அத்தியாயம் -1
ஜூகு - இந்தியாவின் புகழ்பெற்ற வணிக மையத்தின் முதல் இடத்தில் இருக்கும் மும்மை மாநகரத்தில் புற நகரில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதியாகும். இதன் மேற்கில் அரபுக் கடலும், வடக்கில் வெர்சோவா , கிழக்கில் சாந்த குரூஸ், தெற்கில் கர் பகுதியும் அமைந்துள்ளது . இது ஜுகு எனும் அழகிய கடற்கரையைக் கொண்டுள்ளது. மும்பை நகரத்திற்கு மேற்கில் அமைந்த ஜூகு பகுதி, மும்பையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அழகிய கடற்பகுதியை சுற்றிய சுமார் 15,000 ஏக்கர் பரப்பில் மிக பிரம்மாண்டமாக ஜுகு கடற்கரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இருந்தது அந்த வீடு இல்ல இல்ல பெரிய மாளிகை.. அங்கு மொத்தம் பத்து தட்டு மாடிகள் கொண்ட கட்டமைப்பில் எங்கு பார்த்தாலும் பணத்தின் செழுமையே காணலாம். அங்கு ஐந்தாம் மாடி முழுவதும் தனதாக்கி தன் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு அறையென்று உருவாக்கி வைத்திருக்கிறான் அவன். இப்போது அவனின் பிரத்யேக அறையான ஜிம் அறையில் லாட் புல்டவுன் (Lat pulldown) எடுத்து கொண்டிருந்தான். அவனுக்கு பின் உள்ள ஹோம் தியேட்டரில் இருந்து அழகான ஹிந்தி சாங்க் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது..
பல் ஏக் பல் மே ஹி தம் சாகயா
து ஹாத் மே ஹாத் ஜோ தே கயா
சாலுன் மெயின் ஜஹான் ஜாயே து
தாயீன் மெயின் தேரே பாயெயின் து
ஹூன் ரூட் மெயின் ஹவாயேன் து
சாத்தியா…
இந்த மெலோடியஸ் சாங்கு க்கும் இவன் பண்ற வொர்க் அவுட்டுக்கும் சம்பந்தமே இல்லைனு பாக்குறிங்களா அவன் அப்படித்தான் எல்லாமே வித்தியாசமாக தான் பண்ணுவான் அவன் தான் நம் நாயகன் அமன் சக்கரபோர்த்தி "ஏ.எஸ்.குரூப் ஆப் கன்ஸ்ட்ரக்சன் இன் இந்தியா" வின் சி.இ.ஓ..
புல்டவுன் எடுக்கும் போது ஏறி இறங்கும் மார்புகளும் , முறுக்கேறிய புஜங்களும் , கழுத்து நரம்பு புடைத்த தசைக்கோளங்களும் அலை அலையாய் பாய்ந்த அடற்குழல் கேசமும் அதன் வழியே வழியும் வியர்வை துளிகளும் , இறுக மூடி இருக்கும் அழுத்தமான உதடுகளும் , டிரிம் செய்த தாடி மீசையும் , மேல் சட்டை இல்லாமல் பார்ப்போரை கூச்சப்பட வைக்கும் அகன்று திரண்ட மார்பும் , எய்ட் பேக் வயிறும் என அவை அவனை ஒரு ஆணழகனாகவும் கம்பீரமாகவும் காட்டியது. இரண்டு மணி நேரமாக உடற்பயிற்சி செய்தும் கொஞ்சம் கூட களைப்பாகாமல் மீண்டும் டிரெட் மில்லில் ஏறி ஹை ஸ்பீட் நம்பெரில் ஓடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் வீட்டு போட்டிக்கோவில் கருப்பு நிற புக்காட்டி சிரோன் கார் ஒன்று வந்திறங்கியது. அதில் இருந்து ஐம்பத்து ஏழு வயதில் கம்பீர தோற்றத்தில் ஒரு ஆணும் , ஐம்பது வயதில் சாந்த ரூபில் ஒரு பெண்மணியும் இறங்கினர். நேரே வீட்டுவாயிற் மணியை அடிக்க வாய்ப்பில்லாமல் வீட்டிற்குள் சென்றவர்களை வரவேற்றது அவ்வீட்டின் காலங்காலமாக பணியாள் வேளையில் இருக்கும் பெண்மணி எலிசபெத் வயது ஐம்பதுக்கு குறையாமல் இருக்கும். அவரிடம் ஒரு சிறிய தலையசைப்பை கொடுத்து விட்டு கீழ் தளத்தில் உள்ள தன் அறைக்குள் சென்று மறந்தார் அவர் .அவர் தான் நம்ம ஹீரோவின் தந்தை அசோக் சக்கரபோர்த்தி . முன்னாள் ஏ.எஸ்.கம்பனியின் எம்.டி..
அவரை போல் அறைக்குள் செல்லாமல் வரவேற்பறையில் அங்குள்ள எலிசபெத்திடம் நின்று அமன் பத்தி விசாரித்து கொண்டிருந்தார் அமனின் தாயார் அமலா .
"எலிசா அமன் வந்துட்டானா"- அமலா
"ஆமாம் மேடம் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது" - எலிசா
"ஓ சரி எதாவது சாப்பிட்டானா ? "
"இல்லை மேடம் வந்ததுல இருந்து ஜிம் அறையில் தான் இருக்கார். எதாவது சாப்பிட கொண்டு வரவா தம்பி னு கேட்டேன் வேண்டாம் ன்னு சொல்லிட்டார் மேடம்" அதை கேட்டதும் ஒரு பெருமூச்சை விட்டு விட்டு தன் தனயனின் அறை நோக்கி செல்ல மாடி ஏறப் போனவரை அமலா என்று சொல்லி தடுத்து நிறுத்தினார் அவரின் கணவர் அசோக்.
" எங்க போற அமலா "
" நம்ம சோட்டி ரூம் க்கு தாங்க "
"அது தெரியுது அங்க எதுக்கு நீ போறேன்னு கேக்குறேன் " என்றார் அசோக்.
அவரின் கேள்விலேயே தன் அதிருப்திய காட்டிய அமலா "என்னங்க கேள்வி இது என் பையன் ரூம் க்கு நான் போகுறதுல என்ன தப்பு".
"உன் பையன்னு நீ மட்டும் நினைச்சா போதுமா அவனும் உன்ன அம்மாவா நினைக்கணும் ல அமலா" என்றார் அவர்.
"நீங்க என்ன சொன்னாலும் அவன் என் பையன் தான் " என்று விட்டு வேகமாய் மாடி ஏறி அமன் அறைக்குள் சென்றார். கதவு திறந்து தான் இருந்தது அது வழக்கம் தான் அவனை தவிர யாரும் அங்கு வர மாட்டார்கள் வரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம். இருந்தும் கதவை லேசாக ரெண்டு தட்டு தட்டி விட்டு அறைக்குள் நுழைந்தால் வெற்று அறையே அவருக்கு காட்சியளித்தது.
"எங்கே போயிருப்பான்" என்று யோசிக்கும் போதே எலிசா சொன்ன ஜிம் அறையில் இருக்கிறான் என்பது நினைவு வர அங்கே விரைந்தார்.
இப்போது அமன் அறையை பற்றிய ஒரு விவரிப்பு.. அவ்வீட்டின் ஐந்தாவது தளம் முழுவதையும் தன் பிரத்யேக அறையாக மாற்றி கொண்டான். முதலில் 5- ம் தளம் வந்ததும் அவன் அறைக்குள் செல்ல ஒரு மெயின் டோர் -உம் அதற்கு அடுத்த தளங்களுக்கு செல்லவென பக்கவாட்டில் படிகள் மற்றும் லிஃப்ட் சேவையும் இருந்தது.
அதில் அவன் அறையில் இருக்கும் மெயின் டோரை திறந்தால் முதலில் பெரிய ஹால் போன்ற இடம் அதற்கடுத்து அவனின் பிரம்மாண்டமான பெட்ரூம் அதை தாண்டி குளியலறை அப்புறம் அவன் வீட்டில் இருக்கும் சமயத்தில் அலுவல் வேலை பார்க்கும் ஆபீஸ் ரூம் , பிறகு அதையொட்டி ஜிம் , மேலும் வெளிய பெரிய பால்கனி இப்படி எங்கும் ஒரே பிரம்மாண்டம் தான்.
இப்போது ஜிம் அறைக்கு முன் நின்று கொண்டு கதவை தட்டி உள்ளே சென்றவர் அவன் இன்னும் டிரெட்டில் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து "சோட்டி இன்னும் வர்க் அவுட் முடியலையா பா ? கீழ வந்து சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுப்பா . நாள் முழுக்க வேலை வேலைன்னு கஷ்டபட்டு இப்போவும் ஜிம் ல கிடந்து உடம்ப வருத்திக்கணுமா பா . வாப்பா சாப்பிட" என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அவனோ கேட்டும் கேட்காதது போல் டிரெட்டில் ஓடிக் கொண்டிருந்தான்.
"சோட்டி" என்று மீண்டும் அவர் அழைத்து முடிக்கும் முன்னரே " டோன்ட் கால் மீ லைக் தெட் டம்ப் நேம் " என்று சீறினான் அமன்.
அதில் உடல் தூக்கிபோட அதிர்ந்து அவனை பார்த்தவரின் கண்ணில் இருந்து விழிநீர் விழவா என்று துருத்தி கொண்டிருந்தது. அவனோ அவரை ஒரு முறை அழுத்தமாக பார்த்து விட்டு பின் திரும்பி நின்று "உங்களை இங்க வராதிங்கன்னு எத்தனை தடவை சொல்றது திருப்பி திருப்பி என் முன்னாடி வந்து ஏன் என்ன இரிட்டேட் பண்றீங்க" என்று காய்ந்தவன்
அந்த ஹோம் தியேட்டரில் ஓடிய மெலோடி சாங்க் ஐ மாற்றி இங்கிலீஷ் சாங்க் ஒன்றை ஹைய் வால்யூமில் வைத்தான் அவரின் பேச்சை கேட்காமல் இருக்க வேண்டி.
அதை உணர்ந்து திரும்ப "அமன் கண்ணா" என்று சொல்லவும் அந்த அறை அதிற " கெட் லாஸ்ட் ஃப்ரம் மை ரூம் " என்று கத்தினான் அவன்.
அதில் உடல் நடுங்கிப் போனவர் விழவா என்று கெஞ்சிய கண்ணீர்க்கு விடைக் கொடுக்க அது பொழ பொழவென கண்ணிலிருந்து வழிந்தது.
திருப்பி ஏதும் கேட்டால் இதுக்கு மேலயும் எதும் சொல்வான் என்று எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளிய வந்து கண்ணீரை துடைத்து நிமிறவும் அவர் கணவர் அசோக் அவரை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதில் திடுக்கிட்டு உடனே தன் முகபாவனையை மாற்றி இதழை இழுத்து பிடித்து சிரிப்பது போல் காட்டினார் .
உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு ஊகித்தவர் கண்கள் சிவக்க "இப்போ என்ன சொல்லி உன்ன விரட்டினான் உன் பையன்" என்று உருமினார் அவர்.
அமலா எதும் சொல்லாமல் நிற்கவும் "அவனை " என்று சொல்லி அறைக்குள் செல்ல முயன்றவரை கை பிடித்து தடுத்து "ஒன்றும் இல்லை" எனக்கூறி கீழே தங்கள் அறைக்குள் இழுத்து சென்றார்.
இதில் கையாலாகாத நிலையில் அவரின் பின்னே அறைக்குள் சென்றவர் கையை தட்டி விட்டு அவரை அழுத்தமாக பார்க்க அவரின் பார்வையை சந்திக்காமல் கட்டிலின் மெத்தையில் தன் இடத்தில் சென்று படுத்தார் அமலா. அதை கொஞ்ச நேரம் வெறித்து பார்த்தவர் தானும் சென்று படுத்தார் ஆனால் தூக்கம் தான் இருவருக்கும் தூரமாகியது..
இங்கோ அன்னையிடம் கத்தி விட்டு திருப்பி வர்க் அவுட்டில் கவனம் செலுத்தியவன் அவர் சென்றதை உணர்ந்து ஜிம்மிலிருந்து நேரே குளியலறை சென்று குளித்து வெளிய வந்து பாத்ரோப் கட்டியவாரே ஆறு பேர் படுக்க கூடிய பெட்டில் கை, கால்களை விரித்தவாரு குப்புறப் படுத்தான் அமன்.
அவன் மனமோ சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது. "எதற்காக இந்த ஓட்டம் ? யாருக்காக இந்த வாழ்க்கை ? எதை நோக்கி என் பயணம் போகிறது ? என்று எப்போதும் தனக்குள் கேட்கும் கேள்விகளை இன்றும் கேட்டுக் கொண்டு அதற்கு விடை தெரியாமல் அவனின் கண்கள் நேரே அவனுக்கு இடப்புறத்தில் இருக்கும் ஆளுயர பெரிய புகைப்படத்தில் உள்ளவரை பார்த்தது. அங்கு கம்பீரமாக காட்சியளித்தார் ஏ. எஸ். சாம்ராஜ்ஜியத்தின் அடிவேர் அதனை உருவாக்கி கட்டிகாத்த அமனின் தாத்தா "ஆரிய சக்கரபோர்த்தி".
கொஞ்ச நேரம் அவரை வெறித்தவன் "கிராண்ட்பா ஐ நீட் டூ பீஸ் ( peace) அண்ட் ஐ வான்ட் டூ சம் வேயர் (some where) ஃப்ரம் திஸ் ப்லேஸ் " என்றுக் கூறி அவரை பார்க்க அதில் என்ன தெரிந்ததோ " அப்போ எனக்கு விடுதலையே கிடைக்காதா" என்று ஒரு கசந்த முறுவலை சிந்தி விட்டு திருப்பி பெட்டில் தலை வைத்து படுத்து சிறிது நேரத்தில் தூங்கியும் போனான்.
நள்ளிரவு 1 மணி அளவில் கொலாபா நகரில் அமைந்துள்ள அந்த பெரிய மாளிகையில் குறிப்பிட்ட அறையின் பால்கனியில் நின்று கொண்டு கையில் எதையோ வைத்து முணுமுணுத்துக் கொண்டு நேரெதிரே தோன்றும் நிலாவை வெறித்தவாரு "விடுதலையா அவ்வளவு சீக்கீரமாவா ? என்ன விட்டு நீ எப்படி போறேன்னு நானும் பாக்குறேன் டார்லிங்" என்று சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்...