All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,

என்னோட அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன் உங்கள எல்லாம் மொக்க போட்டு ஓட வைக்க, ஆனாலும் படிச்சுட்டு ஓடுங்க. அப்டியே கமென்ட்ஸ் பண்ணிட்டு ஓடுங்க. பாப்பா பாவம்ல அதும் சின்ன பாப்பால??
இல்லனா அழுதுறுவேன் 😭😭😭

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கருத்துத் திரி


இப்படிக்கு

அன்புடன் உங்கள் ReY babyma 😍😍😍
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 5 :


“அப்பறம் அண்ணா, உங்க ஆளு எப்பவோ ஊருக்கு போய்ட்டா, இந்த தடவை ஆச்சும் வாங்க” என்று தொலைபேசியை அணைத்தாள்.


தங்கை தொலைபேசியை அணைத்தவுடன் அவனின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது. அதில் சுகமாய் தொலைந்தான் தன் அத்தை மகளின் நினைவில். இந்நேரம் என்னை நியாபகம் இருக்குமா இல்ல மறந்துருப்பாளா? தன் நண்பர்களுல் சிலர் தன் அத்தை அல்லது மாமன் மகளை காதலிக்கிறேன் என்று சொல்லி கேட்டிருக்கிறானே. அப்பொழுது எல்லாம் கிண்டல் பண்ணினான்.


“அதெல்லாம் ஓல்டு ஸ்டைல் டா, அது என்ன எப்போ பாரு ஒரு அத்தை மகள் இருந்தா அவள தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனுமா என்ன? அப்ப மத்த ஃபிகர் எல்லாம் கோச்சுக்க மாட்டாங்க? அப்பறம் நம்ம லைஃப் ஒரு ஷார்ட் சர்கில்லையே முடிஞ்சிடும். அப்டியே கலர் கலரா நாலு ஃபிகர பார்த்தோமா சைட் அடிச்சோமா அதுல ஒன்ன மட்டும் கரெக்ட் பண்ணிட்டு மேரேஜ் பண்ணனும் டா, அத விட்டுட்டு டைம் வேஸ்ட் டா” என்று சொல்லி விடுவான். அவன் நண்பர்கள் கூட “நீயும் ஒரு நாள் இப்டி,மச்சான் ஐ ஆம் இன் லவ் வித் மை கஸின் டா னுட்டு சொல்லும் போது பார்த்துக்கிறோம்” என்று சொல்லி ஏகத்துக்கும் சாபம் விட்டார்கள். பின்னே அவர்களின் லவ்வை எல்லாம் கிண்டல் செய்தால்?


அவர்கள் விட்ட சாபம் தானோ என்னவோ நம்ம ராசுவும் காதலில் விழுந்து விட்டான் ஒற்றை பார்வையில். ஆனாலும் கிட்டத் தட்ட மூன்று வருடங்கள் அவள் முன்னால் செல்லாமல் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறான். எங்கே நண்பர்களிடம் சொன்னால் கிண்டலில் இறங்கி விடுவார்கள் என்று சொல்லாமல் மறைத்து விட்டான். “மாமன் வரேன்டி சீக்கிரமே என் அத்தை மகளே, வந்து தூக்கிட்டு போரேன் எல்லாருக்கும் முன்னாடி முழு உரிமையோட”. என டூயெட் பாட சென்று விட்டான்.



மூன்று வருடங்களுக்கு முன்னால் தன் தங்கையின் வற்புறுத்தலிற்கு இணங்க மதுரைக்கு சென்றிருந்தான். மதுரையில் தான் பாட்டி வீடும் உள்ளது. சரி இரண்டு நாள் தங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சென்றான். காரில் பயணம் செய்ததன் பயன் எட்டு மணி நேர பயணம் ஆறு மணி நேரத்தில் சனிக்கிழமை காலை நான்கு மணி அளவில் சித்தி கலையரசியின் இல்லத்தை அடைந்தான். வைஷூ தன் அன்பு அண்ணன் தான் சொன்னதிற்காகவே வந்ததினால் ஏகத்துக்கும் மகிழ்ந்தவள் அவனை விட்டு நகரவே இல்லை.



பயண கலைப்பு தீர தனக்காக என இங்கு அமைக்கப்பட்ட அறையில் தூங்கி எழுந்தவன் காலை பத்து மணி அளவில் வான நிற டீசர்ட் கருப்பு நிற ட்ராக் என மாடியில் இருந்து வேகமாக இறங்கியதால் முன் நெற்றியில் விழுந்த சிகையை அழகாக கோதியபடி இறங்கி வந்தான். “குட் மார்னிங் அம்மா, குட் மார்னிங் சித்தப்பா, இன்னும் அந்த வாலு எழுந்திருக்கலையா” என்று கேட்டவாறு டைனிங் ஹாலில் நாற்காலியை இழுத்து போட்டவாரு உட்கார போனான்.



“அண்ணாாாா” என்று அந்த வீடே அதிரும் படி ஓடி வந்தாள் வைஷூ. “ஹே குட்டிமா பார்த்து டா” என தன்னை நோக்கி ஓடி வந்த வைஷூவை தட்டாமாலை சுற்றி நெற்றியில் இதழ் பதித்தான். இப்பொழுது தான் தன்னுடைய முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பை, அதுவும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் மதுரையில் படித்துக் கொண்டிருக்கும் சுட்டிப் பெண்.


தன் அண்ணனை பார்த்தால் மட்டுமே இவ்வாறு என்று தெரிந்ததினால் அவர்களின் பாச போராட்டற்குள் நுழையாமல் மன நிறைவோடு பார்த்தனர் கலையரசி மற்றும் அவரின் கணவர்..


என்ன தான் தன் அக்காவின் மகனாக இருந்தாலும் கலையரசியின் மூத்த மகன் தான். அவனும் அது போல் தான். “போதும் போதும் வந்து சாப்டுங்க” என்றபடி தன் மகனை பார்த்து பார்த்து கவனித்தார். அவனோ ஒரு படி மேல போய் தன் தங்கைக்கு ஊட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.


“அண்ணா இன்னைக்கு காலேஜ் லீவ் தான், வெளிய போவோமா, அப்டியே பாட்டி வீட்டிற்கும் போய்டு ஜாலியா சுத்திட்டு வரலாம்” என்று முகத்தை பாவம் போல் வைத்து கேட்டும் அவளின் அன்பு அண்ணன் வேண்டாம் என்றா சொல்வான்.


“உன் கூட டூ டேஸ் டைம் ஸ்பெண்ட் பண்ண தான் என்னோட இம்பார்டண்ட் வொர்க் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன். தீஸ் டூ டேஸ் இஸ் யுவர்ஸ் டா” நீ போய் ரெடி அகிட்டு வா” என்று தன் அறைக்குள் சென்று வெளியே செல்வதற்கு ஏற்றவாரு கிளம்பி பத்தே நிமிடங்களில் இறங்கி வந்தான்.


அண்ணனும் தங்கையும் சேர்ந்து முதலில் மாலிற்கு சென்றனர். இன்று பள்ளி கல்லூரிகளுக்கு பெரும்பாலும் விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதியது. தன் அண்ணன் உடன் வரும் சந்தோஷத்துடன் அவனின் கையை இறுக பற்றிய படி சுற்றி கொண்டிருந்தாள்.


கேம் விளையாட என ஸ்மாஷ் ஜோனிற்று சென்றனர். சிறு குழந்தை என ஆர்ப்பாட்டம் செய்து விளையாடிய தங்கையை இவன் ரசித்துக் கொண்டிருக்க வேறு இரு கண்களும் விழிகளாலே இவளை தழுவி கொண்டிருந்தது.



மாலில் கேம் ஜோனிற்கு சென்று கிட்டத் தட்ட ஒரு மணி நேரமாக ஆசை தீர விளையாடி விட்டு கடைசி தளத்தில் இருக்கும் ஃபுட் கோர்ட் சென்றனர். இரண்டு மணி நேரமாக தன்னை ஒருவர் பின் தொடர்கிறார் என்றும் தன்னை அறியாமலே ஒருவரின் கோபத்திற்கு ஆளாகிறோம் என்று அறியாமல் தன் அண்ணனின் கையை பிடித்துக் கொண்டு சுற்றி வந்தாள்.



பின்னர் மாலினை விட்டு வெளியேறி ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு தன் பாட்டியின் வீட்டு வாசலில் காரினை நிறத்தினான். இன்று வருவதாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருந்ததால் வாசலில் கார் சத்தத்தில் பாட்டி வெளியில் வந்தார். தன் பேரனை திடீரென்று பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்து போனார்.



“ஹே ராசு வாப்பா, மூனு மாசம் கழுச்சு இப்ப தா என் நெனப்பு வருதாயா” என்று தன் பேரனின் முகத்தை பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தார். அவனும் பாட்டியின் உயரத்திற்கு ஏற்ப வாகாக முன்னோக்கி குனிந்த படி நின்றிருந்தான் முகன் எல்லாம் கனிவும் பாசமும் பொங்க.


“பாட்டீடீடீ நானும் தான் வந்துருக்கேன், உனக்கு உன் பேரன பாத்தோனே என்னயலாம் கண்ணு தெரியாதே” என பொய் கோபத்தில் முகத்தை திருப்பினாள்.


பாட்டிக்கு தான் தெரியுமே அண்ணன் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள், அவனை கொஞ்சியதற்கு எல்லாம் கோபம் கொள்ள மாட்டாள் என. எனவே அவரும் வம்பளந்தவாறே “அதான் வந்துட்டல்ல உள்ள போயி உன்னோட சிநேகிதிய பாரு, அவள பாக்க தான வந்துருப்ப” என்றார்.


“ஆமா கிழவி ஆமா, எங்க அம்முவ? “ என்றாள். “தோட்டத்துல போயி பாரு” என்று பேரன் பக்கம் திரும்பினார். இதை எல்லாம் ராசுவும் புன்சிரிப்புடன் பார்த்தவாறு பாட்டியின் கையை பிடித்துக் கொண்டு பேசியபடி வீட்டிற்குள் சென்றனர்.


“ஹே அம்மு” என்று ஓடி சென்று ஷாலுவை கட்டிக் கொண்டாள் வைஷூ. இருவரும் ஒரு வயது என்பதாலும், ஷாலினிக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை என்பதாலும் சிறு வயது முதலே நெருங்கிய தோழிகளாகவே பழகினர். அதுவும் இருவரும் சேர்ந்தால் அந்த இடம் அவ்வளவு அல்லோல் படும். குறும்பில் இருவரும் ஒருவரை ஒருவர் சலைத்தவர்கள் இல்லை.


“ஹே வாடி, இன்னைக்கு வரேனு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல, காலேஜ் எல்லாம் எப்டி போகுது” என்றவாறு சலசலத்துக் கொண்டு இருந்தனர். ஷாலினியும் தற்போது தான் தனது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறாள்.


இருவரும் அடிக்கடி வாட்ஸப், வீடியோ கால் என பேசினாலும் நேரில் பேசிவது போல் வரும்? தன் நண்பர்கள், கல்லூரியில் நடந்தது என இரண்டு மணி நேரமாக வாயாடிக் கொண்டிருந்தார்கள்.


இரவு ஏழு மணியை நெருங்கியும் வராத தங்கையை அழைத்து செல்ல தோட்டத்திற்கு வந்தான் ராசு. அவனுக்கும் ஷாலினி வந்திருப்பது தெரியும். போகும் போது வருவாள்ல அப்போ சொல்லிக் கொல்லலாம் என்று தான் நினைத்தான்.


இன்னும் இருவரும் வரும் சுவடே தெரியவில்லை என்று தான் இங்கு வந்தான். தோட்டத்தை சுற்றிப் பார்த்தவாறு வந்தவனிற்கு தங்கையின் பேச்சுக் குரலும் அதை தொடர்ந்து வந்த சிரிப்பு சத்ததிலும் பார்வையை திருப்பினான். அப்பொழுது தான் இருள் லேசாக படர ஆரம்பித்திருக்க தோட்ட விளக்கு வெளிச்சத்தில் அதிக வேலைப்பாடு அல்லாத வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற காட்டன் சுடிதாரும், தலையில் முல்லை பூ சூடி, நெற்றியில் விழுந்த சிறு முடி கற்றையை காதோதரம் ஒதுக்கிய படி கண்களில் குறும்பு புன்னகையுடன் வைஷூவிடம் பேசிக் கொண்டிருக்கும் ஷாலுவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.


இவன் நின்ற இடத்தில் சிறு வெளிச்சம் பரவியதால் சட்டென்று மரத்தின் பின் மறைந்து கொண்டான். சிறிது நேரம் பார்த்து விட்டு தங்கையின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பினான்.


“வைஷூ ஆம் இன் கார்டன் ஒன்லி, பட் இப்போ சட்டுனு திரும்பி பார்க்காத, ஒரு டென் மினிட்ஸ் அப்புறம் நான் இங்க இருந்து வீட்டுக்குள்ள போய்டு நான் கார்ல வெய்ட் பண்றேன். இப்ப ரீசன் கேக்காத போரப்போ சொல்றேன்” என அனுப்பினான்.



தன் அலைபேசியில் மெசேஜ் வந்ததை எடுத்து படித்தவள் குழப்பத்தினூடே ஒரு நிமிடம் அமர்ந்தவள் விஷம சிரிப்புடன் “ஓ ஹோ கத அப்டி போகுதா “ என்றவாறு ஷாலினியின் பேச்சில் கவனமானாள்.



சிறிது நேர பேச்சிற்கு பின் தன் அண்ணன் சொன்னவாறு “சரி டி நாங்க கிளம்புறோம். அண்ணா ரொம்ப நேரம் வெய்ட் பண்றாங்க” என்று கூறி அவளை பார்த்தாள். அவளின் எதிர் பார்ப்பு பொய்யாக்காமல் அவளின் கண்களில் சன்னமான ஒளியும் தோன்றி சடுதியில் மறைந்தது.


இவர்கள் இருவரும் நெருங்கி பழகி இருந்தாலும் அவளின் அண்ணன் மேல் உள்ள ஆசையை சொல்லவில்லை. அவளே இப்போது தானே தன் மனதினை சிறு காலமாக தெரிந்திருக்கிறாள்.


மற்றும் அவள் அண்ணனின் மனதும் தெரியாதே.



இருவரும் தோட்டத்தை விட்டு பேசியபடி வீட்டிற்குள் வந்தனர். “சரி பாட்டி, நாங்க கிளம்புறோம்” என்று நகர்ந்தாள். ஷாலினியும் வீட்டை சுற்றி பார்வையை ஓட்டினாள். அவன் தான் காதல் மன்னனாச்சே. சொன்னபடி காரில் தான் இருந்தான்.


“ஹே அண்ணா எதுக்கு மெசேஜ் பண்ணிட்டு காருக்கு வந்துட்டீங்க” என்று காரில் ஏறி தன் பாட்டியின் வீட்டை விட்டு வெளியேறியதும் அண்ணனை பிடித்துக் கொண்டாள். அவனும் கள்ள சிரிப்புடன் “ஹான், உன் ஃப்ரண்ட உனக்கு அண்ணி ஆக்கனும்னு தான்” என்று தங்கையின் புறம் திரும்பி கண்சிமிட்டி சிரித்தான்.


---------------------------------------------------------


தீக்ஷா பேசி முடித்ததும் “இனி என் பக்கத்தில தான இருக்க போற, உன்ன அப்ப கவனிச்சுக்கிறேன் டி மை பேபி” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.


அதன் பிறகு பைனல் ரௌண்ட் டெக்னிக்கல் நடைபெற்றது. இந்த சுற்று தனியாக தான் நடைபெறும். ஒவ்வொரு மாணவர்களின் புத்திக் கூர்மையையும், அவர்களின் இன்டராக்ஷன், செயல் என ஒவ்வொன்றாக மானிட்டர் பன்னினான். தீக்ஷாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவனுள் பதிந்து கொண்டிருந்தது. இன்டர்வியு முடிந்து அனைவரும் வெளியேறினர் ADS group of company staffs.


“ஒரு வழியா இன்டர்வியு முடிஞ்சிருச்சு, எப்டி டி பன்னுனீங்க இன்டர்வியு எல்லாம்” என்று தோழிகளிடம் கேட்டாள் யாழினி.


“ஹம் பன்னிருக்கோம் டி, ரிசல்ட் வரட்டும் பாக்கலாம்” என்றதோடு முடித்தாள் தீக்ஷா.


“சரி டி காலேஜ் முடிய ஜஸ்ட் டூ மன்த்ஸ் தான் இருக்கு. பைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் ஒரு ட்ரிப் போடலாமா” என்று ஆரம்பித்தால் யாழினி. இனி யார் யார் எங்கே இருப்போமோ, இதே போல் நினைத்த நேரம் பார்க்க முடியுமா என்று யோசித்து தான் சொன்னாள்.


“சரி டி, வீட்ல கேப்போம், ஒரு டூ ஆர் த்ரி டேஸ் மாதிரி பாப்போம், நா டாட் ட கேட்டு அரென்ஜ் பண்ண முடியுமானு சொல்றேன்” என்றாள் ததீக்ஷா.



--------------------------------------------------------


கேம்பஸ் இன்டர்வியு முடிவு அடுத்த ஒரு வாரத்தில் அறிவித்தனர். இன்டர்வியு முடிந்து கல்லூரியில் இருந்து விடை பெறும் பொழுது ஒரு வாரத்தில் முடிவு கல்லூரிக்கு அறிவிக்கப்படுவதாகவும், அதன் பிறகு வேலையில் சேருவதற்கான ஆஃபர் லெட்டர் மற்றும் மற்ற தகவல்கள் மாணவர்களுக்கு ஃபார்மர் மெயில் அனுப்புவதாகவும், கூறியிருந்தனர் ஆதியின் கம்பெணி ஹச்.ஆர்(HR) டிபார்ட்மன்ட். அதன்படி முடிவுகள் மட்டும் முதலில் அறிவிக்கப்பட்டது.



“எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.”



பூக்கும்
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,சிஸ்டர்ஸ்

மேரேஜ் பிசினால என்னால போன வாரம் எபி குடுக்க முடியல. ஸாரி. இந்த வாரம் புதன் இல்ல வியாழன் கண்டிப்பா எபி போட்டுருவேன்.

இது வரை படிக்காதவங்க படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடுங்க. படிச்சு முடிச்சவுங்க கமெண்ட்ஸ் போடுங்க 😟😟😟

இப்படிக்கு

அன்புடன் உங்கள் ReY babyma 🤗🤗😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் நட்பூஸ்,

என்னோட அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன். ரொம்ப லாங் கேப், ஆதி,தீக்ஷா,தரஷன்,ஷாலினி,ராசு இப்டி எல்லாரையும் மறந்து இருக்க மாட்டீங்கனு நம்புறேன். இனி தொடர்ந்து திங்கள்,புதன், சனி வாரம் மூன்று அத்தியாங்கள் தர நினைத்திருக்கிறேன். உங்களோட ஒவ்வொரு கமெண்ட்ஸ் தான் நான் அடுத்து எப்படி கொண்டு போகலாம்னு என்னை ஊக்க படுத்த உதவும்.

http://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

என்னோட கருத்து திரியில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அது பாசிடிவ் இல்ல நெகடிவ் எந்த விதமான கருத்தாக இருந்தாலும்.

இப்படிக்கு

அன்புடன் உங்கள் ReY babyma 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 6:




ஹால் ஷோஃபாவில் அமர்ந்திருந்த தீக்ஷா தன் மொபைலில் மூழ்கி இருந்த நேரம் புது மெயிலிற்கான நோட்டிபிகேஷன் “ADS group of companies” என்ற பெயருடன் வந்தது.

பார்த்தவுடனே புரிந்து போயிற்று. ஆஃபர் லெட்டர் என்று. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறு பக்கம் பெற்றோரை பிரிந்து சென்று வேலை பார்க்க வேண்டும் என்று கவலை ஆகவும் இருந்தது.


அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அவள் தந்தையும் உடன் இருந்தார். திடிரென மகளின் முகம் வாட “என்னடா, ஏன் டல்லா இருக்க மாதிரி இருக்க” என்றார். தந்தையிடம் வேலையில் சேருவதற்கான விவரம் மற்றும் தேதியை சொன்னாள்.


“டாட் கன்பர்மேஷன் மெயில் வந்துருக்கு. மே பர்ஸ்ட் வீக் ஜாய்ன் பண்ண சொல்லிருக்காங்க, ஜஸ்ட் டூ மன்த்ஸ் தான் இருக்கு” என்றாள். சிறு புன் சிரிப்புடன் “இந்தா தான இருக்கு சென்னை, ஒரு டூ இயர்ஸ் தான டா, நீயும் போய் ஜாலியா சுத்திட்டு வரலாம்ல? அப்புறம் நம்ம பிஸனஸ்னு நீ பிஸி ஆகிடுவ. எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்” என்றார்.


“ஹான் டாட், சொல்ல மறந்துட்டேன் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் ஒரு சின்ன டூர் போய்டு வரலாம்னு இருக்கோம் ப்ரண்டஸ் எல்லாரும். நீங்க அரென்ஜ் பண்ண முடியுமா? ஒரு இரண்டு அல்ல மூன்று நாள் மட்டும்” என்றாள்.


“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், உங்கள மட்டும் தனியா அனுப்பி வச்சுட்டு நாங்க இங்க ஒவ்வொரு நிமிஷமும் பயந்துட்டே இருக்க முடியாது” என்றவாறு வந்தார் திவ்யா.


அவ அதெல்லாம் காதல் வாங்கினால் தானே. தந்தையிடம் கண் ஜாடை காட்டிக் கொண்டிருந்தாள். அவரும் “என்ன திவி இப்ப என்ஜாய் பண்ணாம வேற எந்த வயசில பண்ண முடியும், அண்ட் சேஃப்டி பண்ணாம நான் தான் விட்டுருவேனா என்ன? “ என்றார்.


“ஓகே டா, எக்ஸாம்ஸ் முடியட்டும் பொல்லாச்சி, கோயம்புத்தூர் சைட் போறது மாதிரி அரென்ஜ் பண்றேன், இன்னும் இரண்டு மாதம் இருக்குல்ல பண்ணிடலாம், எவ்வளவு பேர் போறிங்க எப்ப கிளம்பனும் டீடெய்ல்ஸ் மட்டும் பார்த்துட்டு சொல்லு டா, அதுக்கு ஏத்த மாதிரி பாப்போம்.” என்றார்.


“ஓகே டாட்” என்றவாறு மொபைலில் நுழைந்து கொண்டாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“கம் டூ மை கேபின்” என்று வழக்கத்தை விட கடினம் கூடிய குரலில் பி.ஏ ஷர்மிளாவிற்கு கூறிய அடுத்த இரண்டு நிமிடத்தில்,


“அய்யோ, என்ன ஆச்சுனு தெரியலயே நார்மளா வர சொன்னால நம்மள அந்த பாடு படுத்துவாரு, இதுல இன்னைக்கு ரொம்பபபபபபபபப நல்ல விதமால கூப்பிடுறாரு, இவருக்கிட்ட வேலை பார்க்குறக்கு எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா குவாளிபிகேஷன்லாம் வேணும் போல” என்று தனக்குள் முனுமனுத்தப்படி அவன் முன் வந்து நின்றாள் அவனின் காரியதரிசி.


“ எப்டி நம்ம கைக்கு வர வேண்டிய ப்ராஜெக்ட் அந்த கம்பெணிக்கு போச்சு? நம்ம கிட்ட தான் கான்ட்ராக்ட் சைன் பண்றதா சொன்னாங்க, நம்ம வழக்கமா கோட் பண்ற மாதிரி தான அனுப்புனீங்க, இல்ல நம்ம கிட்ட இருந்து யாரு மூலமாகவும் நியூஸ் போச்சா? இல்ல வேற எதுவும் நடந்துச்சா? என்ன பன்னுவீங்களோ எனக்கு தெரியாது, ஒன் டே தான் டைம், ஒன்னு அந்த ப்ராஜெக்ட் நமக்கு வரனும், இல்ல நம்ம கோட் பண்ண அமௌண்ட யாரு அந்த கம்பெணிக்கு இன்பர்மேஷன் குடுத்தாங்கனு கண்டு பிடிச்சு ஆக்ஷன் எடுங்க“என்று அவள் உள்ளே நுழைந்து ஆசுவாசப் படுத்தக் கூட நேரம் தராது கத்த துவங்கினான் ஆதி.



ஒரு ப்ராஜெக்ட் போனதால் வந்த கோபம் இல்லை. ஏனெனில் இது போனால் அடுத்த கான்ட்ராக்ட் உடனே கையெழுத்திடவும் முடியும் அவனால். இது ஏமாற்றப்பட்டோம் என்பதால் வந்த ஆத்திரம்.



சென்ற மாதம் ஷர்மிளா அவனின் மெயிலிற்கு வந்த நியூ கான்ட்ராக்ட் பத்தின விவரங்கள், அதில் தங்கள் பட்ஜெட் ஒத்து வருபவை, அதை ஒத்துக் கொண்டாள் எவ்வளவு லாபம் பெற முடியும் என ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தாள்.



ஆதியை பொறுத்த வரை எந்த ஒப்பந்தம் என்றாலும் அதில் கனிசமான லாபம் மற்றும் தகுதியான ஒப்பந்தம் மட்டுமே அவன் பார்வைக்கு வர வேண்டும். இல்லையெனில் ஒவ்வொன்றும் இவனே ஆராய்ந்து செய்ய வேண்டும் எனில் “ உங்களுக்கு எதுக்கு சம்பளம், நானே பார்த்துக் கொள்வேன்” என்று நக்கல் பேச்சிற்கு ஆளாக வேண்டி வரும் என ஒவ்வொன்றையும் மிக கவனமாக, மிக சிரத்தையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.



அப்பொழுது தேர்வு செய்த இரண்டு ஒப்பந்தங்களில் ஒன்று தான் மௌன்ட் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வேலை பார்க்க போவது, இன்னொன்று தான் மருத்துவமனை கட்ட வந்ததற்கான ஒப்பந்தம். அது அனைத்து ஸ்பெஷாலிட்டி உடைய கிட்டத்தட்ட பல கோடிகளை உள் வாங்க போகும் மருத்துவமனை.


அதை ஒப்புக் கொண்டு சரியான நேரத்தில், சரியான பட்ஜெடில் முடித்து குடுத்தாள் இதே போல் அடுத்த ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம் என இருந்தது மெயிலில்.



எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு ஆதியின் மெயிலிற்கு அனுப்பி வைத்தாள் ஷர்மிளா. அடுத்த சில மணி நேரங்களில் ஒப்பந்தத்தை ஒப்பு கொள்வதற்கான மெயில் அந்த உரிமையாளரிற்கு அனுப்புமாறு பணித்தான். அதன்படி அனுப்பிய அந்த வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடலாம் என பதில் அனுப்பினர்.


“எக்ஸ்யூஸ்மி சார்” என்று கதவை தட்டிய மறு நொடி, “எஸ் கம் இன்” என்ற அவனின் கம்பீர குரலில் வழக்கம் போல் ரசித்தவாறே உள்ளே சென்றாள். “சொல்லுங்க ஷர்மிளா, அந்த ஒப்பந்தம் ஓ.கே ஆகிடுச்சு அடுத்து நம்ம மீட்டிங் அரென்ஜ் பண்ணனும், எப்ப பண்ணலாம்னு கேட்க தான வந்துருக்கீங்க” என்று கணினியில் இருந்து பார்வையை திருப்பாது மிக சரியாக அவளை போலவே கேட்டான்.


“எல்லாம் தெரிந்தும் க்ராதகா நா மெயில் பாத்துட்டேன், அடுத்து மூவ் பண்ணுனு சொல்ல வேண்டியது தான, நானும் கிட்டத்தட்ட மூனு மணி நேரமா எந்த பதிலும் இல்லைனு இது கேன்சல் தானு ஓடி வந்தா லந்த பாரு,இதுக்கு அந்த சாரே எவ்வளவோ தேவலை போல” என்று மனதிற்குள் அவனை இன்னும் அதிகமாகவே திட்டிக் கொண்டிருந்தாள்.


பின்ன அவளும் எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்றதாம். வெளியில் அப்பாவி முக பாவத்தில் “நெக்ஸட் வீக் ஃப்ரைடே ஈவ்னிங் அரென்ஜ் பண்ணிடலாம் சார்” என்று வெளியேறினால். அதே போல் அந்த ஒப்பந்தம் மிக நல்ல விதமாகவே டின்னர் உடன் முடிந்தது.


அப்படி இருக்கையில் திடீரென அதற்கென ஏற்பாடுகள் செய்து முடிக்கும் தருவாயில் ஒப்பந்தம் ரத்து செய்து விட்டதாகவும், வேறு கம்பெணி அதை விட குறைந்தபட்ச செலவில் ஏற்று கொள்வதால் அங்கே ஒப்பந்தம் கை மாற்றம் செய்வதாக கூறினால் ஆதியை பொறுத்த வரை அந்த கம்பெணியை சும்மா வி்ட்டு வைப்பதே ஆச்சரியம் தான்.


“ஓ.கே சார்” என்று அறையை விட்டு வெளியேறினாள்.


அவன் சொன்னது போல் சரியாக மறுநாளே அந்த கான்ட்ராக்ட் இவர்களின் கைக்கு சேர்ந்தது மட்டும் அல்லாமல் ஏமாற்றிய கம்பெணியின் சில பல கான்ட்ராக்ட்களும் பறிக்கப்பட்டது.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“என்ன டாட், எனக்கு எவ்வளவு வொர்க் இருக்கு. அத விட்டுட்டு எப்படி என்னால இப்ப முடியும், ஏற்கனவே கொஞ்சம் நேரம் கூட ரெஸ்ட் இல்லாம ஓடிட்டே இருக்கேன்” என்று தந்தையிடம் போராடிட்டே அலைபேசியில் மிக முக்கியமான வேலையில் ஆழ்ந்திருந்தான். பேஸ்புக்கில் பெண்களிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்தான்.


“ஹாய் ஸ்வீட்டி”


“ஹாய் பப்ளி”


“ஹாய் பேபி” என்று பலவாரு கொஞ்சிக் கொண்டிருந்தான் (“அடேய் நீ பெரிய பிஸ்னஸ்மேன் டா, அப்டி உன்னைய கொஞ்சம் பில்டப் பண்ணலாம்னு பார்த்தா இப்டி வழியிரியே டா, இது மட்டும் உன்னோட வருங்கால பொண்டாட்டிக்கு தெரிஞ்சது தொலஞ்சடா ராசா” என்று அவன் மனசாட்சி ஏகத்துக்கும் எச்சரிக்கை செய்தது)


“அதெல்லாம் என் பொண்டாட்டிய சமாளிக்க எனக்கு தெரியும், உன் வேலைய பார்த்துட்டு இரு, இப்ப நான் என் வேலைய பார்க்க போறேன்” என்று அதை அடக்கியவன் அரட்டையை தொடங்கினான்.


“நீ செத்தடா” என்றவாறு மனசாட்சி அவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டது.


சிறிது நேரம் பொறுத்து பார்த்த அவன் தந்தை “இவன் கிட்ட இப்படி எல்லாம் பேசினா வேலைக்காகது என்று எண்ணி குரலில் முயன்று கடுமையை வரவழைத்து “தர்ஷன் உன்னட்ட ஏற்கனவே சொன்னேன், கண்டிப்பா போயே ஆகனும் எந்த ரீசனும் சொல்ல கூடாதுனு” என்றார். தந்தையை பற்றி நன்கு அறிந்தவன் மொபைலை கீழே வைத்து விட்டு “ஓ.கே வில் ட்ரை டூ கம்” என்று ஏதும் அறியா பிள்ளையாக கள்ளத்தனத்துடன் அந்த இடம் விட்டு அகன்றான். பின்னே இன்னும் சிறிது நேரம் இருந்தாலும் தன்னை தந்தை கண்டு கொள்வார் என்று அறிந்தவன் ஆயிற்றே.



“மச்சி டுடே நைட் வழக்கம் போல அதே பப் போகலாம், என்னோட ட்ரீட், ஐ ஆம் சோ ஹாப்பி” என்று தன் நண்பன் அஷ்வினை அழைத்து விட்டு தன் புள்ளட்டில் பறந்து விட்டான்.



“நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி”


பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் நட்பூஸ்,

என்னுடைய அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன். எங்கையாது ஃப்ளோ இல்லனா மன்னிச்சிருங்க. அடுத்த தடவை இன்னும் நல்லா எழுத ட்ரை பண்றேன். என்னால முடிஞ்ச வரை இன்னைக்கு எழுதிருக்கேனு நினைக்கிறேன். தயவு செய்து படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடுங்க. எனக்கு அது தான் என்னைய ஊக்கப் படுத்தும். எழுத்து பிழை இருந்தால் கண்டிப்பாக இனி பிழை இல்லாது எழுத முயற்சி செய்றேன்.

http://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு

அன்புடன் ரேவதி 😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 7:



நாட்கள் வேகமாக நகர இன்னும் ஒரு வாரத்தில் இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் வை.வா என்ற நிலையில் அனைத்து மாணவர்களும் மிக பிசியாக தங்களின் ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தனர்.


“ஹே இன்னைக்காது நம்ம ரெகார்ட் சப்மிட் பண்ணனும் டி, இல்லனா அந்த சிடுமூஞ்சி வச்சு செய்யும். வேணும்னே எதாவது சொன்னாலும் கரெக்சன் பாக்க முடியாது, ஜஸ்ட் த்ரீ டேஸ் தான் இருக்கு, எப்டி முடிக்க முடியுமோ?? ” என்று யாழினி புலம்பிய புலம்பலில் கையில் வைத்திருந்த நோட்டில் நன்றாக மொத்தி எடுத்து விட்டாள் தீக்ஷா.


பின்னே ப்ராஜெக்ட் என்ற பேர் வழியில் நன்றாக ஊர் சுற்ற வைத்து விட்டு இப்போது புலம்பினால்.


“இப்ப என்ன சொன்னேனு அடிக்கிற” என்று சிறு குழந்தை போல் உதட்டை பிதுக்கி சினுங்கினாள்.


“உடனே சினுங்காத டி, டுடே முடிச்சிடலாம், அதான் நானும் கூட இருக்கேன்ல, விடு பார்த்துப்போம். இன்னும் கொஞ்ச நாள் தான் அப்பறம் இவங்களை எல்லாம் பார்ப்போமானு கூட தெரியல” என்று மும்முரமாக முடித்தனர்.


காலேஜ் வை.வா முடிந்து கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வும் முடியும் தறுவாயில் உள்ளது. இதோ இதுவே இறுதி தேர்வு என்ற நிலையில் தேர்வு அறையை விட்டு வெளியேறினர் மாணவர்கள்.


சிலர் இத்துடன் கல்லூரி முடிந்தது என சந்தோஷ நிலையிலும், சிலர் இனி இதே போல் ஒரு சூழல் அமையுமோ என்ற கவலையிலும், சிலர் அடுத்தது என்ன என்ற விடை தெரியாத கேள்வியோடும் அந்த கல்லூரி மைதானம்,கேண்டீன், என நிரம்பி இருந்தனர்.


அனைவரும் என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும் அந்த ஸ்லாம் புக்கை எழுதி முடிக்காதவர்கள் இருக்க இயலாது. இப்போதும் அப்படி தான் யாழினி மற்றும் சில நண்பிகளும் அலும்பு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.



“சரி டீ போதும், என்னமோ கண் காணாத தேசத்துக்கு போக போற மாதிரி, எப்படியும் நெக்ஸட் மந்த் சேர்ந்து தான வேலை பார்க்க போறோம்” என்றவாறு பேச்சை தொடர்ந்தாள் தீக்ஷா. அவளுக்குமே இனி இதே கல்லூரி வாழ்க்கை கிடைக்குமா என கவலை இருக்க தான் செய்கிறது.



ஆனால் இது தன் வாழ்வில் அடுத்த முக்கியமான கட்டத்தில் காலடி எடுத்து வைக்க போகும் தருணம் என மனதை தேற்றிக் கொண்டு அடுத்து தாங்கள் செல்ல போகும் டூர் பற்றிய பேச்சினை ஆரம்பித்தாள். சரியாக அது தற்பொழுது நண்பர்களின் கவனத்தை திசை திருப்பியது.


“வர்ற புதன் கிழமை நைட் கிளம்பினா வியாழன் இயர்லி மார்னிங் நம்ம உடுமல பேட்டை ரீச் ஆகிடுவோம், அங்க இருந்து ரெஃப்ரஷ் ஆகிட்டு தென் நம்ம ஜர்னிய ஸ்டார்ட் பண்றோம், டாட் நமக்கு ஒரு கைட் அரென்ஜ் பண்ணிருக்காங்க, அகெய்ன் சண்டே நம்ம திருச்சி வந்துருவோம்” என கூறி முடித்தாள்.



“அடுத்து திருச்சிய நல்லா சுத்த போறோம் ஜாலியா” என்று மற்றொரு நண்பன் கேட்டான். “யூ ப்யூபிள் வில் என்ஜாய், எனக்கும், யாழி க்கும் அடுத்து ரொம்ப இம்பார்டண்ட் வொர்க் இருக்கு, அடுத்து ஜாப்ல ஜாய்ன் பண்ற வரைக்கும் ” என கண்களில் ஒருவித கனவுடன் கூறினாள். யாழினி அறிந்த விஷயம் ஆதலால் தோழியை பார்த்து சிமிட்டினாள்.


“சரி ஜஸ்ட் ஒன் டே தான் இருக்கு, எல்லாம் பேக் பண்ணிக்கோங்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப்போம் அப்ப த்ரீ டேஸ் நல்லா என்ஜாய் பண்ண முடியும்” என்று அனைவரும் கிளம்பினர்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல தூக்கத்தில் உதட்டில் சிரிப்புமாக கனவில் தன் கனவு நாயகனுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தன் முகத்தில் விழுந்த வெயிலின் உபயத்தால் கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் ஷாலினி.


கண்ணை திறக்கவும் எதிரில் இருந்த பாட்டியை முறைத்தவாறு எழுந்து அமர்ந்தாள். “ஏய் கிழவி உனக்கு ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டியோ, இங்க வந்ததுல இருந்து என்னோட கால தூக்கமே போச்சு” என்று சத்தமாக கத்தி விட்டு “நல்ல கனவு வந்துச்சு, என் மாமா கூட, எல்லாம் இந்த கிழவினால” என்று திரும்ப போர்வையை இழுத்து போர்த்தினாள்.


அதை பார்த்து இன்னும் கடுப்பான பாட்டி “அடியேய், பங்குனி வெயில் பல்ல காட்டுது, இதுல இழுத்து போத்திட்டு தூங்குற, இன்னைக்கு உங்க சித்து வீட்டு கோவிலுக்கு போகனும்னு சொன்னல்ல, கிளம்பு, இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த வாயாடியும் அவ தம்பி காரனும் வந்துருங்க” என்று அறையில் இருந்து வெளியேறினார்.


தனக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சியை அறியாது குளித்து முடித்து டார்க் பர்பிள் நிற காட்டன் சுடிதார் அணிந்து, கோயிலுக்கு செல்வதால் தலையை அழகாக பின்னி அதில் மல்லிகை பூச்சூடி, துப்பட்டாவை வலது புறம் மட்டுமே ஃப்ளோட்டின் விட்டு அழகாக மாடியில் இருந்து கீழ் இறங்கி வந்தாள்.



“ஷாலு… “ என்று வந்து கட்டிக் கொண்டாள் வைஷூ.


“எங்கள எல்லாம் நியாபகம் இருக்கா அம்மு” என்று குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள். “மாமா…”என்று சிணுங்கியபடி வந்து வைஷூவின் தந்தை அருகில் அமர்ந்தாள். “உங்க மருமகளுக்கு நம்மலாம் கண்ணுக்கு தெரிவோமா, அத்த மகள பாத்தோனே கட்டிப்ப பிடிச்சிப்பா, அத்தய நியாபகம் இருக்குமா” என்று வந்தார் கலையரசி வைஷூவின் தாயார்.


“அத்த நீங்களுமா” என்று அத்தையிடம் செல்லம் கொஞ்சனாள். “சரி சரி நேரமாகுது, வெயில் ஏறதுக்குள்ள மலைல அங்க போய் சேரனும்” என்று பாட்டி அனைவரையும் கிளப்பினார்.


“நீங்களும் வாங்கனா கேக்க மாட்டேங்கிறீங்க, இங்க தனியா தான இருக்கனும், அப்பாவும் எங்க கூட கிளம்பிட்டாறு” என்றவாறே பொருட்களை காரில் ஏற்ற உதவினார்.


“எனக்கு வயசு திரும்புதாமா, என்னால எல்லாம் மலை ஏற முடியுமா, நீங்க போய்ட்டு வாங்க” என்றார்.
 
Status
Not open for further replies.
Top