All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்டஸ்,

என்னோட அடுத்த அப்டேட் போட வந்துட்டேன். படிச்சுட்டு உங்களோட கமெண்ட்ஸ் போடுங்க ப்ரண்டஸ். சிலர் லைக் மட்டும் போடுறிங்க. அப்டியே ஒரு வரில கமெண்ட் பண்ணா அது என்ன ரொம்ப சத்து டானிக் மாதிரி எனர்ஜடிக்கா இருக்கும், நிறை தான் சொல்லனும்னு இல்ல, குறைகளையும் பதிவு செய்யுங்கள்.

இப்படிக்கு

அன்புடன் உங்கள் ReY babyma 😍😍😘😘
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 10 :


கான்பரன்ஸ் ஹாலில் ஷர்மிளா மற்றும் இன்னும் மூன்று நபர்கள் உள்ளே நுழைந்ததும் தன் வழக்கமான ஆளை அசரடிக்கும் கம்பீரமாக பேச்சை ஆரம்பித்தான்.


“Good morning guys, this is Prabhakar H. R. Manager of ADS group of companies, I am welcome you all gladly, எல்லாரும் உங்களோட கெரியர இன்னைக்கு அதும் ADS group of companies-ல தொடங்க போறத பத்தி ரொம்ப எதிர்பார்ப்போடும்,சந்தோஷமாவும் ஆரம்பிக்க போறிங்கனு நம்புறேன்,” என்று தன் ஆளுமையான குரலில், வசீகரத்துடன் அனைவரையும் வரவேற்றவன், தன்னையும் அறிமுகப் படுத்திக் கொண்டான்.


தன்னை அறிமுகப்படுத்திய பிரபாவை எல்லா பெண்களும் ஒருவித ரசனையுடன் பார்ப்பதை அறிந்த ஷர்மிளா மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் “கிழிஞ்சது போ, இவனை பார்த்தே எல்லாம் இவ்வளவு ஜொள்ளு விடுதுங்களே, அப்ப ஆதி சார பார்த்தா இந்த எட்டு மாடி கட்டிடமும் மிதக்கும் போல,இந்த பிரபாவையும் பாரு யாரையும் பாராபட்சமே இல்லாம ஈனு இளிச்சுக்கிட்டு” என்று பிரபாவை பார்த்தாள்.


அந்த கான்பரன்ஸ் ஹாலின் முன் இருந்த டேபிளின் முன் கருப்பு நிற சர்ட், லைட் ப்ளூ கிரே பாண்ட, டக்கின் செய்து ஐ.டி கார்டை கழுத்தில் மாட்டாது பாண்ட் பாக்கெட்டில் தொங்கவிட்டும், கைகளை மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டு நின்ற விதம் அனைவரையும் கவர்ந்திழுக்கத் தான் செய்யும்.



அனைவரிடமும் தன்னை அறிமுகபடுத்தியவன் மற்றவர்களையும் தங்களை அறிமுகம் செய்ய சொன்னவன் சிரித்த முகமாக கவனித்தவனின் பார்வை யாழினி தன்னை அறிமுகம் செய்யும் பொழுது மட்டும் ஒரு சில நிமிடங்கள் அவளை உற்று நோக்கி பின் அடுத்தவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.


பின் அலுவலக விதி முறைகளை H.R மேனேஜர் என்ற முறையில் அனைத்தையும் விளக்கியவன் “ஓ.கே கைய்ஸ், இப்போதைக்கு உங்க எல்லாரையும் டீம் ஸ்பிளிடப் பண்ணல, பேஸிக் ட்ரைனிங் ஒன் வீக் இருக்கும், அது வரை எந்த பர்டிகுலர் ப்ளேஸ் அலகேட் பண்ணல, தென் இப்ப இந்த மீட்டிங் முடிஞ்சோனே அட்மின்ல உங்க ஐ.டி கார்டு ரெடியா இருக்கும், அத கலெக்ட் பண்ணிக்கோங்க...தென் ஆஃப்டர்நூன் லன்ச் இஸ் மேனேஜ்மென்ட் ஸ்பான்ஸர், யூ ப்யூபிள் வில் என்ஜாய்” என்று அனைவரிடமும் விடை பெற்றவன் தன் அறையை நோக்கி சென்றான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன் அறையை அடைந்தவன் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து சைலண்ட் மோடில் இருந்த தன் மொபைலை நார்மல் மோடிற்கு மாற்றியவன் தன் வலதுகையை நாற்காலியின் கைப்பிடியில் ஊன்றியவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.. அவனின் சிந்தனையை குலைப்பது போலவே அலைபேசி தன் சத்தத்தை காட்டியது.


அலைபேசியின் திரையில் மிளிர்ந்த எண்ணை கண்டதும் “அதான பார்த்தேன், என்னடா இன்னும் நம்மள கூப்டலையேனு” என்றவாறு அலைபேசியை காதிற்கு குடுத்தான்.


“கம் டூ மை கேபின் மிஸ்டர் பிரபாகர்” என்று கூறி பிரபாவின் பதிலை எதிர்பாராது அலைபேசியை அணைத்த ஆதியை கண்டு “போச்சு, கேள்விக்கு பொறந்தவரு மாதிரியே படுத்துவாரே” என்று ஊரில் உள்ள அத்தனை பெரிய பெரிய கம்பெணியில் வந்த ஆஃபரை எல்லாம் விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்த தன் மடத்தனத்தை மெச்சியபடி


“எக்ஸ்யூஸ்மி சார்” என்று ஆதியின் அறையை அடைந்தான் பிரபா. “யா மிஸ்டர் பிரபா, ப்ளீஸ் பீ சீட்டட்” என்றவுடன் “இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல” என்று நினைத்தபடி “தாங்கயூ சார்” என்று அமர்ந்தான். முன் பின் அறியாதவர்களின் முகத்தில் விழும் சிறு மாற்றத்தை வைத்தே அவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்பவன் தன் கீழ் இரண்டு ஆண்டிற்கும் மேல், முக்கிய பணியில் வேலை செய்யும் பிரபாவை கண்டு கொள்ள இயலாதவனா இந்த ஆதி.


“தன்னை கண்டிப்பாக மனதில் வருத்தெடுப்பான் இந்த பிரபா” என்று எண்ணியபடி எதிரில் அமர்ந்திருந்தவனின் எண்ணத்தை பொய்யாக்காமல் தன் கேள்விகளை தொடங்கினான்.


பிரபாவின் பதிலில் திருப்தி பெற்றவனாக அவனை வெளியில் அனுப்பி வைத்தான். பின் வேலையில் சேர்ந்தவர்களுக்கு நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது.


முதல் நாள் என்பதால் ஏழு மணி அளவில் கிளம்பினர். தங்கள் ப்ளாட்டை நோக்கி வண்டியில் செல்லும் போது யாழினியின் பொலம்பலில் ஏற்கனவே இருந்த கடுப்பில் இதுவும் சேர ஏகத்துக்கும் கடுப்பானால் தீக்ஷா. “ஹேய் பேசாம வர போறியா என்னடி, சும்மா நய்ய நய்யனுட்டு” என்று எரிந்தாள்.



பின்னே காலையில் இருந்து இப்போ வர பிரபா புராணம் பாடினால்? “அவரோட கலருக்கு அந்த கருப்பு சர்ட் செம்ம மேட்ச்சிங்ல, அவரோட பேசுற ஸ்டைல், தலைய கோதுற மேனரிசம், அந்த ஸ்மைல் செம்ம க்யூட்ல” என்று விடாது அளந்தால் எவ்வளவு நேரம் தான் பொறுப்பாள். சட்டென்று வாயை மூடியவள் வீடு வந்து சேரும் வரை வாய் திறக்கவில்லை, தீக்ஷாவும் தன் எண்ணத்தில் இருந்ததால் எதுவும் அடுத்து கேட்கவும் இல்லை.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரான் மலை :


“என்ன வைஷூ பண்றாங்க எல்லாரும் இன்னும், நம்ம இங்க வந்து பதினைந்து நிமிஷத்துக்கும் மேல ஆச்சு” என எரிச்சலுடன் மலை ஏறும் பாதையின் தொடக்கத்தில் உள்ள சிறு பாறையில் இடது காலை மடக்கி வலது காலை நீட்டியபடி அமர்ந்தான் தரஷன்.


தர்ஷனை விட சிறுதே தள்ளி நின்ற வைஷூ, ஷாலினியின் காதில் “தர்ஷன் அண்ணாக்கு இவன பார்த்தாலே பிடிக்காது, இப்ப நம்ம கூட இவன் வரலைனு யாரு அழுதா, இப்ப இவரு ஏகத்துக்கும் கடுப்புல இருக்காரு” என்று சொன்னாள்.


“ஆமா வைஷூ, அத்தான் எதுக்கு இவ்வளவு கடுப்பாகுறாங்க, கீழ

உங்க சின்ன அண்ணா வந்தா அத்தான்க்கு என்ன, நமக்கு பிடிக்கலனு தள்ளி வந்துட்டோம்ல அப்பறமும் என்ன இவ்வளவு எரிச்சல்” என்று வைஷூவிடம் விட கேட்டாள்.


தர்ஷன் காதிலும் அது தெளிவாகவே விழுந்தது. “வைஷூ கீழ விஷ்வா கிட்ட அவனோட பேக்ல வைக்க சொல்லி வாட்டர் பாட்டில குடுத்தேன். அவனும் மேல வர மாட்டேங்குறான். நீ போய்டு வாங்கிட்டு வர்றியா” என்று ஷாலுவை கண் ஜாடை காட்டி சொன்னான்.


அண்ணணின் சம்பாஷனையை புரிந்தவள் கீழே செல்ல முற்படுகையில் “இரு வைஷூ நா போய் எடுத்துட்டு வரேன், இல்லனா நானும் வரேன்” என்றவாறு வைஷூவின் கைப்பிடித்து இழுத்தாள்.


“இவ ஒருத்தி, என் அண்ணாவே இவக்கிட்ட ஐஞ்சு நிமிஷம் நாலும் பேசலாம்னு என்னய கழட்டி விடுறாரு, இவ அது புரியாம” என்று நினைத்தவாறு “இல்ல ஷாலு, நீ இரு இதோ வரேன்” என்று வைஷூ ஒடி விட்டாள். தர்ஷன் ஷாலினி மட்டுமே தனித்து இருக்க,தான் விரும்பும் அத்தான் தான் என்றாலும் பல வருடங்கள் நேரில் பார்த்து பேசாது இருந்ததாலும், இன்னும் அவன் தன்னை விரும்புகிறானா என்றும் தெரியாமல் இருப்பதாலும், ஒரு வித சங்கடத்துடன் தன் மொபைலில் ஒரு கண்ணும், நடைபாதையில் மற்றொரு கண்ணுமாக இருந்தாள்.


நிமிர்ந்து ஷாலுவை பார்த்தவன் சிறு சிரிப்புடன் “போன்ல இருக்க செட்டிங்ஸ எல்லாம் பார்த்தது போதும், வந்து உட்காரு” என்று அமர்ந்த வாக்கில் ஒரே எட்டில் ஷாலுவின் கை பற்றி இழுத்து தான் அமர்ந்திருந்த சிறு பாறையில் சற்று நகன்று அமர செய்தான்.


திடீரென இவ்வாறு செய்வான் என்று எதிர்பார்க்காது சற்று அவனை உரசியபடி அமர்ந்தவள் பின் தன்னை சரி செய்து பாறையின் ஓரத்தில் சிறு இடைவெளியுடன் அமர்ந்தாள். “என்ன அத்தான் இது, கீழ விழுந்திருப்பேன். சும்மா சொன்னா நானே உட்கார்ந்திருப்பேன்லய என்று சிணுங்கியபடி சொன்னால்.


“ஏது, நா சொன்னோனே மேடம் உட்கார்ந்து இருப்பீங்க என் பக்கத்தில இப்ப மாதிரி நெருக்கமா” என்று தனக்கும் அவளுக்குமான சிறு இடைவெளியை குறிப்பிட்டான்.


“அது வந்து…” என்று இருந்தவளை “அது பாட்டுக்க வந்துட்டு போகட்டும், நீ கீழ விழுந்து வச்சுக்காத தள்ளி வந்து உட்காரு” என அவளை தன் புறமாக இழுத்தான். அவனுடன் சற்று நெருங்கி அமர்ந்தவளிற்கு ஒரு வித சங்கடமாக இருந்ததால் நெளிந்து கொண்டு இருந்தாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைபற்றி தன் அருகே அமர்த்தி கொண்ட பின்பும் கையை விட மனமில்லாது அமர்ந்திருந்தான். “அடேய், அவள நீ பிடிச்சு இழுத்தோனே உன் மேல வந்து விழுவாளா டா” என்று சலித்துக் கொண்டவனை பார்த்து அவன் மனசாட்சி கேட்டது.

“ஹான் அதான் நான் லவ் பண்றேன்ல”

“அத அவ கிட்ட சொன்னியா… ???”

“அவளும் தான் என்னய லவ் பண்றால, அப்பறம் என்னவாம்”

“அத அவ உன்கிட்ட வந்து சொன்னாளா???? “

“அதான் அவ பார்க்குற பார்வைல தெரியுதே”

“உன் லவ்வ முதல்ல சொல்லிட்டு ,அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிட்டு அப்பறம் இந்த எதிர்பார்ப்ப வச்சுக்கோ ராசா”

“சரி வைஷூ கிட்ட சொல்றேன்…”

“என்னத்த சொல்ல போற..?? “

“ஹான் நா லவ் பண்றத..”

“அடேய் அத அவகிட்ட சொல்லி என்னடா பண்ண போற?? “ என்று அலறியது மனசாட்சி.

“வைஷூ கிட்ட சொல்லி இவ என்னய லவ் பண்றாலானு கேட்டு சொல்ல சொல்லி கேட்க போறேன்”

“அத இவகிட்டையே கேளுடா”

“இவ ஒழுங்கா பதில் சொல்ல மாட்டாளே நா கேட்டா..”

“அப்ப எல்லாத்தையும் உன் தங்கச்சிட்ட கேட்டு கேட்டு இவ மனச தெரிஞ்சுக்க போறீயாக்கும் விளங்கிடும்” என்று ஏகத்துக்கும் காரி துப்பியது அவன் மனசாட்சி.

“இல்ல இல்ல, அதுக்கு இவகிட்ட நேராவே கேட்டுக்கிறேன்”

“உனக்கு மனசாட்சியா இருக்குறதுக்கு… .எங்கயாச்சும் போயி முட்டிக்களாம்” என்று மனசாட்சி அடங்கியது..

இவன் யோசித்து ஒரு வழியாக பேச தொடங்கும் போதே “அண்ணா ரொம்ப நேரம் ஆகிடுச்சா இந்தாங்க வாட்டர் கேன்” என்று வந்து நின்ற தன் தங்கையை முறைக்க இயலாது சிரித்தபடி வாங்கினான்.

“நீ யோசிச்சுட்டே இருந்தா இப்டி தான்” என்றது மறுபடியும் அவன் மனசாட்சி.

வைஷூ வந்தவுடன் தர்ஷனின் நெருக்கத்தில் தான் அமர்ந்திருந்த விதம் புரிய வேகமாக எழுந்து நின்றாள் ஷாலு. தான் தர்ஷனை விரும்புவது வைஷூவிடம் இது வரை சொல்லவே இல்லை. முதலில் தன் அத்தான் மனம் அறிந்த பின் சொல்லலாம் என்று விட்டாள்.

ஆனால் தர்ஷன் இவளை விரும்புவது தெரிந்ததும் மட்டும் அல்லாமல் ஷாலுவின் போட்டோஸையும் வைஷூ தான் தர்ஷனிற்கு வினியோகம் செய்கிறாள் என்றும், ஷாலு இங்கு திருவிழாவிற்கு தற்பொழுது வந்திருக்கிறாள் என்று தகவல் சொன்னதையும், ஷாலுவை பார்ப்பதற்காகவே தர்ஷன் இப்பொழுது எல்லா முக்கியமான வேலைகளை தள்ளி வைத்து விட்டு வந்திருப்பதும் ஷாலினிக்கு தெரிய வாய்ப்பு இல்லையே.


அனைவரும் வரவும் வைஷூ தன் அம்மா தூக்கி கொண்டு வந்த பையை அவரிற்கு உதவும் எண்ணத்தில் கலையரசியுடன் சென்றாள்.

அவர்களை தொடர்ந்து அனைவரும் செல்ல இறுதியாக ஷாலினி தர்ஷன் பேசியபடி நடக்க துவங்கினர். மலை ஏறுவதற்கான பாதை என்பதால் பெரிய மரத்தின் வேர்களும், சிறு சிறு இருப்பதால் தர்ஷன் பேச்சில் கவனமாக இருந்ததால் சிறு பாறை போன்ற கல்லை கவனிக்காது தன் வலது புறம் நடந்து வந்த இடறி விழ இருந்தவளை தன் வலக்கரம் கொண்டு அவளின் இடது முழங்கையின் மேல் சட்டென்று பிடித்த விழாமல் நிறுத்தினான்.

அதன் பின் அவளின் விரல்களில் தன் விரல்களை போர்த்து கொண்டவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் பார்வையை புரிந்து கொண்டவன் “மேல ஏறும் போது இதே மாதிரி நிறையா சறுக்கல் இருக்கும்,என் கைய பிடிச்சுக்கோ, பேலன்ஸ் கிடைக்கும்” என இயல்பாக அவளின் கையை விடாது நடக்க தொடங்கினான்.

முன்னால் சென்று கொண்டு இருந்த ராஜசேகரின் தம்பி மகன் விக்ரம் இவர்களின் நெருக்கத்தை பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டு திரும்பி பார்த்து நடந்தான்.

அவனின் பார்வையை பார்த்து ஷாலினி என்ன நினைத்தாளோ ஏற்கனவே தர்ஷனை தன் இடதுபுற தோள்பட்டை அடிக்கடி சிறிது உரசும் நெருக்கத்தில் நடந்தவள் தான் காதலிப்பற்க்கு முன்னால் இருந்தே தன் அத்தை மகன் தான் என்ற நினைப்பில் மேலும் தர்ஷனை உரசியபடி நடக்க தொடங்கினாள். அவளின் எண்ணத்தை புரிந்தவன் போல் தர்ஷனும் பிடித்து இருந்த அவளின் கையில் அழுத்தத்தை கூட்டி மலை மேல் முன்னேறினான்.


இதே விக்ரம் ஒரு நாள் செய்ய போகும் காரியத்தினால் முற்றிலுமாக ஷாலுவை இழக்க நேரம் வரும் என்று கனவிலும் எதிர்பார்த்து இருக்க மாட்டான்…

பின்னால் நடக்க இருக்கும் நன்மை அல்லது தீமையோ மனிதர்கள் முன்னதாகவே அறிந்து கொண்டால் வாழ்வின் சுவாரசியம் கெட்டு விடும் என்பது கடவுளின் எண்ணமோ ?????


“அளவு கடந்த கஷ்டத்தை அடைந்திருக்கிறோம் அல்லது அடைய போகிறோம் என்று வருந்துவதை விட்டு, வரப்போகும் சந்தோஷத்தை ஏற்று கொள்ள தயாராக வேண்டும்”


பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்டஸ்,

அடுத்த அப்டேட் போட வந்துட்டேன். படிச்சுட்டு கமெண்ட்ஸ் ப்ளீஸ். நிறை குறைகளையும் பதிவு செய்யுங்கள்.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கருத்துத் திரி

இப்படிக்கு அன்புடன் உங்கள் ReY babyma 😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 11 :


முதல் நாள் என்பதால் ஏழு மணியளவிலே கிளம்பி அடுத்த பதினைந்து நிமிடங்களில் தங்கள் ப்ளாடினை அடைந்தனர். தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உடைக்கு மாறியவர்கள் ஹாலின் சோஃபாவில் அமர்ந்தவர்கள் காபி குடித்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

யாழினியின் அலைபேசியில் அழைப்பு வருவதற்கான ஒலியில் தங்கள் பேச்சினை நிறுத்திவிட்டு திரையில் மிளிர்ந்த பெயரினை கண்டதும் கோபம் பொங்க அதை அணைத்தாள். மீண்டும் இரு முறை அழைப்பு வந்ததினால் எடுத்து காதில் வைத்தவள் “ஹலோ யாரு வேணும, அதான் கட் பண்றேன் தெரியுதுல்ல, அப்பறமும் ஏன் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க” என பொரிய ஆரம்பித்தவளை கண்டதும் மறுமுனையில் “போச்சு இன்னைக்கு செம ஃபார்மல இருக்கா போல, இவள தாஜா பண்ணவே நான் தலையால தண்ணி குடிக்கனும், இதுல அந்த வானரகத்த வேற சமாளிக்கனுமே,அதுக்கு என்ன பண்ண போறேனோ” என்று மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நினைத்து வாய் விட்டு சொல்லி தன் தலையில கை வைத்து உட்கார்ந்து விட்டான் தருண்.

“கோபமா இருக்கியா யாழி, ஆனா கோபத்தில உன் மூஞ்சிய பார்க்க சகிக்காதே செல்லக்குட்டி” என சந்தானம் பாணியில் பேசியவனை “அடேய் கையில்ல நீ மட்டும் சிக்குன கைமா தான் பார்த்துக்க, செம்ம கடுப்புல இருக்கேன் ஓடிப் போய்டு, உனக்கு எங்கள விட உன்னோட பெர்சனல் தான முக்கியம்??“ எண்றவளிடம் “ஹேய் நிஜமாவே சாரிடா, அன்னைக்கு ரொம்ப முக்கியமான வொர்க் இருந்துச்சு, இல்லனா நீங்க சொல்லி கேட்காம இருப்பேனா, அதுக்காக இப்படியா ரொம்ப பாசமா பேசுறது, இவ்வளவு பாசத்தை பொலிஞ்சா சின்ன பாடிமா தாங்காது” கெஞ்சல் போல் பேசியனை கண்டு இன்னும் கடுப்பானவள்

“உனக்கு நான் எல்லாம் சரி வர மாட்டேன், இரு இரு அவகிட்டயே குடுக்குறேன்” என்று தன் அலைபேசியை தோழியிடம் நீட்டினாள். “நா யார்கிட்டயும் பேசுறதா இல்லடி, நம்மள விட முக்கியமான விஷயம் அவங்களுக்கு எவ்வளவோ இருக்கலாம், நாம வேற எதுக்குடி அவங்க டைம்ம வேஸ்ட் பண்ணிட்டு” என்றாலும் அலைபேசியை காதில் வைத்திருந்தாள்.

“ம்க்கும், அவளாச்சும் போனை வாங்கி காதுல வச்சுட்டு சண்டையாதும் போட்டா, இவ நம்ம தானு தெரிஞ்சும் போனை வாங்க கூட மாட்டிக்கிறாளே,வந்து சேருதுங்க பாரு நமக்குனு” என சத்தமாகவே நொந்து கொண்டான்.

“என்னடா, ரொம்ப சலிச்சுக்கிற, பேசலான நிம்மதியா இருக்கலாம்னு எண்ணமோ, அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல ராசா” என்று தீக்ஷா ஆரம்பித்தாள்.

“என்ன டார்லிங் ரொம்ப கோபம் போல, அதான் பாசமா பேசுறியா, சரி பரவாயில்லை. டூருக்கு வரலனு தான இப்ப போபம், நான் சொல்றதை கேட்டுட்டு அப்பறம் கோபம் படு” என்றான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“நீங்க ட்ரிப் போட்டப்போ என்கிட்ட வர்றியா ப்ரியானு கேட்டப்போ நா மெடிக்கல் கேம்ப்ல இருந்தேன். நீங்க டூர் ப்ளான் பண்ணிய முதல் நாள் தான் எங்க கேம்ப் முடியும் நாள் தான் அதான் நானும், ரேஷ்மாவும் சரினு சொன்னோம். பட் அங்க இருந்தப்போ தான் கேம்ப எக்ஸ்டர்ன் பண்ணோம் எங்க மேனேஜ்மென்ட் கிட்ட பேசி.

அந்த கிராமத்துல இருக்கிறவங்க எல்லாரும் அவங்க ஹெல்த் பத்தின கவலை இல்லாம இருக்காங்க, அப்படியே உடம்புல ஏதோ பிரச்சனைனு தெரிஞ்சாலும் அதை ஹாஸ்பிடல் போய் பார்க்குற வசதி இல்ல, அப்படி எல்லாரையும் செக் பண்ணப்போ தான் நாங்க அங்க தங்கி விழிப்புணர்வு குடுத்துட்டு, எங்களால முடிஞ்ச வரைக்கும் ஹெல்ப பண்ணிட்டு டுடே மார்னிங் தான் ரீச் ஆனேன்.அதான் நீங்க ஆஃபிஸ்ல இருந்து வரட்டும்னு வெய்ட் செய்துட்டு இப்ப கால் பண்ணேன்”.

தன்நிலை விளக்கம் அளித்த தன் நண்பனை அதற்கும் மேல் கோபம் படாது “சரி விடு, பிழைத்துக் கொள்” என்று விட்டு “உன் லவ்வர பத்தி கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்கிற,சொல்றதுக்கு இஷ்டம் இல்லையா, இல்ல இவளுங்க கிட்ட எல்லாம் எதுக்கு சொல்லிட்டுனு நல்ல எண்ணமா?” என்று அடுத்த கட்ட சண்டைக்கும், தருணின் நிலையை கவலைக்கிடங்கமாக மாற்றுவதற்கும் தயாராகினாள்.

தருண் பேச வாய் திறப்பதற்குள் அவ்வளவு சீக்கிரம் உனக்கு பேச வாய்ப்பு குடுத்திடுவேனா என்ன என்ற எண்ணத்தில் “இப்ப என்ன சொல்ல போற, உங்ககிட்ட சொல்லாமல் எங்க போக போறேன், நீங்க இரண்டு பேரும் மற்றவங்க மாதிரி போற போக்குல சொல்ல எனக்கு விருப்பம் இல்ல, அவளுக்கும் தான். இப்படி ஏதாவது சொல்லி மொக்க போடுவ, அதான??? “ என்று கேட்டு முடித்தாள்.

இந்த தடவை மெல்லிய குரலில் புலம்பாது தன் போனை காதில் இருந்து சற்று தள்ளி பிடித்து “ஆனாலும் என் சாபம் உங்க இரண்டு பேரையும் சும்மா விடாதுடி, கேள்வியும் நீங்களே கேட்டுட்டு, பதிலும் நீங்களே சொல்லிட்டு, என்னய எப்ப பாரு கிறுக்கு பிடிக்க வைச்சிட்டு, எனக்கும் நேரம் வரும், பார்த்துக்கிறேன்” என மேலும் சில அட்சதைகளை தன் தோழிகளின் மேல் தெளித்து,தான் ஒரு மருத்துவ மாணவன் என்பதை மறந்து ஏக போக வார்த்தைகளால் திட்டி போனை அணைத்தான். தன் நண்பனின் மனநிலை அறிந்து சிரித்தனர் இரு தோழிகளும்.

சிறிது நேரத்தில் இருவரும் தங்கள் இரவு உணவினை முடித்து விட்டு, வீட்டில் சிறிது மணி நேரம் பேசியும் பொழுதை கடத்தியவர்கள் தூங்க சென்றனர்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரான் மலை :

தர்ஷனின் கரம் பற்றிபடி நடந்து கொண்டிருந்தவள் அவ்வப்பொழுது தன் மேல் விழும் விக்ரமின் பார்வையை கண்டவள் தர்ஷனை மேலும் ஒன்றியபடி நடந்து தனக்கே தெரியாமல் தன்னை இக்கட்டான சூழ்நிலைக்கு செல்வதற்கு வழி வகுத்தாள் ஷாலினி.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தவர்கள் கோயிலின் முன் சிறு மண்டபம் போல் இருந்த கட்டிடத்தில் தங்கள் பொருட்களை வைத்தவர்கள் சாமி கும்பிட சென்றனர்.

இவர்களை தவிர்த்தும் வேறு மூன்று குடும்பங்களும் தங்களின் நேர்த்திகடன் செலுத்துவதற்காக வந்திருந்தனர்.

பின் கலையரசி, விக்ரமின் அம்மா, மற்றும் மற்ற மூன்று குடும்பத்து பெண்களும் சேர்ந்து பேசியபடி பொங்கல் வைக்கவும், சாமிக்கு அலங்காரம் செய்யும் பொழுது கோயில் பூசாரி கேட்கும் உதவிகளையும் செய்ய வண்ணம் இருந்தனர்.

ஆண்கள் அனைவரும் கோயிலை விட்டு சற்று பத்தே அடிகள் தள்ளி இருந்தவாறு அமர்ந்து தங்கள் குடும்பம், தொழில்,என பேசிக் கொண்டிருந்தனர்.

விகரம் யாருடனும் சேர்ந்திடாது ஒரு மரத்தின் மேல் சாந்ந்து நின்றபடி தன் அலைபேசியில் நுழைந்து கொண்டான்.

தர்ஷன், விஷ்ணு, ஷாலினி, வைஷூ என நான்கு பேரும் மலையின் உச்சியில் இருந்து சில அடிகளே கீழே அமைந்துள்ள கோயிலை சற்றிலும் அடர்ந்த மரங்களும், பாறைகளும், கோயிலின் முன் வாசலின் நேர் எதிரில் அமைந்துள்ள குளம் வரும் பொழுதே கண்ணை கவர்ந்திழுக்க அதை சுற்றி பார்க்கும் ஆவலுடன் கிளம்பிவிட்டனர்.

“ஹேய் பார்த்து தர்ஷன், அவ்வளவா ஆள் நடமாட்டம் இருக்காது, பத்திரமா போங்க, ரொம்ப தூரம் மலையில மேல ஏறிடாதீங்க” என கலையரசியின் கூற்றிக்கு, “அம்மா, யாருக்கிட்ட பத்திரம் அப்படி இப்படி சொல்லிட்டு இருக்கீங்க, ஐயா பெரிய பிஸ்னஸ்மேன், என்ன பார்த்து இந்த மாதிரி பொடிசு கிட்ட சொல்ல வேண்டியது எல்லாம் சொல்றீங்க” என்று விஷ்ணுவை கை காட்டினான் தர்ஷன்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“அத்தான், உங்கள பெரிய பிஸ்னஸ் மேக்னட், பார்த்தாலே எல்லாரும் நடுங்குவாங்க, இப்படி இன்னும் எக்ஸ்ட்ரா பிட் வேணா விட்டுக்கோங்க, நானும் சேர்ந்து வேணும்னா கரகோஷம் எழுப்புறேன், அதுக்கு ஐயாவோட இமேஜ பொடிசுனு சொல்லி டேமேஜ் பண்ணாதீங்க” என ஹீரோ ரேன்ஜிற்கு மொழிந்து நடக்க துவங்கினான் விஷ்ணு.

“அடேய் காலேஜ் போய்டு ஒரு வருஷம் முழுதா இன்னும் முடிக்கல, அதுக்குள்ள நீ என்னவோ ஹீரோ மாதிரி பேசுற, போடா அரட்டை, என்ன மாதிரி முடியுமா என்ன, நான் எல்லாம் காலேஜ் சேர்ந்த ஒன் மன்த்ல அவ்வளவு ப்ரபோசல்,என்கிட்டயேவா ?” என தர்ஷனும், விஷ்ணுவும் பெரிய பெரிய பில்டப் எல்லாம் செய்தும், ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டும் நடந்தனர். தர்ஷன், வைஷூ சேர்ந்து விஷ்ணு, ஷாலினியை தாக்கியும், இவர்கள் இருவரும் இணைந்து தர்ஷன், வைஷூவை தாக்கியபடியும் சென்றனர்.

இயல்பிலே நான்கு பேரும் கலகலப்பானவர்கள் என்பதாலும் நேரம் சென்றதே தெரியாதவாறு வித வித போஸ்களில் செல்பி எடுப்பதும் என இருந்தது.

சிறிது நேரத்தில் “அப்பாடி என்னால இதுக்கு மேல நடக்க முடியல, நீங்க வேணா போய்ட்டு வாங்க, நான் கொஞ்ச நேரத்தில வந்து ஜாய்ன் பண்றேன்” என ஷாலினி ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து விட்டாள்.

“ம்க்கும், என்னடா இந்த நோஞ்சான் இவ்வளவு தூரம் ஒழுங்கா நடந்து வருதேனு நினைச்சேன், அதுக்குள்ள உட்கார்ந்திடுச்சு” என்றான் விஷ்ணு.

“அட போடா உன்கிட்ட பேச எனக்கு இப்ப எனர்ஜி இல்லை என்றாள் ஷாலினி.”சரி போ, நான் முன்னால நடக்குறேன், வைஷூ நீ வர்றியா இல்ல எப்படி” என்றவுடன் தன் அண்ணன் தர்ஷனை பார்த்தாள் வைஷ்ணவி.

தங்கையின் பார்வையை உணர்ந்தவன் போ என்பது போல் தலையை சிறுதே அசைத்தான். வைஷ்ணவியும் தன் தம்பி விஷ்ணுவுடன் இணைந்து நடக்க துவக்கினாள்.

ஷாலினி அமர்ந்திருந்த மரத்தின் மேல் வலது காலினை தலையில் அழுந்த பதித்து, இடது காலினை மரத்தில் பதித்து, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு ஷாலினியை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன், தங்களை சுற்றிலும் பார்வையிட்டு தன் முதல் கேள்வியில் ஷாலினியின் மனதினை அறிய முற்பட்டான். தர்ஷனின் இந்த நேரடி கேள்வியில் சடாரென கண்களில் நீர் கோர்க்க நிமிர்ந்து கலக்கத்துடன் தர்ஷனை பார்த்தாள் ஷாலினி.


“புரிந்து கொள்ளப்படாததை விட வேதனையானது, தவறாக புரிந்து கொள்வது”

பூக்கும்.
 
Status
Not open for further replies.
Top