All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

வாழ்த்துக்கள் நயனிமா உங்கள் படைப்பு புத்தக வடிவில் வெளியிட்டமைக்கு. அபயன் , மிளிர் கதையை உயிரோட்டமாக படைத்து எங்களை போன்ற இளம் வாசகிகளின் 😁😁 தூக்கத்தை கெடுத்ததற்கு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் அபயனை ரொம்ப கஸ்டப்படுத்திவிட்டிர்கள் . அது மனசுக்கு கஸ்டமாக இருந்தது. மிரு அபயனை புரிந்து அவனிடம் வந்து சேர்ந்தது அருமை . குட்டீஸ் சான்சே இல்லை குறும்புக்கு. கடைசி எபியில் இன்னும் கொஞ்சம் ரொமான்ச எதிர்பார்தேன்😙😍. அதை இரண்டாம் பாகத்தில் தீர்ப்பீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்கள் கதை வேட்டை தொடர வாழ்த்துக்கள்.😗😙😘
 

sivanayani

விஜயமலர்
ஹாய் விஜி,
உண்மையில் சொல்லவேண்டும் என்றால் இந்த கதையை fb ல ஒரு போஸ்ட் பாத்து தான் படிக்க வந்தேன். வந்து பார்த்தால் கதைக்கு லைக்ஸ் எகிறி இருக்கிறது. சரி நாமும் படிப்போமே என்று தான் படிக்க ஆரம்பித்தேன்.
To be frank எனக்கு முதலில் விதுலனை பிடிக்கலை. தன் தமக்கைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு பழிவாங்க என்றாலும் இவன் எப்படி இன்னொரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வை தன் கையில் எடுக்கலாம் என்று ஏகப்பட்ட கோபம் அவன் மீது எனக்கு. ஆனால் பதிவுகள் போகப்போக அவன் உணர்வுகளோடு ஒன்ற வைத்துவிட்டீர்கள் என்னை. 11 வயதிலேயே தனது தமக்கையை காணக்கூடாத கோலத்தில் கண்டு மறத்துப்போன இதயத்துக்கு சொந்தக்காரனான அவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

தன் காதலா? இல்லை தன் அக்காவிற்கு நியாயம் செய்வதற்காக தான் தேர்ந்தெடுத்திருந்த வழியா என்று வரும்போது தமக்கைக்காக தன்னவளை கொல்லாமல் கொன்று புதைத்து விட்டு அதற்கு தண்டனையாக அவன் தணல் படுக்கையில் எல்லாம் படுத்து முதுகில் தொடு உணர்ச்சியே இல்லாமல் போகுமளவிற்கு தீகாயம் ஏற்படுவத்துவதெல்லாம்...ஹயோ! நினைத்தாலே பதறுது...

தன் தாயாக நிலவை வரித்துக்கொண்டு அதனிடம் அபயன் கதறும் காட்சி கண்ணீர் வரவழைத்தது சகோ...

"கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா..." இந்த கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் கிடையாது. அவ்வளவு அழகாக கதையோடு பொருந்துது தலைப்பு. இதுவே முதலில் உங்களோட வெற்றி சகோ...

அடுத்து அபயன் மாதிரி ஹீரோவையும் எங்க மனதில் நிக்க வச்சீங்க. அது உங்களோட எழுத்துக்கு கிடைத்த வெற்றி சகோ...

மிளிர் கதாபாத்திரம் கதை முழுவதும் அழகாக மிளிர்கின்றது சகோ. 18 வயதிலேயே இவன்தான் உனக்கு வரப்போகிற கணவன் என்று போட்டோவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து அவன் மேல் மையல் கொண்ட , தன் இராமனே இராவணாக மாறுவான் என்று கொஞ்சமும் எண்ணாத பேதைப் பெண். பின்னாளில் விதுலன் உண்மையான நேசம் காட்டும் போது கூட அதை உண்மை என்று நம்ப முடியாமல் தவித்த ஏந்திழை அவள்.

காந்திமதி ...அன்பின் உறைவிடம்...
இந்த அம்மாவிற்கு இப்படி ஒன்று நடந்திருக்க வேண்டாம்...வாழ்க்கை அவரை வஞ்சித்திருந்தாலும் அபயன் என்ற உடன்பிறந்தானின் ஒட்டுமொத்த பாசத்திற்கும் சொந்தமான அதிஷ்டசாலி அக்கா...
மிளிர் யார் என்று தெரிந்தும் அவளை மனதார மகளாக ஏற்றுக்கொண்ட பாசத்தின் உறைவிடம்.

ஆத்விகன், சாத்வீகனின் பேச்சு நமக்கும் கற்கண்டாய் இனித்தது.

கதையின் முடிவும் இயல்பாக இருந்தது. கண்டிப்பாக தனது கூட்டுக்குள் இருந்து வெளிவந்து மிளிர் தன்னவனின் காதலை உணர்ந்து கொள்ளும் நாளும் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளும்...
வாவ்.. என்ன சொல்லன்னு தெரியல. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுவிதா. ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் வெகுமதி உங்களை போன்ற வாசகர்களின் தரும் கருத்தில்தான் இருக்கிறது. இன்று அதை பரிபூரணமாக உணர்ந்து விட்டேன். இதோ உங்களை போன்ற வாசகர்கள் தந்த ஊக்கம்தான், இந்தளவு இந்த கதை சிறந்து வரேக்க காரணம். மிக மிக மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. இதற்க்கு நன்றியை தவிர வேற என்ன சொல்ரதுன்னும் புரியல. I am blessed and honoured. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஓ போடுங்க!!!
உங்களுக்காக உயிரையே கொடுப்பேன், ஆப்டர்ஆல் 70 எபிதான எழுதிட்டு வரேனு சபதம் ஏற்றிருக்கும் இளவரசிக்கு
ஓ போடுங்க!!!
haa haa yov naa ennkayaa appudi sonnen.. neenka vera kummi adikkatheenka. naanka bestttu prendu yaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
காமுகன் ஒருவனின் கயமை தனத்தால் விளையும் விளைவே கதை தளம்...சிதைந்த சீரற்ற நிலத்தை சிறந்த அறுவடையாக செய்ய முடியுமா... முடியும் என்று காட்டி தன் எழுத்தால் வாசகர்களின் இதயங்களையையே வெற்றிக்கு பரிசாய் தட்டி சென்றிருக்கிறார்.. ...நம் அன்பையே அருவடை செய்து....நமது அபயனின் மிளிரின் பிரம்மா....நம் இதயம் கவர்ந்த செல்ல மாமி...நயனிமா......😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💝💝💝💝💞💞💞💞💞💞💖💖💖💖💖

அன்னையாய் வளர்த்த தன் தமக்கையின் கதறலுக்கு.... தன் கண் முன்னே நடந்த உயிரை உறைய வைக்கும் கொடுங்கோலனின் கோர தாண்டவதத்துக்கும்.....அதன் பிறகு அவள் மீளா துயரில் மாளாது உழன்றதுக்கும் ....அதனால் அவனது வாழ்க்கை சொல்ல முடியாத அவலத்துக்கு ஆளானதுக்கும்...சிறிய வயதில் வன்மமாய் வஞ்சினமாய் வளர்த்தது...பருவ வயதில் அவனை வதைக்க அவனைப்போலவே பலி எடுத்து பழி தீர்க்க புறப்படுகிறான்...

காதல் என்ற போர்வைக்கு பின்னால் ஒளிந்து தன் இச்சையை நிறைவேற்ற கல்யாணம் என்ற புனித பந்தத்தை கையில் ஏந்துகிறான் கிராதகன்...

கல்யாண முடிந்த அன்றே அவன் வேஷம் கலைகிறது ...அவன் வைத்திருந்த துருப்பு சீட்டினால்.... பெண்ணவள் கணவனே ஆனாலும் துரோகியானவனை தூர நிறுத்துகிறாள்... விளைவு கொடுர மிருகத்தினும் கேடாய் தன் குருர அரங்கற்றத்தினை நிகழ்த்தி விட்டு சென்றுவிடுகிறான்...

ஆனால் காத்திருந்து பழியெடுக்க வந்தவனோ கன்னியவளை கண்டவுடன் காதலில் விழுகிறான்...

நெருப்பாய் தகித்த நினைவுகலையெல்லாம் நெய் ஊற்றி வளர்த்து தன் நினைவு கொன்று அவளை உயிரை கொன்று புதைத்து தன்னுடைய வித்தை விதைத்து விட்டு சென்றுவிடுகிறான் ....

எல்லோருக்கும் விடிந்த பொழுது அவளுக்கு மட்டும் விடியா பொழுதாய் விடிந்தது.....
தன் தந்தையின் வாயிலாக தன்னிலையின் காரணத்தையறிந்து இடி விழுந்தது...உயிர் கொடுத்தவனும் பொய்த்தான்....உயிரில் கலந்தவனும் பொய்த்தான்...

காலம் யாருக்கும் காத்திருக்காது.....புது புது அனுபவங்களோடு புதிய விடியல்கல்களோடும்....அவளுக்கும் விடிந்தது....ஆரா ரணங்களால் உண்டான குருத்துக்கள் தான்....ஆனால் அவள் காயத்துக்கு மருந்தானது...
அப்படியே சென்று விட்டால் வாழ்க்கையென்னும் ஆசானுக்கு மதிப்பேது....

விதி சிரித்து விளையாடியது...

இனிமேல் வாழ்க்கையில் யாரை இனி காணக்கூடாது என்று வைராக்கியத்தில் வாழ்ந்தாலே....சசகலமுமாக யாரை நினைத்து தன்னை அர்பணித்தாலே சறுகாய் அவள் வாழ்க்கையை மாற்றிவிட்டு மறைந்தானே.....
அவனே எதிரில் நின்றான்.....

நித்தம் நித்தம் நிம்மதி இழந்து.....பாவம் செய்யாமலே பாவத்துக்கு சம்பளாமாக்ககப்பட்டாலோ அவனே நின்றான்...அதே கம்பிரத்துடன்....

ஆவி கொன்றவனின் அண்மையே அவளை பாதி தின்றதென்றால்...மீதியை குஞ்சுகளை காக்கும் பேடையாய் அவள் பயம் மென்றது...

ஆனால் சுட்டெரிக்கும் சூரியனாய் தகித்தவன்...இன்று குளிர் நிலவாய் தன் அன்பால் நிறைத்தான்...தன் உதிரம் உரு கொண்டு உலா வருவதைப் பார்த்து உள்ளம் பதைத்தான்...அவர்களை தன் உயிரில் வைத்து அவர்களது அன்பு மொழியை சுவைத்தான்...

காயம் பட்ட இதயம் ...சூடு கண்ட பூனை..நம்பி ஏமாந்த இதயம்...நம்ப மறுத்தது...

அவன் அன்பாய் நாடினாலும் நடிப்பாய் நினைத்தால்....அனலாய் தகித்தால்...உடலை வதைத்தவனின் உயிரை தன் கூரிய நாக்கால் வதைத்தால்....

தவறு என்று தெரிந்தே இழைத்த பாவம் மன்னிப்பு கேட்டு தவறை சரி செய்ய முடியாத பாவியாகி போனதையும் தவறுக்கு தண்டனை ஏற்க தான் தயராக இருப்பதையும் உரைத்தான் ....

தான் தவறாகி போன காரணங்கள்.... அதனால் அவன் ரணவேதனைங்கள் எடுத்துரைத்தான்....
அவளை கண்ட நொடி தான் கொண்ட காதல்...ஆனால் கடந்த கால காயத்தால் ஏற்பட்ட வடுவை ...தான் வஞ்சித்ததை ...தன் தமக்கை வதைப்பட்டதை.... தான் சிதைப்பட்டதை....நினைத்துப் வதைத்தவனுக்கு தண்டனையாக வதைத்தேன்......இன்று உன்னிடமே உன் காதலை யாசித்தேன்...என்று தன் உள்ள குமரலை எடுத்துரைத்தான்....

பட்ட பாடு பட்ட பாடு யார் பட்ட பாடு பெரிது என்று தன் வார்த்தையின் அம்புகளாக்கி அவன் மீதே பாய்ச்சினாள்...

எத்தனை அம்புகளை வீசினாலும் அத்தனையும் தாங்கினான்...அவள் அன்புக்கு மட்டுமே ஏங்கினான்...

காதலும் மோதலுமாக காலம் சென்றது..கண்ணீர் மட்டுமே மீதம் இருந்தது....ஒருவரை ஒருவர் உயிர் தேடினாலும் ...உறவாய் தேடும் சமயம் நொந்தது...
ஒருவரை ஒருவர் பிறிந்தனர்....உள்ளம் அதனால் வெந்தனர்...

விடியலை தேடி இரவு மகள் பயனபட்டால்...ஆதவன் தன் அழகான கரங்களால் அவர்களை வாரி அணைக்கவே முடிவெடுத்தான்...

புரியாத பல புதிர்கள் விடை கிடைத்தன....மௌன மொழி கொண்ட மாதா அவள் தன் மௌனம் உடைத்து.... தன் அன்பு தம்பியின் காதல் கோவிலின் பூட்டுடைத்தால்...இத்தனையும் செய்தால் அந்த அன்னை ....அபயனின் தமக்கையாகயல்ல... மிளிரின் தாயாக....


காதல் ஊற்றெடுத்த உள்ளம்.... இப்பெழுது உடைப்பெடுத்தது ....கண்டம் விட்டு கண்டம்....தன் காதலனாகிய கணவனை நோக்கி பயணத்தை ஆழிபேரலையாய் அவனை அதனுள்ளே தானும் அமிழ பயணப்பட்டாள்....

கொல்லாமல் கொன்றவளை தன் காதல் மெய் போற்றும் காதல் அல்ல ...உயிருக்குள் உயிரை வைத்து உயிராய் போற்றும் காதல் என்று சொல்லால் அல்ல செயலால் உணர்த்தி அவள் மன்னிப்பை தன். ஆழமான காதலால் அடைந்த அபயனவிதுலனின் காதலில் மிருதுவான இவள் உள்ளம் மிளிர ......நாமும் வாழ்த்தி விடைபெருவோம்!!!!!
என்ன சொல்லிப்போட்டு தமிழில் இப்படி பிச்சு உதறுறீங்களேப்பா.. அம்மாடியோவ் விமர்சனம் கூட கவிதையாய் கொஞ்சி விளையாடுகிறதே. உங்கள் விமர்சனத்தை சலிக்காமல் படித்து ரசிக்கலாம். செம செம... கிட்ட வாங்க வாசுகி. இருக்க அணைச்சு பெரிய உம்மா... வாவ்... என்ன சொல்ல உங்க கவிக்கு மட்டுமல்ல, விமர்சனத்துக்கும் நான் மிக பெரும் அடிமை பா... தலை வணங்கி நன்றி கூறுகிறேன்.. ஏற்றுக்கொள்ளுங்கள் தோழி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாழ்த்துக்கள் நயனிமா உங்கள் படைப்பு புத்தக வடிவில் வெளியிட்டமைக்கு. அபயன் , மிளிர் கதையை உயிரோட்டமாக படைத்து எங்களை போன்ற இளம் வாசகிகளின் 😁😁 தூக்கத்தை கெடுத்ததற்கு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் அபயனை ரொம்ப கஸ்டப்படுத்திவிட்டிர்கள் . அது மனசுக்கு கஸ்டமாக இருந்தது. மிரு அபயனை புரிந்து அவனிடம் வந்து சேர்ந்தது அருமை . குட்டீஸ் சான்சே இல்லை குறும்புக்கு. கடைசி எபியில் இன்னும் கொஞ்சம் ரொமான்ச எதிர்பார்தேன்😙😍. அதை இரண்டாம் பாகத்தில் தீர்ப்பீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்கள் கதை வேட்டை தொடர வாழ்த்துக்கள்.😗😙😘
Wow what a wonderful comment. Thank you so much ma. I will try my best pa. athuvum ithu pola alakaa varumaa theriyala. aana ennaala mudincha varai muyarchikkiren. ok vaa. :love::love::love::love:
 
Top