All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Chanmaa

Well-known member
Hi ma epilogue poduratha vida, naan part 2 ezhutha poron. so no epilogue. Onl KOllamal kondu puthaithene mannipayaa, kathyin part 2 ezhuthuren. OK vaa. :love::love::love::love:
Silent reader இருந்த என்னை பேச வைத்தே உங்கள் கதைதான் நீங்க எனக்கு பதில் சொன்னதயே பெரிய விஷயமாக கருதுகிறேன் இரண்டாம்பாகத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி
 

Chanmaa

Well-known member
ஹாய் விஜி,
உண்மையில் சொல்லவேண்டும் என்றால் இந்த கதையை fb ல ஒரு போஸ்ட் பாத்து தான் படிக்க வந்தேன். வந்து பார்த்தால் கதைக்கு லைக்ஸ் எகிறி இருக்கிறது. சரி நாமும் படிப்போமே என்று தான் படிக்க ஆரம்பித்தேன்.
To be frank எனக்கு முதலில் விதுலனை பிடிக்கலை. தன் தமக்கைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு பழிவாங்க என்றாலும் இவன் எப்படி இன்னொரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வை தன் கையில் எடுக்கலாம் என்று ஏகப்பட்ட கோபம் அவன் மீது எனக்கு. ஆனால் பதிவுகள் போகப்போக அவன் உணர்வுகளோடு ஒன்ற வைத்துவிட்டீர்கள் என்னை. 11 வயதிலேயே தனது தமக்கையை காணக்கூடாத கோலத்தில் கண்டு மறத்துப்போன இதயத்துக்கு சொந்தக்காரனான அவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

தன் காதலா? இல்லை தன் அக்காவிற்கு நியாயம் செய்வதற்காக தான் தேர்ந்தெடுத்திருந்த வழியா என்று வரும்போது தமக்கைக்காக தன்னவளை கொல்லாமல் கொன்று புதைத்து விட்டு அதற்கு தண்டனையாக அவன் தணல் படுக்கையில் எல்லாம் படுத்து முதுகில் தொடு உணர்ச்சியே இல்லாமல் போகுமளவிற்கு தீகாயம் ஏற்படுவத்துவதெல்லாம்...ஹயோ! நினைத்தாலே பதறுது...

தன் தாயாக நிலவை வரித்துக்கொண்டு அதனிடம் அபயன் கதறும் காட்சி கண்ணீர் வரவழைத்தது சகோ...

"கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா..." இந்த கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் கிடையாது. அவ்வளவு அழகாக கதையோடு பொருந்துது தலைப்பு. இதுவே முதலில் உங்களோட வெற்றி சகோ...

அடுத்து அபயன் மாதிரி ஹீரோவையும் எங்க மனதில் நிக்க வச்சீங்க. அது உங்களோட எழுத்துக்கு கிடைத்த வெற்றி சகோ...

மிளிர் கதாபாத்திரம் கதை முழுவதும் அழகாக மிளிர்கின்றது சகோ. 18 வயதிலேயே இவன்தான் உனக்கு வரப்போகிற கணவன் என்று போட்டோவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து அவன் மேல் மையல் கொண்ட , தன் இராமனே இராவணாக மாறுவான் என்று கொஞ்சமும் எண்ணாத பேதைப் பெண். பின்னாளில் விதுலன் உண்மையான நேசம் காட்டும் போது கூட அதை உண்மை என்று நம்ப முடியாமல் தவித்த ஏந்திழை அவள்.

காந்திமதி ...அன்பின் உறைவிடம்...
இந்த அம்மாவிற்கு இப்படி ஒன்று நடந்திருக்க வேண்டாம்...வாழ்க்கை அவரை வஞ்சித்திருந்தாலும் அபயன் என்ற உடன்பிறந்தானின் ஒட்டுமொத்த பாசத்திற்கும் சொந்தமான அதிஷ்டசாலி அக்கா...
மிளிர் யார் என்று தெரிந்தும் அவளை மனதார மகளாக ஏற்றுக்கொண்ட பாசத்தின் உறைவிடம்.

ஆத்விகன், சாத்வீகனின் பேச்சு நமக்கும் கற்கண்டாய் இனித்தது.

கதையின் முடிவும் இயல்பாக இருந்தது. கண்டிப்பாக தனது கூட்டுக்குள் இருந்து வெளிவந்து மிளிர் தன்னவனின் காதலை உணர்ந்து கொள்ளும் நாளும் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளும்...
செம செம செம
 
Top