All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கருப்பழகி”

அத்தியாயம் – 7

“பொண்ண சீக்கிரம் அழைச்சிண்டு வாங்கோ, நாழியாறது” என்று அறிவித்தார் ஐம்பது வயது நிரம்பிய பூசாரி.



“பொண்ணு வந்தாச்சு ஐயரே, நீங்க மந்திரத்தை சொல்லுங்க.” என்றார் தர்மேந்திரன்.



விலை உயர்ந்த கார்கள் மூன்றும், ஒரு பழைய அம்பாசிடர் காரும் அணிவகுத்து நின்றன ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில். அந்த இடம் ஒரு பாழடைந்த அம்மன் கோயில், அளவில் சிறியதும் கூட. தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தான் அந்தக் கோயில் அமைந்திருந்தது. பராமரிப்பின்றி சிதைந்த தோற்றத்துடன் காட்சியளித்தது. அங்கு ஒரு திருமணம் நடக்க இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் அங்கு ஒரு திருமணம் இன்னும் சில நிமிடங்களில் நடக்க இருக்கிறது. அங்கு நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டு வரவில்லை. மணமகனையும் சேர்த்து ஐந்து ஆண் மக்களும், மணப்பெண்ணையும் சேர்த்து நான்கு பெண்மக்களும் கலந்து கொண்டனர். தர்மேந்திரன், சற்குணபாண்டியன், சுந்தரபாண்டியன், சுந்தரவல்லி இவர்கள் தான் மணமக்களின் உறவினர்கள்.



“டக்கூஊ டக்கூஊ டக்கூஊ டக்கூஊ டக்கூஊ” என்ற ஊன்றுகோல்களின் சப்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தனர் அனைவரும், பூசாரி முதற்கொண்டு. அவன் ஒருவனைத் தவிர.



4’11 அடி உயரத்தில், அடித்தால் ஒடிந்து விழக் கூடிய தேகத்துடன், அவளது அடர்ந்த காப்பிக் கொட்டை நிற தேகத்தில் சுற்றப்பட்ட அடர் சிவப்பு நிறப் புடவையில், கழுத்தில் சிறிய ரோஜா பூ மாலையும், ஒரு பழைய அட்டிகையும், ஒரு டாலர் சங்கிலியும், கைகளில் ஒரு ஜோடி தங்க வளையல்களும் அணிந்து கொண்டு, தலையில் கனகாம்பரப் பூ, பந்து போல் சுற்றப்பட்டு, காதில் சிறு சிமிக்கி ஆட, ஊன்றுகோல்கள் எழுப்பிய சப்தத்தில் அமிழ்ந்துவிட்ட கால்களில் அணிந்திருந்த மெல்லியக் கொலுசொலியுடன், தர்மேந்திரன் வீட்டுச் சமையல்காரி அன்னம்மாவும், சற்குணபாண்டியன் வீட்டுச் சமையல்காரி செங்கமலமும் இருபுறமும் தன்னைத் தாங்க, தன் ஊன்றுகோல்களை அழுந்த ஊன்றுக் கொண்டு மெல்ல நடந்து வந்தாள் அவள். அல்ல நொண்டிக் கொண்டு வந்தாள்.



அவள் கருப்பி! கருப்பி என்று அழைக்கப்படும் புகழினி தெய்வமங்கை!!! பாண்டிவனத்தில் பிறந்த அபலைப் பெண்!!!



பூசாரி அதிர்ந்த பார்வையுடன் நொண்டிக் கொண்டு வந்த மணமகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். “இவாளுக்கு மூளை கீளக் குழம்பிப் போயிடுத்தா??? இந்தப் புள்ளாண்டானுக்கு இந்த மாதிரி ஒரு பொண்ண கட்டி வைக்கிறாளே??? அதுவும் ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்கிற கோயில்ல கல்யாணம் பண்றாளே??? ஏதோ வில்லங்கம் இருக்கும் போலயே! இவளாப் பாத்தா அந்தப் பொண்ண பலிக் கொடுக்கப் போறாப்னனா இருக்கு. ஐய்ய்யோ! பெருமாளே முப்பாதாயிரம் காசுக்கு ஆசைப்பட்டு, பெரிய பாவம் பண்ணிண்டு இருக்கேனோ??? நேக்கு இவா சங்கதியெல்லாம் தெரியாது, என்ன தண்டிச்சுடுதா நாராயணா!! இவாக் கிட்ட இருந்து தப்பிக்கவும் முடியாது, கரிகாய் வெட்டறாப்ல என்னோடக் கை கால வெட்டிடுவா..” என மனதிற்குள் திகிலுடன் புலம்பிக் கொண்டிருந்தார் பாவப்பட்ட பூசாரி.



“ஐய்யரே ஐய்ய்ய்ய்ரே யோவ்வ்வ்வ் அய்ய்யரே” என உலுக்கப்பட்டார் பூசாரி. திடுக்கிட்டுத் திரும்பினார் அவர். “என்னெய்யா வேடிக்கெ பாத்துக்கிட்டுக் கெடக்க, வேடிக்க பாக்கவா உனக்கு அம்புட்டுப் பணம் குடுத்து அழச்சுட்டு வந்தோம்??? வந்த சோலியெப் பாருய்யா” என உறுமினார் சுந்தரபாண்டியன், புகழினியைப் பெற்றவர்.



அவசர அவசரமாக மந்திரங்களை உச்சரித்தார் பூசாரி, பயத்தில் அவருக்கு நாக்குழறியது. புகழினி ஐயரின் அருகில் வந்துவிட்டாள். “உக்காரு ஆத்தா” என்றார் செங்கமலம். அவளுடைய ஊன்றுகோலை அன்னம்மா வாங்கிக் கொண்டார். செங்கமலத்தின் கைகளைப் பிடித்து கொண்டு மெல்லக் கீழே அமர்ந்தாள். அவள் குனிந்த தலை நிமிரவில்லை. கண்களில் தேங்கி நின்றக் கண்ணீர் காட்சிகளை மங்கலாக்கியது.



“ஐயரே மொத மந்திரம் ஓதுரத நிப்பாட்டு, பொழுதுக்கும் பல்லவி பாடத்தேன் வந்தியா? வெரசா தாலிய எடுத்துக் குடுய்யா” என்று பூசாரியை விரட்டினார் சற்குணபாண்டியன், புகழனியின் தந்தை வழி தாத்தா.



அடுத்த உறுமல்கள் வருமுன் அவசரமாகத் தாலியைக் கைப்பற்றிக் கொண்டு மணமகனிடம் நீட்டினார். அவன் அவரை தீர்க்கமாக ஒரு பார்வைப் பார்த்தான். “பெருமாளே நேக்கு இன்னைக்கு நேரம் சரியில்ல..” என மனதினுள் எண்ணிக் கொண்டு பயத்துடன் அவனைப் நோக்கினார்.



பின்னே 6’3 அடி உயரத்தில், சுண்டினால் ரத்தம் வரும் பால் வெள்ளை நிறத்தில், அஜானுபாகுவானத் தோற்றத்துடன், அடர்ந்த சிகையும், சிரிப்பை மறைக்கும் தாடியும், கூர்மையானக் கண்களில் தீட்சண்யம் நெருப்பென மின்ன, நான் எதற்கும் அஞ்சாதவன், என்னிடம் மோதிப் பார்க்கிறாயா என்று சாவல் விடும் தோற்றத்துடன், ராஜ கம்பீரத்துடன் சிங்கம் போல் அமர்ந்திருக்கும் அவன், அவரை ஆழ்ந்து பார்த்தால் அவருக்கு ஏன் குளிர் எடுத்து உடல் நடுங்காது!



அவன் ஷிவ் என்கிற ஷிவேந்திரன்! திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் எனும் பெரும் தொழில் சாம்ராஜியத்தின் எம்.டி அண்ட் சேர்மன். தொழில் வட்டாரத்தில் ‘ப்ளாக் சீட்டா’ என்ற அடைமொழியைக் கொண்டவன்.



“ஷிவ்! என்னப்பா பாக்குற? சீக்கிரம் தாலிய வாங்கிக் கட்டுப்பா, லேட் ஆகுது!” என்றார் தர்மேந்திரன். அவரை அழுத்தமானப் பார்வை பார்த்துவிட்டு, தன் அருகில் அமர்ந்திருந்தவளைச் சற்று தலை தாழ்த்தி நோக்கினான். அவளின் முன் இருமுறை சொடக்கிட்டான். புகழினி திடுக்கிட்டுத் திரும்பி, தலை நிமிர்ந்து பார்த்தாள் அவனை(அண்ணாந்து தான்!). மங்கலாகத் தெரிந்தான், கண்களில் கண்ணீர் குளமாகத் தேங்கி இருந்தது. பூசாரியிடம் தாலியை வாங்கிக் கொண்டு, அவளின் கழுத்தைச் சுற்றிக் கைகளை கொண்டு சென்று கட்டினான், அவள் கண்களைப் பார்த்துபடி. அவன் விரல் கூட நுனி அவள் மேல் படவில்லை! ஏன், மூச்சுக் காற்றைக் கூட அவள் மேல் படவிடாது விழிப்புடன் நடந்து கொண்டான்.



பந்தல் போடவில்லை! வாழை மரங்கள் கட்டவில்லை! தோரணங்கள் தொங்கவில்லை! மணவறை அமைக்கவில்லை! ஹோம குண்டம் வளர்க்கவில்லை! மேள தாளங்கள் முழங்கவில்லை! நாதஸ்வரம் இசைக்கவில்லை! உறவினர் கூடி அட்சதை தூவ வில்லை! குடும்பத்தினர் வாழ்த்தவில்லை! ஆனாலும் அங்கு ஒருத் திருமணம் நடந்தேறியது. தெய்வமாவது அவர்களை வாழ்த்தியதா??? அந்த தெய்வத்துக்கு தான் வெளிச்சம்!!!



மூன்று முடிச்சிட்டவன் நொடியும் தாமதிக்காமல் எழுந்து கொள்ள, அவன் பி.ஏ ஆண்டனி அவனருகில் விரைந்தான். கழுத்தில் கிடந்த மாலையைக் கழட்டி கீழே விசிறியடித்துவிட்டு, நெற்றியில் இருந்த சந்தனக் கீற்றை தன் கைக்குட்டையால் துடைத்தவன் தனது கூலர்சை பி.ஏவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டான் ஷிவேந்திரன்.



“தாத்தா, மை ஜாப் ஸ் டன்.” என்று ரத்தின சுருக்கமாகக் கூறிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வேக நடையுடன் தனது பி.ஏ பின் தொடர சென்றான்.



போகும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் புகழினி. பூசாரிக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. இது என்ன மாதிரி திருமணம்? இந்தப் பெண்ணின் வாழ்க்கை இனி எப்படி இருக்குமோ? என மூன்றாம் மனிதரான அவர், முதல் முறையாக அவளைக் காண்பவர் அவளுக்காகப் பரிதாபப்பட்டார்.



“ஏய், கருப்பி எந்திருடி. எம்புட்டு நேரமாதேன் உக்காந்திருப்பே? தாலிகட்டுன மவராசென் வந்து தூக்கி விட்டாதேன் மகராணி எழுந்திருப்பியலோ!” என ஓங்கியக் குரலில் எகத்தாளமாக வினவினார் சுந்தரவல்லி, புகழினியின் தந்தை வழிப் பாட்டி.



சுந்தரவல்லியின் குரலில் தேங்கி நின்று திரும்பிப் பார்த்தான் ஷிவ். அவள் தட்டு தடுமாறி எழுந்து கொண்டு, பிடிமானமில்லாமல் கீழே விழ இருந்தவளைச் செங்கமலம் ஓடி வந்து தாங்கிக் கொண்டார். அன்னம்மாள் அவளது ஊன்றுகோல்களை சடுதியாக கொண்டு வந்துக் கொடுத்தார். அவள் அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு “மொத தரம் பொடவக் கட்டுறேன் அதேன் வாகு வரல.” என்றாள் மெல்லியக் குரலில் கள்ளமில்லாமல். கேட்ட இருவருக்கும் கண் கலங்கியது. “பிறந்த இடம் தான் இவளைப் பாடாய் படுத்தியது என்றால், புகுந்த இடம் அவர்களை மிஞ்சுபவர்களாக இருக்கிறார்களே! பாவம்! இந்தப் பெண்ணுக்கு விடிவு காலமே இல்லையா தெய்வமே?” என மனதிற்குள் மறுகினர்.



ஷிவேந்திரன் அவளின் கண்ணீருடனான புன்னகையை சலனமில்லாத முகத்துடன் நோக்கிவிட்டு திரும்பிச் சென்றான். தர்மேந்திரன் நொடியும் தாமதிக்க விரும்பவில்லை. சற்குணபாண்டியனிடமும், சுந்தரபாண்டியனிடம் சொல்லிக் கொண்டு அவசர அவசமாகக் கிளம்பினார். கோயிலின் வெளியே கார் ‘சர்ர்ர்ர்’ என்று சீறிப் பாய்ந்த சப்தம் கேட்டது.





“அன்னம்மா, கூட்டுட்டு வா சீக்கிரம், டிரெயின்கு டைம் ஆச்சு” எனத் தனது வீட்டு சமையற்காரியிடம் அவசரப்படுத்தினார் தர்மேந்திரன்.



“இதோ ஐயா, கூட்டிட்டு வரேன்” என தன் எசமானனுக்குப் பதில் கூறிவிட்டு புகழினியின் அருகில் சென்றவர்,



“போலாமா தங்கம் நேரமாச்சு ஐயா கூப்பிடுறாங்க?” என்று சற்று தயங்கிக் கொண்டே வினவினார். அவருக்கே இங்கு நடப்பதில் எதிலும் உடன்பாடில்லை, ஆனால் அவர் ஆளும் வர்க்கத்தில் பிறக்கவில்லையே! கேள்வி கேட்கும் உரிமை அவருக்கு இல்லை. என்ன செய்வார் பாவம்!



புகழினிக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அவளுக்குப் புரிந்தது, பாண்டிவனத்தை விட்டுத் தான் நெடுந்தூரம் பயணிக்கப் போகிறோம் என்று. ஏங்கே அழைத்துப் போகிறார்கள் என்று அவளுக்குத் தெரியாது. ஏன் அவர்கள் இருவரும் யாரென்றும் அவளுக்குத் தெரியாது! மணந்தவனையும் அறியாள், அவனின் மண்ணையும் அறியாள்! அடுத்தவர்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டே வளர்ந்தவள். கேள்வி கேட்கும் பழக்கமும், உரிமையும் அவளுக்கு இல்லை. செங்கமலத்தின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். தன்னைத் தூக்கி வளர்த்தவள் அல்லவா. அவளுக்கு அவர் தான் தாய். செங்கமலத்துக்கு அழுகை வரும் போல் இருந்தது, ஆனால் எசமானி சுந்தரவல்லியின் முன் அழுதுவிட்டு அவரால் பாண்டிவனத்தில் வேலைப் பார்த்து சீவனத்தை ஓட்டிவிட முடியுமா? எனவே அழுகையை அடக்கி அவளின் கையைத் தட்டிக் கொடுத்தார். ஆறுதல் சொல்லக் கூட அவரால் வாய் திறக்க முடியாது சுந்தரவல்லியின் முன்னிலையில்.



“செங்கமலம்” என அதட்டினார் சுந்தரபாண்டியன். சட்டென்று புகழினியின் கைகளை விட்டு விட்டார். அன்னம்மா அவள் கைகளைப் பற்றி அவளை கார் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார்.



“ஸ்ஸ்ஸ் அப்பாடா!!! இப்பத்தேன் எம்மனசு குளுந்திருக்கு. இருபத்தி வருசமா நம்மளப் புடிச்சி ஆட்டுன கெரகம் புடிச்ச மூதேவிய ஒரு வழியா ஒழிச்சுப்புட்டோம். எம்புட்டு ஆட்டு ஆட்டிபுட்டா நொண்டி சிறிக்கி...” என பெருமூச்சுவிட்டவாறேக் கூறினார் சுந்தரவல்லி.



புகழினிக்கு தனது அப்பத்தாவின் பேச்சுக் காதில் விழத்தான் செய்தது. ஆனால் எத்தனை முறை இவ்வாறான குத்தூசி வார்த்தைகளால் குத்துப்பட்டாலும், அந்த மெல்லிய மனம் கொண்ட பாவையால் அவற்றினை தூசி போல் தட்டிப் புறந்தள்ள முடியவில்லையே! அவளுக்குக் கேவல் வந்தது. அன்னாம்மாவின் கை அழுத்தத்தில் அந்தக் கேவலையும் முயன்றுக் கட்டுப்படுத்திக் கொண்டாள். கேவல் விசும்பலானது.



சுந்தரபாண்டியன் அன்னையின் கூற்றை தலை அசைத்து ஆமோதித்தார். சற்குணபாண்டியனும், தர்மேந்திரனும் தனிமையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். புகழினியின் வரவை உணர்ந்து, காருக்கு அருகில் சென்றனர் இருவரும்.



அன்னம்மாவும், புகழினியும் அம்பாஸிடர் காரில் ஏற்றப்பட்டனர். தர்மேந்திரன் எல்லோரிடமும் தலையசைத்து விடைபெற்று தனது ஆடிக் காரில் ஏறிக் கொண்டார்.



சற்குணபாண்டியன் புகழினியும் அமர்ந்திருந்த காரின் சன்னல் அருகில் வந்து மெல்லியக் குரலில் தெளிவாக “நீ செத்தா, ஓன் சாம்பெ(ல்) கூட இந்தத் தேனி பக்க(ம்) வரக் கூடாது, சொல்லிப்புட்டேன்..” என விரல் உயர்த்தி எச்சரித்துவிட்டுச் சட்டென நகர்ந்து கொண்டு “வண்டிய எடுப்பா.” கட்டளையிட்டார் ஓட்டுநரிடம். ஸ்தம்பித்துப் போய் அவரை நோக்கினாள் புகழினி. கார் நகர்ந்தது. கரும் பளிங்கு கன்னங்களில் வெண் முத்தாய் கண்ணீர் கோடுகளாக இறங்கின.



“நான் பிறந்த மண்ணில் கால் ஊன்ற எனக்கு அனுமதி இல்லையா??? இந்த திருமணத்தின் வாயிலாக எனக்கு காரியம் செய்துவிட்டனரா என் பிறந்த வீட்டினர்?? என்றும் அவர்களுக்கு நான் சுமை தான். இன்று இறக்கி வைத்துவிட்டனர். இந்த சுமைக்கு எதற்கு ஒரு திருமணம்??? அவர்களுக்கும் நான் சுமைதானே! இன்னும் என்ன என்ன கொடுமை எல்லாம் நான் காண வேண்டி இருக்கு பெரியக்கா அம்மாளே!” மனதினுள் மருண்டு ஒடுங்கினாள் அந்தப் பாவப்பட்ட பெண்.



மதுரை ரயில் நிலையத்தில் கார்கள் சென்று நின்றன. அன்னம்மா வேகமாக இறங்கி, “மெதுவாம்மா, மெதுவா இறங்குங்க.” என்றபடி புகழினிக்கு காரிலிருந்து இறங்க உதவினார்.



டிரைவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு இவர்கள் பின்னே நடந்து வந்தார். தர்மேந்திரன் இவர்களுடன் வருவதை மரியாதைக் குறைவாக எண்ணி விரைவாகச் சென்று தனக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ள ஏ.சி கோச்சில் சென்று அமர்ந்து கொண்டார். அன்னம்மாவும், புகழினியும் ஸ்லீப்பர் கோச்சில் சென்று அமர்ந்து கொண்டனர். அவர்கள் ரயில் பயணம் தொடங்கியது. அவள் சன்னலில் தலையைச் சாய்த்துக் கொண்டு தங்களை கடந்து செல்லும் காட்சிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். புகழினி தன் வாழ்க்கை எந்த திசையில் பயணிக்கிறது எனத் தெரியாது பயணித்தாள்.



போராளே பொன்னுதாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு

தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு

பால் பீச்சும் மாட்ட விட்டு பஜாரத்து கோழிய விட்டு

போராளே பொட்டை புள்ள ஊர விட்டு”



பாண்டிவனத்தில் சுமையாக வாழ்ந்தவள், சுபிக்‌ஷத்தில் சுகமாக வாழ்வாளா???



கருப்பு அழகி வருவாள்…
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 8



பிளாக் சீட்டா!!! கருஞ்சிறுத்தை, காணக் கிடைக்காத அரிய உயிரினம், அசுர வேகத்துடன் தனது இரைக்கு யோசிக்க, நிதானிக்க இடம் கொடாது அது வேட்டையாடும் லாவகமேத் தனி!!!! எங்கும் வேகம்!! எதிலும் வேகம்!!! அந்த அரிய உயிரினத்தின் பெயரைத் தனது அடைமொழியாகக் கொண்டவன் ஷிவ்!! ஷிவ் என்கிற ஷிவேந்திரன்!!!



இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பட்டியலில் இவ்வருடம் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருப்பவன். தமிழ்நாட்டுத் தொழில் அதிபர்கள் பட்டியலில் கடந்த ஐந்து வருடங்களாக முதல் இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காது தக்க வைத்துக் கொண்டிருப்பவன். அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க இன்னொருவன் இந்தப் பூவுலகில் இனி பிறந்துதான் வரவேண்டும் என்பது தொழில் வட்டாரத்தின் கணிப்பு.



தொழில் சாம்ராஜியத்தின் முடிசூடா மன்னன் ஷிவேந்திரனின் பி.ஏவாக இருப்பதில் ஆண்டோ என்கிற ஆண்டோனி தாமஸுக்கு எப்பொழுதும் கர்வம் உண்டு. ஆண்டோ, ஷிவேந்திரன் படித்த புகழ் பெற்ற பொறியியல் கல்லுரியில் ஷிவேந்திரனுக்கு ஜூனியராக படித்தவன். அப்பொழுதிலிருந்தே ஷிவேந்திரனின் மீது ஒரு ஈர்ப்பு, பிரமிப்பு, ஹீரோ வொர்ஷிப் என்றுக் கூட சொல்லலாம்! எந்தச் சூழ்நிலையையும் அசாதாரணாக தனது ஆளுகைக்குள் கொண்டு வரும் அவன் திறமையே திறமை என மனதிற்குள் சிலாகிப்பான். ஷிவேந்திரனுடன் தான் வேலை செய்வேன் எனத் தனக்குக் கிடைத்த வெளிநாட்டு வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு ஷிவ்வின் பி.ஏவாக தன்னை ஆக்கிக்கொண்டான். ஷிவேந்திரன் வெள்ளை காக்காய் பறக்கிறது பார் என்றால் ஆம்! அதோ பறக்கிறதே என பதிலளிக்கும் அளவு ஷிவேந்திரனின் மேல் கண்மூடித் தனமான நம்பிக்கை, குருபக்தி. ஆனால் இன்று இவையாவும் ஆட்டம் கண்டுவிட்டதோ! முதன்முறையாக ஷிவேந்திரனின் மேல் எதிர்மறை எண்ணம் உருவாகியிருந்தது ஆண்டோவிற்கு.



அவன் அறிவான் ஷிவேந்திரன், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பணக்கார யுவதிகளின் யுவனாவான்! கனவு நாயகன்!!! செக்ஸியஸ்ட் ரிச் எலிஜிபிள் பேச்சுலர் ஆஃப் தி யூனிவர்ஸ் எனப் பிரபல வெளிநாட்டு ஃபாஷன் நாளிதழ் அவனது அட்டைப் படத்தை பிரசுரித்து அவனது கிராக்கியை மேலும் ஏற்றிவிட்டனரே!!! அவனை மருமகனாக அடைய எவ்வளவு பெரிய சாம்ராஜ்யங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாதா என்ன!



ஷிவேந்திரன் ஸ்திரீ லோகன்... கல்லூரியில் சூப்பிரீம் ஹாட் ஹீரோ. பெண்களின் கனவினில் கலவி விளையாட்டை விளையாடும் கலியுக மன்மதனாய் வலம் வந்தவன் (இப்பொழுதும் வலம் வருகிறான் தான்!). நிசத்திலும் அவர்களுடன் கலவி விளையாட்டை விளையாடி மகிழ்ந்தவன், மகிழ்பவன். அவனாக ஸ்திரீகளை எப்பொழுதும் அணுகியதில்லை. அவர்களாக வந்து இவன் மேல் விழுந்து வழிவார்கள். அவனின் கம்பீரமும் அந்தஸ்தும் அப்படிப்பட்டது. குடும்பப் பெண்களைத் தீண்டுவதில்லை. அந்த மட்டிலும் சந்தோசம் என நினைத்துக் கொள்வான் ஆண்டோ. ஷிவ் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை வரையரைத்து வைத்திருப்பவன். அந்த மாதிரிப் பெண்களை கலவி விளையாட்டோடு எட்டி நிறுத்திவிடுவான். காரணம்! பெண்களால் பல சாம்ராஜியங்கள் சரிந்து அழிந்துவிட்டப் பல வரலாறுகளை அவனும் படித்திருக்கிறானே!



அப்படிப்பட்ட வஸ்து உள்ள ஷிவேந்திரன் எவருக்கும் தெரியாமல் ஓர் குக்கராமித்தில் உள்ள பாழடைந்தக் கோயிலில் ஊனமான ஓர் அப்பாவிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தனது வேலை முடிந்துவிட்டது என்று நடையைக் கட்டியதை அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் அவன் தான் கண்டுவிட்டானே! கண் கூடாக கண்டுவிட்டானே! இதற்குப் பெயர் திருமணமா??? தனது முதலாளியை அவன் நன்கு அறிவான். புலி பசித்தால் புல்லைத் தின்பதுக்கு சமானம் ஷிவேந்திரன் அந்த அபலைப் பெண்ணுடன் வாழ்வதென்பது!!! அப்பொழுது அந்தப் பெண்ணின் நிலை??? கர்த்தரே!!! என மனதிற்குள் புகழினிக்காக வருந்தினான் ஆண்டோ.



“ஆண்டோ” என்ற ஷிவ்வின் ஒற்றை அழைப்பில் தன்னை மீட்டுக் கொண்டவன் “எஸ் பாஸ்” என்றபடி அவனருகில் விரைந்தான். ஷிவேந்திரனின் தன்னுடைய பிரத்யேக சார்டட் விமானத்தில் மதுரையில் இருந்து சென்னையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தனர், ஆண்டோ ஷிவ்விற்கு நேர் பின்னே வலது பக்கம் இருந்த வரிசையில் அமர்ந்து இருந்தான்.



“அந்த புது ஈ.சி.ஆர் பிராஜக்ட்ல என்னப் பிரப்ளம்?” வினவினான் ஷிவ்.



“பாஸ் உங்க கசின் வசந்த், லாண்ட் ஓனர் கிட்ட அவரோட பிரெண்ட் சாந்தி இண்டஸ்டிரீஸ் ஜெ.எம்.டி சாந்தகுமாரனுக்காக லாபி பண்ணி இருக்காரு. நம்மளவிட 150 குரோர்ஸ் அதிகமா ஆஃபர் பண்றதா சொல்லி இருக்காங்க. பட் ஓனர் இன்னும் 100 குரோர்ஸ் எக்ஸ்ட்ரா டிமாண்ட் பண்ணியிருக்கார். தி டீல் இஸ் ஓவர் பாஸ். இன்னைக்கு ஆஃப்டர் நூன் ரெஜிஸ்டிரேசன். அண்ட் உங்க கசின் வசந்த்கு 25 குரோர்ஸ் லாபி கமிஷன்.” என விரிவாக எந்தத் தயக்கமும் இன்றி எடுத்துரைத்தான் ஆண்டோ.



“ஐசி” எனத் தனது தாடையைத் தடவிக் கொண்ட ஷிவேந்திரனின் கண்களில் இரையை வேட்டையாடப் போகும் பளபளப்பு.



ஆண்டோவிற்கு தெரியும் அடுத்து என்ன நடக்கும் என்று. ஷிவேந்திரனிடம் இருந்து ஒரு பிராஜக்டை பறிக்கத் திட்டமிட்டு தனது மொத்த சாம்ராஜியத்தை இழக்க இருக்கும் சாந்தகுமாரனுக்காக அவன் பரிதாப படவில்லை. மாறாக ஷிவ்வின் ஆளுமையை, அதிகார பலத்தை தெரிந்தும் விளையாடிப் பார்க்கும் அவர்களுக்குக் கொழுப்பு அதிகம் தான், அனுபவிக்கட்டும்!! என மனதிற்குள் எண்ணினான்.



“லேண்டிங் டைம்?” என்று வினவினான் ஷிவ். “2 ஹர்ஸ் பாஸ்” என்றான் ஆண்டோ. ஷிவேந்திரன் அவனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு மெல்லியக் குரலில் அவனுக்குத் தாங்கள் தரை இறங்குவதற்குள் முடிக்க வேண்டிய காரியங்களை பற்றிய கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். ஆண்டோ தனது மடிக்கணினியை உயிர்ப்பித்து அதில் மூழ்கிப் போனான். சரியாக 20 நிமிடங்கள் கழித்து ஷிவேந்திரனிடம் “டன் பாஸ்” எனக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். ஷிவ்வின் இதழ்கள் லேசாக விரிந்தன.



அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஷிவ்வின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் அவன் அலுவலகம் நோக்கிப் பறந்தனர். கார் சென்னை அண்ணா நகரில் உள்ள திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸின் தலைமை அலுவலகத்தில் சென்று நின்றது. ஷிவ், ஆண்டோ இருவரும் வேகமாக இறங்கி மின்தூக்கியை நோக்கிச் சென்றனர். அங்கு உள்ளவர்கள் எழுந்து நின்று மரியாதையாக வணங்கியதை கண்டு கொள்ளாது சென்றான். இது அங்குள்ளவர்களுக்கு தினசரி வாடிக்கை தான்.



ஷிவ் தனது அறையினுள் சென்று அவன் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். மிகச் சரியாக 13 நிமிடங்களில் ஆண்டோ அனுமதி கேட்டு ஷிவ்வின் அறைக்குள் நுழைந்தான். ஷிவ் என்ன என்பது போல் தனது மடிக்கணினியில் இருந்து விழி உயர்த்தி பார்த்தான். “பாஸ் சாந்தி காட்டன் மில் தீ பிடிச்சிடுச்சி, வாஸ்ட் டாமேஜ். லேப்ர்ஸ் சில பேருக்கு ஃபேட்டல் இஞ்சுரிஸ். இரண்டு பேரோட கண்டிஷன் வெரி கிரிட்டிக்கல். லாண்ட் கிராபிங் கேஸ்ல அவங்க ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு நோட்டிஸ் போயாச்சு. அண்ட் கண்ஸ்டர்க்‌ஷன் எல்லாம் ஸ்டாப் ஆயிடுச்சு. அவங்களோட ஸ்டார் ஹோட்டல ரூல்ஸ் பிரேக் பண்ணி பில்ட் பண்ணதால டெமாலிஷனக்கு ஆர்டர் போட்டுட்டாங்க ஸ்டீல் கம்பெனில அரியர்ஸ் ப்ளஸ் போனஸ் இஷுயுக்காக லேபர்ஸ் ஃபுல் ஸ்டரைக்ல எறிங்கிட்டாங்க பாஸ். இன்கம் டாக்ஸ் ரைட், சி.பி.ஐ ரைட் ஆன் தி வே. மீடியாஸ் ஸ்பாட்ல இறங்கிட்டாங்க. தேர் இமேஜ் இஸ் டோட்டலி டார்னிஷ்ட். அங்க ஷேர்ஸ் ஃபிஃப்டீன் மினிட்ஸ்ல டிராஸ்டிக்கா டிப் ஆகிடுச்சு. இஃப் மை கெஸ்ஸிங் இஸ் ரைட் இன்னைக்கு அவங்க ஷேர்ஸ் டோட்டலி டம்பிள் ஆகிடும், இன்வெஸ்டர்ஸ் அவங்க ஷேர்ஸ்ஸ விக்க ஆரம்பிச்சிட்டாங்க. மேஜர் ஷேர் ஹோல்டர்ஸ் ஹேவ் கால்ட் ஃபொர் ஆன் அர்ஜெண்ட் மீட்டிங் பாஸ்.



சிங்கபூர்ல இருக்க சாந்தகுமரனுக்கு நியூஸ் ரீச்சுடு. இன்னும் திரி ஹர்ஸ்ல சென்னையில இருப்பாரு. அவரோட டாட் ஹார்ட் அட்டாகால அப்பல்லோ ஹாஸ்பிட்டல அட்மிட் ஆகி இருக்காரு. மாஸிவ் அட்டாக்.” என்று ஒரு சிறு துணுக்கையும் விடாது ஒப்புவித்தான் ஆண்டோ.



ஷிவ் தனது சுழற்நாற்காலியில் நன்றாக சாய்ந்து கொண்டு “சாந்தனோட வைஃப் சோபியாவோட செக்ஸ் ஸ்காண்டல் கிளிப்ஸ் எல்லாம் இன்னும் டென் மினிட்ஸ்ல நெட்ல அப்லோட் ஆகனும் ஆண்டோ. முக்கியமா மீடியா கைக்கு அந்த கிளிப்ஸ் போகனும். அவனோட சிஸ்டர் டரைவர லவ் பண்றா இல்லை? அவங்க ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணட்டும். நாளைக்கு அந்த நியூஸ் ஹாட் டாப்பிக்கா இருக்கனும். அவள பத்தின கிளிப்ஸ் கிடைச்சா கண்டிப்பா அதையும் நெட்ல லோட் பண்ணுங்க. அவங்க பிரீத் பண்றதுக்கு டைம் குடுக்கக் கூடாது. அவங்க கம்பெனி ஷேர்ஸ் எல்லாம் நம்ம கண்டரோலுக்கு வரனும்” என உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு தனது வேலையில் ஆழ்ந்தான்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆண்டோ முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல் ஷிவ் சொன்ன உத்தரவை நிறைவேற்றச் சென்றான். அடுத்த 4 மணி நேரத்தில் ஷிவ்வின் அலுவலகத்தினுள் நுழைந்தான் சாந்தகுமார். “டேய் ஷிவா, நாயே வெளில வாடா!!! ***************” என தனக்குத் தெரிந்த புனிதமானத் தமிழ் சொற்களைக் கொண்டு அவனை அர்ச்சித்தான். எங்கிருந்தோ வந்த ஷிவ்வின் பாதுகாவலர்கள் (Bouncers) அவனை அடித்துத் தூக்கி கம்பெனியின் வாயிலில் விசிறியடித்தனர். அவர்கள் பேசவில்லை, ஆனால் அவர்களின் கண்கள் சொன்ன செய்தியால் அவனுக்கு அவமானம் பிடிங்கித் தின்றது, தன்னுடைய மனைவியை நினைத்து தன்னை எள்ளி நகையாடுவது அவனுக்குப் புரிந்தது. இதயம் நைந்துவிட்டான்.



ஒரே நாளில் தொழிலிலும் அடிவாங்கி, சொந்த வாழ்விலும் அடிவாங்கினால் அவன் எவ்வாறுத் தாங்குவான். இரண்டு பிள்ளைகளின் தாயான தன்னுடைய ஆசைக் காதல்(?) மனைவியின் அந்தரங்க காதல் லீலைகள் அவனைக் கொல்லாமல் கொன்றுவிட்டது. அதிலும் தனது உற்ற நண்பனும், ஷிவேந்திரனின் அத்தை மகனுமான வசந்துடன் தன் மனைவி கூடிக் குலாவியக் காணொளியைக் கண்டு அவனுக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது. ‘துரோகிகள்’ எண்ணி எண்ணி மனம் காந்தினான்.



அவனுக்கு ஷிவ்வைப் பற்றித் தெரியும், ஆனால் உயிர் நண்பன்(?) வசந்தன் “நான் ஹாண்டில் பண்றேன்னா ஷிவ் அத்தான் ஒதுங்கிடுவார் சாந்த், கமான் மேன் பி போல்ட்!! இதெல்லாம் நீ ஃபேஸ் பண்ணா தான் உன்னால நம்பர் ஒன் பிஸ்னஸ் மேனா வர முடியும் ஷிவ் அத்தானைப் போல. திஸ் பிராஜக்ட் இஸ் எ மைல் ஸ்டோன் ஃபார் யுர் கரியர்” என்று அவன் செய்த மூளைச் சலைவையில் அந்த ஈ.சி.ஆர் பிராஜக்டை செய்யச் சம்மதித்தான். நண்பன் என்கிற போர்வையில் வலம் வந்த பனங்காட்டு நரி தன்னை சிங்கத்தின் குகையினுள்ளே தன்னைக் குப்புறத் தள்ளிவிட்டு சாமார்த்தியமாக நழுவிக் கொண்டான் என்று இப்பொழுது அல்லவா அவன் மரமண்டைக்குப் புரிகிறது. ஷிவேந்திரனைப் பற்றித் தெரிந்தும் அந்த துரோகியை நம்பிய தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி வருந்தியவாறே, மெதுவாகத் தன்னை சமன் படுத்திக் கொண்டு எழுந்து வீதியில் இறங்கி நடக்கலானான் கால் போன போக்கில். அவனது தொழிலையும், வாழ்க்கையையும் ஒரு பொழுதில் சூரைடாடிவிட்டானே ஷிவேந்திரன்!! சாந்தனுக்கு, அவனுடைய தங்கை அவர்கள் வீட்டு காரோட்டியுடன் ஊரை விட்டு ஓடிவிட்டது தெரியாது! தெரிந்தால்! அவனும் அவன் குடும்பமும் இந்த பேரிடியை தாங்குவார்களா???

லேசாக கதவைத் தட்டிவிட்டு ஷிவ்வின் அறையினுள்ளே நுழைந்தான் ஆண்டோ. தனது மடிக்கணினியில் பார்வையைப் பதித்துக் கொண்டே “எஸ் ஆண்டோ, வாட்ஸ் தி மேட்டர்” என வினவினான் ஷிவ். “பாஸ் அந்த ஈ.சி.ர் ப்ராஜெக்ட் லாண்ட் ஓனர் உங்களப் பாக்க வெயிட் பண்றாரு!!” எனப் பதிலளித்தான் ஆண்டோ.



“நாம பொரம்போக்கு லாண்டெல்லாம் வாங்குறது இல்லைனு உனக்குத் தெரியும் தானே ஆண்டோ? ஆஸ்க் ஹிம் டு வைப் ஆஃப் திஸ் பிளேஸ்” என்று மடிக்கணினியில் இருந்து பார்வையை விலக்காமல் சாதாரணமாகக் கூறினான் ஷிவேந்திரன்.



அந்த நில அதிபதிக்கு கிட்டதட்ட 20 ஏக்கர் இடம் மொத்தமாக கிழக்கு கடற்கரைச் சாலை(ஈ.சி.ஆர்) இருந்தது. அதன் மதிப்பு இன்றையத் தேதிக்கு 500 கோடிகள். ஆனால் இரண்டு மணி நேரத்தில் அவனது பரம்பரை சொத்தைப் புரம்போக்காக மாற்றிய ஷிவேந்திரனின் தீரத்தை என்னவென்று சொல்வது! ஈவு, இரக்கம் சிறிதும் இன்றி இரண்டு செல்வந்தர்களை செல்லாக் காசாக்கி நடுத் தெருவில் நிறுத்திவிட்டானே!



ஷிவேந்திரனைப் பொறுத்த வரை “அடிபணி அல்லது அழிந்து போ”. அவன் அசுரன்! அடங்காத அசுரன்!! அழகான அசுரன்!!! இந்த அசுரனின் தெய்வமங்கையவள் அவனை நோக்கி ரயிலில் தட தடத்து வந்து கொண்டு இருந்தாள்!!! கண்ணீரில் மிதந்த கண்கள் ஷிவேந்திரனின் மனக்கண்ணில் மின்னி மின்னி மறைந்தது.



ஈரோடு ரயில் நிலையத்தில் தனது ஓட்டத்தைத் தற்காலிமாக நிறுத்திக் கொண்டது நாகர்கோயில் எக்ஸ்பிரஸ். மணி ஆறு, இருள் சூழத் தொடங்கி இருந்த நேரம். இன்னும் ஆறு மணி நேரப் பயணம் எஞ்சி இருக்கிறது. புகழினி ஜன்னலோடு ஒட்டி தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.



மற்றவர்களின் இரக்கப் பார்வைகளையும், குறு குறு பார்வைகளையும் சந்திக்கத் திராணியின்றி தலை குனிந்திருந்தாள். கண்ணீர் வற்றிவிட்டிருந்தது. அவளது சோர்ந்த தோற்றம் கண்டு அன்னம்மாவுக்கு நெஞ்சுக் குமிறியது. அவர்கள் ரயிலில் ஏறியவுடன் கேட்கப்பட்ட கேள்விகள் தான் எத்தனை! அம்மம்மா! மனிதர்களா இவர்கள்? பரிதாபம் என்கிற போர்வையில் அவர்கள் மனதின் வக்கிரங்களைக் காட்டிவிட்டனரே!!!



அவரின் நினைவுகள் ஆறு மணி நேரம் பின்னோக்கிச் சென்றது. “மெதுவா கண்ணு, மெதுவா” என புகழினியை கைதாங்கலாக பிடித்துக் கொண்டு இரயில் படியேறச் செய்தார் அன்னம்மா. ஒரு மத்திய வயது பெண் அவர்களுக்கு உதவினார். எல்லோரது பார்வையும் புத்தம் புது தாலி கழுத்தில் மின்ன மணக்கோலத்தில் திருதிருத்து அமர்ந்து இருந்த புகழினியின் மேல் தான் நிலைத்து நின்றது. போவோர் வருவோர் எல்லாம் அவளைக் காட்சிப் பொருளைப் போல் பார்த்துவிட்டு தங்களுக்குள் கிசுகிசுத்துவாறேச் சென்றனர். இதை அவர்கள் இருவரும் கவனிக்கும் நிலையில் இல்லை. அன்னம்மா பயணப் பொதிகளை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார்.



“ஏம்மா ஏதாவது சாப்புடுறிங்களா? காலையில இருந்து வெறும்ம் வயிறா இருக்கிகளே? ரொம்ப சோந்தாப்லாத் தெரியுறிங்க.” மனச் சங்கடத்துடன் வினவினார் அன்னம்மா.



நாவறண்டு போயிருந்தது. பதில் சொல்லும் தெம்பு மனதிற்கோ, உடலுக்கோ இல்லாதமையால் சன்னமாக, வேண்டாம் என்று தலையாட்டினாள் புகழினி. அவர் அவளுக்கு மறுப்பு சொல்ல வாய் திறக்கும் முன் காரோட்டி அவர்களுக்கு இரண்டு சாப்பாடு பொட்டலங்களையும், இரண்டுத் தண்ணீர் பாட்டில்களையும், இரவு சாப்பாட்டிற்கு 200 ரூபாய் பணத்தையும் கொடுத்து விட்டுச் சென்றார். அன்னம்மா அவளுக்கு கட்டாயப்படுத்தி உணவினைத் தானே ஊட்டிவிட்டுவிட்டு தானும் உண்டார்.



அவர்கள் உண்டு முடிக்கும் வரைக் காத்திருந்த கழுகுக் கூட்டம் அவர்களை வார்த்தைகளால் கொத்தத் தொடங்கினர். ஒரு வயதான பெண்மணி “ஏம்மா பொண்ணே இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சா? எங்க போறிங்க? எங்க உன் புருஷனைக் காணும்? இது யாரு உன் மாமியாரா?” என வினவினார்.

“எனக்கு தெரிஞ்சவரோட தான்மா பாப்பா கல்யாணம் கட்டியிருக்ககாங்க. ஒரு அவசர வேலை அதான் எங்கள ரயிலடியில விட்டுட்டு போயிட்டார். நாங்க மெட்ராசுக்கு போறோம்மா” பொய்மையின்றி தன்மையாக பதில் உரைத்தார் அன்னம்மா.



“ஓ! உன் பேரென்ன பொண்ணே? உன் பிறந்த வீட்டு ஆளுங்க எங்க? மாமியார் வீட்டு ஆளுங்களையும் காணும்? நீ அனாதையா? உன்னை ரயிலேத்திவிட யாரும் வரல? உனக்கு இந்த நகை நட்டெல்லாம் யாரு போட்டா? கவரிங்கா? தங்கம்மா?” என வரிசையாக கேள்விகளை அடுக்கினார் அந்த வயதானப் பெண்மணி. எல்லோரும் அவருடையக் கேள்விக்கான பதிலை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்து இருந்தனர்.



“என்னம்மா என்னப் பேசுறிங்க? மொதல்ல உங்களுக்கு எதுக்கு நாங்க பதில் சொல்லனும்? யாரு நீங்க? எங்களுக்கு ஒட்டா? உறவா? கண்டமேனிக்கு கேள்விக் கேக்கிறிங்க? உங்களுக்கும் புள்ளக் குட்டி இருக்கும்மா. வாய் புளிச்சிதோ மாங்கா புளிச்சிதோனு பேச வேண்டாம். உங்க வயசுக்கு அது நல்லாவும் இல்ல. தான் முதகுல இருக்க அழுக்கைத் துடைக்க முடியாம அடுத்தவங்க முதுகுல இருக்கிற அழுக்கை பராக்கு பாக்க வந்துட்டாங்க வேலை மெனக்கெட்டு!” எனப் பொங்கிவிட்டார் அன்னம்மா. அவரின் கடைசி வாக்கியம் தங்கள் காதை ஆவலுடன் தீட்டிக் கொண்டவர்களுக்கும் சேர்த்து தான் என்பது அங்குள்ளவர்களுக்குப் புரிந்தது.



ஒரு இளைஞன் “ஏன் பாட்டி எதுக்கு அந்த பொண்ணு மனசு புண்படராப்பல பேசுறிங்க? அவங்கள பத்தி உங்களுக்கு எதுக்கு? முதல்ல உங்க வீட்டுல உங்களுக்கு தினமும் வேளா வேலைக்கு சோறு கிடைக்குதா? இவ்வளவு பேசிறிங்க, இந்த வயசில உங்கள ரயிலேத்திவிட ஒருத்தரும் வரலியே! மறந்திட்டிங்களா?? தனியா டிக்கெட் வாங்கி போர்ட்டர் உதவியோட தான் நீங்க ரயில் ஏறுனிங்க! அப்ப நீங்க என்ன அனாதையா??” என நெற்றி அடியாகக் கேட்டுவிட்டான். ஈரமுள்ள நெஞ்சினர் சிலர் இப்பூவலகில் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதற்கு அந்த இளைஞனே ஒரு எடுத்துக்காட்டு.



அந்தப் பாட்டியும் இளைஞனும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை புகழினி. ‘நீ அனாதையா? நீ அனாதையா? நீ அனாதையா?’ என்ற கேள்வியே திரும்பத் திரும்ப அவள் காதுகளில் ரீங்காரமிட்டது.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஆமா! நா(ன்) அனாததேன் தேனியில பெரிய செல்வாக்கான குடும்பத்திலெ பொறந்த அனாத. கேப்பார் இல்லாத அனாததேன். எம் சாதி சனமும், எம் பொறந்து வீட்டு சனமும் என்னய ஒதுக்கிப்புட்டாய்ங்க. எனக்கு தாலிக் கட்டுன மவராசனும் என்னய ஒதுக்கிப்புட்டு போய்ட்டாக. இனி போக போக்கிடம் இல்லாம கெடக்க நான், நாதியத்த அனாததேன்.” என மனதினுள் எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தாள் அந்த அபலைப் பெண்.



அன்னம்மா பதறிப்போய் “அய்யோ என்னம்மா நீங்க இந்த கிறுக்கு கிழவி சொல்லுறதை எல்லாம் நினைச்சிக்கிட்டா அழுவுறது? கண்ணத் துடைங்க.” எனத் தன் முந்தானையால் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு புகழினியை சமாதானப்படுத்தி தனது தோள்களில் சாய்த்துக் கொண்டார் அன்னம்மா. மறந்தும் அவர் அவளை கருப்பி என்று அழைக்கவில்லை. பிறகு அதுவேறு அவளைக் கேலிக்குள் ஆக்கிவிடுவார்களே பொல்லாத மனித ஜென்மங்கள்.



செங்கமலத்திற்குப் பிறகு ஒரு தாயைப் போல தன்னை அரவணைக்கும் அன்னம்மாவின் தோள்களில் வாகாக சாய்ந்து கொண்டு விசும்பியபடியே உறங்கிவிட்டாள் புகழினி. அவளின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக தன் மடி சாய்த்துக் கொண்டார் அன்னம்மா.



அந்த இளைஞனிடம் வாதிட்டு செழிக்க முடியாத காரணத்தினால் கழிவறைக்குச் செல்கிறேன் என்கிற சாக்கில் “நொண்டி பொண்ணா இருக்கே, அதுவும் கூழையா கருப்பா வேற இருக்கு. ஒரு வேலை ரெண்டாந்தாராமோ இல்லைனா புருசன் விட்டுட்டு போய்ட்டானோனு கேட்டேன். அழுது வடிக்கிது, பாத்தா வெகுளியா வேறத் தெரியுது! பட்டணத்தில இது எப்புடி பொழப்பு நடத்தும்னு தான், நான் கவலைப்பட்டுக் கேட்டேன்! இது ஒரு குத்தம்மா??? நல்லதுக்கே காலமில்ல. இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு கொஞ்சம் கூட பெரியவங்கனு மரியாதை இல்ல. ஹ்ம்ம்ம்ம் கலிகாலம்” என நொடித்துக் கொண்டே சென்றுவிட்டார்.



அந்தப் பெண்மணி சொன்ன விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் அவரின் கூற்று முற்றிலும் உண்மையே! மறுக்க முடியாததும் கூட! வெகுளியான இந்தப் பெண் சதிகார அரக்கக் கும்பலுடன் எப்படிக் குப்பை கொட்டும்?? என்றக் கேள்வி பூதாகரமாக அன்னம்மாவின் முன் நின்றது.. ஆதரவற்றக் குழந்தையைப் போன்று தன்னை சுருட்டிக் கொண்டு உறங்கும் புகழினியை குனிந்து நோக்கினார்.



“கருவறையில் இருந்து இறங்கி

கல்லறை நோக்கி நடந்து செல்லும்

தூரம் தான் வாழ்க்கை”



இந்த வாழ்க்கை அவளுக்கு இன்னும் என்ன வைத்திருக்கிறது??? இந்தக் கேள்வி ஆழ்ந்த உறக்கத்திலும் புகழினியின் மனதினில் ஓடிக் கொண்டிருந்தது. இனி அவளின் நிலை என்ன? அவளின் அடையாளம் என்ன? அவள் கழுத்தில் மஞ்சள் மணம் கமழும் தாலிக் கொடியின் அர்த்தம் தான் என்ன?



“ப்பாம்ம்ம்ம்ம்ம் ப்பாஆம்ம்ம்ம்ம்” என்ற ரயிலின் கூவலைக் கேட்டுவிட்டு நிகழ்காலத்திற்குத் திரும்பினார் அன்னம்மா. புகழினியைத் தேநீர் பருகச் செய்தார். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கு மெட்ராசுக்கு போவ என மனதிற்குள் எண்ணினார் அன்னம்மா.



“ஆண்டோ கம் டு மை கேபின்” என அலைபேசியின் வாயிலாக அழைப்பு விடுத்தான் ஷிவேந்திரன். “எஸ் பாஸ்” எனப் பதிலளித்துவிட்டு அடுத்த 30 வினாடிகளில் ஷிவ்வின் அறைக்குள் இருந்தான் ஆண்டோ.



“வசந்த டிரேஸ் பண்ணியாச்சா?” என வினவினான் ஷிவ்.



“அப்ஸ்காண்டட் பாஸ்” என நறுக்கு தெறித்தாற்போல் பதிலளித்தான் ஆண்டோ.



“ஹண்ட் ஹிம் டவுன் பிஃபொர் டுவெல் பி.எம்” என அழுத்தமானக் குரலில் உத்தரவிட்டான் ஷிவ்.



“டன் பாஸ்” என்றவிட்டு வாயிலை நோக்கி நடந்தவன், ‘ஆண்டோ’ என்ற ஷிவ்வின் விளிப்பில் நின்று திரும்பினான்.



“இன்னும் டூ ஹவர்ஸ்ல நான் போட் கிளப் ஹவுஸ்க்கு போகனும், மேக் தி நெசசரி அரேன்ஜ்மென்ட்ஸ்” என்றுவிட்டு தனது வேலையில் ஆழ்ந்துவிட்டான் ஷிவ்.

“எஸ் பாஸ்” உள்ளே சென்றுவிட்டக் குரலில் பதிலளித்துவிட்டு வெளியேறினான் ஆண்டோ.. அந்தக் குரலின் மாறுதலை ஷிவ் உணர்ந்தும் உணராதவனாகக் காட்டிக் கொண்டான்.



போட் கிளப் ஹவுஸ்! ஷிவ்வின் மன்மத ராஜ்ஜியம். அங்கு உள்ள வேலையாட்கள் மற்றும் அந்தப் பெண்களைத் தவிர அங்கு வேறு எவருக்கும் உள்ளே வர அனுமதி இல்லை. இன்று காலையில் ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு இரவு வேறு பெண்ணுடன் உறவு கொள்ளப் போகிறான்.



“அந்த மாமா பயலோட இப்போ பேசனுமா தலையெழுத்து” என மனம் வெதும்பி அந்த நபருக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தான். ஷிவ்வின் உத்தரவை 20 வினாடிகளில் கூறிவிட்டு. அலைபேசியை அணைத்துவிட்டான். அவனுக்கு மனது பாரமாக இருந்தது, புகழினியை எண்ணி. “சர்ச்சிக்கு போகனும் ஆஃபிஸ் முடிஞ்சோன.” என மனதிற்குள் தனது பாவத்தைக் கர்த்தரின் காலடியில் சமர்ப்பிக்க விழைந்தான் ஆண்டோ.



ஷிவ் தனது அலுவலகத்தை விட்டுக் கிளம்பினான் ரகசிய வாயிலின் வழியாக. அவனது ரோல்ஸ் ராய்ஸ் சென்னையில் வெகு பிரசித்தம். கிளப் ஹவுஸிர்கு செல்லும் பொழுது வேறு வண்டிகளைத் தான் அவன் உபயோகப் படுத்துவது. அவனே ஓட்டிச் செல்வான்.



அவனது கார் கிளப் ஹவுஸிர்குள் குலுங்கி நின்றது. அந்தக் கட்டிடம் வித்தியாசமான கட்டமைப்புடன் கட்டப்பட்டது. வெளியில் இருந்து யார் பார்த்தாலும் அங்கு நடப்பவைத் தெரியாத மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளது. பங்களாவின் வாசலைத் தாண்டி ஒய்யாரமாக நடந்து வந்தாள் ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்திருந்த நவநாகரிக யுவதி ஒருத்தி. ரோஷினி! அவனைக் கட்டி தழுவி, கழுத்தை வளைத்து அவனின் உதட்டைக் கவ்வி உறிஞ்சினாள். ஷிவ் அவளை அவனிடம் இருந்து அவளைப் பிரித்து எடுத்தான்.



“ரோஷினி, நீ யாருங்கறதை மறந்திடாத. பெட் ரூம் தான் உன்னோட ஹைட் அவுட், அந்த ஸ்பேஸ் தாண்டி நீ வரக் கூடாது. காட் இட்.” அழுத்தமானக் குரலில் கூறிவிட்டு மாடிப் படிகளில் தாவி ஏறிச் சென்றுவிட்டான் ஷிவேந்திரன்.



ரோஷினிக்கு முகம் கருத்துவிட்டது. ரோஷினி, 21 வயது கேரளத்துப் பேரழகி, பிரபலமான மாடல், 5 வெற்றிப் படங்களில் நடித்துவிட்டாள். நான்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாள், அதுவும் பெரிய ஹீரோக்களுடன். கோடிகளில் சம்பளம். இவள் தான் அடுத்த நயன்தாரா என கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கிறது! அவளின் அழகைப் பார்த்து மயங்கி, அவளின் பாதங்களில் பணிந்து அவளுக்குச் சேவகம் செய்யவும், அவளுக்காக தங்களது சொத்து சுகங்களைஎழுதி வைக்கவும் சில பல பெண் பித்தர்கள் காத்துக் கிடக்கின்றனர்.



ஷிவேந்திரன் அவர்களில் ஒருவன் அல்லவே! அவனை அடையத் துடிக்கும் பெண்களில் ரோஷினியும் ஒருத்தி. எவ்வளவோ முறை அவன் அவளை உதாசினப் படுத்தி இருக்கிறான் தான். ஆனால் இன்று போல், நீ ஒரு வேசி ஒரு நாளும் நீ என் மனைவியாக முடியாது என்று முகத்தில் அடித்தாற்போல் பட்டவர்த்தனமாகக் கூறியதில்லை. அவளுக்குக் கோபம் கரைபுரண்டு ஓடியது. ஆனால் அவள் அதனை அவனிடம் காட்டினால் நாளைப் பிச்சைக்காரியாக அவளைத் தெருவில் நிறுத்தி விடுவான். எமகாதகன்! என எண்ணமிட்டவாறே மாடியேறிச் சென்றாள்.



ஷிவேந்திரன் இரவு உடையில் கையில் விஸ்கி நிரம்பிய கோப்பையுடன் பால்கனியின் வாயிலாகக் கடலை வெறித்துக் கொண்டிருந்தான். கதவு திறக்கும் அரவம் கேட்டும் அவன் திரும்பவில்லை. “டார்லிங்” எனக் கிள்ளை மொழியில் கொஞ்சிக் கொண்டு அவனைப் பின்பக்கமாக அணைத்தாள் ரோஷினி.



தனது கையில் இருந்த விஸ்கியை ஒரே மூச்சில் குடித்துவிட்டு. அவளை முன் பக்கமாக இழுத்தான். அவள் மறுபடியும் அவனை அணைக்க முற்பட்டாள். அவன் அவள் தோள்களை அழுந்தப் பற்றி இருந்தான். அவளால் நகர முடியவில்லை.



அவளின் கண்களை ஊன்றிப் பார்த்தான் ஷிவ். அவன் மனது சொல்லியது “சாகசம், பேராசை நிறைந்த கண்கள்” என்று. அவளைத் தன்னை விட்டு விலக்கி விட்டான். அந்தக் கண்கள்! எந்தப் பெண்ணிடமும் அவன் இதுவரை கண்டிராத உணர்வினை பிரதிபலித்தன. அது என்ன? தீவிரமான யோசனைக்கு உள்ளானான்.



ரோஷினி கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள். அவனை நெருங்கினால் அடித்தாலும் அடித்து விடுவான் முரடன். அவள் அடிவாங்கியவள் தான்! பின்னே லட்சங்களில் காசை வாரி இரைக்கிறான். நாலு அடித்தால் தப்பொன்றும் இல்லையே??? என எண்ணினாள் அந்த அழகி.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யோசனையிலிருந்து விடுபட்ட ஷிவ், ரோஷினியை நெருங்கி அவளின் இடையில் கை கொடுத்துத் தூக்கிச் சென்று கட்டிலில் வீசினான். அவள் பொத்தென்று அந்தப் பஞ்சு மெத்தையில் விழுந்து உருண்டாள். அவள் மீது கவிழ்ந்தான். வசந்தன், சாந்தகுமார் மேல் உள்ள ஆத்திரம் எல்லாவற்றிற்கும் அவள் வடிகால் ஆனாள்.



நள்ளிரவு 12.20 மணிக்கு அவனுக்கு ஓர் குறுஞ்செய்தி வந்தது. அதனைப் படித்தவன் உடனே குளியல் அறைக்குள் சென்று குளித்துவிட்டு, ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தவன், தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு “வெகேட் இன் 15 மினிட்ஸ்!” என ரத்தினச் சுருக்கமாக ரோஷினிக்கு ஆணையிட்டவன், அவள் பதிலுக்கு காத்திராமல் வெளியேறிவிட்டான்.



ரோஷினி பல்லைக் கடித்தாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும். பெருமூச்சிட்டவள் லேசாகத் தள்ளாடியவாறு குளியல் அறை நோக்கிச் சென்றாள்.



ஷிவ்வின் பஜீரோ கார் ஈ.சி.ஆர் சாலையில் ஆள் அரவமற்ற இடத்தில் நின்றது. வேகமாக இறங்கி தனது ரோல்ஸ் ராய்ஸில் ஏறிக் கொண்டு சுபிக்ஷத்தை நோக்கிப் பறந்தான்.



“பயணிகளின் கனிவான கவனத்திற்கு, நாகர்கோயிலில் இருந்து திருச்சி வழியாக வரும் நாகர்கோயில் எக்ஸ்பரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரத்தை வந்தடைய இருக்கிறது” என ஒரு அறிவிப்புக் குரல் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டு இருந்தது, சென்னை செண்டரல் ரயில் நிலையத்தில்.



ரயில் நின்றது, பயணிகள் கிடு கிடுவென இறங்கினர். அது நள்ளிரவு 12.30 மணி, இருப்பினும் கூட்டம் அலை மோதியது. எல்லோரும் தங்கள் கூட்டுக்குள் அடைய வேக வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். சிலர் தங்கள் பயணத்திற்கான ரயிலுக்காகக் காத்துக்கிடந்தனர்.



“உங்க குச்சியைக் குடுங்க பாப்பா, அப்புறம் வாங்கிக்கலாம்” என்றார் அன்னம்மா. அவரும் அந்த இளைஞனும் புகழினி ரயிலில் இருந்து கீழே இறங்குவதற்கு உதவி செய்தனர். அன்னம்மா அவனுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். அவன் தலையசைத்து ஏற்றுக் கொண்டான். அப்பொழுது அவர்களை நோக்கி காரோட்டி விரைந்து வருவது தெரிந்தது. அந்த இளைஞன் லேசாக புன்னகைத்து விட்டு அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான்.



“ஏன் பாப்பா, தெம்பா இருக்கிங்களா? இங்க ரொம்ப தூரம் நடக்கனும். உங்களால நடக்க முடியுமா? எதுவும் சாப்பிட வேணுமா?” எனப் பரிவுடன் வினவினார் அன்னம்மா.



ஆழ மூச்செடுத்தவள். லேசாகப் புன்னகைத்துவிட்டு தன் ஊன்றுகோல்களை ஊன்றி நடந்தாள் புகழினி. புகழினியின் வேகத்துக்கு அவளுடன் இணையாக நடந்து சென்றார் அன்னம்மா.



அந்த நள்ளிரவு கார் பயணம் அவளுக்குப் புதுமையாக இருந்தது. நள்ளிரவிலும் பளிச்சென விளக்குகள் மின்ன சன சந்தையுடன் இருக்கும் அந்த ஊர் அவளுக்குப் புதிது. அவள் ஆர்வமாக வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அன்னம்மாவுக்கு அவளின் முக மலர்ச்சி சற்று ஆறுதலைத் தந்தது. அவரின் முதலாளி தர்மேந்திரன் அவர்களுடன் தான் ரயிலில் பயணம் செய்தார். ஆனால் அவரைக் காணவில்லையே??? இந்தக் கேள்வியை அவரால் வாய் திறந்து கேட்டுவிட முடியாது. எனவே அவரும் ஜன்னலின் வாயிலாக வேடிக்கைப் பார்க்கலானார்.



கார் சுபிக்ஷத்தினுள் நுழைந்தது. அந்த மாளிகையைச் சுற்றி இருந்த தோட்டத்தை ஆர்வத்துடன் பார்த்தாள் புகழினி. மாளிகையை ஒப்புக்கு நோக்கியவள், கலைநயமாக இருக்கிறது என மனதினுள் எண்ணினாள்.



அன்னம்மாள் அவள் இறங்குவதற்கு உதவி செய்தபடி “என்ன பாப்பா பாக்குறிங்க? இது தான் எங்க ஐயாவோட வீடு.” என்றார் லேசாக புன்னகைத்தபடி.



அவளிடம் அதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை. என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் வாழவிருக்கும் வீடு என்றோ உன்னுடைய வீடு என்றோ உன் புகுந்த வீடு என்றோ அவர் சொல்லவில்லையே! பின் அவள் என்னவென்று பதில் சொல்லுவாள்! லேசாக உதட்டை இழுத்து வைத்தாள்.



போர்டிகோவில் இருக்கும் படிகளை நோக்கி மெதுவாக நகர்ந்தனர். அப்பொழுது புயலின் வேகத்துடன் ஒரு கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் புகழினியை மோதுவது போல் வந்து நின்றது. அன்னம்மா சடுதியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு புகழினியை நகர்த்த முயன்றார். அதற்குள் காரிலிருந்து இறங்கிய ஷிவேந்திரன்புகழினியை ஆழ்ந்து நோக்கினான். அன்னம்மா பின்னுக்கு நகர்ந்துவிட்டார்.



எங்கே கார் தன்னை மோதிவிடப் போகிறதோ என்ற பயத்தில் புகழினி கண்களை இறுக மூடிக் கொண்டாள். ஷிவ் அவளைப் பார்த்தவாறே அவளின் முன் வந்து நின்று சொடக்கிட்டான் இரு முறை. பட்டெனக் கண் இமைகளை மலர்த்தினாள் புகழினி. அந்த சொடக்கொலி அவளுக்கு எதையோ உணர்த்தியது. போர்ட்டிகோவில் தொங்குகின்ற ஷேண்டிலியர் வெளிச்சத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக உள்வாங்கிக் கொண்டனர். அவள் மிரட்சியுடன் ஷிவேந்திரனை அண்ணாந்து நோக்கினாள். ஷிவேந்திரன் ஆராய்ச்சியுடன் அவளைக் குனிந்து நோக்கினான்.



மூன்று முடிச்சிட்ட மணாளன்! அவளைப் புருவம் முடிச்சிட ஆராய்வதேனோ???



கருப்பு அழகி வருவாள்…
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே :smiley6:

எப்படியிருக்கிங்க?? தீபாவளி நல்லாப் போச்சா??? சந்தோசமாகக் கொண்டாடினிங்களா!!! தீபாவளிப் பண்டிகையொட்டி ஊருக்கு போயாச்சு. இண்டர்வுயூ போஸ்போன் ஆகிடுச்சு ஃபார் சேம் ரீசன்...

'என் கருப்பழகி'-9வது அத்தியாயம் பதிந்துவிட்டேன் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கருப்பழகி”

அத்தியாயம் – 9

ஷிவேந்திரன் புருவங்கள் முடிச்சிட அவனது மனையாளைக் கூர்மையாக தலை முதல் கால் வரை பார்வையிட்டான். அவள் கால்களில் அவன் பார்வை சற்று நேரம் நிலைத்து நின்று, அவள் உடுத்தியிருந்த கருஞ்சிவப்பு வண்ணப் பட்டுப் புடவையைத் தாண்டி ஊடுருவ முயன்றது. தலை குனிந்த நிலையில் இருந்த அவளின் முன் மறுபடியும் சொடக்கிட்டான் ஷிவேந்திரன். சட்டென அவள் தலை நிமிர்ந்து தன் கணவனை ஏறிட்டாள். அவளின் அகண்டிருந்த சிறிய விழிகளை ஊடுருவியவன், பின்பு எதுவும் சொல்லாது பேர்டிகோவை ஒட்டியிருந்த நீளமான அகலமான படிகளில் தாவி ஏறிச் சென்றுவிட்டான்.



அன்னம்மா புகழினியை நெருங்கி அணைத்துக் கொண்டு “வாங்கம்மா போகலாம்” என்றார் மென்மையாக. புகழினிக்கு ஷிவேந்திரனைக் கண்ட பின்பு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. அவனது தோற்றமும், பார்வையும் அவளுக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது.



அன்னம்மாவின் மனம் சங்கடப்பட்டது. காலையில் திருமணம், மதியம் இரயில் பயணம், வரவேற்க ஆளின்றி புகுந்து வீட்டிற்குள் அடியடுத்து வைக்கும் நள்ளிரவு தருணம்! அவள் என்ன செய்வாள் பாவம்! கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிக் கூவலாம். ஆனால் கொண்டவர், பெற்றவர், உற்றவர், மற்றவர் என யாவரும் அவளைக் கழித்துக் கட்டிவிட்ட பின், அவளுக்குப் பயம் பிடிக்காமல் இருந்தால் அல்லவா அது ஆச்சரியம்! பாவப்பட்ட பெண்! இன்னும் என்ன என்ன கொடுமைகள் நடக்கப் போகிறதோ!!! அந்த ஆண்டவன் தான் இந்த பொண்ண காப்பத்தனும் என மனதிற்குள் புழுங்கினார் அன்னம்மா.



தனது மனக்கிலேசத்தை மறைத்துக் கொண்டு லேசாகப் புன்னகைத்தவர் “கண்ணு, எதுக்கு கலங்குறிங்க?? அச்சோ சின்ன பிள்ளைப் போல முதல்ல கண்ணைத் துடைங்க.” என அவளை சமாதானப் படுத்தியவர் அவளது கண்ணீரை அவசரமாக அழுந்த துடைத்துவிட்டார்.



ஷிவேந்திரனுக்கு கண்ணீர் விடுவது பிடிக்காது. அதிலும் பெண்கள் கண்ணீர் விட்டால் அவ்வளவு தான், கொதித்து எழுந்து விடுவான்! கண்ணீர் விடுபவர்களை நீலி கண்ணீர் வடிக்காதே, நாடகம் ஆடாதே என காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி எடுத்ப்பான்.



அவளை மெதுவாக அணைத்தவாறு மெல்லப் படிகளில் ஏறினார். சுபிக்ஷம் பழங்கால அரண்மனை போல் கட்டப்பட்ட காரணத்தினால் 21 படிகள் இருந்தது போர்டிகோவில் இருந்து வீட்டின் பிரதான வாயிலுக்கு. மெதுவாகத் தனது ஊன்றுகோல்களை ஊன்றி சற்று சிரமத்துடன் படிகளில் ஏறினாள். படிகள் அகலமாக இருந்தமையால் அவள் நொண்டிக் கொண்டு ஏறுவதற்கு ஏதுவாக இருந்தது. அன்னம்மா மனதினில் “இவங்க உச்சானி கொம்புல தான் ஏறி உக்காரனும்மா, கீழ உக்காந்தா காணாதா! பாவம் புள்ள எவ்வளவு சிரமப்படுது!” எனப் புகழினிக்காக தனது எசமானர்களை மனதினுள் வைதார் அந்த ஈர நெஞ்சமுள்ள பெண்மணி.



அன்னம்மாவும் புகழினியும் ஒருவாறு மாடி ஹாலை அடைந்து விட்டனர். அங்கு நிசப்தமாக இருந்தது, பெரிதாக தொங்கி கொண்டிருந்த சாண்டிலியர் தனது வெளிச்சத்தை பரப்பியிருந்தது. அன்னம்மாவுக்கு அவளை எங்கே தங்க வைப்பது என யோசனையாக இருந்தது. புகழினியை, அந்த வீட்டின் அலங்காரமான ஆடம்பர தோற்றம் அவளை மிரட்டியது. அவளுடைய பிறந்த வீடு செல்வ செழிப்பான குடும்பம் தான். ஆனால் தன் புகுந்த வீட்டினரின் செல்வ நிலைக்கு தன் பிறந்த வீடு ஈடு இணையாகாது என்பதைப் புரிந்து கொண்டாள்.



சொடக்கொலி! பேந்த பேந்த விழித்து கொண்டிருந்த புகழினியும் யோசனையுடன் நின்றிருந்த அன்னம்மாவும் அதிர்ந்தவர்களாக சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினர். ஷிவேந்திரன் அந்த நவீன ஹாலில் இருந்த மூன்று பேர் அமரக்கூடிய ஆடம்பர இருக்கையில் நடுநாயகமாகக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.



சிகரட்டின் புகையை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டபடி அவளைப் பார்வையிட்டான். திருமணக் கோலத்தில் புடவை கசங்கி, தலையில் இருந்த பூக்கள் வாடி, சிறிய கண்கள் சிவந்து, அழுது வடிந்த முகத்துடன் வாடி வதங்கிய கொடி போல் காட்சியளித்தாள் அவன் மனையாட்டி. இருக்கையில் இருந்து எழுந்து அவளருகே வந்தான். அன்னம்மா பின்னே நகர்ந்து கொண்டார்.



சட்டென்று அவளின் இடது கையில் பற்றி இருந்த ஊன்றுகோலை தன் வலது காலால் தட்டிவிட்டான். ஷிவேந்திரனின் இந்த திடீர் தாக்குதலினால் புகழினி நிலை தடுமாறி தரையில் விழுந்தாள். ஷிவேந்திரன் தன்னுடைய ஷூ அணிந்திருந்த வலது காலால் அவளுடைய புடவையை இடது காலின் முட்டி வரை மேல் ஏற்றிவிட்டு அவளின் சூம்பியிருந்த கால்களைக் கூர்ந்தான்.



அன்னம்மா “ஐய்யோ கண்ணு” என அலறியபடி புகழினியை நோக்கி மனம் பதற அடியடுத்து வைத்தார். ஷிவேந்திரனின் அழுத்தமான பார்வையில் மனம் கலங்க நின்றுவிட்டார். ஷிவேந்திரனின் முன்னிலையில் அழுதுவிட முடியாதே!



தரையில் அலங்கோலமாய் சரிந்து கிடந்த புகழினிக்கு வலியில் உயிர் போயிற்று. வலியில் முனகியவளின் கண்களில் நீர் உடைப்பெடுத்தது. வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது, முடியவில்லை!



புகழினி தன்னைச் சமாளித்து கொண்டு எழுந்து அமர்ந்து கொண்டாள். அன்னம்மாவை கலங்கிய விழிகளுடன் நோக்கினாள். ஷிவேந்திரனை பார்க்க அவளுக்குப் பயமாக இருந்தது. அவள் கொடுமைகளை அனுபவித்தவள் தான். ஆனால் இப்படி ஒரு செயலை கணவனாகப் பட்டவனிடம் இருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. தாலி என்ற மஞ்சள் கயிற்றை பெயருக்குக் கட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றவன் தானே அவளுடைய கணவன்!!!



“உன்னால இந்த வாக்கிங் ஸ்டிக்ஸ் இல்லாமல் நடக்கமுடியாதா?” என அழுத்தமான குரலில் வினவினான். புகழினி கலங்கிய விழிகளுடன் உதடுகள் துடிக்க குனிந்த தலையுடன் ‘இல்லை’ எனத் தலையாட்டினாள். மறுநொடி அவளது ஊன்றுகோல்கள் திக்கொன்றுக்கு பறந்து போய் விழுந்தன. ஷிவேந்திரன் அவளின் பக்கத்தில் கிடந்த ஊன்றுகோல்களை தன் காலால் பலமாக எத்திவிட்டிருந்தான்.



புகழினி மீனைப் போல் அவளது வாயைத் திறந்து கணவனை அண்ணாந்து அதிர்ச்சியுடன் நோக்கினாள். என்ன மாதிரி செயல் இது???



“எந்திரிடி” உறுமினான் ஷிவேந்திரன்.



ஷிவேந்திரனின் உறுமலில் அன்னாம்மா நான்கடி பின்னால் நகர்ந்து கொண்டார். அவருக்கு புகழினியை நினைத்தால் பாவமாக இருந்தது. “இந்த பொண்ண என்ன பண்ண போறாரோ???” என ஷிவேந்திரனை நினைத்து மனதிற்குள் கிலி பிடித்துக் கொண்டது அவருக்கு.



புகழினி நடுங்கும் தனது இருக் கைகளையும் தரையில் ஊன்றி எழுந்த கொள்ள முயன்று தடுமாறி குப்புற விழுந்தாள். வலியை உதட்டைக் கடித்து கொண்டு உள்ளடக்கினாள். காலையில் இருந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவள் தலையில் இடியாக இறங்கிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு, அவளின் உடலும் மனமும் ஒருசேர சோர்ந்துவிட்டன! பாவப்பட்ட சீவன்!!!



ஷிவேந்திரன் தனது பேண்ட் பாக்கட்டிற்குள் தனது இடது கையை நுழைத்துக் கொண்டு வலது கையால் சிகரட்டை புகைத்தவாறே அவளைக் கீழ் கண்ணால் நோக்கினான். அவனது உதடுகள் வலது பக்கமாக லேசாகக் கீழ் நோக்கி வளைந்தன.



அன்னம்மாவுக்கு ஷிவேந்திரனை வெறுப்பாக சில வினாடிகள் பார்த்தார். “ச்சே என்ன மனுசன் இவன்?? பணம் இருந்தா மட்டும் போதுமா! குணம் இருக்க வேண்டாமா??? ராஜேந்திரன் ஐய்யாவுக்கும் சுகுணா அம்மாவுக்கும் இப்படியொரு பிள்ளையா!!! இப்பிடி இந்த பொண்ண கஷ்டப்படுத்துறானே பாவிப்பய!!! விளங்குவானா இந்த ராட்சசன்?” எனத் தனது முகமாற்றத்தை மறைத்துக் கொண்டு முதல் முறையாகத் தனது சின்ன எசமானன் ஷிவேந்திரனை மனதிற்குள் காய்ச்சி எடுத்தார்.



தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஷிவேந்திரனை நோக்கி “ஐயா, காலையில இருந்து சின்னம்மா சரியா சாப்பிடல, சோந்து போயிருக்காங்க. அவங்களால தனியா எந்திரிக்க முடியாது ஐய்யா.” எனத் தயங்கியவாறே கூறினார் அன்னம்மா.



“நான் உன்னைக் கேட்டேனா” என்ற பார்வை பார்த்தான் ஷிவேந்திரன். அந்தப் பார்வையில் பயம் படர தலை குனிந்து விட்டார் அன்னம்மா.



“என்ன எழுந்திருக்க முடியலையா? இத கூட செய்ய முடியாதவ எதுக்குடி அவ்வளவு அவசரமா கிளம்பி வந்த??? என்னோட முதல் ராத்திரி கொண்டாடவா??? அவ்ளோ ஆசையா மேடம் உங்களுக்கு?ம்ம்ம்” எனக் குரூரமாய் வினவினான் ஷிவேந்திரன்.



குப்புற விழுந்து கிடந்த புகழினி அந்தக் கேள்வியின் தாக்கத்தில் உயிர் போகும் வலியையும் மறந்து எழுந்து அமர்ந்து விட்டாள். விக்கித்து போனவளின் கண்களில் நீர் திரண்டு அவளின் கன்னங்களில் இறங்கி கீழே உருண்டோடின.



“ஆத்தீஈ எப்புடி கேட்டுப்புட்டாக! என் ஆயிசுக்கும் இவுக சொன்ன சொல்லு மறக்குமா! என் நெஞ்சை அறுக்குதே!!! இந்த நொண்டி சிறிக்கி உசுரு இன்னும் இத கேட்டு போவாம இந்த பாழு(ம்) உடம்பிலே ஒட்டிக்கிட்டு கிடக்கே!!!” என மனதிற்குள் நொந்து கரைந்தாள் புகழினி.



ஷிவேந்திரனை பிரமை பிடித்தவள் போன்று பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தவன் அவளை நெருங்கி, குனிந்து அவளது சேலை விலகியிருந்த இடது கணுக்காலில் தன்னுடைய கையில் இருந்த சிகரட்டால் அழுத்திச் சுட்டான்.



“ஸ்ஸ்ஸா ஆஅ ஆத்தா” எனச் சட்டென உணர்வு பெற்றவளாக வலியில் தன்னையும் மீறிக் கத்திவிட்டாள் புகழினி.



“ஷிவேந்திரா” என்ற கர்ஜனை அந்த மாளிகை முழுவதும் எதிரொலித்தது. ராஜேந்திரன் ஷிவேந்திரனை உறுத்து விழித்தபடி அவனை நோக்கி வேகமாக வந்தார். அவரின் மனைவி சுகுணா அதிர்ச்சியுடன் தனது மகனைப் பார்த்துவிட்டு புகழினியை நெருங்கினார்.



ஒரு உருவம் கீழே ஹாலில் நடந்தவற்றை மாடியிலிருந்த ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டு கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தது. ராஜேந்திரனின் கர்ஜனையில் அறைக் கதவுகள் திறக்கும் ஒலியில் தனது அறைக்குள் மின்னலென சென்று மறைந்தது அந்த உருவம்!



நிதனமாக நிமிர்ந்து நின்ற ஷிவேந்திரன் தனது தந்தையை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. சுகுணா ஒடி வந்து புகழினியை அணைத்துக் கொண்டார். எசமானி வந்துவிட்ட தைரியத்தில் புகழினியை நெருங்கினார் அன்னம்மா. புகழினி சுகுணாவை கண்டு மிரண்டு விழித்தாள். சுகுணாவின் காருண்யம் வழியும் கண்களை அவள் கவனிக்கவில்லை. அல்லது அதனைப் புரிந்து கொள்ள இயலாத பேதையாகிப் போனாளோ!



புகழினியின் மிரட்சியைக் கண்டு அன்னம்மா “கண்ணு எசமானி அம்மாடா, ரொம்ப நல்லவங்க, நீங்க பயப்படதிங்க. உங்க மாமியார் தான்” என சுகுணாவை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.



‘மாமியார்’ என்ற வார்த்தையில் அவள் உடலில் ஓர் வித நடுக்கம் ஏற்பட்டது. அதனை சுகுணாவும், அன்னம்மாவும் புரிந்து கொண்டனர். சுகுணாவிற்கு மனம் வலித்தது, இருப்பினும் அதனை மறைத்துக் கொண்டு “அன்னம்மா போய் முதல்ல தீப்புண்னுக்கு போடற ஆயின்மண்ட்ட எடுத்துட்டுவாங்க” என்றார் மெல்லிய குரலில். “சரிம்மா” எனக் கூறி கொண்டே உள்ளே விரைந்தார் அன்னம்மா.



ராஜேந்திரன் ஷிவேந்திரனின் முன் வந்து நின்று அவனை உறுத்தார். அவன் அசராது அவரது பார்வையை தாங்கி நின்றான். “யார் இந்த பொண்ணு??? இங்கே எப்புடி வந்துச்சி?? எதுக்கு இந்த பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்கிற??” என புகழினியௌ சுட்டிக்காட்டி அழுத்தமாக வினவினார்.



“காலையில அவளுக்கு நான் யெல்லோ ரோப் தட் இஸ் தாலி கட்டினேன். அப்ப அவ எனக்கு யாரு??” என நக்கலாக வினவினான். அவர் அதிர்ந்து போய் புகழினியையும் அவரது மனைவியையும் பார்த்தார். சுகுணா இமை மூடித் திறந்து மகன் சொன்ன செய்தியை உறுதிப் படுத்தினார்.



தந்தையின் அதிர்ச்சியைக் கண்கள் மின்ன ரசித்தவாறு சிகரட்டை அவர் முகத்திற்கு நேரே ஊதினான். சுகுணாவிற்கு மகன் கணவனை அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் வாய் திறந்து கேட்க முடியாத நிலை. கேட்டால் இன்னமும் மோசமாக நடந்து கொள்வான். அதனால் மௌனம் காத்தார். ஆனால் மகன் மேல் இருந்த அவரின் பார்வையை அவர் விலக்கவில்லை. புகழினியை ஆதரவாக அணைத்து அவளின் தலை முடியைக் கோதிவிடவும் தவறவில்லை.



அந்த மாளிகையின் உறுப்பினர்கள் விருந்தாளிகள் வேலைக்காரர்கள் அனைவரும் அங்குக் குழுமிவிட்டனர். மேகவதி “வாட்ஸ் ஹேப்பினிங் ஹியர்?? ராஜ் இப்போ நீ எதுக்கு உயிர் போன மாதிரி கத்தின” என எரிச்சலுடன் வினவினார்.



ராஜேந்திரன் மகன் மேல் இருந்த பார்வையை நகர்த்தவில்லை. ஷிவேந்திரனை அவர் நன்கு அறிவார். அவனது அலுவலகங்களில் துப்புறவு வேலை பார்க்கும் பெண்கள் கூட அழகாக நேர்த்தியாக இருப்பார்கள். அவனுக்கு எதிலும் அழகும், ஆடம்பரமும், நேர்த்தியும் இருப்பது மிக முக்கியம். அவ்வாறான கொள்கைகளை உடையவன், எவ்வாறு இப்படி ஒரு பெண்ணை மணந்து கொண்டான் என்பது அவருக்குக் குழப்பமாக இருந்தது. மகன் பொய் சொல்ல மாட்டான் என்பது உறுதி. ஆனால் எக்காரணித்திற்காக இப்பெண்ணை மணந்திருந்தாலும், கண்டிப்பாக அவை நல்லவையாக இருக்காது என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்து இல்லை.



புகழினி அமர்ந்து இருந்தமையால் ராஜேந்திரனுக்கு அவளின் கால் ஊனம் தெரியவில்லை. அவர் மகன் அந்தப் பெண்ணை சிகரட்டால் சுட்ட போது தான் அங்கு வந்து சேர்ந்தார். அதனைக் கண்டு மகனை நோக்கி கர்ஜித்தார். அவரை அழைத்தது அவரது மனைவியே. ஆம்! சுகுணா தான் அவரை அழைத்து வந்து. ஹாலில் நடப்பவற்றை சுட்டிக் காட்டினார்.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பத்து நாட்கள் கழித்து இளைய மகனை காணப் போகும் ஆவலில் மாடி பால்கனியில் அமர்ந்திருந்தார் சுகுணா. காரின் சப்தம் கேட்ட உடன் ஆவலுடன் மாடி பால்கனி வழியாக எட்டி பார்த்தார். அப்பொழுது தான் ஒரு நொண்டி பெண்ணும் அன்னம்மாவும் போர்டிகோவை தாண்டி நின்றிருந்த காரிலிருந்து இறங்குவது தெரிந்தது. அவரின் முகத்தில் “யார் இந்த பொண்ணு, இந்த நேரத்தில இங்க வந்திருக்கு?? கூட அன்னம்மா வேற இருக்காங்களே?? எனத் தீவிரமாக யோசித்தார். அப்பொழுது தனது மகனின் கார் அந்த இளம் பெண்ணின் மேல் மோதுவதை போல் வந்து நிற்கவும் அவர் அதிர்ந்து விட்டார். விரைவாக கீழ் தளத்திற்கு ஓடி வந்தார். மகன் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருக்கவும் அங்கிருந்த அலங்கார பொம்மையின் பின்னே சற்று மறைவாக நின்று கொண்டார்.



புகழினியின் மனக்கோலம் அவரின் மனதை உறுத்தியது. அதனால் நடப்பவகளை நோக்க மறைந்து கொண்டார். மகன் அந்தப் பெண்ணின் ஊன்றுகோலைக் காலால் தட்டிவிட்டதைக் கண்டு அதிர்ந்தவர், நொடியும் தாமதிக்காது கணவனை நாடிச் சென்றார்.



அன்னம்மா ஆயின்மெண்டை சுகுணாவின் கையில் கொடுத்தார். எல்லோரும் வந்துவிட்டமையால் அவர் யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. சுகுணா அவருக்கு கண் ஜாடை காட்டவும் யாரும் பார்க்காதவாறு அவர் புகழினியை மறைத்து நின்று கொண்டார். சுகுணா புகழினியின் கணுக்காலில் மருந்திட்டார் மென்மையாக. மருந்து பட்ட எரிச்சலில் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என முனகினாள் புகழினி. “ஒன்னுமில்லைடா, இதோ நிமிஷத்தில காயம் ஆரிடும், இனி எரியாது பாரு” என அன்புடன் கூறினார் சுகுணா.



ராஜேந்திரன் தனது தாயின் கேள்விக்குப் பதிலளிக்காது, மகனை யோசனையாகப் பார்த்தார். மகனின் நடவடிக்கைகளை அவர் தடுத்து நிறுத்தாவிட்டாலும்(?) அவனைக் கண்காணித்து கொண்டு தான் இருந்தார். அவர் மனைவி சுகுணா, பெரிய மகன் மற்றும் மகளின் குடும்பத்தினருடன் தொழில் தொடர்புடைய ஒரு நண்பனின் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் பேர குழந்தைகளுடன் ஊரைச் சுற்றி பார்ப்பதற்காகவும் பத்து நாட்கள் லண்டனில் சந்தோசமாக களித்துவிட்டு இன்றிரவு தான் சென்னை திரும்பினார்கள்.



மகன் நேற்று இரவு மதுரைக்கு ஒரு புதிய ஏழு நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி பற்றிய பிஸ்னஸ் மீட்டிங்கிற்காக சென்றிருக்கிறான் என்ற தகவல் அவருக்கு வந்தது. ஆனால் போன இடத்தில் இளைய மகன் இப்படியொரு பெண்ணை மணமுடித்து வருவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆக, அந்த மதுரை நட்சத்திர ஹோட்டல் ஒரு கண் துடைப்பு. மகனைத் திருமணம் செய்து கொள்ள காத்துக் கிடக்கும் பணக்கார யுவதிகளை அவர் அறிவார். அவர்களை விட்டுவிட்டு இந்தப் பெண்ணை எதற்கு? ஏன்? இந்தக் கேள்விகளை மகனிடம் கேட்டால் அவருக்குப் பதில் கிடைக்காது. அதனை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. இளைய மகன் ஒரு விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என முடிவு செய்துவிட்டால் அது கடகளவும் வெளியேக் கசியாது. அதுவே அந்த விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், உலகத்தின் ஒவ்வொரு இண்டு இடக்கிலும் அந்தச் செய்தியை பரவச் செய்வான். அவனின் சூட்சமம் அப்படி! ‘இதனைப் பொறுத்திருந்து தான் கையாள வேண்டும், இல்லை என்றால் வந்திருக்கும் இளம் பெண்ணிற்கு சேதமாகி விடும்’ என்று மனதினுள் எண்ணினார் ராஜேந்திரன்.



எல்லோரும் குழப்பத்துடன் ராஜேந்திரனையும், ஷிவேந்திரனையும் பார்த்திருந்தனர். அன்னம்மா விலகியவுடன் புகழினியை கவனித்தனர். அனைவரின் புருவங்களும் மேலேறின. ‘யார் இந்தப் பெண் மணக் கோலத்தில் சுபிக்ஷத்தில் ஹாலில் தரையில் அமர்ந்து விசும்பிகிறாள்? சுகுணா அவளை அரவணைத்து தலை கோதுகிறார்!’ கேள்விகள் அனைவரின் மனத்திலும் எழுந்தது.



மேகவதியும் புகழினியை கவனித்து விட்டு, மகன் ராஜேந்திரன் யோசனையில் இருப்பதைப் பார்த்துவிட்டு அன்னம்மாவிடம் திரும்பினார். அவருக்குத் தெரியும் ஷிவேந்திரன் அவரை மதித்து பதில் சொல்ல மாட்டான் என்று. “ஏய் அன்னம்மா, யார் இந்த பட்டிக்காடு?? இவ ஏன் நடு ஹால்ல உக்காந்து அழுவுறா?? யாரு இவளை இந்த நைட் டைம்ல இங்க கூட்டிட்டு வந்தது?? என்ன முழிக்கிற பதில் சொல்லு” என அன்னம்மாவை சரமாரியாகக் கேள்வி கனைகளால் தாக்கி அதட்டினார். மகனிடமும் பேரனிடமும் செல்லாத தனது ஆளுமையை வீட்டு வேலைக்காரியிடம் காட்டினார்.



அன்னம்மாவின் சந்தேகம் நிரூபணம் ஆகிவிட்டது. “ஆக, தாத்தனும் பேரனும் யாருக்கும் தெரியாம இந்தக் கல்யாணத்தை நடத்தி இருக்காங்க! நான் வாய் திறந்தா என்னைக் கொல்ல கூட தயங்கமாட்டங்க தாத்தனும் பேரனும்!” என மனதினில் பய பந்து உருள வாயை இறுக மூடிக் கொண்டு தலை குனிந்தார்.



அன்னம்மாவிடம் இருந்து விஷயம் வராது என்பதைப் புரிந்து கொண்ட மேகவதி மகள் வசுந்தராவிற்கு கண் ஜாடை காட்டினார். வசுந்தரா வேகமாக புகழினியின் அருகில் சென்று அவளின் தலையை நிமிர்த்தி “ஏய்! யாருடி நீ?” என அகங்காரமாய் வினவினாள். வசுந்தராவிற்கு புகழினியின் மனக் கோலம் சிறு உறுத்தலை ஏற்படுத்தியது.



“ஆண்டி” என உறுமினான் ஷிவேந்திரன். அவனின் உறுமலில் சட்டென்று தனது கையை புகழினியின் மேலிருந்து விலக்கிக் கொண்டாரள் வசுந்தரா.



ஷிவேந்திரன் வேகமாக புகழினியின் அருகில் சென்றான். அன்னம்மா பயந்து பின்வாங்கினார். சுகுணா ஆதங்கத்துடன் மகனை நோக்கினார். ஆனால் அவர் மகன் அவரைக் கண்ணுற்றால் தானே! புகழினியை இடது கையால் சட்டென்று தூக்கி நிறுத்தினான். தள்ளித் தான் பிடிந்திருந்தான் அவளை! அவள் நிற்க முடியாமல் தடுமாறுவதை கண்டு சுகுணா புகழினியை தாங்க நெருங்கினார், மகனின் அழுத்தமான பார்வையில் தேங்கி விட்டார்.



ஹாலில் குழுமியிருந்த அனைவரையும் தனது கூரிய விழிகளால் அளந்துவிட்டு தனது ஆளுமையான குரலில் “இவ பேர் கருப்பி, என்னோட வைஃப். அன்னஃபிஷியல் வைஃப்.” எனத் தெளிவாக கூறினான். ‘அன்ஃபிஷியல் வைஃப்’ என்ற வார்த்தையைத் தந்தையை ஆழ்ந்து பார்த்து கொண்டே அழுத்திக் கூறினான்.



அனைவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை. என்னது இந்தப் பெண் ஷிவ்வின் மனைவியா?? கருப்பாக, ஒல்லியாக, குள்ளமாக, நொண்டியாக இருக்கும் இவள் ஆணழகன் ஷிவ்வின் மனைவியா??? என அதிர்ந்து தான் போயினர். இவனுக்குப் பைத்தியம் தான் பிடித்துவிட்டது!!! அப்பனை போல் இருந்து வைக்கிறான். அவனாவது சற்று பார்க்கக் கூடிய ஒருத்தியை மனைவி என்று அழைத்துக் கொண்டு வந்தான். இவன் என்னடாவென்றால் இப்படி ஒருத்தியை மனைவி என்கிறான். அன்னஃபிஷியல் வைஃப் என்றதில் அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.



அனைவரின் முகத்தில் இருந்த அதிர்ச்சியைக் கண்ணுற்றவன், தந்தையின் முகத்தில் இருந்த வெறுப்பையும் தாயின் முகத்தில் இருந்த வெறுமையையும் நோக்கியவன், சட்டென புகழினியின் மேலிருந்த தனது இடது கையை எடுத்துவிட்டான். புகழினி இரண்டாவது முறையாக அவனால் நிலை தடுமாறி தரையில் சரிந்தாள்.



ராஜேந்திரன் ஷிவ்வின் செயல்களைப் பொறுக்க இயலாது மகனின் சட்டையை பிடித்துவிட்டார். ஊனமான பெண்ணை மகன் மனைவி அதுவும் எந்த மாதிரி மனைவி என்று அந்த பாவப்பட்ட பெண்ணை அறிமுகப் படுத்தி, அவளை சிகரட்டால் சுட்டு, இப்பொழுது எல்லோரின் முன்னிலையில் அவளைக் கீழே தள்ளிவிட்டு ஒன்றும் நடவாதது போல் அரக்கத்தனமாக நடந்து கொள்ளும் மகனைக் கேள்வி கேட்காமல் இனியும் விட்டு வைத்தால் ஆபத்தாகிவிடும் என எண்ணினார்.



“ஹவ் டேர், ஹவ் டேர் யு? அந்த பொண்ணை அன்ஃபிஷியல் வைஃப்னு சொல்ற. கேக்கிறத்துக்கு யாரும் இல்லைனு நினைச்சியா? நான் இருக்கேண்டா! உன் அப்பன்டா நான்! என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா. நீ எது செஞ்சாலும் பொறுத்து போவேன்னு நினைச்சியா. சொல்லுடா என்ன பிளான் பண்ற?? எதுக்கு இந்த அப்பாவி பொண்ணை கல்யாணம் பண்ண??” என ஷிவ்வின் சட்டையை பிடித்து உலுக்கியவாறே அவனைக் கேள்விகளால் துளைத்தார் ராஜேந்திரன்.



தந்தையின் கைகளை எளிதாகத் தட்டிவிட்டு தன்னுடைய சட்டையை சரி செய்து கொண்டு, அவரை அலட்சியமாக நோக்கிய படி அங்கிருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தான். தனது பேண்ட் பாக்கட்டில் இருந்த சிகரட் கேசில் இருந்த சிகரட் ஒன்றை உருவி லைட்டரை கொண்டு அதனைப் பற்ற வைத்தான். புகையை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டு நிதனமாக அதனை வெளியேற்றினான். பிறகு அனைவரையும் பார்த்துவிட்டு தந்தையைக் கூர்மையாக நோக்கினான்.



“வீட்ல யாருக்கும் தெரியாமா தான நீங்க மேரஜ் பண்ணிக்கிட்டிங்க, உங்க சன் நானும் அதே போல தான் பண்ணிக்கிட்டேன். வாட்ஸ் ராங் இன் தட். ஒரு சின்ன சேன்ஜ்! நீங்க ஏக பத்தினி விரதன், நான் ஏகப்பட்ட பத்தினிங்களோட விரதன்! தட்ஸ் இட்” எனத் தனது தந்தையைப் பார்த்து கண்ணடித்துக் கூறினான்.



“ஷிவா” அலறிவிட்டார் ராஜேந்திரன். அவருக்குப் பதட்டமாக இருந்தது. இளைய மகனின் மதுப் பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் மனைவி அறிந்ததே. ஆனால் மாதுகளுடன் தனது மகன் சல்லாபிக்கிறான் என்பது அவருக்கு இன்றளவும் தெரியாது. இன்று அது வெளிப்பட்டு விட்டதில் அவரின் மனம் சஞ்சலம் உற்றது. அவசரமாக மனைவியைத் திரும்பி பார்த்தார். மனைவி சுகுணாவின் அதிர்ந்த தோற்றம் அவருக்குக் கவலையை கொடுத்தது. ஷிவ் கவலையற்றவனாகப் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.



“நீ மேரஜ் பண்ணிக்கிட்டது தப்புனு சொல்லல, இந்த பொண்ண என்ன ரீசன்காக மேரஜ் பண்ணிக்கிட்ட?? உன்னோட டேஸ்ட் ஐடியாலஜிஸ் எல்லாருக்கும் தெரியும் ஷிவ்?? பட் வைய் திஸ் கர்ள்??” என வினவினான் விஷ்வேந்திரன் ஷிவேந்திரனின் அண்ணன்.



“விஷ்னு ஃபாரின் ஸ்காட்ச் குடிச்சாலும் நாட்டு சரக்கான கள்ளு குடிக்கிறதுல இருக்க கிக்கே தனிதான் இல்லையா. ஐ வான் டு டேஸ்ட் தி டேஸினஸ் மேன். உனக்கு தெரியாததா? நாட்டு சரக்குன்னா உனக்கு உயிராச்சேடா!” என விஷமமாகத் தமையனை பார்த்துக் கண்ணடித்தான் ஷிவேந்திரன்.



தம்பியைப் பற்றி தெரிந்தும் தலையை கொடுத்த தன்னை மனதிற்குள் குட்டி கொண்டு வாயை இறுக மூடிக் கொண்டான் விஷ்னு. மனதில் சிறு சந்தேகம் எழ மனைவியை லேசாகத் திரும்பி பார்த்தான். அதிர்ந்துவிட்டான்!



மனைவி ஷில்பாவின் அனல் பார்வையில் அவனுக்கு குலை நடுங்கியது “ஷிவ்வ்வ்வ்! பாவி பய போட்டுக் கொடுத்துட்டானே. காலேஜ் டேஸ்ல அடக்கமான கிராமத்து பொண்ணுனு ஒருத்திக்கிட்ட பழகினேன். ஒரே ஒரு நாள் கொஞ்சம் எல்லை மீறிட்டேன். அதுவும் பெருசா ஒன்னும் பண்ணல! சும்மா ஒரு ஹக்கும் கிஸ்ஸும் தான். நான் என்னம்மோ அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்தின மாதிரியே பேசுறானே!! இவன் எல்லா தப்பையும் பண்றான்! இவன கேக்க இங்க ஒரு நாதியும் இல்ல! ஆனா நான் ஒன்னும் பண்ணலனாலும் என்ன ரவுண்டு கட்டி டின் கட்டறாங்களே! இது எந்த விதத்துல நியாயம்?? நான் பொறந்த நேரம் சரியில்லை. இன்னைக்கு என் பொண்டாட்டி என்ன அடி பின்ன போறா. மினிஸ்டர் பொண்ண கல்யாணம் பண்ணி நான் தினமும் மிதி வாங்குறேன்.” என மனதிற்குள் புலம்பினான் விஷ்வேந்திரன்.



விஷ்னு மனைவியை நோக்கி அசட்டுச் சிரிப்பொன்றை சிரித்தான். ஷில்பா அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மாடிப்படிகளில் ஏறி தங்கள் அறையை நோக்கிச் சென்றுவிட்டாள். இப்பொழுது தான் மனைவியை சமாதானப்படுத்தவில்லை என்றால் தன் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து மனைவியைத் தொடர்ந்து சென்றுவிட்டான்.



ஷிவேந்திரன் அண்ணன் விஷ்வேந்திரன் அண்ணி ஷில்பாவிடம் பம்புவதை அறிவான். தன்னையே எதிர்த்து அண்ணன் இன்று கேள்வி கேட்டதும், ‘இருடா இன்னைக்கு உன்னைக் கதறவிடுறேன்’ என்று எண்ணிக் கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு சிறு விஷயத்தை பெரியதாக உருவகித்து கொளுத்திப் போட்டான். அது பற்றிக் கொண்டது! மகனே என்கிட்ட இனிமே வருவ!!! என மனதினில் எக்காளமிட்டான்.



“ஷிவ்! வாட் ஹேவ் யு டன்? என்னோட நாத்தனார தானே உனக்கு மேரஜ் பண்றதா பேசிக்கிட்டு இருக்காங்க! நீ எப்படி இப்படியொரு வேலைய பண்ணிட்டு கூலா இருக்க?” எனப் பொருமினாள் ரூபாதேவி ஷிவேந்திரனின் தமக்கை. தனது மாமியார் வீட்டில் தன்னுடைய ஆளுமையை நிலை நிறுத்த நாத்தனார் ரஞ்சனாவை தம்பிக்கு கட்டி வைத்துவிட வேண்டும் எனப் பிரியப்பட்டாள். ஏகப்பட்ட கணவன் வீட்டுச் சொத்துக்களை ரஞ்சனாவிற்கு கொடுப்பதில் அவளுக்குப் பிடிக்கவில்லை. அதோடு பிறந்த வீட்டுச் சொத்தும் தனது ஆளுகைக்குள் வர வேண்டும் என எண்ணினாள். அதற்கு ரஞ்சனா ஷிவேந்திரனை மணக்க வேண்டும். தன் உடன் பிறப்பை பற்றித் தெரிந்தும் அற்ப ஆசையை மனதிற்குள் வளர்த்துக் கொண்டாள். பைத்தியக்காரி!



“ரூபா என் லைஃப டிசைட் பண்றதுக்கு நீ யாரு?? ஹூ கேவ் யு தி ரைட்ஸ்?? என்னோட அஃபிஷியல் வைஃப் வரதுக்கு ஒரு ஸ்டேடஸ் வேணும் அத மைண்டல வச்சிக்க.” என அழுத்தமாகக் கூறினான். ஓரக் கண்ணால் தமக்கையின் கணவன் ஆதர்ஷை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தன்னை எப்படியாவது அவரது தங்கைக்கு மணமுடித்து விடவேண்டும் என்று விடாமல் முரண்டு பிடிப்பவர். இன்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று!



“ரூபா” என அடிக்குரலில் சீறினான் ஆதர்ஷ். ரூபாவிற்கு தம்பி ஷிவேந்திரன் பேசியதைக் கேட்டு உள்ளம் கொதித்தது. ஆனால் கணவனை எண்ணி அதனை மறைத்தாள்.



“என்ன இன்னும் வேடிக்க பாக்குற?? அதான் உன் பிரதர் சொல்லிட்டாறே நமக்கு ஸ்டேடஸ் இல்லன்னு?? வாட் ஃபார் யு ஆர் வெயிடிங்?? சீக்கிரம் பசங்கள கூட்டிட்டு நாம்ப கிளம்பளாம் கம்!” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினார் ஆதர்ஷ்.



கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டுத் தலையசைத்து மாடிப்படிகளில் ஏறினாள். அதர்ஷ் மனைவியைப் பின் தொடர்ந்தான்.



“ஷிவா ரூபா உன் அக்கா, ஆதர்ஷ் மாப்பிளை உன்னோட அத்தான். ஏன் இப்படி அவங்கள எடுத்தெரிஞ்சு பேசுற. உனக்கு அவரோட சிஸ்டர மேரஜ் பண்ணிக்க இஷ்டமில்லைன்னா அத நாசுக்கா சொல்லிருக்கலாமே!! யாரும் கம்பெல் பண்ணல. ஏன் இல்டிரீட் பண்ணுற அவங்கள?” என மனம் தாளாமல் கேட்டுவிட்டார் ராஜேந்திரன்.



ஷிவேந்திரன் தந்தை ராஜேந்திரனை ஆழ்ந்து நோக்கினான். அந்தப் பார்வையில் ஸ்தம்பித்து விட்டார். என்னைக் கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கு என்ற பார்வை தான் அது. தான் தன் தங்கையையும் தங்கை கணவனையும் மதிக்கவில்லை என்பதைச் சுட்டி காட்டும் பார்வை. ரூபா சற்று சுயநலமிக்கவள் தான் ஆனால் வசுந்தரவை போல அபாயகரமானவள் இல்லையே அவள்! ஆதர்ஷ் பந்தா பேர்வழி தான் ஆனால் தன் தங்கை கணவன் ரகுவை போல பணம் பிடுங்கபவர் இல்லையே!



மேகவதி வசுந்தரா விமன்யா மூவரும் ஹாலின் மறுகோடியில் நின்று கொண்டு சன்னமான குரலில் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். “மாம் இந்த ரூபாவுக்கு ஆசைய பாரேன், அவளோட சிஸ்டர் இன்லாவ ஷிவ்வுக்கு மேரஜ் பண்ணி வைக்கனும்மா? எவ்ளோ தெளிவா பிளான் போடறா பாருங்க!” எனப் பொருமினார் வசுந்தரா.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஷிவ் ஒரே போடா போட்டுட்டான்ல! அவ ஸ்டேடஸ் இக்குவல் இல்லைனு. நீ வொரி பண்ணிக்காத வசு, விமன்யா தான் ஷிவ்வோட வைஃப். அது கண்டிப்பா நடக்கும்.” என மகளுக்கு தைரியம் ஊட்டினார் மேகவதி.



“பாட்டி நான் ஷிவ் அத்தான மேரஜ் பண்றது இருக்கட்டும்! மொதல்ல பொண்டாட்டினு சொல்லிட்டு ஒரு பிளாக் மங்கி வந்து இருக்கே அதை என்னப் பண்றது??” என வினவினாள் விமன்யா.



“ஹா நீ பாத்த தானே விம்மி எப்டி அவள இன்செல்ட் பண்ணானு. அவ இங்க ஒரு வேலைக்காரியா தான் இருப்பா. நீ வேனா பாரு, ஷிவ் அவளை அப்படி தான் நிறுத்துவான்.” என பதிலுறைத்தார் மேகவதி.



“டோண்ட் பி ஸில்லி மாம். ஷிவ் தன்னைச் சேந்தவங்கள அவன் என்னவேனா பண்ணுவான். ஆனா மத்தவங்கள் நெருங்க விடமாட்டான். இப்ப கூட நான் அந்த பொண்ணு தலையைப் பிடிச்ச உடனே ஆண்டினு கத்தினான். கேட்டிங்கதானே! அவனை வீணா சீண்டினா அவன் அவ கூட தயங்காம வாழ்ந்துடுவான்” என சரியாக கணித்து கூறினாள் வசுந்தரா. எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று அவளுக்கு தெரியாதா!



“எஸ் மாம் நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட். அந்தத் திமிர் பிடிச்சவன் நீங்க சொல்றதையும் செய்வான், அதுக்கு மேலயும் செய்வான்.” என பயந்தவாறு கூறினாள் விமன்யா. பின்னே ஷிவேந்திரனை திருமணம் செய்ய வேண்டும் என்பது தானே அவளுடைய வாழ்நாள் லட்சியம். அதனை நிறைவேற்றுவதற்கு அவள் பிரம்ம பிரார்த்தனை செய்கிறாள். ஆனால் ஒரே பார்வையில் தள்ளி நிறுத்துபவனிடம் அவளின் மாய்மால வேலைகள் செல்லுபடியாக வில்லை. இருப்பினும் விடாது முயற்சிக்கிறாள்! விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் துரத்தி பிடிக்கும் கதையாக!



“வசு, விம்மி நாம இப்போ ஹாப்பியா செலிபிரேட் பண்ணனும். இந்த சுகுணா ராஜேந்திரனை வச்சு நமக்கு என்ன ஆட்டம் காட்டினா! இன்னைகு அவன் புள்ள என்ன பண்ணிட்டு வந்திருக்கானு பாத்திருப்பா. இப்ப என்னோட ஃபிளிங்க்ஸ் அவளுக்கு புரிஞ்சிருக்கும்.” என மனதில் சந்தோசம் பொங்கக் கூறினார் மேகவதி.



“கிரேட் மாம்! நான் இப்டி யோசிக்கவே இல்லை. ராஜ் அந்த மிடில் கிளாஸ மேரஜ் பண்ணிட்டு வந்து நமக்கு எவ்வளவு ஷேமாப் போச்சு. என் லைஃப் கூட மிசரபிளா அயிகிடுச்சு. எல்லாம் அந்த சுகுணாவாலதான். இன்னைக்கு அவ புள்ள அவங்கள போலவே செஞ்சிட்டு வந்திருக்கான். அவளுக்கு வலிக்கனும்மா, இன்னும் வலிக்கனும்! எப்படி கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம நடு ஹால்ல ராஜ் அண்ணா தோளில் சாஞ்சு அழறாப் பாரு” என நெஞ்சில் வஞ்சம் பொங்க கூறினாள் வசுந்தரா. தன் கணவன் தன்னை இவ்வாறு ஒரு பொழுதும் ஆறுதல் கூறி அரவணைத்தது இல்லை என்ற பொறாமையில் அவர்களைப் பார்வையால் சுட்டாள் வசுந்தரா.



“மம்மி, லுக் அட் ஷிவ். அந்த பொண்ணையே வச்ச கண்ணு வாங்காமா பாக்குறான். ஷிட்” எனப் பல்லை கடித்தவாறே தனது கைகளை முஷ்டியாக்கினாள் விமன்யா. அதில் அவளின் கைவிரல் நகங்கள் அவளின் உள்ளங்கையில் வலிக்கக் குத்திற்று. அதனை உணரும் நிலையில் விமன்யா இல்லை.



அவர்களுக்கு வசந்த் செய்து வைத்த சிலிம்பிஷ வேலைத் தெரியாது. ஷிவேந்திரன் அவனைப் பிடித்து ஒரு குடவுனில் அடைத்து அடிவாங்க வைத்திருக்கிறான் என்பதையும் இங்கு யாரும் அறியிலர். ஷிவேந்திரன் வீட்டில் தங்கவது வெகு அபூர்வம். தொழில் விஷயங்களை அவன் யாரோடும் பகிர்ந்து கொண்டதில்லை.



தர்மேந்தரனின் மருமகன் ரகுவரன் வழக்கம் போல் அவரின் காதை கடித்து கொண்டிருந்தான். “என்ன மாமா உங்க வீட்டு ஆம்பிளங்களுக்கு இதே வேலையா போச்சு?? யாராவது ரோட்ல போகிற ஒருத்திய திருட்டுத்தனமாக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கனும்னு வேண்டிகிட்டு அலையிறிங்க போல! உங்க மகன் ஏதோ கண்ணுக்கு லட்சணமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டார். உங்க பேரன், அவனை எதுல சேக்குறதுன்னே தெரியலை! இப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறான். கேட்டா அன்னஃபிஷியல் வைஃப்ங்கிறான். இதே நான் எனக்கு உங்க மக மூலமாக் குழந்தை இல்லன்னு ரண்டாவது கல்யாணம் பண்ணிக்க டிசைட் பண்ணப்ப அந்த குதி குதிச்சிங்க! இப்ப போதி மரத்தில உக்காந்திருக்கிற புத்தர் மாதிரி அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருக்கிங்க?? நல்லா இருக்கு உங்க குடும்ப நியாயம்??” என இரண்டாவது திருமணம் செய்ய முடியாத வருத்ததை தன் மாமனாரிடம் இன்று வெளிப்படையாக சொல்லிவிட்டார் ரகுவரன்.



தர்மேந்திரன் ரகுவரனை ஒரு பார்வை பார்த்தார் “இதை பத்தி நீங்க சம்பந்தப்பட்டவங்க, அதான் ஷிவ்கிட்டயும், ராஜாகிட்டயும் நேரடியாக கேளுங்களேன் மாப்பிள்ளை” எனப் அமைதியாகக் கூறினார் தர்மேந்திரன்.



ரகுவரனுக்கு நா உலர்ந்து விட்டது. “என்னது??? ஷிவேந்திரனிடமும், ராஜேந்திரனிடமும் அவர் கேள்வி கேட்பதா??? கிழவனுக்கு இருக்கிற கொழுப்பை பாரேன்! தோளை உரித்து உப்புக் கண்டம் போட்டுறுவானுங்களே. அப்பனுக்கும் மகனுக்கும் எதுல பொருந்துதோ இல்லையோ என்னையும் என் மகனையும் தோள் உரிக்கிற விஷயத்தில நல்லா பொருந்தி வரும்!” என மனதிற்குள் எண்ணினார். அவர் ஏற்கனவே சுகுணாவிடம் வம்பிழுத்து ராஜேந்திரனிடம் தர்ம அடி வாங்கியிருக்கிறார். ராஜேந்திரனாவது கொஞ்சம் பாவம் புண்ணியம் பார்ப்பவர். ஷிவேந்திரன்! அவன் அசுரன்! அடங்காத அசுரன் ஆயிற்றே! கொன்று புதைத்து விடுவான். பயத்தில் உடல் வியர்க்க தன் திருவாயை மூடிக் கொண்டார்.



அன்னம்மா புகழினிக்கு தண்ணீரைப் புகட்டினார். அவளை முதுகில் ஆதாரத்தோடு தடவி கொடுத்தார். அவர் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது. ராஜேந்திரன் ஷிவேந்திரனின் சட்டையைப் பிடித்தவுடன் வீட்டின் வேலையாட்கள் யாவரும் பயந்து தங்கள் கூட்டிற்குள் ஓடி ஒண்டிக் கொண்டனர். அன்னம்மாவால் அவ்வாறு செல்ல இயலாதே! புகழினி அவரின் பொறுப்பில் இருப்பவளாயிற்றே!



ராஜேந்திரன் சுகுணாவின் அழுகையைக் கண்டு மனம் கலங்கினார். இளைய மகனால் தனது மனைவி தொடர்ந்து காயப்படுவதை அவரால் சீரணிக்க முடியவில்லை. காதல் மனைவியாயிற்றே! சுகுணாவின் கண்களில் வழிந்த கண்ணீர் அவரின் இருதயத்தில் குருதியை வடிய வைத்தது.



“ஏங்க? ஏங்க சொல்லல? ஷிவா இப்புடினு ஏன் என்கிட்ட சொல்லல?” எனக் கணவனின் மார்பினில் சாய்ந்து விசும்பியபடி மெல்லிய குரலில் கதறினார் சுகுணா. மனைவிக்குப் பதில் சொல்ல இயலாது ராஜேந்திரன் அவரை ஆறுதலாக அணைத்து அவரை ஆசுவாசப்படுத்த முயன்றார். இவ்வாறு மனைவி கதற கூடும் என்றுதானே இத்தனை ஆண்டுகளாக மறைத்து வந்தார். இன்று மகன் அதை வெளிப்படுத்தி விட்டானே! வெக்கம் அற்றவன்! இது ஒரு பெருமையா??? பெண் பித்தனாக இருப்பது ஒரு பெருமையா???



ஷிவேந்திரன் இமைக்காது புகழினியை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. கல்லுளிமங்கன்! தனது கைக்கடிகாரத்தை பார்வையிட்டான். 2.30 மணி என்று காட்டியது. தன் இருக்கையை விட்டு எழுந்தான்.



மெல்ல தன் தொண்டையை செறுமிக் கொண்டான். எல்லோருடைய கவனமும் அவன் பக்கம் திரும்பியது. “என் மேரஜ் என் பர்சனல். நோ ஒன் ஹேv ரைட்ஸ் டு குவஷின் மீ. என்னோட இந்த அன்னஃபிஷியல் மேரஜ் பத்தி பேசறது இதுவே கடைசி முறையா இருக்கட்டும்” என அழுத்தமாக உரைத்து விட்டு யாரையும் பாராது மாடிப் படிகளில் ஏறினான்.



ஒரு உருவத்திற்கு இங்கு நடப்பவற்றைக் கண்டு மனம் ஆனந்த கூத்தாடியது. இதற்குத் தானே 39 வருடங்களாகக் காத்திருந்தது. ராஜேந்திரனும் அவனின் மனைவியும் கதறும் தருணம், பிள்ளைகள் ஒருவரை ஒருவர் முட்டிக் கொண்டு பிரியும் தருணம். இன்னும் இருக்கிறது! இன்னும் நிறைய நாடகங்கள் அரங்கேற இருக்கிறது!! என அந்த உருவத்தின் மனம் வஞ்சினத்தோடு நகைத்தது.



சட்டென நினைவு வந்தவனாக புகழினியை திரும்பிப் பார்த்தான். அவள் ஓய்ந்து போய் கீழே தலை குனிந்து அமர்ந்திருப்பது தெரிந்தது. சொடக்கிட்டான் இருமுறை.



புகழினி தலை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கியவன், திரும்பி படிகளில் ஏறி வேகமாக அவனது அறையை நோக்கிச் சென்றுவிட்டான்.



ராஜேந்திரன் மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு எழுந்தது. அவர் ஹாலின் ஒரு மூலையில் ஓவியமாக இருந்த தனது பாட்டி சிவகாமியை கண்கள் கலங்க நோக்கினார். சரித்திரம் திரும்புகிறதா?





புகழினி இன்னொரு சிவகாமியா??? சுகுணாவா???





கருப்பு அழகி வருவாள்…



 
Status
Not open for further replies.
Top