All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கறுப்பழகி”

அத்தியாயம் – 12

அந்த துக்கவீடு சலசலத்தது. ஷிவேந்திரன் அலட்சியமானப் பார்வையோடு கம்பீரமாக வந்து கொண்டிருந்தான். ராஜேந்திரன் முகம் இறுகினார். சுகுணா உணர்ச்சி துடைத்த முகத்துடன் சாந்தனின் அன்னையின் அருகில் நின்றிருந்தார். கவனமாக மகனைக் காண்பதை பெற்றோர் இருவரும் தவிர்த்தனர். சாந்தனின் தந்தைக்கு மாலை அணிவித்து வணங்கிவிட்டு சாந்தனையும் தனது தந்தையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றுவிட்டான்.



சாந்தன் எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. ஒரு பொழுதில் தனது வாழ்க்கையைப் புரட்டி போட்டவனின் எள்ளல் பார்வையைக் கூட அவன் கவனித்தானில்லை. எல்லாச் சடங்குகளும் நடந்தேறி சாந்தனின் தந்தையின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு கனத்த மனதோடு புகனியோடு வீடு திரும்பினர் ராஜேந்திரன் சுகுணா தம்பதியர்.



காரிலிருந்து இறங்கியவுடன் வேலையாள் அவர்களை நெருங்கி ராஜேந்திரனின் காதில் படபடப்புடன் எதோ கிசுகிசுத்தான். ராஜேந்திரன் கோப சிவப்பேறிய விழிகளுடன் சுபிக்‌ஷத்தின் தோட்டத்தை நோக்கி விரைந்தார். சுகுணாவும் புகழினியும் பதட்டத்துடன் அவரைப் பின் தொடர்ந்தனர். வீட்டின் பெண்டிர் அனைவரும் அங்குக் குழுமியிருந்தனர். அந்தக் காட்சியைக் கண்டு ராஜேந்திரனும் சுகுணாவும் உறைந்துவிட்டனர். புகழினி “ஆத்தீஈஈஈஈஈ” எனத் தன்னை மீறிக் கத்திவிட்டாள். சரவணனுக்கு அதிர்ச்சிதான் ஆனால் சடுதியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். யார் இதனை செய்திருப்பார்கள் என்று அவனுக்கு அந்த கணப்பொழுதில் புரிந்துவிட்டது.



வசுந்தரா தமையனின் முன் ஆக்ரோசமாக வந்து நின்று, “பாரு, பாரு நல்லா பாரு! இப்போ உனக்கு ஹாப்பியா? கண் குளிர பாரு. இதுக்குதானே நீயும் உன் பொண்டாட்டியும் ஆசைப்பட்டிங்க? என் வாழ்க்கையைத் தான் ரெண்டு பேரும் நாசம் பண்ணிங்க, உங்க பையன் உங்களைவிடமோசமா இருக்கான். என் பிள்ளைய என்னப் பண்ணி வச்சிருக்கான் பாரு. உன் பையனை என்ன பண்ணலாம் சொல்லு சொல்ல்ல்ல்லுஊஊஊஉ” என ஆக்ரோசமாக வீறிட்டாள். ராஜேந்திரனும் சுகுணாவும் உடல் விரைத்து அந்தக் காட்சியை வெறித்தபடி அசையாது நின்றனர்.



“யாராவது போய் காப்பத்துங்களேன்.. வசந்த், வசந்த் கண்ணா! வேலைக்கார நாய்களா போங்கடா போய் என் பேரனை கீழ இறக்கி தூக்கிட்டு வாங்கடா..” எனக் கதறினார் மேகவதி.



வசந்த் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் ரத்தக் காயங்களுடன் சுய நினைவின்றி தலை கீழாகக் கயிற்றில் தொங்கிக் கொண்டிந்தான். ஷிவேந்திரனின் வேட்டை நாய்கள் டைகரும், ரைனோவும் அவனுக்கு இருபுறமும் காவலாக நின்றன.



டைகர்! ரைனோ! ஷிவேந்திரனின் கட்டளைக்கு மட்டுமே அவை அடிபணியும். அவ்வளவு எஜமான விசுவாசம். இப்பொழுது அவற்றிடம் நெருங்க யாவருக்கும் பயம். கடித்து குதறிவிட்டால்!!!



ரகுவரனும், விமன்யாவும் தோட்டத்திற்கு ஓடிவந்தனர். அண்ணனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டு வந்தது, ஆனால் செய்வதறியாது விமின்யா அன்னையை அணைத்துக் கொண்டு சுகுணாவையும், புகழினியையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.



மகனின் நிலையைக் கண்டு ராஜேந்திரனின் சட்டையைப் பிடித்துவிட்டார் ரகுவரன். “உன் பையன் தான் இதுக்கு காரணம். எவ்வளவு திண்ணக்கம் இருந்தா என் மகனை அடிச்சி தலை கீழே கட்டி தொங்கவிட்டு நாய்களை விட்டு காவல் காக்க வைப்பான். யாரு கொடுத்த தைரியம்? ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில மனுஷனைக் கடிச்ச கதையா என் புள்ள மேலேயே கை வைச்சிட்டிங்களா! கொன்னுடுவேன்! கொன்னு புதைச்சிருவேன்!” எனக் கர்ஜித்தார்.



ராஜேந்திரன் ரகுவரனை தடுக்காமல் அமைதியாக நின்றார். சரவணன் தான் இருவருக்கும் இடையில் வந்து பிரித்துவிட்டான்.



மேகவதி அலுவலகத்திலிருந்த தனது கணவன் தர்மேந்திரனை அழைத்து விவரத்தைச் சொன்னார். ஆனால் தர்மேந்திரன், முக்கிய கிளையண்டுடன் பிஸ்னஸ் டின்னர் இருக்கிறது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு கழன்று கொண்டார். அவருக்குத் தெரியும் தர்மேந்திரன் ஷிவேந்திரனை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார் என்று. ஆத்திரம் மேலிடத் தனது மகனையும் மருமகளையும் உறுத்து நோக்கினார்.



ஷிவேந்திரனை தொடர்பு கொள்ள முயன்றனர், பலனில்லை. ஷிவேந்திரனின் கார் நள்ளிரவைத் தாண்டி சுபிக்ஷத்திற்குள் நுழைந்தது. வீட்டின் ஹாலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குழுமியிருந்தனர். யாரையும் கண்டு கொள்ளாமல் மாடியேறி சென்றுவிட்டான் ஷிவ்.



தர்மேந்திரன் அமைதியாக அமர்ந்திருந்தார், ஆத்திரத்தில் பல்லைக் கடித்தக் கணவன் ரகுவரனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு அமைதிப்படுத்தினாள் வசுந்தரா. தந்தையுடனும், அண்ணன் மகனுடனும் சண்டை வளர்க்கும் நேரம் இதுவல்லவே! ஷிவேந்திரனின் கோபம் அவள் அறிந்ததே! மகன் என்ன சில்மிசம் செய்து மாட்டிக் கொண்டானோ. பணிந்து தான் பிள்ளையைக் காக்க வேண்டும். இல்லையேல் அவர்களது பிள்ளை அவர்களுக்கு இல்லை என்றாகிவிடும். தங்களது இழி நிலையை எண்ணி அப்பொழுது அவளால் கண்ணீர் மட்டும் தான் விட முடிந்தது. ஆனால் மனதிற்குள் பகை தீ வளர்ந்து கொண்டேப் போனது.

ஷிவேந்திரனை நெருங்கும் திராணியின்றி அனைவரும் அசையாமல் அமர்ந்திருந்தனர். தர்மேந்திரன் மெல்ல எழுந்து மாடியிலிருக்கும் ஷிவேந்திரனின் அறைக்குச் சென்றார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஒருசில நிமிடங்களில் ஷிவேந்திரனின் குரல் ‘டைகர், ரைனோ’ என விளித்தது. ஒரிரு நிமிடங்களில் ஷிவேந்திரனின் அறையில் இருந்து வெளிப்பட்ட தர்மேந்திரன், வேலையாட்களிடம் “போய் அவனை தூக்கிட்டு வாங்க” எனக் கட்டளையிட்டுவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

வசந்தின் குடும்பத்தினர் வேலையாட்களுடன் அவனை மரத்திலிருந்து கீழே இறக்கி காரில் ஏற்றிக் கொண்டு செல்வதை மாடி பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் ராஜேந்திரன், சுகுணா, புகழினி.

“வசந்துக்கு எதாவது ஆகட்டும்ம்ம்,…” என்ற மேகவதியின் குரலில் அனைவரும் அவசரமாகத் திரும்பினர். அதற்குமேல் எதுவும் சொல்ல இயலாது ஓய்ந்து போய் அவரின் அறைக்குச் சென்றார் மேகவதி.

சுகுணா கண்களை இறுக மூடித் திறந்தார். மனைவியின் துயரம் தோய்ந்த முகத்தைப் பார்க்க ராஜேந்திரனால் முடியவில்லை. “நாம உங்க சிவகாமி பாட்டி மாதிரி அமைதியான குணம் கொண்ட அழகான தேவதை பெண் பிறப்பானு எதிர்பாத்தோம், ஆனா ராட்சஷன் வந்து நமக்கு பிறந்திட்டானே! ஏன் இப்படி? நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம், இப்படி ஒரு பிள்ளை நமக்கு?? இவன் செய்யிற பாவம் எல்லாம் நம்ம வருங்கால சந்ததியத் தொடரப் போகுதுன்னு அவனுக்கு தெரியவே இல்லையா??” என மனந்தாளாமல் பிதற்றினார்.

புகழினியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடைய அறைக்குச் சென்றுவிட்டாள். ராஜேந்திரன் மனைவியைச் சமாதானம் செய்தவாறு தங்களது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்தன. எப்பொழுதும் போல் அன்றும் விடியலில் விழிப்பு வந்துவிட்டது புகழினிக்கு. சுபிக்‌ஷத்தில் அழகாகப் பொருந்தி விட்டாள், இல்லை பொருத்திக் கொண்டாள் என்பதே சரியாகும்! கோலமிடவது, சமைப்பது, வீட்டை அலங்கரிப்பது. மாமியாருடன் வெளியேச் செல்வது எனத் தன்னை வேலைகளில் அமிழ்த்திக் கொண்டாள். கோலம் போட தேவையான சாமான்களை எடுத்துக் கொண்டு மெல்ல வீட்டின் போர்டிகோவை அடைந்து ஹோஸ் பைப்பின் மூலமாக தண்ணீரடித்து சுத்தம் செய்து அழகாக மயில் கோலமிடத் தொடங்கினாள். பாட்டுப் பாடிக் கொண்டே வேலை செய்ய அவளுக்கு மிகவும் பிடிக்கும். தன்னை மறந்து உரக்கப் பாடினாள்.

“ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைச்சேன்

நான் பூவாயீ..
ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயீ

நானா பாடலியே நீ தான் பாட வச்சே


வைகையிலே வந்த வெள்ள(ம் ) நெஞ்சிலே வந்ததென்ன

வஞ்சி நான் கேட்ட வர(ம்) வந்து நீ தந்ததென்ன

சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது

பொன்னுமணி தேரு நான் பொத்து வைச்சேன் பாரு

கன்னி என்ன தேடி நீ அங்கே வந்து சேரு

விதை போட்டேன் அது விளைஞ்சாச்சி நீ வாயேன் வழி பாத்து

கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை
பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்து தான் கூடவில்லை
கூரப்பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்ன ஏந்த நீ தானேஏஏஏஏஏஏஎ “

கோலமிட்டு முடிந்தவள் கோலத்தின் அழகை ரசித்தபடி “அசத்திப்புட்டப் புள்ளெ” தன்னைத் தானே புகழ்ந்து கொண்டவள், மலர்ந்த முகத்தோடு மெல்லப் படியேறி வீட்டினுள் சென்றாள். அவளுடைய அசைவுகளை ஒரு உருவம் நெருப்பென ஒளிரும் கண்களால் உள்வாங்கிக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை. பாவம்!



புகழினி சமையல் அறையில் அன்னம்மாவுடன் சேர்ந்து எல்லோருக்கும் வேண்டிய காலை பாணங்களைக் கலந்தாள். இது மாதிரி வேலைகளைத் தவிர்க்குமாறு சுகுணா வற்புறுத்தியும் அவள் பணிவோடு மறுத்துவிட்டாள். தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்ய அவள் விரும்பினாள். அவர்களும் அவளின் போக்கிலேயே அவளை விட்டுவிட்டனர். அவளுடைய மகிழ்ச்சியைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்!



“அன்ன(ம்) ஆத்தா, எல்லாருக்கும் கொண்ட காபி தண்ணி குடுங்கெ நா(ன்) தோட்டத்தில மல்லி பூ பரிச்சாறே(ன்)”



அன்னம்மா சிரித்தபடி தலையாட்டினார். எதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி கையில் மூங்கில் பூக்குடையுடன் தோட்டத்திற்குச் சென்றாள் புகழினி. அவளைப் பார்த்து பெருமூச்சிட்டார் அன்னம்மா.



தோட்டத்து மண்டபத்தில் அமர்ந்திருந்தான் ஷிவேந்திரன். பருவப் பெண்ணின் அழகிய வனப்பைப் போல விடியல் பொழுதின் அழகு சுபிக்‌ஷத்திற்கு தனி தேஜசைக் கொடுத்தது. சுபிக்ஷத்தில் சம்யுக்தாவின் வரவுக்குப் பிறகு அவன் ஒரு சில நாட்களில் அன்னிய தேசத்துக்கு பறந்துவிட்டு நான்கு மாதங்கள் கடந்து நேற்று நள்ளிரவில் தான் நாடு திரும்பினான். நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பவன், இளைப்பாற ஓர் இடம் கிடைத்தது போல் சாய்ந்து அமர்ந்து கொண்டு தோட்டத்தைச் சுற்றி பார்வையை ஓட்டினான். அவன் இங்கு இல்லாமல் இருந்தாலும் இங்கு நிகழ்ந்த மாற்றங்கள் அவன் கவனத்துக்கு வந்தது.



மல்லிகைப் பூவின் வாசம் அவன் நாசியில் புகுந்தது. அவன் மனையாள் உருவாக்கியிருந்த மல்லிகை பந்தலின் மணம் அந்தத் தோட்டம் எங்கும் கமழ்ந்தது. “புகழினி தெய்வமங்கை” என அழுத்தமாகத் தன் திருவாயால் மனைவியின் பெயரை முதன்முதலாக உச்சரித்தான்.



அவனின் அழைப்புக்கு இணங்கியதைப் போல் அவனின் மங்கையவள் மல்லிகை பந்திலின் அருகே வந்து நின்றாள்.



அந்த மல்லிகை பந்தல் கொடி மண்டபத்தைச் சுற்றி இருந்தது. காலை இருட்டில் ஷிவேந்திரனை அவள் கவனிக்கவில்லை. அவன் மறைவாக அமர்ந்திருந்தான். அவளின் வருகையை உணர்ந்தும் அசையாமல் அமர்ந்து அவளை நோட்டமிட்டான். அங்கு ஒருவன் தன்னை நோட்டமிடுவதை அறியாது, புகழினி தனது புத்தம் புதுத் தோழியான மல்லிகைப் பந்துலுடன் ஆசையுடன் உரையாடத் தொடங்கினாள்.
 
Last edited:

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஏ மல்லி!!! ம்ம்ம்ஹா எங்க மருத மல்லிக(ய்) கணக்கா மணக்குறியே புள்ளெ… பட்டு கணக்கா பதவிசா இருக்குறடி..” மலர்களை ஆசையுடன் தடவி கொடுத்தாள்.



“மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்கதடி மானே

வலைய(ல்) மெட்டு வயச தொட்டு

வலைக்குதடி மீனே

மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்கதடி மானே

வலைய(ல்) மெட்டு வயச தொட்டு

வலைக்குதடி மீனே

மந்தார செடி ஓரத்திலே

மாமன் நடத்துற பாடத்துல

மானே மருதாணி பூசவா!! ஓஓஓ

தேனே அடையாளம் போடவா”


எந்த மாமனடி மயக்க இம்புட்டு மப்பும் மந்தாரமுமா பூத்து குலுங்குறவ??? அது சரி! ஓன் வெண்பட்டு அழகுக்கு மயங்காதவய்ங்க இந்த சீமையிலே இருப்பாய்ங்களா என்ன??? கொள்ளை அழகுடி நீ! நிதம் அந்தி சாயயிலே உனக்கு சுத்தி போடனு(ம்)” மல்லிகை பூக்களைச் செல்லம் கொஞ்சினாள்.



“மூடி வச்சு மூடி வெச்சு

மறைச்சு வெச்சதெல்லாம்

காத்தடிச்சு காத்தடிச்சு

கலைஞ்சு போனதென்ன


பாடி வெச்சு பாடி வெச்சு

பதுக்கி வெச்சதெல்லாம்

காதலிக்க காதலிக்க

வெளஞ்சு வந்ததென்ன


அவள் பாடிய பாடலில் அந்த மல்லிகை கொடி வெட்கப்பட்டு நாணி சலசலத்ததோ! மெல்லிய இளங்காலைத் தென்றல் தீண்டி அசைந்தாடியதோ! அவளின் கன்னம் தீண்டி சிலிர்ப்பூட்டியது. அந்த மெல்லிய தீண்டலில் உண்டான சிலிர்ப்பில் அவள் லயித்தாள்.



“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஏ கள்ளி, வெக்கமாக்கும்! மூடி வெச்சி மறைச்சு செச்சி மாமன் வரப்போ மல(ர்)ந்து மணக்குறியோ! வித்தார(ம்) தெரிஞ்சவ, வெவர(ம்) அறிஞ்சவடி புள்ளே நீ” எனக் கூறி கள்ளச் சிரிப்பு சிரித்தாள் அந்தக் காரிகை தன் மனம் கவர்ந்த தோழியைப் பார்த்து.



உன்னால தேன் உன்னால தேன்

உதிர்ந்து போச்சு வெக்கம்

கண்ணால தேன் கையால தேன்

கலந்து கிட்ட சொர்கம்


நானிருந்தேன் சும்மா வாசலிலே

மாட்டி கிட்டே(ன்) இப்போ வம்பினிலே

நானே மருதாணி பூசவா!!! ஹோஓஓஒ

நீயே அடையாளம் போடவா


“எங்க மருதய ஆண்ட செண்பக பாண்டிய ராசா கூட உன்னயத் தலையில வச்சிக்கிட்ட ராணியம்மாவ பாத்துதேன் மயங்கினாராம்ல! பெரிய ஆள் மயக்கி தாண்டி நீ!” என குறும்புடன் கூறினாள் அந்த தெக்கத்தி பெண்.



மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்கதடி மானே

வலைய(ல்) மெட்டு வயச தொட்டு

வலைக்குதடி மீனே”


அந்தக் கிராமத்து குயில் மெல்லிய குரலில் இனிமையாகப் பாடி, மல்லிகைப் பூக்களுடன் உரையாடும் அவளை ஷிவேந்திரன் உணர்ச்சிற்ற பார்வையுடன் அளவிட்டான். கனகாம்பர நிற சேலையில் கறுமை நிற வதனத்தில் கள்ளமற்ற வெள்ளைப் புன்சிரிப்புடனும் புது பொலிவுடனும் சற்று சதைப் பிடிப்புடன் காணப்பட்டாள். ராஜேந்திரனின் அன்பும், சுகுணாவின் கனிவு கலந்த கண்டிப்பும், அன்னம்மாவின் கவனிப்பும் அவளுக்கு உயிரூட்டி அகமும் புறமும் பொலிவுற்று புது மலரென அவளை வளைய வரச் செய்தது.



அவள் ஒற்றைக் கையால் ஊன்று கோலை வைத்துக் கொண்டு மற்றொரு கையால் எட்டிப் பறித்து தனது இடுப்பில் கட்டியிருந்த மூங்கில் பூக்குடையில் மல்லிகளை நிறைத்தாள். மனதிற்குள் எதனையோ எண்ணிச் சிரிப்புடன் கொடியின் உச்சியிலிருந்த பூக்களை எக்கிப் பறிக்க முற்பட்டவள், ஏதோ ஒரு விதமான புகையின் நெடி நாசியைச் தீண்டவும் முகம் சுழித்தாள்.



சிகரட் புகை! ஒரு சோடிக் கால்கள் அழுத்தமான காலடிகளோடு அவளை நெருங்கி வந்தன. மெல்லத் திரும்பி தலை உயர்த்திப் பார்த்தாள். பார்த்தவளின் அழையாது பார்வை குத்திட்டு நின்றது. அவளுக்கு மாலையிட்ட மன்னவன் தான்! உயர் ரக சிகரட்டை புகைத்தபடி டிராக் சுட்டில் ஷிவேந்திரன் அவளின் எதிரே வந்து நின்றான். அவனைக் கண்டதும் பயத்தில் அவளின் நாக்கு மேல்லன்னத்தில் ஒட்டிக் கொண்டது. அகன்ற விழிகளுடன் மருட்சியோடு நின்றாள்.



அவனுக்குப் பக்கத்தில் அவனுடைய நாய்கள் இரண்டும் புகழினியின் மேல் பாய்வதற்காக காத்துக் கொண்டிருந்தன. நாய்களை அப்பொழுது தான் கவனித்தவள், பயத்தில் “ஆஆஆஆ” என அலறித் தடுமாறி தரையில் பின்னே சாய்ந்தாள். அவளின் மடியில் கட்டியிருந்தப் பூக்கூடையில் இருந்த மல்லிகையாவும் அவளின் மேலேயேச் சிதறின. விழுந்த அதிர்வில் பூக்கூடை அவளின் இடுப்பில் இருந்து நழுவியது. அவளின் ஊன்று கோள் அவளின் கைகளில் மாட்டிக் கொண்டது. கீழே புல் தரை என்பதால் அவள் உடலில் எந்தக் காயங்கள் இன்றி தப்பித்தாள்.



ஷிவேந்திரன் குனிந்து அவளைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான். மற்றவர்கள் குத்தலாக பேசினாலும் அதனைப் புறந்தள்ளி விட்டு சுபிக்ஷத்தில் சந்தோசமாக வலம் வந்தாள் புகழினி. வெகு நாட்களுக்குப் பிறகு அவனைக் காணவும் அதிர்ந்துவிட்டாள். கணவன் என்ற நினைப்பு அவள் மனதில் பதியவில்லை! அடுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தி அடக்கி ஆளும் அரக்கனாகவே அவள் மனதில் பதிந்திருந்தான்.



அவளின் முக மாறுதல்களை அவன் அனுமானித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனையாளோ நாய்களைக் குலை நடுங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனது நாய்களிடம் திரும்பி லேசாகத் தலையசைத்தான். அதனை ஏற்று அவை ஓடிவிட்டன.



“ஆத்தா மீனாட்சி எம்புட்டு பெரிய நாய்ங்க!” என மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். மறுநொடி “இவங்கெ எப்ப நாடு திரும்பினாய்ங்க்! இவய்ங்கெ வாராங்கனு தெரிஞ்சா பாவி நான் வெள்ளி மொளக்கு(ம்) முன்னே தன்னந்தனியா தலைய வெளிய நீட்டி இருப்பேனா!!! ஐயனும் ஆத்தாவும் கூட ஒரு குறிப்பு சொல்லலியே. மாட்டிபுட்டேனே, தன்னந்தனியா மாட்டிபுட்டேனே! புடிக்காத அத்த மவன தலை கீழ தொங்க விட்டு அடிச்சாய்ங்க. வேண்டாத பொண்டாட்டி என்னையும் அப்புடி அடிச்சி புடுவாய்ங்களா? ஆத்தா மீனாட்சி ஒன் மவள நீ தேன் காவந்து பண்ணனும் ஆத்தா. இன்னைக்கு என்னைய கொத்து பொரட்டாவா போடாமா விடமாங்க போலயே....” என மனதிற்குள் புலம்புவதாக நினைத்து பயத்தில் வாயாற உளறித் தள்ளிவிட்டாள். அதை அவள் உணரவும் இல்லை!!! பாவம்!!!



கணவனைக் காணும் திராணியற்று கண்களை இறுக மூடியவள், ஒரு சில வினாடிகள் எந்த அரவமும் இன்றி அமைதியாக இருந்தமையால் லேசாக ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தாள். அவளின் பார்வைக்காக காத்திருந்தது போல் “மேடத்துக்கு சிகரட் ஸ்மெல் பிடிக்காதா?” என ஏளனமாகக் வினவியவன், சிகரட்டை ஆழ்ந்து இழுத்துக் கொண்டு அவனை நோக்கிக் குனிந்தான்.



எங்கே அவன் முன்னே போல் தனக்கு சிகரட்டால் சூடு வைத்து விடுவானோ எனப் பாவையவள் உடல் வெட வெடக்க மீண்டும் கண்கள் தானாக மூடிக் கொண்டன. அவள் என்னவென்று உணரும் முன் அவனின் கணவன் அவளின் மேல் முழுமையாகக் கவிழ்ந்திருந்தான். மறுநொடி அவளின் இதழ்களைப் பிளந்து தனது வாயினுள் இருந்த சிகரட் புகையை அவளின் வாயினுள் ஊதி, வெளியேறாதவாறு அவளின் இதழ்களைத் தனது இதழ்களால் அழுந்த மூடினான்.



அவனின் உடல் கணமோ, கணவனின் முதல் இதழொற்றலின் அதிர்வோ, சிகரட் நெடியினால் ஏற்பட்ட மூச்சுத் திணறலோ பேதையவள் மயக்கமுற்றாள். அவள் கண்கள் செருகி மயக்க நிலைக்குச் செல்வதை ஷிவேந்திரன் இமைக்கும் பொழுதில் உணர்ந்து கொண்டு அவளிடம் இருந்து விலகி எழுந்தவன், நொடியும் தாமதிக்காது வீட்டை நோக்கிச் சென்றுவிட்டான்.



முகத்தில் தண்ணீர் விழுந்ததும் தெளிந்து கண் திறந்தாள் புகழினி, எதிரே அன்னம்மா கவலை அப்பிய முகத்துடன் அவளை நோக்கினார். லேசாகப் புன்னகை புரிந்து அவரின் துணையுடன் மெல்ல எழுந்து அமர்ந்தாள். பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டிருந்தது.



“ஒன்னுமில்லெ அன்ன(ம்) ஆத்தா! காப்பி தண்ணி குடிக்காம போனேனா அதேன் தலை கிறுகிறுத்து போச்சு.” எனச் சிரிப்புடன் கூறினாள்.



“அப்பாடி! நான் பயந்தே போயிட்டேன் புகழ்மா, அப்பவே ஒரு வாய் காபி குடிச்சிட்டு போன்னு சொன்னேன் நீ தான் சுகுணா அம்மா வந்தோன குடிக்கிறேனு சொன்ன. பூ பரிக்க போன பொண்ண காணலியேனு நான் அலறி அடிச்சிட்டு தேடி வந்தா நீ மல்லாந்து மயங்கி கிடக்குற. பயந்தே போயிட்டேன். அம்மாவையும் ஐயாவையும் கூப்பிடாலாம்னு இருந்தப்ப நீ நல்ல வேலையா கண் முழிச்ச! சரி வா மெல்ல எந்திரி. வந்து மொதல்ல காபியக் குடி அப்ப தான் மயக்கம் தெளியும் உனக்கு. ம்ம்ம்ம் எதோ வாடை வருதே என்ன வாடை?”



“அ.. அஆ..அது அது மல்லி பூ வாடைதேன் அன்ன(ம்) ஆத்தா”



“இல்லை கண்ணு இது வேற எதோ ஒரு வாடையால வருது. உனக்கு தெரியலையா??”



“இல்லையே எனக்கொன்னும் தெரியலியே” எனக் கூறிவிட்டு திரும்பி நின்று கொண்டு உஃப் உஃப் என ஊதினாள் புகழினி அன்னம்மா அறியாமல்.



இருவரும் வீட்டை நோக்கிச் சென்றனர். புகழினி மெல்லத் திரும்பி மல்லிகை பந்தலையும், கீழே சிந்தி இருந்த மல்லிகை மொட்டுகளையும், பக்கத்தில் விழுந்து கிடந்த சிகரட் துண்டையும் பார்த்தாள், அவள் இதயம் படபட என அடித்துக் கொண்டது. சட்டெனத் திரும்பி வேகமாக அன்னம்மாவுடன் நடக்கத் தொடங்கினாள்.



டைனிங் டேபிளில் உணவுகளை அடுக்கிக் கொண்டிருந்தார் அன்னம்மா. அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள் புகழினி. வீட்டின் உறுப்பினர்கள் யாவரும் அவரவர் இடத்தில் அமர்ந்து உணவுண்ணத் தொடங்கினர். ஷிவேந்திரன் வந்து அவனது இருக்கையில் அமர்ந்தான். தனக்கு எதிர் வரிசையில் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் அமர்ந்து உண்ணும் அவளைப் பார்த்து இகழ்ச்சி சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு கையில் ஒரு மேகசினுடன் உணவில் கவனமானான்.



விஷ்வேந்திரன் ஷில்பாவின் பிள்ளைகள் டிவி ரிமோட்டிற்காக சண்டை பிடித்து ஒரு வழியாக சன் மயூசிக்கை வைத்தனர்.



“ஆஹா கூசுது முத்தம் முத்தம்

அழகா இருக்குது முத்தம் முத்தம்

வயச குறைக்குது முத்தம் முத்தம்

அள்ளிக் கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்

முத்தம் முத்தம்ம்ம்ம்ம்ம்ம்

முத்தம் முத்தம்ம்ம்ம்ம்ம்ம்ம்”



பாடலை செவிமடுத்த புகழினிக்கு விக்கல் எடுத்தது. அவள் தன்னை மறந்து விக்கியபடி ஷிவேந்திரனை நோக்கினாள். சுகுணா அவளுக்குப் பருக தண்ணீர் கொடுத்தார், ராஜேந்திரன் அவளின் தலையில் தட்டிக் கொடுத்தார். விக்கல் நின்ற பாடில்லை. ஷிவேந்திரன் அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அவளின் விக்கல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. கணவனின் பார்வையில் அவளுக்குக் குளிர் பிறந்தது. தட்டில் தலையைப் புதைத்துக் கொண்டாள்....



ஷிவேந்திரன் ஹாலில் சோபாவில் அமர்ந்து அலைபேசியில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவன், பெற்றோருடன் அலுவலகத்துக்கு செல்லவிருந்த மனையாளை சொடக்கிட்டு நிறுத்தினான்.



அவள் தயங்கியவாறு நின்றாள். முன்பு போல் தலை குனியாமல் சுகுணாவை பார்த்தபடி நின்றாள். யாரையும் நிமிர்ந்து நோக்கி திடமாக எதிர் கொள்ள வேண்டும் என்பது தான் சுகுணா அவளுக்குச் சொல்லி கொடுத்த முதல் பாடம். அதனை புகழினி பின்பற்றவும் செய்கிறாள். கணவனிடத்தில் அவளது திடமெல்லாம் வடிந்து விடுகிறதே! அதிலும் இன்று அதிகாலையில் நடந்த சம்பவம் அவளுக்கு வெட்கத்தைக் கொடுக்கவில்லை மாறாகக் கிலியை கொடுத்தது. கணவனின் வீரப் பிரதாபங்களையும், மன்மத லீலைகளையும் சுகுணாவின் வாயிலாகவும் அன்னம்மாவின் வாயிலாகவும் அறிந்து கொண்டவள் ஆயிற்றே! அவளைப் பொறுத்த வரை அவன் கணவனல்ல அரக்கன்! அவளை தகாத மனைவி என்று சொல்லிவிட்ட பின் அவனைக் கணவனாக நினைத்துக் கொண்டு என்றாவது மாறுவான் என எட்டாக் கனிக்காக ஏங்கி கனவுலகில் மிதக்கும் பேராசை காரியல்ல அவள். நிதர்சனத்தைத் தாங்கி உணர்ந்து வாழும் வெகுளிப் பெண்.



“எங்கப் போற?” என வினவினான் ஷிவேந்திரன்.



சுகுணா கண்களால் புகழினிக்கு தைரியம் கொடுத்தார். தயக்குத்துடன் அவனை லேசாக திரும்பி பார்த்தவள் தயங்கியபடி “ஆத்தாவோடையும் ஐயனோடையும் அபிசுக்கு போறேங்க.”



“…ம்ம்ம்ம்ம் ஆத்தா! ஐயன்! அப்படின்னா என்ன?”



“ஆத்தான்னா அம்மா, ஐய்யன்னா அப்பா. அத்தை மாமானு சொல்ல மனசு வரல அதேன் ஐயன் ஆத்தானு அழைக்கிறேன்”



“ஓ, அப்படியா அப்ப நீ என்னை என்னனு கூப்பிடுவ அண்ணன்னா?” பரிகாசமாக வினவினான்.



புகழினி விழித்தாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவள் ‘காப்பாத்துங்களேன்’ என்ற இறைஞ்சல் பார்வையுடன் ராஜேந்திரனியும் சுகுணாவையும் நோக்கினாள். அவர்கள் இமை மூடித் திறந்து அவளைச் சமாதான படுத்தினர். இந்தப் பார்வை பரிமாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்த ஷிவேந்திரனின் முகம் இறுகியது, தொண்டையைச் செறுமினான். அந்த செருமலில் அவன் புறம் புகழினியின் பார்வை சென்றது.



“என்ன சொல்ல தெரியலியா! என்னை நீ சார்னு கூப்பிடனும். புரியுதா! அதோட இனிமே இங்க வெட்டியா உனக்கு சோறு போட முடியாது. என் அஃபிஸ்ல உனக்கு ஏத்த வேலை இருக்கு. இனிமே என்னைக் கேக்காம எதாவது செஞ்ச உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்!” எனக் கர்ஜித்தான்.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புகழினி கண்களில் துளிர்த்த நீருடன் அவனை மிரட்சியுடன் நோக்கினாள். அதில் திருப்தியுற்றவனாய் அலட்சியமாகத் தனது பெற்றோரை நோக்கியவன் புகழினியைத் தன்னை பின் தொடரும்படி செய்கை செய்துவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.



“புகழுமா உன் ஐயாவ நம்புறதானே, தைரியமா போயிட்டு வா. அந்த முட்டாப்த் பயலுக்கு உன் அருமை தெரியாது. அவன் தெரிஞ்சிக்கட்டும். கண்டிப்பாத் தெரிஞ்சுப்பான். நிமிர்ந்து நின்னு எதையும் எதிர் கொண்டு சாதிக்கனும்டா. உன் சுகு ஆத்தாவும் இப்படி தான் உன்னப் போல தொடை நடுங்கியா இருந்தா. இப்ப பாரு என்ன போடு போடுறானு! இப்ப ஐயா தான் உன் ஆத்தாவ பாத்து நடுங்கிறேன்! நீயும் அப்படி ஆக வேணாமா??”



புகழினி முகத்தில் வெட்கப் புன்னகை படர்ந்தது. போலியாக கணவனை முறைத்த சுகுணா “ஆமா! உங்க ஐய்யன் தினமும் காலையும் மாலையும் நூத்தியெட்டு தோப்புக்கரணம் போடுறார். இன்னைக்கு சாய்ங்காலம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து எண்ணுவோம் என்னடா குட்டி..” ராஜேந்திரனை வாரினார்.



“ஐய்யோஓஓ! நான் அம்பேல்” இருகைகளையும் மேலேத் தூக்கி பாவமாக முகத்தை வைக்கவும் புகழினி வாய்ப்பொத்தி சிரித்தாள். சுகுணா அவளின் தலையில் தடவிக் கொடுத்து அவளை வாசலுக்கு அனுப்பி வைத்தார். ராஜேந்திரன் சுகுணாவை அவளின் பின்னே செல்லவிடாது தடுத்தார்.



“சுகும்மா அந்த முரடன் நம்மளைப் பாத்தா கொம்பு சீவி விட்ட கணக்கா சிலிப்பிக்குவான். புகழ் பாவம்.. விட்டுறு. நம்மள மீறி எதுவும் நடந்துடுமா சொல்லு..”



சுகுணாவின் முகத்தில் விரக்தியான சிரிப்பொன்று மலர்ந்தது. அதன் அர்த்தத்தை உணர்ந்து ராஜேந்திரன் முகம் வாடி விட்டார்.



அங்கு ஷிவேந்திரனின் ரோல்ஸ் ராய்ஸ் நின்று கொண்டிருந்தது. பென்ஸ் காரில் ராஜேந்திரனும் சுகுணாவும் அலுவலகம் செல்வர். இப்பொழுது இந்த காரில் ஏறுவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தாள்.



காரின் கண்ணாடி கீழே இறக்கப்பட்டது. அவளின் கையில் ஒரு துண்டு சீட்டு திணிக்கப்பட்டது.



“இன்னும் அரை மணி நேரத்தில இந்த அட்ரஸுல இருக்கிற ஆஃப்பிஸ்ல நீ இருக்கனும். இல்ல…” உறுமிய ஷிவேந்திரனைத் தொடர்ந்து,கார் சீறிப் பாய்ந்தது.



புகழினி அதிர்ச்சியுடன் சமைந்து நின்றாள். ஒரு சில வினாடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவள் திரும்பி வீட்டை நோக்கினாள். ராஜேந்திரனும் சுகுணாவும் இறங்கி வருவது தெரிந்தது. சுகுணா ஓடி வந்து என்னவென்று புகழிடம் வினவினார்



“என்னடா புகழ்?”



புகழினி அவள் கையிலிருந்த சீட்டைக் கொடுத்து “அரை மணியில நான் அங்க இருக்கனும்னு சாரு சொல்றாரு ஆத்தா.”



சுகுணா பல்லை கடித்துக் கொண்டு கணவனை நோக்கினாள். ராஜேந்திரன் இமை மூடித் திறந்து மனைவியை அமைதிபடுத்திவிட்டு புகழினியை நோக்கி “புகழ்டா வா ஐயன் உனக்கு உன் புது ஆஃபிசை காட்டுறேன். உன்னை உன் ஆஃபிஸ்ல விட்டுட்டு நாங்க நம்ம ஆஃபிசுக்கு போறோம். அதைவிட எனக்கும் உன் சுகு ஆத்தாவுக்கும் என்ன பெரிய கலெக்டர் வேலை.. வா நம்ம கார்ல போகலாம்” தனது காரை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றார்..



புகழினிக்கு அவர்களை வருத்துகிறோமே என்ற சங்கடம் இருந்தாலும் அவர்களின் துணை அவளுக்கு அவசியமாக இருந்தது. அதனால் மகிழ்ச்சியுடன் தலையாட்டிச் சிரித்தாள். ராஜேந்திரனும் சுகுணாவும் நிம்மதியுடன் அவளை மகனின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.



தன் முன்னால் நிமிர்ந்து நிற்கும் அந்த இருபது மாடிக் கட்டிடத்தை ஆவென பார்த்துக் கொண்டிருந்தாள் புகழினி. லேவண்டர் நிற சாஃப்ட் சில்க் புடவையில் பாந்தமாய் இருந்தாள்.



காரிலேயே அவளுக்குத் தைரியம் சொல்லி அவளை அலுவலகத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர். ராஜேந்திரன் ஷிவேந்திரனின் பி.ஏவான ஆண்டோவிற்கு அழைத்து விவரம் சொல்லி இருந்தார். அவனும் தான் புகழினியை நல்ல முறையில் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்தான்.



ஷிவேந்திரனின் தலைமை அலுவலகம் அது. பல்வேறு தொழில்கள் செய்யும் வல்லவன். அந்தக் கட்டிடத்தின் உயரமும் அங்குள்ளவர்களின் உடையலங்காரமும் தோற்றமும் அவளுக்குப் பயத்தை கொடுத்தது. சுகுணாவையும் ராஜேந்திரனையும் மனதில் நினைத்துக் கொண்டு அவள் ரிசப்ஷனை நோக்கி நகர்ந்தாள்.



அங்குள்ளவர்கள் அவளை வேற்று கிரகவாசியை போல் பார்த்துவிட்டுச் சென்றனர். மற்றவர்களின் விசித்திர பார்வையைக் கண்டு அவளின் மனம் வலித்தது. மறுநொடி இது ஒன்றும் தனக்கு புதிது இல்லையே என மனதைத் திடப்படுத்தி கொண்டு அங்குள்ள ரிசப்ஷனிஸ்டிடம் மெல்லியக் குரலில் “நான் புகழினி, சிவேந்திரன் சாரா பாக்கனும். அவய்ங்க என்னைய இங்கன வேலைக்காக வரச் சொல்லி இருந்தாய்ங்க” எனக் கூறினாள்.



ரிசப்ஷனிஸ்ட் பெண் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு தனது தொலைப்பேசியில் பாதுகாவலர்களை அழைத்து இவளை அப்புறப் படுத்துமாறு ஆங்கிலத்தில் உத்தரவிட்டாள்.



புகழினிக்கு சுகுணா தான் ஆங்கிலம் சொல்லி கொடுக்கிறார். ஆனால் இவ்வாறு படபடவென வேகமாகப் பேசினால் அவளுக்கு ஒன்றும் விளங்காது. அவள் கத்து குட்டியாயிற்றே. என்னவென்று புரியாமல் விழித்தபடி நின்றாள்.



பாதுகாவலர்கள் புகழினியைப் இழுத்து அப்புறப்படுத்த முயன்றனர்.



“வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்” ஷிவேந்திரனின் உறுமலில் திடுக்கிட்டு எழுந்து அவனுக்கு மரியாதை செய்தனர்.



ரிசப்ஷனிஸ்ட் பவ்யமாக அவனருகில் வந்து புகழினியை அப்புறப்படுத்தும் காரணத்தைக் கூறினாள்.



“ஹாண்ட்ஸ் ஆஃப் ஹர்” ஷிவேந்திரனின் குரல் கட்டளையாக ஒலித்தது.



மறுநொடி பாதுகாவலர்கள் தங்கள் கரங்களை புகழினியின் மேலிருந்து விலக்கிக் கொண்டு ஒதுங்கி நின்றனர்.



“செண்ட் ஹர் டு மை காபின்” என ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிற்கு உத்தரவிட்டுச் சென்றான் ஷிவேந்திரன்.



புகழினிக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. ஆழ மூச்செடுத்து அழுகையை அடக்கினாள்.



ரிசப்ஷனிஸ்டிற்கு ஏனோ புகழினியை பிடிக்கவில்லை. தோற்றப் பொலிவுடன் உலா வரும் நபர்களின் மத்தியில் அசிங்கமாக அவள் இருப்பதாக நினைத்தாள்.



“ஃபாலோ மீ” என அலட்சியமாகக் கூறிவிட்டு ஹை ஹீல்ஸ் செருப்பில் கீழ் தொடைகளைக் கவ்வி பிடிக்க இறுக்கமான ஸ்கர்ட், முக்கால் கை சட்டையுடன் அரேபிய குதிரை போல் முடியை விரிந்துகிடக்க ஒய்யாரமாக பூனை நடை நடந்தாள். அங்குள்ள யாவரும் அவளைப் போலவே உடை அணிந்திருந்தனர்.



அங்குத் துப்புறவுத் தொழிலாளிகள் உட்பட அனைவரும் நேர்த்தியாக உடையணிந்து அழகுடன் இருப்பதை விழி விரித்து எந்த கல்மிஷமும் இல்லாமல் ஆர்வத்துடன் நோக்கினாள் புகழினி.



மின்தூக்கியில் ஊழியர்கள் யாவரும் அசாதாரணமாக ஆங்கிலத்தில் உரையாடியவர்களின் வாயைப் பார்த்து கொண்டிருந்தாள் புகழினி. ரிசப்ஷனிஸ்ட் அவளைப் பார்த்து எள்ளலுடன் உதட்டைச் சுழித்தாள். புகழினிக்கு என்னவோ போல் இருந்தது. ஆனால் எப்பொழுதும் போல் அதனை சடுதியில் மறைத்துக் கொண்டாள்.



மின்தூக்கியிலிருந்து வெளிப்பட்டு அவர்கள் ஷிவேந்திரனின் அறையை நோக்கி நடந்தனர். அங்கிருந்த பெண்ணிடம் விபரம் கூறி அவளை உள்ளே அனுப்பினாள் ரிசப்ஷனிஸ்ட்.



“ஹே இந்தக் கரிக்கட்டைக்கு இங்க என்ன வேலை இருக்கும். பாஸ் எதுக்கு கூப்பிட்டார் இவளை. அப்படி என்ன வேலை குடுக்க போறார்” என்றாள் அந்தத் தளத்தில் வேலை செய்யும் ஒருத்தி.



“வேற என்ன வேலை அவரோட பாத்ரூம் கழுவுற வேலை தான் இருக்கும் பின்னே இவளுக்கு ஜெ.எம்.டி போஸ்ட்டா தருவாறு. மூஞ்சிய பாரு கருங்குரங்கு மாதிரி. இவ்ளோ பிளாக்காவா ஒருத்தி இருப்பா… ஒவ்வாக்” அருவறுத்து முகம் சுழித்தாள் ரிசப்ஷனிஸ்ட்.



அவளைக் காயப்படுத்தும் நோக்கோடு அவர்கள் அதிசயத்திலும் அதிசயமாக ஆங்கிலத்தை விடுத்து அவர்கள் தமிழ்நாட்டில் தமிழில் உரையாடினர்!!! எவ்வளவு பெரிய அதிசயம்!!!!



இவையாவும் புகழினியின் காதில் விழுந்து அவளின் பிஞ்சு மனதைக் காயப்படுத்தியது. அவளின் கண்கள் தன்னை மீறிக் கலங்கியது. துடைக்கும் நினைவின்றி ஷிவேந்திரனின் அறையினுள் நுழைந்தாள் தலை குனிந்து!



குனிந்தத் தலை நிமிருமா???


கருப்பு அழகி வருவாள்

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே,

'என் கருப்பழகி'-13வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

அடுத்த அத்தியாயம் வரும் புதனன்று (இரவில்) பதியப்படும்.

வாரத்தில் இரண்டு யூடி தான் கொடுக்கிறேன் மக்கா!!! நல்லாப் பாருங்க.

#SAVEDELTA
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கறுப்பழகி”

அத்தியாயம் – 13

பிள்ளை பிராயத்தில் இருந்து வசுந்தராவிற்கு எல்லாவற்றிலும் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்கிற செருக்கு. அதற்குத் தூபம் போடுவது போல் அவளின் பெற்றோர்களும் மகளின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் ஒவ்வொரு நொடியும் அவளை இளவரசியாக உணரவைத்தினர்! பண போதை ஏற்றப்பட அவளுள் ஆணவம், அகங்காரம், அலட்சியம் தலைதூக்கி ஆடியது. ஆனால் என்று சுகுணா ராஜேந்திரனின் கரம் பற்றி சுபிக்ஷத்திற்குள் அடியெடுத்து வைத்தாரோ அன்றிலிருந்து அவளின் தலை எழுத்து தலை கீழாக மாறிப் போனது. அதனை மீட்க அவளால் ஆன மட்டும் முயன்றாள். முடியவில்லை! அதனால் உண்டான கோபமும் வெறுப்பும் சுகுணாவின் பக்கம் திரும்பியது. பிற்காலத்தில் சுகுணா அவளைவிட அந்திஸ்த்திலும் அதிகாரத்திலும் பலமடங்கு உயர்ந்துவிட்டதை சீரணிக்க முடியாமல் சிரமப்பட்டாள். தன்னுடைய கணவன் வீட்டுச் சொத்து பிறந்த வீட்டுச் சொத்து சுகங்களுக்குக் கால் தூசி கூட பெறாது என்பதை அவள் அறிவாள். அதனால் தன்னுடைய பழைய அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டுமெனில் தன் அருந்தவப் புதலவி தன்னுடைய வீட்டிற்கு மருமகளாக வருவது தான் ஒரே வழி என்று முடிவுக்கட்டியவள், அதனைச் செயல்படுத்த முனைந்தாள்.



ஷிவேந்திரன் விமன்யாவை மணந்து கொண்டால் தங்கள் வாழ்வு தரம் ஸ்திரமாகி, மாலை மரியாதைகள் தங்களை தேடி வரும். இளமைக் காலத்தில் இளவரசியாக வாழ்ந்தவள, மகளைக் கொண்டு மகாராணியாக வலம் வரலாம் என்று மண கோட்டை கட்டினாள். தன் தாய் தந்தை எப்படியும் தமையனின் மைந்தனை வளைத்துக் கரைத்து காரியத்தைச் சாதித்து விடுவார்கள் என மனதினில் கொக்கரித்தாள். அதனை சுகுணாவிடம் கூறி அவரை வெறுப்பேற்றினாள்.



ஆனால் நடந்ததோ! ஷிவேந்திரனிடம் அனைத்துச் சொத்துக்களும், நிறுவனங்களும் ஒப்படைக்கப்பட்டன. தர்மேந்திரன் அவன் காலால் இட்ட வேலைகளை தன் தலையால் செய்வதை கண்டு அவள் தன் அன்னையிடம் பொங்கினாள். “உன் சன்னாலேயோ, ஹப்பினாலயோ ஷிவ் மாதிரி பிஸ்னஸ்ஸ சக்ஸ்ஃபுல்லா ரன் பண்ண முடியுமா???” என்ற மேகவதியின் ஒற்றைக் கேள்வியில் வாயடைத்து நின்றாள். வசுந்தரா எப்படிச் சொல்லுவாள்? அவளின் கணவனை ஒரு அல்லக்கையாக தான் அவனின் பிறந்த வீட்டில் வைத்திருக்கின்றனர் என்று! சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை. தொழிலில் நேரும் நெருக்கடிகளைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்ளும் அசாத்திய திறமைசாலி. வசந்த் தந்தையைப் போல் அல்லாமல் தந்திரமானவனாக திறமையானவனாகத் தான் இருந்தான். ஆனால் அவனின் குள்ள நரித்தந்திரம் ஷிவேந்திரன் என்னும் சிங்கத்தின் காலில் மிதிபட்டு விடுகிறதே! குறுக்கு வழியில் மகன் முன்னேறி ஷிவேந்திரனை தோற்கடிக்க விழைகிறான் என்பதை வசுந்தரா அறிவாள். என்றுமே அவனின் மகனை அவள் கண்டித்தது இல்லை. தன்னால், தன்னுடைய கணவனால் சாதிக்க முடியாததை தன் மகனோ மகளோ சாதித்தால் இவ்வுலகில் அவளுக்கு வேறென்ன வேண்டும்! எந்த வழியாக இருந்தால் என்ன! சுகுணா அவளின் முன் மண்டியிட்டுத் தலைவணங்கி, அவளின் பாதம் பணிய வேண்டும். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன! ராஜேந்திரன் எனும் அன்புக் கணவனை அரணாக பெற்றவள், ஷிவேந்திரன் எனும் ஆளுமையான அரசாளும் அரிமாவைப் பிள்ளையாகப் பெற்றவள். அவர்களை தோற்கடிக்க முயன்று அவள்தானே ஒவ்வொரு முறையும் தோற்று தோற்று தலை குனிகிறாள். அவளின் மனம் உலைக்களமாக கொதித்தது.



வசுந்தரா மனம் தளரவில்லை. ஷிவேந்திரன் ஸ்தீரி லோகன். இளமை வனப்புடன் வலம் வரும் வசீகரியான மகள் விமன்யாவின் அழகில் அவன் எளிதில் வீழ்ந்து விடுவான் என மனக் கோட்டைக் கட்டினாள். பதின் வயதிலேயே விமன்யாவும் அதற்கேற்றார் போல் மன்மத பானங்களை மாமன் மகனை நோக்கி அடாத மழையிலும் விடாது பிரயோகித்தாள். ஆனால் அவனோ விமன்யா என்றொருத்தி இருப்பதையே அறியாதவன் போல் அவளைக் கடந்து சென்றுவிடுவான். அவன் பார்க்காத அழகிகளா!!! மனம் தொய்ந்த மகளை வசுந்தரா திடப்படுத்தினாள். தாயின் நற்போதனையில்(?) துணிவுடன் ஷிவேந்திரனின் படுக்கை அறைக்குள் நுழைந்தவள் அவனை ஆசையுடன் கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவ்வளவு தான்! கன்னம் கன்னமாக அறைந்து மாடிப் படிகளில் இருந்து உருட்டிவிட்டு நடு ஹாலில் அவளை பெல்டினால் அடி பின்னி எடுத்து விட்டான். சுபிக்ஷமே அவனது ருத்திர தாண்டவத்தில் அரண்டு போய்விட்டது! வசுந்தரா அவனைக் காலை பிடித்துக் கொண்டு மகளை மன்னித்து விட்டுவிடுமாறு கெஞ்சியும் கதறியும் பலனில்லை.



முப்பது ஆண்டுகளுக்கு முன் தன் அண்ணன் ராஜேந்திரன் அவளை வீட்டின் வாசலில் அனைவரின் முன்னிலையில் விளக்கமாற்றால் அடித்து வெளுத்தான். இன்று தன்னுடைய மகள் நடு ஹாலில் அதே போல் எல்லோரின் மத்தியிலும் அண்ணன் மகனின் கையால் பெல்ட் அடி வாங்குவதை அவளால் சீரணிக்க முடியவில்லை.



வசுந்தரா தாய் தந்தையைப் பார்த்துக் கெஞ்சினாள் கதறினாள். மேகவதி மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். ஆனால் அவளால் பேரனை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாதே.. அப்படிச் செய்ய விழைந்தால் பாதிப்பு தங்களுக்குத் தான் என்று அறியாதவரா அவர்! தர்மேந்திரன் எந்த உணர்வுமின்றி அசையாது மரம் போல் நின்றார். தந்தையின் ஒதுக்கத்தில் வசுந்தரா நிலைகுலைந்து போனாள். ரூபாதேவி தான் ஷிவேந்திரனை தடுத்து அவனை அமைதிப் படுத்தினாள். அந்த சம்பவத்தின் பொழுது ராஜேந்திரனும், சுகுணாவும் அவர்கள் நிறுவன ஒப்பந்த நிமித்தமாக பெங்களூர் சென்றிருந்தனர். அன்னம்மா மூலமாக அவர்களுக்கு விஷயம் தெரிய வந்தது.



சுபிக்ஷத்தில் தங்களது நிலை என்ன என்பதைத் தெள்ள தெளிவாக அன்று தான் தாயும் மகளும் புரிந்து கொண்டனர். மேகவதி கொஞ்ச நாட்கள் வெளியூருக்குச் சென்று வரலாம் என அவர்களைத் திசை திருப்பினார். வசுந்தராவின் மனம் துவளவில்லை. திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸை தன் பிள்ளைகள் ஆள எந்த எல்லைக்குச் செல்லவும் முடிவெடுத்துவிட்டாள்.



புகழினியை ஷிவேந்திரன் திருமணம் செய்து கொண்டு வந்த பொழுது அவளுக்கு அதிர்ச்சியே. ஆனால் புகழினியின் தோற்றமும், வெகுளித்தனமும் அவளைப் பயப்படுத்தவில்லை. அதிலும் ஷிவேந்திரன் அவளை நடத்திய விதமும் ‘அன்னஃபிஷியல் வைஃப்’ என அறிமுகப்படுத்தியதும் அவளைக் குஷியாக்கியது. ஷிவேந்திரனுக்கும் தனது அண்ணனுக்கும், அண்ணன் மனைவிக்கும் நடுவில் நடக்கும் பனிப்போரைக் கண்டு பூரித்தாள். புகழினியையும், சுகுணவையும் தன் அன்னை மற்றும் மகளோடு சேர்ந்து இளக்காரமாகப் பார்த்தாள். ஆனால் ராஜ பாரம்பரித்தில் பிறந்த பேரழிகியான சம்யுக்தா தேவியின் வரவு அவர்கள் வாழ்வில் புயலை கிளப்பியது. ராஜ பாரம்பரித்தில் பிறந்தவளை விடுத்து தன் மகளை ஷிவேந்திரன் சீண்டுவான் என நம்பிக்கை கொள்ள அவள் ஒன்றும் முட்டாள் அல்லவே!



அதிலும் ஷிவேந்திரன் வசந்த்தை அடித்து மரத்தில் தலை கீழாகத் தொங்கவிட்ட பின்பு என்றுமே தோன்றிறாத பயம் அவளைச் சூழ்ந்து கொண்டது. தாயிடம் இருந்து முடிந்த அளவு பணம், நகை, சொத்துக்களைக் கைப்பற்றி கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தாள் வசுந்தரா. திரன் குழுமத்தில் தன்னுடைய பிள்ளைகளை எப்படியேனும் உள்ளேப் புகுத்திவிட்டால், பின்னர் தன்னுடையப் பிள்ளைகள் சாதுர்யமாக திரன் குழமத்தைக் கைப்பற்றிவிடுவார்கள் என நம்பினாள். குறிப்பாக மகன் வசந்தின் சூழ்ச்சி வலைகளில் விழுந்துவிட்டால் எவராலும் மீள முடியாது என்பதற்கு பல சான்றுகள் உள்ளனவே. தன் எண்ணத்தைச்ச் செயல்படுத்த தனது தாயிடம் முறையிட்டாள்.



“மாம் டாட் கிட்டச் சொல்லி திரன் குரூப்ல வசுந்த்க்கும் விமிக்கும் ஷேர்ஸ் குடுத்து பொசிஷன் குடுக்க சொல்லுங்க மாம். என் பிள்ளைங்களும் உங்களுக்கு பேர பசங்க தானே, அவங்களுக்கும் ரைட்ஸ் இருக்கு மாம்.”



“வசு ஆர் யு மேட்? ஷிவ் ஒன்பது வயசுலையே உனக்கு எப்படி நோஸ் கட் கொடுத்தான் ஞாபகமிருக்கா? இப்ப அவன் திரன் குரூப்போட சேர்மென். எல்லாமே அவன் கையில தான் இருக்கு. அவன் எப்படி இதுக்கு ஒத்துக்குவான்?? நாலு மாசம் முன்னாடி தான் வசந்தை தலைகீழா தொங்கவிட்டு அடிச்சான் மறந்திடுச்சா உனக்கு!!”



வசுந்தரா கோபமாகப் பதிலளிக்க வாய் திறக்க எத்தினைக்கையில், சடாரென்று அறைக் கதவைத் திறந்து கொண்டு விமன்யா உள்ளே நுழைந்தாள். மேல் தொடைகளை கவ்வியிருந்த டைட் சார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டில் அபயகரமான வளைவுகளை அசாத்தியமாக எடுத்துக்காட்டி நடந்து வந்தாள்.



“ஹாய் பாட்டி!! என்ன சீரியஸ் டிஸ்கஷன்??? எதுக்கு என்னை வரச் சொன்னிங்க!!! பார்ட்டில இருந்து பாதில வந்துட்டேன்” என சலித்து கொண்டு அங்கிருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டுகொண்டு அமர்ந்தவள் கையில் இருந்த கிங் ஃபிஷர் டின் பியரை ஸ்டைலாக உறிஞ்சியபடி அவர்களை நோக்கினாள்.



மேகவதி தனது ஐபோனிலிருந்த ஒரு வசீகரமான இளைஞனின் படத்தைக் காட்டி “விமி இந்ப்த பையன் பேரு தனசேகர். நம்மளோட சொந்தகாரப் பையன் தான். என் அம்மா சைட் சொந்தம். ஜீவெல்லரி ஷோரூம் வச்சிருக்காங்க. உனக்கு ஓகேனா இமிடியட்டா மேரஜ் ஃபிக்ஸ் பண்ணிடுலாம். என்னடா உனக்கு ஓகே வா?? டூ யு லைக் ஹிம்??”



விமன்யா தன் கையிலிருந்த பியர் டின்னை சில வினாடிகள் வெறித்தவள், தன் பாட்டியை நிமிர்ந்து நோக்கி “ஷிவ் அத்தானைவிட இவன் பெஸ்ட்டா??? ரிச்சா??? ஸ்டார் இமேஜ் இருக்கிறவனா???” என அமர்த்தலானக் குரலில் வினவினாள்.



வசுந்தராவும் மேகவதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “என்ன பாக்குறிங்க! எனக்கு ஷிவ் அத்தானை கல்யாணம் பண்ணிக்கனும், இல்லைன்னா அத்தானை விட எல்லா விதத்திலையும் பெஸ்ட்டா இருக்கிற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கனும். இது தான் என் டெசிஷன்.”



“விமி உன் ஆசை எனக்கு புரியுதுடா. நீ ஏன் ஷிவ்வோட கம்பேர் பண்ணுற? நமக்கு தேவை பிராப்ளமில்லாத இடம், நிறைய சொத்து தட்ஸ் இட். ஒத்துக்கோடா உன் லைஃப் நல்லா இருக்கும்” என்றார் மேகவதி தன்மையாக.



“பாட்டி நான் சொன்னா சொன்னது தான். ஷிவ் or பெட்டர் தேன் ஷிவ்! தட்ஸ் இட்”.



வசுந்தரா அமைதியாக வேடிக்கை பார்த்தாளே ஒழிய அன்னை மகளுக்கு இடையிலான உரையாடலில் தலை கொடுக்கவில்லை. அழுத்தம் அதிகரித்தால் தானே தங்களுக்கு வேண்டியது கிடைக்கும். அந்த அழுத்தத்தை மகள் தருகிற பொழுது அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவதா! பாவமான முகபாவத்துடன் கண்களில் நீரை வரவழைத்துக் கொண்டு மூக்குறிஞ்சினாள்.



“விமி விமி.. பாட்டி மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா?? இவன் கோயம்பத்தூர்லையும் திருப்பூர்லையும் ஷோ ரூம் வச்சிருக்கான். வீட்டுக்கு ஒரே பையன். சோ சொத்து ஃபுல்லா உனக்கு தான் நீ ராணி மாதிரி இருக்கலாம்.”



“ரெண்டு ஷோ ரூம்! திரன் குரூப்போட ஒரு ஆட்டோமொபைல் ஷோ ரூம் வொர்த்த வருமா???”



“உங்கப்பன் செல்வாக்குக்கு ஏத்த மாதிரி தான் உனக்கு மாப்பிளை கிடைக்கும்.” என்கிற வார்த்தைகள் வாய் வரை வந்துவிட்டன. ஆனால் ஏற்கனவே மனசங்கடத்தில் உழலும் பேத்தியை மேலும் சங்கடபடுத்த மேகவதி விரும்பவில்லை. ஒரு வகையில் விமன்யாவின் இந்த நிலைமைக்கு தர்மேந்திரனும் மேகவதியும் தானே காரணம்! தன் மகள் வசுந்தராவை தங்கள் அந்தஸ்த்துக்கு இணையான இடத்தில் கொடுத்திருந்தால்! தன்னுடைய மகள், அவளின் பிள்ளைகளின் வாழ்வு அமோகமாக இருந்திருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.



விமன்யாவின் பிடிவாதம் அவர் அறிந்ததே, அவளின் அன்னை வசுந்தராவை போன்றே! என்ன பிடிவாதம் பிடித்து என்ன செய்ய! இருவரும் கிட்டவேண்டியதை இழுந்து நிற்கின்றார்களே! அமைதியான சுகுணா ராஜேந்திரனை வளைத்துவிட்டாள். அது கொஞ்சம் ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம் தான்! சுகுணா அழகு, குணம், திறமை மிக்கப் பெண்மணி. என்ன தான் அவளின் பிறந்த வீட்டு அந்தஸ்தை இவர்கள் எள்ளி நகையாடினாலும், அவரின் பெருமைகளை யாவரும் உணர்ந்தே இருந்தனர். ஒத்துக் கொள்ளத் தான் மனமில்லை!



ஆனால் புகழினி! இந்த நொண்டி கறுவாச்சிப் பெண்ணை எப்படி பேரன் மணந்து கொண்டான் என்று அவர் மனதிற்குள் நினையாத நாள் இல்லை. அவளெல்லாம் ஷிவேந்திரனின் மனைவியாகிவிட்டாள் என்று பொருமுவார். ஆனால் அவரின் பேத்தி விமன்யா!! அவளின் நிலைமை!! அவருக்கு நினைக்கவே பயமாக இருந்தது. ஷிவேந்திரனின் அழகு, ஆளுமை, அதிகாரம், அந்தஸ்தின் மீது விமன்யாவிற்கு எப்பொழுதும் மயக்கம் உண்டு. அவனுடைய மனைவியாகி தனது தாய் இழந்த அந்தஸ்தைப் பெற்று பெருமையாக வாழவேண்டும் என்று நித்தமும் சித்தம் கலங்கி கனவு கண்டாள். கனவு வெறும் கனவாகி போனது தான் மிச்சம்!

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேத்தியை தொடர்ந்து வற்புறுத்தினால் நிச்சயமாக ஒத்துக் கொள்ளவே மாட்டாள். அதோடு இப்பொழுது சூழ்நிலையும் அவ்வளவாக சரியில்லாதக் காரணத்தினால், அவளைக் கொஞ்ச நாள் விட்டுப் பிடிக்கலாம் என்று முடிவு செய்தார் மேகவதி.



தாயின் யோசனையை வசுந்தரா அனுமானித்துக் கொண்டிருந்தாள். விமன்யா அப்பொழுதே கோபமாக எழுந்து சென்றுவிட்டாள். தோற்றுவிட்ட வலி எத்தகையது என்பதை அறியாதவளா வசுந்தரா! தான் இழந்ததைப் போல் தன் மகளும் இழக்கக் கூடாததை இழந்துவிடக் கூடாது என்று மனதிற்குள் சூளுரைத்து கொண்டாள்.



சிவகாமி இண்டஸ்டிர்ஸில் கணக்கு வழக்குகளைத் தனது மடிக்கணினியில் சரி பார்த்து கொண்டிருந்தார் சுகுணா. ராஜேந்திரன் ஃபாக்டரியை சுற்றிக் கண்காணித்து விட்டு தங்களது அலுவலக அறைக்குள் நுழைந்தார். சுகுணா தலை நிமிர்ந்து பார்த்து லேசாகப் புன்னகைத்துவிட்டு மீண்டும் தனது வேலையில் ஆழ்ந்தார். ராஜேந்திரன் உயர் ரக கண்ணாடிகளின் வாயிலாகத் தொலை தூரத்தை வெறித்தார். மனைவியின் தொடுகையில் புன்னகையுடன் திரும்பியவரின் கையில் தேநீர் கோப்பையைத் திணித்துவிட்டு தன்னுடைய கோப்பையை கையிலேந்தி தேநீரை பருகினார் சுகுணா. மனைவியின் புருவங்களின் மத்தியில் விழுந்து முடிச்சை நீவிவிட்டு “என்னடா சுகி யோசனை?” என மென்மையாக வினவினார் ராஜேந்திரன்.



“ஒன்னும்மில்லைங்க”



“அப்படியா? அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கிற?? நான் காரணத்தை சொல்லவா புகழ் குட்டியையும், அந்தத் தடி தாண்டவராயனைப் பத்தியும் தான நினைக்கிறே??”



ஷிவேந்திரனை தடி தாண்டவராயன் எனக் கணவன் விளித்தது அவரின் முகத்தில் புன்னகையை மலரச் செய்தது.



“அவன் மட்டும் இதைக் கேட்டு இருக்கனும் உங்கள உண்டு இல்லைன்னு பண்ணிடுவான்”



“அதைப் பார்த்துட்டு நீ சும்மா இருப்பியா என்ன?? கட்டக் கழியால ஓங்கி அவன் தலையிலையே நாலு போடு போடமாட்டா”



“ஹாஹாஹாஹா நினைப்புதான் உங்களுக்கு! அதே கட்டக் கழியால அவன் என்ன சாத்தி எடுத்திடுவான்.”



“செஞ்சுடுவானா அவன்! தோலை உரிச்சிடமாட்டேன்.”



“யாரு தோலைங்க?” ஒன்றும் அறியாப் பிள்ளையைப் போல் இமைக் கொட்டிய மனைவியின் காதைத் திருகியவர்,



“ஹே உனக்கு சப்போர்ட் பண்ணா நீ என்னையே வாருரியா.” இருவரும் கலகலத்து சிரித்தனர்.



“சுகிம்மா நாம புகழ அவன் கம்பெனிக்கு அனுப்பினது சரியா? நீ ஜாடை காட்டினதால தான் நான் புகழ்கிட்ட போகச் சொன்னேன். ஆனா எனக்கு அதுல சுத்தமா உடன்பாடு இல்ல. அவன் நம்ம புகழ எதாவது பண்ணிடுவாண்டா.”



சென்னை மாநரகத்தின் உயிர்ப்பை அமைதியாகப் நோக்கிய சுகுணா மவுனம் கலைந்தவராக “அவனால யாரையும் எங்கேயும் என்ன வேணா செய்ய முடியுங்க. புகழ்லாம் அவனுக்கு ஒரு மேட்டரே இல்லை! அவள தூசி மாதிரி ஊதி தள்ளிடுவான். எவ்வளவு நாள் தான் அவளும் பதுங்கி போவா??? இந்த நாலு மாசத்துல நாம அவள் கொஞ்சம் தயார் பண்ணியிருக்கோம். இது அவனுக்கு தெரியாதுன்னா நீங்க நினைக்கிறிங்க?? புகழ நினைச்சா எனக்கு பயமாவும் கஷ்டம்மாவும் இருக்கு. அதுக்காக எல்லாத்துக்கும் எல்லார்கிட்டையும் ஒதுங்கி போனா அவ கடைசி வரைக்கும் அடிமை வாழ்க்கை தான் வாழனும். அதை நாம அனுமதிக்கக்க் கூடாது.



என்னோட யோசனையே வேற. அவன் எப்படி, எங்க, எந்த சூழ்நிலையில நம்ம புகழ கல்யாணம் பண்ணிக்கிட்டானு நமக்கு இன்னும் தெரியலயே? இந்த மாதிரி ஒரு பொண்ணை அவன் கல்யாணம் பண்றான்னா அது சாதாராணமான விஷயம் இல்லை. அவன் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நமக்கு தெரியனும். முன்னாடி விமன்யா தான் அவனோட பொண்டாட்டினு வீட்ல சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ ஒரு ராஜ வம்சத்து பொண்ண காட்டி இவளைத் தான் கல்யாணம் பண்ண போறேன்னு குடும்பத்தார் முன்னாடி பகிரங்கமா சொல்லுறான். அப்ப புகழ்னால இவனுக்கு ஆக வேண்டிய வேலை என்ன? அது தான் என் மண்டையை கரையான் மாதிரிக் குடையது. நீங்க இன்னொரு தடவை அவனோட பி.ஏ. ஆண்டோக்கிட்ட பேசி பாருங்களேன்.”



“நீ புரிஞ்சு தான் பேசுறியா சுகி! ஆண்டோவ பொருத்த வரைக்கும் அவனோட பாஸ் ஒரு டெமி காட், அதை நான் புகழ் நம்ம வீட்டுக்கு வந்த நாளாவது நாளுலயே நல்லா தெரிஞ்சிகிட்டேன். வாய்ல கோந்து ஒட்டுன கணக்கா பய வாயைத் திறக்க மாட்டேங்கிறான். அவன் கிட்ட பேசறதுக்கு இந்த சுவத்துல முட்டிக்கலாம்.”



“ம்ம்ம் அந்த பொண்ணு சம்யுக்தா இனி நம்ம வீட்டுக்கு அடிக்கடி வரதுக்கான வாய்ப்பு இருக்கு. கண்டிப்பா இன்னைக்கு அவ அவனோட ஆஃபிஸ்கு போயிருப்பா. இரண்டும் சேர்ந்து புகழ் குட்டிய என்னப் பாடுபடுத்துறாங்களோ!”



சுகுணாவின் கவலையை மெய்ப்பிப்பது போல் ஷிவேந்திரனின் அலுவலக அறையிலுள்ள இட்டாலியன் டீக்வுட் சோபாவில் சம்யுக்தா அவனோடு ஒட்டி உரசியபடி அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அவன் அவளின் தோளை சுற்றி தன் இடது கையை படரவிட்டிருந்தான்.



உள்ளே வந்த புகழினி தலை குனிந்திருந்தாள். அவர்களின் சிரிப்பு சத்தம் அவளது மூளையை எட்டவில்லை. மரம் போல் நின்றாள். சம்யுக்தாவுடனான உரையாடலை நிறுத்தியவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். சம்யுக்தா இந்தச் செய்கையில் பல்லைக் கடித்தாள். தங்களின் அந்தரங்க சேட்டைகளை கண்டு மனம் நொந்து புகழினி அழது கரைய வேண்டும் என்று எண்ணினாள். இவனோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்கிறான் என மனதிற்குள் பொருமினாள்.



சொடக்கொலி! ஷிவேந்திரன் தன்னை விளிக்கும் சப்தம். சட்டென்று உணர்வுப் பெற்றவளாக நிமிர்ந்து பார்த்தாள். நீர் திரையிட்டக் கண்களால் காட்சிகள் மங்கலாகத் தெரிந்தது. இமைச் சிமிட்டி நீரை உள்ளிக்கிழுத்தவள் மீண்டும் நிமிர்ந்து நோக்கினாள். முன்னே இருந்த இருக்கை காலியாக இருந்தது. ஆனால் சொடக்கொலி கேட்டதே என எண்ணியவள், உள்ளணர்வு உந்த தன் இடது பக்கம் திரும்பினாள். ஷிவேந்திரனும் அவனின் வருங்கால மனைவியும்(!) அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர்களின் நெருக்கம் அவளின் மனதினில் பதியவுமில்லை! பாதிக்கவுமில்லை! பின்னே உரிமை உணர்வு மனதில் இருந்தால் அல்லவா மனதில் பாதிப்பு இருக்கும்! கோபமும் பொறாமையும் குபு குபுவென பொங்கும்! இங்கே தான் அந்த உணர்வு வேர் அருக்கப்பட்டுவிட்டதே!



ஷிவேந்திரனுக்கு அவள் மனதை தங்களின் நெருக்கம் சலனப்படுத்தவில்லை என்று சடுதியில் புரிந்தது. சம்யுக்தாவிற்கும் அது புரிந்து புகழினியை வேட்டையாடும் வெறியைக் கிளப்பியது. ராஜேந்திரனும் சுகுணாவும் அவளை எப்படி அடைகாக்கின்றனர் என்று அவளுக்கு தெரியும். புகழினியின் தோற்ற மாற்றமும், நிமிர்வுமே அதற்கு சாட்சி. “ராஜேந்திரன், அவளோட முதுகை நிமிர்த்திறியா! அவளோட முதுக ஒடிச்சி என் கால்ல அவளை மண்டி போட வைக்கிறேன். அத உன் கண்ணால பார்த்து கண்ணீர் விடுவ.” என மனதிற்குள் வன்மமாக எண்ணியவள் புகழினியை இளக்காரமாக நோக்கினாள்.



தன் கை கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “முதலாளியைப் பார்த்து விஷ் பண்ணத் தெரியாதா??” என உறுமினான் ஷிவேந்திரன்.



“மன்னிச்சிப்புடுங்க சார். இதை மாதிரி இனி செய்யமாட்டேன். வணக்கம் சார், வணக்கம் மேடம்.” என்று இருவரையும் வணங்கினாள் மெல்லிய குரலில். புகழினிக்கு சற்று பயம் தான் இருந்தும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினாள். பயம் வரும் பொழுதெல்லாம் சுகுணாவும் ராஜேந்திரன் அவளின் மனக்கண்ணில் தோன்றி அவளுக்கு தைரியமூட்டுவர்.



“ஏன் ஷிவ் உங்க வீட்டு வேலைக்காரிக்கு நம்ம கம்பெனியில என்ன வேலை. நம்ம பேண்ட்ரில எச்ச பிளேட்ஸ் எல்லாம் கழுவ வந்திருக்காளா???” என இளக்காரமான குரலில் வினவினாள் சம்யுக்தா.



“சம்யு! இங்க அவ சமைக்க வரவழைக்க பட்டிருக்கா. நீ சொல்லுற வேலைக்கில்ல.” என்றான் ஷிவேந்திரன் உணர்ச்சியற்ற குரலில்.



அந்தக் குரல்! அதில் பொதிந்திருந்த உணர்வை சம்யுகதாவால் இன்னாதென்று வரையறுக்க முடியவில்லை. அவள் யோசனையுடன் அவனைப் பார்த்தாள். அவனோ புகழினியை புருவம் முடிச்சிட அளவிட்டான். புகழினியோ யாருக்கு வந்த விருந்தோ என்று டீப்பாயின் மேலிருந்த அலங்கார பூந்தொட்டியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பூக்கள் என்றால் அவளுக்கு உயிர். டூயூலிப் மலர்களை அவள் கண்டதுமில்லை கேள்விப்பட்டதுமில்லை! புதுவித மலரைக் காணவும் அதனைத் தொட்டு வருடிப் பார்க்கும் ஆசை வந்தது.



தான் எங்கே, யார் முன்னே நிற்கின்றோம் என்பதை எல்லாம் மறந்து மெல்லக் குனிந்து அந்த மலர்களைப் புன்சிரிப்போடு ஆசையுடன் வருடிவிட்டாள். அவள் கண்கள் மின்னின. அடுத்த நொடி அந்த பூந்தொட்டி சிலிர் என்ற சத்தத்துடன் விழுந்து உடைந்து, அதிலிருந்த மலர்கள் சம்யுக்தாவின் குதிகால் செருப்பின் அடியில் நசுங்கிக் கொண்டிருந்தன.



புகழினி அதிர்ந்துப் போயிருந்தாள். இமைக்கும் பொழுதில் நடந்துவிட்டது. தான் தொட்டதால் பூந்தொட்டி உடைக்கப்பட்டது என்பதை உணரவில்லை. அவள் என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. பேச நா எழவில்லை!



“ஏய்!!! என்ன சீன் கிரேய்ட் பண்ணுறியா?? கருவாச்சி உனக்கு பெரிய ஹீரோயின்னு நினைப்பா?? ஹவ் டேர் யு டச்சிட் இட்! உன் தகுதிக்கு இந்த கம்பெனி பக்கமே நீ வந்திருக்கக் கூடாது. உன்னை இங்க வேலைச் செய்ய தான் கூப்பிட்டு இருக்காங்க. மைண்ட் இட்.” என அகங்காரமான குரலில் எகிறினாள் சம்யுக்தா.



“சம்யு! காம் டவுன். கமான் சிட்! ஷீத்தல் கம் இன்” என்று இண்டர்காமை அழுத்தி அவனது ஸ்டாஃபை அழைத்தான். அவளும் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள். வந்தவளின் கண்கள் அறையை அளவிட்டன. எதோ விபரிதம் என்று புரிந்தது. புகழினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஷிவேந்திரனை நோக்கினாள். தனது முதலாளியும் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்திருந்த சம்யுக்தாவைக் கண்டு அவள் மனதில் பொறாமை உணர்வைப் பொங்கி எழுந்தது. எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்டு பிரோயஜனமில்லை எனப் புத்திக்கு புரிந்து என்ன செய்ய! மனதிற்குப் புரியவில்லையே! ஆசைக்கு ஏது கடிவாளம்! ஹஹம்ம்ம்ம் என மனதினுள் பெருமூச்சுவிட்டாள்.



ஷிவேந்திரனை பருகு பருகு என்று பார்த்துக் கொண்டிருந்த ஷீத்தலை சம்யுக்தா எரிக்கும் பார்வை பார்த்தாள். அது சொல்லிய செய்தி ‘உன்னை நானறிவேன்’ என்பது தான். அதில் அரண்டு போன ஷீத்தல் அவளின் பார்வையை கவனமாகத் தவிர்த்தாள்.



“ஷீத்தல், ஷீ இஸ் புகழினி. இவளுக்கு அலோக்கேட் பண்ண வேலை என்னன்னு சொல்லிடுங்க. டேக் ஹர் வித் யு அண்ட் ப்ரொவைட் ஹர் ஆல் நெசசரி டீட்டைல்ஸ். அண்ட் ஆஸ்க் ஹவுஸ் கீப்பர் டு வைப் திஸ் ரூம் கிளீன்” என உத்தரவிட்டான் ஷிவேந்திரன்.



“எஸ் பாஸ்” என்றாள் ஷீத்தள்.



ஷீத்தல் புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாக புகழினியை பார்த்தாள். அவளது ஆச்சரியத்துக்கு காரணம், ஷிவேந்திரன் அலுவலகத்தில் எந்தப் பெண்ணையும் மரியாதையாகத் தான் அழைப்பான். இப்படி அவள், இவள் என்று எவரையும் அழைத்தது இல்லை. ஷீத்தலின் ஆச்சரியத்தை ஷிவேந்திரன் கவனித்து கொண்டு தான் இருந்தான் “ஷீத்தல்” என்றான் அழுத்தமான குரலில். அவள் பதறி திரும்பினாள்.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனது சுட்டு விரலால் புகழினியை சுட்டிக்காட்டி, பின்னர் அறையின் வாயிற்கதவைச் சுட்டிக் காட்டினான். புரிந்து கொண்டு புகழினியை பார்த்து பின்னே வருமாறு தலை அசைத்துவிட்டு அறையின் கதவை நோக்கிச் சென்றாள். போகும் பொழுது சொல்லாமல் சென்றால் அதற்கும் திட்டு விழும் என்று “வரேன் சார், வரேன் மேடம்” என்று சொல்லிவிட்டு சற்றுத் தயங்கி நின்றவள் அவர்களிடம் இருந்து ஒரு தலையசைப்புக் கூட பதிலாக வராததால் அறையின் வாயிலை நோக்கிச் சென்றாள் புகழினி. சம்யுக்தா அவளின் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆனால் அவள் காதலனோ செல்லும் அவளையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அதற்குள் ஷீத்தல் கதவின் அருகில் இவளைக் கண்களால் அளந்து கொண்டு நின்று இருந்தாள். இவள் செய்ய போகும் வேளைக்கு ஷிவேந்திரன் இவளைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அலுவலகத்தில் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களால் கூட ஷிவேந்திரனை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது. அப்படி இருக்கையில் இந்தப் பெண்! அவள் எண்ண அலைகள் ஷிவேந்திரனின் ஆழ்ந்தப் பார்வையில் அமிழ்ந்து அடங்கின. “ஓ காட்! இவ யாரா இருந்தா எனக்கு என்ன வந்தது?? பாஸ்கிட்ட கேர்ஃபுல்லா இருக்கனும் இல்லைன்னா உண்டு இல்லைன்னு பண்ணிடுவார்.” என்று மனதிற்குள் அலறி சுதாரித்தாள்.



புகழினி அறையைவிட்டு வெளியேறியதும் சோபாவில் இருந்து எழுந்து கொண்ட ஷிவேந்திரன் சிகரட்டைப் பற்றவைத்தான். சம்யுக்தா அவனைப் பார்த்து “ஷிவ் அவ பேர் கறுப்பி தானே. நீங்க வேற எதோ பேர் சொல்லி கூப்பிடுறிங்க??” என வினவினாள்.



“அவளோட அஃபிஷியல் நேம் புகழினி.”



“ஆனா அன்னஃபிஷியல் நேம் கறுப்பி! ரைட்! அவளே அன்னஃபிஷியல் சப்ஜெக்ட், சோ அவளோட அன்னஃபிஷியல் நேம்லையே அவளைக் கூப்பிடலாம்.”



சம்யுக்தாவிற்கு புகழினியை ஷிவேந்திரனின் மனைவி என்றுச் சொல்ல மனம் வரவில்லை. அன்னஃபிஷியலாகா கூட அவனின் மனைவி என்கிற பட்டம் அவளுக்குக் கிடைக்க பெறக் கூடாது என்று மனதிற்குள் கருவினாள்.



“சம்யுக்தா தேவி” என்று அழுத்தமாக விளித்து தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அவளை நோக்கி தீர்க்கமானக் குரலில் “என்னோட பொருள் மேலயோ, இல்ல என்னைச் சேர்ந்தவங்க மேலயோ யார் கை வச்சாலும், ஏன் கை வைக்க நினைச்சால் கூட அது யாரா இருந்தாலும் சரி.. ஐ வில் சிம்பிளி கில் தெம்!” என்று உறுமினான்.



எவருக்கும் அசராதா சம்யுக்தாவே அவனின் உறுமலில் ஒரு கணம் அரண்டுவிட்டாள். மறுகணம் அவனுக்குப் பதிலடி கொடுக்க நிமிர்கையில் அவன் அறையைவிட்டு வெளியேறி இருந்தான்.



“ஷிவேந்திரா, அந்த நொண்டி உன்னோட உடைமையா? விடமாட்டேன்! விடமாட்டேன்! கறுப்பி ஷிவேந்திரன் எனக்கு மட்டும் தாண்டி சொந்தம். உன்னை சும்மா விடமாட்டேன்டி...சும்மா விடமாட்டேன்..” என மனம் கொந்தளிக்க தன்னுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு அறையைவிட்டு புயலென வெளியேறினாள்.



உரிமையில்லா உறவிது உடைமாகிப் போனதோ!



கருப்பு அழகி வருவாள்…
 
Last edited:

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே,

'என் கருப்பழகி'-14வது அத்தியாயம் பதிந்துவிட்டேன். கொஞ்சம் வேலை... அதான் லேட் ஆகிடுச்சு... மன்னிச்சு மக்கா...

அடுத்த அத்தியாயம் வரும் ஞாயிறன்று இரவு பதியப்படும்.

#SAVEDELTA
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின்என் கறுப்பழகி

அத்தியாயம் – 14


ஈ.சி.ஆர் சாலையில், பிரபலமான ரிசாட்டின் லக்ஸரி சூட்டில் ஆடம்பர இருக்கையில் அமர்ந்திருந்த வசந்தன் பெப்பர் சிக்கன் பீசை ஒரு கடி கடித்துவிட்டு தன் கையிலிருந்த மதுவினை உறிஞ்சினான். ரகுவரன் கைகளைப் பின்னே கட்டி கொண்டு அந்த அறையைக் குறுக்கும் நெடுக்கும் அளந்தார். நடை நின்றது! மதுவின் ருசியில் திளைத்து மயங்கிக் கிடக்கும் மகனைக் கண்டு பல்லைக் கடித்தார். அழுத்தமானக் குரலில் மகனை அழைத்தார்.



“வசந்த்”



“எஸ் டாட்”



“எதுக்கு இங்க நாம வந்திருக்கோம்?”



“சம்யுக்தாவை பத்தி பேசறதுக்காக.”



“நீ என்ன பண்ணிட்டு இருக்க?”



“பார்த்தா தெரியலையா! ரம் அடிக்கிறேன் டாட்..”



ரகுவரனுக்கு மகனின் தலையில் நங்கு நங்கென்று நாலு போடு போட வேண்டும் போல் இருந்தது. நிலைமையின் தீவிரம் உணராமல் மகன் விளையாட்டாகச் சுற்றி கொண்டிருப்பதைக் காண அவருக்குக் கோபம் கொப்பளித்தது.



“வசந்த், ஏண்டா இங்க நான் இவ்வளவு டென்ஷனா இருக்கிறேன் நீ கூலா குடிச்சிட்டு இருக்க?”



“கூல் டாட் கூல்”



“எப்படிடா கூலா இருக்க முடியும்? உன் தங்கச்சிய அந்த பொம்பள பொறுக்கி ஷிவேந்திரன் கட்டிக்க முடியாதுனு சொல்லிட்டான். நம்ப நிலைமை தெரியாதா உனக்கு! நம்ம பிஸ்னஸ்ல நிறைய தில்லாலங்கடி வேலை பண்ணி என் அண்ணன் பசங்ககிட்ட மாட்டி. அவனுங்க நம்பளை மிரட்டி சத்தமில்லாம நம்ப பங்கு சொத்துல முக்கால் வாசி எழுதி வாங்கிட்டானுங்க. நீ தொழில் பண்ணுறேன், ஷேர் மார்க்கேட்ல இன்வஸ்ட் பண்ணுறேனு உங்க அம்மா பேர்ல ஸ்விஸ் பேங்கில இருந்த ஐநூறு கோடில முன்னூறு கோடிய ஏப்பம் விட்டுட்ட. உன் அம்மாவும் தங்கச்சியும் கேசினோ, குதிரை ரேஸ்னு பாதிக்கு மேல நகையெல்லாம் பெட் கட்டி இழந்துட்டாங்க.



நம்ம கிட்ட இப்ப பெருசா ஒன்னுமில்லை. நாளைக்கு எதை காட்டி உனக்கு பொண்ணு பாக்குறது, விமிக்கு மாப்பிளை பார்க்கிறது சொல்லுடா? ஷிவ் தான்டா நம்ம ஒரே ஹோப். அவனையும் அந்த ராஜகுமாரி சம்யுக்தா கரெக்ட் பண்ணிட்டா. அவன் அதுக்குமேல ஒரு கிராமத்து கருவாச்சிய கட்டிக்கிட்டு வந்தவன், அவன்பாட்டுல வெளிநாட்டுக்கு பறந்துட்டான். உன் மாமனும் மாமன் பொண்டாட்டியும் அந்த நொண்டி பொண்ண அப்படி சேஃப் கார்ட் பண்ணுறாங்க. உன் தாத்தன் வழக்கம் போல ஷிவேந்திரனுக்கு ஜிங்கி அடிக்கிறான். உன் பாட்டி இல்லைன்னா சுபிக்ஷத்துக்குள்ள நாம நுழைய முடியாது வசந்த்.”



“டாட் தெரிஞ்ச விஷயம். இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்லுறிங்க?”



“பொழுது போகல அதான்டா சொல்லிட்டு இருக்கேன்”



“எஸ் யூ ஆர் ரைட்! நீங்க வெட்டியா தான இருக்கிங்க, அதுனால உங்களுக்குக் கண்டிப்பா பொழுது போகாது தான்.”



“வசந்த்”



“லோயர் யுவர் டோன் டேட். என்கிட்ட குரல் உயர்த்திறது உங்களுக்கு நல்லது இல்லை.”



“இந்த வீரத்தை எல்லாம் வயசான உன் அப்பங்கிட்ட காட்டாம, உன்னை தலை கீழே தொங்கவிட்ட அடிச்சு நாய்ங்கள காவலுக்கு வச்சான் பாரு ஒருத்தன் அவங்கிட்ட காட்டினா நல்லாயிருக்கும்!!”



வசந்தின் கை முஷ்டி இறுகி, கண்கள் சிவந்தன. தன்னை கட்டுபடுத்தி கொண்டு “என்னப்பா பண்றது! ஷிவேந்திரன் சிவகாமி இண்டஸ்டிரீஸ் சேர்மன் அண்ட் ஃபவுண்டர் ராஜேந்திரனோட பையன். நான் நந்தன் இண்டஸ்டிரீஸோட அல்லக்கை ரகுவரனோட பிள்ளையாச்சே! உங்களுக்கு இருக்கிற திறமை தானேபா எனக்கும் இருக்கும். உங்ககிட்ட இல்லாத வீரம் எனக்கு மட்டும் அலை கடலென பொங்கி வந்துடுமா என்ன!” என்று ராஜேந்திரனை பேச்சில் இழுத்தால் தந்தைக்கு சினம் பொங்கும் என்று அறிந்தவனாக குறிபார்த்து அடித்துவிட்டான்.



மகனின் எள்ளலில் தந்தையின் முகம் கறுத்துவிட்டது. அதைப் பற்றி வசந்த் அலட்டிக் கொள்ளவில்லை. சில வினாடிகள் அமைதியில் கழிந்தது. வசந்ததின் தொலைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்த்துவன் “ம்ச்ச்ச்” என்று அதனைத் தூக்கி படுக்கையில் வீசியெறிந்தான். ரகுவரன் அலைபேசியின் அருகில் சென்று பார்த்தார். ஒரு அழகிய இளம் பெண்ணின் படம் அலைபேசியில் மின்னிக் கொண்டிருந்தது. பெயர் ரீணா!



“யாருடா இது ரீணா?”



“அது ஒரு கிராக்கி.”



“கிராக்கினா?”



“இப்ப இவளை பத்தி தெரிஞ்சிட்டு என்ன பண்ண போறிங்க?”



“சரி இவளை விடு. உதய்பூர் சமஸ்தானத்து ராஜகுமாரி சம்யுக்தாவை பத்தி சொல்லு”



“புதுசா ஒரு பிராஜெக்ட் விஷயமா சென்னை வந்திருக்கா. வந்த இடத்துல உங்க மச்சினன் மகனைப் பார்த்து அப்படியே மயங்கி போயிட்டா. பிரபோஸ் பண்ணியிருக்கா. எவளுக்கும் அசராத அந்த எமகாதகன் இவளை பார்த்து அசந்துட்டான் போல! பக்குன்னு பத்திக்கிச்சி.. இப்ப கொழுந்து விட்டு ஏரியுது.”



"விமிகிட்ட என்ன இல்லைன்னு இந்த பொண்ண மேரஜ் பண்ண டிசைட் பண்ணியிருக்கான். மாமன் மகன் அத்தை மகளைத் தானே கட்டனும். எவ்வளவு தைரியம் இருந்தா அந்த பொண்ண வீட்டுக்கே அழைச்சிட்டு வந்து இண்டிரொடுயுஸ் பண்ணுவான்.”



“ஏம்பா சப்போஸ் நான் ஷிவேந்திரன் போல இருந்தா, விமி போல ஒரு பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவிங்களா என்ன? அவன் எமகாதகன் ஒவ்வொரு செக்கண்டும் பணம் பண்ணுறவன். இருந்து இருந்து விமியையா பண்ணுவான்? முதல்ல இருந்தே எனக்கு இது நடக்கவே நடக்காதுனு தெரியும். நீங்க எல்லாரும் தான் ஓவர் கான்ஃபிண்ட்ல இருந்திங்க, என்ன பண்ண! அப்புறம் என்ன சொன்னிங்க, ஓடுகாலி சுகுணாவுக்கும், திமிரு பிடிச்ச ராஜேந்திரனுக்கு பிறந்திருக்கான்ல அதான் இப்படி கொழுப்பெடுத்து அலையிறானா! சுகுணா ஓடுகாலியா இல்லைன்னா, நீங்கெல்லாம் சுபிக்ஷத்தில நுழைஞ்சு இருக்க முடியாது டாட் மறந்திடாதிங்க. இன்னைக்கு நானும் விமியும் ராஜ பாரம்பரியத்தில பிறந்திருப்போம். என் மாமன் அந்த ரதி தேவிய கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா, என் அம்மா மகாராணியா வாழ்ந்திருப்பாங்க. எங்க ..எங்களுக்கு தலையெழுத்து நல்லாயில்லை!”



“உன் அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதனால தான் உன் அம்மா நீ விம்மி மூனு பேரும் நல்லா இல்லாம இருக்கிங்க அப்படி தானே? ஆனா பாரு உன் அம்மாவை கல்யாணம் பண்ணிக்க எந்த கொம்பேரி மூக்கனும் வரலை. என் காலில் விழாத குறையா பேசி சம்மதிக்க வைச்சாங்க என் பிறந்த வீட்ல. அப்புறம் என்ன சொன்ன உன் அம்மா மகாராணியா வாழ்ந்திருப்பாளா! ஹாஹாஹா! உலகத்துல பிக்கஸ்ட் ஜோக் இது தான் வசந்த்! ராஜேந்திரனோட அழகு, குணம், திறமைக்காக தான் ராஜவம்சத்தில மாப்பிள்ளை கேட்டு அதுக்கு அப்புறம் உன் அம்மாவை பொண்ணு கேட்டாங்க. உன் அலட்டி அம்மாவோட அழகு, குணம், திறமை, படிப்பு, அந்தஸ்து இது எல்லாத்துக்காகவும் இல்லை. புரியுதா! உன் அம்மாக்கு நானே அதிகம். ராஜேந்திரனுக்கும் தான் இருக்கா சுகுணானு ஒரு பொண்டாட்டி.. வீடு, பிஸ்னஸ் எல்லாத்தையும் திறமையா ஹேண்டில் பண்ணுறா. அவளுக்கு ஒன்னுமில்லை, ஓடகாலினு சொல்லிக்கிட்டு நீயும், உன் அம்மாவும், உன் தங்கச்சியும் தான் இப்போ ஒன்னுமில்லாம நிக்கிறிங்க.



இன்னைக்கு அவ சிவகாமி இண்டஸ்டீரீஸோட ஜெ.எம்.டி. உன் அம்மா யாரு வசந்த? இப்போ அவளோட அடையாளம் என்ன? என்னோட திறமை தெரிஞ்சி தான் உன் பாட்டி வீட்ல உங் அம்மாவ எனக்கு கட்டிவச்சாங்க. ராஜேந்திரனோட சேர்ந்து பிஸ்னஸ் பண்ணி பிழைச்சிக்கிலாம்னு சொன்னாங்க. அது தான் சரின்னு நானும் நினைச்சேன். ஆனா எல்லாம் தலை கீழா ஆகிடுச்சு. இதுல எமாத்த பட்டது நான் தான். என்ன பாக்குற? என் அண்ணியோட தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தா, இன்னைக்கு என் வீட்டுல எனக்கு எவ்வளவு மரியாதை இருந்திருக்கும் தெரியுமா? என் சித்தப்பா பையன் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவன் என்னவிட தத்தி, ஆனா அவனோட மச்சினனுங்க தாங்கு தாங்குனு தாங்குறானுங்க. அவங்க பிஸ்னஸ்ல பார்ட்னராகி திண்டுக்கல்ல இன்னைக்கு கொடி கட்டி பறக்கிறான்! கொடுத்து வச்சவன்..ஹ்ம்ம்ம்... இப்ப சொல்லு இதுல யாரு எமாந்தவங்க நானா? இல்லை உன் அம்மாவா?”



தந்தையை எரிச்சல் மேலிடப் பார்த்தான் வசந்த். ஆனால் அவர் சொல்வதும் உண்மை தானே! தனது தாய் வசுந்தரா, பாட்டி மேகவதியுடன் சேர்ந்து சுகுணாவை மட்டம் தட்டுவதிலேயே குறியாகவிருந்தாள். பிள்ளைகளையோ கணவனையோ கவனிக்கும் மனநிலையில் இல்லை. கவனிக்கமாட்டாள் என்பது வேறு விஷயம்! தந்தை தனது பலவீனத்தை வெளிப்படையாகச் சொல்லியும் அதனை சரிக்கட்ட எந்த முயற்சியும் எடுக்காமல் அவரைக் கரித்து கொட்டிக் கொண்டிருப்பாள் வசுந்தரா. நான் மகாராணி ஆக வேண்டியவள் என்று ஒரு நாளைக்கு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிவிட்டு தான் அன்று கட்டையை சாய்ப்பாள். தந்தை பண விஷயத்தில் அப்படி இப்படி இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் ராமனே. இருவருக்குமே பாதிப்பு தான். ஆனால் அவர்கள் வாழ்க்கை அப்படி இப்படியென்று நகர்ந்துவிட்டது. ஆனால் தன்னுடைய நிலைமை? தங்கை விமியின் நிலை? மோசம்! மிகவும் மோசமான சூழ்நிலையில் சிக்குண்டிருக்கிறார்கள். எப்படி மீள்வது!



மகனின் யோசனையை பார்த்துவிட்டு பால்கனியில் சென்று கடலை வெறித்தார் ரகுவரன். எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து தான் வைப்பான் என்று கிராமபுற பழமொழி ஒன்று உண்டு. ஒவ்வொரு தடவையும் ராஜேந்திரனிடம் தோற்று போகையில் குன்றி விடுவார் ரகுவரன். அவரை ஜெயித்து காட்ட வேண்டும் என்ற வெறி கனன்று கொண்டே இருக்கும். ஆனால் திறமை என்ற ஒன்று இருக்கிறது அல்லவா. வேகம் மட்டும் போதாது வெற்றி கனியை சுவைக்க விவேகமும் வேண்டும்மல்லவா! தன்னுடைய மகனாவது ராஜேந்திரனின் மகன் ஷிவேந்திரனை ஒரு கை பார்ப்பான் என்ற நம்பிக்கை, தன்னுடைய மகனை ஷிவேந்திரன் ஒரு கை பார்த்த பொழுது பொய்த்து போனது. ரகுவரனுக்கு விமன்யாவை ஷிவேந்திரனை விட எல்லா வகையிலும் உயர்ந்தவனுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் நிமிர்ந்து இறுமாப்புடன் நிற்க வேண்டும் என்று எண்ணினார். எண்ணம் ஈடேற வாய்ப்பேயில்லை என்று பிற்காலத்தில் புரிந்து கொண்டார். அதன் பிறகு யுத்த பாணியை மாற்றிக் கொண்டார். உறவாடிக் கெடு! மகளை ஷிவேந்திரனுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் தானும் தன்னுடைய பிள்ளைகளும் ஆண்டு ஆனுபவிக்க வேண்டும் என்ற எண்ணியதுடன், திரன் குழுமத்தை கைப்பற்றி கொள்ளலாம் என்று பகல் கனவு கண்டார். பகல் கனவு பலிக்காதே! ஷிவேந்திரன் எல்லோருக்கும் சிம்ம சொப்பனாக இருந்தான். ரகுவரனிடம் ராஜேந்திரன் உரையாடுவதில்லை என்றாலும் உதாசின படுத்தியதில்லை. ஆனால் ஷிவேந்திரன் அவர்களை தன் கால் செருப்பிற்கு கூட மதிக்கவில்லை என்று உணர்கையில் அவருக்கு நெஞ்சு காந்தும். அவன் திரன் குழுமத்தை நிர்வகிக்கும் தீரன்! வாலை ஆட்டினால் வாலை நறுக்கவதற்கு பதிலாக வாலை ஆட்டும் அந்த நாயையே ரெண்டு துண்டாக நறுக்கி தூர வீசும் ஆண் சிங்கமாக சிலிர்த்து கொண்டு நின்றான். அவனிடம் மண்டியிட வேண்டிய அவசித்தை அப்பொழுது தான் உணர்ந்தார் ரகுவரன். அவமானம்! அவமானம்! சொந்த வாழ்க்கை, தொழில் என்று சென்ற இடமெல்லாம் அவமானம். பிழைக்க தெரியவுமில்லை, திறமையுமில்லை. குறுக்கு வழியில் மாமியார் வீட்டு சொத்தை ஆட்டையை போடலாம் என்று காத்திருந்தவரை பார்த்து கர்ஜித்தான் ஷிவேந்திரன். பிடறி மயிர் சிலும்பி கோர பற்கள் ஒளிர காதை பிளக்கும் சிங்கத்தின் கர்ஜனையின் முன் நிற்க முடியாமல் சந்து பொந்திற்குள் ஓடி ஒளியும் சுண்டெலியாக தன்னை உணர்ந்தார் ரகுவரன். அந்தோ பரிதாபமே!



வசந்த் தந்தையின் பின்னே வந்து நின்று அவரையேப் பார்த்து கொண்டிருந்தான். தன் தந்தையின் நிலைக்கும் தன்னுடைய நிலைக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதை அவன் அறிவான். தாயின் மீது தனி பற்றுதல் உண்டு வசந்திற்கு. காரணம் ஒன்றும் பெரிதல்ல வசுந்தராவுடைய சொத்து சுகங்கள் தான். தன் மாமனிற்கு தனக்கு இளையவளாக ஒரு பெண் இருந்திருதால் அவளைப் பலவந்த படுத்தியேனும் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று அவன் எண்ணாத நாளில்லை.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷிவேந்திரனின் தொழில் திறமையை உணர்ந்து கொண்ட வசந்த் அவனிடம் நட்பு பாராட்ட முனைந்தான். ஆனால் ஷிவேந்திரனோ எனக்கு நீ இணையா என்கிற பார்வையை பார்த்துவிட்டு சென்றுவிட்டன். அவனை நெருங்க முடியவில்லையே என்று ஆத்திரம் மேலிடும். தன் தந்தையின் வீட்டில் தங்கள் குடும்பத்தை ஒரு பொருட்டாக எவரும் மதிக்கவில்லை என்று அவனது இளரத்தம் கொதிக்கும். ஆனால் என்ன செய்ய! பலமிழந்திருப்பவர்கள் பணிந்து தானே செல்ல வேண்டும். இல்லையென்றால் உள்ளதும் போய்விடுமே நொள்ளை கண்ணா நிலைமை தான் என்பதை வசந்த் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தான்.



பணக்கார பெண்களிடம் காதல் வசனங்களைப் பேசி மயக்கிவிடுவான். ஆனால் கட்ட கடைசியில் ஷிவேந்திரனின் அத்தை மகன் என்று தெரிந்த பின்பு அவனுக்கேது பவுசு! ஷிவேந்திரனின் அலைபேசி எண்ணைக் கேட்டு இவனது நெஞ்சை வெடிக்க வைத்துவிடுவார்கள் இளம் கன்னிகள். ரகுவரனின் சன் என்பதைவிட ஷிவேந்திரனின் கசின் என்ற அடைமொழிக்குத் தான் மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்து ஷிவேந்திரனின் பெயரை உபயோகப்படுத்திய ஒரு சமயத்தில் எல்லோர் முன்னிலையிலும் அவனிடம் அறை வாங்கியும் இருக்கிறான். அங்கிருந்த பெண்கள் அவனைக் கேலியாக பார்த்துச் சிரித்துவிட்டு ஷிவேந்திரனிடம் நட்பு பாராட்டி கொண்டிருந்தனர். ஷிவேந்திரனாலும், ராஜேந்திரனாலும் தானும் தன்னுடைய குடும்பமும் உதாசினப்படுவதை இனியும் பார்த்து பொறுக்க இயலாது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.



தொழிலில் ஷிவேந்திரனுக்கு எதிராக மெதுவாகக் காய்களை நகர்த்தி அவனைக் குப்புற விழச் செய்ய வேண்டி சில வேலைகளைச் செய்தான். ஷிவேந்திரனோ, நான் உன் அப்பனுக்கும் அப்பனடா என்று அவனது சூதுகளை இமைக்கும் பொழுதும் ஊஃப் என்று ஊதித் தள்ளிவிட்டான். அவனது பலத்தை புரிந்து கொண்ட வசந்த் சரணடைவதை தவிரப் பிழைக்க வேறு வழியே இல்லை என்று தன் தாத்தா தர்மேந்திரனிடம் தஞ்சமடைந்தான். வசந்த் ஒரு குள்ள நரி தனக்கு வேண்டியதை அதட்டியோ அடிபணிந்தோ பெற்று கொள்ளத் தயங்கமாட்டான். மான அவமானம் என்ற வார்த்தைகளுக்கு அவனது அகராதியில் இடமில்லை. பணமும் பதவியும் தான் அவனது விருப்பு.



தாத்தாவிடம் கண்டிப்பாக தனக்குப் புகலிடம் கிடைக்கும், திரன் குழுமத்தில் நுழைந்துவிடலாம், பின்பு எல்லாவற்றையும் வளைத்துவிடலாம் என்று எண்ணினான். அவனுக்கு அப்பொழுது தெரியாது எல்லாத் தொழில்களும் முக்கிய சொத்துக்கள் யாவும் ஷிவேந்திரனின் பெயரில் மாற்றப்பட்டிருப்பது. அதனைத் தாத்தாவின் வாயிலாகத் தெரிந்து கொண்ட பிறகு எரிமலையாக தன் தாத்தா பாட்டியிடம் வெடித்தான். அதற்குத் தாத்தா தர்மேந்திரன் கொடுத்த பதில் “ஆவுற பிள்ளைக்கும் சொத்து தேவையில்லை, ஆவாத பிள்ளைக்கும் சொத்து தேவையில்லை! நீயும் உன் குடும்பமும் திரன் குழுமத்தை ஒரே வருஷத்துல கரைச்சி காணாம அடிச்சிடுவிங்க.. நானும் என் அப்பாவும் கஷ்டப்பட்டு உருவாக்கின சாம்ராஜியம். என் கூட பிறந்திவங்களுக்கு தகுதியில்லைன்னு மொத்த சொத்தையும் நான் எடுத்திக்கிட்டு திரன் குழுத்தை வளஎத்தேன். உங்க கிட்ட கொடுத்திட்டு அது அழியிறதை என்னால வேடிக்கை பார்க்க முடியாது வசந்த். ஷிவேந்திரன் தான் அதை பாதுகாத்து தொழிலையும் வளர்த்து அவனும் ஸ்டார் பிஸ்னஸ் மேனா வளர்ந்துட்டான். ஷிவேந்திரனுக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன் வசந்த். இதை எல்லாரும் நல்லா புரிஞ்சிக்குங்க!. அவனை வெறுப்பேத்திட்டு அப்புறம் என்கிட்ட வந்து புலம்பி ஒரு புரோயஜனமும் இல்லை. என் பேரன் ஷிவ்வ நான் எப்பவும் எதிர்த்து நிற்க மாட்டேன். அப்படி உனக்கு திரன்ல வேலை வேணும்னா ஷிவ் சரண்டர் ஆகு. அவனுக்கு தெரியும் யாருக்கு என்ன வேலை கொடுக்கனும்னு. உன் திறமைக்கு ஷிவ் உன்ன ஷூ துடைக்க சொல்லுற வேலை கொடுத்தா கூட செய் தப்பில்லை! பிழைக்க வழியில்லைன்ற பொழுது. மானம் அவமானம் பார்க்க கூடாது” என்று பிசிரற்ற குரலில் சொல்லிவிட்டு போய்விட்டார்.



இதனை மேகவதி, விமன்யா, வசுந்தரா மூவரும் கேட்டு கொண்டுதான் இருந்தனர். தர்மேந்திரனே கை கழுவி விட்ட பின்பு வாழ்வாதாரமே இல்லாதது போன்ற உணர்வு தோன்றிற்று வசுந்தராவிற்கு. தாயிடம் வெடித்து அழுதாள். விமன்யாவும் மேகவதியை குதறிக் கொண்டிருந்தாள். வசந்த் கோபத்தை அடக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டான். ஆறு மாதத்திற்கு பிறகு தான் அவனை சுபிக்ஷத்தில் பார்க்க முடிந்தது. அதிலும் தன்னை சாந்தனின் நில விஷயத்தில் தலை கீழாக அடித்துத் தொங்கவிட்ட பின்பு ஷிவேந்திரனுக்கு நன்கு வலிக்கும்படி செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டான்



ஷிவேந்திரனை அடிக்க வேண்டும் வலிக்க வலிக்க அடிக்க வேண்டும்! மரண வலியை ஏற்படுத்த வேண்டும்! மனது! மனதில் விழும் அடிக்கு ஆயுள் அதிகம், அது கொடுக்கும் வலியும் அதிகம்! வசந்த் ஷிவேந்திரனின் மனதில் வலிக்க அடித்து ஆராத ரணத்தை ஏற்படுத்தச் சரியான சமயத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். அதற்கு ஏற்றார்போல் சம்யுக்தாவும், புகழினியும் ஷிவேந்திரனின் வாழ்வில் ஒருங்கே உள்ளே நுழைந்தனர். இருவரில் யாரை அடிப்பது, யாரைப் பகடையாக்கி உருட்டுவது என்று யோசிக்கலானான்!



சம்யுக்தா ஷிவேந்திரனை காதலிக்கிறாள் என்பதை வசந்தால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ராஜேந்திரனின் காதல் திருமணம் இரு குடும்பங்களையும் வெகுவாக பாதித்து இருந்தது. அதனால் அவ்வளவு எளிதில் இந்தத் திருமணம் நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் ஷிவேந்திரனின் அபார தொழில் வளர்ச்சி, வசீகரம், ஆளுமை எந்தப் பெண்ணையும் மயக்கிவிடுமே! இதற்கு சம்யுக்தா விதி விலக்காக இருப்பாள் என்பது நடவாத ஒன்றாகவே அவனுக்குத் தோன்றியது. ஆனால் சம்யுக்தா ஷிவேந்திரனை காதலித்து மணம் செய்வதற்காக சுபிக்ஷத்திற்குள் வருகிறாள் என்பது மேல் பூச்சு தான் என்று அவனுக்குத் தோன்றியது. எதுவாயினும் அந்த ராஜகுமாரியை சந்தித்த பின்பு உறுதி செய்து கொண்டு காரியத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும்!



சம்யுக்தாவை சந்திக்க வேண்டி இருமுறை முயற்சித்தும் முடியவில்லை. இன்று மாலை இந்த ரிசாட்டில் சந்திப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறாள். ‘பார்க்கலாம் ஷிவேந்திரனை அழிக்கும் யுத்தி இன்று புலப்படுகிறதா என்று’ என்று மனதினுள் எண்ணிக் கொண்டான். புகழினியை பற்றி அவன் யோசியாமல் இல்லை. அவளது ரிஷி மூலத்தை அறிவதற்குக் கடினமாக முயற்சி செய்தும் பலனில்லை. புகழினியை இப்பொழுது சீண்ட வேண்டாம் என்று முடிவு கட்டியிருந்தான். ஷிவேந்திரனின் பாதுகாப்பிலிருக்கும் ஒன்றை நெருங்கவதென்பது புதை குழியில் விழுவதற்குச் சமம். மரண அடி நிச்சயம்! அதிலும் தாய் மாமனும் அவருடைய மனைவியும் மகனை எதிர்த்துக் கொண்டு அடைகாக்கும் ஒருத்தியை இப்பொழுது நெருங்வது மதியின்மை. அழகி சம்யுக்தா.. அவள் தான் அவன் முதல் குறி!



ஷிவேந்திரனின் பி.ஏ ஆண்டோவிடம் தொலைப்பேசியில் உரையாடிவிட்டு முகம் இறுக மெல்லிய குரலில் ஷிவேந்திரனால் அலுவலகத்தில் புகழினிக்கு இடப்பட்ட வேலைகளையும், சம்யுக்தாவின் நடவடிக்கைகள் பற்றியும் சொன்னார். சுகுணா பெருமூச்சிட்டார். மனைவியின் முகத்தை அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தார் ராஜேந்திரன். உடலும் மனமும் சோர்ந்து போகத் தனது இருக்கையில் சென்று தளர்வாக அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டார் சுகுணா. ராஜேந்திரன் மெல்ல மனைவியின் அருகில் வந்து அவரின் தோளை தொட்டார். நிமிர்ந்த சுகுணாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பதறிவிட்டார் அந்த அன்பு கணவன்.



“சுகிம்மா ஏண்டா, என்னம்மா ஏன் அழற?”



“தப்பு பண்ணிட்டேங்க! தப்பு பண்ணிட்டேன்! உங்க பேச்ச கேக்காம சுபிக்ஷத்தில தங்கினதுக்கு, தண்டனைய அனுபவிக்கறேங்க. முயல்குட்டிய சிங்கத்துக்கு பலி கொடுக்கிற கதையா புகழ அவன்கிட்டயே அனுப்பி வச்சிருக்கோமே. இந்த பாவப்பட்ட பொண்ணு என்ன பண்ணுதோ? எப்படி சமாளிக்கிதோ? புகழ இப்படி படுத்தி எடுக்கிறானே. சாந்தனோட அத்தை அன்னைக்கு துக்க வீட்டுல என் அண்ணன் குடும்பத்தை இப்படி நிலைகுலைய வச்சவனோட குடும்பம் நாசமா போவும், வம்சமே விருத்தி ஆகாதுன்னு சாபம் குடுத்தாங்க. எனக்கு மூச்சே நின்னு போச்சிங்க! நம்மளோட பையங்க! ஆசை மகன்.. உங்களை மாதிரியே இருக்கான்னு அவன் மேலே எவ்வளவு பாசம் வச்சிருந்தேன்! இப்படி பாவியா வளர்ந்து நிக்கிறானே. அவன் நமக்கு திரும்பி பழையடி நாலு வயசு ஷிவ்வா கிடைக்கவே மாட்டானா?? இந்த பாவிய தவமிருந்து ஆசைப்பட்டு பெத்ததுக்கு பெத்துக்காமயே இருந்திருக்கலாமே நான்.. இன்னும் எத்தன பேரோட குடி அழிக்க காத்திருக்கானோ. எனக்கு நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்குங்க!” தன்னை மீறி சுகுணா கதறினார்.



சுகுணா இளைய மகனை நினைத்து அவ்வப்பொழுது வருந்துவார் தான். ஆனால் இப்பொழுது ஒரு சில நாட்களாக அவனது ஆட்டம் உச்சத்தை எட்டிச் செல்வதைக் கண்டு பெற்றவளுக்குப் பயம் பிடித்துவிட்டது. துக்க வீட்டில் கேட்ட செய்திகள், புகழை நடத்தும் விதம் இன்ன பிற விசயங்கள் அவரைப் பலவீனப்படுத்தின.



குற்ற உணர்வுடன் மனைவியை இறுக அணைத்துக் கொண்டரின் கண்கள் கலங்கின. சுகுணா தேவதை பெண், அன்பைப் பொழியும் அட்சய பாத்திரம்! அப்படிப்பட்ட குண இயல்புடையவளை ஓநாய் கூட்டத்தை குடும்பமாகக் கொண்ட தான் மட்டும் அவரிடம் விரும்பி மணக்கக் கேட்டிராவிட்டால்! இன்று நல்ல குடும்பத்தில் அமைதியான சூழலில் சந்தோசமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருந்திருப்பாளே! இந்த கதறலும், கண்ணீரும் யாரால்? தன்னால் தானே! தேவதையை மணக்க அரக்கக் குலத்தை சேர்ந்த நான் அசைப்படலாமா? பட்டுவிட்டனே ஆசை பட்டுவிட்டனே! எனது தீராத ஆசை மனையாளின் தீராத துன்பத்துக்கு அல்லவா வித்திட்டுவிட்டது. மனைவியின் கண்களிலிருந்து உதிரும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் அவரின் இருதயத்தில் குருதியை வடிய வைக்கின்றனவே!



அவரது நினைவுகள் இருபத்தேழு வருடங்கள் பின்னோக்கி சென்றது. சுகுணா சுபிக்ஷத்திற்கு சென்ற நான்காம் நாளே ராஜேந்திரனுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அலுவலக தொலைப்பேசியில் சுகுணாவை வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார்.



“ஏங்க இன்னைக்கி நீங்க தொழில்ல நிலைச்சி நிக்க உங்க தனிப்பட்ட திறமை ஒரு காரணம் தான்! ஆனா அதுவே முழுக் காரணமில்லையே! திரன் குழுமத்து வாரிசா தான் நீங்க தொழில கத்துக்கிட்டிங்க, உங்க பிரண்ட் சூயூரிட்டி கையெழுத்து போட்டாறே அவர் எப்படி உங்களுக்கு பிரண்ட் ஆனார். எதை நம்பி உங்களுக்கு கையெழுத்து போட்டார்? கண்டிப்பா உங்கள மட்டும் நம்பி இல்லைங்க.. உங்க உடல், உயிர், படிப்பு, தொழில் திறமை எல்லாம் அவங்க மூலமா வந்தது. அந்த நன்றியை மறந்துட்டு நாம பேசக் கூடாது. நமக்கும் பிள்ளைங்க இருக்கு, நாளைக்கு நம்ம பிள்ளைகளும் வயசான காலத்துல நம்மை உதறிவிட்டு போனா நமக்கு எப்படியிருக்கும்? தயவுபண்ணி யோசிச்சு பாருங்க.. அவங்க தப்பு செஞ்சிருக்கலாம், அதுக்கு தண்டனையும் நிறைய அனுபவச்சிட்டாங்க, தண்டனை காலம்னு ஒன்னு இருக்கு. இன்னும் எவ்வளவு காலம் தண்டிக்க போறிங்க?? உங்க தங்கச்சி வீட்டுல நீங்க வீட்டைவிட்டு போனதை பத்தியும், அவங்க கல்யாணம் நின்னு போனதை பத்தியும் பேசி பேசி வசுந்தராவை கொல்றாங்க.. பாவம்! அந்த மாதிரி வாழ்க்கை நரகங்க. படிப்பு, அழகு, அந்தஸ்து எல்லாம் இருந்தும் உங்க தங்கச்சி வாழுற நரக வாழ்க்கைக்கு நாம தாங்க காரணம், அதை மறுக்க முடியுமா உங்களால? ஊர் உலகம் என்ன சொல்லும், தன்னோட சுய நலத்துக்காக நல்லா இருந்த குடும்பத்தையும், இளவரசியா வளர்ந்த பொண்ணோட வாழ்க்கையையும் அடியோட அழிச்சிட்டா பணத்தாச புடிச்ச சுய நலக்காரினு என்னை எல்லாரும் பழிச்சு ஏசுவாங்க. அப்படிப்பட்ட அவப்பெயரை எனக்கு நீங்கக் கொடுக்க விரும்பின்னா, நான் இனி சுபிக்ஷத்தில தங்கலங்க. இப்பவே பிள்ளைகளை அழைச்சிட்டு நம்ம பழைய வீட்டுக்கே போயிடுறேன்.” என்று நீயாய அநியாயங்களை பிட்டு பிட்டுவைத்து கடைசியில் சுபிக்ஷத்தில் கணவனது ஒப்புதலுடன் தங்களது இருப்பை நிரந்தரமாக்கிக் கொண்டார் சுகுணா.



மனைவியின் பேச்சை மீற முடியாதவராய் ராஜேந்திரனும் அரை மனதுடன் சம்மதித்தார். தங்கையின் போக்கு பிடிக்காமல் இருந்தாலும், வசுந்தராவின் மீது ராஜேந்திரனுக்கு எப்பொழுதும் தனக்கு இளையவள் என்ற பாசமுண்டு. தன்னுடைய தனிப்பட்ட முடிவால் தொழில் வாழ்க்கை இரண்டும் அடியுண்டு கிடப்பதை அவர் அறிவார். மனைவி சொல்வது போல் தங்கையின் தற்போதைய வாழ்க்கைக்கு அவரும் ஒரு காரணமே. அந்த உறுத்தல் அவருக்கு இருந்து கொண்டே தான் இருந்தது. அதனால் மனைவியின் முடிவிற்குச் சம்மதித்தார்.



சுகுணா தான் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார். பாவம் அவருக்கு தெரியவில்லை, அந்த ஒற்றைச் சத்தியம் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் புரட்டி போட்டு தன்னை வாழ்நாள் முழுக்க கண்ணீர் சிந்தவைக்கும் என்று.



அலைபேசியின் ஒலியில் பழைய நினைவுகளில் இருந்து மீட்டுக் கொண்டவர் விசும்பும் மனைவியின் முதுகை மெல்லத் தட்டி கொடுத்துவிட்டு அலைபேசியில் மின்னி மறைந்த பெயரை பார்த்துவிட்டு யோசனையுடன் அதனை உயிர்ப்பித்து காதில் வைத்தார். சொல்லப்பட்ட தகவலில் அசுவாசப்பட்டவராக மனைவியை உலுக்கி அவரிடமும் அதனைப் பகிர்ந்தார். சுகுணாவின் கலக்கான முகம் லேசாகத் தெளிவு பெற்றது. எல்லாம் சரியாகிவிடும் என்பது போல் இமைகளை அழுந்த மூடித் திறந்து, மனைவியின் கைகளை பற்றிக் கொண்டு இதமாக வருடிக் கொடுத்தார்.



நீலாங்கரை கெஸ்ட் ஹவுஸில் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் யோசனையுடன் மூன்று பேர் அமரக்கூடிய சோபாபில் அமர்ந்திருந்தார் தர்மேந்திரன். அவரின் முன்னே இருந்த டீப்பாயில் சூடான தேநீர் கோப்பையை வைத்துவிட்டு, அவரின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார் மேகவதி.



ராஜேந்திரன் திருமணமாகி சுகுணாவுடன் முதல் முறை சுபிக்ஷத்திற்கு வந்திருந்த பொழுது கணவன் பெண்டாளும் பராக்கிரமத்தை மகனின் வாயிலாக அறிந்து கொண்ட பிறகு, அவருடன் இலகுவாகப் பழக முடியவில்லை. ராஜேந்திரன் சுகுணாவை மகாராணியைப் போல் தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்குகையில் தனக்கும் தனது மகளுக்கும் ஏன் இப்படியொரு கணவன் வாய்க்கவில்லை என்று உள்ளூர வெந்து போவார்..
 
Status
Not open for further replies.
Top