எதை நான் கேட்பின் உனையே தருவாய் - ஸ்ரீஷா
கதையின் முன்னோட்டம் :
அவளுக்கு வார்த்தைகள் கூட வர மறுத்து ,இதயம் முரசு கொட்ட ,அதில் அவள் திகைத்து விழித்திருக்க,
அவளது உணர்வு புரிந்ததோ என்னவோ அவளிடமிருந்து இடைவேளை எடுத்துக் கொண்டவன், கதவை நோக்கி முன்னேற, அதிதியோ சற்று உரத்த குரலிலே அவளது அலைபேசி எண்ணை ஒப்பித்திருந்தாள்.
அவளைப் புரிந்தது போல விக்ரம் திரும்பாதே சிரித்தவன், அப்படியே நடுக்கூடம் நோக்கி நடக்க,அவன் திரும்பியபடி சிரித்ததில் அவனை அறியாத அதிதியோ,
' அவன் தனது அலைபேசி எண்ணை குறித்துக் கொண்டானா?' என்று தெரியாது தவித்திட,அந்த நேரம் அவளது எண்ணிற்குக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்று காட்டும் விதத்தில் அவளது அலைபேசி சிணுங்கியிருந்தது.
'இந்த நேரத்தில் யார் ?' என்ற ரீதியில் அதிதி அலைபேசியைப் பார்வையிட, அதிலோ
“ Thank you for being mine
- By yours”
( என்னுடையவளாக இருப்பதற்கு நன்றி
- இப்படிக்கு உன்னுடையவன்)
என்ற தகவலிருக்க ,நொடியில் தெரியாத எண்ணிலிருந்து வந்த தகவல் என்றாலும் ,
' அது விக்ரம் ' என்று புரிந்து கொண்டவளின் முகம் குப்பெனச் சிவந்து ,அவன் அனுப்பிய குறுந்தகவலை மென்மையாய் வருடிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
*******************
“ அப்போ நீ... நீ என்னைக் கைவிட்டுட மாட்டியா
கார்த்திக் ?” என அவள் ,
' எனது எண்ணத்தில் என்னைச் செயல்பட
(வாழ) விடமாட்டாயா ? ' என்பதை அந்த வாக்கியத்தில் கேட்டதைச் சரியாகப் புரிந்து கொண்ட கார்த்திக் ,அதே தீவிரக் குரலில்,
“ இது சத்தியம் சைத்து.நமக்குக் கல்யாணம் ஆகிட்டா,நான் உன்னைக் கைவிட மாட்டேன்.
சே ! ச்சே ! உன்னை உன் எண்ணத்தில் செயல்பட விடமாட்டேன் ,நான் சொல்றதை கேட்டுத் தான் நீ வாழனும் ”
என்று சொன்னதில், இங்கு அவளது விழிகளிருந்து நீர் திரள் வழிந்து சிதறி ,அவளை மொத்தமாகப் புரட்டிப் போட, அப்போதும் அவள் ,
” கார்த்திக் ! கார்த்திக்”
என விம்மியழுக, அதில் இத்தனை நேரம் அடக்கிய சிரிப்பை கார்த்திக் பக்கெனச் சிரித்திருக்க,
சைத்ராவோ அவனது சிரிப்புச் சத்தத்தில் பட்டென அழுகையை நிறுத்தியிருந்தாள்.
அதில் இன்னும் சிரித்த கார்த்திக் அவளைப் போலவே அழுவது போலச் செய்து காட்டியவன் ,
அவளது வசனங்களை ,
“ கார்த்திக் ! கார்த்திக் ” எனத் தொடர்ந்து பேசி கேலி செய்ய, அதில் சுயம் மீண்ட சைத்ரா,
“ டேய் ! மாடுமுட்டி தலையா ,எதிலெதில விளையாடனும்னு அறிவில்லையா உனக்கு?
ஐயோ இப்படியொரு லூசை எனக்குக் கட்டி வைக்கிறாங்களே !
உனக்கெல்லாம் கல்யாணமே நடந்தாலும் ஃபர்ஸ்ட் நைட் நடக்காது
டா ”
**************
“ வேண்டாம் கார்த்திக் ! அதுக்கு அப்புறம் உங்க
இரண்டு பேர் சண்டையும் எங்களால தீர்க்கவே முடியாது !”
என அறிவுரை வழங்கியதை கண்டு கொள்ளாது முன்னேறிய கார்த்திக், விக்ரமின் கைக்குட்டையை அவனிடமே தூக்கி எறிந்து, தனது கைக்குட்டையை எடுத்துக் கொண்டு சத்தமின்றி அவளை நோக்கி காலெட்டுகள் எடுத்து வைத்ததில், அவனைப் போலவே மீதி நால்வரும் பின்தொடர,
மிக நெருக்கமாக ஐவரும் அவள் முகத்தருகே நெருங்கியதும் , தனது கரங்களிலிருக்கும் கைக்குட்டையை விடச் சைத்துவின் கற்றைக் கூந்தலே போதுமென நினைத்தவன் ,அதன் நுனியை பற்றியெடுத்து அவளது
நாசியில் சிறுக சிறுக உள் சேர்க்க, அதில்,
“ ஹச்” என்று தும்மி எழுந்த சைத்து, தன் முகத்தின் முன் இத்தனை நெருக்கத்திலிருந்த ஐவர் முகத்தைக் கண்டு பயந்து, பதறிக் கத்தத் துவங்கினாள்.
****************
தங்கியிருக்கும் வீட்டு வாசலிலே கொட்டி கொட்டி கிடக்கும் பனி பொக்கிஷங்கள் ,அதை அரண் போலக் காத்து அழகு காட்டும் மலை முகடு என அந்தப் பொக்கிஷங்களைக் கொண்டாடும் மனிதர்களாக , விக்ரம் – அதிதி பனியில் சறுக்கும் பலகையை ( skating board)
தேர்வு
செய்ய, உதயா – கௌதம் சைக்கிளிங்
(glacier mountain biking) தேர்வு செய்ய,
கார்த்திக் – சைத்ராவோ எந்தத் தேர்வுமின்றிக் கொட்டிக் கிடக்கும் வெள்ளை நிறம் கொண்ட கொள்ளையழகு பனியை அள்ளி தங்கள் மீது மாற்றி மாற்றி எறிந்து விளையாட,
' தங்கள் மீது தான் அடுத்து இவர்கள் பனியை எறிவார்கள் '
என உணர்ந்து கொண்ட மற்ற இரு ஜோடிகளும் அங்கிருந்து நகர்ந்து விட,அவர்கள் தங்களைப் பார்த்ததையோ அங்கிருந்து மெதுவாக நகர்ந்ததையோ துளியும் கண்டு கொள்ளாத கார்த்திக் - சைத்ரா கை நிறையச் சில்லிடும் பனிக்கட்டிகள் எடுத்து எறிய , சைத்துவோ குனிந்து குனிந்து தப்பித்து, அதே நேரம் அவளும் கை நிறைய அள்ளி அவன் மீது வீசி விளையாட , அங்குப் பனிகளும் உயிர்பெற்று அவர்களுடன் துள்ளி விளையாடியது.
***************
நொடிகளோ, நிமிடங்களோ இருவரும் அசையாது நின்று தங்களது உள்ளத்து உணர்வை மட்டும் உயிரால் உள்ளார்ந்து பரிமாற்றி
கொள்ள,அந்த நேரம் பெருத்த சத்தம்,
“ அடேய் கௌதம் ! இப்படி ரொமான்ஸ் பண்ணத் தான் சைக்கிளைத் தூக்கிட்டு எங்களைக் கழட்டி விட்டுடு வந்தியா ”
என்ற கார்த்திக்கின் கேள்வியில், கௌதம் கோபம் கொஞ்சம், வெட்கம் கொஞ்சமென முறைக்க முயன்று தோற்க , உதயாவோ கௌதமுள்ளே புதைந்து கொள்பவள் போல அவனது முதுகில் தஞ்சம் புகுந்து கொள்ள, அதற்குள் அங்கு,” டம்” என்றொரு சத்தம்.
அந்தச் சத்தத்தில் திரும்பிப் பார்த்த கார்த்திக் விழுந்து விழுந்து சிரித்தபடி, கௌதமிடம் திரும்பி,
“ நம்ம அண்ணன் காதலில் மட்டும் தான் மடார்னு விழுவார்னு நினைச்சேன் கௌதம்.
ஆனா, பார்த்தா.. பார்த்தா ! சறுக்கில் கூட அவர் மடார்னு தான் விழுறார் ”
என்று சொல்லிச் சிரித்ததில் கௌதம்,
தங்களைக் காட்டிலும் பரிதாபமாகிப் போன விக்ரம் மானத்தை எண்ணிச் சிரிக்க,
அதற்குள் சைத்து, அதிதி மீது பனிக்கட்டிகளை அள்ளி வீசியெறிய, அதிதி விக்ரம் மீது ,விக்ரம் கௌதம் மீது, கௌதம் உதயா மீது ,உதயா மறுபடியும் சைத்ரா மீதெனத் தொடர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் யார் யாரென்று எல்லாம் பார்க்காது, ஒட்டுமொத்தமாக அனைவரும் மீதும் மாற்றி மாற்றி விட்டெறிந்ததில், அவர்களைக் கடந்து சென்ற அந்நாட்டு மக்கள் கூடச் சிரிப்போடே கடந்திருந்தனர்.
****************
கதைச் சுருக்கம் :
மதுரை - ஸ்விஸ் - சென்னை - மதுரை என நகரின் பயணமாகவும் , பாசம்,விருப்பம்,காதல், கலாட்டா,அழுத்தம்,நட்பு , துரோகம்,எல்லையில்லா காதல் ,வாழ்க்கை போராட்டம்
வெற்றி என மூன்று ஜோடிகளின் வாழ்க்கை பயணமாகவும் நகரும் கதை.
இன்று வெளியாகும் எனது முதல் புத்தகத்தை வாங்க விரும்புவோர்,கீழ்காணும் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.
Publisher :Arun Publications
Phone number : 9003145749
Actual rate : Rs 410
With 10% offer : Rs 369
அல்லது
www.udumalai.com என்ற வலைத்தளத்திலும் இப்புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்.கூரியர் கட்டணம் உண்டு .
Foreign delivery available.
புத்தகமாக வாங்கிப் படித்து உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
ஸ்ரீஷா