All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கதை திரி

Status
Not open for further replies.

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2


1631016311

தன் எதிரில் அழகாக ஆகாய நீல நிற பிராக் அணிந்து… அதற்கு தோதாக கழுத்தில் ஒற்றை வரிசை முத்து மாலை காதில் ஓற்றை முத்து கம்மல் கைகளில் முத்துக்கள் கோர்த்த ப்ரஸ்லேட்…. என தன் முன்னே தேவதை போல் வந்து நின்று "ஹாப்பி பர்த்டே அத்து" என வாழ்த்தி கன்னத்தில் முத்தமிட்ட தன் பொம்மாவை கண்களில் அன்போடு பார்வையால் வருடி கொடுத்தவன்… அவளின் நெற்றியில் தானும் முத்தமிட்டு அவளுக்கு நன்றி உரைக்க….



"அத்து… இந்தா கேசரி அம்மா, உனக்காக செஞ்சாங்க" என தானே அவனுக்கு ஊட்டிவிட… அதை பெற்று கொள்ள முயலுகையில்….



ஒரு குரல், கிட்ட வராதே…" ப்ளீஸ் வராதே… போ… போடா இங்க இருந்து… அப்பா யாரு இவன் இவனை இங்கிருந்து போக சொல்லு" என ஆவேசம் வந்தது போல் நித்திலா கத்த…



தன் படுக்கையில் இருந்து அடித்துப்பிடித்து எழுத்தான் தயா என்கின்ற சைதன்யா….. அனைவரையும் அதிர செய்பவனை பதற செய்தது அவன் நினைவுகளில் நிலைத்துவிட்ட அவன் பொம்மாவின் பிள்ளைமொழி … ஆம் இப்பொழுது தயா முப்பது வயது நிறைத்த முழுமையான ஆண்மகன்… சிறுவயதிலேயே ஓங்குதங்காக இருப்பான்… இப்பொழுது சொல்லவும் வேண்டுமா…



கட்டிலில் எழுந்து அமர்த்தப்படியே தன் எதிரில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தினை பார்த்தவன்…. "ஏண்டி , என்னை பார்த்து அப்படி சொன்னா… என்னை ஏண்டி தனியா விட்டு போனே…" என கண்கள் லேசாக கலங்க புலம்பி பிதற்றியவன்… அது பொய்யோ என்பது போல் அடுத்த நொடி…. தன் பிம்பத்தினை உறுத்து விழித்தவன்….



"உனக்கு என்னோட அருகாமை…. என்னோட அன்பு எதுவும் தெரியலை இல்லை… நீ என்னைவிட்டு பிரிஞ்சி இன்னையோட முழுசா பதினெட்டு வருஷம் ஆகுது… எல்லாரும் பிறந்தநாளை அவ்வளவு சந்தோஷமா கொண்டாடுவங்க … ஆனா, எனக்கு என்னோட பிறந்தநாள் வந்தாலே…. உன்னோட வார்த்தையும்…. உன்னோட மறுப்பும் , நம்மளோட பிரிவும் தான் நியாபகம் வருது" என்றவன் குரலில் சிறுவருத்தம் இழையோடியதோ



"என்னை முழுசா மறந்து போய்ட்ட இல்லை…. ஆனா இனிமே உன் வாழ்நாள் முழுசும் .. மச்… இல்லை இல்லை உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் இனி நீ என்னை மறக்காத மாதிரி செய்யலை நான் சைதன்யா இல்லடி…. வரேன் இத்தனை நாள் நான் அனுபவிச்சா வலியை உனக்கு வட்டியும் முதலுமா திருப்பி தருவேன்… ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச் பேபி (just wait and watch baby)" என்றவன் கண்களில் அவ்வளவு ஆத்திரம், வன்மம்….




நன்றாக உறங்கி கொண்டிருந்தவள் திடிரென உடல் அதிர படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் …. சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழல விட, அவளையே பார்த்து கொண்டிருந்தாள் அவளின் தோழி தேன்மொழி….


தேன்மொழியின் பார்வையில் இருத்தது பயமா, கவலையா என பிரித்தெரிய முடியா உணர்வில், தன் பதட்டம் மறைத்து, அவளை கண்டு மென்னகை புரிய… தேன்மொழியோ, "இன்னைக்கும் அதே கனவா…. என"



நித்திலாவோ, வியர்த்திருந்த தன் முகத்தினை துடைத்து கொண்டே ஆமாம் என்பது போல் தலை அசைத்தாள்…


"ஏண்டி ஒரே கனவு தான் திரும்ப திரும்ப வருது உனக்கு… ஆனாலும் என்னமோ புதுசா பார்த்து பயபடுற மாதிரி ஒவ்வொரு தடவையும் நீயும் பதறி என்னையும் ஏன் பதற வைக்குற " என்றாள் கிண்டலாக நித்திலாவின் பதட்டத்தினை குறைக்கும் பொருட்டு



தோழியின் எண்ணம் புரிந்த நித்திலாவோ அழகானதோரு புன்னைகை சிந்தி, "ஹனி எனக்கு விவரம் தெரிஞ்சி இந்த கனவை கண்டு நான் பயந்து இருக்கேன்…. ஆனா இப்ப இந்த கனவு வரும்பொழுது…. எனக்கு சொல்ல தெரியாத ஒரு உணர்வு…. அது… அது எப்படி சொல்றது… என்னால அவங்க துன்பத்தினை போக்க முடியாலேயேனு ஒரு ஆதங்கம் தான் வருது…. இருந்தாலும் என்னையும் மீறி அந்த கனவு வந்ததும் என் உடம்பு உதற ஆரம்பிச்சிடுத்து என"….



நித்திலாவின் இந்த பயமும் பதட்டமும் எதனால் என்று தேன்மொழிக்கு நன்றாக தெரியும்…. ஏனெனில் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள், அந்த விபத்தில் இருந்து நித்திலாவை மீட்க அவள் பெற்றோர் எவ்வளவு பாடுப்பட்டனர் என அவள் அறிவாள்… ஆகையால் அதை பற்றி மேலும் பேச்சை வளர்க்காமல் ….

" சரி, சரி உன் கனவை பத்தி ஈவினிங் ஆராய்ச்சி பண்ணலாம்… இப்ப சீக்கரம் போய் கிளம்பி வா…. அப்ப தான் நேரத்தொட வேலைக்கு போக முடியும்… அதுவும் இன்னைக்கு தான் முதல் நாள்…. " என தேன்மொழி கூற…



நித்திலாவும், அலுவலகம் செல்ல தயாராகி வர குளியலறை நோக்கி சென்றாள்...



பெங்களூர்… "சிலிக்கான் வேலி ஆஃப் இந்தியா" என்ற பெயர் பெற்ற நகரம் …. அதன் அழகால் மட்டுமல்ல, அங்குள்ள வாய்ப்புகளுக்காகவும் மக்களை ஈர்க்கிறது என்பது மறுக்கமுடியாத நிஜம்..

அத்தகைய நகரத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்திற்கு புதிதாக வேலைக்கு சேர்த்திருந்தார்கள்

நித்திலா ஸ்ரீயும் ,தேன்மொழியும்….



இருவருக்கும் வசிப்பிடம் சென்னை… இருவரும் அண்டை வீட்டார் என்றாலும் கல்லூரி தோழிகளும் கூட… தன் மகளின் மனநிலை மாறவே, நித்திலாவின் தந்தை ராஜதுரை தன் மகளை இவ்வளவு தூரம் வேலைக்கு அனுப்பியுள்ளார்… கூடுதலாக தேன்மொழி உடன் இருக்கும் தைரியமும்….



நித்திலா ஸ்ரீ, சென்னையை சேர்ந்தவள்… M.C.A முடித்து…. இங்கு வேலைக்கு வந்துள்ளாள் , வயது 23, பாலில் மஞ்சள் கலந்த நிற மேனி… அழகிய அகன்ற விழிகள்… அளவான நாசி அதில் பெருமையாக வீற்றிருக்கும் ஒற்றை வெள்ளை கல் மூக்குத்தி…. இந்த கால பெண்கள் போல் ஸிரோ சைஸ் இல்லை… சற்று பூசிய உடல்வாகு …. சிரித்தாள் சிறியதாக குழியும் இடபக்க கன்னம்… ஐந்தாரை அடி உயரம் என பார்ப்பவரை சற்று என்னையும் கவனி என சொல்ல வைக்கும் அழகி….



தேன்மொழி ஒன்றும் அப்படி சுமார் ரகம் இல்லை… நித்திலா பால் வண்ணம் என்றால் இவளோ ஓடைத்த கோதுமையில் நிறம்…. வட்டமுகம், கயல்விழிகள்,ஒல்லி என்றும் குண்டு என்றும் சொல்ல முடியாத உடல்வாகு… என திருத்தமாக இருப்பாள்….




இருவரும் ஒரு வழியாக பெங்களூர் டிராபிக் நெரிசலில் நீந்தி அலுவலகம் வந்து சேர்ந்தனர்….



அலுவலகத்தில் நுழைந்தத்தில் இருந்து ஹனி அவளின் முத்தம்மாவை முறைத்து கொண்டே வந்தாள்…


" நான் அப்பவே சொன்னேன் இல்லடி, ஒரு நாலு இட்லியை பேக் பண்ணி கொண்டு வரலாம்னு கேட்டியடி கிளப்புற அவசரத்தில் நான் வேற சரியா சாப்பிடலை… இந்த டிராபிக்ல வரதுக்குள்ள நான் சாப்பிட்ட

ஆறு இட்லியும் என் வாயத்துக்குள்ள கறைஞ்சி ஆவிய காணாம போயிடுச்சி" என நித்திலாவை வசை பாடிக்கொண்டே வந்தாள்…..




ஏற்கனவே அந்த அலுவலகத்தினை கண்டு மிரண்டு போய் இருத்தவளை ஹனியின் புலம்பலும் அவள் தன்னை கூப்பிட்ட முறையும் மேலும் கடுப்பெற்ற… அவளை முறைத்து பார்த்தாள் நித்திலா…



ஏண்டி, தீன்னி பண்டாரம்… உனக்கு கொஞ்சமாவது பயம் இருக்க… முதல் நாள் வேலைக்கு வந்திருக்கோம்…. அதுவும் இந்த பில்டிங் பார்த்தாலே எனக்கு கைக்காலெல்லாம் நடுங்குது இப்ப உனக்கு டிபன் பேக் பண்ணிட்டு வராதது தான் ரொம்ப முக்கியம் என நித்திலா பொங்க….




அவள் பேசியதை எல்லாம் கிடப்பில் விட்டவள்… ஏன் பயந்தா டிபன் தரேன்னு சொல்லி இருக்காங்களா என ஹனி கேட்டு வைக்க….



"அடியேய், நான் எவ்வளவு டென்ஷன்னா இருக்கேன்…. உனக்கு என்னை பார்த்த நக்கலா இருக்கா என அவளை கிள்ள போக… அவளோ, போடி… போய் பொறுப்பா எந்த விங்ல நமக்கு வேலை… அதெல்லம் விசாரிச்சி வை… நான் போய் புட் கோர்ட்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு பார்த்திட்டு வரேன்" என்றவள் எஸ்கேப் ஆகிவிட்டாள்….



நித்திலாவோ, ஹனியை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ…. அவ்வளவு திட்டிவிட்டு… அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள்… தேன்மொழியை வறுத்தெடுத்து கொண்டே வந்ததினால் சுற்றுப்புறம் கவனிக்க தவறினாள்….


தன் கவனம் முழுவதும் ரிசெப்சன் பெண்ணில் பதித்திருத்தவள் … பக்கவாட்டில் இருந்து வேக நடையோடு வந்தவனை சற்றும் கருத்தில் கொள்ளவில்லை… வந்தவனும் பெண்ணவளின் வரவை எதிர்நோக்கவில்லை… திடீர்ரென அவனின் வரவை கண்டு திகைத்தவள்…. என்ன எதிர்வினை ஆற்றுவது என புரியாமல் அவன் மீது மோதி கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் தன் கண்களை இறுக முடிக்கொள்ள…



ஓருசில நொடிகள் கடந்த பின்னும் எதுவும் நிகழவில்லை என உணர்த்து முக்கியமாக தான் விழவில்லை என அறிந்து தன் ஒற்றை கண்ணை மெதுவாக திறந்து பார்க்க…. வலிமையான இரு கரங்கள் தன் தோளை பற்றி இருப்பதை அப்பொழுது தான் உணர்ந்து அவனின் முகத்தினை நிமிர்த்து பார்க்க….



ஏதோ கனமான பொருளை தாங்கி பிடித்துள்ளது போல் நித்திலாவை தாங்கியவன் முகத்தில் எந்த உணர்வும் இன்றி இருந்தது..


பெண்ணவள், அவனின் கரம் பற்றவோ அல்லது அவனின் தோள் அணைக்க முயன்றிருந்தாள் அவள் கீழே விழட்டும் என கொஞ்சமும் தயக்கம் இன்றி விலகி இருப்பான்… நித்திலாவின் பயந்த தோற்றம் அவனை அவளை தாங்கி பிடிக்க சொன்னது… அப்பொழுதும் பெண்ணவளை அணைத்து பிடிக்காது… தோளில் கரம் வைத்து தாங்கினான்...



இவள் கண் திறக்கவே காத்திறந்தது போல் அவளை வழியில் இருந்து விலக்கி நிறுத்தியவன்…. அவள் நன்றி சொல்லக்கூட அவகாசம் அளிக்காமல் சென்றுவிட்டான் அதே வேக நடையோடு….



நித்திலாவோ, ரொம்பத்தான் ஒரு தேங்க்ஸ் சொல்ல கூட சான்ஸ் தரலை… போடா, எனக்கு ஒரு தேங்க்ஸ் மிச்சம்… என தோள்களை குலுக்கி கொண்டு ரிசெப்ஷன் நோக்கி சென்றாள்…. அங்கே நடந்ததை பார்த்து கொண்டிருந்த அந்த ரிசெப்ஷனிஸ்ட் உறைந்து போய் நின்றிருந்தாள்….



நித்திலா, அவளை இரண்டு மூன்று முறை அழைத்த பிறகே சுயத்திற்கு வந்தவள்… தன் எதிரில் உள்ளவளை ஏனோ, அதிசயப்பிறவியை பார்ப்பது போல் பார்த்து கொண்டிருந்தாள்… பின்னே அவளும் தான் என்ன செய்வாள்… இதுவரை பெண்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவன் முதல் முறை ஒரு பெண்ணை தாங்கி பிடித்தது உலக அதிசயமே…



அந்த பெண்ணின் பார்வையில் கூச்சம் எழ… என்ன விஷயம் என வினவினாள்.. அவளோ விஷ்ணுவை பற்றி அனைத்தும் கூற ஆண்னவனின் நடத்தையில் பெண்ணவளின் மனதில் பலபடிகள் உயர்ந்து நின்றான் விஷ்ணு…. அந்த அலுவலகத்தில் உள்ள பெண்கள் அவனுக்கு ஈட்ட பெயர் ரிஷ்ய ஸ்ரீங்கர்…




இங்கே இவ்வளவு கலவரம் நடந்து முடிய, பொறுமையாக தன் சிறுங்குடல் மட்டும் நிறைய உண்டவள் நேரத்தினை கருத்தில் கொண்டு நித்திலாவை நோக்கி வந்தாள் ஹனி…



தன் தோழிக்கு ஒரு பழரசம் வாங்கி கொண்டு தன் முத்தம்மாவை நெருங்க… ரிசெப்ஷனிஸ்ட் தீபிகா… அவர்கள் இருவரையும் சற்று பொருத்து மேனேஜர் அறைக்கு போக சொல்ல…. அங்கே அவர்களுக்கான வேலை பற்றி சொல்லப்பட்டது….


ஒரே அலுவலகத்தில் வேலை என்றாலும் இருவரும் வேறு வேறு டீம்…. அதில் தோழிகள் இருவருக்கும் சற்று சுணக்கம் என்றாலும்… அவர்கள் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை…. தேன்மொழியின் டீம் ஹிட் பிரசாத்…. நித்திலாவின் டீம் ஹிட் விஷ்ணு….






இருவரும் தங்களுக்குள் வாழ்த்து சொல்லி கொண்டு மாலையில் சந்திக்கலாம் என கூறி தங்களுக்கு என ஒத்துக்கபட்ட கேபின் நோக்கி சென்றனர்…



நித்திலா ஸ்ரீ, விஷ்ணுவின் அறைக்குள் செல்ல அனுமதி வேண்டா…. "எஸ் கம் இன்" என்ற அவனின் குரலில் ஈர்க்கபட்டாள் … ஏற்க்கனவே அவனின் குணநலன் அறிந்திறந்தவள்… தற்பொழுது அவனின் உருவம் கண்டு பெண்ணவளின் மனம் தடுமாற்றம் கொண்டது...


அவனை கண்ட பெண்களின் மனம் தடுமாற்றம் கொள்ளவில்லை என்றால் தான் தவறு…


விஷ்ணு, வயது30, பெயருக்கு ஏற்றது போல் உயரமும் நெடுமாலே… ஆறு அடிக்கும் மேல்… சிவந்த நிறம்…. அகன்று விரிந்த மார்பு… ஒட்டிய வயிறு… போட்டிருக்கும் சட்டையையும் மீறி தெரியும் அவனின் கைகளின் தசைகள்… மொத்தத்தில் பல பெண்களின் கனவு நாயகன் இவன்… ( இவனுக்கு இவ்வளவு வர்ணனை ஏன்னு கதையில் புரியும்)



உள்ளே சென்றவளிடம் சில கோப்புகளை கொடுத்து அதனை பற்றி அறிந்து கொள்ள சொன்னவன்…. மதியத்திற்கு மேல் மீட்டிங் என கூறி அவளை போக சொல்லா…



நித்திலா தான் குழம்பி போனாள், சற்று நேரத்திற்கு முன்பு தன்னை விழாமல் தாங்கியவன் இவனா இல்லை வேறு யாருமா என்று…. ஏனெனில் அவளை தெரிந்தது…. தெரிந்தது என்ன பார்த்தது போல் கூட ஒரு சிறிய பாவனை இல்லை விஷ்ணுவின் முகத்தில்…



இவள் இன்னும் நிற்பதை கண்டவன்…. தன் புருவங்களை மேலேற்றி "எனி டவுட் ஓர் எனிதிங் எல்ஸ்" என தன் கேள்வியை முடிக்காமல் பெண்ணவளை பார்க்க….



விஷ்ணுவின் பார்வையில் வெட்கம் மேலிட நித்திலாவோ, மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டவள்… ஒன்றும் இல்லை என இடவலமாக தலை அசைத்து விட்டால் போதும் என தன் இருப்பிடம் வந்து அமர்ந்து கொண்டாள்…




பெண்ணவளின் முகத்தில் வந்து சென்ற பாவனையினை கண்டவன் முகத்தில் அழகான முறுவல் தோன்றியது… அவனின் உதடுகளோ "கிரேஸி கேர்ள்" என முணுமுணுத்து….





நினைவில் வருவானோ😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....


உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்... என்னுடைய கதை முதல் முதல புத்தகமாக வெளிவர போகுது...

"பிரிக்க முடியாத பந்தம்"..........
வம்சி கிருஷ்ணா , ப்ரியம்வதா இவங்களை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...


ஒருவேளை நியாபகம் இல்லைனா
வரும் வெள்ளி அன்று புத்தகம் வெளியாக இருக்கி்றது... இந்த புத்தகம் மூலம் மீண்டும் உங்க வம்சி மற்றும் ப்ரியம்வதாவோட பயணிக்க... கீழ்வரும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

அலைபேசி எண்: 9003145479

அல்லது
Udumalai.com - Online Book Store என்ற website மூலம் onlineல் புத்தகம் பெறலாம்...

இப்புத்தகத்தை வெளியிடும் "அருண் பதிப்பகத்தாருக்கு" மிக்க நன்றி... அண்ட் ஸ்பெஷல் தேங்க்ஸ் டு ஸ்ரீகலா mam....



நன்றி
தனசுதா😍😍😍😍😍

17496
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 3

1749717498

திருச்சி…..



"ஹாலோ, அண்ணி எப்படி இருக்கீங்க… அண்ணா எப்படி இருக்காங்க…. "


………...


"ம்.. இங்க எல்லாரும் நல்ல இருக்கோம், அப்புறம் நிலாக்குட்டி எப்படி இருக்கா"....


………….,


"ம்ஹூம்…. அவனுக்கு என்ன குறை…. அதொல்லாம் ரொம்ப நல்லஆஆஆஆ தான் இருக்கான்…. "


………….





மேற்கொண்டு இன்னும் சில வார்த்தைகள் பேசி வைத்த விசாலாட்சி மற்றும் ராஜேந்திரனின் முகங்கள் வாடியிருந்தது… தன் சொத்தங்களை பிரிந்திரிக்கும் வலி அதில் தெரிந்தது …. அதுவும் அப்பிரிவிற்கு காரணம் தங்கள் மகன் என்ற எண்ணம் இன்னும் வலிக்க செய்தது...


ஆம், அந்த விபத்திற்கு பிறகு தயா குடும்பத்தினை சேர்ந்த யாரும் நிலாவை சந்திக்கவில்லை…. தயா, அவர்கள் செல்வதை நேரடியாக தடை சொல்லவில்லை…. ஆனால் அவனும் ஒரு காரணம்….



"என்னதாங்க உங்க பையன் நினைச்சிகிட்டு இருக்கான்…. இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவங்க அங்கேயும், நாம இங்கேயும் இருந்து கஷ்டப்படுறது…. ஏதோ, சின்ன பிள்ளையா இருக்கும் பொழுது தான் நிலாக்குட்டி மேல இருக்க கோபத்தில் நாம சொல்லுறதை புரிஞ்சிக்களை… இப்பதான் ஊரு மேச்ச உலகம் வியக்கனு தொழில் பண்ணுறனே.. இன்னமும் இப்படி முறிக்கி கிட்டு திறிஞ்ச என்ன அர்த்தம்…. இப்பகூட பாருங்க ஊருக்கு வரேன் சொல்லி கிட்டதட்ட ஒரு மாசமாக போகுது இன்னும் அவன் வந்த பாடு இல்லை…. "என விசாலாட்சி , ராஜேந்திராரிடம் புலம்பி கொண்டு இருந்தார்….


ஏனெனில் ,அவனை ஒவ்வொரு முறையும் ஊருக்கு வர வைப்பதற்கு அவனின் அம்மாவும் அப்பத்தாவும் தான் பகீரத பெயர்த்தனம் மேற்கொள்ள வேண்டியதாகி போனது… அதுவும் இந்த சில நாட்களாக தன் திருமணம் பற்றி அவர்கள் பேச தயா ஊருக்கு வருவதை முடிந்த மட்டும் தவிர்த்தான்..


இங்கே இவர் புலம்பிக்கொண்டிருக்க… இவர் புலம்பலின் நாயகனோ… தன் அப்பாத்தவிடம் அலைபேசியின் வாயிலாக கதையளந்து கொண்டிருந்தான்….



"ராசா, ஏன்ய்யா இன்னும் ஊருக்கு வரலை… " என்றார் சிறு வருத்தோடு.. அவருக்கு தெரியும் தன் பேரனின் மனநிலை…


அவரின் குரலில் உள்ள வருத்தத்தினைகண்டு கொண்டவன்… "அகி டார்லிங் , இங்க கொஞ்சம் வேலை …. அது முடிச்சதும் அடுத்த நொடி உங்க கண் முன்னாடி இருப்பேன்"....


"ஏன் பேபி, உங்க மருமக உங்களை ரொம்ப டார்ச்சர் பண்றங்களா… நீ டம்மி மாமியார இல்லாம ட்ரெர் மாமியாரா கெத்த இரு ,அப்ப தான் உன் மருமக கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க… " என்றவனின் குரல் சிறுநகைபோடு ஒலித்தது… பல வருடங்கள் கடந்து விட்டது அகிலாண்டம் தன் பேரனின் இந்த குறும்பு தளும்பும் குரலை கேட்டு…




"என்ய்யா, உனக்கு என் மேல் இந்த கொலவெறி, வயசான காலத்தில் ஏதோ என் மருமக கையாள கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கேன்…. அது பொறுக்களைய உனக்கு, எனக்கும் என் மருமகளுக்கும் ஏன் சிண்டு முடியற….


வேணும்னா, உனக்கு பெண்டாட்டினு ஒருத்தி வருவா இல்ல அவகிட்ட மாமியார் கெத்தை காட்ட சொல்றேன் என் மருமககிட்ட "என்றார்….



"எனக்கு புடிச்ச மாதிரி முதல்ல பொண்டாட்டினு ஒருத்தி வரட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்றான் தயா ஒருமாதிரியான வெறுமை குரலில்..



அந்த குரலில் உள்ளம் பதறிய அகிலாண்டம்… " ராசா, என்னய்யா…. " என அவர் குரல் தடுமாற…


தன்னை சரிசெய்து கொண்டவன்… "ஒன்றுமில்லை அப்பத்தா, இந்த வார கடைசியில் நான் ஊருக்கு வரேன் " என்றவன் அவன் மறுபடி கேள்வி கேட்கும் முன் அலைபேசியை துண்டித்திருந்தான்..



குடும்பத்தினர் அனைவருக்கும் தயாவிற்கு நிலாவை மணம் முடிக்க வேண்டுமோன்ற ஆசை இருந்தாலும்....

அவன் விருப்பம் அறியவே அவர்கள் அவனின் திருமணம் பற்றி பேச்சேடுத்தனர்…. அவர்கள் கோலத்தில் நுழைந்தால் இவனோ. புள்ளிக்குள் நுழைந்து தப்பித்து கொண்டிருத்தான்...



அகிலாண்டத்திற்கு தன் பேரனின் மனம் புரிந்தாலும்… அவனின் கோபம் அதை பற்றி பேச தடைவிதித்தது… அவரும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்… என்று அவன் தன் பொம்மாவை விட்டுவிலகி வந்தனோ…. அன்றிலிருந்து இன்று வரை அவன் திருச்சியில் தங்கிய நாட்கள் செற்பம்…


அந்த விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவம் செய்யும் பெருட்டு வெளிநாடு சென்றவன்… சிகிச்சை முடிந்த பின்னும் அவனுக்கு தாயகம் திரும்ப விருப்பமில்லை என்பதைவிட அவன் பொம்மாவின் வார்த்தைகள் அந்த எண்ணத்திற்கு தடைவிதித்தது என்பது தான் உன்மை….


முதலில் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை… கண்டுகொண்ட பின்னும் யாரும் மறுப்பு சொல்லவில்லை….



தன் படிப்பை அங்கேயே தொடர… அவனின் தாய் தந்தை அல்லது தாத்தா பாட்டி யாராவது அவனுடன் இருந்தனர்… படிப்பை முடித்த கையோடு அங்கேயே தொழில் தொடங்க போவதாக அவன் சொல்லவும் அனைவரும் முதலில் அதிர்ந்தாலும் …. அவனின் மகிழ்ச்சிகாக சம்மதம் தெரிவித்தனர் சிலபல நிபந்தனையோடு…. அது வேறு ஒன்றுமில்லை, இங்கு தொழில் தொடங்கினாலும் அதை காரணமாக சொல்லி இங்கேயே செட்டில் ஆக கூடாது என்பது தான்….


தயாவும் அதற்கு சம்மதம் சொல்லி, இதே அவன் தன் நண்பர்களோடு தொழில் தொடங்கி சைதன்யா என சொன்னாலே தொழில் வட்டாரத்தில்" முடிசூடா சக்கரவர்த்தி"…. "சாணக்கியன்" என பெயரெடுத்து… அதை வெற்றிகரமாகவும் நடத்தி கொண்டிருக்கிறான்…



பெங்களூர்….



நாட்கள் காற்றை போல் கடந்துசெல்ல நித்திலா வேலைக்கு சேர்த்து ஒரு மாதம் முழுதாக முடிவுற்றிருந்தது…



ஆரம்பத்தில் வேலையில் சிலபல சொதப்பல்கள் செய்து விஷ்ணுவிடம் திட்டு வாங்கினாலும்.. பிறகு ஓரளவிற்கு அனைத்தையும் பழகி கொண்டாள்… விஷ்ணு எப்படி தவறு செய்தால் காய்ச்சி எடுப்பனோ… அதே போல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்தால் பாராட்டவும் செய்வான்….



விஷ்ணுவின் பார்வையில் நித்திலா சற்று வித்தியாசமாக தான் தெரிந்தாள்… தன்னுடைய வசதி, வேலை மற்றும் தன் தோற்றம் பார்த்து மயங்கும் , தன்னை மயக்க முயலும் பெண்களுக்கு மத்தியில் தன்னை கண்டு மருளும் நித்திலாவின் விழிகளை காண விஷ்ணுவின் மனம் விருப்பம் கெண்டாளும்… அதனை அவன் வெளிகாட்டி கொண்டது இல்லை…. அதற்காக அவளிற்கு தனிசலுகை எல்லாம் வழங்கவில்லை… தன்னிடம் எல்லை மீறும் பெண்களுக்கு சுட்டேரிக்கும் சுரியனாய் இருப்பவன்… இது வரை நித்திலாவின் மேல்

நேரடியாக தன் கோப கதிர்களை வீசியது இல்லை… ஆனால் அதற்கான சூழல் வெகு விரைவிலேயே அமைந்தது….



விஷ்ணுவின் குடும்பம் , அதன் பின்னனி பற்றி யாருக்கும் அவ்வளவாக விவரம் தெரியாது… அவன் வசதியான வீட்டு பையன் என்றும்…. தங்கள் நிறுவனருக்கு வேண்டியவன் என்பது மட்டுமே அனைவரும் அறிந்த விஷயம்…. அலுவலகத்திற்கு பக்கம் உள்ள ஒரு சர்வீஸ் அபார்ட்மென்டில் தங்கி உள்ளான்… அதுவும் தனியாக, அலுவலகம் தொடர்பாக நிகழும் பார்ட்டிகளில் அவன் கையில் ஒரு சில் டின் பீர் வீற்றிருக்கும்… அதனை அவன் அருந்துவான இல்லையா என்பது அவன் மட்டும் அறிந்த ரகசியம்… இதுவரை மதுவினாலும்.. மாதுவினாலும் அவன் நிலை தடுமாறியது இல்லை…. ஆனால் நித்திலாவின் மேல் ஏற்பட்டுள்ளது சலனமா, ஈர்ப்பா அல்லது அதற்கும் அப்பாற்பட்ட உணர்வா என பிரித்தறிய முடியாமல் தடுமாறினான்...



விஷ்ணுவிற்கு பெண்கள் ஒன்றும் புதியவர்கள் இல்லை…. நித்திலாவை விட அழகிய பெண்களை கல்லையும் மண்ணையும் போல் கடந்து வந்தவன்… நித்திலாவை கடந்து செல்கையில் விஷ்ணுவின் கண்கள்அரை நொடியனாலும் அவளில் நிலைத்து விட்டே அகலும்…


விஷ்ணு தனக்குள் ஏற்பட்ட உணர்வினை அடுத்த கட்டத்திற்கு கடத்தாமல் இருக்க… காலம் அப்படியே இருக்குமா என்ன… தனக்கு நித்திலா மேல் ஏற்பட்ட உணர்விற்கு பொருள் அறிந்து அவளை நெருங்கும் பொழுது… பெண்ணவள் அவனின் கோபத்திற்கு இரையாகி அவனை விட்டு பல அடிகள் தூர சென்றிருப்பாள் என்பதினை அவன் அறியவில்லை…



இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் புரஜெக்ட் முடிக்க வேண்டிய நிலையில் இருக்க…. அவரவர் தாங்களின் தலையினை கணினிக்குள் நுழைத்து கொண்டிருத்தனர்…. நித்திலாவும் தன்னிடமுள்ள மூளையை கசக்கி பிழிந்து அந்த புரேகிரமிற்கு கோடிங் டைப் பண்ணிக்கொண்டிருந்தாள்….



நித்திலா எல்லோரிடமும் வலிய சென்று பழகமாட்டாள் என்றாலும் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் நட்பு பாராட்டாமாலும் இருக்க மாட்டாள்….



மாலைக்குள் எல்லோரும் அவரவர்களுக்கு என கொடுத்த வேலையை முடித்து கொடுத்தாக வேண்டிய நிலை…. எல்லோரும் தங்களின் வேலையில் பிஸியாக இருக்க நித்திலாவின் டீம்களில் ஒருவன் விஷால் கலகலப்பான பேர்வழி…. பிரேக் டைம்மில் நித்திலா மற்றும் இன்னும் இருவரோடு ஏதோ சிரித்து பேசி கொண்டிருப்பதை கண்ட விஷ்ணுவிற்கு என்னென்று சொல்ல தெரியாத கோபம் வந்தது… விஷால் மட்டும் பேசி விட்டு போயிருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பனோ என்னவோ… அவன் சொன்னத்திற்கு நித்திலாவும் ஏதோ சொல்லி விஷாலுக்கு இவள் ஹய் பை கொடுக்கவும் … விஷ்ணு கொதிநிலைக்கே சென்றான் என்று தான் சொல்லவேண்டும்…



தன் அறைக்கு வந்த விஷ்ணுவிற்கு நித்திலாவின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது… (தம்பி, அதுக்கு பேர் ஆத்திரம் இல்லை பொறாமை என அவன் மனசாட்சி எடுத்து சொல்ல அதை புறம்தள்ளியவன்).... " அவனோடு என்ன பேச்சி, சிரிப்பு வேண்டி இருக்கு இவளுக்கு தலைக்கு மேல வேலை இருக்கு வேலையா முடிக்கமா வெட்டிய அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கா… இன்னைக்கு வேலையா மட்டும் முடிக்கமா இருக்கட்டும் இருக்கு அவளுக்கு… ஏதாவது சொன்னா

அப்படியே பச்ச புள்ளை மாதிரியே முகத்தை வச்சிக்குவா…" என முடிந்த மட்டும் அவளை மனதிற்குள் வருத்தெடுத்தவன் ஒன்றை சிந்திக்க மறந்து விட்டான்...அவள் யாரோடு பேசினால் என்ன சிரித்தாள் தான் என்ன தனக்கு அவள் மேல் ஏன் இந்த உரிமை உணர்வு என அறியமுற்படவில்லை….



நேரம் கடந்து செல்ல அனைவரும் தங்களின் வேலையை முடித்து விஷ்ணுவிற்கு மெயில் அனுப்ப… அனைவரின் மெயிலையும் விடுத்து

முதலில் நித்திலாவின் மெயிலை திறந்துபார்க்க...வெறும் வாயில் அவளை மென்று கொண்டிருத்தவனுக்கு அவல் கிடைத்தது போல்.... நித்திலா சப்மிட் செய்ததில் சிறு தவறு இருக்க... இது போதாதா அவனிற்கு... நித்திலாவை அழைத்து தன் மனபெறுமலை எல்லாம் வார்த்தையாக்கி அவளை வாட்டி எடுத்து விட்டான்...


" நீங்கயெல்லாம் எதுக்கு வேலைக்குவரீங்க , ஒரு வேலையையும் ஒழுங்க செய்ய தெரியலை... ஆனா வாய் மட்டும் பேச வரும்.... சின்ன வர்க் அதுலையும் மிஸ்டேக் பண்ண எப்படி... கவனம் செய்ற வேலையில் இருந்த தான் தப்பு வாராது... நீங்க வேலை செய்யவா வரீங்க ,ஜஸ்ட் டைம் பாஸ் பண்ணவும், உங்க பாய் பிரொண்ட்ஸ் கூட அரட்டை அடிக்கவும் தானே வறீங்க... "



"ச்சை... எங்கிருந்து தான் எனக்குனு வரங்களோ... இவங்கெல்லம் வேலைக்கு வரலைனு யாரு அழுத... இரிடேடிங் .... ஈர்ரேஸ்பான்சிபில் கூஸ்( Irritating... Irresponsible goose)... "



வந்ததில் இருந்து வார்த்தைகளை அமிலமாக தன்னை நோக்கி அள்ளி வீசி கொண்டிருக்கும் விஷ்ணுவை விழிகளில் நீர் நிறைய பார்த்து கொண்டிருந்தாள் நித்திலா...



நித்திலா செய்தது ஒன்றும் அவ்வளவு பெரிய பிழை இல்லை... சாதாரண கவனக்குறைவால் நேர்ந்த தவறு... அதற்கு விஷ்ணு கூறிய வார்த்தைகள் மிக மிக அதிகம்...


நித்திலாவின் கண்களில் கண்ணீரை கண்டதும் விஷ்ணுவிற்கு என்னமோ போல் ஆகியது....


அவன் அறையிலிருந்து வெளியேறிய நித்திலா… ரெஸ்ட்ரூம் சென்று ஒரு மூச்சி அழுது முடித்தாள்… இதுவரை யாரும் அவளை இப்படி கடிந்து கொண்டது கிடையாது… அதுவும் இவ்வளவு மோசமாக …



இவ்வளவு கடிந்து கொண்டவன் அவள் என்ன பிழை எங்கே செய்தாள் என்பதினை சொல்லவில்லை…



நன்றாக முகத்தில் நீர் அடித்து கழுவியும் அழுத்த தடங்களை மறைக்க முடியவில்லை… முகத்தினை அழுந்த துடைத்து கொண்டவள் தன் கேபின் நோக்கி சென்று…. தான் செய்த கோடிங்கை மறுபடியும் சரிபார்க்க தொடங்கினாள்…


விஷ்ணுவிடம் , எங்கு தவறாக உள்ளது கேட்டு சரி செய்திருக்கலாம்… அவனின் வார்த்தைகள் நித்திலாவை அவனிடம் கேட்க அனுமதிக்கவில்லை….



பொறுமையாக முதலில்லிருந்து செக் செய்து கொண்டிருக்க… தேன்மொழி நேரம் சென்றும் நித்திலா வாரத்திருக்க… இவள் இருக்குமிடம் நோக்கி வந்து கொண்டிருந்தவள் கண்டது கணினியோடு சண்டையிட்டு கொண்டிருந்த நித்திலாவை தான்…



தேன்மொழி என்னவென்று கேட்க… விஷ்ணு திட்டியத்தை கூறாமல்.. கொஞ்சம் வேலை இருக்கு நீ வேணா ரூமுக்கு போ என நித்திலா சொல்ல…



தேன்மொழியோ… அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, " நீ வேலையா முடி நாம ஒண்ணவே போகலாம் என சொல்ல…



நித்திலாவும் , தன் வேலையை பார்க்க தொடங்கினாள்….


நித்திலா கண்களில் கண்ணீரோடு பார்த்திலிருந்து விஷ்ணுவின் மனது ஒருநிலையில் இல்லை… ஏனோ சங்கடமாக உணர்ந்தான்…



அவன் மனசாட்சியோ, திட்டுறது எல்லாம் திட்டிட்டு அப்புறம் என்ன பீலிங் என கலாய்க்க…


நான் ஒன்னும் தேவையில்லாமல் திட்டலையே… அவ தப்பு பண்ண அதுனால ஒண்ணு ரெண்டு வார்த்தை கூடுதலா திட்டி இருப்பேன் என…



டேய்… நீ பேசுனது ஒண்ணு ரெண்டு வர்த்தையாட…. உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை…



மச்… சும்மா நொய் … நொய்ங்காத… அவ தப்பு பண்ண நான் சத்தம் போட்டேன் அவ்வளவு தான்… என மனசாட்சியை ஓரம் கட்டிவிட்டு தன் பணியில் மூழ்கிப்போனான்…



நித்திலா , தன் தவறை கண்டு திருத்துவதற்குள் நேரம் பத்தை கடந்து விட்டது… திருத்தியத்தை விஷ்ணுவிற்கு மெயில் செய்ய…. தன் வேலையில் மூழ்கிருந்தவனை நித்திலாவின் மெயில் பூமிக்கு அழைத்து வர…



நித்திலாவின் மெயில்லை கண்டவுடன் குழம்பியவன்… அவன் சிஸ்டெமில் இணைத்துள்ள அவளின் கேபின் சிசிடிவியை செக் செய்ய… அங்கே நித்திலா தன் கணினி முன் அமர்ந்திருப்பதை கண்டவன்… அவள் அனுப்பிய மெயில்லை செக் செய்ய… அதில் உள்ள தவறு திருத்த பட்டிருந்தது… விஷ்ணுவின் முகத்தில் மெல்லிய புன்னகை… அமுல் பேபிக்கு நான் திட்டுனதும் கோபம் வந்திருச்சி போல… என மனதோடு அவளை செல்லம் கொஞ்சியவன்… அவசர அவசரமாக தன் மடிகணினியை அணைத்து… தன் கார் சாவியை எடுத்து கொண்டு நித்திலாவின் கேபின் நோக்கி சென்றான்…



நித்திலாவோ, தேன்மொழியை எழுப்ப அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்… " ஹனி, ப்ளீஸ் முழிச்சிக்கோடி. ஏற்கனவே டைம் ஆயிடுச்சி.. நீயும் வேற படுத்ததே என…



தேன்மொழியோ… இவளின் பேச்சை எல்லாம் ஏதோ தாலாட்டு போல் கருதி மேலும் நித்திரை கொண்டாள்…



நித்திலாவின் பெருமை தன் எல்லையை கடக்க… தேன்மொழியின் முதுகில் ஒன்று வைத்தால்...அதில் அலறி துடித்து எழுந்த ஹனி… " பிசாசே, ஏண்டி அடிச்சா என அவள் கத்த… நித்திலா ஏதோ சொல்ல வந்தவள் … விஷ்ணுவை கண்டு அமைதி காத்தவள்…



தேன்மொழியை இழுத்து கொண்டு அங்கிருந்து வெளியேற செல்ல… அவளை தடுத்து நிறுத்தியவன்...வாங்க , நான் ட்ரோப் பண்றேன் என



நோ தேங்க்ஸ் என்றவள்… நடக்க தொடங்க .. நித்திலா , இந்த டைம் cab புக் பண்ணி அது வந்து நீங்க கிளம்ப இன்னும் நேரமேடுக்கும்… சோ பெட்டெர் நீங்க என் கூட வாங்க என்றவன் முன்னாள் செல்ல…



யோசித்து கொண்டு நின்றுருந்த நித்திலாவிடம் … தேன்மொழி வாடி போகலாம்… ஏற்கனவே எனக்கு பேசிக்க அரம்பிச்சிடிச்சி… இன்னும் லேட் ஆனா ஒரு பச்ச புள்ளைய பட்டினி போட்டு கொன்ன பாவம் உன்னை தான் வந்து சேரும் என…



அதுவரை இறுக்கமாக இருந்த மனநிலை மாறி சிரித்த நித்திலா வா போகலாம் என தோழிகள் இருவரும் விஷ்ணு வண்டியில் எறிக்கொண்டனர்…



வண்டியில் அமர்த்ததிலிருந்து விஷ்ணுவின் கேள்விகளுக்கு தேன்மொழி மட்டுமே பதில் சொல்லி கொண்டிருந்தாள்… அவர்கள் தங்கியுள்ள இடம் வந்ததும் … இருவரும் நன்றி கூறி விடை பெற்றனர்…


நித்திலாவின் மௌனம் விஷ்ணுவை மிகவும் சோதித்து… அதைவிட பெண்ணவளின் விழிகள் விஷ்ணுவின் முகத்தினை ஏறிட்டு பார்க்கவில்லை.. எப்பொழுதும் விஷ்ணுவை காணும் பொழுதில் அவள் முகத்தில் தோன்றும் வர்ணஜாலம் எதுவும் நிகழவில்லை… அவளின் முகமோ உணர்வுகளை துணி கொண்டுதுடைத்தது போல் வெறுமையாக இருந்தது…


நினைவில் வருவானோ😍😍😍😍😍










 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
19712


அத்தியாயம் 4


அன்றைய நிகழ்விற்கு பிறகு நித்திலா விஷ்ணுவை முடிந்தவரை நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவதை தவிர்த்து வந்தாள்… தவறி அப்படி பார்க்க நேர்ந்தால் பெண்ணவளின் விழிகளிலும் வதனத்திலும் அவனை கண்டவுடன் தோன்றும் வர்ணஜாலங்கள் ஏதுமின்றி வெறுமையை பிரதிபலிக்கும்…




விஷ்ணு முதலில் இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, ஏனெனில் இதுவரை அவன் வேலை சம்பந்தமாக எந்த பெண்ணை திட்டினாலோ அல்லது கடிந்து கொண்டலோ யாரும் பெரிதாக எடுத்துகொள்ள மாட்டர்கள் அதனை அவனை நெருங்கும் ஒரு வாய்ப்பாகவே கருதுவார்கள்…



நாட்கள் தான் கடந்ததே தவிர நித்திலாவின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இன்றி சென்றது… முதலில் நித்திலாவின் கோபத்தினை சிறுப்பிள்ளையின் முகத்திருப்பலக எண்ணி ரசித்தவனுக்கு, கிழமைகள் செல்ல செல்ல அவன் மனதில் எதோ ஒரு சொல்ல தெரியாத வலியை அவளின் பாரமுகத்தினால் உணர்ந்தான்...




விஷ்ணுவினால் எந்த ஒரு வேலையையும் ஈடுபட்டோடு செய்ய இயலவில்லை… நித்திலாவின் வெறுமையான உணர்வில்லாத முகம் விஷ்ணுவை மிகவும் இம்சித்தது… அவள் தன்னை மட்டும் தவிர்க்கவில்லை… தன்னை சுற்றி உள்ளவர்களிடமும் நித்திலா அவ்வாறே நடந்து கொள்கிறாள் என்பதினையும் விஷ்ணு இந்த சில தினங்களாக அவளை உன்றி கவனித்த பொழுது தான் அறிந்து கொண்டான்… அவளின் இந்நிலைக்கு தன் வார்த்தைகளே காரணம் என்ற எண்ணம் அவனுக்கு மேலும் குற்ற குறுகுறுப்பை எற்படுத்தியது…



நித்திலாவிடம் பேசி, இதற்கு விரைவிலேயே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் எண்ணியவன்… அதற்கு சரியான தருணத்திற்காக காத்து கொண்டிருந்தான் … விஷ்ணு எதிர்பார்த்த தருணமும் அமைந்தது… அவர்கள் முடித்து கொடுத்த ப்ரொஜெட் பெரிய அளவில் ரிச் ஆகி அதன் மூலம் இவர்களுக்கு இன்னும் சில புது ப்ரொஜெட்கள் கிடைக்க… அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் ஒரு கெட் டூ கெதெர் அந்த மாத இறுதியில் ஏற்பாடு செய்ய சொல்லி மெயில் வர விஷ்ணு இந்த பார்ட்டியை மையமாக வைத்து நித்திலாவிடம் பேச முயன்றான்…



அன்று வேலை முடிந்து அனைவரும் செல்ல… விஷ்ணு நித்திலவை தன் அறைக்கு அழைத்தான்…



“ நித்திலா, கொஞ்சம் என் கேபின் வாங்க” என்றவன் அவள் மறுமொழி கூறும் முன்னே காலை டிஸ்கனைட் செய்திருந்தான்… எங்கே அவள் மறுத்து பேசி விடுவாளோ என்ற அச்சத்தில் ( டேய், விஷ்ணு எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட)



இன்னமும் அவனிற்கு தன் மனம் புரியவில்லை… அவள் முகம் கசங்கினால் தனக்கு ஏன் வலிக்க வேண்டும் என யோசிக்க வில்லை ( வெரப்ப நாங்க முரட்டு சிங்கில்னு சுத்திகிட்டு இருந்த ஏங்கிருந்து பல்ப் எரியும்… எப்படி மிங்கில் ஆக முடியும்… நெம்ப குஷ்டம்… ச்ச.. ச்ச… கஷ்டம்…)




நித்திலாவிற்கு, விஷ்ணு அழைத்ததும் மனம் படபடக்க தொடங்கிவிட்டது, முதல் முறை அழைத்து அவ்வளவு வசை படியவன்… மீண்டும் அழைக்கும் காரணம் பெண்ணவளுக்கு பிடிப்படவில்லை… தயக்கதோடு தான் அவள் விஷ்ணுவின் அறைக்குள் நுழைந்தாள்…


அவனோ அவள் வந்ததிலிருந்து பெண்ணவளை தான் தலை முதல் பாதம் வரை தன் கண்களினால் அளவிட்டு கொண்டிருந்தான்…

தான் வந்ததிலிருந்து அவனின் பார்வை தன்னை துளைப்பதை அறிந்தாலும் , விஷ்ணுவின் முகத்தினை சற்றும் ஏறெடுத்து பார்க்கவில்லை.. அவளின் பார்வை நிலத்திலேயே நிலைபெற்றிருந்தது…


நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர இருவரும் பேசி கொள்ளவில்லை … நித்திலாவோ “ நீ தானே அழைத்தாய் நான் வந்துவிட்டேன் , ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் நீயே கூறு என்பது போல் அமைதியாக நின்றிருந்தாள்” … பெண்ணவளின் மௌனம் விஷ்ணுவை சினம் கொள்ள வைத்தது… “ இருடி இன்னைக்கு உன்னை பேச வைக்கலை நான் விஷ்ணு இல்லடி” என

மனதோடு சொல்லி கொண்டவன்… “ம்ஹும்” என அதற்கும் நித்திலாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை…


“மிஸ்.நித்திலா, எதையாவது தொலைச்சிடீங்களா ரொம்ப நேரமா கீழவே பார்த்துகிட்டு இருக்கீங்க, சொன்னா நானும் ஹெல்ப் பண்ணுவேன் இல்லையா” என்றான் விஷமமாக…



நித்திலாவிற்கு அவனின் கேலி புரிந்தலும் முகத்தில் எந்த உணர்வினையும் காட்டாது … “ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை , சொல்லுங்க” என்றவள் குரலில் இருந்தது என்ன பாவமோ…


இவ்வளவு பேசியும் பெண்ணவளின் விழிகள் விஷ்ணுவை ஸ்பரிசிக்கவில்லை… அதில் விஷ்ணுவின் மனம் சற்று சுணக்கம் கொண்டது… “ அப்படி என்னடீ பிடிவாதம் உனக்கு”... என அவளை மனத்திற்குள் வருத்தேடுத்து கொண்டிருப்பவனுக்கு எப்படி தெரியும் ஏற்கனவே, அவன் அருகமையில் தன்னிலை இழந்து கொண்டிருக்கும் மனதினை இழுத்து பிடித்து நின்று கொண்டிருப்பவள், நன்கு அறிவாள் தான் அவன் முகத்தினை கண்டுவிட்டாள் நிச்சயம் தன் மனம் தன் வசம் இழந்துவிடும் எப்படி சூரியனை கண்டதும் உருகும் பனித்துளியின் நிலையோ அதேபோல் தான் தன்னிலையும் என அவளுக்கு நன்றாக தெரியும்...


விஷ்ணுவிற்கு தான் தன் மனநிலை புரியவில்லை… ஆனால் பெண்ணவளோ தான் அவன் மீது கொண்ட நேசத்தினை அறிந்திருந்தாள், அதுவும் இந்த இடைபட்ட நாட்களில் ஜயம் திரிபுற தெளிதிருந்தாள் தன் காதலை என்று தான் சொல்லவேண்டும் …



முதலில் விஷ்ணுவின் நடத்தையின் காரணமாக மெல்ல மெல்ல பெண்ணவளின் மனதில் அவன் மீது நல்லெண்ணம் உண்டாக… அவனை கண்டால் ஏனோ தன் மனதிற்கு மிகவும் நெருக்கமானவனாகவும், விவரிக்க முடியாத ஒரு இதம் பரவுவதாகவும் தோன்றியது … நாளாடைவில் அதுவே அவள் அறியாமல் விஷ்ணுவின் மேல் விருப்பமாக மாறியது…

அவள் தான் கொண்டது வெறும் ஈர்ப்பா அல்லது உயிர் தீண்டும் மெய் நேசமா என குழம்பி கொண்டிருக்கையில் அவள் அவன் மீது கொண்டது மெய் காதலே என முகத்தில் அறைவது போல் உணர்த்தியது அவனின் கோபம்…


அன்று, தன்னவனின் சூடுச்சொற்களால் நித்திலாவின் உள்ளம் அனிச்ச மலரென வாடிவிட்டது… தான் என்ன தவறு செய்தோம் என கூறாமல் தன்னவன் உதிர்த்த வார்த்தைக்கள் அதிக வலியை உணர்த்தியது… இருப்பினும் எவ்வாறு தன்னை அவன் அப்படி பேசலாம் என்ற கோபத்தில் தான் அவள் வீம்பாக அன்று தன் தவறை தானே கண்டுபிடித்து திருத்தியது… அதற்கு அவனிடமிருந்து சிறு வருத்தமோ, ஆறுதலோ வார்த்தைக்களில் தேவை இல்லை என்றாலும் ஒரு சிறு பார்வை பெண் மனதை சற்று சமன் படுத்தியிருக்கும்… ஆனால் அவனோ, எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக வந்து அழைக்கவும் பெண்ணவளின் உள்ளம் மேலும் காயப்பட்டது… அந்த வருத்ததில் தான் அவனோடு செல்ல மறுத்தாள்…



காரில் பயணிக்கையில் , “ சரியான ரோபோ… கொஞ்மாச்சி பீல் பண்ணுத பாரு… என்ன தப்புன்னு சொல்லமலேயே அவ்வளவு திட்டி, அழ வெச்சோமே… அப்படியும் அந்த புள்ளை தப்பை திருத்தி இருக்கேனு ஒரு அப்ரிசியேஷன்(Appreciation) இருக்கா…” என அவனிற்கு பாராட்டு பத்திரம் வசித்து கொண்டே வந்தவளின் நியாய புத்தி “நீ பண்ண தப்ப நீதானே சரி செய்யனும்… அதுக்கு அவங்க ஏன் உன்னை பாராட்டி சீராட்டனும்னு உன் மனசு எதிர்பார்க்குது…” என கேள்வி எழுப்ப… அக்கேள்விக்கு நித்திலாவினால் சட்டென பதில் சொல்ல இயலவில்லை…


உண்மை தானே, என் பிழையை நான் சரி செய்தேன்… என் மனம் ஏன் அவனின் பாராட்டினை எதிர்பார்க்க வேண்டும், அதை விட அவனின் கோபம் ஏன் தனக்கு இவ்வளவு வலியை கொடுக்க வேண்டும் என பல ஏன் என்ற கேள்விகள் தனக்குள் கேட்டு கொள்ள… அதற்கு கிடைத்த பதிலோ, உள்ளங்கை நெல்லிக்கனியென அவள் மனத்தினை கூற… அந்த பதிலில் நித்திலாவிற்கோ, ஆயிரம் இதழ் கொண்ட தாமரை தனக்குள் மலர்ந்தது போல் ஒரு சிலிர்ப்பு … அந்த சிலிர்ப்பும் , சந்தோஷமும் அவளுள் நிலைபெற்றது ஒரு நொடியே… தன்னவனின் பெண்கள் மீதான கணிப்பில்… அவளுள் மலர்ந்த நேச மலர் நன்றாக மலர்ந்து மணம் வீசும் முன்பே மூடி கொண்டது...



விஷ்ணு அனைந்து பெண்ணகளிடத்தும் அப்படி நடந்து கொள்பவன் கிடையாது … தொழில் சம்பந்தமாகவோ அல்லது வெளியிடத்தில் சந்திக்கும் பெண்களிடமெல்லாம் மிகவும் மதிப்பும் மரியாதையாகவும் தான் நடந்து கொள்வான்… நீ கேவலம் பெண் தானே என்ற எள்ளளோ, உதசீனமோ அதில் துளியும் இருக்காது…


தன்னிடம் நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகமாக நெருங்க முயலும் பெண்களுக்கு நெருப்பு போன்றவன்… அதுவும் தன் தோற்றம், வசதி கண்டு காதல் என சொல்லி வரும் பெண்களை கொஞ்சமும் நிர்தட்ச்சனம் பாராமல் “ ஐ டொண்ட் வண்ட் அ பெட் டாய்… ஐ நீட் மை சோல் மேட், வென் ஐ மீட் ஹெர் மை ஹெர்ட் டேல்ஸ் மீ… ஷீ இஸ் யூவர்ஸ்… ””(I don’t want a bed toy… I need my soul mate, when I meet her my heart tells me she is yours) அப்படி ஒருத்தியை நான் இதுவரை சந்திக்கலை… அப்படி ஒருத்தி வந்த “ஷீ இஸ் மை லைப்… ஐ ஒன்லி சூஸ் … ஐ டொண்ட் கிவ் தட் சான்ஸ் டூ மை பெட்டெர் ஹல்ப் இட்செல்ப் … சோ பெட்டெர் யூ ட்ரை சாம்ஒன்…(she is my life and I only choose , I don’t give that chance to my better half itself… so better you try some one) என கூறிவிடுவான்...




தன்னையும் அவன்(விஷ்ணு) மற்ற பெண்கள் போல் நினைத்து தன் காதலை எள்ளி நகையாடி விட்டாள், அதுவும் இன்று அவன் தன்னிடம் உதிர்த்த வார்த்தைகளை எண்ணி பார்த்தவளின் மனம் தொட்டற் சிணுங்கியாய் தன்னுள் சுருங்கி கொண்டது… தன் நேசத்திற்கு அவனிடமிருந்து எந்த எதிர்வினையும் வராது போனாலும் பரவயில்லை… தன் காதலை அறிந்து தான் அவன் முன்னே அவமான படக்கூடாது என தனக்குள்ளே தன் காதலை மூடி மறைத்து வைத்து கொள்ள எண்ணம் கொண்டாள்… எங்கே தன்னையும் மீறி தன் நேசம் தன் விழி வழியே வெளிபடுத்தி விடுவோமோ என்ற பயத்தில் தான் அவனின் முகத்தினையும் காணாமல் ஒதுங்கி இருந்தாள் நித்திலா...



ஒதுங்கி சென்றவளை தான் கூப்பிட்டு வைத்து இம்சித்து கொண்டிருந்தான் விஷ்ணு… பெண்ணவளின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லாவ...


“நித்திலா… உட்காருங்க” என்றான் விஷ்ணு…


நித்திலாவோ “ பரவயில்லை சொல்லுங்க…” என


“எனக்கு தெரிஞ்சி இப்ப எந்த முக்கியமான வேலையும் இல்லை.. அப்புறம் ஏன் இவ்வளவு அவசரம் உங்களுக்கு ஏதாவது பெர்சானல் வேலை இருக்க ” என (“ விஷ்ணு உனக்கு நேரம் சரியில்லை”)


விஷ்ணுவின் இந்த கேள்வி நித்திலாவை, சீண்டி விட போதுமனதாக இருக்க… “நான் இங்க ஆபிஸ் வேலை பார்க்க தான் வரேன் … ஏன் பெர்சானல் வேலை பார்க்கவோ இல்லை வெட்டி அரட்டையோ அடிக்க வரலை.. அதுவுமில்லாம ஆபிஸ் டைம் ஒவர்… எதுக்கு வர சொன்னீங்கனு சொன்ன அந்த வேலையை முடிசிட்டு நான் கிளம்புவேன்” என படப்பட பட்டாசாய் வெடித்தாள்…



விஷ்ணு, பெண்ணவளின் கோபத்திற்கான காரணம் அறிந்ததினால் அவள் பேசியதற்கு ஆத்திரம் வருவதிற்கு பதில் அவன் உதடுகள் சிரிப்பில் துடித்தது… இப்பொழுது தான் சிரித்தால் ஏற்கனவே காளியாய் இருப்பவள் பிராளய காளியாய் மாறிவிடுவாள் என உணர்ந்து தன் கிழ் உதடுகளை மடித்து புன்னகைக்கு தடையிட்டவன்… தன் இருக்கையில் இருந்து எழுந்து அவள் அருகில் வர…


நித்திலா, எதோ ஒரு வேகத்தில் அவ்வாறு பேசிவிட்டாள்… பேசிய பிறகுதான், தான் சிதற விட்ட வார்த்தைகளை நினைத்தும்... அதனை அவன் எவ்வாறு எடுத்து கொள்வனோ என்ற பயத்திலும் பெண்ணவளின் மேனி படபடத்தது… தன் பதட்டதினை கட்டுப்படுத்த தன் முன்னிருந்த இருக்கையினை அழுத்தமாக பற்றியிருந்தாள்…


அவள் அருகில் வந்தவன், மேஜை மீது சாய்ந்து தன் மார்பின் குறுக்காக கைகளை கட்டி கொண்டு பெண்ணவளின் முயற்சிகளை எல்லாம் கண்காணித்தவன்… அவளின் பதட்டத்தினை குறைக்கும் விதமாக அவளை வம்பிழுத்தான்…


“அப்ப ரொம்ப சூட இருக்கு ” என


அதுவரை தனக்குள் உழன்று கொண்டிருந்தவள்… அவன் சொன்னதின் பொருள் உணராமல்… தன் அருகாமையில் ஒலித்த குரலில் சற்று திடுகிட்டு பார்க்க அங்கு அவளின் மனமோஹனனோ மங்கையவளை மயக்கும் மோஹன புன்னகையோடு நின்றிருந்தான்…


அவன் அருகாமையிலும் புன்னகையிலும் உறைந்து நின்றிருந்தவளை மேலும் நெருங்கியவன் அவள் தன் பதட்டம் குறைக்க பற்றியிருந்த இருக்கையிலிருந்த அவளின் கரங்களை தட்டி கொடுத்தவன்…


“ரிலாக்ஸ் நித்திலா”, என்றவன் மெல்ல அவள் கைகளை பற்றி அழைத்து வந்து நற்காலியில் அமர செய்தவன்… தானும் அங்கிருந்த மேஜை மீது சாய்ந்து கொண்டவன்… அவளின் கரங்களை மெல்ல வருடி கொடுத்த படியே விஷ்ணு, “அன்னைக்கு நான் எதோ ஒரு கோபத்தில் அப்படி பேசிட்டேன்… பிளீஸ் அதை மறந்துடு என்றவன்… உன்னோட இந்த அமைதி... இட்ஸ் டிஸ்டார்ப் மீ லாட் ( Its Distrub me lot ) … பிளீஸ் ஸ்மையில்” என அவளின் கன்னங்களில் மெல்ல தட்ட , பெண்ணவளும் அவனின் சொல்லுக்கும் செயலுக்கும் உடன்பட்டவளின் இதழ்களில் மென்னகை தோன்றி அவளின் இடபக்க கன்னம் குழிந்தது…




தன் மனதோடு போராடி இதுவரை அவன் முகம் பார்க்க மறுந்தவளுக்கு… இப்பொழுது அவன் முகம் மட்டுமே நினைவில் நிலைத்து நின்றது… தன் சங்கற்பங்கள் சக்கரை பொங்கலாக பெண்ணவளின் முகமோ தன் அகம் காட்டும் கண்ணாடியாய் தான் அவன் மீது கொண்ட காதலை ப்ரதிபலித்தது… அதனை விஷ்ணு உணர்ந்து கொண்டான என்பது அவன் அறிந்த ரகசியமே…





நினைவில் வருவானே:love::love::love::love::love:









 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....


சாரி டியஸ்... ரொம்ப லேட் யூடி தான் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிகோங்க... போன்ல டைபிங்க் பண்ண முடியலை... புது சிஸ்டத்தில் தமிழ் டைபிங்க் பண்ண வரலை... இப்ப தான் கொஞ்சம் கொஞ்சாம பண்ண கத்துகிட்டு இருக்கேன்... இனி ஒழுங்க யூடி போடுவேன்....


இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ... வைட்ங்க் பொர் யூவர் valuable comments...


லவ் யூ ஆல்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:



என்னுடைய இராண்டாவது கதை "பிரிக்க முடியாத பந்தம்"..........
வம்சி கிருஷ்ணா , ப்ரியம்வதா இவங்களை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...


ஒருவேளை நியாபகம் இல்லைனா புத்தகம் வெளியாகி இருக்கி்றது... இந்த புத்தகம் மூலம் மீண்டும் உங்க வம்சி மற்றும் ப்ரியம்வதாவோட பயணிக்க... கீழ்வரும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

அலைபேசி எண்: 9003145479

அல்லது
Udumalai.com - Online Book Store என்ற website மூலம் onlineல் புத்தகம் பெறலாம்...


அன்புடன்

தனசுதா:love::love::love::love::love::love::love::love:
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5


20646


நித்திலா ஒரு விஷயத்தினை கவனிக்கவில்லை… தான் கோபத்தில் சொன்ன வார்த்தைகளை மறந்துவிடு என கூறியவன்… பெண்ணவளிடம் மன்னிப்பை வேண்ட வில்லை…




இருவரின் மோன நிலையும் எவ்வளவு நேரம் நீடித்ததோ முதலில் சுயம் பெற்ற நித்திலா... தன் கரங்கள் தன்னவனிடம் சிறைப்பட்டு இருப்பதை கண்டு பெண்ணவளின் கன்னங்கள் சிவக்க… அதை கண்டதும் விஷ்ணு… “ பேபி, யூ ஆர் ஸோ பியூட்டிபுல் வேன் யூ ப்ளஷ்” (Baby, you are so beautiful, when you blush) என்றவன் மெல்ல அவள் கன்னங்களை வருட… அதற்கு தடையிட்டவள் தன் கைகளை அவனிடமிருந்து விடுவிக்க முயல முயல… விஷ்ணுவோ தன் பிடியை மேலும் இறுக்கினான்… அதில் வலி உண்டாக அவனை எற்றிட்டு பார்த்த பெண்ணவளின் பாவனையில் என்ன கண்டனோ… மெல்ல தன் பிடியை தளர்த்த, அவளோ இதுதான் சமயமேன அவனிடமிருந்து தன் கைகளை விடுவித்து கொண்டு வேகமாக அவன் அறை கதவை திறந்து கொண்டு வெளியேறிவிட்டாள்…



பெண்ணவளின் செயலால் விஷ்ணுவிற்குள் சினம் மூண்டது… தன் அவ்வளவு தூரம் சொல்லிய பின்பும் அவள் தன்னிடமிருந்து விலகியதை அவன் அவள் தன்னை தவிர்பதாக எண்ணிகொண்டான்…


காதல் உரைத்து காதலனாக கரம் பற்றினாலே நாணம் கொண்டு விலகுவது பெண்களின் இயற்கை குணம் … இதில் முன்னுரை, முகவுரை ஏதுமில்லாமல் அவளின் மீது உரிமை கொள்வது முறையல்ல என்று அவனுக்கு யார் சொல்லுவது …



தன் கோபத்தினை கட்டுப்படுத்த அறையின் நீளம் அகலம் அளந்தப்படி… இடக்கரம் கொண்டு தன் பிடாரி முடியை கோதியப்படியே பின்னங்கழுத்தை பற்றி தலையை இட வலமாக திரும்பி இருவிழிகளையும் அழுந்த முடி தன்னை சமன் செய்ய முயன்று, அதில் ஒரளவு வெற்றி பெற்றவன்… தன் நற்காலியில் அமர்ந்து நித்திலாவினை கண்காணித்தான்… விஷ்ணுவிற்கு நன்கு தெரியும் தான் செய்யும் செயல் தவறானது என்று… இருந்தும் மீண்டும் மீண்டும் அவள் புறமே சாயும் தன் மனதினை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை…







தன் இருக்கையில் வந்தமர்ந்த பின்னும் நித்திலாவிற்கு படபடப்பு குறையவில்லை…அவனின் அருகாமை பேதையவளின் காதல் மனதினை தட்டி எழுப்ப… எங்கே இன்னும் சிறிது நேரம் நின்றிருந்தாலும் தானே தன் மனதில் உள்ளதை வாய்மொழியாக சொல்லிவிடுவோமோ என்ற அச்சத்தில் தான் அவனிடமிருந்து விலகி வந்தாள்…


தன் கன்னங்களில் கைவைத்தவளுக்கோ, விஷ்ணுவின் ஸ்பாரிசம் நினைவு வர பெண்ணவளின் கன்னங்களில் அழகான ரோஜக்கள் மலர்ந்து , அவள் இதழ்களில் ஒரு வெட்க புன்னகை மிளிர்ந்தது… இதையெல்லாம் தன் கணினி வழியாக கண்ட விஷ்ணுவின் உதடுகள் இதுவரை கொண்ட இறுக்கம் தளர்ந்து அங்கே ஒரு அழகான முறுவல் தோன்றியது… இருவரும் ஒருவர் நினைவில் ஒருவர் முழ்கி இருக்க…



நித்திலாவினை நினைவுகளிலிருந்து மீட்டது அவளின் அலைபேசி சத்தம், அழைத்தது வேறு யாருமில்லை தேன்மொழி தான்… “ ஹாய்

கிஸ்மிஸ், ஆளில்லாத டீக்கடையில் இன்னும் யாருக்குடி டீ ஆத்திக்கிட்டு இருக்க… உன்னை நான் எப்போ வர சொன்னேன் சீக்கரம் வாடி, எவ்வளவு நேரம் தான் வெறும் வாசனையையே பிடிச்சிக்கிட்டு இருக்குறது… ” என ஹனி புலம்ப …


நித்திலாவோ “ கத்தாதேடி வரேன், அதுக்கு ஏண்டி என் பெயரை இப்படி கொலைய கொல்லுற…” என்றாள் மெல்லிய சிரிப்புடன்


அந்தபக்கம் ஹனியோ, “ கிஸ்மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது என ராகத்தோடு இழுத்து சொன்னவள் … கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம் அப்படினு சோக கீதம் பாடிக்கிட்டு இருந்த இந்த இடைபட்ட நேரத்தில் அப்படி என்ன அதிசயம் நடந்தது … சொல்லுங்க… சொல்லுங்க… என பாட்ஷா படத்தில் வரும் டைலாக் போல் பேசி நித்திலாவை வம்பிழுத்து கொண்டிருந்தாள்…


அவளும் கடந்த சில நாட்களாக பார்த்து கொண்டு தானே இருந்தாள்… நித்திலா , சில நேரம் ஏதோ யோசனையிலும், சில நேரம் இலக்கிலாமல் வெறித்து இருப்பவளிடம் ஏதாவது கேட்டாலும் ஒன்றுமில்லை என கூறி மறுப்பவளை மேலும் அதை பற்றி கேட்டு கஷ்ட படுத்தாமல் … தன் அருகில் இருக்கும் வரை வேறு ஏதை பற்றியும் அவளை சிந்திக்கவிடாது … அதனை ஒரளவு செயல்படுத்தியிருந்தாள்...



தேன்மொழியில் கேள்வியில் எற்கனவே மலர்ந்து சிவந்திருந்த நித்திலாவின் வதனம் மேலும் சிவந்தது… சற்று முன்பு நிகழ்ந்ததை நினைத்து… இவர்களின் உரையாடல்களை பார்த்து கொண்டிருப்பவனுக்கு அந்த பக்கம் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை என்றாலும் நித்திலாவின் இந்த வெட்கமும், புன்னகையும் விஷ்ணுவின் மனதை மேலும் அவள் புறம் சாய்க்க போதுமானதாக இருந்தது…



கணினியில் தெரிந்த அவள் பிம்பத்தின் நெற்றி, கண், நாசி என ஸ்பாரிசித்தவனின் விரல்கள் பெண்ணவளின் இதழ்களை தீண்டும் பொழுது ஒரு நொடி அங்கே நிலைபெற்ற பிறகே தன் பயணத்தினை தொடர்ந்தது, அவளின் கன்னக்குழியினை சுண்டிவிட்டவன் “ யூ மேக் மீ கிரேசி பேபி” என்றவன் தன் இடக்கரம் கொண்டு பிடாரி முடியை கோதி கொடுத்தவன் முகத்தில் வசீகரிக்கும் அழகான புன்னகை….



நித்திலா கிளம்பி சென்ற பின்னும் விஷ்ணு தன் கணினியையே பார்த்து கொண்டிருந்தான்… அவனை நிகழ்விற்கு அழைத்தது அவனின் அலைபேசி… அழைத்தது அவன் நண்பனும் இந்த கம்பனியின் நிறுவனர்களுல் ஒருவனான அர்ஜுன்…


அர்ஜுனும் , விஷ்ணுவும் ஒன்றாக வெளிநாட்டில் படித்தவர்கள்… தன் தந்தையின் தொழிலை கவனித்து கொண்டாலும் தனக்கேன தனி அடையாளம் வேண்டி நண்பர்களோடு இந்த நிறுவனத்தினை ஆரம்பித்து வெற்றிகாரமாக நடத்தி கொண்டிருக்கிறான்…



ஹாய் படி(Buddy), ஹொவ் அர் யூ? பார்ட்டிக்கான அரெஞ்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணிடிய என…



தான் எந்த ஏற்பாடும் செய்யாததினால் விஷ்ணு மௌனமாக இருந்தான்….( அவன் எங்கே பார்ட்டிக்கான அரெஞ்மெண்ட்ஸ் பிளான் பண்ணான்… அவன் நித்திலாவை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு தானே அவன் பிளான் பண்ணான்)



விஷ்ணுவின் அமைதியை தவறாக புரிந்து கொண்ட அர்ஜுனோ அந்த பக்கமிருந்து ம்ச், கமான் விஷ்ணு நீ ஹோப் குடுத்ததுனால தான் இந்த ப்ரொஜெட்டுக்கே நான் ஒகே சொன்னேன்.. நீ சொன்னா மாதிரி அதை சக்சஸ் பண்ணிட்ட… அதுக்கு தான் இந்த பார்ட்டியே… நீ ஏண்டா பார்ட்டி, பொண்ணுங்க சொன்னா இப்படி ஒதுக்கி ஒதுக்கி போறியோ தெரியலை என சலித்து கொள்ள( தம்பி, நீ சொல்றது போன மாச நிலவரம்… இப்ப நிலவரமே வேற )


அர்ஜுனின் புலம்பலில் வாய்விட்டு சிரித்தவன்… “டேய், கொஞ்சம் கேப் விட்டுட்டு புலம்புடா… எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை அதுல கொஞ்சம் பிஸியா இருந்ததுனால இன்னைக்கு எதையும் பிளான் பண்ணலை ( எது ராசா, அந்த புள்ளைய சைட்டு அடிக்குறத) நாளைக்கு கண்டிப்பா எல்லா அரெஞ்மெண்ட்சையும் முடிசிட்டு உனக்கு இன்பார்ம் பண்ணுறேன் ஒகேவா…” என



அர்ஜுனோ, “என்னமோ சொல்லுற நம்புறேன்… எப்பவும் வேலை வேலைன்னு அந்த சிஸ்டமையே கட்டிகிட்டு இருக்காதே… கொஞ்சம் லைப்பை எஞ்ஜோய் பண்ணுடா, அப்புறம் சொல்ல மறந்துட்டேன் நாம கூட படிச்ச ப்ளொர(Flora) கால் பண்ணியிருந்த இந்தியா வர போறளாம் எதோ பிஸுனஸ் டிரிப்… உன்னை பத்தி ரொம்ப விசாரிச்சா…


( ப்ளொர(Flora) இவர்களோடு ஒன்றாக படித்தவள்… இந்தியா வம்சாவளியை சார்த்தவள்… படிக்கும் பொழுதே விஷ்ணுவின் நற்குணங்களை கண்டு அவன் மேல் மையல் கொண்டவள்… அவன் மறுத்தும் இன்னும் அவன் மீது கொண்ட நேசத்தினை எவ்வழியிலாவது அவனுக்கு புரியவைக்கும் எண்ணம் கொண்டவள்… அவளின் எண்ணம் எந்நாளும் நிறைவேறது என்று அவளுக்கு யார் சொல்வது…)


கோபபடாதே டா, அவ இன்னும் உன் நினைபில் தான் சுத்திகிட்டு இருக்க போல , பாவம்டா மச்சான் அந்த பொண்ணு

உன்னை மீட் பண்ண முடியுமானு ரொம்ப கெஞ்சி கேட்டா … என்னால மறுக்க முடியலை… அ… அதனால நாம கெட் டூ கெதெர் பிளான் பண்ண அன்னைக்கு அவளை வர சொல்லியிருக்கேன் …” என அவன் முடிக்கவில்லை



அர்ஜுன் கூறியதை கேட்டு பல்லை கடித்தவன்… “ அஜு, என்னால யாரையும் மீட் பண்ண முடியாது… எனக்கு யார்கிட்டையும் பேச விருப்பம் இல்லை… நான் எற்கனவே என்னொட முடிவு என்னனு தெளிவ எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன்… திரும்ப திரும்ப இப்படி பண்ண என்ன அர்த்தம்… என்னை பத்தி தெரிஞ்சும் நீ ப்ளொர(Flora)க்கு சப்பொர்ட் பண்ணுற…” என



விஷ்ணு கூறியதை கேட்ட அர்ஜுன் தன் மனதிற்குள் நீ இப்படி தான் சொல்லுவேனு எனக்கு நல்ல தெரியும்… (அவ உன்னை லவ் பண்றேன்னு சொன்னப்பவே… நீ அதை அக்செப்ட் பண்ணலை… அத்தோட விட்டிய அவ என்னமோ ஊர் உலகதில் யாரும் பண்ணாததை பண்ண மாதிரி மொத்தமா அவளோட பிரெண்ட்ஷிப்பையும் கட் பண்ணிகிட்ட… இதை அந்த பக்கி புரிஞ்சிக்க மாட்டிங்குது… எடுத்து சொன்னாலும் நான் என்னமோ உங்க காவிய காதலுக்கு குறுக்க நிக்குற மாதிரி பேசுற… என தன்னையே நொந்தவன்…)



விஷ்ணு, நீ சொல்றது எனக்கு புரியுது… பொண்ணுங்க விசயத்தில் நீ எப்படினு எனக்கு தெரியும்… நான் சொன்னா அந்த லூஸு கேட்க மாட்டிங்குது… லாஸ்ட் அண்ட் பைனல் உன் மனசில் என்ன இருக்குனு தெளிவ சொல்லிடு… நீங்க ரெண்டு பேரும் ஒரு தடவை நேரில் பார்த்து பேசுறது தான் எனக்கு நல்லதுனு படுது…” என




ஒரு பெரும்மூச்சினை வெளியிட்டவன், தன் இடக்கையால் பிடாரி முடியை அழுந்த கோதியவன்…” இட்ஸ் ஒகே… வரட்டும் பார்த்துக்கலாம்” என்றான் விஷ்ணு…


அவனின் பதிலில் இதுவரை பிடித்து வைத்திருந்த மூச்சினை வெளியிட்டவன்… “ஒகே டா, பார்ட்டி அன்னைக்கு மீட் பண்ணலாம் சீ யூ சூன்…”என்றவன் அழைப்பினை துண்டித்து விட்டான்…



*****************************************



மறுநாளிலிருந்து அந்த பார்ட்டி வேலையை பார்க்க தொடங்கினான் விஷ்ணு… அந்த பார்ட்டியில் டீம் மெம்பர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்தோடு கலந்து கொள்ளலாம் என்பதினால் அனைவரும் அந்த கெட் டூ கெதரை அவலோடு எதிர்பார்த்தனர்…



விஷ்ணுவின் எண்ணம் முழுவதும் ப்ளொர(Flora)வினை எப்படி சமளிப்பது என்றே… எனெனில், அர்ஜுன் ஒருவனிடம் மட்டும் சற்று நெருக்கமாக பழகுவான் விஷ்ணு அதுவும் ஒரு எல்லையோடு… மற்றவர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பான்.. அதுவும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம்… அப்படிபட்டவனிடம் அவள்(ப்ளொர(Flora)) காதல் என கூறி நெருங்க முற்பட்ட நேரங்களில் எல்லாம் பெண்ணவளின் அருகாமையில் தணலின் தகிப்பை உணர்த்தவனின் மனம் சற்று நேரதிற்கு முன்பு நித்திலாவின் அருகாமையில் மதி மயங்கி நின்றதோடு தானே அவளை விரும்பி நெருங்கியதை தன் மனம் படம்பிடித்து காட்ட… மெல்ல மெல்ல தான் நித்திலாவின் மீது கொண்ட உணர்வுகளை மொழிபெயர்த்ததோடு அதனினும் தெளிவாக தன்னவளின் மனம் தன்வசம் என அறிந்தவனின் முகத்தில் எதனையோ வென்றுவிட்ட புன்னகை…



தன் மனயெண்ணத்தினை தன்னவளிடம் உறைக்க தக்க தருணத்தினை எதிர்பார்த்திருத்தான் விஷ்ணு… அவன் மனம் கவர்ந்தவளோ அவனுக்கு அந்த சந்தர்ப்பத்தினை அளிக்காமல் அவனிற்கு ஆட்டம் காட்டி கொண்டிருந்தாள்…


அன்றைய அவர்களின் நெருக்கதிற்கு பிறகு நித்திலா முடிந்தவரை விஷ்ணுவை தனிமையில் சந்திப்பதை தவிர்த்தாள்…

நித்திலாவிற்கு விஷ்ணுவின் மேல் வானளாவ காதல் இருந்தாலும்… அதை அவனிடம் அவள் வாய்விட்டு சொன்னதில்லை… அவனை தூரத்தில் இருந்தே ரசிப்பாள்… விஷ்ணுவிற்கு அவள் மேல் காதல் உள்ளதா என கேட்டாள் அதுவும் தெரியாது அவளிற்கு….ஆனால் இப்பொழுதெல்லாம் விஷ்ணு இவளை பார்க்கும் பார்வையில் ஒருவித பிடித்தமும் உரிமையுணர்வும் அவன் கண்ணில் மின்னலென தோன்றி மறைவதை கண்டிருக்கிறாள்….



நினைவில் வருவானோ:love::love::love::love::love:
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20961

அத்தியாயம் 6


திருச்சி



இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என பல நாட்களாக போக்கு காட்டி கொண்டிருந்தவன்… இம்முறை அவரை எமாற்றமல் சொன்னபடி வந்தவனை நம்ப முடியாமல் விழி விரித்து பார்த்தப்படி… தன் முன் நின்றவனை கண்களில் கண்ணீர் வழிய அவனை தடவி கொடுத்து கொண்டிருந்தார் அகிலாண்டம்…


“ராசா, எப்படி இருக்க…”என்றார் அகிலாண்டம்


“அகி டர்லிங்க் , நான் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கேன்…” என்றவன் தன் அப்பத்தாவின் கண்களை துடைத்துவிட்டு… “டைய்லி நாம விடியோ கால் பேசிகிட்டு தானே இருக்கோம் அப்புறம் என்ன…” என்றவன் தன்னோடு அவரை அணைத்து கொள்ள…


இவர்களின் அலைபறைகளை பார்த்து கழுத்தை நொடித்து கொண்டார் விசாலாட்சி… “ ம்கும், ரொம்ப தான் பெத்த அத்தா கண்ணுக்கு தெரியலை.. அப்பத்தா கிட்ட கொஞ்சிகிட்டு இருக்கான்”... என மனதிற்குள் தன் மகனை திட்டியவர்… “அத்தை, உங்க பேரனை போய் குளிச்சி முடிச்சி சாப்பிட்ட பிறகு மீதி கதையை பேச சொல்லுங்க என…”

சைதன்யாவோ, தன் அன்னையின் பேச்சில் சிறு புன்னகை உண்டாக தன் பாட்டியிடம் ஒன்றை கண் சிமிட்டி “உனக்கு ஏதாவது கருகுற வாட வருத அகி டர்லிங்க்” என கூறியவன் தன் பாட்டியோடு சேர்த்து தன் அன்னையையும் அணைத்து கொண்டு… “அதை எதுக்கு ம்மா பாட்டிகிட்ட சொல்றீங்க, என்கிட்ட நேரடியவே சொல்லாலமே இன்னும் என் மேல உள்ள கோபம் இன்னும் போகலையா என…” கேட்டவனுக்கு நன்றாக தெரியும் தன் அன்னைக்கு நிலா விசயத்தில் தன் மேல் சிறு வருத்தம் உண்டு என…


ஏனெனில், அவர் எவ்வளவோ சமதானம் சொல்லியும் பிடிவாதமாக அவளை தன்னிலிருந்து விலக்கி வைத்திருந்தனே… ( ஆனால் அவன் தான் தன் பொம்மாவின் மீதுள்ள வீண் கோபத்தில் அனைவரிடமிருந்தும் விலகி இருந்தான்… )


அவள் எப்படி தன்னை மறக்கலாம் என எண்ணி எண்ணியே இவன் அவளை அனுஷணமும் மறக்கவில்லை… தன் பொம்மாவின் உதசீனத்தால் அவளை வெறுத்து விட்டதாக நினைத்து கொண்டிருப்பவன் அறியவில்லை முன்பை விட தான் அவள் மேல் கொண்ட அன்பும், உரிமையுணர்வும் கடுகளவும் குறையவில்லை… அதற்கு மாறாக இத்தனை ஆண்டுகளில் அவனின் அவ்வுணர்வுகள் பலமடங்காக அதிகரித்துள்ளது என்பதனை… ஆனால் அதற்கு அவன் பூசிய வண்ணம் தான் தவறாகி போனது…



கோபம் கொண்டு அவளை விட்டு விலகி இருப்பதாக சொல்பவன்… தன் பொம்மாவை மொத்தமாக தன் வாழ்விலிருந்து விலக்காமல், அவள் தன்னை பிரிந்ததிற்கு தண்டனையாக இனி வரும் காலம் முழுவதும் அவள் தன்னருகிலேயேயிருந்து தன்னையே நினைக்க வேண்டும் என ஆசை கொண்டான்… இது நேசம் கொண்ட மனத்தின் விருப்பமின்றி வேறேன்ன…


அவன் தன் நிலை உணரும் பொழுது… பெண்ணவளின் நிலை என்னவாக இருக்குமோ...




தன் மகனின் வார்த்தைகளை கேட்ட விசாலாட்சி தன் மனச்சுணக்கங்களை எல்லாம் தள்ளி வைத்தவர்… அவனின் கன்னங்களை வருடி “ உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லடா தம்பி…. நீ போய் முதல்ல குளிச்சிட்டு வா சாப்பிடலாம் உனக்கு பிடிச்ச ஆப்பம் காரத்துக்கு ஆட்டுக்கால் பாயாவும், சிக்கன் குழம்பும் இனிப்புக்கு தேங்காய் பாலும் இருக்கு … சீக்கரம் வா” என




தயா , தன் அன்னையின் வார்த்தைகளிலும் வருடலிலும் மனம் மகிழ… “ மை ஸ்விட் மாம்” என தன் அணைப்பை மேலும் இறுக்கியவன்… அப்பொழுது தான் கவனித்தான் தன் தந்தையும்,தாத்தாவும் அங்கில்லாததை…

தன் பார்வையினை சுற்றி சுழலவிட்டவன் தன் தாயிடம் “அப்பாவும், தாத்தாவும் எங்கே ம்மா..” என



விசாலாட்சியோ, “இன்னைக்கு வயல்லா வேலையிருக்குனு விடியகாலையிலேயே உங்க அப்பா வயலுக்கு போயிருக்கார்.. தாத்தா பின்னாடி தோட்டதில் இருக்காரு … நீ குளிச்சிட்டு ரெடி ஆகி வராதுக்குள்ள அவங்க வந்துடுவங்க…” என



தயாவும் “சரி” என கூறி தன் அறைக்குள் நுழைந்தவன் குளிப்பதற்க்காக அங்கிருந்த மரப் பிரோவை திறந்து துண்டினை எடுக்க அங்கே அவன் உடமைகள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது… அதனை பார்த்ததும் தெரிந்தது அன்னையின் செயல் என்று, தான் இங்கு அடிக்கடி வருவதில்லை என்றாலும் அவரின் அன்பை எண்ஂணி அவன் உதடுகளில் புன்னகை மிளிந்தது…



அதே புன்னகையோடு அனைத்தையும் தொட்டு பார்க்க, அவன் கைபட்டு பக்கத்தில் அடுக்கி வைக்கபட்டிருந்த ஆல்பங்கள் சரிய அவை கிழே விழாமல் அவன் பிடித்துவிட்டாலும் அதிலிருந்து ஒன்று தவறி கிழே விழ அதனை எடுத்து பிரித்து பார்த்தவன் கண்களில் அவ்வளவு வாஞ்சையும் ரசனையும் பொங்கி பெருகியது, தன் விரல் கொண்டு அந்த நிழற்படத்திற்கும் வலிக்குமோ என்பது போல் மென்மையாக தீண்டினான்… ஏனெனில் அதில் உள்ளது அவன் பொம்மா அல்லவா… நிழலுக்கு வலிக்க கூடாது என நினைப்பவன் தான் நிஜத்திற்கு வலிக்க வேண்டும் என எண்ணினான்…




மனதில் உவகையொடு வருடி கொண்டிருந்தவனின் விரல்கள் தன் பயணத்தினை நிறுத்தின நிதர்சனம் உணர்ந்து .. அதுவரை அன்பை பொழிந்த கண்களில் ஆத்திரமும் அகங்காரமும் வெளிபட அந்த ஆல்பத்தினை தூக்கி தூர எறிந்தவன் தன் உணர்வுகளை சமன் செய்ய , இடகையினால் தன் பிடாரி முடியினை கோதி கொடுக்க… அவனின் பதட்டம் சற்றும் குறையாமல் அந்த அறைகுள்ளிருப்பது மூச்சி முட்டுவது போல் உணர்ந்தவன் வெளிக்காற்றை சுவாசிக்க விருப்பம் கொண்டு தன் அறையில் உள்ள ஜன்னலினை திறக்க அந்தோ பரிதாபம்… யார் நினைவுகளின் தாக்கத்திலிருந்து விடுபட நினைத்தனோ அவளின் இல்லமே அவன் கண் எதிரில் காட்சியளித்தது…



ஆம், தயா அந்த விபத்திற்கி பிறகு அவனின் பழைய அறையினை அவன் பயன்படுத்த வில்லை… மேலே இருந்த அறையில் தான் தங்கிகொண்டவன் மறந்தும் நித்திலாவின் வீட்டின் பக்கம் உள்ள ஜன்னலை திறக்க மட்டான்… ஏனெனில் தன் பொம்மா சம்பந்த பட்டவற்றை பார்த்தால் தன் மனம் பவீனப்படுவதை ஒத்துக்கொள்ளா மனமில்லாமல் அதற்கு கோபம் என முகமுடி அணிவித்து அவள் நினைவுகள் தரும் அனைத்தையும் தன்னிடமிருந்து தூர வைத்தான் … தன் பழைய அறையினை பயன்படுத்தாதற்கு கூட இது தான் காரணம்…

எந்த நினைவுகள் தன்னை ஆட்கொள்ள கூடாது என தள்ளியிருந்தனோ இன்று ஒன்றன் பின் ஒன்றாக அவன் பொம்மாவின் நினைவுகள் ஆழி பேரலையாய் அவனை சூழ்ந்துக்கொள்ள அதிலிருந்து விடுபட முயலாமல் அதனோடு பயணிக்க அவன் முன்னே காட்சிகள் படமாக விரிந்தன…



அன்று


தன் அத்துவின் பிறந்தநாளுக்கு தான் தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என நேற்றிரவே சொல்லிவிட்டு சென்றிருந்தாள் பொம்மா… அவளின் ஆசைகாக தன் அறையில் அவள் தனக்கு பரிசளித்த உடையில் தயாராகி அவளின் வரவிற்காகவும் வாழ்த்திற்காகவும் காத்திருந்தான் அவளின் அத்து…



தன் எதிரில் அழகாக ஆகாய நீல நிற பிராக் அணிந்து… அதற்கு தோதாக கழுத்தில் ஒற்றை வரிசை முத்து மாலை காதில் ஓற்றை முத்து கம்மல் கைகளில் முத்துக்கள் கோர்த்த ப்ரஸ்லேட்…. என தன் முன்னே தேவதை போல் வந்து நின்று "ஹாப்பி பர்த்டே அத்து" என வாழ்த்தி கன்னத்தில் முத்தமிட்ட தன் பொம்மாவை கண்களில் அன்போடு பார்வையால் வருடி கொடுத்தவன்… அவளின் நெற்றியில் தானும் முத்தமிட்டு அவளுக்கு நன்றி உரைக்க...


அவனின் பொம்மாவோ “ அத்து, நான் தானே உனக்கு பஸ்ட் விஷ் பண்ணென், இல்ல அம்மாச்சி அத்தை யாராவது விஷ் பண்ணீட்டாங்களா” என தன் கண்களை கோலி குண்டேன உருட்டி கேட்க… எப்பொழுதும் அவனை கவரும் அவளின் நயண நார்த்தனத்தினை கண்டு ‘இல்லை’ என புன்சிரிப்போடு தலை அட்டியவன்… அவளின் நெற்றியில் விழுந்த முடிகளை ஒதுக்கி விட்டுக்கொண்டே... “அது எப்படி என் பொம்மா , என்கிட்ட அவ தான் எனக்கு ப்ஸ்ட் விஷ் பண்ணனுன்னு சொல்லிட்டு போயிருக்கும் பொழுது நான் வேற யாராவது விஷ் பண்ணா விட்டுவேன… காலையிலிருந்து நான் ரூமைவிட்டு வெளியில் போகலை உனக்காக தான் வைடிங்க் குட்டிம்மா… இப்ப மட்டும் இல்லை பொம்மா, இனி வரும் என் எல்லா பிறந்தநாளுக்கும் உன்னோட வாழ்த்து தான் எனக்கு முதல் வாழ்த்தா இருக்கும்.. என் பொம்மா எனக்கு சொல்லாத வாழ்த்தை மற்ற யாரையும் சொல்ல விட மட்டேன் என”... அவன் கடைசி வரியை சொல்லும் பொழுது வானில் உள்ள தேவதைகள் அந்நேரம் “ததஸ்த்து” என வாழ்த்தியது போலும்…


தன் அத்துவின் பதிலில் அவன் பொம்மாவிற்கு எது புரிந்ததோ இல்லையோ தன் அத்துவிற்கு தான் தான் முதலில் வாழ்த்து சொன்னோம் என மகிழ்த்தவள், “மை ஸ்வீட் அத்து” என மீண்டும் ஒரு முறை அவன் கன்னத்தில் இதழ் பதித்து... தான் கையோடு கொண்டுவந்த டப்பாவினை திறந்தவள் "அத்து… இந்தா கேசரி அம்மா, உனக்காக செஞ்சாங்க" என தானே அவனுக்கு ஊட்டிவிட… வாயில் வாங்கி கொண்டவன் தானும் சிறிது எடுத்து அவளிற்கு ஊட்டிவிட்டான்… அப்பொழுது அவன் அறியவில்லை... இனி இப்படி ஒரு தருணம் தான் வாழ்நாளில் மீண்டும் வருமா!!! அப்படியே ஒருநாள் வந்தாலும் அதற்கு தான் எத்தனை காலங்கள் காத்திருக்க வேண்டி இருக்குமோ என்று…




தயா, நேரே சென்றது பூஜை அறையிலிருந்த தன் அப்பத்தாவிடம் , அவரின் கழுத்தை பின்னிருந்து கட்டிகொண்டவன் அவர் கன்னத்தில் இதழ் பதிக்க … அவனை தொடர்த்து அவன் பொம்மாவும் அவர் மடியில் அமர்ந்து மற்றொரு கன்னத்தில் இதழ் பதிக்க…


சிறியவர்களின் செயலில் தோன்றிய புன்னகையோடு அகிலாண்டமும் இருவருக்கும் முத்தமிட்டவர் தயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி… குழந்தைகளுக்கு ஆரத்தி ஒற்றி விபூதி இட்டு… மீண்டுமொருமுறை அவன் நெற்றியில் முத்தமிட்டவர்…. அனைவரும் கூடத்தில் ஒன்றாக அமர்ந்திருக்க ஆரத்தி தட்டோடு அங்கு செல்ல… இளையவர்களும் அவரை பின்பற்றினர்…




ஜம்புலிங்கமோ, “ வாடா ராசா” என பேரனை தூக்கி தன் மடியின் ஒரு புறம் அமர்த்தி கொண்டவர்… மறுபுறம் நித்திலாவை அமர்த்தி கொண்டு தன் மனைவியை பார்க்க… அவரோ, தன்னவரின் பார்வையின் பொருளுணர்ந்து தன் சுருக்குப்பையில் இருந்து இரு நகைப்பெட்டியை எடுத்து கொடுக்க… அதில் ஒரே மாதிரி ரெண்டு டாலர் சங்கிலிகள் இருந்தன… அந்த டாலர்கள் இரண்டும் பார்ப்பதற்கு சாதாரண ஆலிலை போல் இருந்தாலும் அதனை சுற்றிலும் வெண்மை நிற கற்கள் பதிக்கப்பட்டு ஆங்கிலத்தில் SN

என்ற எழுத்துக்களை சுற்றி பச்சை கற்கள் பதித்து (S என்ற எழுத்து பவளத்திலும், N என்ற எழுத்து முத்துகள் கொண்டும் ) ஒன்றோடு ஒன்று இனைந்தது போல் நன்றாக உற்று பார்த்தால் அன்றி தெரியாதது போல் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது…



ஒரு சங்கிலியை தயவிற்கும், இன்னொன்றை நித்திலாவிற்கும் அணிவிக்க… விசாலாட்சி பெரியவர்கள் இருவரிடமும் ஆசிர்வாதம் பெற சொல்ல, தயாவும் அவர்களின் தாழ் பணிந்த்தான் தன் அத்துவை தொடர்த்து அவனின் பொம்மாவும் அவர்களை பணிய இவர்களை பெற்றவர்களும் சரி அவர்களை பெற்று வளர்த்தவர்களும் சரி அனைவரின் மனமும் சந்தோசத்தில் நிறைய…



ஜம்புலிங்கம் தம்பதியர் தயா மற்றும் நித்திலாவின் தலையில் கைவைத்து மனமாற “ தீர்காயுசோட ரெண்டு பெரும் நல்ல இருக்கனும் “ என வாழ்த்தியவர்கள் இன்று நடக்க போவதை முன்பே அறிந்திருந்தால் “ இருவரும் இப்பொழுது இருப்பது போல் எப்பொழுதும் இணைப்பிரியாமல் இருக்க வேண்டும்” என வாழ்த்திருப்பர்களோ… விதியை யார் வெல்ல கூடும்…




நினைவில் வாருவானோ:love::love::love::love::love:



ஹாய் பிரெண்ட்ஸ்....


இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ... வைட்ங்க் போர் யூவர் valuable comments...


லவ் யூ ஆல்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:


என்னுடைய இராண்டாவது கதை "பிரிக்க முடியாத பந்தம்"..........
வம்சி கிருஷ்ணா , ப்ரியம்வதா இவங்களை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...


ஒருவேளை நியாபகம் இல்லைனா புத்தகம் வெளியாகி இருக்கி்றது... இந்த புத்தகம் மூலம் மீண்டும் உங்க வம்சி மற்றும் ப்ரியம்வதாவோட பயணிக்க... கீழ்வரும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

அலைபேசி எண்: 9003145479

அல்லது
Udumalai.com - Online Book Store என்ற website மூலம் onlineல் புத்தகம் பெறலாம்...


அன்புடன்

தனசுதா:love::love::love::love::love:

 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7
21529


பெரியவர்களை தொடர்ந்து ராஜேந்திரன், விசாலாட்சி ராஜசேகர் வசுமதி என அனைவரும் தயாவை வாழ்த்த… ஜம்புலிங்கம் அகிலாண்டம் தம்பதியர்களை தவிர்த்து மற்றவர்கள் திருச்சி நோக்கி பயணப்பட்டனர் தயாவின் பிறந்தநாளை முன்னிட்டு… இந்த பயணம் தங்களின் குடும்பத்தையே குலைத்துவிடும் என அறிந்திருந்தால் சென்றிருக்க மாட்டார்களோ என்னவோ…



அவர்கள் முதலில் சென்றது 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற ஒன்றான பல ஆழ்வார்களினால் மங்களாஸாசனம் செய்யப்பட்டு… சுடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளை ஆட்கொண்ட ஸ்தலமான அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு தான் … ஸ்ரீ தேவி பூதேவி தாயரோடு சயனத்திற்கும் பெருமாளை தரிசித்து விட்டு மதிய உணவையும் முடித்து கொண்டவர்கள் சிறிது நேரம் அங்கேயே இளைபாறிய அவர்களின் வாகனம் மலைக்கோட்டை நோக்கி பயணித்தது…



மலைக்கோட்டைக்கு பற்பல சிறப்புகள் இருந்தாலும் நம்மில் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது மலை மீது வீற்றிருக்கும் அந்த பானை வயிற்றணை தான்…


அந்திசாயும் வேளையில் கதிரவனின் வெம்மை குறைந்து மாலை தென்றல் வீச அனைவரும் மலை ஏற தொடங்கினார்கள்… அதுவும் தயா மற்றும் அவனின் பொம்மா இருவருக்கும் அவ்வளவு ஆனந்தம் போட்டி போட்டுக்கொண்டு மலை ஏறினார்கள்… இன்னும் சிறிது நேரத்தில் நிகழப்போகும் விபரீதம் அறியாமல்



இந்த கோவில் அமைந்துள்ள மலை மிக மிக பழமை வாய்ந்தது… இக்கோவில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது… தரையிலிருந்து 273 அடி உயரத்தில் அமைந்துள்ளது இக்கோவில்… பிள்ளையார் சன்னதியை அடைய கிட்ட தட்ட நானூறுக்கும் மேற்பட்ட படிகளை ஏற வேண்டும்…


மேலும் அம்மலையிலேயே தாயுமானசுவாமி ஸமேத மட்டுவார்குழலி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்… இந்த இறைவனுக்கு இந்த பெயர் வர காரணமும் சுவையானது...



“முன்பு ஒரு காலத்தில் இரத்தினாவதி என்ற ஒரு சிவபக்தை இருந்தாள். அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வரமுடியவில்லை.இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும்... இதனாலேயே இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு தாயுமானசுவாமி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.


குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாகவும் இந்த சிவஸ்தலம் விளங்குகிறது.”


கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள்.


சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்ற பெயரும் உண்டு. வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள்.கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.




“ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதிநாத

மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்

சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ

ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!”


மேலே உள்ள ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் தினமும் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்பிரசவம் ஆகி பரம ஷேமங்கள் ஏற்படும்.



{ பிரெண்ட்ஸ் மேலே கொடுத்து இருக்குறது ஜஸ்ட் ஒரு இன்போர்மேசன் மட்டுமே… விருப்பம் உள்ளவங்க படிங்க… இல்ல ஜஸ்ட் ஸ்கிப் இட்)




பொன்னி நதி பொங்கி பெருக வரமருளிய பொல்ல பிள்ளையினை தரிசித்து விட்டு… அந்த மலை உச்சியிலிருந்து அந்நகரத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்… மலையிலிருந்து சுற்றிலும் பார்க்க… தூரத்தில் தெரியும் ஸ்ரீரங்கத்தின் கோபுரமும் … வெள்ளியை உருக்கி சிறு இழையாய் ஊற்றியது போல் தோற்றமளிக்கும் காவிரி என காண அத்தனை ரம்மியமாக இருந்தது … இருள் படர்ந்த பின் மலைமேலிருந்து பார்க்க ஊரே ஒளிவெள்ளத்தில் மிகவும் அழகோடு காட்சியளித்தது… அக்காட்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டது…



கண்களில் மலைக்கோட்டையின் எழில் நிறைய… உள்ளத்தில் உவகை பொங்க அனைவரும் கீழ் இறங்கினார்கள்… அங்கே கோயில் வாசலில் வண்ண வண்ண பலூன்கள் விற்க… நித்திலா அதனை ஆசையாக பார்ப்பதை கண்டு ராஜேந்திரன் ஆளுக்கு இரெண்டு வாங்கி கொடுத்தார்… தயாவோ தன்னுடையதையும் அவனின் பொம்மாவிற்கே கொடுத்தான்…



ஒன்றுக்கு நான்கு பலூன் கிடைக்க நித்திலாவிற்கு மிகவும் சந்தோஷம்… நான்கையும் தொட்டு தொட்டு பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்… அதை பார்த்த அவளின் தாய் வசுமதி ஒன்றை மட்டும் அவள் கையில் கொடுத்து மீதியை வண்டியில் வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் வாங்கி கொள்ள… பலூன் கை மாறியவுடன் நித்திலாவின் பார்வை அங்கிருந்த கடைகளின் மேல் பதிய… தன் அத்துவின் கைகளை சுரண்டினாள்…


தயாவோ அவளை என்னவென பார்க்க… அவளோ அங்கிருந்த சொப்பு கடைகளை கண்களால் சுட்டி கட்ட… அவளின் ஆசையினை கண்டுகொண்டவன்… தன் தாயிடம்

“அம்மா, நாம இந்த கடைகளை கொஞ்ச நேரம் சுத்தி பார்த்துட்டு போகலாம்” என நித்திலாவையும் கடைகளையும் கண்களினால் குறிப்பு காட்டி கூற…


விசாலாட்சியும் புரிந்து கொண்டு… “ அண்ணி, நாம கடைத்தெருவை கொஞ்சம் சுத்தி பார்த்துட்டு வரலாம்… அதுக்குள்ள அவங்க வேணா போய் வண்டி எடுத்துக்கிட்டு வரட்டும்…” என வசுமதியும் சரியென சொல்லி தன்னிடம் உள்ள பலூனை தன் கணவரிடம் கொடுத்தார்…


ஆண்கள் இருவரும் வண்டியை எடுத்து கொண்டு அப்படியே குழந்தைகளுக்கு இரவுணவு வாங்கி வருவதாக சொல்லி சென்றனர்… ஏனெனில், ஊர் போய் சேரும் முன் எப்படியும் உணவு வேளை கடந்து விடும்… இப்பொழுது அவர்களை உணவுண்ண அழைத்து சென்றாலும் உண்ண மாட்டார்கள்… இன்னும் உணவிற்கான நேரம் ஆகவில்லை… அதுவுமில்லாமல் சற்று முன்னர் தான் குழந்தைகள் இருவரும் பால் அருந்தி இருந்தனார்… ஆகையால் வாங்கி வந்து வைத்துவிட்டால் போகும் வழியில் உண்டு கொள்ளலாம் என்ற எண்ணத்தில்...



அவர்கள் அந்த பக்கம் செல்ல பெண்களோ பக்கத்தில் இருக்கும் கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்… கோவிலுக்கு பக்கவாட்டில் உள்ள தெரு அது ஆகையால் வாகனங்களின் பயமின்றி சிறியவர்களை முன்னே விட்டு விசாலமும், வாசுகியும் பின்தொடர்ந்தனர்…


நித்திலாவோ, தன் அத்துவின் கரம் பற்றி அங்கிருந்த கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு அதில் உள்ளவற்றை பற்றி அவனிடம் கேள்வி கேட்டு கொண்டே நடந்து வந்தவள் ஒரு கடையின் முன் நிற்க... அங்கே மர சொப்புகள் மற்றும் சின்ன சின்ன ஸ்டீல் சொப்புகள் நிறைய பரப்பி வைக்க பட்டிருந்தது….


இருவரும் கடை முன் நிற்பதை கண்ட விசாலாட்சி… “ என்னடா அம்மு, ஏதாவது வேணுமா” என… அவளோ தன் எதிரில் கை காட்டி “ அத்த, சொப்பு” என அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளின் அன்னையோ… “அடியேய், வீட்டுல அவ்வளவு வாங்கி குமிச்சு வச்சிருக்க… திரும்பவும் அதையே வாங்கி தர சொல்லி கேக்குற…” என



நித்திலாவோ “ ம்மா… வீட்டுல உள்ள சொப்புல இந்த மாதிரி குடம் இல்லை அப்புறம் தோச கரண்டி இல்ல, உரல் தான் இருக்கு அம்மி இல்லை என எதோ கல்யாண சீர்வரிசை பொருளில் அது இல்லை இது இல்லை என்பது போல் லிஸ்ட் சொல்லிக் கொண்டிருந்தாள்…


“ அத்தை விடுங்க அவ ஆசைப்படுவதை வாங்கட்டும்” என்று தயாவும், “விடுங்க அண்ணி” என விசாலாட்சியும்… ஒன்று போல் இருவரும் சொல்ல…



வசுமதியோ “அதானே அம்மையும் மகனும் ஒன்னு சேர்ந்துடீங்களா… இனி நான் சொல்றதை கேட்கவா போறீங்க…” என அலுத்து கொண்டவரின் குரலில் துளியும் கோபமோ வருத்தமோ இல்லை…



தன் அன்னைக்கு நாக்கை துருத்தி பழிப்பு காட்டியவள்… தன் அத்துவிடமும், அத்தையிடமும் தனக்கு என்ன என்ன வேண்டும் என சொல்ல ஆரம்பித்தாள்… சொப்பு வாங்கும் ஆர்வத்தில் கையில் இருக்கும் பலூனை கவனத்தில் கொள்ளாமல் அவளின் பிடி தளர ஒரு கட்டத்தில் பலூனை கை நழுவ விட்டிருந்தாள்…


அந்நேரம் காற்றும் வீச பலூன் அவளின் கைகளில் சிக்காமல் செல்ல அவளும் அதன் பின்னே சென்றாள்… பெரியவர்கள் இருவரும் இவள் சொல்லிய பொருட்களை வாங்குவதில் கவனமாக இருக்க… தயாவும் கூட தன் பொம்மாவிற்கு இன்னும் என்ன வாங்கலாம் என்று பார்த்து கொண்டிருந்தவன்… இன்னும் ஏதேனும் வேண்டும என கேட்க அவள் பக்கம் திரும்ப… தன் அருகில் அவளை காணாது பார்வையினை சுழற்ற அவளோ பலூனை தூரத்தி கொண்டிருந்தாள்…



அதனை பார்த்ததும் தயாவிற்கு கோபம் வந்தது… “ லூசு... லூசு, தெரியாத இடத்துல தனியா போகுது பாரு… என்கிட்ட சொன்னா நான் போய் எடுத்து தர மாட்டேனா…” என தன் பொம்மாவை வருத்தேடுத்தவன்… தங்களின் அன்னையர்களின் கவனத்தினை கவராமல் அவளை பின் தொடர்த்தான்… பின்னே அவர்களுக்கு தெரிந்தால் அவளை கடிந்து கொள்வார்களே… அந்த உரிமை கூட தனக்கு மட்டுமே உண்டு என நினைத்தவன் வேக வேக எட்டுக்களை வைத்து அவளை நெருங்குவதற்குள் அவனின் பொம்மாவோ அந்த தெருவின் கடைசி விளிம்பிற்கு சென்றிருத்தாள்… அது இன்னொரு தெருவோடு இணைத்திருக்கும் குடியிருப்புகள் நிறைந்த
நான்கு வழி கிளை தெரு …


நித்திலா சுற்றுபுறத்தினை கருத்தில் கொள்ளாமல் பலூனை கைப்பற்றுவதில் தன் மொத்த கவனத்தினை செலுத்த... அங்கு வந்த அந்த இருசக்கர வாகனத்தினை பார்க்காமல்
தெருவைக் கடக்க முயல… திடீர் என அந்த தெருவிலிருந்து ஒரு குழந்தை ஓடிவரும் என எதிர்பார்க்காத வாகன ஓட்டியும் நிலை தடுமாற... அதற்குள் நிலாவின் அருகில் வந்துவிட்ட தயா வாகனத்தினை கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்தவன்... மறுநொடி எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் பொம்மாவை காப்பாற்றுவது ஒன்றே குறியாக அவளை பிடித்து இழுக்க அதில் தன் சமநிலை தவறி அவனும் விழுந்தான்... தயா விழுந்த இடத்தில் வீடு கட்ட சிறிய மற்றும் பெரிய ஜல்லி கற்கள் குவிந்து வைத்திருக்க... அதில் அவன் குப்புற விழ அவனின் ஒரு பக்கம் முகம் முழுவதும் அந்த கற்கள் குத்தி கிழித்து காயம் ஏற்பட்டது முகத்தில் இரத்தம் வழியும் அந்நிலையிலும் தன் பொம்மாவின் நிலை அறிய அவளை நெருங்க… நிலாவோ அங்கு இருந்த மணற்பரப்பில் விழுந்ததால் அவளுக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை நெற்றியில் சிறு காயமும் கையில் சிராய்ப்பு மட்டுமே… ஏற்கனவே விழுந்த அதிர்ச்சியில் இருந்தவளின் அருகே தயா செல்லவும் இவனின் ரத்தம் தோய்ந்த முகத்தைக் கண்டு மயக்கமுற்றாள்...


திடீரெனத் தோன்றிய சலசலப்பில் கடைவீதியில் இருந்தவர்கள் அப்பொழுதுதான் குழந்தைகள் மீது கவனத்தைத் திருப்ப குழந்தைகள் இல்லாமல் போக… பக்கத்தில் எங்காவது இருப்பார்கள் என்று தேடிக் கொண்டிருந்தவர்கள்… தங்களை கடந்து சென்றவர்கள் அங்கே இரு குழந்தைகளுக்கு அடிபட்டுள்ளது என தங்களுக்குள் பேசி செல்ல… இவர்கள் இருவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கே செல்ல நிலா மயக்கத்திலும் அவளின் அருகே தயா முகம் முழுவதும் ரத்தம் வழிய அவளின் கன்னங்களை தட்டிக்கொண்டு இருந்தான்…


"பொம்மா… ஏய்… பொம்மா இங்க என்ன பாரு… கண்ணத் தொறந்து பாரு"...என கூறிக் கொண்டு இருந்தவன் தன் அன்னை மற்றும் அத்தையை பார்த்தது … "ம்மா பொம்மாவை கண்ண முழிச்சு பார்க்க சொல்லு"என அவர்களிடம் சொல்லியபடியே மயங்க… வசுமதி தன் அண்ணன் மகனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள … விசாலாக்ஷியோ தன் மகனின் நிலை கண்டு தடுமாறியவரை... வசுமதி சத்தமாக அழைத்து தன்னிலை அடைய செய்தவர்... " அண்ணி, சீக்கரம் அண்ணானுக்கு கால் பண்ணுக்க" என்றவர் தன் கைகுட்டையினை அருகில் இருந்தவர்களிடமிருந்து நீர் வாங்கி நனைத்து... வெட்டிய இடத்தில் வைத்து அழுத்தி பிடித்து ரத்தபொக்கை கட்டுப்படுத்த... அதற்குள் சுதரித்து கொண்ட விசாலாட்சியும் தன் கணவனுக்கு அழைக்க ஆண்கள் இருவரும் விரைந்து வர... நிலா மற்றும் தயா இருவரையும் ஹாஸ்பிட்டலில் சேர்க்க…



நித்திலாவிற்கு பெரிதாக எந்த அடியும் இல்லை என்றாலும் அவளின் மயக்கம் இன்னமும் தெளியவில்லை... தயாவின் முகத்தில் இருந்த கற்களின் துணுக்குகளை அகற்றி வெட்டு பட்ட் இடத்தில் தையல் போட்டு என அனைத்தும் செய்ய... தயாவின் முகமோ பார்ப்பதற்கு சிகப்பாகவும் கற்கள் குத்தியதால் குழிகளும்... தையல் போட்டதினால் உண்டான வடு என பார்ப்பதற்கு விகாரமாக இருந்தது… மயக்கம் தெளிந்த உடன் தயா அவ்வளவு வலியையும் பொறுத்துக் கொண்டு தன் பொம்மாவைப் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மருத்துவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவளின் அறைக்குள் நுழைந்தான்...


தயா அறையில் நுழைவதற்கும் நிலாவின் மயக்கம் தெளிவதற்கும் சரியாகஇருக்க… அவள் கண் விழித்ததை கண்டவுடன் அவளருகில் வேகமாக நெருங்க… நித்திலா சுற்றும் முற்றும் பார்த்தவளின் பார்வை நிலைத்தது தயாவின் முகத்தில் தான்... அவன் முகத்தில் உள்ளகாயம் கண்டு பயமும் அருவெறுப்பும் தோன்ற அதை அப்படியே தன் முகத்தில் பிரதிபலித்தவள் தன் தந்தையை கட்டிக்கொண்டு ஏய், யாரு நீ உன்னை பார்க்கவே பயமா இருக்கு" ப்ளீஸ் கிட்ட வராதே…வராதே… போ… போடா இங்க இருந்து… அப்பா யாரு இவன் இவனை இங்கிருந்து போக சொல்லு" என ஆவேசம் வந்தது போல் நித்திலா கத்த


ஏற்கனவே தன் பொம்மாவின் முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்டு மனம் வருத்தம் கொண்டவன் அவள் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியது... தன்னை தான் சொல்கின்றளா என சுத்தி முத்தி பார்த்தவன் கண்களின் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பம் பார்த்தவன் அதிர்ந்து போனான்... இப்பொழுது தன் பொம்மாவின் வார்த்தைகளுக்கான அர்த்தம் புரியவும் தன் மொத்த உலகமும் ஒரு நொடி ஸ்தம்பித்து போல் அசையாமல் நின்றவனின் பார்வையை தன் பொம்மாவின் மேல் இருந்து அகற்றாமல் அந்த அறையை விட்டு செல்ல முயன்றவனிடம்
ராஜசேகர் எதையோ சொல்ல வர, அவரை தன் கை நீட்டி தடுத்தவன் வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டான்

வெளி வந்தவனின் மனதில் அவன் பொம்மாவின் வார்த்தைகள் கல்வெட்டாக நிலைக்க... தன் தாய் தந்தையை அழைத்தவன் தன்னை வேறு மருத்துவமனைக்கு மாற்ற சொல்லி பிடிவாதம் பிடிக்க... யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை... மருத்துவர்களும் அவன் முகத்திற்கு சிகிச்சை பெரும் பொருட்டு சென்னைக்கு அழைத்து செல்ல சொல்ல... தயாவின் குடும்பம் சென்னை நோக்கி பயணப்பட்டது... அன்றைய நிகழ்விற்கு பிறகு தயா நித்திலாவை சந்திக்க முயலவில்லை... என்னதான் அவள் மீது கோபம் இருந்தாலும் அவனின் அடிமனதில் தன் பொம்மா தன்னை காண வருவாள் என்ற எண்ணம் பேரஆசையாக இருந்தது... ஆனால் நாட்கள் தான் கடந்ததே தவிர அவன் பொம்மா அவனை தேடி வரவில்லை...

ஏற்கனவே பிடிவாதம் அதிகம் உள்ளவன்... அதன்பிறகு முசுடகவும் மாறி போனான்... எந்தளவிற்கு என்றாள்... மருத்துவர்களே அச்சர்யம்படும் அளவிற்கு அவன் வயதிற்கு மீறி வலியை தாங்கி கொண்டு தன் சிகிச்சையை வெற்றிகாரமாக முடித்தான்... ஆனால் அவன் ஒரு விஷயத்தை கவனிக்க வில்லை மூச்சுக்கு மூச்சுக்கு முன்னூறு தடவை அத்து அத்து என்று அழைப்பவள்… தான் அவளை இழுத்து கீழேவிழும் பொழுதும் அப்படி அழைக்கவில்லை மயக்கம் தெளிந்து எழும்பொழுது அழைக்கவில்லை என்பதை அவன் கருத்தில் கொள்ளவில்லை...


தன் நினைவுகளிலிருந்து மீண்டவன் மனதில் 'எவ்வளவு அழகாக அன்பாக ஒற்றுமையாக இருந்த குடும்பம் அவளின் ஒற்றை சொல்லினால் தானே… தான் தன் அன்னையையும் மற்ற அனைவரையும் விட்டு பிரிந்து அவர்களின் அன்பை அருகிலிருந்து அனுபவிக்க முடியாமல் தவித்தேன்… ஆனால் அவளோ தன் தாய் தந்தையுடன் என்னை மறந்து மகிழ்ச்சியோடு இருக்கிறாள் என்ற எண்ணம் தோன்றி அவனின் அகத்திலும் புறத்திலும் வெம்மை பரவ செய்ய'… குளியலறைக்குள் சென்றவன் நீருக்கு அடியில் நிற்க அந்த குளிர்ந்த நீரால் கூட அவன் வெம்மையை தணிக்க இயலவில்லை...


சைதான்யா, குளித்து வருவதற்குள்… ராஜேந்திரனும் ஜம்புலிங்கமும் வந்திருக்க.. இருவரும் அவனின் நலம் விசாரித்து மற்றைய விசயங்களை பேசி கொண்டே உண்டு முடித்தனார்.அவர்களின் பேச்சி அங்கே இங்கே என சென்று கடைசியில் தயாவின் திருமணத்தில் வந்து நின்றது…


விசாலாட்சி தன் மகனிடம், “இத்தனை நாள் தான் வேலை அது இதுனு எதேதோ காரணம் சொல்லி கல்யாணத்தை தள்ளி போட்ட… இப்பதான் உன் பிஸ்னெஸ் கூட நல்ல போறத அப்பா சொல்றங்க… அதனால இந்த வருஷத்துக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணிடனும்னு நாங்க ஆசை படுறோம்” என்றார்...


அதுவரை முகத்தில் இளநகையோடு பேசி கொண்டிருந்தவன்… தன் திருமணம் பற்றி பேச்செழுந்தவுடன் அவனின் முகம் இறுகி போனது…


அதே இறுக்கத்தோடு “ ம்மா, இன்னும் ஒரு வருஷம் போகட்டும்…” என


விசாலாட்சியோ, “என்ன தயா , விளையாடுறிய உனக்கு இப்பவே முப்பது வயசு ஆயிடுசிச்சி… இன்னும் இன்னும் நாள் கடத்திட்டே போன என்ன அர்த்தம்… உன் மனசில் யாராவது இருந்த சொல்லு அது யார இருந்தாலும் நாங்க போய் பேசுறோம் ( இதை சொல்லும் பொழுது விசாலாட்சியின் மனம் தன் மகன் நிலாவை பிடித்திருக்கிறது என சொல்ல மட்டானா என மிகவும் எதிர்பார்த்தது…)

இல்லைனா நாங்க பார்க்கிற பொண்ணுக்கு சரி சொல்லு... உன் வயசில் உள்ள பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி அவனவன் பொண்டாட்டி பிள்ளைன்னு இருக்கும் பொழுது நீ மட்டும் இன்னும் ஒத்தைய இருக்கையில் எப்படி இருக்கு தெரியுமா…” என முதலில் கோபமாக ஆரம்பித்தவர் கண்களில் கண்ணீர் வழிய ஆதங்கமாக முடிக்கவும் தயாவிற்கு வருத்தமாக இருந்தது…



“பீளிஸ் ம்மா, நான் என்ன கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னா சொன்னேன்… எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ஒரு ஒரு வருஷம் கழிச்சு நீங்க சொல்ற பொண்ணு யாராயிருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என


“ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்றதுக்கு இப்பவே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னடா வந்தது அந்த ஒரு வருட காலத்தில் என்ன பண்ண போற வயசு உனக்கு என்ன குறையுதா… நானும் உங்க அப்பாவும் நல்லா இருக்கும் பொழுதே உன்னோட கல்யாணத்தை முடிக்கணும் ஆசைபடுகிறோம் இப்ப பார்க்க ஆரம்பிச்சா தான் இன்னும் ஆறு மாசத்துக்குள்ள முடியும்” என..


தயாவோ, இயலாமையுடன் தன் அப்பத்தா பார்க்க அவரே, “விடு விசாலம் அவன்தான் ஒரு வருஷம் கழிச்சு பண்ணிக்கிறேன் சொல்றான்ல விடு... அவன் சந்தோஷமா இருக்க தானே கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுகிறோம்… இப்ப அவனுக்கு அதுல விருப்பம் இல்லைனா அவனை எதுக்கு கட்டாயப்படுத்தி கிட்டு இருக்கா” என


விசாலாட்சியோ மகனையும் மாமியாரையும் முறைக்க...


தயாவோ, தன் அன்னையின் வருத்தம் கண்டு தானே இறங்கி வந்தவன்… “சரிம்மா இன்னும் ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க அதுக்கப்புறம் நான் கேட்க மாட்டேன் நீங்க யாரை சொல்றீங்களோ அந்த பெண்ணையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் இப்ப உங்களுக்கு சந்தோஷமா… இன்னும் ரெண்டு நாட்களில் நான் ஊருக்கு கிளம்பனும்”... என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்...


ராஜேந்திரன் தன் மனைவியை பார்த்து… “ எதுக்கு மா அவனை இவ்வளவு வற்புறுத்துற கல்யாண விஷயத்தில் ... அவன் சொல்ற மாதிரி ஒரு வருஷம் கழிச்சி பண்ணிட்டா போகுது" என


விசாலாக்ஷியோ... "உங்க மகன் எப்ப கேட்டாலும் இது தான் சொல்லிட்டே இருப்பான்.. இப்ப சொல்லிட்டு போனான் இல்ல ஒரு வார்த்தை நீங்க யார பார்த்தாலும் நான் கல்யாணம் கட்டிக்கிறேன்னு அவன் வாயிலிருந்து அந்த வார்த்தை புடுங்க தான் அவனை இவ்வளவு நெருக்கினேன்… எனக்கு என் நிலா குட்டி தான் இந்த வீட்டுக்கு என் மருமகளா வரணும்" என்றார்…

அகிலாண்டமும் தன் மனதிற்குள் அவனும் மனசுகுள்ள அந்த சிறுக்கிய நினைச்சிகிட்டு தான் மருகுறான்னு நினைக்குறேன்... ஆத்தா, கண்ணாத்தா என் ராசா எண்ணமும்... என் மருமக ஆசையும் ஒன்ன இருந்த அதை நிறைவேத்திக்குடும்மா... என வேண்ட



ஆனால் பாவம் அவர்கள் இருவரும் அறியவில்லை அவனின் எண்ணமும் அதுவே தான் என்று… அவர்கள் பெண்ணவளை பூப்பொல தாங்க வேண்டும் என விருப்பம் கொண்டனர்... அவனோ பூவிற்குள் ஊடுருவும் புயலாக அவளை தாக்க எண்ணம் கொண்டான்... யார் எண்ணம் இடேறுமோ... பொருத்திருத்து பார்ப்போம்....



நினைவில் வருவானோ:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top