All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கதை திரி

Status
Not open for further replies.

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8


பெங்களூர்



அதோ இதோ என பார்ட்டிக்கான நாளும் அழகாக விடிந்தது… அன்று சனிக்கிழமை என்பதால் வீகெண்ட் விடுமுறை, வேலை செல்ல வேண்டிய எந்த பரபரப்பும் இன்றி பொறுமையாக தோழிகள் இருவரும் பார்ட்டிக்கு கிளம்பினார்கள்... இருவரும் வேறு வேறு டீம் என்றாலும் பார்ட்டிக்கு தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை அழைத்து வரலாம் என்ற விதிக்கு ஏற்ப நித்திலா தேன்மொழியை அழைத்துக் கொண்டு செல்ல இருந்தாள்…

பார்ட்டிக்கு செல்வதில் நித்திலா ஆர்வமாக இருந்தாலோ இல்லையோ ஹனி மிகவும் ஆர்வமாக இருந்தாள்...

அவளுடைய ஆர்வம் எல்லாம் பார்ட்டிக்கு என்ன உடை உடுத்துவது எப்படி அலங்காரம் செய்து கொள்வது என்பதை பற்றி அல்ல… அங்கு எந்த வகையான உணவுகள் பரிமாறப்படும் அதன் சுவை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியே இருந்தது…


நித்திலாவே இருவருக்கும் உடைகளை தேர்தெடுத்து மாலையில் கிளம்புவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அவளின் கைகள் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவளின் மனமோ விஷ்ணுவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது... ஏனெனில் கடந்த சில நாட்களாக அவனின் பார்வைகள் அதீத உரிமையோடும் சொந்ததோடும் தன்மீது படிவதை உணர்ந்திருந்தாள்…


எப்பொழுதும் பெண்களை விட்டு சற்று தள்ளி இருக்கும் தன்னவனின் பார்வை தன்னை தழுவுவதை எண்ணி நித்திலாவின் மனதில் அவளையும் மீறி ஒரு இதம் பரவியது… ஆனால் பெண்ணவள் அறியவில்லை, ஆரம்பத்திலிருந்தே அவனின் பார்வை அவளை ரசனையோடு தான் வருடும் என்று…

அவனின் பார்வைகள் மூலம் நித்திலாவிற்கு தன்னவனின் மனம் புரிந்தாலும், சொல்ல தெரியாத ஒருவித தயக்கம் தடைபோட அவள் தன் மனதை அவனிடம் மறந்தும் வெளிப்படுத்தியது இல்லை…


அவள் தான் அப்படி என்றாள், விஷ்ணுவோ பார்வையால் தன் நேசத்தினை பாவைக்கு கடத்துபவன், இதுவரை
தன் மன விருப்பத்தை அவளிடம் வார்த்தைகளால் வெளிப்படுத்தியது இல்லை...

தன் யோசனையில் இருந்தவளை ஹனியின் குரல் நிகழ்விற்கு அழைத்து வந்தது… “என்னடி இன்னைக்கு டைம் ரொம்ப மெதுவா போகுது…” என சலித்து கொண்டவள் … “மச்...அதென்ன பார்ட்டி அப்படினா ஈவனிங்க் தான் வைக்கனும்னு ஏதாவது சட்டம் இருக்க என்ன?, பார்ட்டிக்கு போறோம்னு நான் காலையிலிருந்து இப்பவரை அறைவயிறும் கால்வயிறுமா சப்பிட்டுகிட்டு இருக்கேன்... ஒரு பச்ச புள்ளை எவ்வளவு நேரம் தான் பசி பொருக்கும்” என புலம்பியவள் அப்படி ஒன்றும் பசியில் துவண்டு படுத்து விடவில்லை... இருக்கையில் வாகாக அமர்ந்த்து கொண்டு சிப்ஸ்சை தின்றுகொண்டிருந்தாள்…

தேன்மொழியின் புலம்பலை கேட்டு நித்திலா… “ ஹனி , பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்… யார் நீ அறைவயிறும் கால்வயிறுமா சப்பிட்டுகிட்டு இருக்கியா” என…

ஹனியோ… “ ஆமாம் முத்தம்மா, காலையில் நான் வெறும் ரெண்டு இட்லி தானே சப்பிட்டேன்” என..

நித்திலாவோ, அப்ப அம்மா கொடுத்து விட்ட அதிரசம், முறுக்குல பாதிய காலி பண்ணது யாரு… அதுவும் இல்லாமல் மதியம் வெறும் தயிர் சாதம் மட்டும் போதும்னு சொல்லி…. அதுக்கு சைடிஷ்ஷா ஒரு பாகேட் சிப்ஸ் காலி பண்ணியிருக்க… அது பத்ததுனு இப்ப இன்னும் ரெண்டு பாகேட் சிப்ஸ் காலி பண்ணிட்டு… பேச்ச பாரு… போ.. போய்… ப்ரெஷ் ஆயிட்டு வா… கிளம்பலாம் என

ஹனியோ, நித்திலாவிற்கு பழிப்பு காட்டி விட்டு… தயாராக சென்றாள்...

நித்திலா இளம்ரோஜா வண்ண நிறத்தில் அனார்க்கலியும் அதற்குத் தோதாக ஆக்சஸரீஸ் அணிந்த தயாராக…

தேன்மொழி பீச் வண்ண நிறத்தில் அதே போல் உடை அணிந்த தயாராகி வர… இருவரும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு கிளம்பி சென்றனார்….
***************************

பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு விஷ்ணுவை அனைவருக்கும் முன்பு அவன் நண்பன் அர்ஜுன் அழைத்து வந்திருந்தான்… காரணம் எப்பொழுதும் விஷ்ணு இது போன்ற சமயங்களில் பார்ட்டி ஆரம்பித்து சில நிமிடங்கள் இருந்து விட்டோ அல்லது முடிவில் தலையை காட்டி விட்டோ… பார்ட்டிக்கு நானும் வந்தேன் என பேர் பண்ணிகொண்டு சென்று விடுவான்… இன்றும் எங்கே அப்படி செய்துவிடுவனோ என்று தான் விஷ்ணுவை கையோடு அழைத்து வந்திருந்தான் அர்ஜுன் … அதுமட்டும் இல்லாமல் இன்று ப்ளொரவும் வருகிறாள் அல்லவா…


விஷ்ணுவோ வெளியில் சலித்து கொண்டு கிளம்பினாலும் உள்ளுகுள் குதுக்கலமாகவே கிளம்பினான்… ஏனெனில் அவனின் காதல் கண்ணாட்டி வருகிறாள் ஆதலால்…

விஷ்ணு நன்கு அறிந்திருந்தான்… தன் மீதான அவள் காதலை… பெண்ணவளின் காதலில் இவனின் உள்ளமும் பெரும் உவகை கொண்டது என்றால் மிகையில்லை…

இதுநாள் வரை ஆடிய கண்ணாம்பூச்சி போதும்.. இன்று எப்படியாவது தன் மனதை நித்திலாவிடம் தெரிவித்து விடவேண்டும் என எண்ணியவன் அவளின் வருகைக்காகக் ஆவலுடன் காத்திருந்தான்...


பெங்களுரின் மிகவும் பிரபலமான ஹோட்டல் ஒன்றினை தான் விஷ்ணு பார்ட்டிகாக தேர்வு செய்திருந்தான்… அதுவும் ஹாலை புக் செய்யாமல்… தோட்டத்தில் அழகிய புல்வெளியில்
வட்ட வடிவ மேஜை சுற்றி நாற்காலிகள் அதுவும் மூன்று என அவரவர் அவர்களின் குடும்பத்தோடு அமர்வதர்க்கு ஏதுவாக இருந்தது…

ப்ளோராவோ எப்படியும் விஷ்ணுவிடம் மீண்டும் ஒரு முறை தான் அவன் மீது கொண்டுள்ள நேசத்தை புரிய வைக்க வேண்டும் என எண்ணியபடி பார்ட்டிக்கு முன்னதாகவே தயாராகி வந்தாள்…

உள் நுழைந்ததும் அவளின் கண்ணில் பட்டது விஷ்ணு தான்... எப்போதும் ஆடை அணிவதில் ஒரு நேர்த்தியை கடைபிடிக்காத விஷ்ணு இன்று அவனின் நிறத்திற்கு ஏற்ப உடையுடுத்தி அழகாக தாடியை ட்ரிம் செய்து ஆண்மை மிளிர கம்பீரமாக நிற்பவனை கண்டவள் தன்னை மறந்த நிலையில் அவர்களின் அருகில் நெருங்கி வர …

முதலில் ப்ளொரவை கண்ட அர்ஜுன் , புன்னகையோடு கைகுலுக்கி லேசாக தோள் அணைத்து… அவளின் நலன் விசாரித்தவனிடம் பதில் சொல்லிக்கொண்டு இருந்தவளின் பார்வை விஷ்ணுவை தான் அளவிட்டு கொண்டிருந்தது…

அர்ஜுனை தொடர்ந்து விஷ்ணுவிடமும் நலம் விசாரித்தவள் லேசாக அணைக்க போக, அவளை நாசுக்காக தடுத்து கை குலுக்கியதும் வேறு வேலை இருப்பது போல் அவளை விட்டு விலகி வந்தான்... அவன் செயலில் ப்ளொரவின் முகம் வாடியதை கண்ட அர்ஜுன் மனதிற்குள் விஷ்ணுவை வசைபாடி கொண்டே அவளின் தோளினை தட்டி கொடுத்தவன் அவளை அழைத்து சென்று அங்கிருந்த ஒரு மேஜையில் அமர செய்து… “ நான் அவனை பத்தி புதுச உனக்கு சொல்ல வேண்டியது இல்லை… அவன் கொஞ்சம் மாறி இருக்கான் பட் இன்னும் சில விசயங்களில் அப்படியே தான் இருக்கான்… டோண்ட் பீல்… என்ன பேசனுமோ பேசிடு… நான் போய் அவனை அழைச்சிகிட்டு வரேன் ஒகே”… என்றவன்


விஷ்ணுவிடம் வந்து “ ஏன்டா, இப்படி பண்ற ... ப்ளொர முகம் அப்படியே வாடி போயிடுச்சி… ஸீ இஸ் அவர் பிரெண்ட் (she is your friend) ” என…

விஷ்ணுவோ, தன் தோள்களை குலுக்கியவன்… “அதுக்கு நான் என்ன பண்ணமுடியும், என்னை பத்தி தெரியும் தானே… அப்புறம் ஸீ இஸ் ஜஸ்ட் மை கிளாஸ் மேட் நாட் அவர் பிரெண்ட் … ஸீ இஸ் யுவர் பிரெண்ட் ஒன்லி… (she is just my classmate not our friend, she is your friend only)” என கூறியவன்…

“இங்க பார் அர்ஜுன், நான் இப்படி தான்… என்னை மாத்தனும்னோ இல்லை நான் மாறுவேன்னோ நினைக்குறது இம்பஸிபில்(impossible)”என்றவன் அங்கிருந்து செல்ல முயல…

அவனை தடுத்த ஆர்ஜுன், இந்த ஈரவெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும், ப்ளொர வந்ததே உன் கூட பேச தான்… சோ அவக்கூட பேசு… முக்கியமா பொருமையா பேசு… என சொல்பவனை மேலிருந்து கீழாக தன் தாடையினை தேய்த்து கொண்டே பார்வையிட்டவன்…

"அர்ஜுன், எனக்கு தெரிஞ்சி பிஸினஸ் நல்ல தான் போகுது… அப்புறம் ஏதுக்கு இந்த மேட்ச் பிக்ஸிங் வேலை என்றவனை கொலைவெறியோடு நோக்கியவன்… “ஏன் டா சொல்ல மாட்டே வேண்டாம் வேண்டாம் சொல்லிகிட்டு சாமியார போக பத்து பொருத்தமும் பக்காவ இருக்குறவனை துரத்தி துரத்தி லவ் சொல்றாங்க… ஆனா, நான் இன்னும் சிங்கிள், ஜ அம் ரெடி டூ மிங்கிள் (I'am single, I am ready to mingle) அப்படினு சொல்லிட்டு சுத்துறேன் யாரும் என்னை பாய் பிரெண்ட அக்செப்ட் பண்ண மாட்டுறாங்க… எல்லாரும் பிரெண்ட், பெஸ்ட் பிரெண்ட் ஸ்டெடஸ்லையே மைண்டைன் பண்றங்க… அதான் அடுத்தவங்க காதலை ஊட்டி வளர்த்த… என் காதலை கொடைக்கானல் வளர்க்கும்னு ஒரு எண்ணம்" … என சோகமாக சொல்ல ( தம்பி நிஜமாவே உன் காதலை கொடைக்கானல் தான் வளர்க்க போகுது… வெய்ட் பண்ணு… அதை தனி கதையா பார்ப்போம் பிரெண்ட்ஸ்)

அர்ஜுன் கூறிய பாவனையில் சிரித்து விட்ட விஷ்ணு “சாரி டா” என…

விஷ்ணுவின் தோளில் கைபோட்ட அர்ஜுன்… "எனக்கு உன்னை பத்தி தெரியும் டியுட்… ஆனா சீக்கரம் சாமியார் மொட்ல இருந்து சம்சரிய மாற பாரு" என...

விஷ்ணுவோ, "ஒய்… நான் எப்படா சாமியார போக போறேன்னு சொன்னேன்… உன் பிரெண்டை லவ் பண்ணலை சொன்ன நான் காவி கட்டிக்க போறேன்னு அர்த்தாம போட" என…

அர்ஜுனோ, " ஊ...ஊ.. என விசில் அடித்து தான் மகிழ்சசியை தெரிவித்தவன்…, என் பிரெண்ட் விஸ்வமித்ரனின் தவத்தை கலைச்ச அந்த ம
மேனகை யாருடா" என அர்ப்பரிக்க…


டேய் கத்தாதே, இன்னும் நான் அவகிட்ட எதுவும் சொல்லலை, முதல்ல என் விருப்பத்தை அவகிட்ட சொல்லிட்டு , உனக்கு இன்றோ குடுக்குறேன்" என்றான் ( ஆனால், நண்பர்கள் இருவரும் அறியவில்லை, அப்படி ஒரு சுழல் வரபோவதே இல்லை என்று…)


அர்ஜுனின் வார்த்தைகளுக்காக ப்ளொரவிடம் சென்ற விஷ்ணு, வருபவர்களை பார்க்கும் விதமாக அமர்த்தவன்… அவளிடம் மன்னிப்பு வேண்ட அவளும் அவனிடம் “ உங்களை பத்தி தெரிஞ்சும் நான் அப்படி பிஹவ் பண்ணி இருக்க கூடாது… ஜ அம் ரியலி சாரி, நான் உங்களை லவ் பண்ணுறேன் அப்படிங்குறத்துகாக உங்களை ஹக் பண்ண வரலை ஜஸ்ட், லாங் பாக் பார்க்குற ஒரு பிரெண்ட் அப்படினு தான்..." என முடிக்க முடியாமல் தடுமாற்றத்துடனே தன் செயலுக்கு விளக்கம் குடுக்க…


தனது செய்கை பெண்ணவளின் மனதினை பெரிதும் வருத்தியதை உணர்த்தவன் சங்கடமுற்றான்… தன் பிடாரி முடியினை இடகையினால் கோதி கொடுத்தவன், " ரியலி சாரி ப்ளோர, அர்ஜுன் ஹர்ட் அவன்னு தெரிஞ்சே அவனோட கெஸ்ட்டை இன்சுல்ட் பண்ணனுவேன… ஒரு சில பழக்கங்கலை என்னால மாதிக்க முடியலை… ஒன்ஸ் அகைன் சாரி… ஓகே ஜஸ்ட் லிவ் இட்…ஹொவ் இஸ் யுவர் லைப்… "என மற்ற விசயங்கள் பற்றி பேச ஆரம்பிக்க…

ப்ளொரவும்… விஷ்ணுவின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தவள்… தவறியும் தான் எதற்காக இன்று இங்கு வந்தாளோ அதை பற்றி மற்றும் பேசவில்லை…

பெண்ணவளுக்கு நன்றாக புரிந்து போனது, தன்னை அவன் அவனின் தோழியாக கூட ஏற்காத பொழுது காதலியாக எவ்வாறு ஏற்றுக்கொள்வான்… தன் காதலுக்கு எந்தவித எதிர்காலமும் இல்லை என்பதினை உணர்ந்து கொண்டாள்…


அவனிடம் மீண்டும் மீண்டும் காதலை யாசிக்க அவளின் தன்மானம் இடம் தரவில்லை…


அவளோடு பேசி கொண்டே வருபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனின் கண்களில் திடீரென ஒரு மின்னல் ஷான நேரத்தில் தோன்றி மறைந்தது… இதை மற்றவர்கள் கண்டு கொண்டு இருப்பார்களோ என்னவோ, அவனை இன்ச் பை இன்சாக அறிந்து வைத்திருக்கும் ப்ளொர இதை கொண்டுகொண்டாள்… ஏனெனில் விஷ்ணுவின் பார்வையில் எப்பொழுதும் ஒருவித அலட்சியமும், எதிரில் உள்ளவர்களின் மனதினை ஊடுருவும் கூர்மையும் இடம் பெற்றிருக்கும் … ஆனால் சற்றுமுன் அவன் பார்வையில் ஒரு ரசிப்பு தன்மை இருந்தது… இவன் யாரை இப்படி பார்க்கின்றான் என்ற எண்ணாத்தில் அவள் திரும்பி பார்க்க அங்கு ஒருவரையும் காணவில்லை…


உள்ளே வரும் பொழுதே நித்திலாவின் விழிகள் விஷ்ணுவை தேடி அலைந்து கண்டுகொண்டன, அவன் வேறொரு பெண்ணிடம் பேசுவதை கண்டதும் அவள் பொறமையில் பொங்கவில்லை என்றாலும் பெண்ணவளின் மனதில் தோன்றிய சிறுசுணக்கம் அவள் விழிகளில் வந்து போனது...


பாவை அவளின் பார்வையில் வந்து சென்ற பாவனையினை கண்டு கொண்ட விஷ்ணுவின் உதடுகளில் அழகான ஒரு மென்முறுவல் தோன்ற ப்ளோர தன் எதிரில் இருப்பதால் இதழ் மடித்து அடக்கினான் ..
********************

நேரம் செல்ல அனைவரும் வந்திருக்க… தோட்டத்தில் ஒரு இடத்தில் சிறு மேடை போல் அமைந்திருக்க… அங்கே மனதை மயக்கும் மெல்லிசை மிதமாக கசிய… அந்திசாயும் வேளையும் சேர்த்து கொள்ள அந்த இடமே அவ்வளவு ரம்யமாக இருந்து… அனைவரின் மனதிலும் இதம் பரப்பியது…


அனைவரின் கவனமும் அங்கு மேடையில் தோன்றிய அர்ஜுன் புறம் திருப்ப…. மைக்கை கைகளில் எந்தியிருந்தவன் வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து… ஒரு சில நிமிடம் அவர்களின் நிறுவனத்தினை பற்றி உரையாற்றியவன்… அங்கு அமர்ந்திருந்த விஷ்ணுவை குறும்புடன் பார்த்து ஒன்றை கண்சிமிட்டி… "கைஸ், இது வரை போர்மல பேசுனது போதும்… இனி நாம இந்த பார்ட்டியை என்ஜாய் பண்ணலாம்… ஓகே, இங்க இருக்குற எல்லார்கிட்டையும் ஒரு தனித்திறமை இருக்கும்…. அதை அவங்க இங்க வந்து வெளிப்படுத்தலாம் நாட் ஒன்லி அவர் ஸ்டாப்ஸ்...அவங்க பேமிலி மேம்பேர்ஸ் கூட பங்கெடுத்துக்கலாம்…. இந்த மேடை உங்களுக்காக தான் ….

சரி, முதல்ல யாருக்கிட்ட இருந்து தொடங்கலாம்… ம்… என யோசித்தவன்… ஏன் வேறு யாருக்கிட்ட இருந்தோ… உங்க டீம் ஹெட் மிஸ்டர் விஷ்ணு கிட்ட இருந்தே ஆரம்பிக்கலாம்…. அண்ட் உங்களுக்கு எல்லாம் ஓரு சின்ன ரகசியம் சொல்லட்ட… விஷ்ணு இஸ் அ குட் சிங்கர்… உங்க எல்லார் சார்பிலும் அவரை பாட சொல்லி கேட்குறேன்… காமான்,சியர் அப் ஹிம்… விஷ்ணு… விஷ்ணு… விஷ்ணு… விஷ்ணு...
விஷ்ணு… விஷ்ணு... விஷ்ணு… விஷ்ணு...
விஷ்ணு… விஷ்ணு... என அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தனர்


அர்ஜுனின் கண்சிமிட்டலிலும் குறும்பிலும் இவன் எதோ வில்லங்கம் செய்ய போகிறான் என அறிந்திருந்த விஷ்ணு… அவன் தன்னையே அதில் இப்படி இழுத்து விடுவான் என எதிர்பார்க்க வில்லை… அனைவரின் முன்பும் மறுக்க முடியாமல் அர்ஜுனை முறைத்து கொண்டே மேடை ஏறினான்…


விஷ்ணுவிடம், சிரித்த படியே மைக்கை கொடுத்து அர்ஜுன், இத்தனை நாள் உனக்கு ஒரு பொண்ணு மேல இன்டெர்ஸ்ட் இருக்குனு எனக்கு சொல்லாம மறைச்ச இல்ல அதுக்கு தான் இந்த பனிஷ்மெண்ட்… என கூறி செல்ல…


மைக்கை தன் வலக்கையில் பிடித்து… இடக்கையால் தன் பிடரி முடியினை கொதி கொடுத்தவனின் பார்வை மற்றவர் அறியாமல் நித்திலாவை ஸ்பரிசிக்க… அவளவனின் பார்வையில் பெண்ணாவளின் மனம்
அனலில் இட்ட மெழுகாய் உருகி கரைந்தது….


நினைவில் வருவனோ😍😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9

2354923548

" முழுமதி அவளது முகமாகும்


மல்லிகை அவளது மணமாகும்

மின்னல்கள் அவளது விழியாகும்

மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்

மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்

இதயம் கொடு என வரம் கேட்டேன்

அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்றுவிட்டாள்"......


என உயிர் உருகும் குரலில் பாடிக்கொண்டிருந்தான் விஷ்ணு… அவனின் கண்பாவைகள் இரண்டும் தன் எதிரில் உள்ள பாவையை தான் காதல் மீதுற பார்த்து கொண்டிருத்தன...



கோபாலனின் குழலோசை கேட்டு தன்னிலை மறந்து அந்த பரமாத்மாவோடு இரண்டற கலந்து பேரின்பம் காணும் ராதை போல் , நித்திலாவும் உயிரும் மெய்யும் உருக விழிகளில் காதல் கசிய… இமைக்கவும் மறந்து தன்னவனின் குரலை கேட்டும் கொண்டிருந்தாள் …..


மன்னவனின் குரலில் மங்கை மயங்கிய நிலையில்…. அவளின் செவி வழி சென்ற அவளவனின் குரலோலி அவளின் உயிர் தீண்டி ஒவ்வொரு அணுவிலும் நேசப்பூ மலர செய்ய அதை பெண்ணவளின் வதனம் கண்ணாடியாக பிரதிபலித்தது….


அங்கு உள்ளவர்கள் அனைவரும் அவன் குரலில் மயங்கியிருக்க…. விஷ்ணுவோ தன்னவளின் வதனத்தில் தோன்றும் வர்ணஜாலத்தில் மயங்கினான் ….

***********************************


ப்ளோரவினால் , தன் கண்களையே நம்ப முடியவில்லை … விஷ்ணுவின் முகத்தினில் உள்ள மென்மையும் , மயக்கும் புன்னகையை கண்டு ஒரு நொடி உறைந்துவிட்டாள் … இந்த விஷ்ணு அவள் அறிந்த விஷ்ணு அல்ல முழுதாக மாறியிருந்தான் … பக்கத்தில் அமர்ந்து பாடலை ரசித்து கொண்டிருந்த அர்ஜுனிடம் … “ அஜூ, இது நம்ம விஷ்ணு தானா என சந்தேகமாக வினவியவள்… பெரும் தயக்கத்தோடு அவன் யாரையாவது லவ் பண்றானா அஜூ ” என …


அர்ஜுனோ, விஷ்ணுவின் பாடலில் தன்னை மறந்திருந்தவன் “ கரெக்ட்டா, தெரியலை பேபி , அவன் எதுவும் சொல்லலை ஆனா பையன் பாடுற பாட்டும் … அவன் குரலில் உள்ள குழைவும் ,முகத்துல வந்து போற பளிச் பளிச் மின்னலையும் பார்த்த பைய புள்ள எங்கேயோ வசமா சிக்கி இருக்குனு நினைக்குறேன்” என எப்பொழுதும் போல சீண்டும் குறும்பு குரலில் கூற ...


என்னதான் அவனிடம் காதலை யாசகமாக பெற முடியாது என தன் மனத்தினை கட்டுப்படுத்தி கொண்டாலும் … அவன் வேறொரு பெண் மீது காதல் கொண்டுள்ளான என அறிந்ததும் அறியாத நிலையினை கேட்டு அவளையும் மீறி கண்கள் கலங்கிவிட்டது … “ ஏன் அஜூ, இதை நீ என்ன கிட்ட முன்னாடியே சொல்லாம விட்ட …” என்றாள் உள்சென்ற குரலில்


அர்ஜுன் அப்பொழுது தான் கவனித்தான் ப்ளோரவின் குரலில் உள்ள வேறுப்பாட்டை, என்ன கூறுவது என ஒரு நொடி தடுமாறியவன்… பின்பு இவளிடம் உண்மையை சொல்லுவிடுவது நல்லது என தோன்ற…"எனக்கே கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் தெரியும் பேபி, யாரு என்னனுலாம் தெரியாது… நானுமே அவன் சொல்லும் பொழுது முழுசா நம்பலை… இப்ப அவன் முகத்தை பார்த்த அவன் சொன்னது உண்மையாதான் இருக்குமோன்னு நினைக்குறேன்… சாரி டா, நிஜமா நான் உன்கிட்ட மறைக்கணும்னு நினைக்கலை என்றான்” மெய்யான வருத்தத்துடன்…


"அது மட்டும் இல்லாம அவனோட காதலை பத்தி அவன் சொல்றது தான் சரியா இருக்கும்னு நினைச்சேன்… அவன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா என”... கேள்வியோடு நிறுத்த


ப்ளோரவின் இதழ்களில் ஒரு கசந்த முறுவல் தோன்றியது… “ நான் எதுக்காக இவ்வளவு தூரம் வந்தேனோ அதைப்பத்தி விஷ்ணு கிட்ட நான் எதுவுமே பேசலை அஜூ... தன்னோட ஒரு செயல் மூலமாவே விஷ்ணு தன் மனசில என்ன இருக்குன்னு சொல்லிட்டார் அதுக்கு பிறகு நான் அவர்கிட்ட போய் என்ன பேச முடியும்… காதலுக்காக நாம காதலிக்குறவங்க இல்ல நம்மளை காதலிக்குறவங்ககிட்ட தன்மானம் எல்லாம் விட்டு எதையும் யாசிக்கலாம் ஆனா காதலையே யாசகாம கேட்க முடியாது…


விஷ்ணு வேறோரு பெண்ணை காதலிக்குறது எனக்கு முதலிலே தெரிஞ்சிருந்த நான் இங்க வந்திருக்க மாட்டேன்… இதுக்கு மேலையும் என்னோட காதலை அவர்கிட்ட சொல்ல எனக்கு கொஞ்சம்கூட விருப்பம் இல்லை…


நான் இங்கே வந்ததே, விஷ்ணுகிட்ட முதல்ல இருந்த இறுக்கமும் பிடிவாதமும் தளர்ந்தது… காரணமே சொல்லாம என்னோட காதலை ஜஸ்ட் லைக் தட்" ஐ அம் நாட் இன்டெர்ஸ்ட்டேட்" அப்படினு சொன்ன அவனோட மனசு மாறி, இந்த இடைப்பட்ட காலத்தில் இன்னும் கொஞ்சம் பொறுப்பும் , பொறுமையும் வந்து இருக்கும் … இப்ப என்னோட காதலை சொன்ன கன்சிடெர் பண்ணுவான்னு நினைச்சி தான் வந்தேன் … பட் ஹி இஸ் சேஞ்டு எ லோட் (but he changed a lot)… அன்பார்ச்சுநெட்டிலி(unfortunetly) நான் எஸ்பெக்ட் பண்ண மாதிரி இல்ல தட்ஸ் ஆல்" …


அர்ஜுனை பொறுத்தவரை இருவரும் அவனின் நண்பர்கள் … எப்படி விஷ்ணு காதலை கேட்டு மகிழ்ந்தனோ , அதே போல் ப்ளோரவின் வலியில் வேதனை கொண்டான் …


" இட்ஸ் ஓகே, எனக்கு எப்படி என் காதலை சொல்ல உரிமை இருக்கோ, அதே போல் அவருக்கும் மறுக்க உரிமை இருக்கு… ஜஸ்ட் லீவ் திஸ் டாபிக்".... என தன் தோளினை குலுக்கி கொண்டாள்..


பெண்ணவளின் உள்ளத்தினில் பெரும் வலி இருந்தது என்னவோ உண்மைதான்… தன் காதலுக்காக மட்டுமே தான் முதலில் மறுத்தவனிடமே மறுமுறையும் காதல் சொல்ல வந்தாள்…. இம்முறையாவது அவனிற்கு தன் மீது காதல் முகிழ்க்காத என்ற ஒரு நப்பாசையில் தான்… ஆனால், எப்பொழுது அவனிற்கு வேறொரு பெண் மீது காதல் என்றுணர்த்தளோ இனி அவனிடம் தன் காதலை வெளிப்படுத்துவது வீண் வேலை அதனினும் முறையற்ற செயல் வேறு இல்லை என எண்ணினாள்…



அதைவிட, தன் பொருட்டு தன் நண்பன் மன வருத்தம் கொள்வதை ப்ளோர விரும்பவில்லை… ஒரு பெரும்மூச்சினை அவன் அறியாமல் வெளியிட்டவள்… அவனை சகஜமாக்கும் விதத்தில் … "அப்புறம் நீ சொல்லு அஜு, நீ எப்ப லைப்பில் செட்டில் ஆக போற… வீட்டுல பொண்ணு பார்க்குறங்களா இல்ல நீயும் யாரையாவது லவ் பண்றிய…"என சொல்லி கண்சிமிட்ட…


அர்ஜுனோ, முதலில் அவள் கூறியதை காற்றில்விட்டன், அவன் குடும்பத்தினை நினைத்து கடைசியாக அவள் சொன்னதை மட்டும் கருத்தில் கொண்டு… "ம்ஹும், எனக்கு எங்க அது மாதிரி நல்லது எல்லாம் நடக்குது… அதுவும் உங்கள மாதிரி பிரெண்ட்ஸ் கூட இருந்த நான் உருப்பட்ட மாதிரி தான்…"


"ஒருத்தன் நான் ரொம்ப டீரெர் டீரெர்னு சொல்லிக்கிட்டு, பொண்ணுங்க அப்படினா பார்வையாலேயே அவங்களை பல கிலோமீட்டர் தூரம் ஒடவிட்டவன்… இப்ப என்னடான யாரையோ லவ் பண்றேன்னு சுத்துறான்…. அவன் தான் அப்படி இருக்கான்னா, நீயாவது நம்ம கூடவே ஒரு அப்பாவி சுத்தி கிட்டு இருக்கே, நம்ம பிரெண்ட்ஸ் நல்லதா யாரையாவது இன்ட்ரோ பண்ணி விடுவோம்… அப்படினு நினைச்சி இருக்கியா… நீ இன்ட்ரோடியூஸ் பண்ற எல்லாருக்கும் பாய் பிரெண்ட்ஸ் இருக்கணுங்க… இல்ல எல்லாம் ஆன்டீஸ் அபவ் போர்ட்டிக்கு மேல இருக்காங்க… எல்லாம் என் விதி" என புலம்பி கொண்டிருத்தவனை பார்த்து ப்ளோரவால் சிரிப்பை அடக்க முடியவில்லை…



அவள் சிரிப்பதை அதுரமாக பார்த்தவன்… "நான் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறது இருக்கட்டும்… நீ முதல்ல குட் நியூஸ் சொன்ன… நானும் உன் குடும்பமும் சந்தோசப்படுவோம் என"...



ப்ளோரவோ, “கண்டிப்பா அஜு, என்னால உடனே சொல்ல முடியாது… ஆனா கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிப்பேன் யூ டோன்ட் ஒர்ரி...நான் விஷ்ணுவையே நினைச்சிக்கிட்டு என்னோட லைப்பை ஸ்பாயில் பண்ணிக்க மாட்டேன்… ஐ நீட் சம் ஸ்பெஸ்….” என்றவளின் பேச்சினை தடை செய்தது சுற்றி உள்ளவர்களின் கரவொலி…



பாடல் முடிந்ததும் ஆரம்பித்த கைத்தட்டல் அடங்க சில நொடிகள் ஆனது… விஷ்ணு அனைவருக்கும் சிறுபுன்னகையுடன் நன்றி உரைத்தவன்… அர்ஜுன் ப்ளோரவை நோக்கி வந்தான் அதே புன்சிரிப்புடன்…


அடுத்து அங்கே சிலர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த… நேரம் நிமிடங்களாய் கரைய… அங்கே அனைவருக்கும் பாப்பெ முறையில் உணவுகள் தயார் நிலையில் இருக்க… மெல்ல மெல்ல அனைவரும் தங்களுக்கு வேண்டிய உணவுகளை தாங்களே எடுத்து கொண்டு வந்தமர்ந்தது உண்ண ஆரம்பித்தனர்…


இதில் முதல் ஆளாய் களத்தில் இறங்கியது யார் என்று நான்சொல்ல வேண்டுமா என்ன… அந்த பெருமை தேன்மொழியையே சாரும்…




விஷ்ணுவும் அர்ஜுனும் தங்களுக்குள் பேசி கொண்டே உணவருந்த ப்ளோரவோ தன் தட்டில் உள்ள உணவினை அலைந்து கொண்டிருந்தாள்… இன்னும் சில நிமிடங்கள் அப்படியே கடக்க… ஆண்கள் இருவரும் உண்டு முடிக்க தானும் சாப்பிட்டதாக பேர் பண்ணி கொண்டவள்… அவர்களிடமிருந்து விடை பெற … அர்ஜுன் அவளோடு எழ முயல அவனை தடுத்த விஷ்ணு, நான் செண்ட் ஆப் பண்ணிட்டு வரேன் என்றவன் … அவளை பார்த்து தன்னோடு வரும்படி தலை அசைத்து விட்டு முன்னே நடக்க… ப்ளோர வோ , அர்ஜுனிடம் விடைபெற்று கொண்டு விஷ்ணுவின் பின் செல்ல…


தேன்மொழியோடு பேசியபடியே உண்டுக்கொண்டிருந்த நித்திலாவின் பார்வையில் இந்நிகழ்வுப்பட, அழகிய மெழுகு பொம்மை போன்ற பெண்ணோடு தன்னவன் செல்வதை கண்டதும் அவன் மீது சந்தேகம் இல்லை என்றாலும் காதல் கொண்ட மனதில் ஒரு குறுகுறுப்பு தோன்ற இருவருக்கும் என்ன சம்பந்தம் என அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தேன்மொழியிடம் ரெஸ்ட்ரூம் செல்வதாக சொல்லிவிட்டு அவர்களை பின்தொடர்ந்தாள்….



ப்ளோரவோடு பேச வேண்டும் என்று தான் விஷ்ணு அவளை தன்னோடு வருமாறு அழைத்து விட்டு இவன் முன்சென்றான்…. ஆரம்பத்திலிருந்தே விஷ்ணு பெண்கள் என்றால் இரண்டடி தள்ளிதான் இருப்பான்… அவனிடம் இவள் காதல் சொல்லி தான் மறுத்ததை அத்தோடு இவன் மறந்ததுவிட, இதனைவருடங்கள் கழித்து மீண்டும் அவளின் வரவினை அவன் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை… அவளின் கண்களில் கண்ணீரை கண்டது முதல் ஏனோ இவனுள் ஒரு குற்றவுணர்வு , ஆகவே இம்முறை தெளிவாக பேசி தன் மனதில் உள்ளதை உணர்த்த வேண்டும் என எண்ணிய படியே நடந்த விஷ்ணு அவள் தன் பின்னால் வருவதை உணர்த்து , தன் நடையின் வேகத்தை குறைத்து கொள்ள…


நிமிர்ந்து பார்த்த ப்ளோர கண்டது இதுவரை அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து அங்கே தயக்கமும், பெரும் குழப்பமும் படர்ந்தது இருந்தது … அதனை கண்ட ப்ளோரவின் புருவங்கள் முடிச்சிட்டு கொள்ள , இது வரை புன்னகை மன்னனாக காட்சியளித்தவனின் இந்த தீடீர் மாற்றம் எதனால் என புரியவில்லை .. ஒருவேளை இது தன்னால் வந்ததோ என்ற எண்ணத்தில் அதை போக்கும் விதமாக “இன்னைக்கு ரொம்ப நல்ல பாடுனீங்க விஷ்ணு” என


அவளோடு பேச வேண்டும் என வந்து விட்டாலும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தடுமாற்றத்தில் இடக்கை கொண்டு தன் பிடரி முடியை கொதி கொண்டிருந்தவனின் கவனத்தினை கலைத்தது ப்ளோரவின் குரல்…


“ம்… தேங்க்ஸ் அண்ட் ந… ந… நான் என்ன சொல்ல வரென்ன என… தன் பார்வையிலும் , ஒற்றை வார்த்தையிலும் மற்றவர்களை திணற செய்பவன்… இன்று வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற… அவன் தடுமாற்றம் உணர்த்த ப்ளோர … புன்னகையுடன் “ உங்க பெட்டெர் ஹாப்பை இங்க வர சொல்லி இருக்கீங்களா என”... பெண்ணவளின் கேள்வியில் விஷ்ணு மொத்தமாக திகைத்து போனான்… மற்றவர்களுக்கு தெரியாத விஷயம், ஏன் தன்னவளுக்கே தெரியாதது இவளுக்கு எப்படி தெரியும் என்று… ( அவ்வளவு வெளிப்படையா நீ ஜொள்ளி இருக்க தம்பி)...


விஷ்ணுவின் அதிர்ந்த முகத்தை பார்த்த ப்ளோர… தன் உதடுகளை வளைத்து “ மச்... நீங்க என்னை தனியா அழைச்சுக்கிட்டு வந்ததை பார்த்து, நீங்க உங்க பெட்டெர் ஹாப்பை இன்ட்ரோ கொடுக்க போறீங்கன்னு பார்த்த யூ டிஸ்அப்பொய்ண்ட் மீ எ லாட்” என போலியாக சலித்து கொள்ள


விஷ்ணுவோ, தன் நெற்றியில் விரல் கொண்டு நீவியவன்… “அர்ஜுன் சொன்னானா என்றான்”… சந்தேகமாக, ஏனெனில் விஷ்ணுவிற்கு தெரியும் அர்ஜுன் கொஞ்சம் விளையாட்டாக இருந்தாலும் மற்றவர்களின் விஷயத்தினை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிடமாட்டான் என்று…


ப்ளோரவோ, இல்லை என்று இடவலமாக தலை அசைத்தவள் “நீங்க தான் சொன்னீங்க” என…


“வாட் நான் எப்ப சொன்னேன் என்றான்”…


ப்ளோரவோ, சிறுபுன்னகையுடன்,” உங்க வாயால சொல்லலை, உங்க கண்ணு காட்டி கொடுத்திருச்சி … என்னோட பேசிக்கிட்டே இருந்த உங்க கண்ணுல திடீர்ன்னு 1000 வாட்ஸ் வெளிச்சம் அதுக்கு யார் காரணம் அப்படினு நான் திரும்பி பார்க்கறதுக்குள்ள ஜஸ்ட் மிஸ் … அப்போ கொஞ்சம் டவுட் வந்தது , அடுத்து நீங்க பாடுன சாங் …அப்புறம் அர்ஜுன் கிட்ட கொஞ்சம் போட்டு வாங்குனேன்… தட்ஸ் இட் அண்ட் இப்ப நீங்க நான் சொன்னதை மறுக்காம அக்செப்ட் பண்ணிட்டீங்க என”…



விஷ்ணுவின் முகத்தில் மெல்லிய வெட்கம் வந்து செல்ல… தன் பிடரி முடியை இடக்கையால் கொதி கொடுத்தவன்... “நானும் அதை பத்தி பேச தான் வந்தேன்… எனக்கு தெரிஞ்சி நான் எந்த விதத்தில் உன்னை டிஸ்டர்ப் பண்ணேன்னு எனக்கு புரியலை … அப்ப நீ ப்ரோபோஸ் பண்ணும் பொழுது ஏதோ ஒரு அட்ட்ரக்ஷன்ல சொல்றேன்னு தான் நான் நினைச்சேன்… நான் மறுத்ததும் நீ அதை மறந்துடுவேன்னு நினைச்சேன்… ஆனா நீ இவ்வளவு சீரியஸ்ஆ இருப்பேன்னு தெரிஞ்சிருந்த நான் அன்னைக்கே என்னோட மறுப்பை அழுத்தம் திருத்தமா உனக்கு புரிய வச்சி இருப்பேன்… ரியலி சா… சா…. சாரி ”... என



ப்ளோரவோ , “எனக்கு புரியுது விஷ்ணு, டோன்ட் கெட் எம்பரஸ்(embrass)... கவலை படாதீங்க உங்களை கார்னெர் பண்ணி என்னை தான் லவ் பண்ணனும்னு சொல்லமாட்டேன் என்னை நீங்க தாராளமா நம்பலாம்… எனக்கு வில்லி ஆகுற ஐடியா இல்ல… ,அட இவ்வளவு எஸ்பிளனேஷன் கொடுக்குறேனே இப்ப கூட உங்க ஆளை என் கண்ணுல காட்ட மாட்டிங்களா என போலியாக புலம்பிய படி பெருமூச்சினை வெளியேற்ற …


அவள் சொல்லிய பாவத்தில் மெல்லிய நகை விஷ்ணுவின் உதடுகளில் படர “நிச்சயமா என்னோட கல்யாணத்தில் என் மனைவியை உனக்கு தான் முதல் முதல அறிமுகம் செய்து வைப்பேன், அப்ப நீ உன்னோட ஹப்பியோட வந்த நான் ரொம்ப சந்தோசபடுவேன் என்றான்”…


(ஆனால் அப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்வில் வர போவது இல்லை என்பதை விஷ்ணு அறிந்திருக்க வில்லை)


அவளின் கார் வர, விஷ்ணுவிடம் புன்னகையோடு கை அசைத்து விடைபெற்று கொண்டாள் ப்ளோர …



இதுவரை அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருந்த நித்திலாவிற்கு அவர்கள் என்ன பேசி கொண்டார்கள் என சரியாக கேட்கவில்லை… ப்ளோர கிளம்பியவுடன் தானும் அங்கிருந்து செல்ல நினைத்து திரும்புகையில் இரண்டு வலியக்கரங்களில் அவள் சிறைபட்டிருந்தாள் ...




நினைவில் வருவானோ :love::love::love::love::love:
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....


" அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "


என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கதையோட அடுத்த பதிவை போட்டுட்டேன் , இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ... வைட்ங்க் போர் யூவர் valuable comments...


லவ் யூ ஆல்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:


என்னுடைய கதை "பிரிக்க முடியாத பந்தம்"..........
வம்சி கிருஷ்ணா , ப்ரியம்வதா இவங்களை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...


ஒருவேளை நியாபகம் இல்லைனா புத்தகம் வெளியாகி இருக்கி்றது... இந்த புத்தகம் மூலம் மீண்டும் உங்க வம்சி மற்றும் ப்ரியம்வதாவோட பயணிக்க... கீழ்வரும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

அலைபேசி எண்: 9003145479

அல்லது
Udumalai.com - Online Book Store என்ற website மூலம் onlineல் புத்தகம் பெறலாம்...


அன்புடன்

தனசுதா
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...


எல்லாரும் எப்படி இருக்கீங்க... என்னடா ஒருத்தியை காணும்னு யாரும் தேடலை... சரி விசயத்திற்கு வருவோம்... என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!! கதை டீஸர் போட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க...(ஆடி பெருக்கு அன்னைக்கு போட்டவது சீக்கிரம் கதையை முடிக்கலாம்ன்னு ஒரு ஆசையில் தான்) யாரும் திட்டாம வந்து அவங்க அவங்க கருத்தை சொல்லிட்டு போங்க பார்க்கலாம்....





அன்று காலை எழுந்ததில் இருந்தே நித்திலாவிற்கு தலை சுற்றல் அதிகமாக இருந்தது… கடந்த ஒருசில நாட்களாக அப்படி இருந்தும் அவள் விஷ்ணுவை பற்றிய யோசனையிலும்… தன் தந்தை நேற்றிரவு கூறியதை கேட்டதில் உண்டான அதிர்ச்சியில் இருந்தவளால், தன் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினைக் கருத்தில் கொள்ள இயலவில்லை.


மிகவும் சிரமப்பட்டு எழுந்தவளுக்கு இன்று எப்படியும் விஷ்ணுவை தொடர்புக் கொள்ளும் வழியை அறியவேண்டும் அவன் தங்களோடு லண்டன் வந்தவன்… மற்றவர்கள் திரும்பி ஒரு மாதம் கடந்த நிலையிலும் அவன் இன்னும் இந்தியா திரும்பவில்லை…


அவனிடமிருந்து அலுவலக சம்பந்தமாக வரும் மெயில்களை தவிர்த்து தனிப்பட்ட நல விசாரிப்போ.... அல்லது காதலர்களுக்கே உரிய வேறு எந்த பேச்சு வார்த்தைகளும் இல்லை… முதலில் இதனை நித்திலாவும் பெரிதா எடுத்துக் கொள்ளவில்லை, அவனுக்கு வேலை அதிகம் என எண்ணினாள்… நாட்கள் கடக்கக் கடக்க ஏதோ சொல்ல தெரியாத உணர்வு அவள் மனத்தினை அடக்கொள்ள, அவனிடம் எப்படியாவது பேச வேண்டும் என அவள் எண்ணிய நேரம்… அவளின் தந்தை அவளுக்கு மாப்பிள்ளைப் பார்த்து இருப்பதாகவும் அவர்கள் நாளை மாலை அவளை பெண் பார்க்க வருவதாக சொல்ல… இன்று எப்படியும் விஷ்ணுவை தொடர்புக் கொண்டு பேச வேண்டும் என்றவளின் சிந்தனை சட்டென்று நாட்காட்டியில் பதிய தன்னையும் அறியாமல் அவளின் கைகள் தன் வயிற்றை தடவியது ஒருவேளை குழந்தையாக இருக்குமோ என்று....
……………
………….
…………..


தன் முன்னே நின்றுருந்த குழந்தையினை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சைதன்யா… பால் வண்ண மேனியில் அச்சு அசலாக தன் பொம்மாவை போல் இருந்தவளை கண்டவனின் முகத்தில் மென்மை படர… அவளை நோக்கி அடியெடுத்து வைத்து நெருங்கியவன் குழந்தையின் தலையினை வருட முற்படுகையில்…. ஒரு குரல் "டோன்ட் டச் ஹேர்"(don't touch her)...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10

விஷ்ணுவும் ப்ளோரவும் பேசுவதை மறைத்திருந்தது பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனக் கேட்கவில்லை.

ப்ளோரா கிளம்பவும் சிறிது நேரம் நின்று விஷ்ணுவையே பார்த்துக் கொண்டு இருந்தவள், “ ச்ச… அவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்கவே இல்லை” எனப் புலம்ப, அவளின் மனசாட்சியோ “ஏன் அவங்க காதல் வசனம் பேசிக்கிட்டு இருப்பாங்கன்னு சந்தேகப்படுறியா” என… அதற்கு நித்திலாவோ ‘அப்படியே இவர் பேசிட்டாலும்’ என நொடித்து கொண்டவள். தன் இருக்கைக்கு செல்லலாம் என நினைத்து திரும்ப அவளை இரு வலிய கரங்கள் வளைத்து கொண்டன.

அதில் திகிலுற்று கத்தப் போனவள், அது தன்னவன் என உணர்த்து அமைதி காத்தாலும் அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றுக் கொண்டிருந்தாள்.


ஆம், நித்திலாவை வளைத்துப் பிடித்திருந்த கரங்களுக்கு சொந்தக்காரன் விஷ்ணுவேதான்… ப்ளோரவை வழி அனுப்பியவன் திரும்பி நடக்க, அங்கிருந்த செடியின் அருகில் அசைவை உணர, முதலில் சாதாரணமாக காற்றுக்கு அசைவதாக நினைத்துக் கொண்டவன். தன் நடையினைத் தொடர மறுபடியும் அசைவை உணர்ந்தவன் உற்று நோக்க, அங்கே நித்திலாவின் உடை காற்றில் அசைந்து அவளை காட்டிக் கொடுக்க அதனை கண்ணுற்றவன்… தன்னவளின் செயல் கண்டு அவன் உதடுகளில் மென்முறுவல் படர… “என்னையேவா வேவு பாக்குறா பேபி, இதோ வரேன்” என்றவன். சிறிதும் சத்தம் செய்யாமல் அவளின் பின் வந்து தன்னவளை சிறைசெய்திருந்தான்.


நித்திலாவின் திமிறல்களுக்கு எந்த பலனும் இருக்கவில்லை… ஏனெனில் விஷ்ணு, அவளை தன்னுள் மொத்தமாக புதைத்து கொள்பவன் போல் அவனின் பிடி அத்தனை இறுக்கமாக இருந்தது… அவள் திமிற திமிற அவன் அணைப்பின் இறுக்கம் கூடியதே தவிர சற்றும் குறையவில்லை… இதை உணர்ந்து ஒரு கட்டத்தில் நித்திலாவின் திமிறல்கள் சற்று மட்டுப்பட, அவளை இன்னும் மறைவான இடத்திற்கு அழைத்து இல்லை இல்லை இழுத்து சென்றவன்… இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல நினைத்தான்.

ஆனால்,பெண்ணவளின் அருகாமை தந்த மயக்கத்தில் தன்னிலை மறந்தவன், காற்று புகாத வண்ணம் மேலும் தன் அணைப்பை இறுக்க… இம்முறை நித்திலாவும் அவனோடு ஒன்றினாள், தன்னவளின் இணக்கத்தில் விஷ்ணுவின் கைகள் அவள் இடையில் தவழ , உதடுகளோ பெண்ணவளின் கழுத்தினில் தன் முத்தம் மற்றும் மூச்சி காற்றின் மூலம் வெண்மையை கடத்தியப்படி மேலும் மேலும் அவள் மேனியில் முன்னேறி கொண்டிருந்தன.

நித்திலாவோ, விஷ்ணுவின் கைகளில் துவண்டு கொண்டிருந்தவள்… பெண்களுக்கே உள்ள எச்சரிக்கை உணர்வு தலை தூக்க, விஷ்ணுவின் கைகளுக்கு தடையிட முயல… நன்றாக விருந்துண்டு கொண்டிருப்பவனை பாதி உணவில் அதனை பறித்தால் எவ்வாறு அத்திருப்தி கொள்வனோ, அதே போல் விஷ்ணுவும் “மச், பேபி” என முனங்கியவன் மீண்டும் அவளின் கழுத்தினில் தன் முகத்தினை புதைத்து கொள்ள முயல, தன் சக்தி எல்லாம் கூட்டி அவனை தன்னிடமிருந்து விலக்க முயன்றாள் நித்திலா.

அவளால் முயல மட்டுமே முடிந்தது… விஷ்ணுவின் அணைப்பு மேலும் இறுக, அவனை தன்னிடமிருந்து விலக்க முடியாமல் அவனிடமே சரணடைந்த பாவை. அவளை அணைத்தப்படி குனித்திருந்தவனின் காதினில் தன் இதழ் உரச “வி...விஷ்ணு, ப்ளீஸ் யாராவது வர போறாங்க” என.

பெண்ணவளின் நெருக்கமும் அவள் குரலில் உள்ள குழைவும், அவனை தன்வசம் இழக்க செய்து மயக்கம் கொள்ள வைத்தாலும்… அதனையும் மீறி அவனவளின் வார்த்தைகளில் இருந்த தயக்கத்தில் முயன்று தன்னிலை மீண்டவன். தன் இடக்கரம் கொண்டு பிடறி முடிகளை கோதிய படி… சற்றே கரகரப்பான குரலில், “ந.. நா… (பலரை தன் பார்வையால் பணிய வைப்பவன், வனிதையின் முன் வார்த்தைகள் வெளி வராமல் திணறினான்) க்கும்… என தொண்டையை சற்று சரிசெய்து கொண்டவன். நான்… நான் உன்கிட்ட பேசணும்னு தான்…” என தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் விஷ்ணு தயங்கினான். எங்கே, தன் செய்கையினால் பெண்ணவள் தன்னை தவறாக எண்ணிவிடுவளோ என்று.

‘தான் அவள் மேல் கொண்ட நேசத்தினைப் பற்றி அவளிடம் கூற வேண்டும்’ என நினைத்து தான் விஷ்ணு நித்திலாவை தனியாக அழைத்து வந்தது… ஆனால் நடந்ததே வேறு… தன் செயலை நினைத்து தன்னை தானே திட்டிக் கொண்டவன். தன்னிலை விளக்கம் சொல்ல வேண்டி பெண்ணவளை பார்க்க…

என்னதான் வாய் வார்த்தையாக அவனை தன்னிடமிருந்து விலகச் சொன்னாலும் காதல் கொண்ட மனம் .அவனை விட்டு விலக விருப்பம் இல்லாமல் அவனை ஒட்டியே நின்றிருந்தாள்.

தன்னவளின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து விஷ்ணு அவளிடமிருந்து சட்டென்று விலக… அவனின் விலகலில் நிலையாக நிற்க முடியாமல் அங்கிருந்த கல்மேடையில் கால்கள் துவள அமர்ந்துவிட்டாள் நித்திலா.

தன் எதிரில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவளை காணக் காண விஷ்ணுவிற்கு மனத்திற்குள் என்னமோ செய்தது… என்னதான் பெண்ணவள் தன் மேல் கொண்ட காதலை தான் உணர்ந்திருந்தாலும், தனக்கு அவள் மேல் உள்ள நேசத்தினை அவளிடம் கூறாமல் தான் அவளிடம் நடந்து கொண்டது சற்று அதிகப்படி என உணர்த்தவன், அவளிடம் தன் மனம் பற்றி சொல்ல முடிவு எடுத்து நித்திலாவின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தினை நிமிர்த்த, பெண்ணவளின் வதனமோ அந்திவேளை சூரியனையும் மிஞ்சும் வண்ணம் செக்க சிவந்து, வெட்கம் தந்த படப்படப்பா இல்லை வாடை காற்றினால் வந்த நடுக்கமா என தெரியாமல் துடிக்கும் தன்னவளின் ஈர இதழ்களை கண்டவன், தன் எண்ணியதை எல்லாம் கைவிட்டவனாக, அவனவளின் முகத்தினை தன் இரு கைகளினால் ஏந்தி தன் கண்களினால் அவள் விழிகளை சிறை செய்து மெல்ல தன் வலக்கை பெரு விரல் கொண்டு அவள் மென் இதழ் வருடியவன்… “ஜ குட் நாட் கன்ட்ரோல் மை செல்ஃப், ஜ வான்ட் டூ கிஸ் யூ பேபி, ஷால் ஜ” (I could not control myself, I want to kiss you baby, shall I) என அவளிடம் அனுமதி வேண்டினான அல்லது தன் தேவையினை கூறினான என பிரித்தறிய முடியாமல் வினவியவன் அவள் பதிலுக்காக கூட காத்திருக்காமல் பெண்ணவளின் மென் இதழ்களை நோக்கி முன்னேறியவன் அவனவளின் அதரங்களை முழுதாக முற்றுகையிட்டிருந்தான் அந்த கள்வன்…


ஏற்கனவே அவன் நெருக்கத்தில் மொத்தமாக தன் வசம் இழந்திருந்தவள்… இப்பொழுது தன்னவனின் இதழ் தீண்டலில் முழுதாக தன்னிலை மறந்து அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் நீடித்ததோ, அவளின் உமிழ் நீரில் தான் அவன் உயிரை காக்கும் ஔடதம் உள்ளது போல் அதன் சுவையில் முழ்கிருந்தவனின் அலைபேசி ஒலிக்க முதலில் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தவன் அது மீண்டும் மீண்டும் தன் இருப்பை உணர்த்த, விருப்பமே இல்லாமல் தன் முத்த கவிதைக்கு முடிவுரை எழுதியவன்.

அழைப்பது யார் எனப் பார்க்க… அழைத்தது வேறு யாருமில்லை அர்ஜுன் தான் என அறிந்து… அவனின் அழைப்பை எற்க.

அந்த பக்கம், “விஷ்ணு, எங்கடா இருக்க, ப்ளோராவை செண்ட் ஒப் பண்ணிட்டு வர எவ்வளவு நேரம், அவளை வழி அனுப்பிட்டு நீயும் அப்படியே எஸ்கேப் ஆயிட்டியா என்ன? அப்படி போயிருந்தாலும் பரவயில்லை ஒழுங்கு மரியாதையா திரும்பி வர, உனக்காக நான் சாப்பிடாம வெயிட் பண்ணறேன் என்றவன் தன் குரலை தாழ்த்தி கொஞ்சம் சீக்கரம் வாடா பசிக்குது... எனக் கூறி அழைப்பை துண்டித்தவன், தனக்குள் புலம்பினான், “கடவுளே, உனக்கு கொஞ்சம் கூட என் மேல கருணை இல்லையா? நான் என்ன அப்படி பெருசா கேட்டுட்டேன், எனக்கே எனக்குன்னு ஒரே ஒரு கேள் பிரெண்ட், ஜுஸ்ட் ஒன்லி ஒன் (Girl Friend, just only one) தானே, அண்டெர்லைன் த வேர்ட் கேள் பிரெண்ட் ஒன்லி. நோ டியர், நியர் ஓர் பெஸ்டி ஓகே.
பெண்ணுங்க அப்படினாலே முறைக்குறவனுக்கு கூட நீ லவ்வர் ஸ்பான்செர் பண்ணி இருக்க… (டேய், கடவுளுக்கு வேற வேலை இல்லையாடா). சீக்கரம் எனக்கும் பார்த்துப் பண்ணு என்றான். (பாவம் அவனுக்கு, தெரியவில்லை பின்னாளில் தனக்கு ஏன் காதலை கொடுத்தாய் என இதே கடவுளை வசைபாடுவோம் எனத் தெரியாமல் தனக்கான காதலைக் காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தான் அர்ஜுன்)

அதுவரை, விஷ்ணுவின் இதழ் தீண்டலில் கரைந்து குழைந்து கொண்டிருந்தவள். அலைபேசியின் ஓசையில் தான் தன்னிலை மீண்டாள்… எப்பொழுதும் தன் பார்வையில் கூட தன் காதலை வெளிப்படுத்த கூடாது என உறுதியாக இருந்தவளை இன்று விஷ்ணுவின் பாடலும் அவன் பார்வையும் பாவையின் மனத்தினை நெகிழ வைத்திருக்க… தன்னையும் அறியாமல் அவன் பால் சரிந்து கொண்டிருந்தவளை மொத்தமாக வீழ்த்தி இருந்தது விஷ்ணுவின் தீண்டல்கள்.

ஏற்கனவே, அவன் அருகாமையில் தன் மனம் தடுமாறும் என தெரிந்திருந்தும், இன்று அவனை நெருங்கிய தான் முட்டாள்தானத்தினை நினைத்து தன்னை தானே திட்டி கொண்டவள், அவன் கரங்களில் தான் நெகிழ்ததை நினைத்து அவன் என்ன நினைத்து கொள்வனோ என அவன் முகம் காண சங்கடமுற்று. விஷ்ணு அலைபேசியில் பேசும் பொழுதே அங்கிருந்து செல்ல முயல… அலைபேசியில் கவனம் வைத்திருந்தாலும் நித்திலாவை பிடித்திருந்த தன் பிடியை சற்றும் தளர்த்தவில்லை அவன். அவளும் பிடிவாதமாக அவனை விலக எண்ணவில்லையோ அல்லது தன்னவனின் விருப்பமின்மையினை உணர்ந்து அமைதியாக இருந்தளோ என்னவோ!

அர்ஜுன் பேசி வைத்தும் மேலும் அவளை தன்னோடு இறுக்கி கொண்டவன், இவ்வளவு நேரமும் அவள் தன்னோடு இழைந்ததை மறந்து விட்டு, சற்று முன்பு அவள் தன் அணைப்பிலிருந்து விலக முயன்றதை மட்டும் கவனத்தில் கொண்டவன், தான் இன்னும் அவளிடம் தன் மன எண்ணத்தை கூறவில்லை என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் “என்னை உனக்கு பிடிக்கவில்லையா பேபி?” என்றான் அவள் கண்களை கூர்மையாக நோக்கியபடி.

அவன் கேள்வியிலும், பார்வையிலும் பெண்ணவள் என்ன பாவனையினை உணர்ந்தளோ, அவன் மீது விண்ணை முட்டும் அளவு காதல் இருந்தாலும் அதனை அவனிடம் சொல்ல முடியாமல், சொல்லும் வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தவளிடம் விஷ்ணு, தன்னை பிடிக்கவில்லையா?என கேட்கவும் காதல் கொண்ட மங்கையின் மனம் உணர்வுகள் பிடியில் சிக்கி தவிக்க அவளால் அவனுக்கு மறுமொழி கூற இயலாமல், அவள் கண்களில் இருந்து நீர் வழிய, அவன் வார்த்தைகளை மறுப்பது போல் தன் தலையினை இட வலமாக அசைத்தவள். சிறுகுழந்தை போல் தன் இருகைகளையும் அகல விரித்து விசும்பிய படியே அவன் முகம் பார்த்து "உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு" என்றாள்.
(பெண்ணவள் உணரவில்லை தான் கூறும் இந்த வார்த்தைகளுக்காக பின்னாளில் தான் வருத்தப்படுவோம் என்று.)

வஞ்சியின் வார்த்தைகளில் அவன் மனம் உவகை கொண்டாலும், அவளின் கண்ணீர் அவனை என்னமோ செய்தது," ஹே பேபி, என்னை பிடிச்சிருக்குன்னா இந்த அழுகை" என்றவனின் குரலில் நித்திலா சற்றென்று அவன் முகம் பார்க்க அங்கே கேலி நிறைந்திருந்தாலும் வேறு ஏதோ ஓன்று அந்த கண்களிலும், குரலிலும் மறைத்திருப்பதாக தோன்றியது இருத்தாலும் அதனை பற்றி யோசிக்கவிடாமல், அவள் மனத்தில் இந்த கேள்வியே நிறைந்திருந்தது… தன் காதலை ஏன் இன்னும் விஷ்ணு தன்னிடம் சொல்லவில்லை என்று?

பெண்ணவளின் விழிமொழியில் அவள் குழப்பம் கண்டுக்கொண்ட விஷ்ணு,புன்னைகையோடு அவள் நெற்றியில் முட்டி. எனக்கு உன்னை இப்படி இல்லை என அவளின் விரிந்த கைகளை தன் பார்வையில் சுட்டிக்காட்டியவன் அவளை காற்றும் புகாத வாறு இறுக்கி அணைத்தவன்… இவ்வளவு இவ்வளவு பிடிக்கும் என்றான்.

தன்னவனின் வார்த்தைகளில் கேட்டவளின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து.

தன் காதலுக்கு எதிர்காலமே இல்லை என எண்ணியவளுக்கு, தன்னவனும் தன்னை விரும்புகிறான் என தெரிந்ததும் தன் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தித்துவது என தெரியாமல், தன்னவனின் அணைப்பில் ஒன்றியவள், வார்த்தைகள் வெளிவர மறுக்க காற்றாகி போன குரலில் சிக்கி திக்கி " ஐ… ஐ… லவ் என அவள் திணற, தன்னவளின் தவிப்பை அவள் உடல்மொழியின் மூலம் உணர்ந்த விஷ்ணு 'ஐ லவ் யூ டூ பேபி' என அவள் ஆரம்பித்ததை நிறைவு செய்தான்…

விஷ்ணு நித்திலாவை தன் அணைப்பில் இருந்து விலகவும் இல்லை, அவள் விலகவும் இல்லை…. தேன்மொழியின் குரல் அவளை கூப்பிடவும் தான் சூழ்நிலை புரிந்து, நித்திலா அவனை நிமிர்ந்து பார்க்க.

என்னை பிரிந்தது சென்று விடுவாயா? என்பது போல் அவள் விழிகளில் வழிந்த பாவனையில் விஷ்ணு மனம் முழுதாக பெண்ணவளிடம் தஞ்சம் புகுந்து கொண்டது.அவர்கள் இருவருக்கும் விருப்பம் இல்லை என்றாலும் சுழல் அப்படி இருக்க.மீண்டும்

ஒருமுறை அவளை இறுக்கி அணைத்து விடுவித்தவன், "நயிட் நான் மெசேஜ் பண்றேன், நாளை நாம மீட் பண்ணலாம், பை பேபி" என அவள் கன்னம் தட்டி விடைபெற்றான். எப்படி சத்தம் இல்லாமல் வந்தனோ அதே போல் சத்தமில்லாமல் சென்றுவிட்டான்…

இவ்வளவு நேரம் தன் கைக்கும் வாய்க்கும் வேலை கொடுத்து கொண்டிருந்தவள், நித்திலா சென்று வெகு நேரம் ஆகிவிட்டதை ஒருவழியாக உணர்ந்து, தன் கையில் ஒரு ஐஸ் கிரீம் பௌலை சாப்பிட்டு கொண்டே நித்திலாவை தேடி கொண்டிருந்தாள்.

விஷ்ணு சென்றதும் தன்னை கொஞ்சம் சமநிலை படுத்துக்கொண்டு நித்திலாவும் வெளிவந்து தேன்மொழியோடு இணைத்து கொண்டாள்.
நித்திலாவை கண்டதும் தேன்மொழி , இவ்வளவு நேரம் எங்கடி போன, என விசாரித்தவள், அவள் முகம் சோர்வுற்று இருப்பதை கண்டு, என்னடி அம்மா அப்பா நியாபகம் வந்திருச்சா என…
தேன்மொழியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்து கொண்டிருத்தவளுக்கு, அவளே எடுத்து கொடுக்க…

எனக்கு இங்க வந்ததும் அம்மா அப்பா கூட போனது நியாபகம் வந்திடுச்சு( மனத்திற்குள் தாய் தந்தையிடம் மன்னிப்பு வேண்டி கொண்டாள்) காதல் வந்தால் கள்ளமும் சேர்த்தே வருமோ!!!

என்னால சாப்பிட முடியலை,நான் சாப்பிடாம இருந்த நீயும் சரியா சாப்பிட மாட்டே, அதான் அப்படியே பூக்களை பார்த்துகிட்டு இருத்தேன நேரம் போனதை கவனிக்கலை என (அடிப்பாவி, பொய்… பொய்… அவளுக்கு அம்மா அப்பாவை நினைச்சு எல்லாம் அவ கவலை படலை, பூவையா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த, ஹனி அவ பொய் சொல்றா… நம்பாத அவளை நம்பாத…)

நித்திலாவின் வார்த்தைகளை கேட்டு தேன்மொழிக்கு வருத்தமாக இருந்தது… "சாரி நித்தி" என.

நித்திலாவை தேன்மொழியின் வருந்துவது பிடிக்காமல் " உன் சாரி ஒன்னும் வேணாம், கையில் இருக்குற ஐஸ் கிரீம் பௌலை கொடு என கேட்க…

தேன்மொழியோ ,ஐஸ் கிரீமையும் நித்திலாவையும் மாறி மாறி பார்த்தவள்… அதெல்லாம் கொடுக்க முடியாது , உனக்கு வேணும்னா வா ரெண்டு பேரும் போய் ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கலாம் என…

அவள் கூறிய பாவனையில் நித்திலா வாய்விட்டு சிரித்தவள், தேன்மொழியின் தோளில் இரண்டு அடி போட்டு " சரியான சாப்பாட்டு ராமி டி நீ" என்றாள்.

தேன்மொழியோ, சிரிக்கும் நித்திலாவை கண்சிமிட்டாமல் பார்த்தவள், நீ எப்பவும் இப்படியே சிரிச்சு கிட்டே இரு, அதான் நல்லா இருக்கு என்றாள்

(ஆனால், தோழிகள் இருவரும் அறியவில்லை இன்னும் சில நாட்களில் நித்திலாவின் சிரிப்பு மட்டும் இல்லை அவள் இழக்க போவதை அறிந்திருந்தால்!!!)

நினைவில் வருவனோ😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

Ud போஸ்ட் பண்ணியாச்சு பிரெண்ட்ஸ், ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதி இருக்கேன், எங்கையவது ஏதாவது தப்பு இருந்த சொல்லிங்க... பார்த்து பதமா சொல்லுங்க...

படிச்சிட்டு உங்க கருத்தை சொல்ல மறந்திடதீங்க...

உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்...

உங்கள்
தனசுதா,😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 11



அன்று இரவு சொன்னது போல் விஷ்ணு நித்திலாவிற்கு மெசேஜ் அனுப்பி இருந்தான் நாளை மாலை ஒரு கஃபேக்கு வர சொல்லி, மெசேஜ் பார்த்ததில் இருந்தது நித்திலாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை, காதல் சொல்லிய பிறகு முதல் முறையாக அவன் கூப்பிடுகிறான். ஒரு மனம் அவனோடு வெளியில் செல்ல விருப்பம் கொண்டாலும், ஒரு மனம் தயக்கம் கொண்டது, இதுவரை நித்திலா, தேன்மொழியை விட்டு தனியாக எங்கும் சென்றதில்லை, அவளை விட்டு செல்லும் எண்ணமும் நித்திலாவிற்கு இல்லை, அவளை அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்றால் தேன்மொழியிடம் தங்களின் காதலைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். நித்திலாவிற்கு, தன் காதலை பற்றி தன் தோழியிடம் பகிர்வதில் எந்த தயக்கமும் இல்லை, ஆனால் விஷ்ணுவிடம் தெரிவிக்காமல் அவள் தேன்மொழியிடம் சொல்ல எனோ ஒருவித தயக்கம். ஆதலால் நாளை வர இயலாது என பதில் அனுப்பியிருத்தாள்.



விஷ்ணுவிடமிருந்து, ஏன்? எதற்கு வர வில்லை? என்ன காரணம்? என எந்த கேள்வியும் இல்லாமல் “ஓகே...” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே வந்தது.


நித்திலாவிற்கு அவன் ஒப்புதல் சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவன் தன் நிலையினை தான் சொல்லாமலே புரிந்து கொண்டான் என எண்ணினாள். ஆனால் உண்மை அதுவல்ல? விஷ்ணுவிற்கு நித்திலாவின் பதிலைப் பார்த்ததும் அவ்வளவு கோபம். எப்படி அவள் தனக்கு மறுப்பு கூறலாம் என்று? அவள் வர இயலாததிற்கு என்ன காரணம் எனக் கேட்கும்படி அவனின் காதல் கொண்ட மனம் விருப்பம் கொண்டாலும், அவனின் பிறவி குணம் தலைதூக்க வீம்பாக 'ஓகே' என பதில் அனுப்பிவிட்டான். அதன் பின் நித்திலாவிடமிருந்து வந்த ஓன்று இரண்டு மெசேஜ்களுக்கும் பதில் அனுப்பவில்லை, பதில் அனுப்புவது என்ன அதனை திறந்து கூட பார்க்கவில்லை அவன்!, விஷ்ணு மெசேஜ்களை கண்டதிற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் நித்திலா, அவன் உறங்கிவிட்டதாக நினைத்து கொண்டாள். மறுநாள் தேன்மொழியோடு அவள் நேரம் செல்ல, விஷ்ணு தனக்கு பதில் அனுப்பவில்லை என்றோ அழைக்கவில்லை என்றோ அவன் வருத்தம் கொள்ளவில்லை…


*******************************************************************************



ஞாலம் ஒளிரச் செய்யும் ஞாயிறு தன் பணியை செவ்வனே செய்ய, தோழிகள் இருவரும் தங்கள் பணிக்கு செல்ல, தேன்மொழி அருகில் இருக்கும் வரை எதைப்பற்றியும் யோசிக்காமல் இருந்த நித்திலா, தன் பணியிடத்தை நெருங்கவும் அவளுக்கு விஷ்ணுவை எப்படி எதிர்கொள்வது என பெரும் தயக்கம் கூடிக்கொண்டது, ஆனால் விஷ்ணுவிற்கு அப்படி எந்த தயக்கமும் இல்லை போலும் மிகவும் சாதாரணமாக இருத்தான். அவளை கண்டு ஒரு சின்ன புன்னகை கூட சிந்தவில்லை அவன். இவன் தான் அன்று அவளிடம் அவ்வளவு உரிமையும் நெருக்கமுமாக நடந்தது கொண்டவன என்பது போல் இருந்தது அவன் நடவடிக்கை. முதலில் அனைவர் முன்னிலையில் அவ்வாறு நடந்து கொள்கிறான் என்று எண்ணிய நித்திலா, அவனை தனிமையில் சந்தித்த பொழுதுகளில் கூட அவனிடமிருந்து சின்ன நேசப் பார்வைக் கூட இல்லை, அவன் அவளிடம் காதலை தெரிவிக்கும் முன்பே அவன் பார்வைகள் அவளை உரிமையாக ஸ்பரிசிக்கும், இன்றோ அந்த பார்வையில் ஏனோ ஒரு அந்நியதன்மை அப்பட்டமாக தெரிந்தது…


அவன் ஒதுக்கத்தினை தாள முடியாமல் நித்திலா அவனிடமே என்னவென்று கேட்டு விட, அவனோ அவளை மேலிருந்து கீழாக ஒருவிதமாக பார்க்க… அந்த பார்வையில் பாவையின் மனம் அவனை நெருக்க அச்சம் கொண்டது.



அவன் பார்வையில் மருண்டு நின்றவள் விழிகளில் கண்ணீர் நிறைந்து அவள் கன்னங்களில் வழிய காத்துக் கொண்டிருந்தது.


அவள் கண்ணீரை கண்டதும் சற்று மனம் இளகினாலும் அதனை முகத்தில் காட்டாமல் அவளை முறைத்து கொண்டே, இப்ப எதுக்கு இந்த கண்ணீர் , நான் தான் எதுவுமே சொல்லையே? எனக் கேட்டு அவள் விழிகளில் வழிய தயாராக நின்ற கண்ணீரை துடைத்துவிட்டான்.


( இப்பொழுது அவள் விழியை விட்டு வெளிவர இருந்த எந்த கண்ணீருக்கு தடுத்த தடையிட்டானோ, அதே கண்ணீரை தான் இனி அவளுக்கு அவன் தினமும் பரிசாக தர போகிறான்)



நித்திலாவோ, கண்களை துடைத்து கொண்டு “ என்னது, ஒண்ணுமே சொல்லலையா, அதான் பார்த்தீங்களே ஒரு பார்வை இனி உனக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி, அது ஒண்ணு போதாத,என்னோட மனசை கொல்ல…” என்றவள் மேலும் விசும்பு.


“எனக்கும் அப்படித்தான் இருந்தது, உன்னோட செய்கையை பார்த்து” என்றான் விஷ்ணு பொருள் விளங்கா குரலில்.


நித்திலாவோ, அவன் பதிலில் பதறியவள் “ந… நான் என்ன பண்ணேன்?” என்றாள்.

விஷ்ணுவோ, நொடியில் தன் குரலை சரி செய்துக்கொண்டு, “நேத்து நான் வெளியில் போலாம்ன்னு சொன்னதுக்கு ஏன் மறுத்த?” என்றான்.



‘ப்பூ…’ என ஒரு ஆசுவாச பெரு மூச்சை வெளியிட்டவள். “அது, நான் இதுவரை எங்கேயும் தனியா போனது இல்லை ஹனியை விட்டுட்டு. அப்படி அவளை அழைச்சிக்கிட்டு வரணும்னா நம்மளைப் பத்தி அவகிட்ட சொல்லணும், அவ உங்க டீம் இல்லைனாலும் நீங்க எங்களுக்கு ஹெட் சோ, உங்களை கேட்காம எப்படி சொல்றதுன்னு ஒரு தயக்கம், அதான்…” என்றவள் அடுத்து என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாற.


விஷ்ணுவின் முகத்தில் இப்பொழுது ஒரு மென்னகை படர்ந்தது, அவள் தனக்காக தான் தயங்கி மறுத்துள்ளாள் என்று.


இவ்வளவு நேரம் செஞ்சூரியனாக தகித்தவன், நொடியில் குளிர் பரப்பும் தன்னொளியாக மாறி, அவளை நோக்கி “உன் பிரெண்ட் ஹனினா, உனக்கு நான் யார் பேபி?” என்றான்.


அவன் கேள்வி அவளுக்கு புரியவே சில நிமிடங்கள் தேவை பட்டது, சற்றுமுன்பு வரை அவன் நடந்து கொண்டத்திற்கும் அவன் கேள்விக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் இருக்க, அவனுக்கு என்ன மறுமொழி கூறுவது எனத் தெரியாமல் நித்திலா திகைத்து விழிக்க. அவள் திகைப்பைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டவன், மேலும் அவளை நெருங்கி அவள் இடையில் கையிட்டு தன்னோடு அணைத்து கொள்ள, அவன் அணைத்ததும் அவள் இமைகள் படபடக்க அவனை பார்த்தாள். பாவை அவள் பாவனையில் மயங்கியவன். அவளின் முகவடிவினை தன் விரலினால் அளந்து கொண்டே, வசீகரிக்கும் குரலில் “பார்க்குறாதுக்கு அப்படியே அழகான டால் மாதிரி இருக்க பேபி” என்றவன் அவள் இதழ் நோக்கி குனிய, அடுத்து அவன் என்ன செய்வான் என அறிந்து கொண்டவள் தன் விரலினால் தடைவிதித்து, “நாம உங்க கபின்ல இருக்கோம்” என மெல்லிய குரலில் அறிவுருத்த, தன் உதடுகளுக்கு தடைவிதித்த அவள் மென் விரல்களுக்கு முத்தம்மிட அவனின் மீசை முடி உரச அதில் எற்பட்ட கூச்சத்தில் பெண்ணவள் தன் கைகளை விலக்கி கொள்ள, விஷ்ணுவோ அவள் இதழில் பதிக்க நினைத்த தன் முத்திரையினை இடம் மாற்றி அவள் கன்னத்தில் பதித்து, வெட்கத்தில் சிவந்திருந்த அவளின் முகம் பார்த்து ஒற்றை கண்சிமிட்டி புன்னகைத்தவன் மெல்ல அவள் இதழ்களை தன் விரல் கொண்டு வருடிய படி “எனக்கு தடைப்போட உன்னால முடியுமா பேபி டால், நான் நினைச்சதை மட்டுமே சாதிச்சி பழகியவன்” எனக் கூறியவறே அவள் என்னவென உணரும் முன்னே பெண்ணவளின் இதழ்களை தன் வசமாக்கி இருந்தான் அந்த கள்ளன்.




மெல்ல அவளை தன்னிடமிருந்து விலக்கியவன், “டொன்ட் சே நோ டூ மீ, நெவர் ஒர் எவர் காட் இட் பேபி , குட்”. ( Dont Say No to Me, never or ever got it baby, good) என்றவன் அவள் கன்னங்களை தட்டி, “உன் பிரெண்ட் கிட்ட நம்மளை பத்தி சொல்றதுல எனக்கு நோ இஸ்யூஸ் (no issues) ,பட் கல்யாணம் மட்டும் இன்னும் ஒண்ணு இல்ல ரெண்டு மாசம் கழிச்சு பண்ணிக்கலாம். பிகாஸ் எனக்கு கொஞ்சம் ஆன் சைட் வேலை லாண்டன் வரை போக வேண்டி இருக்கு” என சொன்னதும். அதுவரை மலர்ந்திருந்த நித்திலாவின் முகம் சட்டென்று வாடிவிட்டது.



“என்ன, நீங்க லாண்டன் போறீங்களா?, திரும்பி வர ரெண்டு மாசம் ஆகுமா? என்றவளின் குரலில் அவ்வளவு துயரம், அவனை பிரிவதை நினைத்து.


“ஹேய் பேபி டால், ஜஸ்ட் ரெண்டு மாசம், நான் மட்டும் போகலை நம்ம ஆபிஸ்ல இருந்து ஒரு சிலரும் என்னோட வராங்க. எனக்கும் உன்னை விட்டு போகணும்னு நினைச்சு கஷ்டம தான் இருக்கு” என்றவன் தன்னையும் அறியாமல் நீயும் என்னோட வர்றீயா பேபி டால்? என.


அதுவரை கிரகணம் பிடித்த நிலவேன ஒளி மங்கியிருந்தவளின் முகம், பூரண நிலவாக பிரகாசித்தது. அவன் கேட்டதும் மறுக்க தோன்றாமல் ஏதோ ஒரு குருட்டு தைரியத்திலும், அவனை பிரிந்திருக்க வேண்டியது இல்லை என்ற எண்ணம் முதன்மை பெற, அவனோடு வருவதாக சம்மதித்துவிட்டாள்.



அவள் தன்னோடு வருவதற்கு சம்மதித்து விட்டாள் என விஷ்ணு உள்ளுக்குள் மகிழ்த்தாலும் வெளியே "இப்ப மட்டும் எப்படி பேபி டால், உன் ஹனியை விட்டுட்டு தனியா வருவ" என கிண்டலாக வினவியவன். அவள் கன்னம் தட்டி "ரெடியா இரு, எப்படியும் இன்னும் ரெண்டு இல்ல மூணு வாரத்தில் கிளம்புற மாதிரி இருக்கும்" என்றான்.



விஷ்ணு கேட்டதும் தான் நித்திலாவிற்கு அந்த எண்ணமே நினைவிற்கு வந்தது, விஷ்ணுவிடம் தானும் உடன் வருவதாக சம்மதம் சொல்லிவிட்டாள்,ஆனால் இந்த விஷயத்தினை எப்படி வீட்டிலும், தேன்மொழியிடமும் சொல்வது என தெரியவில்லை. இங்கு வேலைக்கே தேன்மொழி உடன் வந்ததினால் தான் சம்மதித்தார்கள், அப்படி இருக்க தான் மட்டும் தனியாக வெளி நாடு செல்ல அவர்கள் அனுமதிப்பார்களா! அவர்களிடம் எப்படி, என்ன சொல்லி சம்மதம் வாங்குவது என்ற யோசனையில் இருந்தாள் நித்திலா.



ரெண்டு நாட்களாக ஏதோ சிந்தனையாக சுற்றி கொண்டிருந்தவளை அமைதியாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்த தேன்மொழி மூன்றாவது நாள் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டாள்.( நீ ரெண்டு நாள் அமைதியா இருந்ததே உலக அதிசயம் ஹனி).


"ஓய் கிஸ்மிஸ், உன் காலியான மண்டைக்குள்ள அப்படி என்ன ரோசனை,ம்?" என வினவ.


"அ… அது வந்து ஹனி, எங்க டீம்ல இருந்து நாலு பேர் லண்டன் போறாங்க… அதுல நானும் ஒருத்தி..." என.


ஹனியோ ஒரு கணம் தன் தோழியை பிரிவதை நினைத்து வருந்தினாலும், சட்டென்று தன் முகபாவத்தினை மாற்றி கொண்டு " வாவ் நித்தி, எவ்வளவு சந்தோசமான விஷயம், இதை போய் இப்படி சொல்லுற.லூஸு. அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டியா? எப்ப போகணும்? யார் யாரெல்லாம் கூட வராங்க?" என நித்திலாவை கேள்வி மேல் கேள்வியாக கேட்டு துளைத்தெடுத்தாள் தேன்மொழி.



ஏய், கொஞ்சம் கேப்(gap) விடுடி, உன்னோட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல. இந்த சான்ஸ் எனக்கு கிடைச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்( ஏம்மா சந்தோஷ பட மாட்டே, உன் காதலன் கூட போற), இன்னும் வீட்டுல சொல்லலை, என்னை அவ்வளவு தூரம் தனியா அனுப்ப சம்மதிப்பங்களான்னு சின்ன தயக்கம் (ஐய்யோ, ஐய்யோ… என்ன நடிப்புடா சாமி) என்றாள்.


தேன்மொழியோ, அதெல்லாம் சம்மதிப்பாங்க, நீ பயப்படாம கிளம்புற வழிய பாரு என்றாள்.


நித்திலாவோ மனதிற்குள் 'நான் ஏண்டி பயப்பட போறேன் கூட என் விஷ்ணு' வரும் பொழுது.



தேன்மொழியை, நித்திலாவின் அப்பா அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டாள், அவர்களும் மகளின் பயம் பற்றி அறிந்திருந்தாலும் அவளிற்கு நல்லது என நினைத்து இந்த பயணத்திற்கு ஒத்து கொண்டனர்.



அவள் லண்டன் செல்லும் முன்பு வந்து அவளை பார்த்து விட்டு, ஆயிரம் பாத்திரங்கள் சொல்லிவிட்டு சென்றனர். தேன்மொழியும் அவள் காது தீயிந்து போகும் அளவிற்கு நித்திலாவிற்கு அறிவுரை கூறியிருந்தாள்.


( நித்திலாவிற்கு நன்மை பயக்கும் என நினைக்கும் இந்த பயணம் அவள் வாழ்வினையே திசை மாற்ற போகிறது என பாவம் அவர்களும் அறியவில்லை, பயணப்பட போகிறவளும் அறிந்திருக்கவில்லை, அவளை அழைத்து செல்பவனும் இதனை உணர்த்திருக்கவில்லை)



அப்படி இப்படி ஒரு மாதம் சென்றிருக்க,விஷ்ணு ,நித்திலா இன்னும் நான்கு பேர் கொண்ட குழுவை லண்டன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தான்.




நினைவில் வருவனோ😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12

அனைவரும் லண்டன் சென்று ஒரு வாரம் ஓடிவிட்டது. அவர்கள் குழுவில் ஆண்கள் (வினய், பரத்) இருவரும் பெண்கள் (நித்திலா, மாலினி) இருவருமாக விஷ்ணுவுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர். விஷ்ணு அங்கு தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி கொண்டவன். மற்றவர்களுக்கும் அவன் வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டை பார்த்து தங்க வைத்தான்.

அவரவர் வேலையை அவரவர்கள் சிறப்பாக செயலாற்றி கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற நேரம் அங்கு குளிர்காலம் ஆரம்பித்திருந்தது. அந்த சீதோஷண நிலை மாற்றம் நித்திலாவிற்கு சற்று ஒத்துக்கொள்ளவில்லை. ரெண்டு நாட்களாக தனக்கு தெரிந்த கைவைத்தியம், மாத்திரை கொண்டு சமாளித்தாள்.

கடந்த இரண்டு நாட்களாக வெறும்
இரும்பல், தும்மல், உடல் சோர்வு எனப் படுத்திய அவள் உடல் நிலை, இன்று காலையில் இருந்து தகிக்க தொடங்கியது. அவளோடு தங்கியிருந்தவர்கள் அவளிடம் மருத்துவமனைக்கு செல்லலாம் என அழைத்தும், இது சாதாரான ஜுரம் தானே என்று மறுத்துவிட்டாள்.

தன்னிடம் உள்ள மத்திரையினை போட்டுக் கொண்டு அவர்களோடு அலுவலகம் கிளம்பி வந்தவளால் மதியத்திற்கு மேல் சமாளிக்க முடியவில்லை. கண்களில் இரெண்டிலும் மிளகாயை அரைத்து பூசியது போல் எரிய, உடல் முழுதும் அடித்துப் போட்டதுப் போல் வலியெடுக்க தொடங்கியது, உட்காரக் கூட அவள் உடல் ஒத்துழைக்கவில்லை, சற்றுப்படுத்தால் தேவலாம் போல் இருக்க… அங்கிருக்கும் ஓய்வறையில் சென்று படுத்துவிட்டாள்.


கடந்த இரு நாட்களாக விஷ்ணுவிற்கு அதிக வேலை, காலையில் நேரமே அலுவலகம் வந்துவிட்டு வேலை விஷயமாக வெளியில் செல்பவன், நேரம் கழித்து நேராக தன் வீட்டிற்கு சென்றுவிடுவான். ஆதலால் தன்னவளின் நிலையினை அவன் அறியவில்லை. இன்று தன்னவளை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என்ற ஆவலில் தன் பிஸினஸ் லன்சை விரைவாக முடித்து வந்தவனுக்கு கிடைத்தது என்னவோ தன்னவளுக்கு உடல் சுகமில்லை என்ற செய்தி தான்.

என்னதான் விஷ்ணுவும் நித்திலாவும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும், மற்றவர்கள் முன்னிலையில் எதையும் காட்டிக்கொள்ள மாட்டர்கள். பெங்களூரில் தான் அப்படி என்றால் லண்டன் வந்தும் அவர்களிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அடுத்தவர் கண்ணையும் கருத்தையும் கவராது, தங்களின் நேசத்தினைப் பார்வைகள் மூலமும், அலைபேசி வாயிலாகவும் வளர்த்தனர். (இதுக்கு அவ பெங்களூரிலேயே இருந்திருக்கலாம்) அவர்கள் இருவரும் காதலர்கள் எனச் சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள். அதுவும் விஷ்ணு காதலிப்பதாக கூறினால் சொல்லியவரை தான் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.


‘ஒய்வறைக்கு சென்றவள் என்ன செய்கிறாளோ?’ என்ற எண்ணத்தில் அவர்களோடு வந்த மாலினி சென்று பார்க்கையில், நித்திலாவோ குளிரில் உடல் நடுங்க தன்னைக் குறுக்கிக் கொண்டு தன்னினைவின்றி படுத்திருந்தாள். அந்நிலையில் நித்திலாவினை கண்டதும் மாலினி அவளை எழுப்ப முயற்சிக்க, மாலினியின் முயற்சிகள் அனைத்தும் வீணானது. உடனே நித்திலாவை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இதற்கு மேல் நேரத்தினை கடத்துவது நல்லதல்ல என எண்ணிய மாலினி வினய்கும் பரத்திற்கும் அழைத்து விஷயத்தினை சொல்ல, விரைந்து வந்தவர்கள் கண்டது நினைவின்றி கிடந்த நித்திலாவினை தான்.

பரத்தோ ‘முதலில் விஷ்ணுவிற்கு அழைத்துச் சொல்லுவதா, இல்லை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதா’ என்ற யோசைனையில் இருக்க. வினய்யோ, எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்காமல் மாலினியை நகர சொல்லிவிட்டு நித்திலாவினை தூக்க அவள் அருகில் செல்லவும், விஷ்ணு அந்த அறைக்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
வினய், நித்திலாவின் கைப்பிடித்து தூக்கப் போக, அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் விஷ்ணுவின் பார்வையில் என்ன உணர்ந்தானோ, நித்திலாவினை விட்டு அவன் கால்கள் தன்னாலே பின்னடைய, தன்னவளின் அருகினில் வேகமாக நெருங்கிய விஷ்ணு.

“பே… பேபி டால்…” எனக் கூற வந்தவன், சுற்றியிருப்பவர்களைக் கருத்தில் கொண்டு “நி… நித்திலா… நித்திலா…” எனக் கூறி அவளின் கன்னம் தட்ட, அவளிடம் எந்தவித ப்ரதிபலிப்பும் இல்லை.

விஷ்ணுவின் செய்கையினை கண்ட மாலினியோ “பா….பாஸ், அவளுக்கு ஜுரம் அதிகமாகி மயங்கிட்டா போல, நாங்களும் ரொம்ப நேராம எழுப்பிக்கிட்டு இருக்குறோம் அவ கண்ணை திறக்கவே இல்லை. அதான் ஹாஸ்பிட்டல் அழைச்சுக்கிட்டு போ…கலாம்ன்னு…” என மாலினி சொல்லி முடிக்கவில்லை.

விஷ்ணு, நித்திலாவின் நெற்றி மற்றும் கழுத்தில் கை வைத்துப் பார்க்க, அவள் உடல் அனலெனக் கொதிப்பதை அப்பொழுது தான் உணர்ந்தவன். சற்றும் தாமதிக்காமல் நித்திலாவை தான் கரங்களில் அள்ளிக்கொண்டான். பெண்கள் என்றாலே இரெண்டடி தள்ளி நிற்பவனைப் பற்றி அறிந்தவர்கள் அவன் செயலில் விழி விரித்து வியந்து பார்க்க, விஷ்ணுவோ, யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் சிந்திக்கும் நிலையில் இல்லை. அவனுக்கு தன்னவளின் நிலை மட்டுமே கவனத்தில் இருக்க, அவளை ஏற்றிக் கொண்டு வாயு வேகத்தில் விரைந்தது அவனது வாகனம் மருத்துவமனை நோக்கி.

ஹாஸ்பிடலில் நித்திலாவை அனுமதித்தவனால் ஒரு இடத்தில் நிலையாக அமர இயலாமல் அங்கும் இங்கும் நடந்தவனின் காதல் கொண்ட மனம் ஒரு புறம் தவித்தாலும், மறுபுறம் நித்திலாவின் மீது சொல்ல முடியாத அளவிற்கு அதிக கோபமாகவும் இருந்தான் விஷ்ணு.

‘தன்னிடம் அவள் உடல் நிலை பற்றி, ஒரு வார்த்தை முதலிலேயே தெரிவித்திருந்தால் இவ்வளவு தூரம் அவள் நிலை மோசமாகி இருக்காது, அப்படி என்ன அலட்சியம்?’ என அவளை வசைபாடி கொண்டே அந்த மருத்துவமனை காரிடாரின் நீள அகலத்தினை அளந்து கொண்டிருந்தான்.

அந்நேரம் வேலை முடிந்து வினய், பரத் மற்றும் மாலினி மூவரும் ஹாஸ்பிட்டல் வந்தனர். நித்திலா இன்னமும் கண் விழிக்காமல் இருக்கவே, ஒரு பெண்ணாக நித்திலாவிற்கு தன் உதவி தேவை என நினைத்த மாலினி, தான் ஹாஸ்பிடலில் தங்கி நித்திலாவை பார்த்து கொள்வதாக சொல்லவும்.

விஷ்ணுவிற்கு அப்படி ஒரு எரிச்சல், ‘என்னவளை நான் தான் பார்த்துக் கொள்வேன்’ என்னும் உரிமை உணர்வு தலைதூக்க, வலது கையினை பேன்ட் பாக்கெட்டில் விட்டப்படி இடக்கையினால் தன் பிடரி முடிகளை கோதி கொடுத்தவன்.

“ம்… மாலினி நீங்க எப்ப மெடிசன் படிச்சீங்க!” என வியப்பதுப் போன்ற பாவனையில் கூறினாலும் அவன் குரலில் நக்கலே நிறைந்திருந்தது, “இப்படி இங்க சர்வீஸ் பண்றதுக்காக தான் லண்டன் வந்தீங்களா? ஜ அம் இம்பரஸ்டு அபௌட் யூர் மெர்சி” என்றான் முகமும் குரலும் இறுக.

“ஷீ இஸ் நாட் தட் மச் சீரியஸ் (she is not that much serious) (அப்படியா ராசா, கொஞ்சம் நேரம் முன்னாடி, இங்க யாரோ இன்னும் அவ கண்ணு முழிக்கலைன்னு குறுக்கும் நெடுக்கும் நடந்துகிட்டு இருந்தாங்க… அவங்களை உனக்கு தெரியுமா?). இங்க பெஸ்ட் டாக்டர்ஸ் இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க, நாளைக்கு முக்கியமான அசைன்மென்ட் இருக்கு, சோ எல்லாரும் இப்ப கிளம்புங்க. நாளைக்கு உங்க வொர்க் செடியூல் என்னான்னு உங்களுக்கு மெயில் வரும் என்றவன்”. அவர்கள் செல்லலாம் என்பது போல் ஒரு பார்வையை அவர்கள் மீது செலுத்தியப்படி, அங்கிருந்த செவிலியரை அழைத்து நித்திலாவினை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, பெண்ணவளின் தற்போதையா நிலை அறிய மருத்துவரின் அறை நோக்கிச் சென்றான்.

விஷ்ணு சொல்லியதை கேட்டு மாலினியின் கண்கள் கலங்க, வினய் அதிர்ந்து நிற்க அவர்கள் இருவரின் தோளினை தொட்டு பரத், “சரி வாங்க போகலாம், இல்லைன்னா அதுக்கும் வந்து கத்துவார்” என்றவன். அதிர்ந்து நின்ற வினய்யை சுட்டிக்காட்டி அவன் தான் புதுசு, அவரோட குணம் பற்றித் தெரியாது, உனக்கு நல்லத் தெரியும் தானே மாலினி, அப்புறம் எதுக்கு இந்த கண்ணீர்” எனக் கூறி அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

நித்திலாவோ, விஷ்ணுவை நன்றாக தவிக்கவிட்டு இரவு கண்விழிக்க, அதுவரை அவள் மேல் இருந்த அவன் கோபம் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகியது.

தன்னவளிடம் நெருங்கி “பே… பேபி டால், எப்படி இருக்க?” என அவள் நெற்றியில் பரவியிருந்த முடி இழைகளை ஒதுக்கி விட்டப்படி கேட்டவனின் குரலில் அப்படி ஒரு தவிப்பு.

தன்னவனின் தவிப்பை உணர்த்தவள், தனக்கு ஒன்றும் இல்லை தான் நலமாக இருப்பதாக விழிகளை மூடி திறந்து பதிலாளிக்க. அதில் சற்று ஆறுதல் அடைந்தவன், விரைந்து சென்று மருத்துவரை அழைத்து வர, மருத்துவரும் “ஜூரம் குறைந்திருப்பதாக சொன்னவர், இன்று ஒரு இரவு மட்டும் அப்சர்வேஷனில் இருக்கட்டும், நாளை காலை ஜுரம் இல்லை என்றால் வீட்டிற்கு அழைத்து செல்லலாம்” எனக் கூறி விடைப்பெற. விஷ்ணு அவருக்கு நன்றி சொல்லி வழியனுப்பி விட்டு வருவதற்குள் நித்திலா சோர்வு மிகுதியில் மீண்டும் உறங்கி இருந்தாள்.

துங்கும் அவளை கண்டதும் விஷ்ணுவின் முகம் கனிய, பூவை தீண்டும் மென் தென்றல் போல் மெல்ல அவள் நெற்றியை வருடி விட்டவன் அதில் தன் இதழ் ஒற்றி, ‘ஜ லவ் யூ சோ மச் பேபி டால் இன்னைக்கு நீ கண்ணு முழிக்குறதுகுள்ள நான் ஒரு வழி ஆயிட்டேன். என்னோட நிலைமையை சொல்ல வார்த்தைகளே இல்லை, உன் மேல அவ்வளவு கோபம் இருந்தது, ஆனா இப்ப அந்த கோபம் எங்க காணாம போச்சுன்னு தெரியலை. உங்கிட்ட கொஞ்சம் கொஞ்சம என்னோட சுயத்தை தொலைக்குறேன். ஒரு சில நேரம் ஜ லவ் தட் பீல் பட் சாம் டைம்ஸ்… என்றவனின் வார்த்தைகள் முற்றுப் பெறாமல் போக, தன் பிடரி முடிகளை கோதி கொடுத்தவன், “யூ ட்ரிவென் மீ கிரேசி, பேபி டால்” எனக் கூறி பெண்ணவளின் இதழ்களில் பட்டும் படாமலும் தன் உதடுகளை உரச. அந்நிலையிலும் தன்னவனின் ஸ்பரிசத்தை உணர்ந்த பெண்ணவளின் வெண்மதி வதனம் மாலை கதிரவனின் நிறம் கொள்ள, அச்சோர்விலும் பெண்ணவளின் முகத்தில் அழகிய புன்முறுவல் தோன்றியது.



மறுநாள் விஷ்ணு, நித்திலாவை அழைத்துக் கொண்டு நேராக தன் வீட்டிற்கு வந்து விட்டான். கேள்வியாக நோக்கிய பெண்ணவளிடம் தன் புருவம் உயர்த்தி “வாட்?” என.

நித்திலாவோ ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலை அசைத்தாள். பின்னே, தான் ஏதாவது வாயை திறந்தாள் மறுபடியும் எங்கே நிறுத்திய ப்ரசங்கத்தை ஆரம்பித்துவிடுவனோ என பயந்தாள். இப்பொழுது தானே போதும் போதும் என்கிற அளவிற்கு அவனிடம் வசை வாங்கி இருந்தாள்.

ஆம், இரவெல்லாம் சேயை தாங்கும் தாய் போல் அவளைப் பார்த்துக் கொண்டவன். விடிந்ததும் மருத்துவர் அவள் பூரண நலமாக இருக்கின்றாள், இனி இப்படி அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்ற அறிவுரையோடு அவள் கிளம்பலாம் என கூறி விட்டு செல்ல… அப்பொழுது ஆரம்பித்தவன் தான், அவள் உடல் நிலை பற்றி தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை, ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் இப்படி மயங்கும் நிலை வந்திருக்காது, அப்படி என்ன அஜாக்கிரதை அப்படி இப்படி என அவளை பிடிப்பிடி என பிடித்திருந்தான்.

நித்திலாவோ, அவனின் வசை மொழிகளை எல்லாம், அமைதியாக கேட்டுக் கொண்டாள், தவறு அவள் மீது அல்லவா இருக்கின்றது. அவளுக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி கண்டம் விட்டு கண்டம் வந்து மருத்துவமனையில் சேர.

என்னவென்று கேள்வி கேட்டவனிடம் ‘தன்னை தன் இருப்பிடம் அழைத்து செல்லாமல் ஏன் இங்கு அழைத்து வந்தான்?’ என தான் கேட்டால் அதற்கும் வசை பாடுவான் என அவன் குணமறிந்து சமத்துப் பிள்ளையாக இருக்க முடிவு செய்தாள்.


வரும் வழியிலேயே தங்களுக்கு தேவையான உணவுகளை வாங்கியவன், அதனை சாப்பாட்டு மேஜை மேல் வைத்து விட்டு, அந்த வீட்டினை கண்களால் அளவிட்டுக் கொண்டிருந்த நித்திலாவிடம் ஒரு அறையினை சுட்டிக்காட்டி ரெப்ரெஷ் செய்து கொள்ள சொன்னவன். அவள் வருவதற்குள் தானும் குளித்துவிட்டு வர இருவரும் அமைதியாக உண்டு முடித்து, அவளிடம் அந்த வேளைக்குறிய மருந்துகளை கொடுக்க அதையும் விழுங்கினாள்.

சற்று நேரம் கழித்து நித்திலாவை அழைத்து கொண்டு மாடியேறிய விஷ்ணு ஒரு அறைக்குள் நுழைந்தவன் “ஒகே, நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என.

நித்திலாவோ அவன் சொன்னதைக் கேட்டு சாசர் போல் தன் விழிகளை விரித்து பார்க்க. பாவையின் விழி அசைவில் மனம் மயங்கினாலும் அதனை காட்டாது தன் புருவத்தினை ஏற்றி ‘என்ன?’ என்பது போல் பார்வையால் வினவ.

நித்திலாவோ “இப்படி முறைச்சுக்கிட்டே கேட்ட நான் என்னன்னு சொல்றது?” என மனதிற்குள் புலம்பினாள்.


நித்திலாவிற்கு விஷ்ணுவோடு அவன் வீட்டில் தங்க எந்த தடையும் தயக்கமும் இல்லை, அவள் அங்கு தங்க தயங்கும் காரணம், தன்னோடு வந்தவர்கள் இதைப்பற்றி அறிந்தால் தன்னவனைப் பற்றி ஏதெனும் தவறாக எண்ணி விடுவர்களோ? என்று தான். இதனை எப்படி தன்னவனிடம் சொல்வது என பெண்ணவளுக்கு தெரியவில்லை. அவளவனின் பார்வையில் பெண்ணவளும் பேச மடந்தையாகி போனாள்.

பாவம் நித்திலாவிற்கு தெரியவில்லை… தன்னவனை விரல் சுட்டிக் காட்டி கேள்வி கேட்பவர் எவருமில்லை என்பதை விட அதற்கு தைரியம் யாருக்கும் இல்லை அப்படி கேள்வி கேட்கும் உரிமையையும் மற்றவகளுக்கு அவன் தருவத்தில்லை என்பதே உன்மை. யார் என்ன சொன்னாலும் தன் நினைத்தை மட்டும் சாதிக்கும் பிடிவாதகாரன் என்று.

ஆனால் விஷ்ணுவோ அவனவளின் தயக்கத்தில் சினம் சிரமேற “உனக்கு என்னோட தங்க விருப்பம் இல்லையா இல்லை என் மேல் நம்பிக்கை இல்லையா? என தன் தாடையினை தடவியப்படி பெண்ணவளை பார்வையால் கூறுப்போட. அவன் வார்த்தைகள் வலியைக் கொடுத்தாலும், நித்திலாவோ கோபத்தில் சிவந்த அவளவனின் கண்களோடு தன் விழிகளை கலக்கவிட்டவள் “உங்க மேல எனக்கு, விருப்பம் கடலளவு இருக்கு, நம்பிக்கை அது வானளவு இருக்கு விஷு, ஆனா நாம தனியா இங்க வரலை, உனக்கு கீழ் வேலை பார்க்குறவங்களோட நானும் ஒருத்தியா நாம வந்திருக்கோம். நான் இங்க தங்கின அவங்க கிட்ட உன்னோட மதிப்பு என்னாகுமோன்னு தான் நான் தயங்கினேன்” என்றாள் அவன் கன்னங்களை தன் இரு கைகளால் தாங்கி.


அதுவரை ஏரிமலையாய் குமுறி கொண்டிருந்தவன் பெண்ணவளின் பதிலில் பனிமலையாய் குளிர தொடங்கினான்.


நினைவில் வருவனோ...
 
Status
Not open for further replies.
Top