All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 10

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ma....
Sid eppo kadhalai solwan????
Poorni eppadi kadhalukkaga veettai vittu powa?????
Poorni epa veeta vittu povala???😥😥😥😥 சித் எப்போ காதல சொல்லுவான் தெரியலையே சகி...
பொறுத்து இருந்து பார்ப்போம் ‌..
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
11 கலாப காதலா
பூர்ணிக்கு நந்தினி மேல் கோபமாக வந்தது.. " சரி இது அவ வாழ்க்கை அவ முடிவுபடியே நடக்கட்டும் "
என மனதினை சமாளித்து கொண்டு சென்னை கிளம்பினாள்...
" தாத்தா நான் ஊருக்கு போயிட்டு வரேன் "
என்ற பூர்ணியிடம்
" என்னமா அதுகுள்ள கிளம்பிட்ட "
" இல்ல தாத்தா நாளைக்கு காலேஜ் போகனும் ஏற்கனவே மூன்னு நாள் லீவ் போட்டுடேன் "
" சரி மா "
என்றவர் தயங்கி நிற்க
" என்ன தாத்தா ஏதாவது சொல்லனுமா "
" அது வந்து டா "
" என்ன தாத்தா என்கிட்ட சொல்ல போய் இவ்வளவு யோசிக்கிறிங்க "
" எனக்கு உன் மேல நிறைய நம்பிக்கை இருக்கு டா இருந்தாலும் என்னடா தாத்தா இப்படி சொல்லிட்டாங்களேனு தப்பா நினைக்க கூடாது "
" அதலா நினைக்கமாட்டேன் தாத்தா நீங்க சொல்லுங்க "
" அது "
எனறவரை கூரிய பார்வை கொண்டு பார்த்தால் பூர்ணி...
" உன் கல்யாணம் எங்க விருப்பபடி தான்டா நடக்கனும் "
அவர் கல்யாணம் என்றதும் தன் மனக்கண்ணில் வந்து நின்றது சித்தார்த் உருவம் தான்..
" என்னடா நான் பேசிட்டே இருக்கேன் நீ அமைதியா இருக்க "
" ஆங் தாத்தா இப்ப என்ன தாத்தா கல்யாண பேச்சு "
" அதுகில்ல டா உனக்கும் வயசு ஏறுதுல அதான் "
" சரி தாத்தா உங்க விருப்பபடி தான் கல்யாணம் நடக்கும் "
கூறும் போது எவ்வளவு முயன்றும் மனதில் இருந்து சித்தார்த் உருவத்தை நகர்த்த முடியவில்லை...
" என்னடி எல்லாம் எடுத்து வைச்சுடியா "
என்று கேட்டபடி வந்தார் சுமதி..
" ஆங் மா எடுத்து வைச்சுடேன் கிளம்புறேன் மா பாய் "
" சரி டி பாத்து போயிட்டு வா போயிட்டு கால் பண்ணு "
எப்போதும் தன்னை அழைத்து போக தன் பெரியப்பா அல்லது அப்பா அவர்களே வருவர் இப்போது கோபி வந்து இருப்பதை கண்ட பூர்ணி முகம் யோசனையில் ஆழ்ந்தது..
" அப்பா வரல "
" இல்ல மாமா கொஞ்சம் வேலையா இருக்காங்கலா அதான் என்ன போய் விட்டுட்டு வர சொன்னாங்க "
" பெரியப்பா "
" இரண்டு பேரும் தான் வேலையா போயிருக்காங்க ஏன் பூர்ணி என்கூட வரமாட்டியா "
" அதலா இல்ல சரி கிளம்பலாம் "
என அவனது வண்டியில் ஏறி உடகார இறக்கையே இல்லாமல் காற்றில் பறந்தான் கோபி..
பின்னே சிறு வயது முதலே பூர்ணி மேல் அவனுக்கு காதல் ஆனால் தாத்தா மேல் இருந்த பயம் அவனை அவளிடம் தன் காதலை கூற முடியாமல் தடுத்தது...
" என்ன பூர்ணி எதும் பேசாம அமைதியா வர "
" அதலா ஒன்னும் இல்ல மாமா "
" ஏதோ யோசிட்டே வரியே என்ன "
அவன் யோசனை என்ற பிறகே சித் நினைவு வர அதன்பிறகு வேற எதும் அவள் காதில் விழவில்லை அவன் பேசிக்கொண்டே பஸ் ஸ்டாண்டு வந்தான்..
" என்ன பூர்ணி நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல "
" ஐய்யோ இவரு என்ன கேட்டாறுனு தெரியலயே பொதுவா சரின்னு சொல்லி வைப்போம் "
என எண்ணியவள்
" சரி மாமா "
" போயிட்டு வரேன் "
என்றவள் பஸ்ஸில் ஏற
கோபி மிகுந்த சந்தோஷத்துடன் வண்டியில் ஏறி வீடு திரும்பினான்...
வாட்ஸ்அப் மெசேஜ் வந்ததை எடுத்து பார்த்தவள்
" ஓய் கிளம்பிட்டியா "
என சித் அனுப்பி இருக்க
" ம்ம் "
என பதிலுடன் முடித்து கொண்டாள்..
" சரி நான் அந்த பக்கம் தான் வரேன் உன்ன பிக் பண்ணி உன் ஹாஸ்டல விடுறேன் "
" இல்ல வேணாம் நானே போயிக்குறேன் "
" நான் விடுறேனு சொன்னேன் "
அவனுடன் பேச்சினால் வேலைக்கு ஆகாது என்பதால் அமைதி ஆனால்...
" என்ன இவ நல்லா தான இருந்தா அதுக்குள்ள மலை ஏறிட்டா இவள வச்சி எப்படி சமாளிக்க போறமோ "
என எண்ணத்துடன் போனை வைத்துவிட்டு தனது வேலையை கவனிக்க தொடங்கினான்...
ஏதேதோ யோசனையில் சென்னை வந்தவள் இறங்கி பார்க்க அங்கு சித் நின்று கொண்டு இருந்தான்..
வெள்ளை நிற சுடிதாரில் தோள் வரை தொங்கிய கூந்தலை ஒற்றை கிளப்பில் அடக்கி காதில் வளையம் இட்டு ஒரு கையில் வாட்ச் அணிந்து சிம்பிளாக வந்த போதும் தேவதையாக தெரிந்தால் பூர்ணி...
" ஹலோ மேடம் "
" ஹாய் "
" என்ன மேடம் என்னமோ யோசனையாவே வரிங்க "
" அதலா இல்லங்க உங்களுக்கு ஏன் சிரமம் நானே போயிருப்பேன்ல "
" இதுல என்ன சிரமம் நான் இந்த வழியா தான் போறேன் அதான் உன்னையும் கூட்டிட்டு போறேன் "
உண்மையாகவே அவனுக்கு இந்த பக்கம் எந்த வேலையும் இல்லை பூர்ணிக்காக மட்டுமே வந்தவன் அவளிடம் அதை கூறாமல் வேறு காரணம் கூறினான்....
வேறு எதும் பேசாமல் அமைதியாகவே இருந்தால் பூர்ணிமா அவனும் அவளை வற்புறுத்தவில்லை அமைதியாக பயணம் தொடங்கியது...
ஹாஸ்டல் வந்ததும் இறங்கியவள்
" தேங்க்ஸ்ங்க பாய் "
" ஓய் நில்லு " என்றவன் அவள் அருகில் சென்று
" ஏதோ யோசனையாவே இருக்க "
" இல்ல இல்ல ஒன்னும் இல்ல "
" உன் மூஞ்ச பாத்தாலே தெரியுது ரொம்ப எதையும் யோசிக்காத நல்ல ரெஸ்ட் எடு திரும்ப மீட் பண்ணலாம் உனக்கு ஏதாவது பிரச்சினைனா எனக்கு கால் பண்ணு நான் இருக்கேன் எதையும் நினைக்காத போ "
என அவளின் முகத்தில் தொங்கிய ஒற்றை கூந்தலை காதின் பின்புறம் ஒதுக்கி விட்டவன் சிரிப்புடன் அவளை அனுப்பி வைத்தான்.....
தன் மனதில் இருப்பது என்னவென்று தெரியாமல் உள்ளே வந்தவளை நிறுத்தியது பீர்த்தி குரல்
" ஏய் நில்லு "
" ஹாய் டி ரொம்ப டையர்டா இருக்கேன் நாளைக்கு பேசலாமே "
" நான் சொல்லுறத கேட்டுட்டு போ டி "
" என்ன டி "
சலிப்புடன் நின்றவளின் பக்கம் வந்த பீர்த்தி
" இப்போ உன்ன விட்டுட்டு போனாறே அவரு யாரு "
அவளிடம் மறைக்க கூடாது என்று இல்லை ஆனால் யாரென்று சொல்வது என புரியாமல் " பிரெண்ட் டி "
" பிரெண்டா எங்களுக்கு தெரியாம உனக்கு ஏதுடி புது பிரெண்ட் "
அவளிடம் தப்பிக்க நினைத்தவள்
" அவரு எங்க ஊரு டி அது மூலமா பழக்கம் போதுமா தள்ளு நான் போறேன் "
" எது த கிரேட் பிஸ்னஸ் மேன் சித்தார்த் வர்மா உங்க ஊரு உங்க பிரெண்டா "
அவளின் பேச்சில் நின்றவள் திரும்பி அவளை பார்க்க
" சொல்லு சித்தார்த் வர்மா உன் பிரெண்டா "
" அவரு சித்தார்த் வர்மாவா "
" ஆமா உனக்கு தெரியாது "
" இல்லை "
என தலை ஆட்டியவளை கண்ட பீர்த்தி நக்கல் சிரிப்புடன் " சொல்லு அவர எப்படி தெரியும் "
நடந்த அனைத்தையும் கூறியவள் தன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை மட்டும் கூறவில்லை..
சித்தார்த் பற்றி பீர்த்தியும் கூற பூர்ணி பயம் கொள்ள ஆரம்பித்தாள்...
" எனக்கு என்னமோ தப்பா தெரியுது டி இவ்வளவு பெரிய ஆளு உன்கிட்ட எதுக்கு வந்து பேசனும் பழகனும் அதுவும் இல்லாம ட்ராப் வேற பண்ணுறாரு பாத்து இருந்துக்கோ "
என்றவள் செல்ல
பூர்ணி வந்த களைப்பு கூட தெரியாமல் சித் பற்றியும் தாத்தா சொல்லியது கோபி பேசியது நந்தினி காதலனுடன் சென்றது என எல்லாம் யோசித்து இரவு முழுவதும் குழம்பினாள்...
ஆனால் " நான் இருக்கிறேன் "
என சித் கூறிய ஒற்றை வார்த்தையை மறந்தாள்...
மறுநாள் விடிய கனத்த தலைவலியுடன் எழுந்த பூர்ணிமா அறையில் யாருமில்லாததை கண்டு தனது போனை தேடினாள் நேற்று நடந்த குழப்பத்தில் ஃபோன் சார்ஜ் போடாமல் அணைந்து கிடக்க எழுந்து ஆன் செய்து சார்ஜ் போட்டுவிட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்...
பிரியாவை அழைக்க
" ஹலோ சொல்லு டி "
" என்ன டி யாரையும் ரூம்ல காணும் "
" சாரி டி எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு அதான் சீக்கிரமா காலேஜ் வந்துட்டேன் பீர்த்தியும் என்னோடவே வந்துட்டு நீ நல்லா தூங்கிட்டு இருந்தியா அதான் டிஸ்டெப் பண்ணல "
" சரி டி ரொம்ப தலைவலியா இருக்கு நான் நாளைக்கே காலேஜ் வரேன் டி "
" ஓகே டி ரெஸ்ட் எடு பாய் "
" பாய் "
என போனை துண்டித்த அடுத்த நொடி சித்தார்த் அழைப்பு வந்தது ‌..
பேசலாமா வேணாமா என தவித்தவள் ஒரு வழியாக அவனது அழைப்பை ஏற்றாள்..
" ஹாலோ பூர்ணி "
" ஏய் என்ன ரொம்ப நேரமா கால் பண்ணேன் ஸ்விட்ச் ஆஃப் னு வந்துச்சு "
" இல்ல தூங்கிட்டேன் இப்ப தான் எழுந்து சார்ஜ் போட்டேன் பிரெண்ட்க்கு கால் பண்ணி காலேஜ் வரலனு சொன்னேன் "
" சரி சரி எப்படி இருக்க "
" ம்ம் பைன் "
" ஓகே அப்ப மீட் பண்ணலாமா "
" இல்ல காலேஜ் இருக்கு "
" ஏய் இப்பதான லீவ்னு சொன்ன "
தான் குட்டு வெளிபட்டதை நினைத்து உதட்டை கடித்தவள்
" இல்ல வெளியலா எங்கயும் "
" அம்மா தாயே உன்ன எங்கயும் கடத்திட்டு போக மாட்டேன் உங்க காலேஜ் பக்கத்துல இருக்கற காஃபி ஷாப் வா "
சித்தார்த் வுடன் பேசியதில் அவள் புரிந்து கொண்டது தனது முடிவில் இருந்து பின் வாங்காதவன் என
" சரி "
என கூறியவள்
அவனுடன் நேரில் பேசி இத்துடன் இந்த பழக்கத்திற்கு முடிவு கட்ட நினைத்தாள் ஆனால் ஒரு மனது அவனுடனான பிரிவிற்கு வருந்தியது அதன் காரணம் புரியாமலே கிளம்பினாள் ‌......
தொடரும்.....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
12 கலாப காதலா

பூர்ணி கிளம்பி அவன் சொன்ன காஃபி ஷாப் போக இவளுக்கு முன்னரே காத்திருந்தான் சித்....

தூரத்தில் அவள் வரும் போதே கண்டு கொண்டவன் அவளின் அழகில் வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டு இருந்தான்...

ஆண்மகனின் பார்வையின் வீரியம் பெண்ணவளை தாக்க பார்வையை தாழ்த்தி கொண்டு அவனிடம் வந்தாள்....

அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர
" ஏய் இங்க வந்து உட்காரு "
என தன் அருகில் இருந்த இடத்தை சித் காட்ட
" பரவாலங்க "
என்றபடி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்...

சற்று நேரம் இருவரும் எதும் பேசாமல் பூர்ணி பார்வையை சுற்றி படர விட சித் பார்வையை முழுதும் பூர்ணி மேலையே வைக்க..

" நீங்க நீங்க "
என மெதுவாக பூர்ணி பேச்சை ஆரம்பிக்க
" சொல்லுங்க நான் "
" நீங்கதான் சித்தார்த் வர்மா "
" அப்பாடி இதையே நீ இப்ப தான் கண்டுபிடிச்சியா "
" விளையாடாதிங்க நீங்க பிஸ்னஸ் மேன் சித்தார்த் வர்மா வா "
" ஆமா அதுக்கு என்ன இப்போ "
" இத ஏன் நீங்க முன்னடியே சொல்லல "
" நீ கேக்கல நான் சொல்லல "
" நான் கேக்கலனா நீங்க சொல்ல மாட்டிங்களா "
" ஸி உன்ன பத்தி ஒவ்வொரு விஷயமும் நீயா சொல்லி நான் தெரிஞ்சுகிட்டேன் அதே மாதிரி என்ன பத்தியும் நீயா கேட்டு தெரிஞ்சுக்கனு ஆசபட்டேன் "
" அப்போ கேக்காதது என் தப்புன்னு சொல்றிங்களா "
" இப்போ எதுக்கு இந்த சண்ட "
" நீங்க சொல்லாது தான் தப்பு "
" நீ கேக்காதது தான் தப்பு "

இருவரும் முகத்தை திருப்பி கொண்டு கோபத்துடன் இருக்க இடையே வந்தான் அஜய்...

" ஹாய் "
என்றபடி வந்து அமர்ந்தான் அஜய்..
" நீ எப்படா வந்த "
என சித் யிடம்
" நீங்க இரண்டு பேரும் சண்ட போட ஆரம்பிக்கும்போதே வந்தேன் மச்சான் சரி எதுக்கு டிஸ்ரெப் பண்ணணனு ஓரமா நின்னு வேடிக்கை பாத்தேன் "
" நல்ல எண்ணம் டி உனக்கு "
" தேங்க்யூ "

புரியாமல் அமர்ந்த பூர்ணி யார்ன கண்ணாலே கேட்க
" என் பிரெண்ட் அஜய் "
" அஜய் பூர்ணி டா சொன்னேன்ல "

" ஹாய் " என்றான் அஜய்
அதற்குள் சித் ஃபோன் அழைக்க
" நீங்க பேசிட்டு இருங்க நான் ஃபோன் பேசிட்டு வரேன் என்றவாறு நகர்ந்தான்...

ஃபோன் பேசிவிட்டு வந்து பார்க்கும் போது அஜய் பூர்ணி இருவரும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தனர்...

" பாவி பாவி என்கிட்ட இரண்டு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசினாலே சண்ட தான் போடுறா அவன்கூட மட்டும் இப்படி பேசுறா "
என மனதில் நினைத்து கொண்டு டேபிள் அருகே வர அவனை கண்ட பூர்ணி சிரிப்பை அடக்கினாள்....

" மச்சான் பூர்ணி செம டா funny character டா " என அஜய் கூற
" எது உன்ன மாதிரி ஒரு ஓட்ட வாயு க்கு பேரு funny character அ அட சீ தள்ளி உட்காரு "

அதன்பின் மூவரும் இணைந்து உணவு அருந்திவிட்டு கிளம்பி சென்றனர்...

நாளாக நாளாக மூவருக்கும் இடையே இருந்த பிணைப்பு அதிகமானது பூர்ணி மனதில் இருந்த பயம் அஜய் நட்பாலும் சித் உடன் இருந்தாலும் சற்று மறைந்தது ஆனால் எக்காரணம் கொண்டும் சித் மீது தனக்கு இருக்கும் காதலை அவள் வெளியே காட்டி கொள்ளவே இல்லை...
சித் தனது ஒவ்வொரு செயலிலும் தனது காதலை காட்டினான் புரிந்த போதும் அமைதி காத்தாள்....

" ஓய் வெளியே போலாமா டி "
என சித் கேட்க
" இப்போ வா "
" ஆமா "
" ஹலோ பாஸ் டைம் என்ன தெரியுமா "
" வெளிய போலாமானு கேட்டேன் "
" நைட் டைம் லா வெளிய விட மாட்டாங்க ஹாஸ்டல "
" சுவரு ஏறி குதிச்சு வா "
" அப்படிங்குறிங்க "
" அப்படிதான்ங்குற வா"
என அவன் போனை வைக்க
" ஹலோ ஹலோ "
இவள் கத்திய எதும் அவன் காதில் வாங்கவில்லை...

அவன் வைத்தவுடன் அஜய்க்கு அழைக்க இதும் பழக்கமான ஒன்று எங்கு சென்றாலும் அஜய் இல்லாமல் செல்லமாட்டாள் பூர்ணி..
" சொல்லு குட்டிமா "
" அஜ்ஜூ வெளிய போலாம சித் கூப்பிட்டாங்க "

மறுமுனையில் இருந்து சிரிப்பு சத்தம் கேட்க
" என்னடா "
" நீ ஏன் அம்மு இப்படி இருக்க‌ "
" என்ன "
என புரியாமல் கேட்க
" உனக்கு கால் பண்ணுறதுக்கு முன்னடியே எனக்கு கால் பண்ணி நாங்க வெளிய போறோம் நீ வரதானு சொல்லிட்டான் அதனால நீ கிளம்பி போய் அவன்கிட்ட உன் லவ சொல்லு "
" லவ்வா அதலா ஒன்னும் இல்ல "
" சும்மா நடக்காத டி உன் கண்ணுல நான் பாத்தேன் அவனும் பாத்தான் எங்களுக்கு எப்பவோ தெரியும் உன் மனசு உன்ன கஷ்டபடுத்த வேணாம் நீயா சொல்லுவனு அவனும் கேக்கல என்னையும் கேட்க கூடாதுனு சொல்லிட்டான் "

தன் மீது அவனுக்கு இருக்கும் காதலை எண்ணி பூரித்தவள் சிரிப்புடன் ஃபோனை ‌வைத்தாள்...

" ஐய்யோ பிளையார்ப்பா இவன் பேச்ச கேட்டு இப்படி ஏறிடனே இப்போ இறங்க வழி தெரியலயே "
என சுவரின் மீது அமர்ந்து கொண்டு இருக்க..

சிரிப்பு சத்தம் கேட்டு கீழே பார்க்க சித் வயிற்றை பிடித்து சிரித்து கொண்டு இருந்தான்...

அவள் முறைப்புடன் அவனை பார்க்க
" அடியே ஒரு பேச்சுக்கு சுவரு ஏறி குதிச்சு வாடினு சொன்னா அதையே செய்வியா உன்ன வா"
என அவள் கைபிடித்து இறக்கி விட அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.....

" சரி வா போலாம் '
என அங்கிருந்த பைக்கில் உட்கார
" பைக்கா "
" ஆமா ஏன் உனக்கு பைக்கு தான பிடிக்கும் வா வந்து உட்காரு "
அவள் தயங்க
" வாடி "
என அவள் கையினை பிடித்து இழுத்தான்...

ஒரு பக்கம் அவள் கால் போட்டு அவனை விட்டு தள்ளி உட்கார
திரும்பி பார்த்தவன்
" ஏன் இறங்கி சக்கரத்துல உட்காரேன் அடச இறங்கி இரண்டு பக்கம் கால் போட்டு உட்காரு " என்றவன்
" இவ ஒன்சைட் உட்கார தான் நாங்க வண்டி எடுத்துட்டு வந்தோம் பாரு "
என முணுமுணுத்தான்
" இப்ப எதுக்கு திட்டுரிங்க நான் யாரு கூடயும் அப்படி உட்கார்ந்து பழக்கம் இல்ல "
" இனி என்கூட உட்கார பழக்கபடுத்திகோ "

பின் பூர்ணி இருபக்கமும் கால் போட்டு அவனுடன் உடகார வண்டி சீறி பாய்ந்தது
அவனின் வேகத்தில் சற்று மிரள பிடிக்க எதும் இல்லாமல் போக வேறு வழியே இல்லாமல் சித்தின் தோளினையே பற்றினாள்...

அவள் பிடிக்க வேண்டும் என்று தானே வேகமாக சென்றதே என எண்ணியவன் சிரிப்புடன் செல்ல...
அவனின் அருக்மையில் திணறினாள் பூர்ணி....

ஒரு இடத்தில் வண்டி நிற்க அதனை கண்ட பூர்ணி பிரம்பித்தாள..
" ஏய் பீச் க்கு கூட்டிட்டு வந்து இருக்கிங்க வாவ் "
என கடற்கரை நோக்கி சென்றவளின் கையினை பிடித்து நிறுத்தினான்...
என்ன என்ற கேள்வியுடன் பார்க்க

அவன் தனது கையினை சொட்டு இட
அந்த இடம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தது மெல்லிய இசைக்க எங்கும் பரவ தனது கையில் இருந்த வைர ரிங்கை எடுத்து தன்னவள் கையில் மாட்ட முயற்சித்தான்...

பூர்ணி விரல் மூடிய படியே இருக்க
" அடியே கவலபடாத பிரொபோஸ் லா பண்ணல "
" ஹேப்பி பர்த்டே "

அதன் பின்பே தனது பிறந்தநாள் நினைவு வர
" பர்த்டே க்கு விஷ் பண்ணிங்களா "
" ஏன் நீ வேற ஏதாவது நினைச்சியா "
" நான் எதும் நினைக்கல "
என்னறவளின் கையினை மென்மையாக பிடித்தவன் அதில் ரிங்கை மாட்டினான்....

" ஹேய்"
என சுற்றி இருந்தோரின் சத்தம் கேட்க
அஜய் பிரியா பீர்த்தி உடன் சில நண்பர்கள் இருக்க பூர்ணி சென்றாள்...

" ஹேப்பி பர்த்டே அம்மு "
என்று மென்மையாக கட்டி அணைத்து நெற்றியில் முத்தம் கொடுக்க
" தேங்யூ அஜ்ஜூ செல்லம் "
என்றவள் அவனது கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள்..

அவர்களின் மனதிலும் எந்த தப்பான எண்ணமும் இல்லை அவர்களது முத்தத்திலும் தவறு இல்லை என சித் உட்பட சுற்றி இருந்த அனைவருக்கும் அது புரிந்தது...

அதன்பின் பிரியா பீர்த்தி என நட்பு வட்டங்கள் வாழ்த்த கேக் வெட்டி சிறப்பாக பிறந்தநாள் முடிந்தது....

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13 கலாப காதலா
" சரி அப்ப கிளம்புறோம் "
என்ற பூர்ணியின் கை பிடித்தவன்
" நீ எங்க கிளம்புற நான் உன்ன டிராப் பண்ணுறேன் "
என்றவன் அஜயிடம் கண் காட்ட " ஹாண் ஓகே ஓகே அம்மு உன்ன அவன் டிராப் பண்ணுவான் வாங்க சிஸ்டர் நான் உங்கள டிராப் பண்ணுறேன் "
என்றவன் பிரியா பீர்த்தி யை கூட்டி கொண்டு இடம் நகர்ந்தனர்...
" சரிங்க நமலும் போகலாம் "
என்று வண்டி ஏறி செல்ல வண்டி ஹாஸ்டல் பாதையில் செல்லாமல் வேறு பாதை ச்ச நோக்கி சென்றது...
" என்னங்க அப்படி போகனும் இந்த பக்கம் போறிங்க "
" ஏய் எனக்கு தெரியும் நீ வாய மூடிட்டு வா டி "
அவள் அமைதி காக்க வண்டி சென்று ஒரு இடத்தில் நிற்க
" இறங்கு "
என்று இருவரும் இறங்கி அங்கிருந்து நடை மேடையில் அமர்ந்திருந்தனர்...
அந்த இடத்தில் இருந்து நிலாவை பார்க்க அது முழுவதுமாக தெரியாமல் மேகத்தில் மறைந்து மறைந்து கண்ணாமூச்சி விளையாடியது..
ஒன்றும் பேசாமல் இருவரும் அமர்ந்திருக்க பூர்ணி திரும்பி சித் யை பார்க்க
" யார்டா நீ எனக்காக இவ்வளவு செய்யற உன்ன நினைச்சாலே அவ்வளவு சந்தோஷம் ஆனா ஏதோ ஒன்னு தடுக்குது டா அதுக்காக மட்டும் தான் யோசிக்குறேன் "
என மனதிற்குள் பேசியவளிடம்
" ரொம்ப சைட் அடிக்காத டி "
என்றவன் அவள் புறம் திரும்பி
" ஹாப்பியா "
" ம்ம் ரொம்ப ஹாப்பி எப்பவும் அம்மா சொல்லி தான் பர்த்டேவே தெரியும் மறந்து போயிடுவேன் அதும் மார்னிங் எல்லாரும் விஷ் பண்ணி கோயில் போவோம் புது டிரஸ் அதான் பர்த்டே இந்த மாதிரி பிரெண்ட்ஸ் கூடலா செலிபிரேட் பண்ணதே இல்ல "
பேசிக்கொண்டே போனவளின்
அவள் மடி மீது இருந்த கையினை பிடித்து
" ஐ லவ் யூ டி பூர்ணி "
அவன் சட்டென கூறியதில் அதிர்ந்த பூர்ணி
" சித் அது வந்து நான் "
" ஐ லவ் யூ "
" சித் பிளிஸ் சொல்றத கேளேன் "
" ஐ லவ் யூ "
" சித் பிளிஸ் "
" ஐ லவ் யூ "
" சித் "
" ஐ லவ் யூ டி"
" சித் "
" ஐ லவ் யூ பட்டு "
அவளால் அவளையே கட்டுபடுத்த முடியவில்லை ஓரே எட்டில் அவளை அணைந்தவள்
" லவ் யூ டூ சித்து லவ் யூ டா "
என்றவள் கண்ணீருடன் முகம் முழுவதும் முத்தம் பதிக்க இம்முறை அதிர்ச்சி அடைந்தது சித்தார்த்....
" சித்து "
" சொல்லு பட்டு "
" பயமா இருக்கு "
" பயமா இருக்கா ஏன் "
தன் குடும்பத்தை பற்றியும் தன் தாத்தா தன்னிடம் வாங்கிய சத்தியத்தை பற்றியும் கூற
" இதுக்கா இவ்வளவு பயந்த "
" பின்ன இல்லையா எங்க குடும்பத்துல யாருக்குமே லவ் மேரேஜ் இல்ல அப்படி பண்ணிட்டா ஊர விட்டே ஒதுக்கி வைச்சுடுவாங்க எத்தன வருஷம் ஆனாலும் சேக்கவே மாட்டாங்க "
" நீ கவலபடாத பட்டு நான் கூடவே இருப்பேன் "
" எனக்கு என் குடும்பம் தான் எல்லாம் அவங்கள மீறி எதும் பண்ணதுயில்ல பண்ணவும் மாட்டேன் அதே மாதிரி எனக்கு நீயும் வேணும் உன்ன விட்டும் போக மாட்டேன் அப்படி போனா போற இந்த உடம்புல உயிர் இருக்காது "
என சொல்லி முடிக்கும் முன்பே இதழ் கொண்டு அவள் இதழை அடைத்தான்...
முதல் முத்தம் அதுவும் இதழ் முத்தம் திணறி தான் போனாள் பூர்ணி..
அவளிடம் இருந்து விலக்கியவள்
" இனி அப்படிலா பேசாத டி நீ இல்லனா நானும் இல்ல பூர்ணி தான் சித்தார்த் சித்தார்த் தான் பூர்ணி "
பேசி கொண்டே கிளம்பியவளை ஹாஸ்டல் வாசலில் நிறுத்தியவன்
" எத பத்தியும் யோசிக்காத நான் இருக்கேன் அஜய் இருக்கான் போ போய் நிம்மதியா தூங்கு பாய் "
" பாய் " என்று அவனின் கண்ணத்தில் சட்டென முத்தம் இட்டவள் அவன் சுதாரிக்கும் முன்பு ஹாஸ்டல் உள்ளே சென்றுவிட்டாள்...
அவளின் செய்கையில் சிரித்தவன் தானும் அவ்விடத்தை நகர்ந்தான்..
அவன் அறியாமல் இருகண்கள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர்...
" ஏய் பூர்ணி பூர்ணி எழுந்திரு டி "
" என்ன பிரியா கொஞ்சம் நேரம் தூங்குறனே "
நீண்ட நேரம் இரவு கண் விழித்தது கண்கள் இரண்டும் எரிய கஷ்டப்பட்டு கண் திறக்க
" என்ன டி "
" இந்தா வீடுலந்து ஃபோன் அடிச்சுடே இருக்கு புடி "
ஃபோனை வாங்கியவள்
" மா "
" ஹாலோ குட்டிமா ஹாப்பி பர்த்டே டா "
" தேங்க் யூ மா "
" ஏன் டி ஃபோன் எடுக்க இவ்வளவு நேரம் "
" தூங்கிட்டேன் மா "
" இவ்வளவு நேரமா தூங்குற பொம்பள புள்ள காலையிலே எழுந்து குளிச்சு கோயிலுக்கு போறது இல்ல "
" மா ஆரம்பிக்காத மா பர்த்டே மா விடேன் "
" சரி சரி கோசிக்காத டி எழுந்து குளிச்சு கோயிலுக்கு போ சரியா "
" சரி மா "
" எப்பவும் போல சந்தோஷமா இருக்கனும் டி உன் மனசுக்கு என்ன சரினு தோனுதோ அத செய் டா "
அவர் எதை நினைத்து கூறினாரோ பூர்ணி மனதிற்கு சந்தோஷமாக இருந்தது..
" தேங்க்ஸ் மா "
" இரு டி தாத்தாகிட்ட தரேன் "
" அம்மாடி பூர்ணி "
" தாத்தா "
" பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா "
" தேங்க்ஸ் தாத்தா "
" இன்னைக்கு போல என்னைக்கும் சந்தோஷமா இருக்கனும் "
" ம்ம் சரி தாத்தா "
தாத்தா விடம் பேசும்போது தன் மனதிற்கு சற்று குற்றணர்ச்சியாகவே இருந்தது..
" தாத்தா கொடுங்க நான் பேசுறேன் "
என அருண் பிடுங்க
" ஐ ஹாப்பி பர்த்டே டி லூசு "
" அடிங்க வந்தேன் அடி பிச்சுடுவேன் இன்னைக்கு கூட மரியாதையா பேசலாம்ல "
" சரி சரி பொழைச்சு போ ஹாப்பி பர்த்டே அக்காகாரி "
" தேங்க்ஸ் டா தம்பிகாரா "
வீட்டில் உள்ள அனைவரும் வாழ்த்த போனை வைத்தாள் பூர்ணி..
" என்ன மாமா என்னமோ யோசிச்சுடே இருக்கிங்க "
என்று சுமதி கேட்க
" இல்லமா பூர்ணி கல்யாணம் நல்லபடியா நடக்கனும் தான் வேண்டிட்டு இருக்கேன் "
" அதலா ஒன்னும் இல்ல பா நம்ப பேச்ச மீறி என்ன பண்ணிட போறா நம்ம பொண்ணு நீங்க அதையலா நினைச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதிங்க "
ஏனோ சுமதிக்கு இந்த கல்யாணம் சரியாக படவில்லை குறைந்தபட்சம் அவளது சம்மதத்தை கூட கேட்காமல் இவர்களாக பேசுவதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை....
" சரி சரி இந்த டிரஸ் போட்டுட்டு கிளம்பு "
என பிரியா அவளை கிளப்ப
" ஏது டி இந்த சாரி சூப்பரா இருக்கு "
" இந்த இதலா போட்டுட்டு கிளம்பி வா "
என கூறிவிட்டு அறை விட்டு செல்ல
கிளம்பி வந்தவள் தன்னவனுக்கு தான் அணிந்த சேலையை காட்ட நினைத்து ஃபோன் எடுக்க அவன் இவளின் அழைப்பை எடுக்காமல் தவிர்த்தான்...
" என்ன திமிருடா உனக்கு இந்தன நாள் எப்ப டி ஃபோன் பண்ணுவனு காத்துட்டு இருக்கறது லவ் ஆ சொன்னதுக்கு அப்புறம் போனே எடுக்கறது இல்ல இரு டா உன்ன கவனிச்சுகுறேன் "
என்றவள் சற்று கோபத்துடன் கிளம்பி வெளியே வர
அவளுக்காக காத்திருந்த சித்தார்த் அவளை கண்டு மெய் மறந்து பார்த்தான்..
" அண்ணா உங்க செலக்சன் சூப்பர் ணா "
பூர்ணி முழிக்க
" என்னடி பாக்குற இது அண்ணா எடுத்த சாரி தான் சர்ப்ரைஸா இருக்கட்டுனு உன்கிட்ட சொல்லல "
சொன்ன பிரியாவை முறைக்க
" என்னக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லபா அண்ணன் சொன்னாங்க நான் செஞ்சேன் "
என்று கூறிவிட்டு அவள் செல்ல
சித்தார்த் வை கண்டு முறைத்தாள்..
" ஏய் சண்டகாரி இப்ப என்ன டி உனக்கு நல்ல மூடு கெடுக்காம கிளம்பு "
சிரித்தவள் அவனுடன் கிளம்பி செல்ல‌‌....
இங்கு வீட்டில் வெளியே கிளம்பிய முத்துராமன் தாத்தா
தனது மனைவி படத்தின் முன் நின்றார்
" என்னமோ மனசுக்கு சரியில்லாத மாதிரி தெரியுது டி இப்ப நீ இருந்த நல்லா இருக்குனும் தோனுது "
என மனைவியுடன் மனதில் பேசியவர்
கண் தானாக பக்கத்தில் இருக்கும் படத்திற்கு சென்றது...
எதும் பேசாமல் வெளியே கிளம்பி சென்றார்.....
தொடரும்.....

வணக்கம் நட்புகளே கதை எப்படி போகுது பிளிஸ் பிளிஸ் உங்களோட கருத்துக்கை கொஞ்சம் சொல்லிட்டு போங்க அப்ப தான் எழுதுற எனக்கு இன்னும் கொஞ்சம் ஆர்வமா இருக்கும்...

நன்றி
 
Status
Not open for further replies.
Top