All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளுக்கு வணக்கம் ....

சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட்டேன் ....
கல் நெஞ்சே கசிந்துருகு கதையின் அடுத்த அத்தியாயத்தை பதிவிட்டுள்ளேன்..

என்னால் முடிந்த அளவிற்கு பெரியதாக கொடுத்துள்ளேன். இதற்குமேல் முடியவில்லை.

அடுத்த பதிவை வரும் புதன் இரவன்று தருகிறேன்.....

தயவு செய்து தங்களது கருத்துக்களை பதிவிடவும்.

நன்றி,
பூவினி
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வினய் பாலமோகனிடம் எல்லாவற்றையும் கூறவும் அவருக்கு அதிர்ச்சியாயிருந்தது. மகளின் ஆழ்மனம் ஆதியை விரும்புகிறது என்று அவருக்கும் புரிந்தது. ஏனெனில் அன்றொரு நாள் நள்ளிரவில் மகளின் அறைக்கு அவளது உடல் நலத்தை அறிய எண்ணி செல்கையில் அவரும் ஆதி பற்றி அவள் கூறுவதை கேட்டிருந்தார். தனது மகளை காப்பாற்றியதால் ஆதி மீது அவருக்கு பெரிய மதிப்பு இருந்தது.

மதியின் மனதில் ஆதி தான் இருக்கிறான் என்றால் அவளை ஆதிக்கு மணம் முடிப்பதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவளது உடல் நிலை வேறு மோசமாகிக் கொண்டே போகவும் அவளுக்கு திருமணம் செய்தால் அவளது மனநிலையில் மாற்றம் ஏற்படும் என்று முடிவு செய்தவர் ஆதியை பற்றி எப்படி கேட்பது என்று தயக்கத்தில் இருக்க சரியாக வினய்க்கும் மதிக்கும் கல்யாணப் பேச்சை எடுத்தார் தங்கம்.

மதி இதனை எதிர்த்து ஏதாவது சொல்கிறாளா என்று ஆவலோடு எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே... மதி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு ஆதி என்பவனை பற்றி நினைவிலேயே வைத்துக் கொள்ள வில்லை என்பது போல் அவளது நடவடிக்கை அவருக்கு. (அவள் தான் தன்னுடைய சுயவுணர்வின்றி இருந்தாளே... இதில் எங்கு ஆதியை நினைவு கூறுவது).

அதன்பிறகு தான் வினய்க்கும் மதிக்கும் திருமணம் நிச்சயித்தார். தங்கையின் புன்னகை கண்டு மனதில் இருந்த சிறு தயக்கமும் மறைந்து விட்டது. ஆதியை பற்றி அவர் மறந்துவிட்ட நிலையில் இன்று ஆதியைக் காணவும் அவரது மனதில் சிறு அதிர்வு. அவனது பெற்றோரை பார்த்ததும் சாதாரண நிகழ்வாக எண்ணி விட்டார். இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

தங்கைக்கு தான் தனது மகள் மருமகள் என்று நிச்சயித்து ஊர் முழுவதும் பத்திரிக்கை கொடுத்து விட்ட வேலையில் ஆதியின் செயல் அவரை கோபப்படுத்தியது.

அது மட்டுமின்றி ஆதி வினயை அடித்தது, மகளது கண்ணீர் எல்லாம் சேர்ந்து அவரது கண்களை மறைத்தது. அதனால் தான் அப்படி நடந்து கொண்டார். இப்போது உண்மை அறிந்து கொண்டதும் அவரது மனம் சிறிது நிம்மதியுற்றாலும் தங்கையையும் உறவுகளையும் எண்ணி கலக்கமுற்றது.

அதற்கும் வினய் ஒரு வழி சொல்ல தங்கை மகனின் தியாகத்தைக் கண்டு அவரது மனம் குளிர்ந்தது. இருப்பினும் அவன் சொன்னபடி செய்திட முடியாது. இதனால் அவனுக்கு கெட்ட பெயரல்லவா ஏற்படும். ஆகையால் வேறு என்ன செய்யலாம் என யோசித்தார். அதற்குள் வினய் அவரை வெளியே அழைத்து வந்து தனது மற்ற எதையும் கூறாது திருமண திட்டத்தைக் மட்டும் கூற கார்த்திகேயன் மறுப்பு தெரிவித்தார்.

'இது சரி வராது தம்பி. தப்பு பண்ணது என்னோட பையன். அவனுக்கு தான் தண்டனை கிடைக்கணும் ஆனா நீங்க எதுக்கு எல்லார் முன்னாடியும் கெட்டவனா நிக்கனும். நிதானமா வேற வழிய யோசிக்கலாம்"

"வேற வழி எதுவும் இல்லைங்க. கல்யாண மேடையில நா அப்படி செஞ்சா ஆதி மதி கழுத்தில தாலிக் கட்டிடலாம். யாரும் அவங்கள கூற சொல்ல மாட்டாங்க. இல்லனா இந்த சமூகம் இவங்களுக்கு இடையில என்ன நடந்துச்சோனு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசும். புரிஞ்சுகோங்க. மதி மேல எந்த ஒரு கெட்ட பேரும் வரக் கூடாது. '

அவன் பேச பேச ஆதிக்கு கோபம் வந்தது. "இவன் யாரு என் மனு மேல் அக்கற காட்டுதற்கு. என் மனுவ நா பத்ரமா பாத்துக்குவேன். போடா பெரிய தியாகி மாதிரி சீன் போடுறான். உன்னால தான்டா நா இப்படி அவசர அவசரமா மனு கழுத்துல தாலிக் கட்டுனேன். இப்ப உன்ன எதுவும் செய்ய முடியாதபடி என்னோட சூழ்நிலை இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு உன்ன பாத்துக்குறேன். பத்தாததுக்கு அப்பா வேற' மனதுக்குள் வினயை திட்டிக் கொண்டிருந்தான்.

இருவரது பெற்றோரும் தயங்கியபடி நிற்க தங்கம் பேசத்துவங்கினார்.

"நா பேசுறதுக்கு என்ன மன்னிச்சிடுங்க. தம்பி சொல்ற மாதிரியே செய்வோம். நம்ம பொண்ணோட மானம் நமக்கு முக்கியம். என் கிட்ட முன்னாடியே இத பத்தி தம்பி சொல்லிட்டான். நம்ம பொண்ணோட சந்தோஷம் எதுவோ அது தான் நமக்கு சந்தோஷம்"

அப்போதும் தயங்கியவர்களை ஒருவழியாக சமாதானம் செய்து ஒத்துக் கொள்ள வைத்தனர். ஆனால் பாலமோகனும் , கார்த்திகேயனும் நிகழ்வதை ஏற்றுக் கொண்டு மெல்ல மெல்ல நட்பு பாராட்ட ஆரம்பித்தாலும் ஆதியிடம் பேசுவதை தவிர்த்தனர்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியோ அவர்களை கண்டு கொள்ளவில்லை. செந்தாமரையிடம் பேச முயல அவரோ கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார். தாயாய் மகனை மன்னிக்க நினைத்தாலும் ஒரு பெண்ணாய் மன்னிக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆதி மேலும் அவரை வற்புறுத்த விரும்பாமல் அமைதியாகி விட்டான்.

மதியிடம் பேச எவ்வளவு முயன்றாலும் பதில் என்னவோ பூஜ்யம் தான். அவனைக் கண்டாலே விலகி ஓடியவளை மற்றவர்கள் முன்பு எதுவும் செய்ய இயலாமல் அமைதிக் காத்தான்.

அனைவரும் எதிர்பார்த்த திருமண நாளும் வந்தது. எளிமொயான அலங்காரத்திலே தேவதையாய் இருப்பவள் இன்று மணப்பெண் அலங்காரத்தில் பேரழகாய் தெரிய இன்னும் சற்று நேரத்தில் அவளை மனைவியாக்கி கொள்ளப் போகும் உரிமையில் அவளை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி. அப்போது தங்க சிலையை போல அழகாய் தனதருகில் மணவறையில் அமர்ந்திருந்த மாமன் மகளை புன்னகையோடு ஏறிட்டான் வினய்.

அவளது முகத்தில் தெரிந்த துயர் அவனை வாட்டியது. இருப்பினும் அவன் செய்ய வேண்டியதை செய்து தானே ஆக வேண்டும். கண்களால் மதிக்கு ஆதரவு அளிக்க அதில் ஆதி கடுப்பாகி போனான்.

சரியாக ஐயர் கெட்டி மேளம் சொன்னதும் மணவறையில் இருந்து எழுந்து ஆதியின் வயிற்றில் பல லிட்டர் பாலை வார்த்தான் வினய். "தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அதனால் மதியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் அவன் கூற மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ந்தனர். எல்லாரது மனதிலும் வினயைப் பற்றி தவறான எண்ணம் பதிந்தது.

"அப்பவே சொன்னேன் பால மோகன் கிட்ட வினய ரொம்ப நம்பாதீங்க. உங்கள் ஒரு நாள் ஏமாத்திடுவானு. பாரு எங்க வந்து அவர் அவமானப்படுத்திட்டான் பாரு'

'ஆமாம்பா... அவன எவ்வளவு நம்புனாரு இப்படி பண்ணிடானே. அந்த பொண்ணு முகத்த பாரு பாவம்டா'

ஆளாளுக்கு பேச ஆதி மண மேடைக்கு சென்று வினயின் கையில் இருந்த தாலியை வாங்கி மதியின் கழுத்தில் கட்டி அவளது கணவனாகினான். மற்றவர்களுக்கு தியாக செம்மலாகினான்.

மதியின் அருகில் மணப்பெண் தோழியாக இருந்த நிவிக்கு பயங்கரமாக கோபம் வந்தது. கண நேரத்தில் அனைத்தும் முடித்துவிட அவளது கோபம் வினயின் மீது திரும்பியது.

மண்டபத்தை விட்டு வெளியேறியவனை பின் தொடர்ந்து சென்றாள். வினயோ மண்டபத்தின் வாயிலை அடைந்ததும் தனது அலைபேசியை எடுத்தான். "ஹலோ நா வினய் பேசுறேன். மதிக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. நா சொன்ன மாதிரி பேப்பர்ஸ்லாம் ரெடி பண்ணியாச்சுல. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு கொண்டுட்டு வாங்க இப்பவே முடிச்சுடலாம். இல்லனா அப்புறம் பண்ண முடியாது. சரி வாங்க" என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு திரும்பினான்.

ஒரு இளம்பெண் தன்னை முறைத்து கொண்டிருப்பதை கண்டவனுக்கு குழப்பம். அவனுக்கு அவளை தெரியவில்லை. இதற்கு முன் பார்த்ததாகவும் தோன்றவில்லை. அப்படி இருக்கையில் அவள் அவனை முறைப்பதை கண்டு ஆச்சர்யமானவன் அவளை அலட்சியம் செய்து விட்டு தன்வழியே செல்ல முற்பட்டான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நிவி அவனது பேச்சினை கேட்டு விட்டாள். அவன் பேசியதிலிருந்து அவன் வழக்கறிஞரிடம் பேசுகிறான் என்பதை அறியவும்
எல்லைக்கே சென்று விட்டாள்.

இதற்குமுன் அவள் அவனை பார்த்ததில்லை.ஆனால் மதியின் வாயிலாக அவனை நன்கறிவாள். மதிக்கு வினய் மீது எவ்வளவு பாசமும், எவ்வளவு மரியாதையும் இருந்தது என்று அவளுக்கு தெரியுமே.

அப்படி பட்டவளை ஏமாற்ற எப்படி இவனுக்கு மனம் வந்தது என அதிர்ந்து போய் விட்டாள். அவனிடம் கேள்வி கேட்டு சண்டைப் போட்டால் தான் அவளது மனதிற்கு நிம்மதியாயிருக்கும். அதனால் தான் அவனை பின்தொடர்ந்து வந்தது.

அவன் அவளை கண்டு கொள்ளாமல் சென்றதும்" ஹலோ மிஸ்டர் கொஞ்சம் நில்லுங்க.. " என்ற படி அவனைத் தாண்டி வந்து அவனது வழியை மறித்தவாறு நின்றிருந்தாள்.

அவன் புரியாமல் அவளைப் பார்க்கவும் " நீங்களாம் மனுஷனா??? மதிக்கு துரோகம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு. அத்தான் .... அத்தான் உங்க மேல உயிரையே வச்சுருப்பா. அவ மேல உங்களுக்கு கொஞ்சம் கூட பாசம் இல்லையா.. சரி பாசம் வேண்டாம் மனிதாபிமானம் கூடவா இல்ல. உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா கல்யாணம் பேசும் போதே சொல்ல வேண்டியதான இத்தனை பேரு முன்னாடி சொல்லி அவள் அசிங்கப்படுத்திருக்க வேணாம். உங்க மேல மான நஷ்ட வழக்கு போடணும். " என்று அவள் பொரிந்து தள்ள தன்னைப் போலவே மதியின் மீது அன்பு வைத்திருக்கும் அவள் மீது அவனுக்கு கோபம் வரவில்லை. மாறாக அவளை ஆராய்ச்சியாக பார்த்து வைத்தான்.

அவனது பார்வை வேறு அவளுக்கு எரிச்சலை கிளப்பியது. "பொறுக்கி .. பதில் சொல்லாம எப்படி பாக்குறான் பாரு" என முணுமுணுத்தாள்.

"என்ன சொல்றீங்க. கொஞ்சம் சத்தமா சொல்லுங்க"

"நீ எல்லாம்... ச்சை உன்னப் போய் நல்லவனு நம்புனா பாரு அவள சொல்லணும். இப்ப அசிங்கப் படுத்துனது பத்தாதுனு அவ சொத்த ஏமாத்தி பிடுங்க பாக்குறீயா???"

அவள் மரியாதை பன்மையை கைவிட்டதிலேயே கோபமனவன் அடுத்தடுத்த வார்த்தைகளில் வெறியானான்.

அவளை அறைந்திட கை ஓங்கியவன் சற்று நிதானித்து " நா கெட்டவன் தான். அதுக்கு இப்ப என்ன. உன்னால என்னப் பண்ண முடியுமோ... பண்ணிக்கோ" கர்ஜீத்தப்படி தனது காரில் ஏறி சென்றான்.

நிவியோ அதில் அரண்டு போய் அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவளது தோழி வந்து அழைக்கவும் சுய நினைவிற்கு வந்தவள் "எவ்ளோ திமிரு. உன்ன சும்மா விட மாட்டேன்டா" என்று சூளுரைத்தாள்.

காரில் சென்று கொண்டிருந்தவனது மனமோ தனது காதலியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தது. "சாரி ப்ரியா.... இன்னைக்கு நா ஒரு பொண்ண அடிக்க கை ஓங்கிட்டேன். நா ரொம்ப டென்ஷனா இருக்கேன். உன்னைப் பாக்கணு ம் போல இருக்கு. உன் கிட்ட லவ்வ சொன்னப் பிறகு உன்னப் பாக்கவே இல்ல. எங்க போய்ட. எனக்கு பயந்து ஒளிஞ்சிருக்கியா.... என்னால உனக்கு எந்த பிரச்சினையும் வராது. நா உன்ன அந்த அளவுக்கு காதலிக்கிறேன்டா.... ப்ளீஸ் வந்துடு" எங்கோ மறைந்து போன காதலியிடம் மனதில் உரையாடிக்கொண்டிருந்தான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மணவறையில் எல்லா சடங்குகளும் முடிந்துவிட அனைவரும் ஆதி யின் வீட்டுக்கு கிளம்பினர். காரில் தனதருகில் அமர்ந்திருந்த மனைவியிடம் பேச முயன்றான் ஆதி. அவளோ அவனைக் கண்டுக் கொள்ளாது வெளியே வேடிக்கைப் பார்த்தாள். அதில் ஆதி கடுப்பாகி போனான். அவனது காதல் மனம் அமைதி காக்க சொன்னாலும் அவனது குணமோ அதிரடியைக் காட்ட சொன்னது.

அவனது பொறுமையெல்லாம் காற்றில் பறக்க முன்புறம் அமர்ந்திருந்த மதியின் உறவினரது கவனத்தைக் கலைக்காது அவளது தோளைச் சுற்றி கையைப் போட்டான். அதில் எரிச்சலான மதி அவனது கையை தள்ளிவிட முயல அது முடியவில்லை. அவளது பிஞ்சு விரல்களுக்கு வலித்தது தான் மிச்சம். கடைசியாக தனது முழு பலத்தையும் திரட்டி தள்ள அவனது கரம் அவளது தோளிலிருந்து விடைப் பெற்றது. ஆனால் முன்பைவிட இப்போது தான் மதியின் நிலை மோசமாகிக் போனது. ஏனெனில் ஆதியின் கரம் அவளது இடுப்பை சுற்றியிருந்தது. நல்ல வேலையாக அவளை தவிக்க விடாமல் ஆதியின் இல்லம் வந்துவிட ஆதி முதலில் இறங்கினான். அவனைப் பின்தொடர்ந்து மதியும் இறங்க புதுமணத்தம்பதிகளை ஆரத்தி எடுத்து வரவேற்றவர்கள் பால்பழம் கொடுத்து செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தனர்.

"மதி... நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா ... ரொம்ப டையர்டா இருக்க. செல்வி இங்க வாம்மா . மதிய அந்த ரெண்டாவது ரூம்ல விட்டுரு . அவ ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றிட தன்னை கவனிக்காத அன்னை மீது ஆதிக்கு கோபம் வந்தது.

மதி ரூமிற்கு சென்று கதவை மூட முயல்கையில் ஆதி அறையில் நுழைந்து கதவை தாழிட்டான்.


மூன்று நாள் என சென்ற பயணம் ஒரு வாரமாக மாறும் என அத்து நினைத்து பார்க்கவேயில்லை. அவனது மாமாவிற்கு அவனால் இயன்ற அளவு அவனும் உதவி செய்தான். ஆகையால் அவனால் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. முழு நேரமும் அவனை வேலை உள்ளிழுத்துக் கொண்டது. ஒருவழியாக ஊருக்கு திரும்பியவன் அனைவருக்கும் பிடித்தபடி பொருட்களை வாங்கி வந்தான். தன்னுடைய மனம் கவர்ந்தவளுக்கும் அழகான தேவதை சிலையொன்றை வாங்கினான். விடிந்தால் கல்லூரியில் அவளை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியே அவனை உறங்க விடாமல் தடுத்தது.

வீட்டில் கட்டிலில் அமர்ந்திருந்த ஹரிணியின் மனம் முழுவதும் தன்னுடைய மன்னவனை நினைத்து ஏங்கி கொண்டிருந்தது. இந்த ஒரு வார காலமாக அவனை காணாமல் அவள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. அவனை பிரிந்த துன்பத்தை அதிகமாக்கிய தேவின் செயல்களை நினைத்து அவளுக்கு கஷ்டமாயிருந்தது. அந்த நேரம் அவளது அப்பாவின் தொலைபேசி ஒலித்தது.

தன்னருகில் இருந்த தொலைபேசியை எடுத்தவள் அதில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்தவள் தயங்கி பின் அழைப்பை ஏற்றாள். "ஹலோ" என்றவளின் குரலுக்கு பதிலாக "தேங்க் காட்..... நீங்க தான் பேசுறீங்களா . எப்படி இருக்கீங்க. டேப்லட் எல்லாம் ஒழுங்கா சாப்டுறீங்களா" என நல்ல மருத்துவனாய் விசாரித்தான்.

"ம்ம்..... நல்லா இருக்கேன். நீங்க."

"எனக்கு என்ன நல்லாருக்கேன். நாளைக்கு நீங்க அத்துவ பார்க்க போறீங்க. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். எந்த உதவி இப்ப தேவன்னாலும் என்ன கேளுங்க. உங்களுக்கு நா உதவிப் பண்றேன்"

"சரிங்க. நா வச்சுடவா" சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவளது மனம் அவன் காதல் சொல்லிய தருணங்கள் நினைவிற்கு வந்தன. அன்றைய தினத்திற்கு பிறகு தேவ் ஹரிணியின் அறையையே சுற்றி சுற்றி வந்தான். கணப்பொழுதில் அவன் மனதில் காதல் வந்தாலும் மிகவும் ஆழமாக அதன் தடத்தை பதித்திருந்தது.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறுநாள் பொழுது அவளுக்கு மிகவும் இனிமையாக விடிந்தது. காலையில் தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டவளை கண்டு அவளது பெற்றோர்கள் இரகசியமாக சிரித்துக் கொண்டனர். கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டவளுக்கு திருப்தி ஏற்பட்டதும் தான் வெளியிலேயே வந்தாள்.

சாப்பிட அமர்ந்தவளிடம் " என்னமா மாப்ளய பாக்கப் போற சந்தோஷம் போல. முகத்துல பிரகாசம் பலமா இருக்கு. "

"இல்லப்பா.... " என்ற படி வெட்டப்படும் மகளைக் கண்டு அவருக்கு மகிழ்வாய் இருந்தது. அவளது நிம்மதி தானே அவருக்கு வேண்டும். இன்னமும் அத்துவை பற்றிய விவரம் எதுவுமே அவருக்கு தெரியாது. இருப்பினும் அத்துவை தனது மருமகனாக ஏற்று கொண்டு விட்டார்.

ஹரிணி அத்துவை மனதார காதலித்தாலும் அவளது தந்தையிடம் அதைப் பற்றிக் கூறவே இல்லை. அவளது மனதுக்குள்ளேயே போட்டு பூட்டி வைத்துக் கொண்டார்.

அத்துவிடமும் காதல் சொல்ல முடியாமல், பெற்றோரிடமும் உண்மையை சொல்ல முடியாமல் அவள் குறாறவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தாள். அன்று அத்துவின் கைகளில் அடிபட்டவுடன் அவள் துடித்தாலும் அதன்பிறகு அவனை நெருங்கி செல்ல முடியாமல் அவனது பணவசதியும், அவளது சூழ்நிலையும் இருக்க தனக்கான இடம் எது என அறிந்து மௌனமாய் தன்னுள்ளே மருகினாள். அதன்பிறகு அவளது முகத்தில் சிரிப்பென்பதையே மறந்து இயந்திரம் போல வாழ்ந்து வந்தாள்.

நாட்கள் அதன் பொழுதில் செல்ல ஹரிணியின் பெற்றோர்கள் அவளிடம் அவளது வருத்தத்திற்கான காரணங்களை கேட்டனர். பெற்றோர்கள் அறியாத ரகசியம் நம்மிடம் உண்டா???

சற்று தயங்கியவள் உண்மையைக் கூற அவளது பெற்றோர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"உனக்கு அந்த பையன ரொம்ப பிடிக்குமாடா??? "

"ஆமாம்பா" மெல்ல முணுமுணக்க

"சரி அப்ப எங்களுக்கு ஓ.கே. என் பொண்ணு தப்பான பையன செலக்ட் பண்ணிருக்க மாட்டா "

"அப்பா..... " என கண்ணீரோடு அவளது உதடுகள் தந்தியடிக்க

"அழாதமா உன்னோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். அதுக்காக நாங்க என்ன வேணாலும் செய்வோம் "

அதன் பிறகு தான் அவள் அத்துவிடம் காதல் சொன்னனது . நடந்து முடிந்தவைகளை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள் இட்லியைப் சின்ன சின்னத் துண்டுகளாக பிய்த்து அதைக் கொண்டு தட்டில் அத்து என எழுதியிருந்தாள் .

"என்னடா அத்து பத்தியே யோசனையா... சாப்ட வச்ச இட்லியில அத்துனு எழுதியிருக்க. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல பாக்கப் போறீயே. "

"ஆமாம்பா. ஒரு வாரத்துக்கு அப்றம் இன்னைக்கு தான் பாக்கப் போறேன். இந்த ஒரு வாரமாக ஏன் அவரு என்ன பாக்க வரலனு தெரியல. ஆனா கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும்" அவளது மனதினுள் அரித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டாள்.

அவளது கேள்வி தான் அவருள்ளும் உறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் மகளிடம் மட்டும் தான் அவர் வாய் திறந்து கேட்கவில்லை. கேட்டு அவளை மேலும் குழப்பிட எண்ணவில்லை அந்த அன்பு தந்தை. மகளது முகத்தில் தெரிந்த ஆனந்தம் தான் தவறான முடிவை எடுக்கவில்லை என்று அவருக்கு உணர்த்தியது.

அதற்கு மேலும் உணவருந்த முடியாமல் ஹரிணி எழுந்துவிட அவளை கல்லூரியில் விட ராஜனும் எழுந்தார். இருவரையும் வாசல் வரை வந்து வழியனுப்பிய சாந்தியின் முகத்தில் கவலையின் ரேகைகள் மகளது வாழ்வு சிறக்க வேண்டுமென.

கல்லூரி வாசலை நெருங்கிய ஹரிணியின் இதயம் ஒருவித மோன நிலையில் இருந்தது. அன்று அத்து காதல் சொன்ன நிமிடங்கள் மீண்டும் நினைவிற்கு வந்தன. அதுமட்டுமின்றி அவனது உரிமை பார்வையும். அதை நினைத்து இப்பொழுதும் அவளது கன்னத்தில் சிவப்பேறியது. அவளது உடல் முழுவதும் ஒரு வித அதிர்வலை எழுந்து அவளை அதில் அடித்துச் செல்ல முயன்று கொண்டிருந்தது.

அன்றைய நாளுக்கு பிறகு இன்று தான் அவனை சந்திக்க போகிறாள். அவனது காதல் தெரியும் முன்பே அவனை காணாமல் அவளால் இருந்திட இயலாது. இப்பொழுதோ அவனது காதலும் தெரிந்து இனி பிரிவு வரக் கூடாது என்றெண்ணிய நொடியில் தங்களுக்கிடையில் நிகழ்ந்த பிரிவை எண்ணி அவளது மனம் கலங்கியது.

தனது வகுப்பை அடைந்தவளது கண்கள் அத்துவின் இடத்தை தேட அங்கே அவனின்றி போக அவளது ஏமாற்றம்தான் வலியது கண்களில் வழியே கண்ணீராய் வழிந்தோடியது. இத்தனை நாட்கள் அவளை காணாத அவளது தோழர்களும் அவளை ஒரு தலையாய் காதலிக்கும் காதலர்களும் அவளை சூழ்ந்து கொண்டு அவளை நலம் விசாரித்தனர். கல்லூரி வாசலில் ஏற்பட்ட விபத்தென்பதால் அனைவருமே அதை அறிந்திருந்தனர்.


எத்தனை மனிதர்கள் நம்மை சூழ்ந்திருந்தாலும் நமது மனது நாம் நேசிப்பவரையே தேடும். அந்த நிலையில் தான் இருந்தாள் ஹரிணி. "ஹிரிணி எப்படிடி இருக்க. இப்போ பரவால்லயா" என்ற படி அவளருகே வந்தாள் ப்ரியா.

"ம்ம்.... " கடமைக்காக பதலலித்தவள் அத்துவை எப்படி கேட்பது என தெரியாமல் விழித்தாள். அவளது துன்பம் புரியாமல் ப்ரியா கதையளக்க வகுப்பிற்கு ஆசிரியர் வரும்வரை அத்து வரவில்லை.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வழி மீது விழி வைத்து சோர்ந்து போனவள் கடைசியாக வழிகின்ற கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆசிரியரிடம் அனுமதி கேட்டு வகுப்பை விட்டு வெளியேறினாள். கண்களில் கோர்த்திருந்த கண்ணீர் காட்சியை மறைக்க எங்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றவள் தனது எதிரில் ஓட்டமும் நடையுமாக வந்த அத்துவை கவனிக்கவில்லை.


தன்னை தாண்டி செல்லும் தன்னவளை பார்த்து குழப்பமடைந்தவன் "ஹனி" என்று மென்மையாய் கூப்பிட கனவா இல்லை நனவா என்று தெரியாமல் திணறியவள்
கண்ணீர் துணிகளுக்கு இடையில் தெரிந்த அவனது பிம்பத்தை பார்த்தாள். அவளால் அவளது கண்களையே நம்ம முடியவில்லை. அவளது எதிரில் நிற்பது அவளது அத்துவல்லவா....

"அத்து..... அத்து...." என ஜெபம் போல் கூறிக் கொண்டிருக்க தன்னளவில் விழியில் வழிந்த காதலில் அத்துவும் வாயடைந்து நின்றிருந்தான். தனது வேலையால் ஹரிணியை மிகவும் துன்புறுத்தியதாக நினைத்த கொண்டவன் அவளை ஆறுதல் படுத்த நெருங்கி வர அவள் வேகமாய் ஓடி சென்று விட்டாள்.


அவளை பின் தொடர்ந்து ஓடிவந்தவன் அவள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்றிருப்பதுக் கண்டு பிடித்தான். "ஹனி" அவளோ அவனது அழைப்பு அவளது சாவிகளை தீண்டவில்லை என்பது போல் அமர்ந்திருந்தாள். தன்னிடம் கோபம் கொண்டு சிறுபிள்ளை போல நகத்தை கடித்து கொண்டு நின்றிருந்த காதலியைக் கண்டதும் அவனது இதயம் தடம் மாறி துடித்தது.

"ஹனி" அவனது அழைப்பு காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்காமல் பிடிவாதமாக நின்றிருந்தாள். "ப்ளிஸ்டி திரும்பி பாரு" முதன் முறையாக அவளை உரிமையாக அழைக்கவும் ஹரிணி அதிர்ந்து போய் திரும்பினாள். அவளது முகம் அவளது உள்ளத்து உணர்வதை எடுத்துரைத்தது செந்நிறமாக மாறி.

திரும்பினாலும் ஏனோ அவளது பார்வை அவனது தோள் வரை தான் சென்றது. முகத்தைப் பார்க்க அஞ்சி தலைகுனிந்திருந்தாள். அவளது வெட்கம் அவனுக்கு பேராவலை தூண்டியது. எந்த பெண்ணிடமும் காதல் கொள்ளாமல் கண்ணியமாக தனானவளுக்காக காத்துக் கொண்டிருந்தவன் இன்று தன்னவளின் வெட்கமதில் பூரித்திருந்தான்.

கல்லூரியே அவளது பின்னால் சுற்ற அவளோ அவனது கடைக்கண் பார்வைக்காக தானே வாழ்கிறாள். இந்த நொடி அவனது இதயம் முழுவதும் மகிழ்ச்சியே. இதுவரை இருந்த கண்ணியமெல்லாம் காற்றில் பறக்க அவளை அனைத்திட வேண்டுமென்ற பேராவல் அவனுள் எழுந்தது.

இருப்பினும் அவர்கள் இருந்த இடம் அவனது ஆவலை கட்டுப்படுத்திட பெருமூச்சுடன் "ஏன் ஹனி என் கிட்ட பேச மாட்ற. என்ன கோபம் என் மேல"

ஹரிணிக்கு அவன் மேல் எந்த கோபமும் இல்லை. அவனது பக்கம் ஏதாவது நியாயம் இருக்கும் என்று நம்பினாள். ஆனால் இதுவரை தூரத்திலிருந்து அவனறியாமல் அவனை பார்த்து ரசித்தவளால் தன்னருகே தன்னவனாய் ரசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு உணர்வு அவளை தடுத்தது. தந்தையில்லாமல் முதல் முறையாக ஒரு ஆடவனின் அருகில் நிற்கிறாள் . அதுவும் தன் மனம் முழுவதும் நிறைந்தவன்.

தன் வசம் இழந்து அவனை எந்த நொடியும் சரணடைந்திடுவாள் என்று தோன்றியது. தன்னுடைய கடவுளை நேரில் கண்ட பக்தனை போல இருந்தது அவளது நிலை. இதில் என்ன பேசுவது. மௌனமாய் அவனது முகத்தை ஏறிட்டாள்.

அவளது உயிரை உருக்கிடும் பார்வை அவனை வருத்தியது."ஹனி சாரிடி செல்லம். திடீர்னு மாமா என்ன வேல விஷயமா கூட்டிட்டு போவாங்கனு நா நினைக்கவே இல்ல. வேல டென்ஷன்ல உன் கிட்ட பேச முடியலடி. " மென்மையான குரலில் அவன் உரைக்க அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

தனக்கு அடி பட்ட போது தன்னுடைய காதலன் இங்கு இல்லை அவனுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிந்ததும் அவளது மனதில் இதயம் பரவியது. ஏனென்றால் அவளை காண வரவில்லை என்ற அவளது கேள்வியின் விடையல்லவா.. அவளது கண்கள் கலங்கிக் கொண்டிருந்தது.

"ஹனி.... என்னாச்சுடி ஏன் அழற.... ப்ளீஸ் அழாத" அவன் பதற அவளோ அவனை முறைத்தாள். " என்ன டி லாம் சொல்றீங்க. எப்படி அப்படி கூப்டலாம்" கோபமாக கேட்க நினைத்தாலும் முடியாமல் தலை குனிந்தவாறு மென்மையாகவே கேட்டாள்.

"ஏன் கூப்ட கூடாதா???" என்ற அவளது செவியருகில் ஒலித்தக் குரலில் பதறியடித்து நிமிர்ந்தவள் அத்து தன்னருகே நின்றிருப்பதைக் கண்டு அதிர்ந்திருந்தாள். ஒரு இன்ச் இடைவெளி தான் அவர்களுக்கு இடையில். அவனது சுண்டு விரல் நகம் கூட அவள் மீது படவில்லை. ஆனாலும் அவளுள் எழுந்த அதிர்வலைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

"சொல்லுடி " என்று அந்த 'டி'யில் அழுத்தம் கொடுத்து சொல்ல அவள் தான் மௌனமானாள். "ம்ம்ம்ம்." அவன் பதில் சொல்லும்படி தூண்டிட தலையசைத்தாள்.

அவளது வெட்கமும் அவளது மௌனமும் அவனுக்கு பிடித்திருந்தது. அவளது கரங்களை பற்றிக் நினைக்கையில் சட்டென்று அவனை விட்டு விலகி ஓடினாள். ஓடியவளையே மகிழ்வுடன் பார்த்து கொண்டிருந்தது அவனது விழிகள்.

இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. கனியின் காயங்கள் ஆறிவிட்டிருந்தன. இப்போது அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாள்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் அடிபட்ட அன்று தான் ராமை கடைசியாகப் பார்த்தாள். அதன் பிறகு அவன் வரவே இல்லை. ஸ்ரீ மட்டும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு சென்றான். அவளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளில் குறைவில்லை . ஆனால் உரிமையாக அவளை கவனித்துக் கொள்ள உறவென்று ஒருவருமின்றி அவள் தவித்து போய் விட்டாள்.

மருத்துவமனையை விட்டு வெளிவந்த பின்பு தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. வழக்கம் போல் அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்தவளது மனம் ஏனோ ஒரு அலைப்புறுதலுடன் இருந்தது. ஹாஸ்டலை விட்டு வெளிவந்தவளின் கண்களில் விழுந்தான் ராம்.

முன்பு போல் இல்லாமல் ஜீன்ஸ் , டி சர்ட் என மாறியிருந்தவனை வியப்போடு பார்த்தாள். முன்பெல்லாம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமல் முகத்தை மறைத்து இருப்பான். இன்று அப்படி எதுவும் செய்திடாததால் அவனை அறிந்த பலர் அவனோட பேச முயல அவனது பாதுகாவலர்கள் அவனை சுற்றி அந்த போல் அமைத்து இருந்தனர்.


அவனது பார்வை கனி மீதே இருந்தது. அதனை பார்த்தவாறே வந்தவள் அவனது பாதுகாப்பை கண்களால் சுட்டிக் காட்டி அதை தான் உங்கள் உயரம் இது என் உயரம். இப்படியே இருப்பது தான் இருவருக்கும் நல்லது என விதிகளால் பேச அதை புரிந்து கொண்டதைப் போல அவனது முகத்தில் சிறு தடுமாற்றம். ஆனால் அடுத்த நொடியே தன்னை சீர் செய்து கொண்டவன் உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தன் விழிகளால் பதிலுரைத்தான்.


எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த வேளையில் எங்கிருந்தோ வந்த பெட்ரோல் வெடிகுண்டு அந்த இடத்தில் வெடித்ததில் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திடீரென்று வீசப்பட்ட பெட்ரோல் குண்டால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆங்காங்கே தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் ஓடிட தடுமாறி கீழே விழுந்தவர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை.


எல்லாரும் அவர்களை மிதித்துக் கொண்டே சென்றனர். கீழே விழுந்திருந்த ராமும் கனியும் எழுந்திட உதவிய பாதுகாவலர்கள் அடுத்த நொடியே அவர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் போல் நின்றனர்.

ராமினது பார்வை கனியையே ஆராய்ந்தது. கீழே விழுந்ததில் சாலையில் கிடந்த கற்கள் கிழித்து அவனது முழங்காலுக்கு கீழ் இரத்தம் வந்து கொண்டிருந்தது ஜீன்ஸையும் தாண்டி . கனிக்கு பெரிதாக அடி படவில்லை என்றாலும் அதிர்ச்சியில் மயங்கும் நிலையில் இருந்தாள்.

இவர்களை நிம்மதியாக விட மாட்டேன் என்பது போல் அடுத்த பெட்ரோல் குண்டு எறிப்பட்டது. அது ராமின் பாதுகாவலர் ஒருவர் மீது விழுந்துவிட அவர்களது கண்ணெதிரே அவர் தீயில் கருகினார். அதைப் பார்த்த கனி மயங்கிட நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவர்கள் கனியையும் ராமையும் அங்கிருந்த காரின் வழியே அப்புறப்படுத்தினார்கள்.

எப்போதும் ராமின் பாதுகாப்பிற்காக புல்லட் புரூப் ( bulletproof) கார் ஒன்று அவனை தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த காரில் தான் இப்போது இருவரையும் ஏற்றினார்கள். பாதி பேர் அவர்களை பத்திரமாக அழைத்து செல்ல மீதி பேர் அங்கு அடிபட்டு கிடந்தவர்களை காப்பாற்ற சென்றனர்.

காரில் அமர்ந்த ராம் முதல் வேலையாக கனியின் முகத்தில் தண்ணீரை தெளித்தான். அவளது விழிகள் மெல்ல திறக்கவும் தான் அவனது மனம் நிலைக் கொண்டது. ஏற்கனவே அவளது வாழ்வில் அவனால் பெரிய துன்பம் ஏற்பட்டுவிட்டது மேலும் புதிதாகவா என்று தவித்துவிட்டான்.

கண்விழித்தவள் தனது தலை ராமினது மடியில் இருப்பதை பார்த்ததும் பதறி போய் எழுந்தாள். அவளைத் தடுத்திடாத ராம் அவள் நன்றாக அமர்ந்ததும் இழுத்து அணைத்துக் கொண்டான். தன்னுடைய உயிர் தன்னுடைய கை சேர்ந்த நிம்மதியில் அவன் தன்னிலை மறந்திருந்தான்.

அவன் அணைத்திடுவான் என்று எதிர்பாராத கனி திகைத்து விழித்தாள். அவனிடமிருந்து விடுபட அவள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியே. அவனது ஆறடி உயர ஆண்மகனின் வலிய தேகத்தில் சிறு துரும்பை போல் இருந்தாள்.

கனியகன் ஹாஸ்டல் வந்துவிட திடிரென்று கார் நிறுத்தப்பட்டு சில நிமிடங்களுக்கு தொடர்ந்த அணைப்பை முடிவிற்கு கொண்டு வந்தது. அதில் திடுக்கிட்டு விலகியவன் தன்னை தானே நொந்து கொண்டு கனியை பார்க்க அவளோ கண்கள் கலங்கியவாறு அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கனி..... நான்" அவன் திணற போதும் என்பது போல் கையைக் காட்டியவள் கார் நின்றிருப்பதை உணர்ந்து கதவை திறக்க முயல சென்ட்ரல் லாக் செய்யப்பட்ட காரை திறக்க முடியவில்லை. அவள் ராமினது முகத்தைப் பார்க்க அவளது பார்வையின் அனலை உணரநதவன் கார் கதவை திறக்க சொன்னான்.

கதவு திறக்கப்பட்டதும் இறங்கி செய்கிறோம் திரும்பி பார்க்கவே இல்லை. அவளது உருவம் மறையும் வரை பார்த்திருந்தவன் ஒன்றும் பேச முடியாமல் அமராந்திருந்தான். அதன்பிறகு தான் தன்னுடைய காலின் வலியை உணர்ந்தான். மருத்துவமனையை நோக்கி கார் செலுத்தப்பட அவனோ நினைவில் கனியை சுமந்து கொண்டு சென்றான்.


பிறிதோரிடத்தில்.....

"டேய் எவ்ளோ தைரியம் இருந்தா என்ன மீறி ராம் மேல கைய வைப்பாங்க. யாருனு கண்பிடிங்கடா. அவன நான் தான்டா கொல்லணும். என் கையால கொல்லணும். வேற யாரையும் இடையில் வர விட மாட்டேன் " தொலைபேசியில் கத்திக் கொண்டிருந்தது ஒரு உருவம்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளுக்கு வணக்கம்....

ரொம்ப நாள் கழித்து தோழமைகளேனு ஆரம்பிக்குறதுல ரொம்ப சந்தோஷம். எல்லாரும் என்ன மன்னச்சிடுங்க. சில பிரச்சனைகளால என்னால கதையை எழுத முடியல. அதான் இதுவரைக்கும் பதிவு போடல.

இன்றைக்கு தான் டைப் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். புதன் கிழமை கண்டிப்பாக பதிவு தந்துடுவேன்.

அன்புடன்,
பூவினி
 
Status
Not open for further replies.
Top