All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...

"அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" கதையின் பதிவுகள் இங்கே பகிரப்படும், படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள் மக்களே. கதையின் பதிவுகள் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன் கிழமையில் பதிவிடப்படும்.

நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-1
இந்தியாவின் பதினோறாவது பெரிய நகரமாகவும், தமிழகத்தின் மான்செஸ்டார் என்று அழைக்கப்படும் நகரமான ‘கோயம்புத்தூர்’... இந்தியாவின் ‘எடிசன்’ என்று அழைக்கப்படும் ‘ஜி.டி.நாயுடு’ பிறந்த ஊரானது பல்வேறு தொழில் துறைகளுக்கு பெயர் பெற்றதாகும்... ஆடைத்துறை, கனரக தயாரிப்புத்துறை, மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஈரமாவு அரவைப்பொறிகள், மின்சாதன நீறேற்றிகள் தயாரிப்பு, மற்றும் தொழில்நுட்ப நிறுவங்களுக்கு என அனைத்திலும் சிறந்து விளங்கும் பல்வேறு அம்சம் கொண்ட நகரமானது கோவை!

‘லூனா பேஷன் ஜோன்’ என்ற பெயரில் செயல்படும் கட்டிடம் முன் வெள்ளை நிற ஸ்கோடாஃபேபியா வாகனத்தில் இருந்து ஐந்தரை அடி உயரத்தில் சிக்கென்ற உடல்வாகுடன், சரிசமமாக வெட்டி விரித்து விடபட்டிருந்த கருங்கூந்தல் மயிலிறகை போன்று பளபளக்க, ஜீன்ஸ், டிஷர்டில் மாடர்ன் யுக மங்கையாக பாந்தமான நளினத்துடன் இறங்கினாள் சம்யுக்தா...! தன் தொழிலை கட்டி ஆளும் ஆளுமையுடன் இறங்கியவளின் வதனம் நான் மிகவும் கண்டிப்பானவள் என்பதை பறைசாற்றியது.

லூனா பேஷன் ஜோன் ஆடை ரக வடிவமைப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மிடுக்குடன் நடைபோட்டு தன்னறையை அடைந்திருக்க நொடிக்குள் சந்தோஷ், ரோஷினி இருவரும் அவள்முன்பு பிரசன்னம் ஆனார்கள். ரோஷினி சம்யுக்தாவின் அந்தரங்க காரியதரிசியாகவும், சந்தோஷ் சம்யுக்தாவின் மேலாண்மை செயலாளராகவும் பணியாற்றுகின்றனர்.

“குட் மார்னிங் மேடம்” என்று இருவரும் ஒரு சேர தன் காலை வணக்கத்தை பணிவுடன் கூற...

“மோர்னிங்” என்று பட்டும் படாமல் தோரணையாக கூறிவிட்டு, நிர்வாகத்தின் அனுபந்தத்தை பற்றி இருவரிடமும் வினவ ஆரம்பித்துவிட்டிருந்தாள்.

“சந்தோஷ் பிசினஸ் ட்ரிப் அரேஞ் பண்ண சொன்னேனே எந்த கன்ட்ரிக்கு கிளைண்ட் கால்ஸ் பார்க்க அப்பாயின்மென்ட் கிடைச்சிருக்கு”

“மேடம், ஸ்வீடன் தான் நெக்ஸ்ட் வீக் அப்பாயின்மென்ட் கிடைச்சிருக்கு” அவன் கூறியதை கேட்டு கண்களின் இடுக்கில் விரல் வைத்து அழுத்தி தீவிரமாக யோசித்தவள் விசுக்கென்று விழி உயர்த்தி...

“ஒகே சீக்கிரமே நான் ரிப்ளை பண்றேன் யூ கேன் மூவ் நவ்” என்றதும்...

“சூயர் மேடம்...” என்று விட்டு நகர எத்தனித்தவனை...

“ஒன் செக் சந்தோஷ்” என்று ஆக்கினையிட்டதில் பட்டென்று அவன் நடையை நிறுத்தியிருந்தான்.

“நேற்று நியூ மெட்டிரியல் சாம்பிள் வந்திருக்கிறதா சொன்னீங்களே”

“எஸ் மேடம் குவாலிட்டி டிபார்ட்மென்ட்ல செக் பண்ணி ரிப்போர்ட் கூட ரெடி பண்ணிட்டாங்க உங்க அப்ரூவல்காக தான் வெயிட்டிங்”

“சரி நீங்க போய் மெடிரியல் ரிப்போர்ட் அனுப்புங்க, நான் செக் பண்ணிட்டு சொல்றேன்”

“ஒகே மேடம்” என்றவன் அவள் கூறிய பணியை செய்ய துரிதமாக விரைந்தான்.

“ரோஷினி இன்னைக்கு நியூ விசிடர்ஸ் இருக்காங்களா?”

“எஸ் மேடம், கட்டிங் டிபார்ட்மென்ட்க்கு தேவையான ஆக்சஸரிஸ் (உபரி பாகங்கள்) மார்க்கெட்டிங் பீபிள் வந்திருக்காங்க”

“நோ ரோஷினி! இப்போதைக்கு நியூ பைனான்ஸ் பட்ஜெட் எதுவும் அல்லோட் பண்ணலை. அதை பண்ணின அப்புறமா அவங்களை கூப்பிட்டுக்கலாம், நீங்க அவங்க கார்ட் டீடெயில்ஸ் வாங்கி வச்சுக்கோங்க”

“ஒகே மேடம்” என்றதும் அங்கிருந்த இண்டர்காம் ஒலிக்க அதற்கு செவிமடுத்தவள் அதில் கூறிய செய்தியை கேட்டு...

“ஹாங் ஒன் மின்ட்”

“மேடம் கோல்ட் கால் மெம்பெர்ஸ் அஞ்சு பேரு வெயிட் பண்றாங்களாம்?” என்றதும் சில கணங்கள் யோசித்தவள்...

“சந்தோஷ்கிட்டே இன்போர்ம் பண்ணி என்னன்னு என்குயர் (விசாரணை) பண்ணச் சொல்லுங்க” என்று கட்டளையிட்டிருந்தாள்.

“ஒகே மேடம்” என்றவள் அவள் கூறியது போல் செய்து முடித்துவிட்டு நின்று கொண்டிருந்தவளை கண்டு கொள்ளாமல் மின்னஞ்சலில் மூழ்கிவிடவே, ரோஷினி நகர்வதா இல்லை, அங்கே நிற்பதா என்ற குழப்பத்துடன் மௌனமாக நின்றுவிட்டாள்.

இது இன்று நேற்று நடப்பதல்ல எப்போதுமே தலைமை பொறுப்பிற்கிணங்க சம்யுக்தாவிடம் காணப்படும் ஓர் அதிகார தோரணையின் அம்சம்! அவளிடம் வேலை செய்யும் பணியாளர்களிடம் இடைவெளியை மேற்கொள்ளுபவள்... சில சமயம் அவள் கோபத்தின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் பெரும்பாலும் ‘ம்ம்ம்’ என்ற பரிபாஷையை உதிர்த்தாளே மிகப்பெரிய விஷயம் போல் தோன்றிவிடும்... மற்ற துறையினர் என்றால் வேலைகளை காரணம் காட்டி திக்கித் திணறி தான் பேச்சு மேற்கொள்ள வேண்டியதாகியிருக்கும், ரோஷினி அவளின் அந்தரங்க காரியதரிசி என்பதால் அவளால் அதையும் உடனடியாக செய்துவிட முடியாத காரணத்தினால் ஒற்றை காலை மாற்றி மாற்றி முட்டுக் கொடுத்துக் கொண்டு நின்றிருந்தாள். ஒரு வழியாக அவள் எதிர்பார்த்த மின்னஞ்சல் வந்ததும் அதை ஆய்வு செய்து விட்டு அவள் புறம் திரும்பியவள்..

“ரோஷினி ரிப்போர்ட் சாட்டிஸ்ஃபைட்டா (திருப்தியாக) இருக்கு, நீங்க பிராசஸிங் டிபார்ட்மென்ட்க்கு சொல்லி இங்கிலாந்து ஆர்டருக்கான மெட்டிரியலை ரெடி பண்ண சொல்லிருங்க” என்று விட்டு தன் கைபேசியில் மூழ்கிவிட்டவளை கண்டு மேலும் தயக்கம் ஒட்டிக் கொள்ள...

“மேடம் ஷால் ஐ மூவ்?” என்று மெல்லிய குரலில் வினவியவளுக்கு... அலைபேசியில் இருந்து விழி பார்வையை உயர்த்தாமலேயே ஒற்றை புறமாக தலையசைக்க, அப்பாடா இது போதுமே என்பது போல் சிட்டாக பறந்துவிட்டிருந்தாள்.

அன்றைய பணிகளின் மேற்பார்வை சுமைகள் மிகவும் குறைவாக இருக்கவே சூழற்நாற்காலியில் நன்றாக சாய்ந்து ஆசுவாசமாக காலை ஒன்றின் மேல் ஒன்றாக வீழ்த்தி சாவதானமாக அமர்ந்தவள் சமூகவலை தளங்களில் ஆழ்ந்துவிட்டிருந்தாள்... வெகு ஆர்வமாக அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவளின் முசுவில், அறையின் வாசலில் ஆள் நின்றதை கூட கவனியாது மூழ்கியிருந்தவளை, அங்கே நின்றவன் தன் பார்வையாலேயே பருகோ பருகென்று பருகிக் கொண்டிருந்தான்... ஐந்தரை அடி உயரத்தில் மாநிறத்தில் அம்சமாக இருந்தவனின் முகம் அவளின் தோரணையை ரசித்த வண்ணம் மெச்சுதலாக புருவங்கள் உயர்ந்திருக்க...

“மேடம் ரொம்ப பிசியோ?” என்றவனின் குரலில் பறக்கும் பட்டச்சியாய் போல் மனம் துள்ள வெடுக்கென்று எழுந்தவளின் விழிகளில் மின்னலடிக்க, உற்சாக ஆர்ப்பரிப்புடன் அணுகியவள்...

“கவி டார்லி....” என்றவளின் முகம் ஆயிரம் விளக்கு ஜோடனை போன்று பிராகசித்தது.

“கவி வந்து ரொம்ப நேரம் ஆச்சா? ஏன் எனக்கு கால் பண்ணலை?” என்றவள் அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் மேல் ஈஷிக் கொண்டிருந்தாள்.

அவளின் காதல் தர்கத்தை மனதிற்குள் சிலாகித்து கொண்டவனுக்கும் எப்போதும் போல் திகைப்பும், மகிழ்ச்சியும் என இரு சேர்ந்த உணர்வுகள் ஒரு சேர எழும்பி அடங்கியது. அவளின் நெருக்கமான ஸ்பரிஷம் மற்ற எண்ணங்களையும், சிந்தனைகளையும் துரத்தி அடித்துவிட்டிருக்க, அறையின் கதவை மூடி தாழிட்டு விட்டு இடது பக்கம் இருந்த சோபாவில் அமர்ந்துவிட்டிருந்தான்.

“இது ஆபீஸ், யுகிமாக்கு அது நியாபகம் இருக்குதா?” நமட்டுச் சிரிப்புடன் வினவியவனின் கன்னத்தை தட்டி தானும் புன்னகைத்தவள்...

“அதெல்லாம் நல்லாவே நியாபகம் இருக்கு... நீங்க இருந்தா இடம், பொருள், ஏவல் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்” என்றவளின் பதில் அவன் சிந்தையை ஒரு கணம் உலுக்கிப் போட்டது. அவள் முகத்தை தன் விழிகளுக்கு நேர்பார்வையில் வைத்து தாடையை பிடித்துக் கொண்டவன்...

“உனக்கு என் மேல் அந்தளவுக்கு நேசமா யுகிமா?” கண்களுக்குள் உற்று நோக்கியபடி வினவியவனை பதவிசாக நோக்கியபடி...

“எனக்கு உங்க மேல் இருக்கிற காதலை வார்த்தையால் சொல்ல முடியாது” என்றவள், அவன் மார்புச் சட்டையை கொத்தாக இழுத்துப் பிடித்து இதழ்களை முற்றுகையிட்டிருந்தாள். அவளின் எதிர்பாராத இதழ் முற்றுகையில் கிறங்கிப் போனவன் சில கணங்களில் அவளின் செயல்களை தனதாக்கி கொண்டிருந்தான்.



**********************
“ஓம் பூர்புவஸ்ஸுவ
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்”
சுலோகத்தை வேகமாக உச்சரித்து அர்ச்சனையை கூறிக் கொண்டே தீபராதனை சேவகத்தை முதல் கடவுள் விநாயகருக்கு செய்தார் புலியகுளம் முந்தி விநாயகர் ஆலயத்தின் அர்ச்சகர்.

பத்தொன்பது அடி உயரமும், நூற்றிதொண்ணூறு டன் எடைக் கொண்ட இந்த விநாயகரின் சிலை ஊத்துக்குளியில் ஒற்றை கிரானைட் கல்லில் செதுக்கியது என்பதும், ஆசிய கண்டத்திலேயே புகழ்பெற்ற விநாயகர் சிலையில் மிகவும் பெரியது என்பது இதன் சிறப்பு!

அர்ச்சகர் கொடுத்த தீபராதனையை யமுனா, யசோதா இருவரும் தன் உள்ளங்கையில் தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டனர்.

“அக்கா நிச்சயதார்த்ததுக்கு நல்ல நேரம் என்னன்னு நம்ம ஐயர்கிட்ட மறக்காம கேட்டுட்டு போயிறணும்” என்று தன் மூத்த தமக்கை யமுனாவிற்கு நினைவுப்படுத்தினார் யசோதா.

“நீ மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் யசோதா” என்றவர் கண்மூடி கைகளை கூப்பி மனதார விநாயகரை பிரார்தித்து கொண்டவர் ஐயரிடம் விசாரித்த பிறகே அங்கிருந்து இருவரும் நகர்ந்தனர்.

“அக்கா ஐயர் சொன்ன நாளுக்கு இன்னும் ஒருவாரம் தான் இடையில இருக்கு அதுக்குள்ள நம்ம சொந்த பந்ததை அழைத்து ஏற்பாடு செய்ய முடியுமா?”

“இங்க பாரு யசோதா இப்போதைக்கு நாம முக்கியமான சொந்தத்தை மட்டும் கூப்பிட்டுக்குவோம் கல்யாணத்துக்கு வேணா எல்லாரையும் அழைச்சுக்குவோம்”

“சரிதான் க்கா... ஆனா சம்யுக்தா வேற அவ பிரிண்ட்ஸ் அதிகமா வருவாங்க சொல்லிட்டு இருந்தா, அதனால தான் கிராண்டா பண்ணலாம்னு பார்த்தேன்”

“சூழ்நிலையை எடுத்து சொன்னா சம்மு புரிஞ்சுக்குவா யசோ அவளை நான் பார்த்துகிறேன்” அத்துடன் அதை விட்டுவிட்டு நிச்சயதார்த்த விழாவிற்கான ஏற்பாடுகளை பற்றி கலந்துரையாடிக் கொண்டே அவர்கள் வீடு நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

யமுனா, யசோதா இருவரும் உடன்பிறப்புகள்... யமுனா கணவன், மகன் என்று குடும்பம் சகிதமாக வாழ்ந்துக் கொண்டிருக்க... யசோதா கணவனுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக குழந்தை பிறந்தவுடனே அவரை விவாகரத்து செய்துவிட்டு, நீதிமன்றத்தின் மூலம் ஜீவனாம்சம் தர வேண்டி கோரிக்கை வைத்து கணவரின் அசையா சொத்துகளில் சிலவற்றை வாங்கிக் கொண்டு மகளுக்காக அவ்வபோது வேண்டியவற்றுக்கும் வழக்குரைஞர் மூலம் குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். யமுனா, யசோதாவை பெற்றவர்கள் விரைவிலேயே காலம் எய்திவிட தங்கையை தனியாக விடாமல் அவருடனே தக்க வைத்துக் கொண்டார் யமுனா.

இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டபடி வீட்டிற்குள் நுழைய, யமுனாவின் கணவர் பாஸ்கரன், மகன் மனோரஞ்சன் இருவரும் தொழில் சம்மந்தமாக கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.
பாஸ்கரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்திருந்து ஓய்வு பெற்றவர், மகனின் ஆசைப்படி தொழில் வைத்துக் கொடுக்க நினைத்து பொள்ளாச்சியில் இருந்த ஒரு பங்கு சொத்துக்களை விற்று தான் மனோரஞ்சனுக்கு ஜவுளி விற்பனை தொழிலை வைத்துக் கொடுத்திருந்தார். ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பித்த லூனா டெக்ஸ்டைல்ஸ் நாளைடைவில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல லாபத்தையும் ஈட்டித் தரவே, அதை வெளிநாட்டு ஏற்றுமதிக்கான கார்மெண்ட் நிறுவனமாக விரிவாக்கம் செய்துவிட அதை நிர்வாகம் செய்யும் பொறுப்பை சம்யுக்தா ஏற்றுக் கொண்டாள்.

மனைவியும், மைத்துனியும் வருவதை பார்த்தவர்... “என்ன யமுனா கோவிலுக்கு போனீங்களே ஐயர்கிட்ட நாள் குறிச்சு வாங்கிட்டு வந்துட்டீங்களா?” என்று வினவினார்.

“கேட்டுட்டு வந்துட்டோம்ங்க?” என்றவர் ஐயர் குறித்துக் கொடுத்த நாளைக் கூறி அதை பற்றிய விவாதமும் மேற்கொண்டார்.

“அதெல்லாம் சரி யசோதா நீ என்ன முடிவெடுத்திருக்க” என்று பாஸ்கரன் வினவியதற்கு...

“இந்த முடிவை நானும் அக்காவும் தான் சேர்ந்து எடுத்தோம் மாமா... அதனால் எனக்கேதும் ஆட்சேபம் இல்லை?” என்றவர் அவர்களுடன் இணைந்து தானும் பேசலானார்.

மனோரஞ்சன் அவர்களின் பேச்சில் கலந்து கொண்டவன்... “அம்மா, சித்தி நம்ம சம்முவுக்கு தேவையான டிரஸ், உங்களுக்கு அப்புறம் மற்ற தேவைக்கெல்லாம் வேணுங்கிற டிரஸை நான் கடைக்கு போய் அனுப்பி வைக்கிறேன்” என்றவன் அதை பற்றிய சில ஆலோசனைகளை கலந்துரையாடிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தான்.

மனோரஞ்சன், சம்யுக்தா இருவரும் உடன்பிறந்த சகோதர பாசத்திற்கு குறையாது பாசம் கொண்டிருந்தனர்... வீட்டினரிடம் சம்யுக்தாவுக்கு கண்டிப்பு எதிர்படும் போது ரஞ்சன் தான் அவளுக்கு ஆதரவாக துணை நின்று அவளின் ஆசைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவான்.

அனைத்தும் அவள் விருப்பம் போல் நிறைவேறிக் கொண்டிருக்க, தன் எதிர்கால வாழ்வையும் அதே போல் தானே கையில் எடுத்துக் கொண்டவள் தன் உயிர்மெய்யான கவின் மேல் காதல் கொண்டுவிட்டதை நல்ல திருநாளாக பார்த்து கூற பொறுமையில்லாமல், அவனுடன் வாழ வேண்டும் என்ற உத்வேகதுடன் அனைவரும் கூடியிருந்த சமயத்தில் தன் காதலை உடைத்துவிட்டிருந்தாள்!


**********************

“நான் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... நான் ஒருத்தரை காதலிக்கிறேன் அவர் பெயர் கவின்!” என்று சிதறு தேங்காயை போல் மனதை உடைத்து கூறிய சம்யுக்தாவை அனைவருமே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்... எப்போதும் அவளுக்கு விருப்பமுள்ள பொருள் ஏதேனும் ஆர்வபட்டு கேட்பாள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவளின் எதிர்கால வாழ்வையே தேர்ந்தெடுத்திருப்பதை எண்ணி திகைத்தனர்.

யசோதா முகத்தில் முள்ளை கட்டிக் கொண்டது போல் கடுகடுத்தார்.. “என்னடி சொல்ற காதல் கத்தரிக்காய்ன்னு... நீ ஆசைப்பட்ட படி உன்னை இருக்கவிட்டோம் பாரு அதான் தப்பு... ஒழுங்கா பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கப்பாரு... உனக்கு எப்போ யார்கூட கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பெரியவங்க நாங்க பார்த்துக்கிறோம்” என்றவருக்கு தெரியவில்லை, அவள் தோளுக்கு மீறியதும் அல்லாமல் அவர்களின் தளையையே ஒரு பொருட்டாக எண்ணும் சூழ்நிலையில் இல்லை என்று...

“சும்மா கத்தாதீங்கம்மா...” என்று அதட்டியதில் அவளை அடிக்கச் செல்லும் ஆவேசத்துடன் நின்றவரை யமுனா பார்வையால் தடுத்துவிட்டிருந்தார்.

“நான் லவ் பண்றேன் தான் சொன்னேன், கத்தரிக்காய் எல்லாம் நீங்க பண்ணுங்க... அண்ணனுக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்... எனக்கு கவின் தான் பிடிக்கும்” அவர்களின் ஆத்திரத்தையும் சினத்தையும் கண்டு சிறிதும் அலட்டிக் கொள்ளாது கூறியவளின் உதடுகள் தன்னவனை எண்ணி களிப்பில் அகல விரிந்தது. அவளின் பதிலில் ஆவேசத்துடன் அடிக்க எழுந்தவரை...

“யசோதா!” என்று பாஸ்கரனும்..

“சித்தி...” என்று ரஞ்சனும் ஒரு சேர்ந்த குரலில் கூறி அவரை தடுத்துவிட்டிருந்தனர். ரஞ்சனுக்குமே சம்யுக்தாவின் காதல் விவகாரம் சற்று திகைப்பு தான் என்றாலும் தங்கை மேல் கொண்ட பாசம் அவளை கடிந்து கொள்ள முடியாது தடுத்துவிட்டிருந்தது. தங்கையின் மற்ற விருப்பங்களுக்கு உடனடி ஆதரவை அளித்த ரஞ்சனுக்கு காதல் விவகாரம் சற்றே கலக்கத்தை கொடுத்து தள்ளி நிறுத்தியிருந்தது.

“சம்மு இங்கே பாருமா நீ லவ் பண்றது எல்லாம் சரி... ஆனா பையன் யாரு, என்ன படிச்சிருக்கான், அவனுக்கு குடும்பம் எப்படி, நம்ம அந்தஸ்துக்கு ஒத்து வருவானா, இதை எல்லாம் பார்க்கணும்” என்று நிதானமாக விளக்கிய பாஸ்கரனை அவரை விட மிக நிதானமாக பார்த்தவள்...

“பெரியப்பா… ப்ளீஸ்! உங்க போதனைகள் எனக்கு வேண்டாம், நான் கவினை காதலிக்கிறேன்... அவர்கிட்ட ஜாதி என்ன, படிப்பென்ன அந்தஸ்தென்னன்னு எல்லாம் கேட்க முடியாது” என்றவளை இப்போது யசோதா பொறுமை கைவிட்டு அறைந்தேவிட்டிருந்தார்... அதில் அதிருப்தி அடைந்த மற்ற மூவரும் அவரை சமாதானம் செய்ய எண்ணி... “யசோதா” குரலை உயர்த்தி கூவியிருக்க, சம்யுக்தா அவரின் தாக்குதலுக்கு சிறிதும் பாதிப்படையாதவள் போல் சட்டமாக அமர்ந்துவிட்டிருந்தாள்.
அவளை நெருங்கிய யமுனா... “சம்மு நீ முதலில் ரூமுக்கு போ, இந்த விஷயத்தை பற்றி அப்புறம் பேசிக்கலாம்” என்று சமாளிக்க குறுக்கிட்டவரின் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல்...

“முடியாது பெரியம்மா நான் இப்போவே இந்த விஷயத்தை பேசி ஒரு முடிவை தெரிஞ்சுக்காம போகமாட்டேன்” என்று பிடிவாதமாக நின்றவளை கண்டு அனைவரும் செய்வதறியாது திணறினார்கள். சம்யுக்தாவின் பிடிவாதத்தை உணர்ந்து சுதாரித்த யமுனா அவளை பேசும் விதத்தில் பேசி சமாளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்...

“சம்மு என் கூட வா” என்றவர் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க ஆரம்பித்தார்.

“பெரியம்மாகிட்டே சொல்லு சம்மு அந்த பையன் யாரு என்னன்னு...”

“அவர் பெயர் கவின்... ராயல் கிங் மோட்டார்ஸ் நிர்வாகி... அவருக்குன்னு யாரும் கிடையாது, அவர் ஒரு ஆர்ப்பன்(ஆதரவற்றவன்), ஆனால் என்னை கடைசி வரை கண் கலங்காமல் காப்பாற்ற கூடிய திறமை அவருக்கு இருக்கு பெரியம்மா, நீங்களும் வேண்டும்னா விசாரித்துப் பார்த்துக்கோங்க” என்றவளின் கூற்றை கேட்டு யோசனையில் ஆழ்ந்தவர்...

“சரி இனி இந்த விஷயத்தை என்கிட்டே விடு நான் பார்த்துக்கிறேன்” என்றவர் முடியாது என்றவளை சமாதானம் செய்து அறையில் அமர்த்திவிட்டு குடும்பத்தாரிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

அனைவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு அமைதியை கடைபிடிக்க அதை உடைத்தது மனோரஞ்சனின் குரல்...
“அப்பா நாம உடனே பையனை பற்றி விசாரிக்கலாம்... பையன் நம்ம ஸ்டேடஸ்க்கு ஒகேன்னா அவ விருப்பப்படியே செய்திடலாம்” என்றவனின் கூற்றில் ஒப்புதல் இருக்கவே ஆமோதிப்பாக தலையசைத்தார். அதன் பிறகு வேகமாக செயல்பட்டு விசாரிக்க நேர்ந்ததில் அவனின் பின்புலம் அனைத்தும் சம்யுக்தா கூறியது போல் இருக்கவே சம்யுக்தாவின் காதலுக்கு பச்சை கொடி காட்டியிருந்தனர்.


**********************

தாபத்தில் கட்டுண்டிருந்த இருவரும் எங்கோ ஒலித்த ஓசையில் சுதாரித்து விலகிக் கொண்டனர்... “யுகிமா...” என்று அவளை இறுக அணைத்தவனை தானும் அணைத்துக் கொண்டவள்...

“கவின் நான் அடுத்த வாரம் ஸ்வீடன் போகணும், என்னுடன் நீங்களும் ஜாயின் பண்ணிக்கோங்களேன்... ப்ளீஸ்!” உள்ளார்ந்த காதலுடன் கண்களை சுருக்கி சிறு பிள்ளை போல் கெஞ்சியவளை கண்டு மந்தகாசம் அரும்பிக் கொள்ள...

“என்னது உன் கூடவா? ஏன்மா உனக்கு இந்த கொலைவெறி?” என்றவனின் பேச்சிற்கு போலியாக உதட்டை சுளித்தவள்...

“ஏன்?” என்க...

“இல்லை; இங்கேயே உன் கூட இருக்கும்போது உன் அன்புச் சோதனையை கட்டுபடுத்த சிரமப்படுறேன்... இன்னும் அங்கே போனா நாம நாமளா இருக்கமாட்டோம்”

“நாம நாமளா இருக்கத்தான் உங்களை கூடவே வர சொல்கிறேன்” என்றவளின் பேச்சில் திடுக்கிட்டவன் இமைக்காமல் பார்த்திருந்தான்... அவன் பார்வையில் இவள் நிஜமாகத்தான் சொல்கிறாளா? இல்லை; என்னை சோதித்துப் பார்க்கிறாளா? என்ற சிந்தனை தோய்ந்திருக்க, அதை அவளிடமும் பிரதிபலித்தான்...

“யுகிமா நீ என்ன சொல்லுறன்னு யோசிச்சு தான் சொல்லுறியா?”

“இதில் யோசிக்க என்ன இருக்கு கவின்...? அம் யுவர் வைஃப், நீங்க என் ஹஸ்பண்ட்” என்றவளின் வார்த்தையில் நேசத்தின் சாரல் குற்றால அருவியை போல் பொழிந்ததில் குளிர்ந்தாலும் நிதர்சனத்தை எண்ணி தன்னை சமாளித்துக் கொண்டவன்...

“இல்லை யுகிமா வேண்டாம்... எனக்கும் உனக்கும் திருமணம் நடக்காம இந்த விஷப்பரீட்சை வேண்டாம் புரிஞ்சுக்கோ... வருங்கால விமன் ஆன்ட்ரிபிரிநியர் (பெண் தொழிலதிபர்) நீ, என்னால் உன் பெயருக்கு ஒரு களங்கம் வந்து விடக்கூடாது” என்றவனின் வார்த்தைகள் பெண்ணவளை மேலும் அவன்மேல் காதலில் கசிந்துருகி பித்தம் கொள்ள வைத்திருக்க...

“ம்ஹும் முடியாது...! இது என் காதல், நம்ம வாழ்க்கை, இதை மற்றவங்க விமர்சிக்க என்ன இருக்கு? எனக்கு நீங்க வேணும் அவ்ளோதான்” என்று பிடிவாதமாக தர்க்கம் செய்தவளை கண்டு தடுமாறிப் போனவன் என்ன கூறுவதென்பது அறியாது மௌனத்திரையை போர்த்திக் கொண்டான்... அவனின் மௌனத்தை உடைக்க தானே அதற்கு தீர்வையும் கூறலானாள்.

“இப்போ என்ன நமக்கு கல்யாணம் தானே முடியணும்? அதற்கு நான் ஏற்பாடு பண்றேன்... என்னுடன் வர நீங்க ரெடி ஆகிக்கோங்க, நாம ஸ்வீடன் போயிட்டு அப்படியே மால்டா போறோம்” என்றவள் அவனின் பதிலையும் எதிர்பாராமல் சென்று விட, அவளின் வேகத்தை கண்டு பிரமித்தான்.

அவளையே வெறித்தவனின் விழிகளில் பல வித கலவையான உணர்ச்சிகள் தாண்டவமாட பரவச கனவுகள் பொங்கி எழும்பியது.


**********************

பாஸ்கரன் அன்று தான் ஜவுளி கடை வியாபாரத்தில் ஏற்பட்ட ஒரு சிக்கலை தீர்க்க வேண்டி மனோரஞ்சனுடன் சேர்ந்து தீவிரமாக வேலையில் ஆழ்ந்திருந்தவரை...

“பாஸ்கரன்” என்று எங்கிருந்தோ அழைத்த குரலில் சடாரென்று திரும்பி பார்த்தவருக்கு நீண்ட நாள் காணாத பால்ய சினேகிதனை கண்டு ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் ஒரு சேர எழுந்தது.

“டேய் மாதவா! எப்படிடா இருக்கிற? பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு?” என்று பரஸ்பர விசாரிப்பை மேற்கொண்டனர்.
“நான் பாரின் போயிட்டு இந்த வருஷம் தான் டா வந்தேன்” என்றவர் அவர்களின் பால்ய வாழ்க்கையை பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்க, அவர்களின் கடையை சுற்றி பார்த்தப்படி நவ நாகரிக உடையில் பளிச்சென்ற வதனத்துடன் வளைய வந்துக் கொண்டிருந்தவளை மனோரஞ்சனின் பார்வை ஆர்வத்துடன் மேய்ந்தது.

பாஸ்கரன் தன் மகனின் பார்வைக்கு படும்படி நின்றிருக்க, அவரின் கண்ணில் அந்த காட்சி சிக்கியதை கண்டு பேச்சினூடே சிந்தனை எழுந்தது... நண்பருடன் பேசிக் கொண்டிருந்தவரின் கருத்து முழுமையும் அவரின் பேச்சில் பதியாமல் மகனின் பார்வையிலேயே உழன்று கொண்டிருந்தது... அப்படியே அவரும் அந்த பெண்ணை ஏறிட அவர் மூலையில் பொறி தட்டிய விஷயத்தை பற்றி சிந்திக்கலானார்... தன் நண்பன் மகள் நாளை ஏதேனும் பிரச்சனை என்றால் கூட சமாளித்துக் கொள்ளலாம் தெரியாத இடத்திலிருந்து பெண் எடுப்பதற்கு பதில் தெரிந்த இடமானால் சற்று தேவலாம் என்ற எண்ணத்தில் பேச்சினூடே அதை பற்றி திறக்கலானார்...

“அதெல்லாம் சரி மாதவா உன் பொண்ணுக்கு வரன் எதுவும் பார்க்கறியா?”

“ஆமாம்டா நான் பார்த்துகிட்டு தான் இருக்கிறேன்... ஆனால் அவ தான் மேல படிக்கணும்னு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா... அதனால நிறுத்திதான் வச்சிருக்கேன் நல்ல இடமா எப்போ அமைஞ்சாலும் பண்ண வேண்டியது தான்”

“அப்படியா அப்போ நல்ல இடம் அமைஞ்சிருச்சுடா உனக்கு” என்றவரை குழப்பத்துடன் பார்த்திருந்தார்.
“என் மகன் மனோரஞ்சனுக்கு கூட பெண் பார்க்கிற ஐடியாவில் தான் இருந்தேன், என் கொழுந்தியா பெண்ணுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்தத்தை முடிச்சுட்டு தொடங்கலாம்னு இருந்தேன்... ஆனா கடவுளா பார்த்து கை காட்டியது போல இருக்குடா உன் வரவு”

“என்னடா சொல்ற நிஜமாவா?”

“ஆமாம் மாதவா இதில் விளையாட என்ன இருக்கு? நீ குடும்பத்தோட கலந்தாலோசனை பண்ணிட்டு சொல்லு, அடுத்த வாரம் சம்யுக்தா நிச்சயதார்தத்தோட மனோரஞ்சனுக்கும் சேர்த்தே செய்து முடிச்சிருவோம்” என்றதில் அவருக்கு மனம் குளிர்ந்துப் போனது...

“நிச்சயமா பாஸ்கரா நான் இன்னைக்கு பொழுதுக்குள்ள உனக்கு இதுக்கான பதிலை சொல்லிடுறேன்” என்றவர் கிளம்பிச் சென்றிருக்க, தானும் மகனுடன் புறப்பட்டு குடும்பத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

யமுனா, யசோதா, மனோரஞ்சன், பாஸ்கர் நால்வரும் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து நண்பனுடன் பேசிக்கொண்ட சமாச்சாரத்தை கூறி கலந்தாலோசனையில் ஈடுபட்டனர்...

“மாமா என்ன தான் உங்க நண்பர் மகளா இருந்தாலும் பெண்ணை பற்றி விசாரிக்க வேண்டாமா?” என்று மைத்துனி யசோதா கூறியதை கேட்டு...

“அதெல்லாம் ரொம்ப நல்ல பொண்ணு யசோதா... யமுனாவுக்கு நல்லாவே தெரியுமே” என்று கூறி மனைவியை பார்க்க அவர் யார் என்ற சிந்தனையில் இருந்தார்.

“என்ன யமுனா உனக்கு இன்னமுமா நியாபகம் வரலை? நம்ம தெரிஞ்சவங்க வீட்டு விசேஷத்தில் கூட ஒரு தடவை பார்த்தோமே” என்றதும் சட்டென்று எதோ நினைவு வந்தவராக...

“அட ஆமாங்க, நியாபகம் வந்திருச்சு... அந்த பொண்ணுதானே செம அழகா இருப்பாளே... ஸ்டேடஸ்லையும் நமக்கு சமமா இருப்பவங்க தானே, அதற்கென்ன அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்போம் அப்படி சம்மதம் சொல்லிட்டா, சம்யுக்தா, மனோரஞ்சன் ரெண்டு பேருக்குமே சேர்ந்தே நிச்சயம் வச்சிருவோம்”

“அது சரி இதை பத்தி சம்யுக்தாகிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா” என்று மனோரஞ்சன் வினவ அதற்கு யசோதா...

“முதலில் அவங்க என்ன பதில் சொல்றங்கன்னு பார்க்கணும் மனோ அவசரப்பட வேண்டாம்” என்றார்.

“சரி சித்தி, அம்மா நான் திரும்ப கடைக்கு போறேன்... அப்பா நீங்க வர வேண்டாம் இனி நான் பார்த்துக்குறேன்” என்று நகர்ந்தவனை...

“மனோ” என்றழைத்து நிறுத்தினார் யசோதா... தன் சித்தியின் அழைப்பில் திரும்பி பார்த்தவனிடம்...

“மனோ உனக்கு அந்த பொண்ணு மேல விருப்பம் தானே” என்று அக்கறையாக வினவ அவன் மந்தகாசமாக முறுவலித்தவன்...

“எனக்கு விருப்பம் தான் சித்தி... இல்லைன்னா, நான் உங்க கூட பேசும் போதே சொல்லிருப்பேனே” என்று தெளிவாக விளக்கம் அளித்துவிட்டு சென்றிருந்தான். பெரியவர்கள் மூவருக்கும் நடக்கவிருக்கும் சுப காரியத்தின் பூரிப்பில் வளைய வந்தனர்.
ஆனால் அவர்கள் போட்ட திட்டத்தை அப்படியே செயல்பட விதி விட்டுவிடுமா என்ன அவர்களே எதிர்பாராத பல திருப்பங்களும், அதிர்ச்சியும் காத்திருப்பதை அறியாமல் போயினர்!!


சுவடுகள் தொடரும்...

**********************************
வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி” பாகம்-1 அத்தியாயம்-1 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.
நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-2
மாதவன் தன் மனைவியிடம் மனோரஞ்சனை பற்றி கூறியதும்...
“என்னங்க அவங்க நமக்கு தெரிஞ்சவங்களா இருக்கலாம் அதுக்காக பையனை பற்றி விசாரிக்காம நம்ம முடிவை சொல்றதா?”

“அதுக்கென்ன அவசியம் இருக்கு தேவி? பாஸ்கரன் பற்றி எனக்கு நல்லா தெரியும் அவன் குணத்தை பற்றியும் தெரியும் அவன் மகனையும் அப்படித்தானே வளர்த்திருப்பான்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் மகள் ரூபலா இடையிட்டாள்...

“அப்பா உங்ககிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நான் மேனேஜ்மென்ட் ரெண்டு வருஷம் படிச்சுட்டு, ஸ்விஸ்ல இருக்கிற மாமா வீட்ல தங்கி அவருடைய ஹோட்டல்ல ஒரு வருஷம் ட்ரெயின் பண்ணனும்னு... நீங்க காலா காலத்தில் கல்யாணம் பண்ணனும்னு எப்பப்பாரு மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு பேசிட்டு நிற்கிறீங்க?” என்று சிடுசிடுத்தாள்.

“இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க எனக்கு படிப்பு முடிஞ்சு வேலையோ, இல்லை; தொழிலோ இந்த ரெண்டில் ஏதாவது ஒண்ணு இருந்தா தான் கல்யாணம் பண்ணிக்குவேன்... நான் சொன்னதை செய்கிற வரை காத்திருக்க யாருக்கு சம்மதமோ அவங்க எனக்கு பரிபூரண சம்மதம்... மத்ததெல்லாம் உங்க விருப்பப்படி என்ன வேணா பண்ணிக்கோங்க இந்த ஒரு விஷயம் மட்டும் நான் ரொம்ப உறுதியா இருக்கேன்”

மகளின் பேச்சை கேட்ட மாதவன், தேவி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“கேட்டீங்களா உங்க பொண்ணு சொன்னதை இப்போ என்ன செய்கிறதா இருக்கீங்க?”

“தேவி பாஸ்கரன் உள்ளூர்காரன், நல்லா தெரிஞ்சவன், நாளைக்கு எதுனாலும் அவன் முகத்தை பார்த்து நேரடியா கேட்டுடலாம், இதே வேற யாரும்னா நம்மளால எதுவும் பண்ண முடியாத சூழ்நிலை ஏற்பட்டிரும் பேசாம ரூபி சொன்னதை அவன்கிட்ட சொல்லியே கேட்போமே” என்றவர் தாமதியாமல் பாஸ்கரனுக்கு அழைத்து மகளின் கோரிக்கையையும் அவர்களின் விருப்பதையும் கூற, பாஸ்கரன் ஆழ்ந்த சிந்தனைக்கு ஆட்பட்டு விட்டிருந்தார். தன் மனைவி, மைத்துனியிடம் கூற அவர்களும் அவருடன் யோசனையில் ஆழந்தனர்.

நீண்ட நேரம் நீடித்த மௌனத்தை கலைத்தார் யமுனா.. “இங்க பாருங்க அவர் சொன்னதை நாம ஏன் யோசிக்கக்கூடாது?”

“ஏன் க்கா?” என்று யசோதா வினவ பாஸ்கரன் மனைவியை யோசனையாக பார்த்திருந்தார்.

“சம்யுக்தா கூட படிப்பை முடிச்சதும் இப்படித் தானே சொன்னா... அதனால தானே கார்மெண்ட்ஸ் தொழிலை நிர்வாகிக்கிற பொறுப்பை அவகிட்ட கொடுத்தோம்...”

“நம்ம மனோரஞ்சனை கட்டிக்க போகிற பெண்ணும் நம்ம வீட்டு பொண்ணு தானே… நாம அடுத்த வாரம் நிச்சயத்தை மட்டும் முடிச்சு விட்டிருவோம்... அப்புறம் அந்த பொண்ணு ஆசைப்பட்டபடியே படிச்சு முடிச்சு வேலையில் சேரட்டும்... பொண்ணும் சம்பாத்தியம் பண்ணினா நாம இன்னும் நல்ல வசதியா வாழலாமே”

“எல்லாம் சரி தான் யமுனா, ஆனால் வரப் போகிற பொண்ணு பணம் சம்பாதிக்கிற மிதப்பில் நம்மளை மதிக்கலைன்னா என்ன பண்ணுவ?”

“ம்ச்... என்னங்க நீங்க இந்த காலத்தில் போய் இதை எல்லாம் எதிர்பார்த்துகிட்டு? நமக்கு முதல்ல கெளரவம் தான் முக்கியம்... அப்புறம் நம்ம ஸ்டேட்டஸ், அப்படியே அந்த பொண்ணு மதிக்காட்டியும் வீட்டிற்குள் எப்படி வேணா இருந்துக்கோன்னு சொல்லிட்டு வெளியில தெரியாம பார்த்துக்க சொல்லிருவோம்” என்றவரின் கூற்றுக்கு முதலில் ஆட்சேபம் எழுந்தாலும் மனைவி சொல்லே மந்திரம் என்பது போல்...

“அதுவும் சரி தான் யமுனா அப்போ நான் அவன்கிட்டே பேசிடுறேன்” என்றவர் உடனடியாக தொடர்பு கொண்டு விஷயத்தை கூற, மாதவன் எல்லையில்லா மகிழ்ச்சியும், நிம்மதியும் சேர மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்திருந்தார்... அந்தோ பரிதாபம் அனைவரின் நோக்கம் கைகூடப் போவதில்லை என்று யாரும் அறிந்திருக்கவில்லை!


**********************
இயற்கையின் கைங்கர்யத்தில் பச்சைபசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது தேனி... ‘அர்ஜுன் ஸ்பைசஸ் எக்ஸ்போர்ட்ஸ்’ ஆண்டிபட்டியில் அமைந்திருந்த நிறுவனம் ஏற்றுமதியில் மிகப்பெரிய இலக்கை தொட்டு குறுகிய காலத்தில் பிரபலமடைந்த பெருமையை பெற்றிருந்தான் அர்ஜுன்.

அர்ஜுன் மேனேஜிங் டிரைக்டர் (நிர்வாக இயக்குனர்) என பித்தளை நியான் பலகை மின்ன, அங்கிருந்த சுழல் நாற்காலியில் காப்பிகொட்டை நிறத்தில் கோட்சூட் அணிந்து முதலாளிக்கே உண்டான தோரணையுடன் அமர்ந்திருந்தான் அர்ஜுன். வெகு தீவிரமாக கோப்பில் ஆழ்ந்திருந்தவனை...

“அண்ணா உள்ளே வரலாமா?” என்ற குரலில் விழியுயர்த்தியவன்...

“வா தர்சன்” என்றவன் கனிந்த முகத்தில் மெலிதான முறுவலுடன் நோக்கினான்.

“என்ன தர்சன் போடி போயிட்டு வந்துட்டியா? டிராவல் எப்படி இருந்தது” என்று விசாரித்தான்.

“எல்லாமே சூப்பரா இருந்தது அண்ணா அந்த ஏலக்காய் தோட்டத்து சூப்பர்வைசர் தவிர”

“என்ன இந்த தடவையும் அவன் பிரச்சனை செய்தானா? ஏன் நீ என்கிட்டே சொல்லலை, சொல்லிருந்தா அடுத்த நிமிஷமே கிளம்பி வந்திருப்பேனே தர்சன்” என்று படபடவென்று பொரிந்தவனை நிதானமாக நோக்கியவன்...

“அண்ணா முதல்ல நீங்க கூல் ஆகுங்க” என்றதும் அர்ஜுன் சில ஆசுவாச மூச்சுகளை எடுத்துவிட்டு தன்னை சமாளித்துக் கொண்டதை நன்கு அறிந்த பிறகே பேச்சை தொடங்கினான்.

“அண்ணா பேஃக்டரி மேனேஜர் எல்லாம் நமக்கு சரியா லோட் அனுப்பியிருக்காரு, ஆனா இந்த சூப்பர்வைசர் தான் வண்டியோட டிரைவர்கிட்டே தாஜா பண்ணி லோட்ல கலப்படம் செய்திருக்கான்”

“அது தான் நான் தெளிவா சொன்னேனே தர்சன்”

“ஆமாம் அண்ணா... இத்தனை நாள் நாம கண்டுக்காம விட்டோம் இப்போ திடிர்னு கேட்கவும் ஆடிப் போயிட்டான்... பல வருஷமா வேலை பார்க்கிறான்ல அதான் தமாகுமான்னு ஆட்டம் போட்டான்... நான் உடனே நேரடியா ஓனரை மீட் பண்ணிட்டேன்... அப்போவும் அவன் அவளோ சுலபமா ஒத்துக்கலைன்னதும் ஓனர் நேரடியாகவே அவனை வாங்கின வாங்குல அவன் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான் அவனை சஸ்பெண்ட் கூட பண்ணிட்டாங்கன்னா”

“இதுவரைக்கும் நமக்கு லாஸ் ஆனதுக்கு என்ன பண்றதா சொன்னாங்க?”

“அதெல்லாம் ஓனர் பொறுப்பை எடுத்துகிறதா சொல்லிட்டாங்க... நம்மளுடைய லாஸ்க்கு அவங்க பே பண்ணிக்கறாங்களாம், பெண்டிங் அமௌண்ட் மட்டும் கிளியர் பண்ணி விட சொல்லியிருக்காங்க அடுத்த தடவை இதுக்கு தனியா ஆள் போட்டு செக் பண்ணி அனுப்பறாங்கலாம்”

“சரி நான் ஸ்டோர்ஸ்க்கு இன்பார்ம் பண்ணிடுறேன்... நீ இன்னைக்கு ரெஸ்ட் எடு மற்ற வேலைகளை நாளைக்கு பார்த்துக்கலாம்”

“இல்லை அர்ஜுன், நான் வேலை பார்க்கிறேன் எனக்கு அவ்வளவு அலுப்பெல்லாம் இல்லை... நீங்க வேலையை முடிச்சுட்டு வாங்க நான் ஃபேக்டரியை ஒரு ரௌண்ட்ஸ் போயிட்டு வரேன்”

“சரி பாரு லஞ்சுக்கு சேர்ந்தே போவோம் வீட்டுக்கு” என்றதும் தர்சன் அங்கிருந்து நகர, அர்ஜுன் கோப்பிற்குள் கவனம் செலுத்த தொடங்கிவிட்டிருந்தான்.


**********************
நீலநிற பாவடைக்கு பொருத்தமாக வெள்ளை நிற தாவணியை அணிந்திருந்தவளின் முகத்தில் எழில் கூடித் தெரியாமல் வேதனை டன் கணக்கில் கசிந்து வழிந்து கொண்டிருந்தது... தன் மருமகளைத் தேடி வந்த பூங்குழலி...

“ஏன் கலையரசி உன்னை எவ்வளவு நேரமா தேடிட்டு இருக்கிறேன், இங்கே உட்கார்ந்துட்டு என்ன பண்ணுற? இன்னைக்கு சாயந்தரம் கூத்து கட்டணும் அதுக்கு ஆர்மோனியம் நீ தான் வாசிக்கணும் அதுக்காக எதையும் பண்ணலையா?”

“பண்ணனும் அத்தை... கொஞ்ச காற்றாட உட்கார்ந்துட்டு பண்ணலாம்ன்னு தான் இங்கே வந்தேன்” என்றவளை உற்று நோக்கியவர் அவர் மனதை உறுத்திக் கொண்ட விஷயத்தை பற்றி வினவினார்...

“கொஞ்ச நாளாவே நீ சரி இல்லையே அரசி, ஏன் என்னாச்சு உனக்கேதும் பிரச்சனையா?” என்று அவளை ஆராய்ந்தவரை கண்டு மனதிற்குள் தூக்கி வாரிப்போட கணத்தில் சுதாரித்து கொண்டவள்...

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல த்தை... நம்ம கலைவாணி பரீட்சை எழுத போயிருக்காள, அவ இல்லாம எனக்கு போர் அடிக்குது அதனால் தான் ஒரு மாதிரி இருக்கு” என்று திக்கித் திணறி சமாளித்தவளின் வார்த்தையை நம்பியவர்...

“அப்பாடா இவ்ளோ தானா!” என்று நிம்மதியுற்றார்.

“இந்த ரெண்டு நாளா உன் முகமே வாடிப் போயிருக்கவும் நான் என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்... அவ பரீட்சையை எழுதி முடிச்சதும் வந்திடப் போறா இதுக்கு போயா நீ கவலைப்பட்டுட்டு இருப்ப... எழுந்து வா கண்ணு, இந்த தரன் பையன் கூத்து முடிச்சுட்டு வேலைக்கு கிளம்பணும், அதுக்கு நாம தயாராகணும்” என்று விட்டு உள்ளே செல்ல தன் கலங்கிய கண்களில் குட்டையாக நின்ற நீருடன் வெறித்த வானத்தை நோக்கினாள்.

“அரசி” குரலில் கனிவை தேக்கிக் அவளின் தோளில் கை வைத்து அழைத்திருந்தான் தரன் என்கிற கலாதரன். அவனின் அழைப்பில் வெடுக்கென்று திரும்பியவளின் கண்கள் கலங்கியிருப்பதை கண்டறிந்தவன்...

“என்னாச்சு, ஏன் கண் கலங்கியிருக்க?” என்று பதற்றத்துடன் கேட்க, அதுவரை இதோ வந்துவிடுவேன் என்று தொடுத்து கொண்டிருந்த கண்ணீர் துளிகள் அவள் கன்னத்தில் பட்டு சிதறி அவன் இடது கரத்தில் விழவே, சுற்றும் முற்றும் ஜாக்கிரதையாக நோக்கி விட்டு மற்றவர்களின் பார்வையில் படாதவாரு அவளை அங்கிருந்து தள்ளிச் சென்றிருந்தான்.

“என்னாச்சுன்னு முதலில் சொல்லிட்டு அழு” மெல்லிய குரலில் அழுத்தத்துடன் வினவியதும் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள்...

“அந்த மனோவுக்கு நிச்சயம் பண்ணப் போறாங்களாம்” என்றவள் அடக்கப்பட்ட அழுகையின் எதிரொலியாக விசும்பல் வெளிப்பட, அவளின் துயரத்தை கண்டு கண் சிவந்தவன் கைமுஷ்டி இறுகி பச்சை நரம்புகள் புடைத்து தெறித்தது.

“இங்கே பாரு அரசி இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் அவசரப்பட்டு அழுது நீயே காட்டிக் கொடுத்திறாதே... நிச்சயதார்த்தம் இன்னும் நடக்கலை, இனி மேல் தான் பண்ணப் போறாங்க? அது நடந்தா தானே நிஜம்? நீ தைரியமா இரு மற்றதை நான் பார்த்துக்கிறேன்”

“இப்போவே மலர் அடிக்கடி என்னை கேள்விக் கேட்கிறா அண்ணா... இந்த விஷயத்தை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும், நாள் அதிகமாக அதிகமாக பயத்தில் குலை நடுங்குது... நல்ல வேளை கலைவாணி இங்கே இல்லை, இருந்திருந்தா இன்னும் சூழ்நிலை மோசமா போயிருக்குமோன்னு நினைக்கவே தலைசுற்றுது”

“பைத்தியமா நீ... அப்படி எல்லாம் ஆக நான் விட்டு விடுவேனா? நம்மகிட்டே வசதிக்கு குறைவா இருக்கலாம், ஆனா மனோதிடமும், நம்பிக்கையும் மலையளவில் இருக்கிறது... ராத்திரி கூத்தை முடிச்சுட்டு நான் உடனே கிளம்பனும் வா வந்து அதுக்கான ஏற்பாட்டை பாரு” என்றவனை கலங்கிய முகத்துடன் பார்த்திருந்தாள்... அவளின் முகத்தில் படிந்திருந்த கவலை ரேகைகள் அவன் மனதை வதைக்க, சட்டென்று இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன் அவள் சிகையை ஆதுரத்துடன் கோதிக் கொடுக்கலானான்.

“இங்கே பாரு அரசி என்ன நடந்தாலும் சரி எப்பவும் நம்பிக்கையை மட்டும் கைவிடக் கூடாது” என்றதும் சற்றே தெம்பு வரப் பெற்றவளாக கண்களை துடைத்துக் கொண்டு அவனிடமிருந்து விலகி நின்று...

“என்னை மன்னிச்சிருங்கண்ணா... என்னால தானே உங்களுக்கு இத்தனை சிரமம்?”

“பைத்தியம் போனதெல்லாம் போகட்டும் இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்” என்றவனை திரும்பவும் கலக்கமாக பார்த்தவளை...

“என்னடா?” என்று கனிவு மிக்க வினவினான்.

“ஒரு வேளை நிலைமை கைமீறி போயிருச்சுன்னா?”

“போகாது அதுக்கு நான் விடவும் மாட்டேன்...” என்றவனின் வார்த்தையிலும், முகத்திலும் தோய்ந்திருந்த கடினத்தில் அதற்கு மேல் அதைப் பற்றி வினவ முடியாமல் பாறை போன்ற இறுகிய முகம் தடுத்துவிட்டிருந்தது.


**********************
அர்ஜுன், தர்சன் இருவரும் வேலையில் மிகுந்த பளுவின் காரணமாக மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்லவேயில்லை...

“அர்ஜுன் அம்மா வேற பத்து வாட்டி போன் சாப்பிட வர சொல்லிட்டாங்க... வாங்க போயிட்டு வந்திருவோம்... இல்லன்னா அம்மா கோவிச்சுக்குவாங்க” என்று எடுத்துரைக்க, தர்சன் கூறிய விஷயம் அவனுக்கும் தெரியும் என்றாலும் வேலையை முடிக்காமல் செல்லக்கூடாது என்ற கொள்கையை தளர்த்திக் கொள்ளாமல் மூழ்கிவிட்டிருந்தவனிடம்... இதற்கு மேல் பொறுமை காத்தால் தன் அன்னையிடம் பாட்டு வாங்க வேண்டியதாக இருக்கும் என்றறிந்து...

“அண்ணா ஒண்ணு செய்யலாம் நீங்க வேணா வேலை முடிச்சுட்டு வாங்க... இப்போ நான் வீட்டுக்கு கிளம்பறேன், நம்ம ரெண்டு பேரும் போகலைன்னா அம்மாவை சமாதானப்படுத்துறது ரொம்ப சிரமம் ஆகிரும்” இளையவனின் கூற்றில் அவனுக்கும் அது சரி என்று படவே அப்படியே செய்ய ஏவினான்.

“சரி தர்சன் நீ கிளம்பு நான் வேலை முடிச்சுட்டு வரேன்” என்றதும் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு வீட்டை அடைந்திருந்தான்.

தன் கணவர் நடராஜனுக்கு உணவை பரிமாறிக் கொண்டிருந்த மல்லிகாவின் முகம் கடுப்பில் இருப்பதை உணர்ந்தவருக்கு அதற்கு காரணம் பட்டவர்த்தனமாக புரிந்திருக்க...

“என்ன மல்லி ஏதோ டென்ஷனா இருக்கிற?” என்றவரை முறைத்தவர்...

“ஏன்னு உங்களுக்கு தெரியாதா?” என்று எரிந்து விழுந்தார்... மனைவியின் சிடுசிடுப்பில் அவர் கோபத்தின் உச்சியில் இருப்பதை உணர்ந்து...

“நீ அர்ஜுன், தர்சன் மேல தானே கோபமா இருக்கிற?”

“தெரிஞ்சுகிட்டே கேள்வி கேட்கணுமா? கேள்வி கேட்டது போதும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு போய் படுங்க... நீங்களாவது என் பேச்சை கேளுங்க?” என்று அதட்டினார்.

‘ஆஹா செம கோபத்தில் இருக்கிறா போலவே இன்னைக்கு அவங்க ரெண்டு பேரோட கதி அதோ கதி தான்’ மானசீகமாக உரையாடிக் கொண்டவர் மேலும்...

“அவங்க தான் தினமும் சொல்றாங்களே மல்லி வேலைன்னு வந்துட்டா அப்படியே போட்டுட்டு வந்திர முடியுமா? உடையவன் பார்க்காவிட்டால் ஒருமுழம் கட்டைன்னு நீ கேள்விப்பட்டதில்லையா?”

“எல்லாமே உண்மை தான், இவன் தான் தொழிலை நிர்வாகம் பண்ணுறான் யார் இல்லைன்னு சொன்னது... இவன்தான் முன்னாடி நின்னு எல்லாமே மேற்பார்வை பார்க்கணும்... ஆனால் அதுக்காக வயிற்றை காயப் போட்டுட்டு தான் வேலை செய்யணுமா?”

“சரி, அதுக்குத் தான் ஆயிரம் காரணம் சொல்றான்னா கல்யாணத்துக்கும் ஒத்து வரமாட்டேங்குறான்... இவன் வயசுல உள்ள பசங்கெல்லாம் கல்யாணம் செய்து பிள்ளைங்களை பெற்று ஸ்கூலுக்கே அனுப்பிட்டாங்க இங்க அஸ்திவாரமே இல்லை... இவனே தள்ளிப் போட்டானா அப்புறம் தர்சனுக்குக்கு எப்போ பண்றது?” மூச்செடுக்காமல் தன் ஆதங்கத்தை கணவரிடம் கொட்டி வைத்திருந்தார்.

மனைவி சொல்வதும் வாஸ்தவம் தானே என்றெண்ணினாலும் தோளுக்கு மேல் வளர்ந்து தொழிலை கட்டியாளும் மகன்களையும் வற்புறுத்த முடியாமல் அல்லாடினார் நடராஜன்... சரி அனைத்தையுமே ஒரு சமயத்திலேயே கருத்தறிந்து ஆராய்ந்து ஏறக் கட்டிவிட முடியுமா என்ன? அனைத்திற்கும் காலம் நேரம் கைகூடி வரட்டும் என்று பொறுமை காத்தார்.

“சரி மல்லி நான் நாலு மணிக்கு மேல தோப்புக்கு போகணும்” என்று கூறிவிட்டு தொலைகாட்சியில் சில நிமிடங்கள் ஆழ்ந்துவிட்டு படுக்க செல்ல முனைய மனைவி மகன்களுக்காக காத்திருப்பதை எண்ணி அருகில் சென்றவர்...

“மல்லி அர்ஜூனும், தர்சனும் வரட்டும் அதுக்கு முன்னே நீ போய் சாப்பிடு... இல்லன்னா ரெண்டு பெரும் மனசு கஷ்டப்படுவாங்க” என்று நடராஜன் தன் மனைவியிடம் எடுத்துரைத்திருந்தார்.

“ஏன் அவங்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கா எனக்கு இல்லையா? ரெண்டு பேருக்கும் வேலைன்னு வந்துட்டா சாப்பிடணும்னு நியாபகமே இருக்கிறதில்லை... இவங்களை இப்படியே விடக்கூடாது, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க அவங்களை நான் பார்த்துக்கிறேன்” அழுத்தமாக உரைத்துவிட்டு மகன்களை எதிர்பார்த்து அமர்ந்துவிட்டார். அதற்கு மேல் மனைவிக்கு எடுத்து கூற விளையாமல் இனி மகன்கள் பாடு அம்மா பாடு என்றுவிட்டு சென்றிருந்தார்.

ஒரு மணி நேரம் கடந்தே மிட்சுபிஷி பேஜிரோ வாகனம் உள்ளே நுழையவும் ஆர்வத்துடன் எழுந்து அணுகி...

“அப்பாடா வந்துட்டியா தர்ஷு” என்றவரின் விழிகள் அர்ஜுனையும் தேடி அலைபாய அதை கண்டுக் கொண்ட தர்சன்..

“அம்மா அண்ணனுக்கு அவசர வேலை வந்திருச்சு சீக்கிரமே அவன் வந்திருவான், எனக்கு சாப்பாடு எடுத்து வையுங்க நானும் உடனே கிளம்பியாகணும்” எனவும் அவனை ஆன மட்டும் முறைத்தவர்...

“என்ன உங்க அண்ணன் மாதிரியே வர வர நீயும் வேலையே கதின்னு கிடக்கப் போறியா? ஒழுங்கா சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்குற இல்லன்னா என் கூட நீ பேசாத” என்று கண்டிப்புடன் கூறியவரின் வார்த்தையில் தொனித்திருந்த நேசத்தின் கோபத்தை கண்டு நெகிழ்ந்தவன் அவரை நெருங்கி தோளில் கைப் போட்டு நின்றுக் கொண்டான்.

“அம்மா இப்போ எதுக்கு நீங்க கோபப்படுறீங்க? இப்போ என்ன நான் சாப்பிட்டிட்டு கிளம்பக் கூடாது அவ்வளவுதானே? கிளம்பலை போதுமா. எங்கே சிரிச்சுகிட்டே வந்து எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க” என்று சாமர்த்தியமாக சமாளித்து அழைத்தவனின் பேச்சிற்கு அவன் மேல் இழுத்துப் பிடித்திருந்த கோபத்தை தளர்த்தி கொண்டார்... தொழில் வளர்ச்சி காரணமாக மகன்கள் ஊண், உறக்கமின்றி இருப்பது அவருக்கு வேதனையாக இருக்கவே மகன்களிடம் உணவை உண்டு விட்டு தான் வேலைகளை செய்ய வேண்டும் என்று சற்று கடினத்துடன் கட்டளையிட ஆரம்பித்தார்... அதன் காரணமாக இருவருக்கும் அதீத பணி நெருக்கடி நேர்ந்தலும் யாரேனும் ஒருவர் தன் அன்னையை அணுகுவதை வழக்கமாக்கி கொண்டுவிடுவார்கள். அவருக்கும் அவர்களின் பணி நெருக்கடி புரிந்தாலும் மகன்களை விட தொழில் முக்கியமாக கருத முடியாமல் போகவே தன் மனச்சுணக்கத்தை மறையாது வெளிப்படுத்துகிறார்.


**********************
பொம்மலாட்டம் தமிழர்களின் பழமையான மரபுவழிகளில் ஒன்றானது... இது கலை தழுவிய கூத்து வகையை சார்ந்தது... இது மரப்பாவைக் கூத்து, தோல்பாவைக் கூத்து என்று இருவகையாக உள்ளது.

மரப்பாவைகளை தயாரிக்க முள்முருங்கை மரக்கட்டையை நீரில் ஊறவைத்து இழைத்து செய்யப்படுபவை... மரப்பாவை சித்திரங்கள் வரைந்து கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் வடிவமைத்து நூலால் கட்டி திரைக்கு பின்னிருந்து இயக்குவார்கள்... இது வகையான மரப்பாவை கூத்து பெரும்பாழும் வட இந்திய பக்கத்தில் தான் கூத்தை நடத்தி வருகிறார்கள்.

தோல்பாவைக் கூத்து இது வட்டாரக் கலையோ, சடங்கியலாக நடத்தப்படும் கலையாகவோ அல்லாது மரபுவழிக் கலையாக திகழ்கிறது. இந்த கூத்தை நிகழ்த்துவோர் மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும் சென்னை அருகிலும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளனர்.

இராமயணம், மகாபாரதம், அரிசந்திரா கதை, நல்ல தங்காள் கதை, மயில் ராவணன் கதை, வள்ளி திருமணம் தற்போதைய தேவைக்கேற்ப பல சமுதாய விழிப்புணர்வு கதைகளும் இதில் நடத்தப்படுகிறது. இதில் சாலை விதி கடைபிடித்தல், தீண்டாமை கொடுமை, நுகர்வோர் நலன், சுற்றுபுறச் சூழல் பாதுகாப்பு, எய்ட்சு நோய் விழிப்புணர்வு போன்றவைகளும் அடங்கும்.

சென்னையில் 'தக்ஷின் சித்ரா' என்ற இடத்தில் தோல்பாவைக் கூத்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் 'சொக்கிதாணி' என்ற இடத்தில் மரப்பாவை கூத்தையும் தற்பொழுதும் நிகழ்த்தி வருகின்றனர்.

தேனியில் வசிக்கும் கேசவதரன், குருதரன் என்கிற தரன் குடும்பத்தினரும், அவர்களுடன் இணைந்து மற்ற ஆறு குடும்பங்களும் தோல்பாவைக் கூத்தை தங்களின் மரபுவழிக் கலையாக தொடர்ந்து வரும் தங்களின் கலையை நழிந்து விடாது காப்பாற்ற வேண்டி ஒருவருக்கொருவர் முறை வைத்து மாற்றி மாற்றி இந்த கூத்து நிகழ்வை நிகழ்த்துகின்றனர்.

மாதமொரு முறை நடத்தப்படும் இந்த கூத்து இன்று தரன் குடும்ப முறையாக இருக்கவே அதை நிகழ்த்த தயாராகினர். அவர்களுக்கென அந்த ஊரார் ஒன்றுகூடி அமைத்து கொண்டிருந்த மண்டபத்தில் அனைவரும் மேடையேறி கூத்தை ஒருங்கிணைத்தனர்.

“வணக்கம்...! வணக்கமிங்க... வணக்கம்...! இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்!” என்று தொடங்கியது தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி... அதன் ஆரம்பமாக கலாதரன் தன் தந்தையுடன் இணைந்து பாவையை இயக்க ஆரம்பித்திருக்க.. கலையரசி ஆர்மோனியதையும், குருதரன் தபேலாவையும், பூங்குழலி ஜால்ரா முக வீணையை இயக்க ஆரம்பிக்க ராமாயணத்தின் கிட்கிந்தா காண்டத்தை தொகுத்து திரையில் இயக்க ஆரம்பித்தனர்.

தோல்பாவைக் கூத்திற்கு தேவையான பாவைகளை ஆட்டுத்தோல் மற்றும் மாட்டுத்தோளால் செய்து, அதில் இயற்கையான வண்ணப் பூச்சுகள் கொண்டு சித்திரம் வரைந்து திரையின் பின்பே அமர்ந்தவர்கள் ஒளிவெளிச்சத்தை வெள்ளை திரையில் பரப்பி பொம்மையை வசனத்திற்கு ஏற்ப இயக்குகின்றனர். தரன், கேசவன் இருவரின் கைகளில் இருந்த தோல்பாவைகளை அவர்கள் வசனத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்க அதை பார்வையாளர்கள் உற்சாகத்துடன், ஆர்வத்துடனும் கண்டு களித்து ரசித்தனர்.


**********************
அர்ஜுன் இரவு பத்து மணிக்கு மேல் தான் வீடு திரும்பியிருக்க, அவன் மேல் மிகவும் கோபமாக இருந்த மல்லிகா அவனை வரவேற்கவும் ஏழாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டிருந்தார்.

தர்சன், அர்ஜுனை கண்டதும் அன்னையின் பின் மறைவாக நின்று... ‘அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க’ என்று உதட்டை மட்டும் அசைத்து சைகையில் அவரை பற்றி கூறியிருக்க... “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று இமைமூடி திறந்து... கண்ணசைவில் வெளிப்படுத்தியதை புரிந்து தாய்க்கும், தமையனுக்கும் தனிமை கொடுத்துவிட்டு அலைபேசியில் எதையோ ஆர்வமாக நோக்கியபடி சென்றுவிட்டிருந்தான்.

“அம்மா” என்று பாச மழையை பொழிந்தபடி அவர் தோளில் கைபோட்டு கொண்டு கன்னத்தில் நச்சென்று இதழ் பதிக்க, அதில் சிறிதும் அசையாமல் கடினமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். அன்னையின் கோபம் புரிந்தவன் இது போன்ற தருணங்களில் எப்போதும் போன்று அவரை சமாளிக்கும் முனைப்போடு இன்றும் இறங்கினான்.

“என் செல்ல அம்மா இல்லை... சாரிம்மா! அதான் தர்சன் சொல்லிருப்பான்ல வேலை அதிகம்னு, அதனால தான் வர முடியலை” அவனின் பேச்சிற்கு சிறிதும் அசைந்து கொடுக்காமல் அவனை அழுத்தமாக பார்த்திருந்தவரின் விழிகளில் ஓடியதை கண்டு அடுத்து அவர் என்ன கூறுவார் என்பதை அறிந்திருந்தாலும் அவராகவே அதை கூற காத்திருக்கலானான்...

“இந்த பசங்களுக்கு ஒரு வயசுக்கு மேல ஆனா அம்மா சொன்னா அலட்சியப்படுத்துவாங்க, இதுவே பொண்டாட்டி வந்து வான்னு சொன்னா போதும் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் ஓடி வந்து நிற்பாங்க” என்று அங்கலாய்ப்பில் பிரலாபிக்க, அவரின் கூற்றை கேட்டு சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான். மகனின் அமைதியை கண்டு திரும்பி பார்த்தவர் அவன் சிரிப்பை அடக்க சிரமப்படுவதை கண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்த வண்ணம்...

“நான் சொன்னா சிரிக்கத்தான் தோணும்டா உனக்கு, சீக்கிரமே கால்கட்டு போட்டுவிடுறேன் அப்போ பார்க்கிறேன் என்கிட்டே டிமிக்கி அடிக்கிற மாதிரி உன் பொண்டாட்டிகிட்டேயும் கல்தா கொடுக்கிறயான்னு” என்றதும் சிரிப்பை அடக்க முடியாமல் பக்கென்று சிரித்துவிட்டிருந்தான்.

“அட போங்கமா! நீங்களும், உங்க ஆருடமும்... நான் ஒருத்திக்கு அடங்கி இருப்பவனா? என்னை பத்தி தெரிஞ்சுமா நீங்க இப்படி சொல்றீங்க? அப்படி எல்லாம் நான் இருக்கமாட்டேன்ப்பா... சன்னியாசியா போனாலும் போவேனே தவிர இப்படி சம்சார வாழ்க்கையில மாட்டவே மாட்டேன்” என்றவனை கண்டு...

“படவா” என்று பல்லை கடித்து கொண்டு காதை திருகியவர்...

“கால்கட்டு போட்டா தெரியும் சம்சாரியா? சன்னியாசியான்னு?” வேடிக்கையாக கூறியவர்...

“அரட்டை அடிச்சது போதும் எழுந்து வா சாப்பிடலாம்” என்று மகனின் பசியறிந்து உணவு பரிமாறினார். அன்னையின் கோபம் வடிந்துவிட்டதை உணர்ந்த பிறகே திருப்தியாக உணவை உண்ண ஆரம்பித்தவன் உணவை ருசித்துக் கொண்டே...

“ஆயிரம் சொல்லுங்கம்மா உங்க கைமனம் யாருக்குமே வராது” என்று அன்னையை சிலாகித்தான்.

“இதே வார்த்தையை உன் பொண்டாட்டி வந்ததும் சொல்றியான்னு பார்க்கிறேன்” என்று அதிலும் அவனை தொடுத்துக் கொண்டு வாரியவரை கண்டு ஆயாசமாக இருக்க “ஸ்ஸ்ஸ்ப்ப்பா” சலிப்பில் உச்சு கொட்டியவன்...

“நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்லிட்டு இருக்கேன்” என்று நிர்தாட்சண்யமாக கூறியவனை ஒரு மாதிரியாக பார்த்தப்படி...

“இப்படி சொல்றவங்க தான் ஒன்பது பொண்டாட்டி கட்டுவாங்க” என்று அதற்கும் கருத்தாக பெருங்களிப்புடன் வேடிக்கையாக கூறிக்கொண்டிருக்க, அந்நேரம் தண்ணீர் எடுக்க வந்த தர்சன் அர்ஜுனின் கண்களுக்கு சிக்கவே பேச்சின் திசையை மாற்ற எண்ணி...

“வேணா அவனுக்கு பொண்ணு பாருங்க... அவன் தான் கல்யாணம் பண்ணிக்க ஆர்வமா இருக்கிறான்... நீங்க பெண்ணை பார்த்துட்டு சொன்னீங்கன்னா போதும் மாப்பிள்ளையா ரெடியாகி மேடி ஏறி உட்கார்ந்துப்பான்” என்று நமட்டுச் சிரிப்புடன் கூறியிருக்க... சிவனே என்று இருந்தவனை பேச்சுக்குள் இழுத்துவிட்டவனை நோக்கிய தர்சன், தானும் தன் பேச்சு சாதுர்யத்தை காட்ட வேண்டாமா என்ற முனைப்போடு இறங்கினான்.

“அடடே என்ன எனக்கு கல்யாணமா? நான் நாளைக்கே ரெடி ம்மா ஆனா ஒரு கண்டிஷன்” என்றதும் இருவரும் அவர்களின் பேச்சை மறந்து அவனையே என்ன என்பது போல் எதிர்பார்ப்புடன் நோக்க...

“பொண்ணுங்க மட்டுமே இருக்கிற வீடா இருக்கனும்” என்றதும்...

“ஏன்டா மச்சினன் இருந்தா சண்டைக்கு வருவான்னு இப்படி சொல்றியா?” என்ற அன்னையின் கேள்விக்கு...

“சேச்சே அதெல்லாம் இல்லைம்மா... சப்போஸ் அக்கா சரி இல்லைன்னா, தங்கச்சிக்கும், தங்கச்சி சரி இல்லைன்னா அக்காவுக்குன்னு மாற்றி மாற்றி ரூட் விட்டுக்கலாம்ல” உள்ளார்ந்த சிரிப்புடன் வேடிக்கையாக கூறியவனின் பதிலில் அர்ஜுன் அடக்க முடியாமல் “ஹஹஹஹ” வாய்விட்டு சிரிக்க...

மல்லிகா உதட்டில் உறைந்த புன்னகையுடன்... “அடிங் உன்னை” என்று எதையோ தேடுவது போன்று போலியாக மிரட்ட அங்கே இறுக்கமான சூழ்நிலை முற்றிலும் மறைந்துவிட்டிருந்தது.

அர்ஜுன் களைப்புடன் படுக்கையில் விழுந்ததும் அலைபேசி ஒளிமீட்ட... 'இந்த நேரத்தில் யாரு' என்று எண்ணியபடி திரையில் மின்னிய பெயரை பார்த்தவன் நொடியும் தாமதியாமல் அவசரமாக உயிர்ப்பித்திருந்தான்.

சுவடுகள் தொடரும்....


*****************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-2 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

கருத்துத் திரி:

Whatsapp Channel Link:
https://whatsapp.com/channel/0029VaKbymTBqbr4j5oNLd3g


Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-3
கலாதரன் தோல்பாவைக் கூத்தை முடித்துவிட்டு வெளியூர் செல்ல தயாராகினான். அரசி, மலர் இருவரும் தங்களின் தமையனுக்கு தேவையானவற்றை ஒரு பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்க, அந்நேரம் மலரின் கண்களில் புத்தக தபால் போல் இருந்த பொட்டலம் கண்ணில் படவே...

“என்னவா இருக்கும் க்கா, எதுக்கும் பிரிச்சு பார்க்கலாம்” என்று மலர் பிரிக்கப் போக...

“மலர் அப்படி எல்லாம் ஒருத்தர் அனுமதி இல்லாம பிரிச்சு பார்க்கக்கூடாது” என்று கூறிக் கொண்டிருந்த சமயம்...

“மலர் இங்கே வாமா” என்ற பூங்குழலியின் குரலுக்கு இசைந்த அரசி...

“மலர் அத்தை கூப்பிடுறாங்க போய் என்னன்னு கேட்டுட்டு வா” என்று கூறிவிட்டு அவளை அனுப்பி வைத்தவள், அதை வெறித்தப் படியே சில கணங்கள் நின்றிருந்தாள்... பின்பு, என்ன நினைத்தாளோ எடுத்தது போலவே அதையும் பெட்டிலேயே வைத்து மூடிவிட்டாள். தரன் தான் கிளம்பும் நேரம் வந்து புறப்பட்டு வெளியேற கலையரசி அவனை தொடர்ந்தவள்...

“அண்ணா பார்த்துப் போங்க... போயிட்டு எனக்கு அடிக்கடி போன் பண்ணுங்க” என்றவளின் விழிகள் குளம் கட்டியது.

“அரசி முதலில் உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்திப் பழகு நான் போயிட்டு உனக்கு கண்டிப்பா கூப்பிடுறேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டிருக்க, செல்லும் அவனின் முதுகை வெறித்தவாரு நின்றவளின் உள்ளம் ஊமையாய் அழுது கொண்டிருந்தது.

தரன் வீட்டிலிருந்து கிளம்பியதும் தன் நண்பன் அர்ஜுனிற்கு தான் அழைத்திருந்தான்... அந்த நேரத்தில் தயக்கமின்றி அவனுக்கான உதவியை செய்ய வரும் ஒரேயொரு நண்பன் ஆதலால் அவனையே அழைத்திருந்தான்... பேசியின் திரையில் தரனின் பெயர் மின்னியதுமே அர்ஜுன் அவசரமாக இணைப்பில் வர தரன் அவனிடம் தனக்கான தேவையை கூறியிருந்தான்.

“டேய் இது எல்லாம் தேவைதானா? நாம வேறெதுவும் யோசிக்கலாமே” என்ற அர்ஜுனின் கேள்விக்கு...

“எனக்கு தேவை தான் டா, உன்னால் உதவ முடியுமா! முடியாதா?” கறாராக வினவினான்.

“டேய் என்னடா இப்படி கேட்கிற? உனக்கு நான் செய்யாமல் போவேனா? என்னை பார்த்து இப்படி கேட்குற, இனி நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு” என்றதும்...

“தேங்க்ஸ் டா” என்று நன்றி நவிழ்ந்துவிட்டு கைபேசி இணைப்பை துண்டிக்க சென்றவனை...

“டேய்... டேய் தரன் ஒரு நிமிஷம்” என்றவனின் படப்படத்த குரலில் அவன் இணைப்பை துண்டிக்காமல் இருக்கவும்...

“டேய் அங்க எனக்கு தெரிந்த ஒரு நண்பன் கம்பெனி வச்சிருக்கான்... உனக்கு முடியாத பட்சத்தில் அவன்கிட்ட உதவி கேட்டுக்கோ” என்றதும்...

“சரி டா அவன் டீடெயில்ஸ் எல்லாம் வாட்சப்பில் அனுப்பி வைத்திரு” என்று விட்டு இணைப்பை துண்டித்திருந்தான்.


**********************

நிலுவையில் இருந்த பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய சம்யுக்தா, தன் குடும்பத்தாரிடம் பேச வேண்டும் என்று கூறியிருந்ததை அறிந்து அனைவரும் அவளுக்காக காத்திருந்தனர்.... சம்யுக்தா அவர்கள் முன்பு அமர்ந்தவள் அனைவரின் முகத்தையும் ஒரு முறை மேலோட்டமாக ஆராய்ந்து விட்டு தன் பேச்சை தொடங்கினாள்...

“நெக்ஸ்ட் வீக் நான் ஸ்வீடன் போறேன்” என்றதும் அனைவரும் திகைத்தனர்.

“ஏய் என்னடி சொல்ற? அடுத்த வாரம் தான் நிச்சயதார்த்ததிற்கு நாள் குறிச்சிருக்கு நீ ஃபாரின் கிளம்பறேன்னு சொல்ற” என்று யசோதா மகளை கடிந்தார்.

“என்கிட்டே பிளானிங் பற்றி சொல்லவே இல்லையே சம்மு” என்று மனோரஞ்சன் தன் பங்கிற்கு வினவினான். இதில் அவள் தொடர்ந்து பேசட்டும் என்று எண்ணி பாஸ்கரன், யமுனா இருவரும் மௌனமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ம்ச்... அம்மா நான் இன்னும் சொல்லியே முடிக்கலை அதுக்குள்ள எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க?” என்று நிதானமாக கூறியவள் தன் தமையன் புறம் திரும்பி...

“மனோ அண்ணா இது என்ன புதுசா? எப்பவும் கிளைண்ட் பார்க்க இது மாதிரி போகிறது தானே இந்த தடவையும் அப்படி தான் பிக்ஸ் பண்ணேன்” என்றவள் தொடர்ந்து...

“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை தானே நிச்சயம் நான் கிளம்பப் போறது சண்டே நைட் தான் அதுக்கும் இதுக்கும் சம்மதம் இல்லை” என்று கூறிவிட்டு நிறுத்தியிருக்க, யமுனா பேசலானார்.

“அதெல்லாம் சரி தான் சம்மு... தொழில்ன்னா இதெல்லம் சகஜம் தான்... ஆனால் நிச்சயம் முடிஞ்சதும் நீ தனியா போகக் கூடாது”

“ஆமாம் சம்முமா உங்க பெரியம்மா சொல்றது சரி தான்... வேணா இந்த தடவை நம்ம மனோவே போகட்டும்” என்று பாஸ்கரன் கூறியதற்கு...

“என்ன பெரியப்பா நீங்க, இந்த காலத்தில் போய் இப்படி பேசிட்டு?”

“ஏய் அது தான் பெரியவங்க சொல்றாங்களேடி அவங்களையே எதிர்த்து பேசிட்டு இருக்கிறயா?” என்று மகளை கண்டித்தார் யசோதா.

“யசோதா நீ விடு நானும் மாமாவும் பேசிக்கிறோம்” என்ற யமுனா...

“உங்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும் சம்மு... உன் அண்ணனுக்கும் அடுத்த வாரம் நிச்சயம் பண்ணலாம்னு முடிவு செய்திருக்கோம்” என்றவர் நடந்ததை சுருக்கமாக கூற அதை கேட்டவள்...

“என்ன நிச்சயதார்த்தம் இப்போ, மேரேஜ் மூணு வருஷம் கழிச்சா? இது நல்லா இருக்கே, ஆமாம் அதுவரைக்கும் மனோ அண்ணா பொறுமையா இருப்பாரா” என்றவள் ரஞ்சனை நோக்கியபடி இருந்தவளின் கண்கள் சிரித்தது.

“அதெல்லாம் எனக்கு சம்மதம் தான் சம்மு... உனக்கு ஏதாவது ஆட்சேபம் இருக்கா இருந்தா தயங்காம சொல்லு”

“சேச்சே... எனக்கு என்ன ஆட்செபம் சில்லி... இது உன் வாழ்க்கை மனோ அண்ணா நீ தான் டிசைட் பண்ணனும்... இதில் நான் அபிப்ராயம் சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்றவள் தற்போது தனக்கான அனுமதியை பெற இதை பற்றுக்கோளாக கொண்டாள்.

“ஆமாம் பெரியப்பா அண்ணனுக்கும் தானே அப்போ நிச்சயதார்த்தம்... அவன் மட்டும் போகலாமா?” என்று கொக்கிப்போட, இனி எப்படியும் அவள் தாங்கள் சொல்வதை கேட்கமாட்டாள் என்ற முடிவில்...

“சரி! சரி! இப்போ என்ன உனக்கு? நீ பாரின் போகணும் அவ்வளவு தானே சரி போ... ஆனால் நீ தனியா போக வேண்டாம்” என்றதும் வேகமாக இடையிட்டவள்...

“நான் தனியா போறேன்னு சொல்லவே இல்லையே பெரியப்பா... என் கூட கவினும் வருவாரு” என்றதும் அனைவரும் அவளை கூர்மையாக பார்த்தனர்... என்ன தான் அவள் தொழிலில் புழங்கி வெளியுலகம் அறிந்தவள் என்றாலும், மற்ற விஷயங்களில் பெண்தானே என்று அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிப் போக அதை பற்றி வார்த்தைகளால் தெளிவுப்படுத்தவும் தயங்கவில்லை.

“இல்லை சம்மு இது சரி வராது... என்ன தான் நீ தொழில் பண்ணாலும், உலகம் பூரா சுத்தினாலும், நீ பொண்ணு உனக்குன்னு சில கட்டுப்பாடு இருக்கு, அதுக்காக இருக்கிற சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தான் ஆகணும்” என்று யமுனா கூறிய வார்த்தையின் குறிப்பை அறிந்துக் கொள்ள முடியாத சிறு பெண்ணா அவள்...? அவர்களின் பேச்சில் உண்மை இருப்பதை அறிந்தாலும், உணர்ந்தாலும் காதல் உத்வேகம் அவளுக்கு இதெல்லாம் தடையாக இருப்பதா என்று புறக்கணிக்க வைத்தது.

“அதை எல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா பெரியம்மா? எனக்கு என்னை கண்ட்ரோல் பண்ணிக்கத் தெரியும், கவினும் வரைமுறை இல்லாமல் எல்லை மீறி பழகுறவர் கிடையாது.... ஏன் உங்களுக்கெல்லாம் என் மேல் நம்பிக்கையில்லையா அப்போ?” என்று கடைசி அஸ்திரத்தை வீச என்ன கூறுவது என்று அறியாது திணறிப் போயினர்.

“உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லைமா... ஆனால் இன்னைக்கு நாட்டுநடப்பு அப்படி இருக்கே” என்று பாஸ்கரன் கூறியதற்கு...

“புரியுது பெரியப்பா அப்போ உங்க எல்லாருக்கும் இருக்கிற பயம் போகணும்னா இப்படி பண்ணலாம்” என்றவளை கூர்ந்து பார்த்தனர்...

“நிச்சயத்தப் போவே மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணிரலாம்” என்றதும் அவள் ஏதோ பெரியதாக திட்டத்தை மேற்கொண்டு விட்டாள் என்றறிந்து பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அவள் திட்டமிட்டபடி அனைத்தையும் கூறிய திருப்தியில் அவர்களின் பதிலுக்காக அமைதியாக அமர்ந்திருந்தாள்.

நீடித்த மௌனத்தை கலைத்தது மனோரஞ்சனின் குரல்... “சம்மு சொல்றது தான் எனக்கும் சரின்னு தோணுது... அவளுடையது மாதிரியே எனக்கும் இப்போதைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டா பின்னாடி பிரச்சனைன்னா கூட சமாளிக்கலாம் தானே” என்றதும் அனைவரும் முழுமனதாக சரி என்று சம்மதித்தனர்.

“சம்மு அப்போ கவினை வர சொல்லு அவர்கிட்டே இதை பற்றி பேசி முடிவு செய்திருவோம்” என்று பாஸ்கரன் கூற...

“சரி பெரியப்பா” என்று அவளும் அதை ஏற்றுக்கொண்டு நகர்ந்தாள்.
பாஸ்கரன் தன் நண்பன் மாதவனிடம் தெரிவிக்க, அவர் மும்மடங்கு விருப்பம் தெரிவித்ததும் அடுத்தகட்ட ஏற்பாடுகளை தொடங்கலானார்.

சம்யுக்தா கவினுக்கு அழைத்து வீட்டிற்கு அழைப்பு விடுக்க எண்ணினாள்...

“சொல்லு டார்லிங்?” என்றவனின் குழைதலில் உருகியவள்...

“கவி, பெரியப்பா வீட்டுக்கு வர சொன்னாரு” என்றதும் சிந்தனையில் தோய்ந்தவனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.

“எதுக்கு யுகிமா எதுவும் முக்கியமான விஷயமா?”

“ஆமாம் கவி, அடுத்த வாரம் நமக்கு நிச்சயதார்தத்தோட நம்ம மேரேஜையும் ரெஜிஸ்டர் பண்றதுக்கு பெரியப்பா ஒகே சொல்லிட்டாரு”

“வாவ் ரியல்லி! நான் இதை எதிர்பார்க்கவே இல்லை யுகி”

“நானும் தான் கவின்” என்று விட்டு இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்... காதலிக்கும் இருவரின் மனங்கள் ஒன்றிணைந்து ஸ்வீட் நத்திங்ஸ் எனப்படும் தித்திப்பான உரையாடலில் பெரிதாக எதுவும் இல்லாவிடினும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டிருப்பதை ஆனந்தமாக எண்ணினர்.


**********************

இரண்டு நாட்கள் கடக்க கவின் சம்யுக்தாவின் அழைப்பிற்கிணங்க வீட்டிற்கு வந்தவனை வருங்கால மாப்பிள்ளைக்கு உண்டான மரியாதை உபகாரங்கள் செய்து வரவேற்றனர். பாஸ்கரன், மனோரஞ்சனுடன், சம்யுக்தாவும் இணைந்துக் கொள்ள மூவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்... மனோரஞ்சன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தவன் அவனுக்கும் அதே நாளில் நடக்கவிருக்கும் நிச்சயமும், பதிவு திருமணம் பற்றி கூறியிருக்க...

“வாவ் கங்கிராட்ஸ் மனோரஞ்சன்” என்றவன் அவனுடன் கைகுலுக்கி தன் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டான்.

நிச்சயத்திற்கும், பதிவு திருமணத்திற்கும் வேண்டிய ஏற்பாடுகளை பற்றி பேசிவிட்டு மாலை சிற்றுண்டியை முடித்துவிட்டே கிளம்பினான் கவின்...

“ஒகே மாமா அப்போ நான் கிளம்பறேன்” என்றதும் அவனுடன் சற்று தனிமையை கொண்டாட எண்ணி சம்யுக்தாவும் உடன் சென்றாள்... தன் வாகனத்தை திறக்க முனைந்தவனை கைபிடித்து தடுத்தவளை ஏன் என்று புருவத்தை உயர்த்தி வினவியவனுக்கு...

“என் காரில் போகலாம் கவின்... உங்க காரை நாளைக்கு நானே எடுத்துட்டு வரேன்” என்றதும் அவளின் விருப்பப்படியே அவளுடைய வாகனத்தில் பயணித்தான்.
இருவரும் பொழுது போக்கிற்காக சுற்றித் திரிந்து விட்டு சின்னச் சின்ன சில்மிஷங்களுடன் நிமிடங்களை கழித்தனர்... அந்நேரம் கவினின் அலைப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் ஒன்று வரவே...

“ஒரு நிமிஷம் யுகி” என்று கண் சிமிட்டிவிட்டு அலைபேசியில் வந்திருந்த குறுஞ்செய்தியை பார்த்து யோசனையில் ஆழ்ந்தான். அவனின் தீவிர சிந்தனையை கண்டு கொண்டவள்...

“என்னாச்சு கவி ஏதாவது முக்கியமான விஷயமா?” என்றவளின் கேள்வியில் சடுதியில் நிலைமையை உணர்ந்து சுதாரித்தவன்...

“அதெல்லாம் ஒண்ணுமில்லை யுகிமா... என்னுடைய காலேஜ் ஃபிரெண்டுடைய பிரெண்ட் ஒருத்தன் திடிர்னு மீட் பண்ணனும்னு சொல்றான், உடனே நான் அங்க போகணும்” என்றதும் அதற்கு மேல் அவனை கேள்விகளால் குடையாமல்...

“அப்போ எந்த இடம்ன்னு சொல்லுங்க அங்கே நான் ட்ராப் பண்ணிடுறேன்” என்றதும் முதலில் தயங்கியவன், சிலகணங்கள் சிந்தித்தப் பிறகே “சரி” என்று கூறியிருந்தான்.
அவனின் அந்த தயக்கத்தை மட்டும் உணர்ந்து அப்போதே அவன் நண்பனை பற்றி விசாரித்திருந்தாள் பின்னாளில் நடக்கவிருக்கும் பல விபரீதங்களை தடுத்திருக்கலாமோ?!


**********************

திவான் பகதூர் சாலையில் கவினை இறக்கிவிட்டவள் தன் வீட்டை நோக்கி பயணமானாள்... செல்லும் அவள் மனதில் அவன் நண்பன் யாராக இருக்கும் என்ற எண்ணத்தின் சலனம் தோன்றினாலும் காதலின் மாயவேலி அதை திரையிட்டு மறைத்திருக்க அத்துடன் அதை மறந்தும் விட்டிருந்தாள்.

கவின் தன் எதிரில் அமர்ந்திருந்தவனுடன் பேசப் பேச உடல் இறுகிக் கொண்டே சென்றது.

“இதற்கு வேறு வழி எதுவுமில்லையா?”

“இல்லை இது ஒன்று தான் வழி” என்றதும் சில நொடிகள் நிதானமாக யோசித்தவன்...

“சரி அப்போ இப்படியே செய்திடலாம்” என்று விட்டு எழுந்திருந்தான்.


**********************

நாட்கள் கடக்க நிச்சயத்திற்கு சரியாக ஒரு நாளே இருக்கும் பட்சத்தில் தான் மனோரஞ்சனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் ரூபலா வெளிநாடு சென்றுவிட்டதாக தகவல் வந்தது... திடிரென்று கேள்விப்பட்ட தகவலில் பாஸ்கரன் நண்பனை அழைக்க முற்பட அவரே அங்கு பிரசன்னமானார்.

“வா டா மாதவா உன்னைத் தான் கூப்பிடலாம்னு நினைச்சேன்”

“என்னை முதலில் மன்னிச்சிரு பாஸ்கரா” என்று மன்னிப்பு நல்கியவரை கண்டு குற்றம் சொல்ல முடியாமல் போனது... ஆனால், அதே சமயம் இப்படி திடிரென்று சூழ்நிலை மாற காரணம் என்ன என்பதையும் கேட்டார்...

“முதலில் நடந்ததை சொல்லுடா அப்புறம் மன்னிப்பை வேண்டிக்கலாம்” என்றதும் அவர் நடந்ததை கூறினார்.

ரூபலாவின் விருப்பதிற்கு தடை விதிக்காத ஒரு வரன் என்றால் அதில் தனக்கு சம்மதமே மாப்பிள்ளையை பற்றி கூட எனக்கு கவலையில்லை என்று கூறியதை ஏற்ற அவளின் பெற்றோர்களுக்கு மனோரஞ்சனை பிடித்துப் போக, அவர்களும் மகளின் விருப்பதிற்கு இணங்கி நடப்பதாக தெரிவித்து இருந்த பாஸ்கரனின் மகனான மனோரஞ்சனுக்கு மகளுக்கு வரனாக பார்த்திருந்தார்... நிச்சயத்தன்றே பதிவு திருமணம் ஏற்பாடு செய்ததற்கு சரி என்று தான் கூறிவிட்டிருந்தாள்.

“அப்பா எனக்கு கனடா போகிற பிராசஸ் பாஸ் ஆகிருச்சு, நான் உடனடியா கனடா கிளம்பனும்” எதிர்பாராமல் மகள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கூறவே மாதவனும் சற்று கலங்கித் தான் போனார்.

“ரூபி என்னடி சொல்ற? நிச்சய ஏற்பாடு பண்ணிட்டு இருக்கிற நேரத்துல இப்படி சொல்ற?” என்று அவள் அன்னை கேட்டதும்...

“அம்மா நானும் இதை எதிர்பார்க்கலை”

“ஏன் ரூபி ஏற்பாடு பண்ணின நிச்சயதார்தத்தை மட்டும் முடிச்சுட்டு கிளம்பிறேமா?” என்று மாதவனும் எடுத்துக் கூறியிருந்தார்.

“அப்பா இல்லைப்பா அதுக்கு இன்னும் த்ரீ டேஸ் இருக்கு... ஆனா நான் நாளைக்கே சென்னை கிளம்பியாகணும், முக்கியமான ஒரு இண்டர்வியூ அட்டென்ட் பண்ணியே ஆகணும்” என்றவளிடம் இருவரும் வெகுநேரம் போராடி பார்த்தனர்.

“அம்மா, அப்பா இதுக்கு மேல என்னை கம்பெல் பண்ணாதீங்க... அப்புறம் நான் கனடாவில் இருந்து திரும்பவே மாட்டேன்” என்று குண்டை தூக்கிப் போட்டதும் திகிலடைந்து போனவர்கள்... மகளை எதிர்த்து எதிர் பேச்சு பேச துணிச்சல் இல்லாமல், அவள் செல்லுவதை தடுக்க முடியாத கையாலாகாதனத்தோடு வேடிக்கை பார்த்தனர்.

ரூபலாவிற்கு அனைத்து தகுதிகளும் இருக்கப் பெற்றும் வெகுநாளாக எதிர்பார்த்த வெளிநாட்டு வாய்ப்பு ஏனோ அறியாத சில காரணங்களால் அவளுக்கு தடைபட்டு கொண்டே இருந்தது... இப்போது கிடைத்து விடாதா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்தே காத்துக் கொண்டு இருந்தவளுக்கு, சரியாக அந்நேரம் வாய்ப்பு கிட்டியிருக்கவே இப்போது விட்டுவிட்டால் இனி எப்போதும் அந்த வாய்ப்பு தமக்கு கிடைக்காது என்று அறிந்தவள், நிச்சயதார்த்த நிகழ்வை நிராகரித்து விட்டு கனடா புறப்பட்டு விட்டிருந்தாள்.

நடந்ததை கூறி முடித்துவிட்டிருந்த மாதவனிடம்... “டேய் என்கிட்டே ஒருவார்த்தை சொல்லிருக்கலாமேடா?” என்று வினவினார் பாஸ்கர்.

“இல்லை நானும் என் பொண்டாட்டியும் அவளை எப்படியாச்சும் தடுத்து நிறுத்தத்தான் பார்த்தோம்... இந்த வாய்ப்பை விட்டு விட முடியாதுன்னு சொல்லிட்டா... அப்படி தடுத்தாலும் இனி இந்தியாவுக்கே வரமாட்டேன்னு சொல்லும் போது எங்களால் தடுக்க முடியலை, உன்கிட்டே எப்படி சொல்றதுன்னும் தெரியாம தவிச்சுகிட்டு இருந்தேன்டா”

“அவங்க அம்மாவும் இதுக்கு மேல அவளை தடுக்க வேண்டாம் விடுங்கன்னு சொல்லிட்டா” அவரின் கூற்றை கேட்டு மௌனமாக நின்றிருந்தார். ஆனால் அடுத்தடுத்த காரியம் தலைக்கு மேல் நிற்பதை அறிந்து அவரை அனுப்பிவிட்டு பிறகு முடிவெடுக்கலாம் என்ற நோக்கத்தில்...

“நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கும்னு சொல்வாங்கள்ள அது இதுதான் போல... நீ இதுக்காக ரொம்ப வருத்தப்படாம கிளம்பு, நான் வீட்ல பேசிட்டு அடுத்து என்ன பண்றதுன்னு சொல்றேன்” என்றதும் அவருக்கும் அதில் உடன்பாடிருக்கவே மௌனமாக சென்றுவிட்டிருந்தார்.

பாஸ்கரன் வீட்டில் அனைவரிடமும் இதை பற்றி கூறியிருக்க, அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தவர்களை தன்னிலைக்கு இழுத்தார்...

“பேசாம நாம பெரியவங்களை மட்டும் வச்சு பையனுக்கு மாதவன் பொண்ணுதான்னு பேசி உறுதிப்படுத்திக்குவோமா?”

“நீங்க சொல்றதை தான் நானும் யோசிச்சேன்” என்று யமுனாவும்...

“இதைக் கூட செய்யலாம் மாமா, மனோகிட்ட மட்டும் ஒருவார்த்தை கேட்டுக்குவோம்” என்று கூறிய யசோதா மகன் புறம் திரும்ப...

“எனக்கு பிரச்சனை இல்லை சித்தி” என்றவனின் மனதில் ரூபாலாவின் உருவம் மின்னலென வந்துப் போனது. அவன் கண்களில் வந்த மின்னலை அனைவரும் கண்டுக் கொண்டிருக்க சம்யுக்தாவிற்கு மட்டும் அதில் ஏதோ ஒரு வித்தியாசம் தென்பட்டது... அதை தனக்குள் மறைத்துக் கொண்டவள் அவளின் அபிப்ராயத்தை கூற ஆரம்பித்தாள்.

“எனக்கு என்னவோ இது சரியா வரும்னு தோணலை பெரியப்பா” என்று கூறியதும் மனோரஞ்சனின் முகம் நொடிக்குள் கலவரமுற்று நிலைபெற்றதை அவள் கவனமாக குறித்துக் கொண்டாள்.

“ஏன் இப்படி சொல்ற சம்மு?” என்று ரஞ்சன் தான் வினவினான்.

“இல்லை பொண்ணு படிக்கணும், பிசினஸ் ஆரம்பிக்கணும் எல்லாம் ஒகேதான்... ஆனால், அது ஏன் நிச்சயம் மட்டும் இப்போவே முடிக்கணும்? வருங்காலத்தில் என்ன வேணா, எப்படி வேணாலும் மாறலாம் இல்லையா?” என்று கூறிவிட்டு அனைவரின் உணர்ச்சிகளையும் ஆராய ஆரம்பித்தாள்... அவளின் வார்த்தை என்னவோ தமையனின் வாழ்க்கை பொருட்டு கூறியதாக இருக்கலாம். ஆனால், நாளை நடப்பது தனக்குமே பாதகம் இருக்கலாம் என்று அப்போது அவளும் அறிந்திருக்கவில்லை!

“நீ என்ன சொல்ல வர சம்மு தெளிவா சொல்லு” மனோ தான் தன்னை சமாளித்துக் கொண்டு அவசரமாக இயம்பினான்.

“இன்னும் மூணு வருஷத்துகுள்ள அவளுக்கு வேற யார் மேலயும் விருப்பம் வரலாம் இல்லையா?”

“இல்லையே சம்மு அவளுடைய குறிக்கோள், லட்சியம் எல்லாம் நல்லா படிச்சு நல்ல பொசிஷனில் இருக்கணும் என்கிறது தானாம், மற்றபடி வீட்டில் பார்க்கிற வரன் யாரை இருந்தாலும் எனக்கு சம்மதம்னு சொல்லிட்டதா தான் அவங்க அப்பா சொல்லிருக்காங்க”

“இல்லை ண்ணா இதில் ஒரு விஷயம் இருக்கு... இன்னைக்கு இருக்கிற மனநிலை அப்படியே நிலையா இருக்கணும்னு உத்திரவாதம் இல்லையே... அவங்கவங்க சூழ்நிலை பொறுத்து சிலர் மாறிருவாங்க, அப்போ நம்ம பக்கம் ஸ்ட்ராங்கா இருந்து அவங்க நமக்கு செட் ஆகலைனா மன வருத்தம் நமக்கு தான்”

“அதுக்கு என்ன பண்ணலாம் சொல்ல வர சம்மு?” என்று மகளின் வார்த்தையில் பொதிந்திருந்த ஒன்றை உணர்ந்து யமுனா வினவ...

“நிச்சயதார்த்தம் இப்போதைக்கு வேண்டாம் பெரியம்மா... அப்படி அண்ணனுக்கு அந்த பொண்ணுதான் முடிவா தோணுதுன்னா உங்களுக்குள்ள பேசி வைத்துக்கோங்க... சப்போஸ், இதில் நாம நினைச்ச மாதிரி நடக்கலைன்னாலும் பின்னாளில் வேற முடிவை எடுக்க சுலபமா இருக்கும்” என்றவளின் பேச்சில் அனைவருக்கும் உடன்பாடிருக்கவே அதையே செயல்முறைப்படுத்தினர்.

சம்யுக்தா தமையனின் முகமாறுதல்களை கவனித்து யோசித்தவளுக்கு ஏதோ ஒன்று உறுத்தியது... தனிமையில் இருந்த மனோரஞ்சனை அனுகியவள் அவனிடம் நூல்விட்டுப் பார்த்தாள்.

“மனோ அண்ணா நான் சொன்ன முடிவில் உங்களுக்கு மனவருத்தம் எதுவும் இருக்கா?”

“இல்லைடா நீ நிதர்சனத்தை தானே எடுத்து சொன்னே, நியாயமா பார்த்தா நானே அதை யோசித்திருக்கணும்” என்று தயங்கி நிறுத்தியதும்...

“எது உங்களை யோசிக்க முடியாம தடுக்குது மனோ அண்ணா?” என்றவளின் நேரடி கேள்வியிலும், கூர்மையான பார்வையிலும் ஓர்நொடி உடல் அதிர்ந்து சமநிலை அடைந்ததை தவறாது குறிப்பெடுத்துக் கொண்டாள்.

“என்னை தடுக்க யார் இருக்கப் போகிறா சம்யுக்தா?” தன் மனதின் தடுமாற்றத்தை சமயோஜிதமாக மறைத்து பதில் கூறியவனிடம், அவள் எதிர்பார்த்த ஒன்று தட்டுபடாமல் போகவே மேலும் பேச்சை வளர்க்காது அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டாள்.


**********************

“அண்ணா கோயம்புத்தூர் போயிட்டீங்களா எப்படி இருக்கீங்க?”

“ம்ம்ம்... நான் இருக்கேன்... நீ தனியா தானே இருக்கிற அரசி?”

“ஆமாம் ண்ணா... போன வேலை என்னாச்சு சொல்லுங்க... மனோவை பார்த்தீங்களா? என்ன சொன்னாரு?” அவனுக்கு பதிலளிக்க இடைவெளியே கொடாமல் மூச்சுவிடாமல் கேள்விக்கணை வீசியவளை கண்டு எரிச்சலடைந்தவன்.

“கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?” என்று உயர்ந்த குரலில் கூறியதும் தான் நிதானத்திற்கு வந்தவள், அவனின் அதட்டலுக்கு பணிந்து சற்று பொறுமை காத்தாள்.

“இங்கே நான் வந்தது அவனை பார்த்து பேச இல்லை, வேறொரு ஆளை பார்க்க... அவரை பார்த்துப் பேசி காரியத்தை நடத்தி முடிச்சுட்டேன்... இனி அடுத்து ஒரு விஷயம் தான் பாக்கி, அதையும் முடித்துவிட்டு சொல்றேன்... நீ என் ஃபிரண்ட் அர்ஜுன் கூட வந்திரு” என்று கூறிவிட்டு அவன் அனைத்தையும் கூறியிருக்க, அவளுக்கோ அதிர்ச்சியில் கால்கள் வேறோடியது போன்று திக்பிரமை பிடித்து நின்றிருந்தாள்.

“அண்ணா... வேண்டாம் ப்ளீஸ்! இதை நீங்க செய்திருக்கக்கூடாது... இன்னொரு பெண் வாழ்க்கையும் பாதிக்கப்படும், அந்த பாவம் வேண்டாம் அண்ணா உடனடியா இதை நீங்களே நிறுத்துங்க, இல்லை நான் நிறுத்திருவேன்”

“இங்கே பாரு அரசி எல்லாத்தையும் திட்டம் போட்டு செயல்படுத்தி முடிச்சதுக்கு அப்புறம் ஒன்னும் நடக்கப் போறதில்லை, நீ தேவை இல்லாமல் எதுவும் குளறுபடி செய்ய நினைக்காதே” என்றவன் பட்டென்று தொடர்பை துண்டித்திருந்தான்.
அரசியோ என்ன செய்வது, ஏது செய்வது என்ற குழப்பத்திலும் இயலாமையிலும் தவிக்க ஆரம்பித்தாள்... தரனின் வார்த்தையையும் மீற முடியாது இன்னொரு பெண்ணின் வாழ்வு பாதிக்கப்படுவதையும் தடுக்க இயலாது தடுமாறிப் போனாள் பேதை!


**********************

சம்யுக்தா, கவின் நிச்சயதார்த்தம் அதிக பிரமாண்டமும் இல்லாமல், மிக எளிமையாகவும் அல்லாமல் சுமுகமாக நடந்து முடிந்துவிட்டிருந்தது... அவர்களின் பதிவு திருமணமும் எந்த வித தடங்கலுமின்றி நடந்தேறியிருக்க, அவர்களின் வெளிநாட்டு பயணத்தை பரவச களிப்புடன் சுகிக்க ஆயத்தமானார்கள்.

ஸ்வீடன் சென்ற இருவரும் தொழில் சம்மதமான பணி நேரம் போக மற்ற நேரத்தில் அங்கிருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களை கண்டு களித்தனர். சம்யுக்தாவின் காதல் கவினுடன் தனிமையில் இருக்கும் பொழுது நேசப் பிரவாகம் பொங்கி எழ, இருவருமே ஒருவருக்கொருவர் தங்கள் நேசத்தை பரிமாறி காதலெனும் ஆழியில் முக்குளித்தனர்.

“யுகிமா!”

“சொல்லுங்க கவின்”

“இங்கேயே நம்ம வாழ்க்கையை தொடங்கிவிடலாமா?” என்று தாபத்துடன் வினவியவனை சரேலென்று ஏறெடுத்து பார்த்தவள்...

“வொய் நாட்?” என்ற சம்மதத்தின் ஊடே விழிகளில் அவனுக்கான அழைப்பும் தென்படவே அதில் விழிகள் பிரகாசிக்க, அவளை தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்றிருந்தான்.

தன் கைகளில் பூங்கொடியாக தவழ்ந்து கொண்டிருந்தவளை தன் ஈர முத்தங்களால் அர்சித்தான்... அவன் முத்த மழையில் அவள் நனைந்துக் கொண்டிருக்க, பொங்கி வழிந்த காதலின் பறக்கோடியான காமன் தேசத்தை அடைந்தனர்... தானும் கரங்களால் அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டு அவனின் செயலை தனதாக்கிக் கொள்ள, இருவரில் யார் தொடங்கினார்கள், யார் முடித்தார்கள் என்று நிலவிய போட்டியில் இருவருமே சுகமாக அங்கு தோற்றுக் கொண்டிருந்தனர்... காதலின் ஊடல்கள் அத்துமீறியதில் காமனின் மலர் அம்புகள் பாய இருவரும் ஒருவருள் ஒருவராய் கலந்துவிட்டிருந்தனர்.

அங்கிருந்த நாட்களில் இருவரும் தங்களை மறந்து காதலின் அடுத்த நிலையை அடைந்து சுகித்திருந்தனர்... அவன் மார்பில் சாய்ந்த வண்ணம் பால்கனியில் அமர்ந்து நிலவை ரசித்துக் கொண்டிருந்தவள்...

“கவின் நாம மால்டா போகலாமா? பிசினஸ் வொர்க் எல்லாம் தான் முடிஞ்சிருச்சே?”

“ம்ம்ம்... ஏன் யுகிமாக்கு அங்கேயும் நம்ம குடும்ப வாழ்க்கையின் தடத்தை பதிக்க வேண்டுமோ?” என்றவனின் கேலியில் முகம் சிவந்தவள்...

“ச்சீ... போடா ஃபிராடு” என்றவள்...

“ஏன் அப்படி தடம் பதிச்சா தான் என்னவாம்? என் புருஷன் கூடத்தானே இருக்கேன்” என்றவளின் வார்த்தையில் உள்ளம் சிறகடிக்க, அவளை இறுக அணைத்துக் கொண்டவன்...

“கள்ளி திட்டம் எல்லாம் வெகு பிரமாதம் தான்?” என்றவன் தொடர்ந்த ரகசியங்களால் சீண்டிக் கொண்டிருக்க, அவனின் கேள்விக்கு முகம் சிவந்தாலும் சளைக்காது பதில் கூறினாள்.
அந்நேரம் அவனுக்கு முக்கியமான அழைப்பு ஒன்று வரவே அதை நிராகரிக்க முடியாது...

“யுகிமா முக்கியமான கால், கொஞ்ச நேரம் இரு, பேசிட்டு வந்திடுறேன்” என்று விட்டு நகர்ந்திருந்தான். அவன் நகர்ந்த அடுத்த கணமே அவளிற்கும் ஒரு அழைப்பு வர யாரென்று பார்த்தவளுக்கு அநாமதேய எண்ணை கண்டு குழப்பத்துடன் காதில் வைத்து...

“ஹலோ...” என்றதும் தான் தாமதம் எதிரில் ஒரு பெண் குரல் சரவெடியை போல் அவள் செவிகளில் சீறிப் பாய்ந்தது...

“நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோங்க நீங்க பேச வேண்டாம்... உங்க காதலன் கவின் கூட எல்லை மீறாமல் இருந்துக்கோங்க, அவர் உங்களை பழி வாங்கப் போறதுக்காக குடும்பம் நடத்தப் போறாரு... அவர் காதல் உண்மை தான்... ஆனால் உங்களுடன் வாழுற நோக்கம் இல்ளை” படபடவென்று பேசியவளின் வார்த்தையை கேட்டு கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாமல்...

“ஹலோ முதலில் நீங்க யாருன்னு சொல்லுங்க” என்று வினவியதும், எதிரில் இருந்தவள் அச்சத்தில் வெடவெடக்க இணைப்பை துண்டிக்க...

“யாரு யுகி போன்ல?” என்று அவள் கணவன் வினவியபடி அருகில் நெருங்கவும் சரியாக இருந்தது.

சுவடுகள் தொடரும்....

************************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-2 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.

கருத்துத் திரி:

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-4
கவினின் கேள்விக்கு... “ராங் நம்பர்” என்று சற்றும் சலனமில்லாது அலட்சியத்துடன் கூறியவள், அவன் தோளில் தொங்கியபடி...

“ஐ லவ் யூ கவின்” என்று ஆத்மார்த்தமாக கூறியிருந்தாள்.

“மீ டூ யுகிமா” என்றவன் அவள் இதழை முற்றுகையிட்டு அழுத்தமாக அச்சாரம் பதித்ததில் அவள் அந்த தொலைபேசி பேச்சை சுத்தமாக மறந்தும் விட்டிருந்தாள்.

இருவரும் மால்டாவில் கோல்டன் பே பீச் சென்றிருந்த சமயம், கவினுடன் இணைந்து அந்நாட்டு இளவயது பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதை கண்ட சம்யுக்தா அவன் மேல் கொண்ட உரிமையுணர்வு கோபத்தில் அவனிடம் கோபித்துக் கொண்டு விறுவிறுவென்று அறைக்கு திரும்ப எத்தனித்தவளை கவின் அணுக முற்பட்டு...

“யுகி... யுகிமா...” என்று பின்னாடியே சென்றவனை, சிறிதும் சட்டை செய்யாமல் முறுக்கிக் கொண்டு சென்றிருந்தவளை தொடர்ந்து தானும் செல்ல அவன் வரும் முன்பு அறையின் கதவை மூட எண்ணியவளின் நோக்கத்தை புரிந்து அவளுக்கு முன்பாக அறைக்குள் புகுந்து கொண்டிருந்தான்.

அவனிடம் முறுக்கிக் கொண்டு நின்றவள் அவன் சமாதனம் செய்ய நேர்ந்த போது வசைமாரிப் பொழியலானாள். அவள் வார்த்தையால் குதித்த குதியில் செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தவன், அவள் எதிர்பாராத விதமாக இழுத்துக் கொண்டு மஞ்சத்தில் சரிந்துவிட்டிருந்தான்.

“ஃபிராடு விடு டா” என்று செல்லமாக தாக்கிக் கொண்டிருக்க, அவனோ தன் செயலில் கருத்தாக முன்னேறிக் கொண்டே செல்ல, அவனை தடுக்க போராடிக் கொண்டே அவனுடன் ஒன்றிப் போயிருந்தாள்.

**********************
சம்யுக்தா, கவின் இருவரும் தாயகம் திரும்பி இரண்டு மாதம் கடந்திருந்த நிலையில் தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்திருந்தாள் சம்யுக்தா. ஆனால் வீட்டினரிடம் அதை தெரிவிக்கும் துணிச்சல் சிறிதும் இல்லாதவள் நேரடியாக கவினை தொடர்புக் கொண்டாள்.

“கவின் சீக்கிரமா நீங்க தேவி ஹாஸ்பிடல் வாங்க” என்று கூறியவளிடம்...

“யுகிமா என்ன ஆச்சு? என்ன பிரச்சனை?” என்று பதறியவனின் குரலில் என்ன கண்டாளோ...

“ஹாஸ்பிடல் வாங்க பேசிக்கலாம்” என்று விட்டு இணைப்பை துண்டித்தவளுக்கு மனம் சிறகடித்துப் பறந்தது... அவள் அலைபேசி அழைப்பை அவனுக்கு இணைக்கும் முன்பு தான் அன்று எச்சரித்த பெண் குரல் நினைவில் ஆடி அவளை உலுக்கியிருக்க, ஏனோ அன்றில்லாத சலனம் இன்று தோன்ற அழைத்திருந்தாள்... அவளின் சலனத்தை முற்றிலும் ஒன்றுமில்லாதது போல் துடைதெறிந்தவனின் நேசப் பதற்றம் மழைச்சாரலாய் மனதை நனைத்தது.

அவள் கூறிய பதினைந்தாவது நிமிடத்தில் மருத்துவமனை வளாகத்தில் நின்றவனை கண்டு, அவள் உலுக்கிய சஞ்சலத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டவள் உள்ளம் பரிசுத்தமாக இருந்தது.

“யுகி உடம்புக்கு என்னாச்சு, ஏன் திடிர்னு ஹாஸ்பிடல் வந்திருக்க?” என்றவன் அவள் நெற்றி, கழுத்து என உள்ளங்கையை வைத்து பரிசோதிக்க அவனை விழிகளை உற்று பார்த்தபடி...

“ஐ திங்க் அம் பிரெஞ்னன்ட்” என்றதும் அவன் உடல் ஒரு நொடி ஆடி அடங்கியது, அதற்கான காரணம் அவனுக்கே சரியாக புரிபடாமல் திணறினாலும் அவளுக்காக சமாளித்துக் கொண்டவன்...

“ரியல்லி?” என்று ஆர்பரிப்புடன் வினவினான்.
“எனக்கு தெரிஞ்சு கண்டிப்பா அது தான்... ஒரு முறை டாக்டர்கிட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்” என்றவளின் வார்த்தைக்கிணங்க மருத்துவரை அணுகி சோதித்து கொண்டனர்... மருத்துவரும் அவளின் ஊகம் சரி என்று கூறி நிச்சயித்திருந்தார்.

“நாற்பத்தியைந்து நாள் ஆகுது இன்னும் பைவ் மந்த்ஸுக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கணும்... நீங்க தான் வைப்பை நல்லா பார்த்துக்கணும்” என்று அவனிடம் சில அறிவுரைகளை கூறியிருந்தவர், அவளிடம் சிலவற்றை கூறிவிட்டு மாதம் ஒருமுறை பரிசோதனைக்கு வரும்படி அறிவித்திருந்தார்.

அவர்களின் காதலுக்கு உண்டான பரிசாக எண்ணினாலும் அவர்களிருந்த சூழ்நிலை எண்ணி தான் அவள் சற்றே கலங்கி இருந்தாள்... அவளின் கலக்கத்தை கண்டவன்...

“யுகிமா இந்த நேரத்துல நீ இப்படியா இருக்கணும்? நல்லா ஹாப்பியா இருக்கணும், ஐ வில் டேக் கேர் ஆஃப் யூ” என்றவனின் தோள் சாய்ந்தவளுக்கு வீட்டினரை எண்ணி அடிமனதில் புளியை கரைத்தது.

“எனக்கு தெரியலை கவின் என்ன செய்றதுன்னு... நான் வெளியில் வேணா வளர்ந்து வரும் பிசினஸ் விமனா இருக்கலாம்... ஆனால் என் வீட்டுக்கு நான் செல்ல பொண்ணு... நான் இதை எப்படி அவங்களுக்கு சொல்வேன்” என்றவளின் வார்த்தையை கேட்டவனுக்கு மனமும், உடலும் ஒரு சேர இறுகியது. சூழ்நிலை உணர்ந்து தன்னைத் தானே தளர்த்திக் கொண்டு பேசலானான்.

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் யுகிமா”

“கவி என்ன சொல்றீங்க? நிஜமாவா!” வியப்பும், அதிர்ச்சியும் ஒருசேர வினவியவளுக்கு சாசர் போன்று விழிகள் விரிந்தது.

“நிஜம் தான்! நம்ம மேரேஜ் சட்டப்படி பதிவு பண்ணியாச்சு... எப்படி இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டி, நான் தான் உன் புருஷன் அது மாறாது, அதனால் இன்னைக்கே உன் கழுத்தில் தாலி கட்டிடுறேன் இதற்கு மேல் தள்ளிப் போட வேண்டாம் வா”
என்றவன் அவளை அழைத்துக் கொண்டு போரூர் சிவன் ஆலயத்தில் வைத்து மஞ்சள் சரடால் ஆன தாலியை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டான்.

அவள் நெற்றியில் வைத்த குங்குமம் அவளின் வதனத்தில் அழகுற மின்ன, வைத்த கண் வாங்காமல் ரசித்திருந்தவன், அவள் நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அவளின் வீட்டிற்கு சென்றிருந்தான்.

அவள் வீட்டினரின் முகத்தில் விழிக்க முடியாது சங்கடமுற்றவள்... “கவின் எங்க வீட்டுக்கு வேண்டாமே” என்றவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்...

“ஏன் யுகிமா வேற எங்க போகணும்?”

“நம்ம வீட்டுக்கு போகலாம்” என்ற வார்த்தையில் அவன் உள்ளம் குளிர்ந்து போனது. அவள் எண்ணத்தை நிறைவேற்றுவதில் அவனுக்கு தடை இல்லைதான்... ஆனாலும் இப்போதைய அவள் சூழ்நிலையை கருதி அவள் பிடிவாதமாக மறுத்தும் அவளின் வீட்டினரை அணுக செய்திருந்தான்.

இருவரும் மாலையும், கழுத்துமாக இறங்க முதலில் இதை கண்ட பாஸ்கரன் அதிர்ச்சியில் உறைந்தார்.

“சம்மு நீ... நீ... ஏன்... ஏன்... இப்படி... திடிர்னு!” என்று அதிர்ச்சியில் வார்த்தை வராது திணறினார்... என்ன தான் மகளை போல் வளர்த்தாலும் இறுதியில் தான் யாரோ தானோ என்ற உணர்வில் சிலையாக சமைந்துவிட்டார்.

யசோதா அப்போது தான் அவர்களை பார்த்தவர், அவருக்கும் அதிர்ச்சி நேர்ந்தாலும் மகள் செய்த காரியத்தை கண்டு சினம் தலைக்கேற சீற்றத்துடன் பாய்ந்தார்.

“உன்னையெல்லாம் செல்லம் கொடுத்து உன் இஷ்டப்படி வளர்த்ததுக்கு கடைசியில் என்ன காரியம் பண்ணிக்கிட்டு வந்து நிற்கிற?” என்றவர் அவள் கன்னத்தில் பளார் என்று அறைய வெளியில் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து வந்த யமுனாவும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தார்.

யசோதாவிற்கு மகளை அடித்தும் மனதின் கொதிப்பு அடங்காமல் இருக்கவே அருகில் இருந்த கவின் புறம் திரும்பியவர்...

“அவளுக்கு தான் அறிவில்லை ஏதோ அவசரப்படுறான்னா உங்களுக்குமா புத்தி இல்லை? குடும்பம், உறவு இருந்தாத் தானே அந்த அருமை புரியும்” என்றவரின் வார்த்தைகள் அவன் உடல் விரைத்துக் கொள்ள, முகம் இறுகி நின்றுவிட்டான்... அதை கவனித்தவள் அதுவரை கடைப்பிடித்த பொறுமையை கைவிடுத்து விட்டு பொங்கிவிட்டிருந்தாள் சம்யுக்தா.

“அம்மா யார்கிட்டே என்ன பேசுறேன்னு தெரிஞ்சு பேசுங்க... இப்போ அவர் என் புருசன், நான் அவர் பொண்டாட்டி” என்று இறுமாப்புடன் கூறியவளை கண்டு, மேலும் ஆத்திரம் பொங்க அவளை திரும்பவும் அடிக்க கையை ஓங்கிக் கொண்டு செல்ல கவின் அவர் கைபிடித்து தடுக்க...

“யசோதா...” என்று உயர்ந்த குரலில் அதட்டிக் கொண்டு ஒரு சேர வந்தனர் பாஸ்கரன், யமுனா இருவரும்.

“அது தான் சொல்றாளே இவ அவர் பொண்டாட்டின்னு, அப்புறம் நமக்கென்ன உரிமையிருக்கு அடிக்க? விடு இனி அவளாச்சு, அவ வாழ்க்கையாச்சு” தண்ணீர் தெளித்துவிட்டது போல் பேசிவரை தொடர்ந்து...

“சம்முஊ!” என்று உரத்த குரலில் அழைத்தப்படி வந்திருந்தான் மனோரஞ்சன்.

“அது தான் வீட்டில் பேசி முடிவு செய்துட்டாங்கள்ள அப்புறம் ஏன் இப்படி பண்ணீங்க?” என்றவனின் கேள்விக்கு...

“அவ கர்ப்பம் ஆகிட்டா அதான் இந்த அவசர முடிவு” அவனையே உறுத்து பார்த்தப்படி நறுக்குத் தெரித்தார் போன்று கூறியதும், அனைவருக்கும் மின்சாரம் தீண்டியது போன்று இரு மடங்கு திகைத்து பார்த்திருந்தனர்... அப்போதும் விடாது கவினின் பார்வை ரஞ்சனை ஊசியாய் துளைத்துக் கொண்டிருந்தது.

“நீ தொழில் விஷயமா வெளிநாடு போறேன்னு சொன்னது அவன் கூட குடும்பம் நடத்ததானா டி” என்று கொதித்தார் யசோதா.

“அம்மா ப்ளீஸ்... என்னால் நிற்க முடியலை, கொஞ்சம் உன் கேள்வி நேரத்தை மூட்டைகட்டி வை” என்றவள் உடல் பலவீனத்தில் மயங்கி சரிய, அவளை ஆபத்பாந்தவனாக தாங்கிக் கொண்டவன், அதற்கு மேல் அங்கே நில்லாமல் அவளை அவனுடனே வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டிருந்தான்.
செல்லும் அவர்களை பார்த்தபடியே நின்றிருந்த சம்யுக்தா குடும்பத்தினருக்கு அதிர்ச்சியில் உறைந்திருந்த கண்ணீர் அப்போது தான் குபுக்கென்று பொங்கி வெளியேற ஆரம்பித்தது... பாஸ்கரன் தான் அவர்கள் இருவரையும் தேற்ற முயற்சிகளை மேற்கொண்டார்... ரஞ்சனுக்கு அவன் பார்த்த பார்வையின் பொருள் யாதென்று அறியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்... ‘ஒருவேளை நம் விஷயம் எதுவும் அவனுக்கு தெரிந்திருக்குமோ’ என்ற சந்தேகக்கீற்று மின்னலென தோன்றிய வினாடியே மறைந்தும் விட்டிருந்தது.


**********************

சம்யுக்தாவை கவின் தன் இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டிருந்தான்... அவனே முன்னின்று அவளுக்கான தேவைகளை பார்த்துக் கொண்டான்... அடுத்த தினம் எப்போதும் போல் தொழிலை பார்க்க கிளம்பியவளை தடுத்தவன்...

“நீ இந்த நிலைமையில் கம்பனிக்கு போக வேண்டாம் யுகி” என்க..

“இல்லை கவி என்னால் ஒரு இடத்தில் இருக்க முடியாது... எனக்கு வேலை பார்த்தால் தான் ஆக்டிவா இருக்க முடியும்”

“சரி ஆனால் உடம்பு முடியலைன்னா எனக்கு உடனே சொல்லிரனும்” என்றவனின் அக்கரையில் நெகிழ்ந்தவள், அவனை பற்றி இழுத்து அணைத்து இதழ் பதித்தவள்...

“உங்ககிட்டே சொல்லாம இனி யார்கிட்டே நான் சொல்ல முடியும்?” புன்னகையுடன் தெரிவித்தவளின் ஆலிங்கனத்தில் கட்டுண்டவனுக்கு அடக்கப்பட்ட உணர்ச்சிகள் எழுப்பப்பட்டு தாபம் திரண்டு எழுந்தது... ஏனோ அவள் இருக்கும் நிலையில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதோ என்ற கிலியில் அவளை வேகமாக விடுவித்தவன்.

“ஒரு அவசர வேலை இருக்கு நான் கம்பெனிக்கு போகணும் யுகிமா” என்று கூறிவிட்டு தன் உணர்ச்சியின் பிடியிலிருந்து கழண்டு கொண்டவன், அவளையும் அழைத்து சென்று அவள் நிறுவனத்தில் விட்டுவிட்டு தானும் சென்றிருந்தான்.
சம்யுக்தாவின் குடும்பத்தினருக்கு மகளை பிரிந்த வருத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்தது... என்ன தான் அவள் மேல் கடுங்கோபம் எழுந்த போதிலும் பெற்ற பாசமும், வளர்த்த பாசமும் எக்கேடோ கெட்டுச் செல் என்று விட்டுவிட இயலவில்லை. பாஸ்கரனுக்கு மகள் இல்லாத குறையை நிரப்பியது சம்யுக்தா தான் என்பதால் அவருக்கும் இருமடங்கு வேதனை அதிகரிக்க இருந்தவர், அவளை பார்க்கும் சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கலானார்.

மனோரஞ்சனுக்கு தங்கையின் அவசர திருமணத்தில் ஏதோ குழறுபடி இருப்பதாக நெருட, அந்த உறுத்தலுடனே வளைய வந்து கொண்டிருந்தான்.

மூன்று மாதங்கள் கடந்த நிலையில் மேடிட்ட வயிற்றுடன் சில சிரமங்களுக்கு ஆட்பட்டாள் சம்யுக்தா... கர்ப்பிணிகளின் அவஸ்தைகள் ஒவ்வொன்றாக அவள் எதிர்கொள்ள ஆரம்பிக்க சில விஷயங்களில் வெறுப்பு மேலோங்க ஆரம்பித்தது... அவளின் உடல் மாற்றத்தையும், உணர்வுகளின் அழைப்புறுதல்களையும் கண்டு தடுமாறிப் போனாலும் பொறுமையாக அவளை கையாண்டான் கவின். அப்போதுதான் அதற்கான ஆலோசனையை வேண்டி அவனுக்கு தெரிந்தவர்களின் உதவியை நாடினான்.

சம்யுக்தாவிற்கு அன்று அழுவலக பணிகள் நெருக்கடியை கொடுக்கவே அதை சாமர்த்தியமாக சமாளித்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் உடல் ஒத்துழைப்பு கொடுக்காமல் போகவே வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க பார்த்தாள்.

வாகனத்தை அவள் கையாளக்கூடாது என்று நிர்தாட்சண்யமாக மறுப்பு தெரிவித்த கவின் அவளுக்கென பிரத்யேகமாக ஓட்டுனரை நியமிந்திருந்தான். அதுவும் அவள் கர்ப்பிணியாக இருப்பதால் அவளுக்கு பெண் துணையாக இருந்தால் தேவலாம் என்று சிந்தித்தவன் பெண் ஓட்டுனரை தேடிப் பிடித்து நியமித்திருந்தான். அவளால் ஆன வரையில் சம்யுக்தாவிற்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அவள் தன்னால் முடிந்த பங்கை ஆற்றுவாள்.

சம்யுக்தா உதவியை வேண்டும் நேரத்தில் நாடுவாளே தவிர, அதற்கு மேல் அவளிடம் நெருக்கத்தை அதிகரிக்கமாட்டாள்... அது அவள் ஆளுமையின் அதிகாரத்தை நிலைநாட்டுவது போல் இருக்கவே, அந்த பெண்ணும் தன் நிலை அறிந்து செயல்பட்டுவிடுவாள்... இப்படி ஒவ்வொன்றும் அவள் எண்ணத்திற்கு தகுந்தாற் போன்று பார்த்து பார்த்து செய்து அவள் மனதை குளிர்வித்தவன் தான் பின்வரும் நாளில் தீக்கங்குளையும் இட்டு நிரப்பப் போகிறான் என்று கூறினால் அப்போதைய சுழலில் அவள் நம்பி விட வாய்ப்பில்லை தான்.

அவள் செல்லும் வழியிலேயே உணவை முடித்திருந்தவள் அசதியில் இருந்த நிலையிலேயே இருக்கையில் தலைசாய்த்திருந்தாள்... போக்குவரத்து சமிக்ஞை ஒன்றில் வெகுநேரம் காக்க வேண்டிய நிலையில் எரிச்சலுடன் வெளியே பார்வையால் அளவாளாவிக் கொண்டிருந்தவளின் விழிகளில் அவள் கணவன் ஒரு பெண்ணிடம் தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தது கண்ணில் படவே, தன் பார்வையை கூர்மையாக்கிக் கொண்டு ஆராய்ந்த நேரம் போக்குவரத்து சமிக்ஞை முடிவடைந்து வாகனங்கள் நகர ஆரம்பித்துவிட்டிருந்தது... அவளும் அவனிடம் வேலை செய்யும் பெண் ஊழியராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அதை பற்றிய சிந்தனையை பெரிதுபடுத்தாமல் அத்துடன் விட்டுவிட்டாள்... காதல் என்னும் மாயம் அவள் கணவனின் செயல்களை முகத்திரையிட்டு மறைத்திருக்க, அவனை முழுமையாக நம்பினாள்... அவளின் நம்பகத்தன்மை பொய்த்து போகும் போது அவளின் நிலை என்னவோ?

நாட்கள் சலனமின்றி நகர்ந்து கொண்டிருந்த சமயம் மனோரஞ்சன் தங்கையை காண வேண்டி நேரடியாக அழுவலகம் சென்றிருந்தான். தமையனை கண்டதும் சம்யுக்தா புன்னகையுடன் எதிர்கொண்டாள்...

“மனோ அண்ணா எப்படி இருக்க? வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா” என்று விசாரித்தவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தவன் அவள் உடல் மெலிந்திருப்பதை கண்டு ஆட்சேபத்தில் முகம் சுருக்கினான்.

“நாங்க இருக்கிறது இருக்கட்டும்... கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பார்த்துக்கிறேன்னு கூட்டிட்டு போன உன் புருஷன் என்ன ஆனாரு? உன்னை பார்த்துகிறாரா இல்லையா...? இப்படி இளைச்சு போயிருக்கிற” என்று கணவனை குற்றம் சாட்டிக் கொண்டே கூறியவனின் வார்த்தையில் மிதமிஞ்சிய அக்கறை தொனித்திருந்தாலும், தன் கண்ணுக்குள் வைத்து தாங்கும் கணவனை குறை கூறுவதை பொறுக்காமல்...

“அண்ணா நீ என்னை உண்மையான அக்கறையோட பார்க்க வந்தியா? இல்லை; என் புருஷனை குறை சொல்ல வந்தியா?” சற்று காரமாகவே வினவியிருக்க, தங்கையின் குணத்தை நன்கு அறிந்தவன் ஆதலால் தன் கோபத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு அவளுடன் சகஜமாக பேச முயற்சித்தான்.

“இல்லை சம்முமா முன்னைவிட ரெண்டு மடங்கு இளைத்துவிட்ட அதான் ஆதங்கத்தில் இப்படி பேசிட்டேன்” என்றதும் அவளுக்கு ஏறியிருந்த வெப்பம் முற்றிலும் வடிந்திருக்க...

“ஏன் அண்ணா நான் என்ன முன்னைப் போல ஒற்றை ஆளா? எனக்குள்ள ஒரு உயிர் வளருது தாய்மை அடைஞ்ச பொண்ணுகளுக்கு நேர்கிற மாற்றம் தான் எனக்கும் ஏற்பட்டு இருக்கு”

“கவி என்னை கையில் வைத்து தாங்கறாரு... ஆனால் உங்களை எல்லாம் பார்க்க முடியாம கொஞ்சம் ஏக்கமா இருந்தது... இப்போ உன்னை பார்த்ததும் அதில் பாதி ஏக்கம் குறைஞ்சிருக்கு” என்று மனதை மறையாமல் கூறியவளின் பாசத்தில் உருகிக் கரைந்தவன் வெகுநேரம் தங்கையுடன் உறவாடினான்.

“சம்மு உன்னால எதுவும் முடியலைன்னா என்கிட்டே சொல்லிரு நான் பார்த்துக்கிறேன்”

“இல்லை ண்ணா வேலை பார்க்கிறது தான் எனக்கு மிகப்பெரிய ஸ்ட்ரஸ் ரிலீப்பா இருக்கு... எப்படியும் ஒன்பதாவது மாசத்துல இருந்து கொஞ்சம் சிரமம் தான் அப்போ வேணா பார்த்துக்கலாம்” என்று முடிக்க அவளை யோசனையுடன் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தான்.
மனோரஞ்சன் இல்லம் சென்றடைந்ததும் முதல் வேலையாக சம்யுக்தாவை சந்தித்தது பற்றி தான் கூறினான்...

“எப்படி இருக்கிறா மனோ?” என்று முதலில் வினவியவர்கள் யமுனாவும், பாஸ்கரனும் தான்... யசோதாவிற்கு மகளை எண்ணி பெரும் கவலை இருந்த போதும் எங்கே அவள் செய்து வைத்த காரியத்திற்கு தன்னை ஏளனமாக பேசி விடுவார்களோ என்று பயந்து தான் மகளை பார்க்கும் ஆர்வத்தை அடக்கி வைத்திருந்தார்... அவரின் மனவோட்டத்தை புரிந்த கொண்ட இருவரும் அவருக்கும் சேர்த்து தாங்களே பேச முடிவெடுத்து மனோவிடம் கேள்வி மேல் கேள்விக் கேட்டு துளைத்தெடுத்தனர்.

மனோவிடம் பேசியவர்கள் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்து அதன்படி செய்ய ஆயத்தமானார்கள்... சம்யுக்தாவிற்கு ஏழு மாதம் எனும் போது அவளுக்கு வளைகாப்பு வைப்பதாக கூறி அவளை அழைத்து செல்ல வந்தனர். கவின் இதற்கு உடனடியாக சம்மதமும் தெரிவிக்கவில்லை, அதே சமயம் நிராகரிக்கவும் இல்லை, மாறாக தன் மனைவியிடம் சென்றவன்...

“இங்க பாரு யுகி... இப்போ நீயும், குழந்தையும் தான் எனக்கு முக்கியம், அதனால் உனக்கு என்ன விருப்பமோ அதை செய்” என்றதும் அவனை அதற்கு மேல் வற்புறுத்தாமல் அவன் போக்கில் விட்டுவிட்டு அவள் மட்டுமாக தன் அன்னை வீடு சென்றுவிட்டிருந்தாள்... மனைவி சென்றதும் கவின் அதிகபட்ச நேரத்தை தொழிலில் அமர்த்திக் கொண்டான்.
சம்யுக்தா எத்தனையோ தூரம் அவனை அழுத்தி அழைத்தும் அங்கே வர பல காரணங்களை தடையாக கூறினான்... சரி மற்ற சராசரி மருமகன்களை போல இவனும் மாப்பிள்ளை முறுக்கை மேற்கொள்கிறான் போல சில நாட்கள் விட்டு பிடிப்போம் என்று மட்டும் எண்ணியவள் அதுவரை அவள் குடும்பத்துடன் செலவிட ஆரம்பித்தாள்.

அவளுக்கு வளைகாப்பு நாள் குறிப்பிட்டிருக்க அதற்கும் ஆயிரம் முறை வர யோசனை செய்தவனை... “ஏன் கவி எங்க வீட்டில் அன்றைக்கு பேசியதை இன்னுமா மனசில் வச்சிருக்கீங்க? வேணும்னா அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன் எனக்காக வாங்க கவி ப்ளீஸ்” என்று காதலை கசக்கி மன்றாடியதில் அவன் அடிமனம் அசைந்து விட...

“சேச்சே... அதெல்லாம் வேண்டாம்... இப்போ என்ன நான் அங்கே வரவேண்டும் அவ்வளவு தானே வந்துட்டா போச்சு” என்றவன் சரியாக வளைகாப்பு தினத்தன்று அவள் கூறியிருந்த நேரத்திற்கு முன்பாகவே அங்கே பிரசன்னமாகியிருந்தான்.

கணவன் தனக்காக அவன் மனஸ்தாபத்தை தளர்த்திக் கொண்டு வந்த உற்சாகத்தில்...

“ஐ லவ் யூ கவின்” என்றவள் அவன் முகம் முழுவதும் முத்தங்களால் அர்ச்சித்தாள்... அந்நேரம் அவனுக்கும் சித்தம் நெகிழ்ந்திருக்க, மனைவிக்காக அனைத்தையும் கடந்துப் போக எண்ணி தன்னை திடப்படுத்திக் கொண்டான்.

முக்கிய உறவினர்களை மட்டும் அழைத்து வளைகாப்பை ஏற்பாடு செய்திருந்தனர்... மகள் செய்து வைத்த திருமணத்தின் காரணம் கேட்டு அவளை ஏளனப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணமும், தங்களுக்கும் அவமானம் நேர்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும், மிகவும் நெருங்கிய வெகு சிலரையே அழைத்தவர்கள் அவர்களிடம் அவளுக்கு நேரம் சரியில்லை என்று கூறியதால் மிகவும் எளிமையாக கோவிலில் திருமணம் வைத்து முடித்துவிட்டதாக கூறி அதற்கு முற்றுபுள்ளி வைத்து முடித்துவிட்டிருந்தனர். சம்யுக்தாவிடமும் மேற்கொண்டு கேள்விகளால் துளைக்காமல் மிகவும் நாகரிகமாக விழாவில் மட்டும் கலந்துக் கொண்டுவிட்டு சென்றுவிட்டனர்.

அனைத்தும் சுமுகமாக நடந்துக் கொண்டிருப்பதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருந்தவளை சரியாக அவர்கள் இருவரும் உண்ணும் நேரம் கணவன் கவினுக்கு வந்த அழைப்பால் அத்தனையும் தவிடு பொடியானது.

கவின் மனைவியுடன் நேரம் செலவளித்துக் கொண்டிருக்க அச்சமயம் அவனுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற எண்ணிலிருந்து அழைப்பு வரவும், அவசரமாக இணைப்பை உயிர்பித்து காதில் வைத்ததும் எதிர்முனையில் கூறிய செய்தியை கேட்டு ஆடிப் போனான்... ஆனால் அருகில் இருக்கும் மனைவியை கருத்தில் கொண்டு தன் அகத்தின் கொதிப்பை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான்... கணவனின் முகமாறுதல்களை அவதானித்து கொண்டிருந்தவளுக்கு ஏதோ சரியில்லை என்பது வரை மனதிற்குள் புலப்பட அதை அவனிடமும் வினவியிருந்தாள்.

“கவின் என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க?” என்று படபடத்தவளின் குரலில் சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன்...

“பிரெண்ட் ஒருத்தனுக்கு ஆக்சிடென்ட் நான் உடனே போயாகனும்” என்றவன் தன் பட்டு வேட்டி சட்டையை மாற்றிக் கொண்டு அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்க சம்யுக்தா மனதில் காயப்பட்டாள்... இதை அவர்கள் குடும்பமே மௌனமாக வேடிக்கை பார்க்க மனோவிற்கு தங்கையின் கசங்கிய முகம் மிகவும் வேதனையளிக்கவே அவளை நெருங்கியவன்...

“சம்மு நீ வருத்தப்படாத அவர்கிட்டே நான் பேசுறேன்” என்று ரஞ்சன் கூறியது அவள் செவியில் ஏறாதது போன்று கூம்பிய முகத்துடனே அமர்ந்திருந்தாள். பட்டு உடையிலிருந்து சாதாரண உடைக்கு மாறி அவசரமாக வெளியேற முனைந்த கவினை தடுத்திருந்தான் ரஞ்சன்.

“இங்க பாருங்க கவின் என்ன அவசரமா இருந்தாலும், அதை நான் பார்த்துக்கிறேன்... இல்லை, நீங்க அப்புறம் பார்த்துக்கோங்க, முதலில் என் தங்கையை கவனிங்க” என்று அழுத்தமாக கூறியவனை, அனலாக முறைத்தவன் விழிகளில் தீஜுவாலை மின்னியது.

“உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு” என்று சினந்தவன், அவனை வெகு சுலபமாக புறக்கணித்து விட்டு சென்றிருந்தான்... சம்யுக்தாவை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து சமாதானம் செய்திருக்க, அவனின் அவசரம் என்னவோ என்ற ரீதியில் சிந்தித்து தன்னை சமாதானம் செய்து தேற்றிக் கொண்டிருந்தாள்.

சம்பவ இடத்திற்கு வந்து நடந்ததை முழுமையாக தெரிந்துக் கொண்ட கவினின் உள்ளம் தான் மனம் உச்சகட்ட வெப்ப நிலையை கடந்து உலைக்கலனாக கொதித்து கொண்டிருந்தது. அவன் கோபத்தை எதில் காட்டுவது என்பது அறியாமல் இருந்தவன் உன்மத்தம் பிடித்தவன் போல் வாகனத்தின் அதிவேகத்தை கூட்டி இலக்கில்லாமல் திக்கற்று ஓட்டிக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு கவின் சம்யுக்தாவை காணச் செல்லவே இல்லை... அவள் அழைக்கும் போதெல்லாம் தொழிலின் பணிச்சுமையை காரணமாக சுட்டி தவிர்த்து வந்தான்... அன்றும் அது போலவே கணவனை அழைத்தவள்...

“கவி உங்களை பார்க்கனும் போல இருக்கு... என்ன வேலை இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம்... இப்போ என்னை பார்க்க வாங்க கவி... இல்லைன்னா எங்கே இருக்கீங்கன்னு சொல்லுங்க நானாச்சும் வந்து பார்த்துட்டு வரேன்” காதலின் கனிவுடன் வேண்டியவளை கண்டு அவனுக்கு சீற்றம் பொங்கியது.

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? ஏற்கனவே நான் குடும்பம் இல்லாத அனாதைன்னு உன் குடும்பம் பட்டம் கொடுத்திருக்கு... இதில் நான் வேலையை பார்க்காம நஷ்டம் பண்ணிட்டேனா பிச்சைக்காரன்னு சொல்லி வெளியே துரத்திட்டு வேற ஒருத்தன் கூட நீ வாழ சௌகர்யமா இருக்கும்னு நினைக்கறியா?” என்றவனின் சவுக்கடி போன்ற வார்த்தைகளில் சுரீர் என அவள் நெஞ்சை தாக்கிய வலி கீழே பிழன்று அவள் இடுப்பு பகுதியிலும் சூட்டுக் கோளால் தாக்கி இருக்க...


“கவின்ன்ன்...” என்று வீறிடலுடன் கூப்பாடு போட்டவள், பலமிழந்து சரிந்து விழ சென்ற நேரம் பாஸ்கரன் மகளை தாங்கிக் கொண்டவர் உடனடியாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சுவடுகள் தொடரும்...


***************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-4 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
கருத்துத் திரி:
https://www.srikalatamilnovel.com/community/threads/காருராமின்-அன்புக்கு-நீ-அரிச்சுவடி-பாகம்-1-கருத்துத்-திரி.3164/
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-5
அவளுக்கான பிரசவ கால தேதிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் பட்சத்தில் திடிரென்று வலியில் அவள் துடித்ததை கண்டு அனைவரும் பதறிப் போய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்... அங்கே சம்யுக்தாவிற்கு ஏற்பட்ட வலி பிரசவ வலி தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருந்ததும் யமுனா, யசோதா இருவரும் அங்கிருந்த விநாயகரை அணுகி கண்களில் நீருடன் கடவுளை பிரார்தித்தனர்.

“கடவுளே பொண்ணுக்கும், குழந்தைக்கும் எந்த ஆபத்தும் இல்லாம நல்லபடியா பிறக்கணும்” என்று வேண்டியவர்களின் சித்தம் மகளுக்காக பதறிக் கொண்டிருந்தது.

யசோதா தான் மகளின் இந்த திடீர் நிலையை எண்ணி மிகவும் கலங்கிப் போனார்... யமுனாவிற்கும் அவருக்கு குறையாத அச்சமும், பதற்றமும் இருந்த போதும் யசோதாவிற்காக தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு யமுனா தேற்றினார்.

“யசோதா அவளுக்கு சுகப் பிரசவம் எந்த குறையும் இல்லாம நடக்கும் நீ தைரியமா இரு” என்றவரின் வார்த்தை புத்திக்கு உறைத்தாலும் மனதிற்கு உரைக்காமல் போக பரிதவித்து கொண்டிருந்தார்.

“அம்ம்ம்ம்ம்மா....” என்ற அலறல் மட்டுமே அந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் எதிரொலிக்க அவர்களின் அடிவயிறு கலங்கிக் கொண்டிருந்தது...

இடையில் மருத்துவரிடம்... “டா..க்..ட..ர்... எ..ன்.. ஹஸ்...” என்றவளின் வார்த்தை வலியில் குழற அதை தொடர முடியாமல் வலி தடுத்ததில்...

“அம்ம்மாஆ...” என்று அலறினாள்.

“என்... ஹஸ்பண்ட்.. கவினை.. பார்க்கணும்..” என்று வலியினூடே தோன்றிய வலிமையற்ற குரலில் கூறியிருக்க, செவிலியை அவளின் குடும்பத்தாரை அணுகி...

“சம்யுக்தா ஹஸ்பண்டை கேட்கிறாங்க அவரை வர சொல்லுங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட்டிருந்தாள்.

மனோரஞ்சன் அப்போதுதான் உள்ளே நுழைந்தவன்... “அம்மா சம்முக்கு என்னாச்சு? இப்போ எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று பதற்றத்துடன் வினவியவனை இரு விழிகள் குரோதத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

“அவளுக்கு பிரசவ வலி தானாம் ரஞ்சன்... நீ உடனே அவ புருஷனுக்கு போனை போட்டு வரச் சொல்லு” என்றதும் கணமும் தாமதியாமல் கவினின் எண்ணிற்கு அழைக்க...

“நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் எண் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்... சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்” கணினியின் பதிவுகுரல் மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிக்க, அதில் கடுப்படைந்தவன் பற்களை நெரித்துக் கொண்டிருந்தான்.

“கவின் போன் கால் அட்டென்ட் பண்ணு” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவன் ஆயிரம் முறை அழைத்தும் பதிலில்லாமல் போனது. என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சமயம்...

“அம்ம்ம்ம்ம்மாஆஆஆ...” என்ற வீறிடலில் மருத்துவமனை வளாகமே அதிர, சம்யுக்தா பெண் மகவை உலகிற்கு கொண்டு வந்திருந்தாள். குழந்தையின் அழுகுரல் சத்தம் இனிமையாய் செவியை நிறைக்க அனைவருக்கும் மகளும் நலமடைந்து, குழந்தையும் ஆரோக்கியமாக எந்த குறையும் இல்லாமல் வெளிவந்ததில் பெரும் நிம்மதியுடன்...

“அப்பாடா” என்று பெருமூச்சுவிட்டனர்... சம்யுக்தாவிற்கு ஏற்பட்டிருந்த மன அயற்சியும், உடல் பலவீனமும் ஒன்று சேர்ந்து அவளை உறக்கத்திற்கு ஆட்படுத்தியிருந்தது.


**********************

“என் திட்டம் அனைத்தும் வெற்றி... இனி அந்த கவினை தேடி அலைஞ்சுகிட்டு என்கிட்டே தான் வருவாங்க வர வைப்பேன்” என்ற தரனின் குரலில் அரசிக்கு பெரும் வேதனையாகிப் போனது.

“அண்ணா!” என்றவளின் உள்ளம் தணலாய் தகித்துக் கொண்டிருந்தது.

“நான் அவ்ளோ தூரம் சொல்லியும் நீ என்னை எதிர்த்திருக்கிற?”

“அதுக்குள்ள உனக்கெப்படி தெரியும்?” என்றவள் அவன் பதிலை எதிர்பாராது தொடர்ந்து...

“அண்ணா வேண்டாம் விளையாடாதே, உன்னால் இங்கே ஐந்து பேரோட வாழ்க்கை கேள்விக் குறி ஆகிரும்” என்றவளின் பேச்சில் சுர்ரென்று ஏறிய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல்...

“அரசி பைத்தியமா உனக்கு நீ என்ன உளருற?” என்று காரத்துடன் பொரிந்தான்.

“உளறல இது தான் உண்மை, நீ வேணா பாரு நான் சொன்னது நடக்குதா இல்லையான்னு?”

“அரசி...”

“கவின் பாவம் அண்ணா! சம்யுக்தாவை உண்மையா காதலிக்கிறாரு” என்றதும்...

“ஏன் உன் இந்த தரன் அண்ணா பாவம் இல்லையா அரசி? இல்லை, நீ தான் பாவம் இல்லையா? இல்லை, நம்...” என்று ஆரம்பித்தவனை இடைபுகுந்து தடுத்தவள்...

“அண்ணா போதும் என்னால் தாங்க முடியலை?” என்றவள் கண்கள் அருவியை பொழிய பட்டென்று இணைப்பை துண்டித்துவிட்டிருந்தாள்.

அரசியின் தொடர்பு அறுந்ததும் ஆக்ரோஷத்தில் கரங்கள் வெடவெடுக்க தன் மனதின் கொதிப்பை கட்டுப்படுத்த முடியாது அமர்ந்திருந்தவன்... “உனக்கு அந்த கவின் தான் பாவமா?” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன் கைமுஷ்டியை இறுக்கி வெறியுடன் மேஜையில் குத்திக் கொண்டான். உடனடியாக ஒரு முடிவை மேற்கொண்டவன் தன் நண்பன் அர்ஜுனுக்கு அழைப்பு விடுத்திருந்தான்..

அர்ஜுன் இணைப்பில் வந்ததும்... “டேய் தரன் என்னடா ஆச்சு திடிர்னு கூப்பிட்டிருக்க, ஏதாவது உதவி தேவைப்படுதா என் ஃபிரெண்டை பார்த்தியா இல்லையா?” என்று படபடப்புடன் கேள்வி மேல் கேள்விக்கணைகளை தொடுத்தவனுக்கு...

“வந்ததே அதுக்காகத் தானே வேலையை முடிக்காம இருப்பேனா? அவனை பார்த்து பேசி வேலையை முடிச்சுட்டேன்... நான் ஊருக்கு கிளம்பி வரேன் அதுக்காக தான் உன்னை கூப்பிட்டேன், நீ மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்திரு மற்றத்தை நேரில் பேசிக்கலாம்” என்றவன் தொடர்பை துண்டித்துவிட்டு பலத்த சிந்தனையில் ஆழ்ந்தான்.


**********************

மருத்துவமனையில் இருந்த சம்யுக்தா மனம் மிகுந்த அலைப்புறுதலில் தவித்து கொண்டு இருந்தது... தன் உதிரத்தில் கலந்த உயிரின் வரவை எண்ணிய இன்பம் சிறிதளவும் அவள் முகத்தில் பிரதிபலிக்கவில்லை... எதையோ தொலைத்தவள் போன்று இருந்தவளை கண்டு குடும்பத்தினர் செய்வதறியாது இருந்தனர்.

“சம்மு இந்தா இந்த பழத்தை சாப்பிடு” என்று யமுனா நீட்ட அவரை நிதானமாக நோக்கியவள்...

“பெரியம்மா நான் சீக்கிரம் வீட்டுக்கு வரணும், எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க கேட்டு சொல்லுங்களேன்” அவர் நீட்டிக் கொண்டிருந்த பழத்தட்டை வாங்காமல் முக்கியமாக வினவியவளை கண்டு அவருக்கு வருத்தமாகிப் போனது.

“சம்மு உனக்கு சுகப் பிரசவம் என்கிறதால நாளைக்கே வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லியிருக்காங்க... ஆனால் இப்படி மனசுக்குள்ள கண்டதையும் போட்டு குழப்பிகிட்டு சரியா சாப்பிடாம, தூங்காம இருந்தா இன்னும் ஒரு வாரம் கூட இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிரும்” என்று மிரட்டல் விடுத்தவர் தொடர்ந்து...

“என்ன குழப்பம் இருந்தாலும் இப்போதைக்கு அதை மூட்டை கட்டி வச்சுட்டு, நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு, குழந்தைக்கு பால் கொடுக்கணும் அதுக்கு முதல் உன் உடம்பு நல்லா இருக்கணும்”

“இல்லை பெரியம்மா எனக்கு ஒண்ணுமில்லை நான் நல்லா தெம்பாவே இருக்கேன்... சீக்கிரம் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க பெரியம்மா” என்று பிடிவாதமாக கூறியவளை கண்டு அவருக்கு ஆயசாமாகிப் போனது... இந்த பிடிவாதம் தானே அவளை அதிரடியாக சில செயல்களை செய்யத் தூண்டுகிறது என்று எண்ணியவரால் அதை தடுத்து நிறுத்த மட்டும் ஏனோ முடிவதில்லை. ஆனால் அப்போதைக்கு பல சமாதான உடன்படிக்கையை கூறி அந்த பழச்சாறை பருக வைத்திருந்தார்.
சம்யுக்தா கூற்றுப்படியே அன்றே மருத்துவரை ஆலோசித்துவிட்டு அன்று இரவே அவளை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் அவளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அவள் கணவனின் கையெழுத்து தேவைப்படவே கவினை பலமுறை அழைக்க முயன்று தோற்றிருந்தனர்... இறுதியாக பாஸ்கர் மகளுக்கு பொறுப்பேற்று ஆக வேண்டியதை பார்த்து அழைத்து வந்திருக்க, கணவனின் பாராமுக செயலில் மனதில் அடி வாங்கிய சம்யுக்தாவிற்கு பெருத்த சந்தேகம் வளர்ந்திருந்தது... ஒரு வேளை அன்று கூறிய பெண்ணின் வார்த்தைகள் உண்மை தானோ என்று எண்ணிய கணமே அவளுக்குள் எதுவோ உடைவது போன்று வலித்தது.

‘இல்லை இருக்காது.. கவின் என்னை அணுகும் போது அவன் கண்களில் தெரிந்த காதல் பொய்யில்லை.. இது வேறேதோ விபரீதம் போல் தெரிகிறது.. இதை சற்று நிதானமாக தான் ஆராய வேண்டும்’ என்று மானசீகமாக எண்ணிக் கொண்டு தன் நினைவில் ஆழ்ந்திருந்தவளை...

“சம்மு... சம்மு...” எற்றழைத்த அவள் அன்னையின் குரலில் தன்னிலை உணர்ந்து தூக்கிவாரிப் போட...

“அம்மா... ம்மா...” என்று திடுகிட்டப்படி வெடுக்கென்று நிமிர்ந்ததும் தலைச்சுற்றல் கண்டது...

“என்னாச்சுடா சம்மு, எதுக்கு பயம்? வீட்டுக்குள்ள போகலாம் வா” என்றழைக்க குழந்தையை தன் கரத்தில் ஏந்தியப்படி இறங்கியவளை வாசலில் நிறுத்தி யமுனா ஆரத்தி எடுக்க அவளோ கேள்வியுடன் அன்னையை பார்த்தாள்...

“நீயும், குழந்தையும் முதன்முதலா வீட்டுக்கு வறீங்க இல்லையா அதான்” என்று கூறியவர், குழந்தையின் பால் முகத்தை உதட்டில் உறைந்த முறுவலுடன் பார்த்திருந்தார்.

சம்யுக்தா வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் காரியமாக கணவனுக்கு தான் தொடர்புக் கொள்ள முயன்றாள்... முன்பை போல இப்போதும் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் அதை இத்துடன் விட்டு விடக்கூடாது இன்றே அதற்கொரு முடிவு செய்திட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்பு கொண்டவளுக்கு, இப்போது அவள் அழைப்பு இணைக்கப்பட முழுவதுமாக ஒலித்துவிட்டு எடுக்கப்படாமல் இருந்ததற்கான கணினி செய்தி ஒலித்தது.

கணவன் மேல் ஏற்பட்டிருந்த மெலிதான சந்தேகக்கீற்று இப்போது பலமாக வழுத்தது... அவன் எண்ணிற்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டே அலைபேசியை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
தன் அலைபேசியில் ஒளிர்ந்த எண்ணில் விழி பதித்தப்படியே அவளின் அழைப்பை எடுக்கவா, வேண்டாமா என்ற சிந்தனை கூட அல்லாமல் முகம் இறுகி அசையாது அமர்ந்திருக்க... இணைப்பை நிறுத்தாது தொடர்ந்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா... கவின் அவளின் அழைப்பை நிராகரிக்கவும் அல்லாமல் உயிற்பிக்கவும் அல்லாமல் சிலையென அமர்ந்திருந்தான்.

இருவரும் விடிய விடிய தங்கள் தொலைத்தொடர்பு யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர்... ஆனால் அவர்களால் தொடரப்பட்டாலும் மின்கலத்தால் இயங்கும் அலைபேசியால் முடியுமா? ஒரு கட்டத்திற்கு மேல் இனி மின்விசை பொறுத்தினால் தான் உயிர்ப்பேன் என்ற தகவலுடன் இருவரின் அலைபேசியுமே செயலிழந்து உயிர்ப்பில்லாமல் அணைந்து கிடக்க, அலைபேசியின் முகப்பு கருந்திரையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

நடுநிசியில் குழந்தை பசியில் “ங்கா... ங்கா..” என்று அழுகுரல் கேட்டும் அவள் சிறிதும் அசைந்தாளில்லை... பசியில் குழந்தை வீறிட்டு அழவே யமுனா, யசோதா இருவரும் பதறி சம்யுக்தா அறைக் கதவை பலமாக தட்டிக் கொண்டிருந்தனர்...

“சம்மு கதவை திற...”

“சம்மு குழந்தைக்கு என்னாச்சு”

“சம்மு கதவை திற சம்மு” இருவரும் மாற்றி மாற்றி குரல் கொடுத்து பதறியதில் பாஸ்கரனும், ரஞ்சனும் வந்துவிட்டனர்.

“என்னாச்சு யமுனா?”

“என்னன்னு தெரியலைங்க குழந்தை பசியால் அழறா போல... இந்த சம்முக்கு என்னாச்சு தெரியலை கதவை திறக்க மாட்டேங்குறா” என்று பதற்றத்துடன் அவளுக்கு என்ன ஆனதோ என்ற அச்சத்தில் கூறியவரின் குரல் நடுங்கியது.
ரஞ்சன் நிலவரத்தை உணர்ந்து கதவை ஓங்கி அடிக்க சென்ற சமயம் படாரென்ற சத்தத்துடன் கதவை திறந்திருந்தாள் சம்யுக்தா... அவளை நன்றாக ஒரு முறை ஆராய்ந்த யமுனா, யசோதா இருவரும் அவள் நன்றாக இருப்பது உறுதியானவுடன் குழந்தையை நாடினார்கள்.

குழந்தையை பார்த்ததுமே அனுபவம் வாய்ந்த கண்களுக்கு பசி தான் என்று உறுதியானதும் சம்யுக்தாவை முறைத்தவர்கள்...

“சம்மு குழந்தை பசிக்கு அழறா, அவளுக்கு பால் கொடுக்காம என்ன செய்ற?” என்று அதட்டலில் அவள் விழிகள் கைபேசியின் மேல் பதிய அவளின் அமைதி எதனால் என்று புரிந்துப் போக ஆவேசத்துடன் அணுகிய யசோதா...

“ஏய் உங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சனையில அந்த பிஞ்சை ஏன்டி கஷ்டப்படுத்துறீங்க? ஒழுங்கா இப்போ உன் குழந்தையை கவனி, அப்புறமா உங்க பிரச்சனையை பாருங்க” என்று பலமாக அதட்டியவுடன் தான் சுய நினைவுக்கு வந்தவள், அப்போது தான் மார்பகம் ஈரமாவதை உணர்ந்து தாய்மை உணர்வு தலைதூக்க துரிதமாக குழந்தையை அணுகி பக்கத்து அறைக்குள் புகுந்து மகளின் பசியை ஆற்ற ஆரம்பித்தாள்.

பாஸ்கரன், ரஞ்சன் இருவரும் அங்கிருந்து அப்போதே வெளியேறியிருக்க யமுனா, யசோதா இருவர் மட்டும் சம்யுக்தா குழந்தையை பசியாற்றிவிட்டு வரும் வரை காத்திருக்கலானார்கள்.

குழந்தை பசியாறியதும் தன் அன்னையின் மடியிலேயே சுகமாக துயில் கொண்டு விட்ட மகளின் அந்த பூப்போன்ற முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அதை உயிர்த்தவனின் நினைவுகள் அவள் சித்தத்தில் சூறாவளியாய் சுழன்றடித்து கொண்டிருந்தது... அவள் மகளின் முகம் அவள் போல் இருந்த போதிலும், கண்கள் உயிரானவனின் நகல் போல் இருக்கவே, மனம் நிலை கொள்ளாமல் தவிப்பில் ஆழ்ந்தாள்.

வெகுநேரம் வெளியேறாமல் இருந்ததும் யமுனா, யசோதா நேரடியாக மகளை சென்று காண, வெற்று சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தவளை கண்டு இருவரும் குறிப்புடன் பார்வையை பரிமாறிக் கொண்டப்படி மகளை அணுகினர்.

“சம்மு என்னம்மா ஆச்சு? ஏன் நிதமும் இப்படி மனசுக்குள்ள ஏதோ போட்டுக்கு குழப்பிகிட்டே இருக்கிற?” மகளின் குழப்பம் என்னவென்று அறிந்திருந்தாலும் அவளாக கூற வேண்டி கனிவுடன் விசாரித்தார் யசோதா.

“சம்மு உன் மனசுல என்ன இருந்தாலும் எங்கிட்டே சொல்லுடா நாங்க இருக்கிறோம் உனக்கு” என்று யமுனா ஒரு புறம் கூற, அதுவரை தனக்குள் மறுகிக் கொண்டிருந்தவள் வேதனை அணையுடைக்க குபுக்கென்று பொங்கிய கண்ணீரை கட்டுபடுத்தாது உடைந்து அழுதாள்... அவள் அன்னை மடி ஈரமாகவும் தான் மகள் அழுவதை உணர்ந்து..

“சம்மு அழாதடா உனக்கு நாங்க இருக்கோம்” என்று அவளை தேற்ற முற்பட யமுனாவோ அவரை தடுத்திருந்தார்.

“யசோ விடு முதலில் அவள் மனப்பாரம் தீர அழுதுவிடட்டும்” என்றதும் மகளை இடையூறு செய்யாமல் விட்டுவிட்டார்.
சம்யுக்தா தன் மனத்துயரத்தை கண்ணீரில் கரைத்து இறக்கியதும் தான் அன்னையும், பெரியன்னையும் முகத்தில் கலவரத்தை தேக்கி அமர்ந்திருந்ததை கண்டு சற்று சுதாரித்தவள் அவர்களின் நெருடலை போக்க எண்ணி பேசலானாள்...

“எனக்கும், கவினுக்கும் இடையில் ஒரு சின்ன சண்டை நடந்தது... அதை மனதில் வச்சுக்கிட்டு தான் அவர் இப்போ என்னை பார்க்க வராம இருக்கிறார் போல” என்றவளை அமைதியாக பார்த்திருக்க, யசோதா ஏதோ கேட்க முனைந்தவரை யமுனா இமை மூடிதிறந்து அவரை தடுத்துவிட்டார். அதை கவனியாதவள் அவர்களை சமாளிக்க எண்ணிய பேச்சை மேலும் தொடர்ந்தாள்...

“நீங்க கவலைப்பட வேண்டாம்... தொழிலையே நிர்வாகம் செய்து சமாளிக்கிற எனக்கு என் கணவரையா சமாளிக்க முடியாது... என்ன அவர் வந்து பார்க்கலையேன்னு வருத்தம் அதான் இப்படி உடைஞ்சு போயிட்டேன்” என்று அவர்கள் எப்படி கூறினாள் நம்புவார்களோ அப்படி ஒரு பாணியில் கூறியிருந்தாள்.

“எங்களுக்கும் புரியுது சம்மு, இருந்தாலும் இது கணவன் மனைவி விவகாரம் நாங்களும் சட்டுன்னு தலையிட முடியாது இல்லையா, அதான் பயந்துட்டோம்!”

“நீ கண்டதையும் போட்டு குழப்பிக்காமல் நல்லா தூங்குடா, நானும் அக்காவும் ஹால்லையே படுத்திருக்கோம் கதவை லாக் பண்ணாதே அவசரம்னா நாங்க வரணும்” என்று கூறிவிட்டு இருவரும் வெளியேறினர்.

சம்யுக்தாவை விட்டு விலகி வந்ததும் தான் யசோதா அதை கூறினார்... “யமுனா க்கா எனக்கென்னவோ சம்மு பொய் சொல்றன்னு தோணுது” என்க...

“சந்தேகமே இல்லை, பொய் தான் சொல்றா யசோதா... ஆனால் அவ அழுத்தக்காரி இப்போவே ஏதாச்சும் கேட்டா மழுப்பியே சமாளிச்சிருவா, எப்படியும் ஒரு நாள் உண்மை வெளிப்பட்டுத்தானே ஆகும் அப்போ பார்த்துக்குவோம் விடு” என்று கூறிவிட்டார்.


**********************

சம்யுக்தாவிடம் அதற்கு பிறகு கணவனை பற்றிய கேள்வியை அவர்கள் எழுப்பவில்லை... ஆனால் பாஸ்கரன் தெரிந்தவர்கள் மூலமாக கவினை பற்றி விசாரிக்க முற்பட அவனை பற்றி விசாரித்து கூறியதில் சந்தேகப்படும் படியாக எதுவும் இருக்கவில்லை... அதை அவர்களிடம் கூறி வேறு முறையில் விசாரிக்கலாம் என்று பார்த்தால், அவர்களிடமிருந்து என்ன பிரச்சனை என்ற கேள்வி எழும்பும், அதற்கு புதிதாக ஆரம்பித்த இந்த பிரச்சனையை கூறி தீர்வு காண வேண்டும்... அதை ஒன்றுக்கு பத்தாக கயிறு திரித்து உறவினர்கள் மத்தியில் புறணி பேச்சு தவழும் என்றே இயல்பாக பேசி விசாரிப்பது போல் பார்த்துக் கொண்டாரே தவிர சிறிதும் விஷயத்தை கசிய விடவில்லை.

ரஞ்சனுக்கு மூளையை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது... கவினை பற்றிய விசாரணையில் அவன் தான் ஆயிரம் முறை மண்ணை கவ்வி எழுந்தானே தவிர, எந்த பலனும் அளிக்கவில்லை.

இங்கு இருவரின் நிலை தான் இப்படி இருந்ததே தவிர, தன் கணவனின் மர்ம கோபத்திற்கு காரணம் யாதென்று அறிந்துக் கொள்ள இறங்கிய சம்யுக்தாவிற்கு ஒவ்வொரு இடத்தில் ஓவ்வொரு புதிரான விடை தான் கிடைத்தது. முதலில் அவள் குறி வைத்தது சமீபமாக அவள் சந்தித்த அவன் நண்பனை தான்... ஏனென்றால், அதற்கு பிறகு தானே அவன் நடவடிக்கையில் மாற்றமும் நிகழ ஆரம்பித்தது என்பதால் அதிலிருந்து தொடங்கினாள்.

குழந்தையை பெற்ற பச்சை உடம்புடன் அவள் வெளியில் அலைந்து திரிய குடும்பத்தினர் அனுமதிக்காத காரணத்தினால் அவளுக்கென தனிப்பட்ட நபரை நியமித்து அதன் மூலம் அவள் உளவுப் பணியை செய்யலானாள்.

கவின் சென்ற இடத்தில் இப்போது பூட்டு மட்டுமே வரவேற்பதாக கூறியதும், அடுத்ததாக அவளுக்கு வந்த அநாமதாய எண்ணை பற்றி புலன் விசாரணை செய்ததில் கோவையில் இருக்கும் யாரோ நபரை தான் சுட்டியாதே தவிர அவள் தேடிக் கொண்டிருக்கும் கேள்விக்கான விடை கிடைக்கவில்லை.

பெரிதும் குழப்பமுற்று அமர்ந்தவளுக்கு என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாத நிலை... அவள் கணவன் அலுவலகத்தில் இருப்பதாக வந்த தகவலை கேட்டு உடனடியாக அங்கே சென்றாள்... ஆனால் அவன் அப்போது தான் அங்கிருந்து கிளம்பியதாக கிடைத்த தகவலில் இயலாமையில் தோன்றிய கோபத்தில்... “ஷிட்..” என்று மேஜையில் தன் முஷ்டியை மடக்கிக் குத்த, அந்நேரம் கொத்தாக சில தால்கள் அடங்கிய கோப்புகள் கீழே சிதறி விழுந்தன... அதில் இருந்த பத்திர சாசனமும், கையெழுத்தும் ஏதோ சதி நடந்திருப்பதை உணர்ந்தவளுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது போல் இருந்தது.

அதை பற்றிய சந்தேககீற்று வலுத்து உறுதியான போதிலும், ஏனோ அவன் மேல் கொண்ட காதலால் அதை மிகப் பெரியதாக எண்ணாமல் அவனை நேரில் சந்தித்து பேச சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

இப்படியே இரண்டு மாதம் கடந்து செல்ல மூன்றாம் மாதம் துப்புறியும் நிறுவனத்தை அணுகினாள்... ஆனால் அவர்கள் திரட்டிய தகவலும் அவளுக்கு தெரிந்த சிலவற்றையே பொருந்தியிருந்தது... அனைவரும் குழப்பியடித்து, பித்துப்பிடித்து அலையாத குறையில் இருந்தனர். சம்யுக்தா அவ்வப்போது கணவனின் அலுவலகத்தில் இருந்து கொணர்ந்த பத்திரத்தின் மேல் ஆராய்ச்சி பதிந்து கொண்டே இருந்தது... காதலித்து குடும்பம் நடத்தியவளுக்கு தெரியாதா கணவனை பற்றி என்ற இறுமாப்பிற்கு பதிலடி கொடுப்பது போல் இருந்தது அந்த பத்திரத்தில் அடங்கியிருந்த சாசனம்.

இரண்டு நாட்கள் அப்படியே கழிந்திருக்க மூன்றாம் தினம் அவர்கள் எதிர்பாராத வகையில் குழப்பத்திற்கு உரியவனே அங்கே பிரசன்னமானான்.

“வாங்க!” யமுனா மருமகனை கண்டதும் கடமைக்காக அழைத்தவரின் பார்வை அவனை கூர்மையாக ஆராய்ந்தது... அவரின் பார்வையை சுலபமாக புறக்கணித்தவன் மிடுக்காக அவரை பார்த்து வைத்தான்... யமுனாவை தொடர்ந்து யசோதாவும் அதே போல் உபசரித்தவர் அதற்கு மேல் என்ன பேசுவது என்று அறியாமல் மௌனமானார்.

பாஸ்கரன், ரஞ்சன் இருவரும் வெளியே சென்று விட்டு அப்போதே உள்ளே நுழைய, அங்கே கவினை கண்டதும் சம்யுத்தாவின் நிலை தான் பெரிதும் தாக்க ஆத்திரத்துடன் அணுக எண்ணியவனை பாஸ்கரன் கைபிடித்து தடுத்தவர் அவன் செவியை ஒட்டி...

“அவசரப்படாதே ரஞ்சன் இன்னும் உன் தங்கை வரலை” என்று எச்சரித்தார்.

அனைவரும் என்ன பேசுவது? என்ன கேட்பது? என்பதை அறியாது தடுமாறிக் கொண்டிருக்க, சம்யுக்தா குழந்தையை தன் அன்னையிடம் ஒப்படைக்கவென்று எதர்ச்சியாக வெளியே வந்தவள், இத்தனை நாள் வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்திருந்த ஆருயிர் கணவனை கண்டதும் அத்தனை நாட்கள் அவன் மேல் கொண்டிருந்த கோப தாபங்கள் அனைத்தும் தவிடு பொடியாகியிருக்க...

“கவின்!” என்று குழந்தையை தன் கரங்களில் ஏந்தியபடி ஆர்பரிப்புடன் அணுகியவள், அவன் முகத்தை நீண்ட நாள் காணாத இருந்த ஏக்கத்தின் பிரதிபலிப்பாக அபிலாஷையுடன் நோக்கிக் கொண்டிருந்தாள்... மனைவியின் பார்வைக்கு சிறிதும் சலனமில்லாது உணர்ச்சியற்று எதிர்கொண்டான்.

“ஏன் இத்தனை நாள் வரலை கவின்? நம்ம குழந்தையை பார்க்கணும்னு, உங்களுக்கு தோணலையா கவின்? பாப்பாவை பாருங்களேன் எப்படி இருக்கிறான்னு, அவ கண்ணை பாருங்களேன் அப்படியே உங்களைப் போலவே இருக்கு” என்று புன்னகை உறைந்த முகத்துடன் சிலிர்ப்புடன் கூறியவளை சட்டை செய்யாமல்... ரஞ்சன் மேல் வன்மத்துடன் பார்வையை நிலைக்க விட்டப்படி...

“இதை எல்லாம் நீ குழந்தையோட அப்பாகிட்ட தானே சொல்லணும்” என்றவனின் வார்த்தைகள் கூடைத் தணலை அள்ளிக் கொட்டியது போல் தகிக்க நிலைகுலைந்து போனாள்... அவளின் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியுடன், கட்டுகடங்காத பொங்கிய சினத்துடன் பாய்ந்த ரஞ்சன்...

“டேய் யாரை பார்த்து என்ன கேள்வி டா கேட்கிற? உன்னை கொல்லாம விடமாட்டேன் டா” என்றபடி ஆக்ரோசத்துடன் பாய்ந்தவன், அவன் சட்டையை கொத்தாக பற்றி கழுத்தில் விரல்களை பதித்து இருந்தவனை...

“அண்ணா!” என்று அதட்டி நொடிக்குள் பாய்ந்து தடுத்திருந்தவள் பார்வை அவனை ‘கிராதகா’ என்றிருந்தது.

“விடு நீ முதலில்... அவன் கேட்ட வார்த்தைக்கு நீயே இந்நேரம் அவனை கொலை செய்திருக்கணும்... கேட்கிற என்னையும் நீ தடுத்து நிறுத்துகிற” என்று கொதிகலனில் நிற்பவன் போல கொதித்தவனிடம்...

“இது புருஷன், பொண்டாட்டி பிரச்சனை நீங்க தள்ளியே நில்லுங்க” எடுத்தெறிந்தார் போன்று கூறியதும், அதுவரை பொறுமையாக இருந்த குடும்பத்தினர் அனைவரும் அவளிடம் பாய்ந்தனர்.

“சம்மு உன் புருஷனை கொல்லாம உயிரோட விடுறதே தப்பு, நீ என்னடான்னா இப்படி கேட்கிற எங்களையும் கண்டிக்கிற?” என்று பாஸ்கரன் அவர் பங்குக்கு கடிந்துக் கொண்டதும், அவன் முகம் பாறையாக கடினமுற்ற சமயம்...

“அதுக்கு முதலில் நீங்க உங்க மகனை தான் கொல்லனும்” என்ற பெண் குரலில் அனைவரும் குரல் வந்த திசை நோக்கி திரும்ப, அங்கே இரண்டு பெண்கள் கண்களில் கனலைத் தேக்கி நின்றிருந்தனர்... ஒரு பெண்ணின் கையில் தோளில் தலையுறை அணிந்து மூடியபடி குழந்தை வைத்திருந்தவளை அடையாளம் கண்டுக் கொண்ட ரஞ்சனுக்கு ‘க..லை..வா..ணி..’ என்று சத்தமின்றி உதடுகள் உச்சரிக்க சர்வாங்கமும் ஆடியது.

“என்ன உளருறீங்க யார் நீங்க?” என்று கேட்ட பாஸ்கரின் குரலில், ரஞ்சனுக்கு உடல் வெட்டி இழுத்தது போல் வெடவெடக்க ஆரம்பித்தது... அதை கண்டு கொண்ட கவினுக்கு உள்ளத்தின் கனல் சுடர் விட்டு எரிய, இது தான் நாம் பேசுவதற்கான தருணம் என்ற ரீதியில்...

“என்ன டா மச்சான் திகைச்சு போய் நின்னுட்ட?” என்றதும் சிலைக்கு உயிர் வந்தது போல் சரேலென்று திரும்பிப் பார்த்தவன்...

“நீ... நீ... கலாதரனுக்கு நண்பனா?” என்று திக்கித் திணறி வினவியவனை கண்டு விழிகள் குரோதத்தில் பளபளக்க பார்த்திருக்க, ரஞ்சனின் பதட்டத்திலும், கணவன் விழிகளில் மின்னிய விரோதத்திலும் அத்தனை நாட்கள் அவள் சிந்தையை உறுத்திக் கொண்டிருந்த ஆவணத்தில் கண்டறிந்த இடர்பாடு உண்மை என்று பட்டவர்த்தனமாக வெளிச்சமாகி இருந்தது.

“ம்ஹும்...” என்று இல்லை என்பது போல் இடமும் வலமும் தலையசைத்தவனை கண்டு மனதின் ஓரத்தில் எழும்பிய சிறு நிம்மதியின் பொறியில் ‘கடவுளே இவன் அவன் நண்பனாக இருக்கக்கூடாது’ என்று மானசீகமாக வேண்டுதலை எல்லாம் வைத்துக் கொண்டிருக்க... அவனுக்கு பதிலளிக்க விளைந்த கவினை முந்திக் கொண்டு...

“அந்த கலாதரனே இவர் தான் ரஞ்சன் அண்ணா!” என்ற வெட்டும் பார்வையால் கணவனை துளையிட்டப்படி கூறிய சம்யுக்தாவின் பதிலில், மனைவியை உணர்ச்சித்துடைத்த முகத்துடன் பார்த்திருக்க, ரஞ்சன் கால்கள் வேறோடியது போல் பேஸ்தடித்து நின்றுவிட்டிருந்தான்.

“க..வி..ன்..க..லா..த..ர..ன்..! அந்த கவினும் நானே.. கலாதரனும் நானே..” மனைவியின் விழிகளை ஊடுருவியபடியே ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக அழுத்தத்துடன் உச்சரிக்க, அனைவருமே மின்சாரத்தில் தாக்குண்டது போல் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தனர்!

சுவடுகள் தொடரும்...

******************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-5 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
கருத்துத் திரி:
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்

காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-6
ரஞ்சனுக்கு தன் குட்டு வெளியேறிவிட்டதை எண்ணி அச்சத்தில் முகம் ரத்தப் பசையின்றி வெளுத்துப் போக, கிலியில் உடல் வியர்த்துப் போனது... அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, அங்கே சூழ்ந்திருந்த மௌனத்தை உடைத்தது கவின் என்கிற கவின்கலாதரன் குரல்.

“உன் தங்கச்சியை கேட்ட கேள்விக்கு உன் ரத்தம் இப்படி கொதிக்குதே...?” என்று கூறிவிட்டு இடைவெளி விட்டவன், அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டிருந்தவன் சற்று இடைவெளிவிட்டு...

“படிக்க வந்தவ கிட்ட ஆசை வார்த்தை பேசி, காதல்ன்னு பெயரை சொல்லிக்கிட்டு உன்னோட உடல் இச்சைக்காக அவளுடைய அந்தரங்கத்தை கூராய்ஞ்சு பார்த்து அவ வயிற்றில் மகவை கொடுத்துட்டு, இதே கேள்வியை அவளை பார்த்து கேட்டுட்டு போனப்போ... ரொம்ப... சுகமா... இருந்துச்சோ...?” கொதிப்புடன் ஆரம்பித்தவனின் பிசிரற்ற குரல், இறுதியில் ஏளனம் தெறித்தது.

அவனின் வார்த்தையில் யமுனா, யசோதா இருவரும் கொதிப்புடன் எழுந்து நின்றனர்... “ஏய் எங்க வந்து, யாரை பார்த்து, என்ன கேள்விக் கேட்கிற?” என்று முதலில் யமுனா சீற...

“ஏங்க நம்ம பையனை பற்றி கண்டதும் பேசிகிட்டு இருக்கிறான் நீங்க கேட்டுகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க?” என்று கணவர் புறம் திரும்பி எரிந்து விழுந்தார், மனைவியின் பேச்சில் சுதாரித்த பாஸ்கரன்...

“இங்க பாருங்க நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க, எங்க ரஞ்சன் அப்படிப்பட்ட பையன் கிடையாது” என்று பாஸ்கரன் கூற...

“முதல்ல அந்த குழந்தைக்கு நம்ம பையன் தான் அப்பான்னு சொல்ல என்ன ஆதாரம்னு கேளுங்க மாமா?” என்று யசோதா தன் பங்குக்கு விஷக்கங்குகளை கக்க...

தன் பொறுமையை முற்றிலும் இழந்த தரன்... “உங்க பொண்ணு சொன்ன அதே ஆதாரம் தான்” என்றவன் விழிகளில் செவ்வரி ஓடிக் கொண்டிருக்க, சடுதியில் தன் தங்கையின் கையில் இருந்த குழந்தையை பெற்றவன் துணியால் மூடப்பட்டிருந்த தலைக் கவசத்தை அகற்றி முகத்தை அவர்களிடம் காட்ட, அந்த மதலையின் முகம் அட்சரம் பிசகாமல் ரஞ்சனை உரித்து வைத்திருந்ததை கண்டு அனைவரும் பேச்சற்று வாயடைத்து நின்றனர்.

பெண் குழந்தையின் சாயல் அப்படியே சிறு வயது ரஞ்சனை நகல் எடுத்தது போல் பொருத்தமாக இருக்கவே... கோந்தால் இணைத்தது போல் உதடுகள் இறுக ஒட்டிக் கொண்டு வாயடைத்து நின்றிருந்தவர்களை கலைத்தது சம்யுக்தாவின் குரல்...

“சோ, உங்க தங்கச்சி வாழ்க்கைக்கான பழிபடலம் தான் என்னுடனான உங்களுக்கு காதலுக்கு காரணமா மிஸ்டர். க..வி..ன்..க..லா..த..ர..ன்..?” என்று நிறுத்தி நிதானமாக அவன் பெயரை உச்சரித்தவளின் குரலில் அவனை போலவே அதிர்ச்சியோ, கோபமோ அல்லாமல் உணர்ச்சி துடைக்கப்பட்டிருந்தது.

தன் மனைவியின் கேள்விக்கு ஆட்பட்டவன் முகத்திலும் எந்தவித உணர்ச்சி பிரதிபலிப்புக்கான எதிரொலியும் இல்லாமல் இருக்க, அவளை கூர்மையாக பார்த்தவன்...

“அதை நான் சொல்லித் தான் நீ தெரிஞ்சுக்க வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்” நிஷ்டூரமாக கூறியவனின் வார்த்தையை கேட்ட மற்ற அனைவரும் அமைதியை கைவிடுத்து அவனை அக்கினி பிழம்பாய் எரித்துக் கொண்டிருந்தனர்... சம்யுக்தா சிறிதும் பாதிப்பில்லாதவளாக அவனுக்கு சளைக்காது அவனை கூர்மையான பார்வையால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

“உருவத்தில் ஒரே மாதிரி இருந்துட்டா போதுமா? அந்த குழந்தைக்கு அப்பா இவன்தான்னு கைகாட்டிற முடியுமா?” என்று யசோதா கவினை பார்த்து ஆங்காரத்துடன் வினவ, அன்னையின் கேள்வியை ஆட்சேபித்து முகத்தை சுளித்த சம்யுக்தா...

“முடியாது தான் ஆனா டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சிருமே?” என்று கூறியவள் சம்யுக்தாவாக இருக்க கலைவாணி, கலையரசி இருவரும் அவளை நெகிழ்ச்சியுடன் நோக்கினர்.

“என்னடி புருஷனோட தங்கச்சிங்களுக்கு வக்காலத்து வாங்குறியா?” என்று சீற்றத்துடன் மகளிடம் பாய்ந்தவரை கண்டு நிதானமாக எதிர்கொண்டவள்...

“என் புருஷன்!?” என்றவள் பார்வை இகழ்ச்சியாக அவன் மேல் படரவிட்டவள்...

“என் குழந்தைக்கு அப்பா யாரோ, அவன் தானே என் புருஷன்? இங்கே நிற்கிறவர் அவர் தங்கச்சிக்கு நியாயம் கேட்டு வந்திருக்கிற மிஸ்டர்.கவின்கலாதரன்... நான் உங்ககிட்ட கேட்ட கேள்வி இந்த வீட்டு ஆண் இனத்தால் பாதிக்கப்பட்டு இங்கே நிற்கிற இந்த அபலை பெண்ணுக்கு தான்” என்றவள் பார்வை கணவன் மேல் வெறுப்புடன் படிய, அவளை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த கவின் அவளின் பேச்சில் சிறிதும் பாதிப்படையாதது போல் சலனமற்று நின்றிருந்தான்.

ரஞ்சனை குற்றம் சாட்டும் பார்வையில் பார்த்திருந்த சம்யுக்தாவை கண்டு தங்கையும் தனக்கெதிராக திரும்புவதா என்ற ஆவேசத்தில்...

“சம்மு நீ கூடவா இதை நம்பற? நீயே உன் அண்ணனை விட்டுக் கொடுக்கலாமா?”

“ச்சீ...” என்றவளின் உதாசீனம் அவன் காரி உமிழ்ந்தது போல் இருக்க அவமானத்தில் அவன் முகம் சிறுத்துப் போனது. இவர்களின் ஊடல்கள் தொடர்ந்து கொண்டிருந்த கடுப்பில் எரிச்சலடைந்த யமுனா...

“இங்கே பாரு சம்மு உன் அண்ணன்கிட்டே முகத்தை சுளிக்காம முதலில் அங்கே நிற்கிறவனை வெளியே அனுப்பு... உனக்கு பிடிச்ச பீடை இன்னையோட ஒழியட்டும்” என்று கூறியவரை தொடர்ந்த யசோதா...

“அவன்கிட்டே இருந்து சீக்கிரமே விவாகரத்து வாங்கிட்டு, உனக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே நம்ம ஸ்டேட்டசில் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்” என்று கூறியவரை எதிர்த்து சம்யுக்தா பேசும் முன், வேகமாக இடையிட்ட கவின்...

“அந்த சிரமம் உங்களுக்கெதுக்கு? நீங்க எப்படியும் இது போல் ஒரு முடிவை தான் எடுப்பீங்கன்னு தெரியும், அதான் நான் அதற்கான ஏற்பாட்டை முடித்துவிட்டே வந்திருக்கேன்” என்றவன் தன் சட்டை பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த அந்த தாளை எடுத்துக் கொண்டு, மனைவியை நெருங்கி சிறு இடைவெளி விட்டு நின்றுக் கொண்டவன் அவளிடம் அதை நீட்டி...

“விவகரத்து நோட்டிஸ்... போ... போய் உங்க வீட்டில் பார்க்கிற அந்த தகுதியான மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி அவனுக்கும்....” என்று ஆரம்பித்தவனின் வார்த்தைகள் தடைபட்டது, அவளின் விரல்கள் அவன் குரல்வளையை நெரித்துக் கொண்டிருந்த அழுத்தத்தில்... தரன் அப்போதும் அவளின் செயலை எதிர்க்காமல் அசையாமல் நின்றுக் கொண்டிருக்க, அவளின் செயலில் திகைத்த வாணி, அரசி இருவரும் பதற்றத்தில்...

“அய்யோ அண்ணி! அண்ணனை விடுங்க” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே கவின் சூழ்நிலை உணர்ந்து தன் பலத்தால் அவள் கரத்தை தட்டி விட, ஆக்ரோஷத்தில் சிவந்த விழிகளுடன் நோக்கியவள்...

“யாருக்கு யார் அண்ணி... முதலில் இங்கிருந்து எல்லாரும் வெளியே போயிருங்க... இல்லை; நடக்கிறதே வேற?” என்று சுட்டு விரலை நீட்டி எச்சரிக்க... அதில் மேலும் கடுப்படைந்தவன் தங்கைகளை தன் புறம் இழுத்துக் கொண்டு...

“நீயே சொன்னாலும் இனி ஒரு நிமிஷம் கூட நாங்க இங்கே இருக்கமாட்டோம் டி” என்றவன் வெடுக்கென்று திரும்பி நடக்க ஆரம்பித்தவனை அரசி, வாணி இருவரும் தடுத்தனர்.

“அண்ணா தயவு செய்து நாங்க சொல்றதை கேளுங்க... உங்க மேலேயும் தப்பு இருக்கு” என்று அரசியும்...

“என்னால் உங்க வாழ்க்கை பாழாக விடமாட்டேன் அண்ணா நாங்க அண்ணிகிட்ட பேசுறோம்” என்று வாணியும் கூற, அதற்கு மேல் தன் பொறுமையை இழுத்துபிடிக்க முடியாத கலாதரன்...

“ஏய்... ஜாக்கிரதை...!” என்று சுட்டு விரலை நீட்டி மிளகாயின் காரத்துடன் கடுமையாக எச்சரித்தவனின் முகம் சினத்தில் சிவந்திருக்க... அதில் இருவரும் உடல் வெடவெடக்க பீதியுடன் பார்த்தபடி அங்கிருந்து வெளியேறினர். சம்யுக்தாவின் காதலன் கவினாக கால் வைத்தவன் தங்கைகளின் அண்ணன் கலாதரனாக அங்கிருந்து வெளியேறினான்.


**********************

கோவையில் விருந்தினர் இல்லத்தில் இருந்த வரவேற்பறையில் அறையை அளப்பது போன்று அங்கும் இங்கும் நடைப்போட்டு கொண்டிருந்த அர்ஜுனின் விழிகள் நொடிக்கொரு முறை வாசலை தொட்டு மீண்டு கொண்டிருந்தது... அவனின் விழிகளில் எப்போது வருவார்கள் என்ற எண்ணத்தின் எதிர்ப்பார்ப்பு இருக்க, அவனை வெகுநேரம் காக்க வைக்காமல் மிகவும் விரைவாகவே அவனின் எதிர்பார்ப்புக்கு உரியவர்களான கலையரசி, கலைவாணி, கலாதரன் மூவரும் பிரசன்னம் ஆகியிருக்க படபடப்புடன் அவர்களை நெருங்கியவன்...

“டேய் தரன் என்னடா ஆச்சு? அங்க பிரச்சனை பெரிசாகிருச்சா? நான் கமிசனர் அங்கிள்க்கு போன் போடவா?” என்று இடைவெளியில்லாமல் வினவியவனை அழுத்தமாக பார்த்தவனின் விழிகளில் எதுவும் புரிபடாமல் போகவே, அருகில் இருந்த கலையரசி, கலைவாணியின் முகத்தை ஏறிட்டிருந்தான் அர்ஜுன்.

அவனின் கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தவளின் பார்வை கலாதரனை ‘பார்த்தாயா பதில் சொல்’ என்று முறைப்புடன் பொருள் பொதிந்த பார்வையை செலுத்திக் கொண்டிருந்ததை அறிந்தவன்...

“அரசி நீயாச்சு சொல்லுமா என்னாச்சுன்னு” என்று அவளிடம் நேரடியாகவே வினவியதும்...

“டேய் கொஞ்சம் பொறுடா, எல்லாத்தையும் இங்கே வச்சே சொல்லணுமா, முதலில் வீட்டுக்குள்ள போகலாம் வா” என்று அவர்களை சிறிதும் லட்சியம் செய்யாமல் உள்ளே சென்றவனை ஆவேசத்துடன் அரசி தொடர, வாணியை பார்வையால் என்னவென்று விசாரித்தவனின் பொறுமையை சோதிக்காமல் பேசலானாள்.

“நாம நினைத்தது ஒண்ணு ஆனால், நடந்தது ஒண்ணு அண்ணா”

“என்னம்மா சொல்ற வாணி புரியும் படி சொல்லு” என்றதும் அங்கே நடந்தவற்றை விலாவாரியாக கூறியவள் இறுதியில்...

“நான் என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு வழிவகை செய்து தருவாருன்னு மட்டும் யோசிச்சேனே தவிர, அவர் இப்படியோரு விஷயம் செய்திருப்பாருன்னு நினைக்கலைண்ணா” என்று கையில் குழந்தையுடன் கேவ ஆரம்பித்தவளை கண்டு ஆத்திரமும், ஆதங்கமும் ஒரு சேர எழுந்தது...

“இது உங்களுக்கு முன்னாடியே தெரியாதா?” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் வினவ...

“இல்லை ண்ணா தெரிஞ்சது”

“அப்புறம் ஏன் நீங்க ரெண்டு பேரும் தடுத்து நிறுத்த முயற்சிக்கலை?” என்று சீற்றத்துடன் வினவியவனை பச்சாதாபத்துடன் நோக்கியவள்...

“நாங்க எப்படி தடுத்து நிறுத்த முயற்சி எடுக்காம இருப்போம் ண்ணா... அண்ணன் கடைசியா தேனி வந்துட்டு கோயம்புத்தூர் வந்தாரே, அதுக்கப்புறம் தான் அரசிகிட்டே இதை பத்தி சொல்லியிருக்காரு... அதுக்கப்புறம் தான் அரசிக்கா என்கிட்டே சொல்லி அழுதாங்க...”

“அழுதா நடந்ததெல்லாம் இல்லைன்னு ஆகிருமா” சினத்தில் சிடுசிடுத்தவனின் வார்த்தையில் இருந்த தார்மீக கோபத்தின் நியாயம் புரிபடவே...

“அரசிக்கா அப்போவே இந்த செயலை கண்டிச்சு அண்ணன்கிட்டே எதிர்த்து இருக்காங்க... அதுக்கு அண்ணன் என்னை மீறி நீ எதுவும் செய்யக் கூடாதுன்னு அதட்டி மிரட்டினாராம்... ஆனால் நான் விடவில்லை ண்ணா, அவங்க ரெண்டு பேரும் வெளிநாடு போயிருந்தப்போ தான் பேச சந்தர்ப்பம் கிடைச்சு, நான் சம்யுக்தா அண்ணிகிட்டே போன்ல கூப்பிட்டு எச்சரிச்சேன்... அவங்க யாருன்னு கேட்கப் போகிற சமயத்தில் பட்டுன்னு போனும் கட் பண்ணிட்டேன்” என்றவளின் கூற்றில் அவனுக்கும் அதிர்ச்சியும், குழப்பமும் ஒரு சேர தாக்கியது.

‘சம்யுக்தா இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லையா?’ என்று தனக்குத் தானே மானசீகமாக கூறிக் கொண்டவனுக்கு அதில் பொதிந்திருந்த காரணம் என்னவென்று மூலையில் மின்னலென தாக்கியதில் ஆத்திரம் வரப் பெற, தன் நண்பனை நோக்கி ஆவேசத்துடன் நெருங்கியவன் அவன் சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டு...

“அறிவு கெட்ட முட்டாள்! உன் தங்கை வாழ்க்கைக்கு வழிவகை செய்ய மார்க்கம் தேடிப் போகிறன்னு நினைச்சு உதவி செஞ்சா... கடைசியில் உன் வாழ்க்கைக்கு நீயே சூனியம் வச்சுகிட்டு வந்திருக்கியே” என்று கடிந்த பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பியவனை சிறிதும் அலட்டிக் கொள்ளாது சட்டமாக நின்ற கலாதரனை கண்டு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

“இதில் நீ இவ்வளவு ஆவேசப்பட ஒண்ணுமில்லை” என்று சாவதானமாக கூறியவனின் வார்த்தையில் பொறுமையிழந்தவன், கைமுஷ்டி மடக்கி முகத்தை நோக்கி உயர்த்தியவனின் வேகத்தை கண்டு சுதாரித்த கலாதரன், தானும் அவனை தடுக்க பலத்தை பிரயோகிக்க இவர்களின் போர் முனை தாக்குதலை கண்டு அரசி, வாணி இருவரும் மிரண்டு நின்றுவிட்டனர்... அர்ஜுன் தான் அவர்களை கண்டு சுதாரித்தவனாக முதலில் விலகினான். கலாதரன் அப்போதும் சினம் அடங்காத வேங்கையாக முகம் சிவக்க நின்றிருக்க, அரசி இடைபுகுந்தவள்...

“அண்ணா முதலில் நிதானத்துக்கு வா” என்று குரலை உயர்த்தி அதட்டல் போட்டதில் தான் சற்றே தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் ஆவேசம் அடங்காத அறிகுறியாக வேகமூச்சுகளை வெளியெடுத்துக் கொண்டிருந்தான்... அவனை அறைக்கு அழைத்து இழுத்து செல்லும் போதே ஓரக் கண்ணால் வாணியிடம் அர்ஜுனை ஜாடை காட்டிவிட்டு சென்றிருக்க... வாணி அர்ஜுனை அமைதிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டாள்.


**********************

கலாதரன் வெளியேறியதும் நொடியும் தாமதியாமல் குழந்தையுடன் அறைக்குள் புகுந்திருந்த சம்யுக்தாவிற்கு மனம் உலைகளனாக கொதித்து கொண்டிருந்தது... “க..வி..ன்..!” என்றவளின் குரலில் அதீத குரோத வெறி மின்ன காதலின் கைங்கர்யத்தில் கலங்கிய நீர் நிரம்பிய குட்டையானது விழிகள்.
அன்று வரை நிமிர்வுடன் நடமாடியவளுக்கு இந்த காதல் என்னும் பசலை படர்ந்து அவளை பித்துக்குள் ஆக்கியிருந்தது... இந்த காதலின் தாக்கம் தான் எத்தனை வீரியம் வாய்ந்தது... அடங்கப்படாத காளையெனத் திரியும் ஆணும் சரி, எளிதில் உணர்ச்சி வயப்படாத பெண்ணும் சரி... எதற்கும் கட்டுப்படாத, கட்டுப்படுத்த முடியாத இவர்களின் துணிச்சல் மிக்க பலத்தை கூட சிறுநூலிழை போன்று அசைத்து பார்க்கும் வல்லமை வாய்ந்தது என்பதை அந்த மாயக்கடலில் முழ்கி மூச்சு முட்டி எழுந்த பிறகுதான் அனுபவத்தில் உணர முடிகிறது.

எதற்கும் அத்தனை சுலபமாக உணர்ச்சி வயப்படாத சம்யுக்தா என்ற பெண் வேங்கையவள் தன்னவன் அளித்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாது அறையில் தனிமையில் மூழ்கியப்படி கதறினாள்... தன் மனக் குமுறல்களை கண்ணீரில் கரைத்து வெளியேற்றி இருந்தவளுக்கு மனம் சற்று லேசானது போல் இருக்கவே அடுத்த கட்ட முடிவை பற்றி சிந்திக்கலானாள்.
மேஜை மேல் வீற்றிருந்த அந்த ஆவணத்தில் அந்நேரம் அவள் விழிகள் படிய மிகத் தீவிரமாக சிந்தித்து சங்கல்பத்தை மேற்கொண்டவள், தன் கணவன் அளித்த விவாகரத்து சாசனம் அடங்கிய பத்திரத்தையும், ராயல் கிங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'பவர் ஆப் அட்டார்னி' என்று பதிவிட்டிருந்த பத்திரத்தையும் கரத்தில் எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறி குடும்பத்தினரை அணுகினாள்.

யமுனா, யசோதா, பாஸ்கரனுடன் அமர்ந்திருந்த மனோரஞ்சனின் முகத்தில் கலவரம் சூழ்ந்துவிட்டிருந்தது. பாஸ்கரன் தான் முதலில் ஆரம்பித்தவர்...

“முதலில் நடந்ததை சொல்லு ரஞ்சன்” என்று சினம் மேவிய குரலில் கட்டளையிட, இனி மறைக்க முடியாது என்று புரிந்தவனாக தன் காதல் லீலைகளை பற்றி எடுத்துரைத்தான்.

“கலைவாணியை நான் முதன்முதலில் ஒரு காலேஜ் பங்க்சனில் தான் பார்த்தேன்”

கலைவாணி ஜவுளித்துறை சார்ந்த படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருந்தாள்... ஆனால் மேல்நிலைக் கல்வியில் அந்த படிப்புக்கு விண்ணப்பிக்க போதுமான மதிப்பெண் பெறாததால், அவளால் நேரடியாக பொறியியல் படிப்பை தொடர முடியாது போனது... தங்கையின் எதிர்கால கனவை நிறைவேற்ற கலாதரன் தான் முதலில் டிப்ளோமா முடித்து மேற்கொண்டு படிக்க சுலபமாக இருக்கும் என்று எடுத்துக் கூறியவன், அது போலவே நல்ல கல்லூரியை விசாரித்து கோவையில் இருந்த அந்த பொறியியல் கல்லூரியில் சேர்ப்பித்திருந்தான்.

கலைவாணியை வெகுதூரம் அனுப்பி படிக்க வைக்க வீட்டினர் எதிர்த்து நின்ற போதிலும் கலாதரன் தான் தங்கைக்கு முழு பலமாக இருந்து அவளை கோவையில் விடுதியில் சேர்த்து படிக்க செய்திருந்தான்.

‘எஸ்எஸ்கே பாலிடெக்னிக் கல்லூரியில் டெக்ஸ்டைல் டிப்ளோமா டெக்னாலஜி’ முதல் ஆண்டு ஜவுளி தொழில்நுட்பம் பயின்று கொண்டிருந்தாள் கலைவாணி.

கோவையில் பிரபலம் வாய்ந்த ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளன் மனோரஞ்சன் என்பதால், அவர்களின் ஜவுளித்துறை இலாகாவிற்கான முதலாம் ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தான் மனோரஞ்சன்.

அந்த கருத்தரங்கின் ஒருங்கினைப்பாளராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவள் கலைவாணி தான்... பார்த்த முதல் பார்வையிலேயே அவளின் தோற்றத்து அழகில் ஈர்ப்பு ஏற்பட்டு அவள்பால் கவர்ந்துவிட, அன்றைய தினம் முழுவதும் அவளை சுற்றி பார்வையால் வட்டமிட்டபடியே இருந்தவனின் பார்வையை கண்டுக் கொண்ட சக மாணவர்கள் கலைவாணியை அவனுடன் சேர்த்து வைத்து சரச பேச்சுகளால் அவளை கேலி செய்தனர்.

நிகழ்ச்சி நிரல் முடிவடையும் பொழுது எதார்த்தமாக சந்திப்பது போல் அவளை முற்றுகையிட்டு விழாவை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியதாக பாராட்டு தெரிவித்துவிட்டு சென்றுவிட்டிருந்தான்... சக தோழமைகளின் கேலியும், அவனின் ரசிக்கும் கண்களும் இள வயதுக்கே உண்டான ஆர்பரிப்பில் தானும் மையல் கொண்டு அவன் மேல் ஈர்ப்பு கொண்டுவிட்டிருந்தாள் கலைவாணி.

ஆனால் ரஞ்சன் அவளிடம் காதலை கூறும் போது அவளால் சட்டென்று ஏற்றுக் கொள்ள இயலவில்லை... ரஞ்சனோ வார்த்தையினால் அவள் மறுப்பு கூறிய போதும் அவள் கண்களில் தென்பட்ட ஆர்வத்தை கண்டு கொண்டவனுக்கு தொடர்ந்த தன் முயற்சிகளால் அவள் காதலை வெளிக்கொணர்ந்து இருந்தான்.

முதலில் அவனுக்கு கலைவாணியை பற்றிய பின்னணியை அறியாத போது அந்தஸ்தில் தகுதி பெற்ற ஒரு குடும்பத்தின் பெண்ணாகத் தான் இருக்கும் என்று எண்ணி காதலை நாளுக்கு நாள் வளர்த்து கொண்டவனுக்கு இறுதியில், அவள் பற்றிய பின்னணியை அறிந்துக் கொண்டதும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான்.

‘கூத்து கட்டுற குடும்பத்தை சேர்ந்த பெண்ணா அவள்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு தன் தகுதி தராதரத்தை பற்றி அப்போது தான் உணர்ந்தவன் போல சிந்தித்துக் கொண்டிருந்தான். இதை எல்லாம் அவன் துப்பு துலக்கி ஆராய்ந்தபோது அவளுடான ஒன்றரை வருட காதல் நிறைவடைந்திருந்தது.

அவளை தகுதிக்காக காரணம் சொல்லி நிராகரிக்க, அவளின் எழில் நளினம் கொண்ட வதனமும், பெண்மையின் அழகும் அவனுக்கு தடை விதித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அவனுக்குள் இருந்த அந்தஸ்து என்கிற வக்கிரம் தலைதூக்கி அவளை காதல் என்னும் பெயரில் சிறிது காலம் சுற்றி அவனின் இளமைத் தேவையை தீர்த்துக் கொள்ள சிந்தாந்தம் மேற்கொண்டான்... காதல் என்னும் பெயரில் அவளை ஏமாற்ற எண்ணி துணிந்தவன் அவளுடன் சேர்ந்து பல இடங்களில் சுற்றி தன் தேவையை தீர்க்க அச்சரமும் இட்டிருந்தான்... முதலில் மறுத்த கலைவாணியும் அவன் காதல் மொழியில் மயங்கியவள் தன்னை அவனிடம் முழு மனதாக ஒப்படைத்தாள்.

மனோரஞ்சனுடனான காதலை பற்றி அரசியிடம் பகிர்ந்து கொண்டவளை அரசி அப்போதே எச்சரிக்கை கொடுத்திருந்தாள்...

“இங்கே பாரு வாணி காதலிக்கிறது தப்பில்லை... அவர் எவ்ளோ நல்லவரா வேணாலும் இருக்கலாம்... ஆனால் எக்காரணம் கொண்டு அவரிடத்தில் உன்னை நீ இழந்துவிடாதே” என்று கூறியதில் மனம் அதிர்ந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வாணி சாதுர்யமாக மறைத்துவிட்டிருந்தாள்.

“அரசி க்கா அண்ணன்கிட்டே இதை பற்றி சொல்லிரமாட்டியே?” என்று பீதியில் கேட்டவளை கண்டு புன்னகையுடன் நோக்கியவள்...

“நான் எதுக்கு சொல்லப் போறேன், நீ படிப்பை முடித்துவிட்டு வா... அவர்கிட்டே பேசி வீட்டுக்கு வந்து பெண் கேட்க சொல்லு... நாம அண்ணனுக்கு எடுத்து சொல்லிக்கலாம்... அண்ணன் அப்படி ஒன்னும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர் இல்லை” என்று நம்பிக்கையூட்டினாள்... அவள் கூறியதென்னவோ உண்மை தான்! ஆனால் அவள் ஏமாற்றம் அடையப் போவதை அறிந்திருந்தால் இப்படியான ஒரு காதலை அங்கீகரித்திருந்திருக்கமாட்டாள்.

“ஆனாலும் ரொம்ப பயமா இருக்கே அரசிக்கா”

“எதுக்கு பயப்படுகிற காதல் அவ்ளோ பெரிய தப்பான விஷயம் இல்லை... அண்ணன்கிட்டே பேச நான் உனக்கு துணையா நிற்பேன்” அவள் துணை நின்றால் தான் ஆனால் அந்த துணையின் தேவைக்கான சூழ்நிலை தான் மிகவும் தலை குனிவாக இருந்தது.

வாணி மனோரஞ்சனுடனான காதலை கூடலும், ஊடலுமாக இன்ப மயமாக வளர்க்க முதலில் பாதுகாப்பாக ஆரம்பித்த உறவு நாளுக்கு நாள் பலப்பட்டுப் போக அதன் விளைவாக கல்லூரி முடிவின் இறுதியில் வாணி கருவுற்றுவிட்டாள்.

அதை பற்றி கலக்கத்துடன் ரஞ்சனை தேடி ஓடியவள்... “ரஞ்சன் நான் கர்ப்பமா இருக்கிறேன் நாம உடனே கல்யாணம் பண்ணிக்கணும்” என்று கூற, அவனோ அவளை ஏளனமாக பார்த்தபடி...

“என்ன கல்யாணமா?” என்று எக்களிப்புடன் சிரித்தவனை கண்டு அவளுக்கு வயிற்றில் கருக்கடை கட்டி தலையை சுற்றியது...

“ரஞ்சன் ப்ளீஸ் விளையாடாதீங்க... எப்படியும் நாம கல்யாணம் செய்து தானே ஆகணும் அதை இப்போவே பண்ணிக்குவோம்” என்று கூற அவனுக்கோ எரிச்சல் மூண்டது.

“ஏய் இங்க பாரு... உன்னை காதலிச்சது கல்யாணம் பண்ணிக்க இல்லை... ஏதோ பார்க்க அழகா இருந்தேன்னு காதலிச்சேன்... அப்புறம் உன் பின்னணியை விசாரிச்சப்போ தான் நீ தேனில இருக்கிற கூத்துக் கட்டுற பேமிலின்னு தெரிஞ்சது... உன் மேல எனக்கு ஆசை வந்திருச்சு, அதை அடக்க முடியலை கொஞ்ச நாள் ஜாலியா பழகிட்டு போகலாம்னு நினைச்சு தான் பழகினேன் சோ, நீயும் அப்படி ஃபன்னா எடுத்துட்டு போ” சிறிதும் கூச்சமின்றி கூறியவனின் வார்த்தையில் நொறுங்கிப் போனாள் பேதை.

“அப்போ... அப்போ... இந்த குழந்தை”

“நான் எனக்கு தெரிஞ்ச டாக்டர் நம்பர் தரேன், போய் அபார்ட் பண்ணிட்டு வேறு வேலையை பாரு” என்று அலட்சியமாக கூறியவனின் வார்த்தையில் உள்ளம் மரித்து சிதைந்து போயிருந்தது.

அதன் பிறகு செய்வதறியாது திகைத்தவள் கல்லூரி பரீட்சை அனைத்தும் முடிந்த நிலையில் மேலும் இரண்டு முறை முயற்சியெடுத்து, அவனை அணுகி பார்த்தவளை...

“ஆமாம் திரும்பத் திரும்ப என்னை தேடி வரியே உனக்கு வெட்கமா இல்லை?” என்று முதல் இடியை இறக்கியவன் மேலும் தொடர்ந்து...

“அந்த குழந்தைக்கு நான் தான் அப்பான்னு என்ன நிச்சயம்?” என்று இரண்டாவது இடியையும் அழுங்காமல் குழுங்காமல் இறக்கியவன்...

“காதல்ன்னு சொல்லி ஆசை வார்த்தை பேசினதும் என்கிட்ட மயங்கிப் படுத்த மாதிரி இன்னும் எத்தனை பேர்....” என்றவனின் வார்த்தையை தொடர விடாமல் அவன் குரல் வளையை நெரித்து நிறுத்தியிருந்தாள்... அவளின் அகஸ்மாத்தான செயலை எண்ணி திகைத்தவன்...

“ஏய்... ஏய்... விடுடி” என்று அவள் கரத்தை தட்டிவிட்டவனை அக்கினி பிழம்பை பார்வையில் தேக்கி வீசிவிட்டு தேனி நோக்கி பயணமானாள்.

ஒவ்வொரு நாளும் இதற்கான தீர்வை பற்றியே சிந்தித்தவளுக்கு இறுதியில் தற்கொலை ஒன்று தான் முடிவென கருதி, அதை செயல்படுத்த நடுநிசியில் கொல்லைப் புறத்தில் இருந்த கிணற்றிடிக்கு சென்றவள் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள பார்க்க, அந்நேரம் எதர்ச்சியாக வந்த அரசியும், கலாதரனும் தடுத்து விட்டிருந்தார்கள்.

“ஏய் வாணி, என்னடி ஆச்சு? ஏன் இப்படி தற்கொலை பண்ணிக்கப் பார்க்கிற? நீயென்ன கோழையா?” என்று அரசி வினவி முடித்திருக்க, அதுவரை அவளை தன் கூர்மையான பார்வையால் துளைத்துக் கொண்டிருந்த கலாதரன்...

“யார் அவன்?” என்று வினவிய பகீரங்கமான கேள்வியில் அரசி, வாணி இருவரும் மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தேவிட்டனர்!

“என்ன, எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கிறயா? ஊர் விட்டு ஊர் போய் படிச்சுட்டு வந்து கொஞ்ச நாளாவே பித்து பிடிச்சவ மாதிரி சுத்திட்டு இருந்துட்டு, இந்த முடிவை எடுக்கிறன்னா நிச்சயம் இது மாதிரி ஒரு விவகாரமா தானே இருக்கும்” என்றவனின் ஞான சாதுர்யத்தை எண்ணி மெச்சிக் கொள்ளும் நிலையில் அல்லாமல், தன் மானக்கேடனா செயலை எண்ணி வருந்தி அவளும் உண்மையை ஒத்துக் கொண்டிருந்தாள்.

“ஆமாம் நான் ஒருத்தரை காதலிச்சேன்”

“காதலிச்ச சரி, அதுக்காக இப்படி வீட்டில் சொல்லாமலே நீயா முடிவெடுத்து தற்கொலை பண்ணிப்பியா?” என்று அவளின் முட்டாள்தனமான செயலை கடிந்துக் கொண்டிருந்தான்.

“இல்லை ண்ணா... இது காதலா மட்டும் இருந்திருந்தால் நான் உங்ககிட்ட சொல்லியிருந்திருப்பேன், ஆனால்....” என்று இழுக்கும் போதே கலாதரன், அரசி இருவரும் ஒருவரை ஒருவர் பீதியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் பீதியை மெய்யாக்குவது போன்று...

“நான்... நான்... கர்ப்பமா இருக்கேன் அண்ணா” என்றவள் உடல் பலமிழந்து தோய்ந்து தரையில் சரிந்து அமர்ந்தவள், முகத்தை மூடிக் கொண்டு அழுகையில் கரைய மற்ற இருவரும் திக்பிரமை பிடித்தது போல் நின்றுவிட்டனர்.

“அடிப்பாவி நான் அவ்ளோ தூரம் உங்கிட்ட சொல்லியிருந்தனே டி... காதலோட நிறுத்திக்காம ஏன் டி இப்படி பண்ணின?” என்று அரசி தன் பங்கிற்கு அடித்துக் கொள்ள, கலாதரனுக்கு அரசியின் மேலும் கோபம் எழுந்தது... அவளேனும் அவனிடம் கூறியிருந்தால் அப்போதே விசாரித்து அவளை உஷார் படுத்தியிருக்கலாமே என்ற எண்ணம் தலைதூக்க கோபத்துடன் சுற்றும் முற்றும் நோக்கினான்.

வாணியின் பேதலித்த நிலையை கண்டு கண்காணித்து கொண்டே இருந்தவன், இரவு நேரம் கொல்லை புறத்துக்கு போவதை நோட்டம் பார்த்து விட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று கொல்லைப்புறத்து வாசலை உட்புறமாக தாழிட்டிருந்ததால் சட்டென்று யாரும் வர வாய்ப்பில்லாமல் போனது.

கலாதரன் நொடியும் தாமதியாமல் சடாரென்று வாணியை தூக்கி நிறுத்தியவன் கன்னத்தில் “பளார்... பளார்...” என்று அறைந்து தள்ளினான்... அவனின் அடியை பெற்றுக் கொண்டு மரப்பாச்சி பொம்மையை போன்று நின்றிருந்தவளை அரசி உலுக்க... இப்போது அரசியையும் ‘பளார்’ என்று அறைந்திருந்தான்.

“அப்போவே உனக்கு விஷயம் தெரியும்னா என்கிட்ட சொல்லி இருக்கணுமா இல்லையா, இப்போ பாரு எங்க வந்து நிறுத்தியிருக்குன்னு” என்று கடினத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு சாடியவனின் கூற்றில் இருந்த நியாயத்தை புரிந்துக் கொண்டவள், அவனின் அடியை அமைதியாக பெற்றுக் கொண்டு சிரம் தாழ்ந்து நின்றிருந்தாள்.

“இல்லை ண்ணா... அரசிக்காவை திட்ட வேண்டாம் அவங்களை நான் தான் சொல்ல வேண்டாம்னு தடுத்துட்டேன்” என்று அவளுக்காக வக்காலத்து வாங்கி பேசியவளை கண்டு ஆத்திரம் தான் பொங்கியது.

“ஆமாம் இப்போ வக்காளத்து வாங்கு... அவன் கூட சேர்ந்து சுத்தும் போது இந்த வியாக்கானம் எங்க போயிருந்தது? கொஞ்சமாச்சும் குடும்பத்தையும், எங்களையும் நினைச்சு பார்த்திருந்தா இப்படி ஒரு காரியம் செய்துட்டு வந்திருப்பியா?”

“மன்னிச்சிருங்கன்னு சொல்றதால எதுவும் மாறப் போறதில்லை தான்… ஆனாலும், என்னால் அதை தவிர எதுவும் கேட்கவும் முடியாது ண்ணா... என்னை மன்னிச்சிரு ண்ணா... நான் செத்தே கூட போயிடுறேன்... என்னால் உங்க யாருக்கும் தலைகுனிவு வேண்டாம்” என்று கிணற்றின் விளம்பில் கரம் வைத்தவளை வளைத்து மறுமுறையும் கன்னத்தில் அறைந்தவன்...

“திரும்பத் திரும்ப முட்டாள்தனம் பண்ணாதே... உன்னை சாக விடத்தான் கஷ்டப்பட்டு படிக்க வச்சேனா” என்று சினந்துக் கொள்ள சில கணங்கள் குழப்பத்தில் யோசித்தவன்...

“இதை பற்றி இப்போதைக்கு வீட்டுக்கு தெரிய வேண்டாம், ஒழுங்கா போய் தூங்குங்க நாளைக்கு காலையில் பேசி முடிவெடுப்போம்” என்று அதட்டி உருட்டி அனுப்பி வைத்தவனுக்கு தூக்கம் முகவரி இல்லாமல் சென்றுவிட்டிருந்தது.

குழந்தையை கலைத்து விட்டு வேறு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க எண்ணியவனுக்கு அவள் தங்கையின் உடல் அதற்கு தாங்காது என்று மருத்துவர் கூறிவிடவும் அதை கேட்ட வாணி...

“அண்ணா என் உயிர் போனா போகட்டும் நீங்களாச்சும் நிம்மதியா இருங்க ண்ணா” என்று பிதற்றியதும் அவன் முகம் கடுமையாக மாறியது.

“வாயை மூடுறியா முதல்ல... செத்தா எல்லாமே முடிஞ்சதா... மனுஷனா பிறக்கிறது எந்தவொரு சூழ்நிலையும் எதிர்த்து போராடி வாழுறதுக்கு தான், இப்படி கோழைத்தனமா சாகிறதுக்கு இல்லை” என்று அறிவுரை கூறியவன் அடுத்ததாக காவல் நிலையத்தை அணுகி மனோரஞ்சனின் மேல் புகார் அளிக்க முனைந்தான்... ஆனால் இவர்கள் புகார் அளித்தத்தை அறிந்த ரஞ்சன் தன் பண பலத்தை பிரயோகப்படுத்தி வழக்கறிஞரையும், காவல் ஆணையரையும் அணுகி, அவன் பெயரில் கொடுக்கும் பிராதை வாங்கிக் கொண்டு முடக்கி விடும் படி ஏற்பாட்டை செய்திருக்க அதுவும் சுவற்றில் அடித்த பந்தாய் அவர்களுக்கே திரும்பியது.

இறுதியாக ஒரு முறை பிராது கொடுக்க சென்ற தரனிடம்... “இங்க பாருயா இந்த பேரில் திரும்ப எதுவும் கம்பிளைண்ட் கொடுத்தேனா அந்த பொண்ணு மேலேயே பிராத்தல் கேஸ் பதிவு பண்ண வேண்டியிருக்கும்” என்று கூறியதும் தான் மனோரஞ்சன் அவன் பணப் பலத்தை பிரயோகித்திருப்பதை உணர்ந்தவன் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளானான்.

உடனடியாக தனக்கு தெரிந்த நண்பர்களை அணுகி மனோரஞ்சனின் பின்புலத்தை திரட்ட, இனி செய்ய வேண்டியதை திட்டமிட்டு மேற்கொண்டவனுக்கு அதை செயல்படுத்த யாரிடம் உதவி கேட்பது என்று தவித்து நின்ற போதுதான் அர்ஜுன் ஆபத்தாப்பாந்தவனாக வந்திருந்தான்.

முதலில் அவன் வரை விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று யோசித்தவன் தான் என்றாலும், இறுதியில் அவனை தவிர வேறொருவன் ரகசியம் காத்து உதவ மாட்டான் என்ற நம்பிக்கையில் அர்ஜுனிடமே அனைத்தையும் கூற அவனுக்கோ மிகப்பெரிய அதிர்ச்சி தாக்கியது.
கலைவாணிக்காக தானும் கொதித்தவன்...

“அத்தனையும் பணத்திமிருடா தரன்... இதை நீ சும்மா விடக்கூடாது... நீ சொன்ன மாதிரி இதை அவங்க வீட்டுக்கு தெரியப்படுத்தி நியாயம் கேளு... முக்கியமா அவன் தங்கச்சிகிட்ட கேளு... அவள் ஒரு தொழிலை நிர்வாகம் செய்கிறாள்ன்னா நிச்சயம் இதுக்கான நியாயத்தையை அவள் கேட்பா” என்று நண்பனின் திட்டத்தை ஊக்குவித்து தங்கையின் வாழ்க்கைக்கு வழி தேட முனைந்தான்... சம்யுக்தாவை அணுக முற்பட்ட கலாதரன் அவளை சந்தித்தும், அவன் தங்கையின் விஷயத்தை கூற முடியாமல் போக, அதற்கான காரணத்தை வினவிய அர்ஜுனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

“டேய் நீ சொல்றது சரி தான் ஆனால் இது ரிஸ்க்ன்னு தோணுது... ஆனால் உன் பக்கமும் நியாயம் இருக்கிறதால இதுக்கு ஒரு முடிவெடுக்கலாம்” என்றதும் கலாதரன் முதலில் கோவை சென்று சிலவற்றை செய்ய முற்பட்டவன் வேறொரு நோக்கத்துடன் மறுமுறையும் அர்ஜுனை நாடினான்.

“என்னடா சொல்லுற நீயா இப்படி சொல்லுற என்னால் நம்பவே முடியலை?”

“ஏன்டா நம்ப முடியலை”

“இது அப்படி இல்லைடா நான் சொல்லுற விஷயமே வேற அதாவது....” என்றவன் அந்த விஷயத்தை கூற இருவரும் தீவிரமாக சில கணங்கள் யோசித்து கொண்டிருந்தனர்.

“நீ சொல்லுறது சரிதான் டா நாம கலந்து பேசிட்டு முடிவெடுப்போம்” என்ற அர்ஜுன் அலைபேசியில் அந்த முக்கிய எண்ணிற்கு அழைத்து சிலவற்றை பேசிக் கொள்ள அதன் பிறகே கலாதரன் திட்டத்திற்கு மார்க்கம் அமைத்து கொடுத்திருந்தான்.
அந்தோ பரிதாபம்! அவர்கள் போட்டு வைத்த திட்டம் ஒன்றாகவும், நாளை நடக்கப் போவது வேறாகவும் மாறப் போவதை அறிந்திருக்கவில்லை?!

கலைவாணியின் உடல் மாற்றத்தை மறைக்க முடியாமல் போகவே பல காரணங்கள் கூறி அவளை கோவையிலேயே தெரிந்தவரின் கண்காணிப்பில் தங்க வைத்து தேவையான சிகிச்சையும் மேற்கொண்டு விட்டிருந்தான் கலாதரன்.

குழந்தையும் ஆரோக்கியமாக பிறந்திருக்கவே அச்சமயத்தில் தான் அவன் மனைவிக்கும் வளைகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க, அந்நேரம் மனோரஞ்சனை பிடிவாதமாக வர வழைத்து சந்தித்திருந்த கலைவாணியிடம்...

“இங்கே பாரு உன்னை அப்போவே குழந்தையை கலைக்க சொல்லிட்டேன் என் பேச்சை கேட்காமல் பெற்றுகிட்டது நீ... இதுக்கு மேல திரும்பத் திரும்ப என்னை தொந்தரவு பண்ணின அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன், உங்க குடும்பத்தையே அழிச்சிருவேன்?” என்று விகாரமாக கூறியதில் மனமுடைந்தவள் விஷத்தை உட்கொண்டு விட்டு தற்கொலைக்கு முயன்றிருந்தாள்... அன்றைய தினம் தங்கையை காப்பாற்றிய கலாதரனுக்கு பழி உணர்வு பல்கி பெருகிவிட்டிருந்தது.

வாணியின் பின்புலத்தை அறிய வந்ததுமே ரஞ்சன் அவள் குடும்ப உறுப்பினர்களை அறிந்துக் கொள்வதில் பெரிதாக நாட்டம் செலுத்தவில்லை.... அவளுக்கு அண்ணன் தங்கை இருப்பதையே வாணி பேசும் போது எதார்த்தமாக கூறியது தான், அதிலும் தமையனின் பாதி பெயரை மட்டும் கூறி இருந்ததில் வேறெதுவும் தெரிந்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. சாதாரண கூத்து கட்டுபவன் கலாதரன் அவன் என்ன செய்து விடுவான் என்ற அலட்சியமான மெத்தன போக்குடன், அவன் யார் என்பதை நேரில் கண்டறியாமல் போனதன் விளைவு தான் தங்கையின் காதல் கணவனாக இருந்தும் அவனால் கண்டு கொள்ள முடியாமல் போய்விட்டிருந்தது.

மனோரஞ்சன் கூறி முடித்ததும் தான் தாமதம் அதுவரை அவன் கூறியதை மறைவாக நின்று கேட்டுக் கொண்டிருந்த சம்யுக்தா தன் பலம் கொண்ட மட்டும் கரத்தை உயர்த்தி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

சுவடுகள் தொடரும்....

********************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-6 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
கருத்துத் திரி:
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-7
அவளின் எதிர்பாராத தாக்குதலை கண்ட யமுனா, யசோதா இருவரும் ஆக்ரோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே...

“ஒரு பொண்ணோட வாழ்க்கை உனக்கு விளையாட்டாய் போயிருச்சா? அவள் உனக்கு தகுதி இல்லைன்னு தெரிஞ்சா நீ அவளை திரும்பியும் பார்த்திருக்கக்கூடாது” என்று ஆவேசத்துடன் கூறியவளின் வார்த்தையை கேட்டு மேலும் கொதித்தவர்கள்...

“சம்யுக்தா ரொம்ப பேசுற நீ... அவன் உன் அண்ணன் யாரோ ரோட்டில் போற ஒருத்திக்காக உன் சகோதரனை பகைச்சுக்காதே... ஆயிரம் தப்பு செய்திருந்தாலும் அவன் ஆம்பளை” என்று யமுனா தன் விஷக்கங்குகளை கக்க, சம்யுக்தா எரிமலையின் சீற்றத்துடன் பொங்கினாள்.

“ஆம்பிளை...?! அதனால எப்படி வேணா, என்ன வேணா பண்ணலாமா? அப்போ நானும் இது மாதிரி நடந்துகிட்டா ஏத்துக்குவீங்களா?” என்று என்றுமில்லாத அளவில் குரலை உயர்த்தி பேசியதும், யசோதா மகளை அடிக்க கையை ஓங்க அவசரமாக அன்னையை தடுத்தவள் பார்வையால் பொசுக்கிக் கொண்டிருந்தாள்.

“யசோதா நீ விடு அவளை” என்று அவரை விலக்கிய யமுனா சம்யுக்தாவை நெருங்கியவர்...

“நீ இவ்வளவு பேசுறியே முதலில் உன் அண்ணனை குற்றம் சொல்ல உனக்கென்ன தகுதி இருக்கு? இந்த பிரச்சனைக்கான மூல காரணமே நீதானே” என்றவரின் பேச்சில் ‘என்ன நான் காரணமா?’ என்று புரியாத தோரணையில் விழிகளை அகல விரித்தவளுக்கு சீற்றம் சீறிக் கொண்டு எழுந்தது...

“நானா...? இது என்ன புதுக்கதை?” நித்தனையுடன் வினவியவளின் பார்வை தன் பெரியன்னை மேல் வெறுப்பை கக்கியது.

“ஆமாம் நீ தான் காரணம்... நீ மட்டும் அவனை காதலிக்காம இருந்திருந்தா இந்நேரம் இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்குமா?”
தன் அந்தராத்மாவிற்கு விரோதமாக கூறியவரின் வார்த்தையில் சம்யுக்தா மனம் சல்லடையானது.

“பெரியம்மா உங்க மனசாட்சியை விற்று சாப்பிட்டுவிட்டு பேசாதீங்க” என்று எதிர்த்து கேள்விக் கேட்ட சம்யுக்தாவை யசோதா வெறியுடன் தாக்க நெருங்க, பாஸ்கரன் கண்களால் கண்டித்து தடுத்தவர் தானே பேசலானார்...

“சம்மு வீட்டில் பெரியவங்கன்னு நாங்க இருக்கிறோம், எங்க முன்னாடியே நீ எதிர்த்து பேசிட்டு நிற்கிற?” என்று அதட்டியதும் அவரையே இமைக்காமல் பார்த்தவளின் கண்கள் ஆட்சேபத்தில் இடுங்கி இருந்தது.

“என்ன நடந்திருந்தாலும் மனோரஞ்சனும், நீயும் இந்த வீட்டு பிள்ளைகள் அவன் தப்பு செய்துட்டான் தான் அதுக்காக தப்புன்னு ஒத்துக்கணுமா என்ன? அவங்க தகுதி என்ன? நம்ம தகுதி என்ன?” என்றவரின் வார்த்தை நீதி, நேர்மை, நியாயம் என்று நேர்வழியில் செல்லும் அவளுக்கு எதிர்ப்பதமாக இருக்கவே, அது நாள் வரை அவர்களிடம் இப்படி ஒரு வக்கிரம் இருக்கும் என்பதை அறிந்திராதவளுக்கு திகைப்பில் விழிகள் அகல விக்கித்து நின்றாள்.

“இப்போ ஒன்னும் கெட்டுப் போகலை, நீ அவனை டிவோர்ஸ் பண்ணிவிடு... அதுக்கு நமக்கு சிரமம் கொடுக்காம உன் புருஷனே விவாகரத்து நோட்டிஸ் கொடுத்துட்டான் இனி சுலபமா முடிச்சிரலாம்... நம்ம ஸ்டேட்டஸ்க்கு சமமா ஒரு வரன் பார்த்து மனோவுக்கும், உனக்கும் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்கிறோம், நீங்க ரெண்டு பேரும் நாங்க சொன்ன மாதிரி செய்தா மட்டும் போதும்” என்றவரின் கூற்றை ஆமோதித்து...

“ஆமாம் மாமா நீங்க சொல்லுறது தான் சரி அப்படியே செய்திடுவோம்” என்று யசோதாவும்...

“ரெண்டு பேரையும் பிடிச்ச சனி விட்டு தொலைஞ்சுதுன்னு நினைச்சுக்குவோம்” என்று யமுனாவும் கூற, சம்யுக்தா உச்சகட்ட அதிர்வில் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

“நீங்களா இப்படி பேசுறீங்க? அப்போ என் குழந்தைக்கு என்ன வழி? அங்கே ஒரு பொண்ணு என்னை போலவே கையில் குழந்தையோட நிற்கிறாளே அவளுக்கு என்ன வழி?”

“அதை எங்காச்சும் அநாதை அஸ்ரமத்துல விட்டிருவோம்” என்றதும் அவள் உயிரை பிடுங்கி வெளியே எறிவது போன்ற ரணத்தில் துடி துடித்துப் போனாள். அதை எல்லாம் சிறிதும் லட்சியம் செய்யமால் மேலும்...

“அந்த பொண்ணோட தலைவிதி அவ்ளோ தான்... அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? நாம நம்ம வாழ்க்கையை மட்டும் பார்ப்போம்” என்று யசோதா நிஷ்டூரமாக கூற, சம்யுக்தா இரண்டாவதாக தாக்கிய இடியில் கால்கள் ஆணியடித்தது போல் அசைவற்று நின்றுவிட்டாள்.

அவள் வீட்டினரிடம் செல்லமும், சுதந்திரமும் பெற்றே வளர்ந்திருந்தாலும் அதில் தவறான விஷயங்களுக்கு கண்டிப்பும் குறையாமல் இருக்கும் என்று அவளும் நியாயத்தின் தராசுவை போல் எண்ணி தானும் அவ்வழியில் சென்று கொண்டிருந்தவளுக்கு இந்த பேச்சுமுறை... அதுவும் சுலபமாக மனதை மாற்றி வாழ்க்கை அமைக்கும் முறை முற்றிலும் புதிதாக இருக்கவே மின்சாரத்தில் தாக்குண்டது போல் பேஸ்தடித்து நின்றுவிட்டாள்.

சில சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் தான் மனிதனின் போலி முகத்திரையை அகற்றி உண்மை முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சமிட்டு காட்டிவிடும் என்பதற்கு உதாரணமாக இருந்தது அவர்கள் குடும்பத்தாரின் வக்கிரம் பிடித்த எண்ணங்கள்... அவள் கணவனும் ஒரு வகையில் தவறு இழைத்து விட்டான் தான், அதற்காக அவன் மட்டுமே தன் ஜீவனில் நிரப்பி, முழுவதுமாக நிறைந்திருக்கும் சித்தத்தின் நினைவுகளை அழிப்பனால் அழித்து விட முடியுமா? அவள் பெற்ற மகவு இதை ஏதும் அறியாமல் காற்றில் கோலமிட்டு தன் பொக்கை வாயை திறந்து தன் போக்கில் மழலையில் குழறிக் கொண்டும், சிரித்துக் கொண்டிருந்ததையும் கண்டு நெஞ்சம் பொங்கியது...

‘இந்த அறியாத பச்சிளங் குழந்தையையா ஆஸ்ரமத்தில் விடுவது? அதுவும் பெற்றவர்கள் குத்துக்கள் போல் இருக்கும் பட்சத்தில்’ என்று தனக்குள் எண்ணியவளின் அடிவயிறு தாய் பாசத்தில் பற்றிக் கொண்டு எரிந்தது.

அவள் துணிச்சலான பெண் தான் என்றாலும், அவள் மனம் என்ன மரக்கட்டையால் செய்ததா என்ன? அதுவும் ஊன் குருதியால் ஆன உயிர் தானே அவளுக்கும் தாய்மையின் ஈரம் நெஞ்சில் ஆழமாக சுரந்திருக்க மனதை திடப்படுத்திக் கொண்டு அவர்களை நிமிர்வுடன் நோக்கியவள்...

“இதுக்கு முடியாதுன்னு சொன்னா?” என்று மிதப்பாக பார்த்தபடி அதிகார தொனியில் கூறிய குரலின் அழுத்தம் அவளின் எதிர்ப்பை பறைசாற்ற...

“உனக்கு இந்த வீட்டில் இடமில்லை” என்று சிறிதும் தாட்சண்யம் இன்றி யசோதா கூறியிருக்க, யமுனா அவரை ஆமோதித்து பார்வையால் பாராட்டு தெரிவிக்க, இருவரின் பார்வையும் சம்யுக்தா மேல் விரோதத்துடன் படிந்தது.

அவர்களின் பேச்சிற்கு அவளிடம் எதிர்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது... அனைவரையும் ஒரு முறை புழுவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு, தன்னறைக்கு சென்று அவளுக்கும் குழந்தைக்கும் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு முக்கியமாக அவள் கணவன் சம்மதமாக இருந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள்...

“நான் போறேன்” என்று மட்டும் கூறிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே செல்ல எத்தனித்தவளை கண்டு அனைவரும் திகிலடைந்து நின்றுவிட்டனர்.

அவர்கள் அவளிடம் கூறியதே அவளை மிரட்டி பார்க்கத்தான், ஆனால் அவர்களை எதிர்க்கவென்று இப்படி அதிரடியாக வெளியேறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. மனோரஞ்சனுக்கு தான் பகீர் என்றது... அவள் இப்போது அங்கிருந்து நகர்ந்துவிட்டாலானாள் அவன் செய்த தவறை கிடப்பில் போட்டு விடமாட்டாள் நிச்சயம் இதற்கு ஏதேனும் செய்துவிடுவாள் என்று அவன் கிலியில் ஆடிப்போனான்.

இதே அவர்களுடன் நிறுத்தி வைத்தால் அவ்வப்போது குடும்பத்தாரின் அதட்டல் மிரட்டலில் அவளை தங்கள் வழிக்கு இழுத்துவிடலாம் என்று எண்ணி சுதாரித்தவனாக...

“சம்மு எங்கே போகிற? பைத்தியாமா நீ... நம்ம வீட்டில் நீ வசதியா வாழ்ந்துட்டு அந்த வீட்டில் போய் நீ வாழ முடியாது புரிஞ்சுக்கோ... வீட்டில் சொல்லுறதை கேளுடா” என்று தங்கையை வழிமறைத்து தடுத்திருந்தான்... அவனின் இந்த செயல் தங்கையின் பாசம் என்று எண்ணி விட சம்யுக்தா முட்டாள் இல்லை என்பதை நிரூபித்தாள்.

“ஏன் என்னை தடுத்து நிறுத்துற? எங்கே அந்த வீட்டுக்கு வாழ போயிட்டா, நீ ஏமாற்றின அந்த வாணி பெண்ணுக்காக நியாயம் கேட்டுவிடுவேன்னு பயப்படுறியா?” என்றவளின் வார்த்தையில் தூக்கிவாரிப் போட உடல் அதிர்ந்து குலுங்கியது. அதை அவன் முகமும் பிரதிபலித்திருக்க, அதை பார்த்தவளின் முகம் இகழ்ச்சி புன்னகையை சிந்தியது.

“இனி நான் உங்க யார் பேச்சுக்கு கட்டுப்பட போறதில்லை... யாருக்காகவும் என் வயிற்றில் பிறந்த என் மகளை விட்டுக் கொடுக்க முடியாது... எனக்குன்னு இருக்கிற தொழில் எனக்கு தான்... அப்படி அதை என்னிடம் இருந்து வாங்க முற்பட்டா நான் கோர்ட் படி ஏறவும் தயங்கமாட்டேன்” என்று உறுதியாக மொழிந்தவள் நொடியும் தாமதியாமல் வெளியேறிவிட்டிருந்தாள்.


**********************

இரவு நேர தனிமையில் வானில் உலா வந்த வெண்ணிலவை ரசித்தபடி அமர்ந்திருந்த அரசியின் உள்ளம் கடிகார பெண்டுலம் போல் ஊசலாடிக் கொண்டிருந்தது... தன்னிடம் விஷயத்தை கூறிய அன்றே சற்று சுதாரித்திருந்தால் இந்த விபரீதமான சூழலை தவிர்த்திருக்கலாமோ? என்று அப்போதும் அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. விதியின் வலையில் சிக்குபவர்களை யாரும் எப்போதும் காப்பாற்ற முடிவதில்லை என்று அவள் அறிந்த விஷயம் தான் என்றாலும், அந்நேரம் அவள் புத்திக்கு அது உரைக்கவில்லை மாறாக அவள் குற்றவுணர்வை அதிகப்படுத்திக் கொண்டு தான் இருந்தது.

அவள் வாடிய வதனத்தை கண்டு புருவ இடுக்கில் முடிச்சிட்டப்படி யோசனையுடன் நெருங்கிய அர்ஜுன்...

“அரசி இங்கே என்ன பண்ற?” என்று வினவியவனின் குரலில் திடுக்கிட்டு போனவளின் உடல் அதிர வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தவளின் மிரட்சியை உணர்ந்தவன்...

“ரிலாக்ஸ் அரசி நான் தான்?” என்று கூறி அவள் அச்சத்தை குறைத்திருந்தான்.

“இல்லை திடிர்னு குரல் கேட்டதும் பயந்துட்டேன்... ஆமா நீங்க தூங்கலையா?”

“நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிற? நான் ஒரு தூக்கம் தூங்கிட்டு தண்ணி குடிக்கலாம்னு வந்தேன், பார்த்தா இங்கே தனியா உட்கார்ந்துட்டு இருக்கிற?” என்றதும்...

“நான்... நான்... வந்து... சும்மா...” என்று என்ன கூறுவது என்று புரியாது திணறிக் கொண்டிருந்தவளின் சங்கடத்தையும், சிரமத்தையும் புரிந்தவனாக...

“என்கிட்டே தயக்கம் வேண்டாம் அரசி, எதுனாலும் சொல்லுங்க” என்றவனின் பேச்சில் எதை உணர்ந்தாளோ... அதுவரை தனியாக மனதுக்குள் உழன்று தத்தாளித்து கொண்டிருந்தவளுக்கு அவனின் வார்த்தைகள் ஏதோ ஒருவகையில் ஆறுதலாக தான் இருந்தது... என்ன தான் வாணியும், அவளும் நெருக்கம் என்றாலும், இப்போது அவளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவளும் அவளாக இல்லாது இருந்தது அவளின் துயரத்தை அதிகரித்து தான் இருந்தது... தன் மன அவலத்தை பகிர துணை கிடைத்திருந்த நிம்மதியில் தன் தயக்கத்தை விடுவித்து பேசலானாள்.

“தரன் அண்ணா, வாணி ரெண்டு பேருக்கும் பிரச்சனைகள் இருந்தாலும் சேர்ந்துட்டா போதும்னு யோசிச்சிருந்தேன்... ஆனால் நிலைமை இப்படி மாறும்னு நான் நினைக்கவும் இல்லை”

“இன்னைக்கு சாயந்தரம் நான் தரன் அண்ணாகிட்ட எவ்வளவோ பேசி பார்த்துட்டேன், அவர் பிடியே கொடுக்க மாட்டேங்குறார்” என்று புலம்பித் தள்ளினாள்...

“போனது போகட்டும், இனி என்ன நடக்கும்னு தான் யோசிக்கணும் அரசி... முதலில் உன் அண்ணா லைஃபை தான் ஸ்டெடி பண்ணனும்” என்றதும் அவனை குழப்பமாக பார்த்திருக்க அதை அறிந்தவன்...

“வாணி லைஃபை விட்டுட்டேன்னு நினைக்கிறது புரியுது... நான் சொல்வதை நிதானமா கேளுமா” என்றவன் தொடர்ந்து...

“அந்த ரஞ்சன் இளமை மோகம் முத்தி ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிருக்கான்... இது அவன் பணத் திமிரில் அவன் ஆசைக்காக தெரிஞ்சு திட்டமிட்டு செய்தது... அடுத்து தரன் அவனும் இதே வகையில் தான் செய்திருக்கான்... ஆக மொத்தம் ரெண்டு பேருமே இப்போ ஒண்ணாகிட்டாங்க” என்று ஏதோ தொடர இருந்தவனை வேகமாக இடையிட்டவள்...

“இல்லை கிடையாது... ரெண்டு பேரும் ஒண்ணு கிடையாது” என்று சற்றே உயர்ந்த குரலில் உறுமினாள்... அவளின் உறுமலில் கண்கள் இடுங்க பார்த்தவனின் முகத்தில் ஆட்சேபம் பொதிந்திருக்க...

“எப்படி மா இல்லைன்னு சொல்ற?” அமர்த்தலாக வினவினான்.

“ஆமாம் நிச்சயம் என் அண்ணா பண்ணினது, அந்த ரஞ்சனுக்கு ஒப்பில்லாத ஒரு விஷயம் தான்... என் அண்ணன் சம்யுக்தாவை முறைப்படி கைப்பிடிச்சு தான் வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்டாரு... ஆனால் அந்த ரஞ்சன் உடல் தேவையை தீர்த்துகிட்டு கறிவேப்பிலை மாதிரி தூக்கி எரிஞ்சுட்டான்... அவனையும் என் தரன் அண்ணனையும் நீங்க எப்போதும் ஒன்றா சேர்க்காதீங்க” என்று ஒற்றை விரல் சுட்டி எச்சரித்தவளின் விழிகளில் தீயின் ஜுவாலை மின்ன, அவள் குரலில் இருந்த அழுத்தம் அதற்குள் ஏதோ செய்தியிருப்பதை உணர்த்தியது... ஆனால் அவள் அதை சொல்லும் மார்க்கத்தில் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டவன் அதை வரவழைக்க அவளிடமே போட்டு வாங்க முற்பட்டான்.

“அதாவது கத்தியால் குத்தி கொலை பண்ணின்னா தான் தப்பு, கழுத்தை நெறித்து கொலை செய்வது குற்றத்தில் வராது அப்படித் தானே?” என்று உவமேயத்துடன் கூறியவனை விழிகள் தெறித்து விடுவது போல் பார்த்தாள்..

“நீங்க ஏன் இப்படி சொல்றீங்க?”

“பின்னே நீ சொல்றது அப்படி தானேமா இருக்கு?”

“இல்லை நான் அப்படி சொல்ல வரலை இதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கு” என்றவள் அந்த காரணத்தை கூறியிருக்க, அதை கேட்ட அர்ஜுனின் முகத்தில் கலவையான உணர்ச்சிகள் வந்து போனது. அவள் கூறிய விஷயம் அவனும் அறிந்தது தான் என்றாலும் அதை அவனுக்கும் தெரிந்ததாக காட்டிக் கொள்வது இப்போதைய சூழலில் நன்மை இல்லை என்பதை உணர்ந்து சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டான்.

“நீ சொல்றது உண்மையா?” அறியாதவன் போல் அவளிடம் வினவினான்.

“உண்மை தான்! தரன் அண்ணா நிச்சயம் ஒருத்தருக்கு துரோகம் செய்யமாட்டாரு” என்றவள் அன்று தரனின் பெட்டியை தயார் செய்யும் போது அதில் அவள் கண்டறிந்த விஷயத்தை பற்றி கூறியிருந்தாள்.

“முதல்ல எனக்கு அதை பார்க்கனும்னு தோனலைதான்... ஆனால் மனசை ஏதோ பெரிதா உறுத்திட்டே இருக்கவும், அதை அவசரமா பிரிச்சு பார்த்தேன் அப்போதான் அவரை நான் புரிஞ்சுகிட்டேன்... இப்போ சொல்லுங்க அண்ணி கூட விவாகரத்து வாங்குறதை தடுக்காமல் அப்படியே விட்டு விட முடியுமா? அப்படி விட்டால் அண்ணன் உயிரோட செத்திரும், அவர் நடைபிணமா வாழுறதை பார்க்க முடியாது” என்றவளின் கூற்றில் அவன் மனமும் சொல்லுதற்கறியாத நிம்மதி அடைந்திருந்தது.

“சரி தான் அப்போ இனி இந்த விஷயத்தை நாம தான் கையாளனும் அதுவும் உன் தரன் அண்ணனுக்கு தெரியாம”

“ம்ஹும்... அவருக்கு தெரியாம ஒரு காரியம் செய்கிறது ரொம்ப கஷ்டம்... அப்படி அவரை மீறி செய்திருந்த காரியம் நிறைவேறியிருந்தா இந்நேரம் இப்படி சூழ்நிலை ஏற்பட்டிருக்காதே”

“உண்மைதான்! ஆனால், உன் தங்கச்சி கலைவாணியையும் உயிருடன் பார்த்திருக்க முடியாது” என்றதும் விழிகள் தெறித்து விழும்படி பார்த்தவளின் முகத்தில் கலவரம் சூழ்ந்திருந்தது.

“தரன் என் நண்பன். பல வருஷமா அவன் கூட பழகுறேன் அவன் நன்கு பரீட்சயம்... எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு காரியத்தை செய்கிறவனில்லை அவன்... என்னுடைய கோபமெல்லாம் அவன் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டானேன்னு ஆத்திரமும், ஆதங்கமும் தான்” என்றவன் தொடர்ந்து...

“இனி நான் பார்த்துக்கிறேன் நீ கவலையை விடு போய் தூங்கு”

“ம்ஹும்... இல்லை எனக்கு இந்த பிரச்சனைகளை சரியாகாம நிம்மதியே இருக்காது... நான் எப்படியாச்சு நாளைக்கு அண்ணியை பார்த்தே ஆகணும்” என்று கூறியவளை கண்டு யோசனையுடன் பார்த்தவன், அவள் வார்த்தை சரியென தோன்றவே அதை பற்றி சிந்திக்கலானான். சில கணங்கள் அங்கே அமைதி நிலவ சட்டென்று ஏதோ தோன்றியவனாக...

“இங்கே பார் அரசி நீ சொல்றது சரி தான் ஆனால் அதற்கு சம்யுக்தா ஒத்துக்கணுமே”

“இல்லை, என்ன ஆனாலும் சரி நான் அவங்களை பார்க்காமல், பேசாமல் இருக்கப் போறதில்லை, நான் அதில் உறுதியா இருக்கேன்” அவளின் திடமான தீர்மானத்தை தடை செய்யாமல்...

“சரிதான் அப்போ நாளைக்கு நீ போய் பார்க்க நான் ஏற்பாடு செய்கிறேன் ஆனால் ஒரு விஷயம்....” என்று கூறி நிறுத்தியதும்...

‘என்ன’ என்பது போல் அவனை ஏறிட்டவளை தொடர்ந்து...

“இனி எதுவா இருந்தாலும் என்னுடைய உதவி உனக்கிருக்கும் அரசி இதை நீ மறுக்கக்கூடாது” என்று கரத்தை நீட்டியிருக்க தானும் அதற்கு ஒப்புதல் அளிப்பது போன்று அவன் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்திருந்தாள்.

அவளின் செயலில் திருப்தியாக புன்னகைத்தவன்... “தேங்க்ஸ் என்னை நம்புவதற்கு... நாளைக்கு நீயும், கலைவாணியும் போகிறதுக்கு உண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்துட்டு சொல்றேன்” என்றதும் தானும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு சென்றிருந்தாள்.

ஏனோ நேற்று வரை சராசரி பெண்ணாக தெரிந்தவள் அன்று பாரதி சொன்ன புதுமை பெண் போல் புதுமையாக தெரிந்தாள்... அவளை பற்றிய எண்ணத்திலேயே சிந்தை வட்டமிட்டு கொண்டிருந்ததை எண்ணி திடுக்கிட்டவன்.... அதிலிருந்து வெளியே வர சிரத்தை உலுக்கிக் கொண்டு தன் கையில் இருந்த அலைபேசியில் பிரத்யேகமான அந்த எண்ணுக்கு தொடர்புக் கொண்டான்.

அதுவரை அவர்களை மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்த கலாதரனின் உள்ளம் குமைந்துக் கொண்டிருந்தது... அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த அர்ஜுனை நெருங்க எண்ணியவன் அவன் யாருடன் உரையாடுகிறான் என்று பேச்சின் தொனியில் அறிந்திருக்க, அப்போதைக்கு அவனுடன் பேசுவதை தவிர்த்தவன், தான் வந்த சுவடு தெரியாமல் அமைதியாக உள்ளே சென்றுவிட்டிருந்தான்.

கலாதரனின் சித்தமோ இருதலை கொல்லி எறும்பாக தவித்துக் கொண்டிருந்தது... அர்ஜுன், அரசியிடம் பேசிக் கொண்டிருந்த சாராம்சம் தன்னை பற்றி தான் என்று அவனுக்கு தெரிந்தாலும்... அவர்கள் இருந்த தூரத்தின் இடைவெளியில் பேச்சுக் குரல் செவியில் விழாமல் போகவே அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது அவனுக்கு சுத்தமாக அறிந்துக் கொள்ள முடியாமல் போனது... ஆனால் அவர்களின் ஜாடையை மட்டும் உற்று கவனித்து மேம்போக்காக கணித்தவன் தன் இறுதி முடிவை உறுதியாக பற்றிக் கொண்டான்.


**********************

சம்யுக்தா வீட்டிலிருந்து வெளியேறி அவளின் நிறுவனத்திலேயே அமைந்திருந்த விருந்தினர் அறையில் தங்க முடிவு செய்து அங்கே வந்திருந்தாள்... உடனடியாக ரோஷினி, சந்தோஷ் இருவருக்கும் அழைத்தவள் அவர்களிடம் தனக்கு தேவையானவற்றை கூறி ஏற்பாடுகளை செய்ய சொல்லி முதலில் சந்தோஷை அனுப்பி வைத்துவிட்டு, ரோஷினி புறம் திரும்பி...

“ரோஷினி என்னை பார்க்க என் வீட்டில் இருந்து யார் வந்தாலும் என் அனுமதியில்லாம அலோவ் பண்ணக்கூடாது” என்றதும் அவளின் பேச்சிலும், செயலிலும் குழப்பமுற்றாலும் அவளிடம் எதிர் கேள்வி கேட்கும் உரிமை இல்லாததால் அமைதியாக அவள் சொல்வதை ஏற்று செய்யலானாள்.

அவளும் அங்கிருந்து நகர்ந்திருக்க அடுத்து என்னவென்பதை முடிவெடுக்க எண்ணி அவர்கள் குடும்பத்துக்கு நெருங்கிய வழக்குரைஞர் அன்பழகனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள். எதிர்முனையில் அவர் இணைப்பில் வந்ததும்...

“சொல்லு சம்யுக்தா எப்படி இருக்கிற?”

“இருக்கேன் அங்கிள், நான் உங்களை பார்க்கணும்... நாளைக்கு எட்டு மணிக்கு என் கம்பெனிக்கு வர முடியுமா?” என்று வினவியதும் இவருக்கு அவளின் பேச்சு தோரணையே எதுவோ சரியில்லை என்று மனதில் பட்டிருக்க...

“என்னம்மா ஆச்சு எதுவும் முக்கியமான விஷயமா?”

“ம்ம்ம்... ஆமாம் அங்கிள், பட் போனில் பேச வேண்டிய விஷயம் இல்லை... நேரில் வாங்க” அவளின் பேச்சை புரிந்துக் கொண்டவர்...

“கண்டிப்பா வரேன்ம்மா, ஆனால் எட்டு மன்னிக்கே முடியாது... நாளைக்கு கோர்ட்ல பைலிங் வேலை இருக்கு முடிச்சுட்டு தான் வர முடியும்”

“தட்ஸ் ஒகே அங்கிள், அவசரம் இல்லை. நீங்க முடிச்சுட்டு வருவதற்கு முன்னாடி எனக்கு ஒரு கால் பண்ணிட்டு வாங்க”

“கண்டிப்பா வரேன்மா” என்றவர் யோசனையுடனே அலைபேசி இணைப்பை துண்டித்திருந்தார்.
அவரிடம் பேசிவிட்டு வைத்தவளுக்கு மனப்பாரம் மும்மடங்கு அதிகரித்திருந்தது... அதுவரை அவள் மனதில் அமைதியாக நித்திரையில் இருந்த அல்லல் சிலிர்த்துக் கொண்டு எழ, விசனம் கூடிக் கொண்டது. நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்த தன் மகளின் பால் முகத்தை பார்த்துக் கூட அவளால் துன்பத்தை மறந்து இன்பம் கொள்ள முடியவில்லை.

தன் உதிரத்தில் வளர்ந்த மகளின் முகத்தை காணக் காண அவளுக்குள் தன் கணவனின் வார்த்தைகள் தான் எதிரொலித்து கொண்டிருந்தது...

“யார் அப்பாவோ அவரிடம் நான் சொல்லணுமா மிஸ்டர். கவின்கலாதரன்?! இந்த ஒரு கேள்வி கேட்டு என் நிம்மதியை பறிச்சுகிட்ட உங்களை ஒரு நிமிஷமும் நான் நிம்மதியா இருக்க விடமாட்டேன்” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவள் தீர்மானமாக பிரதிக்ஞை செய்துக் கொண்டாள்.


**********************

அர்ஜுன் அன்று முதல் காரியமாக சம்யுக்தாவை அணுகுவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டிருந்தான்... அவன் விசாரித்துப் பார்க்க நேர்ந்ததில் அறிய வந்த விஷயம் அவனை திகைப்புக்குள் ஆக்கியது... அவள் வீட்டிலிருந்து வெளியேறிருக்கும் பட்சத்தில் அவள் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறியமுடியாது குழப்பத்தில் திண்டாடினான்.

சம்யுக்தா எங்கு சென்றாள்...! எப்படி சென்றாள்...? அவளை எப்படி அணுகுவது என்ற பல குழப்பத்தில் யோசித்து கொண்டிருந்தவனை நெருங்கிய கலாதரன்...

“டேய் நாளைக்கு ஊருக்கு கிளம்பி போகணும் அதுக்கான ஏற்பாட்டை பண்ணப் போகிறேன்... நீ என்னுடன் வரியா? இல்லை, உனக்கு வேறேதும் வேலை இருக்கா” எதுவுமே நடக்காதது போல் இயல்பாக கூறியவனை கண்டு அவனுக்கு கொலைவெறியும் பார்த்தான்.

“சரி நீ சொல்லுற மாதிரியே கிளம்பலாம்... ஆனால் அங்கே உன் வீட்டுல உன்னையும், உன் தங்கச்சியையும் வாணியையும் நீங்க செய்த காரியத்தை மன்னிச்சு ஆரத்தி எடுத்து வரவேற்பாங்களா?” என்று உள்ளார்ந்த கடுப்புடன் வினவியவனின் கோபத்தை பொருட்படுத்தாமல்...

“அதெல்லாம் அங்கே போய் பார்த்துக்க வேண்டியது தான்... எத்தனை நாளைக்கு இப்படி மறைஞ்சே வாழ முடியும்? இனி நடக்கப் போகிறதை பேஸ் பண்ணித்தான் ஆகணும்” என்றவனின் வார்த்தை அங்கிருந்த மூவருக்குமே அத்தனை உவப்பாக இருக்கவில்லை.

“எப்படி அண்ணா என்னை வீட்டில் சேர்த்துப்பாங்க? கையில் இருக்கிற என் பிள்ளையை தூக்கி குப்பை தொட்டியில் வீசிவிட்டு போய் நிற்கவா?” என்று கடுப்புடன் கேட்க...

“ஏய் யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்கிற?” என்று கரத்தை உயர்த்திக் கொண்டு சென்றவனை...

“அண்ணா” என்று உரத்த குரலில் தடுத்து நிறுத்திய அரசி...

“வாணியை கூட விடு, ஆனால் அண்ணியும், குழந்தையும் இங்கிருக்கிறாங்களே அவங்களுக்கு என்ன வழி?” சுட்டெரிக்கும் பார்வையால் அவனை பொசுக்கியப்படி அழுத்தமாக அரசி வினவ, பொங்கி எழ காத்திருந்த உணர்ச்சி பிராவகத்தை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டவன் அவளை அமர்த்தலாக பார்த்தபடி...

“அண்ணியா...? அது தான் அன்னைக்கே டிவோர்ஸ் கொடுத்தாச்சே இனி உறவும், உரிமையும் கொண்டாட என்ன இருக்கு? இப்படி கேள்வி மேல் கேள்விக் கேட்டு என்னை கடுப்படிக்காம கிளம்பற வேலைய பாருங்க, இனி என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு நகர எத்தனித்தவனை அர்ஜுன் கைபிடித்து தடுத்திருக்க அவனை முறைத்துக் கொண்டே...

“நீ வேற கடுப்படிக்காதடா விடு” என்று சீறினான்.

“சோ, அங்கிருந்து நீ கிளம்பி வந்தது உன் தங்கச்சி வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு இல்லை, பழிக்கு பழி வாங்க மட்டும் தான்... உன் தங்கச்சியை அவன் கெடுத்து ஏமாத்தின மாதிரி, நீயும் பதிலுக்கு அவன் தங்கச்சியை கெடுத்து ஏமாற்றிட்ட, இப்போ எல்லாமே சரி ஆகிருச்சு” தன் பார்வையை கூர்மையாக்கிக் கொண்டு அமர்த்தலாக வினவியவனை கண்டு சிறிதும் அசராமல்...

“அப்படித் தான் வச்சுக்கோ இப்போ அதுக்கு என்னாங்குற?” என்றவனை கொன்றுவிடும் அளவிற்கு மேலோங்கிய ஆத்திரத்தை தன் உள்ளங்கையை மடக்கி அடக்கிக் கொண்டவன்...

“சபாஷ் டா நண்பா... சபாஷ்...! இப்படி தான் இருக்கணும்... அடுத்து அவன் ஒரு பொண்டாட்டியை கட்டினா, நீயும் வேறொரு பொண்டாட்டி கட்டிக்கிட்டு சுகமா குடும்பம் நடத்துவியோ?” என்றவனின் நக்கலான கேள்வியில் வெகுண்டு சட்டையை கொத்தாக பற்றியிருந்தான்... இருவரின் பார்வையும் யுத்ததிற்கு தயாரானதை உணர்த்த, அதை தடுக்கும் பொருட்டு அரசி இடை புகுந்தவள்...

“உண்மையை சொன்னா கோபம் வரும்னு கூட சொல்வாங்க” என்றதும் புருவங்களை தாழ்த்தி நெற்றியை சுருக்கி தன் கோபத்தை வெளிப்படுத்த, வாணியும் தன் பங்கிற்கு இடைப்புகுந்தவள்...

“அண்ணா அங்கிருக்கிறது உங்க மனைவியும், குழந்தையும்... என் வாழ்க்கைக்கு நியாயம் கிடைக்கலைங்கிறதுக்காக இப்படி தெரிஞ்சே உன் வாழ்க்கையை அழிச்சுக்க நாங்க விடமாட்டோம்”

“சும்மா பழி வாங்கியாச்சு போகலாம்ன்னு சொல்றியே... நீயே அண்ணியை காதலிச்சு கல்யாணம் செய்து ஒரு உயிரை கொடுத்திருக்க, உனக்கு கொஞ்சம் கூடவா அந்த காதல் இல்லை” என்று வினவிய அரசியின் வார்த்தை மனதை உலுக்க, முகத்தின் தசைகளை அணிச்சையாக அசைத்து உணர்ச்சிகளை மறைக்க போராடியதை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு பார்வையால் அதை பகிர்ந்து கொண்டனர் அரசி, அர்ஜுன் இருவரும். நொடிக்குள் தன்னை சுதாரித்தும் கொண்டவன் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கூர்மையாக பார்த்தபடி...
“இல்லை” என்று கல்லை போன்று கடினத்துடன் கூறியிருக்க, வாணி பொறுமையை இழந்தவளாக சடுதியில் அந்த காரியத்தை செய்திருக்க, தரன் திக்பிரமை பிடித்து நின்றிருந்தான்!

சுவடுகள் தொடரும்.....


**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-7 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
https://www.srikalatamilnovel.com/community/threads/காருராமின்-அன்புக்கு-நீ-அரிச்சுவடி-பாகம்-1-கருத்துத்-திரி.3164/
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-8
தன் தமையன் மனதறிய கூறிய பொய்யை கண்டு ஆவேசத்துடன் கொந்தளித்த வாணி தன் குழந்தையை அவன் காலடியில் வீழ்த்தி... “இந்த குழந்தையை தாண்டி சத்தியம் பண்ணிச் சொல்லு... நீ சம்யுக்தா அண்ணியை மனதார காதலிக்கலைன்னு... அப்போ நாங்க நம்புறோம்” என்று கூறியிருக்க, எதிர்பாராத அவளின் செயலில் விதிர் விதிர்த்து நின்றான்.

அவனின் அந்த நிலையை கண்டு பச்சாதாபம் எழுந்த போதிலும், அவனிடம் உண்மையை வரவழைக்க வேண்டி தங்களை கட்டுப்படுத்தி கொண்டனர்.

“என்ன அண்ணா திகைச்சு போய் நின்னுட்ட? ஒரு வேளை நீ சொன்னது உனக்கே மறந்திருச்சா? அப்படின்னா ஒன்னும் பிரச்சனை இல்லை... எங்ககிட்ட சொன்னது உண்மைன்னு சொல்லி குழந்தையை மட்டும் தாண்டிப் போ அது போதும்” என்றவளை சரேலென்று விழிகள் தெறிக்க பார்த்தவன் வெடுக்கென்று குழந்தையை கைகளில் ஏந்தியதில் குழந்தை அழுகையில் வீறிட்டது.

“உங்களுக்கெல்லாம் பைத்தியமா பிடித்திருக்கு? ஒரு குழந்தையை வைத்தா ஒரு உண்மையை நிருபிக்கணும்?” என்று கடிந்த பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பியவன், தங்கையின் கரத்தில் வலுகட்டாயமாக குழந்தையை திணித்துவிட்டு...

“என்னை அசைத்துப் பார்த்து உங்க பிடிக்கு வளைத்து விடலாம்ன்னு மட்டும் ஒரு நாளும் தப்பு கணக்கு போட்டுவிடாதீங்க... நான் நானாக தான் இருப்பேன் யாருக்காகவும் மாற்றிக்கமாட்டேன்” கறாராக கூறிவிட்டு ஆவேசத்துடன் அறைக்குள் புகுந்தவன் அறையின் கதவை அறைந்து சாத்திவிட்டிருந்தான்!

அவனின் அந்த செயல் அவன் மனதையும் உணர்த்தியிருக்க அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.

“அண்ணா இப்போ என்ன செய்கிறது? பார்த்தீங்களா அவர் பேசிட்டு போகிறதை?” என்று வாணி கண்ணீருடன் அர்ஜுனிடம் கூறியபடி வருந்த அவளை ஆறுதலாக பார்த்தவன்...

“நீங்க ரெண்டு பேரும் உங்க அண்ணியை போய் பார்த்து பேசிட்டு வாங்க... உங்க அண்ணனை அடக்க அவங்க ஒருத்தரால் தான் முடியும்?”

“எப்படி சொல்றீங்க? இது நிச்சயம் சாத்தியமில்லை... அவர் அவ்ளோ சீக்கிரம் அசைந்து கொடுக்கிற ஆள் இல்லை... இப்போ நாங்க போய் பார்த்து பேசுறதால் அண்ணிக்கு கூட பிரச்சனை ஆகலாம்” என்ற அரசியை ஆதுரத்துடன் பார்த்தவன்...

“அரசி நான் நேற்று தான் உன்கிட்ட ஒரு ஒப்புதல் வாங்கினேன் நியாபகம் இருக்கா?” என்று கேட்க அவன் எதைக் கூறுகிறான் என்று நினைவு கூர்ந்தவள்...

“ம்ம்ம்... நினைவிருக்கு” என்று பதிலளித்தாள்.

“அப்போ நான் சொல்லுறது போல் ரெண்டு பேரும் செய்யுங்க... சம்யுக்தாவும் உங்க அண்ணனை போல அழுத்தமான பொண்ணு தான்... நேற்று அவள் வீட்டை விட்டு வெளியேறி வந்திருக்கா” என்றவனின் கூற்றை கேட்டு திகைத்தனர்.

“என்ன சொல்றீங்க அண்ணா... அண்ணி ஏன் வெளியேறினாங்க?” என்று வாணி தான் அதில் பொதிந்திருக்கும் பின்னணியை அறிய தாங்காது வினவியிருந்தாள்.

“ஏன்னு நிச்சயமா தெரியலைன்னாலும் என் யூகத்தின் படி அவங்க வீட்டில் சம்யுக்தா உனக்கு ஆதரவா பேசி இருக்கணும், அதுக்கு அவங்க எதிர்ப்பு தெரிவிச்சிருக்கணும்... ஆனால் அதை பற்றிய புலன் விசாரணையை நான் பார்த்துக்கிறேன்... இப்போ நீங்க செய்ய வேண்டியது உங்க அண்ணியை பார்த்து பேசுறது தான்”

“அதுக்கு அவங்க ஒத்துக்குவாங்களா?”

“கஷ்டம் தான் ஆனால், உங்க அண்ணியை வளைத்து வழிக்கு கொண்டு வந்தா தான் இங்க உங்க அண்ணனை அசைத்து பார்க்க முடியும்... இல்லைன்னா, இந்த கல்லுளிமங்கனை நம்மளால் ஒன்னும் செய்ய முடியாது” அவனின் கூற்றில் இருந்த நிதர்சனத்தை புரிந்துக் கொண்ட அரசி, வாணி இருவரும் அவன் கூறியபடி சம்யுக்தாவை காணச் சென்றனர்.

“வாணி நீ குழந்தையை ரெடி பண்ணி, நீயும் ரெடி ஆகி வா... நான் குழந்தைக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கிறேன்” என்று அரசி கூற, அதன்படியே தயாராகிவிட்டு வந்து நின்றவர்கள் அர்ஜுனுக்காக காத்திருந்தார்கள்.

அர்ஜுன் அவர்கள் முன்பு வந்தவன்... “லூனா பேஷன் ஜோன் தான் உங்க அண்ணியோட கம்பெனி... ரெண்டு பேரும் போக கேப் புக் பண்றேன்... ரோஷினி என்கிறவங்க தான் உங்க அண்ணியோட பர்சனல் செக்ரட்டரி, நீங்க அவங்களை பார்த்து பேசுங்க” என்றவனின் சொல்லில் அவன் அவர்களுடன் வருவதாக இல்லை என்பது தெளிவாக புரிய...

“நீங்க வரலையா அண்ணா... எங்களுக்கு பயமா இருக்கு, நீங்களும் வாங்களேன்” என்று வாணி தான் தவிப்புடன் அழைத்திருந்தாள்.

“ம்ஹும்... நான் இப்போ உங்களுடன் வருவது அத்தனை நல்லதல்ல மொத்த காரியமும் ஃபிளாப் ஆகிரும்... நீங்கள் முதலில் போய் பார்த்து பேசிட்டு வாங்க... இங்கே உங்க அண்ணனை தனியா விடுவதும் சரியில்லை... அவன் நம்ம திட்டத்துக்கு எதிரா எதுவும் சதிராடவும் வாய்ப்பிருக்கு, நானும் உங்க கூட வந்துட்டேன்னா அவனுக்கு நாமளே வழி வகை செய்துக் கொடுத்த மாதிரி இருக்கும்”

“அதெல்லாம் சரி தான் அண்ணா... ஆனால் கொஞ்சம் பயமா இருக்கு அதான்” என்று வாணி தயக்கத்தினூடே இழுக்க...

“பயம் எதுக்கு? அவளும் பொண்ணு தான் அப்படி ஒன்னும் உங்களை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளி விடமாட்டா, அவங்க உன் அண்ணி அதை மனதில் வைத்துக்கிட்டு தைரியமா போங்க” என்று அவர்களை ஒரு வழியாக உசுப்பேற்றி விட, அரசி வரவழைத்துக் கொண்ட துணிச்சலுடன் நிமிர்ந்தவள்...

“வாணி அவர் சொல்வதும் சரி தான், முதலில் நாம போய் பேசி பார்ப்போம் நானிருக்கிறேன் வா” என்றவள் மனதின் உறுதியுடன் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
அரசியின் நிமிர்வும், அவளின் துணிச்சலும் அவனுக்குள் அவள் மேல் நன்மதிப்பை விளைவித்திருந்தது... அவர்களை அனுப்பி வைத்தவன் அலைபேசியில் முக்கிய நபருக்கு தகவல் அளித்துவிட்டு கலாதரனை காணச் சென்றான்.


**********************

லூனா பேஷன் ஜோன் என்ற பெயர் பலகை அடங்கிய நிறுவனத்தின் முன் வாகனத்தில் இருந்து இறங்கிய இருவரும் அந்த நிறுவனத்தின் கட்டிடத்தின் அழகை கண்டு அயர்ந்து நின்றுவிட்டனர்... அதை விடவும் பல நிறுவனங்கள் கட்டிடத்தின் தோற்றத்தில் பிரம்மாண்டமாக இருந்தாலும், அவர்களாக வெளியுலகில் ஒன்றை காண்பது அதுவும் அவர்களின் உறவு முறையில் எனும் போது தான் வியப்பில் ஆழ்ந்துவிட்டிருந்தனர்.

அரசியுடன் வந்த வாணிக்கு அதுவரை மறைந்திருந்த கிலி தலை தூக்கியதில் உடல் நடுக்கத்தில் வெடவெடுக்க அவள் கரத்தை இறுக பற்றிக் கொண்டவள்... “அரசிக்கா இதெல்லாம் சரி வருமா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு, நாம பேசாம கையில் காலில் விழுந்தாவது நம்ம அண்ணன்கிட்டேயே பேசிவிடலாம்னு தோணுதுக்கா” என்று பதைப்பில் கூறியவளிடம்...

“ம்ச்... வாணி தயவு செய்து உன் பயத்தை மூட்டை கட்டி வச்சுட்டு வா... சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்ன்னு பழமொழியே இருக்கு... அர்ஜுன் சார் சொன்ன மாதிரி நாம முதலில் அண்ணியை சரி கட்டுவது தான் புத்திசாலித்தனம்... நீ என் கூட மட்டும் இரு மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்று அவளுக்கு தைரியமூட்டி அழைத்துச் சென்றிருந்தாள்.

வரவேற்பறைக்குள் நுழைந்ததும் தான் அரசிக்கும் லேசான பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டிருக்க, சில கணங்கள் ஆழ மூச்செடுத்துக் கொண்டு நின்றிருந்தவள் பின்பு, வரவழைத்துக் கொண்ட துணிச்சலுடன் வரவேற்பு பெண்ணை அணுகி தங்களின் பெயரை கூறி சம்யுக்தாவை காண அனுமதி கோரினாள்... அதற்கு வரவேற்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணோ...

“நீங்க மேடமை எதுக்காக பார்க்கணும் சொல்ல முடியுமா?” என்றவளின் கேள்விக்கு அச்சத்தில் வாணி அரசியின் கையை இறுக பற்றியிருக்க அவளின் கரத்தை லேசாக தட்டிக் கொடுத்தவள்...

“நாங்க அவங்களுக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு மட்டும் சொல்லுங்க” என்று குறிப்பிட்டிருக்க...

“சரி அது தான் வெயிடிங் ஹால் அங்க வெயிட் பண்ணுங்க” என்று அவர்களுக்கு வழிகாட்டி அமரச் செய்தனர்.

“அரசிக்கா அவங்க நம்மளை பார்க்க அனுமதிக்க மாட்டங்கன்னு தான் தோணுது”

“இருக்கட்டும்! ஆனால், நாமளும் இன்னைக்கு பார்த்து பேசாம நகரப் போவதில்லை” என்றவளின் வார்த்தையில் இரும்பின் உறுதி நிலைபெற்றிருந்தது.

சம்யுக்தா தன் அழுவலக அறையிலேயே குழந்தைக்கான தொட்டிலை அமைத்து அங்கேயே வைத்து பார்த்துக் கொண்ட படி தன் பணியில் ஆழ்ந்திருக்க, ரோஷினி அவளை நெருங்கியவள்...

“மேடம் உங்களை பார்க்க கலைவாணி, கலையரசின்னு ரெண்டு பேர் வந்திருக்கிறாங்க” என்றதும் கண்காணிப்பு கேமராவுக்கு இணைத்திருந்த கணினியை நோக்கியவள், அங்கே காத்திருப்பு அறையில் இருந்த வாணி, அரசி இருவரையும் கண்டு சுர்ரென்று சினமெழ...

“அதெல்லாம் யாரையும் இன்னைக்கு பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க... இப்படி திரும்பத் திரும்ப என்கிட்டே கேட்டுட்டு வந்து நிற்க வேண்டாம்” என்று எரிந்து விழுந்ததில் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேறியவள் வரவேற்பில் கூறி அவர்களை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க கூறினாள்...
வரவேற்பு பணிப்பெண் அவர்கள் அமர்ந்திருந்த விருந்தினர் காத்திருப்பு அறைக்கு சென்று...

“சாரி... மேடம் உங்களை பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க நீங்க கிளம்பலாம்” என்றதும் வாணிக்கு கலக்கத்தில் வியர்க்க ஆரம்பித்தது, ஆனால் சிறிதும் நம்பிக்கையை விடாமல் பற்றிக் கொண்டவள்...

“இல்லை நாங்க எவ்ளோ நேரம் ஆனாலும் இங்கே காத்திருக்கிறோம்... அவங்க எப்போ மனசு வைத்து கூப்பிடுறாங்களோ கூப்பிட்டும்” என்று பிடிவாதமாக கூறிவிட்டிருக்க, அவளும் அவர்கள் கூறியதை அப்படியே ரோஷிணியிடம் தெரிவித்தாள்...

“என்ன கிளம்ப முடியாதாம்? விட்டுவிடு அவங்களே சலித்துப் போனா எழுந்து போயிருவாங்க”

“எதுக்கும் மேடம்கிட்டே ஒருவார்த்தை சொல்லிடுறது சரின்னுப்படுது ரோஷினி” என்று தன் அபிப்ராயத்தை கூறியிருக்க, அதில் எரிச்சலுற்ற ரோஷினி...

“இங்கே பாரு மேடம் அப்போவே கடிச்சு விட்டுட்டாங்க... திரும்ப இதை கொண்டு போனா அப்புறம் ஈவ்னிங் வரைக்கும் எனக்கு தான் கச்சேரி வைப்பாங்க... பேசாம விடு அவங்களே போயிருவாங்க” என்றுவிட்டு அலைபேசியை துண்டித்துவிட்டு அடுத்த பணியை காணச் சென்றிருந்தாள். சம்யுக்தா அதற்கு மேல் அவர்களுக்கோ, அவர்களின் விஷயத்திற்கோ அதிக முக்கியத்துவம் அளிக்காமல் தன் வேலையில் சிரத்தையுடன் ஆழ்ந்துவிட்டாள்.

அரசி இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று தெரிந்துதான் முன்னேற்பாடாக குழந்தைக்கு தேவையானவற்றையும், தாய்ப்பால் கொடுக்கும் கலைவாணிக்கு தேவையான ஆகரமும் தயார் செய்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அங்கே காத்திருப்பு அறையிலேயே மாலை வரை அமர்ந்தவர்களை ஏனென்று ஒருவரும் கேட்காமல் இருந்தது அவர்களுக்கு சற்று நிம்மதியாக தான் போனது... ஏதோ இந்த வரையில் அடித்து துரத்தவில்லை என்று தேற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மாலையில் பணி முடிந்த ஊழியர்கள் அவரவர்கள் இடத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க, அறையே வெறிச்சோடி காணப்பட்டது... வாணிக்கு அதில் வெகுவாக பயம் பிடித்து கொண்டிருக்க, அதை அரசியிடம் தெரிவித்தாள்...

“அரசிக்கா எனக்கு ரொம்ப பயமா இருக்கு... இங்கே நாம மட்டும் தான் இருக்கிறோம் போல, இதுக்கு மேல அண்ணி நம்மளை பார்ப்பாங்கன்னு எனக்கு தோணலைக்கா” என்று அவ நம்பிக்கையுடன் கூறியவளை சிறிதும் சட்டை செய்யாமல்...

“எனக்கு நம்பிக்கை இருக்கு வாணி... நிச்சயம் நம்மளை கூப்பிடுவங்க பாரு” என்றவளின் உறுதி மெய்ப்பித்தது.
அழுவலக பணிகள் நிறைவடைந்து முடிந்ததும் சம்யுக்தா அயர்ச்சியுடன் கரங்களை கோர்த்து உயர்த்தி நெட்டி முறித்தவள், எப்போதும் போல் இறுதியாக ஒருமுறை நோட்டம் பார்த்துவிட்டு கிளம்ப எத்தனிக்க இருந்தவளை அவளின் மகள் “ங்கா... ங்கா...” அழுகுரலில் சிணுங்கி அழைக்க...

“செல்லகுட்டி அம்மா வந்துட்டேன்” என்று மகளை கொஞ்சியபடி தொட்டிலில் இருந்து தூக்கிக் கொண்டு திரும்பியவளின் விழிகளில் கண்காணிப்பு கணினித் திரையில் வாணி, அரசி இருவரும் அவர்களுடன் குழந்தையும் இருந்ததை கண்டு திகைத்துப் போனவள்.

“ரோஷினி!” என்று உரத்த குரலில் அழைத்திருந்தாள்.

“மேடம்” என்று அவள் முன்பு வந்ததும்...

“அவங்க ரெண்டு பேரும் இன்னும் போகலையா?” என்று கணினித் திரையை காட்டி விசாரிக்க...

“இல்லை மேடம்! காலையில் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன், உங்களை பார்க்காம போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க மேடம்”

“யூ பிளடி அதை ஏன் என்கிட்டே சொல்லலை” என்று உச்சஸ்தாயில் கத்தியவளின் சுரத்தில் நடுங்கிய ரோஷினி...

“இல்லை மேடம் நீங்க தான்...” என்று பயத்தில் திக்கியவளை...

“ஷட்டப்...!” என்று வெட்டியவள்...

“போய் அவங்களை கெஸ்ட் ரூமுக்கு அனுப்பிட்டு குடிக்க ஜூஸ் கொண்டு வாங்க” என்று அதிகாரத்துடன் உத்தரவிட...

“ஒகே மேடம்” என்றபடி அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
ரோஷினி துரிதமாக நடைப்போட்டு அவர்கள் இருந்த அறையை அடைந்தவள்... “உங்களை மேடம் கூப்பிட்டாங்க” என்றதும் தான் தாமதம்...

“நான் சொன்னேன்ல வா போவோம்” என்று உற்சாகத்துடன் கூறிய அரசியின் முகத்தில் ஒளிர்வு மின்னியது.

“மேடம் உங்களை கெஸ்ட் ரூம்க்கு வர சொன்னாங்க நேரா போய் ரைட் திரும்புங்க” என்று அவர்களுக்கு வழி காட்டிவிட்டு அவள் உத்தரவிட்ட பழச்சாரை கொண்டு வர சென்றிருந்தாள்.
இருவரும் ரோஷினி கூறிய இடம் சென்றிருக்க, தயக்கத்தில் கைகளை பிசைந்தபடி நின்றிருந்த இருவரையும் கண்ட சந்தோஷ்..

“உள்ளே போய் வெயிட் பண்ணுங்க மேடம் வந்துவிடுவாங்க” என்றதும் உள்ளே சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்.
சம்யுக்தா தீவிரமாக சந்தோஷிடம் ஏதோ கூறியபடி வந்தவள் அறைக்குள் புகும் முன்...

“நான் சொன்னதெல்லாம் சரியா இருக்கான்னு ஒருமுறைக்கு ரெண்டு தடவை செக் பண்ணிக்கோங்க” என்று விட்டு உள்ளே செல்ல அவளை கண்ட வாணியும், அரசியும் மரியாதையின் பொருட்டு எழுந்து நின்றிருந்தனர்... அவளோ அவர்களை சிறிதும் கண்டு கொண்டது போல் காட்டிக் கொள்ளவில்லை.

இருவரும் அதை உணர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பீதியுடன் பார்த்துக் கொண்டனர்... சம்யுக்தா குழந்தையை கவனித்துக் கொண்டிருக்கும் சமயம் ரோஷினி உள்ளே நுழைந்திருக்க...

“அதை அவர்களிடம் கொடு” என்று ஏவியதும்...
ரோஷினி அவர்களிடம் நீட்டியிருக்க... “இல்லை வேண்டாம்” என்று வாணி, அரசி இருவரும் ஒருசேர மறுத்தனர்.

“ஏன் வேண்டாம்...? என் ஆபிசில் வந்து ரெண்டு பேரும் உண்ணாவிரதம் இருந்தா சாமி அருள் கொடுக்கிறதா சொல்லுச்சா?” என்று இடக்காக வினவியவளை கண்டு, என்ன பதில் கூறுவதென்று தெரியாது விழித்திருக்க நொடிக்குள் சுதாரித்து கொண்ட அரசி..

“இல்லை அண்ணி! நாங்க உங்ககிட்ட பேசத் தான் வந்தோம் பேசிட்டு கிளம்பிடுறோம் எதுவும் வேண்டாம்” என்றவளை கூர்மையாக பார்த்தவள்...

“என்னுடன் பேசணும்னா முதலில் இதை குடித்து தான் ஆகணும்... அப்படி முடியாதுன்னா கிளம்பலாம்” நறுக்குத் தெரித்தார் போன்று கூறியதில் இருவரும் பழச்சாரை பெற்று ஒரே முடக்கில் குடித்துவிட்டிருந்தனர்... அவர்களின் செயலை கண்டு மிகவும் மெலிதாக முறுவளித்தவளை கண்டு அர்ஜுனின் கூற்று எத்தனை உண்மை என்பதை கண்ணாரக் கண்டனர்.

கணங்கள் கரைய மௌனமே உருவாக அமர்ந்து நேரத்தை கடக்க சம்யுக்தா தான் ஆரம்பித்திருந்தாள்... “சொல்லுங்க எதுக்காக என்னை பார்க்கணும்னு வந்தீங்க?”

“அண்ணி...” என்று ஆரம்பித்தவளை ஒற்றை கரம் உயர்த்தி தடுத்தவள்...

“இந்த உறவு முறை எல்லாம் வேண்டாம் நேரடியா விஷயத்திற்கு வாங்க” கண்டிப்புடன் அழுத்தமாக பிரஸ்தாபித்தவளை இருவரும் சரமற்ற பார்வையால் அவளை வருடினர்.

“நீங்கள் சொல்லுற மாதிரி எங்களுடைய உறவு முறை வேண்டாம் தான்...” என்றவளை அமர்த்தலாக பார்த்திருந்தவளை தொடர்ந்து...

“ஆனால் ரத்தத்தின் தொடர்பை அறுக்க வேண்டாமே” என்றதும் விழிகளை பக்கவாட்டி கோணத்தில் உயர்த்தி கவனமாக பார்த்திருந்தாள்.

அரசியின் அந்த மறைமுக குறிப்பை உணர முடியாதவளா அவள்... நேரடியாக கூறாமல் அவள் கூறிய சாதுர்யத்தை எண்ணி மனதிற்குள் மெச்சிக் கொண்டாலும், அதை தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஒரு வித இறுக்கத்துடனே அவர்களை எதிர்கொண்டாள்.

“அண்ணி...!! இந்த உறவை அத்துவிட்டு பேசுறது இப்போ சுலபமா இருக்கலாம்... ஆனால் எப்போதும் அப்படி இருக்காதே... நீங்கள் விரும்புறீங்களோ இல்லையோ, எங்களால் உங்களை உறவு முறையில்லாமல் கூப்பிட முடியாது... ப்ளீஸ்! அதற்கு மட்டும் அனுமதி கொடுங்க” என்று கரம் கூப்பியவளை கண்டு உணர்ச்சி வெளிப்பாடில்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்... அவளின் மௌனத்தையே சம்மதமாக கொண்ட அரசி பேச ஆரம்பித்தாள்.

“முதலில் என்னை மன்னிச்சிருங்க அண்ணி... உங்களுடைய இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம்” என்றவளின் வார்த்தை புதிராக இருக்க விழிகளை சுழற்றினாள்... அதை கவனித்தவள் அவள் பேச்சை நிராகரிக்கும் முன் வேகமாக கலைவாணியின் காதலையும் அதை அவள் சமயத்தில் மறைத்ததையும் பிரஸ்தாபித்தவள்...

“அன்னைக்கே சுதாரித்திருந்தா இன்னைக்கு இந்த நிலைமைக்கு காரணம் இல்லை தானே” என்றவளின் கூற்று அவளுக்கு முரண்பாடாக பட்டது... பின்னே தவறு செய்தது இருவரின் பக்கமும் இருக்கிற வீட்டு ஆண்கள், ஆனால் பழியை ஏற்பது தவறே இழைக்காத பெண்ணான அவளா என்று எண்ணியவள்...

“எந்த காரணத்திற்காகவும் உங்க அண்ணனுக்கு பரிந்துரைத்துட்டு பேச வேண்டாம் மிஸ்.கலையரசி” என்றவளை தொடர்ந்து...

“இல்லை அண்ணி... உங்க விஷயத்தை பொறுத்த வரைக்கும் நாங்க எப்பவும் எங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணமாட்டோம்... இது என் குழந்தை மேல சத்தியம்” என்று வாணி நிர்தாட்சண்யமாக பிரமாணம் செய்தவளை கூர்மையாக அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணி பொண்ணா நாம ரெண்டு பெரும் ஒரே இனம் தான்... நமக்கு ஏற்பட்ட நிலைமையும் ஒன்று தான்... ஆனால் இதில் நமக்கான சூழ்நிலையும், உணர்ச்சிகளும் தான் வேறு... நீங்க ஒரு நல்ல அந்தஸ்துல இருக்கிற தொழிலதிபர்... நானோ சாதாரண பாமரப் பெண்... உங்க குடும்பத்தை உங்க அதிகாரத்தால் நீங்க அடக்கலாம், இல்லைன்னா; அவங்களை தூக்கியெறிஞ்சுட்டு போய் தனியா தலை நிமிர்ந்து வாழவும் முடியும்... அந்த துணிச்சலும், தைரியமும், வழியும் உங்ககிட்ட இருக்கு இல்லைனாலும் ஏற்படுத்திக்க முடியும்”

“ஆனால்... ஆனால்... என் நிலைமை” என்றவள் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ளும் முயற்சி எல்லை மீறவே மனபாரத்தின் அழுத்தத்தில் கேவினாள்.

“என்னை எங்க வீட்ல கொன்னே போட்டிருவாங்க அண்ணி... ஏதோ அண்ணன் இருக்கப் போய் நான் இப்போ உயிரோட இருக்கிறேன்... இல்லைனா, என் கதி இந்நேரம்..... நான் செத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்” என்ரு கூறிய வாணியின் கண்களில் நீர்மணி முத்துக்கள் திரண்டு கன்னத்தில் உருண்டோடியது.

“அண்ணனுக்கு நான் செய்த செயலை அவரும் திருப்பி செய்து வீட்டில் நின்னா அவரை குடும்பத்தோட வாரிசுக்காக ஏற்றுக்குவாங்க, அதை சக்கா வைத்து என்னையும் அவங்களை ஏத்துக்க வைக்கலாம்னு தான் இப்படி எல்லாம் பண்ணிட்டாரு போல அண்ணி” என்று தன் துக்கத்தை கட்டுப்படுத்த இயலாது விசும்பலானாள்.

அவளின் அழுகையை கண்டு சகிக்காமல்... “போதும் அழுதது இப்படி எதுக்கெடுத்தாலும் அழுதா பிரச்சனை சரியாகிருமா என்ன?” என்று அதட்டல் விடுக்க அழுகையை வழுக்கட்டாயமாக நிறுத்தி விட்டு விழியுயர்த்தி பார்த்தவளை கண்டு...

“நீங்க வந்த விஷயம் பேசியாச்சுன்னா கிளம்பலாம்” என்று முகத்தில் அறைந்தது போன்று கூறியிருக்க, இருவருக்கும் பகீர் என்றது.

“அண்ணி ப்ளீஸ்! நாங்க வந்த விஷயம் இதுக்காக இல்லை” என்ற அரசிக்கு அடுத்த வார்த்தை கூறுவதில் பெரும் தயக்கம் எழுந்தது, ஆனாலும் அவள் தமையனின் வாழ்க்கை அதில் அடங்கியிருப்பதை முன்னிறுத்தி தன்னை தேற்றிக் கொண்டவள்...

“உங்களுக்கு இது பிடிக்காதுன்னு தெரியும் ஆனாலும் எங்களால் அதை சொல்லாம இருக்க முடியலை... நீங்க அண்ணன் கொடுத்த விவாகரத்தை பெரியதாக எடுக்க வேண்டாம்... என் அண்ணனுக்காகன்னு நிச்சயம் கேட்கமாட்டேன்... எங்களுக்காக நீங்க எங்களுடன் வாங்க அண்ணி... நீங்க இருந்தா கூட வாணியை வீட்டில் தங்க வைத்துக்கலாம்” என்றவளையே உணர்ச்சித் துடைத்த முகத்துடன் அமர்த்தலாக பார்த்திருந்த சம்யுக்தாவிடம் மேலும் தொடர்ந்து...

“இதை நீங்க எங்க சுயநலமா கூட நினைக்கலாம் தவறில்லை... ஆனால் ஒரு உண்மையை நாங்க சொல்லியே ஆகணும்... அன்னைக்கு ஒரு நாள் உங்களுக்கு தெரியாத நம்பர்ல இருந்து கால் பண்ணினது நான் தான்... அதில் நான் சொன்னது அத்தனையும் உண்மை தான்... கவினா என் அண்ணன் உங்களை உண்மையா உயிரா விரும்பினாரு அது உண்மை!” என்றவளை உதட்டின் ஓரம் ஏளன வளைவுடன் நோக்கியவளின் பிரதிபலிப்பு அவளின் நம்பாத தன்மையை காட்டியிருந்தது.

“உண்மை, உயிர் எதுகை மோனையில் சொல்ல நல்லா இருக்கேன்னு சொல்றியா மிஸ்.கலையரசி?” என்றவளின் பேச்சிற்கு பதில் கூற முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க இருவருமே உதட்டை கடித்து கொண்டனர்.

“காதலுக்கும், காமத்துக்கு மட்டும் தான் இடைவெளி இருக்கு... ஆனால் காதலுக்கும், நம்பிக்கைக்கும் நூலிழை இடைவெளி கூட இருக்கக்கூடாது... அப்படி இருந்தால் எந்நேரமும் அவங்க வாழ்க்கை விரிசல் ஏற்படலாம், அது பூகம்பமா கூட மாறலாம்.”

“உங்களுக்கும், உங்க அண்ணனுக்கும் உள்ள உறவுக்கு எப்படி விளக்கம் தேவையில்லையோ, அப்படிதான் என் காதலுக்கும், கவினுக்கும் உள்ள உறவு... இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையும் கானல் நீர்... இதை பற்றி உங்ககிட்ட விவாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இப்போதைக்கு இல்லை... அதனால் வேறு விஷயம் எதுவும் இல்லைன்னா நீங்க கிளம்பலாம்” முகஸ்துதியாக கூட அல்லாமல் கட்டளையாக கூறியிருக்க... அவர்களால் அதற்கு மேல் பேச இயலாமல் போக ஒருவரும் ஒரே சமயத்தில் எழுந்து சென்றிருந்தனர்.

அவர்கள் சென்ற பின்பும் அரசி கூறிய வார்த்தைகள் அவள் மூலையில் அவ்வப்போது ரிங்காரமிட்டு கொண்டே தான் இருந்தது... மகளின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் கரைந்தவளுக்கு அவள் நாயகனின் எண்ணங்கள் புடைசுழ்ந்து கரையானாய் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உறுப்பேற்றுக் கொண்டவளுக்கு விழிகளில் தீட்சண்யம் மின்னியது.


**********************

வாணி, அரசி இருவரும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்ததும் வரவேற்பறையிலேயே உக்கிர மூர்த்தியாக அமர்ந்திருந்த கலாதரனை கண்டு திகைத்து திணறிய இருவரும் அச்சத்தில் முகம் வெளுக்க நின்றிருந்தார்கள்.

சுவடுகள் தொடரும்....


**********************************

வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-8 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-9
தங்கைகள் இருவரையும் கடுமையாக முறைத்த வண்ணம் அமர்ந்திருந்த கலாதரன்... “மேடம் ரெண்டு பேரும் எங்க போயிட்டு வரீங்க?” என்று நக்கலாக வினவியிருந்தான்... அதில் மேலும் கலவரம் அடைந்த அரசி பார்வை அர்ஜுனிடம்... ‘ப்ளீஸ் காப்பாற்றுங்க’ என்று விழிகளால் அவனிடம் யாசிக்க... அவனும் பதிலுக்கு விழிகளை மூடித் திறந்து ‘சரி...’ என்பதாக சமிக்ஞை காட்டியவன் சொன்னது போன்று தன் நண்பன் புறம் திரும்பி...

“டேய் தரன் அவங்க இப்போ தானே வந்திருக்காங்க... முதல்ல ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரட்டும் குழந்தையை சுமந்துகிட்டு வாணி ரொம்ப நேரமா நிற்கிறா பாரு” என்றவன்...

“நீங்க ரெண்டு பேரும் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்கம்மா” என்று விட்டு கண்களால் செல் என்பது போல் குறிப்பு காட்டியதும் நகர்ந்தவர்களை...

“நில்” என்று உரத்த குரலில் அதட்டி அவர்களை நிறுத்திய தரன், அர்ஜுனை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தான். அதற்கெல்லாம் சிறிதும் அசைந்திறாதவன்...

“நீங்க போங்க சொன்னேன்ல” என்று கூற, சீறிப்பாய்ந்த வேகத்துடன் அவன் கரத்தை இழுத்து...

“நீ யாருடா என் தங்கச்சிங்களுக்கும் எனக்கும் இடையில் வர?” என்று முகத்தில் அறைந்தது போன்ற கேள்வியில் அரசி, வாணி இருவரும் இடி தாங்கியது போல் அதிர்ச்சியில் விழிகள் விரிய உறைந்தனர்.

அர்ஜுனின் முகமோ உணர்ச்சி துடைக்கப்பட்டு கல்லை போன்று இறுகி இருக்க, அவன் கரத்தை வெடுக்கென்று தட்டிவிட்டவன்...

“ரொம்ப நன்றி நண்பனே!” என்று கரம் கூப்பி விரக்தியுடன் கூறிவிட்டு விருட்டென்று நகர்ந்துவிட்டிருந்தான். அவன் நகர்ந்ததும் அதிர்ச்சியில் இருந்து மீண்ட அரசி ஆவேசத்துடன் நெருங்கியவள்...

“அண்ணா உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... அவர் யாரோவா உனக்கு... உனக்கு மனசாட்சியே இல்லையா?” என்று அரசி சீற்றத்துடன் சிடுசிடுத்ததில் கடுப்படைந்தவன் அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டிருந்தான்.

“என்னை எதிர்த்து கேள்வி கேட்டுட்டு இருக்கிற...? உங்களை தொலைச்சுருவேன் பார்த்துக்கோங்க... யாரை கேட்டு அவளை பார்க்க போனீங்க?” என்றவனை அரசி அடிவாங்கிய கலக்கத்துடன் அமைதியாக நின்றிருந்தாள் என்றால், வாணி அவனை பீதியுடன் பார்த்தபடி விதிர்ப்புடன் நின்றிருந்தாள்.

“அவளை தேடிப் போனீங்களே எப்படி, அம்மணி உங்களை வரவேற்று நல்லா உபசரணை செய்து அனுப்பிட்டாங்களா?” என்று இகழ்ச்சியாக வினவியிருந்தான்.
அவன் நக்கலில் அடங்கியிருந்த சினத்தை உணர்ந்த இருவருக்கும் கிலியில் முதுகுத்தண்டு சில்லிட்டது.

“...........” அவர்களின் அச்சமோ, பதற்றமோ எதிலும் அவன் தணிந்து போவதாக இல்லை என்பதை அவனின் அடுத்த கேள்வி உணர்த்தியது.

“அவளுடைய உபசரணை மழையில் நனைந்து போனதால் தான் நீங்களும் பாசமழையை பொழிந்திட்டு வர இவ்வளவு நேரமாச்சா?” என்று சற்று கடினத்துடனே ஏளனமாக கூறியிருந்தான்.

கலைவாணிக்கு அன்று முழுவதும் சரியாக உண்ணாதது ஒரு புறம், மறு புறம் அவள் தமையனின் விசாரணையால் ஏற்பட்ட கலக்கம் என அனைத்தும் ஒரு சேர இறுதியில் முற்றிலும் உடல் பலமிழந்து மயக்கத்தில் தோய்ந்து சரிய அரசி, தரன் இருவரும் சுதாரித்து “வாணிஈ....” என்று கூவியபடி அவளை தாங்கிக் கொண்டனர்.

குழந்தை அழுகையில் வீறிட அரசி குழந்தையை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டவள்... “அண்ணா அவளை ரூமில் படுக்க வையுங்க நான் பால் எடுத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து வேகமாக நகர்ந்துவிட்டிருக்க, வாணியை ஏந்திக் கொண்டு அறையில் படுக்க வைத்து காற்றாடியை சுழல விட்டிருந்தான் கலாதரன்.

அரசி, வாணிக்கு பால் கலந்து எடுத்து வந்தவள் அவளை தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டு சூடான பானத்தை அருந்த வைத்ததும் தான் வாணி இயல்பு நிலைக்கே திரும்பியிருந்தாள். அவளின் உடல் நிலைக்கு ஆபத்தில்லை என்று அறிந்ததும் தான் கலாதரன் இருவரையும் விட்டதை தொடர்வது போல் முறைக்க ஆரம்பித்தான்.

“இதெல்லாம் என் பேச்சை கேட்காம போய் நீங்களா இழுத்துகிட்டு வந்த வினைதானே?” என்றதும், அதுவரை அமைதியாக இருந்த வாணி...

“அண்ணா ப்ளீஸ் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லாதீங்க” உடல் சோர்வுடன் மெல்லிய குரலில் கூறியவளை கண்டு ஆத்திரத்துடன் பார்த்தவன்...

“ரெண்டு பேருக்கும் இதுதான் முதலும் கடைசியும், இனி என் அனுமதி இல்லாம எங்கயாச்சும் போனீங்க அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன்” என்று கடுமையாக எச்சரித்தவன் அவர்களை ஓய்வெடுக்க தனிமை விட்டு தனதறைக்கு சென்றுவிட்டிருந்தான்.

“என்னக்கா அண்ணன் இப்படி சொல்லிட்டு போறாங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்குக்கா” என்று வாணி கலக்கத்துடன் கூறியிருக்க...

“கத்தி எடுக்க பயப்பட்டா ஆப்ரேஷன் பண்ண முடியாது வாணி... இனி தான் நாம தைரியமா இருக்கணும்... நிச்சயம் இன்னைக்கு நாம பேசிட்டு வந்ததுக்கு அண்ணி கண்டிப்பா நல்லதா தான் எதுவும் முடிவெடுத்திருப்பாங்க... அது என்னவா இருந்தாலும் அதை எதிர்கொள்ள நம்மளை நாமளே தயார் படுத்திக்குவோம்” என்றவள் அவளுக்கு தேறுதல் அளித்துவிட்டு அர்ஜுனின் முன்பு பிரசன்னமானாள்.

தரனின் பேச்சிற்கு பிறகு வாக்குவாதம் முற்ற இடமளிக்காமல் நகர்ந்து கொண்டவன் தன்னறையில் தான் தஞ்சமடைந்திருந்தான், கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து அலைபேசியில் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வாயில் புறம் யாரோ நிற்கும் அரவம் போல் உறுத்தியதில் விழியுயர்த்தி பார்த்தவன் எதிரில் அரசி நிற்பதை கண்டவன்... “அரசி என்னமா இன்னும் தூங்கலையா?” என்று கனிவுமிக்க அக்கறையுடன் விசாரித்தான்.

“உங்ககிட்டே பேசணும்” என்று தயக்கத்துடன் கூறிய அரசியின் நோக்கம் புரிந்தாலும் அந்த இரவு வேளையில் களைப்புடன் இருந்தவளின் மேல் விசாரம் கொண்டு...

“இந்த நேரத்திலேயா? எதுனாலும் நாளைக்கு பேசிக்கலாம் அரசி இப்போ போய் தூங்குங்க” என்று அறிவுறுத்தியவனை சிறிதும் ஏற்காமல்...

“இல்லை இப்போவே பேசணும் ப்ளீஸ்” என்ற மன்றாடுதலில் அவளை நிராகரிக்க மனம் வராமல் எதுவோ ஒன்று தடுக்க...

“சரி வரேன்” என்றவன் அவளை உள்ளே அழைக்காமல் அவளுடன் பின்பக்க நடைபாதைக்கு அழைத்து சென்றிருக்க, அவனின் அந்த கண்ணியம் அவளின் ஆழ் மனதில் அழுத்தமாக விதையூன்றியது.

“என்னை மன்னிச்சிருங்க!” என்று கூறியவளை கண்டு புருவம் சுருக்கி கண்களை சுழற்றி...

“நீ ஏன் என்னிடம் மன்னிப்பு கேட்கிற அரசி?” என்று புரியாமல் வினவியவனை சங்கடத்துடன் நோக்கியவள்...

“தரன் அண்ணாவுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்... என்ன இருந்தாலும் அவர் உங்ககிட்டே அப்படி பேசியிருக்கக்கூடாது... அவர் பேசியதை மனதில் வச்சுக்கிட்டு நடக்கப் போகிற காரியங்களுக்கு.....” என்று பேசிக் கொண்டிருந்தவளை முடிக்கவிடாமல் வலக்கரத்தை சடாரென்று உயர்த்தி தடுத்து நிறுத்தியவன்...

“நான் அவன் சண்டை போட்டதும் ஒதுங்கிப் போனேன் தான்... அவனை ஒரேடியா ஒதுக்கி விட்டுட்டு போகலை... அவன் பேசினது சரியில்லை என்கிறதுக்காக எக்கேடோ கெட்டு ஒழின்னு போயிற நான் என்ன உன் அண்ணன் சொன்ன மாதிரி மூணாவது ஆளா?” அழுத்தமாக கூறியவனை விழியகல மாட்சிமையுடன் பார்த்திருந்தவள்...

“இல்ல நீங்க அவர் பேசின உடனே டக்குனு விலகிப் போனதும் பயந்துட்டேன்”

“பின்னே என்ன செய்ய சொல்கிற அரசி? அந்நேரம் நான் அவனுக்கு எதிர்த்து வாதாடிட்டு இருந்திருந்தா சண்டை வளர்ந்துவிடும்... ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் தான்னு கேள்விப்பட்டதில்லை... உன் அண்ணனும் அந்த ரகமாத்தான் இருக்கிறான் சரியான விடாக்கொண்டனா நிற்கிறான்... சரி இனி நான் அவன்கிட்டே பேசினா நாம எடுக்கிற முயற்சிக்கு பெரிய தடையா போயிரும்ன்னு யோசிச்சு தான் அப்போதைக்கு விலகினேன்” என்றவனின் விரிவான விளக்கத்தை கேட்ட பின்பே நிம்மதி அடைந்திருந்தாள். ஆனாலும் மனதின் ஓரம் ஓடிக் கொண்டிருந்த குறுகுறுப்பை அடக்க இயலாமல்...

“உங்களுக்கு நிஜமாவே கோபம் இல்லை தானே?” என்று வினவினாள்.

“கோபம் இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே”

“அப்புறம் நான் கேட்கிறேன்னு ஆறுதலுக்கு சொல்றீங்களா?”

“அரசி டோன்ட் கன்ஃபியூஸ் யுவர்செல்ப்... எப்போதும் நட்புக்குள் கோபத்துக்கும், வெறுப்புக்கும் இடைவெளி அதிகம், நண்பனுக்கு நண்பன் சண்டை போடுறதும், குழாவிக்கிறதும் பெரிய விஷயம் இல்லை... ஒரு ஆபத்தான சூழ்நிலையில் உதவனும் அதுதான் உண்மையான நட்புக்கு இலக்கணம்... தரன் என்னுடைய உயிர் நண்பன் அவன் ஒரு வார்த்தை சொல்லிட்டேனேன்னு கோபப்படுவனே தவிர வெறுக்கமாட்டேன்... அப்படி விட்டுட்டு போனா அதுக்கு பேர் நட்பும் இல்லை...” என்றவளின் விழிகளில் அப்போதும் கலக்கத்தின் சாயல் தென்பட்டிருக்க...

“என்னை தாராளமா நம்பு அரசி... தரன், வாணி ரெண்டு பேர் வாழ்க்கையும் சரி செய்யாம நான் சுலபமா விடப் போறதில்லை” என்றவனின் சொல்லில் தான் அவள் முகம் ஆயிரம் விளக்கு ஜோடனை போல் விகசித்தது.

“என்ன குழப்பம், பயம் எல்லாம் போயிருச்சா?” நமட்டுச் சிரிப்புடன் வினவி சூழ்நிலையை சகஜமாக்கியவனை கண்டு தானும் பதிலுக்கு புன்னகையை வெளிப்படுத்தினாள்.
“சரி நேரமாகுது போய் தூங்கு... நாளைக்கு நானும் உங்க அண்ணியை மீட் பண்ணனும்... அதுக்கப்புறம் தான் அடுத்தகட்ட நடவடிக்கை என்னன்னு சொல்ல முடியும்”

“ம்ம்... சரி” என்று தலையாட்டியவள்... அங்கிருந்து செல்லும் முன் அவனை ஓர்முறை ஆழ்ந்து பார்த்துவிட்டு சென்றிருந்தாள்... அவள் பார்வையில் திளைத்திருந்தவனுக்கு தோன்றிய நூதன உணர்வில் உள்ளம் கிளர்ந்தது.


**********************

சம்யுக்தா குழந்தையின் ஸ்பரிசத்தை நுகர்ந்து தாய்மையின் பாசத்துடன் கொஞ்சிக் கொண்டிருந்தாள்... பஞ்சு பொதி போன்று அடங்கியிருந்த குழந்தையின் ஆலிங்கனம் அவள் மனத்துயரத்தை தூர்வாரிக் கொண்டிருந்தது.

அவள் மகளின் கண்களும், பார்வையும் அப்படியே அவனை கொண்டிருந்ததில் அவ்வபோது எழும் ஏமாற்றத்தை மட்டும் அவளால் தடுக்க இயலாது போனது. தன் மகளின் கண்களில் தன்னவனின் திருமுகம் தோன்றிய கணமே சிந்தையின் புழுக்கம் வெகுவாக கூடியிருந்தது. அவனின் நினைவுகள் தந்த ரணத்துடன் இருந்த சமயம் கதவு தட்டப்படும் சப்தம் கேட்கவே மற்ற நினைவுகளை ஒதுக்கிவிட்டு வெளியில் அவளுக்காக காத்திருந்த சந்தோஷின் முன் சென்றாள்.

“சொல்லுங்க சந்தோஷ்....”

“மேடம் அன்பழகன் சார் வந்திருக்காங்க”

“உடனே வர சொல்லுங்க” என்றவள் அவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

“என்னமா சம்மு எப்படி இருக்கிற?” என்று பரிகாசத்துடன் நலம் விசாரித்தார்.

“நல்லா இருக்கேன் அங்கிள்... வீட்டில் ஆண்டி சௌக்கியமா?” என்று தானும் பதிலுக்கு பரஸ்பர நலம் விசாரித்திருந்தாள்.
இருவரும் வழக்கமான உரையாடலில் ஈடுபட்ட பிறகே அங்கே அவர் வந்ததற்கான காரணத்தை சம்யுக்தாவிடம் வினவினார்.

“அப்புறம் முக்கியமான விஷயமா வர சொல்லியிருந்தியே சம்மு?” என்று ஆரம்பித்தவரை தயக்கத்துடன் பார்த்தவள் தொட்டிலில் தன் பிஞ்சு கை, கால்களை அசைத்துக் கொண்டு இருந்த மகளை தூக்கி கொண்டு வந்தவளை கண்டு திகைப்பு, பிரம்மிப்பு என கலைவையான உணர்ச்சிகளால் பார்த்திருந்தார்.

“சம்யுக்தா உனக்கு நிச்சயதார்த்தம் ஆனது தானே தெரியும்? எப்போ கல்யாணம் ஆச்சு? குழந்தை பிறந்துச்சு?” என்று மறுட்கையுடன் வினவியிருந்தார்.

“சாரி அங்கிள் நிச்சயதார்தத்துக்கு பிறகு நடந்த விஷயங்கள் உங்ககிட்டே சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருச்சு” என்றவள் நடந்ததை விளக்கமாக கூறினாள். அவள் கூறுவதை எந்த வித இடையூறும் ஏற்படுத்தாமல் கேட்டுக் கொண்டவர்...

“இவ்ளோ விஷயம் நடந்திருக்கு அன்னைக்கே நீ சொல்லியிருக்க வேண்டியது தானே சம்மு? அட்லீஸ்ட் நீ வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாவது சொல்லியிருக்கலாமே” அவள் வாழ்க்கையில் நடந்த குளறுபடியை எண்ணி வருந்தியபடி மனத்தாங்கலுடன் கூறியிருந்தார்.

“சாரி அங்கிள் எல்லாமே ஒரு வேகத்தில் நடந்து முடிஞ்சிருச்சு... நடந்து முடிந்ததை பேசி இனி பயன் இல்லை... இனி நடக்கப் போகிறதை பேசுறதுக்கு தான் உங்களை கூப்பிட்டிருந்தேன்” அவளின் கூற்றை கேட்டவருக்கு அதுவே உசிதம் தான் என்றாலும் கையில் கைக்குழந்தையுடன் நிற்கும் அவளின் நிலையை எண்ணி அனுதாபத்துடன் பார்த்தவர்...

“சரி இனி என்ன செய்யலாம்ன்னு முடிவு செய்திருக்கிறம்மா?” என்றதும் அவளும் தன் திட்டம் முழுவதையும் விலாவாரியாக கூறி முடித்தவள்...

“இது நமக்குள் இருக்கட்டும் அங்கிள்” என்றும் கூறியிருக்க, அவளை திகிலுடன் நோக்கினார்.

“சம்மு இது விளையாட்டல்ல.. வாழ்க்கை! இதுவரைக்கும் எடுத்த உன் அவசர முடிவுகள் போல இதுவும் இருக்க வேண்டாம் நல்லா யோசிச்சுக்கோ” என்று அறிவுறுத்தினார்... ஆனால் சம்யுக்தா தன் நிலைபாட்டில் உறுதியாக இருந்தாள்.

“என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை அங்கிள்...”

“இல்லை சம்மு நீ உன் கணவரை டிவோர்ஸ் பண்ணிவிடு, இப்படி உன் வாழ்க்கையோட விளையாட முடியாது” என்று நிர்தாட்சண்யமாக மறுத்திருந்தார். அவரின் மறுப்பை கேட்டவள் சற்றும் நிலை மாறாமல்...

“நீங்க எனக்கு கூட நின்று உதவி மட்டும் செய்யுங்க... அப்படி முடியாதுன்னா நான் வேறு வக்கீலை பார்த்துக்கிறேன்” என்று முகதாட்சண்யம் இன்றி மிகுந்த உறுதியான நிலைபாடுடன் கூறியவளை அதிர்ந்து பார்த்திருந்தார். அவளின் முகத்தில் நிலவிய அழுத்தமும், உறுதியும் நான் சொன்னதை செய்வேன் என்பது போல் இருக்கவே சில கணங்கள் யோசித்து சுதாரித்து கொண்டவராக...

“என்னமா நீ இதற்கெல்லாம் இப்படி சொல்லிட்டு... என்ன ஆனாலும் நான் உனக்கு உதவுறேன்” என்றதும் பெருமூச்செடுத்தவள்...

“தேங்க்ஸ் அங்கிள்” என்று நன்றி நவிழ்ந்தாள்.

“உன் கணவர் உன் முடிவை ஏற்றுக்குவாரா?”

“ஏத்துக்க வைப்பேன் அங்கிள்... நிச்சயம் ஏற்றுக் கொண்டு தான் ஆகணும்... அதற்கான சில வழிமுறைகளை நீங்கள் செய்யணும்” என்றவளின் விழிகளில் தீட்சண்யம் மிகுந்திருந்தது.

“ம்ம்ம்... அப்போ நாளைக்கே நீயும் உன் கணவரும் கோர்ட் கேம்பஸ்க்கு வந்திருங்க... நான் எனக்கு தெரிந்த லேடி அட்வகேட்கிட்டே சொல்லி வைக்கிறேன்”

“ஏன் அங்கிள் நீங்களே ஹேண்டில் பண்ணலாமே”

“இல்லைம்மா... இது சரி வராது... இது உனக்கு சாதகமா முடியணும்னா இதுக்கு பின்னாடி நான் சில வேலைகள் செய்தாகனும்... நானே கேஸ் எடுத்து செய்கிறதா இருந்தா சில சட்ட சிக்கல்கள் இருக்கு... அதுவுமில்லாம லேடி அட்வகேட் தான் உனக்கான முழு ஆதரவை கொடுப்பாங்க” என்று தெளிவான விளக்கமளித்திருந்தார்.

“ஒகே அங்கிள் அப்படியே செய்யுங்க...” என்றதும் அவள் கூறியதை சிந்தித்தப்படியே அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தார்.


**********************

“எக்ஸ்கியூஸ் மீ... அம் அர்ஜுன் ஃபிரம் தேனி... நான் உங்க எம்டி சம்யுக்தா மேடமை பார்க்கணும்” என்று வரவேற்பு பெண்ணிடம் அனுமதி கோரினான் அர்ஜுன்.

“ஹாங்... என்ன விஷயமா சார் பார்க்கணும்? அப்பாயிண்ட்மெண்ட் எதுவும் இருக்கா? இல்லை; கோல்ட் காலா சார்?” என்று வரிசையாக தன் கேள்விக்கனைகளை முன் வைத்திருந்தாள்.

“நான் மார்கெட்டிங்காக வரலை... இது பர்சனல்” என்று கூறியிருக்க...

“சாரி சார்...! மேடம் பர்சனல் விஷயமா பார்க்க பெர்மிசன் கொடுக்க வேண்டாம் சொல்லிடாங்க சார்”

“இல்லை நீங்க இப்போ என் நேம் சொல்லி மீட் பண்ணனும் சொல்லுங்க... எவ்ளோ நேரம் ஆனாலும் உங்க மேடமை பார்த்துட்டு தான் போவேன்னும் சொல்லுங்க” என்று அழுத்திக் கூறியவன் மேலும் பதிலை எதிர்பாராமல் வரவேற்பறையில் வீற்றிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டிருந்தான்.

பணிப்பெண் என்ன செய்வது என்று அறியாது விழித்துக் கொண்டிருக்கையில் தான் ரோஷினி அங்கே வந்திருக்க...

“என்ன ஷைலு ஏதோ பயங்கரமான யோசனையில் இருக்கிற போல” அவள் குழப்பம் சூழ்ந்திருந்த முகத்தை அவதானித்தபடி வினவியிருந்தாள்.

“ஆமாம் ரோஷினி” என்றவள் அர்ஜுனை பற்றி கூறிவிட்டிருந்தாள்.

“ஓஹ்! யாரு அந்த பர்பில் கலர் ஷர்ட் போட்டிருக்காரே அவரா?”

“ஆமாம் ரோஷி”

“சரி இரு நான் மேம்கிட்டே பேசிட்டு இன்ஃபோர்ம் பண்றேன்”

“ரோஷினி நேத்தே மேடம் உன்னை திட்டினதா சொன்னியேப்பா, இப்போ இதை கேட்டா இன்னும் டென்ஷன் ஆக மாட்டாங்களா?”

“இல்லை ஷைலு நேத்து மேடம் அவங்க ரெண்டு பேரும் வெயிட் பண்ணினதை சொல்லாததுக்கும் கோபப்பட்டாங்க... சோ, இனி எதுவாக இருந்தாலும் நம்ம கடமையை நாம செய்திருவோம் மற்றபடி முடிவை அவங்களே எடுக்கட்டும்” என்றவள் சம்யுக்தாவிடம் கூறியிருந்தாள்.

“அது தான் நேற்றை சொன்னேன்ல பர்சனல் விஷயம்ன்னா ரிட்டன் அனுப்பிடுங்க” சுள்ளென்று தான் கூறியிருந்தாள்... அதை பெரிதும் கருத்தில் கொள்ளாது மேலும்...

“இல்லை மேடம்! இவரும் இன்னைக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் உங்களை பார்க்காம போகமாட்டாராம்”

“வாட் நான்சென்ஸ்!” என்று மொழிந்தவளுக்கு எரிச்சலாக இருந்தது.

“சிசிடிவில பாருங்க மேடம் அவர் ரிசப்சனில் தான் வெயிட் பன்றாரு” என்றதும் அவளும் அதில் பார்க்க அங்கே அமர்ந்திருந்தவனை சற்றும் யாரென்று விளங்காமல் போக கோபத்தின் உச்சத்திற்கே சென்றிருந்தாள்.

‘ச்செய்... இருக்கிற பிரச்சனையில் இது வேறா? யாரெல்லாம் இன்னும் இது மாதிரி தர்க்கம் பண்ண போறாங்களோ?’ உச்சக்கட்ட எரிச்சலுடனே தனக்குள் முனகிக் கொண்டு பற்களை நறநறத்தவள் நெற்றியை தன் உள்ளங்கையால் தாங்கியபடி மேஜைமேல் சாய்ந்து சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள்.

அலைபேசியின் இசையில் தான் சிந்தனையில் இருந்து கலைந்தவள்... “ரோஷினி நம்ம சென்னை கிளைன்ட் பேசணும்னு சொன்னாரு... நீங்க சந்தோஷ் கிட்ட சொல்லி என்னன்னு என்குயர் பண்ணிட்டு சொல்ல சொல்லுங்க”

“ஒகே மேடம்” என்று கூறிவிட்டு நகர்ந்ததும்... சில நிமிடங்களை யோசனையில் கழித்துவிட்டு இண்டர்காமில் வரவேற்புக்கு தொடர்புக் கொண்டவள்...

“மிஸ். ஷைலஜா... என்னை பார்க்க வந்த அர்ஜுனை என் கேபின்க்கு அனுப்புங்க” என்று உத்தரவிட்டதும்..

“ஒகே மேடம்” என்றுவிட்டு வைக்க சென்றவளை...

“ஒன் செக் ஷைலஜா” என்று இடையிட்டவள்...

“எஸ் மேடம்” என்றதும்...

“நான் சொல்கிற வரை அடுத்து யாரையும் என் கேபின்க்கு அனுப்ப வேண்டாம்” என்று கூற...

“சூயர் மேடம்” என்றவள் அர்ஜுனிடம் சென்று அவனை சம்யுக்தாவின் அறைக்கு அனுப்பி வைத்திருந்தாள்.

வரவேற்பு பணிப்பெண் கூறியதை கேட்டு வியப்பு அடைந்தவனுக்கு அவளின் இந்த அதிரடி அனுமதிக்கு பின் கடுமை ஒளிந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டவன், அதற்கு தகுந்தாற் போன்று தன்னை தயார் செய்துக் கொண்ட பிறகே அவளின் அறைக்கு சென்றிருந்தான்.

“மே ஐ கம் இன்”

“எஸ்...” என்றதும் உள்ளே நுழைந்தவனை தலை முதல் கால் வரை அளந்தவளுக்கு யாரென்று அறியாமல் போக...

“யார் நீங்க என்னை பார்க்க வேண்டிய அவசியம் என்ன?” என்று படபடத்தவளின் கேள்வியில் ஒளிந்திருந்த எரிச்சலை குறிப்பெடுத்து கொண்டவன்...

“வேலை நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும்” என்றவனை கண்கள் சுருக்கி யோசனையாக பார்த்தவள்...

“இதை சொல்லத்தான் வந்தீங்களா?” என்று உதட்டை பிதுக்ககியவளை கண்டு முகத்தில் மென்னகை மலர்ந்தது.

“நிச்சயம் இல்லை” என்றவன் அவனின் தொழில் அடையாள அட்டையை வெகு இயல்பாக அவளிடம் சமர்ப்பித்துவிட்டு...

“அம் அர்ஜுன்... அர்ஜுன் ஸ்பைசஸ் எக்ஸ்போர்ட் கம்பெனி எம்டி” என்று தன் கரத்தை அவளிடம் நீட்டியிருந்தான்... மிகுந்த மதிப்புடன் தன்மையாக பேசுபவனை புறக்கணிக்க முடியாமல் போகவே, மரியாதையின் பொருட்டு தானும் அவன் கரத்துடன் பிணைத்து குலுக்கிக் கொண்டாள்.

“சரி என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க?”

“நான் உங்க ஹஸ்பண்ட் கவின்கலாதரனுடைய நெருங்கிய நண்பன்” என்று நிறுத்திவிட்டு அவள் முகத்தின் உணர்ச்சியலைகளை அவதானிக்க... அவள் முகம் உக்கிரமாக மாறியிருந்தது.

“டென்ஷன் வேண்டாம் சம்யுக்தா... நான் உங்க கணவருக்கு ஆதரவு தேடி வரலை... உங்களுக்கு ஆதரவு கொடுக்கத்தான் வந்திருக்கேன்” என்றவனை நம்ப இயலாது இழுத்து பிடித்த பொறுமையுடன் பார்த்திருந்தாள்.

“நான் சொல்லுறதை உங்களால் நம்ப முடியாது தான்... ஆனால் நான் அவனுக்கு நண்பன்னா... நீங்க எனக்கு தங்கை மாதிரி நண்பனா, தங்கையான்னு வந்தா நானும் என் தங்கைக்கு தானே ஆதரவு தெரிவிப்பேன்... அவனைப் போல!” என்றவன் இறுதி வார்த்தையில் சற்றே அழுத்தத்தை கொடுத்து கூறியிருந்தான்.

“இந்த அண்ணன், தங்கை உறவு எல்லாம் வேண்டாம் சொல்கிறதை சொல்லிட்டு கிளம்புங்க” என்று பச்சை மிளகாயின் காரத்துடன் கூறியவளின் பேச்சிற்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்...

“சரி வேண்டாம்... ஆனால் என்னை உங்க வெல்விஷரா நினைக்கலாமே” என்று கூறி முடித்துவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருக்கலானான்.

அவன் கூறிய நலம் விரும்பி என்ற வார்த்தையில் சற்றே நிதானமாக சிந்திக்கலானாள்... சாதாரணமாக அவள் இப்படியான வார்த்தைகளில் சட்டென்று நம்பி விடும் ரகமில்லை தான் என்றாலும், அவனின் பேச்சு தொனியில் இருந்த ஏதோ ஒன்றில் அவளின் நம்பாததன்மை அப்பாற்பட்டு நம்பகத் தன்மையில் கட்டுண்டு விடவே...

“எல்லாம் சரிதான் ஆனால் இதெல்லாம் எதற்காக?” என்ற கேள்வியை அவன் முன் வைத்தாள்.

“கலாதரன் செய்த தவறுக்கு நானும் ஒரு காரணம்” என்றவனை அதிர்ச்சி, திகைப்பு, சினம் என கலவையான உணர்ச்சியை பிரதிபலித்தபடி பார்த்திருந்தாள்.

“என்னை மன்னிச்சிருங்க மிசஸ்.சம்யுக்தா... கலாதரன் அவன் தங்கை வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு போராடத்தான் அவனுக்கு சில உதவிகள் செய்தேன்... ஆனால் அது இன்னொரு பெண் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும்னு நினைச்சும் பார்க்கலை...”

“...........” அவன் பேசுவதை உஷ்ணப் பெருமூச்சுடன் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தாளே தவிர அவன் பேச்சில் இடையிடவில்லை.

“அதை தெரிந்து தான் அவனை எதிர்த்து சண்டை போட்டேன்... ஆனா அங்கே அவனிடம் பேசி புரியோஜனமில்லைன்னு தெரிஞ்சிருச்சு... அவன் செய்தது தவறு தான் தெரிந்திருந்தா நிச்சயம் ஆரம்பத்திலேயே நான் தட்டி கேட்டிருப்பேன்... ஆனால் அதற்கு வழியில்லாமல் எல்லாமே நடந்து முடிஞ்சது”

“ஆக அன்னைக்கு திவான் பகதூர் சாலையில் மீட் பண்ண போன நண்பன் நீங்கதானா?”

“ம்ஹும்...” என்று தலையை இடம் வலம் அசைத்து மறுத்தவன்...

“அது நான் இல்லை... அவன் வேற ஒரு பிரெண்ட்... இங்கே கோவையில் ஓவர்சீஸ் யுனிவர்சிட்டி ஏஜெண்ட்... உங்க அண்ணனுக்கு மணப்பெண்ணாக பார்த்த ரூபலாவை உடனடியா பாரின் அனுப்பி வைக்க பிளான் போட்டு செய்தது” என்றவன் கூற்றை கேட்டு அவளுக்கு அனைத்தும் விளங்கிக் போனது.

“சோ, ரஞ்சன் நிச்சயத்தை தடுத்து நிறுத்த என் கணவருக்கு பின்புலமா இருந்து செயல்பட்டது நீங்கதான்” என்றவளின் வார்த்தையில் மறைபொருள் அடங்கியிருக்க, அதை சரி வர கணிக்க முடியாமல் அரைகுறையாக தலையசைத்து வைத்திருந்தான்.

“ஆமாம்... ரஞ்சன் பண்ணினது தவறு தானே அவனுடைய இச்சைக்கு ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிட்டு இன்னொரு பெண்ணை வாழ்க்கைத் துணையா அடைய நினைச்சா அதை வேடிக்கை பார்க்கவா முடியும்?” என்று தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறி விளக்கமளித்திருந்தான்.

“இவ்வளவு செய்த உங்களை இப்போ மட்டும் எப்படி நம்புறது? நீங்க நிஜமாவே எனக்குத்தான் உதவி செய்ய நினைக்கறீங்கன்னு?” என்று சந்தேக கண்ணோட்டத்துடன் வினவியவளை தீர்க்கமாக பார்த்தவன்...

“சில விஷயங்களை உடனே நிரூபிக்கிறது ரொம்ப கஷ்டம் சம்யுக்தா... என்னை உங்க தோழனா நினைச்சுக்கோங்க அப்புறம் போகப் போக நீங்களே புரிஞ்சுப்பீங்க” என்று வாக்குறுதி அளித்திருந்தான். அவனின் வார்த்தையில் ஏதோ ஓர் உணர்ச்சி பிரவாகம் அவளுள் ஊடுருவ...

“சரி அப்புறம்” என்று இதழ்களை அகல விரித்து அன்பாக புன்னகையில் அவளின் பதிலை அறிந்துக் கொண்டவன் தானும் இதழ் விரித்து உவகையில் புன்னகைத்தான்.

“பிரெண்ட்ஸ்...!” என்று கூறி வலது கரத்தை நீட்டியவனை தானும் கரத்தை மடக்கி ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்... அப்போது அவள் முகத்தில் நொடிக்கும் குறைவாக மின்னல் போல் வந்து போன மாற்றத்தை கவனமாக குறித்துக் கொண்டான்.

“சரி இனி லைஃப் மேட்டர் பேசலாமா?” என்றதும் அதுவரை இருந்த தயக்கத்தை விடுத்தவள்...

“சொல்லுங்க?” என்றவளின் அனுமதியில் சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தான்.

“உங்க கணவர் கலாதரன் கொடுத்த டிவோர்ஸ்க்கான உங்க பக்க முடிவு என்ன சம்யுக்தா?” என்று வினவியவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் ஏறிட்டவள் தன் முடிவை கூறிவிட்டிருக்க, அவளின் சித்தாந்தத்தை எண்ணி திருப்தியுற்றவன்...

“ரொம்ப தேங்க்ஸ் சம்யுக்தா... இதுதான் நல்ல முடிவு... வாழ்க்கை எப்போவும் நமக்கு சாதகமா அமைந்திராது... சில நேரங்களில் நாமதான் நமக்கு சாதகமா மாற்றிக்க முயற்சிக்கணும்... இனி நீங்க என்ன செய்தாலும் அதற்கு பின்னால் என்னுடைய உதவியும் இருக்கும் நீங்க எப்பவும், எப்போதும் என்னிடம் தயங்காம கேட்கலாம்”

“ம்ம்ம்...” என்றவளின் பதிலில் மறைந்திருந்த ஒரு விஷயத்தை சாமர்த்தியமாக மறைத்தவளின் முகம் விரக்தியின் பிடியில் சிக்கியிருந்தது... அவள் முகச் சுருக்கத்தை அவதானித்த அர்ஜுன் அவளுக்குள் பொதிந்திருக்கும் மன வேதனையின் சாயலாக யூகித்து கொண்டுவிட்டான்... அதை பற்றி அப்போதே ஆராய்ந்திருந்தால் பின்னாளில் அவள் எடுக்கவிருக்கும் விபரீத முடிவை தெரிந்துக் கொண்டு சுதாரித்திருக்கலாமோ?!

சுவடுகள் தொடரும்....


**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-9 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்

 
Status
Not open for further replies.
Top