All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-18

“இப்படி எல்லாம் என்னை கார்னர் பண்ண வேண்டாம், அப்புறம் நான் வேலையை ரிஸைன் பண்ண வேண்டியதா இருக்கும்” அவளின் வார்த்தைகள் அவன் மனதை காயப்படுத்தியது.

“என்னை விட்டுட்டு போயிருவியா?” அவனின் ஆழ்ந்த குரல் அவளை ஏதோ செய்ய மெளனமாக நின்றவளுக்கு அது பொது இடம் என்பது அறிவுறுத்திக் கொண்டே இருந்ததில்...

“இது பப்ளிக் பிளேஸ் ப்ளீஸ் விடுங்க!”

“நான் உன் எம்டி தானே தட்டி விட்டுட்டு போனா வேலை முடிஞ்சது, இதில் வசனம் பேச என்ன இருக்கு?” அவளை தூண்டிவிட்ட வார்த்தையில் ரோஷம் பிறக்க விழுக்கென்று பார்வையால் வெட்டியவள்...

“தட்டிவிட்டுட்டு போறதெல்லாம் உங்க பழக்கம் என் பழக்கம் இல்லை” வெடுக்கென்று கூறினாள்.

“உன் மனசை அடகு வச்சுட்டு பேசாதே... நான் கால் பண்ணினப்போ யாரோ போல என்னை ஒதுக்கி வச்சு பேசினது நீ... கம்பனியில் இருந்து உனக்காக ஏற்பாடு பண்ணியிருந்த காரை வேண்டாம்னு ஒதுக்கினது நீ... இதில் நான் எங்கே உன்னை ஒதுக்கினேன்”

“நிஜமா உங்களுக்கு தெரியலையா?”

“தெரியாததால் தானே கேட்கிறேன்”

“உங்க பிரண்ட் வந்ததும் என்னை கண்டுக்காம போனீங்களே அதுக்கு பேர் என்ன சார்?”

“...........”

“நீங்க எங்கே போறீங்க, வரீங்கன்னு தெரிய வேண்டாம், ஆபிஸ்க்கு வருவீங்களா மாட்டீங்களான்னு கூடவா சொல்லமாட்டீங்க... உங்களுக்கு நான் யாரோன்னு நினைச்சதால தானே நீங்க அப்படி செய்தீங்க?”

“...........”

“அதிலும் உங்க பிரெண்ட் முன்னாடி என்னை யாருன்னு காட்டிக்க கூட இல்லை... என் தராதரம் உங்களை தாழ்த்தி காட்டும்ன்னு நீங்க மறைச்சீங்கன்னு, நான் ரொம்ப லேட்டா தான் புரிஞ்சுகிட்டேன், அதான் நானே டீசென்ட்டா ஒதுங்கிரலாம்னு ஒதுங்கிட்டேன்”

“உன் மூலையில் தீயை வைக்க... இந்த மாதிரி பேசினதுக்கு இந்நேரம் உன் பல்லை பேத்திருப்பேன் பிழைச்சு போன்னு விடுறேன்” என்று சினந்தான்.

“ஏன் அப்போ தானே எனக்கு பல்லு போனதை சாக்கா வைத்து வேறு ஆளை தேடிக்க முடியும்?”

“வாயை மூடு கண்ட படி பேத்தாதே”

“அவ என் பிரெண்ட் சுஜிதா... அவங்க பேமிலியே எனக்கு நல்லா தெரியும், அவங்க என்னுடைய நலம்விரும்பிகள் கூட, என் கல்யாணத்தை எப்போ எப்போன்னு எதிர்பார்க்கிறவங்க அப்படி இருக்கும் போது நிச்சயம் அவ வீட்டில் சொல்லிருவா, நம்ம விருப்பத்தை நம்ம வீட்டில் நாம சொல்லி தெரிஞ்சுக்கிட்டதா தான் இருக்கணும்... அடுத்தவங்க சொல்லி தெரிஞ்சதா இருக்கக்கூடாதுன்னு தான் அவகிட்டே கூட மறைக்க நினைச்சேன்”

“நேத்து வெளியே போனதை உன்கிட்டே சொல்லகூடாதுன்னு இல்லை, வேலையே அதிகமா இருந்தது அதான் உன்கிட்டே அப்புறம் பேசிக்கலாம்னு இருந்துட்டேன்” என்று விளக்கம் கொடுத்தும் வேகமாக அவள் அலைபேசியை எடுத்து அவன் வாட்ஸ்அப் ஸ்டேடஸை காட்டியவள்...

“இது தான் நீங்க பிஸியா இருந்த லட்சணமா... எதுக்கு இத்தனை பித்தலாட்டம்?” அவன் மேல் புதைத்து வைத்திருந்த அத்தனை காண்டையும் யோசிக்காமல் வார்த்தையால் கடித்து குதற, அவளின் ‘பித்தலாட்டம்’ என்ற வார்த்தை அவன் உண்மை காதலை பதம் பார்த்ததில் உக்கிரமூர்த்தியானான்.

“பித்தலாட்டாமா?”

“அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?” என்றதும் தான் கோபத்தில் வார்த்தைகளை சிதறவிட்டதை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

“சோ! உன்னை என் பிரெண்ட் முன்னாடி அவாய்ட் பண்ணிட்டேன்னு எனக்கு நீ தேர்ட்ரேட் பொறுக்கி பட்டம் கொடுத்ததுக்கு, மிக்க நன்றி!” இகழ்ச்சியாக உதட்டை வளைத்து கரம் கூப்பி கூறியவனின் பேச்சில் தான், தான் அதிகமாக பேசிவிட்டோம் என்பதை உணர்ந்தவள் குற்றவுணர்வுடன் அவனை நோக்கினாள்.

“சா... சாரி... நான் அப்படி சொல்லலை” என்று பேச தயங்கி நிறுத்த...

“வேறு என்ன அர்த்தம்” என்றவனை கண்டு வாயடைத்து நின்றாள்.

“...........” சிலகணங்கள் மௌனத்தில் கழிய அதை கலைத்திருந்தான் அர்ஜுன்.

“உனக்கு வந்த கோபம் என் மேல் உனக்கிருக்கிற உரிமையுணர்வு... என் தோழியா இருந்தாலும் அவ முன்னாடி உன்னை புறக்கணிச்ச பொறாமை... இதை நான் நேத்தே ஓரளவு யூகிச்சுட்டேன்... எதுக்கும் உன்கிட்டே விசாரிக்கணும்னு தான் ஆபிஸ் போகிறதுக்கு முன்னாடியே உன்னை வழிமறிச்சு கேள்வி கேட்டேன்... அதுக்கு நீ கொடுத்த பட்டம் தான் பொம்பளை பொறுக்கி” அவன் புரிதலை தான் தவறாக எண்ணிவிட்டோமே என்ற எண்ணத்தில் பேசியறியாத மழலையின் நிலையில் ஊமையாகி நின்றாள்.

“ஆபிஸ்க்கு கிளம்புங்க உங்க எம்டி கேட்பாங்க” என்று விட்டு நகர எத்தனித்தவனின் வலது கரத்தின் மணிக்கட்டை பற்றிக் கொண்டவள்...

“சாரி... மன்னிச்சிருங்க... ஏதோ கோபத்தில் அப்படி பேசிட்டேன்” என்று மன்றாடியவளை சாவதானமாக நோக்கியவன்...

“நான் யாரு உன்னை மன்னிக்க” என்று விட்டு காரின் கதவை திறந்தவனை கண்டு மனம் படப்படக்க தவிப்புடன் பார்த்தவள்...

“என் புருஷன்!” அவசரமாக கூறிவிட்டு அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாது அவனுக்கு எதிர்புறம் திரும்பி நின்று கொள்ள, காரின் கதவு பாதி நிலையில் திறந்தபடி தலையை மட்டும் திருப்பியவனின் விழிகளில் தேஜஸ் மின்னியது!

அவளின் வார்த்தையில் சித்தம் சிலிர்க்க உடலில் புது வித அணுக்கள் உற்பத்தி ஆனது போன்று பரவசத்துடன் பார்த்திருந்தான்.

“அரசி...” என்றவனின் குரல் கிறங்கி ஒலிக்க தானும் ஆகர்ஷிக்கபட்டவளுக்கு உள்ளுணர்வு அது பொது இடம் என்று எச்சரித்ததில் சுதாரித்தவள்...

“நேரமாகுது எம்டி சார்” என்றவள் இதழ்கள் புன்னகையில் விரிய அவன் முகம் பார்க்க வெட்கி வேக நடையிட்டு நகர்ந்திருந்தாள்.

அர்ஜுனின் முகம் ஆயிரம் விளக்கு ஜோடனை போல் ஜொலி ஜொலிக்க அழுவலகம் வந்தவனை தர்ஷன் குறுகுறுக்கும் பார்வையால் துளைத்தான். அவன் பார்வையை கண்டும் காணாமல் அவனிடம் அன்றைய பணியை கூறிவிட்டு தன் இருக்கைக்கு சென்றுவிட்டிருந்தான்.

காதலின் ஊடல் அத்தனை அழகானதா என்ற வியப்பின் விளிம்பில் நின்று களிப்பின் உச்சத்தை உணர்ந்தனர் அர்ஜுன், அரசி இருவரும்.

**********************

கலாதரன் குடும்பத்துடன் இணைந்து அன்று மாலை நடைபெறும் கூத்துக்கான ஒத்திகையை பார்த்துக் கொண்டிருந்தான்... சம்யுக்தா அதை காண ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தாள். தோல்பாவை கூத்தின் அரிச்சுவடி கூட அறியாதவளுக்கு அதை அறிந்துக் கொள்ளும் பேராவல் பிறந்தது.

அன்று நிகழ்த்த இருக்கும் நிகழ்ச்சி வள்ளி திருமணக் கதை என்பதால் ஆட்டுத்தோல் கொண்டு வரைந்த பாவை சித்திரங்களை கலாதரன் பாவைகளின் அசைவுக்கேற்ப அதன் அங்கங்களில் தனித்தனி குச்சிகளை இணைத்து அமைத்து கொண்டிருந்தான்.

சம்யுக்தாவுக்கு இது புதுமையாக இருக்கவே அவனிடம் கேட்க முனைந்த போது மலர் தடுத்துவிட்டிருந்தாள்... “அண்ணி இந்த நேரத்தில் அண்ணன்கிட்டே எதுவும் கேட்டா பலியா கோபப்படும் நீங்க அப்புறமா பேசுங்க... அந்த பொம்மை சரியா வரலைன்னா கூத்து நடத்தவே முடியாது... அப்புறம் புதுசா ஆட்டுத்தோல் வாங்கி பொம்மை வரைஞ்சு செய்யுறது ரொம்ப கஷ்டம்... இப்போ இது முடிச்சுட்டு வசனம் பேசி ரெகார்ட் பண்ணனும்” என்று பொறுமையாக எடுத்துக் கூறினாள்.

“ஏன் எப்போதும் இப்படித்தானா?”

“ம்ஹும் அப்படி இல்லை, அண்ணன் கொஞ்சம் நாள் இங்க இல்லை... அதனால, கூத்துக்கான எந்த ஏற்பாடும் செய்யாம நின்னு போச்சு, இன்னைக்கு சாயந்தரம் நம்ம முறை கூத்து நடத்தியே ஆகணும் அதான் எல்லாத்தையும் வேகமாக ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க” அவள் கூறிய செய்தியில் அவன் தனக்காக கோவையில் இருந்த சமயம் என்று புரிய வர, அதில் எதுவும் குதர்க்கம் கண்டுபிடிக்காமல் மலரிடமே அவளின் சந்தேகங்களை கேட்டறிந்தாள்.

“ஆமாம் இது நைட் தான் நடக்கணுமா என்ன?”

“உங்களுக்கு இது பத்தி எதுவும் தெரியாதா அண்ணி?”

“ம்ஹும்... தெரியாது”

“இது பற்றி தெரிஞ்சிருந்ததா தான் ஆச்சர்யம் அண்ணி... ஏன்னா இப்போ எங்க கூட்டத்திலேயே இதை யாரும் கையிலெடுக்கிறது இல்லை...”

“ஏன் அப்படி?”

“வருமானம் தான் பிரச்சனை... எங்களுக்கு தரன் அண்ணா ஒண்ணுக்கு ரெண்டு வேலை பார்க்கிறதால தான் இதை நடத்தவே முடியுது” என்றவள் அதை பற்றி விவரிக்கலானாள்.

இது மேடை ஒளி பிம்பக்கலை என்பதால் தோல்பாவை நிகழ்ச்சி இரவில் மட்டுமே அரங்கேற்றப்படுகிறது. இதற்கான மேடை மூன்று பக்கங்களிலும் ஒளி ஊடுருவாத தடிமனான கருப்பு நிறச் சீலை கட்டப்படுகிறது. பார்வையாளர்களை நோக்கியிருக்கும் முன் பக்கத்தில் சுருக்கங்களற்ற வெள்ளை நிறத் துணிச்சீலை கட்டப்படுகிறது. திரையரங்குகளில் காணப்படும் வெண்திரையைப் போன்றது இது. மேடையெங்கும் இருக்கும் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, திரைகளால் செய்யப்பட்ட, சதுரக் கூட்டின் உள்ளே மட்டும் சக்தி வாய்ந்த ஒரு விளக்கு வெண்திரையில் ஒளி பாய்ச்சுகிறது. இந்த அறைக்குள் தான் பாவையாட்டிக் கலைஞர் அமர்ந்து பொம்மைகளை ஆட்டுவிக்கிறார். ஒளிப் பாவைகளின் மெல்லியப் படல் மூலமும், நகைகளின் துளைகளின் மூலமும் ஊடுருவி, திரையில் பிம்பமாகத் தெரிகிறது. வெண்திரையில் காணப்படும் பாவைக் கதாபாத்திரங்கள் வண்ணத்தில் பிரதிபலித்து மிளிர்வது ஒரு சிறப்பம்சம்.

“ஒஹ்! இவ்ளோ விஷயம் இருக்கா...? சரி இன்னைக்கு என்ன நாடகம்?”

“இன்னைக்கு வள்ளி திருமணம் நாடகம், நாளைக்கு கந்தசஷ்டி நாள் என்கிறதால முருகர் கோவில்ல கூட்டம் அதிகமா இருக்கும் அதனால், இது கொஞ்சம் சிறப்பு இருக்கும்னு அண்ணன் இதை போடுறாங்க”

“நீங்க வேணா பாருங்க அண்ணனுடைய திறமையை பார்த்து அசந்து போயிருவீங்க... என்ன தான் நாங்களும் அதில் இருக்கிறோம்னாலும் இதில் முக்கால்வாசி உழைப்பு எல்லாம் அண்ணன் தான்” என்று சிறு பிள்ளையை போல் பளீர் புன்னகையுடன் வெள்ளந்தியாக கூறியவளின் பேச்சில் தானும் புன்னகைத்தவளுக்கு கூத்தை காணும் ஆர்வம் மிகுந்திருந்தது.

அன்று அவர்களுக்கு உண்டான மண்டபத்தில் அல்லாமல் கோவிலின் பிரகார மண்டபத்தில் அமைத்திருந்த மேடையில் தான் கூத்து நடைபெற்றது.

தன் கணவனுடன் மற்ற அனைவரும் மேடையில் இருக்க சம்யுக்தா கீழே அமர்ந்து கூத்தை ஆர்வத்துடன் காணலானாள்.

சம்யுக்தாவிற்கு கூத்தை காணக் காண சுவாரஸ்யம் கூடிக் கொண்டே சென்றது... அதன் பின்னால் தன் கணவன் பல குரலில், பல அம்சங்களில் பேசி அசத்தியிருப்பதை எண்ணி வியந்து கொண்டிருந்தாள். வள்ளி திருமணம் நாடகம் வெகு விமரிசையாக நேரிலேயே நடைபெற்றது போன்று ஏற்படுத்திய பிம்பத்தில் காண்போர் அனைவரையும் கவர்ந்தது... அதை கண்டுக் களித்த பலரும் அவர்களால் இயன்ற ஊக்க தொகையை சமர்ப்பித்துவிட்டு மனமார பாராட்டிவிட்டு சென்றனர்... நாடகம் முடிந்து அனைவரும் எழுந்து சென்றது கருத்தில் பதியாது மெய்மறந்து அமர்ந்திருந்தவளை நெருங்கிய கலாதரன்...

“எல்லாரும் எழுந்து போயிட்டாங்க” என்றதும் தான் துள்ளி எழுந்தவள், அவனை வியந்த பார்வை மாறாது நோக்கிக் கொண்டிருந்தாள். மனைவியின் பார்வையில் தெரிந்த மறுட்கை தான் செய்த கலைக்கானது என்று உணர்ந்திருந்தாலும் அதை பற்றி பெரிதாக எண்ணாமல்...

“சீக்கிரம் வா சாப்பிட்டுட்டு நான் போய் நைட் ஷிப்ட்க்கு லாகின் பண்ணணும்” என்றதும் சிலைக்கு உயிர் வந்தது போல் அசைந்தவள் அவனிடம் பேசலானாள்.

“இல்லை எப்படி?!” சாசர் போல் அகன்று விரிந்த கண்களுடன் வினவியவளைக் கண்டு...

“என்ன எப்படி?” என்று புரிந்தும் புரியாதது போல் வினவினான். கணவனின் சூசகத்தை அறிந்தாலும் அவனைப் போலவே தானும் உணர்ச்சிகளை வெளிபடுத்தாமல்...

“நீங்க பேசின வசனம், குரல் எல்லாம் எக்ஸ்ட்ராடினரி”

“அப்படி எல்லாம் இல்லை என்னை விட திறமையானவங்க நிறைய பேர் இருப்பாங்க” என்று தன்னடக்கத்துடன் கூறியிருந்தான்.

“இது அப்படி இல்லை... ஒரு வேலை பார்க்கிறவங்களாலேயே ஒரு விஷயத்தை சரியா செய்ய முடியறதில்லை... ஆனால், நீங்க காலையில் மதியம் விவசாயம், மாலை கூத்து, இரவு சாப்ட்வேர் வேலை...?” என்று நிறுத்தியவளை அழுத்தமாக பார்த்தவன்...

“மூணு நேரம் புவ்வாவுக்கும், இத்யாதி செலவுகளுக்கும் டப்பு வேணாமா? உனக்குத்தான் தெரியாதே தூங்குற மெத்தையை கூட பணக்கட்டுல செய்ததோ என்னவோ? எங்களுடைய வாழ்வாதாரம் பற்றி உனக்கு தெரிய வாய்பில்லை தான்” என்றவன் அவள் பதிலையும் எதிர்பாராமல் சென்றிருக்க, பேஸ்தடித்து நின்றிருந்தாள்!

**********************

பூங்குழலி மிகுந்த சினத்துடன் இருந்ததை கண்டு வாணியும், மலரும் கையை பிசைந்தபடி இருந்தனர்.

“என்ன வாணிக்கா பண்ணுறது? அரசிக்கா போனுக்கு ட்ரைப் பண்ணினா சுவிட்ச்ஆப்ன்னு வருது” என்று புலம்பினாள் மலர்.

“இனி தாமதிக்காம அண்ணன்கிட்டே சொல்லிர வேண்டியது தான்” என்றவள் தரன் அறைக் கதவை மெதுவாக தட்டினாள்.

தரனின் குழந்தைக்கு அன்று உடல்நிலை குன்றி விடவே அழுதழுது சோர்ந்து அப்போது தான் உறங்க ஆரம்பித்திருக்க, சம்யுக்தா, தரனும் கூட அப்போதும் சற்றே விழிகளை மூடி அசந்தனர்... அச்சமயம் வாணி கதவை தட்டும் ஒலி கேட்டு... “ம்ச்... இந்த நேரத்தில் யாரு?” என்று சலித்துக் கொண்டே அரை தூக்கத்திலிருந்து விழித்து எழச் சென்ற மனைவியை...

“நீ தூங்கு நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிய தரன் தானே கதவை திறக்கலானான். அங்கே பதட்டத்துடன் நின்றிருந்த வாணியை கண்டவன்...

“என்னம்மா ஆச்சு, ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க?”

“அண்ணா அரசிக்கா இன்னும் வரலைன்னு அம்மா கோபமா இருக்காங்க”

“அதான் அவ அப்போவே ஒரு கிளைன்ட் மீட்டிங்கில் இருக்கான்னு சொன்னாளே”

“சொன்னங்க தான் ஆனா, அம்மாவுக்கு பொம்பளை பிள்ளை இவ்ளோ நேரம் வரலைன்னா ஊர் உலகத்துக்கு யார் பதில் சொல்வாங்கன்னு ரொம்ப கோபமா புலம்பிட்டு இருக்காங்க”

“நான் சொல்றேன் வா” என்றழைத்துக் கொண்டு அவன் சிற்றன்னையை அணுகினான்.

“அம்மா ஏன் இங்கேயே உட்கர்ந்திருகீங்க?”

“இந்த குடும்பத்துக்கு நான் ஒருத்தி தானே பெரிய மனுஷின்னு இருக்கேன்... இங்க இருக்கிற யாருக்கு என்னன்னாலும் உங்களுக்கு முன்னாடி என்னைத் தானே அதிகம் கேள்வி கேட்பாங்க” என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சிடுசிடுத்தார்.

“அம்மா அரசி வேலைக்கு தானே போகிறா, பிரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தவா போனா? வேலைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்... அவகிட்டே அனாவிசயமா கேள்வி கேட்க வேண்டாம்... அவளை அர்ஜுனே கொண்டுட்டு வந்து விட்டுறேன் சொல்லிட்டான்” என்றதும் அவனை எதிர்த்து பேச முடியாமல் போக...

“சரிப்பா” என்று பெயருக்கு கூறியவரின் மனமோ கொதித்து கொண்டிருந்தது.

தரன் அரசி வரும்வரை காத்திருக்க எண்ணிய போதும் குழந்தைக்கு அன்று உடல்நிலை முடியாமல் போக மனைவிக்கு உதவ வேண்டியதாகவும் போனது.

“வாணி, மலர் நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க அரசி வந்திருவா... நான் குழந்தையை பார்த்துக்க உங்க அண்ணிக்கு உதவி செய்யணும்” என்றதும் புரிந்துக் கொண்ட வாணி...

“அதான் நீங்க அம்மாகிட்ட சொல்லிட்டீங்களே நீங்க பாருங்கண்ணா” என்று கூறியவள் தானும் உறங்க சென்றிருந்தாள்.

அர்ஜுன், அரசியை கூட்டிக் கொண்டு ஒரு முக்கிய வாடிக்கையாளரை காண சென்றிருந்தான்... அவருடனான தொழில் ரீதியான நட்பும் உண்டு என்பதால் உடனடியாக விடைபெற முடியாமல் வெகுநேரம் நீடித்தது.

அவர்களுடன் இணைந்தபடி உரையாடலில் ஈடுபட்டிருந்தவளுக்கு வீட்டை பற்றிய எண்ணமும் அச்சமும் ஏற்பட்டிருக்கவில்லை... இரவு பதினோரு மணி அளவில் தான் அவர்கள் புறப்படவே முடிந்தது.

ஏகாந்தம் சூழ்ந்த இரவின் நிலவொளியில் காரில் பயணித்து கொண்டிருந்த இருவரின் மனமும் காதலின் பேரின்ப கிளர்ச்சியில் முக்குளித்து இருந்தது.

பேசாத மௌனனங்கள் காதலின் மொழியாக மாறிப் போக பார்வைகளால் பாஷை பரிமாற்றம் செய்துக் கொண்டிருந்தனர். அரசியின் முகத்தில் நிலவிய நிர்மலம் அவன் இதயத்தை இடறி கொண்டிருந்தது. அர்ஜுன் தன் சிந்தனையை திருப்ப எண்ணி வானொலியை உயிர்பிக்க அதிலும் அவர்கள் காதலை பறைசாற்றும் பாடல் ஒலிக்கவே அவர்கள் கவனத்தை கவர்ந்தது...


கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண் மூடினாள் கண் மூடினாள்
அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறுவிரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா
உயிர் கொண்டு வாழும் நாள் வரை

இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

பாடலின் வரிகள் அவள் மனதை உரைப்பது போல் கவர்ந்தத்தில் அதனுடன் தானும் பாடி அவன் கவனத்தை ஈர்த்தாள்...

நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்

செய்பவன் நீ அல்லவா

“பயங்கரமான பாடகியா இருப்ப போலவே” அவளின் குரலும், அவனை விழிகளால் வருடிக் கொண்டே பாடிய வரிகளிலும் ஈர்க்கப்பட்டவனாக இதழ் விரிந்த புன்னகையுடன் கூறியவனின் இதயம் அவள் ரசித்து பாடிய வார்த்தையையே அசைபோட்டு கொண்டிருந்தது.

“மண்டு.. மண்டு.. நான் பாடினதை பாராட்டுறீங்களே நான் பாடிய வரியை புரிஞ்சுகலையா?” அவன் மனதை புரியாது காதலின் கிறக்கத்துடன் அங்கலாய்த்துக் கொண்டாள்.

“இதுக்கு நான் என் செயலால் தான் பதில் சொல்வேன்” என்றவன் வாகனத்தை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பியவனின் பார்வையில் என்னவென்று அவள் கிரகித்து சுதாரிப்பதற்குள் அவளை அருகில் இழுத்து தன் கை வளைவிற்குள் கொண்டவன்...

இதே சுகம் இதே சுகம்
எந்நாளுமே கண்டால் என்ன

என்று பாடிக் கொண்டிருக்க, அவள் முகத்தில் தன் ஆட்காட்டி விரலால் கோடிழுத்துக் கொண்டிருந்தவனின் தோளில் பிரியத்துடன் சாய்ந்து கொண்டாள்.

இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன
முத்தத்திலே பலவகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டி கொள்ளு

மெல்ல விடியட்டும் கிழக்கு

பாடலின் வரிகள் அவர்களுக்குள் காதல் கிளர்ச்சியை உண்டு செய்ய அதுவரை எல்லையை கடக்காது இருந்தவன்...

அச்சம் பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

என்றதும் அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் மென்மையாக படிந்து மீண்டன. அவனின் ஆலிங்கனத்தில் கரைந்து கட்டுண்டவளுக்கு அவனிடமிருந்து விலகவே மனம் வராது போக அவன் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டபடியே அவன் தோள் சாய்ந்து பயணித்தாள்... அர்ஜுன் அவளை விலக்காது சிறிது சிரமம் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் அனுசரித்து வாகனத்தை ஓட்டினான்.

இல்லம் அடைந்ததும் தான் வேறு வழியின்றி... “வீடு வந்திருச்சு அரசிமா” என்று வார்த்தையில் நேசம் சரசமாட கூறினான்.

“நான் போகலை இப்படியே இருந்திடறேனே” என்றவள் மேலும் அவன் மார்பில் நன்கு தன் முகத்தை புதைத்துக் கொள்ள அவன் உணர்ச்சிகள் தாறுமாறாக எகிறிக் கொண்டிருந்தது.

‘வா இப்படியே இப்போதே என் வீட்டிற்கு சென்றுவிடலாம்’ என்று சித்தம் சிந்தித்தாலும் சில கடமைகளும், பொறுப்புகளும் அவனுக்கு தடையிட்டது... முதலில் அவனை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவன், அரசியின் தாடையை பற்றி கண்களை உற்று நோக்கச் செய்து...

“அரசி சீக்கிரமே நான் நம்ம விஷயத்தை வீட்டில் சொல்லி உன்னை பெண் கேட்க வரேன்” என்று வாக்குறுதி கொடுக்க அவளோ மிரண்டு விழித்தாள்.

“என்னம்மா” என்று பரிகாசத்துடன் கேட்க அவள் விழிகள் அச்சத்தில் கலங்கி சிவந்தது.

“ரொம்ப பயமா இருக்கு”

“எதுக்கு பயம் நீயும் நானும் லவ் பண்றோம்னு சொன்னாத்தானே பயப்படணும்... என் குடும்பத்தின் விருப்பத்தில் நம்ம கல்யாணம் செய்துகிட்டது போல தான் ஏற்பாடு பண்ணுவேன்... நீயும், நானும் காதலிக்கிறது உனக்கும் எனக்கும் தெரிஞ்சா போதும் மத்தபடி உன்னை யாரும் ஒரு அவப் பெயர் சொல்லாதபடி பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு”

அவன் கூற்றில் சற்றே சமாதானம் அடைந்தவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு... “சரி நான் கிளம்புறேன்” என்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அரசியின் முதுகையே வெறித்தவனுக்கு விரைவாகவே அவளை மணந்து தன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உறுதி பிறந்தது... ஆனால் மனிதன் நினைப்பதை அத்தனை சுலபமாக நடத்திவிட விதி விட்டு வைப்பதில்லையே?!

அரசியை எதிர்கொண்ட பூங்குழலி அவளுக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்துவிட்டே படுக்க சென்றிருந்தார்... அரசிக்கு அத்தையின் சாடுதலை விட அர்ஜுனின் பிரிவே அவளை கொண்று தின்று கொண்டிருந்தது... அருகில் படுத்திருந்த வாணி ஆழ்ந்த உறக்கத்தில் உறுதி செய்தவள் அலைபேசி திரையில் இருந்த அர்ஜுனின் படத்திற்கு அச்சாரம் பதித்தாள். வாணியிடம் அசைவு தெரிவது போல் இருக்க வேகமாக பேசியை தலையணை அடியில் வைத்து விட்டு போர்வையை தலைவரை நன்கு இழுத்து போர்த்திக் கொண்டாள்.

**********************

நாட்கள் தெளிந்த நீரோடையாக சென்றுக் கொண்டிருந்தது... சம்யுக்தா இணையத்தின் மூலமாக தன் நிறுவனத்தை நிர்வாகம் செய்ய வேண்டியவற்றை பக்காவாக செய்திருந்தாள்... சுஜிதாவின் உதவியும் இதில் பெரும் பங்கு வகித்திருந்தது.

கலாதரன் மனைவியின் தொழிலுக்கு எந்த வித இடையூறும் சிக்கல்களும் ஏற்படாத வகையில் சில மாற்றங்களை செய்திருந்தான்... அதில் ஒன்றாக வீட்டிற்கு வேலை ஆள் நியமித்து மேற்பர்வையை அவன் சிற்றனையையும் வாணி, மலரிடமும் விட்டிருந்தான்.

பூங்குழலிக்கு இதில் பெரிதாக ஒப்புதல் இல்லை தான் எனினும் தனக்கும் சில சிரமங்களை குறைக்கலாமே என்ற எண்ணத்தில் அரைமனதாக ஏற்றுக் கொண்டார்.

சம்யுக்தா வேலை நேரத்தின் போது அவளின் குழந்தையை மலரும், வாணியும் பார்த்துக் கொண்டனர். அரசி எப்போதும் போல வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.

அனைத்தும் சுமுகமாக முடிந்துவிட்டதே என்ற திருப்தியில் இருந்த கலாதாரனுக்கு என்னை மறந்துவிட்டீர்களே என்று நினைவூட்டுவது போன்று திடுதிப்பென்று வந்திறங்கினான் ரஞ்சன்.

சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-18 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-19

பூங்குழலி கிணற்றடியில் ஏதோ வேலையில் இருக்க, வாணி குழந்தைகளை கவனித்து கொண்டிருக்க, மலர் படித்துக் கொண்டிருந்தாள்... ரஞ்சன் தன் வாகனத்தில் இருந்து இறங்கியவன் ஏதோ அவன் தான் அந்த வீட்டுக்கு உரிமையாளன் என்பது போல் ஜம்பமாக நின்றவன் வாணியை அணுகி...

“எங்க டி என் தங்கச்சி” கிஞ்சித்தும் அவளை மதிக்காமல் அதட்டலாக வினவியவனின் குரலில் தூக்கிவாரிப் போட எழுந்தவள் அவனை கடுமையாக முறைத்தாள்.

“ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசுங்க இல்லன்னா, நடக்கிறதே வேற?

“ஒஹ்! கொடுக்காட்டி என்ன டி பண்ணுவ?”

“ம்ம்ம்... அன்னைக்கு நடுரோட்டில் செய்ய தவறின ஒரு விஷயத்தை இப்போ செய்ய வேண்டியதா இருக்கும்”

அன்று காவல் ஆணையர் வழி மறைத்து கண்டித்ததை நினைவூட்டியதை எண்ணி அவளை பார்வையால் சுட்டெரித்தான்... அவனுக்கு அன்று ஏற்பட்ட அவமானத்தின் வடுவை தீர்க்க எண்ணியவன் அவளை ஏளனமாக நோக்கி...

“உன் மானம், மரியாதை இழந்து நிற்கிறப்போவே இத்தனை திமிருன்னா, அது எல்லாம் இருந்தா நீ இன்னும் எவ்ளோ திமிரா பேசுவா?” என்று தூஷணையாக மொழிந்தவனின் வார்த்தைக்கு சிறிதும் ஒடுங்காமல் முன்னை விட இருமடங்கு அதிகமான நிமிர்வுடன் பார்த்தவளின் விழிகளில் அனல் சுட்டெரித்தது...

“என் மானம், மரியாதையை குலைச்ச நீயே இப்படி வெட்கமில்லாம சுத்தும் போது நான் ஏன் தலை குனியனும் மிஸ்டர்.மனோரஞ்சன்” என்று கூறிவிட்டு கனலாக முறைத்தாள். அவளின் இந்த நிமிர்வு புதியதாக இருக்கவே சட்டென்று பேச்சை மாற்றினான்...

“உன்கிட்டே பேசி என் நேரத்தை வீணடிக்க வரலை, ஒழுங்கா என் தங்கச்சி எங்கன்னு சொல்லு நான் அவளை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்”

“உங்க தங்கச்சின்னு இங்கே யாரும் இல்லை... என் அண்ணனுடைய பொண்டாட்டி, என் அண்ணி தான் இங்கே இருக்காங்க” என்றவளை கண்டு கடினமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

இவர்களின் வாக்குவாதம் சச்சரவாக மாறுவதற்கு முன்பு சம்யுக்தா அங்கே வந்தவள்... “ரஞ்சன் அண்ணா எப்போ வந்த? எப்படி இருக்க?” என்று நீண்ட நாட்கள் தன் குடும்பத்தில் இருக்கும் ஒரு உறுப்பினரை பார்த்த மகிழ்ச்சியில் இயல்பாக விசாரித்தாள்.

“சம்மு எங்களை எல்லாம் மறந்துட்டியாடா? முதல்ல நீ எப்படி இருக்கேன்னு எனக்கு தெரிஞ்சாகணும்” என்று கரிசனம் போல் விசாரித்துக் கொண்டிருந்தவன் மனதில் தகுதியற்ற இடத்தில் இதை எல்லாம் கேட்க வைத்த நிலையை எண்ணி தகித்துக் கொண்டிருந்தான்.

“நான் நல்லா இருக்கேன், நீ என்ன இந்த பக்கம் வந்திருக்க? உன் பொண்டாட்டியையும், பொண்ணையும் கூட்டிட்டு போக வந்தியா?” வினவியவளின் முகம் உணர்ச்சி துடைக்கப்பட்டிருக்க, அவனுக்கோ வன்மம் கூடியது.

“என்ன சம்யுக்தா நீயே இப்படி பேசுற? யாருக்கு யார் பொண்டாட்டி அவ கழுத்துல நான் தாலியா காட்டினேன், இல்லையே!”

“அப்புறம் எப்படி அவளுக்கு குழந்தையை மட்டும் கொடுத்த?” வெடுக்கென்று வந்த வினாவில் அவளை வெறுப்புடன் நோக்கினான்.

“சம்மு திஸ் இஸ் டூ மச்... நான் தான் உனக்கு அண்ணன், இங்கிருக்கவங்க யாரோ ரோட்டில் போகிற மூணாவது ஆள்... என்னமோ நான் மட்டும் தப்பு பண்ணின மாதிரி சொல்ற... இதோ இருக்காளே அவளுக்கு ஒன்னும் அதில் விருப்பம் இல்லாத மாதிரி தெரியலையே” என்றவனின் பார்வை இளக்காரமாக வாணியை வருட, அச்சமயம் அங்கே வந்த பூங்குழலி அவன் வார்த்தையை கேட்டு கொதித்து போனார்.

ஆனாலும் அவரால் ஈடுக்கொடுத்து பேச இயலாது போக, அந்த நிலையை உண்டாக்கிய வாணியின் மேல் அவரின் கோபம் திரும்பியது.

“ரஞ்சன் அண்ணா... பண்ணின தப்பை சரி செய்துக்க பாருன்னு அன்னைக்கே சொல்லிட்டேன் ஆனாலும் நீ கேட்கிறதா இல்லை, இல்லையா?”

“சம்மு நீயே இந்த எலி பொந்தில் என்ன கஷ்டப்படுறியோன்னு துடிச்சுப் போய் தான் உன்னை தேடி வந்திருக்கேன்... நீ இப்படி பேசிட்டு இருக்கிற? இப்போக் கூட ஒன்னும் பிரச்சனை இல்லை, நீ என்னுடன் வா, நம்ம வீட்டில் நம்ம ஸ்டேட்டஸ்க்கு தகுதியானவங்களா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க, நீ எதை பத்தியும் யோசிக்காம என்னுடன் வா” என்றவனின் பேச்சிற்கு எந்த எதிரொலியும் இல்லாது நின்றிருந்தாள்.

“பேசி முடிச்சுட்டியா இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?”

“சம்மு இங்கிறக்கவங்க உன்னை கார்னர் பண்ணி வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன், அதான் நீ இப்படி என்கிட்டே பயந்துப் பயந்து பேசுற... நீ ஒரு வார்த்தை சொல்லு இவங்க குடும்பதையே அழிச்சு ஒண்ணுமில்லாம ஆக்க முடியும்” என்றவனை கண்கள் சிவக்க பார்த்தவளின் தீட்சண்யத்தில் அசையாது நின்றான்.

“இவ்ளோ தான் உனக்கு மரியாதை ரஞ்சன் அண்ணா... ஏதோ என் கூட பிறக்காட்டியும் நான் உன்னை ரத்த சொந்தமா நினைக்கிறேன் தயவு செய்து, அதெல்லாம் தப்புன்னு என்னை நினைக்க வச்சிராத முதல்ல இங்கிருந்து கிளம்பு”

“சம்மு அண்ணனையே எதிர்த்து பேசுறியா?” என்றவனின் எதிரில்...

“ப்பா... ப்பா...” என்று பிதற்றியபடி தவழ்ந்து வந்து அவன் காலை கட்டிக் கொண்ட அவன் மகளின் மேல் கோபம் திரும்ப...

“எல்லாம் இந்த சனியனால வந்தது... ச்சீ, போ!” என்று கிஞ்சித்தும் இரக்கமற்று தள்ளிவிட...

“ஐயோ குழந்தை!” என்று வாணி, சம்யுக்தா இருவரும் பதறிய சமயமே அங்கே ஆபத்பாந்தவனாக வந்த தரன் தாங்கிக் கொண்டிருக்க, எதிர்பாராத சம்பவத்தில் திடுக்கிட்டு பயந்த குழந்தை வீலென்று அலறி அழுக ஆரம்பித்தது... தரனின் பார்வை ரஞ்சனை சீற்றத்துடன் கூறுப்போட சிறிதும் தாமதியாமல் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தான்.

“எங்கே வந்து யாரை டா சனியன்னு சொல்கிற? நீ ஒரு சனியன் உன் தங்கச்சி ஒரு ச...” என்று ஆத்திரத்தில் வார்த்தை தவறவிட்டவனை...

“தரன்” என்று உயர்ந்த குரலில் தடுத்து நிறுத்தினார் கேசவன்.

“அவன் பேசினது தப்புன்னு கண்டிச்சேன்னு பார்த்தா, நீயும் அதே வார்த்தையை தவற விடுற? அதுவும் இந்த வீட்டுக்கு வாழ வந்த பெண்ணை பார்த்து சொல்றியே உன்னை நாங்க இப்படி தான் வளர்த்தோமா?”

“ஒருத்தரோட தப்பை கண்டிக்கிறதுக்கு முன்னாடி நாம சரியா இருக்கனும் தரா, இல்லைன்னா அந்த இடத்தில் நம்ம பேச்சுக்கு தகுதி இல்லாமல் போயிரும்” என்று கண்டிப்புடன் அறிவுறுத்தினார் குருதரன்.

“நீ நம்ம வீட்டு பிள்ளைக்கு நியாயம் கேட்கணும் தான், அதுக்காக இந்த வீட்டுக்கு வாழ வந்த பெண்ணை அவமானப்படுத்தி கேட்டதா இருக்கக்கூடாது” என்றும் குரு கூற...

ஆவேசத்தில் கொதித்து கொண்டிருந்த ரஞ்சன் வெறித்தனமாக கைத்தட்டினான்... “நல்லா இருக்குயா உங்க நாடகம்... குடும்பமே ஒண்ணு சேர்ந்து நல்ல பணக்கார இடமா பார்த்து வளைச்சு போட்டுட்டு.. இப்போ வாழ வந்த பொண்ணு, வாழ்க்கை தந்த பொண்ணுன்னு வசனமா பேசுறீங்க?” என்று எதிர்த்து வாதிட, தரன் பொறுமையிழந்து அவன் சட்டையை கொத்தாக பற்றி துவைத்து எடுக்க, ரஞ்சனும் தன் பங்கிற்கு தாக்க, இருவருக்கும் கைகலப்பு ஆகிப் போனது... கேசவன், குரு இருவரும் சிரமப்பட்டு இருவரையும் பிரித்து நிறுத்தினர்.

தரனின் உள்ளம் உலைக்களனாக கொதித்துக் கொண்டிருக்க, ஆவேசத்தில் வேகமூச்சை வெளியேற்றிக் கொண்டிருந்தான். அவன் கண்களின் சிவப்பு அவனை துவேசம் செய்துவிடும் வெறி தெரிய சம்யுக்தா சுதாரித்துக் கொண்டவள்...

“ரஞ்சன் அண்ணா முதலில் நீ இங்கிருந்து கிளம்பு... இனி ஒரு நிமிஷம் கூட இங்கிருக்கக்கூடாது” கறாராக கூறியவளின் பேச்சிற்கு அசைந்தவன்...

“அப்போ நீயும் என்னுடன் வா சம்முமா, நாம சேர்ந்தே போகலாம்” என்றதும் குருவின் கைகளை விடுவித்து கொண்டு வந்தவன் மனைவியின் விலாவை அழுந்த பிடித்துக் கொண்டு...

”என் பொண்டாட்டியை வான்னு கூப்பிட நீ யாருடா? ஒழுங்கா என் தங்கச்சி கழுத்தில் தாலி கட்டி அவ கூட வாழப் பாரு, அதை விட்டுட்டு கண்டதெல்லாம் பேசினே அப்புறம் பல்லு இல்லாத பொக்கை வாயா தான் ஊரை விட்டு திரும்புவ”

“என் தங்கச்சியே இங்கே இருக்கக் கூடாதுன்னு சொல்றவன் டா நான்... அவளுக்கே நாங்க மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க தயாரா இருக்கோம், நான் போய் உன் தங்கையை மணப்பதா வாய்ப்பில்லை ராஜா” அவன் வார்த்தை எள்ளாடளில் கட்டிக்காத்த பொறுமை காற்றில் பறக்க...

“என் பொண்டாட்டிக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீங்க யாருடா” என்றவன் முகத்தில் கைமுஷ்டி இறுக்கி குத்த அதுவரை பொறுமையாக இருந்த ரஞ்சனை தன் பலம் கொண்ட மட்டும் இழுத்து வாசலை பார்த்து தள்ளிவிட்டிருந்தாள்.

”ரஞ்சன் அண்ணா முதலில் இங்கிருந்து போ” என்று உறுமியவளை தீர்க்கமாக பார்க்க...

“போன்னு சொல்றேன்” என்று உரக்க கூறியதும், அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தான்.

சம்யுக்தாவுக்கு ரஞ்சன் மேல் இருந்த தவறும், தங்கைக்கு அண்ணனாக தன் கணவனின் ஆத்திரத்தின் வெளிப்பாடும் நியாயம் என்று உணர்ந்தாள்... ரஞ்சனை அங்கிருந்து அனுப்பியதே அந்நேரம் தன் கணவனின் கோபத்தை கட்டுபடுத்தும் நோக்கம் கொண்டு செய்திருக்க, தரனுக்கோ அவள் தமையனுக்கு வக்காளத்து வாங்குவதாக நினைத்து மனைவி மேல் சினம் கொண்டான்.

ரஞ்சன் கிளம்பியதும் வாணி குழந்தையுடன் அறைக்குள் புகுந்து கண்ணீர் உகுக்க ஆரம்பிக்க, பூங்குழலிக்கும் மகளின் வாழ்க்கையை எண்ணி பெரும் வேதனை ஏற்பட்டது.

“பாவி மக, இப்படி போய் சிக்கிட்டு வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிட்டாளே” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு தன் துயரத்தை வெளிப்படுத்தினார்... அன்னையின் வார்த்தையில் வாணிக்கு தன் அவல நிலையை எண்ணி மறுகிப் போனாள்.

“குழலி நடந்து முடிந்ததை நினைச்சு அழாதே, இனி நடக்கப் போகிறதை பாப்போம்... இவ வாழ்க்கையும் ஒரு நாள் சரியாகும், நம்பு” என்று தன் வேதனையை மறைத்துக் கொண்டு மனைவிக்கு தேறுதல் கூறினார் குருதரன்.

“அம்மா நீங்க கவலைபடாதீங்க வாணி என் பொறுப்பு, அந்த ரஞ்சன் தான் நம்ம வாணிக்கு புருஷன் இதை நான் நடத்திக் காட்டாம விடமாட்டேன்... இதை யார் தடுக்கறாங்கன்னு பார்த்துடுறேன்” என்றவன் மனைவியை பார்வையால் குற்றம் சாட்டிவிட்டு விருட்டென்று நகர்ந்திருக்க சம்யுக்தாவுக்கு குழப்பமும், திகைப்பும் அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டது.

அரசி அழுவலகம் முடிந்து வந்தவளிடம் வாணி அன்று நடந்த சம்பவத்தை புட்டுப் புட்டு வைக்க அவளுக்கும் ரஞ்சன் மேல் எரிச்சலாக இருந்தது.

“இப்போ தான் அண்ணனும், அண்ணியும் சேர்ந்தாங்கன்னு நினைச்சோம், அதுக்குள்ள கூத்தில் கோமாளி புகுந்த கணக்கா இந்த ரஞ்சன் எல்லாத்தையும் கெடுத்துட்டு போகணுமா... செஞ்ச தப்புக்கு பரிகாரம் பண்ண நினைக்காம, இங்கே இருக்கிறவங்க வாழ்க்கையிலேயும் சிக்கல் உண்டு பண்ண பார்க்கிறானே” என்று கூற வாணிக்கு இவையனைத்தும் தன்னால் தானே என்ற எண்ணத்தில் முகம் அனிச்சமலராய் வாடியது. அப்போது தான் வாணி இருப்பதை மறந்து வாய்விட்டதை உணர்ந்தவள்...

“இங்கே பாரு வாணி இப்படி இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் முகம் தூக்கி வச்சகிட்டு வருத்தப்பட்டா வேலைக்காகாது... எதையும் தைரியமா பேஸ் பண்ண பார்க்கணும்” என்று கூறிக் கொண்டிருக்கும் சமயம் குழலி வந்திருக்க...

“ஆமாம் காலையில் இருந்து நொந்து வேதனையில் இருந்தவ இப்போ தான் சரியானா, அதுக்குள்ள நீ உன் பங்குக்கு அவளை கடிச்சு துப்பறியா?” என்ன பேசினால் என்றே அறியாது அவர் போக்கில் குற்றம் சாட்டியத்தை எண்ணி அரசி விக்கித்துப் போனாள்!

தன் வேதனையை எண்ணி துக்கம் அனுசரித்துக் கொண்டு, வெறுமையில் உழன்று கொண்டிருந்த வாணியும், அவள் அன்னை அரசியை வார்த்தையால் காயப்படுத்தி கொண்டிருப்பதை கண்டு கொள்ளாது இருந்தது, அரசியின் மனதை இரு மடங்கு புண்படுத்தி விட்டிருந்தது.

“அன்னைக்கே என் மகள் செய்த தப்பை கண்டிச்சு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இன்னைக்கு அவள் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்... இன்னைக்கு அவ வாழ்க்கையை இழந்து நிற்கிறதுக்கு நீ தான் காரணம்” என்று கழிவிறக்கம் சிறிதும் இன்றி வார்த்தையால் குத்திக்கிழிக்க மனம் ரணமாக அனலில் இட்ட புழுவாய் துடித்தாள்.

“சின்ன வயசுலயே பெத்தவங்களை பறி கொடுத்துட்ட, இப்படி வளர்ந்து நின்னு என் மகள் வாழ்க்கையை அழிச்சுட்ட... நீ இருக்கிற இடம் விளங்கவே விளங்காது போல உன்கிட்டே இருந்து ஜாக்கிரதையா தான் இருக்கணும்” என்று விளம்பியவரின் பேச்சில் நொடிந்துப் போனாள்.

அதுவரை அவர் பேசியது கூட ஒரு வகையில் தன் மேல் உள்ள தவறுக்கு தண்டனையாக அவள் ஏற்றுக் கொண்டாள்... ஆனால் இறுதியில் அவர் கூறிய தீக்கங்குளை போன்று வார்த்தைகளும் உடலை சுட்டு தகிக்க வைக்கும் என்பதை அன்று நிதர்சனத்தில் உணர்ந்த அரசிக்கு உள்ளம் சல்லடையாக சடைந்தது... இனி தான் உயிரோடு இருக்கவும் வேண்டுமா என்று எண்ணம் துளிர்ந்த கணமே அர்ஜுன் ஒற்றை விரல் கொண்டு மிரட்டுவது போன்ற பிரமையில் அவள் சிந்தனை ஓட்டத்தை தட்டிவிட்டாள்.

குழலியின் வார்த்தை அம்புகளுக்கு இப்போது பழக்கப்பட்டிருந்த போதிலும் இன்றைய பேச்சு மிகவும் அதிகம் என்றே நினைத்தாள். அர்ஜுனின் நேசம் மட்டும் இல்லையென்றால் அவள் அப்போதே மரித்துப் போயிருப்பாள்!

**********************

இரவு பதினோரு மணிக்கு தான் தரன் வீட்டை அடைந்திருந்தான்... ரஞ்சன் வந்துவிட்டு போன சம்பவத்தில் மிகுந்த சினத்தில் இருந்தவன் தன் கோபத்தை குறைக்க வேண்டி என்றுமில்லாத அளவிற்கு அன்று அதிக பணிகளை இழுத்து போட்டு செய்துவிட்டு அலுத்து களைத்து வந்திருந்தான். சம்யுக்தா அந்நேரமும் கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்ததை கவனித்து விட்டு குளித்து உடைமாற்றி வந்தவனை அணுகி...

“சாப்பிட வாங்க” என்று சுவற்றை பார்த்து கூறி விட்டு சென்றிருந்தாள். அவளின் செய்கையில் ‘எனக்கு வேண்டாம் போ டி’ என்று கூறி விட எண்ணினாலும் பசி வயிற்றை கிள்ளி அந்த வார்த்தையை கூறவிடாது தடை செய்திருந்தது... வீட்டில் உள்ளவர்களின் உறக்கத்தை கலைக்காது இருக்க சமையலறையிலேயே சாப்பிட அமர்ந்தனர் இருவரும்.

சம்யுக்தா அவனை உணவுக்கு அழைத்தாளே தவிர, அதன் பிறகு ஒற்றை வார்த்தை பேசாமல் மௌனமாகவே உணவு பரிமாறினாள். சம்யுக்தா வேகமாக உண்டு முடித்திருக்க, அவளுக்கு தூக்கம் கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது... தூக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சித்து கொட்டாவி விட்டபடி தடுமாற்றத்துடன் அவனுக்கு தண்ணீர் குவளையை நிரப்பியவளை கண்டு, ரஞ்சனின் வார்த்தைகள் நாராசமாய் நினைவில் நிழலாடியதில் வன்மம் தலைதூக்க...

“ஏன் இவ்வளவு சிரமப்படணும்? அன்னைக்கே கோர்ட்ல விவாகரத்து வாங்கியிருந்தேனா, உங்க வீட்டில் இந்நேரம் வசதியான இடமா பார்த்து ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் பண்ணி வச்சிருந்திருப்பாங்களே?” என்றவனை விசுக்கென்று விழியுயர்த்தி பார்த்தவளுக்கு அத்தனை நேரம் இருந்த சோர்வும், தூக்கமும் முகவரி இல்லாமல் சென்றுவிட்டிருக்க, அவனை பார்வையால் சுட்டெரித்துக் கொண்டிருந்தாள்.

அதை சிறிதும் சட்டை செய்யாதவன் மேலும்... “இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்லை, என் கூட வாழ விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு, குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு போகலாம், நான் அதுக்கு தடை விதிக்கமாட்டேன்” அமர்த்தலாக கூறியவனின் வார்த்தை அவள் பொறுமையை சோதித்திருக்க, அதன் காரணமாக பொங்கி எழுந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்த இயலாமல் கையில் இருந்த குவளை தண்ணீரை விழுக்கென்று அவன் மேல் ஊற்றி அபிஷேகம் செய்திருந்தாள்... அவளின் செயலில் சீற்றம் அடைந்தவன் உணவு பருக்கைகள் ஒட்டிக் கொண்டிருந்த எச்சில் கரத்தால் அவள் கன்னத்தை தாக்குவதற்கு உயர்ந்திருக்க குழந்தையின் வீறிடல் சப்தத்தில் அவன் கரங்கள் செயலாற்றாமல் அந்தரத்தில் ஊசலாடியது.

“ஞை... ம்மாஆ... ஞை..” என்ற குழந்தையின் அழுகுரல் அவன் காதை அடைக்க வைக்க, அங்கிருந்து ஒரு அடி நகர முற்படாமல் கால்களை ஆணி அடிவைத்தது போல் நின்றிருந்தவளை கண்டு மேலும் கடுப்படைந்தவன்...

“ஏய் காது செவிடா குழந்தை அழுகுறாள போய் கவனி” என்றவனின் சொல்லிற்கு சிறிதும் அசைந்து கொடுக்காமல் பிடித்து வைத்த பிள்ளையார் போன்று நின்றவளின் திண்ணக்கத்தை கண்டு ரத்த கொதிப்பு எகிறிக் கொண்டிருந்தது...

“அதான் அடிக்கணும்னு கை ஓங்கியாச்சே அதை குறையா விட வேண்டாம், நீங்க செய்ய வேண்டியதை செஞ்சு முடிங்க, அதுக்கப்புறம் நான் இங்கிருந்து நகர்ந்துக்குறேன்” என்று வார்த்தையில் மட்டுமல்லாது பார்வையில் அழுத்தம் கூட்டி மமதையாக நின்று அவன் ரத்த அழுத்தத்தை மேலும் எகிற வைத்துக் கொண்டிருக்க, குழந்தையின் வீறிடலில் பெற்றவனாக தசை துடிக்க ஆரம்பித்தது.

“ஏய் இது ராத்திரி நேரம், எல்லாரும் எழுந்திரிச்சுக்க போறாங்க ஒழுங்கா போ” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தைகளால் வலியுறுத்தியவனிடம்...

“முடியாது நீங்க கொடுக்காமல் நான் போகமாட்டேன்” அழுத்தமாக கூறிவிட்டு அவனை கிஞ்சிதும் மதிக்காது அசைவேனா என்பது போல் மெத்தனமாக நின்றவளை சமாளிக்கும் வழியின்றி, அவள் எதிர்பாராது சடாரென்று அவளை இழுத்தவன் இதழ்களை முற்றுகையிட்டு பிடித்த வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் விடுவித்தவன்...

“கொடுத்தாச்சு போதுமா, இப்போ போ” என்று விட்டு கையலம்ப சென்றுவிட்டான்.

“ரூமுக்கு தானே வரணும் இன்னைக்கு எப்படி தூங்குறீங்கன்னு பார்க்கிறேன்” என்று மிரட்டல் விடுத்துவிட்டே நகர்ந்திருந்தாள்.

**********************

ரஞ்சனின் வரவுக்கு பிறகு குரு, குழலிக்கு மகளின் வாழ்க்கையை எண்ணி விசனம் அதிகரித்திருந்தது...

“இந்த பொண்ணுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சோம்... ஆனால், யானை தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கிற மாதிரி இப்படி காசை பெரிசா நினைகிற இடத்தில் அவமானப்பட்டு நிற்கிறாளே” என்று அங்கலாய்ப்பில் புலம்பி கண்ணீர் வடித்தார்.

“குழலி நீ இப்படியே நிதமும் புலம்பி ஆகப் போவதென்ன? கடவுள் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு வழி விடுவார் கவலைப்படாதே” என்று மனைவிக்கு தேறுதல் கூறிக் கொண்டிருக்கும் போதே கேசவன் அங்கே பிரசன்னமானவர்...

“அழாதே குழலி” என்று தானும் ஆறுதல் கூறினார்.

“எப்படி மாமா அழாம இருக்கிறது? பெற்றது ரெண்டும் பெண் பிள்ளையாச்சே எதிர்காலத்தை நினைச்சாளே மனசுல கருக்கடை கட்டுது மாமா” என்று மூக்கை உறிஞ்சியபடி கதனத்துடன் பிரலாபித்தார்.

“நான் இதுக்கு ஒரு முடிவு செய்திருக்கேன்... அதை பற்றி பேசத் தான் வந்தேன்” என்றதும் நிமிர்ந்து பார்த்தவர்களின் விழிகளில் ஒளிப் பிரவாகம் மின்னியது.

“இனிமே நாம அமைதியா இருக்கிறது நல்லதில்லை... வாணியோட வாழ்க்கைக்கு ஒரு வழி செய்யணும்னா அதுக்கு முன்னாடி கலையரசியை கல்யாணம் செய்து கொடுத்தாகணும்”

“ஆமாம் அண்ணா நீங்க சொல்றதும் சரிதான்” என்று குருதரன் ஆமோதிக்க குழலிக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“என்ன சரி தான் சொல்றீங்க? அவ கல்யாணத்துக்கு வர சொந்த பந்தம் எல்லாம் நம்ம மகளுக்கு புருஷன் எங்கன்னு கேட்பாங்க அதை மறந்துட்டீங்களா?” காரமாக வினவினார்.

கேசவன் அவரின் கோபத்திற்கு அலட்டிக்காமல்... “அரசியை பற்றி யோசிக்கும் போது வாணியை பற்றி யோசிக்கமாட்டேனா குழலி” என்று நிதானமாக கூறினாலும் அவருக்கு பெரிதும் உடன்பாடில்லாமல் இருக்கவே கோபம் மாறாமல் பார்த்திருந்தார்.

“அரசி இந்த வீட்டுக்கு மூத்த மகள் மாதிரி தான்... அவளுக்கு ஒரு நல்லது பண்ணாம நாம நேரடியா வாணிக்கு நியாயம் கேட்கப் போனா நாளைக்கு அரசி, மலர் ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் தான் பிரச்சனை ஆகும்”

“அதுவும் இல்லாம நம்ம வாணி, மலருக்கு அம்மாப்பான்னு நீங்க இருக்கீங்க... அரசிக்கு யாரும் இல்லைன்னு ஒரு நினைப்பு வந்திரக்கூடாது... அதனால அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா அடுத்து நம்ம வாணி பிரச்சனையை பார்க்கிறது ரொம்ப சுலபம் தான்”

“அதெல்லாம் சரி தான், வாணிக்கு புருஷன் யாருன்னு கேட்டா யாரை கை காட்டுறது?”

”வாணியோட புருஷன் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான்னு சொல்லிற வேண்டியது தான்” என்றதும் குருதரனுக்கு அது உசிதமாகப்பட்டது.

“நீங்க சொல்றது தான் சரிங்க ண்ணா... வாணியோட வாழ்க்கையை போல அரசிக்கும் சிக்கல் ஆகிரக்கூடாது... அரசிக்கு தாய் தகப்பன் இல்லாத பொண்ணுன்னு ஒரு பேர் வேண்டாம், அந்த பிள்ளையை நாம கட்டி கொடுத்துட்டா அக்கடான்னு நம்ம வாணி பிரச்சனையை பார்த்துக்கலாம்”

“சரி குரு நான் இதை பத்தி நம்ம கலாதரன்கிட்டே பேசுறேன்... சீக்கிரமே அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்திருவோம்” என்று கூறிவிட்டு நகர அலுவலகத்திலிருந்து அப்போது தான் உள்ளே நுழைந்த அரசி கேசவனின் பேச்சை கேட்டு அதிர்ச்சியில் திக்பிரமை பிடித்தது போல் நின்றுவிட்டாள்!

சம்யுக்தா குழந்தையுடன் அளவளாவிவிட்டு வந்தவள் அங்கே வாசலில் வழியை மறைத்தபடி நின்ற அரசியை கண்டு ஆராய்ச்சியாக பார்த்தப்படியே...

“அரசி ஏன் எதையோ கண்டு பயந்த மாதிரி நிற்கிற?” என்றவளின் பேச்சில் துள்ளி குதித்து விலகியவள்...

“அர்ஜுன்... அர்ஜுன்... என..க்கு.. கல்..யா..ணம்..” என்ற பிதற்றவளின் முகத்தில் கலவரம் சூழ்ந்திருந்ததை கவனமாக குறித்துக் கொண்ட சம்யுக்தா...

“என்ன அர்ஜுன்...? என்ன கல்யாணம் அரசி?” என்றதும் தான் முழுவதுமாக நிதானத்திற்கு வந்தவள் அதிர்ச்சியில் உளறியதை எண்ணி பேந்த பேந்த விழித்தாள்.

“என்ன ஆச்சு உனக்கு?”

“இல்... இல்லை... அண்ணி நான் வேலையில் ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன், அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்” என்று ஏதேதோ உளறியவளுக்கு தொண்டை வறண்டு நாக்கு உலர்ந்தது போல் இருக்க...

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு, நான் போய் ரெஃப்ரஷ் ஆகிறேன்” என்று விட்டு நகர்ந்தவளின் கைப்பையை சம்யுக்தாவின் மகள் “ம்ம்மா...ம்ம்மா...” என்று மழலையில் பிதற்றியபடி இழுத்துக் கொண்டிருந்தாள்.

அரசிக்கு இருந்த குழப்பத்தில் அலைபேசியை மட்டும் கையில் எடுத்து விட்டு கைப்பையை குழந்தையிடமே விட்டுச் செல்ல சம்யுக்தா முகத்தில் சிந்தனை ரேகைகள் படிந்தது.

அரசி அறைக்குள் சென்றும் தன் படபடப்பை அடக்கிக் கொள்ள பிரம்ம பிரயத்தனப்பட்டாள்... கைபேசியில் இருந்த அர்ஜுனின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனிடம் இதை பற்றி பேச வேண்டும் என்ற சங்கல்பம் மேற்கொண்டு விட்டிருந்தாள்.

சம்யுக்தா அசந்து திரும்பிய நேரத்தில் மகள் அரசியின் கைபையில் இருந்த பொருட்களை கவிழ்த்து கொட்டியிருக்க...

“அடியேய் செல்லமே! அரசிம்மா பேக்கை இப்படி கந்தரகோலம் ஆக்கிட்டியே” என்று செல்லமாக மிரட்டியபடி மகள் கவிழ்த்த பொருட்களை திரும்பவும் பைக்குள் திணிக்க ஆரம்பிக்க, தன் பொக்கை வாயை திறந்து கிளுக்கி சிரித்தபடி பொருட்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வீசி அன்னையிடம் விளையாடிக் கொண்டிருந்தாள் பெண்ணரசி.

மகளிடம் விளையாடிக் கொண்டே பொருட்களை சேகரித்தவளுக்கு அதில் இருந்த கடவுசீட்டு போட்டோவையும் எடுத்து வைக்க சென்றவளுக்கு அதில் இருந்த ஆண் முகம் எதர்ச்சியாக புலப்பட பைக்குள் போட்ட புகைப்படத்தை மீண்டும் எடுத்து கண்ணுற்றவளுக்கு அர்ஜுன் என்றதும் எதுவோ மனதை குடைந்தது.

‘அர்ஜுன் கம்பனியில் வேலை பார்க்கிறா தான், ஆனால் போட்டோ அதுவும் ரகசியமா வச்சிருக்கிறா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டிருந்த சமயம் மலர் குதூகலத்துடன் வந்தவள்...

“அண்ணி! அண்ணி! அரசி அக்காவுக்கு கல்யாணம் பண்ணப் போறாங்களாம், எனக்கு லெஹங்கா வேணும் அண்ணி... அம்மாகிட்டே நான் சொன்னா போடக்கூடாதுன்னு சண்டை போடுவாங்க, அதனால் நீங்களே வாங்கித்தாங்க அண்ணி” என்றவள் குழப்பம் அதிகரிக்க மலரின் பேச்சிற்கும்...

“சரிம்மா...” என்று ஆதுரத்துடன் கூறிவிட்டிருந்தாள்.

“நீங்க ரொம்ப ஸ்வீட் அண்ணி” என்று கன்னத்தில் அச்சாரம் பதித்துவிட்டு நகர்ந்திருந்தாள் கலைமலர்.

அரசியின் நடவடிக்கையும், மலரின் பேச்சும் ஏதோ ஒன்றையொன்று தொட்டு தொடர்புடையாதாக இருக்கவே ஆழ்ந்து சிந்தித்ததில் இருவருக்கும் ஏதோ உணர்வுகள் இருப்பதை போல் அவளின் அனுபவ மூளை உணர்த்த, இதை சமயம் பார்த்து கணவனின் காதில் போட்டு விட வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.

அவர்களுக்குள் ஆயிரம் மனஸ்தாபங்கள், கோபங்கள், ஊடல்கள் வந்தாலும் குடும்பம் என்று வரும் போது அதில் பொறுப்புகளை சுமப்பவன் தன் கணவன் தான் என்பதை கருத்தில் கொண்டவளாக பொறுப்பை உணர்ந்து நடப்பதில் அவள் தவறவில்லை.

கேசவன் கலாதரனின் அறைக்கு வந்து நிற்க... சம்யுக்தா கணவனிடம் தெரிவித்துவிட்டு நகரத்தான் எண்ணினாள், ஆனால் கேசவன் அவளை தடுத்தவர்...

“இது நம்ம குடும்பத்தில் நடக்கப் போகிற முதல் விஷயம்மா... உனக்கு பிடிக்குதோ, இல்லையோ தரனுடைய பொண்டாட்டி நீ, இந்த வீட்டுக்கு மருமகள் நீ, அவன் கூட நீ அவசியம் நிற்கணும்னு நினைக்கிறேன்” தன்மையாகவே என்றாலும் அழுத்தத்துடன் கூறியதில் சம்யுக்தா ஒரேடியாக முகத்தை திருப்பிக் கொண்டு போக முயலாமல், வீட்டிற்கு பெரியவர் கணவரின் தந்தை என்னும் மரியாதையை நிலை நாட்ட எண்ணி...

“உள்ளே வந்து பேசுங்க மாமா” பண்பாக அழைத்ததில் உள்ளம் பூரித்து போனவர் மகனின் தேர்வு சோடை போகவில்லை என்று திருப்திக் கொண்டார்.

“என்ன ப்பா பேசணும்” என்று தரன் எடுத்துக் கொடுக்க...

“அரசிக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து கொடுத்திரலாம் தரா... அவ அம்மாவுடைய நகை இருக்கு மேல ஏதாவது செய்ய முடியுமான்னு பார்த்து செய்து நல்ல இடமா கட்டி கொடுத்திருவோம்”

“ஏன் ப்பா நம்ம அம்மா நகையும் இருக்கே, அது கூட அத்தைதும் சேர்த்தாலே கம்மியாதான் வரும் ரெண்டு நகையும் சேர்ந்தே போட்டிறலாம்”

“இல்லை தரா, உன் அம்மா நகை உன் பொண்டாட்டிக்கு சேர வேண்டியது... அதுக்கான முழு உரிமையும் உன் மனைவிக்கு தான் இருக்கு”

“இல்லை ப்பா, என் பொண்டாட்டிக்கு நான் பார்த்துக்குறேன்... அதுவுமில்லாம அவளுக்கும் நகை எல்லாம் பெரிய விஷயம் இல்லை பார்த்துக்கலாம்” இவர்களின் உரையாடலை சம்யுக்தா கவனித்து கொண்டிருந்தாளே தவிர அவர்களின் பேச்சை குறுக்கிட்டு வேறெதுவும் பேசவில்லை.

“என்னடா நீயே எல்லாத்தையும் முடிவு செய்கிற உன் பொண்டாட்டிகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்கணும்” என்று அதட்டியவர் அவரே முன் வந்து...

“நீ சொல்லும்மா உன்னுடைய அபிப்ராயம் என்னன்னு” என்று கூறினார்.

“அவர் சொன்னது சரிதான் மாமா, எனக்கு நகை மேல் எல்லாம் பெரிசா இண்டரஸ்ட் இல்லை மாமா, அது அவரே பார்த்து முடிவு செய்துகட்டும்... நீங்க அரசிக்கு கல்யாணம் பண்ண முடிவெடுக்கிறது சரி தான், ஆனால் ஒரு வார்த்தை அவளிடம் விருப்பத்தை கேட்கிறது நல்லது” என்று கூறிய மனைவியை யோசனையாக பார்த்தான் கலாதரன்.

“இல்லைம்மா என்ன தான் நீ பெருந்தன்மையா சொன்னாலும் உன் புருஷன் தரனுடைய அம்மா நகைன்னு உன்கிட்டே இல்லாம போகக் கூடாது... என் பொண்டாடிக்கு நான் போட்ட தாலிக்கொடி மட்டும் உன்னிடம் இருக்கட்டும், அதை நீ வேறு ஏதாவது நகையா மாற்றி வச்சுக்கோ, மற்ற நகையை வேணா அரசிக்கு கொடுத்திரலாம்”

“ம்ம்ம்... சரி மாமா அப்படியே செய்துக்கலாம்”

“சரி ப்பா நாம இதை பற்றி நாளைக்கு பேசலாம், இன்னைக்கு நைட் எனக்கொரு மீட்டிங் இருக்கு அதுக்கு நான் தயாராகணும்” என்றதும் அங்கிருந்து கேசவன் நகர்ந்திருக்க தரன் மனைவியிடம் திரும்பியவன்...

“ஏன் அப்படி சொன்ன?” என்று மொட்டையாக ஆரம்பித்தவனை புருவ இடையில் முடிச்சிட யோசனையாக நோக்கியபடி...

“என்ன சொன்ன?”

“அரசிக்கிட்டே விருப்பத்தை கேளுங்கன்னு சொன்னியே அதை கேட்கிறேன்”

“ஏன்... இதில் என்ன இருக்கு?”

“இதை நான் தவறுன்னு சொல்லலை... அரசியுடைய கல்யாணத்துக்கு அவகிட்டே விருப்பத்தை கேட்காம அடுத்தது பேசக் கூடாதுன்னு தான், நான் அப்பாகிட்டே அப்புறம் பேசுறேன்னு சொன்னேன்... ஆனால் நீ சொன்னதில் ஏதோ விஷயம் இருக்கு, அதான் கேட்கிறேன், சொல்லு என்ன விஷயம்?”

“அரசிகிட்டே அவளுடைய விருப்பத்தை கேட்டுட்டு வாங்க அப்புறம் சொல்றேன்” என்று பீடிகையுடன் முடித்துவிட்டிருந்தாள். தரனும் அதற்குமேல் மனைவியை குடையாது அவள் சொன்னதை போல் செய்து விட்டு அதை பற்றி விசாரிக்க தீர்மானித்து கொண்டான்.

**********************

அரசி அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்... அர்ஜுனை பார்த்ததும் அவனிடம் தன் திருமணத்திற்கு வரன் பார்க்க எண்ணியிருப்பதை கூறிவிட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தாள்.

ஆனால் எதிர்பார்த்த அனைத்தும் நடந்து விட விதி விட்டு விடுவதில்லையே... அரசியை தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும் பரபரப்புடன் மீட்டிங் ஹாலை நோக்கி செல்ல ‘நமக்கு தெரியாம என்ன மீட்டிங்’ என்று யோசித்தாலும், அவளுக்கு இருந்த வேலையில் சரி பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்றெண்ணி விட்டுவிட்டாள்.

சரியாக ஒரு மணி நேரம் கடந்த பிறகே மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வர அக்கௌண்டன்ட் பிரிவில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து விசாரிக்கலானாள்.

“வித்யா இங்கே வாங்க... என்ன திடிர்னு மீட்டிங் ஹாலுக்கு போறீங்க, யாருடைய மீட்டிங் எனக்கு தெரியாம”

“என்ன இப்படி கேட்கறீங்க உங்களுக்கு விஷயமே தெரியாதா? நம்ம எம்டி சாருக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சாம்... அதனால் தர்சன் சார், நடராஜன் சார் ரெண்டு பேரும் வீடியோ கால்ல பேசி வொர்க் அசைன் பண்ணினாங்க” அர்ஜுனுக்கு விபத்து என்ற ஒற்றை வார்த்தையே அவள் உயிரை உருவி குடித்திருக்க, அதற்கு மேல் என்ன என்பதை அறியாது உருக்குலைந்து அமர்ந்துவிட்டாள்.

அர்ஜுன் அன்று தென்னந்தோப்பிறகு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் சமயம் எதிர்பாராமல் வாகனம் கட்டுபாட்டை இழந்து விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது... நல்ல காலம் அவனுக்கு கையிலும், காலிலும் ஏற்பட்ட சிறு அடியுடன் தப்பித்துக் கொண்டான், காருக்கு மட்டும் சேதாரம் அதிகமாக இருக்கவே அவன் குடும்பத்தினர் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்றெண்ணி நிம்மதியடைந்தனர்.

அரசியின் அலைபேசி இசைமீட்டி அழைத்ததில் தான் சுய நினைவு மீண்டவள் அழைப்பவன் தர்சன் என்றதும் அவசரமாக உயிர்பித்து செவி கொடுத்தாள்.

“அரசி க்கா நான் தர்சன் பேசுறேன்” என்றதும் தான் தாமதம்...

“தர்சன் எங்க இருக்கீங்க? இப்போ அர்ஜுன் எப்படி இருக்காரு... அவருக்கு ஒண்ணுமில்லையே சொல்லுங்க... ப்ளீஸ்!” அதிர்ச்சியில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்றறியாது தன்னவனின் நினைவும், நலனும் மட்டுமே பெரியதாக தெரிய தர்சனிடம் இடைவிடாமல் கேள்விகளால் துளைத்தெடுத்திருந்தாள்... இலைமறை காய்மறையாக தெரிந்த விஷயம் இன்று வெட்ட வெளிச்சமாக தர்சனுக்கு புரிய வர, அவளின் பதட்டமும், பயமும் கண்டு இரக்கம் ஏற்பட, மற்ற விஷயங்களை பொருட்படுத்தாமல் அரசியின் கேள்விக்கு பதிலளித்தான்.

“அரசி க்கா பதட்டப்பட வேண்டாம் ரிலாக்ஸ் ஆகுங்க... அர்ஜுனுக்கு பயப்படும்படியா ஏதுமில்லை கை, கால்ல மட்டும் தான் அடிபட்டிருக்கு... ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க மத்தபடி ஒண்ணுமில்லை”

“நிஜமாவே நல்லா இருக்காரு தானே?” என்று அவனை நம்பாமல் ஐயத்துடன் கேட்டவளின் பரிதவிப்பை புரிந்துக் கொண்டவன்...

“நிஜமாவே நல்லா தான் இருக்காரு.....” என்று அவன் கூறி முடிப்பதற்குள் இடையிட்டவள்...

“இப்போ எங்க இருக்கீங்க நீங்க... நான் வந்து பார்க்கலாமா?”

“நாங்க ஹாஸ்பிடல்ல தான் இருக்கோம் க்கா... அவனுக்கு பெயினா இருக்குன்னு சொன்னதால பெயிண்கிள்ளர் கொடுத்திருக்காங்க, தூங்கிட்டு இருக்கான்”

“சரி நான் உடனே வரேன்” என்றவள் எதை பற்றியும் யோசிக்காது புறப்பட்டு மருத்துவமனையை அடைந்திருந்தாள்.

மல்லிகா, நடராஜன் இருவர் மட்டுமே அர்ஜுனுடன் இருக்க, தர்சன் அப்போது தான் மருந்து வாங்க சென்றிருந்தான்.

“அரசி வாம்மா என்ன திடிர்னு நீ இங்கே” என்று விசாரித்தார் நடராஜன்.

“நான் உங்க கம்பெனியில் தானே செக்ரெட்டரியா வேலை பார்க்கிறேனே அங்கிள், அவர் சொல்லலியா?”

“ஓஹ்! அது நீதானாம்மா... அர்ஜுன் செக்ரெட்டரி எடுத்திருக்கேன் சொன்னான்... ஆனால் நீ தான்னு சொல்லலை”

“அவருக்கு ஆக்சிடெண்ட் ஆனது பத்தி எனக்கே இப்போ தான் அங்கிள் தெரிஞ்சது, அதான் உடனே வந்தேன் அவர் எப்படி இருக்காரு”

“பரவாயில்லைம்மா தூங்கிட்டு இருக்கான்... அஃக்சிடெண்ட்ன்னு சொன்னதும் உயிரே போயிருச்சும்மா... என்ன புண்ணியம் செய்தேனோ கை கால்ல காயத்தோட முடிஞ்சது... ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் எடுத்தாச்சு, இப்போ வரைக்கும் எதுவும் பிரெச்சனை இல்லைன்னு தான் சொல்றாங்க” மல்லிகா கூற அதை தொடர்ந்த நடராஜன்...

“டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுத்தா போதும்னு சொல்லியிருக்காரு... அதான் ஒரு மாசத்துக்கு கம்பெனியை நானும், தர்சனும் தான் பார்க்கப் போறோம்”

“இத்தனை வருஷம் நல்லா இருந்தவனுக்கு இப்படி திடிர்னு அடிபட்டு கிடைக்கவும், என் உயிரே என்கிட்ட இல்லைம்மா”

‘உங்களுக்கு மட்டுமா எனக்கும் இங்கே அதே நிலைதான்’ என்று மானசீகமாக கூறிக் கொண்டாள்.

“ம்ஹும்... யாருடைய பொல்லாத கண்ணோ, சாவகாசமோ அவனை இந்த நிலைமைக்கு இழுத்துவிட்டிருச்சு, ஏதோ உயிர் தப்பினதே அதிர்ஷ்டம் தான்னு சொல்லும் போது மனசு ஆடிப்போச்சு” என்று பிரலாபித்து முடித்த மல்லிகாவுக்கு ஆற்றாமை குறைந்திருக்க, இங்கே அதை கேட்ட அரசியின் நிலை தான் இடி தாங்கியது போல் ஆகிப்போ னது.

அவள் அத்தை கூறிய வார்த்தையும், அப்போது மல்லிகா புலம்பிய வார்த்தையும் கோர்த்து பிணைத்துக் கொண்டவளுக்கு தான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவள் என்று அவளுக்குள் மனப்பிரமையை உருவாக்கிக் கொண்டாள்... அறியாத வயதில் தாய் தகப்பனை பறி கொடுத்ததும் இது போன்று நடந்த விபத்துதான் என்று நேரம் கெட்ட நேரத்தில் நினைத்து மறுகியவள், அவனின் இந்த அவல நிலைக்கு தன்னுடைய காதல் தான் என்று அவளாகவே காரணம் கற்பித்து கொண்டவளுக்கு உடல் பலவீனத்தில் தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது.

‘நீ அவனை திருமணம் செய்து அத்தையின் வார்த்தையை மெய்யாக்காமல், அர்ஜுனை விட்டு விலகிச் செல் அவன் நூறு ஆண்டு காலம் நன்றாக இருக்கட்டும்’ என்றெண்ணி தனக்குள் சங்கல்பம் மேற்கொண்டு விட்டிருந்தாள். அவள் அவனை பிரிந்து செல்ல நினைப்பதே அவன் உயிரை பறிப்பதற்கு சமம் என்று நினைத்தும் பார்த்தாளில்லை.

“கவலைப்படாதீங்க ஆண்டி அவருக்கு சீக்கிரம் சரி ஆகிரும்” என்று மல்லிகாவிடம் ஆறுதல் கூறியவள்...

“ஆபிஸ் பொறுப்பு முழுக்க நான் பார்த்துக்கிறேன், நீங்க அதை பற்றி கவலைப்பட வேண்டாம், நீங்களும் உடம்பை பார்த்துகிட்டு ரெஸ்ட் எடுங்க அங்கிள்” என்று நடராஜனுக்கும் ஆறுதல் கூறியவள், அங்கிருந்து செல்லும் முன் கை கால்களில் கட்டுடன் இமைமூடி உறங்கிக் கொண்டிருக்கும் அர்ஜுனை நன்றாக பார்த்து கண்களிலும், மனதிலும் நிரப்பிக் கொண்டு விட்டு சென்றிருந்தாள்.

அரசி பரிதவிப்புடன் மருத்துமனைக்கு வந்ததும் இப்போது நடைப்பிணமாக செல்லும் காட்சியையும் அவளை இரு ஜோடி கண்கள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தன.

சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-19 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-20

அரசி வீட்டிற்கு வந்ததும் அவள் சோக முகத்தை ஆராய்ந்தப்படி அணுகிய குழலி... “அரசி சீக்கிரம் கைகால் அலம்பிட்டு வா சாப்பிடு” என்றதும் அவரை உற்று நோக்கினாள்.

“என்ன பார்க்கிற சீக்கிரம் போயிட்டு வாமா” என்றார்.

அவளுக்கோ வாணியின் பிரச்சனைக்கு முன்பு இருந்ததை போன்று பரிகாசத்துடன் அழைத்ததில் நிம்மதியாக உணர்ந்தவள், அவர் கூறியபடி உணவு உண்ண அமர்ந்தாள். அன்று பார்த்து அவளுக்காக பார்த்துப் பார்த்து பரிமாறினார்..

“எல்லாரும் சாப்பிட்டாச்சா அத்தை”

“இல்லைம்மா நீ சாப்பிட்டிரு”

“அப்போ நானும் எல்லாருடனே சேர்ந்தே சாப்பிட்டிருப்பேனே”

“ம்ஹும்... கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போற பொண்ணு, அங்க சூழ்நிலை எப்படி இருக்குமோ என்னவோ நல்லா சாப்பிட்டு உடம்பை தேற்று” என்றதும் உணவை வாய் அருகே கொண்டு சென்றவளின் கரம் அந்தரத்தில் நின்றுவிட்டது.

‘என்மேல் கொண்ட கரிசனத்திற்கு இதுதான் காரணமா?’ என்று புரிந்துக் கொண்டவளுக்கு சித்தம் சிதிலமைடந்து போய்விட்டிருந்தது. மௌனமாக உணவை கொரித்தவள் எழுந்து செல்லும் முன்...

“அரசி ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினார்.

“என்ன த்தை” என்றதும்...

“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம்... அதனால முன்னாடி மாதிரி கண்ட நேரத்தில் வராமல் சரியான நேரத்திற்கு வரப் பாரு” என்றவரை உணர்ச்சித் துடைத்த முகத்துடன் நோக்கியவள்…

“ம்ம்ம்...” என்று முணுமுணுத்தபடி தலையசைத்தாள்.

“அப்புறம் இன்னொரு விஷயம் பார்க்கிற மாப்பிளையை எங்களுக்கு பிடிச்சா போதும்னு தான் மத்தவங்ககிட்டே சொல்லணும்... அது தான் உன்னை இத்தனை வருடம் வளர்த்ததுக்கு எங்களுக்கு மரியாதையா இருக்கும்” என்றதும் வெறுமனே தலையை மட்டும் அசைத்து வைத்தவள், நொடியும் அங்கே நிற்காது வேகமாக அறைக்குள்ளிருந்த படுக்கையில் விழுந்து தன் துயரத்தை எண்ணி கண்ணீரில் கரையலானாள்.

**********************

கலாதரனுக்கு அவன் பகுதி நேர தொழில்நுட்ப வேலையின் பளு மிகுதியாக இருக்கவே, கலையரசியின் வரன் பார்க்கும் நிகழ்வு சம்மந்தமாக அவளிடம் பேசி மனதை அறிந்து அபிப்ராயம் கேட்க நேரமின்றி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

அரசிக்கு தன் துருதிர்ஷ்டம் தான் அர்ஜுனுக்கு விபத்து ஏற்பட காரணம் என்று சிந்தையில் உறுதியாக உருவேற்று கொண்டிருந்தாள்... அதுவுமின்றி அவள் அத்தை திருமணத்திற்கு மறுப்பு கூறக்கூடாது என்ற கட்டளையும் அவளுள் தாரதம்மியம் எற்படுத்த, தனக்கு எந்த வகையிலேயும் கொடுப்பினை அமைவதில்லை என்ற எண்ணத்தில் அர்ஜுன் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்ற கண்ணோட்டத்தில் முடியாது என்ற மனதை முடியும் என்று உறுதியாக நிலைபடுத்திக் கொண்டு அவனை புறக்கணிக்க முடிவு செய்தாள்.

பணி சம்மந்தமாக பேச நேர்ந்தால் மட்டுமே அர்ஜுனிடம் பேசும் அரசி மறந்தும் அவனிடம் இணக்கம் காட்டவில்லை... அவளின் செயலை எண்ணி அர்ஜுன் தான் ஏமாற்றமாக உணர்ந்தான்.

‘என்னாச்சு அவளுக்கு... நமக்குத் தானே அடிப்பட்டுச்சு… அவளுக்கு மண்டையில் அடிபட்ட மாதிரி பிஹேவ் பண்ணுறா’ என்று தனக்குள் புலம்பியவன், அவளிடமே அதைப் பற்றி இரண்டில் ஒன்று விசாரித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியில் அழைத்தான்.

“சொல்லுங்க நீங்க சொன்ன மாதிரி எல்லா ரிப்போர்ட்டும் ரெடி பண்றேன் வேறெதுவும் இருக்கா” என்று வினவியவளின் குரலே யாரோ மூன்றாமவரிடம் பேசுவது போன்றிருக்க அர்ஜுனுக்கு எரிச்சல் மூண்டது...

“ஏய் நான் உன் அர்ஜுன்... நான் என் பொண்டாட்டிகிட்டே பேசணும்னு பேசுறேன்..” என்றதும் அவள் உடலில் நிகழ்ந்த ரசாயன மாற்றத்தில் இனம்புரியா உணர்வு ஏற்பட்டது... இருந்தும் அவளின் சூழ்நிலையும், அவனின் நலனையும் எண்ணி தன்னை சமாளித்துக் கொண்டே பேசலானாள்.

“இன்னும் கல்யாணமே ஆகலை அதுக்குள்ள பொண்டாட்டியா?” மரத்த குரலில் கூறியவளின் வார்த்தையில் கடுப்படைந்தவன்...

“அப்போ அன்னைக்கு நீ புருஷன்னு சொன்னது உன் மனசில் இருந்து சொல்லலையா, சும்மா வாய் வார்த்தைக்கு தான் சொன்னதா?” என்றவனின் வார்த்தையில் மனதை பிசைய உதட்டை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“...........” அவன் பேச்சிற்கு பதிலளிக்க முடியாமல் நேசமும், குற்றமும் அவள் உயிரை பித்து திங்க... ‘இல்லை செத்தாலும் உன் மனைவியாக சாகனும்னு தான் ஆசைப்படுறேன், ஆனால் என் விதி அது இந்த ஜென்மத்தில் நடக்காது போல’ என்று அந்தராத்மா வேதனையில் குமுற, தாங்க முடியாத அவஸ்தையில் தரையில் எறியப்பட்ட மீனை போல் துடித்துக் கொண்டிருந்தாள்.

“பேசு எதுக்கு ஊமையா இருக்கிற?” அவன் பேச்சு மேலும் உள்ளத்தை ஊடுருவ எங்கே தன்னையும் அறியாமல் அவனிடம் தஞ்சம் அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மனதின் காதலை தனக்குள் புதைத்துக் கொண்டே பதிலளித்தாள்.

“நான் உங்ககிட்டே வேலை பார்க்கிற வேலைக்காரி தான்... என் தகுதி எதுவோ அது தெரிஞ்சு நான் நடந்துக்கிறேன், நீங்களும் அப்படி நடந்துக்கிறது தான் உங்க எதிர்காலத்துக்கு நல்லது”

“ஏய் என்னை மனுஷனா இருக்க விடு... என் வாயை பிடுங்காத, அப்புறம் பச்சையா கேட்டுவிடுவேன்” என்றவனின் பேச்சில் உண்டான கூசலில் முதுகுத் தண்டு சில்லிடுவதை உணர்ந்தாள்.

“...........”

“அன்னைக்கு கோவிச்சுக்கிட்டதுக்கு கூட ஒரு காரணம் இருந்தது... அது கூட ஒரு வகையில் உன் பொஸ்ஸசீவ் காட்டுச்சு... என்னை விட்டு கொடுக்க முடியாத கோபம்னு அது எனக்கு சந்தோசமா தான் இருந்துச்சு... ஆனா இன்னைக்கு என்ன காரணமா இப்படி பேசுறன்னு சுத்தமா புரியலை? என்கிட்டே பேசாம சித்திரவதை செய்யாதே அரசி” என்றவனின் ஏக்கம் அவளை தணலில் இட்டு வாட்டியது. இருந்தும், அவனின் நலனுக்காக என்று நினைத்து தன் மனதை பிரயாசையுடன் கல்லாக்கி கொண்டவள்...

“சில விஷயங்கள் நான் ரொம்ப லேட்டா தான் புரிஞ்சுகிட்டேன், அதான்”

“என்ன விஷயம்?” சுள்ளென்று வினவினான்.

“அதை உங்ககிட்டே சொல்லணும்னு அவசியம் இல்லை” எடுத்தெறிந்து பேசியவளின் வார்த்தையில் ஆத்திரம் வலுத்திருக்க...

“ஏன் எனக்கு அடிபட்டதுக்கு காரணம், நீதான்னு யாராச்சும் சொன்னாங்களா? அதான் பைத்தியக்காரி மாதிரி இப்படி உளறிட்டு இருக்கியா?” அவன் மனதை படித்தவனாக கூறியதில் தூக்கிவாரிப் போட அதிர்ந்து போனாள்.

“இல்... இல்லை... அதெல்லாம் இல்லை... நீங்க தான் இப்போ உளருறீங்க” பதட்டத்தில் வார்த்தைகள் பிசிர்தட்டியதே அவளின் உள்ளத்தை பறைசாற்றி இருக்க, அதை கண்டு கொண்டவனுக்கு அவளை எண்ணி ஆயாசமாக இருந்தது...

“பைத்தியம்... இந்த மாதிரி எல்லாம் மரை கழண்டு போகக்கூடாதுன்னு அன்னைக்கே தெளிவா சொல்லியிருந்தேன்”

“ஆமாம் எனக்கு மரை கழண்டு போச்சு தான்... அதான் சொல்றேன் நீங்க வேறொரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றவள் அவன் பதிலையும் எதிர்பாராமல் பட்டென்று இணைப்பை துண்டித்துவிட்டிருந்தாள்.

அரசியை எண்ணி அர்ஜுனுக்கு ஆத்திரம் பொங்கிய போதும், அவள் மனம் புண்படாமல் எப்படித் தான் சரி கட்டுவது என்றெண்ணி அயர்ச்சியாக இருந்தது. அவளின் எதிர்மறையான விசாரத்தை நேர்செய்வதாக எண்ணி மேலும் அவளை கலவரப்படுத்தி விடக்கூடாது என்று நிதானத்தை கடைபிடித்தான்.

**********************

கலாதரனுக்கு அன்று தான் ஓய்வு கிடைக்கவே அரசியை அழைத்து பேசலானான்.

“கூப்பிட்டு இருந்தீங்களா அண்ணா”

“ஆமாம்மா... உன்கிட்டே பேசணும்” என்றதும் சம்யுக்தா அவள் போக்கில் எழுந்து செல்ல பார்க்க தரன் கண்கள் இடுங்க பார்த்தவன்...

“எங்கே போற?” என்றான்.

“நீங்க பேசுங்க நான் குழந்தையை வெளியே கூட்டிட்டு போறேன்” என்றவளை முறைத்தவன்...

“நான் அரசிகிட்டே பேசணும்னு சொன்னேன் தான், அதுக்காக உன்னை வெளியே போக சொல்லலை... உனக்கு தெரியாமல் பேச கூடிய இரகசியமும் இல்லை, இங்கேயே இரு” என்றதில் அவள் மறுப்பு கூற வழியில்லாது போக குழந்தையுடன் கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.

“உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு அப்பா சொல்றாரு... எனக்கும் அதில் உடன்பாடு இருக்கு... அதனால் நான் வரன் பார்க்கப் போகிறேன்... உனக்குன்னு ஏதாவது விருப்பம் இருந்தா நீ தாராளமா சொல்லலாம் அரசி”

“ஏன் அண்ணா நான் உங்களுக்கு எல்லாம் பாரமா இருக்கேனா? ஏன் நம்ம குடும்பத்திலிருந்து இப்போவே என்னை விலக்கி வைக்க பார்க்கறீங்க”

“என்ன பைத்தியம் மாதிரி பினாத்துற?” என்று உரிமை கோபத்தில் உறுமியவன்...

“உன்னை பாரமா நினைச்சு தான் உங்கிட்ட பொழப்பத்து உன் விருப்பத்தை கேட்டு உட்கார்ந்துட்டு இருக்கேனா?” என்று சிடுசிடுத்ததும் தான் தன் தவறை உணர்ந்து சிரம் தாழ்த்தினாள்.

“இனி மேல் இப்படி பேசுற வேலை எல்லாம் வேண்டாம்... சொல்லு உனக்கு யார் மேலயாச்சும் விருப்பம் இருக்கா?” என்றதும் ஓர் கணம் அர்ஜுன் நினைவுகள் அவள் மனதை உலுக்கிப் போட்டது... அக்கணமே அவள் அத்தையின் பேச்சும் ஒலித்ததில் என்ன சொல்வது என்ற குழப்பத்தில் தள்ளாடி நின்றாள்.

சில நிமிடங்கள் மௌனமாகவே நின்றிருந்தவளின் உணர்ச்சியலைகளை மிக நுணுக்கமாக கவனித்துக் கொண்டிருந்தவர்கள் அதை பார்வையால் பரிமாற்றம் செய்துக் கொண்டனர்.

அரசி தான் பதில் கூற வேண்டும் என்ற நிலையை உணர்ந்து தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவள்...

“நீங்க பார்த்து யாரை கைக்காட்டுறீங்களோ அவங்களை நான் மனதார ஏத்துக்கிறேன் அண்ணா... இத்தனை வருஷம் என்னை வளர்த்து ஆளாக்கின உங்களுக்கா தெரியாது, எனக்கு எது நல்லது, எது கேட்டதுன்னு” என்றவளின் மனசாட்சி ‘அடிப்பாவி அர்ஜுனுக்கு இப்படி ஒரு பாதகம் செய்கிறாயே’ என்று கூக்குரலிட நெஞ்சம் அழுத்தம் தாங்காது வெடித்து சிதறி விடுமோ என்ற அச்சத்தில் விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்தவள் கிணற்றடியில் அமர்ந்து கேவிக் கேவி அழலானாள்.

“என்ன இப்படி சொல்லிட்டு போறா யுகிமா? ஒரு வேளை நாம தான் தப்பா புரிஞ்சுகிட்டோமோ?”

“அப்புறம் ஏன் ஹாஸ்பிட்டலில் இருந்து போகும் போது அவ அப்படி துடிக்கணும் கவின்?” என்ற அன்று அர்ஜுனை மருத்துவமனையில் காண சென்ற போது இருவரும் கண்ட அரசியின் நிலையை பற்றி கூறிய மனைவியின் கூற்றும் அவனை குழப்பதிற்குள்ளாக்கியது.

**********************

கலாதரன் அர்ஜுனை மருத்துவமனையில் இருக்கும் போதே பல முறை பார்த்துவிட்டு வந்திருக்க, சம்யுக்தாவும் அவ்வப்போது சென்று வந்து விட்டிருந்தாள்... அவனின் குடும்பத்தவர்கள் மட்டும் பார்க்காததால் நலம் விசாரிக்க தரன் தன் குடும்பத்தினருடன் அவனை காணச் செல்ல திட்டுமிட்டு புறப்பட்டு கொண்டிருந்தான்... அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசி விடுமுறையில் தான் வீட்டில் இருந்தாள்... அனைவரும் கிளம்பியிருக்க அரசி மட்டும் புறப்பட எத்தனிக்காமல் தேங்கி நின்றாள்.

“அரசி எங்கே வாணி?” என்று விசாரிக்க...

“அக்காவுக்கு தலைவலிக்குதாம் அண்ணா, நெற்றிக்கு ஈரத்துணி சுத்தி படுத்திருக்காங்க” என்றதும் தரனின் பார்வை மனைவியை அர்த்தத்துடன் வருடிச் செல்ல அரசியின் அறைக்குள் சென்றாள் சம்யுக்தா.

“அரசி அர்ஜுன் வீட்டுக்கு எல்லாரும் போறோம் நீ ஏன் வரலை?”

“என்னவோ தெரியலை அண்ணி தலைவலி தாங்க முடியலை... நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க அண்ணி” என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே...

“காலையில் நல்லா தானே இருந்த இப்போ என்ன திடிர்னு? அர்ஜுன் வீட்டுக்கு நாங்க எல்லாரும் போகும் போது நீ மட்டும் இங்கே தனியா நின்னா நல்லாவா இருக்கும்”

“சாரி அண்ணா! எனக்கு தலைவலி ஜாஸ்தியா இருக்கு, அங்கே வந்தாலும் அவரை பார்த்து என்னால் நலம் விசாரிக்க முடியுமான்னு தெரியலை” என்றவளின் பேச்சில் இரட்டை அர்த்தம் பொதிந்திருப்பதை உணர்ந்த சம்யுக்தாவுக்கு எதுவோ உறுத்தியது. அந்த உறுத்தலை நீக்காமல் எதுவும் நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை புரிந்து கொண்டவள்...

“சரி நீ ரெஸ்ட் எடு, நாங்க கிளம்பறோம் கதவை எல்லாம் லாக் பண்ணிட்டு வந்திரு” என்று அறிவுறுத்தியவள் கணவனுக்கு கண்களால் ஜாடை காட்டிவிட்டு வெளியே அழைத்துச் சென்றிருந்தாள்... குடும்பத்தினர் அனைவரையும் வாடகை காரில் ஏற்றி அனுப்பி வைத்த தரன் தன் மனைவி மகளுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடிவு செய்தான்.

தரன் வாகனத்தை எடுத்துக் கொண்டிருக்க... “அரசி ரொம்ப நல்லா நடிக்கிறா... நடிப்பு திறமை அபாரம் தான்” என்று பட்டம் கொடுக்க தரன் யோசனையுடன் பார்த்தவன்...

“நீ சொல்ற மாதிரி அரசி எதுவோ மறைக்கிற மாதிரி தான் இருக்கு... ஆனால், அவளா சொல்லாம நாமளும் எதுவும் செய்ய முடியாதே யுகி”

“விடுங்க கத்திரிக்காய் முற்றினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்” என்றவளின் கூற்றை ஏற்றவனாக அர்ஜுன் இல்லம் நோக்கி புறப்பட்டனர்.

அர்ஜுனுக்கு தரன் குடும்பத்துடன் வருகிறான் என்றதுமே, அரசியும் வருகை புரிவாள் அவளுடன் எப்படியாவது பேசி பித்துக்குள் ஆன அவள் மனநிலையை சரி செய்துவிடலாம் என்று விசாரம் கொண்டு ஆர்பரிப்புடன் இருந்தான்.

ஆனால் தரன் குடும்பத்தினருடன் அரசி வாராமல் இருந்ததை கண்டு அர்ஜுனுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது... தன் கதனத்தை மறைத்துக் கொண்டு இயல்பாக உரையாடவனின் முகவாட்டம் சம்யுக்தாவுக்கு குறுகுறுக்க செய்தது... மல்லிகா, பூங்குழலி இணைந்து கொள்ள ஆண்கள் ஒரு பக்கம் இணைந்து கொள்ள வாணி, மலர் குழந்தையுடன் தோட்டத்தில் விளையாட, சம்யுக்தா, தரன், தர்சன், அர்ஜுன் என நால்வரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

தர்சன் தன்னியல்பு மாறாமல் அர்ஜுனையும், தரனையும் வம்பிழுப்பது போன்று பேசிக் கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளைக்கு ஒரு கால் கட்டு போட்டுட்டு பார்க்கணும், இந்த வாய் இப்படியே பேசுதா இல்லை ஊமையா நிற்குதான்னு தெரிஞ்சிரும்” என்று தரன் வேடிக்கையாக கூறியதற்கு...

தர்சன், சம்யுக்தா இருவரும் ஒரு சேர “களுக்கென்று” சிரித்திருக்க... அர்ஜுன் மட்டிலுமாக பாஷை புரியாதவன் போன்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததை சம்யுக்தா அடிக்கண்ணால் கணவனுக்கு குறிப்பு காண்பித்தாள்.

அவனுக்கும் அதே சிந்தனை வழுக்க... “டேய் அர்ஜுன் என்னடா ஆச்சு எதையோ பறி கொடுத்த மாதிரி உட்கார்ந்துத்திருக்கிற?” என்றதும் தான் தன்னிலை உணர்ந்தவன்...

“சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்லைடா ஆபிஸ்ல ஒரு பிரச்சனை அதான் யோசிச்சிட்டு இருக்கிறேன்” என்று சம்மந்தமில்லாமல் கூறி சமாளிதத்தை கண்டு குழம்பிய தர்சன்...

“என்ன அர்ஜுன் அண்ணா பிரச்சனை? நான் தினமும் ஆபிஸ் போயிட்டு தானே இருக்கேன், எனக்கே தெரியாம பிரச்சனையா?” என்று தீவிரமாக வினவியதும் அர்ஜுன் பேந்த பேந்த விழிக்க அவனை தரன் தான் காப்பாற்றனான்.

“தர்சன் அர்ஜுனுக்கு உடம்பு முடியலை போல ஒரு மாதிரி இருக்கான் அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் நாம கீழே போகலாம்” என்றதும் தர்சன் அப்போது தான் அர்ஜுனின் முகத்தை அவதானித்தவன்...

“ஆமாம் அர்ஜுன் அண்ணா முகம் ரொம்ப வாடிப் போயிருக்கு நீ ரெஸ்ட் எடு” என்று விட்டு தர்சன் நகர்ந்திருக்க தரன், சம்யுக்தா இருவரும் அங்கிருந்து நகரும் சமயம் உள்ளத்தின் குடைச்சலை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது சம்யுக்தாவிடம் அரசியை பற்றி கேட்டேவிட்டிருந்தான்.

“சம்மு அரசிக்கு என்னாச்சு? ஏன் அவ மட்டும் வரலை?” என்றதும் தரன் அவனை கூர்மையாக துளைக்க, அர்ஜுன் அவனை எதிர்கொள்ள முடியாமல் சம்யுக்தாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவளுக்கு தலைவலியாம் முடியலைன்னு படுத்துட்டா”

“ஒஹ்! வேறேதும் பிரச்சனை இல்லையே?”

“இல்லை அர்ஜுன்... எப்படியும் நாளைக்கு ஆபிஸ் வந்திருவா” என்று குறிப்பு காட்டிவிட்டு சென்றிருந்தாள்.

அன்று இரவு கலாதரன் மனைவியிடம் அதை பற்றி பகிர்ந்தான்... “நீ சொன்னது சரிதான் யுகிமா... அரசிக்கும், அர்ஜுனுக்கும் இடையில் விருப்பம் இருப்பது போல் தான் தெரியுது... ஆனால் அதை ஏன் ரெண்டு பேரும் சாமர்த்தியமாக மறைக்கிறாங்கன்னு தான் புரியலை? இதுக்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்டுறேன்” என்றவன் அவன் திட்டத்தை கூற...

“ம்ம்ம்... நானும் இதை தான் சொல்ல நினைச்சேன்” என்றவளின் எண்ணவோட்டமும் கணவனை ஒத்து ஒரே அலையில் இருந்ததை எண்ணி இருவருக்குமே இதமான மனநிலை தோன்றியது. அவர்களுக்குள் சில கசப்பான சம்பவங்களால் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருந்த போதும் பரஸ்பர நம்பிக்கையும், காதலும் இன்னும் உயிரோட்டத்துடன் நிலைபெற்றிருப்பதை உணர்ந்தார்கள்... ஆனாலும் அத்தனை சுலபத்தில் அதிலிருந்து வெளி வர இருவருமே முனையவில்லை.

**********************

அர்ஜுனுக்கு உடல் நிலை நன்றாக தேறியிருக்க, அவன் அழுவலகம் செல்ல முயன்றதை பலமான எதிர்ப்புடன் மல்லிகா தடுத்து விட்டிருந்தார்... அதனால் நேரடியாக அரசியை காண இயலாது போனது... அரசிக்கு அர்ஜுனை காணாது மனம் வலித்தாலும் இப்போதைய சூழலில் அவனை எதிர்கொள்ளவும் முடியாது என்பதை அறிந்து சற்று நிம்மதியாக தான் உணர்ந்தாள். எப்படியும் வரன் பார்த்து பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் என்று முறைப்படி சம்பிரதாயங்களை கடந்தே திருமணம் ஏற்பாடு செய்யப்படும், அதற்குள் ஏதேனும் மாற்றம் நிகழும் பொறுத்திருப்போம் என்று எண்ணிக் கொண்டிருந்தவளின் எண்ணத்தை பொய்யாக்குவது போல், அரசிக்கு அந்த வாரமே பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்த்திருந்தான் கலாதரன்.

“அரசிம்மா நாளைக்கு ஆபிஸ்க்கு லீவ் போட்டிரு உன்னை பெண் பார்க்க வராங்க” என்று தரன் கூறியதும் உயரழுத்த மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்து போனாள்!

“ஏ..ன்.. எ..ன்ன.. இவ்..ளோ.. சீக்..கிர..மே..?” என்றவளின் குரல் கரகரத்து வார்த்தை தந்தியடிக்க மிரண்டு விழித்தவளை கண்டு எந்த பிரதிபலிப்பும் இல்லாமல்...

“அதான் நீயே சொல்லிட்டியே நாங்க பார்த்து என்ன பண்ணினாலும் உனக்கு சம்மதம்ன்னு... மாப்பிள்ளை நல்ல இடத்தில் வேலை செய்கிறாரு, குடும்பமும் நமக்கு ஏற்ற அந்தஸ்துல இருக்கிற நல்ல குடும்பம்... உன் போட்டோவை பார்த்ததும் பையனுக்கு பிடிச்சிருச்சாம் அதான் உடனே பெண் பார்க்க வராங்க”

“சரி அரசிம்மா நீ நாளைக்கு வேண்டியது என்னவோ அதுக்கு தயாராகு... உனக்கு உன் அண்ணி ஹெல்ப் பண்ணுவா... அவ உன்னை பார்த்துப்பா... எல்லாம் ஒத்து வந்தா நாளைக்கே சிம்பிளா நிச்சயமும் ஏற்பாடு செய்திடறேன்” என்று அவள் தலையில் குண்டு மேல் குண்டை வீசிவிட்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்க நகர்ந்து விட, அரசிக்கோ உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.

**********************

அன்றைய தினம் நன்றாகவே புலர்ந்திருக்க அரசிக்கு தான் ஏன் தான் விடிந்ததோ என்பது போல் மனம் வெறுத்து போய் இருந்தது. அவள் விருப்பு வெறுப்பை பற்றி கவலைக்கொள்ள யாரும் இல்லை என்பது போல அனைவரும் உற்சாகமாக இருந்தனர். அரசியை தயாராக்கும் பொறுப்பை சம்யுக்தாவின் பிடியில் இருந்தது.

“அரசி சுடிதார் போடாதே இந்த பட்டுசாரி கட்டு”

“அண்ணி ப்ளீஸ் அதெல்லாம் வேண்டாமே, எனக்கு இப்போவே படபடப்பா இருக்கு, இதில் பட்டு சாரி எல்லாம் கட்டினா என்னால் ஃப்ரீயா இருக்க முடியாது”

“அதெல்லாம் உங்கிட்ட அபிப்ராயம் கேட்கலை, இதை தான் நீ கட்டணும்... எல்லாம் ஒத்துப் போனா இன்னைக்கே நிச்சயமும் பண்ணிருவாங்க, அதுக்கு இதுதான் சரி” சம்யுக்தா வார்த்தையை கேட்ட அரசி இடி தாங்கியது போல் சமைந்து நின்றாள்.

“ரெடியாகு நானே கட்டிவிடுறேன்” என்றதெல்லாம் அவளுக்கு செவியில் ஏறியதாகவே தெரியவில்லை...

“வாணி நீ இதை எல்லாம் நீட்டா அடுக்கி வை, நான் இவளை ரெடி பண்ணுறேன்”

“சரிங்க ண்ணி” என்று வாணியும் அரசியின் நிலையை புரியாது தன் போக்கில் செயல்பட, அரசிக்கு அங்கிருப்பதே முள்ளின் மேல் நிற்பது போல் உறுத்தியது.

‘ஐயோ கடவுளே... நான் அர்ஜுனை விட்டு விலக நினைத்தேன் தான் ஆனால், அவரை முழுசா மனசில் இருந்து தூக்கி ஏறிய முடியாம தவிக்கிறேன், இப்போ பார்த்து இந்த நிலைமையா?’ என்று மனதிற்குள் அரற்றி கொண்டவளின் கூக்குரலை யாரும் அறியார்!

சாவி கொடுத்த பதுமையென நின்றவளின் விருப்பதிற்கு மதிப்பே இல்லாது அவளை அலங்காரம் செய்து முடித்ததும், தன் அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவள், அதை அவளின் வாட்ஸ்அப் செயலில் அனுப்பி வைத்து செய்தியையும் பதிவிட்டிருந்தாள்.

இன்று ஒரு நாள் எப்போதடா கடக்கும் என்ற சலிப்பில் விரக்தியுடன் அமர்ந்திருந்தாள். யாருக்காகவும் காத்திராமல் நேரம் கடந்து செல்ல பெண் பார்க்கும் படலத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்க, அரசிக்கு உடல் வியர்த்து விதிர்த்து நின்றாள்.

சிறிது நேர பொதுவான உபசரிப்புக்கு பின் அரசியை அழைத்து செல்ல சம்யுக்தா, வாணி இருவரும் வர, இரும்பு குண்டை கட்டி வைத்தது போன்று நகர மறுத்த கால்களை சிரமப்பட்டு நகர்த்தி அடியெடுத்து வைத்து வந்தவள், பழச்சாறு குவளை இருந்த தட்டை மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனிடம் நீட்டிய சமயம், அர்ஜுன் அகஸ்மாத்தாக பிரவேசித்திருந்தான்.

“அடடே அர்ஜுன் அண்ணா வாங்க!” என்ற சம்யுக்தாவின் அழைப்பில் உடல் வெட்டி இழுத்தது போல் திடுக்கிட்டு நிமிர்ந்த அரசிக்கு, அங்கே தன் கூரிய பார்வையால் துளைத்தபடி நின்றிருந்த அர்ஜுனை கண்டு கை கால்கள் வெடவெடக்க கையிலிருந்த பழச்சாறு குவளை அவள் கைகளில் இருந்து நழுவியிருந்தது...!

அர்ஜுன் அரசியை ‘கிராதகி’ என்பது போல் பார்வையால் உறுத்து விழித்துக் கொண்டிருக்க, இக்கணமே பூமி இரண்டாக பிளந்து தன்னை உள்வாங்கிக் கொள்ளாதா என்று அவமானத்தில் கூனிக் குறுகினாள்.

“என்னடா வீட்டில் விஷேசம் போல, என்கிட்டே கூட சொல்லலை” என்று வினவிய அர்ஜுனின் பார்வை வாளில்லாமல் அரசியை பார்வையால் வெட்டிக் கொண்டிருந்தது.

“அரசி சொல்லியிருந்திருப்பான்னு இருந்தேன் டா அர்ஜுன்... என்ன அரசி உன்னை பெண் பார்க்க வருகிற விஷயத்தை அர்ஜுன்கிட்டே சொல்லலையா” என்று அரசியிடம் வினவ அவளால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது போக...

அரசி யாரின் அனுமதியையும் எதிர்பாராது விருட்டென்று உள்ளே சென்று அறையில் அடைந்து கொண்டாள்.

அவளின் செயல் வந்திருந்தவர்களுக்கு முகத்தில் அறைந்தது போல் இருக்க, ஒருவரை ஒருவர் ஆட்சேபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் சம்யுக்தா தான் அனைவருக்கும் முன்பாக அவர்களிடம் பேசினாள்.

“ரொம்ப நெர்வசா இருக்கா போல, நீங்க யாரும் தப்பா நினைக்க வேண்டாம்” என்று தன்மையாக எடுத்துக் கூறி சமாளிக்க... வந்தவர்களும் அதை புரிந்தது போல் தலையாட்டிக் கொண்டாலும் அரசியின் செயலை முழுமையாக ஒப்பவில்லை.

வாணி அரசியை நெருங்கியவள்... “அரசி க்கா இந்தா தண்ணி குடி” என்று நீட்டியவளிடம் செம்பிலிருந்த நீரை மடக்மடக்கென்று குடித்திருந்தவள் களைப்பாறுவது போல் வேகமாக மூச்சிரைத்துக் கொண்டிருக்க...

“ஏன் அரசி க்கா திடிர்னு உள்ளே வந்த? அர்ஜுன் அண்ணாவுக்கு துரோகம் பண்ணிட்டோமேன்னு மனசு குத்துதா?” என்றவளின் பேச்சில் அதிர்ச்சியில் உடலை உலுக்கிப் போட விழிகள் தெறிக்க பார்த்தாள்.

அவளின் எதிர்பாராத கேள்வியில் சித்தம் சிதிலமடைய... “உன... உனக்கு... எப்படி தெரியும்?” தடுமாற்றதுடன் வினவினாள்.

“தலைகாணியும், போர்வையும் கதை சொல்லுச்சு” என்ற வாணியின் முகத்தில் ஆட்சேபம் பொதிந்திருந்ததை அறிந்தாள். அவள் தூங்குவதாக எண்ணிக் கொண்டு அலைபேசியில் அவ்வப்போது அவன் முகம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததை கவனித்திருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டாள்.

“நீ தப்பு பண்ற அரசி க்கா... அர்ஜுன் அண்ணா ரொம்ப நல்லவர், ஆனா நீ எதுக்காகவோ அவரை விட்டு விலக நினைக்கிற?”

“இல்லை அப்படி இல்லை” என்றவளின் பேச்சு வேகமாக வெளிவர முடிக்கவிடாமல் வாணியின் பேச்சு இடையிட்டது.

“அப்போ கல்யாணத்தை பற்றி உன்கிட்டே தரன் அண்ணா அபிப்ராயம் கேட்டப்போ அர்ஜுன் அண்ணனை விரும்புற விஷயத்தை ஏன் சொல்லலை?” என்றதும் வாயடைத்துப் போனாள்.

“...........”

“சரி உனக்கு தரன் அண்ணாகிட்டே சொல்ல தயக்கம்னா, அர்ஜுன் அண்ணாகிட்டே சொல்லியிருந்தா அவர் பேசியிருப்பாரே?” அவளின் கூற்று அரசியின் அடிமனதை அம்பென தாக்கிக் கொண்டிருக்க மனதின் கணம் தாங்காது கண்களை கரித்துக் கொண்டு வந்தது.

“எனக்கு நீங்க எத்தனை அறிவுரை சொல்லி எனக்கு பக்கப்பலமா நின்னீங்க... ஆனால், நீங்களே இப்படி செஞ்சது காரணம் என்னன்னு எனக்கு சத்தியமா புரியலை” வாணி தனக்கு தெரிந்த வகையில் அரசியிடம் வாதம் புரிந்துக் கொண்டிருக்க, மாப்பிள்ளை வீட்டவர்களை பக்குவமாக பேசி அனுப்பி வைத்து விட்டு பூங்குழலி கோபவேசத்துடன் அவளை அணுகினார்.

“ஏன் டி உங்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் எங்களை அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு... அவங்களை கொஞ்சம் கூட மதிக்காம பொசுக்குன்னு உள்ள ஓடி வந்துட்ட... இத்தனை வருஷம் உன்னை வளர்த்தினதுக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக் கொடுத்துட்ட” என்று சரமாரியாக தன் வசைமழையை பொழிந்து கொண்டிருக்க தரனும் அங்கே வந்து சேர்ந்தவன்...

“அம்மா அவளை திட்டாதீங்க கொஞ்சம் அமைதியா இருங்க... இது முதல் தடவை என்கிறதால அவ பயந்து போயிட்டா போல... விடுங்க நான் அவகிட்டே பேசிக்கிறேன்”

“ஆமாப்பா இப்படியே அவளுக்கு நீ சப்போர்ட் பண்ணு... அதான் நம்ம முகத்தில் கரிய பூசுர வேலையை பார்க்கிறா”

“அம்மா... என்ன பேச்சு பேசுறீங்க... அவ சின்ன பொண்ணு தானே இதெல்லாம் புதுசா இருக்கவும் ஒரு மாதிரி இருந்திருக்கும், சில பொண்ணுகளுக்கும் இது மாதிரி நேரத்தில் பதட்டம் எற்படுறது சகஜம் தான்”

“என்னத்த சகஜம்... இவகிட்ட சொல்லாம திடீர்ன்னு ஏற்பாடு பண்ணி நிற்க வச்சோமா? எல்லாம் ஏற்பாடு பண்றோம்னு சொல்லித் தானே பண்ணினோம், அப்போ அதுக்கு தயார் ஆக வேண்டாமா? அதுவும் நம்ம அர்ஜுன் தம்பி வேற உள்ளே வரப்போ, அவரை வாங்கன்னு கூட கூப்பிடாம ஓடுறா... அந்த பையன் தான் என்ன நினைக்கும்... இதில் இவ படிச்சு வேலைக்கு வேற போகிறா” அரசியோ, அர்ஜுன் என்ற பெயர் கேட்கும் போதெல்லாம் உள்ளம் தூக்கிவாரி போட்டுக் கொண்டே இருந்தது... அவளுக்கோ இவர்களின் வசைவுகளை விட, அவள் மனதை பறி கொடுத்து வைத்திருப்பவன் நாக்கை பிடிங்காவது போல் கேட்கப் போகிறானே அதை எப்படி தாங்கிக் கொள்வது என்று தான் அவள் அடித்துக் கொண்டாள். வாய் வார்த்தையாக கூறியிருந்தால் எப்படியோ, ஆனால் தன் கண்ணெதிரில் அவன் உரிமை பொருளை வேறொரு ஆடவனிடம் என்னை பாரு, என் அழகை பாரு என்று நின்றது நிச்சியம் காதலில் கண்ணியம் காத்து நின்ற அர்ஜுன் ஒப்புக் கொள்ளவேமாட்டான் என்று தான் அச்சத்தில் நடுங்கினாள்.

“அம்மா போதும் நிறுத்துங்க, அரசியக்கா ஏற்கனவே பயந்து போய் இருக்காங்க, நீங்க வேற அவங்களை டென்ஷன் பண்ணாதீங்க” வாணியும் தன் பங்குக்கு கூற, குழலி மகளை பார்வையால் கண்டிப்பதை கண்ட தரனுக்கு இதற்கு மேல் அமைதியாக இருப்பது அத்தனை உசிதமல்ல என்பதை உணர்ந்தவன்...

“அம்மா முதலில் நீங்க போய் மற்ற வேலைகளை பாருங்க அரசியை நான் தோட்டதுக்கு கூட்டிட்டு போகணும்” என்றவன்.

“அரசி சீக்கிரம் கிளம்பு போகலாம்” என்று ஆக்கினையிட்டான்.

அவனின் வார்த்தையில் அவளுக்கு பரம நிம்மதி எழுந்தாலும் குழலியின் பார்வையில் மனதில் களேபரம் சூழ்ந்தது. அவளின் வெய்துறலை புரிந்தவன்...

“அரசி கிளம்புன்னு சொன்னேன்” உயர்ந்த குரலில் அதட்ட அவசரமாக கிளம்பினாள்.

அரசி ஹாலை கடந்து செல்லும் முன் சோபாவில் சம்யுக்தாவுடன் அமர்ந்திருந்த அர்ஜுனின் பார்வை அவளையே கனல் வீச தாக்கி கொண்டிருந்ததை அறிந்தாள், சம்யுக்தா பெண்ணரசி அவன் மேல் நீர்குவளையை கவிழ்த்து விட...

“சாரி அர்ஜுன், பாப்பா தெரியாம கொட்டிட்டா” என்றதும்...

“என் மேல் இடி விழுந்தே உயிரோடு தான் இருக்கேன், தண்ணீர் கொட்டியதா பெரிய விஷயம்” என்று செவியில் விழுந்த வார்த்தைகள் அவளுக்கானது என்பதை உணர அங்கிருப்பதே மூச்சு முட்டுவது போல் இருக்க விருட்டென்று வெளியே சென்றுவிட்டாள்.

அரசி தோப்பு வீட்டின் முன்புற பிரகாரத்தில் தென்னங்கீற்றுகளை ஓலையாக பிண்ணி அடுக்கி வைத்திருந்ததன் அருகில் யோசனையுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

“துரோகி” என்ற குரல் அவள் செவியில் நாராசமாய் தீண்டிச் சென்றதில் உடல் தூக்கிவாரிப் போட துள்ளி விலகி நின்றவள், அங்கே உன்மத்தம் பிடித்தவன் போல் நின்றிருந்த அர்ஜுனை கண்டு உள்ளம் பதைபதைக்க நடுநடுங்கிப் போனாள் பேதை!

சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-20 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-21

தனது எதிரில் வேட்டைக்கு செல்லும் கருப்பசாமியை போன்று கனல் கக்கும் விழிகளுடன் பிரவேசித்திருந்தவனின் தோற்றத்தில் திகிலடைந்து போனாள் அரசி.

“ஏன் அவன் வருவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தியா?” என்று ஏளனத்தில் உதட்டை வளைத்து வீசிய சுடு சொற்களில் துடித்துப் போனாள்.

“...........” குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு அமைதி நிலவ...

“எப்படி உன் வாழ்க்கையில் முதற்பாதி நான்... இரண்டாவது பாதி அவனா? இது கல்யாணத்துக்கு மட்டும் தானா இல்லை மத்ததுக்கும்மா?” நிஷ்டூரமாக மொழிந்தவனின் சொற்கள் செவியில் இயத்தை காய்ச்சி ஊற்றியது போன்று இருக்க, இமைகளை இறுக மூடிக் கொண்டவள் தன் இரு கரங்களாலும் செவியையும் மூடிக் கொண்டாள்.

“எப்படி டி மனசை ஒருத்தனுக்கும், உடம்பை ஒருத்தனுக்கும் பங்கு போட்டுக்க நினைக்கறீங்க? காதலும், கல்யாணமும் தள்ளுபடியில் தருகிற பை ஒன் கெட் ஒன் ஆஃபரா?” கண்களில் செவ்வரி ஓடியிருக்க, ஆத்திரத்தில் மூச்சிரைத்து கொண்டிருக்க, கடிந்த பற்களுகிடையே வார்த்தைகளை துப்பியவனின் சொல் அம்புகளில் வதைபட்டவள் அனலில் இட்ட புழுவாய் துடித்தாள்.

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதை பழமொழியாக தான் அறிந்திருந்தாள்... ஆனால் அதற்கு செய்முறை விளக்கம் நான் உனக்கு கற்பிக்கிறேன் என்பது போல் அவள் முன்பு தீங்கங்குளை சுலபமாக அள்ளி வீசுவது போன்று வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தவனை கண்டு செந்தணலில் முக்குளித்துக் கொண்டிருப்பதை போல் உணர்ந்தாள்.

சாதுக்கள் அவ்வளவு எளிதில் கோபிக்கமாட்டார்கள்.. ஆனால், அவர்களுக்கு கோபம் வந்தாலோ அரசாட்சியே கவிழ்ந்து போகும். சாணக்கியரின் கோபம் தானே நந்த வம்சத்தை வேரறுத்து மௌரியப் பேரராசை நிறுவியது.

அரசவைக்கே கோபம் என்னும் சாத்தான் அழிவை ஏற்படுத்தியிருக்கும் போது, அர்ஜுனின் உண்மைக் காதலை தகர்த்த அரசியின் மேல் கொண்ட கோபம் அவர்களின் வாழ்வை மட்டும் ஆட்டம் காண வைக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லையே?! என்றெண்ணியவளின் கிலேசம் அந்தராத்மாவை ஊடுருவி சிதைத்து கொண்டிருந்தது.

அவன் அவளை அடித்து துவாசம் செய்திருந்தால் கூட சித்தம் இத்தனை பலமாக உருக்குலைந்திருக்காது போல... நெருஞ்சிமுட்களால் கோர்க்கப்பட்ட அவன் வார்த்தைகளில் வதைப்பட்டு நின்றவளுக்கு ஏனடா இந்த பிறவி எடுத்தோம் என்று துக்கமாக உணர்ந்தவள், நிலத்தில் முகம் புதைத்து புதையல் எடுத்துக் கொண்டிருந்தாள்.

“என் முகத்தை பார்க்கக் கூட பிடிக்கலையோ? அவனை பார்த்து மயங்கி நிற்கிற உன்னால என் முகத்தை பார்க்க பிடிக்காது தான்” கேள்வியும் அவனே கேட்டுக் கொண்டு பதிலையும் அவனே உரைத்திருந்தவனை, கண்களில் கனல் தெறிக்க பார்ப்பது இப்போது அரசியின் முறையானது.

“போதும்! போதும்! போதும்! இத்தோட நிப்பாட்டுங்க... உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன் என்னை நீங்களே கழுத்தை நெரித்து கொண்ணுருங்க உங்களுக்கு புண்ணியமா போகும்” இரு கைகூப்பி மன்றாடியவளின் கண்கள் கலங்கி சிவந்திருக்க, நாசி வியர்வையில் முக்குளித்து, உதடுகள் உறைநிலை பனிக்கட்டியை வைத்தது போல் நடுங்கிக் கொண்டிருந்தது

“சும்மா நடிக்காதே டி... உன் நாடகத்தை எல்லாம் நம்ப இன்னும் நான் கேனையன் இல்லை... உன்னை டி போட்டு கூப்பிட்டா கூட உன்னுடைய மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டிரும்ன்னு வரம்பை மீராம இருந்தேனே டி”

“என் மேல வந்த கோபமெல்லாம் உனக்கு என்மேல இருக்கிற உரிமைன்னு நினைச்சேன் டி... இப்போ கடைசியா நீ பேசினது கூட நான் கிடைக்கமாட்டேனோன்னு தவிச்சு போய் ஏதேதோ பேசுறேன்னு நினைச்சேன் டி”

“ஆனால் இப்போ தானே தெரியுது என்னை கழட்டிவிட நீ பிளான் போட்டிருக்கேன்னு” என்றதும் சரேலென்று அவனை பார்த்தவளின் பார்வையில் உச்சகட்ட விரக்தி மிதக்க...

“ஆமாம்! நான் படுபாவி, கிராதகி, உங்களை ஏமாற்றணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்சவ” என்று கூறிக் கொண்டே பின்னால் நகர்ந்தவளை, கண்கள் இடுங்க பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மனம் துணுக்குற்றதும்...

“ஏய் நின்னு பேசு டி” என்று அதட்டியதை மருந்துக்கும் சட்டை செய்யாமல் கால்களை நகர்த்தியபடியே...

“என்னை போல ஒருத்தி இந்த உலகத்தில் இருக்கிறதுக்கு இல்லாமலே போகலாம்” என்று விட்டு காற்றை கிழிக்கும் வேகத்தில் வரப்பை சுற்றி ஓடியவள் வயல் நடுவில் இருந்த கிணற்றில் குதித்து விட்டிருந்தாள்.

அவளின் செயலில் அதிர்ந்தவன்... “அரசிஈ...!” என்று கூவியபடி தானும் ஓடி கிணற்றில் குதித்து அவள் தலைமுடியை பற்றிக் கொண்டு இழுக்க, அவளோ நீச்சல் தெரிந்த கைங்கர்யத்தில் அவனிடமிருந்து நழுவி நீரில் மூழ்கவே முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளின் செயலில் விதிர்த்தவன்...

“ஏய் முட்டாள்!” என்று கடுமையாக கடிந்தவன் தன் பலம் கொண்ட மட்டும் அவள் தலைமுடியை கொத்தாக பற்ற... அதில் அவளால் திமிறி விலக முடியாமல் போனதில் கிணற்று படியின் வழியாக தரதரவென்று இழுத்துக் கொண்டு கரையேறி, அவளை தீப்பர்வையால் உரசி முறைத்துக் கொண்டிருந்தான்.

“நானே பாவி ஏன் என்னை காப்பாற்றணும்?” அபத்தமாக வினவியவளின் வார்த்தை அவனை பொறுமை இழக்கச் செய்ய கன்னத்தில் சப்பென்று அறைந்தவன்...

“உன் மண்டையில் இருக்கிறது மூளையா... இல்லை, களிமண்ணா... கொஞ்சமாச்சும் படிச்ச பொண்ணு மாதிரி புத்திசாலித்தனமா நடந்துக்கப் பாரு... உன்னை காதலிச்சுட்ட பாவத்துக்காக என்னை அலைகழிக்காதே” வருந்திக் கூறியவனின் வார்த்தைகள் அவள் மனதை ஏதோ செய்திருக்க, அதற்கு மேல் வீண் தர்க்கம் செய்ய முற்படாமல் அமைதியாக நின்றாள்... எங்கே அவனிடமிருந்து நழுவிடுவாளோ என்ற அச்சத்தில் அவள் மணிக்கட்டை இறுக பிடித்தபடி கிணற்றடியிலிருந்து வேகமாக நகர்ந்து தோப்பு வீட்டின் முன்பு பிரவேசிக்க...

அங்கே இருவரையும் முறைத்தபடி தரனும், சம்யுக்தாவும் நின்றிருந்தனர். அரசிக்கோ அவமானம் பிடுங்கித் தின்ன சிரம் தாழ்த்திக் கொண்டாள்... அர்ஜுன் உணர்ச்சித் துடைக்கப்பட்ட முகத்துடன் அவர்கள் முன்பு நின்றான்.

“ஆக ரெண்டு பேரும் விரும்பறீங்க?” என்று வினவிய தரனின் விழிகள் இருவரையும் கூர்மையாக துளைத்துக் கொண்டிருந்தது.

“நான் இன்னும் விரும்புறேன் இனி மேலும் விரும்புவேன்... ஆனால் அங்க எப்படியோ அவகிட்டயே கேளு” என்று கோபமாக இயம்பினான்.

அரசி மௌனமே உருவாக நின்றிருக்க தரனுக்கு எரிச்சலாக வந்தது... “கேட்கிறேனில்ல பதில் சொல்லு அரசி... அர்ஜுனை நீ விரும்பறியா?” கறாராக வினவியவன் கேள்வியை புறக்கணிக்க முடியாமல் வார்த்தைகளை தவிர்த்து...

“ம்ம்ம்” என்று மட்டும் தலையாசைத்தவளை கண்டு அர்ஜுன் வெறுப்பை உமிழ்ந்தான்.

“ஏன் கிணத்துல குதிச்சதில் தொண்டையில எதுவும் சிக்கிகுச்சா? வாய் திறந்து பதில் சொல்ல மாட்டியா?” கடுக்காயின் கடினத்துடன் வினவினான்.

“இல்லண்ணா... வந்து... வந்து... சாரி...” என்ன பேசுவது என்று அறியாது தினறியவளை பச்சாதாபமற்று பார்த்தவன்...

“இந்த வந்து போய் எல்லாம் வேண்டாம்... அவனை நீ காதலிக்கிறயா இல்லையா அதை மட்டும் சொல்லு” என்றவனின் ஏவலில் தன்னை திடப்படுத்திக் கொண்டவள்...

“ஆமாம் நான் இவரை காதலிக்கிறேன்” என்று விளம்பியிருந்தாள்.

“இதை உங்க வாயில் இருந்து வர வைக்க நாங்க இப்படி ஒரு பலப்பரீட்சை நடத்த வேண்டியதா இருக்கு?”

“அதுவும் பரீட்சையில் கூட சரியான பதில் எழுத தெரியாம தள்ளாடுறா உங்க முறை பொண்ணு... இங்கே உண்மையா காதலிச்சு பரிதவிச்சு நிற்கிறது அர்ஜுன் தான்... அண்ணனுக்கு, தங்கச்சிக்கும் ஏமாத்துறதுன்னா சர்க்கரை பொங்கல் சாப்பிடுற மாதிரி போல, என்ன அர்ஜுன் அண்ணா நான் சொல்லுறது உண்மை தானே” சம்யுக்தா கணவனைக் அடிக்கண்ணால் அளவெடுத்தவாறு குத்தலாக கூற, தரன் அவள் வார்த்தையில் அடிப்பட்டாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனைவியை முறைப்பால் கண்டித்தவன் அதைப் பற்றிய வாதத்தை ஒதுக்கிவிட்டு அரசியிடம் திரும்பினான்.

“நான் உன்கிட்டே உன் விருப்பத்தை கேட்டேனா இல்லையா, அப்போ ஏன் சொல்லலை”

“அது வேற ஒண்ணுமில்லைடா... இவளுக்கு ரொம்ப நாள் ஆசை போல என்னை உயிரோட கொல்லணும்னு, அதான் இப்படி டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கிறா? என்ன மிஸ்.கலையரசி அப்படித் தானே? உன் புத்தி ஊருக்கு தான் உபதேசம் பண்ண ஆகும் போல” வாணியின் பிரச்சனையில் அவளுக்கு துணை நின்றதை கூறி பகடி பேசினான். அவன் வார்த்தையில் காயப்பட்டவள் குற்றவுணர்ச்சியில் இமை மூடித் திறந்தாள்.

“ரெண்டு பேரும் வாழ்க்கையை கையிலெடுத்து விளையாடுறீங்களே அது என்ன பொம்மலாட்டமா... இந்த உலகத்தில் நமக்கு மேல இருக்கிற சக்திக்கு நாம எல்லாம் பாவைங்க தான், அவர் ஆட்டி வைக்க நாம ஆடுறோம்... இதில் உங்களுக்கும் ஒரு பங்காற்றம் வேணும்னு இப்படி பண்ணினீங்களா?” என்றவனின் பார்வை அர்ஜுனை குற்றம் சாட்டியது.

“என்னை முறைச்சு என்ன பலன்... நான் எவ்வளவோ முறை சொல்லிட்டேன் அவகிட்ட என்னை நம்புன்னு... ஆனா, அவளுக்கு அந்த நம்பிக்கை வந்த மாதிரியும் தெரியலை இருக்கிற மாதிரியும் தெரியலை... உங்கிட்ட அவ மறைக்கிறான்னு நீ கண்டுபிடிக்க போய் தான் இப்போவும் உன் முன்னாடி நிற்கிறா... இல்லைன்னா, நீ பார்த்த மாப்பிளையோட முதல் ராத்திரி கொண்டாடி முடிச்சுட்டு ஸ்வீட் சர்ப்ரைஸ்ன்னு சொல்லியிருந்திருப்பா” என்றவனின் வார்த்தைகள் சாக்கடை நீரை வாரி இறைத்தது போன்று உடல் கூசி அருவருக்க வைக்க...

“நரம்பில்லாத நாக்கு தானே எப்படி வேணா பேசும்... எப்படி உங்களால் என்னை பார்த்து இப்படி அசிங்கமா பேச முடியுது...? நீங்க சொன்ன மாதிரி நடக்க இருந்திருந்தா அது நடக்கிறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி என் பிணத்துக்கு முதல் மாலையை நீங்க தான் போட்டிருப்பீங்க மிஸ்டர்.அர்ஜுன்” அரசி கூறி முடிக்கவும், தரனின் கரங்கள் அவள் கன்னத்தில் ‘பளீர்’ என்ற சப்தத்துடன் இறங்கவும் சரியாக இருந்தது. மனதால் அடிப்பட்டு இருந்தவளுக்கு அவன் கரம் தாக்கிய அடி அத்தனை வலியை ஏற்படுத்தி விடவில்லை.

“இதெல்லாம் வக்கனையா பேசுறியே, நான் உன்கிட்டே கல்யாணத்தை பற்றின அபிப்ராயத்தை கேட்டப்போ எனக்கு அர்ஜுன் மேல விருப்பம் இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லுறதுக்கு என்ன?”

“ஏன் டா அவதான் ஏதோ பேச தயங்கிட்டா? ஏன் நீ எனக்கு யாரோ மூணாவது ஆளா நீயாச்சும் என்கிட்டே சொல்லியிருந்திருக்கலாமே?” என்று கோபம், அங்கலாய்ப்பு இரண்டும் கலந்தபடி கூறியவன் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.

“நான் உங்கிட்ட சொல்றதுக்கு எனக்கு என்ன தயக்கம் இருக்கப் போகுது டா? நான் பார்த்துப் பார்த்து இருந்தது இவளுக்காக... இவ ஒருத்திகாக மட்டும் தான்!”

“ஒரு வார்த்தை ஒரேயொரு வார்த்தை நீங்க வீட்டில் பேசுங்கன்ன்னு சிக்னல் காட்டியிருந்தா போதும்டா இந்நேரம் எங்க கல்யாணமே முடிஞ்சிருக்கும்”

“ஆனால் இவ நம்ப வச்சு கழுதறுத்துட்டா டா” ஏமாற்றத்தில் விளைந்த ஆற்றமையில் பிரலாபித்தான் அர்ஜுன்.

“உனக்கு வீட்டில் என்ன பிரச்சனை அரசி... அம்மா எதுவும் உன்னை கண்டிச்சாங்களா?” என்று அரசியிடம் நூல் போட்டு பார்த்தான் தரன்.

அவளோ அதற்கு இல்லை என்பதாக தலையாசைத்தவள் உள்ளம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது... சொல்லிவிடலாம் ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும்... ஆனால், அதற்கு பின்பு அவர் மேல் கோபப்பட்டு தரன் ஏதேனும் கூறிவிட்டால் குழலிக்கு அரசி மேல் மேலும் ஆத்திரம் அதிகரிக்கும், மற்றொன்று அழகான குடும்பம் என்னும் கூட்டை உடைத்ததாக ஆகிவிட்டால் என்ன செய்வது?!

தன் குடும்பத்தை இழந்து நிற்பதே மகா கொடுமை, ஒருவகையில் தன் துரதிர்ஷ்டம் என்று எண்ணுபவள், இருக்கும் மற்றொரு குடும்பத்தின் உறவையும் இழந்துவிட்டால் வாழ்க்கையில் என்ன தான் இருக்கிறது? என்றெல்லாம் சில நிமிடங்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

“பின்னே வேற என்ன காரணம்” என்றதும் அவள் அத்தை கூறியதை மறைத்து, தன் துரதிர்ஷ்டத்தை பற்றி கூறியிருக்க, மூவரும் ஒன்று போல் வெளிப்படையாகவே தன் உள்ளங்கையால் நெற்றியில் அறைந்துக் கொண்டனர்.

“உன் மூளை மியூசியத்தில் இருந்திருக்க வேண்டியது... தவறுதலா உன் மண்டையில் இருக்கு” என்று ஆவேசத்துடன் சலித்துக் கொண்டாள் சம்யுக்தா.

“இங்கே பாரு ஒருத்தனுடைய விதி இன்னொருத்தன் கையில் இல்லை... நான் பிறக்கும் போதே என் விதி தீர்மானிக்கப்பட்டது... உனக்கும் அப்படிதான். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருக்கும் அப்படித்தான். கல்யாணமும் இன்னார்க்கு இன்னார்னு கடவுள் முடிச்சிட்டது. நாம என்ன தான் தலைகீழா கவிழ்ந்து நின்னாலும் நடப்பது தான் நடக்கும், அதுக்கும் என்னுடைய தனிப்பட்ட விதிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” ஆவேசமாக பிரஸ்தாபித்தான் அர்ஜுன்.

“நீ படிச்சவ தானே போயும் போயும் இப்படி உப்பு பெறாத விஷயத்துக்கா இப்படி ஒரு முடிவு எடுப்ப?” கலாதரன் சாடியதிலும், அவள் தண்ணீரில் நனைந்ததும் ஒன்றாக சேர்ந்து முதுகுத்தண்டை சில்லிட வைத்து பற்கள் வெடவெடக்க நடுங்கிக் கொண்டிருந்தாள்... அதை பற்றிய கிலேசம் சிறிதும் இல்லாமல் மேலும் தொடர்ந்தான் அர்ஜுன்.

“அவ இப்படி ஒரு முடிவெடுத்திருப்பான்னு தெரிஞ்சிருந்தா இந்த ஆக்சிடென்ட்டிலேயே என் உயிரை விட்டிருப்பேன்... இப்படி இவ்ளோ தூரம் எனக்கும் வேதனை இருந்திருக்காது” என்றவனை சம்யுக்தா, தரன் திகைத்து பார்க்க, அரசி உடைந்து போனவள்...

“ஐயோ! தயவு செய்து அப்படி சொல்லாதீங்க” என்று கதறியவளின் உடல் பலவீனத்தில் சரியத் துவங்க பிடிமானம் இல்லாமல் தரையில் மடிந்து, அவள் மடியிலேயே முகம் புதைத்து துயரத்தில் கரையலானாள்.

“வாயை மூடு! அவ தான் ஏதேதோ நினைச்சு மனசை போட்டு குழப்பிகிட்டு பேசுறான்னு பார்த்தா நீயும் இப்படி பேசுற?” கடுமையாக கண்டித்திருந்தான் தரன்.

“அடுத்தவங்க மனசை சாகடிக்கிறவங்களே இங்க உயிரோடு இருக்கும் போது நீங்க ஏன் அர்ஜுன் அண்ணா சாகணும்?” கணவனையும், அரசியையும் சேர்த்தே ஈட்டியை போல் குத்திய வார்த்தைகளில் தாக்கப்பட்டு முகம் இறுகி நின்றான். அவன் மேல் எப்போதும் போல் தற்போதும் சுடுநீரை விசிறி அடிப்பது புதிதல்ல என்றாலும் கூட ஒவ்வொரு முறையும் காயப்பட்டு தான் போகிறான், இருந்தாலும், தன் தவறை உணர்ந்தவனாக வழக்கம் போல் பல்லை கடித்தப்படி சகித்துக் கொண்டான்.

சம்யுக்தாவின் பேச்சில் தாக்கப்பட்ட அரசி விசுக்கென்று நிமிர்ந்து நோக்கியவள்... “அ..ண்..ணி..” என்று தடுமாறியவளின் குரல் நடுங்க விழிகளில் வலி நிரம்பியிருந்தது.

மனைவியின் பேச்சிற்கு அடிபட்ட பறவையாக சுருண்டு விழுந்தாலும் பினிக்ஸ் பறவை போல் உயிர்த்தும் எழுந்தவன் தன் ரணத்தை ஒதுக்கி வைத்து விட்டு பேசலானான்... “இப்படியே உன் மேல தப்பு, என் மேல தப்புன்னு, பேசிட்டே இருக்கிறதுல பிரயோஜனம் இல்லை... அடுத்து என்னன்னு தான் இனி பேசணும்... நீ சொல்லுடா அர்ஜுன்” என்று அவனை உந்தினான் தரன்.

“நான் என்னத்தை சொல்லுறது... அது தான் உன் மாமன் மகள் என் முகத்தில் கரியை பூசிட்டாளே... இனி என்ன செய்யணும்னு அவகிட்டேயே கேளு” உச்சக்கட்ட விரக்தியில் விட்டேறியாக கூறியவனை கண்டு அரசிக்கு நெஞ்சை அடைத்தது.

“என்னை வெறுத்துட்டிங்களா அர்ஜுன்?” என்றவளின் குரல் நடுங்க... அவனோ அதற்கு பதில் கூறாமல் மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி மௌனமாக நின்றிருந்தான்.

கலாதரன் இந்த சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க எண்ணியவன்... “யுகி நீ அரசியை கூப்பிட்டுட்டு போ, நான் அர்ஜுன்கிட்டே பேசிட்டு வரேன்” என்றதும்...

“ம்ஹும்... நான் போகமாட்டேன், நான் கேட்ட கேள்விக்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்க அப்போ தான் இங்கிருந்து நகருவேன்” பிடிவாதமாக நின்றவளை பார்வையால் அதட்டியவன்...

“ம்ச்... அதான் நான் சொல்றேன்ல அவன்கிட்டே நான் பேசிக்கிறேன்... உனக்கு புருஷன் இவன் தான், உன் கழுத்துல இவன் தான் தாலி கட்டுவான், அதை எப்படி நடத்தணுமோ நான் நடத்துறேன்... உங்க மனஸ்தாபத்தை எல்லாம் புருஷன், பொண்டாட்டியா ஆனதுக்கு அப்புறம் பேசி தீர்த்துக்கோங்க” அழுத்தமாக கூறியவன்...

“நீ அரசியை விட்டுட்டு அர்ஜுன் வீட்டுக்கு வந்திரு” என்று மனைவிக்கு ஆக்கினையிட்டான்... அரசிக்காக பார்த்திருந்தால் அவள் செய்த காரியத்தை கண்டித்து அவனின் சொல்லுக்கு நிச்சயம் எதிர்ப்பு கூறியிருந்திருப்பாள் தான்... ஆனால், அங்கே அவளின் நலம் விரும்பியான அர்ஜுனை கருத்தில் கொண்டு...

“ம்ம்ம்... சரி” என்று கூறிவிட்டு நகர்ந்திருந்தாள்...

“வா போகலாம்” என்று அழைத்த சம்யுக்தாவை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் அர்ஜுனின் மேலேயே பார்வையை நிலைகுத்தி வைத்தபடி பரிதவிப்புடன் அசையாமல் நின்றிருந்தவளின் மனநிலையை அறிந்துக் கொண்ட சம்யுக்தா, அவளிடம் அனுமதி பாராமல் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தாள்.

அர்ஜுன் சிறிதும் அசைந்து கொடுத்தானில்லை... அரசியை கண்ணெடுத்தும் பாராது இறுகிப் போய் நின்றிருந்தான்.

சம்யுக்தாவின் பிடிக்கு சாவி கொடுத்த பதுமை போல் சென்றவளின் விழிகள், தன் பார்வையிலிருந்து மறையும் வரை அர்ஜுனையே ஏக்கத்துடன் வெறித்துக் கொண்டிருந்தது.

தரன் அர்ஜுனை நெருங்கியவன்... “டேய் அரசிக்கும், உனக்கும் இடையில் இருக்கிற உரசல் உங்களுடைய அந்தரங்கம் அதில் நான் தலையிட விரும்பலை தலையிடவும் மாட்டேன்... ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை...”

“அரசியை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு வீட்டில் எல்லாரும் முடிவு செய்தாச்சு... இனி அதை தள்ளிப்போட முடியாது. அதனால், உனக்கும் அரசிக்கும் அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணம் ஏற்பாடு செய்தாகனும்... இது தான் என் முடிவு, இனி நீ தான் உன் முடிவை சொல்லணும்”

“எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்”

“என்னடா சந்தேகம்?”

“அரசிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சதும், ஏன்டா உனக்கு என் நியாபகம் வரலை? எனக்கு அந்தளவுக்கு தகுதி இல்லையா?”

“அடேய் அப்புறம் நான் நண்பன்னு பார்க்கமாட்டேன் வெளுத்துவிட்டிருவேன்... என்னடா பேச்சுன்னு இதை என்கிட்ட சொல்ற? உன் தகுதிக்கு என்னடா குறைச்சல்? உன்னை மாதிரி குணமானவனை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கமாட்டாங்கடா... நீயும், அரசியும் காதலிக்கறீங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்... வாணி மலர் போல அவளையும் நீ பார்க்கிறியோன்னு நினைச்சிட்டேன் அப்புறம் இன்னொன்னு....” என்று இழுத்தவன் தயங்கி நிறுத்த அர்ஜுன் புருவம் சிந்தனையில் சுருங்கியது...

“அதில்லை, இதில்லைன்னு சொல்லிட்டு என்னடா இழுக்குற?”

“உன் ஸ்டேட்டஸ் என்னை அந்தளவுக்கு விசாரமா யோசிக்க வைக்கலைடா” என்று உண்மையை உடைத்ததில் ஆட்சேபதுடன் முகத்தை சுளித்தவன்...

“ஆமாம் பெரிய ஸ்டேட்டஸ்... என்கிட்ட சொத்து இல்லையா? எனக்கு கை கால் இல்லையா? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வருகிறவ சீர்வரிசை கொண்டு வந்து வீட்டை நிறைச்சு தான் நான் அடுத்த சந்ததிக்கு வழி தேட போறேன்னா போ டா”

“அதெல்லாம் நீ நினைக்கமாட்டடா, உன் பரந்த மனப்பான்மையை பற்றி எனக்கா தெரியாது... ஆனால் ஊர் உலகம்ன்னு ஒண்ணு இருக்கே, அவங்க வாய்க்கு அவலா அரசி ஆகிரக்கூடாதே”

“ஊர் வாய் உலக வாய் எல்லாம் தூக்கி உலையில் போட்டுட்டு கலையரசிக்கு அண்ணனா, மச்சான் முறையா நின்னு பேசு”

“அதுக்கு தான் நான் என் அபிப்ராயத்தை சொல்லிட்டேனே, இனி நீ தான் சொல்லணும்”

“நீ சொல்லுறதை பார்த்தா அரசியுடைய கல்யாணத்தை தள்ளிப் போடா முடியாதுன்னு புரியுது, அதனால் நாமளே பேசிக்கிறதை விட வீட்டில் போய் அம்மா, அப்பாகிட்டே எடுத்து சொல்லி கலந்தாலோசனை பண்ணிக்கிட்டு பேசிக்கலாம் வா” என்றதும் பரம திருப்தியாக இருந்தது... இருந்தாலும் மனதின் ஓரத்தில் எழுந்த சிறு அரிப்பை தடுக்க முடியாமல் போகவே...

“ஒரு விஷயம்” என்று நிறுத்திய தரனின் குரலில் அர்ஜுன் நின்று நிதானமாக நோக்கியதும்...

“இதை கேட்பது நாகரிகம் இல்லை தான், இருந்தாலும் கேட்டாகணும்னு உதடு துடிக்குது, மனசு கட்டாயப்படுத்துது” என்று பீடிகை போட்டவனை...

“என்ன டா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவினான்.

“அரசி மேல் கோபம் மட்டும் தானே, அவளை வெறுக்கலையே? அப்படி இல்லைன்னா இனியும் வெறுக்கமாட்டே தானே” சிறு தயக்கத்துடன் கேட்டிருந்தான்.

“நான் அவளை வெறுத்து தூக்கி போட்டிருந்தா, சம்யுக்தா அரசியை மணப்பெண் கோலத்தில் அலங்காரம் செய்து எடுத்து அனுப்பிச்ச போட்டோவை பார்த்த போதே தூக்கிப் போட்டுட்டு போயிருப்பேன்... அவளை வெளி கொண்டு வர இப்படி அவ முன்னாடி நின்னு நாக்கை பிடுங்குற மாதிரி பேசியிருக்கமாட்டேன்” என்று தெள்ளத் தெளிவாக அரசியின் மேல் கொண்ட காதலை விளக்கியிருக்க, அவனுள்ளம் ஆத்ம திருப்தி அடைந்தது.

“தப்பா எடுத்துக்காதே டா... என்ன தான் நீ நெருங்கிய நண்பனா இருந்தாலும், அரசி என் வீட்டு பொண்ணு அவளுக்கான வாழ்க்கை உத்திரவாதம் தெரிஞ்சுக்கிறது, எனக்கு முக்கியமா தெரிஞ்சுது”

“விடு டா நான் இதை எல்லாம் தப்பா எடுத்துக்கலை, எனக்கு சந்தோசம் தான்... ஆனால் உன்னை போலவே எனக்கு ஒரு சந்தேகம் தான்”

“என்ன டா எதுனாலும் தயங்காமல் கேளு” அவன் அரசியை பற்றி தான் எதுவும் வினவப் போகிறான் என்று காத்திருந்தவனிடம்...

“எப்படி டா சம்யுக்தா என்ன குத்தி பேசுனாலும் அமைதியா, பொறுத்து போகிற...? இதை நான் செய்தா அது ஆச்சரியப்படுறதுக்கு இல்லை தான்... ஆனால், சரக்குன்னா வெடுக்குன்னு கோபப்படுற ஆளு நீ எப்படி அமைதியா இருக்கிற?” என்றவனின் வினாவை முற்றிலும் எதிர்பாராததை அவன் முகம் காட்டியது.

அர்ஜுனின் கேள்வியை கேட்டு கசப்பான புன்னகையை உதிர்த்த தரனின் முகம் இருளடைந்தது... “அவப்பட்ட வலியை எனக்கு திருப்பி கொடுக்க நினைக்கிறா” என்றவனின் குரல் மரத்து ஒலித்தது.

“புரியுது டா, ஆனால் என் முன்னாடி மட்டும் கோபத்தை காட்டாமல் கண்ட்ரோல் பண்ணிட்டு தனிமையில் நீ அவகிட்டே கோபத்தை காட்ட மாட்டியே?”

“இங்கே சம்யுக்தா உன் வீட்டு பொண்ணுன்னு உரிமையா?” என்று மெலிதாக இதழ் விரித்தவனின் புன்னகை அவன் கண்களை எட்டவில்லை.

“ஏன் உன் வீட்டு பொண்ணுக்கு நீ உத்திரவாதம் கேட்கக்குள்ள, நான் கேட்கமாட்டேனா?”

“தாராளமா கேளு யார் வேண்டாம் சொன்னா... அவளை நான் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணியிருக்கேன் டா... எனக்கு கோபம் வரும் போகும் தான் அதுக்காக வெறுக்கமாட்டேன்... அவபட்ட வலியை விட நூறு மடங்கு அதிகமா நான் அனுபவிக்கணும்னு நினைக்கிறா... சரி அப்படியாச்சும் அவளுக்கு திருப்தி கிடைச்சா நான் செஞ்ச தப்புக்கு சரி தான்னு ஏற்றுகிட்டு அனுசரிச்சு இருக்கிறேன்”

“டேய் அவளை இவ்ளோ லவ் பண்ணுற... அப்புறம் ஏன் டா கோர்ட் படி ஏறின?”

“சில விஷயங்கள் சொல்லலாம், சில விஷயங்கள் சொல்ல முடியாது அப்படித்தான் இதுவும்... நான் அவ மேல கோபப்பட்டு அவளை காயப்படுத்திட்டே இருக்கேனான்னு உனக்கு சந்தேகம், அதை இல்லைன்னு நிரூபிக்கத்தான் இதை சொன்னேன், மற்றது எல்லாம் எனக்கும் அவளுக்கும் மட்டுமே உரிமையான அந்தரங்கம்”

“சரி அவகிட்டே தனிமையில் உன் நிலைமையை எடுத்து சொல்லலாமே”

“என்னன்னு சொல்ல சொல்ற? அப்படி நான் எதையோ சொல்ல, அவ அதுக்கு என்னை கேள்விக் கேட்டு அது அவளை இன்னும் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கும்... அப்புறம் ஏதாவது சிக்கல் ஆனா என் வாழ்க்கை அதோகத்தி தான்...” அவன் பேச்சில் குறுக்கிடாமல் அவன் முடிக்க காத்திருந்தான்.

“அடிக்கடி என்னை குத்தி குத்தி பேசுறது சங்கடமாதான் இருக்கு அதை இல்லைன்னு சொல்லமாட்டேன், ஆனால் அதைத் தாண்டி இன்னும் கடைசி காலம் வரை வாழ்ந்தாகணும் அப்படி இருக்கிறப்போ எத்தனை நாள், எத்தனை வருஷம் பேசுவா? அப்படியே பேசினாலும் பேசட்டும் பொண்டாட்டி தானே... ஒரு நாள் அவளுக்கே சலிச்சிரும் அன்னைக்கு அவளே தன்னால் உணர்ந்து நிறுத்திக்க போறா, அதுவரை பொறுமையா போனா என் உடம்பில் இருந்து ஆவி குறைஞ்சிராது?”

இது தான் கணவன் மனைவிக்கு உண்டான தாத்பர்யம்... இருவருக்கும் ஏற்படும் சச்சரவுகளில் வார்த்தை போர் தடித்து ஓங்கினால் கணவன் தானே என்று மனைவியும், மனைவி தானே என்று கணவனும் எண்ணி விட்டு கொடுத்து சென்றாலே வாழ்க்கை சிறத்துவிடும் என்பதற்கு உதராணம் காட்டியிருந்தான் கலாதரன்.

“.......” அவன் பேச பேச கண்களை அகல விரித்து ஏதோ அதிசயத்தை காண்பது போல் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

“ஏதோ சண்டை போட்டாலும் என் கூடவே இருக்காளே, அதுவே எனக்கு சந்தோஷம் தான்” என்று முடிக்கவும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான். அவனின் திடீர் அணைப்பில் திடுகிட்டவன் உணர்ச்சி வசத்தை புரிந்துக் கொண்டவன் அதை தகர்க்க எண்ணி...

“டேய் பாவி! நான் அரசி இல்லைடா போதும் என்னை விடு” என்று நகைத்துக் கொண்டே கூறியிருக்க, அவனை விலக்கி நிறுத்தியவன் அவன் முகம் பார்த்தபடி பேசலானான்....

“என்னால் உன்னளவுக்கு அரசியை பார்த்துக்க முடியுமான்னு தெரியலை... ஆனால், உன்னில் பாதியாச்சும் முயற்சி பண்ணுறேன்டா” சிலாகித்து கூறியவனை கண்டு...

“எதுக்கும் இதெல்லாம் பேசும் போது என் பொண்டாட்டி இல்லாம பார்த்துக்கோ... அப்புறம் எனக்கு சப்போர்ட் பண்ணின உன்னையும் பிளாக் லிஸ்ட் பண்ணிருவா” என்று சிரிக்கும் கண்களில் இமைசிமிட்டினான்...

“அய்யயோ நல்லவேளை நியாபகப்படுத்தினேடா நண்பா” என்று அவனும் பதிலுக்கு புன்னகைத்தப்படி சகஜமாக பேசியபடியே இணைந்து நடந்து அர்ஜுனின் வீட்டிற்கு சென்றனர்.

சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-21 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

கதையின் முதல் பாகம் இன்னும் நான்கு அத்தியாயத்தில் முடிவடையவுள்ளது மக்களே முழுதாக படிக்க ஆரம்பிப்பவர்கள் படிக்கலாம், டேக் செய்ய வேண்டுமென்றால் கமெண்டில் சொல்லவும்.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-22

அர்ஜுன் வீட்டை அடைந்ததும் தரன் காத்திருந்து மனைவியுடன் சேர்ந்து வருவதாக கூறியிருக்க, அர்ஜுன் மட்டுமாக முதலில் வீட்டிற்குள் நுழைய மல்லிகா இறுகிய முகத்துடன் அவனை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தார்.

அன்னையின் இந்த கோப முகம் எதனால் என்று உணர்ந்திருந்தாலும், அமைதியாக சென்று சோபாவில் அமர்ந்ததும் தான் தாமதம்... அவரை மீறி சென்றதை கண்டித்து பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்...

“என்னடா நினைச்சுட்டு இருக்கிற உன் மனசுல? வர வர உன் போக்கே சரியில்லை... உன்னை எங்கேயும் நகரக் கூடாதுன்னு சொல்லியும், இன்னைக்கு என் பேச்சை கேட்காம போறேன்னா எனக்கு நீ கொடுக்கிற மரியாதை அவ்வளவு தானா?”

“மல்லி அவனுக்கு அவசர வேலை வந்திருக்கும் அதனால் உடனே கிளம்பிட்டான் போல, அதுக்காக அவனை இப்படி பிடிச்சு துவைச்சு எடுத்துட்டு இருக்கியே?”

“ஆமாம், நீங்க என்ன இவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க? உங்க மகனுக்கு அப்படி என்ன முக்கியமான வேலைன்னு கேளுங்க?” என்று அவனை நுணுக்கமாக ஆராய்ந்தபடி கூறியிருக்க, அர்ஜுன் உணர்ச்சித் துடைத்த முகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“ஆமாம் அர்ஜுன் அவ்ளோ அவசரமா புயல் வேகத்தில் கிளம்பி எங்கே போன?” என்று வினவினார் தந்தை நடராஜன்.

“ஒரு முக்கியமான விஷயமா போனேன்?”

“அப்படி என்ன முக்கியமான விஷயம்னு கேளுங்க... அப்போவே தர்ஷன்கிட்டே கேட்டுட்டேன் அண்ணன் ஆபிஸ்க்கு வரலை ம்மான்னு சொன்னான்”

“...........”

அர்ஜுன் அன்னையின் கோபத்தை உணர்ந்தாலும், அவன் வாழ்க்கையை பற்றிய முடிவை மேற்கொள்ளும் கட்டாயம் இருக்கவே, அவர்களிடம் அதைப்பற்றி எப்படி ஆரம்பிப்பது என்று சிந்தனை வயத்தில் உழன்று கொண்டிருந்தான்... அவன் சிந்தனையில் வாய்ந்த அமைதியை நெஞ்சுரம் என்று எண்ணிக் கொண்டவர்...

“நானெல்லாம் உன்கிட்டே கேட்டா பதில் சொல்ல உனக்கு ரொம்ப கஷ்டமாத் தான் இருக்கும், இதே பொண்டாட்டின்னு வந்துட்டா அவ கேட்கிறதுக்கு முன்னாடி வரிஞ்சு கட்டிக்கிட்டு பதில் சொல்லுவ” என்று அங்கலாய்ப்பாக கூறியவரை ஏறெடுத்து நோக்கியவனின் பார்வையில் மின்னல் வெட்டிய சமயம்...

“நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை தான் அத்தை!” என்று கூறியபடி உள்ளே வந்திருந்தாள் சம்யுக்தா. தரனும் அவளுடனே வந்தவன் மெல்லிய புன்னகையுடன் அர்ஜுனை பார்த்துக் கொண்டிருந்தான். சம்யுக்தா, தரனை கண்டு மல்லிகா, நடராஜன் தங்கள் பார்வையை அவர்கள் புறம் திருப்பினர்.

“நீங்க கேட்டு கமுக்கமா இருக்கிற இதே அர்ஜுன், பொண்டாட்டி எள்ளுன்னா எண்ணெயா நிற்பாரு?” என்று விகடம் பேசி அர்ஜுனை பிடிக்குள் சிக்க வைத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

“அப்படி சொல்லு சம்முமா... இதுக்காகவே யார் கூடவாவது சேர்த்து வச்சு கால் கட்டு போட்டுட்டா அப்பாடான்னு நிம்மதியா இருக்கலாம்ன்னு பார்த்தா, இவன் அதுக்கும் அசையமாட்டேன்னு உட்கார்ந்துகிட்டு எனக்கல்ல கவலையை ஏத்திகிட்டே போறான்” என்று மனத்தாங்கலுடன் அங்கலாய்த்தார்.

“மல்லி போதும் புலம்பியது முதலில் வந்தவங்களை வரவேற்று உபசரி அப்புறமா மற்றதை பேசிக்கலாம்” என்று கணவர் நினைவுறுத்தவும் தான் தன் தவறை உணர்ந்தவர்...

“சாரிமா உங்களை கவனிக்காம நான் பாட்டுக்கு ஆதங்கத்தில் ஏதேதோ பேசிட்டு இருக்கேன், உட்காருங்க குடிக்க டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று நகர்ந்ததும், நடராஜன் அவர்களுடன் கலந்துரையாட அனைவரும் சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.

தரன் பேசிக் கொண்டே அர்ஜுனிடம் சமிக்ஞை காட்ட இமைகளை மூடித் திறந்தவன் அன்னை, தந்தையிடம் மனதை உரைக்கலானான்...

“இனி மேல் நீங்க என் கல்யாணத்தை பற்றி பேசி கவலைப்படமாட்டீங்க ம்மா” என்றதும் திடுக்கிட்டு பார்த்தவர்...

“ஏன் டா சந்நியாசம் போகப் போறியா?” என்றவரின் குரலில் பதற்றம் நிலவ, அதை நமட்டுச் சிரிப்புடன் நோக்கிய சம்யுக்தா...

“அப்படி ஏதும் அர்ஜுன் அண்ணா போனாங்கன்னா, இங்க ஒருத்தி கழுத்தை பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு வந்திருவா த்தை” என்று பூடகமாக கூறியதில் புருவம் சுருங்க யோசனையுடன் பார்த்தா மல்லிகா, நடராஜன் இருவரும்...

“என்னம்மா சொல்லுற?” ஒரு சேர வினவ அதில் சுதாரித்த அர்ஜுன்...

“நான் லவ் பண்றேன்” என்க... இருவரும் வினோதமாக பார்வை பரிமாறிக் கொண்டனர்.

“டேய் நான் அடிக்கடி கல்யாணத்தை பத்தி பேசுறேன்னு அதை நிறுத்தி வைக்க பொய் சொல்லுறியா?” என்று மகனை நம்பாது மல்லிகா கேட்க...

“என்ன டா அர்ஜுன் சொல்லுற நிஜமாவா?” என்று நடராஜனும் வினவ...

“அண்ணன் சொல்லுறது உண்மைதான் ப்பா” என்றபடி நுழைந்தான் தர்சன்... தர்சனின் இதழ்கள் சிரித்துக் கொண்டிருக்க...

“அவன் காதல் கடலில் தொபுகடீர்னு விழுந்ததில் அவங்களையே செக்ரெட்டரியா அப்பாயிண்ட் பண்ணிட்டான்” என்று உடைத்து கூறியிருந்தான்.

அர்ஜுன் தன் திருமணத்தை பற்றி பேசி விட வேண்டும் என்று சிந்தாந்தம் மேற்கொண்ட கணமே தர்சனுக்கு அவசரமாக வீட்டுக்கு வரும் படி தகவல் அனுப்பியிருக்க, சரியான நேரத்தில் பிரசன்னமானவன் எப்போதாடா உடைப்போம் என்று காத்திருந்தவன் போல் கூறியிருந்தான் தர்சன்.

“திலீப் நல்லா சின்சியரா இருக்ககுள்ள அண்ணன் செக்ரெட்டரியா அரசிக்காவை போட்டப்போவே டவுட் வந்திருக்க வேண்டாம்” என்று போட்டுக் கொடுக்க அர்ஜுனோ அவனை போலியாக முறைத்துக் கொண்டிருந்தான்.

“அதனால தான் அய்யா சொல்லாம மறைச்சுட்டாரா இருக்கும் தர்சன்” என்று மகனை நன்கு அறிந்து வைத்திருந்த நடராஜன் கூறியிருந்தார்.

“ஆனாலும் இந்த பையனை நம்பவே கூடாது” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூறினார் மல்லிகா.

“ஏன் மல்லி அப்படி சொல்லுற?”

“பின்னே என்னங்க வார்த்தைக்கு வார்த்தை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்ட தர்சனை கூட நம்பலாம் போல, எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சுத்திட்டு இருந்தவன் திடிர்னு காதலிக்கிறேன்னு வந்து நிற்கறான்... கமுக்கமா இருந்துட்டு என்ன வேலை பார்த்திருக்கான்”

“காதல் மட்டும் தானா இல்லை கல்யாணம் ஆகி குழந்தை இருக்கான்னு எதுக்கும் கேட்டு சொல்லுங்க” என்ன இருந்தாலும் தான் கேட்கும் போது நிர்தாட்சண்யமாக மறுப்பு கூறி நின்றவன், திடிரென்று காதல் என்று கூறியதும், மல்லிகாவுக்கு சிறு ஏமாற்றம் விளைந்ததை தடுக்க முடியாமல் போக அதை வார்த்தையாலேயே பிரதிபலித்திருந்தார்... அன்னையின் வருத்தத்தை அறிந்தவனாக அவரை நெருங்கி அணைத்தப்படி அமர்ந்தவன்...

“அம்மா ப்ளீஸ்... உங்ககிட்டே சொல்லக்கூடாதுன்னு இல்லை... கலையரசிக்கு டைம் தேவைப்பட்டுச்சு, எங்களுக்குள்ள அன்ட்ர்ஸ்டாண்டிங் இன்னும் அதிகமா இருக்கணும்னு நான் நினைச்சேன் அதான் சொல்லலை”

“இப்போ மட்டும் எப்படிப்பா ஞானோதயம் வந்துச்சு?”

“நாங்க அரசிக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வச்சுட்டோம் அம்மா... அரசி பயந்துட்டா அப்புறம் தான் விஷயம் இப்படின்னு தெரிஞ்சுது?” உண்மையுமல்லாத, பொய்யுமல்லாத காரணத்தை கூறி தரன் சமாளித்திருக்க, சம்யுக்தா, அர்ஜுன் இருவருமே ஒரு சேர நிம்மதியாக உணர்ந்தனர். அர்ஜுன் தரனுக்கு கண்களாலேயே நன்றியை உரைத்திருந்தான்.

“என்ன அரசிக்கு மாப்பிள்ளை பார்த்தீங்களா? எங்ககிட்டே கூட சொல்லலையே” தரன் குடும்பத்தை தன் குடும்பமாக பார்க்கும் விதத்தில் மல்லிகா உரிமையால் விளைந்த ஆட்சேபத்தில் வினவ தரனுக்கு தர்ம சங்கடமானது.

அவரின் கேள்விக்கு விடை அறியாத பாலகன் போன்று கையை பிசைந்துக் கொண்டிருந்தான்... அவனும் தான் அவரின் கேள்விக்கு என்னவென்று பதில் கூறுவான்... மர்ம தேசம் போன்று காதல் விளையாட்டை ஆடியாது அர்ஜுன், அரசி இருவரும்... அவர்களை வெளிக்கொணரவே இவன் தலையால் தண்ணீர் குடித்த கதையை கூற முடியுமா? அது அவர்களின் அந்தரங்கத்தை பொருட்கட்சியில் வைத்தது போல் ஆகிவிடுமே என்றெண்ணி மௌனத்தை கடைபிடிக்க, நிலைமையை சமாளிக்க இடையிட்டாள் சம்யுக்தா.

“அத்தை நான் இந்த வீட்டு பொண்ணுன்னு சொன்னது உங்களுக்கு நியாபகம் இருக்கா?”

“அது இருக்கிறதால தானே நாங்க கேட்கிறோம், நீ ஏன்மா திடீர்னு இப்படி ஒரு கேள்வியை கேட்கிற?”

“காரணமாத் தான் சொல்லுங்க மாமா”

“நீ இந்த வீட்டு பொண்ணுங்கிறதில எந்த மாற்றமும் இல்லைம்மா, இப்போ சொல்லு”

“அரசிக்கு பெண் பார்க்க நாங்க நினைச்சதும் உங்ககிட்ட சொல்லி பேசலாம்னு தான் இருந்தோம்... ஆனால் அதுக்குள்ள மாப்பிள்ளை வீட்டில் பெண்ணை பார்க்கணும்னு சொல்லிட்டாங்க... எங்களுக்கும் முதலில் விருப்பம் இல்லை தான்... ஆனால் தொடர்ந்து அவங்க வற்புறுத்தி கேட்டதால மறுக்க முடியாம போயிருச்சு... சரி வீட்டுக்கு விருந்தாளி வந்ததா நினைச்சுப்போம் வந்துட்டு போகட்டும்னு முடிவு செய்து தான் சொல்லலை மாமா”

“இது வெறும் கண் துடைப்புக்காக செய்தது தான் அத்தை... அரசிக்கு தீவிரமா பார்த்து பெண் பார்க்க வராங்கன்னா நிச்சயம் நாங்க உங்களை கூப்பிடாம இருப்போமா? அதுவுமில்லாம அவளை பெண் பார்த்துட்டு போனது வெளியில் தெரிஞ்சா, ஆளாளுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்பாங்க” என்று சம்யுக்தா கூறிய விதத்தில் அவர்கள் பக்கம் நியாயத்தை உணர்ந்து கொண்டவர்...

“வாஸ்தவம் தான்மா... பெண் பார்த்துட்டு நேர்மறையா செய்தி சொல்லாம எதிர்மறையா சொல்லிட்டாங்கன்னா ஊர் வாய் எல்லாம் பெண்ணை தான் பழி சொல்லும்... இப்படிப்பட்ட சமாசாரத்துக்கெல்லாம் காதும் காதும் வச்ச மாதிரி முடிக்கிறது தான் நல்லது” என்று உரைத்தவரை நிம்மதி பெருமூச்சுடன் பார்த்தவள்...

“அத்தை நிஜமா கோபம் எதுவும் இல்லையே?”

“இருந்ததுமா... ஆனா, அது நீ விளக்கம் சொல்லுறதுக்கு முன்னாடி... இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... ஏன்னா அரசி மேல எனக்கும் ஒரு அபிப்ராயம் இருந்தது... ஆனால் கல்யாணமே வேண்டாம்னு மல்லுகட்டி நிற்கிறவனை கட்டாயப்படுத்தி தள்ளி அரசி மனசை கலைச்சதா இருக்கக்கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன்” என்று கூறியிருக்க, தரன் மனைவிக்கு பார்வையால் நன்றி செலுத்தியபடி பெருத்த நிம்மதி அடைந்திருந்தான்.

“தரன் நாங்க ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறோம், அன்னைக்கே சிம்பிளா நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம் கல்யாணம் வேணா கிராண்டா வச்சுக்கலாம்” கூறினார் நடராஜன்.

“ம்ம்ம்... சரிப்பா சீக்கிரமே அரசி கல்யாணத்தை முடிச்சிரலாம் அப்போ தான் நாங்க வாணியின் வாழ்க்கைக்கு ஒரு முடிவெடுக்க முடியும்”

“இங்கே பாரு தரன் நீயோ, உன் குடும்பமோ எங்களுக்கு வேறு இல்லை... அரசி, வாணி, மலர் மூணு பேருமே எங்களுக்கு பிள்ளைங்கள் மாதிரி தான் நீ எதுக்கும் கவலைப்படாதே” என்று மல்லிகா ஆதரவும், ஆறுதலுமாக மனமுவந்து தெரிவித்தார்.

“ரொம்ப தேங்க்ஸ்மா... அப்போ நாங்க கிளம்பறோம்” என்று கூறிவிட்டு மனைவியுடன் நகர, அர்ஜுனும் அவர்களை தொடர்ந்து சென்றிருந்தான்.

“நீ எதுக்கும் கவலைப்படாதேடா அரசியை நாங்க விருப்பப்பட்டு பெண் கேட்கிறதை போலத் தான் பார்த்துக்குவேன்... எக்காரணம் கொண்டும் எங்க காதலை சொல்லி அவளுக்கு இடைஞ்சல் செய்யமாட்டேன்” நண்பனின் பேச்சில் தரன் நன்றியுடன் நோக்கியவன் ஆதரவாக அணைத்து கொண்டான்.

“ரொம்ப தேங்க்ஸ்டா... நானே கேட்கணும்னு நினைச்சேன் ஆனா நீயே சொல்லிட்ட”

“எனக்கு தெரியாதாடா... பெற்றவங்க இருந்தாலே கண்டதையும் சேர்த்து திரிச்சி பேசுவாங்க, இதில் எங்க காதலை சொன்னா அவளை ஜாடை பேசியே நோகடிச்சிருவாங்க” நடப்பை நுணுக்கமாக உணர்ந்து கூறியிருந்தான்.

“உண்மை தான்டா எனக்கும் அதே பயம் தான்” என்றவன் பொதுவாக சில விஷயங்கள் பேசிவிட்டு மனைவியுடன் இல்லம் சென்றடைந்து விட்டிருந்தான்.


**********************

“இதோட நாம இருபதாவது வரன் பார்க்கிறோம்... ஆனால் இதுவும் இப்படி தட்டி போறதை பார்த்தா ஏதோ சதி போல் தெரியுது” நெற்றி ரேகைகள் விகாரத்தில் சுருங்க பேசிய யமுனாவை தொடர்ந்து பாஸ்கரன், யசோதா இருவரும் ஆமோதிப்பாக பார்த்திருந்தனர்.

“எனக்கு என்னவோ இதெல்லாம் அந்த கவினுடைய வேலையா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு அக்கா” என்று தன் யூகத்தில் கூறினார் யசோதா.

“இல்லை யசோதா வாய்ப்பேயில்லை... அவனே சாதாரண கூலிக்கார பைய(ன்) அவனுக்கா இந்தளவுக்கு பவர் இருக்கப் போகுது... எனக்கு என்னவோ நம்ம வீட்டு பொண்ணு மேல தான் எனக்கு சந்தேகமா இருக்கு” என்றவரை யமுனா கடுமையாக முறைத்தவர்...

“உங்களுக்கு புத்தி கெட்டு போச்சா? நம்ம வீட்டு பொண்ணு ரோஷக்காரி தான், கோபக்காரி தான் ஆனா, அவளுடைய அண்ணன் கல்யாணத்தை தடுத்து நிறுத்துற அளவுக்கு கெட்ட எண்ணமெல்லாம் இருக்காது”

“அக்கா சொல்றது சரி தான் மாமா... சம்முவுக்கு ரஞ்சன் மேல பாசம் அதிகம் அவ இப்படி ஒரு காரியம் செய்ய வாய்ப்பேயில்லை”

“இல்லை சித்தி நான் சொல்றனேன்னு தப்பா நினைக்காதீங்க... எனக்கும் அப்பாவுடைய எண்ணம் தான் இருக்கு”

“எப்படி சொல்ற?”

“நான் ஒரு வாரம் முன்னாடி தான் சம்முவை பார்த்துட்டு வந்தேன்” என்று கூறியிருக்க அனைவரும் திகைப்புடன் பார்த்திருந்தனர்.

“என்ன தேனி போயிட்டு வந்தியா?” யமுனா கண்கள் இடுங்க யோசனையுடன் வினவியிருக்க...

“சம்மு எப்படி இருக்கா ரஞ்சன்... என்ன சொன்னா எங்களை எல்லாம் கேட்டாளா?” கண்கள் மின்ன ஆவலுடன் வினவிய யசோதாவை அமைதியாக பார்த்திருந்தனர் மற்ற இருவரும்... என்ன இருந்தாலும் சம்யுக்தாவை பெற்றவர் அல்லவா, அவள் மேல் கொண்ட தாய்பாசம் அவரையும் அறியாமல் மகளின் நலத்தை தெரிந்துக் கொள்ள அடிமனம் உந்தியது.

“ம்ம்ம்... ஏதோ இருக்கா சித்தி... முன்னை அளவுக்கு இல்லை; இப்போல்லாம் அவ கண்ணில் ஏதோ தொலைஞ்ச மாதிரி இருக்கு... உடம்பும் இளைச்சுட்டா அந்த எலிப்பொந்துல எப்படித் தான் இருக்காளோ?”

“ஏன்டா போனதே போன அவளை நம்ம வீட்டுக்கு கூட்டுட்டு வர முயற்சி எடுத்திருக்கமாட்டே?”

“அது எப்படிப்பா நான் கூப்பிடாமல் இருப்பேன், அதெல்லாம் கூப்பிட்டேன், ஆனால் அவ தான் வரவே முடியாதுன்னு மறுத்துட்டா” என்றவன் அங்கு நடந்ததை விவரமாக கூறியிருக்க, அதுவரை இருந்த பொறுமை மறைந்து மூவரின் முகத்திலும் கடுமை விரவியிருந்தது.

“என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டு பையன் மேல கை வச்சிருப்பான் ராஸ்கல்?”

“நீ அவனை சும்மாவா விட்ட ஒருகை பார்த்துட்டு வந்திருக்க மாட்டே?” என்று ஆவேசத்தில் கொதித்தார் யமுனா.

“அதுக்கு தான் வழியில்லாம சம்யுக்தா தடுத்துட்டாளே”

“பாருங்க க்கா அவளுக்கு என்ன திமிர் இருந்தா புருசனை அடக்காம இவனை அடக்கியிருப்பா? எப்படி நீ என் அண்ணன் மேல கையை வைக்கலாம்னு வரிஞ்சுக்கட்டி சண்டை போட்டுட்டு அவனை போடான்னு தூக்கி போட்டுட்டு வந்திருக்கணும்” என்று பொரிந்தனர் யமுனா, யசோதா இருவரும்.

“ம்ச்... அதான் எனக்கும் பெருத்த அவமானம்... அவ மட்டும் அந்த இடத்தில் விட்டு கொடுக்காம இருந்திருந்தா இந்நேரம் அவனை உண்டு இல்லைன்னு செய்திட்டு வந்திருப்பேன்” என்று கூறியவனின் முகம் இறுகியது.

மகனின் கூற்றை சிந்தித்த யமுனா... “நாம எதுக்கும் கொஞ்ச நாளைக்கு ரஞ்சனுடைய வரன் பார்க்கிற படலத்தை நிறுத்தி வைப்போம்” என்று கூறியிருக்க...

“ஏன்க்கா இப்படி சொல்ற? அந்த நாய்களுக்கு பயந்து நம்ம பையன் கல்யாணத்தை நிறுத்தணுமா? இங்கிருந்து போனவளே துண்டை கானோம், துணியை காணோம்னு ஒருநாள் வரத் தான் போகிறா... அவங்களால ஒன்னும் புடுங்க முடியாது” உச்சகட்ட அகந்தையுடன் பேசினார் யசோதா.

“சித்தி சொல்லுறது போல் நடக்கணும்னா, நாம கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை ஆறப் போடுவோம்... நேரம் வரும் போது சைலண்டா பார்த்து முடிச்சிருவோம்” என்ற ரஞ்சனின் விழிகளில் வஞ்சகம் வழிந்தோடியது!


**********************

அரசியை அர்ஜுனுக்கு மனமுடிக்க மல்லிகாவும், நடராஜனும் சம்பிராதயமாக இல்லம் சென்று பெண் கேட்டனர். அர்ஜுனின் சொல்லிற்கிணங்க அவர்களின் காதலை மறைத்து பெரியவர்களின் விருப்பம் போலவே பேசியிருந்தனர்.

“உங்க தகுதிக்கு நீங்க எங்க வீட்டில் பெண் கேட்கிறதே ரொம்ப சந்தோசமா இருக்கு... நீங்க எங்களுக்காக எத்தனையோ உதவி பண்ணியிருக்கீங்க அதை மறுக்க முடியாது... ஆனாலும் எங்க நிலைமைக்கு சில விஷயங்கள் ஒத்து வராது” என்று தயக்கத்துடன் என்றாலும் அவரின் நோக்கத்தை பளிச்சென்று கூறினார் கேசவன்.

“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க... நாங்க உங்ககிட்டே பெண்ணை மட்டும் தான் எதிர்பார்க்கிறோம் மத்தபடி சீர்வரிசை எல்லாம் உங்க விருப்பம் தான்... அர்ஜுன் இத்தனை நாளா கல்யாணமே வேண்டாம்னு சொன்னான்... இப்போதான் சரின்னு சொல்லிருக்கான்... அவனுக்கு பெண் பார்க்கணும்னு ஆரம்பித்ததுமே எங்களுக்கு முதல் ஆளா மனதில் நின்னது கலையரசி தான்” நடராஜன் கூற, அதை தொடர்ந்த மல்லிகா...

“அப்படியும் உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இல்லைன்னா நாங்க என்ன செய்தா நம்புவீங்கன்னு சொல்லுங்க” என்றதும்...

“என்ன ம்மா நீங்க? இப்படி எல்லாம் பேச வேண்டாம்... நாங்க உங்களை நம்பலைன்னா அது நன்றி கெட்டதனம்” என்ற தரன் தன் தந்தை புறம் திரும்பி...

“அப்பா கொஞ்சம் உள்ளே வாங்க” என்றழைத்து சென்றவன்... அவருக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறி சம்மதம் என்று கூறிய பிறகே வெளியேறினான்.

“சரி ஒரு நல்ல நாள் பார்த்து வாங்க உறுதி பண்ணிக்கலாம்” என்று தன் சம்மதத்தை தெரிவித்திருந்தார் கேசவன். குருதரனுக்கும் இதில் மகிழ்ச்சி ஏற்பட குழலிக்கு தான் அதீத மனவருத்தம் உண்டானது.

அவரின் உணர்ச்சிகளை அவதானித்த குரு மனைவியை அணுகி... “ஏன் குழலி ஏதோ மாதிரி இருக்க என்ன பிரச்சனை உனக்கு?”

“நம்ம பொண்ணுக்கு மட்டும் ஏங்க இந்த நிலைமை? இந்நேரம் அவள் நல்ல நிலைமையில் இருந்தா அவளுக்கும் இது மாதிரி நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கலாமே”

“அரசிக்கு எப்படி இப்படிப்பட இடம் அமையலாம்னு பொறாமையா இருக்கா?” என்று மனதை படித்து கூறியிருக்க அசையாமல் பார்த்திருந்தார்.

“ஏன் குழலி இப்படி எல்லாம் யோசிக்கிற? உன்கிட்டே இருந்து இதை நான் எதிர்பார்க்கலை”

“நானும் சாதாரண மனுஷி தான், பெத்தவ நான் குத்துகல்லாட்டம் இருந்து என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிருச்சேன்னு வருத்தமா இருக்காதா?”

“தப்பு குழலி, இது ரொம்ப தப்பு... என்னைக்கும் ஒருத்தரை வாழ வச்சு நாம வாழ்ந்ததா தான் இருக்கணும்... நம்மளால கெட்டு போயிட்டாங்கன்னு இருக்கக்கூடாது... நம்ம பொண்ணு நிலைமைக்கு அவ தான் காரணம் இன்னொன்னு அவ விதி, இதில் அரசி என்ன பண்ணினா? அரசி நம்ம கண் பார்வையில் வளர்ந்த பொண்ணு... பாவம் அறியாத வயசில் பெத்தவங்களை இழந்து தனியா நின்ன குழந்தை அவ... ஏதோ இத்தனை காலமா கிடைக்காத அவளுக்குன்னு தனிப்பட்ட உறவை இனிமேலாச்சும் அனுபவிக்கட்டும்னு கடவுள் அர்ஜுன் குடும்பத்தை தேர்ந்தெடுத்து அனுப்பி வச்சிருக்கிறாரு... இதுக்காக நீ சந்தோசப்படாட்டியும் பரவாயில்லை பொறாமை வேண்டாம், அவ நல்லா இருக்கட்டும்” என்று கூறிவிட்டு சென்றிருந்தார்.


**********************

அர்ஜுன், அரசிக்கு வெகு விரைவாக நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் நடந்தேறியது... மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே புடை சூழ அர்ஜுனும், அரசியும் கணையாழியை மாற்றிக் கொண்டனர்.

அர்ஜுன், அரசியின் வெண்டைப்பிஞ்சு விரல்களில் மோதிரம் அணிவித்ததும் அவளுக்குள் புது அணுக்கள் உற்பத்தி ஆனது போல் சரீரத்தில் புது வித அலைகளை உணர்ந்தாள்... அவள் சித்தத்தில் ‘இவன் என்னவன்’ என்ற எண்ணம் வியாபிக்க கால்கள் பூமியில் பாவாமல் பறப்பது போல் உணர்ந்தாள்.

அர்ஜுன் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் ஆர்வமின்றி இருந்தவன் முகம் உணர்ச்சி துடைக்கப்பட்டிருந்தது. அதை உணர்ந்த அரசிக்கு அவள் உற்சாகம் அனைத்தும் வடிந்திருக்க சஞ்சலம் ஒட்டிக் கொண்டது.

அவரவர்கள் உறவுகளுடன் கலகலத்து கொண்டிருக்க அரசி, அர்ஜுன் தணித்து விடப்பட அவளுடன் துணையாக நின்ற வாணியும், மலரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

“அரசி க்கா நீ அர்ஜுன் அண்ணாகிட்டே பேசிட்டு இரு நாங்க பெரியம்மா, பெரியப்பாகிட்டே பேசப் போறோம்” என்று விட்டு அங்கிருந்து ஓடிவிட, இப்போது இருவருக்கும் இடையில் தனிமையும், பேரமைதியும் சூழ்ந்துக் கொண்டது.

அர்ஜுன் அரசியை கண்டு கொள்ளாமல் தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு அதில் ஆழ்ந்து விட, அரசிக்கு அவனுடன் கொண்ட தனிமையும் பேச்சற்ற மௌனமும் பெருத்த அவஸ்தையாக இருந்தது... இதே அவனும் அவளும் மனஸ்தாபமின்றி நிச்சயதார்த்த விழா நடந்திருந்தால் சூழ்நிலை இப்படியா இருந்திருக்கும்... கொட்டும் அருவியை போன்று அவன் காட்டும் காதலில் நனைந்து, முக்குளித்து மூச்சுக்கு திணறி இருந்திருப்பாள். ‘இது அனைத்துக்கும் காரணம் நீதானே’ என்று சித்தம் குற்றப் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தது.

எப்படியும் அவனாக பேசமாட்டான் நாமாக தான் பேச வேண்டும் என்று உணர்ந்ததும்... “அர்..ஜுன்...!” என்று ஆரம்பித்தவளின் வார்த்தை குரல் வளையை இடறி கரகரத்து ஒலித்தது. அவனோ அவளின் அழைப்புக்கு சற்றும் அசைந்து கொடுக்காமல் அலைபேசியையே கண்ணுற்றபடி அழுத்தமாக அமர்ந்திருந்தான். அவனின் செயலில் மேலும் தடுமாற்றம் ஏற்பட தொண்டையை கனைத்து தன்னை சரி செய்துக் கொண்டு பேசலானாள்.

“அர்ஜுன் என் கூட பேசவேமாட்டீங்களா?”

“..........”

“அர்ஜுன் ஏதாவது பேசுங்க”

“...........”

“எனக்கு உங்க கோபம் புரியுது... ஆனால் என் சூழ்நிலையும் நீங்க புரிஞ்சிக்க முயற்சி பண்ணலாமே?”

“...........”

“அர்ஜு... நீங்களே என்கிட்ட முகத்தை தூக்கி வச்சுக்கிட்டா எப்படி...?” என்று சரமற்று பேசியவளின் எந்தவொரு பேச்சிற்கும் எதிரொலிக்காது அலைபேசித் தான் அன்றைய முக்கிய விருந்தினர் போன்று அதனுடனே ஆழ்ந்திருந்தான்.

அவனின் செயலை கண்ட அரசிக்கு மனம் வேதனை அடைந்தது. ‘கடவுளே இவனை நான் எப்படி சமாளிப்பது? தயவு செய்து எனக்கொரு வழி சொல்’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டிருந்தாள். அர்ஜுன் அரசியிடம் சொல்லிக் கொள்ளாமல் எழுந்தவன் விருட்டென்று நகர எத்தனிக்க அரசி அவன் வலது கரத்தின் மணிக்கட்டை அழுந்த பிடித்து தடுத்தவள்...

“நான் இந்தளவுக்கு உங்களுக்கு வேண்டாதவளா போயிட்டேனா அர்ஜுன்” என்றவளின் விழிகள் கலங்கி சிவந்தது... அர்ஜுன் அவளை பாராமல் இறுகிய முகத்துடன் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான். அவன் நெற்றியில் கீற்றாக இருந்த சந்தனமும், குங்குமமும் அவர்களுக்குள் நடந்தேறிய இனிய வைபவத்தை நிலைநாட்ட... அவன் அழகுக்கு அழகு சேர்த்தது போல் முகம் பளிங்கு போல் மிணுமிணுத்த வதனம் அவளை அவன் மேல் மேலும் பித்தம் கொள்ள செய்தது.

“ம்ச்... நான் போகணும் கையை விடு” வெறுமையான குரலில் கூறியவனை பச்சாதாபத்துடன் வெறித்தவள்...

“முடியாது என்கிட்ட பேசாம நான் போக விடமாட்டேன்” என்று கூறி அவள் கரங்களின் அழுத்தத்தை கூட்டியிருந்தாள்... அவனோ அவளின் முகத்தையே சில கணங்கள் வெறித்தவன் வெடுக்கென்று தன் கரத்தை உருவிக் கொண்டு நகர்ந்துவிட்டிருந்தான். அவனின் இந்த செயலை எதிர்பாராதவள் மனம் உடைந்த கண்ணாடி துண்டுகளை போன்று சில்லு சில்லாய் சிதறிவிட்டிருந்தது.

அனைவரும் உணவு உண்டு முடித்துவிட்டு உரக்க பேசி சிரித்துக் கொண்டிருக்க, அரசி அங்கிருந்து நகர்ந்து அறைக்கு சென்றவள் சாளரத்தின் ஓரம் நின்றுக் கொண்டாள். அவள் உடைந்த உள்ளமோ தன்னவனின் பாராமுகத்தை எண்ணி பரிதவித்து கொண்டிருந்தது.

தன் மனத்துயரத்தில் உழன்று கொண்டிருந்தவள் சாளரத்தின் வாயிலாக வாணி, மலர், அர்ஜுன் மூவரின் பேச்சுக் குரல்கள் அவள் செவியை வருடிச் செல்லவே தடாலென்று திரும்பி நின்றவள், அவன் முத்துப்பாற்கள் பளிச்சிட கலகலவென்று பேசிக் கொண்டிருந்ததை கண்டு... ‘இவனுக்கு பகை நான் மட்டும் தானா?’ என்று துக்கத்துடன் விசாரம் கொண்டவளுக்கு மனதில் ஒற்றை பாராங்கல்லை ஏற்றி வைத்தது போன்று கனத்தது.

அவனின் சிரிப்பும், பேச்சும் அவளுடன் கழித்த இனிமையான நாட்களை தழுவிச் செல்ல இதயத்தில் சுள்ளென்று வலி தாக்கியது. அர்ஜுனாக வந்தவன் திருமணச் செல்வனாக திரும்பி செல்கையில் கூட அவளிடம் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளாமல் சென்றது, அவள் உயிரை வேரோடு பிடுங்கியது போன்று துடித்துப் போனாள்... கண்கள் கண்ணீரை வெளியேற்ற காத்திருக்க அச்சமயம்...

“அரசி” என்று அன்பாக அழைத்தப்படி நுழைந்த மல்லிகா...

“அரசி நாங்க கிளம்பறோம்... நீ கொஞ்சம் நாளைக்கு வெளியே எல்லாம் போக வேண்டாம் அர்ஜுன்கிட்டே சொல்லிட்டேன், அரசியை வேலையா வெளியே கூப்பிட்டு போகாதேன்னு... அதனால நல்லா சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு” என்க... அரசிக்கு இது என்னடா புது சோதனை என்பதாக இருந்தது.

“வேலைக்கு போறதோ, வீட்டில் வேலை பார்க்கிறதோ அதெல்லாம் எனக்கு ஒரு சிரமும் இல்லை அத்தை” என்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் கூறிப் பார்த்தாள்.

“நல்லா சொன்ன போ, நான் சொன்னது சிரமத்துக்கு இல்லைம்மா... சில நேரத்தில் ஜாக்கிரதையா இருக்கணும், அதுவும் கல்யாணம் பண்ற சமயத்தில் பெண்ணும், பையனும் ரொம்ப கவனமா இருக்கணும்... கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாதுன்னு சொல்வாங்க அதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்... சரிம்மா நான் கிளம்பறேன் நேரமாகுது” என்று விட்டு நகர அரசிக்கு பெருத்த ஏமாற்றம் விளைந்ததும்... உடலும், மனமும் சோர்ந்து போக கரங்களை நெற்றியில் தாங்கியப்படி கட்டிலில் சரிந்துவிட்டாள்.


**********************

கலையரசியின் திருமண ஏற்பாட்டுக்கு மத்தியில் நாட்கள் சீராக நகர்ந்துக் கொண்டிருந்தது... கலையரசியை அழுவலகம் செல்லக்கூடாது என்ற மல்லிகாவின் கட்டளைக்கிணங்க அனைவருமே அதை மதித்து நடக்க விரும்பி அவளை வீட்டிலேயே நிறுத்திக் கொண்டனர்.

கேசவன் அன்று மதிய வேளையில் தரனை அணுகியவர்... “ஏன் ப்பா தரா... உன் பொண்ணுக்கும் சரி, வாணியின் பொண்ணுக்கும் சரி பெயர் வச்சீங்களாப்பா? அரசி கல்யாணத்துக்கு வருகிற சொந்த பந்தம் உங்க கல்யாணத்தை பத்தி நிச்சயம் விசாரிப்பாங்க, அதை பற்றி என்ன சொல்றது?”

“அப்பா வாணிக்கும், எனக்கும் ஒரே இடத்தில் வரன் அமைஞ்சு, அவசரமா கல்யாணம் வைக்க வேண்டியதா போச்சுன்னு சொல்லிட்டு, குழந்தையோட முதல் பிறந்தநாளுக்கு எல்லாரையும் அழைச்சு விழா நடத்திறலாம் ப்பா”

“அப்புறம் பேர் வைக்கிறதுக்கு இன்னும் ரெண்டு நாளையில் நல்ல நாள் வருது, அதில் சிம்ப்ளா வீட்டிலேயே ஐயரை வச்சு பூஜை பண்ணிட்டு முறையா செய்திடலாம்” என்றிருந்தான்.

“சரி ப்பா உன் பொண்டாட்டிகிட்டே பேசிட்டு சொல்லு ஏற்பாடு பண்ணிரலாம்” என்று கூறிவிட்டு நகர்ந்திருக்க, கலாதரன் தன் மகளுக்கும், தங்கையின் மகளுக்கும் பெயர் சூட்டும் விழா வைப்பதை பற்றி மனைவியிடம் கலந்தாலோசிக்கலானான்.

சம்யுக்தா கணினியில் ஏதோ தட்டச்சு செய்துக் கொண்டிருக்க அவளை நெருங்கிய கலாதரன்... “யுகி ரொம்ப பிஸியா உன்கிட்டே பேசணும் ஒரு அரைமணி நேரம் ஒதுக்கிட்டு வர முடியுமா” ஏதேனும் மிக முக்கியமான வேலையாக இருந்தால் தடை ஏற்பட்டு விடக்கூடாதே என்ற எண்ணத்தில் கூறியிருந்தான்.

“சொல்லுங்க என்ன விஷயம்?” என்றதும் அறையின் மூலையில் இருந்த நாற்காலியை அவளுக்கு அருகில் இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தான்... அவனின் செயலில் அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும்? ஒரு வேளை ரஞ்சனின் விவகாரமோ என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் விஷயத்தை கூறலானான்.

“நம்ம குழந்தைக்கும், வாணி குழந்தைக்கும் பெயர் வைக்கணும், வீட்டிலேயே சிம்பிளா ஃபங்சன் வச்சு நடத்திரலாம் நேம் செலக்ட் பண்ணி வை, ஆல்ரெடி நான் செலக்ட் பண்ணிட்டேன்” என்று கூற, அவனை ஏற இறங்க பார்த்தவள்...

“என்ன இத்தனை நாள் இல்லாமல் திடிர்ன்னு ஞானோதயம் வந்திருக்கு?”

“திடீர்ன்னு எல்லாம் இல்லை எப்போவோ செய்ய வேண்டியது தான்... வந்ததில் இருந்து வேலை வேலைன்னு ஓடிட்டோம், இப்போ அரசிக்கு கல்யாணமே வச்சுட்டோம்... இன்னும் பெயர் வைக்காம இருக்க முடியாதில்லையா”

“என் மகளுக்கு பெயர் வச்சாச்சு, போய் உங்க தங்கச்சி மகளுக்கு மட்டும் பாருங்க” விட்டேறியாக உரைத்தவள் அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் கணினியில் கண்ணுற்றபடி முனகிக் கொண்டிருந்தாள்... அவளின் செயலையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் முனகுவதை உதட்டின் அசைவில் படிப்பித்து...

“அக்கறை இல்லாமலா உனக்கும், பிள்ளைக்கும் பார்த்துப் பார்த்து செய்துகிட்டு இருக்கேன்?” ஒரு வித இரும்புக் குரலில் அவளிடம் வினவினான்.

“ஆமாம் அப்படி என்ன செய்தீங்க? இங்கே எனக்கான தேவைகளை பார்த்துகிட்டது நான்... என்னவோ இவரே எல்லாத்தையும் பார்த்த மாதிரி பேசுறது?” என்று உதட்டை சுழித்து சிணுங்கிக் கொண்டவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்...

“உனக்கு அப்பப்போ மண்டையில் மரக்கழண்டு போயிருதா?” என்று வினவினான்.

“யாரு எனக்கா?” என்றவளின் குரல் சீறிப் பாய்ந்தது...

“பின்னே ஏதாவது கேட்டா நிதானமா யோசித்து பதில் சொல்லணும், அதை விட்டுட்டு எடுத்தோம் கவிழ்தோம்ன்னு பேசுறது, அப்புறம் என்கிட்டே காரணமே இல்லாம சண்டைக்கு நிற்கிறது? இதை எல்லாம் பார்த்தா நான் இப்படிதானே கேட்பேன்”

“ஆமாம் எனக்கு மண்டையில் ஏதோ கோளாறு ஆகிருச்சு... போங்க போய் இதை சாக்காட்டி அன்னைக்கு ஒருத்தி வந்தாளே வாழ்க்கை கொடுக்குறேன்னு அவளை தேடிப் போங்க?” வெடுக்கென்று பேசி சிடுசிடுத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள...

“எவளையும் தேடிப் போகிற உத்தேசம் எனக்கில்லை... நம்மளை பத்தி பேசும் போது நீயும், நானும் மட்டும் தான் இருக்கணும், மூணாவது ஆளை இழுத்து வச்சு பேசினா அப்புறம் நான் நானா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்” என்று அழுத்தமாக கண்டிப்புடன் கூறியதில் ஏதோ ஒன்று அவளை கட்டுபடுத்தியிருந்தது.

“இங்கே எல்லாமே சம்பிரதாயமா தான் நடக்குதா? என் பொண்ணுக்கு நான் பெயர் வச்சுட்டேன் நீங்க போகலாம்” என்று கூறிவிட்டு வேலையில் புகுந்திருக்க, அவளையே சில கணங்கள் அழுத்தமாக வெறித்துக் கொண்டிருந்தான்... கணவனின் பார்வை அவளை துளைத்து உறுத்திய போதும் அதை பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் இருந்தவளை நோக்கி...

“இங்கே பாரு இன்னும் ரெண்டு நாளையில் நான் ஏற்பாடு பண்ணத் தான் போகிறேன்... எனக்கு பொண்டாட்டியா, நம்ம மகளுக்கு அம்மாவா நீ உட்காருற அவ்ளோ தான்” என்று ஆக்கினையிட்டவன், அவளின் பதிலையும் எதிர்பாராமல் விருட்டென்று நகர்ந்துவிட்டிருந்தான்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலாதரன் சொன்னபடியே நிறைந்த வெள்ளிகிழமை அன்று பெயர் சூட்டும் சடங்கை ஏற்பாடு செய்திருந்தான்... சம்யுக்தா அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யாமல் தயாரானவள் தம்பதியர் சகிதமாக பூஜை இடத்தில் அமர்ந்தனர்.

கலையரசி, வாணியின் குழந்தையை தயார் செய்திருக்க, வாணி சோகமே உருவாக அமர்ந்திருந்தாள்... “வாணி என்னாச்சு எதுக்காக சோகமா இருக்கிற?” என்றதும் தான் தாமதம்...

“அக்கா” என்றபடி விசும்பலானாள்... அவளின் வருத்தம் எதனால் என்று யோசித்தவளுக்கு குழந்தையின் திருமுகம் நினைவுறுத்த அவளின் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தியவள்...

“வாணி நீ எதுக்காக வருத்தபடுறன்னு எனக்கு புரியுது, நீ ஒன்னும் கவலைப்படாதே ஒரு நாள் உன் நிலைமையும் மாறும்” என்று பல ஆறுதல் மொழிகளை கூறி தேறுதல் அளித்தாள்.

“எனக்கு என்னை நினைச்சு கூட கஷ்டமா இல்லை க்கா... ஆனால் என் வயிற்றில் பிறந்த பாவத்துக்காக என் பொண்ணும் தண்டனை அனுபவிக்கிறாளேன்னு தான் ரொம்ப வருத்தமா இருக்கு”

“இப்போ புரியுதா என் வலி எப்படி இருக்கும்னு?” என்று நிஷ்டூரமாக மகளை குத்திக்காட்டியபடி வந்தார் குழலி. அதில் அவள் முகிலினக் கூட்டங்கள் ஒன்றிணைந்தது போல் முகம் இருளடைந்து போக மனதில் காயமடைந்தாள்.

“நீ பெத்த பிள்ளைன்னு உன் ரத்தம் துடிக்குதா? இப்படி தானே எனக்கும் இருக்கும்... பெத்தவங்க நாங்க பிள்ளைகளான உங்களை கண்டிக்கும் போது சில விஷயங்கள் கசப்பா இருக்கும்... ஆனால் அதே நீங்க பிள்ளையை பெற்று வளர்க்கும் போது தான் அந்த அருமை புரியும்”

“என்னை மன்னிச்சிருங்க அம்மா... கையில குழந்தையோட வீட்டு வாசல்படி மிதிச்சப்போ நீங்க என்ன பாடுபட்டு இருப்பீங்கன்னு எனக்கு இப்போ தான் புரியுது” என்று மேலும் விசும்பலை அதிகரிக்க, வாணியை காணாது தேடி வந்த தரன் அவள் அழுகையில் கரைவதை கண்டான்.

“வாணி என்னாச்சு எதுக்குமா அழற?” என்றவனின் அன்பில் கரைந்தவளுக்கு மேலும் அழுகை முட்டிக் கொண்டு வர கேவிக் கொண்டிருந்தாள்.

“வாணி முதலில் அழுகறதை நிறுத்து என்ன பழக்கம் இது? எல்லாத்துக்கும் இப்படி கண்ணை கசக்கிகிட்டு நிற்கிறது? இதுக்காகவா நான் உன்னை வெளியே அனுப்பி படிக்க வச்சேன் என்ன நடந்தாலும் தைரியமா இருக்க வேண்டாம்”

“அதில்லை ண்ணா அவளுக்கு என்னன்னா...” என்று தொடங்கிய அரசியின் பேச்சை தொடரவிடாமல் கரத்தை உயர்த்தி தடுத்து நிறுத்தியவன்...

“எனக்கு தெரியும் அரசி, விளக்கம் தேவையில்லை, விடு நான் பார்த்துக்கிறேன்”

“வாணி போய் முகம் கழுவிட்டு குழந்தையை எடுத்துகிட்டு முன்னாடி வா, பூஜையை ஆரம்பிக்கணும்” என்று கட்டளையாக கூற, அவனின் சொல்லுக்கு படிந்து சென்றிருந்தாள்.

பூஜை ஆரம்பிக்கப்பட்டு சடங்கு நடக்க தரன், சம்யுக்தா இருவரிடமும்... “குழந்தைக்கு குல தெய்வ பெயரை ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் காதில் சொல்லுங்கோ” என்றதும் இருவரும் அதே போல் செய்திருந்தனர்.

“இப்போ ரெண்டு பெரும் சேர்ந்து குழந்தைக்கான பெயரை இந்த அரிசியில் எழுதி அதையும் குழந்தை காதில் ஓதுங்கோ” என்றதும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் ஆராய்ச்சியாக பார்த்தபடி இருவரும் ஆளுக்கொரு பெயரை கூறினர்...

“யாழினி” என்று தரனும்...

“வெண்ணிலா” என்று சம்யுக்தாவும் கூற, அங்கே பார்வை மோதிக் கொண்டது முரண்பாட்டில். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு வெறும் பார்வையார்களாக மட்டுமே இருந்தனர்... அவர்கள் கணித்த வரையில் வாணியின் வாழ்க்கை விஷயமாக அவர்களுக்குள்ளும் ஏதோ உரசல் இருக்கிறது என்பதை மட்டும் அனுபவ கண்களில் கண்டு கொண்டவர்கள், அதில் தலையிட்டு பிரச்சனையை ஊதி பெரிதாக்க நினைக்காமல் ஒதுங்கி நின்றனர்.

“என் பெண்ணுக்கு நான் இதை எப்போவே தேர்வு செய்திட்டேன், அதனால் இது தான் பெயர் இதையே எழுதுங்க”

“உனக்கு இருக்கிற அதே உரிமை எனக்கும் இருக்கு” அவள் செவிக்கு மட்டும் கேட்கும்படி மெல்லிய குரலில் கூற, அவளோ சூழ்நிலையையும் மறந்து பலமாக முறைக்கலானாள்... அவர்களின் இந்த போரை கண்டு அனைவரும் கையை பிசைந்துக் கொண்டு நிற்க தரன் சுதாரித்துக் கொண்டவன்...

“சரி உனக்கும் எனக்கும் சாதாகமா இருக்கிறதை போல நம்ம தேர்வு செஞ்ச பெயரில் ரெண்டு எழுத்தை மட்டும் எடுத்து சேர்த்து பேர் வைப்போம்” என்று ஆலோசனை கூற, அவனை புரியாது பார்த்தவள்...

“எப்படி?” என்று வினவும் போதே...

“நிலாயாழினி” என்று ஆழ்ந்த குரலில் கூற, மேலும் காத்திராமல் அந்த பெயரையே மூன்று முறை குழந்தை காதில் ஓதியவன் விழிகள் சிரித்துக் கொண்டிருக்க, அரிசியிலும் விரல்களால் எழுதலானான்.

என்னவென்று புரியாதது போல் அமர்ந்திருந்த சம்யுக்தாவையும்... “நேரமாகுது சீக்கிரம் நீங்களும் உங்க ஆத்துக்காரரை போல் எழுதுங்கோ” என்ற ஐயரின் பேச்சில் இயந்தரத்தை இயக்குவது போல் செய்து முடித்திருந்தவள் கண்கள் கணவனை வருடிச் செல்ல அவனோ ‘உன்னை நான் அறிவேன்’ என்பதாக புருவத்தை உயர்த்தினான்.

சம்யுக்தா எழச் செல்ல... “ஒரு நிமிஷம்” என்று அவளை தடுத்து நிறுத்தியவன்...

“வாணி உன் குழந்தையை கொடுமா” என்று பெற்றுக் கொண்டவன்... மனைவியிடம் கண்சமிஞ்ஞை காட்ட மறுப்பேதும் தெரிவியாமல் அவர்களின் குழந்தைக்கு போலவே சம்யுக்தா அவள் தமையன் ரஞ்சனின் குல தெய்வ பெயரை நினைவுறுத்தி கூறி, வாணியின் குழந்தைக்கும் அவள் தேர்ந்தெடுத்த பெயராக...

“வியனி” என்று பெயரை சூட்டி முடித்திருந்தனர்.

கலாதரன் மனைவியை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததே அவனின் இந்த சமயோசிதமான முடிவுக்கு காரணமாகிப் போயின... அண்ணன், அண்ணியின் கையிலேயே அவள் குழந்தைக்கும் பெயர் சூட்டியது குறித்து இருமடங்கு புளங்காகிதம் அடைந்திருந்தாள் வாணி.

பெயர் சூட்டும் விழா நல்ல முறையில் நடந்து முடிந்திருக்க தரன் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்... “சோ, எல்லாத்தையும் முடிவு செய்துட்டு தான் நீங்க நடத்தியிருக்கீங்க?” மார்பின் குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு சுவற்றில் ஒய்யாரமாக சாய்ந்து நின்று விசாரித்தவளை கண்டு, வெளி வர இருந்த புன்னகையை உதட்டுக்குள் மென்று முழுங்கியவன் ஒன்றும் அறியாதவன் போல் கைசட்டையை மடித்துவிட்டு கொண்டிருந்தான்.

“கேட்கிறேனில்லை பதில் சொல்லுங்க” என்று அழுத்தமாக கேட்டும் பதில் வராது போனதில் அவன் புஜத்தை அழுத்தமாக பற்றி திருப்பினாள். அப்போதும் அவளை பார்வையால் மட்டுமே அளவெடுக்க பொறுமை இழந்தவள்...

“வாயில் என்ன கொழுக்கட்டையா இருக்கு? இப்போ மட்டும் பதில் சொல்லலை உங்களை இந்த இடத்தில் இருந்து நகர விடமாட்டேன்”

“அம்மா தாயே பரதேவதை உன் கேள்விக்கெல்லாம் நான் ராத்திரி வந்து பதில் சொல்லுறேன்... இப்போ எனக்கு தோட்டத்தில் தேங்காய் லோட் ஏத்துற வேலை இருக்கு ஆளுங்க வந்திருவாங்க அவசரமா போயாகணும் வரேன்” என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராது திரும்பியவன், ஏதோ நினைத்தவனாக சடுதியில் திரும்பி மனைவி சுதாரிக்கும் முன்பு அவள் கன்னத்தில் நச்சென்று அச்சாரம் பதித்துவிட்டு...

“பை டி பொண்டாட்டி... நைட் என்ன எல்லாம் பேசி என் தூக்கத்தை கெடுக்கணும்னு பிளான் போட்டு வச்சு நல்லா பிரிஃபேர் பண்ணிக்கோ” என்று கண்ணிமைத்துவிட்டு நகர்ந்திருந்தவனை பார்வை நிலைகுத்தியபடி இருக்க திகைத்து நின்றுவிட்டாள்.


**********************

அர்ஜுன் அரசியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த களிப்பில் விரைவாகவே உடல் சீராகியிருக்க, எப்போதும் போல் அழுவலகம் செல்லலானான்... தர்சன் அர்ஜுனின் திருமண ஏற்பாடுகளை தன் பொறுப்பில் முன்னிறுத்தி செய்வதாக பொறுப்பேற்றுக் கொண்டு அதில் சிரத்தையாக ஆழ்ந்தான்... அவனின் திருமணத்தை பற்றிய எந்தவொரு தகவலும் அலுவலகத்தில் கசியாது பார்த்துக் கொள்ள எண்ணியவன்... அரசி சில நாட்கள் மருத்துவ விடுப்பில் இருப்பதாக கூறி, திலீபை திரும்பவும் அவனின் காரியதரிசியாக நிமர்த்தினான்.

“திலீப் கலையரசி மெடிக்கல் லீவில் இருக்காங்க... அதனால், இனி நீங்களே பிஏ போஸ்டிங் ஹேண்டில் பண்ணுங்க” அவன் கூறிய செய்தியில் ஏதோ ஒன்று முரண்பாடாக தோன்றினாலும், அவன் முதலாளியாக இருக்கிற காரணத்தில் வரம்பை மீறி எதுவும் கேட்டுக் கொள்ளாது...

“ஒகே சார்” என்று மட்டும் பதிலளித்திருந்தான்.

“அப்புறம் இதுவரைக்கும் அவங்க ஆர்கனைஸ் பண்ணி மேனேஜ் பண்ணின டீடைல்ஸ் பத்தி அவங்ககிட்டே கால்ல கேட்டு நீங்க ரெஃபர் பண்ணிருங்க”

“ஒகே சார்... அப்புறம் ஏலக்காய் பேக்கிங்க்கு உண்டான பேக்கிங் மெசின் ஆர்டர்க்கு அஞ்சு கம்பெனி கொட்டேசன் கோட் பண்ணியிருக்காங்க சார்”

“ம்ம்ம்... எங்கே கொட்டேசன் பைல் எடுத்துட்டு வாங்க” என்றதும் அவன் சேகரித்த தாள்கள் அடங்கிய கோப்பை அவனிடம் சமர்பித்திருந்தான்.

“ஒகே திலீப் நீங்க போகலாம் நான் சொன்னது போல் மிஸ்.கலையரசி கிட்டே கேட்டு எல்லாத்தையும் செக் பண்ணுங்க”

“ஒகே சார்” என்று விட்டு நகர்ந்ததும் அவன் கொடுத்த கோப்பை உன்னிப்பாக கவனித்து அதன் சாதக பாதகங்களை ஆராயலானான்.

திலீப், அர்ஜுன் கூறியவாறு கலையரசிக்கு அழைத்து விவரங்களை கேட்டறிய அரசிக்கு மனதை பிசைந்தது... ‘வேலை விஷயமா கூட என்கிட்டே பேச பிடிக்கலையா அர்ஜுன்?’ என்று மானசீகமாக பேசிக் கொண்டவளுக்கு...

‘அது எப்படி அவன் இப்படி இருக்கலாம் முன்பாவது நான் காதலி அவனிடம் உறவை நிலைநாட்ட முடியுமா என்ற சிறு தயக்கம் இருந்தது, இப்போது பாதி திருமணம் முடிந்த நிலையில் கூட அவனிடம் கேட்க தயங்கினால் வாழ்க்கை முழுவதும் எப்படி சமாளிப்பது?’ என்ற எண்ணம் மேலோங்கவே...

“ஒரு பிஃப்டீன் மினிட்ஸ் டைம் கொடுக்க முடியுமா திலீப்? நான் இதை பற்றி எம்டி சார்கிட்டே ஒரு டவுட் கேட்க வேண்டியது இருக்கு கிளியர் பண்ணிட்டு கூப்பிடுறேன்”

“நோ பிராப்ளம் மேடம்... டேக் யுவர் ஓண் டைம்” என்றவன் இணைப்பை துண்டிக்க அரசி அவசரம் அவசரமாக அர்ஜுனுக்கு அழைத்திருந்தாள்... விலைவிவரம் அடங்கிய மேற்கோள் படிவத்தில் கர்ம சிரத்தையாக ஆழ்ந்திருந்த அர்ஜுனுக்கு அலைபேசி அழைப்பு இடையூறு அளிக்கவே...

“ம்ச்...” என்று சூள்கொட்டி சலித்தபடி திரையில் யாரென்று கண்ணுற்றவனுக்கு அரசி என்றதும் அப்படியே வைத்து விட்டு படிவத்தில் ஆழ்ந்துவிட்டான்... ஆனால் அரசியோ அதற்கெல்லாம் போகட்டும் விடு என்பது போல் விட்டு விடாமல் தொடர்ந்து அவனின் கைபேசிக்கு முயற்சித்து கொண்டே இருந்தாள்... அதில் எரிச்சலுற்றவன் அலைபேசியை ஒட்டு மொத்தமாக அணைத்துவிட்டிருந்தான்.

அரசிக்கும் அவனளவுக்கு குறையாத வைராக்கியம் ஏற்பட அலுவலக அலைபேசிக்கும் அழைத்திருந்தாள்... கைபேசியை எளிதாக அணைத்து எறிய முடிந்தவனால் அலுவலகத்தின் தரைவழி தொலைபேசி இணைப்பை தூண்டிக்க முடியாமல் போனது... வேறு வழியில்லாமல் அவளின் அழைப்பை உயிர்பித்திருக்க, காய்ந்த எண்ணெயில் பொரியும் கடுகை போன்று வார்த்தைகளால் பொரிந்து தள்ளினாள்.

“அப்படி என்ன உங்களுக்கு கோபம்? இப்படி என்னை ஒதுக்கி வச்சு கொஞ்சம் கொஞ்சமா கொல்லுறதுக்கு ஒரேடியா கொன்னு புதைச்சு கொல்லி வச்சுட்டுக்கு கை கழுவிருங்க” என்று நிஷ்டூரமாக மொழிந்தவளின் குரலில் கோபத்தின் காரணமாக நடுக்கம் தென்பட்டது.

அவளின் பேச்சை கேட்டவனுக்கு சுர்ரென்று சினம் ஏற... “வாயை மூடு இல்லன்னா கண்மண் தெரியாம அடிப்பிச்சு எடுத்திருவேன்... என்னை திரும்பத் திரும்ப டார்ச்சர் பண்ணாதே சொல்லிட்டேன்” என்றவன் பட்டென்று இணைப்பையும் தூண்டித்துவிட்டிருக்க அவளுக்கோ அழுத்தம் கூடிக் கொண்டே போனது...

“நானா டார்ச்சர் பண்ணுறேன்னா, நீ தான்டா பேசமா டார்ச்சர் பண்ற... இருக்கட்டும் இதுக்கு ஒரு முடிவு கட்டாம உன் கையால் தாலி வாங்கிக்கமாட்டேன்” என்று கூறிக் கொண்டு பிரதிக்ஞை மேற்கொண்டாள்.

அரசி, திலீப்பிற்கு அழைத்து அவன் கேட்ட விவரங்களை கூறியவள் அடுத்த தினம் எப்படியேனும் அர்ஜுனை பார்த்து விட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொண்டிருந்தவளின் நினைப்பை முறியடித்து தடுத்துவிட்டிருந்தான் தரன்.

அர்ஜுன் விலை விவரம் அடங்கிய பல்வேறு நிறுவன படிவத்தை மதிப்பிட்டு ஆராய்ந்து பார்த்து முடித்திருந்தவன், அதை பற்றி திலீப்பிடம் கூறி ஆலோசனை மேற்கொள்ளலானான்.

“எல்லாமே பிரைசஸ் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு திலீப்? நம்மளுடைய லாஸ்ட் பினான்சியல் இயர் டர்ன் ஓவருக்கு இது கமிட் பண்ணுறது கொஞ்சம் காம்பிளிகேட்டட் தான்... இதனால் வர்கர்ஸ்க்கு சாலரி இன்கிரிமெண்ட் பத்தி யோசிக்க வேண்டியதா இருக்கும்”

“இதே தான் எனக்கும் தோணிச்சு சார்”

“லெட்ஸ் வெயிட்...! கொஞ்சம் டைம் எடுத்து தான் எக்ஸிகியூட் பண்ண வேண்டும்” என்றவன் மற்ற விவரங்களை பற்றி பேசலானான்.


**********************

இரவு நடுநிசிக்கு ஒரு மணி நேரம் முன்பு தான் கலாதரன் வீட்டை அடைந்திருந்ததான்... சம்யுக்தா உர்ரென்ற முகத்துடன் அவனை பார்வையால் துவாசம் செய்தபடி தான் கணவனை வரவேற்றிருந்தாள்.

தரன் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காது எப்போதும் போல் குளித்து தயாராகி உண்ண அமர்ந்திருக்க, சம்யுக்தா முறைத்துக் கொண்டே அவன் எதிரில் அமர்ந்தவள்...

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?” உணவை பரிமாறாமலே அவனிடம் தர்க்கத்தை தொடங்கினாள். அவனோ அதை சிறிதும் சட்டை செய்யாமல்...

“உன்னைத் தான் நினைச்சுட்டு இருக்கேன்னு சொன்னா ஏற்றுக்கவா போற?” விச்சராந்தியாக பதிலளிக்க அதில் கடுப்படைந்தவள்...

“தெரியுதுல, அப்புறம் எதுக்கு அனாஷயமா என்னை கிஸ் பண்றீங்க?”

“எனக்கு இருக்கிறது ஒரேயொரு பொண்டாட்டி தான்... அது நீ மட்டும் தான்... முத்தம் கொடுக்க ஒருத்தி, கட்டிலறைக்கு ஒருத்தி, சாப்பாடு செஞ்சு போட ஒருத்தி, பிள்ளை பெத்துக்க ஒருத்தின்னு எல்லாம் கட்டிக்க முடியாது, அதுக்கு ஆளும் இல்லை”

“ஒஹ்! துரைக்கு இந்த ஆசை எல்லாம் கூட இருக்கா? இருங்க சாப்பாட்டுல விஷத்தை கலந்து வைக்கிறேன்” என்று கூறிக் கொண்டே அவனுக்காக எடுத்துப் பரிமாற...

“ரொம்ப நாள் கழிச்சு என் பொண்டாட்டி ஒரு நல்ல காரியம் பண்ணுறா?” என்று கூறியபடி என்றுமல்லாத அளவிற்கு உணவை ரசித்து ருசித்து வேக வேகமாக உண்டு கொண்டிருந்தான்... விஷம் என்று கூறியதே அவனை உணவு உண்ணாமல் தடுத்து தர்க்கம் செய்யத்தான்... ஆனால், அவனோ நட்சத்திர விருந்தை போல் உண்டு கொண்டிருந்ததை எண்ணி கண்கள் விரித்து பார்த்திருந்தாள்.

“நான் விஷம் வச்சிருக்கேன்னு சொல்றேன், நீங்க ரசிச்சு ருசிச்சு சாப்பிடுறீங்க?” என்றவளின் கேள்விக்கு பதில் கூறாமல் வேகமாக உண்டு எழுந்தவன் அறைக்குள் சென்றிருக்க கணவனை தொடர்ந்து சென்றவள்...

“கேட்கிறேனில்ல பதில் சொல்லுங்க” என்று கூறி அவன் சட்டையை பிடித்து கொண்டவளின் விழிகளை ஊடுருவியவன்...

“பொண்டாட்டி கையால் சாகிற பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? எனக்கு கிடைச்சிருக்கே அதான் மிஸ் பண்ண வேண்டாம்னு ஒரு பிடி பிடிச்சுட்டேன்” என்றவன் அவள் கன்னத்தை ஆட்காட்டி விரலால் பரிகாசத்துடன் நிரடிவிட்டு சயனத்தில் வீழ்ந்திருந்தான்.

கணவனின் பதிலில் மின்சாரம் தாக்கியது போன்று உறைந்து நின்றவளின் உள்ளம் கடிகார பெண்டுலமாய் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது... ‘இவன்... இவன்... என்ன சொல்லுகிறான்?’ என்று மனம் அங்கலாய்ப்பில் தந்தியடிக்க, அதுவும் தொடராமல் நெஞ்சம் விம்மிக் கொண்டிருந்தது... அவன் அவளுக்காக செய்வது அனைத்திலும் நேசம் நெய்திருப்பதை உணர்ந்தாலும் அவன் செய்த பிழை அதை முழுமையாக நம்ப இயலாமல் தடுத்து கொண்டிருந்தது. ‘ம்ஹும் விடக்கூடாது முதலில் நாம் கிடப்பில் போட்ட அந்த பவர் ஒப் அட்டார்னி பத்திரத்தின் பின்னணியை தெரிந்துக் கொள்ள வேண்டும்... அப்போது தான் சில விஷயங்களுக்கு விடை கிடைக்கும் என்று சிந்தாந்தம் மேற்கொண்டாள்.

சுவடுகள் தொடரும்....




**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-22 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

கதையின் முதல் பாகம் இன்னும் நான்கு அத்தியாயத்தில் முடிவடையவுள்ளது மக்களே முழுதாக படிக்க ஆரம்பிப்பவர்கள் படிக்கலாம், டேக் செய்ய வேண்டுமென்றால் கமெண்டில் சொல்லவும்.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-23

கலையரசிக்கு அர்ஜுனை எப்படியேனும் காண வேண்டும் அவனிடம் பேசி ஓர் முடிவெடுத்து விட வேண்டும் என்றெல்லாம் சங்கல்பம் மேற்கொண்டிருந்தவள் அதை செயலாற்ற வேண்டி தரனை அணுகினாள்.

தன் தொழில்நுட்ப பணியை தொடர்ந்து கொண்டிருக்கும் அடையாளமாக காதில் கேட்பொறியை மாட்டிக் கொண்டு காணொளியில் அவ்வப்போது தொடர்பு கொண்டிருந்தவனை அணுக தயக்கத்துடன் நெளிந்தப்படி நின்றுக் கொண்டிருந்தாள்.

சம்யுக்தா பேசியில் உரையாட வெளியே சென்றிருந்தவள் தன் பணியை தொடர வேண்டி அவள் உள்ளே நுழைய, அறை வாசலில் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த அரசியை கண்டு கண்கள் சுருங்க யோசனையுடன் பார்த்தவள்...

“என்னாச்சு அரசி, இங்கே என்ன நின்னுட்டு இருக்கிற?” என்ற கேள்வியில் திரும்பியவள்...

“அண்ணி... அண்ணன்கிட்டே பேசணும்... வேலையா இருக்காரு போல அதான்...” என்று தயங்கி தடுமாறி நிறுத்தினாள்.

சம்யுக்தா அறையில் கணவன் ஏதோ காணொளி சந்திப்பில் இருப்பதை கண்டுக் கொண்டவள் அரசி அவனிடம் பேச வேண்டும் என்பதை ஜாடையாக தெரிவித்தாள்.

அவனும் ஜாடையிலேயே அஞ்சு நிமிஷம் என்று சைகையில் உணர்த்த... “பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு பேசுவாரு” என்றவள் உள்ளே செல்ல, அரசி வெளியே நின்றுக் கொண்டாள்.

தரன் காணொளியில் இருந்து விலகியதும் அரசியை கரத்தால் செய்கை காட்டி உள்ளே வரவழைத்தவன்... “சொல்லு என்ன விஷயம்?” என்று அவனே ஆரம்பித்தான்.

“அண்ணா நான் ஆபிஸ் வரைக்கும் போகணும், நான் ஸ்டோர் பண்ணின டீடெயில்ஸ் எல்லாம் திலீப்கிட்டே எடுத்து கொடுக்கணும்” என்றவளை அடிக்கண்ணால் அளவெடுத்தப்படி பார்த்தவன் விரல்கள் தட்டச்சு பொறியில் இருந்து உயர்த்து அந்தரத்தில் இருக்க, அவன் கந்தழி யோசனையில் ஆழ்ந்தது.

“அப்படி எதுவும் தேவையா இருந்திருந்தா அர்ஜுன் நேரடியா என்னிடம் சொல்லியிருந்திருப்பானே” என்றவன் ஓரக்கண்ணால் அளவெடுத்தப்படி கூறினான்.

“இல்லை ண்ணா திலீப் தான் என்கிட்டே பேசினார்”

“அப்போ நீ அர்ஜுன்கிட்டே பேசலையா?” சாதாரணமாக கேட்பது போல் இருந்தாலும் அவன் குரலில் இருந்த வித்தியாசம் அவன் கண்டு கொண்டதை உணர்த்தியது.

“அண்ணா... அது... அது... வந்து... பேசினேன்... ஆனால் நான் மட்டும் தான் பேசினேன் அவர் பேசலை” தயக்கத்துடன் ஆரம்பித்து இறுதியில் பட்டென்று உரைத்தவளின் குரல் உடைந்திருந்தது.

“நான் உன்கிட்டே அன்னைக்கே சொல்லிட்டேன் அரசி, இனி அர்ஜுன்கிட்டே என்ன பேசணும்னாலும் அவனுக்கு பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் பேசிக்கோன்னு, ஆனால் என் வார்த்தையை நீ மதிக்கிறதா இல்லை இல்லையா?”

“ஐயோ நிஜமா அப்படி இல்ல ண்ணா... ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசி என்னை கொல்லாதீங்க... ஏற்கனவே அவர் பேசாம என்னை கொல்லுறாரு” என்று உடைந்தாள்.

“முடியலை ண்ணா, இந்த மனஸ்தாபம் இப்படியே நீடிச்சிருமோன்னு பயமா இருக்கு... ஒரேயொரு தடவை அவர்கிட்டே பேசி பார்க்கலாமேன்னு தான் யோசிக்கிறேன்” சரமற்று கூறியவளின் குரல் கரகரத்தது.

“நானும் அதே காரணத்துக்காக தான் பேச வேண்டாம்ன்னு சொல்றேன்” என்று நிறுத்தியவன் அவள் முகத்தை உற்று நோக்கினான்.

“அண்ணா”

“என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா?”

“இருக்கு உங்களை நம்பாமல் நான் யாரை நம்ப முடியும். உங்களால் எனக்கொரு நல்லது தான் நடக்கும் கெட்டது நடக்காது” தெளிவாக உறுதியாக கூறினாள்.

“இதை அழிக்காம அப்படியே மனசில் வச்சுக்கோ... இப்போ போய் நீ நல்லா ரெஸ்ட் எடு... என்ன தான் அர்ஜுன் குடும்பம் தெரிஞ்சவங்களா இருந்தாலும் சில விஷயங்களை அனுசரிச்சு போற மாதிரி தான் இருக்கும்... அங்கே உனக்கான சூழ்நிலையும் அப்படி தான்... இங்கே இருக்கிற மாதிரி பிரீயா இருக்க முடியுமான்னு தெரியாதில்லையா... அதனால் இப்போவே நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ போ” என்று ஆதுரத்துடன் பேசியவனை எதிர்த்து வாதாட முடியாமல் அவனின் அன்பு கட்டளை தளையிட மெளனமாக சென்றவளின் முகம் வாடிப் போனது.

இவர்களின் பேச்சை பொது பார்வையாளர்கள் போன்று பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு கணவனின் பேச்சில் ஏதோ பூடகம் ஒளிந்திருந்ததை அப்பட்டமாக உணர்ந்தவள் அவனையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்... கணினியில் மூழ்கியிருந்தவனை அவளின் பார்வை உறுத்தியத்தில் அவள் புறம் திரும்பியவன் ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென்று வினவினான்.

“அது தான் அவ ஒரு தடவை பேசி பார்க்கிறேன்னு சொல்லி கேட்கிறா தானே? ஆனால், ஏன் விட மாட்டேங்குறீங்க? அவ சொல்ற மாதிரி இவங்க பிரச்சனை பெருசாகிறாதா?”

“அவ சொல்லுற மாதிரி செய்தா தான் அப்படி ஆக வாய்ப்பிருக்கு”

“ஏன் இப்படி சொல்றீங்க கவின்?”

“ம்ம்ம்... சிம்பிள் நம்ம லைப் பற்றி நிதானமா யோசி நிச்சயம் புரியும்” என்றதும் தான் திடுமென்று அவள் மூளைக்குள் விளக்கெரிந்தது.

“ஓஹ்! சப்போஸ் அவ பேச போய் சண்டை அதிகம் ஆகும்னு சொல்றீங்களா?” என்ற மனைவியை நோக்கி...

“ஹா...” என்று மென்னகை புரிந்தவன்...

“ஆமாம் டி பொண்டாட்டி... அவனுக்கு அவன் கண்ணு முன்னாடி இன்னொருத்தன் முன்னாடி நின்னுட்டாளேன்னு கோபம்”

“அரசிக்குன்னு அவ பக்கம் ஒரு நியாயம்... இது நாம நடுவரா நின்னு பஞ்சாயத்துல தீர்க்க வேண்டிய விஷயம் இல்லை... ரொம்ப சென்சிடிவான விஷயம், அதை ஹேண்டில் பண்ண ரெண்டு பேரும் அவங்களுடைய வாழ்க்கை வட்டதுக்குள்ள போகணும்... அப்போ தான் என்ன நடந்தாலும் ரெண்டு பேரும் விலக முடியாது” வாழ்க்கையை ஆழ்ந்து உணர்ந்து ரசித்து வாழ்பவனால் மட்டுமே இது போன்று நுணுக்கமான கருத்தாய்வை கூற முடியும் என்றுந்தவளுக்கு தன்னுடன் வாழும் வாழ்க்கையை அத்தனை நேசிக்கிறானா என்று அவளையும் அறியாமல் ஓர் சந்தேக கீற்று வந்து போனது... ‘இப்போ மட்டும் இதை வாயை விட்டு கேட்டோம் அப்புறம் செம காண்டாகியிருவாரு... முதல்ல நாம கேட்க வேண்டியதை கேட்டு முடிச்சிருவோம்’ என்று தனக்குள் பேசிக் கொண்டாள்.

“இன்னும் என்ன சந்தேகம்?” என்றதும்...

“இல்லை ரெண்டு பேரும் கல்யாணத்திற்கு பிறகும் இப்படியே இருந்தா என்ன செய்வீங்க? நான் இதை எதிர்மறையா கேட்கலை லவ் மேரேஜ்ல பிரிஞ்சு போறவங்களும் இருக்காங்க தானே”

அவளின் பேச்சில் மெச்சுதலாக புருவதத்தை உயர்த்தியவன் பார்வையில் சிலாகிப்பு இருந்தது... “உண்மை தான் ஆனால் ஒருத்தருடைய குணாதிசயங்கள்ன்னு ஒண்ணு இருக்கே... அர்ஜுன் , அரசியை பொறுத்தவரை உரிமையுணர்வு ஜாஸ்தி இருக்கு ரெண்டு பேருக்குமே... அதிலும் நம்மளை போல” என்றவன் குரலும், பார்வையும் மனைவியை மையலுடன் வருடிச் செல்ல சம்யுக்தா அதுவரை யோசனையில் நிலத்தை வெறித்தவள் சரேலென்று பார்வையை உயர்த்தி கணவன் மேல் பதித்தாள்... அதில் தன் பார்வையை மாற்றி சுதாரித்துக் கொண்டவன் படக்கென்று நிமிர்ந்து அமர்ந்து பேச்சை தொடரலானான்...

“அர்ஜுன் தாலி கட்டிட்டா அவன் பொண்டாட்டியை விட்டு கொடுக்கமாட்டான்... அரசியும் புருஷன்னு விலகி வரமாட்டா, அந்த நம்பிக்கையில் தான் அவங்களை இப்போதைக்கு பேச வேண்டாம்னு சொன்னேன்... இப்போ விரிசலை சரி பண்ணுறேன்னு காலம் முழுக்க அழுகுற மாதிரி ஆகிறக் கூடாதில்லையா”

“பிரிவு கூட ஒரு வகையில் விரிசலை சரி பண்ணக்கூடிய தந்திரம் தான்... எத்தனை நாளைக்கு அவனால் அரசியை அவொய்ட் பண்ண முடியும்? ரெண்டு பேரும் இம்மெச்சூர் கிடையாதே, அதனால் நிச்சயம் ஒரு இடைவெளி இருக்கட்டும்” என்று விளக்கம் கொடுக்க சம்யுக்தாவுக்கு கணவனை எண்ணி மிகுந்த பெருமை உண்டானது.

கலாதாரனுக்கு மனைவியின் பேச்சு வாழ்க்கையின் அடிப்படையை புரிந்துக் கொண்டதன் சான்றாக அமைந்து இருந்தாலும் ஏனோ அச்சமயம் அவனையும் அறியாமல் அவனுக்குள் ஓர் சந்தேகம் முளைவிட்டிருந்தது. தரன் மாலை வரை தன் தொழில்நுட்ப துறை பணியில் ஆழ்ந்திருந்தான்... சம்யுக்தா அன்று எப்போதும் போல் குழந்தையுடன் நடைப்பயணம் செல்ல புறப்பட்டு வெளியேறியதை கவனித்தவன்...

“யுகி ஒரு நிமிஷம்” என்று நிறுத்தியிருந்தான். கணவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்று தலையை மட்டும் திருப்பி பார்த்தவளை...

“நானும் வரேன் சேர்ந்தே போவோம்” என்றான்.

“இல்லை வேண்டாம், நீங்க வேலையை பாருங்க நானும் நிலாவும் போயிட்டு வரோம்” என்று விட்டு அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் நகர்ந்தவளை கரம் பிடித்து தடுத்திருந்தான்.

“எனக்கு வேலை முடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு, சும்மா அடுத்த டாஸ்க்குக்கு செடுயல் தான் ரெடி பண்ணேன்... அது அவ்ளோ முக்கியமா இப்போவே பார்த்தே ஆக வேண்டிய வேலை இல்லை, அதனால் நானும் வரேன் வெயிட் பண்ணு” என்றவனின் முகத்தையே பார்த்திருந்த அவனின் மகள்...

“ப்பா... ப்பா...” என்று மழலையில் மிழற்றிக் கொண்டு அவன் சட்டையை இறுக பிடித்தப்படி அவன் மேல் தாவி கொண்டு பாய...

“இருடா செல்லகுட்டி... அப்பா ட்ரஸ் மாற்றிட்டு வந்துடறேன்” என்று கூறி கன்னத்தில் அச்சாரம் பதித்துவிட்டு சென்றவன் நொடிப் பொழுதுக்குள் தயாராகி மகளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு மனைவியுடன் சென்றிருந்தான்.

**********************

இவர்களின் ஒற்றுமையை கண்ட வாணிக்கும், அரசிக்கும் அவர்களின் கவலையை மறந்தவர்களாக குதூகலமாகவே உணர்ந்தனர்.

“அரசிக்கா அண்ணனும், அண்ணியும் இப்படியே கடைசி வரைக்கும் இருந்திடணும்” என்க...

“நிச்சயம் இருப்பாங்க வாணி நீ கவலையேப்படாதே”

“நிஜமா தானே அரசிக்கா சொல்லுற, அந்த ரஞ்சன் வந்தன்னைக்கு இவங்களை நினைச்சு எனக்கு குளிர் ஜுரமே வந்திருச்சு?”

“அப்போ உன் வாழ்க்கையை பற்றி நீ கவலைப்படலையா வாணி?”

“கவலை இருந்தது அரசி க்கா... ஆனால் அது பெரிசா இப்போ பாதிக்கிறதில்லை... இப்போ எல்லாம் அண்ணன், அண்ணியை பற்றிய கவலை தான் மனசை அரிக்குது”

“அப்போ நான் சொல்லுறேன் கேளு, அண்ணன் நிச்சயம் அண்ணியை பிரிஞ்சு போற முடிவை எடுக்கமாட்டாங்க”

“எப்படி க்கா அதை இவ்ளோ நிச்சயமா சொல்லுற?”

“நம்ம தரன் அண்ணாவுக்கு அண்ணி மேல அவ்வளவு காதல்... அதை அவரே அவருடைய டைரியில் எழுதியிருந்தாரு... அவர் கோவை கிளம்புறதுக்காக நானும் மலரும் திங்க்ஸ் பேக் பண்ணும் போது தான் அதில் அண்ணியுடைய போட்டோவும், அதில் அண்ணன் தன் கைப்பட அவங்க மேல உள்ள நேசத்தை எழுதியிருந்ததையும் பார்த்தேன்... அப்போ தான் எனக்கு தெரிஞ்சது அண்ணன் சம்மு அண்ணி கூட உன் விஷயத்துக்காக நட்பா பழகலைன்னு... அதனால தான் அவ்ளோ அவசரமா உன்கிட்டே சொல்லி அண்ணனுடைய திட்டத்தை முறியடிக்க அண்ணிகிட்டே பேச சொன்னேன் ஆனால் எல்லாமே நாம நினைச்சதுக்கு நேர்மாறா நடந்திருச்சு” அவளின் கூற்றை கேட்ட வாணிக்கு நிம்மதியாக இருந்தாலும், அந்த சந்தேகம் அவளை குடைய அவளிடமே வினவினாள்.

“அப்புறம் ஏன் அரசிக்கா அண்ணன் டிவோர்ஸ் வரைக்கும் போனாரு?”

“இந்த கேள்விக்கு எனக்குமே பதில் தெரியாது வாணி, உன்னை போலவே எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு, ஆனால் அது எதுவா இருந்தாலும் அது அண்ணனுடைய அந்தரங்கம் அதை நாம கேட்க முடியாதே”

“வாஸ்தவம் தான் அரசிக்கா, எப்படியோ அவங்க பிரியாம இருந்தா சரி”

“அவரு எது செய்தாலும் நிச்சயம் அதில் ஏதோ காரணம் இருக்கும் வாணி, அது நல்லதா மட்டுமே இருக்கும்”

“உண்மை தான் அரசிக்கா... அண்ணி எங்கே எப்படி இருந்தவங்க, இவங்க இவ்ளோ பாங்கா அனுசரிச்சு நடந்துறாங்க”

“செலக்ஷன் யாரு அண்ணனாச்சே நிறைகுடம் தழும்பாதுன்னு சொல்றதுக்கு, அண்ணன் ஒரு உதாரணம்” என்று அரசி சிலாகித்து கூறினாள்.

“சரிதான் அரசிக்கா ஆனால் அந்த வீட்டில் இந்த ரஞ்சன் மட்டும் எப்படி அப்படியே அண்ணிக்கு எதிரான குணத்தில் இருக்கிறான்” என்று ஆட்காட்டி விரலை தாடையில் தட்டியபடி யோசனையுடன் கூறியவளை...

“தப்பு வாணி... அவன் எதிரான குணத்தில் இல்லை குடும்பமே ஒண்ணு போல வக்கிர குணம், அதில் அண்ணி மட்டும் கண்டெடுத்த வைரம்”

“நீ சொல்றது தான் சரி அரசி க்கா... அண்ணி தான் அந்த குடும்பத்தில் தப்பி பிறந்துட்டங்க போல” என்று இருவரும் ஒரு போல கதை பேசி புன்னகைத்துக் கொண்டனர்.

குழலி சிரித்துக் கொண்டிருந்த பெண்களை நெருங்கியவர்... “உங்க அண்ணனுக்கு கொஞ்சமாச்சும் விவஸ்த்தை இருக்கா? வீட்டில வயசு பிள்ளைங்களை வச்சுகிட்டு பொண்டாட்டியோட ஜோடி போட்டுக்கிட்டு வெளியே போகிறான்?” என்று பிரலாபித்தார்.

வாணி, அரசி இருவருக்குமே அவரின் பேச்சு அத்தனை உவப்பை கொடுக்கவில்லை... அரசிக்கோ தன் மேல் வெறுப்பாக உள்ள அத்தையை மேலும் ஏதேனும் பேசி வெறுப்பை கூட்டிக் கொள்ள வேண்டுமா? இருக்கப் போவது இன்னும் சிறிது நாட்கள் அதனால் அமைதியாக இருந்து விட்டு போய்விடுவோம் என்ற முடிவில் மெளனத்தை கடைபிடிக்க, ஆனால் வாணி அவளுக்கும் சேர்த்து வைத்து பேசினாள்.

“ஏன்மா என்ன பேச்சுன்னு இதை பேசுறீங்க? அதுவும் இந்த காலத்துலயும் இப்படியா யோசிப்பீங்க? இங்கே நாங்க என்ன கல்யாணம்னா என்னன்னு தெரியாத குழந்தைகளா? அப்படித் தான் எங்களுக்காக பார்க்கணும்னா அண்ணன் கடைசி காலம் வரைக்கும் தனியாவே இருக்க முடியுமா? நீங்க இன்னொருவாட்டி இப்படி பேசுனீங்க அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்” அரசிக்கும் சேர்த்து வாணி கொடுத்து கட்டிக் கொண்டிருக்க...

“என்னடி பண்ணுவ அப்படி? நீ தான் ஏதோ கூறுகெட்டு ஒரு காரியம் பண்ணிட்டேனா... குடும்பத்தை தாங்குற அவனுக்கு புத்தி வேண்டாம்... அவனும் இதான் சாக்குன்னு கையோட பொண்டாடியையும், குழந்தையையும் பிடிச்சுட்டு வந்துட்டான்” என்று சரவெடியை போல் படபடத்தார்.

“அண்ணன் ஒண்ணும் அவர் சுகத்துக்காக எல்லாத்தையும் பண்ணலை... அவருடைய செயலுக்கு பாதி காரணம் இந்த குடும்பமும், அதில் இருக்கிற நாங்க மூணு பொண்ணுங்களும் தான் காரணம்... அண்ணன் மட்டும் அது சந்தோஷம் தான் முக்கியம்ன்னு நினைச்சிருந்தா இந்நேரம் அண்ணியோட கோயம்புத்தூர்லையே செட்டில் ஆகியிருக்கும்” அதுவரை மெளனமாக இருந்த அரசிக்கு வாணியின் பேச்சு உந்துதலை கொடுக்க வருவது வரட்டும் என்பது போல் தொடர்ந்தாள்.

“அத்தை நான் பேசுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்... அண்ணனுக்கு நம்ம குடும்பம் மேல தான் முதல் அக்கறை இருக்கு... அதுக்கப்புறம் தான் அண்ணி குழந்தைன்னு பார்க்கிறாரு... ஆனால் அது எத்தனை நாளைக்கு நிலைக்கும்? அண்ணிக்கும் எங்களை மாதிரி எத்தனையோ ஆசை இருந்திருக்கும்... அதை எல்லாம் பொசுக்கினது நம்ம குடும்பம்தான்னு தோணிருச்சுன்னா அவங்க நம்ம எல்லாரையும் வெறுக்க ஆரம்பிப்பாங்க”

“இது பொண்ணுக்கே உண்டான தனிப்பட்ட மனநிலை... அவங்க சேர்ந்து போறதால எங்க மனசு சலனப்படும்ன்னு நீங்க நினைக்கறீங்க, ஆனால் அது தப்பு... நாங்களும் அந்த மாதிரி எல்லா சந்தோசத்தையும் அனுபவிக்கத் தானே போறோம்... ஆனால் அதுக்கு காலம் இருக்கு அவங்களுக்கு இப்போ விட்டுட்டா காலம் பின்னாடி போய் வராது” என்று அரசி முடிக்க...

“அண்ணனும், அண்ணியும் சாதாரணமா இல்லை... ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லைன்னு தொழில்லையும், வாழ்க்கையிலையும் நிருபிக்கறாங்க, அவங்க எந்த இடத்திலேயும் தப்பான செயலை செய்யமாட்டங்க” என்றாள் வாணி.

“மலர் கிட்ட கூட அண்ணி ரொம்ப பாசமா தான் இருக்காங்க அத்தை... இப்போ கூட போகக்குள்ள அவங்க மலர்கிட்டே ஏதோ வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் போறாங்க, அவ படிப்பில் ஆழ்ந்திருக்கிறா, அதனால் அவளையும் எக்காரணம் கொண்டும் பாதிக்காது” என்று அவருக்கும் புரியும் வகையில் இடித்துரைத்தனர்... அரசியின் பேச்சு வாணிக்கு வியப்பாக இருந்தது... எவ்வளவு சிந்தித்து நிதானமாக விளக்குகிறாள் என்று எண்ண குழலிக்கு அவரின் அறிவுரையில் பற்றிக் கொண்டு வந்தது.

“எல்லாம் என் கிரகம் நீங்க சொல்லி நான் கேட்டுக்க வேண்டியதா இருக்கு?” என்று எரிந்து விழ வாணி பொறுமையிழந்தவள்...

“அண்ணனும், அண்ணியும் காலம் முழுக்க சந்தோஷமா ஒற்றுமையா இருந்தா தான் நாளைக்கு உனக்கு அப்புறமும் எங்களுக்கு தாய் வீடுன்னு ஒண்ணு இருக்கும்... இதெல்லாம் பெரிய மனுஷி நீ சொல்லி நாங்க கேட்டிருக்கணும், ஆனா கிரகம் நாங்களே சிந்திச்சு சொல்ல வேண்டியதா இருக்கு” என்று உதட்டை பிலுக்கிக் கொண்டாள். வாணியின் பேச்சில் உண்மை உணர்ந்தாலும் அத்தனை எளிதில் விட முடியாது அவரின் மூத்த நிலைத்தகுதி தடுக்க...

“என்னடி வாய் நீளுது உன்னை எல்லாம் பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம்”

“தெரியுதில்லை அப்போ இனிமே எங்ககிட்டே இது மாதிரி பேச்சை எல்லாம் பேசிட்டு வராதே... ஏதோ இந்த ஒரு தடவை நாங்க அண்ணன்கிட்டே போட்டு கொடுக்காம விடுறோம்... இன்னொருவாட்டி இப்படி பேசின நாங்க அண்ணன்கிட்டே சொல்லி தனிக் குடித்தனம் போக சொல்லிருவோம்” என்று மிரட்டல் விடுங்க அவளை எரிப்பது போல் பார்த்தவர்...

“ஏதாவது உங்கண்ணகிட்ட சொன்னே பல்லை தட்டி கையில் கொடுத்திருவேன்” என்றதற்கெல்லாம் அசராத வாணி...

“அப்போ நீயும் இது போல அபத்தமா பேசுறதை நிறுத்திக்கோ” என்று விட்டு...

“வா அரசிக்கா நாம போலாம்” என்றிழுத்துக் கொண்டு சென்றுவிட்டிருந்தாள். குழலி மகளிடம் வீராப்பாக பேசினாலும், அதட்டி உருட்டினாலும் அடிமனதில் எங்கே அந்த குடும்பத்துக்கே தலைமகனாக இருக்கும் ஒரே ஒரு ஆண் மகன் வெளியேறிவிடுவானோ என்ற அச்சம் சூழ்ந்தது.

**********************

மனைவி, குழந்தைகளுடன் பூங்காவிற்கு வந்த தரன் தன் மகளை விளையாட்டு திடலில் அமைந்திருந்த சறுக்கல், ஊஞ்சல், சீசா ஒவ்வொன்றிலும் மிகவும் கவனமாக கையாண்டு கொண்டிருக்க, அவளோ உற்சாகத்தில் கிளுக்கி சிரித்துக் கெக்கலி கொட்டிக் கொண்டிருந்தாள்.

அவளுடன் கழித்த நேரத்தில் இத்தனை நாட்கள் இதை அனுபவிக்க எப்படி தவறினோம் என்றுக் கூட வருத்தம் கொண்டான். ஊஞ்சலில் அமர வைக்க சென்றவனை...

“வேண்டாம் அவ பயந்து அழுவா” என்று சம்யுக்தா தடுக்க...

“அதெல்லாம் ஆழமாட்டா” என்றவன் மனைவியின் வேண்டாம் என்ற சொல்லை சிறிதும் சட்டை செய்யாமல் ஊஞ்சலில் அமர வைத்து அவளை பிடித்துக் கொண்டே மிக மெதுவாக ஆட்டி விட, அவளின் மகளோ சிதற விட்ட முத்து பரல்களை போல் கிளுக்கி சிரித்து தந்தையுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள்.

அவளுடன் வரும் போதெல்லாம் ஊஞ்சலை பார்த்தாலே கதறி அழுபவள், இன்று தந்தையுடன் உற்சாகமாக ஆடியதை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்... தந்தையிடம் எந்த வித எதிர்ப்பும் கூறாமல் அவன் காட்டிய இடங்களில் எல்லாம் அவளின் வரவை நிரப்பிக் கொண்டிருந்தவளை எண்ணி லேசான பொறாமையுணர்வு கூட எழுந்தது. அதை தன் கணவனிடம் எதார்த்தமாக கூறியும் விட்டாள்.

“நான் கூட்டிட்டு வந்து விளையாடுறதை காட்டினால் எங்கே அவளையும் அதில் விளையாட வச்சிருவேன்னோன்னு அம்மே அம்மேன்னு கத்துவா, இன்னைக்கு நீங்க எல்லாத்துலயும் உட்கார வச்சு விளையாடும் போது என்னமா பொக்கை வாய வச்சு சிரிச்சுகிட்டு விளையாடுறா?”

“என்ன பொறாமையா?” என்றவன் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தது.

“ஆமாம் பொறாமை தான்... கஷ்டப்பட்டு பெற்று பார்த்துக்கிறது நானு... ஆனால் செல்லம் கொஞ்சி ஒட்டிக்கிறது மட்டும் அப்பாகிட்டே... அதுவும் பிள்ளையே இல்லைன்னு சொன்ன அப்பாகிட்டே” என்று இறுதியில் ஈட்டியை சொருக, சுவிட்ச் தட்டினார் போல் நின்றவனின் விழிகள் அவளை சுட்டது.

“ஏன் டி... ஏன்? இப்படி இதையே சொல்லி சொல்லியே சாகடிக்கிற? நான் என்ன உன்னை போல முழு நேரமும் குழந்தையோட நேரத்தை செலவளிக்கிறேன்னா, ஏதோ நேரம் கிடைக்கும் போது உங்க ரெண்டு பேர் கூடவும் இருக்க ஆசைப்பட்டு வரேன் இந்த சமயத்தில் கூடவா நான் சொன்னதை சொல்லி காட்டுவ? என்ன பண்ணினா உன் ஆத்திரம் அடங்கும்னு சொல்லு அதையாவது செய்து தொலைக்கிறேன்... ஆனால் இப்படி வார்த்தையிலேயே கூறு போடாத உயிரோட இருக்கிறதே தப்புன்னு தோணுது” என்றவனின் வார்த்தையே அவளை சற்று நிலைக்குலைய வைத்தது தான் என்றாலும் மேலும்...

“நான் செத்து இறுதி ஊர்வலத்தில் போகும் போது தான் உனக்கு மன்னிக்க முடியும்னா சொல்லு இப்போவே செத்துப் போறேன்” என்றவன் நடந்துக் கொண்டே இருக்க எதிரில் வந்த ஆட்டோ ஒன்று அவன் மோதுவது போல் வேகத்துடன் வருவதை கண்டு...

“கவின்ன்...” என்று உச்சஸ்தாயில் அலற சடாரென்று நடைபாதையில் அடியெடுத்து வைத்து ஒதுங்கியிருந்தான். அவன் வார்த்தை அப்போதே ஒத்திகை நடத்தியிருக்க சம்யுக்தா அரண்டு போனாள்.

மகிழ்ச்சியாக வந்தவர்கள் வீடு செல்லும் போது இருவரும் இரு வேறு மனநிலையில் இறுக்கத்துடன் சென்றனர். தரன் மனைவியை கண்டு கொள்ளாது அவனே குழந்தைக்கான தேவைகளை பார்த்துக் கொண்டவன்... மனைவியை நெருங்கி அமர்ந்து அவள் தாடையை பற்றி உற்று பார்க்க செய்து இன்று தோன்றிய சந்தேகத்தை வினவியிருந்தான்.

“ஏன் என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணினோம்னு வருத்தப்படுறியா யுகிமா?” என்றதும் தான் தாமதம், இன்று மாலையில் அவன் அடிப்பட இருந்து நூலிழையில் தப்பியதும், அவனின் வார்த்தையும் ஆக்ரோஷம் அடைய செய்திருக்க, உக்கிரமாக பார்த்தவள் அவன் மார்பிலும், கன்னத்திலும் தன் பலம் கொண்ட மட்டும் தாறுமாறாக தாக்க ஆரம்பித்தாள்.

“ஏன்டா... ஏன்டா... அந்த வார்த்தையா கேட்ட... உனக்கு... உனக்கு... என் மேல எப்படிடா நம்பிக்கை இல்லாமல் போகலாம்” என்று அவள் கரங்களால் தாக்கிக் கொண்டே இருந்தாள்... அவனோ இதனால் உன் மனதில் நான் ஏற்படுத்திய காயம் தீரும் என்றால் நன்றாக அடித்துக் கொள், நான் தாங்கிக் கொள்கிறேன் என்பது போல் தன்னை அவளுக்கு ஒப்புக் கொடுத்து கொண்டிருந்தான்.

அவளின் அடிகள் அவன் உடலை சேதப்படுத்திக் கொண்டிருந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாது மௌனமாக ஏற்றுக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் எக்குத்தப்பாக எங்கோ அடிப்படவே வலியில் “ஸ்ஸ்ஸ்ஹா” என்று முணங்கியதும் தான் மூச்சிரைக்க தன் செயலை நிறுத்தியவள் அவனை தீப்பார்வையால் வெட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏன் நிறுத்திட்ட அடி என்னை அடிச்சு உனக்கு நான் கொடுத்த காயம் ஆறும்னா இன்னும் நல்லா அடி” என்றவனை கண்டு அதற்கு மேல் தன் உணர்ச்சிகளை தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்தவள் அவன் மார்பில் ஒண்டிக் கொண்டப்படி அழுகையில் கரைந்தாள்.

மனைவியின் மனநிலையை புரிந்தவன் அவளுக்கு ஆதரவாக அனைத்து சிகையை வருடிக் கொடுக்கலானான்... கணவனின் மார்பில் சாய்ந்தப்படியே விசும்பிக் கொண்டே உறங்கிப் போயிருந்தாள் சம்யுக்தா. தரனுக்கு தூக்கம் முகவரியின்றி தொலைந்திருக்க, மனைவியை தன் மார்பின் மேல் தாங்கியபடி விட்டத்தை வெறிக்கலானான்.

**********************

“அம்மா நான் நாளைக்கு ஏர்லி மார்னிங் போடி கிளம்பணும்” என்று கூறிய அர்ஜுனை முறைத்தார் மல்லிகா.

“ஏன்டா நீ கல்யாணம் முடியுற வரைக்கும் தூரமா எங்கேயும் போகாதே எதுனாலும் தர்சனை பார்த்துக்க சொல்லுன்னு சொன்னேனா இல்லையா”

“ம்ச்... என்னம்மா நீங்க பேசுறீங்க? வேலைன்னு வந்திட்டா போய் தான் ஆகணும், தர்சன் ஆல்ரெடி பிஸியா தான் இருக்கான்... அவனும் எவ்ளோ வேலை தான் பார்ப்பான்”

“அர்ஜுன் உன் கல்யாணம் முடியுற வரைக்கும் தானே வெளியூர் வேலைகளை தள்ளிப் போட சொல்றா, அதுக்கப்புறம் நீ எங்க போனா யார் என்ன கேட்கப் போகிறா?”

“என்ன ப்பா நீங்களுமா?”

“நான் தான்பா சொல்றேன்... ஏற்கனவே உனக்கு ஆக்சிடென்ட் ஆகி கடவுள் புண்ணியத்தில் தப்பிச்சிருக்க, இப்போ தான் நிச்சயமும் முடிஞ்சிருக்கு ஏதாவது சின்ன அடிப்பட்டா கூட கலையரசி மேல தான் பழிப் போடுவாங்க”

“நல்லா சொல்லுங்க இவன்கிட்ட” என்றதும் அன்னையையும், தந்தையும் கடுமையாக முறைத்தவன்...

“அவங்க சொல்றதுக்கு முன்னாடி நீங்களே இந்த மாதிரி பழங்கால மூடத்தனமான விஷயம் எல்லாம் சொல்வீங்க போல?” கோபத்தில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்று அறியாது வாய்விட...

“டேய் என்னடா பேசிகிட்டு இருக்கிற?” மல்லிகா ஆவேசத்துடன் கண்டிக்க...

“நாங்க பழமையை கடைப் பிடிச்சிருந்தா ஆயிரத்தெட்டு சாஸ்திரம், சம்பிரதாயம் பார்க்காமல் உனக்கும், அரசிக்கும் கல்யாணம் நிச்சயம் செய்திருக்கமாட்டோம் அர்ஜுன்... முதலில் நிதானமா யோசித்து பேசு... இப்போல்லாம் நிதானம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிற?”

“அதை சொல்லுங்க... நீ காதலிச்சுட்டு வந்து நின்னதும் ஜாதகம் பார்க்கணும், சம்பிரதாயம் பார்க்கணும்னு சொன்னோமா? கல்யாணம் மட்டும் தான் சம்பிரதாயம் முறையெல்லாம் பார்த்து வைக்கிறோம்... அதுவும் கூட நம்ம உறவுக்காரங்களுக்காக தான்”

“மூடத்தனமான சில விஷயங்களை எல்லாம் யோசித்திருந்தா இந்நேரம் எத்தனையோ தடை விழுந்திருக்கும்... நாங்க இப்போவும் சொல்லுறது நாளைக்கு நீயும் அரசியும் சேர்ந்து போகும் போது தேவையில்லாத பேச்சுக்கள் காதில் விழப் போக, அதனால சங்கடம் நேர்ந்து உங்க மனசு நோகக்கூடாதுன்னு தான் முன்னெச்சரிக்கையா இருக்க சொல்றோம்”

“சாரி ப்பா ஏதோ கோபத்தில் பேசிட்டேன்” தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியவன்...

“நான் வேலைக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டேன் ப்பா அதனால் இந்த ஒரு தடவை போயிட்டு வந்துடறேன் ப்பா... நான் தனியாவும் போகலை, தரனும் என் கூட வருவான், அவனும் நானும் தான் போகப் போறோம்” என்று விளக்கம் அளிக்க அரைமனதாக சம்மதித்தனர்.

அதிகாலையில் மனைவியின் உறக்கதத்தை கலைக்காமல் எழுந்து தயாராகியிருந்தான் தரன். காற்றில் ஆடும் கற்றை கூத்தலின் மயிரிழைகள் அவள் கேசத்தை வருடி கொண்டிருக்க, நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் முகத்தில் விரல் குவித்து கன்னத்தை அள்ளி முத்தமிட்டு நகர முனைகையில் குழந்தையின் முனகல் சத்தம் ஒலித்தது, அதையும் உணராது ஆழந்த உறக்கத்தில் இருந்தாள் அவனின் மனையாட்டி... உதட்டில் கீற்றாக மின்னிய புன்னகையுடன் குழந்தையை தன் கரத்தில் ஏந்திக் கொண்டவன் வாணியை அணுகி...

“சாரிமா தூக்கத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றான்...

“சேச்சே., அதெல்லாம் இல்லை ண்ணா இன்னும் கொஞ்சம் நேரத்தில் பாப்பாவே எழுந்துப்பா, நானும் எழுந்து தான் ஆகணும்” என்றவளிடம் அவன் மகளை நீட்டினான்.

“அண்ணிக்கு நைட் எல்லாம் உடம்பு முடியாம சரியா தூங்கலை... அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நல்லா தூங்கட்டும், இன்னைக்கு நீயே குழந்தையை பார்த்துக்க முடியுமாமா? உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே” சிறு தயக்கம் இழையோட வினவியவனை நோக்கி பகீர் பார்வையை செலுத்தியவள்...

“ஐயோ என்ன ண்ணா இதுக்கெல்லாம் தயங்கிட்டு? பார்த்துக்க சொன்னா பார்த்துக்கப் போறேன்... நான் என்ன தனியாவா இருக்கிற? அரசிக்கா இருக்கா, அம்மா இருக்காங்க, ஸ்கூலுக்கு போயிட்டு வந்து மலர் குழந்தைகள் கூட விளையாடுவா... நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க ண்ணா... அண்ணியை தொந்தரவு பண்ணாம நாங்க பார்த்துக்கிறோம்”

“சரிடா அவளை வேலை எல்லாம் பார்க்க வேண்டாம் ரெஸ்ட் எடுக்க சொன்னேன் சொல்லிரு” என்று விட்டு தங்கையின் சிகையையும் பரிகாசத்துடன் வருடிக் கொடுத்துவிட்டு சென்றிருந்தான்.

**********************

அர்ஜுனை அழைத்துக் கொண்டு செல்ல அவன் இல்லத்திற்கு சென்ற தரனிடம் பல அறிவுரைகளையும், ஆயிரம் பத்திரங்களையும் கூறிய பிறகே அனுப்பி வைத்திருந்தார் மல்லிகா.

சம்யுக்தா படுக்கையில் நெளிந்தபடியே மெல்ல விழி மலர்த்தி கைகள் முறுக்கி சோம்பல் முறித்தவள் கடிகாரத்தை பார்க்க, அதில் மணி பதினொன்று என காட்டியதில் தூக்கிவாரிப் போட வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

“அச்சோ இவ்ளோ நேரமா தூங்கிட்டோம்... ஆமாம் நிலா பாப்பா என்ன ஆனா” என்றபடி பதறி எழுந்தவள் முன்பு பிரசன்னமானாள் வாணி”

“அண்ணி குளிச்சுட்டு சாப்பிட வாங்க நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்”

“குழந்தை எங்க?” என்று பதட்டத்துடன் வினவ...

“பதறாதீங்க அண்ணி... நிலாவும், வியனியும் விளையாடுறாங்க... காலையிலேயே நிலாவை குளிக்க வச்சு ஆகாரம் கொடுத்துட்டேன், இன்னும் கொஞ்சம் நேரத்தில் தூங்க வச்சுருவேன்” அவள் கேளாமல் இருந்த கேள்விக்கு விடையளித்தவளை கேள்வியுடன் பார்த்திருந்தாள்.

“அண்ணன் தான் காலையில் நேரமே கிளம்பும் போது பாப்பாவை என்கிட்ட விட்டுட்டு, உங்களையும் பார்த்துக்க சொல்லிட்டு போனாங்க” என்றதும் கணவனின் கைங்கர்யம் என்று புரிந்தவள், முதலில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்துவிடலாம் என்று குளியறையில் புகுந்திருந்தாள்.

சம்யுக்தா தயாரானவுடன் அவளின் அறைக்கே உணவை கொண்டு வந்து வாணி பரிமாறினாள். சம்யுக்தா உண்டு முடிக்க வாணியே தட்டை எடுக்க சென்றவளை...

“ஏய் விடு, நான் பார்த்துக்கிறேன் நீ போ”

“இல்லை அண்ணி... பரவாயில்லை, நீங்க கொடுங்க நான் எடுத்துட்டு போறேன்” என்றவள் வேகமாக அங்கிருந்து அனைத்தையும் அப்புறப்படுத்தினாள்... அவளின் செய்கையில் சற்றே நெக்குருகினாள்.

அரசி குழந்தைகளை பார்த்துக் கொண்டு விளையாண்டு கொண்டிருக்க... “நிலாமா அம்மாகிட்டே வா” என்றழைத்ததற்கு அவள் பெண்ணரசி கிளுக்கி சிரித்துக் கொண்டு அரசியின் முதுகின் புறம் சென்று அன்னையை அரை கண்களால் பார்த்து கண்டுபிடிப்பது போல் விளையாட அவளும்...

“புஜ்ஜு பாப்பா காணோம்” என்று தானும் மகளுடன் விளையாடியவள்... “வாங்க வாங்க நாம போய் தூங்கலாம்” என்று அவளை வழுகட்டாயமாக தூக்கியதும், தன் செந்தூர பிஞ்சு உதட்டை பிதுக்கி அழுக ஆரம்பித்தாள், அதை கண்ட அரசி...

“அண்ணி ஒரு நிமிஷம் கொடுங்களேன்” என்று அவள் வாங்கிக் கொண்டதும் சிரித்துக் கொண்டு அவள் ஆடையை கெட்டியாக பற்றிக் கொண்டாள்... அவளின் செயலில் முகம் சுணங்க பார்த்திருந்தவளை...

“அண்ணி நிலா காலையிலிருந்து வியனி கூட ஒரே விளையாட்டு, அதனால் தான் நீங்க தூக்கினதும் அழறா போல, கொஞ்ச நேரம் விளையாடட்டும் நானே இவளை உங்ககிட்டே விடுறேனே” என்று கண்களால் கெஞ்சியபடி கேட்க அவளுக்கே ஒரு மாதிரி ஆகிப் போனது.

“அண்ணி, அண்ணன் உங்களை நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க... உங்க முகமே ரொம்ப வாடி இருக்கு குழந்தையை பற்றி கவலைப்படாதீங்க அண்ணி வியனி வேற, நிலா வேற இல்லை, நாங்க நல்லாவே பார்த்துப்போம்” என்ற வாணியின் விளக்கத்திற்கு பதில் கூறாமல் இருக்க முடியவில்லை.

“நான் அதெல்லாம் எதுவும் சொல்லலை” என்றவள் மகளை ஓர் கணம் வெறித்துவிட்டு அறைக்குள் சென்றவளுக்கு மனம் கனத்தது.

கோவையில் இருந்த வரையில் எப்படியோ அவளும் இந்த வீட்டில் அடியெடுத்த வைத்த நாளிலிருந்து அரசியையோ, வாணியையோ பெரிதும் மதித்து பேசியதில்லை, எப்போதாவது தேவைப்படும் சமயத்தில் மட்டுமே எதுவும் பேசுவாள்... அதுவுமில்லை என்றால் ஆம் இல்லை என்ற ஒற்றை வார்த்தை பதில் மட்டுமே... அங்கே மலரை மட்டுமே கருத்தில் கொண்டு சில விஷயங்களை செய்த போது அவர்களை பற்றி இவள் கருத்தில் எண்ணியும் பார்த்ததில்லை... ஆனால், இன்று அவர்கள் அவள் தமையனின் வார்த்தைக்காக என்ற போதும் அவள் முகவாட்டத்தை கவனித்து அக்கறையாக பேசுவதும் அன்புடன் அவளுக்காக செய்யும் செயலும் அவளை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தியது... ஆனால் அதற்காக ஒரேடியாக அவர்களிடம் இழைந்து பேசவும் அவளின் குணாதிசயம் இடம் கொடுக்கவில்லை.

ஏதேதோ சிந்தனையில் உருட்டியபடி படுக்கையில் சாய்ந்தவளுக்கு மனம் சஞ்சலமுற்றது... அவள் சற்று தெளிவான மனநிலையில் இருந்திருந்தாள் நீ சொல்லி ஓய்வெடுக்க வேண்டுமா என்பது போல் பணியில் ஆழ்ந்திருப்பாள்... ஆனால் கணவன் சொன்னதற்காக என்றில்லாமல் அவளுக்கே அன்று ஓய்வு தேவையாய் இருந்தது தான் உண்மை. அன்று முழுக்க நன்றாக ஓய்வெடுத்தின் பலனாக அவள் முகம் நன்கு பொலிவுற்று இருந்தது.

இரவு உணவை முடித்து விட்ட மகளை தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தப்படி காற்றாட நடைபழகிக் கொண்டிருந்தவளை அணுகிய கேசவன்...

“ஏன்ம்மா இங்கே நடந்துட்டு இருக்கிற குளிர் காத்து அதிகமா இருக்கு குழந்தைக்கு ஜுரம் வந்திரப் போகுது உள்ளே போம்மா”

“அவர் எந்நேரம் வருவாருன்னு தெரியலை... அவர் வந்ததும் போய்க்கிறேன் நீங்க போய் தூங்குங்க மாமா”

“இல்லைமா வாடைக்காத்து குழந்தைக்கு சுத்தமா ஆகாது, நீ உள்ளே போ” என்று அழுத்தமாக உரைத்ததில் அக்கறை புலப்பட அவரை அந்நேரத்தில் எதிர்த்து போராடாமல் அமைதியாக உள்ளே சென்றுவிட்டிருந்தாள்.

தரன் இரவு பணிரெண்டு மணிக்கு மேலாக தான் வந்திருக்க, அந்நேரமும் நித்திரை கொள்ளாமல் விழித்துக் கொண்டிருந்த மனைவியை புன்சிரிப்புடன் நோக்கியவன்...

“இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுத்தியா?” என்று பரிகாசமாக வினவியவனுக்கு...

“ம்ம்ம்... ரெஸ்ட் மட்டும் தான் எடுத்தேன் ரொம்ப தேங்க்ஸ்” என்று நன்றி நவிழ்ந்தவளை புருவம் இடுங்க ஆட்சேபத்துடன் பார்த்தவன்...

“புருஷன், பொண்டாட்டிக்குள்ள தேங்க்ஸ் சொல்லணும்னா வாழ்நாள் முழுக்க இருபத்திநாலு மணி நேரமும், எழு நாளும்ன்னு ஓயாம சொல்லணும் இதையெல்லாம் தவிர்க்கிறது நல்லது” என்றவன் உடல் அலுப்பு காரணமாக கட்டிலில் படுத்தவன்...

“ரொம்ப டையர்டா இருக்கு காலையில் பேசலாம் குட் நைட்” என்று கூறிவிட்டு கண்மூட அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்ய வழியின்றி தானும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
 
  • Like
Reactions: Ums

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-23

கலையரசிக்கு அர்ஜுனை எப்படியேனும் காண வேண்டும் அவனிடம் பேசி ஓர் முடிவெடுத்து விட வேண்டும் என்றெல்லாம் சங்கல்பம் மேற்கொண்டிருந்தவள் அதை செயலாற்ற வேண்டி தரனை அணுகினாள்.

தன் தொழில்நுட்ப பணியை தொடர்ந்து கொண்டிருக்கும் அடையாளமாக காதில் கேட்பொறியை மாட்டிக் கொண்டு காணொளியில் அவ்வப்போது தொடர்பு கொண்டிருந்தவனை அணுக தயக்கத்துடன் நெளிந்தப்படி நின்றுக் கொண்டிருந்தாள்.

சம்யுக்தா பேசியில் உரையாட வெளியே சென்றிருந்தவள் தன் பணியை தொடர வேண்டி அவள் உள்ளே நுழைய, அறை வாசலில் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த அரசியை கண்டு கண்கள் சுருங்க யோசனையுடன் பார்த்தவள்...

“என்னாச்சு அரசி, இங்கே என்ன நின்னுட்டு இருக்கிற?” என்ற கேள்வியில் திரும்பியவள்...

“அண்ணி... அண்ணன்கிட்டே பேசணும்... வேலையா இருக்காரு போல அதான்...” என்று தயங்கி தடுமாறி நிறுத்தினாள்.

சம்யுக்தா அறையில் கணவன் ஏதோ காணொளி சந்திப்பில் இருப்பதை கண்டுக் கொண்டவள் அரசி அவனிடம் பேச வேண்டும் என்பதை ஜாடையாக தெரிவித்தாள்.

அவனும் ஜாடையிலேயே அஞ்சு நிமிஷம் என்று சைகையில் உணர்த்த... “பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு பேசுவாரு” என்றவள் உள்ளே செல்ல, அரசி வெளியே நின்றுக் கொண்டாள்.

தரன் காணொளியில் இருந்து விலகியதும் அரசியை கரத்தால் செய்கை காட்டி உள்ளே வரவழைத்தவன்... “சொல்லு என்ன விஷயம்?” என்று அவனே ஆரம்பித்தான்.

“அண்ணா நான் ஆபிஸ் வரைக்கும் போகணும், நான் ஸ்டோர் பண்ணின டீடெயில்ஸ் எல்லாம் திலீப்கிட்டே எடுத்து கொடுக்கணும்” என்றவளை அடிக்கண்ணால் அளவெடுத்தப்படி பார்த்தவன் விரல்கள் தட்டச்சு பொறியில் இருந்து உயர்த்து அந்தரத்தில் இருக்க, அவன் கந்தழி யோசனையில் ஆழ்ந்தது.

“அப்படி எதுவும் தேவையா இருந்திருந்தா அர்ஜுன் நேரடியா என்னிடம் சொல்லியிருந்திருப்பானே” என்றவன் ஓரக்கண்ணால் அளவெடுத்தப்படி கூறினான்.

“இல்லை ண்ணா திலீப் தான் என்கிட்டே பேசினார்”

“அப்போ நீ அர்ஜுன்கிட்டே பேசலையா?” சாதாரணமாக கேட்பது போல் இருந்தாலும் அவன் குரலில் இருந்த வித்தியாசம் அவன் கண்டு கொண்டதை உணர்த்தியது.

“அண்ணா... அது... அது... வந்து... பேசினேன்... ஆனால் நான் மட்டும் தான் பேசினேன் அவர் பேசலை” தயக்கத்துடன் ஆரம்பித்து இறுதியில் பட்டென்று உரைத்தவளின் குரல் உடைந்திருந்தது.

“நான் உன்கிட்டே அன்னைக்கே சொல்லிட்டேன் அரசி, இனி அர்ஜுன்கிட்டே என்ன பேசணும்னாலும் அவனுக்கு பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் பேசிக்கோன்னு, ஆனால் என் வார்த்தையை நீ மதிக்கிறதா இல்லை இல்லையா?”

“ஐயோ நிஜமா அப்படி இல்ல ண்ணா... ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசி என்னை கொல்லாதீங்க... ஏற்கனவே அவர் பேசாம என்னை கொல்லுறாரு” என்று உடைந்தாள்.

“முடியலை ண்ணா, இந்த மனஸ்தாபம் இப்படியே நீடிச்சிருமோன்னு பயமா இருக்கு... ஒரேயொரு தடவை அவர்கிட்டே பேசி பார்க்கலாமேன்னு தான் யோசிக்கிறேன்” சரமற்று கூறியவளின் குரல் கரகரத்தது.

“நானும் அதே காரணத்துக்காக தான் பேச வேண்டாம்ன்னு சொல்றேன்” என்று நிறுத்தியவன் அவள் முகத்தை உற்று நோக்கினான்.

“அண்ணா”

“என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா?”

“இருக்கு உங்களை நம்பாமல் நான் யாரை நம்ப முடியும். உங்களால் எனக்கொரு நல்லது தான் நடக்கும் கெட்டது நடக்காது” தெளிவாக உறுதியாக கூறினாள்.

“இதை அழிக்காம அப்படியே மனசில் வச்சுக்கோ... இப்போ போய் நீ நல்லா ரெஸ்ட் எடு... என்ன தான் அர்ஜுன் குடும்பம் தெரிஞ்சவங்களா இருந்தாலும் சில விஷயங்களை அனுசரிச்சு போற மாதிரி தான் இருக்கும்... அங்கே உனக்கான சூழ்நிலையும் அப்படி தான்... இங்கே இருக்கிற மாதிரி பிரீயா இருக்க முடியுமான்னு தெரியாதில்லையா... அதனால் இப்போவே நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ போ” என்று ஆதுரத்துடன் பேசியவனை எதிர்த்து வாதாட முடியாமல் அவனின் அன்பு கட்டளை தளையிட மெளனமாக சென்றவளின் முகம் வாடிப் போனது.

இவர்களின் பேச்சை பொது பார்வையாளர்கள் போன்று பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு கணவனின் பேச்சில் ஏதோ பூடகம் ஒளிந்திருந்ததை அப்பட்டமாக உணர்ந்தவள் அவனையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்... கணினியில் மூழ்கியிருந்தவனை அவளின் பார்வை உறுத்தியத்தில் அவள் புறம் திரும்பியவன் ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென்று வினவினான்.

“அது தான் அவ ஒரு தடவை பேசி பார்க்கிறேன்னு சொல்லி கேட்கிறா தானே? ஆனால், ஏன் விட மாட்டேங்குறீங்க? அவ சொல்ற மாதிரி இவங்க பிரச்சனை பெருசாகிறாதா?”

“அவ சொல்லுற மாதிரி செய்தா தான் அப்படி ஆக வாய்ப்பிருக்கு”

“ஏன் இப்படி சொல்றீங்க கவின்?”

“ம்ம்ம்... சிம்பிள் நம்ம லைப் பற்றி நிதானமா யோசி நிச்சயம் புரியும்” என்றதும் தான் திடுமென்று அவள் மூளைக்குள் விளக்கெரிந்தது.

“ஓஹ்! சப்போஸ் அவ பேச போய் சண்டை அதிகம் ஆகும்னு சொல்றீங்களா?” என்ற மனைவியை நோக்கி...

“ஹா...” என்று மென்னகை புரிந்தவன்...

“ஆமாம் டி பொண்டாட்டி... அவனுக்கு அவன் கண்ணு முன்னாடி இன்னொருத்தன் முன்னாடி நின்னுட்டாளேன்னு கோபம்”

“அரசிக்குன்னு அவ பக்கம் ஒரு நியாயம்... இது நாம நடுவரா நின்னு பஞ்சாயத்துல தீர்க்க வேண்டிய விஷயம் இல்லை... ரொம்ப சென்சிடிவான விஷயம், அதை ஹேண்டில் பண்ண ரெண்டு பேரும் அவங்களுடைய வாழ்க்கை வட்டதுக்குள்ள போகணும்... அப்போ தான் என்ன நடந்தாலும் ரெண்டு பேரும் விலக முடியாது” வாழ்க்கையை ஆழ்ந்து உணர்ந்து ரசித்து வாழ்பவனால் மட்டுமே இது போன்று நுணுக்கமான கருத்தாய்வை கூற முடியும் என்றுந்தவளுக்கு தன்னுடன் வாழும் வாழ்க்கையை அத்தனை நேசிக்கிறானா என்று அவளையும் அறியாமல் ஓர் சந்தேக கீற்று வந்து போனது... ‘இப்போ மட்டும் இதை வாயை விட்டு கேட்டோம் அப்புறம் செம காண்டாகியிருவாரு... முதல்ல நாம கேட்க வேண்டியதை கேட்டு முடிச்சிருவோம்’ என்று தனக்குள் பேசிக் கொண்டாள்.

“இன்னும் என்ன சந்தேகம்?” என்றதும்...

“இல்லை ரெண்டு பேரும் கல்யாணத்திற்கு பிறகும் இப்படியே இருந்தா என்ன செய்வீங்க? நான் இதை எதிர்மறையா கேட்கலை லவ் மேரேஜ்ல பிரிஞ்சு போறவங்களும் இருக்காங்க தானே”

அவளின் பேச்சில் மெச்சுதலாக புருவதத்தை உயர்த்தியவன் பார்வையில் சிலாகிப்பு இருந்தது... “உண்மை தான் ஆனால் ஒருத்தருடைய குணாதிசயங்கள்ன்னு ஒண்ணு இருக்கே... அர்ஜுன் , அரசியை பொறுத்தவரை உரிமையுணர்வு ஜாஸ்தி இருக்கு ரெண்டு பேருக்குமே... அதிலும் நம்மளை போல” என்றவன் குரலும், பார்வையும் மனைவியை மையலுடன் வருடிச் செல்ல சம்யுக்தா அதுவரை யோசனையில் நிலத்தை வெறித்தவள் சரேலென்று பார்வையை உயர்த்தி கணவன் மேல் பதித்தாள்... அதில் தன் பார்வையை மாற்றி சுதாரித்துக் கொண்டவன் படக்கென்று நிமிர்ந்து அமர்ந்து பேச்சை தொடரலானான்...

“அர்ஜுன் தாலி கட்டிட்டா அவன் பொண்டாட்டியை விட்டு கொடுக்கமாட்டான்... அரசியும் புருஷன்னு விலகி வரமாட்டா, அந்த நம்பிக்கையில் தான் அவங்களை இப்போதைக்கு பேச வேண்டாம்னு சொன்னேன்... இப்போ விரிசலை சரி பண்ணுறேன்னு காலம் முழுக்க அழுகுற மாதிரி ஆகிறக் கூடாதில்லையா”

“பிரிவு கூட ஒரு வகையில் விரிசலை சரி பண்ணக்கூடிய தந்திரம் தான்... எத்தனை நாளைக்கு அவனால் அரசியை அவொய்ட் பண்ண முடியும்? ரெண்டு பேரும் இம்மெச்சூர் கிடையாதே, அதனால் நிச்சயம் ஒரு இடைவெளி இருக்கட்டும்” என்று விளக்கம் கொடுக்க சம்யுக்தாவுக்கு கணவனை எண்ணி மிகுந்த பெருமை உண்டானது.

கலாதாரனுக்கு மனைவியின் பேச்சு வாழ்க்கையின் அடிப்படையை புரிந்துக் கொண்டதன் சான்றாக அமைந்து இருந்தாலும் ஏனோ அச்சமயம் அவனையும் அறியாமல் அவனுக்குள் ஓர் சந்தேகம் முளைவிட்டிருந்தது. தரன் மாலை வரை தன் தொழில்நுட்ப துறை பணியில் ஆழ்ந்திருந்தான்... சம்யுக்தா அன்று எப்போதும் போல் குழந்தையுடன் நடைப்பயணம் செல்ல புறப்பட்டு வெளியேறியதை கவனித்தவன்...

“யுகி ஒரு நிமிஷம்” என்று நிறுத்தியிருந்தான். கணவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்று தலையை மட்டும் திருப்பி பார்த்தவளை...

“நானும் வரேன் சேர்ந்தே போவோம்” என்றான்.

“இல்லை வேண்டாம், நீங்க வேலையை பாருங்க நானும் நிலாவும் போயிட்டு வரோம்” என்று விட்டு அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் நகர்ந்தவளை கரம் பிடித்து தடுத்திருந்தான்.

“எனக்கு வேலை முடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு, சும்மா அடுத்த டாஸ்க்குக்கு செடுயல் தான் ரெடி பண்ணேன்... அது அவ்ளோ முக்கியமா இப்போவே பார்த்தே ஆக வேண்டிய வேலை இல்லை, அதனால் நானும் வரேன் வெயிட் பண்ணு” என்றவனின் முகத்தையே பார்த்திருந்த அவனின் மகள்...

“ப்பா... ப்பா...” என்று மழலையில் மிழற்றிக் கொண்டு அவன் சட்டையை இறுக பிடித்தப்படி அவன் மேல் தாவி கொண்டு பாய...

“இருடா செல்லகுட்டி... அப்பா ட்ரஸ் மாற்றிட்டு வந்துடறேன்” என்று கூறி கன்னத்தில் அச்சாரம் பதித்துவிட்டு சென்றவன் நொடிப் பொழுதுக்குள் தயாராகி மகளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு மனைவியுடன் சென்றிருந்தான்.

**********************

இவர்களின் ஒற்றுமையை கண்ட வாணிக்கும், அரசிக்கும் அவர்களின் கவலையை மறந்தவர்களாக குதூகலமாகவே உணர்ந்தனர்.

“அரசிக்கா அண்ணனும், அண்ணியும் இப்படியே கடைசி வரைக்கும் இருந்திடணும்” என்க...

“நிச்சயம் இருப்பாங்க வாணி நீ கவலையேப்படாதே”

“நிஜமா தானே அரசிக்கா சொல்லுற, அந்த ரஞ்சன் வந்தன்னைக்கு இவங்களை நினைச்சு எனக்கு குளிர் ஜுரமே வந்திருச்சு?”

“அப்போ உன் வாழ்க்கையை பற்றி நீ கவலைப்படலையா வாணி?”

“கவலை இருந்தது அரசி க்கா... ஆனால் அது பெரிசா இப்போ பாதிக்கிறதில்லை... இப்போ எல்லாம் அண்ணன், அண்ணியை பற்றிய கவலை தான் மனசை அரிக்குது”

“அப்போ நான் சொல்லுறேன் கேளு, அண்ணன் நிச்சயம் அண்ணியை பிரிஞ்சு போற முடிவை எடுக்கமாட்டாங்க”

“எப்படி க்கா அதை இவ்ளோ நிச்சயமா சொல்லுற?”

“நம்ம தரன் அண்ணாவுக்கு அண்ணி மேல அவ்வளவு காதல்... அதை அவரே அவருடைய டைரியில் எழுதியிருந்தாரு... அவர் கோவை கிளம்புறதுக்காக நானும் மலரும் திங்க்ஸ் பேக் பண்ணும் போது தான் அதில் அண்ணியுடைய போட்டோவும், அதில் அண்ணன் தன் கைப்பட அவங்க மேல உள்ள நேசத்தை எழுதியிருந்ததையும் பார்த்தேன்... அப்போ தான் எனக்கு தெரிஞ்சது அண்ணன் சம்மு அண்ணி கூட உன் விஷயத்துக்காக நட்பா பழகலைன்னு... அதனால தான் அவ்ளோ அவசரமா உன்கிட்டே சொல்லி அண்ணனுடைய திட்டத்தை முறியடிக்க அண்ணிகிட்டே பேச சொன்னேன் ஆனால் எல்லாமே நாம நினைச்சதுக்கு நேர்மாறா நடந்திருச்சு” அவளின் கூற்றை கேட்ட வாணிக்கு நிம்மதியாக இருந்தாலும், அந்த சந்தேகம் அவளை குடைய அவளிடமே வினவினாள்.

“அப்புறம் ஏன் அரசிக்கா அண்ணன் டிவோர்ஸ் வரைக்கும் போனாரு?”

“இந்த கேள்விக்கு எனக்குமே பதில் தெரியாது வாணி, உன்னை போலவே எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு, ஆனால் அது எதுவா இருந்தாலும் அது அண்ணனுடைய அந்தரங்கம் அதை நாம கேட்க முடியாதே”

“வாஸ்தவம் தான் அரசிக்கா, எப்படியோ அவங்க பிரியாம இருந்தா சரி”

“அவரு எது செய்தாலும் நிச்சயம் அதில் ஏதோ காரணம் இருக்கும் வாணி, அது நல்லதா மட்டுமே இருக்கும்”

“உண்மை தான் அரசிக்கா... அண்ணி எங்கே எப்படி இருந்தவங்க, இவங்க இவ்ளோ பாங்கா அனுசரிச்சு நடந்துறாங்க”

“செலக்ஷன் யாரு அண்ணனாச்சே நிறைகுடம் தழும்பாதுன்னு சொல்றதுக்கு, அண்ணன் ஒரு உதாரணம்” என்று அரசி சிலாகித்து கூறினாள்.

“சரிதான் அரசிக்கா ஆனால் அந்த வீட்டில் இந்த ரஞ்சன் மட்டும் எப்படி அப்படியே அண்ணிக்கு எதிரான குணத்தில் இருக்கிறான்” என்று ஆட்காட்டி விரலை தாடையில் தட்டியபடி யோசனையுடன் கூறியவளை...

“தப்பு வாணி... அவன் எதிரான குணத்தில் இல்லை குடும்பமே ஒண்ணு போல வக்கிர குணம், அதில் அண்ணி மட்டும் கண்டெடுத்த வைரம்”

“நீ சொல்றது தான் சரி அரசி க்கா... அண்ணி தான் அந்த குடும்பத்தில் தப்பி பிறந்துட்டங்க போல” என்று இருவரும் ஒரு போல கதை பேசி புன்னகைத்துக் கொண்டனர்.

குழலி சிரித்துக் கொண்டிருந்த பெண்களை நெருங்கியவர்... “உங்க அண்ணனுக்கு கொஞ்சமாச்சும் விவஸ்த்தை இருக்கா? வீட்டில வயசு பிள்ளைங்களை வச்சுகிட்டு பொண்டாட்டியோட ஜோடி போட்டுக்கிட்டு வெளியே போகிறான்?” என்று பிரலாபித்தார்.

வாணி, அரசி இருவருக்குமே அவரின் பேச்சு அத்தனை உவப்பை கொடுக்கவில்லை... அரசிக்கோ தன் மேல் வெறுப்பாக உள்ள அத்தையை மேலும் ஏதேனும் பேசி வெறுப்பை கூட்டிக் கொள்ள வேண்டுமா? இருக்கப் போவது இன்னும் சிறிது நாட்கள் அதனால் அமைதியாக இருந்து விட்டு போய்விடுவோம் என்ற முடிவில் மெளனத்தை கடைபிடிக்க, ஆனால் வாணி அவளுக்கும் சேர்த்து வைத்து பேசினாள்.

“ஏன்மா என்ன பேச்சுன்னு இதை பேசுறீங்க? அதுவும் இந்த காலத்துலயும் இப்படியா யோசிப்பீங்க? இங்கே நாங்க என்ன கல்யாணம்னா என்னன்னு தெரியாத குழந்தைகளா? அப்படித் தான் எங்களுக்காக பார்க்கணும்னா அண்ணன் கடைசி காலம் வரைக்கும் தனியாவே இருக்க முடியுமா? நீங்க இன்னொருவாட்டி இப்படி பேசுனீங்க அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்” அரசிக்கும் சேர்த்து வாணி கொடுத்து கட்டிக் கொண்டிருக்க...

“என்னடி பண்ணுவ அப்படி? நீ தான் ஏதோ கூறுகெட்டு ஒரு காரியம் பண்ணிட்டேனா... குடும்பத்தை தாங்குற அவனுக்கு புத்தி வேண்டாம்... அவனும் இதான் சாக்குன்னு கையோட பொண்டாடியையும், குழந்தையையும் பிடிச்சுட்டு வந்துட்டான்” என்று சரவெடியை போல் படபடத்தார்.

“அண்ணன் ஒண்ணும் அவர் சுகத்துக்காக எல்லாத்தையும் பண்ணலை... அவருடைய செயலுக்கு பாதி காரணம் இந்த குடும்பமும், அதில் இருக்கிற நாங்க மூணு பொண்ணுங்களும் தான் காரணம்... அண்ணன் மட்டும் அது சந்தோஷம் தான் முக்கியம்ன்னு நினைச்சிருந்தா இந்நேரம் அண்ணியோட கோயம்புத்தூர்லையே செட்டில் ஆகியிருக்கும்” அதுவரை மெளனமாக இருந்த அரசிக்கு வாணியின் பேச்சு உந்துதலை கொடுக்க வருவது வரட்டும் என்பது போல் தொடர்ந்தாள்.

“அத்தை நான் பேசுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்... அண்ணனுக்கு நம்ம குடும்பம் மேல தான் முதல் அக்கறை இருக்கு... அதுக்கப்புறம் தான் அண்ணி குழந்தைன்னு பார்க்கிறாரு... ஆனால் அது எத்தனை நாளைக்கு நிலைக்கும்? அண்ணிக்கும் எங்களை மாதிரி எத்தனையோ ஆசை இருந்திருக்கும்... அதை எல்லாம் பொசுக்கினது நம்ம குடும்பம்தான்னு தோணிருச்சுன்னா அவங்க நம்ம எல்லாரையும் வெறுக்க ஆரம்பிப்பாங்க”

“இது பொண்ணுக்கே உண்டான தனிப்பட்ட மனநிலை... அவங்க சேர்ந்து போறதால எங்க மனசு சலனப்படும்ன்னு நீங்க நினைக்கறீங்க, ஆனால் அது தப்பு... நாங்களும் அந்த மாதிரி எல்லா சந்தோசத்தையும் அனுபவிக்கத் தானே போறோம்... ஆனால் அதுக்கு காலம் இருக்கு அவங்களுக்கு இப்போ விட்டுட்டா காலம் பின்னாடி போய் வராது” என்று அரசி முடிக்க...

“அண்ணனும், அண்ணியும் சாதாரணமா இல்லை... ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லைன்னு தொழில்லையும், வாழ்க்கையிலையும் நிருபிக்கறாங்க, அவங்க எந்த இடத்திலேயும் தப்பான செயலை செய்யமாட்டங்க” என்றாள் வாணி.

“மலர் கிட்ட கூட அண்ணி ரொம்ப பாசமா தான் இருக்காங்க அத்தை... இப்போ கூட போகக்குள்ள அவங்க மலர்கிட்டே ஏதோ வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் போறாங்க, அவ படிப்பில் ஆழ்ந்திருக்கிறா, அதனால் அவளையும் எக்காரணம் கொண்டும் பாதிக்காது” என்று அவருக்கும் புரியும் வகையில் இடித்துரைத்தனர்... அரசியின் பேச்சு வாணிக்கு வியப்பாக இருந்தது... எவ்வளவு சிந்தித்து நிதானமாக விளக்குகிறாள் என்று எண்ண குழலிக்கு அவரின் அறிவுரையில் பற்றிக் கொண்டு வந்தது.

“எல்லாம் என் கிரகம் நீங்க சொல்லி நான் கேட்டுக்க வேண்டியதா இருக்கு?” என்று எரிந்து விழ வாணி பொறுமையிழந்தவள்...

“அண்ணனும், அண்ணியும் காலம் முழுக்க சந்தோஷமா ஒற்றுமையா இருந்தா தான் நாளைக்கு உனக்கு அப்புறமும் எங்களுக்கு தாய் வீடுன்னு ஒண்ணு இருக்கும்... இதெல்லாம் பெரிய மனுஷி நீ சொல்லி நாங்க கேட்டிருக்கணும், ஆனா கிரகம் நாங்களே சிந்திச்சு சொல்ல வேண்டியதா இருக்கு” என்று உதட்டை பிலுக்கிக் கொண்டாள். வாணியின் பேச்சில் உண்மை உணர்ந்தாலும் அத்தனை எளிதில் விட முடியாது அவரின் மூத்த நிலைத்தகுதி தடுக்க...

“என்னடி வாய் நீளுது உன்னை எல்லாம் பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம்”

“தெரியுதில்லை அப்போ இனிமே எங்ககிட்டே இது மாதிரி பேச்சை எல்லாம் பேசிட்டு வராதே... ஏதோ இந்த ஒரு தடவை நாங்க அண்ணன்கிட்டே போட்டு கொடுக்காம விடுறோம்... இன்னொருவாட்டி இப்படி பேசின நாங்க அண்ணன்கிட்டே சொல்லி தனிக் குடித்தனம் போக சொல்லிருவோம்” என்று மிரட்டல் விடுங்க அவளை எரிப்பது போல் பார்த்தவர்...

“ஏதாவது உங்கண்ணகிட்ட சொன்னே பல்லை தட்டி கையில் கொடுத்திருவேன்” என்றதற்கெல்லாம் அசராத வாணி...

“அப்போ நீயும் இது போல அபத்தமா பேசுறதை நிறுத்திக்கோ” என்று விட்டு...

“வா அரசிக்கா நாம போலாம்” என்றிழுத்துக் கொண்டு சென்றுவிட்டிருந்தாள். குழலி மகளிடம் வீராப்பாக பேசினாலும், அதட்டி உருட்டினாலும் அடிமனதில் எங்கே அந்த குடும்பத்துக்கே தலைமகனாக இருக்கும் ஒரே ஒரு ஆண் மகன் வெளியேறிவிடுவானோ என்ற அச்சம் சூழ்ந்தது.

**********************

மனைவி, குழந்தைகளுடன் பூங்காவிற்கு வந்த தரன் தன் மகளை விளையாட்டு திடலில் அமைந்திருந்த சறுக்கல், ஊஞ்சல், சீசா ஒவ்வொன்றிலும் மிகவும் கவனமாக கையாண்டு கொண்டிருக்க, அவளோ உற்சாகத்தில் கிளுக்கி சிரித்துக் கெக்கலி கொட்டிக் கொண்டிருந்தாள்.

அவளுடன் கழித்த நேரத்தில் இத்தனை நாட்கள் இதை அனுபவிக்க எப்படி தவறினோம் என்றுக் கூட வருத்தம் கொண்டான். ஊஞ்சலில் அமர வைக்க சென்றவனை...

“வேண்டாம் அவ பயந்து அழுவா” என்று சம்யுக்தா தடுக்க...

“அதெல்லாம் ஆழமாட்டா” என்றவன் மனைவியின் வேண்டாம் என்ற சொல்லை சிறிதும் சட்டை செய்யாமல் ஊஞ்சலில் அமர வைத்து அவளை பிடித்துக் கொண்டே மிக மெதுவாக ஆட்டி விட, அவளின் மகளோ சிதற விட்ட முத்து பரல்களை போல் கிளுக்கி சிரித்து தந்தையுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள்.

அவளுடன் வரும் போதெல்லாம் ஊஞ்சலை பார்த்தாலே கதறி அழுபவள், இன்று தந்தையுடன் உற்சாகமாக ஆடியதை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்... தந்தையிடம் எந்த வித எதிர்ப்பும் கூறாமல் அவன் காட்டிய இடங்களில் எல்லாம் அவளின் வரவை நிரப்பிக் கொண்டிருந்தவளை எண்ணி லேசான பொறாமையுணர்வு கூட எழுந்தது. அதை தன் கணவனிடம் எதார்த்தமாக கூறியும் விட்டாள்.

“நான் கூட்டிட்டு வந்து விளையாடுறதை காட்டினால் எங்கே அவளையும் அதில் விளையாட வச்சிருவேன்னோன்னு அம்மே அம்மேன்னு கத்துவா, இன்னைக்கு நீங்க எல்லாத்துலயும் உட்கார வச்சு விளையாடும் போது என்னமா பொக்கை வாய வச்சு சிரிச்சுகிட்டு விளையாடுறா?”

“என்ன பொறாமையா?” என்றவன் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தது.

“ஆமாம் பொறாமை தான்... கஷ்டப்பட்டு பெற்று பார்த்துக்கிறது நானு... ஆனால் செல்லம் கொஞ்சி ஒட்டிக்கிறது மட்டும் அப்பாகிட்டே... அதுவும் பிள்ளையே இல்லைன்னு சொன்ன அப்பாகிட்டே” என்று இறுதியில் ஈட்டியை சொருக, சுவிட்ச் தட்டினார் போல் நின்றவனின் விழிகள் அவளை சுட்டது.

“ஏன் டி... ஏன்? இப்படி இதையே சொல்லி சொல்லியே சாகடிக்கிற? நான் என்ன உன்னை போல முழு நேரமும் குழந்தையோட நேரத்தை செலவளிக்கிறேன்னா, ஏதோ நேரம் கிடைக்கும் போது உங்க ரெண்டு பேர் கூடவும் இருக்க ஆசைப்பட்டு வரேன் இந்த சமயத்தில் கூடவா நான் சொன்னதை சொல்லி காட்டுவ? என்ன பண்ணினா உன் ஆத்திரம் அடங்கும்னு சொல்லு அதையாவது செய்து தொலைக்கிறேன்... ஆனால் இப்படி வார்த்தையிலேயே கூறு போடாத உயிரோட இருக்கிறதே தப்புன்னு தோணுது” என்றவனின் வார்த்தையே அவளை சற்று நிலைக்குலைய வைத்தது தான் என்றாலும் மேலும்...

“நான் செத்து இறுதி ஊர்வலத்தில் போகும் போது தான் உனக்கு மன்னிக்க முடியும்னா சொல்லு இப்போவே செத்துப் போறேன்” என்றவன் நடந்துக் கொண்டே இருக்க எதிரில் வந்த ஆட்டோ ஒன்று அவன் மோதுவது போல் வேகத்துடன் வருவதை கண்டு...

“கவின்ன்...” என்று உச்சஸ்தாயில் அலற சடாரென்று நடைபாதையில் அடியெடுத்து வைத்து ஒதுங்கியிருந்தான். அவன் வார்த்தை அப்போதே ஒத்திகை நடத்தியிருக்க சம்யுக்தா அரண்டு போனாள்.

மகிழ்ச்சியாக வந்தவர்கள் வீடு செல்லும் போது இருவரும் இரு வேறு மனநிலையில் இறுக்கத்துடன் சென்றனர். தரன் மனைவியை கண்டு கொள்ளாது அவனே குழந்தைக்கான தேவைகளை பார்த்துக் கொண்டவன்... மனைவியை நெருங்கி அமர்ந்து அவள் தாடையை பற்றி உற்று பார்க்க செய்து இன்று தோன்றிய சந்தேகத்தை வினவியிருந்தான்.

“ஏன் என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணினோம்னு வருத்தப்படுறியா யுகிமா?” என்றதும் தான் தாமதம், இன்று மாலையில் அவன் அடிப்பட இருந்து நூலிழையில் தப்பியதும், அவனின் வார்த்தையும் ஆக்ரோஷம் அடைய செய்திருக்க, உக்கிரமாக பார்த்தவள் அவன் மார்பிலும், கன்னத்திலும் தன் பலம் கொண்ட மட்டும் தாறுமாறாக தாக்க ஆரம்பித்தாள்.

“ஏன்டா... ஏன்டா... அந்த வார்த்தையா கேட்ட... உனக்கு... உனக்கு... என் மேல எப்படிடா நம்பிக்கை இல்லாமல் போகலாம்” என்று அவள் கரங்களால் தாக்கிக் கொண்டே இருந்தாள்... அவனோ இதனால் உன் மனதில் நான் ஏற்படுத்திய காயம் தீரும் என்றால் நன்றாக அடித்துக் கொள், நான் தாங்கிக் கொள்கிறேன் என்பது போல் தன்னை அவளுக்கு ஒப்புக் கொடுத்து கொண்டிருந்தான்.

அவளின் அடிகள் அவன் உடலை சேதப்படுத்திக் கொண்டிருந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாது மௌனமாக ஏற்றுக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் எக்குத்தப்பாக எங்கோ அடிப்படவே வலியில் “ஸ்ஸ்ஸ்ஹா” என்று முணங்கியதும் தான் மூச்சிரைக்க தன் செயலை நிறுத்தியவள் அவனை தீப்பார்வையால் வெட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏன் நிறுத்திட்ட அடி என்னை அடிச்சு உனக்கு நான் கொடுத்த காயம் ஆறும்னா இன்னும் நல்லா அடி” என்றவனை கண்டு அதற்கு மேல் தன் உணர்ச்சிகளை தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்தவள் அவன் மார்பில் ஒண்டிக் கொண்டப்படி அழுகையில் கரைந்தாள்.

மனைவியின் மனநிலையை புரிந்தவன் அவளுக்கு ஆதரவாக அனைத்து சிகையை வருடிக் கொடுக்கலானான்... கணவனின் மார்பில் சாய்ந்தப்படியே விசும்பிக் கொண்டே உறங்கிப் போயிருந்தாள் சம்யுக்தா. தரனுக்கு தூக்கம் முகவரியின்றி தொலைந்திருக்க, மனைவியை தன் மார்பின் மேல் தாங்கியபடி விட்டத்தை வெறிக்கலானான்.

**********************

“அம்மா நான் நாளைக்கு ஏர்லி மார்னிங் போடி கிளம்பணும்” என்று கூறிய அர்ஜுனை முறைத்தார் மல்லிகா.

“ஏன்டா நீ கல்யாணம் முடியுற வரைக்கும் தூரமா எங்கேயும் போகாதே எதுனாலும் தர்சனை பார்த்துக்க சொல்லுன்னு சொன்னேனா இல்லையா”

“ம்ச்... என்னம்மா நீங்க பேசுறீங்க? வேலைன்னு வந்திட்டா போய் தான் ஆகணும், தர்சன் ஆல்ரெடி பிஸியா தான் இருக்கான்... அவனும் எவ்ளோ வேலை தான் பார்ப்பான்”

“அர்ஜுன் உன் கல்யாணம் முடியுற வரைக்கும் தானே வெளியூர் வேலைகளை தள்ளிப் போட சொல்றா, அதுக்கப்புறம் நீ எங்க போனா யார் என்ன கேட்கப் போகிறா?”

“என்ன ப்பா நீங்களுமா?”

“நான் தான்பா சொல்றேன்... ஏற்கனவே உனக்கு ஆக்சிடென்ட் ஆகி கடவுள் புண்ணியத்தில் தப்பிச்சிருக்க, இப்போ தான் நிச்சயமும் முடிஞ்சிருக்கு ஏதாவது சின்ன அடிப்பட்டா கூட கலையரசி மேல தான் பழிப் போடுவாங்க”

“நல்லா சொல்லுங்க இவன்கிட்ட” என்றதும் அன்னையையும், தந்தையும் கடுமையாக முறைத்தவன்...

“அவங்க சொல்றதுக்கு முன்னாடி நீங்களே இந்த மாதிரி பழங்கால மூடத்தனமான விஷயம் எல்லாம் சொல்வீங்க போல?” கோபத்தில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்று அறியாது வாய்விட...

“டேய் என்னடா பேசிகிட்டு இருக்கிற?” மல்லிகா ஆவேசத்துடன் கண்டிக்க...

“நாங்க பழமையை கடைப் பிடிச்சிருந்தா ஆயிரத்தெட்டு சாஸ்திரம், சம்பிரதாயம் பார்க்காமல் உனக்கும், அரசிக்கும் கல்யாணம் நிச்சயம் செய்திருக்கமாட்டோம் அர்ஜுன்... முதலில் நிதானமா யோசித்து பேசு... இப்போல்லாம் நிதானம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிற?”

“அதை சொல்லுங்க... நீ காதலிச்சுட்டு வந்து நின்னதும் ஜாதகம் பார்க்கணும், சம்பிரதாயம் பார்க்கணும்னு சொன்னோமா? கல்யாணம் மட்டும் தான் சம்பிரதாயம் முறையெல்லாம் பார்த்து வைக்கிறோம்... அதுவும் கூட நம்ம உறவுக்காரங்களுக்காக தான்”

“மூடத்தனமான சில விஷயங்களை எல்லாம் யோசித்திருந்தா இந்நேரம் எத்தனையோ தடை விழுந்திருக்கும்... நாங்க இப்போவும் சொல்லுறது நாளைக்கு நீயும் அரசியும் சேர்ந்து போகும் போது தேவையில்லாத பேச்சுக்கள் காதில் விழப் போக, அதனால சங்கடம் நேர்ந்து உங்க மனசு நோகக்கூடாதுன்னு தான் முன்னெச்சரிக்கையா இருக்க சொல்றோம்”

“சாரி ப்பா ஏதோ கோபத்தில் பேசிட்டேன்” தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியவன்...

“நான் வேலைக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டேன் ப்பா அதனால் இந்த ஒரு தடவை போயிட்டு வந்துடறேன் ப்பா... நான் தனியாவும் போகலை, தரனும் என் கூட வருவான், அவனும் நானும் தான் போகப் போறோம்” என்று விளக்கம் அளிக்க அரைமனதாக சம்மதித்தனர்.

அதிகாலையில் மனைவியின் உறக்கதத்தை கலைக்காமல் எழுந்து தயாராகியிருந்தான் தரன். காற்றில் ஆடும் கற்றை கூத்தலின் மயிரிழைகள் அவள் கேசத்தை வருடி கொண்டிருக்க, நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் முகத்தில் விரல் குவித்து கன்னத்தை அள்ளி முத்தமிட்டு நகர முனைகையில் குழந்தையின் முனகல் சத்தம் ஒலித்தது, அதையும் உணராது ஆழந்த உறக்கத்தில் இருந்தாள் அவனின் மனையாட்டி... உதட்டில் கீற்றாக மின்னிய புன்னகையுடன் குழந்தையை தன் கரத்தில் ஏந்திக் கொண்டவன் வாணியை அணுகி...

“சாரிமா தூக்கத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றான்...

“சேச்சே., அதெல்லாம் இல்லை ண்ணா இன்னும் கொஞ்சம் நேரத்தில் பாப்பாவே எழுந்துப்பா, நானும் எழுந்து தான் ஆகணும்” என்றவளிடம் அவன் மகளை நீட்டினான்.

“அண்ணிக்கு நைட் எல்லாம் உடம்பு முடியாம சரியா தூங்கலை... அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நல்லா தூங்கட்டும், இன்னைக்கு நீயே குழந்தையை பார்த்துக்க முடியுமாமா? உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே” சிறு தயக்கம் இழையோட வினவியவனை நோக்கி பகீர் பார்வையை செலுத்தியவள்...

“ஐயோ என்ன ண்ணா இதுக்கெல்லாம் தயங்கிட்டு? பார்த்துக்க சொன்னா பார்த்துக்கப் போறேன்... நான் என்ன தனியாவா இருக்கிற? அரசிக்கா இருக்கா, அம்மா இருக்காங்க, ஸ்கூலுக்கு போயிட்டு வந்து மலர் குழந்தைகள் கூட விளையாடுவா... நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க ண்ணா... அண்ணியை தொந்தரவு பண்ணாம நாங்க பார்த்துக்கிறோம்”

“சரிடா அவளை வேலை எல்லாம் பார்க்க வேண்டாம் ரெஸ்ட் எடுக்க சொன்னேன் சொல்லிரு” என்று விட்டு தங்கையின் சிகையையும் பரிகாசத்துடன் வருடிக் கொடுத்துவிட்டு சென்றிருந்தான்.

**********************

அர்ஜுனை அழைத்துக் கொண்டு செல்ல அவன் இல்லத்திற்கு சென்ற தரனிடம் பல அறிவுரைகளையும், ஆயிரம் பத்திரங்களையும் கூறிய பிறகே அனுப்பி வைத்திருந்தார் மல்லிகா.

சம்யுக்தா படுக்கையில் நெளிந்தபடியே மெல்ல விழி மலர்த்தி கைகள் முறுக்கி சோம்பல் முறித்தவள் கடிகாரத்தை பார்க்க, அதில் மணி பதினொன்று என காட்டியதில் தூக்கிவாரிப் போட வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

“அச்சோ இவ்ளோ நேரமா தூங்கிட்டோம்... ஆமாம் நிலா பாப்பா என்ன ஆனா” என்றபடி பதறி எழுந்தவள் முன்பு பிரசன்னமானாள் வாணி”

“அண்ணி குளிச்சுட்டு சாப்பிட வாங்க நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்”

“குழந்தை எங்க?” என்று பதட்டத்துடன் வினவ...

“பதறாதீங்க அண்ணி... நிலாவும், வியனியும் விளையாடுறாங்க... காலையிலேயே நிலாவை குளிக்க வச்சு ஆகாரம் கொடுத்துட்டேன், இன்னும் கொஞ்சம் நேரத்தில் தூங்க வச்சுருவேன்” அவள் கேளாமல் இருந்த கேள்விக்கு விடையளித்தவளை கேள்வியுடன் பார்த்திருந்தாள்.

“அண்ணன் தான் காலையில் நேரமே கிளம்பும் போது பாப்பாவை என்கிட்ட விட்டுட்டு, உங்களையும் பார்த்துக்க சொல்லிட்டு போனாங்க” என்றதும் கணவனின் கைங்கர்யம் என்று புரிந்தவள், முதலில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்துவிடலாம் என்று குளியறையில் புகுந்திருந்தாள்.

சம்யுக்தா தயாரானவுடன் அவளின் அறைக்கே உணவை கொண்டு வந்து வாணி பரிமாறினாள். சம்யுக்தா உண்டு முடிக்க வாணியே தட்டை எடுக்க சென்றவளை...

“ஏய் விடு, நான் பார்த்துக்கிறேன் நீ போ”

“இல்லை அண்ணி... பரவாயில்லை, நீங்க கொடுங்க நான் எடுத்துட்டு போறேன்” என்றவள் வேகமாக அங்கிருந்து அனைத்தையும் அப்புறப்படுத்தினாள்... அவளின் செய்கையில் சற்றே நெக்குருகினாள்.

அரசி குழந்தைகளை பார்த்துக் கொண்டு விளையாண்டு கொண்டிருக்க... “நிலாமா அம்மாகிட்டே வா” என்றழைத்ததற்கு அவள் பெண்ணரசி கிளுக்கி சிரித்துக் கொண்டு அரசியின் முதுகின் புறம் சென்று அன்னையை அரை கண்களால் பார்த்து கண்டுபிடிப்பது போல் விளையாட அவளும்...

“புஜ்ஜு பாப்பா காணோம்” என்று தானும் மகளுடன் விளையாடியவள்... “வாங்க வாங்க நாம போய் தூங்கலாம்” என்று அவளை வழுகட்டாயமாக தூக்கியதும், தன் செந்தூர பிஞ்சு உதட்டை பிதுக்கி அழுக ஆரம்பித்தாள், அதை கண்ட அரசி...

“அண்ணி ஒரு நிமிஷம் கொடுங்களேன்” என்று அவள் வாங்கிக் கொண்டதும் சிரித்துக் கொண்டு அவள் ஆடையை கெட்டியாக பற்றிக் கொண்டாள்... அவளின் செயலில் முகம் சுணங்க பார்த்திருந்தவளை...

“அண்ணி நிலா காலையிலிருந்து வியனி கூட ஒரே விளையாட்டு, அதனால் தான் நீங்க தூக்கினதும் அழறா போல, கொஞ்ச நேரம் விளையாடட்டும் நானே இவளை உங்ககிட்டே விடுறேனே” என்று கண்களால் கெஞ்சியபடி கேட்க அவளுக்கே ஒரு மாதிரி ஆகிப் போனது.

“அண்ணி, அண்ணன் உங்களை நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க... உங்க முகமே ரொம்ப வாடி இருக்கு குழந்தையை பற்றி கவலைப்படாதீங்க அண்ணி வியனி வேற, நிலா வேற இல்லை, நாங்க நல்லாவே பார்த்துப்போம்” என்ற வாணியின் விளக்கத்திற்கு பதில் கூறாமல் இருக்க முடியவில்லை.

“நான் அதெல்லாம் எதுவும் சொல்லலை” என்றவள் மகளை ஓர் கணம் வெறித்துவிட்டு அறைக்குள் சென்றவளுக்கு மனம் கனத்தது.

கோவையில் இருந்த வரையில் எப்படியோ அவளும் இந்த வீட்டில் அடியெடுத்த வைத்த நாளிலிருந்து அரசியையோ, வாணியையோ பெரிதும் மதித்து பேசியதில்லை, எப்போதாவது தேவைப்படும் சமயத்தில் மட்டுமே எதுவும் பேசுவாள்... அதுவுமில்லை என்றால் ஆம் இல்லை என்ற ஒற்றை வார்த்தை பதில் மட்டுமே... அங்கே மலரை மட்டுமே கருத்தில் கொண்டு சில விஷயங்களை செய்த போது அவர்களை பற்றி இவள் கருத்தில் எண்ணியும் பார்த்ததில்லை... ஆனால், இன்று அவர்கள் அவள் தமையனின் வார்த்தைக்காக என்ற போதும் அவள் முகவாட்டத்தை கவனித்து அக்கறையாக பேசுவதும் அன்புடன் அவளுக்காக செய்யும் செயலும் அவளை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தியது... ஆனால் அதற்காக ஒரேடியாக அவர்களிடம் இழைந்து பேசவும் அவளின் குணாதிசயம் இடம் கொடுக்கவில்லை.

ஏதேதோ சிந்தனையில் உருட்டியபடி படுக்கையில் சாய்ந்தவளுக்கு மனம் சஞ்சலமுற்றது... அவள் சற்று தெளிவான மனநிலையில் இருந்திருந்தாள் நீ சொல்லி ஓய்வெடுக்க வேண்டுமா என்பது போல் பணியில் ஆழ்ந்திருப்பாள்... ஆனால் கணவன் சொன்னதற்காக என்றில்லாமல் அவளுக்கே அன்று ஓய்வு தேவையாய் இருந்தது தான் உண்மை. அன்று முழுக்க நன்றாக ஓய்வெடுத்தின் பலனாக அவள் முகம் நன்கு பொலிவுற்று இருந்தது.

இரவு உணவை முடித்து விட்ட மகளை தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தப்படி காற்றாட நடைபழகிக் கொண்டிருந்தவளை அணுகிய கேசவன்...

“ஏன்ம்மா இங்கே நடந்துட்டு இருக்கிற குளிர் காத்து அதிகமா இருக்கு குழந்தைக்கு ஜுரம் வந்திரப் போகுது உள்ளே போம்மா”

“அவர் எந்நேரம் வருவாருன்னு தெரியலை... அவர் வந்ததும் போய்க்கிறேன் நீங்க போய் தூங்குங்க மாமா”

“இல்லைமா வாடைக்காத்து குழந்தைக்கு சுத்தமா ஆகாது, நீ உள்ளே போ” என்று அழுத்தமாக உரைத்ததில் அக்கறை புலப்பட அவரை அந்நேரத்தில் எதிர்த்து போராடாமல் அமைதியாக உள்ளே சென்றுவிட்டிருந்தாள்.

தரன் இரவு பணிரெண்டு மணிக்கு மேலாக தான் வந்திருக்க, அந்நேரமும் நித்திரை கொள்ளாமல் விழித்துக் கொண்டிருந்த மனைவியை புன்சிரிப்புடன் நோக்கியவன்...

“இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுத்தியா?” என்று பரிகாசமாக வினவியவனுக்கு...

“ம்ம்ம்... ரெஸ்ட் மட்டும் தான் எடுத்தேன் ரொம்ப தேங்க்ஸ்” என்று நன்றி நவிழ்ந்தவளை புருவம் இடுங்க ஆட்சேபத்துடன் பார்த்தவன்...

“புருஷன், பொண்டாட்டிக்குள்ள தேங்க்ஸ் சொல்லணும்னா வாழ்நாள் முழுக்க இருபத்திநாலு மணி நேரமும், எழு நாளும்ன்னு ஓயாம சொல்லணும் இதையெல்லாம் தவிர்க்கிறது நல்லது” என்றவன் உடல் அலுப்பு காரணமாக கட்டிலில் படுத்தவன்...

“ரொம்ப டையர்டா இருக்கு காலையில் பேசலாம் குட் நைட்” என்று கூறிவிட்டு கண்மூட அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்ய வழியின்றி தானும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலையரசியின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்க ஏற்பாடுகள் அனைத்தும் துரிதகதியில் நடந்துக் கொண்டிருந்தன... கல்யாணப் புடவை எடுக்க அனைவரும் ஒன்று கூடினர்... அவ்வேளையில் கூட அர்ஜுன், அரசியிடம் பாராமுகத்துடனே நடந்துக் கொண்டது அவளை வேதனையில் வாட்டியது.

பெண் அழைப்புக்கு வேண்டிய புடவை, முகூர்த்தப்பட்டு என்று அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்க முற்பட அரசியோ அர்ஜுனின் முகத்திருப்பலை எண்ணி மனவுளைச்சலில் உழன்று கொண்டிருந்தவளை கவனித்த சம்யுக்தா...

“அரசி என்ன ஆச்சு உனக்கு? சதா, நீ ஏதோ யோசனையிலேயே இருக்க புடவை செலக்ட் பண்ணலையா?”

“நீங்களே பாருங்க ண்ணி உங்களுக்குத் தான் இதில் எல்லா விஷயமும் தெரியுமே” என்று அவளின் தொழிலை சாக்காட்டி தப்பித்துக் கொள்ள முனைந்தாள்.

“இதெல்லாம் ஒரு சாக்கா? புடவை எடுத்தாலும் அதை கட்டிக்கப் போறது நீதானே, உனக்கு பிடிச்ச புடவையை நீயும் செலக்ட் பண்ணு வா” வற்புறுத்தி இழுத்திருந்தாள்.

அவளின் கைகள் பெயருக்காக ஏதோ ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாலும், அவள் கண்கள் அவ்வபோது அர்ஜூன் மேல் படிந்துப் படிந்து மீண்டு கொண்டிருந்தது. அதை கவனித்த சம்யுக்தாவுக்கு அவள் உள்ளத்தின் தேடல் புரிந்திருக்க, அதற்கு வழி செய்ய வேண்டி கணவனை கண்களால் அழைத்துச் சென்றாள்.

கணவனை அழைத்துச் சென்றவள் என்ன பேசினாளோ அவனுடன் திரும்பியவள் இயல்பாக கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஆடை எடுக்க ஆரம்பித்தாள்... அனைத்தும் முடிந்திருக்க அனைவரும் வீட்டிற்கு புறப்படும் வேளை...

“அம்மா எல்லாரும் சப்பிட்டுட்டு அப்புறமா வீட்டுக்கு போயிறலாம்” என்று தரன் கூறியதை ஆமோதித்து, அப்படியே அனைவரும் உணவகத்திற்கு செல்லும்படி ஆளுக்கு ஒரு வாகனத்தில் ஏறி அமர வாடிய முகத்துடன் வாணியுடன் அமரப் போன அரசியை சம்யுக்தா தடுத்தவள்...

“அரசி நீ முன்னாடி அர்ஜுன் இருக்கிற காருக்கு போ” என்றதும் முகத்தில் வெளிச்சம் வந்திருக்க...

“சரிங்க ண்ணி” என்றபடி சென்றிருந்தாள்.

“என்னம்மா சம்மு நீ ஏறலை?” என்ற மல்லிகாவிடம்...

“இங்கே ஒரு சின்ன வேலை இருக்கு அத்தை, அதை முடிச்சுட்டு நாங்க அர்ஜுன் காரில் வரோம்?” என்றவளின் கூற்றை ஏற்று அனைவரும் நகர்ந்திருந்தனர்.

சம்யுக்தா கணவனிடம் கண்களால் பேசியபடி அர்ஜுன், அரசியை நெருங்கியவள்... “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அங்க வெயிட் பண்ணுங்க, ஒரு வேலை இருக்கு முடிச்சுட்டு வந்துடறேன்” என்றவள் விறுவிறுவென்று நகர்ந்திருக்க, அங்கே அவர்களுக்கான தனிமை சூழ்ந்து கொண்டது.

அரசி அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஏற்றுக் கொண்டவள் அர்ஜுனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்...

“அர்ஜுன் ப்ளீஸ் என் கூட பேசுங்க... நீங்க பேசாம இருக்கிறது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” சரமற்று கூறியவளின் குரல் கரகரத்தது. அவனோ யாரிடமோ அவள் பேசுவது போல் பார்வையை வேறிடத்தில் பதித்தபடி மௌனமாக நின்றிருந்தான்.

“என் முகத்தை பார்க்கக் கூட பிடிக்கலையா? அப்புறம் எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்க?” என்றவளை வெடுக்கென்று முகத்தை திருப்பியவன் பார்வையால் வெட்டினான். அவனின் முறைப்பை விட மௌனக் கோபம் கொண்று திண்பதே மிக கொடுமையாக இருக்க, அவனிடம் பேசுவது ஒன்றே குறிக்கோளாக பேசலானாள்.

“இப்படி வேண்டா வெறுப்பா என்னை பார்க்கிறதுக்கு பதிலா கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு... வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றதும் பொறுமை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டவன், அவள் கன்னத்தில் சப்பென்று அடித்து விட்டு ஜாக்கிரதை என்று சுட்டு விரலால் எச்சரிக்கை விடுத்திருந்தான்.

“என்னை பார்த்து வேற ஒருத்திய கல்யாணம் பண்ண சொல்ல நீ யாரு டி?” என்று கர்ஜித்தவன் தன் கோபத்தை அடக்கிக் கொள்ள அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

“அப்போ என்னை விருப்பத்தோட தானே கல்யாணம் பண்ணுறீங்க?” என்று அவளின் அடியையும் பொருட்படுத்தாது மேலும் வினவினாள்.

“ஏய் அபத்தமா உளறாதே டி?” என்றவனின் வார்த்தையை தொடர்ந்து பேசி வாக்குவாதம் செய்ய முடியாமல் சம்யுக்தா, தரன் இருவரும் அவர்கள் முன்பு வந்திருக்க முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே பயணம் செய்தனர்.

அர்ஜுன் காரை ஓட்ட அவன் அருகில் தரன் அமர்ந்திருந்தான்... முன் பக்க கண்ணாடி வழியாக அரசியை பார்க்க அப்போது தான் அவள் தோற்றத்தின் மாற்றமும் அவன் கண்ணில் தட்டுபட்டது.. உடல் நலிந்து இருக்க, முகம் வேதனையில் கசங்கி இருந்ததை கண்டு தானும் வேதனையுற்றான்... 'இதெல்லாம் யாராலே எல்லாம் உன்னால் தானே டி' என்று உள்ளத்திலும் அவளிடம் சண்டையிட்டு கொண்டான்.

“ஏன் டா வீட்டுல கல்யாண பஞ்சமா?” என்று ஆரம்பிக்க, தரன் அவனின் பேச்சு புரியாமல்...

“என்னடா சொல்ற?” என்று இயம்பினான்.

“வேற ஒண்ணுமில்லை உன் முறைப் பொண்ணு முன்னாடி பார்த்ததுக்கு ஒரு மடங்கு இளைச்சு தெரியுறாளே அதான் கேட்டேன்”

“அவளுக்கு சோறு போடாம மிச்சம் பண்ணி தான் நான் கோட்டை கட்டப் போறேனா?” என்ற தரன் கூற...

“அப்படி உங்களுக்கு என் புருஷன் மேல சந்தேகமா இருந்தா, தினமும் நீங்களே வீட்டுக்கு வந்து உங்க வருங்கால பொண்டாட்டிக்கு ஊட்டி விட்டுட்டு போங்க” என்று கணவனுக்கு வக்காளத்து வாங்கியவளின் பேச்சில் தரன், அர்ஜுன் இணைந்தே சிரித்தனர்... அரசியின் முகத்தில் அந்த சூழ்நிலையில் மருந்துக்கு கூட புன்னகை எழவில்லை.

வீட்டை அடைந்தும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே வளைய வந்த அரசியை கண்டு கணவனும், மனைவியும் பார்வை பரிமாறிக் கொள்ள தரன் அவளை அழைத்து பேசலானான்.

“அரசி ஏன் சரியா சாப்பிட மாட்டேங்குற? என்ன பிரச்சனை உனக்கு?” என்றவனின் கேள்விக்கு பதில் கூறாமல் முகம் வாடி தூங்கியிருக்க மௌனம் காத்தாள்.

“அர்ஜுன் பேசமாட்டேங்குறான்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கியா?” என்றதும் நெஞ்சை அடைத்த துக்கத்தை கட்டுப்படுத்த இயலாது விக்கி விக்கி கரையலானாள்.

“அரச! அரசி... ஏய் அழாதே” என்ற வார்த்தைகள் செவியில் விழாதது போன்று விசும்பியவளை கண்டு ஆயாசமாகிப் போனது... தரன் தன் மனைவியை ஏறெடுத்து பார்க்க, அவளோ சமாதானம் செய் என்று கண்களை அசைத்து ஜாடை காட்டினாள்.

அவனோ கெஞ்சுதலாக பார்க்க தானும் அவனுடன் இணைந்தவள்... “அரசி எதுக்காக அழற முதலில் அழறதை நிறுத்து” என்று உரக்க அதட்டினாள்... அவளின் குரலுக்கு சற்று பலனிருக்க கண்ணை துடைத்துக் கொண்டு விசும்பிக் கொண்டிருந்தவளை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இடைவெளி கொடுத்திருந்த வேளையில் சம்யுக்தாவின் அலைபேசி ஒலியெழுப்பியது...

“ஒரு முக்கியமான கால் அவாய்ட் பண்ண முடியாது, நான் பேசியே ஆகணும்”

“சரி நீ போ” என்றதும் அவள் பேசியை எடுத்துக் கொண்டு வேகமாக நகர்ந்திருந்தாள்.

“சொல்லு அரசி அர்ஜுன் பேசுறதில்லை, பார்க்கிறதில்லைன்னு உன்னை நீயே வருத்திகிட்டு இருக்கிறியா?”

“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை அண்ணா ஆனா கஷ்டமா இருக்கு”

“பைத்தியம்... அவன் யாரு உனக்கு? உனக்கு புருஷன் ஆகப் போறவன்... இப்போவே அப்படித் தான்... அதை யாரும் இல்லைன்னு சொல்லவும் முடியாது... அவன் பேசாட்டியும் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லலையே?”

“இல்லை ண்ணா இந்த கோபம் எதுக்காக? ஆதுவும் இவ்ளோ தூரம் கல்யாண ஏற்பாடு நடந்துட்டு இருக்கும் போது ஒரு வார்த்தை பேசினா கூட ஆறுதலா இருக்கும்... என்ன தான் மல்லிகா அத்தை அறிமுகம் ஆனவங்களா இருந்தாலும் நான் அந்த வீட்டு பெண்ணாகிட்டா எனக்கு முதல் உறவு அவர் தானே... அவரே இப்படி கோபத்தில் முகத்தை திருப்பிகிட்டு இருக்கிறதை பார்த்தா அவருக்கு என்மேல் விருப்பம் இல்லையோன்னு தோணுது”

“நீ யோசிக்கிறது ரொம்பத் தப்பு அரசி... முதல்ல இது மாதிரி யோசனையே உனக்கு வரக் கூடாது” என்றவனின் கூற்றை புரிந்துக் கொள்ள முடியாமல் மலங்க மலங்க விழித்தாள்.

“அவன் உன்னை உயிரா நேசிக்கிறான்... இந்த கோபமே அதன் வெளிபாடுதான்” என்று இன்முகத்துடன் கூறியவனை...

“இல்லை ண்ணா எனக்கு நிஜமாவே புரியலை?”

“உனக்கு நான் இதை சொல்லி புரிய வைக்கிற நிலைமையில் இல்லை... நீயே கொஞ்சம் நிதானமா யோசிச்சா உனக்கே புரியும் அதுக்கு உதாரணம் சொல்லனும்னா என்னையும், உன் அண்ணியும் எடுத்துக்கோ” என்றதும் சற்று சிந்தித்தவளுக்கு மூலையில் மின்னலடிக்க கண்களில் வெளிச்சம் வந்தது.

“என்ன புரிஞ்சதா?”

“ம்ம்ம்” என்று மேலும் கீழும் தலையசைக்க வாசலில் ஓர் முறை பார்வையை பதித்து விட்டு மனைவி வரவில்லை என்று உறுதியானதும் அதை அரசியிடம் கூறினான்.

“நானும், உன் அண்ணியும் எந்த மாதிரி ஒரு முரண்பாடான சூழ்நிலையில் நம்ம வீட்டுக்கு வந்தோம்ன்னு தெரியும்... எங்களுக்குள்ள ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும், அவள் என்னை விட்டு போனாளா? அப்படி போனாலும் அதற்கு நான் ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன்”

“சில விஷயங்கள் வார்த்தையா சொல்லி உணருவதை விட அனுபவத்தில் தான் உணரனும் அரசி... இப்போவும் உனக்கு அர்ஜுனை நினைச்சு ஏக்கமும், பயமும் போகலைன்னு புரியாது... ஆனால் இது தான் நிஜம், எல்லாம் போகப் போக சரியாகும்னு நம்பு... என்ன ஆனாலும் அவன் தான் உனக்கு புருஷன் மற்றதை நீங்க குடும்ப வாழ்க்கையில் போனதுக்கு அப்புறம் பார்த்துக்கோங்க” என்று நிதானமாக, தன்மையாக மிகவும் தெளிவாக எடுத்துரைத்து அவள் சிகையை ஆதுரத்துடன் நிரடிக் கொடுத்தவன்...

“போ! போய் நல்லா சாப்பிட்டு ஓய்வெடுக்கப் பாரு... கல்யாணப் பொண்ணு ரொம்ப சோர்ந்து இருந்தா வர சொந்தக்கராங்க ஆளாளுக்கு ஒரு புரணி பேசிட்டு திரியுவாங்க... அதனால் உங்களுக்குள்ள இருக்கிறதை வெளியில் காட்டிக்காம இருங்க அர்ஜுன் அதை பார்த்துக்குவான்... உன் பக்கம் நீ தான் பார்த்துக்கணும்”

“ம்ம்ம்... சரி ண்ணா” என்று விட்டு நகர்ந்தவளை...

“ஒரு நிமிஷம் அரசி” என்று நிறுத்தியவன்...

“நானா எல்லா நேரத்திலும் உனக்கான தேவையை பார்த்து பூர்த்தி செய்ய முடியாம போகலாம்... எனக்கான பொறுப்புகள் அத்தனை இருக்குன்னு உனக்கே தெரியும்... ஆனால் நீ கேட்க நினைச்சா என்னிடம் முடியலைன்னா உன் அண்ணியிடம் தாராளமா கேளு” என்றவனை தயக்கத்துடன் ஏறிட்டவளின் உதடுகள் துடிக்க...

“இல்லை ண்ணா அது தான் எனக்கான தேவைகளை நீங்களே பார்த்துப் பார்த்து செஞ்சிடுறீங்களே தேவையா இருந்தா பார்த்துக்கலாம்” என்று அவள் கூற வந்ததை முழுமையாக கூறாமல் மென்று விழுங்கியவளின் உள் மனதின் உறுத்தலை படிப்பித்து உணர்ந்தவன்...

“இங்கே பாரு அரசி எனக்கும், உன் அண்ணிக்கும் இடையில் என்ன இருந்தாலும் அது எங்களுக்குள் இருப்பது... இந்த குடும்பத்துக்கு நான் எப்படியோ அப்படி தான் அவளும், எனக்கான பொறுப்புகளில் அவளுக்கும் பங்கிருக்கு... அதனால் இனி நீ என்னானாலும் அவளிடம் தான் கேட்கிற” என்று ஆணையாக கூறியவன், வார்த்தையில் ஆமோதிப்பாக தலையசைத்துக் கொண்டு சென்றிருந்தாள்.

‘உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது’ புழக்கத்தில் இல்லாத உறவு நீடிக்காது கேட்காத கடன் திரும்ப வராது என்பதற்கேற்ப... சில உறவுக்குள் பாலம் அமைக்காவிட்டால் வாழ்க்கை பயணத்தில் சிக்கல் பிண்ணிக் கொள்ளும் என்று நன்கு அறிந்த கலாதரன் தேவையான போதெல்லாம் நேரடியாக மனைவியை நாடி அரசி தன் தேவைகளை கூறாமல் தயங்கி நின்றால் தன் மனைவிக்குண்டான ஆதிக்கமும் அக்குடும்பத்தில் குறைந்துவிடும், அரசியின் உறவும் தாமரை இல்லை தண்ணீர் போல் தொட்ட குறை விட்ட குறை ஆகிவிடும் அதற்கு வழி வகை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற தெளிவுடன் தான் அரசிக்கு சிறிதும் விலக்கின்றி ஆக்கினையிட்டிருந்தான்.



சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-23 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

கதையின் முதல் பாகம் இன்னும் நான்கு அத்தியாயத்தில் முடிவடையவுள்ளது மக்களே முழுதாக படிக்க ஆரம்பிப்பவர்கள் படிக்கலாம், டேக் செய்ய வேண்டுமென்றால் கமெண்டில் சொல்லவும்.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்

 
Status
Not open for further replies.
Top