All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-10
“நந்து நீ என்ன சொல்லுற? டிவோர்ஸ் ஆகி கையில் குழந்தையோட இருக்கிற ஒருத்தரையா காதலிக்கிற?”

“ஆமாம்!” சிறிதும் பிசிறில்லாது திடமாக கூறியவளின் வார்த்தையை வனிதா நம்ப முடியாதவளாக பார்த்திருந்தாள்.

“ஏய் நந்து நிஜிமா நீயா இப்படி சொல்லுற, என்னால் நம்பவே முடியலை? உங்க வீட்டில் இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க அதை யோசிச்சியா நீ? காதல் கல்யாணமே குதிரைக்கொம்பு இதில் கையில் ரெடிமேடா ஒரு குழந்தையை வைத்திருக்கிறவரை போய் சூஸ் பண்ணி இருக்க... ப்ளீஸ் நந்து நீ இதை இன்னொருவாட்டி நல்லா யோசிச்சு பரிசீலனை செய்து பாரு”

“நான் யோசிக்கிற கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டேன் வனி... என்னால் விக்ரம் இல்லாத ஒரு வாழ்க்கையை யோசித்தும் பார்க்க முடியலை?”

“ஏய் நந்து இது நிஜமாவே காதலா இருந்தா பரவாயில்லை... ஆனால் எனக்கு என்னவோ ஆதன் என்கிற சிறு பையன் மேல இருக்கிற அனுதாபமும், அவனுடைய அப்பா என்கிற காரணத்துக்காக நீ அவர் மேல காட்டுற பரிதாபமும் தான் தெரியுது”

“ஸ்டாப் இட் வனி” என்று சற்றே குரலை உயர்த்தியவளின் பேச்சில் மிரண்டவளாக வாய் மூடிக் கொண்டாள்.

“பரிதாபத்துக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாத பெண்ணில்லை நான்... பரிதாபமா இருந்திருந்தா விக்ரமிடம் பேச்சை வளர்த்து தினமும் அவரை சீண்டி அவருடன் பேச ஆர்வமா இருந்திருக்கமாட்டேன்... அவரை பார்த்து பேசினதில் இருந்து ஒவ்வொரு ராத்திரியும் அடுத்த நாள் என்ன பேசி பேச்சை வளர்க்கலாம்ன்னு தான் யோசிச்சிருக்கேன்”

“..............”

“அப்புறம் ஆதன் அவன் மேல அனுதாபம் மட்டும் தான்னா கண்டிப்பா இல்லை... அப்படி இருந்திருந்தா அவனுக்கு பின்னாடி இருந்து எப்படி வேணா ஆதரவு கொடுத்து அனுதாபத்தை போக்கி இருக்கலாம், அது எப்படி என்னால் முடியும்ன்னு உனக்கே தெரியும்... ஆனால் என்னால் அவனை என் மகனா தான் நினைக்க முடியுது அதனால் தானோ என்னவோ அவனை காப்பாற்ற முதலில் அவங்க அப்பாவான அவர்கிட்டே என் மனதை புரிய வைக்க முயற்சிக்கிறேன்” என்ற பதிலின் மறைப்பொருளை புரியாதவளா வனிதா... சுருக்கமாக நான் ஆதனுக்கு அம்மா என்றால் விக்ரமின் மனைவி, ஆதனுக்காக பேச மனைவியாகிய நான் விக்ரமிடம் தானே முறையிட வேண்டும் என்ற உரிமை தொக்கி நின்றதை ஸ்பஷ்டமாக விளக்கியதை நம்ப முடியாமல் பார்த்திருந்தவளை கண்டு கொள்ளாமல் மேலும்...

“இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா நான் இன்னும் என் மனதை விக்ரமிடம் சொல்லலை... அவரை பார்த்து பேசத்தான் இன்னைக்கும் நேரமே கிளம்பினேன் நீ இடையில் வந்து....”

“கெடுத்துட்டேன்... உங்க காதல் காவியத்தையும் அரங்கேற்ற முடியாமல் போயிருச்சு அப்படிதானே?” என்று கோபத்துடன் இடையிட்டவளின் பேச்சில் இருந்த காரம் அவளை திகிக்க வைத்தது.

“உன் வயசுக்கும், அவர் வயசுக்கும் இதெல்லாம் ஒத்துவருமான்னு ஆச்சு யோசிச்சியா?”

“ஏன் ஒத்து வராது எனக்கு இருபத்தி மூணு பத்து வருடம் வித்தயாசம் என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கூட இதே வயது வித்தியாசம் தான்”

“நீ முடிவே செய்துட்ட?”

“ஆமாம் வனி என்ன நடந்தாலும் சரி, யார் தடுத்தாலும் சரி என்னால் விக்ரமையும், ஆதனையும் விட்டுக் கொடுக்க முடியாது... எனக்கும் அவருக்கும் ஆதன் தான் மூத்த மகன்... எனக்கு பிறக்கிற குழந்தை ஆணோ, பெண்ணோ எதுவா இருந்தாலும் ஆதனுக்கு தங்கையோ, தம்பியோ தான்” தோழியின் பேச்சை கேட்ட வனிதாவுக்கு அவளை தடுத்து நிறுத்தும் எல்லைகளை கடந்த உறுதியை மேற்கொண்டுவிட்டாள், இனி அந்த கடவுளே நினைத்தாலும் அவளின் முடிவை தடுக்க இயலாது என்று புரிந்துக் கொண்டவள்...

“காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லிருக்காங்க அதை இப்போதான் நேரில் பார்க்கிறேன்... கண்ணை திறந்து வச்சுட்டே பாழுங்கிணற்றில் விழுவேன்னு சொல்கிறவளை தடுக்குறதும், சுவற்றில் தலையை முட்டிகிறதும் ஒண்ணுதான்”

“எல்லாம் சரிதான் ஆனால் கடைசியா ஒரே ஒரு கேள்வி மட்டும் என் மனசை உறுத்துது அதுக்கு மட்டும் பதில் சொல்” என்றவளை வார்த்தையால் அல்லாமல் பார்வையாலேயே என்னவென்று விசாரித்தவளை தொடர்ந்து...

“சப்போஸ் உன் மனசை அவர்கிட்டே சொல்லி ஒருவேளை நிராகரிச்சுட்டா என்ன செய்கிறதா உத்தேசம்?”

“அதுக்கு நூறு சதவீதம் வாய்ப்பிருக்கு” என்றவளை உறுத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே தன் பேச்சை தொடர்ந்தாள்...

“ஆனால், அதையும் தாண்டி அவர் மனசில் நான் இருக்கிறேன், அதை நான் உறுதியா சொல்லுவேன்... அவர் மறுக்க காரணம் வச்சிருக்கிற மாதிரி, அவரை விட முடியாதுன்னு நான் காரணம் வச்சிருக்கமாட்டேனா? இந்த நந்தினி எதிலும் வெற்றி அடைஞ்சு தான் பழக்கம்... அதுவும் யாரையும் நோகடிக்காத, யாருக்கும் தீங்கு நினைக்காத வெற்றியா தான் இருக்கும்... அதே போல அதில் உள்ள நன்மைகள் இதுக்கு எனக்கு உதவி செய்யும்கிற நம்பிக்கை தான் வனிதா... சப்போஸ் நீ கேட்கிற மாதிரி ஒரு வேளை விக்ரம் என்னை ஒரேடியா நிராகரிச்சுட்டாருன்னா.......” என்றவள் இடைவெளி விட்டு நிறுத்த வனிதா என்ன கூறுவாளோ என்று எதிர்நோக்கி கொண்டிருக்கும் சமயம்,

“இந்த நந்தினி வாழ்ந்தான்னு ஊர் உலகம் பேசிக்கும்” என்றவளின் வார்த்தையை கேட்ட வனிதாவுக்கு அதிர்வும், சினமும் ஒருசேர எழுந்தது.

“நீ இதுக்கு முன்னாடி பேசினதை கூட நான் ஓரளவு ஏற்றுக் கொள்ளுவேன் நந்தினி... ஆனால் இப்போ சொன்ன பாரு பெற்று வளர்த்த அம்மா, அப்பா, கூட படிச்ச தோழிங்க நாங்க, உன் உறவுக்காரங்க அத்தனையும் மறந்து அந்த விக்ரம்காக உயிரை விடுவேன்னா நீ அடிமுட்டாள் நந்தினி” என்று ஆவேசமாக சீறியவள் தோழியின் பேச்சை தாங்க முடியாமல் கண் கலங்கியபடி விரசாக சென்றுவிட்டாள்.


****************

நந்தினிக்கு தோழியின் கோபத்தை விட, விக்ரம் அவள் நேசத்தை புரிந்து கொள்ள வேண்டுமே என்ற கவலை தான் பெரிதாக தொக்கி நின்று அவள் மனதை அரித்து கொண்டிருந்தது... எப்போதடா வகுப்புகள் முடியும் என்று காத்திருந்த நந்தினி மதியத்திற்கு மேல் இரண்டு வகுப்புகளை கட்டடித்துவிட எண்ணி...

“வனி என்னால் இதற்குமேல ஒரு கிளாசையும் கவனிக்க முடியாது டி, நான் சீக்கிரமே கிளம்பிப் போய் விக்ரம்கிட்டே பேசணும் சாரி நான் கிளம்புறேன்” என்றவள் தோழியின் பாராமுகத்தையும் பதிலையும் எண்ணிப் பாராமலே வேகமாக சென்றுவிட்டிருந்தாள்.

அவளின் அந்த வேகத்தை கண்ட வனிதாவுக்கு தோழியின் வாழ்க்கை என்னாகுமோ என்ற அச்சம் தொக்கி நிற்க... “கடவுளே எப்படியாச்சும் அவள் புத்தியை சரி செய்துவிடு” என்று வேண்டிக் கொள்ளத்தான் முடிந்தது.

நந்தினி கல்லூரியில் இருந்து புறப்பட்டு வெளியேறியவளுக்கு இதயம் ரயில் தண்டவாளம் போல் படபடத்தது. மரத்தின் நிழலில் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்து அவனுக்கு தொடர்புக் கொண்டவள் எதிர்முனையில் அவன் குரல் கணகம்பீரமாக... “ஹலோ!” என்றதும் வெய்துறலில் நடுங்கினாள்.

“அய்யயோ பேசணும்னு போன் பண்ணிட்டு இப்படி நிற்கிறோமே... நந்து பேசு இதுக்கு மேல பேசாமல் விட்ட நிச்சயம் பின்னால் வருத்தப்படப் போறது நீ தான்” என்று திடசித்தம் கொண்டவள்...

“நான்... நான்... நந்தினி பேசுறேன் உங்ககிட்டே பேசணும் நேரில் வர முடியுமா” என்று திக்கித் திணறியவளின் குரலில் விக்ரமின் மனம் அனைத்து உறுதியையும் தட்டி தூக்கி எறிந்து அவனை ஆட்டி வைத்தது.

அவளை இப்போது தவிர்த்தால் அது அவள் வாழ்க்கைக்கு சிக்கலை உண்டாக்கும், இதே அவளுடன் பேசி அவள் மனதில் இருக்கும் விருப்பம் நிறைவேற வாய்ப்பில்லை என்று கூறிவிட்டால் தான் நாம் அவள் வாழ்க்கை சீராக்க செய்யும் நன்மை என்று வேகமாக யோசித்தவன்...

“எங்கே வரனும்?” சுருக்கமாக நான் உன்னுடன் பேசத் தயார் நீயே இடத்தை தேர்ந்தெடுத்து சொல் என்ற அர்த்தம் தொக்கி இருந்ததில் வேகமாக எங்கே சந்திக்கலாம் என்று யோசித்தவள்...

“சரஸ்வதி மஹால் லைப்ரரி வந்திருங்க” என்றதும் இணைப்பை துண்டித்துவிட்டு அங்கே சென்று காத்திருக்கலானாள்.

நந்தினிக்கு விக்ரமுடன் பேசியாக வேண்டும் அதே சமயம் தெரிந்தவர்கள் கண்ணில் பட்டாலும் எதார்த்தமாக இருக்க வேண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

விக்ரம் சரியாக அடுத்த பதினைந்தாவது நிமிடம் அவள் சொன்ன இடத்தில் பிரசன்னமாகினான். நேரில் அவனை கண்ட நந்தினிக்கு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி கூட்டம் பறப்பது பிரமை உண்டானது. அவனிடம் பேச வேண்டும் என்று கூறி வரவழைத்து விட்டாள் தான், ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தயக்கமும், பதட்டமும் ஊடே ஒட்டிக் கொண்டது.

அவனுக்கும் அவளிடம் பேச ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்த போதிலும் அவனுக்கு விதியால் இழைக்கப்பட்ட கோரமான கடந்த காலம் தளையிட்டது. அவளை பார்வையால் ஊடுருவியபடியே மனோதிடத்துடன் அருகில் நெருங்கியவன்...

“சொல்லுங்க மிஸ்.நந்தினி பேசணும்னு கூப்பிட்டீங்க?” என்று அவளின் பதட்டம் புரிந்தவனாக அவனே ஆரம்பித்து வைக்க, நந்தினி வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் அவனை கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்... அவளின் கூர்வாள் பார்வையில் அவன் திடம் இப்போதோ அப்போதோ உடைந்து விடும் என்பது போல் உலுக்கிக் கொண்டிருந்தது.

“என்ன விஷயம்ன்னு தெரியாமல் தான் நான் பேசணும்னு சொன்னதும் ஓடி வந்தீங்களா?” அவளின் கூர்மையான கேள்வியில் இப்போது தடுமாறுவது விக்ரமின் முறையானது.

“சொல்லுங்க மிஸ்டர்.விக்ரம்! என்ன வாயடைச்சு போயிட்டீங்க?”

“..................” அவளின் கேள்விக்கு பதிலளிக்காமல் தரையை பார்த்தபடி மெளனமாக இருந்தான்.

“உங்க மனசை மறைச்சு என்ன சொல்லலாம்ன்னு யோசிக்கறீங்களா?” என்றதும் விழுக்கென்று தன் பார்வையை உயர்த்தியவன்...

“என்ன மிஸ். நந்தினி என்னனமோ உளருறீங்க? என்கூட பேசணும்னு கால் பண்ணி கூப்பிட்டது நீங்க, இப்படி பேச வேண்டிய விஷயத்தை பேசாமல் ஏதோ டீன் ஏஜ் லவரை பார்க்க வந்த மாதிரி கேள்விக் கேட்குறீங்க?” என்று வேடிக்கை பேசி சிரித்தவனின் சொல்லில் நந்தினிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
இதே அவள் வேறொரு நேரமாக இருந்திருந்தாள், அவனின் இந்த பேச்சுக்கு அவளும் குறும்புத்தனமாக சீண்டி அவனுடன் வம்பு வளர்த்து வாயாடியிருந்திருப்பாள்... ஆனால் இப்போதோ அவளின் வாழ்க்கை, ஆதனின் பிரிவு, அவனின் நலன் என வரிசை கட்டிக் கொண்டு நிற்கும் காரியத்தை நினைவில் கொண்டு பேசலானாள்...

“நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்குவோமே... டீன் ஏஜ் காதல் சிலது அறிவற்ற மோகத்தால் ஏற்படுறது... ஆனால் என் வயதும் உங்க வயதும் அதை தாண்டிய முதிர்ச்சி உள்ள வயது தான் நான் உங்களை விரும்புறேன் விக்ரம்” என்று சிதறு தேங்காயை உடைப்பது போல் பகிரங்கமாக தன் மனதை உடைத்து விளம்பியவளின் பேச்சில் அவன் ஆடிப்போனான்.

என்ன தான் நந்தினி குறும்புக்கார துணிச்சலான பெண் என்றாலும் தன் மனதை திறக்கும் வேளை எப்படியும் தடுமாறிப் போவாள்... அச்சமயம் அவள் எண்ணத்தை சிப்பியில் இருந்து திறக்கப்படாத முத்தை போல் கடலிலேயே வீசி எறிந்து விடலாம் என்றெல்லாம் சுலபமாக சிந்தித்து வைத்துக் கொண்டு அவளை சந்திக்க வந்தவனுக்கு, இப்படி அவள் பட்டவார்த்தனமாக மனதை உடைத்து பிரஸ்தாபித்தவளின் கூற்றில் அவனுள் மரித்திருந்த உயிரை உயிர்பித்திருக்க செய்திருக்க, அவளின் நேசத்தை நிராகரிக்க வேண்டுமா என்ற கழிவிறக்கத்தில் அனலில் பட்ட மெழுகாய் உருகி கரைந்துக் கொண்டிருந்தான்.

நந்தினியின் மேல் கொண்ட நேசத்தை வெளிப்படுத்தி அவளுக்கு ஏதேனும் சிக்கல் நேர்ந்துவிட்டால் எங்கே தன் ஜீவன் தொலைந்துவிடுமோ என்று கிலேசம் கொண்டு மறுகித் துடித்தவன்... தன்னை நம்பி இருக்கும் மகனும், அவன் கைவசம் உள்ள தொழிலும், அதற்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களையும் நினைவிற்கு கொண்டு வந்தவன் தன்னை எதற்காகவும் இளகி விடக்கூடாது என்பதை தீர்மானம் மேற்கொண்டு விட்டிருந்தான்.

“நீ புத்திசாலி பொண்ணுன்னு நினைச்சேன் நந்தினி கடைசியில் நீயும் இப்படி சராசரி பெண்ணை போல் என் வசதிக்காக வளைத்துப் போட பார்க்கிற? அதுவும் எனக்கும் என் மகனுக்கும் உள்ள பலவீனத்தை காட்டியா உன் காதலை சொல்லி கொச்சப்படுத்திக்கணும்” அனல் கங்குகள் என்று தெரிந்தே, தன் உள்ளத்தை மறைக்க வேண்டி நாவு கூசாமல் வார்த்தைகளை விட்டவனை கண்டு சிறிதும் அயர்ந்து போகாது, தீட்சண்யம் மாறாத முகத்துடன் கூர் விழிகளால் அவனை வெட்டிக் கொண்டிருந்தவள்...

“மனசாட்சியை வித்து தின்னுட்டு பேசாதீங்க விக்ரம்... யார் நான் உங்களை நேசிக்காமல் உங்க வசதியை நேசிக்கிற ஆளா? ஆதன் மேல இருக்கிற பரிதாபமும், இரக்கமும் தான் உங்க மேல விருப்பப்பட காரணமா அமைஞ்சுதா? உங்க பணத்துக்காக தான் தினமும் உங்களை தேடி வந்து உங்ககிட்ட தனிப்பட்ட முறையில் பேசணும்னு விரும்பினேனா?” அவள் கனத்த குரலில் அழுத்தம் மிகுந்திருந்தது.

“இருக்கலாம்... என்னுடைய பணபலத்தை அனுபவிக்க எப்படியாச்சும் என்னுடன் நெருங்கணும்னு நீ நினைச்சிருக்கலாம்” என்று அப்போதும் இரக்கமில்லாமல் அவள் மேல் அபண்டாமாக பழி சுமத்தியவனை நெருங்கி நின்றவள், அவன் என்னவென்று சுதாரிக்கும் முன் அவன் கரத்தை தன் கரத்துடன் வைத்து அழுத்திக் கொண்டவள்...

“இப்போ சொல்லுங்க நீங்க சொன்ன மாதிரியே நான் உங்க வசதிக்காகவும், ஆதன் மேல கொண்ட இரக்கத்துக்காகவும் தான் உங்களை காதலிக்கிறேன்னு என் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க” என்றவளின் எதிர்பாரத செயலில் விக்கித்து போனான்!

அவளை காயப்படுத்த வேண்டி நெருஞ்சி முட்கள் போல் வார்த்தையை வீசியவனால் அவளின் சத்திய பிரமாணத்தை எதிர்கொள்ளவும் சிந்தை சல்லடையானது.

அக்கம் பக்கம் ஆள் நடமாட்டம் ஒன்றிரண்டு பேர் அவர்களை கண்ணுற்று கொண்டே சென்றது, அவனுக்கு கோபத்தை விளைவிக்க செய்ய வெடுக்கென்று கரத்தை உருவிக் கொள்ள முயன்றவனின் செயலை முறியடிக்கும் பொருட்டு அவள் கரத்தின் அழுத்தத்தை கூட்டியிருந்தாள்.

“பைத்தியக்காரத்தனமா பிஹேவ் பண்ணாதே நந்தினி... நீ ஒரு பிஜி ஸ்டுடெண்ட் அதை மனசில் வச்சுக்கிட்டு சூழ்நிலையும் கருத்தில் கொண்டு புத்திசாலித்தனமா நடந்துக்கோ” அவள் கைகளில் சிக்கிக் கொண்டிருந்த கரத்தை உருவும் முயற்சியில் முனைந்தப்படியே சினந்தான்.

“நான் பைத்தியக்காரியாவே இருந்துட்டு போகிறேன்... அதனால் ஒரு குறையும் இல்லை... ஆனால் எனக்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் வரணும், வந்தே ஆகணும்” என்று அழுத்தமாக நின்றவளின் முன் இனி தன் நிதானமும், பொறுமையும் வேலைக்காகாது என்றுணர்ந்து தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி கரத்தை உருவிக் கொண்டவன், அவள் கன்னத்தில் சப்பென்று அறைந்துவிட்டிருந்தான்.

அவனின் எதிர்பாராத அந்த தாக்குதலில் நந்தினி அரண்டு போனாள்!

அவளை அடித்தும் ஆத்திரம் தீராத விக்ரமின் பார்வை, அப்போதும் அவள் மேல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்க...

“அறிவிருக்கா டி உனக்கு” என்று உறுமியவனின் வார்த்தையில் உள்ளுக்குள் உதறினாலும் அவனின் டி என்ற உரிமையான அழைப்பு இனித்தது.

“இது நீயும் நானும் பிறந்து வளர்ந்த ஊரு, இங்கே உனக்கும் எனக்கும் தெரிஞ்சவங்க யார் வேணா எந்த மூலையில் வேணாலும் இருப்பாங்க... யார் கண்ணிலேயும் சுலபமாப்பட்டு விடுவோம்... அப்படி சிக்கினா நிலைமை என்னாகும்ன்னு யோச்சியா முட்டாள்” கடிந்த பற்களுகிடையே வார்த்தையை துப்ப கணத்தில் தன்னை சமாளித்துக் கொண்டு கூர்மையாக பார்த்தவள்...

“ஏன் உங்களுக்கு என்னால் கெட்ட பெயர் வந்திரும்னு தான் என்னை புறக்கணிக்க நினைக்கறீங்களா?” சுள்ளென்று வினவ, சம்மந்தமின்றி இயம்பும் அவளை என்ன செய்தால் தகும் என்பது போல் உறுத்து விழித்தவன்...

“உன் தலை” என்று சீறினான்.

“இந்த சூழ்நிலையில் அடிப்பட்டு போறது என் வாழ்க்கையா? உன் வாழ்க்கையா...? என்னுடையே கதையே வேற... என் வாழ்க்கை உடைஞ்ச கண்ணாடி... அப்படியே என்னை பற்றி பேசினாலும் எனக்கு அதை பற்றிய கவலை இல்லை... ஆனால் உன் நிலைமையை யோசிச்சு பார்த்தியா?”

“பார்க்காமல் இருப்பேனா?” வேகமாக வந்த பதிலில்...

“அப்புறம் எதுக்காக இப்படி பொது இடத்தில் வச்சு என் கை பிடிச்சு ரகளை பண்ணிட்டு இருக்கிற? யாராவது பார்த்தா நீ கையை பிடிச்சேன்னு சொல்லமாட்டாங்க நான் தான் கைபிடிச்சு இழுத்தேன்னு சொல்வாங்க... இது நான் எனக்காக சொல்லலை உனக்காக சொல்றேன்”

“எதுவா இருந்தாலும் எனக்கு அது சாதகம் தான் அப்போவாச்சும் என்னை நீங்க ஏற்றுக்குவீங்க தானே” நயந்த குரலில் விளம்பியவளின் வார்த்தைகள் அவன் மேல் கொண்ட நேசத்தின் அளவை பிரகடனம் செய்திருந்தது.

அவளுடனான உரையாடல் நீடிக்க நீடிக்க அவளை அவன் வாழ்விலிருந்து புறக்கணிக்க வைக்கும் மனோதிடம் குறைவதை உணர்ந்தவன் தன் முகத்தில் கடினத்தை திரளாக திரட்டி கொண்டு பேசலானான்.

“உன்னை புத்திசாலி, துணிச்சலான பெண் எதையும் சமயோஜிதமா யோசிச்சு முடிவெடுப்பேன்னு உயர்வான ஒரு இடத்தில் வச்சிருக்கேன் தயவுசெய்து அதை சீர் குலைச்சுராதே” என்க...

“சோ, நான் மட்டமான பொண்ணுன்னு முடிவு செய்ததால் தான் என்னை விலக்கி வைக்க பார்க்கிறீங்களா?” என்று அவனுடைய எந்த உணர்ச்சிக்கும் அசைந்து கொடுக்காது பதிலுக்கு பதில் பேசி அவன் பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள் நந்தினி.
“இங்கே பாரு இப்படி முட்டாள்தனமா பேசி என்னை கடுப்பேத்தாதே... அன்னைக்கு ஆதனை கூட்டிட்டு கடைக்கு போயிருக்க, அது மட்டுமா பெற்ற அப்பாவான என்னிடம் கூட சொல்லாமல் உன் வீட்டுக்கும் கூட்டிட்டு போயிருக்க... என் அப்பாவோட பிரெண்ட் ராஜ் அங்கிள் கூப்பிட்டு எனக்கு மேரேஜ் ஆகிருச்சுன்னு நினைச்சு உன்னை என் மனைவின்னு நினைச்சுக்கிட்டாரு, நல்லவேளை அவர் அதையும் வெளியில் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு என்னிடம் வராமல் நேரடியாக என்கிட்டேயே கேட்கப் போய் நான் அவருக்கு விளக்கமா எல்லாத்தையும் சொன்னேன்... இல்லைன்னா, இதே போல நாளைக்கு உன் வீட்டிலேயும் கேட்கலாம் அப்போ உன்னை பெத்தவங்க கிட்ட என்ன சொல்லி சமாளிப்ப?”

“நான் உங்களை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை உங்களை தான் பண்ணிக்குவேன், என் புருஷன் நீங்க தான்னு சொல்லுவேன்” எதற்கும் அசராமல், அவனின் கோபத்தையும் சட்டை செய்யாமல் தன் சித்தம் நிறைவேறினால் போதும் என்பது போல் அழுத்தம் திருத்தமாக கூறியவளின் பேச்சில் அசைவற்று நின்றுவிட்டான்.

என்ன தான் முகத்தில் முள்ளை கட்டிக் கொண்டு பேசினாலும், எதற்கு அசராமல் வார்த்தையாலேயே அவனை வீழ்த்திக் கொண்டிருந்தவளை சோர்ந்து பார்த்தான்... அவள் விழிகளில் வழிந்த காதல் அவன் சிந்தையை சடைத்துக் கொண்டிருந்தது.
இனி என்ன பேசினாலும் அவள் அதற்கு ஏற்றவாறு பதிலுரைத்துக் கொண்டே தான் இருப்பாள், அவளை தட்டிக் கழிக்க எண்ணுவதை விடவும் சிறந்தது நாம் நம் கருத்தில் உறுதியாக நின்று அவளிடம் விலக முயற்சிப்பது தான் உசிதம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
“இதே மாதிரி நீ பேசிக்கிட்டே இருந்த அடுத்த நிமிஷமே நானும் என் மகனும் ஊரை விட்டு போயிருவோம்” அதற்கும் அசராத நந்தினி உதட்டை ஓரமாக வளைத்து இறுகிய புன்னகையை சிந்தியவள்...

“உங்களால் அது முடியாது... நினைச்சா ஊர் விட்டு ஊர் மாறிப் போக நீங்க நாடோடி இல்லை விக்ரம்... அது மட்டுமில்லாமல் என்கிட்ட நேரடியா பொய் பேசுற உங்களால் நான் நகர்ந்ததும் இதே போல இருக்க முடியாது... நீங்க அப்படி இருக்கவும்மாட்டீங்க என்னை நினைச்சு வேதனைப்பட்டு மனசு வலி தாங்காம துடிப்பீங்க”

ஏதோ அவனுடன் காலம் காலமாக வாழ்ந்தவள் போல் அவனை பற்றி படித்து வரித்து இயம்பியவளின் கூற்றில் அவன் அடித்தளம் ஆட்டம் காண ஆரம்பித்தது, சிந்தையை பாறையாக்கிக் கொண்டு அவள் விழிகளை சந்தித்தவன்...

“இப்போ மணி நாலு, நாளைக்கு இதே நாலு மணி வரைக்கும் தான் டைம் அதுக்குள்ள என் மேல் உள்ள விருப்பத்தை மறந்து தூக்கி எறிஞ்சுட்டு உன் வாழ்க்கையை பார்க்கிற வழியை பார்க்கணும்... அதை நீ என்னிடம் சொல்லிட்டு போயிறனும் இல்லைன்னா....” என்றவன் இடைவெளி விட...

“இல்லைன்னா என்ன செய்வீங்க?” திண்ணக்கமாக வினவியவளிடம்...

“நானும், என் மகனும் ஊரை விட்டு மட்டுமில்ல நாடு விட்டு நாடே மாறிப் போயிருவோம்” என்றவன் அவள் வலது கரத்தை இழுத்து பிடித்து தன் கரத்தை அவள் உள்ளங்கையில் பதித்தவன்...


“இது சத்தியம்! என் தொழில் மற்ற விஷயங்களை வெளியில் இருந்து நடத்த கூடிய சாத்திய கூற்றுகள் இன்னைக்கு தொழில்நுட்பத்தில் ரொம்ப சுலபம்னு உனக்கே தெரியும், அதை நடத்த கூடிய பின்புலம் என்கிட்டே உறுதியா இருக்குன்னும் உனக்கு நல்லாவே தெரியும்” ஒருங்கிணைந்த திடத்துடன் மொழிந்தவனின் வார்த்தையில் நிலைக்குலைந்தாள் பேதை!!!

************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-10 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-11

நந்தினியிடம் பேசிவிட்டு வந்த விக்ரம் தனிமையில் மறுகிக் கொண்டிருந்தான்... அவளுடன் பேசியவற்றை ஆசைப் போட்டுக் கொண்டிருந்தான்... அவள் மேல் வைத்திருக்கும் தன் நேசத்தை வெளிபடுத்த முடியாமல் போனதன் இயலாமை சினமாக சிலிர்த்தெழ உன்மத்தம் பிடித்தவன் போல் வாகனத்தை செலுத்தினான்... தனக்கு ஏன் இந்த நிலைமை என்று விதியையும் நொந்து கொண்டிருந்தவன் சித்தம் சிதிலமடைந்திருந்தது.

ஒன்றுமறியாத மழலையான ஆதனையே அடக்கி நந்தினியின் மேல் இருந்த பற்றை திசைமாற்றி வைத்திருந்தவனுக்கு, தன் மனதை அடக்கும் வல்லமையை நந்தினியின் அன்பு களவாடிச் சென்றதை வேடிக்கை தான் காண முடிந்தது.

டன் கணக்கில் இருக்கும் அனல் கங்குகளை ஒன்றாய் ஒரே சமயம் அவள் தலையில் கொட்டுவது என்று தெரிந்தே வார்த்தைகள் சிதறடித்துவிட்டு சென்றிருந்த விக்ரமை எண்ணி எண்ணி அவலத்தில் சேதம் ஆகிக் கொண்டிருந்தாள் நந்தினி... எப்படி வீடு வந்து சேர்ந்தாளோ, அவளே அறியாது தன்னறைக்குள் புகுந்தவளுக்கு மஞ்சத்தில் குப்புறப்படுத்துக் கொண்டு தன் துயரத்தை கண்ணீரில் ஆற்றிக் கொண்டிருந்தாள். அவனை போலவே, அவளும் மனதை மறைத்து அவனை புறக்கணித்து செல்ல ஏனோ அவளால் முடிந்திருக்கவில்லை.

“புளுகுமூட்டை... அப்படி வார்த்தையால் பேசித்தான் என்னை ஒதுக்கி வைக்கணுமா? அதுக்கு என்னை ஏத்துகிட்டு வருவது வரட்டும்ன்னு துணிச்சலா போராடிட்டு போயிரலாமே ஃபிராடு” அலைபேசியில் இருந்த அவனின் புகைப்படத்தை பார்த்தபடி அவனை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

எத்துனை நேரம் அப்படியே இருந்தாளோ அவள் அன்னையின் குரல்... “நந்தினி கதவை திறடி என்ன ஆச்சு உனக்கு?” என்றதும் தான் சூழ்நிலையை கருத்தில் கொண்டிருந்தவள், வேகமாக தன்னை சரி செய்துக் கொண்டு அறைக் கதவை நீக்கி இருந்தாள்.

என்னதான் சரி செய்துக் கொண்டதாக எண்ணினாலும் அழுகையினால் அவளின் இமைகள் தடித்து வீங்கியிருப்பது காட்டிக் கொடுத்திருக்க பதறிப் போன அவள் அன்னை ரேவதி...

“நந்தினி கண்ணு என்னடா ஆச்சு கண்ணெல்லாம் இப்படி வீங்கியிருக்கு?” என்று பரிகாசமான விசாரிப்பு அவளுள் இருந்த துக்கத்தை அதிகப்படுத்தியது.

அப்போது மட்டும் அவள் அன்னையிடம் தன் மனபாரத்தை இறக்கி வைக்க முயன்றால், நிச்சயம் எளிதில் அவளை வெளியில் அனுப்பமாட்டார்கள் என்றெண்ணி சுதாரித்துக் கொண்டவள்...

“ஒரே தலைவலியா இருக்கும்மா நாளைக்கு நான் முக்கியமான அசைன்மென்ட் சப்மிட் பண்ணியாகணும், அதுதான் முடியாமல் அழுதுட்டேன்” என்று சமாளித்திருந்தாள்.

“அவ்ளோதானா! நான் என்னமோ ஏதோன்னு நினைச்சு பயந்து போயிட்டேன்... சரி சரி சாயந்தரம் அக்கா வரேன்னு சொன்னா, அவளுக்காக பலகாரம் பண்ணிட்டு இருக்கிறேன், காபி போட்டு தரேன் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு, நான் அடுப்படியில் வேலை முடிச்சுட்டு வந்து உனக்கு தைலம் தேய்ச்சுவிடுறேன்” என்று விட்டு சென்றிருக்க அதன் பிறகு தான் நந்தினிக்கு மூச்சே வந்தது.

முகம் கழுவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவளிடம் அன்னை கொடுத்த காஃபி தேனாமிர்தமாய் உள்ளே இறங்கியதும் தான் அவளால் தெளிவாக சிந்திக்கவே முடிந்தது.

அவள் தமக்கை வரும் முன் நாம் தெளிவடைந்துவிட வேண்டும் இல்லையெனில், அவள் குதர்க்கமாக கேள்வி கேட்டு தன்னை கண்டுபிடித்து விடுவாள் என்று எண்ணம் தோன்றியதும்... அவள் அன்னையிடம் படிப்பதாக கூறிவிட்டு மாடியில் இருந்த ஒற்றை அறைக்கு சென்று தனிமையில் அமர்ந்து யோசிக்கலானாள்.

அலைபேசியில் இருந்த விக்ரமும், ஆதனும் அவளுடனே இருப்பது போல் தோன்ற தன்னையும் அறியாமல் அவள் உதடுகள் புன்னகையில் விரிந்தது.

“உங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சு போறதா? இனிமேலா... அது இனி முடியாத காரியம்” என்று கூறிக் கொண்டவள் அவன் எண்ணிற்கு அழைக்கலாமா என்று எடுத்தவள் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.

அப்போதுதான் ஆதன் என்ன ஆனானோ இரண்டு நாட்களாக என்னை பார்க்காமல் இருக்கிறானே, அவனுமா என்னை தேடவில்லை என்ற விசனம் மேலோங்கியது. அன்றைய உரையாடல்களை அசைபோட்டு கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் அந்த விஷயம் அவள் மூலையில் மின்னல் வெட்டியது.

விக்ரம் நந்தினியை அறைந்ததும், அவளை டி போட்டு அழைத்ததும் கோபம் என்று புரிந்தாலும்... அந்த கோபம் எதனால் வந்தது, அவள் மேல் உரிமையினால் ஏற்பட்டது... எங்கே அவள் வாழ்க்கையில் விரிசல் விழுந்துவிடுமோ என்ற அக்கறை தானே.

தன் மேல் நேசமே இல்லாதவனுக்கு அக்கறை எங்கிருந்து வரும், சரி தான் போ என்று விட்டேரியாக தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டிருப்பானே அவன் குணம் அப்படிப்பட்டது தானே.

அவள் அவன் கரத்தை தன்னுள் அடக்கி இருந்த போதும் அவன் அத்தனை எளிதாக அவளிடமிருந்த அவன் கரத்தைப் உருவிக் கொள்ள முயற்சிக்கவில்லையே... அவனின் ஆண் தேக பலத்திற்கு முன் பூங்கொடி போல் உள்ள அவளின் தேக வலிமையா பலம் வாய்ந்தது... அவன் நினைத்திருந்தால் அவள் அவன் கரத்தை பிடிக்கும் போதே அவன் முயற்சியில் எளிதாக தட்டி விட்டிருக்கலாம் தானே, அத்தனையும் அவன் போடும் வேஷம் என்று ஸ்பஷ்டமாக அவன் மனதை விளங்கிக் கொண்டதில் சோர்வும், தெம்பும் ஒரு சேர எழுந்தது.

அவன் அவளுக்கு கொடுத்த கெடுவை சிந்தித்தவளுக்கு விசனம் தொக்கி கொண்டது... என்ன தான் அவனை தடுத்துவிடலாம் என்று காதல் நெஞ்சம் கிலேசம் கொண்டாலும் மனதின் ஓர் மூலையில் கலக்கம் வியாபித்து கொண்டு தான் இருந்தது.


****************

ஆதன் இரண்டு நாட்களாக வெளியில் சுற்றிக் கொண்டிருந்ததில் நந்தினியை மறந்திருந்தவன், அன்று அவளின் நினைவு தோன்றிவிடவே நந்தினியை கேட்டு தந்தையிடமும், கண்ணம்மாவிடமும் நச்சரித்து கொண்டிருந்தான்.

“ஆதன் உன்கிட்டே என்ன சொல்லியிருக்கேன் அவங்களை இனிமே நந்தினி ஆண்டின்னு தான் கூப்பிடுற” என்று அதட்டியவனிடம் உதடு பிதுக்கி அழுகையை தொடங்க கண்ணம்மாவிற்கு அடிமனம் வெதும்பியது.

“நந்தினி ம்மா வேணும்” என்று கண்கள் கலங்கி அழுகையில் பிதற்றியவனை கடுமையாக முறைத்துவிட்டு அவனே அடங்கட்டும் என்று விட்டு நகர்ந்திருக்க கண்ணம்மாவிடம் நச்சரிப்பை தொடங்கினான்.

கண்ணம்மாவும் எத்தனையோ சமாதானங்கள் கூறியும், நாளை நந்தினியிடம் அழைத்துச் செல்வதாக கூறியும் சட்டை செய்யாமல் தன் பிடிவாதத்தில் நின்றான்.

இரவு உணவையும் உண்ணமாட்டேன் என்று அடம் பிடிக்க... “நீங்க கொடுங்க கண்ணம்மா நானே அவனுக்கு ஊட்டிவிட்டுக்குறேன்” என்றதும் அவனிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள விக்ரம் மகனிடம் பதவிசாக பேசி கொஞ்சியும், கெஞ்சியும் தான் ஊட்ட முயற்சித்தான்.

ஆனால் எதையும் நான் கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றவன்... “எனக்கு நந்தினி ம்மா வேணும் இல்லைன்னா சாப்பாடும் வேணாம்” என்று தேய்ந்த ரெகார்டை போல் திரும்பத் திரும்பத் கூறியவனின் வீம்பு நந்தினியின் தோற்றத்தை அட்சரம் பிசகாமல் நினைவுறுத்தியது... பெயருக்கு தான் அவன் அன்னை என்று அழைக்கிறான், அவளும் அப்படித் தானே என்று கருதிக் கொண்டிருந்தவனின் எண்ணத்தில் தான் வேற்றுமை மற்றபடி நாங்கள் ஒன்று தான் என்பது போல் பிடிவாத குணத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை பிரகடனம் செய்திருக்க விக்ரம் மருண்டு போனான்.

மகனை காயப்படுத்துவதை விட தன்மையாக பேசி எடுத்துரைக்கலாம் என்று... “சரி நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன் வா இப்போ சாப்பிடு”

“நீ பொய்ச் சொல்லுற?” அவள் கூறிய அதே வார்த்தைகள் விக்ரம் பொறுமையை சோதித்துவிட்டிருக்க, இருவரும் சேர்ந்து கொடுத்த மனஅழுத்தம் மிகுந்து அவன் மகனை வெளுத்துவிட்டான்.

“ராஸ்கல்! என்ன அடம் பிடிக்குற? எத்தனை திமிர் இருக்கணும்... ஓவரா செல்லம் கொஞ்சுற? உனக்கு அம்மாவே இல்லைன்னு சொல்லுறேன்ல என் பேச்சை கேட்கமாட்டியா” என்றவன் கன்னத்திலும், முதுகிலும் நாலு போட...

“ம்மா... பப்பா... வொண்ணா... வேண்ணா...” என்று குழறியபடி கால்களை தரையில் உதறிக் கொண்டும், கரத்தை அவனை நோக்கி நீட்டி தடுத்த படியும் கதறினான்.

அவனின் கதறலில் விக்ரமின் உயிர் அசைந்து விட... “ச்சேய்... ஏன்டா இப்படி பண்ணி தொலைக்குற?” என்று மகனை எண்ணி கலங்கியவன் ஆற்றாமையில் சலித்துக் கொண்டபடி நெற்றியில் அறைந்துக் கொண்டிருந்தான்... அடுக்களையில் இருந்த கண்ணம்மா ஆதனின் அலறலை கேட்டு ஓடி வந்தவர் விக்ரம் அவனை கடுமையாக மிரட்டி தாக்கியதை கண்டு தாய்மையில் நெஞ்சம் பதற...

“ஐயோ தம்பி! என்ன தம்பி குழந்தையை போய் இப்படியா அடிப்பீங்க?”

“வேற என்ன கண்ணம்மா பண்ண சொல்றீங்க? இவன் பண்ணுற அலும்புக்கு அளவே இல்லை... நந்தினி வேற இடத்தில் வாழப் போகிற பொண்ணு, அவளையே நிதமும் பார்க்கணும்னு சொன்னா நல்லாவா இருக்கும்? சரி இவன் கேட்கிறான்னு நான் எனக்கு தகுந்த பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டா வருகிறவ இவனை மகனா பார்ப்பாளா? அப்படி சுமையா நினைச்சுட்டா எல்லாருக்குமே வாழ்க்கை நரகம் ஆகிறாதா, இவனுக்காக தானே நான் இருக்கிறேன், இவனை அடிச்சுட்டு எனக்கு தான் வலிக்குது” என்று உடைந்த குரலில் கூறியவன், பெற்ற பாசத்தில் அவனுக்கும் நெஞ்சில் வலி பிய்த்து திங்க கலங்கியபடியே உண்ணாமல் சென்றுவிட்டான்.

அவனின் பேச்சில் நந்தினிக்கும், அவனுக்கும் யாதொரு சம்மதமும் இல்லை. இனி ஏற்படவும் போவதில்லை என்று உணர்ந்தவருக்கு உள்ளார்ந்த வெறுமை உண்டாகி அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆதன் தரையிலே படுத்தபடி அழுகையின் முடிவாக கேவிக் கொண்டிருக்க, அவருக்கு நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தது போல் கனத்தது.

ஆதனை தன் மடியில் தாங்கிக் கொண்டவர் அவன் சிகையையும், கேசத்தையும் வருடியபடி... “பெருமாளே உனக்கு கண்ணே இல்லையா இந்த பிஞ்சு என்ன தப்பு பண்ணுச்சு, அவனை பெற்றவதான் தப்பு செஞ்சா... அப்போ நீ அவ வயிற்றில் இவனை உருவாகாமல் தடுத்திருக்கலாமே” என்று தானும் விசும்பியபடி பிரலாபித்து கொண்டிருந்தார்.

அன்றிரவு ஆதனும் உண்ணவில்லை, விக்ரமும் உண்ணவில்லை. உறக்கத்திலும் அவ்வபோது கேவிக் கொண்டு இருந்தவனை, இரவு பதினோரு மணியளவில் நெருங்கிய விக்ரம் மகனை தன் கைகளில் ஏந்தி கொண்டவனுக்கு இதயம் விம்மியது.

“நான் பாவிடா கண்ணா உன்னை போய் அடிச்சுட்டேனே” என்று புலம்பியவன், அவன் இரண்டு கன்னத்திலும் முத்தம் வைத்து தோளில் போட்டு கொண்டு தன்னறைக்கு சென்றிருந்தான்.

அவன் சென்றதும் கண்ணம்மாவிற்கு இனியும் அமைதியாக இருப்பது சரியல்ல என்று தோன்ற, வேகமாக சிந்தித்தவர் அர்த்த ஜாமத்தை தொடும் நடுநிசி வேளை என்பதையும் பொருட்படுத்தாமல், தன்னிடம் இருந்த அலைபேசி மூலமாக நந்தினியை அழைத்துவிட்டிருந்தார்.

தூக்கத்தில் எங்கோ மணியோசை அடிப்பது போல் எண்ணி உருண்டு பிரண்ட போதுதான், அவளின் அலைபேசி திரை ஒளிர்ந்து மின்னிக் கொண்டிருப்பதை அறிந்து திடுக்கிட்டு எழுந்தாள் நந்தினி.

“இந்த நேரத்தில் யாரு கூப்பிடுறாங்க” என்று பதறி துடித்து பார்த்தவள், திரையின் ஒலியில் கண்ணம்மா அழைப்பதாக கூறவும் பதட்டம் மேலோங்கியவளாக வேகமாக உயிர்பித்து காதில் வைத்தாள்.

நந்தினி உயிர்பித்து விட்டதும்... “அம்மாடி நந்தினி மன்னிச்சிரும்மா இந்த நேரத்தில் கூப்பிட்டதுக்கு” வயதில் மூத்தவராக தானும் ஒரு பெண்ணுக்கு, அன்னை என்பவரை மனதில் கொண்டு கூறியிருக்க... நந்தினிக்கோ அவரின் மன்னிபெல்லாம் எதற்கோ, யாருக்கு என்ன ஆனதோ என்ற பதட்டமே மேலோங்க...

“கண்ணம்மா ம்மா இப்போ அதெல்லாம் பிரச்சனை இல்லை, இந்த நேரத்தில் கூப்பிட்டிருக்கீங்க முதலில் என்னாச்சு சொல்லுங்க எனக்கு மனசு அடிச்சுக்குது” என்றதும் தான் அவளின் நிலையை புரிந்தவர், மடை திறந்த வெள்ளம் போல் ஆதன் அடம் பிடித்த கதையையும், அதற்கு விக்ரமின் செயல்பாடும் என அத்தனையும் விலாவாரியாக விவரித்தவர்...

“எனக்கு நெஞ்சே வெடிக்கிற மாதிரி ஆகிப் போச்சு... அவனுக்கு என்ன தெரியும் அப்படிதான் அந்த பிள்ளையை அடிச்சுட்டு இந்த தம்பியும் நிம்மதியா இல்லை” என்று கூறி விம்மினார்.
நந்தினிக்கோ அவர் கூறியதை கேட்ட பிறகு மனதில் பாரம் ஏறி அமர்ந்துக் கொள்ள...

“இப்போ அவர் எங்கே?” என்று விசாரித்தாள்.

“தம்பி ரூம்ல இருக்கு, ஆனால் இன்னும் தூங்கலை போல விளக்கெரிஞ்சுட்டு தான் இருக்கு”

“ஆமாம் அந்த சின்ன பையனை இன்னும் ரெண்டு அடி அடிக்க சொல்லுங்க நிம்மதியா தூக்கம் வந்திரும்” என்று கடிந்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பினாள்.

“சரி நீங்க கவலைப்படாதீங்க, நாளைக்கு அஞ்சு மணிக்கு அங்கே வரேன்... ஆனால் நீங்க ஆதன்கிட்டேயோ உங்க விக்ரம் தம்பிகிட்டேயோ நான் வருவதை சொல்லாதீங்க”

“சரிமா” என்றுவிட்டு வைத்ததும் தான் அவருக்கு உறக்கமே வர ஆரம்பித்தது.

ஆனால் நந்தினிக்கு தான் தூக்கம் முகவரி இல்லாமல் சென்றுவிட்டிருந்தது... நேற்றைய கலக்கமும், தடுமாற்றமும் அப்போது முற்றிலும் இல்லை... மாறாக, அடுத்து என்ன செய்து விக்ரமை அணுகலாம் என்றே சிந்திக்க வைத்தது.

ஆதனை போய் அடித்திருக்கிறானே என்று என்னும் போதே அப்போதே அவனை திட்டி கன்னத்தில் இரண்டு கொடுக்க வேண்டும் என்று திகுதிகுவென பற்றிக் கொண்டு எரிய அலைபேசியில் உள்ள அவன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டவள்...

“என்ன தைரியம் இருந்தா என் பையன் மேல கை வைப்பீங்க? இருடா, நாளைக்கு உன்னை பேசிக்கிறேன் நீயா நானான்னு பார்த்துடலாம்” என்று புகைப்படத்தை நோக்கி விரல் நீட்டிக் திட்டிக் கொண்டவள், இறுதியாக தன் இதழ்களில் பொருத்தி அச்சாரம் பதித்தாள்.

நந்தினி அன்று கல்லூரிக்கு செல்லாமல், விக்ரம் கூறியது போல் அவனுக்கு வாக்குறுதியும் தராமல், அவன் என்ன தான் செய்கிறான் என்று பார்க்கலாமே என்ற மெத்தனத்தில் ஊரை வலம் வந்துக் கொண்டிருந்தாள்.

விக்ரம் மில்லில் இருக்கிறானா, வீட்டில் இருக்கிறானா என்று கண்ணம்மாவிடம் உளவு செய்துக் கொண்டவள் தன் போக்கில் உலாத்திக் கொண்டிருந்தாள். விக்ரம் நந்தினியிடம் இருந்து எப்படியும் அவன் கேட்ட பதிலும் வாராது, தன்னையும் விட்டு விலகி விடமாட்டாள் என்று அவளை முற்றிலும் முழுமையாக புரிந்துக் கொண்டவன், இரண்டு மாதங்கள் ஒத்தி வைத்திருந்த பயணத்தை அப்போதே மேற்கொள்ள வேகமாக செயலாற்றினான்.

“கண்ணம்மா ம்மா நானும் ஆதனும் சென்னை போகப் போறோம்... நீங்களும் உங்க மகள் வீட்டுக்கு போறதுன்னு போயிட்டு வாங்க?” என்றவனை புரியாது யோசனையுடன் பார்த்தவர்...

“என்ன தம்பி திடிர்னு சென்னை போகணும்னு சொல்றீங்க?”

“அதுவா சீக்கிரமே சொல்றேன் கண்ணம்மா ம்மா, முதலில் நான் போய் ஆதனுக்கு ஸ்கூல் அட்மிசன் போட்டுட்டு அவனை ஹாஸ்டலில் சேர்க்கணும்” என்றவன் அவரின் பதிலையும் எதிர்பாராமல் சென்றிருக்க கண்ணம்மாவிற்கு அடிவயிற்றை கலக்கியது.

விக்ரமின் பயண பெட்டிகள் வரிசையாக நீண்டிருந்ததை கண்டவருக்கு அவனின் திட்டம் லேசுபாசாக புரிய வர திக்திக்கென்று அடித்துக் கொண்டது. அதையும் நந்தினியிடம் வத்தி வைக்க...

“நீங்க கவலைப்படாதீங்க கண்ணம்மா நான் இதோ வந்துடுறேன்” என்றவள் சிறிதும் தாமதியாமல் விக்ரமின் இல்லத்திற்கே சென்றுவிட்டாள். அவள் வந்த சமயம் விக்ரம் புறப்பட ஆயத்தமாவதில் முனைப்பாக இருக்கவே கண்ணம்மா அவளுக்காக வாசலிலேயே காத்திருந்து அவளை வரவேற்றார்.

“உங்க விக்ரம் தம்பி எங்கே கண்ணம்மா ம்மா”

“தம்பி மேலே ரூம்ல துணிமணி எல்லாம் மூட்டை கட்டிருச்சு நந்தினிமா, நம்ம ஆதனை ஹாஸ்டல் சேர்க்க போறாராம்” என்று குரல் கரகரக்க கலங்கிய கண்களுடன் கூற, நந்தினிக்கு விசனமாக இருந்தது.

‘எலிக்கு பயந்து யாராவது வீட்டை விட்டு ஓடுவாங்களா?’ என்று எண்ணிக் கொண்டவளுக்கு உள்ளுர புன்னகையும் எழுந்ததும் கண்ணம்மா அவளை அதிசயித்து பார்த்திருந்தார்...

“என்னம்மா சிரிக்கிற?” என்றவரிடம்...

“அது வேற ஒண்ணுமில்லை கண்ணம்மா” என்றவள் அவள் நினைத்ததை கூறியிருக்க...

“எலியா அப்போ யாரு இங்கே எலி?”

“வேற யாரு நான் தான்”

“நீயா என்னம்மா சொல்லுற?” என்றதும் அவரையே சிலகணங்கள் கூர்ந்து பார்த்தவள் பின்பு ஒரு முடிவுடன்...

“உங்களுக்கு விக்ரம் மகன் மாதிரி தானே?”

“என்னம்மா இப்படி கேட்டுட்ட எனக்கொரு பையன் இருந்திருந்தா எப்படி பார்ப்பேனோ அப்படி தானேமா நம்ம விக்ரம் தம்பியையும் பார்க்கிறேன்... அதனால் தானே இந்த பாழாப்போன மனசு அந்த பிள்ளை வாழ்க்கையை நினைச்சு அடிச்சுக்குது” என்று உண்மையான வருத்தத்துடன் கூற தயக்கத்தை தூக்கி எறிந்தவள்...

“நான் விக்ரமை விரும்புறேன் கண்ணம்மா ம்மா” என்றவள் பார்வை வெட்கத்தில் தரையில் பதிந்துக் கொண்டது. அவளின் பேச்சை கேட்ட கண்ணமாவிற்கோ அருவியில் நனைந்தது போல் இன்ப ஊற்று பொங்கி எழும்பியது.

“நந்தினிமா நிஜமாவா சொல்லுற?” என்று அவளின் கரத்தை பிடித்துக் கொண்டு தாடையை பற்றி முகம் பார்த்து கேட்டவரின் கண்கள் உணர்ச்சி வசத்தில் கலங்கியிருப்பதை கண்டவளுக்கு, இனி இவரின் உதவியோடு தான் விக்ரம் அவளை புறகணிக்கும் செயல்களை தடுக்க முடியும் என்று கருதியவள், அவர்கள் சந்தித்து பேசியது அதற்கு விக்ரமின் பதில் என சுருக்கமாக மேலோட்டமாக கூறியவள்...

“அவருக்கு என் மேல் விருப்பம் இருந்தும் அதை மறைக்கிறாரு கண்ணம்மா... எங்கே இங்கிருந்தா நான் உங்க விக்ரம் தம்பியை கவிழ்த்திருவேனோன்னு என்கிட்டே இருந்து தப்பிச்சு போகிறாராம்” என்று கூறியவளின் முகம் அவன் செயலுக்கான ஆட்சேபம் மிளிர்ந்து மூக்கு நுனி சிவந்தது.

“அம்மாடி நிஜமாவே சொல்றேன் தாயி நீ நூறு வருஷம் நல்லா இருப்ப, எனக்கு மனசெல்லாம் குளிர்ந்து போச்சு இனி எல்லாத்தையும் நீ பார்த்துக்கோ... நான் தம்பியோட வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும் சொல்ல முடியாது அதுக்கு எனக்கு உரிமையும் இல்லை... ஆனால் ஒன்னே ஒன்னு சொல்வேன், விக்ரம் தம்பி தங்க கம்பி, அது வாழ்க்கையில என்ன நடந்திருந்தாலும் அது ஏதோ ஒரு கேட்ட நேரம் தான் சொல்வேன் மற்றபடி அந்த தம்பி மனசார யாருக்கும் கெடுதலும் நினைச்சதில்லை, துரோகமும் நினைச்சதில்லை, அது மனசு சுத்தம் அந்த மனசுக்கேத்த மகாராணி நீ தான்” என்றவர் அவளை உச்சி முகர நந்தினிக்கு கூச்சமாகிப் போனதில் முகம் சிவந்தாள்.

“சரிங்க கண்ணம்மா ம்மா நீங்க ஆதனை மட்டும் சத்தமில்லாமல் கூப்பிடுட்டு வரீங்களா, நான் அவன்கிட்டே பேசிட்டு அப்புறமா உங்க விக்ரம் தம்பியை கவனிச்சுக்கிறேன்”

“சரிம்மா ஆனால் தம்பி கோபப்பட்டுசுன்னா?” என்று பயந்து பார்த்தவரை நோக்கி...

“இனி உங்க விக்ரம் தம்பி தான் எனக்கு பயப்படனும் கண்ணம்மா சீக்கிரம் போய் ஆதனை கூட்டிட்டு வாங்க” என்றவளின் பேச்சு அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என்பதை சுட்ட வேகமாக ஆதனை அழைத்து வந்தார்.

நந்தினியை கண்ட ஆதனுக்கு பரவசம் தென்பட அவளை ஆரவாரத்துடன் நெருங்க முற்பட்டவனிடம், சத்தம் போடாதே என்று உதட்டில் சுட்டு விரலை வைத்து காண்பித்தவள், அவனை வாஞ்சையுடன் அரவணைத்துக் கொண்டாள்.

“நந்தினி ம்மா நீங்களும் எங்க கூட சென்னை வரீங்களா?” என்று ஆதன் மழலை பேச்சில் கேட்க, இவனை போய் ஏமாற்றி விடுதியில் சேர்க்க பார்க்கிறானே அவன் மண்டையில் பருப்பு மத்தாலேயே போட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவளுக்கு நிஜத்தில் அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையோட்டம் அவளை புன்னகைக்குள் உறைய வைத்தது.

“நந்தினி ம்மா... சொல்லுங்க ம்மா” என்ற ஆதனின் குரல் தான் அவளை தன்னிலைக்கு இழுத்து வந்திருக்க...

“சென்னை போறப்போ நாம எல்லாருமே சேர்ந்து போகலாம் சரியா” என்றவள் அவனுடன் சிறிது நேரம் செலவளித்து விட்டு...

“கண்ணம்மா நீங்க ஆதனை பார்த்துக்கோங்க நான் அவரை பார்க்கணும்”

“சரிம்மா”

கண்ணம்மாவிடம் திடமாக பேசிய நந்தினிக்கு ஏனோ விக்ரமை காண போகையில் லேசாக படபடப்பு ஏற்பட்டது... தன் கைப்பையை ஓரமாக வைத்தவள் அவளின் அலைபேசியை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு புது மணப்பெண்ணை போல் மெல்ல அடியெடுத்து வைத்து மாடிப்படியை கடந்து அவன் அறைக்கு முன்பு நின்றவளின் உள்ளம் தடக் தடக் என ரயில் தண்டவாளம் போல் குலுங்கியது.

“நந்தினி இது வரைக்கும் வந்துட்ட இதற்கு மேல் பின்வங்கினாள் நிச்சயம் அவனை உன் கட்டுக்குள் கொண்டு வர முடியாது... தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செல் நடப்பது நடக்கட்டும் என்று தனக்குத் தானே ஊக்கித்து கொண்டவள் திடமான மனதுடன் அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

விக்ரம் அறைக்குள் இருந்த மஞ்சத்தின் மேல் நான்கு ட்ராலிகள் தயாராக பூட்டி வைக்கப்பட்டிருக்க, இரண்டு பைகள் இதர தேவைக்காக அங்காங்கே ஒன்றிரண்டு பொருளுடன் திறந்த வாக்கில் சிதறிக் கிடந்தது.

விக்ரம் உன்னிப்பாக எதையோ ஒரு தாளில் உள்ள நிபந்தனைகளை படித்துக் கொண்டிருந்தவன் ஆதன் அறையில் இருப்பதாக எண்ணிக் கொண்டு...

“ஆதன் அந்த ப்ளூ கலர் ஃபைலை எடு” என்று காகிதத்தில் கண்ணுற்றபடியே அது இருந்த இடம் நோக்கி விரல் சுட்டியபடி கூறியிருக்க, நந்தினி அதை எடுத்துக் கொண்டவள் அவன் அருகே சென்று சத்தமில்லாமல் நின்றுக் கொண்டாள்.

விக்ரம் தன் மகன் அருகில் இருப்பதாக எண்ணி அவன் உயரத்திற்கு கீழே பார்த்துக் கொண்டே திரும்பியவன் பார்வையில் நந்தினியின் பாதம் படவே அவளின் அகஸ்மாத்தான வரவை கண்டு அதிர்ச்சியில் உடல் வெட்டி இழுத்து தூக்கிவாரிப் போட எழுந்திருந்தான்.


**************************

வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-11 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-12
விக்ரம் நந்தினியை தன் இல்லத்தில் அதிலும் குறிப்பாக தன் அறையில் எதிர்ப்பாராது இன்ப அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் உள்ளத்தை எளிதாக புரிந்துக் கொண்ட நந்தினியின் விழிகள் குறும்பாக இமைசிமிட்ட, அதில் சுதாரித்துக் கொண்டவன் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன்...

“ஏய் நீ எங்கே இங்கே? யாரை கேட்டு உள்ளே வந்த முதல்ல வெளியே போ... கண்ணம்மா ம்மா எங்கே?” என்று கடினமான குரலில் கூறியவன் தொடர்ந்து...

“கண்ணம்மாஆ... கண்ணம்மா ம்மா ஆதன்...” என்று உரத்த குரலில் கூவிக் கொண்டிருந்தான்.

“பொறுங்க பாஸ்! எதுக்காக இப்படி கத்தி எனெர்ஜியை வேஸ்ட் பண்றீங்க? உங்க கற்பு பறி போகாமல் இருக்க நான் கியாரண்ட்டி தரேன்” என்று நாடக பாணியில் கூறியவளை கண்டு எரிச்சல் மேலோங்க...

“அறிவிருக்கா உனக்கு?” என்று தன் உள்ளங்கையை அவளை நோக்கி நீட்டியபடி படபடத்தவனுக்கு, அவளின் பேச்சை கண்டு ஆத்திரமாக வந்தது. ஆனால் நந்தினியோ நீ என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள் நான் அதற்கெல்லாம் பயந்து ஓடி விடமாட்டேன் என்பது போல்....

“அறிவில்லைன்னா கடன் தரப் போறீங்களா?” அவனின் எந்த உணர்ச்சிக்கும் அசராமல் பதிலுக்கு பதில் கூறி அவன் ரத்த அழுத்தம் எகிற வைத்ததில் கண் சிவந்தான்.

“நீ ஓவரா போகிற நந்தினி... நீ எந்த இடத்தில் யார்கிட்டே நின்னு பேசுறேன்னு நினைவிருக்கா?”

“ஏன் நினைவில்லை நல்லாவே நினைவிருக்கு... இது உங்க வீடு நான் நின்னுக்கிட்டு இருக்கிறது உங்களுடைய பெட்ரூம்” என்றவள் அவனை மையலாக பார்த்து வைத்தாள்.

அதில் அவன் மனம் இதோ உன் கட்டுப்படுகளை கட்டவிழ்க்க போகிறேன் அவளிடம் சரணடைந்துவிடு என்று அபாய சங்கிலியை நினைவுறுத்த, அவளின் வழியிலேயே சென்று அவளை மடக்க எண்ணியவன் அவளை போலவே பார்வையை மாற்றி பார்த்தான். பூட்டப்படாத அறைவாசல் கதவில் அவன் பார்வை நிலைகொண்டதை கண்டு நந்தினிக்கு பக்கென்றாகிப் போனது.

என்னதான் அவள் விக்ரம் மேல் நேசம் கொண்டிருப்பவள் என்றாலும், அவளும் பெண்ணல்லவா! பெண்மைக்கே உண்டான எச்சரிக்கை அவன் பார்வையில் சற்றே துணுக்குற வைத்தது. அவள் விழிகளில் மின்னல் வேகத்தில் மின்னி மறைந்த அச்சத்தை கண்டு கொண்டவனுக்கு அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த வழி கிடைத்துவிட்டதில் அவளை மிதப்பாக பார்த்தவன்...

“இன்னும் ரெண்டு நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள இங்கிருந்து போயிரு” அழுத்தமாக உரைத்திருந்தான்.

“இல்லைன்னா” என்று அசட்டையாக கேட்டவளிடம்...

“ம்ம்ம்... நீ சொன்னியே கற்பு அது என்னால் உனக்கு பறி போனதாக இருக்கும்” என்று விஷம புன்னகையுடன் கூறியவன் சொல்லுக்கு சிறிதும் அசைந்து கொடுக்காமல் திக்பிரமை பிடித்தவள் போல் நின்றுவிட்டாள்.

அவளின் அந்த விடாபிடியான செயலில் ஆக்ரோஷம் ஏற்பட... “சொன்னா கேட்கமாட்ட? இரு டி உனக்கு வாய் பேச்செல்லாம் வேலைக்காகாது செயல் தான் சரியா இருக்கும்” கடிந்த பற்களுகிடையே வார்த்தையை துப்பியவன், துரிதமாக சென்று கதவை அடைத்த வேகத்தில் நந்தினிக்கு இதய துடிப்பு இருமடங்கு அதிகரித்தது.

“நந்தினி தைரியமா இரு, அவன் உன்னை மிரட்டிப் பார்க்கிறான்” என்று தனக்குள் கூறி மனோதிடத்தை திரட்டி நீ என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள் இதற்கெல்லாம் அசர நான் ஆளில்லை என்று இறுமாப்புடன் நின்றவளை கண்டு வேகமாக செயல்படத் துணிந்தான்.

விக்ரம் அவளை மிரட்ட வேண்டி சற்று கடுமையாக செயல்பட எண்ணினாலும்... ஏனோ அவன் வளர்ந்த விதமும், நந்தினியின் மேல் கொண்ட அதீத காதலும், நலனும் அவள் அங்கிருந்துக்கு சென்றால் தேவலாம் என்று விசாரம் கொண்டபடியே, எவ்வளவு பொறுமையாக கதவை அடைக்க முடியுமோ அவ்வளவு பொறுமையாக அறைக் கதவை அடித்துக் கொண்டிருந்தான்.

‘நந்தினி போயிரு ப்ளீஸ்’ என்று அந்தராத்மாவில் உறைந்திருந்த அவளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்.

கதவை அடைத்துவிட்டு நிதானமாக திரும்பிய போதும் அவள் நின்ற இடத்தில் அவனை மட்டுமே நிலைகுத்திய பார்வையால் வருடிக் கொண்டிருக்க, வஞ்சினத்துடன் பார்த்து மிரட்டியபடி நெருங்கினான்.

அவன் பார்வையில் நந்தினிக்கு கலவரம் சூழ்ந்தாலும், இழுத்து பிடித்துக் கொண்டிருந்த திடம் அவளை உசுப்பேற்ற தன் உயரத்திற்கும் அதிகமாக நிமிர்ந்து நின்றாள்... அதுவரை அவள் கண்களை சந்தித்துக் கொண்டிருந்த விக்ரமின் பார்வை அவனை தலை முதல் பாதம் வரை மையலாக வருடிச் செல்ல, நந்தினிக்கு அவன் பார்வையில் உடல் கூசிச் சிலிர்க்க, ஆணவனின் வலிமையான தேகம் அவளுள் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

அவன் அருகில் நெருங்க நெருங்க அவன் ஆண்மைக்கே உண்டானா பிரத்யேக வாசனையை அவள் நாசி உணர பெண்ணவள் மயங்கிக் கொண்டிருந்தாள், அவன் ஆண்மையின் ஆளுமை அவனுள் புதைந்துவிட துடித்தது... அதுவரை தோன்றிய அச்சம், நாணம் அனைத்தையும் மறந்து அவளின் விக்ரம் அவளுக்கு உரிமையானவன் என்பது மட்டுமே கருத்தில் பதிய பொங்கி வழியும் நேசத்துடன் அவனை நோக்கினாள்.

அவளின் பார்வையில் அவன் எடுத்துக் கொண்ட சபதம் அத்தனையும் கானல் நீராய் ஆகியிருக்க, அவளை தாபத்துடன் நெருங்கியவன் இருவருக்கும் இடையில் சிறு நூலிழை இடைவெளி மட்டுமே விட்டு நின்றவன் அவளை பார்வையாலேயே கைது செய்திருந்தான், நந்தினி கல்லில் வடித்த சிலை போல் உணர்ச்சியில் உறைந்து நிற்க அவள் என்னவென்று உணரும் முன்னரே சட்டென்று அணைத்துவிட்டிருந்தான்.

அவனின் ஆலிங்கணத்தில் கட்டுண்டவளுக்கு உலகமே மறந்து போனது... கண்களை மூடி அவனின் ஸ்பரிசத்தை அனுபவித்து அவனுக்கே உண்டான பிரத்யேக வாசனையை தன் நாசி துவாரத்தில் இழுத்து நுரையீரலில் நிரப்பிக் கொண்டவளுக்கு, அவனுடன் பல வருடம் வாழ்ந்து கூடிக்களித்தது போல் இன்ப பரவசத்தை உணர்ந்தாள்.

இருவரும் நேசக் கடலில் மூழ்கி தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, இணையின் நெருக்கத்தை அதிகரிப்பதின் மூலம் தெரிவித்து கொண்டிருந்தனர். அவர்களின் தனிப்பட்ட நேச உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தவர்களில் விக்ரமுக்கு தான் முதலில் தன்னினைவு மீட்டெடுக்க அவளிடமிருந்து விலகாமலே...

“போயிரு நந்தினி... என்னை விட்டு விலகி போயிரு... நான் முள் செடி என்னை நெருங்கி வாழ நினைக்காதே கடைசியில் காயமும், வலியும் உனக்கு தான்.... தயவுசெய்து என்னுடன் பிணைத்துக் கொள்ள துடிக்கிற பந்தத்தை தூக்கி எறிஞ்சிரு... என் கூட வாழுற உன் வாழ்க்கை கனவில் வேணா சாத்தியம் ஆகலாம் ஆனால் நிஜத்தில் நடக்காது” என்று தன் நிலையை வார்த்தையால் உணர்த்திக் கொண்டிருக்க, அவனின் விரசம் அல்லாத சரசத்தில் மேலும் காதல் அதிகரிக்க அவனை விட்டு விலகும் உத்தேசம் சிறிதும் இல்லை என்பது போல் அசையாமல் இருந்தாள்.

“முடியாது விக்ரம்! இப்படியே செத்துக் கூட போறேன் ஆனா உங்க இடத்தில் வேறொரு ஆண்............” என்னும் போதே அவளுக்கு அரோசிகத்தில் வதனம் சுருங்கியது... அவளை விலகச் சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கும் சில நிமிடங்களாவது அவளின் அன்பை அனுபவிக்கலாமே என்ற அவாவில் மெளனமாக நின்றிருந்தான்.

“சொல்லவே நாக்கு கூசுது விக்ரம்! ப்ளீஸ்... நீங்க ம்ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க உங்க கூட இப்போவே இப்படியே இருந்துடறேன்” என்றதும் தான் அவன் கந்தழியில் சொரெர் என்று நிதர்சனம் உணர அவனிடமிருந்து வேகமாக அவளை தள்ளி நிறுத்த முயல அவளோ விடாது இறுக்கிக் கொண்டிருந்தாள்.

“ஏய்! சொல்லுறதை கேளு நந்தினி ப்ளீஸ்... நீ இப்படியே உன் முடிவில் தளர்த்திக்கமால் இருந்தா, நான் திரும்ப இங்கே வர முடியாத மாதிரி எங்கேயும் போயிருவேன்” என்ற போது தான் ஆசுவசமாக மெல்ல அவன் மேல் இருந்த தன்னை பிரித்துக் கொண்டவள், சிறு நூழிலை இடைவெளியில் நின்று அவனின் இருகரத்தையும் கோபுரம் போல் பிணைத்துக் கொண்டு தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டவள்...

“சும்மாவே உங்க மேல பைத்தியமா இருக்கிற பைத்தியக்காரி நான்... உங்க மனசை வெளிப்படுத்திய அப்புறமும் நான் உங்களை விட்டு விலகுவேன்னு தப்பு கணக்கு போடுறீங்க பாருங்க அதை நினைச்சா தான் சிரிப்பா இருக்கு” என்று புன்னகைத்து விட விக்ரமுக்கு தலைவேதனையாக இருந்தது.

“முதல்ல கையை விடு டி” என்னதான் அவன் கோபமாக கூற எண்ணினாலும், அவன் குரல் என்னவோ மென்மையாக தான் வெளிவந்தது.

“ஏன் உங்களை விடவா நான் பலசாலி என் கையை தட்டி விட்டுட்டு போனா முடிஞ்சது பண்ண வேண்டியது தானே” நமட்டுச் சிரிப்புடன், அவன் மேல் கொண்ட காதலின் கர்வத்துடன் கூறினாள்.

அவள் கூறியது போன்று அவன் தேக வலிமை மிக்க ஆண் தான்... ஆனால் சித்தம் அவளின் நேச ஆழியில் சிக்கிக் கொண்டுவிட்டதே...

‘வேண்டாம் டி இது நடக்காது, அப்படி பிரிய வேண்டிய ஒரு நிலைமை வந்துட்டா நீயும் தாங்கிக்க முடியாது, நானும் தாங்கிக்க முடியாது’ என்று சிந்தை ஓலமிட்டது கொண்டிருந்தது.

“எனக்கு புரிஞ்சுருச்சு நீ ஏன் இப்படி என்னை சித்திரவதை பண்ணுறேன்னு” விழிகளில் அவன் பார்வை நிலைகுத்தியப்படி அழுத்தமாக பேசியதும், நந்தினி சுதாரித்து கொண்டவள் ஒற்றை புருவம் உயர்த்தி...

“என்ன நான் சித்திரவதை பண்ணுறேன்னா? வாய்கூசாம பொய் பேசாதீங்க... சரி எதை வச்சு நான் சித்திரவதை செய்கிறதா சொல்றீங்க?”

“நானோ பொண்டாட்டியை ஓட விட்டுட்டு அவளால் பிறந்த என் மகனோட கையாலாகாத்தானமா இருக்கிற ஆம்பளை, இவனுக்குன்னு பேச யார் இருக்கா? இல்லை; இவனை கட்டிக்கத்தான் யாரிருக்கா... நாம ஆட்டி வச்சா ஆடித்தானே தீரணும் அப்படிங்கிற ஆணவம், அதிகாரம், மிதப்பு” என்று கூற நந்தினி ஆவேசமாக அவன் கரத்தை உதறியவள் விழிகளில் சீற்றம் மிகுந்திருந்தது...

“ச்சீ... நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்க சொல்ல அதை கேட்டுட்டு நிற்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு... உங்களோட கடந்த கால வாழ்க்கையில் நடந்த பாதிப்பு என்னை பாதிச்சிருமோன்னு நினைச்சு பயப்படுறீங்க என் மேல் கொண்ட அக்கறைன்னு நினைச்சேன் பாருங்க என்னை சொல்லணும்”

அவளின் பேச்சில் அவன் மேல் வெறுப்பு உண்டாகிவிட்டதை எண்ணி வெற்றிக்குறி தோன்றாமல், அவன் உள்ளம் உடைவதை போல் உணர்ந்தான்.

அவனின் உணர்ச்சிகளை அவதானித்து கொண்டிருந்தவளுக்கு நெஞ்சில் குருதி கசிந்தது.

“உங்ககிட்ட நான் உருகுறேன், வழியுறேன்னு எதை சொன்னாலும் கேட்டுக்குவான்னு நினைச்சுட்டுட்டீங்களா? ஆதனை சாக்கிட்டு உங்க கூட குழைய பார்க்கிறவளா நான்... அதுக்கு எதுக்கு இப்படி பட்டபகலில் பூட்டி வச்ச உங்க அறைக்குள்ள நான் உங்ககூட இருக்கணும்?” நறுக்நறுக்கென்று அவள் கேட்ட கேள்வியில் தரையில் எறியப்பட்ட மீனாய் துடித்து கொண்டிருந்தான்.

‘அந்த துடிப்பும், வேதனையும் அவளின் நல்வாழ்வுக்காக தானே தாங்கிக் கொள் விக்ரம்... இல்லைன்னா, அவ உன்னை விட்டு போகமாட்டா’ என்று உருப்பேற்றுக் கொண்டு பார்வையை அவள் மேல் நிலைக்குத்தி வைத்தபடி திடமாக நின்றான்.

“நீங்க குடும்பத்தை தொலைச்சுட்டு தனியா வாழுற ஆம்பளை தான் ஆனால், தைரியம் இல்லாத ஏப்பை சாப்பையான ஆளு கிடையாது... கண்ட பொண்ணுங்களை எல்லாம் ரசித்து ருசிக்கிற ஆம்பளையும் நீங்க கிடையாது, ஆனால் அப்படி எல்லாம் உங்க ஒழுக்கத்தை கடைபிடிச்சுட்டு உங்களை காதலிக்கிறேன்னு சொன்ன ஒரு காரணத்துக்காக எனக்கு நல்லது பண்ணுறேண்ணு முட்டாள்த்தனமா பேசுறீங்களே இப்படி தான் உங்க அம்மா உங்களை வளர்த்தாங்களா” என்றதும் அவன் அன்னையை இழுத்ததில் விக்ரமுக்கு முகம் கடினமுற்றது.

“இங்கே பார் என்னை என்ன வேணா சொல்லு கேட்டுக்குறேன்... தேவையில்லாமல் எங்க அம்மாவையெல்லாம் இழுக்காதே அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன்” என்றவன் அழுத்தமான குரலில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“உங்க அம்மா உங்களுக்கு உசத்தி, நான் யாரோ மூணாம் மனுஷி... அதனால் தான் உங்களை மையில்லாமல் மயக்க பார்க்குறேன்னு அசிங்கமா, பச்சையா பேசி என் காதலை கொச்சைப்படுத்தறீங்க?”

“அதான் உன்னை அசிங்கப்படுத்திட்டேன்ல ஏன் என் முன்னாடி நின்னு பேசுற கிளம்பு காத்து வரட்டும்” நக்கலாக உரைத்திருந்தான்.

“போகத்தான் போறேன் விக்ரம் போகாமல் இங்கிருந்து உங்க கூட குடும்பமா நடத்த முடியும்... நான் உங்க கூட ஆசைத்தீர வாழ்ந்து குடும்பம் நடத்த ஆசைப்பட்டதுக்கு தான் உறவை களங்கப்படுத்தி அசிங்கப்படுத்திட்டீங்களே” என்றவளுக்கு வேதனையில் முகம் கசங்க துக்கம் தொண்டையை கவ்வியது.

சில கணங்கள் இமைசிமிட்டி தன்னை சரி செய்துக் கொண்டு நிமிர்ந்தவள் பார்வையில் தீட்சண்யம் நிறைந்திருந்தது.

“இந்த நந்தினி ஒன்னை நினைச்சா அவ்ளோ சீக்கிரம் விலகமாட்டா... நான் அடிச்சு சொல்றேன் இன்னும் ஒருவாரத்தில் என்னை தேடி நீங்க வருவீங்க... என் காதல் உங்களை வர வைக்கும் மிஸ்டர். விக்ரம் இது கர்வத்தோடவே விடுற என் சவால் முடிஞ்சா என்கிட்டே இதில் ஜெயிச்சுக்காட்டுங்க” என்று அரைக்கூவல் விடுத்தவள் விறுவிறுவென்று அறையிலிருந்து வெளியேறினாள்.

ஆவேசத்துடன் கீழிறங்கி வந்த நந்தினியை கண்ட கண்ணம்மாவுக்கு என்னவோ ஏதோ என்ற படபடப்புடன் அவளை நெருங்கியவரிடம் அவர் வினவும் முன்பே...

“தூங்குறவங்களை எழுப்பலாம் கண்ணம்மா, ஆனால் தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது” என்று மட்டும் உரைத்தவள் வாகனத்தை சீற்றத்துடன் இயக்கினாள்.


****************

விக்ரம் இயலாமையின் கதனத்தில் தவித்துக் கொண்டிருந்தான்... நந்தினி அணைத்துக் கொண்டிருந்ததால் பெண்மைக்கே உரித்தான ஸ்பரிசம் அவனுள் உணர்ந்து உயிரில் உறைய வைத்தது.


அவள் இறுதியாக விட்ட சவாலில் தான் தோற்று போக நேர்ந்தால் எத்தனை சுகமாக இருக்கும் என்று நினைக்கும் போதே... தோல்வி என்ற வார்த்தை கூட அத்தனை தித்திப்பாக இருக்கும் என்பதை உணர்த்திய அவன் நந்தினி அவனின் தேவதையாக தெரிந்தாள்.

ஆனால் கண்ணுக்கு தெரிந்த தேவதையை கண்மண் தெரியாமல் காயப்படுத்தி, அவளை தூக்கி எறிவது என்பது எத்தனை கொடுமையான விஷயம் என்பதை அன்றுணர்ந்தவனுக்கு தன் ஜீவன் இல்லாமலே போகட்டும் என்ற விரக்தி சூழ்ந்தது.

கண்ணம்மா நந்தினி வந்ததையும், அவள் விருப்பதையும் செந்திலிடம் அவருக்கு தெரிந்தவரை விஷயத்தை கூறியிருக்க...

“என்ன கண்ணம்மா நிஜமாவா சொல்லுற, நம்ம நந்தினிம்மா விக்ரம் தம்பிகிட்ட விருப்பத்தை சொல்லிருச்சா?”

“இல்லைமையா நான் சொல்வேன் செந்தில் அண்ணா... அந்த புள்ள என்கிட்டே சொல்லிட்டு தானே விக்ரம் தம்பிகிட்டே பேசப் போச்சு ஆனால் என்ன பேசினாங்களோ தெரியாது... எனக்கு தெரிஞ்சு விக்ரம் தம்பி தான் எதுவும் வார்த்தையை விட்டிருக்கும்”

“நிச்சயமா கண்ணம்மா... ஏன்னா நம்ம தம்பிக்கு வாழ வச்சு தானே பழக்கம்... எங்கே அதோட வாழ்க்கை அந்த பிள்ளையை பாதிச்சிருமோன்னு பயப்படுது”

“அதுக்காக வீடு தேடி வந்த மகாலட்சுமியை கண்ணை திறந்துட்டே விரட்டி விடலாமா?”

“வாஸ்தவம் தான் கண்ணம்மா... எனக்கும் அதுதான் தோணுது... நந்தினி பொண்ணு அப்படி ஒன்னும் கண்மூடித்தனமா விவரம் தெரியாத பெண்ணில்லை... எனக்கு என்னவோ இந்த பிள்ளை தான் விக்ரம் தம்பிக்காக பிறந்த பொண்ணுன்னு என் உள்மனசு சொல்லுது”

“அப்படி இருந்திருந்தா இந்த பெண்ணையே கட்டியிருக்கலாம்... சொந்தம் பந்தம்னு விழுகாம நிதானமா கல்யாணம் பண்ணி இப்போ அய்யாவும், அம்மாவும் கூட உயிரோட இருந்திருக்க வாய்ப்பிருக்குமே”

“இல்லை கண்ணம்மா இது தான் அவங்க ரெண்டு பேரோட விதியா இருக்கலாம்... கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்து பயிர் அதுக்கான விதியை எழுதுறது அந்த பிரம்மன், இதில் யாருக்கு எப்போ எப்படி நடக்கும்ன்னு முடிவு செய்தது தானே... ஆனால் நந்தினி பொண்ணோட அமையுற வாழ்க்கை தான் நம்ம விக்ரம் தம்பிக்கு நிரந்தரம்ன்னு தோணுது”

“நீங்க சொல்றது நிஜம் தான் அண்ணா... ஒரு முறை அடிபட்டா அதுக்கப்புறம் அமையுறது நல்லதா இருக்கும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்... அப்படியே நடக்கட்டும் விக்ரம் தம்பிக்காக நான் அந்த பெருமாள்கிட்டே வேண்டிக்கிறேன்” என்று விக்ரமின் வாழ்க்கை சீராக வேண்டும் என்று இரு நல் உள்ளங்களும் எண்ணிக் கொண்டது.


****************

நந்தினி விக்ரமின் இல்லத்திற்கு பிரவேசம் செய்த பிறகு அவன் ஊரை விட்டு செல்லும் திட்டம் மேலும் வலுப்பெற்றது. விக்ரம் சென்னை செல்லும் திட்டத்தை தள்ளி வைத்தான். கண்ணம்மா, செந்தில் இருவருக்கும் விக்ரமின் வெளியூர் பயணம் ஒத்தி போய்விட்டதை அறிந்து நிம்மதி அடைந்திருந்தவர்களுக்கு அவன் பயணத்தை ஒத்தி வைத்ததற்கான காரணம் அறிந்த போது முன்பிலும் இருமடங்கு பேராதிர்ச்சியாக இருந்தது.

“கண்ணம்மா ம்மா நீங்க அடுத்த மாசத்தில் இருந்து வீட்டுக்கு வர வேண்டாம்... வேலைக்கு வரணும்னா மில்லுக்கு வேணா வாங்க”

“ஏன் தம்பி என்ன ஆச்சு?” இந்த மாற்றம் எதற்காகவோ என்று புரியாது வினவியவரிடம்...

“நான் பாரின் போகப் போறேன் ம்மா அதனால தான்” என்றவனின் சொல்லைக் கேட்டு அதிர்ந்து பார்த்திருந்தார்.

“தம்பி! என்ன தம்பி திடுதிப்புனு இப்படி சொல்றீங்க? இப்போ எதுக்கு தம்பி அங்கெல்லாம் அதுவும் அந்த குழந்தையை வச்சுக்கிட்டு எப்படி அங்கே சமாளிப்பீங்க?”

“ம்ஹும்...” என்று இயல்பாக புன்னகைத்தவன்...

“ஆதனை பார்த்துக்கிறது எனக்கு புதுசா என்ன? அதெல்லாம் நான் சமாளிச்சுக்குவேன்” என்றவன் வேகமாக நகர்ந்திருக்க, உடனடியாக அந்த செய்தியை நந்தினியிடம் தெரிவித்தார் கண்ணம்மா.

கண்ணம்மா கூறியதை கேட்ட நந்தினியும் கலவரமானாள்... ஆனால் அவன் இப்படி அங்கிருந்து ஓடுவதிலேயே குறியாக இருப்பது அவளை வெகுவாக உறுத்தியது... தன் மூளையை உலுக்கி இளைப்பாற்றி கொண்டு நிதானமாக யோசித்தவளுக்கு சாராம்சம் ஸ்பஷ்டமாக விளங்கியிருந்தது.

“ஒஹ்! இங்கிருந்தா நீங்க என்னை தேடி வந்திருவீங்கன்னு நாடு விட்டு நாடு தாவுறீங்களா மிஸ்டர்.விக்ரம்? நீங்க கண்டம் விட்டு கண்டம் தாண்டினாலும் சரி, உங்க மனைவி நான் தான் நீங்க என்னைத் தேடி வரத்தான் போறீங்க” என்று சித்தம் அறைகூவல் விடுக்க கண்ணம்மாவிற்கு பதில் கூறும் நிர்பந்தத்தை உணர்ந்து...

“அவர் இந்த ஒரத்தநாடு எல்லையையே தாண்ட முடியாது கண்ணம்மா, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க” அலட்டிக்காமல் கூறியவளின் பேச்சில் நடந்துவிடுமா என்ற சந்தேகம் எழவே...

“எப்படிம்மா?” கரகரத்த குரலில் வினவினார்.

“நான் நடத்திட்டு சொல்லுறேன் ம்மா... சப்போஸ் அதுக்கு உங்களுடைய உதவி தேவைபட்டா.....” என்றவளின் பேச்சு முடிவு பெரும் முன் வேகமாக இடையிட்டவர்...

“உனக்கு என்ன உதவி வேணாலும் நான் செய்ய தயாரா இருக்கேன் தாயி, நீ எதுனாலும் தயங்காம கேளு” என்றவரின் சொல்லில் தெம்பு வரப்பெற்றவளாக என்ன செய்வதென்று ஆழ்ந்து சிந்திக்கலானாள்.


**************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-12 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் மூன்று பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-13
விக்ரம் வெளிநாடு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை சிரத்தையாக மேற்கொள்ளலானான்... பாஸ்போர்ட்லிருந்து அனைத்து முக்கிய படிமுறைகளையும் அவனை போலவே ஆதனுக்கும் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தான்.

அனைத்து படிகளையும் முறையாக செய்து முடித்தவன் ஒரு கோப்பில் பத்திரமாக சேகரித்து வைத்துவிட்டு, அதனுடன் சில லட்ச பணத்தையும் வங்கியிலிருந்து எடுத்துக் கொண்டவன், அதை தன் காரின் பின் சீட்டில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டிருந்தான்.

அவனுக்கும், ஆதனுக்குமாக சில பொருட்களை வாங்க வேண்டி வணிக வளாகத்திற்கு சென்றுவிட்டே வீடு செல்ல திட்டமிட்டிருந்தான்... அவன் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு இல்லம் வந்தடைந்ததும் பணத்தையும், பொருளையும் கையிலெடுத்துக் கொண்டவன் அவன் வெளிநாடு செல்ல ஆவணங்கள் சேகரித்து வைத்திருந்த கோப்பை பற்றி மறந்துவிட்டிருந்தான்.

வெகுநேரம் ஆகிய பின்பே முக்கிய ஆவணங்கள் காரில் இருப்பது நினைவு வந்து அதை எடுக்க சென்றவனுக்கு கோப்பு தொலைந்துவிட்டிருந்ததை கண்டு அதிர்ந்தான்!

காரில் மற்றொரு முறை நன்றாக அலசி தேடியவன் கண்களில் எங்கும் தட்டுப்படாமல் போகவே கண்ணம்மாவிடம் விசாரித்தான்.

“கண்ணம்மா ம்மா கார்கிட்டே எதுவும் போனீங்களா, காரில் ஒரு பைல் வச்சிருந்தேன் பார்த்தீங்களா?”

“இல்லையே தம்பி நான் எங்கே அங்கே போறேன்? அப்படியே போனாலும் காரை எனக்கு திறக்க தெரியாதே” ‘உண்மைதானே சாவி என்னிடம் இருக்கும் போது அவர் திறந்திருக்க வாய்ப்பில்லையே’ என்று எண்ணிக் கொண்டவனுக்கு திகைப்பும், குழப்பமும் அதிகாரித்தது.

பணம் பத்திரமாக இருக்க கோப்பு மட்டும் தொலைந்தது எப்படி என்ற சிந்தனையும், குழப்பமும் அதிகரித்தது... இனி அடுத்து என்ன செய்வது எது செய்வது என்று புரியாத புதிராக குழம்பி நின்றான்.

ஆவணங்களை தொலைத்துவிட்டு அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விக்ரம் அல்லாடிக் கொண்டிருந்த வேளை, ஆதனுக்கு அடிக்கடி ஜுரம் வந்தது... முதலில் சாதாரண ஜுரமாக இருக்கும் என்று வீட்டிலேயே மாத்திரை மருந்து உட்கொள்ள வைத்து பார்த்துக் கொண்டவனுக்கு ஐந்தாம் நாள் மாலை காய்ச்சல் அதிகரித்து மயங்கி விழுந்து வைக்க, பதறி துடித்துப் போனவன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தான். அங்கே ஆதனை பரிசோதத்த மருத்துவர்கள் அவன் டைபாய்ட் காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறவே அவனுக்கு பெரும் சோதனையாகிப் போனது.

“ஆதன் ரெண்டு வாரமாச்சும் ஹாஸ்பிட்டல் அப்சர்வேசனில் இருக்கணும்” என்று மருத்துவர் கூறிவிட பித்து பிடிக்கும் நிலைக்கு ஆளானான்.

ஒரு பக்கம் தொழில், மறுபக்கம் அவன் வெளிநாடு செல்ல மேற்கொண்டிருந்த திட்டம், மற்றொன்று ஆவணங்கள் தொலைந்து போனது என அனைத்தும் அவனை சுற்றி வளைத்திருக்க மன அழுத்தமும் ஆக்கிரமித்து கொண்டுவிட்டது.

விக்ரம் ராப்பகலாக மருத்துவமனையில் தன் மகனுக்கு சேவகம் செய்துக் கொண்டிருக்க அவனுக்கு உடல் பலவீனம் அடைந்திருந்ததை கண்ட கண்ணம்மா...

“தம்பி நீ வேணா வீட்டுக்கு போய் கொஞ்சம் ஓய்வெடுங்க நான் பையனை பார்த்துக்கிறேன்” என்று வாடி களைத்திருந்த வதனத்தை கண்டு கவலையுற்றவராக கூற...

“இல்லை கண்ணம்மா ம்மா வேண்டாம்... நான் மேனேஜ் பண்ணிக்குவேன் நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் சமைச்சு வச்சுட்டு வந்திருங்க” என்றவன் உறங்கிக் கொண்டிருந்த மகனின் சிகையை ஆதுரத்துடன் கோதிக் கொடுத்தான். அவனின் பெற்ற பாசத்தில் உண்டான வேதனை ஸ்பஷ்டமாக விளங்க எப்படியேனும் அவனையும் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்ற கிலேசத்தில்...

“ஏன் தம்பி நான் நல்லா பார்த்துக்கமாட்டேன்னு நினைக்கறீங்களா?” என்றார்.

“ச்சே... ச்சே... என்ன கண்ணம்மா ம்மா நீங்க இப்படி பேசுறீங்க? உங்களை போய் நான் அப்படி நினைப்பேனா என்னை விட நீங்க தான் இவனை நல்லா பார்த்துக்குவீங்க... எனக்கு அது கவலையில்லை, நான் ஊரை விட்டு போகணும்னு மற்ற வேலைகளில் கவனம் செலுத்திட்டு, இப்படி இவன் உருக்குலைஞ்சு படுத்திருக்கானேன்னு வருத்தமா இருக்கு கண்ணம்மா ம்மா, இவன் சரியாகி எழற வரைக்கும் எனக்கு தூக்கம் வருவது கஷ்டம் தான்”

“எனக்கு உங்க கவலை புரிஞ்சதால் தான் தம்பி போய் ஓய்வெடுக்க சொல்லுறேன்... அவனுக்குன்னு நீங்க தான் பார்த்தாகணும், அவன் ஆஸ்பித்திரியில் படுத்ததில் இருந்து ஒரு நேரமோ ரெண்டு நேரமோ தான் சாப்பிடுறீங்க... சரியானபடி தூக்கமும் இல்லை... இப்படியே போனா நாளைக்கு உங்களுக்கு ஒண்ணுன்னா அவனை எப்படி பார்த்துக்குவீங்கன்னு யோசிங்க தம்பி”

“நீங்க சொல்லுறதும் சரிதான் கண்ணம்மா”

“அப்புறம் என்ன தம்பி, காலையில் சமைக்க மட்டும் ராஜாத்தியை வர சொல்றேன்... என்ன வர சொல்லவா தம்பி?”

அவனுக்கும் இருந்த அலுப்பில் ஓய்வெடுக்க கெஞ்சி கொண்டிருந்த உடலை கட்டுப்படுத்த முடியாமல்... “சரி ம்மா நீங்க சொன்னது போலவே செய்திறலாம்” என்றவன் அன்றைய பரிசோதனையை பற்றி மருத்துவரிடம் பேசிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் அவனை நிறுத்திய கண்ணம்மா...

“தம்பி சொல்றேன்னு தப்பா எடுக்காதீங்க, ஆதன் அப்பப்போ அந்த நந்தினி பெண்ணை கேட்டு தூக்கத்தில் உளருறான்... ரொம்ப கஷ்டமா இருக்கு தம்பி ஒரு வார்த்தை அந்த பிள்ளைகிட்டே சொன்னா வந்து பார்த்துட்டு போயிரும்... நம்ம பையனும் சீக்கிரம் குணமாகிருவான்னு தோணுது”

“கண்ணம்மா ம்மா இதுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன் திரும்பத் திரும்ப பேசி என்னை கடுபேற்றாதீங்க” முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு கூறிவிட்டு விருட்டென்று நகர்ந்து சென்றிருந்தான்.

கண்ணம்மா அப்போதைக்கு நந்தினியை அழைப்பதை பற்றிய எண்ணத்தை தள்ளி வைத்த போதிலும், அதிகாலையில் ஆதன் புலம்பிய புலம்பலை கேட்டு மனம் நைந்தவர் விடியும் தருவாயில் தன் தயக்கத்தை ஓரம்கட்டி விட்டு நந்தினிக்கு அழைத்து ஆதனின் உடல்நிலை பற்றி கூறி, அவன் புலம்பலையும் கூறி, விக்ரமின் கோபப் பேச்சையும் கூறிவிட்டிருந்தார்.

கண்ணம்மா ஆதனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதே நந்தினிக்கு மனத்தாபம் உண்டாக, விக்ரமின் கோபம் அவளை எரிச்சலூட்டியது ‘இப்போ கூடவா உன் மகனை பார்க்க அனுமதிக்கமாட்ட’ என்று கருவியவள்...

“அவர் கிடக்கிறாரு கண்ணம்மா ம்மா நீங்க அப்போவே என்கிட்டே சொல்லியிருக்க வேண்டியது தானே?” என்று அவரை உரிமையாக கடிந்துக் கொண்டவள்...

“சரி எந்த ஹாஸ்பிடல் சொல்லுங்க நான் வரேன்” என்றதும் மருத்துவமனை பெயரை கூறியவர்...

“நந்தினிமா நான் சொன்னேன்னு விக்ரம் தம்பிக்கு தெரிய வேண்டாம்”

“கண்டிப்பா கண்ணம்மா அதை நான் பார்த்துக்கிறேன்”

“நந்தினிமா அப்புறம் இன்னொரு விஷயம் இங்கே வரப்போ உங்க வீட்டில் என்ன சொல்லுவ, ஆயிரம் இருந்தாலும் நீ வயசு பொண்ணு உன்னை பெத்தவங்களுக்கு வயுத்துல கருக்கடை கட்டிகிட்டு அல்லாடக்கூடாது பாரு... ஏன்னா நானும் ஒரு பெண்ணை வச்சிருக்கேன் அதான் கேட்கிறேன்”

“அதெல்லாம் பிரச்சனை இல்லை கண்ணம்மா நான் பார்த்துக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தவள், வேகமாக புறப்பட்டு தயாராக ரேவதி மகளை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்.

“நானும் பார்க்கிறேன் கண்ட நேரத்தில் போற வர, என்னடி நினைச்சுட்டு இருக்கிற உன் மனசுல, நீ காலேஜுக்கும் போக வேண்டாம், ஒண்ணுத்துக்கும் போக வேண்டாம் ஒழுங்கா அடங்கி வீட்டில் இரு, இந்த வருஷமே மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் அப்புறமா நீ எங்க வேணா போ” என்று தாட்பூட் என்று கத்த, நந்தினிக்கு திகில் பிடித்துக் கொண்டது... அவரை என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவளின் தந்தை துரைசாமி அங்கே பிரசன்னம் ஆகியிருக்க...

“ரேவதி என்னாச்சு ஏன் குழந்தையை திட்டிட்டு இருக்கிற?”

“ஆமாம் குழந்தையாம் குழந்தை, இப்போ தான் புட்டி பாலை குடிக்கிறா பாருங்க, ஏழு கழுதை வயசாச்சு கல்யாணம் பண்ணியிருந்தா இந்நேரம் ஒரு பிள்ளைக்கு அம்மா ஆகியிருப்பா... சரி படிக்கட்டுமேன்னு விட்டது தப்பா போச்சு, சும்மா சும்மா ஊர் சுத்த போகிறா நீங்களும் கண்டுக்க மாட்டேங்குறீங்க?” என்று நீளமாக குற்றப் பத்திரிக்கை வாசிக்க, நந்தினி பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கி பதைப்புடன் நிற்கும் போதே...

“என்னம்மா நந்தினி, உங்க அம்மா இப்படி சொல்லுற மாதிரி அப்படி எங்கே தான் போற?” என்றதும், அந்நேரம் உடல் நலம் குன்றி மருத்துவமனை வசத்தில் இருந்த ஆதனை கற்பனையில் கிரகித்துக் கொண்டவளுக்கு கண்கள் கலங்கிய குட்டையாக, தவிப்பை கட்டுப்படுத்த இயலாமல் தன்னையும் மீறி கேவி விட்டாள்... அவளின் அழுகையை கண்டு பெற்றவர்கள் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்வை பரிமாறிக் கொள்ளும் போது நந்தினி உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்க பேச ஆரம்பித்தாள்.

“அது வந்துப்பா என் பிரெண்டோட குழந்தைக்கு உடம்பு சரியில்லை, அவ புருஷன் பாரினில் இருக்கிறாரு... இங்கே அவ மாமியார் கூட இருக்கிறா... என்ன தான் அவ மாமியார் கூட இருந்தாலும் எல்லாத்துக்கும் சட்டுன்னு உதவி கேட்டுவிட முடியாதே... அவங்க அம்மா, அப்பாவும் வர முடியாத சூழ்நிலை வேறயாம்... காலையில் போன் பண்ணி எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா நந்தினின்னு அழுதாப்பா, அந்த பையனும் என்னை ஆசையா நந்தினி ம்மா! நந்தினி ம்மான்னு! நம்ம அகிலா அக்கா பொண்ணு மாதிரியே கூப்பிடுவானா அதான் மனசு தாங்கலைப்பா”

நந்தினி பேச ஆரம்பித்த போதே சூழ்நிலையை கருத்தில் கொண்டு சகஜமாகி இருந்ததால், அடுத்தடுத்து என்ன கூறினால் பெற்றவர்கள் மனம் மாறுவார்கள் என்றதை மானசீகமாக பரிசீலித்துக் கொண்டு அதற்கு தக்கபடி சிந்தித்து, அதை பிசிறில்லாமல் கதை தொடுத்து கூறியவளை கண்டு பெற்றவர்கள் இருவருக்கும் மகளின் வருத்தத்தில் மனம் இறங்கினார்கள்.

“விடு ரேவதி நம்ம நந்தினியை பற்றி உனக்கு தெரியாதா அந்த குழந்தைக்கு உடம்பு சரியாகிற வரைக்கும் அவ போயிட்டு வரட்டும்” என்று தந்தை கூறியதை கேட்ட நந்தினிக்கு மனம் குத்தாட்டம் போட்டது... அதை முகத்தில் காட்டாமல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவளை கண்டு மேலும் இறங்கி...

“நீ வாம்மா நந்தினி நானே உன்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வரேன்” என்றதும் அவளுக்கு பக்கென்றாகி போனது.

“அப்பா... நீங்களுமா நீங்க எதுக்கு நானே போயிக்குவேனே?”

“இல்லைம்மா நானே விட்டேனா நானே கூட்டிட்டு வந்திருவேன்ல அதுக்கு தான்”

“அப்பா நான் இப்போ அவளுடைய வீட்டுக்கு தான் போகப் போறேன்... அங்கே அவ ரெடி ஆனதும் அவளுடன் போவேன், அப்புறம் கொரோனா வந்த பிறகு ஹாஸ்பிடலில் எல்லாரையும் ரீசன் இல்லாமல் பார்க்க அனுமதிக்கிறதில்லை ப்பா... நீங்க அங்கே வந்து எதுக்கு சிரமப்படணும்? நான் அவ கூட மட்டும் தான் இருக்கப் போறேன் மற்றபடி, வெளி வேலைக்கு எல்லாம் அவங்க மாமியார் ஆள் ஏற்பாடு பண்ணிட்டாங்களாம், அவங்களுக்கும் ஏஜ் ஆகிட்டதால தான் எங்கே கொரோனா வந்திருமோன்னு முன் ஜாக்கிரதையா இருக்காங்க நீங்களும் சேஃபா இருக்க வேணாமா?”

“அது என்னடி நாங்க மட்டும் பத்திரமா இருக்கணும், அப்போ உனக்கு ஒன்னும் ஆகாதா?”

“ஆகாதும்மா நான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததும் கஷாயம்ன்னு ஒரு மூலிகை தருவியே அதை கொடு நான் குடிச்சுக்கிறேன், அப்புறம் நானும் என்னை சேஃபா தான் பார்த்துக்குவேன்” அதையும் இதையும் கூறி அவள் வீட்டினரை சமாளிப்பதற்குள் அவளுக்கு நாவு உலர்ந்து போனது.

ஒருவழியாக அனைத்து தடைகளையும் தாண்டி மருத்துவமனைக்கு சென்று ஆதனை பார்த்தவளுக்கு நெஞ்சம் விம்மியது. முன்னைக்கும் இருமடங்கு இளைத்து எழும்பில் சதையை ஒட்டி வைத்தது போல் இருந்தவனின் உடல்வாகில் சலைன் ஏற்றுவதற்கு ஆங்காங்கே ஊசி குத்திய இடங்கள் பிளாஸ்டர் இட்டு பார்க்கவே பரிதாபமாக இருக்க நந்தினிக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது.

ஆதன் நந்தினியை கண்டு விட்டதும் அத்தனை நாட்களாக இருந்த சோர்வு பொய்யோ என்பது போல் ஆயிரம் விளக்கு ஜோடனையுடன் பிரகாசித்தது.

“நந்தினி ம்மா” என்று மெல்லிய குரலில் அழைத்தவனை வாஞ்சையுடன் உச்சி முகர்ந்தாள்.

“ஆது குட்டிக்கு என்னாச்சு?” என்று அவன் முகத்தை மென்மையாக வருடிக் கொண்டே வினவியதும்...

“ம்ம்... ஆதுக்கு காய்ச்சு” என்று மழலையில் கூறி தன் கழுத்தை தொட்டு காண்பித்தவன், ஆங்காங்கே ஊசி ஏற்றப்பட்டு அதற்கு பிளாஸ்டர் போட்டிருந்த இடங்களையும், அவனுக்கு சலைன் ஏறிக் கொண்டிருந்ததையும் சுட்டி...

“எல்லா இடத்துலையும் ஊச்சி போட்டுட்டாங்க... வலிக்கு... ஆதுக்கு வலிக்கு நந்தினி ம்மா” என்று பினாத்தியவனை கண்டு அவளுக்கு அனுதாபம் பொங்கியது.

அந்தோ பரிதாபம்! இதே அவனுக்கு அன்னை மட்டும் சரியாக வாய்த்திருந்தால் எப்படி கலகலவென்று சுட்டியாக இருந்திருப்பான்... இந்த சிறு வயதிலேயே பரிதாபத்தை சுமக்க வேண்டும் என்று விதி வைத்துவிட்டதே என்று எண்ணியவளின் சித்தம் பாராங்கல்லை தூக்கி வைத்தது போல் கணத்தது.

அவனை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டு தன்னை சரி செய்துக் கொண்டவள்... “உனக்கு உடம்பு சரி இல்லைன்னு தானே ஊசி போட்டிருக்காங்க சீக்கிரம் சரி ஆகிரும்” என்றவள் அவனுக்கு பல சமாதான மொழிகளை கூறி தேற்ற விரைவாகவே அவளுடன் ஒன்றிப் போனான்.

அவனுடன் பேசிக் கொண்டே இருந்தவளுக்கு நினைவுகள் விக்ரமை நோக்கி பறந்தது, ஆதனுக்கு அன்னையாக மட்டுமே சிந்தித்தவளுக்கு விக்ரமுக்கும் அவள் தான் முதல் மனைவி என்பதும் அப்படி அவள் நினைப்பது போல் சரியாக இருந்திருந்தால்... இந்நேரம் அவள் விக்ரமுடன் எந்த உறவும் நிலைநாட்டியிருக்க முடியாதே என்ற நினைக்கும் போதே தன்னுள் ஏதோ உடைவதை போல் வெறுமையாக உணர்ந்தாள்.

அவனை நினைக்கும் போதே ஏன் தனக்குள் இனம் புரியாத உணர்வொன்று எழுகிறது, அவள் எண்ணியது போல் அவன் மனைவியுடன் இருந்திருந்தால் என்ன செய்ய முடியும்? என்று ஏதேதோ சிந்தித்தவளுக்கு இறுதியில், இது தான் இன்னார்க்கு இன்னார் என்ற பூர்வ ஜென்ம பந்தமோ என்ற கருத்து அவளுள் பரவசத்தை உண்டு செய்தது.

ஆதனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே மருந்து வாங்கச் சென்றிருந்த கண்ணம்மா அங்கே வந்திருக்க, நந்தினியின் வரவையும், ஆதனின் ஒளிர்ந்த முகத்தையும் கண்டு நிம்மதியுற்றார்.

“எங்கே கண்ணம்மா போனீங்க?”

“மருந்து வாங்கப் போனேன்மா, இவன் தனியா இருப்பானேன்னு தான் ஓடி வந்தேன் பார்த்தா நீ இங்க இருக்கிற”

“ஆதுவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்படி வராமல் இருப்பேன் கண்ணம்மா”

“நீ வந்ததும் தான் இந்த பையன் முகத்துல சிரிப்பே வருது”

“ஆமாம் எங்கே உங்க விக்ரம் தம்பி, மகனை உங்க பொறுப்பில் விட்டுட்டு தொழிலை பார்க்க போயாச்சா?”

“அதெல்லாம் இல்லை கண்ணு... தம்பி அப்படி எல்லாம் பண்ணாது... அதுக்கு தான் மகன்னா உசுராச்சே... நாலு நாளா தம்பி தான் பார்த்துகிட்டு இருந்திச்சு... தொழிலையும் பார்த்துகிட்டு, ஆஸ்பத்திரிக்கும் அலைஞ்சுகிட்டு ரொம்ப சோர்ந்து போச்சு, நான் தான் நேத்து ராத்திரி பேசி வீட்டுக்கு அனுப்பி வச்சேன்”

“ம்ஹும்.... இன்னைக்கு ஏன் இன்னும் வரலை மணி ஒன்பதாக போகுதே”

“தெரியலை கண்ணு தூங்கிருச்சு போல போன் அடிச்சுப் பார்த்தேன் எடுக்கலை... அசந்து தூங்குது போல”

“சரி கண்ணம்மா நீங்கள் வீட்டுக்கு போய் குளிச்சுட்டு ஹாஸ்பிடல் வாங்க அதுவரைக்கும் நான் பார்த்துக்கிறேன்” என்றவளை யோசனையுடன் பார்த்தப்படி நின்றவரை...

“என்ன கண்ணம்மா உங்க தம்பி கேட்டா என்ன சொல்றதுன்னு யோசிக்கிறீங்களா” என்றதும் அவரும் ஆமாம் என்று தலையசைத்தார்.

“நான் ஆதனை கேட்டு உங்ககிட்டே பேசினேன் அப்போ நான் தான் துருவி துருவி கேட்டேன்னு சொல்லுங்க” என்றவளின் பேச்சை ஏற்று அவரும் இல்லம் சென்று உணவை தயாரித்து வைத்து விட்டு குளித்து தயாராகி நின்ற போதுதான், விக்ரம் தயாராகி கீழே வந்திருக்க அங்கிருந்த கண்ணம்மாவை கண்டு சிந்தனைக்குள்ளானான்.

அவன் அறிவான் கண்ணம்மா அவ்வளவு எளிதில் ஆதனை விட்டு நகர்பவர் அல்ல... அதே போல நம்பிக்கையற்ற ஆட்களிடம் விட்டுவிட்டு வருமளவிற்கு கடமையாக நினைப்பவரல்ல என்றவனுக்கு அந்த ஊகம் தோன்ற அவரிடமே அதை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று சிந்தாந்தம் கொண்டான்.

“கண்ணம்மா ம்மா நீங்க இங்கே இருக்கீங்க அங்கே ஆதன் கூட யார் இருக்கா” என்றவனிடம் சிறிதும் தயங்காமல்...

“நம்ம நந்தினி தான் தம்பி” என்றவர் கூற்றில் அவன் ஊகம் மெய் என்றானது.

“அவகிட்டே எதுக்கு சொன்னீங்க?” என்று அதட்டியதும்...
அவள் கூறியதை அட்சரம் பிசகாது இயம்பியவரின் கூற்று ஒரு பக்கம் இனிமை அளித்தாலும், மற்றொரு மனமோ அவள் மேல் கொண்ட புறக்கணிக்கும் சபதத்தை தாக்கு பிடிக்க வைத்தது.

“அவ கேட்டா நீங்க சொல்லிடுறதா, வேறெதாவது சொல்லி சமாளிச்சிருக்கலாமே கண்ணம்மா ம்மா” என்றவனை நோக்கி...

“இங்கே பாரு தம்பி டாக்டர் ரௌண்ட்ஸ் வர நேரம் நெருங்கிருச்சு... இதுக்கு மேல நீங்க விசாரிச்சு நான் பதில் சொல்லிட்டு இருந்தா பையனை சோதிக்க வர டாக்டருக்கு பதில் சொல்ல முடியாது... நந்தினி பொண்ணு இப்போ தான் வந்திருக்கு அதுக்கு எதுவும் தெரியாது நாம இப்போ கிளம்பலாமா, வேண்டாமா” எங்கே குறி வைத்தால் அவன் கேள்வி கேட்கும் படலத்தை முறியடிக்கலாம் என்ற தாத்பர்யம் புரிந்தவராக கூறியிருக்க, நொடியும் அங்கே நின்று வழக்காடாமல் கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டிருந்தான்.

நந்தினி அறையின் வாசலில் உள்ள பார்வையாளர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்ததை கண்டு அவளை நெருங்கிய இருவரும்...

“என்னமா நந்தினி இங்கே இருக்க?” என்று கண்ணம்மாவின் கேள்விக்கு...

“டாக்டர் செக்கப் பண்ணுறாங்க ம்மா... நீங்க ஏன் இவ்ளோ லேட்? உங்ககிட்டே போகும் போதே சொல்லி அனுப்பினேனா இல்லையா, டாக்டர் வர நேரம் உங்களுக்கு தெரியாதா, இவ்ளோ மெத்தனமாவா இருக்கிறது... குழந்தை தனியா இருப்பானேன்னு கொஞ்சமாச்சும் பொறுப்பும், அக்கறையும் இருக்க வேண்டாம்” என்றவளின் கேள்வி தான் கண்ணம்மா நோக்கி பாய்ந்ததே தவிர, பார்வை விக்ரமை தான் அதிகாரத்துடன் அதட்டிக் கொண்டிருந்தது.

அவளின் அந்த அதிகாரமும், அதட்டலும் தனக்குத் தான் என்று புரிந்தாலும், அவனாக எதுவும் பதில் கூறாமல் வேறெங்கோ பார்வையை பதித்தபடி நின்று கொண்டான்.

மருத்துவர் வெளி வந்ததும்... “நேற்றைக்கு விட இன்னைக்கு பெட்டரா இருக்கிறான்... இப்படியே கண்டினியு ஆச்சுன்னா சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணிரலாம்” என்று கூறிவிட்டு செல்ல... அவன் உடல் நிலையின் தேறுதல் எதனால் என்று புரிந்த கண்ணம்மா, விக்ரம் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தம் தொணித்த பார்வையை பரிமாறிக் கொண்டனர்.


**************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-13 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் மூன்று பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-14
அவர்களை கடந்து நந்தினி முன்னே சென்றிருக்க கண்ணம்மா விக்ரமை நெருங்கி...

“தம்பி இன்னைக்கு காலையில் இருந்து தான் அவன் முகத்துல அப்படி ஒரு சிரிப்பு, இது யாரால அந்த புள்ளையாள, ம்ச்., என்ன நடக்குமோ தெரியலை” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பிரலாபித்து விட்டு ஒன்றுமறியாதவரை போல் அறைக்குள் புகுந்து கொண்டார்.

தன் தந்தையை கண்ட ஆதன்... “அப்பா” என்றவனின் குரலில் இருந்த துள்ளல் அவனையே நெகிழ வைத்தது. அத்தனை நாட்களாக அவன் அருகில் இருந்தது தான் கவனித்துக் கொண்டிருந்தான் ஆனால் அப்போதெல்லாம் பேச அரும்பாடுபடுபவன் இன்று அனைத்துக்கும் ஈடுகட்டுவது போல் உயிர்ப்புடன் கூறினான்.

‘இத்தனை நாளா எங்கடா ஒளிச்சு வச்சிருந்த இந்த சிரிப்பை எல்லாம்’ என்று மானசீகமாக கேட்டு கொண்டவனுக்கு ஆயாசமாக இருந்தது.

எங்கே விட்டால் நந்தினி சென்றுவிடுவாளோ என்ற விதிர்ப்பில் ஆதன் ஏதேனும் கூறி அவளின் கவனத்தை கவர்ந்துக் கொண்டே இருந்தான்... நந்தினியும் அவனை புரிந்துக் கொண்டவள் அவன் மாத்திரையின் உபயத்தால் உறங்கும் வரை கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்துவிட்டு, அவன் நன்றாக உறங்க ஆரம்பித்ததும் அறையின் ஒரு மூலையில் அமர்ந்துக் கொண்டாள்.

அவள் பார்க்காத வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், அவள் அவன் எதிரில் அமர்ந்ததும் அலைபேசியில் கண்ணுற்று அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்துக் கொண்டான்.

நந்தினி “ம்க்கும்” என்று தொண்டையை கனைத்து தன்னை உணர்த்தியவளை திரும்பியும் பாராமல் திண்ணக்கமாக அமர்ந்திருந்ததை கண்டவளுக்கு ஆத்திரமாக வந்தது.

‘என் முகத்தை பார்க்கக் கூட உனக்கு பிடிக்கலையா? இரு உன்னை என்கிட்ட கெஞ்ச விடலை நான் நந்தினி இல்லை’ என்று பிரதிக்ஞை செய்துக் கொண்டாள்.

“கண்ணம்மா ம்மா இனி மேல் நான் ஆதனை பார்க்க வர முடியாது அதில் சிரமம் இருக்கு” என்று ஆரம்பிக்க...

“ஏன் நந்தினிம்மா என்னாச்சு?” பனிப்புடன் கண்ணம்மா வினவ, விக்ரமின் உடல் திகைப்புற்று அசைந்தது... அதை தவறாமல் குறிப்பெடுத்துக் கொண்டவள்...

“எங்க வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க, சீக்கிரமே கல்யாணமும் பண்ணப் போறாங்க அப்புறம் எப்படி நான் இங்கே வர முடியும்” என்றதும் இருவருக்குமே தூக்கி வாரிப் போட்டது.
விக்ரம் ஒரு கணம் அவளை அதிர்ந்து நோக்கியவன், சடுதியில் பார்வையை இயல்பாக்கிக் கொண்டு தரையை பார்த்தப்படி அமர்ந்துவிட்டான்.

“நந்தினிமா நீ சொல்றது நிஜமா?” என்று கண்ணம்மா நடுங்கும் குரலில் கேட்க, நந்தினிக்கு அவரின் மேல் பரிதாபம் சுரந்தது.

‘விக்ரமுக்கு இருக்கும் நலம் விரும்பியில் இருவரில் அவர் ஒருவர் தாய் மனம் ஆயிற்றே அதுதான் படாத பாடுபடுகிறது’ தனக்குள் நினைத்துக் கொண்டவள் விக்ரமின் பார்வை தரையிலேயே கூர்ந்து பதிந்திருப்பதை உறுதி செய்துகொண்டு, கண்ணம்மாவை பார்த்து இமைசிமிட்டி நாக்கை துருத்தி அழகுகாட்ட நொடியில் அவர் முகம் மின்னியது. அவரும் அவளை புரிந்துக் கொண்டவர் அவளை ஒத்து பேசலானார்.

“ஆமாம் மா வயசு பொண்ணுகளை காலா காலத்தில் கரை சேர்த்தா தானே பெற்றவங்களுக்கு நிம்மதி... என்ன விக்ரம் தம்பி நெசந்தானே” என்று விக்ரமையும் அவர் பேச்சிற்குள் இழுக்க, தரையில் புதையலெடுத்துக் கொண்டிருந்தவனின் பார்வை லேசாக அவரை ஏறெடுத்து பார்க்க, அவன் முகம் கருத்திருந்தது.

“நாளைக்கு நானும் அவரும் பார்த்து பேசிக்கப் போகிறோம் கண்ணம்மா ம்மா... ஆதனை நான் பார்க்க வரது சந்தேகம் தான்” என்று கூறியவளின் பேச்சை கேட்டு அவன் முகத்தில் உள்ள தசைகள் அணிச்சையாக அசைந்து அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டிருப்பதை உணர்த்தியது... நந்தினியின் கண்கள் உல்லாசத்துடன் அதை ரசித்துக் கொண்டிருந்தது.

“சரிதான் ம்மா நாளையிலிருந்து நானே பார்த்துக்கிறேன் நீயும் போயி உன் வாழ்க்கையை பாரு” என்று அவரிடம் கூறி முடித்தவர்...

“நாளையிலிருந்து இந்த பையனை நான் தான் சமாளிக்கணும் என்ன செஞ்சு இந்த தங்கத்தை தேத்த” என்று அங்கலாய்த்துக் கொண்டு பெருமூச்சு விட... அதுவரை பொறுமையாக இருந்த விக்ரமுக்கு எங்கிருந்து தான் அத்தனை வேகம் வந்ததோ...

“பாதியில் போறதுக்கு ஏன் கண்ணம்மா என் பையன் மனசில் ஆசையை வளர்க்கணும்... இதுக்கு தானே நான் தலைபாடா அடிச்சுகிட்டேன், நான் சொன்னது உண்மைன்னு இப்போ புரிஞ்சுகிட்டீங்களா?” என்று சினந்தவனை அலட்டிக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் புருவம் வில்லாக வளைய ‘ஏன் உன் மனசில் ஆசை இல்லையா?’ என்று வினவிக் கொண்டிருந்தது.

“அதுக்கென்ன தம்பி பண்ண முடியும்? இந்த உலகத்தில் எல்லாமே பாதியில் வந்து பாதியில் போறதுதான்னு நீங்க தானே சொல்வீங்க, நம்ம நந்தினிம்மாவும் அப்படிதானே” என்று அவன் கூறும் வார்த்தையை கொண்டே அவனை தாக்கியதில் ஊமையாகிப் போனான். கண்ணம்மாவின் பேச்சிற்கு நந்தினியின் பார்வை சபாஷ் போட்டது.

அதற்கு மேல் தனக்கு பேச வழியில்லை என்று உணர்ந்து கொண்ட விக்ரம் வெடுக்கென்று எழும்பி வெளியே சென்றிருக்க, நந்தினி கண்ணம்மா ம்மாவை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டாள்.

“பாவம் பாப்பா தம்பி, அது முகமே சுருங்கிப் போச்சு”

“இதை உங்க தம்பி தானே வலிய இழுத்துகிட்டது அனுபவிக்கட்டும்”

“ஆனாலும் இந்த காரணம் கொஞ்சம் அதிகமாவே பாதிக்குமே பாப்பா... அந்த தம்பியோட மனசு என்ன பாடுபடுதோ” என்று விக்ரமுக்காக கவலைப்பட்டார்.

“இதுக்கு நான் அன்னைக்கு சொன்ன காரணம் தான் கண்ணம்மா ம்மா... உங்க தம்பி தூங்குற மாதிரி நடிக்குறாரு, என்ன தான் தட்டி எழுப்பினாலும் எழுந்திருக்க முயற்சிக்கமாட்டாரு... ஏதாவது அசம்பாவீதம் நடந்துருச்சுன்னு தெரிஞ்சா தான் விசுக்குன்னு எழுந்திரிப்பாங்க... நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்கம்மா எல்லாமே நல்லதா நடக்கும்ன்னு நம்புங்க” என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டிருந்தாள்.

விக்ரம் சரியாக ஒரு மணி நேரம் கழித்து உள்ளே வர அப்போதும் ஆதன் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு சுற்றும் முற்றும் விழிகளால் அலச, நந்தினி அவன் கண்களில் அகப்படாததை கண்டு நாற்காலியில் சாய்ந்தபடி கண்மூடியிருந்த கண்ணம்மாவை தட்டி...

“நந்தினி எங்கே?” என்று விசாரித்தான்.

“பாப்பா அப்போவே போயிருச்சே தம்பி” என்று சாதாரணமாக விளம்பி விட்டு இமைமூடிக் கொள்ள, விக்ரமுக்கு ஏதோ ஓர் இனம் விளங்காத ஏமாற்றம் பரவி அவனை சோர்வடைய வைத்தது.
அன்றைய இரவு அவன் நித்திரையை தொலைத்துவிட்டிருந்தான்... இரவு ஆதனுடன் கண்ணம்மாவை அமர்த்திவிட்டு இல்லம் வந்தடைந்தவன் அறையில் சென்று உறங்க முயற்சித்து மோசமாக தோற்றுப் போனான்... ‘நாளை அவனை பார்க்கப் போகிறாளாமே’ என்ற கூற்று அவன் மூளைக்குள் குடைந்து இம்சித்துக் கொண்டிருந்தது... அன்று அவளின் அணைப்பில் நின்றதை தன்னிச்சையாக நினைவு கூர்ந்தவனுக்கு அவள் வியாபகம் மரங்கொத்திப் பறவையாய் கொத்தித் தின்றது... அவள் சாய்ந்திருந்த மார்பை தன் கரத்தால் வருடிக் கொண்டவனுக்கு அவள் தன்னை விட்டு சென்றுவிடுவாளோ என்ற நினைவே சித்தத்தை சிதிலமடைய செய்துக் கொண்டிருந்தது.


****************

விடிந்தும் விடியாதா தருவாயில் விரைவாகவே கிளம்பி மருத்துவமனைக்கு சென்றவன்... “கண்ணம்மா ம்மா வீடெல்லாம் கிளீன் பண்ணாமல் தூசியா இருக்கு, போய் கிளீன் பண்ணிட்டு சமைச்சுட்டு குளிச்சு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க நான் ஆதனை பார்த்துக்கிறேன்” என்றதும் மறுப்பு கூறாமல் சென்றுவிட்டிருந்தார்.

அவர் சென்றதும் விக்ரம் மகனிடம் பேச்சு கொடுத்தப்படியே நந்தினியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்... நேரம் தான் விரயம் ஆகிக் கொண்டிருந்ததே தவிர, நந்தினி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாதது அவன் உள்ளத்தை ஊசலாட வைத்தது.

எப்போதும் நந்தினியை பற்றி கேட்கும் மகன் கூட அன்று சுத்தமாக விசாரிக்காதது மட்டும் இன்றி, அப்படி ஒருத்தி அவனுடன் பழகவே இல்லை என்பது போல் இருந்தவனை கண்டு குழப்பமாக இருந்தது. அவனோ குழந்தை பெரியவர்களை போல் மூடி மறைத்து அழுத்தமாக இருக்க தெரியாத அறியாதவன் என்பதால் அவனின் மாற்றம் எதனால் என்று புரியாமல் அவனை பெரும் அளவில் சோதித்து வைத்தது.

அவனாக நந்தினியை பற்றி பேசவும் அவனுக்கு பயமாக இருந்தது... ஒரு வேளை நந்தினி கூறியது போல் அவள் வரவே இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் ஆதனின் நிலையை எண்ணிப் பார்க்கவே முகவும் அச்சுறுத்தியது? அவன் மகனை தேற்றுவதும் அத்தனை சுலபமான காரியம் அல்லவே என்று கருதியவன் உதடுகளை இறுக மூடிக் கொண்டான்.
விக்ரமின் விழிகள் நொடிக்கு நொடி வாசலையே தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்தது... ஆனால் அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் தான் அங்கே வரவேயில்லை... மதியம் உணவை தயாரித்து எடுத்துக் கொண்ட வந்த கண்ணம்மா அவனுக்கு பரிமாற, அவருக்காக உணவை உட்கொள்ள எண்ணியவனுக்கு தொண்டையில் உருண்டையாக ஏதோ சிக்கிக் கொண்டது போல் உணவு கவளம் இறங்க மறுத்தது.

வெகுநேரம் சாதத்தை விரல்களால் அளந்துக் கொண்டிருந்தவனை கண்டு... “தம்பி என்னாச்சு இன்னைக்கு எதுவும் புடிக்கலையா?” என்றதும் தான் தன்னினைவு மீண்டவன்...

“அதெல்லாம் இல்லை” என்றுவிட்டு முடிவாக என்ன செய்ய வேண்டும் என்று உருப்பேற்ற பிறகே வேகமாக அள்ளி விழுங்கியவன்...

“கண்ணம்மா ம்மா ஆதனை பார்த்துக்கோங்க எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு போய் முடிச்சுட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு நகர்ந்திருந்தான்.

விக்ரம் வாகனத்தை எடுத்துக் கொண்டு நந்தினியின் கல்லூரி சாலையை நோக்கி ரோந்துக் காவலரை போன்று வட்டமிட்டு கொண்டிருந்தான்... அவன் அறிவான் நிச்சயம் அவள் எங்கே சென்றாலும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும் என்று அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான், அவளோ உன் கண்ணில் அத்தனை சுலபமாக தட்டுபட்டு விடுவேனா என்பது போல் கல்தா கொடுத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஒரே சாலையிலேயே வாகனத்தை ஓட்டியபடி மண்டை காய்ந்துக் கொண்டிருந்தவனின் கண்களில், புதுப்பட்டினத்தில் அமைந்துள்ள திரைப்பட அரங்கத்தில் வைத்து ஒரு ஆணுடன் சிரித்து பேசியபடி கண்களுக்கு தட்டுப்படவே அவன் சொல்லுதற்கறியாத உணர்ச்சி வசத்துக்குள்ளானான்.

‘அப்போ அவ சொன்னதெல்லாம் நிஜம் தானா?’ என்று கூப்பாடு போட மறுமுறையும் அவர்களை கண்ணுற்றான்.

நந்தினி ஏதோ கூற, அதற்கு எதிரில் இருந்தவன் அவளை கலாய்த்திருக்க வேண்டும் அவள் அவனை முதுகில் ஓங்கி செல்லமாக அடித்திருந்தாள்... ‘இனிமேல் தானே பிக்ஸ் பண்ண போறதா சொன்னா அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சதா? பப்ளிக் பிளேஸ்ன்னு பார்க்காமல் இப்படி புகுந்து விளையாடுறாங்க கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?’ என்று அவர்களை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான்.

அது பொறாமையா? இல்லை; அது பொது இடம் என்பதை கருத்தில் கொள்ளாத நாகரீக கோபமா என்று அவனுக்குள்ளே ஒரு பட்டிமன்றம் நடந்துக் கொண்டிருந்தது.

இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களை நெருங்கிய ஒருவரை நந்தினியின் தந்தையோ என்று சிந்திக்கும் போதே முகத்தை உற்று நோக்கியவனுக்கு அவள் தந்தை என்பது ஊர்ஜிதம் ஆனது... அப்போ நந்தினி சொன்னது எல்லாமே உண்மையா, அவளுக்கு சீக்கிரமே கல்யாணமா என்று என்னும் போதே இதயத்தை வேருடன் வெட்டி சாய்ப்பது போல் தோன்றியது.

இனி தான் என்ன செய்வது? அவளை வேண்டாம் என்று அவன் வாழ்க்கையில் இருந்து விரட்டிவிட்டது அவன் தான்... ஆனால் இப்போதோ ஏனடா அதை செய்தோம் என்று வருந்திக் கொண்டிருக்கிறான். இனி அவளை நெருங்க முடியாதா என்று விசனத்தில் உடலில் உள்ள சக்தி அனைத்தும் வடிந்தது போல் பலவீனமாக தலையை ஸ்டீரிங்கில் கவிழ்த்துக் கொண்டவனுக்கு உத்திரத்தில் மாட்டப்பட்ட உறி போன்று உள்மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

எத்துனை நேரம் அப்படியே இருந்தானோ ஏதோ நினைத்து மனதிற்குள் புது உத்வேகம் பிறக்க, வெடுக்கென்று எழுந்தவன் அன்று நந்தினியை காணாது செல்லக்கூடாது என்ற திடத்துடன் தனிமையில் நந்தினியை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தான்.
நந்தினியின் தந்தை சென்றுவிட்டிருக்க நந்தினியும், அவளுடன் இருந்த ஆடவனும் மட்டுமே எஞ்சி இருந்தனர்... ‘போதுமடா கடலை வறுத்தது தீஞ்சுற போகுது சீக்கிரம் கிளம்பு’ என்று அறியாத அவனை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தான்.

இப்படி நட்டநடு சாலையில் ஒரு பெண்ணுக்காக ஏங்கிக் கொண்டு அறிமுகமில்லாத ஆடவனையும் வார்த்தைகளால் நிந்தித்து கொண்டிருப்பதை எண்ணி, அவனை நினைத்து அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்தது... ‘ச்சை நாம ஏன் இப்படி யாருன்னே தெரியாதவனை எல்லாம் திட்டுறோம்’ என்றவனுக்கு காரணம் நந்தினி என்று புரிந்ததில் அவள் மேல் ஆத்திரம் வந்தது.

அவர்கள் இருவரும் அங்கே ஒருவன் இவர்கள் மேல் காண்டாகி கொண்டிருப்பது அறியாமல் இருவரும் சகட்டு மேனிக்கு சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் சில கணங்கள் பேசிக் கொண்டிருந்தால் விக்ரம் தான் யார் என்பதையும் மறந்து அவர்களை அணுகி பிடிபிடியென்று பிடித்து விட்டிருப்பான்... நல்லகாலம் அவர்கள் இருவரும் பேசிவிட்டு ஆளுக்கொரு திசையில் செல்ல நந்தினி சென்ற வாகனத்தை துரிதமாக தொடர்ந்து விரட்டியவன் காரை கொண்டு வழிமறைத்தான்.
திடிரென்று ஏற்பட்ட இடையூரில் நந்தினி வாகன ஓட்டியிடம் கோபத்துடன் குரலை ஓங்க எண்ணிய சமயம், அங்கே அகஸ்மாத்தாக வந்த விக்ரமை கண்டு அப்படியே வார்த்தைகளை உள்ளிழுத்துக் கொண்டாள்.

“உன்கிட்டே பேசணும் என் கூட வா” என்று எந்தவித தயக்கமும் இன்றி நேரடியாக விளம்பியவனை கண்களை சுருக்கி பார்த்தவள்...

“சாரி எனக்கு நேரமில்லை” என்று விட்டேரியாக விட்டு வாகனத்தை எடுப்பதில் முனைப்பு காட்ட, அத்தனை நேரம் அடக்கி வைக்கப்பட்ட ஆத்திரம் சீறிக் கொண்டு எழ...

“ஏன் அவன் கூட பேச மட்டும் நேரம் இருந்ததா? இப்போ மட்டும் என்கூட வரலை அப்புறம் நடக்கிறதே வேற” என்று சற்று கடுமையாகவே மிரட்ட, நந்தினிக்கு அவன் கோபத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது. சுற்றும் முற்றும் ஓர் முறை பார்வையை ஓட்டியவளை கண்டு கடுப்புற்றவன்...

“நான் ஒண்ணும் உன் கையை பிடிச்சு இழுக்க கூப்பிடலை, அப்படியே யாரவது பார்த்தாலும் பரவாயில்லை அவனை விட நான் ஒன்றும் குறைஞ்சு போயிறலை ஒழுங்கா வா” என்று கடிந்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பியவனிடம்...

“என்ன அதிகாரம் எல்லாம் பலமா இருக்கு?” என்று கண்களை விரித்து கோபமாக கேட்க...

“ஏய் எதுவும் பேசின அப்புறம் இங்கேயே உன்னை கைமா பண்ணினாலும் பண்ணிருவேன் ஒழுங்கா வா டி” என்று அரட்டிவிட்டு வாகனத்தை விரட்டிக் கொண்டு சென்றுவிட, ‘இருடி உன்னை பேசிக்கிறேன்’ என்று தானும் அவனை கரித்து கொட்டியபடியே அவனை தொடர்ந்து சென்றாள்.


****************

மாலை நேரம் பகலவன் கூட்டுக்குள் செல்ல நிலாமகள் வானில் உலவு வரும் வேளையில் சூரக்கோட்டையில் உள்ள அய்யனார் கோவில் அருகில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி காத்திருக்க நந்தினியும் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தாள்.

இருவரின் பார்வையும் கூர்மையாக மோதிக் கொண்டதில் திரளான உணர்ச்சிகள் அவர்களை சுற்றி வட்டமிட்டு கொண்டது. சில கணங்கள் மௌனமே அங்கே ஆட்சி செய்ய அதை கலைத்தது விக்ரமின் குரல்...

“லேட் ஆகுதுன்னா வீட்டில் சொல்லிரு” என்றவனை கண்கள் இடுங்க பார்த்தவள்...

“என்னன்னு சொல்லுறது... எனக்கு தாலி கட்டின புருஷன் என் கூட பேசணும்னு கூப்பிட்டிட்டு வந்திருக்காரு அதனால் நீங்க என்னை தேடாதீங்கன்னு சொல்லுறதா?” ஒற்றை புருவத்தை உயர்த்தி இறுமாப்பாக வினவியவளின் கேள்வியை கண்டு தடுமாறி நின்றான். அந்நிலையிலும் அவளின் புருஷன் என்ற வார்த்தை அவனுள் பனிமழையை பொழிந்தது போல் சில்லென்று சிந்தையை குளிர்வித்தது.

அவள் மட்டும் எப்படி இப்படி வார்த்தைக்கு வார்த்தை மடக்கும் யுக்தியை கற்று வைத்திருக்கிறாள் என்று எண்ணியதை மறைத்து வைக்காமல் அவளிடம் வெளிப்படுத்தவும் செய்திருந்தான்.

“என்னை இப்படி வார்த்தையால் அரெஸ்ட் பண்ணுற திறமை உன்கிட்டே மட்டும் தான் இருக்கு” என்றவனுக்கு உதட்டில் மெல்லிய நகை தோன்றியது.

“சும்மா இந்த பாச்சா பேச்செல்லாம் வேண்டாம், எதுக்காக தனியா பேசணும்னு சொன்னீங்க அதை மட்டும் சொல்லுங்க” விட்டேரியாக உரைத்தவளை கண்டு அவனுக்கு நெஞ்சம் வலித்தது.

“என் கூட பேசவே அவ்ளோ கஷ்டமா இருக்கா நந்தினி, நான் உனக்கு அவ்ளோ வேண்டதவனா போயிட்டேனா?” என்று உள்ளே சென்றுவிட்ட கம்மிய குரலில் கூறிய வார்த்தையின் தாக்கம் அவளை அசைத்துப் பார்த்தது.

“ஆமாம் நான் வேணும்னு வருவேன் நீங்க வேண்டாம்ன்னு தள்ளி வைப்பீங்க, அப்படி தள்ளி போகலைன்னா நெருப்பை அள்ளி கொட்டுற மாதிரி வார்த்தையை வீசுவீங்க... அதை கேட்டு நான் தாங்கிட்டு இருக்கணும்” அவளும் மெல்லிய குரலில் வேதனையுடன் கூறினாள்.

அவளின் வேதனையான குரலில் தான் தன் தவறை உணர்ந்துக் கொண்டவன்... “என்னை மன்னிச்சிரு நந்தினி, நான் பேசியது ரொம்ப தப்பு, அதுக்காக நீ என்ன தண்டனை கொடுக்க நினைக்கிறயோ கொடு நான் ஏற்றுக்கிறேன்” என்றவன் அவள் வலது கரத்தை தன் இரு கைகளிலும் குவித்து அடக்கி கொண்டான்.

“ப்ளீஸ் மன்னிச்சிரு” என்று உள்ளடங்கிய குரலில் கூறினான்.

“எதுக்காக இந்த திடீர் மன்னிப்பு படலம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“ஏன் தப்பு பண்ணினவன் நான் மன்னிப்பு கேட்கிறது தானே நியாயம்... உன்னை ஒதுக்கி வைக்கணும்னு நான் நினைச்சது சரி, அதுக்காக உன்னை அப்படி பேசியிருக்கக்கூடாது ஒரு பொண்ணா உனக்கு அது எப்படி இருந்திருக்கும்ன்னு இப்போ தானே புரியுது” என்றவனை...

“ம்ஹும்...” என்று லேசாக தலையசைத்து அசட்டையாக ரீங்காரம் செய்தவள்...

“இந்த திடீர் ஞானோதயம் எதனால் வந்தது விக்ரம்?” நெற்றி பொட்டில் குறிபார்த்து தாக்குவது போன்ற அவளின் சுருக்கென்ற கேள்வியில் தடுமாறியவன் சடுதியில் தன்னை சமாளித்துக் கொண்டு பேசலானான்...

“என்னால் உன்னை விட்டுக் கொடுக்க முடியலை நந்து... ஒரு மனசு உன்னை ஏற்றுக்க சொல்லுது, இன்னொரு மனசு என்னோட அலங்கோலமான கடந்த கால வாழ்க்கையை காட்டுது... என்னால் தாங்க முடியலை நந்தினி... ஆனால் நீ இல்லாமலும் இருக்க முடியாதுன்னு எனக்கு தெளிவா புரியுது... புரிஞ்சுக்கோ நந்து”

அவனின் பிரத்யேகமான நந்து என்ற அழைப்பு அவளுள் புதிய செல்களை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தாலும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கோ அவளின் உள்ளுணர்வை புரிந்துக் கொள்ள முடியாத சூழலில் கலக்கம் சூழ்ந்தது.

“இப்போ மட்டும் எப்படி எல்லாத்தையும் மறந்து என்னை ஏற்றுக்கறீங்க விக்ரம்? இப்போவும் உங்களுடைய கடந்த கால வாழ்க்கை எதுவும் மாறிடலை அப்புறம் எப்படி என் காதலை நீங்க அங்கீகரிக்கறீங்க?” என்ற கேள்வியில் அவளின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தபடி பேசலானான்.

“எல்லாருக்கும் வாழ்க்கையில் தான் தோல்வி வரும் நந்து... ஆனால் எனக்கு தோல்வியில் தான் வாழ்க்கையே இருக்கு... என்னடா வாழ்க்கை இதுன்னு நினைக்காத நாளில்லை... ஆனால் இந்த முறை நான் தோற்று போகணும்னு தோல்வியில் இன்பத்தை கொடுத்தவள் நீ நந்து... என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவள் நீ... என்னடா வாழ்க்கை எப்போதடா விடுதலை கிடைக்கும்ன்னு நினைச்சுட்டு இருத்தவன்கிட்டே நான் வாழணும்னு ஒரு உயிர்ப்பை கொடுத்தவ நீ நந்தினி... என்னால் என் மனதுக்கு துரோகம் செஞ்சுட்டு வாழ முடியாது” என்றவனை...

“உங்க மனசில் என் மேல் விருப்பமும், அபிப்ராயமும் இருக்குன்னு தெரியும், நீங்க குழம்பிட்டு இருக்கீங்கன்னு தெரியும்... ஆனால் அந்த குழப்பமும், தயக்கமும் இப்போ மட்டும் எப்படி போச்சு?” அவளின் கேள்விக்கு அவளுக்கே விடை தெரியும் என்றாலும் அவன் என்ன தான் கூறுகிறான் என்று பார்க்கத்தான் அவனுக்கு நூல்விட்டு பார்த்தாள். அவனும் அந்த காரணத்தை கூறியதும்...

“நினைச்சேன்” என்ற நந்தினி கசப்பாக புன்னகைத்தவள்...

“நீங்க நான் சொன்னதை கேட்டு என்னை தேடி ஓடி வருவீங்கன்னு தெரியும்... தூங்குற மாதிரி நடிக்கிற உங்களை எழுப்ப நான் உபயோகப்படுத்தின யுக்தி அது... அப்படி எனக்கு கல்யாணம் ஆகப்போகுது, நான் இன்னொருத்தன் கூட பேசிட்டு இருந்தது எல்லாம் தான் என் மேல் உள்ள உங்க காதலை வெளிக் கொண்டு வந்ததுன்னா இப்போ சொல்றேன் தெளிவா கேட்டுகோங்க” என்றவளை கலவையான உணர்ச்சிகளுடன் பார்த்துக் கொண்டிருக்க...

“எனக்கு வரன் எதுவும் பார்க்கலை, கல்யாணத்துக்கும் அவசரப்படுத்தலை... என்கூட பேசிகிட்டு இருந்த பாலா எனக்கு அத்தான் முறை ஆகுது... அதாவது என் அக்கா புருஷனோட சித்தப்பா பையன், என் அத்தானோட தம்பி... அவனுக்கும் எனக்கு கிட்டத்தட்ட ஒரே வயசு தான் ஆனால், ரெண்டு மாதம் எனக்கு இளையவன்... அதனால் அவனும் நானும் அக்கா, தம்பி மாதிரி நல்லா பாசமா தான் பழகிக்குவோம்... அதே சமயம் அவன் எனக்கு முறைன்னு எல்லாரும் பண்ணுற மாதிரி என்னை சீண்டி விளையாடுவான் அப்படிதான் இன்னைக்கும் பேசி சீண்டிகிட்டோம்... என் அப்பா தான் அவன் என்னை பார்க்கணும்னு சொல்லி சொன்னாரு, அதனால் தான் வந்தேன்”

“ஏய் உன்கிட்டே நான் எப்படி தேடி வந்தேன்னு சொல்லணும்னு தான் அதை சொன்னேன் உன்னை சந்தேகப்பட்டு வரலை அதை புரிஞ்சுக்கோ... உன்னை என்னால் விட்டு கொடுக்க முடியாது நந்தினி” அவன் கூறியதை கேட்டுக் கொண்டு இமைக்காமல் பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள்.

“.....................”

“இன்னைக்கு முழுசும் நீ ஹாஸ்பிடல் வரலை, என்னை விடு ஆதன் கூடவா உனக்கு வேண்டாம்... அவன் நேத்து தான் நல்லா இருக்கிறதா டாக்டர் சொன்னாங்க, நீ வரலைன்னா அவன் ரொம்ப சோர்ந்திருவான் நந்தினி”


“ம்ச்., போதும் விக்ரம்... ஆதனை விடுங்க அவன் நம்ம வாழ்க்கை கட்டத்தில் இருக்கிறான் அவ்வளவு தான் ஆனால், அவன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன்... ஆனால் என்னுடைய உணர்ச்சிகளை பதம் பார்த்து குழப்பினது நீங்க... இப்போவும் நான் எனக்கு கல்யாணம்ன்னு சொல்லி உங்களை தூண்டி விடலைன்னா என்னை தேடி வந்து உங்க மனசை திறந்திருக்கமாட்டீங்க அது தானே உண்மை” என்றதும் அவனுக்கு வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனது போல் வாயடைத்து நின்றான்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-15
அவன் மெளனமாக நின்ற விதமே அவள் கூறியது தான் மெய் என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சமிட்டு காட்டியிருக்க மனம் வெறுத்துப் போனவள்...

“போதும்! விக்ரம் விட்டிருங்க நான் போறேன்” என்று கூறிவிட்டு சரேலென்று திரும்ப அவள் கரம் அவன் கரங்களுக்குள் மாட்டிக் கொண்டு வர மறுத்தது.

“விடுங்க விக்ரம் என்னை உயிரோட கொல்லாதீங்க”

“என்னை ஆசைகாட்டி மோசம் பண்ண தயார்ன்னா... முடிஞ்சா கையை உருவிட்டு போ” அவள் போட்ட பந்தை அவளுக்கே வீச சரேலென்று பார்வையை திருப்பி கூர்விழிகளால் அவனை வெட்டினாள்.

“இதெல்லாம் எனக்கு ரொம்ப நாடகத்தனமா இருக்கு விக்ரம்... என்னுடனான உங்க நேசத்தை வெளிக்கொணர வைக்க நான் இல்லாத பொய்யை சொல்ல வேண்டியதா இருக்கு... இது போல பின்னாடி எத்தனை நாடகம் ஆட வேண்டியதா இருக்குமோ அப்புறம் வாழ்க்கை மேல பிடிப்பு வராது வெறுப்பு தான் வரும்”

“எனக்கும் நீ சொல்லுறதில் உடன்பாடு இருக்கு நந்தினி... ஆனால் ஒன்னே ஒன்னு என் மனசை நான் திறக்கணும்னு தானே நீ பொய் பேசின, நானும் இப்போ ஒத்துக்கிட்டேன்... நீ இல்லாமல் வாழ முடியாது எனக்கும் உன்மேல் விருப்பம் இருக்குன்னு சொல்லிட்டேன்... இப்போ போய் என்னை தூக்கி எறிஞ்சுட்டு போக தயாரா இருக்கியே... அப்போ என் மனசை தெரிஞ்சுகிட்டு கழட்டிவிட்டுட்டு போக தான் இதை எல்லாம் செய்தியா?”

“நீங்க கேட்கிறது நியாயம் தான் ஆனால், இதையும் யோசியுங்க... என்னுடைய யூகம் சரின்னா என்னைக்கு உங்களை எதிர்த்து நான் கேள்விக் கேட்டேனோ அன்னைக்கே என் மேல உங்களுக்கு ஒரு அபிப்ராயம் வந்திருச்சு... அப்புறம் நாளுக்கு நாள் அது அதிகமாகிட்டு தான் போச்சு ஒவ்வொரு நாளும் உங்க பார்வை என் மேல உள்ள நேசத்தை சொல்லுச்சு உண்மையா இல்லையா?”

“உண்மை தான்” கம்மிய குரலில் கூறியிருந்தான்.

“அப்புறம் அந்த நேசத்தை சொல்லாமலே இருந்திருந்தா நாளாக நாளாக நீங்க பித்து பிடிச்சு ஞை ஞைன்னு தலையை பிராண்டிகிட்டு பைத்தியக்காரனாத்தான் அலைஞ்சிருப்பீங்க.... அதிலிருந்து காப்பாற்றத்தான் உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தேன் போதுமா”

“ஒஹ்!!” என்று அழுத்தமாக பார்த்தபடி உதட்டை குவித்தவன்...

“நான் பைத்தியக்காரனா மாறுறேன் மாறாமல் போறேன்... நான் உயிரோட இருக்கிறேன் இல்லை செத்துப் போறேன், அதனால் உனக்கென்ன நந்தினி?” என்றதும் அவன் பேச்சை தாங்க முடியாத நந்தினி படாரென்று அவன் கையில் ஒளிந்திருந்த தன் கரத்தை உயர்த்தி சப்பென்று அடித்திருந்தாள்.

சும்மாவே அவள் அவனின் முரட்டு கன்னத்தை தாக்கியிருந்தால் கூட அவ்வளவு பலமாக அடி தாக்கியிருக்காது... அதில் அவன் கரங்களுக்குள் சிக்கியிருந்த அவள் கரம் அத்தனை வேகத்துடன் தாக்க முடியாமல் போகவே பூ மோதியது போல் தான் இருந்தது... அவளின் அந்த கோபத்தின் பரிணாமத்தை கண்டு அவன் மனதுக்குள் மத்தாப்பூ ஒளிர்ந்தது.

“வாய் இருக்குன்னு கண்ட மேனிக்கு பேச வேண்டாம் அப்புறம் அசிங்க அசிங்கமா நான் பேச வேண்டியதா இருக்கும்... உங்களை நம்பி உங்க மகன் இருக்கிறான் அதை நியாபகத்தில் வையுங்க”

“அது தான் நீ நியாபகம் வச்சிருக்கியே... அதை அடிக்கடி எனக்கு நியாபகப்படுத்து அது போதும்... தீன்னா சுட்டுரும்மா நான் சொன்ன வார்த்தை தான் உனக்கு வலிக்குதா? உசுருக்கு போராடிகிட்டு இருந்தவனை காப்பாத்திட்டு அவன் முழுசா குணமாகிட்டானா இல்லையான்னு பார்க்காம கடைசியில் இதுக்கு மேல முடியாது ஒரேடியா சாவுன்னு சொல்லுற மாதிரி இருக்கு உன்னோட செயல் எல்லாம்”

“ஆமாம் நான் தான் அப்படி பண்ணுறேன்னா?”

“பின்னே இல்லையா? நேத்து வரைக்கும் உன்னை விட்டு விலகிப் போனேன் தான், அன்னைக்கு உன்கிட்ட எல்லை மீறி கடுமையா பேசிட்டேன் தான்... அதுக்காக என்னை உயிரோட கொல்லுவியா? உன்னை பேசிட்டு நான் மட்டும் நிம்மதியாவா இருந்தேன்? இல்லையே, நான் தினம் செத்துகிட்டு தான் இருக்கேன்”

“அதனால தான் உங்க மகன்னு கூட பார்க்காமல் அந்த பிஞ்சு உடம்பை காயப்படுத்துறீங்களா?” அவள் ஆதனை அடித்ததை நினைவுறுத்த, மனம் வலித்தது... அதே சமயம் அவளுக்கு ஆதன் மேல் கொண்ட அக்கறை இம்மியளவும் குறையவில்லை என்பதே பெருத்த நிம்மதி அளித்தது.

“மறக்க நினைக்கிற உன்னையே அவன் நியாபகப்படுத்தினான் அதான் ரெண்டு போட்டேன்” முனகலாக வந்த வார்த்தையில் அவன் தவறுக்காக உணர்ந்து வருந்துவதை புரிந்துக் கொண்டவள்...

“அப்படி அடிக்கிற கையை வெளாசி தள்ளணும்” கடினக் குரலில் உரிமையுடன் கூறியவளை கூர்மையாக நோக்கியவன்...

“செய் நந்தினி! நீ என்ன செய்ய ஆசைப்படுறியோ அத்தனையும் செய்... ஆனால் என்னை விட்டுட்டு போகாதே. நீ சொன்ன மாதிரியே எனக்கு உன்னை பார்த்த நாளிலிருந்து விருப்பம் தான், இதே உன் இடத்தில வேற எந்த பொண்ணா இருந்தாலும் அவளை அப்போவே ஓரம் கட்டியிருக்க முடியும்... ஆனால் உன்னை என்னால் அப்படி செய்ய முடியலை, அதுதான் நமக்குள்ள உறவின் பலம் போல”

“இந்த வார்த்தையை எப்படி நம்புறது? எங்க வீட்டில் அவ்வளவு சுலபமா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாங்க விக்ரம் அப்போவும் நீங்க குட்டியகரணம் அடிச்சுட்டா நான் உயிருடன் இருக்கமாட்டேன்” என்றவளின் வார்த்தையில் திகைத்தவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.

“அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட விடமாட்டேன் நந்தினி... வீட்டில் எதிர்ப்பு வருவது சகஜம் தான், அதுக்காக உன்னை விட்டு கொடுத்திரமாட்டேன்”

“பிராமிஸ்” என்று கரம் நீட்டியவளின் மேல் தன் கரத்தை வைத்தவன் சத்திய பிரமாணம் செய்திருந்தான்... அந்தோ பரிதாபம் அவளின் சத்தியத்திற்கு உட்பட்டு காதலை காப்பாற்ற தகுந்த பாதுகாப்பு அரண்களை அப்போதே மேற்கொண்டிருந்தால் பின்னாளில் அவள் எடுக்கப் போகும் விபரீதமான முடிவை தடுத்திருக்கலாமோ?!


****************

அவனின் சொல்லில் அவளுக்குள் இருந்த அத்தனை குழப்பங்களும் நீங்கியிருக்க, அவன் நேசத்தை ஒப்புக் கொண்ட மகிழ்ச்சியில் திளைத்து, அவனுடன் அப்போதே உறவாட துடித்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். கணங்களோ நொடிகளோ அறியாது அவனின் அணைப்பில் கட்டுண்டு இருந்தவளுக்கு திடிரென்று அது நியாபகம் வரவே...

“ஆமாம் உங்க வெளிநாடு பிளேன் எல்லாம் என்ன ஆச்சு?” என்றதும்...

“அதுவா, அதை ஏன் கேட்கிற? என்னுடைய ஒரிஜினல் செர்டிபிகேட், பாஸ்போர்ட் அப்புறம் ஆதனுடையதுன்னு சேர்த்து வச்சிருந்த பைலை யாரோ திருடிட்டாங்க”

“நீங்க போலீசில் கம்பிளைன்ட் கொடுக்கலாம்ல? எந்த திருடன் அதை மட்டும் திருடுவானாம்?”

“அது திருடன் இல்லை, திருடி!” என்று அவளை பார்த்து அழுத்தி கூறியவனின் பார்வை குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தது.

அவனின் பேச்சில் தான் மாட்டிக் கொண்டு விட்டதை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டவள் பீறிட்டு வந்த சிரிப்பையும் சமாளித்து கொண்டு...

“அப்படித்தான் அந்த திருடி யாருன்னு தெரிஞ்சா அந்த திருடி மேல கம்பிளைன்ட் கொடுக்க வேண்டியது தானே”

“அந்த திருடி யாருன்னு தெரிஞ்சதால தான் கம்பிளைன்ட் கொடுக்கலை... அந்த திருடி ஆல்ரெடி என் மனசை திருடிட்டா... அதனால் எந்த தண்டனையா இருந்தாலும் நானே கொடுத்துக்குறேன் சொல்லிட்டேன்”

“ஒஹ்!! அப்படி என்ன தண்டனை?”

“அது நேரம் வரும் போது, அதுக்கான உரிமை கிடைக்கும் போது, அதை உன்கிட்டே கொடுக்கும் போது தெரியும்” என்று கூற நந்தினிக்கு அது என்னவென்று புரிந்ததில் முகம் சிவந்தாள்.
பெண்மைக்கே உண்டான வெட்கத்தின் சிவப்பு ஆணவனை நூதன உணர்வில் ஆட்படுத்தியது.

“ஆமாம் நான் தான் திருடிட்டேன்னு தெரிஞ்சுதுள்ள, உடனே என்கிட்டே கேட்டு வாங்கி வெளிநாட்டுக்கு பறந்திருக்க வேண்டியது தானே, யார் வேண்டாம்னு சொன்னா?”

“எது உன்கிட்டே கேட்டு வாங்கி நான் போறதா? இதெல்லாம் நடக்கிற காரியமா, இதுவரையும் யாருமே என்கிட்டே இப்படி எல்லாம் ஆட்டம் காட்டினதில்லை... ஆனால் நீ என் கண்ணில் விரல் விட்டு ஆட்டுறது போல் என்னை ஆட்டிப்படைக்கிற, ஆனால் இதெல்லாம் கூட இதமான இம்சையாத் தான் இருந்துச்சு”

“ஒஹ்! ஆமாம் அது எப்படி நான் தான்னு முடிவு செய்தீங்க?”

“பின்னே திருடன் எடுக்கிறவன் பக்கதுல பையோட லட்சகணக்கில் வச்சிருக்கேன் அதை எடுத்திருந்தா வாஸ்தவம், ஆனால் அந்த பணத்தை விட்டுட்டு டாக்குமெண்டை எடுக்கிறான்னா நிச்சயம் அது நீயா தான் இருக்கணும்னு என் ஆழ்மனசு ஆருடம் சொல்லுச்சு”

“ஆமாம் மனசுக்குள்ள என்னை வச்சுக்கிட்டு வெளிநாடு போக ஏற்பாடு பண்ணுவீங்க, நான் அதை வேடிக்கை பார்த்துட்டு டாட்டா காமிச்சு வழியனுப்புவேன்னு எதிர்பார்த்தீங்களா?”

“இல்லை தான்” நமட்டு சிரிப்புடன் கூற...

“அதனால் தான் நீங்க காம்ப்ளெக்ஸ் உள்ள போனதும் வாட்ச்மேனை வச்சு காரியத்தை சாதிச்சேன்”

“இப்படி எல்லாம் செய்து கூட என் கூட வாழணும்னு என்ன இருக்கு நந்துமா? என்னுடைய தடமெல்லாம் கரடு முரடான பாதை, வேகமாக சீரான வேகத்தில் போக முடியாது... ஆயிரத்தெட்டு தடை முட்கள் கற்கள் நிறைஞ்ச பிரச்சனையான பாதை, எனக்கு அதை நினைக்கும் போதுதான் கஷ்டமா இருக்கு நந்தினி”

“நீங்க சொல்லுற மாதிரி லைஃப் தான் சுவாரஸ்யமா இருக்கும் விக்ரம்... அதுவுமில்லாமல் ஒரு கரடு முரடான பாதையில் போகிறவருக்கு தான் வாழ்க்கைன்னா என்னன்னு அர்த்தம் தெரிஞ்சிருக்கும், தன்னில் வர பாதியை எப்படி பார்க்கிறது அவளுக்கான முக்கியத்துவம் என்ன, தன்னுடைய வாரிசுக்கு என்ன முக்கியத்துவம் என்னன்னு எல்லாம் சரியா வழி நடத்திச் செல்லும் விக்ரம்... எல்லாமே சுலபமா கிடைச்சுட்டா அதனுடைய அருமை தெரியாதில்லையா?” அவளின் பேச்சை கேட்டு விக்ரமுக்கு உணர்ச்சி பெருக்கெடுக்க...

“நந்து கெட்டதிலேயும் ஏதோ ஒரு புண்ணியம் பண்ணிருக்கேன் போல, அதனால் தான் நீ எனக்கு கிடைச்சிருக்கிற” என்று புளங்காகிதம் அடைய அணைத்துக் கொண்டவன், அவளை உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிட்டான்.

அவனின் அலைபேசி ஒலியெழுப்ப மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பை கண்டு... “நந்து உன்கிட்டே முக்கியமான விஷயம் நிறைய பேசணும், என் கடந்தகாலம் கசடா இருந்தாலும் ஒருமுறை நீ தெரிஞ்சுக்கிறது நல்லது அதை எல்லாம் நான் உன்கிட்டே சொல்லணும், அப்போதான் எனக்கு ஆறுதலா இருக்கும்”

“நிச்சயம் பேசுவோம் விக்ரம் முதலில் ஆதனுக்கு குணம் ஆகட்டும்... அப்புறம் ஒருநாள் சாவகாசமா சந்திச்சு பேசுவோம் நீங்க ஹாஸ்பிடல் போங்க நானும் வீட்டுக்கு போறேன்” சஞ்சல மனதுடன் வந்த இருவரும் அன்றில் பறவைகளை போன்று ஒன்றிவிட்ட திருப்தியுடன் சென்றனர்.


****************

நந்தினி வீட்டிற்குள் நுழையும் போது அவள் தமக்கை அகிலா தன் கணவன் குழந்தை சகிதமாக பிரசன்னம் ஆகியிருக்க, அவள் தாமதமாக வந்ததை கண்டு அவளின் தமக்கையும், அன்னையும் ஒருசேர முறைத்தனர்.

“எங்க டி இவ்ளோ நேரமா ஊர் சுத்திட்டு வர?” அகிலா வினவ, நந்தினி பதில் சொல்ல சிந்திப்பதற்குள்...

“வர.. வர.. இவளுடைய போக்கே சரியில்லை அகிலா! நிதம் லேட்டா வரா, கேட்டா ஏதேதோ காரணம் சொல்லுறா... அவ பேச்சை கேட்டு படிக்க அனுப்பினதுக்கு பதிலா கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கணும், நான் தப்பு பண்ணிட்டேன்னு இப்போ தான் வருத்தப்படுறேன்” என்று ரேவதி கூற நந்தினி இருவரின் பேச்சை கேளாமல் அவள் தமக்கை மகள் தாரணாவுடன் சிரித்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

“பாருங்கம்மா இங்கே நாம ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கிறோம் அவ என்ன செய்துட்டு இருக்கான்னு” என்ற அகிலா அவள் காதை திருக...

“அகிலா விடு வலிக்குது” என்று கூறிய நந்தினியை தொடர்ந்து வந்த அகிலாவின் கணவன் சதீஷ்...

“அகிலா அவளை விடு, அவ பிரெண்ட்ஸ் கூட தானே போயிட்டு வந்திருப்பா இதுக்கு எதுக்கு அம்மாவும் மகளும் விசாரணை கமிஷன் போடுறீங்க?” என்று இடைபுகுந்ததும் மருமகனை எதிர்த்து கூறாமல் ரேவதி வாய் மூடிக் கொண்டிருந்தார்.

“மாமா சொன்னது தான் சரி அக்கா... நான் பிரெண்ட்ஸ் கூட சுத்திட்டு வரேன்”

“ஆமாம் பிரெண்ட் கூட சுத்த ரெண்டு மணி நேரமா?”

“அதென்ன ரெண்டு மணி நேரம்?”

“பாலா வீட்டுக்கு போய் ரெண்டு மணி நேரம் ஆச்சு... அப்பா உன்கிட்டே பேசிட்டு வீட்டுக்கு வந்து காய்கறி பையை அம்மாகிட்டே கொடுத்துட்டு போய் ரெண்டு மணி நேரம் ஆச்சு இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும்?” என்று வினவ... நந்தினிக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாது நகத்தை கடித்துக் கொண்டிருக்க, எப்போதும் போல் அவள் யுக்தியை பயன்படுத்த எண்ணி, அவள் மாமா சதிஷை பார்த்து கண்களால் கெஞ்ச நான் பார்த்துக்கிறேன் என்று இமைமூடி திறந்ததை அகிலா கவனித்துவிட்டிருந்தாள்.

“விடு அகிலா அவ இப்போ தானே நந்தினி வந்திருக்கா போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரட்டும்” என்று கூறியதும் நந்தினி...

“அப்படி சொல்லுங்க மாமா, ஒரு புள்ளை நாளெல்லாம் வாத்தியார் நடத்துற பாடத்தை கேட்டு கேட்டு காது தேய்ஞ்சு ஓய்ஞ்சு வந்திருக்குமேன்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா... ஒரு காப்பி தண்ணி, ஒரு பலகாரம் ஒன்னும் இல்லை! ஏதோ திருடனை பிடிச்சு வச்சு விசாரிக்கிற மாதிரி விசாரிச்சுட்டு இருக்காங்க” என்று குற்றப் பத்திரிக்கை வாசிக்கவும்...

“என்ன மச்சினிச்சிக்கு சப்போர்ட்டா பேசுறீங்க? என்ன விஷயம்?” என்று கண்களால் கணவனை மிரட்ட நந்தினிக்கு அவர்களுடன் விளையாடிப் பார்க்கும் ஆவல் உந்தியதில்...

“என்ன க்கா எங்கே உனக்கு போட்டியா நான் வந்திருவேனொன்னு பயப்படுறியா?” குறும்பு சிரிப்புடன் வேடிக்கையாக பேசியதை கேட்ட ரேவதி...

“அடியேய் மகளே! உங்க அக்காவுக்கும், மாமாவுக்கும் சண்டை மூட்டி வைக்க வெளியில் இருந்து எல்லாம் ஆள் வரத் தேவை இல்லை நீ ஒருத்தி போதும் போல”

“அவளை சொல்லி குத்தமில்லைம்மா இங்கே ஒருத்தர் இருக்காரே இவரை கண்டிச்சா சரியாப் போகிரும்” என்று கண்களால் சுட்டெரிக்கும் இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு நந்தினி சென்றுவிட சதிஷின் சிரிப்பொலி அவளை தொடர்ந்து ஒலித்தது.
தன் மச்சினியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த சதீஷ் அங்கே உக்கிரமடைந்த காளியை போல் நின்றிருக்கும் மனைவியை கண்டு திருதிருத்தான்.

“என்ன மச்சினிச்சி மேல ஓவரா பாசம் வழியுது? பார்த்து அடக்கி வாசிங்க அவ என்னை போல சகிச்சுகிட்டு போகிற ஆள் இல்லை... வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசுற ஆளு உங்க கதை தெரிஞ்சா அவ கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விட்டிருவா” என்று அவனை குத்திக்காட்டி கூறியவள் விருட்டென்று நகர்ந்திருக்க... சதிஷிற்கு அவமானத்தில் முகம் கருக்க காண்டாகிப் போனவன் மனைவியின் பின்னே சென்று அவள் தனிமையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பேசலானான்.

“என்ன டி ரொம்ப ஓவரா பேசுற? என்னுடைய கடந்த காலத்தை பற்றி பேசதேன்னு ஆயிரம் முறை சொல்லிட்டேன்... அப்படி பிடிக்கலைன்னா அதுக்கும் ஒரு வழியை சொல்லிட்டேன், எது உனக்கு உசிதம்ன்னு நீ தான் தேர்ந்தெடுத்த ஆனால், எப்போ பாரு எதாவது சாக்கு கிடைச்சா குத்திக் காட்டி பேசிட்டு இருக்கிற?”

“ஏன் நீங்க.........” என்று ஏதோ கூற ஆரம்பிக்க இருந்தவளை ஒற்றை கரம் உயர்த்தி தடுத்து நிறுத்தியவன்...

“உன் தங்கச்சி வயசென்ன என் வயசென்ன? அவ எனக்கும் தங்கச்சி மாதிரி தான் அவளோட சேர்த்து வச்சு தப்பா பேசுற உனக்கு அறிவில்லை... அதுவும் கல்யாணம் பண்ணிட்டு இன்னொரு வீட்டுக்கு போக வேண்டிய பொண்ணு அவ பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிரும்ன்னு நினைக்க வேண்டாம்” என்று கடுமையாகவே கடிந்துக் கொள்ள அகிலா தன் தவறை புரிந்தவளாக உதட்டை கடித்துக் கொண்டவள்...

“சாரி” என்றாள்.

“உன் சாரியை தூக்கி குப்பையில் போடு’ என்று கோபம் குறையாமலே ஆவேசமாக கூறிவிட்டு சென்றிருக்க...

“என்னங்க! என்னங்க! இருங்க” என்று கணவனை சமாதானம் செய்ய பின் தொடர்ந்தாள் அகிலா.


*************

நந்தினி முகம் கழுவிக் கொண்டு துவாலையால் துடைத்துக் கொண்டிருக்க அச்சமயம் அலைபேசி அழைப்புக்கான திரை மின்னியத்தில் ஆசுவாசமாக அதை பார்த்தவளுக்கு அதில் இருந்த விக்ரமின் எண்ணை கண்டு பரவசத்துடன் உயிர்ப்பித்தாள்.

“என்ன வீட்டுக்கு போயிட்டியா? எதுவும் பிரச்சனை இல்லையே” என்று அக்கறையாக வினவியவனின் பேச்சை கேட்டவளுக்கு தரையில் கால்கள் பாவவில்லை.

“பாருடா துரைக்கு இப்போதான் இந்த நந்தினி மேல கருணை மழையும், பாச மழையும் பொங்குது... இத்தனை நாள் இந்த அக்கறையை எல்லாம் எங்கே ஒளிச்சு வச்சிருந்தீங்களாம்?” அவளின் அந்த குறும்பு பேச்சை கேட்கவே அழைத்திருந்த விக்ரமுக்கு அவனின் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில்....

“ஹாஹாஹா” என்று கலகலத்து சிரித்தவன்...

“வேறே எங்கேயும் இல்லை என் மனசுக்குள்ளே தான் ஒளிச்சு வச்சிருந்தேன்”

“ஆமாம் இது மாதிரி எத்தனை ரகசியங்களை ஒளிச்சு வச்சிருக்கீங்கன்னு, ஒருநாள் கண்டுபிடிக்கத் தானே போறேன் அன்னைக்கு இருக்கு உங்களுக்கு... இந்த நந்தினியோட தரமான சில சிறப்பு சம்பவங்களும் இருக்கு”

“தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்று அவளிடம் முற்றும் சரணாகதி அடைந்திருந்தான்.

இருவரும் சில நிமிடங்கள் உரையாடி தீர்த்துவிட்டே அலைபேசியை அணைத்தனர்.

விக்ரமுக்கு வினோத உணர்ச்சி அலைகள் அவன் சிந்தையை ஆக்கிரமித்திருந்தது... அவன் இதற்கு முன் இது போல் இன்ப பரவசத்தில் மிதந்தது இல்லை என்று சொல்லுவதற்கு இல்லைதான்... ஆனாலும் அவன் ஷைலாஜாவிடம் காட்டிய காதலுக்கு துளியும் எதிரொலி என்பது திருப்தியாக அவனுக்கு கிடைத்ததில்லை... அவனுடன் அவள் வாழ்ந்த வாழ்வு கடமையாக தான் இருந்தது. அதை அவன் உணர்ந்திருந்தாலும் ஒரு வேளை இதெல்லாம் நாடகத்திலும், திரைப்படைதிலும், கதைகளிலும் தான் சாத்தியம் போல நிஜ வாழ்க்கையில் கடமை தான் போல என்று கருதிக் கொண்டிருந்தான்.

அந்த கருத்துகளை முற்றிலும் துடைத்தெறிந்து இதோ பார் உனக்காக உருகி உருகி காதலிக்க நான் இருக்கிறேன்... நம்முடைய இந்த காதல் வாழ்வு தான் ஈரேழு ஜென்மமும் தொடரும் பந்தம் என்பதை நந்தினி நாளுக்கு நாள் உணர்த்தியதில் தான், நிஜ வாழ்க்கையிலும் நேசத்தின் சுவடுகள் வெவ்வேறு பரிணாமங்களில் பகிரப்படும் என்ற உண்மையை அனுபவித்து சுகித்து கொண்டிருந்தான்.


**************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-14 & 15 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் மூன்று பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-16
விக்ரமின் முகம் ஆயிரம் விளக்குகளால் ஒளியேற்றப்பட்டது போன்று ஜொலித்ததை கண்ட கண்ணம்மாவுக்கு எதுவோ நன்மை நடக்கப் போவதாக அவரது உள்மனம் ஆருடம் விளம்பியது.

‘கடவுளே! எதுனாலும் நல்லதா நடக்கட்டும்’ என்று பிரார்த்தித்துக் கொண்டவர் அவரின் மகிழ்ச்சியை செந்திலிடமும் பகிர்ந்து கொண்டார்.

“ஏன் கண்ணம்மா, நம்ம தம்பி சந்தோசமா இருக்குன்னு நீ சொல்றதெல்லாம் சரி... ஆனால் அது எப்படி அதுக்கு காரணம் நந்தினி பொண்ணு விஷயமா தான் இருக்குமுன்னு இவ்ளோ உறுதியா சொல்லுற?”

“நேத்து நந்தினி பாப்பா சொல்லிட்டு தான் போச்சு... நீங்க வேணா பாருங்க கண்ணம்மா நான் தூக்கி போடுற குண்டுல உங்க விக்ரம் தம்பி பதறி அடிச்சுகிட்டு என்னை தேடி ஓடி வரப் போறாரு, என்னை ஏற்றுக்கவும் போகிறாருன்னு... சொன்ன மாதிரியே நந்தினிமா காலையில் இருந்து ஆஸ்பித்திரிக்கே வரலை, தம்பி வாசலை ஏக்கத்தோட பார்த்துப் பார்த்து ரொம்ப சோர்ந்து இருந்துச்சு, சாப்பாடே சரியா சாப்பிடலை... நான் தான் அதட்டி உருட்டி சாப்பிடவே வச்சேன்... அப்புறம் வேலைன்னு வெளிய போன பிள்ளை பொழுது சாஞ்சு தான் வந்தாரு”

“அப்படியா? இன்னைக்கு மில்லுக்கும் வரலையே... அப்போ நீ சொல்லுறது தான் நிசமா இருக்குமோ கண்ணம்மா... அப்படி இருந்திட்டா அந்த ஸ்ரீரங்கநாதருக்கு நான் என்னால் முடிந்த அளவு காணிக்கை செலுத்திடுவேன்”

“அதுக்கு இப்போவே காணிக்கை எடுத்து முடிஞ்சு வச்சுக்கோங்க அண்ணா... நம்ம நந்தினி பொண்ணு மட்டும் ஒன்னை நினைச்சுட்டா அதை விட்டு கொடுக்காத, விட்டு விலகாத ரகம், நிச்சயம் நம்ம விக்ரம் தம்பி வாழ்க்கை இனி பிரகாசமா தான் இருக்கும்” என்று மனப்பூர்வமாக கூறினார் கண்ணம்மா.

நந்தினி ஆதனை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்த வேளையில், விக்ரம் அவளை மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று கூறியிருக்க...

“ஏன் நான் ஹாஸ்பிடல் வரக்கூடாது? நான் அப்படித்தான் வருவேன்... என் மகனை பார்க்கக் கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு?” என்று உரிமை கோபத்தில் சிடுசிடுக்க...

“ம்ம்ம்... உன் புருஷன்!” என்ற ஒற்றை வார்த்தையில் உடலில் பலவித ரசாயன மாற்றம் நிகழ்ந்ததில் தேகத்தின் மயிரிலைகள் சிலிர்த்துக் கொண்டது போல் கிளர்ந்தாள். வெட்கம், மகிழ்ச்சி என இருவேறு உணர்வுகள் போட்டிப் போட்டுக் கொண்டு நந்தினியின் இதழ்களை கைது செய்து அதன் பிடியில் வைத்திருக்க உதட்டை கடித்துக் கொண்டு உணர்ச்சிகளை கட்டுபடுத்திக் கொண்டிருந்தாள். அவளை பாராமாலே அவளின் உணர்ச்சி மாற்றங்களை அவதானித்துக் கொண்டவனுக்கு மந்தகாச முறுவலில் இதழ்கள் விரிய உலகம் வேறாகிப் போயிருந்தது.

“சொன்னதை செய் நந்தினி” என்றவனின் வார்த்தைகள் மென்மையாக வெளிவந்திருக்க, அதில் சுதாரித்துக் கொண்ட நந்தினி...

“உங்களையும், ஆதனையும் பார்க்காமல் எப்படி நான் இருப்பேன்?” அவளும் மிக மென்மையான குரலில் வினவியிருந்தாள்.

“நான் சொல்லுறது உனக்காக தான்... அடிக்கடி நீ என்கூட சுற்றி யார் கண்ணிலும் சிக்கிட்டா வீண் வம்புதான், நீ உன் படிப்பை முடிக்கிற வரைக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம்” என்று அவன் ஒரு காரணத்திற்கு கூற, நந்தினியோ அவனை பாராது இருக்க வேண்டுமா என்று சுள்ளென்று ஆத்திரம் வரப் பெற்றவள்...

“ஏன் என்னை விட பெட்டரா எவளும் கிடச்சா, என்னை கழட்டி விட பிளான் பண்ணி முன்னெச்சரிக்கை முடிவை எடுக்கறீங்களா?” என்று கோபத்தில் மூக்கு விடைக்க கூறிவிட்டிருந்தாள்.

அவளின் பேச்சு அவனை பெண் பித்தன் போல் வரித்து அடிப்படை குணத்தை சேதப்படுத்தியிருக்க சினத்தில் உடல் விரைத்துக் கொண்டான்.

“ஆமாம் என்னை கட்டிக்க வரிசையில் நிற்கிறாங்க, எதுக்கும் அவங்களை எல்லாம் ஒருமுறை பார்த்துட்டு முடிவு பண்ணலாம்ன்னு திட்டம் போட்டு தான் உன்கிட்டே சொல்றேன்” என்று கடிந்த பற்களுகிடையே வார்த்தையை துப்பியவன், கோபத்தில் மூச்சிரைத்துக் கொண்டிருப்பதை இரைச்சல் ஒலியில் உணர்ந்த போது தான் தன் தவறை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டவள்...

“சாரி” என்று மன்னிப்பு கோறிய வார்த்தையை கிஞ்சித்தும் லட்சியம் செய்யாமல்...

“இப்படி எல்லாம் யோசிக்கிற உன் மூளையை தூக்கி காய்லாங் கடைக்கு போடு அப்போவாச்சும் ஏதாவது தேறுதான்னு பார்ப்போம்” என்று ஆவேசத்துடன் பேசிவிட்டு பட்டென்று அணைப்பையும் துண்டித்துவிட்டிருந்தான்.

“ஹலோ! ஹலோ!” என்ற நந்தினியின் குரலுக்கு எதிரொலி இல்லாமல் நிசப்தமே நிலவ அவளுக்கு திகில் பிடித்துக் கொண்டது.

“ச்சே... கொஞ்சம் அதிகமா பேசிட்டோமோ? நந்தினி வாயை வச்சு அடங்கி இருக்கமாட்டே... இப்போ பாரு கோபமா போனை கட் பண்ணிட்டாரு” என்று புலம்பிக் கொண்டவளுக்கு அவனின் தார்மீக கோபத்தின் பரிணாமத்தில் உள்ளுக்குள் உதறியது. விதிர்ப்பில் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தவள் அவனை பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டிருக்க...

“இனி உடுக்கை அடிச்சு தான் மலை இறக்க வேண்டியதா இருக்கும் போல” என்று தனக்குத் தானே பேசி கொண்டு விட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றுவிட்டாள்.

செந்தில், கண்ணம்மா ஆதனுடன் மருத்துவமனையில் இருந்தனர்... அங்கே பிரசன்னமான நந்தினியை கண்டு இருவரும் வாத்சல்யத்துடன் வரவேற்றனர்.

“என்ன ம்மா, என்ன ண்ணா... நீங்க மட்டும் இங்கே இருக்கீங்க...? உங்க விக்ரம் தம்பி எங்கே காணோம், எப்போவும் போல இன்னைக்கும் வேலையாமா?” என்று உரிமையுடன் வினவியவளை கண்டு இருவரும் அர்த்த புஷ்டியுடன் சிரித்துக் கொண்டனர்.

“இல்லைம்மா, தம்பி காலையிலேயே வந்திருச்சு கேண்டீனுக்கு சாப்பிட போயிருக்கு இப்போ வந்திரும்” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே விக்ரம் அங்கே சமீபித்திருக்க, நந்தினியை கண்டதும் ஒளிர்ந்த முகத்தை வினாடிக்குள் கடினமாக்கிக் கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.

அவன் பாராமுகமும், தசை இறுக்கமும் நந்தினியை கலவரப்படுத்தியது... அலைபேசியில் பேசும் போது ஏற்பட்ட கிலியை காட்டிலும் மும்மடங்கு அதிகரித்திருந்த விதிர்ப்பு நந்தினியை கவலைக்குள்ளாக்கியது.

‘ஐயையோ தெரியாத்தனமா வாய் விட்டுட்டோமே, அவன் முகமே பாறாங்கல்லு மாதிரி இருக்கே என்ன சொல்லி சமாதானப்படுத்த?’ என்று மானசீகமாக பிரலாபித்துக் கொண்டாள்.

‘ஒருவேளை அவனின் கோபத்திற்கு சரித்திரத்தை திருப்புவது போல் என்னை வேண்டாம் என்று கூறி ஒதுக்கி வைக்க நினைத்துவிட்டானோ?’ என்ற பேரச்சம் அவளுள் பிரளயத்தை உண்டு செய்தது.

‘ம்ஹும்... கூடாது! முடியாது... அவனை விட்டு விலகுவதா, இது சாத்தியமா?’ என்று என்னும் போதே தன் உடலில் ஏதோ ஓர் உறுப்பை இழப்பது போன்ற உணர்வு அவளை ஆட்டுவித்தது. ‘அவனின் கோபத்தை கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் பிரிவு ம்ஹும்... முடியாது அதற்கு பதில் உயிரை விட்டுவிடலாம்’ என்று ஏதேதோ எண்ணி யோசித்துக் கொண்டே ஆதனுடன் அமர்ந்திருந்தாள்.

ஆதன், நந்தினியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எப்போதும் போல் இல்லாத வலியை இருப்பதாக கூறிக் கொண்டிருக்க, அவனின் பேச்சு ஈனஸ்வரத்தில் ஒலிப்பது போல் நிகழ்வை உணர்த்தியதில் இயந்திரத்தனமாக ஏதோ கூறி அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருத்தாள். இருவரின் அந்த அன்பின் பரிணாமத்தை பார்க்கவே விக்ரமுக்கு மிகவும் அழகா இருந்தது.

‘இதில் எல்லாம் சரியா இருப்பா, ஆனால் பேசும் போது மட்டும் யோசிக்கமாட்டா’ என்று சிந்தைக்குள் அவளை திட்டிக் கொண்டிருந்தான்.

இவர்களின் மௌனச் சண்டையை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த செந்தில், கண்ணம்மா இருவரும் ஜாடையாக ஏதோ பரிமாறிக் கொண்டனர். நொடிப் பொழுதும் தாமதியாமல்...

“தம்பி நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க நானும் செந்தில் அண்ணனும் போய் சாப்பிட்டுட்டு வந்துடறோம்” என்று கூறிவிட்டு வெளியேறினர்.

“என்ன கண்ணம்மா நாம என்னனமோ பேசிகிட்டோம் கடைசியில் இப்படி ஆகிப் போச்சே?”

“எப்படி ஆகிப்போச்சு அண்ணா?”

“பாப்பாவும் தம்பியும் முகத்தை திருப்பிகிட்டு நிற்கிறாங்களே நாம நினைச்சது நடக்குமா?” என்று சந்தேகத்துடன் கேட்டவரை விஷம புன்னகையுடன் எதிர்கொண்டவர்...

“ஏன் அண்ணா அவங்க முகத்தை திருப்பிகிட்டு நிற்கிறது நெசம்தான்... ஆனால் பாருங்க எதிராளியை போலவா அவங்க பார்த்துக்கிறாங்க?” என்றதும் செந்திலும் அவரின் கூற்றை சற்றே நிதானமாக சிந்திக்கலானார்.

“நம்ம விக்ரம் தம்பி முகம் உர்ருன்னு இருக்கு... நந்தினி பொண்ணு முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தாலும் அதை தாண்டி ஏதோ கவலை தெரியுது... ரெண்டு பேருக்குள்ள ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கணும், அதான் புருஷன் பொண்டாட்டி மாதிரி இழுத்துகிட்டு நிற்கிறாங்க”

“நீ சொல்றது சரிதான் கண்ணம்மா எனக்கு இப்போ தான் புரியுது, பொம்பளைங்க உங்களை மாதிரி ஆம்பளைங்க எங்களால் சட்டுன்னு சில விஷயத்தை கணிக்க முடியறதில்லை”

“அது தான் நாங்க... நீங்க வேணா பாருங்க நாம சாப்பிட்டு முடிச்சுட்டு ஆற அமர போவோம் அவங்க சமாதானம் ஆகி சிரிச்சுகிட்டு இருப்பாங்க” என்று கூறி உணவகத்திலேயே நேரத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்தனர்.

நந்தினி, ஆதனுடன் பேசிக் கொண்டு மருத்துவமனை என்பதை மறக்க வைக்கும் அளவிற்கு உற்சாகபடுத்திக் கொண்டிருந்தாலும், அவ்வபோது விக்ரமையும் தன் ஓரக் கண்ணால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.

விக்ரம் அவளை சிறிதும் ஏறெடுத்து பாராமல் அவளுக்கும் அவனுக்கும் யாதொரு சம்மதமும் இல்லை என்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவனை கண்டவளுக்கு துடுக்குத்தனம் தலைதூக்கியது... அப்போதே அவன் முன்பு நின்று சட்டையை பிடித்து முதுகில் நான்கு போட்டால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்க... ‘அப்படி அடித்திருந்தால் கூட அவன் சுகமாக தாங்கிக் கொண்டிருந்திருப்பான்... ஆனால் அவனை நீ வார்த்தையால் அடித்துவிட்டு ஏதோ அவன் தான் தவறு செய்தது போல் கூறுவது சரியா’ என்று அவள் மனசாட்சி கூக்குரல் விடுத்தது.

ஆதன் விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் விக்ரமை அணுகி பேச முயற்சிப்பதை என்னும் போதே நந்தினிக்கு மிகவும் சங்கடமாக இருந்தது... ஒரு வழியாக ஆதனை உறங்க வைத்துவிட்டு முக்கியமான ஒரு மின்னஞ்சலை தன் மடிக்கணினி மூலம் தட்டச்சு செய்துக் கொண்டிருந்தவனை அணுகினாள்.

“விக்ரம்” என்றழைத்தவளின் குரலுக்கு இசையாமல் கணினியில் சிரத்தையாக ஆழ்ந்திருந்தவனை எண்ணி உள்ளுக்குள் பீதி உருவானது. அதுவரை நந்தினி மட்டுமே அரட்டிக் கொண்டு இருப்பாள், விக்ரம் தடுமாறி இயலாமையில் முறைத்துக் கொண்டு நிற்பான்... ஆனால் முதல்முறையாக அவள் அவனின் கோபத்திற்கு ஆளாகி இருந்ததே அவளின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது.

விக்ரமின் பாராமுகம் அவளுக்கு அப்படி ஒன்றும் புதியதில்லை தான் என்றாலும், இதற்கு முன்பு அவன் காட்டிய பாராமுகம் அவளை புறக்கணிக்க போட்ட போலி முகமூடி தான் கோபம் என்பதால் பெரியதாக அவளை பாதித்ததில்லை... ஆனால் இப்போதோ அவள் சொன்ன வார்த்தையின் வீரியம் தாங்காமல் அவள் முகத்தை பார்க்கவும் விரும்பாமல் அமர்ந்திருப்பவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்ற அச்சம் மேலோங்கி இருந்தது.

அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியின் அருகில் தானும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவள் விக்ரமின் விலாவில் தன் கரத்தை பதித்துக் கொண்டு... “விக்ரம்” என்ற ஆழ்ந்த குரலில் தேக்கி வைத்த காதலின் ஏக்கத்துடன் அழைத்தவளின் குரல் அவன் ஆழ்மனதை ஊடுருவி அசைத்துப் பார்த்தது.

ஆனால் அவள் கூறிய வார்த்தை அவன் மூளைக்குள் தேவையற்ற பொருளை போல் குடைந்ததில் இழுத்து பிடித்த ரோஷத்துடன் அதை தனக்குள் மறைத்துக் கொண்டு, பக்கவாட்டில் பார்வையை திருப்பி ஒருமாதிரியாக பார்த்தவன்...

“நானே பொண்ணுங்களை தேடுற விமனைசர் ஆச்சே? என்னை தேடி வந்து ஏன் தொந்தரவு பண்ணுற?” சுள்ளென்று கூற, அவளுக்கு ஏதோ போல் ஆகிப் போனது.

“இப்படி எல்லாம் நான் சொன்னேனா ப்ளீஸ் இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க”

“அப்புறம் நீ பேசினதுக்கு என்ன அர்த்தம்? நான் யோக்கியமானவன்னா அர்த்தம்?... பசப்பதே! போய் உன் மகனை பாரு, அந்த மகனை பெற்ற தந்தை என் மேல் என்ன கவலை நான் ஊரில் உள்ள வேற யாரைச்சும் பார்த்துக்கிறேன்” என்றதும் உரிமை கோபம் தலைதூக்க...

“உங்களை கொன்னுருவேன்” என்று இரு கரத்தின் விரல்களையும் விரித்து அவன் கழுத்தில் பதித்தபடி கண்களில் ரௌத்திரத்தை தேக்கி கடிந்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பியவளின் செயலை கண்டு அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக பார்த்தான்.

“கொன்னுரு உனக்கும் பிரெச்சனை முடிஞ்சுரும், எனக்கும் நிம்மதி கிடைச்சிரும்” என்றதும் தான் தன் செயலை உணர்ந்து வெடுக்கென்று கரத்தை உருவிக் கொண்டவள்...

“இப்படி பேசாதீங்கன்னு இப்போ தானே சொன்னேன்” என்று கண்டிப்புடன் கடுமையாக கூறியவள்...

“செத்துட்டா அப்புறம் பெற்று வச்சிருக்கீங்களே மகன் அவனை என்ன செய்கிறதா உத்தேசம்?” கோபத்தில் மூக்கு நுனி சிவக்க சிடுசிடுத்தாள்.

“அதான் இருக்கே ஆதரவற்ற இல்லம் அங்கே போயிருவான், நீ வேறொரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு” வெகு சாதாரணமாக கூறியதும், அவளுக்கு வந்ததே கோபம் அவன் மடிக்கணினியை வெடுக்கென்று பிடுங்கியவள் அருகில் கிடைத்த பொருளை எல்லாம் வைத்து அவனை சாத்து சாத்தென்று சாத்தினாள்.

“ஏன் டா அவனை அநாதை ஆஸ்ரமத்தில் விடவா பெற்றெடுத்த? அவன் என்ன பாவம் பண்ணினான்” சரமாரியாக வசைமழையில் அவனை தூற்றிக் கொண்டிருந்தாள்.

“..................”

“பார்த்த அன்னைக்கே என்கிட்டே நீ கவுந்துட்டு, என்னையும் கவிழ்க்க வச்சுட்டு, இப்போ சாவு அது இதெல்லாம் பேசுறா? என்ன டா நினைச்சுட்டு இருக்கிற நீ” என்று தன் போக்கில் அவனை தாக்கிக் கொண்டிருக்க... அவளின் அடிகளை எதிர்ப்பு தெரிவியாமல் பெற்றுக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் எக்குதப்பாக பட்டு அவள் நகத்தினால் கீறி காயம் பட்டுவிடவே உடனடியாக உண்டான எரிச்சலில்...

“ஸ்ஹ் ஹா!” என்று சிணுங்கியதும் தான் தாக்குதலை நிறுத்தியவளுக்கு வேகத்தில் மூச்சிரைத்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அவள் நகத்தினால் கீறப்பட்ட காயத்தில் மெலிதான கூடு போல் சிவந்து சின்ன புள்ளியாக ரத்தம் கசிய பதறிப் போனவளாக.

“அச்சோ! சாரி விக்ரம்... நகம் கீறிவிட்டிருச்சு சாரி! சாரி!” என்றவள் வேகமாக தன் துப்பட்டாவில் துடைத்து அங்கே முதலுதவி பெட்டி போல் வைத்திருந்த சிறியளவு மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் அடங்கிய பேசினில் இருந்த மருந்தை எடுத்து அவனுக்கு தடவி விட்டாள். அவனோ அவளின் செயலை மெளனமாக பார்த்துக் கொண்டும் ஏற்றுக் கொண்டும் இருந்தானே தவிர எந்தவித உணர்வுகளையும் வெளிபடுத்திக் கொள்ளவில்லை அவள் சித்தமே தன் பாக்கியம் என்று உணர்த்தியபடி அமர்ந்திருந்தான்.

“லூசு நான் தான் அடிச்சுட்டேன்னா என்னை தடுக்க மாட்டீங்களா?” என்றவளை நமட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன்...

“நான் ஏன் தடுக்கணும்?” அவனின் கேள்வியில் புருவத்தை சுருக்கி உயர்த்தி வியப்பாக பார்த்தவள்...

“என்ன உளறல் உங்களை அடிக்கும் போது நீங்க தடுக்க வேண்டாமா? ஏதோ கிபிட் கொடுக்கிற மாதிரி சொகுசா முதுகை காட்டிட்டு கொடுடின்னு வாங்கிட்டு இருக்கீங்க”

“எனக்கு அப்படித்தான் இருந்துச்சு அதனால் தான் தடுக்கலை?” என்றவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இத்தனை நாளா என்கூட இப்படி எல்லாம் உரிமையா சண்டை போட ஆளில்லாமல் தனியா தானே தவிச்சுட்டு இருந்தேன்... ஆனால் இப்போ எவ்ளோ சுகமா இருக்கு தெரியுமா?” என்றவனின் ஏக்கமான வார்த்தைகள் அவன் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த காலத்தை பறைசாற்ற, அவள் காதல் நெஞ்சை இரண்டாக பிளப்பது போல் ஏற்பட்ட வலியில் தன்னையும் ஆறியாமல் கண்ணீரை உகுத்துவிட்டிருந்தாள்.

“என்..னை.. மன்..னிச்..சிரு..ங்க.. விக்..ரம்.. நான்.. தெரி..யாமல்.. பேசிட்..டேன்..” என்று கேவிக் கொண்டே பிசிறடிக்கும் குரலில் மன்னிப்பு கோரினாள்... விக்ரம் சற்றும் அசையாமல் இருக்கவே இன்னும் அவன் தன்னை மன்னிக்கவில்லையோ என்று மிரண்டு பார்த்தவள்...

“என் மேல உள்ள கோபம் இல்லையே?” பயந்துப் பயந்து அவள் பேசிய வார்த்தையே அவனை ஆகர்ஷித்தது... அவள்மேல் கொண்டிருந்த மனஸ்தாபங்கள் முகவரி இல்லாது சென்றிருக்க...

“செம காண்டுல இருந்தேன்... ஆனால் எப்போ நான் கோபப்பட்டதை நினைச்சு மிரண்டு போனியோ அப்போவே போயிருச்சு” என்றவனின் கண்கள் காதலை பொழிய அவன் விழிகளில் வழிந்த நேசம் அவனை ஈர்த்ததில் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“நிஜமாவே நான் ரொம்ப பயந்துட்டேன் உங்ககிட்டே நானா பயப்படுறது இதுதான் முதல் தடவை”

“அதனால தான் கொஞ்சம் நேரம் அதை அனுபவச்சிட்டு விளையாடலாம்ன்னு முடிவு பண்ணினேன்” என்று நமட்டு சிரிப்புடன் கூறியவனை போலியாக முறைத்தாள்.

“சரி சாப்பிட்டியா?” என்று அவள் சிகையை தடவிக் கொடுத்துக் கொண்டே அக்கறையுடன் வினவ...

“ஆமாம் இவ்ளோ நேரம் இல்லாத அக்கறை இப்போ எதுக்கு விடுங்க” என்று இதழ்கடையோரம் வளைத்து சிலுப்பிக் கொண்டவளின் தாடையை பற்றி திருப்பி அவள் விழியோடு தன் விழி பார்வையை கலக்கவிட்டபடி பேசலானான்.

“இங்கே பாரு நந்தினி நாம ரெண்டு பேரும் சராசரி மனுஷங்க தான்... கோபம் வருவதெல்லாம் உனக்கும் சகஜம், எனக்கும் சகஜம், நான் உன்மேல கோபப்படுவேன், சண்டை போடுவேன் ஆனால் உன்னை வெறுக்கமாட்டேன், விலகியும் நிற்கமாட்டேன் என்ன புரிஞ்சுதா” அவனின் வார்த்தைகளை விட அவன் பார்வை பேசிய மொழி தான் அவளுள் இறங்க...

“ம்ம்ம்...” என்றவளுக்கு இப்போது ஆனந்தத்தில் கண்கள் நனைந்தது.

“இப்போ சொல்லு சாப்டியா?” அவள் விழிகளில் வழிந்த நீரை சுண்டி விட்டப்படியே பேசியனிடம்...

“ம்ஹும்... இல்லை செமையா பசிக்குது” என்றாள்.

“ஏன் சாப்பிடலை?” அவள் மேல் கொண்ட கரிசனத்தில் அதட்ட...

“என் புருஷன் வாங்கி தருவாருன்னு தான் வீட்டில் சாப்பிடாம வந்தேன்” என்று கூறியவள் விழிகளில் குறும்பு கூத்தாடியது... அவள் எப்படி கூறினாலும், அவளின் அந்த புருஷன் என்ற வார்த்தை ஆண்மையை உயிற்பிக்க செய்து நூதான உணர்வில் ஆட்படுத்தியது.

“வந்த உடனே சொல்ல வேண்டியது தானே இவ்ளோ நேரமாவா சாப்பிடாமல் இருப்ப?”

“அதான் நீங்க சாப்பிட்டுட்டீங்களே அது போதும்” என்றவளை அர்த்தத்துடன் பார்த்தவனை புரிந்து கொள்ள இயலாமல் கண்களை சுருக்கினாள்.

விக்ரம் சில நிமிடங்களில் அறைக்கே உணவை வரவழைத்தவன் அவளை அமர்த்தி தானே அவளுக்கு உணவை பரிமாறி...

“இந்தா சாப்பிடு” என்று ஊட்டியும் விட நந்தினியோ ஆச்சர்யத்தில் விழிகளை சாசர் போல் விரித்தாள்.

“யம்மா எவ்ளோ பெரிய கண்ணு, பார்த்து வெளியே தெரிச்சிற போகுது” என்று அவளை கேலி செய்தப்படியே உணவை புகட்ட அவள் பாதி சாப்பிடு முடித்ததும். அவன் கரம் பற்றி தடுத்து நிறுத்தியவள்...

“இப்போ நீங்களும் சாப்பிடுங்க” என்க...

“நான் தான் சாப்பிட்டுட்டேனே எனக்கு பசியில்லை நீ சாப்பிடு” என்று உணவை எடுத்தவனை தடுத்தவள்...

“ஃபிராடு” கூர்மையாக பார்த்தபடி கூறினாள்.

அவளின் கூற்றில் புருவத்தை வில்லாக வளைத்து உயர்த்தியவன் “ஏன்” என்று விழிகளாலேயே வினவ...

“உண்மையை சொல்லனும்னா... நீங்க சாப்பிடவே இல்லை, கேண்டீன் போய் சாப்பிடுறவங்க வாயை வேடிக்கை பார்த்துட்டு வந்தீங்க என்ன சரிதானே” என்றவளின் புத்தி கூர்மையை எண்ணி பாராட்டுதலாக புருவம் உயர்த்தி மெச்சிக் கொண்டவன்...

“உன்கிட்டே ரொம்ப கேர்புல்லா இருக்கணும்?” என்று பகடி பேசியவன் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தது.

“உங்களை காதலிக்கிறேன்ல இதுகூட இல்லைன்னா எப்படி? மனசுல எனக்கு ஒரு இடத்தை கொடுத்து, அதில் நான் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த அப்புறமும் என்னை தள்ளி வைக்க பிளேன் போட்ட ஆளு நீங்க... சாப்பிடாம சாப்பிட்டுட்டேன்னு பொய் சொல்லுற உங்களையா கண்டு பிடிக்கமாட்டேன்”

“ஹாஹாஹா” என்று பலமாக வாய் விட்டு சிரித்தவன்...

“சரி எதை வச்சு நான் சாப்பிடலைன்னு கெஸ் பண்ணின?”

“நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்டா மாதிரின்னு சொன்னாபோது பார்த்தீங்களே ஒரு பார்வை அந்த திருட்டு முழியே எங்கப்பா புதருக்குள் இல்லேங்கிற கதையை காட்டி கொடுத்திருச்சு”

“நீ சாப்பிடமாட்டேன்னு எனக்கும் தெரியும் நான் சாப்பிட போகலைன்னா கண்ணம்மா ம்மா, செந்தில் அண்ணா ரெண்டு பேரும் வருத்தப்படுவாங்க... அதான் அவங்களுக்காக கேண்டீன் போறேன்னு சொல்லிட்டு போனேன், ஆனால் நீ சொன்ன மாதிரி சாப்பிடுறவங்களை வேடிக்கை பார்த்துட்டு வந்துட்டேன்”

“அதானே சரி இப்போ சாப்பிடுங்க” என்று துரிதப்படுத்த...

“உனக்கு நீ கேட்காமலே ஊட்டி விட்டேன்னா இல்லையா எனக்கும் ஊட்டி விடமாட்டியா?” என்று உரிமையாக கேட்க அவளோ...

“ம்ஹும்... மாட்டேன்” என்று சாதாரணமாக தலையசைக்க தட்டை ஓரமாக வைத்து விட்டு முறுக்கிக் கொண்டவன்...

“அப்போ எனக்கு வேண்டாம் போ டி” என்று நிர்தாட்சண்யமாக மறுக்க, அவனின் செயலை கண்டு அவளுக்கு புன்னகை அரும்பியது.

“ரோஷம் எல்லாம் வேண்டாம் விக்ரம் சார்... நீங்க ஆதனை பார்க்க என்னை அடிக்கடி ஹாஸ்பிடல் வர வேண்டாம்ன்னு சொன்னதுக்கு காரணம் இருக்கிற மாதிரி இதுக்கும் ஒரு காரணம் இருக்கு... எனக்குன்னு ஒரு நேரம் வரும் அப்போ மூணு நேரமும் நானே ஊட்டி விடுறேன் இப்போ சாப்பிடுங்க” அவளின் பேச்சில் ஏதோ உட்கருத்து பொதிந்திருப்பதை புரிந்தாலும் அது எதுவென்று அறியாது விழித்தவன்...

“ஏன் அப்படி என்ன காரணம்” என்று விசாரித்தான்.

“நான் பொண்ணு எனக்காக நீங்க யோசிக்கிற மாதிரி, நானும் உங்களுக்காக சில விஷயங்கள் யோசிக்கமாட்டேனா?” என்றதும் சில கணங்களில் மூலையில் மின்னல் வெட்ட அவளை புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக...

“சரி தான்” என்றவன் மௌனப் புன்னகையுடன் அமைதியாக சாப்பிட்டான்.

விக்ரம் உணவருந்தி முடிக்கவும், நந்தினி ரகசியமாக அவனிடம் ஏதோ கூற அதற்கு கலகலத்து சிரித்தபடியே கையலம்பிக் கொண்டு இருந்தவனை கண்ட கண்ணம்மா, செந்திலிடம் கண்ணை காட்டி எப்படி நான் சொன்னது சரியா என்று ஜாடையால் கேட்க உதட்டை பிதுக்கி சபாஷ் போட்டார்.

இருவரையும் கண்ட நந்தினி... “என்ன ரெண்டு பெரும் சாப்பிட்டீங்களா உள்ளே வராம அங்கேயே நிற்கறீங்க?”

“நீயும் தம்பியும் முக்கியமா ஏதோ பேசிட்டு இருந்தீங்க போல அதான்ம்மா வெளிய போயிட்டு வரலாமான்னு யோசிச்சேன்” என்று பல்லை காட்டி வைக்க நந்தினி, விக்ரம் இருவரின் பார்வையும் அர்த்தத்துடன் உரசிக் கொண்டது.

“நீங்க வாங்க” என்று உள்ளே அழைத்த விக்ரமின் பேச்சிற்கு மதிப்பளித்து இருவரும் உள்ளே செல்ல அங்கே சில கணங்கள் குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு நிசப்தம் நிலவியது.

நந்தினி விக்ரமிடம் பேசு என்பது போல் அவனிடம் கண்ணை காட்ட இருவருக்குமே அந்த சம்பாஷனை புதுவித உணர்வையும், உறவையும் எற்படுத்தி அவர்களின் உலகத்தில் காலடி எடுத்து வைத்து சஞ்சரிப்பது போல் உற்சாக பேரலையில் மிதக்க வைத்தது.

இருவரையும் பார்த்தும் பார்க்காதது போல் கவனித்து கொண்டிருந்தனர் அவர்களின் மௌன சம்பாஷணைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் செந்தில் ,கண்ணம்மா இருவரும்.

நந்தினி விக்ரமிடம் கண்பாஷையில் நம்மை பற்றி சொல் என்பதாக இருந்ததை புரிந்துக் கொண்டாலும், அவளை வைத்துக் கொண்டு அவர்களிடம் கூற விக்ரமுக்கு எதுவோ ஒன்று தடுத்தது.

“சரி நந்து நீ கிளம்பு” என்று அவளை பார்வையால் கட்டுபடுத்தி வெளியேற்றியவன்...

“கண்ணம்மா ம்மா, செந்தில் அண்ணா ரெண்டு பெரும் இங்கேயே இருங்க உங்ககிட்டே கொஞ்சம் பேசணும் நான் நந்தினியை விட்டுட்டு வந்துடறேன்” என்க நந்தினியும் அவர்களிடம் கூறிவிட்டு அவனையே யோசனையுடன் பார்த்தப்படி விடைபெற்றுக் கொண்டாள்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-17
“ஏன் விக்ரம் இப்போவே அவங்ககிட்டே நம்ம விஷயத்தை சொல்லியிருக்கலாமே, உங்களுக்காக நல்லது நினைக்கிற ரெண்டு ஜீவன் அவங்க மட்டும் தானே”

“எனக்கு தெரியாமலா? அவங்ககிட்டே நான் சொல்லத்தான் போறேன் ஆனால் அது இப்போவே வேண்டாம்... நீ போய் உன் படிப்பை பாரு”

“சோ, இனிமே உங்களையும் ஆதனையும் பார்க்க வர வேண்டாம்ன்னு சொல்லுறீங்க... போனில் ஆச்சும் பேசலாமா... இல்லை, அதுக்கும் எதாவது தடா சட்டம் போட்டிருக்கீங்களா?” என்று கூறி முகத்தை சுளித்தாள். அவளின் உரிமை கோபம் கண்டு வாத்சல்யத்துடன் பார்த்தவன்...

“நான் அடிக்கடி பார்க்க வேண்டாம்ன்னு தான் சொன்னேன்... பார்க்காமலே இருக்கணும், பேசாமலே இருக்கணும்னு சொல்லவே இல்லை... அது நம்ம ரெண்டு பேருமே செய்ய முடியாத ஒரு விஷயமும் கூட... ஒரு அஞ்சு நாள் பொறு நான் ஆதனை ஹாஸ்பிட்டலில் இருந்து டிச்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போயிக்கிறேன் அப்புறமா மீட் பண்ணலாம்... உன்னுடைய பிஜி படிப்பையும் நீ முடிச்சிரு அதுவரைக்கும் நம்ம விஷயம் தெரிய வேண்டாம் தெரிஞ்சா உன் படிப்புக்கு பாதிப்பாகும்”

“அதுக்காக இன்ஸ்டால்மெண்டில் பார்க்கிற மாதிரி தான் பார்க்கணுமா?”

“வேறு என்ன செய்யலாம்?” என்று வினவ, பதில் கூறாமல் முகத்தை முறித்து தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளை கண்டு வருத்தம் எழும்பியது.

“இதோ பார் நந்துமா சும்மாவே காதல்ன்னு சொன்னா எதிர்ப்பு சொல்லுறவங்க பேரண்ட்ஸ்... இதில் நம்ம விஷயமே வேற, அப்படி இருக்கும் போது என்னவெல்லாம் பிரச்சனையை சந்திக்கணுமோ தெரியலை, அது பிரச்சனை வரும் போது தான் தெரியும் அதை தற்காலிகமா தள்ளி வைக்கிறோம் அவ்ளோதான்”

“சப்போஸ் எங்க வீட்டில் ஒத்துக்கவே இல்லைன்னா?” அவளுக்கு அவன் உறுதியின் நிலைப்பாடு என்னவென்று அறிய வேண்டி வினாவை எழுப்பிவிட்டு திக்திக்கென்ற மனதுடன் காத்திருக்க...

“என்னை நம்பி என்னுடன் வா, கோவிலில் வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, நம்ம மேரேஜை ரெஜிஸ்டரும் பண்ணிட்டு வாழ்க்கையை ஆரம்பிப்போம்?” என்று அழுத்தமாக கூற, நந்தினிக்கு அவனின் நிலைப்பாடில் ஆயிரம் மடங்கு ஒப்புதல் இருக்கவே மாட்சிமையுடன் அவன் கரங்களை தன் கரங்களுக்குள் கோர்த்து கொண்டவள்.

“இது போதும் விக்ரம்... இது போதும்!” உணர்ச்சிவசத்தில் கரகரத்த குரலில் கூறிவிட்டு, அவன் உள்ளங்கையில் முத்தம் பதித்துவிட்டு நிமிடமும் நில்லாமல் சென்றுவிட்டிருந்தாள்.

விக்ரம் நந்தினியை விரும்புவதை பற்றி கண்ணம்மா செந்திலிடம் பிரஸ்தாபித்திருந்தான்.

“உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா அதில் எங்களுக்கு சந்தோஷம் தான் தம்பி... நந்தினி பொண்ணோட அம்மா அப்பா சம்மதிப்பாங்களா?”

“அது தான் எனக்கும் ரொம்ப கவலையா இருக்கு செந்தில் அண்ணா”

“நீங்க ஏன் தம்பி கவலைப்படறீங்க? உங்களுக்கு பேச நாங்க இருக்கிறோம்” என்று கண்ணம்மா கூற...

“நீ சொல்ற கண்ணம்மா, நம்ம தம்பியும் இதை தான் எதிர்பார்க்கும்... ஆனால் இதை பொண்ணு வீட்டாளுங்க ஏத்துக்கணுமே”

“ஏன் ஏத்துக்கமாட்டாங்க? நாம தானே ஐயா அம்மா காலத்தில் இருக்கிறோம், நம்ம விக்ரம் தம்பியே நம்ம கண் பார்வையில் வளர்ந்தது இதுக்கு மேல என்ன வேணும் அவங்களுக்கு”

“செந்தில் அண்ணன் சொல்லுறது சரிதான் கண்ணம்மா ம்மா, நந்தினி வீட்டில் என் விஷயத்தையே ஏற்றுக்கிறது சிரமம் தான், இதில் அம்மா அப்பாவும் இல்லாதது அவங்களை ரொம்பவே யோசிக்க வைக்கும்”

“அப்போ என்ன தான் பண்ணுறது தம்பி?”

“காலம் நேரம் கூடி வரட்டும் கண்ணம்மா ம்மா அது அதுக்கு சில நேரம் அமைஞ்சிரும், அவங்க அம்மா அப்பாவை சம்மதிக்க வைக்க முயற்சி எடுப்போம் இல்லைன்னா, நந்தினியை என்கூட வர சொல்லிருவேன்” என்றவனின் திடமான முடிவு எதிர்காலத்தில் தலைகீழாக மாறிப் போக போவதை அவனே அறிந்திருக்கவில்லை!!

****************

நந்தினி விக்ரமின் சொல்லை ஏற்று ஆதனை பார்க்க வேண்டி மருத்துவமனை பக்கம் அண்டாமல் இருந்தாள்... ஆனாலும் அவர்கள் இருவரையும் பார்க்காத தவிப்பும், ஏக்கமும் பலமாக ஆட்கொண்டுவிட்டிருந்தது. ஏதோ காலம் காலமாக விக்ரமுடன் வாழ்ந்து விட்டு பிரிந்தது போல அவளுக்கு தளைகள் இட்டு கட்டுப்படுத்தியிருந்த விக்ரமின் மீது அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

அவள் கோபத்தின் அளவை பற்றி அறியாத விக்ரமோ அவளுக்கு அலைபேசியில் அழைக்க, அவன் இணைப்பை மட்டும் உயிர்பித்துவிட்டு மெளனமாக இருந்தாள்.

“என்ன மேடமுக்கு கோபமா?” என்று அவளை புரிந்துக் கொண்டு வேடிக்கையாக வினவ...

“நான் யாரு உங்க மேல கோபப்பட” முகத்திலறைந்தது போல் கூறியதில் அவன் முகம் சடுதியில் பட்டுப் போனது.

“..................” சில வினாடிகள் அவனும் மௌனம் காக்க எங்கே இணைப்பை துண்டித்துவிட்டானோ என்று திரையில் பார்த்து உறுதி செய்துவிட்டு அவன் இணைப்பில் தான் இருக்கிறான் என்று அறிந்ததும்...

“ஹலோ.. ஹலோ... விக்ரம்” என்று படபடவென்று அவனை அழைத்தவளிடம்...

“ம்ம்ம்... இருக்கிறேன்” என்று மட்டும் கூறினான்.

“லைன்ல இருக்கீங்கன்னா பேசணும், கால் பண்ணிட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”

“அதுதான் நீ எனக்கு யாருன்னு கேட்டுட்டியே, அதான் யோசிச்சிட்டு இருக்கேன்?”

“யோசிப்பீங்க.. யோசிப்பீங்க.. நேரில் வந்து மண்டையை ரெண்டு தட்டு தட்டினா நான் யாருன்னு நினைவு வந்திரும் என்ன வந்து செய்யவா?” என்றதும் அவனுக்கு முந்திய பேச்சு அனைத்தும் மறைந்திருக்க பக்கென்று சிரித்தவன்...

“வா வந்து தட்டு” என்று இயம்பினான்.

“ஆமாம் எங்கே வருவதாம்? நான் வரவே கூடாதுன்னு தான் நூற்றி நாப்பத்தி நாலு தடா சட்டம் ஒண்ணு போட்டு வச்சிருக்கீங்களே”

“ஓஹோ என் சொல்லை மீறி நீ எதுவும் செய்யமாட்ட அப்படிதானே? இது இப்போ மட்டுமா இல்லை, எதிர்காலத்திலேயும் நீடிக்குமா?”

“நானெல்லாம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்கிற ரகமாக்கும்... இப்போ மட்டும் இல்லாமல் எப்போவுமே நான் உங்க சொல்லை தட்டமாட்டேன்” என்றவளின் சொல்லில் அவன் கரைந்தான்.

“சரிதான் என்ன என் மேல உள்ள கோபமெல்லாம் போச்சா?”

“அது எப்படி போகும் உங்களை பார்க்கிற வரைக்கும் ஸ்டெடியா இருக்கும்”

“நாளைக்கு மார்னிங் தான் ஆதனை டிஸ்சார்ஜ் பண்ணப் போறாங்க நாளைக்கு மதியம் உன் காலேஜ்கிட்டே வரேன் தயாரா இரு” என்றதும் தனக்காக பார்க்கிறானோ, ஆதனை பார்க்க வேண்டுமே என்பதை கருத்தில் கொண்டவள்...

“நாளைக்கு தானே டிஸ்சார்ஜ் பண்ணுறாங்க ஆதனை பார்த்துக்கோங்க விக்ரம், நாம நாளை மறுநாள் கூட மீட் பண்ணிக்கலாம்” என்று கூறியிருந்தாள்.

“இல்லை நந்து நான் இதை பற்றி அப்போவே உன்கிட்டே பேச வேண்டிய விஷயம், அதை இதுக்கு மேல தள்ளிப் போடுறதில் எனக்கு விருப்பம் இல்லை”

“அப்போ ஆதனை யார் பார்த்துக்குவா? அவன் நல்லா இருந்தாக்கூட பரவாயில்லை, ஆனால் ஹாஸ்பிட்டலில் இருந்துட்டு வரான் அவனுக்கு உடம்புல பலமே இருக்காது நீங்க கூட இருந்து பார்த்துக்க வேண்டாமா?” அவள் மகன் மேல் கொண்ட அக்கறை பெண்ணுக்கே உரித்தான தாய்மை குணத்தையும், உன்னதமான அன்பையும் பிரதிபலிக்க, அவளின் நேசத்தை பெற்ற பாக்கியத்தை எண்ணி புளங்காகிதம் அடைந்தான்.

“அவனுக்கு பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லை, உன்னை பார்த்ததிலேயே அவன் தெம்பாகிட்டான், நீ இருந்தாதான் உன் கவனம் அவன் பக்கம் மட்டுமே இருக்கணும்னு அதையும் இதையும் சொல்லி புலம்புறான்... இப்போதைக்கு வேளா வேளைக்கு அவனுக்கு சாப்பாடு கொடுத்து ரெஸ்ட் எடுக்க வைக்கிறது தான் அதை கண்ணம்மா ம்மா பார்த்துக்குவாங்க” என்றதும் அவளுக்கு ஆதனின் மனநிலையும், விக்ரமின் எண்ணமும் புரிந்து செயல்பட எத்தனித்தாள்.

“அப்போ நாளைக்கு மதியம் காலேஜுக்கு லீவ் போட்டுட்டு வீட்டுக்கு வந்துடறேன் ஆதனை பார்த்துட்டு கிளம்பலாம்”

“வேண்....” ஏதோ கூற வந்த விக்ரமின் பேச்சை முடிவுறாமல் வேகமாக இடையிட்டவள்...

“வேண்டாம்ன்னு சொல்லாதீங்க விக்ரம் ப்ளீஸ்... எனக்கு ஆதனை ஒருவாட்டியாச்சும் பார்த்தால் தான் நிம்மதியா உங்ககூட பேச முடியும்” என்றதில் அவனுக்கே ஒரு மாதிரியாகிப் போக...

“சரி சரி வா அவனை பார்த்துட்டே நாம வெளியில் போவோம்” என்று அனுமதியளிதிருந்தான்.

ஆதனை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றிருக்க, அங்கே அவர்களுக்கு முன்னால் நின்ற நந்தினியை கண்டு கண்கள் மின்ன பார்த்தான் விக்ரம்.

கண்ணம்மா, செந்தில் இருவரும் நந்தினியிடம் மரியாதை நிமித்தம் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு நகர்ந்துக் கொண்டனர்... நந்தினியை பார்த்த ஆதன் குதியாட்டம் போடாத குறைதான் காய்ச்சலிலும், மருந்து மாத்திரைகளின் உபகரணத்தில் மட்டுமே இரண்டு வாரம் இருந்தவனுக்கு, அவன் பலவீனம் அடைந்த உடலும் ஏதோ பலம் அடைந்தது போல் நந்தினியை சுற்றினான்.

அவன் தெம்பு குறைய குறைய உடல் சோர்ந்து தள்ளாடி விழவே, நந்தினி அவனை அதட்டி உருட்டி உண்ண வைத்து மருந்து மாத்திரைகளை கொடுத்து உறங்க வைத்திருந்தாள்.

ஆதன் உறங்கியதை அறிந்து நந்தினியை நெருங்கியவன் “என்ன தூங்கிட்டானா?” என்று விசாரித்தான்.

“ஆமாம் இப்போதான் தூங்கினான்” என்றவளை அபிலாஷையுடன் பார்த்துக் கொண்டிருக்க, இருவருக்கும் உண்டான தனிமையில் அவள் சித்தம் தடுமாறியது. சில கணங்கள் அப்படியே நீடிக்கவிட்டவன் சூழ்நிலை உணர்ந்து செயல்பட எண்ணினான்.

“சரி வா சாப்பிட்டுட்டு கிளம்பலாம்?” என்று சாதாரணமாக கூறிவிட்டு நகர்ந்தவனை...

“ஒரு நிமிஷம் விக்ரம்” என்று கூறி தடுத்து நிறுத்தியவள்...

“நாம ரெண்டு பேரும் இங்கேயே பேசக் கூடாதா?” என்று தயக்கத்துடன் விளம்பியிருந்தாள்.

“ம்ஹும்... வேண்டாம் நந்தினி! நான் பேசப் போகிற விஷயம் என் கடந்த கால வாழ்கையை சார்ந்தது அதுக்கு யாருடைய இடையூறும் இருக்கக்கூடாது” என்றவனின் குரலில் இருந்த துயரம் அவளையும் வாட்ட, அவனின் சொல்படியே அங்கேயே உணவை உட்கொண்டு விட்டு அவனுடன் இணைந்து சென்றாள்.

விக்ரம், நந்தினி இருவரும் திருச்சி நோக்கி செல்ல திட்டமிட முன்னெச்சரிக்கையாக நந்தினி வீட்டிற்கு அழைத்து அவள் படிப்பு சம்மந்தமாக தோழிகளுடன் செல்ல இருப்பதாக கூறிவிட்டு சென்றாள். இருவரும் தனிமை வேண்டி கல்லனைக்கு வந்திருந்தனர்.

இருவருக்குமான தனிமையான ஓர் இடத்தில் அமர்ந்ததும் விக்ரம் தான் பேச்சை ஆரம்பித்தான்... “இப்போ நான் பேசப் போகிற விஷயம் என்னுடைய முன்னால் திருமண வாழ்க்கையும், கல்யாணம்ன்னு சொல்லி நான் கிணத்தில் விழுந்த கதை தான்... இதை நீ கேட்கவும் நினைக்கவும் விரும்பமாட்டேன்னு எனக்கு தெரியும்... ஆனாலும் என்னுடைய சரிபாதியாக ஆகப்போகிற உனக்கு நமக்குள்ள எந்தவித ஒளிவு மறைவும், நெருடலும் இருந்து விடக்கூடாது... முக்கியமான விஷயம் நமக்குள்ள ஏற்படுற பந்தத்திற்கு என் கடந்த காலம் எந்த விதத்திலும் உன்னை பாதிக்கக்கூடாதுன்னு தான் இதை சொல்லுறேன்”

“விக்ரம் உங்களுடைய கடந்த காலம் என்னவா இருந்திருந்தாலும் அதை ஒரு பொருட்டா நான் எடுத்துக்க மாட்டேன்... ஆனாலும் நீங்க சொல்லுறது போல நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்க வேண்டாம்னு தான் நானும் நீங்க சொல்லுறதை கேட்டுக்கிறேன்”

விக்ரம் அவன் படித்தது வளர்ந்தது மேல்படிப்புக்கு வெளிநாடு சென்றதெல்லாம் பற்றி கூறியவன், இறுதியில் அவன் திருமணத்தின் அடித்தளத்தில் வந்து நிறுத்திவிட்டு அவளை நோக்கியவனின் பார்வையில் தீட்சண்யமும், முகத்தில் இறுக்கமும் படிந்திருந்தது.

****************

“அம்மாவுக்கு அண்ணன் முறை ஆகுற சதாசிவம் மாமாவுடைய பொண்ணு தான் ஷைலஜா”

“அவளும் நானும் சின்ன வயசில் இருந்தே நல்லா பேசி பழகியிருக்கோம்... அவளும் அத்தான் அத்தான்ன்னு என்னை சுற்றி வந்தவ தான்” என்று விட்டு நந்தினியின் முகத்தை பார்க்க அவள் முகம் தன் உணர்ச்சிகளை மறைக்க சிரமப்பட்டு போராடிக் கொண்டிருந்ததை கண்டவனுக்கு உள்ளத்தை கொய்தது.

“சாரி நந்து இதெல்லாம் சொல்லி உன்னை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கலை, அதே சமயம் சொல்லாமலும் இருக்க முடியலை, இன்னைக்கு ஒரு நாளைக்கு இதெல்லாம் சகிச்சிக்கோ” இவனின் இந்த வார்த்தைக்கு இருக்கட்டும் பரவாயில்லை என்று இயல்பாக பரந்த மனப்பான்மையுடன் கூற ஏனோ அவளால் முடியவில்லை... அவளின் உணர்வுகளை அவனும் உணர்ந்தாலும் பின்னாளில் இதை பற்றி அவள் அறிய வரும் போது அவர்கள் வாழ்க்கையில் சிக்கல் நேர்ந்து விடக்கூடாதே என்ற விசாரத்தில் பேச ஆரம்பித்தான்.

“அம்மா அவளை கல்யாணம் செய்துக்கிறயான்னு என் விருப்பத்தை கேட்ட போது என்னால் மறுக்க முடியலை... யாரோ ஒருத்தியை கல்யாணம் பண்ணி புரிஞ்சுகிட்டு வாழுறதுக்கு ஷைலஜா நல்லா தெரிஞ்ச பொண்ணு, அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்ச பொண்ணுன்னு நான் சரின்னு சொல்லிட்டேன்”

“ஆனால் அவ எதிர்ப்பு சொல்லியிருந்திருக்கா, அவ ஒருத்தனை விரும்புறதா சொல்லியிருக்கா... ஆனால் அவன் வேறு இனத்தை சேர்ந்தவன் அதுவும் பெரிதாக பின்புலம் இல்லாதவன்னு அவங்க ஏத்துக்கமாட்டேன்னு சொல்லியிருக்காங்க... என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னா குடும்பத்தோட தற்கொலை பண்ணிகிறதாவும் சொல்லியிருந்திருக்கிறாங்க... இதை அவ காதலன்கிட்டே பகிர்ந்துகிட்டதும் அவன் என்னுடைய பணபலத்தை பிரயோகிக்க நினைச்சு அவளை என்னை கல்யாணம் பண்ணினதும் ஒரே வாரத்தில் ஓட பிளான் போட்டிருக்காங்க, அதுவும் அவங்க வாழ தேவையான பணத்தையும் திரட்டிட்டு ஓடி வர பிளான் போட்டு கல்யாணதுக்கு சம்மதம் சொல்லியிருந்திருக்கிறான் இவளும் அதற்கு சம்மதிச்சு தான் என்னை கல்யாணம் பண்ணியிருந்திருக்கா”

“என்னுடைய கெட்ட நேரம் இதெல்லாம் எனக்கு தெரியாமலே போயிருச்சு... ஷைலஜா வீட்டினருக்கும் என்னை விட அவங்க மகள் வாழ்க்கை கண்முன் நின்றதால அவங்களும் சொல்லலை... அவளுடைய காதல் விவகாரத்தை தெரிஞ்சுக்காமலே அவ என்னுடைய மனைவியாகிட்டா” என்று கூறியதும் நந்தினி பொறுக்க முடியாமல் அவனிடம் அந்த வினாவை எழுப்பினாள்.

“என்ன தான் அவ உங்க சொந்தக்கார பெண்ணா இருந்தாலும் நீங்களும் ஒருமுறை விசாரிச்சு இருந்திருக்கலாமே விக்ரம் ஏன் அதை பற்றி உங்க வீட்டில் யோசிக்கலை?” என்று வினவினாள்.

“புது உறவா இருந்தா விசாரிக்க நினைக்கலாம் ஷைலஜா என் அம்மாவுடைய சொந்த அண்ணன் பொண்ணு நான் வேற அவ வேறன்னு எங்க அம்மா பிரிச்சு பார்க்கலை” என்றவனின் பேச்சில் இருந்த நிதர்சனம் நன்கு விளங்கியது... அவள் மனமோ விக்ரமின் அன்னையை எண்ணி மிகவும் பரிதாபம் சுரந்தது. ‘தன் மகனின் வாழ்க்கையை வளப்படுத்த எண்ணி சீரழித்த நிலையை எப்படி தான் தாங்கினாரோ என்று மனம் வெதும்பியது’

“ஷைலஜா என் கூட தாம்பத்தியத்துக்கு உடன்பட மறுத்தா, நானும் சரி விட்டு பிடிக்கலாம்ன்னு ஒரு ரெண்டு மாசம் வரைக்கும் பொறுமையா இருந்தேன்... அந்த இடைப்பட்ட காலத்தில் பெயருக்கு தான் அவ என் மனைவி நான் அவள் கணவன் மற்றபடி நான் நானாதான் இருந்தேன்... அவ அடிக்கடி ஒருத்தன் கூட பேசிகிட்டு இருந்தா நான் யாருன்னு கேட்டதுக்கு என் பிரெண்டுடைய அண்ணன், எனக்கும் அண்ணன் மாதிரின்னு சொன்னா... அவனும் என்கிட்டே பேசினதால நான் மேற்கொண்டு அவளை எதுவும் சொல்லலை அதை பெரிசா கண்டுக்கவும் இல்லை”

“ஏன் விக்ரம் அவனை பற்றி நீங்க விசாரிச்சிருக்கலாமே” என்று கேட்டுவிட்டு உதட்டை கடித்துக் கொண்டாள்... இந்த கேள்வி வெகு சுலபமான கேள்வி ஆனால் விடை கூறுபவனின் மனநிலை தான் என்னவோ என்றெண்ணி பரிதவித்தாள்.

அவள் எண்ணியது போல் விக்ரமுக்கு அவன் கடந்த காலத்தின் சுவடுகள் பதித்த காயங்கள் அவனுக்கு வலியை ஏற்படுத்தவில்லை... மாறாக, ஏதோ மரத்த போன உணர்வு தான் தோன்றியது... அதனாலோ என்னவோ நந்தினியின் கேள்வியை எளிதாக எதிர்கொண்டு பதிலளித்தான்.

“என்ன சொல்லி விசாரிப்பேன் நந்து? என் பொண்டாட்டி மேல எனக்கு சந்தேகம்ன்னு சொல்லியா விசாரிக்க முடியும்?” அவன் பதிலில் உதடுகளை இறுக மூடிக் கொண்டவள் ஏன் என்று சிந்தித்து கொண்டிருந்தாள்.

“நான் ஏன் அதை செய்யலைன்னு நீ யோசிக்கிறது புரியுது” என்றவன் தொடர்ந்து...

“எங்க அம்மா என்னை அப்படி எல்லாம் வளர்க்கலை நந்து... எங்க அம்மான்னா எனக்கு ரொம்ப புடிக்கும், பொண்ணுங்க மனசை காயப்படுத்தக் கூடாது அவங்க நம்ம வீட்டு குலதெய்வம் மாதிரி உன் பொண்டாட்டியையும் நீ உன் கண்ணு போல தான் வச்சு பார்த்துக்கணும் எக்காரணத்துக்காகவும் நீ சந்தேகப்படக் கூடாதுன்னு சொல்லி சொல்லி வளர்த்ததாலேயே எனக்கு ஷைலஜாவை சந்தேகக் கண்ணோட பார்க்க முடியலை... தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்லுவாங்க அதை கடைபிடிக்க நினைச்சேன்”

“இப்படிப்பட்ட பையனை பெற்ற அம்மாக்கள் இருந்தாலே பொண்ணுங்க பயப்பட தேவை இருந்திருக்காது... ஆனால் நல்லவர்களுக்கு சோதனை வரும்ன்னு சொல்வாங்க அப்படி தானே உங்க அம்மாவுக்கும் நேர்ந்தந்திருக்கு” என்று நந்தினி விக்ரமின் அன்னையை எண்ணி வருந்தினாள்... நந்தினியின் வருத்தம் கண்டு அவனுக்கும் உணர்ச்சி அலைகள் எழும்பினாலும் பேசி முடிக்க வேண்டியவற்றை பேசி முடித்திட வேண்டி தொடரலானான்.

“மூணாவது மாசம் தான் எங்களுக்குள்ள எதார்த்தமா தாம்பத்தியம் நடந்தது...” என்று கூறிவிட்டு நந்தினியின் முகம் பார்க்க அவன் நினைத்தது போலவே அவள் சகிக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்ததை அறிந்தவன்...

“அம் சாரி நந்தினிமா... இந்த ஒரு தடவை பொறுத்துக்கோ நான் மறைச்சு சொன்னா சில விஷயங்கள் உனக்கு புரியாமல் போயிரலாம்... அதனால தான் என்னுடைய இறந்தகால கண்றாவி வாழ்க்கை கதையை எல்லாம் உன்கிட்டே சொல்லிடுறேன்” என்றவனை அவள் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“கண்றாவி வாழ்க்கையா?”

“பின்னே சுகபோக வாழ்க்கையா? நான் இதை சொல்லலைன்னா நீ அப்படித்தான் நினைச்சுப்பா சொல்றேன் கேளு”

“எனக்கும் அவளுக்கும் தாம்பத்தியம் நடந்து முடிஞ்சிருந்தது... அடுத்தநாள் எழும்போது தான் நானே என்னை உணர்ந்தேன் அவளும் அதை உணர்ந்தா... நான் யோசிச்சது என்ன இருந்தாலும் நான் அவ புருஷன் தானே அதனால் அவளுக்கும் உடன்பாடு இருந்தது தானே அப்படின்னு நினைச்சுட்டு சந்தோசமா தான் இருந்தேன்”

“அவளுக்கு அப்படி இல்லை நடந்ததே கடமை தாம்பத்யம் ஆனால் ஏதோ நான் தான் பிளேன் போட்டு அவளை ரேப் பண்ணினா மாதிரி நடந்துகிட்டா... நான் கட்டின புருஷன் அவ என் பொண்டாட்டி என்கிற எல்லா உறவையும் மறந்துட்டு, எப்படி நீ என்னை தொடலாம் நான் தான் கொஞ்ச நாள் பொருன்னு சொல்லியிருந்தேன்ல அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்ன்னு அவ என்னை பேசக் கூடாதா வார்த்தை எல்லாம் பேசிட்டா... அந்த வார்த்தைகளை உன்கிட்ட கூட என்னால் சொல்ல முடியலை நந்தினி” என்று கூறியவன் முகம் இறுக உடல் விறைத்துக் கொண்டது... நந்தினியோ திகைப்பூண்டை மிதித்தவள் போல அதிர்ந்த விழிகளால் அவனை நோக்கிக் கொண்டிருந்தாள்.

**************************

வணக்கம் நட்பூக்களே...

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-16 & 17 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் மூன்று பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-18

அவன் கூறியதை நந்தினியாலேயே ஜீரணித்து கொள்ள முடியவில்லை... அவன் அவளிடம் வெளிப்படையாக கூற முடியாத வார்த்தைகள் எனும் போதே யூகத்தில் சிந்தித்துப் பார்த்தவளுக்கு அவனின் வலியை உணர்ந்து அனுபவித்தாள்... “வி..க்..ர..ம்..” என்று பிசிறடித்த குரலில் அவனை உணர்ந்த வலி ஸ்பஷ்டமாக வெளிப்பட்டது.

“இதுக்கே அதிர்ச்சி ஆனால் எப்படி நந்து?” என்று சாதாரணமாக பேசியவனை கழிவிறக்கத்துடன் நோக்கினாள்.

“அதுக்கப்புறம் அவகிட்டே பேசுறதையே நிறுத்திட்டேன்... எங்க படுக்கை பிரிஞ்சது வீட்டில் யாராவது பார்வையில் படுவோம்ன்னு இருந்தால்தான் என் ரூமில் இருப்பா அதுவும் எவ்ளோ சேஃபா இருக்க முடியுமோ அப்படி இருப்பா, இல்லைன்னா என் ரூம்க்கு பக்கத்தில் இருக்கிற டிரெஸ்ஸிங் ரூமில் இருந்துக்குவா... அவ நடந்துகிட்ட விதத்தில் எனக்கே ஒருமாதிரி ஆகிப்போச்சு ஒருவேளை நாம தான் அலையிறோமோன்னு எல்லாம் நினைச்சு என்னை நானே வெறுத்திருக்கேன்”

“இது மெல்ல மெல்ல என் அம்மாவுக்கு தெரிய வந்துச்சு, கல்யாணம் ஆனா மகன் நேரம் கழிச்சு வீடு வரான் முகத்தில் ஒரு சோபை இல்லைன்னு கண்ணம்மா ம்மா கிட்டே புலம்பி இருக்காங்க”

“எங்கம்மா ரெண்டு மூணு தடவை என்கிட்டே இதை பற்றி நாசூக்கா விசாரிச்சு பேசி பார்த்தாங்க... நான் பிடி கொடுக்கலை அவகிட்டே பேசி பார்த்தாங்க அவ எங்க அம்மாவை மதிக்காமல் திமிரா பதில் சொல்ல அதுக்கு எங்க அப்பா ஏன்மா உன் அத்தையை இப்படி எல்லாம் பேசுறேன்னு சொல்ல அதை சாக்கா வச்சு என் அம்மா அப்பா கொடுமைப் படுத்துற மாதிரி ரணகளமே பண்ணிட்டா... அது அன்னையோட நிற்காமல் எப்போ எல்லாம அவங்க என்னை பத்தி அவகிட்டே பேசுறாங்களோ அப்போ எல்லாம் அதே மாதிரி கத்தி கூச்சல் போட்டு வீட்டு வாசலுக்கு வந்து தெருவே எட்டி பார்க்கிற அளவுக்கு நாராடிச்சுட்டா... அவங்க அவகிட்டே பேசினது எல்லாம் எனக்கு தெரியாது ஏன்னா நான் இலாதப்போ தான் அவங்க ஷைலஜாகிட்டே பேசியிருக்காங்க”

“நான் இல்லாமல் போனது அவளுக்கு ரொம்ப வசதியா போச்சு கண்டமேனிக்கு அவங்களை திட்டுறதும் என்னை பற்றி தவறான விதத்தில் ஏதேதோ சொல்லியிருந்திருக்கா, உன் பிரெண்ட் ரம்யாவுடைய பேராண்ட்ஸ் தான் சமாதானம் செய்து வைத்தாங்கன்னு அம்மா சொன்னாங்க”

“ரம்யாவுடைய பேரண்ட்ஸ் பொறுத்தவரை பொண்டாட்டியை ஒழுங்கா வச்சு வாழத் தெரியாத பேடின்னு எல்லாம் பேசினாங்களாம் ஆனா அதுக்காக எல்லாம் நான் கவலைப்படலை... ஏன்னா அவங்களுக்கு அவ பேசினது மட்டும் தானே தெரியும் உள் விவகாரம் என்னன்னு தெரியாதே அதனால் அவங்களை பற்றி எல்லாம் பெரிசா யோசிக்கலை அதனால் தானோ என்னவோ இப்போ ஆதனையும் அவங்க வெறுக்கிறாங்க”

“உங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் அவளை விசாரிச்சு கண்டிக்கலையா விக்ரம்?”

“ம்ஹும்...” என்று விரக்தியாக சிரித்தவன்...

“அங்க தான் கடவுள் எனக்கு ட்விஸ்ட் வச்சாரு இந்த சண்டை நடந்தப்போ எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்லாமலே ஒருமாசம் மேல ஓடியிருந்தது... எனக்கு இதெல்லாம் தெரிய வந்தப்போ ஷைலஜா கருத்தரிச்சிருந்தா, அதுவும் நாற்பதைந்து நாள்... நான் என் அம்மா அப்பா ரெண்டு பேரையும் சத்தம் போட்டேன் ஏன் என்கிட்டே இதெல்லாம் சொல்லாமல் மறைச்சீங்கன்னு?”

“அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”

“என்ன சொல்வாங்க தன் மகன் நல்லா இருக்கணும்னு நினைக்கிற எந்த ஒரு அம்மாவும் சொல்லுறதை தான் என் அம்மாவும் சொன்னாங்க... அவ எங்க கூட தானே சண்டை போட்டா அவ யாரு வெளியில் இருந்து வந்தவளா இல்லையே என் அண்ணன் மகள் தானே எங்களுக்கும் அப்படிதானே அதனால், அதையெல்லாம் கண்டுக்காதே நீ சந்தோசமா இல்லைன்னு நினைச்சு வேதனைப்பட்டுட்டு இருந்தோம்... அதனால் தான் பிரச்சனையே உருவாச்சு இப்போ தான் உனக்குன்னு வாரிசு வரப் போகுதே அதனால் நீ அவகூட சந்தோசமா இருந்தா எங்களுக்கு அது போதும்ன்னு முடிச்சிட்டாங்க”

“ஒரு குழந்தை உண்டானதும் எங்களுடைய அந்தரங்க வாழ்க்கையில் எதுவும் பிரச்சனை இல்லை எல்லார் வீட்டிலேயும் இருக்கிற மாதிரி சகஜமான புருஷன் பொண்டாட்டி உரசல்ன்னு தப்பா கணக்கு போட்டுட்டாங்க... எனக்கு அதை புரிஞ்சுகிட்டு ஒருபக்கம் சிரிப்பாவும் ரொம்ப வேதனையாவும் தான் இருந்துச்சு... அப்போவும் என்னால் அதை வெளியே சொல்ல முடியலை, சரி அப்படியே நினைச்சுக்கிட்டு என் அம்மா அப்பாவாச்சும் நிம்மதியா இருக்கட்டும்ன்னு முடிவு பண்ணினேன்”

“ஆனால் அதுலேயும் அவ மண்ணள்ளி போட்டு என் குடும்பத்தோட நிம்மதியை கெடுக்க இருந்தா... குழந்தையை அபார்ட் பண்ண நினைச்சா, எனக்கு அதிர்ச்சியா இருந்தது... உடனே நான் அவங்க வீட்டுல சொல்லிட்டேன்... அவங்க அம்மா நாங்க பார்த்துக்கிறோம் நீ கவலைப்படாத விக்ரம் குழந்தை பிறந்ததும் சரியாகிருவா, பொறுப்பு வந்திரும் அதுஇதுன்னு சொல்லி என்னை சமாதானம் படுத்திட்டாங்க”

“அவங்க வீட்டில் வந்து அவகிட்டே என்ன பேசினாங்களோ, ஏது பேசினாங்களோ தெரியலை, அதுக்கப்புறம் அவ குழந்தையை அபார்ட் பண்ண முயற்சிக்கலை... அந்த கோபத்தை எங்க வீட்டில காட்ட ஆரம்பிச்சா... அதுவும் என்னை புருஷன்னு மதிக்கவும் இல்லாமல் அளவுமீறி பேசினா... நான் அடிக்க கை ஓங்கிட்டேன் ஆனால் அம்மா தடுத்துட்டாங்க”

“வேண்டாம் ராஜா அவ மாசமா இருக்கா... அதுவும் உன் உயிர் நம்ம வீட்டு வாரிசு அவகிட்டே என்ன மனஸ்தாபம் இருந்தாலும் அதை தள்ளி வச்சுட்டு அவகூட சந்தோசமா இருன்னு சொன்னாங்க... என் அம்மா பேச்சை என்னால் தட்ட முடியலை, அதுவும் இல்லாமல் என் உயிரை சுமந்துட்டு இருக்கிறா அவளை பார்த்துக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் என்கிட்டே இருக்குன்னு நானும் அவளை பார்த்துக்கிட்டேன்”

“அதுக்கப்புறம் கொஞ்சம் சுமுகமா போச்சு அவ ரொம்ப குழையலைனாலும் என்னை தவிர்க்கவும் இல்லை, தாமரை இல்லை தண்ணி மாதிரி தான் வாழ்ந்தோம்... அப்போவும் அவன் கூட பழகின அந்த அவன் பார்த்து பேசிட்டு தான் இருந்தான்... முன்னாடியே நான் சந்தேகப்படலை இப்போவா சந்தேகப்படப் போறேன்னு நினைச்சு ரெண்டு பேரும் பிளான் போட ஆரம்பிச்சுட்டாங்க... குழந்தை பிறந்ததும் அவ ஓடுறதா முடிவெடுத்திருந்ததா எனக்கு பிரச்சனை ஆனப்போ தான் தெரிஞ்சது”

அவன் பேச பேச இடையூறு ஏற்படுத்தாமல் கனத்த மனதுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“வளைகாப்பு நடந்து முடிஞ்சும் அவ அவங்க வீட்டுக்கு போகலை என் கூடவே இருக்கணும்னு சொல்லி இருந்தா, நானும் சரி வயிற்றில் என் மகனையோ, மகளையோ சுமக்கிறதால ஏற்பட்ட மாற்றத்தினால் வந்த பாசம் போலன்னு சந்தோஷப்பட்டேன்... அவங்க வீட்டிலேயும் அதை சொன்னாங்க, பாருங்க குழந்தை பிறந்தா இன்னும் நெறையா மாறிருவான்னு சொன்னாங்க”

“நானும் அந்த தைரியத்தில் பழைய மனஸ்தாபம் எல்லாம் மறந்து அன்னைக்கு ராத்திரி ஆசையா அவளை தொட நெருங்கின போது தீப்பட்ட மாதிரி துள்ளி குதிச்சு விலகிட்டா... நான் என்னாச்சுன்னு காரணம் கேட்டப்போ ரொம்ப சோகமா முகத்தை வச்சுகிட்டு என்னால் முடியலை அது இதுன்னு காரணம் சொல்லி தடுத்துட்டா, எனக்கும் அப்போதைக்கு பெருசா தெரியலை, பிள்ளைதாச்சி உடம்பு நோகுது போலன்னு அவளுக்காக பார்த்து விட்டுட்டேன்”

“குழந்தையும் பிறந்தது ஆணோ பெண்ணோ எதுனாலும் சரின்னு சொல்லி சந்தோசமா வரவேற்றோம்... ஆனால் அவளுக்கு குழந்தை பிறந்த சந்தோஷம் துளி கூட இல்லை... ஆதனை பார்த்துக்க அவ்ளோ வெறுப்பு காட்டினா, அப்போதான் எனக்கு சந்தேகமே வர ஆரம்பிச்சுது உடனே அவகிட்டயும் கேட்டேன்”

****************

“உனக்கு என்னதான் ஷைலஜா பிரச்சனை? என்கிட்டேயும் நெருங்க மாட்டேங்குற, என் அம்மா அப்பா உன் சொந்த அத்தை, மாமா அவங்க கிட்டேயும் ஒட்ட மாட்டேங்குற? ஏதோ மூணாவது ஆள் மாதிரி சண்டை போடுற, குழந்தையையும் கவனிக்க மாட்டேங்குறன்னு கேட்டேன்”

“நான் அப்படி கேட்டதும் அவ உஷார் ஆகிட்டா... அதிலிருந்து குழந்தையை கேர் பண்ண ஆரம்பிச்சா, அவ எங்க யார்கிட்டேயும் சண்டை போடாம இருந்தா... எங்க அம்மா அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் எனக்கும் அவ மேல ஈடுபாடு வர ஆரம்பிச்சுது” என்றவன் கடைக்கண்ணால் நந்தினியை நோக்க அவள் முகம் தவிப்பை காட்டியது... அவனின் பேச்சை தவிர்க்கவும் முடியாதே என்று விசாரம் கொண்டவன் பெருமூச்சு விடுத்துவிட்டு பேச்சினை தொடரலானான்.

“எல்லா கோபத்தையும் மறந்திட்டு இயல்பா இருக்க ஆரம்பிச்சேன்... அவங்க அம்மா வீட்டுக்கு அவளை எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தாங்க, அவ போகவே மாட்டேன்னு சொல்லிட்டா கடைசியில் அந்த பழி எங்க மேல விழுந்துச்சு”

“அவதான் எங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்றான்னா நீங்களாச்சும் பேசி அனுப்பி வைக்கக் கூடாதான்னு சொன்னாங்க”

“அவகிட்டே நான் பேசுறேன் நானே கூட்டிட்டு வந்து விடுறேன்னு சொன்னதும் தான் அவங்க சமாதானம் ஆகிப் போனாங்க”

“நாள் வேகமா ஓடிப்போச்சு... எங்க ரெண்டு பேருக்கும் முதல் கல்யாண நாள் வந்துச்சு அன்னைக்கு என்கிட்டே கிபிட் கேட்டா நானும் என்னுடைய கிரெடிட் கார்டை எடுத்து கொடுத்தேன் அவ சந்தோஷமா வாங்கிக்கிட்டா... அப்போவே அவங்க அம்மா வீட்டுக்கும் போய்ட்டு வரதா சொன்னா... நானும் அவளை கொண்டு போய் விட்டுட்டு வர தயாரானேன் ஆனால் அவ என்னுடைய வரவை தவிர்க்கப் பார்த்தா”

****************

“ஏன் நீ மட்டும் தனியாவா போவ? அப்புறம் உங்க வீட்டில் என்னை தான் தாளிச்சு எடுப்பாங்க. அதனால் நானும் வரேன் இரு”

“என்னங்க நீங்க? நான் இத்தனை நாளா வரமாட்டேன் சொன்னதுக்கு காரணம் நீங்க தான்னு நினைச்சுட்டு இருக்காங்க... அவங்களுக்கு உங்க மேல கொஞ்சம் கோபமிருக்கு முதலில் நான் போய் பேசிட்டு வரேன், அப்புறமா நீங்க நான் குழந்தை எல்லாரும் சேர்ந்து போவோம்”

“என்ன குழந்தையை விட்டுட்டு போறியா? அதெல்லாம் முடியாது அப்படி எல்லாம் நீ போக வேண்டாம்”

“ஏன் அவனை ஒரு நாளைக்கு நீங்க பார்த்துக்க மாட்டேங்களா?”

“முட்டாள் மாதிரி பேசாதே ஷைலஜா... அவன் பச்சை குழந்தை அம்மாவா நீ கூட இருக்கிற போல இருக்காது, பசிச்சா அவனுக்கு நீதான் ஃபீட் பண்ண முடியும் நான் பண்ண முடியாது” குழந்தையை விட்டு போவதாக கூறியதும் சற்றே ஆத்திரத்தில் காய்ச்சி கொட்டிவிட்டான்.

“ஆமாம் எல்லாமே நாங்க தான் பண்ணனும்னு ஏன் இப்படி ஒரு படைப்பை படைச்சு வச்சானோ... ச்சேய்., உங்களை மாதிரி ஒரு நாளைக்கு எங்களால் சந்தோசமா இருக்க முடியுதா?” என்று அவள் தாய்மையின் ஈரம் கூட இல்லாமல் எரிச்சலுடன் கூறியவளை இமைக்காமல் பார்த்தான்.

“பெற்ற தாய் மாதிரி பேசு ஷைலஜா, ஏதோ வாடகை தாய் மாதிரி பேசாதே... நீ உன் அம்மா வீட்டுக்கு போறேன் சொன்ன நானும் போன்னு சொல்லிட்டேன்... ஆனால் குழந்தையை விட்டுட்டு போறேன்னா என்ன அர்த்தம்? இல்லை, உனக்கு அப்படி சிரமமா இருக்கா அம்மா, அப்பாவை வர சொல்றேன் கூட்டிட்டு போ” என்றதும் அவளுக்கு தன் திட்டம் எங்கே கெட்டு விடுமோ என்ற எண்ணத்தில் அபாய மணியடிக்க விழித்துக் கொண்டவள் சிறிது இறங்கிப் போனாள்.

“ம்ச்... சாரிங்க நான் ஏதோ ஒரு மூட்ல பேசிட்டேன், நீங்க சொல்றது சரிதான் குழந்தையை நானே கூப்பிட்டுட்டு போறேன்... என் கூட கண்ணம்மா, செந்தில் இவங்க ரெண்டு பேரும் வரட்டும்” என்றதும் அவனுக்கு முழு மனதாக ஒத்து வாராமல் அரைகுறையாக சம்மதித்து வைத்தான்.

“சரி போயிட்டு வா... ஆனால் ஒரு ரெக்வஸ்ட்”

“என்ன மாமா”

“கண்ணம்மா ம்மா, செந்தில் அண்ணனை மரியாதையா கூப்பிடு ஷைலஜா, அவங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டில் வேலை செய்கிறவங்க தான், ஆனால் பெரியவங்க அவங்களுக்கான மரியாதையை கொடு” அவனின் அறிவுரையை கேட்டு எரிச்சல் பட்ட ஷைலஜா முகத்தை சுளித்தாள்.

“சும்மா இருங்க மாமா உங்களுக்கு ஒன்னும் தெரியாது வேலைக்காரங்களுக்கு மரியாதை கொடுத்தா தலை மேல் ஏறி உட்கார்ந்துப்பாங்க” என்றவள் விக்ரமின் அன்னை தந்தையிடம் பெயருக்கு கூறிவிட்டு சென்றிருந்தாள். அவளை கை குழந்தையுடன் தனியாக அனுப்புவது அவ்வளவாக விருப்பம் இல்லை என்றாலும் கூட மகனுக்காக பொறுத்துக் கொண்டனர்.

****************

“அப்புறம் என்ன ஆச்சு?” நந்தினி ஏதோ திகில் படம் பார்க்கும் அச்சத்துடன் படபடத்தாள்.

“அதுக்கப்புறம் தான் என் வாழ்க்கையில் பிரளயமே உண்டாக ஆரம்பிச்சது நந்துமா”

“கண்ணம்மா ம்மா, செந்தில் அண்ணா ரெண்டு பேரும் தான் அவளை அழைச்சுட்டு அவங்க அம்மா ஊரான திருச்சிக்கு போனா... திருச்சி பஸ் ஸ்டாண்டில் குழந்தையை கண்ணம்மாகிட்டே கொடுத்துட்டு இதோ வரேன்னு சொல்லிட்டு போனவதானாம் அவங்க காத்திருந்து காத்திருந்து பார்த்து ஏமாந்து தான் போனாங்க... ரெண்டு மூணு மணி நேரம் செந்தில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் சுத்தி சுத்தி தேடியிருக்காங்க... பயத்தில் எனக்கு போன் பண்ணி சொன்னத்துக்கு நான் அவளுடைய அடையாளத்தை சொல்லி யார்கிட்டயும் விசாரிச்சு பாருங்கன்னு சொன்னேன்... அண்ணா எனக்காக பஸ் ஸ்டாண்டில் ஒரு கடை விடாம விசாரிச்சதில் கடைசியா ஒரு பூக்கார அம்மா அவர் சொல்லுற அடையாளத்தில் ஒரு பெண்ணை பார்த்தாவும், அவ யாரோ ஒரு ஆணோட அவசர அவசரமா சென்னை பஸ்ஸில் போனதாகவும் சொன்னாங்களாம் அதை என்கிட்டே அப்படியே சொன்னாரு”

“எனக்கு என்னவோ அந்த அம்மா வேற யாரையாச்சும் கூட சொல்லியிருக்குமோன்னு தோணுது தம்பி எதுக்கும் நாம வெளியில் விசாரிப்போம்ன்னு சொன்னாரு”

“அவரு சொன்னதும் எனக்கு அப்போவே ஏதோ தப்பு நடந்திருக்குன்னு உறுத்தல் ஏற்பட ஆரம்பிச்சிருச்சு... உடனே அவளை தேடி பார்க்க வருகிறவனை பற்றி தான் விசாரிச்சேன்... அவன் பேர் டேவிட் அவனுடைய வீடு சென்னை திருவள்ளூரில் இருக்கிறதாகவும் தற்காலிகமா தான் தங்கியிருந்ததாகவும் சொன்னாங்க”

“எனக்கு அந்த டேவிட் மேல தான் சந்தேகம் ஆரம்பிச்சுது... அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது தான், என்னுடைய அஞ்சு லக்சம் பெருமானம் உள்ள கிரெடிட் கார்டிலிருந்து ஐம்பதாயிரம் பணம் எடுத்தது தெரிய வந்தது உடனே அதை ட்ரெஸ் பண்ண ஆரம்பிச்சேன்”

“நீங்க உடனே உங்க கார்டை பிளாக் பண்ணியிருக்கலாமே விக்ரம்”

“ம்ஹும்... அப்படி பண்ணினா அவங்களுடைய திட்டத்தை தான் தடுக்க முடியும்... ஆனால், அவங்க போட்ட திட்டத்தில் என் வாழ்க்கையும் அடங்கியிருக்கே... நான் பிளாக் பண்ணினா அடுத்த நிமிஷம் அவங்க என்ன வேணா பண்ணலாம் என் மேலேயே கூட தப்பா கேஸ் பைல் பண்ணி என்னையும், என் குடும்பத்தையும் கார்னர் பண்ணவும் வாய்ப்பிருக்கு... ஏன்னா ஷைலஜா அப்படிபட்ட புத்தியுள்ளவன்னு நான் அவகூட வாழ்ந்த வாழ்க்கையில் நல்லா தெரிஞ்சுகிட்டேன் அவளுடைய சந்தோஷத்துக்காக என்ன வேணா செய்யக்கூடிய ஆளு”

“பணம் பெரிய மேட்டர் இல்லை நந்து... அவ கேட்டிருந்தா என் சொத்தையும் எழுதி கொடுத்திருப்பேன், என்னுடைய காதல் மனைவியா வாழ்கிற பட்சத்தில்! ஆனால் அவங்க ரொம்ப நுணுக்கமாக ஆராய்ந்து திட்டம் போட்டிருக்காங்க... இல்லைன்னா, எந்நேரமும் குடும்பம் நம்ம மகன்னு மட்டுமே இருக்கிற அம்மா, அப்பா அவளை தனியாவும் விட்டிருக்க மாட்டாங்க அவளும் ஓட வாய்ப்பிருந்திருக்காது”

“அப்புறம் என்ன தான் ஆச்சு?”

“நானும் அவங்க விஷயத்தை முழுசா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு வீட்டில் பொறுமையா எடுத்து சொல்லிக்கலாம்ன்னு நினைக்கக்குள்ள தான், அம்மாவுடைய தெரிஞ்சவங்க ஷைலஜா அந்த டேவிட் கூட போறதை போட்டோ எடுத்து அனுப்பியிருக்காங்க, அதுவுமில்லாமல் அவ கல்யாணத்துக்கு முன்னாடி அவன் கூட சுத்திட்டு இருந்ததை சொன்னதும் அந்த நிமிஷமே அம்மா நெஞ்சு வலி வந்து மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க”

“குழந்தை பசியால் அழ ஆரம்பிச்சுட்டான்... ஷைலஜா வீட்டில் இருந்து வந்தவங்களும் அந்த விஷயம் உண்மைன்னு ஓத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டாங்க அப்போ அப்பாவுக்கு கோபம் வந்திருச்சு”

****************

“உங்க எல்லாருக்கும் புத்தி இருக்கா இல்லையா, இதை எல்லாம் என் பையன் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியது தானே, இப்போ என் பையன் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு” கத்த ஒரே வாக்குவாதமும், சண்டை சச்சரவும் ஆகிப்போச்சு.

“இனி உங்க குடும்பத்துக்கும், எங்க குடும்பத்துக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்ல நாங்க பெத்த பொண்ணும் செத்துட்டா, அவமேல நீங்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் நாங்க அதில் தலையிடவே மாட்டோம்ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க”

****************

“இப்படி அவங்க சொல்லிட்டு போனதும் எனக்கு ஒண்ணுமே புரியாத நிலை... என் கையில் பால் மனம் மாறாதா பச்சிளங்குழந்தை! ஆதன் பசியில் அழுகும் போது என் ரத்தம் துடிக்கும்” என்றவனுக்கு அப்போதும் அந்த வலியை உணர்ந்தவன் போல் இமைமூடி திறக்க, ஆற்றாமையில் நந்தினிக்கு மனதை இறுக்கியது.

அவனுக்காகவது அவ பார்த்திருக்கக் கூடாதான்னு என் அம்மா, அப்பாவுக்கு ஒரு எண்ணம்... ஆனால் தாய்ப்பாசமே இல்லாதவள் கிட்டே அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்ட எனக்கு வெறுப்பா இருந்துச்சு... அப்போவும் அவ மேல கோபம் வரலை... காரணம், அவமேல ஈடுபாடு இல்லாத போது கோபம் எப்படி வரும்? என்னுடைய கோபமெல்லாம் என் மேல தான்”

“அவ பண்ணின தப்புக்கு நீங்க என்ன செய்வீங்க விக்ரம்?” என்று அவனை குறை சொல்லியது அவனாக இருந்தாலும் அதை பொறுக்க முடியாமல் கூறிவிட்டிருந்தாள்.

“அவ தான் குழந்தையை அபார்ட் பண்ண பார்த்தாளே, அப்போவே நான் தடுக்காமல் இருந்திருந்தா ஆதன் இத்தனை துன்பப்பட வேண்டியது இருந்திருக்காதே... என் உயிரில் ஜனித்து அவ வயிற்றில் பிறந்த ஒரு காரணத்துக்காக என்னோட சேர்ந்து அவனும் வேதனையும், வலியையும் அனுபவிச்சுட்டு இருக்கிறான்” என்றதும் வேகமாக தன் கரத்தினால் அவன் வாயை அடைத்தவள்...

“வேண்டாம் விக்ரம் சொல்லாதீங்க... ஆதன் கஷ்டப்படுறான் தான், இல்லைன்னு சொல்லலை... ஆனால், அவன் இருக்கவும் தானே நீங்க நீங்களா இருக்கீங்க... உங்களை உயிர்ப்போட வச்சிருக்கிறதும் அவன் தானே அதை நினைச்சு பாருங்க” என்று கூறியவளின் கூற்றில் விக்ரம் ஆமோதிப்பாக மேலும் கீழும் தலையசைத்தான்.

“கண்ணம்மா ம்மா தான் ஆதனை பொறுப்பா பார்த்துக்கிட்டாங்க”

“குற்றுயிரும் குலையுயிருமா அம்மா பிழைச்சாங்க... ஆதனுக்காக அவங்களை அவங்க தேற்றிகிட்டாங்க... நீ சொன்னது போலவே அப்பாவும் கிரெடிட் கார்டை பிளாக் பண்ண சொன்னாரு நான் தான் இந்த காரணத்தை சொல்லி நிறுத்திட்டேன்”

****************

“இப்போ என்ன தான் ப்பா பண்ண போற?”

“விவாகரத்துக்கு அப்ளை பண்றேன் ப்பா... அவ கிட்ட இருக்க இந்த கிரெடிட் கார்டுடைய செலவுகளை ஜீவனாம்சத்தில் கொண்டு வந்துக்கலாம்” என்று தெளிவாக கூறினான், ஆனால் விக்ரமின் தந்தை கேசவனுக்கு தான் மனம் ஊஞ்சல் ஆடியது.

கேசவனின் நெருங்கிய உறவினர் விக்ரமின் மாமா சுந்தரேசனுக்கு தகவல் போக அவர் ஓடோடி வந்து நின்றார்.

**************************
வணக்கம் நட்பூக்களே...

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-18 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் மூன்று பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-19

“இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு ஏன் யாருமே என்கிட்டே சொல்லலை” உரிமையுடன் கடிந்து கொண்ட சுந்தரேசனை கண்டு அனைவரும் சிரம் தாழ்த்திக் கொண்டனர்.

“எங்கே அண்ணா எங்களுக்கு தலையும் புரியாத, வாலும் புரியாத நிலை... என்னால் தாங்கிக்கவே முடியலை... அக்கம் பக்கத்தில் எல்லாம் நானும், என் மகனும் தான் அவளை ஓட விட்டது போல் பேசிக்கறாங்க, எங்களால் தாங்கிக்க முடியலை அண்ணா” என்று விக்ரமின் அன்னை சுலோக்சனா ‘ஹோஒ’ வென்று கதறினார்.

“அந்த பொண்ணு எங்கே போச்சு யாருகூட போச்சுன்னு தெளிவா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு விக்ரம் சொல்லிக்கலாம்ன்னு சொன்னான்” என்று கேசவன் கூற அவர் சிந்தனைக்குள்ளனார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே விக்ரம் அனைத்து தகவல்களுடன் வந்தவன்...

“சுந்தர் மாமா” என்று அவரை இன்முகத்துடன் வரவேற்ற விக்ரமின் முகம் இளைத்து கருத்து இருந்ததை கண்டு மனம் வெம்பினார்.

“ஏன் விக்ரம் உனக்கொரு பிரச்சனைன்னு சொன்னா நான் வந்து நிற்கமாட்டேனா?”

“உங்ககிட்டே சொல்லக் கூடாதுன்னு இல்லை மாமா முதலில் நான் நடந்ததை தெளிவா விசாரிச்சுக்க டைம் எடுத்துக்கிட்டேன் அதே போல விசாரிச்சிட்டும் வந்துட்டேன்”

“என்னப்பா ஆச்சு?”

“ஷைலஜா டேவிட்ன்னு ஒரு பையனை காதலிச்சு அவ வீட்டில் சொல்லியிருக்கிறா, அவங்க வீட்டில் மிரட்டி தான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க... அந்த பையன் மிடில் கிளாஸ்... ஷைலஜா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் ஒரு வாரத்தில் ஓட பிளான் போட்டிருக்காங்க மாமா... ஆனால் சில சூழ்நிலைகள் அவளுடைய திட்டத்திற்கு தடைக்கல்லா அமைஞ்சிருச்சு”

“அந்த இடைவெளியில் அந்த டேவிட் என்னுடைய பணபலத்தை தெரிஞ்சு ஷைலஜாகிட்டே பேசியிருக்கான் அவளும் அவனுக்கு ஒத்து போயிருக்கா... ஆனால் விதி என்கூட மேம்போக்கா வாழ்ந்த ஒருநாள் வாழ்க்கையில் குழந்தையும் உருவாகிருச்சு அவளுக்கும் வேற வழியில்லாமல் போயிருச்சு”

“அந்த பையன் அப்போ கூடவா ஒதுங்கி போகலை... இல்லை மாமா அவன் என்னை பற்றி நல்லா தெரிஞ்சுகிட்டான், குழந்தைக்கு முன்னாடின்னா எப்படியோ குழந்தை ஆனதும் எப்படியாவது சொத்தில் பாதியாச்சும் அமுக்கலாம்ன்னு திட்டம் போட்டிருக்கான்... அதனால் அவளை குழந்தை பெற்றுக் கொடுத்துட்டு வந்தாலும் ஏற்றுக்க சம்மதம்ன்னு சொல்லியிருக்கான்... அதே மாதிரி லம்ப்பா ஒரு தொகை கிடைச்சதும் ரெண்டு பேருக்கும் சேர்ந்து வாழுற ஆசை வந்திருச்சு, இவ கையில் அவங்க வீட்டில் போட்ட நகை என்னுடைய பணம்ன்னு அவ கொண்டுட்டு போனதும் அவளை கூட்டிட்டு போயிட்டான்”

“ச்சீ.. கேட்கவே அருவெறுப்பா இருக்கு” என்று சுலோக்சனா தாங்க முடியாமல் கூறிவிட்டார்... விக்ரமுக்கும் அதே நிலை தான் என்றாலும் கூட அவள் மூலமாக பெற்றெடுத்த மகனின் எதிர்காலம் இனி எப்படி இருக்குமோ என்ற கவலை அவனை மருட்டியது.

“சரி இப்போ அடுத்து என்ன பண்ணலாம்?”

“டிவோர்ஸ் தான் மாமா வேறென்ன? ஆனா அதுக்கும் அவ அவ்ளோ சுலபமா வழிக்கு வரமாட்டா... ஏன்னா நான் விவாகரத்து தராத வரைக்கும் தான் என்கிட்டே பணம் கறக்க முடியும்” என்றவனுக்கு முகம் ரத்தமென சிவந்தது.

“முதலில் அவளை பார்த்து பேசுவோம் விக்ரம் வாங்க எல்லாரும் அவங்க இடத்துக்கே போய் நியாயம் கேட்போம்” என்று அழைத்து சென்றவர் அவர்களுடன் அவருக்கு நன்கு தெரிந்த காவல் துறையில் அதிகாரத்தில் உள்ள ஒருவரையும் அவரின் நண்பரும் என இணைந்து சென்றனர்.

சபையில் நின்றிருந்த ஷைலஜா விக்ரமை புழுவை பார்த்தவள்... “எனக்கு இவன் கூட வாழவே விருப்பம் இல்லை எங்க வீட்டில் தான் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி வச்சாங்க” என்றதும் சுலோக்சனா மிகுந்த ஆவேசத்துடன் அவளை நெருங்கி கன்னத்தில் “பளார்! பளார்!” என்று அறைந்துவிட்டார்.

கேசவன் தான் அவரை தடுத்திருக்க... “நீங்க விடுங்க... அண்ணன் பொண்ணு தானேன்னு அவகிட்டே நான் பொறுத்து பொறுத்து போனது என் பையன் வாழ்க்கைக்காக தான்... இவ என்னடான்னா என் பையன் வாழ்க்கையை கெடுத்துட்டு, அவ ரத்தத்தில் உருவான பிள்ளையையும் தூக்கி எறிஞ்சிட்டு என்ன மாதிரி வார்த்தை சொல்லுறா?”

“விடு அதுதான் அவ அதையெல்லாம் மறந்துட்டு இன்னொருத்தன் கூட போயிட்டாளே இனி அவளை நம்ம பையன் கூட சேர்த்து வச்சு பேசுறதே தப்பு” விக்ரம் அவளை பார்வையால் எரித்துக் கொண்டிருக்க அதில் சூடேறிய ஷைலஜா...

“சும்மா குதிக்காதீங்க உங்க பையன் ஆம்பளையே கிடையாது அந்த குழந்தையும் அவனுடையது இல்லை” என்று பச்சையாக பொய் சொல்ல அனைவரும் திகைப்பூண்டை மிதித்தது போல் ஸ்தம்பித்தனர்... விக்ரமுக்கு அனைத்தும் கசந்துப் போக அருவெறுப்பாக அவளை ஓர் பார்வை பார்த்துட்டு, அவன் மாமா சுந்தரேசன் புறம் திரும்ப அவரே பேசலானார்.

“இதுக்கு மேல நாம யாரும் பேச வேண்டாம்... இந்த பாருமா விக்ரமை எனக்கு சின்ன பையனா இருக்கும் போதில் இருந்தே நல்லா தெரியும், அவன் பொண்ணுங்ககிட்டே மதிப்பும் மரியாதையுமா பேசித்தான் பார்த்திருக்கிறேன்... ஏன்னா சுலோக்சனா வளர்ப்பு அப்படி, ஆரம்பத்தில் உன்னை பற்றி சுலோக்சனா சொல்லி புலம்பியப்போ கூட விக்ரமை தான் அனுசரிச்சு போன்னு சொல்லியிருக்கா... நானும் சரி ஆணா இருந்தா என்ன, பெண்ணா இருந்தா என்ன, யாராவது ஒருத்தர் விட்டு க்கொடுத்து போனா தான் வாழ்க்கை சிறப்பா இருக்கும்ன்னு நானும் அவனை உன்கிட்டே அனுசரிச்சு தான் போக சொல்லியிருக்கேன்... இதே அவன் இடத்தில் வேறொரு ஆம்பிளையா இருந்தாலும் சரி, அவனை பெற்ற தாயா இருந்தாலும் சரி, இந்நேரம் உன்னை என்ன வேணா செய்திருப்பாங்க... ஆனால் இப்போ வரைக்கும் இவங்க அது மாதிரி எதுவும் அதிரடியா செய்யலை... உன் விஷயம் தெரிஞ்சவங்க பேசினதோட சரி எல்லா பழியும் விக்ரம் மேலதான் விழுந்திருக்கு, இந்த சமயத்தில் கூட உன்னை பற்றி அவதூரா ஒரு விஷயம் சொல்லலை... அப்படி இருக்கிறவனை பார்த்து நீ என்ன வார்த்தை சொல்லிட்டே” என்று கொதிப்புடன் பேசியவர் விக்ரம் புறம் திரும்பி...

“விக்ரம் இதுக்கு மேல இவளுடைய சங்காத்தமே வேண்டாம், சீக்கிரமே விவாகரத்துக்கு அப்ளை பண்ணு, அப்படியே குழந்தைக்கும் உனக்கும் மரபணு சோதனை எடுத்து கோர்டில் கேஸ் போடு அதுக்கான பதிலை இவ கோர்ட்டில் சொல்லிக்கட்டும்” என்றவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

சுந்தரேசன் தானே விக்ரமுக்கு தேவையான உதவிகளை செய்து அவனையும், குழந்தையையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் தெளிவாக விக்ரமின் குழந்தை தான் ஆதன் என்று அளித்த சான்றிதழை கண்டு சுந்தரேசன் கொதித்துப் போனார்.

“எப்படிப்பட்ட பிள்ளை அவன் வாழ்க்கையில் விளையாடிட்டு போயிட்டாளே” என்று மானசீகமாக அவளை கருவிக் கொண்டார்.

விக்ரமோ அனைத்தும் வெறுத்து வாழக்கை வாழவே கசந்துப் போனவனாக வலம் வந்தான். விக்ரமின் நிலையை கண்ட பெற்றவர்களுக்கு மனம் அடித்துக் கொண்டது.

ஆதனுக்கு ஒரு வயது என்ற போதுதான் விக்ரம் வாழ்க்கையில் அடுத்த கொடூரம் நிகழ்ந்தது. விக்ரமை எண்ணி எண்ணி நொடிந்துப் போன சுலோக்சனா ஓர் இரவு தூக்கத்திலேயே உயிரை விட்டுவிட்டிருந்தார்.

அன்னையின் மேல் பாசம் கொண்ட விக்ரமுக்கு உயிர் அசைய கதறினான். வாழ்க்கை அவனுக்கு தொடர்ந்து சில இழப்புகளையே கொடுத்துக் கொண்டிருந்தது... அவன் அன்னை இறந்து அடுத்த ஆறு மாதம் நிறைவடைவதற்குள் அவன் தந்தையும் மரணித்துவிட விக்ரம் உடைந்தே போனான்.

ஷைலஜாவுடைய விவாகரத்து வழக்கு இரண்டாம் வருடம் தான் முடிவிற்கு வந்தது அதிலும் அவனுடைய சொத்துகளிலும் பங்கு கோர சென்ற போதுதான், அவனுக்கு அவளை சிக்க வைக்க வசமாக பிடி கிடைத்து விட சுந்தரேசன் நிமர்த்திய வழக்குரைஞர் அவனுக்காக வாதாடினார். அவள் எடுத்து சென்ற கடன் அட்டையின் செலவு விவரங்களையும், அதற்கு வங்கி அளித்திருந்த மும்மடங்கு வட்டியையும் காட்டி மேற்கொண்டு அவளின் பேச்சுகளையும் பெற்ற தந்தையே இல்லை என்றதற்கு தகுந்த ஆதாரத்தையும், சாட்சியையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க, நீதிபதி அவளை கடுமையாக கண்டித்து விட்டு விக்ரமாக விருப்பபட்டு கொடுக்கின்ற தொகையை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டளையில் வேறு வழி இல்லாதவளாக பெற்றுக் கொண்டாள்.

அனைத்தும் முடிந்தது... விக்ரமின் திருமண வாழ்க்கை முடிவு பெற்றது, அவன் அன்னை தந்தையின் இழப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டிருந்தது. பெரும்பாலும் பெண்கள் தான் ஆண்களின் தவறான புத்தி மற்றும் நடவடிக்கையால் வஞ்சிக்கப்பட்டு வாழ்கையை இழந்து நிராதரவற்ற அபலைகள் ஆகின்றனர் என்பதை முறியடித்து சில ஆண்களும் இது போன்று தவறான நடத்தையில் உள்ள பெண்களால் பாதிக்கப்பட்டு, அவர்களின் சுயநலமான முடிவிற்கு இறையாகி அவலத்தில் அபலை ஆகின்றனர் என்பதற்கு விக்ரம் சான்றாகியிருந்தான்.

ஏதோ நடைப்பிணமாக வலம் வந்தவனுக்கு அவன் மகன் ஆதன் மட்டும் இல்லையெனில் அவனும் சிறிது சிறிதாக காற்றில் கரைந்து தான் போயிருப்பான்... கண்ணம்மா, செந்தில் இருவரும் அவனுக்கு உறுதுணையாக இருக்கவே சுந்தரேசனுக்கு சற்றே நிம்மதியளித்தது.

அவனுடன் இருந்த உறவினர்களில் பெண் பிள்ளையை வைத்திருந்தவர்கள் விக்ரமின் சொத்திற்காக இரண்டாம் தாரமாக அவனுக்கு திருமணம் செய்து தர முன் வந்ததாக கேள்விப்பட்டு அதை பற்றி அவனிடம் சுந்தரேசன் வினவ...

“ஏன் விக்ரம் நடந்ததெல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு, உறவுக்காரங்கள்ள பெண் தர முன் வராங்களாமே ஆனால் நீதான் மாட்டேன்னு சொல்றதா சொல்றாங்க?” என்றவரின் சொல்லில் கசப்பாக புன்னகைத்தவன்...

“அது எதுக்காகன்னு உங்களுக்கே தெரியும் மாமா”

“தெரியும் விக்ரம். ஆனால் இப்படியும் யோசி அவங்கள்ள உண்மையான மனசுள்ளவங்க பெண்ணை வாழவச்சுட்டா போதும்ன்னு பெண் தர நினைக்கலாம், அவங்க கூட பொண்ணு நல்லா இருந்துட்டா போதும்ன்னு தள்ளி இருக்கிறவங்களுக்கும் இருக்கிறாங்க, நம்ம தனாகரன் பொண்ணு ராஜலக்ஷ்மி ரொம்ப நல்ல பொண்ணு, அவனும் நல்ல குணம் தான்... என்ன பெண் மேல உயிரா இருக்கிறவன் அவனுக்கும் உன் குணம் அத்துபடி என்றதால தான் கேட்டானாம் ஆனால் நீ எல்லாருக்கும் சொல்லுறதை போல அவனுக்கும் பட்டுக்கத்திரிச்ச பதிலா சொல்லிட்டியாம் என்கிட்டே சொல்லி வருத்தப்பட்டான்”

“அவரும் எல்லாரையும் போல ஒரு கண்டிசனை சொன்னதால தான் நானும் அவர்கிட்டே அப்படி பதிலை சொல்ல வேண்டியதா போச்சு” என்றவன் முகம் கல்லை போன்று இறுகியிருக்க, அவருக்கு அந்த நிபந்தனை எதுவென்று புரிந்ததில் அதிர்ச்சி அடைந்தார்.

“என்ன அவனுமா உன் மகனை ஆஸ்ரமத்தில் விடச் சொன்னான்? என்னிடம் பையன் தங்கம் அவன் பெற்ற பையனும் தங்கமா தான் இருப்பான்னு சொன்னான்”

“ஆமாம் தங்கம் தானாம் ஆனாலும் அவருடைய மகளுக்கு அது இடைஞ்சலா ஆகிரக் கூடதில்லையா அதனால் மற்றவங்களை மாதிரி ஆஸ்ரமத்தில் விட வேண்டாமாம்?”

“பின்னே அவனும், அவன் பொண்டாட்டியும் பார்த்துக்கிறதா சொன்னானா?”

“அப்படி சொல்லி இருந்திருந்தா கூட நான் யோசிக்கிறேன்னு தானே சொல்லியிருப்பேன் மாமா?”

“பின்னே என்ன தான் சொன்னான்”

“அவங்க பொண்டாட்டியோட தங்கச்சியோட நாத்தனாருக்கு உறவுகாரங்க ஒருத்தங்க குழந்தை இல்லாமல் இருக்கிறாங்களாம், அதுவும் அந்த ஆளுக்கு ஐம்பத்தைந்தாம் அந்த அம்மாவுக்கு ஐம்பதாம், அவங்க இருக்கிற வரைக்கும் அவங்க நல்லா பார்த்துப்பாங்களாம் அதுக்கப்புறம் என்ன பண்ணணுமோ பண்ணிக்கலாமாம்... மத்தவங்களாம் என்கிட்டே நேரடியா சொன்ன ஒரு விஷயத்தை அவர் தலையை சுத்தி மூக்கை தொடுவது மாதிரி சுத்தி வளைச்சு சொன்னாரு”

“எனக்கு ஆத்திரம் தான் வந்துச்சு, இருந்தும் என்ன செய்ய அவங்க பேசிய வேண்டிய நிலைமையில் இருக்கிறாங்க நான் கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்... அதனால் கேட்டு தானே ஆகணும்” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறியவன் விழிகளில் தீஜுவாலை மின்னியது.

“ச்சே... நான் கூட அவன் சொன்னதையும் கேட்கலையான்னு உன் மேல வருத்தப்பட்டேன் விக்ரம் என்னை மன்னிச்சிரு”

“நீங்க போய் மன்னிப்பு கேட்டுட்டு விடுங்க மாமா, சிலர் இப்படித்தான் மாற்ற முடியாது, ஊரில் ஆயிரம் பேசட்டும் அவங்களுக்கேன்னா என் வாழ்க்கையை நான் தான் பார்த்தாகனும்... எத்தனையோ பொண்ணுங்க என்னை போல் குழந்தையுடன் தனியா தான் வாழுறாங்க அது போல நானும் இருந்துட்டு போறேன்”

“உன் வாழ்க்கை உன் கையில் விக்ரம் ஒரேடியா வேண்டாம்ன்னு தூக்கி போடாதே... உனக்காக யாராவது வாழ்க்கை கொடுக்க முன் வந்தா அவங்களை பற்றி யோசி... ஆனால் இனி நீயா முடிவெடு யார் தலையீடும் வேண்டாம், அப்படி ஏதவாது உனக்கு விருப்பம்ன்னா என்கிட்டே சொல்லு உனக்காக நானிருக்கிறேன் என்னை மறந்துறாதே”

“இல்லை மாமா எத்தனையோ பேர் என் கதையை கேட்டு அவங்க அவங்க வாய்க்கு அவலாக்கிட்டு போனாங்க... ஆனால் நீங்க தான் என்னுடைய பிரச்சனையை தீர்க்க கூடவே இருந்தீங்க உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்”

விக்ரமுக்கு அதன் பிறகு தொழிலும், ஆதனும் கண்முன் நிற்க அவன் அவலத்தை எண்ணி துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்ததை மூட்டை கட்டி வீசிவிட்டு தொழிலில் தொழிலாளர்களுக்காகவும் வாழ்க்கையின் பிடிப்பாக ஆதனுக்காகவும் வாழ பழகிக் கொண்டான்.

தன் கடந்த கால வாழ்க்கையை சொல்லி முடிக்கவும் அருகில் இருந்த நந்தினியின் விசும்பலில் அவளை திகைத்து பார்த்தான்.

“நந்தினி... நந்துமா...” என்ற அழைப்பிற்கு சிறிதும் அசையாமல் தன் போக்கில் கேவி கேவி அழுதவள் அவள் மார்பில் சாய்ந்து ‘ஹோ’ பேரிரைச்சலுடன் கரையலானாள்.

அவளின் அழுகையில் அவனுடைய கடந்த கால வாழ்க்கைக்கான துக்கத்தின் தாக்கம் அதில் ஸ்பஷ்டமாக வெளிப்பட்டதில், தனக்காகவும் வருந்த ஒரு ஜீவன் இருப்பதை எண்ணி அவனுக்குள் புத்துயிர் பிறந்த அதே கணம் அவள் கண்ணீர் முகம் அவனை அசைத்தது.

“ஏய் பைத்தியம் அழாதே நான் சொன்னதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் நந்துமா” என்று அவனின் தேறுதல் மொழிகள் சுத்தமாக அவள் செவியில் ஏறவில்லையோ, அவளின் கண்ணீரின் தடம் அவள் கன்னத்தை தொட்டு அவன் சட்டையை தாண்டியிருந்த மார்பை நனைக்க அவளை எண்ணி வியாகூலம் அடைந்தான்.

அவனும் சமாதானம் சொல்லி களைத்துப் போனவன் அவளாகவே தேற்றிக் கொண்டு எழட்டும் என்று காத்திருக்க எண்ணி சாய்ந்திருந்த அவள் முகத்தை விலக்காமல் சிகையை ஆதுரத்துடன் வருடிக் கொண்டிருந்தான்.

நந்தினி இருக்கும் இடம் உணர்ந்து சுதாரித்து எழுந்தவளுக்கு இமைகள் வீங்கி முகம் சிவந்திருந்தது... விக்ரமின் துயரம் ஆழ்மனதை வெகுவாக பாதித்திருப்பதை அவளின் பளிங்கு முகம் காட்டியது.

“என்ன அழுது முடிச்சாச்சா ஆர் யூ ஒகே?”

“இல்லை; நான் ஒகே இல்லை... எப்படி நீங்க இத்தனை கஷ்டத்தையும் தாங்கிட்டு வாழ்ந்தீங்க?” என்றவளின் கேள்விக்கு மெலிதாக புன்னகைத்தவன்...

“என்னுடைய வாழ்க்கை இதுதான்னு ஆகிப்போச்சு, இதிலிருந்து எங்கே ஓடி ஒளிஞ்சு தப்பிக்க முடியும் சொல்லு... எதையும் எதிர்கொண்டு தான் வாழ்ந்தாகணும் நந்துமா” என்று சாதரணமாக கூறியவனை கண்டு அவன் மேல் காதல் பொங்கியது.

“இருந்தாலும் அந்த ஷைலஜா பேசினது எல்லாம் ரொம்ப ஓவர்... ச்சே., அவளால் இங்கே மற்ற சில பொண்ணுகளையும் சில சூழ்நிலைகளில் சிலர் தவறா நினைக்க வேண்டியதா ஆகிருது”

“நீ சொல்லுறது சரிதான் நந்து... பொண்ணுங்களும் அப்படியே, ஆம்பளைங்களும் அப்படியே... ஆண்களும் சில தவறுகளை செய்றாங்க அது உண்மையிலேயே தவறு செய்யாதவங்களை பாதிச்சிருது என்னை போல”

“இல்லை விக்ரம், இது ரொம்ப அநியாயம்... என்னைக்குமே நாம ஒருத்தருக்கு நல்லது தான் செய்யணும் கெட்டது செய்யக்கூடாது இங்கே எல்லாருக்கும் ஒவ்வொரு பிரச்சனை ஒவ்வொரு விதமா இருக்கும்... நம்மளால் முடிஞ்சா உதவனும் இல்லையா ஒதுங்கி விடனும், இப்படி வாழ்க்கைன்னு தெரிஞ்சும் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கக்கூடாது”

“உண்மை தாண்டா நந்து சிலர் இதையெல்லாம் யோசிக்கததால் தான் தப்பு செஞ்சுடுறாங்க” என்றவன் அவளை ஆசுவாசப்படுத்த தண்ணீர் கொடுத்துவிட்டு, அவளை மெல்ல அழைத்துக் கொண்டு வாகனத்திற்கு சென்றான்.

மாலை நேரம் சூரியன் மேற்கு திசையில் மறைந்துக் கொண்டிருக்க, நந்தினிக்கு சுற்று வெளியை வெறுமையாக வெறித்துக் கொண்டிருந்தவளின் சித்தம் பாறாங்கல்லை வைத்தது போல் கனத்தது.

“நந்து போதும் பீ நார்மல்... எல்லாம் நடந்து முடிஞ்சாச்சு, இனி எதுவும் திரும்பப் போறதில்லை எதுவும் மாறப் போறதில்லை... இனி வருங்காலம் நமக்கானது அதை மட்டும் பார்ப்போம்”

“எனக்கு மனசு ரொம்ப வலிக்குது விக்ரம்” என்றவள் அவன் விலாவை பிடித்து சாய்ந்துக் கொண்டாள். அவள் வருத்தம் அவனை தாக்கினாலும் நேரம் ஆகிக் கொண்டிருப்பதை உணர்ந்து விக்ரம் வாகனத்தை செலுத்தலானான்.

**************************

வணக்கம் நட்பூக்களே...

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-19 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் மூன்று பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்.
 
Status
Not open for further replies.
Top