All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கார்த்திகாவின் "கரை தேடும் ஓடுங்கள்" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்....

கேட்டவுடன் திரி அமைத்து குடுத்த ஸ்ரீகலா mamக்கு நன்றி ☺☺☺☺☺

நான் கார்த்திகா.... பேரை சொன்னதும் தெரிஞ்சிகிற அளவுக்கு இதுவரைக்கும் ஒன்னும் பண்ணல🙂🙂🙂 இப்போ மட்டும் என்ன பண்ண போறன்னு நீங்க சொல்றது கேக்குது ☺☺ உங்களை எல்லாம் கதைன்ற பேர்ல கதற வைக்க வந்துருக்கேன்......
இது ஒரு சிறுகதை தான்.....
எனக்கு தெரிஞ்ச அளவுக்கு கொடுக்குறேன் சஸ்பென்ஸ் த்ரிலர் இப்டி எதுவும் இல்லை இனி கதைக்கு போவோம் 🙂🙂🙂🙂
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை தேடும் ஓடங்கள்

வந்தாரை வாழ வைக்கும் என்று அழைக்கப்படும் சென்னைக்கு மிக அருகில் உள்ள பள்ளிக்கரணையில் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் ஹரிஷ் மற்றும் அவன் மனைவி சங்கீதா இவர்களின் ஒரு வயது மகள் கனிஷ்கா இவள் தான் நம் கதையின் நாயகி.....

ஹரிஷ் இவன் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான் சங்கீதா இவளும் இதே வேலை தான் ஆனால் வேறு நிறுவனம்.....இனி கதைக்கு போவோம்
ஹரிஷ் "நானும் கிளம்பிட்டேன் போற வழில என்னையும் ட்ராப் பண்ணிடு... "
"சரிமா "
ஏங்க "நம்ம பொண்ணு first year பர்த்டே செலிப்ரஷன்க்கு எல்லாருக்கும் சொல்லிட்டிங்களா???"
"சொல்லிட்டேன்மா,,, அம்மா அப்பாவால் வர முடியல்லையாம்.. நாம ஒரு வீக்எண்ட் போய்ட்டு பாப்பாவை காட்டிட்டு வருவோமா??"
"சரிங்க போகலாம்,,, அப்பறம் உங்க பிரிண்ட்ஸ எல்லார்ட்டையும் சொல்லிட்டீங்களா??",,, "அந்த கண்டிஷன்" என்று சொல்லி அவள் பார்த்த பார்வையில் "அதையும் சொல்லிடறேன்" ((யப்பா என்ன முறைப்பு ))சரி சரி டைம் ஆகுது சீக்கிரம் கிளம்பு.....
அம்மா " நானும் அவரோடவே கிளம்புறேன் லஞ்ச் கட்டிட்டிங்களா "
"கட்டிடேன்மா சாம்பார் சாதம்,,, இதுல மாப்பிள்ளைக்கும் இருக்கு"
"அப்பாவும் பாப்பாவும் எங்கம்மா காணோம்", ,,,,,
"அப்பா பாப்பாவை தூக்கிட்டு பக்கத்துல இருக்குற பூங்கா வரைக்கும் போயிருக்காரு,,, நீங்க பாத்து போய்ட்டு வாங்க"
"சரிம்மா நாங்க கிளம்புறோம் "
அத்தை "நாங்க வரும் போது எதும் வாங்கிட்டு வரணுமா"
"இல்ல தம்பி எல்லாம் இருக்கு,,,, பாப்பாக்கு பால் பவுடர் மட்டும் வாங்கிட்டு வாங்க ".......


((இதை கேட்கும் போது சங்கீதாவிற்கு தன் மார்பில் பால் சுரந்தது,,
அவள் கண்களில் சொல்ல முடியாது வழி,, தன் ஒரு வயதே ஆன குழந்தைக்கு தன் பாலை குடுக்க முடியவில்லையே என்று,,, ஆனால் அவள் என்ன செய்வாள் தன் கணவனின் பிடிவாதத்தினால் சொந்த வீடு இப்போ கார் இதுக்கு மாதம்தோறும் EMI கட்ட இப்போ ரெண்டு பேரும் வேலைக்கு போகும் நிலை... ))
இதே நேரம் அங்கு பூங்காவில் நம் கதையின் நாயகி கனிஷ்கா என்னும் கனி தாத்தா "அங்க பாருங்க தோ தோ ஐ பட்டர்பிளை "என்று தன் தாத்தாவின் கை பிடித்து சின்ன சின்ன அடிகள் வைத்து நடந்து வந்தது அவள் தாத்தாவும் அந்த பிஞ்சி கை பிடித்து அவள் நடைக்கு ஈடு குடுத்து நடந்து வந்தார்....

தொடரும்.........
 
Last edited:

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends
நான் கார்த்திகா.
“ கரை தேடும் ஓடங்கள் “….
இந்த கதையில் உள்ள கதாபாத்திரம் பற்றி ஒரு சின்ன அறிமுகம்
ஹரிஷ்
இவனின் பெற்றோர் சுந்தரம் லட்சுமி இவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு நகர வாழ்கை சரி வராது அதனால் ஹரி தன் குடும்பத்தோடு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சென்று வருவான்
சங்கீதா
இவளின் பெற்றோர் கணபதி மீனாட்சி இவர்களின் ஊர் கள்ளக்குறிச்சி இவர்களுக்கு தீபக் என்று ஒரு மகனும் உண்டு தீபக் சங்கீதாவிற்கு மூத்தவன்… தங்கையின் திருமணம் முடிந்ததும் தான் என் திருமணம் என்று உறுதியாக சொல்லிவிட்டதால் அவனுக்கு சில மாதம் முன்பு தான் திருமணம் முடிந்தது…. இவனும் பெங்களூருரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிகிறான்……. தங்கைக்கு திருமணம் முடிந்ததும் ஊரில் உள்ள வீட்டை விற்றுவிட்டு பெங்களூரில் ஒரு பிளாட் வாங்கி தன் பெற்றோருடன் இருந்து வந்தான்… அதே ஊரில் வசிக்கும் நிர்மலா என்னும் பெண்ணை தரகர் மூலமாக திருமணம் முடிந்தது……

இனி கதைக்கு போவோம்

கரை தேடும் ஓடங்கள்


காரில் சென்று கொண்டிருக்கும் போது சங்கீதா “ஹரி நான் வேணாம்னு சொல்ல சொல்ல கேக்காமா வீட்டு லோன் முடியறதுக்குள்ள கார் வாங்கிட்டு இப்போ EMI கட்ட முடியாம நானும் பாப்பாவை விட்டுட்டு வேலைக்கு போறமாதிரி ஆகிடுச்சு இப்போ என்னால பாப்பாவோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல”…. ஹரி “காலைலயே அராமிக்காதமா,,,,, கொஞ்ச நாள் தான் நான் என்ன எனக்காகவே பண்றேன் எல்லாம் நம்ம பொண்ணு பின்னாடி நல்ல இருக்கனும் தான்……. கொஞ்ச நாள் கழிச்சி நாம வாங்கணும்னு நினைச்சாலும் முடியாது………… கனியோட ஸ்டடி பியூச்சர் இப்டி ஓடிரும்… நீங்க சொல்றது எல்லாம் சரி தான்.... ஆனாலும் என்னால பாப்பாவோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல்லயே……..
எனக்கு புரியுதுமா நீ சொல்றது.... கொஞ்ச நாள் பொறுத்துக்கோ…..
சங்கீதாவின் அலுவலகம் வந்தது…
“சரிங்க ஈவினிங் கூப்பிட வரிங்களா”….
“இல்லமா எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு முடிய லேட்டா ஆகும் நீ கேப் புக் பண்ணி போயிரு”
“ சரி ஹரி வரேன் “ அவள் இறங்கும் வேலை அவன் அவளின் கை பிடிக்கவும் என்னவென்று பார்த்த சங்கீதாவை உன்னை ரொம்ப கஷ்ட படுத்தறேனா (( ((அவனும் கெட்டவன் இல்லை ஆடம்பர விரும்பி))
“அப்டில்லாம் இல்லை ஹரி நீங்க வருத்தப்படாதிங்க”
“ ஐ லவ் யூ டி “என்று ஒரு பறக்கும் முத்தமும் தந்தான்…. .
அதில் சங்கீதாவின் கன்னங்கள் செம்மையை பூசி கொண்டது இவளும் அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு சிட்டாக இறங்கி ஓடிவிட்டால் இவனும் விசில் அடித்து கொன்டே காரை தன் அலுவலகம் நோக்கி செலுத்தினான்……
ஆபீஸ் உள்ளே சென்ற சங்கீதாவை
அவளின் தோழி சத்யா “என்னடி வரும் போதே முகம் ஜொலிக்குது அண்ணன் கூட ஒரே ரொமான்ஸ் போல”
“ஏய் அடி வாங்க போற ‘’என்று தன் வெட்கத்தை மறைக்க குனிந்து தலை நிமிறாமல் தன்னுடைய இடத்திற்கு சென்று விட்டாள் !!….
மாலை ஆபீஸ் முடிந்து வெளியே வந்ததும் சத்யா சங்கீதாவிடம் “அண்ணா கூப்பிட வருவாரா” என்று கேட்க
“இல்லடி அவருக்கு மீட்டிங் இருக்காம் என்னை cab புக் பண்ணி போக சொன்னாரு”.. “சரிடி வா நான் உன்னை வேளச்சேரில இறக்கி விட்டுட்டு நான் போரேன்” சத்யாவின் வீடு வேளச்சேரியில் தான் உள்ளது……
சங்கீதாவை வேளச்சேரியில் இறக்கி விட்டுட்டு சத்யா தன் வீடு நோக்கி சென்றாள்…சங்கீதா போகும் வழியில் பால் பவுடர் வாங்கிட்டு வீட்டுக்கு சென்றாள்…… வீட்டில் தன் அம்மாவை பார்த்ததும் கனிஷ்கா ஓடி வந்து அம்மா நானு நானு என்று அவள் பையை வாங்கி சென்றது ……. பின்பு தன் அம்மாவை விட்டு நகரவில்லை…. பாப்பாக்கு நாளை பர்த்டேக்கு எந்த டிரஸ் போடலாம்னு கேட்கவும் கனி அழகிய அரக்கு நிற பட்டு பாவாடை சட்டையை எடுத்து வந்து அம்மா இது இது என்று சொன்னது…………
குழந்தையுடன் கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு மீனாட்சியுடன் நைட் டிபன்க்கு உதவி கொண்டிருந்தாள்
அங்கே ஹரி தன் நண்பர்களை தன் மகளின் பர்த்டே பார்ட்டிக்கு அழைத்து கொண்டிருந்தான்… இவனின் நண்பர்கள் மகேஷ் மதன் சுரேஷ் இவர்கள் இங்கு ஆபீஸ்லில் தான் நண்பர் ஆனார்கள்…..
“டேய் மச்சான் அப்புறம் இது வெறும் பர்த்டே பார்ட்டி தான் நோ ட்ரிங்க்ஸ் உங்க சிஸ்டர் கண்டிஷன் போட்ருக்கா”
“ அங்க மட்டும் இல்லை இங்கயும் தான்” என்று நண்பர்கள் மூவரும் ஒரே நேரத்தில் கூறினர்…. அதை கேட்டு சிரித்து கொன்டே “நாளைக்கு அஞ்சு மணிக்கெல்லாம் வந்துருங்க…… எல்லாரும் பாமிலியோட வாங்க”
“ ஓகே மச்சி வரோம்”……..


பிறந்தநாள் அன்று மாலை “தாத்தா இந்த டிரஸ் நல்ல இருக்கா” என்று கனிஷ்கா தன் பட்டு பாவாடை போட்டுகொண்டு அவரிடம் காமிக்க ஓடியது…. . “உனக்கு என்னடா குட்டிமா நீங்க எப்பவுமே அழகு தான்” என்று கூறி கன்னத்தில் முத்தம் வைத்தார்…
அப்போது ஒருவர் ஒருவராக வர ஆரம்மித்தனர்…. மீனாட்சி எல்லாரையும் வரவேற்று அமர வைத்தார்…. பார்ட்டிக்கு அக்கம் பக்கத்து வீட்டிலும் அழைத்து இருந்தனர்…….. அதில் ஒருவன் தான் வேலு…. இவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான்… பக்கத்து வீட்டுகாரன்….. இவன் மனைவி இவன் குணம் பிடிக்காமல் விவாகரத்து வாங்கி சென்று விட்டாள் ஆனால் இவன் அவன் மனைவி வேறு ஒருவருடன் ஓடி போய்விட்டாள் என்று சொல்லி மனைவியின் மீது உள்ள காதலால் மறுமணம் செய்ய வில்லை என்று கூறி அனுதாபங்கள் வாங்கி உள்ளான். … ஆனால் மீனாட்சிக்கு இவனை கொஞ்சம் பிடிக்காது இருந்தாலும் ஒன்றும் காட்டி கொள்ள மாட்டாள்….. . ஒரு வேலை இவனால பின்னாடி அவள் ஆசை குட்டிமாவிற்கு ஆபத்து என்று தெரிந்திருந்தால் இந்த பார்ட்டிக்கு கூட அழைத்து இருக்க மாட்டாள்….

இரண்டு வருடத்திற்கு பின்
இப்போது கனிஷ்கா LKG ஓரு மிக பெரிய தனியார் பள்ளியில் படிக்கிறாள்…. அதனால் சங்கீதா தான் வேலைக்கு போவதை நிறுத்தவில்லை… தாத்தா கணபதி தான் அவளை பள்ளிக்கு அழைத்து சென்று பின் மாலை அழைத்து வருகிறார்….இந்த நிலையில் தீபக் மனைவி நிர்மலா கர்ப்பமானாள்……அவளுக்கு மசக்கை அதிகமாக இருப்பதால் தன் பெற்றோரை கொஞ்ச நாள் வந்து இருக்குமாரு கேட்டான்….. மீனாட்சிக்கு என்ன செய்வது என்று யோசனை இங்கே கனியை பார்த்துக்க ஆல் வேண்டும் இப்போது ஸ்கூலுக்கு போறதால கூட்டிட்டும் போக முடியாது என்ன செய்வது என யோசனை…..
அன்று மாலை கனிஷ்காவை அழைத்து வரும் போது கணபதி “குட்டிமா தாத்தா ஊருக்கு போகணும் நீங்க சேட்டை பண்ணாம சமத்தா இருப்பிங்களா ” என்று கேட்ட தாத்தாவிடம் “கனிஷ்கா குட் கேர்ள் தாத்தா உங்களுக்கு தெரியாத” என்றது…. பின்பு தாத்தாவிடம் எப்போ வருவீங்கன்னு கேட்க அவரால் என்ன சொல்வது என்று தெரியவில்லை ஏனெனில் இதுவரை பெங்களூரு சென்றால் இரண்டு நாளில் வந்து விடுவார்கள் ஆனால் இப்போ போனால் வர 3 மாசம் ஆகும் என்று …..
இரவில் சாப்பிட்டுவிட்டு ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது நிர்மலா கர்ப்பமாக இருக்கும் செய்தியை மீனாட்சி மகளிடம் சொன்னார்… சங்கீதாக்கு ஒரே மகிழ்ச்சி …. “ எப்போமா சொன்னாங்க”
“மதியம் தான் சொன்னாங்க “
“ இது நல்ல விஷயம் தானே ஏன்மா டல்லா இருக்கீங்க “
“அது வந்து தீபக் நிர்மலாக்கு உடம்பு வீக்கா இருக்கு கொஞ்ச நாள் இங்கே வாங்கனு சொல்றான்”… இதை கேட்டதும் சங்கீதாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…..
“ சரிம்மா அண்ணா கூப்பிட்டா போயிட்டு கொஞ்ச நாள் இருந்துட்டு வாங்கனு” சொல்லவும் மீனாட்சி “குட்டிமா இப்போ தான் ஸ்கூல் போற அவளையும் பாத்துகிட்டு நீ ஆபீஸ் போய்ட்டு எப்பிடி சமாளிக்க போற “
“தெரியல மா பாக்கலாம் ஹரி கிட்ட சொல்றேன் நீங்க எதும் யோசிக்காம படுங்க ”என்றுவிட்டு தன் அறைக்கு சென்றாள்..
அறைக்குள் யோசனையோடு வரும் மனைவியை பார்த்து என்ன என்று கேட்க அம்மா சொன்னதை சொல்லவும் இவனும் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தான்…..சங்கீதா வோ “நான் வேலைக்கு போகட்டி கஷ்டம் நான் போனால் பாப்பாவை பாத்துக்க முடியாது….இதுக்கு தான் ஆரம்பத்துல சொன்னேன்…மெட்ரிகுலேஷன் சிலபஸ் சேப்போம்னு கேட்டி ங்களா”…. என்று கேட்க முதல் முறையாக தப்பான முடிவு எடுத்ததாகா நினைத்தாலும் வெளியில் ஒன்றும் சொல்லாமல்
“யாராவது பாப்பாவை பாத்துக் கொள்ள ஆள் ஏற்பாடு பண்ணுவோம் “என்றான் இவளுக்கும் இந்த யோசனை சரியாக பட
“அம்மாகிட்ட சொல்றேன்”..என்றாள்…..
மறுநாள் காலையில் மீனாட்சியிடம் சொல்ல “ யாரோ ஒருவரை நம்பி குட்டிமாவை எப்பிடி விட முடியும் “ என்று ஒரே சஞ்சலம்… ஆனாலும் வேற வழி இல்லாத காரணத்தால் அவரால் ஒன்னும் சொல்ல முடியவில்லை…..
அக்கம் பக்கம் சொல்லி வைத்து சுமதி என்ற ஒரு பெண் வந்தாள் ….
சுமதி நடுத்தர வயது பெண் அவருக்கு கணவன் இறந்து விட்டார்… ஒரு மகன் அவனும் வெளியூரில் வேலை செய்கிறான்.....
கனியை பற்றி அவள் என்ன சாப்பிடுவாள் எப்போ என்ன குடிப்பாள் என்று சுமதியிடம் சொல்லிவிட்டு குட்டிமாவை அவரின் பொறுப்பில் விட்டுவிட்டு பெங்களூரு சென்றனர் மீனாட்சியும் கணபதியும்….
தொடரும்……..
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends,,,,,,,
நான் கார்த்திகா. "கரை தேடும் ஓடங்கள்". இன்னும் ஒரு பகுதி தான் உள்ளது. இந்நேரம் கதை எதை பற்றி என்று கெஸ் பன்னிருப்பிங்க... நாளை அடுத்த பகுதி மற்றும் முடிவோடு வருகிறேன் 🙂🙂🙂🙂...
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I கரை தேடும் ஓடங்கள்

இரண்டு வருடத்திற்கு பிறகு

இந்த இடைப்பட்ட காலத்தில் நிர்மலாக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது...
அவனை பார்த்துகொள்ளவதால் மீனாட்சியால் இங்கு வர முடியவில்லை.. நம் கனியும் தன் வேலைகளை தானே பார்த்து கொள்ள பழகி கொண்டாள்... சுமதி தான் கனியை பள்ளிக்கு அழைத்து செல்வாள் மாலை மட்டும் பள்ளி பேருந்தில் வந்து விடுவாள்... சுமதியும் கனியை நல்ல படியாக பார்த்து கொள்வாள்.. அதனால் சங்கீதாவும் கொஞ்சம் நிம்மதியாக வேலைக்கு சென்று வந்தாள்.....

இனி

இப்பொது கனி வீட்டில் இருக்கிறாள். Annual லீவ். இன்னும் ஓரிரு நாளில் பள்ளி மறுபடியும் ஆரம்பம்..

இந்த நேரத்தில் சுமதியின் மகனுக்கு விபத்து ஏற்பட்டு வீட்டில் இருக்கிறான். அதனால் அவனை பார்த்து கொள்ள வேண்டி வர முடியாத சூழ்நிலை...

சங்கீதாவும் பாப்பாக்கு லீவ் தானே நான் பாத்துக்குறேன் நீ உன் மகனை பார்த்துக்கொள். உடம்பு சரியானதும் வா என்று சொல்லி விட்டாள்...

பள்ளி ஆரம்ப நாள் ஹரியே கனியை பள்ளிக்கு அழைத்து சென்றான். மாலை கவனமாக வர வேண்டும் என்ற அறிவுரையோடு... ஹரிக்கு கனியை நினைத்து பெருமை அதிகம்..... இருக்காதா பின்ன ஐந்து வயது குழந்தை தன் தேவைகளை அதுவே பார்த்து கொள்ளும் போது......

ஹரி "சங்கீ ஈவினிங் பெர்மிசன் போட்டு சீக்கிரம் வீட்டுக்கு போயிடு "... என்றான்

சங்கீதா "சரி ஹரி,,,, சுமதி நாளைக்கு வந்துறதா சொன்னாங்க " என்றாள்.....

ஹரி "சரிம்மா பாப்பா கவனம்" என்று சொல்லிவிட்டு அவளை ஆஃபிஸில் விட்டுட்டு அவன் அலுவலகம் சென்று விட்டான்..

மாலை சங்கீதாவால் சீக்கிரம் போக முடியவில்லை.. Project இன்று கட்டாயம் சப்மிட் பண்ண வேண்டும்


என்று கூறிவிட்டார்கள்.. அதனால் சங்கீதா பக்கத்துவீட்டில் இருக்கும் மாமியிடம் போன் செய்து இன்று ஒரு நாள் மட்டும் பார்த்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள் அவரும் பார்த்து கொள்வதாக கூறவும் இவள் இங்கு நிம்மதியாக இருந்தாள்.. இவளின் நிம்மதி இன்று இரவோடு போக போகுது என்று தெரிந்திருந்தால் இன்று வேலைக்கு லீவ் போட்டுவிட்டு வீட்டிலே இருந்திருப்பாள்...

மாலை கனி வந்ததும் அவளை மாமி பார்த்து கொண்டார்.. அப்போது கடைக்கு செல்ல வேண்டி இருந்ததால் கனியையும் அழைத்து கொண்டு வீட்டை பூட்டும் நேரம் அங்கே வந்தான் வேலு.....

வேலு " என்ன மாமி கனியை கூட்டிகிட்டு எங்க கிளம்பிட்டீங்க "என்று கேட்டான்....

மாமி "இல்லப்பா சங்கீதாவிற்கு இன்று வேலை அதிகமாம் வர லேட்டாகுமாம்...... அதனால் கனியை பாத்துக்க சொல்லி கால் பண்ணின..... மளிகை கடைக்கு போகணும் அதான் அவளையும் கூட்டிட்டு போறன்" என்றாள்


வேலு "அதுக்கு ஏன் கனியை கூட்டிட்டு போறீங்க கனி அங்கிள் கூட வரிங்களா நான் உங்களுக்கு சாக்லேட் தரேன் "என்று கேட்டான்

கனியும் "சரி அங்கிள்" என்றுவிட்டு "ஆண்ட்டி நான் அங்கிள் கூட இருக்கேன் நீங்க போய்ட்டு வாங்க" என்றது

மாமியும் "சரி வேலு நீ கொஞ்சம் பாத்துக்கோ நான் வந்ததும் கூப்டுகிரேன்" என்றுவிட்டு கடைக்கு சென்று விட்டார்.....

கனியும் தனக்கு நடக்க போகும் விபரிதம் தெரியாமல் அவனோடு சென்றாள்.....

வீட்டிற்கு அழைத்து சென்றதும் கனிக்கு ஒரு டைரி மில்க் சாக்லேட் குடுத்தான்.. கனியும் அதை வாங்கி சாப்பிட்டது.. சாப்பிடும் அந்த பிஞ்சின் மேனியில் இவன் கண்கள் மேய்ந்தது....








அப்போது யூனிபோர்மில் சாக்லேட்டின் ஒரு துண்டு விழுந்தது.... உடனே அவன் "dress எல்லாம் ஆகிடும் நாளைக்கு ஸ்கூலுக்கு எப்டி போட்டுக்க முடியம் அதுனால யூனிபோர்ம் கழட்டிட சொன்னான்".....

அதற்கு கனியோ "பரவால்லை அங்கிள் என்கிட்ட இன்னோரு யூனிபோர்ம் இருக்கு அத போட்டுப்பேன் " என்றாள்...


"சரி வா அதை துடைச்சு விடுறேன் இல்லாட்டி எறும்பு கடிக்கும்னு" சொல்லி பாத்ரூம்க்கு அழைத்து சென்றான்.....

கனியும் அவனோடு சென்றது அப்போ அவன் தண்ணீர் தொட்டு துடைத்து விட்டான்.... துடைத்து முடித்ததும் அவன் கைகள் மெதுவாக கீழ இறக்கினான்... கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவும் கனிக்கு என்ன புரிந்ததோ வேகமாக அவனை தள்ளி விட்டு வெளியே ஓடிவிட்டாள்... அவனும் அவளை துரத்தி வரவும் இவள் வேகமாக வெளியே வந்து மாமியின் வீட்டு முன் நின்று கொண்டாள்.

இதை கீழே CCTV கேமரா மூலம் பார்த்த செக்யூரிட்டி ஏதோ சரி இல்லை என்று நினைத்து வேகமாக மேலே வந்தார்....

அப்போது கனியை தேடி வந்து வேலு செக்யூரிட்டி கூட இருப்பதை பார்த்து விட்டு இவள் என்ன சொல்கிறாள் பார்க்க மறைந்து நின்று கொண்டான்....

செக்யூரிட்டி கனியின் முகத்தில் என்ன கண்டாரோ அவளை சகஜமாக்கும் பொருட்டு " ஏன் பாப்பா இங்கே நிக்குறீங்க" என்றான்...

கனியும் துணை கிடைத்த திருப்தியில் "அம்மா வர லேட்டாகுமாம் அங்கிள் "என்றது......

அதற்கு செக்யூரிட்டி ஏன் கூட வரியா என்று கேட்டதுக்கு பயந்த பார்வை பார்த்தது...

உடனே அவரும் புரிந்து கொண்டு "கீழே பூங்காவிற்கு கூட்டிட்டு போகட்டா" என்றார்..






பூங்கா என்றதும் பயம் இல்லாமல் அவருடன் சென்றது...

இரவு ஹரி வந்ததும் செக்யூரிட்டி அவனிடம் நடந்த அனைத்தையும் கூறினார். ஹரிக்கு என்ன செய்வது என்று ஒன்னுமே புரியவில்லை.... தன் தேவதைக்கு இப்படி ஒரு ஆபத்து ஏற்பட்டதை நினைத்து மனதில் பயம் கொண்டான்...... தன் பர்ஸ்ல் இருந்து சில ரூபாய் நோட்டு எடுத்து அவர் கையில் தந்தான்....

அதற்கு அவரோ "நான் பணம் எதிர்பார்த்து உங்களுக்கு உதவ வில்லை... எனக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்"... என்றார்... உடனே ஹரி அவரின் கை பிடித்து நன்றி யை தெரிவித்தான்.....

வீட்டுக்கு வந்து சங்கீதா விடம் நடந்ததை சொல்லவும் அவளோ பயங்கர கோபம் கொண்டாள் ஹரியின் மீது

சங்கீதா " இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன் கனியை CBSE BOARD வேண்டாம் MATRIC BOARD சேத்து விடுங்க நான் வீட்ல இருந்து பாத்துக்குறேன் அப்டினு சொன்னேன் நான் சொல்ற எதுவும் கேக்குறது இல்ல. "

ஹரியும் அந்த வேலுவை ஒரு வலி பண்ணும் ஆத்திரம். ஆத்திரத்தோடு அவன் வீட்டை நோக்கி செல்வதை பார்த்த சங்கீதா
"இப்போ நீங்க அவனிடம் சண்டை போட்டால் எல்லாருக்கும் இந்த விஷயம் தெரிந்து விடும்.. அதுமட்டும் இல்லாமல் கனியை எல்லாரும் அனுதாபத்தோடு பாப்பாங்க.. ஆறுதல் சொல்றேன்னு இன்னும் நம்மளை புண்ணாக்குவாங்க இந்த ஒரு விஷயத்தில் ஏன் பேச்சை கேளுங்கள் " ...... என்றாள்

மறுநாள் சங்கீதா வேலையை ராஜினாமா செய்துவிட்டாள்.. ஹரியுடன் பேச வில்லை.... கனியின் கண்களில் ஒரு பயம் இருந்து கொன்டே இருந்தது... இவளே கனியை பள்ளிக்கு அழைத்து சென்றாள்..

அன்று ஹரி ஆபீஸ் செல்லும் வழியில் ஒரு விபத்து யார் என்று போய் பார்த்தான்....

வேலு தான். வேகமாக வந்த லாரியில் அடிபட்டு இறந்து கிடந்தான்.....

அன்று ஹரி வீட்டிற்குள் வரும் போது கனி தன் அம்மாவிடம் "ஏன் மா அப்பாவோட பேசாம இருக்க " என்றது அதற்கு....

சங்கீதா "அப்டில்லாம் இல்லை" என்று சமாளித்தாள்.....


அதற்கு கனியோ "இல்ல மா நீ அப்பாவோட பேச மாற்ற அப்பா எப்போ பாத்தாலும் உன்னையே பாத்துட்டு இருக்காரு பாவம் மா அப்பா பேசு மா " என்றாள்....

இதை கேட்டபடி வந்த ஹரி ஓடி வந்து தன் மகளை கையில் தூக்கி அவளை கணத்தில் முத்தம் வைத்துவிட்டு அவளை கட்டி கொண்டு அழுதான்.... கனியோ ஹரியின் கண்ணீரை துடைத்து விட்டு ஏன்பா அலற என்றது அதற்கு ஹரி அப்பா ரொம்ப கெட்டவன் என்றான் உடனே சங்கீதா குழந்தைகிட்ட என்ன பேச்சு இது என்று அவனின் கை பிடித்தால். ஹரியோ அவள் கையை இறுக்கமாக பிடித்து
கொண்டு ஏன் மேல் கோபம் இருந்தால் திட்டு அடி ஆனால் பேசாம மட்டும் இருக்காதாடி என்னால முடியல நம்ம குழந்தைக்காக தான் உன்னை வேலைக்கு போக சொன்னேன் மத்தபடி இப்டி நடக்கும்னு நான் நினைக்கல என்னை மன்னிச்சுடுடி என்று அவளை கட்டி பிடித்து கதறி விட்டான்..

இப்போ சங்கீதாவிற்கு ஒரு scooty வாங்கி கொடுத்தான். கனியை அவளே அழைத்து சென்று கூட்டி வந்தாள் ஹரிக்கும் promosion மற்றும் சம்பளம் உயர்வு கிடைத்தது....

சங்கீதாவும் கனிஷ்கா வோடு தன் நேரத்தை செலவழித்தாள்... சுமதியை வீட்டு வேலைக்கு மட்டும் வைத்து கொண்டாள்...

சுபம்
 
Status
Not open for further replies.
Top