All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கதை திரி

Status
Not open for further replies.

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இட்ஸ் ஆல் ஹப்பெனிங் பிகாஸ் ஆஃப் தேம் இல்லயா " என இருவரையும் சுட்டிக்காட்டிய தாக்ஷியிடம் தலையாட்டி ஓப்புக்கொண்டாள் ஜெய்மி.

தத்தம் மனைவியின் மூலம் நட்பு பாராட்டிய அமிழன் எய்டன் இருவரின் எண்ண போக்கும் ஒரே மாதிரி அமைந்ததில் ஒருவரை மற்றவருக்கு உள்ளார்ந்து பிடித்து இருவருக்குமிடையே பிணைப்பு இறுகியது.

பேசி கொண்டு மரங்கள் அற்ற சமவெளிக்கு வந்தவர்கள் எதிர் பட்ட பள்ளத்தாக்கில் சாய்வாக ஒங்கி வளர்ந்த மலையில், செதுக்கிய வண்ணமாக பயிரிட்டிருந்த தேயிலை பாத்திகள் மீது பட்டு தெறித்த சூரிய கதிர்களின் ஒளி அவ்'எஸ்டேட் முழுவதும் பரவி இளமஞ்சள் கலந்த சிவப்பாக காட்சி அளித்து கண்ணுக்கு விருந்தளித்து.

பேச்சற்று மெய்மறந்து ரசித்து கொண்டிருந்த தோழிகள் இருவரின் அருகே வந்த நின்றனர் அவர்களின் துனைவர்கள்.

" வாவ்......என்ன ஒரு சீனரி..!
இத தூங்கி மிஸ் பண்ண பாத்துருக்கீங்க ரெண்டு பேரும்..
இங்க தூங்குறத அங்க வீட்டிலயே தூங்கிருக்கலாம்..." என வம்பிலுத்த எய்டனிடம் சண்டையிட தயாரான ஜெய்மி
அந்நாள் இரவை கூடாரம் ( tent ) அமைத்து செலவிடும் செயற்பாட்டிற்க்கு வந்த பிறகும் முடியவில்லை.


ரிசார்ட்டின் செயற்பாட்டில் ஒரு பகுதியான டெண்ட் கேம்ப்ங்'கில் இரவில் மலை முகட்டில் கூடாரம் அமைத்து
அனைவரும் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அன்றிரவை வெட்டவெளியில் நிலவொளியில் களித்து கொண்டிருந்தனர்.


ஜெய்மி, தாக்ஷி இருவரும் உடலை இறுக்கி கம்பிலியால் சுற்றி தங்களை குளிரில் இருந்து மறைத்து கொண்டிருந்தனர்.

சைட் சீனிங், சைக்கிளிங், ட்ரெக்கிங் என்ற பெயரில் பிளான்டேஷன் வாக் என கடந்து வந்தவர்கள் இப்போது 'குடிசை மொமெண்ட்டா' என்பது போல் நடுங்கும் குளிரில் கூடாரத்தில் இரவை களிக்க வைத்த ஆண்கள் இருவரின் மீது கோபம் கொண்டிருந்தவர்கள், சற்று தள்ளிருந்த அமிழன் எய்டனின் உரையாடலை கேட்டு பீதியாகினர்.

" என்ன ஒரு வியூ.. வாவ்... செம ப்ரோ.. லவ்லி ப்ளேஸ்.. இந்த ரிசார்ட் ரெக்கமெண்ட் பண்ண உங்க பிரெண்ட் கிட்ட தான்க்ஸ் சொல்லனும் ப்ரோ " என்ற எய்டனிடம்,

" அவன் சொன்னதை விட நாம ஃபீல் பண்ணும் போது தான் தெரியுது இவ்வளவு அழகுனு,
ஏன் ப்ரோ நாம நெக்ஸ்ட் ட்ரிப் கூர்க் ( coorg ) போன என்ன, என் பிரெண்ட் சொன்னான்
அங்க ட்ரீ ஹௌஸ் செம த்ரில்லா இருக்குமாம்"


" வாவ் சூப்பர் ப்ரோ.. நெக்ஸ்ட் நாம கூர்க் ட்ரிப் பிளான் பண்ணுறோம்,
ட்ரீ ஹௌஸ் போறோம், என்ஜாய் பண்ணுறோம்" என இருவரும் கை தட்டி கொண்டனர்.


இதனை கண்டு பீதியான ஜெய்மி
"தாக்ஷி உன்னை நான் டிவோர்ஸ் பண்ணுறேன்டி "


"தேவா........ ! நீயா பேசுற... "

"நானே தான் சூர்யா, இன்னும் இவங்கள ஒன்னு சேர விட்ட , நமக்கு தான் சேதாரம் அதிகமாகும்... அதுக்கு முதல நாம பிரியனும் சூர்யா.... "

" அதுவும் சரி தான் தேவா.. எதையும் பிளான் பண்ணி பண்ணறது தான் நமக்கும் நல்லது.... "

என தங்களுக்குள் தளபதி ரஜினி, மம்மூட்டி போல் சூளுரைத்து கொண்டிருந்தவர்களிடம் வந்த அமிழன்


" தாக்ஷி..... ஒரு வாக் போயிட்டு வரலாமா "
என கேட்கவும் அதிர்ச்சியுற்றாள் தாக்ஷி.


" வாக்'கா.... இப்பவா மாமா.. " என தனக்குள் விழுங்கினாள்.

" ஆமா தாக்ஷி செம க்ளைமேட் பாரு.. ஒரு மூன் வாக் போகலாம் வா... "
என கை நீட்டிய அமிழனிடம் கை கொடுத்து எழுந்தவள் தன்னை பார்த்து முகத்தை மறைத்து சிரித்து கொண்டிருந்த ஜெய்மியை முறைத்து விட்டு சென்றாள்.



இரவின் அழகான நிசப்தத்தில் நீரோடையின் சலசலப்பு சத்தத்தை தவிர சுற்றி எங்கும் நிசப்தமே..

குளிர் காற்று அவர்கள் இருவரையும் தழுவி ஊடுருவி சென்றன..

வேண்டாம் வெறுப்பாக முதலில் வந்தவள் இயற்கையின் அழகில் தன்னை மறந்து கால்களை எட்டி போட்டு லயித்து நடை பயின்றவளை திரும்ப மலையேத்தவென அமைந்தது அமிழனின் பேச்சு,


" தாக்ஷி, பாரேன் இவ்வளவு நாள் நாம டீ தப்பா போட்டுக்கிட்டு இருந்தருக்கோம்.."

சைட் சீனிங் என்ற பெயரில் நேற்று பாதி நாள் முழுவதும் மூணாறில் பிரிசித்து பெற்ற பழமையான தேயிலை தொழிற்சாலையான கண்ணன் தேவன் ஹில்ஸ்'லில் களித்தனர், ஆண்கள் பெருப்பான்மையான நேரம் தொழிற்சாலைக்குள்ளும் பெண்கள் இருவரும் தோட்டத்திலுமாக.

அவர்களுக்கு சுற்றி காட்டவென வந்தவரே தேனீர் தயாரிக்கும் முறைமையை விளக்கினார்.

தேயிலை'யை அதிகம் கொதிக்க வைக்க கூடாது என்றும், கொதித்த வெந்நீரில் தேயிலை போட்டு மூடி வைத்து விட வேண்டும். அதனை சிறிது நேரம் கழித்து வடிகட்டி அப்படியே பிளாக் டீ'யாக அருந்தலாம்... இல்லையென்றால் சூடான பாலில் தேயிலை தண்ணீரை கலந்து அருந்தலாம் என்றும், பாலையும் தேயிலையும் சேர்த்து கொதிக்க விட கூடாது என்றும் தெளிவாக விளக்கினார்.. அதை சிரமேற்றி தெளிவாக கவனித்து கொண்டார்கள் ஆணவர்கள்.

அதனையே இன்று திரும்ப அமிழன் வியந்து விளக்கவும் கோபம் கொண்டு கால்களை அழுத்தம் கொடுத்து தரையில் பதித்து நடந்தாள் தாக்ஷி..

நீரோடையின் சலசலப்பை மீறி தாக்ஷியின் கால்கள் கொடுத்த சத்தத்தில் அவளின் மேல் கண்களை பதித்த அமிழன் அவள் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து நடந்து சென்ற முறையில் ரசித்து
' இன்னும் நீ மாறவே இல்ல டுக்கு ' என தனக்குள் புன்னகைத்து கொண்ட அமிழனுக்கு
சற்றுமுன் எய்டனுடன் நடந்த உரையாடல் ஞாபகம் வந்தன..


"ஓகே ப்ரோ.. நான் தாக்ஷிய கூட்டிட்டு ஒரு வாக் போயிட்டு வரேன்.."

"இங்க நியூலி மேரீட் கபில் யாருன்னு தெரில ப்ரோ... அப்பப்ப மறந்துடுது" என கேலி செய்து சிரித்த எய்டனிடம்,

"நியூலி மேரீட் கபில்'க்கு ப்ரைவஸி கொடுக்கலாம்னு தான் வாக் போலாம்னு தாக்ஷிய கூட்டிட்டு போறேன், வேணும்னா நீங்க ஜெய்மிய கூட்டிட்டு போங்க நான் இங்க இருக்கேன்..."

" ஏது இவளயா... தாக்ஷிம்மா'வாச்சும் நீங்க கூப்பிட்டதும் வருவா..
இவள நான் ஏற்கனவே மலை இறக்க கஷ்டப்படனும்..
இதுல வாக் போலாமனு கேட்டேன், இப்ப இருக்கிற மலையை விட்டு வேற மலைக்கு தாவிடுவா..
நீங்க கிளம்புங்க ப்ரோ "


அவனின் கூற்றில் சிரித்தவன் " எங்கள கிளப்ப வேகமா தான் இருக்கீங்க போங்க " என்ற அமிழனிடம்,

"ஆனாலும் ப்ரோ நீங்க எங்களுக்காக தான் தாக்ஷிம்மாவ வாக் கூட்டிட்டு போறீங்க சொல்றத நான் நம்பிட்டேன் "
என இதழ்களில் சிரிப்பை அடக்கினான் எய்டன்.


"ப்ரோ.... " என ஆரம்பித்த அமிழனிடம்

"அதான் நான் நம்பிட்டேனு சொல்றேனே ப்ரோ.. ஹாவ் அ சில் வாக்.. என்ஜாய்.... "
என கையசைத்து சிரித்தவனை கண்டு தானும் சிரித்ததை நினைவில் நிறுத்தி இப்போதும் தலைகோதி புன்னகைத்து கொண்டவன்..

தாக்ஷியின் கைகளை பிடித்து தன்னருகே நிறுத்தி,

" என்னவாம் டுக்கு'க்கு... கோபம் வந்தா தான இப்படி நடப்பீங்க.. சின்ன வயசுல
நீ இப்படி நடக்கிறத வச்சு தான உன்னை டக்……. " என கூற வந்தவனின் இதழ்களை தன் விரல்கள் கொண்டு மூடியவள்,


" போதும்.. அந்த பேர் சொல்ல வேணாம்.. சொன்னிங்க அவ்வளவு தான் பாத்துகோங்க "
என கூறிவயள் தன் விரல்களில் உணர்ந்த அவனின் வெப்பத்தினால் கைகளை விலக்கி
தள்ளி செல்ல முயன்றவளை இழுத்து பிடித்து தன் கைவலைகளுக்குள் நிறுத்தியவன்..


" எனக்கு வேற ஒரு டௌபட் இருக்கு அத கிளீயர் பண்ணிட்டு போ"

வெளியே ஊடுருவிய குளிர் காற்றுக்கு எதிர் வினையாய்
அவளிடம் அவன் கடத்திய வெப்பத்தில் லயித்தவளின் கண்கள் மேலெழுங்கி என்னவென்று வினவின.


" பட்டர்ஃபிளை கிஸ்'னா என்னது..."
என மிக தீவிரமாக முக்கியமான கேள்வியை போன்று கேட்ட அவனின் கேள்வியில் நாணம் கொண்டவள்,

"அய்யே மாமா போங்க.. இது தான் உங்க டௌபட்'டா"
என விலகி செல்ல முயன்றவளை தடுத்து தன் கைகளுக்குள்ளே நிறுத்தியவன்,

"நீயும் நீத்து குட்டியும் பேசுறத கேட்ருக்கேன்.. அது என்ன எனக்கு இல்லாம நீத்துக்கு மட்டும் பட்டர்ஃபிளை கிஸ் "
என புருவம் உயர்த்தி உரிமை பாராட்டும் சிறுகுழந்தையாக தன் முன் முகம் சுருக்கி நின்ற அமிழனை கண்டு உவகை கொண்டவள்.


"அது சின்ன பேபிஸ் கூட விளையாடுறது மாமா, நீத்துகுட்டி இங்க இருந்தப்ப அவளுக்கு அது பிடிச்சு போய் இப்போ வீடியோ கால்'ல கேக்குற.. சின்ன பிள்ளை கூட போட்டி போடுறீங்க நீங்க "

என கூறியவளை கண்டு இன்னும் முகம் சுருக்கங்களோடு நின்றவனின் மேல்சட்டையின் காலரை பிடித்து தன்னருகே நிறுத்தி அவர்களுக்குள் மிச்சம் இருந்த இடைவெளியயும் குறைத்தவள்,

" இப்ப என்ன உங்களுக்கும் பட்டர் ஃப்ளை கிஸ் வேணும் அவ்வளவு தான "
என அவளின் இடது கண்களை அவளின் எதிர்புறம் நின்ற அவனின் இடது கண்கள் அருகே கொண்டு சென்றவள் அவளின் இமைகளை அவனின் இமைகளோடு சேர்த்து சிமிட்டி பட்டர்ஃபிளை கிஸ் என்ன என்பதனை செயல்முறையில் விலக்கினாள்.

படபடத்த இருவரின் இமைகளையும் பிரித்தவள்,
"இப்ப புரிஞ்சுடுச்சா.. இதுக்கு போய் நீத்து குட்டியோட போட்டி போட்டுகிட்டு...
நீத்து விட ரொம்ப அடம் பிடிக்கிறீங்க நீங்க" என விலக்கியவளை தடுத்தவன்,


"உனக்கு தெரிஞ்சத நீ சொல்லிட்ட டுக்கு , இனி என் டர்ன் எனக்கு தெரிஞ்சத நான் சொல்ல வேணாமா .. " என அவனவளை இதழோடு அனைத்து கொண்டான்.

மண நிறைவோடு முடிந்த மூணாறு நாட்கள் இனி பெங்களூரில் தொடரும்!! (மா??)...

....................................

அப்புறம் மக்களே இதில் புதியதாக இரண்டு விஷயங்கள் சொல்லிருக்கேன்.
எல்லாரும் கத்துருப்பீங்க'னு நினைக்கிறேன.
கற்று கொடுத்த நிறைவோடு விடை பெறுகிறேன்..
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...



கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்

கீர்த்தி😍


http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417


 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 15 பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் ,

அத்தியாயம் 15

நிலகண்ணாடியில் முன் நின்று தலையை உளர்த்திவிட்டு மேஜை மேல் கழற்றி வைத்திருந்த அமிழன் அவளுக்கு அணிவித்த செயினை அணிய முற்பட்டவள் கண்ணாடி பின்பத்தில் அவளோடு சேர்ந்து பிரிதிபலித்த செயினயே சிறிது நேரம் யோசனையோடு பார்த்தாள். பிறகு ஒரு முடிவு பெற்றவளாக, ஹாலில் அலுவலகத்திற்க்கேன கிளம்பி அதற்கு முன் முடிக்க பட வேண்டிய அலுவல் வேலைய மடிக்கணினி முன் அமர்ந்து சரி பார்த்துக்கொண்டிருந்த அமிழனின் அருகில் சென்றாள் தாக்ஷி.

" மாமா இந்த ரிங் எங்க வாங்குனீங்க ..."

தன் கணினியில் வைத்திருந்த அவனின் கண்ணை விலக்காமல்
"இங்க தான் தாக்ஷி.. "

" இது வாங்குன பில் இருக்கா மாமா, இந்த ரிங் செயின்ல ஃபிட்'டா இல்லாம சுத்திட்டே இருக்கு, செயின்'ல ஒரு நாட் போட்ட சரியா இருக்கும்ல.."
என ஏன் என்பதாய் தெளிவாகவே அவன் கேட்கும் முன்னரே பதில் அளித்தாள்.

"அங்க செகண்ட் ஷெல்ஃப்'ல தான் தாக்ஷி எல்லா பேப்பர்ஸ்ம் இருக்கும், கொஞ்ச நீயே பாரேன்டா அங்க இருக்கானு " என இன்னமும் அவனது அலுவல் வேலையில் கவனமாக இருந்தவனை பார்த்தவள் அவளாகவே உள்ளே சென்று தேடலில் சில நிமிடங்களை தனியாக செலவிட்டவளாக திரும்ப அமிழனிடம் வந்தாள்.

" செயின் வாங்குன பில் அங்க இல்லையே மாமா "
என்றாள் கணினியில் கவனமாக இருந்த அமிழனின் அருகில் அமர்ந்துக்கொண்டு...

"மாமா ...," என அவனை அழைத்து அவளின் வாக்கியம் முற்று பெரும் முன்னரே,

"அங்க தான் இருக்கும் தாக்ஷி " என கூறியவன் அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததை உணர்ந்து அவளை திரும்பி பார்த்தான். அங்கு முகத்தை சுருக்கி தன் அருகே அமர்ந்திருந்தவளை கண்டவன் தலையாட்டி புன்னகைத்துக்கொண்டு ஒரு கையால் மடிக்கணினியை அணைத்து மறுகையால் அவளை தோளோடு சேர்த்து அனைத்து கொண்டான்.

"என்ன வேணுமாம் டுக்கு'க்கு "

"மாமா... " வேலையின் பொருட்டே தன் மீது கவனமாக இல்லாதவனை கண்டு கொண்டவள்,
" ஒன்னும் இல்ல உங்களுக்கு டைம் ஆகிடுச்சுல நீங்க ஆஃபீஸ் போய்ட்டு வாங்க அப்புறம் பேசிக்கலாம் "

"இல்ல இப்பவே சொல்லுவியாம்... அப்புறம் எனக்கு டே ஃபுல் இந்த முகம் சுருங்குன டுக்கு தான் ஞாபகத்துக்கு வருவா "

அவன் கூற்றலில் மென்மையாக முறைத்தவள் " இந்த செயின்ல ரிங் ஃபிட் ஆகல மாமா அப்புறம் இந்த செயின் மாடலும் கழுத்துல அழுத்தம் கொடுக்குது அதான் கொஞ்சம் மாத்திகலாம்னு கேட்டேன்.. ஆனா செயின் வாங்குன பில் இங்க இல்லையே.. "

" நீ செயின கேட்டியா..
செயின் புதுகோட்டைல ஜெய்மி மேரேஜ் அப்போ வாங்குனது தாக்ஷி, பில் அங்க தான் இருக்கும், பிரபு கிட்ட கேட்டு பாரு... நான் வரட்டா...
பை டா டைம் ஆகிடுச்சு.. ஈவினிங் வந்ததும் டிஸ்கஸ் பண்ணலாம்" என அவளை அணைத்து நெற்றியில் இதழ் ஒற்றி விலகி தலையசைத்து விரைந்து விட்டான்.

' என்னடா இது ' என அவனின் கூற்றை சில நிமிடங்கள் யோசித்தவள் பின் பில் ஊரில் இருப்பதால் அங்கு செல்லும்போது மாற்றி கொள்ளலாம் என முடிவு செய்து அப்போதைக்கு யோசனையை ஒதுக்கி மற்ற வேலைகளில் கவனம் செலுத்தியவளை களைத்தன பிரபுவின் அலைபேசியிலான அழைப்பு.

பிரபுவிடம் உரைடயாடிவள் தன் யோசனையை அவனிடம் தெரிவிக்கவும் மறக்கவில்லை.

தமக்கையை உள்வாங்கியவன் " ஆமா பில் இங்க தான் இருக்கும், இப்ப ஏன் அத மாத்த போறியா என்ன.. "

" ஹே அதில்லைடா, ரிங் கோர்த்து செயின் போற்றுக்கனால சரியா செட்டா நிக்க மாட்டேங்குதுடா, பேசாம ரிங்'க கையலயே போட்டுக்கலாம், மாமா கொடுத்துன்னு தான் செயினவே இருக்கட்டும்னு நினைக்கிறேன்... "

" உன்கிட்ட ரிங்'கா கொடுக்க ரெண்டு தடவை ட்ரை பண்ணி அது முடியாம போனதுனால தான், சென்டி'யா ஃபீல் பண்ணி அத செயின மாத்தி உன்கிட்ட சேர்த்துட்டாங்க, நீ அதை மாத்தாதக்கா "

இது அவளுக்கு புது செய்தி, புருவம் சுருக்கி வியந்த தாக்ஷியோ
" என்கிட்ட கொடுக்க வந்தாங்களா எப்போ... "

தமக்கையின் வினாவில் பெருமூச்சு விட்டவனாக
"ம்ம், மேரேஜ் முன்னாடி ஃபினிக்ஸ்ல மீட் பண்ணுனீங்கள அப்பவும், அப்புறம் ..... "

"அப்புறம் ... "

" உங்க மேரேஜ் பிஃக்ஸ் பண்ணுறதுக்கு முன்னாடி இங்க நம்ம ஊர்லனு ஒரு தடவை.. "

" நீ என்ன சொல்ற பிரபு.. எங்க மேரேஜ் பேசுறதுக்கு முன்னாடியா.. "

" ஹையோ என்னக்கா நீ உன்கிட்ட மாமா அந்த ரிங் எப்போ வாங்குங்கனு சொல்லலயா... "

" ம்ம்ம்ம் சொன்னாங்க அவங்க ஃபர்ஸ்ட் மன்த் சலாரில வாங்குனதுனு..... " என கூறிக்கொண்டே வந்தவள் ஏதோ பிடிப்பட்டவளாக " பிரபு..... "

" இப்பவாவது புரிஞ்சதா ..... "

" பிரபு.... நீ ... " என உண்மையை உணர்ந்து கொண்டவளாக அவளின் வார்த்தைகளில் தயக்கங்கள் நிறைந்திருந்தது.

" ஆமா...சொல்ல போன ரொம்ப வருசமாவே .... " என ஆரம்பித்தவன் நிறுத்தினான்...
" சரி விடு இதுக்கு மேல நான் இது பத்தி பேசுறது சரியா வராது....
அப்புறம் நீ ரொம்ப யோசிக்காத என்ன.. " என தமக்கையை அறிந்த தம்பியாய் அறிவுறுத்தி விட்டு வைத்து விட்டான்.

இங்கு தாக்ஷியோ அவனின் அறிவுரையை மீறி யோசித்து குழம்பி கலங்கி மேலும் சிந்திக்க முடியாமல் நின்றாள்.

இத்தனை நாள் அவளுள் ஒதுக்கி மறைத்து வைத்திருந்த அவளின் குற்றவுணர்ச்சி மேலேந்து அவளை சுயப்பச்சாபத்தில் தள்ளியது.

தன் விருப்பத்தை மட்டும் முன் நிறுத்தி அவளுக்காகவே அனைத்தும் செய்து மகிழ்ந்துகொள்பவனாக இருக்கும் அவளவனை கண்டு கொண்டிருந்தவள், இது அவர்களது திருமணம் தொட்டு வந்த உறவாய் தன்னை போன்றே அவனுக்கும் என நினைத்தவள் அஃது அவ்வாறில்லை என உணர்ந்ததும் இவ்வளவு நாள் அவளுள் மறைந்து ஒதுக்கி வைத்தவை குற்றஉணர்வாக தலைதூக்கியது.

ஒவ்வொன்றாக யோசித்து தெளிவு பெற்றவள் அவளின் மீது அவன் கொண்ட நேசத்தை புரிந்து கொள்ளாமல் இருந்தது மட்டுமில்லாமல் தான் செய்த மடத்தனத்தையும் யோசித்து குழம்பி கொண்டவளுக்கு குற்றஉணர்ச்சியே ஒங்கிருந்தது.

மதியன் மேல் தான் கொண்டது காதல் இல்லை என சுலபமாக கடந்து வந்தவளுக்கு அமிழனின் காதலை அறிந்து கொண்ட நொடிகள் முதல் உண்டான கணத்தை தாங்க இயலவில்லை.
இதில் தான் அவனுக்கும், அவன் தன் மேல் கொண்ட காதலுக்கு உண்மையாக இல்லையோ என்ற உணர்வும், தான் அவனின் மனைவியாய் இருக்கிறோம், காதலோடு இருக்கிறோமா என்ற பதில் விளங்கா கேள்விகளும் அவளை அலைகளித்தன.

அதில் தன்னுள் மூழ்கியவள் தனித்து கொள்ளளாகினாள்.

அலுவல் விட்டு வந்த அமிழனுக்கு கிடைத்ததோ அவளிடம் கண்ட அந்நிய பார்வைகள் தான்.

தன்னை தள்ளி நிறுத்திய அவளின் பார்வைகளை கண்டவன் தனக்குள் இறுகினான்.
அவள் பேசாமல் தள்ளி நிறுத்திய ஒவ்வொரு நொடியும் அவனுள் ரணமாய் அறுந்தன.

நெடுஞ்சாலை போல் அவர்களுள் நீண்ட இடைவெளி முற்று பெற்ற நிலையில் மீண்டும் அவனை விட்டு அவள் செல்லும் பாதையின் திசை மாறினாலும் முடிவில் அவனிடம் வந்து சேர்ந்து அவனிடமே முற்று பெரும் என தன்னவளை நன்கு உணர்ந்து அறிந்தாலும், தனக்குள் சிந்தனையில் மூழ்கி இறுகியவளை கண்டே வருத்தம் முற்றான்.

' தோல் சாய்ந்து அவளின் எண்ணங்களை இரக்க நான் இல்லையா, பகிர்ந்து கொள்ள அணைத்துமாய் நான் இருக்க ஏன் தனக்குள் மறுகி அவளை வருத்திக்கொள்கிறாள்' என்ற கோபம் கொண்ட வருத்தமே அவனுக்கு ஓங்கி நின்றது.

ஒவ்வொரு முறையும் அவன் முன் வருத்திக்கொள்வதுமட்டுமில்லாமல் அவனை தள்ளி நிறுத்தும் அவளின் செய்கை கண்டு செயலறியா அவளுக்காக வருந்தினான்.

மௌனமாகவே பிறகு கழிந்த நாட்களில் இருவருமே மௌனத்தை உடைக்க முயலவில்லை.

********************


அன்றைய விடியல் இருவருக்கும் வேறு விதமாக அமைந்தன.
அவனின் தொலைந்த தன்னை மீட்க அவனாளே முடியும் என பலவாறு யோசித்து உணர்ந்து கொண்டவள், தெளிவுடன் மாலை வீடு திரும்பும் அவனுக்காக காத்து கொண்டிருந்தாள்.

எல்லாவற்றையும் அவனுடன் பகிர்ந்து அவனுக்கும் மட்டுமில்லாமல் அவளுக்கும் புரிய வைக்க வேண்டிய பதில்களை அவனிடம் வேண்டி, கேள்விகளோடு காத்துக்கொண்டிருந்தாள்.
அவன் வருகைக்கு முன் அவன் என்னை தாங்கி வந்தது அலைபேசி அழைப்பு.

அமிழனின் என்னை கண்டு அவள் மனம் கொண்ட ஆறுதலே உரைத்தது அவனுக்கான தேடலை., அந்த இனிமையோடே அலைபேசியை காதிற்க்கு கொடுத்தாள்.

" ஹலோ மாமா " என்று அலைபேசியை விரைந்து எடுத்த அவளின் கூற்றில் உள்ள மகிழ்ச்சியின் அளவுகோலை உணர்ந்தவன் நிச்சயம் இதை எதிர் பார்க்கவில்லை.

அலைபேசி எடுப்பாலோ மாட்டாலோ என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு அவள் குரலில் உள்ள இனிமையை கண்டு ஒரு நொடி தடுமாறினாலும் அதை ஒதுக்கி அலைப்பேசி அழைத்திற்க்கான காரணியை சொல்லிவிட்டான்.

" டுக்.... தாக்ஷி, இளங்கோ அண்ணா அவங்க பாப்பாக்கு ஸ்கூல் லீவ்'னால பாப்பாவையும் அத்தாச்சியயும் ஊருல விட்டுட்டு வர இன்னைக்கு கிளம்புறாங்க , நீயும் அவங்களோடவே கிளப்பிடு ....
எல்லாம் பேக் பண்ணி ரெடியா வச்சுக்கோ...
ஈவினிங் சீக்கிரமவே கிளம்பனும்.." என அவனின் கூற்றில் இப்போது செய்கை அறியா நிற்பது தாக்ஷியின் முறை ஆகிற்று..

அவர்கள் சொந்த ஊரான நெய்யூலியில் நடைபெறவிற்கும் திருவிழாவிற்கவே இப்பயணம்,
பெங்களூரில் வசிக்கும் அவரகள் உறவான இளங்கோ குடும்பத்துடன் தாக்ஷி முன்னரே செல்வதாகவும், பின்னர் ஜெய்மி எய்டனை அழைத்து கொண்டு அமிழன் வருவதாகவும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பயணம் தான் என்றாலும் இப்போது இவ்வளவு விரைவாகவே அவனை விட்டு செல்ல போவதை அறிந்து அதிலும் அவளவனிடம் பேசி தெளிவு பெறாமல் செல்ல போவதை கண்டு உள்ளுக்குள் உழன்றாள்.

மாலையில் விரைவாக வீடு திரும்பிய அமிழன் அதே அவசரத்தோடு அவளை கிளப்பினான்.
அவனிடம் தனித்து பேசும் நேரம் அவளுக்கு கிடைக்க பெறவில்லை, அவனும் கொடுக்க வில்லை.

அவன் முகத்தை திரும்பி திரும்பி பார்த்தவாறே நடந்துவந்தவள் தடுமாறி விழப்போனத்தில் அவள் கையை பிடித்துக்கொண்டவன், பிறகு விடும் எண்ணமே இல்லாது மறந்து போக கோர்த்த கரங்களை பிரிக்கவில்லை. அவர்கள் குடியிருப்பு வாயில் வரை வந்தும்கூட சேர்த்த கைகளை விலக்கவில்லை.
தன் முகத்தையே அடிக்கடி திரும்பி திரும்பி தாக்ஷி பார்ப்பதை உணர்ந்தவன், அவள் கண்ணோடு கண் நோக்கி முகம் பார்ப்பதை தவிர்த்தான், எங்கே பார்த்தாள் தாமே அவளை அனுப்ப மாட்டாமல் இருந்துவிடுவோம் என்று நேராக பார்ப்பதை தவிர்த்தான்.

தாக்ஷியை இங்கிருந்தே ஏற்றிக்கொண்டு செல்லவதாக ஏற்பாடு... இளங்கோ குடும்பம் வந்துவிட்டதற்கான அடையாளமாக அவர்கள் குடியுருப்பின் முன் நெருங்கி வந்த அவர்கள் மகிழுந்தை கண்டவள் அவன் கைக்குள் இருந்த அவளின் கைகளை இப்போது அழுந்த பதித்து இம்முறை அவள் கோர்த்துக் கொண்டாள்.

விடைபெறும் நேரத்தில்
" மாமா... " என உள்ளிருந்து ஆழமாக அழைத்த அவனவளின் குரலில் தன்னை தொலைத்தவன் அவளை பார்த்து தோளோடு லேசாக அனைத்து விலகி
" பத்திரம் ஓகே.. நான் லீவ் கிடைச்ததும் சீக்கிரம் வந்துறேன் "

" எப்போ ... "
என அவள் அவனை பார்த்த பார்வை அவனுக்கு புதிது.
ஏக்கம் எதிர்பார்ப்பு என அணைத்துமாய் ஒற்றை பார்வையில் ஒற்றை கேள்வியில் பிரிவுக்கான அவளின் ஏக்கங்களை அவனுக்கு பறைசாற்றின.

அவளின் பார்வையின் கனத்தை உள்வாங்கியன்,

" சீக்கிரமே "
என அவளின் கையோடு அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்தான்.

........................................

தாமததிற்கு மன்னுச்சு தோழமைகளே.... லிட்டில் வேலை அண்ட் லிட்டில் லெஸி...

இன்னும் 3 எபி தான். வித் இன் 4 டு 5 டேஸ்'ல கதை பினிஷ் பண்ணிடலாம்....

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்

கீர்த்தி😍

http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 16 பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் ,

அத்தியாயம் 16

ஆதவன் இறங்கிய மாலை வேலையில் நெய்யூலியே அமைதியாக இருக்க அவர்கள் வீட்டிலிருந்து மட்டும் சத்தம் வந்து கொண்டிருந்தன. பாட்டிக்கும் பேத்திக்குமான வாக்குவாதங்கள்.

" அப்பத்தா..... " என அவளின் கத்தலுக்கு அசராமல் பதில் பார்வை பார்த்தார் வெங்கடலட்சுமி.

" இப்ப முடிவா என்ன தான் சொல்றீங்க..."

" இனி புதுசா என்னடி முடிவு சொல்லனும். அதான் சொல்லிட்டேன்ல காப்பு கட்டினத்துக்கு அப்புறம் யாரும் ஊர விட்டு போக கூடாது.. உன் அப்பாமாருங்களே வேலைய முடிச்சுட்டு புதுக்கோட்டைல ரா தங்காம தினமும் இங்க வந்துடுறாங்க , இவ என்னடானா இப்ப போய் பெங்களூருக்கு கிளம்பணும்னு வந்து நிக்குறா...
இன்னும் 5 நாள்ல திருவிழாவை வச்சுக்கிட்டு இவ பண்ணுற அழும்பு இருக்கே...
ஏட்டி என்னடி புள்ள வளர்த்து வச்சிருக்க" என தாக்ஷியிடம் ஆரம்பித்து வேணுவிசாலட்சியிடம் முடித்தார்.

நெய்யூலிக்கு தாக்ஷி வந்து நான்கு நாட்கள் ஆகின. ஊரில் திருவிழா பொருட்டு காப்பு கட்டிருக்கும் நிலையில் தான் பெங்களூர் செல்ல வேண்டும் என அடம் பிடித்த தாக்ஷியை இடித்து கொண்டிருந்தார் வெங்கடலட்சுமி.

அவரை முறைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பிய தாக்ஷியை பார்த்தவர்,

"எங்கடி கிளம்புற"...

"ம்ம்ம்ம்.... என் மாமா வீட்டுக்கு.. மாமா வீடு இங்க இதே ஊருல தான இருக்கு... அங்க போலாம்ல " என முறைப்பாக கூறியவள்,
" வேணும்மா இப்போ வரீங்களா என்ன... " என அவளின் சித்தியை அழைத்தாள்.

"ஏட்டி நீ போறதுனா போ... அவ இந்த வீட்டு மருமக, அவளுக்கு இருக்கு ஆயிரம் வேலை.. அது மாதிரி நீயும் போய் உன் வீட்டு வேலைய பாக்குற வழிய பாரு...
நானே சொல்லணும்னு நினைச்சேன் உன் மாமனோட அப்பத்தா வையுரதுக்கு முன்னாடி உன் வீட்டுக்கு போய் சேரு "
என அவளின் அப்பத்தா கூறவும் அவரை முறைத்து விட்டு,

" அப்போ இது என் வீடு இல்லனு சொல்றல.. இனி இங்க வருரெனா இல்லையான்னு பாரு " என விறு கொண்டவளை சமாதானம் படுத்தி பிரபுவை அமிழனின் வீடு வரை அவளின் துணைக்கு அனுப்பி வைத்தார் வேணுவிசாலாட்சி.

****************

இங்கே அமிழனின் வீட்டுக்கு வந்தவள் அவர்களது அறைக்குள் வந்து அறையை சிறிது நேரம் அளந்துகொண்டிருந்துவிட்டு அமிழனுக்கு அழைத்தாள்.

அலைபேசியில் அவளின் எண்ணை கண்டு புன்னகைத்தவன்,

" சொல்லுங்க மேடம்.. இப்ப என்ன பஞ்சாயத்து முடிஞ்சதா இல்லயா... "
அதற்குள் அவனுக்கு எப்படி தெரியும் என யோசித்தவள் அதை அவனிடமே கேட்டும் விட்டாள்,

" எப்படி தெரியும்.... "

"நெய்யூலி'ல திருவிழாக்கு போற்றுக்க ஸ்பிக்கர்ஸ் விட பாட்டி பேத்தி சத்தம் தான் பெருசா கேக்குதாமே.... "

"மா....மா..... " என சிணுங்கியவளை கண்டவன்,

"ஓகே... இப்ப என்ன வேணுமாம் தாக்ஷிம்மாக்கு.."

"மாமா... நீங்க... நீங்க.. எப்பதான் வருவீங்க மாமா.. " என வாய்விட்டு கேட்டே விட்டாள்.
சற்றுமுன் தன்னிடம் வர வேண்டும் என்பதற்காகவே அவளது பாட்டியுடன் சண்டை போட்டதை அறிந்தவன் இப்போது தனது வரவை எதிர்பார்த்தவளின் குரலில் தெரிந்த தனக்கான தவிப்பை உணர்ந்துக்கொண்டவனின் மனம் உவகையில் நிறைந்தது, அதே மனநிறைவு அவன் குரலிலும,

"டுக்குக்கு எப்ப வரனும்.... "

"ம்ம்ம்ம்... "

"பதில் வரலயே..... "

' எவ்வளவு ஏக்கமா கூப்பிடுறேன், இதில எப்ப வர'னு இன்னும் கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க' என மனதிற்குள் அவனை வைதவள்,

"எவ்வளவு சீக்கிரமோ வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம்... அதோட... " என நிறுத்தினாள்.

" அதோட....... வேற என்ன தாக்ஷி "

"அது..... நீங்க வாங்க சொல்றேன் " என இதுவரை இலகுவாக பேசியவள்,
" உங்ககிட்ட நான் பேசணும் மாமா..... நிறையா..... " என அவள் குரலின் தொனி மாறி ஆழ்ந்து ஒலித்தது.

***************

அமிழனிடம் பேசி விட்டு அமர்ந்தவள் இம்முறை அவனிடம் அனைத்தையும் உரைத்து தன் மனதில் சிறு சஞ்சலம் கூட இல்லாமல் அவனின் காதலை பெற வேண்டும், தான் சொல்வதை அவன் எவ்வாறு எடுத்து கொள்ள போகிறான் என்ற அச்சம் வேறு எழுந்து தவித்தாலும் அவனிடம் அனைத்தும் சொல்லிவிடவேண்டும் என்ற முடிவில் மட்டும் பின்வாங்கவில்லை.

தன்னுள் அவ்வெனத்தை கூறு போட்டு கூறு போட்டு உழன்றவள் அமர்ந்த நிலையிலே உறங்கிவிட்டாள்.

உறக்கத்தில் இருந்தவள் கதவை திறந்து சாத்தும் சத்தத்தில் விழித்தாள். எதிரில் நின்ற அமிழனை கண்டு விழித்து, விழிகள் அகற்றி அவனயே உற்று பார்த்து கொண்டிருந்தாள்.

'அவனோடு பேசி சில மணி நேரம் தானே ஆகிறது அதற்குள் எப்படி வந்தான்'
'ஹையோ இது நிஜம் தானா ' என கண்ணை மூடி திறந்து பார்த்தவள் அப்படியும் நம்பாமல் தன்னை சோதித்து பார்த்து கொள்ள கிளம்பியவளின் செய்கையை கண்டவன்,

" ஓய்... டுக்கு உன் முன்னாடி நிக்குறது உன் மாமாவே தான் " என புன்னகை சிந்தி அவளை நோக்கி கைகளை விரிக்க அடுத்த நொடி தாக்ஷி அவன் கைகளில் இருந்தாள்.

அவனின் சட்டையின் காலரை இழுத்து இன்னும் தன்னோடு சேர்த்து நிறுத்தியவள்
" போன தடவ ரெண்டே நாள்'ல வந்தீங்கள இப்போ மட்டும் ஏன் நாலு நாள்.... "
என உரிமையால் கோபமாக வார்த்தைகள் விழுந்தாலும் கண்கள் முழுவதும் அவனுக்கான நேசத்தை, தேடலை தேக்கி வைத்தவளின் வதனத்தை பார்த்தவன் மெய் மறந்தான். திகட்ட திகட்ட தித்திக்கும் தேன்சொட்டாய் இனித்தது.

" யோவ் மாமா.... சொல்லு ஏன் லேட் இந்த தடவை... " அவளின் இந்த புதிய பரிமாற்றத்தில் இதழ் விரித்து சிரித்தான்.

" யோவ்...... மாமா.... உன்னைத்தான்.. பதில் சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம் " என இவளும் சேர்ந்து சிரிக்கவும் அவனுக்கு சிரிப்போடு வெட்கமும் வந்து ஒட்டிக்கொண்டது.

தன் கைவலைகளுள்ளே அவளை வைத்திருந்தவன், தானும் அமர்ந்து அவளையும் தன் அருகே அமர்த்திக்கொண்டான்.

" அப்பவும் இப்பவும் உன்னை பார்க்க தான் ஓடி வந்தேன்னு உனக்கு புரிஞ்சுடுச்சா டுக்கு... " என்றவனின் புன்னைகையில் இதுவரை திடிரென வந்த அவனின் வருகையால் அவளுள் ஒழிந்திருந்த கலக்கம் மேலேற தயக்கங்களோடு அவனை நோக்கி,

" மாமா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என அவளின் கைகளை விலக்கி நகர்ந்து அமர முயன்றவளின் முயற்சியை முறியடித்தவன்

" எது சொல்றதா இருந்தாலும் இப்படி இருந்தே சொல்லு... "

தான் சொல்லி முடித்ததும் இப்போது போலவே இருப்பானா என்ற தயக்கம் எழுந்தாலும் அவனிடம் உரைக்க ஆயுத்தமானாள்..

" மாமா.. நான்.... " என தயங்கியவளை கண்டவன்,

"இங்க பாரு தாக்ஷி..." என அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பி அவளின் கன்னங்களை கைகளில் ஏந்தியவன்,

"கொஞ்ச நாளாவே நீ ரெஸ்ட்லெஸ்'சா இருக்கிற, என்கிட்ட சொன்னா நீ பெட்டரா ஃபீல் பண்ணுவனா சொல்லு இல்லனா ஜஸ்ட் லீவ் இட் உன்னை வருத்திக்காத... "

" இல்ல மாமா நான் உங்ககிட்ட சொல்லியே ஆகனும் " என சில நொடிகள் இடைவெளி விட்டவள்..
" மாமா ......நான் .....நம்ம மேரேஜ்க்கு முன்னாடி .......மதி மாமா'வ.... நீங்க தான் மதி மாமானு...... தப்பா நினைச்சு.... மாமா ... அது வந்து...."
என வார்த்தைகள் சரியாக கோர்க்க முடியாமல் திணறி அவனை நேர்கொண்டு நோக்க முடியாமல் அவள் கண்களுக்குள் ஒரு இடத்தில் நிற்காமல் வட்டம் அடித்துகொண்டிருந்த அவளின் இரு கருவிழிகள் அவன் விழிகளோடு கலந்து நின்றன அவளின் இதழ் அசைவுகளை அவனது விரல் கொண்டு நிறுத்திய அமிழனின் செய்கையால்.

அவனின் விரல் நீக்கி பேச முயற்சித்தவளை திரும்ப தடுத்தவன்,

" எனக்கு தெரியும் "
என அமிழன் கூறிய வாக்கியத்தில் விடுக்கென நிமிர்ந்து பாரத்தாள்.

" ஈஸி டுக்கு... எனக்கு தெரியும்... "

" மாமா .... நான்..... உங்களுக்கு எப்படி தெரியும்.... மாமா.... நான்.... "
என தன்னிலை விளக்கம் கொடுக்க ஆரம்பித்தவளை தடுத்து,

" ஸ்ஸ்ஷ்...... நான் தான் சொன்னேன்ல... தெரியும் எல்லாமே ...
நீ இப்படி என்கிட்ட சொல்ல தயங்க வேணாம் டுக்கு..
இனபாஃக்ட் நமக்குள்ள இனி இந்த டாபிக் வேணாம், உன்னை கஷ்ட படுத்திக்காத டி"

அவனுக்கு முன்னரே தெரியும் என அவனது கூற்றில் அவளுக்கு நிம்மதி அளித்த அதே வேலையில் நிம்மதியும் இல்லாத பாரம் கலந்த உணர்வு குவியலில் தத்தளித்தாள்.

"மாமா நீங்க .. என்னை தப்பா .. நான் செஞ்சது தப்பா.... "
இன்னும் வார்த்தைகளை கோர்க்க முடியாமல் எங்கே அவன் தன்னை தவறாக நினைத்து விட்டானோ என மறுகியவளின் விழிகளில் கலக்கத்தை கண்டவன், அவளை மேலும் தன்னருகே இறுக்கி,

" தாக்ஷி, நீ இப்படி நினைக்கிற அளவுக்கு நான் எப்பயாச்சும் நடந்திருக்கென..
நீ இத நினைச்சு தான் உனக்குள்ள குழப்பிட்டிருக்கேன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு...
ஓகே... ஃப்ரஸ்ட் அண்ட் லாஸ்ட்டா பேசிடலாம்..
மதி, மேகனால ஆரம்பிச்சு எனக்கு எல்லாமே தெரியும்.. எப்ப தெரியும் எப்படி தெரியும்ங்கிற டாபிக் வேணாம்...
அப்போ இட்ஸ் நாட் அ லவ்'னு ஈஸியா வெளிய வர முடிஞ்ச உன்னால இப்போ மட்டும் என்ன குழப்பம்.. ம்ம்ம்...
அண்ட் இதில தப்பா நினைக்க என்ன இருக்க... அதுவும் என் தாக்ஷிய என் டக்'க, என் டுக்குவ நான் எப்படி என்னை விட்டு தனியா வேற ஒரு ஆளா நினைக்க முடியும் "

"இது... இது தான் மாமா... ஏன் என் மேல இவ்வளவு அபஃக்ஷன் வச்சருக்கீங்க.. உங்க அபஃக்ஷனுக்கு நான் ட்ரூ'வா இருக்கேனா"

"அத ப்ரூவ் பண்ணி காட்டினா இனி உளராம இருப்பீயா "

"மாமா ... "

"இந்த குழப்பம் தேவையே இல்லாதது டி.. இனி இதுக்கு மேல நீ யோசிக்கவே கூடாது "
என அவளை அருகே அனைத்து அவள் கற்றுத்தந்த பட்டர் ஃப்ளை கிஸ்'சுடன் அவனுக்கு தெரிந்தயும் திருப்பி ஒரு சேர அவளுக்கு கற்றுக்கொடுத்தவன்,
அவளுக்குள் அலைகளித்த கேள்விக்கு விடையாக அவனே உள்ளதை அவளுக்கு உணர்த்தினான்.

நிமிடங்கள் நொடிகளாக கரைய, அந்நிமிடங்கள் இருவரின் மனதில் பொக்கிஷமாய் சேமித்தன. நீடித்த மோன நிலையை விட்டு விலகியவள் அவனை நேர் காண முடியாமல் அவள் பூட்டி கொண்ட நாணம் தடுக்க அவனின் விரல்கள் கோர்த்து அவன் மீதே சாய்ந்து அமர்ந்தவளுக்கு பேச்சு என்பதே மறந்து போயின.

"இன்னும் கான்பியூஷன் இருக்கா.. திரும்ப வேணும்னா ப்ரூவ் பண்ணி காட்டடும்மா " என வினவியவனின் செய்கையில் மேலும் நாணம் கொண்டவள் அவன் சட்டை பட்டனை தாண்டி நிமிரவில்லை.

" நீங்க ஏன் மாமா உங்க காதல முன்னாடியே சொல்லல " என அவனின் சட்டை பட்டனை திருகி எடுப்பது போல் பிய்த்து கொண்டிருந்தவள் அவன் கூறிய பதிலில் குழப்பமாகி பார்த்தாள் என்றால் அவனின் அடுத்த கூற்றலில் மேலும் குழம்பினாள்.

" லவ்'வா.. நான் எப்போ லவ் பண்ணுனேன்.. "
என்ற அவனின் பதில் வினவளில் தலையுரத்தி விழி விரித்து பாரத்தவளிடம்,

" இப்படி பாக்காதடி, சும்மாவா உன் கண்ணுல மயக்கி வைக்கிற இந்த மாதிரி கண்ணை விரிச்சு பாத்தேனா அந்த கண்ணுல பட்டர்ஃபிளை கிஸ் நியூ வெர்சின் 2.0வ நான் ரிசர்ச் பண்ண வேண்டியதா இருக்கும். "

'இந்த மாமா என்ன சொல்ல வராங்க, லவ் இல்லன்னு சொல்லிட்டு கண்ணு ரிசர்ச்'னு உளருறாரு... ' என கடுப்பானவள்.

" யோவ் மாமா.. எதையும் முழுசா தெளிவா சொல்ல மாட்டீங்களா...இவ்வளவு நாள் குழப்பினது பத்தாத...,
அப்போ இந்த ரிங்'க்கு என்ன அர்த்தம் " என அவன் அவளுக்கு அணிவித்த செயினை உயர்த்தி காட்டினாள்.

அதற்கான அவனின் பதிலில் பெண்ணவள் சிலையனால் என்றால், அடுத்து அவள் உரைத்ததில் அமிழன் சிலையாகி போனான்.


...........................................

இன்னும் இரண்டே இரண்டு எபி தோழமைகளே.... எனக்கும் முடிக்க போறேம்னு ஜாலியா இருக்கு .
🙈
🙈
🤩
😛


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்

கீர்த்தி😍



http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 17 பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் ,

அத்தியாயம் 17

"அப்போ இருந்து இப்ப வர இந்த கண்ணு தாண்டி என்னை உன்கிட்ட மொத்தமா இழுத்தது..
என்ன பார்வைடி இது... இப்படி என்னை போட்டு சாய்க்குது "
என தான் காதல் இல்லை என்று கூறி குழப்பவும் விழி உயர்த்தி அவனை பார்த்தவளை கண்டு
கரகரப்பாக வந்தது அவனின் குரல்.

" உனக்கு ஞாபகம் இருக்கா டுக்கு உன்னை சின்ன வயசுல டக் டக் னு கொஞ்சம் கிண்டல் பண்ணவோம்.. ஆனா அப்ப கூட இந்த கண்ணு கோபமோ அழுகையோ காட்டினதில்லை.."

"ஹலோ மாமா... அது உங்களுக்கு கொஞ்சமா .... " என இடையிட்டு முறைத்த தாக்ஷியை அடக்கி,

அவளின் இதழ்களை தன் விரல்கள் கொண்டு தடுத்தவன்
"ஸ்ஷ்ஷ்... நீ தான கதை கேட்ட, நடுல பேச கூடாது... 'உம்' மட்டும் தான் நீ சொல்லனும்.. சரியா.. "
என்றவனின் கூற்றுக்கு சம்மதமாக மண்டைய ஆட்டி கை கட்டி கதை கேட்க சிந்தையாக அமர்ந்திருந்தவளின் பாவனையை பார்த்தவன் அவனுக்குள் உதித்த சிரிப்பை அடக்கி அவர்களின் சீறார் பருவத்தை நினைவு கோர்ந்தான்.

சிறு வயது முதலே அமிழன் அவனின் அத்தையான வேணுவிசாலாட்சி செல்லம்.
அவரின் திருமணத்திற்கு பின் தாக்ஷி அமிழனின் இடத்தை பிடித்து விட்டாள்.
இதுவரை தான் மட்டும் ஸ்பெஸலாக இருந்த அவன் அத்தைக்கு தாக்ஷியின் வரவு போட்டி உணர்வை மட்டுமே அமிழனுக்கு கொடுத்தன மாறாக அதில் கோபமோ பொறமையோ இல்லை.

அந்த போட்டி உணர்வில் அவன் கொடுக்கும் சீண்டல்கள் கிண்டல்களை கண்டு தாக்ஷி சிணுங்கினாளும் அவளின் கண்கள் கோபமோ அழுகையயோ பிரிதிபலித்ததில்லை.
எதுனாலும் விழிகளை அகற்றி விரித்து அவனிடம் உரையாடுகையில் அந்த கண்கள் காட்டும் பாவனைகள் அவன் ரசிக்கும் படியாக இருக்கும்.

ஆனால் முதன் முதலாக அவனுக்குள் வந்த தாக்கம் அவள் கண்களில் கண்ட வெறுமையில் தான்.
அவளின் அன்னையின் இழப்பினால் உண்டான தாக்கத்தில் அவள் மூழ்க,
அவள் கண்கள் பிரிதிபலித்த வெறுமையில் அவன் மூழ்கினான்.
அதற்காக அப்போதே நேசம் என்றெல்லாம் இல்லை,
ஏனோ அந்த வெறுமை அவனையும் அடைத்தது.

அவள் அன்னையின் இழப்பின் பின் பகலவன் சந்திரன் என யவர் ஆட்சி செய்தாலும் அவள் காணப்படுவது அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் தின்றில் மட்டுமே.
அதுவே அவளின் இருப்பிடமாக மாற தொடங்கியது.
கிணற்றடியில் தூரத்தில் எதையோ தேடி வெறித்து அமர்வதை வழக்கமாக்கி கொண்டாள்.
அவளின் சித்தி அவளை தேடி வீட்டினுள் அழைத்து சென்றாலும் திரும்பவும் கிணற்றடிக்கே வந்து அவற்றையே இருப்பிடமாக கொள்ள தொடங்கினாள்.

பலமுறை அவளை அங்கே கண்ட அமிழன், அவள் முன் சென்று நின்றாலும் கூட கருத்தில் கொள்ளாமல் எங்கோ இலக்கில்லாமல் வெறித்து கொண்டிருந்த அவள் கண்கள் அவளை விட அமிழனை அழுத்தியது.
எல்லாம் சில காலம் தான் பிறகு அவள் அன்னையின் இழப்பில் இருந்து மீண்டு விடுவாள் என நிதர்சனம் உணர்ந்தாலும் அதையும் தாண்டிய அவளுக்கான தவிப்பு அமிழனுள் எழுந்தது.

அவளின் செய்கையை உணர்ந்த வீட்டினர், பிரபு, அமிழன் முதற்கொண்டு அனைவரும்
கொஞ்ச கொஞ்சமாய் அவளை மாற்ற முயற்சித்தினர்.

விளையாட்டில் சேர்த்து கொண்டு அவளின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்த அமிழன் பிரபுவுடன் சென்று அனைவருடன் சேர்ந்து விளையாடினாலும் அதில் உயிர்ப்பே இல்லாமல் பங்குகொண்டாள்.

அன்றும் அவ்வாறே விளையாட்டில் அடிப்பட்டும் தோற்று விட்டும் கூட எந்த உணர்வையும் பிரிதிபலிக்காமல் ஓரமாக சென்று அமர்ந்தவளை பார்த்த அமிழன், அவளுக்கு அடிபட்டதை கூட உணராமல் இருப்பவளை கண்டு ஒரு முடிவுடன் அவளின் அருகே சென்று அமரந்தான்,

" தாக்ஷி... " என உரக்க அழைத்து அவளின் கவனத்தை ஈர்த்தவன்,
" ஏன் அழுகாம இருக்க....பாரு எப்படி அடி பற்றுக்கு.... உனக்கு வலிக்கலயா....
அழுதுடு .. மொத்தமா எல்லாம் கரையுற வர அழுதுடு.. ஆனா இது தான் கடைசி தடவயாய் இருக்கனும்.. "

என திடிரென அதிரடியாகவும் கட்டளையாகவும் அழுது விடு என உரைத்தவனின் முன் அவளின் கருவிழிகள் இரண்டும் சத்தமில்லாமல் அவள் அனுமதியில்லாமல் நிறைந்து புவியிர்ப்புதிசை விதியின் படி கீழ் நோக்கி சென்றன.

அவளது அன்னை தவறிய அன்று மட்டும் வாய் விட்டு கதறியவள் அதன் பின் அவளுள்ளே இறுகி கொண்டாள்.
இதோ இன்று திடிரென வந்த அவனின் அதட்டலில் எங்கோ வெறித்த கொண்டிருந்த அவளின் விழிகள் அவனில் நிலைத்து நீர் கொண்டு நிறைந்தன.
தாக்ஷி அழுது முடித்து ஓயவும் அவள் சித்தி பாட்டி பிரபு என அனைவரும் வந்து,
என்ன எதுவென்று அரவனைத்து அவளின் காயத்தை கவனிக்க ஆர்ம்பித்தனர்.

அதன் பின்னர் வந்த நாட்களில் அவளின் நிர்மலான பழைய முகம் அவனுள் இதுவரை என்னென்று தெரியாமல் எழுந்த தவிப்புக்கு பிரியாவிடை கொடுத்து.

அந்த வயதில் அவனுக்கு இருந்த முதிர்ச்சி அவனுக்கு உரைத்தது ஒன்றையே
அவளின் அகம் கொண்ட சந்தோஷம் மட்டுமே அவனின் நெஞ்சை நிறைக்க முடியும் என்பதே ஆகும்.

அது ஏன் என்ற கேள்விக்கும் அவன் அப்போது விடை தேட முயற்ச்சிக்கவில்லை.

அன்று அவனால் அவனுள் அமுக்கப்பட்ட கேள்விக்கு அவன் கல்லூரி முடிக்கும் தருவாயில் பதிலை உணர ஆரம்பித்தான்.
கேள்வியை ஒதுக்கினாலும் அந்நாள் வரை அவனின் அனுமதியே இல்லாமல் அவனை முழுவதும் ஆக்கிரமித்திருந்தாள்.
அப்போதும் கூட அவனுள் எழுந்த உணர்வலைகளுக்கு அவன் பெயர் வைக்கவில்லை.

"காரணமே இல்லாம, அமைதியா எனக்குள்ள நீ முழுசா நிரஞ்சுருந்த தாக்ஷி, அது ஏன் எப்படிலாம் தெரியாது,
இதோ இந்த ரிங் வாங்கும் போது கூட எனக்கு தோணுன உணர்வுக்கு பெயர் என்னனு தெரியாது.
ப்ர்ஸ்ட் மன்த் சலாரில சாமிக்கு எடுத்து வச்சிட்டு அப்புறம் செலவு பண்ணு'னு அம்மா சொல்லும் போது, என் முத செலவு உனக்காக தான் இருக்கணும்னு தோணிச்சு,
அதுக்கு மேல வேற எதுவும் யோசிக்காம நேரா போய் இந்த ரிங் வாங்கிட்டு வந்தட்டேன்.
வாங்கிட்டு வந்ததும் என் சிந்தனை ஃபுல்லா நீ தான் இருந்த தாக்ஷி, நிறையா கேள்விகளோட...
இத நீ ஏன் இப்போ வாங்குன, எதுக்காக வாங்குன, என்ன நினைச்சு வாங்குனனு இப்படி அடுகடுக்கா நிறைய கேள்விகள் எனக்குள்ள....
அப்போ ஒரு எண்ணம் எழுந்து என்னயவே எனக்கு க்ளியரா உணர்த்தினது..
என் தாக்ஷியா என்னால மட்டும் தான் சந்தோசமா வச்சுக்க முடியும்னு, அதுக்கு வாழ்க்கை ஃபுல்லா நான் உன் கூட இருக்கணும்ங்கிற முடிவுக்கு என்னை கொண்டு வந்தது....

எனக்கே என்னைய உணர்த்தின இந்த ரிங் எனக்கு எப்பவும் ஸ்பெஸல்"
என தன் அருகே வாகாக தன் தோள் சாய்ந்து தான் சொல்வதை இமைக்க மறந்து கேட்டு கொண்டிருந்தவள் அணிந்திருந்த மோதிரத்தை சுட்டி காட்டியவன்,

"இதுக்கு இது தானு பெயர் வைக்கலாம் எனக்கு தெரில தாக்ஷி..
என்னால மட்டும் தான் உன்னை ஹாப்பியா வச்சுக்க முடியும்னு ஏன் தோணுச்சுன்ற கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல...
எனக்குள்ள இருக்குறதுக்கு பெயர் லவ்'ன்னா அது அப்படியே இருந்துட்டு போகுட்டும்.. அத நான் உன்கிட்ட வாய் வார்த்தையா சொல்லணும்னு நீ விரும்புன நான் சொல்லுறேன்...."

என நீண்ட கால அவளின் பால் அவன் கொண்ட நேசத்தை விளக்கி அவளுக்காக மட்டுமே அவள் கேட்ட காதலை வாய் வார்த்தையாக கூற தயாராகிருந்தவனை கண்டு உள்ளம் பொங்க அவன் தோளில் இருந்து எழுந்தவள்.

" வேணாம் மாமா... அந்த ஒரு வார்த்தை மட்டும் நிறைவை கொடுத்துடாது.. அதான் என்னை ஒவ்வொரு நிமிசமும் உணர வைக்கிறீங்களே... இத விடவா அந்த ஒரு வார்த்தை எனக்கு உணர்த்தபோகுது... " என அழகாக அவன் கொண்ட நேசத்தின் கனத்தை உணர்ந்தள், மறுத்தாள்.

"மாமா.......
அப்போ கல்யாண பேச்சு வீட்ல அவங்களா ஆரம்பிச்சது இல்லயா.... "
என தொடர்ந்து கேள்வி எழுப்பியவளிடம்

"மீஹிம்..... இது முழுக்க முழுக்க நம்ம வீட்ல அவங்களாவே பேசி
கல்யாணம் வர ப்ரொஸிட் பண்ணுன அரேஜ்ட் மேரேஜ்...
நான் இதுல எங்கேயும் வரல...
வீட்ல ஆரம்பிச்ச பேச்சு வார்த்தையை, நான் முடிச்சு வச்சேன்னு வேணும்னா சொல்லலாம்... "
என கண்ணடித்தவன்,

" நம்ம வீட்ல மதி, பிரபுக்கு மட்டும் என் டுக்கு'க்கான என்னோட ஆபக்ஷன் பத்தி தெரியும்.. அவங்க மூலமா ஐயா இரண்டு வீட்லயும் மூவ் பண்ணி என் டுக்கு'வோட அமிழனா ரைட் ராயலா சீக்கிரமாவே மாறிட்டேன்.."
என நகைக்க அவளோ விழித்தாள்..

" என்ன பிரபுக்கா... அப்போ பிரபு தான் என்னை பத்தி எல்லாத்தையும் உங்ககிட்ட சொன்னான.... " என இன்னும் லேசாக தயக்கமிருந்தது அவள் வார்த்தைகளில்.

"நீங்களே எனக்கு எல்லாமுமா அமைஞ்சது இட்ஸ் மை ட்ரெசர் மாமா...
ஆனா நா... நான்.. உங்களுக்கு பொருத்தமானவ..... " என தடுமாறிய இதழ்களுக்கு நிறுத்தம் கொடுத்தவன்,

" நீ என்னோட சந்தோசம் தாக்ஷி, மீதியுள்ள என் மொத்த வாழ்க்கையும் நீ மட்டும் தான்.
எனக்கு ரொம்ப நாள் உன் கூட வாழனும், சந்தோஷமா வாழனும், உன் சந்தோஷமா நான் இருக்கணும் .....

என்னால மட்டும் தான் உன்னை சந்தோஷமா வச்சுக்க முடியும்னு ஆரம்பிச்ச நேசம்,
என் டுக்கு'னால மட்டும் தான் எனக்கு ஒரு ஃபுல் ஃபில் லைஃப் கொடுக்க முடியும்னு புரிய வச்சருக்கு...
நீ தான் என்னை முழுமையாய் ஆக்கிருக்க தாக்ஷி..."

என அவள் முகத்தை கைகளில் தாங்கி கூறியவனை இத்தனை நேரங்களாக அவன் மேல் பதிந்த கண்களை அகற்றாமல் அவனையே பார்த்தவள் அவனை மறுத்து,

" இல்ல மாமா உங்களால நான் தான் ஃபுல் ஃபில் ஆகிருக்கேன் ..."

" சரி நம்மளால மட்டும் தான் நம்ம லைஃப் ஃபுல் ஃபில் ஆகிருக்கு..
இனி நோ மோர் ஆர்ஃக்யுமென்ட்ஸ் ஓகே'வா "

அதற்கு தலையசைத்து பேச முயற்சித்தவளை தன் தோளிலே திரும்ப சாய்த்து கொண்டவன்
" இட்ஸ் பிக் டே, ... ரொம்ப அழகான நேரத்தை சைலெண்ட்டா கண்ணை மூடி ரசிக்கலாம் டுக்கு..
இனி பேச்சுக்கு தடா ..." என்றவனிடம்


"மாமா... " என மென்மையாக இழுத்து
"நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுறேனே...
நாளைக்கு புதுக்கோட்டை வர போய்ட்டு வரலாமா " என வாகாக அவன் தோளில் சாய்ந்து கூறியவள் ஏனென்று அவன் கேட்கும் முன் அவளாகவே உரைத்த பதிலில் சிலையாகி போனான்.

*****************

அடுத்த நாள் மாலை,

ஆதவன் இறங்கி வீடு திரும்பியவர்களுக்கு அமைதியான யாருமில்லாத வீடே வரவேற்றது.
ஊரில் அனைவரும் கோவிலில் கூடியிருந்தனர்,
இன்று அமிழன் வீட்டு மண்டகபடி என்பதனால் அவனின் வீட்டினரும் விரைவாகவே சென்று விட்டிருந்தனர்.

புதுக்கோட்டைக்கு சென்று வீடு திரும்பிய தாக்ஷி அமிழன் இருவரும் விரைந்து தங்களை சுத்த படுத்தி கொண்டு அவர்களும் கோவிலுக்கு செல்ல தயாராகினர்.

கிளம்பி தெருவில் இறங்கி நடக்க முயன்ற தாக்ஷியை தடுத்து வண்டியில் ஏறுமாறு பணித்தான்.

"மாமா பக்கத்து தெரு'ல இருக்குற கோவிலுக்கு காரா... ரொம்ப ஓவரு மாமா" என மறுக்க பார்த்த தாக்ஷி அவனின் பார்வையில் அடங்கி ஏறினாள்.

வண்டியை இயக்கியவன் "இனி நீ வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்'பும் ரொம்ப முக்கியம் தாக்ஷி "
என பாடம் எடுத்தவனை கண்டு இன்னும் என்ன என்ன நடக்க போகுதோ என சலித்து கொண்டாலும்
அதில் அவளுக்கும் உவகையே, அதன் மகிழ்ச்சி கொடுத்த நிறைவோடே கோவிலுக்கு சென்று இறங்கினர்.

தீபாராதனை, அர்ச்சனைகள் முடிந்து கோவிலின் சுற்றில் அமர்ந்து பேச ஆரம்பித்த வேணுவிசாலட்சியும்
அமிழனின் அன்னையும் இவர்களின் வருகையை கண்டு அமிழன் தாக்ஷியின் அருகே வந்தார்கள்.

வேணுவிசாலட்சி " இவ்வளவு நேரம் கழிச்சா வருரது... போய் சீக்கிரம் சாமி கும்பிட்டுட்டு வாங்க "
என அனுப்பி வைத்தார். சித்தமே என ஈசனை தருசிக்க சென்றனர் தம்பதியர் இருவரும்.

மனம் நிறைந்த, மனம் ஒத்த தம்பதிகளாக ஈசனின் முன் நின்றவர்களுக்கு
வேண்டுதல் என்பதாக பெரிதாக ஏதுமில்லை.
கண்மூடி ஐயனை மனதில் நிறைத்தவர்கள் அவர்களுக்காக காத்து கொண்திருந்த
இரு அன்னைகளிடம் சென்றனர்.

ஈசனை தருசித்து வந்தவர்களிடம் அன்றைய பிரசாதமான சக்கரை பொங்கலை நீட்டினார் அமிழனின் அன்னை.

சிறிது எடுத்து கொண்டவன் இரு அன்னைகளுக்கும் பொங்கலை சிறிதாக பிட்டு ஊட்டினான்.
அவனின் திடீர் செய்கையில் விழித்தாலும் இருவருமே வாங்கி கொண்டனர்.
செயலில் பொங்கலை அளித்து அதன் இனிப்பு அவர்களின் தொண்டையில் இறங்குவதற்கு முன்,
கூற்றில் இருவரின் மனதில் அதனை விட அதிகமான இனிப்பை சொட்டு சொட்டாய் இறக்கினான்.

" நாங்க உங்களுக்கு ஸ்வீட் நியூஸ் சொல்ல வந்தா, நீங்க அதுக்கு முன்னாடி ஸ்வீட்டோட ரெடியா இருக்கீங்க "
என ஆரம்பித்து அவர்கள் அவசரமாக புதுக்கோட்டை சென்று வந்த காரணியை கூறவும் இரு அன்னைகள் கொண்ட மகிழ்ச்சியின் அளவு கோலை எந்த கருவி கொண்டும் அளக்க முடியாத அளவிற்கு ஆர்ப்பாட்டமாக அலைகளித்தது.

ஆம்,அவர்களின் அழகான சின்ன கூட்டில் புதிதாக அழகிய சிட்டு ஒன்று குடிபெயரவிற்கிறது.
அதனின் பொருட்டே புதுக்கோட்டை சென்று மகப்பேறு மருத்துவரை சந்தித்து உறுதிபடுத்தி வந்திருந்தனர்.

பெங்களூரில் அவள் இருந்த மனநிலையில் சரியாக தன்னை உணராதவள்,
இங்கு நெய்யூலிக்கு வந்த பிறகு அவளில் உண்டான மாற்றங்கள் அவளுக்கு மெல்ல மெல்ல புரிப்பட்டன.

அதனை உறுதிபடுத்தி தன் எண்ணங்களை அவளவனிடம் மட்டுமே முதலில் பகிர வேண்டும் என்று அவள் கொண்ட பேராவள் தான் நெய்யூலி வந்த நான்கே நாளில் அமிழனிடம் செல்ல வேண்டும் என்று அவளின் அப்பத்தாவிடம் சண்டையிட வைத்தது.

அது முடியாமல் போகவே வருந்தியவளுக்கு அன்றிரவே அவள் முன் வந்து இன்பத்தை அளித்தான் என்றால் அவள் அவனுக்கு பதிலுக்கு இச்செய்தியை கூறி அதனை விட அதிகமான இன்பத்தினை திருப்பி அளித்தாள்.

இருபெண்மணிகளையும் தூரத்தில் கண்ட இரு வீட்டு பாட்டிமார்கள் வர அவர்களை தொடர்ந்து வீட்டு ஆண்களும் வர செய்தி அறிந்த மொத்த குடும்பமும் சத்தமில்லாமல் மீண்டும் ஈசனை தரிசித்து பேரானத்தோடு வீடு திரும்பினர்.

அமிழனின் மனைவியாய் அழகாக மெருகேறியவள் தான் கொண்ட தாய்மையில் தன்னிறைவு அடைந்தாள்.


........................

Thank you makalae... ❣❣

பைனல் எபி நாளைக்கு ஈவினிங் இல்லனா டே ஆஃப்டர் டுமாரோ போட்டுருறேன்..
எனக்கு சப்போர்ட் செய்த அனைத்து அழகான உள்ளங்களுக்கும் மிக மிக நன்றிகள்... ❣❣😍

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி😍

http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போற போக்கில் ஒரு காதல்" கதையின் இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ்

அத்தியாயம் 18

கடும் பணி ஊடுருவும் ஞாயிறு கிழமை அதிகாலை வேலையில் ஊரும் வீடும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க சத்தமில்லாமல் எழுந்து கிளம்பி கொண்டிருந்தாள் தாக்ஷி.
இவள் கிளம்பி அறையை விட்டு வெளியே வர அங்கு அவளுக்கு முன்பே ஜெய்மி தயாராகியிருந்தாள்.

அறையை விட்டு வெளியே வந்த தாக்ஷி கதவை சாற்றிம் போது எழுப்பிய சத்தத்தில் திரும்பினாள் ஜெய்மி.

"பாத்துடி... மொத்த வீடே எழுந்துட போகுது "

"ஓகே .. ஓகே... போலாமா.. ரெடியா.." என்ற தாக்ஷி தொடர்ந்தாள்
"நேத்து கரோக்கி'னு ( karoke ) பெருல ஆடுன ஆட்டத்துக்கு நாம திரும்பி வருற வர முழிச்சுக்க மாட்டாங்க "

"அதுவும் கரெக்ட் தான்...
இன்னைக்கு ஆர்டர்லாம் அப்லோடு பண்ணிட்டியா... கீழ் ப்ளாட் சேச்சி அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்கன்னு எஸ்ட்ரா இரண்டு கேட்டுருக்காங்க.."

"ம்ம்ம்... கொடுத்துடலாம்... சரி வா டைம் ஆகிடுச்சு கிளம்பலாம்... "

என அவர்களிடம் உள்ள சாவியால் வீட்டை பூட்டி பேசி கொண்டே கீழே வந்தவர்கள் வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பி அந்த அதிகாலை குளிருக்கு பழகியவர்களாய் அவர்கள் குடியிருந்த பகுதியிலிருந்து சற்று தள்ளிருந்த இடத்திற்கு சென்று அந்த சின்ன கட்டிடத்தின் முன் நிறுத்தினர்.

வண்டியை பூட்டி விட்டு நிமிர்ந்த ஜெய்மி தன் முன் விரிந்திருந்த கட்டிடத்தை பார்த்து சில நொடிகள் அப்படியே நின்றாள்.
முன்னே சென்ற தாக்ஷி தோழியின் ஆரவம் இல்லாததால் அவளை திரும்பி பார்த்து அவளிடம் சென்று அவளை உலுக்கி என்னவென்று வினவவும்,

" ஒரு வருஷம் ஆகிடுச்சு தாக்ஷி " என கட்டிடத்தை சுட்டி காட்டினாள் ஜெய்மி.

ஆமாம் என்பது போல் தலையசைத்து தாக்ஷியும் ஜெய்மியோடு சேர்ந்து அவற்றை ஒரு நிமிடங்கள் ரசித்து சிலிர்த்து நின்றாள்.

அடுத்தடுத்து உள்ள வேலைகளை மனதில் நிறுத்தி கட்டிடத்தின் உள்சென்று மடமடவென்று வேலைகளை ஆரம்பித்தனர்.

எக்கோ க்ரீன் என்ற பெயரில் hydroponics ( மண்ணிலா விவசாயம்) முறையில் விவசாயம் பயிரிட ஆரம்பித்திருந்தனர் இருவரும்.

இதன் முழு யோசனை உழைப்புகள் பெண்கள் இருவரதுதான் என்றாலும் ஆரம்ப புள்ளி என்பது இருவரின் கணவர்களே.

பெங்களூருக்கு ஜெய்மி வந்ததில் இருந்து இரு குடும்பத்திற்கும் வார விடுமுறை நாட்கள் என்பது ஒன்றாக ஒரே வீட்டில், அவ்வாறான ஒரு பொழுதில் பெண்களை நோக்கி அமிழன் ஆரம்பித்து வைத்த கேள்வி தான் அவர்களின் இன்றைய நிலைமைக்கு ஒரு ஆரம்பப் புள்ளி.

"உங்க ரெண்டு பேருக்கும் நெக்ஸ்ட் என்ன பிளான் ? " என அமிழன் கேட்கவும்
எய்டனும் அதையே அமோதித்து
"அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க " என கேட்டவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பீதியானவர்கள்
பார்வையாலே பேசி கொள்ளவும் செய்தனர்.

'என்ன ஜெய் இது .. திரும்பவும் கம்ப்யூட்டரா...'

'ச்சே ச்சே ... அப்படி இருக்காதுடி.. இரண்டு பேருக்கும் தெரியும் நமக்கு அது பிடிக்காதுனு, அத விட வராதுனு ரொம்ப நல்லாவே தெரியும்'

'அப்போ வேற என்ன.. இவங்க இரண்டு பேர் மாதிரி நம்மையும் டூயல் டீகிரி பண்ண சொல்லுவங்களோ '

'அச்சச்சோ இருக்குமோ ... இப்ப என்ன பண்ணுறது தாக்ஷி'

என தங்களுக்குள் கண்களால் பேசி கொண்டிருந்த தோழிகள் இருவரின் பார்வை பரிமாற்றத்தை நிறுத்தினான் அமிழன்.

"நாங்கலாம் கிடைச்ச வேலைய பிடிச்சு செய்யிறோம்,
ஆனா நீங்க உங்களுக்கு பிடிச்ச வேலைய செய்யலாம்..... எல்லாருக்கும் பிடிச்ச வேலைய செய்யிற சான்ஸ் கிடைக்காது, சோ உங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை சொல்லுங்க.. "

என்ற அமிழன் கூறிய மறு நொடி இருவரும் ஒரு சேர கூறிய சொல் 'இயற்கை விவசாயம்'.

வியந்து அவர்களை பார்த்த ஆண்கள் இருவரிடம்
"ஆமா மாம்ஸ் எங்க காலேஜ்ல நடந்த எவர்க்ரீன் ப்ரோக்ராம்ல கலந்துகிட்ட நாங்க அதுல ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டோம் " என ஜெய்மி கூறவும் தாக்ஷி,

"அது மட்டுமல்ல, சென்னை அக்ரிகல்சர் டிபார்ட்மெண்ட் நடத்தின மூணு ப்ரோகரம்லயும் நாங்க ரொம்ப ஆர்வமா கலந்துகிட்டோம் "

"எஸ் ... செம எக்ஸ்ப்ரியனஸ், நிறைய கத்துகிட்டோம், ரொம்ப அழகா தெளிவா சொல்லி கொடுத்தாங்க.. ஃபுல் டே ப்ரோக்ராம், அவங்களே லன்ச்'சும் ஸ்பான்சர் பண்ணுனாங்க "

"யம்மி ஃபுட்ல ஜெய்... என்ன ரைத்தா தான் கொஞ்சம் புளிப்பு அதிகம் ஆகிடுச்சு "

"ம்ம்ம் ஆமா தாக்ஷி, அத தவிர மத்த எல்லா டிஸ்ஸும் யம்மில"

என விவசாயத்தில் ஆரம்பித்து பச்சடியில் முடித்த தோழிகள் இருவரையும் கண்டு அமிழன் தனக்குள்ளும் எய்டன் வெளிப்படையாகவும் தலையில் அடித்து கொண்டனர்.

"ஆர்கானிக் அக்ரிகல்சர் ரொம்ப நல்ல விசயம் தான் பட் அத எப்படி செயல்படுத்துவீங்க " என்று வினா எழுப்பிய எய்டன் தன் முன்னிருந்த தண்ணீர் நிரம்பிய குவளையை எடுத்து பருக ஆரம்பித்தான்.

"ஏன் பண்ண முடியாது... நெய்யூலில நமக்கு அக்ரி லாண்ட் இருக்குல... அங்க ஆரம்பிப்போம் "

"அதே தான்... நாங்க நிறைய புது விசயம்லாம் கத்துகிட்டோம், எந்த எந்த சீசன்க்கு எதை பயிர் செய்ஞ்சா ப்ராஃபிட் வரும், அப்புறம் ஊடுபயிர் முறை, தண்ணீர் வளம் இல்லாதப்போ என்ன பண்ணலாம், அவுட்புட் அதிகமா இருக்கும் போது எப்படி சேமிக்கலாம்னு புது புது ஐடியா எல்லாம் கத்திக்கிட்டோம்... "

"நாங்க கத்துகிட்டத வச்சும் ஊருல எல்லார்கிட்டயும் இன்னும் தெளிவா கத்துகிட்டும் விவசாயம் செய்வோம்"

"ஆர்கானிக் வெஜிடபிள் ஷோ ரூம் புதுக்கோட்டைல ஆரம்பிச்சுடலாம் தாக்ஷி, இப்ப அப்பா அவர் கிளினிக் எக்ஸ்டன்ட் பண்ண வாங்கிருக்குற காம்ப்ளக்ஸ்ல நாம கடைய போற்றலாம் "

"ஹே சூப்பர் ஜெய், அப்படியே அப்பா கடைக்கு ப்ரொவிஷனல் வாங்க வர கஸ்டமர்ஸ இங்க திருப்பி விட சொல்லுவோம் "

"அப்புறம் என்ன நாமளே விவசாயம் பண்ணி நாமளே சேல் பண்ணிடலாம்.. ஆனா நாம அக்ரி பண்ற வேலைய இருக்கும் போது கடைய யாரு பாத்துப்பா "

"ஆமால.. அது ஒன்னு இருக்குல, அப்போ நாம கடைய ஈவினிங் மட்டும் போட்டுக்கலாம ஜெய்.. மார்னிங் நெய்யூலில ஒர்க் முடிச்ச்சுட்டு ஈவினிங் புதுக்கோட்டைக்கு வந்துடலாம்"

"இல்ல தாக்ஷி அது சரியா வராது.. மார்னிங் தான் சேல் அதிகம் இருக்கும் அப்போ கடை ஓபன்ல இருக்கனும்.. "

"பட் கடைய பார்த்துக்க ஆளு??..., அப்பா சித்தப்பா இரண்டு பேரும் அவங்க கடைல பிஸியா இருப்பாங்களே... ஸ்டார்டிங் நாம வெளிய இருந்து ஆள் போட்ட நல்லா இருக்காதே ஜெய்.... "

" ஹே ஐடியா.. அப்பா இப்போலாம் ஈவினிங் கன்சல்டன்சி தான் பாக்குறாங்க, பகல்ல ஏதாவது எமெர்ஜென்சி கேஸ் மட்டும் தான்..
சோ அப்பாவ மார்னிங் கல்லால உட்கார வச்சுடுவோம்....
ப்ராப்ளம் சால்வட்...
அப்படியே அவர் பேஷன்ட்ஸ்சும் நமக்கு கஷ்டமர் ஆகிடுவாங்க....
ஹை ஃபை " என இருவரும் மடமடவென முடிவு எடுக்கவும் எய்டன் தண்ணீர் குவலையை கீழே வைக்கவும் சரியாக இருந்தது.

' ஒரு க்ளாஸ் தண்ணி குடிக்குறதுக்குள்ள என்ன வேகமா பிளான் பண்ணுறாங்க...., நட்சத்திர ஜன்னல் சாங்'கே இவங்ககிட்ட தோத்திடுச்சு' என அதிசியத்தவன் அமிழனை பார்த்தான்.
அமிழனும் தன்னை போலவே விழித்து கொண்டிருந்ததை கண்டு அருகில் இருந்த மற்றொரு தண்ணீர் நிறைந்த குவலையை எடுத்து அவனிடம் கொடுத்து அமிழன் ஆசுவாச படுத்த உதவினான்.

இருவரும் சற்று ஒரு சேர ஆசுவாச படுத்தி கொண்டவர்கள்,

"எல்லாம் ஓகே.. பெங்களூர்ல இருந்துட்டு நெய்யூலில எப்படி விவசாயம் பண்ணுவீங்க " என எய்டன் கூறவும் அதை வேகமாக அமோதித்தான் அமிழன்.

"நீங்க சொல்றது ரொம்ப நல்ல விஷயம்..
பட் இட் நீட்ஸ் டைம்.. இப்போ எங்களால வேலைய விட்டுட்டு வர முடியாது இல்லயா...
சோ இங்க இருந்தே பாக்குற மாதிரி ஒரு நல்ல ஐடியா சொல்லுங்க, அத செயல் படுத்திடலாம் "

என்ற அமிழனின் கூற்று பெண்களுக்கும் சரியாக படவே அடுத்த வாரமே தோழிகள் இருவரும் கொண்டு வந்த திட்டம் தான் ஹைட்ரோபோனிக்ஸ் ( hydrophonics) முறையிலான மண்ணில்லா விவசாயம்.

இவர்களின் யோசனையை வியந்து மெச்சிய ஆண்கள் இருவரும் அவற்றை அவர்கள் முறையாக கற்க வைத்து திட்டத்தை செயலாக்கவும் வைத்தனர்.

அவர்கள் பகுதியில் இடம் தேடி அது அவர்கள் பட்ஜெட்டில் வராததால் கொஞ்சம் அருகில் அவர்களுக்கு தேவையான தனி கூரையை தேடியவர்களுக்கு எதிர்பாரத இடத்தில் இருந்து உதவி வந்தது.
அவர்கள் பகுதி கவுன்சலர் அமிழன் தந்தையின் மாணவர், ஆகையால் அமிழனுக்கு இங்கு வந்ததில் இருந்து அவருடன் மரியாதை நிமித்தம் பழக்கம் உண்டு.
இவர்கள் இடம் தேடி அலைவதை கண்டவர் என்னவென்று அழைத்து விசாரித்து அதே பகுதியில் உள்ள அவர்க்கு சொந்தமான காலி மனையை கொடுக்க முன் வந்தார். அவர் ஏற்கனவே மனையின் ஒரு பகுதியை யோகசனங்கள் பயில இலவசமாக வழங்கியிருந்தார். இப்போது அமிழன் தந்தை மேல் கொண்ட மதிப்பில் இவர்களுக்கும் இலவசமாக அளிக்க முன் வந்தவரை மறுத்து இடத்தை ஐந்து ஆண்டு குத்தகைக்கு எடுத்து கொண்டனர்.

அதன் பின்னர் மடமடவென வேலைகள் நடந்தன. ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்திற்கு ஏற்ப கட்டிடம் எழுப்பி தேவையான உபயகரங்கள் வாங்கி பயிரிட ஆரம்பித்து விட்டனர்.

ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் என்பது ஒரு கூரையின் கீழ் முற்றிலும் மண்ணில்லாமல் நீரை கொண்டு பயிரிடப்படுவையாகும். ஒரு தாவிரத்திற்க்கு அது வளர தேவையான அனைத்து விதமான சத்துக்களும் நீரிலே கிடைத்து விடும். எல்லா விதமான நுண் ஊட்டசத்து கலந்த நீரிலே செடியின் வேர்கள் படர்ந்து வளர்கின்றன.
நீரில் செடிகள் செங்குத்தாக நின்று வளர ஆதாரமாக பயிரிட படும்.
இதில் கவனிக்கபட வேண்டிய முக்கிய விஷயம் இந்த முறை விவசாயத்தில் மற்ற முறையை விட என்பது சதவீதம் மேல் தண்ணீர் மிச்சமாகும்.
இயற்கை முறையில் மண்னே எழுபது சதவீத தண்ணீரை இழுத்துக்கொள்ளும்.
இதில் அவ்வாறு இல்லையாதலாலும் மற்றும் அறுவடை செய்யப்பட்ட பயிர்களின் தண்ணீரையும் மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிப்பதாலும் நீர் அதிகமாக சேமிக்க படுகிறது.

ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் முறையை தேர்ந்தெடுத்த பெண்கள் இருவரும்
அதில் விதவிதமான கீரையை பயிர் செய்யும் முடிவுக்கு வந்தனர்.

செங்குத்தாக வளர்வதால் மற்ற முறையை விட ஐந்து மடங்கு வேகமாகவும் மகசூல் அதிகமாகவும் கொடுத்தது.

மாசு முற்றிலும் இல்லாத சுத்தமான சுற்று புறத்தில் வளர்ந்த, ரசாயன பூச்சிக்கொல்லிகள் முற்றிலும் பூஜ்ஜியமான கீரை வகைகள் சுவைமிக்க இருந்தன. அதுவும் அறுவடை செய்யப்பட்ட கீரைகள் சில நிமிடங்களிலே அழகாக உரையிடப்பட்டு வெகு விரைவிலே அவர் அவர் வீட்டில் சேர்க்க பட்டன.
சிறிதாக ஆரம்பித்த அவர்களின் விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் வெகு விரைவிலே பெருகினர்.

ஆரம்ப காலத்தில் அவர்கள் பகுதியில் அவர்களே சென்று விநியோகம் செய்ய ஆரம்பித்தவர்கள் பெங்களூர் நகரம் முழுவதும் சிறிது சிறிதாக விரிவடையவும், நகரை பகுதி வாரியாக பிரித்து ஏரியா'க்கு ஒருவராக ஜோமன்ட்டோ ஊழியர்கள் சில பேர்களிடம் ஒப்பந்தம் வைத்துக் கொண்டனர்.

இவை அனைத்தும் காலை வேளையிலே விநியோகம் செய்து முடிந்து விடுவதால், அவர்களுக்கும் அவர்கள் வேலையில் தடங்கள் இல்லாமலும் ஒவ்வொரு வினியோகத்திருக்கு விகிதமாக லாபம் கிடைப்பதால் அவர்களும் ஒரு அங்கமாகி, நேரத்தோடு வாடிக்கையாளர்களின் வீட்டில் விநியோகம் செய்தனர்.

தெளிவான மற்றும் விரிவான திட்டமிடல் தோழிகள் இருவரையும் வேகமாக வளர்த்தது. இணையதளம் ஒன்று ஆரம்பித்து அதில் சந்தா ( subscription ) முறையில் நாள் சந்தா, வாரம் இருமுறை சந்தா, வாரம் மூன்று முறை, நான்கு முறை சந்தா என ஆரம்பித்து அதில் வாடிக்கையாளர்களை சேர்த்தனர்.
அவர்களின் சுவைமிக்க சத்தான கீரைக்கு விளம்பரம் இல்லாமலே பெங்களூர் நகரம் முழுவதும் வாடிக்கையாளர்கள் பெருகியது.

கீரை மட்டுமில்லாது இப்போது இதர சில காய்கறிகளையும் பயிரிட்டு அதன் அறுவடை காலத்திற்க்கு சில நாட்கள் முன்பே இணையதளத்தில் அறிவித்து விடுவார்கள். அதற்கேற்ப விற்பனையும் ஆகிவிடும்.
கீரைகளை போல் மற்றவையும் அறுவடை செய்யப்பட்ட சில நிமிடங்களிலே அதே மலர்ச்சியோடு வாடாமல் உடனே வாடிக்கையாளர்களிடம் சேர்க்கப்பட்டது.

இதோ உள்ளே நுழைந்தது முதல் ஒரு நொடிகள் கூட வீணாக்காமல் விரைவாக வேலையில் இறங்கி செடிகளுக்கு நீரை மாற்றி தரம் பார்த்து அறுவடை செய்து உரையிடப்பட்டு, சரியான
முகவரியோடு விநியோகம் செய்பவர்களிடம் ஒப்படைத்து விட்டே மூச்சு விட்டு அமர்ந்தனர்.

*********************
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த ஜெய்மி மற்றும் தாக்ஷி இருவரும், அவர்கள் கண்ட காட்சியில் இதழ்கள் விரித்து புன்னகைத்தனர்.

அமிழனிடம் ஓவியத்திற்க்கு சரியான முறையில் வண்ணம் தீட்ட பயின்று கொண்டிருந்தவர்களை எய்டன் அழைத்து பாடவும் அவனுடன் சேர்ந்து பின் பாட்டு பாடினர் இரு வீட்டின் அடுத்த தலைமுறைகளான சின்ன சிட்டுகள்.

ஜெய்மி எய்டனின் மகவு ஷரோன், அமிழன் தாக்ஷியின் மகவு மைத்திரி. இருவரும் அவர்களின் அன்னைகளை போல் ஒரே வருடத்தில் முன்னர் பின்னர் பிறந்து ஒன்றாக வளரும் தோழிகள்.

வார விடுமுறை எப்பவும் போல் இப்பவும் இரு குடும்பங்களும் ஒன்றாக ஒரே வீட்டில்.

"என்ன திரும்ப ஆரம்பிச்சாச்சா.. இந்த ரைம்ஸ் விட்டுட்டு வேற எதுவும் புதுசா சொல்லி கொடுக்க மாட்டீங்களா.. " என உள்ளே நுழைந்த வாரே எய்டனை பார்த்து ஜெய்மி லேசான முறைப்புடன் கூறினாள்.

எய்டன் பாடி அவர்களின் மகவுகள் பின் பாட்டு பாடிய பாட்டு கீரை விதைப்போம் கீரை விதைப்போம் என்ற மழலை பாட்டாகும்.

"இது என்னடா வம்பா போச்சு, அவங்க அம்மாஸ் வீடு வீடா கீரையை விக்கும் போது பசங்க கீரை ரைம்ஸ் பாட கூடாதா "

"அதுக்காக இந்த ஒத்த ரைம்ஸ் வச்சே ஓட்ட கூடாது.. "

"இப்பவே இந்த ரைம்ஸ் மூலமா பசங்களுக்கு எக்கோ க்ரீன் ஊட்டி வளர்க்குறேன், அதுக்கு நீ என்னை பாராட்டனும்..
என்ன ஒரு அழகான பாட்டு... இந்த பாட்டை நீ குறைச்சு எடை போட்டுட்ட ஜெய்..
நான் என்ன 'கட்டு கட்டு கீரை கட்டுனு' மூவி பாட்டா சொல்லி கொடுக்கிறேன் " என சினிமா பாட்டை எய்டன் பாடி காட்ட, அவர்கள் வீட்டின் சின்ன சீட்டுகளும் எப்பவும் போல் அவனை பின்பற்றி முதல் வரியை பின் பாட்டு பாடவும் நிஜ முறைப்போடு எய்டனிடம் திரும்பினாள் ஜெய்மி,

" அச்சோ.... பாருங்க பசங்க ஃபாலோ பண்ணுறாங்க.. உங்கள... "
என நீளவிருக்கையில் இருந்த குஷனை எடுத்து எய்டனை மொத்த தொடங்கவும் அதனை கண்டு ஷரோனும் மைத்திரியும் குஷியாகி இம்முறை ஜெய்மியை பின்பற்றி எய்டனை மொத்த துரத்தினார்கள்.

இவர்களை கண்டு வாய் விட்டு நகைத்த தாக்ஷியோ நீளவிருக்கையில் கைகளை படர விட்டு அமர்ந்திருந்த அமிழனின் அருகே சென்று அமர்ந்து அவனோடு சேர்ந்து ரசித்தாள்.

மாட்டிருந்த ஹூடியை தலையில் இருந்து விடுதலை கொடுத்தவளிடம்
" இன்னைக்கு பனி அதிகமா... ரொம்ப டயர்டா வேற தெரியுற டுக்கு... "

"சண்டே'ல மாமா... கொஞ்சம் ஆடர்ஸ் அதிகம்" என சோர்வாக தலை சாய்த்தவளின் நெற்றியை நீவி விட்டவன்,
" காஃபி போடட்டும்மா.. சூடா குடிச்சா கொஞ்சம் பெட்டரா இருக்கும் "

இங்கு மாட்டிக்கொண்டு இடைவெளியே இல்லாமல் முன்முனை தாக்குததால் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த எய்டன் அமிழனை பார்த்து,
"ப்ரோ... இங்க நான் மொத்து வாங்கிற்றுக்கேன், காப்பாத்துவீங்கனு பார்த்த சைட் கேப்'ல ரொமான்ஸ் பண்ணிட்டுருக்கீங்க" என்று கூறியவன் பிள்ளைகளிடம் திரும்பி,

"குட்டிஸ்... அமிழனப்பா கலர் பண்ணினதும் சாக்லேட் பான் கேக் ( Pan Cake) பண்ணி தரேனு சொன்னாங்கள.. ஓடுங்க ஓடுங்க போய் கேளுங்க " என பிள்ளைகளை திசை திருப்பியவன் ஜெய்மியிடம்,

"கொஞ்சம் கேப் விட்டு அடிடி.. டையர்ட் ஆகிருப்ப ஜூஸ் சாப்பிட்டுட்டு வந்து கன்டினியூ பண்ணு " என கூறி அதற்கும் ஜெய்மியிடம் இரண்டு மொத்து வாங்கினான்.

"ஹே ... சாக்கி பான் கேக் " என இரு சிட்டுகளும் அமிழனை உலுக்கவும்

"ஓகே.... ரைட் ரைட்.. பான் கேக்'க்கு முன்னாடி சாக்லேட் கேக் சாப்பிடலாமா " என அமிழன் அவர்களிடம் வினா எழுப்பவும், அதில் அவர்களின் குண்டு கண்கள் விரிந்து குதித்தனர்.

"கேக்கா... இப்போவா... எப்போ வாங்குனீங்க மாமா" என கேட்ட தாக்ஷியிடம்,

" சர்ப்ரைஸ்... " என இருக்கை விட்டு எழுந்தவன் எய்டனை பார்த்து சைகை செய்யவும் இருவரும் உள்ளே சென்று தீபம் ஏற்றப்பட்ட கேக்'கோடு வெளியே வந்து,

" கங்க்ராஸ்ஸ்ஸ்...... இட்ஸ் அ செலிப்ரேஷன் டே.. உங்களோட ஒன் இயர் வெற்றிகரமான கம்பிளிஷனுக்கு வாழ்த்துக்கள்..." என கூறி இருவருக்கும் வாழ்த்து சொல்லவும் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டு ஆர்ப்பரித்தனர்.

ஜெய்மி, தாக்ஷி இருவரும் ஒன்றாக கேக் வெட்டி தங்களுக்கும், பிள்ளைகளுக்கும், தத்தமவர்களுக்கும் கேக்'குடன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

அதே மகிழ்வோடு காலை உணவை முடித்து ஜெய்மி தாக்ஷியின் வீடு, பிரபு, இளமதியன் என அனைவரின் வாழ்த்தை பெற்று மகிழ்வை அனைவருடன் பகிர்ந்து அமர்ந்திருந்தவர்களிடம் அலைபேசியில் தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசி முடித்து வந்த எய்டன் மேலும் அந்நாளின் மகிழ்வை அதிகரித்தான்.

" அண்ட் ஒன் மோர் சர்ப்ரைஸ் ஃபார் யூ, உங்களோட ப்ர்ஸ்ட் இன்டெர்வியூ இன்னைக்கு போடுறாங்க... வாங்க வாங்க பாக்கலாம் " என கூறி தொலைக்காட்சியை உயிர்பித்தான்.

" ஃப்ரைடே தான் இன்டெர்வியூ எடுத்தாங்க அதுக்குள்ளவா டெலிகாஸ்ட் " என்ற ஜெய்மியிடம்

"இது என்ன பாகுபலி மூவியா... எடிட்டிங், விஃப்எக்ஸ்'னு டைம் எடுக்க,
இன்னைக்கு உங்க பர்ஸ்ட் ஆனிவெர்சரினு சொன்னோம் ஆதான் எடுத்தத வெட்டி ஒட்டி இன்னைக்கே போடுறாங்க "

"உங்கள..... வாங்குன மொத்துலாம் பத்தாது போலயே.. " என்றவள் ஷரோன் மைத்திரியிடம் திரும்பி ," பசங்களா செகண்ட் ரௌண்ட்க்கு ரெடியா " என கூவவும் வேகமாக சரண்டர் ஆகினான்.

"போதும்... அடுத்த கோட்டாக்கு எனக்கு தெம்பு இல்ல...
இப்ப வாங்க உங்க சக்ஸஸ் ஸ்டோரிய பாப்போம் " என்றவன் பிள்ளைகளிடம் திரும்பி

"ஷரோ, மைத்து வாங்க, வாங்க... அம்மா டிவில வர போறாங்க.... பாப்போமா.... "
என இருவரையும் அள்ளி கொண்டு அவர்களின் பீன் பாக்'கிள் அவர்களை வசதியாக அமர்த்திவிட்டு அவனும் அவர்களின் அருகே உள்ள நீளவிருகையில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

எய்டன் அருகே ஜெய்மி, அடுத்து தாக்ஷி அமிழன் என முறையாக வரிசையாக அமர்ந்து பாரக்க ஆயுத்தமாகினர்.

இரு ஆண்களுக்கும் தன்னுடையவர்களின் இந்த அபரிதமான வளர்ச்சியில் பெருமையே, சிறிதாக என்று ஆரம்பித்து அதில் இந்த ஒரு வருடமாக தெளிவான திட்டமிடலுடன் உழைப்பை போட்டு விரிந்து வளர்ந்து நிற்கும் தன்னவர்களை கண்டு இரு ஆண்களுக்கு என்றும் போல் இன்றும் மனம்கொள்ளா பெருமை.

'அ இயர் ஆஃப் எவர் க்ரீன் ட்வின் கேர்ள்ஸ்' என்ற தலைப்போடு ஆரம்பித்து சின்ன சின்னதாய் அவர்களின் கட்டிடம் முதலில் திரையில் வந்தன, அடுத்தாக பயிர்களை ஜூம்-இன் ஜூம்-அவுட்'டில் அழகாக பிரிதிபலித்து தாக்ஷி ஜெய்மியிடம் வந்து நிறைந்து அவர்களின் ஒரு வருட வெற்றி பயணத்தை சுவாரஸ்யமாக பதிவு செய்த காட்சியை தத்தம் துணைகளோடு கண்டு களித்தனர்.

அமிழனின் கைவலைகளுள் வாகாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மணம் நிறைந்திருந்தது.

தான் கொண்ட நேசத்தை இன்னது என்று பெயரும் இல்லை ஒரு வட்டத்திற்குள்ளும் இல்லை என்று கூறியவனிடம் பதிலுக்கு திகட்ட திகட்ட அவள் கொண்டுள்ள காதலை அவனுக்கு உணர்த்தினாள் பெண்ணவள்.

தன்னையே தொலைத்து , வேறங்கோ எங்கோ தன்னை தேடி கொண்டிருந்தவள் இறுதியில் அவனிடம் தன்னை கண்டுகொண்டாள்.

முற்றும் .....

அவங்களோட சக்ஸஸ் ஹிஸ்டர்ய அவங்க பார்க்கட்டும்.. வாங்க நாம அங்க இருந்து அப்படியே ஜூம் அவுட் பண்ணி வெளியே வந்துடலாம்.


ஒரு வழியா ஒரு போக்கில போய்ட்டிருந்த கதையா அது போக்கிலயே போய் முடிச்சாச்சு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...

Hydrophonics பத்தி இதுக்கு மேல விரிவா சொன்னா கட்டுரை மாதிரி ஆகிடும்னு தான் என்னால முடிஞ்ச அளவு ஷார்ட்டா முடிச்சிட்டேன்.
Future farmingல இதுவும் ஒரு மாற்ற'அ இருக்கும்னு நினைக்கிறேன்.

"போற போக்கில் ஒரு காதல்" ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரியா தான் கொடுக்கனும்னு நினைச்சேன்.
ஹோப்பிங் அப்படிதான் கொடுத்திருக்கேன்னு நினைக்கிறேன் :unsure::rolleyes::ROFLMAO::love:

நெக்ஸ்ட் "ஸ்கெட்ச் 1" க்ரைம் ஸ்டோரிய முடிச்சதும், அடுத்ததும் அதே தொடரா ஸ்கெட்ச் 2' வே எழுதலாம்னு நினைச்சுட்டு இருக்கேன்.
பிகாஸ் லவ் ஸ்டோரிய விட போட்டு தள்ளுறது ரொம்ப ஈசி'யா இருக்குல :p:ROFLMAO::LOL::cool:....


எனக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் அள்ளி தெளித்த எல்லாருக்கும் ஒரு பெரிய பெரிய நன்றிகள் ❣❣. நிஜமாவே ரொம்ப ஹாப்பி ..:love:

மச் மச் நன்றிகள் ஃபார் உங்களோட அழகான கமெண்ட்ஸ் ❣❣😍...
ஸ்கெட்ச் 1 முடிச்சதும் ஸ்கெட்ச் 2 ல மீட் பண்ணுவோம்..


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்

கீர்த்தி😍

http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:
Status
Not open for further replies.
Top