All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "துளி துளி தூறலாய்...!" கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 16

விண்மீனே உன் மைவிழியிலே‌
வீழ்ந்து தான் போனேனே,
மீண்டிட பலநூறு வழி கிட்டினும்,
கறையேறாது கிடக்கவே மனம் ஏங்கிடுதே;
ஒருமுறை கைக் கொடுத்து ஏற்றி விடுவாயா??‌



கௌதம் தன் அறையில் அமர்ந்து இன்று நடந்த அனைத்தையும் மறுபடியும் ஓட்டிப் பார்த்தான். ருத்ரா தன்னிடம் கூறியது அனைத்தும் சரியே என எண்ணினான்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சத்யாவே அவனுடைய உயிர் நண்பன். வேறு நண்பர்கள் இருந்தாலும் தனக்கு நடக்கும் அனைத்தையும் தன்னிடம் தான் கூறுவான்.

'அதனால் அவனின் ஒவ்வொரு நகர்வும் தனக்கு அத்துப்படியே. அப்படி இருக்கையில் அவன் தனக்கு சொல்ல நினைத்த செய்தியை கண்டுபிடிப்பது சாத்தியமே' என்று எண்ணினான்.

இவ்வளவு நாள் தன்னுடைய மன உளைச்சலால் சரியான வழியில் யோசிக்காது விட்ட தன்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான். இத்தனை நாட்கள் அவன் செய்த தவறை சரி செய்ய நினைத்தான்‌.

இப்போது அவன் சத்யா அன்றாடம் என்ன செய்வான் என்று யோசிக்க ஆரம்பித்தான். "காலைல எழுந்து பின் உடனே ஜிம்க்கு போவான்‌.

அப்புறம் அவன் வீட்டுக்கு வந்து கிளம்பி ஹோட்டல் போவான். பிரேக் பாஸ்ட் முடிச்ச அப்புறம் ஆபிஸ் வந்துருவான்.

புல் டே ஆபிஸ்ல தான் இருப்பான். ஏதாச்சும் புது புராஜெக்ட் வந்தா வெளியே நியூஸ் கலெக்ட் பண்ண போவான். தென் லஞ்சும் வெளிய தான்.

டின்னரையும் வெளிய முடிச்சிட்டு தான் வீட்டுக்கே போவான். சோ நைட் டைம் தான் வீட்டுலையே மோஸ்ட்லி இருப்பான். இதுல எங்க எவிடென்ஸ மறைச்சு வச்சிருப்பான்.

வேற என்ன ஹேபிட் அவன்கிட்ட இருக்கு" என பலவாறாக யோசித்து கொண்டு இருந்தான் கௌதம். "ஒரு வேளை ஜிம்ல அவன் ரேக்ல வச்சிருப்பானோ.

சேச்..சே இருக்காது" என்று சொல்லி விட்டு "வேற எங்க வச்சிருப்பான்" என்று யோசித்தவன் ஹோ கௌதம் இதை எப்படி மறந்த" என தன் தலையில் தட்டிக் கொண்ட கௌதம்,

சத்யா அறையில் இருந்து எடுத்து வந்த மடிக்கணினியை அப்போது தான் நினைவு கூர்ந்தான். தான் கொண்டு வந்ததை எங்கு வைத்தோம் என தன் அறையை ஆராய்ந்தான்.

அவனை சொல்லியும் குற்றம் இல்லை. சத்யா இறந்ததில் இருந்து தான் அவன் சிந்தனை ஓட்டம் சரியான திசையில் செல்ல மறுக்கிறதே.

தன்னை நிதானப்படுத்திய கௌதம் சத்யாவின் மடிக்கணினியை தன் அறையின் கப்போர்டில் இருந்து எடுத்து அமர்ந்தான்‌‌.

சத்யா பழைய கடவுச்சொல்லை மாற்றியதால் புதியது என்னவாக இருக்கும் என்று மண்டை காய்ந்து. 'சரி தன் தாய் தந்தை அல்லது தன் பேரை எதுவும் வைத்திருக்கிறானா' என்று போட்டு பார்த்தான்.

எதுவும் திறக்கவில்லை. இதற்கு மேல் முயற்சி செய்து எல்லாம் அழிந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தவன் மூடி வைத்து விட்டான்.

இதை கணினி பொறியாளர்கள் யாரிடமாவது கொடுத்து திறந்து தரும்படி கேட்போமா என்று எண்ணினான். பின் அந்த முடிவை நொடியில் மாற்றிக் கொண்டான்.

ஏனெனில் அவனுக்கு தற்போது உள்ள நிலையில் யாரையும் நம்ப மனம் மறுத்தது. அதுமட்டும் இல்லாது யாரையும் தன் பிரச்சினையில் இழுத்து விட அவன் விரும்பவில்லை.

கௌதம் இதை தற்போது தன்னுடைய பிரச்சினை என்றே முடிவு செய்து விட்டான். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்து விட்டான்.

அதே நேரம் ஆருத்ரா அங்கே தன் தோழிகள் முன் அவர்களின் கேள்விகளால் விழி பிதுங்கி முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

கௌதம் இல்லத்தில் இருந்து கிளம்பிய ஆரு நேராக தன் அப்பார்ட்மெண்டை தான் வந்தடைந்தாள். எப்போதடா வருவாள் வைத்து செய்வோம் என காத்திருந்தனர் அவள் தோழிகள்.

ஆரு உள்ளே நுழைந்த உடன் ஆரம்பித்து விட்டனர் அவளின் தோழிகள். மீரா தான் முதலில் ஆரம்பித்தாள்.

"எங்க போய்ட்டு வர ஆரு‌" என்றாள் முறைப்புடன். தன் தோழிகள் ரவுண்டு கட்டி அமர்ந்து இருப்பதை பார்த்த ஆரு‌ 'இவளுங்க ஏன் இப்படி உக்காந்திருக்காளுக' என்று யோசித்தாள்.

அப்போது தான் அவள் தன் தோழிகளை கௌதமை பார்த்த உடன் பாதியில் கலட்டி விட்டு சென்றது நினைவு வந்தது. 'போச்சு போச்சு பாதில விட்டுட்டு போய்டோம்ல.

இவளுக கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறோம்னு தெரியலையே' என்று உள்ளுக்குள் உதறினாலும் வெளியே தன்னை தைரியமாக காட்டிக் கொண்டு

"சொல்லு மீரா. எதுக்கு கூப்பிட்ட" என்றாள் ஏதும் அறியாதது போல். ஆருவின் முகத்தை கண்ட மீராவிற்கு தான் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறியது.

'இவளை' என பல்லை கடித்த மீரா தன் மூச்சை இழுத்து விட்டுவிட்டு "இங்க பாரு ஆரு‌‌ எங்க பொறுமைய நீ ரொம்ப சோதிக்கிற. நாங்க ஏன் உன்னை கூப்டோம்னு உனக்கு தெரியாது" என்றாள் பல்லை கடித்து கொண்டு.

'இன்னைக்கு சூடு ரொம்ப இருக்கும் போலவே. நம்ம என்ன பண்றோம்னு இவங்க கிட்ட சொன்னா அவ்ளோ தான்.

வீட்ல நான் பண்றத அப்படியே போட்டு குடுத்துருங்க குட்டி பிசாசுங்க. இப்ப என்ன பண்றது. சரி ஏதாவது சொல்லி சமாளிப்போம்' என யோசித்த ஆரு‌

"புரியல மீரா. என்னை என்ன கேள்வி கேக்குறனு ஒன்னும் புரியல டி" என்றாள் இன்னும் தன் நடிப்பை தொடர்ந்தபடி‌. "சரி நேராவே கேக்கறேன்.

நாம பீச் போனோமே அங்க இருந்து பாதியில நீ அவ்வளவு அவசரமா எங்க போன. யாரை பாக்க போன" என்றாள் மீரா. அதே கேள்வியை தங்கள் கண்களில் தாங்கியபடி மற்ற இரு தோழிகளும்.

மூவரையும் பார்த்த ஆரு‌ "நான் எங்க போறேன்னு சொல்லிட்டு தானே போனேன். மறுபடியும் கேக்கறீங்க" என்றாள் தன் தோழிகளிடம்.

பின் மீண்டும் அவளே தொடர்ந்தாள். "என் புது ஃபிரண்ட். அவரை நான் லைப்ரரியில தான் மீட் செஞ்சேன். அவரும் நிறைய புக்ஸ் படிப்பார்.

அப்படி தான் எனக்கு இன்டர்டுயூஸ் ஆனார்‌. அன்ட் நான் கொஞ்சம் புக்ஸ் கொண்டு வந்தேனே அது அவர் கொடுத்தது தான். அவரை தான் பீச்ல பார்த்தேன்.

சோ அவர் போறதுக்குள்ள பேசலாமே அப்படினு வேகமா போய்டேன். அதுக்கு போய் இப்படி நிக்க வச்சு கேள்வி கேக்குறீங்க.

என்ன கைஸ் இது. நான் இதுவரைக்கும் யாரையும் இப்படி பார்த்தது இல்லையா என்ன. நீங்க பண்றது தான் புதுசா இருக்கு.

என்னை சந்தேகப்படுற மாதிரி இருக்கு. இத உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை. நீயும் இப்படி செய்றது இட்ஸ் ரியலி அப்செட்டிங் மீரா" என்றுவிட்டு அறையினுள் சென்று கதவை சாற்றி விட்டாள் ஆருத்ரா.

அவள் சொன்னதை கேட்ட பின் "ஹேய் மீரா நம்ம தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டோமா. அவ சொல்ற மாதிரி அவ எப்பவாவது இப்படி யாரையாவது ஃபிரண்ட்னு சொல்லி பாக்க போவா தானே.

நாம தான் அத ஓவரா சீன் ஆக்கிடோமா" என்றாள் அவள் தோழி அனு. அவள் மற்றோரு தோழி வினிதாவும் "எனக்கும் அதே தான் தோனுது மீரா.

ஆரு கரெக்டா தான் இருக்கா போல. நாம தான் ஓவரா இமஜின் பண்ணிக்கிட்டோம் பா. விடு மீரா அவ நார்மல் தான்" என முடித்து அவர்களும் சென்றனர்.

ஆரு என்னதான் சொல்லி சென்றாலும் மீராவின் மனது சமன் ஆகவில்லை. ஏனெனில் ஆருவை பற்றி மற்றவர்களை விட நன்கு அறிந்த மீரா இதை நம்ப மறுத்தாள்.

இன்னும் சொல்ல போனால் முன்பை விட இப்போது தான் அவளின் சந்தேகம் அதிகரித்தது. அவள் அறிந்த ஆரு இப்படி இல்லை.

தான் சண்டையிட்டால் தன்னை சமாதானம் செய்யாமல் செல்ல மாட்டாள். இப்போது அவள் சென்றதை காணும் போது அவள் ஏதோ தன்னை சமாளித்து தப்பி சென்றது போலே தெரிந்தது.

இவள் அப்படி என்னதான் செய்கிறாள் என கண்டுபிடிக்க வேண்டும். எனவே அவள் வெளியே ஏதும் சென்றால் பின்னால் தொடர்ந்து சென்றாவது கவனிக்க வேண்டும் என முடிவு செய்தாள்.

ஆருவின்‌ செய்கையை யோசித்து கொண்டு அமர்ந்திருந்த மீராவை மற்ற தோழிகள் வந்து தான் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தனர். பின் மீராவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

உள்ளே வந்த பிறகு தான் ஆருவிற்கு‌ நிம்மதியாக இருந்தது. எங்கே தன் தோழிகளிடம் தெரியாமல் ஏதும் உளரி விடுவோமோ என உள்ளுக்குள் உதறல் இருந்தது.

அதனாலே அவர்களை திட்டி விட்டு வந்து சேர்ந்தாள். ஆனாலும் உள்ளுக்குள் சிறு குற்ற உணர்ச்சி எழுந்தது தோழிகளிடம் மறைப்பதால்.

ஒரு நல்லது நடக்க சின்ன சின்ன பொய் சொன்னால் தவறு இல்லை என தன் மனதை தேற்றிக் கொண்டாள் ஆரு‌. பின்பே அவள் மனம் சமன் அடைந்தது.

தன் மனதை சமாளித்து ஒருவாறு எழுந்து சென்று குளித்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தாள். கௌதமின் வீட்டிலே உண்டு முடித்து வந்து விடவும் உண்ண கூட வெளியே செல்லவில்லை.

சரி வெளியில் உண்டு வந்திருப்பதாள் என்று உணர்ந்த தோழிகளும் அவளை தொல்லை செய்யாமல் விட்டனர்.

ஆருவிற்கு தூக்கம் வராததால் வழமை போல் புத்தகம் படிக்கலாம் என்று முடிவு செய்தாள். சத்யாவின் புத்தகத்தை படிக்க எடுத்து அதை அப்படியே விட்டு சென்றதால் அது படுக்கையில் கிடந்தது.

'ம்ம் என்ன என்ன புக்லாம் இருக்குன்னு முதல்ல பார்ப்போம். அப்புறம் எதை படிக்கிறதுன்னு டிசைட் பண்ணலாம்' என்று எண்ணிய ஆரு ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து பார்த்தாள்.

சத்யாவின் ரசனை என்னவென்று அந்த புத்தகங்கள் கூறியது. அப்போது அந்த புத்தகங்களின்‌ நடுவே கிடைத்த ஒரு பொருள் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

'இதை கௌதம் கிட்ட சொன்னா கண்டிப்பா யூஸ் ஆகும்' என நினைத்தவள் நேரத்தை கூட காணாது அழைப்பை விடுத்தாள்.

அங்கே சத்யாவின் மடிக்கணினியை திறக்க என்ன செய்யலாம் என்ற யோசனை செய்து தலை மீது கை வைத்து அமர்ந்திருந்தான் கௌதம்.

அப்போது அவன் அலைப்பேசி அழைக்கவும் மணியை பார்த்தான். அது இரவு 11:30 என்றது. எனவே 'இந்த நேரத்தில யாரு' என்ற கேள்வியுடன் தன் போனை பார்த்தவன் அதில் ஆருவின் எண் வரவும் பதட்டமானான்.

"ஹலோ ருத்ரா என்னாச்சு இந்த நேரம் கால் செஞ்சுருக்க. எதாவது எமர்ஜென்சியா‌ மா. வீட்டுக்கு பத்திரமா போய்ட தானே" என்றான் எடுத்தவுடன். அப்போது தான் நேரம் பார்த்தாள் ஆரு.

'ஐயோ இவ்ளோ நேரம் ஆச்சா' என்று தன்னையே நொந்தவள் "எமர்ஜென்சி எதுவும் இல்லை கௌதம். ஒரு முக்கியமான விஷயம் பேசலானு கால் செஞ்சேன்.

நான் வீட்க்கு வந்துட்டேன். சாரி டைம் பார்க்கல. தூங்கிட்டு இருந்தீர்களா. டிஸ்டர்ப் பண்ணிட்டனா" என்றாள் தயக்கமாக.

"ஓஓ ஓகே ருத்ரா. நோ இஸ்யூஸ். நான் முழிச்சு தான் இருந்தேன். சொல்லுங்க என்ன விஷயம்" என்றான் சோர்வாக.
அதை அவன் குரலில் உணர்ந்த ஆரு

"நீங்க ஏன் டல்லா பேசுறீங்க கௌதம். உங்க வாய்ஸ்ல அப்படியே தெரியுது என்ன ஆச்சு" என்றாள் தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு.

'எப்படி என் குரலை வைத்தே கண்டு பிடிச்சா' என்று வியந்த கௌதம் தான் மடிக்கணினியை திறக்க முயன்றதை சொல்லி முடித்தான். பின் "இப்ப என்ன செய்றதுனு எதுவும் தோனலை ருத்ரா.

யாரையும் நம்பவும் முடியல, யாரையும் இந்த பிராப்லம்ல இழுத்து விடவும் மனசு வரலை. அதான் அதை யோசிச்சிட்டு இருந்தேன் " என்றான் அயர்வாக தன் நிலையை விளக்கி.

"கௌதம் அதை நான் ஓபன் செஞ்சு தறேன்" என்ற ஆருவின் வார்த்தைகள் அவன் காதில் இருந்து மனதை அடைய சில விநாடிகள் எடுத்தது.

அடைந்த உடன் அவன் காதில் விழுந்தது சரிதானா என்று உறுதிபடுத்திய கௌதம் மனம் இறகை போல் மென்மையானது. அதை அளித்த ஆருவின் மேல் பாசமும் அதிகமாகியது.

-தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 17

சிப்பி விழியிலே காந்தம் கொண்டாயோ,
உலோகமென உன் நிழலிலே நிதம் தவறாமல் உறைகிறேன்;
கண் அசைவிலே எனை கைதாக்கி செல்கிறாயே,
உன் நோக்கம் தான் என்னவோ?
விடுதலை என்று தான் தருவாயோ!!


கௌதம் மடிக்கணினி பற்றிய பிரச்சினையை சொன்னவுடன் ஆரு சொன்ன பதில் இதுதான்‌ "நான் திறந்து தருகிறேன்" என்று‌. அதை கேட்ட கௌதம் ஆருவிடம் "உன்னால முடியுமா ருத்ரா.

பிகாஸ் நான் ஒரு திரீ ஆர் போர் டைம்ஸ் பாஸ்வேர்டு போட்டு ராங்னு காட்டுச்சு. அகைன் நீ டிரை பண்ணி எல்லாம் இரேஸ் ஆகிட்டா என்ன பண்றது" என்றான்.

அதை கேட்ட ஆரு "நீங்க என்னை என்னன்னு நினைச்சீங்க. நான் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர். எனக்கு இதுலாம் ரொம்ப ஈசி தெரியுமா" என்றாள் மிடுக்குடன்.

அதை ஒதுங்கிய கௌதம் "இங்க பாரு ருத்ரா நீ சாப்ட்வேர் எஞ்சினியராவே இருக்கலாம். பட் இதுல இருக்க டீடெயில்ஸ் டெலிட் ஆகாம எடுக்க முடியுமா.

ஏனா இப்போ வர என்ஜினியர்ஸ்லா பேப்பர் சேஸ் பண்ணி அப்புறம் அப்படியே மக் அடிச்சு பாஸ் பண்றவங்க தானே" என்றான் உசாராக.

அவனின் பதிலில் கடுப்பின் உச்சிக்கு சென்ற ஆரு‌ "ஹலோ ஹலோ நிறுத்துங்க. என்ன விட்டா பேசிட்டே போறீங்க. என்னை பார்த்தா பேப்பர சேஸ் பண்ணி பாஸ் பண்றவ மாதிரியா இருக்கு.

நான்லாம் நல்லா புரிஞ்சு படிச்சு பாஸ் செஞ்ச ஆளு. அதுமட்டும் இல்லாம எனக்கு ஹேக்கிங் கூட நல்லாவே தெரியும்" என்றாள் ரோஷமாக.

அவளின் பதிலில் வாய் விட்டு சிரித்த கௌதம் "ஓகே ஓகே நான் ஒத்துக்கிறேன் நீ பெரிய அறிவாளினு. அதனால தான் சேப்டி மெஷர் எதுவும் எடுக்காம அர்த்த ராத்திரியில சுவரும் ஏறி குதிச்சன்னு" என்றான் இன்னும் கிண்டலாக.

"ஓஹோ நான் தான் அறிவு இல்லாதவ நடுராத்திரியில சுவர் ஏறி குதிச்சேன். சார் தான் பெரிய அறிவாளி ஆச்சே நீங்க என்ன சார் செஞ்சீங்க, சுவர தாண்டாம கதவ திறந்தா போனீங்க" என்று ஆரு‌‌ பதிலுக்கு கிண்டல் செய்தாள்.

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் மிஸ்டர்.அறிவாளி நான் சேப்டி மெஷர் எதுவும் எடுக்காம போனேன்னு நான் சொன்னேனா.

அதுலாம் நான் பக்காவா எல்லாம் செட் பண்ணிட்டு தான் செவுத்த தாண்டுனேன். இன்பாக்ட் உங்களை கூட நான் தான் தப்பிக்க வைச்சேன்.

ஞாபகம் இருக்கா இல்லை மறந்து போச்சா" என்றாள் இன்னும் நக்கலாக. "ஹே அது நான் அப்ப கொஞ்சம் எமோஷனலா லாக் ஆகி இருந்தேன்.

இல்லைனா போலீஸ் வரது கூட தெரியாம பீல் பண்ணிட்டு நின்னுட்டு இருந்திருக்க மாட்டேன். ஏதோ ஒன்ஸ் என்னை காப்பாத்திட்டு அதை இத்தனை டைம் சொல்ற" என்றான் தன் கெத்தை விடாமல்.

"எது ஒன்ஸ் காப்பாத்தினனா சின்ன திருத்தம் டுவைஸ்" என்றாள் மிடுக்காக. "ஹே உளறாத ருத்ரா ஒரு டைம் தான்" என்றான் கௌதமும் ஸ்திரமாக.

"அப்படியா" என்று ஒரு மாதிரி இழுத்த ஆரு‌ "கௌதம் நீங்க போனது போலீஸ் புல் புரெக்சன் கொடுத்த வீட்டுக்கு. அங்க கேமரா எதுவும் இல்லைனாலும்,

அந்த தெருவில யார் வீட்லையுமா கேமரா இல்லாம இருக்கும். அப்புறம் எப்படி நீங்களும் உங்க வண்டியும் அங்க எந்த கேமராலையும் மாட்டாம வந்தீங்க" என்று முடித்தாள்.

கௌதம் 'ஆமால்ல இதை நாம யோசிக்காம விட்டுட்டோம். அந்த வீட்டுக்குள்ள நம்ம மூமென்ட்டால போலீஸ்க்கு சந்தேகம் வந்ததால தானே மேல ஏறி வந்தாங்க.

சப்போஸ் அந்த சின்ன சந்தேகத்தை அவங்க ஹையர் ஆபிசர் கிட்ட சொல்லிருந்தா கூட அந்த ஏரியா புல்லா இருக்க எல்லார் வீட்டு சிசிடிவிலையும் செக் பண்ணிருப்பாங்கல' என்ற அவனின் மனதின் கேள்விக்கு

‌ 'ஆமா அந்த சமயத்தில நீ இதெல்லாம் விலாவரியா யோசிக்கிற நிலைலையா இருந்த கௌதம். ஆமா இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்' என்று அவனே கௌன்டர் கொடுத்து கொண்டான்.

கௌதம் அமைதியாக இருக்கவும் ஆருவே‌ தொடர்ந்தாள். "என்ன எப்படி எனக்கு இதுலாம் தெரியும்னு மண்டை வெடிக்குதா கௌதம்.

நான் ஒரு உண்மைய சொல்லட்டா. நான் தான் அந்த ஏரியால உள்ள எல்லா கேமராவையும் ஹேக் செஞ்சேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நான் உங்களுக்கு முன்னாடியே அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டேன். ஆனா நீங்க தான் எதையும் கவனிக்கலை.

அன்ட் உங்களை பார்க்கவுமே நீங்க எமோஷனல் ஆகிட்டீங்கனு புரிஞ்சுக்கிட்டேன். அதான் நான் உங்கள டிஸ்டர்ப் செய்யாம சைலன்டா இருந்தேன்.

அப்புறம் போலீஸ் வரதை பார்க்கவும் தான் உங்கள பெட்க்கு கீழ இழுத்துட்டு போனேன்" என்று முடித்தாள் அன்று நடந்தவைகளை கூறி.

அனைத்தையும் கேட்ட கௌதமிற்கு தான் ஆச்சரியமும் அன்பும் அதிகமாய் அவன் ருத்ரா மீது பெறுகியது. சிறிது நேர அமைதிக்கு பின் "சரி ருத்ரா நான் இப்ப ஒத்துக்கிறேன் நீ உண்மையாவே ஜீனியஸ் தான்னு.

ஆமா எப்படி ஹேக்கிங்லா கத்துக்கிட்ட" என்றான் சிரித்தபடி. ஆருவும்‌ அவன் நிலை உணர்ந்து "அது சும்மா ஜாலிக்காக கத்துக்கிட்டேன்.

உண்மைய சொல்லனும்னா என் பிரண்ட்ஸ் ஒரு பெட் வச்சாங்க யார் காலேஜ் சிஸ்டம ஹேக் பண்றதுன்னு. ஆனா தப்பாலா எதுவும் செய்யல.

சும்மா ஸிஸ்டம் உள்ள போய்ட்டு வரனும் அவ்ளோ தான். அப்ப ஸ்டார்ட் ஆச்சு. இப்ப இவ்ளோ தூரம் வந்துருக்கு.

அப்ப இப்படி ஆரம்பிச்சது அது ஏதோ ஒரு ரீசன்காகன்னு இப்ப புரியுது" என்றாள் ஆரு‌ பெருமூச்சு ஒன்றை விட்டு. "சரி ருத்ரா எதுக்கு இப்ப கால் செஞ்ச அதை சொல்லு.

வேற பேசிட்டு இருந்துட்டோம்" என்றான் நினைவு வந்தவனாக கௌதம். அதற்கு "அது கௌதம் இப்ப சொல்லலாம்னு தான் போன் செஞ்சேன்.

பட் ஒரு நாளைக்கு ஒரு சப்பிரைஸ் தான். சோ நான் நாளைக்கு நேர்ல உங்களை பார்க்க உங்க வீட்டுக்கு வரேன் அப்ப அந்த செகண்ட் சப்பிரைஸ் ரிவீல் பண்றேன்.

ஓகே. பாய் கௌதம். குட் நைட்" என்ற ஆரு‌, கௌதம் "ஹே ருத்ரா ருத்ரா ஒன் மினிட்" என்று கூப்பிட கூப்பிட தன் அலைபேசியை அணைத்து விட்டாள் சிரிப்புடன்.

அந்த புறம் கௌதமிற்கு 'அது என்ன சர்பிரைஸா இருக்கும்' என்று தலை வெடித்தது. ஆனால் இருவருக்கும் இந்த உரையாடல் மனதிற்கு இதம் தந்தது என்னவோ உண்மை.

வாழ்வில் ஒருவர் மற்றவரின்‌ அருகாமையில் தான் அன்பு அரவணைப்பை உணர முடியுமா என்ன.

தன் குரலாலும் தொலைவில் இருந்தே அந்த அன்பையும் ஆதரவையும் தர முடியும் என இருவரும் அறிந்து கொண்டனர் அந்த நிமிடத்தில்.

பின் மனம் முழுவதும் நிறைந்த மகிழ்வுடன் உறங்க சென்றனர். அடுத்த நாள் கண்டிப்பாக சத்யாவின் விஷயத்தில் ஒரு முடிவு கிடைக்கும் என இருவரும் நம்பினர்.

மறுநாள் காலை ஆருத்ரா அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தாள். பார்த்த தோழிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளிடம் வந்த அனு "ஏய் ஆரு‌ எங்க பா கிளம்பிட்டு இருக்க அதுவும் இவ்வளவு ஏர்லியா. ஆபிஸ்க்கு போக தான் டைம் நிறைய இருக்கே" என்றாள்.

கிளம்பிக் கொண்டே ஆரு‌ "அது கொஞ்சம் வெளியே வேலை இருக்கு அனு அதான் சீக்கிரம் போறேன். ஹாப் டே பர்மிசன் போட்ருக்கேன்.

சோ அந்த வேலையை முடிச்சிட்டு அப்படியே ஆபீஸ் வந்திருவேன் டோன்ட் வொர்ரி. நீங்க கிளம்பிருங்க" என்றவள் தான் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள் எல்லாம் சரியாக உள்ளதா என பார்த்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாள்.

"வாட் ஹாப் டே லீவா. அப்படி லீவ் போட்டுட்டு செய்ற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருக்கு உனக்கு. அதுவும் எனக்கு தெரியாம" என்றாள் இவள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த மீரா.

மீரா மற்றும் மற்ற இரு தோழிகளையும் ஒரு பார்வை பார்த்த ஆரு‌ "இங்க பாரு மீரா நான் எதாவது தப்பு பண்றனா என்ன. இப்பலாம் எப்ப பாரு நிக்க வச்சு கேள்வி கேக்கறதையை வேலையா வச்சிருக்க நீ.

சும்மா சும்மா இப்படி என்னை டார்சல் பண்ணாத. பிளீஸ் என்ன விட்டுரு மீரா நான் கிளம்பறேன். உன்கிட்ட பேச எனக்கு தெம்பு இல்லை" என்று சொல்லி கிளம்பி விட்டாள் ஆரு.

மீரா மற்றும் இரு தோழிகளும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டனர். தன்னை வார்த்தையால் காயப்படுத்தி செல்லும் தோழியை வேதனையோடு பார்த்திருந்தாள் மீரா.

அவளை கண்ட தோழிகள் "ஹே மீரா கூல் டா. அவ ஏன் இப்படி பண்றானு தெரியலை டா" என்று அவளை சமாதானம் செய்தனர்.

"ஹே அதுலாம் ஒன்னும் இல்லை. ஐம் ஆல்ரைட் கைஸ். நான் இப்ப வந்தர்ரேன்" என்று சொல்லி மீராவும் வெளியே கிளம்பினாள்.

பார்த்த தோழிகளுக்குமே மனம் கனத்தது‌. "ஒரு வேளை நம்ம கண்ணே பட்டுருச்சுனு நினைக்கிறேன் அனு. எப்படி இருந்த ரெண்டு பேரும் இப்ப இப்படி சண்டை போட்டுகிறாங்க.

கஷ்டமா இருக்கு டா" என்று வினிதாவும் வருத்தப்பட்டாள். "ம்ம் ஆமாம்" என்றாள் அனுவும் பதிலாக. அங்கே வெளியே வந்த ஆருவிற்கும் மனது மிகவும் வலித்தது.

அவள் இதுவரை மீராவிடம் இப்படி கடுமையாக பேசியது இல்லை. எனவே அவளிடம் நிச்சயம் சாயந்திரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்தாள்.

பின் ஒரு ஆட்டோ பிடித்து கௌதமின் இல்லம் நோக்கி சென்றாள். அவளை தொடர்ந்து வந்த மீரா‌ ஆரு ஒரு ஆட்டோவில் செல்வதை பார்த்தாள்.

பின் தானும் ஒரு ஆட்டோவை பிடித்து அவளை பின் தொடர சொல்லி சென்றாள். அவள் முதல் நாளே எடுத்த முடிவின் பயனாக.

ஆரு அப்படி எங்கே செல்கிறாள் என இன்று கண்டு பிடித்து விட வேண்டும் என்ற முடிவு தற்போது அவள் தன்னை திட்டிய பேச்சில் வலுப்பெற்றது.

ஆட்டோ செல்லும் பாதையை பார்த்தவள் 'இவ என்ன நம்ம ஆபீஸ் வீடுனு ரெண்டுக்கும் அப்படியே ஆப்போசிட்ல போறா.

அப்படி யாரை பார்க்கப் போறான்னு தெரியலையே. இதை மறைக்கத்தான் என்னை திட்டுனாளா' என யோசித்து கொண்டு இருந்த மீரா எதிரில் செல்லும் ஆட்டோவை தவற விட்டாள்.

திடீரென ஆட்டோ டிரைவர் கூப்பிடவும் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவள் "ஆன் என்ன அண்ணா" என்றாள்.

"அது முன்னாடி போய்கிட்டு இருந்த ஆட்டோவ இப்ப காணோம் மா. நாம தவற விட்டுட்டோம்" என்றார். "என்ன அண்ணா எப்படி தவற விட்டீங்க.

எங்க போனான்னு தெரியலையே. இப்ப என்ன பண்றது" என தனக்குள் புலம்ப ஆரம்பித்தாள். பின் தான் செய்ய ஒன்றுமில்லை என்று உணர்ந்தவுடன் ஆட்டோகாரரை வண்டியை மறுபடியும் தன் வீட்டிற்கே திருப்ப சொல்லி சென்றாள் மீரா.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 18

வர்ணங்கள் பல சேர்த்த ஓவியம் நீ,
உயிர் பெற்று நடக்கையிலே
புவியும் புது வர்ணம் அடைந்திடுதே;
புண்ணாய் போன என் மனதிற்கும்,
உன் வர்ணம் புத்துணர்வு தந்திடுதே!



ஆருத்ரா தன் தோழி மீரா தன்னை பின்தொடர்வதை கவனிக்கவில்லை. ஆனால் ஒரு சிக்னலில் அவள் பின்னால் வந்த மீராவின் ஆட்டோ நின்றுவிட ஆரு வந்த ஆட்டோ முன்னே சென்றுவிட்டது.

இதை எதையும் அறியாத ஆரு‌ கௌதமை காண போகும் உற்சாகத்தில் சென்றாள். ஏன் தனக்கு இவ்வளவு மகிழ்ச்சி என்பதும், அது கௌதமை காண செல்வதாலும் என அவள் உணர்ந்தாள்.

ஆனால் அந்த உணர்வு என்னவென்று அவள் யோசிக்கவில்லை. முன் சத்யாவின் வீட்டில் இருந்து கௌதம் தன்னை பாதுகாப்பாய் அழைத்து சென்றதில் அவளின் தந்தையை நினைவு கூர்ந்தான்.

அவனோடு இருக்கையில் தான் பாதுக்காப்பாய் இருப்பதை அவள் எப்போதும் உணர்வதை மகிழ்வுடன் உள்வாங்கி கொள்பவள் அத்துடன் அதை விட்டு விடுகிறாள்.

கௌதமை பற்றியே நினைத்து கொண்டு வந்தவள் அவன் இல்லம் வந்தவுடன் தான் தன் மனதின் சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள்.

அங்கே வீட்டில் தன் அன்னையின் முன் அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது விழி பிதுங்கி நின்று கொண்டிருந்தான் கௌதம்.

நடந்தது இதுதான். கௌதம் காலையிலே தன் அன்னையிடம் சென்றவன் "அம்மா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்றான் தயக்கமாக.

'என்ன இவன் இன்னைக்கு இவ்ளோ பணிவா பேசுறான். இப்படிலாம் நம்ம புள்ள பேச மாட்டானே ம்ம்' என்று யோசித்த ரேவதி வெளியே ஜன்னலை எட்டிப்பார்த்தார்.

தன் அன்னையின் செய்கையை புரியாது பார்த்த கௌதம் "அம்மா என்னம்மா செய்ற?" என்றான் குழப்பத்துடன்.

"இல்ல டா வெளிய மழை எதுவும் வருதானு பாக்குறேன்" என்றார் இன்னும் தன் நடிப்பை தொடர்ந்தவாறு.

அது புரியாத கௌதம் "அம்மா வெளியே வெய்யிலு பல்ல‌ காட்டுது‌. நீ என்ன உளறிக்கிட்டு இருக்க" என்றான் கடுப்புடன்.

"அது ஒன்னும் இல்லடா நீ என்கிட்ட இவ்ளோ பணிவா பேசிறியே அதான்" என்றார் நக்கலாக. இப்போது தான் தன் அன்னை தன்னை கிண்டல் செய்கிறார் என்று புரிந்து

"அம்மா பிளீஸ் என்னை கிண்டல் பண்ணாம நான் சொல்றதை கொஞ்சம் கேளு" என்றான் கெஞ்சலாக. "சரி சொல்லு" எனறார் ரேவதி போனால் போகிறது என்பது போல்.

"அது மா ருத்ரா இருக்கால அவ நம்ம வீட்டுக்கு இப்ப வரப்போறா மா. அதனால அவளுக்கும் சேர்த்து கொஞ்சம் பிரேக் பாஸ்ட் பண்ணிரு என்ன" என்றான் தன் அன்னையிடம்.

"என்னடா சொல்ற நேத்து தானே கூட்டிட்டு வந்த. இப்ப என்ன திடீர்னு. இது சரியில்லை கௌதம். உங்க ரெண்டு பேருக்கும் புடிச்சிருந்தா அந்த பொண்ணு வீட்ல நான் பேசறேன்.

ஆனா இப்படி அடிக்கடி அவள வீட்டுக்கு கூப்டாத கௌதம். யாராவது பார்த்தா அந்த பொண்ணை தான் டா கண்ணா தப்பா நினைப்பாங்க. புரியுதா" என்றாள் பொறுப்பான தாயாக.

தன் அன்னை கூறியதை சிரிப்புடன் கேட்டு கொண்ட கௌதம் "அம்மா என்னை பத்தி தெரியாதா. நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பலாம் இல்லை மா.

என்னோட லேப்டாப்ல பாஸ்வேர்டு போட்டத மறந்துட்டேன். ருத்ரா சாப்ட்வேர் இன்ஜினியர் அதான் அவகிட்ட ஹெல்ப் கேட்டேன்.

அவளும் ஹெல்ப் பண்றேன்னு சொன்னா மா. சோ அதான் இப்ப வந்திட்டு இருக்கா போதுமா. டவுட் கிளியர் ஆகிருச்சா" என்றான் சிரிப்புடன்.

சிறிது நேரம் கழித்து "ஆனா மா நான் என்ன சொன்னாலும் அங்க சுத்தி இங்க சுத்தி என் கல்யாணத்துலையே வந்து நிக்கிற" என்று வம்பு வளர்ந்து கொண்டிருந்தான்.

அப்போது தான் ஆட்டோவில் வந்திறங்கினாள் ஆரு‌. ஆட்டோ சத்தத்தில் எழுந்த கௌதம் "அம்மா ருத்ரா வந்தாச்சு" என்றான்.

அதை கேட்டு அவனை முந்தி சென்ற ரேவதி தானே கதவையும் திறந்தார். தன் அன்னையின் செய்கையை பார்த்த கௌதம் சிரித்துக் கொண்டே அவரின் பின்னே சென்றான்.

அங்கே வந்த ருத்ரா வாசலிலே வந்து தன்னை வரவேற்கும் கௌதமின் அன்னையை கண்டு சிரிப்போடு "குட் மார்னிங் ஆன்டி" என்றாள்.

"வாடா தங்கம். உள்ள வா. நீ வரதா இந்த கௌதம் இப்போ தான் சொல்றான். எதோ லேப்டாப்ப திறந்து தரப் போறியாம்ல. நீ எவ்ளோ பெரிய அறிவாளி.

இவனும் தான் இருக்கானே. நீ இரு நான் போய் டிபன் ரெடி பண்றேன் என்ன" என வழமை போல் தானே பேசிவிட்டு தன் மகனை பார்த்து தன் மேவாயை தோலில் இடித்து சென்றார்.

இவ்வளவு நேரம் அவர் பேசியதை சிரிப்புடன் பார்த்திருந்த கௌதம் கடைசியாக தன் இமேஜை டேமேஜ் செய்து செல்லவும் கடுப்புடன் பார்த்தான்.

ஆரு "கௌதம்" என்று அழைத்த பின் அவள் புறம் திரும்பியவன் "சாரி ருத்ரா எங்க அம்மா பண்ணுன அலப்பறைல நான் உன்னை இன்வைட் பண்ண மறந்துட்டேன்.

வா ருத்ரா" என்றான் அவளிடம். "சரி நைட்டு டல்லா இருந்தீங்களே இப்ப ஓகே வா" என்றாள் கரிசனமாக. "உன்கிட்ட பேசின அப்புறம் நான்‌ ஓகே ருத்ரா" என்று இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

பின் ருத்ராவே "அப்புறம் கௌதம் நாம லேப்ப பார்க்கலாமா" என்றாள். "இல்லை ருத்ரா நாம பிரேக் பாஸ்ட்ட முடிச்சிட்டு போய் எடுக்கலாம்" என்றான் கௌதம்.

"அன்ட் ஒரு முக்கியமான விஷயம் ருத்ரா" என்றவனின் கேள்விக்கு என்ன என்றாள் கண்களால்.‌ "அப்பா உன் கண்ணு செமையா பேசுது ருத்ரா" என்று விட்டு

"என்ன முக்கியமான விஷயம்னா நைட்டு எதோ ஒரு சர்ப்ரைஸ் இருக்கு நாளைக்கு சொல்றேன்னு சொன்னியே அது என்ன" என்றான் ஆர்வமாய்.

"ஓஓ நீங்க அதை கேக்குறீங்கலா அதையும் பிரேக் பாஸ்ட் முடிச்சிட்டே சொல்றேனே" என்றாள் பதிலுக்கு நமட்டு சிரிப்புடன். "ஹே வாட் இஸ் திஸ் ருத்ரா. பிளீஸ் ஸ்பீக் அவுட் யா" என்றான்.

"என்னடா பண்றீங்க ரெண்டு பேரும். வாங்க டிபன்‌ ரெடி சாப்டலாம்" என்று ரேவதி அழைத்து விட்டார் பேச்சை தடை செய்யும் விதமாக. 'சரி சாப்பிட்ட அப்புறம் தான் எல்லாம் கிளாரிபை ஆகும் போல' என உண்ண சென்றான்.

'லேப்டாப்பில் என்ன இருக்கும், ருத்ரா கூறப் போகும் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்' என்ற சிந்தனையில் அரைகுறையாக சாப்பிட்டான் கௌதம்.

ஆருவும்‌ கௌதமும் தங்கள் மனதின் அலைப்புறுதலில் அமைதியாக உணவை உண்ண அங்கு ரேவதி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.

ஒருவழியாக காலை சிற்றுண்டியை முடித்த பின் இருவரும் தங்கள் வேலையை பார்க்க சென்றனர். கௌதம் முன்னெச்சரிக்கையாக "அம்மா நாங்க முக்கியமான வேலை பார்க்க போறோம்.

இந்தா இருக்கு பார் டைனிங் டேபிள் அங்க தான் உக்காந்திருப்போம். நீ அங்க வந்து எங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. சரியா" என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

அதை பார்த்த ஆரு சிரித்துக் கொண்டிருந்தாள். தன் மகனை பார்த்து முறைத்த ரேவதி ஆருவை பார்த்து "நீ வேலைய பாரு டா.

நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வரேன்" என சொல்லி சென்றார். தன் அன்னை செல்வதை கண்ட கௌதம்

"ஓகே ஆரு நாம வேலைய ஸ்டார்ட் செய்வோம். இரு நான் போய் லேப்டாப்பை எடுத்துட்டு வர்றேன்" என்று உள்ளே சென்றான்.

அவன் வருவதற்கு முன் தான் எடுத்து வந்த பையை எடுத்து அதில் இருந்த ஒன்றை மட்டும் எடுத்து டேபிலின் மேல் வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள் ஆரு‌.

உள்ளே சென்ற கௌதம் மடிக்கணினியை எடுத்து வந்தவன் டைனிங் டேபிள் மேல் இருந்ததை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.

"இது..இது.. எப்படி.. எப்படி ருத்ரா உன்கிட்ட வந்துச்சு" என்றான் கௌதம் கண்களில் துளிர்த்த நீருடன். அவன் குரலும் கம்மி மெலிதாக ஒலித்தது.

அவனின் முகம் காட்டும் உணர்வுகளை உள்வாங்கிய ஆரு‌ மெல்லிய சிரிப்புடன் "நீங்க தான் கௌதம் என்கிட்ட தந்தீங்க" என்றாள்.

புரியாது பார்த்த கௌதமிடம் "ஞாபகம் இல்லையா கௌதம் அன்னைக்கு சத்யாவோட வீட்ல வச்சு கொஞ்சம் புக்ஸ் குடுத்தீங்களே.

அதோட தான் இதுவும் இருந்துச்சு" என்றாள் ஆரு. அது வேறொன்றும் இல்லை சத்யாவின் டைரி. ஆம் சத்யாவின் ஒரு பழக்கம் டைரி எழுதுவது.

அவன் நிறைய பேச மாட்டான். அதற்கு பதில் தன் மனதில் இருப்பதை அந்த டைரியில் எழுதி விடுவான்.

இப்போது இது கண்டிப்பாக தனக்கு பெரிதும் உதவும் என எண்ணினான் கௌதம். அதை கையில் எடுத்து ஆருவை பார்த்து

"தேங்க்ஸ் ருத்ரா தேங்கியூ சோ மச் மா. இதை தான் நான் தேடிட்டு இருந்தேன். அங்க சத்யா வீட்டில டைரி இல்லைன்னு தெரியவும் எங்க போயிருக்குமோன்னு குழம்பிட்டு இருந்தேன்.

தேங்க்ஸ்" என்றான் உள்ளிருந்து. இதை கேட்ட ருத்ரா மற்றதை விட்டு விட்டு "அப்போ நீங்க சத்யாவோட வீட்டுக்கு மறுபடியும் போனீங்களா" என்றாள் முறைத்தபடி.

அவளை கண்டு சிரித்த கௌதம் "ஹையோ ருத்ரா அது அன்னைக்கு என்னால எதுவும் எடுக்க முடியல. எடுத்த லேப்டாப்பும் பாஸ்வேர்டு தப்புன்னு சொல்லுது.

அதான் சத்யா வேற என்னலாம் யூஸ் பண்ணுவான்னு யோசிச்சேன். அப்பதான் அவனுக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்குன்னு ஞாபகம் வந்துச்சு.

அதான் மறுபடியும் வீட்டுக்கள்ள போனேன். பட் எங்க தேடியும் டைரி கிடைக்கில. அதோட அந்த ஜார்ஜ் வேற என்னனமோ சொன்னாரா. ரொம்ப அப்செட்.

அதான் அப்படியே பீச் வந்தேன். அங்க நேத்து உன்ன பார்த்தேன். அப்புறம் தான் உனக்கே தெரியுமே. நேத்து வீட்ல என்கிட்ட அவ்ளோ என்கரேஜிங்கா பேசுனல்ல.

ரியல்லி பெல்ட் பெட்டர் மா. அன்ட் நைட்டு அதையே யோசிச்சு கன்பூஸன்ல இருந்தேன். அப்பவும் நீ தான் என் மைன்ட ஹீல் செஞ்ச" என்று அனைத்தையும் ஒப்பித்தான்.

அவனை பார்த்து தானும் சிரித்த ஆரு "சரி உங்க ஃபிரண்ட் டைரியில இருக்கறத அப்புறம் பார்க்கலாம். நான் இன்னொரு டீடெயில் வச்சிருக்கேன்.

அது என்னோட கெஸ் தான் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கானு பாருங்க" என்றாள் புன்னகையுடன். 'இன்னும் இருக்கா' என ஆச்சரியமாய் நினைத்த கௌதம் சொல்லு என்றான் கண்களாலே.

ஆரு‌ கூறப் போவதையும் தெரிந்த பின் கௌதம் என்ன முடிவு செய்வானோ என்ற ஆர்வத்தில் தன் பையில் கொண்டு வந்திருந்த மற்றதையும்‌ எடுத்து வெளியே வைத்தாள் ஆரு.

ஆனால் அதை பார்த்த கௌதமிற்கு 'இதில் போய் என்ன இருக்கு' என்று குழப்பம் தான் வந்தது. அதையே தன் பார்வையிலும் வெளிப்படுத்தி ஆருவின் பதிலுக்காக காத்திருந்தான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 19

பூத்து குலுங்கும் பூந்தோட்டமே,
உன் பூக்களை எனக்கு தருவாயா?
புள்ளி மானாய் நான் துள்ளி வந்தேன்,
ஏனோ முகத்தை திருப்பி வைத்தாய்;
சிறு வேல் விழியாலே என்னை நிரப்பி வைப்பாயா பூக்காரியே??


கௌதம் தனக்கு முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை கண்டு "என்ன ருத்ரா இதுல என்ன இருக்கு. எதுக்கு இப்படி எல்லாத்தையும் பரப்பி வச்சிருக்க" என்றான் புரியாது.

"கௌதம் இந்த புக்ஸ் இது சத்யா வீட்ல இருந்து எடுத்துட்டு வந்தது" என்றாள் ஆரு ஒருவித எதிர்பார்ப்புடன்.

அப்போதும் புரியாது பார்த்த கௌதமை "கௌதம் இந்த புக்ஸ் நேம் சொல்றேன் கேளுங்க. ஆலிவர் ட்விஸ்ட், ஐ ஏம் அ டேக்ஸி, இக்பால்.

இதுலாம் சில்ட்ரன் லேபர் அன்ட் அப்யூஸ் நாவலஸ். இப்ப புரியுதா" என்றாள் மீண்டும் அவன்‌ முகம் பார்த்து.

இப்போது எதுவோ கௌதமிற்கு தெளிவானது போல் இருந்தது. சிறிது நேரம் யோசித்த கௌதம் "ருத்ரா யு ஆர் ரியலி பிரில்லியண்ட டா.

இப்ப எனக்கு இந்த பிரச்சினையோட நுனி கிடைச்சிருச்சுனு தோனுது" என்றான் அர்த்தத்துடன். ஏனெனில் ஒரு ஆர்ட்டிகல் எழுதி முடிக்க வேண்டும் என்றால்

சத்யா பல விதத்தில் விஷயங்களை சேகரிப்பான். அதில் ஒன்று புத்தகங்கள். அந்த புத்தகத்தில் இருக்கும் சூழ்நிலைகளை ஆராய்ந்து நிஜத்தில் எதாவது ஒத்து வருமா என்று தான் முதலில் ஆராய்வான்.

அதை வைத்தே கௌதம் 'சத்யா குழந்தை அப்யூஸ் நாவலஸ் படிச்சிருக்கான்னா அப்போ அதை பத்தி தான் எதோ அவனுக்கு விஷயம் கிடைச்சிருக்கு.

சோ இது மூலமா சத்யா என்கிட்ட சொன்ன விஷயம் குழந்தைங்க' என்ற முடிவுக்கு வந்தான்.

இப்போது ஆரு‌ "கௌதம் நான் சும்மா இந்த புக்ஸ்ல ஞிஸ்ட் மட்டும் தான் படிச்சு பார்த்தேன். அன்ட் அதை வச்சு தான் சொன்னேன்.

அன்ட் நீங்க இப்ப சத்யா டைரியில எதாவது டீடெயில்ஸ் கிடைக்காதானு பாருங்க. நான் லேப்டாப்ப ஓபன் பண்றேன். ஓகே" என்றாள்.

"ஓகே" என்ற கௌதமும் அதை எடுத்து ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டான். ஆருவும் மடிக்கணினியை எடுத்து அமர்ந்து விட்டாள்.

சுமார் ஒரு மணி நேரம் சென்ற பின் தான் தன் வேலையை முடித்த ஆரு‌ தலையை நிமிர்ந்து பார்த்தாள். அவள் எதிரே கௌதம் சத்யாவின் டைரியை விரிந்து வைத்து அமர்திருந்தான்.

மேலும் கையில் ஒரு நோட்டை வைத்து சீரியசாக அதில் எதுவோ எழுதிக் கொண்டிருந்தான். 'அப்படி என்ன எழுதுரார்' என்று யோசித்த ஆரு

"கௌதம் என்ன செய்றீங்க" என்றாள். ஆருவின்‌ சத்தத்தில் தன் கவனம் கலைந்த கௌதம் "ஹான் என்ன ருத்ரா" என்றான் தலையை தூக்கிப் பார்த்து.

"லேப் பாஸ்வேர்ட பிரேக் பண்ணி ஓப்பன் பண்ணிட்டேன் கௌதம். நீங்க என்ன செய்றீங்க இவ்ளோ சீரியசா. அப்படி அதுல உங்களுக்கு என்ன ஹின்ட் கிடைச்சிது" என்று வினவினாள் ஆரு‌.

"அதை அப்புறம் சொல்றேன் ருத்ரா. இப்ப நம்ம லேப்ப பார்க்கலாம். சத்யா ஏதோ முக்கியமான விஷயம் இதுல இருக்கவும் தான் இவ்ளோ சேப்பா வச்சிட்டு போய் இருக்கனும்.

சோ பர்ஸ்ட் நாம இதை பார்ப்போம்" என்ற கௌதம் ஆருவின் அருகே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

பின் சத்யாவின் மடிக்கணினியை தன் பக்கம் திருப்பியவன் அதில் சத்யா இது சமந்தமாக ஏதும் வைத்திருக்கிறானா என்று ஆராய ஆரம்பித்தான்.

பார்த்து கொண்டே வந்தவன் ஒரு போல்டர் சத்யா இறந்த தேதியில் இருந்து ஒரு வாரம் முன்பு பதிவு செய்திருந்ததை பார்த்தான்.

'சரி இதற்குள் சென்று பார்ப்போம்' என்று முடிவு செய்த கௌதம் அந்த போல்டரை திறந்தான். அதில் ஒரு காணொளியும் ஒரு வேர்ட் பையிலும் சில புகைப்படங்களும் இருந்தது.

முதலில் வீடியோவை ஆன் செய்யலாம் என ஹெட்செட்டை இணைத்து கொண்டான். அதில் தான் ஒன்று எடுத்து திரையையே பார்த்திருந்த ஆருவிடம் ஒன்றையும் தந்தான்‌.

அதன் பின்னே காணொளியை ஓட விட்டான். அது ஒரு சிறுவன் பேசிய காணொளி. அந்த சிறுவன் தன்னை போல் பலரை கடத்தி அடைந்து வைத்திருப்பதை கூறிக் கொண்டு இருந்தான்.

மேலும் தங்களை வெளிநாடு வெளி மாநிலம் போன்ற இடங்களுக்கு வேலைக்கு அடிமையாக அனுப்பி வைப்பதையும் சொல்லி கொண்டு இருந்தான். முழு காணொளியும் முடிந்த பின்

ஆருவை ஒரு பார்வை பார்த்த கௌதம் அடுத்திருந்த புகைப்படங்களை பார்த்தான். அது எல்லாம் குழந்தைகள் படங்கள்.

அதுவும் ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பது போல் இருந்தது. அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றி செல்வது போன்ற படங்களும் இருந்தது.

மேலும் வேறு சிலரின் படங்களும் இருந்தது. அவர்களை பார்த்த கௌதமிற்கு அது யாரென தெரியவில்லை. ஆனால் பார்த்தால் ரவுடி கும்பலை போல் இருந்தது.

அதை எல்லாம் பார்த்தவன் 'சரி அடுத்து உள்ள வேர்ட் பையிலை பார்ப்போம்' என்று திறந்து உள்ளே சென்றான்.

அதில் சத்யா முதலில் இருந்த வீடியோ, புகைப்படம் என்று தான் சேகரித்த விஷயங்களை தொகுத்து எழுதி இருந்தான்.

எல்லாவற்றையும் பார்த்து முடித்த கௌதம் அதை தன் கைப்பேசியில் ஏற்றி வைத்து கொண்டான். பின் லேப்டாப்பை மூடி வைத்தான்.

சிறிது நேரம் அமைதி நீடித்தது. அதை உடைத்த ஆரு‌ "கௌதம் இதை எல்லாம் பாக்கிறப்ப நாம கெஸ் செஞ்சது கரெக்ட்னு புரியுது.

யாரோ குழந்தை கடத்துறத தான் சத்யா கண்டு பிடிச்சிருக்கார். அவங்க தான் சத்யாவ ஏதோ செஞ்சிருக்கனும்" என்று தன் யூகத்தை முன் வைத்தாள்.

ஆரு கூறியதை கேட்ட கௌதமுக்கு டைரியில் படித்ததும் மடிக்கணினியில் பார்த்ததும் ஒன்று என புரிந்தது. ஆனால் வேறு எதுவோ எங்கோ சரியில்லை என்று தான் தோன்றியது.

ஆனால் தன் சந்தேகத்தை முன் வைக்காது "ம்ம் இருக்கலாம் ருத்ரா" என்றான் ஏதோ யோசனையுடன். "சரி டைரியில என்ன இருந்தது"

என்று தன் அடுத்த சந்தேகத்தை கேட்டாள். அவளை பார்த்த கௌதம் "நம்ம லேப்டாப்பில் என்ன பார்த்தோமோ அதையே தான் எழுதி இருந்தான் ருத்ரா" என்று முடித்து கொண்டான்.

ஆனால் அதில் சத்யா இது சாதாரண கடத்தல் போல் தெரியவில்லை என்று தன்னுடைய சந்தேகத்தை எழுதி இருந்ததை சொல்லாமல் விட்டான்.

தான் வந்த வேலை அனைத்தையும் முடித்த ஆரு தனக்கு நேரமாவதை உணர்ந்து "எனக்கு டைம் ஆகுது கௌதம். நான் கிளம்பட்டா இல்லை புல் டே லீவ் சொல்லிட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டா" என்றாள்.

"இல்ல ருத்ரா நீ கிளம்பு. நீ இதுவரைக்கும் எனக்கு செஞ்ச ஹெல்பே ரொம்ப பெரிசு மா. சோ நீ கிளம்பு" என்றான் கட் அன்ட் ரைட்டாக.

அவன் சொன்னதை கேட்ட ஆரு "இப்ப வேனா நீங்க என்னை துரத்தி விடலாம் கௌதம். பட் நான் மறுபடியும் வருவேன்" என்று விட்டு ரேவதாயிடமும் சொல்லி சென்றாள்.

அவள் தன்னை மிரட்டுவது போல் சொல்லி செல்லும் தோரணையை கண்ட கௌதம் சிரிப்புடன் அனுப்பி வைத்தான்.

மாறன் மிகுந்த பரபரப்புடன் கார்முகிலனிற்கு அழைப்பு விடுத்து காத்திருந்தான். இரண்டாம் முறை தான் கைப்பேசியை எடுத்தான் முகிலன்.

"ஹலோ முகிலன் என்ன ஆச்சு ஏன் போன் எடுக்க இவ்ளோ நேரம்" என்றான் பரபரப்பாக. "சாரி மாறன். இங்க ஏ.சி இருந்தார்.

அதான் அவர்‌ போன அப்புறம் எடுக்கறேன். என்ன ஆச்சு. ஏன் இவ்ளோ டென்ஷனா பேசிறீங்க" என்றான் முகிலன்.

"ரொம்ப முக்கியமான விஷயம் முகில். நான் எப்படி இதை சொல்லுவேன். இவ்ளோ நாள் நாம எல்லாரும் முட்டாள் ஆகிட்டோம் முகில்" என்றான் கோபமான குரலில்.

"என்னாச்சு ஏன் இந்த கோபம் மாறன். என்ன சொல்றீங்க நாம எப்படி முட்டாள் ஆனோம்னு சொல்றீங்க. கொஞ்சம் கோபப்படாம சொல்லுங்க" என்றான் முகில்.

"நாம முட்டாள் ஆகிட்டோம்னு சொல்றத விட நம்மல நல்லா முட்டாள் ஆக்கிட்டான் அந்த பிரசாத்" என்றான் பல்லை கடித்து கொண்டு.

"கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க மாறன்" என்றான் இப்போது முகிலனும் பரபரப்புடன். அதற்கு மாறன் "நாம‌ இதுவரைக்கும் பிரசாத்னு நம்பிக்கிட்டு இருந்தவன் உண்மையான பிரசாத்தே இல்லை முகில்" என்றான் ஆவேசமாக.

ஒரு நிமிடம் தான் கேட்டது உண்மை தானா என்று சந்தேகம் அடைந்த முகிலன் "என்ன சொல்றீங்க மாறன். எனக்கு புரியலை" என்றான் வெளி வராத குரலில்.

"உண்மை தான் முகில் இவ்ளோ நாள் பிரசாத்னு சொல்லிக்கிட்டு இங்க வந்தவன் பிரசாத்தே இல்லை. இத இப்ப தான் நான் கன்பார்ம் செஞ்சேன்" என்றான் கடுப்புடன்.

"என்ன மாறன் இது இவ்ளோ நாள் அவன் தானே உங்களுக்கு எல்லா வேலைகளையும் சொல்லுவான். அந்த ஆப்ப கூட இவன் தான் மேனேஜ் பண்றானு சொன்னீங்க.

இப்ப எப்படி இவன் பிரசாத் இல்லைனு சொல்றீங்க. பிளீஸ் கொஞ்சம் என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க" என்று முடித்தான் முகிலன்.

மாறன் இன்று காலை நடந்த நிகழ்வுகளை முகிலனிடம் கூற ஆரம்பித்தான். இன்று காலை வந்த பிரசாத் வழக்கம் போல் தன் அறைக்கு சென்றான்.

அப்போது குமாரரையும் மணியையும் அழைத்த பிரசாத் அவர்கள் அடுத்த செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான்.

பின் எப்போதும் போல் அவர்களை வெளியே அனுப்பி விட்டான். சிறிது நேரம் சென்று அவன் இருந்த அறையை கடந்து சென்றான் மாறன்.

அந்த நேரம் அவன் அலைப்பேசியில் யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான். கிட்டதட்ட கிசுகிசுப்பாக பேசிக் கொண்டிருந்தான்.

'அப்படி யார்ட்ட இவன் இப்படி பேசிக்கிட்டு இருக்கான்' என்று யோசித்த மாறன் அங்கையே நின்றான்.

அப்படி பேசியவன் திடீரென சத்தமாக கத்தினான்‌. "போதும் பிரசாத் நீ இவ்ளோ டென்சன் ஆகாத. நான் பாத்துக்கிறேன்.

நீ சொன்ன வேலை எல்லாம் இங்க நான் எக்சிகுயூட் பண்ணிட்டு தான் இருக்கேன் புரியுதா" என்றான். சிறிது மௌனத்திற்கு பின் "இங்க பாரு பிரசாத் அந்த ஆப்ப பில்ட் செஞ்சது நான்.

எவ்ளோ ஸ்டார்ங்க பில்ட் பண்ணிருக்கேன் தெரியுமா. அந்த ஆப்பால நமக்கு எந்த ரிஸ்க் பேக்டரும் கிடையாது புரியுதா" என்றவன்

"சரி நாம நேர்ல பாக்குறப்ப டீடெயில்லா சொல்றேன் ஓகே. இப்ப வைக்கிறேன்" என்று தன் அழைப்பை அணைத்தான்.

ஒன்று விடாது அனைத்தும் கூறிய மாறன் "எனக்கு அப்படியே ஆத்திரமா வருது முகில்‌. இவ்ளோ நாள் நாம நினைச்சது எல்லாம் இப்ப ஒன்னுமே இல்லைனு ஆகிருச்சு.

எனக்கு அந்த நிமிஷமே அவனை அப்படியே சுட்டு தள்ளனும் போல‌ வெறி ஏறுச்சு. எப்படி கன்ட்ரோல் பண்ணிட்டு வந்தேன்னு இப்ப கூட புரியல" என்று அனைத்தையும் சொல்லி முடித்தான் மாறன்.

கேட்ட முகிலனுக்கு தலையே சுற்றி விட்டது ஒரு நிமிடம். என்ன சொல்வது என்று புரியாது அமைதி ஆனான் அதிர்ச்சியில்.

அப்போது தன் அறை வாயிலில் நிழலாடுவதை கண்டவன் 'இது வேறையா. யார்ரா நீங்கலா‌. எங்க இருந்து டா வரீங்க.

ம்ம் எவனா இருந்தாலும் வாங்கடா நீங்களா நாங்களான்னு பாத்துகறேன்" என்று மனதில் சபதம் எடுத்தான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 20

காற்றில் கலந்த உன் சுகந்தத்தை சுவாசித்தேன்;
காற்றும் நீ அருகே இருக்கிறாயென,
என்னை தேற்றிக் கொண்டே நகர்கிறது;
காத்திருக்கிறேன் காற்று கூறியது
உண்மையா என்று அறிந்திட!!



மாறன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்முகிலனின் அறை வாயிலில் யாரோ அவன் பேசுவதை கேட்பது தெரிந்தது.

போன முறை மாறன் அழைப்பு விடுத்து எச்சரிக்கை செய்தபின் தன் அறையை நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தான்.

அப்போது அவன் பேனாக்கள் வைக்கும் இடத்தில் ஒரு பேனா மட்டும் வித்தியாசமாக இருக்க எடுத்து பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. ஏனெனில் அதில் மைக்ரோ போன் வைக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்த உடன் கண்டு கொண்டான் அவனையும் யாரோ கண்காணித்து வருகின்றனர் என்பதை. அதை அந்த நிமிடமே அகற்றி விட்டான்.

ஆனால் கோபம் தான் ஏகத்துக்கும் ஏறியது "என்னோட ரூம் வரைக்கும் வந்துட்டீங்கலா" என்று. அன்று முதல் இன்று வரை அவன் அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் அவர்களுக்கு தெரியாமல் கண்காணிக்கிறான்.

அவர்களிடம் பேசி தன் அறைக்கு அடிக்கடி யார் செல்வது என்ற செய்தியை கேட்டு எல்லோரிடமும் மறைமுகமாக கேட்டு பார்த்தான். யாரென கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்போது தன் அறை வாசலிலிற்கே வந்து விட்டனரா என்று எண்ணிய முகிலன் "ஒன் மினிட் மாறன்‌. பிளீஸ் ஸ்டே ஆன் த லைன்" என்றுவிட்டு எழுந்து கதவருகில் மெல்ல சென்றான்.

பின் மெதுவாக கதைவை திறந்தவன் பார்த்தது குழுவாக நிற்கும் ஐந்து ஆறு போலீஸ் அதிகாரிகளை தான்.

அவர்கள் இவன் வந்ததைக் கூட கவனியாது "நீங்க தட்டுங்க இல்லை நீங்க தட்டுங்க" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.

பார்த்த முகிலனுக்கு தான் கோபம் கோபமாக வந்தது. அவர்களை பார்த்து "இங்க நின்னுக்கிட்டு என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும்" என்றான் கோபமாக.

அவனை கண்டவர்கள் பயத்தில் எச்சிலை விழுங்கியவர்கள் "சார்" என்றனர். "என்ன சார்னு இழுக்குறீங்க.

என் ரூம் முன்னாடி என்ன வேலை உங்களுக்கு. போய் வேலைய பாருங்க" என்றான் இன்னும் கோபமாய்.

அப்போது ஒருவர் மட்டும் முன்னே வந்து "சார் இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாள். அதான் விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தோம் சார்" என்றார் தயக்கமாக.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்" என்று விட்டு ஒரு மலர் கொத்தை தந்தார் அவர். பின் அனைவரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.

அந்த மலர் கொத்தை வாங்கியவன் "தேங்க்ஸ்" என்று அனைவருக்கும் பொதுவாக சொல்லி விட்டு " இப்படி வொர்க் டைம்ல வந்திருக்கீங்க.

ஏன் லஞ்ச் டைம்ல வந்தா நான் எதாவது சொல்ல போறனா. இதுலாம் சரியில்லை. அப்படியே வந்ததும் வந்தீங்க டோர்ர ஒரு நாக் பண்ண முடியாதா.

வாசல்ல வச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க. போய் வேலைய பாருங்க" என்றான் இப்போது கோபம் இல்லாது ஸ்ரிட்டான குரலில்.

கதவை அடைத்து உள்ளே வந்தவன் முதலில் பார்த்தது அந்த பூங்கொத்தில் சந்தேகிக்கும் படி எதுவும் இருக்கிறதா என்பதை தான்.

ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் தான் நிம்மதி கொண்டான். பின்பே மாறனிடம் பேசச் சென்றான்‌.

"சாரி மாறன் ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேன். இங்க ஒரு சின்ன இஸ்யூ அதான். நீங்க சொல்லுங்க இப்ப என்ன பண்ணலாம்னு" என்றான் முகிலன் மாறனிடம்.

"அதை விடுங்க முகில் இன்னைக்கு உங்க பிறந்தநாளா. சாரி நானும் போன் பண்ணி உங்களுக்கு டென்ஷன் ஏத்தி விட்டுட்டேன்.

அன்ட் மெனி மோர் ஹேப்பி பர்த்டே முகில்" என்றான் மாறன் தானும் கோபம் குறைந்தவனாய். "தேங்க்ஸ் மாறன்.

நீங்க பேசவும் நான் டென்ஷன் ஆகலை. நீங்க அங்க எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. என்னை நம்பி எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கீங்க.

இங்க என்னடானா எவனோ ஒருத்தன் நம்ம கூட இருந்துட்டு நமக்கு எதிரா வேலை பார்த்து கிட்டு இருக்கான்.

நீங்க லாஸ்ட் டைம் சொன்ன அப்புறம் தான் என் ரூமை நல்லா தரோவா செக் பண்ணேன். ஒரு மைக்ரோ போன் இருந்தது.

அதான் இபப் டென்ஷன் ஆகிட்டேன்" என்றான் முகிலன் சமாதானமாக. பின் "இங்க என்னவோ ஒன்னு சரியில்லை முகில்.

எனக்கு அந்த டவுட் ஆரம்பத்தில இருந்தே இருந்துக்கிட்டு தான் இருக்கு" என்றான் மாறன் யோசனையாக.

"ஒரு வேளை உங்க ஃபிரண்ட் சத்யாக்கு இதை பத்தி ஏதோ டீடெயில்ஸ் கிடைக்க போய் தான் அவனுங்க இப்படி பண்ணீட்டாங்களோ" என்று தன் சந்தேகத்தை முன் வைத்தான் முகிலன்.

"ஆமா முகில். அப்படி இருந்தா சத்யா கண்டிப்பா நமக்கு ஏதாவது ஒரு ஹின்ட விட்டுட்டு தான் போய்ருப்பான்னு எனக்கு தோனுது முகில்

அதை கண்டிப்பா நான் தேடி போகப்போறேன்" என்று தன் மனதின் எண்ணத்தை கூறினான் மாறன். "நீங்க செய்ங்க மாறன். பட் நிதானமா செயல்படனும்.

அன்ட் நீங்க இன்னும் சேப்பா இருங்க. உங்க சேஃப்டியும் முக்கியம். ஓகே டேக் கேர்" என்று முடித்தான் முகிலன். "ம்ம் புரியுது முகில். ஓகே நான் பாத்துக்கிறேன்.

அன்ட் சீ யூ சூன் முகில்" என்று அழைப்பை அணைத்தான் மாறன். அவன் அறியவில்லை அவன் தேடி செல்லும் முன்னர் அவனை தேடி

அவன் நண்பன் சார்பில் ஒருவர் அல்ல இரண்டு நபர்கள் வரப்போகிறார்கள் என்று. அவர்களின் துணை கொண்டே தன் ஆட்டத்தை முடிப்பான் என்றும்.

அங்கே கௌதம் இல்லத்தில் ஆருத்ரா கிளம்பிய பின் தன் வேலையை தொடங்கி விட்டான் கௌதம்.

முதலில் தன் பத்திரிகை அலுவலகத்தின் தலைமையகத்திற்கு அழைப்பு விடுத்தான். அங்கே அவனுக்கு வேண்டிய ஒரு நபர் உள்ளார்.

அவன் என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார். அவரிடம் தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் நடந்த கடத்தல் மற்றும் காணாமல் போனவர்களின் விவரங்கள் தனக்கு வேண்டும் என்றான்.

குழந்தைகள் என்று குறிப்பிட்டு கேட்காமல் பொதுவாக சொல்லி விட்டான் தன் மீது சந்தேகம் வராத அளவு. அந்த நபரும் பலர் ஆராய்ச்சி செய்வதற்காக இப்படி கேட்பார்கள் என்பதால்,

கௌதமும் அதற்கு தான் கேட்கிறான் என்று நினைத்து நாளை தருவதாக சொல்லி வைத்தார். சரியென்று வைத்த கௌதம் தன் அடுத்த வேலையாக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றான்.

இது எப்போதும் நடக்கும் ஒன்று தான். பத்திரிகையாளர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று அங்கே வந்த புதிய கேஸ்களின் விபரம் பெற்று கொள்வர்.

இது எல்லா இடத்திலும் நடக்கும் ஒரு நிகழ்வே. கௌதமும் தன் அலுவலகத்தில் அழைத்து இன்று தான் செல்வதாக கூறிவிட்டு சென்றான்.

அங்கே செய்திகளை வாங்கிக் கொண்டு அவர்களே அறியாது தனக்கு தேவையான தகவல்களை சேகரித்து கொண்டான்.

பின் அங்கிருந்து புறப்பட்டு நேரே தன் அலுவலகத்திற்கு சென்றான். அங்கு தான் சேகரித்த செய்திகளை தந்துவிட்டு பின்பு உடனே வெளியே வந்து விட்டான்.

அங்கு இருப்பவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் பத்திரிகையாளர்கள் வேலை அலுவலகத்தில் இல்லாமல் வெளியே தானே.

வெளியே வந்தவன் நேரே தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வந்தவன் நேரே தன் அறைக்கு சென்றான். அங்கே இருந்த கரும்பலகையை எழுதுவதற்காக எடுத்து தன் முன்னே வைத்தான்.

பின் அதில் தான் சேகரித்த விபரங்கள் தன் சந்தேகங்கள் என்று அனைத்தையும் அதில் எழுத தொடங்கினான்.

முதலில் நடுவில் ஒரு வட்டம் போட்டு அதில் குழந்தை கடத்தல்கள் என்று எழுதினான். பின் குழந்தைகளை எதற்காக கடத்துவார்கள் என்று தன் சந்தேகங்களை வரிசைப்படுத்தினான்.

"பெண் குழந்தைகள் மட்டும்னா வேற காரணத்துக்காக கடத்துவாங்க. பட் நமக்கு தெரிஞ்ச வரை ஆண் பெண் ரெண்டு குழந்தைகளும் கடத்தி இருக்காங்க.

ஏன்னா சத்யா வச்சிருந்த வீடியோல அந்த பையன் அப்படி தான் சொன்னான். சோ அந்த ரீசனா இருக்காது‌" என்று தன் பட்டியலில் இருந்த முதல் காரணத்தை அடித்து விட்டான்.

"அடுத்து பார்த்தா குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்க கடத்துவாங்க. அது இங்க இருக்க லோக்கல் ரவ்டீஸ் ஒரு கேங் நடத்துறது.

அந்த கேங்க கூட கடைசியா நாம எழுதின ஆர்ட்டிகல் மூலமா தான் வெளியே வரவச்சோம். அவனுங்க எல்லாம் இப்ப ஜெயில்ல இருக்கானுங்க.

சோ அவனுங்க இருக்க சேன்ஸ் இல்லை. பட் ஒரு வேளை புது ஆளுங்க அதுக்குள்ள இந்த வேலை செய்ய ஆரம்பிச்சிருந்தா. சரி அது ஒரு இருபது சதவீதம் சான்ஸ் இருக்கலாம்" என்று குறித்து கொண்டான்‌.

"அடுத்து இருக்க டவுட்ஸ்படி பார்த்தா ஒன்னு ஆர்கன் திருடரது அன்ட் இன்னொன்னு பான்டட் லேபர்ஸ்.

இதுல ஆர்கன் திருடரது அப்படினா குழந்தைகளை விட பெரியவங்களை தான் டார்கெட் பண்ணுவாங்க.

அப்படியே ஆர்கன்காக குழந்தைகளை கடத்துராங்கன்னு எடுத்தாலும் அது ஒரு பத்து சதவீதம் இருக்கலாம்" என்று அதையும் குறித்து கொண்டான்‌.

"இதுல பான்டட் லேபர்ஸ் கடைசி. அன்ட் குழந்தைகளை இதுக்கு கடத்தறது கொஞ்சம் கம்மி தான். இதுல போரண்ட்ஸோட சேர்த்து வச்சி தான் குழந்தைகள கூட்டிட்டு போவாங்க.

நாம‌ அப்படி தான் கேள்விபட்டு இருக்கோம். சரி இதுக்காக தான் இவனுங்க கடத்துராங்கனா ஒரு இருபது சதவீதம் சான்ஸ் இருக்கு" எனறு குறித்து கொண்டான்‌.

அனைத்தையும் எழுதி முடித்து பார்த்தவன் "மொத்தம் ஐம்பது சதவீதம். அப்ப மீதி ஐம்பது என்னவாக இருக்கும்" என்று ஒரு வட்டம் போட்டு அதில் ஒரு கேள்வி குறியை போட்டு பார்த்தான்.

அவனை பொருத்த வரை சத்யாவின் மரணம் வெறும் குழந்தை கடத்தல் கும்பலால் நடந்தது என்று இப்போதும் நம்ப முடியவில்லை.

"ஏனெனில் அதற்காக கொலை செய்யும் அளவுக்கு யாராவது செல்வார்களா" என்று ஒரு எண்ணம். மேலும் இது போல் வழக்கில் பணம் இருந்தால் எளிதாக கையாண்டு விடலாம்.

அதற்கான சாத்தியம் அதிகம். அதற்காக கொலை செய்யும் அளவுக்கு ரிஸ்க் எடுப்பார்கள் என்ற எண்ண முடியவில்லை.

இவன் எண்ணம் இப்படி வட்டமடித்துக் கொண்டு இருக்க அதற்கு சளைக்காது மாறனும் அதே போல் தான் எண்ணிக் கொண்டு இருந்தான்.

இவர்களுக்கு இப்படி தலை வேதனையை கொடுத்த அந்த பிரசாத்தோ அங்கு தன் இடத்தில் முக்கியமான ஒரு கலவையை பரிசோதித்து கொண்டிருந்தான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 21

கண்களின் காட்சி பிழையென கடந்து சென்றாலும்,
காண்பது நிஜமென உன் நறுமணம் கூறியதே;
காத்திருந்த
நேரம் காற்றில் உன் வாசத்தை சேர்த்தாயோ,
முகர்ந்து கொண்டே நகர்க்கிறேன் என் அருமை தோட்ட முல்லையே!!


மாறன் இப்போது இங்கே நடக்கும் வித்தியாசமான காரியங்களை எண்ணி கொண்டு இருந்தான். அவனுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

இத்தனை நாள் அவன் மாறுவேடத்தில் தன் அடையாளத்தை மறைத்து இங்கு வந்து நாய் படாதபாடு பட்டு தான் சேகரித்த விபரங்கள் அனைத்தின் மூலம் இது ஒரு சாதாரண கடத்தல் என்றே எண்ணினான்.

ஆனால் இப்போது இருக்கும் சூழலில் தான் சேகரித்த விபரங்கள் அனைத்தும் பொய்யோ? இங்கு நடப்பது அப்படி இல்லையோ? என்றே எண்ண வைக்கிறது.

ஏனெனில் இன்று காலையில் நடந்த ஒரு நிகழ்வு தான் அவனை இப்படி எண்ண வைத்ததற்கு காரணம்.

காலையில் வந்த ஒரு கும்பல் சித்து விக்கி மற்றும் ரோஹித் ஆகிய மூன்று சிறுவர்களையும் இன்று அழைத்து சென்று விட்டனர்.

மேலும் இப்போது எல்லாம் குழந்தைகளை கூட்டி வருவதற்கு இவர்கள் யாரும் செல்ல அனுமதிப்பதில்லை. வேறு யாரோ சிலர் தான் போகின்றனர்.

அதுவும் தாங்கள் தரும் லிஸ்ட்டில் பாதி பேரையே இங்கு கொண்டு வந்து விடுகின்றனர். மீதி பசங்களை எங்கே அழைத்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை.

தான் காலம் தாழ்த்துகிறோமோ என்று அவனுக்கு தோன்ற தொடங்கி விட்டது. இந்த சிறுவர்களை என்ன செய்ய போகிறார்கள் என்று எல்லா விதத்திலும் விசாரிக்க முயன்றான்.

ஏன் இன்று காலை கூட அந்த சிறுவர்களை அழைத்து செல்கையில் தானும் அவர்களை பின்தொடர முயற்சி செய்யலாம் என்றே நினைத்தான்‌.

ஆனால் அவனை யாரும் அந்த இடத்தை விட்டு நகர விடவில்லை. அதுவும் வந்த தடியன்கள் ஒருவரும் இவர்கள் யாரையும் நெருங்கக் கூட விடாது தடுத்தனர்.

அதுவும் போன சிறுவர்களின் அந்த சோகமான முகம் அவன் மனதை இப்போதும் பிசைகிறது. அவர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்தவன் குமாரிடமும் சென்று மறைமுகமாக கூட கேட்டு பார்த்தான்.

அவனுக்கு தனக்கு தெரிந்த உண்மை கூட தெரியாமல் இருப்பதை கண்டு பல்லை கடிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

இதில் குமார் வந்து இவனிடம் "என்ன நடக்குது இங்க" என்று கேட்ட போது அவன் தலையை கொண்டு சுவற்றில் முட்டி உடைத்து விடலாமா என்றே தோன்றியது.

இங்கே இவன் புலம்ப அங்கே அந்த சிறுவர்கள் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அவர்கள் பயத்தில் நடுங்கிய வண்ணம் நின்றிருந்தனர்.

சித்து, விக்கி மற்றும் ரோஹித் ஆகிய மூன்று சிறுவர்களையும் அந்த கட்டிடத்திற்குள் அழைத்து சென்றனர். புதிய இடத்தை கண்டு மேலும் சுருங்கினர் சிறுவர்கள்.

அங்கு தன் கையில் இருந்த கோப்பையில் ஏதோ திரவத்தை ஊற்றி கலந்து கொண்டிருந்த பிரசாத் அப்போது கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவன் தலையை நிமிர்ந்து பார்க்கும் வரை அமைதியாக நின்றிருந்தனர் சிறுவர்களை அழைத்து வந்தவர்களும்.

அந்த நேரம் புயல் போல் உள்ளே வந்தான் மற்றொருவன்‌. வந்தவன் அங்கே நின்றுக் கொண்டிருந்தவர்களை போல் பொறுமை இல்லாது நேராக அந்த அறைக்குள் சென்று விட்டான்.

அதற்கு அங்கே இருந்தவர்களும் ஒன்றும் சொல்லவில்லை. நடந்த அனைத்தையும் பார்க்காதது போல் முக பாவத்துடன் நின்றிருந்தனர்‌‌.

உள்ளே சென்ற மற்றவனோ "டேய் பிரசாத் என்ன செய்ற" என்றான் குதூகலமான குரலில். வந்தவனை திரும்பி முறைத்த பிரசாத்

"உனக்கு எத்தனை தடவை சொல்றது சக்தி நான் வேலை பார்க்கும் போது உள்ள வராதன்னு" என்றான் உக்கிரமாக.

அதை என்னை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை என்ற முகபாவத்தில் வந்த சக்தி "இதுலாம் என்கிட்ட நீ பேசக் கூடாது. புரியுதா" என்றான் நக்கலாக.

சக்தியை முறைத்த பிரசாத் "என்ன ஆச்சு நான் சொன்ன வேலை. முடிச்சுதா இல்லை சொதப்பீட்டியா" என்றான் தன் வேலையை பார்த்துக் கொண்டே.

"என்னை என்னன்னு நினைச்ச. நான் உன் அண்ணன் டா அதுலாம் பக்காவா முடிச்சிட்டேன். இனிமே எவனும் நம்மல நெருங்க முடியாது" என்றான் கெத்தாக.

அவனை கேவலமான ஒரு பார்வை பார்த்த பிரசாத் "இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. யாரோ ஆப் உள்ள பூந்து ஹேக் பண்ண டிரை‌ செஞ்சிருக்காங்க.

அதை ஆரம்பத்திலேயே பார்க்காம விட்டுட்டு ரொம்ப பேசாத. புரியுதா" என்றான் காட்டமாக. அதை அசட்டை செய்தவன் "அதான் இப்ப எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டேன்ல.

சும்மா பேசாத. சரி உன் வேலை எப்படி போய்கிட்டு இருக்கு" என்றான் சோஃபாவில் கால் நீட்டி அமர்ந்து கொண்டு. அவனை ஒரு பார்வை பார்த்தவன்

"அது உனக்கு தேவை இல்லாத விஷயம். நீ உன் லிமிட்ல இரு" என்றான் அதிகாரமாக. இது எனக்கு பழக்கம் தான் என்பதை போல் அமர்ந்திருந்தான் சக்தி பிரசாத்.

இவன் விஷ்ணு பிரசாத் சக்தி பிரசாத்தின் தம்பி. இரண்டு வயது சிறியவன். அண்ணன் சக்தி பொருப்பில்லாது ஊரை சுற்றுபவன் என்றால்,

விஷ்ணு பிரசாத் பொருப்பானவன் என்ற போர்வையில் அனைத்தும் செய்பவன். ஆனால் இருவரும் தங்கள் மனதிற்கு பிடித்ததை செய்வதற்கு எதையும் செய்பவர்கள்.

விஷ்ணுவிற்கு தன்னை மட்டுமே பிரசாத் என்று அழைக்க வேண்டும் என்ற பிடிவாதம் அதிகம். தன் அண்ணனை கூட அப்படி கூப்பிடுவதில் விருப்பம் இல்லாதவன்.

எனவே அவன் சக்தி இவன் பிரசாத் என்றே அழைக்கப்பட்டனர். இந்த விஷ்ணு வெளிநாடு சென்று தன் படிப்பை முடித்து வந்தவன்.

இரண்டு பேரையும் படிப்பில் மட்டும் யாராலும் வெல்ல முடியாது. அந்த அளவுக்கு படிப்பில் சிறந்து தான் விளங்கினர்.

இப்போது வெளிநாட்டில் இருந்து பிரசாத் வந்தவுடன் அவன் பெற்றோர்கள் சக்தியை பற்றி புகார் வாசித்தனர்.

தன் பெற்றோர்கள் தன்னுடைய அண்ணனின் நடவடிக்கையை கூறவும் "இவன் அப்படி என்ன தான் பண்றான்" என்று இவனும் கவனிக்க ஆரம்பித்தான்.

அப்படி தான் சக்தி தன் செலவிற்காய் சிறிய அளவில் குழந்தைகளை கடத்துவதை கண்டு பிடித்தான். அதில் முதலில் அதிர்ந்து போனான்.

பின் அவன் எண்ணத்தில் ஒரு விகாரமான யோசனை தோன்றியது. அதை தனக்கு சாதகமாய் பயன்படுத்தினால் என்ன என்று நினைத்தான். அவன் வீட்டிற்கு வந்தவுடன் அதை பற்றி கேட்டும் விட்டான்‌.

சக்தியை தன் அறைக்கு அழைத்தவன் "நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க" என்றான் கோபமாக. "என்னடா பண்ணிட்டேன். இவ்ளோ கோபப்படுர" என்றான் அசட்டையாக.

"நான் என்ன கேக்கேறேன்னு உனக்கு புரியலை. சரி நேராகவே கேக்குறேன்‌. எதுக்கு இப்படி குழந்தைகளை கடத்தி வித்துட்டு இருக்க.

இது வெளிய தெரிஞ்சா நம்ம குடும்ப மானம் தான் போகும். நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல" என்றான் ஆவேசமாக.

பிரசாதுக்கு உண்மை தெரிந்ததால் பெரிதும் அதிர்ந்தவன் "இல்லை அது வந்து இல்லை டா நான் எதுவும் அப்படி பண்ணலையே" என்றான் திக்கி தினறி.

"என்னை இத நம்ப சொல்றியா. நானே நேர்ல பார்த்தேன்" என்று தான் எடுத்த புகைப்படங்களை காட்டினான். அதை பார்த்து இன்னும் அதிர்ந்த சக்தி

"சாரி பிரசாத் சாரி. செலவுக்கு பணம் இல்லைன்னு தான் இப்படி பண்ணிட்டேன். அப்பாவும் பணம் தரதை நிருத்திட்டார் நான் என்ன செய்வேன் சொல்லு.

நீயும் சின்ன வயசுல இருந்து வெளிநாட்டுலையே இருக்க. நான் யார்கிட்ட கேட்பேன் சொல்லு. நான் வேனா இதை இப்பவே விட்டர்ரேன்டா. அப்பாக்கிட்ட மட்டும் சொல்லிராதடா. பிளீஸ்" என்று கெஞ்சினான்.

அவன் கெஞ்சலை கவனியாதவன் போல் "வாட் நான் ஏன் சொல்லாம இருக்கனும். அதனால எனக்கு என்ன கிடைக்கும்" என்றான் குரூரமான சிரிப்புடன்.

புரியாது பார்த்த சக்தியிடம் "என்ன புரியலையா இதனால எனக்கு என்ன யூஸ்னு கேக்குறேன்" என்றான் மீண்டும்.

இப்போது ஓரளவு யூகித்த சக்தி சிரிப்புடன் "நீ தான்டா என் தம்பி. நீ சொல்லு நான் என்ன செய்யனும்" என்றான் அவனின் மனவோட்டத்தை புரிந்தவனாக.

அப்போது அவன் கூறியது இது தான் "நான் ஒரு வேலை பார்க்க போறேன். அதுக்கு எனக்கு கொஞ்சம் குழந்தைகள் தேவை புரியுதா.

அப்புறம் என்ன வேலை ஏது என்ன இது எதுவும் நீ கேட்க கூடாது. அன்ட் நீ குழந்தைகளை நேர்ல போய் இனிமே கடத்த கூடாது வேற எதாவது வழி யோசி" என்றான்.

பின் இருவரும் இணைந்து வேலையை பார்த்தனர். இந்த ஆஃப் குறித்த யோசனையை சக்தி கூறிய போது மெச்சுதலாக தான் பார்த்தான்.

இதன் ஆழம் போக போக சக்திக்கு தான் இந்த கடத்தல் சாம்ராஜ்யத்தில் ராஜாவாக இருக்க வேண்டும் என்று வெறியே வந்தது.

இதில் அதிக பலன் என்னவோ பிரசாரத்திற்கு தான். ஏனெனில் எல்லா இடத்திலும் தன்னுடைய அடையாளமாக கூட சக்தியையே முன் நிறுத்தானான்.

பிரச்சினை வந்தால் கூட அதில் அவனை மாட்டி தான் தப்பித்து விடலாம் என்று அவன் ஒரு கணக்கை போட்டிருந்தான்.

இதை எதையும் அறியாத சக்தியும் தன் தம்பி எல்லா இடத்திலும் தன்னை மதிக்கிறான் தன்னையே முன்னிலை வகிக்க வைக்கிறான் என்று தவறாக எண்ணினான்.

இவ்வளவு எச்சரிக்கையாக இருந்த போதும் பிரசாத்தின் இடத்தை ஒருவன் கண்டு பிடித்து விட்டான்.

அவனுக்கு தக்க பதில் கொடுத்தாலும் அவர்களுக்கு பிடிக்காத பல விஷயங்கள் அதன் பின் தான் நடக்கிறது.

எனவே அவனுக்கு நெருடலாக இருக்கும் விஷயமும் அவன்‌ மரணமே. தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ண வைப்பதும் அதுவே.

இதில் என்ன செய்வது என்று தினமும் யோசித்து கொண்டு இருக்கிறான். தன்னுடைய ஆட்களின் மடமை தனத்தால் இன்று தனக்கு பிரச்சினை வரும் சாத்தியம் இருப்பதால் அதிக கோபமும் கொள்கிறான்.

என்றும் ஒரு குற்றவாளி ஒரு சிறு விஷயத்தை விட்டு செல்வான் என்பது சரி என்பதை போல் தன் திட்டத்தில் ஓட்டை விழுந்தது என்று எண்ணினான்.

சரி இதன் மூலம் யார் வந்தாலும் பார்த்து கொள்வோம். எந்த எல்லைக்கும் செல்வோம் இதில் அண்ணன் என்ன தம்பி என்ன என்று முடிவு செய்து விட்டான்.

இவன் செய்த சிறு பிழை தான் இவனை நெருங்குவதற்கும் உதவப் போகிறது என்ற இவனின் பயமே மெய் ஆகப் போவதையும் விரைவில் காணப்‌ போகிறான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 22

கடைக்கண் பார்வை வீசி சென்றுவிடு பெண்ணே,
காத்திருந்து காயமடைந்த நெஞ்சை தேற்றிட;
சிறு ஊண் உறக்கம் இல்லாது அலையும்,
என் ஆற்றமையேனும் ஆறிடும்‌ பெண்ணே;
தரிசனம் காண ஏங்குகிறேன் வந்திடுவாயா முன்னே??


கௌதம் கரும்பலகையில் தன் சந்தேகங்கள் கணிப்புகள் என்று ஒருபுறம் எழுதியவன் மற்றொரு புறம் தன் நண்பன் சத்யாவின் பெயரை எழுதினான்.

'சத்யா அந்த சிறுவனை கண்ட பின்னே அவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது என்றால் அவனும் சென்று ஆராய்ந்து தான் ஆதாரம் தயாரித்து இருப்பான்.

அப்படியானால் அவனின் இறப்பிற்கு ஒரு வார அல்லது இரண்டு வார தொலைபேசி சிக்னல் எங்கெல்லாம் பயணித்து இருக்கிறது என்று தெரிந்தால்

நமக்கு சற்று எளிதாக இருக்கும்' என்று கணித்த சத்யா இதை செல்போன் அலுவலகத்தில் சென்று கேட்கலாமா என்று யோசித்தான்.

சில விநாடியில் அந்த முடிவை கைவிட்டான் காரணம் ருத்ரா. 'கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு ஏன் நெய்க்கு அலைவானேன்.

ருத்ரா வேறு இன்று காலை தான் லேப்டாப்பை திறந்து தரும் போது தனக்கு ஹேக்கிங் கை வந்த கலை என்று பெருமை பேசி சென்றிருக்கிறாளே.

அவளின் உதவியின் மூலம் அதை எளிதாக கண்டு பிடித்து விடலாம்' என்ற எண்ணத்தில் ருத்ராவிற்கு அழைத்து விட்டான்.

அழைத்த பின் தான் உணர்ந்தான் இது அவளின் அலுவல் நேரம் என்று. எனவே உடனே அழைப்பை துண்டித்தான்.

அலுவகத்தில் இருந்த ஆரு அவள் தோழிகளோடு கேன்டீனில் அமர்ந்து இருந்தாள். இப்போது தான் மீராவிடம் பேசி பேசி அவளை ஒருவாறு சமாதானம் செய்திருந்தாள்.

அப்போது ஆருவின் கைபேசி அழைப்பு விடுக்கவும் அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர்.

தோழிகள் ஒரு சேர திரும்பி பார்க்கவும் 'அழைப்பது யார்' என்று பார்த்தாள். கௌதமின் பெயர் வரவும் திடுக்கிட்டாள்.

'எப்படி இவர்கள் முன் எடுக்க' என்று முழிக்கையிலே அழைப்பு நின்று விட்டது. 'ஹப்பாடா' என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள்.

இதை எதிரில் இருந்து பார்த்த தோழிகள் "போன்ல யாரு ஆரு‌" என்றனர் அவளை குறுகுறுவென பார்த்தவாறு‌.

"ஆ..ஆ அது சும்மா கம்பெனி கால்" என்று சமாளித்தாள் ஆரு‌‌. அதை தோழிகளும் நம்பியவுடன் நிம்மதி ஆனாள்.

'ஆனால் இந்த நேரம் கௌதம் ஏன் தனக்கு அழைப்பு விடுத்தார்' என்று மட்டும் தலைக்குள் குடைய ஆரம்பித்தது. தோழிகளை சமாளித்து எப்படி கௌநமை தொடர்பு கொள்ள என்று யோசித்தாள்.

அப்போது ஆருவை அவர்கள் டீம் லீடர் அழைக்க இதுதான் சாக்கென்று ஓடினாள் ஆருத்ரா. டீம் லீடரை பார்த்து விட்டு வந்தவள் நேரே கழிப்பறை நோக்கி சென்றாள்.

உள்ளே யாரும் இல்லை என்று உறுதிபடுத்தியவள் கௌதமிற்கு அழைப்பை விடுத்து எடுக்கும் வரை காத்திருந்தாள்‌.

அந்த பக்கம் கௌதம் 'ச்சே இது ருத்ரா ஆபிஸ்ல இருக்க டைம். இப்ப போய் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றோமே.

சரி ஈவ்னிங் ஆக இன்னும் கொஞ்ச நேரம் தானே இருக்கு. அவ வீட்டுக்கு வந்த அப்புறம் போன் பண்ண சொல்லுவோம்" என்று போனில் குறுஞ்செய்தி அனுப்ப எடுத்தான்.

அப்போது ஆருவே அழைக்கவும் அழைப்பை ஏற்றான். "சாரி ருத்ரா நான் இந்த டைம் உனக்கு கால் செஞ்சு டிஸ்டர்ப் பண்ணிட்டேனா" என்றான் எடுத்தவுடன்.

"அதுலாம் ஒன்னும் இல்லை கௌதம். நான் என்ன ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கனா நீங்க போன் பண்ணா பேசாம இருக்க.

நான் கேன்டீன்ல தான் இருந்தேன். நீங்க கால் பண்ணவும் யாருக்கும் தெரியாம இந்த பக்கம் ஓடி வந்துட்டேன்" என்றாள் சிரிப்புடன்.

"சரி சரி எதுக்கு கால் செஞ்சீங்க அதை பர்ஸ்ட் சொல்லுங்க" என்றாள் காரியத்தில் கண்ணாக. அவளின் ஆர்வம் உணர்ந்த கௌதம் சிரித்துக் கொண்டே

"ருத்ரா ஒரு முக்கியமான விஷயம் உன் கூட டிஸ்கஸ் பண்ணனும். அதுதான் இப்ப கால் செஞ்சேன். போன்ல பேசறது அந்த அளவு சேப்னு சொல்ல முடியாது ருத்ரா.

இன்னும் சொல்லனும்னா நேர்ல பேசறது தான் சேப். அப்படி இல்லைனா நீ உன் வீட்ல இருக்கிறப்ப நான் வீடியோ கால் செய்வேன்.

அது கொஞ்சம் பெட்டர். பட் நீ இப்ப ஆபிஸ்ல இருக்க. இங்க வச்சு நீ பேசுறது நாம ரிஸ்க் எடுக்கிறம்னு அர்த்தம் ருத்ரா.

சோ நீ வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டு எனக்கு கால் பண்ணு ஓகே. அன்ட் உன் லேப்டாப் ரெடி பண்ணி வச்சுக்கோ" என்று முடித்தான் கௌதம்.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஆரு‌ "ஓகே கௌதம். நான் வீட்டுக்கு வந்து உடனே உங்களுக்கு கால் செய்றேன்" என்று அழைப்பை துண்டித்தாள்‌.

ஆரு இப்போது எப்படி வீட்டிற்கு கிளம்பலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள். ஏனெனில் இப்போது சென்றால் தான் மட்டும் தான் வீட்டில் இருப்பாள்.

மாலை நேரம் என்றாள் தோழிகளும் உடன் இருப்பர்‌. அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டே இருப்பர்.

சிறிது நேரம் என்ன காரணம் சொல்லி கிளம்பலாம் என்று யோசித்தவள் வெளியே வந்தாள். தன் இருக்கையில் அமர்ந்தவள் மீராவிடம் மெல்ல

"மீரா எனக்கு ரொம்ப ஸ்டமக் பெயினா இருக்கு பா" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.

அவளின் வித்தியாசமான செய்கையை பார்த்திருந்த மீரா அவளை நம்பவில்லை. இருந்தும் "சரி ரெஸ்ட் எடுக்குறீயா. இல்லை வீட்டுக்கு போறியா" என்றாள் அவளின் எண்ணத்தை அறிய.

இதை எதையும் கண்டு கொள்ளாத ஆரு தன் மதி ஒன்றே குறியாய் "என்னால சுத்தமா முடியலை மீரா. நான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்றாள்‌.

சிறிது நேரம் முன்பு வரை நன்றாக பேசிக் கொண்டு இருந்தவள் இப்போது இப்படி சொல்வது பொய் என்று நன்கு தெரிகிறது.

ஆனால் இதை சொன்னால் நிச்சயம் சண்டை வரும் என்ற எண்ணத்தில் "சரி ருத்ரா நீ சொல்லிட்டு கிளம்பு" என்றாள் மீரா வீட்டிற்கு போய் கேட்டு கொள்வோம் என்ற எண்ணத்தில்.

பின் ஆருவும் அலுவகத்தில் சொல்லி விட்டு வீட்டை நோக்கி கிளம்பி விட்டாள். ஒரு ஆட்டோ பிடித்து வீட்டை அடைந்த ஆரு‌ கதவை சாத்திவிட்டு தன் அறைக் கதவையும் தாள் போட்டு விட்டாள்.

உடனே கௌதமின் எண்ணிற்கு அழைப்பும் விட்டாள். ஆரு பேசி முடித்து வைத்த உடன் கௌதம் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க தொடங்கினான்.

அவன் யோசனையில் இருக்கும் போது வந்து எட்டி பார்த்த ரேவதி கூட அவனை தொல்லை செய்யாது தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.

அப்போது அவன் சிந்தையை கலைக்கும் வண்ணம் கௌதமின் கைப்பேசி அலறியது. கடுப்புடன் "யாருடா அது" என்று எடுத்தவன் அது ருத்ராவிடம் இருந்து வருகிறது என்றதும் உடனே எடுத்தான்.

"ஹே என்ன ருத்ரா. நான் தான் வீட்டுக்கு வந்த அப்புறம் கால் பண்ணா போதும்னு சொன்னேன்ல. என்ன இப்பவே கால் பண்ற" என்றான் அவள் பேசும் முன்.

"கௌதம் நான்‌ சொல்றத கொஞ்சம் கேளுங்க. நான் வீட்டுக்கு வந்துட்டேன் அதான் கால் பண்றேன்" என்றாள் சிரித்துக் கொண்டே. அவள் பதிலில் ஆச்சரியமடைந்த கௌதம்

"என்ன அதுக்குள்ள வந்துட்டியா. ஹே உண்மைய தான் சொல்றியா ருத்ரா" என்றான் மகிழ்வுடன். அவன் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்த ருத்ரா "ஆன் உண்மை தான் நான் வீட்டுக்கு வந்துட்டேன்.

வந்த உடனே உங்களுக்கு கால் செய்றேன் போதுமா. நீங்க வேற முக்கியமான விஷயம் அப்படின்னு சொன்னீங்களா அதான் உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்லிட்டு வந்துட்டேன்" என்றாள் ஆரு‌.

பின் அவளே "என்ன அவ்ளோ இம்பார்ட்டன்ட் மேட்டர் சொல்லுங்க சொல்லுங்க" என்றாள் ஆர்வமுடன். அவளை நினைத்து தலையில் அடித்து கொண்ட கௌதம்

"நீ இருக்க பாரு" என்றுவிட்டு "எனக்கு ஒரு விஷயத்தை ஹேக் பண்ணி சில டீடெயில்ஸ் எடுக்கனும். அதான்" என்றான் இழுத்துக் கொண்டே.

"ஓ... ஹேக்கிங்கா அதலாம் சும்மா தூசி மாதிரி அப்படி லெஃப்ட் ஹேன்ட்ல தட்டிட்டு போய்ருவேன். சொல்லுங்க என்ன பண்ணனும்" என்றாள் கெத்தான குரலில்.

ஆனால் கௌதம் கூறியதை கேட்ட ஆரு‌ அலறிவிட்டாள் "ஏதே விட்டா நீங்க என்னை போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் உக்கார வச்சிருவீங்க போல" என்று.

"ஹையோ ருத்ரா இது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம்லா இல்லை. ஜஸ்ட் நீ சத்யாவோட மொபைல் நம்பர் இந்த ஒன் மந்த்ல எந்த எந்த இடத்துக்கு மூவ் ஆகி இருக்குனு மட்டும் பாத்து சொல்லு அது போதும் மா" என்றான் சமாதானமாக.

"என்ன போதுமா இது ஒன்னும் சிசிடிவி கேமராவோ இல்லை யார் வீட்டு ஸிஸ்டமோ இல்லை ஹேக் செய்றதுக்கு கௌதம்.

ஒரு கம்பெனி சர்வர் உள்ள பூந்து ஒரு பர்சனல் நம்பரோட டீடெயில்ஸ் எடுக்க சொல்றீங்க கௌதம். இது கொய்ட் ரிஸ்கி. மாட்டுனா அவ்ளோ தான்‌. கேஸ் ஆகிரும்" என்றாள் புரிய வைக்கும் முனைப்பில். "நீ சொல்றது எல்லாம் சரி தான் ருத்ரா.

பட் நீ தான் ஹேக்கிங்ல புலி, நான் அப்படி நான் இப்படி, நான் அத செஞ்சேன் இத செஞ்சேன்னு சொன்ன. ஆப்டரால் சத்யா நம்பர் லொக்கேஷன்ஸ் டிரேஸ் பண்ணி சொல்ல முடியாதா.

இதை என்னமோ ரொம்ப பெருசா பேசுற" என்றான் கௌதம் நக்கலாக. 'ஐயோ சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிட்டோம் போலையே' என மனதிற்குள் அலறிய ஆரு

"என்ன கிண்டலா நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா கௌதம்" என்றாள் இயலாமையுடன்.

"அதுக்கூட எனக்கு புரியாதா. ஏன் மாட்டிக்காம உன்னால எடுக்க முடியாதா" என்று இன்னும் அவளை கடுப்பேத்தினான். "ஐயோ கௌதம் நான் இந்த மாதிரி இல்லீகலா எதுவும் செஞ்சது இல்லை.

சோ எனக்கு பயமா இருக்கு. வேற எதாவதா இருந்தா கூட செஞ்சு தரேன். இது என்னால முடியாது. பிளீஸ் கௌதம்" என்றாள் கெஞ்சலாக.

அதற்கு கௌதம் "இங்க பாரு ருத்ரா. இப்ப நம்ம நிலை என்னன்னு உனக்கு தெரியும். கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு. அன்ட் உன்னால இது முடியும் அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.

நீ மனசு வச்சா இதுக்கு ஒரு வழிய என்னால கண்டிப்பா கண்டுபிடிக்க முடியும். சோ பிளீஸ் மா பிளீஸ்" என்று அவனும் கெஞ்சினான்.

ருத்ரா மனம் மாற வேண்டும் என்று அவள் மனதை மாற்ற கௌதமும் தன்னால் முடிந்த அளவு பேசி கரைத்து கொண்டு இருந்தான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 23

என் இனிய தருனமதை கண்டவளே,
என் கடும் நாட்களையும் கண்டாயோ?
உடன் இருப்பாயோ இவை இரண்டிலும்,
இருந்துவிட்டு போவாய் எனில் சம்மதம் தந்திடு,
உன் சிரத்தின் சிறு அசைவின் வழி!!


கௌதம் தன்னிடம் சத்யாவின் எண்ணின் கடந்த ஒரு மாத லொக்கேஷனை எடுத்து தருமாறு கேட்டதில் இருந்து மறுத்துக் கொண்டு இருக்கிறாள்.

ஆனால் கௌதமும் தன்னால் முடிந்த அளவு அவளை சம்மதிக்க வைக்க பேசிக் கொண்டு இருந்தான். கிட்டதட்ட அவளை பேசியே கரைத்துக் கொண்டு இருந்தான்.

ஆருவையும் 'சரி' என்று சொல்லவும் வைத்து விட்டான். அதுவும் அரை மனதுடன் தான் அவள் அதை நாளை வந்து செய்து கொடுப்பதாக ஒத்து கொண்டாள்.

பின்பு அவள் தன் கருத்தை முன் வைத்தாள். "கௌதம் நாம சத்யா பாடி இருந்த இடத்தில போய் ஏதாவது கிடைக்கிதான்னு தேடிப் பார்க்கலாமா" என்றாள்.

"நீ சொல்றது படி டிரை செஞ்சாலும் எவ்ளோ யூஸ் ஆகும்னு தெரியலை ருத்ரா‌. பிக்காஸ் கொலை பண்றவன் அவன் இடத்துக்கு பக்கதிலையே பாடிய டிஸ்போஸ் பண்ணுவானா.

இந்த லாஜிக் படி பார்த்தா நாம அங்க போனாலும் எதுவும் கிடைக்குன்னு சொல்ல முடியாது ருத்ரா" என்றான் தன் எண்ணத்தை.

"கௌதம் நீங்க இப்படி யோசிச்சு பாருங்க. நம்ம இந்த ஒரு லாஜிக்கால எந்த விஷயத்தையும் விட்ற கூடாது.

ஏன்னா ஒரு சின்ன குளூ அந்த இடந்தில கிடைச்சாலும் நமக்கு அது பெரிய ஹெல்ப்பா இருக்கும்ல" என்றாள் தன் மனதில் தோன்றியதை.

ஆரு கூறியதை யோசித்தவன் "நீ சொல்றதுலையும் ஒரு பாய்ண்ட் இருக்கு ருத்ரா. சரி நான் நெக்ஸ்ட் அங்க போய் பாக்குறேன்.

அன்ட் ருத்ரா நீ எனக்கு அந்த லொக்கேஷன் மட்டும் எடுத்து குடுத்துரு என்ன" என்றான் கடைசியாக.

"உங்களை என்ன பண்றது கௌதம். அதான் ஒத்துக்கிட்டனே. நீங்களும் நாளைக்கு அந்த காபி ஷாப்ல வச்சு வேலைய பார்க்கலாம்னு சொன்னதுக்கு ஓகேன்னு சொல்லிட்டீங்க.

அப்புறம் என்ன. என்னை ஆள விடுங்க நான் செஞ்சு தரேன் போதுமா" என்றாள் ஆரு அவன் எதிர்ப்பார்க்கும் பதிலை.

அவளின் வாய் வார்த்தையாக கேட்ட பின்னே தான் கௌதம் முழுதும் மனம் சமாதானம் ஆனான். பின் நாளை சந்திப்போம் என்று கூறிவிட்டு அழைப்பை வைத்தான்.

மாலை வந்த தோழிகள் பார்த்தது படுத்து உறங்கி கொண்டிருந்த ஆருவை‌ தான். கௌதமுடன் பேசிய ஆரு‌ அப்போது தான் உறங்கினாள்.

எனவே அவளுக்கு மதியம் சாப்பிட்ட ஏதோ உணவால் தான் அவளுக்கு வயிற்று வலி வந்தது போல என்று எண்ணிக் கொண்டு அமைதியாக சென்றனர் தோழிகள்.

காலை தோழிகள் எழும் முன் எழுந்த ஆரு‌ அவர்கள் எழாதவாறு மெல்ல கிளம்பி விட்டாள். துண்டு சீட்டு ஒன்றில் "இன்னைக்கு லைப்ரரில புக் கொடுக்க லாஸ்ட் டே‌.

அதனால நான் இப்பவே போறேன். அங்க போய்ட்டு ஆபிஸ்க்கு வந்துடுறேன். பாய் கைஸ்" என்று ஒரு பொய்யை எழுதி வைத்து விட்டு சென்றாள் ஆரு.

தன் தோழிகள் இதை கண்டிப்பாக நம்புவார்கள் என்று எண்ணிய ஆரு கிளம்பிவிட்டாள் ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கௌதமை காண.

அந்த காபி ஷாப் காலை எட்டு மணிக்கு கும்பலே இல்லாது இருந்தது. பணக்கார வீட்டு பிள்ளைகளே அதிகம் வருகை தருவதால் இன்னும் ஆட்கள் வரவில்லை.

கடை ஊழியர்கள் தவிர கௌதம் மட்டுமே அங்கு இருந்தான். அவன் மனமோ 'ருத்ரா சொன்னது சரிதான் போல. இந்த கடையில ஈ காக்கா கூட இல்லை' என்று.

ஆரு தான் இந்த காபி ஷாப்பை சொன்னது. எனவே அவ்வாறு யோசித்தான். அவன் வந்து ஐந்து நிமிடத்திற்குள் எல்லாம் ஆரு வந்துவிட்டாள்.

"சாரி கௌதம் டிராபிக்ல கொஞ்சம் லேட் ஆகிருச்சு. நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகுதா?" என்றாள் வந்தவுடன் மன்னிப்பான குரலில்.

"இல்லை ருத்ரா இப்ப தான் ஒரு ஐஞ்சு நிமிஷம் இருக்கும். நீ வந்துட்ட. சரி பர்ஸ்ட் குடிக்க எதாவது ஆர்டர் பண்ணலாம்.

ஏன்னா நான் வந்ததுல இருந்து அந்த பேரர் என்னை ஒரு மாதிரி பாக்குறான்" என்று கூறியவன் பேரரை அழைத்து இரண்டு கோல்டு காபியை ஆர்டர் செய்தான்.

அதை கண்டு சிரித்த ஆருவை "சிரிக்காத ருத்ரா நம்ம மட்டும் தான் இருக்கமா. எல்லாரும் நம்மலையே பாக்குற மாதிரி இருக்கு" என்றான் அவஸ்தையுடன்.

இப்போது நன்கு சிரித்த ஆருவை முறைத்த கௌதம், பின் தானும் அவள் சிரிப்பில் சேர்ந்துக் கொண்டான்.

காபி வந்ததும் தங்களை யாரும் தொல்லை செய்யாதீர்கள் என்று கூறியவர்கள் சுவர் ஓரம் சென்று அமர்ந்து கொண்டனர்.

"வேலைய ஸ்டார்ட் செய்வோமா ருத்ரா" என்ற கௌதமை பயந்த பார்வை பார்த்தாள் ஆரு‌. அதை கண்ட கௌதம் "இங்க பாரு ஆரு எந்த பிராப்லமும் வராது.

புரியுதா. வந்தாலும் நான் பாத்துக்கிறேன் ஓகே. உன் பேரை எங்கையும் நான் வரவிட மாட்டேன். ஐ பிராமிஸ் மா" என்றான் அவள்‌ கையை பிடித்து அழுத்தி கொடுத்து.

அந்த பிடியில் ஆருவிற்கு‌ அவ்வளவு தைரியம் வந்தது போல் தோன்றியது. 'சரி' என்று தலை அசைத்தவள் தன் மடிக்கணினியை எடுத்தாள்.

அப்போது கௌதமும் அவனின் மடிக்கணினியை எடுத்தான். ஏன் என்ற‌ ஆருவிடம்‌ " எங்கையும் நான் உன் பேர கூட வரவிட மாட்டேன்னு சொன்னேன்ல அதான்.

இப்ப யாரு வேலை பாக்குறா யார் படம் பாக்குறாங்னு தெரியாதுல" என்றவன் தன் ஹெட்செட்டை காதில் மாட்டி வேலை செய்வது போல் சீரியசாக காமெடி படம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனை கண்டு சிரித்து விட்டு தானும் தன் ஹெட்செட்டை காதில் மாட்டியவள் கைப்பேசி அலைவரிசை கம்பெனிக்குள் நுழைய முயன்று கொண்டிருந்தாள்.

கௌதமோ சுற்றி உள்ளவர்கள் தங்களை ஏதும் பார்க்கிறார்களா இல்லை புதிதாக யாரேனும் வருகிறார்களா என்று படம் பார்ப்பதை போல் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

விஷ்ணு பிரசாத் தன் ஆராய்ச்சியின் ஒரு பாகமாய் சில சிறுவர்களுக்கு குடிக்க எதுவோ ஒரு திரவ மருந்தை கொடுத்தான்.

அந்த சிறுவர்களில் சிலருக்கு அதை குடித்த சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் சிலருக்கு மயக்கம் வந்து விட்டது.

உடனே பிரசாத் அவர்களை பரிசோதித்தான். ஒரு சிறுவன் மட்டும் மிகவும் வலுவிழந்து தொய்ந்து விழுந்தான். 'ஐயோ ச்சே' என்று சுவற்றில் தன் கையை குத்திக் கொண்டான் பிரசாத்.

அவன் ஆட்களில் ஒருவனை அழைத்தவன் அந்த சிறுவனை தூக்கி கொண்டு சென்று புதைக்க சொல்லி விட்டான். பின் தன் அறைக்கு வந்தவன் தீவிரமான யோசனைக்கு சென்றான்.

விஷ்ணு பிரசாத் சக்தியை விட நன்கு படிப்பான். எனவே மருத்துவ துறையை தேர்வு செய்தான்.

அப்படி தேர்வு செய்தவன் வெளிநாட்டில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு தகுதி தேர்வின் மூலம் சென்றே படித்தான்.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் இரண்டையும் அங்கேயே முடித்து வந்தவன் இங்கு தன்‌ தந்தையின் கீழே இருந்த மருந்து கம்பெனியை எடுத்து நடத்தினான்.

பிரசாரத்திற்கு தன் கம்பெனியில் புதிய புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.

அதற்கு அவன் நிறைய மருந்துகளும் கண்டும் பிடித்தான். ஆனால் சோதனை செய்யாது அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு அவன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவன் பரிசோதித்து பார்க்கவே அவனுக்கு அரசின் அனுமதி அவசியம்.

அவனும் நேர்மையான முறையில் தான் அரசிடம் அனுமதி கோரினான். ஆனால் அவனை அரசு நிராகரித்தது ஏன் என்ற காரணம் கூட சொல்லாது.

இன்னும் சொல்லப்போனால் நிராகரித்தது அரசு அல்ல அரசு அதிகாரிகளே. ஏனெனில் அரசின் சார்பில் இருப்பவர் அவர்கள் தானே.

விஷ்ணு பிரசாத்தை பொருத்த வரை அவனின் மருந்துகள் முறையாக மக்களுக்கு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது.

ஆனால் அவனின் எண்ணத்தை மாற்றும் நாளும் வந்தது. மருந்து ஆராய்ச்சி சம்மதம் கொடுக்கும் அதிகாரிகளே கையூட்டு பெற்று கொண்டு வேறு ஒரு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தனர்.

அதை கண்ட பின் அதுவரை நேர்மையாக இருக்க வேண்டும் என்ற அவனின் எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொண்டான். "அனுமதி தருவதற்கே பணம் போதும் எனில்,

தன் மருந்துகள் கடைசி பயன் தரும் நிலையில் இவர்களிடம் காசை கொடுத்து ஒப்புதல் பெற்று கொண்டால் என்ன" என்று மனதில் நினைத்து விட்டான்.

அதிலும் அவன் கேன்சர் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதை தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டான். அதற்கு தகுந்த அறிவும் வாய்க்கப்பட்டவன்.

ஆனால் முறையான வழியில் போக தவறினான். அப்படி தன் மருந்துகளை யார் மீது சோதித்து பார்ப்பது என்று அவன் குழம்பிக் கொண்டு இருந்த நேரம் சக்தியின் கடத்தல் வேலைகளை கண்டுபிடித்தான்.

ஏற்கனவே எல்லார் மீதும் கோபத்தில் இருந்தவன், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ண துவங்கினான்.

அதை கொண்டே அவன் அண்ணனை தன் பகடையென கொண்டு அவன் வேலையை ஆரம்பித்தான்.

முதலில் அவன் மனதே அவனுக்கு முரணாக இருந்தது தவறு செய்கிறோம் என. ஆனால் அதற்கும் தகுந்த பதில் தந்தது அவன் மனதில் இருந்த ஆசைகள்.

தான் கண்டுபிடிக்கும் மருந்துகளை குழந்தைகளுக்கு செலுத்தி அவர்களை தன் சோதனை எலியாக மாற்றிக் கொண்டான்.

இதில் அவன் பொருட்கள் சரியான அளவில் போட்டு உருவாக்கினாலும் அவன் மருந்துகள் சரியான‌ பலனை தரவில்லை. இதற்கு தான் மனமும் நல்லதாக இருக்க வேண்டும் என்று சொல்வதா.

சக்தியின் மூலம் உருவாக்கிய செயலியின் மூலம் தனக்கு தேவையான தகவல்களை அவன் சேகரித்து கொள்வான். அதாவது சிறுவர்களின் இரத்த வகை இதுபோல்.

சின்ன சின்ன சிறுவர்கள் துடிதுடித்து சாகும் போது அவன் மனமும் துடிக்க தான் செய்தது. பலரை காப்பாற்றும் மருத்துவன் இன்று சிறு சிறுவர்கள் பலர் சாவிற்கு காரணமானது அவனுக்கு குற்ற உணர்வை தந்தது.

ஆனால் அதை பார்த்தால் தன் வாழ்வின் லட்சியம் என்ன ஆவது என்ற தான் என்னும் பிரதான எண்ணம் தலைதூக்கி அவன் குற்ற உணர்வை அடக்கி விடுகிறது.

பிறக்கும் போதே எவரும் கெட்டவராக பிறப்பதில்லையே அவர் வளரும் சூழலும், அவர் சந்திக்கும் மனிதர்களுமே அவரவரின் குணங்களை மாற்ற முயற்சி செய்கின்றது.

ஆனால் அதற்கு ஆட்படாமல் வாழ்வின் நெறி எதுவென்று மனிதன் புரிந்து தன் வாழ்க்கை நெறி தவறாது நடத்தல் வேண்டும்.

அதை விடுத்து தான் மாறியதற்கு இந்த சமூகம் தான் காரணம் என்று கூறுவது சரியாகாது. நம் மனதில் ஏதோ ஓர் மூலையில் இது போல் கொடூர எண்ணங்கள் சிறிது மனிதனிடம் இருக்கும் தான்.

ஆனால் அதை வளர விடாது நல் நெறியை கடைப்பிடிப்பவனே வாழ்வில் நிரந்தர முன்னேற்றம் காண்பான்.

தவறான பாதையில் போகுபவனுக்கு தான் வேகமாக முன்னேறுவது போல் தோன்றும். ஆனால் அது என்றும் நிரந்தரம் இல்லை என்பதை அவன் உணர்ந்தால் உலகில் எந்த தவறும் நடக்காது.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 24

மிதக்கும் காகித கப்பலே,
நீரில் உன் மிதவை கண்டு மகிழும்
என் மதியை திருடி சென்றவளிடம்,
என் மனதையும் கொண்டு சேர்ப்பாயோ?
அவள் நகர்வதற்குள் இதை நிகழ்த்தி கொடுப்பாயா?


அந்த காபி ஷாப்பில் இன்னும் கூட்டம் வரவில்லை. அவர்கள் வந்து ஒரு மணி நேரம் கடந்து சென்றுவிட்டது. அவர்களுக்கு பின் ஒருவரே வந்தார்.

அவரும் வந்தவர் ஒரு இடத்தில் அமர்ந்தவர் என்னவோ செய்து கொண்டிருந்தார். அதை பார்த்தவன் 'சரி அவரும் நம்மல மாதிரி தான் போல' என்று எண்ணி கொண்டான்.

அனைத்தையும் கவனித்து வந்தான் கௌதம். ஆருவும் தன்னை முழுதாக ஈடுபடுத்தி ஒரு மணி நேரத்தில் ஸர்வரை ஹேக் செய்து உள்ளே நுழைந்து விட்டாள்.

"எஸ்" என்ற ஆரு‌ சத்தத்தில் திரும்பிய கௌதம் "என்ன ஆச்சு ருத்ரா" என்றான். 'நம்ம அவ்வளவு சவுண்டாவா சொன்னோம்' என்று நினைத்த ஆரு அதையே கௌதமிடம் கேட்டாள்.

"இல்லை அவ்ளோ சத்தமாவா கேட்டுச்சு" என்றாள்‌. அவள் கேட்ட விதத்தில் சிரித்த கௌதம் "இன்னும் கொஞ்சம் வால்யூம் குறைச்சிருக்கலாம்" என்றான்.

"சரி என்ன ஆச்சு எதுக்கு எஸ் சொன்ன?" என்றவனின் கேள்விக்கு "நான் ஸர்வர் பிரேக் பண்ணி உள்ள போய்ட்டேன்" என்றாள்.

"ஹே ருத்ரா சூப்பர். யூ ஆர் ரியலி அமேசிங்" என்றான் உள்ளத்தில் இருந்து. "தேங்க்ஸ் கௌதம். சரி நீங்களும் பாருங்க நம்ம இப்ப சத்யா நம்பர்குல்ல போய்ட்டோம்"

என்று சத்யாவின் நம்பரை ஓப்பன் செய்தாள்‌. "ஹான் ருத்ரா மா இந்த ஒன் மன்த் டேட்டா புல்லா எடுத்துரு என்ன. ஏனா டவுட்னா மறுபடியும் நீ தான் வந்து எடுத்து தரனும்" என்றான் அவளை கடுப்பேற்றும் விதமாக.

அவனை பார்த்து முறைத்தாள் "தயவு செஞ்சு ஆள விடுங்க கௌதம். ஒரு தடவை இந்த வேலை பாக்கறதுக்குள்ளயே எனக்கு கை கால்லாம் உதறிருச்சு.

எத்தனை மாசம் என்ன வருஷம் டீடெயில்ஸ் கூட எடுத்து தந்தர்றேன் போதுமா" என்றாள் அரன்டவளாக. அவளை பார்த்து கௌதம் சிரித்து விட்டான்.

அதன் பின் எல்லாம் ஜெட் வேகம் தான். சத்யாவின் கடந்த மாத லொக்கேஷன் போன் கால்ஸ் போன்ற எல்லாவற்றையும் தனியாக சேவ் செய்து கொண்டாள் ஆரு‌.

பின் ஸர்வர் உள்ளே போன தடம் தெரியாது வெளியே வந்துவிட்டாள் ஆரு. அதை டாக்குமெண்டாக மாற்றிவிட்டு " கௌதம் ஆல் செட். இதை யாருக்கு அனுப்பறது" என்றாள்.

கௌதமும் தன்னுடைய ஈ மெயிலுக்கு அனுப்ப சொன்னவன் தன்னுடைய மொபைலில் அதை பதிவிறக்கி கொண்டான்.

"ஓகே ருத்ரா. நாம கிளம்பலாம் ரொம்ப நேரமா இருக்கோம். யாருக்காவது டவுட் வந்தரப் போகுது.

அன்ட் உன் லேப்ல ஒரு டேட்டா இது சமந்தமா இருக்க வேண்டாம். எல்லாத்தையும் இரேஸ் செஞ்சிறு என்ன புரியுதா" என்றான் தன் பொருட்களை எடுத்து கொண்டு.

"ம்ம் ஓகே கௌதம். நான் இரேஸ் பண்ணிர்ரேன்" என்ற‌ ஆரு கௌதமுடன் தன் பொருட்களை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

வெளியே வந்தவுடன் தன் இருசக்கர வாகனத்தை எடுத்த கௌதம் "ஆரு‌ வா வண்டியில ஏறு நான் உன்னை ஆபிஸ்ல டிராப் பண்ணிடறேன்" என்றான்.

தனக்கு நேரமானதை உணர்ந்த ருத்ரா 'சரி' என்று கௌதமோடு பயணத்தை தொடர்ந்தாள். போகும் வழியில் திடீரென நினைவு வந்தவளாக,

"கௌதம் நீங்க சத்யாவோட மெயில செக் பண்ணீங்களா" என்றாள்‌ . அவளை கண்ணாடியின் வழியே பார்த்தவன்,

"மெயில் ஐடி, கிளைவுட் எல்லாத்தையும் செக் பண்ணிட்டேன். லேப்ல இருந்தத தான் ஒரு காபி ஏத்தி வச்சிருக்கான்" என்றான் கௌதம் தான் பார்த்ததை.

பின்பு அவளை அலுவலகத்தில் இறக்கி விடும் வரை எந்த பேச்சும் இல்லை. ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய அலுவலகத்திற்கு அரை மணி நேரத்தில் கொண்டு சேர்ந்தான் அவன்.

தன் கை கடிகாரத்தை திருப்பி பார்த்த ஆரு "வாவ் கௌதம் ஹாப் அன் அவர்ல கொண்டு வந்து விட்டுட்டீங்க. செம ஸ்பீட் தான்.

நான் இதுவே பஸ் இல்லை ஆட்டோல வந்திருந்தா ஒன் அவர் ஆகிருக்கும். ரொம்ப தேங்க்ஸ் கௌதம்" என்றாள் அவன் கையை பிடித்து ஆட்டிக் கொண்டே.

ஒரு சிரிப்புடன் "ஓகே நீ போ ருத்ரா உனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு பாரு. உன் பிரெண்ட்ஸ் வந்திருக்க போறாங்க" என்றான் கௌதம்.

"ம்ம் ஆமாம். சரி கிளம்பறேன் கௌதம். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்க ரிட்டர்ன் போறப்ப இவ்ளோ ஸ்பீட் போக கூடாது புரியுதா" என்றாள் உரிமையான மிரட்டலில்.

அதை கேட்டு சிரித்தவன் "சரிங்க மேடம் நான் மெதுவாவே போறேன். நீங்க முதல்ல முன்னாடி பாத்து போங்க யார்மேலையும் இடிக்காம" என்று நக்கல் செய்து விட்டே கிளம்பினான்.

போகும் அவன் மனதில் ஆருவே நிறைந்திருந்தாள்‌‌. 'அவள் ஏன் தன் மேல் இவ்வளவு உரிமை எடுத்து கொள்கிறாள். அவளுக்கு நம்மை பிடிக்கிறதோ?' என்று யோசித்தான்.

ஆனால் அவள் தன்னுள்ளே ஏற்படுத்திய மாற்றத்தை சிறிதும் கவனிக்கவில்லை. ஏனெனில் இப்போது வண்டியை கிளம்பிய கௌதமிற்கு வேகமாக வண்டியை ஓட்ட மனம் வரவில்லை.

ஆரு‌ சொன்ன ஒற்றை வார்த்தைக்காக தினம் ஐம்பது அறுபது கிலோமீட்டர் வேகத்தில் பறப்பவன், இன்று முப்பதை தாண்டாமல் செல்கிறான்.

தன் அன்னை நண்பன் சத்யா என யார் சொல்லியும் கேட்காத கௌதம் இன்று ஆரு‌ சொன்னதை கேட்பதை அவனே உணராது போனான்.

ஆனால் அவன் உணரும் தருணம் அவனுடைய ருத்ரா தானே வழிய சென்று ஒரு பெரிய பிரச்சினையை இழுத்து வைத்திருப்பாள் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டான்.

அங்கே அப்படி இருக்க இங்கே ஆருத்ராவின் நிலையும் கிட்டத்தட்ட அதுவே. ஆனால் அவள் கௌதமை போல் அல்லாது தன் நிலையை உணர தொடங்கினாள்.

அலுவகத்தில் வந்து அமர்ந்த ஆரு‌ தன் தோழிகளும் வராமல் இருக்கவே கௌதமுடன் தனக்கு கிடைத்த முதல் சந்திப்பில் இருந்து நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதுவும் அவன் வீட்டிற்கு சென்ற போது கௌதமின் அம்மாவின் பேச்சு அதை இன்று வரை யோசித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

ஏனெனில் ரேவதியின் பேச்சை கேட்ட ஆருவிற்கு கோபம் சங்கடத்திற்கு பதில் ஒருவித ஆனந்தமே ஆட்கொண்டது.

கௌதமை காணப் போவது அவளிற்கு அதிகமான மகிழ்ச்சியை தான் தருகிறது. இப்போது கூட அவனோடு வண்டியில் வந்தது ஒரு நல்ல நினைவை தான் தந்தது.

நினைவு என்பதை தாண்டி எப்போதும் போல் பாதுகாப்பு உணர்வே அதிகரித்தது. அவனின் ஒவ்வொரு செயலிலும் அது அப்படியே பிரதிபலிக்கிறது.

மேலும் அது மிகவும் பிடித்து போய் இருந்தது. அவனிடம் தான் ஏன் இவ்வளவு தூரம் உரிமை எடுத்து பேசி வந்தோம் என்று பலவாறு யோசித்தாள்.

அப்படி வந்த சிந்தனைகளின் முடிவில் அவளின் மனதை ஓரளவு புரிந்து கொண்டாள் ஆரு. அதாவது தான் அவனை நேசிக்கிறோம் என்று.

ஆனால் எப்போதிருந்து என்று மீண்டும் யோசிக்க செல்லும் நேரம் பட்டென்று அவள் முதுகில் ஒரு அடி விழுந்தது. அடித்தது வேறு யார் அவள் தோழிகளே.

வலியில் "ஆ..ஆ...." என்று கத்தியவள் தன் தோழிகளை பார்த்து "ஏன்டி இப்பிடி அடிச்சீங்க. வலிக்குது. ஏன் என்னை கூப்டா திரும்பி பார்கத்திருக்க மாட்டனா" என்றாள் முறைத்துக் கொண்டே.

அவளை விட அதிகமாக முறைத்த தோழிகள் "என்ன நாங்க கூப்டல" என்று ஒரு மாதிரி குரலில் சொல்லி விட்டு "உன்னை எத்தனை டைம் கூப்பிடுறது.

மேடம் நீங்க தான் ஏதோ பகலையே கனவு கண்டுட்டு உக்காந்து இருந்தீங்க. அதான் அடிச்சோம்" என்றாள் அனு. 'ஐயயோ நாம தான் கவனிக்கலையா.

போச்சு போச்சு என்ன ஏதுன்னு கேட்டே நம்மல போட்டு படுத்தி எடுக்க போறாளுக' என்று எண்ணிய ஆரு‌ சமாளிக்கும் விதமாய்

"இல்லப்பா சும்மா தான். நான் லைப்ரரி போய் இருப்தேன்ல அங்க ஒரு புது ஆள பார்த்தேன். சரியான தலைவலி கேஸ்.

ஹாய்னு ஆரம்பிச்சவன் நிறுத்தவே இல்லை. தனியா இருக்கவும் போட்டு அறுத்து எடுத்துட்டான்.

எப்படியோ தப்பிச்சு ஓடி வந்துட்டேன். அதுல எனக்கு தலைவலியே வந்திருச்சு. சோ சும்மா அப்படியே உக்காந்திருந்தேன்.

நீங்க வந்ததையும் கவணிக்கல" என்றாள் புதிய காரணத்தை உருவாக்கியவள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

தோழிகள் தன்னை சந்தேகமாய் பார்க்கவும் "ஹே வொர்க் நிறைய இருக்கு பா. சீக்கிரம் வாங்க வேலையை ஆரம்பிப்போம்" என்று தோழிகளை திசை திருப்பினாள்.

இந்த காரணம் சரியாக வேலை செய்தது. பின் பேச்சு சிரிப்புடன் அவர்கள் வேலை தொடர்ந்தது‌.

ஆனால் மீராவிற்கு மட்டும் அவள் மேல் இருந்த சந்தேகம் குறையவில்லை. எதுவோ அவள் மறைப்பது போல் தெரிந்தது.

சிரிப்புடன் வேலையை பார்த்திருந்த ஆரு‌வை திரும்பி பார்த்தவள் 'இவ நல்லா தான் இருக்கா. ஒரு வேளை நமக்கு தான் தப்பா தெரியுதா' என்று யோசித்துக் கொண்டே தன் வேலையை பார்த்தாள்.

அங்கே அலுவலகம் செல்லாது கௌதம் தன் வீட்டாற்கு சென்றான். தன் அறைக்கு சென்று அமர்ந்தவன் முதலில் தன் கைப்பேசியை எடுத்து ஆரு‌ அனுப்பிய டாக்குமெண்டை திறந்து பார்த்தான்.

கடந்த ஒரு மாதம் முழுவதும் சத்யா எங்கே போனான் என்று தீவிரமாக அதையே பார்த்தான். அவன் அதிகமாக நகரத்திற்கு வெளியே தான் சுற்றியிருக்கிறான் என்பதை கவனித்தான்.

'இவன் என்ன சிட்டி அவுட்டர்லையே சுத்திருக்கான். அதிக லொக்கேஷன் கூட அங்கதான் காட்டுது. அப்ப இந்த ஏரியால தான் ஏதோ இருக்கு போல‌" என்று யோசித்தான்.

பின் கடைசியாக அவன் கைப்பேசி அலைவரிசை எங்கு நின்றது என்று பார்த்தான். பார்த்தவன் ஒரு நிமிடம் அதிர்ச்சியா அல்லது சிறு நம்பிக்கை ஒளியா என சொல்ல முடியாத உணர்வில் நின்றான்.

ஏனெனில் கடைசியாக வெள்ளி இரவில் இருந்து சனி மதியம் வரை ஒரே இடத்தை தான் காட்டியது. அதுவும் எந்த இடத்தில் சத்யாவின் உடல் கிடைத்ததோ அதற்கு வெகு அருகில்.

இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு புரியவில்லை. ஒரு வேளை ஆரு நேற்று கூறிய சந்தேகம் உண்மையாக இருந்தால் என்ற எண்ணம் தற்போது அவனது மனதிலும் எழுந்தது.

இதை எப்படி முடிவு செய்வது என்று யோசித்து கொண்டே வந்தவன் 'ம்ம் அது கிடைச்சா என்னால கெஸ் பண்ண முடியும்' என்று எண்ணியவன் தன் அலுவகத்தை நோக்கி கிளம்பி விட்டான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 25

வாயில் வரை வந்து நின்றேன்,
வார்த்தை மட்டும் வராது நிற்க
உன் சங்கீத சிரிப்பொலியே பதிலாக;
காற்றும் அதை அழகுற என்னிடம் நீட்ட,
பற்றி கொள்கிறேன் அதையே பற்றுகோளாய்!!


கௌதம் கிளம்பினான் தன் அலுவலகம் நோக்கி. அங்கே அவன் எதிர்பார்த்த தகவல் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

அலுவலகம் வந்தவன் நேராக எடிட்டர் அறைக்கு சென்றான். கதவை தட்டி அனுமதி கேட்டவன் 'கம் இன்' என்ற சத்தம் கேட்ட பின் உள்ளே சென்றான்.

கௌதமை கண்ட எடிட்டர் நாராயணன் "வாப்பா கௌதம். என்ன ஆபிஸ் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு போல" என்றார் சிரிப்புடன்.

"அப்படிலாம் ஒன்னும் இல்லை சார். நான் வந்து போய்க்கிட்டு தான் இருக்கேன். நீங்க தான் என்னை கவனிக்கவில்லை" என்றான் தானும் சிரிப்புடன்.

"சரிதான். ஓகே என்ன விஷயம் கௌதம். காரணம் இல்லாம நீ வந்து என்னை பார்க்க மாட்டியே" என்றார் அவனை கூர்மையாக பார்த்து கொண்டே.

அவரை பார்த்து வாய்க்குள் சிரித்தவன் "சார். அது முக்கியமான ஒரு விஷயம் தான். அன்ட் அது யாருக்கும் தெரியவும் கூடாது.

அதான் எப்படி ஆரம்பிக்கிறதுனு தான் யோசிக்கிறேன்" என்றான் யோசனையாக. "மை மேன். என்ன கேக்கனுமோ நீ கேளு ஓகே.

அப்புறம் இது என்னோட கேபின் என்னை கேக்காம ஒருத்தரும் உள்ள வரமாட்டாங்க உனக்கே தெரியும். இப்ப சொல்லு" என்றார் கௌதமிற்கு நம்பிக்கை தரும் விதமாக.

சிறிது நேரம் சென்று "எனக்கு சத்யாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேணும் சார். அதோட காப்பி உங்ககிட்ட இருக்கும்னு எனக்கு தோனுது.

சப்போஸ் அப்படி உங்ககிட்ட இல்லைனா கூட அதை எனக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா சார்" என்று ஒரு வழியாக கேட்டு விட்டான் கௌதம்.

கௌதமை பார்த்த நாராயணன் "என்னால முடியாது கௌதம்" என்றார். அவரை அதிர்வுடன் பார்த்த கௌதம் "சார்" என்றான்.

"என்ன சார். உரிமையா முடிஞ்சு தாங்கனு கேக்காம‌. முடியுமானு கேக்குற" என்ற நாராயணனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவன்

"இப்படியா சார் பிபிய ஏத்துவீங்க. ஒரு நிமிஷம் அப்படியே ஸ்டன் ஆகிட்டேன்" என்றான். "ஜஸ்ட் பார் ஃபன் மை பாய்" என்றவரின் பதிலுக்கு

"என்னா ஃபன்னு கொஞ்ச நேரத்தில டென்ஷன் பண்ணிட்டு" என மனத்திற்குள் திட்டியவன் வெளியில் சிரித்து வைத்தான்.

"சார் நான் கேட்டது" என்றான் இழுவையாய் "காரியத்துல கண்ணா இருக்க. சரி என்கிட்ட ஒரு காப்பி இருக்கு.

உனக்கு தேவைப்படும் அப்படினு எனக்கு தோனுச்சு. சோ வாங்கி வச்சேன். நீ முன்னாடியே வருவனு எதிர்ப்பார்த்தேன். பட் நீ கொஞ்சம் லேட் தான்" என்றார்‌ நாராயணன்.

பேசாமல் அமைதியாக இருந்த கௌதமை கண்டவர் என்ன நினைத்தாரோ எழுந்து சென்று தன் கப்போர்டை திறந்து ஒரு கவரை எடுத்து வந்தார்.

"இந்தா கௌதம் நீ கேட்டது" என்று கொடுத்தவர் அவனை பார்த்து "என்னப்பா இறந்தது உன் பிரண்ட்ங்கிறதால மனசு ஒரு நிலைக்கு வர மாட்டேங்குதா" என்றார் பரிவோடு.

அவரை பார்த்து "இருக்கலாம் சார். அன்ட் தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப் சார்" என்றவனை ஆதூரமாய் சிரித்தவர் "மை பிளஷர் கௌதம்" என்றார்.

அவரிடம் மறுபடியும் தன் நன்றியை தெரிவித்தவன் அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனை கண்ட ரேவதி கூட "என்னடா மவனே வேலைய விட்டுட்டியா என்ன.

வீடே அண்ட மாட்ட. இப்ப என்னன்னா பொழுதனைக்கும் வீடே கதின்னு கெடக்குற" என்றார். தன் அன்னையை முறைத்தவன் "எம்மா ஏன்மா உனக்கு இந்த கொலை வெறி.

நான் வேலைக்கு போறது உனக்கு பொறுக்கலையா. பேசாம போய்று. வேலையை விட்டுடியானு கேக்குற" என தன் போக்கில் புலம்பி கொண்டே அவன் அறைக்கு சென்றான்.

அவன் புலம்பி கொண்டு செல்வதை கண்ட ரேவதி "ஹப்பா நல்லா தான் இருக்கான். இவன் ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட மாதிரி சுத்தவும் என்னவோனு நினைச்சிட்டேன்" என்று தன் போல் பேசி சென்றார்.

தன் அறைக்கு வந்த கௌதம் அந்த ரிப்போர்டை பிரித்து பார்த்தான். அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டோடு போலீஸ் எப்.ஐ.ஆரின்‌ காப்பியும் இருந்தது.

தன் எடிட்டர் நாராயணன் தனக்கு குரு என்பதை நிரூபித்து விட்டார் என்று மகிழ்வுடன் எண்ணியவன் இரண்டையும் பார்க்கலானான்.

முதலில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டை பார்த்தவன் சத்யாவின் இறந்த நேரத்தை குறித்து கொண்டான்‌.

மேலும் அவன் பின் தலையில் அடிபட்டு இறந்திருக்கிறான் என்று குறிப்பிட்டு இருந்தனர். நண்பனை எண்ணி வேதனை அடைந்தான்.

பின் தன்னை தேற்றி எப்.ஐ.ஆர் காப்பியை எடுத்தவன் அதில் போலீசார் சத்யாவின் உடலை கண்ட நேரத்தை பார்த்தவனது மனம் சட்டென்று பதட்டமானாது.

தான் கண்டது உண்மை தானா என்று இரண்டு ரிப்போர்டையும்‌ ஒன்றாக வைத்து ஒருமுறைக்கு இருமுறை உறுதிபடுத்தினான்.

இப்போது அவன் மனதில் புதிய உறுதி ஏற்பட்டது போல் இருந்தது. தான் அந்த கொலையாளியை நெருங்கியது போல் தோன்றியது.

கமிஷனர் முகிலனிடம் மாறன் பேசிக் கொண்டு இருந்தான். "முகில் என்ன விஷயம் சொல்லனும் பேச சொல்லி மெசேஜ் போட்டாருந்தீங்க" என்றான் மாறன்.

"எஸ் மாறன். எனக்கு ஒரு விஷயம் இப்ப தான் தெரிய வந்துச்சு. அதான் உங்ககிட்ட ஷேர் பண்ணியே ஆகனும் அப்படின்னு போன் பண்ண சொன்னேன்" என்றான்.

பின் மீண்டும் அவனே "அந்த பிரசாத் விஷயம் சொன்னீங்கல. உங்களுக்கு வேலை சொல்றது அந்த ஆப்ப கண்டு பிடிச்சதுலாம் அந்த பிரசாத் தான்" என்றான்.

"வாட் என்ன சொல்றீங்க முகில். அவன் பேசறத நானே கேட்டேன். ஐம் சென்ட் பர்சண்ட் சுயூர்" என்றான் மாறன் உறுதியாக.

"நீங்க சொன்னதும் கரெக்ட் தான் மாறன். அதே சமயம் நான் சொன்னதும் கரெக்ட்" என்று குழப்பிய முகிலிடம் "என்ன இப்படி குழ்பபுறீங்க முகில்.

ப்ளீஸ் தயவு செஞ்சு புரியிற மாதிரி சொல்லுங்க" என்றான் மாறன். "சொல்றேன் மாறன். உங்களுக்கு அங்க வேலை சொல்றவன் சக்தி பிரசாத்.

மே பி அவன் பேசினது விஷ்ணு பிரசாத்தா தான் இருக்கனும்" என்று முடித்தான் முகிலன். "என்ன விஷ்ணு பிரசாத்தா. யாரு முகில் அது" என்ற மாறனின் கேள்விக்கு,

"அந்த சக்தியோட தம்பி" என்றான் முகில். "என்னாது" என்று அதிர்ந்து விட்டான் மாறன். "எஸ் மாறா. அவன் ஒரு டாக்டர்.

அன்ட் அவன் படிச்சது எல்லாம் வெளிநாட்டுல தான். அவன் இங்க வந்து கொஞ்ச மாசம் இல்லை ஒரு வருசம் இவ்ளோ நாள் தான் இருக்கும்னு நியூஸ் கிடைச்சிது.

அவன் தான் யுனிக்கா இருக்கனும் அப்டின்னு எப்பவும் நினைப்பான்னு சொன்னாங்க. அதே சமயம் அவனை மட்டும் தான் எல்லாரும் பிரசாத்னு கூப்டனும்னு சொல்வானாம்.

இப்ப அவங்க பார்மா கம்பெனிஸ் எல்லாம் அவன் தான் டேக் ஓவர் பண்ணி பாத்துட்டு இருக்கானாம்.

அன்ட் அவன் எல்லாமே நேர்மையா இருக்கனும்னு பேசற டைப்னு சொல்றாங்க. இருந்தாலும் அவன்‌ அண்ணே பண்றது தெரியாம இருக்காது அப்படின்றது என் எண்ணம்.

பிகாஸ் அவன் ரொம்ப ஷார்ப் அப்டின்னு தான் நான் கேள்விப்பட்டேன். சோ அதான் அப்படி சொல்றேன்.

இனிமே என்ன பண்ணனும்னு டிசைட் பண்ண வேண்டியது உங்க வேலை தான் மாறன் புரியுதா" என்று தான் திரட்டிய தகவல்களை எல்லாம் சொல்லி முடித்தான்.

தான் கேட்டவற்றை மெதுவாக உள்வாங்கியவனின் மனதிற்குள் சில முடிச்சுகள் அவிழ்க்கபட்டது போல் தோன்றியது.

"என்ன மாறன் எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க" என்ற முகிலனின் கேள்விக்கு "நீங்க சொன்னதை தான் யோசிச்சுட்டு இருந்தேன்" என்றவனது குரலே ஒரு மாதிரி தான் இருந்தது.

"என்னாச்சு மாறன் உங்க வாய்ஸ் கூட சேஞ்ச் ஆன மாதிரி இருக்கு" என்றான் முகில். "இல்லை முகில் எனக்கே கன்பார்மா தெரியாத ஒரு விஷயத்தை நான் எப்படி சொல்றது.

அதை தான் யோசிச்சேன் முகில். நான் கெஸ் பண்ணது கரெக்ட்னா உடனே இன்பார்ம் பண்றேன். ஓகே

அன்ட் நான் கெஸ் பண்ணது கரெக்ட்னா அவன சீக்கிரம் பிடிக்கனும் முகில். அவன் ரொம்ப பெருசா ஏதோ பண்றானு தோனுது" என்று முடித்தான் மாறன்.

சரி என்று முகிலும் அழைப்பை துண்டித்தான். மாறனும் தனக்கு இனி வேலை அதிகம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தான்.

ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று யோசித்தவன் அந்த கும்பலுக்கு வந்து சேர்ந்தான்.

சிறிது நேரத்தில் வந்த குமார் மற்ற அனைவரையும் அழைத்து தங்களுக்கு ஒரு புதிய வேலை வந்துவிட்டதாக கூறியவன் வெற்றியை ஒரு பார்வை பார்த்து செல்லலாம் என்றான்.

ஆருத்ரா தன் அலுவலகத்தில் வேலையை முடித்தவள் தோழிகளோடு வெளியே வந்தாள். அங்கே அவர்களுக்காக காத்திருந்தது அலுவலக பேருந்து.

தோழிகள் அனைவரும் ஏறி அமர்ந்தனர். அப்போது ஜன்னலில் வேடிக்கை பார்த்திருந்த ஆரு சட்டென்று ரோட்டில் யாரையோ பார்த்து விட்டாள்.

பார்த்தவளின் பார்வை கூர்மையானது. இப்போது எப்படியாவது கீழே இறங்கி செல்ல முடியுமா என்று யோசித்தாள்.

திரும்பி தன் தோழிகளை பார்த்தவள் திடீரென யோசனை வந்தவளாய் தன் பையை துழாவி விட்டு "ஹைய்யோ மீரா நான் என் மொபைல மேலையே வச்சிட்டு வந்துட்டேன்.

நான் போய் எடுத்துட்டு வந்தர்ரேன். லேட் ஆனா நான் வந்துடுறேன் ஓகே நீங்க இறங்காதீங்க" என்று கூறி இறங்கி ஓடினாள் மீரா கூப்பிடுவதை கேட்காதது போல்.

சென்றவள் ஒரு மரத்தில் அருகில் நின்று பேருந்து கிளம்பியதை உறுதிப்படுத்தியவள் எதிரே இருந்த கடையை பார்த்தாள்.

அந்த ஆள் கிளம்பவும் தானும் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிக் கொண்டவள் அந்த நபரை பின்தொடர்ந்தது சென்றாள்.

இதில் சிறிது தூரம் சென்ற பேருந்தில் இருந்து இறங்கிய தோழி மீராவை கவனிக்கவில்லை. ஆரு ஆட்டோவில் ஏறி செல்வதை கண்ட மீரா தானும் ஆட்டோ ஒன்றில் ஏறி ஆருவை பின்தொடர்ந்தாள்‌.

ஒருபுறம் இவள் இங்கே செல்ல மறுபுறம் கௌதமோ தான் கண்டுபிடித்ததை சரியா என கண்டறிய தானும் தன் வீட்டில் இருந்து கிளம்பினான்.

வழி முழுவதும் அவன் மனம் ஏனோ துடித்தது. நெருக்கமானவர் யாருக்கோ ஆபத்து என இதயம் உணர்த்த அதை விடுத்து மூளை சொல்லியதை கேட்டு தன் வழியில் தொடர்ந்தான்.

இப்படி ஆளுக்கொரு திசையில் ஒரே திசையை நோக்கி பயணிப்பவர்கள் அவர்கள் எதிர்க்கொள்ள போகும் இக்கட்டை பற்றி அறியாமல் விட்டனர்.

-தொடரும்
 
Top