All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "துளி துளி தூறலாய்...!" கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 26

என்னுள் புதைந்திருந்த புலவனை நீ மீட்டுள்ளாய்,
ஏனோ அதை அறிய மறுக்கிறாய்;
எனக்கே நான் புதிதாய் தெரிய,
உன்னாலான மாற்றம் உனக்கே என்கிறேன்;
இதற்கேனும் பதில் தந்திடு பெண்ணே!!


கௌதம் தன் இருசக்கர வாகனத்தில் வரும் போது அவன் கைப்பேசி அலறியது. யார் என எடுத்து பார்த்தான். அதில் ருத்ரா என்று வந்தது.

வண்டியை ஓரமாக நிறுத்தியவன் 'இப்ப எதுக்கு ருத்ரா கால் செய்றா. ஏதாவது பிரச்சனையோ' என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றவன் "சொல்லு ருத்ரா" என்றான்.

"கௌதம் நான் சத்யாவ துரத்திட்டு வந்த ஆளுங்கள்ல ஒருத்தனை இங்க பார்த்தேன். இப்ப அவனை தான் பாலோ பண்ணிட்டு போய்ட்டு இருக்கேன்" என்றாள் மெதுவான குரலில்.

இதை கேட்ட கௌதமிற்கு தான் கோபம் எவரெஸ்டாய் ஏறியது "ஏன்டி உனக்கு மூளைன்னு எதாவது இருக்கா, இல்லை ஓரமா கழட்டி ஏதும் வச்சிட்டு வந்திட்டியா" என்று கத்தினான்.

திடீரென கௌதம் தன்னை திட்டவும் திடுக்கிட்டாள் ஆரு‌‌. பின் தன்னை தேற்றி கொண்டு "இங்க பாருங்க கௌதம்" என்று ஆரம்பித்தாள்‌.

அவளை பாதியில் தடுத்தவன் "ஸ்ஸ் பேசாத. எதுக்கு எடுத்தாலும் எனக்கு தெரியும்னு சொல்றது. பிரச்சினையோட சீரியஸ்நஸ் புரியலையா.

ஏன்டி போறதும் போனியே இப்படி தனியா தான் போவியா. கூட யாரையாவது துணைக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே.

முதல்ல எங்க போய்ட்டு இருக்கன்னு ஒழுங்கா லொக்கேஷன அனுப்புற புரியுதா" என்றான் கடுமையான குரலில்.

"ஏன் இப்படி கத்துறீங்க. நான் பாலோ பண்ணி மட்டும் தான் போறேன். அதான் இப்ப உங்ககிட்ட சொல்றேன்ல"

என்றவள் தன் முன்னே செல்லும் வாகனம் ஒரு கிளை சாலையில் சென்று நிற்பதை பார்த்தாள்.

உடனே "அண்ணா அண்ணா இங்கையே நிறுத்துங்க" என்று ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி இறங்கிக் கொண்டாள்.

அவரிடம் பணம் தந்து அனுப்பி விட்டாள். அதை அங்கு கேட்ட கௌதமிற்கு இன்னும் டென்ஷன் ஏறியது.

ஆட்டோ சென்றவுடன் "கௌதம் நான் இறங்கிட்டேன். இப்ப என்ன பண்ணட்டும்" என்றவளை என்ன செய்தால் தகும் என எண்ணியவன் அவளை திட்டினான் மனதிற்குள்.

"எதுக்கு ஆட்டோவ நீ திரும்ப அனுப்புன" என்றான் காட்டமாக. "அதான் நீங்க வர்றீங்கள" என்றாள் நியாயமாக. 'இவளை' என்று மனதில் எண்ணியவன்,

"இப்ப நீ எங்க இருக்க லொக்கேஷன அனுப்பு" என்றான் பற்களை கடித்தபடி. கௌதம் சத்யாவின் உடல் இருந்த இடத்தை சுற்றி ஏதேனும் கிடைக்குமா என்று பார்க்கவே கிளம்பி இருந்தான்.

இப்போது இந்த ஆரு‌ வேறு ஒரு பிரச்சனையை இழுத்து விட்டாள். இருந்தாலும் அங்கு சென்றால் இன்றே கூட இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்க வாய்ப்பும் உள்ளது என எண்ணினான்.

ஆருவின் குறுஞ்செய்தி வந்தவுடன் அதை பார்த்தவன் ஒரு நிமிடம் நிம்மதி ஆனான். ஏனெனில் அது அவன் சென்றுக் கொண்டிருந்த இடம் தான்.

அந்த இடத்திற்கு சிறிது தொலைவில் இருந்து தான் பேசிக் கொண்டு இருக்கிறான். எனவே இன்னும் பத்து நிமிடத்தில் சென்று விடலாம் என்று நினைத்தவன் உடனே வேகத்தை கூட்டி கிளம்பினான்.

அவன் செல்லும் வழியெல்லாம் ஆருவை மனதில் இன்னும் திட்டிக் கொண்டே தான் சென்றான். 'இவ என்ன நினைச்சுக்கிட்டு இப்படிலாம் செய்றா.

தனியா போய்ருக்கா, ஆட்டோவையும் திரும்ப அனுப்பிட்டா. ஏதும் அங்க அவளுக்கு பிரச்சினை வந்தா என்ன பண்ணுவா.

என்னை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்திருப்பாளா. அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்' என்ற மனதின் வார்த்தைகளில் திடுக்கிட்டு விட்டான்.

'இப்ப என்ன நினைச்சேன். ருத்ரா இல்லாம நான் எப்படி இருப்பேன்னு தானே. ஆனா எனக்கு ஏன் இப்படி தோனுது.

ஆண்டவா. ஒருவேளை நான் ருத்ராவ விரும்புறனா. ஆனா எப்ப இருந்து இப்படிலாம் யோசிக்க ஆரம்பிச்சேன்' என தன் போக்கில் யோசித்தான்‌.

கடைசியாக 'எஸ் நான் ருத்ராவ லவ் பண்றேன் தான். அவ எனக்கு தான். அதான் என் மனசு அவளுக்கு ஏதோ ஆபத்து அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தது.

அது அவ மேல நான் வச்ச காதலால தான்' என்று பலவாறு யோசித்தவன் ஒருவழியாக தன் டியூப்லைட் மூளையின் காதலை உணர்ந்தான்.

ஆனால் இந்த நிமிடம் மகிழ்ச்சியை விட பயம் தான் அதிகமாக இருந்தது அவன் மனதில். காரணம் அவன் ருத்ரா அன்றி வேறு யார்.

போகும் அவன் தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களிடமும் மனுப் போட்டு கொண்டே சென்றான். 'நான் போறதுக்குள்ள ருத்ரா எந்த பிரச்சனைலையும் சிக்கிடக் கூடாது' என்று.

அங்கே தனியாக நின்றிருந்த ஆருவிற்கு தற்போது தான் கௌதம் தன்னை எதற்கு திட்டினான் என்று புரிந்தது.

அந்த சாலையில் அவளும்‌ வந்ததில் இருந்து பார்த்ததில் ஒரு வண்டி, ஏன் ஒரு காக்கா குருவி கூட செல்லவில்லை.

என்னதான் வெளியே தைரியமாக நின்றாலும் மனதிற்குள் பயம் பயங்கரமாக உருவெடுத்தது. கௌதம் சீக்கிரம் வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்‌.

அதற்கு அவள் மனதே 'ஆமா இப்ப நினைச்சு என்ன பண்றது. அதான் வந்த ஒரு ஆட்டோவையும் அனுப்பிட்ட. கௌதம் உன்னை திட்டுறதுல தப்பே இல்லடி.

பாவம் அவரும் இப்ப வேகமா கிளம்பி வந்துட்டு இருப்பாரு. வந்து நல்லா இன்னும் நாலு திட்டு திட்டுனாக் கூட பரவாயில்லை.

ஆனா சீக்கிரம் வந்து என்னை கூட்டிட்டு போனா போதும்‌. நீ பெரிய இவ. ஜேம்ஸ் பாண்ட் இன்டியானா ஜோன்ஸ்னு நினைப்பு தான் ஆரு உனக்கு.

இப்ப பாரு வந்து இப்படி மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டு நிக்கிற. இனிமே இப்படி பண்ணுவ பண்ணுவ' என தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள்.

அப்போது அவள் முதுகில் யாரோ கையை வைக்கவும் பயத்தில் அரண்டு போய் விட்டாள் ஆரு‌.

அவள் கத்தப் போகும் நேரம் அந்த நபரின் மற்றொரு கரம் அவள் வாயை மூடவும் பயத்தில் மயக்கம் வரும் போல் ஆனது ஆருவிற்கு.

குமார், மணி முதாலானோர் அனைவரையும் சக்தி பிரசாத் தன் அறைக்கு அழைத்தவன் "உங்களுக்கு ஒரு புது வேலை வந்திருக்கு" என்றவன்

அதை பார்க்க குமார் போன்ற சிலரை தன்னோடு அழைத்துக் கொண்டு கிளம்பினான். இதில் மாறனும் அடக்கம்.

தங்களை எங்கே அழைத்து செல்கிறார்கள் என்று கேட்ட வெற்றியின் கேள்விக்கு முறைப்பையே பதிலாக தந்தான் குமார்.

விஷ்ணு பிரசாத் தன்னுடைய ஆய்வகத்தில் சில ஆட்களை அழைத்து "அந்த மூனு பசங்களை இங்க டெஸ்ட் எடுக்க அழைச்சிட்டு வாங்க" என்றான்.

அங்கு வந்த சிறுவர்களுள் முதலில் அழுதுக் கொண்டிருந்த சித்துவை அழைத்தவன் "தம்பி அழக்கூடாது பா. நான் உங்களை ஒன்னும் செய்ய மாட்டேன்.

ஒரு சின்ன டெஸ்ட் மட்டும் எடுப்போம் ஓகே. அப்புறம் நீங்க உங்க ரூம்க்கு போகலாம். அங்க நான் வாங்கி வச்சிருக்க டாய்ஸ் வச்சு விளையாடலாம்.

அப்புறம் உங்களுக்கு என்ன புட்ஸ் வேணுமோ அதை கேளுங்க இந்த அங்கிள்லாம் வாங்கி தருவாங்க என்ன" என்றான் பரிவான குரலில்.

"எங்களுக்கு அதுலாம் வேணாம். எங்களை எங்க வீட்ல கொண்டு போய் விட்டுருங்க" என்றான்‌‌ அழுதுக் கொண்டே.

அவன் தலையை தடவிக் கொண்டே "ஓகே இங்க நீங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணீங்கனா நான் உங்களை உங்க வீட்டுக்கு அனுப்பிருவேன்" என்றான் பிரசாத்‌.

அதை கேட்டு உண்மையா என்று ஏக்கமாக பார்த்தவன் "நாங்க உங்களுக்கு ஹெல்ப் செஞ்சா நீங்க எங்கள வீட்டுக்கு அனுப்புவீங்க தானே" என்றான் அப்பாவியாக.

ஆம் என்றவன் தனக்கு தேவையான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டான். பின் சிறுவர்களுக்கு ஆளுக்கு ஒரு டம்ளர் ஜூஸை தந்தான்.

"என்ன அங்கிள் இந்த ஜூஸ் கசக்குது" என்ற சித்துவின் கேள்விக்கு "அது அப்படி தான் இருக்கும். குடிங்க என்ன" என்றவன் அவர்கள் குடித்து செல்லும் வரை பார்த்திருந்தான்.

அவர்கள் சென்றவுடன் தன் அருகில் இருந்த மற்றொரு மருத்துவரிடம் "நல்லா கேர் பண்ணிக்கோங்க.

ஹெல்தியான புட்ஸ் குடுங்க அன்ட் மெடிசின்ஸ் மூனு நேரமும் குடுங்க. எந்த சிட்டுவேஷன்லையும் ஸ்டாப் பண்ணிடாதீங்க.

அந்த பசங்களை நல்லா குளோஸா வாட்ச் பண்ணுங்க. எதாவது ஒரு சின்ன சிம்ப்டம்ஸ் ஆர் வேற எதாவது டிப்ரண்ட் ஆட்டிடூட் தெரிஞ்சா கூட எனக்கு இன்பார்ம் பண்ணிடுங்க.

ஓகே" என்றவன் தன் அறைக்கு சென்று ஒரு குடுவையை எடுத்து தன் ஆராய்ச்சியை தொடர்ந்தான்.

அந்த நேரம் பார்த்து வந்து சேர்ந்தான் சக்தி பிரசாத். வழமை போல் அவன் அறை கதவை திறந்தவன் நேரே பிரசாத்திடம் வந்தான்.

"ஹே பிரசாத். என்னடா செய்ற" என்றவனை முறைத்த பிரசாத் "இந்த ரூம் உள்ள வரக்கூடாது அப்டின்னு எத்தனை தடவை சொல்றது" என்றான்.

அதை கண்டு கொள்ளாத சக்தி "நீ சொன்ன மாதிரி என் ஆட்கள கூட்டிட்டு வந்துட்டேன்" என்றான். "சரி அவங்களுக்கு பசங்க இருக்க ரூமை காட்டு.

நான் சொன்ன பசங்களை மட்டும் அங்க ஷிப்ட் பண்ணிர சொல்லு" என்றவன் தன் வேலையை தொடர்ந்தான்‌.

மாறன் உள்ளே வந்தது முதல் இங்கிருந்த அனைத்தையும் யாரும் அறியாமல் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டான்.

விஷ்ணுவை பார்த்த மாறன் 'இவன் தான் பிரசாத்தா. இன்னைக்கே நான் உன்னை பார்ப்பேன்னு நினைக்கில டா. இன்னையோட நீங்க எல்லாம் காலிடா' என்று மனதில் கறுவிக் கொண்டான்.

பின்பு அவர்களை ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த சிறுவர்களை எல்லாம் ஒவ்வொரு நிலையில் பெட்டில் படுக்க வைக்க பட்டிருந்தனர்.

பார்த்த மாறனுக்கு மனம் வேகமாய் அடித்து கொண்டது. இவர்களை எப்படி காப்பாற்றுவது என யோசிக்க தொடங்கியது.

அப்போது "சே பக்கத்து ரூம்ல இருக்காங்க போல" என்றவன் அவர்களை அடுத்த அறைக்கு அழைத்து சென்றான்.

அங்கே நல்ல நிலையில் இருந்த சிறுவர்களை தாங்கள் எடுத்து வந்த வேனில் ஏற்ற சொல்லி அவன் ஒரு அறையில் சென்று அமர்ந்து விட்டான்.

குமார் உள்ளிட்டோர் அந்த சிறுவர்களை வேனில் ஏற்றி கொண்டிருந்தனர். மாறனும் எப்படி என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.

அப்போது யாரும் அறியாதவாறு நகர்ந்தவன் மேலும் தனக்கு தேவையான தகவல்களை புகைப்படங்களாய் சேகரித்தான்.

அங்கிருந்த லேப் தனியே அமர்ந்து வேலை செய்திருந்த வேறு சில மருத்துவர்கள் என் எல்லாவற்றையும் ஆதரங்களாய் ஆக்கினான்.

அந்நேரம் வெளியில் இருந்து வேகமாக உள்ளே வந்த பிரசாத்தின் ஆள் ஒருவன் கூறிய செய்தியில் சக்தி பிரசாத் உட்பட அனைவரும் கோபம் அடைந்தனர்.

அந்த ஆளிடம் மறுபடியும் ஏதோ சொல்லி அனுப்பினான் பிரசாத். அதை கேட்ட சக்தியோ விகாரமாய் சிரித்தான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் -27

காற்றும் நுழையா காட்டில் மாட்டிய பெண்ணே,
காக்க வேண்டி எனகாய் காத்திருந்தாய்;
வருவேனா என்ற ஏக்கம் நிறைந்த உன் முகத்திற்கேனும்,
நான் விரைந்து வந்திடுவேன் பெண்ணே;
பயம் விடுத்திடுவாய் நான் என்றும் உன்னருகிலே தான்!!


ஆருத்ரா தன் வாயை மூடிய நபரை கண்டு பயத்திற்கு பதில் நிம்மதி தான் அடைந்தாள். ஏனென்றால் அது அவள் தோழி மீரா தான்.

ஆருவின் பின்னால் ஆட்டோவில் தொடர்ந்து வந்த மீரா ஆட்டோ உள்ளே அமர்ந்து கொண்டே ஆரு என்ன செய்கிறாள் என்று தீவிரமாக கண்காணித்தாள்.

ஆரு‌ அவள் வந்த ஆட்டோவை அனுப்பி விட்டு யாரிடமோ போனில் பேசியதை பார்த்தவள் 'யாரிடம் பேசிகிறாள்' என்று யோசித்தாள்.

பின் அவள் அங்கேயே இவ்வளவு நேரமும் நிற்கவும் போய் என்னவென்று கேட்டு விடுவோம் என இறங்கி வந்தாள்.

வந்தவள் அவள் தோளில் கை வைத்ததில் அலறப் போனவளை தன் கைக் கொண்டு அவளின் வாயை மூடி விட்டாள். ஆரு மீராவை பார்த்தவுடன் தான் அவள் மூச்சு சீரானது.

மீராவின் கையை நகற்றியவள் "ஹே மீரா குட்டி நீ இங்க என்ன செய்ற. ஏன்டி இப்படி தோள்ல கை வச்சி என்ன பயமுறுத்துன" என்றவள் அப்போது தான் மீரா முறைப்பதை கண்டாள்.

"என்ன பேச்சை நீ ஆரம்பிச்சா நான் கேட்க மாட்டனா. ஒழுங்கா சொல்லு இங்க என்ன வேலை உனக்கு. என்ன பண்ற. யாருகிட்ட பேசுன. இங்க எதுக்கு நிக்கிற" என்று அடுக்கிக் கொண்டே சென்றாள்.

மீராவின் கேள்விகளை கேட்டு திருதிருவென முழித்த ஆரு‌ "அது.‌." என ஆரம்பிக்கும் நேரம் அவள் முன் வந்து வண்டியை நிறுத்தினான் கௌதம்.

அவனை கண்டு நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டாள் ஆரு. தன் தோழியை விடுத்து கௌதமை நோக்கி திரும்பிய ஆரு‌

"கௌதம் வந்துட்டீங்களா. என்ன டென் மினிட்ஸ்ல வந்துட்டீங்க. பக்கத்துல தான் இருந்தீங்களா. இல்லை ஸ்பீடா வந்தீங்களா" என்றாள் அவனை பேச விடாது.

"என்ன நீயே பேசி என்னை டைவர்ட் பணண்லாம்னு பாக்குறியா. என்ன தாண்டி உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்க. தன்னந்தனியா இங்க வந்து நிக்கிற.

எவனாவது வந்து பிரச்சினை பண்ணா என்ன பண்ணிருப்ப. கொஞ்சம் கூட மூளை வேலையே செய்யாதா.

ஏதோ நான் பக்கதில இருக்கவும் உடனே வந்து சேர்ந்தேன். இதுவே தூரமா இருந்தா என்ன பண்ணிருப்ப.

எப்ப பார்த்தாலும் இப்படி கேன தனமா எதுவும் செய்றத தான் உன் வேலையா வச்சிருக்க" என்று தாறுமாறாக திட்டிக் கொண்டு இருந்தான்.

"சாரி கௌதம் சாரி சாரி இனிமே இப்படி பண்ண மாட்டேன்" என்ற ருத்ராவின் குரல் அவன் செவியை அடையவே இல்லை.

இதில் அருகில் ஈ உள்ளே போகும் அளவு அதிர்ச்சியில் வாயை பிளந்து கொண்டிருந்த மீராவை கவனிப்போர் யாரும் இல்லை.

தன் திட்டுக்களை எல்லாம் முடித்த பின்னே தான் கௌதம் பக்கத்தில் இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்த மீராவை கண்டான்.

ஆருவை நோக்கி "இவங்க யாரு" என்றான். "இவ என் பெஸ்ட் பிரண்ட் மீரா" என்றாள் இப்போது துணைக்கு ஆள் இருக்கும் குதூகலத்தில்.

"ஓஓ. அப்போ தனியா வந்தேன்னு சொன்ன" என்ற கௌதமின் கேள்விக்கு இங்கு நடந்த அனைத்தையும் கூறினாள்.

"சரி நீங்க ரெண்டு பேரும் உடனே கிளம்புங்க. மிஸ்.மீரா நீங்க வந்த ஆட்டோ அங்க தானே நிக்குது சீக்கிரம் கிளம்புங்க" என்று அவசரப்படுத்தினான்.

மீராவும் சரி வீட்டிற்கு சென்று ஆருவிடம் எல்லாவற்றையும் கேட்டு கொள்ளளாம் என்று எண்ணியவள் கிளம்ப தயாரானாள்.

ஆனால் ஆருவோ‌ கௌதமை பார்த்து "கௌதம் நான் சொல்றத பர்ஸ்ட் கேளுங்க. அந்த ஆள் உள்ள தான் இருக்கான்.

அன்ட் இந்த செட்டப்லா பார்த்தா இங்க தான் நம்ம கேள்விக்கான பதில் எல்லாம் கிடைக்கும்னு தோனுது" என்றாள் அங்கிருந்த கட்டிடத்தை காட்டி.

"இங்க பாரு ருத்ரா என் கோவத்தை இதுக்கு மேல ஏத்தாம ஒழுங்கா கிளம்பற புரியுதா. நான் எப்பையும் சொல்றது தான் இதலாம் நான் பாத்துக்கிறேன். கிளம்பு" என்றான் பற்களை கடித்தவாறு.

ஆனால் இதை எதையும் ஒரு பொருட்டாக மதிக்காத ருத்ரா "ஹலோ கௌதம் நான் நீங்க சொல்லி கேட்டுருவேனா என்ன.

நீங்க மட்டும் இல்லை நானும் என்ன கேட்டுச்சா நானும் சேர்ந்து தான் உள்ள போறோம். ஆரம்பத்தில இருந்து உங்க கூட தானே இருக்கேன்.

அப்படிலாம் பாதியில விட்டுட்டு போக முடியாது. நானும் வருவேன்" என்றவள் மீராவை பார்த்து "நீ கிளம்பு மீரா நான் வந்தர்றேன் ஓகே" என்றாள்.

இருவரும் தன்னை முறைப்பதை கண்டு கொள்ளாமல் அவள் தன்னை போல் உள்ளே சென்றாள். இதை கண்ட கௌதம் தலையில் அடித்து கொண்டான்.

'இவ இதுக்கு மேல கேக்க மாட்டா' என்று எண்ணிய கௌதம் மீராவை பார்த்து "நீங்க கிளம்புங்க நான் ருத்ரா வ சேப்பா வீட்ல கொண்டு வந்த விட்டர்றேன்" என்றான்.

ஆனால் ஆருவை கௌதமுடன் தனியே விட பயந்த மீரா தானும் வருவதாக கூறி ஆருவுடன் சேர்ந்து கொண்டாள்.

ருத்ரா மட்டுமல்லாது அவள் தோழியும் சொல் பேச்சு கேட்டகாதவர்கள் போல் என்று கடுப்புடன் எண்ணிய கௌதம் தன் விதியை நொந்து கொண்டே இருவருடனும் சென்றான்.

அந்த கட்டிடத்தை அடைந்தவர்கள் பின் எப்படி உள்ளே நுழையலாம் என்றும் ஏதேனும் வழி உள்ளதா என்றும் ஆராய்ந்தான் கௌதம்.

அந்த கட்டிடத்தின் பக்கவாட்டில் இருந்த சுவரை கண்டவன் ஏறி குதித்து விடலாம் என்று நினைத்து இருவரையும் பார்த்து கடைசி முறையாக

"இங்க பாருங்க நான் சுவர தாண்டி குதிச்சு தான் போக போறேன் புரியுதா. சோ நீங்க இங்கையே இருங்க" என்றான்.

ஆனால் அதை கொஞ்சமும் கேட்காத ஆரு‌ முதல் ஆளாக ஏறி குதித்து விட்டாள். இதை கண்ட கௌதம் தான் நொந்து விட்டான்.

"இவ எப்ப தான் நான் சொல்றத கேக்க போறா. ச்சே நம்ம அம்மா தான் நம்மல பேச விட மாட்டாங்க. வரப்போற பொண்டாட்டியும் அப்படியே இருக்காளே.

கௌதம் உனக்கு மட்டும் ஏன்டா இப்படி" என்று தான் நொந்தான். தன் எண்ணத்தை விடுத்து திரும்பி மீராவை பார்க்கும் போது அவளும் சுவரை தாண்டிக் கொண்டிருந்தாள்.

'நீயுமா' என்று தன் விதியை நொந்தவாறு தானும் சுவரை தாண்டினான். அங்கே தனக்காக நின்றிருந்த ஆருவிடம் சென்றான்.

பின் ஒவ்வொரு மரத்தின் பின்னால் மறைந்தவாறு அவர்களை அழைத்து கட்டிடத்தின் அருகே சென்றான். அங்கிருந்த ஒரு ஜன்னலை திறந்து பார்த்தான்.

அது ஏதோ ஒரு லேப் போன்ற அமைப்பில் இருந்தது. அப்போது தன் பென் கேமராவை ஆன் செய்தவன் வீடியோ எடுக்க ஆரம்பித்தான்.

"என்ன செய்றீங்க கௌதம்" என்று ஹஸ்கி குரலில் தன் காதருகே கேட்ட ருத்ராவை திரும்பி பார்த்தவன் "ஸ்ஸ்" என்றான் அவள் வாயில் தன் விரலை வைத்து.

இதை பார்த்து மீரா தான் கடுப்பானாள். பின்பு அந்த ஜன்லை மூடி விட்டு நகர்ந்தான் கௌதம். அவர்கள் சென்ற இடத்தில் சிலர் சிறுவர்களை வேன் ஒன்றில் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

"ஐயோ கௌதம் அங்க பாருங்க" என்ற கத்த ஆரம்பித்த ஆருவின் வாயை அடைத்த கௌதம் "பிளீஸ் ருத்ரா கத்தாத.

விட்டா நீயே நம்மல மாட்டிவிட்ருவா போலையே‌. தயவுசெஞ்சு எதுவும் பேசாத. நானும் பாத்த்துட்டு தான் இருக்கேன். புரியுதா" என்றான்.

அவன் பேசும்போது தன்னோடு அவ்வளவு நெருக்கத்தில் நின்று அதை சொல்வதை கேட்டு இப்போது உண்மையாகவே ஆரு பேச்சிழந்தாள்.

ஆனால் முன்னே தன் கவனம் முழுவதையும் வைத்திருந்த கௌதம் அவளின் எண்ணத்தை கவனிக்கவில்லை.

இங்கே இவர்கள் இப்படி நின்று பார்த்துக் கொண்டிருக்க அங்கே மாறன் தன் போனில் இருந்த அனைத்தையும் முகிலனிற்கு "லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்" என்ற குறுஞ்செய்தியோடு அனுப்பி வைத்தான்.

இங்கே நின்றிருந்த மூவரும் சிறுவர்களை ஏற்றுவதை பார்த்துக் கொண்டிருக்க அவர்களை பார்த்து சென்ற நபரை கவனிக்காது விட்டனர்.

உள்ளே சென்ற பிரசாத்தின் ஆள் வெளியே யாரோ நிற்கிறார்கள் என்று கூறிவிட்டான். இதை கேட்டு பிரசாத் "அவங்கள உள்ள இழுத்துட்டு வா.

யாரு என்னன்னு பாக்கலாம்" என்றான். இப்போது கௌதமை சுற்றி ஆட்கள் வந்தனர். தாங்கள் மாட்டிக் கொண்டோம் என்று சிறிது நேரம் கழித்து உணர்ந்த கௌதம் தன்னையே நொந்து கொண்டான்.

ஏனெனில் தன்னோடு சேர்த்து மேலும் இரண்டு பேரின் உயிரையும் தற்போது பிரச்சனையில் சிக்க வைத்திருப்பதை எண்ணியே மிகவும் கவலை கொண்டான்.

இதற்கு காரணமான ஆருவை பார்த்து முறைத்த கௌதம் "நான் சொன்னத கேட்டு போய்ருக்க வேண்டியது தானே. இப்ப பாரு மாட்டிக்கிட்டோம்.

நான் மட்டும் வந்திருந்தா எவ்ளோ நேக்கா தப்பிச்சுருப்பேன் தெரியுமா. இப்ப நீயும் வந்து இப்படி ஈசியா மாட்ட வச்சிட்ட" என்றான் கோபமாக.

ஆருவு‌ம் பயந்து தான் இருந்தாள். ஆனால் உடன் கௌதம் இருப்பதால் கொஞ்சம் தைரியமாக தான் இருந்தாள்.

இதில் மீராவின் நிலை தான் படுபயங்கரம். ஏன் இங்கு வந்தோம்? யார் இவர்கள்? எதற்கு நம்மை சுற்றி நிற்கிறார்கள்‌. என்னடா நடக்குது இங்க" என்ற கேள்விகள் சூழ அழும் நிலைக்கு சென்றாள்.

இப்போது வந்தவர்கள் அவர்களை அந்த கட்டிடத்திற்குள் அழைத்து சென்றனர். இவர்களை அழைத்து வருவதை பார்த்த மாறன் "யாரு இவங்க புதுசா" என்று பார்த்தான்.

"எப்படியோ தெரியாம வந்து மாட்டிக்கிட்டாங்க போல. முகில் எல்லாம் ரெடி பண்ணி வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை.

இப்ப என்ன பண்றது" என்று யோசித்து கொண்டிருந்தான். அங்கே வந்தவர்களில் இருவர் பெண்கள் வேறு.

அதுவும் ஒரு பெண் அரண்டு போய் இருப்பது பார்க்கும் போதே தெரிந்தது. இதில் தான் என்ன செய்ய என்று நினைத்தவன் சரி என்ன நடக்குதுன்னு பாக்கலாம் என்று நின்றான்.

இப்போது மூவரும் உள்ளே வந்தனர். அவர்களை பார்த்த சக்தியின் சிரிப்பிலே தெரிந்தது அவர்களின் நோக்கம் தங்களை இங்கிருந்து உயிரோடு அனுப்ப கூடாது என்பது என.

அவர்களில் கௌதமை கண்ட விஷ்ணு தான் "ம்ம் வெல் ஐ கெஸ் நீ கௌதம் சத்யாவோட ஃபிரண்ட் ரைட். ஐ எக்பெக்டட் யூ ஏர்லி.

பட் என்னை கண்டுபிடிக்க உனக்கு இவ்ளோ டைம் எடுத்துருக்கு. உன் பிரண்ட் என்னவோ நீ அப்படி இப்படின்னு என்னன்னவோ சொன்னான்.

சாகும் போது கூட உன் பேரை தான் சொன்னான்" என்றவனை சக்தி மாறன் உட்பட அனைவரும் சற்று அதிர்வுடன் தான் பார்த்திருந்தனர் கௌதமை தவிர்த்து.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 28

திண்டாடி திணறும் திங்களே,
ஏனோ காற்றும் தற்போது வெட்டி செல்ல,
காணலும் தான் நமை கண்டு சிரிக்க,
காலம் நேரம் வந்துவிடும் கலங்காதே பெண்ணே;
ஆருடமே சொல்லி செல்லிடுதே வெற்றி அருகேயென!!


விஷ்ணு பிரசாத் கௌதமை தெரிந்தது போல பேச பேச அதிர்வுடன் பார்த்திருந்தனர் அனைவரும். ஆனால் கௌதம் மட்டும் எந்த உணர்வையும் காட்டாது அமைதியை கடைப்பிடித்தான்.

"வெல் கௌதம். இங்க என்ன பண்ற நீ. நீ தனியா வருவேன்னு நினைச்சேன். கூட ரெண்டு பொண்ணுங்கள கூட்டிட்டு வந்திருக்க.

ம்ம் தைரியம் தான். சரி எனக்கு எதுக்கு அதுலாம்‌. எனக்கு தேவை என்னோட டாக்குமெண்ட்ஸ் அன்ட் ரிப்போர்ட்ஸ் தான்.

உன் பிரண்ட் திருடிட்டு போனது எனக்கு வேனும். எங்க இருக்குன்னு சொன்னா போதும் நான் உங்க எல்லாத்தையும் அப்படியே சேஃபா அனுப்பி விட்டர்ரேன்.

என்ன சொல்ற கௌதம்" என்றான் பிரசாத். ஆருத்ரா மாறன் ஏன் சக்தி உட்பட அனைவரும் 'இவன் எந்த டாக்குமெண்ட்ட கேக்குறான்' என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

இதை எல்லாம் கேட்ட கௌதமின் பதில் என்னவென தெரிந்து கொள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அதுவும் ஆரு‌ 'எனக்கு தெரியாம என்ன டாக்குமெண்ட்.

நம்மகிட்ட மறைச்சிட்டாறா. இல்லையே கண்டிப்பா அவருக்கும் எதுவும் தெரியாது. கௌதம் என்ன சொல்லி சமாளிக்க போறாறோ.

பாவம் அவர் மட்டும் வந்திருந்தா கூட இப்படி நின்னுட்டு இருக்க மாட்டாரு. எல்லாம் என்னால தான்" என தன் போக்கில் யோசித்திருந்தவள் கௌதமை பார்த்தாள்‌.

மாறனுக்கோ அவனை கடைசியாக சந்தித்து சென்ற சத்யாவின் முகமே மனதில் வந்து சென்றது. சத்யா குழந்தைகள் அடைந்து வைத்திருந்த இடத்தில் மாறனின் பிடியில் சிக்கினான்.

தன் நண்பன் எனவும் தான் மனது சமன்பட்டது. அங்கிருந்து சத்தியாவை பத்திரமாக அனுப்பி வைத்தான் மாறன். அதன் பின் என்ன நடந்தது அவன் எப்படி மாட்டினான் என்று அவனுக்கும் தெரியவில்லை.

ஆனால் அவன் அறியாதது தான் சேகரித்த விபரங்கள் பத்திரப்படுத்திய சத்யா மீண்டும் அங்கே வந்ததை. அங்கிருந்து சென்ற சக்தியை பின்தொடர்ந்து அவன் விஷ்ணுவின் வேலைகளை கண்டறிந்தான்.

அவனே அறியாது அங்கிருந்து பல முக்கியமான பையில்களை எடுத்துக் கொண்டான். ஆதாரம் என எதுவும் வரக்கூடாது என விஷ்ணு பிரசாத் கேமரா பொருத்தாதது அவனுக்கு மேலும் வசதியாய் போயிற்று.

ஆனால் அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வரும் போது அவன் ஆட்கள் கண்ணில் பட்டு விட்டான். மாட்டும் முன் அதையும் பத்திரப்படுத்தி விட்டான் என்பதையும் மாறன் அறிய வாய்ப்பில்லை.

மாறனுக்கு 'இப்போது இது என்ன புதிதாக டாக்குமெண்ட்ஸ்' என்று குழப்பமானது. அதை தன் கண்ணில் காட்டாதவாறு மறைத்து கௌதமை பார்த்திருந்தான்.

அனைவரும் தன்னை குழப்பத்துடனும் எதிர்ப்பார்ப்புடன் பார்ப்பதை கண்ட கௌதமிற்கு பயத்திற்கு பதில் சிரிப்பே வந்தது.

"ம்ஹூம். நீ பிரசாத் தானே. உன்னை இங்க இன்னைக்கு பார்ப்பேன்னு நினைக்கல. கிரேட் டிவிஸ்ட் பார் மீ டூ.

பட் உன்னை இப்படி பாக்கறத விட அப்படியே ஜெயில் கம்பிக்கு பின்னாடி, ஒன் டூ திரினு என்னிட்டு இருந்தத பாத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

எனக்கும் அப்படியே சும்மா குளுகுளுன்னு இருந்திருக்கும். டோன்ட் வொர்ரி கண்டிப்பா உன்னை அந்த கோலத்தில சீக்கிரம் பாத்திருவேன்.

அப்புறம் நீ தானே சக்தி பிரசாத். ஹான் உன்னையும் சேர்த்து தான்" என்று கௌதம் கூறியதை கேட்டு நமட்டு சிரிப்பு சிரித்தான் மாறன்.

உடன் இருந்த ஆருவோ 'கௌதமுக்கு இவனுங்களை தெரியுமா. என்கிட்ட கூட சொல்லல. வெளியே வரட்டும் பாத்துக்கிறேன்' என்று எண்ணினாள்.

சக்திக்கோ கோபம் எகிறியது. எனவே கௌதமை பார்த்து "டேய் யாருடா நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா. உன்னால இல்லை யாராலையும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது.

நீ எங்களை ஜெயிலுக்கு அனுப்ப போறியா இல்லை நாங்க உன்னை பரலோகம் அனுப்ப போறமானு பார்க்கத் தானே போற" என்றான்.

சக்தியை நோக்கி திரும்பிய விஷ்ணு பிரசாத் "நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா" என்றவன் மீண்டும் கௌதமிடம்

"இங்க பாரு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அன்ட் பிரச்சினையும் கிடையாது. இதுல நமக்கு நடுவுல எதுக்கு சண்டை சொல்லு.

எனக்கு என் டாக்குமெண்ட்ஸ் கிடைச்சா போதும். உனக்கு இந்த பொண்ணுங்க உயிரோட கிடைச்சா போதும்.

சோ இப்ப உன்னோட டெசிஷன் என்ன" என்று அவன் பத்திரங்களை தரவில்லை என்றால் அந்தப் பெண்களை கொன்று விடுவதாக மறைமுக எச்சரிக்கை செய்தான்.

மனதில் பயம் எழுந்தாலும் அதை வெளியில் காட்டாத கௌதம் "என் கிட்ட எந்த டாக்குமெண்டும் இல்லை. இன்பாக்ட் நீ எதை பத்தி கேக்குறனு கூட எனக்கு தெரியலை" என்றான்.

கடுப்பான பிரசாத் "இங்க பாரு நான் என் பொருமையை புடிச்சு வைச்சு பேசிட்டு இருக்கேன். அதை தாண்ட வச்சிருறாத‌.

என் பொருமை ரொம்ப நேரம் இருக்காது. ஒழுங்கா நான் சொன்னத கேளு இல்லை நான் என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது.

உன் ஃபிரண்ட் என்னன்னா என இடத்துக்கே வந்து என்னோட பொருளையே திருடிட்டு போறான். எவ்ளோ தைரியம் அவனுக்கு.

அவனை கண்டுபிடிச்சு போட்டு அந்த அடி அடிச்சும் வாய திறக்க மாட்டேன்னு இருக்கான். ஆனா உன் பேரை தாண்டா சொன்னான். அவனை கொன்னும் எனக்கு பிரச்சினை தான்.

இந்த லூசு பசங்க செத்தவன் பாடிய பக்கத்துலையே வேற போட்டு எனக்கு இன்னும் பிரச்சினைய தான் ஏத்தி இருக்கானுங்க" என்று தன் ஆட்களையும் திட்டிவிட்டு,

"கண்டிப்பா உனக்கு தெரியாம இருக்காது. ம்ம் சொல்லு எங்க அந்த டாக்குமெண்ட் எல்லாத்தையும் வச்சிருக்கன்னு" என்றான்.

இதை கேட்டு சுற்றென்று கோபம் ஏறியது கௌதமிற்கும் மாறனுக்கும். தங்களை கட்டுப்படத்திக் கொண்டு நின்றிருந்தார்கள்.

பின் கௌதம் மீண்டும் தனக்கு எதுவும் தெரியாது என சாதிக்க கடுப்பின் உச்சம் சென்ற பிரசாத் தன் ஆட்களை நோக்கி "ம்ம்" என்றான்.

பிரசாத் கண்ணை காட்டவும் அடியாள் ஒருவன் முன்னே வந்தான்‌. கௌதமின் கழுத்தில் அவன் கத்தி வைக்க வரும் போது அந்த அடியாளை அடித்து கீழே தள்ளினான் கௌதம்.

விஷ்ணு பிரசாத்தை பார்த்தவன் "என்ன பயந்து போய்ருவேன்னு நினைச்சியா. இல்லை என்னை சாதாரண பத்திரிகைகாரன்னு நினைச்சியா.

எப்படிடா ஒரு உயிரை எடுக்க மனசு வந்துச்சு" என்றவன் பின் "அதானே தினம் தினம் சின்ன சின்ன பசங்களை கொல்லும் போதே மனசு உறுத்தல.

என் பிரடண்ட கொல்றதுலா உனக்கு சர்வசாதாரணம் இல்லை. நான் தான் மறந்துட்டேன் நீ ஒரு மனுஷ மிருகம்னு" என்றான் பிரசாத்தை பார்த்து.

இப்போது பிரசாத் "ஓஓ அப்போ நான் என்ன பண்றேங்கற வரைக்கும் உனக்கு தெரிஞ்சிருக்கு இல்ல. அப்ப உன்னை வெளியே விடுறது எனக்கு டேஞ்சர் ஆச்சே.

சரி போனபோகுது‌ நான் உனக்கு ரெண்டு ஆப்சன் தறேன்‌. அது என்னன்னா ஒன்னு நீ என் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து தர.

அப்ப நீ கூட்டிட்டு வந்தியே ரெண்டு பொண்ணுங்க அவங்க சேப்டிக்கு நான் கேரண்டி. அவங்கள சேப்பா நான் அனுப்பி வச்சிருவேன்.

பட் அப்போவும் உன்னை என்ன பண்ணனுங்கறத நான் தான் டிசைட் பண்ணுவேன். அன்ட் ஆப்ஷன் டூ அது என்னோட சாய்ஸ் ஓகே.

இங்க என்ன நடக்குங்கிறதுக்கு நான் சூயரிட்டி தர முடியாது. இப்ப சொல்லு உனக்கு இருக்கிறது நான் சொன்ன இந்த சாய்ஸ் தான்.

நவ் டிசைட் இட். சொல்லு கௌதம் என்ன உன் முடிவு" என்று முடித்தான். கௌதமும் தன் நிலையில் இருந்து இறங்கி வராது 'நீ என்ன செய்து விடுவாய்' என்ற பார்வை பார்த்தான்.

இப்போது பிரசாத் பார்த்த பார்வையில் அவன் ஆட்கள் சட்டென கௌதமின் அருகே இருந்த ஆரு‌ மற்றும் மீராவின் கழுத்தில் கத்தியை வைத்து விட்டனர்.

அங்கே கத்தியின் பிடியில் இருந்த மீராவோ ஏற்கனவே பயத்தில் இருந்தவள் தற்போது வெளிப்படையாக நடுங்கி வேர்த்து வடிய நன்றிருந்தாள்.

ஆருவோ மனது முழுவதும் பயம் இருந்தாலும் அருகில் கௌதம் இருக்கும் தைரியத்தில் "ஹேய் இங்க பாரு டா தடியா" என்றாள்.

அவளை பார்த்த பிரசாத் "ஏய் நான் பிரசாத். மரியாதை மரியாதை முக்கியம்" என்றான் அவள் முன் வந்து.

அதை அலட்சியம் செய்தவள் "நீ யாரா வேணா இருந்துட்டு போ. ஆனா நீ ஜெயிலுக்கு போறது மட்டும் உறுதி டா. என்ன நெனச்ச எங்கள.

உன்னால எங்களை ஒன்னும் பண்ண முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்தில பாரு என் கௌதம் உங்க எல்லாத்தையும் அடிச்சு போட்டுட்டு எங்களை கூட்டிட்டு போவார்"

என்று வீர வசனம் பேசினாள். இதை கேட்டு தலையில் அடித்த கௌதம் 'இவ எதுக்கு இப்படி டைலாக் பேசுறா.

கழுத்துல கத்தி வச்சுருக்கானுங்க இப்பக் கூட வாய் மூடுறாளா பாரு" என மனத்திற்குள் அவளை திட்டியவன் திரும்பி முறைத்தான்.

அவளை பார்த்த மீராவும் மனதிற்குள் கிட்டத்தட்ட இதோ போல் ஏன் இன்னும் கேவலமாக திட்டிக் கொண்டு இருந்தாள்.

கௌதம் தற்போது ஆருவிடம் "ஏய் வாய மூடுடி. எங்க வந்தாலும் உன் வாய் மட்டும் குறைய மாட்டேங்குது" என்றான் மெல்ல.

அதற்கு ஆரு "என்ன கௌதம் நீங்க இப்பக் கூட ஒருத்தனை அடிச்சீங்க. இவங்களை எல்லாம் போட்டு அடிச்சு எங்களை இங்க இருந்து கூட்டிட்டு போங்க" என்றாள்.

இப்போது நன்கு அவளை முறைத்தவன் ஏதும் சொல்லும் முன் மீரா "ஏன்டி பயத்துல உனக்கு மூளை எதுவும் குழம்பி போச்சா.

அவனுங்க நம்ம கழுத்துல கத்தி வச்சாருக்காங்க டி" என்றாள் சத்தமாக. இதை அனைத்தையும் கண்ட பிரசாத் "நிறுத்துங்க எல்லாரும்.

என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. உங்க பஞ்சாயத்தை வேற எங்கையாவது போய் வச்சுக்கோங்க. இப்ப கௌதம் நீ எனக்கு வேணுங்கறத குடுத்துட்டு போ" என்றான்.

இதை கேட்ட ஆரு‌ "கேட்டத குடுத்துட்டு போங்கறான். என்னமோ கௌதம் அவன் லவ்வர் மாதிரி" என மனத்திற்குள் பேசுவதாக எண்ணி சத்தமாக பேசி பிரசாத்தை முறைத்தாள்.

இதை பார்த்த கௌதம் "கடவுளே இவளை என்ன பண்றது. எங்க வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கா" என்று எண்ணியவன் ஆருவிடம்‌ "ஏய் நம்மல புடிச்சு வச்சிருக்காங்க டி.

அவன் கேக்குறத கொடுக்கலைனா கொன்னுறுவேன்னு பயமுருத்துறான். நீ என்னன்னா டயலாக் அடிச்சிக்கிட்டு இருக்க. கொஞ்ச நேரமாவது வாயை மூடுடி" என்றான் பற்களை கடித்து கொண்டு.

இதை கண்டு எரிச்சல் அடைந்த பிரசாத் "ஏய் என்னங்கடா இவங்கள பேச விட்டு வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க.

இன்னும் ஒரு வார்த்தை அந்த பொண்ணு பேசுச்சு கழுத்தை அறுத்து போடுங்க டா" என்றான் ஆருவின் பேச்சின் விளைவால்.

இப்போது கௌதம் மாறன் இருவரும் பயந்து விட்டனர் அவனின் ஆக்ரோசத்தில்.

மாறன் தான் இனியும் தாமதிப்பது சரியல்ல மற்றும் களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்தது என்று முடிவு செய்தான்‌.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஆரு மற்றும் மீராவின் கழுத்தில் கத்தி வைத்திருந்த இருவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

சத்தம் வந்த திசையை பார்த்த அனைவரும் கண்டது துப்பாக்கி முனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரசாத்தை தான்.

அனைவரும் அதிர்வுடன் அவனை பார்த்த நேரம் "எவனாவது அவங்க மேல கைய வச்சீங்க. இவன் செத்துருவான்" என்றான் அவன்.

"ஏய் உனக்கென்ன பைத்தியமா. அவன் என் தம்பி அவனை விடு. நமக்கு எதிர்ல இருக்க அவங்க மேல துப்பாக்கிய வை" என்றான் சக்தி.

அதற்கு "நீ சொன்ன வேலையை இதுவரை பார்த்ததால என்னை என்ன உன் வேலைக்காரன்னு நினைச்சியா. நான் மாறன் டா.

உங்க ஒருத்தனையும் சும்மா விட மாட்டேன்" என்றவனை நீயா அது என்று அனைவரும் அதிர்ந்து பார்த்திருந்தனர் பிரசாத் உட்பட.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே 🙏🙏,
இந்த கதை முடிய போகுது ‌. இன்னும் ஒரே ஒரு எபி மட்டும் தான் இருக்கு. சோ படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க பா 💞💞❤❤

தூறல் - 29

கோபம் கூட காற்றில் கரைந்ததே பெண்ணே,

உன் விழி வீச்சு என்னை சாய்த்த நொடிதனில்;
காற்றிலாடும் இலையென இசைந்து சென்றேன்,

நீ எனை கண்டு உன் இதழின் மென்னகை செய்த நொடி!!

'என்ன இவன் தான் மாறனா' என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்த நொடி "என்ன எல்லாரும் ஷாக் ஆகி நிக்கிறீங்க.

ஷாக் ஆகுறத அப்புறமா ஆகிகோங்க என்ன. இப்ப போலீஸ் வருவாங்க. எல்லாரும் மரியாதையா போலீஸ் ஸ்டேஷன் வந்து செஞ்ச தப்பை ஒத்துக்கறீங்க புரியிதா" என்றான் மாறன்.

அங்கு அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த குமாரை பார்த்து "என்ன குமார் பிரீஸ் ஆகிட்ட. மாறன்னா வெற்றி மாறன்னு நினைச்ச நீ,

மணிமாறன்னு ஒரு பேர் இருக்குங்கிறத மறந்துட்டியே‌. இப்ப பாரு சும்மா கொத்தோட மாட்டிக்கிட்டீங்க" என்று உச்சு கொட்டினான்.

"ஏய் என்ன மணி நீதான் அந்த போலீஸ்காரனா. என் கூடவே இருந்து என்னையே ஏமாத்தி இருக்கல்ல. உன்னை கொன்னு போட்டா தான் என் மனசு ஆரும்டா" என்ற சக்தி பிரசாத் அவனை தாக்க வந்தான்.

அந்த நேரம் அவனை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான் கௌதம். "எங்க போற சக்தி பிரசாத். சத்யா, இங்க இருக்க சின்ன பசங்கன்னு எல்லாத்தையும் கொன்னீங்கல்ல.

இப்ப பதிலுக்கு நீங்க நல்லா அனுபவிப்பீங்க டா" என்றான் ஆக்ரோசமாக. இருவரும் தங்கள் பிடியில் இருந்து வெளிவர முயன்றனர்.

இப்போது தெளிந்த பிரசாத்தின் ஆட்கள் அங்கிருந்த இரண்டு பெண்களையும் பிடிக்க வந்தனர். அதை பார்த்த கௌதம்

"ருத்ரா ரெண்டு பேரும் இங்க இருந்து ஓடுங்க சீக்கிரம். வெளிய போய் முடிஞ்சா போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணுங்க. போங்க" என்று கத்தினான் கௌதம்.

இப்போது மீராவையும் இழுத்துக் கொண்டு ஆரு அந்த கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முயன்றாள்.

ஆனால் பிரசாத்தின் ஆட்கள் அவர்களை வெளியே விடாது உள்ளே துரத்தி சென்றனர். அவர்களும் ஓடினர் அந்த கட்டிடத்திற்குள்ளே.

சக்தியும் விஷ்ணு பிரசாத்தும் இவர்கள் பிடியில் இருந்து வெளிவர முயன்று கொண்டிருந்தனர்.

கௌதமும் மாறனும் அவர்களை விடாது பிடித்திருந்தனர் அவர்களின் மற்ற ஆட்களையும் சமாளித்து கொண்டு.

அந்த இடமே கலவரமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் மற்ற ஆட்களை சமாளிக்கும் போது மாறனின் பிடியில் இருந்து நழுவி சென்ற விஷ்ணு பிரசாத்தை தடுக்க முடியவில்லை.

இந்த கலவரமான நேரத்தில் தான் முகிலன் தன் படையுடன் வந்து சேர்ந்தான். அங்கு நடந்து கொண்டிருந்ததை பார்த்த முகிலன் அவசரமாக தன் படையுடன் உள்ளே நுழைந்தான்.

முகிலன் வந்தபின் சண்டை வேகமாக முடிவுக்கு வந்தது. மாட்டிய அனைவரையும் கைது செய்து காவல்துறையினர் தங்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

கௌதம் இப்போது விஷ்ணு பிரசாத் எங்கே சென்றான் என்று முகிலன் மாறனின் உதவியோடு தேடத் தெடங்கினான்.

அதோடு ருத்ரா மற்றும் மீராவையும் மீட்க தேடினான். அந்த கட்டிடம் முழுவதும் தேடிக் கொண்டு வந்தனர்.

அப்போது அங்கே ஒரு அறை பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் உள்ளே ருத்ராவின் குரல் போல் கேட்டது. அதை கவனித்த கௌதம்

"மாறன் இந்த ரூம் உள்ள தான் ஏதோ சத்தம் கேக்குது‌. அது கண்டிப்பா ருத்ரா வாய்ஸ் தான். திறக்கலாம் வாங்க" என்றான் பதட்டத்துடன்.

"கௌதம் நாம உள்ள பாக்கலாம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க" என்ற மாறன் முகிலிடம் திரும்பி "என்ன பண்ணலாம் முகில் உள்ள பிரசாத் இருப்பான் போல.

ரூம் லாக் ஆகி இருக்கு. உடைச்சிறலாமா" என்றான். முகிலனும் ஒரு நிமிடம் யோசித்தவன் "ஓகே மாறன் ஒடச்சிறலாம்" என்று மூவரும் அந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அவர்கள் அங்கு பார்த்ததோ சர்ஜிக்கல் கத்தியின் பிடியில் நின்றிருந்த ஆருத்ரா மீரா இருவரையும் தான்.

அந்த கத்தியை பிடித்திருந்த பிரசாத் நிஜத்தை ஏற்கும் துணிவின்றி "இங்க பாருங்க என்னை உங்களால எதுவும் பண்ண முடியாது.

அப்படி எதாச்சும் என்னை பண்ண நினைச்சா இவங்க ரெண்டு பேர் கழுத்தையும் அறுத்து போட்டுருவேன்" என்றவன் அவனுமே பயத்தில் இருந்தான்.

அவன் இந்த பிரச்சினை இந்த அளவு வரும் என்று நினைத்து பார்க்கவில்லை. அதுவும் போலீஸே தன் கும்பலில் இருந்து தங்களை பிடித்தது என்றதில் பெரிதும் பயந்து விட்டான்.

அவன் இதுவரை பல கொலைகள் செய்த குற்ற உணர்வில் இருந்தவன் தற்போது பயம் வந்தவுடன் பயத்தில் ஏதேதோ செய்து கொண்டிருந்தான்.

"இங்க பாரு உன் கைலாம் நடுங்குது. வேணாம் அவங்களை விட்டுரு பிளீஸ். உன்னை எதுவும் செய்ய வேணாம்னு நான் போலீஸ் கிட்ட சொல்றேன்.

பிளீஸ் தயவு செஞ்சு அவங்கள ஏதும் செஞ்சிறாத பிரசாத்" என்று கெஞ்சி கொண்டிருந்தான் கௌதம். அதே நேரம் அவன் ருத்ராவை கண்டு 'அவன் கைய பிடி' என்பது போல் செய்கை செய்தான்‌.

இதை புரிந்த ஆருவும்‌ மெதுவாக அவன் கவனம் திரும்பும் நேரம் அவன் கையை பிடித்து கொண்டாள். அப்போது பிரசாத் அவளை திரும்பி முறைத்தான்.

இந்த இடைவெளியை பயன்படுத்திய கௌதம் மீராவை தன் புறம் இழுத்து பிரசாத்தின் மற்றொரு கையை பிடித்தான்.

இப்போது மாறன் வந்து ஆருவை நகற்றி அந்த கையை அவன் பிடித்து முறுக்கினான்.

இது எல்லாம் சில நிமிட இடைவெளியில் நடக்க பிரசாத் எதிர்ப்பாரா இந்த நிகழ்வால் எதுவும் செய்ய தோன்றாது நின்றான்.

பிரசாத் பிடிபட்டவுடன் அவனையும் சேர்த்து கைது செய்தான் முகிலன். இங்கே ஆருவின் அருகே சென்றான் கௌதம்.

"ருத்ரா உனக்கு ஒன்னும் ஆகலை தான்டா" என்றான் காதலாக அவளின் கன்னம் தாங்கி. "ம்ம். நான் நான் ஓகே தான் கௌதம்" என்றாள் அவன் பார்வையில் கட்டுண்டு.

அப்போது தான் அவளுக்கு பிரசாத்துடன் ஏற்பட்ட போராட்டத்தில் கையில் ஏற்றப்பட்ட காயத்தை கண்டான் கௌதம்.

"ஹே கைல என்ன காயம்" என்று பதிறியவனிடம் "ஜஸ்ட் சின்ன காயம் தான் கௌதம் ஆறிடும்" என்றாள் ஆறுதலாக. "ம்ம்" என்று அரைகுறை மனதுடன் தலை ஆட்டி வைத்தான்.

இதில் அருகில் தங்களை முறைத்து கொண்டிருந்த மீராவை கவனிக்கவில்லை இருவரும். "ஆரு‌...." என்ற குரலில் திரும்பி பார்த்த ஆரு‌ அப்போது தான் ஞாபகம் வந்தவளாய்

"ஐயோ மீரா செல்லம் உன்னை மறந்தே போய்ட்டேன். சாரி டா. உனக்கு ஒன்னும் ஆகலைல" என்றாள்.

அதற்கு இருவரையும் முறைத்த மீரா விறுவிறுவென அறையை விடுத்து அந்த நீண்ட ஹாலிற்குள் சென்றாள். அவள் பின்னே ஆரு செல்ல கௌதமும் சென்றான்.

அங்கே ஹாலில் இருந்த மாறன் "ஹான் கௌதம் ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.

அந்த பிரசாத் எதோ டாக்குமெண்ட் பத்தி கேட்டுட்டு இருந்தான். அது என்ன" என்று வினவினான். "ஆமா நான் கூட கேக்கனும்னு நினைச்சேன்.

அது என்ன எனக்கு கூட தெரியாம அப்படி என்ன டாக்குமெண்ட்" என்றாள் ஆருவும். அதை கேட்டு சிரித்த கௌதமும் நேற்று நடந்ததை கூற தொடங்கினான்‌.

மதியம் அலுவலகத்தில் இருந்து வந்தவன் சத்யாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் எப்.ஐ.ஆர் காப்பியை பார்த்திருந்தான்.

அதில் சத்யா இறந்த நேரத்தில் இருந்து ஒரு கால் மணி நேரத்திலே போலீஸார் அவன் உடலை கண்டு பிடித்ததாக இருந்தது.

அதை வைத்து தான் கௌதம் அவன் இறப்பு ஒன்று அந்த இடத்தில் நடந்திருக்க வேண்டும் அல்லது அவனை கொன்ற இடம் அவன் உடல் இறந்த இடத்தின் அருகே இருக்க வேண்டும் என்று யூகித்தான்.

அவன் யூகம் சரியே. ஏனெனில் அந்த கட்டிடத்தில் வைத்து கொன்று விட்டு உடலை எங்காவது கொண்டு போட்டு விட

எடுத்து வந்த பிரசாத்தின் ஆட்கள் போலீஸ் ஜீப் சத்தம் கேட்டு அங்கேயே ரோட்டோரம் அவன் வண்டியோடு போட்டு ஒளிந்து கொண்டனர்.

அங்கே வந்த போலீசும் அவன் உடலை அப்புறப்படுத்தினர். அதுவே கௌதமின் சந்தேகத்தை தூண்டியது.

அவன் அங்கே சென்று பார்க்கலாம் எதாவது துப்பு கிடைக்கலாம் என தன் வண்டி சாவியை எடுக்க போனான்‌. சாவியை எங்கே வைத்தான் என தேடும் போது தான் அங்கே சத்யாவின் ஐ.டி கார்ட் அவன் கண்ணில் பட்டது.

அதை கையில் எடுத்தவன் சத்யாவின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்தவன் தன் கைகளால் தடவினான். அப்போது தான் அதில் இருந்த வித்தியாசம் தெரிந்தது.

உற்று பார்த்தவன் கண்டது ஒரு ஹிட்டன் கேமராவை. அதை கண்டு பரபரப்பானவன் தன் மடிக்கணினியில் இனைத்தான்.

அதில் சத்யாவின் நேரடி வாக்குமூலமே இருந்தது. "கௌதம் இதை எப்படியாவது உன்கிட்ட கொண்டு வந்து சேர வச்சிருவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.

அப்படி உன்கைல கிடைச்சு நீ இந்த வீடியோவை பார்த்தா கண்டிப்பா அந்த பிரசாத்தை சும்மா விடாத டா. எல்லாம் சின்ன பசங்க டா.

அவன் கண்டுபிடிச்ச மருந்த பரிசோதினை பண்ண அந்த பசங்கல சோதனை எலியா மாத்திட்டான் டா. அது மட்டும் இல்லாம வேற ஒரு வேலை பாத்திருக்கான் அந்த ராஸ்கல்.

கேன்சர் மருந்து கண்டுபிடிக்கிறேன்னு அதை டெஸ்ட் பண்ண மூனு பசங்கல தேர்ந்தெடுத்தவன் அதை டெஸ்ட் பண்ணறதுக்கு முன்னாடி அந்த பசங்களுக்கு கேன்சர் செல்ஸ இன்ஜெக்ட் பண்ணிருக்கான்.

ஒரு நோய் வந்தா கூர் பண்ண தானே டா டாக்டர். இவன் நோய‌ ஏற்படுத்தி சரி பண்ண டிரை பண்றான் டா. பிளடி.

நான் அவன் இடத்துக்கு உள்ள போய் இந்த டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டேன் டா.

நான் அவன் இடத்துக்கு வந்ததை அவன் கண்டுபிடிச்சுட்டான். அவன் ஆளுங்க என்னை துரத்திக்கிட்டு வராங்க டா.

அப்படி வரவழியில அந்த எவிடன்ஸ் எல்லாத்தையும் சேப்-அ மறைச்சி வச்சிருக்கேன் டா. அதை பத்திரமா எடுத்து சேர்க்க வேண்டிய எடத்துக்கு அனுப்பி வைடா‌.

நான் தப்பிக்க சான்ஸ் இருக்கான்னு தெரியலை. ஆனா அவன் தப்பிக்க கூடாது.

அவன அவன எப்படியாவது தண்டிக்கனும் கௌதம். சாரி டா உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கனும். சாரி சாரி டா.

என் அப்பா அம்மாவ பாத்துக்கடா" என்றவன் பின் ருத்ராவோடு பேசும் காட்சிகள் வந்தது. அதை கண்டவன் கண்களிலும் கண்ணீர்.

சிறிது நேரத்தில் தன்னை தேற்றியவன் அந்த டாக்குமெண்ட்ஸ் இருக்கும் இடம் என சத்யா சொன்ன அந்த இடத்திற்கு சென்றான்.

அது ஒரு பாழடைந்த கோயில். அங்கே தான் இருந்தது அந்த கவர். அதை எடுத்து தன் வீட்டில் வைத்து விட்டு சத்யாவின் உடல் இருந்த இடத்தை காண சென்றான்.

அப்போது தான் ஆருத்ரா அவனை அழைத்தது. நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்த கௌதம் அமைதியாக நின்றான்.

அமைதியை கலைக்கும் விதமாக மாறன் "பொறுக்கி கேன்சர் செல் இன்ஜக்ட் பண்ணிருக்கானா. அதுவும் சின்ன பசங்களுக்கு ச்சே.

சத்யா கிரேட் கௌதம். அவனே எல்லா எவிடன்சும் எடுத்துட்டு அவன் உயிரை மட்டும் காப்பாத்திக்க தெரியாம இருந்திருக்கான்.

அந்த பிரசாத் எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிப்பான்" என்றான் கோபமாக. 'ஆம்' என்று கௌதமும் தலை அசைத்தான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 30 (இறுதி அத்தியாயம்)

கண்டேன் என் காதல் நீயென,
இனி தடையேதும் இல்லை பெண்ணே;
வந்துவிடு என் முன்னே,
காத்திருப்பேன் உனகாய் கரையேறும் மீனாக,

கடல் நடுவில் காற்றாக!!

"கௌதம் என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க. பொம்பள புள்ள கணக்கா இவ்ளோ நேரமாவா கிளம்பிக் கிட்டு இருப்ப.

அங்க பொண்ணு வீட்ல மாப்பிள்ளை வரலைன்னு நிச்சயித்த வேற தேதிக்கு மாத்திர போறாங்க" என்று கௌதமின் அறைக்கு வெளியில் நின்று கத்திக் கொண்டு இருந்தார் ரேவதி.

பட்டென கதவை திறந்த கௌதம் "எம்மா ஏன் இந்த கொலை வெறி உனக்கு விட்டா நீயே இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுவ போல.

காலைல இருந்து இதை வாங்கிட்டு வா அதை வாங்கிட்டு வான்னு என்னை போட்டு படுத்தி எடுத்துட்டு இப்ப வந்து என்னை சொல்ற.

இப்ப தானே நான் கிளம்ப உள்ள போனேன். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என்னை சொல்ற" என்று கடிந்துக் கொண்டே வந்தான் கௌதம்.

அதை வழக்கம் போல் கண்டு கொள்ளாத ரேவதி தேவையான பொருட்களை எடுத்து கொண்டே "நின்னு வெட்டி கதை பேசாம சீக்கிரம் கிளம்புடா.

உள்ள என்னடா பண்ற இன்னும்" என்று பேசி வெளியே சென்று கௌதமை சத்தம் போட்டார்.

"எல்லாம் என் நேரம்" என்று முணுமுணுத்த கௌதம் வீட்டை பூட்டி தானும் தாயுடன் கிளம்பினான் தன்னுடைய ருத்ராவை காணும் மகிழ்ச்சியில்.

அன்று சக்தி மற்றும் விஷ்ணு பிரசாத் இருவரையும் கைது செய்த போலீசார் அடுத்த நாளே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

சத்யாவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது.

மேலும் சமர்பிக்கபட்ட ஆதாரம் அனைத்தும் அவர்கள் இருவருக்கும் எதிராக அமைந்ததால் அவர்களுக்கு கிடைத்த தீர்ப்புக்கு பெரிதாக எந்த எதிர்ப்பும் எழவில்லை.

இப்போது ஜெயிலில் இருந்த சக்தி இன்னும் தன் தவறை உணராது மற்றவனை திட்டிக் கொண்டிருந்தான். விஷ்ணு பிரசாத் தன்னால் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி மருத்துவனாய் எப்போதும் போல் கலங்கினான்.

ஆனால் செய்த வினையானது சிறியது அல்லவே. இது தனக்கான தண்டனையென எண்ணி தன் நாட்களை கழிக்க முடிவு செய்திருந்தான்.

தன் மகன்கள் இருவரும் இவ்வளவு பெரிய தவறு செய்து ஆயுள் தண்டனை பெற்றது மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ராஜசேகருக்கு.

வாழ்க்கையே வெறுத்தது அவருக்கு. இவ்வளவு ஓடி ஓடி பணம் சம்பாதித்தது யாருக்காக.‌ தன் மகன்களுக்கு தானே.

இப்படி இரண்டு மகன்களும் தங்கள் சுயநலத்திற்காக பலபேர் வாழ்க்கையை கெடுத்து தங்கள் வாழ்நாளை இனி ஜெயிலில் தான் கழிக்க போவது மனதை ரணமாக்கியது.

இனி தானம் தர்மம் என அனைவருக்கும் தன் பணத்தை பயன்படுத்த முடிவு செய்தார் மனமுடைந்த ராஜசேகர்.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன். நல்லது எது கெட்டது எதுவென சிறு வயதிலேயே தன் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்காது அவர்கள் வளர்ந்த பின் வருத்தப்படுவது என்ன நியாயம் என அறியாது விட்டார் அவர்.

சித்து, விக்கி மற்றும் ரோஹித் ஆகிய மூன்று சிறுவர்களுக்கம் தான் பிரசாத் புற்றுநோய் செல்களை செலுத்தி இருந்தான்.

மூன்று சிறுவர்கள் என்று கௌதம் கூறிய உடன் மாறன் கண்டுபிடித்து விட்டான் அது இந்த மூன்று சிறுவர்கள் தான் என.

ஏனெனில் அந்த சிறுவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்திற்கு இரவு நேரம் வரும் பிரசாத்தின் ஆட்கள் சிறுவர்கள் அறைக்கு சென்று ஏதோ செய்து வருவர்.

அதுவும் அந்த மூன்று சிறுவர்களை தனிமைபடுத்தியதில் இருந்தே கண்டு விட்டான் மாறன் அது இவர்கள் என. உடனே அவர்கள் மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டான் மாறன்.

அவர்கள் தற்போது ஆரம்ப கேன்சர் நிலையில் இருப்பதால் எளிதில் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

அதன் மருந்து செலவுகள் எல்லாம் கூட ராஜசேகரே ஏற்றுக் கொண்டார். கடத்திய சிறுவர்களை அவர்தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர்.

வெளியூர் வெளிநாடு என்று அனுப்பிய சிறுவர்கள் மேலும் தற்போது வரை காப்பாற்றபட்டு காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் என அனைவரையும் அவர்கள் பெற்றோர் பொறுப்பில் விட்டனர்.

கார்முகிலன் மற்றும் மாறன் இருவரும் நீதிமன்றம் விட்டு வெளியில் வந்த போது செய்தியாளர்கள் மூலம் அனைத்து பெற்றோர்க்கும் தங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி சென்றனர்.

"பேரண்ட்ஸ் உங்க பசங்க போன்ல கேம் தானே விளையாடுராங்கனு கேர்லெஸ்ஸா இருக்காதீங்க.

பிகாஸ் இந்த கேங் பசங்கல கடத்துனதே ஒரு கேம வச்சு தான். அவங்கல கேம விளையாட வச்சு கிஃப்ட்ஸ் கொடுத்து அவங்க பக்கம் இழுத்துப்பாங்க.

அன்ட் அவங்க பத்தின எல்லா டீடெயில்ஸ்ம் வாங்கிக்கிட்டு அதை வச்சே வீட்டுல இருக்கவங்கல கொன்னுருவேன் அது இதுன்னு மிரட்டுவாங்க.

அப்படியே இதை சொல்லி தான் உங்க பசங்கல அவங்க தங்களோட கூட்டிட்டு போனாங்க.

சோ பேரண்ட்ஸ் உங்க குழந்தைகள கேர் எடுத்து பாத்துக்கோங்க. அவங்க கூட கொஞ்ச டைம் ஸ்பென்ட் பண்ணுங்க" என்று பெற்றோர்களுக்கு தங்கள் கடமையையும் விளக்கினார்கள்.

இப்படி எல்லா வேலைகளையும் பார்த்து முடித்த போது தான் கௌதம் ஆருத்ராவின் மனம் சமாதானம் அடைந்தது.

அடுத்து காதலை உணர்ந்த கௌதம் நேராக சென்று அன்னை ரேவதியின் காலில் விழுந்து விட்டான் எப்படியாவது தன் காதலை சேர்த்து வைக்கும் படி.

அப்போது சந்தோஷமாக தன் வேலையை ஆரம்பித்த ரேவதி இப்போது அவனை கொண்டு வந்து நிறுத்தியிருப்பது இந்த நிச்சயதார்த்தத்தில்.

ஆருத்ராவின் சொந்த ஊரும் மதுரை அருகே தான். அதுவே ரேவதிக்கு போதுமானதாக இருந்தது. தன் சொந்தங்களை வைத்து பேசி முடித்துவிட்டார்.

ஆருத்ரா வீட்டிலே சிறிய அளவில் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர் திருமணத்தை சிறப்பாக செய்து கொள்ளலாம் என.

இப்போது அடித்து பிடித்து செல்ல சண்டையுடன் தாயும் மகனும் ஆருத்ரா வீட்டை வந்தடைந்தனர்.

அங்கே ஆருத்ரா குடும்பம் அவள் தோழிகள் என அனைவரும் அவர்களுக்காய் காத்திருந்தனர்.

கௌதமும் ரேவதியும் வந்தவுடன் அவர்களை தடபுடலாக வரவேற்று அமர வைத்தனர். சில நேர பேச்சுக்குப் பின் ஆருத்ராவை அங்கே அழைத்து வந்தனர்.

ஆருத்ரா வந்தவள் ரேவதியை மட்டும் பார்த்து சிரிப்புடன் வரவேற்று அமர்ந்தவள் கௌதமை திரும்பி கூட பார்க்கவில்லை.

அவனும் அவள் தன்னை இப்போ பார்ப்பாள் அப்போ பார்ப்பாள் என எண்ணி எண்ணி அவள் முகத்தையே பார்த்தான். ஆனால் ஆரு நிமிரக்கூட இல்லை.

ஏன் அவர்கள் செல்லும் போது ரேவதியிடம் பேசிய ஆரு கௌதமிடம் பேசாமல் சென்றாள். பார்த்த கௌதமிற்கு உள்ளுக்குள் புசு புசுவென கோபம் ஏறியது.

'ஏன் என் கூட மட்டும் பேச மாட்டேங்குறா. என்ன நினைச்சிட்டு இருக்க அவ மனசுல. எங்க அம்மா கிட்ட பேச முடியுது என்கிட்ட பேச முடியாதா'

என்று மனதிற்குள் ஆருவை திட்டியவன் 'சரி வீட்டுக்கு போய் போன் செஞ்சு அவக்கிட்ட பேசிக்கலாம்' என்று எண்ணி அமைதியாக சென்றான்.

ஆனால் ஆரு அவன் அழைப்பை ஏற்காது அவனுக்கு போக்கு காட்டினாள். அது அவர்கள் திருமணம் வரை நீண்டது.

கௌதமிற்கு தான் மண்டை காய்ந்தது 'இவளுக்கு நம்மல புடிச்சிருக்கா இல்லையா. என்னோட பேச மாட்டேங்கிறா ஆனால் மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டா.

என் அம்மா அவங்கட்ட அவளால பேச முடியுது என்னை பாத்தா வாய்ல கம் போட்டு ஒட்டிகிறா' என்று கௌதம் மனதில் போட்டு ஆருவை திட்டி தள்ளினான்.

இதுவரை கொலையாளி யாரென கண்டு பிடிக்க முயன்றதில் தன் மனதையே உணராத கௌதம்

இப்போது மனம் முழுவதும் ஆருவின் எண்ணம் மட்டும் கொண்டதால் அவள் ஒதுக்கம் எதனால் என்று அறியாது குழம்பி தவித்தான்.

திருமண நாளும் அழகுற விடிந்தது. கௌதம் திருமணத்திற்கு முன்பேனும் அவளிடம் பேசிவிட எண்ணினான். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

திருமணமே முடிந்து விட்டது. கௌதம் 'இனி அவள் தன் வீட்டுக்கு தன்னோடு தானே வர வேண்டும்' என்று எண்ணி 'சரி நேரில் பேசிக் கொள்வோம்' என்று காத்திருந்தான்.

இரவு நேரம் கௌதம் ஆருவின் வரவிற்கு காத்திருந்தான். ஆருவும் வந்தாள். வந்தவள் நேராக வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள் கௌதமிடம் பேசாது.

கௌதம் ஆருவின்‌ அருகே சென்று "ருத்ரா என்ன பாரு. ஏன் நீ என்கூட பேச மாட்டேங்கிற. நானும் நம்ம எங்கேஜ்மென்ட்ல இருந்து பாக்குறேன்.

நீ என்ன பர்பஸா அவாய்ட் பண்ற ருத்ரா. ஏன்னு கேக்க வந்தா அதுக்கு கூட என்னை பாக்க மாட்டேங்குற" என்றான் தவிப்புடன்.

தன் முன்னால் நின்றிருந்த கௌதமை மேலிருந்து கீழ் வரை நோக்கிய ஆரு‌ அப்போது தான் வாயை திறந்தாள்.

"நான் ஏன் உங்ககிட்ட பேசனும்?" என்றாள் நிதானமாக. அவளின் கேள்வி கண்டு அதிர்ந்த கௌதம் "ஏன் பேசனும்னு கேக்குற.

ருத்ரா நாம‌ இப்ப ஹஸ்பண்ட் அன்ட் வைஃப் டா. நாம‌ பேசி தானே ஆகனும்" என்றான் பாவமாக. "ஓஓ" என்றுவிட்டு அமைதியானாள் ஆரு‌.

அவள் முகத்தை கண்டு அதிர்ந்த கௌதம் "ருத்ரா மா உனக்கு என் மேல என்ன டா கோபம். ஏன் இப்படி செய்ற" என்றான் மீண்டும் முகத்தை பாவமாக வைத்து.

அவனை முறைத்த ஆரு‌ "ஏன் உங்களுக்கு தெரியாதா நான் எதுக்கு இப்படி முறைக்கிறேன்னு" என்றவள் "சரி சொல்றேன்.

நீங்க என்னை லவ் பண்றத என்கிட்ட புரபோஸ் செஞ்சீங்களா" என்றாள் முறைப்பாய். புரியாத கௌதம் "ஏன் ருத்ரா நான் தான் உன்கிட்ட புரபோஸ் செஞ்சேனே டா.

நீ கூட எதுவும் சொல்லாம சரின்னுட்டு போனியே" என்றான். "எது நீங்க செஞ்சதுக்கு பேரு புரபோஸ்ஸா" என்றாள் கோபமாய்.

அன்று நடந்ததை இன்று யோசித்து பார்த்தான் கௌதம். சக்தி மற்றும் பிரசாத்தின் கைதுக்கு பின் ஆருவையும்‌ மீராவையும் அவர்கள் வீட்டில் விட வந்தான்.

அப்போதே நேரம் நள்ளிரவே நெருங்கி இருந்தது. ஆருவை‌ மட்டும் அங்கே தன்னுடன் நிருத்திய கௌதம் அவளை நோக்கி

"ருத்ரா எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்றான். திடீரென கௌதம் கேட்கவும் ஆனந்தமாய் அதிர்ந்த ஆரு வெட்கத்துடன் சரி என்று ஓடிவிட்டாள்.

வீட்டின் உள் சென்று மீரா மற்றும் தோழிகளிடம் சரமாரியாக திட்டு வாங்கியது தனிக் கதை. அதை நினைவு கூர்ந்த கௌதம் இப்போது "சரி அதுக்கு என்ன" என்றான் சாதரணமாக.

"அதுக்கு என்னவா. நீங்க பண்ணதுக்கு பேரு புரபோஸ்ஸா. வெளியே சொல்லிறாதீங்க சிரிப்பாங்க. ஏதோ அப்ப கொஞ்சம் எமோஷனலா இருந்தேன்.

அதான் நீங்க சொன்ன உடனே நான் சரின்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் தான் யோசிச்சேன் அட் லீஸ்ட் ஒரு ரோஸ் கூட குடுக்காம புரபோஸ் செஞ்சீங்க.

சோ அது எனக்கு பிடிக்கில. அதனால நீங்க எப்ப எனக்கு ஒழுங்கா புரபோஸ் பண்றீங்களோ அன்னைக்கு தான் நான் உங்ககிட்ட பேசுவேன்" என்றாள் ஆரு‌.

ஆருவின்‌ சிறுபிள்ளை தனத்தில் சிரித்த கௌதம் "ஓகே நான் ஒழுங்கா புரபோஸ் பண்ணா உனக்கு கோபம் போய்ரும் ரைட்" என்றான் கௌதம்.

ஆருவும்‌ ஆம் என தலையசைக்க, கௌதம் ஆருவை அழைத்து தன் அறை பால்கனியில் நிறுத்தியவன் மெத்தையில் கிடந்த ரோஜாக்களை எடுத்து கொத்தாய் பிடித்து கொண்டான்‌.

பின் ஆருவின் முன் சென்றவன் அவள் முன்னே ஒரு காலை மடித்து முட்டியிட்டான். அவனின் செய்கையை ஆர்வமாய் பார்த்திருந்தாள் ஆரு‌.

தன் கையில் இருந்த பூங்கொத்தை நீட்டி "ருத்ரா நீ லைஃப்ல நிறைய பேரை கிராஸ் பண்ணிருப்ப‌. அன்ட் அவங்க உனக்கு ஸ்பெஷலா கூட இருக்கலாம்.

அவங்களுக்கும் நீ ஸ்பெஷலா இருக்கலாம். பட் எப்பவும் உன் சின்ன ஹார்ட்ல எனக்கும் அவங்களுக்கு மத்தியில ஒரு சின்ன இடம் கொடுத்துறுடா.

உன்னை பர்ஸ்ட் டைம் பாக்குறப்ப நமக்கு கல்யாணம் ஆகும்னுலா நான் நினைச்சு கூட பார்க்கல. அன்ட் நாம மேரேஜ் வரைக்கும் வந்துட்டோம். இனியும் நாம போக போற தூரம் ரொம்ப அதிகம்.

உன் லைப்ல அப்ஸ் அன்ட் டவுன்ஸ் எல்லா டைம்லையும் நான் உன்கூட இருப்பேன். உன்னை நல்லா பாத்துப்பேன்.

என் கூட லைஃப் லாங் டிராவல் பண்ண ரெடியாடா. லைப் லாங் உன் ஹார்ட்டோட சேர்த்து உன்னையும் என்னோட டிரஷரா வச்சு பாத்துப்பேன்.

ஐ லவ் யூ சோ மச் டா. என் ஹார்ட் உள்ள எப்பவும் நீ துடிக்கனும்னு ஆசைப்படுறேன். அப்புறம் என் ஹாட்ல நிறைய சேம்பர்லா இல்லை.

ஒன்லி ரெண்டே சேம்பர் தான் இப்போ. ஒன் சைட் என் அம்மா அன்ட் இன்னொரு சைட் நீ மட்டும் தான்.

கூடிய சீக்கிரம் அது இன்கிரீஸ் ஆகலாம். அதுக்கும் மேடம் நீங்க தான் மனசு வைக்கணும்" என்று குறும்பாக முடித்தான்.

கௌதம் முடித்தவுடன் கண்களில் கண்ணீருடன் காதல் வழிய "ம்ம்" என்றாள் ஆரு அந்த பூக்களை வாங்கிக் கொண்டு.

அப்படியே கௌதமின் தோளில் சாய்த்து கொண்டாள் ஆரு. "என்ன மேடம் புரபோஸ் பண்ண சொன்னீங்க. நானும் ஏதோ பண்ணிட்டேன் தேறுவனா" என்று வம்பிழுத்தான் கௌதம்.

"ஷ்ஷ் இந்த நேரத்தை அப்படியே நான் பீல் பண்றேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்ற ஆரு அமைதியை கடைபிடித்தாள்.

கௌதமும் என்ன நினைத்தானோ அந்த நிமிடத்தை அனுபவிக்க தானும் அமைதியானவன் ஆருவை தோளோடு அனைத்து கொண்டான்.

சிறிது நேரம் சென்று ஆரு தன் நீண்ட நாள் சந்தேகமான கௌதமிற்கு தன் ரசனை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எல்லாம் எப்படி தெரியும் என்று கேட்டாள்.

அதை கேட்டு மெல்ல சிரிப்பை உதிர்த்த கௌதம் ஆருவை தன்னை நோக்கி திருப்பி நிறுத்தி அவளின் தோள்களில் தன் கைகளை வைத்தான்.

"ம்ம் ருத்ரா நான் ஒரு நாள் என் வேலைய முடிச்சிட்டு ஒரு மால்க்கு வந்தனா. அப்போ நீ ஒரு பையன் கூட பேசிக்கிட்டு இருந்த" என்ற கௌதமை புரியாது பார்த்தாள் ஆரு‌.

பின் அந்த நிகழ்வை கௌதம் நன்கு விளக்கி கூறியவன் சிரிப்புடன் சொல்லி முடித்தான். "ஆனா ஒன்னு ருத்ரா இதுவரைக்கும் பசங்க தான் பொண்ணுங்கள கிண்டல் பண்ணி ஓட விடுவாங்க.

ஆனா பர்ஸ்ட் ஒரு பொண்ணு பையன பேசியே ஓடவிட்டத அன்னைக்கு தான்டி பார்த்தேன். அவன் முகத்தை பார்த்து தான் நான் வீட்டுக்கு வந்தும் சிரிச்சுக்கிட்டே இருந்தேன் தெரியுமா" என்றான் கிண்டலாக.

"ஐயோ கௌதம் பிளீஸ் கிண்டல் பண்ணாதீங்க" என்றாள் சிணுங்களாய். மீண்டும் மீண்டும் கிண்டல் செய்த கௌதமை கெஞ்சி கொஞ்சி தாஜா செய்தாள் ருத்ரா.

பின் இருவரும் அந்த நேர இனிமையை அனுபவித்தவாறு இனி வாழ்வில் எது வந்தாலும் இருவரும் ஒன்றாக பார்ப்போம் என்று மகிழ்வுடன் நிலவொளியில் தங்கள் எண்ணத்தை பகிர்ந்தனர் மனதோடு.

அத்துடன் நாமும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பலாம் நண்பர்களே!!

-முற்றும்
 
Last edited:

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே 🙏🙏,

நான் ஆரம்பத்துல சொன்ன மாதிரி இது என்னோட முதல் கதை. வெற்றிகரமா அதை இங்க போட்டு‌ முடிச்சிட்டேன். என்னோட முதல் கதை சோ இதுல நிறைய தப்பு தவறுகள் இருக்கு. அதை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு படிச்சு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தந்த எல்லா நட்பூஸ்க்கும் என்னோட நன்றிகள் நன்றிகள் பல:smiley15::smiley12:smiley12.
மறுபடியும் இன்னொரு கதையோட விரைவில் வரேன் நட்பூஸ். அதுவரைக்கும் பாய் பாய்🥰🥰🥰
 
Top