All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "வஞ்சிக்கொடியும்! வத்தலக்குண்டின் ரகசியமும்!!" கதை திரி

Status
Not open for further replies.

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே:whistle::love:🙏🙏,

எல்லாரும் எப்படி இருக்கீங்க. நான் உங்க சாந்தி கவிதா (sk) மறுபடியும் ஒரு கதையோட வந்துட்டேன். என்னடா இது கதையோட டைட்டிலே ஒரு மார்க்கமா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.

பதில் இதுதான் ஃபிரண்ட்ஸ். இது ஒரு காமெடி கதை. நமக்கும் நகைச்சுவை வரும்னு நம்பி ஒரு நகைச்சுவை காதல் தொடரை எழுதறேன்🤩🤩😇😇. அது நகைச்சுவையா இருக்கா இல்லையானு படிச்சு பார்த்து நீங்க தான் சொல்லனும்.
சிரிப்பு வரலைனா கொஞ்சம் பாத்து பதமா கமெண்ட் பண்ணிட்டு போங்கப்பா. பிஞ்சு பாடி தாங்காது😍😍.

இதோ இன்று முதல் எபியோட வந்துட்டேன் பிரண்ட்ஸ்....🤩🤩🤩

ரகசியம் - 1

காலை இளந்தென்றல் காற்று மேனியை உரசி செல்ல, அந்த காலை வேளையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.

"அரவிந்தா" என்ற அழைப்பு மென்மையாக எங்கோ தூரத்தில் கேட்பது போல் அவன் காதுகளில் விழ, லேசாக தூக்கம் கலைந்தது.

தொடர்ந்து அதே பெயர் ஏலமிடுவதை போல் காதில் வந்து விழ அடித்து பிடித்து எழுந்து விட்டான் அவன்.

"யோவ் அரவிந்தா வெளிய வாயா?"

இப்போது தெளிவாகவே கேட்க, சத்தம் எங்கிருந்து வருகிறது என காதை தீட்டி கேட்டு பார்த்தான். அப்போது தான் தெரிந்தது, அந்த சத்தம் இல்லை இல்லை கத்தல் எல்லாம் வருவது அவன் வீட்டு வாயிலில் இருந்து என.

'காலங்காத்தால யாருடா அது?' என கடுப்புடன் எண்ணி சென்று வாயில் கதைவை திறந்த அவன் ஐந்தரை அடியில் அமுல் பேபி லுக்கில் அம்சமாய் இருந்தான்.

அங்கே சென்று பார்க்க அவன் வீட்டின் முன்னே ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. அதை கண்டு 'ஐயையோ இன்னைக்கு என்ன ஏழரையோ தெரியலையே'

என உள்ளுக்குள் உதறினாலும் அதை வெளியே காட்டாது "என்னங்க என்ன வேணும். எதுக்கு எங்க வீட்டுக்கு முன்னாடி வந்து கத்திட்டு இருக்கீங்க" என்றான் பதற்றத்தை மறைத்துக் கொண்டு.

"ஏன் நாங்க எதுக்கு வந்திருக்கோம்னு உனக்கு தெரியாதாயா. எல்லா அந்த அரவிந்தால தான். தினமும் அந்த ஆளோட இதே ரோதனையா போச்சு. அந்த ஆள் இப்ப இங்க வரனும்"

அங்கே நின்றிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி கத்த தொடங்கிட நொந்து விட்டான்.

"இங்க பாருங்க. வம்பு பண்ணன்னே காலைல கிளம்பி வந்தீங்களா. சும்மா சும்மா கத்திட்டு இருக்காம கிளம்புங்கயா‌. எனக்கு எக்கச்சக்கமா வேலை இருக்கு" என்று பேச்சை நிறுத்த பார்த்தான்.

"ஏலேய் என்ன கலண்டுட்டு ஓட பாக்குறியா. அதெல்லாம் முடியாது எங்களுக்காக இப்ப நியாயம் கிடச்சே ஆகனும்" என ரஜினிமுருகன் பட ஸ்டைலில் ஒருவன் கத்த, தன் காதை குடைந்து கொண்டவன்

"நியாயமா!! நான் என்ன பலசரக்கு கடையாயா வச்சிருக்கேன். கேட்ட உடனே குடுக்க" என்று கடுப்படித்தான்.

"சரி சரி சும்மா கத்தாம என்ன பிரச்சினைனு சொல்லிட்டு போங்க. நான் போய் பால் காச்சனும் சமையல் செய்யனும். தலைக்கு மேல வேலை இருக்கு. சீக்கிரம் சீக்கிரம்" என போனால் போகிறது என்பது போல் கேட்டு வைத்தான்.

"உங்க வீட்டு அரவிந்து எங்க வீட்டு பொண்ணு கைய புடிச்சி இழுத்துட்டான்யா இழுத்துட்டான்" என்று இன்னொருவன் ஒப்பாரி வைக்க ஹையோ என்றானது இவனுக்கு.

"இங்க பாருங்க சார்‌ எதோ நீங்க நடந்ததை தப்பா புரிஞ்சிட்டு வந்து பேசுறீங்கன்னு நினைக்கிறேன். அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அதனால பிரச்சினை பண்ணாம எல்லாரும் கிளம்புங்க"

அவன் எவ்வளவு கூறியும் அங்கிருந்த நபர்கள் அசையாமல் "அந்த அரவிந்து தான் பிரச்சினை பண்ணி இருப்பான்" என அடித்து கூறிட,

"என்னையா சொல்லிகிட்டே இருக்கேன்ல. சொன்னதையே சொல்லி சொல்லி லந்த கூட்டுறீங்க" என இல்லாத காலரை ஏற்றிக் கொண்டு தானும் அவர்களுக்கு சரிக்கு சமமாக கோதாவில் இறங்கிவிட்டான்.

அரை மணி நேரம் சென்ற வாய் சண்டையின் முடிவில் "இன்னொரு தடவை இதே மாதிரி நடந்தது. அப்பன் புள்ளை ரெண்டு பேரும் இந்த தெருவுலையே இருக்க முடியாது பாத்துக்க" என எதிர் கோஷ்டி கத்தி செல்ல

"அதையும் தான் பாத்துக்கலாம் டா என் பொட்டேடோ சிப்ஸுகளா" என தன் பங்குக்கு கத்தியவனும் வீட்டிற்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவன் கண்டது நல்ல சிகப்பு கலர் சட்டை அதற்கு ஏதுவாக ஆரஞ்சு கலர் பேண்ட்டை அணிந்து காதில் நீல நிற பெரிய ஹெட் போனை மாட்டிக் கொண்டு ஒரு உருவம், சோஃபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து உருளைக்கிழங்கு வருவலை உள்ளே தள்ளிக் கொண்டிருந்ததை தான்.

அந்த உருவம் தான் அரவிந்தன். இவரும் ஐந்தரை அடிதான். இவர் மனதிற்குள் தான் ஒரு அரவிந்த் சாமி என நினைத்துக் கொண்டு ஊரில் பிலிம் காட்டி சுற்றி கொண்டிருக்கும் சாதா அரவிந்தன். இவ்வளவு நேரம் நடந்த சண்டைக்கு மூலக் காரணியும் இவர் தான்.

தெருவில் இவ்வளவு நேரம் தொண்டை தண்ணீர் வற்றும் அளவு யாருக்காக காட்டு கத்து கத்திவிட்டு வந்திருந்தானோ, அந்த மனிதரோ நடந்ததுக்கும் எனக்கும் சம்மதமே இல்லை என்பது போல் இருந்தது அவனின் கோபத்தை ஏகத்துக்கும் ஏற்றியது.

கோபத்தில் அவரின் ஹெட் போனை பிடிங்கினான். "ஏன்டா அதை புடுங்குன. பிளீவர் எவ்ளோ சூப்பர் சாங் தெரியுமாடா. அதை குடுடா" என்றார் அரவிந்தன்.

"யோவ் தகப்பா என்ன பாத்தா உனக்கு எப்படியா இருக்கு. இப்படியே பேசுன அப்புறம் அப்பான்னு கூட பாக்க மாட்டேன். ஒரே போடு மண்டைய உடைச்சிருவேன் பாத்துக்க"

அவன் கத்திய கத்தில் தான் ஏதோ பெரிய பிரச்சினை என உணர்ந்த அரவிந்தன் "என்ன சித்து கண்ணா எதாவது பிரச்சினையாடா‌" என மெல்ல கேட்டார் முகத்தை நல்ல பிள்ளை போல் வைத்து கொண்டு.

"என்ன பிரச்சினையா? நீ என்னத்தை பண்ணி வச்ச. காலைலயே வீட்டு முன்னாடி பஞ்சாயத்து. யாரை கையப் புடிச்சு இழுத்துட்டு வந்த.

தெருவே கூடி நம்ம வீட்ல கும்மி அடிச்சிட்டு போகுது. எதையும் தெரியாம உனக்கு பிளீவரு கேக்குதா பிளீவரு" பொங்கி எழுந்து விட்டான் சித்து என்றழைக்கப்பட்ட சித்தார்த் அரவிந்தனின் ஆசை மகன்.

"என்ன நான் ஒரு பொண்ணு கைய புடிச்சி இழுத்தனா" என்று பொய்யாக அதிர்வது போல முகத்தை வைத்த அரவிந்த் ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்து இழுத்து சொன்னார்.

"அப்படினு எந்த பேமானி சொன்னான். வாடா மகனே அவனா நானான்னு ஒரு கை பாக்குறேன்" என்று வீரவசனம் பேசி வெளியே போக கிளம்பியவரை

"ஆமா எங்க போக போறீங்க மிஸ்டர். அரவிந்த்?" என்று நக்கலாக கேட்டு நிறுத்தினான் சித்து.

"டேய் மகனே உன் ஆருயிர் தகப்பன் மேல ஒரு கும்பல் கைய பிடிச்சு இழுத்தான்னு பொய்யான குற்றச்சாட்ட சொல்லிருக்கு. அதை தப்புன்னு நிருபிக்க வேணாமா. வாடா போவோம். போட்ரா பி.ஜி.எம்அ"

அரவிந்த் மீண்டும் பேசி வேகமாக வெளியேற போகும் நேரம் அவர் கையை பிடித்து இழுத்து நிறுத்திய சித்து "இரு இரு நைனா இன்னும் என்னோட இன்வஸ்ட்டிகேஷன் முடில.

அதுக்குள்ள தப்பிச்சு ஓட பாக்குறியா" என சரியாக கேட்டுவிட திருதிருவென முழித்தார் அரவிந்த்.

'ஐயோ கரெக்டா கண்டுபுடிச்சிட்டானே. இப்ப எப்படி வெளிய போறது' என அரவிந்த் பலமாக யோசிக்க

"எப்பா இல்லாத மூளைய போட்டு என்னத்த யோசிக்கிற. நீ என்னதான் போட்டு குடைஞ்சாலும் அங்க ஒன்னும் தேறாது. அதனால ஒழுங்கா காலைல என்ன சம்பவம் பண்ணிட்டு வந்தன்னு சொல்லிரு. இல்ல நடக்கிறதே வேற"

அவன் தோரனையே சொல்லியது 'நீ சொல்லவில்லை என்றால் இன்னொரு சம்பவம் நிச்சயம்' என.

அதில் ஜெர்க்கான அரவிந்த் நடந்ததை பகிர்ந்தார். "அது ஒன்னும் இல்லடா மகனே காலைல நான் வாக்கிங் போனேன்டா. அப்போ..." என தன் கையை மேலே நோக்கி காட்ட

"அங்க என்ன பாக்குற" என்றான் சித்து. "ஃபிளாஷ் பேக்குடா. சும்மா குறுக்க குறுக்க பேசாம சொல்றத கேளு" என வியாக்கியானம் பேச தலையில் அடித்து கொண்ட சித்துவும் 'சொல்லி தொலை' என்ற தோரணையில் நின்றான்.

காலை நேர காற்றை முகத்தில் வாங்கியபடி வாக்கிங் சென்று கொண்டிருந்தார் அரவிந்த். அப்போது ஒரு பாட்டி சாலையை கடக்க பயந்து நின்றிருந்தார்.

ஆனால் அந்த பரந்து விரிந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்லாதது வேறு விஷயம்‌.

இந்த காட்சியை கண்டு 'நான் பிறந்ததே இந்த உலகத்துக்கு சேவை செயய்டா!' என வேகமாக அந்த கிழவியை நோக்கி போனார்.

"இந்த ரோட் கிராஸ் பண்ண நான் உதவி பணண்வா?" பவ்யமாக கேட்டு வைத்தார் அரவிந்த். இவரின் உடையை கண்டாவது அந்த கிழவி சற்று சுதாரித்திருக்கலாம்.

அந்த கிழவி ஒருவேளை ராம்ராஜின் பேனாய் இருந்திருக்கும் போல. எனவே "சரிய்யா என்னை அந்த பக்கம் விட்டுட்டு போயா" என்றார் அந்த கிழவியும் இவரை நம்பி.

அந்த கிழவியின் சம்மதம் கிடைத்தவுடன் குதூகலமாய் கையை பிடித்து யாருமே இல்லாத ரோட்டில் "பார்த்து வா பாட்டி. கொஞ்சம் லேப்ட் அப்படியே ரைட்டு" என ஏதேதோ பேசி ஸ்ரைட்டாக இழுத்து வந்து ரோட்டை தான்டி விட்டார்.

"ரொம்ப நன்றி பா. நீ நல்லா இருக்கனும்" என அரவிந்த் எதோ மலையை பெயர்த்து கையில் தந்தது போல் பாட்டி பேசி வைக்க,

"என்னா பாட்டி நான் எவ்ளோ பெரிய உதவி பண்ணிருக்கேன். வெறும் தேங்க்ஸோட போகலாம்னு பாத்தியா. ஒழுங்கா நான் கேக்கறத தந்திட்டு போ"

அரவிந்த் பேசியதற்கு 'என்ன வேணும்' என கிழவியும் எதற்த்தமாக கேட்க நம் காதல் மன்னனோ "ஒரு உம்மா குடுத்துட்டு போ" என டீல் பேசினார்.

"எதே!" என்று தன் நெஞ்சில் கை வைத்து ஷாக்கான கிழவி "எலேய் என்ன பாத்தா எப்படி தெரிது. நான் என்ற புருஷன தவிர யாருக்கும் முத்தலாம் தர மாட்டேன். என்ன பாத்து என்ன செய்ய சொல்ற படுபாவி" என வசைமாரி பொழிந்து மேவாயை தோலில் இடித்தது.

"சரி விடு. நீ தரலைனா என்ன நான் தந்திட்டு போறேன்" என்ற அரவிந்த் கிழவியின் கண்ணத்தில் நச்சென்று ஒரு இச்சை வைக்க

"ஐயையோ! எனக்கு ஒருத்தன் முத்தம் குடுத்துட்டான். ஐயோ யாருமே இல்லையா இந்த அநியாயத்தை கேக்க. கட்டைல போறவன் என் கற்பை கலங்கம் பண்ணிட்டானே"

கிழவி ஊரையே கூட்ட கத்த "எதே கற்ப கலங்கம் பண்ணிட்டனா?' அதிர்ந்த அரவிந்த் எடுத்தார் ஒரு ஓட்டம், சந்து பொந்து என்று பார்க்கவில்லையே அப்படி ஒரு ஓட்டம்.

குண்டு குழி என எதையும் பாராது அடித்து பிடித்து அவர் வசிக்கும் தெருவின் சாலைக்கு ஓடி வந்துவிட்டார்.

"ஏன் நைனா கெழவிய கூட விட்டு வைக்க மாட்டியா. அதுக்காயா தெருவே கூடி என் தலையில ஃபுட்பால் விளாடிட்டு போகுது"

நொந்து போய் சொன்ன சித்து ஏதோ யோசித்துவிட்டு "ப்பா ஒரு சந்தேகம். நீ எதோ ஒரு கெழவிட்ட தானே வம்பிழுத்துட்டு வந்த.

ஆனா காலைல வந்தது அந்த முச்சந்தில இருக்க பிரியா வீட்டு ஆளுங்களே" என சந்தேகத்தை எழுப்பினான்.

'ஐயையோ! இத நாம எதிர்பாக்கலையே' என அரவிந்த் முழியை டிசைன் டிசைனாக திருப்ப கடுப்பான சித்து "எல்லாத்தையும் மறைக்காம சொல்லிடு. இல்ல நடக்கறதே வேற" என்றான் கறாராக.

"அதுடா மகனே" என ஆரம்பிக்கும் போதே உஷாராக இரண்டு அடி தள்ளி நின்ற அரவிந்த் தொடந்தார்.

"நான் மூச்சு வாங்க ஓடி வந்தனா. அப்போ என்னோட சைட்டு. அதான் டா அந்த பிரியா அம்மா. குளிச்சிட்டு தலை துவடிட்டு இருந்தாடா. அந்த தண்ணீ காத்துல என மேல மழை சாரல் மாதிரி விழுந்துச்சா.

'தம்தன தம்தன' மியூசிக் வேற கேட்டுச்சா. அப்படியே அவள சைட் அட்டிச்சிட்டு, அப்புறம் எப்பவும் போல நான் பாட்டுக்கு அவகிட்ட எப்படி இருக்கன்னு தான்டா கேட்டேன்.

அதுக்கு அவதான் அவ புருஷன் அத பண்றான் இத பண்றான்னு அவ கஷ்டத்த சொல்லி ஒப்பாரி வச்சா.

அவ அழுவறத தாங்க முடியாம அவ கைய பிடிச்சு ஆறுதல் சொன்னேன். இதான்டா மகனே நடந்தது‌. அந்த பாலாபோன பாலு அந்த பிரியா அப்பன் இதை பாத்திருப்பான்னு நினைக்கிறேன்.

அதான் ஊரை கூட்டி கரைச்சல குடுத்துட்டு போய்ட்டான். பாவம் என் டார்லு அவன்கிட்ட மாட்டிட்டு எவ்ளோ கஷ்டப்படுறா"

அரவிந்த் நிறுத்தாது சீரியல் டயலாக்குகளை அள்ளிவிட சித்துவிற்கே ஒரு நிமிடம் தலை சுற்றியது‌. இப்படி அரவிந்த் சொல்லி முடிக்கும் நேரம் அவர்கள் வீட்டின் வெளியே

"எவன்டா அது என் பாட்டிக்கு முத்தத்தை வச்சது? வெளிய வாடா என் டபரா தலையா" என்று ஒரு குரல் கேட்க

சித்து அங்கிருந்த தன் தந்தையை பாசமாக ஒரு பார்வை பார்த்து வைக்க 'ஆத்தாடி அடுத்த பஞ்சாயத்தா' என உஷாரான அரவிந்த் அப்படியே நழுவி தன் அறைக்குள் அடைந்தார்‌.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 2

மாலை நேர காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க, அதை எதையும் உணராமல் அந்த ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பரபரவென நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர்‌.

கல்லூரி முடிந்து செல்லும் மாணவர்கள், அலுவலகம் முடிந்து செல்லும் அலுவலர்கள் என பலர் அவர்களின் இல்லங்களுக்கு செல்ல ஒருவரை ஒருவர் முட்டி மோதி ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர்.

அந்த கும்பலை ஒரு புன்சிரிப்புடன் பார்த்தபடி ஒரு கையில் தன்னுடைய ஸிலிங் பேக்கை மாட்டிக் கொண்டு, மற்றொரு கையில் சிறிய வாக்கிங் ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு ஒரு ரயிலை விட்டு இறங்கி வந்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவளின் பால் நிற மேனியை பார்த்த அனைவரும் ஓரு நிமிடம் அவளை திரும்பி பார்க்க,

அவள் கண்ணில் போட்டிருந்த பெரிய கண்ணாடியும் அவளின் வாக்கிங் ஸ்டிக்கையும் சேர்த்து பார்த்து முகத்தை திருப்பி சென்றனர்.

'இந்த மாதிரியான பார்வைகள் என்னை ஒன்றும் பாதிக்கவில்லை' என்பது போல் அவளும் முகத்தில் மாறா மென்னகையுடன் நடந்துக் கொண்டிருந்தாள்.

யாரோ அப்படி அவள் போகும் போது அவளை இடித்து விட்டு செல்ல "ஐயோ" என அலறியவாறு தடுமாறி விழ சென்றுவிட்டாள்.

அதை கண்டு பதறி பக்கத்தில் நின்ற காவல் அதிகாரி அவளை தாங்கி பிடித்தார். சுற்றி சிறு கூட்டம் கூடிவிட்டது.

"என்னாச்சுமா என்னாச்சு. அடி எதுவும் பட்டிருச்சா" என சுற்றி நின்றிருந்தவர்கள் அனைவரும் அவளிடம் பரிதாபப்பட்டு விசாரிக்க

"அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. எனக்கு எதுவும் ஆகலை. நான் நல்லா இருக்கேன்" என அவர்களிடம் பொதுவாக கூறியவள் "எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க" என்றுவிட்டு நகர்ந்தாள்.

"பொண்ணு ரதியாட்டம் இருக்கு. இந்த பொண்ணுக்கு ஆண்டவன் இப்படி ஒரு குறைய குடுக்காம இருந்திருக்கலாம்"

அங்கே கூட்டத்தில் சில குரல்கள் இவ்வாறு கேட்க அதையுமே சிறு சிரிப்புடன் கடந்து சென்றாள்.

அந்த ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அவள் முகத்தில் இருந்த சாந்த புன்னகை குறும்பு சிரிப்பாக மாறிவிட்டது.

ஒரு பக்கம் தாங்கியபடி வைத்து நடந்த கால்களை நேராக வைத்து சாதரணமாக நடந்து வந்து அவள் கையில் பிடித்திருந்த வாக் ஸ்டிக்கை அதே கையால் மேலே தூக்கிப் போட்டு பிடித்தாள்.

அதை ஸ்டைலாக மடித்து தன் பைக்குள் வைத்துக் விட்டு‌ அதில் இருந்து ஒரு கூலர்சை எடுத்து தன் கண்ணில் இருந்த பெரிய கண்ணாடியை கழட்டி அதற்கு பதில் இதை கண்களில் மாட்டிக் கொண்டாள்.

இறுக்கி கொண்டை இட்டிருந்த முடியை பிரீ ஹேராக எடுத்து விட்டுக் கொண்டு,

இதற்கு முன் ஒரு காலை விந்தி வந்தது இவள் தான் என யாரும் சத்தியம் செய்து சொன்னாலும் அதை யாராலும் நம்ப முடியாத தோற்றத்திற்கு வந்திருந்தாள்.

அங்கிருந்த மறைவான ஒரு இடத்திற்கு சென்று தன் பைக்குள் கையை விட்டு இருந்த பணத்தை எல்லாம் எடுத்து எண்ணி பார்த்தாள்.

"ஆ ஒன்னு ஆ இரண்டு" என ஆரம்பித்து "ஆயிரம் ரூபா தேறிறுச்சா பரவாயில்லையே. யார்கிட்ட பணத்தை அடிக்கன்னு யோசிட்டு இருந்தேன். எவனோ நம்மள இடிக்க போயி அதுக்கு ஒரு கூட்டம் கூடி அவனுங்களே நமக்கு உதவி பண்ணிட்டானுங்க.

அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான்யா முடியுது‌. இன்னைக்கு செலவுக்கு இது போதும்" என்று நக்கலாய் நினைத்தபடி மகிழ்வுடன் அதை பைக்குகள் பத்திரப்படுத்தி கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் வீரசுந்தரி. பெயரில் இருப்பது போல் அவளுக்கு வீரம் எப்போதும் ஒரு படி அதிகமாகவே இருக்கும்.

யாரும் அறியாமல் அவர்கள் பர்சை எடுத்து அதில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு, மீண்டும் எடுத்த இடத்திலே பர்சை வைத்துவிடுவதில் வீரசுந்தரியை அடித்துக் கொள்ள யாரும் இல்லை.

திருடி பிழைத்தாலும் அவளுக்கு சில கோட்பாடுகளை வைத்திருக்கிறாள். அது என்னவென்றால் அவளின் அன்றாட தேவைகளுக்கு உண்டான பணத்தை மட்டும் திருடிக் கொண்டால் அதற்கு மேல் அன்று திருட செல்லவே மாட்டாள்.

அவள் திருடி என்பதை இதுவரை யாருக்கும் தெரியாமல் கவனமாக மறைத்து களவாடி செல்லும், திருட்டு படிப்பில் பி.ஹச்.டி பட்டம் பெற்ற அக்மார்க் திருடி தான் இந்த வீரசுந்தரி.

வேகமாக வந்த சுந்தரி அந்த சந்திற்குள் நுழைந்தாள். அந்த இடத்தை பார்க்கும் போதே தெரிந்தது அந்த இடம் ஏழைகளின் வசிப்பிடம் என.

சிறிய குறுகலான சந்துகள், பெயருக்கு என போடப்பட்டு பள்ளம் பள்ளமாக இருந்த சாலைகள். அதில் ஆங்காங்கு தேங்கி நிற்கும் மழைநீர் என மொத்தமும் அங்கே நிறைந்திருந்தது.

"வா வீரா என்ன வேலை முடிஞ்சு போச்சா. இன்னைக்கு சீக்கிரமே வீட்டான்ட வந்துட்ட"

அடிபைப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி சுந்தரியிடம் கேட்டார்.

"ஆமா கங்கா க்கா" என்று சொல்லி நகர பார்த்த சுந்தரியை "வீரா ஒனக்கு ஒரு சேதி தெரியுமா" என தெருவில் நடந்த ஏதோ ஒரு கதையை சொல்ல‌த் துவங்கினார்.

"அப்படியா க்கா. பாரேன் எனக்கு இது தெரியாம போச்சே" என அந்த பெண்மணி பேசியதை வாயில் கை வைத்து கதை கேட்கும் பாவனையில் கேட்டிருந்த வீரா பேசி முடித்தபின்

"எக்கா ஊர்ல இருக்க எல்லா நியூஸும் உன் கைல தான் போல. ஆனா பாரேன் உன்ற புருஷன் போற வர பொண்ணுங்கட்ட வம்பு பண்ணி அடி வாங்குறது உனக்கு தெரியாம போச்சே!"

வியப்பு போல் இந்த விஷயத்தை கூறும் போதே "எங்க வீரா அந்த மனுஷன்" என்று பொங்கிய கங்கா அருகில் கிடந்த ஒரு துடைப்பத்தை கையில் எடுத்து கொண்டாள்.

"எக்கா அண்ணே இந்த தெரு முக்குல நின்னு தான் பொண்ணுங்கள டாவ் வுட்டு அடிவாங்கிட்டு நின்னுட்டு இருந்துச்சு" என்று வீரா சமர்த்தாய் போட்டுக் கொடுத்து விட்டாள்.

'ஒரு தென்றல் புயலாகி வருதே!' என்ற பி.ஜி.எம் போட்டது போல் கங்காவும் துடைப்பத்தை வாள் போல் தூக்கிக் கொண்டு, காற்றில் முடிகள் எல்லாம் பறக்க புயலாக சென்றாள் தன் கணவனை புரட்டி எடுக்க.

"எக்கா பாத்து பதமா பண்ணிவிடு க்கா" வீராவின் போலியான கத்தலை கூட காதில் வாங்காது சென்றிருந்தாள் அந்த வீரப்பெண்.

ஒரு பெண்ணை கிண்டல் செய்ய போய் செமத்தையாக அடி வாங்கி ஒரு ஓரமாக அமர்ந்திருந்த கந்தசாமயின் முன் இப்போது துடைப்பத்துடன் கங்கா முழு சந்திரமுகியாகி நின்றிருந்தாள்.

"ஏன்யா எவ்ளோ தைரியம் இருந்தா பொம்பள பிள்ளைக கிட்ட வம்பிலுத்திருப்ப. என்கிட்ட எவ்ளோ அடி வாங்கியும் திருந்தமாட்டியா நீ"

பேசிக் கொண்டே கையில் வைத்திருந்த துடைப்பத்தால் போட்டு புரட்டி எடுத்து விட்டாள் கங்கா. ஏற்கனவே ஆட்களிடம் அடிவாங்கியதில் பாதி போதை இறங்கியிருக்க, கங்கா அடித்ததில் மீதி போதையும் இறக்கிவிட

"ஐயோ எல்லா போதையும் இறங்கி போச்சே. இப்ப மறுபடி சரக்கு அடிக்க காசுக்கு நான் எங்க போவேன்" என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் கந்தசாமி. அவனுக்கு அவன் கவலை!

அங்கே கந்சாமியை மாட்டிவிட்ட நிம்மதியில் தன் வீட்டை அடைந்த சுந்தரி "என்னடா கதிரு. படிக்கிறியா" என்று தன் தம்பியிடம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.

இந்த வீரசுநத்ரியின் ஒரே ஒரு உறவு உலகம் என்று சொன்னால் அது அவள் தம்பி கதிரவனே‌. தாய் தந்தை உறவினர் என்று சொல்லிக்கொள்ள இருவருக்கும் யாரும் இல்லை.

அப்படி இருக்கும் இந்த இருவருக்கும் அவர்கள் இருக்கும் குப்பத்து மக்கள் தான் எல்லாமுமாக இருக்கிறார்கள்.

"ஆமா க்கா" என்ற கதிரிடம் "இந்தாடா கதிரு நோட்டு வாங்க காசு கேட்டுரிந்தியே இத வச்சு வாங்கிக்கடா" என்று தான் கொண்டு வந்த காசில் கொஞ்சம் கொடுத்துவிட்டு சமையலை கவனிக்க சென்றாள்.

அதே நேரம் கங்கா வெளியே கத்திக் கொண்டிருக்க "க்கா என்ன கங்கா க்கா சலம்பிட்டு இருக்கு?" என்று கதிர் கேட்க

"அதுவா கந்தன் அண்ணே அங்க பொண்ணுங்க கிட்ட உரண்டைய இழுத்துக் கிட்டு இருந்துச்சுடா. அதான் கங்கா க்காட்ட பதமா கோர்த்தூட்டு வந்தேன்" என்று சாதாரணமாக கூறி அவள் வேலையை பார்க்க

"எக்கா என்னக்கா இவ்ளோ அசாலட்டா சொல்ற. கங்கா க்கா அதான் இந்நேரம் கதகளி ஆடிட்டு போகுதா" என்று தானும் சிரித்தவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

-----------------------------------------

அலுவலகம் சென்றுவிட்ட வந்த சித்து தன் லேப்டாப் பையை கடுப்புடன் ஹாலின் டேபிலில் பொத்தென்று போட அவன் கோபம் அதிலே தெரிந்தது.

'ஆத்தாடி பயங்கர கோபமா இருக்கான் போலையே. இவனை முதல்ல கூல் பண்ணனுமே' என்று நினைத்தபடி அவனை சரிகட்ட நினைத்தார் அரவிந்த்.

"சித்து கண்ணா இந்தாடா காபி" என கண் சிமிட்டி பாவனையாய் சொல்ல முறைத்தபடி தான் நின்றிருந்தான் சித்து.

இருவருக்கும் காலையில் நடந்த விஷயங்கள் தான் கண் முன்னே வந்தது. முதலில் வந்த பிரியா வீட்டினர் சென்ற கொஞ்ச நேரத்திலே அந்த பாட்டியின் வீட்டில் இருந்து வந்து பெரிய ரகளை செய்தனர்.

"ஏன்டா வயசான கெழவிய கூட விடமாட்டிங்களாடா" என தெருவுக்கே கேட்க கத்த அரவிந்த் சமர்த்தாக ரூமினுள் அமர்ந்திருக்க,

அங்கிருந்த அனைவரையும் அசாராது இரண்டாவது ரவுண்டு சென்று சமாளித்து வந்தான் சித்து. அதில் அவனுக்கு மிகவும் நேரமாகிவிட்டது.

அதன்பின் சமையல் செய்து குளித்து கிளம்பி அலுவலகம் சென்று சேர வெகு தாமதமாகிவிட்டது. அதில் அவன் சொட்டை தல மேனேஜர் வேறு வைத்து செய்துவிட்டார்.

அந்த நல்ல வார்த்தைகளோடே அந்த நாளை துவங்கிய சித்துவிற்கு அந்த நாள் தன்னால் முடிந்த அளவு அடிகளை தந்து செல்ல நொந்து போய் வந்து சேர்ந்துள்ளான்.

அந்த கோபத்தை எல்லாம் அவன் தந்தையிடம் காட்ட முடியுமா என்றால் அதுவும் இல்லை. அதுஅதுக்கு ஒரு கவுண்டர் கொடுத்து வாயை அடைத்து விடுவார் மனிதர்.

"ஏன்யா நான் இப்ப காபி கேட்டேனா. காலையில் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு வெங்காயத்தை வெட்டி தரியா. நானே சமைச்சு கொட்டனும். இப்ப மட்டும் என்ன வெங்காயத்துக்கு காபி" என எகிற

அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டால் அது அரவிந்த் இல்லையே. எனவே தெனாவெட்டாக போய் சோஃபாவில் அமர்ந்தவர் அந்த காபியை எடுத்து உறுஞ்சியவாரு

"அதான் நீ ஸ்கூல் காலேஜுன்னு போறப்ப உனக்கு ஆக்கி கொட்டிட்டு தானே நான் வேலைக்கு போனேன். இப்ப நீ வேலைக்கு போற நான் ரிட்டையர்ட் ஆகிபுட்டேன்.

நான் புல் ரெஸ்ட்ல தான் இனிமே இருக்கனும். அதுதான் உலக நியதி. அதுனால மகனே நீதான் எனக்கு வடிச்சு கொட்னும். போவியா" என்று டீவியை போட்டு அமர்ந்து கொண்டு மீதி காபியை குடித்தார்.

"எம்மா ஆத்தா! இந்த மனுசன எப்படிமா நீ காதல் பண்ணி இழுத்துட்டு ஓடியாந்த. எப்படி பதனஞ்சு வருஷம் குப்ப கொட்டுன" என என்றோ இறந்துப் போயிருந்த தன் அன்னை புகைப்படத்தை பார்த்து சத்தமாக புலம்பி விட்டு சென்றான்.

எங்கே என்றால், 'இப்படியே புலம்பிட்டு இருந்தா யாரு ஃநைட் சோறு ஆக்குறது' என்று நொந்துப் போய் சென்றுவிட்டான்.

"மவனே ஃநைட் எனக்கு சப்பாத்தி பன்னீர் குருமாடா" என்ற குரலில்

'இப்படியே இந்த ஆள கொன்னுட்டா என்ன' என்றே யோசித்து வைக்க "மவனே அவ்ளோ சீக்கிரம் உன் சோலிய முடிக்காம நான் சாவமாட்டேன்டா" என்றார் அரவிந்த் அவன் மனவோட்டத்தை அறிந்தவர் போல்.

அதற்கு மேல் என்ன இனி சமையல் அறையில் கரண்டியுடன் சண்டை தான்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 3

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வீரா. அந்த கடைசி வீட்டு காவேரி இருக்கால்ல. அவ பொண்ணு ஒரு பையன கூட்டிட்டு ஓடிட்டாளாம்"


கங்கா எப்போதும் போல் ஊர் கதை ஒன்றை வீராவிடம் பேசிக் கொண்டே கீரையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.

அவள் கூறியதை கேட்டு "அட ஆமா க்கா‌ உனக்கு இது தொரியுமா. அந்த பையன் நல்ல பெரிய வீட்டு பையனாமே. வீதியில எல்லாம் பேசிக்கிறாங்க" என்று அவளும் தன் பங்கிற்கு ஒரு பாய்ண்டை அடித்துவிட

தன் மேல் வாயில் கை வைத்து அதிசயித்த கங்கா "அப்படியா இந்த சேதி எனக்கு எப்படி தெரியாம போச்சு. ஆனாலும் அந்த புள்ள நல்லா வெவரமா தான் ஆள புடிச்சிருக்கா" என்றாள்.

"நீயும் தான் இருக்கியே. வேலை வேலைன்னு ஓடிட்டு, தம்பிக்காக மாடா உழைக்கிற. உனக்குன்னு ஒரு வாழ்க்கைய பத்தி யோசிச்சு பாக்குறியா.

உன்னை சொல்லி என்ன பண்றது. உன் பெத்தவங்க உன்னை சூது வாது தெரியாம இப்படி பச்ச மண்ணா இல்ல வளத்து வச்சிருக்காங்க. ஒரு பொய் கூட சொல்ல தெரியலை"

கங்கா வீராவை பற்றி தன் மன எண்ணத்தை அள்ளிவிட வீராவின் மனமோ 'க்கும் நம்மள பத்தி தெரியாம இந்த அக்கா வேற இஷ்டத்துக்கு அடிச்சுவிடுதே' என்று எண்ணியபடி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு தலையை ஆட்டி வைத்தாள்.

அதே நேரம் "அக்கா அக்கா!" என்று கதிர் வீராவை அழைத்துக் கொண்டே வந்தான்.

"அக்கா தம்பி வந்துட்டான் க்கா. நான் போய் அவனை பாக்குறேன்" என்றிட "சரி‌ வீரா நீ போய் கதிர பாரு" என்று கங்காவும் பேச்சை முடித்துக் கொள்ள

"வாடா கதிரு. ஸ்கூல் அதுக்குள்ள முடிஞ்சிருச்சா.‌ இன்னைக்கு என்ன மதியானமே வந்துட்ட" என தம்பியின்‌ பின்னால் சென்றாள்.

"அது இன்னைக்கு அர நாள் தான் க்கா ஸ்கூல் அதான் வந்துட்டேன்" என்று வீராவிற்கு பதில் அளித்தவாறு தன் பள்ளிப் பையை கலட்டி அதன் இடத்தில் வைத்தான்.

"க்கா ஸ்கூல்ல போட்டி நடத்துறாங்க. சயின்ஸ் பிராஜக்டாம். அது செய்ய சில பொருள் எல்லாம் வாங்கனும் க்கா. அது என்னன்னு மிஸ் எழுதி தந்திருக்காங்க.

அந்த பொருள் எல்லாம் வாங்கிட்டு வரனும்னு மிஸ் சொன்னாங்க க்கா. இந்தா க்கா லிஸ்ட்"

கதிர் தந்த லிஸ்டை வாங்கி பார்த்த வீரா "இது எல்லாம் வாங்க எவ்ளோ காசு தேவைப்படும்டா கதிரு" என்றாள்.

"அது சரியா எவ்ளோன்னு தெரியலை க்கா. ஆனா எப்படியும் ஐயாயிரத்தில இருந்து எட்டாயிரம் வரை கூட வரும்னு சொன்னாங்க க்கா"

கதிர் கூறியதை கேட்டு "எவ்ளோ நாளைக்குள்ள இதை எல்லாம் வாங்கிட்டு வரனும்னு சொன்னாங்க கதிரு?" என்று வீரா கேள்வி எழுப்பினாள்.

"அது இன்னும் இருவது நாள் இருக்கு க்கா. அதுக்கு அப்புறம் தான் பிராஜக்ட்ட சமிட் பண்ணனும்னு சொன்னாங்க"

"ஓஓ.. இன்னும் இருவது நாள் இருக்கா" என்று கதிரிடம் பதிலுரைத்த வீரா மனதிற்குள் சில கணக்கு போட்டு 'இன்னும் இருவது நாள் இருக்கா. அதுக்குள்ள எங்க போய் ஆட்டையப்போடுறது.

பஸ் ஸ்டான்ட் ரயில்வே ஸ்டேஷன்னு எங்கையும் இவ்ளோ காச கொண்டார மாட்டாங்களே. எல்லாவனும் ஏ.டி.எம்‌ கார்டைல வச்சிட்டு சுத்துரானுங்க.

இதுல ஆன்லைன் பேங்கிங் வேற. கேட்டா டிஜிட்டல் இந்தியாவாம்ல. ச்சே இந்த இந்திய திருநாட்டுல சுதந்திரமா திருட முடியுது. சரி எங்க திருறதுன்னு சீக்கிரமா ஒரு முடிவ பண்ணுவோம்' என்று எண்ணிக் கொண்டாள்.

அவள் திருடி பிழைத்தாலும் அவள் தம்பி நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டும் என்பதில் வீரா அவ்வளவு உறுதி கொண்டிருந்தாள்.

--------------------------------------

இளங்காலை வேளையில் சூரியன் கிழக்கிலிருந்து எழுந்து உலகை தன் ஒளி சிறகால் ஆக்கிரமிக்க தொடங்கி கொண்டிருந்தான்.

அந்த விடிந்தும் விடியாத காலை வேளையில் அரவிந்திற்கு நெஞ்சு சுருக் என்றது. அதில் விழித்து விட்டார் அரவிந்த்.

கண்விழித்த அரவிந்த் தன் கண்களை தேய்த்துவிட்டு உள்ளங்கையில் முகத்தை பார்த்தவர்

"என்ன ஏதோ நெஞ்சு சுருக்குன்னுச்சு" என்று‌ யோசித்தவர் "எதாவது எறும்பு கடிச்சிருக்கும்" என்று தானாகவே ஒரு முடிவுக்கு வநத்வர்

"இந்த நாள் எனக்கு மட்டும் இனிய நாளா அமையனும்‌ ஆண்டவா" என்று சற்று சத்தமாகவே வேண்டிக் கொண்டவர் தன் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டார்.

தன் முகத்தை கழுவியவர் சத்தம் எழுப்பாமல் கதவை திறந்து வெளியே வந்து காலில் சூவை மாட்டியவர் கிளம்பிவிட்டார்‌ தன் நடைப்‌ பயிற்சிக்கு.

எப்போதும் போகும் சாலையை விடுத்து வேறு சாலையை தேர்ந்தெடுத்து அதில் இயற்கையை ரசித்தவாறு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அதான் எப்போதும் போகும் வழியில் பெரிதாக ஒரு ஏழரையை நேற்று இழுத்து வந்து வீடு வரை விட்டுவிட்டாரே. அதன் பிறகு எப்படி அந்த வழியை பயன்படுத்துவார்‌. எனவே இன்று வழியை மாற்றிவிட்டார் மனிதர்.

"ம்ம் இதுவும் நல்லாதான் இருக்கு. கண்ணுக்கு குளிர்ச்சியா‌ மனசுக்கு இதமா சூப்பரா இருக்கு" என்று வழியில் நடந்து வரும் பெண்களை டாவ் அடித்து கொண்டு நடந்து சென்றார்.

இதில் போகும்‌ போது சும்மா இராமல் அங்கே குழுவாக செல்லும் பெண்களை பார்த்து "ஹாய் பியூட்டிபுல் கேர்ள். எல்லாம் எப்படி இருக்கீங்க" என்று அவர்களை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றார்.

அந்த பெண்களோ இவர் பேசியதை கண்டுக் கொள்ளாமல் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டும் சிரித்து கொண்டும் அவரை கடந்து சென்று விட்டார்கள்.

"என்ன ரியாக்ஷனே காணோம். நான் இங்க ஒரு மனுஷன் நிக்கிறேன். கண்டுக்குராங்களா பாரு இந்த பொம்பள புள்ளைக எல்லாம்.

இதே நிவின் பாலி, விஜய் தேவரகொண்டானு இப்படி எல்லாம் யாராவது இவளுங்களுக்கு எதுத்தாப்பல வந்திருந்தா பல்லை காட்டிட்டு போவாளுங்க.

நாமளும் தான் அரவிந்த் சாமி மாதிரி அம்சமா இருக்கோம். நம்ம அருமை இவங்களுக்கு யாருக்கும் தெரியலை" என்று சற்று சத்தமாகவே புலம்பியவர் அடுத்து அங்கே வந்த ஆன்டிகளை லுக்கு விட்டார்.

"ஓய் நீங்க போனா போங்க. இங்க பாருங்க இன்னொரு ஏஞ்சல்ஸ் குரூப்பு வருது. அதுலை ஒன்னையாவது என்னை பாத்து சிரிக்க வக்கிறேன். இது சாலஜ்சு" என்று இவரை கண்டு கொள்ளாமல் தூரமாய் போன சில பெண்களை பார்த்து கத்திவிட்டு,

அந்த ஆன்டிஸ் பார்வை படும்படி அவர்கள் எதிரே ரோமாயோ போல் ஸ்டைலாக இந்த பக்கம் அந்த பக்கம் என நடு ரோட்டில் ரேம்ப் வாக் நடந்து கொண்டிருந்தார் அரவிந்த்.

ஆனால் இந்த ஆன்டிகள் கூட்டமும் தங்களுக்குள் ஏதோ மும்மரமாக பேசிக் கொண்டு செல்ல அரவிந்தை திரும்பி கூட பார்க்கவில்லை.

அதில் நொந்து விட்ட அரவிந்த் "இது என்னடா இந்த அரவிந்த் சாமிக்கு வந்த சோதனை. ஒருத்தி கூட ஒரு சைட் லுக்கு கூட விட மாட்டேங்குறாளுங்க" என்று பேசிக் கொண்டே சுற்றி முற்றி வேறு பெண்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தபடி சென்றார்.

அப்போது "சார்" என்றொரு இனிய குரல் அவரின் பின்னால் இருந்து கேட்க பத்து பாட்டில் பூஸ்ட் குடித்தது போல் குஷியான அரவிந்த், தன் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு "எஸ்" என்று ஸ்லோ மோஷனில் பாதி உடம்பை மட்டும் திருப்பி அந்த பெண்ணை பார்த்தார்.

திருத்தம் அங்கே நின்றது பெண் அல்ல அதை ஆன்டி என்றுகூட சொல்ல முடியாது. வேண்டும் என்றாள் பாட்டி என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அரவிந்தை பார்த்து ஒரு கண்ணை சிமிட்டி "நீங்க உங்களுக்கு நல்ல கம்பானியன் தொலவுனா. டோன்ட் வொர்ரி. அவளுங்க போனா போகட்டும். நான் வேணும்னா உங்க கூட வந்திடுறேன்" என்றாள்.

அந்த பாட்டியை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்த அரவிந்தே அதிர்ந்து ரெண்டடி விலகிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அங்கு நின்றிருக்கும் பெண்ணின் பர்ஸ்சுனாலிட்டி எப்படி என்று.

"என்ன டார்லிங் அப்படியே பின்னாடி போறீங்க. வாங்க டார்லிங் வாங்க நாம பேசி பழகுவோம்"

அந்த பெண்மணி 'வாங்க பழகலாம்' என்றழைக்கவும் இதற்கு மேல் இங்கே நின்றால் ஆபத்து நமக்கு தான் என்று உணர்ந்த அரவிந்த் எடுத்தார்‌ இன்றும் ஒரு ஓட்டம்.

பின்னங்கால் பிடரியில் அடிக்க தெருவில் புழுதிகள் பறக்க "தம்பி அப்படியே தப்பிச்சு ஓடிரு" என்று தனக்கு தானே கூறிக் கொண்டு பலரை இடித்து தள்ளி காற்றாய் பறந்து விட்டார் வேறு இடத்திற்கு.

அந்த பெண்ணால் இனி தன்னை தொடர்ந்து தொல்லை தரமுடியாது என்று உணர்ந்த பின்னரே தன் ஓட்டத்தை நிறுத்தி அதை சாதாரண நடையாக மாற்றினார் அரவிந்த்.

ஓடி வந்த வேகத்தில் சற்று நேரம் மூச்சு வாங்க நின்றவர் தன் கையை முகத்துக்கு நேராக காட்டி

"ச்சே பொண்ணுங்கள வம்பிழுத்து தான் இதுவரை ஓடி வந்திருக்க அரவிந்தா. இப்புடி ஒரு பொம்பள கிட்ட இருந்து தப்பிக்க நாயை விட கேவலமா மூச்சு வாங்க ஓடி வந்திருக்கியே.

உனக்கு இது அசிங்கமா இல்ல. உன் புள்ளைக்கு தெரிஞ்சாலே போதுமே கிழி கிழினு கிழிச்சு தொங்கவிட்டுருவான்.

ஆனா உன்னோட எஸ்டிடில இப்படி ஒரு கலங்கம் வந்திருச்சே. ஐயோ என்னடா உன் நிலைமை இவளோ கேவலமா ஆகிப்போச்சு. த்தூ த்தூ" என தன் முகத்தில் தானே துப்பிக் கொண்டார்.

"இதுக்கு மேல இந்த அசிங்கத்தை தாங்கிட்டு வாக்கிங் போறதா. அப்படி ஒன்னும் நீ வாக்கிங் போய் கிழிக்க வேணாம்‌. வா வீட்டை பாத்து போவோம்"

அரவிந்த் நொந்த படி தன் வீட்டை நோக்கி நகர்ந்தார். வெகு சாவகாசமாக வீட்டை அவர் அடையும் நேரம் அவர் வீட்டின் முன்னே ஒரு கும்பலே நிற்பதை கண்டு குழம்பினார்.

ஏனெனில் இன்று தான் மனிதர் யாரிடமும் வம்பிழுத்துவிட்டு வரவில்லையே. மாறாக அவர் தானே நோஸ் கட் ஆகி வந்துள்ளார்.

"என்னடா இது தெரு முனை பிரியா அப்பன் அந்த வீனாப் போன பாலு தலை கூட தெரியுது. தெருவே நம்ம வீட்டு வாசல்ல தான்‌ நிக்கிது.

இப்புடி தெருவே கூடுற அளவுக்கு நாம அப்படி ஒன்னும் பெரிய சம்பவம் எல்லாம் இன்னைக்கு பண்ணவே இல்லையே. என்ன காரணமா இருக்கும்.

ஒருவேளை நம்ம புள்ளை எதாவது சம்பவம் பண்ணிட்டானா" என்று தனக்கு தானே பேசிக் கொண்டவர்

"ச்சே ச்சே என்ற மவனே புள்ளப்பூச்சி ஆச்சே.‌ அவனுக்கு பொண்ண தூக்கனும்னா கூட பெத்த பாவத்துக்கு நாம தானே போய் அந்த பொண்ணை தூக்கனும்.

இவன் சரியான அமுல் பேபி. குனிஞ்ச தலை நிமிராம இவனை வளத்து வச்சிருக்கேன். அதனால அவன் எதுவும் பிரச்சினை பண்ணியிருக்க மாட்டான். வேற என்னவா இருக்கும்?"

இப்படி எல்லாம் யோசித்து தனக்கு தானே பேசிக் கொண்டே வீட்டை வந்தடைந்தார் அரவிந்த். ஆனால் இவர் அருகில் சென்றும் கூட ஒருவரும் இவரிடம் பேசவும் இல்லை.

இவரை கண்டுக் கொள்ளவும் இல்லை. அவர்களுக்குள்ளே எதுவோ பேசிக் கொண்டும் உள்ளே பார்த்துக் கொண்டும் இருந்தனர்.

அதையெல்லாம் கவனித்துக் கொண்டே வீட்டினுள் சென்ற அரவிந்த தன்‌ மகன் இருந்த கோலம் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டார். அதைவிட அவன்‌ அருகில் இருந்த உருவத்தை கண்டு‌ மயங்கியே விட்டார்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 4

அரவிந்த் அவர் வீட்டின் உள்ளே சித்துவின் அருகே இருந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தலை சுற்றி நின்றார்.

பின்னே இருக்காதா அவர் சித்துவின் அருகே கண்டது அவரின் சொந்த உருவத்தை தான். அதுவும் ஒரு பெஞ்சில் அந்த உருவத்தை படுக்க வைத்திருந்தனர். அந்த உருவத்துக்கு அருகில் அமர்ந்து அவர் மகன் சித்து அழுதுக் கொண்டிருந்தான்.

"அப்பா! ஐயோ ப்பா.‌ எனக்கு இருந்தது நீ மட்டும் தான். இப்ப என்ன நீயும் அநாதையா விட்டுட்டு போய்ட்டியே. ஏந்திரிப்பா"

சித்து அங்கே உயிரற்று‌ படுத்திருந்த அவன் தந்தையின் உடலைப் பிடித்து கதறி அழுதுக் கொண்டிருக்க, இங்கே என்ன நடக்கிறது என்றே புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றார் அரவிந்த்.

ஒருவேளை கனவு எதுவும் காண்கிறோமோ என்று அவர் எண்ணிய நேரம், அவர் அருகில் இருவர் பேசுவது நன்றாக காதில் விழுந்தது.

"என்ன சார் ஆச்சு. நல்லா தானே மனுஷன் சுத்திட்டு இருந்தாரு. தீடீர்னு எப்படி இப்படி?" ஒருவர் வருத்தமாக கேட்க

"ஹார்ட் அட்டாக்காம் சார். விடியகாத்தால வந்திருக்கு போல. பையனும் விடிஞ்சு ரொம்ப நேரம் இவர் எழுந்து வரலைன்னு போய் பாத்திருக்கான். அசையாம அப்படியே இருக்கவும் பதறிப்போய் டாக்டர கூட்டிட்டு வந்து பாத்தா விடியகாலைலேயே உயிர் போயிருச்சுன்னு சொல்லிருக்காரு"

"அப்பா பையன்னு ரொண்டு பேரு தான் இருந்தாங்க. இப்படி அவன தனியா விட்டுட்டு போய்ட்டாரு. பாவம் இவரும் ரொம்ப நல்ல மனுஷன் தான். அதான் தூக்கத்திலையே நிம்மதாயா போய் சேந்துட்டாரு"

இப்படி பேசிக் கொண்டது எப்போதும் இவர்களிடம் மல்லுக்கு நிற்கும் பாலு மற்றும் அவர் நண்பரே. "என்ன நான் செத்து போய்ட்டனா?" அதிர்ந்து போன அரவிந்திற்கு அப்போது தான் புரிந்தது அவர் நிஜமாகவே இறந்தே விட்டார் என.

அதோடு அங்கே கிடத்தப்பட்டிருந்தது அரவிந்தின் உடல் தான். அவரின் ஆன்மா தான் இவ்வளவு நேரம் வெளியே சுற்றிவிட்டு வந்தது.

'உயிரோட இருந்தா திட்டுறது. செத்தா புகழ்றது. இந்த வாயால தானே இந்த பாலு என்ன எப்படி எல்லாம் திட்டுனான். இப்ப பாரு ரொம்ப நல்லவன் மாதிரி சீன போடுறான்' அந்த அதிரச்சியான நேரத்தில் கூட தனக்குள் புலம்பியபடி தன் மகன் அருகே போய் நின்றார் அரவிந்த்.

அவர் உயிரற்ற உடல் அருகே ஆவியாக நின்ற அரவிந்தின் மனம் சொல்லொன்னா உணர்வில் இருந்தது. என்னதான் அது அவர் உடலாகவே இருந்தாலும் அதை உயிரில்லாமல் காண சற்று வருத்தமாக இருந்தது.

அதிலும் அவர் மகன் அப்படி அடித்துக் கொண்டு அழுவதை காணும் போது அதிகமாய் வருத்தம் சேர்ந்தது. இதற்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என உணர்ந்தவர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

"ஐயோ என் ராசா! போய்ட்டியா" அழுதபடி ஓடிவந்த குரல் வந்த திசையை கண்டு ஆச்சரியப்பட்டார் அரவிந்த்.

அப்படி யார் வந்தார் என்று பார்த்தல், இரண்டு தினங்களுக்கு முன்னர் அரவிந்த் ஒரு கிழவியிடம் வம்பிழுத்து வந்திருந்தாரே. அதே கிழவியே கதறியபடி வந்தது.

"என் புருசனுக்கு அப்புறம் என்ன பாசமா கூப்புட்டு முத்தம் எல்லாம் குடுத்தியே ராசா. அதுக்குள்ள நீ இப்படி போய்ட்டியே" கிழவி ஊரை கூட்டி ஒப்பாரி வைக்க பார்த்த அரவிந்துக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

"உயிரோட இருந்தப்ப வெரட்டி வெரட்டி அடிச்ச கூட்டம் நான் செத்துட்டேன்னு தெரிஞ்சு என்னாம்மா அழுவுறாங்க. உண்மையாவே அழுவுறானுங்களா இல்ல அழற மாதிரி நடிக்கிறாங்களா?"

அரவிந்த் இப்படி எண்ணியபடி ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்து, அதன்பின் யார் யார் தன் இறப்பிற்கு வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என பார்த்தார்.

அவர்கள் என்ன சொல்லி அழுகிறார்கள் என வேடிக்கை பார்க்க துவங்கினார். 'நான் செத்ததுக்கு அப்புறம் யார் என்ன செய்ய போறாங்கன்னு எனக்கு என்ன தெரியும்' பலரின் புலம்பல் இதுவே.

ஆனால் இங்கோ அரவிந்திற்கு அதை கண்கூடாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்க, ஒவ்வொருவரின் அருகில் சென்று என்ன பேசிக் கொள்கிறார்கள் என ஆர்வமாய் கேட்க துவங்கி விட்டார் அரவிந்த்.

அரவிந்தின் உடலை எடுக்கும் நேரம் நெருங்கிவிடவே, கூட்டத்தில் இருந்த பெருசு ஒன்று "நேரம் ஆயிருச்சு. அடுத்து ஆக வேண்டியத பாருங்க ப்பா" என்று எடுத்துக் கொடுக்க

மற்றவர்களும் அதை ஆமோதிக்க அரவிந்தின் உடலை இடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவானது. அரவிந்த் மற்றும் சித்துவிற்கென சொந்த பந்தங்கள் என யாரும் இல்லாமல் போகவே சுற்றத்தாரே ஒவ்வொரு வேலையாக எடுத்து செய்தனர்.

பல ஆண்டுகளாக அதே தெருவில் வசித்தபடியால் அவர்களே இருவரின் சொந்தமாக அனைத்திற்கும் துணையாக நின்றனர். அதன் பின்னர் வேலை துரிதமாக நடக்க அரவிந்தின் உடல் அவர் இல்லத்தை விட்டு புறப்பட்டு சென்றது.

அரவிந்த் அவரின் சொந்த உடல் அவரின் வீட்டை விட்டு போவதை கதவருகில் வருத்தத்துடன் நின்று பார்த்து நின்றிருந்தார். இடுகாட்டிற்கு சென்று அவர் உடல் எரிந்து சாம்பலாவதை பார்க்கும் அளவு அவருக்கு தைரியமும் இல்லை. எனவே வீட்டிலே பின்தங்கி நின்று விட்டார். அதே நேரம் அவருக்கு என்ன நடந்தது என்று யோசித்து பார்த்திருந்தார்.

காலை அவருக்கு நெஞ்சில் லேசாக சுறுசுறுவென வலி வந்தது சாதாரண வலி அல்ல. அரவிந்திற்கு மேஜர் ஹார்ட் அட்டாக் வந்து அவரின் உயிர் உடலைவிட்டு நீங்கி வெளியே வந்துவிட்டது.

தான் இறந்தது கூட புரியாத அறிவுஜீவி அரவிந்த் வழமை போல் உடலை பேன பொறுப்பாக வாக்கிங் சென்றுவிட்டார். இதில் வரும் போகும் பெண்களிடம் லவ் பார்வை விட்டு செல்ல பாவம் அவர் யார் கண்களிலும் படவில்லை என்பது அரவிந்திற்கு புரியாது போனது.

கடைசியாக இவரிடம் காதல் வசனம் பேசியதில் ஒரு பாட்டி பேயிடம் இருந்து தான் அவர் விழுந்தடித்து ஓடி வந்தார் என்பதை அறிந்தால் என்ன செய்வாரோ அரவிந்த்.

அங்கே ஒருபுறம் அரவிந்த் ஆவியாக ஊர் சுற்ற கிளம்பிய நேரம் வீட்டில், சித்து இன்றென பார்த்து வெகு நேரம் கழித்தே தூக்கத்தில் இருந்து எழுந்தான்.

எனவே அவசர அவசரமாக சமையல் வேலைகளை கவனித்து அலுவலகம் கிளம்பி வர அதன்பின்னரே வீட்டின் அமைதி அவனை தாக்கியது.

அதுவரை வராத அவனுடைய தந்தையின் நினைவு அப்போது தான் வர "என்னாச்சு இவருக்கு. ஒரு சத்தமும் காணோம்‌. ஒருவேளை வாக்கிங் போய்ட்டு இன்னும் வரலையோ" என்று தனக்குள்ளே பேசியபடி எதற்கும் அவர் அறைக்கு சென்று பார்ப்போம் என அவரின் அறைக்கு சென்றான்.

அங்கே சென்று பார்த்த சித்துவிற்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அசையாத நிலையில் படுத்திருந்த அரவிந்தை கண்டு எப்போதும் போல் ஏதோ வம்பு வளர்த்து வந்தே இப்படி தூங்குவது போல் நடிக்கிறார் என எண்ணிய சித்து

"அப்பா இன்னைக்கு என்ன பண்ணிட்டு வந்து நல்ல பையன் மாதிரி படுத்திருக்க. நான் எதுவும் சொல்ல மாட்டேன்‌. தயவு செஞ்சு எந்திரி எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகுது" என்றான்.

சித்து கொஞ்ச நேரம் பேசி பார்த்தவன் அவர் உண்மையாகவே தூங்குகிறாரோ என்று அவரை உலுக்கி எழுப்பிய நேரம் அவரின் தலை ஒருபுறம் சாய்ந்தது.

அதில் அதிர்ந்த சித்தார்த் "அப்பா என்னாச்சுப்பா எந்திரி ப்பா" என பதறி போய் அழைக்க சிறிதும் அசைவின்றி படுத்திருந்த அரவிந்தை கண்டு மேலும் பதறி போய் மருத்துவரை வீட்டிற்கே அழைத்து விட்டான்.

அவர் வந்து பரிசோதித்து பார்த்து அவர் நெஞ்சு வலியில் இறந்து சில மணி நேரம் ஆகிவிட்டது என்று ஒரு குண்டை இறக்கி செல்ல கதறி துடித்தான் சித்து.

அவன் கதறலில் தெருவே அதன்பின் கூடிவிட, இதை எதையும் அரவிந்தே அறிந்திருக்கவில்லை என்பதால் உண்மை அறியாது மண்டை வெடித்தது மனிதருக்கு.

"நாம எப்படி செத்தோம்" பலவாறு யோசித்தும் எப்படி மனிதர் செத்தார் என்று ஒன்றும் புரியாது போனது. அவர் அவரின் எண்ணத்தில் மூழ்கி இருந்த நேரம் அவர் உடலை எடுத்து சென்ற ஆட்கள் அனைவரும் திரும்பி வந்துவிட்டனர்.

அதில் அவரின் கவனம் அங்கே திரும்ப, சித்து வந்து அவன் தந்தை புகைப்படத்தின் அருகே அமர்ந்துக் கொண்டான். அங்கே இருந்தவர்கள் ஒவ்வொருவராக கலைந்து செல்ல

சிறிது நேரத்தில் அரவிந்தின் இல்லம் வெறிச்சோடி போனது. அந்த வீட்டில் தனியாய் தன் தந்தையின் நினைவோடு அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்பினாலும் எதையும் உணராது அமர்ந்திருந்தான் சித்து.

சித்து யாரை நினைத்து அப்படி அமர்ந்திருந்தானோ அவரே அவனின் எதிரே தாடையில் கை வைத்து தன் மகனையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

"இவன் நம்ம மகன் தானா. நம்ம புள்ளைக்கு நம்ம மேல இவ்ளோ பாசமா. பரவாயில்ல அரவிந்தா உன் புள்ளை மனசுல நீ எங்கையோ இருக்கடா"

அரவிந்த் தனக்குள் பேசியபடி தன் தோளிலே தட்டி கொடுத்தார். ஆனால் அவர் மகனுக்கு தான் எதிரே இருந்த அவன் தந்தை தெரியாததால் அவர் புகைப்படத்தை பார்த்து அமர்ந்திருந்தான். அப்படியே அந்த படத்தின் அருகில் படுத்து தானாக உறங்கி போனான்.

-----------------------------

"இன்னைக்கு எப்படியாவது ஆயிரம் ரூபாய்க்கு மேல அடிச்சே ஆகனும். அப்பதான் செலவு போக தெனம் ஐநூறு ரூபாய்னு இருவது நாள்ல பணம் சேரும்"

தனக்குள் கணக்கு போட்டு பார்த்த வீரசுந்தரி தன்னை தானே உற்சாகமூட்டிக் கொண்டு வேட்டைக்கு கிளம்பி விட்டாள்‌. ஆனால் அவள் தேர்ந்தெடுத்த இடம் சற்று பிசகிவிட்டது.

எப்போதும் போல் ரயில் நிலையத்திற்கோ அல்லது பஸ் நிலையத்திற்கோ சென்றிருந்தால் சற்று பணத்தை தேற்றி இருக்கலாம்.

அவள் சென்றதோ ஒரே பெரிய மாலிற்கு. அங்கே சென்றால் அனைத்து இந்திய குடிமக்களும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மாறி இருக்க முதலுக்கு மோசமாகி விட்டது.

சுற்றி சுற்றி கேமரா வேறு இருக்க கடைசியில் அவளால் ஒரு ரூபாய் கூட ஆட்டையைப் போட முடியவில்லை. 'என்னடா இது நமக்கு வந்த சோதனை' நொந்து போய் அங்கிருந்த ஒரு பொருளின் விலையை பார்த்து நெஞ்சு வலியே வந்துவிட்டது.

'ஆத்தி இந்த துணி ரெண்டாயிரம் ரூவாயா. சாணித் துணி மாதிரில்ல இருக்கு. நம்ம மாரி அண்ணே கொண்டு வர துணியே இதை விட நல்லா இருக்குமே. விலையும் கொறவு தான். ம்ம் இது தான் மாலு போல'

வீரா தன்னுள் எண்ணியபடி அந்த மாலை சுற்றிவிட்டு மாலை நேரம் பஸ் ஸ்டாப்பிற்கு வரும் போது ஏதோ ஒரு புண்ணியவான் தவறுதலாக கீழே விட்ட இருநூறு ரூபாய் கிட்ட அன்றைய உணவுக்கு அந்த பணம் சரியாக இருந்தது.

"ச்சே மாலுக்கு போற பண்ணாடை எல்லாம் பணக்காரண்னு நம்பி போனேன். இப்படி நம்ம வச்சு கழுத்தறுத்துட்டானுங்களே.

அந்த மாலுல பத்து ரூவா பொருள ஐம்பது ரூவான்னு திருடுறானுங்க. நம்மல ஒரு ஆயிரம் ரூவா திருட விடுறானுங்க. பாவிங்க நல்லா இருப்பானுங்களா. இந்த பாவப்பட்ட திருடியோட சாபம் இவனுங்களை எல்லாம் சும்மாவே விடாது"

பணக்காரர்கள் மால் உரிமையாளர்கள் என மொத்தமாக அனைவரையும் சாபம் விட்டவாறு தன் இல்லம் நோக்கி நகர்ந்தாள் அந்த நல்ல உள்ளம் கொண்ட திருடி.

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 5

அரவிந்த் இறந்து சித்துவை விட்டு சென்று நான்கு நாட்கள் முடிந்திருந்தது‌. சித்தார்த்தும் தற்போது அலுவலகம் செல்ல துவங்கி விட்டான். ஆளில்லா அவன் வீட்டில் இருப்பதை விட அலுவலகம் செல்வது கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது.

அதே நேரம் ஆன்மாவாக இருந்த அரவிந்த் தன் மகனை பின்தொடர்வதை தன் வேலையாக மாற்றிக் கொண்டார்.

அதோடு பெண்களை தற்போது தங்குக் தடையின்றி சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டார் மனிதர். யாரேனும் ரோட்டில் நடந்தால் காற்றை ஊதி புழுதி பறக்க செய்து அவர்களை கலவரப் படுத்துவது,

தெரு முக்கில் இருக்கும் பிரியாணி கடையில் திருடி தின்னுவது, தன் பரம எதிரியான பாலுவின் வண்டியில் பின்னால் அமர்ந்துக் கொண்டு நாய்களை விட்டு துரத்தவிடுவது போன்ற அரும்பெரும் சாதனைகளையும் சிறப்பாக செய்து வந்தார்.

எப்போதும் போல் அன்றும் தன் அலுவலகம் கிளம்பி சென்றான் சித்து. அவனை தொடர்ந்து அரவிந்தும் சென்று அலுவலகத்தில் நுழைய முதலில் அவர் பார்வையில் பட்டது அங்கிருந்த அழகழகான பெண்களே.

"அம்மாடி இந்த புள்ளைங்க எல்லாம் எவ்ளோ அழகா இருக்குங்க. இங்க தானே இந்த சித்து பையலும் ஐஞ்சாறு வருஷமா வேலப் பாக்குறான். ஒரு பொண்ணையாவது உஷார் பண்ணிருக்கலாம். இப்படி எதுக்கும் துப்பில்லாம இவன வளத்து வச்சிருக்கனே. நான்லாம் வயசுல எத்தனை பொம்பள புள்ளைங்க பின்னாடி சுத்திருக்கேன். எனக்கும் தான் ஒன்னு பொறந்திருக்கே‌. சரியான தத்தி தத்தி!"

அரவிந்த் அங்கே நுழைந்தது முதல் அவர் மகனை போட்டு கழுவி கழுவி ஊற்றியவர் அவனை எண்ணி தலையிலே அடித்துக் கொண்டார். அதன்பின் அவர் வேலையை ஆரம்பித்து விட்டார்.

ஒரு பெண் கணினியில் தன் முழு கவனத்தையும் வைத்து ஏதோ ஒரு முக்கியமான வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகே சென்ற அரவிந்த் "கமான் அரவிந்து! யூ கேன் டூ இட்" என தனக்கு தானே ஹை ஃபைவ் கொடுத்தவர் அவள் முடியை அலுங்காமல் குலுங்காமல் எடுத்து நன்றாக பின்னி அருக்காணி சடைப் போல் வளைத்து விட்டு நிமிர்ந்தார்.

அழகாக இருந்த அந்த பெண்ணின் முடி தற்போது பரிதாபமாய் மாறி இருக்க "வெல் டன் மிஸ்டர். அரவிந்த்" என தன்னையே பாராட்டியவர் அடுத்ததாக இருந்த ஒரு வாலிபனிடம் நகர்ந்தார்.

அந்த வாலிபனை கண்டு "இந்த ஒல்லிக் குச்சி ஓணான என்ன செய்யலாம்" என்று அவனை இரண்டு சுற்று சுற்றியவர் ஏதோ தோன்ற "இந்தா வந்துட்டேன்" என அவனிடம் விரைந்தார்.

அந்த வாலிபனின் இடுப்பில் கை வைத்து கிச்சுகிச்சு மூட்ட தொடங்கிவிட, அவனோ கூச்சம் தாங்காமல் "ஐயோ அம்மா" என்று கத்தியவன் யார் இப்படி செய்தது என்ற கடுப்பில் நிமிர்ந்து தன் அருகே இருந்த பெண்ணை பார்க்க அவளோ அருக்காணி ஸ்டைல் சடையுடன் பயங்கரமாக அமர்ந்திருந்தாள்.

"ஐயோ! பேய்..." என்று அவன் பயத்தில் அலறி அடிக்க அவன் சத்தத்தில் அந்த பெண்ணை பார்த்த அனைவரும் சிரிக்க துவங்கினர்.

தன் முடியை இப்படி ஆக்கியது அந்த வாலிபன் என எண்ணி "ஏன்டா ஒட்டடகுச்சி! எதுக்கு என் முடிய இப்படி பண்ணுன" என சண்டைக்கு சென்று விட்டாள்.

எதுவும் செய்யாத அந்த அப்பாவி இளைஞனோ "ஏய் அருக்காணி உன்ன நான் என்ன செஞ்சேன். நீதான் என் இடுப்புல கிச்சுகிச்சு முட்டுன. மரியாதையா அதுக்கு மெத சாரி கேளு" என தன் பங்கிற்கு சண்டைக்கு கிளம்பினான்.

இவர்கள் சண்டையிடும் கேப்பில் சுற்றி இருந்த கூட்டத்தில் புகுந்த அரவிந்த் அங்கே இருந்த ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு ஏதோ ஒரு கலாட்டாவை நிகழ்த்தி அருகில் இருக்கும் நபரை கூடவே கோர்த்தும் விட்டு வந்தார்.

அதன்பின் என்ன அந்த ஐ.டி அலுவலகமே சிறிது நேரத்தில் சண்டை கடைப் போல் காட்சி அளித்தது. ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சமமாக கோதாவில் இறங்கிவிட சத்தம் ஜவ்வைய் கிழித்தது.

இதற்கு உச்சமாக ஒரு பெண்ணோ கேப்டன் ஸ்டைலில் ஒரு ஆளை தூக்கி அடித்து "யாஹூ!" என கராத்தே போஸ் கொடுத்து நின்றாள்.

இவர்கள் சத்தம் மேனஜரான சித்துவின் அறைக்கு கேட்க "என்ன இவ்ளோ சத்தம்" என்று குழம்பியவன் அறையை விட்டு வெளியே வரும் நேரம் தான் கேப்டன் ஸ்டைலில் அடிவாங்கியவன் அவன் காலருகில் வந்து விழுந்தான்.

இப்படி தீடீரென ஒருவன் வந்து விழுகவும் அதிர்ந்து நெஞ்சில் கை வைத்த சித்து சுற்றி பார்க்க அலுவலகமே சின்னாபின்னமாகி இருந்தது. அதில் கடுப்பான சித்து

"நிறுத்துங்க! ஐ சே ஸ்டாப் இட்!" என ஹைப்பிச்சில் கத்த அனைவரும் அமைதியாகினர். இங்கே நடந்த கலவரத்தை ஒரு பேனின் மேல் அமர்ந்து

"ஆ.. போரு! ஆ... சிக்ஸூ! ஏய் மண்டையா அவனை இன்னும் ரெண்டு அடிப்போடு! ஏம்மா பொண்ணே அந்த பொண்ணு தலைய புடிச்சி இன்னும் நல்லா ஆட்டு" என ரன்னிங் கமெண்டரி தந்து கொண்டிருந்த அரவிந்தும் "எவன் அவன்" என்றவாறு திரும்பினார்.

"என்ன நடக்குது இங்க. இது ஆபிஸா இல்ல வேற எதாவதா. குழா அடியில சண்டைப் போடுற மாதிரி போடுறீங்க"

"ஏய் மகனே! இது ஆபிஸ்னு உனக்கே தெரிலையா. இந்த குழா அடி சண்டைக்கு நான் கோல்ட் மெடலே தருவேன்டா"

பேனில் உக்கார்ந்து ஆடியபடி சித்துவின் பேச்சுக்கு எதிர் பஞ்ச் போட்டுக் கொண்டிருந்தார் அரவிந்த். பாவம் அவர் பேசுவது அவரை தவிர வேறு யாருக்கும் கேட்கப் போவது இல்லை என மறந்துவிட்டார் மனிதர்.

"இப்போ எதுக்கு நீங்க எல்லாம் சண்டை போட்டீங்கனு எனக்கு தெரிஞ்சாகணும். ஒவ்வொருத்தரா வந்து எக்ஸ்ப்பிளனேஷன் தந்துட்டு போகனும்"

சித்து ஸிரிக்டாக சொல்லிவிட அனைவரும் முழித்துக் கொண்டு நின்றிருந்தனர். ஏனெனில் அந்த அருக்காணி சடை பெண்ணின் முடியோ பழையபடி அழகாக கர்ஸ் செய்யப்பட்டு இருந்தது.

கிச்சுகிச்சு மூட்டினாள் என்றால் அது எப்படி நடந்தது என்று காட்டவா முடியும். அதனால் அந்த வாலிபனும் திணறினான். அவர்களை போலவே மற்றவர்களிடமும் சொல்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை.

ஏனெனில் அதை எல்லாவற்றையும் தான் அரவிந்த் சரி செய்துவிட்டாரே. எனவே அனைவரும் ஒருவர் மற்றவர் முகத்தை பார்த்து கடைசியில் சித்துவின் முகத்தை பரிதாபமாக பார்த்து வைத்தனர்.

ஒருவரும் பதில் தராமல் அமைதியாக இருக்க சித்தார்த் பேசினான்.

"என்ன எல்லாரும் சைலண்டா இருந்தா விட்டுருவனா. எல்லாருக்கும் பணிஸ்மென்ட் நிச்சியம் உண்டு. முதல்ல நீங்க ஆபீஸ்ல போட்ட குப்பை எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு எவ்ளோ நேரம் ஆனாலும் வேலைய முடிச்சிட்டு என்கிட்ட வந்து ரிப்போர்ட் பண்ணிட்டு தான் போகனும்"

அப்போது தான் அங்கிருந்தவர்கள் தங்களை சுற்றியே பார்த்தனர். அவ்வளவு குப்பை கிடந்தது. எல்லாம் அரவிந்தின் லீலையே.

சண்டை நடக்கும் போது அது லைவ்லியாக தெரிய அங்கிருந்த பேப்பர் தெர்மாக்கோல் என்று கைக்கு கிடைத்தது எல்லாவற்றையும் கிழித்து பிய்த்து பறக்கவிட்டிருந்தார்‌.

அதுவே அந்த அலுவலகத்தை குப்பை கூலமாக்கி இருந்தது. அந்த ஊழியர்களும் தங்கள் சண்டையில் உடைந்த மண்டை போல் இதுவும் என எண்ணிக் கொண்டு அமைதியாக சுத்தம் செய்ய துவங்கினர்.

அதை எல்லாம் சுத்தம் செய்து எடுக்கும் முன் அனைவரின் முதுகெலும்பும் ஒடிந்து விட்டது. 'ஹப்பாடி' என்று நிம்மதி பெருமூச்சு எடுத்து அவர்கள் வேலை பார்க்க அமர்ந்த நேரம் மதிய உணவு வேலை வந்துவிட்டது என கடிகாரம் பண்ணி ரெண்டு முறை அடித்து காட்டிட,

நொந்தே விட்டனர் அனைவரும். அவசர அவசரமாக தங்கள் உணவை முடித்து அனைவரும் கணினியின் முன் அமர்ந்து வேலையை தொடங்க, அது முடிய இரவு ஏழு ஆகி போய் நின்றது.

இதில் சித்து வேறு விளக்கம் கேட்டிருக்க ஒவ்வொருவரும் சென்று தங்களுக்கு நடந்ததை கூற, சித்து தான் 'பைத்தியமா இதுங்க' என குழம்பி விட்டான்.

ஏனெனில் ஒவ்வொருவரும் கூறிய காரணங்கள் ஒவ்வொன்றும் மணி மணியாக இருந்தது. அவற்றுள் சில..

"சார் யாரோ என் கைய பிடிச்சு கடிச்சு வச்சிட்டாங்க"

"சார் யாரோ என்னோட தலைல கொட்டிட்டாங்க"

"என் இடுப்புல யாரோ கிச்சுகிச்சு மூட்டி விட்டுட்டாங்க"

"யாரோ என் சேரை எட்டி உதச்சு என்ன கீழ தள்ளி விட்டுட்டாங்க"

இப்படி ஒன்னாங்கிளாஸ் பிள்ளைகளை விட திறமையாக அள்ளிவிட கேட்ட சித்துவிற்கு தான் தலைவலி வந்துவிட்டது.

அதுவும் கடைசியாக ஒருவன் கூறியதை கேட்டு நிஜமாகவே தலையில் அடித்து கொண்டான். அப்படிப்பட்ட அறிய பதில் என்னவென்றால் "சார் எனக்கு என்னமோ இதெல்லாம் ஏதோ ஒரு பேயோட வேலையோன்னு தோனுது".

ஆனால் அவன் கூறிய விடையே உண்மை என யாருக்கும் தெரியவில்லை.

"எல்லாரும் நிறுத்துங்க. ஸ்கூல் படிக்கிற புள்ளைங்கள விட கேவலமா கம்ப்ளைன் பண்றீங்க" சித்து அனைவரும் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியே ஓய்ந்தான்.

அனைவரும் பாவமாக ஒருத்தர் முகத்தை மற்றொருவர் பார்த்து கொள்ளவும் "போய் தொலைங்க" என்று விட்டுவிட்டு தன் இல்லம் செல்லக் கிளம்பி விட்டான்.

இவ்வளவு நேரம் நடந்தவற்றை கிரிக்கெட் மேட்சை பார்ப்பது போல் சுவாரஸ்யமாக கண்டு முடித்தவர் தன் மகன் பின்னே கிளம்பி விட்டார்.

சித்து ஆளில்லா தன் வீட்டை சுற்றி பார்த்தவன் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் தந்தை உயிரோடு இருக்கும் போது எவ்வளவு களைப்பாய் இருந்தாலும் அவரின் அலப்பறையை வைத்து தினமும் ஒரு சண்டை நடக்கும்.

என்னதான் தந்தையை திட்டினாலும் அவனுக்கு அவன் தந்தை செய்வது மிகவும் பிடிக்கும். விளையாட்டுக்காக தான் அவரிடம் வம்புக்கு நிற்பான்.

இப்போது அவரின் அலம்பல்கள் இல்லாமல் நாள் விடிவது மனதிற்குள் சொல்லொண்ணா வலியை தந்தது. எனவே சமைக்கும் எண்ணம் துளியும் இல்லாது அப்படியே சோபாவில் சாய்ந்திருந்தான்.

தன் மகன் இப்போது சமைப்பான் அப்புறம் சமைப்பான் என காத்துக் கொண்டிருந்த அரவிந்திற்கு கடுப்பானது.

"என்னடா இவன் இன்னைக்கு சமைச்சு போடாம நம்மல பட்டினி போட போறான் போலையே. இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டு முக்கு கடைக்கு நடைய கட்டிட வேண்டியது தான். ஆனா யாருக்கும் தெரியாம திருடரது ரொம்ப கஷ்டமா இருக்கு. இவன் சீக்கிரம் எந்திரிச்சா நல்லா இருக்கும்"

சித்துவை பார்த்து மனதிற்குள் இவ்வாறு எண்ணிய அரவிந்த் அவன் தோளில் பட்டென ஒரு அடிப் போட்டார்.

தோளில் ஏதோ அடி விழுவது போல் தோன்றவும் தோளை தடவி கொடுத்தான் சித்து‌‌. "நாம அடிச்சது இவனுக்கு உரைக்கிதா" ஆச்சரியப்பட்ட அரவிந்த் மீண்டும் அடித்தார்.

சித்து மீண்டும் தடவிக் கொடுக்க "டேய் மவனே! எந்திரிச்சு போய் நைட்க்கு எதாவது சோத்த குழம்ப ஆக்குடா". கர்ணக் கொடுரமாய் ஒரு குரல் கேட்க அதிர்ந்த சித்து சுற்றி சுற்றி பார்த்தான் சத்தம் எங்கிருந்து வருகிறது என.

"டேய் செவிட்டு பயலே மரியாதையா போய் சமைச்சு வையு. எனக்கு கொல பசி"

முதல் தடவை கேட்ட குரலில் தனக்கு ஏதோ பிரமை என்றிருந்த சித்து மீண்டும் குரல் கேட்கவும் பயந்து போய்

"ஏய் யாருயா அது. தைரியம் இருந்தா என் முன்னாடி வந்து பேசுங்கயா. மறைச்சு நின்னு பேசாம"

"டேய் தண்ட பயலே. நான் உன் முன்னாடி தான் இருக்கேன்டா. நல்லா கண்ண முழிச்சு உத்து பாரு"

சித்துவின் கேள்விக்கு இடக்காக பதில் அளித்த அரவிந்தின் ஆவி தற்போது மெல்ல மெல்ல தன் உருவை பெற்றது.

தன் முன்னே இறந்த தன் தந்தை காற்றில் மிதந்து கொண்டு ஆசீர்வதிப்பது போல் கைகளை வைத்து கொண்டு "நான் பெத்த மகனே!" என்று கூறிக் கொண்டு இருப்பதை பார்த்து ஷாக் அடித்தது போல் ஆன சித்து, உச்சபட்ச அதிர்ச்சி தாங்காது மயங்கி சரிந்தான்.

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 6

"அக்கா" கத்தியபடி வந்த கதிரை புன்னைகையுடன் பார்த்த வீரா "வாடா கதிரு" என்று அழைத்தாள்.

"அக்கா பணம் ரெடி பண்ணிட்டியா. இன்னும் எட்டு நாள் தான் இருக்கு. மிஸ் வேற எப்போ காசு தருவன்னு கேட்டுட்டே இருக்காங்க"

வந்ததும் வராததுமாக கதிர் பண விஷயத்தை ஞாபகப்படுத்தினான். அவனும் தயங்கி தயங்கியே கேட்டு மெல்ல நிமிர்ந்து அவன் அக்காவை பார்த்து வைத்தான்.

கதிருக்கும் அவன் குடும்ப சூழல் நன்றாகவே தெரியும் ஆதலால் டீச்சர் தினமும் பணத்தை பற்றி கேட்டும் அவன் அதை தன் அக்காவிடம் சொல்லாமல் இருந்தான்.

ஆனால் இன்று டீச்சர் மிகவும் வற்புறுத்தி கேட்ட காரணத்தால் தான் மெதுவாக தன் தமக்கையிடம் கேட்டுவிட்டான்.

"கண்டிப்பா ரெடி பண்ணிடுவேன் கதிரு‌. நான் வேலை பாக்குற எடத்துல கேட்டு வச்சிருக்கேன். அவங்க தரேன்னு சொல்லியிருக்காங்க. இன்னும் எட்டு நாள் இருக்குல்ல. எப்படியும் ரெடி பண்ணிருவேன் கதிரு"

வீரா தன் தம்பிக்கு கூட தெரியாமல் தான் இந்த திருட்டு தொழிலை பார்த்து வருகிறாள். எங்கோ ஒரு கடையில் வேலை பார்ப்பதாக கூறியிருந்தாள்.

இந்த வாழ்க்கையையே அவள் தம்பிக்காக வாழும் போது அவனை நன்றாக கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்து அவனை நல்ல பள்ளியிலே படிக்க வைக்கிறாள்‌.

அவன் கேட்டதை எல்லாம் மறுக்காது செய்து முடித்து வைப்பாள். கதிரும் அவளிடம் அப்படி எதுவும் தேவையில்லாமல் கேட்கவும் மாட்டான். எனவே எப்படியும் நாளை எங்காவது பல்க்காக அடித்து கதிரிடம் கொடுக்க முடிவு செய்து விட்டாள் வீரா.

"க்கா நான் விளையாட கிரவுண்டுக்கு போறேன்" சொல்லிவிட்டு கதிர் வீட்டை விட்டு கிளம்பி ஓடினான்.

"ம்ம் எப்படி எட்டாயிரம் ரெடி பண்றது. நான் வேற கதிருக்கிட்ட அவ்ளோ உறுதியா சொல்லி அனுப்பிட்டேன். எங்க போய் ஆட்டைய போட. ஒன்னுமே புரிய மாட்டேங்குதே"

தனக்குள் புலம்புவதாக எண்ணி வாய்விட்டே புலம்பிய வீரா "என்னடா இது இந்த வீராக்கு வந்த சோதனை. முழுசா ஒரு எட்டாயிரம் ஆட்டைய போடுறதுக்கு என்ன எல்லாம் குட்டிக்கரணம் அடிச்சாலும் முடியலையே" என்று நொந்து விட்டாள்.

"சரி நாளைக்கு நமக்குனு ஒரு இளிச்சவாயன் சிக்காமலா போவான்" அவள் தன்னையே சமாதானம் செய்தவள் வேலையை தொடர்ந்தாள்.

---------------------------------------

தன் முன்னால் மயங்கி கிடந்த மகனை கண்ணத்தில் கை வைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தார் அரவிந்த்.

"இவன் என்ன பொசுக்குன்னு மயங்கி சரிஞ்சிட்டான். இந்த லூசு பயலை பெத்துட்டு நான் பட்ற பாடு. இவன் உண்மையாவே என் பையனான்னு அடிக்கடி சந்தேகம் வருது. ச்சே" சலிப்பாக புலம்பி தள்ளினார் அரவிந்த்.

"முதல்ல இவனை எழுப்பி விட்டுட்டு அப்புறம் பேசிக்கலாம்"

தண்ணீரை எடுத்து வந்த அரவிந்த் பொலிச் பொலிச் என சித்துவின் முகத்திலேயே தெளிக்க அதன்பின்னே அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு திரும்பியது.

"அம்மா..." என தலையை பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்த சித்துவின் அருகே பளிச்சென பேஸ்ட் விளம்பரத்துக்கு வரும் நடிகை போல் பல்லை காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார் அரவிந்த்.

சித்து எழுந்த உடனே "டேய் மகனே என்னடா இப்படி மயங்கிட்ட. நான் உன் அப்பன்டா" என மீண்டும் பேச, தன் தந்தையை பார்த்தது ஏதோ பிரமை என்று எண்ணியிருந்தான் சித்து.

ஆனால் அவர் மீண்டும் சிரித்துக் கொண்டு பேச "நமக்கு கண்ணுல கோளாறா இல்ல நாம கனவு எதுவும் காணுறோமா" என கண்ணை கசக்கி பார்த்தான்.

அப்போதும் அசையாது அவன் கண்களில் அரவிந்த் தெரியவே தன் கைகளை கிள்ளி பார்த்தான். ஆனால் சித்து என்ன செய்தாலும் அவன் முன்னால் இருந்த அவன் தந்தை மறையவில்லை.

"ப்பா உண்மையாவே நீதானா. எப்படி ப்பா வந்த. நீ தான் செத்து போய்ட்டியே. அப்புறம் எப்படி திரும்ப வந்த. நான் தான் நீ உயிரோட இருக்கறத தெரியாம வேற யாரையாவது எரிச்சிட்டு வந்துட்டேனா"

சித்து பலவித உணர்ச்சிகளில் கண்களில் நீர் ததும்ப பேசி நிறுத்த "இவ்ளோ எமோஷன் உடம்புக்கு ஆகாதுடா மகனே‌. நானே சொல்லுவேன். பொறுமையா கேளு" என்று நிறுத்தினார் தந்தை.

"நான் உண்மையாவே செத்து தான் போய்ட்டேன்டா மகனே. நீ கொள்ளி வச்சதும் எனக்கு தான். ஆனா அது என்ன மாயமோ தெரியல நான் ஆவியா இங்கையே திரியறேன்"

அரவிந்த் சொல்லி முடிக்க "என்னாது ஆவியா" என்று அதிர்ந்து போன சித்து "ப்பா நீ பேயாவா சுத்துற" என கலவரமாக கேட்டான்.

அதற்கு அரவிந்தும் பாவமாக தலை அசைத்து வைக்க, "வாட் எ மெடிக்கல் மிராக்கல். எப்படி இது நடந்திருக்கும்" என அதிர்வில் இருந்து நீங்கிய சித்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து யோசிக்க, இங்கே அரவிந்துக்கோ பசி காதை அடைத்தது.

"டேய் சித்து பையா. அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்‌. இப்போ முதல்ல போய் சமைக்கிற வேலைய பாரு‌. பசி உசுரு போகுது"

"அது எப்படி நைனா செத்துப் போனதுக்கு அப்புறம் கூட உனக்கு டைம்கு பசிக்குது. ஆனா பொதுவா செத்தவங்க சாப்புட மாட்டாங்கன்னு நீயே சொல்லிருக்கியே. உன்னால மட்டும் எப்படி சாப்புட முடியுது"

சித்து பாயிண்டை பிடித்து தன் தந்தையிடம் கேள்வியை தொடுக்க "அதுதான் எனக்கும் தெரிலடா மவனே. தயவு செஞ்சு போய் சமைடா கொஞ்ச நாளா அந்த முக்கு கடை பிரியாணியை திருடி தின்னு நாள ஓட்டிட்டேன். எங்க திருடும் போதும் மாட்டிக்குவேனோன்னு திக்கு திக்குன்னே இருந்ததுடா. அதனால ஒளிஞ்சு மறஞ்சு திருடருதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு".

அரவிந்த் பெருமூச்சு எடுத்து சொல்லி முடிக்க, அவரை கீழிருந்து மேலாக ஒரு மாதிரி பார்த்த சித்து "எனக்கு ஒரு சந்தேகம் நைனா. நீ உண்மையாவே பேயா இல்ல பேய் மாதிரி சீன் போடுறியா?" என சந்தேகமாய் கேட்க

"ஏன்டா மகனே உனக்கு இந்த சந்தேகம். டெபனேட்லி ஐ ஏம் அ அக்மார்க் பேய்டா" என பதிலளித்தார்.

"அப்புறம் ஏன் நீ ஒளிஞ்சு மறஞ்சு போய் சோத்த திருடுன. நேராகவே போய் எடுத்து தின்ன வேண்டியது தானே. நீதான் பேய் ஆச்சே யார் கண்ணுக்கும் தெரிய மாட்டியே" என்று நக்கலடித்த சித்து ஏதோ யோசித்தவன்

"ஆனா என் கண்ணுக்கு மட்டும் தெரியிற. அது எப்படி நைனா" என கேள்வியோடு நிறுத்தினான்.

"அட ஆமால்ல இதை நான் யோசிக்காம விட்டுட்டேன்டா. நான் ஏன் உன் கண்ணுக்கு மட்டும் தெரியிறேன்னு எனக்கும் தெரியலை. ஆனா நான் செத்ததுல இருந்து நானும் உன்கூட தான் இருக்கேன். சரி சரி நான் பொறுமையா கதை சொல்றேன். முதல்ல நீ போய் சமைடா. பசி வயித்தை கிள்ளுது"

அரவிந்த் அப்போதும் சோற்றிலே குறியாய் இருக்க "போறேன் போய் தொலைக்கிறேன்" அலுத்துக் கொண்டே சென்றான் சித்து. அவனை பின்தொடர்ந்தது வந்த அரவிந்தும் சமையல் மேடையில் ஏறி அமர்ந்துக் கொண்டார். அதன்பின் சித்து தன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.

"ப்பா நீ எப்படி செத்த. செத்த அன்னைல இருந்து இந்த நாலு நாள் என்ன பண்ணிட்டு இருந்த. இத்தனை நாள் என் கண்ணுக்கு தெரியாத நீ இப்ப மட்டும் எப்படி என் கண்ணுல தெரியிற. முதல்ல இதுக்கு எல்லாம் பதில சொல்லு"

"அதுதான் எனக்கும் தெரியலைடா மகனே. இந்த நாலு நாள் நானும் உன்கூட தான் சுத்திட்டு இருக்கேன். ஆனா அப்போ எல்லாம் நான் உன் கண்ணுக்கு தெரியவே இல்ல. இப்ப மட்டும் தெரியிறேன். அது எப்படி?"

சித்துவிடமே கேள்வியை அவன் தந்தை திருப்பி விட, அவரை முறைத்த சித்து "சரி அதைவிடு என் மத்த கேள்விக்கு பதில சொல்லு" என சட்னியை அரைத்துக் கொண்டே கேட்டான்.

"ஏன்டா மவனே நான் பேய் தானேடா. உனக்கு என்ன பாத்தா பயமாவே இல்லையா. இவ்ளோ கேசுவலா பேசுறா. என்னை பாத்தா‌ டெரர் பேய் மாதிரி இல்லையா" என அரவிந்த் அப்பாவியாக கேட்டு வைக்க சிரித்துவிட்டான் சித்து.

"நைனா நீ உன்னை பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்க. உயிரோட இருக்கும் போதே நீ ஒரு காமடி பீஸூ. இதுல நீ செத்தா மட்டும் டெரரா மாறிடுவியா" என்று சிரித்தவன் "அதைவிடு நீ இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்த. அதை சொல்லு" என்றான்.

"முதல் நாளு அதான் நான் செத்த அன்னைக்கு ஏதோ நெஞ்சுல எறும்பு கடிச்சா மாதிரி சுருக்குன்னு வலிச்சுதுடா. நான் அது எதுவோ பூச்சிக் கடினு தட்டிவிட்டுட்டு எந்திரிச்சு வாக்கிங் போயிட்டேன்" என்று ஆரம்பிக்க

"நிறுத்து நிறுத்து. நீதான் ஹார்ட் அட்டாக் வந்து பெட்லையே தானே செத்து கெடந்த. எப்போ வாக்கிங் போன" சித்து இடையில் நிறுத்தி கேள்விகளை தொடுத்தான்.

"அட என்னை முழுசா சொல்ல விடேன்டா. உன் டவுட்டை எல்லாம் கடைசியா கேளு" என்று அலுத்துக் கொண்ட அரவிந்த் தொடர்ந்தார்.

அவர் வாக்கிங் சென்றது, அங்கிருந்த பெண்களை வளைத்து வளைத்து சைட் அடித்தது, அந்த பெண்கள் இவரை சற்றும் கண்டுக் கொள்ளாமல் சென்றது.

அதன்பின் ஒரு பாட்டி பேயிடம் பலமாக பல்ப் வாங்கியது, அந்த கிழவியிடம் சிக்காமல் விழுந்து வாரி ஓடி வந்தது என எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.

"நம்ம வீட்டுக்கு வந்து பார்த்தா தெருவே கூடி நிக்குதுடா. அப்புறம் தான் நான் செத்ததே தெரியுது" பாவமாக அரவிந்த் சொல்லி முடித்த நேரம் "ஹாஹாஹா..." என்று வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டிருந்தான் சித்து‌.

"யோவ் நைனா நீ செத்துட்டன்னு உயிரைக் கொடுத்து நான் அழுதுட்டு இருந்தா. நீ செத்தது கூட தெரியாம ஊரை சுத்திட்டு வந்துருக்க. இதுல ஹைலைட் என்ன தெரியுமா. நீ செத்த நியூஸ் ஊருக்கே தெரிஞ்சு கடைசியா தான் உனக்கே தெரிஞ்சிருக்கு பாரேன்"

மீண்டும் அரவிந்தை பார்த்து பார்த்து சிரித்தான் சித்து. "சரி சரி ஓட்டாதடா. எதோ என் நேரம் இப்படி ஆகிப் போச்சு. ஆனால் நான் வந்த அப்புறம் நடந்ததை பாக்கனுமே.

அந்த பாலுல இருந்து பல்லு போன கிழவி வரை எல்லாரும் என்னை பத்தி நல்லவிதமா புகழ்ந்து தள்ளிட்டு இருந்தாங்கடா. நான் உயிரோட இருக்கும் போது சாணில செருப்ப முக்கி அடிச்ச கூட்டம் என் சாவுல நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு பேசுறத கேட்டு உன் அப்பன் நான் செம ஹாப்பிடா"

அரவிந்த் சிலாகித்து கூற "இதெல்லாம் நடந்துச்சா. நைனா ஒரு நாள்ல நீ ஹீரோ ஆகிட்டியா. சூப்பர் போ" என சித்து அவர் கையில் தட்ட அது காற்றை தொட்டது போல் தான் இருந்தது.

"சித்து நான் ஆவிடா. என்னை அப்படி எல்லாம் தொட முடியாது. நான் நினைச்சா தான் உன்னை தொட முடியும்" அரவிந்த் கெத்தாய் இல்லாத காலரை தூக்கிவிட

"செத்தும் உன் கொழுப்பு மட்டும் குறையவே இல்ல ப்பா. சரி பேச்சை குறைச்சிட்டு வா சாப்பிடலாம்" அலுத்துக் கொண்டே சமைத்த உணவை மேசையில் எடுத்து வைத்தான்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 7

"அதான் சாப்டு முடிச்சிட்டியே. இந்த நாலு நாள் என்ன செஞ்ச. சொல்லு சொல்லு"

சித்து கேட்டதிற்கு அரவிந்தும் தன் அரும் பெரும் சாதனைகளை எடுத்துரைக்க தலையிலே அடித்துக் கொண்டான் சித்து. திடீரென எதோ தோன்ற

"அப்போ காலைல என் ஆபிஸ்ல கலாட்டா செஞ்சது நீதானா?" பல்லை கடித்து கொண்டு சித்து கேட்க "ஹீஹீஹீ..." என கேவலமாக ஒரு சிரிப்பை தந்த அரவிந்த் ஆம் என்றார்.

"யோவ் மனுஷனாயா நீ. ஒழுங்கா வேலை பாக்குற என் ஆபீஸ் ஆளுங்களையே கடைத் தெருவில சண்டை போடுற மாதிரி சண்டை போட விட்டுருக்க. நீ செஞ்ச வேலைக்கு அவங்க திட்டு வாங்கிட்டு போறாங்க"

சித்தார்த் மூச்சு வாங்க பேசி நிறுத்த ஹாயாக அமர்ந்திருந்த அரவிந்த் தன் காதை விரல்களால் நோண்டியபடி "சின்ன திருத்தம்டா மகனே. நான் மனுஷன் இல்ல ஆவி.

அப்புறம் அது என்ன ஆபீஸா. எல்லாரும் விட்டா அந்த கம்ப்யூட்டரையே கட்டி குடும்பம் நடத்திருவானுங்க போல. அதான் அவனுங்க மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக சின்ன கேம் விளாட விட்டேன்" என சட்டம் பேச அவரை முறைக்க மட்டுமே முடிந்தது சித்துவால்‌.

"சரி நீ தூங்கு சித்து. நான் சாப்பிட்டு வயிறு புல்லா நிறைஞ்சு போச்சு. நான் போய் ரெஸ்ட் எடுக்க போறேன். பாய்டா"

சாப்பிட்டு முடித்து கிளம்ப போன அரவிந்த் போகிற போக்கில் "அப்புறம் இருந்த பசில உன் தோசையையும் சேத்து எடுத்து சாப்பிட்டேன். நீ போய் உனக்கு வேற தோசை ஊத்தி சாப்புட்டுக்கடா. வரட்டா" என்றவர் விருட்டென்று வெளியே பாய்ந்து சென்றார்.

"என்னாது என் தோசையையும் தின்னுட்டியா" என அதிர்ந்து போய் சித்து கத்த, அதற்குள் அரவிந்தோ வாசலருகே நின்று பாய் காட்டிவிட்டு சென்றிருந்தார்.

"யோவ் நைநா எங்க சுத்தியும் மறுபடியும் திங்க வீட்டுக்கு தானே வரனும். அப்போ பேசிக்கிறேன்"

கத்திய சித்து பாத்திரங்களை பார்க்க அங்கே தோசை மட்டுமின்றி சட்டினியையும் காலி செய்திருந்தார் அவன் அருமை தந்தை.

"என்ன சட்டினியுமா ஐயோ" என தலையில் துண்டை போட்ட சித்து நொந்தவாரே மீண்டும் மூன்று தோசை வார்த்து பொடியை வைத்து உண்டு முடித்து படுக்க சென்றான்.

-------------------------------------

காலை எழுந்தது முதலே பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் வீரா. தினமும் செய்வது தான் என்றாலும் இன்று மனதும் பரபரப்பாகவே இருந்தது.

ஏனெனில் இன்றேனும் எப்படியாவது தன் தம்பிக்கு கொடுக்க பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தாள்.

அதற்கு தன் கொள்கையான ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் திருடும் ஸ்கீமை ஒதுக்கி வைத்துவிட்டு லம்ப்பாக அடித்து கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து விட்டாள்.

அதற்கு தான் இந்த பரபரப்பு. கதிர் வழக்கம் போல் பள்ளி செல்ல உணவு கட்டி தந்துவிட்டு "நாளைக்கு கண்டிப்பா பணம் தந்துருவேன் கதிரு. அக்கா கேட்ட இடத்துல இன்னைக்கு தரேன்னு சொல்லிட்டாங்க. உங்க மிஸ்ஸூ கேட்டா சொல்லிருடா‌"

கதிரிடம் ஒரு காரணத்தை சொல்லி விட்டு இன்றைக்கு வரும் போது பணத்துடன் வருவது என்ற முடிவுடன் தன் பணிக்கு அதுதான் திருட்டு தொழிலுக்கு கிளம்பிவிட்டாள் வீரசுந்தரி.

அது ஒரு முக்கிய பேருந்து நிறுத்தம். மக்கள் கூட்டம் எப்போதும் ஜேஜேவென இருக்கும்‌. அருகிலேயே ஒரு ஏ.டி.எமும் இருக்க இன்று நினைத்து வந்த காரியம் வெற்றி பெற்றுவிடும் என்று எண்ணிய வீரா அங்கேயே தன் ஜாகையை போட்டு விட்டாள்.

அவள் சாதாரணமாக நடமாடினாலும் இரண்டு ஜோடி கண்கள் அவளை சந்தேகத்துடனே பார்த்து வைத்தது.

'என்ன இத்தனை பேத்துட்ட அடிச்சும் ஆயிரம் தான் தேறி இருக்கு. ரொம்ப நேரம் இங்கையே இருந்தாலும் சந்தேகம் வர சான்ஸ் இருக்கு. என்ன பண்றது'

வீரா மனதிற்குள் யோசித்தபடியே சுற்றி சுற்றி பார்த்து ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அப்போது ஏ.டி.எம்மில் பணம் எடுத்த ஒரு நபர் பந்தாவாக தன் கையில் வைத்திருந்த பணத்தை எண்ணிக் கொண்டே வெளியே வந்தான்.

அவனோடு சேர்ந்து தானும் அதை வாய் அசைத்து எண்ணிப்பார்த்தாள் வீரா. 'என்னாது ஐம்பதாயிரமா!' என்று ஆனந்த அதிர்ச்சி அடைந்த வீரா

'செம்ம வேட்டை இதை பெர்பெக்டா கரெக்ட் பண்ணுறோம்! பிண்ணுறோம்!' என மனதிற்குள் எப்படி அதை அடிப்பது என பிளான் போட துவங்கினாள்.

அதே நேரம் அவளை கவனித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு ஜோடி விழிகளும் இதை பார்த்து விட்டன. அதில் ஒரு ஜோடி விழிகள் அவள் எப்படி அந்த பணத்தை அடிக்க போகிறாள் என ஆர்வமாக பார்த்தது என்றால்,

மற்றொரு ஜோடி விழிகளோ நீ செய் அதற்கு பின் இருக்கு கச்சேரி என்று பார்த்திருந்தது.

அந்த ஆள் பணத்தை பர்சில் வைத்து தன் பின் பாக்கெட்டில் வைத்துவிட்டு அவன் வாகனத்தை நோக்கி போகும் நேரம் அவனின் பின்னாலையே சென்ற வீரா

லாவகமாக அந்த பர்சை அடித்து அதிலிருந்து பத்தாயிரம் ரூபாயை மட்டும் எடுத்துவிட்டு மீதம் இருந்ததை அந்த பர்சிலே விட்டுவிட்டு அதை அந்த நபரின் பாக்கெட்டிலே மீண்டும் வைத்துவிட்டாள்.

அதை தூரத்தில் இருந்து பார்த்த இரண்டு ஜோடி கண்களும் 'சபாஷ்! இந்த பொண்ணு செம டேலண்டட் தான்' என்றும்

'நீ இவ்ளோ பெரிய கேடியா. இருடி இந்தா வரேன். வந்து உன்னை கையும் களவுமா மாட்டி விடுறேன்' என இரண்டு விதமாக நினைத்துக் கொண்டது.

அந்த பணத்தை எடுத்த ஆள் சரியாக வண்டியில் ஏறும் நேரம் ஒருவன் வந்து "சார் நீங்க ஏ.டி.எம்ல பணம் எடுத்துட்டு தானே போறீங்க?" என்று கேட்க

அந்த ஆள் அவனை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்து வைத்து "அது எதுக்கு உங்களுக்கு. நீங்க எதுக்கு இதையெல்லாம் கேக்குறீங்க" என பதில் கேள்வி கேட்டான்.

"அது எதுக்கு சார் உனக்கு. நீ உன் பர்ச எடுத்து பாரு அதுல காசு இருக்காது" தைரியமாக கூறி அங்கேயே நிற்க அதிர்ந்து போன அந்த நபர் வேகமாக பர்சை எடுத்து பார்த்தான்.

அதில் அவன் வைத்த பணம் இருக்க குறைந்த பணத்தை கவனிக்காது "யோவ் மரியாதையா போயிரு. இப்படிலாம் சொல்லி என் பணத்தை அடிச்சிட்டு போலாம்னு நினைக்கிறியா" என திட்டப்போக அங்கே கூட்டம் கூடி விட்டது.

"என்ன சார் என்ன பிரச்சினை" என ஆளாளுக்கு வந்து கேட்க வீராவிற்கு திக்கென்றது. ஏனெனில் வீராவை மாட்டிவிட சென்ற ஆள் அவளுக்கு நன்கு தெரிந்தவனே.

அவன் பெயர் பிரகாஷ். ஏற்கனவே வீராவிடம் ஒருமுறை வம்பு செய்து தர்ம சாத்து வாங்கியுள்ளான். அதற்கு அவளை பழிவாங்கவே இப்போது அவளை மாட்டிவிட நினைத்தான்.

வீராவை பார்த்துக் கொண்டே "சார் நீ பணத்தை எண்ணி பாரு சார் அது கொறஞ்சு போயிருக்கும்" என்று கூறிவிட

அந்த ஆளும் பணத்தை எடுத்து எண்ணி பார்த்தான். பிரகாஷ் சொன்னது போலவே அதில் பத்தாயிரம் குறைந்திருக்க திடுக்கிட்ட அந்த ஆள் "யோவ் என்னயா காச நீ திருடிட்டியா" என்று கத்த ஆரம்பிக்க

பிரகாஷோ "இல்ல சார் நான் எடுக்கல. ஆனா யார் எடுத்தான்னு நான் பாத்தேன்" என்று ஆரம்பிக்க வீராவிற்கு தலையே சுற்றி விட்டது‌.

அங்கே பிரகாஷோ "எடுத்தது யாருன்னு சொன்னா நீங்க எல்லாம் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க. ஏன்னா அடிச்சது ஒரு பொண்ணு" என்று ராகம் பாட

அவன் சட்டையை பிடித்த அந்த ஆள் "யோவ் ஒழுங்கா யாருன்னு சொல்லு" என கடுப்பாய் கேட்க அதற்கு மேல் தாமதிக்காமல் வீராவை காட்டி "இந்த பொண்ணு தான் சார்" என்று நேக்காக கோர்த்து விட்டான்.

அதை கேட்டு அதிர்வது போல் ஒரு ஆக்டிங்கை போட்ட வீரா "சார் நான்லாம் டீசன்டு பேமிலில பொறந்த பொண்ணு சார். அந்த பொறுக்கி பய பேச்சை கேட்டு நீங்க எப்படி என்னை சந்தேகப்படலாம்" என்று சண்டைக்கு இழுத்தாள்.

"சார் அவ இப்புடி எதாவது பேசி டபாய்க்க பார்ப்பா. நீ அதை கண்டுக்காம போலீசுக்கு போன போடு சார். அவங்க வந்து ரெண்டு தட்டு தட்டுனா எடுத்த காச தந்துருவா"

வீராவை பார்த்து பி.எஸ்.வீரப்பாவை போல் சிரித்தபடி பிரகாஷ் போட்டுக் கொடுக்க வீராவும் நானும் அசத்தவள் இல்லை என்பது போல் சிறிது நேரம் வேண்டும் என்றே சண்டையிட்டாள். அப்படியே தப்பிவிடலாம் என்ற நோக்கில்.

ஆனால் அதற்குள் வேறு யாரோ நூறுக்கு அழைத்திருக்க சண்டை நடக்கும் போதே காவல்துறை என்ட்றீ கொடுக்க சத்தம் குறைந்தது.

"என்ன என்ன பிரச்சினை" காக்கி உடையில் சூரி கெட்டப்பில் ஒருவர் வந்து நிற்க கூட்டத்தில் யாரோ "இவன் யார்ரா ஓனானுக்கு சட்டை பேண்ட் போட்டுட்டு வந்துருக்கான்" என கலாய்க்க

அதை யாரும் கவனிக்கவில்லை. அங்கு நடந்த பிரச்சினைகளை அந்த ஏ.டி.எம் ஆள் கூறிவிட "சார் இவங்க வேணும்னே என் பழிய தூக்கி போடுறாங்க.

நான் அப்படிலாம் பண்ணவே இல்ல. நான் அந்த மாதிரி பொண்ணும் இல்ல சார்" என்று பாவம் போல் முகத்தை வைத்து கூறினாள். ஆனால் மனதிற்குள் திக் திக் என்று தான் இருந்தது.

ஆளாளுக்கு ஒவ்வொன்று மீண்டும் பேச வீரா அவர்களுடன் சண்டையிட என மறுபடியும் சண்டை ஆரம்பிக்க "ஸ்டாப் இட். யோவ் நிறுத்துங்க" என வந்த போலீஸ் லத்தியை பிடித்து எக்கியபடி பேச அனைவரும் அமைதியாகினர்.

"எம்மா நீ என்னாம்மா பஜாரி மாதிரி கத்துற. கொஞ்ச நேரம் சும்மா இருமா. இந்த பிரச்சினைய நானே முடிச்சி விடுவிடுறேன். அதுக்கு எம்மா பொண்ணே நீ உன் பைய குடு"

"இங்க பாருங்க சார் என் காச இந்த நாதாரி அவன் காசுன்னு சொன்னா என்ன பண்றது. என் காச அவனுதுன்னு தர மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடு நான் என் பைய தரேன்" அந்த போலீசிடம் தன் கையை நீட்டியவாறு நின்றாள் வீரா.

'இது என்னடா இது' என்று நொந்த அந்த சூரி போலீசும் "எம்மா சத்தியம் பண்றேன்மா. போதுமா" என அவன் கையில் அடித்து சத்தியம் செய்த பிறகே தன் கைப்பையை தந்தாள்.

அதை ஆராய அனைவரும் ஆர்வமாக அங்கே பார்த்தனர். ஆனால் அதில் ஆயிரம் ரூபாய் தான் இருந்தது. அதை அனைவருக்கும் காட்டியது போலீஸ்.

"இது எப்படி அவ எடுத்தத நான் பாத்தனே" என்று மண்டை காய்ந்தது பிரகாஷூக்கு. "ஹப்பாடா" என்று பெரு மூச்சு விட்டுக் கொண்ட வீரா

"சார் எனக்கு என்னவோ எல்லாரையும் இப்படி திசத்திருப்பி திருட இந்த பரங்கிக்கா மண்டையன் போட்ட பிளான் இதுன்னு தோனுது. எதுக்கும் அவன புடிச்சு விசாரிங்க"

போகிற போக்கில் வீரா பிரகாஷை கோர்த்துவிட்டாள். இப்போது அனைவரையும் திரட்டிய பிரகாஷை பார்த்து ஸ்லோ மோஷனில் கூட்டம் திரும்ப 'என்ன மொத்த கூட்டமும் நம்மல ஒரு மாதிரி பாக்குது' என பதறினான் அவன்.

அவனை அமுக்கி பிடித்த போலீஸ் அவன் அனைத்து பொருட்களையும் சோதனை போட பத்தாயிரம் ரூபாய் அவன் பாக்கெட்டில் இருந்தது.

"பிளடி பக்கெட் நீ திருடிட்டு அந்த அப்பாவி பாப்பா மேல பழிய போட பாக்குறியா" என சூரி அவன் மூஞ்சியிலேயை ஒரு குத்துவிட அடி இடி போல் விழுந்தது‌.

கூட்டமும் அவனை சேர்ந்து குமுற "ஹே அப்படி போடே போடே" பேக்கிரவுண்டில் பாட்டை போட்டு வீரா எஸ் ஆகிவிட்டாள்.

சிறிது தூரம் ஓடி சென்று நின்ற வீரா புன்னகையுடன் தன் அருகே நின்ற நபரை பார்த்து "தேங்க்ஸ் அங்கிள்" என்றாள்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 8

"நாட்டாம தீர்ப்பை மாத்து....!" என்று ஒரு குரல் கேட்க பழைய துருப்பிடித்த பீரோ கதவை திறந்தது போல் தன் தலையை மெதுவாக திருப்பினார் கார்மேகம்‌.

"டேய் இங்க என்ன பஞ்சாயத்தா நடக்குது. ஏன்டா அந்த மனுஷன கடுப்பேத்துற" கடுமையாக முறைத்துக் கொண்டிருந்த கார்மேகத்தின் மனைவி அலமேலு பேசிய தன் மகனை கடிந்தார்.

"பின்ன என்னா ம்மா. உன்ற புருஷன் சுத்த சூனியமா பேசிட்டு இருக்காரு‌‌. அந்த ஆளு அதான் உன் அண்ணன் என் மாமன்காரன் ஊரை விட்டு ஓடி எத்தனை வருஷம் ஆகுது. இனி தான் வந்து அந்த வீட்டை சொத்தை எல்லாத்தையும் உரிமைக் கொண்டாடப் போறாரா.

இன்னும் சொல்லப்போனா அவரு உசுரோட இருக்காரா இல்ல பரலோகம் போயிட்டாரான்னே தெரியலை. இதுல அவரு இந்த சொத்த கேக்க மட்டும் வரப்போறாராக்கும்"

கடுப்பில் பேசிய தன் மகன் மாதவனை பார்த்து பல்லை கடித்த கார்மேகம் அவனை விடுத்து இப்போது தன் மனைவியை பார்த்து கத்தினார்.

"இங்க பாரு அலமேலு உன் புள்ள பேசறது சுத்தமா சரியில்லை. உங்க அப்பாரு அவரு சொத்த சமமா பிரிச்சு உனக்கும் உன் அண்ணனுக்கும் எழுதி வச்சிட்டு ஊரை விட்டு ஓடுன உன் அண்ணன் திரும்பி வந்தா அதை எல்லாம் பத்திரமா தர வேண்டிய பொறுப்பை என்கிட்ட தந்திட்டு செத்து போனாரு. அதை நிறைவேத்த வேண்டியது என் கடமை. அதுனால அந்த வீடு சொத்து எதுலையும் உன் புள்ள கண்ணு போவக்கூடாது சொல்லிட்டேன்"

கார்மேகம் உறுமலாக பேசி முடித்துவிட்டு தன் துண்டை உதறி தோலில் போட்டுக் கொண்டு வெளியேறினார். போகும் அவரையே கடுப்பாக முறைத்துக் கொண்டிருந்தான் மாதவன்.

"எம்மா ஓடிபோன என் மாமன் கூட இந்த சொத்த இப்படி பாதுகாக்க மாட்டாரு மா. ஆனா உன் புருஷன் இருக்காரு பாரு. எல்லாரும் பெத்த புள்ளைக்கு சொத்து சேக்க தான் நினைப்பாங்க. இங்க என்னடான்னா எல்லாம் தலைகீழா இருக்கு" மாதவன் தான் புலம்பி தள்ளினான்.

"ஏன்டா மாதவா அதான் நம்ம சொத்தே அவ்ளோ கெடக்குதேடா. இதுல என் அண்ணனோட சொத்து எதுக்குடா. வீனா உன் அப்பாரோட சண்டை போடாம இருக்கிறத வச்சு ஒழுங்கா பொழைக்க பாரு"

அலுமேலு கணவனுக்கு ஏற்ற மனைவியாக வரி மாறாமல் பேசிவிட்டு செல்ல, எதுவும் பேச முடியாது பல்லை கடித்து நின்றது என்னவோ மாதவன் தான்.

'ச்சே ஊரு உலகத்தில இல்லாத அப்பா அம்மா எனக்கு தான் கிடைச்சிருக்காங்க. அந்த வீட்டுல என்ன இருக்குன்னு கூட தெரியாம தத்தியா இருக்குதுங்க. இவங்கல வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது' என தலையில் அடித்துக் கொண்ட மாதவன்,

'ஆனா யார் என்ன செஞ்சாலும் அந்த வீட்ட மட்டும் நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன். எவன் எனக்கு போட்டிக்கு வரான்னு நானும் பாத்துக்கிறேன்' என்று கறுவியபடி சென்றான்‌.

மாதவன் கார்மேகம் மற்றும் அலமேலு தம்பதியின் ஒரே மகன். இவர்கள் குடும்பம் வத்தலக்குண்டில் பெரும் பேறுடன் செல்வ செழிப்பில் இருக்கும் குடும்பமே. சிம்பிளாக நாட்டைமை வீடு என்று ஊரில் உள்ளவர்களால் செல்லமாக சில நேரம் பொறாமையாக அழைப்படுபவர்கள் இவர்கள்.

மேலும் உதவி என்று வருவோர்க்கு இல்லை என சொல்லாமல் அள்ளி தரும் வள்ளல் கார்மேகம் மற்றும் அலமேலு. அதனால் ஊராருக்கு சற்று பிடித்த குடும்பமும் கூட.

வீட்டிற்கு ஒருவர் இதற்கு எல்லாம் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்ற சட்டத்தின் பேரில் பெற்றோருக்கு எதிர்ப்பதமாய் இருப்பவனே மாதவன். இங்கே கார்மேகம் தன் சொத்துகளையே ஊருக்கு வாரி வழங்க,

மாதவனோ அவன் தாயின் சகோதரனின் சொத்துக்கு அடிப்போட்டு கொண்டுள்ளான். அதுவும் அந்த வீட்டில் எதுவோ ஒன்று இருக்கிறது என ஊரார் கதை வேறு கட்டியிருக்க அதை எப்படியாவது அடித்து தனக்கு உரிமையாக்கிக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்கிறான் மாதவன். பார்ப்போம் அவனது முயற்சிகள் வெற்றி அடையுமா என!

-----------------------------

இங்கே கூட்டத்தில் பிரகாஷை போலீசில் வசமாக மாட்டிவிட்டு நிற்காமல் ஓடி வந்து ஒரு இடத்தில் மூச்சு வாங்கி நின்ற வீரா தன் அருகில் இருந்த உருவத்தை கண்டு "தேங்க்ஸ் அங்கிள்" என நன்றி உரைத்தாள்.

அவளை பார்த்து ஈஈ என பல்லை காட்டிய அந்த உருவமும் "பரவாயில்ல பாப்பா" என்றது பெரிய மனதுடன்.

வீராவோ இந்த நபர் வராது போயிருந்தால் தான் இன்று எப்படியும் சிக்கி இருப்பது நிச்சயம் என்று உணர்ந்தே இருந்தாள். அவளது நினைவுகள் ஒரு மணி நேரத்திற்கு முன் சென்றது.

பிரகாஷ் பிரச்சினை செய்ய ஆரம்பித்த நேரம், இனி எல்லாம் அவ்வளவு தான் தனக்கு தான் தர்ம அடி என்று வீரா எண்ணிய நேரம், அவள் அருகே யாரோ வந்து அவள் கையை சுரண்டினர்.

வீரா திரும்பி பார்க்க அங்கே முப்பத்திரண்டு பல்லையும் காட்டியபடி நின்றிருந்த ஒரு நபர் "அந்த காச சீக்கிரம் எடுமா பாப்பா. இல்ல நீ மாட்டிப்ப" என்று கூற

"எ.. எந்த காசு" அரண்டு போய் வீரா கேட்டாள். "பாப்பா நீ என்ன செஞ்சன்னு நான் பாத்துட்டேன். அதனால ஓவரா நடிக்காம நீ அடிச்ச பணத்தை எடு. நான் உன்ன இங்க இருந்து காப்பத்தி விடுறேன்" என்றிட

அந்த உருவத்தை நம்பவும் முடியாது நம்பாமலும் இருக்க முடியாது நின்றிருந்தாள் வீரா.

அதே நேரம் இந்த விஷயம் போலிசுக்கு தகவலாய் போய்விட, அதற்கு மேல் பேசாது வீராவும் அடித்த பணத்தை சமர்த்தாக எடுத்து நீட்டி விட்டாள்.

"அங்கிள் இந்த பணத்தை கூட மொத்தமா நீங்களே வச்சுக்கோங்க. ஆனா என்ன போலீஸ்ல மட்டும் கோர்த்தூட்டு போயிராதீங்க அங்கிள்"

வீரா பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அந்த நபரை தாஜா செய்ய "நீ அமைதியா இரு பாப்பா நான் பாத்துக்கிறேன்" என வசனம் பேசி நகர்ந்தார் அந்த நபர்.

அதை வாங்கிய பின் அந்த நபர் நைசாக அங்கே பிரகாஷ் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு அமைதியாக நின்றுக் கொண்டார்.

அதுவரை ஒருவித திகிலுடன் நின்றிருந்த வீராவுக்கு அதை பார்த்த பின்பு தான் உயிரே வந்தது. இனிமேல் யார் வந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என துணிந்து நின்றாள். அதன்பின் நடந்தது நாம் அறிந்ததே.

"அதை விடு பாப்பா நீ என்ன பண்ற. பேஷனுக்கு திருடுரியா இல்லை புரபஷனா திருடுரியா"

நன்றி சொன்ன வீராவிடம் அந்த நபர் எதிர் கேள்வி கேட்க முழித்தாள் வீரா.

"அது வந்து அங்கிள்..." என இழுத்து நிறுத்தியவள் "பேஷன்னு சொல்ல முடியாது ஆனா புரபஷன்னு சொல்லலாம் அங்கிள்" என்று தயங்கியபடி முடித்தாள்.

அவள் கூறியதை கேட்டு அவர் அதிர்வார் என வீரா பார்க்க அந்த நபரோ "வாவ் சூப்பர் பாப்பா. செம த்ரில்லான வேலை" என பாராட்ட வீரா தான் குழம்பி போய் பார்த்தாள்.

"அம்மாடி நடந்தது ஓடுனதுனு உனக்கு டையர்ட் ஆகிருக்கும். பக்கத்து தெருவுல தான் என் வீடு இருக்கு. என்கூட வாமா பாப்பா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போவ" என்று வாஞ்சையாக அவர் அழைக்க

"அதெல்லாம் வேணாம் அங்கிள். நேரமாயிருச்சு என் தம்பி எனக்காவ காத்திட்டு இருப்பான்" என்று வீரா தனியே கழன்று கொள்ள பார்த்தாள்.

"என்னம்மா பாப்பா நான் எவ்ளோ ஆசையா கூப்பிடுறேன். என் வீட்டுக்கு வரமாட்டியா. உன்னை பார்த்தா என் புள்ள வயசு தான் இருக்கும்னு தோணுது. நீ வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். வா பாப்பா" என்று பாவமாக அழைத்தார்.

அவர் அவ்வளவு கெஞ்சி கூப்பிடவும் "சரி வரேன் அங்கிள்" என்று ஒத்துக் கொண்டு தானும் அவரோடு சென்றாள் வீரசுந்தரி.

அந்த வீட்டின் முன்னே சென்று நின்ற வீரா நினைத்தது இதுதான் 'நல்ல பெரிய வீடுதான். இந்த அங்கிள் இவ்ளோ பெரிய பணக்காரரா'.

"உள்ள வாமா. அப்படியே அந்த காலிங் பெல்லை அழுத்தி விடுமா" என்ற குரல் வந்தவுடன் "ம்ம் ஓகே அங்கிள்" என தானும் வந்த வீரா அழைப்பு மணியை அழுத்தினாள்.

"இதோ வந்துட்டேன்" ஒரு ஆணின் குரல் உள்ளே இருந்து கேட்க 'அங்கிளோட பையன் போல' என்று மட்டும் எண்ணி கொண்டு நின்றாள் வீரா.

கதவை திறந்த வாலிபன் அங்கே நின்றிருந்த அந்த மனிதரையும் வீராவையும் குழப்பமாக பார்த்துவிட்டு "யார் வேணும்" என்றான் புருவ முடிச்சுடன்.

'வீடு எதுவும் மாறிப் போய் வந்துட்டமா. இந்த ஆள் என்ன இப்படி பாக்குது' என்று வீராவிற்கு தான் குழப்பமாக இருந்தது.

"இவன் ஒருத்தன் சும்மா நைய்யிநைய்யின்னு. போட அங்கிட்டு. நீ ஒன்னும் கண்டுக்காத பாப்பா இவன் என் பையன் தான். நீ உள்ள வாமா" என அவர் உள்ளே நுழைய அங்கே நின்ற அவர் பையனோ அவரை அதிர்ச்சியாக பார்த்து வைத்தான்.

"ஆமா பாப்பா உன்னை பாப்பான்னே கூப்பிடுறேனே உன் பேர் என்னம்மா?" என்று முடிவில் கேட்க 'ஷப்பா இப்பவாவது என் பேரை கேட்டாரே' என எண்ணிய வீரா

"என் பேர் வீரசுந்தரி அங்கிள். எல்லாரும் வீரான்னு கூப்பிடுவாங்க. ஆமா உங்க பேர் என்ன அங்கிள்" என்றாள்.

"வீரசுந்தரியா பேரே நல்லா வீரமா இருக்கேம்மா. சூப்பர் சூப்பர்" என சிலாகித்து கூறியவர் "என் பேர் அரவிந்த் வீரா" என்றார் கெத்தாய்.

"இவன் என் பையன் சித்தார்த்மா" ஓரமாய் இங்கே நடப்பதை ஏதோ அதிசயத்தை போல் பார்த்துக் கொண்டிருந்த சித்துவை காட்டி சொன்னார் அரவிந்த்.

"ஓஓ நல்ல பேரு அங்கிள்" என்ற வீராவுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. எனவே அமைதியாக இருக்க அரவிந்தே தொடர்ந்தார்.

"உனக்கு அப்பா அம்மா இருக்காங்களா?"

"எனக்கு அப்பா அம்மாலாம் இல்ல அங்கிள். ஆனா ஒரு தம்பி இருக்கான். பேரு கதிர்‌. அவன படிக்க வைக்க தான் நான் இவ்ளோ கஷ்டப்படுறேன் அங்கிள்"

அரவிந்த் கேள்விகளுக்கு வீரா பதில் சொல்லி கொண்டிருக்க 'இங்க என்னடா நடக்குது. என் நைனா இந்த பொண்ணு கண்ணுக்கும் தெரியிறார் போலையே. ஆனா எப்படி' என சித்து குழப்பத்துடன் பார்த்திருந்தான்.

பேசி முடித்த வீரா அந்த வீட்டை சுற்றி தன் பார்வையை ஓட்ட அங்கே அரவிந்தின் படத்திற்கு மாலை போடப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

அதில் அதிர்ந்து போன வீரா அப்போது வரை அவர் முகத்தை மட்டும் பார்த்ததை விடுத்து மெதுவாக அவர் கால்களை பார்க்க அது அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.

தான் கண்டது கனவா நினைவா என்று கண்களை மீண்டும் தேய்த்து கொண்டு பார்த்த வீராவுக்கு மிதக்கும் அரவிந்தே தெரிய உச்சக்கட்ட அதிர்வில் மயங்கி சரிந்தாள்.

"என்னடா இது இந்த பொண்ணு பொசுக்குன்னு மயங்கிருச்சு. டேய் மவனே வந்து என்னாச்சுன்னு பாருடா" என்று அரவிந்த் கத்த

"ஏன் ப்பா செத்தும் என் உயிர வாங்குற. யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து இங்க வச்சு சாவடிக்க பாக்குரியா" கடுப்பில் கத்திய சித்துவும் தன் விதியை நொந்தபடி வீராவின் அருகில் சென்றான்‌.

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 9

"ஐயோ பாவம்! யாரு பெத்த புள்ளையோ. இப்படி என் வீட்ல வந்து மயங்கிருச்சே. டேய் மகனே மூச்சு பேச்சு இருக்கான்னு கொஞ்சம் பாருடா" அரவிந்த் சித்துவிடம் புலம்பி தள்ள

"கொஞ்சம் உன் வாய மூடிட்டு நில்லு ப்பா. உட்டா நீயே கொன்னுருவ போல. மூச்சுலாம் இருக்கு எதோ அதிர்ச்சியில மயங்கின மாதிரி தான் இருக்கு" என கடுகடுத்தான்.

"எம்மா பொண்ணே! நான் பேசுறது கேக்குதா எழுந்துருமா" சித்து பதட்டத்துடன் வீராவை எழுப்ப

"சித்து என்னடா ராப்பிச்சைக்காரன் மாதிரியே அம்மா தாயேன்ங்குற. அதான் வீரசுந்திரினு எவ்ளோ அழகான பேர சொன்னுச்சு அந்த பொண்ணு ஒழுங்கா பேரை சொல்லி எழுப்புடா"

அரவிந்த் வேறு இடையில் புகுந்து சித்துவை வெறுப்பேற்றினார். அதில் தலையை திருப்பி அரவிந்தை சித்து முறைத்து வைக்க வாயை மூடிக் கொண்டார் மனிதர்.

பின் சித்து தண்ணீர் தெளித்து எழுப்ப சிறிது நேரத்தில் எழுத்துக் கொண்டாள்‌ வீரா. எழுந்தவுடன் திருதிருவென முழித்திருந்த வீரா அரவிந்த் மற்றும் சித்துவை அதிர்ச்சியுடனும் பயத்துடன் பார்த்து வைத்தாள்.

"ஏங்க என்ன ஆச்சு. ஏன் திடீர்னு மயங்கீட்டீங்க"

சித்துவிற்கு ஓரளவு காரணம் புரிந்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் கேட்டான்‌. அவன் எண்ணியது போலவே வீரா எச்சிலை கூட்டி விழுங்கியபடி

"இ.. இவர் உங்க அ.. அப்பா அங்க போட்டோ மா.. மாலை" என திணறினாள்.

இப்போது அரவிந்திற்கும் அவள் ஏன் மயங்கி விழுந்தாள் என்று புரிந்தது. "ஐயோ வீராமா அது அங்கிளோட போட்டோ தான்‌. நான் செத்துப் போய்ட்டேன்மா. அதான் அதுக்கு மாலை போட்டு விளக்கு ஏத்தி வச்சிருக்கான் என் பையன்" என சோகம் போல் சொல்லி முடித்தார் அரவிந்த்.

அவர் கூறியதை கேட்டு இன்னும் அதிர்ந்த வீரா இப்போது பயத்தில் சித்துவின் கைகளை இறுக்கமாக பற்றியபடி அவனுடன் ஒன்றிக் கொண்டாள்.

அவள் முகத்தில் இருந்த அதீத பயத்தை பார்த்து அவளை இன்னும் பதட்டப்பட வைக்காமல் அரவிந்த் பொறுமையாக பேசினார்.

தான் இறந்து போனது அது தெரியாமல் அவர் ஊர் சுற்றி வந்தது அதன்பின் அவர் இறந்ததை கண்டு அவரே அதிர்ந்தது என அனைத்தையும் எதோ கதை போல் கூறினார்.

"வீரா என் புள்ள அவ்ளோ பாசக்காரன்னு எனக்கு அதுவரை தெரியவே இல்லை. இவன் ஐய்யோ அப்பா என்ன விட்டு போய்டியேனு அழுத அழுகைல போனா போகுதுன்னு இவனுக்கு நான் தரிசனம் தந்துட்டு இருக்கேன்" என்று அரவிந்த் பேச

"அதான் எதுக்குங்குறேன். நீ செய்ற திருட்டு வேலை ஆகாத போவத வேலைனு எல்லாத்தையும் என் தலைல கட்ட தானே" என இடைப் புகுந்தான் சித்து.

"போடா போக்கத்தவனே. உனக்கு என் அருமை தெரியலைடா மவனே. ஒரு நாள் என் பெருமைய நீ என்ன இந்த ஊரு உலகமே பேசும் பாரு"

"ஆமா உயிரோட இருக்கும் போதே நீ செஞ்சு கிழிச்சுட்ட. இப்ப செத்ததுக்கு அப்புறமா தான் எல்லாம் செய்ய போறியா. யோவ் தகப்பா எதாவது அசிங்கமா சொல்லிட போறேன்"

எங்கையோ ஆரம்பித்த அரவிந்தும் சித்துவும் கடைசியில் சண்டையில் வந்து நிற்க, இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்த வீரா "போதும் நிறுத்துங்க" என கத்தியிருந்தாள்.

"டேய் லூசு பய மவனே நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம். வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்திருக்கே அதுவும் மயங்கி வேற விழுந்திருக்கு. அதுக்கு என்ன வேணும் ஏது வேணும்னு உபசரிக்க துப்பு இல்ல. என்கிட்ட பாஞ்சுக்கிட்ட வர. போ போ வீராக்கு குடிக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா

டேய் போறதும்தான் போற அப்படியே எனக்கு ஒரு டம்பளர் ஜூஸை கொண்டாடா. இந்த ஆப்பிள் இருந்தா அதை ஜூஸ் போட்டு கொண்டுவாடா. உன்கிட்ட பேசி பேசி என் தொண்டை வரண்டு போயிருச்சு"

அரவிந்த் இடையில் பேசிய பேச்சில் கடுப்பான சித்து "செத்தும் என் உயிர வாங்குதே இந்த ஆளு. யோவ் தகப்பா ரொம்ப ஓவரா போற உன்ன பேசிக்கிறேன்யா" சித்து கறுவியவாறே ஜூஸ் போட சென்றான்.

"அவன் கெடக்குறான்மா தடிமாட்டு தண்டம். அவனுக்கு டிசிப்பிலின் பத்தலை. அதான் வேற ஒன்னும் இல்ல. கழுதைய அடிச்சு வளக்காம விட்டுட்டேன். அதனால அதை விடுமா. அவனை எல்லாம் நீ கண்டுக்காத பாப்பா"

அரவிந்த் பேசியதை கேட்டு சித்துவிற்கு கடுகடுவென வந்தது என்றால் சிரிப்பு வந்துவிட்டது வீராவிற்கு. அதில் புன்னகைத்த வீரா

"அங்கிள் எனக்கு ஒரு டவுட். நீங்க உங்க பையன் கண்ணுக்கு தெரியறீங்க ஓகே. ஆனா என் கண்ணுக்கு எப்படி‌ தெரியறீங்க"

இப்போது சற்று பயம் நீங்க பெற்ற வீரா தன் சந்தேகத்தை அரவிந்திடம் கேட்டாள்.

"அதுவாமா முதல் தடவை உன்னை அங்க பஸ் ஸ்டாப்ல பார்த்த போதே உன்னோட டேலன்ட்ல நான் இம்ப்ரஸ் ஆகிட்டேன் பாப்பா. நீ எப்படி அந்த பணத்தை ஆட்டைய போட்டு எஸ் ஆக போறேன்னு நான் பாத்துட்டே இருந்தேன். அப்பதான் அந்த பைய கூட்டத்தை கூட்டிட்டான். அதான் உனக்கு உதவி பண்ண உன் கண்ணுக்கு தெரியற மாதிரி வந்தேன்"

அரவிந்த் அனைத்தையும் சொல்லி முடித்தும் வீரா "ஓஓஓ.. தேங்க்ஸ் அங்கிள்" என்றாள்.

உள்ளே இருந்து ஜூஸ் எடுத்து வந்த சித்துவோ 'என்னாது திருடியா..' எனறு அதிர்ந்து போய் நின்றுவிட்டான்.

"சரி பாப்பா உன்னை பத்தி சொல்லு. எதுக்கு இன்னைக்கு பணம் அடிக்க பார்த்த. அந்த பணம் எடுக்க முடியலைனதும் உன் முகம் வாடி போயிறுச்சே என்ன ஆச்சு"

அரவிந்த் கேட்கும் நேரம் சித்து ஜூஸை கொண்டு வர அதை எடுத்து வீராவிடம் கொடுத்தபடி என்ன நடந்தது என கேட்க சிறிது தயங்கினாள் வீரா.

"என்ன மா வீரா என்கிட்ட சொல்ல மாட்டியா‌. என்ன உன் மாமாவா நினைச்சு சொல்லுமா"

என்று அரவிந்த் கூறி நிறுத்த அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்து அவரை பார்த்தான் சித்து. இத்தனை வருடம் தன் தந்தையோடு குப்பை கொட்டியதில் அவரை பற்றி அறியாதவனா சித்து.

அவர் எங்கு சுற்றி எங்கே வருவார் என்றுகூடவா தெரியாது. எனவே 'சித்து இந்த மனுஷன் பேசுற டோனே சரியில்லை சிக்கிடாதடா' என தனக்கு தானே எச்சரிக்கை செய்து கொண்டான்.

ஆனால் பாவம் அவன் எவ்வளவு எச்சரிக்கையாய் இருந்தாலும் அவன் தந்தை அவர் நினைப்பதை கச்சிதமாக முடித்து விடுபவர் என்று அந்த நிமிடம் மறந்து விட்டான் சித்து.

சற்று தயங்கிய வீராவும் மெதுவாக தான் தினமும் எவ்வளவு திருடுவது என்ற அவள் வைத்திருக்கும் கொள்கை, இப்போது தம்பிக்காக பணத்திற்கு அலைவது என அனைத்தையும் கூறினாள்.

'மேய்கிறது எருமை இதுல பெருமை' என‌ கவுண்டர் கொடுத்துக் கொண்டான் சித்து மனதிற்குள் தான். பின் வாயை திறந்து யார் அரவிந்திடம் பல்ப் வாங்குவது. எனவே மௌனமாக அவர்கள் இருவரின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தான்.

"சரிமா வீரா நாளைக்கு பணத்தை ரெடி செஞ்சிடறேன்னு உன் தம்பிட்ட சொல்லிட்டு வந்துட்டியே. இப்ப பணத்துக்கு என்ன செய்ய போற"

"அதுதான் தெரியலை அங்கிள். யோசிசிட்டு இருக்கேன்"

வீராவோடு சேர்ந்து தானும் யோசித்த அரவிந்த் அவர்களை குறுகுறுவென பார்க்கும் சித்துவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏதோ முடிவை எடுத்தவராய் சித்துவிடம் பேசினார்‌.

"டேய் மவனே ஒரு பத்தாயிரம் ருபீஸ் எடுத்து வாடா‌ வீராமாக்கு குடுக்கனும்"

அரவிந்த் சொல்லி நிறுத்திய நொடி சித்து குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் புறை ஏறிவிட்டது.

" நைனா என்னா சொன்ன" அதிர்ந்து போன சித்து அவசரமாய் மீண்டும் கேட்க

"காது செவுடா போயிருச்சாடா. போ போய் பத்தாயிரம் எடுத்துட்டு வா. நீதான் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிரியே. ஒரு பத்தாயிரம் அதுல தந்தா உன் புதையலு ஒன்னும் குறைஞ்சு போயிடாதுடா"

அரவிந்த் அவர் இஷ்டத்துக்கு பேசி சித்துவை பேசவே விடாது காசை வாங்கிக் கொண்டார்.

'இவரு பேச்சை கேக்கறதுக்கு பதிலா காசை தந்திட்டு போலாம்' என எண்ணியே சித்துவும் பணத்தை தந்தான்.

அதேநேரம் வீரசுந்தரி "ஐயோ அங்கிள் எனக்கு பணம் வேணாம் அங்கிள்" என்று தயங்க

"இந்த அங்கிள் தந்தா வாங்கிக்க மாட்டியா" என பாவமாக முகத்தை வைத்து இன்னும் பேசி பேசியே அவளை சமாளித்த அரவிந்த் அவள் கையில் பணத்தை திணித்து விட்டே ஓய்ந்தார்.

அப்படியே அது இதுவென பேசி அவள் எங்கிருக்கிறாள் என வீட்டு முகவரி அவள் கைப்பேசி எண் என அனைத்து விவரங்களையும் வாங்கி கொண்டே அவளை விட்டார் மனிதர்.

பணம் கிடைத்த நிம்மதியில் வீரா அவள் வீட்டிற்கு செல்ல எதுவோ பெரிதாக சாதித்த மிதப்பில் நின்ற அரவிந்தை புரியாது பார்த்து வைத்தான் சித்து.

"மவனே அந்த பொண்ண நல்லா பாத்துக்கிட்டியா"

அரவிந்த் கேட்ட கேள்வி எதற்கு என புரியாத போதும் 'ஆம்' எனும் விதமாய் சித்து தலை அசைக்க

"ரொம்ப நல்லதுடா மவனே. ஏன்னா உன்னோட வருங்கால பொண்டாட்டி அந்த பொண்ணு தான். அதனால இனிமே வேற புள்ளைங்கள பேருக்கு கூட நிமுந்து பார்க்கக்கூடாது சொல்லிட்டேன்"

சித்துவை எச்சரித்த அவன் தந்தை "என் மருமவ எவ்ளோ அறிவு அழகு திறமை. இந்த பய அவளுக்கு கொஞ்சம் கம்மின்னாலும் பெத்த புள்ளையா போய்ட்டானே. ச்சே அரவிந்து உன் செலக்ஷனே எப்பவும் சிறப்பா தான்டா இருக்கும்" என தன்னை தானே பெருமையாக புகழ்ந்து தள்ளியடி நகர்ந்தார்.

பாவம் தான் கேட்டவற்றில் அதிர்ந்து போய் நின்றது என்னவோ சித்து தான். அவன் மண்டைக்குள்ளோ "சோலமுத்தா போச்சா!" என்று வடிவேலு வேறு பேசி வெறுப்பேற்றிட தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் சித்து.

-----------------------------------

"டேய் மச்சான் உன் அப்பா என்னடா சொன்னாரு. நானும் வந்ததுல இருந்து கேட்டுட்டே இருக்கேன். நீ என்னடான்னு வாயவே திறக்க மாட்டேங்குற. இப்ப நீ பேசப்போறியா இல்லயா"

அமைதியாக தன் அருகே அமர்ந்திருந்த தன் நண்பன் மாதவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் ஷங்கர்.

"என்னத்தடா சொல்ல சொல்ற. என் அப்பன் தான் பழைய பஞ்சாங்கம் ரூல்ஸ் ராமானுஜம்னு உனக்கு தெரியாதா. என்ன சொல்லி இருப்பார். நமக்கு இருக்க சொத்து போதும் உன் மாமன் சொத்து எல்லாம் வேண்டாம்னு சொல்லுது அந்த ஆளு"

கடுப்பாக கூறிய மாதவனின் தோளில் தட்டிக் கொடுத்த ஷங்கர் "அவர் அப்படி சொல்றார்னு நீ விட்ராத மச்சான். அந்த வீட்டுல என்னமோ பெரிய புதையல் இருக்கு அது இருக்கு இது இருக்குன்னு ஊரே பேசிக்குது. அது உனக்கு வரனும்னு நான் ஆசைப்படுறேன். பாத்துக்கோடா நான் வரேன்"

தன்னால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் மாதவனை நன்றாக ஏற்றிவிட்ட ஷங்கர் அதன்பின்னரே அங்கிருந்து நகர்ந்தான்.

தன் நண்பன் கூறியது போல் அந்த வீட்டை எப்படியும் அடைய வேண்டும் என்று இப்போது இன்னும் தீவிரமாக எண்ணி அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான் மாதவன்.

அப்போது அவன் மூளைக்குள் சட்டென்று ஒரு எண்ணம் உதிர்க்க அதை அப்படியே செயல்படுத்த திட்டம் தீட்டினான் மாதவன்.

-ரகசியம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top