All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "வஞ்சிக்கொடியும்! வத்தலக்குண்டின் ரகசியமும்!!" கதை திரி

Status
Not open for further replies.

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 14

அன்று காலையிலே வானம் தூரல் வீசி மக்களை குளிர்வித்துக் கொண்டிருக்க அதை ரசித்தபடி தன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து அந்த குளிரை போக்கும் விதமாக தன் கையில் இருந்த காபியை உறிஞ்சி கொண்டிருந்தான் சித்து.

"காலைல இப்படி மழைச்சாரல்ல உக்காந்து காபி குடிக்கிறதும் ஒருமாதிரி நல்லா சுகமா தான்யா இருக்கு" என்றபடி அந்த காபியின் வாசனையை மூக்கின்வழி நன்கு இழுத்து வெளியே விட்டவன் "ம்ம்ம் ஆஹா... என்ன சுகம் என்ன சுகம்" என மீண்டும் காபியை குடித்தான்.

தன் பிள்ளை சுகமாக அமர்ந்திருப்பதை கண்டு வயிறு எறிந்து போய் பார்த்த அரவிந்த்

"வேலைக்கு போவாம தண்டச்சோறு தின்னாலும் அதை இப்படி பகிரங்கமாலாம் பண்ணக்கூடாதுடா மவனே"

என்றவாறு சித்துவின் இனிமையான நேரத்தை கெடுக்கவென வந்து குதித்தார் அவனின் தந்தை. அவர் பேசியதற்கு பதில் பேசாது தன்போக்கில் காபியை அவன் குடித்துக் கொண்டிருக்க

"என்னடா காது செவுடா எதுவும் போச்சா. உன் நைனா இங்க கத்திட்டு இருக்கேனே" மீண்டும் கத்தினார் அரவிந்த்.

"எல்லாம் கேக்குதுது கேக்குதுது. என்ன சொல்லனுமோ சொல்லிட்டு போ" காதை குடைந்தவாறு தன் பங்கிற்கு தானும் வெறுப்பேற்றினான் சித்து.

"என்னடா கொழுப்பு ஏறிப்போச்சா, வேலை போய் ஒரு மாசம் ஆகுதே இந்த ஒரு மாசத்துல வேற வேலை தேடுவோம் அப்புடின்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. என்னமோ மாமியார் வீட்டுக்கு வந்தமாதிரி ஜாலிய இருக்க"

அரவிந்த் மூச்சு விடாமல் பேசி நிறுத்த "இப்ப என்ன உனக்கும் ஒரு காபி வேணும். அதுக்குதானே இவ்ளோ பேசுற" என அரவிந்த் பேசியதற்கு பதிலாக ஒரு வரியில் சித்து கேட்டு வைக்க

"நீதான்டா இந்த அப்பன புரிஞ்ச நல்ல மகன். போடா கண்ணா போ அப்பாவுக்கு ஒரு நல்ல காபியா போட்டு எடுத்துட்டு வாடா" வெட்கமே இல்லாமல் அரவிந்தும் பல்லை இழித்தபடி கேட்டு நின்றார்.

அரவிந்தை கேவலமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவருக்கு காபி போட சென்றான் சித்து. சித்து வேலைக்கு செல்லவில்லை என்றாலும் செலவுக்கு அவனிடம் தாரளமாகவே பணம் இருந்தது‌.

அதுவும் அரவிந்த் இத்தனை வருடங்கள் சம்பாதித்தித்தே சித்துவின் வாழ்நாளுக்கு தேவையானதாக இருந்தது. அதில் எல்லாம் அரவிந்த் கில்லிதான். பின்னே சென்னையிலே அவ்வளவு பெரிய ஒரு வீட்டை கட்டிவிட்டு மேலும் இரண்டு இடங்களையும் வாங்கி போட்டு வைத்துள்ளார்‌. அதுபோக பேங்கிலும் சொல்லும்படியாக சில லட்சங்களை சேர்த்து வைத்திருக்கிறார் மனிதர்.

சித்து வேலைக்கு சென்ற இந்த ஐந்து வருடத்தில் அவனும் நன்றாகவே சம்பாதித்தான் அப்படி இருக்க பணத்திற்காக அவன் யோசிக்கவில்லை. எனவே தான் அவன் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளான். 'இனி வேலைக்கே போகமாட்டேன்' என்று சித்து சபதமே எடுத்துவிட

அதை கேட்ட அரவிந்தோ "சபாஷ்டா மகனே! இனி நீ வேலைக்கு எல்லாம் போகவேண்டாம். அதுக்கு பதிலா வீர்ம்மா கூட போ. நீ கண்டிப்பா உருப்புடுவ" என ஐடியா வேறு குடுக்க கடுப்பாகிவிட்டான்.

"யோவ் அப்பனாயா நீ. திருட ஐடியா குடுக்குற. என்ன ஒரேயடியா என்னைய ஜெயில்ல வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டியா. அதெல்லாம் முடியாது நான் சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்கபோறேன்"

சித்து பிசினஸ் செய்யபோவதாய் அறிவிக்க ஆடிப்போனார்‌ மனிதர். "ஐயோ பாவி பயலே நான் இத்தனை வருஷம் சேர்த்த சொத்து எல்லாத்தையும் மொத்தமா அழிக்க பிளான் போட்டுட்டியா. அதான் பிசினஸ் பண்ணப்போறேன்னு கிளம்புறியா"

அரவிந்த் அதை சண்டையாகவே இழுக்க அவர் கத்திலை காதிலே வாங்காத சித்து "என்ன பொல்லாத சொத்து. எல்லாம் நீ ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்த உன் புள்ள எனக்குதானே. அதான் என் புராப்பர்ட்டிய அடமானம் வச்சு நான் பிசினஸ் தொடங்க போறேன் போவியா.

என்னமோ இவரு உசுரோட இருக்கும் போதே இவரை கோவில் குளம் ஆசிரமம்னு அனுப்பிவிட்டு சொத்த அபகரிச்சாப்புல பேசறத பாரு" என தன் பங்கிற்கு தானும் எகிறியபடி சென்றான்.

இந்த ஒரு மாதமாக இருவருக்கும் இதே பஞ்சாயத்து தான் ஓடிக் கொண்டிருக்கிறது‌. ஆனால் இப்போது போல் சோறு என்று வந்துவிட்டால் தந்தை மகன் இருவரும் "நோ சூடு! நோ சுரனை!" என களத்தில் இறங்கிவிடுவர். அதில் மட்டும் இருவரும் தந்தை மகன் என்பதை நிரூபித்தனர்.

இந்த இடைப்பட்ட நாட்களில் நடந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது கதிர் சித்துவின் குடும்பத்தோடு நன்கு ஒன்றியதுதான். தினமும் மாலையானால் விளையாட செல்லாமல் வீராவை படுத்தி எடுத்து சித்துவின் இல்லம் வந்துவிடுவான் கதிர்.

அங்கே வந்தால் வீராவிற்கும் அரவிந்தோடு பொழுது நன்றாக போய்விடுவதால் அவளும் மகிழ்வுடன் கதிரை அழைத்து வந்துவிடுவாள். சித்து கதிருடன் படிப்பு முதல் உலக நடப்புகள் என அனைத்தையும் பேசுவான். சித்து பேசுவது மிகவும் பொதுவான விஷயம் தான் ஆனால் அதில் மிகவும் கவரப்பட்டான் கதிர்.

அவன் தெரு பள்ளி என செல்லும் இடமெல்லாம் "எங்க சித்து மாமா அப்படி இருப்பார் தெரியுமா! எவ்ளோ பெரிய அறிவாளி தெரியுமா!" என அவன் புகழை பரப்பிக் கொண்டிருந்தான்.

இதை மட்டும் அரவிந்த் கேட்டிருந்தால் 'என்றா சொன்ன என் மகன் அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டானா?' என அதிர்ச்சியில் மயங்கியே விழுந்திருப்பார்.

என்றும் போல் அன்றும் கலவரமாக தந்தை மகனுக்கும் செல்ல இன்றென பார்த்து சித்துவின் சமையலுக்கு பாய் சொல்லிவிட்டு கடையில் ஆர்ட்ர் போடலாம் என்ற முடிவை அரவிந்த் அதிரடியாய் எடுக்க

'அப்பாடா இன்னைக்கு நமக்கு ரெஸ்ட்பா' என்று சித்துவும் ஆர்டர் போட ஒத்துக் கொண்டான். சாப்பாடு வெளியே வாங்கலாம் என முடிவை எடுத்தவுடன் இருவருக்கும் அக்கா தங்கை இருவரை பற்றிய நினைவே முதலில் வந்தது.

அப்போது மணியை பார்த்த சித்துவிற்கு மனது நெருடியது‌. ஏனெனில் எப்போதும் டான் என மாலை ஆறுக்குள் வந்துவிடும் இருவரையும் இன்று ஏழு மணி ஆகியும் காணவில்லை.

அதே யோசைனையோடு "அப்பா" என அமைதியாக அழைக்க அரவிந்தோ எப்போதும் போல் "ன்னா?" என்றார்.

எப்போதும் வாய்க்கு வாய் பேசும் சித்துவோ அவரிடம் வம்பு எதுவும் பேசாமல் "மணி ஏழு ஆச்சு. இன்னும் கதிரும் அவன் அக்காவும் வரலை. ஏதோ தப்பா இருக்கே ப்பா" என்றான்.

அதன்பின்னரே அதை கவனித்த அரவிந்திற்கும் அப்போதுதான் அது உரைத்தது‌.

"ஆமாண்டா எப்பவும் ஆறு மணிக்குள்ள புள்ளைங்க வந்திருவாங்கல. ஆனா இன்னைக்கு என்ன இன்னும் காணோம். சித்து கண்ணா வீராம்மாக்கு ஒரு போன போடுடா. அவ குரலை கேட்டாதான் எனக்கு நிம்மதி" என்றார் அரவிந்தும்.

உடனே சித்துவும் வீரசுந்தரிக்கு அழைத்து விட்டான். "ஹலோ வீரசுந்தரி? நான் சித்தார்த்" மெதுவாக அவன் ஆரம்பிக்க

"சொல்லுங்க நான்தான் பேசறேன்" என்ற அவள் குரலே ஏதேபோல் இருந்தது‌.

"வீரா அழுறியா?" அதிர்ந்து போய் கேட்டான் சித்து. ஏனெனில் அடாவடி பெண்ணாக எல்லார் மனதிலும் இருக்கும் வீரா அழுகிறாள் என்றால் பயம் வரத்தானே செய்யும்.

"அது வந்து..."

"இப்ப நீ எங்க இருக்க? கதிர் எங்க இருக்கான்?"

சித்து கேட்டு நிறுத்திய அடுத்த நிமிடம் கதறிவிட்டாள் வீரா. அவள் தேம்பி தேம்பி அழுவதை இங்கிருந்து கேட்ட அரவிந்தும் சித்துவும் பயந்துவிட்டனர்.

"வீரா... வீரா.. அழாம என்ன ஆச்சு இப்ப நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க"

"இங்க.. எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்க ஆஸ்பிட்டல்ல" சித்து கேட்டதற்கு தாங்கள் எங்கிருக்கிறோம் என கூறி வைத்தாள் வீரா. இருவரில் யாருக்கு என்ன ஆனதோ என பதறி அடடித்து தந்தையும் மகனும் கிளம்பி சென்றனர்.

அது பெரியதும் அல்லாத சிறியதும் இல்லாத ஒரு தனியார் மருத்துவமனையே. அந்த இடத்தில் வீராவை தேடுவது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. போனதும் கண்டுக் கொண்டனர்‌. அங்கே ஒரு அறையின் முன்னால் இருந்த சேரில் அழுதபடி அமர்ந்திருந்தாள் வீரா.

அவள் அருகில் சென்று சித்து "வீரா" என்றிட அவனையும் அவன் அருகில் நின்றிருந்த அரவிந்தையும் கண்டு மேலும் கதறி அழுதாள் வீரா.

அவள் அழுவது சித்துவின் மனதின் உள்ளே ஏதோ செய்திட அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்து அவள் கையை பிடித்து, அவள் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தான்.

"என்னம்மா யாருக்கு என்ன ஆச்சு? கதிர் எங்க? நீ எதுக்கு இங்க உக்கார்ந்து அழுதுட்டு இருக்க?"

சித்துவின் கேள்விக்கு அவள் பதில் சொல்லும்முன் அவர்களின் முன்னே வந்து நின்றார் ஒரு மருத்துவர். அவரை பார்த்து வீரா உடனே எழுந்து நிற்க சித்துவும் உடன் எழுந்தான்.

"டாக்டர் என் தம்பிக்கு என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கான்?" வீரா கேட்டதில் கதிருக்குதான் எதோ ஆகியிருக்கிறது என்று புரிந்துபோக

"என் ரூம்க்கு வாங்க. கொஞ்சம் டீட்டெய்லா பேசனும்" என்றார் மருத்துவர். எனவே அவரை தொடர்ந்து வீராவும் சித்துவும் அவரின் அறைக்குள் நுழைந்தனர். மருத்துவரோ ஒரு பைலை கையில் எடுத்து அதில் பார்த்தவர் சித்துவை நோக்கி

"நீங்க?" என்றிட "இவங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க டாக்டர். அவங்க நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நான்தான் பொறுப்பு. நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க" என்றான். அவன் கூறியதை கேட்டு வீரா அந்த நிமிடத்திலும் ஏதோ ஒன்று தன் மனதில் சுரப்பதை உணர்ந்தாள்.

"அப்போ சரி சார் இந்த பொண்ணு வேற அழுதுட்டே இருந்தது. அதான் கொஞ்சம் தயங்கினேன். அந்த பையன் கதிருக்கு பிரைன் கிட்ட சின்னதா ஒரு கட்டி இருக்கு‌" என்று கூறி முடிக்கும் முன்

"டாக்டர் என்ன சொல்றீங்க?" என அதிர்வுடன் கேட்டான் சித்து.

"பயப்படாதீங்க சார். இதுல பயப்பட ஒன்னும் இல்ல. கட்டி ரொம்ப சின்னது தான். ஒரு சின்ன ஆப்பரேஷன் செஞ்சு அந்த கட்டிய ரிமூவ் பண்ணிட்டா எந்த புராப்லமும் இல்ல. பையன் பழையபடி நல்லா ஆகிருவான்" என்று முடித்தார்.

"என்ன டாக்டர் ஆப்பரேஷன் அது இதுன்னு சொல்றீங்க. ஆனா நேத்து வரைக்கும் கதிர் நல்லாத்தானே இருந்தான். தலைவலி அந்தமாதிரி கூட அவன் சொன்னது இல்லையே" என தன் சந்தேகத்தை கேட்டான் சித்து‌.

"அவன் சின்ன பையன் தானே சார். அதுனால அவனுக்கு அவ்வளவா எந்த சிம்ப்டம்ஸும் வந்திருக்காதுன்னு நினைக்கிறேன். இப்ப சிட்டுவேஷன் என்னன்னு நான் தெளிவா சொல்லிட்டேன். அன்ட் இதுக்கு மேல என்ன செய்யனும்னு நீங்கதான் சொல்லனும்" என்றிட்டார் அந்த மருத்துவர்.

சித்துவோ வீராவை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க அவளோ நடுக்காட்டில் மாட்டிக் கொண்ட குழந்தை போல் முழித்தபடி அவள் இருக்க அதன்பின் அவளிடம் எதுவும் அவன் கேட்கவில்லை. அவனே அந்த மருத்துவரிடம் மேலே என்ன செய்ய வேண்டும் என்று கலந்து ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 15

அந்த அறை ஒரு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு மிகவும் அமைதியாக இருந்தது‌. அந்த அறையினுள் டாக்டர் சித்தார்த் வீரசுந்தரி மூவருடன் அரவிந்துமே இருந்தார். அவர்கள் அனைவரும் டாக்டர் கூறியதை கேட்ட அதிர்வில் இருந்து மீண்டு வரவில்லை என அவர்களின் முகமே நன்கு காட்டிக் கொடுத்தது‌.

டாக்டர் கூறியதை கேட்டு சற்று நேரம் யோசித்த சித்தார்த் மற்றவர்களின் முகங்களையும் பார்த்தான். அவர்களின் குழப்ப முகத்தை பார்த்து பின்பு பேசி தெளியப்படுத்திவிடலாம் என அவன் கதிருக்காய் ஒரு முடிவை எடுத்துவிட்டான் வீராவிடம் கூட கேட்காமல்.

டாக்டர் ஆப்பரேஷன் மட்டும்தான் ஒரே சாய்சா? மெடிசின் மூலமா கரைக்க எதாவது வாய்ப்பு இருக்கா?"

கடைசி முயற்சியாக சித்து ஒன்றை கேட்டு நிறுத்த "அப்படி ஒரு சாய்ஸ் இருந்திருந்தா ஒரு டாக்டரா நானே அதைதானே முதல்ல சொல்லி இருப்பேன். ஆனா அது முடியாதுன்ற பட்சத்துல இந்த முடிவை உங்ககிட்ட சொல்லிட்டேன். இப்ப முடிவை சொல்லவேண்டியது நீங்கதான்" என சொல்லி முடித்தார் டாக்டர்.

"டாக்டர் எங்களுக்கு ஒரு புயூ மினிட்ஸ் டைம் தாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து சொல்றோம்"

கதிரின் பைலை வாங்கிக் கொண்டு வீராவையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் சித்து. வந்தவன் அந்த பைல்களை போட்டோ எடுத்து யாருக்கோ அனுப்ப

"என்ன பண்ற சித்து?" குழப்பமாக கேட்டார் அரவிந்த்.

"என் பிரண்டோட அண்ணா ஒருத்தர் டாக்டர் ப்பா. அதான் அவர்ட்ட அனுப்பி ஒரு செகன்ட் ஒப்பீனியன் கேக்கலாம்னு அனுப்பறேன்"

பைலை போட்டோ எடுத்து அவன் நண்பனுக்கு அனுப்பி முடித்த சித்து அவனிடம் போன் செய்தும் பேசி வைத்தான். அதன்பின் ஒரு ஐந்து நிமிடம் கழித்து அவனே மீண்டும் அழைத்தான்.

"சித்து மச்சான் அண்ணா லைன்ல இருக்கான் நீ பேசுடா" என்றிட சித்துவும் அவன் நண்பனின் சகோதரனிடம் பேசி பார்க்க இங்கே இருந்த மருத்துவர் சொன்னதையே அவரும் கூற எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நன்றி கூறி வைத்துவிட்டான்.

"என்ன கண்ணா சொல்றாங்க?" அரவிந்தோ பதற்றத்தோடு கேட்க

"இந்த டாக்டர் சொன்னதைதான் ப்பா அந்த அண்ணாவும் சொல்றாங்க" என்றிட்டான் சித்து.

"அப்போ இப்ப என்னடா செய்யப்போறோம்?" அரவிந்த் கேட்டதற்கு ஏதும் பேசாத சித்து வீராவை பார்க்க சித்து வந்ததில் இருந்து செய்வதை மௌனமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாளே ஒளிய எதுவும் பேசவில்லை.

"வீரா நீ இப்படி அமைதியா இருந்தா எப்படிமா. கதிர்க்கு இப்ப ஆப்பரேஷன் செஞ்சே ஆகனும்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. நீ என்ன சொல்ற?"

சித்து கேட்டதற்கு முழித்தபடி அமர்ந்திருந்த வீரா "எனக்கு என்ன செய்றதுன்னு எதுவும் புரியலையே. என்ன பண்றது?" பாவமாக கேட்க சித்துவிற்கு ஏதோ போல் ஆனது. அவளை இறுக அணைத்து 'ஒன்றும் ஆகாது' என ஆறுதல் கூறவேண்டும் போல் இருந்தது.

ஆனால் சூழலை கருத்தில் கொண்டு அதை அப்படியே மனதிற்குள் வைத்தவன் "இங்கபாரு வீரா இனிமே எல்லா முடிவையும் நானே எடுக்கறேன். நான் சொல்றத மட்டும் நீ செய் அதுபோதும்" என்றவன் நேராக மருத்துவரிடம் பேச சென்றான்.

"டாக்டர் நாங்க ஆப்பரேஷன் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டோம். அப்புறம் கதிர்க்கு ஆப்பரேஷன் இங்கையே வச்சு செய்யப் போறீங்களா இல்லை வேற ஹாஸ்பிடல் மாத்த வேண்டி இருக்கா?"

சித்து இவ்வாறு கேட்கவும் காரணம் உண்டு. ஏனெனில் அது ஒரு பொதுநல மருத்துவமனையே. அவன் கேட்டதற்கு "இங்க ஆப்பரேஷன் செய்ய எந்த பெசிலிட்டியும் இல்ல சார்‌‌. நான் வேற ஒரு டாக்டருக்கு ரெக்கமண்ட் பண்ணி ஒரு லெட்டர் தரேன். நீங்க அங்க போனா எல்லாம் அவங்களே பாத்துப்பாங்க" என்றிட்டார்.

சரி என்று ஒத்துக் கொண்ட சித்தார்த் அடுத்த கட்ட வேலைகளில் வேகமாக இறங்கவிட அடுத்த ஒரே மணி நேரத்தில் அந்த டாக்டர் பரிந்துரை செய்த வேறொரு மருத்துவமனைக்கு கதிர் மாற்றப்பட்டு மீண்டும் ஒரு முறை அவனுக்கு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

மறுநாளே நரம்பியல் மருத்துவரின் நேரம் கிடைக்க அன்றே அறுவை சிகிச்சை செய்ய முடிவும் செய்யப்பட்டது. எல்லாவற்றையும் தயார் செய்த பின்னரே கதிரை வைத்திருந்த அறைக்கு வந்து சேர்ந்தான் சித்து.

அங்கு கதிர் மெத்தையில் ஏதும் புரியாமல் பயத்துடன் படுத்திருக்க வீரா அவன் கையை பிடித்தபடி அருகே அமர்ந்திருந்தாள். அரவிந்த்தான் இருவரிடமும் ஏதோ ஆதரவாய் பேசிக் கொண்டிருப்பதை போல் தெரிய உள்ளே நுழைந்தான் சித்து.

அங்கே இருக்கும் சூழ்நிலையை கண்டு அதை மாற்றும் பொருட்டு "என்ன நைனா சின்ன புள்ளைங்கள பயம் காட்டிட்டு இருக்கியா?" என்றபடி வந்தான்.

அவனை முறைத்த அரவிந்த் "நான் என்ன புள்ளை புடிக்கிறவனாடா புள்ளைங்கள பயம் காட்ட. இவங்களும் என் புள்ளைங்கடா அவங்ககூட நான் பேசிட்டு இருக்கிறது உனக்கு பொறுக்கலையோ" என வம்புக்கு நின்றார்.

இதற்குதானே சித்துவும் அவரிடம் வேண்டும் என்றே வம்புக்கு சென்றது. இவர்கள் சண்டை இத்துடன் முடியாது இன்னும் கொஞ்சம் நீள கவலையில் இருந்த வீரா கதிர் இருவரும் அவர்கள் கவலையை மறந்து சிரிக்க துவங்கிவிட்டனர்.

இந்த நல்ல மனநிலையிலே அவர்களின் இரவு கடக்க அடுத்த நாள் அறுவை சிகிச்சையும் நல்ல விதமாகவே ஆரம்பிக்க கதிரை உள்ளே அழைத்து சென்றுவிட்டனர். அப்போதுதான் வீராவுக்கு ஒரு விஷயம் மண்டையில் உரைத்தது.

நேற்று இருந்த மருத்துவமனையிலும் சரி இன்றும் சரி வீரா ஒரு ரூபாய் கூட கட்டவில்லை. மேலும் இன்று முன் பணம் கட்டியிருந்ததால் தான் சிகிச்சையும் நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் புரிந்தது‌.

அருகில் இருந்த சித்து மற்றும் அரவிந்த் இருவரையும் பார்த்தவள் "அங்கிள் சித்தார்த் ரெண்டு பேர்கிட்டையும் நான் கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள்.

கதிருக்கு உள்ளே அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டிருக்க இப்போது வீரா தனியே பேசவேண்டும் என்று கூற இருவரும் ஒன்றும் புரியாது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

"எதுக்கு?" சித்து கேட்கவும்

"சொல்றேன் வாங்க" கதிருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்றாள்.

"என்ன வீரா என்னம்மா பேசணும் கதிருக்கு அங்க ஆப்பரேஷன் நடந்துட்டு இருக்கு‌. இந்த நேரத்தில எதுக்கு எங்க கூட தனியா பேசணும்னு சொல்லி கூட்டிட்டு வந்த?" குழம்பிப்போய் அரவிந்த் கேட்க

"அங்கிள் நேத்து அங்க ஹாஸ்பிடல் அப்புறம் இன்னைக்கு இங்க ஆப்பரேஷன் எல்லாத்துக்கும் நான் பத்து ரூபா கூட தரலையே அங்கிள். நேத்து இருந்த மனநிலைல எனக்கு எதுவுமே தோனலை. நீங்கதான் எல்லா காசும் கட்டுனீங்களா. எவ்ளோ ஆச்சு?"

படபடவென்று கேள்விகளை அவள் அடுக்க "வீரா பொறுமைமா பொறுமை. ஏன் இப்படி பதட்டபடுற. கதிரும் நீயும் எப்ப எங்க வீட்டுக்கு வந்தீங்களோ அப்போவே நீங்க எங்க வீட்டு பிள்ளை ஆகிட்டீங்கமா. நான் சேத்து வச்சிருக்க காசை எல்லா இவன் ஒருத்தன் மட்டும் ஆட்டையப்போட பாக்குறான்மா. இப்ப நீங்க ரெண்டா பேரும் வந்துட்டீங்க. அதான் உங்களுக்கும் தரனும்னு நான் கண்டிஷனா சொல்லிட்டேன்ல"

அரவிந்த் விளையாட்டு போல் சொல்லி முடிக்க "ப்பா என்னா என்னமோ நான் உன் சொத்தை எல்லாம் திருட வந்தவன் மாதிரி பேசுற. இங்க பாரு வீரா இவரு இப்படிதான் பேசுவாரு. ஆனா அவர் சொன்னாலும் சரி சொல்லாமா இருந்தாலும் சரி உனக்காகவும் கதிருக்காகவும் நான் என்ன வேணா செய்வேன்" என்றான்.

"ஏன்... ஏன் எங்க மேல இவ்ளோ பாசம்?" உள்ளே போன குரலில் மெதுவாய் கேட்டாள் வீரா.

அவள் கேள்வியில் புன்னகை புரிந்த சித்து இதை இப்ப சொன்னா நல்லா இருக்காதே வீரா. கதிர் நல்லபடியா குணமாகி வரட்டும் அப்ப நான் சொல்றேன் என்னோட லவ்வ என்று நினைத்தான்.

ஆம் சித்து இப்போது வீராவின் மேல் காதல் கொண்டுவிட்டான். எப்படி எப்போது என்று எல்லாம் சொல்ல தெரியவில்லை அவனுக்கு. ஆனால் வீரா கதிரிடம் காட்டும் தாய்மை உணர்வு தான் அவனை அவளை நோக்கி ஈர்த்து விட்டது. தினமும் கதிரிடம் பேசும் போது அவளை பற்றிதான் பாதி நேரம் பேசுவான். அவளுக்கு எதிர்த்த சோபாவில் அமர்ந்தபடி கதிருடன் பேசுகிறேன் என விடாது சைட்டும் அடிப்பான்.

ஆனால் அரவிந்துடன் பேசும் சுவாரஸ்யத்தில் அதை எல்லாம் அவள் கண்டுக் கொண்டதே இல்லை. அது அவனுக்கு இன்னும் சாதகமாய் போய்விட அவள் அவன் வீட்டிற்கு வரும் நேரம் சித்துவிற்கு கொண்டாட்டம் தான். அப்படி இருக்க அவளுக்கு என்றால் விரைந்து வந்து நிற்காது இருப்பானா சித்து.

அவன் அவனுடைய யோசனையில் இருந்த நேரத்தில் வீரா அவனைத்தான் பார்த்திருந்தாள். அவள் தன்னையே பார்த்ததை உணர்ந்து இப்போது பேசினான் சித்து.

"நீ ஒருநாள் சொன்னல்ல வீரா நாங்க எப்படி இருக்கோம்னு கேக்க கூட ஆள் இல்லாதவங்கன்னு. நீங்க மட்டும் இல்ல அதே மாதிரிதான் நாங்களும் வீரா. அப்பா இருந்த வரை எனக்கு அவரும், அவருக்கு நான்னும் இருந்தோம் இப்பவும் இருக்கோம். ஆனா அதை தாண்டி எங்களுக்குன்னு யாரும் இருந்தது இல்ல. அது எதுமே எங்களை பாதிக்காம இருக்கத்தான் எங்களுக்குள்ள நாங்க இப்படி பேசிக்குவோம்.

இதுக்கு நடுவுலதான் நீங்க ரெண்டு பேரும் எங்க லைஃப்ல வந்தீங்க. உண்மைய சொல்லனும்னா நீங்க வந்த அப்புறம் அப்பாவும் சரி நானும் சரி ரொம்பவே சந்தொஷமா இருந்தோம் வீரா. அப்படிப்பட்ட உங்களுக்கு உதவின்னு தேவைபடும்போது அதை செய்ய நாங்கதான் குடுத்து வச்சிருக்கனும்"

ஆத்மார்த்தமாய் கூறிய சித்துவை வியப்பு பொங்க பார்த்தாள் வீரா. அவன் பேசிய பேச்சில் இன்னும் கொஞ்சம் அழுகை அதிகமாக அவள் அழுவதை இப்போதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது அவளை இழுத்து ஆதரவாக அணைத்துக் கொண்டான்‌.

இதை பார்த்திருந்த அரவிந்தோ ஏதோ தன் பிறவி பயனே நிறைவடைந்ததைப் போல் நெஞ்சில் கை வைத்து ஆனந்தமாய் இருவரையும் பார்த்து வைத்தவர் மெல்ல அந்த அறையிலிருந்து வெளியேறினார் அவர்களுக்கு தனிமை அளித்து.

அதுமட்டும் அல்லாது இதுபோன்ற சீரியசான சீனை அதிக நேரம் பார்ப்பது எல்லாம் அரவிந்தின் வரலாற்றிலே இல்லையே. அதற்கே மனிதர் அந்த அறையிலிருந்து தெரித்து ஓடியிருந்தார்.

"ஆப்பரேஷன் முடிய இன்னும் நேரம் ஆகும். என் புள்ள வீராவ சமாதானம் செய்றேன்னு உள்ள பதுங்கிட்டான். நாம இப்ப என்ன பண்றது?" புலம்பியபடி ஹாஸ்பிடலை சுற்றியபடி அரவிந்த் அங்கிருந்த பெண்களை சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டார் மனிதர்.

அங்கே தனியே யார் தொந்தரவும் இல்லாமல் இருக்க வீரா இன்னும் சிந்துவின் அணைப்பில் தான். இவர்கள் தங்கள் நிலை உணர்ந்து பிரிந்து அறுவை சிகிச்சை நடக்கும் அறையின் முன் வரும்போது அங்கு கதிருக்கு அறுவை சிகிச்சையை முடித்து மருத்துவர் வெளியே வந்துவிட்டார்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 16

வானம் கருமேக கூட்டத்துடன் இதோ விட்டால் மழையாய் கீழே வந்துவிடுவேன் என்ற நிலையில் சூழ்ந்திருக்க, அந்த அந்திமாலை வேளையில் குளிர்காற்று உடலை துளைத்தும் மருத்துவமனை தோட்டத்தில் மெல்ல நடைப்பயின்று கொண்டிருந்தான் சித்தார்த்த.

அவன் உடல் மட்டுமே இங்கிருக்க நினைவு மொத்தமும் வீராவிடம் சென்றிருந்தது. நேற்றைய தினம் நிகழ்ந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தான் சித்து.

வீராவின் அழுகை நேற்று அதிகமாகவே அவளை யோசிக்காது அணைத்துவிட்டான். ஆனால் அவன் அணைப்பில் இருந்து விலகி சென்ற வீரா அவனிடம் விலக்கமே காட்டினாள். மருத்துவர் வரும் வரை இருவர் மட்டும் அந்த அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்கு முன்னே அமர்ந்திருந்தாலும் ஒருவர் முகத்தை கூட மற்றவர் பார்க்கவில்லை.

சொல்லமுடியா தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது இருவருக்கும். அப்போது அறுவை சிகிச்சை முடிந்து வந்த மருத்துவர் கதிருக்கு நல்ல முறையில் சிகிச்சை நடந்துவிட்டது என்றும் இனி எந்த வித ஆபத்தும் இல்லை என்றும் கூறி அவர்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்தினார்.

இப்போதும் கதிர் ஐ.சி.யுவில் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க அவனுக்கு தேவையான உதவிகளை வீரா பார்த்து செய்கிறாள். அவளை பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் அவளை சைட் அடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருக்கிறான் சித்து.

இப்போதும் அவளுக்கு காபி வாங்கி வருகிறேன் என கீழே வந்தவன் இதற்கு மேல் அவளிடம் எதையும் மறைக்காது தன் காதலை சொல்லி விட வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டான். ஆனால் அரவிந்த் என்று ஒருவர் இடையில் இருக்கும் போது இது சாத்தியமா என்பதை யோசிக்க மறந்தான் மகனவன்.

சித்தார்த் யோசித்து முடிக்கும் நேரம் வானமும் லேசாக தூரல் போட தன் மனதில் எடுத்த முடிவை செயல்படுத்த வேகவேகமாக காபியை வாங்கிக் கொண்டு கதிர் இருந்த அறைக்குள் வந்தான்.

சித்து கதவை திறக்கும் போது சரியாக "அங்கிள் அப்புறம் என்ன ஆச்சு?" என்று வீராவின் குரல் கேட்க

"அப்புறம் என்ன ஆச்சா. என் புள்ளயாச்சே நான்தான் பிரிண்சிபல் ஆபிஸ்ல அவனுக்காக பேசி எல்லாரையும் சமாதானப்படுத்தினேன். அப்புறம்தான் அவனை மறுபடியும் ஸ்கூல் உள்ளையே விட்டாங்கனா பாரேன்" என்று மனிதர் தொடர

"நைனா..." சித்து ஹைப்பிச்சில் ஆரம்பிக்க மூவரும் ஒன்றாக திரும்பி அவனை பார்த்தவுடன் மீண்டும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். சித்துவிற்கு நன்றாக புரிந்தது அவன் தந்தை ஏதோ அவன் தலையை நன்றாக போட்டு உருட்டி இருக்கிறார் என‌.

இப்போது போய் அவனுடைய காதலை சீரியசாக சொன்னாலும் வீரா சிரித்துவிட வாய்ப்பு நூறு சதவீதம் இருப்பதை உணர்ந்து சித்து அவன் தந்தையை தீயென முறைத்துபடி அமைதியாக அமர்ந்துவிட்டான்.

சித்துவை பெற்று இத்தனை ஆண்டுகள் வளர்த்த அவன் தந்தைக்கா அவன் முகத்தை படிக்க தெரியாது. மகனின் மனதும் நன்றாகவே புரிந்தது.

'உன்னை அவ்ளோ சீக்கிரம் வீராட்ட லவ்வ சொல்ல விட்டுருவேனாடா மகனே. கொஞ்ச நாள் பித்து புடிச்சு சுத்து. அப்பத்தான் என் வீராம்மாவோட அருமை உனக்கு தெரியும்' என மனதிற்குள் நினைத்தபடி அவரும் சிரித்துக் கொண்டிருந்தார்.

ஒரு வாரத்தில் கதிர் உடல்நிலை சற்று தேறிவிடவே, அவனை டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். அப்படி டிஸ்சார்ஜ் செய்தவுடன் சித்துவும் அரவிந்தும் அவர்கள் இருவரையும் அவர்கள் வீட்டிற்கு அழைக்க வீரா முடியாது என்று மறுத்திட்டாள்.

"என்னம்மா வீரா அப்போ எங்களை இன்னும் நீ வேத்து ஆளாதான் பாக்குறியா. உடம்பு சரியில்லாத புள்ளைய வச்சுகிட்டு தனியா என்னம்மா செய்வ. எங்ககூட வாடாம்மா அங்கிள் மேல நம்பிக்கை இல்லையா?" என இருவரிடமும் மாறி மாறி பேசியே அவர்களை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர் அரவிந்த்.

தந்தை தன் வாழ்வில் செய்த ஒரே உருப்படியான வேலை இதுதான் என மனதிற்குள் உல்லாசமாக நினைத்த சித்தார்த் மகிழ்ச்சியாக அவர்களை அழைத்து சென்றான்.

அவர்கள் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டானே தவிர வீராவிடம் ஒருநிமிடம் கூட தனிமையில் பேச நேரம் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்வதை விட அவனின் தந்தை விடவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.

பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ஒருநாள் முடிவு செய்த சித்து நேராக அவன் தந்தையிடம் சென்று நின்றான்.

"ப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"கொஞ்சம் என்னடா மகனே நெறையவே பேசு" வாயில் உருளைக்கிழங்கு சிப்சை அமுக்கியபடி அரவிந்த் பேச 'ஆண்டவா' என்று மனதில் கடுப்பான சித்து தன்னை சமன் செய்துவிட்டு தொடர்ந்தான்‌.

"ப்பா உன்கிட்ட சண்டை போடுற மூட்ல நான் இப்ப இல்ல. நான் இப்ப எதுக்காக உன்ட்ட பேச வந்திருக்கேன்னும் உனக்கு தெரியும்"

"அப்பிடியா சரி என்னான்னு சொல்லு"

"நான் வீராட்ட தனியா பேசணும்.‌ ஆனா அதுக்கு கொஞ்சம் கூட இடந்தராம நீ குறுக்க வந்து நிக்கிற நைனா. நீதானே வீரா உன் மருமகளா வரணும்னு ஆசைப்பட்ட. இப்ப நானே அதுக்கு ஓக்கேன்னு சொல்றேன். நீ என்னன்னா அவகிட்ட என்ன பேசவே விடமாட்டேங்குற. நீ உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க நைனா" என எகிறிய சித்து சட்டென தன் சத்தத்தை குறைத்து

"நைனா உன்ன கெஞ்சி கேக்குறேன் அவகிட்ட என் லவ்வ மட்டும் சொல்லவிடேன். உனக்கு புன்னியமா போகும்" என பேசி முடித்தான்.

"வாவ் நீ கெஞ்சும் போது எனக்கு ரொம்ப ஆனந்தமா இருக்குடா மகனே. உன் வாழ்க்கையில ஒரு நல்லது நடக்கனும்னா அது நான் செஞ்சதாதான் இருக்கனும். இப்ப பாத்தியா வீராம்மா உன் லைப்ல வந்த வரம். அந்த வரத்தை தந்தது நான்ங்குறப்ப எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்குடா" என அரவிந்த் வசனம் பேச கடுப்பான சித்து

"இப்ப முடிவா நீ என்னதான் சொல்ல வர?" என்றான்.

"வீராம்மா என்னோட செலக்ஷன்தான். ஆனா நீ டக்குன்னு லவ்வ சொல்லி ஓகே பண்ணா அவளோட வேல்யூ உனக்கு தெரியாமையே போயிரும். அதான் கொஞ்ச நாள் உன்னை அலையவிட்டேன். இவ்ளோ தூரம் நீ வந்து இப்ப கெஞ்சறதால உன்ன வீராம்மாட்ட பேச அலவ் பண்றேன்" என்றார் அரவிந்த் கடைசியாக.

அவர் இதுவரை செய்ததே போதும் என்று உணர்ந்த சித்து விட்டாள் போதும் என வீராவை தேடி ஓடிவிட்டான்.

பாவம் சித்து வீரா இவ்வளவு நேரம் அவன் தந்தையிடம் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டாள் என அறியாது அவளை தேடி சென்றான். தந்தை மகன் பேசுவதை கேட்டபின் வீரா மாடிக்கு வந்துவிட்டாள்.

வீராவுக்கும் மனது சற்று சமன்பட சிறிது நேரம் தேவையாக இருந்தது. அன்று மருத்துவமனையில் வைத்து சித்து கட்டி அணைத்ததில் இருந்தே சித்துவின் மீது ஏதோ ஓர் உணர்வு தோன்றியே இருந்தது‌.

அன்றிலிருந்து அவளின் மனதிலும் ஒரு கள்ளம் புகுந்துத் கொள்ள சித்துவை அவன் அறியாது சைட் அடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்போதுதான் அவனும் அவளை அவ்வப்போது விழுங்குவது போல் பார்ப்பதை கவனித்திருந்தாள்.

அதில் அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று புரிந்தது. அதனால் பலநாள் அவன் அவளிடம் பேச வரும்போது பதட்டத்தில் அவளாகவே அரவிந்திடமோ அல்லது கதிரிடமோ சென்று அமர்ந்துவிடுவாள்.

இப்போது தந்தை மகன் இருவரும் பேசியதை கேட்டு தன்மேல் இவர்களுக்கு எவ்வளவு பாசம் என்று மிகவும் நெகிழ்ந்துதான் போய் இருந்தாள். எனவே தன் மனதை சற்று சமன்படுத்தவே அங்கு மாடிக்கு சென்றுவிட்டாள்.

இங்கு எல்லா இடத்திலும் தேடியப்பின் கடைசியாக மாடிக்கு வந்து சேர்ந்தான் சித்து. அங்கே வீரா இருக்க மகிழ்ந்த சித்து வேகமாக அவளிடம் வந்து "வீரா" என்றழைக்க ம்ஹீம் காத்துதான் வந்தது.

'ஐயோ வீரமா கிளம்பி வந்தும் வெறும் காத்து தான் வருதே. டேய் சித்து இந்த சான்ஸ விட்டா உன் நைனா உனக்கு பெரிய ஆப்பா அடிச்சிட்டு போயிருவாருடா. போ போ பேசு" என மனதிற்குள் பேசியபடி வீரா வை இப்போது சற்று சத்தமாக அழைத்தான்.

வீராவும் திரும்பிட "வீரா உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும். நீ நான் சொல்றதை கேட்டுட்டு மெதுவா யோச்சு உன் முடிவை சொன்னா போதும்" என்று தடதடக்கும் இதயத்துடன் ஆரம்பித்தான்.

வீரா எதுவும் பேசாது இருக்க தொடர்ந்தான் சித்து‌. "நான்.. நான் உன்னை அது வந்து" என தயங்கி தன் கண்ணை மூடி திறந்தவன்

"ஐ லவ் யூ வீரா!" என்றான் அவள் கண்களை பார்த்து. அவன் கண்களில் தெரிந்த காதலில் வீராவே ஒரு நிமிடம் தலை சுற்றி போனாள். எப்போதும் தந்தையுடன் விளையாடிக் கொண்டு சிரித்து கொண்டிருக்கும் சித்தார்த் இல்லை இவன்.

இவன் கண்களை பார்த்தாலே போதும் மாயம் செய்து அவன் கட்டுக்குள் கொண்டு வரும் வித்தைக்காரன். அப்படி இருந்தது சித்தார்த்தின் பார்வை.

"வீரா சத்தியமா சொல்றேன் உன் அழகாலையோ இல்ல வேற எந்த காரணத்தாலையும் உன்மேல எனக்கு லவ் வரல. நான் உன்னை லவ் பண்ண காரணமே உன்னோட அந்த தாய்மை குணம் தான் தெரியுமா. அதுவும் நீ கதிரோட தலை கோதிவிடறதுல இருந்து அவனுக்கு ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்றது எல்லாம்தான் உன்னை எனக்கு பிடிக்க வச்சிது.

ஏன் தெரியுமா? நான் பிறந்த கொஞ்ச வருஷத்துலையே என் அம்மா இறந்துட்டாங்க. எனக்கு ரொம்ப சின்ன வயசுலையே அம்மா பாசம் இல்லாம போச்சு. ரொம்ப கஷ்டமா இருக்கும்டா சிலநேரம் ஆனா அப்பா பீல் பண்ணுவார்னு எதையும் வெளியே காட்டுனது இல்ல.

ஆனா நீ கதிர்கிட்ட காட்டுற பாசத்த பாக்கும் போது எனக்கும் அது வேணும்னு தோனுது. மனசு உன்னை தான் இப்பலாம் ரொம்ப தேடுது"

எப்போதும் சித்துவை சிரிப்புடன் பார்த்து விட்டு இப்படி முகம் எல்லாம் சிவந்து விட்டால் அழுதுவிடுவேன் என்பது போல் பார்க்க வீராவுக்கு ஏதோ போல் இருக்க

"சித்து நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் எனக்கு புரியுது. யாருக்கு நான் எப்படியோ இனி உங்களுக்கு எல்லாமா நான் இருப்பேன்" என வீரா தன் சம்மதத்தை இப்படி கூற ஒருநிமிடம் சித்துவிற்கு ஒன்றும் புரியவில்லை.

புரிந்தவுடன் சாசர் போல் கண்கள் விரிய "ஹேய் வீரா நெஜமாவா?" என மொத்த ஆசையையும் கண்களில் தேக்கி வைத்து கேட்க அவன் முகத்தில் கைகளை வைத்து அவன் முகத்தை பார்த்து

"ம்ம் எனக்கு நீங்க சொல்ற மாதிரி எல்லாம் சொல்ல தெரியலை. ஆனா உங்க கண்ணுல எப்பவும் சந்தோஷத்தை பாக்கனும்னு தோனுது. அன்னைக்கு கதிர வச்சிட்டு ஹாஸ்பிடல்ல இருந்தப்ப இவ்ளோ பெரிய உலகத்தில எனக்குன்னும் நீங்க இருக்கீங்கனு காமிச்சீங்கல. அது மாதிரி நானும் எப்பவும் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் உங்ககூட இருப்பேன்" என்று மனதார கூற

அதற்குமேல் தாமதியாது அவளை இறுக அணைத்து கொண்டான் சித்து. "ரொம்ப தேங்க்ஸ்டா. என் லைப்ல இந்த மொமென்ட நான் எப்பவும் மறக்கமாட்டேன்" என்றான் உளமாற.

இங்கு நடந்ததை கண்டு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி விட்டது அரவிந்திற்கு. இனி தான் இல்லாது போனாலும் தன் மகனிற்கு ஒரு துணை வந்துவிட்டாள் என நிம்மதியாக கீழே சென்றார் அந்த பாசமான தந்தை.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 17

அரவிந்தின் வீடு என்றும் இல்லாமல் அன்று மிக அமைதியாக இருக்க 'நம்ம வீடு இப்படி இவ்ளோ அமைதியா இருக்காதே. ஒருவேளை வீடு எதுவும் மாறி வந்துட்டோமா?' என எண்ணிக் கொண்டே வீட்டின் கதவை மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் வீரசுந்தரி. அங்கே சோபாவின் ஒரு மூலையில் சித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க

மற்றொரு மூலையில் தெனாவெட்டாக காலை ஆட்டியபடி அமர்ந்திருந்தார் அரவிந்த். பார்த்தவுடனே தெரிந்தது இருவரும் ஏதோ வாக்குவாதத்தை முடித்த டையர்டில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என.

இதற்கு ஹைலைட்டாக இருவரையும் கண்ணத்தில் ஒரு கை வைத்து கொண்டு இன்னொரு கையில் சிப்சை வைத்தபடி வேடிக்கை பார்த்தபடி இருவரின் எதிரே அமர்ந்திருந்தான் கதிர்.

'என்னவா இருக்கும்?' என்ற கேள்வி மண்டையை குடைய கதிரை 'என்ன ஆச்சு?' என்று சைகையில் கேட்க 'நீயே கேளு' என அவன் கைக்காட்டி விட்டு திரும்பிக் கொண்டான்.

"அங்கிள் சித்து என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும். ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு உக்காந்து இருக்கீங்க?"

இருவரும் பதில் பேசாது அமர்ந்திருக்க "ப்ச் இரண்டு பேரும் எதுவும் பேசாம இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம். அங்கிள் நீங்க சொல்லுங்க" என்க

"அந்தா குத்துகல்லு மாதிரி உக்காந்து இருக்கானே அவனை கேளு" சித்துவை கோர்த்து வைத்தார் அவன் தந்தை.

"சித்து நீங்களாவது சொல்லுங்க. என்னதான் ஆச்சு" என அவனிடம் கேட்க "என்னால சொல்ல முடியாது. உன் அங்கிள்ட்டையே கேட்டுக்கோ" என்றிட்டான்.

இப்படி இருவரும் மாறி மாறி இருவரையும் காட்ட கடுப்பான வீரா "ரெண்டு பேரும் எதுவுமே சொல்ல வேணாம். நான் போய் நைட்க்கு டிபன் சமைக்கிறேன். உங்களுக்கா எப்ப சொல்லனும்னு தோனுதோ அப்ப வந்து சொல்லுங்க" என்றவள் அங்கிருந்து நகர போக

"ஏய் ஏய் வீரா நீ என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட. நீ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. இங்க வா, வந்து எங்க பஞ்சாயத்த முடிச்சிட்டு விட்டுட்டு போ முதல்ல" சித்து கிளம்ப போன வீராவை தடுத்து நிறுத்தினான்.

"ஷப்பா இவங்களோட தினமும் இதே வேலையா போச்சு" என அலுத்தபடி வந்தவள் இருவருக்கும் நடுவில் அமர்ந்த பின் கேட்டாள் "சரி பஞ்சாயத்த முடிக்கனும்னா முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் என்ன பஞ்சாயத்துன்னு சொல்லுங்க"

இப்போதும் அரவிந்த் வாயை திறப்பது போல் தெரியாது போகவும் சித்துவே ஆரம்பித்தான்.

"வீரா உனக்கே தெரியும்ல எனக்கு வேலை போயிருச்சுன்னு" வீரா ஆம் என தலையசைக்க

"ஆன் அதான் நானே சொந்தமா பிசினஸ் பண்ணலான்னு பிளான் பண்ணுனா உன் அங்கிள் அதெல்லாம் வேணாம் நீ வேலைக்கே போன்னு சண்டை பண்றாருடா" பாவமாக முகத்தை வைத்து கொஞ்சலாக சித்து சொல்லி முடிக்க பார்த்த வீராவிற்கு பாவமாய் போனது.

"அடேய் எப்பா என்னாடா உனக்கு ஏத்தமாதிரி முழுசா சொல்லாம பாதிய கட் பண்ணி சொல்ற" என எகிறிய அரவிந்த்

"வீராம்மா முழுசா நடந்ததை அங்கிள் நான் சொல்றேன்மா. நான் உங்க அத்தைய கூட்டிட்டு இந்த ஊருக்கு வந்தப்ப எங்களுக்குன்னு ஒரு வாடகை விடு தர எவ்ளோ யோசிச்சாங்க தெரியுமா. அப்படி இருந்த நாங்க இந்த வீட்ட கட்டினோம். அதோட இன்னும் ஒரு ரெண்டு இடத்தில இடம் வாங்கி போட்டிருந்தேன். இவ்ளோ வருஷம் நான் கஷ்டப்பட்டதை எல்லாத்தையும் இவன் ஒரே நாள்ல அழிக்க பாக்குறான்மா" என மூக்கை சிந்திய அரவிந்த்

"அந்த இடத்து பத்திரத்தை வச்சு லோன் வாங்கி பிசினஸ் தொடங்கப்போறேன் பத்திரத்தை தான்னு வந்து நிக்கிறான்மா இவன்" என ஏற்ற இறக்கத்துடன் கூற வீரா இப்போது அரவிந்தை பாவமாக பார்த்தாள்.

இந்த பழைய பஞ்சாயத்தே இவர்களுக்குள் இன்னும் ஓட வாண்டட்டாக வந்து வண்டியில் ஏறியிருந்தாள் வீரா.

'என்ன இவ ரியாக்ஷன் எங்க அப்பனுக்கு சாதகமா போகுது. இது சரியில்லையே' என வீராவின் முகத்தை கண்டு உஷாரான சித்து 'இப்போ பாருங்கடா என் பர்பாமன்ச' என களத்தில் இறங்கிவிட்டான்.

"வீரா எனக்கும் தான் யாரு இருக்கா சொல்லு. நான் பிசினஸ் பண்ணனும்னு ஆசைப்படுறேன் அதுக்கு ஒரு நல்ல அப்பாவா இவரு என்ன பண்ணனும் 'மகனே நீ எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற. இந்தா இந்த பத்திரத்தை வச்சு காசு ஏற்பாடு செஞ்சு பிசினஸ் ஆரம்பின்னு' சொல்லனும்ல. இவரை விட்டா நான் போய் யாரை கேப்பேன்.

நீயே சொல்லு வீரா என் அப்பா தானே எனக்கு பிசினஸ் செய்ய உதவி செய்யனும்"

சித்துவின் நடிப்பில் வாயில் கைவைத்த அரவிந்த் 'அடப்பாவி மகனே! என்னம்மா நடிச்சு ஸ்கோர் பண்ற. நான் உனக்கு அப்பன்டா இப்ப பாரு என் ஆக்டிங்க' என தானும் தன் பங்கிற்கு நடித்துக் கொட்ட ஆரம்பித்தார் அரவிந்த்.

"வீராம்மா நான் என்ன அவனுக்கு உதவி செய்யலைனா சொல்றேன். இவன இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்கயாவது வேலைக்கு போய் எக்ஸ்பீரியன்ஸ் ஆன அப்புறம் தானே தனியா பிசினஸ் செய்ய சொல்றேன். இப்பவே தனியா ஆரம்பிச்சு எதாவது லாஸ் ஆகிப்போனா கடைசியில கஷ்டபடப்போறது அவன்தானே. அவன் நல்லதுக்கு தானே இந்த அப்பங்காரன் இவ்ளோ தூரம் பேசுறேன். அவன் நல்லா இருந்தா தானே நாம எல்லாரும் நல்லா இருப்போம்" என டயலாக் அடிக்க

சித்தார்த்துக்கு பேசுவது தன் தந்தை தானா இல்லை அவரைப் போல் குளோனிங் உருவத்தை யாராவது கொண்டு வந்து விட்டு சென்றுவிட்னரா என்று ஆச்சரியப்பட்டு போனான்.

"அவ்வா அவ்வா அவ்வா... யோவ் நைனா என்னா ஆக்டிங்கு. என்கிட்ட ஒரு பேச்சு உன் மருமகட்ட ஒரு பேச்சு. நடிக்க எங்க போய் டிரைனிங் எடுத்த" என இப்போது விட்ட இடத்திலிருந்து சித்து சண்டையை துவங்க

"ஆன் உன்னைவிட கம்மியா தான்டா மகனே நடிச்சேன். உன் பர்மான்ஸ் இருக்கே சான்ஸே இல்ல. எப்பா எங்க இருந்து டா இதையெல்லாம் கத்துக்கிட்டு வந்த" என அரவிந்தும் ஆரம்பித்துவிட்டார்.

இதில் பாவம் இடையில் மாட்டி முழித்துக் கொண்டிருந்தது வீராதான். 'பேசாம சமைக்கவே போயிருக்கலாம். தேவையில்லாம இவங்களுக்கு நடுவுல வந்து மாட்டிக்கிட்டேனே' என காலதாமதமாக உணர்ந்த வீரா.

'இப்படியே எந்திரிச்சு ஓடிடு வீரா' என துரிதமாக யோசித்து அப்படியே சமையல்கட்டிற்குள் ஓடிவிட்டாள். இவள் சென்றதைக் கூட கவனியாத தந்தை மகன் இருவரும் பழையபடி சண்டையை தொடர இதில் ஹைலைட்டே கதிர் தான்.

ஆரம்பத்தில் இருந்து இருவரின் சண்டையையும் சிப்சை தின்றுக் கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்க்கும் கதிரை கண்டு மீண்டும்‌ தலையில் அடித்தபடி வந்தாள் வீரா.

"அங்கிள் சித்து ரெண்டு பேரும் விளையாடினது போதும். வாங்க டிபன் ரெடி பண்ணிட்டேன்" என்ற போது தான் தெரிந்தது இவள் சென்று உணவை தயார் செய்யும் வரை தந்தை மகன் கூட்டனி சண்டையில் இருந்திருக்கிறது என்று.

"ஐயோ அக்கா என்ன அதுக்குள்ள வந்து சண்டைய கலச்சி விட்டுட்ட எனக்கு இன்னைக்கு இந்த சண்டைல தான் நேரமே போச்சு. மாமா நீங்க ரெண்டு பேரும் ஆரம்பிங்க செமையா இருக்கு" என்ற கதிரை ஞே வெ பார்த்து வைத்தனர் இருவரும்‌.

பின்னே இருக்காதா முதலில் இவர்கள் சண்டையில் இடையே வந்து சமாதானம் செய்ய முயன்ற கதிரையும் வீராவை போல் நடுவே வைத்து செய்திருக்க அவன் இதற்கு மேல் நம்மால் ஆகாது என வேடிக்கை பார்க்க துவங்கி கடைசியில் இப்படி வந்து நிற்கிறான்.

"ஏய் கதிரு நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ பெரிய விஷயத்துக்காக சீரியசா சண்டை போட்டுக்கிறோம் நீ என்னடா பொசுக்குன்னு சிரிப்பு வருதுன்னு சொல்லிபுட்ட" அரவிந்த் நியாயமாக கேட்டு வைக்க

"கதிரு உனக்கு எங்களை பார்த்தா காமெடியா இருக்கா. இருடா மச்சான் இந்தா வரேன்" என்ற சித்து கதிரை கிச்சுகிச்சு மூட்டிவிட "ஐயோ மாமா விடுங்க. அம்மா கூசுது மாமா" என கதிர் சிரிக்க சிரிக்க அவனை விடவில்லை சித்து.

"டேய் கதிரு நீ டேபில்க்கு போ" என அவனை சித்துவிடம் இருந்து பிரித்த வீரா "நீங்க சண்டை போட்டோம்னு வேனா சொல்லுங்க. ஆனா சீரியசா போட்டேன்னுலாம் சொல்லாதீங்க. எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது. இப்ப பேசாம வந்து சாப்பிடுங்க" என்றாள் அவளும் சிரிப்புடன்.

அப்படியே அனைவரும் சிரித்தபடி உணவு உண்ண செல்ல வெகு நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் மன நிறைவான சூழல் மீண்டிருந்தது. கதிரிடம் சித்து வீரா காதல் விஷயத்தை அரவிந்த் கூறி சம்மதம் கேட்க அவனுக்கு சித்து அவன் அக்காவின் கணவனாக வரப்போகிறான் என தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ந்துதான் போனான். அன்றிலிருந்து இவர்கள் செய்யும் சேட்டையில் அவனும் சேர்ந்து கொள்வான். இன்றும் அப்படியே அவர்களை வம்பிழுக்க நேரம் நன்றாகவே சென்றது.

உணவு நேரமும் கூத்தும் கும்மாளமாய் செல்ல இரவு சித்து மீண்டும் வந்து அரவிந்திடம் பேசினான். ஆனால் இப்போது முன்பைப்போல் இல்லாமல் அவர்கள் பேச்சு சற்று சீராயசாகவே இருந்தது‌.

"அப்பா உன் விளையாட்டை எல்லாம் விட்டுட்டு நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு" இப்படி சித்து கூற சரி என்ற அவன் தந்தையும் தலை அசைக்க தொடர்ந்தான் மகன்.

"நான் ஏன் பிசினஸ் பண்றேன்னு உனக்கு சொல்லிடறேன். இப்ப நான் மறுபடியும் வேலைக்கு போனாலும் இந்த வேலையிலையும் எவ்ளோ நாள் என்ன வச்சிப்பாங்க சொல்லு. எப்பனாலும் நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க போறது உறுதி.

நான் அதுல தோத்து போயிட்டா என்ன பண்றதுன்னு தானே நீ பயப்படுற. ஏன்ப்பா வாழ்க்கையில அடிப்படாம எதையும் கத்துக்முடியாதுன்னு நீதானே சொல்லுவ. அம்மாவும் நீயும் இந்த ஊருக்கு வந்த அப்போ எவ்ளோ கஷ்டப்பட்டீங்கன்னு நீ சொன்னது எனக்கு நல்லாவே நியாபகம் இருக்குப்பா. அதனால உன்னோட உழைப்புல உருவான எதையும் நான் அழிக்கமாட்டேன்‌‌.

இப்பவும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலைனா சொல்லு நான் வேற எதாவது வேலையே தேடறேன்" என அவன் மனதில் இருந்த அனைத்தையும் அப்படியே சொல்லி முடித்தான்.

இப்போது யோசித்து பார்த்த அரவிந்த் "எனக்கு புரியுதுடா கண்ணா. ஆனா நீ வாழ்க்கைல எந்த இடத்துலையும் தடுமாறி நின்னா அதை என்னால பாக்க முடியாதுடா" என்ற அரவிந்த்

"அதேநேரம் என் பையன் ஆசைப்படுற எதையும் வேணாம்னு சொல்லவும் மனசு வரல. அதனால நம்ம ரெண்டு நிலத்தையும்‌ அடகு வச்சுக்கோ டா. புது பிசினஸ் நல்லபடியா ஆரம்பி. அப்பா உனக்கு துணையா இருக்கேன்" என முடித்தார்.

அவர் கூறியதை கேட்டு மனதார மகிழ்ந்த சித்து "ரொம்ப தேங்க்ஸ் பா" என்று அவரை அணைத்து கொள்ள அதை கண்டு அக்கா தம்பி இருவரும் மகிழ்ந்து தான் போயினர்.

"சரி அந்த பத்திரத்தை எல்லா என் பீரோல இருந்து எடுத்துட்டு வா. எதை வைக்கிறதுன்னு சொல்றேன்" எனவும் ஆனந்தமாக சென்ற சித்து அரவிந்தின் பழைய பீரோவை குடைய அதனுள் இரண்டு மூன்று புதிய பத்திரங்கள் இருக்க அதை எடுத்துக் கொண்டான். அப்போதுதான் அதனுள் இருந்த வேறொரு பழைய கவரை கண்டவன் அது என்னவென தெரிந்து கொள்ள அதையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 18

அரவிந்தின் பழைய பீரோவில் இருந்து இரண்டு கவர்களை அள்ளி வந்து போட்ட சித்து "நைனா இந்தா லேண்ட் டாக்குமெண்ட்ஸ் எதை அடகு வைக்கிறதுன்னு சொல்லு. கமான் பாஸ்ட்"
அரவிந்த் சரி என்றவுடனே கேட்டு பெறவில்லை எனில் அவர் மீண்டும் வேண்டாம் என முறுங்கைமரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என அவசர அவசரமாக எடுத்து வந்து கேட்டுவிட்டான்.
அரவிந்த் ஏதோ ஒரு வீக் பாயிண்டில் பேசிவிட்டாரே தவிர இன்னும் முழுமனதாக சொத்துப் பத்திரத்தை கொடுக்க மனது இல்லை மனிதருக்கு. மனதே இல்லாமல் தன் மகன் கொண்டு வந்த பத்திரத்தை பார்த்து முழித்த அரவிந்தை கலவரமாக பார்த்த சித்து
இதற்கு மேல் அவரை தனியே சமாளிக்க முடியாது என்று உணர்ந்து மெல்ல தலையை திருப்பி வீராவை பார்த்து "வீரா செல்லம்" என்று அவன் அழைத்ததுதான் தாமதம்
"கதிரு வா உனக்கு மாத்திரை போட நேரம் ஆகிருச்சு. மாத்திரை போட்டுட்டு தூங்கனும் வா வா நாம ரூம்க்கு போகலாம்" என்று எஸ்கேப் ஆகிவிட்டாள்.
பின்னே இந்த தந்தை மகன் கூத்தின் நடுவே மாட்டிக் கொண்டு யார் முழிப்பது. அதை நன்றாக தெரிந்திருந்த வீரா நேக்காக தப்பி அறைக்குள் ஓடி சென்றுவிட்டாள். இனி அவளை வைத்து எதுவும் சாதிக்க முடியாது என்று புரிந்து போக அவன் தந்தை சற்று குழம்பி இருக்கும் நேரமே தன் காரியத்தை சாதிக்கலாம் என முடிவெடுத்தான்.
"நைனா என்ன பத்திரத்தை உத்து உத்து பாக்குற. எந்த பத்திரத்தை வைக்கணும்னு சீக்கிரம் சொல்லு. சொன்னா நான் சட்டுபுட்டுனு வேலைய ஆரம்பிப்பேன்ல"
சித்து தன் நிலையிலையே நிற்க தன் நிலப்பத்திரங்களை மாற்றி மாற்றி பார்த்த அரவிந்த் தன் முகத்தை பாவமாக வைத்து சித்துவை ஒரு பார்வை பார்க்க அவர் மகனோ எனக்கென்ன வந்தது என்பது போல் அமர்ந்திருந்தான்.
அரவிந்த் சோகமாக அமர்ந்திருந்த நேரம் சித்து அவன் எடுத்து வந்த மற்றொரு கவரை எடுத்து "இது என்ன கவரு நைனா? உன் துருபிடிச்ச பீரோல இதுவும் இருந்தது" என்க
அந்த கவரை பார்த்தவர் "தெரியலையே மகனே‌. நான் எதாவது முக்கியமான டாக்குமெண்ட் வச்சிருக்க போறேன். பிரிச்சு பாரு உள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சிரும்" அரவிந்த் உற்சாகமாக கூறினார்.
"இருந்துட்டாலும் ஏன் நைனா என்ன தங்க புதையல் ரகசியத்தையா உள்ள வச்சிருக்கப்போற. எதாவது வீணாப்போன பேப்பர்ஸ வச்சிருப்ப. இரு உள்ள என்ன இருக்குன்னு பார்க்குறேன்" என அந்த கவரை பிரித்து உள்ளே இருந்து ஒரு கொத்து பத்திரத்தை எடுத்தான் சித்து.
அதை பார்த்த சித்துவிற்கு ஒரு மினி ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டுது‌. பின்னே இருக்காதா அது அனைத்தும் ஏதோ நில பத்திரங்கள். அதுவும் அனைத்தும் ஒரிஜினல். 'எப்புட்ரா' என அதிர்ந்த சித்து
"நைனா இதை எல்லாம் எங்க இருந்து திருடிட்டு வந்த. அம்புட்டும் லேண்ட் டாக்குமெண்ட்ஸ்யா. அதுவும் பூராவும் ஒரிஜினல். உண்மைய சொல்லு எல்லாத்தையும் எங்க இருந்து சுட்டுட்டு வந்த?"
சித்து சீரியசாக பேச அரவிந்த் அப்போதுதான் அவர் மகன் உண்மையை பேசுகிறான் என புரிந்து "இங்கக்குடு சித்து நான் பாக்குறேன்" என அனைத்தையும் வாங்கி பார்க்க
ஒவ்வொரு பத்திரத்தையும் மாற்றி மாற்றி பார்த்ததில் அவரின் கண்கள் சந்திரமுகி ஜோதிகா போல் விரிந்துக் கொண்டே சென்றது. முடிவில் அதே பேய் முகத்துடன் சித்துவை பார்த்தவர்
"மகனே அம்புட்டும் நம்ம சொத்து தான்டா" என்றார் பல்லை இழித்துக் கொண்டு. சித்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனெனில் அந்த பத்திரத்தில் இருந்த சொத்தின் மதிப்பில் ஒரு சதவீதம் கூட அவர் இங்கு சென்னையில் வாங்கிய சொத்து இருக்காது. அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்று குழ்மபிவிட்டான் சித்து‌.
"இல்ல எனக்கு சுத்தமா புரியல ப்பா. கொஞ்சம் தெளிவா சொல்லு" இப்போது சித்துவும் சற்று பதற்றத்துடனே கேட்டான். அவன் தந்தை எதில் வேண்டுமானாலும் பொய் சொல்லுவார். ஆனால் இதுபோன்ற சீரியசான விஷயத்தில் என்றும் பொய் உரைத்தது இல்லை.
"அட ஆமாண்டா சித்து கண்ணா. இது எல்லாம் நம்ம சொத்துதான்‌. எல்லா உன் தாத்தா சொத்துடா. உன் தாத்தா அதான் எங்க அப்பா ஊர்ல பெரிய பண்ணக்காரருடா. அந்த ஊருல முக்கால்வாசி இடமே நம்மலது தான். அந்த பத்திரம்தாண்டா இதெல்லாம்" கண்கள் மின்ன அரவிந்த் கூறியதை கேட்டு உண்மையில் பாதி உரைந்த நிலையிலே இருந்தான்.
இங்கு ஒரு நிலத்தை வைத்து சிறு கம்பெனி துவங்கலாம் என்று நினைத்திருக்க அடிச்சதுடா லாட்டரி என்பது போல் இவ்வளவு பெரிய சொத்து இருக்கிறது என தெரிந்தால் என்ன ஆகும். அந்த அதிர்ச்சி இருக்கத்தானே செய்யும். முதல்கட்ட அதிர்ச்சி விலகவே சில நிமிடங்கள் எடுத்தது தந்தை மகன் இருவருக்கும்.
"ஆமா ப்பா எனக்கு ஒரு டவுட்டு. நீதான் சின்ன வயசுலையே ஊரைவிட்டு ஓடி வந்துட்டியே இந்த எல்லா பத்திரமும் நம்ம வீட்டு பீரோல எப்படி வந்தது?" என தனக்கு தோன்றியதை சித்து கேட்டு வைக்க அதற்கு கேவலமான ஒரு சிரிப்பை உதிர்த்த அரவிந்த்
"அதுவந்துடா மகனே நானும் உங்க அம்மாவும் லவ் பண்ணுறப்பையே என் அப்பா அதான் உன் தாத்தா எனக்கும் என் தங்கச்சிக்கும் தனி தனியா சொத்தை பிரிச்சு எழுதி வச்சிட்டாரு" அரவிந்த் பேசும் போது "ஓஓ... உனக்கு தங்கச்சி எல்லாம் இருக்காங்களா?" என இடையிட்டான் சித்து.
"அட ஆமாம் மகனே உனக்கு அவ அத்தை. இப்ப என்ன பண்றாளோ? எப்படி இருக்காளோ? அப்பவே என்மேல எவ்ளோ பாசமா இருப்பா தெரியுமா" அரவிந்த் அவர் தங்கை நினைவுக்கு போக
"ஐயோ ப்பா அதெல்லாம் அப்புறம் பீல் பண்ணு இப்ப டாக்குமெண்ட் அது எப்படி வந்தது அதை சொல்லு" என்று சரியாக தடைப்போட்டான் அவர் பேச்சுக்கு.
"கொஞ்ச நேரம் என்ன பீல் பண்ண விடுறானா?" என்று கடுப்பில் கூறியவர் தொடர்ந்தார்.
"எங்க விட்டேன்.. ஆன் சொத்து சொத்து பிரிச்சு வச்சாரா. என் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சுச்சு. அப்பதான் உன் அம்மாவை லவ் பண்றேன்னு கூட்டிட்டு போய் உன் தாத்தா முன்னாடி நின்னேன்டா‌. அவர் என்னன்னா உன் அம்மாவை ஏத்துக்க முடியாதுனு ஒரேதா நோ சொன்னாரு. இதுக்கு மேல அவர் என்ன எனக்கு ஓகே சொல்றதுன்னு உங்க அம்மாவ கூட்டிட்டு ஓடி வந்தேட்டேன்ல"
அரவிந்த் பேசியதை கேட்டபடி வந்த வீரா "வாவ் அங்கிள் நீங்க சூப்பர். அந்த காலத்துலையே எவ்ளோ சாகசம் எல்லாம் செஞ்சிருக்கீங்க. நீங்க பெரிய ஆளுதான்" என தன் பங்கிற்கு ஏற்றிவிட்டாள்.
"பின்ன உன் அங்கிள்னா சும்மாவா. என் அருமை பெருமை எல்லாம் உனக்கு தெரியுது. இந்தா உக்காந்து இருக்கானே என் புள்ள இவனுக்கு எங்க இதெல்லாம் தெரிய போவுது" வீரா வரவும் அரவிந்த் தனக்கு தானே பெருமை பேச சித்து இருவரையும் பார்த்து பொய்யாக முறைத்தான்.
"சரி சரி முறைக்காதடா சொல்றேன். நான் ஊர்லையே சொகுசா வாழ்ந்தவன்டா அப்படி இருக்கும் போது இங்க வந்து கஷ்டபடக்கூடாதுன்னு கொஞ்ச பத்திரத்தை எடுத்துட்டு வந்தேன். அடகு வச்சாவது செலவு பண்ணலாம்னு. ஆனா எனக்கு நல்ல சம்பளத்தில வேலை கிடைச்சிதா அதனால இதை அப்படியே வச்சிட்டேன்" அரவிந்த் இவ்வாறு கூறி நிறுத்த
"அடப்பாவி தகப்பா நீ சரியான கேடியா இருந்திருக்க போலையே" என ஆச்சரியப்பட்டுப் போனான் மகன்.
"அங்கிள் அதுக்கு அப்புறம் நீங்க உங்க சொந்த ஊருக்கு மறுபடியும் போகவே இல்லையா" வீரா தன் சந்தேகத்தை கேட்க ஒரு பெருமூச்சை விட்ட அரவிந்த்
"இல்லமா என் அப்பா இவன் அம்மாவ ஏத்துகலைனு எனக்கு அவர் மேல கோவம் இருந்துச்சு. அதுல அவரை திரும்ப பாக்கவே கூடாதுன்னு மனசுல ஒரு எண்ணம். அதான் ஊர் பக்கமே போகமா இருந்துட்டேன்" என தன் சொந்த கதையை சொல்லி முடித்தார்.
"இப்ப போனா உங்க அப்பா எதாவது சொல்வாறா அங்கிள்?" புத்தியே இல்லாது வீரா கேட்டு வைக்க அவளை சித்து ஒருமாதிரி பார்த்தான்.
"நானே போய் சேந்துட்டேன்‌ என் நைனாவா இன்னும் உயிரோட இருக்க போறாரு. ஆனா ஒன்னு தோனுது வீராம்மா இத்தனை வருஷம் வைராக்கியமா இருந்து என்னத்த சாதிச்சேன்‌ என்னத்த கொண்டு போனேன். என் அப்பாவ ஒருதடவை போய் பாத்திருக்கலாம்"
சோக பிஜிஎம் போட்டு அரவிந்த் பாவமாக சோககீதம் வாசிக்க "இந்த நியாய வெங்காயம் எல்லாம் உயிரோட இருக்கப்ப பேசிருந்தா நல்லாருந்திருக்கும்" அவர் பிஜிஎமை ஆஃப் செய்வது போல் பேசினான் சித்து.
"சரி அதை விடு ப்பா இது உன் அப்பா சொத்துன்னா இது என்னோட சொத்தும் தானே முதல்ல அதை சொல்லு" தனக்கு வேண்டிய பாயிண்டை பிடித்து சித்து சரியாய் கேட்க இப்போது அரவிந்தின் மூளையிலும் பல்ப் பிரகாசமாய் எரிந்தது.
"ஆமாண்டா மகனே அம்புட்டும் நம்ம சொத்துதான். நீ இந்த சொத்து பத்திரத்தை வச்சு லோன்கூட வாங்கலாம். இதுக்கு பணம் நிறையவே கிடைக்கும் டா" சைடு கேப்பில் தன் நிலத்தை பத்திரபடுத்த அரவிந்த் சில் டெக்னிக்கை அள்ளி விட்டார்.
"வாழ்க்கையில எனக்கு நீ செஞ்ச ஒரே நல்லகாரியம் இதுதான் ப்பா. ஆனா இந்த டாக்குமெண்ட்ட வச்சு நான் பணம் வாங்கப் போறது இல்ல" சித்து இப்போது ஒரு டிவிஸ்ட் தர
"என்னடா சித்து கண்ணா செய்யப்போற" என அரவிந்தும் ஆர்வமாக கேட்டார்‌.
"அது எதுக்கு ப்பா உனக்கு. நான் செய்யும் போது நீ பாரு இப்ப வெயிட் அண்ட் வாட்ச்" அரவிந்திடம் வீரவசனம் பேசிய சித்து வீராவை பார்த்து
"பேபிமா போய் உன் லக்கேஜ் கதிர் லக்கேஜ் எல்லாத்தையும் பேக் பண்ணு நான் பேய் என்னோடதையும் பேக் பண்றேன். நாம நைனா ஊருக்கு இன்னும் டூ டேஸ்ல கிளம்பறோம்" என திடீரென அறிவித்தான்.
"எதுக்குடா மகனே?" என்ற அரவிந்தை கண்டு கொள்ளாது தன் அறைக்கு சென்று விட்டான் சித்து.
"வீராம்மா உனக்கு இவன் பிளான் எதாவது புரியுதா? இவன் எதுக்கு இப்ப நம்மள எல்லாரையும் சென்னைய விட்டு காலி பண்ணி கூட்டிட்டு போக பாக்குறான்" அரவிந்த் குழப்பாமாய் கேட்க
"அது எனக்கும் புரியல அங்கிள். உங்க புள்ள மொத தடவையா எதோ பிளான் பண்றாரு என்னதான் செய்றாருன்னு பாப்போமே. நான் போய் பேக் பண்றேன் அங்கிள்" என்று வீராவும் அவள் அறைக்கு கிளம்பினாள்.
"என்ன எல்லாரும் டிரஸ்ச பேக் பண்ண போயிட்டாங்க. அப்ப நம்ம டிரஸ்சையும் போய் பேக் பண்ணுவோம். டேய் மவனே உங்க அப்பனுக்கும் சேத்து ஏசி கோச்ல டிக்கெட் புக் பண்ணுடா" அரவிந்த் தான் ஒரு ஆவி என்பதை மறந்து புத்தியே இல்லாமல் கத்திக் கொண்டு செல்ல
"ஆமா அங்கிள் கேக்க மறந்துட்டேன் உங்க ஊரு பேரு என்ன?" என வீரா கேட்க
அதற்கு "வத்தலக்குண்டு வீராம்மா" என தானும் கத்திய அரவிந்த் தன் பெட்டியை அடுக்க சென்றார்.
இவர்கள் இங்கு அலப்பரையாக கிளம்ப "வாங்க செல்லங்களா. உங்களுக்காகதான் ரொம்ப நாளா நானும் இங்கையே இருக்கேன். சீக்கிரம் வாங்க வாங்க ஐ'ம் வெய்டிங்" என அந்த வீடே அதிரும்படி ஒரு குரல் கேட்க இன்றும் தெரியாத்தனமாக அந்த பாதையில் சென்ற மாதவன் அலறிக் கொண்டு ஓடினான்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 19

"புத்தும் புது காலை...
பொன்னிற வேளை...
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..."

பஸ்ஸில் பாடல் ஓடிக் கொண்டிருக்க அதோடு சேர்ந்து தானும் பாடியடி இல்லை இல்லை கத்திக் கொண்டு வந்தார் அரவிந்த்.

'ஆண்டவா இந்தாளோட முடியலையே' என நொந்துப்போய் வந்தது சித்துவே. ஏனெனில் மனிதர் கரடியாய் கத்துவது இவன் காதுகளில் தானே கேட்கும். இவர்களுக்கு முன்னால் இருந்த இருவர் சீட்டில் அமர்ந்து சிரித்து பேசியபடி வந்த வீராவையும் கதிரையும் எட்டி பார்க்க

இருவரும் இந்த உலகிலே இல்லை. ஏதோ பேசி சிரித்து கொண்டு வர சித்துவின் பாடுதான் திண்டாட்டம். அதுவும் அரவிந்திடம் எதுவும் பேசவும் முடியாதே. அப்படி இவன் பேசுவதை யாராவது பார்த்தால் 'பையித்தியமா இவன்?' என நினைத்து செல்ல வாய்ப்பு உண்டு என பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக வந்தான்.

நேற்று இரவு சென்னையில் இருந்து திருச்சி கிளம்பிவிட்டனர் நால்வரும். பஸ் நிலையத்திற்கு வந்து ஏசி கோச்சில் ஏன் தனக்கு ஒரு டிக்கெட் போடவில்லை என அங்கேயே வைத்து அரவிந்த் சண்டையை இழுக்க

"இங்க பாரு நைனா பேய்க்கு எல்லாம் டிக்கெட் தரமாட்டாங்கலாம். நீ அப்படியே பிளையிங்ல வாயே. இல்லனா ஒன்னு பண்ணு பஸ் மேல உக்காந்துட்டு வா. இப்ப எங்கள டிஸ்டர்ப் பண்ணாத"

சித்து அரவிந்திடம் வம்பு பேசி பஸ்ஸில் ஏற "ஐயோ நல்ல ஸ்லீப்பிங் கோச்சு ஏசி வேற. இந்த பையன் மட்டும் நல்லா தூங்கிட்டு வருவான் நான் பஸ் மேல உக்காந்துட்டு வரணுமா? நோ நெவர்" என தானும் ஏறியவர் டிரைவர் சீட்டிற்கு பக்கத்திலே அமர்ந்துவிட்டார் மனிதர்.

இப்படி நால்வரும் அலப்பறையாக கிளம்பி வர திருச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்ட பேருந்தியில் ஏறிய நேரம் பாடல்கள் எல்லாம் அரவிந்தின் விருப்ப பாடல்களாய் போக கத்தி கத்தி அவர் மகனை கதற வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒருவழியாக அரவிந்த் சாகசங்கள் அனைத்தையும் பொறுத்தபடி வத்தலகுண்டு செல்லும் பேருந்தை விட்டு இப்போது இறங்கி நின்றனர் அனைவரும்.

"ஆஹா...‌" மூச்சு காற்றை நன்றாக உள் இழுத்து வெளியே விட்ட அரவிந்த் "சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா" தன் திருவாயை திறந்து மீண்டும் பாட

"ஊரை விட்டு ஓடி போனப்ப தெரியலையா நைனா இது சொர்கம்னு. மனசுல பெரிய இளையராஜானு நினைப்பு. அப்படியே வாய மூடிட்டு வா நைனா கடுப்பேத்தாம" என கடுப்படித்தான்.

"சரி சரி உங்க சண்டைய ஒரு டூ மினிட்ஸ் நிறுத்திட்டு அங்கிள் ரிலேட்டிவ் வீடு, அதான் உங்க அத்தை வீடு எங்க இருக்குன்னு யார்டையாவது கேப்போம்" இவர்கள் இருவரும் சண்டையை ஆரம்பித்தால் அவ்வளவுதான் என இடையே புகுந்து கலைத்துவிட்டாள் வீரா‌.

இப்படி இவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பேசியபடி நடந்து வர அங்கு அந்த கிணத்தில் சடலத்தை காண ஓடிய கிழவி அவள் வீட்டு திண்ணையில் அமர்ந்து இவர்களை உற்று உற்று பார்த்தது. அதை கவனித்த வீரா

"அங்கிள் ஆள் சிக்கிருச்சு. அங்க பாருங்க கரெண்டே இல்லாத சிசிடிவி கேமரா அங்க ஒன்னு இருக்கு அதுகிட்ட கேட்டா ஆல் டீட்டெய்ல்ஸ் கிடச்சிடும்"

வீரா கைக்காட்டிய இடத்தில் அந்த கிழவி வாயில் வெத்தலையை அதக்கி கொண்டு கையில் இடிக்கல்லில் டொக்கு டொக்கு என இடித்திக் கொண்டிருந்தது.

"கரெக்ட் வீரா அந்த கிழவி வாய் வெத்தலைய மெல்லுற ஸ்டைல்லையே தெரிது அது கண்டிப்பா இந்த வில்லேஜ்ல பெரிய சிசிடிவியா இருக்கும்னு. வா போய் கேக்கலாம்" தானும் ஒத்துக் கொண்ட சித்து அனைவரோடும் அந்த கிழவியிடம் சென்றான்.

"பாட்டி பாட்டி எங்களுக்கு ஒருத்தரை பத்தி தெரியனும். இங்க அரவிந்த்னு ஒருத்தர் இருந்தார். அவர்கூட ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஓடி போயிட்டாரு. அவருக்கு ஒரு தங்கச்சி ஆன் அங்க பேர் கூட அலமேலுவள்ளினு அவங்க வீடு எங்க இருக்கு?"

சித்து கேட்டு நிறுத்த கிழவி அவனை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்து "அதை கேக்குறியே நீ யாரு தம்பி? ஊருக்கு புதுசா இருக்க. உன்கிட்ட நான் ஏன் சொல்லனும்" என்றது நக்கல் தொனியில்.

'கிழவி கூட நம்மல மதிக்க மாட்டேங்குதே' நொந்துபோன சித்து "நான் அந்த அரவிந்தோட பையன் பாட்டி. என் அத்தை பேமிலிய மீட் பண்ண வந்திருக்கேன்‌. அவங்க வீடு எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க" என மீண்டும் கேட்டான்.

இப்போது கிழவியின் கண்கள் இரண்டும் ஜூம் ஆகி சித்துவை ஆஆவென பார்த்து "ராசா நீ முத்தரசன் ஐயா பேரனா?" என்றது.

அதில் முழித்த சித்து "நைனா உன் அப்பா பேர் முத்தரசனா?" என மெதுவாக ஹஸ்கி வாயிசில் கேட்க "ஆமாண்டா மகனே அவர்தான் என் நைனா உன் தாத்தா" என்றார் மகிழ்ச்சியாக.

அவர் முகத்தை பார்த்து "எப்பா என் நைனா மூச்சில என்னா சந்தோஷம்" என தானும் மகிழ்ந்த சித்து "ஆமா பாட்டி" என்றான் சிரிப்புடன்.

சித்து ஆம் என்றவுடன் "ஆத்தி எங்க முத்தரசு ஐயா பேரானாயா நீயி பாரேன் எவ்ளோ அழகா ராசா மாதிரி இருக்க" என கிழவி பல பிட்டுகளை அள்ளிவிட மனதிற்குள் பறந்துக் கொண்டு இருந்தான் சித்து.

பின்னே அவன் வாழ்வில் கேட்கும் முதல் புகழ்ச்சி அல்லவா‌. அவன் முகத்தை பார்த்து 'அங்கிள் இவரை திட்டுரதுளையும் தப்பே இல்ல. பாரு அந்த கிழவி பேச பேச வந்த வேலையை விட்டுவிட்டு கதை பேசறத' என கடுப்பான வீரா

"பாட்டி பாட்டி நாங்க இன்னும் கொஞ்ச நாள் இந்த ஊர்ல தான் இருக்கப் போறோம். அதனால நீங்க மெதுவாவே இவர்ட்ட பேசிக்கலாம். இப்போ இவர் அத்தை அலமேலுவள்ளி அவங்க வீடு மட்டும் எங்க இருக்குன்னு சொன்னீங்கனா நல்லா இருக்கும்"

வீராவின் இடையீட்டில் அவளை பார்த்து "என் ராசாத்தி உன்னை என் மருமகன்னு சொல்ல எனக்கு ரொம்ப பெருமையா இருக்குமா" என்ற அரவிந்திற்கு இப்போதுதான் மனம் சற்று நிம்மதியானது.

பின்னே அவர் மகனை ஒருவர் அவர் கண்முன்னே புகழ்வதா என்ற அல்ப நினைப்புதான். சித்துவிற்கோ 'கொஞ்ச நேரம் நம்மல புகழ்றத கேக்க விடுறாளா இவ' என கடுப்பாய் வர அவளை பார்த்து புசுபுசுவென நின்றான்.

அதையெல்லாம் யார் கண்டு கொண்டது. அந்த கிழவியிடம் இருந்து தகவல்களை கறந்த பின்னர் "சரி வரோம் பாட்டி தகவல் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ். நாம மறுபடியும் மீட் பண்ணலாம் பாய்" என டாட்டா காட்டிவிட்டு சித்துவையும் அழைத்து சென்றாள்.

"நைனா இவ்ளோ பெரிய வீடு நம்மலோடதா?" தங்கள் கண் முன்னால் இருந்த பெரிய இல்லத்தை வாயை பிளந்து பார்த்து சித்து நின்று கேட்க

"இல்லடா மகனே இது நம்ம வீடு இல்ல. நம்ம வீடு இதைவிட பெருசுடா. இது என் தங்கச்சி வீடுன்னு நினைக்கிறேன்" என்று அரவிந்த் கூறிக் கொண்டிருக்கும் நேரம் யாரோ ஒரு ஆள் வெளியே வந்தார்.

வெளியே வந்தது வேறு யாரும் இல்லை மாதவன் தான்‌. 'யாருடா இவங்கலாம் நம்ம வீட்டு முன்னாடி நின்னு ஏதோ பேசிட்டு இருக்காங்க. நாம இவங்கல இதுக்கு முன்ன நம்ம ஊருல பார்த்தது இல்லையே. யாரா இருக்கும்?' என அவர்களை பார்த்து யோசித்தபடியே அவர்களிடம் வந்து சேர்ந்தான்.

"யாருங்க நீங்க? இங்க என்ன செய்றீங்க? எங்க அப்பாவ பார்க்க வந்தீங்களா?" மாதவன் வரிசையாக கேட்டு நிறுத்த

"இது அலுமேலுவள்ளி வீடு தானே?" பதில் கேள்வி கேட்டான் சித்து.

"ஆமாங்க அவங்க என் அம்மாதான். நீங்க யாரு. எங்க அம்மாவ பத்தி எதுக்கு கேக்குறீங்க?"

"நாங்க சென்னைல இருந்து வரோம். அவங்கலதான் நாங்க பாக்கனும். கொஞ்சம் கூப்பிடுறீங்களா?" மாதவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது சித்து அவன் அன்னையை காண வேண்டும் என கூறி வைக்க இதற்குமேல் அவனிடம் எதுவும் பேசாது "சரி உள்ள வாங்க" என்று உள்ளே சென்றான்.

சித்துவிற்கோ ஆச்சரியம். பின்னே அவன் வாழ்ந்த ஊரில் இதுபோல் தெரியாதவர்கள் வந்தால் வீட்டிற்குள் அழைக்கும் வழக்கம் எல்லாம் இல்லையே. இந்த வரவேற்பே புது விதமாய் இருக்க ஆச்சரியமாக உள்ளே நுழைந்தான் தன் படையுடன்.

"இங்க உக்காருங்க நான் போய் கூட்டிட்டு வந்திடுறேன்" மாதவன் அவர்களை அமர செய்துவிட்டு உள்ளே ஒரு அறைக்குள் செல்ல

"நைனா அது உன் தங்கச்சி பையன்னு நினைக்கிறேன். பாரேன் நாம யாருன்னு கூட சொல்லாம வீட்டுக்குள்ள கூப்பிட்டு உக்கார வெச்சிட்டு போறான். உன் ஊரு நல்ல ஊருதான் போல"

சித்து கூறியதை கேட்க அரவிந்திற்கு ஆனந்தமாய் இருந்தது. பின்னே இது அவரின் சொந்த மன்னனின் பெருமையல்லவா. அதுவும் இத்தைனை வருடம் கழித்து. ஏற்கனவே பேயாக மிதக்கும் மனிதர் இப்போது ஒரு அடி மேலே தான் பறந்தார்.

"பார்த்தியா உன் தகப்பனோட சொந்த ஊர. ஊருன்னா இதுதான்டா ஊரு. நீயும் ஒரு ஊருல இருக்கியே" அரவிந்த் தன் பங்கிற்கு அவரின் ஊர் பெருமையை எடுத்துவிட இருவர் பேசுவதையும் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட வீரா

"ஐயோ அங்கிள் இது உங்க ஊர்னா உங்க பையன் சித்துக்கும் இது சொந்த ஊரதானே" நியாயமாக கேட்டு வைக்க 'ஆமால்ல' என தந்தை மகன் இருவரும் நினைத்து மண்டையை ஆட்டி வைத்தனர்.

இவர்கள் பேசி முடிக்கும் நேரம் காபி கப்புகளுடன் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி. அவளை பார்த்து எழுந்து நின்ற அரவிந்தின் முகத்தில் சொல்லமுடியா ஒரு உணர்வு வந்து போக கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது. சுகர் வந்த பேஷன்ட் போல் கைகால் எல்லாம் தடதடவென ஆடியது‌.

"நான் தூக்கி வளத்த
என் அன்பு தங்கச்சி..."

அரவிந்தின் முகத்தில் தெரிந்த பாவனையில் சித்து வீரா கதிர் என எல்லோருக்கும் அவர் தங்கை மீது கொண்ட பாசம் அப்படமாய் தெரிய 'இவரு எப்படி ஊரைவிட்டு இத்தனை நாளு தனியா இருந்தாரு' எனதான் எண்ணினர்.

"எல்லோரும் எடுத்துக்கோங்க" என்று காபியை கொடுத்த அந்த பெண்மணி அப்படியே உள்ளே செல்ல 'ஒருவேளை நாம யாருன்னு தெரியாததால அத்தை அப்படியே உள்ள போறாங்க போல' என நினைத்த சித்து அவரை அழைக்க போகும் நேரம் மாதவன் வேறொரு பெண்மணியுடன் வந்தான். கூடவே இன்னொரு நபரும் வந்தார்‌.

"ஐய்யா எல்லாருக்கும் காப்பி குடுத்துட்டேங்க" என அந்த பெண்மணி கூறி சென்றுவிட "சரி சரசு நீ உள்ள போ" என்ற மாதவன்

"இவங்கதான் என் அம்மா அலமேலுவள்ளி‌. நீங்க பாக்க வந்தது இவங்கலதான்" என கூறி நிறுத்தினான்.

'என்ன இவங்கதான் என் அத்தையா' என்ற ஆச்சரியத்தை விட 'அது வேலைக்கார அம்மாவா' என்ற அதிர்ச்சியே அதிகம் இருந்தது சித்துவிற்கு. அதை கேட்ட மூவரும் இப்போது டக்கென அரவிந்தை திரும்பி பார்க்க "என்னா வேலைக்காரியா?" என கத்தியே விட்டார் மனிதர். அதே அதிர்ச்சியோடு அவர் தன்னோடு வந்தவர்களை பார்க்க அவர்களின் கேவலமான பார்வையில் 'ஈஈஈஈ....' என இழித்து வைத்தார்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 20

அரவிந்தின் கேவலமான சிரிப்பில் அவரை முறைத்து வைத்து 'தூதூ...' என மெதுவாக துப்பியே விட்டான் சித்தார்த். 'ச்சே என்னா இது அசிங்கமா போச்சு!' என நொந்து போய் நின்றார் அரவிந்த்.

"என்ன தம்பி என்னாச்சு?" சித்து துப்பியதை பார்த்து அலமேலு கேட்க

"அது ஒன்னும் இல்லைங்க. பல்லு இடுக்குல ஒரு துரும்பு சிக்கி இருந்தது. அதான் துப்புனேன்" என மகன் அழகாய் சமாளித்து வைக்க சரி என்றுவிட்டு இப்போது அலமேலு மேலே பேச துவங்கினாள்.

"வாங்க தம்பி என் புள்ளை நீங்க என்னை பாக்க சென்னைல இருந்து வந்திருக்கிறதா சொன்னான். நீங்க எல்லாரும் யாருப்பா? என்னை உங்களுக்கு எப்படி தெரியும்?"

அலமேலுவள்ளி ஒருவித ஆர்வத்துடன் வேகவேகமாக கேட்டு சித்துவை பார்த்தாள். ஏனெனில் திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் அலுமேலுவை காண்பதற்கு என்று அவ்வளவு தொலைவில் இருந்து எல்லாம் யாரும் வந்தது இல்லை. ஏன் அவர் கணவர் மகன் என அவர்களை பார்ப்பதற்கு கூட ஓரிருவர் வந்ததுண்டு.

சொந்த பந்தம் என்று பார்த்தால் எல்லோரும் உள்ளூரிலே குப்பை கொட்டி கொண்டிருக்க வெளியூரில் அவ்வளவாக சொந்தங்களும் இல்லை. அந்த ஆர்வத்துடன் தன்னை காண சென்னையிலிருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள் என மாதவன் கூறியதில் ஆவலாய் ஓடி வந்திருந்தார் அலமேலுவள்ளி.

பார்ப்பதற்கு அரவிந்தின் உயரத்தில் ஓரளவு அவரின் சாயலிலே இருந்தார் அலமேலு. அலமேலு பல்லை காட்டிக் கொண்டு நின்றிருக்க அவரோடு வந்த அவள் கணவன் கார்மேகம்தான் வந்திருந்தவர்களை ஆராயும் பார்வை பார்த்தபடி அமர்ந்தார்.

மாதவனுக்கும் வந்தது யாராக இருக்கும் என தெரிந்துக் கொள்ள ஆர்வமாகதான் இருந்தது. அதுவும் ஒரு அழகிய பெண் வேறு வந்திருக்க இவர்கள் யார் எதற்காக வந்திருக்கிறார்கள் என கேட்பதற்கு அவ்வளவு ஆவல் இருக்கவே செய்தது.

மூவரும் சித்து என்ன சொல்ல போகிறான் என ஆர்வமாய் பார்ப்பதை கண்டு 'பார்ரா நம்ம இண்ட்ரோக்கு என் அத்தை பேமுலிக்கு எவ்ளோ ஆர்வம்' என சிறிது பெருமையாக எண்ணிய சித்து தன்னை அறிமுகப்படுத்தினான்.

"என் பேரு சித்தார்த் ஆன்டி, இவ வீரசுந்தரி நான் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு. அப்புறம் அவன் கதிர் அவளோட தம்பி" என தங்கள் பெயர்களை கூறியவன்

"என் அப்பாவோட பேரு அரவிந்த், உங்க அண்ணா. ஒரு முப்பது வருஷத்துக்கு முன்ன ஊரைவிட்டுகூட ஓடிப்போய்ட்டாரே அவரோட பையன் நான்" என்று துவங்கியதுதான் தாமதம் அமர்ந்திருந்த அலமேலு டக்கென எழுந்து நின்றுவிட்டார்.

"என்ன... என்னையா சொல்ற என் அண்ணன் மவனா நீயி. நெசமாவேவா சொல்ற" என்று திணறியபடி பேசிய அலமேலுவின் கண்களிலிருந்து எங்கிருந்து வந்ததோ கண்ணீர் பொலபொலவென்று கொட்ட துவங்கிவிட்டது. அப்படியே சிறிது நேரத்திற்கு முன்னர் அரவிந்தின் முகத்தில் வந்த அதே எக்ஸ்பிரஸனை அச்சு அசலாக பெண் சாயலில் காட்டினார் அலமேலு.

சித்து "ஆமாம் ஆன்டி!" என முகத்தில் ஒரு லிட்டர் பாலை வடியவிட்டபடி அமுல்பேபி லுக்கில் சொல்ல வீரா கதிர் இருவரும் 'அடப்பாவி' என பார்த்து வைத்தனர்.

சித்து கூறிய அடுத்த செகன்ட் அவன் அருகே தாவி சென்ற அலமேலு அவன் இரு கன்னங்களையும் பிடித்துக் கொண்டு "என் ராசா என் அண்ணே மவனாயா நீ. எவ்ளோ பெரிய புள்ளையா இருக்க. இந்த அத்தையா பாக்க எத்தினி வருஷம் கழிச்சு வந்திருக்க எப்படி ராசா இருக்க"

அலமேலுவள்ளி அறுத பழைய ஹீரோயினை போல் டயலாக்காய் பேசிக் கொண்டே சென்றார்.

"ஆன்டி ஆன்டி காம் ஆகுங்க. நான் இங்கதான் இருக்கேன் எங்கேயும் போகல" சித்து அவர் கைவளைவில் இருந்தபடி சமாதானம் செய்தான். இந்த காட்சியை பார்த்து 'இவங்க டிராமா தாங்க முடியலைடா சாமி' என தன் தலையை திருப்பிய வீரா அப்போதுதான் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு நபரை கவனித்தாள்.

அலமேலுவள்ளி என்னதான் சட்டென்று சித்து கூறியதை நம்பி விட்டாலும் அவர்கள் வெறும் வாய் வார்த்தையாக கூறியதை அவள் கணவன் கார்மேகம் நம்பவிடவில்லை. தினம் தினம் எத்தனை மனிதர்களை அவர் சந்திக்கிறார் இப்படி திடீரென சிலர் வந்து சொந்தம் என்றால் அவர் நம்பிவிடுவாரா.

சந்தேக கண் கொண்டுதான் பார்த்தார். அதை கவனித்த வீரா 'ம்க்கும் இந்த பெரிய மனுஷன் பார்வையே சரியில்லையே. சந்தேகமால்ல பாக்குறாரு. சித்து வேற இந்த நேரம் பார்த்து சென்டிமென்டா பேசி பாசத்தை புழிஞ்சிட்டு இருக்காரு' மனதிற்குள் புலம்பிய வீரா அப்படியே திரும்பி அரவிந்தை பார்க்க

அவரோ கண்களில் கண்ணீரோடு அவர் மகன் தங்கையின் பாச காட்சிக்கு சாட்சியாக நின்றுக் கொண்டிருந்தார்.

'அங்கிளுமா சரிதான். எப்படா இது முடியும்?' என்று நினைத்து இவர்களை ஒரு பெருமூச்சுடன் வீரா விதியே என நோக்க, அந்நேரம் "ம்க்கும்" என குதிரை கணைத்ததை போல் குரலை செறுமினார் கார்மேகம்.

அவர் குரலில் திரும்பிய அலமேலு "என்னங்க என் அண்ணன் பையன பாருங்க. இத்தனை வருஷம் கழிச்சு என்னை தேடி வந்துட்டான்" என்று நெகிழ்ந்து போய் கூற

"அலமேலு ஒரு நிமிஷம் அமைதியா இரு. நான் வந்தவங்ககிட்ட ஒரு ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்" இடைப்புகுந்தார் கார்மேகம்.

"தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனா இத்தனை வருஷம் கழிச்சு வந்து நீங்கதான் என் மச்சானோட பைன்னா நாங்க எப்படி நம்பறது. அதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? என் மச்சான் அரவிந்து உங்க கூட வரலையா? நீங்கதான் அவர் மகன்னு சொல்லுற மாதிரி ஏதாவது ஆதாரத்தை முதல்ல காட்டுங்க தம்பி"

கார்மேகம் பாயிண்ட் பாயிண்டாக அவர் எண்ணியதை எடுத்து வைக்க 'அப்பாடி ஒருவழியா இந்த டிராமாவ முடிச்சூட்டு அடுத்த கட்ட நடவடிக்கைய எடுத்துட்டாரே இந்த மனுஷன்' என நிம்மதி கொண்டது வீராவின் மனம். பின் எவ்வளவு நேரம்தான் சித்து அலமேலு அழுது வடிவதை பார்ப்பது.

"அங்கிள் அப்பா ஒரு மாசத்துக்கு முன்ன தவறிட்டாரு. அவர் இறக்கிறதுக்கு முன்னாடி மரண படுக்கையில இருக்கும் போது அவர் சொந்த ஊர் இது, இங்க ஒரு தங்கச்சி இருக்காங்கன்னு எல்லாம் சொன்னார்.

அதுவரைக்கும் கூட எங்களுக்கு இப்படி சொந்தம் இருக்கிறது எனக்கு தெரியாது அங்கிள்" என்ற சித்து அப்பட்டமான பொய்யை அடித்துவிட, அவன் கூறியதில் தன் கவலையில் இருந்து வெளிவந்த அரவிந்த்

"எதே நான் சாவரதுக்கு முன்ன மரண படுக்கையில இருந்தனா? என்னமோ நான் சீக்கு வந்து செத்த மாதிரி சொல்றான். டேய் மவனே உன் நைனா தூங்கத்துல செத்து வீர மரணம் அடைஞ்சேன்டா" என தன் பங்கிற்கு தானும் கத்தினார்.

ஆனால் அதை எல்லாம் சிறிதும் காதில் வாங்காத சித்து அவன் அத்தையுடன் ஆழ்ந்துவிட்டான். "ஐயோ அங்கிள் கொஞ்ச நேரம் சும்மா இருங்கலே" இவர் பேச்சை தாங்காது பேசியது என்னவோ வீரசுந்தரியே.

"என்ன என் அண்ணா இப்ப உயிரோடயே இல்லையா" அதிர்ந்து கேட்ட அலமேலு மேலும் அழுகையை கூட்ட அவளை கவனித்தனர் வீரா அரவிந்த் இருவரும். இதை கேட்டு கார்மேகமே சற்று அதிர்ந்து தான் போனார். இப்போது அரவிந்தும் அமைதியாக அந்த இடமும் அமைதியாக இருந்தது.

"அங்கிள் இப்படி யாருன்னே தெரியாத ஒருத்தன் வந்து உங்க சொந்தகாரன்னு சொன்னா ஷாக்கா தான் இருக்கும். உங்களுக்கு சந்தேகம் வரது கரெக்ட் கூட. இங்க பாருங்க" என அதன்பிறகுதான் தன் போனில் இருந்த சில போட்டோக்களை எடுத்து காட்டினான் சித்து.

அதில் சித்து அரவிந்தின் புகைப்படங்கள் நிறைய இருக்க, அதன் ஹைலைட்டே கடைசியாக இருந்த பத்திரங்களின் புகைப்படங்கள் தான்.

"இது என்ன தம்பி" என கார்மேகம் தன் சந்தேகத்தை உறுதி செய்ய கேட்க "இது அப்பா இங்க அவர் பேர்ல இருக்க லேண்ட் டாக்குமெண்ட்ஸ்னு சொன்னார் அங்கிள். அவர் ஊரை விட்டு வரப்போ இதை எல்லாம் சேத்துதான் எடுத்துட்டு வந்ததா சொன்னாரு" என அவர் எண்ணியதை உறுதி செய்தான்.

"ஓஓ.. சரிங்க தம்பி. அந்த பத்திரத்தை எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கீங்களா இப்போ"

"இல்ல அங்கிள் நிறைய டாக்குமெண்ட்ஸ் இருந்தது. எடுத்துட்டு வரும் போது மிஸ் ஆகிட்டா என்ன செய்ய. எல்லாமே முக்கியமான டாக்குமெண்ட்ஸ் மாதிரி இருந்தது அதான் அங்க சென்னைலையே பேங்க் லாக்கர்ல வச்சிட்டு அதை போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்தேன் அங்கிள்"

கார்மேகத்தின் கேள்விக்கு பதில் அசராது அடித்தான் சித்து‌. பின்னே பத்திரங்களை எடுத்து வந்து இங்கு ஆட்கள் யாரும் தெரியாத ஊரில் அவனை யாரேனும் ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்ற பயமே. அதனால் இப்படி போட்டோ மட்டும் எடுத்து வந்திருந்தான். அதில் எல்லாம் அவன் அரவிந்தின் மினி ஜெராக்ஸு மிஷின்தான்‌ அவ்வளவு விவரம்.

இதை எல்லாம் பார்த்த பின்னரே சித்துவை முழுதாக கார்மேகம் நம்பினார் எனலாம். அதன்பின் என்ன நீண்ட நாள் சென்று வந்த தன் அண்ணன் மகனுக்கு தடபுடலாக விருந்து தயார் செய்ய கிளம்பிட்டார் அலமேலு. தன் அண்ணனை கவனிக்க முடியாது போனதால் அவர் மகனை நன்றாக ஊட்டி ஊட்டி கவனித்தார்.

என்ன கவனிப்பு கொஞ்சம் ஓவர்புளோ ஆகி கொண்டுதான் சென்றது‌. ஆரம்பத்தில் ஆனந்த கண்ணீரில் இருந்த அரவிந்தோ தற்போது இரத்த கண்ணீரில் நின்றார். பின்னே இருக்காதா ஆடு கோழி மீன் என வகைத்தொகையாய் டேபிலில் இருக்க அவர் மகனோ அதை எல்லாம் வெட்டு வெட்டு என வெட்டிக் கொண்டிருக்க, அரவிந்தால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது‌.

"ச்சே என் தங்கச்சி என்மேல வச்சிருக்க பாசத்துல இடி விழ. குத்துக்கல்லு மாதிரி அவ அண்ணங்காரன் நிக்குறேன் ஒரு வாய் சோறு போடாம என மவனுக்கு அள்ளி அள்ளி போடுறாளே" தான் அவள் கண்ணுக்கு தெரியமாட்டோம் என்ற புத்தியே இல்லாது தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு சோறு கிடைக்காத கடுப்பில் நின்றிருந்தார் மனிதர்.

"ஐயோ சோறு.. சிக்கனு.. மட்டனு.." சந்திரமுகி ஜோதிகா போல் சாப்பாட்டை பார்த்து கதறிய அரவிந்திற்கு பாவம் பார்த்து யாரும் அறியாமல் வீரா தான் இரண்டு சிக்கன் துண்டுகள் கொஞ்சம் மட்டன் பிரியாணி என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தந்து வைத்தாள்.

"என் ராசாத்தி! நீதான்மா என் மருமவ. இந்த பைய தனியா சிக்கட்டும் அப்ப பாத்துக்கிறேன்" என அனைத்தையும் தின்று முடித்த அரவிந்த் பொறுமியபடி இருக்க

"ஹப்பா என்னா சாப்பாடு என்னா சாப்பாடு. இப்படி ஒரு சாப்பாட்ட நான் சாப்பிட்டதே இல்ல அத்த. ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது" ஒரு கூடை ஐசை அள்ளி அசால்டாக அலமேலுவின் தலையில் வைத்தான் சித்து.

இதையெல்லாம் பார்த்த வீராவின் மனமோ 'சரியான சோத்துக்கு செத்த குடும்பமால்ல இருக்கு. இது தெரியாம வந்து காலை வச்சிட்டோமா' என அபாய மணி அடிக்க, 'இனி என்ன அடிச்சு என்ன செய்ய இவருக்கு காலம்பூரா ஆக்கிப்போட்டே அழுவனும் போலையே' என மனதிற்குள் ஒரு நிமிடம் கலங்கி விட்டாள் வீரா‌.

'நோ வீரா நெவர். அவ்ளோலாம் நாம கஷ்டபட முடியாதே. சோ வெரைட்டியா சோறு வேணும்னா சித்துவையே கிச்சன் உள்ள தள்ளி ஆக்க விட்டுருவோம்' என தக்க சமயத்தில் அவள் மூளை ஐடியாவை தர அதுதான் சரி என அவளும் முடிவு செய்த பின்னரே சற்று நிம்மதியானாள்.

இவ்வளவு நேரம் இவர்கள் நடத்திய பாச போராட்டத்தில் கதிரே கடுப்பாகி "அக்கா சித்து மாமா எப்போ முடிப்பாரு?" என கேட்கும்படி கொஞ்சம் ஓவராகதான் சென்றுக் கொண்டிருக்க

"அத்த ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசனும். நானும் நினைங்சிட்டே இருந்தேன் மறந்துட்டேன் பாருங்க. அப்பா அவருக்கு இங்க ஒரு வீடு இருக்கிறதா சொன்னாரே. அந்த வீடு எங்க இருக்கு? நாங்க அங்க போகனுமே" என மெதுவாக ஆரம்பித்தான்.

இதுவரை நடந்த கூத்துகளை கண்டுக் கொள்ளாது விதியே என அமர்ந்திருந்த மற்றொரு ஜீவன் மாதவன் இதை கேட்டவுடன் டக்கென்று திரும்பி பார்த்தான்.

"அந்த வீட்டை பத்தி எதுக்கு ராசா கேக்குற? நம்ம வீடே நல்லா பெருசாதானே இருக்கு‌. இங்கையே நீங்க தங்குங்கப்பா. இத்தனை வருஷம் கழிச்சும் என் அண்ணனோட இருக்க முடியலை. உன்னோடையாவது இருக்கேனே" அலமேலு செண்டிமென்டை டச் செய்ய

"அதனால என்ன அத்தை இனிமே இன்னும் கொஞ்சம் நாள் ஏன் ஒன்னு ரெண்டு மாசம் இங்கதான் இருக்க போறோம். அதுவரைக்கும் நீங்களும் எங்கக்கூடவே அந்த வீட்ல வந்து தங்கிக்கோங்க. என் அப்பா வாழ்ந்த வீட்ல கொஞ்ச நாள் நானும் இருக்க ஆசைப்படுறேன். முடியாதுன்னு மட்டும் நீங்க சொல்லவே கூடாது"

சித்து கூறிய அடுத்த நொடி "எதே...!" என அதிர்ந்துபோய் எழுந்தே விட்டான் மாதவன். ஆனால் அவனை கவனிக்கதான் அங்கே ஆள் இல்லை. அவனோ அந்த வீட்டின் பக்கமே தலை வைக்க கூடாது என எண்ணியிருக்க விதி அவனை அந்த வீட்டுக்குள்ளே அழைத்து செல்ல மன்னிக்கவும் வான்டட்டாக இழுத்து செல்ல ஊரிலிருந்து ஒருவனை தள்ளி வந்திருப்பதை என்ன சொல்ல...!

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 21

தங்கள் கண் முன்னால் இருந்த அந்த பெரிய மாளிகையை ஆவென பார்த்து வைத்தனர் சித்தார்த் குரூப். அவர்கள் வீடு என்றால் சென்னையில் இருப்பது போன்று இல்லை அதை விட சற்று பெரியதாக இருக்கும் என எண்ணியிருக்க இதுவோ அதைவிட மூன்று மடங்காவது பெரிதாக இருக்க ஆச்சரியத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

'பெரிய வீடு பெரிய வீடுன்னு நைனா சொல்லும் போதுகூட இவ்ளோ பெரிய வீடா இருக்கும்னு நான் நினைக்கிலையே. இது மினி சைஸ் அரண்மனை மாதிரில்ல இருக்கு‌. ஐயோ ஐயோ இது எல்லாம் எனக்கே எனக்கா... வீடே இவ்ளோ பெருசுன்னா இன்னும் எவ்ளோ புராப்பர்டி தேறுமோ. ஆண்டவன் குடுத்தா கூறைய பிச்சிக்கிட்டு குடுப்பாருன்னு சொல்லுவாங்க. நமக்கு வானத்துல இருந்து ஸ்ரைட்டா மொட்ட மாடில கொட்டிடாரே..ஏஏஏ'

சித்து மனதிற்குள் ஒரு குத்தாட்டமே போட்டு கொண்டிருக்க வீரா கதிர் இருவரும் அவ்வளவு பெரிய வீட்டை கண்டு வாய் அடைத்து நின்றிருந்தனர். அந்த வீட்டை பார்த்த அதிர்வில் வீராவிற்கு மூளை அப்படியே பிரீஸ் ஆகிவிட்ட நிலைதான்.

இவர்கள் ஆனந்த அதிர்வில் இருக்க அதற்கு மாறாக அவர்கள் அருகில் நின்றிருந்த மாதவனோ வேறொரு அதிர்வில் நின்றிருந்தான். அவன் கண் முன்னே இரண்டு உயிர்களை காவு வாங்கிய வீடல்லவா இது. அவனுக்கு தெரிந்து இரண்டு உயிர்கள் போய் இருக்கிறது, தெரியாது எத்தனை எத்தனையோ?

அப்படிப்பட்ட பூத் பங்களாவில்தான் இனி அவன் சிறிது காலம் தங்க வேண்டும் என இழுக்கப்பட்டு வந்ததில் அரண்டு போய் நின்றிருந்தான். அவன் அருகே முகம் முழுவதும் நிறைந்த மகிழ்ச்சியில் அலமேலு அவர் சிரிப்பை கண்டு புன்முறுவல் செய்தபடி கார்மேகம் என மொத்த குடும்பமும் அங்கேதான்.

சித்து அவன் வீட்டில் வைத்து அனைவரையும் அவனுடன் வந்து தங்க அழைத்த போதே மாதவனின் மனதில் இருந்த பீதி அப்பட்டமாக முகத்தில் தெரிய, அவனை பார்த்து அதை வேறு விதமாய் எடுத்து கொண்டார் கார்மேகம்.

மாதவன் இன்னும் அந்த வீட்டை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தவறாக நினைத்தவர், அவனை தனியே இழுத்து சென்று

"இங்கபாரு மாதவா! வீட்டிக்கு உரிமைபட்ட உன் மாமா மகன் வந்துட்டான். இனி அந்த வீட்டை அடையனும்னு ஏதும் கோக்குமாக்கா பண்றத அடியோட விட்டுப் புட்டு ஒழுங்கா நடந்துக்க" கார்மேகம் மிரட்டி வைக்க

'நான் எங்கையா கோக்குமாக்கு பண்ணுனேன். அந்த வீடு வேணும்னு கூட உன்கிட்ட தானே கேட்டேன்' என திட்டிய அவன் தந்தையை பாவமாக பார்த்தான் மாதவன்‌. ஆனால் அதை எல்லாம் கவனிக்காது மேலும் தொடர்ந்தார் அவன் தந்தை.

"இங்க பாரு அவன் கூப்ட மரியாதைக்காவ கொஞ்ச நாள் போய் அவனோட நாம தங்கியே ஆவனும். அதனால உன் வாலை சுருட்டிக்கிட்டு போய் உன் பொட்டிய கட்டிகிட்டு வா" ஒரே போடாக போட மாதவன் 'வரமாட்டேன் முடியாது' என எவ்வளவு கத்தியும் கதறியும் குண்டுகட்டாக தூக்கி கொண்டு வராத குறையாக இழுத்து வரபட்டிருக்க

'கொஞ்ச பிரீயா விட்டா அப்படியே அந்த பக்கம் தெரிச்சு ஓடிருவேன். ஆண்டவா இங்க இருந்து எப்படியாவது என்னமட்டும் காப்பாத்தி விட்டுருயா' என மனத்திற்குள் கதறிக் கொண்டுதான் இருந்தான்.

என் கதறி என்ன பயன் அவனைத்தான் கார்மேகம் அவர் கண் பார்வையிலையே வைத்திருக்கிறாரே. அவரை மீறி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாமல் மனது முழுக்க பீதியில் உறைந்து நின்றிருந்தான்.

"மவனே! டேய் மவனே!" அரவிந்தின் குரல் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியாது போக பேவென நின்றிருந்த சித்துவின் மண்டையில் நங்கென ஒரு கொட்டு வைத்த தந்தை

"எப்பா டேய் உன் வாய கொஞ்சம் மூடி தொலடா. இப்படியே திறந்து வச்சிருந்தா காக்கா குருவி எல்லாம் சிலைன்னு நினைச்சு உன் வாய்க்குள்ள கூடு கட்டிர போகுது" சித்துவை கிண்டல் அடித்து வைத்தார்.

ஆனால் அதை எல்லாம் கண்டுக் கொள்ளாத சித்துவோ "எவ்ளோ பெரிய வீடு" என தேவியானி போல் சொல்லி வைக்க "பாரு நல்லா பாரு இதுதான் உங்க அப்பன் நான் பொறந்து வளர்ந்த வீடு. எப்பூடி" சந்தில் சிந்து பாடினார்.

அவர் கூறியதை கேட்டு அவரை ஒரு மார்க்கமாக பார்த்த சித்து 'இந்த வெட்டி பந்தாவுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல" என மெல்ல முணுமுணுத்தவன் அதற்கு மேல் அவரின் பேச்சை கேட்க பிடிக்காது

"ரொம்ப நேரமா எல்லாரும் வாசல்லையே நிக்கிறோம். வாங்க வாங்க எல்லாரும் உள்ள போலாம்" வீட்டை பார்த்த படி நின்ற அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பி வீட்டின் கதவை நோக்கி சித்து நகர, அவனை தொடர்ந்து மற்றவர்களும் சென்றனர்.

அலமேலுவிடம் "சாவியை தாங்க அத்தை வீட்டை திறக்கனும்"

சித்து கேட்டு நிற்க அலமேலுவோ கார்மேகத்திடம் கேட்டு வைத்தார். அவரோ "என்னம்மா என்கிட்ட கேக்குற? எல்லா சாவியும் உன்கிட்ட தானே நான் குடுத்து வச்சிருக்கேன்‌. இப்ப என்கிட்ட கேட்டா என்ன அர்த்தம்" என்றிட்டார் கார்மேகம்.

"இல்லங்க கெளம்ப முன்ன நான் சாவி கொத்து இருக்க இடத்துல பார்த்தேன், ஆனா அங்க பெரிய வீட்டு சாவி இல்ல. நான்கூட நீங்க எடுத்துட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன்" குழப்பமாக அலமேலு சொல்லி நிறுத்த மற்றவர்களுக்கும் குழப்பமாகதான் இருந்தது. இப்போது சாவி இல்லாது எப்படி வீட்டை திறப்பதென யாருக்கும் புரியாது போக, என்ன செய்வது என ஒருவருக்கொருவர் ஒரு யோசனை கூற

இவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்த நேரம் படாரென ஒரு சத்தம் கேட்டது. அதில் அதிர்ந்த அனைவரும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்த்தனர். அங்கே இவர்கள் இவ்வளவு நேரம் எப்படி சாவி இல்லாது கதவை திறப்பது என பேசிக் கொண்டிருந்தார்களோ அதற்கு அவசியமே இல்லாது அந்த கதவுகள் தானாகவே திறந்து கொண்டன.

'இது என்ன கதவு தானா திறக்குது. ஏதோ தப்பா இருக்கேடா சித்து' சித்து மனதிற்குள் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிவிட்டான்.

'ஆரம்பமே அதிரடியே இருக்கேடா மாதவா. உள்ள போற நாம உயிரோட வெளிய வருவோமா?' மாதவன் மனதில் எழுந்த பயத்தில் கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது அவனுக்கு.

அதேநேரம் ஒருவன் வீட்டின் உள்ளிருந்து "நாட்டாமை ஐயா வணக்கம்!" என்றவாறு வந்தான். "ஏன்டா அழகா நீ இங்க என்னடா பண்ணுற. உனக்கு எப்படி பெரிய வீட்டு சாவி கெடச்சுது?"

கார்மேகம் வந்தவனிடம் கோபமாக கேள்வியை கேட்க அவனோ "ஐயா மாதவன் ஐயாதாங்க மதியமே என்ன கூப்புட்டு வீட்டுசாவிய தந்தாரு. நம்ம அரவிந்த் ஐயா குடும்பம் வந்திருக்காங்க அவங்க இங்கதான் தங்கப்போறாங்கன்னு வீட்டை எல்லாம் சுத்தம் செஞ்சு வைக்க சொன்னாருங்க. இப்பதான் சுத்தம் பண்ணிட்டு ஆளுங்க எல்லாம் போனாங்க. இப்பதான் உள்ளார இருந்த அறை எல்லாம் சாத்திபுட்டு வரேங்க பாத்தா நீங்களே அதுக்குள்ள வந்துட்டீக" என அழகன் நீட்டி முழக்கினான்.

அவன் பதில் கூறியவுடன் மாதவனுக்கு பகீரென்றது. ஏனெனில் அந்த அழகன் சொல்லிய ஒரு வரி கூட உண்மை இல்லையே. மாதவன் அவனை அழைத்து சாவியை கொடுக்கவே இல்லை எனும் போது பகீரென இருக்காதா என்ன.

"ஏன்டா மாதவா! நீதா சாவிய கொடூத்தூட்டியா?" அவன் தந்தை கேட்டதற்கு மாதவன் இல்லை என தலை அசைக்க போக அவன் தலையோ அவன் சொல்லாமலே ஆம் என ஆடியது.

"அப்ப இவ்ளோ நேரம் சாவிய காணோம்னு பேசும் போது வாயை தொறந்து சொல்லி இருக்க வேண்டியதானே" கார்மேகம் கடுப்பில் கத்த

"என்னை எங்க சொல்ல விட்டீங்க. நீங்கதான் பேசிகிட்டே இருந்தீங்களே. அப்புறம் எப்படி நான் சொல்றது" என மாதவன் பதிலளித்தான்.

இன்னும் சொல்ல போனானல் மாதவனின் வாயை யாரோ ஒருவர் கடன் வாங்கி பதிலளித்தனர் என சொன்னால் அது சரியாக இருக்கும்.

'என்னடா இது நாம நினைக்காததை எல்லாம் நம்ம வாய் தானா பேசுது. நம்ம வாய யாருடா வாடகைக்கு எடுத்திருக்கா? ஐயையோ இந்த வீட்டுக்குள்ள நுழைய முன்னாடியே ஏதேதோ நடக்குதே. வசமா வந்து சிக்குறோம் போலையே. மாதவா என்ன ஆனாலும் நீ மட்டும் உள்ள போகவே கூடாதுடா. பனி மழை வெயில்னு எது வந்தாலும் இந்த திண்ணையிலையே படுத்துகூட உயிரை விட்டுடலாம். ஆனா பேய்கிட்ட மாட்டி அடி வாங்கிறதுக்கு எல்லாம் நம்ம பாடில தெம்பு இல்லடா. இப்புடியே வெளிய பதுங்கிரு'

மாதவன் உள்ளுக்குள் அவன் பாதுகாப்பிற்கு ஒரு முடிவை அவசரமாய் எடுத்தும் "இன்னும் என்ன வெளியேவே நிக்குறீங்க. எல்லாரும் வலது காலை எடுத்து வைச்சு வாங்க உள்ள போகலாம்" என அடுத்ததாய் எல்லோரையும் உள்ளே அழைத்து சாரி இழுத்து சென்றது சாட்சாத் நம் மாதவனே.

வீட்டின் வெளியிலே வாயில் ஈ நுழையும் அளவு அந்த வீட்டை ரசித்திருந்த அனைவரும் இப்போது உள்ளே சென்று பார்த்து அதன் பிரம்மாண்டத்தில் இன்னும் வியந்துதான் போயினர்.

"எத்தனை வருஷம் ஆச்சு இந்த வீட்டுக்குள்ள வந்து. ம்ம் நான் இருக்கும் போது இந்த வீடு எப்படி இருந்ததோ அதேமாதிரியே இப்பவும் இருக்கு" அரவிந்தின் ஆனந்தமான குரலில் அவரை சித்து பார்க்க

"மகனே பாருடா பாரு! உன் அப்பனோட ஸ்டேடஸு எவ்ளோ பெருசுன்னு. நீயும் தான் இருக்கியே ஒரு வீடு குருவிகூடு மாதிரி" அரவிந்த் அது அவரின் வீடும் என்பதை மறந்து பேசியபடி செல்ல

சித்துவை சுற்றி அனைவரும் இருந்ததால் பல்லை கடித்து கொண்டு அமைதியாக நின்றான். இதற்குமேல் விட்டால் அவன் தந்தை பேசும் பேச்சில் அவனுக்கு நெஞ்சுவலி வந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை என உணர்ந்த சித்து

"அத்தை நாங்க அவ்ளோ தூரம் வந்தது ரொம்ப டையர்டா இருக்கு. சோ எதாவது ஒரு ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்குறோம்‌. நைட் பேசலாம்" என கதிரையும் வீராவையும் அழைத்து கொண்டு அவன் எதிரே இருந்த அறையை நோக்கி சென்றான்.

அவன் சென்றதோ அந்த இரண்டு நபர்கள் கப்போர்ட்டுக்குள் போன அறை. அந்த அறைக்குள் மூவரும் நுழையப்போக மாதவனோ "வேண்டாம் வேண்டாம்!" என்று காட்டு கத்தலாக கத்த அவன் குரல் ஒருவருக்கும் கேட்கவில்லை.

"ஐயையோ வந்த அன்னைக்கே சாவ போறாங்களா" மாதவன் கதற அவன் அருகில் நின்ற அரவிந்திற்கே அவன் குரல் கேட்காதது விந்தை தான். சரியாக அவர்கள் உள்ளே நுழையும் நேரம் அவர்களின் முன்னால் போய் நின்றார் அரவிந்த்.

மூவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்து கொள்ள "மகனே இது மை ரூம் நான் டிசைட் பண்ணிட்டேன். நீங்க எல்லாம் பக்கத்து ரூம்க்கு போங்க. என்ன வீராம்மா மாமா சொல்றத கேப்பதானே"

அரவிந்த் பேசுவதை கேட்டு ஆத்திரமாக வந்தது சித்துவிற்கு‌. ஆனால் அனைவரின் முன்னால் எதுவும் பேச முடியாது நிற்க, "சரி வாங்க அங்கிள் இந்த ரூம்ல இருக்கட்டும். நாம பக்கத்து ரூம்க்கு போகலாம். அங்க வச்சு பேசிக்கலாம்" என மெதுவாக முணுமுணுக்க

"வேற என்ன பண்ணி தொலைக்க போகலாம்" கடுப்பாய் ஒத்து கொண்டான் சித்து. எனவே இவர்கள் அப்படியே பக்கத்து அறைக்கு நகர்ந்து செல்ல பார்த்திருந்த அவன் அத்தை குடும்பத்திற்கு சற்று குழப்பமாக இருந்தது. ஆனால் அதை பெரிதாக கண்டுக் கொளள்வில்லை.

மாதவன் 'தப்பிச்சுட்டாங்க' என்று மனதிற்குள் ஒரு நிம்மதி பிறக்க "ஏய் செல்லம் நான் பேசறது கேக்குதா? இனிமே நீ தான்டா என் நம்பர் ஒன் செல்லாக்குட்டி. உன்னை வச்சுதான் நான் பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் செய்யப்போறேன். ரெடியா இருந்துக்கோ. இப்ப பாய் செல்லம் வரட்டா..." என்றொரு குரல் காதின் அருகே கேட்க வேர்த்து விறுவிறுக்க நின்றிருந்தான்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 22

அந்த விசாலமான அறையை சுற்றி பார்த்தபடி வீரா கதிர் இருவரும் நிற்க, சித்துவோ கடுப்பாக அவன் கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு புசுபுசுவென மூச்சு வாங்கிய படி அமர்ந்து விட்டான். அவனை கண்டு குழப்பமாக புருவத்தை சுழித்த வீரா

"என்ன ஆச்சு சித்து? ஏன் பேக இப்புடி தூக்கி போடுறீங்க. உங்க முகத்தை பாத்தா ஏதோ டென்ஷனா இருக்க மாதிரி இருக்கே என்ன விஷயம்?"

சாவுகாசுமாக அவன் எதிரே அமர்ந்தபடி கேட்டாள் வீரா. இங்கு நடந்தவை அனைத்தையும் கண்டிருந்தும் ஏதும் அறியாதது போல் அவள் கேட்டு வைக்க, வீராவை முறைத்துபார்த்தான் சித்து.

"ஏன் உனக்கு தெரியாதா? நீயும் வந்ததுல இருந்து பாக்குற தானே என் அப்பா பண்ணுற அலப்பறைய? அப்புறம் என்ன என்னன்னு எதுவும் தெரியாத மாதிரி கேக்குற. அதான நீ உன் அங்கிள்‌ டீம், அவருக்குதானே சப்போர்ட் பண்ணுவ" வள்ளென சித்து கத்தினான்.

பின்னே இருக்காதா அவர் தந்தையின் புகழ் பாடலை கேட்டுக் கொண்டு எவ்வளவு நேரம்தான் அவனும் பொறுமை காப்பது. போக அவன் அத்தை குடும்பத்தாரின் முன் அரவிந்தை எதிரித்து எதுவும் பேச முடியவில்லை என்பது வேறு அவன் மனதை பிராண்டியது.

"ப்ச் சவுண்ட கொறைங்க" காதுக்குள் விரலை விட்டு ஆட்டியபடி கூறிய வீரா "ஏதோ அங்கிள்‌ அவர் பொறந்து வளந்த ஊரை பாக்கவும் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாரு. அதுல கொஞ்சம் அப்படி இப்படி பேசியிருப்பாரு. அதுக்கு எல்லாம் நீங்க மூஞ்ச தூக்கி வச்சுக்கலாமா?" என எப்போதும் போல் அரவிந்தின் பக்கம் தன் கொடியை பலமாக ஆட்டினாள் வீரசுந்தரி.

"சபாஷ் சபாஷ்! அப்படி சொல்லு வீராம்மா" என கைகளை தட்டியபடி இப்போது உள்ளே நுழைந்தார் சித்துவின் கோபத்து காரணமான அவன் தந்தை.

"வீராம்மா நீதான்டா இந்த மாமனார் மனம் புரிஞ்ச மருமக. எங்க இந்த சித்து பையன் பேசுறத கேட்டு அவன் பக்கம் நின்னுபுடுவியோன்னு நினைச்சேன். ஆனா நீ எப்பவும் என் பக்கம்னு மறுபடியும் நிரூபிச்சுட்ட" பாராட்டு பத்திரம் வேறு அரவிந்த் வாசித்து வைக்க வீராவிடம் நியாயம் கேட்ட தன் மதியை நொந்து கொண்டு பார்த்தான் சித்து.

"சரி எதுக்குடா மகனே என்ன வர சொல்லி சிக்னல் தந்துட்டு வந்த? என்னா மேட்டர்?" அரவிந்த் கேட்டபின் தன் கோபத்தை கட்டுப்படுத்தி சித்து அவன் இவ்வளவு நேரம் நினைத்ததை பேச ஆரம்பித்தான்.

"இங்க பாரு நைனா நான் பேசும்போது குறுக்க பேசாத. நான் இப்பவே சொல்லிட்டேன். அப்புறம் நான் பேசாம்போது குறுக்க பேசுன நான் என்ன பண்ணுவேன்னே எனக்கு தெரியாது" என டிஸ்க்கிளைமரோடு ஆரம்பித்தான் மகன்.

"நைனா நம்ம வீட்ல அங்க சென்னைல நீ எல்லாரோட கண்ணுக்கும் தெரிஞ்ச அதனால நாம எப்பவும் போல பேசிட்டு இருந்தோம். ஆனா இங்க அப்படி இல்ல. உன் தங்கச்சி குடும்பமும் இருக்காங்க முக்கியமா நீ அவங்க கண்ணுக்கு தெரிய மாட்ட. அதனால எதாவது முக்கியமான விஷயம் பேசனும்னா எங்களை இந்த ரூம்க்கு வர சொல்லி பேசு. நாங்க உன்கிட்ட பேசனும்னா கண்ணை காட்டுறோம் இங்க வந்துடு புரியுதா"

நீளமான பேசிய சித்துவிடம் வாட்டர் பாட்டிலை வீரா நீட்ட "ப்ச் அருமைடா மகனே! வரவர நீளமான டையலாக் எல்லாத்தையும் அசால்டா மனப்பாடம் பண்ணாம ஒப்பிச்சிட்டு இருக்க. நீ நடத்து நடத்து" முழுதாக கேட்டுவிட்டு கடைசியில் தன் பங்கிற்கு பங்கம் செய்தார் அரவிந்த்.

அவர் பேசியதை கேட்டு சித்துவின் மூளையில் சற்றென்று ஒரு ஞானோதயம் பிறக்க "அப்புறம் இதெல்லாத்தையும் விட இன்னொரு முக்கியமான விஷயம். 'நாம பேசறது தான் யாருக்கும் கேக்காதே' அப்படின்னு நினைச்சுக்கிட்டு சகட்டுமேனிக்கு என்னை எப்பவும் பங்கம் பண்ற மாதிரி எல்லாரும் இருக்கும் போது நீ பேசவே கூடாது" என சத்தியம் செய்து தர சொல்லி சித்து நின்றான்.

அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து புன்னகைத்த அரவிந்த் "இங்கபாருடா மவனே நடக்காததை எல்லாம் என்கிட்ட சத்தியமா கேக்க கூடாது. அரவிந்த் வழி தனிவழி அதுல நீ குறுக்க வராத என்ன" சம்மந்தமே இல்லாமல் அரவிந்தும் பஞ்சாய் எடுத்து விட்டார்.

மீண்டும் தந்தை மகனுக்கு முட்டிக் கொள்ள இருவரும் மாறி மாறி அவர்களை கழுவி கழுவி ஊத்த, இருவரையும் பார்த்து 'இனி நம்ம பாடி தாங்காது' என்று நினைத்த வீரா "நிறுத்துங்க" என கத்தினாள் அந்த இடத்தை அமைதியாக்கும் பொருட்டு.

சண்டை இட்ட இருவரும் மூச்சு வாங்கி நிற்க "வந்த இடத்துல கூட அமைதியா இருக்க மாட்டீங்களா சித்து. அங்கிள் நீங்களாவது விட்டுக் குடுத்து போலாம்ல" பஞ்சாயத்து செய்து வைக்க தவறுதலாய் வீரா நுழைந்து விட்டாள். மீண்டும் அவள் காது ஜவ்வு வலிக்கும் அளவு ஒரு சொற்போர் நிகழ கடுப்பாகிய வீரா

"சித்து இந்த ரூமை விட்டு வெளியே போய் சண்டைய போடுங்க. ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்தது ரொம்பவே டயர்டா இருக்கு, சோ நானும் கதிரும் ரெஸ்ட் எடுக்கனும். நீங்க வேற ரூமக்கு போய் கண்டினியூ பண்ணுங்க" என கத்தி விட்டாள்.

வீரா சொன்னதை கேட்டு தன் தந்தையோடு போட்டுக் கொண்டிருந்த சண்டையை அப்படியே டீலில் விட்ட சித்து "என்னாது வெளியவா? ஏன் ஏன் ஏன்? நானும் உங்ககூடவே இந்த ரூம்ல இருக்கேனே. நான் மட்டும் எதுக்கு வேற ரூம் போகனும்" சிறு பிள்ளை போல் பதறிப்போய் பாவமாய் கேட்டான் சித்து.

அவனை பார்த்து நக்கலாக சிரித்த அரவிந்த் "ஏய் சித்து பையா! உனக்கும் வீராம்மாக்கும் இன்னும் கல்யாணம் ஆகல. அதனால நீங்க ஒரே ரூம்ல படுக்க கூடாது"

இப்படி கூறி அவனை வெளியே தள்ள முயல, கடைசியாக வீராவின் முகத்தை பாவமாய் சித்து பார்த்து வைத்தான் அவள் தன்னை இங்கே தங்கிவிடுமாறு கூறுவாளா என. அவளின் முகமோ கொஞ்சம் வேகமாக வெளியே சென்றால் தேவலை என்னும் பாவத்தில் இருந்தது.

அவளை திரும்பி திரும்பி பார்த்தபடி விதியை நொந்தபடி வேறு அறைக்கு சென்றான் சித்துவும். அவனோடு அவன் தந்தையும் சேர்ந்தே வந்திருக்க "ஆமா நைனா பேசாம நான் உன்னோடவே அந்த ரூம்ல இருக்கேனே. புது இடம் வேற நான் மட்டும் இந்த ரூம்ல தனியா எப்படி இருக்க?"

சண்டையாவது மண்ணாவது என அனைத்தையும் காற்றில் விட்ட மகனவன் தனியே தங்க பயந்துக் கொண்டு பாவமாய் கேட்டு வைக்க, அவன் முகத்தை உற்று பார்த்து தந்தையோ

"பெர்பிர்மன்ஸ் பத்தலைடா மகனே! இன்னும் கொஞ்ச கூட மூஞ்ச பாவமா வச்சுக்க அப்பவேனா எனக்கு அந்த ரூமை உன்கூட ஷேர் பண்ண தோனுதான்னு பாக்குறேன்"

அதற்கும் ஒரு பஞ்ச் வைத்துவிட்டு சென்றார் அரவிந்த். அப்படி அலும்புடன் தட்டி பறிந்த அந்த ரூமுக்குள் பலவித உணர்வுகளுடன் தன் ரைட் காலை வைத்து அரவிந்த் உள்ளே நுழைய, அங்கிருந்த ஏதோ ஒன்றால் அவர் உடல் ஒரு குலுங்கு குலுங்கியது.

"ஆஹா! இந்த ரூம்ல காலை வைக்கும் போதே என்னா ஒரு குட் வைபரேஷன்" அது பேய் வைபரேஷன் என பேயான அரவிந்திற்கே புரியாது போக ஆனந்தமாய் உள்ளே நுழைந்தார்.

அந்த அறையை ஆவென வாயை பிளந்து சுற்றி பார்த்த மனிதர் அங்கிருந்த கட்டில் பீரோ ஏன் தரையை கூட விடாது அனைத்தையும் தடவி பார்த்து "செத்துப்போன மை டாடி! என்னமோ வைரம் வைடூரிய பொக்கிஷம் இருக்க மாதிரி இந்த ரூம்க்கு உள்ள என்ன வரவே விடமாட்டியே, இப்ப பாரு செத்து ஆவியான அப்புறமா வந்தாவது இந்த ரூமை டேக் ஓவர் பண்ணிட்டேன்" அல்பமாய் ஒரு அறைக்கு அரவிந்த் பில்டப் கொடுத்து ஏற்கனவே செத்திருந்த அவரின் தந்தையையும் இழுத்தார்.

இப்படி அல்பமாய் அலையும் அரவிந்தையும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் அவரின் சிறு வயதிலிருந்து அரவிந்த் அலமேலு என்ன வேறு யாரையும் அந்த அறைக்குள் விட்டதே இல்லை அவரின் தந்தையானவர். அப்படி அந்த அறையினுள் என்னதான் இருக்கிறது என மண்டை காயும் மற்றவர்களுக்கு. அப்படிப்பட்ட அறைக்குள் அவர் வராது அவர் மகன் சித்துவை மட்டும் எப்படி விடுவார்‌ மனிதர்.

இப்போது ரூம் டூரை முடித்திருந்த அரவிந்த் ஹாயாக கட்டிலில் தெனாவெட்டாக அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தார். அவர் வந்ததில் இருந்து செய்த அனைத்தையும் பார்த்தபடிதான் இருந்தது அந்த கப்போர்டில் இருந்த மரபொம்மையும்.

"அடேய் அரவிந்தா! இன்னமும் கோமாளி தனம் பண்ணிட்டு திரியிர. உன்னையெல்லாம் ஒரு ஆளா நினைச்சு நானும் ஒரு திட்டம் போட்டு உன் குடும்பத்தையே இழுத்துட்டு வந்திருக்கனே என்ன எதை கொண்டு அடிக்க. உன்னை வச்சு நான் நினைச்சதை செஞ்சு முடிக்கிறதுக்குள்ள என் ஆயிசு இந்த பூமில முடிஞ்சிரும் போலையே"

காலத் தாமதமாக உணர்ந்த அந்த பொம்மை கவலையாக புலம்பி நங்கு நங்கு என கப்போர்டின் கதவிலே முட்டிக் கொண்டது. 'இப்போ கவலைப்பட்டு நோ யூஸ்' விதியும் பொம்மையை பார்த்து பாவமாய் உச்சுக்கொட்டி சென்றது.

அதேநேரம் மரபொம்மை முட்டிக் கொண்ட சத்தத்தை கேட்டு வெளியே அமர்ந்திருந்த மாதவனோ ஒவ்வொரு நிமிடமும் திக்திக் நிமிடங்களென வெடவெடத்து போய் இருக்க, பேயாக சுத்தும் நம் அரவிந்தோ டூர் வந்துள்ள வெளிநாட்டு பயணியை போல் உல்லாசமாய் அங்கிருந்த சோஃபாவில் குதித்து கொண்டிருந்தார்.

இருவரையும் தன் சிசிடிவி விழிகளால் கூர்ந்து கவனித்த மரபொம்மை "என் வேலைக்கு இந்த எழவெடுத்தவன வரவச்சதுக்கு பதிலா என் செல்லாக்குட்டிய வச்சே முடிச்சிருக்கலாம் போலையே" என்று கூறியபடி மேலும் நான்கு முறை முட்டிவிட்டு டயார்ட் ஆகி அமைதியாகி விட்டது.

அப்பன் இங்கு ஒருபக்கம் அந்த அறையின் மீதிருந்த காதலில் சுற்றிக் கொண்டிக்க, மகனோ அவன் வீராவின் மீதுள்ள காதலில் தூக்கம் வராது அவன் அறையில் புரண்டு கொண்டிருந்தான்.

"இதுக்குமேல நம்மால ஆகாது சாமி. நைனா தான் அவர் ரூமுக்கு போயிட்டாரே. நாம அப்படியே நைசா வீரா ரூமுக்கு போக வேண்டியதுதான். இல்லைன்னா இன்னைக்கு என் கட்டை சாயாதுடி மாலா!"

வானத்தை பார்த்து மெல்ல புலம்பிய சித்து நைசாக அவன் அறையிலிருந்து வீராவின் அறையை அடைந்தான். உள்ளே சென்றால் கதிர் நல்ல உறக்கத்தில் இருக்க, இதுதான் சமயம் என வீராவின் கையை மெல்ல சுரண்டினான் சித்து.

கையில் ஏதோ ஊறுவதை போல் உணர்ந்த வீரா அதை தட்டிவிட "அடியே என் மக்கு வீரா ஏந்திரிடி! செல்லம் உன் மாமா வந்திருக்கேன் ஏந்திரிங்க செல்லம்!" ஏதேதோ செய்து அவளை மட்டும் வெற்றிகரமாய் எழுப்பிவிட்டான் பையன்.

தூக்கத்தில் எழுந்த வீரா அவள் முகத்தின் அருகே மங்கலாக ஒரு முகம் குளோசப்பில் அதுவும் பேஸ்ட் விளம்பரத்தில் வருவதை போல் பல்லை காட்டிக் கொண்டு தெரிய பயத்தில் அலறப்போய்விட்டாள். அவர் கத்தப்போவதை உணர்ந்து அதற்குமுன் அவள் வாயை அடைத்த சித்து

"ஏய் செல்லம்! நான்தான்டி கத்தி கித்தி வைக்காத. என் அப்பன் எங்கையாவது இருந்து வந்து குதிச்சிர போறான்" உசாராக அவளிடம் கூறி வைத்தான்.

அவன் கையை விலக்கிய வீரா "துங்கதானே போனீங்க. என்னாச்சு ஏன் திரும்ப வந்திருக்கீங்க அதுவும் மெதுவா எழுப்பி விடுறீங்க. உங்களுக்கு என்னதான் ஆச்சு சித்து" தூங்கவிடாது அலம்பு செய்யும் அவனிடம் பாவமாக கேட்டு வைத்தாள் அவன் வீரா.

"என்ன ஆச்சா? என்னன்மோ ஆச்சு செல்லம்" ஒரு மார்க்கமாய் சிரித்துக் கொண்டே சித்து கூறியவன் தன் குரலை மேலும் சுருக்கி ஹஸ்கி வாய்சில் "நீ ஒரு உம்மா குடு சரியா போயிடும்" என்று அசால்ட்டாக கேட்டு வைத்தான். ஆனால் அதை கேட்டு வீராதான் அதிர்ச்சியில் ஆவென வாயை பிளந்து விட்டாள்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 23

'அந்திமாலை நேரம் என் அண்டர்வேரை காணோம்' அகோரமான ஒரு குரல் காதுகளில் விழ ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் யாரோ மீண்டும் ஒரு கொள்ளிகட்டையை வைத்தது போல் திகுதிகுவென இன்னும் எரிந்தது சித்துவுக்கு. அவனை கடுப்பாக்கி பார்க்க கூடிய ஒரே ஜீவனான அவன் தந்தை அரவிந்தோ பாட்டை பாடியபடி அவர் கையில் இருந்த காபியை உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்.

சித்து அவன் கையில் மாட்டியிருந்த பாவப்பட்ட ஒரு கேரட்டை சதக் சதக் என வெட்டி அவன் மனதில் இருந்த கோபத்தை குறைக்க முயல, 'நான் இருக்கும் போது, அதெல்லாம் நடக்கற காரியமா' என சொல்லாமல் சொல்லி நின்றார் அவன் ஆருயிர் தந்தை.

சித்துவால் காலையில் நடந்த நிகழ்வை இன்னும் ஜீரனிக்க முடியாது ஒரு கிளாஸ் ஈநோவை கூட குடித்து பார்த்து விட்டான். ஆனால் நடந்தவை எல்லாம் மனதிற்குள் அப்படியே நின்றது.

அப்படி என்ன நடந்தது என ஒரு அரைமணி நேரம் முன்னே சென்று பார்ப்போமா!

நல்ல உறக்கத்தில் இருந்த வீராவை எழுப்பி அது இதுவென பேசி முத்தம் கேட்டு நின்ற சித்துவை என்றும் இல்லா திருநாளாய் வீரா வெட்கம் வேறு கொண்டு பார்த்தாள்.

"ப்ச்... சித்து சும்மா இருங்க. பக்கத்துல கதிர் இருக்கான்" மெல்ல சிணுங்கிவைத்தாள் அவன் காதலி.

அவள் சிணுங்களை கேட்டு சித்துவின் மனம் சில்லுசில்லாய் போக, அவள் வேண்டும் என இன்னும் சண்டித்தனம் செய்தது மனது. "ஐயோ செல்லம் அவன் டையர்டுல தூங்குறான். இப்போலாம் எந்திரிக்க மாட்டான். ஒரே ஒரு உம்மா மட்டும், ஒன்னே ஒன்னு பிளீச்.."

அப்படி இப்படி என பேசிக் கொண்டு அவளை சித்து நெருங்கிட, வீராவின் இதயம் அது பலமாக துடிக்க ஆரம்பித்தது. அந்த சத்தம் அமைதியாக இருந்த அறையில் அப்படியே சித்துவின்‌ காதுகளில் விழ இன்னும் வீரசுந்தரி பித்து அதிகமானது அவனுக்கு.

அந்த மோன நிலை, அவன் அழகு காதலி என சித்துவின் மனமே அவன் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை. இதில் வீராவின் அழகிய கண்ணம் இரண்டும் என்றுமில்லாது வெட்கத்தில் சிவப்பாய் வேறு மாற, அப்படியே அதை தன் கைகளில் ஏந்திக் கொண்டான் காதலன்.

"ஐயோ! வீரா செல்லம் என்னடி இப்படி சிவந்து மனுஷன பைத்தியம் ஆக்குற. சத்தியமா சாவடிக்கிறடி. ஆப்பிள் மாதிரி சிவக்குற இந்த கண்ணத்தை அப்படியே கடிச்சு சாப்டனும் போல இருக்கேடி"

ஏதேதோ பிதற்றியபடி அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தி, இரு கண்ணங்களிலும் முத்தமிட்டான். அப்படியே அவள் கண்களோடு கண்களை கலக்கவிட்டவன் மென்மையாய் மிக மென்மையாய் அவள் உதடுகளை கவ்வி கொண்ட நேரம்

"அடேய்! பரதேசி பரதேசி! நாசமா போன எடுபட்டபயலே!" என்றொரு குரல் எங்கோ கேட்க, அடித்து பிடித்து எழுந்தான் சித்து. ஒன்றும் புரியாமல் தன்னை சுற்றி பார்த்த சித்துவிற்கு ஒன்றும் புரியவில்லை. மேலே கட்டில் இருக்க இவன் கீழே விழுந்து கிடந்தான்‌.

அவன் முன்னாலோ அரவிந்த் "நீயெல்லாம் வெளங்குவியாடா? உன்னையெல்லாம் புள்ளையா பெத்து வளத்து விட்டதுக்கு நாலு எருமைமாட்ட வாங்கி விட்டிருந்தா, இந்நேரம் லிட்டர் லிட்டரா பாலை தந்நிருக்கும். தண்டக் கருமம் உன்னை பெத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" என மாங்கு மாங்கென திட்டிக்கொண்டிருந்தார்‌.

சித்துவிற்கு என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு வீராவுடன் அவளுடைய அறையில் இருந்தது மட்டுமே நினைவில் இருந்தது‌. ஆனால் அவன் தற்போது இருந்ததோ அவனுக்கு என தரப்பட்ட அறையில். எப்படி அங்கிருந்தவன் இங்கு வந்தான் என அவனுக்கே தெரியவில்லை.

வீராவின் உதட்டின் ஈரம் கூட அவனுடைய உதட்டில் இன்னும் அப்படியே இருக்க, அவன் முன்னால் கத்திக் கொண்டிருக்கும் தந்தையை பார்த்துப்பின் புரிந்துக் கொண்டான் வீரா அறையில் இருந்தவனை இங்கு இழுத்து வந்தது அவன் தந்தை என.

அவன் வீராவுடன் ரொமான்ஸ் செய்த காரணத்தாலே அவன் தந்தை திட்டுகிறார் என உணர்ந்தான் சித்து. எவ்வளவு நாள்தான் தந்தை அவனை வீராவிடமிருந்து ஒதுக்கி வைப்பார் என வெகுண்டு எழுந்த சித்து

"நைனா! போதும் நிறுத்து. என்ன விட்டா ஓவரா பேசிட்டு போற. என்ன அப்படி ஊர்ல இல்லாத தப்பை நான் செஞ்சேன். ஏதோ கல்யாணம் பண்ணிக்கப் போற என்னோட லவ்வர், அப்படினு கொஞ்சம் நேரம் அவளோட ரொமான்ஸ் பண்ணா என்னை இங்க தள்ளிட்டு வந்தது மட்டுமில்லாம மூச்சு விடாம திட்டிட்டேப் போற. போதும் இத்தோட உன் ரேடியோவ ஆஃப் பண்ணு.

ச்சே இந்த வீட்டுல சுதந்திரமா என் செல்லாக்குட்டி கூட கொஞ்ச நேரம் இருக்க முடியுதா. நைனா என்னை இப்ப ஆளவிடு. ரொம்ப நேரம் ஆச்சு நான் தூக்கம் போறேன். நீ முதல்ல இடத்த காலிப்பண்ணு"

தானும் அரவிந்திற்கு சளைத்தவன் இல்லை என எகிறிவிட்டான் சித்து. அவன் கூறியதை கேட்டு அவனை மேலிருந்து கீழ் வரை கேவலமாக பார்த்து வைத்தார் அரவிந்த்.

அவர் பார்வையே 'இவன் நமக்குதான் பொறந்தானா, இல்ல ஆஸ்பத்திரில புள்ளைய மாத்தி ஏதும் குடுத்துட்டாங்களா? முழு நேர பைத்தியக்காரனா இருக்கானே!' என்றது.

"டேய் முட்டாப்பய மவனே! நிறுத்துடா எந்த உலகத்துல இருக்க. காலையிலே தண்ணீ எதுவும் போட்டுட்டியா. உன்னைப் போய் புள்ளைன்னு வளர்த்தேன் பாரு என்னை சொல்லனும்டா" என அப்போதும் திட்ட துவங்கிட

"ந்தா இப்ப நிறுத்துறியா இல்லையா நைனா. எதுக்கு இப்ப திட்டுற? சொல்லித் தொலை"

"பின்ன என்னடா விடிஞ்சு போச்சே, வாய் நமநமங்குதேன்னு காபி போட இங்க வந்து உன்னை எழுப்பலாம்னு வந்தேன்"

அரவிந்த் கூறியதை கேட்டு ஒன்றும் புரியாது சித்து "என்ன விடிஞ்சு போச்சா" என முழித்து வைத்தான்.

"ஆமாண்டா பையித்தியக்காரா. என்ன கனவு கண்டு தொலைச்ச? தூக்கத்துல எதோ தானா பேசி சிரிச்சிட்டு இருந்தியே. சரி என்ன உளருறன்னு கேக்க என் காத உன் வாய்கிட்ட கொண்டாந்து வச்சேன். நீ என்டான்னா சட்டுனு என் கழுத்த புடிச்சு அமுக்கி என் உதட்டை கடிச்சு வச்சதும் இல்லாம என்னடா வியாக்கியானம் பேசுற. பெத்த அப்பனுக்கே முத்தம் குடுக்குறியே உருப்புடுவியாடா நீயெல்லாம்" என்று முடித்தார் அரவிந்த்.

'என்ன இந்தாளுக்கு நான் முத்தம் குடுத்தேனா?' என யோசித்த சித்துவிற்கு அப்போதுதான் மூளையில் சிறிதாக பல்ப் எரிந்தது. அதாவது கனவில் வந்த அவன் காதலிக்கு முத்தம் தருவதாக எண்ணி நிஜத்தில் வந்த அவன் தந்தைக்கு முத்தத்தை தந்திருக்கிறான் அந்த பரம்பரை பையித்திக்காரன்.

அதை கேட்டு படாரென வெடித்துவிட்டது பாவம் அவன் பிஞ்சு இதயம். அதைவிட போயும் போயும் அவன் தந்தைக்கு முத்தம் தந்தது தெரிந்தவுடன்

"த்து கருமம் கருமம். யோவ் நைனா எதுக்குயா என்கிட்ட வந்த. ஐயோ ச்சை! ஐயோ இந்தாளுக்கா முத்தம் குடுத்தேன்‌. என் வீரா செல்லம் வெக்கப்பட்டுக்கிட்டே சரின்னு சொன்னப்பவே நான் சுதாரிச்சிருக்க வேணாமா இது கனவுன்னு. அது எனக்கு அப்ப புரியாம போச்சே! ஐயோ..."

மனம் வெறுத்துபோய் முனகியபடி பரபரவென்று தன் உதடுகளை தேய்த்து எடுத்தான் பையன். பாவம் முத்தத்தின் குறுகுறுப்புதான் போகவே மாட்டேன் என்றது. அதன்பின் பாத்ரூம் போய் பேஸ்ட் பிரஷ்ஷை எடுத்தவன்தான் கால்மணி நேரம் தேய் தேய் என உதடு பற்களை புண்ணாகவே ஆக்கிவிட்டான்.

"டேய் இப்ப வெளியே வந்து எனக்கு காபி போட்டு தருவியா மாட்டியா? சரியான தண்டத்துக்கு பொறந்த தண்டமாடா நீ, இப்ப எனக்கு காபி வேணும் வாடா வெளிய"

அவன் பாத்ரூமிலே பதுங்கியதில் கடுப்பான அரவிந்த், அவன் வரும்வரை பொறுமை இல்லாது பாத்ரூம் வாயிலிலே நின்று அரவிந்த் தன்னையும் சேர்த்தே திட்டுகிறோம் என மூளையே இல்லாது கத்திக் கொண்டிருந்தார் மனிதர்.

'ஐயோ! கனவுல கூட என் ஆளு கூட டூயட் பாட விடாம என்னை கடுப்பேத்திட்டு, மூட்டைப்பூச்சி மாதிரி நையநையன்னு இம்சை பண்ணுதே. கொலை கேசா ஆனாலும் பரவாயில்லைனு இந்த ஆள அப்படியே கொண்ணுட்டாதான் என்ன' என அவர் இறந்ததைகூட மறந்தவனாய் யோசித்தபடி முகத்தில் கிலோ கணக்கில் கோபத்தை பூசிக் கொண்டே வந்தான் சித்து.

அவன் கோப முகத்தை பார்த்து 'என்ன மூஞ்சில பல்ப் பிரகாசமான எரியுது. சரி இருக்கட்டும் நமக்கு இப்ப தேவை காபி அதை மொதல்ல குடிப்போம் மீதியை அப்புறம் பாத்துப்போம்' என காரியத்தில் கண்ணாகிவிட்டார் அவன் தந்தை.

"இந்த மொறப்பு வெறப்பு எல்லாத்தையும் மூட்டக்கட்டி வச்சுட்டு வந்து காப்பி போட்டு தாடா தடிமாட்டு தண்டம்"

அரவிந்த் சித்துவை திட்டிய படியே அவனை இழுத்து வந்து சமையல் அறைக்குள்ளே விட்டுதான் நின்றார். அதற்குமேல் என்ன செய்வது, சித்துவால் காபியை தவிர வேறு எதையும் போட முடியாது என உலகம் அறியுமே.

அங்கே தங்க போவதாக முடிவு செய்த உடனே சமைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்திட்டார் அவன் அத்தை அலமேலு.

காலையிலே பால் பாக்கெட்டும் அவர் ஏற்பாட்டின்படி வந்திருக்க சித்து அங்கிருந்தவற்றை எடுத்து காபியை போட்டு கொடுத்தான். பழக்க தோஷத்தில் அப்படியே காலை சமையலிலும் இறங்கிவிட்டான் நல்ல பிள்ளையாக.

ஆனால் மனதிற்குள் ஒரு பெரிய எரிமலையே வெடித்துக் கொண்டிருக்க, வெளியே காட்ட முடியுமா இல்லை காட்டினால் அவன் தந்தையிடம் இவன் பருப்புதான் வேகுமா. ஆனால் அவன் குக்கரில் வைத்த பருப்பு சரியாக விசில் வந்துவிட, சாம்பாருக்கு காயை நறுக்கி கொண்டிருக்கிறான் அந்த அப்பாவி மகன்.

இதில் ஒவ்வொரு காயாக நறுக்க நறுக்க 'ஐயோ.. ஐயோ ஐயோ ஐயோ...' அவன் மனது வேற எசப்பாட்டு பாடிக் கொண்டிருக்க 'நமக்கு ஊர்ல எதிரி இருந்தா பரவால்ல, நமக்குள்ளையே இருக்கே!' என நொந்து நின்றான் அரவிந்தின் புத்திரன் சித்தார்த்.

அந்த நேரத்தில் சரியாக எண்ட்ரீ கொடுத்தாள் வீரா. சமையல் அறையில் சித்து கேரட்டை கொலை செய்வததை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்ட வீரா

'ஆண்டவா! இன்னைக்கு காலைலே எதோ சம்பவம் பெருசா நடந்திருக்கும் போலையே! வீரா காபிய தூக்கிட்டு அப்படியே எஸ்ஆகிரு. இவங்க பஞ்சாயத்துக்குள்ள தெரியாம கூட கால விட்டுராத, அப்புறம் உசுருக்கு சேதாரம்டி' என உசாராக வந்து காபியை மட்டும் லவட்டி கொண்டு ஓடிவிட்டாள்.

காபியை ருசித்து ரசித்து குடித்த பிசியில் அரவிந்தும், அவளை கண்டு காலை நிகழ்வுகள் மீண்டும் கண் முன்னே வந்த வயிற்றெரிச்சலில் சித்துவும் அமைதி காத்த அந்த இரண்டு செகண்டில் ஓடி தப்பிவிட்டாள் புண்ணியவதி.

இங்கு இப்படி போய்க் கொண்டிருக்க "அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கே. இதுகள நம்பி நான் வேற பல பிளானு செஞ்சிருக்கேன்‌. ஆனா போறப்போக்க பார்த்தா நம்ம நெலைமையே சல்லி பைசா பெறாது போலையே. இவனுங்கள வச்சி நான் என்னாத்தை செய்ய. காலாங்காத்தாலையே என் ஜீவன வாங்குதுங்களே" என தூரத்தில் மரபொம்மை அதன் மர இதயம் வெடிக்கும் அளவு மன வலியில் துடித்துக் கொண்டிருந்தது தந்தை மகன் இருவருக்கும் தெரியவில்லை. பாவம் பொம்மை!

-ரகசியம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top