All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாரலின் "அன்பே உ(எ)ன்னை உனக்காக" கதைத் திரி

Status
Not open for further replies.

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளே எனது முதல் கதையான உயிருக்குள் இன்னொரு உயிரை சுமக்கின்ற காதல் சுகமானது என்னும் கதைக்கு நான் எதிர்பார்த்ததைவிட பெருமளவு வரவேற்பை நீங்கள் தந்தீர்கள் . புது எழுத்தாளர் என்று யோசிக்காமல் பலர் தொடர்ந்து படித்துவிட்டு அவர்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர் . மேலும் பலர் லைக் போட்டு தங்களின் வரவேற்பை தந்தனர் . பலர் சைலெண்டாக படித்தனர் . அனைவர்க்கும் என் நன்றிகள் .

ஒரு வாசகியாக நான் ஸ்ரீகலா அக்காவிற்கு தனியாக அனுப்பும் ஒவ்வொரு கருத்துக்கும் நிச்சயம் அவரிடம் இருந்து அன்பான பதில் இருக்கும் . இப்பொழுது நான் கேட்ட ஒருவார்த்தைக்காக ஸ்ரீகலா அக்கா எனக்கு தளம் ஆரம்பித்து தந்து ஊக்கப்படுத்தினார் . ஒரு புதிய எழுத்தாளராக நான் கேக்கும் அணைத்து சந்தேகங்களுக்கும் கண்டிப்பாக இன்முகத்துடன் ஒரு பதில் அனுப்புவார் . அவரின் ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் .

இப்பொழுது நான் இங்கு சொல்லவருவது ,என்னுடைய முதல் கதை இன்னும் சில அத்தியாயங்களில் முடிந்து விடும் . என் மனதில் உதித்த அடுத்த கதையை விரைவில் தளத்தில் பதிவிடலாம் என்று எண்ணினேன் .

கதையின் தலைப்பு : அன்பே உ(எ)ன்னை உனக்காக .....

கதாநாயகர்கள் : நிஸ்வந்த் , யஸ்வந்த்
கதாநாயகி(கள் ) : அபிதா , ****

எனது முதல் கதையில் சில இடங்களில் தவறு இருக்கலாம் ... அதை கண்டிப்பா சுட்டி காட்டுங்கள் அதே தவறு என் அடுத்த கதையில் வராத அளவு பார்த்துக் கொள்கிறேன் .

என் முன் கதை போல் இந்த கதைக்கும் உங்களின் ஆதரவை எப்பொழுதும் எதிர்பார்க்கும் நான் (சாரல் )
 
Last edited:

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பே உ(எ)ன்னை உனக்காக ......

முன்னோட்டம் - 1

தனது அலுவலகத்தில் நிஸ்வந்த் கம்பீரமாக அமர்ந்து தனது மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டு இருந்தான் . அப்பொழுது அவனின் அறை கதவு தட்டும் ஓசை கேட்டது . தலையை சற்றும் நிமிர்த்தாமல் தனது மடிக்கணினியில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டே "எஸ் கம் இன் " அழுத்தமாக தனது ஆளுமை நிறைந்த குரலில் கூறினான் .

மென்மையாக கதவு திறக்கப்பட்டது . திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே வந்தாள் அவள் . அவள் தான் ஜெயதி . அந்த அலுவலகத்தில் ஜி எம் ஆக வேலை செய்பவள் . அவளின் சிபாரிசு வந்த இடத்தையும் அவளின் திறமையையும் கண்ட நிஸ்வந்த் அவளை அந்த அலுவலகத்தில் தனக்கு அடுத்ததாக முக்கிய இடத்தில் வைத்து இருந்தான் .

பின்னே இருக்காதா என்ன.. சிபாரிசு செய்தது யார் ?

கண்ணன் ஆகிற்றே . அந்த வீட்டின் அனைத்து இளவட்டங்களுக்கும் அவன் சிம்மசொப்பனம் ஆகிற்றே . ரஞ்சினியின் வளர்ப்பு ஆளுமையுடன் பொறுப்பாக ஆண் பிள்ளை என்றாள் கண்ணனை போல் இருக்க வேண்டும் என்று அனைவரும் மெச்சும் வகையில் வளத்திருந்தாள் .

"எஸ் ஜெயதி " என்றான் நிஸ்வந்த் நிமிராமல் .

தனது புருவங்களை உச்சிக்கு கொண்டு சென்று ஆச்சர்யப்பட்ட அவள் "சார் உங்க மெயில் பார்த்தீங்களா " என்றாள் கர்மசிரத்தையாக .

"என்ன மெயில் ?....ஒஹ் அந்த xxxx கம்பெனி டீடெயில்ஸ் ஹா பார்த்துட்டு சொல்றேன் " என்று கூறி பேச்சை அவ்ளோதான் என்று துண்டித்தான் .

அவள் அங்கு இருந்து அசையாமல் இருப்பதை உணர்ந்த நிஸ்வந்த் நிமிர்ந்து அவனின் இருக்கையில் நேராக அமர்ந்து வலது கையை தாடைக்கு முட்டுக்கொடுத்து 'என்ன ' என்னும் விதமாய் பார்த்தான் .

எப்பயும் போல் அவனின் ஆளுமையில் அதிசயித்த அவள் "சார் ஆம் ரேசைனிங் " என்றாள் சர்வசாதாரணமாக .
"வாட் " கத்திவிட்டான் நிஸ்வந்த் . எழுந்து நின்று "வாட் ஆர் யு கிரேஸி ...." என்று அதிர்ச்சியுடன் கேட்டான் .

அதிர்ச்சியாகாமல் பின்னே ! நிறுவனத்தின் அத்துணை ரகசியங்களையும் தனக்கு நிகராக தெரிந்து வைத்திருப்பவள் ஆகிற்றே .

"சார் ஐ ஹாவ் டு ...நான் வேலை விடவேண்டிய கட்டாயம் ...கண்ணன் சார் இடம் முன்பே பேசியாகிவிட்டது ...ஒன் மந்த் நோட்டீஸ் பீரியட் முடிஞ்சு கிளம்பிடுவேன் " என்று கூறி நிற்காமல் நடந்தாள் .

அவன் அத்தனை கோபத்தையும் தனது கை முஷ்டி இறுக்கி ஓங்கி குத்தி தனக்கு முன் இருக்கும் மேஜைமீது காட்டினான் . கண்ணன் சொன்ன வார்த்தைக்காக இவளை முக்கிய பொறுப்பில் சேர்த்த தனது மடமையை எண்ணி தன்னயே நொந்தான் .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பே உ(எ )ன்னை உனக்காக .....

முன்னோட்டம் :-

இன்று ஆர் ஆர் சொலுஷன்ஸ் ஷேர் மார்க்கெட்டில் தரம் இறங்கி நஷ்டத்தில் சென்றுக் கொண்டு இருந்தது . அனைத்து பக்கத்தில் இருந்தும் நெருக்கடி . மேலும் பல ப்ராஜெக்ட் கைநழுவி புதிதாக ஆரம்பித்து சந்தைக்கு வந்த ஏ ஜெ சொலுஷனிற்கு சென்றது .

'எவ்வாறு ? எங்கே தவறினேன் சொல்லிவைத்தார் போல் அணைத்து ப்ரொஜெக்ட்டும் சரியாக அந்த நிறுவனத்திற்கு செல்கிறது ...ஒரு கருப்பு ஆடு இருக்கிறது யார் அது ' மண்டையை போட்டு உடைத்துக் கொண்டான் நிஸ்வந்த் .


தனது ஒட்டிப்பிறந்த உடன் பிறப்பை தேடியது அவன் உள்ளம் . நிஸ்வந்த் யஸ்வந்த் இருவரும் உல்லாச பேர்வழிகள் . ஆனால் காரியத்தில் கெட்டி . பிசினெஸ் என்று வந்தால் சீரும் சிறுத்தைகள் . எவரும் அவர்களை நெருங்க அஞ்சுவர் . விளையாட்டுத் தனமாக எதிரிகளை இடம் தெரியாமல் அழிப்பார்கள் . இப்பொழுது நேர்ந்ததோ துரோகம் . கண்ணிற்கு தெரியாத எதிரி ..ஒருவேளை யார் என்று தெரிந்தால் ?

யஸ்வந்த் அமெரிக்கா சென்று இருந்தான் உல்லாச பயணமாக . முன்பெல்லாம் இருவரும் செல்வது வழக்கம் . ஆனால் எப்பொழுது அவள் நிஸ்வந்த்தின் வாழ்வில் நுழைந்தாளோ அன்றில் இருந்து சில நேரங்களில் ஒதுங்கினான் நிஸ்வந்த் .

அவள்...அவள் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப எவரும் வரவில்லை . அதேநேரம் அவள் இருக்கும் பொழுது தெரியாத வெறுமை இப்பொழுது அவனைத் தாக்கியது .

யஸ்வந்த் அனைத்தையும் விளையாட்டு தனமாகவே பார்க்க நேர்ந்ததால் நிஸ்வந்த்தின் வாழ்க்கையையும் விளையாட்டுப் போக்கில் எடுத்துக்கொண்டான் .

தங்கள் நிறுவனத்தின் பங்குச் சந்தை சரிவைக் கண்டு உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடு செய்தான் யஸ்வந்த் .

கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அங்கு கேளிக்கைகளுக்கு பஞ்சமில்லை . பணத்தை தண்ணீராக செலவு செய்ய அனைத்து விதமான பொழுதுபோக்கும் உள்ள நகரம் . அங்கு இருக்கும் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தனது சகோதரனுக்கு அழைப்பு விடுத்தான் .

"சொல்லு யஸ்வந்த் " சுரத்தை இல்லாமல் வந்தது வார்த்தைகள் .

"என்ன நடக்குது அங்க ? எப்படி ஷேர்ஸ் இவ்ளோ டவுன் ஆச்சு ...." கேள்விகள் வந்துக்கொண்டே இருந்தது . இவனால் பதில் சொல்லத்தான் முடியவில்லை . தன்னை நிதானப்படுத்திக் கொண்ட யஸ்வந்த் "நான் ஏர்போர்ட்ல இருக்கேன் ....திங்கள் காலை நான் அங்கு இருப்பேன் ..." என்று கூறி அழைப்பை வைத்தான் .

......................................................................

அது ஒரு தொழில்முறைக் கூட்டம் . அந்த மும்பை மாநகரத்தில் பெரும் தொழில் அதிபர்கள் பலர் அங்கு கூடுவர் . தாஜ் ஹோட்டலில் பெரும் ஹாலில் அனைவரும் கூடி இருந்தனர் சிலர் தொழில் முறை நட்புகளுடன் பேசிக் கொண்டு இருந்தனர் . சில தொழில் அதிபர்களின் மனைவிமார்கள் தங்களின் பணப்புகழை பறைசாற்றும் வகையில் அலங்காரம் செய்துக் கொண்டு வளம் வந்தனர் .

அங்கு இருந்த பார் கவுண்டெரில் தன்னை மீறி மது அருந்திக் கொண்டு இருந்தான் நிஸ்வந்த் . யஸ்வந்த் அங்கு இருந்த சில பெண்களின் நடுவில் கோபியரின் கண்ணனாக மாறி நின்றுக் கொண்டு இருந்தான் . இருந்தும் தனது உடன் பிறப்பை தன் பார்வை வட்டத்தினுள் வைத்து இருந்தான் .

நிஸ்வந்த் தள்ளாட்டத்துடன் எழுந்தான் அவனின் எதிரே ஒரு பெண் ...அவளை பார்த்தவுடன் நிஸ்வந்த் "ஹே நீயா இப்போ எங்க வேலை செய்ற " என்றான் குளறலுடன் . அவனின் தள்ளாட்டத்தை பார்த்து எள்ளலான புன்னகையை அவனின் பக்கம் சிந்திவிட்டு சென்றாள் அவள் .

நிஸ்வந்த் கீழே விழுகும் சமயம் அவனை தாங்கி பிடித்தான் யஸ்வந்த் . "நிஷு யார் அது ? " என்றான் கேள்வியுடன் .

"யாரு ? " என்று கேட்டான் நிஸ்வந்த் போதையில் .

'இவனிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை ஆளு மட்டை ' என்று எண்ணிக் கொண்டே நிஸ்வந்தை கைத்தாங்கலாக பிடித்துச் சென்றான் யஸ்வந்த் .

......................................................................

யஸ்வந்த்திற்கு அவளை பார்த்து அவ்ளோ ஒரு ஆத்திரம் .

தனது அலுவகத்தில் தனக்கு எதிரே அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தவளை ஏதும் செய்ய இயலாமல் கையை கட்டி போட்டது போல் இருந்தது யஸ்வந்த்திற்கு .

யஸ்வந்த்தும் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் வெறுமையான பார்வையுடன் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் .

"சோ யு ஆர் தி கலப்ரிட் " தீயென தகித்தது அவனின் வார்த்தைகள் . முகத்திலோ எந்த உணர்வும் இல்லை .


ஒற்றை புருவத்தை தூக்கி மெச்சுவதை போன்ற ஒரு பார்வை பார்த்து நக்கலாக சிரித்த அவள் "ஓஹ் தி கிரேட் ட்வின் பிரோதெர்ஸ்க்கு என்னை கண்டு பிடிக்க இவ்ளோ மாதகாலம் ஆகிடுச்சா ? " அவ்ளோ ஒரு நக்கல் அவளின் குரலில் .
 
Last edited:

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பே உ(எ)ன்னை உனக்காக ....

முன்னோட்டம் : 3

யஸ்வந்த் நிஸ்வந்த்தின் பெரியம்மா ரஞ்சினி கையை கட்டி வேடிக்கை பார்த்தாள் . மூத்த தலைமுறை ஆண்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர் . எவரும் மூச்சை கூட விடாமல் இழுத்து பிடித்திருந்தனர் அத்துணை ஒரு அமைதி .

ஓய்ந்து போன தோற்றத்துடன் அமர்ந்து இருந்தாள் ராகினி . எங்கே தவறினேன் ....அவளின் மனம் அவளையே கேள்வி கேட்டது .

எந்தவிதமான பயமும் இல்லாமல் உள்ளே நுழைந்த யஸ்வந்த் நிஸ்வந்த் தங்களின் அன்னையின் முன் சென்று நின்றனர் . ராகினியை விளையாட்டுத்தனத்துடன் பிள்ளைகளின் அம்மா போன்று இல்லாமல் ஒரு தோழமையுடன் பார்த்த அனைவரும் இன்று அவளின் புதிய அவதாரத்தை பார்த்தனர் .

ஆம் அவள் தனது இரு மகன்களையும் அறைந்திருந்தாள் . "அம்மா !! " என்று ஒரே நேரத்தில் இருவரும் அதிர்ச்சியுற்றனர் .மேலும் எவரும் நடுவில் தலையிடவில்லை அதையும் கண்டு குழப்பமுற்றனர் .

"என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க ? " என்று கோபத்துடன் வினவினாள் ராகினி . இதுவரை அவள் இவ்ளோ குரல் உயர்த்தி கடுமையாக பேசியதை ரஞ்சினி கூட கண்டதில்லை .

"பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்ளோ ஈசி ஹா ...." மீண்டும் அறைந்தாள் .

தங்களின் அன்னைக்கு தங்களின் போக்கு தெரிந்துவிட்டது என்று இருவரும் தலை கவிழ்ந்தனர் .

"யாரை ஏமாற்ற இந்த மாறி நடந்தீங்க ....எங்கோ மும்பையில் குடும்பதுக்கு தெரியாமல் செய்ரோம்னு நினச்சு உங்கள நீங்களே ஏமாத்திருக்கீங்க ...நம்ம வீட்ல பெண்கள் இல்லையா ? போ போய் உன் அத்தை பொண்ணு வெண்பா கிட்ட வம்பு செய்து பாருங்களேன் மொத்த குடும்பமும் உங்களை வகுந்துரும் .....என்ன தயிரியம் உன் வீட்டு பொண்ணு அப்படினா ஒசத்தி அடுத்தவீட்டு பொண்ணு அப்படினா இழப்பமோ !! " அத்தனை கோபம் ராகினியின் குரலில் .

பிரவீன் அருகில் வந்து மனைவிக்கு ஆறுதலாக நின்றானே தவிர அவளைத் தடுக்கவில்லை . "நம் வீட்டு பிள்ளைகள் அப்படினு சொன்னாலே இருக்கிற மரியாதையை இருட்டுல போட்டு புதைச்சுட்டீங்க ... உங்க தாத்தா பாட்டியை சொல்லணும் அதிகப் பணம் தேவை இல்லாத வயதில் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க கூடா நட்பு இவ்ளோ கேடு செய்ய வழிவகுத்திருச்சு " தனது மாமனார் மாமியார் முன் இருந்திருந்தால் அவர்களை நிச்சயம் சும்மா விட்டிருக்கமாட்டாள் அவள் .

ரஞ்சினி எத்தனையோ முறை தன்னை சிலநேரங்களில் இது தவறு என்று கடுமையாக பிள்ளைகளுக்கு கூறுமாறு சொன்னதை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் 'அக்கா இது வயசு கோளாறு நம் பிள்ளைகள் தவறு செய்ய மாட்டார்கள் ' என்று கண் மூடி தனமாக நம்பி சொன்ன தன்னையே நொந்துகொண்டாள் ராகினி .

"அம்மா நாங்க ஒன்னும் பெருசா தப்பு பண்ணலை ..நாங்களா எங்கயும் போகலை ஜஸ்ட் சோசியலைசிங் ...கல்ஸ் அவங்களே ஏதும் சொல்லல எங்க நட்புக்காக ஏங்குறாங்க யாரையும் நாங்க போர்ஸ் பண்ணலை " நிமிர்ந்து நின்று ஆண் என்ற கர்வத்தில் பதில் கூறிய யஸ்வந்த்திற்கு மீண்டும் ஒரு அறை . இப்பொழுது அறைந்தது ரஞ்சினி .

"டூ யு திங்க் கல்ஸ் அஸ் சோ ஈசி ....ஹொவ் டார் யு சேய் திஸ் ......உங்க அம்மா உங்க மேல வச்சிருந்த நம்பிக்கையை உடைச்சு அதையும் மீறி அவ முன்னாடியே இப்படி திமிரா பேசுற நீ ...டோன்ட் யு பீல் அஷேம்ட் ஒப் திஸ் .... கெட் லாஸ்ட் " சீறினாள் ரஞ்சினி .' நான் அப்பவே கண்டிக்க சொன்னேன் கேட்டியா நீ ' என்று செய்தி தாங்கிய பார்வையை தனது தங்கை ராகினியின் மீது செலுத்தி தனது அறைக்குள் சென்று முடங்கினாள் ரஞ்சினி .

ராகினி நிமிர்ந்து நின்று "வெளியே போங்க இனி உங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...மாமா இவனுங்களை இனி தொழில் பார்கவிட்டீங்க நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் " என்று கூறிய ராகினி எவரையும் பார்க்காமல் தனது கணவன் ப்ரவீனுடன் வெளியே சென்றாள் .

Happy mother’s day to all. Be a proud mother. Enjoy your motherhood feel with heart filling love towards your children. Being a kid (how many years it may be you are kid to your mother) spend some time with your mother. During her presence we will not realize our mother’s value. At her absence sure we Will be longing to see her back soon.

Than being a mother of a girl child mother of boy have more responsibility in growing up them. Instead of teaching a girl not to go out at untime we can teach our son to protect and safeguard a girl when he see her alone. Don’t say them “boys should not cry“tell them “don’t make anyone to cry” .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளே இந்த கதையை எனது முதல் கதையான உயிருக்குள் இன்னொரு உயிரை சுமக்கின்ற காதல் சுகமானது கதையின் தொடராகவும் படிக்கலாம் , புது கதை என்ற வகையிலும் படிக்கலாம் . அந்த கதையில் இருக்கும் பல கதாபாத்திரங்கள் இதிலும் தொடர்வார்கள் .

அத்தியாயம் :-1

நிஸ்வந்த் , யஸ்வந்த் இருவரும் உருவ ஒற்றுமை மட்டும் இல்லை குணத்திலும் எண்ணங்களிலும் ஒற்றுமை பெற்றவர்கள் . அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து மூன்றாம் நபரால் நிச்சயம் அடையாளம் காண இயலாது . நிஸ்வந்த்தின் எண்ணங்கள் ஒரு சில இடத்தில் மட்டுமே கடந்த சில நாட்களாக தனித்து தெரியும் . யஸ்வந்த்திற்கு அதற்கான காரணம் தெரியும் ஆகையால் அவனை எதற்கும் வற்புறுத்த மாட்டான் .

இவர்களை பற்றி என்ன சொல்ல ...ஒரே உருவம் நல்ல உயரம் . நீச்சல் ஜிம் என்று உடம்பை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் . பெண்களுக்கு மட்டும் தான் வில் போன்ற புருவம் என்று யார் சொன்னது ? இவர்களின் புருவமும் வில் போன்று வளைந்து அடர்த்தியாக இருக்கும் . அதன் கீழ் வில்லில் இருந்து வரும் அம்பை போன்ற கூர்மையான கண்கள் அதில் கொஞ்சமே கொஞ்சம் குறும்பு . அடர்த்தியான கேசம் அலையென முன் நெற்றியில் வழியும் அதை இவர்கள் ஒன்று போல் ஒதுக்குவதே தனி அழகு . (போதும் பா எனக்கே ஓவர இருக்கு )

தாய் ராகினி தோழியை போன்றவள் . தந்தை பிரவீன் தாயின் மீது அதீத காதல் கொண்டவர் . அண்ணன் ரஞ்சித் தங்களின் பெரியம்மாவின் பையன் கண்ணன் அண்ணனை போன்று கோட்பாடுகளுடன் வளர்ந்தவன் . இருவரும் போலீஸ் . கண்ணன் தமிழக காவல் துறையில் டி எஸ் பியாக இருக்கிறான் அவர்களின் குடும்பத்தின் இளவட்டங்களின் சிம்மசொப்பனம் அவன் . ரஞ்சித் ஏ சி பி யாக இருக்கிறான் . இருவரும் திருமணமானவர்கள் . ஒவ்வொருவருக்கும் இருகுழந்தைகள் இருக்கின்றனர் .

தற்சமயம் அவர்களின் குடும்ப தொழிலான ஆடை தொழிலை ராஜ்குமாருக்கு (அவர்களின் பெரியப்பா ) துணையாக இருந்து பார்த்து கொள்வது இவர்கள் இருவர் தான் . மற்ற அனைவரும் தொழில் செய்வதில் பெரிதும் நாட்டம் இல்லாமல் இருந்தமையால் அத்தை ,பெரியப்பா , அப்பா மூவரின் தொழிலையும் இணைத்து குடும்ப உறுப்பினர்களின் அனைவரின் பெயரிலும் ஷேர்சாக பிரித்துவிட்டு திறம்பட தொழில் செய்யும் இருபத்தி ஒன்பதுவயது வாலிபர்கள் .

தங்களின் என்ன ஈடுபாடுகளுக்கு ஏற்ப கட்டிட தொழிலையும் , மென்பொருள் நிறுவனத்தையும் தாத்தா பாட்டி தந்த சொத்தின் பங்கில் அமைத்து நிர்வகிக்கின்றனர் .

மும்பை மாநகரில் பணக்காரர்கள் வசிக்கும் பாந்த்ரா மேற்கில் சொகுசான அடுக்குமாடி குடி இருப்பு ஒன்றை இருவரும் சேர்ந்து வாங்கினர் . யஸ்வந்த் சென்னையில் இருந்து கட்டிட தொழிலையும் ஆடை நிறுவனத்தையும் பார்த்துக்கொள்கிறான் .

நிஸ்வந்த் மும்பையில் வசித்து மென்பொருள் நிறுவனத்தையும் வட இந்திய ஆடை தொழிலையும் எடுத்து நடத்துகிறான் . இருவரும் தினமும் வீடியோ கால் பேசிக்கொள்வார்கள் . வாரவிடுமுறைக்கு யஸ்வந்த் மும்பை வந்துவிடுவான் . மும்பையில் இவர்கள் போடாத ஆட்டம் இல்லை . இரவின் இருட்டில் எவரும் அறியாமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தனர் . அணைத்து கெட்ட பழக்கங்களும் இருந்தும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர் . எத்தனுக்கு எத்தனாக ஒருத்தன் இருப்பான் அப்படி இருப்பவன் தான் கண்ணன் அவன் அனைத்தும் அறிவான் இருந்தும் சரியான நேரத்திற்காக பொறுமை காத்தான் .

கடந்த சில நாட்களாக நிஸ்வந்த் பெண் தோழமைகலை முற்றிலுமாக தவிர்த்தான் . அதன் காரணம் அறிந்த யஸ்வந்த்தும் பெண் தோழமைகலை தவிர்த்தான் . மற்றபடி இருவரும் வார விடுமுறை நாட்களில் பப் மது புகைப்பழக்கம் என்று சந்தோஷமாகவே இருந்தனர் .

அன்று காலை நிஸ்வந்த் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் . அப்பொழுது அவனின் கவனத்தை அலைபேசி கலைத்தது . எடுத்து பார்த்தால் கண்ணன் . உடனே அதனை உயிர்ப்பித்து காதில் வைத்தான் "ஹலோ அண்ணா என்ன சப்ரைஸ் நீங்க எனக்கு கூப்பிட்டிருக்கீங்க அதும் காலைலயே " என்றான் குரலில் வழிந்த ஆச்சர்யத்தோடு .

"எப்படி இருக்க நிஷு நீயும் சென்னை பக்கம் வரலாமே எப்பப்பாரு யஸ்வந்த் தான் அங்க வரான் " என்றான் கண்ணன் .

'எங்கே வந்தா எங்க தகிடுதத்தம் எல்லாம் வெளிய வந்திருமே ' என்று நினைத்த நிஸ்வந்த் "வரேன் அண்ணா இந்த வாரம் வரேன் ....நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க லக்ஷிதா எப்படி இருக்கா " உண்மையான அக்கறையுடன் கேட்டான் .

"குட்டிமா நல்லாவே இருக்கா எல்லாரும் இங்க நல்ல இருக்கோம் " கண்ணன் தங்கை பெயர் கேட்டவுடன் சந்தோசத்துடன் பதில் கூறினான் .

"சொல்லுங்க அண்ணா " நிஸ்வந்த் யோசனையாக கேட்டான் .

"அது எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே " நிதானமாக கேட்டான் கண்ணன் .

"அண்ணா என்ன ஹெல்ப் அது இதுனு சொல்லுங்க செஞ்சுட்டு போறேன் " ஆள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் என்று உணர்ந்த கண்ணன் சிரித்துக் கொண்டே

"அது எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க பொண்ணு யூ எஸ்ல இருந்து வந்திருக்கா அவங்க அம்மா அங்க பிக் ஷாட் பட் இவளுக்கு அங்க நாட்டம் இல்லை ...சோ இங்க மும்பைல தனியா இருக்கா போர் அடிக்குது வேலை வேணும்னு கேட்டா உன் நியாபகம் வந்துச்சு அதான் கூப்பிட்டேன் ..." எதையும் குரலில் காட்ட மாட்டான் கண்ணன் .

"ஓஹ் குட் எனக்கும் ஆள் தேவை இருக்கு ...நீங்க சொன்னா நம்பிக்கையான ஆளாத்தான் இருப்பாங்க என்ன படிச்ருக்காங்க " நிஜமாவே நிஸ்வந்த்திற்கு ஆள் தேவை இருந்தது .

"எம் எஸ் படிச்சருக்கா அதும் யூ எஸ்ல வெள் நாலெட்ஜ்ட் கேர்ள் ...இன்டெர்வியூ பண்ணு தேறினா அப்பொய்ண்ட் பண்ணிக்கோ " என்றான் கண்ணன் .

"ஓஹ் கம் ஒன் அண்ணா எலிஜிபிள் இல்லைனா நீங்க கேட்ருகவே மாட்டீங்க வர சொல்லுங்க நாளைக்கு காலைல டென் ஓஹ் கிளாக் ஸ்செடுல் பிளாக் பண்ணிக்கிறேன் " என்றான் நிஸ்வந்த் .

"கண்டிப்பா நிஷு தேங்க்ஸ் ஐ வில் கால் யு பாக் " என்று கூறி அணைப்பை துண்டித்தான் .

உடனே தன்னுடன் உடன் பிறந்த உடன் பிறப்புக்கு அழைத்த நிஸ்வந்த் "ஹாய் யாஷு " என்றான் .

"ஹாய் நிஷு குட் மோர்னிங் அண்ணா கால் பண்ணாங்க ரிக்கார்டிங் ஜாப் போர் கேர்ள் ரைட் " புன்னகையுடன் கேட்டான் யஸ்வந்த் .

"ஓஹ் சொல்லிட்டு தான் கூப்பிடங்களா ? " என்றான் நிஸ்வந்த் .

"எப்படியும் நீ எனக்கு சொல்லிருவனு தெரியும் சோ சொல்லிட்டு அப்பறம் கூப்பிட்டாங்க " என்றான் கூறினான் யஸ்வந்த் .

"ஓகே யாஷு ஆம் ஸ்டார்டிங் பை போர் நொவ் " என்று கூறி அன்றைய தினத்திற்கான வேலைக்குள் தன்னை மூழ்கிக்கொண்டான் நிஸ்வந்த் .

யஸ்வந்த்தும் சென்னையில் தனது அலுவலில் மூழ்கி இருந்தான் . அடுத்த நாளும் விடிந்தது . இன்றில் இருந்து அந்த இரட்டையர்களுக்கு புயல் வந்து தாக்க போகிறது அதும் அழகான புயல் என்பதை அறியாமல் காலை எழுந்தவுடன் காலை வணக்கம் சொல்லி தங்களின் நாளை தொடங்கினர் .

பத்து மணி இருக்கும் நிஸ்வந்த் தனது மடிக்கணினியில் தலையை விட்டு எதோ தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்த பொழுது அவனின் அறையில் இருந்த அலைபேசி அவனின் கவனத்தை ஈர்த்தது . இவன் எடுத்தவுடன் "சார் இங்க உங்கள பார்க்க மிஸ் ஜெயதி வந்திருக்காங்க "

"ஊஹ் இஸ் ஷி " என்றான் யோசனையாக . அவன் மறந்துவிட்டான் தான் கண்ணனிடம் சொல்லியதை மறுத்துவிட்டான் மேலும் பெயர் தெரியாததால் வந்த குழப்பம் .

"சார் கண்ணன் சார் அனுப்பிச்சாங்கன்னு சொன்னாங்க " என்றாள் அந்த வரவேற்பில் நிற்கும் பெண் பணிவாக .

"ஓஹ் யா அஸ்க் ஹேர் டு கம் இன் " என்று கூறி அவளின் வரவிற்காக காத்து இருந்தான் .

இரண்டு நிமிடத்தில் அவனின் அறை கதவு மென்மையாக தட்டப்பட்டது .

"எஸ் கம் இன் " என்றான் ஆளுமை நிறைந்த குரலில் .

உள்ளே நுழைந்த பெண்ணை ஆராய்ச்சியாக பார்த்தான். சுமார் இருபத்தி மூன்று வயது இருக்கும் பாவை அவள் . ஆண்கள் மட்டும் தான் போர்மல்ஸ் போடவேண்டுமா என்ன அவளும் போட்டிருந்தாள் மிகவும் அழகாக பொருந்தி இருந்தது அவளுக்கு . தூக்கி போனிடைல் போட்டு மிதமான ஒப்பனை , அவள் முகம் திருத்தமாக வட்டவடிவமாக நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நின்றிருந்த அவளை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ச்சியான பார்வை செலுத்தியவன் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமருமாறு சைகை காமித்தான் .

அவளும் அவனின் எதிரே அமர்ந்தாள் . இவள் அவனை ஆராய்ச்சியாக பார்த்தால் அவன் ஜெயதியின் கோப்பையை வாங்கி முழுதாக பார்த்தான் . "வெள் யு ஆர் அப்பொய்ன்டெட் அஸ் ஜி எம் ஒப் ஆர் ஆர் சொலுஷன்ஸ் " என்று கூறிக் கொண்டு எழுந்து நின்று அவளின் முன் கை நீட்டினான் .

அவள் ஒரு ஆழ்ந்த பார்வையை அவனின் புறம் செலுத்தி "ஹொவ் டூ யு ஜட்ஜ் மீ வித் அவுட் எனி குஸ்ட்டீன்ஸ் " (எவ்வாறு நான் இந்த வேலைக்கு தகுதியானவள் என்று கேள்வி கேக்காமல் அனுமானித்தாய் ) என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் வினவினாள் .

நிஸ்வந்தும் ஆங்கிலத்தில் பதில் கூறினான் இங்கே தமிழில் காண்போம் "கண்ணன் அண்ணா தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்வார் மேலும் உங்கள் படிப்பு நீங்கள் படித்த பல்கலைக்கழகம் கூறியது உங்களின் திறமையை பற்றி " என்றான் நேராக .

சிறு புன்னகையுடன் அவனின் கை பற்றி குலுக்கி "தாங்க யு ஐ வில் டேக் எ லீவ் " என்று கூறி விடைபெற்றாள் .


ஒரு அழகான புத்திசாலியான புயல் இவர்களின் வாழ்வில் நுழைந்தது . அந்த புயலில் சிக்க போவது யார் அதன் பின்னணி என்ன ....தாங்கள் மட்டுமே சிறந்தவர்கள் பலம்கொண்டவர்கள் என்று நினைப்பவர்களையும் ஒரு சிறு புத்திகூர்மையான செயலால் வீழ்த்த முடியும் என்று அந்த இரட்டையர்களுக்கு பாடம் புகட்டவே கடல் கடந்து தேசம் தாண்டி வந்திருக்கிறாள் பெண் அவள் .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனது இரண்டாம் கதையான அன்பே உ(எ)ன்னை உனக்காக .... என்னும் கதையின் முதல் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன் . படித்துவிட்டு உங்களின் மேலான கருத்தை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் . உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்க்கும் நான் (சாரல் )

சாரலின் "அன்பே உ(எ)ன்னை உனக்காக" கருத்துத் திரி
 

Ar2

Active member
Epodum suspense vacitey irukenga🤞super Pa sema 2 perum etho panini irukanganu ninaikiren enanu nu than theirla yash abi ya ethadu panini irupano🤔romba yosikireney ena panrandu wait panuvom
 
Status
Not open for further replies.
Top