All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புகளே ரொம்ப சந்தோஷமா இருக்கு என்னோட கதையான என் கலாப காதலா க்கு பெரிய வரவேற்பு கிடைத்தது ரொம்ப நன்றி நிறைய பேர் ரொம்ப அழகான கருத்துகளை சொல்றிங்க தேங்க் யூ my dears என்னோட அடுத்த கதை இனி எல்லாமே நீ தானே இது daily யூடி தரேன் சண்டே மட்டும் இல்ல இன்னைக்கு மட்டும் ஸ்பெஷல் யூடி கதையோட முதல் பாகத்த போடுறேன்.....
வழக்கம் போல நல்லா இருந்தா நல்லாருக்குனு சொல்லுங்க நல்லா இல்லனா என்ன நல்லா இல்லனு சொல்லுங்க உங்களோட கருத்துக்கள் தான் எங்களோட பலம் பிளிஸ் பிளிஸ் படிக்குற எல்லோருமே உங்க கருத்துகளை சொல்லுங்க எதிர்மறை கருத்தா இருந்தாலும் கூட...

நன்றியுடன்
சிந்தியன்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை பற்றி

இரண்டாவது திருமணம் சரியா ? தவறா ?
சிலருக்கு சரியாகவும் சிலருக்கு தவறாகவும் இருக்கிறது....

நம்ப நாயகன் நாயகிக்கு எப்படி இருக்குனு பார்ப்போம்..

நமது நாயகி பாரதி பிரியா
நாயகன் வெற்றிஸ்வரன்
இளவரசன் அபிசரண்

இவர்கள் மூவரை சுற்றி நடக்கும் கதை களம்....

ஒரு அழகான தாய் மகன் அன்பு கணவன் மனைவிக்குள் இருக்கும் பாசம்... இதுல இருக்கும்...
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் தவறுகளை அப்போது தான் திருத்தி கொள்ள முடியும்..

நன்றியுடன்
சிந்தியன்.....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1 இனி எல்லாமே நீ தானே


அழகிய காலை பொழுது புலர....... விடியற்காலை ஐந்து மணி தனம் தன் வீட்டின் வாசல் பெருக்கி சுத்தம் செய்து நீர் தெளித்து கோலம் போட்டு விட்டு உள்ளே வந்தாள்....


பாரதி என்றவாறு அறையின் உள்ளே குரல் கொடுத்து சென்றார் ஆனால் அவள் முன்பே எழுந்து விட்டாள் என்பதை சொல்லும் விதமாக படுக்கையின் மடிப்புகள் சுருட்ட பட்டு அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது....


குளியல் அறையிலிருந்து வந்த சத்தத்தில் அவள் அங்கு தான் இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டு அவர் சமையல் அறை பக்கம் சென்றார்....


சூடான காபி போட்டு எடுத்து கொண்டு பாரதியின் அறைக்கு சென்றார்..
அப்போது தான் குளியல் அறையில் இருந்த வந்தாள் பாரதி...
மாநிறத்துடன் எந்த விதமான ஒப்பனையும் இல்லாமல் இரவு உடையுடன் வெளியே வந்தாள்...


"என்னமா நானே வந்து போட்டுறுப்பல நீங்க ஏன் மா கஷ்டப்படுறிங்க இன்னும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் லா" என்று தன் தாயிடம் கடிந்து கொண்டவள்...
காஃபி யை எடுத்து கொண்டு அன்றைய நாளிதழை எடுத்துக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தாள்..


"இதுல என்னடி கஷ்டம் காஃபி போடுற வேல மட்டும் தான் செய்றேன் மத்த எல்லா வேலையும் நீ தான் பாக்குற அது பத்தாதுனு ஆபிஸ் வேலையும் பாக்கற உனக்காக இது கூட செய்ய கூடாதா டி" என்று தன் பக்க நியாயத்தை கூறினார் தனம்...


"அதான் நீ என்னைக்கு உடனே ஓத்துக்கிட்டு இருக்க" என்றாள் பாரதி.. "அடிபோடி" என்றவர்
தாயும் மகளும் சேர்ந்து அன்றைய நாளிதழை படித்தனர்...
அதன் பின்னர் இருவரும் சேர்ந்து காலை உணவு இட்லி, தக்காளி சட்னி மற்றும் மதிய உணவாக சாம்பார், உருளை வறுவல் என முடித்தனர்....


முடித்து விட்டு மணி பார்க்கும் போது அது சரியாக எட்டை காட்டியது...


"மா டைம் ஆகிடுச்சு நான் போயி கிளம்புறேன்" ... என்றவள் தன் உடைகளை எடுத்து கொண்டு அறையினுள் இருக்கும் பாத்ரூம் க்கு சென்றாள். அவள் வருவதற்குள் அவளை பற்றி பார்ப்போம்...


செல்வ செழிப்பு இல்லை என்றாலும் ஓரளவு வசதியுடன் வாழ்ந்தவர்கள் தான்
தனம் - மனோகர் தம்பதியர்....
இவர்களின் சொந்த ஊர் திருவண்ணாமலை. அங்கு சிறிய ஜவுளி கடை நடத்தி வந்தார் மனோகர்.
இவர்களின் மூத்த மகன் ருத்ர பிரியன்...
இரண்டாவது மகள் பாரதி பிரியா...
ருத்ரன் பிறந்து ஏழு வருடம் கழித்து பிறந்தவள் தான் பாரதி....
தனம் பொறுப்பான குடும்ப தலைவியாக நடந்து கணவனின் அன்பையும் குழந்தைகளின் பிரியத்தையும் பெற்றாள்...
வருடங்கள் ஓட ருத்ரன் கல்லூரி முடித்து விட்டு தன் தந்தையின் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்தான் அப்போது பாரதி பண்ணிரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்...


அப்போது தான் அவர்களின் வாழ்வில் அந்த துன்பம் எனும் புயல் வீச ஆரம்பித்தது...
எப்போதும் போல கடை முடித்து விட்டு வீடு வரும் போது எதிர்பாராத விதமாக மனோகரின் வண்டின் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயை பலியானார்...


கேள்விபட்ட தனம் சரிந்து விழுந்தார் தனது 26 வருடமாக தன்னுடன் சரி பாதியாக இருந்த உயிர் இவரை மட்டும் விட்டு விட்டு தனியே சென்றது..


அந்த இழப்பில் இருந்து மீண்டு வர பல நாட்கள் ஆனது அந்த குடும்பத்திற்கு...
ருத்ரன் தான் பொறுப்பான மகனாக அண்ணாக எல்லாம் செய்தான் அவனின் ஆதரவால் பாரதி தனம் இருவரும் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பினர்.....


பாரதி தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி முதலாமாண்டு அடி எடுத்து வைத்தாள் தன் கவனம் முழுவதும் படிப்பு தான் என லட்சியம் கொண்டு படிதாள்...


இயல்பு நிலைக்கு வந்த சிறிது நாட்களில் அடுத்த புயல் வீச ஆரம்பித்தது அது தான் ருத்ரன் திருமணம்..
ஒரு நாள் காலை தனம் சமையல் அறையிலும் பாரதி காலேஜ் கிளம்பி கொண்டு இருக்கும் போது ருத்ரன் வந்தான் கழுத்தில் மாலையுடன் பக்கத்தில் புது தாலியுடன் பொண்ணும்....


"என்னப்பா இது" என்றவரிடம் "மா இவ கீதா நம்ப கடையில வேலை பாக்குற நானும் இவளும் லவ் பண்ணோம் இவ வீட்டுல தெரிஞ்சு பிரச்சினை ஆயிடுச்சு அதான் இப்படி" என திக்கி திணறி கூறியவனை ஓன்னும் சொல்லாமல் ஏற்று கொண்டார் தனம். இவை எல்லாம் நடக்கும் போது பாரதி சிறிய பெண் கோபம் இருந்த போதும் எழுத்து பேசாமல் அமைதியாக இருந்தால்....


புது பெண் என்று வந்தவள் பெயருக்கு கூட மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவில்லை விழ போனவனையும் தடுத்து நிறுத்தினாள்....
அவள் நிற்கும் தோரணையும் பார்க்கும் அலட்சி பார்வையும் எதும் பாரதிக்கு பிடிக்கவில்லை....


தொடரும்.....

வணக்கம் நண்பர்களே இது எனது அடுத்த நாவல்.. கதை படித்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் (அது எதிர்மறை கருத்துக்களாக இருந்தாலும் கூட) மதிப்பீடுகளையும் வழங்க கேட்டு கொள்கிறேன் உங்கள் கருத்துகள் தான் எனக்கு மேலும் நம்பிக்கையை கொடுக்கும் ...


நன்றியுடன்
சிந்தியன்...
 
Top