All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
4 இனி எல்லாமே நீ தானே
பள்ளியில் அபி ஆசிரியர்
" சார் அபி சொல்ல ஒன்னுமே இல்ல ஹி ஸ் குட் பிரிலியண்ட் இந்த வயசுல இவனுக்கு இருக்குற பொறுப்பு அமைதி வெரி வெரி குட் சார் பட் "
" அபி நீ வெளியே வைட் பண்ணு நான் டாடி கிட்ட பேசுட்டு கூப்பிடுறேன் "
" ஓகே மேம் " என கூறி அபி வெளியே சென்று அமர்ந்து கொண்டான்..
" சார் சொல்லறேனு தப்பா நினைக்காதிங்க அபி ரொம்ப ஸ்மார்ட் பட் அதே டைம் இந்த வயசுல இருக்குற குறும்பு தனம் விளையாட்டு எதும் இல்ல ரொம்ப லோன்லி ய ஃபீல் பண்ணுறான் "
என்றார் அவனது மேம்..
" பிளிஸ் சார் அவன் கிட்ட பேசுங்க நிறைய டைம் ஸ்பண்ட் பண்ணுங்க "
" ஓகே மேம் நான் அவன் கிட்ட பேசுறன் "
" ஓகே சார் தேங்க யூ "
அவனது மேம் யிடம் பேசிய பிறகு வெற்றி தான் எந்த இடத்தில் தவறு செய்கிறோம் ஏன் அபி இப்படி இருக்கிறான் என சிந்திக்க ஆரம்பித்தான்..
சென்னையில்
" கைய்ஸ் கம்மிங் வீக் நம்ப கம்பெனிக்கு ஒரு பெரிய கம்பெனி லேந்து ஆர்டர் வந்துருக்கு அதுக்காக நாம இன்னும் அதிகமா வோர்க் பண்ணனும் டீம் டீம் ஆ பிரிச்சு இந்த வேலையை செய்ய போறோம்
இதுல டீம் லீட் ஹெட் என்ன பண்ணனும் எல்லாம் இருக்கு பாத்துக்கோங்க நேக்ஸ்ட் வீக் ல வொர்க் ஸ்டார்ட் பண்ணலாம் "
என்று தன்னுடைய பொறுப்பிற்க்கான வேலையை கூறி அடுத்த வேலையை பார்க்க சென்றார் அந்த நிறுவனத்தின் ஹெச்ஆர்...
அப்போது தான் வந்தது வில்லங்கம் சரியாக மனோகரின் டீம்ல் வந்தாள் பாரதி.
ஆனால் அதை பாரதி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. வன்முகத்துடன் சுற்றி வந்த மனோகர் தன் நேரம் வர காத்திருந்தான்...
அடுத்த வாரம்
எல்லோருக்கும் ஆன வேலை ஒதுக்கப்பட்டது. அவரவர் அவரவர் வேலையை மும்மரமாக செய்தனர். இவ்வாறாக பத்து நாள் சென்ற பின் பாரதி அன்று தன் தாயை ஹாஸ்பிடல் கூட்டி போக பர்மிஷன் கேட்டு 2 மணி நேரம் சென்றுவிட்டாள். அதன் பிறகு வந்து அவளது வேலையை பார்த்து முடிக்க இரவு எட்டு மணி ஆகிவிட்டது. ஒவ்வொரு ஆக செல்ல வேலையில் முழுகி இருந்த பாரதி மணியை கவனிக்கவில்லை. எல்லோரும் சென்ற பின் நேரமாவதை உணர்ந்து மணியை பார்க்க அது ஒன்பதை காட்டியது " "அச்சச்சோ ரொம்ப டைம் ஆகிடுச்சு சரி மீதியை நாளைக்கு பாப்போம் " என எண்ணி வெளியே செல்ல கிளம்பினாள்..
அவள் கதவின் அருகே செல்ல மனோகர் வந்துவிட்டான். அவனின் கோர சிரிப்பு பாரதி மனதில் பயத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அதை வெளியே காட்டாமல் " என்ன வேணும் உனக்கு ஏன் இப்படி வழிய மறிச்சுட்டு நிக்கற " கேட்டவளை பார்த்து " நீ தான் வேணும் ஏன் டி எவ்வளவு திமிர் இருந்த ஒரு ஆம்பள உன்கிட்ட அன்னைக்கு கெஞ்சுனா அப்படியே ஒவரா சீன் போடுற "
" ஏய் யார பாத்து டி போடுற பல்ல உடைச்சுடுவன் மரியாதை யா வழிய விடு இல்ல "
" இல்லனா என்னடி பண்ணுவ ஒன்னால என்ன டி பண்ண முடியும் "
" ஏய் இப்பயே போலிஸ் கூப்பிட்டு உன்ன‌என்ன பண்றன் பாரு "
என்று தனது மொபைல் எடுத்த போது அவன் தட்டி விட்டான்.
" என்ன டி பெரிய பத்தினி யாட்டம் சீன் போடுற உன் கத லா தெரியாதுன்னு நினைச்சியா நீயலா ___________________________ "
அவளை பற்றி ரொம்ப கேவலமாக பேசினான்.
பொறுத்து பார்த்த பாரதி பட்டென்று அவனை அறை முயல ஆனால் அவன் சுதாரித்து " என்னடி ஆனா வோனா கைய ஓங்குற நீ மட்டும் தான் ஓங்குவியா நான் ஓங்குறன் பாரு "
என அவளது சேலையின் முந்தானையை பிடித்து இழுத்தான்.
அவனின் இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் தப்பி செல்ல ஓடும் போது
" நீ இன்னைக்கு தப்பிக்கவே முடியாது டி "
என கூறி துறத்தினான் ..
மறுபடியும் அவனிடம் அகப்பட்டு கொண்ட பாரதி நிலைமை கை மீறி போவதை உணர்ந்து தன்னை காத்து கொள்ள அருகில் இருந்த ஒரு பூச்சாடியை கொண்டு அவனின் தலையில் ஓங்கி அடித்தாள்..
ஆஆஆஆ என அந்த இடத்திலேயே சுரேண்டு விழுந்தான் மனோகர்...
ஒரு நிமிடம் அவனை பார்த்த பாரதி பயத்தில் அவனின் மூக்கில் கை வைத்து பார்த்தால் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை உணர்ந்து வேகமாக தனது பை மொபைல் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வெளியே சென்றாள்.
யாரும் பார்க்காததை உறுதி செய்து கொண்டு அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..
ஆனால் இரு கண்கள் அவளை கவனித்ததை அவள் அறிய வாய்ப்பு இல்லை....
தன் வீட்டை நோக்கி ஓடியவள் வீடு வந்து சேர்ந்தும் தான் மூச்சே விட்டாள்..
மகளுக்காக காத்திருந்த அவளது அம்மா
" என்னடி இவ்வளவு லேட் "
என்று கேட்டு கொண்டே அவளது முகத்தை பார்த்த போது
" ஏன் டி முகமெல்லாம் இப்படி இருக்கு சேலை வேற கிழிஞ்சுருக்கு என்னடி ஆச்சு "
அவ்வளவு தான் தாயை கண்ட சேய் கட்டி அணைத்து
" அம்மா இன்னைக்கு "
என ஆஃபிஸில் நடந்தவற்றை அப்படியே கூறினாள்..
" அஅஅஅ..அப்பபோ அவ.... செத்துட்டானா "
" தெரியல மா நான் அவன அடிச்சுட்டு மூக்குல கை வச்சு பாத்தன் மூச்சு இல்ல பயந்து வந்துட்டேன் "
அடுத்து என்ன பேசி கொண்டு இருக்கும் போதே சட்டென கதவை திறந்து உள்ளே வந்தனர் இருவர்......

தொடரும்........
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo.... யாரு அந்த ரெண்டு பேரு.... யாரு paathukite இருந்ததது ava office ah vittu வெளிய வரத்தை..... அவன் thappu panninaa iva அடிச்சா avalodaya தற்காப்பு kaaga அதுல என்ன thappu..... Romba payanthutaa... Enna aaga pooguthoo.... வெற்றி abi ah care panni paathukanum... Super Super maa
 
Top