All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ நல்ல ஆரம்பம், சுயநலமான அண்ணி, அண்ணனுடன் பாரதியின் போராட்டம் படிக்க ஆவலாக உள்ளோம் :smile1::smile1::smile1:
சில சுயநல உள்ளங்களும் உலகில் இருக்க தான செய்கிறது..
நன்றி சகி
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2 இனி எல்லாமே நீ தானே


கீதா வின் எண்ணம் முழுவதும் தன் கணவன் தான் இந்த வீட்டிற்கு எல்லாம் செய்கிறார் அதனால் நாம் தான் எல்லாரையும் அதிகாரம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் அவளின் மனதில் நின்றது....

அதன்படி வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் யாரையும் மதிக்காமல் நடந்து கொண்டாள். இது மட்டுமல்லாமல் பாரதியையும் மட்டமாகவே நடத்தினாள்...

இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டியவன் எதும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்..

பொறுத்து போனது போதும் என பாரதி ஒரு நாள் அவளின் அண்ணனிடம்
" அண்ணா அண்ணி பண்ணுறது எதும் சரியில்ல வீட்டுல எந்த வேலையும் செய்றது இல்ல அம்மா வையும் மரியாதை குறைவா நடத்துறாங்க "

" இப்ப என்ன இங்க நான் மரியாதை குறைவா நடத்துனு நீ பாத்த " என்றாள் கீதா

" ஏய் பாரதி என்ன டி இது கம்முனு இரு ருத்ரா நீ உள்ள போபா " என்று பாரதியை அதட்டினார் தனம்

" சும்மா உங்க பொண்ண விட்டு இல்லாத பொல்லாத லா சொல்ல சொல்லி இப்ப நடிக்கிறிங்களா "

" பாத்தியா ணா உன் முன்னாடி யே எப்படி பேசுறாங்கனு "

" ஏய் என்ன ரொம்ப பேசுற "
" என்னங்க நான் உங்கள கல்யாணம் பண்ணது இவங்களுக்கு பிடிக்கல அதுக்கே தான் தேவல்லாம என்ன பத்தி இல்லாதலா சொல்லி நம்பல பிரிக்க பாக்குறாங்க "
என்றாள் அழுது கொண்டே

" கொஞ்ச நேரம் சும்மா இருக்கிங்கள எல்லாரும் ச்ச இந்த வீட்டுல நிம்மதியே இல்ல " என்றவன் கோபத்துடன் எழுந்து சென்று விட்டான் ருத்ரன்...

" இப்ப உங்களுக்கு சந்தோஷமா உங்களாள தான் இப்ப அவரு சாப்பிடமா போய்டாரு " என்ற கீதா அவனுடனே சென்று கதவை சாத்தி கொண்டாள்....

அதன் பிறகு இது போல பல சம்பவங்கள் நடந்தது ருத்ரன் கொஞ்சம் கொஞ்சமாக மனைவி பக்கம் பேச ஆரம்பித்து கடைசியில் கீதா சொல்வதே அந்த வீட்டின் சட்டம் என்று ஆனது....

" மா " என்று கிளம்பி வந்தவளை பார்த்த தனது பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தார் தனம்..

நீல நிற காட்டன் புடவையில் தளர்வாக பின்னிய தலையுடன் காதில் சிறிய ஜிமிக்கி கையில் ஒரு வளையல்யுடன் மறு கையில் வாட்ச் நெற்றியில் சிறிய வட்ட பொட்டுடன் வந்து நின்ற மகளை பார்த்தார் தன் அமைதியினால் தான் மகளின் வாழ்கை கேள்வி குறி ஆகியதோ என்ற எண்ணம் இருந்தது....

பாரதி பேரழகு இல்லை இருப்பினும் அவளிடம் உள்ள ஏதோ ஒன்று அனைவரையும் அவளிடம் இழுக்கும் அது அவளது அமைதியா அன்புடன் பேசும் பேச்சா அல்லது அவளது சிரிப்பா என்பது யாருக்கும் தெரியாது.....

பாரதி தன்னை சுற்றி உள்ளவர்களிடம் எப்போதும் அன்பாகவே பழகுவாள் ஆனால் அந்த அன்பிலும் ஒரு அளவு இருக்கும்....
பாரதி கிளம்பி தான் வேலை செய்யும் MSK நிறுவனத்திற்கு சென்றாள்....

பரப்பரப்பாக இருக்கும் பெங்களூர் மாநகரத்தில் " அபி இல்லம் " என்ற ஃபோர்ட் தாங்கிய வீடு அது..
பார்ப்பவர் கண் கவரும் இந்த காலத்துக்கேற்ப உள்ள வீடு...
அமைதியாக உள்ள வீட்டின் உள்ளே

" அபி " என்று கூப்பிட்டவாறு தன் அறையில் இருந்து வந்தான் வெற்றி என அழைக்கப்படும் வெற்றிஸ்வரன் ஆறடி உயரத்துடன் அழகான உருவத்துடன் அளவான தாடி மீசையுடன் கண்களில் கூர் பார்வையுடனும் 29 வயது ஆன ஆண் மகன் கோட் சூட் அணிந்து வெளியே வந்தான் நமது நாயகன்..

" எஸ் dad " என்றான் ஐந்து வயது சிறுவன் அபி என்கிற அபி சரண்....
இந்த வயத்திற்கு ஏற்ப எந்த குறும்பும் இல்லாமல் அமைதியாக இருந்தான் அபிசரண்....

" ஹாய் dad good morning "
" good morning அபி "

சாப்பிட்டு முடித்து விட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்....

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3 இனி எல்லாமே நீ தானே
ABI TEXTILE INDUSTRY MUMBAI
என்ற பெயர் பலகையுடன் தாங்கி நிற்கும் ஆபிஸ் உள்ளே கிட்டத்தட்ட 20000 மேலான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்....
இது பெங்களுரில் இருக்கும் டாப் 5 இண்டஸ்ட்ரி இருக்கும் தொழிற்சாலை களில் ஒன்று. இங்கு இருந்து ஏற்றுமதி ஆகும் துணி உள்ளுரில் இருந்து பல வெளிநாட்களுக்கும் விற்பனை ஆகிறது.
அதுமட்டுமின்றி "ABI TEXTILE SHOP"
மக்களிடையே மிகவும் பிரபலமான துணி கடை ... ராசியான கடை என்கிற பெயரும் பெற்று இருப்பதால் கூட்டத்திற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது..
இது எல்லாம் வெற்றியின் ஐந்து வருட கடுமையான உழைப்பு சாதராண 2000 நபர்களை கொண்டு உருவாக்கியது தான் அபி இண்டஸ்ட்ரி இன்று பல ஆயிரம் மக்களுக்கு வாழ்வு அளித்து கொண்டு இருக்கிறது..
"அபி அன்பு இல்லம்" என்கிற ஆதரவற்றோர் இல்லம் ஒன்றையும் நடத்துகிறான். அதை ருக்மணி அம்மா என்கிற ஐம்பதை தாண்டிய ஒருவர் நடத்துகிறார்..
வெற்றி ஒருவர் பேச்சை கேட்கிறான் எனில் அது ருக்மணி அம்மா பேச்சை மட்டும் தான்.
தன்னிடம் வேலை செய்பவர்களிடம் எப்போதும் உறுதுணையாக இருப்பவன் தன்னை எதிர்த்து நிற்பவர்களையும் சாதுர்யமாக பேசி நினைத்ததை முடித்து கொள்ளும் வித்தைகளை அறிந்தவன்..
இன்று சிடுமூஞ்சி என அழைக்கப்படும் வெற்றிஸ்வரன் ஒரு காலத்தில் கண்களால் காதல் பேசி எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வந்தவன் தான் ஏனோ இப்போது சிரிக்கவே மறந்து ஏதோவொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்குகிறான்..
அபி க்கு வெற்றி வெற்றி க்கு அபி என்கிற ஒரு கொள்கையுடன் வாழ்பவர்களுக்கு இடையே பாரதி எனும் சந்தோஷ பூக்கள் எப்போது வர போகிறது...
இங்கு சென்னையில் பாரதி வழக்கம் போல தன்னுடைய ஆபிஸ் க்கு வேலைக்கு சென்றாள். அது ஒரு கன்ஸ்டிரக்ஸன் ஆபிஸ் அங்கு தான் பாரதி வேலை செய்கிறாள்.
அந்த ஆபிஸ் ல் வேலை பார்க்கும் அனைவரிடமும் பாரதி பழகுவாள் ஆனால் அந்த பழக்கத்திலும் ஒரு அளவு இருக்கும்.
யாரிடமும் அதிகம் ஒட்டவும் மாட்டாள் அதே நேரம் வெறுத்து ஒதுக்கவும் மாட்டாள்.
பாரதியின் நிலை தெரிந்த சிலர் அவளிடம்
கேலியும் பொய் பரிதாபமும் காண்பித்தனர்..
அவர்களை எல்லாம் பாரதி ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை..
அவளுடன் வேலை செய்யும் லதா " குட் மார்னிங் டி என்ன டி இன்னைக்கு கொஞ்சம் லேட் போல "
" ஆமாம் டி மார்னிங் டிராபிக் அதான் "
என்றவள் கையெழுத்து இட்டு தனது வேலையை தொடங்கினாள்.
அவளுடன் வேலை செய்யும் மனோகர் என்பவன் எல்லா பெண்களிடமும் சற்று அத்துமீறி தான் பழகுவான். அவன் தான் அந்த கம்பெனி மேனஜர் அவனின் கிழ் தான் பல பெண்கள் வேலை செய்கின்றனர். இவனின் அத்துமீறல் தெரிந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் வேலை பார்க்கின்றனர் அவர்களுள் பாரதியும் ஒருவள்..
இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனது சில்மிஷத்தை தொடர்ந்தான். இந்த நிறுவனத்தின் முதலாளி வயதான ஒருவர் மிகவும் நல்லவர் தன்னிடம் வேலை செய்பவர்களை கணிவுடன் நடத்தி அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்கின்றார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து நிறுவனத்திற்கு வர முடியவில்லை அதனால் பொறுப்பு மனோகர் கைக்கு சென்றது..
ஒரு முறை எல்லா பெண்களும் தனக்கு கீழே தான் என்கிற நினைப்புடன் பாரதியை நெருங்கினான்.. ஆனால் பாரதி யார் அவள் பாரதி கண்ட புதுமை பெண் விட்ட அறையில் சுருண்டு விழுந்தான்.
இதை உடனடியாக முதலாளியிடம் கூறபோன அவளிடம் கை கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான் ..
அவளும் கடைசி முறை என கூறி மன்னித்து விட்டாள்..
மனதில் வன்மத்தை கொண்ட அவன் நேரம் பார்த்து காத்து கொண்டு இருந்தான்.
ஆனால் அப்போது பாரதிக்கு தெரியவில்லை அவனால் தான் தன் வாழ்க்கை திசை மாறும் என்பது...
பெங்களூரில்
அபி " டாட் நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் நீ வரனும் "
வெற்றி " நாளைக்கா நாளைக்கு டைம் இல்ல அபி நெக்ஸ்ட் டைம் பாக்காலாம் "
அபி " டாட் லாஸ்ட் டைமும் வரல சோ இப்ப கண்டிப்பா வரனும் "
வெற்றி " அபி பிளிஸ் புரிஞ்சுக்கோ டாட் க்கு வோர்க் இருக்கு ஸ்குல் ல நான் பேசிக்குறன் "
அபியின் மனதில் தன் தந்தை யை தன் நண்பர்களுக்கு அறிமுகம் படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றி யால் வர முடியாது சூழ்நிலை அடம் பிடிக்க தெரியாத அபியும் அமைதியாக சரி என்று விட்டு விட்டான்...
மறு நாள் காலை வழக்கம் போல பள்ளி செல்ல அபி தயார் ஆகி வந்தான்.
" அபி கிளம்பலாமா " என்ற வெற்றியிடம்
" எங்க டாடி ஸ்குல் கா ".
" ஆமாம் டா வா போகலாம் "
" என்ன டாடி திடிரென நேத்து வேல இருக்குனு சொன்னிங்க "
" இட்ஸ் ஓகே டா பாத்துகுறன் வா போலாம் "
நேற்று இரவு அபி சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்க சென்ற பின் வெற்றி க்கு ருக்மணி அம்மா ஃபோன் செய்தார்.
" ஹாலோ அம்மா சொல்லுங்க எப்படி இருக்கிங்க ஹோம் ல எல்லாரும் எப்படி இருக்காங்க "
" நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் டா நீ எப்படி இருக்க என் செல்ல பேரன் எப்படி இருக்கான் "
" அவனுக்கு என்ன நல்லாதா இருக்கான் நானும்.... இருக்கேன் மா "
" இன்னும் பழசையே நினைச்சா எப்படி டா உனக்குனு ஒரு வாழ்கை வேனாமா "
" இன்னோரு வாழ்க்கையா அப்படி ஒன்னு என் வாழ்க்கையில இல்ல மா "
" உனக்காக இல்லனாலும் அபிக்காக "
" அம்மா பிளிஸ் நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன் இது மட்டும் சொல்லாதிங்க மா "
அவனின் நிலை தெரிந்தும் இப்படி கேட்கிறோமே என நினைத்து " சரி டா விடு அபி குட்டி என்ன பண்ணுறான்"
" இப்ப தான் மா தூங்க போனான் நாளைக்கு ஸ்குல் ல பேரண்ட்ஸ் மீட்டிங் னு சொன்னான் நான் தான் வரல இன்னொரு நாள் பாத்துகலாம் னு சொன்னான் "
" டேய் ஏன்டா இப்படி பண்ணுற நாளைக்கு அவன் கூட போனா என்ன இப்ப உள்ள பிள்ளைங்க லா எல்லாத்துக்கும் அடம்பிடிச்சு தான் நினைச்சத சாதிச்சூகுறாங்க அவன் எப்படி இருக்கானு பாரு டா "
" இல்ல மா நாளைக்கு முக்கியமான மீட்டிங் அதான் "
" போதும் நாளைக்கு அவன் கூட போற தாயில்லாத புள்ள டா போய்ட்டு வா "
அதன்படி வெற்றி அபி யடன் கிளம்பி அவனது பள்ளிக்கு சென்றான்..
தொடரும்...
 
Top