All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
10 இனி எல்லாமே நீ தானே
அபியின் பிறந்தநாளுக்காக அந்த வீட்டின் முன்புறம் முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குழந்தைகளுக்கென பல வேடிக்கை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது...
முதன்முதலில் அந்த வீட்டிற்கு வருகை புரிகிறாள் பாரதி அவளுடன் ருக்மணி அம்மா மட்டும் வந்தார் தனம் உடல்நிலை காரணம் காட்டி தவிர்த்து விட்டார்...
வெற்றி " மா வாங்க மா "
என்று காலில் விழுந்து ஆசிரிவாதம் வாங்கினான்..
அவனின் மனநிலை புரிந்த ருக்மணி அம்மா " எல்லாம் சரி ஆகிடும் டா நம்பு "
என்று அவனின் மனதை சற்று மாற்ற முயற்சி செய்திருந்தாள்...
அபி மிகுந்த சந்தோஷத்துடன் வந்தவர்களை வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்..
இந்த வருட பிறந்தநாளிள் அவனுக்கு முதன்மையாக இருந்தது பாரதி....
பாரதி பாரதி என்று எல்லாவற்றிக்கும் அவளையே அழைத்தான் முதலில் தயங்கிய பாரதி பின்பு அவனுடன் சேர்ந்து அவளும் மகிழ்ந்தாள்...
கேக் வெட்டும் போதுகூட அபி பாரதியை அழைத்து முன்றித்தினான்..
வெற்றி இருந்த மனநிலையில் இதை எல்லாம் கவனிக்கவில்லை..
ஆனால் சுற்றி இருந்தவர்கள் பாரதியை வித்தியாசமாக பார்க்க தொடங்கினர்.
கருத்தில் கொண்ட போதும் பாரதி அபிக்காக சற்று பொறுத்தாள்.
இரவு இல்லம் திரும்பியவுடன் அங்கு நடந்தவைகளை தனத்திடம் கூறினாள் பாரதி.
தனம் " அபி ரொம்ப சந்தோஷபட்டானா டி "
பாரதி " சார் ஃபூல் ஜாலி மூட் தான் மா "
" ஆனா வெற்றி சார் தான் ஏதோ மூட் அவுட்டாவே இருந்தாங்க "
தனம் " ஏன்டி ஏதாவது பிரப்பளம் ஆ "
பாரதி " தெரியல மா நான் எதும் கேட்டுகல "
தனம் " ரொம்ப நாளுக்கு அப்புறம் உன் முகத்துல சிரிப்பு தெரியுது டி "
பாரதி " ஆமாம் மா ஏன்னு தெரியல அபி என் வாழ்க்கையில வந்தடனே ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுறேன் "
தனம் " எப்பவும் இதுமாதிரியே இருக்கனும் டி "
ம்ம் என்று முடித்து கொண்டு நாளை விடியலை நோக்கி சென்றாள்...
அதன்பின்பு வழக்கும்போல தனது வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்.
மைதிலிக்கு பாரதி அபி இருவரும் நெருங்கி பழகுவது பொறாமையை தந்தது எங்கே வெற்றி குழந்தையை சாக்கிட்டு பாரதியுடன் இணைந்து விடுவானோ என்கிற பயத்தையும் தந்தது..
அந்த ஆபிஸில் இன்று ஒரு மீடிங்க் இருந்தது அதில் வெற்றி தான் முடிக்க வேண்டும் ஆனால் அவனின் நேரம் அபிக்கு காய்ச்சல் தன்னுடனே அவனையும் ஆஃபிஸ் அழைத்து வந்து தனது அறையில் தங்க வைத்துவிட்டு மீட்டிங் சென்றான்..
மைதிலி பாரதி இவர்களுடன் மேலும் ஐந்து பேர் கொண்ட குழு வெற்றியுடன் செல்ல நேர்ந்தது ஆதலால் பாரதிக்கும் அபிக்கு நேர்ந்தது தெரியவில்லை..
அங்கு பிரசண்டேஷன் செய்யும் இடம் இம்முறை பாரதியை பழி வாங்க மைதிலி திட்டம் தீட்டினாள் அதன்படி பிரசன்டேஷன் செய்ய வேண்டிய பெண் பாத்ரூம் செல்லும் போது அங்கு யாருக்கும் தெரியாமல் அவளை அடைத்து வைத்துவிட்டாள்.
அவளது திட்டப்படி பாரதியை இதில் கோர்த்துவிட்டு அவள் ஆங்கிலம் தெரியாமல் அசிங்கப்பட்டு நிற்கும் போது தான் இதை செய்து வெற்றியின் மனதில் இடம்பிடிக்க திட்டம் தீட்டினாள்..
வெற்றி " வாட் அந்த பொண்ண கானுமா என்ன நினைச்சுட்டு இருக்கிங்க எல்லாம் இது கிளையண்ட் க்கு ரொம்ப முக்கியமான பிரசன்டேஷன் சொன்னல இப்ப வந்து இப்படி சொல்லுறிங்க இப்ப யாரு இத பண்ணுறது "
ஒருவரும் என்ன செய்வது என குழம்பி நிற்கும் போது மைதிலி அதில் பாரதியை கோர்க்க எண்ணி அவள் பெயரை சொல்லும் முன்னரே
பாரதி " சார் நான் பண்ணுறேன் சார் "
வெற்றி " நீங்களா ஆனா இதபத்தி "
பாரதி " சார் இத நானும் ரூபாவும் தான் ரெடி பண்ணோம் ஓரளவு பண்ணுவேன் சார் "
மைதிலி " ஓரளவுலா இல்ல நல்லா பண்ணணும் "
வெற்றி " மைதிலி ஸ்டாப் "
என அவளிடம் கையினை காட்டிவிட்டு பாரதி புறம் திரும்பி
" நான் உங்கள நம்புறேன் பாரதி பெஸ்ட் ஆஃப் லக் நல்ல பண்ணுங்க "
இருவரும் சிரிப்புடன் பிரசன்டேஷன் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.....
தொடரும்...
 
Top