All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15 இனி எல்லாமே நீ தானே


வாழ்க்கையே வெறுத்த வெற்றி அடுத்து என்ன செய்வது என புரியவில்லை. கணவர் இறந்த சோகத்தில் இருந்த சுகந்தி அபியை சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை.

மறக்க ஆரம்பித்தான் அபிக்காக வாழ ஆரம்பித்தான்... பல கேலி பரிதாபம் அவனின் மனதை குதறினர்..

எதுமே வேண்டும் என பெங்களூர் வந்து அதை தொழிலை கையில் எடுத்து தொடங்கினான். மறக்க வேண்டும் என நினைத்த போதும் சரண்யா வின் நியாபகம் திடிரென்று வந்து அவனின் மனதில் அமர்ந்து கொள்ளும்..

அபியும் வளர ஆரம்பித்து ஒன்றரை வயதில் அவனை அழைத்து கொண்டு பீச் க்கு சென்றான். கடலின் அழகை பார்த்த பின்பு அவனுக்கு சரண்யா நினைவு வர மீண்டும் குழந்தை கவனத்தில் கொள்ளவில்லை...

குழந்தை அழுது கொண்டே அவனை விட்டு நடக்க தொடங்கியது அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி குழந்தை அணைத்து கொண்டு சுற்றி முற்றி பார்க்கும் போது குழந்தை வெற்றியை கைகாட்டி அழதான்....

அவனிடம் சென்றவர் வெற்றியின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார். அவரின் அறையில் வலியை உணர்ந்தவன் தான் இருந்த நிலைமை உணர்ந்து அபியை வாங்கி கொண்டான்.. அந்த பெண்மணி தான் ருக்மணி அம்மா..

" குழந்தை கூட்டிட்டு வந்துட்டு இங்கென பிறாக்கு பாத்துட்டு இருக்க அறிவில்ல அவன் பாட்டுக்கும் ரோட்டுல அழுதுட்டே போறான் " என்று வசைபாடும் போது ஒன்றும் பேசாமல் அமைதியாகவே நின்று இருந்தான் வெற்றி...

என்ன தோன்றியதோ சரி வா என அவனை அழைத்து கொண்டு அபியை தூக்கி கொண்டு அவரின் இல்லத்திற்கு சென்றார்....

அதன்பின்பு ருக்மணி அம்மா கொடுத்த தைரியத்தில் ஆதரவாலும் பழையதை மறந்து புதிய உலகத்திற்கு வந்தான்.....

நடந்த அனைத்தையும் பாரதியிடம் கூறிய வெற்றி...

வெற்றி " இதலாம் ஏன் உன்கிட்ட சொல்லுறேனு பாக்குறியா "

அவள் புரியாமல் அவனேயே பார்க்க
" அபிக்கு அம்மா வேணும் அவன் புலம்புனத கேட்டியா நீ அம்மா அம்மா புலம்புறான் அவனுக்கு நீ அம்மா வா வேணும் சம்மதிப்பியா "

அவன் கேட்டதன் அர்த்தம் சற்று நேரத்திற்கு பின்பே விளங்க வேறு எதும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.....

அவன் பேசிய அனைத்தையும் நினைத்து கொண்டு தன் அறையில் அமர்ந்திருந்த பாரதியை பார்க்க வேகமாக வந்தார் தனம்....


" அம்மா " என்ற கூவலுடன் அவரின் மடியில் விழுந்து கதறி அழுதாள் பாரதி..

தனம் " என்னடி ஆச்சு ஏன் டி இப்படி அழுகுற அபி க்கு ஒன்னும் இல்லையே "
என்று கேட்க பதறிய பாரதி

" மா அதலாம் இல்ல அபி நல்லா இருக்கான் அவனுக்கு ஒன்னும் இல்ல வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க "

தனம் " அப்புறம் என்ன டி ஏன் அழுகுற "

நடந்தவைகளை ஒன்று விடாமல் தன் தாயிடம் கூறினாள் பாரதி...

தனம் " அவ்வளவு தான அதுக்கு ஏன் இப்படி ஆர்பாட்டம் பண்ணுற "

பாரதி " என்னமா பேசுற என் நிலைமை என்னனு உனக்கு தெரியாதா அதோட என்ன "
என ஆரம்பிக்கும் போதே

தனம் " என்னடி உனக்கு நடந்துச்சு உனக்கு நடந்தது ஒரு விபத்து அதையே நினைச்சுட்டு இருக்குற வாழ்கைய அழிச்சுக்காத "

சிறிது இடைவெளி விட்டவர்
" எனக்கு வெற்றிய பார்த்ததும் இப்படி ஒரு ஆச வந்துச்சுதான் ஆனா அவங்க பணக்காரங்க என்ற ஒரே காரணத்துக்காக அமைதியா இருந்தேன் இப்ப அவங்களே வந்து கேட்கும் போது நான் சரின்னு தான் சொல்லுவன் "

பாரதி " முடியாது மா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் "

தனம் " உன்னோட சம்மதத்த நான் கேட்கவே இல்லை "

எப்போதும் தன் விருப்பத்தை மட்டுமே கேட்கும் தனது தாய் இன்று வித்தியாசமாக பேசியது அவளுள் ஆச்சிரியத்தை உண்டாக்கியது...

வெளியே வந்த தனம் ருக்மணியிடம் தனது கட்டை விரலை உயர்த்தி காட்டி முடிந்தது என சிரிப்புடன் சொல்லி கொண்டார்......

வெற்றி பாரதியை இல்லத்தில் இறக்கி விட்டுவிட்டு வீடு திரும்பியவன் முதலில் அழைத்தது ருக்மணி அம்மாவிற்கு தான் தான் பாரதியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி சம்மதம் கேட்டான்....

ருக்மணி " ரொம்ப சந்தோஷம் டா உன் வாழ்க்யில நல்லது நடக்காதானு ஏங்கிட்டு இருந்தன் இப்ப தான் சந்தோஷமா இருக்கு அது சரி இதபத்தி எப்போ பாரதிகிட்ட பேச போற "

வெற்றி " அவகிட்ட பேசிட்டேன் மா "

ருக்மணி " அடப்பாவி எல்லாம் முடிச்சுட்டு தான் என்கிட்ட சம்மதமானு கேட்குறியா "

வெற்றி " இல்லமா அவள நான் கட்டாயப்படுத்தல அவகிட்ட என்னோட விருப்பத்த மட்டும் தான் சொல்லிருக்கேன் "

ருக்மணி " சரிடா விடு நான் பாத்துகுறேன் "

வெற்றி " மா அவள நீங்களும் தனம் அம்மாவும் எந்த விதத்திலும் வற்புறுத்த கூடாது அவள அவ விருப்படி விடுங்க "

ருக்மணி " சரிடா கண்ணா உங்க வருங்கால பொண்டாட்டிய நாங்க ஒன்னும் சொல்லல போதுமா "

இதைப்பற்றிய தனத்திடம் பேசியபோது முதலில் தயங்கிய தனம் பின்பு தனது மகளின் எதிர்கால வாழ்க்கை நல்லமுறையில் இருக்கும் என்ற நம்பிக்கையில் ருக்மணி சொல்படி கேட்டார்....


பாரதியிடம் பணிந்து பேசினால் அவள் சரிபட்டு வரமாட்டாள் என்று அதிரடி தாக்குதலை நடத்தினார் தனம் அதன்படியே பாரதியும் அவரை எதிர்த்து பேசாமல் அடங்கிவிட்டாள்.....

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16 இனி எல்லாமே நீ தானே

பாரதியை யாரும் கண்டு கொள்ளவே இல்லை அவளிடம் பேசினால் நிச்சயமாக இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தான் தெரிவிப்பால் என எண்ணி தனம் அவளிடம் பேசவில்லை....

ஃபோன் அழைப்பில் தன்நிலை உணர்ந்தவள் யார் என்று பார்த்தால் அது வெற்றி யின் அழைப்பு.....
எடுக்கலாமா வேண்டாமா என குழம்பி இறுதியாய் எடுத்தாள்...

வெற்றி " ஹலோ ஹலோ பாரதி "

பாரதி " ஆங் சொல்லுங்க சார் "

வெற்றி " ஏய் இன்னைக்கு ஆபிஸ் வரல எனிதிங் பிராப்ளம் "

பாரதி " ஒன்னும் கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் "

வெற்றி " ஏய் என்னச்சு உடம்புக்கு என்ன ஹாஸ்பிடல் போனியா "
அவனின் அக்கறை கலந்த பேச்சில் தன்நிலை மறந்தாள்...

பாரதி " இல்ல இல்ல பெரிசாலா ஒன்னும் இல்ல கொஞ்சம் டையர்ட் ஆ இருக்கு வேற ஒன்னும் இல்ல "

வெற்றி " ஒஒஒ அப்ப சரிடா நீ ஆபிஸ் வந்துடுறியா இங்க கொஞ்சம் வொர்க் இருக்கு "

பாரதி தனது வேலையில் கவனம் செலுத்தி ஆபிஸ் சென்றாள்....
மீட்டிங்க்காக அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து இருக்க சற்று தாமதமாக உள்ளே வந்தாள் பாரதி...

பாரதி " சாரி சார் கொஞ்சம் டைம் ஆகிடுச்சு "

வெற்றி " இட்ஸ் ஒகே டா "

அதன்பிறகு வேலை பற்றிய சில ஆர்டர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட எல்லாரும் அமைதியாக வெற்றி சொல்லுவதையே கேட்டு கொண்டு இருந்தனர்....

வெற்றி " ஓகே கேய்ஷ் இது தான் நாம பண்ண போற ஆர்டர் பத்தின டீடெய்ல் உங்களுக்கு ஏதாவது சந்தேகமனா என்கிட்ட இல்ல மைதிலி கிட்ட கேட்டுக்கோங்க பாய் "

என்று வந்த தன் கடமையை அழகாக நிறைவேற்றி வெளியே சென்றான்...

எல்லோரும் வெளியே செல்ல அங்கு தனித்து நிற்கும் பாரதியை நோக்கி வந்தாள் மைதிலி...

மைதிலி " என்ன பாரதி மேடம் நினைச்சத முடிச்சுடிங்க போல "

பாரதி " புரியல மைதிலி நீங்க என்ன சொல்லிற்ங்க "

மைதிலி " சும்மா நடிக்காத ஆள் நல்லா புடவையை சுத்திட்டு ஒன்னுமே தெரியாத பூனை மாதிரி இருந்துட்டு ஆபிஸ் ஓனர் வெற்றி சாரையே வளைச்சு போட்டுடிங்க போல "

பாரதி " மைதிலி மைண்ட் மூவர் வோட்ஸ் . ரொம்ப அதிகமா பேசுறிங்க "

மைதிலி " ஓஓஓ நான் அதிகமா பேசுறனா நேத்து நைட்டு ஃபூலா எங்க மேடம் இருந்திங்க "

பாரதி " அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் உங்க வேலைய மட்டும் பாருங்க ".

மைதிலி " ஏன் சும்மா மழுப்புறிங்க நேத்து நைட்டு ஃபூலா வெற்றி சார் கூட தான இருந்திங்க "

பாரதி " சீ அசிங்கமா பேசாத அபிக்கு உடம்பு சரியில்லை அதனால ஹாஸ்பிடல இருந்தேன் "
" உன்கிட்ட லா பேசி புரிய வைக்கனு எந்த அவசியமும் இல்ல "
என்று அவளை தவிர்த்துவிட்டு தன் இருப்பிடம் சென்று அமர்ந்தாள்...

அவளால் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை மைதிலி மற்றும் அவள் தோழியால் ஆபிஸ் உள்ளவர்கள் அனைவருக்கும் அவளை பற்றி தப்பு தப்பாக சொல்லி வைத்திருந்தனர்....

சுற்றி உள்ளவர்கள் அனைவரும் கூடி கூடி அவளை பற்றியே பேசினர்....

பொறுக்கமாட்டாமல் நேராக வெற்றியின் அறைக்கே சென்றாள்..

பாரதி " சார் உங்கிட்ட பேசனும் "

வெற்றி " ம்ம் சொல்லுடா என்ன பேசனும் "

பாரதி " இந்த டா போட்டு செல்லமாளாம் கூப்பிட வேணாம் "

வெற்றி " ஏய் என்னச்சு என்றவன் "
நெருங்கி சென்று அவளின் கையினை பிடித்து கொண்டான்...‌

கையை உதறியவள்...

பாரதி " என்ன இப்படிலா பண்ணுறீங்க உங்கிட்ட வேல செய்சா நீங்க சொல்லுறதலா கேட்கனும் அவசியம் இல்லை "
நீண்ட பெருமூச்சு விட்டாள்.
" எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல தேவையில்லாம இதபத்தி இனிமே என்கிட்ட பேசாதிங்க நான் உங்க ஸ்டாப் நீங்க எனக்கு முதலாளி அத தவிர ஒன்னும் இல்ல "

என்றவள் அவன் முகம் காணாது ஓடி சென்று விட்டாள்.‌‌

சொல்ல முடியாத முகம் பாவனங்களுடன் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான் வெற்றி..

சற்று நேரம் கழித்து தனது கார் சாவினை எடுத்து கொண்டு வெளியே வந்தான்...

மைதிலி " சார் இந்த பையில் பாக்குறனு சொன்னீங்க "

வெற்றி " நான் நாளைக்கு பாக்குறேன் இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு "

மைதிலி " பட் சார் இத பாத்து சைன் போட்டு கொடுக்கனுமே "

வெற்றி " இந்த அசைன்மெண்ட் யாரு லீட் பண்ணுறா"

மைதிலி " மனோஜ் டீம் சார் "

வெற்றி " ஓகே அவங்கிட்ட கொடுத்து சரிபார்த்து என்கிட்ட சைன் வாங்கிக்க சொல்லுங்க "

ஏற்கனவே மனோஜ்க்கும் மைதிலிக்கும் ஆகாது இதை அவனிடம் கொடுக்க சொல்ல மைதிலி வெறுப்படைந்து மனோஜ்டம் சென்றாள்..

மைதிலி " இந்தா "
என ஒய்யாரமாக பைலை அவனின் டேபிலில் வைத்தாள்..

மனோஜ் " என்ன இது "

மைதிலி " சார் க்ரேட் பண்ணி சார்கிட்ட சைன் வாங்க சொன்னாங்க "

மனோஜ் " இது என் வேலை இல்ல "
என்றவன் பைலை தூக்கி திரும்ப அவள் பக்கமே தள்ளினாள்..

அவனிடம் இதற்கு மேல் பேசி பயனில்லை என்பதை உணர்ந்து இவனின் டீமில் இருந்த மற்றொரு ஆளிடம் சென்றாள் அவளும் முடியாதென கை விரிக்க இறுதியில் தலையெழுத்தேன பாரதியிடம் சென்றாள்...

அவள் அனைத்தும் கூற அமைதியாக கேட்டு கொண்ட பாரதி
" வைச்சுட்டு போங்க "
என்று தன் வேலையை பார்க்க தொடங்கினாள்...

மாலை நேரம் அனைவரும் வீடு பைலை வெற்றியிடம் சமர்பிக்க அவனின் அறைக்கு சென்றாள் அங்கு சென்று பார்த்த போது தான் தெரியும் அவன் இல்லை என்று .....

விசாரித்ததில் எப்போதோ சென்றுவிட்டான் என பைலை பார்க்க அது இன்று கையெழுத்து வாங்க வேண்டும் என வேறு வழி இல்லாமல் பலத்த சிந்தனைக்கு பிறகு வெற்றியின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தால்.....

தொடரும்....‌
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17 இனி எல்லாமே நீ தானே

நேராக வெற்றியின் வீட்டிற்கு சென்றவள் உள்ளே செல்ல சற்று தயங்கினாள் பின்பு ஒருவழியாக தைரியம் கொண்டவளாய் உள்ளே சென்றாள் அங்கு அவளை வரவேற்றது அபியின் கத்தல்கள் தான்....

அபி " முடியாது முடியாது நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் "

வெற்றி " அபி நீ ரொம்ப நல்ல குழந்தை தான புரிஞ்சுக்கோ வேணாம் டா "

அபி " ஏன் பா இப்படி பண்ணுறீங்க எனக்கு வேணும் பா "

வெற்றி " வேணாம் அபி நமக்கு அது கிடைக்காது தேவையில்லாம அடம்புடிக்காத எதவாது நமக்கு கிடைக்கலனா அது ஏத்துகுற மனசும் நமக்கு வேணும் டா "

அபி " அப்ப யாருக்குமே என்ன பிடிக்காதா "

வெற்றி " அப்படிலா இல்ல டா அப்பா நான் இருக்கேன் எப்பவும் இருக்கன் "
இவர்கள் பேசுவதை கேட்டவள் வெளியே செல்ல எத்தனிக்க

அபி " அப்பா நான் சொன்னா பாரதி கேட்குவாங்க பா எனக்கு அம்மா வா பாரதி வேணும் பா "

வெற்றி " அவங்களுக்கு இதுல விருப்பம் இல்ல டா புரிஞ்சுக்கோ அப்பா சொன்னா கேட்பல அமைதியா தூங்கு போ "
அழுகையுடனே படுத்து கொண்ட அபியை சமாதானம் செய்து தூங்க வைத்தான்..‌

இதை எல்லாம் கேட்டபின் பாரதியால் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை.... பைலை வைத்துவிட்டு தனது இடத்திற்கு சென்றுவிட்டாள்......

ஞாயிறு வழக்கம் போல பாரதி அபிக்காக காத்திருந்தாள் ஆனால் அவன் வரவில்லை..
இன்று அவனிடம் சொல்லி புரிய வைத்து அவனது வாழ்க்கையில் இருந்து மொத்தமாக விலகிட நினைத்தாள் பாரதி....

ருக்மணி " இங்கென பண்ணுற பாரதி "

பாரதி " இல்லமா அபி வர டைம் ஆகிடுச்சு இன்னும் வரல அதான் பாத்துட்டு இருக்கேன் "

ருக்மணி " அவன் எப்பயோ‌ வந்துடானே "

பாரதி " என்னமா சொல்லுறீங்க அவன் என்ன வந்து பாக்கவே இல்லையே "

ருக்மணி " இது என்ன அதிசயம் பாரதி னு கத்திட்டு உன்கிட்ட தான ஓடி வருவான் "

பாரதி " சரிமா நான் போய் பாக்குறேன் "
பாரதி அபியை தேடி செல்ல அவனை முதன்முதலில் பார்த்த அதே மரத்தின் அடியில் உள்ள பென்ஜில் அமர்ந்திருந்தான்...

அவனது முகமே சரியில்லை காரணம் தெரிந்தும் ஒன்றும் நடக்காது போல அவனிடம் பேச முற்பட்டாள் பாரதி..

பாரதி " என்ன சார் என்ன வந்து பார்க்காமலே இங்க வந்து உட்கார்ந்துகிட்டிங்க "
அபி அமைதி காக்க

பாரதி " நான் மாட்டும் பேசிட்டே இருக்கேன் நீ ஏன்டா இப்படி பண்ணுற சரி வா நாம போய் விளையாடலாம் "
அவனின் கையை பிடித்து இழுக்க அசையாமல் அதே மாதிரி அமர்ந்து இருந்தான்...

அபி " என்ன யாருக்குமே பிடிக்கல இல்ல பாரதி "

பாரதி " டேய் என்ன டா பேசுற என் செல்லத்த யாருக்கு பிடிக்காம போகும் "
அபி " இல்ல என்ன யாருக்குமே பிடிக்கல நான் ரொம்ப பேட் பாய் "

பாரதி " ஏய் அதலா இல்ல "

அபி " ஆமாம் பாரதி நான் பேட் பாய் நான் அசிங்கமாக இருக்கேன் அதான் எங்க அம்மா என்னைவிட்டு போய்டாங்க இப்ப நீயும் என்ன விட்டு போக பாக்குற "
என கேவலுடனே கூறினான்....

பாரதி அசைவற்று அமைதியாக இருந்தாள். எனக்கு தெரியும் நீ ருக்மணி அம்மாகிட்ட பேசிட்டு இருந்த இந்த ஊர விட்டு போறனு நான் கேட்டேன் ....

ஆமாம் யாருக்கும் தெரியாமல் இந்த இடத்தை விட்டு பாரதி செல்ல நினைத்தால் ஆனால் வயதான தாயை தன்னுடன் வைத்துக் கொண்டு அலைய முடியாத காரணத்தால் ருக்மணி அம்மாவிடம் பேசி தனத்தை மட்டும் சிறிது நாட்கள் இங்கு தங்க வைத்து கொண்டு பிறகு அவரை தான் இருக்கும் இடத்திற்கு அழைத்து கொள்ள முடிவு செய்து ருக்மணியிடம் பேசினாள்...

ஆனால் அவள் அறியவில்லை இவளை தேடி அபி வந்த போது இதை எல்லாம் கேட்டுவிட்டான் என.....
பிஞ்சு மனம் ஆசைபட்டது கிடைக்காமல் அதனை விட்டு விலகவும் முடியாமல் கண்ணீர் என்னும் ஆறுதல் கொண்டு தன் மனதை தேற்ற முயற்சி செய்தான்......
இவற்றை எல்லாம் தனம் கேட்க அபி வேறு எதும் பேசாமல் கிளம்ப பாரதி அதே இடத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிய நின்றாள்......

எவ்வளவு நேரம் நின்றாள் என அவளுக்கே தெரியவில்லை கால்களில் வலி எடுக்க அதனை உணர்ந்த பின்னரே தன் அறைக நோக்கி சென்றாள்....

எப்போது வருவாள் என காத்திருந்த தனம்
" போதுமா டி ஒரு பிஞ்சு குழந்தை மனச எப்படி நோக அடிச்சுறுக்கனு புரியுதா "

பாரதி " அம்மா நீயும் இப்படி எல்லாம் பேசி கஷ்டப்படுத்தா மா "

தனம் " நான் கஷ்டப்படுத்துறன நீ தான் எல்லாரையும் கஷ்டப்படுத்தற "

பாரதி " மா எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசுற "

தனம் " நிறுத்து டி சும்மா அதையே சொல்லாத புருஷன் செத்த யாரும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கறது இல்லையா "
இதை கூறியவுடன் பாரதி அப்படியே தரையில் அமர்ந்து கதற ஆரம்பித்தாள்..

தனம் " அழு நல்லா அழு உன் மனசுல இருக்கற எல்லாத்தையும் அழுது
கரைச்சுடு "

சிறிது நேரம் அழுது ஓய்ந்த போது....
தனம் " அம்மா சொல்லுறத கேளு டி எனக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை வேணும் டி உங்க இறந்த அப்போ நீங்களாம் விவரம் தெரிஞ்ச வயசு அப்ப கூட நான் சாய்ஞ்சு அழ உங்க அப்பா தோள தான் டி
தேடுனேன்"
" இப்ப புரியாது டி நீ அழும் போது உனக்கு ஒரு தோள் வேணும் நினைப்ப டி அப்ப என் பொண்ணு கஷ்டப்பட கூடாது தான் டி இப்ப உன்ன அழ வைச்சு கஷ்டப்படுத்துறன்"

" வெற்றி ரொம்ப நல்லவரு அதைபோல அபியும் நல்ல குழந்தை அவங்க கடைசி வரை உனக்கு ஒரு நல்ல ஆறுதலா இருப்பாங்க புரிஞ்சுகோ டி "
என தனது நீண்ட உரையை முடித்தவுடன் தன் மகள் திருமணத்திற்கு சம்மதிப்பால் என தெளிவுடன் அவளை யோசிக்கவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்......
தனம் அடுத்து சென்றது வெற்றியின் இல்லம் மகளுக்கு அறிவுரை வழங்கியவர் அடுத்து வெற்றியிடம் அவளது கடந்த காலத்தை பற்றி கூற அவனை தேடி சென்றார்....
தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18 இனி எல்லாமே நீ தானே
வெற்றியின் வீட்டிற்கு சென்ற தனம் அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தயங்கினார்....

வெற்றி " என்னமா இவ்வளவு தூரம் வந்துருக்கிங்க சொல்லியிருந்தா நானே வந்து இருப்பேன்ல "

தனம் " பரவால்ல தம்பி உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அதான் நானே உங்கள தேடி இங்க வந்தேன் "

வெற்றி " சொல்லுங்க மா "

தனம் " அது வந்து "

வெற்றி " மா தயங்கம சொல்லுங்க நானும் உங்க பையன் மாதிரி தான "

தனம் " நாம எல்லாரும் ஆசப்பட்ட மாதிரியே உங்களுக்கும் பாரதிக்கும் கல்யாணம் நடக்கும் தம்பி "

வெற்றி " இல்லமா அது பாரதிக்கு விருப்பம் இல்ல‌"

தனம் " இல்ல தம்பி அவகிட்ட நான் பேசி புரிய வைச்சுருக்கேன் அவ கண்டிப்பா ஒத்துக்குவா "

வெற்றி" வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைக்கனுமா "

தனம் " சில விஷயங்களை வற்புறுத்தி தான் செய்ய வைக்கனும் அதுதான் அவ எதிர்காலத்துக்கும் நல்லது "

வெற்றி " நீங்க என்ன இந்த அளவுக்கு நம்ப நான் என்ன பண்ணணு எனக்கே தெரியல உங்க நம்பிக்கைய நிச்சயம் நான் காப்பாத்துவன் மா "
என அவரின் கையினை பிடித்து கொண்டு தனது நம்பிக்கையை அளித்தான்...

தனம் " நான் இங்க இத சொல்ல மட்டும் வரல பா பாரதியோடு கடந்தகால பக்கத்த நீங்க தெரிஞ்சகனும் தான் வந்தேன் "

வெற்றி " எனக்கு அவளோட கடந்த காலத்த பத்தி எந்த பிரச்சனையும் இல்ல மா ஆனால் சொன்ன உங்க பாரம் குறையும் அப்படினா சொல்லுங்க "

தனம் " சொல்லுறன் பா "
என பாரதி பிறந்து வளர்ந்த அவளின் தந்தை இறந்தது அண்ணனின் திருமணம் அண்ணியின் அலட்சியம் எல்லாவற்றையும் கூறினார்...

ஐந்து வருடங்களுக்கு முன்...
அன்று வீட்டில் அனைவரும் அமர்ந்து உணவு உண்ண
கீதா " ஏங்க சொல்லுங்க "
என தனது கணவன் ருத்ரன் காதில் ரகசியம் பேசினாள்...

கொஞ்சம் பொறு என ருத்ரன் கையினால் சைகை காட்ட கீதா சொல்லு சொல்லு என் நச்சரிக்க தொடங்கினாள்..‌..

இதை எல்லாம் கண்டும் காணாமல் பாரதி மற்றும் தனம் அமைதியாக உணவு உண்ண மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் ருத்ரன்..

ருத்ரன் " மா "

தனம் " ம்ம் சொல்லு பா "

ருத்ரன் " அது வந்து "
என தன் மனைவின் முகம் பார்க்க அவள் சொல்லு என கண்களால் மிரட்டி கொண்டு இருந்தாள்..

ருத்ரன் " நம்ப பாரதிக்கு ஒரு வரன் வந்துறுக்கு பேசலாமா மா "

பாரதி " அதுக்குள்ள என்னப்பா அவசரம் இப்ப தான் கடைசி வருஷம் படிக்கிற "

கீதா " நல்லருக்கு நீங்க சொல்லுறது அதான் படிச்சு முடிக்க போறால அப்புறம் என்ன கட்டிக்க கொடுக்க வேண்டியது தான "

பாரதி " அண்ணி அதான் அம்மா அண்ணன் பேசுறாங்கல நீங்க ஏன் இப்படி பேசுறீங்க "

ருத்ரன் " பாரதி அவ உன் நல்லதுக்கு தான பேசுறா "

தனம் " பாரதி நீ சும்மா இரு நீ என்னப்பா சொல்லுற "

ருத்ரன் " மா இவங்க வீட்டு பக்கம் ஒரு வரன் வந்துறுக்கு ரொம்ப நல்ல வசதியான குடும்பம் ஒரு பையன் இரண்டு அக்கா பையனோட அப்பா அண்ணன் தம்பிங்க இரண்டு பேரு ஒரே வீட்டுல கூட்டு குடும்பமா தான் இருக்காங்க "

தனம் " சரிப்பா வர சொல்லு பேசுவோம் "

ருத்ரன் " சரிமா சொல்லுறேன் "
தனியா சென்ற தன் தாயிடம் சென்ற

பாரதி " மா எனக்கு இப்ப கல்யாணம் வேணாம் மா அதும் இல்லாம அண்ணி வீட்டு சைடு வேற சொல்லுறீங்க எனக்கு பயமா இருக்கு‌ மா "

தனம் " பாரதி மா ஒன்னும் பயப்படாத சும்மா பேச தான் போறோம் அப்படியே பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட மாட்டோம் புரியுதா உனக்கு பையன பிடிச்சா தான் "

ஒருவாறாக அனைவரையும் பேசி சமாதான படுத்தி மாப்பிள்ளை வீட்டினரை வர வைத்து இருந்தனர் கீதா ருத்ரன் தம்பதியினர்...

மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் வந்தாயிற்று ஐம்பது வயதை ஒத்த பெண்மணி அறுவது முதல் அறுபத்தைந்து வயதில் இரண்டு ஆண்களும் வந்திருந்தனர்..

வேறு யாரும் வரவில்லை வந்தவர்கள் பெண்ணை பார்த்து பிடித்து போக
" இங்க பாருங்க மா எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க பொண்ணுக்குனு எதும் செய்ய வேணாம் நாங்களே எல்லாம் செய்வோம் குடும்பத்தோட கடைசி வரை ஒத்துமையா வாழனும் அதா எங்களுக்கு வேணும் என்ன சொல்லுறிங்க "
என்றார் அந்த பெண்மணி...

தனம் " அதலாம் என் பொண்ணு நல்ல பொண்ணு தான் மா நீங்க பயப்பட மாதிரி என்னைக்கும் நடந்துக்க மாட்டா "

" சரிமா இதுல பையன் போட்டோ இருக்கு பையன் பேரு சத்யா பார்த்துட்டு சொல்லுங்க "

போட்டோ வை வாங்கிய தனத்தின் முகம் பிரகாசமாக அதை வைத்தே பையன் நன்றாக இருக்கின்றார் என தெரிந்து கொண்டாள் பாரதி..

வந்தவர் அனைவரும் சென்றுவிட தனம் பாரதியிடம் சென்று மாப்பிள்ளை போட்டோ காட்டினார்...
வாட்டசாட்டமான உடம்புடன் களையான மாநிற முகத்துடன் வெள்ளை சட்டையில் அம்சமாகவே இருந்தான் சிரித்தால் இன்னும் அழகாக இருந்திருப்பான் ஆனால் முகத்தை மட்டும் உம்மென்று வைத்து கொண்டு இருந்தான் மாப்பிள்ளை சத்யா...

பார்த்தவுடன் பாரதிக்கு அவரை பிடித்தேவிட
தனம் " நான் கூட அவ மாப்பிள்ளை பார்த்தாலே எப்படி இருக்கோனு நினைச்சேன் பரவால்ல டி நல்லா தான் இருக்காறு "
" நீ என்ன டி சொல்லுற உனக்கு சம்மதமா "

பாரதி " ம்ம் பிடிச்சிருக்கு மா "

அடுத்து எல்லாம் கூடி ஒரு மாத இடைவெளியில் திருமணம் பேசப்பட்டது. நாட்கள் நகர ஒருதடவை கூட சத்யா பாரதியிடமோ அல்லது அவனது குடும்பத்துடனோ பேசவில்லை..

மாப்பிள்ளை வீட்டினர் அவனது வேலையை காரணம் காட்டி பெண் வீட்டாரிடம் சமாதானம் செய்தனர்......

விடியல் அழகாக விடிய திருமண மண்டபம் முழுவதும் அலங்கார விளக்குளாள் நிறைய சுற்றி விருந்தினர் வருகையால் அந்த இடமே அழகாக பார்ப்பவர் கண்ணை அவரும் வண்ணம் மேடையில் மணப்பெண் பாரதி மற்றும் மணமகனாக சத்யா ஜொலிக்க பெரியவர்களின் ஆசிவாதத்தால் பாரதியின் கழுத்தில் மூன்று முடிச்சு இட திருமணம் அழகாக நடைபெற்றது.....

திருமணம் முடிந்து பாரதி தன் தாய் வீட்டை விட்டு செல்ல தாயுக்கும் மகளும் பாசப்போரட்டாமே நடந்தது..
ஆனால் அவள் அறியவில்லை அவள் கூடிய சீக்கிரமே தன் தாயிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுவாள் என.....

திருமணம் முடிந்து மூன்றாவது நாள் தனம் வழக்கம்போல வீடு வாசல் கூட்ட கதவை திறந்த போது அங்கு பாரதி நின்று கொண்டு இருந்தாள்.

தலைமுடி கலைந்து கன்னங்களில் கைவிரலின் அச்சு பதிந்து ஆடைகள் கசங்கி பரிதாப நிலையில் நிற்கும் தன் மகளை கண்ட தாயின் மனம் தவித்தது...

பதறி கதறிய தனத்தின் குரல் கேட்டு கீதா ருத்ரன் இருவரும் தன் அறையில் இருந்து வர..
தனம் " என்னடி ஆச்சு ஏன்டி இப்படி இருக்க "
என கதறியபடி கேட்க..

பாரதி " தண்ணி தண்ணி "
என நாக்கு வறண்டு கேட்ட தன் மகளை அணைந்தவர் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்து இளைப்பாற விட்டார்..

அதற்குள் ருத்ரன் கீதா இருவரும் மாப்பிள்ளை வீடு சென்றனர் நடந்தது என்னவென்று அறிய...

தனம் கேட்ட அத்துனை கேள்விக்கும் மௌனம் மட்டுமே பதிலாக கொடுக்க...

விபரம் கேட்க சென்ற ருத்ரன் கீதா இருவரும் வீடு வந்தனர்...
தனம் " டேய் என்னடா நடந்துச்சு "
என அழுகையுடனே கேட்க

கீதா " நல்லா பொண்ணு பெத்து வைச்சுருக்கீங்க போன மூனே நாளுலவா புருஷன இப்படி தல முழுகுவா என்னதான் ராசியோ "

தனம் " டேய் என்னடா பேசுறா கொஞ்சம் புரியபடி சொல்லுங்களேன் "

ருத்ரன் " மா பாரதி புருஷன் நேத்து நைட்டு ஆக்ஸிடென்ட் ல இறந்துட்டாறு மா "
அதிர்ச்சி அடைந்து நெஞ்சில் கை வைத்து அப்படியே கதவின் மீது சாய்ந்து விழுந்தார் தனம்.....

அதன்பின்பு சத்யா இறந்தர்க்கு பாரதி தான் காரணம் என எண்ணி அவளுக்கு எந்த சடங்கும் சத்யா வீட்டில் செய்விடவில்லை..

அன்று நடந்த நிகழ்வுகளை நினைத்து இன்று கண்ணீருடன் வெற்றியிடம் நடந்த நிகழ்வுகளை கூறினார் தனம்...
அதுக்கு அப்புறம் சென்னை வேலைக்கு வந்தது அங்கு மனோகர் என்ற மிருகத்தால் ஏற்பட்ட நிகழ்வுகளை கூறிய தனம்...

" என் பொண்ணுக்கு இந்த வாழ்க்கை நிரந்தரமாக இருக்கனும் அதுக்கு தான் நடந்த உண்மையலா உங்கிட்ட சொன்னேன் அவ கல்யாணம் ஆகி அந்த வீட்டுல வாழ்ந்த மூன்னு நாள் என்ன நடந்துச்சுனு யாருக்குமே தெரியல அழுத்தகாரி யாருகிட்டயும் சொல்லவும் இல்ல "

" நீங்க எப்பவும் அவளுக்கு பாதுக்காபாவும் நல்ல துணையாகவும் இருக்கனும் என் பொண்ணு இதுக்கு அப்புறம் சந்தோஷத்த மட்டும் தான் பா பாக்கனும் "
என்று கை எடுத்து கும்பிட்ட தனமத்தின் கையினை பற்றி...

வெற்றி " மா பாரதி இந்த அளவுக்கு வாழ்க்கையில் கஷ்டப்படடாளா நான் தான் கஷ்டப்பட்டனு நினைச்சேன் என்ன மாதிரியே பாரதியும் பல கஷடத்த தாண்டி தான்வந்துருக்கா "
" நீங்க கவலப்படதிங்க பாரதி இனி என் பொறுப்பு "

தொடரும்.....

வணக்கம் நட்புகளே
கதையின் போக்கை பற்றி தங்களது கருத்துகள் மூலம் எனக்கு தெரிவிங்கள்.. உங்களது கருத்துகள் தான் எனது நம்பிக்கை...

நன்றியுடன்
சிந்தியன்..
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
19 இனி எல்லாமே நீ தானே

முருகன் சன்னதியில் அழகான காலை பொழுது சுற்றி இருந்த உறவினர்கள் முன்னிலையில் பாரதியின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சு இட்டு தன்வாழ்வின் அங்கமாக இணைத்து கொண்டான்..

வெற்றி தன் மனதில் இனி வரும் காலங்களில் பாரதி மட்டுமே என் வாழ்க்கை துணை அவளுக்கு எந்த ஒரு தீங்கும் நிகழாமல் கடைசி வரை துணை இருந்து அவளை காப்பேன் என மனதில் உறுதி பூண்டார்....

பாரதி மனதில் இப்படி தான அந்த கல்யாணம் நடந்தச்சு கல்யாணம் ணாலே வெறுத்து போன எனக்கு திரும்பவும் அதே அடியா எங்க அம்மாவுக்காகவும் அபிக்காவும் மட்டும் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சென்னேன் அவங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்.......

எளிமையாக யாரையும் அழைக்காமல் தன் நலன் மேல் உண்மையாண அக்கறை கொண்ட ஒரு சிலரை மட்டுமே அழைத்துருந்தான் வெற்றி அதுபோல பாரதி பக்கம் ருக்மணி அம்மாயுடன் இல்லத்தில் இருந்த மூத்த சில வயதானவர்கள் வந்திருந்தனர்....

திருமணம் முடிந்துவுடன் வெற்றியின் போனில் இருந்து அபி எல்லோரையும் போட்டோ எடுத்தான் அனைவரும் நிற்க வெற்றியின் மிக அருகே செல்ல வேண்டி இருந்ததால் பாரதி சற்று அசௌகரியமாக உணர்ந்தாள்..

இதனை உணர்ந்த வெற்றியும் அவளை தொந்தரவு செய்யாமல் சற்று விலகியே நின்று கொண்டான்......

காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பாரதி வெற்றியை நிமர்த்திய ருக்மணி " எப்பவும் இரண்டு பேரும் சேர்ந்தே இருக்கனும் உங்களுக்கு இடையில் எந்த வித ஒளிவு மறைவும் இருக்க கூடாது " என கூறி இருவர் நெற்றியிலும் இதழ் பதித்தார்....

அபி " பாட்டி எனக்கு "

ருக்மணி " ஓஓ என் செல்ல கண்ணனுக்கு இல்லாமலா " என அவனுக்கு நெற்றி முத்தம் ஒன்றை வைத்தார்...

தனத்திடம் ஆசிர்வாதம் வாங்கும் போது அழ கூடாது என கட்டு படுத்தி வைத்த கண்ணீர் அருவியாக வந்தது... தாயும் மகளும் அழ அபி தான் இருவரையும் அதட்டி அழுகையை நிறுத்தினான்...

தனம் " நீங்க இரண்டு பேரும்.... எப்பவும்... ... சந்தோஷமா இருக்கனும் பா "
என அழுகையின் ஊடே சொல்லி ஆசிர்வாதம் பண்ணினார்....

அதன்பிறகு உணவு முடித்து கொண்டு காரில் கிளம்ப காலையில் இருந்து தன் தாய் தந்தை யின் திருமணத்தில் ஓடி ஆடிய விளையாடிய அபி காரில் வரும்போதே தூங்கிவிட்டான்...

இல்லம் வர எவ்வளவு சொல்லியும் கேளாமல் சிறிது நாட்களுக்கு பிறகு உங்களுடனே வந்து தங்கி கொள்வதாக கூறி தனம் இல்லத்தில் இறங்கி கொண்டார்...
அழுது அழுது பாரதி தன் எதிர்காலத்தை நோக்கி புறப்பட்டாள்....

தன் ஒரு கையில் அபியை வைத்து கொண்ட வெற்றி மறுபுறம் திரும்ப பாரதியும் கண்களை மூடி கொண்டு தூங்கி தான் விட்டிருந்தாள்....

வீடு வர
வெற்றி மெதுவாக பாரதியின் கை பற்றி

" பாரதி பாரதி எழுத்துரு வீடு வந்துடுச்சு "

அவன் தொடுகையை உணர்ந்தவள் பட்டென்று கண்களை திறந்து திரு திரு வென விழித்தாள்...

வெற்றி " வா வீடு வந்துடுச்சு போகலாம் "
அபியை தூக்கி கொண்டு இறங்க பாரதி மறுபுறம் இறங்கினாள்....

ருக்மணி அம்மா ஏற்பாட்டின் படி அங்கு உள்ள வேலை ஆட்கள் ஆர்த்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்தனர்....

நேராக ஒரு அறைக்கு சென்றான் வெற்றி சத்தம் இல்லாமல் இருக்க திரும்பி பார்க்க பாரதி வராமல் ரூம் வாசலிலே நின்று கொண்டு இருந்தாள்..

அவளின் தவிப்புகான அர்த்தம் புரிந்தவன்..
வெற்றி " உள்ள வா " என சற்று அழுத்தி கூற
வேறு வழியின்றி உள்ளே வந்தாள்...

படுக்கையில் அபியை படுக்க வைத்தவன்.
" நீ பிரஸ் ஆகிகோ நான் என் ரூம்க்கு போறேன் இது அபி ரூம் தான் நீ தைரியமா இருக்கலாம் ... "

அவன் சென்ற பிறகு மூச்சு விட்டாள் பிரெஸ் ஆகி வந்து அமர்ந்து தன் வாழ்வில் நடந்த பிரச்சினைகளை நினைத்து பார்த்தாள் ஏனோ இம்முறை அழுகையும் வரவில்லை வெறுமையும் வரவில்லை மாறாக அவள் மனது சற்று ஆறுதலாக இருந்தது அதன் காரணம் வெற்றி அவள் இருக்கும் தைரியம் திஎன இவளுக்கு புரியவில்லை......

அபி " பாரதி வா சாப்பிடலாம் வா "
என கையை பிடித்து இழுத்து வந்தான் அபி..

ஆனால் அங்கு வெற்றி அமர்ந்து இருந்ததாள் சங்கோஜப்பட்டு திரும்பவும் அறைக்கு சென்றாள்...

அபி " பாரதி " என அழைக்க..

வெற்றி " அபி இங்க வா "

அபி " பாருங்க டாடி இந்த பாரதிய சாப்பிட கூப்பிட்டா வர மாட்டாற்ங்க "

வெற்றி " அபி அவங்க இன்னைக்கு தான் நம்ப வீட்டுக்கு வந்துறுக்காங்க சோ இதுலா புதுசு கொஞ்சம் கொஞ்சமா தான் பழகனும் அவங்களுக்கான ஸ்பேஸ் நாம கொடுக்கனும் நீ எதுக்கும் அவங்கள வற்புறுத்தா ஓகே வா நான் போனதுக்கு அப்புறம் சாப்பிட கூப்பிடு சரி யா எனக்கு கொஞ்சம் வேல இருக்கு நான் கிளம்புறேன் நீ சாப்பிடு "

" ஆங் அப்புறம் அவங்க உனக்கு பாரதி இல்ல அம்மா அம்மா னு கூப்பிடு "

அறைக்கு சென்ற பாரதி
" ச்ச என் மனசு இப்படி இருக்கு திரும்ப திரும்ப அவங்கள இன்சைல் பண்ணுற மாதிரி தோணுது இப்படிலா பண்ண கூடாது சகஜமா இருக்க டிரை பண்ணணும் "
என எழுந்தவள் அறைக்கு அபியே திரும்ப வந்தான்...

பாரதி " சாரி டா அபி எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு அதான் வந்துட்டேன் "

அபி " இட்ஸ் ஓகே மா எனக்கு புரியுது இப்ப சாப்பிட வாமா போகலாம் "

பாரதி " ம்ம் சரிடா "
" ஏய் இப்போ என்ன சொன்ன திரும்ப சொல்லு "

அபி " ஏன் அம்மா உனக்கு கேகலயா சாப்பிடலாம் வாமானு சொன்னேன் "

அவன் அம்மா என்றதில் உணர்ச்சிபூர்வம் அடைந்து கண் கலங்கியது..
கலங்கியது பாரதிக்கு மட்டும் இல்லை அபிக்கும் தான்..

அபி " நான் உன்ன அம்மான்னு கூப்பிடட்டா நீ என் கூடவே இருப்பியா மா "

பாரதி " உன் கூடவே தான் செல்லம் இருப்பேன் எங்கயும் போக மாட்டேன் டா உன் கூடவே இருப்பன் "

அபி " பிராமிஸ் "

பாரதி " பிராமிஸ் டா செல்லம் "

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20 இனி எல்லாமே நீ தானே

பகல் பொழுது முழுவதும் கடந்து விட்ட பாரதியால் இரவை நகர்த்த முடியவில்லை..

அந்த வீட்டின் வேலையாட்கள் தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டு வெற்றியின் அறைக்கு பொருட்களை எடுத்து செல்வது எதற்கு என புரிந்தும் தடுக்க முடியாமல் தவிப்புடன் அபியின் அறையையே சுற்றி சுற்றி வந்தாள்...

ஃபோன் அடிக்க
பாரதி " ஹாலோ மா "

ருக்மணி " நான் ருக்மணி மா பேசுறான் டா "

பாரதி " ஆங் சொல்லுங்க மா "

ருக்மணி " எப்படி டா இருந்துச்சு இன்னைக்கு நாள் "

பாரதி " நல்லாதா மா இருந்துச்சு "

ருக்மணி " சரிடா நான் ஒரு விஷயம் சொல்ல தான் ஃபோன் பண்னேன் "
அவர் சொல்லவருவது தெரிந்து சற்று கலக்கமடைந்தாள் பாரதி..

ருக்மணி " இன்னைக்கு உனக்கும் வெற்றிக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணிறுக்கேன் "
எதிர்முனையில் அமைதி நிலவ அவரே தொடர்ந்தார்...

ருக்மணி " பாரதி மா கேட்குறியா "

பாரதி " சொ...சொல்லுங்க மா "

ருக்மணி " பாரதி மா இது ஒரு சடங்கு தான் டா நீ ஒன்னும் பயப்படாத வெற்றி அப்படி பட்ட பையன் இல்ல உன் சம்மதம் இல்லாம உன்ன ஒன்னும் பண்ண மாட்டான் அதுக்கு நான் கிரன்டி டா "
பாரதி பேச வாயடுக்க.
" அப்புறம் எதுக்கு இதலாம் நீ கேட்கலாம் "

தன் மனதில் நினைத்ததை சரியாக ஊகித்து ருக்மணி அம்மாயை நினைத்து பெருமைப் அடைந்தாள்...

" நீயும் வெற்றியும் ஒருதர் ஒருதர புரிஞ்சுக்கனும் அதுக்கு நீங்க இரண்டு பேரும் ஒரே அறையில இருந்தா தான் அது நடக்கும் சும்மா நீ வேற இடத்துல அவன் வேற இடத்துல இருந்தா எப்படி புரிஞ்சுபிங்க அதுக்கு தான் பகல் முழுக்க எங்க வேணா இரு நைட்டு அந்த அறையில தங்கு சரியா "
" ஆங் அப்புறம் இன்னோரு விஷயம் வெற்றி உன் சாப்பாட புடுங்கி சாப்பிட மாட்டான் அதுனால தைரியமா அவன் இருக்கும் போதே நீ போய் சாப்பிடலாம் சரியா "

மதியம் அவன் இருந்ததாள் தான் உணவு உண்ண வரவில்லை என நாசுக்காக கூறியதை புரிந்து சிரித்து கொண்டாள் பாரதி..

ருக்மணி " பாரதி மா சொன்னதுலா நியாபகம் இருக்கா உன் மனச மாத்த முயற்சி செய் சரியா வைச்சுடுறேன் டா "

பாரதி " ம்ம் சரி மா "

அறையில் நுழைந்த வெற்றியின் கண்களுக்கு தெரிந்தது அலங்கரிக்கப்பட்ட அறையினுள் நீல வண்ண பட்டு புடவையில் மிதமான அலங்காரத்துடன் உட்கார்ந்திருந்த பாரதியை பார்த்தான்....

சிறு சிரிப்புடன் அவள் அருகில் வந்தவன்.
வெற்றி " இது யாரு வேல "

பாரதி " ருக்மணி அம்மா "

வெற்றி " நினைச்சேன் அவங்களா தான் இருக்குனு "

வெற்றி " சாப்பிடியா "

பாரதி " ம்ம் நீங்க "

ம்ம் என்று தனது உடையை எடுத்து கொண்டு அங்கிருந்த பாத்ரூம் உள்ளே நுழைந்தான்...

என்ன தான் ருக்மணி அம்மா ஆறுதல் கூறினாலும் அவளது மனதினுள் சற்று படபடப்பாகவே இருந்தது.

திரும்ப வந்த வெற்றி படுக்கையை சரி செய்து
வெற்றி " இது பெரிய பெட் தான் நீ இங்கயே படுத்துக்கோ "

அப்போதும் அவள் தயங்கி நிற்க
வெற்றி " பயப்படாத மா நான் அவ்வளவு கெட்டவன் லா இல்ல கொஞ்சம் நல்லவன் தான் மா "
வந்த சிரிப்பை உதட்டின் இடுக்கில் மறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் பாரதி...

வெற்றி " பாரவால சிரிக்கலாம் தப்பு இல்ல சிரிச்சா ஹெல்த் க்கு நல்லது "

இம்முறை சற்று தாராளமாகவே சிரித்துவிட்டு பெட்டின் மறுமுனையில் படுத்து கொண்டாள்.....

முதுகு காட்டியபடி இருவரும் படுக்க அன்றைய நாள் முடிந்தது....

தொடரும்....

வணக்கம் நட்புகளே

கதை பத்தி உங்க கருத்துக்களை சொல்லுங்க உங்களது உந்துதல் தான் எனது நம்பிக்கை...
பிளிஸ் பிளிஸ் உங்க பொன்னான கருத்துக்களை போற போக்குல கொஞ்சம் போட்டுட்டு
போங்க புண்ணியமா போகும்........
நன்றி ஆல் சகோ அண்ட் சகி.......

🥰🥰🥰🥰🥰🥰🥰
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புகளே கதை பற்றி சிறிய தொகுப்பு இதுவரை
நாயகி பாரதி தாயுடன் தனித்து இந்த உலகில் வாழும் இளம்பெண்..
வேலை செய்யும் கம்பெனியில் மனோஜ் என்பவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானவல் அவனை அடுத்து போட்டு தனது வீட்டிற்கு ஓடி வர அவளது முதலாளி அவள் மீது பரிதாபம் கொண்டு அவளை மும்பைக்கு ருக்மணி அம்மா இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறார்...
நாயகன் வெற்றி தனது பையன் அபியுடன் வாழ்ந்து வருகிறான்.. இவனே ருக்மணி இல்லத்திற்கு ஆதரவு அளிப்பதால் அடிக்கடி அங்கு செல்லும் அபிக்கு பாரதி நட்பாக அந்த நட்பு அளவில்லாத பாசமாக மாறுகிறது..
இதனடையில் பாரதிக்கு வெற்றி கம்பெனியில் வேலை கிடைக்க அங்கு பணிபுரியும் மைதிலிக்கு பாரதி மேல் பொறாமை ஏற்படுகிறது..
சிறிது நாட்களுக்கு பிறகே அபி வெற்றி மகன் என பாரதிக்கு தெரிய இதனால் எந்த வித சஞ்சலமும் அடையாத பாரதி அபி இருவரும் அதே பாசத்துடன் பழகி வருகின்றனர்..

இதனிடையே அபிக்கு காய்ச்சல் வர அவனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் பாரதி வெற்றி அங்கு வைத்து தனது கடந்த காலத்தை பாரதிக்கு எடுத்து கூறுகிறான்..
அதில் வெற்றி மனைவி சரண்யா முதலில் பெற்றோருக்காக திருமணம் செய்தாலும் இடையில் அவளது மனம் மாறி சினிமா மீது கொண்ட ஆசையில் பெற்ற குழந்தையையும் கட்டிய கணவனையும் விட்டு விலக முதலில் சம்பித்து போன வெற்றி ருக்மணி அம்மா ஆதரவால் அபிக்கு என வாழ நினைத்து அதில் வெற்றியும் கண்டான்..
ஆனால் இப்போது பாரதி மேல் கொண்ட காதலால் அபிக்கு தாயாக அவளை வர சொல்லி கேட்க முடியவே முடியாது என மறுத்த பாரதி விலகி செல்ல..
மகளின் வாழ்க்கை கேள்வி குறி ஆகுமோ என பயந்த தனம் பாரதி பற்றிய உண்மைகளை அதாவது அவள் ஏற்கனவே திருமணம் ஆகி மூன்றே நாளில் கணவனை பற்றி கொடுத்தவள் என கூறிகிறார்.

அதன்பிறகே தனத்தின் பிடிவாதத்தால் இருவரும் திருமணம் நடக்க.
அதன் பிறகு வருவதை இனி வரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்..

நன்றி..

நட்புகளே
நான் இதுவரை ரீகேப் மாதிரிலா எழுதினது இல்ல ரீடர் கேட்டதால தான் எழுதினேன்.. எந்த அளவுக்கு இது புரியுனு எனக்கு தெரியல் இதுக்கு மேலையும் கதை புரியலன கொஞ்சம் கோபடாம மேல போய் முதல இருந்து படிச்சுட்டு வந்துடுங்க..

சிந்தியன்....
 
Top