All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

KarthikaThana

New member
நிறைய பேருக்கு இது கதை நமக்கு இது நம் வாழ்க்கை. மறுபடியும் அந்த வலி சுமந்த நினைவுகனோடு. கண்ணெதிரே தோழியைப் பறிகொடுத்திருக்கிறேன். காணாமல் போனவர்களில் சேர்ந்திருக்க வேண்டிய நான் கடவுள் அருளால் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ வலிகளை சுமந்து கொண்டு ஈழத்தமிழர்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அருமையான முயற்சி
 

sivanayani

விஜயமலர்
Extraordinary story Nayani mam. Very glad to read the climax and your style of writing....mmm... I have no words to express. All the best and give more and more stories like this. Congratulations for your success......
I am blessed and honored ma. Thank you soooo much dear. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அந்த வரதனுக்கு நல்ல தண்டனை.அவனை ஏன் இதோடு விட்டாய் என அவள் கேட்டதற்கு அவனின் பதில் அருமை.

எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களின் காதல் குறையாது என்பதற்கு ஒரு தாஜ்மகால் சூப்பர்

ஐந்து குழந்தைகள் அதிலும் உதயின் தம்பி தங்கை மீதான பாசம் சூப்பர்

அம்மேதினி சுமதி நல்ல மாமியார் மருமகள்

கடைசியாக ரோகிணி மற்றும் அவளது அம்மாவையும் உள்ளே இழுத்துக் கொண்டு வந்து விட்டீர்கள். காலம் அனைத்தையும் மாற்றும் என்பது போல் அவர்களின் மாற்றம்

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை எவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் பல வலிகளையும் இழப்புகளையும் கொண்டு அவர்கள் வாழ்க்கை அமைந்துள்ளது ஆனாலும் அத்துன்பங்களுக்கு மத்தியிலும் படித்து முன்னேறியும் உள்ளனர்

இங்கே பலர் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும் கவலை கொள்வதும் கடவுளை நிந்திப்பதுமாக உள்ளனர்

அவர்கள் பட்ட கஷ்டங்களை இக்கதையின் மூலம் எங்களுக்கு எடுத்து காட்டியுள்ளீர்கள்

உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்

விரைவில் புது கதையுடன் சீக்கிரம் வாருங்கள்
மிக மிக நன்றிபா. அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கருத்துப் பதிவைப் பார்க்கும்போது. வார்த்தைகள் இல்லை. நாம் பட்ட துண்டபம் மரணத்தின் தருவாயில் கூட மறக்காது என்பதுதான் வலியே. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நிறைய பேருக்கு இது கதை நமக்கு இது நம் வாழ்க்கை. மறுபடியும் அந்த வலி சுமந்த நினைவுகனோடு. கண்ணெதிரே தோழியைப் பறிகொடுத்திருக்கிறேன். காணாமல் போனவர்களில் சேர்ந்திருக்க வேண்டிய நான் கடவுள் அருளால் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ வலிகளை சுமந்து கொண்டு ஈழத்தமிழர்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அருமையான முயற்சி
அப்பப்பா எத்தனை அவலங்கள் எத்தனை தவிப்புகள். ஒன்றா இரண்டா சொல்ல. கதை சொல்வதென்றால் இன்னொரு மகாபாரதமே எழுதிவிடலாம் நம் ஈழத் தமிழர்களின் சரித்திரத்தை வைத்து. :cry::cry::cry::cry:
 
Status
Not open for further replies.
Top