All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

நான் டெய்யம்மா... நான் இந்த தளத்திற்கு எழுத்தாளரா புதுசு. ரிஜிஸ்டர் பண்ணாத வாசகியா இருந்த என்னை இப்போ இந்த நிலைமையில் கொண்டு வந்து சேர்த்த கடவுளுக்கு நன்றி. கேட்டவுடன் திரி அமைத்து தந்த ஸ்ரீ மேம்க்கு நன்றி.

புதுசா இந்த எழுத்து உலகத்துல பேனாவை பிடிச்சிருக்கிற பொண்ணு நான் ... உங்களை நம்பி என்னோட எழுத்து பணியை தொடங்கலாம்னு முடிவு பண்ணி கால் வச்சிருக்கிறேன் இந்த பக்கத்துல... உங்க எல்லோராட அரவணைப்பும் எனக்கு கண்டிப்பா தேவை...

என்னோட எழுத்து பயணத்தை சரியான பாதையில் கொண்டு போக எனக்கு உறுதுணையாய் நீங்கள் எல்லோரும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...


கதையோட தலைப்பு..

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

இது ஒரு காதல் கதை...
எப்படி ஒவ்வொரு உயிரினமும் தன்னோட இணையை சரியா கண்டுபிடிச்சி காதல் வசப்படுமோ.. அது போல இங்கே யார் யாரை எப்படி கண்டுபிடிச்சி.. காதல் கதை பேசி... கை பிடிக்கிறாங்க என்பது தான் கதை..

நாயகன் நாயகி பற்றி கதையில் பார்க்கலாம்... இப்போதைக்கு இவ்ளோ தான்...

போதுமா தோழமைகளே... சீக்கிரம் முதல் எபி யோட உங்களை சந்திக்கிறேன்...



நன்றி...
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம்1

images (19).jpeg

"வால்பாறை வட்டப்பாறை
மயிலாடும்பாறை மஞ்சபாறை
நந்திப்பாறை சந்திப்பாறை
அவரு என்ன மட்டும் சிந்திப்பாறே....
பாறே... என்னை பாறேன்..."


ஹ்ம்மம்ம்...ம்ம்ம்ம்....

என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி கொண்டே, அவ்வீதியில் முயல் குட்டி போல் வந்து கொண்டிருந்தாள் அவள்...!

புசு புசு போல் பஞ்சு தேகம்..
தோள் வரை வெட்ட பட்டிருந்த கூந்தல்... அளவான நெற்றி...
கதை பேசும் கண்கள்...
வடிவாய் நாசி..
ரோஜா நிற உதடுகள்..
இயல்பாய் சிவந்த கன்னம்...
லூசான பெனியன்... அதற்கு ஏற்றார் போல் இன்றைய காலத்து பட்டியாலா பேண்ட்.

பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு...! ஆனால் அந்த அழகை பற்றி அக்கறை இன்றி...
எந்தவித எதிர்கால இலக்கும் இன்றி... பெற்றோரே உலகம் என்று வாழும் வளர்ந்த குழந்தை இவள்.

அது ஒரு ரம்மியமான காலை பொழுது...!!
விடிந்தும் விடியாததுமாய்...
வரவா...
நான் வரவா என தன் உஷ்ண கதிர் வாள்களை நீட்டியும் மடக்கியும் ஆதவன் தன் சோம்பல் முறிக்க...
ஒளிந்தும் மறைந்தும் கவி பாடிய சந்திரன் தன் பள்ளி அறைக்கு வாசம் செய்ய புறப்பட...
சுகமான தென்றல் காற்று வீதியோரமாய் நின்ற பன்னீர் பூக்களை தொட்டும் தொடாமலும் தன் காதலை சொல்லி செல்ல...
சிட்டு குருவிகளின் பேச்சுக்கள் கீச் கீச் என ஒரு வகை ரகம் இழுக்க...
அந்த பூக்களின் மணத்தையும் குருவிகளின் கானத்தையும் தன் பாட்டுக்கு துணைக்கு அழைத்தவாறு கொஞ்சம் துள்ளல் நடையோடு இளவரசியாய் பவனி வந்து கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி...

சொல்ல போனால் இன்றைய கால பாடல்களில் எத்தனை இனிமை இருந்தாலும் திகட்ட திகட்ட... அள்ளி அள்ளி... பருகி ருசிக்க முடியாதே..?!

எல்லாம் ஒரு எல்லை வரை தானே..! ஆனால் பழைய பாடல்கள்...

அதுவும் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது கேட்ட பாடல்கள்...
அப்பப்பா... இப்பொழுது கேட்டாலும் என்னனவோ செய்யும்..
அப்படியே மயிர் கால்கள் எல்லாம் சிலிர்த்து அடங்கும். அந்த வகை உணர்வுக்கு ஈடு இணை இல்லை என்பாள் இவள். அதுவும் பழைய கால பாப் தமிழ் பாடல்கள் என்றால் அலாதி இஷ்டம்... எல்லாம் பக்கத்து வீட்டு மாலதி அக்கா புண்ணியம்...

அந்த காலனியிலே பிறந்து வளர்ந்திருந்தாலும்... எத்தனை முறை சுத்தி வந்தாலும் அவளுக்கு சலிக்கவே சலிக்காது... அத்தெருக்கள்.. அருகருகே அமைந்திருக்கும் வீடுகள்...
அத்தனை அழகு..

ஆம்... பிரம்மனுக்கு அடுத்த படியாக கலை நயம் கலந்து வலம் வரும் இன்றைய கால தொழில் நுட்ப வல்லுனர்களால் அழகாய் வடிக்கப்பட்டிருக்கும்
நேர்த்தியான வீடுகள்..
சுத்தமான வீதிகள்...

வீடுகளின் முன் அமர்ந்து பேசி சிரித்து கொண்டிருக்கும் ஒரு சில முதியவர்கள்...
வம்பிழுக்கவே காத்திருக்கும் சில குத்து விளக்குகள்...
தெருவோர ரோமியோக்கள்(எப்படி தான் விடியற்காலையிலே டூயிட்டி பாக்க நேரம் தவறமா வந்திருதாங்களோ...ஸ்ஸ்ஸ்ஸ்..... ஷாப்ப்பா...முடியலடா சாமி....உங்க கடமை பொறுப்பிற்கு அளவே இல்லையாடா...?! )
சோம்பல் முறித்து கொட்டாவி விட்ட படி அமர்ந்திருக்கும் சிறுசுகள்... என கிராமமும் நகரமும் சேர்ந்து வாசம் செய்யும் ஸ்தலம் அது...
அவளை பொறுத்த வரை சொர்க்கப்பூமி...

அந்த பிரதான காலனியில் பார்வைக்கு பளிச்சென படும் இடத்தில் படு சுத்தமாகவே இருந்தது அவள் கடை. அது ஒரு மினி சூப்பர் மார்க்கெட்.

அவள் அப்பா நடத்தி வரும் கடை.இவள் அவ்வப்போது வந்து அப்பாவுக்கு உதவியாக இருப்பாள். அம்மாவுக்கு அதில் விருப்பம் கிடையாது. சகோதரி போல் தூசு படாமல் ஒய்யாரமாக ஹை ஹீல்ஸ், உயர் ரக ஆடை அணிந்து ஏசி அறைக்குள் நுனி விரல் பட்டும் படாமலும் தாழிசைக்கும் தொழில் நுட்ப வேலை பார்க்கவே விரும்புகிறாள். ஆனால் இவளுக்கு அதில் நாட்டம் இல்லை..

அப்பாவின் கைக்குள் சுகமாய் சாய்ந்து கொண்டு திரியவே விரும்புவாள். அதில் அந்த அப்பாவுக்குமே அலாதி இன்பம். !

என் தேவதை இவள்...! ஆராதிக்க பிறந்தவள் என் மகள்...! என் வீட்டு செல்ல இளவரசி.! எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே அள்ளி தருபவள் என்று பெருமிதம் கொள்வார்.

அதில் சகோதரிக்கு சின்ன சுணக்கம் உண்டு. ஆனால் அவளை தாங்கவே வருவாள் அன்னை.அதனால் பூசல்கள் இன்றி நிறைவாய் செல்கிறது அவர்களது வாழ்க்கை... கொஞ்சம் பணக்கார தோரணையில் வாழும் நடுத்தர குடும்பம்.

அப்பா தேவேந்திரன். அம்மா கீர்த்தனா. மூத்தவள் வதனா.
இளையவள்....
இவள்...
ஆம் இவள் அவளே தான். இத்துணை தூரம் தமிழ் எழுத்துக்களால் கொஞ்சமே கொஞ்சம் வர்ணிக்கப்பட்ட நம் கதையின் நாயகி... ஆராதிக்கவே பிறந்தவள் ஆராதனா....

மூத்தவள் மூளைக்காரி.படிப்பில் கெட்டி. படு பாந்தவாக வேலையில் அமர்வதே இவளது இலட்சியம். அதற்கேற்றார் போல ஒரு நல்ல பெயர் சொல்லும் கம்பெனியில் ஆலோசகராக பணி புரிய வாய்ப்பு கிடைக்கவே கடந்த வருடம் முதல் வேலை செய்து வருகிறாள்.

இளையவள் படிப்பில் கெட்டி இல்லை என்றாலும் மோசம் இல்லை. நல்ல கற்பனை திறன் கொண்டவள்.எதையும் எளிதில் மனதிலே பதிய வைத்துவிடும் நியாபக சக்தி கொண்டவள். பெரிய ஓவியராக வர அத்தனை தகுதியும் மிக்கவள். ஆனால் வேலைக்கு செல்வது இழுக்கு என்று எண்ணுபவள்.

ஆடி பாடி கதை பேசி சிரித்து மகிழ்ந்து பெற்றோருடனும், அண்டை உறவுகளுடனும், குழந்தை பருவ நட்புகளுடனும் நேரம் செலவிடமால் இப்படி மாங்கு மாங்கு என்று இயந்திரம் போல் உழைத்து கொட்டி என்னத்தை சாதிக்க...?! சந்தோசமாய் இருக்க வேண்டிய காலம் வரை அப்படியே இருப்போமே. அவசியம் வரும் போது மெதுவாக வேலைக்கு செல்லலாம் என்பதே இவள் எண்ணம்.


இப்போதைக்கு தந்தைக்கு உதவியாக கடைக்கு சென்று வருகிறாள். இப்போது கூட கடையை காலையிலே திறந்து வைக்க தான் அம்மணி அன்ன நடை நடந்து சென்று கொண்டிருக்கிறாள்...

எத்தனை மெதுவாக நடந்தாலும் காலம் இவள் சொல்வதை என்ன கேட்டுக் கொண்டா இருக்கும்... ?!!

===================================


"அம்ம்ம்மாமாமாமா.....
அம்ம்மா...."

"ஏன்டி.... இப்படி கத்தி கூப்பாடு போடுற...?! உங்க அம்மா என்ன டெல்லிலயா இருக்கா...!இந்த கத்து கத்துற.....?"


"ச் ச் ச்....... அம்ம்மா....நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்....?!
நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க...
போச்சு... எல்லாம் போச்சு....!!
ஹைய்யோ..! நான் இப்போ என்ன பண்ண போறேன்...???!"


"ஏன்டி இப்படி காட்டு கத்தல் போடுற...
இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி துள்ளுற..."


"இன்னும் என்ன ஆகணும்?
இப்போ உங்களுக்கு சந்தோசமா...?!"


"என்னன்னு முதல சொல்லி தொலைடி.... "

"என்னவா... ?! நான் தான் நேற்றைக்கே சொன்னேனே... இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.. 8 மணிக்கு அங்க இருக்கணும்ன்னு சொன்னேனா இல்லையா... சீக்கிரமே எழுப்பி விட்ருக்கலாம்ல... இப்போ நான் எப்படி ஆஃபீஸ் போறது...."

என்று புலம்பியபடி வராத. . . காவேரி தண்ணீரை மூக்கால் உறிஞ்சி தள்ளியபடி குடும்ப சீரியலை பிரதி பலிக்க ஆயத்தமானாள் அவள..
அவள் வதனா...

"இப்போ என்னடி.... ? பிள்ளை கொஞ்சம் அசந்து தூங்குறாளே... ஒரு நாள் தானே தூங்கிட்டு போகட்டும்னு விட்டேன்.. அதுக்காக என்ன என்னடி பண்ண சொல்ற....?!"

"நீ ஒரு நாள்ளாவது வேலை டென்ஷன் இல்லாம நிம்மதியா தூங்கிரியா.... எப்போ பாரு வேலை வேலை...!! "

"ஏன் டி இப்படி அலையுர....?
கொஞ்சம் உன் வயசுக்கு ஏத்த மாதிரி மத்த பசங்க போல இருக்க வேண்டியது தானே..."

"அம்ம்மா..... "

என்று தன் கோபத்தை பற்களை கடித்து அடக்க முற்பட்டாள்....

அம்மாவிற்கு நன்றாக தெரியும் இவளது லட்சியம் பற்றி... அதில் பெருமையும் கூட... இருந்தும் இப்படி பேசுவது வதனாவிற்கு கோபத்தை கிளரியது....

"சரி சரி.. கோவிச்சிக்காத.... அழகான உன் முகம் கலையிழந்து போகுதுடி... நான் உனக்குள்ள எல்லா பொருளையும் எடுத்து வச்சாச்சி. நீ சாப்பிட்டு கிளம்புனா நேரம் சரியா இருக்கும்..."

"நோ வொர்ரி பேபி... கூல்...
போ.. போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா... " என்று சமாதானம் கூறி அவளை அனுப்பி வைத்தாள் அம்மா...

வதனா... அம்மாவை போல் கொள்ளை அழகு... ஒல்லியான உடல்வாகு தான்.ஆனால் அவள் அணியும் நவநாகரீக உடைக்கு ஏற்றவாறு வெகுகச்சிதமாக பொருந்தி அவள் அழகை இன்னும் மெருகேற்றி காட்டும்....

ஆள் பாதி.. ஆடை பாதி.. என்பார்கள்...! அது இவளுக்கு நன்றாக பொருந்தும். அத்தனை கவனம் அதில்.

அது போல் இவளுக்கு எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும்.. பேச்சு சுத்தம். தொழில் என்று வந்துவிட்டால் அத்தனை பக்தி.

அவள் வேலை செய்வது வி.கே குரூப்ஸ் கம்பெனியில் பங்கு சந்தை மற்றும் தொழில் ஆலோசகராக. மனதுக்கு நிறைவான வேலை.

"பாய் பாய்.... அம்மா... பாய்.."

"யெஸ்.. யெஸ். எல்லாம் எடுத்தாச்சி.. போய்ட்டு வரேன் மா... "

என்று கூறி தான் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினாள் வதனா....

ஷ்ஷ்ஷ்.... ஓ காட்.. எப்படியாவது பஸ் சீக்கிரம் வந்துரனும்...

என்று கடவுளிடம் சிறு வேண்டுதலை போட்டப்படி தன் நடையை கட்டினாள்.


"ஹேய் வதனா... என்ன இவ்வ்ளோ அவசரமா போகிற?"

என்றபடி வந்தான் ராம்.அக்காலனியில் வசிப்பவன்.சிறு வயது முதலே பழக்கம்..


"இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.சீக்கிரம் ஆபிஸ் போகணும்ப்பா.. அதான்... "

"ச்சு... இவ்ளோ தானா... சரி வா.. வந்து என்னோட கார்ல ஏறு.. நான் என்னோட பேக்கரிக்கு தேவையான சாமான்கள் வாங்க அந்த ஏரியா தான் போறேன்... "

ராம் பேக்கரி கடை ஒன்று அவர்கள் காலனியில் நடத்தி வருபவன். ஒரு தங்கை உண்டு. அம்மா அப்பா இல்லை. பாட்டியின் அரவணைப்பில் வாழ்பவர்கள்.


"நோ ராம் நோ...ஐ கேன் மனேஜ். யு கோ.. "

"ஹேய்... நோ ப்ராப்லம்... உன்னை நான் ஒன்னும் சுமந்துட்டு போக போறது இல்லை... வண்டி தானே... கம்..."

"ஹே..... அப்படி இல்லை... பட் இட்ஸ் நாட் குட் ஐ திங்க்... "

என்று காலனியில் வம்பு பேசவே காத்திருக்கும் சில பெண்மணிகளை சுட்டி காட்டி ... "சோ... நோ...."


"ஏய்... நீ ஓவரா தான் பண்ணற... நம்மள தான் இங்கே எல்லோருக்கும் தெரியுமே... சோ ஐ திங்க் நோ ஒர்ரி.. "


அவள் முகம் பிடிவாதத்தை காட்ட... அவன் பேச்சை மாற்றும் பொருட்டு...,


"போ போ... போற வழியில உன் பஸ் எங்காவது போய் முட்டிக்க போகுது... அப்போ பீல் பண்ணுவ பாரு..."

என்று வராத கோபத்தை காட்ட முயன்று தோற்றான் அந்த காலனியின் ஆணழகன்...

"அட ச் சீ..போடா.. "

"சரி விடு... என் கூட தான் வர மாட்டேன்னு சொல்லிட்ட... உன்னை பஸ்லயாவது ஏற்றி விட்டுட்டு போறேன்..."

"ஹா ஹா ஹா.....
ஆமா ஆமா.... இவர் தான் டெய்லி என்னை பஸ் ஏற்றி விட்டுட்டு போறார்....
வரார்ராம்... அட போடா..."

நீ சொன்னாலும் சொல்லாட்டியும் தினமும் நான் தான் உன் கூடவே வரேன்.. ஆனால் உனக்கு தெரியாம... தெரிஞ்சா அலவ் பண்ணுவியே மாட்டியோன்னு கொஞ்சம் பயம்... இல்லை இல்லை... தயக்கம்...

"வருகிறாயா என்ன...?!
என நீ கேட்கும் முன்னே
என் பாதச்சுவடுகள்..
உன் வசம் ஓடி
உவகையோடு வாசம் செய்யுமே..!
என் கண்ணே...!
என் மனம் புரிகிறதா உனக்கு...?!
தினம் தினம்..
உனை எண்ணியே...
பித்தனாகிறேன் நான்...!"


அவசரமாய் கவிதை ஒன்று இதயத்தில் பூத்தது அந்த அழகிய மன்மதனுக்குள்...

இந்த காதல் இருக்கிறதே...அப்பப்பா...
கோழையை கூட வீரனாக்கும்... வீரனை கூட தயக்கம் கொள்ளச் செய்யும்...

அவனது மனதில் காதல் சடுகுடு ஆட்டம் துவங்க... அவன் விழிகள் காதல் பாஷை பேச ஆரம்பித்தது பெண்ணவளிடம்...

அழகே உருவாய்.. கச்சிதமாக செதுக்கிய சிலை போல் முன்னாள் நிற்கும் அந்த பேரழகியின் முன் சட்டென மண்டியிட்டான் ராம்...

புன்னகையை சுமந்து நிற்கும் அந்த நீள் வட்ட பெரிய கயல்விழிகளை நோக்கி...


"ஐ லவ் யூ .. லவ் யூ சோ மச்... "

சொல்லி விட்டான்...
ஆம்..
அந்த காதல் வார்த்தையை கடைசியில் சொல்லியே விட்டான்...
மனதினுள் பொக்கிஷமாய் அவன் இந்நாள் வரை சேமித்து வைத்த நினைவுகளை மடை திறந்த வெள்ளமாய் கொட்ட ஆரம்பித்தான் அந்த காதல் பித்தன்...

"என் கடைசி ஜென்மம் வரை...
வாழ் நாள் முழுமைக்கும்..
குழந்தைகள் பேர்க்குழந்தைகள்...
என மகிழ்ச்சி மட்டுமே பிரதானமாக கொண்டு...
காதலெனும் ஊஞ்சல் கட்டி...
திகட்ட திகட்ட... அன்பை காட்டி... அழகான ஒரு வாழ்க்கை நாம் வாழ... எனக்கொரு வாய்ப்பு தருவாயா என் கண்மணி...?!"

பொது இடம் என்று பாராமல்...
அத்தனை பேர் முன்னிலையில்...
அனைத்தையும் மறந்து....

பெண்ணவள்... அவனவள் முன் மண்டியிட்டு காதல் யாசகம் கேட்டான் அவனவன்...?!?

விழி திறந்து... உலகம் மறந்து.... கனா காண்பது இப்போது அவள் வழியா...?! இல்லை அந்த காதல் நாயகனா???
 
Last edited:

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 2images (31).jpeg


" கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா...
கங்கை நதி வைகை நதி பெண் தானம்மா...
மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும்...
பெண் நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்...

வலப்பக்கம் ஒரு கரை..
இடப்பக்கம் ஒரு கரை...
நதிகள் நடுவில் ஓடி வரும்..."


என்று கைகளை வலதும் இடதும் ஆட்டிய படி உடலசைத்து திரும்பியவள் அப்படியே ஸ்தம்பித்தாள்.... ஆராதனா.

"ஹேய்... நீ எப்போ டி உள்ளே வந்த... "

பேந்த பேந்த விழித்தப்படி கேட்டாள் பெண்.

மறுபக்கம் முறைப்பு தான் வந்தது...


"ஏய்.. ஏண்டி.. என் மேல கோபமா என்ன..?! என் செல்லம்ல..." என கொஞ்சியபடி நாடியை பிடித்து கொஞ்சினாள்...

"ஹ்ம்ம்... தள்ளி போடி முதல.... நீ அடி தான் வாங்க போற... தொடாத... போ..."

என்று கோபமாய் சீறி பாய்ந்தாள் அடுத்தவள்...

இந்த அடுத்தவள் ஆராதனாவின் தோழி கீதா. அந்த ஆணழகன் ராமின் தங்கை..

"ஏய் கீது...! மன்னிச்சிக்கோ டி... நேத்து நான் உன் வீட்டுக்கு வரேன்..ன்..னு சொன்னதை மறந்தே போய்ட்டேன் டி... எல்லாம் இந்த வெள்ளச்சியால வந்ததுடி.."
(அதாங்க.. அவளோட செல்ல அக்கா வதனா... அக்கா அடிக்கிற வெள்ளை கலர்ல இருபாப்பல அதான் அம்மணி பெயர் வச்சிட்டாப்புள...)

"அவா இன்னைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங்ன்னு சொல்லி என்னை ரொம்ப வேலை வாங்கிட்டாடி.... நானும் அசதியில அப்படியே தூங்கிட்டேன்டி...."

என்று சலித்தப்படி வருத்தம் தெரிவிக்க முயன்றாள் பெண்...முகத்தில் டன் கணக்கில் சோகம்...

சோகமா... இல்லை ... அப்படி ஒரு தோற்றமா?!! ஹ்ம்மம்மம்... யோசனையை புறந்தள்ளிய கீது பொரிய ஆரம்பித்தாள்...

"என்ன...ன...ன...து....?????!
அப்படியே தூங்கிட்டியா...?!?
யாரு....ரு....ரு... நீ...நீ...நீயி....??!!

மம்ம்ம்ம்ம்ம்......."

நம்பாத பார்வை ஒன்றை பார்த்தாள்...

"ஹேய்... நம்புடி... நிஜமம்ம்ம்ம்ம்ம்ம்மா தான்... "

என்று தலையில் அடித்து சத்தியம் செய்தாள் பெண்ணவள்....


கொஞ்சம் லூசாகவும் இல்லாமல் சரியாகவும் இல்லாமல் ஃபிரீயாக அவள் அணிந்திருந்த உடையும்... ஃபேதர் கட் ஹேர் ஸ்டைல்லும்... குழந்தை முகமும்... அவள் தலையில் அடித்த படி நின்ற தோரணையும், அப்பாவி நடிப்பும்... கொஞ்சம் அழகாய் தான் இருந்ததோ... ?!!



படைத்தவனே வியந்தான்...
உன் பஞ்சு மேனி கண்டு...!
இரு கண்கள் போதாது...
உன்னழகை கண்டு ரசிக்க...!
தொட்டு பார்க்கவா உன்னை...
ஒருமுறையேனும் போதும்..
பெண்ணே! நான் பிறந்த பலன் அடைவேன்....!!




ஹ்ம்ம்... எத்தனை அழகு இவள்... அழகை பற்றிய கர்வமில்லாமல்... இப்படி வாஞ்சையில்லாமல் இருக்கிறாளே..... என்று தான் நினைக்க தோன்றியது...

கடவுளே! இவளை எப்பொழுதும் சந்தோசமாகவே வைத்துக் கொள்.... என்று கடவுளிடம் ஒரு பெட்டிசனை போட்டப்படி ஆராதனாவை முறைத்து பார்த்தாள் கீதா...

அவள் இன்னும் கொஞ்சம் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டாள்... நடிப்பதற்கு இவளுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்??!ஹ்ம்ம்...?!

அவளது செயலை ரசிக்க தோன்றியது தோழியவளுக்கு...! கொஞ்சம் கோபம் குறைந்தார்ப் போல தான் இருந்தது... ஆனாலும் கோபத்தை பிடித்து கொண்டே பேசினாள் தோழி...

"ஹாங்.... அப்டிங்கிற....?!!

ஆன்னானா...... எனக்கு வேற மதிரியில்லா நியூஸ் வந்துச்சு... "என்று தடையை யோசனையாய் தடவியபடி சொன்னாள் தோழி...

"யார்...ர்...ரோ.... கேட்டுக்கோடி.... யார்ர்ரோ பார்த்துக்க... "என்ற படி அந்த யாரோவில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தப் படி.....

"யார்ரோ நல்லா மூக்கு முட்ட தின்னுப்புட்டு... விடிய விடிய ஆட்டம் போட்டாப்புல்லால இருந்துச்சி....?!!...


ஹ்ம்மம்ம்.... ?! "

என்றபடி இடுப்பில் தன் கைகளை ஊன்றியபடி... புருவம் உயர்த்தி கேட்டாள் கீது....


அச்சச்சோ....! புள்ளைக்கு விஷயம் தெரிஞ்சிடிச்சி போல...?! செத்தேன்...! இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது....???

மனதினுள் நினைத்தபடி யோசனையில் நகம் கடிக்க ஆரம்பித்தாள் ஆராதனா...

"அடச் ச்சீ... விரலை வாயிலிருந்து எடுடி...."

என்றபடி அந்த விரலை சட்டென தட்டிவிட்டாள் கீது...

"ரொம்பலாம் யோசிக்காத... அங்கே மூளையில இருக்கிற கொஞ்சன்னுண்டு
அறிவும் உருகி வழிஞ்சிட போகுது...."

"என்ன அங்க சத்தத்தை காணோம்.... ஹ்ம்மம்மம்.....
இப்போ அமைதியா இருந்து என்ன ப்ரேயோசனம்டி...?!!"

"கருமம்டி.... உன்னையெல்லாம் நம்பி நான் ராத்திரி ஃபுல்லா... என்னோட டெய்லரிங் வேலையெல்லாம் விட்டு புட்டு காத்துக் கிட்டு இருந்திருக்கேன்...

ஆனா நீயி... அந்த வெள்ளச்சிய வெறுப்பேத்தனும்ன்னு... சத்தமா பாட்டை போட்டு குத்தாட்டம் போட்ருக்க... அதுவும் இல்லாம அவள வேலை செய்ய விடமா தடுக்க... அவளுக்கு குடிக்க வச்சிருந்த பால்லுல தூக்க மாத்திரை வேற கலந்து கொடுத்துருக்கிற....
ஹ்ம்ம்......

அதோட பிள்ளை போளச்சி போகட்டும்னு விட்டியா நீ... ?!? "

ஹாங்.... ?!?

என்று கை உயர்த்தி கேள்வி கேட்டாள் கீது....


என்ன மீதியை சொல்லட்டுமா...?! என்ற ரீதியில் புருவம் உயர்த்தினாள் கீது...


இவா விட மாட்டா போல...

மனம் கசங்கினாள் ஆரு.


"அதோட விட்டியாம்மா...நீ?!
வெள்ளச்சி கஷ்டப்பட்டு ரெடி பண்ண அந்த ரிப்போர்ட் பேப்பர்..ர்..ரை..."

பேப்பர் என்பதில் கொஞ்சம் இடைவெளி விட்டு... பின்...

"அந்த பேப்பர்ரை என்னங்க அம்மணி பண்ணினிங்க....?!?! "
ஹ்ம்மம்ம்.....

"தெரு பசங்க கூட சேர்ந்து... பேப்பர் ராக்கெட் விட்டு விளையாண்டு இருக்கீங்க...."


"அதுல வேற அந்த தடி மாடு ராஜேஷ் கூட சண்டை பிடிச்சிருக்கிற...?!"


"அவனெல்லாம் ஒரு மனுஷன்....?! சும்மாவே ஜொள்ளு விட்டுகிட்டு அலைவான்.... அவனை போய் ஏண்டி சீண்டுனா... "


ஹைய்யையோ.... ! இவளுக்கு எப்படி...?? நேர்ல பார்த்த மாதிரி... எல்லாம் தெரியுது.... ?!

என்று கைகளை பிசைந்தபடி... களவு செய்து மாட்டி கொண்ட பிள்ளை போல் முழித்தாள் ஆராதனா.....

"ஏய்.. இப்படி பச்ச பிள்ளை மாதிரி முழிக்காதடி... "

என்றபடி அவள் தலையில் வலிக்காமல் கொட்டினாள் கீது.

"அய்யயோ... அம்மா... அடிக்கிறாளே... யாராவது வாங்களேன்... ஹைய்யயையோ.... காப்பாத்துங்க....காப்பாத்துங்க.... " என்ற படி கத்தினாள் ஆரு...(ஆராதனா)

"ஏய்... கத்தினா கொன்னுருவேன்..." என்ற படி அவள் வாயை அழுந்த மூடினாள்..


"என்னடி.. உண்மையை சொன்னதும் இந்த கத்து கத்துற... இருடி... அந்த வெள்ளச்சி கிட்ட போட்டு கொடுக்கிறேன்.... "



"ஹேய்.... அப்படி மட்டும் செஞ்சிறாதடி... அவளுக்கு தெரிஞ்சா அம்மாட்ட வத்தி வச்சிருவாடி...."

"ப்ளீஸ் டி... நான் உன் பிரண்ட் இல்ல...?!?"

கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு... கொஞ்சமும் இரக்கம் காட்டாமல்... சொன்னாள் கீது

"இல்ல... இல்லவே இல்லை....!"


"நீ பிரண்ட் இல்ல.... என்ன பிடிச்ச சனிடி.. சனி..."

மீண்டும் மீண்டும் மண்டையில் கொஞ்சம் வலிக்கவே கொட்டினாள் கீது...

"சனியனே.. உண்ட எத்தனை தடவ சொல்றது.. அந்த எருமை ராஜேஷ் கிட்ட எதுவும் வச்சிக்காதன்னு...


"சொன்னா கேக்கிற ஐடியாவில் இல்லையோ நீ...!?!"

ஆருவிற்கு சட்டென ரோஷம் மேலோங்க ,

"ஹே... நான் ஒன்னும் அவன்கிட்ட வம்புக்கு போகல... அவனா தான் வந்தான்... "

"அடச்ச்சீ..! பேசி மழுப்பாதடி... "

"ஹேய்... நீ நினைக்கிற அளவு அவன் ஒன்னும் அவ்ளோ ஒர்த் இல்லைடி... அவன்லாம் காமெடி பீஸ்டி..."

என்று சொல்லி கல கல வென சிரித்தாள் ஆரு...

அந்த தெத்து பல் சிரிப்பில் இயற்கையாக சிவந்த கன்னங்களை கடித்து தின்னலாம் போல தான் இருந்தது....

"ஹ்ம்மம்ம்..... அதுவும் சரி தான்... ஆனாலும் அவன் மனசுல வீணா ஏன் உன் மேல ஆசைய வளர்க்கணும்....?!"

"அப்படிலாம் ஒன்னும் இல்லைப்பா.... அவன்கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன்... காதல் கீதல் எல்லாம் எனக்கு சரிப் பட்டு வராது... அதுவும் உன்னோட.... சத்தியமா முடியவே முடியாதுன்னு தெளிவா அவன்கிட்ட சொல்லிட்டேன்டி... சோ பயப்பட எதுவும் இல்லை.... நீ கவலைப்படாதா...ஓ.கே...?!"



"ஒன்னும் பிரச்சனை வராம இருந்தா சரி...."


தோள் மேல் தோள் கை போட்டபடி நடந்து வாசலில் போடப்பட்ட நாற்காலியில் போய் அமர்ந்தனர் தோழியர்....

கீது ஆருவை பார்த்து....

"அப்புறம் என்னடி... உங்க அப்பா என்ன இன்னும் கடைக்கு வரல...?! இந்நேரத்துக்கு வந்து இருக்கணுமே...."



"இல்லைடி இன்னைக்கு அம்மாக்கு ரெஸ்டுடாரண்ட் ஒர்க் வந்துருக்கு... நம்ம ஹேமா ஆன்ட்டி தான் கூப்பிட்டு இருக்கிறாங்க..."

"உனக்கு தான் தெரியுமே.. அம்மா நல்லா சமைப்பாங்கன்னு... அவுங்க ரெஸ்டாரண்ட்ல ஒரு குக் இப்போ தேவைப்படுதாம்... அதான் அம்மாவ கூப்பிட்டு இருக்கிறாங்க..."

"சோ அப்பா மதியம் தான் வருவாங்க..."

ஹேமா ஆன்ட்டி அவர்கள் காலனியில் வசிப்பவர். டவுனில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். இவரும் ஆருவின் அம்மாவும் தோழியர்.. நட்பின் காரணமாக உதவிக்கு சென்றிருக்கிறார் ஆரு அம்மா கீர்த்தனா...

"சரி சரி.... "

என்ற படி கீதாவும் ஆருவும் அவர்கள் காலனியில் நடந்த பிற வம்பு தும்புகளை பற்றி குதூகலத்துடன் பேச ஆரம்பித்தனர்...


====================================


"ரா ரா ரா ம் ம் ம் ம் ம் . . ."


"ஹேய்... ராம்... என்ன ஆச்சி... ஏன் அப்படியே பிரீஸ் ஆகி நின்னுட்ட.. "

"நீ முழிக்கிற முழிய பார்த்தா.... ஏதோ கனவுலத்துக்கு போய்ட்ட போல..."

"டேய்! என்னடா ஆச்சி..."

என்றபடி ராமின் தோள்களை உலுக்கினாள் அந்த சொப்பன சுந்தரி வதனா...

சட்டென தலையை உலுக்கிய படி நினைவுக்கு வந்தான் ராம்...

அட.. நாம் என்ன கனவா கண்டோம்...?!
ச் ச் ச...

ஹ்ம்ம்.... எப்போ தான் என் காதலை இவளிடம் சொல்லப் போகிறோனோ...

என்று பெருமூச்சு விட்டப்படி நிமிர்ந்து பார்த்தான்...எதிரே சிரித்த முகமாய் நின்றிருந்த வதனா பட்டாள்...

"ஹ்ம்ம்...ஒன்னும் இல்லை வதனா.. ஒரு சின்ன யோசனை.. சரி வா... போகலாம்... "

என்ற படி பஸ் ஸ்டாப் நோக்கி நடை போட்டான் ராம்.. கூடவே வதனாவும்...

அவர்கள் போகும் பாதை காதல் பேருந்தை அழைத்து வருமா... இல்லை வில்லனிடம் கொண்டு போய் சேர்க்குமா..?!

===================================

அந்த ரெஸ்டாரண்ட் வாசலை இடித்து தள்ளி விடுவான் போல... தன் ஆறடி உயரத்தையும், கட்டுமஸ்தான தோள்களையும் குறுக்கியப்படி உள்ளே நுழைந்தான்...

அந்த கிரேக்க ஆணழகன்...!

பார்ப்பதற்கு அந்நிய நாட்டு ஆடவனை போன்ற நாகரிகம் இருந்தாலும் .... அவன் இந்தியன் என்பதை முகம் கொஞ்சம் எடுத்துக் காட்டியது...

கண்ணுக்கு குளிர்ச்சியாக கருப்பு நிற குளிர் கண்ணாடியும்...., முனிவர் போன்ற உச்சி கொண்டையும்...., தோள் வரை சீராக கத்தரிக்கப் பட்ட கூந்தலும்...., பிரவுன் கலர் கலரிங் செய்தபடி இருந்த ஒன்றிரண்டு முடிகளும்..., கொஞ்சம் அழகுக்கு அழகு சேர்த்ததுப் போல இருந்தது....

ஆங்காங்கே சிறு சிறு கிளிசல் போட்டப்படி இன்றைய நாகரீக சட்டையும், வெளிர் நீல நிற ஜீன்ஸ்ஸும், அவனுக்கு கச்சிதமாய் பொருந்தியதோ...?!

ஆண்மை பொருந்திய அந்த நீள கழுத்தில் சில்வர் நிற செயினும்... அதில் பறவை டாலரும்... கூடவே ஜோடியாக ஒரு ஜெபமாலை போன்ற தோற்றத்தில் ஏதோ ஒரு பாசி மாலையும்... இடது கையில் பல வகை கயிறும்.... அவனை அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாமல் கொஞ்சமே.... என்ன ....?!?! நிறையவே வித்தியாசமாக தூக்கி காட்டியது....



கையிலிருந்த ஏதோ ஒன்றை ஸ்டைலாக வலக்கையிலிருந்து இடக்கைக்கு தூக்கிப்போட்டப்படி... அசால்ட்டாக... வெகு அசால்ட்டாக வே நடந்து வந்து கொண்டிருந்தான்.... அந்த முறுக்கேறிய கட்டுமஸ்தான உடம்புக்கு சொந்தக்காரன்.....


காலியாக இருந்த ஜன்னலோர இருக்கைக்கு சென்றமர்ந்த அவனை நோக்கி பேரர் சென்றார்....
கூடவே சுற்றியிருந்த பலரது கண்களும் தான்.....

அந்த உணவு பட்டியல் தாங்கிய அட்டை என்ன புண்ணியம் பண்ணியதோ.... ?!! அவன் விரல்கள் தீண்டியதில் காதல் உஷ்ணம் கூடி... மன்மதன் காலடியில் சரண் புகுந்தது.....

அவன்... அவன் பாட்டிற்கு அவனுக்கு தேவையானதை சொல்லி முடிக்க... பேரரின் முகம் ஒரு நொடி ஆச்சரியத்தை காட்டி சென்றது....

பேரர் நகர்ந்து விட... அவன் ஜன்னலுக்கு வெளிப்புறம் தெரிந்த அந்த அழகிய நீண்ட நீலநிறத்தில் வெள்ளைக்கோடுகள் ஒன்றன் பின் ஒன்றாக...ஊர்வலம் வந்து கொண்டிருந்த கடல்லலைகளையும்... கடற்கரையையும் ரசிக்க தொடங்கியிருந்தான்...


ஏதோ..அந்த இயற்கையை ரசிக்கவே பிறந்தவன் போல சுற்றியிருந்த எதையும் பொருட்படுத்தாமல்.... அவன்பாட்டிற்கு அவனுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்...

அவனது தவத்தை கலைப்பது போல் டேபிள் மேலிருந்த செல்போன் அழைப்பு விடுத்தது.

எடுத்தவன் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான்.....

"யெஸ் டாட்...
.................?

ஐ அம் பைன்...
..................?

ரீச்ட்டு அட் மார்னிங்.
....................!

நோ வொரி டாட். ஐ வில் பி தேர்அட் ரைட் டைம். ஓ. கே.... சி யூ டாட்.. லவ் யூ...!உம்மா!"


என்றபடி அணைப்பை துண்டித்தான். முகத்தில் புதிதாய் ஒரு இளநகை..!


கொஞ்ச நேரத்தில் பேரர் உணவு பாதர்த்தங்களை வைத்துவிட்டு சென்றுவிட... அவன் கண்களை கவர்ந்தது அந்த சிவப்பு நிற பீங்கான் தட்டும்... அந்த பத்தார்த்தமும்....!

"ஆகாய வெண்மையில்
பளிச் பளிச்சென மின்னுகிறது...
சிவப்பு நிற ரத்தின கற்கள்!

அள்ளி அணைத்திடுகையில்
கிலுக் கிலுக்கென சிரிக்கிறது....
பச்சை நிற மாணிக்கங்கள்!

ஆடி கூத்தாடுகையில்
மலுக் மலுக்கென சண்டையிடுகிறது...
மஞ்சள் நிற முத்துக்கள்!

அவசரமாய் இதழணைக்கையில்
சுருக் சுருக்கென வாட்டுகிறது...
கருஞ்சிவப்பு நிற வைடூரியங்கள்!

பெண்ணே! நீ எப்படி கை தேர்ந்தவளானாய்...?!
அனைத்தையும் கச்சிதமாய் தேர்ந்தெடுத்து...
சில்லிட வைக்கிறாய்...
மனதையும் உடலையும்..!!!"



(மக்களே...! இந்த கவிதை ஒரு உணவு பத்தார்த்தை பற்றியது. அதில் சேர்ந்துள்ள பொருட்கள் என்னன்னு ஒவ்வொன்றாக விவரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாசிக்க வாசிக்க பொருள் விளங்கும். பொருள் பிடிபட்டால் உணவின் பெயர் நாசியின் மணம் தீண்டும்.... என்ன கண்டுபிடிப்பீங்க தானே...?!?!)
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..
முதல் இரண்டு அத்தியாயங்கள் பதிந்து விட்டேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

நன்றி.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாளே!

அத்தியாயம் 3






தனித்துவமுண்டு
வெள்ளை நிறத்திற்கென்று..?!
அதில் கூட்டு சேரும் எதுவும்
வெளிச்சம் போட்டு தெரியும்...
இரவு வானில் நட்சத்திரம் போல
மனதை கொள்ளை கொள்ளுமே...?!!



வெள்ளை நிறத்திலான அந்த சாதத்தையும்... அதில் மின்னிய மாதுளை மணிகளையும்.. பசுமை நிறத்திலான குண்டு குண்டு திராட்சை மாணிக்கங்களையும்... மயக்கும் மஞ்சள் நிறத்திலான அந்த அன்னாசி பழ துண்டுகளையும்.... பக்குவமாய் தாளித்து பொரித்திருந்த அந்த கருஞ்சிவப்பு நிற வத்தலும்... அந்த சாதத்திற்கு கூடுதல் கவர்ச்சி தந்ததோ..?!

அனைத்தையும் பக்குவமாய் சேர்த்து.. கூடவே கொஞ்சம் கை மணம் தூக்கலாகவே கொட்டி.. நாசியின் வழியே இதயத்தை தட்டி மனதை திருடி சென்றது...

அந்த சிவப்பு நிற தட்டில் சிரித்த சாதம் ... அது... அது.... தயிர் சாதம்...!!!!


அவனுக்கு பிடித்த இந்திய உணவுகளில் முதன்மையானது.! உணவு உள்ளே இறங்க இறங்க.. அவன் இதயக் கிடங்கில் பொதிந்திருந்த அன்னையின் நினைவுகள் மேலோங்கி வந்தன....

ஒவ்வொரு கவளமும் அவன் அன்னையின் மணத்தை பிரதிபலிப்பதாய் இருந்தது...

வெகுநாள் கழித்து அவன் ரசித்து உண்டான்.. கொஞ்சம் வயிறு நிரம்பவே...!

தாயை விவரம் தெரியும் சமயத்தில் இழந்தவன் தான் அவன். வளர்ந்தது எல்லாம் பாட்டி மற்றும் அப்பாவுடன் தான். இருந்தும் தாயின் வாசம் அறிந்தவன். கடைசி பருக்கை வரை ரசித்து.. ரசித்து... சப்பு கொட்டி... கடைசியில் தாள மாட்டாமல் விரல் சூப்பி விட்டான்..



உடலும் மனமும் ஏதோ ஒரு வகையில்.. இத்தனை ஆண்டுகள் கழித்து... பெற்ற தாயை தேடியது...ஹ்ம்ம்ம்.... பெருமூச்சு விட்டபடி அது இப்போதைக்கு முடியாத காரியம்...என்று நினைத்து கொண்டான்...

சட்டென ஒரு யோசனை.! உடனே பேரரை கை அசைத்து அழைத்தான்.அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தான் . பேரர் யோசனையாக பார்த்தான்.

"ஹேய்.. டோன்ட் ஒர்ரி மேன்...ஜஸ்ட் வாண்ட் டு சி. தோணிச்சி.. அவ்வ்வ்ளோ தான்.போ போய் கூட்டிட்டு வா..."

"ஓ.கே சார்." பேரர் நகர்ந்து விட்டான்...

சில சில நிமிட இடைவெளிக்கு பிறகு தன்முன்னே வந்து நின்ற அந்த மனிதரை கண்டதும் விழிகள் பளிச்சிட சிரித்தான்.

பார்ப்பதற்கு மரியாதையான தோற்றத்தில் எதிரே வந்து நின்ற அந்த அழகிய பெண்மணியை நோக்கி எழுந்தவன், அவரோடு கை குலுக்கி தன்னை அறிமுக படுத்தி கொண்டான்.

அவரும் பதிலுக்கு,

"நான் கீர்த்தனா. இங்கே குக்கா ஒர்க் பண்ணுறேன். உங்களுக்கு செய்த டிஷ் நான் பண்ணது தான்.நீங்க என்னை பார்க்கணும்ன்னு சொன்னிங்களாம். என்ன விஷயம்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா . . ? !"

தன் எதிரே இருந்த காலி இருக்கையை காட்டி அமருமாறு சைகை செய்தான்.அவரும் "தேங்க்ஸ் " சொல்லிவிட்டு என்ன விஷயமாக இருக்கும் என்ற யோசனையில் அமர்ந்தார்.


"முன்ன பின்ன தெரியாத நான் கூப்பிட்டதும் கஷ்டம் பார்க்காம வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ். நான் உங்களோட டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. சட்டுன்னு விஷயத்தை சொல்லிடுறேன்" என்றபடி எந்தவித பீடிகையுமின்றி பேச ஆரம்பித்தான்.

"நான் இந்தியா வரப்போ எல்லாம் இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவேன். ஆனா அப்போல்..லா..ம் பீல் பண்ணாத ஏதோ ஒண்ணு இப்போ பீல் ஆகுது. சம்திங் ஸ்பெஷல்..! எ..எ..எனக்கு .. அதை எப்படி சொல்லுறதுன்னு சரியா தெரியல...

ஆனா. . .னா.. னா ஐ கேன் பீல் டிபர்ரன்ட் . அல்சோ ஐ லைக் தட்...

ஹ்ம்ம்.... அந்த பீ..பீல்..... என்ற படி தன் விரல்களை மடக்கி இதயத்தை தொட்டு காட்டி . .
இங்கே... எ . .எ. .என். .ன். .ன். .ன. .வோ செய்யுது ஆன்ட்டி ... சம்திங்..." கொஞ்சம் குரல் தழு தழுத்ததோ. .. .

"ஆன்ட்டி ன்னு உங்களை கூப்பிடலாம்ல. . . ?! ஒன்னும் பிரச்சனை இல்லையே..."

"ச் ச ச . . . நோ ப்ரோப்லம் தம்பி..."

"அதான் ஆன்ட்டி . . இந்த அளவு இதயத்தை கவர்வது மாதிரி சமைச்சது யாருன்னு பார்க்கணும்ம்னு தோணிச்சி..அதான் உங்களை கூப்பிட்டேன். . . "


"ஓ ! ரியலி... ரொம்ப சந்தோஷம் தம்பி... உங்களுக்கு இந்த டிஷ் இவ்வ்ளோ பிடிச்சதுக்கு. . . !"


அவரும் தம்பி முறைக்கு மாறி உறவை புதுப்பித்து கொண்டார். . .

அவன் அம்மாவை இழந்து தனியாக இருப்பது தெரிந்ததும் ரொம்பவே பரிதவித்துப் போனார் பெண்மணி.

அம்மாவின் இழப்பை மறக்கும் பொருட்டு அவனிடம் பேச்சு கொடுத்தார்.. கொஞ்ச நேரத்தில் அவன் ஜாதகமே இவர் கையில்... அவன் அமெரிக்க வாழ் இந்தியனாம். தமிழ்நாட்டு தகப்பனுக்கும்...மும்பை தாய்க்கும் பிறந்தவனாம். சிறு வயதிலே தாயை இழந்ததால் அப்பாவுடனும் பின் அப்பாவின் அன்னையிடமும் அதாவது இவனது அப்பம்மாவிடமும் வளர்ந்தானாம். படித்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவாம். இப்போது அப்பாவை பார்ப்பதற்காக இந்தியா வந்திருக்கிறானாம். அப்படியே ஊர் சுற்றி பார்த்து விட்டு உடனே கிளம்பி விடுவானாம்.இது தான் இப்போதைக்கு இவனது திட்டம்.

பேச்சு பேச்சாக. . . அவர்கள் உரையாடல் கொஞ்ச நேரம் தொடர்ந்தது. முடிவில் இருவரும் அவ்வளவு நெருக்கமாகி விட்டனர்.

கீர்த்தனா தாயாக மாறி அன்பு மழை பொழிய ஆரம்பித்து விட்டார்.

விடைபெறுகையில் அமெரிக்கா கிளம்பும் முன் ஒருமுறை தன் வீட்டிற்கு வருமாறு அழைப்பு வேறு. . . !

அந்த அளவு இருவரும் உணவால் உணர்வால் இணைக்கப்பட்டனர் .

இது தான் தமிழ் காலச்சாரமோ ... உணவால் கட்டிப் போடுவது என்று இதை தான் சொல்வார்களோ . . ?!


____________________________________________________



" அம்மாடி ஆராதனா . . .! ஆரு . . ! அப்பா வர கொஞ்சம் நேரம் ஆகிடிச்சி.."

என்று சொல்லியபடி தன் வண்டியை கடையின் அருகில் பார்க் பண்ணியவர் ஆருவிடம் . .

"உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையேம்மா . . . ?!"

"நோப்பா. . "

"சரிம்மா . . நீ வீட்டுக்கு போ. நான் கடையை பார்த்துக்கிறேன் . நீ ஈவ்னிங் வந்தா போதும். சரியா. . . ?"

"சரிப்பா... பை பை . . " என்ற படி கையில் ஒரு குச்சி மிட்டாயுடன் , விடை பெற்று சென்றாள் ஆரு . ..

அவள் அப்பா தேவேந்திரன் சிறு துள்ளலுடன் செல்லும் தன் அன்பு மகளை ஆசை பொங்க பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தார். . .


__________________________________________________

அவசர அவசரமாக அனைத்து கோப்புகளையம் சரிபார்த்து வரிசையாக பார்வைக்கு தகுந்தார்ப் போல் வைத்துக் கொண்டிருந்தாள் வதனா.

சட்டென அவளுக்கு பிடிப்பட்டது. முக்கியமான பேப்பர் பண்டில் ஒன்று மிஸ்ஸிங் . மீண்டும் அந்த கோப்பை சரி பார்த்தாள்.

அவள் நினைத்தது சரி தான். அந்த பேப்பர்ஸ் இங்கில்லை. . .

அது எப்படி. .. ??? நேநே ற் ற் று தானே . . . ?!!! என்று புருவம் சுருக்கி யோசித்தவளுக்கு சட்டென பொரி தட்டியது......

"ஆ ஆ ஆ ர் ர் ரூ ரூ ரூ . . . "

அந்த பளிங்கு பற்களுக்கிடையே அவளது பெயர் கடிப்பட்டு சின்னா பின்னாமானது . .

"யூ . . யூ . . யூ. . யூ . . ! செத்தடி நீ. . . நீ தான். . .! கண்டிப்பா இது நீ தான். . . ! இருடி . . . வீட்டுக்கு வந்து வச்சிக்கிறேன் . . ." என்றபடி தன் வலக்கையில் கட்டியிருந்த டைட்டன் கடிகாரத்தை பார்த்தாள். மணி 10.30. மீட்டிங்கிற்கு இன்னும் 30 நிமிடம் இருக்கிறது.

வேக நடை போட்டு. . . தன் குதிகால் செருப்பின் இசையோடு . . கைகளை காற்றில் அசைத்து . . கொஞ்சம் வேகமாக தன் அறைக்கு சென்று, தான் ஏற்கனவே சேவ் பண்ணி வைத்திருந்த பென் டிரைவை எடுத்தாள். கணினியை உயிர்ப்பித்து அத்தனை பேப்பர்களையும் ஒரு பிரிண்ட் எடுத்தாள். . .


"ஷ் ஷ் ஷ் . . . ஹப்பாடா . . . வேலை முடிஞ்சது . . . !"

அனைத்தையும் சரியாக அடுக்கிய பின் எழுந்து மீட்டிங் நடக்கவிருக்கும் ஹாலிற்கு சென்றாள் பெண். . இம்முறை கொஞ்சம் மெதுவாகவே. . . டென்ஷன் இல்லாமல் அமைதியாகவே. . . !
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாளே

அத்தியாயம் 4


கோலங்கள். . . கோலங்கள். . .
அழகான கோலங்கள். . .
கோலங்கள் கோலங்கள். . . .
ஓ. . .ஓ ஓ ஓ ஓ . .. . ஓ. . . .
ஓ . . ஓ. . ஓ . . ஓ . . .ஓ. . .
பெண்ணே! எழுது . . . .
புது கோலம் எழுது. . . .

ஓ . .. ஓ. . . .ஓ
. .. . என்று தன் காந்த குரலால் அலறிய படி அக்கோவில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட ஆயத்தமானாள் ஆரு. இந்த அலங்கோலத்திற்கு துணையாய் கீது வேறு . .!

"ஹேய் . . ஆரு சரியா போடுடி.. அந்த பூ இந்த புள்ளில இருந்து ஸ்டார்ட் பண்ணா தான் கரெக்ட்டா இருக்கும். ஒழுங்கா பாறு..!"

"ம்ம்ம். . ." என்று தான் வைத்த அந்த டைனோசர் போன்ற முட்டைகளை ஒரு முறை மேலும் கீழும் ஆராய்ந்தாள் அவள்....

பின் ஏதோ முடிவுக்கு வந்தவளாய் . . . "ஆமா . .. நீ சொன்னது சரி தான். . . நான் பாட்டிற்கு இந்த புள்ளில ஆரம்பிச்சிருந்தா கோலமே கன்றாவியா போயிருக்கும்.. . நீ அந்த பக்கம் இருந்து போட ஆரம்பி. நான் இந்த சைடு போடுறேன்.. ஓ . கே வா ?"

என்று முடிவு செய்து ஒரு வழியாய் கோலம் போட ஆயத்தம் ஆனார்கள் தோழியர்.

அப்போது இவர்கள் இருந்த பக்கம் வந்த லட்சுமி பாட்டி (கீதுவின் பாட்டி ) இவர்களிடம்,

"என்ன ராசாத்திகளா . . . ?!!! இன்னுமா கோலம் போட்டு முடிக்கல . . . ?!! ஒரு வாரம் ஆகுமா. . இல்ல எப்படி . . . ?!" என அவ்விளம் பெண்களின் மூக்கை அழகாய் உடைத்தார் அந்த காலத்து இளைநி . . . .


"இதோ பார்ரா கிழவிக்கு குசும்ப. . ." -ஆரு

"ஹே சும்மா இருடி . ." -கீது

"போடி இவள . . நாமளே இப்போ தான் புள்ளியை வச்சி ஒரு கண்டத்தை தாண்டிருக்கோம். அதுக்குள்ள மைக் போட்டு ஊருக்கே நம்ம லட்சணத்தை சொல்லுது பாரு . . . இந்த கிழவியை சும்மா விட கூடாது இன்னைக்கு . . . " என்றபடி தன் துப்பட்டாவை இறுக்கமாய் முடிச்சு போட்டப் படி எழுந்தாள் ஆறு. . .


"நான் கோலம் போட்டு முடிக்கலைன்னா நீ என்ன உன் வீட்டுல விளக்கு வைக்காமயா இருக்க போறா. . ?!? இல்ல . . " என்று மேலே ஏதோ கேட்க போன ஆருவின் வாயை தன் கை கொண்டு மூடியவள். . .

"இதோ பாட்டி. . இன்னும் கொஞ்ச நேரத்தில முடிச்சிடுவோம் . . .நீங்க போங்க பாட்டி . .. " என்றபடி பல்லிளித்தாள் கீது .. .


"சரி தான். . . சீக்கிரம் ஆகட்டும். .. நான் பூஜைக்கு தேவையான சாமான்கள் சரியா இருக்கான்னு ஒரு முறை அர்ச்சகரை போய் பார்த்துட்டு வந்துருதேன். .." என்றபடி அவர் நடையை காட்டினார்.

அவர்கள் இருந்த ஏரியாவின் தெரு முனை பிள்ளையார் கோவிலின் முன் தான் இந்த கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பாட்டி தான் இவர்களை கோலம் போட அழைத்திருந்தார்.

அக்கோவில் ஒன்னும் அவ்வளவு பெரியது அல்ல. 10 அடிக்கு 15 என்ற ரீதியில் அமைந்திருந்த சின்ன கோவில். அங்கே சுற்றி குடியிருப்பவர்கள் தினம் தினம் பூஜை செய்து வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.


" ஒரு புன்னகை பூவே. . !
சிறு பூக்களின் தீவே. . !

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது. . .
உன் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது. . .
லவ் பண்ணு . .. லவ் பண்ணு . . . . "


என்றபடி 5 வயது குழந்தைகள் ஓட்டும் சிறிய ரக சைக்கிளை ஓட்டியபடி வந்து கொண்டிருந்தான் அக்காதல் ரோமியோ ராஜேஷ்.

ஆருவை நோக்கி . . . ஆருவையே பார்த்தப்படி . . மெதுவாக. . . ஆமை வேகத்தில் ஊர்ந்த படி வந்தவன் மீண்டும் பாடினான் .

"ஒரு புன்னகை பூவே. . . !
சிறு பூக்களின் தீவே. . .!
நீ என்னை மட்டும் காதல் பண்ணு . . "


என்றபடி ஒரு சிவப்பு நிற ரோஜாவை ஆருவை நோக்கி வீசினான்.

கோலம் போட்டுக் கொண்டிருந்த ஆரு தூரத்தில் அவன் வரும் போதே கண்டு கொண்டாள்.

ஏதோ ஒரு பொடியனிடம் சைக்கிளை பிச்சை கேட்டு வாங்கி வந்திருப்பான் போலும். அதையும் ஒழுங்காக ஓட்ட முடியாமல் கஷ்டப்பட்டு அங்கேயும் இங்கேயும் . . முட்டி. . விழுந்து. . . தள்ளாடியபடியே வந்ததை தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாளே. . .

அவன் வந்து கொண்டிருந்த தினுசில் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. கஷ்டப்பட்டு தலை குனிந்தவாறே அதை மறைக்க அரும்பாடு பட்டாள் பெண் . பக்கத்தில் தான் கீது இருக்கிறாளே. . .! நானாக ஏதாவது செய்தால் கண்டிப்பாக இவள் என்னை கொன்றேப் போட்டு விடுவாள். சோ குளோஸ் மௌத்...! என்று கம் போட்டு ஒட்டிக் கொண்டாள் .

ஆனால் அந்த மன்மதனோ விட்டானா . . . ?!

அவள் மீது ரோஜாவை தூக்கிப் போட்டதும் இல்லாமல் . . . காதல் பாட்டு வேறு பாடுகிறான்.

ஹைய்யோ இந்த ரோஜா ஏன் கீதுவின் காலடியில் போய் விழுந்தது. . . பார்த்து விட். . ட். . ட். .டா. . ளோ . . . ? ! சரி தான். பார்த்துட்டாளே பக்கி. . . இனி இவன் செத்தான் . . என்று நினைத்தப்படி கீதுவை நிமிர்ந்து பார்த்தாள் ஆரு .

காதல் ரசம் சொட்ட. . . சொட்ட. . . அங்கே ராஜேஷ் தன் இரு கால்களையும் நிலத்தில் ஊன்றிய படி. . . கைகளை ஆட்டி ஆட்டி மீதி பாடலையும் பாடி க் கொண்டிருந்தான்.



"என் வாலிப நெஞ்சம். .
உன் காலடி கெஞ்சும். . .
சிறு காதல் பிச்சை போடு கண்ணு . .


நான் கெஞ்சி கேட்கும் நேரம் . . .
உன் நெஞ்சின் ஓரம் ஈரம் . . .
அச்சோ . . . அச்சோ. .. காதல் வாராதோ. . ?. . !
சூரியன் வாசல் வந்து ஐஸ்கிரீம் கொடுக்கும். . .
ஓடாதம்மா. . .வீழாதம்மா . . .
சந்திரன் உள்ளே வந்து சாக்லேட் கொடுக்கும். . .
சூதாதம்மா . . . ரீலுதாம்மா. . . "


பொறுத்து பொறுத்து பார்த்த கீது ,

"அடங்க மாட்டானே இவன். . . " என்றபடி எழுந்தே விட்டாள் .

அவனோ...

"உன் படுக்கை அறையிலே. . .
ஒரு வசந்தம் வேண்டுமா. . . ?!"


"பார்த்தியாடி நம்ம தெரு ரோமியோவை . . .?!" -கீது

"ஹம்ம்ம்ம்ம்......" இது ஆரு.


அவன்

"உன் குளியறையிலே . . . .
. . . . . . .. . . . . . . . . . . . . .. . . . ."


என்று தன் மீதி பாட்டை தொடர்ந்தவன் மேல். . . . தன் அருகே இருந்த தண்ணீர் நிரம்பிய வாளியை அப்படியே தூக்கி வீசினாள் பெண் கீது.. . !. . . .!



தண்ணீரோடு வாளியும் சேர்ந்து அவன் தலையில் அபிஷேகம் செய்ய. . . ..


"ஹைய்யோ . . . . . . அம்ம்ம் ம் ம் மா. . . . . . .!!!!!!" என்று கதி கலங்கியபடி விழுந்தே விட்டான். . . அந்த காதல் சிற்பம் கேட்பாரற்று தரையில் வீழ்ந்து கிடந்தது.


"எடுடி.. அந்த துடைப்பத்தை. . .! அய்யோ. . ! பாவம் ம் ம் ன்னு . . . சும்மா விட்டா . . . கழுதை பாட்டுலாம் பாடுது. . ."



துடைப்பத்தின் மறுமுனையை கையில் அடித்தப்படி பஜாரியாய் நின்றிருந்தாள் கீது.


"என்ன திண்ணக்கம். . . உனக்கு. .. ?! என் மேலயே தண்ணீரை அடிக்கிற. . அது மட்டும் இல்லாமல் வாளியை என் தலை மேல போட்டு என்னை கொல்ல வேறு பார்க்கிற. . ?" தன் கை சட்டையை மடக்கியப் படி எழுந்தான் அக்காதலரசன்.

"என்னடா. . . ?! அடி ரொம்ப பலமோ. . ?!"

துடைப்பத்தை மறு கைக்கு மாற்றியப்படி கேட்டாள் அவ்வீராங்கனை கீது.


ஏ ஏ ஏ ய் ய் ய் ய் . . . ! -ராஜேஷ்.


ஏ யே ய் ய் ய் . . . . .!. . . . ! -கீது.

இருவரும் கத்திய கத்தலில் ,யார் குரல் ஓங்கி ஒலித்ததோ தெரியாது.


கோபத்தில் கீது. . . துடைப்பத்தை கொண்டு அவனை அடிக்க ஓ. . ஓ. . ஓ . . ங் . . ங் . .க . .. .. !!

அக்கணம். . . முன்னோடி. . . . ஆண்மகன் கொஞ்சம் விழித்துக் கொண்டானோ. . ? !

அது நாள் வரை காமெடி பீஸ் போல் இருந்தவன். . . தன் ஐந்தரை அடி உயரத்திற்குமாய் . . அநியாயத்திற்கு நிமிர்ந்த படி நின்றான்.. ! அந்த பரந்து விரிந்த தோள்களும். . . முறுக்கேறிய கைகளும் . . . . முறுக்கி விட்டபடி இருந்த மீசையும் . . . ஆண்மை ததும்பும் வீரனாக காட்சியளித்தான்.

ஒரு நொடி. . . கீதுவினுள் பயத்தின் தென்றல் இதமாக . . . பதமாக. . . பட்டும் படாமலும். . . வீசி சென்றதோ. . . ?!

"ஹ்ம்ம். .. " அதை அலட்சியமாக உதறியபடி அவனை . . . அவளும் நிமிர்ந்து பார்க்க முயன்றாள். கொஞ்சம் கெத்தாகவே. . . !


அப்போது . . . அப்போது. . . எதுவோ இடம் மாறியதோ. . . எதுவோ தடம் புரண்டதோ . . ?! ஆனால் எதுவோ ஒன்று இனம் காண முடியாத நிகழ்வு நடந்தது. . .


மன்மதன் கள் மயக்கத்தில் தன் மலர் மாலையை ஆள் மாற்றி வீசி விட்டானோ. . . ? . . ?!


அவனும் நோக்கினான். . . அவளும் நோக்கினாள் . . .


செந்தீயாய் தொடங்கிய தகிக்கும் பார்வைகள். . . கொஞ்ச கொஞ்சமாய். . . தனிந்து . . . காதல் ஜமுக்களத்தில் சாய்ந்து படுத்ததோ. . ? ! அத்தருணத்தை இனிமையாக்க வேண்டி காதல் தேவதைகள் கொஞ்சம் இசை சேர்க்க விரும்பினவோ . . ?! குருவிகளின் பாஷை இசைக்கு வலுவூட்டியதோ . .. ? கொஞ்சம் தித்திப்பாக கரைந்தது நிமிடங்கள். . .


முதலில் சுதாரித்தது மங்கையவள் தான். அப்போது தான் கவனித்தாள் . . தன் துடைப்பம் தாங்கிய கையை அவன் கரம் இரும்பு பிடியாய் பிடித்திருந்ததை.


அவளுள்ளே எழுந்த ரசாயன மாற்றத்திற்கு மேலும் வித்திட்டது அந்த ஆண்மகனின் உஷ்ணம்.. . .


அவனுள்ளும் ஏதோ நடந்ததோ. . .?! ஆனால் அம்முகத்தில் ஏதும் இனம் காண முடியலயே . . ?!?

புரியாமல் பேந்த பேந்த விழித்தாள் பெண்.

இவர்கள் பேசும் காதல் பாஷைகள் . . கரம் பிடித்தவுடன் மலருமா. . ?! இல்லை சருகாகுமா . . ?!

"தொட்டவுடன் மலர்வதென்ன. . .
பூவே. .
தொட்ட ஆண்மகன்
மனம் கவர்ந்ததாலா . . ?!
பார்வை பட்டவுடன்
நாணம் கொள்வதென்ன . . .
மலரே. .
காதல்கொண்டதாலா . . ?!"



____________________________________________________

அந்தி மாலை பொழுது. . . ஒளி என்னும் பெண்ணின் இதழை இருள் என்னும் அரக்கன் இதமாய் அரவணைத்திடும் பொழுது . . ! பறவைகளின் கானம் வேறு. . குழந்தைகளின் விளையாட்டு சத்தம் கூடவே வலு சேர்க்க. . . அந்த இதமான சூழ்நிலையை ஆழ்ந்து அனுபவித்தப் படி தன் வீட்டு பால்கனியில் சுவரோரமாய் இருந்த நாற்காலியில் ஓய்வாக. . கொஞ்சம் சாய்வாக அமர்ந்த படி. . . அன்றைய பொழுதை மெதுவாக அசைப் போட்டபடி இருந்தார் கீர்த்தனா.


"அம்மா. . " என்றழைத்தப்படி ஆபிசிலிருந்து வந்த வந்தனா , அம்மாவின் தோளில் வாகாக சாய்ந்த படி அமர்ந்தாள்.


"என்னம்மா. . .வேலை அதிகமா. . முகம் ஏன் டல்லா இருக்கு ? " என்று கேட்டார் அம்மா.

"அப்படி லாம் எதுவும் இல்லைம்மா. நார்மல் ஒர்க் தான். வரும் போது கொஞ்ச தூரம் காலார நடந்து வந்தேன்.அதான் உங்களுக்கு பார்க்க அப்படி தெரியுது.. . "

"சரிம்மா. . நீ ரெபிரேஷ் ஆகிட்டு வா. . . நான் உனக்கு "டீ " கொண்டு வரேன்."

"ஓ.கே.ம்மா. . . !" என்றபடி தாவி படிக்கட்டுகளின் படிகளை கடந்து சென்றாள்.

மேலே வந்தவள் நேரே தனதறைக்கு செல்லாமல். . . ஆருவின் அறைக்கு சத்தமில்லாமல் சென்றாள்.



நேராக பாத்ரூமிற்கு சென்றவள் இரு பாக்கெட் களிலும் தண்ணீரை நிரப்பினாள் . பின் அறைக்கு வந்து கட்டிலில் மேலிருந்த பெட்சீட் தலையணை,பெட் அனைத்தையும் எடுத்து மறைவாய் ஓரிடத்தில் வைத்தாள் .

பின் பிளாஸ்டிக் வாட்டர் பூல் கவரை கட்டிலின் மீது கச்சிதமாக பொருந்துமாறு செட் செய்தாள். அதில் தான் பிடித்து வைத்திருந்த தண்ணீரை மெதுவாக ஊற்றினாள். பின் பழையபடி போர்வையை எடுத்து கட்டிலின் மீது தண்ணீர் மீது படாமல் அழகாக பார்க்க படுக்கை மாதிரியே அமைத்தாள்.

"டன் . . முடிஞ்சது. . . .!

ஹா ஹா ஹா. . . ."

வில்லன் . . இல்ல இல்ல வில்லி சிரிப்பு சிரித்துக் கொண்டாள். தன் தோளை தானே தட்டி கொடுத்தபடி....
"சபாஷ். . வது. . . ! இது தான் சரியான தண்டனை... மகளே ஆரு. . . ! உனக்கு வச்சிருக்கேன்டி ஆப்பு. . .! ஐ ம் வைட்டிங் . . . . " என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள் . . .



"டன் டனக்கா . . . டன் டனக்கா . . . .

னக்கா. . .. னக்கா. . . ."

ஆடியபடியே தன் அறை நோக்கி சென்றாள் வதனா . .



------------------------------------------------------------------
அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முன் பிளாக் கலர் ஆடி கார் வழுக்கி கொண்டு வந்து.. சத்தமின்றி தரையை முத்தமிட்டு கொண்டு வந்து நின்றது..

அதிலிருந்து புயலாய் இறங்கினான் அவ்வழகிய இளைஞன். தன் முத்து பல் சிரிப்பில் அனைவரையும் கிற்ங்கடித்தப்படி அந்த அறை நோக்கி வேக எட்டுகளுடன் சென்றான்.

"ஹாய் டாட். . .!" என்றபடி எதிரே நின்றிருந்த தன் அன்பிற்குரிய தகப்பனை ஆர தழுவி கொண்டான். அவன் ரவி. "ரவி வர்ம குலோத்துங்கன்.... " வர்மா குரூப்ஸ் ஆப் கம்பெனியின் இளவரசன். நம் கதையின் நாயகன்.


"ஹாய் மை டியர் சன். . . . !" குரல் தழு தழுக்க . . . அந்த வயதீகம் அடைந்த... தேக்கு மரம் போல் இருந்த. .. அவ்வாலிபன் ஆர தழுவிக் கொண்டான். . . அவர் ராஜ சேகர வர்மா. வர்மா குரூப்ஸின் எம்டி... ரவியின் தந்தை.


வெகு நாள் கழித்து நேரில் பார்க்கிறார்களே. . . சொல்ல வேண்டுமா என்ன. . .?!


"டேய்!எப்படி டா இருக்க. . . ?"

"ஐ ம் பைன் டாட். . "

"இப்போ தான் இந்த கிழவன் நியாபகம் வந்தா. . ?!"


"ஹே. . . யாரு கிழவன். . பார்ர்கிறதுக்கு இன்னும் வாலிப வயசு பையன் மாதிரி இருந்துகிட்டு பையனுக்கு பேச்சை பாரேன். . " என்று சிரித்தபடியே பதில் கொடுத்தான் ரவி வர்மன். . .


"தென் . . இது என்னடா கோலம்..?! சாமியார் கணக்கா ... ஆளும் .. மண்டையும்.. . என்னடா இது. . . ?!" என்று தலையில் அடித்துக் கொண்டார்...

"ச் ச். . .டாட். ஐ லைக் இட் . சோ. . ." என்று இதற்கு மேல் இந்த பேச்சு வேண்டாம் என்பது போல் ஷார்ட்டாகவே பதில் கொடுத்தான்.

பெரியவரும் அதை புரிந்து கொண்டாரோ என்னவோ அதற்கு மேல் அந்த பேச்சு பேச வில்லை. . .

"தென் வாட் ஸ் யுவர் பிளான்...?"

" வான்ட டு ஸ்பென்ட் சம் டைம் வித் யு . தென் ஒன் கோவா ட்ரிப். நெக்ஸ்ட்..." என்றபடி கையை கீழிருந்து மேல் நோக்கி பறந்தபடி காட்டி "அமெரிக்கா வாசம் தான்" என்றான்.


"ஓ. . .அது சரி.. அப்புறம் எப்போடா எனக்கு ரெஸ்ட் கொடுக்க போற?! என்றார்...

அவனோ " இப்போதைக்கு இல்ல" என்றான்.

"அட.. போடா. . நானும் நீ வந்து பொறுப்பேத்துப்ப , நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பார்த்த விட மாட்டியே.. சீக்கிரம் இந்தியாவிலே செட்டில் ஆகிற மாதிரி வாடா . . .! " என்று வாகையாக புன்னகைத்தார்...

அப்புன்னகையின் அர்த்தம் என்னவோ. . ?!

"கண்டிப்பா ப்பா . . பட் என்னோட டைம் இன்னும் வரவில்லையே ..." என்று இரு கைகளையும் விரித்து குறும்பாய் சிரித்தான்.


விவிலியத்தில் ஒரு நிகழ்ச்சி வரும். அதில் கன்னி மரியாளும், இயேசு பிரானும், அவர் நண்பர்களும் ஒரு திருமண வைபோகத்திற்கு சென்றிருப்பார்கள்.

அப்போது அங்கே எதிர்பாராத விதமாக திராட்சை ரசம் தீர்ந்து விடும் . (அன்றைய கால கட்டத்தில் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போது திராட்சை ரசம் பரிமாறப்படும் . இப்பொழுது கூட சில கிறிஸ்தவ திருமணங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது ). இதை அறிந்து கொண்ட மரியாள் , இயேசுவிடம் வந்து " மகனே. .! திராட்சை ரசம் தீர்ந்து விட்டது" என்பார். அதற்கு அவர் " அம்மா! என் நேரம் இன்னும் வரவில்லையே. . .?! " என்று நாசூக்காக மறுப்பார்.

ஆனால் மரியாவோ.. அங்கு இருந்த பணியாட்களை பார்த்து.. இயேசுவை கை காட்டி "இவர் உங்களுக்கு சொல்வதை எல்லாம் செய்யுங்கள்" என்பார் .

அப்புறம் என்னங்க . . .அம்மா சொல் தட்ட முடியாம இயேசுவும் அம்மாவோட ஆசையை நிறைவேற்றுவார். அது ஒரு சுவாரசிய கதை.

ஹ்ம்ம்... அது போல தான் ராஜ சேகர வர்மாவும் மகனிடம் மேலும் வாதாடாமல் அவன் போக்கிலேயே போய் தன் ஆசையை நிறைவேற்ற நினைக்கிறாறோ . . ?!

எது எப்படியோ. . இந்த வாலிப சிங்கத்தை அந்த கிழட்டு வாலிப சிங்கம் கட்டி போடுமா என்ன. . . ?
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai friends..
அடுத்த அத்தியாங்கள் பதிந்து விட்டேன். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாளே . . . !

அத்தியாயம் 5


“என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு . . .
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன். . .
செல்லறிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு. . . !

ஓ ஓ ஓ ஓ . . .

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை. .
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு. . .!

ஓ ஓ ஓ ஓ . . . . . . “






தென்றலாய் காற்றிலே கலந்து ஒலித்தது இன்னிசை பாடல். அனால் இவை ஏதும் காதில் விழாமல் அந்த புத்தம் புது இளஞ்ஜோடி தன் போக்கில் கனவில் மிதந்த படி இருக்க. . . சில நொடி பொழுதுகள் கடந்தும் இதே நிலை நீடிக்க. . . அது வரை பொறுத்து. . பொறுத்து. .. பார்த்த ஆராதனா இனியும் முடியாது என்றெண்ணி. .
அவர்கள் அருகில் வந்து கோர்த்திருந்த இரு கைகளையும் பிரித்து விட்டாள் .

"ச் ச் ச்சு . . போதும் நிறுத்துங்க...!" என்று இருவரையும் பொதுப்படையாக பார்த்து கூறியவள்..,

பின் கீதாவை பார்த்து . . ,

"ஏய் ! கீது. . . அவன் தான் லூசு தனமா பிஹேவ் பண்ணறானா .... உனக்கு என்ன ஆச்சி. . ? ! நீ அவனை விட மோசமா கேனத்தனமால நடந்துக்கிற. . ! !

அவனை பற்றி தான் தெரியுமே. . ஏதோ ஒரு ஆர்வத்துல. . பைத்தியக்கார தனம் பண்றானா. . . நீ என்னடானா . . அவன் கூட சரிக்கு சமமா வம்புக்கு நிக்குற. . ?!

எல்லோரும் பார்க்கிற மாதிரி இருக்கிற இடத்துல இருந்துகிட்டு ரெண்டு பேரும் என்ன விளையாடுறீங்களா . . ?! "

ராஜேஷ் புறம் திரும்பியவள் ,

“டேய் ! உனக்கு வேற வேலை இல்லை. . ? எதுல காமெடி பண்ணனும்ம்னு ஒரு விவஸ்தை வேணாம். . . ? ! நீ பண்ணற இந்த அலம்பல் எல்லாம் பொண்ணுங்க எங்களை எந்த அளவு பாதிக்கும்னு உனக்கு தெரியுமா. . ?!

என்னை பொறுத்த வரை நீ இந்த ஏரியாவில் வசிக்கிற ஒரு பையன்! புரிஞ்சுதா உனக்கு . . ?! ஏன் இப்போ மட்டும் மரம் மாதிரி நிக்குற. . ?! வாயை திறந்து பேசுடா மடையா . . ? ? ! !

சும்மா ரோமியோ மாதிரி பூவை தூக்கிட்டு அலையாத . . ?! புருஞ்சுதாடா .. "

"இந்த உலகத்துல பாதி பேர் . . நீ எனக்காக பிறந்த ஜீவன்னு நினைச்சி . . காதல் ஹார்மோன் கூட விளையாடி. . அப்புறமா பல அடிகள் பட்டு . . . வாழ்க்கைன்னா என்னன்னு நிதர்சனம் புரிஞ்சி. . .அதற்கு அப்புறம் தான் தனக்கான நிரந்தர துணையை கண்டுப் பிடிக்கிறாங்க. . .!


இதுக்கு நீயும் விதிவிலக்கு இல்ல. . ."



"உனக்குன்னு ஒருத்தி வருவா. . . அப்போ நீயும் நல்ல இடத்துல இருந்தா. . . அவளா உன்னை தேடி வந்து காதலை சொல்லுவா. . " என்று கீதாவை ஒரு பார்வை பார்த்து கூறினாளோ பெண்ணவள் . . . ?!

"ஹ்ம்ம்ம்...... சரியா. . . நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா. . . ?! "

என்று சில பல அறிவுரை மழைகளை பொழிந்த ஆராதனா. . .அவனை கிளம்ப சொன்னாள்.

ஆனால் அம்மாயக்கண்ணன் அசைந்தானில்லையே . . !

அவன் தான் தன் இந்நாள் . . . இந்நொடி. . புதிதாய் பிறந்த தன் காதலியை வைத்த கண் வைத்தப்படி பார்த்துக் கொண்டே இருந்தானே. .



" என் முன்நாள் காதலியே . . .
நீ சொன்னால் நான் கேட்பேனோ . . ?!
உன் கேள்விகளுக்கு பதில் சொல்லிட தோணலையே . .
ஏனென்றால் இன்று
என் காதலியை கண்டுகொண்டேனடி பெண்ணே. . .!
வருவேனடி நான் மீண்டும் . . .
புதிதாய். . . வளமான எதிர்காலத்தோடு. . .
உன் தோழியின் கழுத்தில் மாலை சூட. . . "




என்று மனதால் கவிபாடிய படி கீதாவிடம் விழியசைவால் விடைப் பெற்று சென்றான் அவன். அவன் ராஜேஷ்.. இப்பொழுது அவன் கீ. . தா. .வி. .ன் ராஜேஷ். . . !


மந்திரித்து விட்ட ஆடு போல ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்து இருந்தாள் கீதா. என்ன நினைத்தாளோ ஆருவும் அவளிடம் தோண்டி துருவி கேட்காமல் விட்டு விட்டாள்.


_________________________________________________

இயற்கை புல்வெளியில் நடந்தபடி தன் அலைபேசியில் பேச ஆரம்பித்திருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன் தன் ஆசை பாட்டியிடம்.

"யெஸ் . . கிரன்னி .... ஐ ம் குட் . .. "

"யு டோன்ட் ஒர்ரி டார்லிங். . . !"

"ஹவ் இஸ் தி டே . .. ?! "

"போடா. . . ஒண்ணுமே நல்லா இல்லை. . .. நீ இல்லாம எனக்கு என்னவோ போல இருக்குதுடா .... பேசாம நானும் உன் கூடவே வந்துருக்கலாம் போல. . . ." அங்கலாய்த்தார் ரவி வர்மாவின் பாட்டி பார்கவி.


"ஸ் ஸ் ஸ் ஸ் ஸ். . . என்ன பாட்டி . . . உங்களுக்கு இந்தியா வரணும்ன்னு தோணிச்சுன்னா வாங்க. .. என்கிட்ட ஏன் பெர்மிஷன் எல்லாம் கேக்கிறீங்க . .. ?!" புன்னகைத்தான் பேரன்.

"ச் ச் ச்சு . . . போடா. . . இங்க கம்பெனியை யாரு பார்த்துப்பா . . ? பேசாம ஒண்ணு செய்வோமாட கண்ணா. . . ? " கொஞ்சம் தாழ்ந்து வந்தார் பெண்மணி.


புருவம் சுருக்கியவாறே. . .

"ஹ்ம்ம்ம். . . . எ. . ன். . ன . . . ?" என்று ஏதும் அறியா பிள்ளை போல் கேட்டான்..


"வேற என்னடா கேட்க போறேன் . . . பேசாம இந்த பிஸ்னஸ் எல்லாத்தையும் உன் அம்மாவோட தம்பிங்க .. அதான் உன் மாமன்மார்களிடன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சொல்லிவிட்டு. . . நாம ஏன் இந்தியாவிலே செட்டில் ஆகுற மாதிரி ஏற்பாடு பண்ண கூடாது. . " என்று தன் ஆசையை தெரிவித்தார்.


"பண்ணலாம் பாட்டி . . . ஆனா இப்போ வேண்டாம். . . அது அதுக்குன்னு சரியான நேரம் வரும் போது.." என்று பட்டென சொன்னான்.

"போடா. . . எனக்கு ரொம்ப பயமா இருக்குதுடா . . . எனக்கு வேற வயசாகிட்டே போகுது... என் காலத்துக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை வேண்டாமா. . ?"

"பா பா ட் ட் டீ . . . "

"சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் மத்தவங்க மாதிரி குடும்பம் குழந்தைங்கன்னு வாழணும்டா . . . "
.
"பாட்டி .. போதும்.. கண்டிப்பா நீங்க சொல்றது எல்லாம் நடக்கும்.. எனக்கு இப்போ கொஞ்சம் டைம் கொடுங்க...! அது வரை இனி இந்த . . த . . த. . . பேச்சே வர கூடாது... சரியா...?!"

"சரிடா. . . நீ பண்ணிக்கிறேன் சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம்.... சரிடா.. போனை வச்சிருதேன்.."

"ஓ கே... பை "

என்றபடி அணைப்பை துண்டித்தான்.


ஹம்ம்ம்ம்ம்ம்.....
இந்த பாட்டி இருக்கிறார்களே. . . .விடவே மாட்டார்களே. . . என்ற படி புன்னகைத்து கொண்டான்.

நினைவுகள் பின்னோக்கி சென்றன. அந்த சின்னஞ்சிறு வயதில்... பாசத்தை கொட்டி வளர்த்த அன்னையை . . இழந்து. . . தனியாய் தவித்த போது. . .. ஓடோடி வந்து தன்னை அரவணைத்தது இந்த பாட்டி தானே. . ?!

இவர் மட்டும் அன்று மடி தாங்கா விட்டால் . . ?! நினைக்கவே கஷ்டமாக இருந்தது. .

இன்று இந்த நிலைமையில்.. கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் இவரல்லவா. . . ?!

இந்த பாட்டிக்காக சரி சொல்லி விடலாமா.. கொஞ்சம் யோசித்தான்.. பின் தலையை குலுக்கியவாறே. . . "ஹ்ம்ம். .. நோ. . . நாட் நொவ் . . ." முடிவெடுத்து விட்டான்.....

________________________________________________




அந்த ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக . . வாசல் புறமே பார்த்தவாறு யோசனையாய் இருந்தாள் வதனா .

அம்மா அப்பா எல்லோரும் கேட்டாயிற்று. என்னம்மா? என்ன விஷயம் ? என்று... ஆனால் எதற்கும் பதில் இல்லை பெண்ணவளிடத்தில்!

" வேலைக்கு போயிட்டு நாங்களே வீட்டுக்கு வந்தாச்சு .. இவா . . இந்த அம்மணி மட்டும் இன்னும் வீடு வந்து சேரல... . டெய்லி ஊர் சுத்துறதே இவளுக்கு பொழப்பா போய்ட்டு.!

வீட்ல யாராவது ஒரு வார்த்தை அவளை கேக்கிறாங்களா...?!"

"ச் ச் ச்ச . . " என்று காலை தரையில் அடித்துக் கொண்டாள்.

அத்தனை வசவுக்கும் சொந்தக்காரி அவள் செல்ல தங்கை ஆராதனா தான் என்று நான் சொல்லவும் வேண்டுமோ. . ?!

ஏதோ வாயிக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தவள் சட்டென முதுகில் ஒரு அடி விலவும் திடுக்கிட்டுப் போனாள்.

"ஹைய்யோ...! அம்மா..."

"ஏன்மா ... இப்போ என்னை அடிக்கிற. . ?!” முறைத்தபடி கேட்டாள் வதனா....

" பின்னே.. ? எத்தனை தரம் உன்னை கூப்பிடறது...பதில் சொல்ல வேண்டாமா..?!" என்று கண்டிப்பு காட்டினார் அந்த அன்பு அன்னை கீர்த்தனா.

"சாரிம்மா . . சும்மா ஒரு யோசனை. சொல்லுங்கம்மா. . "

"ஆராதனா பூஜை முடிஞ்சி அந்த ராம் வீட்டுல சாப்பிட்டுட்டு தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னா . . அவள் வர இன்னைக்கு லேட்டாகும். அவள் வந்தானா . . அடுப்புல தான் பால் இருக்கு.. ரெண்டு பேரும் குடிச்சிட்டு அப்புறமா போய் படுங்க சரியா. . .. ?!"

"ஹ்ம்ம்.. சரிம்மா.."

அம்மா சென்று விட...

"சனியன் ! என் நேரம். .. . ! இன்னைக்கு பார்த்து . . . . இவா இவ்வளவு லே. . ட். . டா. . வா. . வரணும்... ?! "

கொட்டாவி வேறு வந்து தொலைத்தது..
“ச்ச்ச்ச . . .” இது வேறு. . .
வாசலுக்கு நேராக இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டாள் பெண். " இன்னைக்கு நான் அவ ரூம்ல பண்ணி வச்சிருக்கிற கூத்துக்கு இனி அவள் என் பக்கமே திரும்ப கூடாது..

கண் குளிர அதை பார்க்கலாம்ன்னா இந்த தடிமாடை இன்னும் காணோம்... ?" என்று புலம்பியபடி ஆராதனாவிற்க்காக காத்துக் கொண்டிருந்தாள் .


_______________________________


அதே நேரம்.. அங்கே ராமின் வீட்டில் வதனா... டைனிங் டேபிளில் அமர்ந்தபடி நன்றாக சப்பு கொட்டியபடி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

"ஹப்பாடா . . . நல்லா சாப்பிட்டேன்" என்று தன் வயிற்றை இரு கைகளாலும் தடவிய படியே ஆரு ராமை பார்த்து. . .

" டேய் ராமு... நீ நல்லா சமைச்சிருக்காடா ... உனக்கு வர போற மனைவி ரொம்ப குடுத்து வச்சவடா...." என்று புகழாரம் சூட்டினாள் ஆரு .

வலிக்காமல் அவள் தலையில் கொட்டியவன்...
"ஏய்.. எருமை.. எத்தனை தடவ சொல்லுறது உனக்கு.. பெயர் சொல்லி கூப்பிடாதான்னு..! ஒழுங்கா மரியாதையா கூப்பிடு"

"அட போடா.. நீயும் சின்ன வயசுல இருந்து சொல்லுற.. ஆனால் என்னோட வாய் கேட்கவா செய்யுது.. போடா ..!

எல்லோருக்கும் அந்த ஸ்பெஷல் ஐட்டம் கொண்டு வா. . . போ..!
என்னடா முறைக்கிற. . . ? போ போ...
உன் சாப்பாட்டை கஷ்டப்பட்டு நான் சாப்பிட்டு இருக்கேன்ல. . .
போய் எடுத்துட்டு வா...”

“மவளே. . . நல்லா வழிச்சி கொட்டிக்கிட்டு பேச்ச்சா பேசுற. . .?!”

“ஹீ ஹீ ஹீ. . .. “
“சரி.. கொஞ்சம் டேஸ்ட்டா இருந்து.. அதான் சாப்புட்டுட்டேன்... இப்போ என்னங்கிற.. . ?”

என்று கை மடக்கி கேட்டவள் பின் . .


“ரொம்ப சாப்பிட்டுட்டேன்டா ராம். . . எல்லாம் டைஜெஸ்ட் ஆகாண்டமா. . ?! நீ பக்குவமா செய்வீயே அதை எடுத்துக் கிட்டு வாடா என் ராசா . . !”
என்றபடி வீட்டிற்கு முன்புறம் இருந்த ஹாலில் நாற்காலியில் சென்று அமர்ந்தாள். கூடவே கீதுவும் ஒட்டிக் கொண்டாள்.

இம்மூவருக்கும் ஒரு பழக்கம் , சாப்பிட்டு முடித்த பின் இப்படி சற்று நேரம் அமர்ந்து ஏதாவது கதை பேசியபடி இருப்பது...

சரி அவர்கள் பேசுவது இருக்கட்டும் .நாம் வருவோம் அந்த டிஷ்ஷிற்கு ! கண்டுபிடிப்பதற்காக உங்களுக்கான குளு இதோ. . . .

டொட்ட டொயின் . . .


“தாகத்தை தணிக்கும் அதை
சுட்டெரிக்கும் சூரியனுக்கு அருகில்
ஒரு சூரிய குளியல் போட வைத்து . . .
அளவாக அந்த காய்ந்த சருகுகளை
சட்டென கவிழ்த்து. . .
கொஞ்சம் குளிரவிட்டு. . .
மஞ்சள் மங்கையை சேர்த்தால். . .
ஆஹா . . .
கூடவே தித்திப்பை கலந்தால். . .
ஓஹோ. . .
சொல்லவும் வேண்டுமோ. . .
அந்த சுவைக்கு அடிமையானால் . .
மீள்வது கடினமடி பெண்ணே. . !”


ராமும் தன் கையில் மூவருக்குமாய் சேர்த்து அந்த ஸ்பெஷல் ஐட்டத்தை போட்டு எல்லோருக்கும் கொடுத்து விட்டு அதில் தானும் ஒன்றை எடுத்து பின் அவர்கள் கூடவே அமர்ந்து கொண்டான்.


அப்போது ,

"ஆண்கள் ஆண்களாக இருப்பதற்கு
பெண்கள் அனுமதிப்பதே காரணம்..!
பெண்கள் அனுமதிக்கா விட்டால்
ஆண்கள் என்றோ மனிதர்களாக மாறியிருப்பார்கள்..!

அதேபோல் பெண்கள் பெண்களாக இருப்பதற்கு
ஆண்கள் அனுமதித்ததே காரணம்..!
ஆண்கள் அனுமதி மறுத்தால் . .
பெண்கள் என்றோ தெய்வங்களாக, சர்வமுமாய் மாறி இருப்பார்கள். . !"


என்று ஒரு பெண் பட்டிமன்றத்தில் பேசி கொண்டிருந்தது பக்கத்துக்கு வீட்டு தொலைக்காட்சியிலிருந்து கேட்டது.

"எவ்வளவு மகத்தான உண்மை பார்த்தியா கீது.." -ஆராதனா

"ஹ்ம்ம்...." என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள் கீது.

"கொஞ்சம் சரி தான்.. ஆனா . . பெண் தான் ஆணை ஒரு எல்லைக்குள்ள நிறுத்தி வைத்து கொள்கிறா. சின்ன வயசுல இருந்தே ஆண் பிள்ளைகள் ஆழ கூடாதுன்னு சொல்றது... ஆணுக்கு ஒரு நியதி பின்பற்றுறது... ஆண் பிள்ளைகளிடம் பெண்கள் அந்த நாட்கள்ல அனுபவிக்கும் வலியை சொல்லாம வளர்க்கிறது இப்படி எல்லாத்தையும் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட இடத்துல ஆணை வளர்க்கிற..! " -ராம்.


"ஹே.. இதை முழுசா தப்புன்னு சொல்ல முடியாது. இந்த குடும்பம் , சமுதாயம், கலாச்சாரம் இது எல்லாம் சேர்ந்து தான் அவளை இப்படி நடந்துக்க சொல்லுது..” என்றபடி பெண் குலத்திற்கு வக்காலத்து வாங்கினாள் கீதா.

"ஆனா பெண் பெண்ணாக இருப்பதற்கு பெண் தான் காரணம்ன்னு நான் சொல்லுவேன்" என்றாள் ஆராதனா..

மற்ற இருவரும் அவள் முகம் நோக்க. . .

“ஆண்களின் அனுமதிக்காக காத்திருந்து காத்திருந்து பெண்களே தங்களை ஒரு எல்லைக்குள்ள முடக்கி கொள்கிறார்கள் . பார்க்கப் போனா ஒரு வகையில அது தான்தான் உண்மை. நீ என்ன நினைக்கிற கீது .?”

“ஆமா ஆரு. ஆனா இந்த எல்லைகள் எல்லாம் கடந்து சாதிக்கிற பொண்ணுங்களும் இருக்காங்கப்பா. . .சோ ஒட்டு மொத்தமா சொல்ல முடியாது.” பொதுவாக கீதா பேசினாள் .

“வெற்றியோ தோல்வியோ எல்லாத்துக்கும் இந்த சமுதாயம்,உறவுகள்,குடும்பம் தான் காரணம். வாழ்க்கையிலே சாதிக்கணும்ன்னு நினைச்சா. . முதல அந்த ஆள் எல்லா தடைகளையும் தூக்கி போட்டுட்டு .. தைரியமா உலகத்தை பேஸ் பண்ணனும்..!

அப்படி இருந்திருக்கலாம் .. இப்படி பண்ணியிருக்கலாமே. .. அப்படின்னு தேவையில்லாமா புலம்புறத விட்டுட்டுட்டு . . உறவுகள் முன் தனக்கான மரியாதையை உரிமையை அவுங்க அவுங்க தான் வாங்கிக்கணும் . .

நமக்கு விதிச்சது இது தான் அப்படின்னு மூலையில் கிடக்க கூடாது. . . இப்படி நிறைய விஷயங்கள் இருக்குது. . . “ என்று கொஞ்சம் பெரியவளாய் பேசினாள் ஆராதனா. .


“ஹ்ம்ம்.... சரி தான் . . அவர் அவர் வாழ்க்கை . அவர் அவர் உரிமை. . “ -ராம்


“இத்தனை பேசுற சில பெரிய ஆள்கள் அதை பயன்படுத்தாம சும்மா வெட்டியால நேரத்தை போக்கிட்டு இருக்காங்க . .”

என்று சந்தடி சாக்கில் ஆருவை வாரினாள் . அவளுக்கு ஆற்றாமை தன் தோழி திறமை இருந்தும் இப்படி விளையாட்டு தனமாக இருக்கிறாளே என்று....

“ஹா ஹா ஹா . . . “

அண்ணனும் தங்கையும் கைகளை தட்டி ஹை ஃபை கொடுத்து கொண்டனர்.....
“ம்ம்ம்ம். . . . என்னை கலாய்க்கிறதுல உங்க ரெண்டு பேருக்கும் அம்புட்டு சந்தோஷம். . .?! ஹ்ம்ம். . . . நடக்கட்டும்.. நடக்கட்டும்..! இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லி என்னை கிண்டல் பண்றீங்கன்னு பார்க்க தானே போறேன். . .”


விழிகள் பளிச்சிட அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இவள் சொல்வதன் பொருள் என்ன. . அப்படியானால். . ?! என்று வியப்புடன் ஆருவை பார்த்தாள் கீது. . .


இரு கண்களையும் சிமிட்டி வசீகரமாய் புன்னகைத்தவள். . .ஆம் நீங்கள் நினைப்பது சரியே என்பது போல தலையை ஆட்டினாள் . . .


“என்னடி சொல்லுற. . . ?!”

“ஆமா . . கொஞ்ச நாளாவே.. என் மனசுக்குள்ள இந்த நினைப்பு ஓடிக்கிட்டு தான் இருக்கு... கூடிய சீக்கிரமே நல்ல வேலைக்கு போகலாம்ன்னு இருக்கேன். .” என்று சொல்லி முடித்ததும் தான் தாமதம் கீது.. ஆருவை கட்டிக்கொண்டாள் . .


“ஹே . . !” குதூகலமாய் ஒலித்தது தோழியின் குரல். .

“வாழ்த்துக்கள் ஆராதனா . .” என்றான் ராம். கூடவே …

“உனக்கு என்ன உதவின்னாலும் தயங்காம என்னிடம் நீ கேட்கலாம்.. நீயும் கீதுவும் எனக்கு வேறு வேறு கிடையாது. . சரியா. . ?!” என்று பொறுப்பான ஆண் பிள்ளையாய். .

“ஹ்ம்ம்ம்...” தலையசைத்து கொண்டாள் ஆரு...

“சரி வா. . உன்னை வீட்ல விட்டுடுறேன் . . . “ என்றபடி எழுந்தான் ராம்..

“பாய் டி . .” கை அசைத்தபடி ஆருவும் எழுந்து கொண்டாள்.

இருவரும் ஆருவின் வீடு நோக்கி நடக்க . . அங்கே அவளுக்காக படுக்கையறை குளியல் சிரித்துக் கொண்டிருந்தது...
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் என்னோட பட்டு செல்லங்களே...
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இது வரை like மற்றும் கமெண்ட் செய்த உள்ளங்களுக்கு நன்றிகள். அமைதி பிரியர்களுக்கும் நன்றிகள்.
 
Status
Not open for further replies.
Top