All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கதை திரி

Status
Not open for further replies.

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 31

கனா காண்கிறேன் நான்
அனுமானுஷ்ய உலகில்
குட்டி குட்டி நட்பூக்களுடன்

குளு குளு சீதோஷ்னத்தில்..

ரவி வர்மாவின் அதிரடி கல்யாண செய்தியில் வீடே அதிர்ந்து அடங்கி போயிருக்க தனது அறையில் ஆராதனா அவன் அணிவித்திருந்த அந்த இதய வடிவ மோதிரத்துடன் கொஞ்சி கொண்டிருந்த சமயம் அவள் காலடியில் எதுவோ தட்டுப்பட குனிந்து பார்த்தாள்.

"ஹைய்.. புசு புசு குட்டி. நீங்க யாரு. எப்படி இங்க வந்தீங்க?" என்றபடி காலடியிலிருந்த அந்த நாய்குட்டியை பார்த்த சுவாரசியத்தில் தன்னை மறந்து குதூகளித்தாள். அப்போது அங்கே வந்த வதனா "அப்பாக்கு யாரோ கிப்ட்டா கொடுத்தாங்களாம். இது பார்க்க அழகா இருக்குல்ல.. சோ அப்பாவும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டார்" என்றபடி வட்ட வடிவத்தில் கண்ணாடியிலான மீன் தொட்டியை மேசையின் மீது வைத்தாள். அதனுள் தங்க நிற மீன் ஒன்று சுதந்திரமாக நீந்தி கொண்டிருந்தது.

"ஹேய்.. இது எப்போ வாங்குனது? இன்றைக்கு என்ன ஒரே சர்ப்ரைஸ்ஸா இருக்கு".

"அம்மாவோட ஷாப்ல ஒர்க் பண்ணுற ஒருத்தங்க வெளியூர் போறாங்களாம். அவங்க வீட்ல இதை கவனச்சிக்க ஆள் இல்லை. சோ அவங்க திரும்பி வரும் வரை நம்ம வீட்ல தான் சார் கெஸ்ட்டா ஸ்டே பண்ண போறார்".

"ஓ. சரி சரி. நமக்கு நல்லா டைம் பாஸ் ஆகும்" பேசிக்கொண்டு இருந்தவள் சட்டென ஆச்சரியத்தில் "ஹேய் இதோ பாரேன். இந்த பிஷ் கன்னம் ரெண்டும் சிவப்பு காலரா சேஞ்ச் ஆகுது".

"ஹே.. ஆமாமில்லை".

சகோதரிகள் இருவரும் புது தோழர்களுடன் உறவாடி கொண்டிருந்த பொழுது வதனாவின் கண்ணில் அன்று பாட்டி கொடுத்த மூன்றடுக்கு தங்க சங்கிலி பட்டது. அதை கைகளில் தூக்கி பார்த்தவள் "ஏய் ஆரு. இது என்னன்னு தெரியுதா?"

"ஏன் பார்த்தா தெரியலையா.. செயின்டி".

"போடி லூசு. இதோட முதலடுக்கில் இருக்கிற 'ப்ளூ ஐ' டேவில் ஐ (devil eye) மீன் பண்ணுது. நம்ம ஊர்ல கண்திருஷ்டி படமா இருக்க சாமி கயிறு கட்டுவோம்ல அது மாதிரி தான் இதுவும்".

"ஓ.. அப்படியா?".

"ம்ம்ம்.. யாரோட பொறாமையும் நெகட்டிவ் எனர்ஜியும் உன் மேல பட்டு உனக்கு அதனால எந்தவித பாதிப்பும் வர கூடாதுன்னு பாட்டி பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருக்கிறாங்க போல".

"வாவ்.. சூப்பர் சூப்பர். பாட்டி ரியலி கிரேட். லவ் யூ பாட்டிமா". சந்தோஷத்தில் பறக்கும் முத்தத்தை பாட்டிக்கு பரிசாக அனுப்பினாள் பெண்.

"அது சரி. இதை ஏன் அப்படியே வச்சியிருக்கிற. கழுத்துல போட்டுக்க வேண்டியது தானே.." என்றபடி அவளே ஆருவின் கழுத்தில் அந்த செயினை அணிவித்தாள்.

"அப்புறம் ஆரு.. ரொம்ப தேங்க்ஸ்டி. உன்னால தான் எனக்கும் ராமுக்கும் இவ்ளோ சீக்கிரம் மேரேஜ் நடக்க போகுது" பின்னிருந்து ஆருவை அணைத்து கொண்டு உச்சியில் இதழ் பதித்தாள்.

"ஹேய் வது.. தேங்க்ஸ்லாம் எதுக்குடி? எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு அக்கா. அவளோட லைஃப் என்னால கேள்வி குறி ஆகும் போது அதை சால்வ் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு இல்லையா? சோ நீ பீல் பண்ணுற அளவு நான் பெருசா ஒன்னும் செஞ்சிடல" சொன்னவாறு வதனாவின் உள்ளங்கையில் முத்தமிட்டாள்.

"உனக்கு ஒன்னும் கோபமில்லையே? ரவி விஷயத்துல..".

"அதெல்லாம் ஒன்னுமில்லை. அதான் உன்னோட ஆளு மார்னிங்க் மீட்டிங்லயே தெளிவா சொல்லிட்டாரே.. ஆனாலும் உன் ஆள் ரொம்ப பாஸ்ட் தாண்டி. இவ்ளோ ஸ்பீட் ஆகாதுடி.."

"ஹீ ஹீ ஹீ.." அப்பட்டமாய் ஜொள்ளு வடித்தாள் ஆராதனா.

"போதும் நிப்பாட்டு. ரொம்ப வழியுது. துடச்சிட்டு போய் தூங்கு. அப்புறம் ஆரு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம ராம்மோட சிஸ்டர் அதான் உன்னோட ஆருயிர் தோழி கீது இருக்காளே.. அவளை ராஜேஷ் பொண்ணு கேட்டு பேசி முடிச்சாச்சாம். எங்களோட கல்யாணம் முடிஞ்ச அப்புறம் அவங்களோட கல்யாணம் இருக்கும்".

"வாவ்.. சூப்பர் நியூஸ்டி. ஜாலி ஜாலி.. கீது ஆசைப்பட்ட படியே அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது" மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவள் நொடியில் புருவம் சுருங்க கேட்டாள், "அந்த ராஜேஷ்க்கு கல்யாணம் ஆகாத ஒரு அண்ணன் இருக்கானே. அவனுக்கு பண்ணாம எப்படி இவனுக்கு பொண்ணு பார்த்தாங்க?".

"ஓ.. அதுவா. ராஜேஷ் கூட பிறந்த அண்ணன் யாதேஷ் இருக்கானே அவனுக்கு உன் ஆளு ரவியோட ரீலேடிவ் நேகாவை பேசியிருக்கிறாங்களாம். இதுவும் லவ் மேரேஜ் தானாம். எல்லாருக்கும் ஜோடி செட் பண்ணி முடிச்சி வச்சது யாருன்னு நினைக்கிற.. ம்ம்ம்ம்.. எல்லாம் உன் ஆளு தி கிரேட் ரவி வர்மாவாக்கும்".

பிரமிப்பில் ஆரதானாவிற்கு பேச்சே வரவில்லை. சாத்தியமில்லாததை கூட இவன் சப்தம் போடாமல் சாத்தியம் ஆக்கியிருக்கிறானே. எதற்க்காக இத்தனை வேகம். இவனுக்கு எப்படி இப்படி யோசிக்க முடிகிறது.

"ஹேய்.. என்ன ஆச்சு. அப்படியே பிரீஸ் ஆகிட்ட. ஆ..ஆ..ரு.."

"ஹ்ம்ம்ச். ஒன்னுமில்ல. எல்லாம் இவ்ளோ ஸ்பீடா நடக்கும் போது கொஞ்சம் உதறலா இருக்கு".

"ச்ச்சி.. ச்சி.. தப்பா எதுவும் இருக்காது. வீணா கற்பனை பண்ணிக்காத. இது தான் விதியா கூட இருக்கலாம். அதோட ரவிக்கு உன்னை விட்டு பிரிஞ்சி இருக்க கஷ்டமா இருக்குமா இருக்கும். சோ சார் லவ் மூட்ல வேகமா செய்யுறார். அவ்ளோ தான். சரி போய் தூங்கு. இப்பவே லேட் நைட் ஆகிடிச்சி". அறைக்கதவை தாளிட்டு விட்டு சென்று விட்டாள் வதனா.

ரவியை பற்றியே யோசித்தபடி தூங்க ஆரம்பித்தவளை யாரோ கூப்பிடுவது போல இருந்தது.

"ஆ..ஆ..ஆராதனா.. ஆ..ஆராதனா... எ..ழு..ந்தி..டு. நீ..நீ.. செய்ய வேண்டிய வேலை ஒன்று பாக்கி இருக்கு. அது முடியாம உன்னால உன் வாழ்க்கையை தொடங்க முடியாது.. எழுந்திடு ஆராதனா.. எழுந்திடு.."

"முஹும்.. யாரது? அர்த்தராத்திரியில் எழுப்பி விடுறது.. ஹே.. வது.. உன் வேலையாடி? ம்ம்ம்.." புருவம் சுருங்க கண்கள் கசக்கியபடி படுத்திருந்தவள் கை கால்களை ஸ்பைடர் மாதிரி வடக்கேயும் தெற்கேயும் மாற்றி மாற்றி அசைத்தாள்.

கண்கள் சொருக மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர நினைத்தவளை எழுப்பியது அதே குரல். "நீ எங்களுக்காக செய்ய வேண்டிய நேரம் வந்திடுச்சு. எழுந்திடு. இனி தமாதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் இந்த பூமிக்கு தான் ஆபத்து. ம்ம்ம்.. உன் உள்ளுணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டிய நேரமிது. உடனே கிளம்பு. எங்களோட புறப்பட்டு வா".

கம்பீரமும் உறுதியும் தெரிந்த அந்த குரலில் மனம் ஒரு நொடி திகைக்க பெண்ணவள் தேகம் நடுங்க தொடங்கியது. நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒருவித அழுத்தம் பரவி அவளது நியூட்ரான் செலகளுக்குள் பரவசத்தை பரப்பியது. உடலிலிருந்து எதுவோ ஒன்று தன்னை விட்டு பிரிந்து செல்வது போல ஒரு பிரம்மை. ஆழ்மனதில் ஏதேதோ விஷயங்கள் படம் போல காட்சிகளாய் விரிய.. அதில் தெரிந்த உருவங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த.. கண்மூடிய படியே அந்த நிகழ்ச்சியின் வீரியத்தை பெண்ணவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவசரமாய் இருக்கும் தன் அவசியத்தை உணர்ந்தும் உணராததுமாய்.. யாராலும் செய்ய முடியாத செயலை தான் மட்டுமே செய்ய வேண்டிய நிர்பந்தத்தை... அந்த கல்நெஞ்சில் ஓரமாய் பூத்து காய்ந்து சருகான மலரை மீண்டும் உயிர்த்தெழ செய்ய தன்னால் மட்டுமே முடியும் என்பதை பெண்ணவள் நெஞ்சம் அடித்து சொன்னது.

ஒருவித பதற்றத்துடன் கண்களை திறந்தாள் ஆராதனா. சுற்றிலும் இருள் பரவியிருக்க.. அந்த புது குட்டி தோழனான பப்பியும்(நாய்), தங்க மீனும் மட்டுமே துணைக்கு இருந்தது. 'இது என்ன? விசித்திரமாய் இருக்கிறது.. என்ன நடக்கிறது இங்கே? நான் எங்கே இருக்கிறேன்?' மனம் அலைகழிக்க பெண்ணவள் உரைந்து நிற்கையில்.. நீரிலே உலா போய் கொண்டிருந்த தங்க மீன் துள்ளி குதித்து அவள் காலடியில் அடைக்கலம் புகுந்தது.

சீதையை அசோக வனத்தில் சந்தித்து தலை வணங்கி வந்தனம் தெரிவித்து மரியாதை கொடுத்த அந்த குரங்கரசன் ஆஞ்சிநேயர் போல இருந்தது இச்செய்கை. குனிந்து நடுங்கும் விரல்களால் தங்க மீனை உள்ளங்கையில் ஏந்தியவள் அதன் கண்ணோடு கலந்து பேச ஆரம்பித்தாள்.

"இப்போ.. இங்க நடக்கிறது எல்லாம் எதுக்காக? என்னை சுற்றி நடக்கிற இந்த மர்மத்துக்கு காரணம் என்ன?"

"சொல்கிறேன். பொறு. முதலில் உன் மேல் நம்பிக்கை வை. இதுவரை யாராலும் செய்ய முடியாத ஒன்றை நீ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய்".

தங்கமீன் இப்படி பேசவும் ஆரு அதிர்ந்து விட்டாள். அதெப்படி இந்த மீன் பேசுவது எனக்கு புரிகிறது? தன் சந்தேகத்தை மறைத்தப்படி அதனிடம் கேட்டாள்,

"அப்படி என்ன கட்டாயம்?".

"ஏன்..ன்னா.. உன்னால மட்டும் தான் எங்களை எங்களோட கிரகத்துக்கு கூட்டிட்டு போக முடியும்".

"எ..எ..ன்ன.. நீங்க வேற்று கிரக வாசிகளா? அப்படின்னா நீங்க ஏலியன்ஸ்ஸா?" கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடும்படி ஆச்சரியத்தில் கேட்டாள் ஆரு.

"எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற? நாங்க ரெண்டு பேரும் ஏலியன்ஸ் தான். நீ நினைக்கிற மாதிரி பயங்கரமானவங்க ஒன்னும் இல்லை" கோபமாய் குரைத்தது பப்பி டாக்.

"சா..சாரி. நிறைய மூவிஸ்ல அப்படி காட்டி இருக்கிறதுனால கொஞ்சம் பயந்துட்டேன். அது சரி இவ்ளோ நாளா நீங்க ரெண்டு பேரும் எங்கிருந்தீங்க? இப்போ மட்டும் எப்படி என்னை தேடி கண்டுப்பிடிச்சீங்க?".

"நாங்க ரெண்டு பேரும் அந்த மந்திர பரமபத பெட்டிக்குள்ள அடைப்பட்டு இருந்தோம். நாங்க தான் அந்த தாய கற்கள்" தங்க மீன் சோகமாய் உரைத்தது.

"அப்படின்னா இவ்ளோ நாளா நீங்க என் கழுத்துல அந்த ஜெயின் டாலரா இருந்தீங்களா?? என்னால நம்பவே முடியல. பின்ன எப்படி அந்த கல்லுல இருந்து வெளியே வந்தீங்க?"

"நாங்க குறிப்பிட்ட காலம் வரை அதுல அடைப்பட்டு இருக்கணும்னு சாபம். எங்களோட எஜமான் சொன்ன கட்டளையை எங்களால் நிறைவேத்த முடியல. அதோட அந்த நேரத்தில் ஏற்பட்ட பிரளயத்தால் இந்த மாதிரி நாங்க இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்" -பப்பி டாக்

"யாரோட கைகள் இந்த தாய கற்கள் மீது பட்டு அதன் ஆயுள் முடியுதோ.. அப்போ நாங்க சுதந்திரம் அடைவோம் அப்படின்னு எங்களோட எஜமான் சொல்லியிருந்தார். உன்னோட அம்மா.. ரவியோட அம்மா.. ரவி.. அப்புறம் நீ.. இப்படி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கை மாறி.. கடைசில உன்னால தான் எங்களோட சாபம் போய் எங்களோட லைஃப் திரும்ப கிடைச்சி. அது படி உன்னால் தான் கற்களுக்கு உள்ள ஒளிரும் பவர் முடிவுக்கு வந்து. சோ அதுக்கு அப்புறம் நாங்க வெளியே வந்துட்டோம்.

ஆனால் இப்போதைக்கு எங்களுக்கு உள்ள சக்திகள் எதையும் பயன்படுத்த முடியாது. எங்களோட ஒரிஜினல் உருவத்தையும் பெற முடியாது" -தங்க மீன்.

"ஏன்..?" பாவமாய் கேட்டாள் ஆரு.

"எங்களோட கிரகத்துக்கு போனா தான் எங்க லைஃப் பழையபடி மாறும்".

"அது சரி.. உங்க உலகத்துக்கு எப்படி போறது? நான் எப்படி இதுல உதவ முடியும்?".

"அதை போக போக நாங்க சொல்லுறோம் இப்போ வா போகலாம்" என்றபடி அந்த இருளில் நடக்க ஆரம்பித்தனர். சிறிது தூரம் நடந்த பின் இருள் விலகி ஒளி பரவ தொடங்கிய நேரம் அவர்கள் அங்கே ஆழ்கடலின் மேலே நிற்பதை உணர்ந்து பயந்து போனாள் ஆரு.

"ஹைய்யோ நான் தண்ணீல மூழ்கி சாக போறேன்" கை கால்கள் தள்ளாடியபடி பெண்ணவள் நடுங்கினாள்.

"ச்சு. சும்மா இரு ஆராதனா. அதெல்லாம் ஒன்றும் ஆகாது" ஆதரவாய் சொன்னது அவள் கையில் இருந்த தங்க மீன்.

"அ..அது எப்படி..?"

"அதெல்லாம் அப்படி தான். வா நடப்போம்".

"என்ன இது சும்மா ஜாலியா பழகலாம்ங்கிற மாதிரி ஈஸியா தண்ணீ மேல நடக்கலாம்னு சொல்லுறீங்க. ஆமா.. உங்களோட உலகத்துக்கு இப்படியே நடத்தியே கூட்டிட்டு போயிறலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?" இடுப்பில் கையை ஊன்றியபடி அந்த இரு ஏலியன் குட்டிகளையும் பார்த்து கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்லை. நமக்கு அங்கே போக யாராவது உதவி செய்வாங்க. போக போக உனக்கே தெரியும். சோ நீ எதுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதோட இப்போ நீ ஒரு ஆன்மா. அதாவது உடல் இல்லா உயிர். உன்னோட உடல் பூமியில் உன்னோட வீட்டில் பாதுகாப்பா இருக்கும் நீ திரும்பி வர வரை".

"ஹைய்யோ என்ன சொல்லுற.. அப்போ நான் செத்து போயிட்டேனா..?"

"லூசு லூசு.. இவ்ளோ நேரமா நாங்க என்ன சொன்னோம்" பற்களை கடித்தப்படி குரைத்தது பப்பி டாக்.

"பூமியில இருக்கிற உன்னோட பிரதிப்பிம்பம் அதாவது ஜெராக்ஸ் காப்பிக்கு எதுவும் மாறாது. ஒரு ரோபோ போல எல்லா விஷயமும் அந்த ஆராதனா பண்ணுவா. அதே மாதிரி உடல் இல்லாத நீ.. இங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ண போற. சோ உன்னோட லைஃப் சேப் தான்.

நீ எங்க கிரகத்துல இருந்து திரும்பி வந்த அப்புறம் உன்னோட ஆன்மா அதாவது இப்போ எங்க கூட இருக்கிற நீ.. பூமியில இருக்கிற உன்னோட உடல் கூட சேர்ந்து ஒன்றாக மாறிடுவீங்க".

"அப்பாடி.. இப்போ தான் நிம்மதியா இருக்கு. ஆமா உங்களோட கிரகத்துக்கு போக எவ்ளோ நாள் ஆகும்? ஏன் கேட்கிறேன்னா இன்னும் ஏழு நாளுல எனக்கு கல்யாணம்".

"ம்ம்ம்.. நீ கேள்வி கேட்காமா வந்தின்னா சீக்கிரம் போய் சேரலாம் "என்று தங்க மீன் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு நீலதிமிங்கலம் அவர்கள் மூவரையும் விழுங்கியது.

"ஆஆஆஆ.." அலரலுடன் திமிங்கலத்தின் வாயின் உள்ளே செல்லலானார்கள். 'டொப்..' என்ற சத்தத்துடன் அதன் வயிற்றில் தள்ளப்பட்டனர்.

"அய்யோ.. இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே எப்படி தப்பிக்கிறது?" பயத்தில் நா உலர்ந்தபடி கேட்டாள் ஆரு.

"பொறு. ஏதாவது வழி கிடைக்கும்" என்றபடி தங்க மீன் அவள் கையிலிருந்து கீழே குதித்து நீச்சலடிக்க தொடங்கியது. பப்பி டாக்கோ அங்கும் இங்கும் குதித்தோடி எதையோ தேட தொடங்கியது. வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் போர் அடிக்கவும்.. சுற்றுப்புறத்தை ஆராயலானாள்.

நல்ல சிவந்த நிறத்தில் தடிமனான அதே சமயம் உறுதியாக தெரிந்த தசைகளும்.. உணவின் எச்சங்கள் சிதறிகிடக்க அங்கே ஓரிடத்தில் எதுவோ ஒன்று அவள் கருத்தை கவர அதை கையில் எடுக்க முனைந்தாள். இவள் இழுப்புக்கு அது வெளிவர அடம்பிடிக்கவும் மூச்சை தம் பிடித்து இழுத்தாள். இழுத்த வேகத்தில் மறைந்திருந்த வாசல் திறக்க மூவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட துரும்பாய் இழுத்து செல்லப்பட்டனர்.

இழுத்து செல்லப்பட்ட அவர்கள் அங்கும் இங்கும் முட்டி மோதி 'பொத்' தென்று வந்து விழுந்தனர் பஞ்சு மேகத்தின் மீது. என்னடா.. 'நமக்கு அடி ஒன்னும் படலையே..' என்று சிந்தித்தவாறு நெற்றியை தடவியப்படி எழுந்தவள் தான் இருக்குமிடமறிந்து ஆனந்தத்துடன்அதிர்ந்தாள்.


"ஹைய்யோ.. நாம இப்போ க்ளவுட் மேலே நிக்குறோமா?? வாவ்.. சூப்பர். எவ்ளோ சாப்ட்டா இருக்கு. காத்து மாதிரில நான் பறக்கிறேன்.." இரு கைகளையும் பறவை பறப்பது போல வைத்து அங்கும் இங்கும் ஆடி பாடிய படி தாவி தாவி ஓடினாள் பெண். அவள் ஆடிய ஆட்டத்தில் ஏற்பட்ட அதிர்வில் கலைந்திருந்த மேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து அது ஒரு ராட்சஷ உருவமானது.

இதை பார்த்துக் கொண்டிருந்த தங்கமீனும் பப்பி டாக்கும் "டேய் பப்பி.. நம்மல கரை சேர்க்க ஒரு அறிவாளியை தான் நம்ம எஜமான் அனுப்புவார்ன்னு பார்த்தா ஒரு கோமாளியை அனுப்பி வச்சியிருக்கிறாரே".

"ஆமாடா. ஆனாலும் ஜோக்கருக்கு ஏதோ ஒரு பவர் இருக்க போய் தானே நாம அடுத்த லெவலுக்கு வந்திருக்கோம். சோ இவள் கோமாளியா இருந்தா என்ன? பேமாளியா இருந்தா என்ன? வா அடுத்து எப்படி இங்கிருந்து போகலாம்னு பார்ப்போம்".

பறந்து பறந்து ஆடியவள் களைத்துப் போய் ஓரிடத்தில் அமரவும் அந்த ராட்சஷ உருவம் பெரியதாக மாற தொடங்கியது. அதை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது ஆருவிற்கு. கூர்ந்து கவனித்தவள் மூளையில் பொறி தட்டியது. 'இது ரவி காட்டிய அந்த மரப்பெட்டியில் இருந்த வெள்ளை யானை தானே?'. மெதுவாக அதனருகே சென்றவள் சற்றும் யோசிக்காமல் உயர்ந்திருந்த அதன் தும்பிக்கையில் தாவி குதித்தமர்ந்தாள்.

சீ-சா கேம் போல அதன் தும்பிக்கை சட்டென கீழே தாரவும் இரு வெள்ளை சிறகுகள் யானையின் வயிற்று பகுதியில் முளைக்கவும் சரியாய் இருந்தது. அதை பார்த்தவள் கை தட்டி ஆர்ப்பரித்து சிரித்தாள் ஆரு. ஹேய் கோல்ட் பிஷ் அண்ட் பப்பி முழிச்சிக்கிட்டு நிக்குறீங்க. சீக்கிரம் வாங்க. உங்களை விட்டுட்டு பறந்துட போகுது.

தங்கமீனும் பப்பி டாக்கும் அலறி அடித்து கொண்டு ஏறினர் அந்த பறக்கும் வெள்ளை யானையின் மீது. வட்டவடிவத்தில் ஒரு சுற்று சுற்றிய அந்த யானை தன் பயணத்தை சிறப்பாய் தொடங்கியது. ஆருவிற்கு எல்லாம் சுவாரசியமாய் இருந்தது. ஏதோ குழந்தைகள் படிக்கும் கதை புத்தகத்தில் நுழைந்தது போல பிரம்மை.

காற்றில் அலைமோதிய முடிகளை இழுத்து பிடித்தவாறு அமர்ந்தவள் அந்த குட்டி எலியன்களை பார்த்து, "முதலயே கேட்கணும்னு நினைச்சேன் ஆனால் சுத்தி நடந்த ஆச்சரியத்துல மறந்துட்டேன். ஆமா.. உங்களோட எஜமான் யாரு..?".

"எஜமான் காலடி மண்ணெடுத்து
நெற்றியிலே பூசிடுவோம்.." பேக் கிரவுண்ட் சாங் ஓட தங்க மீன் உரைத்தது. "மகாமுனி அகத்திய சித்தர். எம்பெருமான். எம்குல தலைவன். ஓர் அங்குல மண்குடுவையில் ஜனித்து பூமிக்கு யாத்திரை வந்தாரே அந்த குள்ளமணி சித்தர் அகத்தியரே எம் எஜமான்" கர்வமாய் கர்ஜித்தது.

"ஓ..அது சரி. இந்த ஓல்ட் மூவிஸ்ல எல்லாம் காட்டுவாங்களே குள்ளமா தாடி வச்சிக்கிட்டு கையில ஒரு குண்டலமும் கம்பும் வச்சிக்கிட்டு நிறைய தகிடுதத்தம் எல்லாம் பண்ணுவாரே அவரா? ".

"ஆம். உனக்கு ஒன்று தெரியுமா? இந்த பிரபஞ்சத்திற்கே காலப்பயணம் செய்து சாகசம் புரிந்தவர் எங்கள் அகத்தியர்".

"அவர் தான் இந்த டைம் ட்ராவல் விஷயத்தை அறிமுகப்படுத்தி வச்சாரா? இன்ரெஸ்டிங்".

"அது மட்டுமில்லை.. தமிழ் இலக்கியத்தை வகுத்து இப்படி தான் எழுத வேண்டும் அப்படின்னு விதிமுறைகளை கொடுத்தவர் இவர். அதோடு சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ரிக், யஜூர், சாம, அதர்வண நான்கு வேதங்களிலும் வலம் வருபவர் இந்த மாமூனி. இந்த வேதங்கள் ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் இடைவெளியில் எழுதப்பட்டவை. அப்படின்னா அகத்தியரது வயசென்ன?".

"ஹே.. குள்ள டாக்கு. அவர் தான் டைம் ட்ராவல் பண்ணியிருக்கிறாரே. பின்ன எப்படி வயசாகும்?? சோ அவர் எல்லா யுகத்திலும் யூத் ஐகானா இருந்திருக்கார்" அசால்ட்டாக பதிலுரைத்தாள் ஆரு.

"இவர் சப்தரிஷிகளில் ஒருவரா இருக்கிறார். ரிஷிகள் இந்த நான்கு வேதங்கள் எழுதப்படுவதற்கு முன் வாழ்ந்தவர்கள். அது மட்டுமில்ல இவர் பிறக்கும் போதே முழுமனுஷனாக ஒரு மண் குடுவையில் இருந்து வெளிவந்திருக்கார்".

"சோ அந்த மண் குடுவை தான் டைம் ட்ராவல் பண்ண ஹெல்ப் பண்ணுன மெஷின். சின்ன பானையில இருந்து வந்ததுனால நம்ம யூத் அகத்தியர் குள்ளமா பப்ளியா இருந்திருக்கார். என்ன கரக்ட்டா..?" இல்லாத சட்டை காலரை உயர்த்தியப்படி பெருமையாய் சொன்னாள் ஆரு.

"போதும் போதும். இப்போ நான் சொல்லுறதை கேளு எங்களோட ஆள் யார் தெரியுமா?" கண்ணில் ஒளியுடன் சொன்ன பப்பி டாக்கை குறும்புடன் பார்த்த ஆராதனா, "எதுக்கு இவ்ளோ ஸீன் போடுற. விஷயத்துக்கு வா" என்று கூறி வெத்து போன பட்டசாக மாற்றினாள்.

அவள் சொன்ன தினுசில் உள்ளுக்குள் ஆருவை கடித்து குதறிவிடும் வெறி கிளம்பினாலும் அதை அடக்கிய பப்பி நிமிர்ந்து தன்னை சமன்ப்படுத்தியபடி கர்வமாய் கம்பீர தொனியில் உரைத்தது. "அகத்தியர் ஒரு தமிழன்".

"ஆ..ஆ..ஆ... என்ன சொன்ன.. நீ.. நீ.. நீ.. இப்போ என்ன சொன்ன. அவர் தமிழரா? அம்மாடி.. அப்படின்னா தமிழ் மூத்த மொழி தான். மார் தட்டி சொல்லி கொள்வதில் தவறில்லை தான். ஹே டாக் சூப்பர் சூப்பர். உன் எஜமான் உண்மையிலே பெரிய ஆள் தான்டா. அது சரி அவர் உங்களுக்கு என்ன ஜோலி கொடுத்தார். நீங்க இப்படி சாபம் வாங்குற அளவுக்கு..?".

"அது..அது.. "என்று தயங்கிய தங்க மீனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்திய பின் அடுத்த எபியில் சாபத்திற்கான காரணத்தை பார்க்கலாம்.
 
Last edited:

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ஸ்..

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது முழுக்க முழுக்க கற்பனை சம்பவம். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் தயங்காமல் தெரிவிக்கவும்.

நன்றி...

PlS share ur cmts in below link
கருத்து திரி
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 32

22878
வெண்பஞ்சு மேகத்தை
வடமிழுத்து கால் பதித்தேன்..
வட்ட நிலவில் திசையறியாமல்
யாரோடு யாரை சேர்க்கவோ?!



சிவப்பு நீல கற்களில் இருந்து வெளிவந்த தங்க மீனும் பப்பி டாக்கும்.. இத்தனை காலமும் அதில் சிறைப்பட்டிருந்த காரணத்தை கேட்டதும் பெண்ணவள் ஆராதனா மயக்கம் போடாத குறை தான்.

அந்த நாளில்.. இந்த உலகத்தில் மனிதர்கள் பிறப்பதற்கு முன்.. செவ்வாய் கிரகத்திலும் வெள்ளியிலும் ஆண்கள் பெண்கள் என்று தனி தனியே ஒவ்வொரு கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆண்கள் செவ்வாய் கிரகத்திலும் பெண்கள் வெள்ளி கிரகத்திலும் இருந்தனர்.

வெள்ளி கிரகத்தை மேரியும் செவ்வாய் கிரகத்தை ஜூலியஸும் ஆட்சி செஞ்சிக்கிட்டு இருந்தார்கள். ஆண்கள் மட்டுமே ஒரு கிரகத்தில் இருந்தால் எப்படி இருக்கும்..? அதே போல பெண்கள் மட்டுமே ஒரு கிரகம் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்து பார்க்கவே விசித்திரமாக இருக்கிறதா?

அப்படி ஒரு சமயத்தில் அவர்களுக்குள்ளே ஒரு எண்ணம்.. வேறு ஒரு கிரகத்தில் இதே போல உயிரனங்கள் வாழ முடியுமா? அப்படி இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொண்டால் என்ன?? விளைவு மேரியும் ஜூலியஸுவும் தூதுவர்களிடம் ஆராய்ச்சி செய்ய சொன்னனர்.

இரண்டு கிரகத்திற்கும் பொதுவாக பக்கத்தில் இப்போது நாம் வாழும் பூமி அவர்கள் கண்ணிற்கு மனிதர்கள் வாழ ஏற்ற கிரகமாக பட்டது. ஆனால் அதனை அடைவதற்கு ஒரு சிக்கல் இருந்தது. பூமியில் நேரடியாக அவர்களால் கால் பதிக்க முடியாது. பூமியின் நண்பனான நிலாவில் முதலில் கால் பதித்து பூமியின் உண்மையான நிலையை கண்டறிந்தால் தான் எந்தவித சந்தேகமும் இன்றி பூமிக்கு செல்லலாம் என்ற நிலை. விளைவு இரண்டு கிரகத்திலுமிருந்து நிலவினை நோக்கி பயணம்.

அங்கு தான் அவர்களுக்கான ஆச்சரியம் காத்திருந்தது. முதன் முதலில் ஆண்கள் பெண்களை சந்தித்தார்கள். பிணைக்க முடியாத பந்தம் உருவானது. பெண்கள் ஆண்கள் பால் ஈர்க்கப்பட்டார்கள். ஆண்கள் பெண்களிடம் மயக்கம் கொண்டார்கள். அந்த நிலா இப்பொழுது ஷேக்ஸ்பியர் நாடக ஹீரோ ஹீரோயின் ரோமியோவும் ஜூலியட்டும் சந்திக்கும் இடமாக மாறியது.

காதல் என்ற புதிய உணர்வில் இருகிரக மக்களும் திளைத்திருந்த தருணமது. சில காலம் இனிமைக்கு பின் தங்கள் இலக்கை நினைத்து தத்தம் ஜோடிகளோடு பூமியை நோக்கி பயணம் தொடங்கினர். அங்கே அவர்கள் புது கிரகத்தில் பால் காய்ச்சி ஜோடியாக அமோகமாய் வாழ ஆரம்பித்தனர். விஷயம் இரு கிரக மக்களுக்கும் பரவியது. அனைவரும் பூமியை நோக்கி பயணித்தனர்.

அப்படி ஒரு பயண முடிவில் தான் ஜூலியஸும் மேரியும் சந்தித்தனர் அந்த காதல் தேனுறும் மன்மத நிலவில். முதல் பார்வையிலேயே இருவரும் காதலென்னும் பிடியிலே வசமாக சிக்கி கொண்டனர். பிரிக்க முடியாத நிலையான பந்தம் ஒன்று அங்கே அந்த இரு வேறு வேற்று கிரகவாசிகளிடம் நிகழ்ந்தது. வெகுகாலம் அந்த புத்தம் புது காதலர்கள் தேனுறும் நிலவில் காதல் தேனை திகட்ட திகட்ட பருகினர். பின் பூமியை தரிசித்துவிட்டு அங்கே தங்கள் மக்களை ஒன்றாக இணைத்து அவர்களுக்கு புதியதொரு வாழ்வை வாழ அனுமதி கொடுத்துவிட்டு, ஒரு கிரகத்தின் தலைவனாக தலைவியாக தங்களுக்கு இருக்கும் பொறுப்புக்களை எண்ணி தங்கள் காதலுக்கு தற்காலிக விடுமுறை கொடுத்து மீண்டும் தங்கள் கிரகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் பிரிந்து சென்றனர்.

ஒரு நாள் வெள்ளி கிரகத்தில் எதிர்பாராத விண்கல் ஒன்று மோதியதில் பெரிய பேரழிவு ஏற்பட்டது. அங்கிருந்தால் இனி தன் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெண்ணி
வெள்ளி கிரகத்தின் அரசியான மேரி தன் கிரக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிரடி முடிவை எடுத்தார். அனைவரையும் பூமியில் குடியேற வழி வகுத்தார்.

ஆனால் அவர் மட்டும் பூமிக்கு செல்லாமல் நிலாவிலே தங்கி விட்டார். தன் கண்முன்னே இத்தனை நாட்கள் வாழ்ந்த கிரகம், மக்கள் வாழ தகுதி அற்ற கிரகமாக மாறுவதை கண்ணெதிரே காண முடியாமல் துடிதுடித்தார். ஒரு சின்ன விண்கல் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கனவிலும் எதிர்பார்த்திருக்க வில்லை. அதே போல இந்த விஷயம் தன் வாழ்வில் மிகப்பெரிய சூறாவழியை ஏற்படுத்தும் என்பதை அவர் அன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரும் சாதாரண மனிதர் தானே.


இப்போது மேரி எல்லாம் முடிந்து ஏதோ தனி ஆளாய் இருப்பது போல உணர்ந்தார். பூமியின் செழிமை வா வா என்றது. ஆனால் அவருக்கோ பூமிக்கு செல்ல விருப்பமில்லை. தன் காதலனோடு சேர்ந்து வாழ விரும்பினார்.

அதை நடைமுறை படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. வெள்ளி கிரக மக்களுக்கும் செவ்வாய் கிரக மக்களுக்கும் பூமியின் காலநிலை ஒத்துக் கொண்டது. ஆனால் வெள்ளி கிரக மக்களுக்கு செவ்வாய் கிரக சீதோஷ்ணம் ஒத்துக்கொள்ளும் படி இல்லை. அதனால் மேரியால் நேரடியாக செவ்வாய் செல்ல முடியாத நிலை.

அப்போது தான் அவரது ஆலோசகர் அகத்திய மாமூனி ஒரு ஆலோசனை வழங்கி அதை செயல்படுத்தினார். ஜூலியஸுக்கு தூது அனுப்பி மேரியின் நிலையை எடுத்துரைத்து ஜூலியஸின் பதிலை வாங்கி வருவது என்று. தன் சீடர் இருவரை உருமாற்றி செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் தற்காலிக கவசத்துடன் அனுப்பி வைத்தார். ஆனால் அச்சீடர்கள் செல்லும் வழியில் விண்வெளியில் ஏற்பட்ட புழுதிப்புயலில் சிக்கி அவர்களால் செவ்வாய் கிரகத்திற்கு சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் நிலாவில் தன் காதலனின் பதிலுக்காக காத்திருந்த மேரிக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. போதுமான வைத்திய பொருள்கள் அங்கில்லை. பூமிக்கு தான் சென்றாக வேண்டும்.

இருந்தும் அவர் மனம் தன் காதலனது வரவுக்காக காத்திருக்க விரும்பியது. இந்நிலையில் அவரது உடல்நிலையின் மீது அக்கறை கொண்டு அகத்தியர் வலுக்கட்டாயமாக மேரியை பூமியில் கொண்டு சேர்த்தார். ஜூலியஸை உன்னிடம் சேர்த்து வைப்பது என் பொறுப்பு என்று வாக்கு கொடுத்தார். வேறு வழியின்றி மேரியும் பூமியில் தங்க சம்மதித்தார்.

அங்கே செவ்வாய் கிரகத்திலோ தன் ஒற்றன் மூலம் வெள்ளியின் அழிவையும் மக்கள் பூமியில் குடியேறியதையும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேரியின் முடிவு சரி என்று தான் நினைத்தார். ஆனால் ஒரு காதலனாக அந்த இக்கட்டான நிலையில் மேரி ஏன் தன்னை நாடி வரவில்லை..? சரி..போகட்டும். ஒரு தகவலாவது சொல்லியிருக்கலாமே.. இந்த அளவு தானா அவளுக்கு என் மீது காதல்? உண்மையிலேயே என்னை விரும்பியிருந்தால் என்னிடம் வந்திருப்பாளே. எல்லாம் வெறும் நடிப்பு. பெண்கள் என்றாலே இப்படி தான் போல. பச்சோந்தி போல நேரத்திற்கு நேரம் நிறம் மாறுவர்கள் போல.. அதானே செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது.. பூமியை போலவா செழிப்பு.. அதான் சரியாக கணக்கு போட்டு பூமியை தேர்ந்தெடுத்திருக்கிறாள். துரோகி..

மேரியின் உண்மை நிலை அறியாமல் ஜூலியஸ் காதலி மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். இதை அறியாத மேரியோ தன் காதலன் வருகைக்காக பூமியிலே காத்து கொண்டிருக்கிறார்.

அங்கே புழுதி புயலில் மாட்டி கொண்ட சீடர்கள் வேறு வழியின்றி தங்கள் பயணத்தை மேற்கொண்டு தொடர முடியாமல் குருவிடம் திரும்பி வந்தனர். விஷயத்தை அறிந்த அகத்தியர் பதறி போனார். இதனால் எவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து கொண்டவர் எவரது துணையுமின்றி தானே ஜூலியஸை சந்திப்பது என்று முடிவெடுத்தார். ஆனால் ஜூலியஸோ அகத்தியரை பார்க்கவே அனுமதிக்கவில்லை.

மேரிக்கு தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத கோபத்தில் தூது செல்லாமல் திரும்பி வந்து அந்த சீடரகளுக்கு சாபம் ஒன்றினை கொடுத்தார். "இக்காதலர்களை சேர்த்து வைக்க உதவி கிடைக்கும் வரை நீங்கள் இருவரும் காலப்பயணம் மேற்கொள்ள விளையாடும் இந்த பரமபத பெட்டிக்குள் கற்களாய் இருக்க கடவதாக. உங்களது மறுஜனனம் கற்களின் ஒளி குறைய காரணமாயிருக்கும் கையால் நிகழட்டும்".

பின்பு இந்த காதலர்களை சேர்த்து வைக்க முடியாத துயரத்தில் அகத்தியர் யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார். அந்த மேரியோ தன் காதலன் வருகைக்காக இன்னும் பூமியிலே காத்திக்கொண்டு இருக்கிறார்.

இப்பொழுது தான் ஆருவிற்கு புரிந்தது. இது வெறும் விளையாட்டு இல்லை.. இருவரது வாழ்வு என்று.

வாழ்க்கை என்பது பல மாற்றங்கள் நிறைந்தது. எதிர்பாராததை எதிர் பாருங்கள் எதிர்பார்ப்புகள் இன்றி இது தானே வாழ்வில் நிம்மதியை தரகூடிய மருந்து. நேற்று இருந்தது இன்று இல்லை. இன்று இருப்பது நாளை இருப்பதும் கேள்விக்குறியே. அப்படி இருக்கையில் ஏன் இந்த தாமதம்.. விட்டுக் கொடுங்கள் உங்கள் துணையிடம். உங்கள் கோப வெறுப்புகளை களைந்து கொஞ்சம் தாழ்ந்து கீழிறங்கி போய் மன்னிப்பை கேட்பதில் அசிங்கம் இல்லை. அது தான் பலவருட தாம்பத்தியத்திற்கு அஸ்திவாரம்.

நன்றி..! நல்லது..! உன் விருப்பப்படியே..! சரி. முயற்சி செய்கிறேன்..! மன்னிச்சிடு. கோபத்துல நான் அப்படி பேசிட்டேன். இனி திருத்திக்க முயற்சி செய்கிறேன்.! என்னால நீ இல்லாம.. முடியாது.!

இப்படி சில வார்த்தைகள் போதும் உறவை நீட்டிக்க. அதை செய்ய தான் பெரும்பாலும் தவறுகிறார்கள். தாங்களே நீதிபதியாகி அனைத்தையும் தன் போக்கிலே தீர்மானித்து அவசர அவசரமாய் தீர்ப்பு எழுதி முடித்தும் வைத்து விடுகிறார்கள். எதிர் நிற்பவர் ஏன் இப்படி நடந்து கொண்டார்..? அவருக்கு என்ன சூழ்நிலையோ? கொஞ்சம் காது கொடுத்து அவர் தரப்பு நியாயத்தை கேட்டிருக்கலாமோ..? என்றெல்லாம் இப்போது சிந்திப்பதில்லை.

இப்படி ஒரு தவறை தான் ஜூலியஸ் செய்தார். ஆனால் மனமொத்த காதலர்களான இவர்கள் பிரிவின் வீரியத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒருவர் அன்பால் தன் காதலை மீண்டும் அடைய விரும்பினார். ஆனால் இன்னொருவரோ கோபம் என்னும் அரக்கனை தலையிலே ஏந்தி வெறுப்பை கண்ணிலே அணிந்து தான் என்ற அகந்தையிலிருந்து வெளிவர முடியாமல் பிரிவை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டார்.

பூமியிலே மேரி பல ஆன்டுகளாக காதலுக்காக தவம் இருந்து கொண்டிருக்க... செவ்வாய் கிரகத்திலோ ஜூலியஸ் மனம்விட்டு பேசாத ஒரு காரணத்தினால் தன்னை தானே ஒரு வட்டத்திற்குள் அடக்கி தன் காதலை புதைத்து இல்லை இல்லை சிதைத்து கொண்டிருக்கிறார். மிஸ் அண்டர்ஸ்டான்டிங் லீட்ஸ் டு பெட்டர் அண்டர்ஸ்டான்டிங் இதை இப்போது யார் இங்கே சொல்லி புரிய வைப்பது..??

சாதாரண உப்பு சப்பில்லாத விஷயம் அதை தன்னிடம் சொல்லாமல் தனியாக முடிவு எடுத்த ஒரே காரணத்துக்காக இன்று வரை மேரி தண்டிக்க பட்டிருப்பது ஆராதனாவிற்கு தெள்ள தெளிவாக புரிந்தது.

பாவம் மேரி.. இந்த மனிதருக்காக இப்படி தவமாய் தவம் கிடக்கிறாரே.. இந்த காதல் தான் எத்தனை விசித்திரமானது. கல்லை கட்டி கடலில் போட்டால் கூட காதலுக்காக சந்தோசமாக அனுபவிக்குமே..

தீடிரென பூமி பற்றி ஒரு எண்ணம் தோன்ற, "அது சரி..இதனால் பூமிக்கு என்ன ஆபத்து வந்துவிடப்போகிறது?" ஏலியன் குட்டிகளிடம் பார்வையை திருப்பினாள்.

"இப்போது செவ்வாய் கிரகமும் அழிவின் விளிம்பில் நிற்கிறது" சோகமாய் குரைத்தது பப்பி டாக்.

"எ..எ..என்ன...?"

"ம்ம்ம்ம்.. செவ்வாய் அழிந்தால் பூமியின் ஈரப்புவிசையில் மாற்றம் நிகழும். அப்படியென்றால் பூமியில் சுனாமி.. எரிமலை வெடிப்புகள்.. என்று பேரழிவு ஏற்படும்".

"ஓ மை காட்.. இப்போது எப்படி இந்த அழிவை தடுப்பது? அந்த ஜூலியஸை மேரியிடம் எப்படி கொண்டு போய் சேர்ப்பது..?"பெண்ணவள் பரிதவித்தாள்.

"அது உன் கையிலும் ஜூலியஸ் கையிலும் தான் இருக்கிறது".

"ஜூலியஸ் என்றால் சரி. ஆனால் என் கையில் எப்படி? தெளிவா சொல்லு".

"எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. நீ ஜூலியஸை சந்தித்து பேசினால் மற்ற விவரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது".

"சரி.. சரி .. பேச்சு போதும். இப்போது சீக்கிரம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வழியை கண்டறிவோம்" துரித படுத்தியது தங்க மீன்.

ஆராதனா அந்த பறக்கும் யானையின் மீதிருந்து கீழே பூமியை பார்த்தாள். பார்க்க ரம்மியமாய் தான் இருந்தது. ஆனால் உள்ளத்தில் ஏதோ ஒரு கவலை பிறந்தது. தாயை பிரியும் சேயை போல பூமியை ஏக்கமாக பார்த்தாள். அதற்குள் அந்த யானை மேகத்தினை கடந்து பூமியின் வெளிப்புறம் வந்திருந்தது. அங்கே ஓரிடத்தில் நின்ற அந்த யானை இவர்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் பூமிக்குள் ஒளிந்து கொண்டது.

"இப்போது நாம் அடுத்த வழியை சென்றயடைய வேண்டும். எங்கேனும் ஏதாவது வழி கிடைக்கிறதா என்று தேடுங்கள்" தங்க மீனின் பேச்சில் அதில் கவனமானாள் ஆராதனா.

விண்வெளி.. உயிர் இல்லாத இடம்.. வெகு வெகு அமைதியாக இருந்தது. எந்த கவச உடையும் இன்றி பெண்ணவள் பாதங்கள் அந்தரத்திலே அடியெடுத்து வைத்தது. ஆங்காங்கே சிறு சிறு கற்கள் பரவி கிடக்க அனைத்தையும் உற்று பார்த்தப்படி வந்தவளுக்கு சந்தேகம் படும் படி எதுவும் அகப்படவில்லை. திரும்பி ஏலியன் குட்டிகளை பார்க்கையில் அவர்களும் தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"சரி தான்... இங்கிருந்து வெளியே சென்ற படி தான்" அலுத்துக் கொண்டபடி பெண்ணவள் இன்னும் கொஞ்சம் முன்னேறி நடக்க ஆயத்தமானாள். அப்போது அங்கே மின் மினி பூச்சி போலே குட்டி குட்டியாய் நட்சத்திர வடிவில் ஏதோ ஒன்று ஒளிர்வது போல இருந்தது. ஆர்வ மிகுதியில் பெண்ணவள் விரைந்து அதை நோக்கி சென்றாள். இடைவரை குனிந்து இரு கைகளையும் கூப்பி அந்த ஒளிர் விளக்குகளை பிடிக்க முற்பட்டாள். ஆனால் அதுவோ நான் உன் கையில் அகப்படுவேனோ என்ற ரீதியில் ஆட்டம் காட்டியது.

பெண்ணவள் இப்போது பொறுமை இழந்திருந்தாள். "எனக்கேவா டிமிக்கி கொடுக்கிற...இப்போ பாரு உன்னை பிடிக்கிறேன்". துப்பட்டாவின் இரு முனைகளையும் இரு கைகளிலும் பிடித்தவள் மீன் பிடிப்பது போல அதனை நோக்கி வீசினாள். அவள் அதிர்ஷ்டம் நான்கைந்து நட்சத்திரஒளிர் விளக்குகள் அகப்பட்டு கொண்டன. மகிழ்ச்சியில் பெண் துள்ளி குதித்தாள்.

"ஹேய்.. மாட்டிக்கிட்டீங்களா..??" சிறு இடைவெளி வழியாக மாட்டிக் கொண்ட ஒளிர் பூச்சிகளை பார்த்து சிரித்தாள். அ..ப்..போது... அ...ப்போது...

அந்த விளக்கு பூச்சிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்றாக கை கோர்த்து பெரியதாக மாறியது... அதிர்ச்சியில் அவள் 'ஆ..ஆ..ஆ..' வென்று வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருக்கையிலே... அது மலைபோல பெரிதாகி ராட்சஷ நட்சத்திரமாக உருவெடுத்தது.

"யா..யா...யார் ந்நீ..?" அதனிடமிருந்து ஓங்கி ஒலித்தது குரல்.

ஆருவிற்கோ அச்சத்தில் இதழ்கள் திறப்பேனோ என்று ஒட்டி கொண்டது இதழ்கள்.

"ம்ம்ம்ம்... கேட்கிறே..ன் இ..இ..ல்லையா?! யார் நீ..நீ..? என் குழந்தைகள் விளையாடுகையில் தொந்தரவு செய்கிறாய். எ..எ.. என்ன தைரியம். உன்னை யார் இங்கே அனுமதித்தது. நீ எப்படி இங்கே வந்தாய் அதை முதலில் சொல்" அழுத்தமாய் வார்த்தைகள் வெளிவந்தது.

அதில் பெண்ணவள் வெளவெளத்துப் போனாள். நொடிகள் கரைய அவளையே பார்த்திருந்த அந்த ராட்சஷ நட்சத்திரம் சட்டென்று தன் பூத உடலை அசைத்தது. அதிலிருந்து வெளிப்பட்ட குட்டி குட்டி நட்சத்திரங்கள் பறந்து வந்து அவளை வெட்டுக்கிளி போல தாக்க ஆரம்பித்தது. அவற்றை தடுத்தவாறு பின்னோக்கி ஓடியவள் கால் தடுமாறி விழுந்தாள்.. கூடவே அவள் அணிந்திந்திருந்த அந்த மூன்றடுக்கு சங்கிலியும்.

'ஹைய்யோ.. இது பாட்டி ஆசை ஆசையாக தந்த பரிசாயிற்றே..' பதறியடித்து கொண்டு அதை குனிந்து எடுக்க முனைந்தாள். அதற்குள் அந்த குட்டி பட்சிகள் அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. விரல் நுனியில் சிக்கியிருந்த சங்கிலி அவள் தடுமாறியதில் பறந்து போய் அந்த பூத நட்சத்திரத்தின் முன் விழுந்தது.

தன் முன் கிடந்த அந்த சங்கிலியை பார்த்ததும் அதனுள் மகிழ்ச்சி பிரவாகம் ஊற்றெடுத்ததோ..?! விரல் சொடுக்கி ஆராதனாவை தாக்கிய பட்சிகளை நிறுத்த சொன்னது. அது வரை கோரமாய் காட்சியளித்த அந்த ராட்சஷ உருவம் இப்போது அப்படியே சாந்தமாக மாறியது. அந்த சங்கிலியில் இருந்து சின்ன நட்சத்திர டாலரை மட்டும் தனியே பிரித்தெடுத்து ஆத்மார்த்தமாக இதழ் ஒற்றியது தான் தாமதம் அந்த இடமே வெண்புகை மண்டலமாக மாறியது. அந்த குட்டி டாலர் நட்சத்திரம் இப்போது உயிர் வந்து ராட்சஷ உருவமாக மாறியது.

ராட்சஷ நட்சத்திரம் ஆனந்த களிப்பில் அதன் புது துணையை அணைத்து கண் குளிர பார்த்து ரசித்தது. பின் இதனையே வியப்பாக பார்த்திருந்த ஆருவிடம்.. "இ..இது.. இ..இவ்..வன் தான் என்னோட உயிர்.. என்னோட காதல்.. நாங்க செஞ்ச ஒரு சின்ன தப்பால் நாங்க இவ்ளோ நாள் பிரிஞ்சி இருக்க வேண்டியதா ஆகிற்று.

அன்றைக்கு மட்டும் நாங்க அப்படி ஒரு தப்பை பண்ணாம இருந்திருந்தா இப்படி ஒரு நிலை வந்திருக்காது. ஆனால் இந்த பிரிவும் ஒரு வகையில நல்லது தான். ஏ..ன்..ன்..னா இந்த இடைப்பட்ட காலத்துல தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டோம். எங்களுக்குள்ள காதல் இன்னும் ஸ்ட்ராங் ஆச்சு".

'இது என்ன புது கதை?' என்று வியப்புடன் பார்த்திருந்த ஆருவிடம் தன் துணையை பிரிந்த நிகழ்வை சொல்லலானது... "அன்றைக்கு நாங்க ரெண்டு பேரும் சந்தோசத்துல இருந்தோம். அப்போ எங்களையும் அறியாம டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டோம். எங்க டான்ஸோட வேகம் இந்த விண்வெளியில் புழுதி புயலை உருவாக்கிற்று. அது மாமூனி அகத்தியரோட சீடர்கள் வழியை தடுத்து நிறுத்திடிற்று. அதனால அவங்க முன்னேறி செல்ல முடியல. அவங்க வந்த வழியே திரும்பி போயிட்டாங்க. அப்போ எங்களுக்கு இது பெரிய விஷயமா தெரியல. அதான் எந்த உயிருக்கும் ஆபத்து இல்லையே.. அப்படின்னு நினைச்சோம்.

ஆனா.. அதுக்கு அப்புறம் தான் எங்களுக்கு விஷயம் தெரிஞ்சி. அதை நினைச்சி நாங்க ரொம்பவே வருத்தப் பட்டோம். அகத்தியரை பார்த்து மன்னிப்பும் கேட்டோம். ஆன்..னா..அவர் ஏத்துக்கல. அப்படியென்ன குருட்டு காதல்.. 'காதல் வாழ வைக்கணும். அடுத்த நபரோட வாழ்வை கெடுக்கிறது மாதிரி நடந்துக்க கூடாது. காதல் பொறுப்பா இருக்க சொல்லும். பொறுக்கி மாதிரி சுயநலமா இருக்க சொல்லாது. நீங்களும் வாழ்ந்து அடுத்தவரையும் வாழ வைக்கணும். இப்படி காதல் போதையில் மூழ்கி சுற்றி இருக்கிறவங்களுக்கு துன்பத்தை கொடுக்க கூடாது.

உங்களால் எப்படி மேரியும் ஜூலியஸும் பிரிஞ்சி இருக்கிறாங்களோ அதே மாதிரி நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருப்பீங்க. எப்போ அவர்களை சேர்த்து வைக்க ஒரு தூதுவர் ஜூலியஸை பார்க்க வருவாரோ அப்போ தான் நீங்க ரெண்டு பேரும் சேர்வீங்க. அதுவரை உங்கள் காதல் வலிமையானதா இருந்தா... அந்த தூதுவர் உன் காதலரோட உயிரை மீட்பார். அவருக்கு தேவையான உதவியை நீங்க தான் செய்யணும்'. அப்படின்னு சொல்லிட்டு என்னோட துணையை குட்டியா மாற்றி கூடவே கொண்டு போயிட்டார்.

அவர் சொன்ன மாதிரி இப்போ தூதுவரா நீ வந்து தான் எங்களை சேர்த்து வச்சியிருக்கிற. மம்ம்ம்ம்... சொல்லு. இப்போ உனக்கு நாங்க என்ன செய்யணும். உனக்கு நாங்க கடமை பட்டிருக்கிறோம்".

அந்த ராட்சஷ நட்சத்திரம் சொல்லியதை வியப்புடன் கேட்டவள்.. சிந்தை தெளிந்து தனக்கு இங்கிருந்து செல்ல வழியை கொடுக்குமாறு கேட்டாள். உடனே குட்டி குட்டி மின் மினி பூச்சிகள் போல சில பறந்து வந்து ஒரு ஏணி போல மாறியது. அது அடுக்கடுக்காக உயர்ந்து நிலாவிலே முடிந்தது. "ம்ம்ம்.. ஏறிக்கொள். இந்த ஏணி உன்னை கொண்டு போய் சேர்க்கும்" கூறிய மாத்திரத்தில் அதன் துணையுடன் பறந்து சென்று விட்டது.

பரவசத்துடன் பெண்ணவள் அந்த ஏணியில் காலடி எடுத்து வைத்தாள்... அது ஒரு லிப்ட் போல மேலே தூக்கி சென்றது. இதை தூரமாய் பார்த்துக் கொண்டிருந்த பப்பி டாக்கும் தங்க மீனும்.. ஓடோடி வந்து அவளோடு இணைந்து கொண்டது.

"வா..வா..வ்... நானும் நிலாவிலே கால் பதிச்சிட்டேன்.. ஹா ஹா ஹா..." ஆரவார புன்னகையுடன் நிலாவிலே இறங்கி நடந்தாள் ஆரு. அப்போது அவளை நோக்கி வெண்மை நிற குதிரை போன்ற ஒன்று பாய்ந்தோடி வந்தது. அதன் தலைமுட்டியில் நீளமாக ஒற்றை கொம்பும்.. அடி வயிற்றுப் பகுதியில் பறந்து விரிந்த இரண்டு இறக்கைகளும்.. உடல் குதிரை தேகமுமாய் இருந்தது. இதை எதிர்பாராத ஆராதனா சுதாரிப்பதற்குள் அது தலையை குனிந்து கூரிய கொம்பால் ஆருவை முட்டி தூக்கி எறிந்தது.

"அ..அ..அ..ம்..ம்..மா.. மா.. மா.." பெரும் கூவலுடன் பெண்ணவள் தூரமாய் போய் விழுந்தாள்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 33 (a)

26238

சிவப்பு ரோஜாவே
உன் பதில் வேண்டி..
தடைகளை கடக்கிறேன்
தன்னலம் துறந்து
காதல் மணம் பரப்புவாயா..?!


எங்கிருந்தோ வந்த யூனிகோர்ன் வெண்குதிரை ஒன்று தன் கூரிய கொம்பால் ஆராதனாவை தூக்கி வீசியது. எதிர்பார்க்காத நேரத்தில் நடந்து முடிந்த இந்த திடீர் தாக்குதலில் பெண்ணவள் செய்வதறியாது திகைத்துப் போய், பறந்து சென்று தூரமாய் புழுதியோடு புழுதியாக கீழே விழுந்தாள்.

சுவாசத்தோடு கலந்த மண் துகள்கள் அவள் மூச்செடுக்க விடாமல் தடுக்க, சுவசாத்திற்காக தடுமாறியவள் இருமியபடியே மெதுவாக எழுந்தமர முற்பட்டாள். அப்போது இன்னொரு திசையிலிருந்து வந்த மற்றோரு யூனிகோர்ன் குதிரை தன் பங்குக்கு முட்டி தூக்கியெறிய மீண்டும் அந்தரத்திலே பறந்தாள். இப்படி மாற்றி மாற்றி பெண்ணவள் பந்தாடபட சிறுகுடலும் பெருங்குடலும் இடம் மாறாத குறைதான்.

தலைக்குள் வண்டு குடைவது போல ரீங்காரம் வேறு மேற்கொண்டு யோசிக்க முடியாமல் தடை செய்தது. தன் வாழ்நாளில் நடந்த ஏதேதோ நினைவுகள் நொடியில் தோன்றி மறைய ஆரம்பித்தது. ஓர் நொடி கண்களை அழுந்த மூடி நிதானமாக ஆழ்ந்து சுவாசத்தை எடுத்தவள் உறுதியுடன் கண்களை திறந்து, கையிலே வைத்திருந்த பாட்டியின் பரிசான அந்த செயினின் ஒரு டாலரான சிலுவையை இறுக்கி பிடித்தபடி அந்த குதிரையின் நெற்றியில் ஓங்கி குத்தினாள். அடுத்த நொடியே அந்த பறக்கும் குதிரை சாதுவாய் அடங்கி போக, மீதமிருந்த இன்னொரு குதிரையின் மீதும் அதே போல செய்தாள். அதுவும் சட்டென தன் ஆக்ரோஷத்தை குறைத்து கொண்டது.

நீண்ட நெடும் மூச்சுக்களை விட்டவாறு பெண்ணவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, நடந்து முடிந்த செயலில் ஆச்சரியப்பட்டப்படி ஏதோ தோன்ற அந்த ஏலியன் குட்டிகளை தேடினாள். அவை அங்கே ஒரு பாறையின் பின்னே ஒழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. 'இந்த பிள்ளை பூச்சிகளை நம்பி எப்படி தான் அந்த முனிவர் அவ்ளோ பெரிய பொறுப்பை ஒப்படைச்சாரோ..? அவர் மட்டும் இப்போ பார்க்கணும்.. ஹா ஹா ஹா.. சரியான பயந்தாங்கோழைகள்'.

"டேய்.. ஏலியன் குட்டிகளா.. வெளியே வாங்கடா".

பாறை மறைவிலிருந்து தலையை மட்டும் வெளியே காண்பித்த அந்த பப்பியும் தங்க மீனும் அப்பாவியாய் முகத்தை வைத்தப்படி மெதுவாக வெளியே வந்தது. "ச்..ச்..ச்சு... என்ன ஒரு வீரம். எப்படிடா என்னை மட்டும் கோர்த்து விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆனீங்க. செம சாமர்த்தியம்டா.."என்று கேலி பேசியவள் முன் வந்து சாதுவாய் மண்டியிட்டி அமர்ந்தது அந்த யூனிகோர்ன் என்று அழைக்கப்படும் ஒற்றை கொம்பும் இறக்கைகளும் கொண்ட வெண்குதிரை.

" உண்மை காதலை சேர்க்க வந்திருக்கும் காதல் தூதுவருக்கு சந்திர மண்டலத்தின் காவலாளியின் சார்பாக வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சொல்லுங்கள். உங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய கடமைப் பட்டிருக்கிறோம்" சிரம் தாழ்த்தி பேசிய அந்த குதிரையின் மனித குரலில் பெண்ணவள் விக்கித்துப் போனாள்.

"அ..அ..அது.. வ.. வ..வந்து.. உனக்கு எப்படி என்னை தெரியும்? இவ்ளோ நேரம் என்னை அட்டாக் பண்ணுன.. இப்போ என்னடான்னா ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுற. ஒன்னும் புரியலயே".

சிரிக்க தெரியாது என்று மனிதர்களால் சொல்லப்படும் விலங்கினத்தில் ஒன்று அழகாய் புன்னகை தவழ்ந்த முகத்துடன் சொன்னது, "தியாகத்தின் முத்திரையான இந்த சிலுவை தான் அதற்கு காரணம். இது எங்கள் தலைவி மேரியின் ஆயுதம். எங்கள் தலையில் நீ இதை வைத்ததன் மூலம் வெளிப்பட்ட சக்தி உணர்த்தியது உன்னைப் பற்றி".

"ஓ.. அது சரி. எனக்கு இப்போ ஜூலியஸை பார்க்கணும். அவர்கிட்ட எப்படி போகுறது. உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?"

"கண்டிப்பா. முதலில் எங்களோட கொம்புகளை கழற்ற உதவி செய்" என்று சொன்னவர்களை விசித்திரமாக பார்த்த ஆரு தன் அச்சத்தை மறைத்தப்படி அந்த குதிரையின் அருகே சென்று கொம்புகளை கழற்றினாள். அப்போது அந்த வெண்குதிரை "ம்ம்ம்... அதனுள்ளே உன் கையை விடு" என்றது.

என்னவாக இருக்கும் என்ற சிந்தனையோடே தன் கைகளை கூரிய கொம்பினுள்ளே நுழைத்தவள் கையில் துண்டு சீட்டு ஒன்று அகப்பட்டது. விரலிடுக்கில் பிடித்தப்படி மெதுவாக அதை வெளியே எடுத்தாள். "உனக்கான தேர்வு இப்போது தொடங்குகிறது. படித்துப் பார்த்துவிட்டு உன் கருத்தினை சொல்லு" கொஞ்சம் அதிகாரமாய் உரைத்ததோ...?

'என்னது எக்ஸ்ஸாமா.. ஏண்டா இப்படி பாடு படுத்திறீங்க.. எக்ஸாம்னாலே எனக்கு அலர்ஜி ஆச்சே. அதுவும் கிரகம் விட்டு வெளியே வந்தப்புறமும் கேள்வி கேட்டு கொடுமை படுத்துறீங்களே. இது அடுக்குமா. அய்யோ ஆண்டவா என்னை காப்பாத்து'. லேசாக விரல்கள் தந்தியடிக்க பெண்ணவள் அந்த துண்டு சீட்டில் இருந்ததை வாசிக்க தொடங்கினாள்.

"நான் இருக்குமிடத்தில் நான் என்ற சிந்தனையே ஜனிக்காது.. தனிமையில் வேண்டுவது.. தனிக்காட்டு ராஜாவின் தலைக்கணத்தை தகர்ப்பது.. அதனை காட்டினால் யூனிகோர்ன் புன்னகை விரியும். உனக்கான பாதை பிறக்கும்".

'என்னது யூனிகோர்ன் புன்னகை விரியுமா..? அது எப்படி? இது யாரோட சிந்தனையா இருக்கும்..?' தனக்குள் முணுமுணுத்தப்படியே கோல்ட் பிஷ்ஷை பார்த்து,"டேய் தங்க கட்டி! இங்க வா.. வதனா உன்னை எனக்கு இன்ட்ரோ கொடுக்கும் போது நீ தனியா தானே அந்த மீன் தொட்டியில் ஸ்விம் பணிக்கிட்டு இருந்த. அப்போ உனக்கு என்ன தோணிச்சு??ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு".

"அ..அ..அது..து.. அது வந்து.. சீக்கிரம் தண்ணிக்குள்ள இருந்து வெளியே போகணும்னு தோணிச்சி. அது சரி அதை ஏன் இப்போ கேக்குற?" தாடையை நெஞ்சோரமாய் இருந்த துடுப்பு கொண்டு தடவியபடி கேட்டது.

"ம்ம்ம்.. உன்னை மசாலா தடவி பொறிச்சு சாப்பிட தான்.. போடா லூசு பயலே.. நானே எக்ஸாம் பீவர்ல இருக்கேன். இவன் வேற.. ச் ச.. இதுக்கு பதில் என்னவா இருக்கும்.." குறிப்பினை கைகளில் ஏந்தியபடி அங்கும் இங்கும் நடந்தவள் சோர்ந்தது தான் மிச்சம். அவளால் அதற்கான பதிலை கொஞ்சம் கூட யூகிக்க முடியவில்லை.

அவள் என்ன அறிவியல் புத்தகமா? தேடி கண்டறிந்து பதில் சொல்ல.. முந்திய நாள் வரை நம்மை போல ஒரு சாதாரண பெண்ணாக பூமியில் வாழ்ந்தவள் தானே. தீடிரென்று ஒரே நாளில் எல்லாம் மாயாஜாலமாய் மாறிப் போனால் மங்கையவள் தான் என்ன செய்வாள்? உறவுகள் அனைத்தையும் விட்டு பிரிந்து பல மைல் தொலைவில் இருக்கும் நிலாவுக்கு பயணம் செய்து வந்ததன் அலுப்பும் பிரிவின் துயரும் இருக்காதோ?!


கனவில் ஏதோ விந்தையாய் விளையாடுகிறோம் என்று நினைத்து தானே இந்த பயணத்தை தொடங்கினாள். போகப் போகத் தானே இது கனவல்ல. மர்ம தேசத்தின் வாசல் என்று புரிந்தது. இதில் சடாரென்று பயமுறுத்தும் விசித்திர விலங்குகளின் மோதல் வேறு.. அவளும் தான் எப்படி யோசிப்பாள். சாதாரண மனநிலையில் இருந்தாலாவது மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுத்திருப்பாள். ஆனால் இப்போது உறவுகளை பிரிந்து தனித்து இவளிருக்கும் மனநிலையில்.. ம்ஹும்.. சத்தியமாய் அவளால் முடியவில்லை.

நடந்து நடந்து சோர்ந்தவள் அப்படியே கால்களை மடக்கி தரையில் சம்மளம் போட்டு அமர்ந்தவள் ஒரு கணம் கண்களை மூடி தன்னைத் தானே அமைதியாக்கிக் கொள்ள முயன்றாள். சில நிமிடத்திற்கு பிறகு கொஞ்சம் மனது சமன்பட்டது போல தோன்றவும் நிமிர்ந்தபடி கண்களை திறந்தவள் விழியில் பட்டது நீலநிற பூமிப்பந்து.

அமாவாசை இருளில் ஒளிரும் வெள்ளி நிலவு போல அந்த பிரபஞ்சத்தில் ஒற்றை கதிராய் திமிருடன் ஜொலித்தது பூமி. அள்ளி தெளித்தார் போல ஆங்காங்கே சிதறி கிடந்த வான் மேகங்களும்.. பெரும்பாலான இளஞ்ஜோடிகளுக்கு பிடித்த நிறமான நீலநிறத்தில் பெருங்கடல்கள் பூமியில் அதிக இடங்களை ஆக்கிரமித்து கண்ணை கவர்ந்திழுக்கும்படி அமைந்தது கவர்ச்சியாய் தெரிந்தது. தெரிந்தும் தெரியாமலும் பசுமையாய் விரிந்திருந்த நிலப்பரப்பானது பார்ப்பதற்கு பாயாசத்திலே மிதக்கும் பருப்பு வகைகளை ஒத்து காணப்பட்டது. பார்க்க பார்க்க அவள் மனதில் தானாக ஒரு இதம் பரவியது. மனம் நிரம்பியதினாலே என்னவோ இப்போது அவள் மூளை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தது.

அந்த குறிப்பு சீட்டின் கேள்வியை மீண்டும் அசைப் போட்டாள். நான் என்பது என்னவாக இருக்கும்? தனிமையில் மனம் எதை தேடும்..? இந்த குதிரைகளுக்கு நான் எதை காட்ட வேண்டும்..? ஹம்ம்ம்..

முழங்காலை கைகளால் அணைத்தப்படி அமர்ந்திருந்தவள் யோசனை இப்போது அந்த வெண்குதிரைகளின் மீது படிந்தது. 'ஆஜானுபாகுவாய் கம்பீரமாய் இருக்கும் இவற்றிற்கு என்ன குறை..?' மனம் அதன் போக்கில் பயணிக்க நேரம் கடந்தது அவளுக்கு உரைக்கவே இல்லை. இன்றோடு அவள் பூமியில் இருந்து கிளம்பி நான்கு நாட்கள் கடந்ததை அறிந்தால் பேதையின் நிலை என்னவாக இருக்குமோ..? இன்னும் மூன்று நாட்களே உள்ளது அவள் திருமணத்திற்கு! இவள் எப்போது ஜூலியஸை சந்தித்து மேரியோடு சேர்த்து வைத்துவிட்டு பூமி திரும்புவதோ..? அதுவரை பூமியில் இவளது சூழ்நிலை எப்படி மாறியிருக்குமோ..? இதெல்லாம் இவள் அறிந்திருந்தால் இந்த பயணத்தை தொடங்கியிருப்பாளோ என்னவோ.. ? எல்லாம் விதியின் விளையாட்டு.

நம் வாழ்வில் எது எது நடக்க வேண்டும் என்று நம்மால் அறிந்திருக்க தான் முடியுமோ?! வருவதை அனுபவித்து தானே ஆக வேண்டும். மனதை அதற்கு தயார்படுத்திக் கொண்டால் விளைவின் வீரியம் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். அவ்வளவே.

அழகு பதுமையாய் அமர்ந்திருந்தவள் வதனத்தின் சோகரேகை ஏலியன் குட்டிகளை கவலை கொள்ள செய்தது. இப்படியே போனாள் நிலைமை விபரீதமாகும் என்பதை அறிந்து கொண்டவர்கள் உடனடியாக செயலில் இறங்கினர்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haai makkale..

Today chinna ud thaan thara mudinji. Pls adjust karo.

Romba nal kalichi yelutha try panum po onnum yelutha varala. Form ku vantha apuram periya epiya tharen.


Thank you for all ur support frnds.
 
Status
Not open for further replies.
Top