All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கதை திரி

Status
Not open for further replies.

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 27


அல்லோல பட்ட மனது
அந்திமாலையில் உன்னருகே
அமைதி கொண்டது!
பெண்ணே! நீ என்ன செய்தாய்?
மாயம் செய்தாயோ?!


தன்னை இத்தனை நாட்களாய் சீராட்டி பாராட்டி ஊக்குவித்து வளர்த்து ஆளாக்கியது தன் சொந்த பாட்டி இல்லை என ரவி சொன்னதும் பெண்ணவள் ஆராதனா ஸ்தம்பித்து போனாள். செய்தி செவி வழி சென்று மூளையில் உரைக்கவே சில நொடிகள் எடுத்தது.

"என்ன சொல்றீங்க ரவி?"அதிர்ந்து கேட்டாள் ஆராதனா.

"ஆமா ஆரு. எனக்கும் இந்த விஷயம் தெரிஞ்சப்போ ஷாக்கா தான் இருந்தது. அவர்கள் என்னை பார்த்துக்க எங்க அப்பா ஏற்பாடு பண்ணியிருந்த லேடியாம். ஆனால் சொந்த பேரனை பார்த்துக்கிறது மாதிரி அவ்ளோ நல்லா பார்த்துக்கிட்டாங்க. எனக்கு அவர்கள் உறவு கிடையாது அப்படின்னு எப்பவுமே பீல் பண்ண முடியாத அளவு கேரிங்கா பார்த்துப்பாங்க. அல்சோ செம டலேண்ட் பெர்சன். அவங்களுக்கு தெரியாத விஷயம்னு எதுவும் கிடையாது. வயசானாலும் என்னோட வயசுக்கு ஈக்குவலா பேசுவாங்க. தான் ஒரு பெரிய ஆள் அப்படின்னு ஒரு நாளும் என்கிட்ட நடந்துகிட்டதே கிடையாது. அதனாலயே எனக்கு அவங்க ரொம்ப இஷ்டம்.

அப்போ தான் ஒருநாள் எனக்கு அவர்கள் என்னோட சொந்த பாட்டி இல்லைன்னு தெரிஞ்சி. ரொம்ப கஷ்டமா போயிடிச்சி. அம்மாவும் போயிட்டாங்க. உயிருக்கு உயிரான பாட்டியும் சொந்தமில்லை, கூட வேற எங்க அப்பாவுக்கு என்னோட உறவுகள் அடுத்த கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணாங்க. சோ எல்லாம் சேர்ந்து என்னோட மனசுல ஒரு குழப்பத்தை உண்டாக்கிற்று. அப்போ எனக்கு என்ன தெரியும்? சின்ன வயசு. ரொம்ப ஒர்ரி பண்ணிக்கிட்டு யார்கிட்டையும் சொல்லாம வீட்டை விட்டு வெளியே போயிட்டேன்".

"ஹய்யய்யோ... அப்புறம் என்ன ஆச்சி".

"டி.. முதல போண்டா வாயை மூடு. பொறுமையா இரு நானே சொல்றேன். ஆமா உன்னை உங்க அம்மா அப்பா தேட மாட்டங்களா? நைட் முழுசும் ஒரு வயசு பொண்ணை காணோம்ன்னு பதறி போக மாட்டாங்களா?"

"அய்யய்யயோ.. மறந்தே போயிட்டேனே! என் அம்மா என் தோலை உரிச்சி உப்புகண்டம் போடப் போறாங்க.." பதற்றத்தில் எழுந்து நின்று தலையில் இரு கைகளையும் மூடியபடி வைத்து கொண்டாள். விழியில் மெல்லியதாக நீர்படலம்.

"ஹேய் பேபி. அழுகிறியா நீ. ஓ. கம் ஆன். கண்ணை துட. நீ நேத்து என்னை பார்த்த அதிர்ச்சியில் பேசிக்கிட்டே இருக்கும் போது அப்படியே மயங்கி விழுந்துட்ட. சாரி சாரி கிஸ் பண்ணிக்கிட்டே. அப்போ உன் ட்ரஸ் எல்லாம் ஈரமானதுனால என்னோட ட்ரஸ் மாத்தி விட்டேன்".

"ஹே.. உன் முட்டை கண்ணை விரிச்சி பயங்காட்டத. நான் முழுசா எதையுமே பார்க்கல".

"அப்போ அரை குறையா பார்த்தியா?!"

"ஏய். நான் அப்படி சொல்லலடி".

"பின்ன எப்படின்னு சார் விம் போட்டு விளக்குறீங்களா".

"அடியே. நீ நினைக்கிற மாதிரிலாம் எதுவும் நடக்கலை. பாத் டவலால் உன்னை மூடிக்கிட்டு தான் ட்ரஸ் போட்டு விட்டேன். தப்பான்னா எண்ணத்துல நான் எதுவும் பண்ணல. பிளீஸ் நம்புடி".

"ஹ்ம்ம்..சரி சரி. போகட்டும். இந்த ஒரு தடவை மன்னிச்சி விடுறேன். ம்ம்ம் அப்புறம்?"

"அப்புறம் என்ன உன்னை பெட்ல படுக்க வச்சிட்டு நான் என்னோட ஆபிஸ் ரூம்ல போய் படுத்துட்டேன்".

"அது சரி. இப்போ என்னோட அப்பா அம்மாக்கு என்ன பதில் சொல்லுறது?"

"நான் நேத்தே உன்னோட ஃப்ரென்ட் கீதுவுக்கு போன் பண்ணி ஆரு உன் கூட நைட் ஸ்டே பண்ணியிருக்கிற மாதிரி உன்னோட அம்மாட்ட சொல்ல சொல்லியிருக்கிறேன். அவளும் அப்படி தான் சொல்லியிருப்பா. நீ தான் உன் ஃப்ரென்ட் வீட்ல தங்குறது சகஜம் ஆச்சே. சோ உன்னை பத்தி அவங்க எதுக்கு கவலைப்பட போறாங்க".

"எனக்கு தெரியாம இவ்ளோ வேலை பர்த்திருக்கியா தேஜா வூ".

"எல்லாம் உன் மேல உள்ள அக்கறையினால தான் பேபி" கண்ணடித்தபடி சொன்னான்.

"பேபி யாம் பேபி. இவ்ளோ கேர் பண்ணுறவர் நேத்து நான் தனியா கஷ்டப்பட்ட போது எங்கே போய் தொலைஞ்சீங்களாம்?"

"ஏன்டி என்ன நடந்து?"

"என்ன நடந்ததுன்னு தெரியுமா?" என்று நேற்று முகம் தெரியா நபர்களால் தான் கடத்தப் பட்டதையும் பின் அந்த மித்ரன் மனம் மாறியதையும் தான் கால் தடுக்கி பெரிய பள்ளத்தில் தலை குப்புற விழுந்ததையும் அந்த கற்களின் மாய சக்தியையும் பின் நடந்த டைம் ட்ராவல் பற்றியும் கடைசியில் ரவியிடம் வந்து சேர்ந்ததையும் சொல்லி முடித்தாள்.

"இனி அந்த ஆளால் உனக்கு ஒன்னும் ஆகாதுனாலும் அவரை எனக்கு ஒரு நாள் இன்ரோ பண்ணி விடு. அந்த ஆளால் தான் நீ அலறி அடிச்சி என் கிட்ட வந்துருக்க. என் காதலை சேர்த்து வச்ச தெய்வம் டி அந்த ஆள். ஹா ஹா ஹா.."

"அந்த இக்கட்டான நேரத்திலயும் என்னை தான் நீ எதிர்பார்த்திருக்க. ரைட்? அதுவும் இல்லாம என்னை உடனே பாக்கணும்னு வேற வெறித்தனமா ஆசை பட்டிருக்க. என் செல்ல பொண்டாட்டி" என்று சொல்லியபடி ஆருவின் கன்னங்களை அழுத்தி கிள்ளினான்.

"போடா. உனக்கு விளையாட்டா இருக்கு. நான் எவ்ளோ எமோஷ்னல் ஆகிட்டேன் தெரியுமா?"

"எல்லாம் ஒரு விதத்துல நல்லத்துக்கு தான். இல்லன்னா நீ இப்போ என் கூட சேர்ந்திருப்பீயா".

"அந்த கற்கள் நீ தான் என்கிட்ட கொடுத்தியா ரவி? அன்றைக்கு காலனி பாங்சன்ல வந்தது நீ தானே?"

"ம்ம்ம். ஆமா. ஆக்ச்சுவலா என்னோட ஃப்ரென்ட் வீட்டுக்கு தான் வந்திருந்தேன். எதேச்சையா உன்னை பார்த்தேன். அது நீதான்னு என் மனசு சொல்லிச்சி. எனக்கு தான் உன்னை தெரியும். உனக்கு என்னை தெரியாது இல்லையா சோ முன்ன பின்ன தெரியாத நான் கூப்பிட்டா நீ வருவீயோ மாட்டியோன்னு தான் அவனை அனுப்பி உன்னை கூட்டிட்டு வர சொன்னேன். அவன் தான் உங்க காலனியை சேர்ந்த ஆள் ஆச்சே. உனக்கு எப்படியும் அவனை தெரிஞ்சிருக்கும். அவன் கூப்பிட்டா வருவன்னு நினைச்சேன்.

ஆனால் நீ அவன் உன்னை ரேப் பண்ண வந்தது கணக்கா டிராமா போட்டு ஒரு சீன் கிரியேட் பண்ணிட்ட".

"ஏய். நீ என்ன சொல்லுற. அவன் மேல ட்ரிங்க்ஸ் ஸ்மெல் அடிச்சே".

"அதுவா? உன்னை பார்க்க வர அவசரத்துல ஒரு குடிகாரன் மேலே மோதிட்டான். அவன் கையில இருந்த டிரிங்க்ஸ் அப்படியே அவன் மேலே சு..வா..க. சோ உனக்கு அந்த ஸ்மெல் அடிச்சிருக்கும்".

"அப்படியா விஷயம். நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?" அன்றைய நாளின் நினைவில் பெண்ணவள் தேகம் சிறிது நடுக்கம் கொண்டது.

"ஷ்.. ஷ்.. ஆரு கூல் பேபி. ஏன் டென்ஷன் ஆகுற. ரிலாக்ஸா விடு".

"ஹ்ம்மம்ம்..." அப்போது தான் நினைவுக்கு வந்தது அன்று இருளில் கையை பிடித்து இழுத்து மனிதன் தன்னை ரேப் பண்ணும் பொருட்டு நெருங்காததை. 'சரி தான். அவன் ஒன்றும் செய்யாமலே நாமாக கற்பனை பண்ணி கொண்டு கத்தி கூப்பாடு போட்டிருக்கிறோம்'.

"அப்புறம் ஏன் நீ என்னை அன்றைக்கு பார்க்காமலே போயிட்ட?"

"அதுவா. நான் உனக்கு குடிக்க தண்ணீர் எடுத்துட்டு திரும்பி வந்து பார்க்கும் போது உன் ஃப்ரென்ட்ஸ் எல்லோரும் இருந்தாங்க. எல்லோரும் யாரோ உன்கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணியிருக்காங்க அப்படின்னு நினைச்சி ஏதேதோ பேசிட்டிருந்தாங்க.

அந்த டைம்ல நான் என்ட்ரி ஆன என்னை வில்லன் மாதிரி பார்ப்பாங்க. சோ நான் திரும்பி போயிட்டேன். மனசுக்கு கஷ்டமா தான் இருந்து உன்கிட்ட பேச முடியலயேன்னு. ஆனாலும் என்னோட நினைவா அந்த கற்கள் உன்கிட்ட இருக்கட்டும்னு நினைச்சேன்.

அந்த கற்களோட சக்தி எப்படியாவது நம்மை சேர்த்து வைக்கும்ன்னு எனக்கு தோணிச்சி. இப்போ அதே மாதிரி நடந்திருச்சி". இருவரது முகத்திலும் இப்போது மென்னகை தவழ்ந்தது.

"அதுமட்டும் இல்லாம நான் ஏதாவது ஒன்னு சாதிச்சத்துக்கு அப்புறம் தான் உன்னை வந்து சந்திக்கணும்னு நினைச்சிருந்தேன். சோ அந்த காலனி பங்சன்ல நடந்தது நல்லத்துக்குன்னு நினைச்சி திரும்ப அமெரிக்கா போயிட்டேன்".

"நல்லா சாதிச்சி கிழிச்ச போ".

"ஏன்டி?"

"பின்ன அந்த கற்கள் எப்படி என்கிட்ட வந்ததுன்னு தெரியாம குழம்பி அன்றைக்கு உன்னை நான் சந்திச்சேனா இல்லையா? அப்படி இப்படின்னு என்னை நானே குழப்பிக்கிட்டு அந்த ஆளுக்கு நான் தேஜா வூ அப்படின்னு பெயர் எல்லாம் வச்சேன்".

"ஹா ஹா ஹா... இருக்கு ஆனால் இல்லை அதானே தேஜா வூ மீனிங்?"

"உனக்கு சிரிப்பா தான் இருக்கும். போடா. நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்".

"என்னோட அம்மு இவ்ளோ ஓர்ரி பண்ணியிருப்பான்னு தெரிஞ்சிருந்தா ஓடோடி வந்திருப்பேனே. இவ்ளோ நாள் டிலே ஆகியிருக்காதே" என்றபடி அவள் காதோடு அவனிதழ்கள் சரசமாடின.

"ம்ம்ம்.. ஆசை தோசை அப்பளம் வடை தள்ளி போடா".

"ஏய்..தள்ளி போகதே எனையும் தள்ளி போக சொல்லாதே..
இருவர் இதழும்.."

என்று தன் வசீகர குரலால் மேலே பாடப் போனவனின் இதழில் கைகளை பொத்தி அவனை தடுத்தவள் "போதும் ராசா. முதல சொந்த கதையை சொல்லி முடி. இப்பவே விடிஞ்சிருச்சி. நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்".

"மனுஷனை கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண விட மாட்டாளே. இருடி. சொல்றேன்" என்றபடி தொடர்ந்தான்.

"நெஸ்ட் டைம் நான் உன்னை ரோடு கிராஸ் பண்ணுறப்போ காப்பதுனேன். என்னோட நடவடிக்கைகளை பார்த்துட்டு பாட்டிக்கு சந்தேகம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏனோ என்னை உடனே கிளம்ப சொல்லிட்டாங்க. அன்றைக்கு மீட்டிங் வேற அர்ஜெண்டா போக வேண்டி இருந்து. சரி தான் பாட்டிட்ட உன்னை ஒப்படைச்சிட்டு நான் போயிட்டேன்".

"ஓ. அப்படியா. அன்றைக்கு பாட்டியும் இப்படி தான் சொன்னாங்க. ஆனா முழுசா சொல்லல".

"உனக்கு ஒழுங்கா ரோடு கிராஸ் பண்ண கூடவா தெரியாது. லூசு லூசு. எப்படி பயந்துட்டேன் தெரியுமா?"

"ஹீ ஹீ ஹீ.. ஏதோ அவசரத்துல போயிட்டேன். காட் பிராமிஸ் இனி அப்படி பண்ணவே மாட்டேன்".

"உங்களுக்கு அந்த கற்கள் எப்போ எப்படி கிடைச்சி ரவி? அந்த மேஜிக் ஸ்டோன் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும். சீக்கிரம் சொல்லுங்களேன். எனக்கு ஆர்வத்துல தலையே வெடிச்சிரும் போல இருக்கு" என்றபடி அவன் கைகளை அவள் கைகளுக்குள் அடக்கி கொண்டாள்.

"எனக்கு அந்த கற்கள் எப்படி என்கிட்ட வந்ததுன்னு சரியா நியாபகம் இல்லை ஆரு. அப்போ நான் ரொம்ப சின்ன பையன். நடந்தது எதுவும் சரியா தெரியல. ஆனால் எனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது தான் அந்த கற்களோட பவர் பற்றியும் அந்த கற்கள் ஏன் என்கிட்ட இருக்குதுன்னும் முழுசா தெரிஞ்சிகிட்டேன்".

"எப்படி எப்படி?"

"என் அம்மா".

"என்ன சொல்றீங்க? உங்க அம்மாவா?"

"ம்ம்ம். என்னோட அம்மா தான் தந்துருக்கணும். ஏன்னா அந்த கற்கள் கூடவே என்னோட அம்மாவோட ஹேண்ட் பாக் இருந்து. கூட அந்த கற்கள் பற்றின குறிப்பும் எங்க அம்மா கையெழுத்தில்".

"ஓ. அப்படியா. அப்போ உங்க அம்மாக்கு தான் அந்த கற்கள் எப்படி எதுக்காக உன்கிட்ட வந்ததுன்னு தெரியும். சரி சரி. அப்புறம் என்ன ஆச்சி".

"பொறுடி. எனக்கு குளிருது. எவ்ளோ நேரம் தான் வெறும் டவலோட இருக்கிறது போய் ட்ரஸ் மாத்திட்டு குடிக்க உனக்கு ஏதாவது எடுத்துட்டு வாறேன். நேத்து நைட்டும் சாப்பிடல. இப்போ வரேன் அது வரை ஒழுங்கா அமைதியா இரு".

'தன் மேல் எத்தனை அக்கறை இவனுக்கு தான். ஒரு ஆண்மகனுடன் ஓரரிரவு தனித்து இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த பயமும் குற்றஉணர்ச்சியும் இல்லையே. பாதுகாப்பாய் அல்லவா தோன்றுகிறது.

யார் இவன்? என் வாழ்வில் ஏன் வந்தான். சுனாமியாய் ஒரு நொடிக்குள் என் வாழ்வை மாற்றி விட்டானே. இனி இவன் இன்றி என்னால் எப்படி ஒரு நொடியையும் கடந்திட முடியும்". காதல் கொண்ட மனம் உலகம் மறந்து அவன் காலடியிலே தஞ்சம் புகுந்தது.

கருப்பு நிறத்தில் மரத்திலான கலைநயமிக்க ட்ரேயை கையில் ஏந்தியபடி ஸ்கை ப்ளூ கலரில் சட்டையும், டார்க் ப்ளூ கலர் ஃபேண்டும் அணிந்து தனக்கே உரிய வசீகர புன்னகையுடன் அவளை நோக்கி வந்தான் ரவி. அவனது அழகிற்கு அந்த நிறம் வெகு கச்சிதமாக பொருந்தி அவனழகை தூக்கி காட்டியது. பெண்ணவள் இப்பொழுது அவளாகவே இல்லை.

"போதும் போதும். என்னை சைட் அடிக்கிறதை நிப்பாட்டிட்டு முதலில் இதை எடுத்துக்கோ".

19178

சிறு நாண சிரிப்புடன் அவனிடமிருந்து தன் கண்களை வலுகட்டாயமாக பிரித்து அவன் நீட்டிய ட்ரேயில் பார்வையை பதித்தாள். அந்த ட்ரேயில் இரண்டு வெள்ளை நிற பீங்கான் குவளைகளும் ஒரு ஜக்கும் அதனை தொடர்ந்து ஒரு கூரை வீடு போன்ற பொம்மை வீடும் அதனை சுற்றிலும் ஒரு சின்ன நீரோடை செல்ல நேராக பாத்தி போல அமைத்து அதில் குட்டி குட்டி கூழாங்கற்கள் பதிக்க பட்டிருந்தது. இதனை வடிவமைத்தவன் உண்மையிலே திறமைசாலி.

"மேடம்க்கு இதை சாப்பிடுற ஐடியா இருக்கா இல்லையா? ம்ம்ம்?"

அவன் பேச்சில் தன் சிந்தனையை ஒதுக்கி விட்டு அந்த குவளையை எடுத்துக் கொண்டாள். அதன் வாசம் அவளை வெகுவாக ஈர்த்தது. அதிலும் அதன் நிறம் பெண்ணவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"ரொம்ப நல்லா இருக்கு. இது என்ன?"

"ஹ்ம்ம்... இப்பவே சொல்லணுமா".

"ஏன் சொல்ல கூடாதா?!" அவனிடமே கேள்வியை திருப்பினாள்.

"சொல்லாமல் சொல்றேன். நீயே கண்டு பிடிச்சிக்கோ" சொல்லிவிட்டு அவளிடம் இருந்த காலி குவளையை வாங்கி அந்த ட்ரேயில் வைத்தான்.

"சொல்றேன் கேட்டுக்கோ" என்றபடி தன் புதிர் பெட்டியிலிருந்து ஒரு புதிரை அவிழ்த்து விட்டான்.

"அச்சு அசலனா வதனத்தின் தோலை
மணங்களின் ராஜாவோடு மணமுடித்து
தேகத்தை சீராக்கும் சிங்கத்தை
வெற்றி ரிப்பனை வெட்டி
அதன் நுனியை,

சிங்கிள் பாயாய் ஜொலிப்பவனோடு தன்னந்தனியாக மோத விட்டு,
கருங்காலி பயலை காளிக்காக
தீக்குளிக்க வைத்து,

கடைசியில்
ஏழு அரக்கர்களையும் நைய புடைத்து ஜலத்திலே நீராட செய்து
ஒரு சிட்டிகை சொடுக்கி
ஆற பொறுத்தால் வருவேனே நான்

கன்னிப் பெண்ணின் நாணத்தை போல
கதகளி ஆடி கண்ணை கவர்ந்து
கண்ணுக்கு தெரியாதவனை துவம்சம் செய்வேனே."


"ம்ம்ம். சொல்லு பார்ப்போம்".

"டேய் இது உனக்கே அடுக்குமாடா. ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்ளோ பில் டப் குடுக்கிறீயே?"

"ஏய். இதுல எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு தெரியுமா? அதை போய் இப்படி ஈஸியா சொல்லுற".

"சரி விடு. என்னால கண்டுபிடிக்க முடியல. நீயே சொல்லிடு".

"ஆங். அஸ்கு புஸ்கு. இப்போ சொல்ல மாட்டேன். அப்புறம் சொல்றேன். அப்போ தான் நீ இதை யோசிச்சி யோசிச்சி மண்டைய போட்டு பிச்சுக்குவ".

"என்ன ஒரு சந்தோசம் உனக்கு".

"இப்போதைக்கு என்னோட ஹிஸ்டரி வேணா சொல்லட்டுமா?".

"வேற வழி. கேட்டு தானே ஆகணும். சொல்லி தொலைடா".

"என்னடி 'டா' லாம் போட்டு பேசுற. இரு இரு உனக்கு அப்புறமா வச்சிக்கிறேன்.

அவ்ளோ நாளா யாரை பாட்டின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேனோ அவங்க என்னோட ஒரிஜினல் பாட்டி இல்லை, அப்பாவும் எப்போ அடுத்த மேரேஜ் பண்ணிப்பாரோன்னு அன்றைக்கு எல்லோர் மேலேயும் ஒரு வெறுப்பு. யாரும் எனக்கு நிரந்தரமில்லை, எனக்காக யாருமே இல்லை அப்படின்னு. சோ எதை பற்றியும் யோசிக்கமா யார்கிட்டயும் சொல்லாம வீட்டை விட்டு வெளியே போயிட்டேன்.

அப்படியே போய் ஒரு பீச்ல உக்காந்துட்டேன். மணிக்கணக்கா. இருட்ட ஆரம்பிச்சுது. முதல கோவத்துல வெளியே வந்தது ஒன்றுமே தெரியல. நேரம் ஆக ஆக தான் எனக்கு பயம் கொடுக்க ஆரம்பிச்சது. இதுக்கு அப்புறம் எங்கே போறது, என்ன பண்ண, அப்படின்னு. குழப்பத்துல இருக்கும் போது தான் ஒரு தேவதை வந்தாள்".

"வந்து..?"

" அவள் மட்டும் வரல. கூடவே ஒரு சின்ன நாய் குட்டியும்".

"வில்லங்கம் தனியா வரல. கூட ஒரு சகுனியையும் கூட்டிட்டு வந்திருக்குன்னு சொல்லு".

"என்ன சொல்லுற? யாரு வில்லங்கம்?"

'உனக்கென்னப்பா. நீ கொடுத்து வச்ச மகராசன். உன் வாழ்க்கையில ஒரே தேவதைகளா வருது. ஆனால் எனக்கு அப்படியா. நானே இப்ப தான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள எனக்கு போட்டியா ஒரு பொண்ணு. அவளை நீ தேவதைன்னு கொஞ்சுவ. அதையும் நான் விதியேன்னு கேட்கணும். எல்லாம் என் தலை எழுத்து'.

"ஒன்றும் இல்லை ராசா. நீ மேலே சொல்லு உன் தேவதையை பற்றி".

"பொம்மேரி ரகத்துல அது குட்டி டாக் பார்த்துக்கோ. அதை விரட்டிட்டே வந்துகிட்டு இருந்தா. நான் உக்காந்து இருந்ததை கவனிக்கலை போல. ஓடி வந்த வேகத்துல கால் தடுக்கி என் மேல விழுந்துட்டா".

"ஹேயய்யோ! மேலேயே விழுந்துட்டாளா?அப்புறம் என்ன ஆச்சி?".

"பாவம். சின்ன பொண்ணு. பயந்துட்டா".

"சின்ன பொண்ணா?"

"ஆமா. அப்போ எனக்கு ஒன்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அந்த பெண்ணுக்கு மூன்று வயசு வேணா இருந்திருக்கும்".

"அட கடவுளே அப்படின்னா பாப்பான்னு சொல்ல வேண்டியது தானே. நான் என்னடான்ன்னா உன் வயசுக்கு ஏத்த மாதிரி பெரிய பொண்ணா இருக்கும்னு நினைச்சிட்டேன்".

'ஷ் ஷ் ஷ்.. ஷப்பாடா வில்லங்கம் தீர்ந்தது. நாம நினைச்ச மாதிரி எதுவும் இல்லை' மனதுக்குள் ஆறுதல் பட்டு கொண்டாள் ஆரு.

"ம்ம்ம். நீ கன்டினியூ பண்ணு ராசா".

"அந்த பொண்ணு யாருன்னு கேட்க மாட்டியா?"

"அப்போ உனக்கு அந்த பொண்ணை தெரியுமா?"

"அப்போ தெரியாது. ஆனா இப்போ நல்லா தெரியும்".

"ஹேய்.. என்ன சொல்லுற. அப்போ இப்போ வரை கான்டாக்ட்ல தான் இருக்கிறீங்களா?"

"யெஸ் பேபி".

"டேய். நீ என்னடா சொல்லுற?".

"அந்த பொண்ணு யாருன்னு சொல்லு பார்ப்போம்".

"எனக்கு எப்படிடா தெரியும்".

"அப்போ தெரியாதுங்கிற".

"ஆமாடா".

"சரி விடு. அந்த பெண்ணை பற்றி சொல்லுறேன் கேட்டுக்கோ".

'டேய் மவனே ஓவர் பம்மாத்து எல்லாம் வைக்கிற. எசக்கு மசக்கா எதுவும் சொல்லு உனக்கு இருக்குடா'.

"அந்த பொண்ணோட நேம்.."



அடுத்த epi ல சொல்றேன். டா டா...;):D
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ!

அத்தியாயம் 28

சொல் பேச்சு கேட்கும் தேவதை பெண்ணாய் இருப்பதை விட
அடம்பிடிக்கும் வாண்டாய்
அட்டூழியம் செய்யும் சுட்டியே
மனதில் இடம் பிடிக்கிறது...


"பாட்டி ,அப்பா, என்னை விட்டுட்டு போன அம்மா எல்லோர் மேலேயும் உள்ள கோபத்துல யார்கிட்டயும் சொல்லாம பீச்க்கு வந்து உக்காந்துட்டேன். அப்போ தான் ஒரு தேவதை வந்தாள். கூடவே வால் பிடிச்சுக்கிட்டு இன்னொரு அடாவடி தேவதையோட". அன்றைய நினைவில் ரவி தன் கண்முன்னே விரிந்த காட்சியை ஆராதனாவுடன் பகிர்ந்து கொள்ளலானான்.

வெள்ளை நிறத்தில் அழகாய் இருந்த அந்த குழந்தைக்கு இளம் மஞ்சள் நிற கவுன் பொருத்தமாய் இருந்தது. அமர்ந்திருந்த ரவி மீது மோதிய அந்த குழந்தை ரவியை பார்த்து பயந்து நிற்க அவன் தன் முன்னே நின்ற குழந்தையை ஆர்வமாக பார்த்தான்.

குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் பார்ப்பதற்கு தேவதை போல இருந்தால்..

ரவியும் அப்படி தான் அந்த குழந்தையின் முகசுணக்கத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே அந்த குழந்தையின் பின்னே யாரோ வருவது தெரிந்தது. அவன் அமர்ந்திருந்தவாறே தலை சரித்து யாரென்று பார்த்தான். அதுவும் இன்னொரு குழந்தை தான்.

இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த குழந்தை இவர்கள் அருகில் வந்து அந்த தேவதை குழந்தையை பார்த்து,

"அதிவு கெத்தவளே! ஒதுங்கா போவத் தெயிறாது. இப்பயியா விதுந்து கிதப்ப? ஒது தாக்கு(dog) கூத பியிக்க முயில" என்று இடுப்பில் கை வைத்து அந்த குழந்தையை திட்டியவள் ரவியை பார்த்து,

"ஒது சின்ன பாப்பா விதுந்து கிதக்கு. இப்பயி மாது மாயிரி இருக்க. எதுப்பி வித தெயிறாது. எதுமை மாது" காரசாரமாக பொரிந்து தள்ளியது தேவதை ரூபத்தில் இருந்த அந்த சுட்டி.

'என்னது.. எருமை மாடா. இத்துன்னுண்டு இருந்துபுட்டு இது என்னமா பேச்சு பேசுது. இது குழந்தை இல்லை. சரியான வாண்டா இருக்கும் போல'.

"ஏய். போ போயி தாக்கு பியிச்சு கொது. உந்தால தா தாக்கு ஓயி போற்றி. ம்ம்ம். கம்மு. போயி பிதி" அந்த குட்டி வாண்டு அவனை விரட்டியது.

எல்லாம் என் நேரம் என்று புலம்பியபடி அந்த டாக் எங்கேனும் தெரிகிறதா என்று பார்த்தான். பார்த்தவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"ஓய். குட்டி அந்த டாக் ஓடி போயிடிச்சி. நான் எப்படி பிடிக்க முடியும். நீயே பாரு இங்க எங்கேயாவது உன் டாக் நிக்குதான்னு".

"அய்யோ அண்ணா. அது எங்களோட டாக் இல்லை. பார்க்க அழகா இருந்துச்சா அதான் அது கூட நானும் தங்கச்சியும் விளையாடிட்டு இருந்தோம்" என்று அந்த அழகான தேவதை குழந்தை பதில் சொல்லியது.

"அப்படியா. குட்டி ஏஞ்சல் உங்களோட நேம் என்ன?".

"யென் பேர்ரு வதனா".

"சரி. உங்களோட அப்பா அம்மா எங்கே".

"அதோ. அங்க நிக்கிறாங்க" என்று அவர்கள் வந்த திசையை நோக்கி கை காட்டியது. அங்கே அவளது பெற்றோர் இவர்களை தான் பார்த்து கொண்டிருந்தார்கள்.

"அவங்க தான் உங்க அப்பா அம்மாவா?"

"ம்ம்ம்".

"சரி. இப்படி தனியா விளையாட கூடாது. அப்பா அம்மா கூடவே இருக்கணும். புரியுதா. போங்க" என்றதும் வதனா ஓடி விட்டாள். ஆனால் அந்த குட்டி வாண்டோ இவனை முறைத்து கொண்டிருந்தது.

"இன்னும் ஏன் இங்கே நிக்கிற. போ உன்னோட அம்மாட்ட".

"நீயி போலயா? எதுக்கு தன்னியா உக்கான்ந்து இதுக்க. உன் ம்மாஆ ப்பா எங்க?"

' நான் இப்போ எங்கே போக? அங்கே திரும்பவும் எப்படி போக முடியும்? பாசமாய் வளர்த்த அம்மா தான் இன்றில்லையே. நான் இப்பொழுது என்ன செய்ய?'. அந்த சுட்டி பெண்ணின் ஒற்றை கேள்வியில் அவன் மனம் கணத்தது. தனக்கு யாருமில்லை என்ற எண்ணம் வரவே தானாக கண்கள் கசிந்தது அவனுக்கு.

"அதுழுயா? எதுக்கு அதுழுற?"

இவன் ஒன்றும் பேசவில்லை அமைதியாகிவிட்டான். இந்த சின்ன பெண்ணிடம் என்னவென்று சொல்ல.

அவன் அருகே அமர்ந்து கொண்டது அந்த குழந்தை. இல்லை இல்லை வாலில்லா வாண்டு. அவர்கள் அருகே இருந்த ஒரு பேப்பரை எடுத்து பார்த்துவிட்டு அவனிடம் நீட்டி இது என்ன என்று கேட்டது. அவனும் வாங்கி படித்து பார்த்துவிட்டு சொன்னான்.

19389

அது ஒரு கடல் பறவை. அதோட பெயர் ஆல்பாட்ரஸ். ஆசிய பெருங்கடலில் வாழும் அற்புத பறவையினம். பத்தாயிரம் மைல்களை வெறும் நாற்பத்தி ஆறு நாட்களில் தரையில் கால் பதிக்காமல் எந்த உணவும் எடுத்து கொள்ளாமலே பறந்து கடக்கும் சக்தி கொண்டது. அதோடு மட்டுமில்லாமல் அறுபது ஆண்டுகள் வரை உயிர் வாழ கூடிய ஒரு பறவையினம். இதன் உடலமைப்பை வைத்து தான் பெரிய பெரிய ஜெட் விமானங்கள் தயாரிக்க கரணமாயிருந்ததாம்.

அந்த பறவையின் இறக்கையை இருபுறமும் இருவர் பிடித்தபடி போஸ் கொடுத்து கொண்டிருந்தனர் ரவியின் கையிலிருந்த பேப்பரில்.

"அப்பதின்னா அதோட அப்பா அம்மா குதும்பம் யேல்லாத்தையும் வித்துட்டு பதந்து போயிருமா?".

"ஆமா. அப்போ தானே அந்த பறவை வாழ முடியும்" குழந்தைக்கு புரியும் விதத்தில் விளக்கினான்.

"அம்மா அப்பா இதுந்தா வாத முதியதா? யென்?" அப்பாவியாய் கேட்டது குட்டி வாண்டு.

"அதுவா பறவைகளுக்கு சிறகு முளைச்சத்தும் தாய் பறவை கூட்டை விட்டுட்டு போயிரும். சோ அது சாப்பிட அதுவா தான் உணவு தேடணும்".

"நீயும் பெதுசா ஆயிட்டியா? அதான் நீயும் இப்போ அப்பா அம்மா இல்லாம வந்திருக்கியா? நீயும் இந்த பதவை போல பதக்க போதீயா?"

இதற்கு என்ன பதில் சொல்ல? தயங்கினான் ரவி.

"ஆன்னா நீயி தித்தும்பி போயிரு. உன்ந்தோட அப்பா அம்மாட்டயே. பாவமில்ல. உதக்காக காத்துட்டு இதுப்பங்கள்லா. பதவை மாறி பதக்காத. எல்லோர் கூதவும் சேஞ்சு இரு. எதுக்கு பியிஞ்சி போனும். நானு பாரு பப்பா..ம்மாஆ.. வது.. எல்லோதும் செஞ்சு தான் இருக்கோம். நீ மட்டும் எயிக்கு தத்தியா இக்கணும். பாது. உனக்கு இந்தும் றெக்கை கூத சதியா முதைக்கல".

"ஹ்ம்ம்ச். உனக்கு புரியாது. என்னால இனி திரும்பிலாம் போக முடியாது".

"ஏன்னு?".

"அவங்க யாரும் எனக்கு.. என்ன சொல்ல சொந்தமில்லை மாறி தோணுது".

"அப்பதின்னா? நீயி இந்த தாக்கு மாதி போவியா?".

"ஒரு விதத்துல அப்படி தான்".

"ச் ச் சு.. பாவமில்ல நீயி".

"ம்ம்ம். கிளம்பு நீ. உன்னோட அம்மா உன்னை தான் பார்த்துட்டு இருக்கிறாங்க. போ" என்று அந்த சுட்டியை விரட்ட விரும்பினான் ரவி. ஏதோ ஒரு விதத்தில் அந்த குழந்தையின் கேள்வி அவனை அசவுகரியமாக உணர வைத்தது. ஏதோ தான் குற்றம் செய்தது போல.

"சரிய். நீயும் அப்போ கிதம்பு உன் வீத்துக்கு. நீயும் அந்த பதவை மாதி அதோட அப்பா அம்மா வித்துட்டு போன மாதிரி உன் அப்பா அம்மாவை வித்துட்டு போவதா. எனக்காக. ப்பிளீஸ்.. இந்த ஒது ததவை மத்தும் வீத்துக்கு போ. அந்த பதவை மாதி பெயிய தெக்கை வந்ததும் பதந்து போ. இப்ப தா உதக்கு றெக்கை இல்லையே. அப்போ தா நா அம்மாட்டா போவேன்".

"எதுக்கு இப்போ இப்படி அடம் பிடிக்கிற".

"ப்பிளீஸ்.. யென் பப்பு குத்தில்ல". கண்களை சுருக்கி விரல் நுனிகளை கோபுரம் போல சேர்த்து தன் தாயை போல கொஞ்சிய தினுசில் அவன் கரைந்து போனான். அந்த சின்ன சிறு வாண்டின் செய்கை அவன் உள்ளத்தை அசைத்து பார்த்தது. 'பப்பு' இது தன் தாயின் பிரத்தேயேக அழைப்பு. அவனும் அன்பிற்கு ஏங்கும் சிறுவன் தானே. யாரிடத்திலாவது தன் தாயின் செயல் பிரதிபலித்தால் இலகுவது இயல்பு தானே.

"ம்ம்... எதுந்து" என்று அவனை தோள் பிடித்து எழுப்ப முயன்றது அந்த வாண்டு. பிஞ்சு கைகளின் செயலுக்கு இணங்கி அவனும் எழுந்து நின்றான்.

"குத் பாய். வா போலாம்" அவன் விரல் பிடித்து அழைத்து சென்றது. அக்குழந்தையின் ஸ்பரிசம் அவனுக்கு இதமாய் இருந்தது. வெகு நாள் கழித்து தன்னை அதட்ட.. கொஞ்ச.. கெஞ்ச.. ஒரு ஆள் கிடைத்துவிட்டதே.

"சரி. உனக்காக நான் இப்போ திரும்பி வீட்டுக்கு போறேன். ஆனால் அங்கே ஏதாவது எனக்கு பிடிக்காதது நடந்தா திரும்பி வேற எங்கேயாவது போயிருவேன். ஓகே?".

"அய். ஜாலி. இப்போ தா நீயி குத் பாயி". கை தட்டி ஆர்ப்பரித்து குதுகளித்தது அந்த சுட்டி வாண்டு. அந்த குழந்தையின் சந்தோசம் அவனுக்கும் நிறைவாய் இருந்தது. அவள் பெற்றோரிடம் விட்டுவிட்டு அவன் வீடு நோக்கி செல்லலானான்.

அப்போது அந்த குழந்தை அவன் விரல் பிடித்து இழுத்து குனியவைத்து அவன் கன்னத்தில் இதழ் பதித்தது. அவன் உறைந்து போனான். அவனும் சிறுவன் தான். ஆயினும் ஏதோ ஒன்று தடம் மாறியது. உள்ளுக்குள் என்னமோ ஒரு பிடிமானம் வந்தது.

'இவள் தேவதை அல்ல. ஆனால் எனக்காக வந்த கடவுள். தேவதைகளுக்கு எல்லாம் மேல். என் செல்ல குட்டி வாண்டு. கண்டிப்பாக நான் திரும்பி வருவேன் உனக்காக. அப்போது நான் உன்னை என்னை விட்டுபிரிய விடமாட்டேன்'.

"ஒது வேளை நீயி திதும்பி வந்தா யென் வீத்துக்கு வா. இங்க தான் இதுக்கு. சதியா? நா உன்ன பத்துமாமா பாத்துக்கறே. அந்த தாக்குக்கு பதிலா நீ என் கூதவே இதுந்துரு" தலையை ஆட்டி ஆட்டி சொன்னது அப்படியே அவன் மனதில் நினைத்ததை வேறுவிதமாக. அவன் அந்த சுட்டியின் பேச்சில் இருந்த அன்பில் நொறுங்கி போனான்.

'கண்டிப்பா. உனக்காக நான் திரும்பி வருவேன்' மனதில் நினைத்து கொண்டான்.

"ம்ம்ம்.." வார்த்தைகள் அதிகமில்லை ஆனால் உணர்ச்சிகள் நிரம்பியது.

"ஆராதனா.. ஏய் ஆரு. போதும் வா
அம்மாக்கு டைம் ஆகுது பாரு. சீக்கிரம் வீட்டுக்கு போகணுமில்ல" என்றபடி அவளது அம்மா அவளை அவனிடமிருந்து பிரித்து சென்றார். அந்த சுட்டி வாண்டுவின் பெயர் ஆரதனாவா? நைஸ் அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளது கடைசி விரல் இவன் நுனி விரலை முத்தமிட்டு பிரிந்து சென்றது.


##########################################


"ஹே.. அப்போ அந்த சுட்டி வாண்டு நான் தானா.. அய்.. ஜாலி.. நாமா சின்ன வயசிலேயே மீட் பண்ணியிருக்கிறோம். ஹா ஹா.. விசித்திரமா இருக்குல்ல" ஆர்ப்பரித்து துள்ளினாள் ஆராதனா. அவனுக்கு இவளது செய்கை அந்த குட்டி வாண்டுவின் செயலை நியாபகப்படுத்தியது.

"அப்போ உன்னோட நெஞ்சுல குத்தியிருக்கிற டாட்டூ அந்த ஆல்பாட்ரஸ் பறவை தானா..?!" ஆச்சரியத்தோடு கேட்டாள்.

"கள்ளி நல்லா சைட் அடிச்சியிருக்கிற. ம்ம்ம்ம்.. நானும் அதே கோலத்துல ஒரு நாள் உன்னை பார்ப்பேன். அப்போ இருக்குடி". அவன் டவல் அணிந்திருந்த அந்த தோற்றத்தை குறிப்பிட்டு அவளையும் அவ்வாறு ஒருநாள் அவனளவனாக மாற்றிய பின் பார்ப்பேன் என்று தன் மனதின் ஆசையை சொன்னான் அந்த காதலன்.

19391

பின் தன் நெஞ்சை தொட்டு காட்டி "அந்த பறவை தான் இது. உன்னோட நினைவா தான் அந்த பறவையை பச்சை குத்துனேன். கண்ணாடில பார்க்கும் போதெல்லாம் ஒரே மூச்சுல பறந்து உலகத்தையே சுத்தி வர இந்த பறவை போல நானும் சீக்கிரம் உன்னை வந்து பார்க்கணும், உன் கூடவே என் வாழ்நாள் முழுசும் உன்னையே சுத்தி வரணும்ன்னு தோணும்".

யாரோ தான் நீ
என் கண்ணில் படும்வரை..
யாருமே தேவையில்லை இப்போது
என்னில் நீ சேர்ந்த பின்..


"மம்ம்ம்ம்... கவிதை அள்ளுது ராசா.. அப்புறம் சொல்லு. நீ வீட்டுக்கு போன அப்புறம் என்ன நடந்து?".

"நான் வீட்டுக்கு திரும்பி போகும் போது என்னோட அப்பா அவங்க சொந்தகாரங்க கிட்ட சண்டை போட்டுகிட்டு இருந்தாங்க. 'எனக்கு என்னோட ரவி இருக்கான். அவன் மட்டும் போதும். வேற யாரும் எனக்கு தேவையில்லை. இனி இந்த வீட்டு பக்கமே வராதீங்க'. அதை கேட்டதும் எனக்கு கோபம் எல்லாம் பறந்து போயிடிச்சி. ஓடி போய் எங்க அப்பாவை கட்டி பிடிச்சு அழுதுட்டேன்.

அந்த சம்பவத்துக்கு பிறகு வேற யாரும் திரும்பவும் கல்யாணம் பண்ண சொல்லி கேட்டு வந்து என்னோட மனசை கஷ்டப்படுத்திருவாங்களோன்னு எங்க அப்பா பீல் பண்ணி என்னை என் பாட்டியோட அமெரிக்கா அனுப்பி வச்சிட்டாங்க. அப்புறம் தான் உனக்கு எல்லாம் தெரியுமே".

"மம்ம்ம்ம்.... அது சரி உன்னோட அம்மா உன்கிட்ட எப்போ அந்த கற்களை கொடுத்தாங்கன்னு சொல்லவே இல்லையே".

"ஓ. அதுவா. அன்றைக்கு நைட் நான் என்னோட அறைக்கு போய் என்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருக்கும் போது தான் எங்க அம்மாவோட அந்த ஹேண்ட் பேக் கண்ணுல பட்டுச்சி. அதை திறந்து பார்க்கும் போது தான் அதுல சில நோட்ஸ்ஸும் கற்களும் இருந்துச்சி. அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன் அந்த கற்களுக்கு சக்தி இருக்கு. நமக்கு ப்ரென்ட் மாதிரி எப்போ வேணும்னாலும் ஹெல்ப் பண்ணும்.

எப்படி அந்த பரமபதம் டைம் ட்ராவல் பண்ணுமோ அதே மாதிரி இந்த கற்களும் ரொம்ப நேரம் இல்லமா கொஞ்ச நேரம் மட்டும் டைம் ட்ராவல் பண்ணும் அப்படின்னு நான் தெரிஞ்சிகிட்டேன்.

நிலா ஒளியில மழை நீர் இந்த கற்கள் மேல் பட்டு நம்மளோட மூச்சு காற்று வெட்பமும் உள்ளங்கை ஸ்பரிசமும் சேர்ந்து அந்த கற்களுக்கு சூடு கொடுத்து அதை உயிர்த்தெழ செய்யும் அப்படின்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதை செக் பண்ணி பார்க்கும் போது தான் உன்னை அந்த குடிகாரன்கிட்ட இருந்து என்னால காப்பாத்த முடிஞ்சிது".

" ஓஹோ.. கதை அப்படி போகுதா. சரி ஃபஸ்ட்டு அந்த ஹேண்ட் பாக் எப்படி உன்கிட்ட வந்து?".

"அது எனக்கு சரியா நியாபகம் இல்லைடி. ஆனால் சின்ன வயசுல இருந்தே அந்த பாக் என்னோட ரூம்ல தான் இருக்கு. ஒருவேளை எங்க அம்மா வச்சிருப்பங்களோ?" .

"என்னை கேட்டா? ஹம்ச்" அசால்ட்டாக தோளை குலுக்கினாள் பெண்.

"ஹே நான் உனக்கு ஒண்ணு காட்டட்டா" என்று ஆர்வத்தோடு சொன்னவள் தன் ஆடை மறைவில் இருந்து அந்த கற்களை எடுத்து சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தாள். அன்று கீதுவுடன் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளி பட்டு அந்த கற்கள் மின்னியதை அவனுக்கு காட்ட விரும்பினாள்.

ஆனால் இம்முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த கற்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது போலும். இவள் அப்படி இப்படி உலுக்கியும் அந்த கற்களில் இருந்து ஒளி வருவேனா என்று அடம்பிடித்தது.

"ஏய் என்ன பண்ணுறடி?".

"டேய் ரவி அன்றைக்கு இப்படி தான் கீது கூட நின்னு பேசிட்டு இருக்கும் போது இந்த கற்கள் ரொம்ப பவரா மின்னிச்சி. ஆனால் இப்போ அப்படி எதுவுமே ஆகல. ஏன்னு தெரியல".

"அதை கழற்றி என்கிட்ட கொடு. நான் பார்க்கிறேன்". அவனும் அந்த கற்களை ஆராய்ந்தான். அவனிடம் இருந்ததற்கும் இப்போது உள்ள கற்களுக்கும் அதில் ஏதோ ஒரு சிறு வித்தியாசம் இருப்பது போல பட்டது. கற்களின் நடுவில் மெல்லிய கோடு ஒன்று புதிதாய் இருந்தது.

"நான் நினைக்கிறேன் இந்த கற்களோட பவர் குறைஞ்சிடிச்சுன்னு. அதாவது நம்மளோட மொபைல்க்கு சார்ஜ் போடுற மாதிரி இந்த கற்களுக்கும் ஒருவேளை சார்ஜ் போடணுமா இருக்கும். நம்ம ரெண்டு பேரும் இதை யூஸ் பண்ணி டைம் ட்ராவல் பண்ணியிருக்கிறோம். சோ அதோட எனர்ஜி லெவல் கம்மி ஆகிருக்கு".

"அய்யோ. அப்போ இந்த கற்கள் செத்து போச்சா. நாம டைம் ட்ராவல் பண்ண முடியாதா? இனி இதுக்கு உயிர் வராதா?".

"ஏண்டி..? பச்ச குழந்தையை விட மோசமா பிகேவ் பண்ணுற. அதான் சொல்லுறேனே அதுக்கு சார்ஜ் போட்டா திரும்ப பழையபடி ஆகிரும்னு".

"உண்மையாவா..?"

"ம்ம்ம். இப்போதைக்கு அது ரெஸ்ட் எடுக்குதுன்னு நினைச்சிக்கோ".

"ம்ம்ம்ம். சரி. ஆனால் இதுக்கு எப்படி ஜார்ஜ் போடுவ?".

"அதை நான் பார்த்துக்கிறேன். உனக்கு இப்போ எல்லா விளக்கமும் தெரிஞ்சிடிச்சில்ல. சீக்கிரம் போய் ரெடி ஆகு. என்னோட வீட்ல உள்ளவங்கிட்ட உன்னை அறிமுகப்படுத்தி விடுறேன்".

"ரவி. இப்பவேவா... உங்க வீட்ல உள்ளவங்க எப்படி எடுத்துக்குவாங்களோ?" கொஞ்சம் பயத்துடன் கேட்டாள்.

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ முதல போ போய் ரெடி ஆகு".

"ரவி ரவி பிளீஸ். கடைசியா ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அன்சர் பண்ணிடு".

"ம்ம்.. கேளு".

"அதுவா நீ எனக்கு அந்த வூட்டன் டிரேல ஒன்னு தந்தியே அது என்னது?".

"அதுவா.. அது ஒரு மூலிகை பானம். நான் முதல என்ன சொன்னேன்,
'அச்சு அசலனா வதனத்தின் தோலை' பதிமுக மரத்தோட தோல் அதாவது பட்டை.

'மணங்களின் ராஜாவோடு மணமுடித்து' நல்லா மணம் வீச கூடிய பொருள் அது ஏலக்காய் அப்புறம் சுக்கு.

'தேகத்தை சீராக்கும் சிங்கத்தை' நம்ம உடலை சமமா மேயிண்டைன் பண்ண கூடிய பொருள் சீரகம்.

'வெற்றி ரிப்பனை வெட்டி அதன் நுனியை' அதாவது வெட்டி வேர்.

'சிங்கிள் பாயாய் ஜொலிப்பவனோடு தன்னந்தனியாக மோத விட்டு' சிங்கிள் மீன்ஸ் தனியா சரியா? நான் சொன்னதும் அது தான் தனியா விதை. சம்பாருக்கு எல்லாம் போடுவோமே அந்த பொடி.

'கருங்காலி பயலை காளிக்காக தீக்குளிக்க வைத்து' அப்டிங்கிறது கருங்காலி மரத்தோட பட்டை.

'கடைசியில் ஏழு அரக்கர்களையும் நைய புடைத்து' இப்போ நாம பார்த்தோமே பதிமுக பட்டை, ஏலக்காய், சுக்கு, சீரகம், வெட்டி வேர், தனியா, கருங்காலி பட்டை இவங்க தான் அந்த ஏழு அரக்கர்கள். நல்லா நைசா அரைத்து அதை,

'ஜலத்திலே நீராட செய்து
ஒரு சிட்டிகை சொடுக்கி
ஆற பொறுத்தால் வருவேனே நான்
கன்னிப் பெண்ணின் நாணத்தை போல' அப்படின்னா அந்த அரைத்து வைத்திருக்கிற பொடியில் ஒரு சிட்டிகை எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து சூடு ஆறிய பிறகு சரியான பக்குவம் வரும். எப்டின்னா கன்னிப் பெண் வெட்கப்படும் போது அவளோட கன்னம் சிவக்குமே அது போல இளம் ரோஜா நிறத்தில் அந்த தண்ணீரோட நிறம் இருக்கும்.

'கதகளி ஆடி கண்ணை கவர்ந்து
கண்ணுக்கு தெரியாதவனை துவம்சம் செய்வேனே' இது எதை சொல்லுதுன்னா கதகளி டான்ஸ் கேரளாவோட பாரம்பரிய நடனம். அது போல இந்த மூலிகை தண்ணீரும் கேரளா மாநிலத்தோட பாரம்பரியம். அங்கே எல்லோர் வீட்டிலும் இந்த தண்ணீரை சாதாரணமா பார்க்கலாம். அதை போல எந்தவொரு விசேஷம்ன்னாலும் இந்த தண்ணீர் தான் பரிமாறுவாங்க. இந்த மூலிகை தண்ணீர், தண்ணீர் மூலமா பரவ கூடிய கண்ணுக்கு தெரியாத நோய் கிருமிகளை சாகடிச்சிரும். சோ நமக்கு எந்த வித பிரச்சனையும் வராது.

19392

இந்த மூலிகை தண்ணீரை 'பதிமுக தண்ணீர்' அல்லது 'தாகமுக்தி' அப்படின்னு சொல்வாங்க. ம்ம்ம்.. இப்போ புரிஞ்சா நான் எதுக்கு உன்னை அந்த தண்ணீர் குடிக்க சொன்னேன்னு. போ. போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா".

"ஓ.கே" என்று துள்ளலுடன் செல்லும் தன் செல்ல சுட்டி வாண்டை ரசித்துக் கொண்டான். இனி தான் அவனுக்கு வேலைகள் ரவுண்டு கட்டி நிற்கிறதே.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்

அடுத்த பதிவு போட்ருக்கேன். படிச்சி பார்த்துட்டு எப்படி இருக்குத்துன்னு சொல்லிட்டு போங்க. உங்களோட கருத்துக்கள் தான் என்னோட பூஸ்ட் இல்லை இல்லை... தாகமுக்தி.

so எல்லோரும் எனக்கு support செய்து அடுத்த epi சீக்கிரம் கொடுக்க எனர்ஜி கொடுங்க அப்படின்னு உங்களை கொஞ்சி கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.

டா டா...
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் என் சோட்டா பீமர்களே..

எல்லோரும் நலமா?
என்னடா இவள் சொல்லாமல் போயிட்டான்னு என்னை நல்லா திட்டுனீங்களா? சோ சாரி டியர்ஸ்.

என்னோட தாமத பதிவுகளுக்கான காரணத்தை கதை முடியும் போது சொல்லுறேன். இப்போ எல்லோரும் தூசி படிஞ்சிருக்கிற என்னோட கதையை திரும்ப படிக்க ரெடியா இருங்க. இதோ அடுத்த பதிவு உங்கள் பார்வைக்கு.

இது வரை என் கதைக்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றிகள். அமைதியாய் இந்த பக்கத்தை கண்ணால் தொட்டு செல்லும் புத்தரின் பக்தர்களுக்கும் நன்றிகள்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 29

20840

ஹச் என்ற தும்மலில்
துதிக்கையை ஆட்டி
கும்மியடிக்க வைத்தாளே
பருவப் பெண்ணை
தனக்குள்ளே வைத்திருந்த
கலை ரகசியத்தால்!


"ஏய்.. ரவி சொன்னா கேளுடா. என்னால சத்தியமா முடியாது. அதுவும் இல்லாமல் இன்றைக்கு பார்த்து அதை சொல்லுற. இது உனக்கே அடுக்குமாடா" பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்சினாள் ஆராதனா.

"ம்ஹும். நான் சொன்னா சொன்னது தான். இப்பவே செய்யுற" விடாப்பிடியாக சண்டித்தனம் செய்தான் ரவி.

"டேய். எனக்கு உண்மையிலேயே எப்படி கட்டுறதுன்னு தெரியாதுடா".

"மூச். மறுபேச்சு பேச கூடாது. ம்ம்ம். சீக்கிரம் போய் ரெடி ஆகு. கம் ஆன். குயிக். நோ மோர் ஆர்குமெண்ட்ஸ்".

இருந்தும் 'காச் மூச்' என்று கத்தியவள் வேறு வழியின்றி கட்டிலில் கிடந்த பைகளை எடுத்துக் கொண்டு உடைமாற்றும் அறைக்கு சென்றாள்.

தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆராதனாவை அறிமுகப்படுத்த விரும்பினான் ரவி. அதுவும் அன்றே. அதற்கு தான் அவளை புடவை கட்ட சொல்லி கேட்டுக் கொண்டிருந்தான். அவளோ எனக்கு சேலை வசதியில்லை, அதுவுமில்லாமல் சேலை கட்ட தெரியாது என்று ஏதேதோ சொல்லி சமாளித்து பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகாமல் கோபத்துடன் ரவி கொடுத்த ஆடைகள் நிரம்பிய பைகளை எடுத்துக் கொண்டு உடை மாற்றச் சென்றாள்.

வேண்டா வெறுப்பாக அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தவள் திகைத்துப் போனாள். ஆச்சரியத்தில் அதை அப்படியே தூக்கி கொண்டு ரவியிடம் ஓடினாள்.

"ஹேய்..இ..இதெல்லாம் எ.. எப்படிடா..?" வேகமாக ஓடி வந்ததில் மூச்சிறைக்க சுவாசத்திற்க்கு தடுமாறியபடியே வியப்புடன் அவனிடம் கேட்டாள்.

"என்னது எப்படி?" இவள் என்ன கேட்கிறாள் என்று ஒன்றும் புரியாமல் புருவம் உயர்த்தி அவளிடமே மீண்டும் வினா தொடுத்தான்.

"எனக்கு சாரீ கட்ட தெரியாதுன்னு உனக்கு முன்னவே தெரியுமா? ஹப்பாடா பாவாடை, ரெடிமேட் சாரீ.." என்று தன் கைகளில் இருந்தவற்றை சுட்டி காட்டியவள், "உனக்கு எப்படி பொண்ணுங்க ட்ரஸ் பத்தியெல்லாம் தெரியும்?" ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

"ஏய். லூசு பொண்ணு" என்று செல்லமாய் சலித்தப்படி அவளது முன்நெற்றியில் விரல்களை சேர்த்து வைத்து தட்டியவன், "நீ தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் உன்னோட விருப்பு வெறுப்பு அது இதுன்னு எல்லாம் ஆளுக்கு அத்துப்படி".

"உனக்கு சாரீ கட்ட கஷ்டமா இருக்கும்னு தான் இந்த ஸ்கர்ட் வாங்குனேன். எவ்ளோ நேரம் வேணும்னாலும் நீ சாரில இருக்கலாம். இந்த ஸ்கர்ட் உனக்கு ரொம்ப கம்பர்ட்டபுலா இருக்கும். அதோட நீ எப்படி கட்டினாலும் உனக்கு சாரீல நல்ல வடிவத்தை இந்த ஸ்கர்ட் கொடுக்கும். அல்சோ வாஷ்ரூம் போகணும்ன்னா இதோ இந்த ஸ்கர்ட் அடி பக்கம் ரெண்டு சைடுலயும் இருக்கிற இந்த 'யூ' வடிவத்தில் இருக்கிற எலெஸ்டிக் கயிறை தூக்கி உன்னோட ரெண்டு பக்கம் சோல்டர்லயும் ஸ்கூல் பாக் போடுற மாதிரி போட்டுக்கிட்டு சுலபமா டாய்லெட் போகலாம். அதோட சாரீ கசங்கிடுமோ மடிப்பு கலைஞ்சிடுமோ அப்படின்னு எந்த ஒரு டென்ஷனும் வேண்டாம். இது ஒரு பேக் மாதிரி சாரீ மடிப்புகளை கலையாம வச்சிக்கும்.

அப்புறம் இந்த ரெடிமேட் சாரீல முந்தானை மடிப்பு, கொசுவம் எல்லாம் எடுத்து அழகா அவங்களே தைத்து வைத்திருப்பாங்க. உன்னோட சைஸ்க்கு ஏற்ற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்க ஹுக் எல்லாம் இருக்கும். ஜஸ்ட் ஒரு டவலை கட்டிக்கிற மாதிரி ஒரு சுத்து சுத்துனா போதும். எப்படி அய்யாவோட செலக்க்ஷன்? அடிச்சி தூள் கிளப்புதுல.." சொல்லியபடி காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

ஆராதனாவிற்கு அவனது அளவுக்கு அதிகமான அக்கறையில் பேச்சே எழும்பவில்லை. ஓர் இரவுக்குள் இவன் எப்படி எனக்காக பார்த்து பார்த்து வாங்கியிருக்கிறான். அதுவும் எனக்கு பொருந்துகிற மாதிரி! எனக்கு எதிலும் அசௌவுகரியம் ஏற்பட்டு விட கூடாது என்பதில் எத்தனை கவனமாக இருக்கிறான். அப்படியென்றால் இவன் எவ்வளவு தூரம் என் மேல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு துணை". சந்தோஷ மிகுதியில் அவனை இறுக்க அணைத்து விடுபட்டாள் பெண்.

"ரொம்ப பெருமையா இருக்குதுடா. பொண்ணுங்கனாலே உணர்ச்சி இல்லாத ஜடம்ன்னு நினைக்கிறவங்க மத்தியில நீ எனக்காக பார்த்து பார்த்து செய்யுறப்போ எனக்கு அவ்ளோ ஹாப்பியா இருக்குது".

"ஹேய். இதுக்கே அசந்துட்டா எப்படி. இது வெறும் ட்ரெய்லர் தான்மா. இனிமே தான பார்க்க போற இந்த மாமனோட ஆட்டத்தை. ம்ம்ம். போ சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா பார்க்கலாம்".

" சரி போறேன். லாஸ்ட்டா ஒரே ஒரு கொஸ்டின் கேட்டுக்கவா?".

"இன்னுமாடி இருக்கு உன் கொஸ்டின்? ஹப்ப்பா.. சாமி.. ஆனா இதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து பின்னாடி நீ நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் செஞ்சி தான் ஆகணும். ம்ம்ம்.. சொல்லு. என்ன கேட்கணும்".

'அதென்ன பதில் செஞ்சு தான் ஆகணும்ன்னு சொல்லுறான். பதில் சொல்லனும்ன்னு தானே சொல்லனும்'. மனதின் சிந்தனையை ஒதுக்கியவள் அவன் முகம் பார்த்து கண்களில் ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

"அன்றைக்கு பீச்ல என்னை மீட் பண்ணிட்டி உன்னோட வீட்டுக்கு போன அப்புறம் எதுக்காக அந்த ராத்திரி நேரத்துல என்னை காப்பாற்ற வந்த? எனக்கு கஷ்டம்னு தெரிஞ்சி வந்தியா இல்லை வேற எதுக்காக வந்த?".

"அதுவா.. அன்றைக்கு தான் நான் என்னோட பாட்டியை முதன்முதலா பார்த்தேன். பார்த்த உடனே எனக்கு அவங்க மேலே ஒரு வித லவ் பீல் ஆச்சி. அது மட்டுமில்லமா அவங்களோட பெயரும் என்னோட அம்மாவோடதும் ஒன்று தான். இது தான் பார்கவி பாட்டின்னு அப்பா சொன்னதும் எனக்கு அவங்க என்னோட அம்மாவா தான் தெரிஞ்சாங்க . ஏதோ சொல்ல முடியாத பந்தம் எனக்கும் அவங்களுக்கும் இருக்கிற மாதிரி தோணுச்சி. அப்போ இருந்து இப்போ வரை அப்படி தான் இருக்கு அந்த பீல்".

"போதும்.. போதும்.. எல்லா பசங்களும் அம்மா புராணம் பாடுவாங்கான்னா நீ அம்மா பெயரில இருக்கிற ஓல்ட் லேடியையும் பற்றி புராணம் பேசுற. சரி விடு. எப்போ தான் அந்த கற்களை மூலமா என்னை கண்டுபிடிச்ச. அதை சொல்லு".

"அந்த கற்கள் என்னோட கட்டிலின் ஓரத்தில் கட்டி வச்சிருந்தாங்க. அது ஏதோ சாமி கயிறுன்னு நினைச்சி யாரும் தூக்கி போடல. அதனால தான் அந்த கயிறு இவ்ளோ நாள் ஆனா அப்புறமும் என் கூடவே இருந்திருக்கு. அந்த கற்கள்களுக்கு அது தான் பதுகாப்புன்னு ஒரு வேளை எங்க அம்மா நினைச்சிருக்கலாம். பாட்டி எனக்கு கதை சொல்லி தூங்க வைச்சிட்டு இருக்கும் போது தான் இந்த கற்களை பாட்டி கண்டுபிடிச்சாங்க. அதை பற்றி எனக்கு எதுவும் தெரியலன்னு சொன்னேன். அப்போ தான் பாட்டி இந்த கற்கள் மனசுக்கு பிடிச்சவங்களை மீட் பண்ண வைக்கும்ன்னு சொன்னாங்க.

உன் கூடவே வைச்சிக்கோ. சாமிக்கிட்ட இருக்கிற உங்க அம்மா உனக்கான காத்துகிட்டு இருக்கிற உன்னோட தேவதையை காட்டுவான்னு சொன்னாங்க.

அவங்க போன அப்புறம் நான் அதை யூஸ் பண்ணி பார்த்தேன். யாரை மீட் பண்ண.. அம்மாவா நீயான்னு தோணிச்சி.. அம்மா தான் சாமிக்கிட்ட பத்திரமா இருக்கிறாங்களே. சோ எனக்கு என்னோட தேவதை.. அதாவது குட்டி ஆராதனாவை பார்க்கணும்னு தோணிச்சி. அந்த வயசுல என்னோட எண்ணத்துல நிச்சயம் காதல் இல்லை. அந்த ராத்திரி நேரத்து பங்க்சனில் நீ ராதை மாதிரி காதலை கண்ணுல தேக்கி வச்சிக்கிட்டு கண்ணணை எண்ணி டான்ஸ் ஆடுனதை பார்த்த அப்புறம் என்னோட நெஞ்சுல காதலை தவிர வேறு எதுவுமே இல்லை".

அன்று பார்த்ததும்
வந்தது இஷ்டம் என்றால்
இன்று பிடித்த உன்மேல்
வந்தது முரட்டு இஷ்டமடி பெண்ணே!


"ஓ. அப்படின்னா உன்னோட பாட்டி தான் கண்டுபிடிச்சங்களா?! அது சரி அவங்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?"

"அவங்களுக்கு எப்படி தெரியும்? சும்மா ஆறுதளுக்காக அப்படி சொல்லியிருப்பாங்க. ஏன்னா நிலா ஒளியும் மழை தண்ணியும் இதுக்கு வேணும்ன்னு நான் தானே கண்டுபிடிச்சேன். அன்றைக்கு நைட் நான் அதை என்னோட வீட்டு பால்கனியில் இருந்து தான் ட்ரை பண்ணி பார்த்தேன். அப்போ பார்த்து மழை சாரல் அடிச்சி. நிலாவும் வந்துச்சி. சோ அய்யா அப்படியே ட்ராவல் பண்ணி வந்து உன்னை பார்த்தா.. அந்த குடிகார பயல் உ..ன்..னை... எனக்கு வந்த கோபத்துல நல்லா வெளுத்து வாங்கிட்டேன். என் வீட்டுக்கு திரும்ப வந்து நிறைய தடவ யூஸ் பண்ணி பார்த்து தான் இந்த மெத்தட் கண்டுபிடிச்சேன். நிலாவும் மழையும் சேர்ந்து தான் இதை ஒர்க் பண்ண வைக்குதுன்னு".

மேலும் எதையோ கேட்க வாய் திறந்தவள் இதழின் மீது விரல்களை வைத்து மூடியவன், "மூச்.. இதுக்கு மேலே ஒரு கேள்வியும் கிடையாது. சீக்கிரம் போய் கிளம்புற. கோ கோ".

அவளும் அவனின் அவசியம் புரிந்து எதுவும் பேசாமல் அந்த பைகளை ஏந்தியபடி உள்ளே சென்றாள்.

################

ஆனியன் ஸ்கின் கலரில் இளரோஜா நிற பார்டர் வைத்திருந்த அந்த புடவைக்கு ஏற்றபடி மிதமான வேலைப்பாடுகள் கொண்ட டார்க் பிங்க் கலர் பிளவுஸ் அவளுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. தேவலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த ரதியாட்டம் ஜொலித்தாள் ஆராதனா. அவளது அழகில் ஒருநொடி இமைக்க மறந்த ஆண்மகன் ரவி, மெல்ல நடந்து சென்று அவள் விரல் பிடித்து அழைத்து அங்கிருந்த மரஊஞ்சலில் அமர வைத்தான்.

அவள் கையில் ஒரு பெட்டியை கொடுத்தான். அது பார்ப்பதற்கு ராஜஸ்தானி வேலைப்பாடுகள் கொண்டவையாகவும் பெட்டியின் முகப்பு பக்கத்தில் வெள்ளை நிற யானை ஒன்று அதன் துதிக்கையை உயர்த்தியபடியும் அதனை சுற்றிலும் பூக்களும் நட்சத்திரங்களும் அலங்கரித்து கொண்டிருந்தன. அதனை அந்த மர ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஆராதனாவின் கைகளில் கொடுத்தவன் அவளருகேயே இன்னொரு பக்கம் அமர்ந்து கொண்டான். கண்களாலேயே அந்த மரப்பெட்டியை திறந்து பார்க்கும்படி சொன்னவனின் பார்வைக்கு கட்டுப்பட்டு மங்கையவளும் அதை திறக்க முயற்சித்தாள்.

ஆனால் என்ன முயன்றும் அவளால் அதன் திறக்கும் பக்கத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. அவள் அந்த பெட்டியுடன் போராடும் அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அக்கள்ளன். ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படவே அவள் அந்த பெட்டியை விட்டு விட்டு அருகேயிருந்த ரவியை நிமிர்ந்து பார்த்தாள். அவன் ஒன்றும் தெரியாதது போல முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டிருந்த போதும் அவன் கண்களில் ஒழிந்திருந்த கள்ளச் சிரிப்பை கண்டு கொண்டாள் அவன் காதலி.

"ஏய். என்னது இது. என்னை என்னனு நினைச்சிக்கிட்டு விளையாடுறா? ஹ்ம்ம்..? உன்னோட தொல்லை ஓவரா போச்சி. ஹம்ச். முதல இதை எப்படி ஓபன் பண்ணுறதுன்னு சொல்லு" என்று கையில் இருந்த பெட்டியை காட்டியபடி கேட்டாள்.

"பெரிய பெயின்டிங்ஸ் எல்லாம் அசல்ட்டா வரையிற. ஒரு சின்ன பாக்ஸை ஓபன் பண்ண தெரியல. ஷேம் ஷேம்.." வாயை பொத்தி கேலி செய்தவன் சிரித்தப்படியே தொடர்ந்தான்.

"நீ லியானார்டோ டாவின்சியோட பெயின்டிங்ஸ் பரர்த்திருப்பியே. அதுல ஒரு மர்மம் இருக்கும். அவர் ஏதோ ஒன்றை புதுசா சொல்ல முயற்சித்திருப்பார். அதே சமயம் அந்த டைம்ல அதாவது அவர் வாழ்ந்த
காலத்துல யாருக்கும் தோன்றாத தெரியாத பல விஷயங்கள் அவருக்கு அத்துப்படி. அதை அவரோட ஒவ்வொரு ஓவியத்திலும் நாம பார்க்கலாம். அதே மாதிரி தான் இந்த பாக்ஸ் மேல இருக்கிறதும்".

"டாவின்சி பற்றி தான் எல்லோருக்கும் தெரியுமே. அவர் தான் பத்து மனுசங்களோட மூளைக்கு சமமானவர் அயிற்றே. இவர் ஓவியத்திற்கு மட்டுமில்லை சிற்பம் வடிவமைப்பது, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, பொறியியலாளர், உடற்கூறியலறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகர அமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை, வடிவமைப்பாளர் அப்படின்னு ஏகப்பட்ட கலைகளை தனக்குள்ள அடக்கி வச்சிருந்த மனுஷர் ஆச்சே".

"எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அவரை உலகம் முழுசா ஃபேமஸ் ஆக்குனது என்னவோ மோனலிசா ட்ராயிங் தானே..?!".

"ஆமா. இப்போ அதுக்கும் இந்த பாக்ஸ்க்கும் என்ன சம்மந்தம்?".

"இருக்கு டியர். சம்மந்தம் இருக்கு. அவரோட அந்த பெயிண்டிங் இப்போ வரை பிரேஷ்ஷா புதுசு மாதிரியே ஷைனிங் கொடுக்க காரணம் அது வரையப் பட்டிருக்கிற விதம். அதாவது லேயர் பை லேயர்ரா (அடுக்கடுக்காக) வரைய யூஸ் பண்ணியிருக்கிற மெத்தட் தான். மொத்தம் பன்னிரெண்டு லேயர் இருக்கு. அதை எப்படி சொல்றதுன்னா ஒரு முறை பெயிண்டிங் பண்ணதுக்கு அப்புறம் அடுத்த பெயிண்டிங் ஏற்கனவே வரைந்து வைத்திருக்கிற பெயிண்டிங் மேலே வரையிறது. சோ ஒன்றுக்கு மேலே ஒன்றுன்னு மொத்தம் பன்னிரெண்டு அடுக்கா கலர்ஸ் பண்ணியிருப்பாங்க.

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா ஒவ்வொரு லேயரும் ஒன்று அல்லது இரண்டு மைக்ரோ மீட்டர் தடிமன் கொண்டது. அப்படின்னா பார்த்துக்க எவ்ளோ ரிஸ்க் எடுத்து கச்சிதமா ரெடி பண்ணியிருப்பார். ம்ம்ம்..?".

"ஹ்ம்ம்.. உண்மை தான். சென்டிமீட்டரை விட பத்து மடங்கு சிறியது மில்லி மீட்டர். மில்லி மீட்டரை விட ஆயிரம் மடங்கு சிறியது மைக்ரோ மீட்டர். அப்படி தானே?! இதை எந்த ட்ரிக் யூஸ் பண்ணி வரைஞ்சார்ன்னு கடைசி வரை சொல்லாமலே போய் சேர்ந்துட்டார். மனுஷர் அந்த டெக்னிக் மட்டும் சொல்லி கொடுத்துட்டு போயிருந்தார்ன்னா எவ்ளோ நல்லா இருந்திருக்கும். இப்போ வரை எல்லா ஓவியர்களும் அந்த டெக்னிக் கண்டுபிடிக்க எவ்ளோ கஷ்டப்பட்டு கிட்டு இருக்கிறாங்க. அது சரி இப்போ எதுக்கு மோனலிசாவையும் அந்த டாவின்சியையும் பற்றி பாடம் எடுக்கிற?".

"விஷயம் இருக்கு. பொறு சொல்றேன்".

"ம்ம்ம்.. சீக்கிரம் சொல்லு".

"அப்படிப்பட்ட அந்த அறுநூறு வருஷ பழமையான ஓவியம் போல இந்த மரப்பெட்டியில் இருக்கிற பெயின்டிங்ஸ்ஸும்".

"டேய். என்னடா சொல்லுற. நம்புற மாதிரி சொல்லு" அவன் சொல்வது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் நம்புவதற்கு கடினமாக இருந்தது. ஒருவேளை அவன் சொல்வதில் ஏதும் உண்மை இருந்தால் அதை வெளியே சொல்லி பிரபலமடைவதை விட்டு இப்படி ரகசியமாக வைத்து கொள்ள என்ன தேவை இருக்க போகிறது.

"ஹேய் அம்மு. நிஜமாடா. என்னோட பாட்டி தான் சொன்னாங்க. நானும் முதல இதை நம்பல. அப்புறம் செக் பண்ணி பார்த்த அப்புறம் தான் உண்மை தெரிஞ்சி".

"என்ன உண்மை?".

"இந்த பெயிண்டிங்ஸ்ஸும் அப்படி தான். அவர் பன்னிரெண்டு லேயர் வரைஞ்சிருந்தார்ன்னா இந்த பெயின்டிங்ஸ்ல என்பத்திரெண்டு அடுக்கு இருக்கு. ஒவ்வொரு அடுக்கும் வெறும்.."

"சொல்லுடா.."

"வெறும் ஒன்றே ஒன்று நானோ மீட்டர் தான்".

"டே..டேய். என்னடா சொல்லுற. நானோ மீட்டர்ன்னா மைக்ரோ மீட்டரை விட ஆயிரம் மடங்கு சின்னது ஆச்சே. ஹைய்யோ.. எப்படிடா. டேய் டேய் பிளீஸ்டா. எப்படியாச்சும் அந்த மெத்தட் மட்டும் எனக்கு கேட்டு சொல்லுடா.உன் பாட்டிக்கு இல்லை இல்லை உனக்கு கோவில் கட்டி கும்பிடுறேன்.

ஹைய்யோ! அந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா நான் தான் இந்த உலகத்திலேயே ரொம்ப பெரிய ஓவியர். வாவ்.. கேக்கவே எவ்ளோ நல்லா இருக்கு" என்று அவள் பாட்டிற்கு அவளது கற்பனை உலகில் பயணித்து கொண்டிருந்தாள்.

"ஹே ஹே.. கொஞ்சம் உன்னோட ட்ரீம்ல இருந்து நிஜத்துக்கு வா" என்று அவள் தோள் தொட்டு உலுக்கியவன் "அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ இதை எப்படி திறக்கிறதுன்னு உனக்கு தெரியணுமா வேண்டாமா?"

"நான் வேண்டாம்ன்னாலும் நீ விடவா போற. சொல்லு. சொல்லி முடி".

"இந்த பெயின்டிங்ஸ்ல மேஜிக் இருக்கு. இதோ இருக்குதுல இந்த யானையோட துதிக்கை அது தான் அந்த மேஜிக் கீ. அதாவது இதை ஓபன் பண்ணுற சாவி. ஆசிர்வதிக்கிற மாதிரி உசந்து நிக்கிற துதிக்கையை பிடிச்சி கீழே இறக்குன்னா இந்த பாக்ஸ் ஓபன் ஆகிரும். அப்புறம் மீண்டும் அந்த துதிக்கையை பிடிச்சி கீழேயிருந்து மேலே தூக்குன்னா க்ளோஸ் ஆகிடும். எப்படி..?"

"கொடு. நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்" என்று அந்த பெட்டியை வாங்கியவள் அவன் சொன்னது போலவே செய்தாள். "அய்.. ஓபன் ஆகுதுடா" சந்தோஷத்துடன் சொன்னவள் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தாள்.

அதில் சில நகைகள் இருந்தன. அதை பார்த்தாலே தெரிந்தது அதன் விலை கண்டிப்பாக அதிகம் என்று.

"இப்போ எதுக்கு இதெல்லாம் எனக்கு கொடுக்குற?".

"உனக்கு இல்லை என்னோட மனைவிக்கு கொடுக்கிறேன். தயவுசெய்து என் மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் பேசி மூட் அவுட் ஆக்கத. இன்றைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதை அப்படியே நிலைக்க விடு". எங்கே அவள் வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்ற அச்சத்தில் அவன் முன்னெச்சரிக்கையாக சொன்னான்.

"ம்ம்ம்..உனக்காக ஒத்துக்கிறேன். ஆனால் இதுவே தொடர கூடாது" விரல் நீட்டி எச்சரித்தாள் பெண்.

"உத்தரவு மகாராணி..!" இடைவரை குனிந்து நமஸ்கரித்து உரைத்தான் அவன்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே

தாமதத்திற்கு மன்னிக்கவும்.. விரைவில் அடுத்த அத்தியாயம் பதிவு செய்கிறேன்.

என்மேல் கோவமாக இருக்கும் என் செல்ல வாசக கண்மணிகள் என்னை உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து வெப்பன்ஸ் ஏதும் தூக்கமல் ஏற்று கொண்டு உங்கள் தொடர் ஆதரவை தரும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

என்றும் உங்கள் நினைவுடன்
டெய்யம்மா..
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 30

புன்னகை அழகு தான்
இல்லையென்று யார் சொன்னது?
ஆனால்
பெண் நகை அணிந்தால்
புது அழகு தானே!


22240

22242


அந்த விசித்திர யானை ஓவியம் இருந்த மரப்பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை அவளுக்கு அணிவித்தவன் அவளை அழகு பார்த்தான்.

காதில் சிவப்பும் பச்சையும் கற்கள் கலந்த பெரிய குடை ஜிமிக்கி அசைந்தாட , கழுத்திலே காசுமாலைகள் சரம் சரமாய் கோர்த்திருந்த செயினின் முடிவில் தொகைவிரித்த இரண்டு மயில்கள் நெஞ்சோடு நெஞ்சு முட்டிக் கொண்டிருக்க அதன் கால்களிலே ஊஞ்சல் போன்ற டிசைனில் குழல் ஊதும் கண்ணன் தோளில் ராதை தலை சாய்த்து நிற்பது போலவும், அவர்களை சுற்றி இதய வடிவத்தில் சிவப்பு வண்ண ரத்தின கற்கள் அலங்கரிக்க, தங்க குண்டு மணிகள் அதன் நுனியில் ஆடிய படியும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

22241


22243

அவளது அழகை ரசித்து பார்த்தவன் அவளை விரல் பிடித்து எழுப்பி, "வா. அப்பா, பாட்டி எல்லோர்ட்டையும் போய் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம். கூடவே உனக்கு சில சர்ப்ரைஸ்ஸும் இருக்கு. எந்த காரணத்திற்காகவும் நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு துணையா நான் இருக்கேன். சரியா? வா" என்றபடி விரல் பிடித்து அழைத்து சென்றவனின் பின்னே ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல சென்றாள். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த அவர்கள்அங்கே நடு ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த பெரியவர்களை பார்த்ததும் ரவி புன்னகைத்தான் என்றால் ஆராதனாவின் நெஞ்சுக்கூடோ பலத்த வேகத்துடன் துடிக்க ஆரம்பித்தது.

'அய்யோ! அம்மா, அப்பா, வதனா இவர்கள் எல்லோரும் எங்கே இங்கே..? அதுவும் இந்நேரத்தில்? கண்டிப்பாக இவன் வேலையாக தான் இருக்கும். ராட்சஷன்! நினைத்ததை உடனே சாதிக்கும் ரகம். ச்..ச.. இவனிடம் மாட்டி கொண்டு என்ன பாடு பட போகிறேனோ?!'.

அங்கே ரவியின் அப்பா, பாட்டி, ஆராதனாவின் அம்மா, அப்பா, சகோதரி, இளங்கோ, அவர் மனைவி, மகள் என்று எல்லோரும் ஒன்றாக அந்த நீள்வடிவ சோபாவில் அமர்ந்து இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரையும் சுற்றி குடும்பமே அணிவகுத்து கும்மியடிக்க தயாராக இருப்பது போல தோன்றியது ஆராதனாவிற்கு. 'இவன் எப்போது அம்மா அப்பாவிற்கு எல்லாம் தகவல் சொன்னான். என்ன சொல்லி வரவழைத்திருப்பான்'. பயத்தில் விரல்கள் நடுங்க பெண்ணவள் ரவியின் சட்டையை பிடித்துக் கொண்டாள். அவளது பதற்றத்தை அவள் முகம் பார்க்காமல் அச்சிறு தொடுகையிலேயே உணர்ந்தவன் அவளுக்கு கண்களாலே ஆறுதல் சொன்னான்.

"அப்புறம் சொல்லுப்பா. எங்க எல்லோரையும் காலையிலே இவ்ளோ சீக்கிரமா வர சொல்லியிருக்கிற. உங்களை பார்க்கும் போதே விஷயத்தை யூகிக்க முடியுது. இருந்தாலும் உங்க வாயால கேட்டுட்டா நல்லா இருக்கும். ம்ம்ம்.. சொல்லுங்க. என்ன விஷயம்?" என்று ஆருவிடம் பார்வையை பதித்த ராஜ சேகர வர்மா ரவியிடம் கேட்டு உரையாடலுக்கு தொடக்க புள்ளி வைத்தார்.

"அப்பா. நான் ஆராதனாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" எந்தவித அலங்கார வார்த்தைகளும் இன்றி பட்டென்று மனதில் இருந்ததை போட்டு உடைத்தான் ரவி.

"என்னடா சொல்லுற?"- ரவியின் அப்பா.

"எ..என்ன.." - இளங்கோ.

"அப்போ நீ நேகாவை விரும்பலையா?" இது பாட்டி.

"என்ன ஆரு இதெல்லாம்?" -கீர்த்தனா.

"கள்ளி. சொல்லவே இல்லை" - வதனா.

ஆள் ஆளுக்கு அவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்த ரவியும் ஆருவும் ஒருவருக்கு ஒருவர் கண்களால் தைரியம் கொடுத்து கொண்டு பேச தொடங்கினர்,

"அம்மா. நான் ரவியை விரும்புறேன். அவன் இல்லாம என்னால வாழ முடியாது. அவனை விரும்புற விஷயத்தை நேத்து தான் நானே புரிஞ்சிகிட்டேன். அதனால ஏன் உங்க கிட்ட சொல்லலன்னு கேட்காதீங்க".

"ஆரு சொல்லுற மாதிரி நேத்து தான் அவளோட காதலை என்கிட்ட சொன்னா. சொன்னதும் நான் உங்க எல்லோர்கிட்டேயும் சொல்லணும்னு நினைச்சேன். அதான் எல்லோரையும் உடனே வர வச்சேன். அதுவும் இல்லாம உங்க எல்லோராட சம்மதமும் எங்களுக்கு ரொம்ப முக்கியம்" என்று ஆருவின் அப்பா அம்மாவை குறிப்பாக பார்த்து சொன்னான்.

"இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படிடா.. இப்போ நாங்க என்ன பண்ணனும்னு ஆசைப்படுற..?" என்றார் ராஜசேகர வர்மா.

"எனக்கு ஆராதனாவை கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்கிறேன்".

'அட.. இவன் என்ன இவ்வளவு பாஸ்டா இருக்கான். மேரேஜ் பத்தி எல்லார்ட்டையும் சொல்லுறான். நம்ம கிட்ட பெர்மிசன்.. சரி அது கூட வேண்டாம் ஒரு இனபர்மேஷனுக்காவது சொல்லியிருக்கலாம்ல. சரியான பந்தய குதிரை. போடா தேஜா வூ' மனதிற்குள் திட்டி கொண்டாள் ஆரு.


"அது சரி. பொண்ணை பெத்தவங்க கிட்ட முதல அனுமதி கேளு. எனக்கு என் பையன் கல்யாணம் யார் கூட நடந்தாலும் சந்தோசம் தான். இதுல வேற ஆரு கீர்த்தனா பொண்ணுன்னு சொல்லும் போது என்னால எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்" என்று அவர் சம்மதத்தை சொல்ல அடுத்து பாட்டியின் முகத்தை பார்த்தான் ரவி.

"பாட்டி. நீங்க நினைக்கிற மாதிரி நானும் நேகாவும் வெறுமனே நண்பர்கள் தான். அதை தாண்டி வேற எதுவும் இல்லை".

"ம்ம்ம்ம். புரியுது. நான் உனக்கு வர போற மனைவிக்குன்னு கொடுத்த அந்த நகைகளை ஆரு போட்டிருக்கிறதை பார்க்கும் போதே உன் விருப்பம் தெரிஞ்சி போச்சி. இதுல நான் சொல்லுறதுக்கு எதுவுமில்லை. என் பேரனுக்கு அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணோட கல்யாணம் நடந்தா போதும்" என்று அவரும் அவர் சம்மதத்தை சொன்னார்.

இப்போது ஆருவின் பெற்றோர்கள் என்ன சொல்ல போகிறார்களோ? என்று அனைவரும் அவர்கள் முகத்தை ஒருவித கலக்கத்துடன் பார்க்க..

"ராஜு உன்னோட பையனுக்கு என்னோட பொண்ணை கொடுக்கிறதுக்கு முழுசம்மதம்" என்று கீர்த்தனா தன் முடிவை ரவியை போல பட்டென்று சொல்லிவிட்டு தொடர்ந்து பேசினார். "இவ்ளோ ஸ்பீடா இருக்கிற உன் பையன் கல்யாண தேதியையும் பிக்ஸ் பண்ணி வைக்காமையா இருந்திருப்பான். அதையும் சொல்ல சொல்லு. அப்புறம் தாலி முகூர்த்த புடவை எல்லாம் எடுத்தாச்சா.. இல்லை இனிமே தானா?" என்று நான் ஒன்றும் உன் வேகத்திற்கு சளைத்தவள் இல்லை என்று அவனை சீண்டினார்.

'என்னது இது? விட்டால் இப்போதே தாலி கட்டி குடும்பம் நடத்த அனுப்பி விடுவாள் போல. பெண்ணை பெற்றவன் நான் இருக்கையில் இவள் இந்த ஆட்டம் ஆடுகிறாளே' என்று மனதினுள் நொந்தப்படி தேவேந்திரன் சட்டென எழுந்து நின்று விட்டார். "கீர்த்தனா என்னது இது..? ஆராதனவோட அப்பா நான் இருக்கும் போது நீ மட்டும் தனியா எப்படி முடிவு எடுக்கலாம். உன்னோட ஸ்நேகிதன் மேலே உள்ள பாசத்துல உடனே சரின்னு சொல்லுற. ஹ்ம்ம்.. இது கொஞ்சம் கூட சரியில்லை. இது நம்ம பொண்ணோட லைப்". 'நம்ம' என்ற வார்த்தையில் கூடுதல் அழுத்தம் கொடுத்து கீர்த்தானவை முறைத்தவர் ரவியிடம் திரும்பி,

"பாருங்க மிஸ்டர் ரவி. என்னோட பொண்ணை நான் எப்படி வளர்த்தேன்னு உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு ராத்திரியும் என்னோட தோளில் சாய்ந்துகிட்டு கதை கேட்டுகிட்டே தான் தூங்குவா. ஒருநாள் சொன்ன கதையை திரும்ப சொல்ல கூடாது. அதுக்காகவே டெய்லி நியூ ஸ்டோரியா கஷ்டப்பட்டு யோசிச்சு சொல்லுவேன். அப்படியும் சில நாள் தூங்காம அடம் பண்ணுவா. அப்போ நிலாவை காட்டி, நட்சத்திரதிற்கு பேர் வச்சி விளையாடி அவளை கொஞ்சி கெஞ்சி தூங்க வைப்பேன். இப்படியெல்லாம் பொறுமையா ஹாண்டில் பண்ண உங்களால முடியுமா?

அவளுக்கு பிடிச்ச சாப்பாடுன்னா நான் தான் ஊட்டி விடணும்ன்னு அடம்பிடிப்பா. கூடவே என்னோட விரலையும் கடுச்சி வைப்பா. வலியில உயிர் போனாலும் சிரிச்சிகிட்டே சாப்பாடு ஊட்டுவேன். உங்களால அது முடியுமா?

என் பொண்ணு தூக்கத்துல குங்-பூ, கராத்தே எல்லாம் பண்ணுவா. அதெல்லாம் அனுசரிச்சி உங்களால் இருக்க முடியுமா?

இப்படி ஒவ்வொன்றுக்கும் அவள் நான் இல்லாம இருந்தது இல்லை".

'யாரு ஆருவா? இல்லை நீங்களா? உங்க பொண்ணு இல்லமா நீங்க இருந்துகிட மாட்டேன்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு சும்மா ரீல் விடாதீங்க.' என்று ஒரு லுக் விட்டார் கீர்த்தனா.

சிறகு முளைத்த தேவதையிவள்
சிம்பிள் சிரிப்பில் மயக்கியவள் இவள்
சில்வண்டாய் ரீங்கரித்தாலும்
சில்மிஷம் செய்து அடிமையாக்குபவள் இவள்..
இவள் என் மகள்..

சேட்டைகள் குறும்புகள்
குசும்புகள் குளறுபடிகள்
தொல்லைகள் எதுவாயினும்
என்னுள் மகிழ்ச்சியை பரப்பியவள் இவள்..
இவள் என் செல்ல மகள்..

இவளின்றி நொடி பொழுதும் கடந்திடுமோ என் வாழ்வு..?!


தந்தை பாசத்தில் மனதில் வண்ண கவிதைகள் பூத்தது அவருள்.

"இப்படி ஏகப்பட்டது இருக்குது மாப்பிளை. ஆரு என்னோட உயிர் மாப்பிளை. அவளோட ஒவ்வொரு தேவையையும் பார்த்து பார்த்து செஞ்சவன் நான். இப்போ பொசுக்குன்னு எங்கிருந்தோ வந்து என் பொண்ணை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டு போறேன்னு சொன்னா.. என்னால எப்படி ஏத்துக்க முடியும் மாப்பிளை". பேசிக் கொண்டே வந்தவர் தன்னையும் அறியாமல் ரவியை 'மாப்பிளை' முறை வைத்து அழைத்து விட்டார். " உங்களால் இதெல்லாம் முடியுமான்னு முதல சொல்லுங்க மாப்பிளை" என்று ஆரு பண்ணும் சில செயல்களை சொல்லி ஆருவை கேலி பண்ணியவர் மறைமுகமாக தன் சம்மதத்தை 'மாப்பிளை' என்ற அழைப்பிலேயே எல்லோருக்கும் உணர்த்தி விட அங்கே சிரிப்பலை பொங்கியது.

'ஷ் ஷ் ஷ்... ஷப்பா.. கொஞ்ச நேரத்துல டெரர் பீஸ் ஆகிட்டார். நல்ல வேளை இது வெறும் எமோஷனல் சீன் தான்' மனதுக்குள் ஆசுவாசபட்டுக் கொண்டான் ரவி.

ஆருவோ தன் அப்பா இப்படி எல்லோர் முன்னும் தன்னை 'அழகான இம்சை மகள்' பட்டத்தை கொடுத்து மாட்டி விடுவார் என்று எதிர்பாராததால் அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்.

மகள்கள் செய்யும் சேட்டைகள் எந்த ஒரு ஆண்மகனையும் விரும்பி கோமாளி வேஷம் போடவைக்கும் மாயதந்திரம் கொண்டவை.. என்பதை உணர்ந்தவர்களுக்கு மகள்களின் பிரிவு உணர்ச்சி மிகுந்தவையாக தான் இருக்கும்.

"மாமா.. உங்க பொண்ணுக்கு தூக்கம் வந்தா இதோ இப்படி தூக்கி வச்சி கொஞ்சிப்பேன்" என்று அவர் சொன்னதை இவன் செயல்படுத்தினான். ரவியின் கைகளில் ஆரு குழந்தையாக தவிழ, எல்லோர் முன்னும் இப்படி தன்னை பொசுக்கென்று தூக்கிய சங்கடத்தில் ஆரு நெழிய, சுற்றி இருந்தோர் இந்த அதிரடியை கண்டு ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.

"அப்புறம் என்ன சொன்னீங்க மாமா? சாப்பாடு தானே.. என் சாப்பாடையும் சேர்த்து ஊட்டி விட்டுட்டா போச்சி. ஒரு அப்பாவா மட்டும் இல்லமா தாயுமானவனா என்னால் சந்தோசமாகவே இதெல்லாம் செய்ய முடியும். அவள் குங்-பூ பண்ணாலும் சரி கராத்தே ஷாட் அடிச்சாலும் சரி உங்க பொண்ணு கூட காலம் முழுக்கா மல்லு கட்ட நான் தயார் மாமா". தகப்பனாய் அவருள் எழுந்த ஐயத்தை ஒன்றுமே இல்லாதது போல மாற்றி விட்டான். அவனது செயலில் மனம் பூரித்து போனார் தேவேந்திரன். என் மகளை சந்தோசமாய் இவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை பிறந்தது அவருள்.

அதன் பின் அங்கே எல்லோரும் ஒரு மனதாக திருமண பேச்சு வார்த்தையில் இறங்கினர். வதனாவிற்கு முடித்த பின் தான் ஆருவிற்கு திருமணம் என்று ஒரு தாயாக கீர்த்தனா சொல்லிவிட வதனாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் பேச்சு எழும்பியது.

'ஹய்யையையோ.. இப்படி என்னை மாட்டி விட்டுட்டாளே கடன்காரி ஆரு' மனதுக்குள் பொறுமிய படி ஆருவை கண்களாலே எரித்தாள் வதனா.

நிலைமையை புரிந்து கொண்டு ஆருவே வதனாவின் காதல் விஷயத்தை சொன்னாள். முதலில் திகைத்த கீர்த்தனாவும் தேவேந்திரனும் பின் ராமின் நல்ல குணங்கள் தெரிந்ததால் ஒத்துக் கொண்டனர். அது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணாவது அவர்கள் பக்கத்திலே கண்முன்னே இருப்பாளே, அது அவர்களுக்கு திருப்தியாய்பட வதனா ராமின் காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தனர்.

எல்லோரும் அவர் அவர் போக்கில் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்க ரவிக்கு போன் கால் ஒன்று வரவும் தொலைபேசியுடன் அவன் நகர்ந்து செல்லவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆரு தன்னை நோக்கி வந்த இளங்கோவை கண்டதும் அவளது கண்கள் வியப்பில் விரிந்தது. வந்தவர் நெகிழ்ச்சியாக ஆருவின் கைகளை பிடித்துக் கொண்டு "அம்மாடி ஆராதனா! உனக்கு ஒன்றும் ஆகலையே? நான் உன்னை எங்கேயெல்லாமோ தேடுனேன். இன்னும் என்னோட ஆள்கள் தேடிக்கிட்டு தான் இருக்கிறாங்க. நீ நல்ல படியா இருக்கிறதை பார்க்கும் போது தான் நிம்மதியா இருக்கு. எப்படிமா இதெல்லாம் நடந்து? என்னால தான நீ மலையிலிருந்து விழுந்த.. நான் மட்டும் உன்னை நேற்று கடத்தாம இ..இ..ருந்திரு..ந்..தா.." குரல் தழு தழுக்க பேசியவர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க ஆருவிற்கு தர்ம சங்கடமாய் போய் விட்டது.

"ஷ்.. ஷ்.. விடுங்க அங்கில். உங்கள் கண்ணு முன்னாடி தானே நிக்கிறேன்.எனக்கு தான் ஒன்னும் ஆகலையே. எதுக்கு உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிறீங்க?! ஐ அம் ஆல்ரைட். எல்லாம் நல்லத்துக்குன்னு நினைச்சிக்கோங்க. ஆக்சுவலா நேத்து நான் கால் தடுக்கி விழுந்ததுனால தான் ரவிக்கிட்ட வந்து சேர முடிஞ்சி. என்னோட காதலையும் புரிஞ்சிக்க முடிஞ்சி. கூடவே சில அற்புதங்களையும் தான். அதற்காக நான் தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும். அதை விட்டுட்டு நீங்க என்னாடான.. முதல கண்ணை துடைங்க அங்கில். யாராச்சும் பார்க்க போறாங்க".

"நீ மறுபடியும் மறுபடியும் கீர்த்தனாவோட பொண்ணுன்னு ப்ரூவ் பண்ணுறமா. நான் உனக்கு கெடுதல் பண்ண நினைச்சிருந்தும் நீ என்னை மனுஷனா மாத்தின. உன்னோட உயிருக்கே ஆபத்து வர இருந்தும் நீ காட்டி கொடுக்காமா எனக்கு ஆறுதல் சொல்லுற. இப்படி ஒரு அன்பான பொண்ணை பார்க்கும் போது ஆச்சரியமா இருக்கு".

"இதையே எத்தனை தரம் தான் சொல்லுவீங்க அங்கில். விடுங்க. அப்புறம் உங்க பேரு மித்திரன்தானே பின்னே ரவி மத்தவங்க இளங்கோன்னு சொல்லுறது எப்படி?".

"அதுவா.. என்னோட முழுப்பெயர் இளங்கோ மித்திரன். ரவிக்கு இளங்கோ. மற்ற எல்லோருக்கும் மித்திரன். அதான் உனக்கு தெரியல".

"ஓ. அப்படி போகுதா லாஜிக். சரி தான். அப்புறம் அங்கில் இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள சீக்ரெட். தப்பி தவறி கூட யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். தேவையில்லாம யாரும் மனவேதனை படறதுல எனக்கு இஷ்டம் இல்லை" கறாராய் சொன்னாள் ஆராதனா.

"உஉஉன்னோட இந்த மனசு வேற யாருக்கும் உண்மையிலேயே வராது ஆராதனா. உன் பெயருக்கு ஏற்றப்படி நீ ஆராதிக்க பிறந்தவ தான்மா".

"ஆராதிக்க பிறந்தவ மட்டும் இல்லைடா காதலால் எல்லோரையும் சேர்த்து வச்சி பிரபஞ்சத்தையே ஆள பிறந்தவடா இந்த ஆராதனா" என்றபடி இவர்கள் பேச்சினூடே உள்ளே நுழைந்தார் பாட்டி.

"நீங்க சொன்னா சரி தான்" இளங்கோமித்திரனும் ஆமோதிக்க ஆருவிற்கு சிரிப்பாக வந்தது. ஆள் ஆளுக்கு அவளை தலையில் தூக்கி வைத்து சுற்றாத குறையாக புகழ்ந்ததில் வேடிக்கையாக இருந்தது.

"எதுவுமே காரண காரியமில்லாமல் இந்த உலகத்துல நடக்காதுமா. அது அதுக்குன்னு நேரம் வரும்போது எல்லாம் சரியா நடக்கும். அது மாதிரி தான் நீயும் என்னோட பேரன் வாழ்க்கையில வந்தது. உலகத்துல எத்தனையோ பேர் இருந்தும் நீ தான் இந்த வீட்டுக்குன்னு இருக்குது பார்த்தியா? அது தான் விதி. உன்னோட கள்ளங்கபடமில்லா இந்த அன்பு தான் உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கு. உனக்குள்ள இருக்கிற இந்த அன்பு இந்த உலகத்தை மட்டுமில்லை பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது.

நான் ஏன் இப்படி சொல்லுறேன்னு நீயே ஒரு நாள் புரிஞ்சிப்ப. அப்போ உனக்கே எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும். ஹ்ம்ம்.. எதையோ சொல்ல வந்து ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கேன் பாரு. இந்தாம்மா. இதை என்னோட பரிசா வச்சிக்கோ" என்று ஒரு நகை பெட்டியை அவள் கையில் கொடுத்தார்.

22244


அது ஒரு மூன்றடுக்கு மெல்லிய கழுத்து சங்கிலி. முதலடுக்கில் வட்ட வடிவ பிரெமுக்குள் நீல நிறத்திலான கருவிழி மிதந்த படி இருந்தது. இரண்டாவது அடுக்கில் பிறை நிலாவும் நட்சத்திரமும் கோர்த்திருக்க நடுவில் வெள்ளை நிற கற்கள் பதித்த சிலுவை அசைந்தாடியபடி இருந்தது. மூன்றாவது அடுக்கில் ஒற்றை கருப்பு நிற இறகு ஒன்று கண் சிமிட்டியபடி இருந்தது. பார்ப்பதற்க்கே அந்த செயின் வித்தியாசமாக இருந்தது.

ஆராதனாவின் விரல்கள் தானாக அந்த சங்கிலியை தொட்டு தடவியது. உடலில் ஒருவித சிலிர்ப்பு பரவி அடங்கியது. பெண்ணவள் எதையோ பெயர் சொல்ல தெரியாத பரவச நிலையை உணர்ந்தாள்.

அப்போது அங்கு வந்த ரவி வர்மா அவள் தோளோடு அணைத்து எல்லோர் மீதும் பார்வையை பதித்து உதிர்த்தான் அந்த மங்களகரமான காதல் வார்த்தையை. "இப்பவே எங்களோட எங்கேஜ்மெண்ட் வச்சிக்கலாம்னு இருக்கிறேன். இப்போ சிம்பில்லா ரிங் எக்ஸ்சேஞ் பண்ணி முடிச்சிக்கலாம். ஏன்னா இன்னும் ஒரு வாரத்துல எனக்கும் ஆராதனாவுக்கும் மேரஜ்".

'என்னது..??' விழிகள் விரிய அதிர்ந்தாள் ஆராதனா. அனைவரும் அவன் சொன்ன செய்தியில் ஸ்தம்பித்து இருக்க பாட்டி கேட்ட அடுத்த கேள்வியில் நிஜத்திற்கு வந்தனர். "இவ்ளோ சீக்கிரமா வைக்க வேண்டி அவசியம் என்ன ரவி? கொஞ்சம் பொறுமையா பண்ணலாமே. பொண்ணு வீட்டு சைடும் நாம் பார்க்கணுமில்ல".

"நோ பாட்டி. என்னால ஆருவை இதுக்கு மேல தனியா விட முடியாது. எனக்கு ஆரு என் கூடவே இருக்கணும். அதோட நெஸ்ட் மன்ந்த் எனக்கு பிஸ்னெஸ் விஷயமா அலைய வேண்டி இருக்கும். சோ இப்போ வச்சா தான் வசதி. கல்யாணத்துக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் நான் அரேஞ் பண்ணிக்கிறேன். நீங்க யாரும் எதுக்காகவும் கவலை பட அவசியமில்ல".

கீர்த்தனா ஒரு தாயக மற்ற சீர்வரிசைகள், நகை என மகள்களுக்கு செய்ய வேண்டியதை நினைத்து கலங்கி நிற்க அவரது தயக்கத்தை உணர்ந்து கொண்டவனாக, "ஓ ஆன்ட்டி. நீங்க எனக்கு ஆராதனாவை மட்டும் தந்தா போதும். வேற எதுவும் தேவையில்லை. அது மாதிரி வதனா கல்யாணத்தை பற்றியும் கவலைப்பட வேண்டாம். ராம் கிட்ட நான் பேசிட்டேன். அவனுக்கு எல்லாம் ஓ.கே தான். சோ நீங்க ரிலாக்ஸா இருங்க".

'இப்படி ஒரு சிறந்த மருமகன் யாருக்கு கிடைக்கும். ஒன்றும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடு. கல்யாண வேலை என்று எதுவும் இல்லாமல் பார்த்து பார்த்து செய்ய மருமகனே மகனாக மாறினால் யாரால் தான் மறுக்க முடியும்?'.

இப்படி யாருக்கும் மறுப்பு தெரிவிக்க எந்த காரணமும் கொடுக்காமல் அடாவடியாக நின்று அனைவரையும் சம்மதிக்க வைத்து விட்டான் அந்த மாயக்காரன் ரவி வர்மா. ஆராதனாவின் விரலில் நிச்சய மோதிரத்தை அணிவித்து பாதி திருமணத்தை முடித்துவிட்டான். எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தவர்கள் பொதுவாக பேசிவிட்டு அவரவர் அறைகளில் தஞ்சம் புகுந்து கொள்ள ஆராதனா தன் கைகளில் அவன் அணிவித்த அந்த மோதிரத்தையே பார்த்து கொண்டிருந்தாள். அது பொதுவாக அணியும் மோதிரம் போல பெயர் பொரித்தோ அல்லது வைரம் பதித்தோ இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. மனித இதயம் துடிப்பதற்கு ஆயத்தமாக இருப்பது போல செதுக்கப் பட்டிருந்தது. 'இது அவனது இதயமாம். என் கையில் அவன் சிறைப்பட்டிருக்கிறானாம்' தனிமையில் அவன் சொன்ன விளக்கத்தை நினைத்தவளுக்கு சிரிப்பாக வந்தது.

"சரியான போக்கிரிடா நீ" அவனுடன் பேசுவதாக எண்ணி கொண்டு அந்த மோதிரத்துடன் பேசிக் கொண்டிருந்தவள் காலை எதுவோ குடைவது போல இருந்தது. குனிந்து பார்த்தவள் கருவிழிகள் இரண்டும் விரிந்து ஒளிர்ந்தது.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனதருமை வாசகர்களே..
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

ரொம்ப நாள் ஆகி போச்சுன்னு என்னை புகழ்ந்த நல் உள்ளங்களுக்கு பெரிய சாரி.. கூடிய சீக்கிரம் இந்த கதையை முடிக்க நினைக்கிறேன். இன்னும் 5 அல்லது ஆறு அத்தியாத்தில் கதையின் முடிவு.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஊக்கம் தான் எனது அத்தனை தடங்கல்களையும் தாண்டி இங்கே இழுத்து வருகிறது.

நன்றி
 
Status
Not open for further replies.
Top