All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் மடல்கள்

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 12574

#இனிய_மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள் ⚢♀⚢♀⚢♀⚢♀⚢♀⚢♀⚢♀

நடுஇரவு..
நகைகளணிந்த நங்கை..
நடந்து வரும் கங்கை..
அழகில் மேனகை..
வருகிறாள்..
தனியே தன் பணிமுடித்து..


மேடுபள்ளங்கள் மீதூறும் பார்வை..


களவு கொள்ள எண்ணும் கயமைப் பார்வை..

'இந்நேரத்தில் என்ன!எங்கே?'
ஆராய்ச்சிப் பார்வை..
'எம்மதம்.. என்ன ஜாதி' கேள்விப்பார்வை..


மூன்றாம் பாலை வன்மையாய் குடிக்க எண்ணும் விலங்கின் பார்வை..

ஏதுமில்லை.. எங்கும் இல்லை.. ஆம்... எங்குமே இல்லை.. இல்லவே இல்லை..


படபடப்பு ஏதுமின்றி ..
வழமை போல்
தன் வழியில்..
தன் கூட்டை நாடி..
நடக்கிறாள்..
பிடித்த பாடலை முணுமுணுத்து..

அயர்ந்து உறங்கும் குடும்பத்தின்
துயில் கலைக்காமல்..
துகில் மாற்றி.. யுகமாய் உழைத்த களைப்பு இதமாய் அழுத்த பஞ்சணை புக..
சுகமாய் அணைத்தன தேவனின் கரங்கள்.. நித்திரைத் தேவனின் கரங்கள்..

அச்சம்.. நாணம்.. மடமை.. பயிர்ப்பு ஏதும் சுமக்க தேவையில்லா மகளவள்.. மண்ணின் மேன்மை கூட்ட வந்த மகளிர் குலமவள்..

துஞ்சினாள்.. மறுநாளில் இன்னமும் வீறு கொண்டு விளங்கச் செய்ய.. அவனியை..

இந்நாள்.. இப்படி ஒரு நாள் வரும்..
💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐

அனைவருக்குமான உலகாய் இவ்வுலகம் அழகாய் சுழலும்..

🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁

வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.
உங்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
உணமையான வரிகள் தாமரை
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை.....


வாவ்... எப்படி படத்தில் தாமரை தன் இதழ்களை விரித்து நம் மனங்களை மயக்குகிறதோ...


அதே போல், உங்களின் மடல்களும் எல்லோர் மனத்திலும் மணம் பரப்புகின்றது....


அழகான தமிழில் அற்புதமான வரிகள் தாமரை...😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮


அதுவும் ஏவுகணை நாயகனை பற்றி அவரின் வார்த்தைகளை தாங்கள் தெரிவு செய்து கொடுத்த விதம் பிரமாதம்.....


மகளிர் தின மடல்... எப்பொழுது, அப்படி ஒரு பொன்நாள் விடியும் என எங்கும் மாந்தர்கள் பலர் உண்டு....
 

Ramyasridhar

Bronze Winner
தாமரை மா ஒவ்வொரு மடலும் தனித்து நின்று அழகாக ஜொலிக்கிறது. அனைத்து மடல்களும் எளிமையான வார்த்தைகளை கொண்டு அனைவரும் படிக்கும் வண்ணம் இருந்தது. பூமிதாயை நான்கைந்து வரிகளில் மிக அழகாக காட்டிவிட்டீர்கள். மகளிர் தின மடல் நம் அனைவரின் ஆசைகளை பிரதிபலிப்பதாய் இருந்தது. அப்துல்கலாம் ஐயா அவர்களை குறித்த மடல் மிகவும் அருமை. என்னை வெகுவாக கவர்ந்தது வார்த்தைகளைப் பற்றிய மடல். நாம் உதிர்க்கும் வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை மிக எளிமையாக அதே நேரம் நெஞ்சில் பதியும் வண்ணம் மிக சிறப்பாக சொல்லிவிட்டீர்கள். அனைத்து மடல்களையும் ஒருமுறைக்கு மேல் படித்தேன், அதிலும் இந்த இரண்டாவது மடலை மற்றவை காட்டிலும் கூடுதலாக படித்தேன்.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை அக்காஆஆ.....
சார்ட் ஸ்டோரிஸ் கொடுக்கறனு சொன்னீங்கலே எங்கே...சீக்கிரமா வாங்க மிஸ் யூஊஊஊஊஊஊ😍😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆ.....
சார்ட் ஸ்டோரிஸ் கொடுக்கறனு சொன்னீங்கலே எங்கே...சீக்கிரமா வாங்க மிஸ் யூஊஊஊஊஊஊ😍😍😍😍😍😍
அம்முக்குட்டீ😍😍😍😍😍💓💓💓💓💓💓💓💓.

அடுத்தக் கதை எழுத ஆரம்பிக்கலாம்னு.. புள்ளையார் சுழி போட்டு வச்சேன் டா..

" தொலைந்து போ ..... என் காதலில்.." னு பேர் கூட வச்சேன்😅😅😅😅😅😅😅.

ஷார்ட் ஸ்டோரியா.. அவ்.. இப்போ நிலைல..

#லைஃப் இஸ் வெரி ஷார்ட்.. ஆல்வேய்ஸ் பீ ஹேப்பி....
இப்படித்தா பாடிட்டு சுத்திட்டு இருக்கேன்..
வர்றேன் டா.. நோ டென்ஷன் பேபி😍😍😍😍😍 தேடினதுக்கு #லவ்.. தேடவச்சதுக்கு #ஜாரி..

ஏதாவது ஐடியா பண்ணிட்டு வர்றேன்.. #ஸ்டே ஸேஃப் பேபி # டேக்கேர்
 
Top