All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "என்னைக் களவாடிய காவலனே" - கதை திரி

Status
Not open for further replies.

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று

இரவு 8.45


"எங்கு சென்றாய் என்னவளே!!!
நீ காணவில்லை என்பதை
நினைக்கவே பதறுகிறது
என் மனது.....
உனக்கான என் பதற்றம்
நீ அறிந்தது தானே...
என்னுள் இருக்கும் நீ
அதை உணரவில்லையா???
என் மனதின் குரல்
உனக்கு கேட்கவில்லையா??
நீ என்னை விட்டு
சென்றதாய் எண்ணும்
நினைப்பே
என் இதயதுடிப்பை ரணமாய்
பாரமாய் அழுத்துவதை
உணர்கிறேன் நான்...
அதை நீ உணரவில்லையா
அது உன் நுண்ணுர்வை
தீண்டவில்லையா???
எனை மீறி பொங்கும்
கண்ணீரும்
நெருப்பாய் சுடுகிறதே..
அதை ஆனந்த கண்ணீராய்
மாற்ற வந்துவிடு உடனே"


இவ்வாறு
பித்துபிடித்தவன் போல்
அவள் இக்கணம்
எங்கிருக்கிறாள்
என்பதை அறிய இயலாத
தன் இயலாமையில்
தனக்குள்
தன் மனதுக்குள்
கதறிக்கொண்டிருந்தானவன்..

நேற்றைய சண்டையின்
கோபத்தில்
எங்கேனும்
சென்றுவிட்டாளோ???

இல்லை
அவ்வாறு இருக்காது...

அவளின் அன்பு
என் அன்பை
காட்டிலும் உயர்ந்தது..
எனை தவிக்க விட்டு
போக இயலாது
அவளால்
அவளின் காதலினால்..

பின்னெங்கு
சென்றிருப்பாள்???

அவளின் மாத தேதி
அவனின் நினைவில்
ஊசலாட
வயிறு வலியால்
எங்கேனும்
மயங்கிவிட்டாளோ??
இவ்வெண்ணமே
அவனிற்கு பெரும்
தலைவலியை
உண்டாக்க...
அமர்திருந்தானவன்
இரு கைகளாலும்
தன் தலையினை தாங்கி...

வந்தாள் அவள்...
நின்றாள் அவன் முன்னே...
மாயையோயென
திகைத்து நின்றான் ஓர் நிமிடம்...
தன் சுயநினைவு
அடைந்த மறுநிமிடம்...
அழைத்து சென்றான்
அவளை
அவர்களின் இல்லத்திற்கு...


வீட்டிற்க்குள் நுழைந்த
அடுத்த நிமிடம்
அடங்கிருந்தாள் அவள்
அவனுள்...
எங்கிருந்தோ காப்பது போல்
தன் கைவளைக்குள்
அடக்கியிருந்தான் அவளை...

முழுவதுமாய்
ஸ்பரிசித்திருந்தான் அவளை
ஏதுமில்லை அவளுக்கென
அவன் உணரும் வரை....

அவன் மனதின் பதட்டம்
அவன் கைகளில் தெரிய...
உணர்ந்தாள் அவளும்
அவளுக்கான
அவனின் பரிதவிப்பை
அவனின் தேடலை...
எண்ணிலடங்காத
எதுலும் அடங்காத
அவள் மீதான அவனின்
தூய்மையான காதலை....

தன்னைவிட்டு விலக்கி நிறுத்தினான்
கண்ணீரை மறைத்த
விழிகளால் பார்த்து கொண்டனர்
இருவரும்....

அவனின் கண்ணீர்
அவளின் மனதை
ரணமாய் கிழித்து
கண்ணில் நீரை நிரப்பியது...

அவனின் பரிதவிப்பு
எனக்காக தானே...
அவன் மனம் வாடியது
என்னால் தானே...
இவ்வாறாய் எண்ணி
சோர்ந்தது
அவளின் மனம்...

சோர்ந்த அவளின் மனம்
அவன் காதலை எண்ணி
ஒரு பக்கம் வியக்க...
அவன் மன வலியை
எண்ணி மறு பக்கம்
வேதனையுற்றது...


ஏதும் பேசிக்கொள்ளவில்லை
இருவரும்....

அமர்ந்திருந்தான்
அமைதியாய்
மெத்தையில்....

அவனருகில் சென்று
மண்டியிட்டு நின்றாளவள்..
பதறி தடுத்து
அருகில்
அமர்த்திக்கொண்டானவளை
அவளின் அடிப்பட்ட
கால் வலிக்குமேயென...

எனினும் பேசவில்லை
அவளிடம்....

"சாரி" அவளுரைக்க
மௌனமாய்
அவள் விழியினை
அவன் நோக்க,
தொடர்ந்தாளவள்....
உரைத்தாள்
அன்றைய நிகழ்வை...

மனதின் வலியும்
காயம் பட்ட காலின் வலியும்
அவளை சோர்வுறச்செய்ய
அரைநாளில் விடுப்புக்கேட்டு
உறங்கி விட்டாள்
ஓய்வறையில்
அவளின் அலுவலகத்திலேயே...

தன்னை
புரிந்துக்கொள்ளாது பேசும்
அவனின் கோபத்தின் மீது
தானும் கோபம் கொண்டவள்,
முடிவு செய்தாள்
தானாய் சென்று அவனிடம்
பேசப்போவதில்லையென...

தன்னவனின் நேசத்தை
செவியினூடே உணர்த்தும்
கைப்பேசி
இன்று அவனின்
கோபத்தை உணர்த்த
கையாலாகாத பேசியாய்
தோன்றிய கைப்பேசியை
மின்னுயுரூட்ட
மறந்திட்டாளவள்....

நீண்ட நெடும்
உறக்கத்திலிருந்து
"தான் எங்கிருக்கிறோம்"
என்ற நினைவிலேயே விழிக்க...
அனைத்தும்
நினைவிலாடிய நேரம்
பதட்டம் கொண்டது
அவளின் மனது
அவனின் பதட்டத்தை எண்ணி...

விரைந்து
அலுவல் வண்டி
ஏற்பாடு செய்து
வந்து நின்றாள்
அந்நிறுத்தத்தில்....

நிகழ்வை அவள்
உரைத்து
முடித்திருந்த நேரம்...

"அட, என் தூங்குமூஞ்சியே"
என்ற பாவனையில்
உள்ளடக்கிய
சிறு புன்னகையுடன்
பார்த்திருந்தான்
குற்றயுணர்ச்சியுடன்
பேசிட்டிருந்த
அவளின் விழியை....

ஏனோ
சிறுபிள்ளையாய்
தோன்றினாளவள்
அவனுக்கு
இப்பொழுது....

அருகிலிருந்தவளை
தூக்கி
தன் மடியில்
அமர்த்திக்கொண்டானவன்...

மடியில் இளைப்பாரும்
பிள்ளையாய்
அவளின் இடையை
கட்டிக்கொண்டு
அவளின் தோளில்
தன் நாடியை வைத்து
ஆசுவாசமாய்
இளைபாரினானவன்....
எனினும் தன்
மௌனத்தை
கலைக்கவில்லையவன்...

திரும்பி அமர்ந்து
அவனின் முகம்
நோக்கியவள்,
"அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே...
அன்புள்ள திமிரே
அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே"
என்று பாடி
அவனின் நாடியை பிடித்து
இவள் கொஞ்ச,
மனதுக்குள் ரசித்தாலும்
சிரித்தாலும்
உணர்ச்சியற்ற
இறுக்கமான முகத்துடன்
அவளை
பார்த்திருந்தானவன்....

“உன் தண்டனை
ஏதாயினும் ஏற்க்கும்
சக்தியுண்டெனக்கு
எனை கொல்லாமல்
கொல்லும்
உன் மௌனத்தை
ஏற்க்கும்
சக்தியில்லையடா எனக்கு...”
தன் உள்ளம் தவிக்க
கண்ணில் தேங்கிய நீருடன்
கவலை தோய்ந்த முகத்துடன்
அவனின் முகம் நோக்கி
இவளுரைக்க,

“கொடுமையான
தண்டனையுண்டு
உன் செயலுக்கு”
என்றுரைத்தவன்,
தண்டனையாய்
அவளிதழை
இம்சித்திருந்தான்
அவனிதழால்...

கெஞ்சித் தவித்த
அவளிதழை
அவனிதழால் கொஞ்சி
ஆசுவாசப்படுத்தினானவன்...

விடுவித்தவன்
"சாரி" என்றுரைக்க...
"எதற்காகவோ இம்மன்னிப்பு??
இதழை இம்சித்ததற்காகவா??"
நாண புன்னகையுடன் வினவ...

"இல்லையடி பெண்ணே!!
காலை கடுங்சொல்லால்
உன்னை இம்சித்ததற்க்காக...
வார்த்தையற்ற மௌனத்தால்
உன்னை வஞ்சித்ததற்காக...”

“வானளவு விரிவானது
கடலளவு ஆழமானது
என் மீதான உன் காதலென
புரிந்துக்கொண்டேனடி பெண்ணே..

எத்தகைய உறவுகள்
இருப்பினும்,
உற்றவனாய்
உணர்வானவனாய்
உயிரானவனாய்
நான் மட்டுமே
முதன்மையாய் உனக்கென
அறிந்துக்கொண்டேனடி கண்ணே..."
என்றவனுரைக்க...

பின் ஏனிந்த
மௌன போராட்டமோவென
அவள் கேள்விகணை வீச...

"கைப்பேசி எங்கே??"
முறைத்துக்கொண்டே
அக்கணையை
அவளிடம் திருப்பிவிட்டானவன்...

உயிரற்ற நிலையிலுள்ள
கைப்பேசியை அவனிடம்
அவள் காண்பிக்க...

உன் பாதுகாப்பு
எவ்வளவு முக்கியமென
உனக்கு விளங்கவில்லையா??

எனதருகில் நீ இல்லாத நேரம்
இதனால் மட்டுமே
உன் உணர்வினை
உன் பாதுகாப்பினை
நான் உணர முடியும்
புரிகிறதா உனக்கு"
அவளின் செயலை
கண்டித்து கண்டனம்
தெரிவித்தானவன்...

"இனியொரு நேரம்
இவ்வாறு நிகழ்ந்தால்
ஒரு மாதத்திற்கு
மௌன விரதம்
கடைப்பிடிப்பேனடி
வாய்ப்பூட்டை
திறக்கவே மாட்டேன்"
தண்டனையை உரைத்தவன்,

குற்றயுணர்ச்சியில்
தவறு செய்த
சிறுபிள்ளையின்
முகபாவனையில்
அமர்ந்திருந்த தன்னவளை
கண்டதும்
அவனின் மனமிறங்க
மென்மையாய்
அணைத்துக்கொண்டான் அவளை....

தன் இன்பமும் அவள்
தன் துன்பமும் அவள்..
தன் அனைத்து
உணர்வுகளையும்
உயிர்ப்பிக்கும்
அவளின் செயல்களென...
குறுகிய காலத்தில்
பெரும் தாக்கத்தை
தனக்குள் உருவாக்கி
தனக்கு யாவுமானவளாய்
மாறியிருந்தவளை
எண்ணி
பூரித்திருந்தானவன்...
இதுதான் திருமணத்தின்
மாயமோ??? வலிமையோ???

பேரன்பின் வலியை
ஆழிபேரலை அன்பால்
துடைத்தெறிந்து
கரைக்காணா அன்பை
பகிர்ந்து வாழ
கற்றுக்கொண்டனர்
இருவரும்....


இரு வருடங்களுக்கு பிறகு...

"என்னங்கககக!!!!!"

"தந்தை இல்லாது
உணவும் இரங்காது
உங்கள் செல்ல மகளுக்கு!!!
வருகிறீர்களா இங்கே??"

முகப்பறையிலிருந்து
கூறிக்கொண்டே
போய் நின்றாள்
அவன் முன்.....

அவனின்
கையேட்டில் எதையோ
கிறுக்கிக் கொண்டிருந்தவன்,
அதனை அப்படியே
போட்டுவிட்டு
மகளை
காணச் சென்றானவன்....


அவன் கிறுக்கியதை
என்னவென்று
இவள் பார்க்க,
அங்கிருந்தது
அழகான கவிதை...
அவளுக்காய் அவன்
எழுதிக் கொண்டிருந்த
கவிதையது....

"நிரலாளனை(Programmer)
உன் நிரந்தரனாய்
மாற்றியவளே!!!!

உன் மெய் காதலால்
என் இதயமெனும்
மென்பொருளுக்கு
உயிரளித்தவளே...

உன் மிகையான அன்பால்
என் மூளை என்னும் சர்வரையே
ஸதம்பிக்க செய்தவளே...


என் நிலைவட்டில்
உன் நினைவலை மட்டுமாய்
பதிக்கச்செய்தவளே!!!

ஐம்பொருளை அடக்கிய
ஆறாம்பொருளாம்
என் கைப்பேசியின்
உயிர் வடிவாய்
என் கை வளைக்குள்
இருப்பவளே......"


இதுவரை
எழுதியவன்
முற்று பெறாமல்
விட்டுச்செல்ல...

மென்பொருளாளர்
காதல்பொருளாளராய்
மாறிவிட்டாரோ
என்றெண்ணியவள்,
தானே முடித்தாள்
அக்கவிதையை....

"கைப்பேசியாய்
கை வளைக்குள்
இருப்பவளை
மின்கலமாய் இருந்து
மின்னுயுரூட்டி
எனை ஆள்பவனே...
இருப்பேன்,
ஏழேழு ஜென்மத்திற்கும்
உன் கைவளைக்குள்ளே
உன்னவளாக...
உன் உற்றளாக...
உன் உயிரானவளாக...."


என்றும்
என்றென்றும்
இதே அளபரியா காதலோடு
சீரும் சிறப்புமாய்
இன்பமாய் இவர்கள்
வாழட்டுமென வாழ்த்தி
விடைபெறுவோம் நாமும்....


அன்புடன்,

நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:
Status
Not open for further replies.
Top