All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரசன்னா விஸ்வநாதனின் "விசித்திரமான உறவுகள்" - கதைத் திரி

Status
Not open for further replies.

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6:

சஹானா வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து பூஜை அறைக்குள் நுழைந்தாள். அவள் கொண்டு வந்த குத்து விளக்கை பூஜை அறையில் வைத்து விட்டு விளக்கேற்றி சாமி கும்பிட்டு முடித்தவுடன் அவளை அங்கு ஹாலில் உள்ள சோபாவில் உக்கார வைத்தனர். அருகில் விஷ்ணுவும் அமர வைக்க பட்டான். இருவருக்கும் பாலும் , பழமும் கொடுத்து விட்டு அவர்களை மறு வீட்டிற்கு என்ற சடங்கிற்காக சஹானா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் விஜி, நாகா, சைந்தவி, ஆகியோரும் உடன் வந்திருந்தனர். அவர்களுக்காக எடுத்து வைத்த புது துணிகளை சஹானா வின் அம்மா அவர்கள் இருவரிடமும் கொடுக்க அவர்கள் சஹானாவின் அறைக்கு சென்று மாற்றினர். சஹானாவிற்கு புது பட்டு புடவை என்பதால் மடிப்பு வரவில்லை. அதனால் தாமதம் ஆகியது. ரூம் வெளியே இருந்து விஜியோ பொறுமை இன்றி அத்தனை பேரும் இருக்கையில் அவர்கள் இருந்த ரூமை தட்டி வெளிய வாங்க. சீக்கிரம் கெளம்பனும். விஷ்ணு பிரெண்ட்ஸ் வந்து வெயிட் பன்றாங்கன்னு அப்பா சீக்கிரம் வர சொல்றாங்க . அவங்களும் சீக்கிரம் கெளம்பணுமாம் என்று சொல்லி அவர்கள் வெளியில் வரும் வரை அநாகரிகமாக கதவை தட்டி கொண்டே இருந்தாள்.இதை பார்த்து கடுப்பான மீனாட்சி ரெம்ப அவசர படுத்தாதமா. அவங்க வரட்டும் என்று சற்று கோவமாகவே சொன்னார். அதன் பிறகே சற்று அடங்கினாள். வீட்டை விட்டு கிளம்பும் போது சஹானா அழ தொடங்கினாள். அவள் அழுவதை பார்த்து அவளுடைய மாமா, அப்பா அத்தை எல்லாரும் அழுதனர். அப்போது சஹானாவின் மாமா பையன் சரவணன் விஷ்ணுவிடம் வந்து சஹானாவை நல்லா பாத்துக்கோங்க. அவ கொஞ்சம் கோவா காரி தான் . ஆனால் சொன்னா புரிஞ்சுப்பா என்று சொன்னான். எனக்கு சஹானா பத்தி தெரியும் அண்ணா. நான் நல்லா பாத்துக்கறேன்.நீங்க கவலை படாதீங்க என்று தேற்றி விடை பெற்றனர்.
ஆனால் ஒரு நாள் சஹானாவின் ஒட்டு மொத்த துன்பத்திற்கும் தாமே காரணம் ஆக போகிறோம் என்பதை விஷ்ணு அறிவானா??
 
Last edited:

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்லும் வழி முழுதும் சஹானா அழுது கொண்டே இருந்தாள். விஷ்ணு சமாதானம் செய்யாமல் அவனுடைய அக்கா மற்றும் அவர்களுடன் வந்தவர்களுடன் பேசிக்கொண்டே வந்தான். வீடு வந்ததும் அனைவரும் வீட்டுக்குள் செல்ல சஹானாவிடம் தான் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக சொல்லி மொட்டை மாடிக்கு சென்றான். சஹானாவும் அங்கு இருந்த ரூமில் உக்காந்து இருந்தாள். கொஞ்ச நேரத்தில் விஷ்ணு அவளை வந்து அழைத்து சென்று தன் நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தினான். ஒரு சிறு புன்னகையுடன் அமைதியாக ஒதுங்கி அங்கு இருந்த சோபாவில் விஷ்ணுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் . நண்பர்கள் மகிழ்ச்சியாய் பேச காலையில் சீக்கிரம் எழுந்ததும் இன்றைய சடங்கிலுமாய் ஏற்பட்ட சோர்வில் தூக்கம் கண்ணை கட்டியது சஹானாவுக்கு. ஒரு வழியாக அவர்கள் விடை பெற்று சென்றவுடன் அந்த வீட்டின் சிறப்பு விருந்தினர் ராபர்ட் இவர்களுடன் பேசினார். இங்க பாரு மா இனி இது தான் உன் குடும்பம். என்ன நடந்தாலும் உன் அத்தை, மாமாட்ட சொல்லு. எல்லா பொன்னுங்கலும் அம்மா பேச்சை கேட்டு வாழ தெரியாம இருப்பாங்க. நீ அப்படி இல்லாம பாத்து நடந்துக்கோமா . அவங்க பேச்சு கொஞ்சம் அடாவடியா தான் இருக்கு. ஏன்னா அவங்க தொழில் அப்படி.அந்த மாறி இருந்தா தான் அவங்க பொழப்பு போகும். (சொக்கநாதர் வட்டி தொழில் செய்வதை குறிப்பிடுகிறார் )என்றதும் சஹானாவிற்கு ஒரு மாதிரி ஆகி போயிற்று. என்ன இது முதல் நாளே அம்மாவை பத்தி நம்ம கிட்டயே இப்படி சொல்றாங்க. இவங்க அம்மாட்ட பேச கூட இல்லையே. இவங்கதான் சேலை விஷயத்தை சொல்லிருக்காங்க. அதான் இப்படி பேசுறாங்க. இனிமே நம்ம அம்மாவை குறை சொல்ற மாறி நடந்துக்க கூடாது என்று அன்றே முடிவு எடுத்து விட்டால் சஹானா.....
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7:

திருமணத்திற்கு வந்த அனைவரும் சென்று உறங்க சஹானா மட்டும் ஹாலில் தூக்க கலக்கத்துடன் உட்காந்திருந்தாள். இரவு 12 மணிக்கு கையில் பால் டம்ளருடன் விஷ்ணு இருந்த அறைக்கு செல்ல அனுமதிக்க அங்கு குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிறைய இனிப்புகளும் வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே போனில் பேசி கொஞ்சம் பழகியதால் விஷ்ணுவிடம் சாதாரணமாகவே நடந்து கொண்டாள் சஹானா. ஆனால் உள்ளூர பல குழப்பங்களும் சிந்தனைகளும் ஓடி கொண்டே இருந்தது. சஹானா பாலை விஷ்ணு விடம் கொடுத்து குடிக்க சொல்ல மீதி இருந்த பாலை தானும் குடித்தாள்.

இனி என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியவில்லை. விஷ்ணுதான் சஹானாவை நெருங்கி அமர்ந்து அவனின் தேடலை தொடங்கினான். ஆனால் சஹானாவிற்கு அவன் மேல் இருந்த அன்பு ஒரு புறம் இருக்க, அவன் வீட்டில் செய்த அலப்பறைகளும், இன்றைய சோர்வும் சேர்ந்து எதையும் ஏற்கும் மன நிலையில் இல்லாமல் இருந்தாள். ஆனால் அவள் விஷ்ணுவை காதலித்த மனதோ அவனுக்கு ஒத்துழைத்தது. அப்படியே இருவரும் உறங்க காலை 9 மணிக்கு தான் எழுந்தனர்.

சஹானா எழுந்து குளித்து விட்டு ஹாலில் அமர்ந்து இருந்தாள். அப்போது விஜி சஹானாவை கூப்பிட்டு இனிமே எல்லா வேலைகளையும் நீ தான் பாத்துக்கணும். நாங்க எல்லாரும் சாப்பிட்டோம். நீயே போய் தோசை சுட்டு அவனுக்கு குடுத்துட்டு நீயும் சாப்பிடு.நான் ரெம்ப டயர்டா இருக்கேன். நான் தூங்க போறேன்னு சொல்லிட்டு போய் தூங்கிட்டா. சஹானாவிற்கு தான் தூக்கி வாரி போட்டது. நமக்கு ஒன்னுமே சமைக்க தெரியாது. இவங்க இப்படி சொல்றாங்களே. நம்ம வீட்ல எப்படில்லாம் இருந்தோம் என்று சற்று கண் கலங்கி விட்டது. பின் தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டு வேலையை பார்க்க போனாள்.

எப்போதுமே புது பெண்ணை வேலை பார்க்க சொல்ல மாட்டங்களே நம்ம ஊரு பக்கம். இங்க என்னடானா வேலைக்காரி வந்த உடனே போயி வேலை பாக்க சொல்ற மாறி எண்ட இப்படி சொல்ராங்களே என்று நினைத்து கொண்டாள். பாவம் அவளுக்கு இனி தானே வாழ்க்கை பல பாடங்களை கத்து கொடுக்க காத்திருக்கிறது......
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஹானா அவளுக்கும் விஷ்ணுவிற்கும் தோசை சுட்டு கொண்டு வந்து இருவரும் உண்டனர். உண்டு முடித்ததும் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி விட்டு மதிய சமையலில் உதவி செய்வதற்காக சென்றாள். அங்கு ஒரு குண்டான பெண்மணி சஹானாவை ஒரு மாதிரியாக பார்க்க மிகவும் சங்கடமாகவும் உணர்ந்தாள். என்ன இது புதுசா கல்யாணம் ஆணவன்களை இப்படி பாக்குது லூசு. ஒரு வேலை நம்ம உதட்டுல உள்ள காயத்தை தான் இப்படி பாக்குதோ. இந்த விஷ்ணு வேற நம்ம மானத்தை வாங்கிட்டாரே என்று மனதுக்குள் நினைத்து கொண்டு வேலை பார்க்குற மாறி தலையை குனிந்து கொண்டாள். பின் காய்கறி வெட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது சஹானாவின் அத்தை , தங்கை, தம்பி வர அனைவரையும் வரவேற்று அவர்களுடன் சென்று பேசி கொண்டிருந்தாள். அவளுக்கு பதிலாக அவளுடைய வேலையை அவள் அத்தை பார்த்து முடித்தார்.

இவள் வேலை செய்வதை பார்த்து சந்தோசமாக இருந்தாலும் ஒரு பக்கம் வந்த அனைவர்க்கும் பாரமாகி போனது. எப்படி லாம் வளர்ந்த புள்ள. வந்த உடனேயே வேலை வாங்கிட்டாங்களே என்று நினைத்து கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தனர்.

சஹானாவிற்கு அவர்களை பார்த்ததில் இருந்து ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் எதையோ இழந்து விட்ட உணர்வு தோன்றியது. ஆனால் அது என்ன என்று தான் தெரியவில்லை....
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7:

ஒரு வழியாக சமையலை முடித்து அவர்களை saapida வைத்து அனுப்பி வைத்தாள் சஹானா. அவர்கள் சென்ற பின்பு வெறுமையை உணர அறையில் சென்று படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள். முழிப்பு வந்தவுடன் அச்சோ 6மணி ஆச்சே. நம்மள விஷ்ணு எழுப்பவே இல்லையே. இதுக்கும் ஏதாவது சொல்லுவாங்களோ. சரி போவோம். பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு சமயலறைக்குள் nulaindha சஹானாவை காபி கொடுத்து குடிக்க சொன்னார் சரோஜா. ஹாலுக்கு வந்து அமைதியாக குடித்து கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த விஜி யின் மூத்த மகளான ஹன்யா சஹானாவுடன் சகஜமாக பேச அவர்கள் இருவரும் நண்பர்களாகவே மாறினார்.

சஹானா எப்போதும் இப்படித்தான். சின்ன குழந்தைகளுக்கு சமமாகவும், பெரியவர்களுக்கு ஏற்ற மாறியும் நடந்து கொள்வாள். அதே போல் தான் ஹன்யா வுடன் நன்கு பழகினாள்.இன்றைய நாளும் கடந்துவிட கணவன் மனைவி இருவரும் அவர்கள் உலகில் சங்கமமாக தொடங்கினர்.

அடுத்த நாள் எழுந்து மாமியாருக்கு உதவிகள் செய்து சாப்பிட்டு முடிக்கவே 3மணி ஆகி விட்டது. சஹானா ரெடி ஆகு. நம்ம படத்துக்கு போவோம். சரிங்க. ஆனா வீட்ல சொல்லணுமே. அதுலாம் னான் சொல்லிக்கிறேன். நீ கெளம்பு.

இருவரும் தயாராகி வெளியே கிளம்பினர். ஆனால் படத்துக்கு செல்லாமல் கோவிலுக்கு சென்றனர். அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு ஒரு ஐஸ் கிரீம் கடையில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு வீட்டிற்க்கு செல்ல 6 மணி ஆகி விட்டது. அப்போது தான் விஷ்ணு அப்பா சுப்பிரமணி நாளைக்கு மறுவீட்டுக்கு நீ சஹானா வீட்டுக்கு போகணும் என்று சொல்ல மிகவும் சந்தோசமாக இருந்தது சஹானாவிற்கு.
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போது தான் ஞாபகம் வந்தது சஹானாவிற்கு இவருக்கு போட நல்ல சட்டை கூட இல்லையே. அங்க போனால் நிறைய பேரு பாக்க வருவாங்க. இப்படியே போனால் இவர கேவலமா நெனப்பாங்க. முதல கடைக்கு போயி சட்டை எடுக்கணும் என்று முடிவு எடுத்து விஷ்ணுவிடம் தெரிவிக்க அவனும் சரி என்று ஒத்து கொண்டான். பின்பு சஹானா கடைக்கு கிளம்ப தயாராகி வெளியே வரும்போது விஷ்ணுவும் அவன் அப்பாவும் பேசியதை கேட்டாள்.
அப்பா நாளைக்கு ஊருக்கு போறதுக்கு சட்டை எடுக்கணும். பணம் வேணும். அப்படியா பா. சரி வா நாம 2 பேரும் போயி எடுத்துட்டு வருவோம். இல்லப்பா நானும் சஹானாவும் போய்ட்டு வரோம். அப்படியா சரி பா. இந்தா 1000 ரூபாய். போயி எடுத்துக்கோங்க. சரி பா. அப்ப போய்ட்டு வரோம் என்று இருவரும் கிளம்பினர்.

சஹானாவிற்கு எதையோ இழந்து விட்ட உணர்வு அன்றே தோன்ற ஆரம்பமாகி விட்டது. புதுசா கல்யாணம் ஆனவங்க வெளிய போறாங்க. வெறும் 1000 தான் குடுக்கறாரு. இதையும் இவரும் வாங்கிட்டு வராரு. என் வீட்ல 1000 ரூபாய்க்கு லாம் துணி எடுத்ததே இல்லையே. கடைக்கு போனால் விலையை பத்தி யோசிக்காதே இல்லை. ஆனால் இங்க நிலைமை ரெம்ப மோசமா இருக்கே. நம்மள ஏமாத்திட்டாங்களே.நம்ம லைப் போச்சே.இப்படியே 5கும் 10கும் கஷ்டப்பட்டு தான் வாழணுமோ. அது இல்லாம சின்ன புள்ள மாறி அப்பாட்ட பணம் வாங்கி செலவு பண்றவர நம்பி நம்ம வந்துருக்கோமே என்று மனதிற்குள் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

கல்யாணம் ஆனவங்க சந்தோசமா இருப்பாங்க. ஆனால் சஹானா 2டே நாளுல தன்னுடைய வாழ்க்கையை பத்தி பயப்பிட ஆரம்பிச்சுட்டா. அப்போது அவளுக்கு அவங்க அப்பா போன் பண்ணி நானும் அம்மாவும் அங்க தான் வந்துகிட்டு இருக்கோம் என்று சொல்ல தற்போதய மன நிலையில் அது ஒன்றே மகிழ்ச்சியாக இருக்க அவளும் தான் இருக்கும் இடத்தை கூறி அங்கு காத்திருப்பதாக சொல்ல அவர்களும் சற்று நேரத்தில் வந்து விடுவதாக சொன்னார். இவளும் விஷயத்தை விஷ்ணுவிடம் சொல்ல அவனும் சரி நம்ம டிரஸ் எடுத்துட்டு பக்கத்துல இருக்கற கோவில்க்கு போவோம். அவ்னபா வந்தோன நம்ம அவங்க கூட போவோம் என்று சொல்ல இவளும் ஓத்த்துக்கொண்டு டிரஸ் எடுக்க சென்றனர். அங்கு அவனுக்கு 2 சட்டைகளை எடுத்து பில் போடா சொல்லி விட்டு கிளம்ப தயாரானான் விஷ்ணு.

அப்போது சஹானாவிற்கு அழுகையே வந்து விட்டது.முதல் முதல்ல கடைக்கு வந்துருக்கோம். ஒரு சின்ன கெர்ச்சிப் கூட வாங்கி கொடுக்கல. கேக்கணும் ணு கூட தோணலையே. இவரு எப்படி இப்படி இருக்காரு என்று நினைத்தாள். பின் கோவிலுக்கு சென்று சிறிது நேரம் இருந்தனர்.

தாங்கள் வந்து விட்டதாய் சஹானா அப்பா சொல்ல அவர்களை பார்க்க சென்றனர் இருவரும். அனைவரும் பேசிக்கொண்டு இருந்து விட்டு செல்ல சஹானாவிற்கு மனது மிகவும் பாரமாகி போனது. தான் எதையோ இழந்துவிட்டோம் என்று மனது சொன்னதை முகமும் பிரதிபலித்ததோ. அமைதியாகவே வீடு சென்றனர். பேருக்கு எதையோ சாப்பிட்டு விட்டு உறங்க சென்றாள் . அவளுள் பல யோசனைகள். முடிவு மட்டும் இல்லையே. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.. அவள் அழுவதற்கு பதிலாக வானம் அழுதது. நல்லவர் இருக்கும் இடத்தில் மழை பெய்யும் என்று சொல்லுவார்கள். சஹானா என்ற நல்லவளுக்காக அண்றே அந்த வானம் அழுததோஊஊ............... images (3).jpeg
 
Last edited:

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

என்னுடைய கதையை படிக்கும் அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள். நெறய பேரு லைக் போடறீங்க. அதுக்கு என்னுடைய நன்றிகள். அதையும் தாண்டி நான் உங்களிடம் இருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். அதாவது சஹானா இடத்தில் நாம் போன்ற பெண் இருந்தாள் என்ன மன நிலையில் இருப்போம் என்பதே. தவறாமல் சொல்லுங்க பிரெண்ட்ஸ். அத்தியாயம் 7 படிந்து விட்டேன். படித்து விட்டு சொல்லுங்கள்...




இப்படிக்கு
ப்ரசன்னா விஸ்வநாதன்
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8:


காலை எழுந்ததும் மிகவும் உற்சாகமாக உணர்ந்தாள் சஹானா. ஏனென்றால் மறுவீடு சடங்கிற்காக அவள் வீட்டுக்கு செல்ல போகின்றாளே. அப்பாடி இப்பயாவது நம்ம வீட்டுக்கு அனுப்பணும்னு தோணுச்சே. இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணன் வந்து நம்மள கூட்டிட்டு போவாங்க. வீட்ல 2 நாள் இருந்துட்டு வரலாம் என்று சஹானா நினைத்து கொண்டிருக்க சுப்பிரமணி சாதாரணமாக ஒரு குண்டை சஹானா தலையில் போட்டார். Inga பாருங்க இப்ப போய்ட்டு சாயங்காலம் 3 மணிக்குலாம் திரும்ப வந்துரனும். பாத்துக்கோங்க என சொல்ல சஹானா முகம் விழுந்து விட்டது.
ஆமா இவங்க மகள் மட்டும் வீட்டுக்கு வரலைனா ஒப்பாரி வைக்குதுங்க. இதுல எனைய என் வீட்டுக்கு விட்றதுக்கு டைம் டேபிள் போட்டு அனுப்புது. இதுங்கலாம் என்ன ஜென்மங்கள் என்று மனதுக்குள் நன்றாக வருத்து எடுத்தாள். பின் அவர்கள் வீட்டுக்கு சென்று மிகவும் மகிச்சியுடன் இருந்தாள். ஆனால் விஷ்ணுவிடம் அந்த மகிழ்ச்சி சுத்தமாக தெரியவில்லை. அதை சஹானா கவனிக்கல.

கொஞ்சம் நேரம் இருந்து விட்டு மறுபடியும் அரக்கர் கூடத்திற்கு (மாமியார் வீட்டுக்கு )கிளம்பினாள் சஹானா. அடுத்த நாள் காலை விஷ்ணுவின் அக்கா மகளான திவ்யாவின் நிச்சயத்திற்கு சென்றனர் அனைவரும். அங்கு மாப்பிளை வீட்டில் இருந்து எடுத்து கொடுத்த புடவையை அணிந்து வர சொல்ல மணப்பெண்ணின் அத்தை என்ற முறையில் சஹானாவும் சென்றால். அங்கு நாகலட்சுமி இவளை திவ்யாவிற்கு புடவை கட்ட சொன்னாள். இவளும் ஏதோ சம்பர்தாயம் என்று நினைத்து கட்ட தொடங்கும் முன் வெடுக்கென்று பிடிங்கி அவர்களே கட்டினார். இதுக்கு எதுக்கு என்கிட்டே சொல்லணும். இந்த பொம்பள புத்தியே இப்படி தானா.

இருந்தாலும் esayum காட்டி கொள்ளாமல் அந்த இடத்தில் இருந்து வந்து விட்டாள். பின் நிச்சயம் முடிந்து அனைவரும் வீடு திரும்ப விஜி யும் நாகாவும் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். இவளும் சரி என்று பெயருக்கு சொல்லி விட்டு வந்து விட்டாள்.

கொஞ்ச நாள் கழித்து சஹானாவிற்கு நூல் பெருக்கு வைத்தனர். ஏன் என்றால் சஹானா விஷ்ணுவுடன் வெளிநாடு செல்வதால் அணைத்து சடங்கையும் சீக்கிரமாகவே வைத்தனர். சொக்கநாதர் சஹானாவிற்கு அனைத்தும் தரமாகவே செய்தார். ஆனால் அவர் இந்தா விசேஷத்தில் செய்த ஒரே தவறு சாப்பாடு பொறுப்பை சுப்ரமணியிடம் விட்டது. ஏற்கனவே மகன் கல்யானதுக்கு ஒன்னும் செய்யாதவன் இதுல மட்டும் enna செஞ்சுற போறான். அதன் பயன் வந்தவர்களுக்கு சாப்பாடு பத்தவில்லை. அது மட்டும் இல்லாமல் வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பரிசு பொருளும் முடிந்து விட்ட நிலையில் சரோஜா மீனாட்சியிடம் எங்களுக்கு இன்னும் நெறய பேரு வருவாங்க. அதுனால எங்களுக்கு இன்னும் 50 பரிசு பொருள் வேணும் என்று சொல்ல அதுவும் வாங்கி கொடுத்து விட்டே சென்ட்றார் சொக்கநாதர்.

பின் கொஞ்ச நாளில் இருவரையும் தலை தீபாவளிக்கு அழைப்பதற்காக வந்தார் மீனாட்சி.. ஆனால் சரோஜா விட மருத்து விட்டாள். எங்க முறைப்படி இங்க தான் தீபாவளி கொண்டாடுவாங்க என்று வாதம் செய்தார். மீனாட்சியும் விட்டு விடுவாரா என்ன. ஒரு வழியாக அவர் நினைத்த மாறியே சஹானாவையும், விஷ்ணுவையும் அழைத்து கொண்டே சென்றார்.. அங்கு சென்ற பின் விஷ்ணு சஹானாவிடம் எங்க அப்பா கூட நான் இதுவரைக்கும் தீபாவளி கொண்டாடுனதே இல்லை. இப்ப நீங்க இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க என்று சொல்ல சஹானாவிற்கு ஒரு மாதிரியாக போயிற்று. இவரு என்ன சின்னப்புள்ள மாதிரி பேசுறாரு. ச்ச இவரால் என் சந்தோசமே போச்சு என்று நினைத்து கொண்டாள். ஆனால் உண்மையாகவே பின்னாளில் அது தான் நடக்கும் என்பதை உணராமல்.......
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -9:

தலை தீபாவளி முடிந்து ஒரு வாரத்தில் விஷ்ணு வெளிநாடு கிளம்பி விட சஹானாவும் தன்னுடைய விசா வேலையை முடித்து கொண்டு தான் அம்மா வீட்டிற்கு கிளம்பி விட்டாள். விஷ்ணு நேரம் தவறாமல் அவளிடம் பேசி விடுவான். அவளும் அவனுடன் பேசும் நிமிடங்களை ஆவலோடு எதிர் பார்ப்பாள். அப்படி பேசும்போது ஒரு நாள் சஹானா என்னங்க நான் அங்க வந்த அப்புறம் உங்களோட சம்பளத்துல இருந்து கொஞ்சம் எனக்கு சேர்த்து வைக்க கொடுத்துடுங்க என்று சொல்ல விஷ்ணுவும் அதற்கு சம்மதித்தான். சஹானா தன்னவனுடன் தனியாக இருக்க போகும் நாட்களை நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்தாள். அதே போல சஹானாவும் வெளிநாடு கிளம்பினாள் அவள் மாமனாரின் துணையுடன். அங்கு ஏர்போர்ட் விட்டு வெளியில் வந்து தன்னவனை பார்த்தவுடன் ஆவலுடன் அவனை சென்று கட்டிக்கொண்டாள். பின்பு இருவரும் அவர்கள் தங்கும் இடத்திற்கு செல்ல டாக்ஸி ஏறினார்.

சுமார் 2 மணி நேர பயணத்தின் பின்பு அவர்கள் வீட்டை அடைந்தனர். அவள் இனி தங்க போகும் வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் சஹானா.
அவள் உள்ளே சென்றதும் கதவை அடைத்த விஷ்ணு சஹானாவை நெருங்கி இருந்தான். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு கிடைத்திருக்கும் தனிமை அவர்கள் உலகத்தில் சஞ்சரிக்க சொல்லி தூண்டிய இளமை அனைத்தும் அங்கு இருக்க இனி அவர்களை கேட்கவும் வேண்டுமா. விஷ்ணு சஹானாவை கைகளில் ஏந்தியவன் மறு நொடி அவளிடம் சரணடைய தொடங்கினான். அவளும் அவனுக்கு இணையாக தனது அன்பை வாரி வழங்கினாள். பின்பு காலை விடிந்தும் சஹானா எழுந்திரிக்க வில்லை. ஆனால் விஷ்ணு ஆபீஸ் கிளம்பி கொண்டு இருந்தான்.

அவன் சென்றவுடன் மெதுவாக எழுந்து பல் துலக்கி விட்டு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். கிச்சன் சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தினாள். சமைக்க ஏதும் இல்லாமல் இருக்கவே என்ன செய்ய என்று விஷ்ணு வரும் வரை காத்திருக்கலானாள். மதியம் வந்த விஷ்ணு சாதம் வடித்து தயிர் வைத்து சாப்பிட சொல்ல அவளும் அதையே செய்தாள். ஈவினிங் வெளில போயி மளிகை சாமான் வாங்கிக்கலாம் சஹானா. என்னென்ன தேவையோ அதுலாம் லிஸ்ட் போடு வை.


இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, சாப்பிட அணைத்து பாத்திரங்களையும் ஒதுக்கி வைத்தாள் சஹானா. அவள் வந்த வுடன் அவளை ஆசையோடு நெருங்க ஆரம்பித்து அவனின் தேவையை முடித்து விட்டு உறங்கினான். மாலை இருவரும் சென்று தேவயானவையை வாங்கி விட்டு வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வந்தனர். பின்பு இரவும் அவர்களுடையதாய் போனது.


இப்படியே நாட்கள் செல்ல சஹானா தன்னுடைய வாழ்க்கையை நினைத்து மகிச்சியுடன் இருந்தாள். பாவம் இது எதநாள் என்று தெரிந்தால் என்ன ஆவாளோ ☹☹☹🙁🙁
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10:

அழகாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் விதி விளையாட தொடங்கியது விஜி யின் மூலமாய். சஹானா சென்று கொஞ்ச நாளில் விஜி விஷ்ணுவிடம் பணம் கேட்க அவனால் கொடுக்க முடியவில்லை. புதிதாக தனி குடித்தனம் தொடங்கியதால் கொஞ்சம் செலவு ஆகி விட்டது. அது மட்டும் இல்லாமல் சஹானாவிற்கு அவன் வீட்டிலிருந்து எதுவும் செய்யாததால் அவளுக்கு வளையல் வாங்கி பரிசளித்தான். ஆனால் அதை அவன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் பணம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு கொடுக்க வில்லை. சரோஜா வும் விஜியும் சஹானாவை விஷ்ணுவிடம் அனுப்பியதற்கு ஒரே காரணம் குழந்தைக்காக மட்டுமே. ஏனெனில் சஹானாகு நாட்கள் தள்ளி போனதை அறிந்து மருத்துவரை சென்று பார்க்க அது கர்ப்பம் இல்லை நீர் கட்டி என்று சொல்லி விட்டனர்.ஒரு வேலை கர்ப்பம் தரித்திருந்தால் விஷ்ணுவிடம் அனுப்பி இருக்கவே மாட்டார்கள்என்பதே உண்மை. அதற்கான மாத்திரையும் கொடுத்து தொடர்ந்து சாப்பிட சொன்னார் மருத்துவர். சஹானாவிற்கு இதெல்லாம் எரிச்சலை தந்தது. என்னடா இது ஒரு மாசத்துக்குள்ள குழந்தை வேணும் னு இப்படி பண்றங்க. விட்டா குழந்தய பெத்து எடுத்துட்டு வானு சொல்லிருப்பாங்க போலயே. சரி என்ன தான் பண்றங்கனு பாப்போம். இவங்க சொல்றத கேக்கலைனா அதுக்கு வேற ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்க. இன்னும் கொஞ்ச நாள் தானே சமாளிப்போம்.

இப்படி நினைத்து விட்டு விட்டால் சஹானா. ஆனால் மாதந்தோறும் சரோஜா நச்சரிக்க தொடங்க இவள் விஷ்ணுவிடம் எரிச்சல் பட தொடங்கினாள். இதில் பண விஷயமும் சேர்ந்து கொள்ள சண்டை ஆரம்பம் ஆனது இவர்களிடத்தில். சண்டையில் உன் வீட்ல இருந்து எனக்கு என்ன செஞ்சாங்க. வரதட்ஷனை மட்டும் வாங்க தெரிஞ்சதுல.அது மட்டும் இல்லாம மொய் பணம் தான் இருக்குமே அவங்க கிட்ட அத அவங்கள யூஸ் பண்ண சொல்லுங்க. இங்க இருந்து பணம் அனுப்பாதீங்க என்று சாதம் போட அதை விஷ்ணு விஜியிடம் அப்படியே சொல்லி விட்டான். இது தெரிந்த விஜி இப்படியா பண்ற. இரு டி உன்னை பாத்துக்குறேன் என்று மனதினுள் கருவிக்கொண்டாள். நானே அவனை வச்சு தான் வாழ்க்கையை ஓடுறேன் நீ அதுக்கே ஆப்பு வைகுறியா. விஷ்ணு என் கை ல இருக்கறவரைக்கும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது டி.

இதை எல்லாம் மனதுக்குள் நினைத்த விஜி வெளியே விஷ்ணுவிற்கு நல்லவள் போல் நடித்து அவனின் மனதில் குழந்தை பிறந்தால் எல்லாம் சரி ஆகி விடும் என்னும் எண்ணத்தை விதைத்தாள்.அதையே விஷ்ணுவும் ஏற்றுக்கொண்டு சஹானாவிடம் அமைதியாகவும் நல்லவன் போலவும் அவள் மேல் பாசம் வைத்திருப்பவன் போலவும் நடிக்க ஆரம்பித்தான். ஆனால் உண்மையான பாசம் என்று நினைத்து சஹானா அவனை முழு மனதாய் நம்பினாள்.

பாவம் நம்பிக்கை போய் பெரிய அடி விழும் என்று உணராமல்
 
Status
Not open for further replies.
Top