All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரசன்னா விஸ்வநாதனின் "விசித்திரமான உறவுகள்" - கதைத் திரி

Status
Not open for further replies.

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீட்டிற்கு சென்றதும் விஷ்ணு அவன் அப்பா-விற்கு போன் செய்ய அவரும் நாங்க பொண்ணை பேசி முடிசிட்டோம். நீயும் நேர்ல வந்து பாரு. சரிப்பா. அம்மா ட்ட குடுங்க. என்னமா உங்களுக்கு பொண்ண பிடிசிருக்கா. என்கிட்டே யாரும் எதுவும் கேக்கல பா. உங்க அப்பா கும் அக்கா கும் பிடிசிருக்கு. சரி னு சொல்லிட்டாங்க. அப்டியா மா. அப்ப உங்களுக்கு பிடிக்கலையா. அப்டிலாம் இல்லப்பா அதான் பேசி முடிச்சுட்டாங்களே.இனி ஏன் adha பத்தி பேசணும். சரி மா அப்பா -ட்ட குடுங்க. நான் அப்பா ட்ட பேசுகிறேன். அப்பா எனக்கு பொண்ணு கிட்ட பேசணும்.கொஞ்ச நாள் பொறு. அவங்க நம்ம வீட்டுக்கு வர்றதா சொல்லிருக்காங்க. அப்ப அவங்க கிட்ட சொல்லி பேச வைக்கிறேன். சரி பா அப்ப நான் வச்சுடறேன்.


என்னடா இது. அம்மா இப்டி சொல்ராங்க. ஒரு வேலை பொண்ணு நமக்கு ஏத்த மாரி இல்லையோ. அம்மா க்கு பிடிகளையோ. சரி நாம சஹானாட்ட பேசி பாப்போம். அப்பறம் முடிவு எடுப்போம்.


சொக்கநாதர் குடும்பம் அடுத்த வாரத்திலேயே சுப்பிரமணி வீடிற்கு சென்றுபார்த்து விட்டு சஹானா விற்கு திருமணம் தேதி முடிவு செய்து விட்டு வந்தனர். அப்போதும் சொக்கநாதர் சீர் பற்றி கேட்க சுப்பிரமணி மறுத்து விட்டார்.
 
Last edited:

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1வாரம் கழித்து சுப்பிரமணி எங்க சொந்தக்காரங்களாம் பொண்ண பாக்கணும் னு ஆசைப்பட்ட பட்றாங்க. நாளைக்கு வராங்க. அப்டியா சரி வரட்டும். நாங்க பத்துக்கறோம். சரிங்க அப்ப வச்சுடறான். அடுத்த நாள் சஹானாவை பார்க்க விஷ்ணு வின் பெரியம்மா, பெரியப்பா, அக்கா,மச்சான், அக்கா மகள்கள், தெரிந்தவர்கள் என் படையே வந்தது. வந்து சஹாணவை பார்த்து விட்டு பூ வைக்கும் சடங்கை செய்தனர். அது முடிந்த கொஞ்ச நேரம் கழிச்சு விஷ்ணுவின் மச்சான் பசுமலை சஹானாவிடம் போன் குடுத்து பேச சொன்னார். ஆனால் சஹானா வாங்க பயந்து கொண்டு வேணாம் என்றாள். அவர் கையில் கொடுத்து விட்டு போய் விட்டார். அதை காதில் வைத்து சஹானா ஹலோ. நான் விஷ்ணு பேசறேன். எப்படி இருக்கீங்க. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.என்னய்யா உங்களுக்கு பிடிசிருக்கா னு கேக்க சஹானா வுக்கு மனசுல ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்தது. அந்த குரலே மயக்குற மாரி இருந்ததை உணர்ந்தாள்.ஆனால் அப்ப அத அவ நமக்கு அவர பிடிசிருக்கு. அதான் அப்டி தோணுது னு விட்டுட்டா. பேசி முடித்த பின் விஸ்ணுவின் அக்கா மகள் சைந்தவி சஹானாவிடம் நெருக்கமாக பழக அவள் ஒரு தோழி போல் ஆனாள். அவள் மூலமே சஹானா -விஷ்ணு போன் நம்பர் பரிமாராப் பட்டது. சஹானாவோ 3 நாட்கள் விஷ்ணுவிடம் பேச இருவருக்கும் பிடித்து விட்டது. இடையில் சஹானா விஸ்ணுவிடம் போட்டோ அனுப்ப சொல்ல விஷ்னு வேண்டும் என்றே நல்லா இல்லாத போட்டோ அனுப்ப சஹானாவிற்கு அதிர்ச்சியாகி விட்டது. என்னது இது. அவங்க அக்கா காட்டின போட்டோ லா நல்லா இருந்தாரு. இதுல நல்லாவே இல்லையே. இப்ப என்ன பண்ண. நாம லைப் அவ்ளோ தான. நாம கனவு எல்லாமே போச்சா னு அழுக ஆரம்பிச்சுட்டா. அது மட்டும் இல்லாம விஷ்ணு டையும் நீங்க இந்த போட்டோ ல வேற மாரி இருக்கீங்க. எனக்கு உங்க வீட்ல காமிச்சா போட்டோ தான் பிடிச்சது னு சொல்ல விஸ்ணு க்கு கோவம் வந்துருச்சு. அப்ப என்னய்யா புடிக்கலான சொல்லு. நானே எங்க வீட்ல சொல்லிடறேன். உனையே ஏதும் சொல்லாம நான் பாத்துக்கறேன்னு சொன்னான். ஆனா சஹானா க்கு பதில் சொல்ல தெரியலை.உடனே போனை கட் பன்னிட்டு பேசாம போய்ட்டா. சஹானா வீட்லயும் போய் போட்டோவ காமிச்சு எனக்கு இந்தா பையண புடிக்கல னு சொல்லிட்டா. சஹானா அம்மாக்கு எதுமே சொல்ல முடியல. என்ன பையன் இப்டி இருக்கான். நம்ம சஹானா க்கு பொருத்தம் இல்லாம.இந்த பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா ஊரு ல உள்ளவங்க என்ன பேசுவாங்கலோனு ரெம்ப கவலை பட்டாங்க. ஆனா சொக்கநாதர் முடிவா சொல்லிட்டாரு. இந்த பயன் தான் சஹானா க்கு. வேற பேச்சு இல்லைனு சொல்லிட்டாரு. சஹானா 2நாள் அழுதா. அப்பறம் யோசிக்க ஆரம்பிச்சா. 3வது நாள் ஒரு முடிவுக்கு வந்துட்டா. அழகை விட குணம் தான முக்கியம். அந்த வகையில பார்த்தா விஷ்ணு க்கு என்ன கொறைச்சல். என்னைய கண்டிப்பா நல்ல பத்துப்பாரு னு நம்பினாள். அதுனாலயே விஷ்ணு வை பாக்காம கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினாள். அடுத்து அவளே விஷ்ணு ட்ட போன் பண்ணி பேசி மன்னிப்பு கேட்டு பேச அராம்பிச்சுட்டாள்...

விஷ்ணு சஹானாவின் நம்பிக்கையை காப்பாற்றுவானா இல்லை அவளை வஞ்சம் தீர்ப்பானா??????
 
Last edited:

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்......
நீங்கள் அனைவரும் யோசித்திருப்பீர்கள். புது ஹீரோ, ஹீரோயின் போட்டோஸ் போடாம ஏன் விஜய் சிம்ரன் போட்டிருக்கேன்னு. அதுக்கு காரணம் இருக்கு. அத கதை படிக்கும் போது நீங்களே புரிஞ்சுப்பீங்க.


உங்களுக்குடைய கருத்துக்களையும் , விமர்சங்களையும் தாராளமா எனக்கு சொல்லலாம். அதுவே என்னை மென்மேலும் வளர வைக்க உதவும்.

அன்புடன்
பிரசன்னா விஸ்வநாதன்
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:
சஹானா பேச பேச விஷ்ணுவின் நல்ல மனதை புரிந்து கொண்டாள்.விஷ்ணு நம்மள நல்லா பத்துப்பாரு. நமக்கு கவலை இல்லை. நம்ம லைப் சந்தோசமா இருக்கும் என்ற நம்பிக்கையில் காதலிக்க ஆரம்பித்தாள். இவர்களுடைய திருமணம் 6மாதத்திற்கு பிறகு என்று பெரியவர்களால் முடிவு செய்ய பட்டது. அந்த தைரியத்தால் இருவரும் அவர்கள் உலகத்தில் இருந்தனர். ஆனால் இவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனை இன்றிலிருந்தே தொடங்கி விட்டது என்று இருவரும் நினைக்காமல் போனது தான் பரிதாபம்.

அங்கு சுப்பிரமணி வீட்டில் அவர்களுக்கு சொந்தக்காரரும் தரகருமானவரிடம் சரோஜா வும், விஜி யும், அவர்கள் வேலையைக்காட்ட தொடங்கினர். என்ன அண்ணன் பொண்ணு வீட்ல பெருசா வீடு கட்டாம இருக்காங்க.என் பையனுக்கு நெறய பேர் பொண்ணு கொடுக்க காத்துட்டு இருக்காங்க.ஒரு வீடு கூட ஒழுங்கா இல்லாம இன்னும் அடுப்புல சமைக்கிறாங்க. ஒரு காஸ் அடுப்பு கூட இல்லை. என் சொந்தக்காரங்க எங்கள என்ன நினைப்பாங்க. என் பையன் AC இல்லாம தூங்க மாட்டான்.ஆமா மாமா. உங்களுக்கே தெரியும் நாம பக்கம் எவ்ளோ மதிப்பு எங்களுக்கு இருக்குன்னு.வீடு இல்லைனா அசிங்கமா போய்டும். அவங்க தொழில் செய்றங்க, வசதியானவங்கனு நெனச்சு தான் பொண்ணு பாக்க போனோம். ஆனா வீடே சிறுசா இருக்கு. அதுனால கண்டிப்பா வீடு இருக்கனும் ன்னு சொல்லிடுங்க என்று ஒத்து ஊதினால் விஜி. அது மட்டும் இல்லாம நகை எவ்ளோ போடறாங்களோ போடட்டும். ஆனா சீர் பத்தி பேசணும். என் புருஷன் சீர் வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. ஆனா அதுக்கு பதிலா பணமா வாங்கி குடுத்துருங்க.சாப்பாடு நல்லா பண்ணனும் னு சொல்லிருங்க. மண்டபம் பெருசா வேணும். நம்ம பக்கம் நெறய பேர் வருவாங்க என்று பட்டியலிட்டார் சரோஜா. சரி மா நான் சொல்லிடறேன்.நானே நேர்ல போய் அவங்ககிட்ட பேசிடறேன். அப்பறம் வந்து உங்க கிட்ட சொல்றேன். அடுத்த நாள் மாலை சொக்கநாதரிடம் சென்றார் தரகர்.

வணக்கம் அண்ணன். மாப்பிளை வீட்டுல இருந்து பேச சொன்னாங்க. பொன்னுக்கு சீர் வேண்டாம்னு சொன்னாங்க இல்லையா. ஆனா அதுக்கு பதிலா காசா கேக்குறாங்க. அது மட்டும் இல்லாம பையன் தங்குறதுக்கு இந்த வீடு தோது படாதாம். Ac வச்ச வீட்ல தான் இருப்பானம். அவங்க அம்மா வும் அக்கா வும் சொல்ல சொன்னாங்க. மஹால் பெருசா வேணுமாம். சாப்பாடு காலை லையும் போடணுமாம். நல்லா வெரைட்டியா இருக்கணுமாம்என்று தரகர் சொல்ல சற்று யோசித்தார் சொக்கநாதர். .அப்டியா சரி நாங்க அதுலாம் பாத்து செஞ்சூரோம். வீடு எனக்கு இல்லாம இல்லை. எனக்கு 3 வீடு இருக்கு.நான் அதுலாம் வாடகைக்கு விட்ருக்கேன். இந்த இடத்துல ஏன் பெருசா கட்டணும் தான் நான் கட்டல. இங்க பக்கத்துலயே எங்க வீடு ஒன்னு இருக்கு. அதுல AC லாம் வச்சு நான் தயார் பனிடரேன். சாப்பாடுக்கு சொல்லிடறேன். ஆனா சமையல் காரர் என்ன சொல்லறாரு னு தெரியல. எங்க பக்கத்துல இருந்து வரவங்க பெரும்பாலும் காலை சாப்பாட்டை எதிர் பாக்க மாட்டாங்க.இருந்தாலும் நான் சொல்லிடறேன். . அப்புறம் சீர்க்கு பணமா தராம நகைல சேர்த்து போடறேன் என் மகளுக்கு. நீங்க அவங்ககிட்ட இதை சொல்லிடுங்க. சரிங்க. நான் அப்ப கெளம்புறன். இருங்க என் வீட்ட காமிக்கிறேன். அதை பாத்துட்டு போய் சொல்லுங்க. சரி வாங்க போவோம். நீங்கள் கார் வாங்கலயா. மாப்பிள்ளை வீட்டு காரங்க வாங்காரங்களாம்.ஆமா நாங்களும் தான் வாங்கணும்.
சொக்கநாதர் அவருடைய இனொரு வீட்டுக்கு கூட்டிட்டு போய் காமிச்சார். இந்த வீடே ஒரு குடும்பத்துக்கு போதும். நீங்கள் இதையே கூட தயார் பண்ணிடுங்க. அப்ப நான் கிளம்புறேன். சரி போய்ட்டு வாங்க.

வீட்டுக்கு வந்த சொக்கநாதரிடம், மீனாட்சி இதை அன்னிக்கே சொல்லிருக்கலாமே அவங்க. பொண்ணு பாக்க வரும்போதே நாம சொல்ல தான செஞ்சோம். நாங்க சின்ன வீட்ல தான் இருக்கோம்னு . நான் இன்னும் பெருசா வீடு கட்டலன்னு. இப்ப பூ வச்சுட்டு போய்ட்டு இப்டி பேசுறாங்க. எனக்கு என்னமோ சரியா படலங்க. எதுக்குமே ஆசைப்படாதவங்களுக்கு எவ்ளோ வேணாலும் செய்யலாம். அது நம்மளோட விருப்பத்தை பொறுத்து. இவங்க பேச்சுல சுத்தம் இருக்கற மாதிரி எனக்கு தெரியலை.பாத்து செயுங்க. சீர் க்கு பதிலா காசு கேக்குறாங்க. இனமும் எனலாம் நடக்க போகுதோ தெரியலஎன்று புலம்பினார் மீனாட்சி.


அதுலாம் ஒன்னும் கவலைப்படாத மா . மாப்பிள்ளை வீட்டுக்காறவங்கனாளே இப்டி கேக்க தானமா செய்வாங்க. விடு பாத்துக்கலாம். பையன் நல்லவனா தான இருக்கான். நமக்கு அது போதும்.

தரகர் சரோஜா வை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். வாங்க அண்ணா. என்ன நாங்க கேட்டதுலாம் பொண்ணு வீட்ல கேட்டச்சா. சொல்லிட்டேன் மா. அவங்களுக்கு இன்னோரு வீடு பக்கத்துலயே இருக்கு. அத சரி பண்ணுறதா சொல்லிட்டாங்க. சீர் பணம் பத்தி பேசிட்டேன். அவங்க பணமா தர மாட்டோம். நகை சேர்த்து போடறேனு சொல்லிட்டாங்க. அப்டியா சொன்னாங்க. சரி இருக்கட்டும். அப்பறம் பாத்துக்கலாம். சரி மா அப்ப நான் கிளம்புறேன். வேற ஏதாவதுன்னா போன் பண்ணுங்க.

தரகர் சொல்லி சென்றதும் சரோஜாவும் விஜியும் யோசிக்க தொடங்கினர். என்ன மா நாம ஏதாவது தேத்தலாம்னு பாத்தா உஷாரா இருக்காங்க. பணம் கிடைக்காது போலயே. விடு விஜி இன்னும் முடியல. இனி தான ஆரம்பம். அப்பறம் பாப்போம்.

இவர்கள் செய்யும் சதி ஏதும் தெரியாமல் சஹானாவும் விஷ்ணுவும் மகிழ்ச்சியாய் இருந்தனர் அவர்களுடைய வாழ்க்கையை எண்ணி. அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்குமா ????????
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4:

தரகர் வந்து பேசி சென்ற-பின் ஒரு நாள் விஜி தன் சொந்தங்களுடன் சஹானா வீட்டுக்கு வந்தாள். அப்போது சஹானாவின் சித்தி விஜியிடம் நேரடியாகவே பேசினார். உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன ன்னு சொல்லுங்க. எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை அத்தை என்று நடித்தாள் விஜி. விஜி எப்போதுமே அப்படித்தான் எதிலுமே நேரடியாக தலையிட மாட்டாள். செய்ய வேண்டிய காரியத்தை அமைதியாக செய்து விட்டு ஒன்றுதெரியாதது போல் இருந்து விடுவாள். அவளை பொறுத்தவரை அவளுடைய தேவைக்கு என்ன வேணாலும் செயும் குணம் கொண்டவள். இதுனாலயே சஹானாவிற்கு பல கஷ்டங்கள் காத்திருக்கிறது என்பதை பாவம் சஹானா அரிவாளா .
என் தம்பி எதுமே வாங்க வேணாம்ன்னு சொல்லிட்டான் அத்தை . அவங்க அப்டி சொன்னாலும் நாங்க செய்றத செய்வோம் விஜி. அத பத்தி நீங்க கவலை பட வேணாம். ஆமா உனக்கு உங்க வீட்ல என்ன செஞ்சாங்க. அத்தை எனக்கு எதுமே செயயல. தம்பி கல்யாணம் முடிஞ்ச அப்பறமா தான் எனக்கு செட்டில் பன்றேன்னு சொல்லிருக்காங்க அப்பா. அப்படியா சரி மா என்று முடித்து கொண்டார் சஹானாவின் சித்தி தாரணி. ஆனால் விஜி சொன்னதை அப்போது அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதுனாலே பின்னாளில் பிரச்சனை வர போகிறது என்று புரிந்திருந்தால் நடக்க போகும் நிகழ்வுகளை அன்றே தடுத்திருப்பார்களோ.
சஹானா -விஷ்ணு வின் திருமணத்தை அக்டோபர் மாதம் 22ம் தேதி வைத்து கொள்ளலாம் என்றும் அதே நாளில் காலை நிச்சயதார்த்தமும் சேர்த்து வைக்கலாம் என்று முடிவு செய்தனர். இன்னும் 6மாதம் இருக்கும் நிலையில் சொக்கநாதர் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தன் வீட்டாருடன் பட்டியலிட்டார். ஆனால் அதற்கு நேர்மாராய் விஜி யும் சரோஜா வும் இருந்தனர். அம்மா நாம சீர் வாங்கலைன்னா அசிங்கமா இருக்கும் மா. தம்பி க்கு பொண்ணு கொடுக்க எத்தனை பேர் தயாரா இருந்தாங்க. அவன் அழகுக்கும் படிப்புக்கும், அவன் வாங்கற சம்பளத்துக்கும் நெறய வாங்கணும் .ஆனா நாம சீர் பணம் கேட்டதுக்கு கூட தர மாட்டேன் சொல்லிட்டாங்க. நகை யா போட்டா சஹானாட்ட தான் இருக்கும். அதுனால சீர் வாங்கிடுவோம் என்று இங்கு நல்ல பிள்ளையாக ஏத்தி கொடுத்தாள் விஜி. எனக்கும் அதான் யோசனையா இருக்கு விஜி. ஆனா நாம மாத்தி மாத்தி பேசுனா தப்பா போயிடாதான்னு பாக்குறேன். சரி மா நாமளா இப்ப ஏதும் சொல்ல வேணாம். கல்யாணம் முடியறதுக்குள்ள எப்படியாவது பேசி வாங்கிடுவோம்.
இதற்கிடையில் சுப்பிரமணி வெளிநாடு சென்று விட்டார். போகும்போது சொக்கநாதரிடம் கல்யாணம் சம்பந்தமான விஷயங்களை என் மக விஜிட்ட பேசுங்க மச்சான். சரி மச்சான் நீங்கள் நல்ல படியா போய்ட்டு வாங்க. கொஞ்ச நாள் கழித்து மீனாட்சி சொக்கநாதரிடம் நீங்கள் மாப்பிளை வீட்ல இன்னோரு தடவை சீர், மத்த விவரம் லாம் பேசிருங்க. அப்பறம் கடைசி நிமிசத்துல அது தரல இது தரல ன்னு பேசுவாங்க. அப்பறம் நம்மளுக்கு தான் அசிங்கமா போயிரும். சரி மா நான் சஹானா வை விஜி ட்ட பேச சொல்றேன்.
சஹானா இங்க வா மா. விஜி க்கு போன் பண்ணி குடு. அம்மா பேசட்டும். சரிப்பா. விஜி க்கு போன் பன்றா சஹானா. ஹலோ அண்ணி எப்படி இருக்கிங்க. அம்மா பேசணும் ன்னு சொன்னாங்க. இதோ கொடுக்கறேன். போன் ஸ்பீக்கர்-ல் போடுகிறாள் சஹானா. விஜி நான் அத்தை பேசுறேன். நல்லா இருக்கியா. புள்ளைங்க என்ன செய்றாங்க. எல்லாரும் இருக்கோம் அத்தை. நீங்கள் நல்லா இருக்கீங்களா. இருக்கோம் மா. ஏதாவது முக்கியமான விஷயமா அத்தை. ஆமா மா கல்யாணம் நாள் நெருங்குது. அதான் எல்லாம் பேசிட்டா திருப்தி ஆகிடும் ன்னு பாக்குறோம். சொல்லுங்க அத்தை என்ன பேசணும். சீர் பத்தி பேசணும். அப்பா கிட்ட அவங்க எதிர்பார்ப்பு என்னனு கேட்டு சொல்லுமா. சரி அத்தை நான் கேட்டுட்டு மதியம் 3 மணிக்கு பேசறேன். சரி மா வச்சுடறேன்.
அம்மா இப்ப தான் சஹானா வீட்ல இருந்து போன் வந்துச்சு. அவங்க அம்மா தான் பேசுனாங்க. நம்ம எதிர்பார்ப்பு என்ன ன்னு கேக்குறாங்க. என்ன மா சொல்லலாம். இது தாண்டி சரியான சந்தர்ப்பம். இப்ப நாம கேட்டா தான் தப்பா தெரியாது. பின்னாடி விஷயம் தெரிஞ்சு விஷ்ணுவே நம்மகிட்ட ஏன் சீர் வாங்குனீங்கன்னு கேட்டா கூட உன் மாமியார் தான் என்ன வேணும் ன்னு கேட்டுட்டே இருந்தாங்க. ன்னு சொல்லி நம்ம தப்பிச்சுக்கலாம். அதான் அப்பா முன்னாடியே இந்த மாரி விஷயத்தை நீங்களே பேசிக்கோங்கன்னு வேற நம்மகிட்ட விட்டுட்டாருல்ல. அதுனால நம்ம முடிவ இப்ப சொல்லு. அப்பாட்ட நம்ம பேசிக்கலாம். அப்படியே கட்டில், மெத்தை, பீரோ கொடுக்க சொல்லு. மத்த விஷயங்களை அப்பா நேர்ல வந்து பேசறேன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லு. அப்ப பாத்திரம் மா. அது நேருல அப்பா வந்த அப்பறமா பேசிக்குவோம். எல்லாத்தயும் நாமளே பேசுனா தப்பா போயிரும். அப்பறம் நம்ம மேல சந்தேகம் வந்துரும். அதுனால பொறுமையாவே எல்லாம் பண்ணுவோம். சரி மா அப்பன்னா அப்டியே சொல்லிடறேன்.
மதியம் 3 மணிக்கு சஹானா க்கு போன் பண்ண விஜி மீனட்சி கிட்ட பேசுறாங்க. இப்பயும் ஸ்பீக்கர்ல போட்டு தான் பேசுறாங்க. சொல்லு மா விஜி. அப்பா கிட்ட பேசியாச்சா. பேசிட்டேன் அத்தை அத சொல்ல தான் கூப்பிட்டேன். கட்டில், மெத்தை, பீரோ வேணுமாம். மத்த விஷயங்களை அப்பா நேருல வந்து பேசிக்குவாங்கலாம் . அப்படியா கல்யாண நேரத்துல தான மா அப்பா வருவாங்க. அப்ப சொன்னா நாங்க எப்புடிமா தயார் பண்றது. ஏதாவது கேக்கணும்னா வெளிப்படையா கேளுங்க. அதற்கு விஜி நாங்க கேக்குறதுலாம் உங்களால குடுக்க முடியுமா என்று நக்கலாக கேட்டாள். அந்த பேச்சில் மீனாட்சி க்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. உடனே அமைதியாக ஏன் விஜி அப்படி நாங்க குடுக்க முடியாதபொருளா என்ன பெருசா கேட்க போறீங்க. கடவுள் எல்லாம் செய்ற அளவுக்கு எனக்கு வசதியை குடுத்துருக்காரு. நீங்க என்ன வேணுமோ கேளுங்க. நாங்க செய்ரோம். உடனே சுதாரித்த விஜி அச்சோ அத்தை நான் தப்பா ஏதும் சொல்லல.நீங்கள் குடுப்பிங்கண்றதுக்காக எங்களுக்கு தோண்றதுலம் கேக்க முடியுமான்னு கேட்டேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க என்று சமாளித்தாள்.ஒருவாறு பேசி முடித்து வைத்து விட்டார் மீனாட்சி. இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த சஹானாவிற்கும், சொக்கநாதருக்கும் ஒரு மாதிரி ஆகி போய் விட்டது.என்ன இந்த புள்ள இப்டி கேக்குது. நம்மள பத்தி என்ன நெனைக்கிது. நம்ம ஒன்னுமே இல்லாதவங்கன்னா. நம்ம வசதி என்ன நம்ம தகுதி என்ன ன்னு தெரியுமா தெரியாதா. ஒரு ஓனரா இருந்து 40 பேருக்கு சம்பளம் குடுக்கற நம்மள என்ன நினைச்சுகிட்டு இருகாங்க. முதல்ல வீடு இல்லைன்னு சொன்னாங்க. இப்ப தான் அவங்க சொன்ன உடனே நம்ம மகளும் மருமகனும் வந்து தங்குறதுக்காக வீடு கட்டிட்டோம்ல(சரோஜா வீடு பத்தி தவறா பேசின உடனேயே சொக்கநாதர் வீடு கட்ட ஆரம்பிச்சுட்டார் ). இதுலயாவது நம்ம யாருன்னு தெரிய வேணாமா என்று பொரிந்தார் மீனாட்சி. அதற்கு சொக்கநாதர் விடு மா. சின்ன புள்ள தனமா பேசிடிச்சு. அத நம்ம பெருசு பண்ண வேணாம். அந்த புள்ள என்ன கூடவேவா இருக்க போகுது. நம்ம பொண்ணு அந்த வீட்டுக்கு போனோன விஜி அது குடும்பத்தை பாத்துகிட்டு போக போகுது. இதுலாம் பெரிய விஷயம் ஆக்க வேணாம். விட்ருங்க. ஏனோ தெரியல. இந்த சம்பந்தம் பேச ஆரம்பிச்சதுல இருந்தே இவங்க பேச்சு சரி இல்ல. முதல்லயே எல்லாத்தயும் தெளிவா சொன்னா நம்ம என்ன செய்யாமையா போயிருவோம். சபைல எல்லாரும் முன்னாடியும் வேண்டாம் ன்னு சொல்ராங்க. தனியா வேணும் ன்னு சொல்லுறாங்க. நம்ம கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும் என்று அவர்களை சரியாக கணித்தார் மீனாட்சி.ஆம் சரோஜா, சுப்ரமணி, விஜி அப்டி தான் நடந்து கொள்கின்றனர். ஏன் என்றால் அவர்கள் எந்த சூழ்நிலையிலயும் விஷ்ணுவை பகைத்து கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏன் என்றால் இவர்கள் அவனிடம் இருந்து வரும் பணம் மூலம் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . மீனாட்சி சொன்னதை ஆமோதித்தார் சொக்கநாதர். ஆனால் சஹானா மட்டும் யோசனையில் இருந்தாள். இதை விஷ்ணுவிடம் கூட சொல்லவில்லை.
இவ்வாறு ஒரு மாத காலம் கடந்திருக்க சொக்கநாதரும் வீடு கட்டி முடித்து விட்டார். திருமணம் நடக்க இன்னும் ஒரு மாதமே எஞ்சி இருந்தது. என்ன அண்ணன் புள்ள கல்யாணத்த எங்க வச்சிருக்கீங்க. மஹால்ல தான்ப்பா வச்சிருக்கோம். அட்வான்ஸ் எல்லாம் பண்ணிட்டேன். ஏன் அண்ணா புதுசா வீடு கட்டிட்டு ஏன் மஹால்ல வைக்கணும். வீட்ல வச்சா நெறய பேரு வருவங்கள. அது மட்டும் இல்லாம வீடுன்னா உங்களுக்கும் வசதியா இருக்கும். எங்களுக்கு புரியுது இருந்தாலும் மாப்ள வீட்டு காரங்ககிட்டயும் ஒரு வார்த்தை கேப்போம். அவங்க என்ன சொல்றங்களோ அத வச்சு முடிவு எடுப்போம்.
இந்த விஷயத்தை சஹானாவிடம் சொல்லி விஷ்ணுவிடம் பேச சொன்னார் மீனாட்சி. சஹானாவும் போன் பண்ணி தன் அம்மாவை விஷ்ணுவிடம் பேச வைத்தாள். தம்பி நான் அத்தை பேசுறேன். சொல்லுங்க அத்தை எப்படி இருக்கீங்க. நான் நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கேன் அத்தை. ஏதோ பேசணும்ன்னு சொன்னிங்களாமே என்னனு சொல்லுங்க. ஆமாப்பா கல்யாணத்த வீட்ல வச்சா நல்லா இருக்கும்ன்னு எல்லாரும் சொல்லுறாங்க. எங்களுக்கு முதல் விசேஷம். முன்னாடி பேச்சு வார்த்தை பேசும்போதும் உங்க மாமாக்கு வீட்ல கல்யாணம் வைக்கணும்ன்னு தான் ஆசை. ஆனா எங்க கிட்ட வீடு இல்லாத நாள உங்க வீட்டு ஆளுங்க ஒத்துக்கல.இப்ப தான் வீடு கட்டிட்டோமே அதான் உங்க அப்பா கிட்ட நாங்க கேட்டதா சொல்லுங்க. அப்டியே உங்க அப்பாவ மாமாக்கு போன் பண்ண சொல்லுங்க. நாங்க பேசுறோம். அப்டியா சரி அத்தை நான் அப்பாவை பேச சொல்றேன் என்று வைத்து விட்டான் விஷ்ணு.
அந்த மதியமே சுப்பிரமணி சொக்கநாதரிடம் பேசினார்.மச்சான் என் பொன்னுக்கு நான் பெருசா கல்யாணம் பண்ணல. கோவில்ல வச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சோம். அப்பயும் சொந்த காரங்களுக்கு சொல்லல. என்னய்ய பொறுத்தவரைக்கும் இது தான் முதல் விஷேசம். எங்களுக்கு நெறய கூட்டம் வரும். அதுனால மஹால்ல வச்சா தான் சரியா வரும். நீங்கள் மஹால் புக் பண்ணலைனா சொல்லுங்க. நாங்க அத பாத்துக்கறோம். அப்டிலாம் இல்ல மச்சான் எங்களுக்கும் ஒரு ஆசை. அத தான் சொன்னோம். நான் மஹால் புக் பண்ணிட்டேன். இருந்தாலும் கேட்டுக்கலாம்ன்னு தான் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க. நாம மஹால்லேயே வைப்போம். வேற ஒன்னும் இல்லை மச்சான். வச்சுடறேன் என்று வைத்து விட்டார் சொக்கநாதர். அவங்க ஒத்துக்கல மீனாட்சி விட்ருவோம். சம்பந்தம் பண்ண போற எடத்துல பிரச்சனை வேணாம். இதுல பிரச்சனை பண்ண என்னங்க இருக்கு. நம்ம கேட்டோம். அவங்க வேணாம் ன்னு சொல்லிட்டாங்க. சரி விடுங்க என்றார் மீனாட்சி மன வருத்தத்துடன்.
சுப்பிரமணி விஜி-யிடம் நான் சொக்கநாதர்ட்ட பேசிட்டேன் என்று பேசிதை சொன்னார்.அவரும் ஒத்துக்கிட்டாரு. மத்த ஏதாவது விஷயம்னா எனக்கு டெலிபோன் பண்ணுங்க.
ஆனால் இங்கு சரோஜா என்ன விஜி நானே அவங்க கிட்ட வீடு இல்லைன்னா விஷ்ணு அங்க போய் தங்க மாட்டான்னு நெனச்சு வீட ஒரு காரணமா காட்டினால் அவங்க வீடு கட்டிட்டாங்க அதுக்குள்ள. அவனை அங்க ஒட்ட விடக்கூடாது விஜி. அம்மா நம்ம விஷ்ணுவை பத்தி நமக்கு தெரியாதா. அது மட்டும் இல்லாம கைவசம் தான் நம்மகிட்ட வேற வேலை இருக்கே. அத பாக்க மாட்டோம். இத்தன நாலும் அத பண்ணி தானமா நம்மளை எந்த கேள்வியும் கேக்காம வச்சிருக்கோம். அதையே தொடர்ந்து செய்வோம். அப்ப சஹானா ஏதாவது கேள்வி கேட்டா. அவளை பாத்தா அப்புடி தெரியல மா. அப்டி தெளிவா இருந்தா நாம மாத்திடுவோம். நமக்கு தெரியாத வழியா என்று தாயும் மகளும் சிரித்து கொண்டனர்.


இப்படி பட்ட சதி கார குடும்பத்திடம் இருந்து சஹானா தப்பிப்பாளா???????
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் 1:
சஹானாவிற்கும் விஷ்ணுவிற்கும் திருமணம் முடிந்து விஷ்ணுவின் வீட்டுக்கு செல்கிறார்கள். அப்போது அங்கு வாசலில் ஒரு அரூபம் அழுது கொண்டிருக்கிறது. சஹானா வீட்டில் காலடி எடுத்து வைக்க இவளுடன் சேர்ந்து அதுவும், அவளாக அவளுடனே காலடி எடுத்து வைக்கிறது.
 
Last edited:

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5:

திருமணம் நடக்க இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் சஹானா -விஷ்ணுவின் திருமணத்துக்கு முறைப்படி ஜோதிடரை வைத்து நாள் குறித்தனர். அப்போது அங்கு இருந்த மீனாட்சியிடம் என்ன அண்ணி மண்டபம்லாம் புக் பண்ணிட்டிங்களா என கேட்டார் சரோஜா . பண்ணியாச்சு அண்ணி. நல்லா பெருசா இருக்கனும் . எங்களுக்கு நெறய பேரு வருவாங்க. ஆமா என்ன கல்யாணம் விஜயதசமி அப்ப முடிவு பன்னிருக்கிங்க என்று சற்று கோவமாக கேட்க மீனாட்சிக்கு கோவம் அதிகரித்தது.




பொண்ணு பாக்க வரும்போது சாகர மாறி வந்தாள். இன்னைக்கு இது பேசுற வாய பாரு. எல்லாம் என் தலையெழுத்து. கொஞ்சம் கூட எங்களுக்கு தகுதியே இல்லாத ஆழுங்கலாம் என்னய்யா மெரட்டுது. என் புருஷன சொல்லணும். இதுங்கள மாறி பட்டிக்காட்டுக்கு பொண்ண குடுக்கறதுக்கு என்று நொந்து கொண்டே சரோஜாவுக்கு உங்க புருஷன் தான் முடிவு பண்ணது. போய் அவர்ட்ட கேளுங்க என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டார்.



தவறு சுப்பிரமணி மீது இருப்பதை தெரிந்ததும் சமாளித்து எங்க ஆளுங்க சைவம் அசைவம் 2உம் சாப்பிடுவாங்க. அதுனால எல்லாம் தயார் பண்ணிடுங்க என்றார். உடனே மீனாட்சி சரியான சோத்து பண்டாரங்க.எப்ப பாரு சோறு சோறு ன்னு என்று மனதில் நினைத்து கொண்டே நாங்க சமையல் காரங்ககிட்ட பேசிட்டு சொல்றோம் என்று அத்துடன் பேச்சை முடித்து கொண்டார்.



பிறகு ஜோதிடர் குறித்த நேரத்தை வாங்கி கொண்டு வந்த சொந்தங்களையும் அழைத்து சென்று ஓட்டலில் உணவு உண்ண வைத்தார் சொக்கநாதர். இதனிடையில் விஷ்ணுவின் சொந்தக்காரியான குண்டான பெண்மணி எங்களால அவ்ளோ தூரம்லாம் கல்யாணத்துக்கு வர முடியாது என்று சொல்ல மீனாட்சி கடுப்பில் உச்சபச்ச எல்லைக்கே சென்று விட்டார். வரலைனா வீட்லயே இரு. நீ வந்தா எங்களுக்கு தான் நஷ்டம். எங்களால வடிச்சு கொட்ட முடியாது. ஆலையும் மூஞ்சியையும் பாரு.செனைபன்னி மாறி இருந்துகிட்டு என்று மனதிற்குள்ளேயே வறுத்து எடுத்தார்.





இது எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் சஹானாவிடம் ஜோதிடர் கொடுத்த குறிப்பை பூஜை அறையில் வைக்க சொன்னார். பின்பு அங்கு நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார். சஹானா வீட்டில் எப்பொழுதுமே யாரும் எதையும் மறைத்து பேசியது இல்லை. அதனால் அந்த வீட்டில் நடக்கும் அணைத்து விஷயங்களும் வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். அது போல எது செய்தாலும் ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுப்பர். ஆனால் விஷ்ணுவின் வீட்டில் இதற்கு எதிர்மறையாக இருப்பவர்கள். எதையுமே விஷ்ணுவிடம் சொல்லாமல் எல்லாவற்றையும் செய்வார்கள். விஷ்ணுவும் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவர்களுக்கு வசதி ஆகி போனது. இதனாலேயே பல பிரச்சனைகளை சந்திக்க போகிறோம் என்று தெரிந்திருந்தால் விஷ்ணு தெளிந்திருப்பானோ.........




அக்டோபர் 22.சஹானா -விஷ்ணுவின் திருமண நாள் அழகாக விடிந்தது. சஹானா எழுந்ததும் குளித்து முடித்து மண்டபத்திற்கு கிளம்ப தயாராகி வந்தாள்.அப்போது மீனாட்சி சஹானாவிடம் அப்பத்தா காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கு மா என்றார் . உடனே சஹானாவின் அப்பத்தாவின் காலில் விழ போனவளை தடுத்த அப்பத்தா பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்ற போகும் போது பூஜை அறையில் உள்ள விளக்கு விழுந்து உடைந்து விட்டது. அய்யயோ என்ன இது அபசகுனமா இருக்கு. புள்ள வாழ்க்கைல முதல் அடி எடுத்து வைக்கும் போது இப்டி நடக்குது என்று கவலை கொண்டார். ஆனாலும் பேத்தியிடம் எதையும் காட்டி கொள்ளாமல் அவள் நெற்றில் திருநீறு பூசி எல்லாம் நலப்படியா நடக்கட்டும் என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். இருந்தாலும் வீட்டில் உள்ள அனைவருக்குமே பயமாக தான் இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவரவர் மண்டபத்துக்கு கிளம்பும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.






சஹானா மிகுந்த வேதனையோடும் குழப்பத்தோடும் அங்கிருந்து மண்டபத்திற்கு கிளம்பினாள். ஏனெனில் அவ்வாறான சூழ்நிலை அவளுக்கு அமைந்து விட்டது. அதை நினைத்து பார்த்தவளுக்கோ நம் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று பயமே வந்து விட்டது. அப்போது விஷ்ணு நடந்து கொண்ட முறையை நினைத்தவளுக்கு வருத்தத்தையே தந்தது. ஆனாலும் நினைத்து கொண்டே மண்டபம் நோக்கி பயணமானாள்.




அக்டோபர்-7 அன்று விஷ்ணுவும் அவன் தந்தையும் திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து விட்டனர். அடுத்த நாள் சஹானா திருமணத்திற்காக பியூட்டி பார்லர் இல் புக் செய்து விட்டு பேஸியல் செய்து வரலாம் என்று தன் தந்தை யுடன் சென்றிருந்தாள். அப்போது தான் வருவதாகவும் விஜி க்கு தெரிய படுத்தி இருந்தாள். உடனே விஜியும் தானும் வருவதாக ஒத்துக்கொண்டாள்.



சுமார் 6 மணி இருக்கும் போது பேசியல் செய்து கொண்டிருந்தாள் சஹானா. அப்போது விஜி வந்து பேசிகொண்டுருந்தாள். விஜி சஹானாவிடம் விஷ்னு வந்துருக்கான். போய் பாரு என்று சொல்ல சஹானாவிர்க்கு பயமும் சந்தோஷமும் ஒருங்கே தோன்றியது. அனைத்தையும் முடித்து கொண்டு வெளியில் எட்டி பார்த்தவளுக்கோ திக் என்றிருந்தது. ஏனெனில் 6 அடி உயரத்தில் தாடியும் , மீசையுமாய் ஊதா நிற சட்டையும் ஜீன்ஸ் உம் அணிந்திருந்த சாமியார் போல தான் இருந்தான். சஹானாவிற்கு தான் சொன்னதால் தான் இப்படி இருக்கிறான் என்று நினைத்து குற்ற உணர்ச்சியாய் இருந்தது.



ஏனெனில் சஹானா விஷ்ணுவிடம் சண்டைக்கு பிறகு பேசிய போது நான் போட்டோ வில் பார்த்த மாறி நீங்க இல்லை. அதுனால அந்த மாறி நீங்க இருக்கனும் ன்னு சொன்னாள். அது மட்டும் இல்லாம நம்ம தமிழ்நாடு காரங்க மாறி மீசை தாடிலாம் வைங்க. அப்ப தான் அழகா இருக்கும் ன்னு சொல்லி சொன்னதுக்கு சாமியார் மாறி வச்சுருக்காரே என்று நினைத்து சொன்னதுக்காக தன்னையே நொந்தாள்.




மனதில் வலி இருந்தாலும் தன்னை நிலை படுத்திகொண்டு விஸ்ணுவிடம் சென்றாள். இவளை பார்த்ததும் எழுந்து நின்ற விஷ்ணு சிரித்துக்கொண்டே என்ன இவ்ளோ குட்டையா இருக்க.chinna புள்ள மாறி என்று சிரிக்க இதை கேட்டவுடன் சஹானாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும் சிரித்து சமாளித்தாள். பின்பு தான் வாங்கி வந்த சாக்லேட் பெட்டியை அவளிடம் கொடுத்தான் .மறுக்காமல் அதை வாங்கி கொண்டாள். பின்பு பார்லர் விட்டு வெளியே வந்து ஒரு பேக்கரிகுள் சென்று டீ குடித்து கொண்டே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தனர். விஷ்ணு சாதாரணமாகஅவன் அக்கா விஜி யுடன் பேசிக்கொண்டு இருந்தான். சஹானாவிடம் திரும்பவும் இல்லை.ஆனால் சஹானாவிற்கு தான் தயக்கமாகவும் , பயமாகவும் இருந்தது. ஒரு வேளை விஷ்ணுவிடம் தெரிந்த அலட்சியத்தையும் சஹானாவை கண்டுகொள்ளாமல் விஜியிடமே பேசிக்கொண்டிருந்த விஷ்ணுவையும் நன்கு உற்று பார்த்திருந்தால் அன்றே அவள் தெளிந்திருப்பாளோ.


வீணாக விஷ்ணுவை காதலித்து கஷ்ட பட்டிருக்க மாட்டாளோ. விதி யாரையும் விட்டது இல்லையே...... 😞😞😞😞



விஜி சஹானாவிடம் திரும்பி உனக்கு என்ன கலர் முகூர்த்த புடவை எடுக்க என்று கேட்க எனக்கு பச்சை கலர் தவிர எது நல்லா இருக்கோ அத எடுங்க என்று கூறி சென்று விட்டாள். அப்போது விஷ்ணுவும் கூட இருந்தான். சஹானாவோ நமக்கு கல்யாண புடவை நல்லா க்ராண்டா வேணும் ன்னு சொன்னதை விஷ்ணு விஜிட்ட சொல்லிருப்பாங்க போல. அதான் நம்ம கிட்ட கேக்குறாங்க என்று நினைத்து பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.



ஆனால் முகூர்த்த புடவை எடுக்கும் போது பெரிய சங்கடமே வரும் என்று தெரிந்திருந்தால் சஹானா சொல்லியிருப்பாளோ.........


ஒரு நாள் சொக்கநாதரும் மீனாட்சியும் மாப்பிள்ளையை பார்க்க சுப்பிரமணி வீட்டுக்கு சென்றனர். அது மட்டும் இல்லாமல் சீர் பற்றி நேரில் பேசிக்கொள்ளலாம் என்று முன்னமே விஜி சொல்லி இருந்ததால் அதையும் பேச சென்றனர். சிறிது நலம் விசாரித்ததற்கு பின்பு சீர் பற்றி பேச விஷ்னுவை உள்ளே போக சொல்லி விட்டனர் சுப்பிரமணி சரோஜா விஜி. அவனும் அவர்கள் பேச்சை கேட்டு அப்படியே நடந்து கொண்டான். அதன் பிறகு பெரியவர்கள் பேச ஆரம்பித்தனர். சரோஜா தான் பேச்சை தொடங்கினர்.





அண்ணி எங்களுக்கு சீர் தரமா வேணும். பலகாரமும் நெறய வேணும். நாங்க சொந்தகாரங்களுக்கு குடுக்கணும். அதுனால எல்லாம் தரமா செஞ்சுடுங்க என்று" தரம் "என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தார். சரோஜா சீண்டி பார்க்க மீனாட்சிக்கு கோவம் வந்து விட்டது. ஆனாலும் பொறுமையாக எண்ணலாம் வேணும் என்று கேட்டதற்கு எங்களிடம் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் இருக்கு. அத தவிர எல்லாம் வேணும் என்று சொல்ல அதற்கு மீனாட்சியோ அப்ப மிக்ஸி, கிரைண்டர் என்று விவரித்து கேட்க அதுவும் வேணும். எங்களோடது வேளை செய்யலைன்னா நாங்க இதை எடுத்து பயன்படுத்திக்க போறோம் என்று சொல்ல சரி என்றனர். பின்பு பாத்திரம் எதுக்கு. புள்ளைங்க வெளிநாட்டுல தான இருக்க போறாங்க. அங்க கொண்டு போக முடியாதே. என்று மீனட்சி சொல்ல அதற்கு சரோஜா வோ திடிர்னு மெட்ராஸ்ல வேளை பாக்குற மாறி இருந்தா பாத்திரம் வேணும்ல என்று சரோஜா கேக்க சரி என்று ஒத்துக்கொண்டு வந்து விட்டனர். ஆனால் அதை கேட்டு வெளியில் வந்தவுடன் மீனாட்சி சொக்கநாதரை பொரிந்து தள்ளி விட்டார். முன்னாடியே சொன்னேன் கேட்டீங்களா. இந்த குடும்பம் சரி இல்ல. முன்னாடி வெளிநாட்டுல இருக்க போகுதுனு சொன்னாங்க. இப்ப மெட்ராஸ்ல வந்து தங்குனா பாத்திரம் வேணுமாம். எப்படி மாத்தி மாத்தி பேசுது அந்த கருவாச்சி சரோஜா. காசுக்காக தான் இப்டிலாம் பண்ணுதுங்கனு சொன்னன்ல . கடைசில இப்படி நாம பொண்ண இந்த மாறி குடும்பத்துல வந்து தள்ளி விட்டுட்டீங்களே என்று நொந்தார்.



இதை சஹானாவிடம் தெரிவிக்க அவளுக்கு கோவமாக வந்தது. கல்யாணம்ன்ற பேருல கொள்ளை அடிக்கிறாங்களே. இவங்கலாம் என்ன மனுஷங்க என்று நினைத்து நடந்த அனைத்தையும் விஷ்ணுவிடம் கூறினாள். அவனும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.நான் பார்த்துக்கறேன் என்று சமாதானம் செய்தான்.



ஆனாலும் அவர்கள் சொன்ன தரம் என்ற வார்த்தை சொக்கநாதரின் தன்மானத்தை சீண்டிவிட சரோஜா வீடே நிறையும் படி சீர்கலை வாங்கி குவித்து விட்டார்.



திருமணத்திற்கு 2 நாள் முன்பு விஜி சஹானாவிற்கு அழைத்து அம்மா விடம் கொடுக்க சொன்னாள். அடுத்து பேசிய மீனட்சியிடம் புடவை எடுக்க வரும்படி குறிப்பிட்ட கடையை சொல்ல சரி என்று ஒத்துக்கொண்டு கிளம்பினார் மீனட்சி, சொக்கநாதர் மற்றும் மீனாட்சி யின் அண்ணன் மனைவியுமான சாந்தி. அங்கே கடைக்கு போய் கிட்டத்தட்ட 2மணி நேரமாக காத்திருக்க அவர்கள் வரவே இல்லை. இதற்குள் மீனாட்சீ கடுப்பாகி விட்டார். இந்த நேரத்துக்கு தானே வர சொன்னாங்க. இப்ப இவ்ளோ நேரம் ஆகியும் வரல. இந்த குடும்பம் மாப்பிள்ளை வீடுன்னு ரெம்ப பண்ணுதுங்க என்று புலம்பிக்கொண்டிருந்தார் சாந்தியிடம்.


அப்போது மேலும் அரை மணி நேரம் அவர்களை காக்க வைத்துவிட்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தனர் விஷ்ணு வீட்டினர்.



அனைவரும் கடைக்குள் சென்று புடவை பார்த்து கொண்டிருந்தனர். அங்கு சுப்பிரமணி , சரோஜா, விஜி, விஜி யின் தோழி நாகலட்சுமி போன்ற சிலர் வந்திருந்தனர். ஒரு புடவையை எடுத்த நாகலட்சுமி விஜியிடம் கொடுக்க அதையே முகூர்த்த புடவையாக பில் போட்டாள் விஜி. மீனாட்சியிடம் பிடித்திருக்கா என்று கேட்காமல், அவரை மதிக்காமல் நடந்து கொண்ட விதமும் சுத்தமாக பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் சுப்பிரமணி 10000குள்ள பட்டு காட்டுங்கன்னு சொன்னதும் பிடிக்கவில்லை. இவங்க மட்டும் நம்மகிட்ட தரமா கேக்குறாங்க. அதே மாறி அவங்களும் தரமா செய்ய வேணாம்.நாமெல்லாம் நிச்சயத்துக்கு கூட 10000 க்கு மேல தான் பட்டு எடுப்போம். இவங்க என்ன இப்படி பண்றாங்க.அயோ பட்டு ஒழுங்கா எடுக்கலைனா நாம சொந்தக்காரங்க முன்னாடி அசிங்கமா போய்டுமே. அதெல்லாம் விட சஹானா ஒத்துக்க மாட்டாளே. அவ இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலையே என்று வருத்தம் கொண்டார்.இனி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்து எடுத்த புடவையை சுட்டிக்காட்டி இது சஹானாவுக்கு பிடிக்காது. அதுனால கூட ரேட்ல வேற புடவை எடுங்க என்றார்.அவர் அப்படிக்கேட்டவுடன் என்ன செய்வது என்று சரோஜாவும் சுப்பிரமணி யும் திகைத்து விட்டனர். ஏனெனில் அவர்களிடம் பணம் இல்லை. மொத்தமே 15000 தான் கொண்டு வந்தனர். அந்த பணத்தை வைத்து நிச்சயத்திற்கும், திருமணத்துக்கும் சேர்த்து புடவை எடுக்கலாம் என்று நினைத்து வந்திருந்தனர். மீனாட்சி கூறியதை கேட்டு திகைத்தாலும் எல்லாம் ஒரு நொடி தான். பின்பு அவருடைய பேச்சை உதறி தள்ளினார். அந்த நேரம் பார்த்து சஹானா போன் பண்ண அனைத்தையும் கூறி விட்டார். உடனே அவளும் சரோஜாவுக்கும், விஜிக்கும் போன் பன்னி புடவை சற்று கூடுதல் விலையில் எடுக்கும்படி கூற அவளையும் ஒரு பொருட்டாக நினைக்காமல் போன் கட் செய்தனர். அவள் மறுபடியும் போன் பண்ண அவளது அழைப்பை எடுக்கவே இல்லை. பின்பு அவளும் கோவத்துடனே விட்டு விட்டாள். இந்த கோவம் எல்லாம் விஷ்ணு மேலே திரும்பியது. அவனும் அங்கு இருந்தும் நமக்கு ஒழுங்காக எதுவும் செய்யவில்லையே என்று ஆற்றாமையாய் வந்தது. ஆனால் பாவம் அவளுக்கு தெரியவில்லை. சஹானா நேரில் வந்து சொன்னாள் கூட விஷ்ணு இப்படி தான் நடந்து கொள்ளுவான் என்று........






இங்கு சாந்தி விடாப்பிடியாக விலை குறைவானாலும் பரவா இல்லை என்று துணிந்து வேறு ஒரு புடவையை தேர்ந்து எடுத்தார் சாந்தி. அந்த புடவையே தன் மருமகள் சஹானாவின் தகுதிக்கு ஏற்றது இல்லை என்றாலும் வேறு வழியின்றி நாவல் பழ நிறத்தில் ஜரிகையுடன் இருந்த புடவயை தேர்ந்தெடுத்தார்.



வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல சஹானா அழுது தீர்த்தாள். விஷ்ணுவிடம் சண்டை போட்டாள். உங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே அது வேணும் இது வேணும் ன்னு கேக்குறீங்க.. எனக்கு உங்க வீட்டுல உள்ளவங்க மேல நம்பிக்கையே இல்லை. நான் என் பேருல உள்ள சொத்துக்களை எல்லாம் மாத்தி எழுதி குடுக்க போறேன் என்று அழுதாள். ஆனால் அவளை சமாதானப்படுத்த வேண்டியவனோ அவளிடமே சண்டைக்கு நின்றான். என் வீட்டுல உள்ளவங்க அப்டிலாம் இல்லை. உன் சொத்து ஏதும் எங்களுக்கு வேணாம் என்று கோவப்பட்டு வைத்து விட்டான். ஆனால் அன்றே அவன் யோசித்து செயல்பட்டிருந்தால் அவன் வாழ்வு சிறப்பாக இருந்திருக்கும்.


பெற்றவர்கள்மேல் வைத்த பாசமும் நம்பிக்கையும் தான் தன் வாழ்க்கையே கேள்விக்குறியாக்க போகிறது என்று தெரியாமல் தன்னை உயிராய் நினைத்து, தனக்காக எதயும் செய்ய இருபவளான தன் இணையை நோகடித்தான்..


பல ஆண்கள் இன்று இப்படிதான் இருக்கின்றனர்.ஒரு பெண் தன் வீட்டில் அணைத்து சந்தோஷங்களையும் அனுபவிக்கிறாள். அவள் வீட்டில் அவள் ராணியாகவே வளம் வருகிறாள். அப்படி பட்ட பெண் தன் கழுத்தில் கட்டிய தாலிக்காகவும், தாலியை கட்டிவனையும் மதித்து அவனுக்காகவே வாழ்கிறாள். எந்த சூழ்நிலையிலும் கணவனை விட்டு குடுக்க துணிவதில்லை. ஆனால் ஆண்கள் அவளை ஒரு பொருட்டாய் கூட பார்ப்பதில்லை. தனக்காக அவள் பெற்றோர், அவளின் அடையாளம், அவளின் உறவுகள் என அனைத்தயும் துறந்து இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்பவளை, தன் வாழ்வின் கடைசி வரை வர கூடியவளை எப்படி நடத்த வேண்டும் என்று உணராமல் அவளை காயப்படுத்துகின்றனர். மேலும் தன்னை திருமணம் செய்பவனிடம் உரிமையோடு கேட்கிறாள், சண்டை போடுகிறாள் என்றால் அவன் தன்னவன் என்னும் நினைப்பால் மட்டுமே என்பதை ஆண்கள் மறந்துவிடுகின்றனர். இதை உணராமல் தன் பெற்றவர்கள் மேல் வைத்த கண் மூடி தனமான பாசம் அவர்களின் மூளையை மழுங்கடிக்கிறது.



பெற்றவர்கள் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் பூஜை அறையில் வைத்து கூட வழிபடலாம். ஆனால் சுயநலவாதிகளாகவும், பேராசை கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது. அப்படி பட்டவர்களுக்காக வாழ வேண்டியவர்களின் வாழ்க்கை அழிய வேண்டுமா...????


விஷ்ணுவின் வாழ்க்கையும் அழிய தான் போகிறது... இப்படி பட்ட பெற்றவர்களால் ......



விஷ்ணு சிந்திப்பான அல்லது பிரச்னையை சந்திப்பானா?????










 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதை எல்லாம் நினைத்து கொண்டே சென்றவள் கண்களில் நீர் துளி.இனி தன் வாழ்க்கை தனக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ என்று...

மண்டபம் உள்ளே சென்றவள் தன் ஈர முடியை காய வைத்து கொண்டிருந்தாள். நேரம் கடந்து கொண்டிருக்க விஷ்ணுவிடம் எந்த தகவலும் இல்லை. சண்டை போட்ட பிறகு அவன் சஹானாவிடம் பேசவே இல்லை.. இதை நினைத்து வருந்தி கொண்டிருந்தாள் சஹானா.


கொஞ்ச நேரம் கழித்து ப்யூட்டி பார்லர் பெண் வந்துவிட அவர்களின் கை வண்ணத்தில் தேவதையாய் ஜொலித்தாள் சஹானா. ரோஜா பூ நிற காஞ்சிபுரம் பட்டுடுத்தி அதற்கேற்ற நகை அணிந்து, அழகாக தலைவாரி நெற்றி சூடியிட்டு vaanulaga தேவைதையை ஒளிர்ந்தாள் சஹானா. ஆனால் அவள் கண்ணில்மட்டும் ஒளியே இல்லை. அந்த நேரம் பார்த்து விஜியும் நாகலட்சுமி யும் பியூட்டி பார்லர் பெண்ணிடம் சேலை கட்டிக்க வர எரிச்சலோடு முகத்தை திருப்பி கொண்டாள் சஹானா. அவர்களால் தான் தனக்கு இந்த கஷ்டம் என்று உணர்ந்து கொண்டவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் அப்படி தான். கோவமோ சந்தோஷமோ வெளிப்படையாக காட்டி விடுவாள். அவளுக்கு நடிக்க தெரியாது.


ஆனால் இந்த குடும்பத்தில் கொஞ்சம் நடித்தால் தான் வாழ முடியும் என்பதை அறிவாளா அவள். இந்த நடிப்பின் மூலமாக மட்டுமே விஷ்ணு விடம் ஜெயிக்க முடியும் என்பதை தெரிந்திருந்தால் சஹானா ஆடையே முயற்சி செய்திருப்பாளோ. ஆனால் பாவம் உண்மை தான் முக்கியம் என்று நினைத்து கொண்டிருப்பவலுக்கு இனிமேல் சோதனை காலம் தான் என்று யார் அறிவார்.


மேடையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தவுடன் ஐயர் பொண்ணு மாப்பிள்ளையை அழைத்து அவர்களுக்கான முகூர்த்த உடைகளை கொடுத்து உடுத்தி வர்ற சொன்னார். அவர்கள் உடுத்திய பின்பு மணவறைக்கு அழைத்து வரப்பட்டார்கள். இருவரும் பக்கத்தில் இருந்தும் இயந்திரம் போல் தான் நடந்தது. சஹானாவிற்கு அப்போதே உள்ளுக்குள் நொறுங்கி விட்டது.


எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசை பட்ட வாழ்க்கை. இப்படி ஆகி விட்டதே எனது உடைந்து விட்டாள் சஹானா. அப்போதே அவளுடைய பாதி உயிர் அவளை விட்டு போய் விட்டது.


அனைத்தும் முடிந்து மணமக்கள் இருவரும் விஷ்ணுவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களை பார்த்து ஒரு அரூபம் அழுது கொண்டிருந்தது. சஹானா குத்துவிளக்கை கைகளில் ஏந்தி வலது காலை வீட்டிற்குள் அடி எடுத்து வைக்க அந்த ரூபமும் அவளுடன், அவளாகவே அந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தது.


மனித உருவில் இருக்கும் பேய்களிடம் சிக்கி தவிக்கும் சஹானா இனி நிஜ பேயிடமும் சிக்கி தவிக்கிறாளா இல்லை தப்பிப்பாளா.?????????
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி பிரெண்ட்ஸ் சில தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் உடனே எபி கொடுக்க முடியவில்லை. இந்த வாரம் வரும் திங்கள் அன்று எபி கொடுக்கிறேன்.
 
Status
Not open for further replies.
Top