All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரியங்கா ராஜாவின் "காத்திருந்த தேவதை" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் உறவுகளே,,,,

நான் பிரியங்கா ராஜா...
புனைப்பெயர் கற்பனைகளின் இளவரசி,,,
எஸ்.எம்.எஸ் தளத்தில் புதிதாக எழுதப் பிறந்திருக்கும் மழலை எழுத்தாளினி,,,,
என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள பெரிதாக எதுவும் இல்லை,,,, ஆனாலும் என்னை அறிமுகம் செய்து கொள்வது எனது தலையாய கடமை,,,,

பிறந்தது வளர்ந்தது வாழ்வது எல்லாம் செட்டிநாட்டு சீமையாம் காரைக்குடி,,,,
காரைச்செடிகளை அழித்து குடிபெயர்ந்த மக்களின் அடுத்த வாரிசு நான்,,, பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்க என்னாலான முயற்சியை என்றும் செய்வேன்,,,
அதனாலேயே எனது கதையை அந்த மண்ணிலேயே நிகழ்த்தவுள்ளேன்,,,

வாசிக்க பிடிக்கும் என்ற காரணத்தினாலேயே தங்களைப் போலவே கல்கி, சாண்டில்யனில் இருந்து படிக்க ஆரம்பித்து அயர்ன் கடையில் இருந்து வாங்கிவரும் துணிக்கு நடுவேயுள்ள பேப்பர் வரைக்கும் படிப்பேன்,,, வாசிப்பை நேசித்ததாலோ என்னவோ எழுத்தும் என்னை அதிகமாகவே ஆக்கிரமித்துக் கொண்டது,,, கவிதைத்துவமாக எழுதவராது,,, ஆனாலும் எனது வழியில் நான் எழுதுவேன்,,, சாண்டில்யனை விட கல்கியின் எழுத்தையே அதிகம் நேசிப்பவளாதலால் என் எழுத்தில் காதல் என்பது கண்ணும் கண்ணும் நோக்கியாவாக மட்டுமே இருக்கும்,,,, ரொமான்சை நாயகன் நாயகியின் விழிகளிலேயே காட்டும் எழுத்தாளினி நான்,,, தேவைக்கு கொஞ்சம் ரொமேன்சை போடலாம்,,, ஆனாலும் குடும்பம், நட்பு, உறவு சார்ந்த கதைகளுக்கே அதிகம் முன்னுரிமை கொடுப்பேன்,,,,

நட்பின் வாசமும்,,, அண்ணன் தங்கை பாசமும் இல்லாமல் எந்த கதையும் என் எழுத்துநடையில் இருந்தது இல்லை,,, இனியும் இருக்காது,,, கடைசியாக என்னிடம் இருக்கும் ஒரு குறையே கதையை பதிவிடுவது தான்,,, கொஞ்சம் சோம்பேறி எழுத்தாளினி என்பதால் இம்மழலையை மன்னித்துவிடுங்கள்,,,
விரைவிலேயே காத்திருந்த தேவதையுடன்
வருவேன்,,,,

இப்படிக்கு
நான்
பிரியங்கா ராஜா
கற்பனைகளின் இளவரசி
🏃🏃🏃🏃🏃
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருந்த தேவதை 1

சில்லென்ற குளிர்ந்த காற்றோடு எங்கிருந்தோ வந்து ஒன்று கூடிய கருமேகங்கள் தன் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தன அந்த மாலைப் பொழுதொன்றில்,,, நல்லமழை தான் கொஞ்சம் குளிர்காற்று உடலை தீண்ட
செட்டிநாட்டு பெருமையை நாடுவிட்டு நாடு பரப்பும் பெரிய பெரிய தூண்களால் ஒரு தெருவையே அடைத்து கட்டப்பட்டிருந்த அரண்மனை போன்ற வீட்டின் உள்ளே இருந்து மழைக்கு இதமாக சூடான வெங்காய பஜ்ஜியின் வாசம் வந்து நாசியை தீண்டியது,,,, வீட்டின் நடுமுற்றத்திலே மழைத் தண்ணீர் சலசலவென ஓடுகளில் விழுந்து வழிந்து முற்றத்தை சிறுகுளமாக மாற்றிக்கொண்டிருக்க வெங்காய பஜ்ஜியின் வாசத்துடன் அதனை போடும் பெண்களின் சிரிப்பு வாசமும் வீட்டையே தன் மனத்தால் நிரப்பியது,,,,

அதே சமயம் மாடியில் இருந்த சுற்று வராண்டாவில் விளையாடிய குழந்தைகளின் குரலும் அவர்களின் சிரிப்பு சப்தமும் வீட்டையே கலகலப்பாக மாற்றியபடி இருந்தது, அந்த குழந்தைகளின் கூட்டத்தின் நடுவில் தான் அவள் இருந்தாள்,,, குழந்தைகளோடு கண்ணைக்கட்டிக் கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடியபடி இருந்தாள்,,, குழந்தைகளின் குரல் அவளை அங்கும் இங்கும் அலைக்கழித்தபடி இருக்க அவளும் உற்சாகத்துடனே தான் விளையாடினாள்,,,,

"""""ஏய் ஜீவா,,, என்ன என்னப்பிடி பார்க்கலாம்""""

""""""ஹய்யா ஜாலி,,, இன்னைக்கு ஜீவாக்கா தோற்கத்தான் போகுது"""""

""""""டேய் டேய் உன் பக்கத்துல வர்றா பாரு விலகு விலகு"""""

""""""அய்யோ ஜீவா பாத்து பாத்து""""""......

அவ்வளவு தான் கடைசியாக இந்தக்குரல் கேட்டபொழுது அவள் கால்கள் மாடிப்படிகளில் வைத்து தடுமாறியது,,, மாடிப்படிகளில் கவனத்துடனே கண்ணைக்கட்டியபடி இறங்கியவள் காலை சரியாக வைக்காமல் ஸ்லிப் ஆகி அப்படியே விழுந்துவிட்டாள்,,,, விழுந்துவிடப் போவதை அவள் கொஞ்சம் சுதாரித்து மாடிப்படிகளின் கைப்பிடி கட்டைச்சுவற்றை பிடிப்பதற்குள்ளாகவே
பொத்தென்று கீழே விழுந்துவிட்டாள்,,, ஆனால் என்னவொரு ஆச்சர்யம் என்றால் கீழே விழுந்தவளுக்கு கொஞ்சம் கூட வலிக்கவே இல்லை,,, அதுவும் இல்லாமல் தரை மெத்துமெத்தென்று நெளிந்தபடி இருக்க அவள் விழும்போது கேட்ட குரல்களை திரும்ப நினைத்துப் பார்த்தாள்,,,

""""""அய்யோ ஜீவா பாத்து பாத்து,,, அச்சோ போச்சே""""""

""""""அந்த அண்ணன் மேலேயே விழுந்து வச்சுட்டாளே"""""

""""""பாவம் இப்போ அவங்களுக்கு தான் வலிக்கப்போகுது"""""

கடைசியாக கேட்ட குரலோடு இன்னும் இன்னும் அவர்கள் பேசிக்கொண்டே போக தான் அவளுக்கு கொஞ்சம் விளங்கவே செய்தது,,, தான் யார் மேலேயே நன்றாக விழுந்து கிடக்கிறோம் என்று,,, பதறியபடியே எழ முயற்சித்து பாவாடை பின்னிவிட்டு திரும்பவும் அந்த மெத்தை மனிதன் மீதே விழுந்து கண்ணில் கட்டியிருந்த துணியை அவசரமாக எடுத்து முதலில் மன்னிப்பு கேட்டாள்,,

""""""""ஐயோ ஐயோ,,, ஐ அம் சாரி,,, என்ன,,, என்ன மன்னிச்சிடுங்க""""" வேகமாக சொல்லிவிட்டு அவள் எழ அவன் முன்னே கீழே அமர்ந்திருந்த இளைஞனோ ஜீவாவையே பார்த்தபடி இருந்தான்,,,,

உண்மைக்குமே அவன் விழிகள் எவரையும் கொக்கிப்போட்டு இழுக்குமோ என்னவோ!!!!! ஜீவாவை அவன் காந்தப்பார்வை அவன் பக்கம் இழுக்க,,, முதல் பார்வையிலேயே தனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவான் என அப்போதைக்கு ஜீவா என்ற ஜீவிதா நினைக்கவே இல்லை,,,, ஜீவா பேசியதற்கு அவன் வெகுநேரம் வரைக்கும் கூலாக அவளை பார்த்தான்,,, பார்த்துகொண்டே இருந்தவன் என்ன நினைத்தானோ எழுந்து நின்று இதழோடு விழிகளாலும் புன்னகைத்தபடி வார்த்தைகளை உதிர்த்தான்,,,,

""""""அடடா,,, ஷோ க்யூட்,,, என்ன ஒரு அழகான குட்டி தேவதை,,, ஹேய் பிரின்சஸ் இப்போ மட்டும் உனக்கு ஒரு பதினெட்டு இல்ல பத்தொன்பது வயசு இருந்திருந்தால் வாடி என் ராஜகுமாரின்னு அள்ளிக்கிட்டு போயிருப்பேன்,,,, பட் சோ சேட்,,, சரி நோ ப்ராப்ளம்,,, இப்போ வயசு ஆகலைன்னா என்ன??? அந்த அளவுக்கு வயசானதும் ஓடி வந்துடுறேன்,,, உன்ன அள்ளிக்கிட்டு போக"""""" அவன் பேசிக்கொண்டே போக இவளுக்கு அவன் பேசியதின் அர்த்தம் கொஞ்சம் கூட விளங்கவே இல்லை,,,,

"""""என்ன சொல்லுறிங்க நீங்க?????"""""

""""""ம்ம்ம்ம் சோ க்யூட்,,,, லவ் யூ சோ மச் மை டியர் லிட்டில் பிரின்சஸ்"""""" அவன் சொல்ல அவனை புரியாமலேயே பார்த்தவள் அவன் என்ன பைத்தியமோ என்று திருதிருவென விழிக்க கொஞ்சமும் யோசிக்காது அவன் அவனை சுற்றியிருந்த அத்தனை குழந்தைகளோடு
சேர்த்து அவள் நெற்றியிலும் முத்தம் கொடுத்துவிட்டு அனைவருக்கும் பொதுவாக கையசைத்து டாட்டா காட்டிவிட்டு வெளியே ஓடினான்,,,,
ஜீவா அவனையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருக்க வேகமாக சென்றவன் ஓரமாக கிடத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பேக்கை எடுத்து போட்டுக்கொண்டு புறப்பட்டுவிட்டான்,,, அவன் போவதை பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது,,, காரணம் அவன் யாரென்றே அவளுக்கு தெரியாதே,,, இந்த வீட்டிற்க்கு கொஞ்சமும் உரிமை இல்லாதவன் இத்தனை நேரம் வரைக்கும் அவளுடைய வீட்டிற்க்குள் இருக்கிறான் என்றால் அவன் யாராக இருக்கும் என்று சிந்தித்தவளாக இருக்க மழை கொஞ்சம் குறைந்தார் போல இருந்தது,,,,

மழை குறைவதை பார்த்து தான் அவன் புறப்படுகிறான் போல என்று நினைத்தவள் அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாதவளாக அவனை பின்தொடர்ந்து சென்றாள்,,, அவன் வெளியே போய்விட்டு வானத்தை பார்த்தான்,,, என்ன நினைத்தானோ!!!! இன்னுமொருமுறை திரும்பி வீட்டின் உள்ளே பார்க்க ஜீவா அவனை பின்தொடர்வது தெரிந்து அங்கிருந்தபடி காற்றில் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு வாசலில் இருந்த பெரிய கேட்டை திறந்துகொண்டு தூரலில் நனைந்தபடியே சென்றான்,,,

வீட்டு வாசலுக்கு நேரெதிரில் மழையில் நனைந்தபடியே இருந்த கருப்பு நிற காரை நெருங்கி கதவை திறந்துகொண்டு உள்ளே அமர்ந்தவன் கண்ணாடியை இறக்கிவிட்டுவிட்டு எட்டி வெளியே பார்த்தான்,,, ஜீவா அவனை ஆர்வமாக பார்க்க அவனோ அவன் வைத்திருந்த ஒரு கேமாராவை எடுத்து கிளிக்கினான்,,,, மழை கொஞ்சம் குறைந்து வெறும் தூரல் மட்டுமே போட்ட நிலையில் அதில் நனைந்தபடியே அவனை பார்த்தாள்,,, அவன் கேமராவில் இருந்து வந்த ஃப்ளாஸ் அவள் கண்களை கூச செய்ய கண்மூடி திறக்க,,,, அவனுடைய கார் அந்த இடத்தை விட்டு வேகமாக புறப்பட்டு சென்றது,,,,

ஜீவாவிற்கு இனி என்ன செய்வதென்று தெரியவில்லை,,, மனதின் ஓரம் சிறுவலி தோன்ற வேகமாக வெளியே ஓடிச்சென்று சாலையில் நின்று அவன் கார் போன திசையையே பார்த்தபடி இருந்தாள்,,, கார் அவள் கண்ணை விட்டு புள்ளியாய் மறைவது நன்றாகவே தெரிந்தது,,, கண்களை மூடி ஒரு பெருமூச்சோடு அவள் நிற்க மழை நன்றாக வழுக்க ஆரம்பித்தது,,, அதே சமயம் அவள் இதழோரம் உப்புக்கரிக்க அதன் பிறகு தான் அவளுக்க் அந்த உணர்வே வந்தது,,, தான் எதற்கு இப்பொழுது அழுகிறோம் என்பதை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை,,,,

எதற்காக இத்தனை கவலையும், சோகமும், அழுகையும், வலியும் என தெரியாமலேயே கண்கலங்க இடியும் மின்னலும் அடுத்தடுத்து விழ மின்னலில் வந்த வெளிச்சம் அப்படியே அவனுடைய கேமரா ப்ளாஷை நினைவு படுத்துவதாக இருந்தது,,, திரும்பவும் அத்தனை மழையிலும் நனைந்தபடி அவன் கார் போன திசையையே பார்த்தவளாக உறைந்து போய் நின்றாள்,,,, அந்த சமயம் பார்த்து தான் அவளை ஜீவாஆஆஆஆ என்று யாரோ அழைக்கும் ஒலி கேட்க அந்த குரலுக்கு உரியவரை நினைத்தாள்,,, அவளுடைய அம்மா மீனாட்சியின் குரல் அது,,,, அய்யய்யோ என்று பயந்தபடி நிற்கயிலேயே திரும்பவும் அந்த குரல் கேட்டது,,,,

"""""""ஏய் ஜீவாஆஆஆ"""""" அவர் அழைத்ததற்கு இதோ வந்துட்டேன்மா என்று சொல்ல தான் அவள் நினைத்தாள்,,, ஆனால் அவள் இதழ்கள் திறவாமலேயே """"ம்ம்ம்ம்ம்ம்""""" என்ற முனங்கள் சப்தம் தான் வெளியே வந்தது,,,,

""""""ஜீவாஆஆஆஆ""""""

"""""""ம்ம்ம்ம்ம்ம்""""""இவள் திரும்பத்திரும்ப முனங்க தற்பொழுது தாயின் குரல் வெகு அருகிலேயே கேட்டது,,,,

"""""என்னங்கடி என்ன பாத்தா உங்களுக்கெல்லாம் எப்புடி தெரியுது???? நானும் கூப்பிட்டுட்டே இருக்கேன்,,, நீ பாட்டுக்க ம்ம்ம்ம்ம் கொட்டிக்கிட்டே கெடக்க???? ஏன்டி தெனந்தெனம் இது ஒரு பொலப்பா!!!! ஏந்திரிச்சு வாடி""""" அம்மா மீனாட்சியின் சத்தம் பயங்கரமாக கேட்க சட்டென்று தூக்கிவாரிப்போட்டவளாய் எழுந்து அமர்ந்தாள்,,,,

""""""ச்ச்ச,,, மறுபடியும் அதே கனவா?????""""" இவள் சொன்னபடியே கலைந்திருந்த கூந்தலை அள்ளிக்கொண்டையிட மீனாட்சி இவள் சொன்னதை கேட்டுவிட்டு அறைக்குள் வந்தவராய் கேட்டார்,,,

""""""என்னடி என்ன கனவு????"""""" தாயின் கேள்வியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வழக்கம் போலவே மழுப்பினாள்,,, உண்மையை சொல்லி வாங்கிக்கட்டிக்க அவள் என்ன முட்டாளா???

""""""அதெல்லாம் ஒன்னுல்லம்மா,,,, ஆபிஸ்ல நேத்து நடந்ததையே நெனச்சுட்டு தூங்கிருப்பேன் போல,,,, அங்க இருக்க மாதிரியே கனவு வந்துருச்சு"""""

""""""நல்லா வந்துச்சுப்போ!!! இன்னும் இப்படியே படுத்துக்குட்டு கெடந்தா நல்லா போவ ஆபிஸுக்கு,,, அடச்சீய் எழுந்திரிச்சு போய் கெளம்பு,,, """""

""""""ஏம்மா இப்புடி காலையிலேயே கத்துற????"""""

"""""""ஆமாடி,,, சீக்கிரம் எழுந்து கெளம்புன்னு சொன்னா கேக்குறது இல்ல,,, ஒன்பது மணி வரைக்கும் பல்லப்பொளந்துட்டு தூங்கிட்டு அப்பறம் நேரமாச்சு நேரமாச்சுன்னு சாப்பிடாம கூட ஓடுவ.... எங்களையும் போட்டு கொல்லுவ"""""

""""""ம்ம்மாஆஆஆ,,,, இப்போ என்ன ப்ராப்ளம் உனக்கு????""""""

""""""எனக்கு என்னடி ப்ராப்ளம்???? நீ தூங்குனா தூங்கிக்கிட்டே கெடன்னு மடியில படுக்க வச்சு தாலாட்டு பாடிக்கிட்டு கூட இருப்பேன்,,, ஆனால் நீ போற வீட்டுல வெளக்கு வைக்குற வரைக்கும் நீ தூங்குனியன்னா!!!!! எல்லாரும் என்னத்தான்டி சொல்லுவாங்க,,,, புள்ளைய வளத்துருக்க லட்சனத்தை பாருன்னு என்னை தான் துப்புவாங்க"""""""

""""""ஆஹா.... ம்ம்மாஆஆ,,, இப்போ புரிஞ்சுருச்சு,,, நீ சுத்தி சுத்தி எந்த விசயத்துக்கு வாரன்னு,,,, காலையிலேயே எரிச்சல கெளம்பாம அங்குட்டு போமா"""""

""""""அங்குட்டு போவா!!!! ஏன்டி என்னப்பாத்த கேனச்சிறுக்கி மாதிரியா தெரியுது???? அந்தந்த வயசுல அது அது நடந்தா தான்டி பொண்ணுக்கு பெருமை,,,"""""

""""""அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எல்லாம் எனக்கு இன்னும் வயசு இருக்கும்மா?????""""""

""""""இப்போ இல்லன்னு யாரு சொன்னா???? ஆனா ஒனக்கு அப்பறம் கல்யாண வயசுல ஒருத்தி இருக்கான்னு நியாபகம் வச்சுக்கோ ஜீவா,,, இப்போ சொல்லு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடுவோமா?????"""""

மீனாட்சி அவளை ஆர்வமாக பார்க்க ஜீவா அம்மாவை பாவமாக பார்த்தாள்,,, தன்மேல் அம்மா எந்த அளவிற்கு பாசமாக உள்ளார் என்பது ஜீவாவிற்கே தெரியும்,,,,, சின்னவயசுல இருந்தே அவளுடைய ஒவ்வொரு தேவையையும் அவள் கேட்பதற்கு முன்பாகவே நிறைவேற்றி வைக்கும் குடும்பத்தினரின் ஒரே வேண்டுகோள் தான் அது,,, ஆனால் அவளால் தான் தீர்மானமாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை,,, அவர்களின் எதிர்பார்ப்பிலும் தவறு இருப்பது போல் இல்லை,,, மெல்ல எழுந்து அமைதியாகவே பெட்சீட்டை மடித்து பெட்கவரை சரிசெய்தபடியே பல்துலக்க பாத்ரூமிற்குள் நுழைய அம்மாவின் குரல் திரும்பவும் ஒலித்தது,,,,

""""""என்ன ஜீவா??? நான் கேட்டதுக்கு எந்த பதிலுமே சொல்லாம போற?????""""""

""""""ம்ம்மாஆஆ,,, ப்ளீஸ்"""""

""""""ஏன் ஜீவா??? ஏன் இப்புடி பண்ணுற??? எங்களுக்கும் ஆசை இருக்காதாடி"""""" என்று சொல்லும் பொழுதே அவள் பாத்ரூமை அடைத்து தாழிட மீனாட்சி கோபத்தில் கதவை தட்டிவிட்டபடி ஆதங்கத்தோடு திட்டிவிட்டு சென்றார்,,,,

""""""சரியான திமிர் புடிச்சவ,,, கேக்குறதுக்கு ஏதாச்சும் பதில் சொல்லுறாளா பாரு,,, அப்புடி நான் என்ன பெருசா ஆசைப்பட்டுட்டேன்,,, நம்ம குடும்பத்துக்கு மொதப் பொண்ணு,,, ஆசையாசையா வளத்து படிக்க வச்சு இப்ப வேலைக்கும் அனுப்பியாச்சு,,, அடுத்து கல்யாணத்தை பண்ணி ஒரு பேரன் பேத்திய பாப்போம்ன்னு பாத்தா எதுக்காச்சும் சரிப்பட்டு வர்றாளா!!!!! இப்ப வேணாம் இப்ப வேணாம்ன்னு ஓடுறாளே""""" புலம்பியபடி அறையை பெருக்கியபடியே வெளியே செல்ல ஜீவா அமைதியாக பாத்ரூமிற்குள் நின்றுகொண்டு கண்ணீர் வடித்தாள்,,,, கண்மூடி திறக்கும் பொழுதெல்லாம் அவன்முகம் மின்னல் போல வந்து வந்து போக அவன் நினைவுகளை கலைக்க ஷவரை திறந்துவிட்டு நின்றாள்,,,,
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருந்த தேவதை 2

காலை 8.45

ஜீவிதா குளித்து முடித்து ஆபிஸுக்கு தயாராகி காலை உணவுக்காக டைனிங் டேபிளில் அமர அவளுக்கு முன்பாகவே அவளுடைய குடும்பத்தினர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்,,,,

அம்மா - மீனாட்சி
அப்பா - முத்துராமன்
தங்கை - யோகா
தம்பி - ரக்ஸன்

தற்போதைக்கு அவளுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்கள் மட்டுமே,,, அப்பா ஒரு ப்ரைவேட் செக்டார் பேங்க்ல மேனேஜர்,,, அம்மா ஹோம் மேக்கர்,,,, யோக எம்.எஸ்.சி பைனல் இயர்ல இருக்க ரக்சன் இப்போ தான் பயோ டெக்னாலஜில முதல் வருடத்தில் இருந்தான்,,,, வீட்டுக்கு இவ தான் பெரிய பொண்ணு,,, குடும்பத்துக்கு இவ தான் முதல் பெண்ணும்,,,சோ வீட்டுக்கு கொஞ்சம் செல்லமும் இவளே தான்,,, பாசமான பொண்ணு,,, அம்மா, அப்பா, தங்கை, தம்பின்னு எல்லோரோடையும் ரொம்ப க்ளோஸ்.... குடும்பம்னு வந்துட்டா தன்னைப் பற்றி யோசிக்காம எதை வேணும்னாலும் செய்யத் துணியுறவ தான்,,,, ஆனால் கல்யாணம்க்குற ஒரு விசயத்துல மட்டும் துணிந்து எந்த முடிவுமே எடுக்க முடியாமல் இருந்தா,,,

பாவம் அவளால தான் எப்படி சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர முடியும்,,,, மனசுல ஒருத்தனை நினைச்சுட்டு இன்னொருத்தன மேரேஜ் பண்ணிக்குறேன்னு எப்படி அவளால சொல்ல முடியும்????? அதே சமயத்துல அவளால தன் மனசுல உள்ள விசயத்தையும் துணிந்து சொல்லிட முடியுமா??? அப்படி சொன்னா அவளை அவ குடும்பத்தினர் என்னவென்று நினைப்பாங்க,,,, பெயர் என்னன்னு தெரியாது,,, ஊரு என்னன்னும் தெரியாது,,, அவன் எங்க இருந்து வந்தான்னும் தெரியாது.... ஏன் வந்தான்னும் தெரியாது,,,, இப்படி எதுவுமே தெரியாம அவனுடைய உருவத்தையும் அவன் கொடுத்த முத்தத்தையும் மட்டுமே வச்சுட்டு கிட்டத்தட்ட எட்டு வருசமா முட்டாள் மாதிரி காத்துட்டு இருக்கவளை அவங்க என்னவென்று நினைப்பாங்க??? தன் நேசிப்பை அவங்களால தான் புரிஞ்சுக்க முடியுமா!!!! அப்படியே புரிஞ்சுட்டாலும் அவனை அவங்களால எப்படி தேடிக் கண்டுபிடிக்க முடியும்????

உனக்கு அந்த அளவுக்கு வயசாகும் போது ஓடி வந்துடுறேன்னு சொன்னவனுக்கு இன்னுமா நான் கல்யாண வயசை நெருங்கினது தெரியாமல் இருப்பான்!!!!! அவன் வருவானா??? மாட்டானா???? என தினம் தினம் தவமிருப்பவளை அவன் தேடி வர இன்னும் எத்தனை நாட்கள் தான் ஆகுமோ!!!!!!

ஜீவிதா அவனை பார்க்கும் போது அவளுக்கு பதினைந்து வயது தான் இருக்கும்,,, ஆனால் இப்பொழுதோ இருபத்து மூன்று,,, இந்த இடைப்பட்ட காலங்களில் அதாவது கிட்டத்தட்ட எட்டு வருட காலமாக அவள் அவனையே தான் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்,,,, அவன் பார்வை தந்த குறுகுறுப்பும் வார்த்தைகளில் இருந்த விஷமமும்,, விளையாட்டு பேச்சும் என அனைத்துமாக சேர்ந்து நினைவுகளாக கனவிலும் நனவிலும் வலம் வர தன் விருப்பத்தை வெளியே சொன்னால் என்ன நினைப்பார்களோ என்று அவன் வருவானா என காத்திருந்தாள்,,,, அவள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் வயதும் ஊரும் உலகும் காத்திருக்குமா!!!!! சொந்த மண்ணிற்கு பெற்றோர்கள் போய் வரும் நேரமெல்லாம் ஊரும் உறவும் அதைப்பற்றியே பேச இவள் வயதை ஒத்தவர்களும் கல்யாணம் ஆகி பிள்ளைகளை சுமக்க இவளை பெற்றவர்களுக்குள்ளும் ஆசை வந்துவிட்டது,,,, அதுவரை குழந்தையெனவே தெரிந்தவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டமென்ற நினைவும் வந்தது,,

மனதில் உள்ள ஆசையை மகளிடம் வந்து சொன்னால் அவள் பிடியே கொடுக்காமல் மலுப்பிக்கொண்டே இருந்தாள்,,, இன்றும் அப்படியே மலுப்பிவிடலாம் என்ற முடிவோடு வந்தவளை மீனாட்சி விடவேண்டுமே,,,சரி அப்படி என்ன தான் நடக்குதுன்னு பார்க்கலாம்,,,,

ஜீவா வந்து சாப்பிட அமர்ந்ததுமே அவளுக்கு பிடித்தமான உணவை மீனாட்சி அவள் தட்டில் எடுத்து வைக்க அவள் உற்சாகமாகவே சிரித்தபடியே கேட்டுவிட்டு சாப்பிட்டாள்,,,,,

""""""வாவ்,,,, இன்னைக்கு பொங்கலாம்மா,,, சூப்பர் சூப்பர்"""""

""""""ம்ம்ம்ம்,,, உனக்கு பிடிக்குமேன்னு தான் பண்ணிருக்கேன்,,,,கோழி மாதிரி கொத்திட்டு இருக்காம நல்லா அள்ளி சாப்பிடு"""""

அம்மா சொல்ல சிறுகுழந்தை போல சந்தோசப்பட்டு அவள் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊதி ஊதி ரசித்து ருசித்து சாப்பிட மகள் சாப்பிடுவதையே ரசித்தபடி இருந்த பெற்றவர்களுக்கு அவளால் சிறு வருத்தம் தான்,,, இத்தனை சந்தோசமாகவும் குறும்புத்தனமாகவும் இருக்கிற பொண்ணு கல்யாணம்னு ஒரு பேச்சை எடுத்தால் மட்டும் ஏன் இப்படி ஓடி ஒளிந்து கொள்கிறாள் என வருத்தமாக இருந்தது,,, அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் காத்திருந்த மீனாட்சி அவள் தட்டு காலியாவதை பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் பொங்கலை வைத்தபடி பேச்சை ஆரம்பித்தார்,,,,

""""""ஜீவாம்மா""""""

""""""என்னம்மா????""""""

""""""அது வந்து,,, அம்மாவ பாத்தா உனக்கு பாவமா தெரியலையாடி""""""

""""""என்னம்மா ஆச்சு உனக்கு ஏன் இப்படி பேசுற??? மேலுக்கு ஏதும் முடியலையா?????"""""

""""""ம்க்கும்,,, ஏன் மேலுக்கு என்ன??? அது கல்லு மாதிரி நல்லா தான் இருக்கு,,,, கல்யாண விசயத்தை பத்தி கேட்டேனே,,, என்ன சொல்லுற?????""""""

""""""ஐயோம்மா ப்ளீஸ்... மறுபடியும் ஆரம்பிச்சுட்டுயா!!!!! ப்பாஆஆஆ நீங்க கொஞ்சம் அம்மாவுக்கு புரியவைக்க கூடாதா!!!! எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்""""""

""""""அப்போ எப்பதான்டி பண்ணிப்ப??? கெழவி ஆனதுக்கு அப்புறம் பண்ணிக்கப்போறியா?????""""" அதுவரைக்கும் பொருமையாக சொல்லிட்டு இருந்த அம்மாவிற்கு இப்போது கொஞ்சம் கோபம் எட்டிப்பார்க்க மனைவியை சாந்தப்படுத்தினார் முத்துராமன்,,,

""""""மீனா,,,, இப்போ எதுக்கு நீ சத்தம் போடுற,,, பொருமையா சொல்லு""""""

""""""ஆமாங்க,,, இப்ப நாந்தான் சத்தம் போடுறேன்""""""

""""""கொஞ்சம் பொருமையா பேசுடி,,,"""" அப்பா சொல்வதை கேட்டுவிட்டு ஜீவா புன்னகையோடு சொன்னாள்,,,,

""""""நல்லா சொல்லுங்கப்பா,,, சும்மா சும்மா கல்யாணம் கல்யாணம்ன்னு என்ன நச்சரிச்சுட்டே இருக்காங்க,,, அப்படி எனக்கு என்ன வயசு ஆயிடுச்சு!!!! ஜஸ்ட் ட்வெண்டி த்ரீ"""""

""""""ஆஆஆஆ,,,, என்ன ஜஸ்ட் ட்வெண்டி த்ரீ???? உன் மனசுல என்ன பாப்பான்னு நெனைப்பா,,, இருபத்துமூணு ஆச்சு ஜீவா,,, இந்த வீட்டுல நீ ஒருத்தி மட்டும் பொம்பளப்புள்ள இல்லடி,,, உனக்கு அடுத்து யோகா வேற இருக்கா,,, உனக்கு முடிச்ச கையோட அவளுக்கும் பாத்து கல்யாணம் பண்ணனும்"""""

"""""""ஐயோ அம்மா,,,,, என்ன கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுறியா???? நல்லா தானே இருந்த,,, இப்போ என்ன ஆச்சு உனக்கு கல்யாணம் கல்யாணம்னு தொல்ல பண்ணிட்டு இருக்க""""""

"""""""ம்ம்ம்ம்,,, இப்போ தான்டி எனக்கு புத்தியே வந்துருக்கு,,, ஊருப்பக்கம் கல்யாணம் காதுகுத்துன்னு எதுக்கும் போக முடியல,,,, உனக்கு எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம்னு கேக்குறாங்க,,,, நானும் நீ படிக்குறன்னு விட்டேன்,,, இப்போ சுயமா வேலைக்கு போறன்னு விட்டேன்,,, இன்னும் விட்டுட்டே இருந்தா நீ இன்னும் ஏதாவது காரணத்தை என்னையே யோசிக்க வச்சு தள்ளிப்போட்டாலும் போடுவ""""" அம்மா பேச பேச மறுபடியும் தந்தையிடமே முறையிட்டாள்,,,,

""""""அப்பா ப்ளீஸ்.... அம்மாவுக்கு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்"""""

""""""சாரிம்மா,,,, இந்த விசயத்துல நான் உன் அம்மா கட்சி தான்""""""

""""""ப்பாஆஆஆ""""""

"""""""கல்யாணம் பண்ணிக்குறதுல என்ன பிரச்சனை ஜீவா உனக்கு????"""""

""""""பிரச்சனையெல்லாம் ஏதும் இல்லப்பா,,,, இப்போதைக்கு வேண்டாம்ன்னு தான்""""" ஜீவா என்ன சொல்லுறதுன்னு தெரியாமலே முழிச்சுட்டு இருக்க சாப்பிட்டு முடித்தவர் கைகழுவி விட்டு எழுந்து வந்து அவள் தோளில் கை வைத்தபடி பேசினார்,,,

""""""என்ன ஆச்சு ஜீவா?????"""""

""""""ப்பாஆஆ,,, கல்யாணம் பண்ணிக்குறதுல்ல ப்ராப்ளம் இல்லப்பா""""""

""""""பின்ன என்ன!!!!! பண்ணிக்க வேண்டியது தானே""""""

""""""அதுவந்துப்பா,,, ஒரு இரண்டு மூணு வருசத்துக்கு அப்புறமா""""" ஜீவா தன் மனதிற்குள் ஒரு கணக்கு வைத்து சொன்னாள்,,, எப்படியும் இந்த குறுப்பிட்ட காலங்களிர் அவன் வந்துவிடுவானோ என்ற நப்பாசையில் சொல்ல மீனாட்சுக்கு கோபம் தலைக்கு ஏறியது,,,,

"""""""கேட்டிங்கள்ள,,, இன்னும் இரண்டு மூணு வருசம் கழிச்சாம்,,, ஏற்கனவே ஏழு கழுத வயசாயிருச்சு,,, இதுல இன்னும் மூணு வருசம் போனா எவனும் இவள கட்டிக்க மாட்டான்"""""" அம்மா சொல்ல இம்முறை ஜீவாவிற்கு கோபம் வந்துவிட்டது,,,,

"""""ஏன்,,, ஏன்,,, ஏன் கட்டிக்க மாட்டான்,,, எனக்குன்னு ஒருத்தன் கண்டிப்பா வருவான்""""""

""""""கனவு தான் கண்டுட்டு இருக்கணும்""""""

""""""கனவெல்லாம் ஒன்னுமில்ல,,, நெஜமாவே எனக்கே எனக்குன்னு ஒருத்தன்,,, எனக்காகவே ஒருத்தன் என்னத்தேடி வரதான் போறான்"""""" அவள் உணர்ச்சிவசப்பட்டு பேச தாய் தந்தையர் இருவருமே ஒருவாறு நிம்மதியாகினர்,,, திருமணத்தை நினைத்து மகளுக்கு ஒன்றும் அந்த அளவிற்கு கவலை இல்லை என்பதை உணர்ந்தவர்கள் நிம்மதியாகினர்,,,,

""""""ஜீவா""""" அம்மா யதார்த்தமாக அழைக்க உணர்ச்சிவசப்பட்டு இருந்தவள் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொன்னாள்,,,,

""""" ம்மாஆஆ,,, ப்பாஆஆ,,, பேச்ச வளத்துட்டே போக வேணாம்,,, கல்யாணம் தானே பண்ணிக்குறேன்,,, கண்டிப்பா பண்ணிக்குறேன்,,, ஆனா கொஞ்சம் பொறுமையா இருங்க,,, நான் சொன்னது எனக்கானவன் புதுசாவா பொறந்து வரப்போறான்,,, வருவான்,,, எனக்கானவன் இவன் தான்னு எனக்கு எப்போ தோணுதோ அப்ப பண்ணிக்குறேன்"""""" அவள் சொல்ல இம்முறை கோபம் போய் அவளை பாவமாக பார்த்தார் அம்மா,,,,

""""""ஜீவாம்மா""""" அவர் என்னவோ சொல்ல வர அப்பா இம்முறை மகளுக்கு ஆதரவாக பேசினார்,,,

""""""மீனா விடு,,,, அவ தான் பண்ணிக்குறேன்னு சொல்லிட்டால்ல,,, கொஞ்சம் அவள ப்ரீயா விடு""""" அப்பா மகளுக்கு ஆதரவாக பேச அவள் இப்போதைக்கு தப்பித்தோம் என்று புன்னகையோடு அம்மா அப்பா கன்னத்தில் முத்தமிட்டு தம்பி தங்கையரிடம் கையசைத்து விடைபெற்று அலுவலகத்தை நோக்கி ஓடினாள்,,,,
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருந்த தேவதை 312876

அலுவலகத்தில் நுழைந்த பிறகு ஜீவிதாவிற்கு நேரம் போனதே தெரியவில்லை,,, காலையில் உள்ளே நுழைந்தவள் கொஞ்சம் கூட ஓய்வேயின்றி வேலை செய்து கொண்டிருந்தாள்,,, மதிய உணவை உண்பதற்கு கூட தாமதமாக தான் கிளம்பினாள்,,, மோஸ்ட்லி அனைத்துமே முடித்தாகிவிட்டது,,, இன்னும் ஒரு இரண்டு மூன்று பைல்களை புரட்டி பார்த்துவிட்டு அதை கம்யூட்டரில் ஏற்றிவிட்டால் அவளின் அன்றைய வேலை முடிந்துவிடும்,,, எதற்கு இத்தனை அவசரம் என்றால் அவள் இன்றைக்கு சீக்கிரமே வீட்டிற்க்கு போகவேண்டும்,,, பிகாஸ் இன்றைக்க் அவள் தோழி கார்த்திகாவிற்கு அந்த ஊரில் இருந்த பிரபலமான ஹாலிலே நிச்சயதார்த்தம்,,, கார்த்திகாவின் அப்பா பெரும்புள்ளியாதலால் குறிப்பிட்ட உறவுகளும் நட்புகளும் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கின்றன,, அவர்களில் ஜீவாவும் ஒருவள்,,,,

ஜீவாவும் கார்த்திகாவும் நல்ல தோழிகள்,,, கார்த்திகா ஜீவாவின் வயதை ஒத்த பெண்ணல்ல,,, சிறுவயதில் இருந்தே கார்த்திகா படிப்பில் கொஞ்சம் மந்தம்,,, மூன்று வகுப்புகளில் இரண்டிரண்டு வருடங்கள் படித்து ஒருவழியாக தந்தையின் தயவால் தான் கல்லுரியில் நுழைந்தாளே,,, அங்கே சென்றவளுக்கு ஜீவா நன்றாக படிப்பதை பார்த்தே பிடித்துவிட்டது,,, அவள் செமினார் எடுப்பது கூட புரியும் வகையிலேயே இருக்க எப்படியோ பேச ஆரம்பித்து நட்பாகி கடைசியில் அரியரே இல்லாமல் பாசானது வரைக்கும் ஜீவா தான் காரணமே,,, இரண்டு வீட்டு விசேஷங்களுக்கு இருவருமே போனது கிடையாது,,, அந்த அளவிற்கு நடந்ததும் இல்லை,,, முதல்முறையாக பத்திரிக்கையோடு வந்தவளிடம் வரமுடியாது என்று சொல்ல அவள் என்ன கல்மனதுக்காரியா????

கார்த்திகாவிற்கு என்ன தான் பள்ளியில் இருந்தே அவளுடைய பணத்திற்காக நிறைய தோழிகள் இருந்தாலும்,,, கல்லூரியில் ஜீவிதா மட்டுமே அவளுடைய உற்ற தோழி,,, பின்புலத்தை பார்க்காமல் மனதின் எண்ணங்களை வைத்து மட்டுமே தோன்றிய நட்பிது,,, அதனாலேயே என்னவோ மற்றவர்களை காட்டிலும் ஜீவிதா மீது தான் அவளுக்கு அதிக பாசமே,, ஜீவிதா படிப்பை முடித்ததுமே வேலைக்கு சென்றுவிட கார்த்திகாவின் வீட்டில் திருமணப்பேச்சு ஆரம்பமானது,,, கார்த்திகாவின் அப்பா அவருடைய பிஸ்னஸ் சர்க்கிலிலேயே ஒரு வரனை பார்த்து முடிக்க அதன் விளைவாகவே முக்கியமான உறவுகளை மட்டுமே அழைத்து நடத்தபடும் கார்த்திகாவின் நிச்சயதார்த்ததில் இவளுக்கும் அழைப்பு கிடைத்தது,,, கார்த்திகா தனது பெற்றோரோடு நேரிலேயே வந்து ஜீவிதா குடும்பத்தினரை வரவேற்று சென்றிருந்தாள்,,, நிச்சயதார்த்தம் தானே அதனால் ஜீவிதா மட்டும் போய் வந்துவிடலாம் என்று குடும்பத்தோடு பேசி முடிவு செய்திருக்க இன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்ப வேண்டும்,,,

கார்த்திகாவின் குடும்பத்தினர் வசதியானவர்கள்,,, அதனால் அவர்களுடைய வாழ்க்கை முறையுமே ஆடம்பரமானது தான்,,,, வாழ்க்கை முறையே அப்படியென்றால்!!! நிச்சயதார்த்தத்தை எல்லாம் எந்த அளவிற்கு ஆடம்பரமாக கொண்டாடுவர்,,, அங்கே போவதற்கு ஜீவா தன்னையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமே,,, இந்த ஐப்ரோ வேறு இஸ்டத்திற்கு காடு போல மண்டிக்கிடக்க புருவத்தையாவது சரிசெய்வோம் என்று ப்யூட்டி பார்லருக்கு போக நினைத்தாள்,,, இத்தனையெல்லாம் செய்ய வேண்டுமெனில் அவளின் அன்றைய வேலைகளை சீக்கிரமே முடிக்க வேண்டும்,,, அதற்காக தான் இத்தனை வேகமாக வேலை செய்ததும்,,,

ஆப்டர் நூன் லஞ்ச் டைமுக்கு வெறும் இரண்டு மூனு பைல்கள் மட்டும் தான் பெண்டிங்ல இருந்தது,,, அதையும் சாப்பிட்டு வந்ததும் முடித்து விடலாம் என்ற தைரியத்தோடு விரைவிலேயே சாப்பிட்டுவிட்டு அவளுடைய டேபிளுக்கு வந்தாள்,, அவள் அமர்ந்த சில நொடிகளிலேயே அந்த கம்பெனியின் சீஃப் அக்கௌண்டண்ட் சங்கர் சார் அவளை
வந்து அழைத்தார்,,,

"""""ஜீவிதா""""" என்று அவர் வந்து நிற்க இவள் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்,,,

"""""சார்???"""""

""""""சாப்பிட்டாச்சாம்மா????"""""

"""""" ம்ம்ம்,, ஆச்சு சார்,,, என்ன விசயம்????"""" அவள் கேட்க அவர் வருத்தம் தோய்ந்த முகத்துடனே சொன்னார்,,,

"""""ஒரு ஷேட் நியூஸ் ஜீவிதா,,, உன்ன எம்.டி கூப்பிட்டாரு"""""

"""""என்ன சார் காமெடி பண்ணுறிங்க??? எம்.டி கூப்பிடுறது ஷேட் நியூஸா????"""""

"""""அட நீ வேறம்மா,,, எம்.டி கூப்பிடுறது ஷேட் நியூஸ் இல்ல,,, அவரு சொல்லப்போற விசயம் தான் ஷேட்,,,, ம்ம்ம்ம்""""""என்று அவர் பெருமூச்சு விட இவள் விசாரித்து பார்த்தாள்

"""""அப்படி என்ன மேட்டர் சார்????"""""

"""""அது வந்தும்மா,, இல்ல இல்ல நீ அத அவர்க்கிட்டயே கேட்டுக்கோம்மா""""" ரொம்ப ரொம்ப வருத்தமாக ஃபீல் பண்ணி சொல்லிட்டு அவர் அவ்விடத்தை விட்டு செல்ல ஜீவிதாவும் அப்படியென்ன விசயமோ என்று எம்.டியின் அறைக்கு சென்றாள்,,,

""""எக்ஸ்யூஸ் மீ சார்,,, மே ஐ கம் இன்""""" அறைக்கதவை தட்டியபடி கேட்க எம்.டி நாகராஜன் உள்ளிருந்தபடியே குரல்கொடுத்தார்,,,,

""""க்கூ இஸ் திஸ்????"""" அவர் நிமிர்ந்து பார்க்காமலேயே யாரென்று கேட்க ஒரு புருவ சுழிப்புடனே கதவை திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டியபடி சொன்னாள்,,,

"""""இட்ஸ் மீ சார்,,, ஜீவிதா..."""" ஜீவிதா சொன்னதும் புன்னகையுடனே நிமிர்ந்தவர் அவளை வரவேற்றார்,,,

"""""ஜீவா,,, கம் இன் கம் இன்,,, உனக்கு எதுக்கு பர்மிசன்??? எப்போதும் போல வர வேண்டியது தானே!!!!""""

""""""சங்கர் சார் நீங்க கூப்பிட்டதா சொன்னார்"""""

"""""ஆமாடா கூப்டேன்,,, எல்லோர்க்கிட்டேயும் சொல்லியாச்சு,,, உன்கிட்ட மட்டும் சொல்ல முடியல,, சாப்பிட போயிட்டியாமே"""""

"""""ம்ம்ம்ம்ம்,,, என்ன விசயம் சார்??? எதுவும் ப்ராப்ளமா????"""""

""""""ஆமா,, நாம இரண்டு பேரு தானே இருக்கோம் ஜீவாம்மா,,, எதுக்கு சார் சார்ன்னு கூப்பிடுற??? எப்போவும் போல அங்கிள்ன்னு கூப்பிட வேண்டியது தானே!!!!""""" அவர் சாதாரணமாக சொல்லிவிட்டு சிரிக்க இப்பொழுது தான் ஜீவாவிற்கு கொஞ்சம் நார்மலாகவே இருந்தது,,, பிகாஸ் அவரு முகத்துல எந்த கவலையுமே தெரியவில்லை,,, ரொம்பவே கூலா அண்ட் இன் சேம் டைம் அவர் முகம் எந்த சங்கடமும் இல்லாமல் தெளிவாக தான் இருந்தது,,, அதனால ஜீவாவும் நிம்மதியுடனே அங்கே இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்,,,,

"""""சரி ஓகே அங்கிள்,,, இப்போ சொல்லுங்க என்ன விசயம்????"""""

""""""அது ஒன்னுமில்லடா,, நான் என்னோட வொர்க்ல இருந்து ரிலீவ் ஆகிடலாம்ன்ன் முடிவு பண்ணிருக்கேன்""""" அவர் திடுமென சொல்ல ஜீவாவிற்கு தூக்கிவாரிப்போட்டது,,,
!
""""""வாட்!!!!!! என்ன அங்கிள் சொல்லுறிங்க??? ஏன் இந்த திடீர் முடிவு!!!!"""""

""""""திடீர் முடிவெல்லாம் இல்லடா,,, என்னோட நிலைமை அப்படி,,, அதான்""""""

""""""அப்படி என்ன நெலமை வந்துருச்சுன்னு ரிலீவ் ஆகுறேன்னு சொல்லுறிங்க,,, அங்கிள் உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு ஃபீல் பண்ணுறிங்களா??? போங்க அங்கிள்,, நீங்க இல்லைன்னா இந்த கம்பெனியோட நிலைமை என்ன??? யாரு எடுத்து நடத்துவா??? வித்துட போறிங்களா!!!
என்னால உங்க இடத்துல வேற யாரையுமே வச்சு பாக்க முடியாது அங்கிள்,,, ப்ளீஸ் போகாதிங்க""""" அவள் பேசிக்கொண்டே போக அவர் புன்னகைத்தவராய் சொன்னார்,,,

"""""ஹேய் ஜீவா கூல் கூல்,,, ஐ நோ,,, என் மேல இங்க இருக்கவங்கள விட நீ ரொம்ப பாசம் வச்சுருக்கன்னு தெரியும்...."""""

""""""அதான் தெரியுதுல்ல,,, அப்புறம் ஏன் போறிங்க??? போறேன்னு சொல்லுற அளவுக்கு என்ன தான் ப்ராப்ளம்?????""""" அவள் கேட்டுக்கொண்டே போக அவர் நிதானமாக பதில் சொன்னார்,,,

"""""ப்ராப்ளம் தான் ஜீவாம்மா..."""""

""""""அங்கிள்???""""""

""""""நான் இப்போ ரிலீவ் ஆகுறதுக்குன்னு ஒரு ரீசன் இருக்குடா"""""

""""""அப்படி என்ன ரீசன்????""""

""""""எனக்குன்னு ஒரு பையன் இருக்கான்னு உனக்கு தெரியும்ல"""""

"""""ம்ம்ம் தெரியும்,,, இப்போ அதனால என்ன??? பையன் வச்சுருந்தா ரிலீவ் ஆகணுமா????"""""

"""""ஹேய் லூசுப் பொண்ணு,,, கொஞ்சம் நான் சொல்லுறத கேட்கிறியா????"""""

"""""சரி சொல்லுங்க"""""

"""""ஒரு அப்பாவா நான் என் பையனுக்கு பண்ண வேண்டிய கடமைன்னு நெறையவே இருக்குல்ல"""""

""""""ம்ம்ம்ம்ம்""""""

""""""அவனுக்கு அம்மா இல்ல,, நான் மட்டும் தான்,,, சின்னவயசுல இருந்தே ரொம்ப செல்லம் கொடுத்து வளத்துட்டேன்,,, அவன் என்ன கேட்டாலும் இல்லன்னு சொன்னதே இல்ல"""""

"""""சரி"""""

"""""அவனுக்கு பிடிச்ச படிப்பை படிக்க வச்சேன்,,, வெளிநாட்டுல போய் மேற்கொண்டு படிக்கணும்னு சொன்னான்,, அதையும் பண்ணிட்டேன்"""""

"""""சரி""""

""""""அவனுக்கு போட்டேஃக்ராபில பெரிய அளவுல அச்சீவ் பண்ணனும்னு ஆசை,,, சோ அவன் விருப்பப்பட்டபடியே அவனுக்கு புடிச்சதெல்லாம் பண்ணிட்டேன்,,, எல்லாமே அவன் நல்லதுக்குன்னு பண்ணினால் இப்போ அதுவே பெரிய பிரச்சனை ஆகியிருச்சு,,,
அவர் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல இவள் புரியாமல் கேட்டாள்,,,

"""""என்ன அங்கிள் சொல்லுறிங்க????"""""

""""""போட்டோ எடுக்குறேன்,, போட்டோ எடுக்குறேன்னு அவன் ஊரு ஊரா,, நாடு நாடா சுத்துறது,,, கண்ட பொண்ணுங்களை எல்லாம் போட்டோ எடுக்குறதுன்னு அவன் இப்போ இருக்குறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கு ஜீவா"""""

""""""இதுல என்ன அங்கிள் பயம்
???? போட்டோக்ராபி கூட ஒரு நல்ல கரியர் தான்,,, எத்தனையோ பேரு போட்டோக்ராபி லைன்ல சாதிக்கலையா??? உங்க பையனுக்கும் அது போல ஆசையோ என்னவோ!!!!"""""

""""""நீ சொல்லுறதும் சரி தான்டா,,, ஆனா இவன் பொண்ணுங்க கூட சுத்துறத பார்த்தா தான் பயமா இருக்கு,,, ஏதோ பார்ட்டி கீர்ட்டின்னு போறான்,,, இதெல்லாம் சரியா படலம்மா,,, எதுவும் முன்னப்பின்ன தெரியாத பொண்ண கூட்டிக்கிட்டு வந்துட்டு இவ தான் உங்க மருமகள்ன்னு சொல்லிடுவானோன்னு பயமா இருக்கு""""" அவர் கவலையாக சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவளோ விழுந்து விழுந்து சிரித்துவிட்டு சொன்னாள்,,,

"""""ஐயோ ஐயோ,,, அங்கிள் அங்கிள்,,, உங்கள வச்சுட்டு,,, நீங்க இப்போ பேசுறத பார்த்தா ஒரு டிபிக்கல்ட் இந்தியன் மாமியார் மாதிரியே இருக்கு""""""சொல்லிவிட்டு அவள் திரும்பவும் விழுந்து விழுந்து சிரிக்க அவர் இதழ்களுமே மெல்ல விரிந்தது,,,

"""""யூ நாட்டி,,, கிண்டல் பண்ணுற???"""""

""""""பின்ன என்ன அங்கிள்???? நீங்க சொல்லுறத பார்த்தா அப்படி தான் இருக்கு...."""""

""""""சரிடா,,, நீ என்ன வேணும்னாலும் நெனைச்சுக்கோ,, இப்போதைக்கு இருக்க சிட்சுவேசனுக்கு
நான் அவனை பிசினஸ்ல புகுத்துனா தான் நான் கவலைப் படுற மாதிரி எதுவும் நடக்காது"""""

"""""நீங்க சொல்லுறது சரிதான் அங்கிள்,,, அதுக்குன்னு அவர் விருப்பமே இல்லாம அவருக்கு தெரியாத ஒரு விசயத்தை திணிக்குறது சரியா????"""""அவள் கேட்க அவர் இதழ்கள் விரிய சொன்னார்,,,,

""""""யாருக்கு தெரியாது அவனுக்கா!!!! சின்னவயசுல இருந்தே இந்த ஃபீல்டுல ஊறி வளர்ந்தவன்டா,,, எப்படி தெரியாம இருப்பான்????""""""

""""""சோ,,, இனி அவங்க தான் பார்த்துக்க போறாங்க???""""""

""""""ஆமாடா,,,, எனக்கு எந்த அளவுக்கு எல்லாரும் டெடிக்கேட்டடா இருந்திங்களோ அதைப் போல அவன் மேனேஜ்மெண்டுலயும் இருக்கணும்"""""

""""""அங்கிள்,,, இத நீங்க சொல்லணுமா என்ன????"""""

""""""சொல்லணும்னு அவசியம் இல்ல தான்,,, ஆனால் சொல்லாம போயிட்டா என்ன நீ சும்மா விடுவியா,, கரிச்சு கொட்டிட மாட்ட????""""" விளையாட்டாக சொல்ல சிணுங்கினாள்,,,,

""""""அங்கிள்""""""என்று,,,

""""""சரி சரி கோவிச்சுக்காத,,, இதான் விசயம்,,, நாளையில இருந்து அவன் தான் உங்க புது எம்.டி""""" அவர் சிரித்தபடியே சொல்ல ஜீவாவிற்கு சங்கடமாகவும் கஷ்டமாகவும் இருந்தது,,, இத்தனை நாட்களில் அவர்கள் இருவருக்குள்ளும் உருவான பந்தம் அப்படி,,, ஆண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு பெண் குழந்தைகள் மீது ஒரு ஏக்கம் வருமே,,, அதே ஏக்கம் தான் ஜீவாவை பார்த்த போதும்,,,,அவர் இவளை பெண்ணைப் போலவே பார்க்க இவளும் அவரை தந்தையைப் போலவே கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்,,, இத்தனை நாட்கள் கூடவே இருந்தவர் திடுமென இப்படி சொன்னது கஷ்டமாக இருந்தது,,, ஆனாலும் இதுதான் நிலை என்றால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்று இயல்பாக பேசினாள்,,,,

""""""அங்கிள்,,, அதுக்காக ஒரேயடியா வராமலே இருந்துடாதிங்க,,, அடிக்கடி வரணும்,, என்கிட்ட பேசணும்"""""

""""""கண்டிப்பா"""""

""""""உங்க புள்ளைய பார்த்துட்டோம்னு என்ன மறந்துட்டு இருந்திங்க,,, அப்புறம் அவ்ளோ தான்"""" கண்களை உருட்டி மிரட்டி அவள் சொன்னாலும் குரலில் இருந்த வருத்தம் தன்னை அப்பட்டமாக வெளிக்காட்டவே எழுந்து வந்து அவள் தலையை வருட அவள் கவலையை மறந்து சிரித்தாள்,,,

"""""சரி ஓகே அங்கிள்,,, நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமாக போகணும்,,, பெண்டிங் வொர்க் இருக்கு,,, முடிச்சுட்டு கிளம்புறேன்,,, பை,,, டேக் கேர்""""" கைக்குலுக்கி அவசரமாக விடைபெற்றாள்,,, இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்தால் கண்கள் குளமாவதென்னவோ சர்வ நிச்சயம் தான்,,, அதற்காகவே விழுந்தடித்து வெளியே வந்தாள்,,,,

தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்து கண்களை மூடி தன்னைத்தானே நிலைப்படுத்திக்கொள்ள,,, காதுகளில் நாகராஜனின் குரல் கேட்டது போட்டோக்ராபி போட்டோக்ராபி என்று,,, தலையைக் குலுக்கி சரிசெய்தவள் திரும்பவும் கண்களை மூட அவன் உருவம் பளிச்சென்று வந்து போக அத்தனை பேர் சுற்றியிருந்தும் தலையில் அடித்துக்கொண்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்,,, மின்னல் போல அவன் உருவம் மனதில் வந்து வந்து நிழலாடி விளையாட வெளியே திடுமென வந்த மழையும் மின்னலும் அவள் மனதை வெளிப்படுத்துவதாகவே இருந்தது,,,
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருந்த தேவதை 4

13031

ஜீவா தன் வீட்டை நோக்கி போகும் பொழுது மாலை ஐந்தேமுக்கால் ஆகிவிட்டது,,, என்ன தான் வேகமாக முடிக்க வேண்டும், சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்று பரபரப்பாக வேலை பார்த்தாலும் அவளுடைய வேலையை முடிக்கும் பொழுது நான்கை நெருங்க,,, அதன் பின்னர் அவள் கிளம்பி பார்லருக்கு போனால்,,, இருபது நிமிட காத்திருப்பிற்கு
பிறகு அவள் எப்பொழுதும் த்ரெட் பண்ணும் ப்யூட்டிசியன் வரவில்லை என சொல்ல எரிச்சலுடனே அங்கிருந்து கிளம்பி ஒரு கிஃப்ட் ஷாப்பிற்குள் நுழைந்து ஒரு கிஃப்டை வாங்கிங்கொண்டு வீட்டிற்கு போய் சேரையிலே ஐந்தே முக்கால் ஆகிவிட்டது,,,,

அலைந்து திரிந்து வந்ததில் அசதியாக வேறு இருக்க வீட்டிற்கு போனதுமே கொஞ்சம் படுத்து எழுந்தால் நன்றாக இருக்கும் என்று கெஞ்சிய மனதை அடக்கியபடி சென்றாள்,,, பின்னே என்ன செய்வது சும்மாவே எங்கேயாவது கிளம்ப வேண்டும் என்றால் குறைந்தது அவளுக்கு இரண்டு மணி நேரமாவது தேவைப்படும்,,, சுடுதாரிலேயே அப்படியென்றால் புடவையில் என்னத்தை சொல்ல???? மூன்று மணி நேரமாவது வேண்டும்,,, இதில் போய் குளித்து முடித்து புடவையை தேர்ந்தெடுத்து அதைக்கட்டி கிளம்பவேண்டுமென்றால் இன்னும் எத்தனை மணி நேரமாகுமோ என்னவோ!!!!

இதில் இன்னுமொரு விசயம் என்னவென்றால் ஜீவாவிற்கு தனக்கென்று எதையும் தனியாக தேர்வு செய்யவே தெரியாது,,, அப்படியே செய்தாலும் அது விளங்கியமாதிரி தான் இருக்கும்,,, சுடிதாருக்கு ஜிமிக்கியையும்,,, புடவைக்கு மாடர்ன் ஆர்னமெண்டிகளையும் போடும் வித்தியாசமான ரகம்,,, ஆனால் மற்றவர்களுக்கு என்றால் பார்த்து பார்த்து சரியாக தேர்ந்தெடுப்பாள்,,, அவளுக்கென்று தேர்வு செய்தால் மட்டுமே மொத்த குடும்பமும் கலாய்த்து எடுத்து விடும்,, இதனாலேயே என்னவோ எல்லாவற்றையும் தாயின் பொறுப்பிலேயே விட்டுவிடுவாள்,,,
இன்றும் அப்படியே தான்,,, வீட்டிற்குள் நுழையும் பொழுதே அம்மாவையும் அவளுடைய அறைக்குள்ளேயே இழுத்து கொண்டு போய் நின்றாள்,,,,

""""""ம்மாஆஆ,,, ம்மாஆஆ,,, என் செல்ல அம்மால்ல,,, சீக்கிரமா எல்லாத்தயும் எடுத்து வை,,, நான் குளிச்சுட்டு வர்றேன்""""" என்றபடியே அவள் சொல்ல தாயிடம் இருந்து பதில் வந்தது,,

""""""அதெல்லாம் ஏற்கனவே ரெடியா எடுத்து வச்சுட்டேன்,,, நீ மொதல்ல டக்குன்னு போய் குளிச்சுட்டு வா""""""

""""""அய்,,, யூ ஆர் சோ ஸ்வீட்ம்மா,,, லவ் யூ""""" என்றபடியே அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டவள் முகத்தை நிமிர்த்து பார்த்து கேட்டார்,,,

""""""என்ன ஜீவா,,, பார்லர் போகலையா???"""""

""""""ஏன்மா நீ வேற அந்த கதைய கேட்குற,,, நான் அறக்கப்பறக்க கெளம்பி போய் அரைமணி நேரமா உக்கார்ந்துந்தா,,, இன்னைக்கு எனக்கு த்ரெட் பண்ணுற அக்காவே வரலையாம்"""""

"""""அதனால என்ன??? வேற ஆளுங்க இருந்துருப்பாங்கள்ள!!!!"""""

""""""இருந்தாங்க தான்,,, ஆனா எனக்கு அவங்கள்ளாம் சரிப்பட்டு வரமாட்டாங்க,,, அந்த அக்கா த்ரெட் பண்ணுனா தான் எனக்கு பண்ணுன மாதிரியே இருக்கும்""""""

""""""அட லூசு,,, அதுக்குன்னு இப்படியேவா போகப்போற???""""

""""""பரவால்லம்மா,,, இருக்கட்டும்"""""

""""''என்ன பரவால்ல???? சும்மாவே உன் நெத்தியில ஸ்டிக்கர் பொட்டு நிக்காது,,, அதுக்குன்னு தான் ஐலைனர்ல வரஞ்சுட்டு போயிட்டு இருக்க,,, மத்த எடுத்துக்குன்னா பரவாயில்லடி,,, புடவை கட்டும் போது பாந்தமா போனா தானே நல்லாயிருக்கும்,,, அங்க போய் கொஞ்ச நேரத்துலயே விழுந்துட்டா என்ன பண்ணுறது????"""""

"""""அம்மா,,, வெறும் ரெண்டு மணி நேரம் தானே,,, சமாளிச்சுக்கலாம்,,, நைட் டைம் தானே,,, அத்தனை கூட்டத்துர என் நெத்திய யாரு பாக்கப்போறா???? கார்த்திக்கு கூட என்ன கவனிக்க நேரம் இருக்கோ என்னவோ????""""""

""""""நிச்சயதார்த்தம் தானேடி,,, கல்யாணமா என்ன,,, உன்ன கவனிக்க கூடவா மாட்டா????""""""

""""""ம்மாஆஆ,,, அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்,,, நான் போய் மொதல்ல குளிச்சுட்டு வர்றேன்""""" என்றுவிட்டு அவள் ஓட மீனாட்சி சிரித்தபடியே மகளை கிளப்புவதற்கான அத்தனையையும் எடுத்துவைத்து காத்திருந்தார்,,,

அவளும் சொன்னதை போலவே விரைவாகவே குளித்துவிட்டு வர,,, தாயின் உதவியோடு ஒரு பட்டுப்புடவையை கட்டி,,, நீளமான பின்னலிட்டு முல்லைச்சரத்தை சூடி,,, எப்பொழுதும் பூசும் ஒரு க்ரீமை முகத்திற்கு பூசி,,, சற்று பெரிய அளவில் கோபுர வடிவில் ஒரு பொட்டிட்டு,, கண்களுக்கு மையிட்டு இப்படி அத்தனையையும் இட்டுவிட்டு,,, பெரிய குடை ஜிமிக்கியும், கழுத்தில் ஒரு லாங் செயினும்,, அட்டிகையும் போட்டு,, கைகளுக்கு பார்டர் வைத்தது போல புடவைக்கு மேட்சாக வளையல்களையும் போட்டுவிட்டு பார்த்தவருக்கு கொஞ்சம் பெருமையாக தான் இருந்தது,,, சிறிது மையை எடுத்து திருஷ்டி பொட்டிட்டவரை பார்த்து சிரித்தவள் அம்மா வேறுபுறம் திரும்பவும் சட்டென்று அழித்துவிட்டு நிற்க,,, தலையில் ஒரு குட்டை பரிசாக வாங்கிக்கொண்டாள்,,,,

ஏதோ அவள் கிளம்பியிருந்ததை பார்த்தால் அவளுக்கு தான் இன்று நிச்சயதார்த்தமோ என்று கூட தோன்றியது,,, காதில் இருந்த கல் ஜிமிக்கியும் லாங்செயின் டாலரும், அட்டிகையும் டாலடிப்பதை போல இருக்க,,, இவையெல்லாம் அதிகப்படியோ என்று கேட்டு வைத்தவளை அம்மாவோ முறைத்து பார்க்க சத்தமில்லாமல் பல்லைக்காட்டிவிட்டு புறப்பட்டுவிட்டாள்,,,
கார்த்திகாவின் நிச்சயதார்த்தம் அந்த ஊரில் இருந்த மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டல்ல தான் நடந்தது,,, மொத்தமாக ஐந்து அடுக்கில் இருந்த கட்டிடத்தில் க்ரௌண்ட் ப்ளோர் முழுக்க பார்க்கிங்கிற்காக ஒதுக்கியிருந்தார்கள்,,, அதிகப்படியான கூட்டம் ஒன்றும் இல்லாததும் சுற்றியிருந்த ஆடம்பரத்தின் வெளிப்பாடும் கொஞ்சம் பயத்தை வரவழைப்பதாகவே இருந்தது,,,

அத்தனை பெரிய ஹோட்டலில் ஆட்டோவில் போய் இறங்க ஒருமாதிரி தான் இருந்தது,, ஆனாலும் வெளியே வாசலிலேயே இறங்கி நடந்து போய் வியர்த்து வழிந்து அத்தனை நேரம் பார்த்து
பார்த்து செய்த ஒப்பனைகள் அழிந்துவிடுமே என்று தைரியமாகவே போய் இறங்கி நின்றாள்,,,

எத்தனையோ வருடங்களாக இருக்கும் ஊர் தான இருந்தாலும் இந்த நாள் வரைக்குமே இப்படிப்பட்ட இடங்களுக்கு வரும் சந்தர்ப்பம் அமையாததால் இன்று செல்லும் பொழுது கொஞ்சம் தயக்கமாக இருந்தது,,, ஆட்டோவில் இருந்து இறங்கி ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்து பேலன்ஸை வாங்கிவிட்டு திரும்பிப்பார்த்தால் அங்கே குழுமியிருந்தவர்கள் அவளையே ஒருமாதிரி கேவலமாக பார்க்க அவளுக்கு கோபம் தான் வந்தது,,,

""""""இன்னவாம்??? இவளுங்க எல்லாம் இதுக்கு முன்ன ஆட்டோவையே பாத்தது இல்லையாக்கும்,,,, ரொம்ப சீனைப் போடாதிங்கடி,,, என்னைக்குமே அதான் நிரந்தரம்,,, ஒரே ஒருநாள் ஒரு பூகம்பம் வந்து உங்க சொத்துபத்தையெல்லாம் உள்ளக்க இழுக்கட்டும், அப்புறம் உங்க நிலை,, இதையும் விட கேவலமா தான் இருக்கும்,,, ஆளப்பாரு,,, அடிங்க்,,,"""""என்று மனதிற்குள்ளேயே அர்ச்சித்து ஒரு கெத்தான பார்வை பார்த்தபடி அவர்களை கடந்து உள்ளே சென்றவளை வாயிலில் நின்ற செக்யூரிட்டி புன்னகையோடு வரவேற்க அவள் பதிலுக்கு புன்னகைத்து நன்றி சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்,,,

ரிசப்சனில் நின்ற பெண்ணிடம் அவள் போய் நிற்க அவள் விவரங்களை கேட்டுவிட்டு வழிசொல்லி அனுப்பினாள்,,,
செகண்ட் ப்ளோரில் தான் நிச்சயதார்த்தமாம்,,, லிஃப்டின் உதவியோடு செல்லலாம் என்று சென்று இரண்டு நிமிட காத்திருப்பிற்கு பிறகு உள்ளே சென்று செகண்ட் ப்ளோரை அழுத்தினாள்,,, கதவு மூடப்போகயில் இன்னும் ஒருவன் உள்ளே நுழைய திரும்பவும் லிஃப்ட் ஓபனாகி க்ளோஸ் ஆனது,,,

அவன் யாரென்றெல்லாம் கவனிக்காதவள் திரும்பவும் செகண்ட் ப்ளோர் என்று அழுத்தப்போக அவனும் அதே எண்ணை சொல்ல இவள் பொதுவாக அழுத்திவிட்டு நின்றுகொண்டாள்,,, முட்டாள்பெண் அவன் யாரென்று கொஞ்சம் நிமிர்ந்து பார்த்திருக்கலாம்,,, கவனிக்காமலேயை செகண்ட் ப்ளோர் வந்ததும் அவனுக்கு முன்பாகவே வெளியே வந்துவிட்டாள்,,,

வெளியே வந்து கவனித்து பார்த்தால் இருபுறமும் வரிசையாக வெறும் அறைகள் மட்டுமே இருந்தது,,, தூரத்தில் ஒரு பெரிய ஹால் தெரிய ஒருவேளை அது தான் நிச்சயதார்த்த விழா நடக்கும் இடமாக இருக்கும் என்று யூகித்தவளாய் அங்கே சென்றாள்,,, உள்ளே நிறையபேர் அங்கும் இங்கும் உலாவியபடி இருக்க,,, கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் கார்த்திகாவை மட்டும் காணவில்லை,, அவள் எங்கே என்று முட்டாள்தனமாக யோசித்த அவள் மூளையை தட்டி சரிசெய்தவள் உள்ளே ஏதேனும் அறைகள் இருக்கின்றனவா என்று பார்வையை ஓட்டியவாறே வந்தாள்,,,, எவரிடமாவது விசாரித்து பார்ப்போம் கார்த்திகா இருந்தால் உண்டு இல்லையெனில் வந்தவழியே திரும்பி போவோம் என்று சிந்தித்து பார்த்தால் எவருமே அவளை கவனிப்பது போல தெரியவில்லை,,, அப்படி கவனிப்பவர்களும் அவளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவே ஒருமாதிரியானது,,,,

"""""" என்ன கொடுமை ஜீவா,,, யார்க்கிட்ட கேட்குறது,,, கார்த்தீ,,, இப்படி என்ன தனியா நின்னு பொலம்ப விட்டுட்டியேடி"""""" என்று தனியா நின்று புலம்பிய நிமிடம் அவளுக்கு பின்னே ஜல் ஜல் என்ற கொலுசொலி கேட்க திரும்பியவள் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது,,, நிச்சயதார்த்திற்கு தயாரான நிலையில் மணப்பெண் அலங்காரத்தில் நின்றபடி இருந்த தோழியை பார்த்து உற்சாகத்தில் ஆர்ப்பரித்தாள்,,,,

""""""ஹேய் கார்த்தீஈஈஈஈ,,, ஹேய் வாவ்,, அழகா இருக்கடி,,,"""""என்றபடி அவள் நிற்க அந்த கார்த்திகாவோ ஜீவா என்று ஓடிவந்து கட்டிக்கொள்ள இவளிடம் சின்ன சிரிப்பொலி மட்டுமே கேட்டது,,, ஜீவா சிரிக்கவுமே அவளுடைய அணைப்பை இறுக்கியவளிடம் இருந்து அவசரமாக விலகி நின்றாள்,,,

"""""எருமமாடு,,, நீ மாறவே மாட்டியா??? மூச்சுவிட முடியல""""""

""""""அதெல்லாம் மாத்திக்க என்னால முடியாது,,, ஆமா எப்போ வந்த நீ,??? வந்ததுமே என் ரூம்க்கு வர வேண்டியது தானே,,, இங்க என்ன பண்ணிட்டு இருக்க????""""""

""""""ஹாங்,,, சைட் அடிச்சுட்டு இருக்கேன்,, ஆளப்பாரு,,, உன்ன தான் தேடிட்டு இருந்தேன்""""""

"""""அதான் கையில போன் வச்சுருக்கல்ல,, ஒரு கால் பண்ணி கேட்கவேண்டியது தானே"""""

""""""வாஸ்த்துவமான பேச்சு தான்,, பட் எனக்கு அந்த டைம்ல எதுவும் தோணல""""""

""""""எது எப்படியோ,,, நீ வந்துட்டல்ல அதுவே போதும்,,, ஆமா நீ மட்டும் தான் வந்தியா??? அம்மா அப்பால வரல""""""

""""""இல்ல கார்த்தி,,, எல்லோரும் மேரேஜ்க்கு ஆஜர் ஆகிடுவாங்க""""""

"""""""ம்ம்ம்ம்,,,, ஜீவா,, இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி,,, நான் மட்டும் இப்படி மேக்கப் போடாம இருந்திருந்தா எல்லாருமே நீ தான் கல்யாணப்பொண்ணுன்னு நினைச்சுப்பாங்க,,, சும்மா கலக்கலா வந்துருக்க போ""""""

""""""ரொம்ப ஓட்டாத கார்த்தி,,, அம்மா தான் இப்படி பண்ணிவிட்டாங்க,,, கொஞ்சம் ஓவரா தெரியுறமாதிரி இருக்குல்ல,,,"""""

"""""ம்ம்கூம்,,, எல்லாம் சரியா தான் இருக்கு,,, சரி வா,,, நான் உன்ன எல்லார்க்கிட்டேயும் இன்ட்ரோ பண்ணுறேன்,,, முக்கியமா ரகுக்கிட்ட"""""

"""""ரகு?????"""""

""""""நீ இன்விடேசன பார்க்கவே இல்லையா,,, அவர் தான் என் ஃபியான்ஸி""""

""""""சாரி கார்த்தி,,, எங்க அவரு????"""""

"""""""வா கூட்டிட்டு போறேன்""""" என்று சிறுகுழந்தை போல ஜீவாவின் கைப்பிடித்து அழைத்து சென்றவள்,,, அத்தனை பேரிடமும் அறிமுகப்படுத்தி வைக்க,,, சற்று நேரத்திலேயே அதுவரைக்கும் இருந்த ஒதுக்கம் மறைந்து இயல்பாகிப்போனாள்,,,,

புதிய இடமென்ற நினைப்பே வராத வண்ணம் கார்த்திகா அவளை கவனித்துக்கொள்ள,, கொஞ்சம் தனிமையை உணர்ந்தது என்னவோ பாவம் அந்த ரகு தான்,,, ஜீவாவுடனே அவள் இருந்தால் அவன் என்ன செய்ய முடியும்,,, என் வருங்கால மனைவியை என்கிட்டேயும் கொஞ்சம் பேச விடும்மா என்று அவனே ஜீவாவிடம் கேட்டது தான் அங்கே அதிகம் சிரிப்பை வரவழைப்பதாய் இருக்க,,, வெட்கத்துடனே அப்பொழுதும் கார்த்திகா தோழியை கவனிக்கவென்றே ஒருவரை துணைக்கு வைத்துவிட்டே தான் சென்றாள்,,, பாவம் அவள் துணைக்கென இருந்த பெண்ணும் தான் எத்தனை நேரத்திற்கு அமைதியாகவே இருக்கமுடியும்??? இதோ வருகிறேன் என்று போனவள் தான் திரும்ப வரவே இல்லை,,, அந்த நேரம் தான் இவளுக்குமே கொஞ்சம் ஒருமாதிரி இருந்தது,,,,

...
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருந்த தேவதை 5
13250
நிச்சயதார்த்த நிகழ்ச்சி அதன்போக்கில் நடந்துகொண்டிருக்க வெகு நேரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு தான் நேரமாக ஆக உட்கார்ந்து கொண்டே இருப்பதற்கு ஒரு மாதிரி இருந்தது.. எதற்காக இத்தனை நேரம் இப்படி அமர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எழுந்தாள்... யாரையுமே தெரியாத இடத்தில் யாரிடம் தான் பேசுவது? கைகளில் போனையும் எவ்வளவு நேரம் தான் நோண்டிக்கொண்டே இருப்பது? என்ன செய்வது என்று புரியாமலேயே அவள் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டாள்..

சுவர்களில் தொங்கப்பட பட்டிருந்த வண்ணவண்ண பூக்களும், ஆங்காங்கே ஒட்டி வைக்கப்பட்டிருந்த பலூன்களும் அவளுடைய கவனத்தை கவர கால் போன போக்கில் அனைத்தையும் பார்த்தபடியே நின்றவளுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொன்னது, யாரோ அவளை கவனிக்கின்றனர் என்று. யாராய் இருக்கும் என்று விழிகளை சுழலவிட்டவள் பார்த்துவிட்டாள்.. அவளை விட சற்றே பெரியவனாக இருந்த ஒருவன் ஜீவாவையே விடாது பார்த்துக் கொண்டிருந்தான்.. இதழோரப் புன்னகையை இவள் மீது வீசியவன் ஜீவா பார்த்ததை உணர்ந்ததுமே அருகே தயங்கித் தயங்கி வர இவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது...

எத்தனையோ இடங்களில் இது போன்ற பார்வைகளை எல்லாம் பார்த்தபடியால் அவளால் இயல்பாக இருக்கமுடிந்தது தான்.. ஆனால் அவன் வந்து இவளிடம் பேசவேண்டும் என்ற முனைப்போடு சுற்றிக்கொண்டிருக்க, நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஒருபக்கம் பஃப்பை மெத்தடில் உணவும், மற்றொரு பக்கம் மேற்கத்திய நடனமும் நடந்து கொண்டிருந்தது.. இப்பொழுதே சாப்பிட அவளுக்கு தோன்றாததால் அவள் அங்கேயே நிற்க அவன் வந்துவிட்டான்...

"ஹாய்ங்க நான் விஸ்வா..."என்றவனை ஒருமாதிரி இவள் பார்க்க அவனே தொடர்ந்து பேசினான்...

"சாரிங்க எதுவும் தப்பா நெனச்சுக்காதிங்க, நான் ரகுவோட தம்பி..."என்கவும் தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியானது..

"ஓஓஓ... சொல்லுங்க..."

"இல்ல, எல்லாரும் டான்ஸ் பண்ண போறாங்களாம், எனக்கும் ஆசையா இருக்கு..." என்றவனை ஏதோ வினோத ஜந்துவைப் போல இவள் பார்க்க அவனே தொடர்ந்தான்...

"சாரிங்க தெளிவா சொல்லாமலே பேசிட்டு இருக்கேன். ஜோடி ஜோடியா ஆடணும். எனக்கு ஃபேர் இல்ல, சோ இஃப் யூ டோன்ட் மைண்ட்..." அவன் இழுக்க சட்டென்று சொல்லிவிட்டாள்...

"சாரி எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல, நீங்க வேற யார்க்கிட்டேயாவது..." எனும் பொழுதே அங்கே மேற்கத்திய இசை இசைக்க ஜோடி ஜோடியாக நின்றவர்கள் இசைக்கு தகுந்தாற்போல ஆட ஆரம்பித்துவிட்டனர்... என்ன நடனமோ! என்று அவளும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. முக்கியமாக கார்த்திகாவும், ரகுவும் அவர்களில் ஒரு ஜோடியாக இருக்க அவர்களுக்காகவே அவள் அந்த நடனத்தை பார்த்தாள்...

ஒரே கூட்டமாக இருந்ததினால் எத்தனை ஜோடி ஆடுகின்றனர் என்று முதலில் குழம்பினாலும் நேரம் ஆக ஆக, கொஞ்சம் கொஞ்சமாக டயர்டாகி ஒதுங்க ஒரு ஆறு ஜோடிகள் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தது... அந்த ஆறு ஜோடிகளில் ஒரு ஜோடி மட்டுமே அனைவருடைய கவனத்தையும் ஆதரவும் பெற்று ஆடிக்கொண்டிருந்தனர்... அந்த பெண்மணிக்கு ஒரு நாற்பத்தைந்து ஐம்பது வயது இருக்கும் ஆனால் அவரோடு நடனமாடியவனோ சிறுவயது இளைஞனாக தெரிந்தான். முகம் காட்டாது அந்தப்பக்கமாகவே திரும்பி திரும்பி அந்த அம்மாவை மட்டுமே சுழற்றி சுழற்றி அவன் ஆட, ஆட வைக்க பார்ப்பவர்கள் அனைவருக்குமே அவ்வளவு உற்சாகமாக இருந்தது...

அத்தனைபேரும் இளஞ்சிட்டுகளின் இடையை தழுவியாட அவனோ அழகாக தோளில் மட்டுமே கைப்போட்டு, விரல்களை பிடித்து பிடித்து சுற்ற அந்த அம்மாவும் வயதை மறந்து ஆடி சிரிக்கயில் அத்தனை ஒரு அழகு... மூச்சிமட்டும் வாங்காமல் இருந்திருந்தால் இன்னும் ஆடியிருப்பாரோ என்னவோ? அவர் மூச்சி வாங்கி விலகிக்கொள்ள அவனோடு ஆடவென்றே ஒரு கூட்டமே கூடிவிட்டது...

முதலில் அவன் முகத்தை பார்க்க முயற்சித்தவள், எவ்வளவு முயன்றுமே பார்க்கமுடியாமல் போக, அட யாராய் இருந்தால் எனக்கென்னவென்று அவ்விடத்தைவிட்டு நகன்று சென்றுவிட்டாள்... இரவு ஒன்பது மணிக்கு தான் வீட்டிற்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வந்ததால் நேரமாக ஆக எந்த ஒரு பயமுமே இல்லை... கண்ணாடி சன்னல் ஓரமாக போய் நின்று வெளியே சாலையில் செல்லும் வண்டிகளையே வேடிக்கை பார்க்க ஏதேட்சையாக தோழியை பார்க்க திரும்பியவளின் பார்வை அப்படியை குத்திட்டு நின்றது...

'இது அவனா? அவன் தானா? அவன் என்ன தேடி வந்துட்டானா? ஜீவா நல்லாபாரு அவன்தானா?' என்று தனக்குள்ளேயே பிதற்றியபடி அவள் அவனை நோக்கி ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவளை போல சென்று நிற்க, ஒரு எட்டு வயது குட்டிப்பெண்ணை கைகளில் தூக்கி சுற்றியபடியே நடனமாடியவன் இவளை பார்த்ததும் அந்த குழந்தையை விட்டுவிட்டு கையை நீட்ட தன்னிச்சையாகவே அவன்விரல் கோர்த்துக்கொண்டாள்...

அடுத்து என்ன நடந்தது என்பதெல்லாம் இவளுக்கு முற்றிலும் நியாபகமே இல்லை... இது அவன் தானா? அவனே தானா? என்று தனக்குதானே கேட்டபடியே அவள் இருக்க, அவன் அவள் விரல்களை பிடித்து இழுத்து ஒற்றைவிரலை பிடித்துக்கொண்டு உடலுரசாமல் சுற்றி சுற்றி ஆடி முடிக்க கடைசியில் பெரிதாக கைத்தட்டும் ஓசை கேட்டு தான் சுயநினைவுக்கே வந்தாள்...

சுற்றி நின்றவர்கள் எல்லாம் இவளை பார்த்து இல்லை இல்லை இவர்களை பார்த்து கைதட்ட, அவன் அனைவருக்கும் நன்றி நல்கிக்கொண்டிருந்தான்... கடைசி வரைக்கும் ஆடியவர்கள் இவர்கள் தான் போலும், கார்த்திகா ஜீவாவை வந்து கட்டிக்கொண்டு ஆகா ஓகோ என்று பாராட்டு பத்திரம் வாசிக்க அந்த விஸ்வா கூட வந்து பொறாமை ஏதுமின்றி பாராட்டிவிட்டு தான் சென்றான்.. இவர்களிடம் எல்லாம் பேசிவிட்டு திரும்பி பார்த்தால் அவன் நின்ற இடத்தில் யாருமே இல்லை.. ஒரு நிமிடத்தில் உயிரே போய்விட்டது...

எங்கே அவன்? எங்கே சென்றான்? தன்னுடைய எட்டு வருட காத்திருப்பிற்கு கடவுள் கொடுத்த வரமாக தான் அவனுடன்
கழித்த நிமிடங்களை நினைத்து சந்தோசப்பட்டாள். இப்பொழுது அத்தனை சந்தோசமும் மொத்தமாக பறிபோனது போல இருந்தது.. ஒருவேளை கடந்து போன நிமிடங்கள் எல்லாம் வெறும் கனவு தானா என்ன? அவன் தன் மனதின் கற்பனையோ!!! இல்லவே இல்லையே என்று அவன் தொடுகையை நினைத்து அவள் அவனை விழிகளாலேயே தேட ஆரம்பிக்க ஒரு ஐந்து நிமிட தேடலுக்கு பிறகு அவள் விழிகளில் விழுந்தான் அவன்...

ஆனால் அவளை பாதித்த விசயம் என்னவென்றால்? அவன் ஜீவாவை கண்டுகொள்ளவே இல்லை. போனிலேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தவரிடம் பேசிக்கொண்டிருக்க, ஜீவாவிற்கு அன்றைய நாள் நினைவில் வந்து போனது... இன்னும் அவனுக்கு போட்டோக்ராபியில் தான் விருப்பம் போல என்றெண்ணி தன்னை பார்க்கிறானா இல்லையா என்று அவனையே சுற்றி சுற்றி வர அவள் கார்த்திகாவிடம் பேசிய சிறிய இடைவெளியில் காணாமல் போய்விட்டான்...

"ஐயோ, இப்ப எங்க போனான்?..." என்று விழிகளாலேயே அவள் தேடிக்கொண்டிருக்க அவள் பின்னே ஒழித்தது ஒருகுரல்...

"யார தேடிட்டு இருக்க?..."என்ற கேள்வியில் திடுக்கிட்டு திரும்பியவள் அவளுக்கு அருகே அவனை, அவன் விழிகளை நேருக்கு நேராக பார்த்துவிட்டு திணறினாள்...

"அது,அது வந்து..." என்று உலறியவளை பார்த்தவன் போனை பார்த்தபடியே கேட்டான்...

"எதுக்கு இவ்ளோ திணறல்? சரி வா..." என்றழைக்க சுயநினைவு வந்தவளாக கேட்டாள்..

"எங்கே?..."

"ம்ம்ம்.. சாப்பிடத்தான். எல்லாரும் சாப்பிடுறாங்களே, உனக்கு பசிக்கலையா?..."

"ம்ம்ம்..."

"என்ன ம்ம்ம், வா..."என்று அவள் கைப்பிடித்து அழைத்து செல்ல ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பவளைப் போல அவன் பின்னேயே சென்றாள்...

இவள் தேமே என்று நிற்க அவனே இருவருக்குமான உணவை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க, அவனின் அக்கறையில் ஜீவாவிற்கு அப்படியொரு சந்தோஷம்.. ஒருவேளை இது கனவாக இருந்து, சந்தேகப்பட்டு கிள்ளிப்பார்த்தால் கனவு கலைந்துவிடுமோ என்று அமைதியாகவே அவனை விழிகளால் புசித்து, வயிற்றுப்பசிக்கு அவன் கொடுத்ததை உள்ளே தள்ள அதன் பின்னரும் அவனே பேசினான்...

"சோ, நெக்ஸ்ட் என்ன ப்ளான்?..." என்று கேட்டவனிடத்தில் உதட்டை பிதுக்கினாள்...

"என்ன ப்ளான்? ஒன்னுமில்லயே, நீங்க தான் சொல்லணும்..."

"லிசன் இன்னும் எத்தனை நேரத்துக்கு தான் நீயும் நானும் பார்த்துட்டே இருக்கப்போறோம்? நெக்ஸ்ட் ஸ்டேஜூக்கு போக வேணாமா?..."என்று கேட்க அவளுக்கு அப்பொழுது தான் நினைவே வந்தது.

இந்த எட்டு வருடப்பயணத்தில் இருவருக்குள்ளும் நடந்த நிகழ்வுகளை அவர்களின் தேடல்களை, தங்களின் காதலை பற்றி பேச வேண்டாமா? பார்த்துக்கொண்டே இருந்தால் பசியாறிவிடமுடியுமா என்ன? அவன் கேட்டதும் தான் அந்த நினைவே இவளுக்குள்ளும் வர சாப்பிட்டபடியே கேட்டாள்...

"என்ன பண்ணலாம்?..."

"ஹாங்.. தட்ஸ் குட்.. நீ இங்க இருந்து இன்னும் உன் ப்ரண்ட் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைக்குறியா? சே எஸ் ஆர் நோ..."

"நோ, பட்...."

"உன் ப்ரண்ட் கூட இருக்கணுமா?..."

"ஏன் இப்படி கேட்குறிங்க?..."

"இத்தனை கூட்டத்துல உன்ன காணும்னா தேடுவாங்கன்னா நினைக்குற?..."

"இல்ல தான்.. ஆமா ஏன் இப்படி கேட்குறிங்க?..."

"அப்போ ஏன் இவ்ளோ தயக்கம். கமான், வேற எங்காவது போலாம். இங்க நமக்கு ப்ரைவசி கிடைக்காதுன்னு நினைக்குறேன்..."

"எங்க போறது?..."

"எங்காவது.." எனும் போதே அவள் சாப்பிட்டுவிட்டு கைகழுவ செல்ல இவனும் அறைகுறை உணவுடனே எழுந்து கைகழுவி வந்தான்...

"என்ன சொல்லுற போலாமா?..."

"போலாம் ஆனா, இந்த நேரத்துல..."என்றபடி அவள் நடக்க முயல அருகே இருந்த டேபிளில் இருந்த ஆணியில் அவள் புடவை தலைப்பு நன்றாக மாட்டிக்கொண்டது.. அவள் அதை எடுக்க முயற்சிக்க இவன் பரபரத்தான்...

"ஓஓஓ, வாட் ஹேபன் டியர்? நான் வேணா..." என்று அவன் அவளுக்கு உதவுவதாக நினைத்து இன்னும் கொஞ்சம் கோர்த்துவிட இவள் பட்டுநூல் பிரியாமல் எடுக்க முயற்சித்தபடி இருந்தாள்..

"நான் நானே எடுக்குறேன்..." என்று எடுத்தவளிடம் அவன் அடுத்து சொன்ன வார்த்தைகள் தான் இடியாய் இறங்கியது...

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே! எங்க போலாம்? உனக்கு கம்பர்ட்டா இருக்க ப்ளேஷா சொல்லு, பார்க், பீச், ஹோட்டல்.. பேசாம ஒன்னு பண்ணலாம் என் ப்ரண்டோட ஹெஸ்ட்ஹவுஸ் இருக்கு அங்க போயிடலாம், ஒரு இரண்டு மணி நேரம் உனக்கு ஓகே தானே. ஆக்ட்சுவலி எனக்கு டென் மினிட்ஸ் போதும், மத்ததெல்லாம் உனக்காக தான்..."என்று அவள் தோளை தொட்டபடி அவன் சொல்ல அதுவரைக்கும் அவளிடம் இருந்த மொத்த சந்தோசமுமே இப்பொழுது காணாமல் தொலைந்து போனது...

'இவன் என்ன பேசுகிறான்? எதைப்பற்றி பேசிகிறான்? ஒருவேளை!...' என்று நினைத்தவளின் விழிகள் தானாகவே குளமாக அவனே பொறுமை இழந்தவனாக சொன்னான்...

"என்னயா ரொம்ப மாட்டிக்கிச்சா.. சரி அப்போ ஒன்னு பண்ணலாம். நான் பார்க்கிங்ல போய் காரை எடுத்துட்டு வந்துடுறேன். நீ லாபில வெயிட் பண்ணு..." என்றுவிட்டு அவன் ஓட திடுதிடுக்கும் இதயத்துடனும் வலி நிறைந்த மனதுடனும்
பட்டுப்புடவை என்றும் கூட பார்க்காமல் வெடுக்கென்று இழுத்து பிய்த்துவிட்டு நடையைக் கட்டினாள்...

அவன் தன்னை பார்த்தாலும் தான் இனி அவனை பார்த்தாலும் தனது எட்டுவருடக்காதலுக்கு இழுக்கு என்று, இவனையா காதலித்தோம் என்று தன்னைத்தானே நொந்து அவன் கண்ணில் பட்டுவிடவே கூடாது என்று அவசர அவசரமாக தோழியிடம் கூட சொல்லிக்கொள்ளாது அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்...
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருந்த தேவதை 6
13419

தப்பித்தோம் பிழைத்தோம் என அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என்ற பயத்துடனே அவள் அங்கிருந்து கிளம்பி எப்படியோ வீட்டை நோக்கி வந்தாள்.. அபார்ட்மெண்ட் வாயிலிலேயே ஆட்டோவை நிறுத்தியவள் இறங்கி நடந்தபடியே தன்னை நிதானப்படுத்திக்கொண்டு செல்ல கண்கள் குளமாவதை மட்டும் தடுக்கவே முடியவில்லை.. அபார்ட்மெண்ட்வாசிகள் என்பதால் எவன் எவன் எங்க போனாலும் வந்தாலும் செத்தாலும் கூட யாருக்குமே கவலை இருக்காது.. இரவு நேர வாட்ச்மேன் மட்டும் சேரில் அமர்ந்தபடியே இப்பொழுதே தன்னுடைய உறக்கத்தை ஆரம்பித்திருக்க, விழிகளை கண்ணீர்திரையிட்டு மறைத்திருந்தாலும் தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டவளாக வீட்டு வாசலில் போய் நின்றாள்.. க்ரௌண்ட் ப்ளோர்ல தான் அவளின் வீடுமே.. வீட்டு வாசலில் போய் நின்று காலிங்பெல் அடிக்கும் சமயம் எதுவுமே நடவாதது போல முகத்தை வைத்துக்கொள்ள கொஞ்சம் சிரமப்பட்டுதான் போனாள்...

காலிங் பெல் அடித்தவுடனேயே மீனாட்சி அவசரமாக வந்து கதவைத் திறக்க, ஏனோ அத்தனை நேரம் தேக்கிய வலிகளும், கண்ணீரும் கரையை உடைத்துக்கொண்டு வருவேன் என்று பயமுறுத்தியது.. தாயிடத்தில் சொல்லி அழும் தைரியமோ தகுதியோ தம்மிடம் இருக்கிறதா என்றவாறே அவள் சட்டென்று உள்ளே நுழைய மீனாட்சி வழக்கம் போலவே கேள்விகளை அடுக்க ஆரம்பித்துவிட்டார்...

"என்ன ஜீவா இவ்ளோ நேரம் ஆகிப்போச்சு? இதுக்கு தான் யோகாவையும் கூடவே கூட்டிட்டு போன்னு சொன்னேன்.. என்னாச்சுடி ஏன் ஒருமாதிரி இருக்க?..."என்றவாறே அவளை நெருங்க சட்டென்று சிடுசிடுத்தாள்...

"ம்மாஆஆ, ஏம்மா வந்ததுமே தொணத்தொணன்னு நச்சரிக்குற? சத்தம் போடாம இரும்மா..."என்க மீனாட்சி மகளை மறந்தவராக சொன்னார்..

"ஏது நச்சரிக்குறேனா? ஏன்டி சொல்லமாட்ட வயசுப்புள்ளய காணும் காணும்னு காத்திருந்தா தான்டி ஒனக்கு தெரியும்... நச்சரிக்குறேனா? இரு இரு போறவீட்டுல மாமியாகாரி இதையே சொல்லுவா அப்ப என்ன பண்ணுவன்னு பாக்குறேன்... நச்சரிக்குறேனாமுல்ல..." என்று அவர் சொல்ல ஜீவாவிற்கே கொஞ்சம் சங்கடமாக தான் போனது...

"ம்மாஆ ஏம்மா எதையெதையோ சேத்து முடிச்சுப்போட்டு பேசுற? ஏற்கனவே எனக்கு டயர்டா இருக்கு.. தூங்கணும் போல வருது..."என்றவாறே அவளுடைய அறையை நோக்கி பெற்றவளாக அடுத்த கேள்வியை கேட்டார்...

"சாப்பிட்டியாடி?..."என்றதற்கு தலையை தலையை ஆட்டி வைத்துவிட்டு அவளுடைய அறைக்குள் வர யோகா அமர்ந்திருந்தாள்...

புத்தகத்தை வைத்துக்கொண்டு எதையோ மனப்பாடம் செய்தபடி இருந்தவள் ஜீவாவை பார்த்ததும் வாய்க்குள்ளேயே தான் படித்ததை சொல்லிப்பார்த்தவளாய் ஜீவாவை பார்த்து புன்னகைத்துவிட்டு புத்தகப்புழுவாய் மாறிப்போக இவளோ பர்ஸை பத்திரமாக வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்... அத்தனை நேரம் வரைக்கும் கட்டுப்படுத்திய வலியெல்லாம் கண்ணீராய் வழிந்தோட, பாத்ரூம் டேப்பை ஓபன் செய்து ஓடவிட்டவளாக சத்தமின்றி வாய்ப்பொத்தி அழ ஆரம்பித்தாள்...

எட்டுவருடக்காதல் ஒற்றை நொடியில் காற்றாய் கரைந்து போனது.. தீப்பற்றி கருகிப்போனது.. இதற்காக தானா இத்தனையாண்டுகள் தன் மனமெனும் கோட்டைக்குள் அவன் மீதான காதலை பாதுகாத்து வளர்த்தது.. தன் இளமைப் பருவத்து இம்சைகளைக்கூட ஏதோ தவம் புரியும் முனிவர் போல கடந்துவந்தாளே... எத்தனையோ பேரின் காதலை நாசூக்காக நிராகரித்தாளே.. அவன் வருவானா மாட்டானா என்று தெரியாமலேயே அவனுக்காய் காத்திருந்தாளே.. இவையெல்லாம் எதற்காக ஒற்றை நொடியினில் ஏற்படும் சல்லாபத்திற்காகவா? அவன் தன்னை என்னவென்று நினைத்தான்? மறந்திருந்தாலும் பரவாயில்லை.. இப்படியா ஒருகேள்வியை கேட்டு... அதற்கு மேல் எதையும் நினைக்க தோன்றாதவளாய் புடவையுடனே தண்ணீரை மோண்டு மோண்டு தன் மேல் ஊற்றிக்கொண்டாள்...

புடவையை அவிழ்க்கும் பொழுது அவனோடு உரசியாடியது நினைவில் வர இன்றோடு இப்புடவைக்கு மட்டுமல்ல, தான் அவன் மீது கொண்ட காதலுக்கும் ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாக புடவையை அவிழ்த்து தூரப்போட்டுவிட்டு, தலைக்கு முழுகிவிட்டு வெளியே வர யோகா அவளை கேள்வியாய் பார்த்தாள்...

"என்னக்கா? இந்த நேரத்துல போய் தலைக்கு குளிச்சுருக்க? வீட்டுக்கு தூரமா?..."என்று கேட்டவளிடத்தில் முகத்தை காட்டாமலேயே ஈரக்கூந்தலை டவலால் சுற்றி எடுத்தபடியே சொன்னாள்...

"மொகம் கழுவுறேன்னு ஷவர ஓபன் பண்ணிட்டேன்டி... அதான் மொத்தமா ஊத்திக்கிட்டேன்..."

"நீ சொல்லறத கேட்டா நம்புற மாதிரியே இல்லையே..."

"உன் சீஐடி மூளைய மொதல்ல ஓரமா தூக்கிப்போடு.. எனக்கு செம டயர்டா இருக்கு, தூங்கணும்..." என்றவாறே போய் யோகாவிற்கு முதுகை காட்டி படுக்க,
,
"தலையையாவது காயவச்சுட்டு படேன்.. நீர் கோர்த்துக்க போது..."

"ஃபேன்ல காஞ்சுடும் யோகா.. என்ன டிஸ்டர்ப் பண்ணாம தூங்கவிடேன்..."என்றவளாக போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு படுக்க, யோக சிறு தோள்குலுக்கலோடு திரும்பவும் படிக்க ஆரம்பித்துவிட்டாள்...

எப்படியோ அம்மா தங்கையென இருவரிடமும் சமாளித்தபடி படுத்தவளை மனம் ரணமாய் கொன்றது... அவனுக்காக காத்திருந்து பார்க்கமுடியவில்லையே என்று நினைத்து அனுபவித்த வேதனையைக் காட்டிலும், இன்று அவனை பார்த்து மனம் கசந்ததால் வந்த வேதனை தான் அதிகமாக இருந்தது.. எப்பொழுதும் அவளை படுத்ததுமே ஆட்கொள்ளும் நித்திராதேவி இன்று ஜீவாவை கொஞ்சம் அதிகமாகவே சோதிக்க அவனை நினைத்து நினைத்து மனம் சோர்ந்தவளாக உறங்கும் பொழுது நடுசாமத்தை கடந்திருந்தது...

இந்த இரவுடனே அவனின் நினைவுகள் தொலைந்து போனால் போதுமென காத்திருந்தவளுக்கு விடியல் வில்லங்கமாய் தான் துவங்கியது... ஆமாம் எப்பொழுதும் போலவே அதே பாழாய்போன கனவு வந்து அவளை எழுப்ப முதலில் சந்தோசமாய் அதிலேயே மூழ்கிப்போனவள் தூக்கிவாரிப்போட்டு எழுந்து அமர, அங்கே யோகா புத்தகமும் கையுமாக தயாராகி நின்றாள்... ஜீவா அலறியடித்துக்கொண்டு எழுந்து அமர அவளை பார்த்தவாறே நின்றவள் புருவம் சுருக்க இவளுக்கு சுருக்கென்றது... எது எப்படி போனால் என்ன? எவ்வளவோ பார்த்தாயிற்று என்று தைரியமாக யோகாவை பார்த்தாள்...

"ஏய் ன்னா லுக்கு?..."

"ஒன்னுமில்லயே..."

"அப்பறமென்ன? பே..." என்க யோகாவும் உதட்டை சுழித்து சொன்னாள்...

"மொகறையப் பாரு..."என்று, அவ்வளவு தான், அக்காவும் தங்கையும் பாசம் பொங்க நாலு வார்த்தைகள் பேசிமுடிக்க ஜீவா எழுந்து போர்வையை மடித்தபடியே கேட்டாள்...

"என்னடி இன்னைக்கு ஸ்பெசல் க்ளாஸ் இருக்கா?..."

"ஏன் கேக்குற? நீ எதுவும் எடுக்கலாம்ன்னு இருக்கியாக்கும்?..."

"நா எடுத்தா நீ புத்திசாலியாயிடுவடி கொரங்கு..." என்க அருகே இருந்த ஒரு பேனாவை எடுத்து அவள் மேல் வீசியவள்...

"சீ பே..."என்றவாறு கண்ணாடியை பார்க்க ஜீவா ஒதுங்கி நின்றவாறே சொன்னாள்...

"இவ்ளோ சீக்கிரமா கெளம்பி நிக்குறன்னு தான் கேட்டேன்..."

"ஹல்லோ மேடம்.. நான் ஒன்னும் சீக்கிரமா கெளம்பல, நீ தான் இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தூங்கியெழுந்து நிக்குற..."என்று நக்கலாய் சொல்ல அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது...

"என்ன? ஏய் என்ற கிண்டல் பண்ணுறியா?..."

"நா ஏன் கிண்டல் பண்ணப்போறேன்? டவுட்டுன்னா மொபைல்ல எடுத்துப்பாரு நான் கிளம்புறேன்..."என்க மொபைல் திரையை பார்த்தவளுக்கு திக்கென்றானது...

"ஆத்தீ, நெசமாவே ஒன்பது மணிவரைக்கும் தான் தூங்கிட்டோமா? இன்னைக்கு வேற நான் சீக்கிரமா போவணும்... போச்சு போச்சு.. ஏன்டி என்ன யாரும் எழுப்பல?..."என்று யோகாவின் முதுகில் மொத்திவிட்டு அவள் செல்ல யோகா தலையில் அடித்துக்கொண்டு சென்றாள்...

என்ன தான் அவசரஅவசரமாக குளித்து கிளம்பி தயாரானலும் மணி பத்தை நெருங்கிக்கொண்டிருக்க, சாப்பிடாமலேயே கிளம்பலாம் என்று பரபரப்போடு வந்தவளை நிறுத்து இரண்டு இட்லிகளை பிய்த்து வைத்துக்கொண்டு மீனாட்சி காத்திருக்க.. அவள் வந்ததுமே அவள் சொல்ல சொல்ல கேட்காமல் ஊட்டியபடியே கேள்விகளை அடுக்கினார்...

"நிச்சயதார்த்தம் எப்படி டி இருந்தது? மாப்பிள்ளை பையன் எப்படி? கார்த்திகாவுக்கு பொருத்தமா இருப்பானா? பையன் வீடு வசதியோ!.." என்க இட்லிகளை தொண்டை வரைக்கும் விட்டு அடைத்துக்கொண்டு தண்ணீரை குடித்தவள், பரபரத்தாள்...

"ம்மாஆ எதுனாலும் சாயங்காலம் வந்ததுக்கு அப்பறம் பேசிக்கலாம்.. இப்ப எனக்கு நேரமாச்சு நான் கெளம்புறேன்..."

"எப்பபாரு அவசரம்.. நான் இன்னுப் பேசவே ஆரம்பிக்கலடி..."

"அதாம்மா சாயங்காலம் பேசுவோம்.. இன்னைக்கு புது எம்.டி வர்றாப்படி.. மொதநாளே லேட்டா போனா அப்பறம் அவ்வளவு தான்.. நான் போறேன்..."என்றவாறே அவள் ஓட,

"ஜீவா சொல்லுறத கேட்டுட்டு போடி, உன் எம்.டி சார் தான் அவரோட...."மீனாட்சி கடைசியாக சொன்னது கற்பூரமாய் காற்றில் கரைந்தது தான் மிச்சம்... பொறுமையற்றவளாய் அவள் ஓட மீனாட்சி தலையை குலுக்கியபடியே நின்றார்...
 
Last edited:

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருந்த தேவதை 7
13790
என்னதான் அரக்கப்பறக்க தயாராகி கிளம்பி வந்தாலும் ஜீவிதா அவளுடைய அலுவலகத்தை அடையும்பொழுது மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது.. என்றைக்கு விரைவாக அலுவலகம் வர வேண்டும் என்று அவள் நினைத்தாலும் இப்படித்தான் ஆகிவிடுகிறது என்று நொந்தவளாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.. அவள் அலுவலகமே என்றும் இல்லாத திருநாளாய் இன்று பரபரப்பாகவும் அலங்கோலமாகவும் அவளை வரவேற்றது.. ஷங்கர் சாரின் கைகளிலேயே ஒட்டடை கம்பு ஆக்கிரமித்திருக்க, அக்கவுண்ட் ஜீஃப் குமரன் சாரோ குடுகுடுவென ஓடியபடியே எல்லோருக்கும் வேலை ஏவ, மற்றவர்களும் ஆளுக்கொரு வேலையாக பார்த்துக்கொண்டிருந்தனர்.. வெகு நாட்களாக கிடப்பில் கிடந்த பைல்கள் எல்லாம் தூசி தட்டப்பட்டு கொண்டிருந்தது.. அவர்கள் செய்யும் வேலைகளை எல்லாம் பார்த்து சிரித்தபடியே சென்றவள் தனது இருப்பிடத்தை பார்த்ததுமே அதிர்ச்சியாகி உறைந்து விட்டாள்.. பக்கத்து இருக்கையில் இருந்த சாந்தி அக்கா அவருடைய டேபிளை சுத்தம் செய்கிறேன் என்று ஜீவாவின் டேபிளில் எல்லாம் குப்பைகளை போட்டுவிட ஜீவாவிற்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு எரிந்தது...

பின்னே எறியாமல் எப்படி இருக்கும்? தினம் தினம் தூசி இல்லாமல் துடைத்து பளிச்சென்ற வைத்திருப்பவள் டேபிளில் அத்தனை குப்பைகளை கண்டால் கடுப்பாக தானே செய்யும்... வந்த கோபத்தில் அந்த சாந்தியக்காவை கத்திவிடலாம் என்று பார்த்தாலும் பாவம் ஒருபக்கம் அவர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருந்தது.. என்ன செய்வது என்று புரியாமலேயே அவள் அவளுடைய இருப்பிடம் செல்லும் பொழுது பொதுவாக சாதாரணமாகக் கேட்டாள்...

"என்னதான் நடக்குது இங்க நாளைக்கு ஆயுதபூஜை கூட இல்லையே? எல்லாரும் இப்படி கிளீன் பண்ணிட்டு இருக்கீங்க..." என்று கேட்டவளை வேலையுடனே நிமிர்ந்து பார்த்தவர்,

"ஹேய் ஜீவா வந்துட்டியா.. சாரிமா க்ளீன் பண்றேன்னு உன் இடத்தையும் குப்பை ஆகிட்டேன்... ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு ஃபுல்லா கிளீன் பண்ணி விடுறேன்..." வியர்த்து வழியும் முகத்தோடு அவர் சொல்லிவிட்டு திரும்பவும் வேலையை தொடர, இவளுக்கும் கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது..

"அது பரவால்லக்கா, ஆமா என்ன நடக்குது இங்க எல்லாரும் பயங்கரமாக கீளீனிங்ல இறங்கிட்டிங்க?..."

"இன்னைக்கு புது எம்டி வரேன்னு சொன்னாங்கல்லம்மா..."

"அவர் வந்தா என்ன?..."

"அவர் வந்தா என்னவா! அவருக்கு எல்லா இடமும் சுத்தமாக இருந்தால்தான் பிடிக்குமாம் அலங்கோலமாக இருந்தால் கோபப்படுவார்ன்னு சங்கர் தான் சொன்னாரு..."

"என்னக்கா நீங்க? சில்லியா பேசிட்டு இருக்கிங்க?.. அவருக்கு கிளீனிங்கா இருந்தா பிடிக்கும்னா அவரோட ரூமை சுத்தம் பண்ணி வைக்கலாமே.. அத விட்டுட்டு இது என்ன வேல.. ஆளாளுக்கு கீளீனர் போல துடைப்பத்த தூக்கிட்டு... நம்ம டேபிள் எல்லாம் ஏற்கனவே நீட்டா தான் இருந்தது.. இப்ப க்ளீன் பண்ணுறேன்னு சொல்லிட்டு இப்பதான் பார்க்க அலங்கோலமா இருக்கு..."என்க சாந்தியோ,

"ஜீவா ஜீவா கோவிச்சுக்காதம்மா.. நமக்கு எதுக்கு வம்பு சொல்லு.. சொன்னத செய்ய வேண்டியது தான்.. இன்னும் பத்து நிமிசத்துல கிளீன் ஆகிடும்..."என்றவராக அந்த பெரிய டேபிளை இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டிருக்க, ஜீவிதாவும் இயல்பாகவே துப்பட்டாவை எடுத்து மூக்கில் கட்டிக்கொண்டு அனைவருக்கும் உதவ ஆரம்பித்துவிட்டாள்..

சாந்தி அக்கா சொன்னதை போலவே பத்து நிமிடத்தில் அலுவலகம் மொத்தமும் சுத்தமாக ஆகிவிட அத்தனை பேருமே டயர்டாகி வியர்த்து வழிந்த முகங்களோடு அவரவர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டனர்.. அந்த நேரம் பார்த்து ஷங்கர் சாரிடம் இருந்து ஜீவாவிற்கு அழைப்பு வர அவரிடம் சென்றாள்...

"ஜீவா உன்னை எம்டி சார் கூப்பிட்டார்மா..." என்க இவளுக்கு திக்கென்றது...

"என்னது எம்டி சாரா? ஆமா அவர் எப்போ வந்தாரு? பார்க்கவே இல்லையே..."

"எப்ப வந்தாரா? இன்னைக்கு நீதாம்மா லேட்.. அவரு எட்டரைக்கே வந்துட்டாரு..."

"ஓஓஓ, அப்போ புது எம்.டியும் உள்ள தான் இருக்காரோ?.."

"இல்லம்மா அவரு இன்னும் வரல, வர லேட்டாகும் போல..."என்று அவர் சொன்னது தான் தாமதம் அவள் எம்.டியின் அறைக்குள் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைய, நாகராஜன் ஒரு நாற்காலியில் ஏறி நின்று சுவற்றில் ஏதோ செய்ய,

"என்ன அங்கிள் பண்ணிட்டு இருக்கிங்க?..."என்று கேட்டபடியே அவரிடம் சென்றாள்...

"வா ஜீவா.. உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...நீ வரலன்னு தான் நானே.. ஒரு நிமிசம் இங்க வந்து அந்த போட்டோவ எடுத்துக்கொடேன்..."நாற்காலியில் இருந்து இறங்காமலேயே விழுந்துவிடாமல் இருக்க சுவரில் கைவைத்து தன்னை நிலைப்படுத்தியபடி நின்றவரை கேலியாக பார்த்து சிரித்தாள்...

"உங்களுக்கு எதுக்கு அங்கிள் இந்த வேண்டாத வேலை?..."

"என்ன வாய் பாதி வார்த்தையை மட்டும் சொல்லுது.. முழுசா சொல்லு ஜீவா.. வயசான காலத்துல உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலையெல்லாம், அப்படின்னு கேளு ஜீவா..."என்று சொன்னவரை என்ன செய்தால் தகுமென்று தோன்றியது..

"அங்கிள்.. ஆனா நீங்க இருக்கிங்களே.. முதல்ல இறங்குங்க.. நானே பண்ணுறேன்.. கீழ விழுந்து ஏதாவது அடிகிடி பட்டுருச்சுன்னா என்ன பண்ணுறதாம்..." உண்மையான அக்கறையோடு கேட்டவளை பார்த்து சிரித்தபடியே அவள் கைப்பிடித்தே கீழே இறங்கியவர்க்கு குப்பென்று வியர்த்தது...

"ப்பா, அதுக்குள்ள எப்படி வேர்த்து கொட்டுது பாரேன்..."என்க அதற்கும் சேர்த்து அவளிடம் இருந்து கலட்டு விழுந்தது..

"தெரியுதுல்ல.. அப்ப சும்மா இருக்க வேண்டியது தானே.. ஆமா அப்படி என்ன போட்டோ இது? அவசியமா இத போட்டே ஆகணுமா?..."என்று கேட்டபடியே சேரில் ஏறி நின்று அவர்கொடுத்த போட்டோவை ஒழுங்காக பார்க்காமலேயே மாட்டிவிட்டு இறங்க,

"என் பையனோட போட்டோ ஜீவா.. எம்.டியா பொறுப்பெடுத்துக்க போறான்ல, அதான் இங்க இருந்த என் போட்டோவ எடுத்துட்டு அவன் போட்டோவ மாட்டலாம்ன்னு..."பேசியபடியே அவர் போட்டோவை பார்க்க எதார்த்தமாக பார்த்தவளின் விழிகள் அதிர்ந்தது...

பின்னே அதிராமல் என்ன செய்யும்? எவன் ஒருவனை இத்தனை வருடங்கள் பார்க்கவேண்டுமென உறுகிமறுகி கிடந்தாளோ! எவன் ஒருவனை பார்க்கும் இடம் யாவிலும் தேடித்தேடி அழைந்தாளோ! எவனை நினைத்து தன் எட்டுவருடத்தையும் காதலாய் நினைத்து கழித்தாளோ அவன், அவனே இன்று சிரித்தமுகமாய் போட்டோவில் தெரிந்தால்... ஒருநிமிடம் அவள் உலகம் உறைந்ததில் தவறில்லையே...

ஆனால் அனைத்திற்குமே காலம் நேரம் என்று உண்டல்லவா? அவனை தேடி அழையும் பொழுதெல்லாம் கண்ணாம்பூச்சி ஆடியவன் இன்று பார்க்கவே கூடாது என்று நினைக்கயிலே கண்முன் விழுந்தால் எப்படியிருக்கும்?...

'இவனா? இவன் எப்படி.. இவன் தான் அங்கிளோட பையனா? யார நான் இனிமேல் பார்க்கவே கூடாதுன்னு வேண்டிட்டு இருக்கேனோ அவனையே இப்போ என் பக்கத்துல கொண்டு வந்து சேர்க்குதே இந்த விதி.. இனி நான் என்ன செய்ய?...' மனம் முழுக்க வேதனையை சுமந்து உள்ளுக்குள்ளேயே அவள் புழுங்க, அவள் மனம் புரியாத நாகராஜனோ மகனைப்பற்றி பெருமையாக ஸ்லாகித்து பேச, அப்படி பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அறைக்கதவை திறந்து கொண்டு அவன் வந்து நின்றான்...

ஜீவா உடைய மனநிலையைப் பற்றி அப்பொழுது வார்த்தைகளில் விவரிக்க வேண்டுமா என்ன? அவனை திடுமென பார்த்ததுமே உடம்பெல்லாம் நடுங்கி வியர்த்து வழிய ஆரம்பிக்க, அவள் இதயம் அதன் இயல்பை மீறி வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது... ஒரு இரண்டு மூன்று நிமிடங்களுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அவள் போராடிய போராட்டத்தை அவளிடத்தில் இருந்து பார்த்தால் தான் நமக்கும் தெரியும்.. ஒருவழியாக அவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிற்க, அவனோ எதுவுமே தெரியாது போல வந்து நின்று பேச ஆரம்பித்தான்..

"ஹாய் டாடி.. நம்ம ஆபீஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. என்ன ஒரு பிளசன்டா இருக்கு தெரியுமா? ஐ லைக் வெறி மச்ப்பா... ஆமா இவங்க...?..."
என்று எதுவுமே தெரியாதது போல ஜீவாவைப் பார்த்து அவன் கேட்டு வைக்க, ஜீவாவுக்கு தலையில் இடியே விழுந்தது போல இருந்தது...

பொய் சொல்லலாம் அதற்கென்று இப்படி ஒரு பொய்யா? என்று அதிர்ச்சியுற்றவளாக அவள் அவனை பார்க்க, அவனோ எதுவுமே தெரியாதது போல ஜீவாவை பார்த்தபடியே தனது தந்தையிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு இருவருக்கும் பொதுவான
அறிமுகப்படலத்தை நாகராஜன் ஆரம்பித்தார்...

"இவதாண்டா ஜீவா.. நம்ம ஆபீஸ்ல ரொம்ப டேலன்ட்டான பொண்ணு.. ரொம்ப நல்ல பொண்ணு.. எனக்கு இங்க என் பொண்ணு போல..." என்று அவர் பெருமையாய் அவளை சொல்ல அவன் எதையும் கண்டுகொள்ளாதவனாக சொன்னான்...

"ஓஓஓ! இவங்க தான் அந்த ஜீவாவா... நீங்க அடிக்கடி ஜீவா ஜீவான்னு சொல்லவும் நான் கூட பையனோன்னு நினைச்சுட்டேன்.. மேடம் தான் அந்த ஜீவாவா?..." என்று கேட்டு வைக்க அவளுக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு எரிந்தது.. ஆனாலும் இருக்கும் சூழலும் நேரமும் அவளை எதுவும் செய்யவிடாமலேயே செய்ய அமைதியாக நின்றாள்...

"டேய்.. போதும் டா விடு.. ஜீவாம்மா இவன் தான் என் பையன்.. நான் சொன்னேன்ல, அவரு தான் இவரு.. ஆனந்த்..." என்க அந்த ஆனந்தே அவசரமாக இடைப்புகுந்தான்...

"என்ன டாடி... சொல்லுற விதமே சரியில்லையே.. என்ன பத்தி அப்படி என்ன சொல்லி வச்சுருக்கிங்க?..."

"ஒன்னுமில்லடா.. அப்பப்போ பேசிட்டு இருப்போம் அவ்ளோ தான் இல்லயா ஜீவா?..." என்று அவர் ஜீவாவை பார்க்க அவள் அகத்தின் பிரதிபலிப்பு முகத்தில் தெரிந்து அவரை கலவரப்படுத்தியது...

"என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரியாயிட்ட?..." என்று உண்மையான அக்கறையோடு கேட்டவரிடத்தில் அவனை பார்க்காமலேயே சமாளித்தாள்...

"ஒன்னுமில்ல அங்கிள்..."என்று சொன்னவளுக்கு ஏதோ முள்மேல் நிற்பது போன்றொரு உணர்வு... உடனே இங்கிருந்து சென்றால் தேவலை என்று தோன்ற அங்கிருந்து விட்டால் போதுமென்று அவளுடைய இருக்கையை வந்தடைந்தவளுக்கு மேல்மூச்சுகீழ்மூச்சு வாங்கியது... அவள் கவனம் ஏனோ வேலையில் போகமாட்டேன் என்று அடம்பிடித்து அவனிடமே சென்றது...

'ஆனந்த்... எவ்ளோ நல்ல பெயருல்ல.. இந்த பெயரை தெரிஞ்சுக்க நான் இத்தனை வருசம் காத்திருக்க வேண்டியதா இருந்திருக்கு... ஆனா இந்த கடவுள் என்ன வச்சு செய்யுறான்யா.. இத்தன வருசமா இவன் பெயர் என்னவா இருக்கும்னு யோசிக்காத நாளில்ல, அவன பாக்க மாட்டோமான்னு ஏங்காத நிமிசமும் இல்ல அப்போ எல்லாம் காட்டாம எப்ப இவன் முகத்துலயே முழிக்க கூடாதுன்னு நெனச்சு ஓடுறேனோ அப்ப பாத்து அவன என் பின்னாடியே விடுறார்.. என்ன டிசைன்யா நீயெல்லாம்... ம்ம்ம்ம்ம்... ' என்று எதையெதையோ யோசித்தவளுக்கு தன் எட்டுவருடக்காதல் பொய்யாய் போனதின் ஆதங்கம் வெளிப்பட்டு கண்ணீர்த்துளிகளாக அவள் கைகளில் பட்டு தெரிக்க, தாம் இருக்கும் இடத்தை உணர்ந்து அவசரமாக துடைத்தவள் தன் வேலையை தொடர எத்தனிக்கயில் தன் நினைவுகளுக்கு உரிமையானவனே வந்துவிட்டான்...

அப்பாவும் பிள்ளையுமாக வெளியே வந்து அனைவரையும் அழைத்து அறிமுகப்படத்தை முடித்ததும், வந்தவர்களில் நாகராஜன் மட்டும் ஜீவாவிடத்தில் வர அவனோ மற்றவர்களோடு பேசியபடி நின்றான்.. ஜீவாவை பார்த்தவர் அவளை வெளியே வரும்படி சைகை காட்டிவிட்டு செல்ல அவள் இதயம் ஏகத்திற்கும் தாளம் எழுப்பி பயமுறுத்தியது.. ஒருவேளை அவன் தன்னை அவரிடத்தில் தவறாக சொல்லியிருப்பானோ என்று அவசரமாக அவர் பின்னேயே போய் நிற்க அவர் இவளுக்கென காத்திருந்தார்...

"என்ன அங்கிள் என்ன விசயம்? ஏதும் பிரச்சனையா?..."என்று இவள் கேட்க அவர் இதழ்களில் மெல்லிய நகை இழையோடியது...

"இதையே தான் ஜீவா நான் உன்கிட்ட கேட்க வந்தேன்.. என்னாச்சு உனக்கு ஏன் ஒருமாதிரி இருக்க?..."

"ஒன்னுமில்லயே அங்கிள்... நான் நல்லா தான் இருக்கேன்..."

"பொய் சொல்லாத டா.. ஆனந்த் பேசுனத வச்சு ஃபீல் பண்ணுறியா? அவன் அப்படி தான்டா.. எல்லார்கிட்டேயும் ஜாலியா பேசுவான்... நீ ஏதும் வருத்தப்படாத நான் இனி அவன அடக்கி வச்சுக்குறேன்..."என்று அவர் சொல்ல இவளுக்கு ஏனோ ஒருமாதிரியானது..

"ஐயோ என்ன அங்கிள் நீங்க வேற? அதெல்லாம் ஒன்னுமில்ல நான் நல்லா தான் இருக்கேன்... இதோ பாருங்க சிரிக்கிறேனே..."என்று ஒரு பளிச் புன்னகையை விரித்ததுமே சமாதானமானவர்,

"ஜீவாம்மா.. நீ தான்டா அவன கொஞ்சம் அப்பப்போ போய் பார்த்துக்கோணும்.. என்மேல எப்படி கேரிங்கா ஒரு அப்பன போல பாத்துட்டியோ அது போல..."என்று அவர் சொல்ல வருகையிலேயே இடைமறித்தவள்...

"அவரையும் அப்பாவ போலவே பாத்துக்குறேன் சரியா?..."என்று கேட்க மெல்ல அவள் தலைவருடி சிரித்தவர்,

"சரி அப்போ நான் வரட்டா..."என்று கிளம்பப்போக ஜீவாவிற்கு ஒருமாதிரியானது..

"ஏன் அங்கிள் போறிங்க.. இனிமேல் வரமாட்டிங்களா?..."

"அப்பப்போ வருவேன்டா... பொறுப்பையும் குடுத்துட்டு கூடவே உக்காந்துட்டு இருந்தா நல்லாவா இருக்கும்.. ஸ்கூல் பையன் போல ட்ரீட் பண்ணாதிங்க டாடின்னு திட்டுவான்.. அடிக்கடி வாரேன்.. சரியா?..." என்று அவளுக்கு புரியும் விதமாக சொல்லி அங்கிருந்து அவர் செல்ல ஜீவா போகும் அவரையே பார்த்தபடி நின்றுவிட்டு தனது இருக்கைக்கு வந்தாள்...

வந்து அமர்ந்தவளுக்கு திடுமென ஒரு எண்ணம்.. அவனைப்பார்த்து தான் எதற்கு பயப்பட வேண்டும்? அவனுக்காக கடந்த எட்டு வருடங்கள் பாழாய்போனது போதும்.. இனி தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து கொள்வோம்.. அவனுக்கும் தனக்குமான உறவு முதலாளி வேலையாளோடு இருந்தால் போதும், அதற்கு மேல் ஏதேனும் தன்னை சீண்டி பார்த்தால் அவன் மூக்கை உடைத்துவிட்டு கிளம்பவேண்டியது தான் என்ற முடிவோடு
தனக்கு தானே சமாதானம் செய்தபடி வேலையில் கவனத்தை செலுத்தினாள்...
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(சாரி மக்களே உடல்நிலை சரியில்லை.. அதான் அப்டேட் எதுவும் போடலை.. கொரானா உலக மக்களையே படுத்தி எடுக்கறச்சே நம்மள மட்டும் விடவா போகுது? மாமி சென்னைல இருந்து வேற ரிட்டன் ஆகிட்டாங்க.. தனிமைபடுத்திட்டு இருந்தா சுற்றியிருக்கவங்க பண்ணுன கொடுமையில எதையும் யோசிக்க முடியலை... உடம்புக்கும் மனதிற்கும் சரியில்லாமல் போயிட்டு.. இப்போ நான் நல்லாயிருக்கேன்.. சோ கதையோடு பயணிக்கலாம்.. காத்திருந்த சொந்தங்களுக்கு நன்றிகள்😊)

காத்திருந்த தேவதை 8
14338
தெளிவான முடிவை எடுத்தவளாக ஜீவா அவளுடைய இருக்கையில் அமர்ந்து அலுவலக வேலைகளில் ஈடுபட, அப்பொழுது பார்த்து பக்கத்து இருக்கைக்கு சொந்தக்காரியான சாந்தி எம்.டி அறைக்குள் இருந்து வெளியே வந்து அவளருகில் வந்தாள்...

"ஜீவிதா..."என்று வாயெல்லாம் பல்லாக வந்து நின்றவரின் முகமாறுதலை கண்டவள்...

"எங்கக்கா போனிங்க?..."என்று கேட்க,

"ஹேய் ஜீவி நம்ம புது எம்.டி நல்ல பையனா இருக்கான்டி.. என்னம்மா அக்கறையா பேசுறான் தெரியுமா?..."என்று அவனின் புகழ் பாட,

"என்னக்கா ஒரே புகழ்ச்சியா இருக்கு... சாரு அப்புடி என்ன பண்ணிட்டாரு?..." என்று நக்கலுடனே கேட்டாள்...

"நாம அவர ரொம்ப ஸ்டிக்டுன்னு நெனச்சோம்ல... சரி சரி அப்படி பாக்காத.. நான் அப்படி தான் நெனச்சேம்ப்பா..."

"சரி இப்போ அதுக்கு என்ன?..."

"நாகராஜன் சார் இன்ட்ரோ பண்ணுறச்சே டெரர் ஆபிசராட்ட பேசிட்டு உள்ளார கூப்புட்டு..."அந்த நேரம் பார்த்தா சாந்திக்கு தும்மல் வரவேண்டும்.. பேச்சு அத்துடனே நிறுத்தப்பட்டு ஹச் ஹச் என்று தும்மியபடி இருக்க, இவளோ சாந்தி சொல்லவந்த வார்த்தைகளை தானாகவே சித்தரித்துகொண்டு அவசரமாக கேட்டாள்...

"உள்ள கூப்ட்டு என்னக்கா.. அடக்கடவுளே எவ்ளோ தைரியம் இருக்கணும் அவனுக்கு.. அங்கிளுக்காக பொறுமையா போவோம்னு பார்த்தா இவன் என்ன பொறுமையா இருக்கவிடமாட்டான் போலயே..."என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிமுடிக்க.. ஒருவழியாக தும்மி முடித்தவளோ!,

"ஐயோ ஜீவி.. நீ ஏன் ஏதேதோ பேசிட்டு போற? தும்மல் வருதேன்னு பேச்சை நிறுத்துனது தப்பா? நீ ரொம்ப தப்பா பேசிறடி..."என்க ஜீவிதாவோ தன்னிலை உணர்ந்தவளாய், சாந்தியின் குணத்தையும் அல்லவா தவறாக நினைத்துவிட்டோம் என்று உடனடியாக மன்னிப்பு கேட்டாள்...

"சாரிக்கா..."

"அவரு என் தம்பி மாதிரி ஜீவி... சொல்ல வந்தத முழுசா கேட்டுட்டு எதுனாலும் பேசு.. பாதியிலேயே கண்டதையும் இமேஜின் பண்ணிக்காத..."

"ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரிக்கா..."

"சரி விடு... நான் சொல்லுறத கேளு.. எல்லார் முன்னாடியும் வெறப்பா நின்ன மனுசன் எல்லாரயும் தனித்தனியா கூப்புட்டு பேசுறாரு.. அதுவும் நாகராஜன் சாரைப்போலவே பாசமா.. என்ன அக்கா அக்கான்னு எவ்ளோ பாசமா கூப்புட்டான் தெரியுமா? அவனப்போய் என்கூட..."என்க ஜீவாவிற்கு தான் தூக்கிவாரி போட்டது...

அவர் சொன்னதுமே தன்னை எண்ணி தனக்குத்தானே மனதிற்குள் அர்ச்சித்துக்கொண்டாள்...,'ஏன் ஜீவா உனக்கு இப்புடி புத்தி போகுது? உன்கிட்ட தப்பா பிஹேவ் பண்ணுனா மத்த எல்லார்க்கிட்டேயும் அப்படியே பண்ணுவான்னு இருக்கா? அவனவிடு இந்த அக்காவ நீ எப்படி தப்பா நெனைக்கலாம்... அக்கான்னு சொன்னவனைப் போய் தப்பா நினைச்சு அவங்ககிட்டயே தப்பா சொன்னா உன்ன தான் தப்பா நெனைப்பாங்க.. போடி போடி பொலப்பத்தவளே...' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டவளை நினைக்க அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.. பின்னே என்ன? அவனுக்கு சாதகமாய் பேசிய மனதை நினைத்தால் வேறு எப்படி இருக்கும்? ஆச்சர்யத்துடனே மனதின் ஓரம் சுறுக்கென்று நெருஞ்சிமுள்ளாய் ஒரு வலி ஏற்பட்டது...

எத்தனை பெரிய தவறு செய்தவன் அவன்.. அவனைப் போய் இத்தனை வருடமாக நேசித்து தவறிழைத்ததும் இல்லாமல் இன்றும் அவனுக்காக பரிந்து பேசி அனுதாபப்பட்டால் அவள் மனதை என்னவென்று தான் சொல்வது...

'மானங்கெட்ட மனமே
நினைக்காதே அவனை...' என்று கடிந்துகொண்டு நிற்கும் பொழுது, அந்த சாந்தி அக்காவோ அவனை ஆஹா ஓஹோவென பேசி எரிச்சல்படுத்த, அவர்களை விலக்கவும் முடியவில்லை, இவளால் விலகிப்போகவும் முடியவில்லை...

"நெசமாவே சொல்லுறேன் ஜீவி.. அக்கா அக்கான்னு அவன் கூப்பிடும் போது அப்புடியே என் தம்பி கூப்புடுற மாதிரி தான் இருந்தது.. எவ்ளோ அன்பு எவ்ளோ அக்கறை தெரியுமா? விதையொன்னு போட்டாக்க சுரையொன்னா முளைக்கும்? நல்ல மனுசனா இருக்கான்.. சங்கர் சார் தான் எனக்கடுத்து போனாரு.. இன்னும் ஆளயே காணோம் பாரு..."

"யப்பா.. என் காது ஜவ்வே கிழிஞ்சுடும் போலக்கா... உங்க தொம்பி ஒரு பெரிய ஐஸ் பாரையே தூங்கி உங்க தலையில வச்சு அனுப்பிருக்கார் போல.. தொம்பி புராணம் பெருசா போகுது..."

"கிண்டல் பண்ணாத ஜீவி.. நீ வேணா பாரே.. உன்னை கூப்பிடும் போது உனக்கே தெரியும்... "

"என்ன என்கிட்டேயும் உங்க தொம்பி பாசமலர் படம் ஓட்டுவாராக்கும்?..."

"அதுக்கு வாய்ப்பு கொஞ்சம் கம்மி தான்னு நெனைக்குறேன்..."

"ஏன்?..."

"அது அப்புடி தான்.. நீ வேணா போயிட்டு வா.. தம்பி உன்கிட்ட எப்புடி பேசுதுன்னு அப்பறம் தெரிஞ்சுப்போம்..."என்று குறும்பு சிரிப்போடு அவர் இருப்பிடத்தில் அமர சரியாக இரண்டு நிமிட இடைவெளியில் வந்த சங்கர் அவளை அவன் அழைப்பதாய் சொல்லிவிட்டு செல்ல, ஏதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற தைரியத்தோடு கிளம்பிவிட்டாள்...
(அடுத்த பதிவு இரண்டு நாட்களில்)
 
Last edited:
Status
Not open for further replies.
Top