All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புதிய கதைகளுக்கான முன்னோட்டங்கள்💖💖💖

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,

"காற்றாகி போவாயோ காதலே" குட்டி டி..

*********************

சக்தி எதுவும் பேசாமல் தயக்கத்துடன் நிரஞ்சனை பார்க்க, அவன் நிலை புரிந்த நிரஞ்சனும் ஒரு முறை கண்களை மூடி திறந்து விட்டு மஞ்சரியை அழுத்தமாக பார்த்தான்..

முக்கியமாக குழந்தையை பார்ப்பதை தவிர்த்து விட்டான்..

மஞ்சரியின் கண்களை நேராக பார்த்தவன், "சக்தி உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறான்.. உங்களுக்கு நல்ல கணவனாகவும் உங்க குழந்தைக்கு நல்ல த...தகப்பானாவும் இருப்பான்.. உங்களுக்கு சம்மதமா.." என தடாலடியாக போட்டு உடைக்க

அவன் இப்படி உடனே சொல்லுவான் என்று எதிர்பார்க்காமல் சக்தி ஒரு பக்கம் விழிக்க, அப்போது தான் அர்ச்சனை டிக்கெட் வாங்கி கொண்டு வந்த ராணியும் உச்சகட்ட அதிர்ச்சியில் கையில் இருந்த டிக்கெட் காற்றில் பறப்பது கூட தெரியாமல் அதிர்ந்த நின்றிருந்தாள்..

எல்லாரையும் விட மஞ்சரியின் நிலை தான் படு மோசமாக இருந்தது..

முதலில் அவன் பேசியது அவளுக்குள் செல்லவே சில நொடிகள் பிடித்தது.. சென்ற விஷயமோ இதயம் மூளை அனைத்தையும் மறக்க செய்ய, அதிர்ச்சியுடன் அவள் சக்தியை பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த ஆமோதிப்பே நிரஞ்சன் சும்மா கேட்கவில்லை என்பதை உணர்த்தியது..

மீண்டும் மஞ்சரி நிரஞ்சனை பார்க்க அவன் முகமோ கற்பாறை போல் இறுகி கிடந்தது...

"மனசாட்சியை குழி தோண்டி புதைச்சுடீங்களா ரஞ்சன்.. இல்லை என்னை ஒரேடியா கொன்று விட முடிவு பண்ணி இருக்கீங்களா..!" அவனை அழுத்தமாக பார்த்து கொண்டே கலங்கிய குரலில் மஞ்சரி கேட்க, இப்போதும் நிரஞ்சன் அமைதியாக தான் நின்றான்..

ஆனால் இப்போது விழிப்பது சக்தியின் முறை ஆயிற்று..

மனம் எல்லாம் குழம்பி விட "மஞ்சரி.." என காற்றாகி போன குரலில் சக்தி அழைக்க

அவனை திரும்பி அதே அழுத்தத்துடன் பார்த்தவள், "உங்கள் நண்பர் அவர் மனைவியை தான் உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வந்திருக்கார்.. பெரிய தியாகினு நினைப்பு.." என எரிச்சலுடன் மஞ்சரி கூற

"உன்னை தியாகம் செய்ய நான் யாரும் இல்லை மஞ்சரி.." என்றான் நிரஞ்சன் அழுத்தமாக

புக் கிடைக்கும் லின்க்:


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் நம் பாண்டியன் மகன் சரவணன்.. எப்போ வரும் தெரியவில்லை பேபீஸ்.. சும்மா டி..

கதை: நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ..!

***************

சரவணன் அருகில் அமர்ந்தவள் லேசாக அவனை ஓரக்கண்ணால் பார்க்க, "அழகா இருக்க டா திவி குட்டி.." என்றான் சரவணன் மென்மையாக

அதில் வெட்கத்துடன் குனிந்து விட்டாள் திவ்யா..

சற்று நேரத்தில் 'கெட்டிமேளம் கெட்டிமேளம்' என்று குரல் கொடுத்தபடியே ஐயர் மாங்கல்யத்தை எடுத்து சரவணன் கையில் கொடுக்க, அதை வாங்கி திவ்யா கழுத்தருகில் கொண்டு சென்றவன் கைகள் ஒரு நொடி நின்றது..

அவன் தாலி கொண்டு வந்ததுமே சிறு வெட்கத்துடன் திவ்யா அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் பார்வையில் அடுத்த நொடி அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட்டான் சரவணன்..

அங்கிருந்த அணைத்து பெரியவர்களின் ஆசிர்வாதத்துடனும் திவ்யாவை தன்னவளாய் ஏற்று கொண்டான் சரவணன்..

சரியாய் அதே நேரம் மிருணாளினியின் கார் அந்த மண்டபத்தை கடந்தது..

அங்கிருந்து வந்த சத்தமான நாதஸ்வர ஓசையில் அந்த பக்கம் திரும்பி பார்த்தவள் கண்களில் அந்த மண்டபத்தின் வாசலில் வைத்திருந்த பேனரில் இருந்த சரவணன் படம் விழுந்தது..

முந்தைய நாள் அவனை பார்த்தது ஞாபகம் வந்தது..

'இந்த சண்டியருக்கு திருமணமா!' என்று அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே கார் அந்த மண்டபத்தை கடந்து விட்டது..

மிருணாளினி நேராக சென்றது அவர்கள் வாங்க போகும் இடத்தை பார்க்க தான்..

அங்கு சென்று அந்த இடத்தை பார்த்தவளுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது..

சுற்றுவட்டதில் பெரிதாக எந்த உணவகமும் இல்லாமல் இருக்க, இங்கு அவர்கள் உணவகம் ஆரம்பித்தால் பத்ரி சொன்னது போல் நன்றாக போகும் என்று அவளுக்கும் தோன்றியது..

அந்த இடத்தை ஒரு முறை கூர்மையாக அளந்தவள், "ரெஜிஸ்டர் பண்ணிடலாம் பத்ரி.." என்று கூற

"எல்லாம் ரெடியா இருக்கு மேம்.. போகலாம்.." என்றார் பத்ரி

இருவரும் ரெஜிஸ்டர் ஆபிஸ் சென்ற போது அனைத்தும் தயாராக இருக்க, உடனடியாக பத்திர பதிவு முடிந்து விட்டது..

"கன்ஸ்டருக்ஷன் ஆரம்பித்து விடலாம் இல்லையா பத்ரி.." என்று காரில் ஏறி கொண்டே மிருணா கேட்க

"ஆரம்பிச்சுடலாம் மேம்.. அதுக்கு முன் இங்கு சப் கலெக்டரிடம் மட்டும் அனுமதி வாங்க வேண்டும்.. அது மட்டும் கையோடு முடித்துவிட்டால் நீங்க கூட கிளம்பலாம் மேம்.." என்றார் பத்ரி

"ஓகே லெட்ஸ் கோ.." என்றுவிட்டு மிருணா காரில் ஏற அடுத்து அவர்கள் சென்றது நேராக சப் கலெக்ட்டரை பார்க்க தான்..

அங்கு தான் அவள் சோதனை காலமே தொடங்கியது..

அவர்கள் உணவகம் கட்ட என்று அனுமதி கேட்க, அங்கு இருந்த கலெக்டரோ "இங்கு அதற்கெல்லம் அனுமதி இல்லை மா.." என்று அசால்டாக கூறினார்

அதை கேட்டதும் அவரை புருவம் சுருங்க பார்த்த மிருணா, "வாட்.. ஹோட்டல் கட்டுவதில் என்ன பிரெச்சனை.. இதற்கு போய் ஏன் மறுக்கறீங்க..?" என்று ஒன்றும் புரியாமல் கேட்க

"இங்கு வெளி ஆட்கள் எல்லாம் ஹோட்டல் கட்ட அனுமதி கிடையாது மா.. நம் பஞ்சாயத்த்து தலைவர் உணவகம் ஒன்று பெரிய உணவகம் இருக்கு.. அது போக மீதி இருப்பது எல்லாமே அவர் அனுமதி கொடுத்தது தான்.. அவர் அனுமதி கொடுத்தா தான் நீங்க கட்ட முடியும்.. ஆனா கண்டிப்பா கொடுக்க மாட்டார்.. சோ அந்த எண்ணத்தை விட்டுடுங்க.." என்றார் அவரும் தெளிவாக

அதில் எரிச்சலுடன் எழுந்துவிட்ட மிருணா, "வாட் நான்சன்ஸ்.. இது என்ன ஆராஜகமா இருக்கு.. யார்கிட்டயோ போய் எல்லாம் என்னால் கேட்க முடியாது.. இங்க நீங்க தானே சப் கலெக்ட்டர்.. நீங்க சைன் போடுங்க.. இல்லாட்டி நான் இன்னும் மேலிடத்திற்கு போக வேண்டி இருக்கும்.." என்று அழுத்தம்மாக கூற, அவளை சங்கடமாக பார்த்தவரோ

"நான் அனுபமதி கொடுத்தாலும் நீங்க கட்ட முடியாது மா.. புரிஞ்சுக்கோங்க.. நீங்க போறது தான் நல்லது.. வேண்டுமென்றால் நீங்க வாங்கின இடத்தை மீண்டும் விற்க ஏற்பாடு செய்யவா..?" தன்மையாக தான் சப்கலெக்டர் பேசினார்..

ஆனால் மிருணாவின் கோபம் தான் ஏகத்திற்கும் எகிறியது..

அவரை உறுத்து விழித்து கொண்டே அங்கிருத நாற்காலியில் பொறுமையாக அமர்ந்தவள் "எதுனாலும் நான் பார்த்துப்பேன்.. அது என் பாடு.. நான் கேட்டது உங்க அப்ரூவல் மட்டும் தான்.. அதை மட்டும் பண்ணுங்க.. இல்லை வேற ஏதாவது எதிர்பார்க்கறீங்களா..?" என்று மிருணா இழுக்க

"ஐயோ அதெல்லாம் இல்லை மா.." என்று அலறி விட்டார் அவர்

"தென் சைன்.." என மிருணா முடிக்க

அவரோ பேனாவை கையில் கூட எடுக்காமல் சங்கடத்துடன் அமர்ந்திருந்தார்..

அதில் அவர் மனம் புரிந்துவிட, "பத்ரி இந்த ஏரியா எம்.எல்.ஏக்கு கூப்பிடுங்க..." என்று மிருணா இருக்கையில் சாய்ந்தவரே உத்தரவிட, அவரும் அடுத்த நொடி எம்.எல்.ஏக்கு அழைத்திருந்தார்..

அவரிடம் விஷயத்தை கூறி விட்டு மிருணா சப் கலக்டெரிடம் போனை நீட்ட அதை வாங்கி பவ்யமாக பேசினார் அவர்.

"ஏன் யா கையெழுத்து கேட்டா போட்டு தொலையேன்.. பஞ்சாயத்தெல்லாம் ஒரு விஷயம் என்று சொல்லி கொண்டு.. வேலை வேணும்னா ஒழுங்கா கையெழுத்து போடு.." என்று கத்திவிட்டு அவர் போனை வைத்து விட, யோசனையுடன் அதை அணைத்தார் சப்கலக்டெர்..

அவர் முகத்தையே பார்த்து கொண்டிருந்த மிருணா சிறு ஏளன புன்னகையுடன் "நவ் சைன்.." என்று பேனாவை நீட்ட அதை வாங்கியவர் கைகள் லேசாக நடுங்கியது..

அவர் சைன் பண்ணலாம் என்று அந்த பாத்திரத்தின் அருகில் கைகளை கொண்டு சென்று போதே, "என்ன நடக்குது இங்க..?" என்ற கர்ஜனையான குரல் அனைவர் கவனத்தையும் கலைத்தது..

பரிச்சயமான குரலில் மிருணா திரும்பி பார்க்க, அங்கு இன்னும் புது மாப்பிளை உடை கூட மாற்றாமல் பட்டி வேஷ்டியை மடித்துக்கட்டி கொண்டு மீசையை முறுக்கி கொண்டு வந்து நின்றான் சரவணன்..

அவனை பார்த்ததும் 'அட சண்டியர்' என்று மிருணாவின் மனம் தானாக நினைத்தது..

பின் தான் அவன் பேச்சு தன் செயலை எதிர்த்ததே மண்டையில் உரைக்க, இப்போது இறுகி விட்ட முகத்துடன் அவனை எதிர்க்க தயாராக எழுந்து நின்றாள் மிருணா..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,

" காற்றாகி போவாயோ காதலே" குட்டி டி..

****************

மேலும் அவன் முகத்தில் கோபத்தையும் தாண்டி படிந்திருந்த சோர்வு அவள் கண்களில் பட, "ரஞ்சன்.." என தன்னை அறியாமல் அழைத்து விட்டாள்..

அவள் அழைத்ததில் அவள் புறம் திரும்பியவன் கேள்வியாக அவளை பார்க்க, "ஏன் கண் எல்லாம் சிவந்திருக்கு.. சரியா தூங்கலையா..?"

ஏதோ ஆர்வத்தில் மஞ்சரி கேட்டு விட, அவனோ அவள் கேள்விக்கு பதில் கூறாமல் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி விட்டான்..

அதில் ஒன்றும் புரியாமல் விழித்தவள் "என்ன ஆச்சு ரஞ்சன்..?" என அவனுடன் நடந்த படியே கேட்க

"ஏய்.." என கத்தி கொண்டே நின்றிவிட்டான் நிரஞ்சன்

அவன் கத்தியதில் மஞ்சரி அதிர்ந்து விழிக்க, இப்போது அவளை நிதானமாக பார்த்தவன், "எனக்கு என்ன ஆனால் உனக்கு என்ன மஞ்சரி..?" என ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக அவன் கேட்க, இப்போது பதில் சொல்ல தெரியாமல் விழிப்பது அவள் முறை ஆயிற்று

"இ.. இல்லை கண்கள் ரொம்ப சிவந்திருக்கே என்று கேட்டேன்.." மென்று விழுங்கி கொண்டே மஞ்சரி கூற

"ஓ.." என நக்கலாக ஒரு முறை அவளை அழைந்தவன்

"நைட் முழுக்க தண்ணி அடிச்சேன்.. அதான்.." என்றவன் அதற்கான அவள் ஆதர்ச்சியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினான்

"தினமும் குறைந்தது ஒரு புள் பாட்டில்லாவது குடிக்காமல் படுப்பதில்லை.. அதான் இப்படி..." முகத்தில் எந்த உணர்வும் காட்டாது கூறிவிட்டு நிரஞ்சன் சென்று விட, மஞ்சரி தான் திகைப்பு மாறாமல் நின்று கொண்டிருந்தாள்..

அவள் அறிந்து அவனுக்கு ஒரு கெட்டபழக்கமும் கிடையாதே..!

இப்போது புதிதாக பழகி இருக்கிறானா என்ன..!

ஏனோ நிரஞ்சனுடன் எதையும் சம்மந்தப்படுத்தி அவளால் யோசிக்க கூட முடியவில்லை..

அவள் இல்லாத நாட்களில் இன்னும் என்ன என்ன புது பழக்கம் வந்திருக்கிறதோ என ஒன்றும் புரியாமல் விழித்தாள் மஞ்சரி..

மேலும் மலரை கூட வைத்துகொண்டு அப்படி ஒன்றும் செய்துவிட மாட்டான் என்றாலும் எதுவும் உறுதியாக புரியாமல் குழம்பி தான் போனாள் மஞ்சரி..

அவள் விழிப்பதை ஒரு முறை திரும்பி பார்த்து திருப்தி பட்டுக்கொண்டே சென்றான் நிரஞ்சன்..

அவனுக்குள் அத்தனை கோபம் இருந்தது..

அவனுக்கு என்ன ஆனால் அவளுக்கு என்னவாம்..

'ஏதோ ரொம்ப தான் அக்கறை போல் நடிப்பு வேறு' என்ற கோபத்தில் தான் பொய் கூறி விட்டு வந்தான்..

'இன்னும் அவனிடம் பேசினால் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியது தான்' என நினைத்துக்கொண்டே சென்று விட்டான் நிரஞ்சன்

புக் கிடைக்கும் லின்க்:


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

பாண்டியன் மகன் சரவணன்.. விரைவில் நம்மை சந்திக்க வருவான்..

கதை : நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ..!

***************

"இல்லை பா உங்களுக்கும் கல்யாணம்.. எப்படி அழைப்பது என்று தெரியாமல்.." அவர் மென்று விழுங்கி கொண்டே தான் பேசினார்

"எனக்கு கல்யாணம் என்றால் ஊரை கண்டுக்காம விட்டுருவேன் என்று உங்களுக்கு யார் சொன்னது.. இதுவே கடைசியா இருக்கட்டும்.. இனி ஒரு முறை இப்படி பண்ணினா உங்க வேலை இருக்காது.." என அவரை எச்சரித்தவன், அடுத்து மிருணா புறம் தான் திரும்பினான்..

"இதோ பார் சின்ன பொண்ணு... இங்கு வெளி ஆட்கள் எல்லாம் ஹோட்டல் ஆரம்பிக்க முடியாது.. கிளம்பு.." என்று சாதரணமாக கூற, அன்று போலவே அவன் மரியாதை இல்லாமல் பேசியதில் அவனை உறுத்து விழித்தாள் மிருணா..

அவனோ இந்த முறை அவள் பார்வையை எந்த கலக்கமும் இல்லாமல் தாங்கி நின்றான்..

அன்று அவள் வயதை பற்றி சரியான முடிவிற்கு வர முடியாமல் குழம்பி தான் அவன் மரியாதையாக பேசியது..

இன்றோ இத்தனை அருகில் பார்த்ததும் அவள் மேல் பூச்சு எல்லாம் தாண்டி அவள் சிறிய பெண் தான் என்று அவனுக்கு தெளிவாக புரிந்து போயிற்று..

அவன் கூற்றில் மிருணாவின் கோபம் மேலும் ஏற, "மரியாதை மிஸ்டர்.." என கை நீட்டி எச்சரித்தாள் மிருணா

அதில் சிறு கிண்டல் புன்னகையுடன் அவளை பார்த்தவன், "ஏய் என்ன சும்மா சும்மா மரியாதையை கேட்டு வாங்கிட்டு இருக்க.. பார்த்தா இருபது வயசு தான் இருக்கும் போல்.. பிள்ளை பூச்சி மாதிரி இருந்துகிட்டு எல்லாரையும் மிரட்டிட்டு சுத்துறையா நீ.. இந்த சரவணன் கிட்ட உன் பாச்சா எதுவும் பலிக்காது பாப்பா.. ஒழுங்கா கிளம்பு.."

மீசையை முறுக்கி கொண்டு பேசியவன் குரலில் கோபத்தை விட கிண்டல் அதிகம் இருந்ததில் மிருணாவின் கோபம் அதிகரித்து கொண்டே போனது..

ஒரு நொடி கண் மூடி திறந்து தன்னை நிதானப்படுத்தி கொண்டவள், "வெல் ஒரு நிமிடம்.." என்றவள் பத்ரியிடம் திரும்பி கண்களை காட்ட, அவள் விழி மொழியை புரிந்து கொண்டவன் மீண்டும் அந்த எம்.எல்.எ க்கு அழைத்தான்..

ஆனால் இந்த முறை மிருணாவிற்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது..

போன் அவள் காதிற்கு வந்ததுமே அவர் மிருணாவிடம் கெஞ்ச தொடங்கி விட்டார்..

"பாப்பா அங்க பிரெச்சனை வேண்டாம் பாப்பா... அவங்களுக்கு தலைவர் அளவு பவர் இருக்கு.. அவர் என்னை திட்டறார்.. மன்னிச்சிடு மா.." என்றுவிட்டு சட்டென அவர் போனை வைத்துவிட

"ச்சை.." என கத்திகொண்டே போனை மிருணா எரிச்சலுடன் தூக்கி எறிய, அது தரையில் விழுந்து சில்லு சில்லாய் உடைந்து போயிற்று..

அவள் செயல்கள் அனைத்தையும் ஒரு கையால் மீசையை முறுக்கி கொண்டே முகத்தில் உறைந்துவிட்ட புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான் சரவணன்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,

" Happy independence day" பேபீஸ்.. ஒரு ஸ்பெஷல் டி..🥰🥰🥰 நம்ம சரவணன்.

கதை : நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ

****************

நேராக அவள் அறை கதவை வேகமாக அடித்து திறந்து கொண்டு சரவணன் உள்ளே வர, அப்போது தான் மிருணாவும் பத்ரியும் சைட்டிற்கு போகலாம் என்று கிளம்பி கொண்டிருந்தனர்..

கதவை திறக்கலாம் என பத்ரி வந்த போது தான் சரவணன் அதை அடித்து திறந்திருந்தான்..

நல்லவேளை.. சற்று வேகமாக பத்ரி வந்திருந்தால் அவர் மூக்கு உடைந்திருப்பது உறுதி..

அவன் வந்த வேகத்தில் அவர் திகைத்து நிற்க, இருவரும் கிளம்பி தயாராக நிற்பதை கவனித்த சரவணன், "வெளில போங்க.. உங்க முதலாளி அம்மா வர கொஞ்ச நேரம் ஆகும்.." என்று மிருணாவை பார்த்து கொண்டே கூற, பத்ரி என்னவென்று புரியாமல் அவளை பார்த்தார்..

அவளும் கண்களாலேயே 'போங்க' என்று கூற, அதற்கு பின் தான் பத்ரி நகர்ந்தார்..

அதை கவனித்து கொண்டிருந்த சரவணன் பத்ரி வெளியே சென்றதும் நிதானமாக மிருணா அருகில் வந்தான்..

"அனைவரையும் கண் அசைவில் ஆட்டி வைத்த பழக்கத்திற்கு என்னிடமும் அதை முயற்சிக்கிறாயா..?" அவள் கண்களுக்குள் ஊடுருவி கொண்டே அவன் கேட்க, சற்றும் சளைக்காமல் அவனை பார்த்தவள்

"புரியலை.." என்றாள் ஒற்றை சொல்லாக

அதில் அவன் பொறுமை காற்றில் பறக்க, "என்ன டி புரியலை.. என்னை திருமணம் செய்ய சம்மதம் என்று சொன்னாயாமே.. சுத்தமாக பொருத்தம் இல்லாத நீயும் நானும் எப்படி வாழ முடியும்.." என்று சீற

"எதற்கு வாழ வேண்டும்..?" என்றாள் இப்போது மிருணா பொறுமையாகவே

அதில் சரவணன் தான் இப்போது விழிக்க வேண்டி இருந்தது.

அவன் கொஞ்சம் தளர்ந்ததும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டவள், "கொஞ்சம் உட்காருங்க.. பொறுமையா பேசலாம்.." என்று இருக்கையை காட்டிவிட்டு அவனுக்கு எதிர்புறம் இருந்த தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்..

அவனும் வேறு வழி இல்லாமல் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்தான்..

"இங்க கவனீங்க சரவணன்.. நான் ஒன்றும் நம்ம இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றெல்லாம் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.. இன்னும் சொல்ல போனால் திருமணம் பற்றி எல்லாம் எனக்கு எந்த யோசனையும் இப்போதைக்கு இல்லை.. திவிஜா நம் இருவருக்கும் வேண்டும்.. ஆசிரமத்தில் தம்பதிக்கு தான் தத்து கொடுப்பேன் என்கிறார்கள்.. நான் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு திவிஜாவை அழைத்து போக முடியும்.." என்று கூறி ஒரு நொடி மிருணா நிறுத்த, அவளை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்து கொண்டிருந்தான் சரவணன், அதில் உள்ளுக்குள் சிரித்து கொண்டவள்

"ஆனால் அப்படி போனால் உங்களுக்கு குழந்தை கிடைக்காது.. மேலும் குழந்தையை அன்புடன் வருபவன் ஏற்றுக்கொள்வான் என்று சொல்ல முடியாது.. இதுவே உங்கள் குடும்பமா இருந்தா திவிஜாக்கு நிச்சியம் அன்பான சொந்தங்கள் கிடைக்கும்.. அதான் குணாவை என்னை திருமணம் செய்துக்கறாரா என்று கேட்டேன்.."

அவள் கூறியதை கேட்டுக்கொண்டே வந்த சரவணன் கடைசியாக அவள் கூறியதில் "என்ன..?" என்று அதிர்ந்து எழுந்து விட்டான்

அவன் அதிர்ச்சியை புரியாமல் பார்த்தவள், "என்ன ஆச்சு..?" என்று கேட்க

"மாமவையா திருமணத்திற்கு கேட்டாய்..?" கொஞ்சமும் அதிர்ச்சி நீங்காமல் சரவணன் கேட்க

அவளோ "ஆமாம்" என்றாள் சாதரணமாக

"அவர் தான் வயது வித்தியாசம் அதிகம் என்று உங்களை பற்றி சொன்னார்.. எனக்கு ஒன்றும் இல்லை.. எதுவானாலும் குழந்தைக்காக தான் என்னும் போது எனக்கு தனிப்பட்ட கருத்து எதுவுமில்லை.. அதான் உங்ககிட்ட சம்மதம் கேட்க சொன்னேன்.." வெகு சாதரணமாக மிருணா கூறிக்கொண்டே போக

'என்ன பெண் இவள்..!' என்று தான் சரவணனுக்கு தோன்றியது

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் யாரென்று தெரிகிறதா பாருங்க மக்களே..😉😉

********************

அவளுக்கு யாருக்கு இல்லை என்ற தைரியத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் அவள் கையை பிடித்து இழுத்துவிட, "ஐயோ விடு டா" என நிரல்யா கத்திக்கொண்டிருக்கும் போதே அவளை பிடித்திருந்தவன் கைகள் வேகமாக தளர்ந்து, அவன் நாலு அடி தள்ளி போய் விழுந்திருந்தான்..

விழுந்த வேகத்தில் கீழே கிடந்தவனும் நிரல்யாவும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்க, அங்கு ரௌத்திரமாய் அவனை உறுத்துவிழித்து கொண்டு நின்றிருந்தான் சித்ரூபன்..

ஒரு அடியில் அவன் கோபம் அடங்கவில்லை போல், நிரல்யா பார்த்துக்கொண்டிருக்கும் போதே கீழே கிடந்தவனை ஒரே கையில் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கியவன், "பணத்திற்கு ஈடா பொண்ணு வேணுமா உனக்கு, நாயே.." என கத்திகொண்டே சித்ரூபன் மீண்டும் அவனை ஒரு அரை விட, அவன் உதட்டு சதை கிழிந்து ரத்தம் வடிந்தது.

அங்கு சித்ரூபனையும் ஆதித்யாவையும் யாரும் எதிர்பார்க்கவில்லை என அவர்கள் அதிர்ந்த பார்வையே உணர்த்தியது..

ராகேஷ் ஒரு பொறுக்கி என்பது ஊரறிந்த விஷயம்..

அவன் தங்கையை பார்க்க போய் திரை உலகின் ஜாம்பவான்கள் வந்து நிற்பார்கள் என யார் கண்டது..

"வேடிக்கை பார்த்துட்டு நிக்கறீங்களே, நீங்க எல்லாம் மனுஷ ஜென்மம் தானா!" எரிச்சலுடன் ஒலித்த ஆதித்யாவின் குரலில் தான் அனைவரும் சற்று நினைவிற்கே மீண்டு தலைகுனிந்து நின்றனர்..

அனைவரையும் கண்கள் சிவக்க பார்த்த சித்ரூபன், அங்கிருந்த ஒரு மேசையில் தாவி ஏறி அமர்ந்தான்..

கையில் ஒரு சிகரட் எடுத்து பற்ற வைத்துக்கொண்டவன், நிதானமாக அனைவரையும் ஒரு முறை பார்க்க, அவனை பற்றி நன்கு தெரிந்த அனைவருக்குமே வயிற்றில் புளியை கரைத்தது..

"என்ன பிரெச்சனை?" அழுத்தமாக வந்து விழுந்த அவன் வார்த்தையில் யாரும் பதில் கூற கூட பயந்து அமைதியாகவே இருக்க,

"யாரவது சொல்லி தொலைங்களேன்.. எல்லாரும் தான் பெரிய வீரன் ஆச்சே!" கோபத்துடன் ஆரம்பித்தவன் நக்கலுடன் முடிக்க,

'இவர்களுக்கெல்லாம் மகன் முறை தான் சரி பட்டு வரும்' என்று நினைத்துக்கொண்டு ஆதியும் ஒரு பக்கம் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தான்.

"ராகேஷ் வாங்கி இருந்த கடன்.." என ஒருவன் இழுக்க

"ம்ம் யாருக்கு எவ்வளவு? அண்ட் ப்ரூப் இருந்தா மட்டும் நில்லுங்க.." தெளிவாக சித்ரூபன் கூற, அங்கிருந்த அனைவரிடமுமே கையில் ஒரு பத்திரம் இருந்தது..

யாரும் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லையே..

முதலில் ராகேஷ் கடனுக்கு ஈடாக வீட்டை எழுதி கொடுத்திருந்த பாத்திரத்தை ஒருவன் நீட்ட, அதை வாங்கி பார்த்தான் சித்ரூபன்.

அதில் தெளிவாக கடன் கொடுக்கமுடியவில்லை என்றால் வீட்டை எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதி இருந்தது.. சட்டபூர்வமாக ஒன்றும் செய்ய முடியாது..

அதை மீண்டும் அவன் கையிலேயே கொடுத்தவன், "நெக்ஸ்ட்" என திரும்ப மற்ற மூவரும் தங்களிடம் இருந்த பத்திரத்தை நீட்டினர்..

அனைத்திலும் லட்சக்கணக்கில் ராகேஷ் கடன் வாங்கியதற்கான சான்று இருந்தது..

அனைத்தையும் ஒரு முறை பார்த்தவன், அந்த பத்திரங்களை தன் அருகில் வைத்துவிட்டு, கடைசியாக அவனிடம் அடிவாங்கியவனிடம் திரும்பினான்..

"ஏய்..." என சுடக்கிட்டு அவன் அழைக்க, ஏற்கனவே ரத்தம் ஒழுக நின்றிருந்தவன் அதற்கு மேல் சித்ரூபனிடம் மோத தைரியம் இல்லாமல் அமைதியாக முன்னால் வந்தான்..

அவன் முன் சித்ரூபன் கைநீட்ட, புரிந்துகொண்டவனாய் தன்னிடம் இருந்த பத்திரத்தை சித்ரூபனிடம் நீட்டினான் அவன்..

அதை வாங்கி பார்த்தவன் முகம் ஏளனத்துடன் வளைந்தது..

"ஐம்பது லட்சம்.. கொஞ்சம் பெரிய அமௌன்ட் தான்.. அதான் துரை கைநீட்டிடீங்களா? ஒரு பெண்ணிற்கு எதுவுமே ஈடாகாது டா.. முட்டாள்.."

"இதோ பார் இந்த ஐம்பது லட்சம் நீ அவள் மீது கை வைத்ததற்கு தண்டனை.. இத்துடன் ஓடி விடு.. மீறி ஏதாவது செய்ய முயன்றால், என்னை பற்றி உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.." சிகரட் இருந்த கையால் நெற்றியை நீவி கொண்டே சித்ரூபன் கேட்க

"பெரிய அமௌன்ட் சித்ரூபன்" என்றான் அவன் மெதுவாக

"எனக்கு ஒரு விஷயாத்தை இரண்டு முறை கூற பிடிக்காது.." அழுத்தம் திருத்தமாக அவனிடம் இருந்து வந்த வார்த்தையில், இனி நின்றாள் நிச்சியம் தன்னை ஒரு வழி செய்துவிடுவான் என்று புரிய, தன் விதியை நொந்துகொண்டே நகர்ந்தான் அவன்..

நகரும் போது அவன் பார்வை நிரல்யா மீது ஒரு முறை படிந்தது..

அதை சித்ரூபன் ஆதித்யா இருவருமே கவனித்து விட்டனர்..

ஆனால் அவன் வேகமாக ஓடிவிட்டதால், சித்ரூபன் அதற்கு மேல் அவனை கண்டுகொள்ளவில்லை..

மற்றவர்களை நிதானமாக பார்த்தவன், "உங்க எல்லாருக்கும் தேவையான பணம் உங்க கைக்கு கிடைக்கும்.."

"அண்ட் நீங்க கொஞ்சம் டைம் கொடுங்க.. வீட்டை காலி பண்ணி தருகிறோம்.. இப்போ எல்லாரும் போகலாம்.." அழுத்தமாக சித்ரூபன் கூறியதில், அவனை பற்றி நங்கு தெரிந்த இருவர் நகர்ந்துவிட, மற்ற இருவர் தயங்கி நின்றனர்..

அவர்கள் நிற்கும் காரணம் புரிந்தவன், "எனக்கு யாரையும் ஏமாற்றி பழக்கம் இல்லை.. தைரியமா போங்க.. நம்பிக்கை இல்லைனா அவங்ககிட்ட கேளுங்க.. சொல்லுவாங்க.." என முன்னால் சென்றவர்களை கைகாட்டி சித்ரூபன் கூற, அவர்களும் அதற்கு மேல் நின்றாள் மரியாதையாக இருக்காது என நகர்ந்து விட்டனர்..

அனைவரும் சென்றதும் சித்ரூபன் கையில் முடிந்திருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு, "ஐ எம் சாரி.. கொஞ்சம் டென்ஷன் ஆகிடுச்சு, அதான் ஸ்மோக் பண்ணிட்டேன்.." என நிரல்யாவிடம் கூற

அவன் தன்னிடம் தான் பேசுகிறான் என்று புரிந்துகொண்ட நிரல்யா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்..

இத்தனை நேரம் நடந்த கலவரத்தில் ராட்சசன் போல் கர்ஜித்து அத்தனை பெரியவர்களை ஓட விட்டவன், அவளிடம் மென்மையாக மன்னிப்பு கேட்டால் அவளும் என்ன தான் செய்வாள்!

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

மிக மிக சந்தோசமான விஷயத்துடன் வந்திருக்கேன்.. நம்ம சரவணன் உங்களை எல்லாம் பார்க்க வந்துட்டார்..


முதல் நன்றி நம் ஸ்ரீகலா Sri Kala அக்காவிற்கு தான்.. அக்கா நீங்க இல்லை என்றால் எதுவுமே சாத்தியம் இல்லை கா.. அனைத்தும் நீங்க கொடுத்தது தான்.. லவ் you அ லாட் கா..🥰🥰🥰😍😍😍.. தொடர்ந்து புத்தகத்தை வெளியிட்டு வரும் ப்ரியா நிலையத்திற்கும் Rajasekaran V பெரும் நன்றிகள் அண்ணா..🥰🥰🥰🥰

டீஸர் படித்து சரவணன் ஜோடி பற்றி குழம்பிய மக்களே விடை புத்தகத்தில்..

செப்டம்பர் 1 முதல் எல்லா இடங்களிலும் கிடைக்கும்..

இப்போது நம் சைடில் 10% கழிவுடன் கிடைக்கிறது மக்களே.. புக் செய்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் டியர்ஸ்.. லவ் you ஆள் பேபீஸ்...🥰🥰🥰🥰

நன்றி

அருணா

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் டீஸர் பேபீஸ்.. பாண்டி மாமா வரும் டீஸர் டியர்ஸ்.. படிச்சுட்டு சொல்லுங்க பா..

********************

புக் கிடைக்கும் link:



சரவணன் புல்லட்டில் ஏறி அதை உயிர்ப்பித்திருக்க, அதில் ஏறும் முன் போனை எடுத்து பார்த்த பாண்டியன், "அம்மா டா.." என்றார் குரலில் சிறு பயத்துடன்

அதில் லேசாக சிரித்து கொண்ட சரவணன், "பேசுங்க பா..வெளியில் தான் வீரமெல்லாம்..அம்மா என்றால் நடுங்க வேண்டியது.." என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற

"ஆமா டா.. அவள் என்னையே ஓட விட்டவள் ஆயிற்றே.."

கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ஒத்துக்கொண்டே அலைபேசியை உயிர்ப்பித்தார் பாண்டியன்..
அவர் நினைத்தது போலவே அந்த பக்கம் அன்பரசி எடுத்ததும் கத்த தொடங்கி விட்டார்.

"மாமா எங்க போய் யாரை அடிச்சுட்டு இருக்கீங்க.. இப்போ வீட்டுக்கு வரீங்களா இல்லையா..?" சிறு கோபத்துடன் அன்பரசி கேட்க
"வரேன் அரசி.. மாமாக்கு பசிக்குது சமைச்சு வைக்கறயா.." என பாண்டியன் மெதுவாக கேட்க

"ம்ம் எல்லாம் ஆச்சு.. சும்மா ஐஸ் வைக்காம வந்து சேருங்க.." என்றுவிட்டு போனை வைத்து விட்டார் அன்பரசி

"என்ன பா உங்க பாச்சா பலிக்கலை போலயே.." என சரவணன் கிண்டலாக கேட்க

"அது என்னிக்கு டா உங்க அம்மாகிட்ட பலிச்சுருக்கு.. வீட்டுக்கு போ.. உனக்கும் கச்சேரி இருக்கு.." என்றார் பாண்டியனும் சிரித்து கொண்டே

அவர் ஏறியதும் வண்டியை அடித்து உதைத்து கிளப்பிய சரவணன் அடுத்த பதினைந்தாவது நிமிடம் வீட்டில் இருந்தான்..

இருவரும் வீட்டிற்குள் வந்த போது வரவேற்பறையிலேயே குணா அமர்ந்திருந்தான் ..

அன்பரசியின் தம்பி குணா.

இப்போது அவனுக்கு நாற்பது வயது.. மெதுவாக மாமன் அருகில் சென்ற சரவணன், "என்ன மாமா உங்க அக்கா பயங்கர சூடா இருக்காங்களா.." என்று மெதுவாக கேட்க

"ஆமா டா.." என்றான் அவன் ஒரு மெலிதான புன்னகையுடன்.

குணாவிடம் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது.. எப்போதும் கொஞ்சம் அமைதியானவன் தான்..

அதிலும் கடந்த ஐந்து வருடத்தில் மொத்தமாகவே தனக்குள் ஒடுங்கி போய் விட்டான் ..

அவனுக்கு ஏற்பட்டது தாங்க முடியாத இழப்பல்லவா..! இழப்பின் காரணம் கூட அறியாமல் தவித்தவனை ஓரளவேனும் தேற்றியது அவன் குடும்பம் தான்.. இல்லை என்றால் என்றோ மொத்தமாக ஓய்ந்து போய் இருப்பான் ..

இங்கு மூவரும் அமர்ந்திருக்கும் போதே சமையல் அறையில் இருந்து வேகமாக வெளியே வந்தார் அன்பரசி..

"சரவணா அவர் கூட பஞ்சாயத்து அது இது என்று சுத்தாதேன்னு எத்தனை முறை டா சொல்வது.. இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு கல்யாணம்.. அந்த நினைப்பு கொஞ்சமாவது இருக்கா உனக்கு.. எங்காவது போய் ஏதாவது ஆனால் என்ன செய்வது.. உங்களுக்கு கொஞ்சமாவது ஏதாவது அறிவு இருக்கா..?" பிள்ளையிடம் ஆரம்பித்தவர் கணவனிடம் முடிக்க, மகனை திரும்பி பார்த்து கண்களாலேயே கெஞ்சினார் பாண்டியன்

அதில் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அன்னையிடம் சென்றவன், அவர் கழுத்தை கட்டிக்கொண்டு, "போதும் மா மலை இறங்குங்க.. கோபத்தில் உங்க முகம் சிவப்பதை சைட் கூட அடிக்க முடியாம அப்பா பயப்படறார் பாருங்க.." என அவர் கன்னத்தை பிடித்து கொண்டு அவன் கொஞ்ச

"அட ச்சீ போடா.." என்றவர் முகம் இப்போது வெட்கத்தில் சிவந்து போனது

அதில் அவரறியாமல் தந்தையை பார்த்து கண்ணடித்துவிட்டு சரவணன் தன் அறைக்கு செல்ல படி நோக்கி போக, "டேய் திவ்யா போன்.. பண்ணினா உன் மேல் பயங்கர கோபத்தில் இருக்கா.. என்னை கரெக்ட் பண்ணின மாதிரி அவளை பண்ண முடியுதா பாரு.." என்று சிரித்து கொண்டே கூறியவர்

"நீங்க ரெண்டு பேரும் முதலில் சாப்பிட வாங்க.." என கணவனையும் தம்பியையும் பார்த்து கூறிவிட்டு நகர்ந்து விட்டார்

அப்போது தான் போனை சைலன்ட்டில் போட்டிருந்ததே சரவணனுக்கு நினைவு வர, 'செத்த டா சரவணா நீ..' என தனக்கு தானே கூறி கொண்டு இரண்டு இரண்டு படிகளாக தாண்டி வேகமாக தன் அறைக்கு வந்து சேர்ந்தான் சரவணன்..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் குட்டி டி...

***************

சாதா பேண்ட் சட்டை இரவு உடையாக அணிந்து கொண்டு அவள் வந்த போது அவன் சோபாவில் இல்லை..

அந்த அறை முழுவதும் மிருணா தேட சரவணன் பால்கனியில் நின்றிருந்தது தெரிந்தது..

மெதுவாக அங்கே வந்தவள் "தூங்கலையா சரவணா..?"என்று சாதரணமாக கேட்க

அவளை திரும்பி பார்த்தவன் கண்கள் அத்தனை சிவந்திருந்தது..

அதில் ஒரு நொடி அனிச்சை செயலாய் பின்னால் நகர்ந்து விட்டாள் மிருணா..

"உன்னுடன் வந்து படுக்கவா..?" அழுத்தமாக அவன் கேட்க அவன் கூறிய வார்த்தைகளில் அவள் கோபமும் வெளியே வந்தது..

"என்ன பேசறீங்க! தூங்கலையா என்று தானே கேட்டேன்.. அதற்கு சொல்லும் பதிலா இது..!" சீறலுடனே மிருணாவும் கேட்க

"வாயை மூடு டி.." என்று கத்திவிட்டான் சரவணன்

கண்கள் முகம் எல்லாம் சிவக்க உச்சகட்ட கோபத்துடன் அதை கட்டுப்படுத்தும் வழியறியாது நின்றிருந்தவனை பார்த்து மிருணாவிற்கே உள்ளுக்குள் கொஞ்சம் நடுங்கி தான் விட்டது..

அவள் லேசாக பின்னால் நகர, அதை பார்த்து நக்கலாக சிரித்தவன், "என்ன தைரிய சிகாமணி எங்க போறீங்க..?" என்று நக்கலாக கேட்டவன், அடுத்த நொடி கோபத்துடன் அவளை உறுத்து விழித்தான்

"நீ சாதாரணமா இருப்ப டி.. என்னால் முடியலை.. தலை எல்லாம் வெடிக்கற மாதிரி இருக்கு.. குழந்தைக்காக கூட போயும் போயும் உன்னை திருமணம் செய்திருக்க வேண்டாம் என்று இப்போ தோணுது.. என் கண் முன்னாடி நிற்காம போய்டு.. நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியலை.." அவளை நெருங்கி நின்று கர்ஜனையாக சரவணன் கூற, இது வரை இப்படி ஒரு முகத்தை அவனிடம் பார்த்திராதவள் அங்கு அதற்கு மேல் நிற்க தைரியம் இல்லாமல் உள்ளே வந்து விட்டாள்..

புத்தகம் கிடைக்கும் link:


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய விஜய தசமி நல் வாழ்த்துக்கள் டியர்ஸ்.. ஒரு ஸ்பெஷல் teaser..😍😍


**************


"மாயா நம் இருவருக்கும் இப்போது திருமணம்.."


ஏதோ இருவரும் சாப்பிட போகிறோம் என்பது போல் அவன் அசால்டாக சொல்ல, முதலில் அவன் கூறியதை மாயாவால் நம்பக்கூட முடியவில்லை..


"என்ன விளையாடற ராம்.." என்று அவள் குழப்பத்துடன் கேட்க


"இதில் விளையாட ஒன்றுமே இல்லை மாயா.. இப்போ நமக்கு திருமணம்.. இன்றில் இருந்துது நீ என் மனைவி.. நீ ஒத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் இது நடக்கும்.." என்று அழுத்தம் திருத்தமாக தர்ஷன் கூற
ஒருவாறு அவன் சீரியஸ்ஸாக தான் பேசுகிறான் என்று மாயாவிற்கு புரிந்தது..


ஆனால் என்ன சொல்கிறான்..??
திருமணம் என்றால் அவ்வளவு எளிதா..


மேலும் இப்போது எதற்கு என ஒன்றும் புரியாமல் அவள் மூளை வெகுவாக குழம்ப, "ராம் எனக்கு ஒன்றும் சத்தியமா புரியலை.. இப்போ எதுக்கு கல்யாணம்..??" என்று மாயா குழப்பத்துடன் கேட்க


அவன் முகத்தில் சில நாட்களாக காணாமல் போய் இருந்த நக்கல் சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டி கொண்டது..


"கல்யாணம் எதற்கு பண்ணுவாங்க மாயா.. குடும்பம் நடத்த தான்.." உதட்டில் நக்கல் சிரிப்பு இருந்தாலும் அவன் குரலில் அழுத்தம் மாறாமல் இருக்க
அந்த குரல் சொன்னதை செய்யுமே என்ற பயம் கொஞ்சம் கொஞ்சமாக மாயாவை தாக்கியது..


"உன்னை கல்யாணம் பண்ணி குடும்பம் வேறு நடத்தணுமா.. இதற்கு நான் எப்படி சம்மதிப்பேன் என்று நினைத்தாய் ராம்.."
உள்ளுக்குள் பயம் இருந்தாலும், கோபமும் சேர்ந்துகொள்ள எரிச்சலுடன் மாயா கேட்க


"கிருஷ்ணா.." என்று ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது தர்ஷனிடம் இருந்து
அதில் மாயாவிற்கு மேலும் அதிர்ச்சி தான் மிஞ்சியது..


அவளுக்கு 'ச்சை' என்று ஆகி விட்டது..


இவன் மனித பிறவியே இல்லை என்று அவள் மனம் காரி துப்ப, "நீ ராட்சசன் ராம்.. உனக்கு கொஞ்சமும் மனசாட்சியே இல்லையா.. ஒரு குழந்தையை வைத்து எவ்வளவு தான் மிரட்டுவாய்.. என்ன ஆனாலும் இப்போது சொன்னதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்.." என்று எரிச்சலுடன் கூறி விட்டு மாயா வேகமாக திரும்பி நடக்க முயற்சிக்க, ஒரே ஏட்டில் அவளை அழுத்தமாக பிடித்து நிறுத்தியவன்


"தம்பி மீது பாசம் அவ்வளவு தானா.. நீயும் உன் அப்பா மாதிரி தான் போலவே.." நக்கலாக தர்ஷனிடம் இருந்து வந்த கேள்வியில் கண்களில் வலியுடன் அவனை பார்த்தவள், அவனுக்கு பதில் சொல்லாமல் தன் கைகளை விலக்கி கொள்ள முயற்சித்தாள்..


ஏனோ தர்ஷன் கிருஷ்ணாவை ஒன்றும் செய்து விட மாட்டான் என்று இத்தனை நாளில் அவளுக்கு சிறு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது..


அவனை வைத்து அவளை மிரட்டி கொண்டிருந்தானே ஒழிய, அவனை கஷ்டப்படுத்தியது போல் ஒன்றும் தெரியாததால் தான் தைரியமாக மாயா அப்படி கூறியது..


அவள் கண்களில் இருந்தே அவள் மனதை சரியாக படித்துவிட்ட தர்ஷன் "ம்ம் நீ நினைக்கும் அளவு நான் நல்லவன் இல்லை மாயா.." என்று அவளை கூர்ந்து பார்த்து கொண்டே கூறியவன், தன் போனை ஒற்றை கையால் எடுத்து ஒரு வீடியோ ஆன் செய்து அவள் கண்கள் முன் நீட்டினான்..


அந்த வீடியோ பார்த்ததும் மாயாவின் கைகளும் கால்களும் தானாக தன் செயல்களை நிறுத்தி விட்டது..


அந்த வீடியோவை அவள் கண் எடுக்காமல் பார்க்க சில நொடிகளே ஓடிய அந்த வீடியோ முடிந்ததும் இனி அவள் நகர மாட்டாள் என்ற தைரியத்தில் தன் கைகளை எடுத்துவிட்டான் தர்ஷன்...


அவன் அவளுக்கு காண்பித்தது கிருஷ்ணா அழுத ஒரு வீடியோ..


ஒரு நாள் ஏதோ விளையாட்டாக சிறிது நேரம் அவன் அழுததை அவனை சமாதான படுத்தி விளையாட வைப்பதற்காக தர்ஷன் வீடியோ எடுத்திருந்தான்..


அதை எடுத்து கிருஷ்ணாவிடம் போட்டு காட்டி, 'பாருங்க கிச்சா குட்டி அழுதா நல்லாவே இல்லை..' என்று அவன் குழந்தையை சமனாதனம் செய்தது இப்போதும் அவன் கண்கள் முன் விரிந்தது..


ஆனால் மாயாவிற்கு அதெல்லாம் தெரியாதே..


குழந்தை ஏதோ கஷ்டத்தில் அழுகிறான் என்று நினைத்தவள் உறைந்து நின்று விட்டாள்..


அவள் என்ன நடக்காது என்று நினைத்தாளோ அந்த எண்ணம் பொய் ஆகி விட்டதே..
இதோ குழந்தை அழுகிறான்..
எதற்கு அழுதானோ..? எப்போது அழுதானோ..? என்று அவள் மனம் ஏகத்திற்கு துடித்து கதற, கண்களில் கனல் பறக்க தர்ஷன் புறம் திரும்பியவள்,


அவன் சட்டையை கொத்தாக பிடித்து "குழந்தையை என்ன டா பண்ணின.. அவனுக்கு ஒன்றும் ஆகாதுன்னு சொல்லி தானே நீ சொன்னதெல்லாம் செய்ய வைத்தாய்.. கிருஷ்ணா எங்கே டா.. அவனுக்கு என்ன டா ஆச்சு.." பைத்தியம் பிடித்தது போல் மாயா அவனை உலுக்கி கொண்டே கத்த, தர்ஷனோ அவள் கத்தி ஓயும் வரை அமைதியாக இருந்தான்..


ஒருகட்டத்தில் அவனை உலுக்குவதை நிறுத்தியவள் , "ப்ளீஸ் சொல்லு ராம்.. கிருஷ்ணா நல்லா இருக்கான்ல.. நீ அவனை ஒன்னும் செய்துவிட வில்லையே.." என்று அழுகையுடன் கேட்க


அவள் கைகளை நிதானமாக எடுத்துவிட்டவன், "நீ நான் சொன்னதை செய்யும் வரை அவன் நன்றாக இருப்பான்.." என்று எப்பவும் கூறும் பதிலை இப்போதும் கூற
'பாவி..' என்று அவன் வாய் தானாக முணுமுணுத்தது


கிருஷ்ணா பற்றிய கேள்விக்கு இதை தவிர அவனிடம் இருந்து எந்த பதிலும் வராது என்று அவளுக்கு தெரியும் தான்..


அதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இதே போல் சொல்ல வேண்டுமா..!!


********************


"அதற்கு பின் என்னுடன் வாழ்வதும் வாழாததும் உன் முடிவு தான்.." என்றுவிட்டு நிறுத்தினான்


அதை கேட்க கேட்க மாயாவிற்கு உயிரே போய் விடும் போல் இருந்தது..


அனைத்து உணர்ச்சிகளும் மரத்துபோய்விட்டது என்று சில வினாடிகள் முன்பு நினைத்தது எத்தனை தவறு..


இதோ அவள் மனதை உயிரோடு கத்தி கொண்டு திருகுகிறானே.. எத்தனை வலிக்கிறது..


அவள் தந்தை மானம், தந்தை மானம் என்கிறான், இதில் முக்கியமாக போக போவது அவள் மானம் அல்லவா..


இவனுக்கு அது புரிந்ததா இல்லையா என்ற சந்தேகத்துடன் மாயா அவனிடமே கேட்டாள்.

"ராம் இதில் அப்பா மானம் போகும் என்றா நினைக்கிறாய்.. என் வாழ்க்கை தான் முழுதாக வீணாகும்.. அது உனக்கு புரியவில்லையா.." என்று ஆற்றாமையுடன் அவள் கேட்க


"நீ அவன் மகள் தானே.. பட்டு தான் ஆக வேண்டும்.." என்று பட்டு தெறித்தார் போல் அவனிடம் இருந்து பதில் வந்தது


அதில் மாயா அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, "மேலும் வாழ்க்கை வீணாவானேன்.. நமக்கு நடப்பது திருமணம் தான் மாயா.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. வெளி உலகிற்கு தெரிந்த பின் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக சாதரணமாக வாழ முயற்சிக்கலாம்.." என்று சற்று மெதுவாக தர்ஷன் கூற


"சீ.." என்று அடுத்த நொடி முகத்தை சுளித்தாள் மாயா


அவளை உயிரோடு கொன்ற பின் வாழ போகிறானா.. அவளுக்கு லேசாக சிரிப்பு கூட வரும் போல் இருந்தது..


அவளது உதாசீனம் அவனுக்கும் சிறு கோபத்தை கிளப்பி இருக்க, "அப்போது உன் முடிவு எதுவானாலும் எனக்கு சம்மதம் தான் மாயா.. ஆனால் இப்போது நான் சொன்னது தான் நடக்க வேண்டும்.."


அவள் கவலையை உணர்ந்தும் தர்ஷன் தன் பிடியில் இத்தனை உறுதியாக நிற்க, அப்போது தான்
இந்த அளவு அவன் கோபப்படும் அளவு தந்தை என்ன செய்திருக்க கூடும் என்ற சந்தேகம் மாயாவிற்கு வந்தது..


எதுவாக இருந்தாலும் அவன் செய்ய நினைப்பது மிகவும் அதிகப்படி என்று மாயாவிற்கு தோன்ற, "அப்படி என் அப்பா என்ன செய்தார் ராம்.. நீ இத்தனை தூரம் கோபப்படுவது நியாயமாக இருக்கும் என்றே எனக்கு தோன்றவில்லை..அப்பா அப்படி என்ன கொலையா செய்து விட்டார்..." என்று கோபத்துடன் மாயா கத்த


"ஆமாம் டி.." என்று அவளுக்கு மேல் சத்தமாக கத்தினான் தர்ஷன்


கண்கள் எல்லாம் கோபத்தில் சிவந்து விட அவளை இழுத்து கொண்டு அந்த மேசை அருகில் சென்றான் தர்ஷன்..


அங்கு அழகிய புன்னகையுடன் மூன்று பேர் புகைப்படம் மாட்ட பட்டிருந்தது..


மூவர் முகத்திலும் அத்தனை அமைதி..


ஒருவர் சற்று வயதான பெண்மணி.. மேலும் தர்ஷன் வயதை ஒத்த ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாய் இரு படங்கள் இருந்தது..


"பாரு இவர்கள் மூவரின் உயிரும் போனது உன் தந்தையின் அலட்சியத்தாலும், பணத்தாசையாலும் தான்.. இவர்கள் உயிர் மட்டுமா..!!" என்று நிறுத்தியவன் மேலும் உயிருடன் இருந்து வதை படும் இரு உயிர்களை நினைத்து சில நொடிகள் கலங்கி நின்றான்..


மாயாவோ அவன் கூறிய செய்தியில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்க "நோ நீ பொய் சொல்லுற.. நான் நம்ப மாட்டேன்.." என்று சத்தமாக கத்தினாள்


அவள் தந்தை மூன்று உயிர் போவதற்கு காரணமாக இருந்திருப்பார் என்று அவளால் நம்ப முடியவில்லை..


அவர் கெளரவம் பார்ப்பார் தான்.. அதற்காக பிள்ளைகளை கூட ஒதுக்கி வைப்பார் தான்.
ஆனால் உயிர்.. அதனுடன் விளையாண்டிருப்பாரா என்பதை
அவளால் சுத்தமாக நம்ப முடியாமல் தான் கத்தி இருந்தாள்..


தன் வலியில் கண்மூடி நின்றிருந்த தர்ஷன் அவள் கூற்றில் கண்களை திறக்க, அவள் கூறிய வார்த்தைகள் அவன் கோபத்தை ஏகத்துக்கும் கிளறி விட்டது..


"நம்பினால் நம்பு.. நம்பாட்டி போ டி.. உன்னிடம் நிரூபிக்க நேரமில்லை.. நான் சொன்னது நடக்க வேண்டும் அவ்வளவு தான்.." என்று கோபத்துடன் இரைந்தவன், அடுத்த நொடி சற்றும் யோசிக்காமல் தன் அன்னை படத்தில் தொங்கி கொண்டிருந்த அவர் தாலியை எடுத்து மாயா கழுத்தில் அணிவித்திருந்தான்..


அவன் என்ன செய்கிறான் என்று மாயா உணரும் முன்பாகவே அவர்கள் திருமணம் நடந்து முடிந்திருதது..


இருவரின் மனதிலும் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் இருந்தது..



ஆனால் அதை கொஞ்சமும் நினைக்க கூட வழி இல்லாமல் இருவரின் மனதையும் கொல்லும் ரண வேதனையுடன் அவர்கள் திருமணம் முடிந்திருந்தது..

 
Status
Not open for further replies.
Top