All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிதன் தயாவின் ‘கொலையும் கற்று மற’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொலையும் கற்று மற

அத்தியாயம் 1 - கொலையா? தற்கொலையா?

2008ம் ஆண்டு
திருச்சி கார்ப்பரேஷன் உயர்நிலை பள்ளியில் பிளஸ் 2 மேலதிக வகுப்புகள் முடிவடைய அன்று மாலை 6 மணியாகிவிட்டது, பிரியா தனது தோழிகளான வைஷ்ணவி மற்றும் பூங்குழலியுடன் சிறிது பதற்றம் மேலோங்க தங்குமிடம் நோக்கி புறப்பட்டாள்.
"ஏண்டி இவ்வளவு டென்ஷன்?" என்று வைஷ்ணவி கேட்க, " ஏய் நீங்கல்லாம் பக்கத்தில இருந்து வாறீங்க. தடுக்கி விழுந்தா உன்ட வீடுதான். குழலிக்கு அவள்ட அப்பாட கடைக்கு போய்டுவாள். நான் எவ்வளவு தூரம் போகணும்! இப்பிடி லேட் ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா அட்லீஸ்ட் சைக்கிளையாவது கொண்டு வந்திருப்பன். இப்ப போய்ச்சேர 7 மணியாக போகுது " என்று பயத்திலும் வெறுப்பிலும் புகைந்து தள்ளினாள் பிரியா.
அந்த நேரத்தில் தெரு முனையில் பிரியாவின் ஓரக்கண் பார்வைக்காக காத்திருந்த இளைஞனை தோழிகள் மூவரும் காணத்தவறவில்லை. அவன் கடந்த 6 மாத காலமாக பிரியாவின் பின்னால் அலைவதையே முழு நேர தொழிலாக கொண்டிருக்கிறான். அவனது சீருடையை பார்க்கும் போது ஏதோ ஒரு தனியார் பள்ளி மாணவன் என்பதும் பார்ப்பதற்கு செழிப்பான குடும்பத்து பையன் போலவும் இருந்தான்.
இவ்வளவு நேரமும் பிரியாவின் வருகைக்காக காத்திருந்தான். கூடவே அவனுடன் 4,5 நண்பர் பட்டாளமும் நின்றிருந்தது. பிரியாவும் தோழிகளும் தெரு முனையை கடக்கையில் நண்பர் கூட்டம் உத்வேகத்துடன் அவனை கிண்டலடித்து அவனது இருப்பினை பிரியாவிற்கு உணர்த்த முயன்றனர். அவனும் பிரியாவின் அழகினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் இந்த 6 மாதத்தில் பிரியா ஒருமுறையேனும் அவனை திரும்பி பார்த்ததில்லை.
"என்னடி அவனும் உனக்கு பின்னாலயே திரியுறான், நீயும் கண்டுக்காமலே இருக்கிற, அவனுக்கு ஒரு நல்ல முடிவா சொல்லலாம்தானே" என்று பூங்குழலி கூறி வைஷ்ணவியுடன் சேர்ந்து பிரியாவினை வெறுப்பேற்றும் படி சிரித்தார்கள். அக்கினியாய் கொதித்த பிரியாவோ " உங்களுக்கெல்லாம் எத்தன தடவ சொல்றது, இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு, அதோட உங்களுக்கு என்னோட நிலைமையும் தெரியும்தானே" என்று கோபக்கனலை பொழிந்தாள்.
"சரி சரி உன்ன கூலாக்குவம் எண்டு சும்மா கேலி செய்றாள், நீயும் அதுக்கு கோபப்பட்டுட்டு........." வைஷ்ணவி சமாதானப்படுத்த பிரியாவும் சற்று நிதானமானாள்.

சில நிமிடங்களில் வைஷ்ணவியின் வீடு வந்து விட , பூங்குழலியும் பிரியாவும் பயணத்தை தொடர்ந்தனர்.
"குழலி அந்த காந்தி நகர்ல வாற குறுக்கு தெருவால போக பயமாயிருக்குடி" என்று மீண்டும் பழைய பல்லவியை பாட தொடங்கினாள் பிரியா.
"இப்பவே இருட்டிட்டு, அந்த ஏரியாவே ஒரு மாதிரி, ஆறு மணிக்கு பிறகு சன நடமாட்டமே இருக்காது. குடிகாரனுகள் மட்டும் தான் இருப்பானுகள். இன்னைக்கு அந்த பிள்ளையார்தான் தான் என்ன காப்பாத்தணும்" என்று பல்லவியை தொடர்ந்தாள்.
"ஒண்ணும் யோசிக்காதடி, அப்பிடில்லாம் கூட பயப்பிடாத, எட்டு மணிக்கு மேலதான் அங்க போறது கொஞ்சம் பயம், இப்ப பிரச்சினையில்ல" என்று குழலி ஆறுதல் கூற சிறிது மனதை தேற்றியவளாய் பிரியாவும் நடையை வேகப்படுத்தினாள். இரண்டொரு நிமிடத்தில் குழலியும் விடை பெற ஓட்டமும் நடையுமாய் பறந்த பிரியா காந்தி நகரை அடைந்தபோது நேரமோ ஆறு நாற்பத்தைந்து.
ஏதோ நள்ளிரவு போல் நிசப்தமாக ஆங்காங்கே தெரு விளக்குகள் பல்லை காட்டி சிரித்து கொண்டிருந்தன. கதிரவனையோ சந்திரனையோ வானில் காணக்கிடக்கவில்லை. நெஞ்சில் சிறிது தைரியத்தினை வரவழைத்துக்கொண்டு நான்கு அடிகள் எடுத்து வைத்தாள் பிரியா.
சிறிது தூரத்தில் இருந்த டாஸ்மார்க் கடையின் முன் வழமையாக பிரியாவிடம் வம்பிழுக்கும் அந்த காடையர்கள் போதை தலைக்கேறிய நிலையில் ஒரு ஆட்டோவினுள் இருந்ததை கண்ட பிரியாவின் உடல் நடுங்கியது. பயத்தில் கண்கள் வியர்த்தது. அவர்களில் ஒருவன் தன்னை கண்டுவிட்டு தன்னை நோக்கி வருவதை உணர்ந்த பிரியா செய்வதறியாமல் மூர்ச்சையிழந்து நிற்க ......
"பிரியா......" பின்னாலிருந்து வந்த அந்த குரலினை நோக்கி திரும்புமுன் பிரியாவின் கைகளை ஒரு கை பற்றிக்கொண்டது.
திரும்பியவள் திடுக்கிட்டாள்.


2019, ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி,
சென்னை நகரம் சனிக்கிழமை நைட் பார்ட்டியினை முடித்துவிட்டு துயில் கொள்ள ஆரம்பித்திருந்தது. காலைக்கதிரவன் கூட வங்கக்கடலின் மடியில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நேரம் துகிரனின் கைத்தொலைபேசி தூக்கத்தை கலைத்து விட்டு அழத்தொடங்கியது. திடுக்கிட்டு எழுந்த புராதனியின் காதில் அலைபேசியிலிருந்து வெளியாகிய மெல்லிசையும் கூக்குரலாக ஒப்பாரி வைக்க அருகில் எதுவுமே அறியாமல் நித்திரையிலிருக்கும் துகிரனை பார்த்ததும் வெறுப்பின் உச்சத்துக்கு போனாள் புராதனி.
"துகி உங்கட போன் தான் ரிங் பண்ணுது, எந்திரிங்க" என்று கூறிக்கொண்டே துகிரனின் கையை உலுப்பி விட கண்களை திறந்தும் திறவாமலும் தூக்கம் கலைந்தும் கலையாமல் துகிரனின் கை செல்போனை நெருங்கியது.
"எத்தனை தடவ சொல்லியிருக்கன் இந்த போன சைலண்ட்ல போட்டுட்டு படுங்கன்னு", புராதனி கடிந்து கொண்டு மீண்டும் படுக்கையில் சாய, ஒருவாறாக கண்களை திறந்து ஸ்க்ரீனில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் என்ற பெயரை பார்த்ததும் அக்செப்ட் பட்டனை அழுத்தி காதில் வைத்தான் துகிரன்.
"ப்ளீஸ் ரமேஷ் எதுவா இருந்தாலும் மோர்னிங் பேசுறேன்" என்று துகிரன் சொல்லி முடிப்பதற்குள் மறுமுனையில் "இந்த டைம்ல கால் பண்ணினதுக்கு ரியலி சாரி சார், பட் இட்ஸ் ஏர்ஜென்ட் சார்" ரமேஷ் கூறி துகிரனின் பதிலை எதிர்பார்த்து நிற்க, துகிரனும் அன்றைய தூக்கம் அத்துடன் முடிந்தது என்று உணர்ந்தவனாய் ஒருவித சலிப்புடன் “ம்ம்ம்..... சொல்லுங்க. என்ன பிரச்சனை?” என்றான்.
"சார் இங்க அண்ணா நகர் வெஸ்ட் ராமநாதன் கொலனில ஒரு மெர்டர் நடந்திருக்கு, செத்து போன பையன் கொஞ்சம் பெரிய இடம், ஸோ கமிஷ்னர் நீங்களும் கிரைம் சீன ஒரு தடவ பார்த்தா பெட்டர் எண்டு பீல் பண்றார்"
"ஓகே நான் ஒரு தேர்ட்டி மினிட்ஸ்ல ஸ்பாட்ல இருப்பன்" என்று சொல்லி விட்டு போனை அணைத்தான் டிடெக்ட்டிவ் துகிரன்.
மெதுவாக திரும்பி புராதனியை பார்க்க அங்கே அவள் தூங்குவது போல் பாசாங்கு செய்வது அவனுக்கு புரிந்தது. துகிரனுக்கு அது புரியாமலிருக்க புராதனி பெரிய நடிகையுமில்லை, துகிரனும் அவ்வளவு ஏமாளியும் இல்லை.
"ஐயா கிளம்பிடீங்க போல" பேச்சிலே சலிப்பும் வெறுப்பும் மேலோங்கியிருந்தது.
"நான் இந்த டைம்ல போகணுமெண்டில்ல, உன்னோட அப்பாதான் என்ன கட்டாயம் வரச்சொல்லி இருக்கிறார்" என்று கமிஷ்னரின் மகளை மடக்கினான்.
இந்த பதிலை எதிர்பார்த்த புராதனியும் "ஹ்ம்ம்.... இந்த சாமர்த்தியத்த உங்க வேலைல காட்டுங்க" என்று மெல்ல வெள்ளைக்கொடியேற்ற இதற்கு மேல் பேச்சை வளர்க்ககூடாதென எண்ணியவனாய் புறப்பட ஆயத்தமானான் துகிரன்.
"ஈவினிங் மாட்னி ஷோ போகணும்னு சொன்னது ஞாபகமிருக்கா?"
"ஆஹா இத மறந்துட்டேனே, நல்ல வேளை ஞாபகப்படுத்திட்டா" என்று மனதிற்குள் கூறிக்கொண்டு" யெஸ் டியர், அத மறப்பனா? ஆன்லைன்ல டிக்கெட்ட புக் பண்ணிடும்மா, பிறகு ஹவுஸ்புல்லாகிடும்" சொல்லிக்கொண்டே கார் கீயினை எடுத்து விட்டு காற்றில் முத்தங்களை பறக்க விட அவளும் பதிலுக்கு ஒருசில முத்தங்களை திருப்பியனுப்பினாள்.
ராமநாதன் காலனியில் காற்றை கிழித்துக்கொண்டு வந்த இன்னோவா கார் ஒன்று கோல்ட் மூன் அப்பார்ட்மென்ட் முன்றலில் வந்து நிற்க உள்ளிருந்து துகிரன் வெளிப்பட்டான். துகிரனை கண்டதும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இன்னொரு போலீசுடன் துகிரனை நோக்கி வந்தார்.
"குட் மோர்னிங் சார்"
"குட் மோர்னிங் ரமேஷ், ஏற்கனவே நித்திரைய குழப்பிட்டீங்க, இப்ப இந்த கொலைய பற்றி சொல்லி மொத்தமா குழப்புங்க" என சிரித்துக்கொண்டே கூறினான் துகிரன்.
"சார் விக்டிமோட நேம் ஆதி, ஆர்.கே கன்ஸ்ட்ரக்க்ஷன் ஓனர் ராம்குமாரோட பையன். இங்கதான் அவங்களோட ஒரு அபார்ட்மெண்ட் இருக்கு , டென்த் புலோர்ல. நைட் பிரண்ட்ஸ்க்கு பார்ட்டி குடுத்திருக்கான். ரெண்டு மணிக்கு செக்யூரிட்டி ரௌண்ட்ஸ் போகும் போது தான் அவனோட பாடிய பின்னாடி கார் பார்க்கில கண்டிருக்கிறான். அப்பறம் தான் நமக்கு கால் வந்திச்சு"
பேசிக்கொண்டே டெட் பாடி இருக்கும் இடத்தை அடைந்தனர் மூவரும். உடலினை நெருங்கும் முன்னே சாராய வாடை மூக்கை துளைத்தது. ஆதியின் உடலை உன்னிப்பாக கவனித்த துகிரன் சுற்று முற்றிலும் ஏதாவது தடயங்கள் உள்ளதா என்பதையும் அவதானிக்க தவறவில்லை. இறந்த உடலைப்பார்த்த மாத்திரத்தில் இது கொலை என்பதனை ஊர்ஜிதப்படுத்திய துகிரன் கீழே குனிந்து ஆதியின் உடலில் எதையோ பார்த்துவிட்டு மேலேயும் அபார்ட்மென்டினை அண்ணார்ந்து பார்த்தான் .
"ரமேஷ் பார்ட்டி எங்க நடந்திச்சு?" என்று ஏதோ ஒன்றை அறியும் ஆவலில் கேட்டான் துகிரன்.
"சார் ஆதிட அபார்ட்மென்ட்லதான் நடந்திருக்கு"
"அதாவது பத்தாவது மாடில?"
"கரெக்ட் சார்"
எதோ யோசித்த துகிரன் மீண்டும் "பார்ட்டிக்கு வந்தவங்கள எங்க வச்சிருக்கீங்க?" என்று வினவ,
"சார் அதே அபார்ட்மென்ட்லதான் இருக்கிறாங்க, பட் ஒருவரும் நிதானமா இல்ல. போதை தெளியல்ல சேர் இன்னும்"
"ஓ..... அப்ப சீக்கிரமா வாங்க அவங்களையும் ஒருதடவ பார்த்திடுவம்" என்று கூறியபடி லிப்ட்டினை நோக்கி துகிரன் விரைய போலீசார் இருவரும் எதுவும் புரியாமல் பின் தொடர்ந்தனர்.
10 B அபார்ட்மென்ட் வாசலில் இரண்டு கான்ஸ்டபிள்கள் காவலுக்கு நிக்க உள்ளே ஒரு பெண் கான்ஸ்டபிளும் காவலுக்கு நின்றார். உள்ளே சென்ற துகிரன் அங்கிருந்த மேலை நாட்டு மதுக்குடுவைகள் மூலம் அந்த பார்ட்டியின் தன்மையினை விளங்கி கொண்டான்.
"சார் பார்ட்டிக்கு வந்த ஜென்ட்ஸ் இந்த ரூம்ல இருக்கிறாங்க, லேடீஸ அந்த ரூம்ல வச்சிருக்கிறம்" என்று ரமேஷ் கூற துகிரன் முதலில் ஆண்களின் அறையினுள் நுழைந்தான்.
அங்கு ஏழு இளைஞர்கள் போதையில் சாய்ந்திருந்தார்கள். அவர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்த துகிரன் சில நிமிடங்களின் பின்னர் பெண்களின் அறையினுள் பெண் கான்ஸ்டபிளுடன் நுழைந்தான். அங்கே இருந்த 5 பெண்களையும் அதே போல சில நிமிடங்கள் கவனமாக அவதானித்துவிட்டு வெளியில் வந்த துகிரன் இன்ஸ்பெக்டரிடம் பின் தொடருமாறு சைகையில் கூறிவிட்டு லிப்ட்டினை நோக்கி விரைந்தான்.
லிப்ட்டில் மேலே மொட்டைமாடிக்கு சென்று அங்கிருந்து ஆதியின் உடலை பார்த்த துகிரன் மொட்டைமாடியிலும் தனது கழுகுக்கண்ணை உலவவிட்டான். அவ்வளவு நேரமும் எதையோ தேடிக்கொண்டிருந்தவனின் கண்களில் தெளிவு பிறந்தவனைப்போலே ஒரு பெரு மூச்சு விட ஏற்கனவே துகிரனின் நடவடிக்கைகளில் குழம்பி போன இரு போலீசாருக்கும் தற்போதைய துகிரனின் தெளிவு மேலும் குழப்பத்தை உண்டாக்க முழி பிதுங்கி நின்றனர்.
துகிரன் எப்பொழுதும் ‘எவ்வளவு உன்னிப்பாக நாம் அவதானித்தாலும் நமக்கு புலப்படாதது மற்றையவர்க்கு புலப்பட்டிருக்கும் என்றும் எத்தனை பெரிய குற்றத்திற்கும் சிறு ஆதாரமே குற்றவாளியை பிடிக்குள் சிக்க வைக்கும்' என்பதையும் நம்புபவன். ஆகவே தனது பாணியில் விசாரணையை...... இல்லை ஏதாவது முக்கிய விடயங்களை தான் தவறவிட்டேனா என சுய பரிசோதனை செய்யத்தொடங்கினான்.
"ஸோ இத எப்பிடி சூசைட் இல்ல கொலை எண்டு கன்போர்மா சொல்றீங்க?" என்று பரிசோதனையை தொடங்க அருகில் நின்ற அந்த போலீஸ் இளைஞன் தொடர்ந்தான். " சேர் ஹண்ட்ரட் பெர்சன்ட் சொல்ல ஏலாது, பட் இது கொலையா இருக்க தான் சான்ஸ் கூட இருக்குது" என்று புதிர் போட்டான் அந்தப்புதுப்பொலிஸ்.
"சார் ஹீ இஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்யா, டிபார்ட்மென்டுக்கு புதுசு. கமிஷ்னர் சார் இவரையும் உங்களோட இந்த கேஸ்ல ஒர்க் பண்ண சொல்லியிருக்கிறார்" என்று ரமேஷ் கூற, தான் ஏற்கனவே மாமனாரிடம் வழக்குகளை விசாரிக்க தனக்கு ஒரு உதவியாளர் தேவை எனக்கேட்டது நினைவிற்கு வந்தது.
துகிரனோ சத்யாவினை நோக்கி " கான் யு எலாபொரேட்?" என்று சந்தேகப்பார்வையை உயர்த்த சத்யாவும் தனது அனுமானங்களை அடுக்க தொடங்கினான்.
சத்யா போலீஸ் டிபார்ட்மென்ட்டினுள் சேரும் முன்னரே துகிரனின் திறமைகள் பற்றி அறிந்திருந்தான். துகிரனுடன் உதவியாளனாக பணி செய்யக்கிடைத்த சந்தர்ப்பத்தை பெரும் பாக்கியமாக கருதினான். எனவே தான் கண்டுபிடித்த விடயங்கள் மூலம் துகிரனை இம்ப்ரெஸ் பண்ணுவதே அவனது எண்ணமாயிருந்தது.
"சேர் பொதுவா ஒருத்தர் சூசைட் பண்ணறதுக்காக மாடியிலிருந்து குதிக்கும் போது முன் பக்கமாகத்தான் குதிப்பார். அப்பிடி குதிச்சா பாடி குப்புறவே இருந்திருக்கும். ஆனா இங்க ஆதியோட உடம்பு மேலே பார்த்தபடிதான் இருக்கு. ஸோ யாரோ ஆதியை தள்ளி விட்டிருக்கிறாங்க, இதுதான் என்னோட பர்ஸ்ட் டவுட்" என்று சத்யா கூற துகிரனும் இதை அறியாதவன் போல முகத்தில் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.
"வேற என்ன சந்தேகம் இருக்கு?" இன்ஸ்பெக்டர் ரமேஷ் கேட்க,
"சார் அன்ட் ஆதியோட வலது கண்ணுக்கு கீழ லேசா வீங்கியிருக்கு, ஸோ யாரோடயோ கைகலப்பு ஆகியிருக்கோணும். தவறுதலா விழுந்தோ வேறு ஏதும் வழிகளாலயோ கண்ணுக்கு கீழ வீக்கம் வந்திருக்கலாம் தான், பட் அத போஸ்ட் மோட்டம் ரிப்போர்ட்லதான் கிளியர் பண்ணலாம்" என்று சத்யா தனது அவதானிப்புகளை சொல்லி முடிக்க துகிரன் மீண்டும் ஆதியின் உடலைப்பார்க்க கீழே விரைந்தான்.
இப்போது அவன் முகம் பாசாங்கு செய்யவில்லை, ஏனெனில் சத்யா கடைசியாக சொன்ன தடயத்தினை துகிரன் கவனித்திருக்கவில்லை தான். ஆதியின் உடலினருகில் சென்று சத்யா கூறியவை உண்மையென்பதை உறுதிப்படுத்தி கொண்டாலும் எதோ ஒரு குழப்பம் அவன் மனத்திலிருந்தது.
"ஓகே ரமேஷ், நான் ஒரு பத்து நிமிஷம் தனியா இருக்கணும், பொரென்சிக்ல இருந்து வந்து செக் பண்ணிட்டாங்களா? என்று துகிரன் சொல்லிக்கொண்டிருக்கும் பொது மணியோ காலை 6.30ஆகியிருந்தது. கதிரவனும் முழுதாக கிழக்கில் விஜயம் கொண்டிருந்தான்.
"சார் பொரென்சிக் டீம்ட இன்ஸ்பெக்ஸன் எல்லாம் முடிச்சிட்டாங்க. நீங்க முடிச்சிட்டா போஸ்ட் மோட்டத்துக்கு பாடிய அனுப்பிடலாம்" ரமேஷ் துகிரனின் பின்னால் நடந்து கொண்டே சொல்லிச்சென்றான்.
"நான் இன்னொரு தரம் டெட் பாடிய பார்த்துட்டு அனுப்பிடலாம்" சொல்லிக்கொண்டே துகிரன் தனது காரினுள் ஏறினான். இதுவும் அவனது வழக்கமான செயல் தான்.
குற்றம் நடைபெற்ற இடத்தில் நமது கண்கள் எந்த ஒரு தடயத்தினை முதலில் காண்கிறதோ அதை சுற்றி சுற்றியே எமது அவதானம் முழுவதுமாக இருக்கும். அதை விட வேறு பெரிய தடயங்கள் இருப்பினும் நமது மூளை அதனை அண்ட விடாது. அவ்வாறான நேரங்களில் துகிரன் சிறிது இடைவெளி எடுத்து தன் எண்ணங்களை வேறு திசையில் செலுத்தி, உதாரணமாக தனக்கு பிடித்த பாடல்கள் கேட்பான். அதன் பின்னர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் புதிதாக கிரைம் சீனை பார்க்கும் போது வேறு தடயங்களும் கிடைக்கும் என்பது அவனது நம்பிக்கை. நம்பிக்கை மட்டுமல்ல அவ்வாறு நிகழ்ந்த அனுபவங்களும் அவனுக்குண்டு.
துகிரனை பற்றி நன்கு அறிந்த இன்ஸ்பெக்டர் ரமேஷும், சத்யாவும் துகிரனின் வருகைக்காக காத்திருந்தனர்.
இருபது நிமிடங்கள் அவர்களின் பொறுமையை சோதித்த துகிரன் காரினுள் இருந்து இறங்கி மீண்டும் ஆதியின் உடல் இருந்த இடத்தை அடைந்து சில நிமிடங்கள் உடலை சுற்றி பார்த்து விட்டு தான் வைத்திருந்த பேனாவினால் ஆதியின் சட்டை பாக்கெட்டை மெதுவாக விலக்கி பார்த்தான்.
பார்த்ததுதான் தாமதம் " ரமேஷ் பாடிய கிளியர் பண்ண சொல்லுங்க, அன்ட் ஈவினிங் போஸ்ட்மோட்டம் ரிப்போர்ட் எனக்கு கிடைச்சாகணும்" கண்டிப்புடன் கூறிவிட்டு, சத்யாவிடம் தனக்கு ஒரு டீ தருமாறு கேட்டுக்கொண்டான்.
சத்யாவும் ரமேஷும் பல சந்தேகங்களுடனும் கையில் டீயுடனும் துகிரனை நெருங்கினர்.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்து விட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2 - சரஸ்வதி அனாதைகள் இல்லம்

திரும்பிப்பார்த்த பிரியாவிற்கு தன்னை அழைத்ததும் கரங்களை பற்றியதும் தன்னை சில மாதங்களாக பின்தொடரும் பையன் தான் என்று தெரிந்தது. ஸ்கூட்டி பைக்கில் வந்திருந்த அந்தப்பையன் பைக்கை அருகில் நிறுத்திவிட்டு பிரியாவின் அருகில் நின்றிருந்தான்.
ஏற்கனவே பயத்தில் வெலவெலத்துப்போயிருந்தவளுக்கு, இத்துனை காலமும் தன்னை தொந்தரவு செய்யாமல் தன்னை நெருங்காமல் தெரு முனைகளில் கூடாரமிட்டவன் இன்று தன் கைகளை தொட துணிந்துவிட்டான் என்பதை எண்ணும் போது நெஞ்சம் எரிமலையாய் வெடித்திருக்கும். ஆனால் அவ்வாறு அவன்மீது கோபம்கொள்ளும் நிலையில் அவள் இல்லை. மாறாக பயம் எனும் உணர்வே அப்போது மேலோங்கியிருந்தது.
வந்த இளைஞனோ இவை எதையும் பற்றி விளங்காதவன் போல் கையை பற்றிய கண நிமிடத்தில் கஸுவலாக "ஒரு அஞ்சு நிமிஷம் லேட் ஆகிட்டன், அதுக்காக விட்டுட்டு வந்துடுவியா?" என்று கூற எதுவும் புரியாமல் என்ன கூறுவதென்று அறியாமல் பிரியா விழிக்க..... "சரி சரி பைக்ல ஏறு, படத்துக்கு டைம் ஆச்சு.....சீக்கிரம்...." என்று உரிமையுடன் சொல்லிக்கொண்டே பைக்கில் ஏறும்படி கண்களால் சைகை செய்தான்
இந்த நேரத்தில் பிரியாவை நோக்கி வந்த வெறிநாய்களில் ஒருவன், திடீரென பிரியாவுடன் ஒரு இளைஞன் வந்து கதைத்து கொண்டிருப்பதை பார்த்து சற்று குழம்பிப்போனான். பல காலமாகவே பிரியாவிடம் சேட்டை விடுபவன்தான் அந்த பாண்டி. திருட்டு, வழிப்பறி போன்ற வேலைகளை செய்து தனது இரு மனைவிமாரையும் காப்பாற்றாமல் மூன்றாவதாக ஒரு மனைவியை தேடிக்கொண்டிருக்கும் அப்பாவி. வயது நாற்பதுக்கு மேல். சிலகாலமாக பிரியாவில் ஒரு கண் வைத்துள்ளான். ஒவ்வொரு முறையும் பிரியா அந்த தெருவில் நுழையும் போதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்வாள். இன்றுதான் முதல் முறையாக சன நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் நடந்து வருகிறாள். இதுதான் அவளின் இந்தப்பயத்திற்கு காரணம்.
சரி இப்போது அந்தப்பையன் கூறியபடி அவன் பைக்கில் ஏறுவதா? இல்லையா? என்றெல்லாம் யோசிப்பதற்கு பிரியாவுக்கு அவகாசமில்லை. அவளுக்கிருந்த ஒரே தெரிவு அவனுடன் பைக்கில் ஏறி அவ்விடம் விட்டு தப்பித்து செல்வதே.
ஆம் என தலையசைத்துக்கொண்டே பைக்கில் அவளும் ஏற, காற்றைக்கிழித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்தது ஸ்கூட்டி.
"ரியலி சாரி பிரியா, அந்த டைம்ல அந்த ஏரியால நடந்து போறது அவ்வளவு சேஃப் இல்ல, அதோட அந்த பாண்டியும் அங்கதான் இருந்தான். அவன் என்னவேணுனாலும் பண்ணக்கூடிய ஆள். அதான் அப்பிடி தெரிஞ்ச மாதிரி கதைச்சு கூட்டிட்டு வந்தன்" அவன் மன்னிப்புகேட்க...... பின்னாலிருந்த பிரியாவிடமிருந்து எதுவித பதிலுமில்லை.
அவள் பயத்திலிருந்து இன்னும் மீளவில்லை என உணர்ந்தவன், அவளை தொந்தரவு பண்ண விரும்பாமல் "உங்கள எங்க டிராப் பண்ணணுமுன்னு சொன்னா அங்க டிராப் பண்ணிடுவன்" என்று சொல்லிவிட்டு பைக்கை சீரான கதியில் செலுத்தினான். சிறிது நேரத்திற்கெல்லாம் பிரியாவின் வீடு இருக்குமிடத்தை அடைந்தான் அவன். ஆனால் அவனுக்கு பிரியாவினது வீடு எதுவென்று தெரியாது.
வீடுகளே பெரிதாக இல்லாத அந்த தெருவில் ஓர் பிள்ளையார் கோவிலைக்காட்டி "அந்த கோயிலுக்கு பக்கத்தில டிராப் பண்ணுங்க" என்றாள் பிரியா. அவனுடன் பேசிய முதல் வார்த்தை......அவனுக்கு ஏதோ சாதித்த சந்தோசம், ஆனால் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.சுற்றும் முற்றும் வீடுகளைக்காணாத போதும் "ஒரு பையனோட பைக்ல வந்தா வீட்ல அத எப்பிடி எடுத்துக்குவாங்களோ தெரியாதானே" அதான் இங்க தள்ளி டிராப் பண்ண சொல்லியிருக்கிறாள் என்று உணர்ந்த்தவனாய் வண்டியை நிறுத்தினான் அந்தப்பெயர் தெரியா பையன்.
சட்டென இறங்கியவள் எதுவும் கூறாமல் தெருவைக்கடந்து எதிரேயுள்ள "சரஸ்வதி அனாதைகள் இல்லம்" நோக்கி விரைந்தாள்.
தனக்கு நன்றி சொல்லி செல்வாள் என எதிர்பார்த்த இளைஞனுக்கு அவள் தன்னை சட்டை செய்யவில்லை என்பது ஏமாற்றத்தை கொடுத்தாலும் பிரியா அனாதை இல்லத்தினுள் சென்றது பேரதிர்ச்சிதான்.
மணி இரவு ஏழு முப்பதாகியிருந்தது. இல்லத்தில் லட்சுமி அம்மாவிடம் நடந்தவற்றை கூறி மனதை சாந்தப்படுத்தினாள் பிரியா.
"யாரந்தப்பையன்? பேர் என்ன? அந்தக்கடவுள் தான் அந்தத்தம்பிய அப்ப அனுப்பிவச்சிருக்கு" என்று லட்சுமி அம்மா வினவும் போதுதான் அவனின் பெயரைக்கூட தான் கேட்கவில்லை என்பதை உணர்ந்தாள் பிரியா.
"தெரியலம்மா, நான் எதுவும் கேட்கல" என்று நொந்து கொண்டாள்
"சரி பரவால்ல, இனி எங்கயாவது அந்தப்பையனைக்கண்டா ஒரு நன்றி கட்டாயம் சொல்லிடு" என்றுவிட்டு தொடர்ந்து "காலைல முன்னால கோயிலுக்கு போய்ட்டுவந்துடும்மா" லட்சுமி அம்மா பிள்ளைகளுக்கு இரவுணவு வழங்க ஏற்பாடு செய்யச்சென்றார்.
"எங்கயாவது கண்டாலா ..... அதான் ஒவ்வொரு நாளும் வந்திடுவானே" என்று மனதில் நினைத்து சிரித்துக்கொண்டாள். அவனுக்கு நாளை நிச்சயம் நன்றி சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தன் தம்பி தங்கையரை பார்க்க கிளம்பினாள் பிரியா. ஒன்றல்ல ரெண்டல்ல மொத்தம் 34 தம்பி தங்கையர் அவளுக்கு. அனைவரும் அனாதைகள் தான். எல்லோருக்கும் பிரியா அக்கா மட்டுமல்ல. அம்மாவும் அவள்தான்.
தன் செல்லங்களை பார்த்து அளவளாவினாள், சிரித்து மகிழ்ந்தாள், ஒன்றாக சாப்பிட்டாள், கதைகள் கூறினாள், பின் தூங்கச்சென்றாள். எல்லா நேரத்திலும் அந்த இளைஞனை நினைக்கவும் தவறவில்லை பிரியா.

"சார் என்ன நடக்குதுன்னே விளங்குதில்ல, கொஞ்சம் உங்களுக்கு தெரிஞ்சத சொன்னா கேஸ கன்டினியூ பண்ண வசதியா இருக்கும்" என்று ஒருவித தயக்கத்துடனும் அறிந்து கொள்ளும் ஆர்வத்திலும் சத்யா ஆரம்பிக்க, துகிரனும் "டெபனெட்லி" என்று தடயங்களை அடுக்க தொடங்கினான்.
"சத்யா சொன்ன முதல் பாயிண்ட நானும் ஒத்துக்கிறன் அன்ட் நானும் அதே போல ஆதிய யாரோ தள்ளிவிட்டிருக்கிறாங்க எண்டுதான் பீல் பண்றன். பட் அந்த கண்ணுக்கு கீழ வீங்கியிருந்தத நான் நோட் பண்ணல . வெல் டன் சத்யா"...... சத்யாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை . டிடெக்ட்டிவ் துகிரனிடம் தடயவியல் நிபுணர்களே தோற்று விடுவார்களே.
ரமேஷ் குறுக்கிட்டு "சேர் ஏன் சம்பந்தமில்லாம மொட்டைமாடிக்கு போனீங்க?"
"அங்கதான் கொலையே நடந்திருக்கு, ஐ மீன் அங்கியிருந்து தான் யாரோ ஆதிய தள்ளிவிட்டிருக்காங்க. கைகலப்பும் அங்கதான் நடந்திருக்கோணும்" துகிரன் கூற கூற இருவரும் புரியாமல் முழித்தனர்.
இதை விளங்கிய துகிரன் மேலும் " எப்பிடின்னு சொல்றன், ஆதிட வலது கை விரல் நக இடுக்கில நீலக்கலர் தூள் ஏதோ இருந்திச்சு. நிச்சயமா அது வோல் பெயிண்டா தான் இருக்கணும். இந்த அபார்ட்மென்ட்ல மொட்டைமாடில தான் ப்ளூ பெயிண்ட், ஸோ அங்க நடந்த கை கலப்பில ஆதிய யாரோ தள்ளும்போது அவன் தப்பிக்கிறதுக்காக சுவரை பிடிச்சிருக்கிறான், பட் நோ யூஸ் "
"சார் எங்களுக்கு ஆதாரத்துக்கு யூஸ் ஆகியிருக்கு தானே" என்று ரமேஷ் நகைக்க, துகிரனும் மெல்ல சிரித்துவிட்டு தொடர்ந்தான்
"அன்ட் லாஸ்ட்டா நான் நோட் பண்ணினது, ஆதி நைட் யாருக்கோ ப்ரொபோஸ் பண்ணியிருக்கான். வெடிங் ரிங் பாக்ஸ் அவனோட பாக்கெட்ல இருக்குது. ரிங் பாக்ஸ் உடைச்சிருக்கு. உள்ள ரிங் இல்ல"
"அப்ப பார்ட்டிக்கு வந்த பொண்ணு யாரோதான் அந்த ரிங் போட்டிருப்பா, வாங்க சார் செக் பண்ணிடுவோம்" சத்யா இடை மறித்துவிட்டு எழ..... துகிரனோ, "அவசரப்படாதீங்க சத்யா, இப்ப போய் செக் பண்ணி என்ன செய்யப்போறீங்க? அந்த பொண்ணுதான் கொலை செய்த எண்டு என்ன ஆதாரம் இருக்கு?"
"அதோட மேல இருக்கிற பொண்ணுங்கள்ள ஒருத்திட கைல புது மோதிரம் ஒண்ண பார்த்தன். அவதான் ஆதியோட காதலியாயிருக்கோணும் . அவளோட சேர்த்து இன்னும் ரெண்டு பொண்ணுங்க மேலயும் ரெண்டு பசங்க மேலயும் தான் டவுட்" என்று துகிரன் இருவரினதும் ஆர்வத்தை தூண்டிவிட்டான்.
"இருவரும் ஆர்வ மிகுதியில் புருவங்களை உயர்த்த, துகிரனும் " பார்ட்டிக்கு வந்தவங்க எல்லாருமே தலை கால் புரியாத போதைல இருந்தாங்க, பட் ஜென்ஸ்ல ரெண்டு பேரும் லேடீஸ்ல மூணு பேரும் தங்கட நிலை தெரியாத அளவுக்கு போதைல இல்ல, ஸோ ஒண்ணு அவங்க இந்த பார்ட்டிக்கு என்ஜோய் பண்ண வரல அல்லது அவங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிருக்கும்" துகிரன் முடிக்க,
"மே பி யாரும் கொலைசெய்த பிறகு குடிச்சிருக்கலாம் தானே சார்?" என்று சத்யா சந்தேகத்தை எழுப்ப துகிரனும் "குட் பாயிண்ட்" என்று சொல்லிக்கொண்டு சத்யாவை உதவிக்கு வைத்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்தான்.
சத்யாவோ மனசுக்குள் "என்னடா இந்த மனுஷன் நம்மளோடதானே இருந்தான், இப்ப வந்து இவ்வளவு சொல்றான்" டிடெக்ட்டிவ் துகிரனை டிபார்ட்மென்டில் ஏன் எல்லோரும் ஹீரோவாக பார்க்கிறார்கள் என்று அவன் புரிந்து கொள்ள அந்த ஒரு மணி நேரமே போதுமானதாகவிருந்தது.
"ஆதியோட பேரண்ட்ஸ்க்கு மெசேஜ் குடுத்தாச்சா?"
"யெஸ் சார், நாலு மணிக்கே இன்போர்ம் பண்ணிட்டன். அவங்க பிஸ்னஸ் விஷயமா டெல்லிக்கு போயிருக்காங்க. மோர்னிங் பிளைட்ல வந்திடுவாங்க"
"ஆதிக்கு வேற யாரவது கூட பிறந்தவங்க?"
"ஒரு தங்கச்சி இருக்கு, பட் அவ இப்ப இவங்க கூட இல்ல மலேசியால இருக்கிறதா ஆதிட அப்பா போன்ல சொன்னார். வேற விசயங்கள அவர் சொல்ற நிலமைல இல்ல. அவங்க வீடு வேளச்சேரிலதான் இருக்கு, ரெண்டு கான்ஸ்டபிள அனுப்பி செக் பண்ணிட்டன். வீடு பூட்டி தான் இருக்கு சார்"
"சர்வன்ட்ஸ்?"
"இல்ல சேர்"
இவ்வாறு துகிரனும் இன்ஸ்பெக்டரும் பேசிக்கொண்டிருக்க சத்யா அபார்ட்மென்ட் செக்யூரிட்டியை அழைத்து வந்தான்.
"சார் இவன்தான் முதலாவதா டெட் பாடிய பார்த்திட்டு ஸ்டேஷனுக்கு கால் பண்ணினது" என்று சத்யா சொல்லிக்கொண்டிருக்கும் போதே துகிரன் செக்யூரிட்டியை மேலும் கீழுமாக பார்த்தான்.
"என்ன நடந்ததுன்னு விளக்கமா சொல்லு" என்று இன்ஸ்பெக்டர் உலுக்க, நிதானமாக நடந்ததை கூறினான் செக்யூரிட்டி.
"சார் ஒவ்வொரு நாளும் நைட்ல மூணு மணி நேரத்துக்கு ஒரு தடவ காம்பௌண்ட சுத்தி செக் பண்ணிட்டு வாராது வழமை. அப்பிடி இண்டைக்கு விடியக்காலைல போகும் போது தான் சார் ஆதி சார்ட உடல் விழுந்து கிடந்ததை கண்டன். உடனே ஸ்டேஷனுக்கு போன் அடிச்சு சொல்லிட்டேன் சார்"
"ஆதிட பாடிய பார்க்ககுள்ள எத்தனை மணிஇருக்கும்?"
"சார் ஒரு மூணு முப்பது இருக்கும்ன்னு நினைக்கிறன்"
"ஆதி கீழ விழுந்த சத்தம் கேட்கலையா?"
"கேட்கல சார்"
"அதெப்பிடிடா பில்டிங்கிற்கு பின்னால ஒரு ஆள்ட உடம்பு விழுந்திருக்கு, உனக்கு சத்தம் கேட்கலன்னு சொல்லுறது நம்புற மாதிரி இல்லையே!!!!" இன்ஸ்பெக்டர் ரமேஷ் அப்பாவியாய் நின்றிருந்த அந்த செக்யூரிட்டியை மிரட்டியது சத்யாவிற்கு பிடிக்கவில்லைதான்.
"சார் நான் நைட்ல தூங்கிட கூடாதுன்னு ரேடியோல பாட்டு கேட்டிட்டிருப்பன், அதால தான் கேட்டிருக்காது சார்" என்று கூறியவன் பயத்தில் வியர்த்துவிட்டான்.
துகிரன் கேள்விகளை தொடர்ந்தான், "எவ்வளவு நாளா இங்க செக்யூரிட்டியா வேலை செய்றா?
"சார் நான் பயனியர் செக்யூரிட்டி சேர்விஸ் என்ற கம்பனிலதான் வேலை செய்யுறன். அந்த கம்பெனில இருந்து தான் இந்த அபார்ட்மென்ட்க்கு செக்யூரிட்டிஸ மாறி மாறி அனுப்புவாங்க. நான் இங்க மூணு வருசமா நைட் ஷிப்ட் வேலை செய்யுறன் சார். மாசத்துல இருபது நாள் வேலை செய்யணும், கூட நாள் செய்தா ஓவர் டைம் கிடைக்கும் சார்"
"உனக்கு ஆதிய எவ்வளவு காலமா தெரியும்?"
"இங்க வேலைக்கு வந்த நாள்ல இருந்து தெரியும் சார்"
"எந்தளவுக்கு பழக்கம்?"
"பழக்கமெண்டு இல்ல சார், ஆதி சார் என்ன போல ஆட்களோட பழகிறவர் கிடையாது. அவர் தன்னோட ஸ்டேட்ஸ்க்கு சமமா இருக்கிறவங்க கூடதான் பழகுவார்"
"வேற என்ன ஆதிய பற்றி தெரியும்?
"சார் அவன் ஒரு பொம்பிள பொறுக்கி சார், இங்கயே நிறைய பொண்ணுங்கள கூட்டிட்டு வருவான்"
"ஓ....."
"ஆனா இப்ப ஒரு ஆறேழு மாசமா திருந்திட்டானோ தெரியல, பொண்ணுங்கள கூட்டி வாறதில்ல. ஒரு பொண்ணுகூடதான் எப்பயாச்சும் வருவான்"
"யாரந்தப்பொண்ணு"
"தெரியல சார், கட்டிக்கப்போற பொண்ணா இருக்கும். நேற்றும் அவ கூடதான் வந்திருந்தான்"
"சரி இந்த அபார்ட்மெண்ட்ல சிசிடீவி கேமெரால்லாம் இல்லையா?"
"இருக்கு சார், ஆனா எல்லாமே காம்பௌண்ட சுத்திதான் இருக்கு. உள்ளுக்குள்ள ஒண்ணுமில்ல"
"ஏன் அது?"
"சார் இங்க மொத்தமா இருபது வீடுங்க இருக்கு. அநேகமான வீடுங்கட ஓனர்ஸ் வெளிநாட்டில தான் இருக்கிறாங்க. மிச்ச வீடுங்க சென்னைல இருக்கிற பெரிய புள்ளிகள்ட கேளிக்கை விடுதிகள்தான். எப்பவும் பார்ட்டிங்க தான் இங்க நடக்கும். விடிய விடிய ஒரே கூத்தும் கும்மாளமும்தான். அதால அவங்க எல்லாரும் ஒண்ணா முடிவெடுத்து உள்ள சிசிடீவி கேமெரால்லாம் வேணாமுன்னு சொல்லிட்டாங்க. ஏதோ பிரைவசி இல்லையாம்னு சொன்னாங்க. வெளில மட்டும் தான் இருக்கு"
"இது வேறயா!" என்று ரமேஷ் சலித்துக்கொண்டான்
"சத்யா இவனோட டீடெயில்ஸ் எல்லாம் எடுங்க" என்று சத்யாவிடம் கூறிவிட்டு செக்யூரிட்டியை பார்த்து "ஊர்லதான் இருக்கனும். விசாரணைக்கு கூப்பிடுற டைம்ல வந்துடனும். ஓகே?" என்று கறாரான குரலில் கூறினான் துகிரன்.
"பெயர் மணிமாறன், சொந்த ஊர்.........." என்று செக்யூரிட்டி மணி எனும் மணிமாறன் தனது சுயவிபரங்களை சப் இன்ஸ்பெக்டர் சத்யாவிடம் கொடுத்துக்கொண்டிருக்க துகிரனின் கைபேசி அலறத்தொடங்கியது.
கைபேசியின் முகப்பில் புராதனியின் பெயரைக்கண்டதும் பச்சைப்புள்ளியை அழுத்தி காதில் கைபேசியை வைத்தான்.
"ஹலோ துகி, என்ன செய்யுறீங்க? எட்டு மணியாகுது, ஏதாவது சாப்பிடீங்களா? வீட்ட வந்திட்டு போகலாம்தானே?" என்று கொஞ்சினாள் மனைவி
"இன்னும் கொஞ்ச வேலையிருக்கும்மா, நான் இங்க ஏதாவது சாப்பிடுவன். ஈவினிங் படத்துக்கு போக வந்திடுவன்மா" என்று கணவன் குழைய,
"ஐயோ படத்துக்கெல்லாம் கட்டாயம் போகோணுமெண்டில்ல, நீங்க வந்து ரெஸ்ட் எடுங்கப்பா. அப்ப லஞ்சுக்கும் வர மாட்டிங்களா?" என்று சோகமாய் கேட்டாள் புராதனி.
"ட்ரை பண்றன்மா, கவனமா இருங்க"
"ஹ்ம்ம்... என்னையே நினைச்சு கொண்டிருக்காம வேலையையும் கொஞ்சம் கவனியுங்க. சும்மா என்னில அக்கறை மாதிரி நடிக்க வேணாம்" என்று செல்லமாக முறைத்தாள்.
"சரி சரி தனிய இருக்கிற, வீட்டை லொக் பண்ணிட்டிருங்க" என்று துகிரன் சீரியஸ் மோடுக்கு போனான்.
"டோன்ட் வொரி டிடெக்ட்டிவ், மை சிஸ்டர் இஸ் கமிங் நவ்"
"ஓ ..... ஓகே. லேட்டா கால் பண்றன்மா .டேக் கேர்"
"டேக் கேர், லவ் யூ" என்று சொல்லி முடிப்பதற்குள் துகிரன் இணைப்பை துண்டித்தான்.
என்னதான் எலியும் பூனையும் போல் வெளியில் தெரிந்தாலும் துகிரனும் புராதனியும் ஒருவர் மேல் ஒருவர் அவ்வளவு பாசம் வைத்துள்ளனர். அதுவும் துகிரன் மாதிரி டிடெக்ட்டிவிற்கு புராதனியின் காதல் தான் ஒரு டானிக்.
புராதனியின் தங்கை வருவதால் அவள் தன்னை தேட மாட்டாள் என நிம்மதியடைந்தான் துகிரன். அந்தக்கணம்....... "ஓ.... இத எப்பிடி மறந்தன்?" மனதிற்குள் தன்னையே திட்டிக்கொண்டு சத்யா இருக்குமிடம் விரைந்தான் துகிரன்.
"சத்யா அந்த செக்யூரிட்டி பையன் எங்கே?"
"இப்பதான் சார் அவனோட டியூட்டி டைம் முடிஞ்சிதுன்னு சொல்லிட்டு கிளம்பினான்........ அதோ போறான் சார்" என்று சத்யா சொல்லிக்கொண்டே "மணி" என்று உரக்க கூப்பிட்டான்.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவிட தவறாதீர்கள். நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3 - ரேஷ்மா, அனு மற்றும் யாழினி

அடுத்த நாள் காலை வழமையை விட சீக்கிரமாகவே பாடசாலைக்கு கிளம்பிவிட்டாள் பிரியா. பாடசாலை வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக குழலியிடமும் வைஷ்ணவியிடமும் முந்தைய நாள் நடந்த சம்பவங்களைக்கூறினாள்.
"யார் செஞ்ச புண்ணியமோ அந்தப்பையன் அங்க வந்திருக்கான்" குழலி சொல்ல, "ஆமாடி, அந்த பாண்டிய ஏற்கனவே இப்பிடி தனியா போன பொம்பள பிள்ளைங்ககிட்ட வம்புக்கிழுத்தன்னு சொல்லி போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணியிருக்காங்க, நீ தப்பிச்சது பெரிய விஷயம்தான்" என்று வைஷ்ணவி தன் பங்கிற்கு பயமுறுத்தினாள்.
"சரி அவன்கூட ஏதாவது பேசினியா?" என்று குழலி கேட்டுக்கொண்டிருக்க வைஷ்ணவி இடைமறித்து "யாரு இவளா? மூச்சு விட்டிருக்கமாட்டாள். பயத்தில ஒரு தாங்க்ஸ் கூட சொல்லாமத்தான் வந்திருப்பாள்" என்று சொல்ல பிரியாவும் ஆம் என்பது போல் தலையசைத்தாள். பிரியாவின் இணைபிரியா தோழிக்கு அவளைப்பற்றி இது கூடவா தெரியாமலிருக்கும்.
"ஹேய் லூசுப்பிள்ளை, இண்டைக்கு ஸ்கூல் முடிஞ்சதுக்கப்புறம் அவனைக்கண்டு தாங்க்ஸ் சொல்லிடு, எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கான்........" என்று குழலி காட்டமாக சொன்னாள்.
அன்றைய நாள் முழுவதும் எப்போது பள்ளி முடிந்து அவனை சந்திக்கலாம் என்று ஆவலில் காத்திருந்தாள் பிரியா.
பிரியாவின் நீண்ட நேர தவிப்பிற்கு பின் ஒருவழியாக பள்ளியும் முடிந்தது, நெஞ்சம் படபடக்க தோழிகளை இழுத்துக்கொண்டு பள்ளியிலிருந்து வெளியேறினாள் பிரியா.
அன்றைய நாளை முடிப்பதற்கு பிரியா பட்ட அவஸ்தையை கண்கூடாக பார்த்த வைஷ்ணவியும் குழலியும் தங்களது கேலிப்பேச்சுக்களை தொடங்கினர்.
"ஐயோ ஏன்டி இவ்வளவு அவசரப்படற? நேற்றுதான் ஸ்பெஷல் கிளாஸ் லேட் ஆச்சு, இண்டைக்கு என்னடி பிரச்சன?" என்று வைஷ்ணவி ஏதும் விளங்காதவள் போல கேட்க குழலியும் "என்ன வைஷு உனக்கு மறந்துடுச்சா? இன்னைக்கு மேடம் அந்த பையன மீட் பண்ண போறாங்க. அதுக்குத்தான் இந்த அக்கப்போர்" என்று சொல்லிவிட்டு இருவரும் கொல்லென்று சிரித்தனர்.
இவர்களது கேலிப்பேச்சை கணக்கிலெடுக்காமல் வேகமாக நடக்கத்தொடங்கினாள் பிரியா.
"அவள் ஒரு தாங்க்ஸ் சொல்றதுக்காக மீட் பண்ண போறாள், அதுல என்ன நக்கல் வேண்டி கிடக்கு உனக்கு?" என்று மேலும் வைஷ்ணவி கலாய்க்க, பதிலுக்கு குழலியும் "ஒரு தாங்க்ஸ் சொல்றதுக்குத்தானா இன்னைக்கு பூரா மணிக்கூடையே பார்த்திட்டு இருந்தாள். நம்புறமாதிரி இல்லையே?" என்று சொல்லிவிட்டு மீண்டும் கோரஸ்ஸாக பற்களை காட்டினர் இருவரும்.
பிரியாவும் பொறுமை இழந்தவளாய் "சும்மா இருங்கடி தொண தொணன்னுட்டு இருக்காம, நானே டென்ஷன்ல இருக்கிறன்"
"இதில என்ன டென்ஷன் வேண்டி கிடக்கு?" என்று குழலியும் கொஞ்சம் சீரியஸாகவே கேட்டாள்.
"எப்பிடி போய் பேசுறதுன்னு தெரியல?"
"ஓகே, அப்ப நாங்களும் கூட வரவா? அப்பிடின்னா தைரியமா இருக்கும்தானே?" என்று வைஷ்ணவி சொல்ல....
"ஆணியே புடுங்க வேணாம், நானே பார்த்துக்கிறேன்"
பிரியாவின் இந்த பதிலை எதிர்பார்த்த தோழிகள் இருவரும் வாயை பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்கினர். பிரியாவிற்கு தான் ஏன் அவர்களை தவிர்க்கிறேன் என்று விளங்கவில்லை, ஆனால் தனியாகத்தான் சென்று பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
தெருமுனையில் பிரியாவின் கடைக்கண் பார்வைக்காக காத்துக்கொண்டிருந்தான் அந்தப்பையன். ஆனால் இன்று அவனது நண்பர்கள் அவனுக்கு துணையாக இல்லை. அதிலிருந்து அவனும் தன்னைப்போலவே இன்று யோசித்திருக்கின்றான் என்று பிரியாவிற்கு விளங்கியது.
இதுவரை வேறு எந்த ஆண் நண்பருடனோ கதைத்து பழக்கப்படாத பிரியா தோழிகளை சற்று முன்னே சென்று தனக்காக காத்திருக்குமாறு கூறிவிட்டு அவனை நோக்கி நடந்தாள். வழமையாக பிரியாவின் அழகில் சொக்கிப்போகும் அவன் இன்று அவள் தன்னை நோக்கி நடந்த்து வருவதைக்கண்டதும் மூர்ச்சையிழந்து நின்றான்.
அருகில் பிரியா வந்ததும் இருவருக்கும் பேசுவதற்கு எதுவும் வரவில்லை.
"ரொம்ப தாங்ஸுங்க, நேற்று நீங்க மட்டும் அங்க வரலனா என்ன நடந்திருக்குமோ தெரியல. நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு" பேச்சை தொடங்கியது ப்ரியாதான்.
"இட்ஸ் ஓகேங்க, இதிலென்னருக்கு......."
மறுபடியும் சில வினாடிகள் மௌனம்......... "உங்கள சில டைம்ல பார்த்திருக்கிறன். உங்க பெரு என்ன? எந்த ஸ்கூல்?" இந்த தடவையும் முந்தியது பிரியாதான்.
"அடிப்பாவி சில டைம் பார்த்திருக்கிறியா? உன் பின்னால நாய் மாதிரி ஆறு மாசமா சுத்திட்டிருக்கன்.... சில டைம்மாம்ல....." என்று மனசிற்குள் சிரித்துக்கொண்டே "என் பேரு ஹரி, பிரிட்டிஷ் இன்டர்நஷனல் ஸ்கூல்ல படிக்கிறன்"
"ஓ, என்னோட பேரு......" என்று பிரியா தொடங்கும்போதே ஹரி இடைமறித்து "ஆல் டீடெயில்ஸ் ஐ நோ" என்று புன்முறுவினான்.
ஹரியின் பேச்சில் மயங்கியவளாய் நின்றிருந்தாள் பிரியா. "மறந்துட்டேன், நேற்றே என் பேர சொல்லித்தான் கூப்பிட்டீங்கல்ல. சாரி"
தான் தெரு முனையில் அதிக நேரமாய் நிற்பதை உணர்ந்த பிரியா "டைம் ஆகுது, நான் கிளம்புறன்" என்று சொல்லியபோது அவளுக்கு போக இஷ்டமில்லை என்பது ஹரிக்கு புரிந்தது.
"இனி எப்ப மீட் பண்ணலாம்?" சரியான நேரம் பார்த்து தூண்டில் போட்டான் ஹரி.
இந்தக்கேள்வியை சற்றும் எதிர்பாராவிட்டாலும் பிடித்திருந்தது பிரியாவிற்கு. "இனி நான் எதுக்காக உங்கள மீட் பண்ணனும் ஹரி?" என்று கூறிவிட்டு சிட்டாக பறந்தாள் பிரியா.


தன்னை சத்யா அழைப்பதை கேட்டு திரும்பிய மணியும் திரும்ப அவர்களிருக்கும் இடத்திற்க்கு வந்தான்.
"உனக்கு ஆதிட தங்கச்சிய பற்றி என்ன தெரியும்?" மணி வந்ததும் வராததுமாக துகிரன் இந்தக்கேள்வியை கேட்க பதறாமல் பதிலளித்தான் மணி.
"சார் தங்கமான பொண்ணு சார். பேர் யாழினி. ஆதி சாருக்கும் தங்கச்சின்னா உயிர், அப்பப்ப எனக்கு நிறைய உதவிகளும் செய்யும் சார் அந்தப்பொண்ணு. கோடீஸ்வர வீட்டு பொண்ணுன்னு சின்ன பந்தா கூட இல்லாதவ" என்று யாழினியின் புகழ் பாடினான் மணி
"சரி கடைசியா எப்ப அந்த பொண்ண நீ பார்த்த?" என்று துகிரன் விசாரிக்க,
"சார் ....... அந்தப்பொண்ணும் மேலதான் சார் இருக்கு. நேற்று பார்ட்டிக்கு தன்னோட காதலனோடு வந்திருந்தா, போகும்போது என்ன நலம் விசாரிச்சிட்டுதான் போனா" என்று மணி கூற துகிரனுக்கும் சத்யாவிற்கும் தூக்கி வாரிப்போட்டது.
"டேய் உளறாத" சத்யா அதட்ட, "சத்தியமா சார்" மணி பொய் சொல்லவில்லை என்பது துகிரனுக்கு தெரிந்தது.
யாழினியும் அந்த பார்ட்டிக்கு வந்திருக்கிறாள் என்றால் அந்த விடயம் அவர்களின் அப்பாவிற்கு தெரியாதா? ஏன் மகள் மலேசியாவில் என்று பொய் சொல்ல வேண்டும்? யாழினியுடன் வந்தவன் யார்? போன்ற கேள்விகள் துகிரனின் மனதில் எழ, போதை தெளிந்தவர்களை விசாரிக்க மேலே சென்றான் துகிரன்.
10B அபார்ட்மென்ட்க்கு சென்ற துகிரனும் சத்யாவும் அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் போதையிலிருந்தவர்களின் நிலையினை கேட்டறிந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் போதை தெரிந்துவிட்டது என்பதை கான்ஸ்டபிள் உறுதிப்படுத்தியதும் அனைவரையும் ஒன்றன் பின் ஒன்றாக விசாரணைக்கு அனுப்புமாறு துகிரன் கான்ஸ்டபிளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.
"சத்யா இந்த இன்குவாரில என்ன நடக்கும்னு நினைக்கிறீங்க?"
"சார் இவங்கள்ல யாரோ ஒருத்தர் தான் கொலை செய்திருப்பாங்க, அந்த ஆள் நிச்சயம் பொய் சொல்லும்னு நினைக்கிறன்"
"எக்ஸ்சாட்லி"
"ஆனா அத பொய் எண்டு எப்பிடி கண்டுபிடிக்கிறது சார்?"
"அதையும் அந்த கொலை செய்த ஆள்கிட்ட இருந்து தான் தெரிஞ்சு கொள்ளனும்"
"புரியல சார்"
"போகப்போக புரியும். இப்ப அவங்கள டீப்பா ஆப்செர்வ் பண்ணுங்க" உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே "எக்ஸ்கியூஸ் மீ" என்றபடி முதலில் ஒருவன் போதை தெளிந்தும் தெளியாமலும் வந்து துகிரனுக்கும் சத்யாவிற்கும் முன்னால் வந்து உட்கார்ந்தான்.
பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பையன் போல இருந்தான். முறுக்கேறிய உடல். இடது கையில் டாட்டூ. ஆதி இறந்தது குறித்து அதிர்ச்சியும் சோகமும் குழப்பமும் அடைந்திருந்தான் என்பது தெளிவாக விளங்கியது
பெயர் ராபர்ட், வயது 28, ஆதியின் நண்பன், காலேஜில் ஒன்றாக படித்தவன். தொழிலதிபர் ராம்பிரசாத்தின் ஒரே மகன் மற்றும் வேறு சில தகவல்களையும் சொன்னான். ஆனால் அவை எதுவும் முக்கியமானதாக துகிரனுக்கு படவில்லை. சத்யாவோ அனைத்து வாக்குமூலங்களை ரெகார்டரில் பதிந்து கொண்டான்.
ராபர்ட்டை போல அடுத்தும் நண்பர்கள்தான்.சஞ்சய், வினோத், ரிஷி, ஹுசைன். பெரும் செல்வந்தர் வீட்டு பிள்ளைகள். சஞ்சய், வினோத் , ராபர்ட் ஆகியோர் ஆதியுடன் காலேஜில் ஒன்றாக படித்தவர்கள். ஹுசைன் ஏதோ ஒரு நைட் கிளப்பில் அறிமுகமானவன்.ரிஷியின் அப்பாவும் ஆதியின் அப்பாவும் நெருங்கிய சிநேகிதர்கள் . ஐவரும் முடா குடிகாரர்கள்.இரவு பார்ட்டியில் மூக்கு முட்ட குடித்துவிட்டு மட்டையாகிவிட்டனர் என்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரிந்தது. அதில் வினோத்தும் ரிஷியும் தங்களது கேர்ள் பிரெண்டுடன்தான் பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். வினோத்தின் கேர்ள் ப்ரெண்ட் லேகா, ரிஷியின் கேர்ள் பிரெண்ட் இஷா. ஆண்களுடன் ஈகுவாலிட்டியை குடியிலும் காட்டக்கூடியவர்கள்.
இவர்கள் ஒருவருக்கும் என்ன நடந்தது என்பது கூட தெரியவில்லை. அப்படித்தான் அவர்கள் சொல்கின்றனர். அதை அப்போதைக்கு துகிரனும் நம்பினான்.
அடுத்ததாக துகிரன் முன் வந்தாள் ஒரு பெண், அழகுப்பதுமையாக நின்றிருந்தாள். கண்களின் ஓரம் கண்ணீர்த்துளி வெளிவர தயாராக இருந்தது. ஏற்கனவே நிறைய கண்ணீர் விட்டுவிட்டாள் என்பதை அவளது சிவந்துபோன முகம் காட்டிக்கொடுத்தது. உள்ளத்தில் இருந்த பயத்தையும் அவள் முகம் காட்டிக்கொடுக்க மறுக்கவில்லை. இவற்றையெல்லாம் கவனித்த துகிரன் அவளை விசாரிக்கும்போது கூடுதல் கவனமெடுத்தான்.
"பேர் என்ன?"
"அனு"
"முழுப்பேர் அதுதானா?"
"அனுராதா"
"ஆதியை உங்களுக்கு எப்பிடி பழக்கம்?"
"நான் ஆதியோட லவ்வர். ரெண்டு பெரும் வன் இயரா ரிலேஷன்ஷிப்ல இருக்கிறம். அவர் என்னத்தான் கட்டிக்கிறதா இருந்தார்......." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்களிலிருந்து கண்ணீர் பீறிட்டது.
துகிரன் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தான்.
அனு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திய பின் துகிரன் தொடர்ந்தான்.
"நேற்று எதுக்கு பார்ட்டி?"
"நேற்று ஆதி அவரோட பிரெண்ட்ஸ்க்கு என்ன இண்ட்ரடியூஸ் பண்ணிவைக்கிறதுக்கு இந்த பார்ட்டிய அரேஞ் பண்ணியிருந்தார்"
"ஆதிட கேரக்டர் எப்பிடி?"
"ஆதிய பற்றி நிறைய தப்பான விஷயங்களை எல்லாரும் சொல்லுவாங்க. பட் அவர் என்னை காதலிக்க தொடங்கினதுக்கப்புறம் ரொம்பவே மாறிட்டாரு, நான்தான் அவரை மாத்திட்டேன்"
கேள்விகளை வேறு திசை நோக்கி கொண்டு சென்றான் துகிரன், "உங்கப்பா என்ன பண்றார்?
"எனக்கு அப்பா, அம்மா யாருமே இல்ல, என்ன சின்ன வயசில இருந்து பாட்டிதான் வளர்த்தாங்க. பாட்டி ஒரு வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அப்புறம் தனியாதான் இருக்கிறன்.
"எந்த ஏரியா?
"கேளம்பாக்கம்"
"எந்த காலேஜ்?
"ஸ்ரீ ராமச்சந்திரா இன்ஜினியரிங் காலேஜ்ல எம்.பி.ஏ படிச்சன்"
"ஓகே, எப்பிடி ஆதியோட பழக்கம்?"
"நான் அவரோட கம்பெனில தான் ஒர்க் பண்றன்"
"என்ன பொசிஷன்?"
"அவரோட பர்சனல் அசிஸ்டன்ட்"
இவர்களுக்குள் எவ்வாறு காதல் மலர்ந்தது என்று துகிரனுக்கும் சத்யாவிற்கும் புரிந்தது.
"எப்பயிருந்து உங்களுக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடுற பழக்கமெல்லாம்?"
"நான் அந்த மாதிரி டைப் இல்ல, நேற்று ஆதி கெஞ்சி கேட்டதால ஒரு தரம் எடுத்துகிட்டேன். முதல் தடவ என்றதால தலை சுத்தி மயக்கம் வந்திட்டு"
"அப்ப ஆதி உங்களோட இருக்கலயா?
"பார்ட்டி தொடங்கினதில இருந்து என்னோடதான் இருந்தார், பன்ரெண்டு மணிக்கு என்ன மொட்ட மாடிக்கு கூட்டி போய் ரிங் தந்து ப்ரபோஸ் பண்ணினார். அதுக்கப்புறம் கீழ வந்துதான் என்ன ட்ரின்க் பண்ண சொல்லி கேட்டார்.அப்பறமா என்ன நடந்திச்சுன்னே தெரியல. கண்ண முழிக்கிற நேரம் போலீஸ் இருந்திச்சு"
"ஓகே மிஸ்.அனு, ஆதிய யாரோ நேற்று மாடில இருந்து தள்ளிவிட்டிருக்காங்க. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? பயப்படாம சொல்லுங்க."
"நேற்று பார்ட்டிக்கு வந்திருந்தவங்க எல்லாருமே ஆதியோட பிரெண்ட்ஸ்தான். பட் பார்ட்டிக்கு இன்வைட் பண்ணாமலே ரேஷ்மா அவ பாய் பிரெண்டு கூட வந்திருந்தா"
"ரேஷ்மா யாரு?"
"ரேஷ்மா ஆதியோட பிரெண்ட்தான், எக்ஸ் லவ்வர். பட் அது ரேஷ்மாட வன் சைட் லவ்ன்னுதான் என்கிட்ட ஆதி சொல்லியிருக்கிறார். என்னாலதான் ஆதி அவகிட்ட இருந்து விலகிட்டார்ன்னு அவளுக்கு என்கிட்ட கோபமிருக்கு. நேற்று ஆதி கூட வந்து சண்டை பிடிச்சா. ஆதி என்ன பேசிக்கிட்டாங்க எண்டு சொல்லல. பிறகு திடீரெண்டு சைலன்ட் ஆகிட்டா. அவ ஏன் பாய்பிரெண்ட கூட்டி வந்தான்னும் தெரியல. அதுலதான் சின்ன சந்தேகமிருக்கு"
"ஓகே யூ மே கோ நவ், கான்டக்ட் நம்பர் அன்ட் அட்ரெஸ்ஸ குடுத்திட்டு போங்க, கூப்பிடுற நேரம் ஸ்டேஷன்க்கு வரவேண்டியிருக்கும்" என்று துகிரன் முதல்கட்ட விசாரிப்பை முடிக்க, அனுவும் விபரங்களை சத்யாவிடம் கொடுத்துவிட்டு கண்களின் ஓரத்தை கைக்குட்டையால் துடைத்தபடி வெளியேறினாள்.
அனு வெளியில் போனதும் கான்ஸ்டபிளிடம் சிறிது நேரத்தின் பின்னர் அடுத்த நபரை உள்ளே அனுப்புமாறு சொன்ன துகிரன் அவளது வாக்குமூலத்தை மீட்டி பார்க்க தொடங்கினான்.
"சேர் அனு சொல்றத வச்சு பார்த்தா ரேஷ்மால தான் டவுட் வருது" என்று சத்யா சொல்ல, துகிரனோ எதுவும் பேசாமல் இருந்தான்.
சிறிது நேரத்தின் பின்னர் "சத்யா எதையும் உடனே முடிவெடுக்க வேணாம், இப்ப இங்க விசாரிக்கிற எல்லாரையும் அவங்கதான் கொலை பண்ணியிருப்பாங்க என்ற கோணத்தில விசாரியுங்க. இங்க ஒருத்தர் மாத்திரம் தான் பொய் சொல்லுவாங்க எண்டில்ல, நிறைய பேர் பொய் சொல்லலாம், மே பி இந்தக்கொலைல கூட நிறைய பேர் சம்பந்தப்படலாம். ஸோ வெரி கேர் புல்" என்று அறிவுறுத்தினான் துகிரன்.
துகிரனும் அடுத்ததாக ரேஷ்மாவினை உள்ளே வரச்சொல்லுமாறு கான்ஸ்டபிளுக்கு கட்டளையிட்டான்
காண்போரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கன்னியென துகிரனின் முன் வந்தமர்ந்தாள் ரேஷ்மா. மேலைத்தேய சீமாட்டிகள் அணியும் உடையணிந்து, எப்பேர்ப்பட்ட ஆடவனையும் தன் அழகிலும் கவர்ச்சியிலும் கட்டிப்போடும் வல்லமை கொண்டவளாக வந்திருந்தாள் அவள். ரேஷ்மாவுடன் ஒப்பிடும் போது அனு அழகில் கொஞ்சம் குறைவுதான் என துகிரனும் எண்ணிக்கொண்டான்.
மறுபுறம் சத்யா வந்த வேலையை மறந்து ரேஷ்மாவின் வனப்பில் மதிமயங்கி நிற்க, துகிரன் அவள் கண்களில் குடி கொண்டிருந்த பயத்தினை தெளிவாக கண்டு கொண்டான். கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்ததற்கான தடமில்லை.
துகிரனும் சத்யாவின் கவனத்தை கலைக்கும் முகமாக "சத்யா ஸ்டார்ட் பண்ணுங்க" என்றதும் சுயநினைவுக்கு வந்தவனாக கேள்விகளை கேட்க தொடங்கினான்.
"உங்க பேரு மிஸ்?"
"ரேஷ்மா"
"வயசு?"
"இருபத்துமூணு"
"எந்த ஏரியால இருக்கிறீங்க?"
"வளசரவாக்கத்தில........." என்று ரேஷ்மா கூறிக்கொண்டிருக்கும் போதே துகிரனுக்கு சத்யாவின் கேள்விகள் எதற்காக கேட்கப்படுகின்றன என்று விளங்கிவிட்டது. இன்னும் அவன் மயக்கத்தில் இருக்கிறான் என்பதும் விளங்கியது.
உடனே துகிரன் இடைமறித்து "உங்களுக்கு எப்பிடி ஆதிய பழக்கம்?" என கேள்வியின் திசையை மாற்றினான்.
"நானும் ஆதியும் ஒருத்தர ஒருத்தர் மூணு வருசமா காதலிச்சிட்டு இருந்தோம்"
"அப்பிடின்னா அனுராதா என்கிறது யாரு?"
அனுவின் பெயரைக்கேட்டதும் ரேஷ்மாவின் சிவந்த முகம் மேலும் செந்நிறமாகியதை இருவரும் அவதானித்தார்கள்.
"அவள் தான் என்னையும் ஆதியையும் பிளான் பண்ணி பிரிச்சவள், இப்பவரைக்கும் ஆதியும் அனுதான் அவனோட உயிருன்னு சொல்லிட்டு இருந்தான். இல்ல இல்ல அப்பிடி என்ன வசியம் செய்தாளோ தெரியல" என்று கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.
"ஸோ உங்களுக்கும் ஆதிக்கும் எப்ப பிரேக் அப் ஆச்சு?"
"அனு எங்க லைஃப்ல வந்த பிறகுதான், கிட்டத்தட்ட வன் இயர் ஆகிடிச்சு"
"ஸோ லாஸ்ட் வன் இயரா உங்களுக்குள்ள எந்த கனேக்க்ஷனும் இல்ல. ஆம் ஐ ரைட்?"
"ஆமா, பட் நான் இன்னும் ஆதியத்தான் விரும்புறன், அவனில்லாம என்னால வாழ முடியாது. அதனாலதான் நேற்று அவன் பார்ட்டி குடுக்கிறான்னு தெரிஞ்சிக்கிட்டு எனக்கொரு முடிவு கேட்கிறதுக்காக இங்க வந்தன்"
"ஆதி அனுவத்தான் மேரேஜ் பண்ணிக்கப்போறான்னு தெரிஞ்சதும் கோபத்துல அவன மாடில இருந்து தள்ளிவிட்டுடீங்க. அப்பிடித்தானே?"
துகிரனின் இந்தக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ரேஷ்மா சற்று பதறினாலும் பதற்றத்தை வெளிக்காட்டாமல் பதிலளித்தாள்.
"எனக்கு அந்தளவுக்கு தைரியமெல்லாம் இல்ல சார், அதோட ஆதிய கொலை பண்றதால எனக்கு என்ன லாபம்? அனுவுக்கு தான் நிறைய லாபமிருக்கு. அவளோட தான் ஆதியும் நேற்று முழுக்க குட்டி போட்ட நாய் மாதிரி பின்னால திரிஞ்சான். இல்லன்னா ஆதிட அருமைத்தங்கச்சி அவள்ட புருஷனோட சேர்ந்து கதையை முடிச்சிருப்பாள். அவங்களுக்கு தான் ஆதிய கொல்ல வேண்டிய தேவை இருந்திருக்கும். இதில என்ன ஏன் சந்தேகப்படுறீங்க சார்?" என்று உளறிக்கொட்டினாள் ரேஷ்மா.
"ஆதிட தங்கச்சிக்கு ஏன் ஆதில கோபம்?"
"யாழினி சரியான பிடிவாதக்காரி. லாஸ்ட் இயர் அவங்க வீட்ல வேலை செய்த கார் டிரைவர யாழினி லவ் பண்ற விஷயம் ஆதிக்கு தெரிய வந்திச்சு. ஆதி உடனே அவன போலீஸ்ல சொல்லி வீட்ல தங்க நகைய திருடிட்டான்னு பொய் கேஸ் குடுத்து லாக் அப்ல வச்சு லாடம் காட்டினார். அதுக்கப்புறம் அவன் உயிர்ப்பிச்சை கேட்டு ஊரை விட்டு ஓடிட்டான். அப்புறமா ரெண்டு மாசத்தால யாழினியும் அவன் கூட ஓடி போய்ட்டா. பட் ஆதிட பேமிலி யாழினி மலேசியா போய்ட்டான்னு ஊரை ஏமாத்திட்டு இருக்காங்க. அன்னைக்கப்புறம் நேற்றுதான் அவ அந்த டிரைவர் கூட திரும்பி வந்திருக்காள். பழி வாங்க வந்திருக்கலாம். அவளும் அவள்ட புருசனும் ஆதியும் லிப்ட்ல மேல போனதையும் நான் பார்த்தன்"
"எத்தன மணிக்கு மேல போனாங்க?"
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4 - ப்ரீ பிளான்ட் மர்டர்

"இனி நான் எதுக்காக உங்கள மீட் பண்ணனும் ஹரி?" என்று கூறிவிட்டு சிட்டாக பறந்தாள் பிரியா.
பட்டென்று முகத்திலடித்தால் போல் சொல்லிவிட்டாளே என்று முன்னே பார்க்கும்போது சிறிது தூரம் சென்று விட்டிருந்தாள் பிரியா. சிறிது தூரம் சென்றவள் திரும்பி ஹரியைப்பார்த்து வெட்கி தலைகுனிந்து திரும்பி நடக்க தொடங்கினாள்.
குழம்பிய ஹரி ஏன் அவ்வாறு கூறினாள் என்று யோசிக்கும் போதுதான் "இனி நான் சந்திக்கமாட்டேன் நீதான் என்னை வந்து சந்திக்க வேண்டும்" என்பதைத்தான் அப்படி கூறியிருக்கிறாள் என்பது விளங்கியது. தனது ஆறு மாத தவத்திற்கு பலன் கண் முன்னே தெரிவதை கண்டு வானில் மிதக்க தொடங்கினான் அவன்.
அன்று முதல் பிரியாவிற்காக ஹரி அந்தத்தெருமுனையில் காத்திருப்பதும் பிரியாவும் அவனுக்காக கடைக்கண் பார்வையையும் மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு போவதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர். பிரியாவின் நடை உடையிலும் வெகுவான மாற்றம் இருந்தது. இயல்பாகவே பேரழகியாக இருந்தவள் இப்பொழுதெல்லாம் தன்னை மெருகுபடுத்தவேண்டும் என்பதற்காகவே நேரத்தை செலவழிக்க தொடங்கியிருந்தாள் பிரியா. இவளது இந்தப்போக்கு எதற்காக என்பதை குழலியும் வைஷ்ணவியும் நன்கு அறிந்திருந்தனர்.

தனது பதினோராவது வயதில் பெற்றோரை விபத்தில் இழந்து நிர்கதியாகி நின்ற பிரியாவை அரவணைப்பதற்கு "சரஸ்வதி அனாதைகள் இல்லம்" மாத்திரமே இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் பிரபலமான பாடசாலை ஒன்றினால் பிரியாவிற்கு ஸ்கொலர்ஷிப் வழங்கப்பட்டு ஹாஸ்டலில் வந்து தங்கியிருந்து படிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தான் வளர்ந்த இல்லத்தை விட்டு வேறெங்கும் செல்லமாட்டேன் என்றும் அந்த இல்லத்தில் அனாதரவாக விடப்படும் பிள்ளைச்செல்வங்களுக்கு சேவை செய்வது ஒன்றே தனது வாழ்வின் இலட்சியம் என வாழ்ந்தவளா இன்று தன்னை அழகுபடுத்துவதில் மெனக்கெட்டு கொண்டிருக்கிறாள் என்பது இவளைப்பற்றி நன்கு அறிந்த பூங்குழலிக்கு அதிர்ச்சியை அளித்தது.
பிரியாவிற்கு அறிவுரை சொல்வதில் குழலிக்கு இஷ்டமில்லைதான், ஆனாலும் அவள் மனம் கேட்கவில்லை.
"ஏய் புள்ள கொஞ்ச நாளா போக்கே சரியில்ல" பள்ளி இடைவேளையின்போது பேச்சை தொடக்கினாள் குழலி.
"அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லையே" பதிலில் கோபம் எட்டிப்பார்த்தது.
"எங்களுக்கும் கண் இருக்கிங்கிறத மறந்திடாதம்மா, நம்மட நிலைமை நமக்கு தெரியனும். அப்புறம் காதலன்னு வந்து நின்னிடாத..... ஏதோ சொல்லிட்டன். பக்குவமா நடந்துக்க புள்ள" குழலி சொல்ல வந்ததை ஒருமாதிரியாக சொல்லி முடித்தாள்.
இதை கேட்ட பிரியாவிற்கு குழலி மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது. காதல் மயக்கத்தை தாண்டி எதையும் அவள் புத்தி ஏற்பதற்கு தயாரில்லை.
"ஏன் அவள் லவ் பண்ணினா உனக்கேன்டி காண்டு?" பிரியாவிற்கு ஆதரவாக இணைந்து கொண்டாள் வைஷ்ணவி.
"அடியே நீ வேற, அந்த ஹரி யாருன்னே தெரியாது. பணக்கார பசங்கள நம்பவே கூடாதுடி. கடைசில ஏமாத்திட்டு போய்டுவானுங்க. இவள் வேற ஒரு ஏமாளி. அதனாலதான் சொல்றன்"
பூங்குழலி தன்னை ஏமாளி என்று சொன்னது பிரியாவிற்கு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல இருந்தது. "கொஞ்சம் வாய மூடு, நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். லவ் பண்ணனுமா வேணாமானும் எனக்கு தெரியும். உங்க யாரு அட்வைஸும் இங்க தேவையில்ல" என்று ஏசி விட்டு பதிலை எதிர்பாராமல் அவ்விடம்விட்டு நகர்ந்தாள் பிரியா.
"குழலி ஏன்டி அவள அப்பிடி சொன்ன, இப்ப பாரு கோவிச்சிட்டு போறாள்?" என்று வைஷ்ணவி குழலியிடம் பாய்ந்தாள்.
"ஏய் உனக்கு பிரியாவ இப்ப ரெண்டு வருஷமாத்தான் தெரியும். அவ ஒரு அனாதைன்னு தெரியும், வேற என்ன அவளப்பத்தி தெரியும்?


"எத்தன மணிக்கு மேல போனாங்க?"
"டைம் தெரியல, நான் கீழ வந்ததுக்கப்புறம்தான்"
"ஓகே. அனுக்கு என்ன மொட்டீவ் இருக்கும்?"
"ஆதி தன்னோட பேர்ல இருக்கிற ப்ரொபேர்ட்டிஸ் அவனுக்கப்புறம் அனுக்கு போற மாதிரி உயில் எழுதி வச்சிட்டானாம், ஸோ ஆதி இறந்தா ஆட்டோமெட்டிக்கா அவ்வளவும் அனுக்கு தானே. இத விட மோட்டிவ் வேணுமா?"
"நைட் பார்ட்டில எப்ப ட்ரின்க் பண்ணினீங்க?"
"ட்ரின்க் பண்ற பழக்கம் எனக்கு முன்னாடிருந்தே எனக்கு இருக்கு. 12.30 க்கு ஆதிய மொட்ட மாடிக்கு கூட்டி போய் எனக்கு என்ன முடிவு சொல்ல போறான்னு கேட்டன். அவன் அனு மயக்கத்தில இருக்கிறான்னு புரிஞ்சுக்கிட்டேன். கவலைல அப்புறமா தான் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கிட்டேன்"
"மொட்டை மாடிக்கு தனியாவா போனீங்க?"
இந்தக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ரேஷ்மா தடுமாறியவளாய் “அது வந்து திலக்கும் கூட துணைக்கு வந்தான்"
"திலக் யாரு உங்களுக்கு?"
துகிரானின் இந்த கேள்விக்கு கொஞ்சம் மழுப்பலாக பதில் சொன்னாள் ரேஷ்மா.
"அது வந்து..... என்னோட பிரெண்ட் தான். அண்ணன் மாதிரி. நைட் தனியா வர பயத்தில துணைக்கு கூட்டி வந்தன்"
"ஓகே, உங்க அப்பா அம்மா யாரு? என்ன செய்றாங்க?"
"எனக்கு அப்பா, அம்மா யாருமில்ல. மாமா, மாமி கூடத்தான் வளர்ந்தன். அவங்க இப்ப லண்டன்ல இருக்காங்க. நான் இங்க பிரெண்ட்ஸ் மூணு பேர் சேர்ந்து ஒரு வீட்டில இருக்கிறம்"
மற்றைய தேவையான விபரங்களை சத்யா கேட்டு எடுத்துக்கொண்ட பின் ரேஷ்மாவினை வெளியில் அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான் துகிரன்.
"சார் ரேஷ்மா சொல்றத வச்சு பார்த்தா அனு அண்ட் யாழினி இத பண்றதுக்கு சான்ஸ் இருக்கிற மாதிரி தெரியுது. குழப்பமாவே இருக்கு சார்" என சத்யா குழம்ப,
"இன்னும் நிறைய குழம்ப வேண்டியிருக்கும் சத்யா, இப்பவே முடிவெடுக்கவேணாம். இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? ஆதிய நீங்களா கொலை பண்ணினீங்க எண்டு ரேஷ்மாகிட்ட நான் கேட்டப்ப உடனடியா ஆதிய கொல்றதில என்ன லாபம்ன்னுதான் ரேஷ்மா சொன்னா, ஸோ உண்மையா லவ் பண்றவங்க அப்பிடி சொல்ல மாட்டாங்க" என்று துகிரன் சொல்ல சத்யாவும் "அட இத நோட் பண்ணலையே" மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

கைபேசியில் நேரத்தை பத்து மணி என்று தெரிந்து கொண்ட துகிரன் காலையிலிருந்து வெறும் வயிற்றுடன் இருப்பதாலும் பசியுடன் இருந்தால் மூளை வேலை செய்யும் வீதம் குறைந்துவிடும் என்பதாலும் கான்ஸ்டபிளிடம் அனைவருக்கும் காலை உணவை ஏற்பாடு செய்யச்சொன்னான்.
ஒரு டீயினை குடித்து விட்டு சத்யாவும் துகிரனுக்காக காத்துக்கொண்டிருந்தான். துகிரனோ புராதனியிடம் கைபேசியில், டிபன் சாப்பிட்டன், சீக்கிரம் வந்துடுவன் என்று சில பொய்களை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தான். புராதனியை எவ்வாறு சமாளிப்பது என்பது அவனுக்கு தண்ணி பட்ட பாடுதான். சீக்கிரம் கதைத்து முடித்து விட்டு... இல்லை கெஞ்சி விட்டு மேலே வந்தான் துகிரன்.
"சார் லபோரட்டரிக்கு கால் பண்ணி பேசிட்டன், போஸ்ட்மோட்டம் ரிப்போர்ட் ஈவினிங் எடுக்கலாம்ன்னு டாக்டர் சொன்னார்"
"குட் குட், இந்த கேஸ எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கிறது நல்லது, லேட் ஆக ஆக குற்றவாளி தப்பிச்சிடுவான், பிகோஸ் இங்க இருக்கிறவங்க எல்லாரும் பெரிய இடம், பொலிடிகல் இன்ஃப்ளுவன்ஸ் அதிகமா இருக்கும்னு தோணுது"
"தப்பிச்சிடுவான்னு சொல்றீங்க, ஸோ கொலை பண்ணினது பையன் ஒருத்தன்னு முடிவு பண்ணிடீங்களா சார்?"
"ஹாஹாஹா....... அது ஏதோ ப்ளோல வந்திட்டு, இன்னும் பையனா பொண்ணான்னு சொல்ல முடியல அண்ட் ஒரு ஆள் தான் கொலைல சம்பத்தப்பட்டிருப்பாங்கன்றதும் டவுட்தான்"
வழமை போல சத்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை, ஆனாலும் தன்மானம் கருதி தனக்கும் அந்த சந்தேகம் இருப்பது போல தலையசைத்தான்.
"ஓகே சத்யா இப்பவே லேட் ஆகிட்டுது, யாழினிய கூப்பிடுங்க அண்ட் ரேஷ்மாகிட்ட கேட்ட மாதிரி இல்லாம சரியான கேள்விகளை கேளுங்க சத்யா, நான் எதுவும் கேட்க மாட்டேன்" என்று துகிரன் கூற வெட்கி தலைகுனிந்து ஆம் என்பது போல் தலையசைத்து விட்டு யாழினியை உள்ளே அழைத்தான் சத்யா.
துகிரன் அவ்வாறு சிறிது நக்கலாக கூறியது சத்யாவிற்கு ஏதோ தான் தனது கடமையை செய்யத்தவறியது போல் தோன்றியது. துகிரனுக்கு தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பது போல் கேள்விகளை கேட்க தயாரானான் சத்யா. துகிரனும் இதற்காகத்தான் சத்யாவை கிண்டலடிப்பது போல தூண்டிவிட்டிருந்தான்.
எதிரே கண்ணீரே உருவானவளாய் உட்கார்ந்திருந்தாள் யாழினி. மாநிறம், வீட்டிலே ராணி போல இருந்தவள் தற்போது மணமுடித்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளது தோற்றமே காட்டிக்கொடுத்தது. முகம் களையிழந்து வாடியிருந்தது.
ஏற்கனவே ரேஷ்மாவும் செக்யூரிட்டி மணிமாறனும் சொன்ன தகவல்கள் உண்மையானது என்பது இவளது பதில்களில் தெரிந்தது.
"ஒரு வருசமா தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்த நீங்க ஏன் நேற்று பார்ட்டிக்கு வந்திருந்தீங்க?"
"நான் இனி என்னோட குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு முடிவெடுத்து ஒரு வருசமாச்சு, மூணு நாளைக்கு முன்னாடி அண்ணாதான் கால் பண்ணினான். ரொம்ப பாசமா பேசினான். தான் இப்ப மாறிட்டதாவும் என்னை எப்பிடியும் அப்பா, அம்மா கூட சேர்த்து வைக்கிறதாவும் சொன்னான். இதுக்கெல்லாம் அனுதான் காரணம்னு சொன்னான். அதனால தான் பாலாவையும் கூட்டி வந்தன், பாலாக்கு இங்க வர்றதில துளியும் இஷ்டமில்ல"
"ஏன் நைட் ஆதிய கூட்டிகிட்டு மொட்டைமாடிக்கு போனீங்க?"
"நான் கூட்டிகிட்டு போகல, அண்ணாதான் கூட்டிகிட்டு போனான். பாலாகிட்ட அண்ணா மன்னிப்பு கேட்கிறதுக்காகத்தான் கூட்டி போனான்னு மேல போனதுக்கப்புறமாத்தான் தெரிஞ்சிச்சு"
"நீங்களும் உங்க ஹஸ்பன்டும் நேற்று ட்ரின்க் பண்ணல, ஸோ உங்களுக்கு ஆதி மாடில இருந்து கீழ விழுந்தது தெரியலையா? அந்த டைம் ரெண்டு பேரும் எங்க போயிருந்தீங்க?
"அண்ணாகூட மொட்டைமாடில பேசிட்டு நான் கீழ வந்ததுக்கப்புறம் அண்ணாவும் பாலாவும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்திட்டு வந்தாங்க. வந்ததுக்கப்புறம் பாலா பஸ்ல ட்ராவல் பண்ணினதால தலையிடிக்கிறதா சொல்லி ரூம்ல போய் படுத்திட்டாரு, நான் கிச்சன்ல அவருக்கு காபி போட்டு குடுத்துட்டு பாலா கூட ரூம்லதான் இருந்தன்"
"ஆதியும் பாலாவும் தனியா என்ன பேசினாங்க?"
"பாலா எதுவும் சொல்லல, நானும் பாலாவ டிஸ்டர்ப் பண்ண விரும்பல"
யாழினியின் வாக்கு மூலத்தின் பின் துகிரன் கூட சற்றே குழம்பி போயிருந்தான். அதை வெளிக்காட்டாமல் மற்றைய தேவையான தகவல்களைப்பெற்றுக்கொண்டு யாழினியை வெளியில் போகச்சொன்னான் துகிரன்.
அடுத்து பாலாவைத்தான் துகிரன் எதிர்பார்க்கின்றான் என்பதை ஊகித்துக்கொண்டு சத்யாவும் பாலாவினை உள்ளே அழைத்தான். உள்ளே வந்தவன் மேலைத்தேய பார்ட்டி கலாச்சாரத்துக்கு அறிமுகமில்லாதவன் என்பது அவனது தோற்றத்தில் தெரிந்தது.சற்றே பயம் கலந்த மரியாதையுடன் கைகட்டி நின்ற பாலாவினை உட்காரச்சொன்னான் சத்யா. தயங்கியபடியே உட்கார்ந்தான் பாலா.
வழமையான கேள்விகள் மூலம் அவன் பெயர் பாலமுருகன் எனவும் ஊர் சேலம், அப்பா இல்லை அம்மாவும் அக்காவும் மட்டும்தான்.இரண்டு வருடங்களாக ஆதியின் வீட்டில் டிரைவராக வேலை செய்துள்ளான் போன்ற தகவல்களை பெற்றுக்கொண்டனர் துகிரனும் சத்யாவும்.
"யாழினிகூட எப்பிடி காதலாச்சு?" என்று சத்யா வினவ, தான் யாழினியை காலேஜ்க்கு கூட்டி சென்று வரும்போது யாழினிக்கு முதலில் காதல் வந்தது என ஜெமினிகணேசன் காலத்து காதல் கதையை கூறினான் பாலா.
"சரி அப்புறம் எதுக்காக அவங்க வீட்ட நகைய திருடின?” துகிரன் அதட்டுவது போன்ற தொனியில் கேள்வியெழுப்பினான்.
"சார் நான் ஒண்ணும் நகைய திருடல்ல, அந்த மாதிரி எங்கம்மா என்ன வளர்க்கல. என்மேல இருந்த கோபத்தில ஆதி சார்தான் அப்பிடி ஒரு பொய் கேஸ போட்டு போலீஸ்ல வச்சு வெளுத்து கட்டினாரு. பிச்சையெடுத்தாலும் அடுத்தவங்க பொருள்ல கை வைக்கமாட்டன் சார்" என்று சற்று காட்டமாகவே கூறினான் பாலா.
அது ஒரு பொய் கேஸ்தான் என்று துகிரன் நம்பினாலும் பாலாவின் ரோஷத்தை தூண்டிவிடவே அவ்வாறு கேள்விகேட்டான்.
"அப்போ அதுக்கு பழிவாங்கிறதுக்காகதான் நேற்று பார்ட்டிக்கு வந்தியா?"
"சார் எனக்கு ஆதி சார் செஞ்ச கொடுமைக்கு பழிவாங்கிற எண்டா அந்த நேரமே என்ன வேணும்னாலும் செய்திருப்பன். ஆனா என்ன இருந்தாலும் நான் கஷ்டத்தில இருந்தப்ப ஆதி சார்ட அம்மாதான் எனக்கு வேலை போட்டு குடுத்தாங்க. அவங்களுக்காக தான் பொறுத்துக்கிட்டன். இப்பிடி கோழை மாதிரி ஊர விட்டு ஓடியிருக்கமாட்டன் சார்"
"அப்போ ஊர விட்டு போனது?"
"யாழினிதான் சேலத்துக்கு திரும்பி போயிட சொன்னாள், தான் கொஞ்ச நாளைக்கப்புறம் வந்துடுறேன்னு சொல்லத்தான் நானும் ஊருக்கு போனன்"
"நேற்று ஆதி தனியா என்ன பேசினான் உன்கூட?"
"யாழினி கூட கூட்டிட்டு போய் நடந்த எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டாரு, அப்புறமா யாழினி போனதுக்கப்புறம் எங்களையும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகச்சொன்னாரு. தன்னோட பேக்டரி ஒண்ணுக்கு என்ன முதலாளி ஆக்கிறதா சொன்னாரு. நான் எல்லாத்துக்குமே மறுத்துட்டேன். என்னால சம்பாதிச்சு யாழினிய காப்பாத்தமுடியும்னு முடிவா சொல்லிட்டன். ஆதி சாருக்கு அது பிடிக்கல. நானும் கீழ வந்துட்டேன். இத பற்றி இன்னமும் யாழினிக்கு எதுவும் தெரியாது சார்."
"உன்கூட ஆதி மறுபடியும் கீழ வரலையா?"
"இல்ல சார்"
"பார்ட்டிக்கு வந்தவங்க யாராவது மேல அந்த டைம் வந்தாங்களா?"
"அப்பிடி யாரும் வரல சார்"
"ஓகே. பாலா நீங்களும் யாழினியும் கேஸ் முடியும் மட்டும் சென்னையிலதான் இருக்கணும். எங்களுக்கு இன்போர்ம் பண்ணாம எங்கயும் போக கூடாது. கான்டக்ட் டீடெயில்ஸ குடுத்துட்டு போங்க." என்று துகிரன் பாலாவிடம் கூறிவிட்டு சத்யாவை நோக்கி "இவங்களுக்கு ஸ்டே அரேஞ்ச்மன்ட்ஸ பார்த்து செய்யுங்க. யாழினிட அப்பா இவங்கள இப்ப ஏத்துக்கிற நிலமையில இருக்கமாட்டார்"
சத்யாவும் ஆம் என்பது போல் தலையசைத்துவிட்டு பாலாவிடம் தேவையான மீதி தகவல்களைப்பெற்றுக்கொண்டான்.
துகிரன் இறுதியாக ரேஷ்மாவுடன் வந்தவனை விசாரணைக்கு அழைக்கவும் துகிரனின் கைபேசி கனைக்கவும் சரியாகயிருந்தது. அது அவன் வெகு நேரத்திற்கு முன்பே எதிர்பார்த்திருந்த அழைப்புத்தான். கமிஷனர் தேவராஜ்தான் அழைப்பில் வந்திருந்தார். தனது மருமகன் என்பதையும் தாண்டி துகிரனின் திறமை மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டவர் தேவராஜ்.
"குட் ஆஃப்டர்நூன் சார்"
"குட் ஆஃப்டர்நூன் துகிரன், காலையிலேயே கால் பண்ணியிருப்பன். இன்ஸ்பெக்டர் ரமேஷ் நீங்க இன்வெஸ்டிகேஷன்ல இறங்கிட்டதா சொன்னார். ஸோ உங்கள டிஸ்டர்ப் பண்ண விரும்பல. இப்ப என்ன சிற்றுவேஷன் துகிரன்?"
"இன்வெஸ்டிகேஷன் இன்னும் போய்ட்டிருக்கு சார், இன்னும் முடியல. இன்னும் ரெண்டு மூணு பேர்ட்ட விசாரிக்க வேண்டியிருக்கு. அத முடிச்சிட்டு தான் பிரெஸ்க்கு நியூஸ் குடுக்கணும். கேஸ் கொஞ்சம் காம்பிலளிகேட்டட்டாதான் இருக்கு. பட் சீக்கிரம் கொலையாளியை கண்டுபிடிச்சிடலாம்”
கமிஷனர் குறுக்கிட்டு " சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவீங்கன்னு தெரியும், பட் இது ரொம்ப சீக்கிரமா கண்டுபிடிக்கவேண்டிய விஷயம். ஏன்னா இதில நிறைய பெரியபுள்ளிகளோட பசங்க சம்பத்தப்பட்டிருக்காங்க. இறந்த பையன்ட அப்பா ராம்குமார் ஒரு தொழிலதிபர் மட்டுமில்ல ஆளும்கட்சில பெரிய செல்வாக்கு உள்ள ஆளு. அதே போல தான் அவனோட பிரெண்ட்ஸும். ஸோ தலையிடி நமக்குத்தான். சி.ம் லெவெல்ல இருந்து பிரஷர் வரும். அதுக்குள்ளே கேஸ் முடிஞ்சாகனும். அண்ட் வன் மோர் திங், எதிர் கட்சிகாரங்க எப்படா போலீஸ் தப்பு பண்ணும்னு காத்திட்டு இருப்பாங்க. ஏதாவது சொதப்பிச்சின்னா உடனே ஆளும்கட்சியிடம் விலைபோய்விட்டதா போலீஸ்ன்னு நம்மள நாறடிப்பானுங்க. எல்லா கட்சிக்கும் ஒவ்வொரு டிவி சேனல் இருக்குன்னு ஞாபகம் வச்சுக்க துகிரா. இதில இவ்வளவு சிக்கல் இருக்குன்னுதான் உன்ன இந்த கேஸ்ல இன்வோல்வ் பண்ணினன். மாக்ஸிமம் மூணு நாள்தான் டைம், அதுக்குள்ளே சோல்வ் பண்ணிடனும். தட்ஸ் யுவர் டாஸ்க் துகிரன். இஸ் தட் கிலியர்?"
கமிஷனர் சொல்ல சொல்ல துகிரனுக்கு தலை சுற்றியது. மூன்று நாட்களுக்குள் எவ்வாறு இந்த கொலை வழக்கை தீர்ப்பது என்பது ஒரு புறமிருந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தான் பிரத்தியேக விடுமுறையில் புராதனியுடன் பெங்களூர் செல்ல திட்டமிட்டதையும் அதனைப்புராதனியிடம் ஏற்கனவே தான் கூறிவிட்டதையும் நினைக்கும்போது துகிரனுக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது. இருந்தாலும் கடமை தவறாதவனான துகிரன் சொந்த விடயங்களை பொருட்படுத்தாமல் "ஓகே சார், மூணு நாளுக்குள்ள சோல்வ் பண்ணிடுறன்" என்று வாக்கு கொடுத்தான்.
துகிரனும் தனது மகளும் பெங்களூர் போக உத்தேசித்திருப்பது கமிஷனர் தேவ்ராஜ்க்கு தெரியாமலில்லை. அதேவேளை தனது மகளை சமாளிப்பதிலும் துகிரன் கெட்டிக்காரன்தான் என்பதுவும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.
துகிரனும் சத்யாவிற்கு கைகளால் அடுத்தவனை உள்ளே அழைக்குமாறு சைகை காட்ட சத்யாவும் வெளியிலிருந்து ஒரு கட்டுமஸ்தான ஆண்மகன் ஒருவனை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.
"உங்க பேர் என்ன மிஸ்டர்?"
"திலக்"
"எங்க வேர்க் பண்றீங்க?"
"ராயப்பேட்டை பவர் வேர்ல்ட் என்கிற ஜிம்ல ட்ரைனரா வேர்க் பண்றன் சார்"
"ரேஷ்மா உங்களுக்கு யாரு?"
"ரேஷ்மா என்னோட தங்கச்சிட பிரெண்ட், எனக்கும் தங்கச்சி மாதிரித்தான்"
"நீங்க எதுக்கு நேற்று பார்ட்டிக்கு வந்தீங்க?"
"ரேஷ்மாதான் தனியா போக பயமா இருக்குன்னு என்னையும் கூட்டிகிட்டு வந்தா"
"மொட்டைமாடில என்ன நடந்திச்சு?"
சற்றே தடுமாறிய திலக்கின் வாய் உளறியது.
"மொட்டை மாடிலயா? என்ன நடந்த? நாங்க அப்பார்மென்ட்ல தானே இருந்தோம். தெரியலையே" என்று சொல்லி திருட்டு முழி முழித்தான் திலக்.
சத்யா எதோ சொல்ல வர குறுக்கிட்ட துகிரன் " அப்போ ரேஷ்மா மொட்டை மாடிக்கு போனது எதுக்காகன்னு தெரியுமா மிஸ்டர் திலக்?"
"ஓ அவ ஏதோ பர்சனலா பேசுறதுக்காக போனான்னு நினைக்கிறன். நான் போதைல இருந்ததால எதுவும் சரியாய் ஞாபகமில்ல சார்" என்று திக்கி திணறி சமாளித்தான் திலக்.
"என்ன மிஸ்டர் திலக் ரேஷமாக்கு பாதுகாப்புக்கு கூட வந்திட்டு தனியா மொட்டைமாடிக்கு அனுப்பியிருக்கீங்க. போதைல எதுவும் ஞாபகமில்லன்னு வேற சொல்றீங்க" என்று நையாண்டியாக சொன்னான் துகிரன்.
பதில் எதுவும் கூறாமல் இருந்த திலக்கின் கண் வெளியில் விழுந்துவிடும் போல இருந்தது. பயத்தில் வியர்த்து ஒழுகியது.
"ஓகே சத்யா, திலக்கிற்கு எதுவுமே தெரியாது போல இருக்கு. பார்க்க இன்னசன்ட்டாதான் இருக்கிறார். அவரோட கான்டக்ட் டீடெயில்ஸ வாங்கிட்டு அனுப்பிடுங்க" என்று துகிரன் கூற சத்யாவும் பதிலுக்கு "ஆமா சார் எனக்கும் அப்பிடித்தான் தோணுது” என்று கூறினான்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த திலக் எனும் திலகனுக்கு அடி வயிற்றைக்கலக்கியது.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5 - தந்தையின் நாடகம்

"ஏய் உனக்கு பிரியாவ இப்ப ரெண்டு வருஷமாத்தான் தெரியும். அவ ஒரு அனாதைன்னு தெரியும், வேற என்ன அவளப்பத்தி தெரியும்? சென்டிமென்டல் பூல்னு சொல்லுவாங்களே அது இவள்தான். யாராவது பாசமா கதைச்சா ஏமாந்துடுவாள். இதையே எல்லாரும் யூஸ் பண்ணி இவகிட்ட வேலை வாங்கிட்டு அப்புறமா கழட்டிவிட்டுடுவாங்க. அவளோட அப்பா, அம்மா அக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்கன்னுதானே தெரியும். ஆனா அதில இறந்தது அவளோட உண்மையான அம்மா இல்லடி. அவளோட அம்மா இவளுக்கு ஏழு வயசாயிருக்கும்போதே தற்கொலை பண்ணிக்கிட்டா. எதுக்காக? இவ்ளட அப்பாக்கு வேறொரு பொண்ணு கூட தொடர்பிருக்கின்னு தெரிஞ்சதுனால. அந்த பொண்ணுதான் அக்ஸிடெண்ட்ல செத்துப்போனது. இவ அப்பாவோட ரெண்டாவது பொண்டாட்டி. ரொம்ப வசதியான குடும்பம். ஒரே ஒரு பொண்ணா ராணி மாதிரித்தான் அவங்கம்மா இருக்கும்வரைக்கும் வாழ்ந்திருக்கிறாள். இவளோட அப்பாவும் சித்தியும் இவள என்னென்ன கொடுமைல்லாம் படுத்தியிருக்காங்க தெரியுமா? சித்திக்கு பிறந்த பிள்ளையை கூட இவள்தான் தாய் போல பார்த்துக்கிட்டா. அதுவும் எட்டு வயசில. அதுக்காகத்தான் இவள அவங்க கூட வச்சிருந்தாங்க. இப்பகூட ஹோம்ல இருக்கிற குழந்தைங்களை இவதான் பார்த்துக்கிறா. இது கூட பிரியா எனக்கு சொல்லல, லட்சுமி அம்மாதான் சொன்னாங்க. தான் யாருன்னு மத்தவங்க தெரிஞ்சிக்கிட்டு அவள் மேல அனுதாபப்படுறது அவளுக்கு பிடிக்காது." என்று குழலி சொல்ல சொல்ல பிரியாவை எண்ணி பரிதாபப்பட தொடங்கினாள் வைஷ்ணவி.
"ச்சா..... பாவம் இல்லடி அவள்....அப்பிடின்னாலும் அவளும் தன்னோட வாழ்க்கைய பார்க்கத்தானே வேணும்"
"அவளுக்கு புடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை கிடைச்சுதுன்னா இந்த உலகத்திலேயே சந்தோசப்படுற முதல் ஆள் நானாத்தான் இருப்பன். அதுக்கு அவள் மொதல்ல நல்லா படிச்சு பிளஸ் 2 முடிக்கணும். அவள் ஆசைப்படுறமாதிரி டாக்டராகணும். அவளுக்கிருக்கிற அறிவுக்கும் நல்ல மனசுக்கும் கண்டிப்பா எல்லா சப்ஜெக்ட்லயும் சென்டம் வாங்குவாள்."
"ஆமால்ல, நான் கூட அத யோசிக்கல"
"ரெண்டு நாள் முன்னாடி லட்சுமி அம்மாவ கடையில சந்திச்சன். இப்பெல்லாம் பிரியா தன்கூட ஒழுங்கா பேசுறதில்லன்னும் ஹோம்ல படிக்கிறதா தெரியலன்னும் வருத்தப்பட்டாங்க. அதான் கொஞ்சம் புத்திமதி சொல்லுவம்னு நினைச்சன். நீ எல்லாத்தையும் சொதப்பிட்டா."
"எனக்கெப்பிடி இதெல்லாம் தெரியும். முதலே என்கிட்ட விசயத்த சொல்லியிருந்தா நானும் சப்போர்ட் பண்ணியிருப்பன்ல. அவள் கோவிச்சிட்டு வேற போய்ட்டாள்.”
"அவளோட கோபம் என்னான்னு தெரியாதா? பத்து நிமிசத்தில எதுவுமே நடக்காததுபோல வந்து கதைப்பாள்." என்று சொல்லிக்கொண்டே வகுப்பறையை நோக்கி விரைந்தனர் இருவரும்.
வகுப்பறையில் தோழிகளின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்த பிரியா இருவரையும் கண்டதும் குழந்தை போல "கோவிச்சிடீங்களா?" என்று கொஞ்சினாள். சிரிப்பை பதிலாக்கிய இருவரும் "அது ஒருநாளும் நடவாது" என்று மனதினுள் நினைத்துக்கொண்டனர்.
பூங்குழலி தன்னிலைமை தெரிந்துதான் அறிவுரை சொல்கிறாள் என்பது பிரியாவிற்கு விளங்கினாலும் ஹரி மீது இருந்த ஈர்ப்போ காதலோ இவை எதையும் அவள் மூளைக்கு எடுத்துச்செல்லவில்லை. உண்மையை சொல்லப்போனால் அதன் பிற்பாடுதான் அவன் மீதான ஆசை அதிகமாகியது. அந்த வயதில் எதிர்ப்புக்கள் வர வர பிடிவாதமும் கூடும் என்பது வாஸ்தவம்தானே.
அன்றுவரை வெறுமனே பார்வையாலே மட்டும் சந்தித்துக்கொண்டவர்கள் ரகசியமாக சந்திக்க தொடங்கியிருந்தார்கள். ஹரியின் பாசமான வார்த்தைகளும் அரவணைப்பும் இதுநாள் வரையில் தனக்காக எவருமில்லை என்று வாழ்ந்தவளுக்கு வாழ்க்கை மீது ஒரு பிடிப்பை உண்டாக்கியது. ஆதரவற்ற குழந்தைகளுக்காக தனது வாழ்வை அர்பணிப்பதை பற்றி மட்டுமே யோசித்தவள் இன்று தனது வாழ்க்கையை பற்றியும் கனவு காண ஆரம்பித்திருந்தாள். பிரியா இவ்வாறு தனக்காக வாழத்தொடங்கியது பூங்குழலிக்கும் வைஷ்ணவிக்கும் ஒருபக்கம் மகிழ்ச்சியைக்கொடுத்தாலும் பூங்குழலிக்கு ஏதோ ஒரு இனம்தெரியாத பயமும் இருந்து கொண்டிருந்தது.
ஹரிதான் பிரியாவின் உலகமாகிப்போய் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. பிளஸ் 2 பரீட்சைகள் முடிந்து பெறுபேறுகளும் வெளியாகியிருந்த நேரம் அது. பிரியா எடுத்திருந்த மதிப்பெண்கள் டாக்டராவதற்கு காணாமலிருந்தது. இரண்டு நாளாக ஹோமில் தனது அறையினை பூட்டிவிட்டு அழுதுகொண்டிருந்தவள் அன்று ஹரியினை சந்திப்பதற்காக வெளியில் வந்தாள்.
மாலை ஐந்து மணியளவில் பிரியாவை சந்திக்க ஹரியும் அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு வந்து காத்துக்கொண்டிருந்தான். ஹரியை கண்டதும் பிரியாவின் கண்களில் நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன.
பிரியாவின் கண்களில் கண்ணீரைக்கண்டதும் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் ஹரி. ஏழு வயதுவரை அம்மாவிடம் கிடைத்த அரவணைப்பாகவே உணர்ந்தவள் உரிமையுடன் முகம் புதைத்து அழுது தீர்த்தாள். கண்ணீர் தீரும் மட்டும் எதுவும் பேசாது ஹரியும் இடைவெளி காத்தான். சிறிது நேர அமைதிக்கு பின் பிரியா பேசத்தொடங்கினாள்.


திலக் வெளியே சென்றபின்னர் சத்யா வழமைபோல் குழப்பமே உருவானவனாய் துகிரன் முன்னே நின்றிருந்தான்.
"சார் இவன் பொய் சொல்றது தெளிவா தெரியுது. ரேஷ்மா ஏற்கனவே தானும் திலக்கும் மொட்டைமாடிக்கு போய் ஆதிகூட பேசினதா சொல்லியிருந்தா, இப்ப இவன் என்னடான்னா தான் மொட்டைமாடிக்கு போகவே இல்லன்னும் ரேஷ்மா போனது கூட தெரியாத மாதிரியும் சொல்றான். அப்போ திலக் பொய் சொல்றான்னா அவன் கொலை பண்ணியிருக்கலாம் அல்லது அவனுக்கு இந்த கொலைல எதோ சம்பந்தம் இருக்குன்னு தானே அர்த்தம்"
"சத்யா நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான், ஒரு விசயத்த தவிர"
"எத சொல்றீங்க சார்?"
"திலக் பொய் சொல்றங்குறதுக்காக அவனுக்கும் இந்த கொலைக்கும் நிச்சயமா சம்பந்தம் இருக்குன்னு சொல்ல முடியாது. அவன் எதையோ எங்ககிட்ட இருந்து மறைக்கிறான். பட் அது கொலை சம்பந்தப்பட்டதுதான்னு இல்ல"
"வேற எத மறைக்க போறான் சார்?"
"எதுன்னு தான் நாம கண்டுபிடிக்கணும், நாம விசாரிச்சா அத்தன பேரோட வாக்குமூலத்தையும் வச்சு ஒண்ணு மட்டும் நிச்சயமா சொல்லலாம். நேற்று இங்க நடந்தது ஆத்திர அவசரத்தில நடந்த கொலை இல்ல. பிரீ ப்ளான்ட் மெர்டர்"
மறுபுறம் இவற்றைக்கேட்டு மலைத்து போய் நின்ற சத்யாவிடம் மீண்டும் துகிரன் "சத்யா கீழ பிரஸ் வந்திருக்கு. இன்ஸ்பெக்டர் ரமேஷ் அத டீல் பண்ணிக்குவார். நீங்க அவருக்கு தேவையான டீடெயில்ஸ குடுத்துடுங்க. குற்றவாளியை விரைவில் பிடிப்போம்னு சொல்லிட சொல்லுங்க. நான் பக்கத்து அபார்ட்மெண்ட்ல இருக்கிறவங்ககிட்ட விசாரிச்சிட்டு வந்துடுறன்"
"ஓகே சார்"
"அண்ட் இன்னும் தேர்ட்டி மினிட்ஸ்ல ஆதிட பேரன்ட்ஸ மீட் பண்ணனும். ரெடியா இருங்க" என்று கூறிவிட்டு அடுத்த விசாரணைக்கு விரைந்தான் துகிரன்.
"என்ன மனுஷன்யா நீ, கொஞ்சமாச்சும் ரெஸ்டு தாறானா பாரு" என்று மனசிற்குள் துகிரனை நொந்து கொண்டு இன்ஸ்பெக்டர் ரமேஷின் கைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினான் சத்யா.
துகிரன் சொன்ன வேலைகளை முடித்துவிட்டு முப்பது நிமிடத்தில் அரக்க பறக்க சத்யாவும் துகிரனின் இன்னோவா கார் அருகில் வர காரினுள் துகிரனும் கிளம்புவதற்கு தயாராக இருந்தான். அன்று அரை நாளைக்கடந்து சூரியனும் உச்சியில் நின்று அக்கினிப்பார்வையில் சுட்டெரித்தான். வெறும் டீயினை மட்டும் குடித்து வயிற்றை நிரப்பி கொண்டிருந்த சத்யாவிற்கோ பசி தாங்கமுடியவில்லை. துகிரனுக்கும் அப்பிடித்தான். ஆனால் அது அவனுக்கு பழக்கம்தான். செய்யவேண்டிய வேலை மீதமிருக்கும் போது அவனுக்கு பசி தெரிவதில்லைதான். ஆனால் இவ்வளவு நாளும் தனியாகவே பணி புரிந்தவனுக்கு தற்போது தான் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க கமீஸனரினால் கொடுக்கப்பட்ட உதவியாளனின் பசியால் வாடிய முகம் அவனது கடமைக்கு குறுக்கே வந்தது. போகும் வழியில் ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான். சத்யாவை வயிறாற சாப்பிடச்சொன்னான், தானும் ஏதோ கடமைக்கு ஒரு குளிர்பானத்தை பருகிக்கொண்டான்.
அதிகபட்சம் அந்த ஹோட்டலில் இருபது நிமிடங்கள் செலவிடவில்லை, ஆனால் மழுங்கி கொண்டிருந்த சத்யாவின் கண்களை அந்த இருபது நிமிட ஓய்வும் உணவும் பிரகாசிக்க செய்தது. அடுத்த பத்து நிமிடத்தில் ராம்குமாரின் பங்களாவிற்கு முன்னால் நின்றது இன்னோவா.
வாசலில் இருவரும் கால் வைக்கும்போதே உள்ளிருந்து அழுகுரல் காதைப்பிளந்தது. ஆதியின் அம்மாவின் அழுகுரல்தான் அது. துகிரனின் கணிப்பின் படி ராம்குமாரும் அவரது மனைவியும் பதினோரு மணியளவில்தான் சென்னைக்கு வந்திருக்க வேண்டும். என்னதான் கோடீஸ்வரியாக இருந்தாலும் மீண்டும் சம்பாதிக்கவே முடியாத செல்வம் தான் ஒரு அன்னைக்கு அவளது புதல்வன். அவள் அழுவதைப்பார்க்கும் போது இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கக்கூடாதோ என சத்யாவிற்கு தோன்றியது.
"என்ன சத்யா ஏதோ தயக்கம் ஒண்ணு தெரியுது?"
"ஆமா சார், அம்மாவ பார்க்கிறப்ப ரொம்ப பாவமா இருக்கு. கொஞ்சம் லேட்டா இங்க வந்திருக்கலாம்னு தோணுது....." என்று சத்யா தனது ஆதங்கத்தை கொட்டிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த துகிரன் சிறு புன்முறுவலுடன் "அப்பிடியில்ல சத்யா, மர்டர் கேஸ் விசாரிக்கிறப்ப இப்பிடித்தான் இருக்கும். அம்மாவ வேணுமுன்னா இப்ப டிஸ்டர்ப் பண்ணாம விட்றலாம். அதே நேரம் இப்பிடியான சந்தர்ப்பத்திலதான் ஏதாவது எவிடன்ஸும் கிடைக்கலாம். ஸோ எமோஷனலாகாம க்ளோஸா ஆப்செர்வ் பண்ணுங்க" என்று கூறினான்.
துகிரனின் அறிவுரை சத்யாவிற்கு சற்று நெருடலாக இருந்தாலும் ரியாலிட்டி அதுதான் என புரிந்து கொண்டவனாய் பங்களாவினுள் நுழைந்தான்.
ஏற்கனவே சேதி அறிந்து ராம்குமாரின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் துக்கம் விசாரிக்கும் நோக்கில் அங்கு வந்திருந்தனர். ஹாலில் தரையில் இருந்தபடி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார் ராம்குமாரின் மனைவி நந்தினி. அவரைச்சுற்றி பல பெண்கள் அமர்ந்து கொண்டு நந்தினியம்மாவை தேற்றுவதற்கு முற்பட்டுக்கொண்டிருந்தனர். மற்றொரு மூலையில் இருந்த சோபாவில் இடிந்து போய் ஒருவர் உட்கார்ந்திருக்க அவரிடம் மற்றவர்கள் துக்கம் விசாரித்து கொண்டிருந்தனர். அவர் ராம்குமாராகத்தான் இருக்க வேண்டுமென ஊகித்த துகிரன் அவர் அருகே சென்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.
"சார் மை நேம் இஸ் துகிரன். டிடெக்ட்டிவ் இன் சிட்டி கிரைம் பிரான்ச். உங்க மகனோட கேஸ நான்தான் இன்வெஸ்டிகேட் பண்றன். இஃப் யு டோன்ட் மைன்ட் உங்க கூட கொஞ்சம் பேசலாமா?"
துகிரனை நிமிர்ந்து பார்த்தவர், ஆம் என்பதுபோல தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். துகிரனின் திறமைகள் பற்றி நன்கு அறிந்தவரான ராம்குமார் ஓரிரு தடவை தனது நண்பரான கமிஷனர் தேவராஜை சந்திக்க சென்ற இடத்தில் கண்டிருக்கிறார். தேவராஜும் தனது மருமகனின் துப்பறியும் ஆற்றல் பற்றி மெய் சிலிர்த்துப்போய் பல சந்தர்ப்பங்களில் தனது நண்பருக்கு கூறியிருக்கிறார்.
தனியே தனது பிரத்தியேக அறைக்கு துகிரனை அழைத்துச்சென்ற ராம்குமார் "சொல்லுங்க தம்பி, உங்களுக்கு என்ன டீடெயில்ஸ் வேணும்?" என்று வினவினார்.
"சாரி போர் யுவர் லாஸ் சார், பட் இந்த நேரத்தில நீங்க குடுக்கிற இன்பொர்மேசன் எங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்"
"தெரியும்ப்பா, உங்களுக்கு என்ன டீடெயில்ஸ் வேணும்னாலும் கேளுங்க, நான் சொல்றன். என் பையனை இப்பிடி பண்ணினவன சும்மா விடக்கூடாது" என்று கூறிக்கொண்டே தனது அழுகையை அடக்கிக்கொண்டார் ராம்குமார்.
மகன் இறந்து தந்தை அழுவதென்பது எந்த தந்தையும் தன் வாழ் நாளில் சந்திக்க கூடாத துயரம் என்பது துகிரனுக்கு தெரிந்த ஒன்றுதான். "உங்களுக்கும் ஆதிக்கும் ரிலேஷன்ஷிப் எப்பிடி இருந்திச்சு?
"அவன்தான் சார் எனக்கும் நந்தினிக்கு உசிரு, நான் ஒண்ணும் பிறக்கும்போதே பணக்காரன் இல்ல தம்பி. இந்த இடத்துக்கு வாறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன், ஆதி பிறந்ததுக்கப்புறமா தான் எனக்கு நல்ல காலமே தொடங்கிச்சு. அவனுக்கு எல்லாமே பார்த்து பார்த்து செஞ்சன் தம்பி. எல்லாருகூடயும் ரொம்ப நல்லா பழகுவான். அவனுக்கு எதிரிங்களே கிடையாது. அவன கொலை பண்ண யாருக்கு மனசு வந்துச்சோ?" என்று கூறியபடி கலங்கினார் ராம்குமார்.
அவரது கண்ணீரில் பொய் இல்லை என்பதை புரிந்து கொண்ட துகிரனுக்கு அவரது வார்த்தையில் உள்ள நாடகத்தனமும் விளங்கியது. அருகில் நின்ற சத்யாவோ ராம்குமாரின் தந்தைப்பாசத்தில் உருகிவிட முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் சிறிதும் சலனமின்றி தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த துகிரனைப்பார்க்கும் போது தான் என்ன சப்ப கட்டு கட்டினாலும் இவனிடம் வேலைக்காகாது என்று ராம்குமாருக்கு விளங்கியது.
"கொலைகாரனை கண்டுபிடிக்கத்தானே வந்திருக்கன், சீக்கிரம் புடிச்சிடலாம். அது சரி சார், உங்களுக்கு ஆதி மட்டும்தான் பிள்ளையா?"
எந்தக்கேள்வியை துகிரன் கேட்க கூடாதென்று ராம்குமார் அழுது பாசாங்கு செய்தாரோ அந்தக்கேள்வியை கேட்டேவிட்டான் துகிரன். சத்யாவும் மனசிற்குள் "டேய் சத்யா நீ என்னடா ராம்குமாரோட கடைசிப்புள்ள மாதிரி பீல் பண்ணிட்டிருக்கா?" என்று தன்னைதானே கடிந்து கொண்டான்.
இந்தக்கேள்விக்கு ஏற்கனவே சொல்லி ஊரை ஏமாற்றி வைத்திருக்கும் பதிலைக்கொடுத்தார் ராம்குமார்.
"இல்ல தம்பி, எனக்கு ரெண்டாவதா ஒரு பொண்ணு இருக்கிறா, இப்ப மலேசியால ஹயர் ஸ்டடீஸ் பண்ணிக்கிட்டிருக்கா."
"ஓ அப்பிடியா, அவங்க பெரு என்ன?"
"யாழினி" என்று அவர் சொல்லும்போது கோபத்தில் அவரது இன்னொரு முகம் தெரிந்தது.
முகத்தில் சிறிய ஆச்சர்ய உணர்வை வெளிக்காட்டியபடி துகிரனோ "என்ன ஒரு அதிசயம் பார்த்தீங்களா சார்? மலேசியால இருக்கிற உங்க பொண்ணு பேரும் யாழினி, நேற்று ஆதிட பார்ட்டிக்கு வந்திருந்த பொண்ணு பெரும் யாழினி, அவ ஹஸ்பன்ட் பாலா கூட வந்திருந்தா" என்று சொன்னான்.
யாழினியும் வந்திருந்தாள் என்று தெரிந்ததும் ராம்குமாருக்கு கோபம் பீறிட்டாலும் தான் பொய் சொல்லி துகிரனிடம் மாட்டி கொண்டது தலைகுனிவாகவும் இருந்தது. பேச்சிழந்து தலைகுனிந்து நின்றார் செல்வந்தர் ராம்குமார்.
"மிஸ்டர் ராம்குமார் இனியாவது என்கிட்ட உண்மைய சொல்லுங்க.உங்களோட கதைகள என்கிட்ட விக்கலாம்னு நினைக்காதீங்க"..... துகிரன் காட்டமாக கூறினான்.
"ஆமா யாழினி என் வீட்டில வேலை செஞ்ச டிரைவர் கூட ஓடி போயிட்டாள்தான், அன்னையிலிருந்து அவள தல முழுகிட்டன். கீழ் சாதி நாயோட போனவள் எனக்கு பொண்ணே இல்ல. செத்துபோய்ட்டாள்னுதான் நானும் ஆதியும் வாழ்ந்திட்டு இருந்தோம். நேற்று அவள் அந்த நாயோட வந்திருக்காள்ன்னா யாரு ஆதிய கொலை பண்ணியிருப்பாங்கன்னு சந்தேகமே இல்ல. என்கிட்ட விசாரிக்கிறது விட்டுட்டு அந்த ஓடுகாலியையும் தெருநாயையும் புடிச்சு ஜெயில்ல போடுங்க தம்பி." என்று ராம்குமார் பொரிந்து தள்ளியபோது அவருக்குள் இருந்த சாதி வெறியன் ராம்குமாரின் முகமூடியை உடைத்து கொண்டு வெளியில் வந்தான்.
இதை எதிர்பார்த்த துகிரன் யாழினி மீது தந்தைக்கும் மகனுக்கும்தான் கோபமே தவிர தாயிற்கு கோபமில்லை என்பதை விளங்கிக்கொண்டான். அருகில் ராம்குமாரின் வார்த்தைகளில் அதிர்ச்சியுற்ற சத்யாவோ "இவனுக்கா இவ்வளவு நேரம் பரிதாபப்பட்டேன், விட்டா இவனே பெத்த மகள கொன்னுடுவான் போலயே" என்று மனதிற்குள் திட்டி தீர்த்தான்.
"மிஸ்டர் ராம்குமார் நீங்க சொல்றங்கிறதுக்காக எல்லாம் யாரையும் அரெஸ்ட் பண்ண முடியாது, அந்த வேலைய நான் பார்த்துக்கிறன். நீங்க எனக்கு கார்பொரேட் பண்ணுங்க அது போதும்."
"உங்க மாமா என்னடான்னா துகிரன் மாதிரி டிடெக்ட்டிவ் இந்தியாவிலேயே இல்ல, அப்பிடி இப்பிடின்னு புகழ்ந்து தள்ளிட்டு இருப்பார், ஆனா நீ என்னடான்னா கையும் களவுமா கிடைச்ச கொலைகாரிய விட்டுட்டு வந்திருக்கா" என்று துகிரனை கேலி செய்வது போல் கோபத்தை தூண்டினார் ராம்குமார்.
தன்னுடைய வார்த்தைகள் துகிரனுக்கு கோபத்தை உண்டாக்கும் என ராம்குமார் எதிர்பார்க்க துகிரனோ நிதானமாக "மிஸ்டர் ராம்குமார் நான் உங்ககிட்ட எனக்கு செர்டிபிகேட் கேட்கல. கமிஷனர் சார் என்ன பற்றி சொன்னார்னா அத பத்தி அவரோட டீல் பண்ணிக்குங்க. உங்களோட மிரட்டலுக்கெல்லாம் நான் ஆள் கிடையாது. நான் ஒண்ணும் உங்க வீட்டு டிரைவர் கிடையாது, நீ வா போன்னு பேசுறதுக்கு. என்கிட்ட மரியாதையா பேசினா நானும் மரியாதை குடுப்பன். அண்ட் பை தி வே டிரைவர்னாலும் அவனும் மனுசன்தான் நாய் கிடையாது. ஸோ எப்பிடி பேசணும்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறன்" துகிரன் தனது ஆவேசத்தையும் திமிரையும் சாது போல இருந்து கொண்டே காட்ட வெலவெலத்துப்போனது ராம்குமார் மட்டுமல்ல சத்யாவும்தான்.
இப்பிடி ஒரு அதிகாரியை அதுவும் இளம் அதிகாரியை டிபார்ட்மெண்டில் காண்பது அரிதிலும் அரிதுதான். அவருடன் உதவியாளராக பணி செய்வது பாக்கியம்தான் என மனதிற்குள் துகிரனை புகழ்ந்தான் சத்யா.
சில நிமிட மௌனத்தின் பின் கேள்விகளை தொடர்ந்தான் துகிரன். அனால் பதிலளிப்பவரிடம் பழைய மிடுக்கோ சென்டிமென்ட்டோ இருக்கவில்லை.
"உங்களுக்கு யாராச்சும் பிஸ்னெஸ்ல வேண்டாதவங்க இருக்காங்களா?"
"பணம் கொஞ்சம் கூட சம்பாதிச்சாலே வேண்டாதவங்க பொறாமை புடிச்சவங்கன்னு இருப்பாங்கதானே, நீங்க யார கேட்கிறீங்க தம்பி?"
"ஆதிட ப்ரெண்ட்ஸ் பார்ட்டிக்கு வந்திருக்காங்க, அவங்களும் பெரிய இடம்தான். ராபர்ட், சஞ்சய், வினோத், ரிஷி, ஹுசைன். இவங்கள்ல அல்லது இவங்க பேமிலி யார்கூடயாச்சும் உங்களுக்கு விரோதம் இருந்திச்சா?
"இதில ரிஷிட அப்பா மகாலிங்கம் என்னோட சிநேகிதன்தான். அவனுக்கு ஆதியும் மகன் போலத்தான். ஸோ நீங்க அந்த டைரக்ஸ்ன்ல யோசிக்க தேவையில்ல"
"ஓகே. பட் நான் அப்பிடி யோசிக்காம இருக்க முடியாது."
வேறு சில கேள்விகளையும் கேட்டுவிட்டு ஆதியின் அம்மாவை விசாரிப்பதற்கு அழைத்தான் துகிரன். ராம்குமார் கஷ்டப்பட்டு நந்தினியம்மாவை அழைத்துவந்தாரே தவிர எந்த கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை, வெறும் அழுகை மட்டும்தான் பதிலாக கிடைத்தது. தாயின் உண்மையான பாசத்தை உணர்ந்த துகிரன் அப்போது எந்தவொரு முக்கியமான விடயங்களையும் நந்தினியம்மாவிடம் கேட்டு பெறமுடியாது என உணர்ந்து அங்கிருந்து கிளம்பினான்.
"சார், செமையா அந்தாளுக்கு குடுத்தீங்க, நான்கூட அவருக்கு அடங்கி போய்டுவீங்களோன்னு நினைச்சிட்டேன். சாரி சார்." என்று முகஸ்துதி செய்தான் சத்யா.
"உங்க வேலைய செய்றதுக்கு என்னைக்குமே பயப்படாதீங்க" என்று கூறி விட்டு காரினுள் இருவரும் ஏறும்போது மணியோ இரண்டாகிவிட்டது.
"சார் எல்லாரையும் விசாரிச்சிடீங்க, யாரு கொலை பண்ணியிருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?"
மெல்லிய புன்னகையுடன் துகிரனும் " நான் சொல்றன், உங்களுக்கு யார் மேல சந்தேகம்னு சொல்லுங்க சத்யா?"
 
Status
Not open for further replies.
Top