All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "ரகசிய கவிதையே..!" - கதைத்திரி

Status
Not open for further replies.

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்.!

அடுத்த கதையோடு வந்தாச்சு,

இப்போதைக்கு வாரம் ஒரு யூடி போடுறேன்.

எல்லாமே நார்மல் ஆனதும் தொடர்ந்து யூடி போடுறேன் டியர்ஸ்.

அன்புடன்.,

மதிளா சுகி✍
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம்: 1


க்ரைம் ஹண்டர்ஸ் டிடெக்டீவ் ஏஜென்சி

“மேடம் எங்களுக்கு எங்களோட க்ளையண்ட் ரொம்பவே முக்கியம் மேடம்., நீங்க என்ன கேஸ்ன்னு சொல்லுங்க நாங்க பார்த்து தர்றோம்” என எதிரில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான் அவன். க்ரைம் டிடெக்டீவ் ஏஜென்சியின் சீனியர் ஆஃபீசர் ஆன ஆதி.

“அது வந்து, எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் மாப்பிளையைப் பத்தி ப்ரீ மேரிட்டல் செக் ஒன்னு பண்ணணும்” என்றாள் தயக்கமாக அந்தப் பெண்.

“அதுக்கு ஏன் மேடம் இப்படித் தயங்குறீங்க அதுக்கும் நாங்க டிபார்ட்மென்ட் வச்சிருக்கோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றவன்.

“டேய் சுரேஷ், மேடம் உங்க டிபார்ட்மெண்ட் தான் டீடெயில் வாங்கிக்கோ. ரம்யா உனக்கு அஸிஸ்ட் பண்ணுவாங்க.” என ஆணையிட்டவன் அந்தப் பெண்ணைச் சுரேஷூடன் அனுப்பி வைத்தான்.

க்ரைம் ஹண்டர்ஸ் டிடெக்டீவ் ஏஜென்சி காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத குற்றங்களின் பின்னணியை கூடக் கண்டுபிடித்து முன்னணியில் திகழ்ந்துக் கொண்டிருக்கும் ஹைடெக்கான ஏஜென்சி. அவர்களுக்கு வரும் வழக்குகளைப் பணம் பெற்றுக்கொண்டு உண்மை தன்மையை ஆதாரத்துடன் தங்களுடைய க்ளையண்ட்க்கு காட்டுபவர்கள். இந்த ஏஜென்சியின் முடிசூடா மன்னனாய் விளங்குபவன் தான் வீரா. க்ரைம் ஹண்டர்ஸை வழிநடத்துபவன். ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுத்துப் பணியமர்த்திக் கொடுத்திருக்கிறான். அனைத்து கேஸிலும் இவன் தலையீடு இருக்காது. சில முக்கியமான கேஸ்களில் மட்டுமே அவனின் தலையீடு இருக்கும். அவனின் அனுமதி இன்றி அணுவும் அங்கு அசையாது.

திமிர் என்ற பெயருக்கு சொந்தக்காரன். யாருக்கும் அடங்காதவன் அதே சமயம் அடங்கவும் மறுப்பவன் அவனின் கூர்விழி பார்வையை அவனின் கூலர்ஸ் மறைத்திருக்கும். முகத்தைப் பார்த்தே அகத்தைக் கண்டுக்கொள்பவன். அக்கினியின் உஷ்ணத்தை அவன் பார்வையிலே காட்டிவிடுவான். முன்கோபக்காரன். காவல்துறையில் சேர்ந்திருந்தால் அவன் கண்டுபிடித்த வழக்குகளுக்கு ஏகப்பட்ட பதக்கங்களை வாங்கிக் குவித்திருப்பான்.

“வீரா சார், இஸ் கம்மிங்” என்ற ஆதியின் குரலில் ஏஜென்சியே பரபரப்பானது. எதையும் கண்டுக்கொள்ளாது தன் அறைக்குள் நுழைந்தான் வீரா. அவனைத் தொடர்ந்து சென்ற ஆதியோ.,

“சார்” எனத் தலையை நீட்டினான்.

“யா கம்மின்”

“சார் இன்னைக்கி ஒரு ப்ரீ மெரிட்டல் செக் கேஸ் தான் வந்துச்சு”

“ஓகே, நீட்டா முடிச்சு கொடுத்திடுங்க நம்ம ஏஜென்சி மேல எந்தக் கம்ப்ளைண்டும் வந்திடக் கூடாது” எனச் சொன்னவன் கணினியின் முன் அமர்ந்துக்கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

“சார் மினிஸ்டர் வேதநாயகம் அப்பாயின்மென்ட் கேட்டாரு”

“ம்ம் வரச் சொல்லு பத்து மணிக்கு” எனச் சொல்லி விட ஆதி அந்த அறையை விட்டுக் கிளம்பியிருந்தான். வேதநாயகத்திடம் தகவலை சொல்லி விட்டு தன் வேலைகளை பார்க்க சென்று விட்டான் ஆதி. ஆதி வீராவின் பர்சனல் அசிஸ்டன்ட்டாக பணிபுரிந்துக்கொண்டிருக்கிறான். வீராவின் மீட்டிங் அரெஞ்ச் செய்வதில் இருந்து ஹை ப்ரோபைல் கேஸ்களை வீராவின் கவனத்திறக்கு கொண்டு வரும் பிஆர்ஓ ஆகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். திரை பிரபலங்களில் இருந்து, அரசியல் பிரபலங்கள் வரை ஆதிக்கு தான் கால் செய்து வீராவை பார்ப்பதற்கு அப்பாயின்மென்ட் வாங்கி கொள்வார்கள். அப்படி தான் வேத நாயகமும் இன்று வருவதாக சொல்லியிருந்தார்.

ஆதி சொன்னதைப் போல் வீராவை பார்க்க வேதநாயகம் வந்திருந்தார்.

“வெல்கம் மிஸ்டர் வேதா” எனக் கைகுலுக்கினான் வீரா. நரைத்த தலைமுடியும் வெள்ளை வேட்டி சட்டையுடன் வந்திருந்தார் வேதா. மிடுக்கான தோரணையும் அவ்வப்போது கண்ணாடியை சரி செய்து கொண்டிருந்தார் அவர்.

“வீரா சார்!!”

“சொல்லுங்க வேதா”

“வீரா எனக்கு ஒரு உதவி வேணும்”

“ம்ம் சொல்லுங்க வேதா, ஏற்கனவே நம்ம டீல் பண்ண கேஸ் உங்களுக்கு சாதகமா முடிய போய் தான், மறுபடியும் நம்ம மீட் பண்ணுற சந்தர்ப்பம் அமைஞ்சிருக்குன்னு நம்புறேன்” என்றான் கணினியை பார்த்தபடி.,

“சரியா சொன்னீங்க வீரா, இந்த தொழில்ல உங்களை அடிச்சிக்க ஆளே இல்லைன்னு தான் சொல்லணும். தொலைஞ்சு போன கோடி கணக்கான பணத்தை ஒரே நாளில் கண்டு பிடிச்சு கொடுத்துடீங்களே. போலீஸ்காரனுகளே திணறி போன கேஸ் சார் அது” வீராவை பற்றி பெருமையாய் பேசினார் அவர். அவர் பாராட்டுகளை எதிர்பார்த்து இந்த வேலையை செய்யவில்லை. கொடுத்த வேலையை சரியாய் செய்து முடித்தாக வேண்டும் அதை மட்டுமே அவனின் எண்ணமாக வைத்திருந்தான் வீரா. அதனால் தான் என்னவோ வெறும் ஐந்து பேரை வைத்து ஆரம்பித்த நிறுவனம் இப்போது தமிழகம் முழுவதும் கிளைப்பரப்பி இருக்கிறது.

“சரி விசயத்துக்கு வாங்க வேதநாயகம்” என்றான் அமைதியாய்.

“என் பொண்ணு ப்ரியா ஒரு பையனை லவ் பண்ணுறா”

“வாழ்த்துகள் வேதா!! அப்போ அடுத்து உங்க வீட்டில தான் கல்யாண விருந்தா??” தன் வாழ்த்துகளை தெரிவித்தவுடன் வேதாவின் முகம் மாறியது.

“இல்லை” தயக்கமாய் வார்த்தைகளை உள்இழுத்தார் வேதா.

“பையனோட பேக்கரவுண்ட் செக் பண்ணணுமா?? பண்ணிடலாம் நல்ல பையனா கெட்ட பையனான்னு தெரிஞ்சுக்கிறதில் தப்பு ஒண்ணும் இல்லை வேதா சார். ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுறதை விட கேரக்டர் பார்த்து கல்யாணம் பண்ணுற காலம் வந்திடுச்சு வேதா சார்” என்றான்.

“இல்லை வீரா அந்தப் பையன் நல்லவன் தான். ஆனால் வேற பொண்ணோட தொடர்பு இருக்கிற மாதிரி ஆதாரம் ரெடி பண்ணி தரணும், அதை என் பொண்ணுக்கிட்ட காட்டினால் அவளே அந்த பையனை வேண்டாம்ன்னு சொல்லிடுவா” என்றார் இல்லாத மீசையை முறுக்கியபடி.

“வாட் டூ யூ மீன்” எனக் கத்தியவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

“இதோ பாருங்க வேதா, போன தடவை நம்ம டீல் பண்ணின கேஸ்ல உங்க பக்கம் நியாயம் இருந்ததிச்சு அதான் உங்களுக்கு நான் அந்தக் கேஸை முடிச்சுக் கொடுத்தேன். அந்த பணம் கவர்ன்மென்ட்டுக்கு சொந்தமான பணம்ன்னு வேற சொன்னீங்க. திஸ் இஸ் ராங்க் ” எனக் கோபமாய் அவன் திட்டினான்.

“வீரா!! நீங்க இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டீங்கன்னு ஆதி தம்பி சொன்னப்புல., நம்ம ஒரு டீலிங் பேசிக்குவோம் சொல்லுங்க எவ்வளவு வேணும் ஒரு கோடி” என அவர் பேரம் பேச துவங்க.,

“ஜெஸ்ட் ஷெட் அப் அண்ட் கெட் லாஸ்ட். பணத்துக்காக மட்டும் நான் இதை பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்சா அது உன்னோட தப்பு வேதா” எனக் கத்தியிருந்தான் வீரா.

அவனின் குரல் கேட்டு ஓடி வந்த ஆதி வேதாவை வெளியே அழைத்து வந்திருந்தான். போலியாய் எந்தச் சான்றிதழையும்., ஆதாரங்களையும் உருவாக்காமல் நேர்மையாய் தொழிலை நடத்தி வருகிறான். நேர்மையாய் நிமிர்ந்து நிற்பதால் என்னவோ அவனுக்கு எதிரிகள் ஏராளம். எதிரிகளை பற்றி அவன் எப்போதும் கவலை கொண்டதேயில்லை. அவனுக்கென்று ஒரு வரையறை வகுத்து சரியான வழியில் மட்டுமே பயணித்துக் கொண்டிருப்பவனுக்கு வேதா போன்ற ஆட்களை தினமும் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட தான் செய்கிறது. அவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தான் நம் நாயகன் வீரா.

“என்னய்யா ஆதி!! உங்க ஆளு பணம் கொடுத்தால் வாங்க மாட்டேன்னு சொல்றாரு”

“அய்யோ வேதா சார் பணம் கொடுக்கவா வந்தீங்க. வீரா சார்க்கு அதெல்லாம் பிடிக்காது.” எனச் சொன்னான் ஆதி.

“எனக்கு என்ன இந்த ஒரு ஏஜென்சி தான் இருக்கா?? நான் தெர்ட் ஐ க்குப் போயிக்கிறேன்” எனச் சொல்லி அங்கிருந்து வேதா கிளம்பியிருந்தார் வேதநாயகம்.

“ஆதி!!! இந்த மாதிரி கேஸஸ் என்னோட டெபிள்க்கு இனி வரக் கூடாது” என எச்சரிக்கை செய்தான் வீரா.

“சாரி சார்! நான் கேஸ் டீடெயில் கேட்டேன், இது பெர்சனல் மீட்ன்னு வேதா சொல்லிட்டாரு” எனத் தயங்கி தயங்கி சொல்லி நகர்ந்தான் ஆதி.

****

சென்னை மாநகரத்தின் ட்ராபிக் சிக்னலில் அந்தக் கருப்பு நிறக் கார் மெல்ல நகர்ந்துக்கொண்டிருந்தது. அந்தக் கருப்பு நிறக் காரை தொடர்ந்து கொண்டிருந்தது இந்தச் சிகப்பு நிற கார். சிகப்பு நிறக் காரை கவனமாய் இயக்கிக்கொண்டிருந்தான் ஆதி.

“ஆதி!! கார் நம்பர் சரி தானே” முன்னிருக்கையில் அமர்ந்தபடி கேட்டான் வீரா.

“நம்பர் 2756, கரெக்ட்டா தான் சார் இருக்கு” எனப் பதில் கொடுத்தான் ஆதி.

“ரொம்ப நெருக்கமா ஃபாலோ பண்ணாதே, ஸ்லோ டவுன் பண்ணி போகணும். அதே சமயம் காரை மிஸ் பண்ணிடக் கூடாது. திஸ் கேஸ் பெர்சனலி இம்பார்ட்டான்ட்” எனச் சொன்ன போது முன்னே சென்ற கருப்புக் கார் மெல்ல நகர்ந்தது. ஆதியும் அந்தக் காரை மெல்ல தொடர்ந்தான்.

வீரா எந்தக் கேஸிலும் எளிதில் தலையிட மாட்டான். ஆனால் அவன் முன்னே சென்றுக்கொண்டிருக்கும் கருப்பு நிறக் காரில் இருக்கும் பெண்ணைப் பற்றி ப்ரீ மெரிடல் செக். செய்யச் சொல்லி வற்புறுத்தியது அவனின் ஆருயிர் நண்பன் தேவா அல்லவா. அவனுக்காக இதை அவன் செய்து தானே ஆக வேண்டும். தேவாவிற்காக எதையும் செய்பவன் இதை செய்ய மாட்டானா என்ன?

தேவாவிடம் இருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்றான் வீரா.

“வீரா!! அந்தப் பொண்ண பார்த்தியா??”

“தேவா உனக்காகத் தான் ஃபாலோ பண்ணி போயிட்டு இருக்கேன். கார் இப்போ தான் ரவுண்ட் ரோட் சிக்னலை தாண்டி மூவிங்ல இருக்கு ஸ்டில் ஃபோலோயிங்க், பொண்ண பார்க்கலை ஜெஸ்ட் ஃபாலோயிங்”

“தேங் காட்!! நீ செய்ய மாட்டீயோன்னு நினைச்சேன் வீரா”

“நண்பனா ஆகிட்டீயே செஞ்சு தானே ஆகணும்”வீரா சொன்னவுடன், தேவா சிரிக்க, வீராவின் இதழ்கள் சற்று மலர்ந்தது. இவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியோ அவன் சிரிப்பதை வியப்பாய்ப் பார்த்திருந்தான். அவனின் கடுமையான முகத்தைப் பார்த்துப் பழக்கபட்ட ஆதிக்கு அவன் சிரித்துப் பேசுவதே புதிதாய் இருந்தது. என்ன தான் கவனம் அவர்களின் பேச்சில் இருந்தாலும் அந்தக் கருப்பு நிறக் காரை தொடர்வதைத் தவறாமல் செய்துக்கொண்டிருந்தான் ஆதி.

“நீ டிடெக்டீவ் ஏஜென்சி வச்சிருக்கது, என்னோட பிஸ்னஸ்க்கு யூஸ் ஆச்சு. ஆனால் என்னோட கல்யாணத்துக்கு யூஸ் ஆகும்ன்னு என்னைக்குமே நினைச்சதில்லை. இப்போ அது தான் கை கொடுத்திச்சு பார்த்தியா??”

“அதெல்லாம் இருக்கட்டும் தேவா, யாரிந்த பொண்ணு நீ பார்த்தியா?? இல்லை வீட்ல பார்த்தாங்களா??”

“வீட்ல ப்ரோக்கர் மூலமா வந்த பொண்ணுடா. அம்மாக்கும் அப்பாக்கும் பொண்ணு பிடிச்சு போயிடுச்சு. நான் தான் உனக்கு வேலை தரலாமேன்னு இந்த முடிவை எடுத்தேன். நீ அவளை வாட்ச் பண்ணுறன்னு அவளுக்கும் தெரியா கூடாது. அம்மாக்கிட்ட போன் பண்ணி போட்டுக் கொடுத்திறாத என் தெய்வமே. ப்ரீ மெரிட்டல் செக் பத்தி யார்க்கிட்டையும் சொல்லாத ப்ளீஸ்டா வீரா” கெஞ்சலாய்ச் சொன்னான் தேவா.

“ஹண்டரட் இல்லை டூ ஹண்டரட் பர்சென்ட் இந்த ப்ராஜெக்ட்டை சீரியாஸா முடிச்சுக் கொடுக்கிறது என்னோட பொறுப்புப் போதுமாடா தேவா”

“தேங்க்ஸ்டா வீரா” எனத் தேவா அழைப்பை துண்டித்திருந்தான்.

“ஆதி ஸ்லோ!!” எனக் கட்டளையாய் ஒலித்தது வீராவின் குரல்.

“ஓகே சார்”என அவன் சொல்லிக்கொண்டிருந்த போது அவர்கள் சிட்டியை விட்டு வெளியே வந்திருந்தார்கள். கருப்பு நிறக் காரின் வேகம் கூடியது. அதற்கு இணையாய் ஆதியும் காரின் வேகத்தைக் கூட்டினான்.

“என்னை இந்தப் பொண்ணு ஓவர் ஸ்பீட்ல போகுது” என வீரா முனுமுனுத்தான்.

“சிட்டிக்கு வெளிய வந்துட்டா இப்போ எல்லாரும் இப்படித் தான் சார் போறாங்க” என்றான் ஆதி.

“சரி மிஸ் பண்ணிடாம ஃபாலோ பண்ணு”

தேவாவும், வீராவும் தொழில் ரீதியான நண்பர்கள். அவனின் தொழில் சார்ந்து உளவு பார்ப்பதற்காக வீராவை ஆணுகவுவான். அப்படியே நண்பர்கள் ஆகி விட்டார்கள். முதல் முறை அவனுடைய சொந்த வாழ்க்கைக்காக உளவு பார்க்கும் பொறுப்பை வீராவிடம் கொடுத்திருக்கிறான். அதைச் சரி வர செய்ய வேண்டும் என்ற வேகம் வீராவிடம் இருந்ததால்.

இப்போது காரை வீரா இயக்க ஆரம்பித்தான். அந்தக் கருப்பு நிறக் காரை தவர விட்டு விடக் கூடாது என நினைத்திருந்தான். அந்தக் கருப்பு நிறக் கார் இப்போது சாலையில் தாறுமாறாய் ஓட ஆரம்பித்தது.

“சம்திங் இஸ் ராங்க்” என்றான் வீரா. எதிரில் வந்துக்கொண்டிருந்த லாரியில் மோதுவது போல் சென்ற கருப்பு நிறக் கார்.அதிலிருந்து தப்பித்து மேலும் முன்னேறியது.

“ஓ மை காட்!! கார் அவங்க கண்ட்ரோல்ல இல்லை” எனக் கத்தினான் வீரா. இவன் கத்தியதிலும் அவன் சென்ற வேகத்திலும் மிரண்டு போய் அமர்ந்திருந்த ஆதிக்கு பேச்சு வர மறுத்தது. இவ்வளவு நேரம் அந்தக் கருப்பு நிறக் காரை தெரியாமல் பின்தொடர்ந்துக்கொண்டிருந்த வீரா. அந்தக் காரில் இருப்பவருக்கு எதுவும் விபரீதமாக நேர்ந்து விடக் கூடாது என்று நினைத்து அந்தக் காரை ஓவர் டேக் செய்ய முயற்சித்ததோடு எதிரில் வந்துக்கொண்டிருந்த வாகனங்களுக்குச் சைகை காட்டிக் கொண்டிருந்தான்.

இறுதியாய் அந்தக் கருப்பு நிறக் கார் சாலையோரத்தில் நின்றிருந்த புளியமரத்தில் மோதி நின்றது. அதில் விளக்குகள் எரிந்து எரிந்து அணைந்து கொண்டிருந்தது. தன்னுடைய காரை ஓரமாய் நிறுத்தியவன் முதலில் ஆம்புலன்ஸை வரவழைக்கும் படி ஆதிக்கு கட்டளையிட்டான். ஆதியும் வீரா சொன்னதைத் தவறாமல் செய்தான்.

மெல்ல அந்தக் கருப்பு நிறக் காரை நெருங்கினான் முன் பாகங்ககள் மிகவும் சேதம் ஆகி இருந்தது. காரின் கதவை திறந்தான். ஒட்டுநர் இருக்கையில் ஒரே ஒரு பெண் மட்டும் அமர்ந்திருந்திருந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளை நிற உடையைக் குருதி நனைத்திருந்தது.

“எக்ஸ்க்யூஸ்மீ மேடம்” என அழைத்துப் பார்த்தான். அவளோ சுய நினைவின்றி முகம் திருப்பிக் கிடந்தாள்..

அவளின் முகத்தைத் திருப்பிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் முன்னே உதிரங்களுடன் நனைந்துக் கிடக்கும் அவள் அவளாக இருக்கக் கூடாது. நிச்சயம் அவளாக இருக்கக் கூடாது என்றே தோன்றியது வீராவிற்கு.

அவளின் முன் நெற்றி கேசங்கள் உதிரங்களில் நனைந்து அசையாமல் பிடிப்பாய் இருந்தது. அவளே தான் இது அவளே தான் என அவன் மனம் அடித்துச் சொன்ன போது. எதற்க்கும் அஞ்சாத வீராவின் இதயம் இப்போது வேகமாய்த் துடிக்க ஆரம்பித்தது. அவள் உயிருடன் தான் இருக்கிறாளா?? எனத் தெரிந்து கொள்வதற்காக அவள் நாடி பிடித்துப் பார்த்தான் துடிப்பு இருந்தது.

“ஆதி!! கால் தி ஆம்புலன்ஸ்” கலங்கிய விழிகளிடன் சொன்னான் வீரா.

“சார் ஏற்கனவே சொல்லியாச்சு சார்” எனப் பதில் கொடுத்தான்.

“மேக் இட் ஃபாஸ்ட் இடியட்” எனக் கத்தியவனின் விழிகளில் ஈரம் கசிந்தது. அதைப் பார்த்த ஆதிக்கு எதுவும் புரியவில்லை. யாரென்று தெரியாத ஒரு பெண்ணிற்காகவா இவர் அழுகிறார் என்பது போல் பார்த்து வைத்தான்.

அவளின் பாதங்களிலும் காயங்கள் உடல் முழுக்க உதிரங்கள் நிறைந்து காணப்பட்டவளின் கன்னம் தட்டியவன். அவளை எழுப்ப முயற்சி செய்தான். அவளின் பெயரை சொல்லி அவளை அழைக்க முயற்சித்தவனின் மனதில்.,

“உன்னோட பெயரை சொல்லி கூப்பிடுற நிலைமை எனக்கு எப்போதுமே வராதுடி, இனி நீ யாரோ நான் யாரோ” என்றோ அவன் ஆத்திரத்திலும் கோபத்திலும் உச்சரித்த வார்த்தைகள் அவன் நினைவில் வந்து ரணம் செய்தது.

“ஆர் யூ ஒகே” என அவளின் கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தான். இப்போது கூட என் பெயரை சொல்லி அழைக்கமாட்டாயா வீரா. என அவளின் விழிகள் திறக்க சண்டித்தனம் செய்தது. அவளின் பெயரை உச்சரித்து ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான் வீரா.

“தியா!! தியா!!” என்றான் அவள் இமைகள் மெல்ல பட்டாம்பூச்சியாய்ப் படபடத்தது. மெல்ல திறந்து அவனைப் பார்த்தது. குருதி வழிந்தோடிய அவளின் முகம் அவனைப் பார்த்து மெல்ல சிரித்தது. அவளின் சிரிப்பு அவனை என்னவோ செய்தது. மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில் யாராவது இப்படி புன்னகைப்பார்களா? அவளின் புன்னகையின் அர்த்தம் தான் என்ன? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவளை காப்பாற்றியாக வேண்டும். மீண்டும் இமைகளை மூடிக்கொண்டாள் அவள்.

“தியா!! ஒன்னுமில்லை” எனப் பதற்றத்துடன் சொன்னான் வீரா. அவளிடம் எந்த எதிர் விணையும் இல்லை. ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது.

***

வீரா அவளை மருத்துவமனையில் சேர்த்த பின், மருத்துவரை பார்த்து பேசினான். அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனத் தெரிந்த பிறகு. ஒரு நொடிக் கூட அங்கிருக்க அவனுக்கு விருப்பம் இல்லாமல் தேவாவிற்கு அழைப்பு விடுத்திருந்தான். அவளை மீண்டும் சந்திக்க அவன் விரும்பவில்லை என்பதே உண்மை.

“சொல்லு வீரா!!” என உடனே அழைப்பை ஏற்றிருந்தான் தேவா.

“தேவா!! டென்சன் ஆகாதே வீட்லையும் எதுவும் சொல்லிக்காதே, உடனே கிளம்பி மலர் ஹாஸ்ப்பிட்டலுக்கு வா” என அவசரமாய்ச் சொல்லி முடித்தான் வீரா.

“ஏன்டா யாருக்கு என்ன ஆச்சு?” எனப் பதறினான் தேவா.

“நீ ஃபாலோ பண்ண சொன்னல அந்தக் கார் ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு. ஒன்னும் பிரச்சனை இல்லை, ஷி இஸ் சேஃப்.” என்றான் வீரா.

“தியா ஒகே தானே?” எனப் பதறினான் தேவா.

“நீ முதலில் கிளம்பி வாடா” எனக் கோபமாய்க் கத்தியவன் கார் பார்க்கிங்கில் காத்திருந்தான்.

பத்து நிமிடத்தில் தேவா வந்து சேர தியா அனுமதிக்கப்பட்டிருந்த அறை எண்ணை அவனிடம் சொல்லி அவளைப் பார்த்து வரும் படி சொன்னான் வீரா. மருத்துமனையில் மயக்கத்தில் படுத்திருந்த தியாவை பார்த்த தேவா. அவளைத் தொந்தரவு செய்யாமல் தன் நண்பனை தேடி வந்தான். வீராவோ புறப்படத் தயாராக இருந்தான்.

“வீரா எங்கே போற” என்ற குரலில் திரும்பி பார்த்தான்.

“அதான் நீ வந்துட்டல, டே கேர் ஆஃப் ஹர்” எனச் சொல்லி நகரப் போனவனின் கரம் பற்றி இருந்தவன் உடைந்து போய் இருந்தான்.

“டேய் தேவா என்னாச்சுடா?”

“இல்லைடா! தியா வீட்டில பார்த்த பொண்ணு தான். இன்னும் ஃபார்மலா அவ வீட்டுக்கு கூட நாங்க இன்னும் போய்ப் பேசலை. ஆனால் இப்போ நடந்திருக்க ஆக்ஸிடண்ட் பார்த்தால் எனக்கு எதோ சந்தேகமா இருக்குடா” என்றான் தயக்கமாய்.

“ஏன்டா அப்படிச் சொல்ற??”

“ஆமா தியா நல்லா ட்ரைவ் பண்ணுவான்னு அம்மா சொன்னாங்க” என்றவுடன் வீராவின் முகம் சற்று மாறியது. ஆனால் தேவா அதைக் கவனிக்கவில்லை. அவளை உரிமையாகத் தியா தியா எனத் தேவா சொல்வதும் வீராவுக்கு வலியை தான் தந்தது.

“என்ன தான் நல்லா ட்ரைவ் பண்ணினாலும் ஆக்ஸிடண்ட் இஸ் நார்மல்டா இதில் சந்தேகபட ஒன்னும் இல்லை. இன்ஃபெக்ட் ஆக்ஸிடன்ட் நடந்த இடத்தில் நானும் தான் இருந்தேன், இது ப்ளான் பண்ணி யாரும் பண்ணலைடா”

“நான் தியாவை பத்தின ஃப்ரொஃபைல உனக்கு மட்டும் தான் அனுப்பினேன்” என்றவன் நிமிர்ந்த தன் நண்பனின் விழியைப் பார்த்தான்.

“என்ன சந்தேகபடுறீயா தேவா?” என ஆழ்ந்து நோக்கிய வீராவின் விழிகளில் நேர்மை இருந்தது. அதோடு அவள் மீதான காதலும் தேங்கி நின்றது. மனதில் உள்ளதை உயிர் நண்பனிடம் சொல்லவும் முடியாமல் தவித்து நின்றான் வீரா. அவன் காதலாய் நினைத்த அவனுடைய தியாவை அவன் கொல்ல நினைப்பானா? அப்படிக் கொல்ல நினைத்தவன் காப்பாற்றி மருத்துவமனையில் தான் சேர்த்திருப்பானா? காதல் என்ற பெயரில் அவன் உயிரை வாங்கிச் சென்றவள். மீண்டும் அவன் வாழ்க்கையில் வர காரணம் தான் என்ன?

கேள்வியின் துணையென விடையும் சேர்ந்தே


தேடலை தொடர்கிறதோ..?

ஒன்றுக்கும் ரெண்டுக்கும் இடையில் இங்கே

முடிவினில் படர்கிறதோ..?

எங்காகிலும் பார்த்ததுண்டோ..?

தீ நீருடன் சேர்ந்தது உண்டோ..?

யார் யாரினை விழுங்குவார் என்பதை

சொல்வார் உண்டோ..??




ரகசியமாய் தொடர்வோம்...
 
Last edited:

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் 2

உயிர் தோழன் தன்னைச் சந்தேகபடுகிறானா? என்ற கேள்வி தான் இப்போது வீராவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. முதலில் க்ளையண்ட்டாக அறிமுகமானவன், உயிர் தோழனாகி போனான். இப்போது வரை அந்த நட்பு அழகாய்த் தொடர்கிறது. ஐந்து வருட நட்பில் இருவருக்கும் இடையில் எந்தச் சண்டையும் சந்தேகமும் வந்ததில்லை. ஆனால் இந்தத் தியாவின் விபத்து அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்திவிடுமோ என நினைத்துக் கொண்டிருந்தான் வீரா.

விபத்தின் காரணம் தெரிந்தும் தன் நண்பனிடம் உண்மையை வெளிப்படையாய் சொல்ல முடியாத சூழ்நிலை கைதி போல் நின்றுக்கொண்டிருந்தான் வீரா. நண்பனின் தோள் தொட்டான் தேவா.

“டேய் வீரா! நான் உன்னைச் சந்தேகபடுவேனாடா? நம்ம என்ன அப்படியா பழகியிருக்கோம். என்னோட வீராவை பத்தி எனக்குத் தெரியாதா?. சுட்டாலும் சங்கு நிறம் கருக்காதுன்னு சொல்லுவங்களே. அந்த மாதிரிடா நீ. உன்னோட ஆஃபிஸ்ல இருந்து தகவல் கசிந்திருக்க வாய்ப்பு இருக்குமோ?” எனக் கேள்வியாய் முடித்தான் தேவா.

தேவா சொல்வதும் சரிதானோ ஒரு வேளை இது திட்டமிடப்பட்ட விபத்தோ? என ஒரு பக்கம் தோன்றினாலும் ஆனால் உண்மை தான் அவனுக்கு நன்றாகத் தெரிந்ததாயிற்றே. நண்பனிடம் அதைச்சொல்லி அவன் காயப்படுத்த எண்ணவில்லை. ஆனால் இதற்கு ஒரு முற்று புள்ளியை வைக்க அவன் யோசித்துக்கொண்டிருந்தான்.

தன் நண்பனின் வாழ்க்கை இதில் அடங்கியிருக்கிறது. தேவாவின் தொழிலை பொறுத்தவரையில். அவனுக்கு எதிரிகள் ஏராளம். அதைச் சமாளிப்பதற்கே வீராவின் உதவியை நாடுபவன். இப்போது அவனது திருமண வாழ்க்கையாவது நிம்மதியாக இருக்க வேண்டும். என நினைத்தான் வீரா. தியா, தேவாவுக்குச் சரியான பொருத்தம் இல்லை என்பதை உணர்ந்தான். அது அவள் முன்னாள் காதலி என்பதால் மட்டும் அல்ல, அதற்கு வேறு சில காரணங்கள் இருப்பதை அவன் மட்டுமே அறிவான்.

“நான் விசாரிக்கிறேன் தேவா! ஆதிக்கும் எனக்கும் மட்டும் தான் கேஸ் டீடெயில் தெரியும். சோ நான் பார்த்துக்கிறேன்” என வீரா சொல்லிக்கொண்டிருந்த போதே, மருத்துவ ஊழியர் ஒருவர் வந்து தியா கண் விழித்து விட்டதாகச் சொல்லிவிட்டு போக,

“வீரா! வாடா தியாவை பார்க்க போவோம்” என நண்பனை அழைத்தான் தேவா.

“நான் வரலை நீ போய்ப் பாருடா” என வேண்டுமென்ற அவளைச் சந்திப்பதை தவிர்த்தான் வீரா.

“டேய் வாடா!” எனச் சொன்ன தேவா வலுக்கட்டாயமாக அவள் அனுமதிக்கப் பட்டிருந்த அறைக்கு இழுத்து செல்லபட்டான் வீரா.
அவளோ கண்விழித்து எழுந்து அமர்ந்திருந்தாள்., அவள் முகத்தைக் கூட ஏறிட்டு பார்க்கவில்லை தலைக் கவிழ்ந்து நிற்க.

“தேவா நீ பேசிட்டு வா நான் வெளியே வெயிட் பண்ணுறேன்” அவன் அங்கிருந்து தப்பித்து ஓட நினைத்த போது. வீராவின் கரத்தை இறுக பற்றினான் தேவா.

“நீ போயிட்டா தியாக்கிட்ட யாருடா பேசுறது? இது எங்களோட ஃபர்ஸ்ட் மீட் டா இடியட். அவக்கிட்ட எனக்குப் பதில் நீ தான் பேசணும்” எனத் தேவா சொல்வதைக் கேட்ட வீரா அரண்டு விழித்தான்.

“ஹாய் தியா! ஐ யெம் தேவா” எனத் தன்னை அவளிடம் அறிமுகப் படுத்திக்கொண்டான் தேவா.

“தெரியும்! வீட்ல போட்டோ காட்டினாங்க” எனத் தியாவிடம் இருந்து பதில் வர,

“இவன் என்னோட ஃப்ரெண்ட் வீரா” எனத் தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான் தேவா.

“ஓ! உங்க ஃப்ரெண்டா? ஹாய் கூடச் சொல்ல மாட்டாரா?” அவனை இதுவரை பார்த்ததே இல்லை என்பது போல் அவளிடம் இருந்து பதில் வர வீராவுக்குக் கோபம் தான் வந்தது.

“ஹாய் ஐ யெம் வீரா” என அவன் பதில் கொடுப்பதைப் பொருட்படுத்தாது முந்திக்கொண்டு,.

“தியான்னு கூப்பிடலாம் தப்பேதுமில்லை” என வீராவை அவள் வம்பிழுத்தாள். தேவாவோ அவளின் பதிலில் புன்னகைத்தான்.

‘உன் பேரை நான் சொல்லவே மாட்டேன்டி” மனதோடு பேசிக்கொண்டான் வீரா.

“சரி இரண்டும் பேரும் பேசிக்கிட்டு இருங்க, நான் பில் பே பண்ணிட்டு வர்றேன்” என வீராவை அந்த அறையில் விட்டுவிட்டுக் கிளம்பியிருந்தான் தேவா.

அவன் கிளம்பிய அடுத்த நொடியில் சிறைபட்டிருந்த சிறையில் இருந்து பறந்து செல்லும் பறவை போல் அந்த அறையில் இருந்து வெளியேற முற்பட்டவனைத் தடுத்து நிறுத்தியது அவளின் குரல்.

“மிஸ்டர் வீரா! இப்படியே எத்தனை நாள் தப்பிச்சு ஓடலாம்ன்னு இருக்கீங்க” அவள் கேள்வியில் நக்கல் நிறைந்திருந்தது.

“இதோ பாரு! என்னோட நண்பனுக்காகப் பல்லை கடிச்சிட்டு இருக்கேன். அவன் வாழ்க்கையில இருந்து நீயா போறது உனக்கு நல்லது” விரல் நீட்டி எச்சரித்தான் வீரா.

“இப்போ பேச்சு வருதே! தேவா இருக்கும் போது பேசியிருக்க வேண்டியது தானே, அடேய் நண்பா இவ என்னோட முன்னாள் காதலின்னு சொல்லியிருக்க வேண்டியது தானே”

“அது உனக்குத் தேவையில்லாத விசயம். என்னோட வாழ்க்கையை அழிச்ச மாதிரி. என்னோட நண்பனோட வாழ்க்கையை அழிச்சிடாதே. அவனை விட்டு நீயா விலகி போயிடு, இல்லைனா..” என அவன் இடைநிறுத்த.

“என்ன பண்ணுவ வீரா? உண்மையை உன் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிடுவீயா?”

“அஞ்சு வருசம் ஆனாலும்,உன்னோட திமிர் இன்னும் அடங்கவே இல்லைடி” விழிகள் சிவக்க சொன்னான்.

“இந்த டி போட்டு பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். அதுக்கான தகுதியை நீ எப்போவோ இழந்திட்ட வீரா. மைண்ட் யுவர் வொர்ட்ஸ்” எச்சரித்தாள் அவள்.

“நீயெல்லாம் ஒரு பொண்ணா? எனக்கு நீ செஞ்சது தேவாவுக்குத் தெரிஞ்சது அவனே உன்னைத் தூக்கி போட்டுட்டுப் போயிடுவான்”

“தைரியம் இருந்தால் தேவாக்கிட்ட சொல்லு பார்ப்போம்”அவள் சொன்னதில் அவளைப் பார்த்து முறைத்தான் வீரா.

“இந்த முறைப்பெல்லாம் இருக்கட்டும், உனக்குத் தான் என்னைப் பிடிக்காதே அப்பறம் எதுக்காக என்னைக் காப்பாத்தின வீரா?”

“அது மனிதாபிமானம், உன்னோட இடத்தில் யார் இருந்தாலும் நான் இப்படித் தான் செஞ்சிருப்பேன்” உறுதியாய்ச் சொன்னான் வீரா.

“அப்படியா.? அப்போ யாருக்கு இப்படி ஆகி இருந்தாலும், உன்னோட கண் கலங்குமா வீரா.?” என அவள் பேசிக்கொண்டிருந்த போதே அறைக்குள் தேவா நுழைந்திருந்தான். அவள் கேட்ட கேள்வியில் அசையாமல் நின்றிருந்தான் வீரா.

“தியா.! உங்க வீட்ல இன்ஃபார்ம் பண்ணட்டுமா?”

“நோ! நோ! வேண்டாம் தேவா, ஃப்ரெண்ட் வர சொல்லியிருக்கேன். வீட்ல ஆக்ஸிடன்ட்னு தெரிந்தால். நம்ம கல்யாணத்தை நிறுத்திடுவாங்க சோ சரியானதும் நானே போயிக்கிறேன்” என அவள் தயங்கி தயங்கி சொல்ல,

“வாட் வீட்ல ஓகே சொல்லிட்டியா தியா” ஆர்வமாய்க் கேட்டான் தேவா.

“இல்லை நோ சொல்லலாம்ன்னு தான் இருந்தேன். உங்களை நேர்ல பார்த்ததுக்கு அப்பறம். நீங்க ரைட் சாய்ஸ்ன்னு தோணுது” வெளிப்படையாய் அவள் பேசியது தேவாவிற்கு மிகவும் பிடித்துப் போனது. வீரா அங்குச் சூழ்நிலை கைதி போல் நின்றுக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தாள் தியா.

அவள் வேண்டும் என்றே தான் செய்கிறாள் என்பது வீராவுக்கு நன்கு புரிந்தது. தன்னைப் பழிவாங்க தேவாவை தூண்டில் மீனாக நினைக்கிறாள் என்பதையும் அவன் உணரத் தான் செய்தான்.நண்பனிடம் சொன்னால் பொறாமையில் சொல்கிறான் என நினைத்து விடுவானோ என்ற பயம் ஒரு புறம். காதல் இன்னும் வலை வீசி தன் நண்பனின் வாழ்க்கையை அழித்து விடுவாளோ என்ற பயம் இன்னொரு புறம். அவனுடைய முன் கோபம். ஆளுமை அனைத்தும் நட்பிற்கும், முன்னாள் காதலிக்கும் நடுவில் சிக்கக் கொண்டு தவித்தது.

****
ஒரு மாதம் கடந்திருந்தது தியாவை பெண் பார்க்க செல்ல வேண்டிய நாளும் வந்தது. உயிர் நண்பன் தன்னுடன் வர வேண்டும் என நினைத்து தேவா, வீராவையும் அதற்காக அழைத்துச் சென்றிருந்தான்.

வெகு நாட்களுக்குப் பின் அவளைப் புடவையில் பார்க்கிறான் வீரா. அவளோ அவையின் முன் தலை தாழ்த்தி நின்றிருந்தாள். ஆளை அசரடிக்கும் அழகு தான் அவள். அந்த அழகை வைத்துக்கொண்டு தானே திமிராய் திரிகிறாள் இவள். இப்போது வரை தான் செய்தது தவறேன்று ஒத்துக்கொள்ள மறுக்கிறாளே இவள்.

“வீரா! புடவையில் தியா எவ்வளவு அழகா இருக்கா பாருடா” என்றான் பதிலாய் புன்னகை மட்டுமே அவனால் தர முடிந்தது.. அதோடு தேவாவின் விழிகளில் தேங்கியிருந்த காதலையும், தியாவின் மீது அவனுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அவனால் உணர முடிந்தது. நண்பனுக்காகத் தன் ஈகோவை தூக்கி எரிந்துவிட்டுத் தியாவிடம் பேசி விடலாம் என்ற முடிவை எடுத்திருந்தான் வீரா.

“தேவா பொண்ணைப் பிடிச்சிருக்காடா.?” எனத் தேவாவின் தாய் ராஜேஸ்வரியின் குரலைக் கேட்டு அசடு வழிய சிரித்தான் தேவா.

“டேய் வீரா! அவன் தான் அசடு வழியுறான் நீயாவது உன் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டு சொல்லு” எனச் சிரிப்புடன் ராஜேஸ்வரி கேட்க, அவையில் இருந்த அனைவரும் சிரிக்க. ஒருவன் மட்டும் அமைதியாய் இருந்தான். அந்த ஒருவனைத் தான் தியாவும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பிடிச்சிருக்கு மா” எனத் தேவா சொல்ல அடுத்து என்ன நாள் பார்த்து நிச்சயதார்த்திற்கு இருவீட்டாரின் சம்மதத்துடன் தேதி குறிக்கப்பட்டது. தியாவிடம் எப்படியாவது பேசியாக வேண்டும் என்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தான் வீரா.

அவளிடம் பேசும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவில்லை ஆனால் அவனைப் பார்வையிலே எரித்துக்கொண்டிருந்தாள் தியா.

‘நான் எதோ தப்பு பண்ணின மாதிரி என்னைப் பார்த்து முறைச்சிட்டே இருக்கா, அவள் மேல் தான் தப்பு அதிகம்’ என நினைத்துக் கொண்டிருந்தவனின், தோளில் வலிய கரம் பதிய, தியாவின் முகத்தில்

சிரிப்பு படர்வதைப் பார்த்ததிலே பின்னால் நிற்பது தேவா தான் என்பதைப் புரிந்துக்கொண்டான் வீரா.

“என்னடா வீரா! பொண்ணு எப்படி அன்னைக்கி ஹாஸ்பிட்டல்ல பார்த்ததை விட இன்னைக்கி ரொம்ப அழகா இருக்கால்ல” தேவா கேட்க,

“உனக்குப் பொருத்தமா இருக்காங்கடா” எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தான் வீரா.

“டேய் எங்கடா போற சப்போர்ட்க்கு நில்லுடா” போனவனைப் பிடித்துத் தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.

“ஏய் தேவா! எனக்கு வொர்க் இருக்குடா நான் கிளம்புறேன்” என அவன் சொல்ல,

“ஓ அப்படியா?” என்றான்.

“ஆமா அந்த ஆக்ஸிடன்ட் பத்தி விசாரிக்கச் சொன்னேன்ல, அது என்னாச்சு”

“எனக்குக் கிடைச்ச டீடெயில்ஸ் வச்சி பார்த்ததில், அது ப்ளான்ட் இல்லைடா, அப்பறம் வேற எதாவது டீடெயில்ஸ் தெரிஞ்சுக்கணும்னா தியாவை தான் விசாரிக்கணும்”

“என்னடா இப்படிச் சொல்லுற, அவ வேணும்னே வண்டியை இடிச்சிருக்கான்னு சொல்லுறீயா?”

“சீ இல்லைடா, ப்ரேக் ஃபெயிலியரா? வேற எதாவது ரீசனான்னு விசாரிக்கணும்” என வீரா சற்று தயங்கியே சொல்ல,

“அவ்வளவு தானே இப்போவே விசாரிச்சிரு” எனத் தியாவை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான் தேவா.

“தியா! என்னோட ஃப்ரெண்ட் வீரா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொல்றான்” என்றான்.

“என்ன பேசணும்??”

“இல்லை அன்னைக்கி உனக்கு நடந்த ஆக்ஸிடன்ட் பின்னாடி யாரவது இருக்காங்களான்னு அவனோட டிடெக்டீவ் ஏஜென்ஸில விசாரிக்கச் சொல்லியிருந்தேன். அதைப் பத்தி..” எனத் தேவா இழுத்தான்.

“ம்ம் பேசலாம் தேவா!! வரச் சொல்லுங்க உங்க ப்ரெண்டை” என அவள் சொல்ல, அதே சமயம் தேவாவை அவனின் தாய் அழைக்க,

“வீரா பேசிட்டு இரு, அம்மா கூப்பிடுறாங்க என்னன்னு கேட்டுட்டு வரேன் என விரைந்து இறங்கினான்.

பட்டுபுடவையில் அழகு பதுமையாய் நின்றிருந்தவளின் முகம் பார்க்க பிடிக்காமல் எங்கோ பார்த்து பேச ஆரம்பித்தான் வீரா.

“மிஸஸ் தேவா..! நான் பாஸ்ட்டை பத்தி பேசுறதுக்காக இங்கே வரலை. நான் கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொன்னால் மட்டும் போதும். பிகாஸ் என்னோட நண்பன் விசாரிச்சு சொல்ல சொல்லியிருக்கான். நான் தான் உங்களை மீட் பண்ணுறதை ஒரு மாசத்துக்கு மேல் தள்ளி போட்டுட்டேன், பட் இப்போ என்னால அதைப் பண்ண முடியலை பிகாஸ் அவன் ரிப்போர்ட் கேட்டுட்டே இருக்கான்.” என்றவன் திரும்பி அவள் முகத்தை நேராய் பார்த்தான். அவன் காதலித்த போது தியாவிடம் இருந்த குழந்தை தனம் காணாமல் போயிருந்தது. எந்தச் சலனமும் இன்றி அவனை நேராகப் பார்த்தவள்.

“கடந்த காலத்தை நான் எப்போவோ கடந்து வந்துட்டேன் மிஸ்டர் வீரா. அதைப் பத்தி நீங்க பேசினாலும் நான் கவலை படப்போறதில்லை, ஏன்னா நிச்சயதார்த்ததுக்கு முன்னாடியே தேவாக்கிட்ட என்னோட முன்னாள் காதலை பத்தியும். கிறுக்கு தனமான காரணத்துக்கு ஒரு கிறுக்கன் என்னை விட்டுட்டு போனதை பத்தியும் சொல்லத் தான் போறேன். அது எனக்கும் தேவாவுக்கு நடுவில் இருக்கிற பெர்சனல் அதை நாங்க பேசிக்குவோம். நீங்க உங்க வேலையைப் பார்க்கலாம். உங்க கேள்வியைக் கேட்கலாம்” பொட்டில் அடித்தாற் போல் அவள் பதில் கொடுத்தாள். அதை அவன் எதிர்பார்க்கவில்லை. தன்னை நினைத்து உருகுவாள் என நினைத்த இந்த ஆண் மனதிற்கு ஏமாற்றமே கிடைத்தது. அவளின் பதில் இவளை காயப்படுத்தாது போல் நடித்தான் வீரா.

“ஓகே கம்மிங் டூ தி பாயிண்ட், ஆக்ஸிடன்ட் நடந்த அன்றைக்கி, நீங்க எங்கே போறதுக்காக அவ்வளவு வேகமா போனீங்க”

“ஃப்ரெண்டோட பர்த்டே பார்ட்டி அட்டன் பண்ணுறதுக்கு மகாபலிபுரம் போனேன்” பதில் பட்டென வந்தது.

“ப்ரெண்டோட பெயர்”

“ப்ரீத்தி” எ்ன்றாள்.

“ரிசார்ட்டோட நேம்?”

“ப்ளூ ஹெவன்” அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் உடனே உடனே வந்தது.

“எதனால் ஆக்ஸிடன்ட் ஆச்சுன்னு நினைக்கிறீங்க”

“நான் தான் காரை ட்ரைவ் பண்ணிட்டுப் போயிட்டிருந்தேன். என்னால ஸ்பீடை கன்ட்ரோல் பண்ண முடியலை. ப்ரேக் ஃபெயிலியர்ன்னு நினைக்கிறேன்” சாதாரணமாகச் சொன்னாள் அவள்.

“ஓகே..! ஆக்ஸிடன்ட் ஆன இடம் தெரியுமா?”

“இல்லை அதெல்லாம் தெரியலை மறந்திடுச்சு”

“நமக்கு ஒரு கெட்டது நடந்துச்சுனா அந்த இடத்தை நம்மளால மறக்கவே முடியாது. அதை ஒவ்வொரு முறை கடந்து போகும் போதும் அந்தக் கொடூரமான நிகழ்வை நமக்கு ஞாபக படுத்திட்டே இருக்கும் இந்த பாழான போன மனசு. அதே மாதிரி நமக்கு நிம்மதியையும் அன்பையும் கொடுத்த இடத்தையும். நபரையும் மரணப் படுக்கையிலும் மறக்க முடியாது, அன்பு கிடைச்ச இடத்தையே நீங்க மறந்திட்ட போது. ஆக்ஸிடன்ட் நடந்த இடத்தை மறக்கிறது இயல்பு தான்” என நக்கல் தொனிக்க அவன் சொல்ல,

“நீங்க பேசுறதுக்கும், கேஸ்க்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, கேட்க வந்ததைக் கேட்டுட்டு கிளம்புங்க மிஸ்டர் வீரா” அவளின் ஆளுமை குறையாது பதிலைக் கொடுத்தாள் பெண்.

“ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேசன்., ஆக்ஸிடன்ட் நடந்த இடம் ஈஞ்சம்பாக்கம். நீங்க மஹாபலிபுரம் போகலை திருவான்மியூர் போய்கிட்டு இருந்தீங்க”

“ஓகே! இப்போ அதனால் என்ன?” என அவள் கேட்க,

“நான் இன்னும் பேசி முடிக்கலை மிஸஸ் தேவா” என அவன் அழுத்திச் சொன்னான்.

“சொல்லுங்க” கோபமாய் அவளிடம் இருந்து பதில் வந்தது.

“இரண்டு சிக்னல்ல நிக்காம நீங்க வேகமா போனீங்க, உங்களோட கார் உங்களோட கன்ட்ரோல்லையே இல்லை”

“அதான் சொன்னேன்ல ஃப்ரேக் ஃபெயிலியர்ன்னு” வேகமாய்ப் பதில் கொடுத்தாள்.

“உங்களோட கார் ப்ரேக் சரியா தான் இருந்திச்சு அப்படின்றதுக்கு, ஆக்ஸிடன்ட் ஆனதுக்கு அப்பறம் காரை ரிப்பேர் பண்ணின மெக்கானிக் கொடுத்த ஃப்ரூப் இதோ” என ஒரு காகிதத்தை அவளிடம் நீட்டினான். அதை வாங்கியவள் அதிர்ந்து விழித்தாள்.

“ஷாக் ஆகாமல் நீங்களே உண்மையைச் சொல்லிடுங்க” என அவளின் முகம் பார்த்து கேட்டான் வீரா.

“நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் மிஸ்டர் வீரா”

“ஒகே, அப்போ உண்மையை நானே தேவாக்கிட்ட சொல்லிடுறேன்” அவன் நகர்ந்தான்.

“ஒரு நிமிசம் வீரா..!” மென்மையான அவளின் குரல் அவனைத் தடுத்தது. தன்னை மறந்து அவன் வீரா என அழைத்தது அவன் காலை அங்கேயே கட்டிப்போட்டது போல் அசையாமல் சிலையாய் நின்றான் அவன்.

“தப்பு என் மேல தான்” என அவள் தயங்கி நின்றாள்.

“எத்தனை நாளா இந்தப் பழக்கம் உங்களுக்கு இருக்கு மிஸஸ் தேவா” என அவளை நெருங்கி அவன் கேட்க அவளோ நடுங்கி போய் நின்றாள். இத்தனை நேரம் அவள் காட்டிய தைரியம் ஆளுமை அனைத்தும் அவன் கேட்ட கேள்வியில் உடைந்து போயிருந்தது. அவள் பார்வையைத் தழைத்தாள்.

“எதுக்காக ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டுக் கார் ஓட்டுனீங்க?” நேரடியாக அவன் விசயத்திற்கு வர, பதில் சொல்ல முடியாமல் அவள் திணறிப்போய் நின்றாள். அவளை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

ஐந்து வருடத்திற்கு முன் சிறு பிள்ளை போல் துள்ளி திரிந்தவள். இவன் கரம் பற்றிக் கவலைகளை மறந்தவள். இப்போது யாரோ போல் நிற்கிறாள். தவறென்றால் கொதித்தெழுபவள், இன்று அவளே தவறிழைத்து கூனி குறுகி அவன் முன்னால் நிற்கிறாள்.

ஆடை மாற,
ஜாடை மாற, கூந்தல்
பாதம் யாவும் மாற,
கண்களோ உன்
கண்களோ மாறவில்லை..!
கண்களோ என் கண்களோ..!
ஏமாற வில்லைப் பொய்
கூறவில்லை..!
நேற்று நான்
பார்த்ததும் உன்னைத்தானா
சொல்.? இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்..??


ரகசியமாய் தொடர்வோம்..

படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் டியர்ஸ்


கமெண்ட்டு டப்பா:


 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் 3

தைரியம் ஒட்டுமொத்தமாய் வடிந்த நிலையில் கூனி குறுகி நின்றிருந்தவள், அவன் விழிகளைப் பார்ப்பதை தவிர்த்தாள். அவன் பார்வையோ அவளையே நிலைக்குத்தி நின்றது. அவளோ அவன் முன் அவஸ்தையாக உணர்ந்தாள். அவன் கேள்வி கேட்டு அவள் பதில் சொல்லும் இடத்தில் நிற்பதே சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. இந்த நிலை தன் வாழ்க்கையில் எப்போதும் வந்துவிடக்கூடாதென்று நினைத்தாள். ஆனால் யாரை பார்க்க கூடாதோ அவன் முன்னே விதி நிற்க வைத்திருப்பதை என்னவென்று சொல்வது.

“சொல்லுங்க மிஸஸ் தேவா! ட்ரைவ் பண்ணும் போது எதுக்காக ட்ரக்ஸ் யூஸ் பண்ணீங்க..?” அவன் கேள்வியில் அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது.

“நான் ட்ரக்ஸ் யூஸ் பண்ணினேன்றதுக்கு உங்ககிட்ட ப்ரூஃப் இருக்கா மிஸ்டர் வீரா.?” அவள் மேல் தவறு இருந்தும் அவனிடம் அதற்கான சான்று எதுவும் இருக்கிறதா? என்பதைத் தெரிந்துக்கொள்ள முனைந்தாள்.

“அதை நான் தேவாக்கிட்ட சொல்லிக்கிறேன், இப்போ நீங்க சொல்லுங்க உண்மையை மட்டும் சொல்லுங்க, உங்களுக்குத் தான் பொய் சொல்லுறதும், அடுத்தவங்களை ஏமாத்துறதும் வழக்கம் தானே” அவன் மீண்டும் அவளைச் சீண்டினான். அவள் தன் மேல் தான் தவறு என ஒப்புக்கொள்ளும் வரை இவன் விடுவதாய் இல்லை. அவன் விடமால் கேட்ட கேள்வியில் இறுதியாய் அவள்

ஆம் எனத் தலையசைத்தாள்.

“ஆமாம், அன்னைக்கி நான் ட்ரக்ஸ் எடுத்திருந்தேன்” என்றாள்.

“எதுக்காக எடுத்தீங்க” என மீண்டும் கேள்வியில் துவங்க, அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“இல்லை, டெய்லி எடுத்துப்பீங்களா? இல்லை அது தான் ஃப்ர்ஸ்ட் டைமா? ஏன்னா ட்ரக்ஸ் எடுத்திக்கிட்டு யாரும் ட்ரைவ் பண்ண மாட்டாங்க”

“அது என்னோட பர்சனல்” எனச் சொல்லி நகர்ந்தவளை.

“இந்தக் கல்யாணத்தில உனக்கு விருப்பம் இல்லையா தியா? வீட்ல ஃபோர்ஸ் பண்ணுறாங்களா?” என மீண்டும் கேள்வி கேட்க,

“எனக்குத் தேவாவை ரொம்பப் பிடிச்சிருக்கு” எனச் சொல்லி அவனைப் பொருட்படுத்தாது நகர்ந்தாள்.

“இதோ பாரு தியா! நீ பண்ணுறது ரொம்பப் பெரிய தப்பு, தேவா ரொம்ப இன்னசென்ட். அவன் வாழ்க்கையில விளையாடதே. என்னைப் பழி வாங்குறதுக்காக நீ எந்த எக்ஸ்ட்ரீம்க்கு போவன்னு எனக்குத் தெரியும்” எனக் கோபமாய்ப் பேசினான் வீரா. அவனைத் தாண்டி சென்றவள் அவன்புறம் திரும்பினாள், கலகலவெனச் சிரித்தாள்.

“என்ன மிஸ்டர் வீரா பொஸஸ்ஸீவ்னஸ் எட்டி பார்க்குது போல” நக்கல் தொனிக்கச் சொன்னாள்.

“ச்சீ..! பொஸஸ்ஸீவ்னஸா ? அதுவும் உன்னைப் பார்த்து” எனத் தலையில் அடித்துக்கொண்டான்.

“மிஸ்டர் வீரா, நீங்களே நிமிசத்துக்கு நிமிசம் மிஸஸ் தேவான்னு, கூப்பிட்டு அதை அக்செப்ட் பண்ணிக்கிட்டீங்க. அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே என் வாழ்க்கையில இருந்து மூவ் ஆன் ஆகி போயிட்டீங்க, இப்போ நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும், பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்லுறதுக்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் ரைட்ஸூம் இல்லை. அதோட இது என்னோட வாழ்க்கை ஸ்டே அவே ஃப்ரம் மீ” எனச் சொன்னவளின் கரம் பற்றித் தன்புறம் இழுக்க,

அவன் மேல் வந்து விழுந்தாள் கோதை பெண்ணவள், அவளின் விழிகள் படபடத்தது, அவள் கையை அழுந்த பிடித்தவன். அவள் முகத்தைப் பார்த்து நேராய்ச் சொன்னான்.

“நீ ட்ரக்ஸ் யூஸ் பண்ணினதை தேவாக்கிட்ட ரிப்போர்ட்டா கொடுக்கப் போறேன். அன்னைக்கி டாக்டர் எடுத்த ப்ளட் டெஸ்ட் எல்லாமே சேர்த்து கொடுத்திருவேன் தியா, நீயா விலகி போறீயா? இல்லை” என அவளை மிரட்டலாய் பார்த்தான்.

“இவ்வளவு நெருக்கமா ஒருத்தர் முச்சு காத்து ஒருத்தர் மேல் படுற அளவுக்கு, பலமுறை நம்ம நிண்ணுருக்கோமே மிஸ்டர் வீரா அதையும் உங்க ஃப்ரெண்ட்கிட்ட சேர்த்து சொல்லுங்க, நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன்” என அவள் புன்னகைத்தபடி சொல்ல, அழுத்தமாய்ப் பிடித்திருந்த கையை விடுவித்தான்.

அவள் தன் காலடியில் விழுந்து கெஞ்ச வேண்டும் என்று ஏங்கியது அவன் மனம். ஆனால் அவளோ நிமிர்வாய் பேசுவதை இவனால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

“அப்படியே பட்டர்ப்ளை பார்க்ல நம்ம டைம் ஸ்பெண்ட் பண்ணியதும் உங்களுக்கு நினைவு இருக்கும்னு நினைக்கிறேன், முடிஞ்சா இந்தக் கல்யாணத்தை உண்மையை மட்டும் சொல்லி நிறுத்திக் காட்டுங்க மிஸ்டர் வீரா” என் சொல்லி அவள் சாதாரணமாய்ச் சவால் விட்டு நகர்ந்து. படியிறங்கி சென்றாள் அவளை எதிர்கொண்ட தேவாவோ,

“ஹேய் தியா! பேசி முடிச்சிட்டியா”

“பேசிட்டேன் தேவா, உங்க ஃப்ரெண்ட் தான் பேயரைஞ்ச மாதிரி நிக்கிறாரு வேப்பிலை அடிச்சு கூட்டிட்டு போங்க” எனச் சொன்னவள் தன் அறையை நோக்கி ஓடினாள்.

தேவா மொட்டை மாடிக்கு சென்று தன் நண்பனை பார்த்தான். தியா சொன்னது போல் அசையாமல் எதோ யோசனையில் நின்றிருந்த வீராவை உலுக்கினான் தேவா..

“என்னடா விசாரிச்சியா?” தேவாவின் குரலில் தலையை உலுக்கிய வீரா.,

“ஒன்னும் பிரச்சனை இல்லைடா தேவா, நான் சொன்ன மாதிரி தான் யூஸ்வலா நடக்கிற ஆக்ஸிடன்ட் தான்” என வீரா சொன்ன பிறகே நிம்மதி பெருமூச்சை விட்டான் தேவா.

**************

பெண் பார்க்கும் படலம் முடிந்த பிறகு பல வித யோசனைகளுடன் தன் வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தான் வீரா. ஆயிரம் குழப்பங்கள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவனுடைய எண்ணங்களைக் கலைக்கும் வண்ணம் அவனுடைய அலைப்பேசி அலறியது. ஆதி அழைக்கிறான் என்பதைத் தெரிந்தவுடன் உடனே அழைப்பை ஏற்றான்.

“சார் லேப் ரிப்போர்ட் வந்திடுச்சு என்றான்”ஆதி.

“வந்திடுச்சா? அது என்ன ட்ரக்ஸ்ன்னு தெரிஞ்சுதா?”

“சார் ட்ரக்ஸோட லெவல் கம்மியதான் இருக்குப் பட்” என அவன் இழுக்க,

“என்ன எதாவது ப்ராப்ளமா?” என வீரா கேட்ட பிறகு அவன் கொடுத்த பதிலில் உரைந்து போய் அமர்ந்தான் வீரா.

“இது எப்படிப் பாஸிபிள்?” எனக் கேள்வியை ஆதியிடமே கேட்டான்.

“இப்படித் தான் சார் ரிப்போர்ட் வந்திருக்கு, நான் தேவா சார்க்கு டீடெயிலா மெயில் போட்டிடவா?” என ஆதி கேட்க,

“அந்தக் கிறுக்குதனத்தைப் பண்ணி தொலைச்சிடாதே ஆதி. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ, நம்ம ஃப்ர்ஸ்ட் டைம் நம்ம கம்பெனியோட எத்திக்ஸை மீறப் போறாம், பாஸ்ட்டீவனா ரிப்போர்ட் மட்டும் தேவாவுக்கு அனுப்பு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்” என்றான் வீரா.

“சார் விசயம் ரொம்ப டேஞ்சரஸ் சார்” எனப் பதறினான்.

“ஆதி அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சொன்னதை மட்டும் செய். அவனுக்கு இது தெரிய வேண்டாம். இந்த ப்ராபளமை நம்ம தான் ஃபேஸ் பண்ணப்போறோம், நான் ஆஃபிஸ் வந்திட்டு உன்கிட்ட பேசுறேன்.”

“ஓகே சார் காட் இட்” என ஆதி அழைப்பை துண்டித்திருந்தான்.

வீராவுக்கு இப்போது அமைதி தேவைப்பட்டது , மன நிம்மதி அதிகமாகவே தேவைப்பட்டது, அவனுக்கு மனநிம்மதி கிடைக்கும் இடத்தை நோக்கி பயணப்பட்டான்.

தியா இந்தப் பெயருக்கு சொந்தக்காரியின் நினைவு தான் அவனை ரணமாய்க் கொன்றுக்கொண்டிருந்தது. அவளால் எப்படித் தன்னைக் கடந்தது செல்ல முடிந்தது. தன்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் விழிகளில் துளி அளவுக் கூடச் சலனமின்றி எவ்வாறு அவள் தன்னை எதிர்கொள்கிறாள். குற்ற உணர்வற்று திரிகிறாள் போன்ற எண்ணமெல்லாம் அவனுக்குள் வந்து போனது.

ஐந்து வருடங்கள் கடந்தும் அவள் நினைவுகளைக் கடந்து செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவனுக்கு . அவளுக்கான வாழ்க்கையை அவள் தேர்ந்தெடுக்கும் போது எங்கிருந்து கோபம் வருகிறதோ. இத்தனை நாள் அவள் இல்லாமல் வாழ பழகியவனுக்கு. அவளின் நினைவுகளைத் தான் எனோ கடந்து செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.
அவன் மனதிற்கு அமைதிக்கொடுக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு வீட்டிற்க்குள் நுழைந்தான்.

“ம்மா!! ம்மா..!” எனக் குரல் கொடுத்தபடி நுழைந்தான். ஆம் அவன் தாயை தேடி சென்னையில் இருந்து நூற்றி ஐம்பது கீலோமீட்டர் பயணித்து வேலூருக்கு வந்திருந்தான்.

“என்ன வேலு வந்திட்டீயா? உங்க அம்மா ரூம்ல இருக்கா” என்ற குரல் அடுக்களையில் இருந்து வந்தது.

“அப்பா!! நீங்க இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க” எனச் சமையலறைக்குள் நுழைந்தான் வீரா என்ற வீரவேல்.

“உங்க அம்மாக்கு தான் சமைச்சிக்கிட்டு இருக்கேன் வேலு” என அவனுடைய தந்தை ரகுபதி சொல்ல.,

“சமைக்கிறதுக்குத் தான் ஆள் இருக்காங்களே அப்பா” என்றான் வீரா.

“என் புருசன் எனக்கு ஆசையா சமைச்சி கொடுக்கிறாரு உனக்கு எங்கடா வலிக்குது?” என அவன் முதுகில் தட்டினார் அவனுடைய தாய் வேணி.

“வேணிம்மா!!” என ஆசையைக் கட்டிக்கொள்ள வந்த மகனை தடுத்து நிறுத்தினார் வேணி.

“ஊருக்கு போய் ஒரு போன் பண்ணுறது இல்லை. எப்போ பார்த்தாலும் வேலை பிசின்னு சொல்றது. நாங்க நினைக்கும் போதல்லாம் இவர் கால் பண்ணமாட்டாராம். இந்த ஊர் பக்கம் தலையை வச்சி படுக்க மாட்டாராம். இவரு வரும் போது நாங்க உடனே கொஞ்சிடணுமாம். போட டேய் போ” எனச் சிரித்தபடி மிரட்டிய தாயை பார்த்தவன்.

“உனக்கு விளையாட்டுக்கு கூடக் கோப படத் தெரியலை போ வேணிம்மா” ஆசையைக் கட்டிக்கொண்டவன்.

“நிஜமாவே உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் வேணிம்மா, என்ன பண்ணுறது வேலை அப்படி” எனத் தாயை சமாதானம் செய்தான்.

“சரி குளிச்சிட்டு சாப்பிட வாடா” எனத் தாய் சொன்ன வார்த்தையிலும் பாசமான அணைப்பிலும் அவனுக்கு ஒரு வித அமைதி கிடைத்தது. குளிப்பதற்காக அவன் அறைக்குள் சென்றவன், அவன் அறையின் மூலையில் தொங்கிக்கொண்டிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். கோபம் தலைக்கேற பார்த்தவன் அதைத் தூக்கி போட்டு உடைத்திருந்தான்.

“வேலு என்ன சத்தம் பா” என வேணி ஓடி வந்து கண்ணாடி சிதறலுக்கு நடுவில் கிடந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றார்.

“இந்தப் போட்டோவை யார் என்னோட ரூம்ல மாட்டினது” சீறினான் அவன்.

“சொல்லு வேணிம்மா யார் இதை மாட்டினது” மீண்டும் கோபமாய் வினவினான்.

“நான் தான் வேலு!! உனக்குப் பிடிக்குமேன்னு மாட்டி வச்சேன்” என அவர் சொல்ல,

“இதுக்குத் தான் என்னை வரச் சொல்லிட்டே இருந்தீங்களா? நான் கிளம்புறேன்” எனக் கோபமாய் அவன் அவன் வீட்டை விட்டுக் கிளம்பினான்.

“வேலு சாப்பிட்டு போப்பா” எனத் தாயின் குரலும் அவன் செவிகளில் விழவில்லை.

“வேலு போகதே நில்லு” எனத் தடுத்து நிறுத்திய தந்தையின் குரலுக்கும் செவி சாய்க்கவில்லை. கோபம் கண்ணை மறைக்கத் தன் காரை கிளப்பிக் கொண்டு புறப்பட்டிருந்தான் வீரவேல்.

***
தியாவின் அலுவலகம்:

“என்னடி தியா முகத்தில் கல்யாணக் கலை வந்திடுச்சு போல” எனத் தோழிகள் கிண்டலடிக்க ஆஃபிஸ் கேண்டீனில் அமர்ந்து காஃபி பருகிக்கொண்டிருந்தாள் தியா.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைடி பைத்தியங்களா” என அவள் புன்னகைத்தபடி சொல்ல,

“ஸ்ருதி பாருடி அவளோட ஃபேஸ் எவ்ளோ க்ளோ ஆகுதுன்னு, மேடம் வெட்கமெல்லாம் படுறாங்க” ஷைனி சொன்னாள்.

“ஆமா ஷைனி, பொண்ணு பார்த்திட்டு போனதுக்கே இவ்வளவு க்ளோனா மத்தெல்லாம் நடந்தால்” என வாய்மூடி சிரித்த லேகா வை பார்த்த தியாவோ.

“அடியேய் லேகா நம்ம கேண்டீன்ல உட்கார்ந்திருக்கோம், நம்மளை சுத்தி எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்த்திட்டு சென்ஸோட பேசுங்கடி” என அதட்டலாய் சொன்னாள் தியா.

ஷைனி, தியா, லேகா, ஸ்ருதி நால்வரும் கண் மருத்தவமனையில் ஃபண்ட் ரைஸிங் எனச் சொல்லபடும் (நிதி திரட்டும்) பிரிவின் கீழ் வேலை பார்ப்பவர்கள்.

இந்தப் பிரிவானது அந்த மருத்துமனையின் இதயமாகச் செயல்பட்டு வருகிறது. ஃப்ரீ ஐ ஃபவுன்டேசன் எனச் சொல்லப்படும் அந்த மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்குக் கண் சிகிச்சை அளிப்பதும். கண் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருவதால். இவர்கள் வேலை செய்யும் நிதி திரட்டும் பிரிவு அந்த மருத்துவமனையின் இதயமாகச் செயல்பட்டு வருகிறது.

“சரி பேசினதும் போதும் வாங்க போய் வேலையைப் பார்ப்போம்” என அவர்களின் பிரிவை நோக்கி நால்வரும் நடந்துக்கொண்டிருந்தனர்.

“இப்படிக் காஃபி ஃப்ரேக்கு நாலுபேரும் சேர்ந்து போயிருக்கோம்ன்னு அங்கயற்கன்னிக்கு தெரிஞ்சுது நம்மளை கொண்ணே போட்டுரும் வாங்க ஓடுவோம்” என ஷைனி சொல்ல லிஃப்ட்டை நோக்கி ஓடினார்கள் நால்வரும், அங்கே காத்திருக்க வேண்டிய நிலை வர நால்வரும் நகத்தைக் கடித்துக்கொண்டு நிற்க, லிஃப்ட் கதவு மெல்ல திறந்தது. அங்கயற்கன்னி முறைத்தபடி லிஃப்ட்டிலிருந்து வெளிபட்டார்.

“இன்னைக்கி செத்தோம்டி” மூவரும் புலம்பத் தியா மட்டும் தைரியமாய் நின்றிருந்தாள்.

“எல்லாரும் சேர்ந்து எங்க போனீங்க?” கோபமாய்க் கேட்டார் அங்கயற்கன்னி

“நோ மேம்! சேர்ந்து போகலை, ஹச்.ஆர் கூப்பிட்டாங்கன்னு போயிருந்தேன் மேம்” தியா பட்டெனப் பதில் மற்ற மூவரும் திருதிருவென விழிக்க.,

“என்ன முழிக்கிறீங்க? நீங்க மூணு பேரும் எங்க போனீங்க” சற்று சத்தமாகவே ஒலித்தது அங்கயற்கன்னியின் குரல்.

“மானம் போகுதே” எனப் புலம்பிய ஷைனியோ,

“மேம்! நான் ரெஸ்ட் ரூம் போயிருந்தேன்” எனப் பதில் கொடுக்க,

“ஆத்தி அடுத்து நம்ம தானா?” லேகாவின் செவியில் கிசுகிசுத்தாள் ஸ்ருதி.

“சமாளிப்போம்” என ஸ்ருதி சொல்ல,

“என்ன நீ்ங்க இரண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க..?”

“மேம் நானும் ஸ்ருதியும், ஐ டோனேசன் ஃபார்ம் ஃபில் பண்ண போயிருந்தோம் மேம், ஐ பேங்க்ல வர சொல்லியிருந்தாங்க” லேகா சொல்லி முடிக்க,

“டிப்பார்ட்மென்ட்ல தான் எந்த வேலையும் இல்லையே வாங்க அஞ்சு பேரும் சேர்ந்து போய்க் காஃபி குடிச்சிட்டு வரலாம்” எனக் கோபமாய் நால்வரையும் பார்க்க,

“திருட்டு முழி முழிக்கிறதை பாரு கெட் பேக் டூ யுவர் வொர்க்” என அங்கயற்கன்னி திட்டியதில். லிஃப்ட்டுக்காகக் காத்திருந்தவர்கள் படிகளில் ஏறி ஓட ஆரம்பித்தனர்.

தியா அவளின் இருக்கையில் அமர்ந்து கணினியில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தாள். வேலை என்று வந்துவிட்டாள் நால்வரும் சின்சியர் சிகாமணியாக மாறிவிடுவார்கள். டிப்பார்ட்மென்ட்டுக்கு போன் கால்களை அட்டன் செய்யும் பொறுப்பை ஸ்ருதி ஏற்றிருந்தாள்.

நிதி கொடுக்கத் தயாராக இருக்கும் நபர்களைத் தொடர்பு கொண்டு பேசி நிதியை பெறும் வேலையைச் செய்யும் பொறுப்பில் ஷைனி பார்த்துக்கொள்வாள்.

அன்றாடம் உள்ள தகவல்களை எக்ஸ்எல் ஷீட்டில் ரிப்போர்ட்டோக பதிவிட்டு வரும் பொறுப்பை லேகா ஏற்றிருந்தாள்.

இவர்கள் அனைவருக்கும் சீனியராக இருந்து அனைத்தையும் பொறுப்பாய் சொல்லிக்கொடுத்து வெளிநாடுகளில் இருந்து நிதி செலுத்துவர்களிடம் பேசுவதும் நிதியை பெறுவதையும், இவர்கள் மூவரில் ஒருவர் வரவில்லை என்றாலும் அந்தப் பொறுப்புகளைச் செய்து முடிப்பதிலும் பொறுப்பாய் இருப்பவள் தான் தியா.

மூன்று வருடமாய் இதே வேலையைச் செய்து கொண்டிருப்பதால் மூவருக்கும் என்ன சந்தேகம் என்றாலும் தியாவை தான் கேட்பார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு வருட காலம் மட்டுமே ஆகிறது. ஒரே வயது கொண்டவர்கள் என்பதால் எளிதில் நண்பர்களாகி விட்டார்கள்.

“ஹே ஃபாரின் கால் சத்தம் போடதீங்கடி” எனச் சொன்ன தியா அழைப்பை ஏற்றாள்.

“குட் ஈவினிங் சார்” என்றாள் அவள்,

“என்னடி இவ மார்னிங் சொல்லாமல் ஈவ்னிங் சொல்லிட்டு இருக்கா.?” என ஸ்ருதி, ஷைனியின் காதில் கிசுகிசுத்தாள்.

“எந்த ஊர்ல இருந்து கால் வருதோ அந்த ஊருக்கு ஏத்த மாதிரி பேசுவாடி” எனப் பதில் கொடுத்தாள் ஷைனி.

“ஓ..” எனச் சொல்லிவிட்டு அவரவர் வேலையில் முழ்க,

தியா பேசிய வெளிநாட்டு அழைப்பு மூலம் நிறைய நிதி வர இருப்பதாகத் தெரிய வர, விசயத்தை உடனே அந்தப் பிரிவின் இன்சார்ஜ் ஆன அங்கயற்கன்னியிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக ஃபார்மலான மெயிலை தட்டி அனுப்பினாள். அரை மணி நேரம் ஆகியும் அவரிடம் இருந்து பதில் வராத காரணத்தால் அவருக்கு அழைப்பு விடுத்து பார்த்தாள் அழைப்பையும் ஏற்கவில்லை.

“என்னடி மேடம் போனை எடுக்க மாட்டேன்றாங்க” எனப் புலம்பிக் கொண்டிருந்தாள் தியா.

“ஹே தியா, சீஃப் கூட மீட்டிங்க்ல இருப்பாங்கடி” என ஷைனி சொல்ல,

“அப்ரூவல் வாங்கணுமேடி” என அவள் பேசிக்கொண்டிருந்த போதே.
தியாவிற்கு இன்டர்காமில் அழைப்பு வந்தது.

“குட் மார்னிங், ஃப்ண்ட் ரைஸிங்” என்றாள் தியா.

“பினான்ஸ் டிப்பார்ட்மென்ட்ல இருந்து பார்த்திபன் மா” என்றார் அவர்,

“சொல்லுங்க அண்ணா” என்றாள் தியா. ஏற்கனவே பேசி பழக்கம் இருப்பதால் அண்ணா என்று அழைத்தாள் தியா.

“தியா ஒரு பிரச்சனை மா” என உடனே விசயத்திற்கு வந்தார் பார்த்திபன்.

“என்னாச்சு அண்ணா” பதற்றமாய்க் கேட்டாள்.

“ரிசீவ் ஆகுற ஃப்ண்ட்ஸ் எல்லாமே, உடனே வேற அகௌண்ட்க்கு டிரென்ஸ்ஃபர் ஆகுறதா மேலிடத்தில் இருந்து சொல்லியிருக்காங்க” என்றார் பார்த்திபன்.

“என்ன அண்ணா சொல்லுறீங்க?”

“இது டூ டேஸா நடந்திட்டு இருக்கு, அந்த அகௌண்ட்டை ஐடி டிபார்ட்மெண்ட் ட்ரேஸ் பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க, போலீஸ்ல கம்ப்ளைன்ட் கூட ஃபைல் பண்ணியிருக்காங்க”

“இப்போ என்ன பண்ணுறது அண்ணா?” என அவள் பதறினாள்.

“நியூவா எந்த டோனார்கிட்டையும் அகௌண்ட் டீடெயில் கொடுக்காதீங்க, அப்பறம் ரெகுலர் டோனார்ஸ்கிட்ட கால் பண்ணி அகௌண்ட்ல இப்போதைக்குப் பணத்தைப் போட வேண்டாம்ன்னு சொல்லிடுங்க”

“அண்ணா இப்போ தான் ஒரு ஃபாரின் டோனார்கிட்ட அகௌண்ட் டிடெயில்ஸ் கொடுத்தேன்”

“சரிம்மா இனிமேல் கொடுக்காதீங்க, நான் உனக்கு ஃபார்மலா டீடெயில் மெயில் போடுறேன்” என்றார்

“அண்ணா அந்த அமௌண்ட் கொஞ்சம் அதிகம்” எனத் தயங்கி தயங்கி சொல்ல.,

“எவ்வளவுமா”

“ஒன் க்ரோர் (ஒரு கோடி)” என அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான் பார்த்திபன்.

“அய்யோ தியா அந்த அமௌண்ட் வராமல் எப்படியாவது ஸ்டாப் பண்ணு” என அவன் அழைப்பை துண்டிக்கத் தியாவோ பதற்றமாய் அமர்ந்திருந்தாள்..

ரகசியமாய் தொடர்வோம்...

ஹாய் டியர்ஸ் உங்கள் கருத்துகளை கமெண்ட்டு டப்பாவில் தெரிவியுங்கள்.

 
Last edited:

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் 4

வேலூரில் இருந்து கிளம்பியவனின் வாகனம் சென்னையில் இருக்கும் அவன் அலுவலகத்தில் சற்று இளைபாறியது. அவன் கோபம் முழுவதையும் வாகனத்தின் வேகத்தில் காட்டியதால் என்னவோ வாகனத்தில் இருந்து புகை வர ஆரம்பித்தது.

தாயிடம் கோபம் பட்டு வரும் அளவிற்கு அந்தப் புகைப்படத்தில் என்ன தான் இருந்தது. அவன் முன்னாள் காதலியான தியாவுடன் இந்த வீரா இணைந்து புன்னகைத்து நிற்கும் புகைப்படத்தில், தியா லவ்ஸ் வீரா என எழுதப்பட்டிருந்தது. காதலித்த போது அவனுக்காக அவள் கொடுத்த காதல் பரிசு தான் அது.

இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருப்பதாய் வேணி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் பிரிந்திருப்பதும் வேணிக்குத் தெரியாது. இப்போது அவளுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் நடக்கவிருப்பதும் வேணிக்குத் தெரியாது.

வீரா இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பதைத் தாயிடம் சொல்லாமல் மறைத்திருந்தான். தெரிந்தால் தாய் வருத்தப்படுவாள் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு.

ஆனால் இந்த முறை அவளின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அவனுக்குக் கோபம் வரக் காரணம், தன் உயிர் தோழன் ஆன தேவாவை அவள் மணக்கவிருப்பது தான் அவனுக்கு அதீத கோபத்தை தூண்டியது.

தன்னைக் காதலித்துவிட்டு தன் தோழனை கட்டிக்கொள்வாளா? இந்த ராட்சஸி, இரக்கம் இல்லாதவள் என்றெல்லாம் அவன் நினைத்துக்கொண்டிருந்த போது அவன் தாயிடம் இருந்து அழைப்பு வந்தது. அலைப்பேசியை எடுத்து பேசினால் அவர் ஆயிரம் கேள்வி கேட்பார். அதைச் சொல்வதற்கெல்லாம் துளியும் தைரியமில்லாமல் அவன் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

மீண்டும் அலைப்பேசி இசைந்தது. இந்த முறை தாயின் மீது கோபத்தை காட்ட வேண்டாமே என நினைத்து, அழைப்பை ஏற்றான். தாயிடம் உண்மையைச் சொல்லிவிடலாம் என்ற எண்ணத்துடன் அழைப்பை ஏற்றான்.

“வேணிம்மா சாரி” என அவன் எதோ சொல்ல வரும் முன் இடையிட்டார் வேணி.

“நாங்க செத்துப் போயிட்டோம்னு போன் பண்ணினாலும் இப்படித் தான் எடுக்கமாட்டீயா டா?” கோபமாய்க் கேட்டார் அவர்.

“வேணிம்மா, நீ கோபமா இருக்கன்னு தெரியுது, அதான் சாரி சொல்றேன்ல”

“உன் சாரியை தூக்கி குப்பையில போடுடா” கோபம் குறையாமல் பேசினார் வேணி.

“வேணிம்மா” கெஞ்சலாய் ஒலித்த வீராவின் குரலை கேட்டு எரிச்சலைடந்த வேணி.

“பேசாதேடா, என்னைப் பேச விடு” என வேணி கோபமாய்க் கத்தியதில் மௌனித்தான் அவன்.

“சொல்லு வேலு, தியா பொண்ணுக்கிட்ட சண்டையா?” என அவர் ஆரம்பித்தார்.

“அது வந்துமா” என அவன் வார்த்தைகளை உள் இழுத்தான்.

“உண்மையை மட்டும் தான் சொல்லணும் வேலு” என அவர் சொல்ல,

“நானும் அவளும் பிரிஞ்சி அஞ்சு வருசம் ஆகிடுச்சுமா” என்றான் அவன்.

“அஞ்சு வருசம் ஆச்சா? என்னடா சொல்லுற? என்கிட்ட ஏன் சொல்லலை?”

“நாங்க பிரிஞ்சது தெரிந்தால் நீ கல்யாணத்தைப் பத்தி பேசுவ, அதான் வேணிம்மா சொல்லலை”

“அது மட்டும் தான் காரணமா? இல்லை உன் மேல் தப்பு ஏதும் இருக்கா? ஏன் கேட்கிறேன்னா தியா நல்ல பொண்ணுடா” என அவளுக்குத் தன் தாயே பரிந்து பேசுவது அவனுக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.

“ஆமா ஆமா நல்ல பொண்ணு தான். இப்போ வேற கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டா” என மனதில் இருந்ததை உளறி தொலைத்தான்.

“என்னடா சொல்லுற? தியா அப்படிப் பட்ட பொண்ணெல்லாம் இல்லை, எனக்கு என்னமோ நீ தான் எதோ பண்ணியிருக்கன்னு தோணுது”

“இப்போ அவளுக்குச் சப்போர்ட் பண்ண தான் எனக்குப் போன் பண்ணியா வேணிம்மா? உன் பிள்ளையை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டால்ல??” கோபமாய்க் கேட்டான் அவன்.

“அப்படி இல்லைடா வேலு, இரண்டு பேரும் உயிருக்கு உயிரா இருந்தீங்களே, அதான்”

“அதைப் பத்தி பேசாதேம்மா, நான் அவளைக் கடந்து வந்து வருசம் ஆச்சு, அவ என்னமோ செஞ்சிட்டு போறா” என்றவன் அமைதியாகி போனான்.

“அப்போ உனக்குப் பொண்ணு பார்க்கவா டா? காலக் காலத்தில ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோ” என்றார்.

“அதெல்லாம் அப்பறம் பார்க்கலாம்” என மகன் சொல்வதிலே வேணிக்கு புரிந்து போனது. தியா இன்னும் இவன் மனதை விட்டு நீங்கவில்லை என்பதும், அவள் மேல் அவன் காட்டும் கோபம் கோபமே இல்லை, அவள் மீதான காதல் தான் இப்படி வெளிப்படுகிறது எனப் புரிந்துக்கொண்ட வேணி.

“சரிடா வேலு, நீ சொல்லும் போது அம்மா பொண்ணு பார்க்கிறேன். வெறும் வயித்தோட இல்லாமல் சாப்பிடு டா, சாப்பிட்டியான்னு கேட்கதான் போன் போட்டேன்”

“ஆனால் அதைத் தவிர மத்த எல்லாத்தையும் கேட்டுட்ட, சாப்பிட தான் போறேன்ம்மா”

“சரி வேலு அப்போ நான் போனை வைக்கிறேன்” என அழைப்பை துண்டித்தார் வேணி.

**********

ஐ ஃபவுன்டேசன்:

தியாவிற்கு அழுது அழுது கண்கள் சிவந்து போயிருந்தது. என்ன செய்வதன்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள். எதிரில் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த அங்கயற்கண்ணி. தியாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன பண்ணி வச்சிருக்கத் தியா? நான் அப்ரூவல் கொடுக்காமல் நீ எப்படி நம்மளோட அகௌண்ட் டீடெயில்ஸை டோனர்க்கு கொடுக்கலாம்?”

“மேம் எப்போதும் இப்படித் தானே செய்வோம், நான் அப்ரூவல் கொடுக்க லேட் ஆனால் நீயே டிடெயில்ஸ் கொடுத்திடுன்னு நீங்க தானே சொல்லியிருந்தீங்க” என அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு பதில் கொடுத்தாள்.

“இடியட்! இப்படித் தான் என்கொயரில பதில் சொல்லுவீயா? என்னோட பேர் வெளிய வரவே கூடாது புரிஞ்சுதா? நாளைக்கு என்கொயரி இருக்கு, சாரி எல்லாமே என்னோட தப்பு தான்னு சொல்லிட்டு எழுந்து வர்ற, இல்லைன்னா? அதில் வர கான்சீக்வென்ஸஸை நீ தான் ஃபேஸ் பண்ணணும் தியா” என எச்சரிக்கை பார்வை பார்த்தார் அங்கயற்கண்ணி.

“மேடம் ஆனால் நான் எந்தத் தப்பும் பண்ணலையே”

“சொன்னதைச் செய் இடியட், கெட் லாஸ்ட்” என அவர் கோபமாய்க் கத்திய பின் அந்த அறையை விட்டு வெளியேறினாள் தியா.

அவள் அழுதுக்கொண்டு வருவதைப் பார்த்த ஷைனி உடனே அவளை நெருங்கியிருந்தாள்.

“ஏய் தியா!! என்னடி ஆச்சு”

“ஒன்னும் இல்லை” எனச் சமாளிப்பாய் சொன்னவள் தன் இருக்கையில் போய் அமர்ந்தாள்.

“ஏய் சொல்லுடி” என மற்ற மூவரும் சூழ்ந்துக்கொள்ள, அறையில் நடந்தவற்றை அழுகையுடன் சொல்லி முடித்தாள் தியா. தியா எளிதில் உடைந்து போகமாட்டாள். செய்யாத தவறை அவள் செய்ததாகச் சொல்வதோடு அதற்கு மன்னிப்பும் கேட்க சொல்வதை அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

அந்த ஒரு கோடி வங்கி கணக்கில் விழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இப்போது மருத்துவமனையின் வங்கி கணக்கை யாரோ ஹெக் செய்திருப்பதால் அந்த ஒரு கோடி பணமும் வேறு கணக்கிற்கு மாற்றல் ஆகி விட்டது.

தன்னம்பிக்கை இழந்து வேலையை விட்டு நின்றுவிடலாமா? என யோசித்தவளுக்கு வேலையை விட மனமில்லை. இங்கு மட்டும் தான் அனைத்தையும் மறந்து அவள் நிம்மதியாக இருந்து வந்தாள். இப்போது அவளின் நிம்மதிக்குப் பங்கம் வந்துவிட்டது.

“ஏய் அழாதேடி தியா, ஓரே ஒரு சாரி தானே கேட்டுட்டு அடுத்த வேலையைப் பார்த்திட்டு போவீயா? உட்கார்ந்து ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்க.” எனச் சொன்னாள் லேகா.

“நான் தான் தப்பே பண்ணலையேடீ” என்றாள் தியா.

“யா! ஷீ இஸ் கரெக்ட், செய்யாத தப்புக்கு அந்த அங்கு சாரி கேட்க சொல்லுதா? சொல்லப் போனால் அவங்க தான் சாரி கேட்கணும், நேத்து எத்தனை தடவை தெரியுமா தியா கால் பண்ணினாள், மெயில் கூடப் போட்டிருந்தாள்” என ஷைனி தியாவுக்கு ஆதரவாய் பேசினாள்.

“தியா! இங்கே வந்திட்டு நீதி நேர்மை நியாயம் எல்லாம் பேசிக்கிட்டு இருந்தன்னா இருக்கிற வேலையும் போயிடும், அடுத்தவனை மிதிச்சு எப்படி மேல ஏறி போகலாம்ன்னு நினைக்கிற போட்டி உலகத்தில இருந்துக்கிட்டு நீதி நேர்மைன்னு பேசி வேஸ்ட் டி, அது உனக்குத் தான் நல்லதில்லை. என்கொயரிக்கு போனீயா? சாரி சொன்னியா? நேரா கேண்டீன் போய் இதமான ஏலக்காய் டீயை குடிச்சியான்னு வாடி, பிரச்சனை முடிஞ்சிரும்" ஸ்ருதி அவளைத் தேற்றினாள்.

“சரி டீ நான் பார்த்துக்கிறேன், போய் வேலையைப் பாருங்க கேமரால மேடம் பார்த்திட்டு இருப்பாங்க” தியா சொன்னவுடன் அவரவர் இருக்கையில் போய் அமர்ந்து அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர்.

“தியா! நீ உடைஞ்சு போகும் போதெல்லாம் இதை எடுத்து பாரு உனக்குக் கண்டிப்பா ஒரு நம்பிக்கை கிடைக்கும்” அவளுக்கு மிகவும் நெருக்கமானவனின் குரல் அவளருகில் கேட்பதை போல் உணர்ந்தாள்.

அழுதுக்கொண்டிருந்தவள் விழியைத் துடைத்துவிட்டு அவள் கைப்பையில் எதையோ துலாவினாள். அந்தப் பொருள் அவள் கையில் சிக்கியது. முகத்தில் புன்னகை மலர்ந்தது.

கைப்பையில் இருந்து அந்தப் பொருளை எடுத்தவளுக்குக் கண்ணீர் எங்கோ காணாமல் போயிருந்தது. கையில் சிறுது நேரம் வைத்து விழிகளை மூடினாள். அன்று அவன் அதை அவள் கைகளில் கொடுக்கும் போது அவள் பெற்ற சந்தோசம் இன்றும் அவளுக்குக் கிடைத்தது. அவள் முகத்தில் தெளிவு பிறந்தது. நாளை நடக்கவிருக்கும் விசாரனைக்கு அவள் கொடுக்க வேண்டிய பதில்கள் இப்போதே அவள் மனதில் ஓட ஆரம்பித்தது. அந்தப் பொருளுக்கு முத்தம் கொடுத்தவள் மீண்டும் கைப்பையிலே பதுக்கி வைத்துக்கொண்டாள்.

தைரியம் இழந்து போகும் நேரங்களிலும், அவளின் தன்னம்பிக்கை உடைக்கப்படும் நேரங்களிலும் அவளுக்குள் அந்தக் குரல் கேட்கும். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனின் முகம் அவள் மணக் கண்ணில் மின்னி மறையும்., அதே போல் அவன் கொடுத்த அந்தப் பொருளை அவன் மேல் இருக்கும் கோபத்தில் அவள் தூக்கி எறிந்ததுமில்லை, தொலைத்ததும் இல்லை. காதலுடன் கொடுத்த அந்தப் பொருளின் மதிப்பு அவளுக்கு மட்டுமே தெரியும்.

அவளுக்குள் தைரியத்தை அந்தப் பொருள் கொடுத்து விடுகிறது.
இமைகள் மூடி சற்று நேரம் அமர்ந்திருந்தவள், பெருமூச்சொன்றை விட்டு, பின் வேலைகளைத் தொடர்ந்தாள்.

“தியா!! எல்லாம் ஓகேவா?” எனச் சைகையில் கேட்ட ஷைனியை பார்த்து புன்னகைத்த தியா பெருவிரலை உயர்த்திக் காட்டி,

“ஓகே” என்றாள். தியாவின் புன்னகை பார்த்தபின் நிம்மதியடைந்த ஷைனியும் அவள் வேலையைத் தொடர்ந்தாள்.

*****
மறுநாள் விசாரனைக்காக உயர் பதவியில் இருக்கும் நபர்கள் அமர்ந்திருக்க, அந்தக் கண் மருத்துவமனையை நிர்வகிக்கும் சீஃப் எனச் சொல்லப்படும் பாஸ்கரன் நடுநாயகமாய் வீற்றிருந்தார். அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் (ஆப்தமாலஜிஸ்ட்) கண் மருத்துவர்களும் அமர்ந்திருந்தனர். அந்த இடத்திற்குச் சம்மந்தமே இல்லாத ஆளாய் தியா, அங்கயற்கண்ணி அருகில் அமர்ந்திருந்தாள்.

“சொன்னது நினைவுல இருக்குல, நீ தான் செஞ்சன்னு ஒத்துக்கிட்டு சாரி சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்” ரகசியாமாய் மிரட்டல் விட்டார் அங்கயற்கண்ணி. அவளோ பதில் ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

“என்ன பதில் சொல்லாமல் இருக்க, இது எவ்ளோ பெரிய மீட்டிங் தெரியுமா? உன்னை மாதிரி லோ லெவல் வொர்கர்ஸெல்லாம் இந்த மீட்டிங்க்கு அழைப்பே விட மாட்டாங்க, டாப் சீக்ரெட் ஆன மீட்டிங் இது, என்னால தான் இந்த இடத்தில் நீ உட்கார்ந்திருக்க” என அவர் பெருமையடித்துக் கொண்டார்.

‘அப்படி என்ன டாப் சீக்ரெட்டான மீட்டிங், செஞ்ச தப்புக்கு சாரி கேட்டுட்டு போறதுக்கு ஒரு மீட்டிங் அதுக்கு இவ்ளோ பில்டப்’ என அவள் மனதில் நினைத்துக்கொண்டிருந்த போது,

அவையில் நடுநாயகமாய் வீற்றிருந்த பாஸ்கரன் தன்னுடைய மைக்கை பேசுவதற்கு ஏற்றாற் போல் வளைத்துக்கொண்டு அனைவரையும் பார்த்தார். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தவர், ஒவ்வொரு துறையில் நடக்கும் தவறுகளை விசாரித்தார். அதன் பின் நிதி திரட்டும் துறையிடம் கேள்வி எழுப்பினார் அங்கயற்கண்ணி எழுந்து நின்று தியாவை காட்டி,

“சார் நியூ ஜாய்னி எதோ தெரியாமல் பண்ணிடுச்சு” என்றார்.

“மிஸ் தியா!! இதை மறுபடியும் ரீப்பீட் பண்ணாதீங்க” எனப் பாஸ்கரன் எச்சரித்துவிட்டு அடுத்தத் துறையை நோக்கி கேள்வி எழுப்ப போன வேளையில்.

“நோ சார்!!” எனத் தியாவின் குரல் கேட்டு அனைவரும் அவளை நோக்கி திரும்பினர். அவள் தைரியமாய் நிமிர்ந்து நின்றாள். தியாவை கையைப் பிடித்து இருக்கையில் அமர வைக்கும் முயற்சியில் இருந்தார் அங்கயற்கண்ணி.

“சார் நான் கொஞ்சம் என்னோட தரப்பை சொல்லலாம்ல” என அவள் கேட்க, அதிர்ந்து விழித்தார் அங்கயற்கண்ணி. நடந்தவற்றை ஒன்று விடாமல் உண்மையை மட்டும் சொல்லியவள் நிமிர்ந்து நின்று.,

“நான் நேர்மையை இருக்கிறதுக்கு என்னை வேலையில் இருந்து தூக்கினாலும் பிரச்சனை இல்லை” எனச் சொல்லி அமர்ந்தாள் தியா.

“அங்கயற்கண்ணி, என்னைப் பெர்சன்ல்லா வந்து மீட் பண்ணுங்க, தியாவையும் கூட்டிட்டு வரணும்” எனச் சொல்லிய பாஸ்கர் அடுத்தத் துறையிடம் கேள்வியை எழுப்ப ஆரம்பித்தார். அந்த ஒரு மணி நேர மீட்டிங் இறுதியாய் முடிய, தியாவை சிலர் பாராட்டி நகர்வதைப் பார்த்து முறைத்த படி நின்றுக்கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி.

*****

சீஃப் பாஸ்கரனின் அறையில் கூனி குறுகி நின்றிருந்தார் அங்கயற்கண்ணி, தியா அவரை ஏளனமாய்ப் பார்த்து வைத்தாள்.

“உங்க டிப்பார்ட்மென்ட்ல என்ன தான் ப்ராப்ளம்?? அதை உங்களுக்குள்ள சரி பண்ணிக்க மாட்டீங்களா? இங்கே ஏற்கனவே நம்மளுடைய பேங்க் அகௌண்ட்டை யார் ஹெக் பண்ணிருக்காங்கன்னு கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கிட்டு இருக்கோம், இதில் உங்க டிப்பார்ட்மென்ட்ல என்ன தான் பிரச்சனை” பாஸ்கரன் கேள்விகளை அடுக்கினார். அங்கயற்கண்ணியால் பேசவே முடியவில்லை, தியாவை விட அவரின் வயதும் அனுபவமும் அதிகம் தான். ஆனால் அவர் தப்பித்துக்கொள்ளத் தியாவை பலி ஆடாக மாற்ற நினைத்தார்.

“சார்! நான் தப்பு பண்ணுறதுக்கு நியூ ஜாயினி ஒன்னும் இல்லை, த்ரீ இயர்ஸ் எக்ஸ்ப்பீரியன்ஸ் எனக்கு இருக்கு, நம்மளோட அகௌண்ட் நம்பரை டோனர் கிட்ட கொடுக்கக் கூடாதுன்றே தகவலே எனக்கு லேட்டா தான் வந்திச்சு, ப்ராப்பரா யாரும் மெயில் போடலை, நான் டோனர் கிட்ட பேசின டைமிங் அண்ட் என்னோட மெயில்ஸ் எல்லாமே நீங்க செக் பண்ணிக்கலாம். பார்த்திபன் சார் எனக்கு இன்ஃபார்ம் பண்ணும் போது நான் டோனர் கிட்ட பேசி முடிச்சிருந்தேன்” என அவள் சொல்ல,

“அங்கயற்கண்ணி! நீங்க என்ன சொல்ல வர்றீங்க? தியா மேல தப்புன்னு சொல்றீங்களா? என்கொயர் பண்ணலாமா?” என அவர் கேட்க,

“நோ சார்.! ஃபால்ட் என்னோடது தான், நான் தான் தியா போட்ட மெயிலுக்கு ரிப்ளை போடலை” எனத் தவறை ஒப்புக்கொண்டாரே தவிரத் தியா மீது கோபமாய்த் தான் இருந்தார்.

அப்போது பாஸ்கரனின் பிஏ அவர் காதில் வந்து ஏதோ கிசுகிசுக்க, இருவரையும் அமரும் படி சைகை செய்தார் பாஸ்கரன்.

“வரச் சொல்லுங்க” எனப் பிஏ விடம் பாஸ்கரன் சொல்ல,

“எக்ஸ்கீயூஸ்மீ சார்!” என்ற குரல் கேட்க திரும்பி பார்த்தாள் தியா.
ஆதி கதவை திறந்துக்கொண்டு வர அவனைத் தொடர்ந்து அவன் வந்தான், ஒரு காலத்தில் உருகி உருகி காதல் செய்த அவளவன். அவனின் தீட்சண்யமான பார்வை அவள் மேல் தான் முதலில் படிந்தது. மாந்தளிர் நிறத்தில் புடவை கட்டியிருந்தவளின் கழுத்தில் அடையாள அட்டை தொங்கி கொண்டிருந்தது. அவளின் நீளமான கூந்தலை ஒரு சென்டர் க்ளிப்பில் அடக்கியிருந்தாள்.

“இவன் எதற்கு இங்கு வருகிறான்” என்பது போல் அவளின் பார்வை இருந்தது.

இவள் இங்கு வேலை செய்கிறாள் என்பதெல்லாம் வீராவுக்குத் தெரியும், ஆனால் அவளைச் சந்திக்க நேரிடும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

“எங்கே போனாலும் வழிய வந்து என்கிட்டையே சிக்குறீயே தியா” என அவன் மனதில் நினைத்துக்கொண்டான். அவளை எதோ போல் கடந்து சென்றவன்., அந்தக் கண் மருத்துவமனையின் நிர்வாகியான பாஸ்கரனிடம் கை குலுக்கினான்.

“வீரா!! ஃப்ரம் க்ரைம் ஹன்டர்ஸ் டிடெக்டீவ் ஏஜென்ஸி” எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டான் வீரா.

“உங்களைப் பத்தி நிறையக் கேள்வி பட்டிருக்கேன் மிஸ்டர் வீரா, உங்களோட அப்பாயின்மெண்ட் கிடைக்கவே இல்லை, அப்பறம் என்னோட பிஏ தான் ஆதிக்கிட்ட பேசினார்” எனப் பாஸ்கரன் சொல்லிக் கொண்டிருந்த போதே, அங்கே அமர்ந்திருந்தவளுக்குச் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. கட்டுபடுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“உங்களோட கேஸ் டீடெயில் பார்த்தேன் பாஸ்கரன், இதை நான் கண்டுபிடிச்சே தீரணும்ன்ற முடிவோட தான் வந்திருக்கேன்” எனப் பதில் கொடுத்தான் வீரா.

“யூ மே ப்ரோசிட் மிஸ்டர் வீரா” எனப் பாஸ்கரன் சொல்ல,
வீராவோ அங்கே அமர்ந்திருந்த அங்கயற்கண்ணியையும் தியாவையும் திரும்பி பார்த்துவிட்டுப் பாஸ்கரனை பார்த்தான்.

“நம்ம ஸடாஃப் தான் நீங்க சொல்லுங்க வீரா” எனப் பாஸ்கரன் சொல்ல,

“இல்லை சார் அவங்களை வெளிய அனுப்புங்க சில கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியணும், சோ..” என அவன் இடைநிறுத்த, தியாவும்

அங்கயற்கண்ணியும் வெளியேற்றபட்டார்கள். அவர்களோடு சேர்த்து பிஏவும் வெளியே அனுப்பட்டிருந்தான்.

“பாஸ்கரன் ஒன்னும் மட்டும் புரிஞ்சுக்கங்க, இந்த மாதிரி பணம் விசயத்தில் நம்ம நிழலையே நம்பக் கூடாதுன்னு தான் நான் சொல்லுவேன், ஏன்னா பணத்துக்காக எதையும் செய்யக் கூடிய தைரியம் எல்லாருக்கும் வந்திடுச்சு, யாரையும் ஃப்ளைண்டா நம்பாதீங்க, உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை, என்னை விட உங்களுக்கு அனுபவம் பாடம் அதிகமா இருக்கும்” அவன் சொல்வதை ஆமோதிப்பதை போல் தலையாட்டினார் பாஸ்கரன்.

“போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கீங்களா?” என வீரா கேட்க,

“கொடுத்திருக்கோம்” என்றார் பாஸ்கரன்.,

“யாரு கேஸ் டீல் பண்ணுறாங்கன்னு தெரியுமா?” என வீரா கேட்க,

“ராகவன் தான் பண்ணுறார், சைபர் க்ரைம்ல கேஸ் போயிட்டு இருக்கிறதா சொன்னாரு”

“ஓ நம்ம ராகவனா..? பார்த்துகலாம்” எனச் சொன்ன வீரா,

“ஆதி..! ராகவனை நேர்ல பார்த்து பேசிட்டு டீடெயில்ஸ் வாங்கிட்டு வரணும்” எனக் கட்டளையிட்டான் வீரா.

“வேற எதாவது ப்ரைவெட் டீடெக்ட்டீவ் ஏஜென்சில ரெஜிஸ்டர் பண்ணியிருக்கீங்களா?” அடுத்தக் கேள்வியை உடனே கேட்டான், அவன் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு வீராவிடம் தெரிந்தது.

“ஆமாம், த்ரெட் ஐ ல கொடுத்தோம்”

“ஓகே ஃபைன், அவங்க பங்குக்கு அவங்க விசாரிக்கட்டும், நான் என்னோட வேலையை சரியா செஞ்சிடுறேன் டோன்ட் வொரி மிஸ்டர் பாஸ்கரன் இரண்டு நாள்ல நான் கேஸை முடிச்சு கொடுத்திடுறேன்” என வீரா சொல்ல பாஸ்கரனின் முகத்தில் நம்பிக்கை பிறந்தது.

“ஏழை எளிய மக்களுக்கு மருத்துவதுக்காகப் பயன்படுற பணம் எங்களை விட்டு வெளியே போகாதுன்னு நம்பிக்கை இருக்கு” என்றார் பாஸ்கரன்.

“முடிச்சிடலாம்” என்றான் கர்ஜனை குரலில் வீரா.

“அதுக்கு முன்னாடி, இது ரிலேட்டடா சம்பந்த பட்ட டிப்பார்ட் மென்ட்ல இருக்கிற ஸ்டாஃப் எல்லாத்தையும் நான் விசாரிக்கணும்” என்றான்.

“ஓகே உங்களுக்கு விசாரணை பண்ணுறதுக்கு ருமூம், ஸ்டாஃப்போட டிடெயிலும் உங்க டேபிள்க்கு வந்திடும்” என அவர் சொல்ல, அவன் எழுந்து அறையை விட்டு வெளியேறியிருந்தான்.

ஆதியோ ராகவனைப் பார்க்க சென்றிருந்தான்., பலவித யோசனையில் கேண்டீனை நோக்கி நடந்தான் வீரா. காஃபியை வாங்கிக்கொண்டு இருக்கையில் வந்த அமர்ந்தவனின் செவிகளில் அந்தக் குரல் கேட்டது, கலகலக்கும் சிரிப்புடன். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி அவளே தான் என்பது தெரிந்தும் அவளைத் திரும்பி பார்க்க அவன் விரும்பவில்லை. அவன் செவிகளில் கேட்பதை காஃபி அருந்திய படி அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

“அப்பறம் என்னாச்சு தியா??” ஷைனி கேட்டாள்.,

“நான் சாரிக் கேட்டு போயிடுவேன்னு மேடம் நினைச்சிட்டு இருந்தப்போ, நோ சார்ன்னு எழுந்திருச்சு நின்னேன் பாரு மேடம் முகம் மாறிடுச்சு” என அவள் சொல்லி சிரிக்க,

“செம்ம!! அந்த அங்குக்கு இதெல்லாம் தேவை தான்” ஸ்ருதி சொன்னாள்.

“ஆமாம் ஆமாம் தேவை தான், நேத்து தியாவை எப்படி அழ வச்சு அனுப்பிச்சு” ஸ்ருதி சொன்னதை லேகா ஆமோதித்தாள்.

“இல்லைடி எனக்கு என்னவோ பாவமா தான் இருந்திச்சு” என்றாள் தியா.

“அப்படியெல்லாம் சொல்லாத தியா, தப்பு அவங்க மேல தானே” என்றாள் ஷைனி.

“தப்பு என்னவோ அவங்க மேல தான்” எனத் தியா சொல்ல,

“உங்களுக்கெல்லாம் தெரியாதுடி, நேத்து தியா ரொம்ப அழுதிட்டே இருந்தாள். அப்போ அவ ஹெண்ட் பேக்ல இருந்து எதோ பொருளை எடுத்துக் கண்ணை மூடி தியானம் பண்ணுற மாதிரி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாள், அப்பறம் அந்தப் பொருளுக்குக் கிஸ் பண்ணிட்டு சிரிச்சா, அப்பறம் அவ ஃபேஸ்ல தேஜஸை பார்க்கணுமே” என ஷைனி சொல்ல,

“அப்படி என்ன பொருள்டி அது, எங்களுக்கும் கொஞ்சம் காட்டேன் அங்குவை ஃபேஸ் பண்ண எங்களுக்கும் யூஸ் ஆகும்ல” என லேகா கேட்க, இறுக்கமாய்த் தன் கைப்பையைத் தனக்குள் இழுத்துக் கொண்டாள் தியா.

“ஏய் ஷைனி அவ பேக் குள்ள நீ சொன்ன மாதிரி எதோ இருக்கு போலயே” என ஸ்ருதி கைப்பையைப் பறிக்க முயன்றாள்.

“அது என்னோட பர்சனல்டீ சொன்ன கேளுங்க” எவ்வளவோ தடுக்க முயன்றும் அங்கு நடந்த இழுப்பறியில் பேக்கில் இருந்த பொருள் விசிறி அடிக்கப்பட்டு எங்கோ போய் விழ,

“ஏய் போங்கடி, அது எனக்கு எவ்ளோ முக்கியமான பொருள் தெரியுமா.?” எனத் தோழிகளிடம் கோபம் கொண்டவள் ஓடிச் சென்று அதை எடுக்க முயன்றாள். அவள் எடுக்கும் முன் அதை அவன் எடுத்திருந்தான். அவன் முகத்தைப் பார்க்காது,

“தேங்க்யூ சார்” எனப் பொருளை வாங்க முயன்றாள். ஆனால் அந்தப் பொருளை அவன் இறுக்கமாய்ப் பிடித்திருந்தான்.

“கொடுங்க சார்” எனச் சொன்ன படி அவன் முகத்தை ஏறிட்டவளின் முகம் இறுகி போனது, விழிகளில் நீர் தேங்கி நின்றது..

ரகசியமாய் தொடர்வோம்..

கமெண்ட்டு டப்பா:


 
Last edited:

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் 5

அந்தத் தனித்துவமான மாலைப் பொழுதில் அவளெதிரில் திமிராய் நின்றருந்தவனின் முகம் பார்த்து பதறிப்போய் நின்றிருந்தவளின் விழிகள் பட்டாம்பூச்சியாய்ப் படபடத்தது. அவனை அவள் அங்கு எதிர்பார்த்து இருக்கவில்லை. இத்தனை நேரம் தன் தோழிகள் பேசியதை இவன் கேட்டிருப்பானோ.? எனத் தியாவுக்குத் தோன்றியது. இருந்தாலும், அவனை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என உணர்ந்தவளாய், அவன் கையில் வைத்திருந்த பொருளை வெடுக்கென இழுத்தாள்.

இப்போது பொருள் அவளின் கை சேர்ந்திருந்தது. கைப்பையில் பத்திரபடுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனருகில் அவள் மினியான் பொம்பை போல் தான் தெரிந்தாள். அவன் ஆறடியை நிமிர்ந்து பார்த்தே அவளின் கழுத்து வலித்து விடும் போல் இருந்தது.

“எனிவே தேங்க்ஸ்” எனச் சொல்லி நகர்ந்தவளின் கைப்பற்றி இழுத்தவன், அவளைக் கையில் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

“என்ன பண்ணுறீங்க வீரா?? கையை விடுங்க” என அவன் பிடியில் இருந்து விலக முற்பட்டவளின் கரத்தை இறுக்கமாய்ப் பிடித்திருந்தான்.

“கை வலிக்குது விடுங்க, எல்லாரும் பார்க்குறாங்க விடுங்க” என அவள் கத்திய போது, இருவரும் கார் பார்க்கிங் வந்து சேர்ந்திருந்தனர். அவள் கரத்தை மெல்ல விடுவித்தான் அவன்.

“என்ன நடக்குது தியா?” அவளை ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான் அவன்.

“என்ன நடக்குதுன்னு கேட்டா என்ன அர்த்தம்..? இது நான் வேலை செய்யுற இடம், இங்கே வந்து உங்க ஃப்ரெண்ட் கட்டிக்கப்போற பொண்ணைக் கைய பிடிச்சு இழுக்குறதை என்ன சொல்றது மிஸ்டர் வீரா??” அவள் இப்படியொரு கேள்வி கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. உறைந்து போய் நின்றான்.

‘அவள் சொல்வதும் சரி தானே, இவள் தேவாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாளே’ என அவன் மனதில் கேள்வியாய் வந்து விழ, அவள் கரம் பற்றி இழுத்து வந்ததைத் தவறென உணர்ந்தவன்.

“சாரி நான் அப்படிச் செஞ்சிருக்கக் கூடாது தான்” என்றான்,

“ஓ உங்களுக்குச் சாரிலாம் கேட்க தெரியுமா?” நக்கல் தொனிக்கச் சொன்னவளை எதிர்கொள்ள முடியாமல் தவிர்த்தான்.

“நீங்க கிளம்பலாம் தியா” அவன் செல்லும் வழியைக் காட்ட,

“எதுக்குக் கூட்டிட்டு வந்தீங்க முதல்ல அதைச் சொல்லுங்க??”

“அது வந்து!! நீ இன்னும் அந்தப் பொருளை வச்சிருக்க..? நானே வேண்டாம்ன்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம் அது உனக்கு எதுக்கு.?” என நேரடியாய் விசயத்திற்கு வந்தான் வீரா.

“ஒருத்தர் ப்ரியத்தோட கொடுத்த பொருளை என்னால தூக்கி போட முடியாது” அவள் சொன்ன பதில் ஊசியை வைத்து குத்துவதைப் போல் அவனுக்கு வலித்தது. அதோடு அவன் அவள் கொடுத்த புகைப்படத்தைத் தூக்கி போட்டு உடைத்ததும் நினைவுக்கு வந்தது.

“அதான் நமக்குள்ள எதுவும் இல்லைன்னு ஆகிடுச்சுல்ல தியா, அப்பறம் எதுக்கு இந்த நாடகம், தேவாவுக்கு இதெல்லாம் தெரிய வந்தால் என்ன ஆகுறது??” சற்று கோபமாகவே பேசினான்.

“தெரிய வந்தால் என்ன?? கல்யாணம் நிண்ணு போயிடும்ன்னு, நீங்க கவலை படுறீங்களா வீரா??”

“ஜெஸ்ட் ஷட் அப் தியா!! குழந்தை மாதிரி விளையாடதே, நமக்குள்ள எதுவுமே இல்லைன்னு முடிவு செஞ்சு அஞ்சு வருசம் ஆச்சு, அப்பறம் எதுக்காக நான் கொடுத்த பொருளை இன்னும் வச்சிக்கிட்டு இருக்க, என்னை எப்படி உன் வாழ்க்கையில இருந்து தூக்கி ஏறிஞ்சியோ, அப்படி அதையும் எறிய வேண்டியது தானே” கோபம் கொப்பளிக்க, அவன் பேசியதில் அந்த இடமே அதிர்ந்தது.

“இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணும் மிஸ்டர் வீரா. எனக்குக் காதல் மேல் இருந்த நம்பிக்கை தான் போச்சு, கடவுள் நம்பிக்கை இன்னும் போகலை, நீங்க கொடுத்த இந்தச் சின்ன வேல் நான் வச்சிருக்கதால, உங்களைக் காதலிச்சிட்டு இருக்கேன்னும் அர்த்தம் இல்லை, உங்களை மறக்க முடியாமல் தவிக்கிறேன்னும் அர்த்தம் இல்லை, உங்களோட கற்பனைக்குக் கொஞ்சம் கடிவாளம் போடுங்க, உங்களை நான் எப்போவே கடந்து வந்துட்டேன், அதனால் தான் உங்களோட முகத்தை நிமிர்ந்து பார்த்து என்னால பேச முடியுது, உங்களால தான் என்னைக் கடந்து போக முடியலைன்னு நினைக்கிறேன், மூவ் ஆன் ஆகுங்க மிஸ்டர் வீரா” எனச் சொல்லி நகர்ந்தவளின் பிம்பம் மறையும் வரை அவளையே பார்த்திருந்தான் வீரா.

அவள் எளிதாய் பேசி சென்ற வார்த்தைகள் அவனுக்கு ரணமாய் வலியை கொடுத்தது. அவள் மாறிவிட்டாள் என்பதையும் உணர்ந்தவனுக்கு , அவள் தன்னைக் கடந்து எங்கோ சென்றுவிட்டாள். அவன் தான் அவள் விட்டுச் சென்ற இடத்திலே நின்றுக்கொண்டு பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருக்கிறான் என்பதும் அவனுக்குத் தெரிந்தது.

எவ்வளவு ஆழமான உறவாக ,வீண்கோபமும், பிடிவாதமும் ஒன்றிணையும் போது, அந்த உறவில் எளிதில் வலியை கொடுத்து விரிசல் ஏற்படுத்திவிடும்.

விடுகதைப்போல் பேசி செல்பவளிடம் எங்கிருந்து விடையை எதிர்பார்ப்பது. அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடுகதை போட்டு செல்பவள் அவன் கண்களுக்கு ஆச்சரியமாய்த் தெரிந்தாள். ஐந்து வருடத்திற்கு முன் அவள் அப்படி இல்லையே என்ற யோசனையிலே அந்த நாள் அவனுக்கு மெல்ல நகர்ந்தது..

*****
மறுநாள்:

க்ரைம் ஹண்டர்ஸ் டிடெக்ட்டீவ் ஏஜென்ஸி

தன் அறையில், சுழல் நாற்காலியில் அமர்ந்து கணினியில் முழ்கியிருந்தவனின் பார்வை அவ்வப்போது வாயிலை தொட்டு திரும்பியது. யாரின் வரவுக்காகக் காத்திருக்கிறான் என்பதை அவன் மட்டுமே அறிவான்.

“எக்ஸ்க்யூஸ்மீ சார்” எனக் கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு கேட்ட ஆதியை கண் அசைவிலே உள்ளே வரும் படி அனுமதிக்கொடுத்தான் வீரா.

“ராகவனைப் பார்த்தீயா?” அவன் முதல் கேள்வி அதுவாகத் தான் இருந்தது. ஐ ஃபவுன்டேசனின் கேஸை இரண்டு நாள்களில் முடித்துத் தருவதாகச் சொல்லி வந்திருந்தான். அதற்காக இன்ஸ்பெக்டர் ராகவனைப் பார்த்து வரும் படி ஆதியை அனுப்பியிருந்தான். ராகவனிடமும் தொடர்பு கொண்டு தொலைப்பேசி வழி பேசியிருந்தான்.

காவல்துறைக்கும் இவனின் ஏஜென்சிக்கும் நட்புறவு இருப்பதால் அவன் கேட்கும் தகவல் அவனுக்கு எளிதில் கிடைத்துவிடும்.அதே போல் காவல்துறையை அவனின் ஏஜென்சியை நாடி வந்தது உண்டு.. இணைந்து செயல்பட்டதும் உண்டு.

“ராகவன் சாரை பார்த்துப் பேசிட்டேன் சார்”

“பைல் கொடுத்தாரா?”

“ம்ம்ம் கொடுத்தார்” என ஆதி பதில் கொடுக்க,

“இடியட் நான் கேட்க, கேட்க தான் சொல்லுவீயா? வொர்க்ல கொஞ்சம் அட்டன்டீவா இரு” என எச்சரிக்கை பார்வை பார்த்தான் வீரா.

“சாரி சார்” என்றவன் ராகவன் கொடுத்த கோப்பை வீராவிடம் நீட்டியிருந்தான்.

“சைபர் க்ரைம்ல இருக்க ஆஃபிசரோட நம்பர் கொடுத்திருக்காரு, வேற எதாவது டீடெயில் வேணும்னா கால் பண்ண சொன்னாரு” எனத் தகவலை வேகமாகச் சொல்லி முடித்தான் ஆதி, வீராவோ ஃபைலை புரட்டி பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஆமாம், அங்கே வொர்க் பண்ணுறவங்க கொடுத்த ஸ்டேட்மென்ட் எதுவுமே இல்லை” என வீரா நிமிர்ந்து பார்த்து கேட்டான்.

“வீரா சார்!! ஐ ஃபவுன்டேன்குள்ள போலீஸ் வர்றதை அவங்க விரும்பலை, தினமும் ஆயிரக் கணக்கான நோயாளிகள் வந்து போற இடத்தில் போலீஸ் வந்தால், அவங்க மேல் மக்களுக்கு இருக்கிற நம்பிக்கை போயிரும்ன்னு பயப்படுறாங்களாம்” என ஆதி சொன்ன போது வீராவுக்குக் கோபம் தான் வந்தது.

உள்ளே இருக்கிறவர்களின் உதவி இன்றி இவ்வளவு பெரிய திருட்டு அரங்கேற வாய்ப்பில்லை என்று அவனுக்கு நன்கு புரிந்து போனது.

“ஐ ஃபவுன்டேசனில இருந்து நேத்தே நமக்குப் பேமெண்ட் வேற போட்டுட்டாங்க சார்” எனத் தயங்கி தயங்கி சொன்னான் ஆதி.

“இடியட்! நம்ம வேலையை முடிச்சிட்டுப் பணம் வாங்குறது தானே வழக்கம்..?” எனக் கோபமாய்க் கத்தினான் வீரா.

“நான் எவ்வளவோ சொன்னேன் பாஸ்கரன் சார் தான் கேட்கலை” எனச் சொன்ன பிறகு சற்று அமைதியானான். உடனே பாஸ்கரனுக்கு அழைப்பு விடுத்தான்.

“பாஸ்கரன்!! வீரா ஸ்பீக்கீங்” என்றான்.

“சொல்லுங்க வீரா..?”

“ஹாஸ்பிட்டலுக்கு எந்த டைம்க்கு நான் வந்தால் உங்களோட ஸ்டாஃப் ப்ரீயா இருப்பாங்க??” எனக் கேட்டான்.

“ஃப்ரீ டைம்ன்னு எதுவும் இல்லை வீரா, ஒவ்வொருத்தரா தனித் தனியா தானே விசாரிக்கப் போறீங்க வாங்க பார்த்துகலாம்” என்றார் பாஸ்கரன்.

“இல்லை மிஸ்டர் பாஸ்கரன், விசாரணை நடக்கப் போகுதுன்னு தெரிந்தால் குற்றவாளி தப்பிச்சு போக வாய்ப்பு இருக்கு பொய் சொல்லவும் அதிக வாய்ப்பு இருக்கு. ஸ்டாஃப் வேற நம்ம மிரட்டி விசயத்தை வாங்க முடியாது. நான் சொல்லுற மாதிரி பண்ணுங்க” என விசயத்தைச் சொல்ல ஆரம்பித்தான் வீரா. அவனின் அணுகுமுறை பாஸ்கரனுக்கு மிகவும் பிடித்ததோடு. வீரா கண்டுபிடுத்துவிடுவான் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

“சரி நான் சொன்ன மாதிரி ஏற்பாடு பண்ணிடுங்க, ஹெல்ப்க்கு ஆள்கள் வேணும்னா சொல்லுங்க பசங்களை அனுப்பி வைக்கிறேன்” என வீரா சொல்ல,

“சரி வீரா” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தவர், எதிரில் அமர்ந்திருந்த பிஏவை பார்த்தார் பாஸ்கரன்.

“சரியான மூளைக்காரனா இருக்கான் இந்த வீரா, நான் சொல்லுற மாதிரி சொல்லுற டிப்பார்ட்மென்ட்க்கு மட்டும் சர்குலர் அனுப்பு” எனப் பிஏவை ஏவி விட்டு புன்னகைத்தார் பாஸ்கரன்.

***
அதே சமயம் வீராவின் எதிரில் நின்றுக் கொண்டிருந்த ஆதியின் செல்போன் அலறியது. வீரா அருகில் இருப்பதலோ என்னவோ அவன் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைப்பு வர எரிச்சலடைந்த வீராவோ.,

“அறிவிருக்கா உனக்கு? எடுத்து பேசு இல்லை சைலண்ட்ல போடு எதாவது ஒண்ணு பண்ணு” என எரிந்து விழுந்தான்.

“சார்!!! தேவா சார் தான் கால் பண்ணிட்டு இருக்காரு” என அமைதியாய் ஆதி சொன்னதைக் கேட்டு இருக்கையில் இருந்து அதிர்வுடன் எழுந்து நின்றான்.

“எடுத்து பேசு, நான் ரொம்பப் பிசியா இருக்கேன்னு சொல்லி, அவாய்ட் பண்ணிடு” என்றான் வீரா.

“சார் அவர் உங்க ஃப்ரெண்ட் அதான்..” என வார்த்தைகளை இழுத்தான் ஆதி.

“சொல்றதை செய்” என உத்தரவாய் வீரா சொல்ல, அடுத்து வந்த அழைப்பை ஏற்றான் ஆதி.

“தேவா சார்!!” ஆதி பேசிக்கொண்டிருப்பதை அமைதியாய் கவனித்தான் வீரா.

“வீரா எங்கே” என்பது தான் தேவாவின் முதல் கேள்வியாய் இருந்தது.

“சார் அவர் ஒரு கேஸ்ல பிசியா இருக்காரு” என மழுப்பலாய் பதில் சொன்னான்.

“அப்படியா..?”

“உங்க சாரு என்கிட்ட பேசமாட்டராமா??”

“அப்படி எல்லாம் இல்லை சார், நிஜமாவே சார் பிசியா இருக்காரு”

“அப்போ உங்க சாரை பார்க்க நான் அப்பாயின்மென்ட் வாங்கணும், அப்படித் தானே சொல்ல வர..?” சற்றுக் கோபமாகத் தான் அவன் பேசிகிறான் என்பது அலைப்பேசியை மீறிக் கேட்கும் தேவாவின் குரலிலே வீராவுக்குப் புரிந்து போனது.

“அய்யோ..! சார் அப்படியெல்லாம் இல்லை, வீரா சார் ஃப்ரீ ஆனதும் நானே பேச சொல்லுறேன்” என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் விழித்த ஆதியை பார்க்க வீராவுக்குப் பாவமாகத் தான் இருந்தது. யார் மீதோ இருக்கும் கோபத்தை அவன் மீது காட்டினாலும், சொல்லும் வேலையைத் திறம்படச் செய்து முடிப்பவன் ஆதி. ஆதி மீது வீராவின் பரிதாப பார்வை படிந்த அதே நேரத்தில்.

“சரி நான் பார்த்துக்கிறேன்” எனத் தேவா அழைப்பை துண்டிக்க, நிம்மதி பெருமூச்சு விட்டான் ஆதி.

அதே சமயத்தில் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு அதிரடியாய், வீராவின் அறைக்குள் நுழைந்தான் தேவா.

“ஆதி கெட் அவ்ட்” என்ற தேவா சொன்னவுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடியிருந்தான் ஆதி. அவர்களின் நட்பில் தொடக்கக் காலத்தில் இருந்தே ஆதிக்கு தெரியும். எப்போதும் தேவாவை வீரா விலக்கி வைத்ததே இல்லை. ஆனால் தியாவின் கேஸை கையில் எடுத்த பிறகு வீராவின் நடவடிக்கைகள் மொத்தமாய் மாறியிருப்பதை ஆதியால் உணர முடிந்தது.

“தேவா..!” என மெலிதாய் உச்சரித்த வீராவை பார்த்த தேவாவோ

“சொல்லுடா உனக்கு என்ன தான் பிரச்சனை” என அங்கிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தான்.

“டேய் தேவா ஒரு பிரச்சனையும் இல்லை” எனச் சமாளிப்பாய்ச் சொன்னான் வீரா.

“என்னோட நண்பனை பத்தி எனக்குத் தெரியாதா? நேத்து உனக்கு எத்தனை முறை கால் பண்ணிருக்கேன் பாரு”

“தெரியும் பார்த்தேன்” என்ற பதில் வீராவிடம் இருந்து வந்தது.

“ஒரு தடவை கூடத் திருப்பிக் கூப்பிடணும்னு தோணலையாடா? அப்படி என்னடா என் மேல உனக்குக் கோபம்”

“தேவா!! கோபமெல்லாம் இல்லைடா, வேலை பிசியா இருந்தேன்”

“நான் கொடுத்த கேஸையும் பண்ண மாட்டேன்னு சொல்லிட்ட, இப்போ என்னடன்னா கால் எடுக்க மாட்டேன்ற, ஆஃபிஸ்ல இருந்திட்டே இல்லைன்னு சொல்ல சொல்லுற?? எதோ நடந்திருக்கு, நீ என்கிட்ட எதையோ மறைக்கிறன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுதுடா வீரா” நண்பன் எதற்காகத் தன்னைத் தவிர்க்கிறான் எனப் புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தான்.

குழம்பி போய் நிற்கும் தன் நண்பனுக்கு என்ன தான் பிரச்சனை என்பது புரியாமல் பதிலை எதிர்நோக்கி அவனையே பார்த்திருந்தான் தேவா.

“சரி நானே சொல்லிடுறேன்!! நீ நேத்து நைட் ஒரு கேஸ் கொடுத்தல்ல அதை என்னால பண்ண முடியாது டா., அதனால் தான் உன்னை அவாய்ட் பண்ணிணேன் போதுமா” என உண்மையை ஒத்துக்கொண்டான் வீரா.

“ஏன்டா அதை உன்னால பண்ண முடியாது..?”

“தியாவை பார்க்குறதுக்கு முன்னாடி ப்ரீ மெரிட்டல் செக் பண்ண சொன்ன ஓகே தான். ஆனால் இப்போ நீ தியாவை பார்த்திட்ட, அவங்களைப் பிடிச்சிருக்குன்னு பெரியவங்க முன்னாடி சொல்லிட்ட, அவங்களுக்கும் உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க, ஃப்ரீ மெரிட்டல் செக் பண்ணி அதில் எதாவது தப்பா இருந்தால் அது நல்லா இருக்காதுல டா தேவா”

“டேய் வீரா! நீயா இதெல்லாம் பேசுற?? இது தானடா உன் தொழில் மறந்துட்டீயா? எதுக்காக நீ இவ்வளவு எமோஷ்னல் ஆகுற..?” எனப் புரியாது கேள்விகளை அடுக்கினான் தேவா.

“நான் சொல்றது உனக்குப் புரியலை தேவா” என்றான்.

“தியாவுக்கு எதாவது பாஸ்ட் இருக்கான்னு தெரிஞ்சிருக்கிறதில் என்ன தப்பு இருந்திட போகுது வீரா..? அதுக்காக நீ என்னை அவாய்ட் பண்ணுவீயா?? உன் மனசில இருக்கிறதை சொல்லி தான் தொலையேன்டா. நம்ம என்ன அப்படியா பழகியிருக்கோம்” எனத் தேவா கேட்ட கேள்விகள் வீராவை சுட்டது.

“அல்மோஸ்ட் மேரேஜ் கிட்ட வந்துட்டீங்க அதான் யோசிச்சேன்டா” என்றான்
வீரா.

“கல்யாண மேடையில் கூட நிண்ணு போன திருமணங்கள் இருக்குடா வீரா. நம்மக்குச் செட் ஆகுமா?? இல்லையான்னு தானே தெரிஞ்சிக்கப் போறோம். ஒருவேளை அவளுக்கு விருப்பம் இல்லாமல் இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தால்”

“எனக்கு அப்படியெல்லாம் தோணலைடா தேவா, இதெல்லாம் நேரடியா நீ தியாக்கிட்டயே கேட்டுக்கோயேன்”

“பைத்தியம் மாதிரி பேசுறடா வீரா, நான் நேரடியாய் கேட்டால் அவ என்ன பத்தி தப்ப நினைச்சிட மாட்டாளா..?”

“தியாவுக்கு ஸ்ட்ரைட் ஃபார்வெர்டா இருக்கிறது பிடிக்கும்டா” எனத் தன்னை மறந்து உளறியிருந்தான் வீரா.

“வாட்..? அதெப்படிடா உனக்குத் தெரியும்” அதிர்ந்தபடி தேவா கேட்க,
“இல்லைடா நிறையப் பொண்ணுங்களுக்கு இப்போலாம் ஸ்ட்ரைட் ஃபார்வர்டா இருக்கிற பசங்களைத் தான் பிடிச்சிருக்கா் ஒரு ஆய்வு சொல்லுதுடா.. வீமென் சைக்காலஜின்னு வச்சுக்கோயேன்”

“ஓ அப்படி ஒண்ணு இருக்குதோ?” ஆச்சரியமாய்க் கேட்டான் தேவா.

“பொண்ணுங்க கூடப் பழகி இருந்ததானே இதெல்லாம் உனக்குத் தெரியும்”
என வீரா தேவாவை பார்த்து நக்கலடிக்க,

“நீ கோ- எஜ்ஜூகேசன்ல காலேஜ் படிச்ச அதனால உனக்குப் பொண்ணுங்களைப் பத்தி தெரியுது. நாங்க அப்படியா?? எந்தப் பக்கம் பார்த்தாலும் பசங்க ஸ்டாஃப் கூட ஜென்ட்ஸ் தான்” என முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு சொன்ன தேவாவை பார்த்துச் சிரித்தான் வீரா.

“அதான் கல்யாணம் ஆகப் போகுதே, அப்பறம் என்னடா ஜாலியா இரு”

“ஆமாடா தியா என்னோட லைஃப்ல் டர்னிங் பாயிண்ட்டா இருப்பான்னு நினைக்கிறேன்.., அவளோட பேச்செல்லாம் அவ்வளவு தெளிவா மெட்சூரிட்டியோட பேசுறா” என்றான் தேவா.

“தியாக்கிட்ட பேசுனியா..?”

“ம்ம் டெய்லி நைட் கால் பண்ணுறா, வொர்க் பத்தி கேட்கிறா.? இன்னைக்கி தனியா மீட் பண்ணணும்னு வர சொல்லியிருக்கா, நீயும் வர்றீயாடா?” எனத் தேவா கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய் நண்பனை பார்த்தான் வீரா.

ரகசியமாய் தொடர்வோம்...

கமெண்ட்டு டப்பா:




 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் 6

ஐ ஃபவுன்டேசன்;

நண்பனிடம் தியாவை பார்க்க தான் வரவில்லை என்று சொல்லி விட்டு அவன் அடுத்ததாக அவன் வேலையைப் பார்க்க வந்திருந்தான். பாஸ்கரனின் அறையில் அவரின் வரவுக்காகக் காத்திருந்தான் வீரா.

அறை மணி நேர காத்திருப்பிற்குப் பின், பாஸ்கரன் அந்த அறைக்கு வந்தார். அவருடன் அவரின் உதவியாளரும் அங்கு வந்து சேர்ந்தார். வீராவை பார்த்தவுடன்,

“வாங்க வீரா!! நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கலை” என்றார் பாஸ்கரன்.

“வேலையெல்லாம் சரியாக நடக்குதான்னு பார்க்க வந்தேன்” என்றான் வீரா. அவன் நினைப்பது சரியாக நடந்தேற வேண்டும் என்ற உறுதி அவன் பார்வையில் தெரிந்தது.

அவனுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும்.

தொழில் என வந்து விட்டால் அவன் நினைத்ததை நடத்திக் காட்டாமல் விட மாட்டான். அதுவும் இந்தக் கண் மருத்துவமனையின் வழக்கு அவனுக்குள் ஒரு வேகத்தைக் கொடுத்திருந்தது.

“நீங்க சொன்னது போல் எல்லா ஏற்பாடையும் பண்ணியாச்சு, நாளைக்கு நம்ம ஐ ஃபவுன்டேசன்ல டெக் ஃபெஸ்ட் (tech fest) நடக்கப் போகுது” என அவர் உறுதியாய் சொன்னார்.

“ஓகே!! மத்ததெல்லாம் நம்ம பசங்க பார்த்துப்பாங்க, ஃபெஸ்ட் நடக்கப் போற கம்பட்டீசன், அப்பறம் அதோட ரிசல்ட்ஸ் வச்சு தான் நம்ம குற்றவாளியை நெருங்க போறோம்” எனச் சொன்ன வீராவை பார்த்து அதிர்ந்து விழித்தார் பாஸ்கரன்.

“என்ன சொல்லுறீங்க வீரா, அதெப்படி குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்”

“அதெல்லாம் ரிசல்ட் வந்ததுக்கு அப்பறம் தெரியும், அப்பறம் ஃபெஸ்ட் நடக்கும் போது நான் இங்கு வரமாட்டேன், இது ஒரு சாதாரணக் கம்படீசன் மாதிரி தான் எம்ப்ளாயர்ஸ்கு தெரியணும், அதில் மட்டும் கொஞ்சம் கவனமா பார்த்துகங்க” எனச் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு அந்த மருத்துவமனையில் இருந்து கிளம்பி வெளியே வந்தான். தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

கேண்டீனில் தேநீர் அருந்த தோன்றினாலும், எங்கே தியாவை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுமோ என நினைத்து நொடி கூடத் தாமதிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

அவள் விட்டு சென்று விட்டாள், அவளுக்கான புதிய வாழ்க்கையைத் துவங்க போகிறாள். தான் அதற்குக் குறுக்கே நிற்க கூடாது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். தியாவை பற்றித் தேவா பேசும் போது அவன் கண்களில் தேங்கி இருக்கும் காதலை நண்பனாய் இருந்து அவனால் உணர முடிந்தது.

தன்னுடைய சுயநலத்திற்க்காக தேவாவின் வாழ்க்கையை அவன் அழிக்க நினைக்கவில்லை, ஆனால் தியா அனைத்து முடிவுகளையும் எளிதாய் எடுப்பதைத் தான் வீராவால் ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை. எப்படி இவள் தன்னை மறந்து கடந்து சென்றாள். என்ற யோசனையிலே சாலையில் காரை இயக்கி கொண்டிருந்தான்.

அப்போது அவனுக்குத் தேவாவிடம் இருந்து அழைப்பு வந்தது. காரை இயக்கிய படி அவனுடைய அழைப்பை ஏற்றான், காதில் ப்ளூ டுத் மாட்டியிருந்ததால் தேவாவிடம் காரை இயக்கிக் கொண்டே அவனால் பேசமுடிந்தது.

“வீரா!! வீரா!!” நண்பனின் அலறல் சத்தம் தான் அவன் செவிகளில் வந்து விழுந்தது.

“டேய் தேவா!! என்னடா ஆச்சு” எனப் பதறியவன் வாகனத்தை ஓரமாய் நிறுத்தினான்.

“வீரா!! நான் பேசுறது கேட்குதா டா??” ஹீனமான குரலில் அவன் குரல் கேட்க பதறினான் வீரா.

“டேய் தேவா!! என்னடா ஆச்சு பொறுமையாய் சொல்லு”

“யாரோ என்னை ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்கடா யாருன்னு தெரியலை”

“நீ இப்போ எங்கே இருக்க, நான் என்னோட கார்ல தான் இருக்கேன் ரொம்ப நேரமா ஒரு ப்ளாக் கலர் கார் என்னை ஃபாலோ பண்ணிட்டு வருது.”

“காரோட நம்பர் பார்த்தீயா”

“ஃபார் ரெஜிஸ்ட்ரேசன் போட்டிருக்குடா”

“இப்போ நீ எந்த ஏரியால இருக்க..??” என அவசரமாய்க் கேட்டான் வீரா.

“ஈஸ்ட் தாம்பரம்”

“உடனே பக்கத்தில் இருக்கப் போலீஸ் ஸ்டேசன் போ, நான் உடனே வர்றேன்” என்றான் வீரா.

“சரிடா” என அழைப்பை துண்டிருந்தான் தேவா.
தேவாவின் தொழிலை பொறுத்தவரை அவனுக்கு எதிரிகள் அதிகம், இதே போல் நிறைய முறை நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் வீரா தான் அதன் பின் இருக்கும் எதிரிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறான். தன் நண்பனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்ற பயமும் பதற்றமும் ஒன்றிணைய, வாகனத்தை வேகமாக இயக்கினான் வீரா.

பதற்றத்தில் உடனே ஆதிக்கு அழைப்பு விடுத்தான் வீரா. நண்பனின் உயிர் அவனுக்கு முக்கியமல்லவா. கல்லூரி காலத்திற்குப் பின் தொழில் ரீதியாய் நண்பனாக வந்த ஒருவன் தான் தேவா. மற்றவர்கள் எல்லாம் அவனுக்கு நெருக்கம் கிடையாது. ஆனால் தேவா வீராவின் கடினமான காலங்களிலும் உறுதுணையாய் நின்றவன்.

“ஆதி ஸ்பீக்கிங்” சார் என்ற குரல் செவிமடலில் கேட்க,

“ஆதி எங்கே இருக்க..??”

“சார் வீட்ல” என்றான்.

“ஓ ஷிட்!!” எனத் தலையில் அடித்துக்கொண்டான் வீரா.

“என்னாச்சு சார் எதாவது பிரச்சனையா..?”

“ஆமாம் தேவாவுக்கு ஒரு ப்ராபளம்” என்றான் வீரா.

“தேவா சாருக்கா??”

“ஆமாம், தேவாவை யாரோ கருப்பு கார்ல ஃபாலோ பண்ணுறாங்களாம்” என்றான் அவசரமாக.

“எந்த ஏரியா சார்” எனத் துரிதமாய்க் கேட்டான் ஆதி.

“ஈஸ்ட் தாம்பரம்” என அவன் சொன்ன நொடியில்,

“சார் நான் அங்கே தான் இருக்கேன் அங்கே தான் என்னோட வீடு” என அவன் பதில் கொடுக்க, அவசரத்தில் இதை யோசிக்காமல் விட்டுவிட்டோமே என்று இருந்தது வீராவிற்கு.

“ஓகே!! ஈஸ்ட் தாம்பரம் போலீஸ் ஸ்டேசன்கு தான் தேவாவை போகச் சொல்லியிருக்கேன், நான் வர்றதுக்கு டென் மினிட்ஸ் ஆகும், உன்னால முடிஞ்சுதுன்னா கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி போ” என வீராவின் கட்டளையை ஏற்று ஆதியும் காவல் நிலையத்திற்குப் புறப்பட்டிருந்தான்.

சில நொடிகள் கடந்த பின்னும் ஆதியிடம் இருந்தும் அழைப்பு வரவில்லை, தேவாவிடம் இருந்து அழைப்பு வராத காரணத்தினால். வாகனத்தை இயக்கிய படி தேவாவிற்கும், வீராவிற்கும், மாற்றி மாற்றி அழைத்து முயற்சி செய்தான் ஆனால் இருவரும் அழைப்பை ஏற்கவில்லை.

வீராவின் மனதில் சலனம் ஏற்பட்டது, நேரத்திற்கு ஏற்றாற் போல் வாகன நெரிசல் வேறு. அவன் வேகத்தைக் குறைத்துத் தாமதப்படுத்த, தன் உயிர் தோழனுக்கு எதுவும் நேர்ந்து விட்டதோ என்ற சலனம் பயமாய் உருவெடுத்த நேரம். கிழக்கு தாம்பரத்தின் காவல் நிலையத்தின் முன் காரை நிறுத்திவிட்டு, காவல் நிலையத்திற்குள் நுழையச் சென்றவனை வலிய கரம் ஒன்று பற்றி இழுத்து தன் புறம் இழுத்தது

அது அவனின் உயிர் நண்பன் தேவா தான், முதலில் அவனுக்கு ஏதும் ஆகிவிட்டதா எனப் பயந்து போனவன், நண்பனை முழுவதுமாய் ஆராய்ந்தான்..

“தேவா!! உனக்கு ஒன்னும் இல்லையே..? எந்தக் குரூப்டா அவன் எதாவது டீடெயில் தெரிஞ்சுதா..? கார் நம்பர் நோட் பண்ணீயா” அதீத பதற்றத்தில் கேட்டான் வீரா. நண்பன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான் தேவா.

“தேவா!! என்னடா சிரிக்கிற??” சற்றுக் கோபமாகக் கேட்டான்.

“அது ஒன்னும் இல்லைடா!! உன்னை இங்கே வர வைக்கிறதுக்குத் தான் சின்னப் பொய் சொல்லிட்டேன்” என மீண்டும் சிரித்தவனைப் பார்த்துக் கோபம் தான் வந்தது வீராவிற்கு.

“டேய் தேவா!! பொய் சொன்னீயா?? உன்னை நம்பி ஆதியை வேற இங்கே வரச் சொல்லியிருந்தேன்” எனப் புலம்பினான் வீரா.

“கவலைப்படாதே அவனும் இங்கே தான் இருக்கிறான்” எனச் சொல்லியவன்,

“ஆதி!!” என அழைக்க, அருகில் இருந்த தேநீர் கடையில் நின்றபடி சிகரெட்டை வாயில் வைத்துப் புகை விட்டுக்கொண்டிருந்தவன், வீராவை பார்த்தவுடன், பாதிச் சிகரெட்டை புகைக்காமல் கீழே போட்டு விட்டு ஷூ காலால் மிதித்தவன், ஓடி வந்தான்.

“டேய் நீயும் ஏன்டா போன் எடுக்கலை” வீரா கோபம் கொண்டான்.

“சார்!! தேவா சார் தான் போனை வாங்கி வச்சிட்டு தர மாட்டேன்டாரு. அதனால் தான்” எனத் தலையைச் சொறிந்தான் ஆதி.

“டேய் தேவா எதுக்கு டா இதெல்லாம் பண்ணிட்டு இருக்க..? எவ்வளவு முக்கியமான வேலை இருக்கு தெரியுமா??”

“என்னை விட உனக்கு முக்கியமான வேலையாடா??” எனத் தேவா கேட்ட கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றான் வீரா. ஆம் முக்கியமான வேலையில் இருந்தாலும், அவன் எப்போதும் தன் நண்பனுக்கு முதலிடம் கொடுத்து, வேலையாட்களிடம் வேலையை கொடுத்து விட்டு வருவது வழக்கம்.

“சரி என்ன விசயம் சொல்லு..?” வீரா கேட்க,

“தியாவை மீட் பண்ணுறதுக்கு நீயும் கூட வரணும்”என தேவா சொன்னவுடன் வீராவின் முகம் மாறியது, அதை அங்கு நின்றுக்கொண்டிருந்த ஆதியும் குறிப்பெடுத்துக்கொண்டான்.

“அதுக்காகவா இப்படிப் பண்ணின??” இறுக்கமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் வீரா.

“நான் முதலிலே கூப்பிட்டேன், நீ தான் வரமாட்டேன்னு சொன்னீயே, எனக்கு எதாவது ஆபத்துனா வருவன்னு தான் இப்படி ஒரு ப்ளான்” எனச் சிரிக்கும் நண்பனிடம் எப்படிச் சொல்வது, தியா தன் முன்னாள் காதலி என்பதை, தியாவை பார்க்க கூடாது என்று நினைத்தால் தானே , வரவில்லை எனச் சொல்லியிருந்தான். இவன் புரிந்துக் கொள்ளவே மாட்டானா?? என்ற எண்ணங்கள் எல்லாம் மனதில் ஓட நண்பனை ஏறிட்டான்.

“இதோ பாரு தேவா!! இது உன்னோட லைஃப் புரிஞ்சுக்கோ” என்றான் நிதானமாய்.

“அதெல்லாம் எனக்குப் புரியுதுடா, தியாவை பார்த்து பேசவே தயக்கமா இருக்கு, நீ இருந்தால் நல்ல சப்போர்ட்டா இருக்கும்” எனத் தேவா சொல்வதைக் கேட்டு ஆதி சிரித்துவிட்டான். அவன் சிரிப்பதை பார்த்து தேவாவுக்கு கோபம் வந்தது. இது அவனுக்கு சம்மந்தம் இல்லாத விசயம், உடனே அங்கிருந்து அவனை அகற்ற நினைத்தான் தேவா.

“ஆதி!! நீ வீராவோட கார் எடுத்திட்டு புறப்படு, வீராவை நான் ட்ராப் பண்ணிக்கிறேன்” எனச் சொன்ன தேவா, வலுகட்டயாமாக வீராவின் கார் சாவியைப் பிடுங்கி ஆதியிடம் கொடுத்துவிட, ஆதி வீராவின் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருந்தான். வீராவோ வாயடைத்து நின்றான். அவன் நண்பனை எதிர்த்து அவனால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

தியாவை பற்றிய உண்மைகளைச் சொல்வதற்கும் இந்த நட்பு தான் தடையாய் இருக்கிறது., எங்கே நண்பன் உடைந்து விடுவானோ என்ற பயம் தான் வீராவை எதுவும் செய்ய விடாமல் தடுத்திருந்தது.

“என்ன பார்க்கிற வீரா,இப்போ நீ என் கூட வந்து தான் ஆகணும். வா என் கார்ல போவோம்” என அவனைத் தன் காரில் அழைத்துச் சென்றான்.

“தேவா!! நான் கார்லையே இருந்துக்கிறேன், நீ தியாக்கிட்ட பேசிட்டு வா” என்றான் வீரா. காரை இயக்கி கொண்டிருந்த தேவா, நண்பனை பார்த்து முறைத்தான்.

“இதோ பாரு வீரா!! தியா என்கிட்ட எதோ உண்மையைச் சொல்லணும்ன்னு தான் வர சொல்லியிருக்கா, ஸ்பாட்ல நீ இருந்தால் உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணி நான் முடிவெடுத்துப்பேன், அதுக்காகத் தான் உன்னைக் கூட்டிட்டு போறேன், பேசாமல் அமைதியா வா” எனச் சொன்னவன் சாலையைப் பார்த்துக் வாகனத்தை இயக்கி கொண்டிருந்தான்.

*********

மாலை நேரம் சாலை ஓரம், தென்றல் அவளின் கார்குழலை தீண்ட, வெந்நிற சிஃப்பான் புடவையில், தலைத் தாழ்த்தி நடந்து வந்த தேவதையைப் பார்த்து நின்றான் வீரா. மேகங்கள் மாலை நிற வெய்யோனை மறைத்திருக்க, மழை வரும் அறிகுறியை சொல்லாமல் சொல்லியது, காற்று சீற பாய்ந்து மேகங்களை வேறு திசையில் திருப்பிக்கொண்டிருந்தது. அவள் நனைந்து விடக்கூடாது என மழையும் பூமியை நனைக்க மறுத்துவிட்டதோ என்னவோ? மேகங்கள் கலைந்து வேறுதிசையில் சென்று விட, அவள் வரவில் இந்த இடமே வெளிச்சம் பெற்றது.

“ஹாய்..” எனக் கையசைத்தவனைப் பார்த்தவளின் விழிகள் அவனருகில் நின்றிருந்தவனைப் பார்த்து முறைத்தது. அவனை யாரோ போல் கடந்தவள், தேவாவின் கரம் பற்றி இழுத்து காஃபி ஷாப்பிற்க்குள் அழைத்துச் சென்றாள். அவள் உரிமையாய் கரம் பற்றி இழுத்து செல்வதைத் தேவாவின் மனம் ரசித்தது.

இதுவரை பெண்களின் ஸ்பரிசமே தீண்டாதவனின் மனதிற்கு, அவளின் தீண்டல் இதம் கொடுக்க,அதை அனு அனுவாய் அனுபவித்தான் தேவா.

“உங்களை மட்டும் தானே வரச் சொன்னேன் தேவ்” என அவன் காதுகளில் கிசுகிசுத்தாள் தியா. அலைப்பேசியில் பேசிப் பழகி தேவா, செல்லமாகத் தேவ் ஆகி போயிருந்தான் தியாவிற்கு.

“ஹே தியா அவன் வரமாட்டேன்னு தான் சொன்னான் நான் தான் கூட்டிட்டு வந்தேன்” என அவன் பதில் கொடுத்தான்.

“நீங்க என்ன சின்னக் குழந்தையா தேவ்? ஃப்ரெண்ட்ஷிப்பா இருந்தாலும் நம்ம பர்சனலா பேசுற இடத்தில் உங்க ஃப்ரெண்ட் எதுக்கு..? நீங்க தான் வரச் சொன்னீங்கனா அவரும் பல்லைக் காட்டிட்டு வந்திடுவாரா?” எனச் சற்று கோபமாகவே கேட்டாள் தியா.

“ஹே தியா!! அப்படிலாம் பேசாதே, அவனோட வேலையெல்லாம் விட்டுட்டு நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக வந்திருக்கான்” என வீராவுக்குப் பரிந்து பேசினான் தேவா.

அவள் தேவாவின் கரம் கோர்த்திருப்பதையும், அவன் தோலுரசி நடந்து செல்லும் பாவை பெண்ணவளை ஏக்கமாய்ப் பார்த்துக்கொண்டிருந்ததான் வீரா. தான் இங்கு வந்திருக்கவே கூடாது என மனம் வருந்தி நின்றிருந்தவனை மேலும் நோகடித்தது. அவனின் காது பட அவள் பேசிய வார்த்தைகள்.
அவனைத் தாண்டி தூரத்தில் நின்ற நண்பனை

“தேவா!” என அழைத்தான்.

“பார்த்திங்களா தேவ்!! இதுக்குத் தான் சொன்னேன் உங்க கிட்ட மனசு விட்டு பேசலாம்ன்னு வந்தேன். இப்போ பாருங்க இவரு பூஜைக்கு நடுவில கரடி மாதிரி, போங்க உங்க ஃப்ரெண்ட் கூப்பிடுறார்ல என்னன்னு கேட்டுட்டு வாங்க” எனக் கோபமாய் மொழிந்தாள்.

“சாரி தியா!!” எனச் சொன்ன தேவாவோ நண்பனை நோக்கி ஓடி வந்தான்.

“மச்சி சாரிடா” என வீராவிடம் மன்னிப்பு வேண்டினான் தேவா..

“ச்சீ சீ அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, மீட்டிங் இருக்குன்னு ஆதி கூப்பிட்டான் நான் போய்ப் பார்த்திட்டு வந்திடுறேன்” என அங்கிருந்து புறப்படுவதே சரியாக இருக்கும் என முடிவெடுத்துச் சொன்னான் வீரா. தேவா கட்டாயப் படுத்தித் தான் வீராவை அழைத்து வந்திருந்தான்.

“நீ ஒன்னும் போக வேண்டாம். இல்லாத போன் வந்தாதா பொய் சொல்லுறீயாடா வீரா வாடா” எனத் தன் நண்பனின் கரம்பற்றித் தன்னோடு அழைத்து வரும் தேவாவை பார்த்து தியாவின் முகம் சுருங்கி போனது. அவனின் இருப்பு தியாவுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த வீராவோ..?

“டேய் தேவா!! சொல்றதைக் கேளுடா, இது உன்னோட பர்சனல், ஸ்பெசலான மொமன்ட்டா என்னைக் கூட வச்சிட்டு வேஸ்ட் பண்ணாதேடா, நான் கார்ல வெயிட் பண்ணுறேன்” என அவனைக் கட்டியணைத்து சொன்னான்.சரி என்பது போல் தலையாட்டிச் சென்றான் தேவா. தன் நண்பனின் முகம் வாடி போனதை தேவாவால் உணர முடிந்தது.

கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு அந்தக் காஃபி ஷாப்பினுள் தேவாவும், தியாவும் நுழைந்தனர். அவள் மனம் திறந்து பேச தான் அவனை அங்கு வரவழைத்திருந்தாள். அவள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி முடித்து நிமிர்ந்தாள்.

“தேவ்!!” என அவள் அழைக்க,

“இதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு பாஸ்ட் இருந்திருக்கு,அவ்வளவு தானே” என்றான் தேவா.

“ஆமாம், மியூட்சுவலா லவ் பண்ணிணோம், மியூட்டசுவலாவே பிரிஞ்சிட்டோம்” என்றாள் தியா. தேவா பதிலேதும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான்..

“நான் உங்களை ஏமாற்றிக் கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கலை, என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்டு, அதுக்கு அப்பறமும் நீங்க ஓகே சொன்னால், நம்ம இதைத் தொடரலாம் இல்லைனா நோ பராப்ளம், நான் வீட்ல பேசிக்கிறேன் கல்யாணத்தை நிறுத்திடலாம்” என அவள் என்னவோ எளிதாய் சொல்லிவிட்டாள், அவன் முகம் மாறுவதை உணராத பேதைப் பெண்ணோ அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“இதை ஏன் முன்னாடியே சொல்லலை??” எனத் தேவா கேட்ட கேள்வியில் அவள் தொக்கி நின்றாள், அவளால் அதற்குப் பதில் கூற முடியவில்லை,

“அன்னைக்கி ஹாஸ்பிட்டல்ல முதல் முறை பார்த்தோமே அப்பவே சொல்லியிருக்கலாமே” என மீண்டும் அவன் கேட்க, அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“பேசுங்க தியா!! வீரா என் கூட வந்ததுக்கு அவ்வளவு கோப பட்டீங்க?? நான் இதைப் பத்தி என் ஃப்ரெண்ட் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்” என இருக்கையில் இருந்து வேகமாய் எழுந்தான்.

“தேவ்!!” என அவள் அழைக்க,

“நீங்க தேவா ன்னு கூப்பிடலாம்”
“எனக்குப் பாஸ்ட் இருக்கிறது உங்களோட பிரச்சனையா?? இல்லை உங்க ஃப்ரெண்ட்க்கிட்ட கோப பட்டது பிரச்சனையா?” எனத் தியா கேட்ட கேள்வியில் மீண்டும் இருக்கையில் அமர்ந்தவன்.

“அவன் ஒகே சொன்னால் தான், நம்ம கல்யாணமே நடக்கும், ஹீ இஸ் எ ட்ரூ ஃப்ரெண்ட் ஆஃப் மைன், பிஸ்னஸ்ல இருந்து பர்சனல் லைஃப் வரைக்கும், அவன் தான் என்னோட வழிகாட்டி, புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்” எனச் சொல்லி நகர்ந்தவனை,

“தேவ்!!” என மீண்டும் அழைத்தாள்,

“சொல்லுங்க தியா!!” என்றான்.

“ஐ யெம் சாரி” எனச் சொல்லி எழுந்தவள் கண்ணாடி கதவை திறந்து கொண்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.. அவள் கோபமாய் நடந்து செல்வதை காரில் அமர்ந்த படி பார்த்துக்கொண்டிருந்தான் அவளின்.

காலங்கள் கரைந்தோடினாலும்,
முதல் காதல் என்றும்..
முடிவில்லா காதல்..


ரகசியமாய் தொடர்வோம்..

லேட்டா யூடி போட்டதுக்கு மன்னிச்சிருங்க செல்லம்ஸ், பக்கத்து தெருவில் மாதா கோவில் திருவிழா நேற்று தான் மைக் செட்டை கழட்டினாங்க. நானும் மைக் செட்டோட சேர்ந்து நிரந்தரம் பாட்டு பாடிட்டு இருந்ததால் எழுத முடியலை மன்னிச்சு பேபிஸ்.. தொடர்ந்து கதையை படித்து கருத்துகளை தெரிவிக்கும் நட்பூக்களுக்கும்.. சைலண்ட் ரீடர்ஸ்க்கும் நன்றிகள்..

கமெண்ட்டு டப்பா:


 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் 7

இரவின் துவக்கத்தில் இருந்தது சென்னை மாநகரம். ஆகாயத் தேவதை முழுப் பௌர்ணமியாய் வானை வலம் வந்துக் கொண்டிருந்தாள். மின் விளக்கின் ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது அந்த அடுக்கு மாடி குடியிருப்பு. அதன் ஏழாவது தளத்தில் இருந்த எஸ் செவனின் பால்கனியில், கையில் மது பாட்டிலுடன் மனதில் ரணத்துடன் நின்றிருந்தான் தேவா. அவன் அதீத போதையில் இருக்கிறான் என்பதற்குச் சாட்சியாய் மதுபாட்டில்கள் கீழே உருண்டு கொண்டிருந்தது.

“டேய் தேவா போதும் டா” என அவன் கையில் இருந்த பாதி மது பாட்டிலை பிடுங்கும் முயற்சியில் இருந்தான் நண்பன் வீரா.

“அவளுக்கு எவ்வளவு திமிரு பார்த்தியா டா??” சொன்னதையே திரும்பத் திரும்பக் கேட்டுச் சலித்துப் போயிருந்தான் வீரா.

“நீ சொல்றதும் சரி தான்டா எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்டா தேவா!!”

“அப்போ என்னைக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லுறீயா மச்சான்” எனக் குழந்தை போல் கேட்பவனைப் பார்த்துப் பாவமாக இருந்தது வீராவுக்கு. இது வரை தேவா குடித்ததும் இல்லை, எந்தப் பெண்களிடமும் பழகியதும் இல்லை. ஆனால் இன்று தியாவால் இப்படிக் குடித்துக் கொண்டிருக்கிறான் என்பதே வீராவுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

“அவ யாருடா..? நம்ம ஃப்ரெண்ட்ஷிப் பத்தி பேசுறதுக்கு, நீ அவளைப் பத்தி பேக்ரவுண்டலாம் செக் பண்ண வேண்டாம், அவளோட கேரக்டர் தான் காஃபி ஷாப் மீட்டிங்கலையே தெரிஞ்சிடுச்சே” என ஆவேசமாய்க் கோபம் கொண்டவன் மீதம் இருந்த மதுவையும் தொண்டைக்குள் சரித்தான்.

“தேவா! நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா” என அவனை வரவேற்பறைக்குள் இழுத்து வந்து சோபாவில் அமரச் செய்தான்.

“நான் இப்போ என்ன சொன்னாலும் உனக்குப் புரிய போறது இல்லை, இந்தப் பிரச்சனையை நான் சரி பண்ணுறேன் உனக்காக” என உறுதியாகச் சொன்னான் வீரா.

“வேண்டாம் மச்சான், நீ என் கூட இருக்கக் கூடாது நினைக்கிறவ எனக்குத் தேவையே இல்லைடா, தியா என்ன உலக அழகியா?? வீட்டில சொல்லி வேற பொண்ணை உடனே பார்க்க சொல்றேன்” எனத் தன் அலைப்பேசியை எடுத்து தன் தந்தைக்கு அழைப்பெடுக்க முயன்றவனின் கையில் இருந்த அலைப்பேசியைப் பறித்திருந்தான் வீரா.

வீராவுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது தியா அப்படி நடந்துக்கொள்ளக் காரணம் அவன் தான் என்று, இதுவரை எந்தப் பெண்ணையும் நினைத்து புலம்பாத நண்பன் தியாவை நினைத்துப் புலம்பிக்கொண்டிருக்கிறான். அவன் மனதில் காதல் துளிர் விட்டிருக்கோமா? என்ற எண்ணமும் தோன்ற, தியாவிடம் பேசி இதைச் சரி செய்தாக வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டான். வீரா தங்கி இருக்கும் வீட்டிலே அன்று தேவா உறங்கி போனான். நண்பனை அவனின் படுக்கையில் கிடத்தி விட்டு, பால்கனியில் வந்து நின்றான் வீரா.

இதமான தென்றல் காற்று அவன் மேனியில் படர, வானத்து நிலாவில் கூடத் தியாவின் முகம் ஒரு முறை வந்து போனது. அவளைக் காதலித்தது என்னவோ உண்மை தான், ஆனால் இப்போது அப்படி இல்லையே, அவளுடைய நினைவுகள் அவனை விட்டு விலக மறுத்தது. மெல்ல நிதானித்தான். நடந்தேறிக்கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தான் ஒரு முற்று புள்ளியை வைக்க முடியும் என நம்பிக்கை ஏற்பட்டது.

தன்னுடைய ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு தியாவை பற்றி யோசித்தான். அவள் மிகவும் நல்லவள் தான்.. அவள் அவனை எளிதாகக் கடந்து சென்று விட்டாள் அவ்வளவு தான். இருவரும் பேசி முடிவு செய்து தானே பிரிவை தேர்ந்தெடுத்தோம், இப்போது அவளை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பது தவறு எனத் தோன்றியது வீராவுக்கு.

இப்போது அவன் மனதில் பிறந்த தெளிவுடன் அறைக்குள் நுழைந்தான்.

“தியா!!! ஐ லவ் யூ சோ மச்” என்ற தேவாவின் உளறலே சொல்லாமல் சொல்லியது. அவனுக்குத் தியா மீது காதல் அரும்பி விட்டது. அதே நேரம் தேவாவின் செல்பேசியில் தியா காலிங் என வர, அதைச் சின்னப் புன்னகையுடன் கடந்து சென்ற வீரா. சோபாவின் படுத்துக்கொண்டான்.

இந்த இரவு நீண்டுக்கொண்டே போனது, விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் வீரா.

*************

ஐ ஃபுவுன்டேசன்:

அன்று மருத்துவமனைக்கு விடுமுறை தெரிவிக்கபட்டிருந்தது.. எப்போதும் இப்படிச் செய்வதில்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு டெக் ஃபெஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவசர சிகிச்சைக்காகச் சில மருத்துவர்களும், கண் வங்கியில் உள்ள ஊழியர்கள் மட்டும் அன்று அவர்களின் பணிகளைச் செய்துக்கொண்டிருந்தனர்.

தியா தன் ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மெல்ல நடந்து வந்தாள். கருப்பு நிற புடவையில் அழகாய் மிளிர்ந்தாள் அவள், அதற்கேற்ற ஒப்பனைகளுடன் அவள் நடந்து வர,

“வாவ்!!! அழகா இருக்கடி தியா” என வாய் பிளந்தாள் ஷைனி,

“நீயும் அழகா தான்டி இருக்க” எனப் பதில் கொடுத்தாள், அவர்கள் குழுவில் அனைவரும் கருப்பு நிற உடையில் வந்திருந்தார்கள், ஷைனியை தொடர்ந்து லேகா,ஸ்ருதியும் வர இந்த இடமே நண்பர்களின் ஆர்பாட்டத்தோடு கலைக்கட்ட ஆரம்பித்தது.

பேச்சும் சிரிப்பும் இணைந்து நால்வரும் பேசிக்கொண்டிருந்த வேளையில், அவர்களை நோக்கி அங்கயற்கண்ணி வந்தார்.

“என்னடி இது நம்ம டிப்பார்ட்மெண்ட்க்கு ப்ளாக் தானே ட்ரேஸ் கோட், இது என்ன மாரியம்மன் கோவிலுக்குக் கூல் ஊத்துற மாதிரி வந்திருக்கு” தியாவின் செவியில் கிசுகிசுத்தாள் லேகா.

“சும்மா இருடி” எனச் சிரிப்பை உதட்டிற்குள் மறைத்தவள்,

“குட் மார்னிங் மேம்” என அங்கயற்கண்ணி யை பார்த்து சொல்ல, மற்ற மூவரும் கோரஸாக “குட் மார்னிங் மேம்” என ராகம் பாடி சொல்ல,

“ஷட் அப்!! என்ன எலிமென்ட்ரி ஸ்கூல் பசங்க மாதிரி பிகெவ் பண்ணுறீங்க இடியட்ஸ்” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார் அங்கயற்கண்ணி

“சாரி மேடம்” என மற்ற மூவரும் கோரஸாக மீண்டும் ராகம் பாட, தியா மட்டும் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.

“நல்லா சிரி தியா!! ஏற்கனவே டிப்பார்ட்மெண்ட் மானம் காத்துல பறக்குது, இதிலை நீ நல்லா சிரி” என ஏற்கனவே அவள் மேல் இருக்கும் கோபத்தைத் திட்டி தீர்த்துக்கொண்டார் அங்கயற்கண்ணி,

“இதோ பாருங்க, இது வரைக்கும் ஐ ஃப்வுன்டேசன்ல இந்த மாதிரி டெக் காம்படீசன்லாம் வச்சதே இல்லை, வின் பண்ணுறவங்களுக்குப் பெனிபிட்ஸ் நிறைய இருக்குதாம், நம்ம டிப்பார்ட்மெண்ட்ல யாரெல்லாம் கலந்துக்கப் போறீங்க” என அவர் கேட்க,

“ஷைனியும் தியாவும் மேடம்” எனப் பதில் கொடுத்தாள் லேகா.

“தியாவா?? அவளுக்கெல்லாம் எதுவும் தெரியாது, ஸ்ருதி நீ கலந்துக்க” என அங்கயற்கண்ணி சொல்ல, ஸ்ருதியோ திருதிருவென விழித்தாள்.

“மேம்!! எனக்கு டெக்னிக்கலா எதுவும் தெரியாது, நான் ஜெஸ்ட் போன் கால் மட்டும் தான் மேம் அட்டன் பண்ணுவேன்” என நழுவினாள் ஸ்ருதி,

“லேகா நீ” லேகாவை கலந்து கொள்ளச் சொல்ல,

“மேம்!! தியா அளவுக்கு எனக்கு டெக்னிக்கல் நாலெட்ஜ் இல்லை மேம்” என மறுப்பு தெரிவித்தாள் லேகா,

“என்னமோ செய்ங்க டிபார்ட்மென்ட்க்கு கெட்ட பேர் மட்டும் வந்திடக் கூடாது” எனத் தியாவை முறைத்தபடி சொல்லி சென்றார் அங்கயற்கண்ணி.

“தியா!! அங்குக்கு உன் மேல இருக்கக் கோபம் இன்னும் போகலை போல” என்றாள் ஷைனி,

“கோபம் தானே இருந்திட்டு போகட்டும்” என எளிதாய் எடுத்துக்கொண்டாள் தியா.

“சரி வாங்க காம்படீசன் எங்க நடக்குதுன்னு பார்ப்போம்” என லேகா அனைவரையும் அழைக்க, அப்போது தியாவின் செல்பேசி சிணுங்கியது.
வெகுநாட்களுக்குப் பின் அவனிடம் இருந்து அழைப்பு, வீரா எனப் பதிவு செய்யபட்டிருந்த எண்ணை பார்த்தவுடன் பதற்றம் தொற்றிக்கொள்ள,

“நீங்க போங்கடி டென் மினிட்ஸ்ல நான் வந்திடுறேன்” எனத் தோழிகளை அனுப்பி விட்டு அழைப்பை ஏற்றாள்.

எதிர்முனையில் மௌனம் சாதித்தான் வீரா, அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க,

“சொல்லுங்க மிஸ்டர் வீரா!! தியா தான் பேசுறேன்” என்றாள் நக்கல் தொனிக்க.

“தியா!! சாரி ஃபார் எவ்ரிதிங்” என்ற பதில் அவனிடமிருந்து,

“இவன் மன்னிப்பு கேட்கிற ஆளா??” என்ற யோசனையுடன் அவள்,

“இல்லை புரியலை, எதுக்குச் சாரி”

“நேத்து அப்படி நடந்ததுக்குத் தேவாவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை” என்றான்.

“எனக்குத் தேவாவை பற்றி நல்லாவே தெரியும்., நீங்க சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம், இது எங்களோட முதல் சண்டை நிச்சயம் என் மனசில் இருந்து மறையாது, அதை எப்படிச் சரி செய்யணும்னு எனக்குத் தெரியும், நீங்க எங்களுக்கு நடுவில் இன்வால்வ் ஆகாமல் இருக்கிறது உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது” எனத் தியா தெளிவாகப் பேசினாள்.

“அதுக்கில்லை தியா!! நான் உன் கூடக் கொஞ்சம் பர்சனலா பேசணும்” என்றான் அவன்..

“ஈவ்னிங் மீட் பண்ணலாம், எனக்கு இப்போ வேலை இருக்கு” என அவசரமாய்ச் சொன்னவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.

‘எவ்வளவு திமிரா பேசுறா’ என அவளை நிந்தித்தபடி அலைப்பேசியைப் பார்த்திருந்தான் வீரா.

*******

பால்கனியில் நின்று அவளிடம் பேசி முடித்தவன், திரும்பிய போது அவனைப் பார்த்த படி அறைகுறை தூக்கத்துடன் டீசர்ட்டும் ஷாட்ஸுடன் நின்றிருந்தான் தேவா..

“டேய் வீரா!! இது யாரோட ட்ரெஸ்டா இவ்வளவு டைட்டா இருக்கு” என்றான் தேவா.

“என்னோடது தான் தேவா” அவன் பதில் கொடுத்தான்.

“ஆமா!! நான் வீட்டுக்கே போகலையா??”

“இப்போ வந்து கேளுடா?? உனக்குத் தான் அந்தப் பழக்கம் இல்லையே எதுக்காக அந்தக் கருமத்தை வாங்கிட்டு வந்த??”

“எதுடா?? என்ன வாங்கிட்டு வந்தேன்” என அவன் நேற்றிரவு நடந்தவற்றை மறந்தவனாகப் பேச,

“கொஞ்சம் கீழே பாருடா மச்சான்” என வீரா சொல்ல, காலி மது பாட்டில்கள் அவன் கண்களில் பட..

“ஓ மே காட் ஷிட்” எனத் தலையில் அடித்துக்கொண்டான் தேவா.

“நான் உன்கிட்ட என்னடா சொல்லிருக்கேன், உன்னைச் சுத்தி நிறைய ஆபத்து இருக்கு, நீ நிதானம் இல்லாமல் இருந்தன்னா என்ன ஆகுறது?? எவனாவது அட்டாகப் பண்ணியிருந்தானா என்ன பண்ணிருப்ப, இடியட்” எனக் கோபமாய்த் திட்டினான்.

“அதான் என் தோஸ்த்து நீ இருக்கல்லடா என்னைக் காப்பாத்த” என டீசர்ட்டில் இல்லாத காலரை அவன் தூக்கி விட்டான்.

“பைத்தியம் மாதிரி பேசாதே தேவா, அந்த ரத்தினம் உன்னைப் போட்டு தள்ளுரதுல குறியா இருக்கிறான். உனக்கு நான் சொல்றது புரியவே மாட்டேன்துடா தேவா”

“எனக்கு எதுவும் ஆகாதுடா வீரா பயப்படாதே” என்றான் தேவா.

“நேத்து நான் மட்டும் இல்லைனா ரோட்ல தான் குடிச்சிட்டு கிடந்திருப்ப, அப்படி என்னடா தியா மேல உனக்குக் கோபம்”

“தியா மேல எனக்குக் கோபமா?? அப்படியெல்லாம் இல்லைடா, அவளோட பாஸ்ட்டை இத்தனை நாள் சொல்லாமல் இப்போ வந்து சொல்றாளேன்னு வருத்தம் தான்” எனத் தயங்கி தயங்கி சொன்னான் தேவா..

“அது தான் காரணமா? பொய் சொல்லாதேடா தேவா, நைட் ஃபுல்லா உன்னோட உளறலையும் புலம்பலையும் கேட்டுட்டு தான் இருந்தேன், உனக்கு அவளை அவ்ளோ பிடிச்சிருக்கு டா அதான் உனக்குக் கோபம் வருது” என நண்பனிடம் எடுத்துச் சொன்னான் வீரா. தேவாவால் அதற்குப் பதிலே சொல்ல முடியவில்லை, தேவாவோ அமைதி காத்தான்.

“சரி நான் தியாக்கிட்ட பேசிக்கிறேன்” என மழுப்பலாய் பதில் சொல்லி ஆஃபீஸ் செல்வதாகச் சொல்லி அவன் புறப்பட்டு விட்டான். வீராவும் அவனுடைய டிடெக்டீவ் ஏஜென்ஸிக்குப் புறப்பட்டிருந்தான்.

**********

தன் அறைக்குள் நுழைந்த வீரா கணினியை உயிர்பித்தான். அப்போது கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தான் ஆதி.

“குட் மார்னிங் சார்” என வீராவை பார்த்துச் சொன்னான்.

“ம்ம் மார்னிங், ஐ ஃப்வுன்டேசன்ல சொன்ன மாதிரி எல்லாம் சரியா நடந்திட்டு இருக்குல??”

“ஆமாம் சார் எல்லமே சரியா நடந்திட்டு இருக்கு, நிச்சயம் நம்ம குற்றவாளியை கண்டுபிடிச்சிடலாம், ஹேக்கிங் தெரிஞ்சவங்க தான் இதைப் பண்ணியிருப்பாங்க சார், நம்ம வச்சிருக்கக் காம்படீசன்ல ஹேக்கிங் பண்ண தெரிஞ்சவன் அவனோட திறமையைக் காட்டி மாட்டுவான் சார்” என ஆதி சொன்னான்.

“ஓகே!! நம்ம பசங்களைக் காண்டெக்ட் பண்ணியா?? யாரும் மிஸ் ஆகக் கூடாது எல்லாரும் இந்தக் காம்படீசன்ல கலந்துக்கணும்” என்றான் வீரா.

“சார் ஒவ்வொரு டிப்பார்ட்மென்ட்லையும் ஆர்வம் இருக்கிற இரண்டு பேர் தான் கலந்துக்க போறாங்க”

“வாட்?? நான் என்ன சொன்னேன் என்ன பண்ணி வச்சிருக்கீங்க” எனக் கத்தினான் வீரா.

“சார் எல்லாருக்கும் இந்த ஃபீல்ட் தெரியணும்னு அவசியம் இல்லைல, அதுவும் கோடிங் சார்” என்றான் ஆதி.

“இடியட்!! அது எனக்குத் தெரியாதா?? தெரிஞ்சிக்கிட்டே தெரியாதுன்னு சொல்லி தப்பிக்கிற குற்றவாளியா இருந்தால் என்ன பண்ணுவ?? நான் கொடுத்திருக்க டாஸ்க்கை பார்த்திட்டு அந்த ஹேக்கரால சும்மா இருக்க முடியாது அவன் மாட்டுவான்” என வீரா சொல்லிக் கொண்டிருந்த போதே, அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் எனப் புரிந்தவனாய் ஐ ஃபவுன்டேசனில் இருக்கும் அவர்களின் ஆள்களுக்கு அழைப்பை விடுத்திருந்தான். அனைவரும் பங்கேற்றாக வேண்டும் என வீரா சொன்னதைப் பகிர்ந்து விட்டு வீராவை நிமிர்ந்து பார்த்தான் ஆதி.

“தெட்ஸ் குட் ஆதி” எனச் சொல்லி அவன் வேலையில் முழ்கி போனான்.

எப்படியும் ரிசல்ட் வருவதற்கு அந்தி சாய்ந்து விடும் என நினைத்துக் கொண்டிருந்தவனின் அலைப்பேசி சிணுங்கி தன் இருப்பைக் காட்டியது.

“சார்!! பேங்க்ல இருந்து பேசுறோம்” என்ற ஆணின் குரல் கேட்டவுடன்.

“சொல்லுங்க உங்க கால்க்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றான் வீரா.

“சார் உங்களுக்கு மெயில் அனுப்பியிருந்தோம் பார்த்தீங்களா??” என்றான் பணிவாய்.

“யா!! இப்போ தான் ரிசிவ் ஆகிருக்கு ஓப்பன் பண்ணிட்டு இருக்கேன் சொல்லுங்க”

“சார் நீங்க கொடுத்த அகௌண்ட் பத்தி டீடெயிலா மெயில்ல அனுப்பியிருக்கேன்.. அந்த அகௌண்ட் டெல்லியில இருக்கிற மணீஷ் பாண்டே அப்படின்ற பேர்ல ஓப்பன் ஆகிருக்கு, ட்ரன்ஸ்ஃபர் ஆன அமௌண்ட் இன்னும் அதே அகௌண்ட்ல இருக்கிறத அந்த ப்ராஞ்ச்ல இருந்து தகவல் கிடைச்சிருக்கு சார்” என வங்கி அதிகாரி சொல்ல,

“அந்த மணீஷ் பாண்டே பத்தின கேஓய்சி(kyc) டீடெயில் கண்டிப்பா உங்க ப்ராஞ்ச்ல இருக்கும்ல??” வீரா தீவிரமானன்.

“ஆமா சார்!! அந்தக் கஸ்டமரோட பான் கார்ட், ஆதார் டீடெயில்ஸ் அட்டாச் பண்ணியிருக்கேன் சார், காண்டெக்ட் நம்பர் கூடச் சேர்த்து அனுப்பியிருக்கிறேன்” என வங்கி அதிகாரி சொல்வதைக் கேட்டவுடன் இந்தக் கேஸில் பாதிக் கிணறை தாண்டி விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்தான் வீரா. ஆனால் இந்த வழக்கு அவனின் நிம்மதியை ஒட்டுமொத்தமாய்க் குலைக்கப் போகிறது என்பதை அறியாமல், ஐ ஃபவுன்டேசனில் இருந்து வர இருக்கும் அழைப்புக்காகக் காத்திருந்தான் வீரா. இரண்டு நாட்களில் இதை முடித்துத் தருவதாகச் சொல்லியதை முடிக்கப் போகிறோம் என்ற நிம்மதியுடன் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் வீரா.

அந்தி சாய்ந்தது நேரம் ஐந்தை காட்டியது, குட்டி போட்ட பூணைப் போல் அறையை அளவெடுத்து நடந்துக்கொண்டிருந்தான் வீரா. ஆதி விரைந்து ஓடி வருவதைக் கண்ணாடி கதவின் வழியே பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.

“சார்!! ரிசெல்ட் ரெடியாக இருக்கிறதாம், இப்போ நம்ம அங்கே போறது மட்டும் தான் வேலை” என்றான் ஆதி, ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் காரை எடுத்துக்கொண்டு ஆதியும் வீராவும் புறப்பட்டிருந்தனர். காரை இயக்கியபடி ஆதியை பார்த்தவன்,

“உனக்கு ஒரு மெயில் செண்ட் பண்ணியிருந்தேன் பார்த்தீயா?”

“பார்த்தேன் சார், அந்த மணீஷ் பாண்டேவை பத்தி டெல்லில இருக்கிற நம்ம பசங்களை விசாரிக்கச் சொல்லியிருக்கேன். விசாரிச்சிட்டுச் சொல்லுறதா சொல்லியிருக்காங்க” என்றான் ஆதி, என்ன தான் பதிவு செய்யப்பட்ட டிடெக்டீவ் ஏஜென்சியாக இருந்தாலும்,ஸ்லீப்பர் செல் போன்ற ஆள்களைப் பணியமர்த்திப் பார்ட் டைம் வேலை போல் செய்து வைத்திருக்கிறான் வீரா.

இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் எங்கு எதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்றாலும் ரிஸ்க் எடுத்து இறங்கிவிடுவான். முடிந்தவரை அவன் அந்த வேலையை முடிக்கப் பார்ப்பான் இல்லை என்றால், அங்குக் கல்வி பயிலும் மாணவர்கள், பார்ட் டைம் வேலை செய்பவர்களை வைத்து தகவலை பெற்றுக் கொள்வான்.

இருவரும் பேசியபடி ஐ ஃபவுன்டேசனின் கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு பாஸ்கரனின் அறையை நோக்கி இருவரும் விரைந்திருந்தனர்.வீராவின் வருகைக்காகக் காத்திருந்தவர் மடிக்கனிணியை எதிரே அமர்ந்திருந்த வீராவின் புறம் திருப்பினார்.

அதில் போட்டியில் கலந்து கொண்ட நபர்களின் ப்ரோக்ராம் மற்றும் கோடிங் தனித் தனியாக இருந்தது. அவுட்புட் சரியாக வந்த முதல் பத்து பேரின் ப்ரோக்ராமை நிதானமாய்க் கவனித்துப் பார்த்தான் வீரா.

“அந்தப் பத்து பேர் யாரு??” என்ற கேள்வியுடன் பாஸ்கரனை பார்க்க, அந்தப் பத்து பேரின் பெயரும் அச்சடிக்கப் பட்ட காகிதமாய் அவனிடம் ஒப்படைத்தார் பாஸ்கரன்.

வெற்றி பெற்றவர்களின் பெயர்களுடன் அவர்கள் வேலை செய்யும் பிரிவு என அனைத்தும் குறிப்பிடபட்டிருந்தது. அதிலிருந்த முதல் பெயரை பார்த்து வீராவுக்கு ஒரு குட்டி ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதைப் போல் ஓர் உணர்வு, மிதமாகத் தன் நெஞ்சை நீவியவன் தியாவின் பெயரை தொட்டு மெல்ல வருடினான்.

‘நிச்சயம் அவள் இதைச் செய்திருக்க மாட்டாள், அவள் பணத்திற்கு ஆசை படுபவள் அல்ல’ எனக் காதல் கொண்ட நெஞ்சம் கலங்கி சொல்ல,

‘அவள் செய்திருப்பாள், நிச்சயம் செய்திருப்பாள் உன்னைக் காதலித்து ஏமாற்றிச் சென்றவள், இதைச் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்??” எனக் கேள்வி எழுப்பியது அவனின் மூளை.

மனதிற்கும் மூளைக்கும் இடையே அல்லாடியவன்,

“இந்தப் பத்து பேரையும் நான் உடனே விசாரிக்கணும்” எனச் சொல்லிக் கொண்டிருந்த போதே, அவனுடைய அலைப்பேசி அலறியது. தியா காலிங் என்ற பெயரை பார்த்து முதல் முறை மன நடுக்கத்தை எதிர் கொண்டான் வீரா..

ரகசியமாய் தொடர்வோம்..
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் 8

அவனின் அலைபேசி அலற அமைதியாய் பார்த்து கொண்டிருந்தவனின் பார்வை ஆதியின் மீது படர, வீராவின் கண் அசைவிற்கு அர்த்தம் புரிந்தவனாய் அலைபேசியை எடுத்துச் சைலண்ட் போட்டு விட்டான்.

தியா எதற்காக அழைக்கிறாள் எனத் தெரிந்ததும் அவளின் அழைப்பை அலட்சியம் செய்திருந்தான் வீரா. அவளைச் சந்திக்க அனுமதி கேட்டதும் அவள் அந்தி பொழுதில் சந்திப்பதாய்ச் சொன்னதும் நினைவில் வர, அவன் கடமையே கண் கண்ட தெய்வம் போல் நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவளின் பெயர் குற்றவாளியாய் கருதும் பட்டியலில் முதல் இடத்தை வகிக்கும் என்று அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இப்போது அந்தப் பத்து பேரையும் விசாரித்தாக வேண்டும் என்பது அவனுடைய கடமை. இன்று அலுவல் பணி முடிந்து விட்டதால் அனைவரும் வீட்டிற்க்கு சென்றிருந்தனர். என்ற தகவலை பாஸ்கரன் சொல்ல,

“நாளை பத்து மணிக்கு இந்தப் பத்து பேரும் இங்கு இருந்தாக வேண்டும்” எனச் சொல்லி அவன் நகர்ந்தான்.

“சார்..!” என அழைத்து வீராவின் செல்போனை நீட்ட,

“நீ கார் எடுத்துட்டு போ ஆதி!! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என ஆதியை பார்த்து சொன்ன பிறகு அவனும் தலையசைத்துப் புறப்பட்டிருந்தான்.

அவன் புறப்பட்ட பிறகு தியாவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான் வீரா. அவள் அழைப்பை ஏற்றவுடன்,

“எங்கே இருக்கத் தியா?” என அவசரமாய்க் கேட்டிருந்தான்”

“நான் கால் பண்ணும் போது நீங்க தான் எடுக்கலை மிஸ்டர் அதான் வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கிறேன்” என அவள் பதில் கொடுத்தாள்.

“கிளம்பாதே நானும் இங்கே தான் இருக்கிறேன்” என அவன் சொன்னான்.

“நான் பார்க்கிங்ல இருக்கிறேன்” என அவள் பதில் கொடுக்க, பார்க்கிங்கை நோக்கி ஓடினான். இன்று அனைத்திற்க்கும் அவனுக்கு விடை தெரிந்தாக வேண்டும், தேவாவின் வாழ்க்கையில் இவள் வந்தது எதற்காக, ஐ ஃபவுன்டேசனின் நூதன திருட்டுக்கும் இவளுக்கும் சம்மந்தம் இருக்கிறதா? என அனைத்திற்கும் அவனுக்கு இன்றே விடை தெரிந்தாக வேண்டும் என்ற முனைப்பில் வந்தவன் அவள் முன் முச்சு வாங்கி நின்றான். அவன் அவள் எதிரே இப்படி மூச்சு வாங்கி நிற்பது, பழைய நினைவுகளைக் கிளர்ந்தெடுக்க, நினைவுகளைச் சின்னத் தலையசைப்பில் புறம் தள்ளினாள் பெண்.

கருப்பு நிற புடவை அவளுக்கு அவ்வளவு அழகாய் இருந்தது, அவளின் கரு விழிகள் அவனைப் பதற்றத்துடன் பார்த்தது.

“எதுக்காக இப்படி மூச்சு வாங்க ஓடி வந்தீங்க வீரா” என ஸ்கூட்டியில் அமர்ந்தபடி கேட்டாள்.

“அது வந்து..” இழுத்தவன்,
“கொஞ்சம் பேசணும் வெளிய போய்ப் பேசலாமா?” என அவன் அதிரடியாய் கேட்க, சரியெனத் தலையசைத்தவள்,

“எங்கே போகணும்” எனக் கேட்டாள்,

“காஃபி ஷாப்” எனப் பதில் கொடுத்தான்.

“ஓகே!! கார்ல ஃபாலோ பண்ணி வர்றீங்களா??”

“இல்லை!! உன் கூடத் தான்” வீரா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து விழித்தவளை பொருட்படுத்தாது அவளை வாகனத்தின் இருந்து இறக்கி விட்டவன், ஸ்கூட்டியை தான் இயக்கி அவளைப் பின்னே அமரச் சொன்னான்.

“நான் ஆட்டோல வரவா??” என அவள் அவனுடன் செல்வதைத் தவிர்க்க முற்பட்டாள்.

“தியா!! ஒரு தடவை சொன்னால் புரியாதா?” என அவன் பேசியதிலே அவன் கோபமாக இருக்கிறான் என்பதைப் புரிந்துக்கொண்டவள், அமைதியாய்ப் பின்னால் அமர்ந்தாள். அவள் அமர்ந்த அடுத்த நிமிடம் வாகனம் சீறிப் பாய்ந்தது.

“வீரா மெதுவா போ!!” என அவள் சொல்வதை அவன் கேட்கவில்லை,

“அய்யோ!! காஃபி ஷாப்பை தாண்டி போறோம் பாரு” என அவள் அலற, அவனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை,

***********

கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள பீச் பங்களாவில் வாகனத்தை நிறுத்தியவன்,

“இறங்கு தியா!!” என்றான்..

“வீரா!! இங்கே எதுக்கு வந்திருக்கோம், காஃபி ஷாப் போறோம்ன்னு தானே சொன்ன?”

“அதெல்லாம் உள்ளே போய்ப் பேசிக்கலாம் வா!!” என்றான், மருண்ட விழிகளுடன் பயந்து நின்றவளை பார்த்தவன்,

“என்னோட சுண்டு விரல் கூட உன் மேல் படாது பயப்படாமல் வா” என அவன் சொன்னபின் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் தியா, மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது.

“இது என்னோட பங்களா தான்!! இங்கே எப்போதும் வர மாட்டேன் சில கிரிமினல்ஸை விசாரிக்கணும்னா தான் இங்கே கூட்டிட்டு வருவேன்” எனச் சொல்லி முன்னே செல்ல,

“இப்போ என்ன சொல்ல வர வீரா??” என அவள் கேட்டவுடன்,அவள் கையில் இருந்த அலைப்பேசியைப் பிடுங்கி ஃப்ளைட் மோடில் போட்டான்.

“என்ன பண்ணுற வீரா?? எனக்கு முக்கியமான கால்ஸ் வரும். ” என அவள் சொல்வதைக் கேட்காமல், அந்த வீட்டில் விசாரணைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த நாற்காலியில் அவளை அமரச் சொன்னவன், அவளெதிரே அமர்ந்தான். அந்த அறையில் மேசையில் இருந்த மடிக் கனிணியை உயிர்ப்பித்தவன்.

“நான் கேட்ட தான் சொல்வீயா? இல்லை..?” என அவன் இழுக்க,

“என்ன உளறிக்கிட்டு இருக்க வீரா?? முதலில் சாவியைக் கொடு நான் வீட்டுக்கு போகணும்” என அவள் கேட்க, சாதாரணமாய் இருந்த வீராவின் முகம் கோபத்தைப் பிரதிபலித்தது.

“ஓ மை காட்!! சரி கேளு என்ன கேட்கணுமோ கேளு, உன் கேள்விக்குப் பதில் சொன்னால் போக விடுவ தானே” என அவள் சொல்ல,

“ரத்தினத்தை எத்தனை நாளா உனக்குத் தெரியும்” எனக் கனிணியை இயக்கியபடி கேட்டான் அவன்,

“ரத்தினமா? அப்படி யாரும் தெரியாது” என்றாள் அவள்,

“ஓ!!”

“தேவாவை கல்யாணம் செய்ய முதலில் நீ சம்மதிக்கலை தானே” என அவன் அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.

“ஆமாம்” என்றாள்.,

“பரவாயில்லையே தியா, உண்மையெல்லாம் பேசுற” என நக்கலாய் கேட்டான்.

“நான் பொய்யெல்லாம் சொல்லலை, உண்மையைத் தான் சொல்லிட்டு இருக்கேன், முதலில் திருமணத்தில் பிடித்தம் இல்லை, அப்பறம் வீட்டில எடுத்துச் சொன்னதால சம்மதம் சொன்னேன்” என அவள் தைரியமாய்ப் பேசினாள். அவள் பேசியதில் புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தவன்,

“அப்பறம் எதுக்காக ட்ரக்ஸ் எடுத்ததோட, ஸ்லிப்பீங் பில்ஸ்ஸூம் எடுத்திட்டு காரை ஓட்டிட்டு போனீங்க தியா??” என அவன் கேட்ட கேள்வியில் அவள் ஒட்டுமொத்த தைரியமும் உருகுலைந்து போக, அவளின் கண்கள் கலங்கியது.

“இப்போவாவது உண்மையைச் சொல்லுறீயா தியா??” எனப் பொறுமையாய் கேட்டான், கண்ணீர் விழிகள் தாண்டி வழிந்தது தியாவிற்கு.

“கடந்த மூணு வருசமா ஐ ஃபுவுன்டேசனில் வொர்க் பண்ணிட்டு இருக்கத் தியா, அதுக்கு முன்னாடி எங்கே வொர்க் பண்ணிட்டு இருந்த??” அவளிடம் பதில் இல்லை,

“தேவாவையும் என்னையும் எதுக்காகப் பிரிக்க முயற்சி செய்யுற தியா??” மீண்டும் அவளிடம் பதில் இல்லை, தலைக்கவிழ்ந்து அழுதுக்கொண்டிருந்தாள்.

“நான் கேட்கிற கேள்விக்கு உன்னால பதிலே சொல்ல முடியாது தியா!! நான் சொல்லவா பதில்” எனக் கேட்ட நொடி பட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

“நீ இரண்டு வருசம் ரத்தினத்துக்குப் பிஏ வா வொர்க் பண்ணியிருக்க, அதோட ஆதாரம்” எனச் சொன்னவன் ஐ ஃபவுன்டசனில் அவள் வேலையில் சேரும் போது கொடுக்கப்பட்ட ரெஸ்யூமை கனிணியில் திருப்பிக் காட்டினான்,

ரத்தினம் ஏஜென்சியில் இரண்டு வருடம் வேலை பார்த்தற்கான அனுபவச் சான்றிதழையும் இணைத்திருந்தாள். அதைப் பார்த்தவுடன்,

“ஆமாம், வேலை செஞ்சேன்” என்றாள் தியா.

“அதை எதற்காகத் தியா மறைக்கிற??”

“அது வந்து..” பதில் சொல்ல தடுமாறினாள் பெண்..

“நீ இன்னும் ரத்தினத்துக்கு ரகசிய பிஏவா தான் இருக்க?? அம் ஐ ரைட்??” என அவனின் கேள்வியில் விலுக்கென விழித்தாள் பெண். அவளால் இல்லை என மறுக்கவும் முடியவில்லை ஆமாம் என ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை.

“நீ என்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி கூட ரத்தினத்துக்குப் போன் பண்ணி பேசியிருக்க??” பதிலேதும் பேசாமல் நேரத்தை கடத்துவதைப் பார்த்துக் கோபம் தான் வந்தது அவனுக்கு.

“இதுக்கு மேல் என்கிட்ட எதுவும் கேட்காதே வீரா, ஏன்னா என்னால பதில் சொல்ல முடியாது” என அவள் சொன்னாள்.

“வாட்?? அதுக்குத் தான் நான் இங்கே உன்னைக் கூட்டிட்டு வந்திருக்கேனா? பதில் சொல்லாமல் உன்னால் இங்கே இருந்து போக முடியாது தியா” என அவன் மிரட்டினான்.

“இப்போ உனக்கு என்ன தெரியணும்?? நான் எதுக்காகத் தேவா வாழ்க்கைக்குள்ள வந்தேன்னு தெரியணும் அவ்வளவு தானே??” என்றாள்.,

“அதோட சேர்த்து ஐ ஃபவுன்டேசனில் பணத்தை யாருக்காக வேற அகௌண்ட்க்கு மாத்தி விட்டன்னு தெரியணும்” என அவன் கேட்க,

“வாட், அதைச் சத்தியாம நான் பண்ணலை வீரா” எனப் பட்டெனப் பதில் கொடுத்தாள்.

“அதை நான் எப்படி நம்புறது” அவன் எதிர் கேள்வி கேட்டான்.

“எனக்கு இரண்டு பேர் மேல் இதில் சந்தேகம் இருக்கு” என அவள் சொல்ல, அந்தப் பெயர்களையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

“சரி அதெல்லாம் இருக்கட்டும், இப்போ சொல்லு தேவா வாழ்க்கையில நீ எதுக்கு வந்த?”

“எனக்கு வேற வழியில்லை வீரா, நான் செஞ்சு தான் ஆகணும்.. இதுக்கு மேல் என்னை எதுவும் கேட்காத ப்ளீஸ், என்னால உன்னோட நண்பனுக்கு எதுவும் ஆகாது அதுக்கு நான் உத்திரவாதம்” என்றாள் தியா..

“அப்போ எதுக்காக என்னை மனசில வச்சிட்டு அவனுக்குச் சம்மதம் சொன்ன தியா”

“இல்லை நான் உன்னைக் கடந்து வந்துட்டேன் வீரா” என்றாள் அவள்.

“என்னைப் பார்த்து சொல்லு தியா!! நிஜமாகவே நீ என்னைக் கடந்து வந்துட்டியா??” அவளிடம் பதில் இல்லை,

“அப்போ இதுக்கு என்ன அர்த்தம் தியா” என அவள் ஸ்கூட்டியின் சாவியில் தொங்கிக்கொண்டிருந்த கீசெயினை எடுத்து ஆட்டினான். அதை வேகமாகப் பிடுங்கினாள்.

“நான் கிளம்பணும்” எனத் துரிதமானாள் தியா..

“ஏய் நில்லுடி, என் கண்ணைப் பார்த்து சொல்லிட்டு போ!! நீ என்னை மறந்துட்டன்னு, உன்னை அங்க ஒருத்தன் நம்பி காதலிச்சிட்டு இருக்கான்டி, தெரியுமா உனக்கு” என அவன் சொன்ன சொல்லில் தியாவின் நடை தடைபட்டது. அவளைத் தன்னோடு இழுத்தவன்,

“சொல்லுடி!! என்ன தான் நடக்குது..? எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்க” என அவன் கேட்க,

“சாரி வீரா!!” என அவனின் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.. அவள் என்ன சொல்கிறாள். இங்கு என்ன நடக்கிறது எனப் புரியாமல் விழித்தான் அவன். அவளைத் தன்னிடம் இருந்து விலக்கினான். அவள் விழிகளில் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்றியது. அவள் குற்ற உணர்வில் தவிக்கிறாள் என்பதை அவள் கண்களே சொல்லாமல் சொல்லியது.

“நீ என்ன சொல்லுற தியா!! தெளிவா சொல்லு, எதுக்காகச் சாரி சொல்லுற??” என அவளின் தோள்களை உலுக்கி கேட்டான்.

“ரத்தினம் என்னோட மாமா வீரா” என மீண்டும் தேம்பி அழுதாள்.

“வாட்??” என அவன் அதிர்ந்து விழித்தான். அவளின் பேக் க்ரவுண்டை பற்றித் தேவா விசாரிக்கச் சொன்னான். அவள் தன் முன்னாள் காதலி என்பதாலே அதைப் பற்றி விசாரிக்காமல் இருந்தான் வீரா. தேவாவிடமும் எந்தப் பிரச்சனையும் இல்லை எனக் காட்டிக்கொண்டது இப்போது எவ்வளவு பெரிய தவறாகி போனது என்பதை உணர்ந்திருந்தான் அவன்.

“நான் உன்னைப் பிரிஞ்சதுக்கும் அவர் தான் காரணம், இப்போ தேவாவை கல்யாணம் பண்ணிக்கப் போறதுக்கும் அவர் தான் காரணம்” என அவள் சொன்னது அவன் தலையில் பேரிடியாய் வந்து விழுந்தது. அந்த ரத்தினம் தேவாவை தொழிற் போட்டி காரணமாகக் கொலை செய்ய நினைக்கிறான் என நினைத்திருந்த வீராவும் இது பெரும் அதிர்ச்சி தான்.

“அவர் சொன்னால் நீ ஏன்டி கேட்கிற?? உங்க அப்பா அம்மாக்கிட்ட சொல்ல வேண்டியது தானே” எனக் கேட்ட வீராவின் விழிகளை ஏறிட்டவள்.

“அப்பா, அம்மாவை அந்த ரத்தினம் கொண்ணுட்டான் வீரா??” என அவனின் மார்பில் புதைந்த அழுதவளின் கண்ணீர் அவனின் இதயத்தைத் தொட்டது. தியாவின் தாய் தந்தையைக் கொன்று விட்டானா எதற்காக?? என்ற கேள்வியும் அவனுக்குள் எழாமல் இல்லை தலையும் புரியாமல் வாலும் புரியாமல் திணறி போய் நின்றவனின் சட்டையைப் பிடித்தவள்.

“ஏன்டா!! நான் வேண்டாம்ன்னு சொன்னால் என்னை அப்படியே விட்டு போய்டுவியா?? இந்த அஞ்சு வருசத்துல நான் எங்கே இருக்கேன், என்ன பண்ணிட்டு இருக்கேன், உன்னை உருகி உருகி காதலிச்சவ, உன்னை ஏன் வேண்டாம்ன்னு சொல்லுறான்னு யோசிக்கவே மாட்டியா?” என அவள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்லவே முடியவில்லை. அத்தனைக்கும் காரணம் கோபம் என ஒரு வாரத்தையால் சொல்லி விட முடியாது.

நேசங்கள் நிரகாரிக்கபடும் போது எந்தக் காதலும் காரணம் கேட்டு நிற்காது அதைத் தான் வீராவும் செய்தான். அவள் இதற்கு மேல் இதைத் தொடர வேண்டாம் என்றாள், ஏன் எனக் கேட்டும் அவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை, அவளை அலைப்பேசியில் அழைக்க முயற்சித்தான், அவள் எண் ஸ்விட்ச் ஆஃப் என வர, அதோடு, அவளை விட்டு விலகினான். அவளின் நினைவுகளை மட்டும் சுமந்துக்கொண்டு இன்று வரை வாழ்கிறான் அவன்.

“நீ தானேடி வேண்டாம்ன்னு சொல்லிட்டு போன?? அதுக்கு மேல் நான் என்ன பேச முடியும் சொல்லு, உன் விருப்பம் இல்லாமல் தாலி கட்டி வாழ்ற வாழ்க்கையெல்லாம் நரகம் தியா.. நம்ம காதலிச்ச நாள்ல இருந்து எல்லாமே உன் விருப்ப படிதானே நடக்குது, நான் என்னைக்கு உன் விருப்பத்திற்கு எதிரா நிண்ணுருக்கேன் தியா..? நீ பிரிஞ்சிடலாம்ன்னு சொன்ன அதை எப்படித் தியா என்னால மறுக்க முடியும்” என அவன் கேட்ட நொடியில் அவன் சட்டையை விடுவித்தாள் பெண்.. காதலித்த காலங்களில் அவளின் விருப்ப படி தான் எல்லாமே நடந்தது, முதலில் காதலை சொல்லி அவனை நெருங்கியதும் அவள் தான், இறுதியில் வேண்டாம் எனச் சொல்லி உதறிச் சென்றவளும் அவள் தான்.

“இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத வீரா!! எல்லாத்துக்கும் காரணம் அந்த ரத்தினம் தான். இப்போ கூட அவனோட ஆளுங்க நம்மளை ஃபாலோ பண்ணி வந்திருக்க வாய்ப்பு இருக்கு” என அவள் பதற்றமானாள்.

“நான் இருக்கும் போது நீ எதுக்குப் பயப்படுற?? என்ன ஆனாலும் பரவாயில்லை சொல்லு பார்த்துக்கலாம், தேவாக்கிட்ட இதைப் பத்தி பேசி சரி செய்யலாம்” என அவன் கேட்க,

“தயவு செய்து தேவாக்கிட்ட மட்டும் இதைப் பத்தி சொல்லிடாதே வீரா” எனக் கெஞ்சலாய் சொன்னாள்.

“இதைப் பத்தி பேச நான் உன்னை எப்போ எங்கே மீட் பண்ணுறதுன்னு சொல்லு??” என அவன் அடுத்தக் கேள்வியை உடனே கேட்டான். அவள் எதிலோ மாட்டியிருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாய்ப் புரிந்தது.

அவளை அதில் இருந்து மீட்டாக வேண்டும் என உறுதியும் எடுத்துக்கொண்டான்.

“வொர்க் ப்ளேஸ்ல பேசுறது தான் சேஃப் அங்கே தான் அவனால என்னைக் கண்காணிக்க முடியாது. நான் அங்கே இருந்து வெளியே வந்தாலே யாராவது அவனோட ஆள்கள் என்னை ஃபாலோ பண்ணுறது வழக்கம்” என்றாள் தியா.

“நீ கவலைப்படாதே தியா!! ஐ யெம் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ” என்றவனின் விழிகளில் இன்னும் காதல் தேங்கி நின்றது. அதை அவளால் பார்க்கவும் முடிந்தது. இத்தனைக்கும் காரணம் அவள் தான் என்பதே அவளின் மனதை வதம் செய்தது.

“என்னைக் கூட அந்த ரத்தினம் விட்டுவான் வீரா!! ஆனால் தேவா தான் அவனோட டார்கேட்டே” எனத் தியா சொல்வதைக் கேட்டு பதறி தான் போனான் வீரா.

“அவனைக் கொல்றதுக்குத் தான் உன்னை அனுப்பியிருக்கானா??”

“நோ!! நோ!! தேவா எந்த நேரத்தில் எங்கே இருப்பான்ற தகவலை மட்டும் என்கிட்ட இருந்து கேட்டுக்குவான்” என அவள் சொன்ன நொடியில் ரத்தினத்தின் திட்டமும் வீராவுக்குப் புரிந்தது. அவனை எப்படித் திசை திருப்பி விடுவது என்ற தெளிவும் அவனுள் பிறக்க,

“சரி நீ கிளம்பு!! நான் பார்த்துக்கிறேன்” என அவளை அனுப்பி வைக்க முற்பட, அவனின் கரத்தை இறுக்கமாய்ப் பற்றியவள்,

“லவ் யூ ஆல்வேஸ் வீரா!!” எனச் சொல்லி நகர்ந்தாள், அவனின் வாழ்க்கையில் மீண்டும் தியாவின் வரவை நினைத்து மனம் தித்தித்தாலும், தேவாவை நினைத்து வருத்தம் கொண்டது. நண்பனிடம் இதை எப்படிச் சொல்லி புரிய வைக்கப் போகிறான் என்ற அச்சமும் எழுந்தது.

ரகசியமாய் தொடர்வோம்..


கருத்து திரி;

 
Status
Not open for further replies.
Top