All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் காலம் எல்லாம் அவன் காதலில்😍 - கதை திரி

Status
Not open for further replies.

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் பட்டூஸ்😍😍😍







 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 17


" கருப்பு வெள்ளை காகிதமாய் இருந்த என் வாழ்க்கையை


வண்ணமயமான ஓவியமாக்க வந்த தூரிகை நீ!!!"





தனக்கு வந்த அழைப்பினை ஏற்று மறுபுறம் கேட்ட அதிதியின் குரலில் ஆனந்தமாய் அதிர்ந்தான் ஆதர்ஷ்.

"ஹேய் ஏஞ்சல்!!! என்ன இது சர்ப்ரைஸ்... இந்நேரத்துக்கு கால் பண்ணியிருக்க?? இது யார் நம்பர்?? ஏதும் அர்ஜென்ட் அஹ் டா??" என்று ஆனந்தமாய் ஆரம்பித்தவன் முடிக்கும் போது பதட்டத்துடன் வினவ,

தனக்கான அவனின் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் இரசித்து மனதிற்குள் சேமித்து வைத்தவள்,

"ஸ்ரீ.. கூல் கூல்.. சும்மா உன்கிட்ட பேசணும் போலையே இருந்துச்சா அதான்.. இது என்னோட இன்னொரு நம்பர்" என்று வெட்கத்தோடே அழைத்ததற்கான காரணத்தை ஹஸ்கி குரலில் கூறினாள்.

தன்னைப் போலவே அவளும் தன் நினைவால் வாடுகிறாள் என்று அறிந்து கொண்ட ஆதர்ஷிற்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று புது ரத்தம் பாய்வது போல் இருக்க, சந்தோஷ மிகுதியில் விசில் அடித்தான்.

அவனின் விசில் சப்தம் அவளின் செவிப்பறையைக் கிழிக்க, "ஹய்யோ ஸ்ரீ.. சும்மா இரு.." என்றவளுக்கு அவன் செய்கை மேலும் புன்னகையை விரிவடையச் செய்தது.

"அப்பறம் அதிமா.. சாப்பிட்டியா??" என்று அவன் பேச்சைத் தொடங்க,

"ரொம்ப முக்கியம்" என்று அவள் முணுமுணுத்தது அவனிற்கும் கேட்க,

"முக்கியம் தான் முக்கியம் தான்" என்று அவனும் ராகம் பாடினான்.

"அப்பறம் என்ன பண்ற அதி" என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்க,

அதில் கடுப்பான அதி, "ஒபாமா கூட மீட்டிங்க் முடிச்சுட்டு வரேன்.. நீங்க சார்??" என்று பதிலளிக்க,

அதற்கு பளீர் புன்னகையை பரிசளித்தவன், "சரி சரி நோ டென்ஷன் பேபி... இன்னைக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?" என்று அவன் உளமார்ந்து கூற,

அவளும் அன்று காலையில் இருந்து நிகழ்ந்தவளை ஓர் முறை மனதில் ஓட்டிப் பார்த்து உதட்டில் உறைந்த புன்னகையுடன், "ஆமா ஸ்ரீ.. நான் ரொம்பவே ஹேப்பியா இருக்கேன்.. அது எல்லாமே உன்னால தான்.. தேங்க் யூ ஸ்ரீ" என்று நெகிழ்ச்சியுடன் கூறினாள்.

அவள் உணர்ச்சிவசப் படுகிறாள் என்று அறிந்த ஆதர்ஷ், சூழ்நிலையை இலகுவாக்க, "எனக்கு உன்னோட தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்..ஐ லவ் யூ சொல்லு" என்று பேரம் பேச,

"அதான் உன்னை பிடிச்சிருக்குன்னு அன்னைக்கே சொன்னேன்ல.. அப்பறம் என்ன??" என்று அவளும் பிகு செய்தாள்.

"பிடிச்சிருக்கு வேற?? லவ் வேற?? என்னை லவ் பண்ற தான அப்போ லவ் யூ சொல்லு" என்று அவனும் விடாமல் வம்பிழுக்க,

"சொன்னாதான் புரியுமா?? அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது அதுக்குன்னு கரெக்டான டைம் வரட்டும் சொல்றேன்" என்று மனதில் எதையோ நினைத்து அவள் கூற,

அவனும் அதற்கு மேல் அவளை வற்புருத்தாமல் வேறெதையோ பேச, அவர்களின் அந்த இரவு காதலர்களுக்கே உரிய ஸ்வீட் நத்திங்க்ஸை பேசிப் பேசியே கழிய அதிகாலை ஐந்து மணிக்கு தான் அழைப்பையே துண்டித்து உறங்கச் சென்றனர்.












"ஹாய் ராகவ்!! என்ன ஒரு சர்ப்ரைஸ்!!!" என்று தன்னைக் காண கல்லூரிக்கே வந்திருந்த ராகவ்வைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் அபிநயா.

"சும்மா தான் அபி.. அப்படியே இந்தப்பக்கம் ஃப்ரெண்டை பார்க்க வந்தேன்... அதான் உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு" என்று அவன் காரணத்தைச் சொல்ல,

அதை ஏற்றுக் கொண்டவள், "சரி வாங்க நடந்துட்டே பேசலாம்" என்றவள்,

"அப்பறம் ராகவ்.. எப்படி இருக்கிங்க??" என்று கேட்க,

ஒரு சோம்பல் புன்னகையை சிந்திய ராகவ், "தெரிஞ்சுகிட்டே கேட்குறிங்க... இருக்கேன்" என்று சொல்ல,

அவனின் சோகம் அவளைத் தாக்கினாலும் அதை முகத்தில் காட்டாத அபி, "அதிதிகிட்ட பேசுனிங்களா??" என்று அவள் அடுத்த கேள்விக்கு தாவ,

ராகவ்விற்குத் தான் அதிதியைப் பற்றி கேட்டதும் நெஞ்சில் சுளீர் என்று ஓர் வலி தோன்றி மறைந்தது.

"ம்ம்ம்.. அவ கால் பண்ணிட்டே தான் இருந்தா.. நான் தான் எடுக்கலை" என்று அவன் பதிலளிக்க,

அதைக் கேட்டு தன் நடையை நிறுத்திய அபி கைகளைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்வையால் துளைத்தெடுத்தாள்.

அவளின் பார்வையை தாங்கமுடியாதவன் , "இப்போ எதுக்கு இப்படி பார்க்குறிங்க அபி" என்று அவன் கேட்டே விட,

"இல்லை எனக்கு தெரிஞ்ச என்னோட ஃப்ரெண்ட் ராகவ் இவ்ளோ செல்ஃபிஷ் இல்லை.. இப்போ இருக்கது ராகவ் இல்லையோன்னு பார்க்குறேன்" என்று அவள் கூற,

"நான் என்ன பண்ணேன்.. நான் எங்க செல்ஃபிஷா இருக்கேன்" என்று ராகவ் லேசாக முளைத்த கோபத்துடன் வினவ,

"பின்ன இல்லையா?? அவகிட்ட பேசுனா உங்களுக்கு இன்னும் ஹர்ட் ஆகும்னு அவளை அவாய்ட் பண்ணி அவளை ஹர்ட் பண்ணிட்டு இருக்கிங்க தான??" என்று அவள் நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் கேட்க,

அப்போது தான் அதிதியைப் பற்றி நினைத்தவன் தன் செயலை நினைத்து வருந்தி ஏதும் பேசாமல் தலை குனிந்து கொண்டான்.

அவனின் செய்கை அபிக்கு வலித்தாலும், மருந்து என்றால் கசப்பாகத் தான் இருக்கும்.. இப்படியே விட்டால் ராகவ்விற்கு இன்னும் அது ஆபத்து என்று உணர்ந்தவள் மேலும் பேசத் தொடங்கினாள்.

"என்ன ராகவ் அமைதியா ஆய்ட்டிங்க?? அவ உங்களை எவ்ளோ க்ளோஸா நினைச்சிருந்தா உங்க கிட்ட அவளோட காதலைப் பற்றி சொல்லிருப்பா.. எனக்கு தெரிஞ்சு அதிதிக்கு உங்களை விட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாருமே இல்லை.. அப்படி இருக்கப்போ நீங்களும் அவளை அவாய்ட் பண்ணா அவ என்னாவா???" என்றவள்,

மீண்டும் தொடர்ந்தாள்..

"நான் அதிதியை இதுவரையும் பார்த்து பேசுனதை வச்சு சொல்றேன்... ஷி இஸ் வெரி சென்ஸிடிவ்.. அவ ஒரு பூ மாதிரி.. சட்டுனு வாடிருவா.. அவளோட உலகமே ரொம்ப சின்னது தான்.. அதுவும் இல்லாம அவ ஒரு ஓவர் திங்கர்(over thinker) .. இந்த சமயத்துல நீங்க அவளை அவாய்ட் பண்ணா அவ என்னென்ன யோசிச்சு மனசை குழப்பிக்குவா தெரியுமா??" என்று அவனை பழையபடி மாற்ற அதிதியை அவள் பயன்படுத்திக் கொண்டாள்.

அதிதி மீது அவன் கொண்டுள்ள நேசத்தின் அளவை அறிந்த அபி, அவளை வைத்து தான் ராகவ்வை மாற்ற முடியும் என்று பேசிக் கொண்டே போக,

ராகவ் மனதில் அபி சொன்னதே ஓடிக் கொண்டிருந்தது.

'எப்போதும் யாராலையும் என் அதிக்கு கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைச்சிட்டு நானே அவ கஷ்டத்துக்கு காரணம் ஆய்ட்டேனே' என்று தனக்குள் மறுகிய ராகவ்,

ஒர் தெளிவுடன் நிமிர்ந்து அபியை நோக்கியவன், "ரொம்ப தேங்க்ஸ் அபி.. நான் அதியைப் பற்றி யோசிக்கவே இல்லை.. என் கஷ்டம் தான் பெரிசுன்னு இருந்துட்டேன்.. இனி என்னைக் கொஞ்சம் கொஞ்சமா பழைய மாதிரி மாத்திக்க ட்ரை பண்றேன்.. ஆனா அதுக்கு உங்க ஹெல்ப்பும் வேண்டும்" என்று கூற,

"எனிதிங்க் ஃபார் யூ" என்று மனதில் கூறிக் கொண்ட அபி, "சொல்லுங்க ராகவ் என்ன பண்ணனும்" என்று கேட்டாள்.

"அது.. கூட யாருன்னா இருக்க வரைக்கும் தெரியலை.. தனியா இருக்கப்போ என்னோட வருத்தம் என்னை மூழ்கடிச்சிடுது.. அதுனால இதுல இருந்து மீண்டு வர ஐ திங்க் ஐ நீட் கவுன்சிலிங்" என்று அவன் சொல்ல,

இதற்காகத்தானே அவள் பேசியது.. அவன் மாற வேண்டும் என அவனே நினைக்க வேண்டும் என்று நினைத்த அபி அது நடந்தவுடன் மகிழ்ச்சியுடன், "ஸ்யூர் ராகவ்.. இங்க எங்க சீஃப் இருக்கரு.. பெஸ்ட் சைக்காட்ரிஸ்ட் அவர்கிட்ட உங்களுக்கு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிட்டு சொல்றேன் நீங்க வாங்க" என்று கூற,

புன்னகையுடன் அவளை ஏறிட்ட ராகவ், "ரியல்லி வெரி தேங்க்ஸ் அபி.. நீங்க மட்டும் இல்லைனா என்ன ஆய்ருப்பேன்னே தெரியாது" என்று உணர்ந்து சொல்ல,

அதை மறுத்தவள், "ஃப்ரென்ட்ஸ் குள்ள என்ன தேங்க்ஸ் எல்லாம்.. விடுங்க ராகவ்.. வாங்க சாப்பிட போகலாம்" என்று அழைத்துக் கொண்டு போனவளின் மனமெங்கும் ஆறாத ரணம் இருந்தும் தன்னவனின் வலியைப் போக்கியே தீருவேன் என்று உறுதி கொண்டாள்.






"ஹேய் கங்க்ராட்ஸ் டி!!!" என்று அதிதியைக் கட்டிக் கொண்டு தன் வாழ்த்தை தெரிவித்திருந்தாள் சம்ரு.

ஆம், அடுத்த நாளே ஆதர்ஷின் பெற்றோர் வந்து அதிதியின் வீட்டில் பேசி நிச்சய தேதியைக் குறித்துச் சென்றிருந்தனர்.

இருவீட்டிலும் உறுதி ஆனபின் நண்பர்களுக்கு சொல்லிக் கொள்ளலாம் என்று ஆதர்ஷ் சொன்னதால், இன்றே சந்தோஷ் சம்ருவிடம் விஷயத்தைக் கூறியிருக்க சம்ரு உண்மையான மகிழ்ச்சியுடன் இருவரையும் வாழ்த்தினாள்.

ஆனால் சந்தோஷோ காதில் புகை வராத குறையாய் ஆதர்ஷை முறைத்துக் கொண்டிருந்தான்.

அவன் முறைப்பிற்கான காரணம் புரியாத ஆதர்ஷ், "ஏன் டா நான் ஏதோ உன் முறைப்பொண்ணு மாதிரி என்னை இப்படி முறைக்குற" என்று கேட்க,

"பின்ன எப்படி டா இப்படி?? ஒரு நாள்ல இதோ இந்த பிள்ளையை கரெக்ட் பண்ண" என்று அதிதியைக் காட்டிக் கூறியவன் தொடர்ந்து, "ஒரே வாரத்துல வீட்டுல இருக்கவங்களையும் கரெக்ட் பண்ணி நிச்சயம் வரைக்கும் வந்துட்ட.. எப்படி டா??" என்று அவன் பொறாமையோடு வினவ,

அதைக் கேட்டு மற்ற மூவரும் நகைத்தனர்.

"டேய் உனக்கென்ன பிரச்சனை அதான் உங்க ரெண்டு பேத்துக்கும் வீட்டுலயே பேசி முடிச்சு ஒன்னாவே சுத்த விட்டிருக்காங்க.. நாங்க என்ன அப்படியா??" என்று ஆதர்ஷ் கூற,

அவனை கொலைவெறியோடு நோக்கிய சந்தோஷ், "டேய் வயித்தெறிச்சலைக் கிளப்பாத!! பேருக்கு தான் மாமன் பொண்ணு இவளை லவ் பண்ணிட்டு இவங்க அப்பன் கிட்ட சம்மதம் வாங்குறதுக்குள்ள என்னை தலையால தண்ணி குடிக்க வச்சுட்டாங்க தெரியுமா??"என்று அவன் ஆற்றாமையோடு கூற,

அதைக் கேட்டு குழம்பிய அதிதி, "ஏன் சந்தோஷ்.. நீங்க அவரோட சிஸ்டர் பையன் தான?? அப்பறம் ஏன் சம்மதிக்கலை??" என்று கேட்க,

சோகத்துடன் தன்னுடைய கதையை கூறத்தொடங்கிய சந்தோஷை நிறுத்திய மூவரும், "உன் காதல் கதையெல்லாம் சொல்லி மொக்கை போடாத!! சீக்கிரம் உன் மாமா எதுக்கு உன்னை மாப்பிள்ளையா ஏத்துக்கலைன்னு மட்டும் சொல்லி முடிச்சிரணும் சரியா??" என்று எச்சரித்துவிட்டே அவனை கதை கூற அனுமதித்தனர்.




அப்போது சந்தோஷும் சம்ருவும் கல்லூரி முடித்து வேலைக்கு போக தொடங்கிய சமயம்,

தங்கள் வீட்டிலே தங்கள் கல்யாணப்பேச்சை தொடங்குவார்கள் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சந்தோஷ், வெட்கத்தை விட்டு நாமளே போய் கேட்டுவிடுவோம் என்ற முடிவுடன் இரு வீட்டு ஆள்களையும் ஒன்றாக கூட்டியிருந்தான்.

"இப்போ எதுக்குடா ஏதோ வித்தை காட்ட போற மாதிரி எல்லாரையும் கூப்பிட்டு வச்சிருக்க??" என்று சந்தோஷின் அன்னை வினவ,

"நீயெல்லாம் ஒரு மம்மியா.. பையனுக்கி கல்யாண வயசு ஆய்டுச்சே கல்யாணம் பண்ணி வைப்போம்னு விவஸ்தை இல்லை.. இதுல வித்தை காட்டுறாங்களாம்.. உன் மண்டையை உடைச்சு மாவிளக்கு போடுறேன் பாரு" என்று மிரட்டியவன்,

நேராக தன் தாய்மாமனிடம் சென்று, "மாமா எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாது" என்று ஆரம்பிக்க,

"ஏன் சுத்தி வளைச்சா இடுப்பு பிடிச்சுக்குமா??" என்று மீண்டும் சந்தோஷின் அன்னை கவுன்டர் கொடுக்க,

"தாய்க்கெழவி உன்னை வந்து வச்சுக்கிறேன்" என்று பத்திரம் காட்டியவன், மீண்டும் தன் மாமனிடமே வந்து, " எனக்கு எப்போ சம்ருவை கட்டி வைக்க போறிங்க??" என்று கேட்க,

அவனைக் குழப்பமாகப் பார்த்த அவனின் மாமா, "நாங்க எப்போ மாப்பிள்ளை அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொன்னோம்" என்று அவன் தலையில் குண்டைப் போட்டார்.

"மாமா இப்படியெல்லாம் சொல்லி இந்த பிஞ்சு மனசை உடைக்காதிங்க.. சின்ன வயசுல இருந்து அவ தான் எனக்குன்னு வளர்ந்துட்டேன் அப்பறம் இந்த கன்னிப்பையன் சாபம் உங்களை சும்மா விடாது" என்று அவன் சீரியசாய்ப் பேச,

"டேய் முண்டம் உன் ராசி கன்னி இல்லை.. உனக்கு தனுசு ராசி டா.. நீ கன்னிப்பையன் இல்லை" என்று அவனின் அன்னை மீண்டும் அவனிடம் வம்பிழுக்க,

அவனுக்கு வந்ததே கொலைவெறி, "அம்மான்னு கூட பார்க்க மாட்டேன் அம்மியை தூக்கி மண்டையில போட்டிருவேன்.. வாயை மூடிட்டு உட்காரு" என்று அவரை மிரட்டியவனை அடக்கிய அவனின் மாமா, "இதோ பாருங்க மாப்பிள்ளை 'இளவட்டக் கல்லை' தூக்குறவனுக்குத் தான் என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கனும்னு நான் கங்கணம் கட்டிகிட்டு இருக்கேன்.. அதுனால நீங்க அந்த இளவட்டக்கல்லை தூக்கிட்டா என் மவ உங்களுக்குத் தான்" என்று அவர் தன் முடிவைச் சொல்ல,

அவனிற்கு அப்போது தான் அவர்கள் வீட்டின் முன்னால் இருக்கும் கல் நினைவிற்கு வந்தது.

"எதேய்ய் அந்தக் கல்லை தூக்கணுமா?? யோவ் மாமா உன் பொண்ணை கல்யாணம் பண்றதே அந்தக் கல்லைத் தூக்கி என் தலையில போட்டுக்கிறதுக்கு சமம் தான் இதுல அதை வேற தூக்கனுமா?? முடியவே முடியாது உன் பொண்ணை நீயே வச்சுக்கோ ஆளை விடு" என்றவனை மறித்த சம்ருவின் கண்களில் இருந்த கோபமே சொல்லாமல் சொல்லியது அந்தக் கல்லைத் தூக்காமல் நீ போய் விடுவாயா என...

வேறு வழியில்லாமல் மூன்று மாதம் ஜிம்மிற்க்கெல்லாம் போய் உடம்பை வளர்த்து பின் நான்கைந்து முறை முயற்சி செய்து ஒரு வழியாய் அவன் அந்தக் கல்லைத் தூக்கிய பின்பே சம்ரு அவனை விட்டாள்.

இப்படி கஷ்டப்பட்டு கல்லைத் தூக்கி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிய கதையை அவன் சொல்லி முடிக்க, அங்கிருந்தவர்களின் சிரிப்பொலி அந்த அறையை நிறைத்தது.





" மற்றவர்களுக்கு வெளிச்சம் தர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுவர்த்தி போல்


உன் உதட்டில் பூக்கும் புன்னகைக்காக எனக்குள் உருகிக் கொண்டிருக்கிறேன் நான்!!"




-தொடரும்.
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே😍😍


எல்லாருக்கும் இந்த புது வருடம் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் அமைய வாழ்த்துகிறேன்...

எல்லாரும் என் மேல செம்ம காண்டுல இருப்பீங்க.. இவளுக்கு ஒரு கதையை தொடங்கி பாதியிலே விட்டுட்டு ஓடுறது தான் வேலையா போச்சுன்னு.. மன்னிக்கவும்... இந்த டைம் ஒரு முடிவோடு 2021 முடியிறதுக்குள்ள " காலம் எல்லாம் அவன் காதலில் " கதையை முடிச்சிரணும்னு ஒரு முடிவோடு எழுதி முடிச்சிட்டேன்.. போட தான் டைமில்லை.. இன்னையில இருந்து டெய்லி ஒரு யூடி வரும்.. நம்பி படிக்கலாம். சத்தியமா கதையை முடிச்சிட்டேன்.. சோ என்னை நம்பி படிக்க தொடங்கலாம்.. இதுவரைக்கும் படிக்காதவங்க மேலும் இத்தனை நாளுல படிச்சது மறந்தே போச்சுன்னு நினைக்கிறவங்க இந்த லிங்க்ல போய் படிச்சுட்டு வாங்க...



எல்லாம் நியாபகம் இருக்கு நீ அடுத்த யூடியை போடுண்ணு என்னை திட்டுறவங்க இந்த லிங்கில் போய் அடுத்த அத்தியாயத்தை படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க..



படிச்சுட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என்னோட பகிர்ந்துன்கோங்க பா... மிக்க நன்றி..

கருத்துகளை இங்கே சொல்லுங்க


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ♥ நன்றி வணக்கம்😁

இப்படிக்கு உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் செல்லப் பிள்ளை ,
மித்து 😍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் பட்டூஸ்😍😍😍


 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் பட்டூஸ்😍😍😍


 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் பட்டூஸ்😍😍😍





 
Status
Not open for further replies.
Top