All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘கரை சேர்ந்த விண்மீன்’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
thanks a lot madam 😊
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்,

வாசிப்பில் ஆர்வம் அதிகமாகி கடைசியில் நாமே எழுதினால் என்ன என்று பேனாவையும் பற்றி விட்டேன். பொதுவாகவே சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைக்க பிடிக்கும் எனக்கு. அதே இந்த கதையிலும் சேர்ந்து விட்டது என்னோடு. உங்கள் எதிர்பார்ப்புக்கள் வீணாகாது என நம்புகிறேன். இன்று கதையின் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன் உங்கள் கருத்துக்கள் அதுவே என் எழுத்துக்களை செதுக்க போகும் உளி. நிறை குறை இரண்டையும் மறவாது பகிர்ந்து கொள்ளவும். உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்..

மீரா ஷாலினி.
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..1


💛தூரமாய் வானில் நான்..
கரையோரமாய் அங்கே நீ..
எப்போது உன்னிடம்
நான் சேர்வது..
எப்போது உன்னில்
நான் தொலைவது..💛


"சனா!!!!..."

"கொஞ்சம் வொலியூம கம்மி பன்னுமா.."தூக்க கலக்கத்திலே எட்டிப்பார்த்து கூறிவிட்டு மீண்டும் போர்வைக்குள் சுருண்டு கொண்டாள் சனா.

"எருமையே காலைலே என்கிட்ட வாங்கிக்காத மரியாதையா எழுந்திடு..நாள் புல்லா அந்த வாலுங்க கூட சுத்திட்டு லேட்டா வந்து மதியம் வர தூங்க வேண்டியது.. இப்படியே இருந்தா போற இடத்துல என்னைத்தான் குறை சொல்வாங்க..கொஞ்சமாவது உன் தங்கச்சிங்கள பார்த்து பழகு.."
ஆவேசமாய் அறை வாசலில் இருந்து சத்தமிட்டுக்கொண்டிருந்தார் சனாவின் அன்னை வசுந்தரா.

"ஆஆஆவ்வ்..ம்மா டெய்லி ஒரே டையலக்க எப்படிமா இவ்வளோ கரக்ட்டா ஒரு பிழை வராம சொல்லுற..அம்மான்னா அம்மாதான்.."
அடுத்த நிமிடம் கரண்டி கட்டிலை நோக்கி பறந்து வர ஒரே தாவலில் எழுந்தவள் தன் டூத் ப்ரெஷ் பேஸ் வொஷ் சகிதம் வீட்டுக்கு பின்னிருந்த குளியறைக்கு சென்றாள். போகும் வழியிலே தங்கை மதிவதனியின் தட்டில் இருந்து ஒரு இட்லியை எடுத்து கடித்து விட்டு போட்டு அவளின் அலறலில் வீட்டை அலங்கரிக்கவும் தவறவில்லை.

டூத் ப்ரெஷ்ஷை வாயில் ஒரு பக்கம் வைத்துக்கொண்டு தூங்கி வழிய நின்று கொண்டிருந்தவள்..
"சனானானா..." என்ற அடுத்த சத்தத்தில் ப்ரசன்ட் என நிமிர்ந்து நின்றாள்.

அவளைக் கண்டு கைதட்டி சிரித்தான் அங்கே மதிலில் தொங்கிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு சுதன்.
"டேய் சுப்பு பக்கி..எதுக்குடா இப்படி சத்தம் போடுற..எரும கொரங்கு மாதிரி தாவாம ஒழுங்க வாசல்வழியா வாருதுக்கு என்னா.." அந்த பத்து வயது பையனிடம் பாய்ந்தாள் சனா.

"ஆமா உங்க அம்மா வாசல் கதவ திறந்து வச்சி வா மகனே ன்னு என்ன அப்படியே வரவேற்க தான் போறாங்க பாரு.. சரி சரி நான் சொல்ல வந்தத சொல்லிட்டு கிளம்புறன்.. நம்ம டீம் பெட் இருக்க இடத்த கண்டுபிடிச்சாச்சி..அது அந்த சாத்தான் விக்கி வீட்டுல தான் இருக்கு.. "
இடையிடையே சறுக்கிய கையால் மதிலை சுற்றிப்பிடித்துக்கொண்டே கூறினான் சுதன்.

"நோக்கு எப்படி தெரியும்டா..அதோட அது எதுக்கு அவனுக்கு.. அவனுக்கு பால் கூட பிடிக்க தெரியாதே..அதுல பெட்ட வச்சி என்ன செய்ய போறான்.." தன் மேலான சந்தேகத்தை ப்ரோஷ்ஷை கடித்துக்கொண்டே முன்வைத்தாள் சனா.

"நீ தானே சும்மா போனவன பிடிச்சி வம்பிழுத்து வச்ச அன்னக்கி..அதுக்கு பழிவாங்கி இருக்கலாம்.." தெளிவு படுத்தினான் சுதன்.

" நான் எதுக்கு சும்மா போனவன வம்பு பன்ன..அவன் தான் நான் வீசின கல்லுக்கு நேரா அவன் சைக்கிள கொண்டு வந்தான் அது கண்ணாடிய உடைச்சிட்டு.." கூலாக கூறியவளை அது சரி என பார்த்து விட்டு "சரி நாலுமணிக்கு மரத்தடிக்கு வந்துடு அங்க பேசிக்கலாம்.." பொத் என குதித்த சத்தத்தோடு மறைந்து போனது மதில் வழி எட்டிப்பார்த்திருந்த தலை.
மேலும் ஓர் பதினைந்து நிமிடம் வாயில் ப்ரெஷுடனே பக்கத்து வீட்டு ப்ரீதி தொடக்கம் தெருவின் கடைசி வீட்டு நாய் டிம்மி வரை யோசித்து முடித்தவள் மெதுவாய் வாயை அலம்பிக்கொண்டு உள்ளே சென்றாள்.

சனா இதுதான் நம் நாயகி..மூர்த்தி வசுந்தராவின் மூத்த புதல்வி. இவளுக்கு இரு தங்கைகள்...மதிவதனி மதுமிதா இருவரும் இரட்டையர்கள். வசுந்தராவிற்கு சனா அப்படி செய், இப்படி செய்யாதே என்று கூறி கூறியே நாள் முடிந்து விடும்.
மூர்த்தியிடம் புகார் சொன்னாலோ சனா அருகில் வந்து தலைவருடி கன்னத்தை செல்லமாய் கிள்ளி விட்டு செல்வதுதான். இந்த நேரங்களில் வசுந்தரா தான் காதிரண்டும் புகை கக்க முறைத்துக்கொண்டிருப்பார்.
மதி மது இரண்டு பேரும் சனாவிற்கு எதிர் துருவம். இப்படியெல்லாம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத அழகிய குடும்பம் தான் இது.

சனா இன்றி நாம் இல்லை என போட் தூக்காமல் சுற்றுபவர்கள் தான் த டைகர் குழு. பெயர் வைத்தது கூட சனா தான். இந்த குழுவில் நாளுக்கு இரண்டு முறை வசுந்தரா வீட்டுக்கு வந்து புலம்பிடும் தாய்மார்களின் புதல்வர்களும் புதல்விகளும் சனா உள்ளடங்களாக அடக்கம்.

சுதன்.. மகேஷ்..குமார்..இந்து..மஹதி இவர்கள் தான் குழு அங்கத்தவர்கள். முதலில் விக்கியும் இருக்க பின் அவனுடன் வந்த ஒரு சண்டையில் குழுவில் இருந்து நீக்கப்பட்டான் அவன்.

இருபது வயதை தொட்டுக்கொண்டிருந்த சனா, பத்து முதல் பதினைந்து வயதிற்குள் உள்ளடங்கிடும் இவர்களுக்கு என்றுமே அக்கா இல்லை, சட்டி இல்லை சனா தான்.

ஊரில் நல்ல காரியங்களில் முன்னிற்பதோடு நான்காம் தெருவில் முதலாம் வீட்டில் பிஸ்கட் செய்யும் மீனாட்சி பாட்டி கூரை ஏறி அந்த பிஸ்கட் ஒன்றை வைத்து விட்டு மீதி எல்லாம் அள்ளிக்கொண்டு வருவது, ஊரின் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் ராம் தாத்தா சைக்கிளில் போகும் போது மேலிருந்து தண்ணீரை கொட்டுவது..இப்படி பல பல அரிய செயல்களையும் செய்து ஊர் முழுவதும் எப்போடா தள்ளி விடலாம் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தேவதை 😝 தான் சனா.

பல் விளக்கி முடித்து வந்தவள் காபி போட்டு வந்து உட்கார மதுவும் மதியும் நல்ல பிள்ளைகளாக பாடம் படித்துக்கொண்டிருக்க வசுந்தராவோ ஒரு பக்கம் கன்னத்தை தாங்கி அமர்ந்திருந்தார்.

"என்னம்மா எந்த கப்பல் கவுந்திச்சி?" கேட்டு விட்டு அவளே சிரித்துக்கொள்ள முறைத்துப்பார்த்த வசுந்தரா..
"அடுத்தது என்னடி பன்ன போற?" என்றார் கோபமாக.

" அடுத்ததும்மா சும்மா தான் ஒன்னும் முக்கியமான வேல இல்ல. அப்படியே சாப்பிட்டுட்டு மரத்தடிக்கு போறது தான்..ஏன்மா கேட்குற?"

"அதை கேட்கல்லடி காலேஜ் முடிச்சிட்டல்ல..இதுக்கு அப்புறம் என்ன பன்ன போற?" பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு கேட்டார்.

"அதான்மா தெரில்ல பாரேன் நைட் நைட்டா நானும் உட்கார்ந்து யோசிக்கிறேன் ஆனால் ஒன்னுமே தோனமாட்டேங்குது. நம்ம திறமைக்கு எந்த இடத்துல வேலை ஓகே ஆகும்..எல்லாமே மிடில் ரேஞ் ஆள்களுக்கு தான..நம்ம போல ஸைன்டிஸ்ட் மூளை இருக்கவங்களுக்கு.." கன்னத்தில் கையை வைத்துக்கொண்டே பேசிக்கொண்டு போனவளிடம் ஏன்தான் கேட்டோம் என நினைத்த வசுந்தரா பல்லைக்கடித்துக்கொண்டிருக்க இதைக்கண்ட மதியும் மதுவும் மூர்த்தியும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.

"பேசாம கல்யாணம் பன்னிக்கிறயா..?" பட்டென போட்டு உடைத்தார் வசுந்தரா.

ஸ்லோ மோஷனில் அவரைத்திரும்பி பார்த்த சனா.."இது நல்லா இருக்கே..ஆனா மாப்பிள்ளைக்கு நான் எங்க போவேன்?"

தானிருந்த இடத்திலிருந்து பாய்ந்து வந்து அருகில் அமர்ந்த வசுந்தரா.."தங்கமே அதுக்கு தானடா நாங்க இருக்கோம்..உனக்கு எப்படி மாப்பிள்ள வேணும் சொல்லு..நாளைக்கே கொண்டு வந்து நிறுத்திடலாம்.." என்றார்.

"அது எனக்கு கறுப்பா செவப்பா..கட்டையா நீட்டா...இதெல்லாம் பிரச்சனையே இல்லமா..ஆனா எப்பயும் இதோ இப்படி சிரிச்சிட்டே இருக்கனும்.." சனா பல்லைக்காட்டி விட்டு கூறவும் இடையில் வந்து புகுந்த மதி...

"அக்கா அப்போ நீ டூத் பேஸ்ட் விளம்பறத்துக்கு வாரவனதான் கட்டிக்கனும்.." என்றாள்.

அவளை விரட்டி விட்ட வசுந்தரா குதூகலத்தோடு போனை எடுத்து இருந்த தரகருக்கு எல்லாம் கால் போட ஆரம்பிக்க சனாவோ இந்த வாரம் புல்லா மீனாட்சி பாட்டி பிஸ்கட் செய்யலயே என்ற கவையில் இன்னக்கி முதல் வேலையா வேற எங்க இந்த ஊர்ல பிஸ்கட் செய்யுறாங்கன்னு கண்டுபிடிக்கனும் என எண்ணிக்கொண்டாள்.
 
Last edited:

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..2

💛விண்ணிலிருந்து
குதித்தே..
அலைகளுடன்
சேர்ந்தே..
வருகிறேன்
உன்னிடம் சேர..
உன் இடம் தேடி..💛

காலைப்பொழுது அழகாய் விடிந்திருக்க ஆதவனே சலித்துப்போகும் அளவு சனாவை எழுப்பி எழுப்பி ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் வசுந்தரா.

கரண்டியாலும் அடித்துப்பார்த்தாகி விட்டது..ஏன் தண்ணீரையுமே கொண்டு போய் ஊற்றியாயிற்று..அதை கொசுக்கடி போல் ஒதுக்கி விட்டு தண்ணீரையும் போர்வையால் துடைத்துக்கொண்டு மீண்டும் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தாள் வசுந்தரா பெற்றெடுத்த செல்வ மகள்.

தரகர்கள் கொண்டு வந்திருந்த போட்டோக்களை குடும்பமே உட்கார்ந்து அலச.. பல பல குறைகள் தெரிந்த சனாவின் பார்வையை கண்டு சமாளிக்க முடியாது அலசி ஆராயும் பொறுப்பை மூர்த்தியும் வசுந்தராவும் மட்டும் எடுத்து ஒரு பையனை தெரிவு செய்தனர். சனா போட்டோவை பார்த்தால் இதிலும் குறை மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் என போட்டோவை மறைத்து விட்டனர்.

இதோ இன்று மாலை பெண் பார்க்க வருவதாக இருக்க இன்றாவது கொஞ்சம் நேரத்துடன் அதாவது ஒன்பது மணிக்காவது எழும்பினால் நல்லது என எழுப்பிக்கொண்டிருந்தார் வசுந்தரா. சனாவோ பத்து மணிக்கு தான் அலாரம் அடிக்கும் என அசையாது படுத்திருந்தாள்.

ஒருவாரு பத்துமணிக்கு எழுந்து குளித்து காபி குடித்து வந்தமர்ந்தாள். தாய் முறைக்க எதுக்கு இப்போ முறைக்கிறாங்க என யோசித்த வண்ணம்.."ம்மா.." என்றாள்.

வசுந்தராவோ கண்ணை உருட்டி பார்த்து விட்டு திரும்பிட..
"ம்மா புள்ளய பயம் காட்டாதம்மா.." என்று சனா சிணுங்க..தலையில் அடித்துக்கொண்ட வசுந்தரா.." உன்ன இன்னக்கி பொண்ணு பார்க்க வராங்கடி மூன்று மணிக்கெல்லாம் வந்துடுவாங்க..இப்போ டைம் ஒன்னாகுது.. போய் ரெடி ஆகு.."என்றார் பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டே.

அப்பொழுதும் சனா உம் என்றே இருக்க..."என்னடி..?" என்றார் இம்முறை கோபம் வெடிக்க..

"நீ என்கிட்ட கேட்காம எதுக்கு இன்னக்கி வர சொன்ன.." இழுத்துக்கொண்டு மூக்கால் கேட்க..

"ஏன் இன்னக்கி என்ன?" பதிலுக்கு கேட்டார் வசு.

"மூனு மணிக்கு டீம் மீடிங்..ங் இரு...அய்யோ அம்மா அடிக்காத..ஹிஹி" ஆரம்பிக்கும் போதே கரண்டியுடன் வந்து நின்றவர் அதனை ஓங்கவும் அடித்து பிடித்துக்கொண்டு சிரிப்புடனே ஓடினாள் சனா. பதிலுக்கு வசுந்தராவும் சிரித்துக்கொள்ள அதனையும் தாண்டி தன் மகளை இன்னும் சில நாளில் பிரிந்திட வேண்டுமே என்ற துயர் ஒட்டிக்கொள்ள கண்கள் கலங்கியது.

இவ்வாறு மாலை நேரம் வர தங்கைகளின் கைவண்ணத்தில் அழகு பதுமையாக சாரியில் அறையில் அமர்ந்திருந்தாள் சனா. அவள் தயாரா என பார்க்க வந்த வசுந்தரா அவள் அமர்ந்திருந்த விதம் கண்டு அருகில் வந்து கையில் இருந்த கரண்டியால் தலையிலே ஒன்று போட...
"ஆஆஆ அம்மா எதுக்குமா அடிச்ச..?" என்றாள் தேய்த்துக்கொண்டே..

"இப்போவாவது பொண்ணுமாதிரி உட்காருடி..பாரு நீ எப்படி இருக்கன்னு..கடவுளே இவள நீதான் காப்பாத்தனும்.." என்று விட்டு அவர் நகர முகத்தை சுருக்கிக்கொண்டே மேசைமேல் தூக்கி வைத்திருந்த ஒரு காலை மட்டும் கீழறக்கிக்கொண்டு மறுகாலை அப்படியே சுவற்றில் தூக்கி வைத்திருந்தாள்.

இந்நேரம் எல்லாம் ஒன்று சேர்ந்தால் கூத்து தொடங்கி விடும் என உள்ளே விடாது சமாளிக்க பார்த்து தோற்று பின் வாண்டுகளை நேராக பாய் போட்டு அமர்த்தியிருந்தார் வசுந்தரா. அதுகளும் எப்போடா அறைக்குள் நுழைய இடம் கிடைக்கும் என வாசலையே பார்த்திருந்தன.

"அக்கா வந்துட்டாங்க.." மது ஓடி வர பின்னால் மதியும் இணைந்தாள்.

வந்தவர் அனைவரையும் தாயும் தந்தையும் வரவேற்கும் சத்தம் கேட்க உள்ளிருந்து அறைக்கதவில் காதை வைத்து கேட்டுக்கொண்டிருந்தாள் சனா.

எல்லாரும் அமர்ந்திருப்பது கதவிடுக்கில் தெரிய ஒருவர் மீது ஒருவராக தலையை வைத்து நின்று பார்த்துக்கொண்டிருந்தனர் மதுவும் மதியும். " இதுல யாருடி மாப்பிள்ள.." மதி கேட்க.." அதோ அந்த ரெட் கலர் சாரி ஆன்ட்டிக்கு பக்கத்துல இருக்காரே அவரா இருக்கும்" என்றாள் மது.

இவர்களது உரையாடல் சனாவுக்கும் பார்க்கும் ஆசையை தூண்டிட.."கொஞ்சம் நகரு மது நானும் பார்க்கிறேன்.." என்றாள் சனா முன்னால் வந்து.

மது விலகி இடம் கொடுக்க மதியோ அதே இடத்தில் ஒட்டிக்கொண்டு "அதெல்லாம் முடியாது நான் தான் முதல்ல இந்த இடத்துக்கு வந்தன் நான் நல்லா பார்த்த அப்புறம் நீ பார்த்துக்கோ.. "என்று விட்டு தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

நேரம் நகர மதியோ அதே இடத்திலே இருக்க எரிச்சலடைந்த சனா..
"போதும்டி.." என்றாள். " நான் இன்னும் ஒழுங்கா பார்க்கல பாரு இங்க கொஞ்சமாதான் தெரியுது.." என்று கூற கோபம் கொண்ட சனா..

அறைக்கதவை பட்டென் திறந்து விட்டு.." இதோ இப்போ நல்லா விளங்கும் போய் பாரு.." என கூறி அவளை வெளியே தள்ளி விட்டு மதுவுடன் ஹை பை போட்டுக்கொள்ள..

அந்நேரம் வந்திருந்த ஒரு பெண் உங்களுக்கு எத்தனை பெண் என கேட்ட கேள்விக்கு பெருமையாக.." மூனு பேர்ங்க..மூனு பேருமே ரொம்ப சமத்து..இருக்கிற இடம் கூட தெரியாத அளவு அமைதின்னா பாருங்களேன்" என வசுந்தரா கூறவும் அறையிலிருந்து அங்கு, அடுக்கி வைத்திருந்த சட்டி முட்டிகளை பெரிய சத்தத்தோடு தள்ளிக்கொண்டு மதி வந்து விழவும் சரியாக இருந்தது.

அனைவர் பார்வையும் அங்கு மொய்க்க பல்லைக்கடித்துக்கொண்ட வசுந்தரா..இவர்கள் பக்கம் திரும்பி .."பொண்ண அழைச்சிட்டு வாரன்.." என்றார் கதையை மாற்றும் விதமாக.

எல்லோரும் இதனை மறந்து பெண்ணைப்பார்க்கும் ஆவலில் சலசலக்க..அறைக்கு வந்தார் வசுந்தரா.

"அம்மா வா வா..எது மா மாப்பிள்ளை?" வரும் போது இழுத்து வைத்து கேட்டாள் மது.

"அதோ அங்க சிவப்பு சாரிக்கு பக்கத்துல இருக்காருல அவரு.." வசுந்தரா காட்டவும் தான் அணிந்திருந்த கண்ணாடியை நன்றாக சரி செய்து விட்டு பார்த்த சனா..ஓஹ் சொல்ல மறந்துட்டேன்..நம்ம சனாக்கு கொஞ்சம் தூரத்துல இருக்கது தெரியுறது கம்மியா சோ எப்பவும் கண்ணாடியும் கண்ணுமா தான் சுத்துவா. கண்ணாடிய பிரிஞ்சு இருக்கும் தருணங்கள் இரண்டே இரண்டு தான்..ஒன்னு தூங்கும் போது அப்புறம் குளிக்கும் போது..அதுவும் சில நேரம் போட்டுகிட்டே தூங்கும் நேரமும் உண்டு.

"ஏம்மா பிரியாணி ப்ளேட்ட அரைவாசில புடுங்கி வச்சது போல மூஞ்ச வச்சிட்டு இருக்கே அதுவாம்மா.." கேட்டாள் சனா..

அவளை தட்டி அமைதிப்படுத்திய வசுந்தரா கையில் காபி ட்ரேயை கொடுத்து விட்டு கண்ணாடியை கழட்ட போக திமிறிக்கொண்டு பின்னகர்ந்தாள். கப்புகளில் இருந்த காபி எல்லாம் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தன இவள் திமிறலில்.

"டோன்ட் டச் மை க்ளாஸஸ்.." முறைத்துக்கொண்டு சனா கூறவும்.."சரி வா கேட்டா பொண்ணுக்கு கண் பார்வை சரியில்ல சொல்லு.." சிறு கோபத்துடன் கூறி விட்டு அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார் வசுந்தரா.

அனைவர் பார்வையும் அழகு பதுமையாய் நடந்து வந்தவள் பக்கம் திரும்ப பார்க்க வேண்டியவனோ தன் போனில் எதையோ முக்கியமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒவ்வொருவரிற்காய் சென்று காபியை கொடுத்தவள் கடைசியாய் மாப்பிள்ளையிடம் வர அவனோ அதே போல் போனை பார்த்துக்கொண்டே எடுக்க போகவும் சனாவின் வால்தனம் தலை தூக்க.. அங்கு ஏற்கனவே ஒரு கப் குடித்து விட்டு வைத்திருக்க, அந்த காலி கப் இருந்த பக்கம் ட்ரேயை திருப்பினாள்.

இதை அறியாத அவனும் அதனை எடுத்து வாயில் போனை பார்த்துக்கொண்டே வைக்க அவ்விடம் விட்டு நகர்ந்து வந்து தன் தாய் அருகில் நின்று கொண்டாள் சனா.

காபி வராமல் போகவே அப்போதுதான் தன் பார்வையை போனில் இருந்து நகர்த்தியவன் பார்வை கப்பில் பதிந்து விட்டு ஆச்சரியமாக அவள் மேல் பதிந்தது. இதற்காகவே காத்துக்கொண்டிருந்த சனா தன் ஒரு கண்ணை சிமிட்டவும் டக்கென தலையை மறுபக்கம் திருப்பிக்கொண்டான் அவன்.
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..3

💛நீ தான் என்று
கண்டேன்...
என் ஒளியிலே
உன் விம்பத்துகல்கள்
அலையெங்கும்
மிதந்திடவே.. 💛



"நாளைக்கு போய்டுவேன்டி..ப்ளீஸ்.." கண்களை பெரிதாக்கி மூக்கை சுருக்கி உதட்டை இழுத்துக்கொண்டு மதியிடமும் மதுவிடமும் கூறினாள் சனா.


"அடியே இதே எத்துன முறை சொல்லி சொல்லி இந்த பப்பி பேஸ காட்டி வேல வாங்குற எங்க கிட்ட..கேக ஆளில்ல நினைச்சயா.." பத்தாவது முறையாக டிவி முன் இருந்து வேலையை ஏவிய சனாவிடம் பொறிந்து கொண்டே தட்டை மீண்டும் கடலையால் நிரப்பி வர சமயலறை சென்றாள் மது.


"உண்மையும் அதுதான..ஹிஹி தாங்ஸூ.." என்று முறைத்தவளிடமிருந்து தட்டை பிடிங்கிக்கொண்டாள்.


அன்று பார்த்து விட்டு போனவர்களுக்கு பெண்ணை பிடித்து விட கல்யாணத்தையும் சீக்கிரமே வைத்து விட நாள் குறித்திருந்தனர். அந்த நாளிற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்க இவளோ ஏதோ நாளை என்பது போல் முகத்தை பாவமாக வைத்து அனைத்தையும் தன் பக்கத்திற்கு செய்து கொண்டிருந்தாள்.


ஆதஷை சிறுவயதில் இருந்து வளர்த்தது அவனது பாட்டி தான்..
தாயை சிறு வயதிலே இழந்திருந்தான். தந்தை இருந்தும் ஏனோ அவரை இவனுக்கு பிடிப்பதில்லை எனவே தானே உழைத்து ஓர் அளவான இரண்டு மாடி வீட்டை கட்டி தன் பாட்டியுடன் வசித்து வந்தான்.


சொந்தக்காரர்கள் இருந்தும் அவன் பெரிதாய் ஒட்டிக்கொள்வதில்லை. பாட்டியும் அவனும் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஆதிஷ் மென்பொருள் தயாரிப்பு செய்யும் க்ளௌட்ஸ்(clouds) கம்பனியை வெற்றிகரமாக நடத்திக்கொண்டே தற்போது அதன் இரண்டாவது கிளை உருவாக்கத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தான்.


மணி மூன்றை தொடும் வரை அரைக்கண்ணால் கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் சனா. வசுந்தரா அறையில் ஏதோ செய்து கொண்டிருக்க தங்கைகளும் அவருடன் இருக்க இந்த பக்கம் வாசலில் வந்து எட்டி பார்த்தான் சுதன்.


"சனாஆஆஆ..வா போலாம்.." இவன் கிசுகிசுப்பாய் அழைக்க கட்டியிருந்த புடவையை தூக்கி பிடித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தத்தி தத்தி நடந்து வாசலிற்கு வந்தாள்.


"என்ன சட்டி இது..இதை போட்டுட்டு எப்படி மதில் ஏறி குதிப்ப கூரைக்கு தாவுவ..எப்படிதான் அதுகுள்ள குதிப்ப.."பட பட என கேள்வி கேட்டவனை தலையில் தட்டி அமைதி படுத்தி விட்டு அவனை இழுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாய் அந்த இடத்தை விட்டு புடவையை தூக்கி பிடித்துக்கொண்டு ஓடினாள்.


தங்களது கூட்டம் நடக்கும் மரத்தடிக்கு வந்த பின்னே ஓட்டத்தை இளைக்க நிறுத்தியவள்.."அந்த கொடுமைய ஏன்டா கேட்குற..இனிமே அங்க போன புடவைதான் கட்டனும்ன்னு இப்போவே ப்ராக்டிஸ்டா..உப் கல்யாணம் பன்னா ஜாலியா தூங்கிட்டு சாப்பிட்டு தூங்கலாம்ன்னு தான் ஓகே சொன்னன்..ஆனா இது ரொம்ப கஷ்டமா இருக்கும் போலயே..சரி சரி எல்லாரும் வந்தாச்சா..சுதன்.. மகேஷ்..குமார்...இந்து..மஹதி..
மஹதி எங்கடா..?"


"இதே வந்துட்டேன்.." சத்தமிட்டுக்கொண்டே வந்தாள் பத்து வயது மஹதி.


"எதுக்குடி ஊரையே கூட்டிட்டு வார.." தலையில் நங் என கொட்டினான் மகேஷ்.


"ஆவ் சரி எதுக்கு திடீர் மீட்டிங்?" தலையை தேய்த்துக்கொண்டே கேட்டாள் அவள்.


"அது நம்ம தேடுதல் வேட்டைக்கு பலன் கிடைச்சிரிச்சி...இந்த தெரு தாண்டி ஆறாவது தெருல அஞ்சாவது வீட்டுல போடுற வடை தான் இந்த ஊர் புல்லா எல்லா கடைக்கும் போகுதாம்.."
இந்து கூறி முடிய துள்ளிக்குதித்த மஹதி...


"அப்போ இன்னக்கி அங்கதான் போக போறோமா.." என்று முகம் பிரகாசிக்க கேட்டு விட்டு.."ஆனா நாம இரண்டாவது தெருவ தாண்டி இதுவரை போனதே இல்லையே.." என்றாள் சிறு கலவரம் முகத்தில் படற.


"போனதே இல்லன்னா போகவே கூடாதா என்ன..போவியா.." அவளை வெட்டி பேசினான் குமார்.


"சரி சரி போதும் வாங்க போகலாம்..டேய் சுப்பு டப்பா எடுத்தயா..?" சனா கேட்க...


"எடுத்தேன் சட்டி.." கையிலிருந்த இரு டப்பாக்களை பார்த்துக்கொண்டே கூறினான்.


"ஓகே இரு எதுக்கும் மேல போய் கயிறு எடுத்துக்குறன்.." புடவையை இழுத்து செறுகிக்கொண்டு அந்த மரத்தில் மேலே இவர்களது சேட்டையில் பாதி பிய்ந்தும் கம்பீரமாய் உட்கார்ந்திருந்த மர வீட்டை நோக்கி ஏறி கதவைத்திறந்தது கொண்டு உள்ளே சென்றாள்.


அங்கு வெறுமையாய் இருந்த பிஸ்கட் டப்பாவை கண்டு நெஞ்சடைக்க..(இவளெல்லா என்னாத பன்னுறது.."
அதையும் கயிற்றையும் அள்ளிக்கொண்டு கீழே குதித்தாள்.


"இந்தா சுப்பு இதையும் வச்சிக்கோ..இந்து இதை நீ வச்சிக்கோ.." டப்பாவையும் கயிற்றையும் ஒவ்வொருவரிடம் கொடுத்தவள் போகலாம் என்று அனைவரும் புடை சூழ நடக்க ஆரம்பித்தனர்.


நடந்து ஐந்தாவது தெருவை நெருங்கிக் கொண்டிருந்தவர்களை தடுத்தாள் மஹதி.."டேய் அஞ்சாவது தெருல ஆறாவது வீடா..இல்ல ஆறாவது தெருவுல அஞ்சாவது வீடா.." மற்றவர்களையும் சேர்த்தே குழப்ப அவள் தன் குழப்பத்தை முன்வைக்க..


"எரும குழப்பாத ஆறாவது தெருல அஞ்சாவது வீடு.." சுதன் கூறவும்..


"எனக்கென்னமோ அஞ்சாவது தெருல ஆறாவது வீடு போல தான் நினைவு சட்டி.." இது குமார்.


"என்னாட நீங்க ஆள் ஆளுக்கு ஒவ்வொன்ன சொல்லுறீங்க..சுப்பு நீதான போய் செக் பன்ன கரக்டா சொல்லு.." அங்கிருந்த ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டு கேட்டாள் சனா.


"அது சட்டி இப்போ எனக்கே கொஞ்சம் டவுட்டா இருக்கு..😕" சுதன் தலையை சொறியவும்...அவனை இயன்ற அளவு முறைத்த சனா.."இப்போ என்ன பன்னுறது.." என்றாள் சற்றே கோபமாய்.


"இப்படி செய்யலாமா..இன்னக்கி ஆறாவது தெருல அஞ்சாவது வீட்டுக்கு போலாம்..நாளைக்கு அஞ்சாவது தெருல ஆறாவது வீட்டுக்கு போலாம்.."இந்து பெருமையாய் தன் யோசனையை முன் வைக்க..


"ஆமா அடுத்த நாள் நம்ம ராம் தாத்தா வீட்டு முன்னாடி தோப்பு கரணம் போடலாம்." குமார் கூறவும்.."ஏன்டா " என்றாள் மஹதி.


"பின்ன நாம இன்னக்கி ஒரு வீட்டுல போய் அங்க வடை இருக்கோ இல்லையோ நாம போனத கண்டுபிடிச்சி உசாராகிடுவாங்க அப்புறம் நாளைக்கு நம்மல கையும் கலவுமா பிடிச்சிடுவாங்க.."


குமார் கூறியதை கேட்டவர்கள் அமைதி காக்க.."இப்போ நமக்கு இந்த வடை கண்டிப்பா தேவையா..பேசாம கடையில வாங்கியே சாப்பிட்டுகலாமே..." இந்து கேட்கவும்


"என்னன்னாலும் திருடி சாப்பிட்ற டேஸ்டும் அந்த பொலிஸ் கிட்ட இருந்து தப்பிச்சி ஓடுற அந்த ரியல் கள்ளன் பொலிஸ் த்ரிலும் வருமா.." என்றான் மகேஷ்.


பொறுமையை இழந்த சனா.."சும்மா பேசிட்டே இருக்காதீங்கடா..இதான் ப்ளான் கேளுங்க..குமார் நீயும் இந்துவும் மகேஷும் ஆறாவது தெருல இருக்க அஞ்சாவது வீட்டுக்கு போறிங்க இந்தா பிடி ரெண்டு டப்பா ஒரு கயிறு..நானும் சுதனும் மஹதியும் அஞ்சாவது தெருல இருக்க ஆறாவது வீட்டுக்கு போறோம்..எல்லாரும் அடுத்தது நம்ம மரத்தடில சந்திக்கிறோம்..டன்னு??"


அனைவரும் தலையாட்டி விட்டு திட்டப்படி குழுவாய் பிரிந்து செல்ல முதலில் ஐந்தாவது தெருவின் ஆறாவது வீடு முன்னே வந்தவர்கள் கொஞ்சம் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


"சுப்பு இந்த வீட்ட பார்த்தா வடை சுடுற வீடு போல இல்லையேடா.." சனா இழுக்கவும்..


"சட்டி அதுக்குன்னு பாட்டி வடை சுட்ட கதையில வார போல ஓலை குடிசையா வச்சிருப்பாங்க..மொடர்ன் வேல்ட்ல.."


"டேய் அது சரிடா வடை சுட்டு உழைக்கிறதுக்கு இவங்களுக்கு என்ன தேவை இருக்குன்ற நீ.." இரு தள வீட்டை பார்த்துக்கொண்டே மஹதி கேட்டாள்.


"ரொம்ப கேள்வி கேட்காதீங்க..இங்க பாரு டோன்ட் ஜஜ் அ புக் பை இட்ஸ் கவர்..சொல்லிர்காங்களா இல்லையா அது போல தான் டோன்ட் ஜஜ் அ ஹவுஸ் பை இட்ஸ் லுக்.. ஒரு வேள ஒரே இடத்துல உட்கார்ந்த நோயா வந்துடும்ன்னு ஆரோக்கியத்துக்காக வடை சுடலாம்ல.." பட பட என பொரிந்தான் சுதன்.


யோசித்த சனா.."அது எப்படிடா வடைய உட்கார்ந்து தன சுடுவாங்க இதுல என்ன ஆரோக்கியம்?"


"அவங்க நடந்துட்டே சுடுவாங்கலாம்..வாரியா இப்போ உள்ள போகலாம்.." தலையில் அடித்துக்கொண்டு சுதன் முன்னால் அவ்வீட்டை நோக்கி நடக்க..அவ்வீட்டினுள் இருப்பது தெரியாது சனாவும், மஹதியையும் சுதனையும் பின்தொடர்ந்தாள்.

கருத்துக்களை பகிர

 
Last edited:

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..4

💛உன் விழிகளின் நடனம்
என் உயிரை மீட்டுதடி..
உன் விழிகளில் கரையின்
விம்பம் காண்கிறேன்
அங்கும் நானே..💛

சுதன் முன்னால் ஐந்தாவது தெருவின் ஆறாவது வீடு நோக்கி நடக்க..அவ்வீட்டினுள் இருப்பது தெரியாது சனாவும், மஹதியையும் சுதனையும் பின்தொடர்ந்தாள்.

முதலில் மதில் ஏறிக்குதித்த சுதன் இரண்டாவது மஹதியை குதிக்க உதவி செய்ய கடைசியாக சனா தன் புடவையையும் உயர்த்திப்பிடித்துக்கொண்டு சுதனிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டு குதித்ததில் கீழே விழுந்து கையையும் தேய்த்துக்கொண்டு எழுந்து நின்றாள்.

"அதுக்குதான் சொல்லுறது இதோ நம்மள போல இப்படி உடுத்துட்டு வான்னு.." தனதையும் மஹதியினதும் காற்சட்டை டீஷர்ட்டை பார்த்து சுதன் கூற அவனை முறைத்த சனா பேசாது குருதி கசிந்த கையை தன்னிடம் இருந்த கைக்குட்டையை வைத்து கட்டிக்கொண்டு முன்னே நடந்ததாள்.

அவள் அந்த வீட்டு வாசல் நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்திருக்க சுதன் அவளை இழுத்து நிறுத்தினான்."உனக்கு உன் மாமியார் வீட்டுக்கு போறன்னு நினைப்பா சட்டி அப்படியே வாசல் பக்கம் போற நீயே எங்கள மாட்டி விட்டுறுவ போலயே..நான் மொதல்ல போறேன் நீ கம்முன்னு பின்னால வா.. அந்த டப்பாவ கொடு இங்க" படபட என பொரிந்து விட்டு அவள் கையில் சில பிஸ்கட்டுகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த டப்பாவையும் பிடுங்கிக்கொண்டு முன்னே நடந்தான் சுதன்.

"இவன் பேச்செல்லாம் நான் கேட்க வேண்டிய நிலமை.." முணுமுணுத்து விட்டு அவள் அவனை பின்தொடர்ந்தாள். அங்கு வீட்டின் பின்புறம் வந்தவர்கள் அங்கு மேலிருந்த இரண்டு ஜன்னலையும் பார்த்து விழித்துக்கொண்டு நின்றனர்.

முதலில் அமைதிமை களைத்தாள் மஹதி..."சட்டி இதுல எது கிச்சனா இருக்கும்.."

"தெரிலயே..இரு இன்கி பின்கி போட்டு பார்க்கலாம்.." சுதன் கூறவும் சனா முறைத்த முறைப்பில் என்ன என்று பார்க்க.."உன் இன்கி பின்கி எப்பவுமே பிழையாதான் வரும் என்ன போல அறிவாளிகள் அறிவா எண்ணிணா கரக்ட்டா வரும் இரு..பத்து இருபது முப்பது நாப்பது.." அவள் எண்ணவும் அறிவா என்னுற மூஞ்ச பாரு என முணுமுணுத்தான் சுதன்.

"நூறு...நீ அவுட்டு..இதோ இது தான் கிச்சன் வாங்க போலாம்.."வலது பக்கம் இருந்த ஜன்னலை சனா காட்ட மஹதியும் சுதனுமோ.."இன்கி பின்கில இதுதான் வந்திச்சி..சோ இதுதான் கிச்சன்.."என இடது பக்கம் இருந்த ஜன்னலைக்காட்ட இல்ல இதுதான் இல்ல இதுதான்..என ஒரு இருநிமிட விவாதத்தின் பின் சனா தன் கையில் இருந்த கைகுட்டையை எடுத்து முகத்தை மறைத்து கட்டிக்கொண்டு.."நான் போறேன்..பே.." என்று விட்டு அங்கு திறந்திருந்த நீண்ட கதவு போன்ற ஜன்னலிற்கு கயிற்றை வீசி அதை இறுக்க கட்டி விட்டு ஏற தொடங்கினாள்.

அவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட சுதனும் மஹதியும் தங்களிடம் இருந்த கயிற்றை கொண்டு அடுத்த ஜன்னலினூடு போட்டு ஏறத்தொடங்கினர்.

மேலே ஏறி ஜன்னலினூடு உள்ளே நுழைந்த சனாவைப்பார்த்து பல்லை இளித்துக்கொண்டிருந்தது அந்த படுக்கையறை.."அச்சோ இப்படி ஆகிரிச்சே.." யோசித்தவள் ஓடிச்சென்று கீழே எட்டிப்பார்க்க அங்கோ சுதனையும் மஹதியையும் காணவில்லை.

"அதுதான் கிச்சன் போலவே..நோ நோ ஒத்துக்க கூடாது.. என்ன பன்னலாம்..சரி இந்த வீட்டுல இரண்டு கிச்சனா இருக்கும் என்று சமாளிச்சிடலாம்..பர்ஸ்ட் இங்க என்ன இருக்கு பார்க்கனுமே வடை இருக்காது..அட்லீஸ்ட்.." அவள் தன் பார்வையை அலச அவள் கண்களுக்கு அகப்பட்டது அந்த ப்ரிஜ்.

ஓடோடிச்சென்று அதனை திறந்தவள் அதனுள் இருந்த சாக்லெட் மலையை கண்ணை விரித்து விரித்து பார்த்து விட்டு கைகளில் அள்ளி எடுத்து தன்னிடம் இருந்த பையில் திணித்துக்கொண்டாள். அதில் பெரியதாய் இருந்த ஒன்றை வாயில் கடித்துக்கொண்டு ப்ரிஜ்ஜை அடைத்து விட்டு "டன் இப்போ என்ன பன்னலாம்.." யோசித்துக்கொண்டே இவள் பின்னால் திரும்ப அங்கே அழகாய் கைகளை கட்டி கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் ஒருவன்.

வாயிலிருந்த சாக்லெட் தானாகவே கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள திறந்த வாய் மூடாது அப்படியே நின்று கொண்டிருந்தாள் சனா.

ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து நெருங்கி வந்தான்.

சனாவின் மூளையோ "இவன் அவன்ல..அவன் பெயர் என்ன ப்ச் மறந்துட்டேனே..அம்மா என்னமோ சொன்னாங்களே எதுக்கு இப்படி பார்க்குறான்..அய்யோ அவன் வீடா இருக்குமோ இது.." பலவாறு எண்ணிக்கொண்டிருந்தவள் அருகில் வந்து முகத்தை மறைத்திருந்த துணியை எடுத்து விட்டான் ஆதிஷ்.

பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தவளை நிதானமாய் பார்த்தான் ஆதிஷ். அடுத்து அவன் பார்வை அவள் கைகளுக்ககு சென்றது. அங்கே பையினுள் நெரிசலில் இடமில்லாது மூச்சுவிட வெளியில் தலை நீட்டிக்கொண்டிருந்தன சில சாக்லெட்கள்...இவள் அவற்றை இழுத்து மறைக்க முயல அவனோ ஒரு கையை அவள் பக்கமாய் நீட்டி கேட்டான்.

ஒரு முறை பாவமாய் அவற்றை பார்த்து விட்டு அவள் கொடுத்து விட அதை வாங்கி கட்டிலில் வைத்தான். "ஐம் ஆதிஷ்.." அவன் பேசுவது ஏதோ வேற்றுக்கிரக மொழி போல் அவனையே பார்த்திருந்தாள் சனா.

"ஹலோ சனா ரைட்.."

டிங் டிங் என தலையை ஆட்டினாள். "இங்க என்ன வேலை?" ஒற்றை வரியில் வந்தது கேள்வி.

"அது..அது.." சனா என்ன சொல்வது என இழுக்க...

"மாமா அக்கா உங்களுக்கு பிஸ்கட் தந்துட்டு போக வந்தாங்க..." கதவிடுக்கில் எட்டிப்பார்த்து குரல் கொடுத்தான் சுதன்.

"டேய் என் பிஸ்கட் டா..வேணா.." சுதன் பக்கமாய் திரும்பியிருந்த ஆதிஷின் பின்னால் இருந்து சுதனிற்கு கைகளால் சைகை காட்டினாள் சனா.

"ஓஹ்.." அவன் திரும்பி ஒரு முறை சனாவை பார்க்க நல்ல பிள்ளையாய் கைகளை பின்னால் கட்டி குனிந்து கொண்டாள்.

"அம்மா நம்பர் சொல்லு.." அவன் கேட்கவும் அங்கும் இங்கும் விழிகளை உருட்டியவள்..

"அம்மாகிட்ட போனில்லையே.." என்றாள் சமாளித்துவிட்ட குதூகலிப்பில்.

"அப்பா போன் இல்லாம இருக்க மாட்டாங்க..அப்பா நம்பர் சொல்லு.."

"விட மாட்டான் போலயே அதுவும் ஏதோ நான் தப்பு செஞ்சி மாட்டின ரேஞ்ல பன்னுறான்.." அவள் உள்ளே யோசிக்க.."நீ தப்பு பன்னிதான் மாட்டிருக்க.." என்றான் ஆதிஷ்.

பே என வாயைப்பிளந்ததவள் இப்போது சுதன் பக்கம் பார்த்து விட்டு.."இதோ இவன் தான் இந்த வீடு தான் சொல்லி கூட்டிட்டு வந்தான் எனக்கு எதுவுமே தெரியாது.." என்றாள் அப்பாவியாய்.

அவன் பார்வை சுதன் பக்கம் செல்ல.."அய்யோ மாமா என்ன கூட்டிட்டு வந்ததே இவள் தான்..நான் இந்நேரத்திற்கெல்லா வீட்டுல பாடம் படிச்சிட்டு இருப்பன்..டேய் சட்டி..நீயாச்சி உன் பிஸ்கட்டாச்சி..பிடி.." என அந்த டப்பாவை தூக்கிப்போட்டு விட்டு ஒரே ஓட்டமாய் அங்கிருந்து மறைந்தான் அவன். திரு திரு என விழித்த மஹதியும் அவன் பின்னே நழுவி விட..தன்னந்தனியாய் ஆதிஷ் முன்னே நின்று கொண்டிருந்தாள் சனா.

அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என கேட்கவும் கையும் களவுமாக மாட்டியிருந்தும் ஒத்துக்கொள்ளாது யோசித்த சனா.."நான் வீட்டுலே தான் இருந்தேன் இவன் தான் பிஸ்கட் வடன்னு சொல்லி என்ன கூட்டிட்டு வந்தான் நம்புங்க செத்து போன என்னோட அணில் குட்டி மேல சத்தியம்.." அவள் கண்ணை உருட்டி உருட்டி கூறவும் அவ சத்தியம் பன்னி பன்னியே அது செத்துருக்கும் போல..என்று எண்ணி விட்டு ஒன்றும் பேசாது அங்கிருந்து நகர்ந்தான்.

எங்க போறாறு..என இவளும் எட்டிப்பார்க்க அலுமாரியைத்திறந்து மருந்து பெட்டியுடன் இவளருகில் அவன் வருவதை பயத்தில் பார்த்தவள்.."அது அது எதுக்கு.." என்றாள் தன் கையை பின்னே மறைத்துக்கொண்டு..

"உன் கையில அடி பட்டிருக்கு.."

" நான் இன்னக்கி விரதம் மருந்தெல்லா போட கூடாது.." பின்னகர்ந்தவளை அதிசயமாய் பார்த்த ஆதிஷ்..ஏதோ கூறும் முன்னே சனா பின்னால் அங்கிருந்த அலுமாரியில் மோதிட மேலிருந்து ஏதோ கீழ விழவும் திரும்பிப்பார்த்தாள்.

அங்கு ஒரு போட்டோ விழுந்திருக்கவும் அதை கையில் எடுத்த சனா திருப்பிப்பார்க்கும் முன்னே அவளிடம் இருந்து அதை பறித்தான் ஆதிஷ்.

"லீவ் மீ எலோன்.." அடுத்த நொடி அழுத்தமாய் சத்தமின்றி அவன் கண்கள் சிவக்க கூறவும் அவனை புரியாது பார்த்த சனா விட்டால் போதும் என அங்கிருந்து வெளியேற போகவும் அவள் பின்னாலே அறையில் அந்த போட்டோ விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது..


கருத்துக்களை பகிர
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..5

💛உன் ஒளியின்றியே
இருள் கரையாய்
இருள் போர்வைக்குள்
இருப்பது தான் மேலோ
எண்ணுகிறேன்..💛



"அப்புறம்.."என கட்டிலில் படுத்திருந்தவளை பார்த்து ஒரே நேரத்தில் மதியும் மதுவும் கேட்க.. சட்டென எழுந்தமர்ந்தாள் சனா.


"என்ன..?" என்றாள் மது குழப்பமாய்..


"இதுதான் க்ளைமெக்ஸ்..அப்புறம் நான் வெளிய வர டமால்ன்னு ஒரு சத்தம்.." என்றாள் சனா பாவனையோடு.


"என்னக்கா மாமாவோட பாட்டி விழுந்துட்டாங்களா..?" ஆர்வமாய் எழுந்து நின்று கேட்டாள் மதி.


"ஆர்வத்த பாரு..பாட்டி விழுந்தா அப்படியாடி சத்தம் கேட்கும்.." அவள் தலையில் தட்டினாள் சனா.


"அப்போ..?" என்று மற்றைய இருவரும் கேட்க.."யாருக்கு தெரியும் நான் தான் வெளில வந்துட்டேனே.." என்றாள் சனா.


அடுத்த நிமிடம்.."த்தூ.." என மதியும் மதுவும் ஒரு சேர துப்ப.."ஏன்டி.." என்றாள் சனா.


"இதெல்லாம் ஒரு கதைன்னு எங்கள விடிய விடிய வேலை வாங்கி இப்போ அரைமணிநேரமா இழுத்து அடிச்சி சொன்ன பாரு.. உன்ன இந்த செருப்பால மொத்தினாலும் போதாதுடி.." என்றாள் மது கோபமாய்.


அடுத்த நிமிடம் மதி கையில் செருப்புடன் பாய சனா துள்ளிக்குதித்து எழுந்து ஓடினாள் மதியுடன் மதுவும் இணைய வீடே
உருண்டது.


அந்நேரம் ஆதிஷின் வீட்டில் ஆதிஷ் அவன் பாட்டி வள்ளியை வறுத்து எடுத்துக்கொண்டிருந்தான்.


"பாட்டி இப்போவே இந்த கல்யாணத்த நிறுத்துங்க இதுதான் என்னோட முடிவு.."


"டேய் என்னடா நீ பாட்டுக்கு உன் அப்பன் கேக்கும் போது தலைய எல்லா பக்கத்துக்கும் ஆட்டிட்டு இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம்னு இருக்கும் போது இப்போ வந்து நிறுத்துங்க நிறுத்துங்கன்னு குதிக்கிற.." ஆவேசமாய் பொறிந்தார் வள்ளி.


"அதெல்லாம் தெரியாது..எனக்கு பொண்ணுங்க யாரையும் நம்ப முடியாது..நான் அனு குட்டிய அழைச்சிட்டு வந்து அவகூடவே இருந்துக்குறன்.."
எங்கோ பார்த்துக்கொண்டு பதில் அளித்தான் அவன்.


"டேய் பாப்பாவ உன்கூட இருக்க வேணா சொல்லலயே யாரும்..கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறம் பொண்ணுகிட்ட மெதுவா சொல்லிக்கலாம்.."


"பாட்டி முடியாது..அந்த பேய் விஷு உயிரையே குடிச்சிட்டா மறந்திட்டீங்களா..இப்போ அனு தனியா இருக்கா அதுவும் நான் இருந்தும் யாரும் இல்லாத போல அனாதை இல்லத்துல..யாரு காரணம்..இப்போவும் முட்டாளதனமா ஒரு பொண்ண நம்ப சொல்லுறீங்களா.." வீடு முழுவதும் எதிரொலிக்க சத்தமிட்டான் அவன்.


ஆனால் அதற்கு சற்றும் அசராத வள்ளியோ.." நீ என்ன வேணா சொல்லிக்கோ எல்லா பொண்ணுங்களும் ஒன்னு இல்ல..ஒருத்தி செய்தான்னு எல்லாரும் தப்பாகிட முடியாது..இந்த கல்யாணம் நடக்கும்.." இதற்கு மேல் பேச ஒன்னுமில்லை என்பது போல் வள்ளி எழுந்து சென்று விட்டார்.


அப்பா சிதம்பரத்திடம் ஏனோ பேச பிடிக்கவில்லை அதற்கு அவன் சித்தி தான் காரணம் அம்மா இறந்த பின் அப்பா இரண்டாவது மணம் செய்தவர் தான் லதா. ஏனோ அம்மாவின் இடத்தை பிடித்தவள் என்று சிறுவயதிலே ஆதிஷ் மனதில் பதிந்து விட அவர்களை விட்டு விலகியே இருந்தான். பாட்டி மட்டும் தான் அவன் உறவு.


லதாவிற்கோ ஆதிஷ் என்றாள் உயிர். இருந்தும் அவன் விலகலிலும் வெறுப்பிலும் அவனை தூரத்திலிருந்து பார்த்து மகிழ்வதோடு சரி. என்றாவது புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தார்.


ஆனால் அந்த வெறுப்பு விஷு உயிர் பிரிந்த பின் பெண்கள் மேல் கொண்ட வெறுப்பில் இன்னும் அதிகரித்ததே தவிர குறையவில்லை. சம்பாதிக்க தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து தனக்கென ஒரு வீட்டை முதலில் கட்டி அதில் வள்ளியுடன் குடியேறினான். அனைவருக்கும் வருத்தம் தான் என்றாலும் தடுக்க முடியாது பேசாது துக்கத்தை விழுங்கிக்கொண்டனர்.


லதாவிற்கும் சிதம்பரத்திற்கும் ஒரு மகள் பெயர் நந்தினி.. ஆதிஷை விட ஆறு வயது சிறியவள்..அவளது பெயர் கூட இவனுக்கு தெரியாது முகத்தை கூட இதுவரை பார்த்ததில்லை அதாவது பார்க்க முயற்சித்ததில்லை.


இவையெல்லாம் சேர்ந்து தந்தையிடம் பேச தடுக்க பாட்டியை நாடினான் அங்கும் தோல்விதான். பெண் பார்க்க போகும் போது அவனிடம் தந்தை கேட்கையில் நிலமை அப்படி..வள்ளி நெஞ்சுவலியில் படுத்திருக்க அவரது கடைசி ஆசை என கூற ஆதிஷடம் திருமணம் பற்றி கேட்க இவனும் வேறு வழியின்றி தலையை ஆட்டினான். இப்போது பாட்டியின் நிலமை சரியாகிட மேலும் கீழும் குதித்துக்கொண்டிருந்தான்.


இனி அவளிடம் பேசுவது தவிர வழியில்லை என உணர்ந்து கொண்டவன் அறைக்கு சென்று தயாராகிக்கொண்டு திரும்ப அவன் கண்ணில்பட்டது அந்த சாக்லட் பை. தன்னை மறந்து சிரித்தவன் அதையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.


வீட்டு முன் வந்து பைக்கை நிறுத்திவிட்டு இறங்கியவன் பார்வை முதலில் சென்றது மேல்தளத்தின் ஜன்னல்வழி வெளியில் நீட்டிக்கொண்டிருந்த வளையல் அணிந்திருந்த கையை நோக்கி.


அவன் அதற்கு நேர் எதிரே கீழே நின்று அண்ணாந்து பார்க்க அதற்கடுத்த நிமிடம் இது உனக்கு தேவைதான் என்பது போல் நடந்தது அடுத்த நிகழ்வு.


அந்நேரம் கதவை திறந்த வசுந்தரா அதிர்ச்சயில் வாய் பிளந்து இருக்க அப்போது வெளியில் வந்தாள் மது சிணுங்கலோடு..."ம்மா பாருமா அந்த சனா மாடு நான் கேக் போட கரைச்சி வச்சிருந்ததை அவளுக்கு சாப்பிட கொடுக்கலன்னு மேல இருந்து எல்லாத்தையும் கீழ தூக்கி போட்டுட்டா.." பேசிக்கொண்டே சென்றவள் அம்மா உணர்வற்று இருப்பதை கண்டு அவர் எதிரே இவளும் பார்க்க அப்போதுதான் கண்டாள் ஆதிஷ் நின்று கொண்டிருந்த கோலத்தை.


"ம்மா இது மாமால ஏன் உள்ளேயே கூப்பிடாம இருக்க..மாமா வாங்க உள்ள.." என்றாள் கதவை அகல திறந்து விட்டவாறு.


வசுந்தராவோ.."நீங்க பன்னி வச்ச வேலைக்கு வரவேற்க வேற செய்யுறீங்களா.." என்று முறைத்துக்கொண்டு நிற்க...ஆதிஷோ இப்படி ஆகி விட்டதே என்ன செய்வது என தெரியாது மெதுவாய் உள்ளே நுழைந்தான்.


வசுந்தரா முன்னால் வந்து.."மாப்பிள்ளை சாரி இந்த பிசாசுங்க இப்படிதான் ஏதாவது பன்னி ஊர் வம்ப இழுத்து வைக்கும்..இன்னக்கி நீங்கனால சரி இல்லன்னா அவ்வளோதான்.." என அவர் பேசிக்கொண்டே போக ஏது நான்னால சரியா...எல்லாம் நேரம் என எண்ணிக்கொண்டு.."அத்..த பாத்ரூம்.." என இழுக்கவும்.."அட மறந்துட்டேன் பாருங்க.." என அழைத்து சென்று குளியலறையை காட்டினார்.


சனா மெதுவாய் படியிறங்கி வரவும் அவ்வளவு நேரம் வசுந்தராவின் திட்டைக்கேட்டு களைத்துப்போயிருந்த மது.."சீனெல்லாம் முடிஞ்சி வர்ரத பாரு.." என திட்டிக்கொண்டாள்.


படியருகில் வந்ததும் ப்ரேக் போட்டவள்..." ஆமா இதென்னா இங்க எல்லாம் மாவ ஊத்தி வச்சிருக்க.." என ஆதிஷ் சென்ற வழியெங்கும் சிதறியிருந்த மாவை பார்த்துக்கொண்டே கேட்டாள் சனா.


"கேட்ப இதுவும் கேட்ப இன்னும் கேட்ப..நீ செய்ததுக்கெல்லாம் வாங்கிக்கட்டினது நான்.."எண்ணிக்கொண்டு.."கேக் செஞ்சிட்டேன்..இதையே பளோ பன்னி போ இருக்கும்.." என்று கூறிவிட்டு கையை கட்டிக்கொண்டாள்.


எதற்கும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அதையே பின்தொடர்ந்து சென்றாள். அது குளியலறை வரை செல்ல.."அடியே பாத்ரூம்லயா கேக்க வைப்ப.." என அங்கு நின்று குரல் கொடுக்கவும் குளியலரைக்கதவு திறந்தது.


அந்நேரம் அதுவும் அங்கு ஆதிஷை எதிர்பார்க்காத சனா விழிக்க சுற்றிப்பார்த்த ஆதிஷ் பட்டென சனாவை குளியலறைக்குள் இழுத்து கதவை சாத்தினான்.


"இதெல்லாம் தப்பு.." சனா அவள் பாட்டுக்கு ஏதோ உலறிக்கொட்ட அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு தொடங்கினான் ஆதிஷ்.


"சனா..எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல என்னால இப்போ எதுவும் பன்ன முடியாது..அதுனால நீ உன் வீட்டுல பேசி இத நிறுத்துற.." என்றான் தான் சொல்ல வந்ததை வெகு சுருக்கமாய்.


அவன் கூறியது கேட்டவளுக்கு கோபம் வர கண்ணை சுருக்கி அவனை பார்த்த சனா.."முடியாதுன்னா.." என்றாள்.


"முடியாதுன்னாவா..இதுல உன் லைப் ஆல்சோ டிபென்ட்டாகி இருக்கு..மறந்துடாத.." என்றான் சற்றே கோபமாய்.


"எனக்கு அதை பற்றி கவலை இல்லன்னு நான் சொன்னா.."முன்பு போலவே அவள் கேட்க அவளது பேச்சில் பொறுமை பறக்க..


"ஆர் யூ மேட்.." என்றான் சற்றே சத்தமாய்..


"ஓஹ யெஸ் ஐம்.. வருவீங்க பார்ப்பீங்க. இன்னும் இரண்டு கிழமைல கல்யாணம்ன்னு இருக்கும் போது இதுல இஷ்டமில்ல சொல்லுவீங்க நாங்களும் தலைய ஆட்டிட்டு நீங்க சொல்லுறத செய்யனுமா..முடியாது." அவள் பேசிவிட்டு செல்வதற்கு திரும்ப கோபமாய் ஆதிஷ் அவளைப்பற்றி இழுக்க அந்நேரம் கால் வழுக்கிட அவன் மேலே சரிந்தாள் சனா.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..6

💛தரையில் விண்மீன்
வருவதுண்டு வந்தாலும்
கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை
தொடுவதுண்டு
தொட்டாலோ காதல்
ஆகும் உன் மனம்..💛



தனக்கு மேலிந்தவளைக்கண்டு ஆதிஷ் உறைந்திருக்க அவளோ கண்கள் அவனை பார்த்துக்கொண்டிருந்தாலும் கைகள் இரண்டும் சுற்றி எதையோ தேடிக்கொண்டிருந்தன.


சிறிது நேர தேடலின் பின் கையில் அவள் தேடியது மாட்டி விட மெதுவாய் எடுத்தவள் அந்த சவர்க்காரத்தை நன்றாக ஆதிஷின் கண்களில் தேய்த்து விட்டு எழுந்து ஓட முயல..
ஆதிஷோ ஒரு கையால் கண்ணை தேய்த்துக்கொண்டு மறுகையால் இவளை தப்பிக்க விடாது இறுக்க பிடித்துக்கொண்டான்.


முழித்து முழித்து பார்த்தவள் அவனை தள்ளிவிட அவனோ விடுவேனா என்பது போல் அவளையும் சேர்த்தே இழுத்துக்கொண்டு விழுந்தான்.


"ஏய் விடுடுடுடு..."சனா கீழே விழுந்திருந்தவன் மேல், மேலே பார்த்த வண்ணம் விழுந்திருக்க தன் மேல் இருந்த அவன் கையை தள்ளிக்கொண்டே எழப்போனாள்.


"முடியாது.. நீ கல்யாணத்த நிறுத்துரேன்னு சொல்லு.." கண்ணை தேய்த்துக்கொண்டு தன் பக்கத்திலே நின்றான் அவன்.


"முடியாது..விடு விடு.." சத்தமிட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனை உதிக்க தன்னை சுற்றியிருந்த கையை ஒரே கடியாய் பற்கள் அனைத்தும் பதிய கடித்தாள்.


அலறிக்கொண்டு அவன் கையை விலக்கவும் எழுந்து தப்பினேன் பிழைத்தேன் என வெளியில் ஓடோடி வந்தாள் சனா. அதேநேரம் அந்த வழியில் வந்த வசுந்தரா இவளை முறைக்க.."ஒன்னுமில்லையேம்மா நானா எதுவும் பன்னலாட்டியும் நீயா இப்படி சும்மா முறைச்சி என்ன பன்ன வெச்சிருவ" என இழுக்க அவர் அவளை நெருங்கவும் ஒரே ஓட்டமாய் மேலே ஓடினாள்.


எதுக்கு என யோசித்து புலப்படாமல் அவர் வந்த வழியே திரும்ப ஆதிஷ் தான் கண்களை தண்ணீரில் குளிக்க வைத்து விட்டு கைகளை வாயால் ஊதிக்கொண்டு விட்டால் போதும் ராட்சசி என பொறிந்து கொண்டே யாரும் பார்க்க முன் வீட்டிலிருந்து வெளியேறினான்.


"எரும எரும எரும எரும.." ஒவ்வொரு எருமைக்கும் தாராளமாக மதுவின் தலையில் அவளது மண்டையோடே உணர்வற்று போகும் அளவு நங் நங் என கொட்டிக்கொண்டிருந்தாள் சனா.


"தப்புதான்டி அங்க மாமா இருக்கத சொல்லாதது தப்புதான் அடிக்காத போதும்.." ஓவென ஒப்பாரி வைத்தாள் அவள் பதிலுக்கு.


காப்பாற்ற வீட்டில் மதியை தவிர வேறு யாரும் இல்லாமல் போனது சனாவிற்கு சாதகமாகி விட வறுத்து எடுத்து தன் கோபத்தை எல்லாம் மதுவின் மேல் பிளிந்து கொண்டிருந்தாள்.


மதுவின் கூடவே பிறந்த பிறப்போ தவறியும் அவளது அழுகை காதில் விழுந்திடாமல் இருக்க ஹெட்போனை காதினுள்ளே புதைத்து அமர்ந்திருந்தது.


போதும் போதும் என தோன்றும் அளவு அடித்து முடித்தவள் பக்கத்திலே அமர்ந்து மூச்சு வாங்க மதுவோ ஈஈஈஈ என அழ ஆரம்பித்தாள். அவளை சனா முறைத்த முறைப்பில் வாயை கப் என மூடிக்கொண்டாள்.


காலை நீட்டி போட்டு அமர்ந்து ஆதிஷ் வசுந்தராவிடம் கொடுத்து விட்டு போன பையிலிருந்த சாக்லெட்டை எடுத்து காலி செய்யத்தொடங்கினாள்.


அந்நேரம் ஜோசியரை பார்க்க சென்றிருந்த வசுந்தராவும் மூர்த்தியும் வர கதவை திறந்து விட்டு மீண்டும் வந்து நல்ல பிள்ளையாய் வந்து அமர்ந்து கொண்டாள் சனா.


ஹெட்போனை கழட்டி ஓரமாய் வைத்து விட்டு சனா அருகில் தவழ்ந்து வந்த மதி சனாவின் காதை இழுத்து வைத்து.."பாத்ரூமுள்ள என்னடி நடந்தது.." என கேட்கவும் அவளை முறைத்த சனா.."சின்ன புள்ள கேட்குற கேள்வியாடி இது.." என்றாள் சத்தமாய்.


பாய்ந்து வந்து அவள் வாயை மூடியவள்.."க்கும் நான் உன்ன விட ஜஸ்ட் ஏழு வயது தான் சின்னவ மறந்துடாத.." என்றாள் பாவனையோடு.


"அட ஜஸ்ட் ஏழுதானா அப்போ அடுத்த மேடையிலே உனக்கும் கல்யாணத்த வச்சிடலாம்..அம்மா" அவள் சத்தமாய் அழைக்க இவள் மாட்டி விட்டாலும் விடுவாள் என அங்கிருந்து சத்தமின்றியே விலகிச்சென்றாள் மதி.


நாட்கள் இவ்வாறு நகர ஆதிஷ் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பதும் தோல்வி காண்பதுமாய் இருக்க இங்கு சனா வசுந்தராவின் அறிவுறைகளை ஒதுக்கி வீட்டுக்குள் அடைத்து விட்டு ஊர் மேய போவதும் தொடர இதோ நாளை திருமணம் என்றிருக்க சொந்தக்காரர்களால் வீடே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.


இன்றைக்காவது இவள் உருப்படியா இருந்துடனும் என உலகில் எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்ட வசுந்தரா ஊர் சுற்ற போனவளை பிடித்து இழுத்து வந்து மேலே அவரது அறையில் அமர்த்தி காவலுக்கு வாசலிலே மதியையும் நிறுத்தி வைத்து விட்டு வேலைகளை பார்க்க சென்றார்.


அப்படி மட்டும் நடந்தால் சூரியன் தான் மேற்கில் உதித்து விடுமே கதவை வசுந்தரா அடைத்துச்சென்ற அடுத்த நொடி ஜன்னல்வழி எட்டிப்பார்த்தான் சுதன்.


"ஏய் வா வா..விக்கி பெட்ட எங்க வச்சிருக்கான் கண்டுபிடிச்சிட்டயா..? எப்படி போக போறோம்..அவன் அங்க இல்லாத டைம் எப்போ" ஆர்வத்தில் அவனருகில் ஓடிச்சென்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள் சனா.


"ம்ம்ம்ம்.."


"என்னடா ம்ம்ம்ன்ற..ஏதும் சிக்கிடுச்சா என்னத்தய அப்பட சாப்பிட்ட.."


"ம்ம்ம்ம்" அவன் மீண்டும் ம்ம் எனவும் தான் புரிந்தவளாக..
"ஓஹ் இத எடுக்கவா இரு இரு.."அவன் வாயில் இருந்த கயிற்றை கையில் எடுத்தாள் சனா.


எடுத்தது தான் தாமதம்.."மக்கு மக்கு ஏறி வந்தவன தூக்கி விடுவோமா இல்ல வாயில இருக்கதாவது எடுப்போமா அதுவும் இல்லயா இந்த கையில இருக்கதையாவது எடுக்கிறயா ஒன்னுமில்ல கேள்வியா கேக்குற மக்கு சட்டி.." பொறிந்து தள்ளினான் சுதன்.


சுறு சுறு என கோபம் ஏற.."டேய் ஏணியோடே பிடிச்சி தள்ளி விட்றுவன் ஓவரா பேசாத.." சனா எச்சரிக்க கீழே ஏணியை பிடித்துக்கொண்டு நின்ற மஹதி இந்து மகேஷ் குமாருக்கு பொறுமை பறந்து கொண்டு இருந்தது.


"ஆமா ஏணி ஏறி உன்ன காப்பாத்த வந்தேன் பாரு என்ன சொல்லனும்..போ" கோபத்தில் அவன் முகத்தை திருப்பிக்கொள்ள சனாவோ இவன் போய்ட்டா நாம எப்படி போறது மன்னிப்பு கேட்கலாமா என்று யோசிக்க அதே நேரம் கீழே இருந்து.."டேய் இரண்டு பேரும் கீழ வந்து சண்ட போடுங்கடா..என்ன ஜென்மங்களோ உங்க இரண்டு பேராலையும் தான் நம்ம டைகர் கெங் இன்னும் முன்னேறவே இல்ல.."மஹதி பொறுமை இழந்து சத்தமிட இப்போது தங்களது சண்டை மறந்த சனாவும் சுதனும் என்ன என கேட்டுக்கொண்டே கீழே பார்த்து முறைத்தனர்.


சில கெஞ்சல் கொஞ்சல் பல சண்டைகள் என ஏணியிலிருந்து சுதன் தரை இறங்க அவனுக்கு பின்னே இறங்கினாள் சனா.


"சரி சரி ப்ளான் என்ன பெட் எங்க இருக்கு.."
சனா கேட்க அங்கிருந்த வாண்டுகள் அனைத்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு நீ சொல்லு என ஆள் ஆளை காட்ட இவ்வொறே நேரம் கடக்கவும் பொறுமையை இழந்த சனா.."யாராவது சொல்லுங்கடா..." என்றாள் கோபமாய்.


"அது சட்டி..பெட் இருக்கது..இருக்கது.."சுதன் இழுக்க..


"இருக்கது.." என எடுத்துக்கொடுத்தாள் சனா..


"இருக்கது ஆதிஷ் மாமா வீட்டுல.."பட்டென போட்டு உடைத்தாள் மஹதி.


"ஹீஹீ சரிடா பசங்களா பார்த்து கவனமா போய்ட்டு வாங்க..அக்காக்கு கல்யாணம்ல வெளில எல்லா சுத்த கூடாதுல..டாட்டா.."சனா ஏணியை எடுத்து வைத்து ஏறப்போக.."ஏய்."என்று அனைத்து வாண்டுகளும் முன்னால் வந்து நின்று மறைத்தது.


அடுத்த பத்து நிமிடத்தில் அவளை உருட்டி மிரட்டி ஆதிஷ் வீட்டின் முன்னால் நிற்க வைத்திருந்தனர்...


"டேய் வேற பெட் வாங்கிக்கலாம்டா சொன்னா கேளுங்க.."சனா அழுகுரலில் இழுக்க..


"முன்ன வச்ச கால பின்ன வைக்க த டைகர் கெங்க்கு தெரியாது சட்டி மறந்துடாத.." என்றான் சுதன்.


"சரிடா நான் முன்னயும் வைக்கல பின்னயும் வைக்கல நீங்க வரும் வரை இங்கயே நின்னுக்குவேனாம்..நீங்க போவீங்கலாம்..எப்படி.."சனா சிரித்துக்கொண்டு கேட்க நல்லாவே இல்ல என்று அனைவரும அவளை இழுத்துக்கொண்டே அந்த வீட்டின் பின்பக்கமாய் சென்றனர்.


உள்ளே ஏறிக்குதித்தவர்கள் மேல்தளத்தில் இருந்து ஆளுக்கு ஒருவர் ஒரு பக்கமாய் பிரிந்து தேடலை ஆரம்பிக்கப்போகவும் சனா சுதனை பிடித்து வைத்து தன் சந்தேகத்தை கேட்டாள்.


"சுப்பு விக்கி ஏன்டா பெட்ட இங்க வைக்கனும்.."


"அது சட்டி அவனுக்கு நாம தேடி வருவோம்ன்னு தெரியும் அதோட ஆதிஷ் மாமாவும் விக்கியும் இப்படியாம்..." என்றான் தன் கைகளிரண்டையும் அவள் முன்னால் பிணைத்துக்காட்டி.."ஆனால் அவனுக்கு தெரியாது ஆதிஷ் மாமா நமக்கு மாமான்னு..சரி சரி தேடு போ.." என்று விரட்டி விட்டு தன் வழியே போனவன் திரும்பி வந்து.." இது ஆதிஷ் மாமா தூங்குற டைம்..பாட்டியும் தான்..வேற யாரும் இங்க இல்ல சோ பயப்புடாம போலாம்.." என்று விட்டு திரும்பி நடந்தான்.


தன்னையே நொந்து கொண்டு சனா அறையிலிருந்து வலதுபக்கமாக போக ஆரம்பிக்க..."ஆஷி டேடி..ங்க இயிக்க.." என்று இடது பக்கமாய் இருந்து வந்த மழலைக்குரலில் குழம்பியவள் கொஞ்சம் நின்று விட்டு பின் இடது பக்கம் மெதுவாய் நடக்க தொடங்கினாள்.


கருத்துக்களை பகிர
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..7

💛எதற்காக எனை
பார்க்கிறாய் நீ..
எதற்காக உன்னுள்
எனையே தொலைத்து
நிற்கிறேன் நான்..
விடை தெரிந்தால்
எதற்கோ இந்த
வரிகள் இங்கு..💛



சனா அறையிலிருந்து வலதுபக்கமாக போக ஆரம்பிக்க..."ஆஷி டேடி..ங்க இயிக்க.." என்று இடது பக்கமாய் இருந்து வந்த மழலைக்குரலில் குழம்பியவள் கொஞ்சம் நின்று விட்டு பின் இடது பக்கம் மெதுவாய் நடக்க தொடங்கினாள்.


இடது பக்கமாய் செல்ல நீண்ட குறுகிய ஒரு நடை தொடர்ந்து சென்றது. கடைசியாய் குளியலறை இருக்க மெதுவாய் சற்றே திறந்திருந்த கதவை மெல்லமாய் தள்ளினாள்.


அங்கு ஒரு அழகான பெண் குழந்தை இரண்டரை வயதிற்கு கொஞ்சம் அதிகமாய் இருக்கும் போல குட்டியாய் ஒரு காற்சட்டை அணிந்து கொண்டு ஷவரனின் அடியில் நின்று டான்ஸ் என்ற பெயரில் தரையில் காலால் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் போதாக்குறைக்கு பாட்டு வேறு.


சனா அவளை பார்த்து தன்னையும் மீறி சிரித்து விட அவள் சிரிப்பு சத்தத்தில் சட்டென திரும்பினாள் குழந்தை.


"ஏஏஏஏய்ய்ய்ய யாது நீ..இபி தா குயிக்கும் போயு வந்து பாப்பியா..உன் டேடி சொய்யி தயல.." மூக்கையும் கண்ணையும் சுருக்கிக்கொண்டு கைகளால் தன்னுடலை மறைத்துக்கொண்டு சனாவை பார்த்து திட்டினாள்.


அவளை நிமிர்ந்து பார்த்த சனாவிற்கு அவள் தன்னை மறைக்க முயன்று கொண்டிருப்பதை பார்த்து இன்னும் சிரிப்பு வர அங்கிருந்த சுவரில் சாய்ந்து பார்த்து பார்த்து சிரித்தாள். இதை பார்த்த குழந்தைக்கு தனது உயரத்திற்கு கோபம் ஏற அங்கிருந்தே பக்கட்டில் நீர் பிடித்து அதனை இவள் பக்கமாய் அவளிற்கு வீசி அடித்தாள்.


தொப்பலாய் நனைந்த சனா மூச்சை இழுத்து விட்டு அவளை பார்த்து முறைக்க அவள் இப்போது கைதட்டி சிரித்துக்கொண்டிருந்தாள். "ஏய் சிரிக்காத.." சனா கோபமாய் கூறவும் அவளுக்கு தான் சளைத்தவள் அல்ல என்பது போல் அவளருகில் வந்து இடுப்பில் கையூன்றி இவள் முழங்காலளவு உயர்த்திற்கு நின்று அவளை உற்று நோக்கினாள்.


"என்ன முறைக்கிற.." சனா கேட்க..


"உன்ன என் ஆஷி டேடிகிட்ட சொய்யி போயிஷ்கிட்ட புட்சு கொயிப்பேன்.." சனாவின் விரலில் பாதியளவு இருந்த தன் விரல் நீட்டி எச்சரித்தாள்.


"போயிஷாம் போயிஷ் அத போலிஸ்ன்னு கூட சொல்ல வரல்ல உனக்கு ரொம்ப தான் திமிரு.." அவள் விரலை பிடித்து மடக்கி விட்டாள் சனா.


"ஏய் உன்க்கு என்ன பத்தி தெய்யாது.."


"உங்கள பத்தி தெய்யாது தான்..சொல்லுங்க கேப்போம்.." சனா அவள் போலவே பேசி இழுத்து காட்டவும் கோபம் கூட.."ஆஷி டேடிடிடிடிடி..." வீடே அதிரும் வண்ணம் சத்தம் போட்டவளை ஒரே தாவலில் பாய்ந்து கையில் தூக்கி..."ஏய் ப்ளீஸ் ப்ளீஸ் சத்தம் போடாத.." என்று அவள் வாயை மூட அடுத்த நிமிடம் அனைத்து பற்களின் தடமும் சனாவின் கையில் ஓவியம் தீட்டியிருந்தது.


அலறவும் முடியாமல் பல்லைக்கடித்து குட்டி பிசாசு என மனதில் திட்டிக்கொண்டே அவளை கீழே விட்ட சனா அவள் அங்கிருந்து ஓடவும் வலியை விழுங்கி விட்டு குளியலரையின் கதவின் பின்னால் ஓடிச்சென்று ஒழிந்து கொண்டாள்.


"ஹேய் அனு குட்டி செல்லம் ஏன் என்னாச்சு.." ஆதிஷின் குரல் குளியலறைக்கு வெகு அருகில் ஒலிக்க..." குட்டியாம் குட்டி அதுக்கு பிசாசுன்னே சொல்லலாம்..அய்யோ அம்மா கை வலிக்கிதே.." உள்ளங்கையில் இருந்த காயத்தை மறுகையால் தடவிக்கொண்டாள் சனா.


"ஆஷி டேடி அங்க பேயி இயிக்கி..நா பாத்த.."


"அடிங் நான் பேயாடி உனக்கு..ஆமா பிசாசுக்கு இந்த அழகான பொண்ணு பேய் போலதான விளங்கும்.." கதவுக்கு பின்னிருந்து தானே கேள்வி கேட்டு அதற்கு தானே பதிலும் சொல்லிக்கொண்டாள் சனா.


"பேயா.....சரி நான் பார்க்குறன்..நீ பாட்டிக்கிட்ட சொல்லி ட்ரெஸ் போட்டுக்கோ ஓடு.." அவளை கீழே இறக்கி விட்டு ஆதிஷ் குளியலறையை நெருங்குவது தெரிய சனாவிற்கு அய்யோ என்றிருந்தது. மனமோ அவசர அவசரமாக இந்த இக்கட்டில் மாட்டி விட்ட சுதனை எண்ணையில் போட்டு தாழித்துக்கொண்டிருந்தது.


குளியலறைக்குள் நுழைந்த ஆதிஷ் திறந்திருந்த ஷவரை திருகி மூடிவிட்டு ஒரு முறை அந்த அறையை சுற்றி வந்தான் பின் வெளியேற வாசல் வரை நடந்தான். சனாவிற்கு இப்போது தான் மூச்சே வந்தது. இன்னும் நாலடி வைத்தால் அவன் சென்று விடுவான் என ஊகித்து கதவிற்கு பின்னிருந்து இவள் ஒவ்வொரு அடியாய் எண்ணிக்கொண்டிருக்க சட்டென சத்தமே இன்றி நின்றது காலடிகளின் ஓசை.


என்னாச்சி என இன்னும் கதவில் நன்றாக காதை அழுத்தி வைத்து சனா கேட்க பட்டென அடுத்த நொடி ஆதிஷ் கதவை முன்னால் இழுக்க நிலை தடுமாறி அவன் மேல் மோதி நின்றாள் சனா.


அய்யோ இந்த நிலம மட்டும் யாருக்கும் வர கூடாது..எண்ணியவள் ஒன்றும் செய்யத்தோன்றாது அவன் மேலயே சாய்ந்து கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.


அவளை பார்த்து சிரிப்பு வர கொஞ்சமாய் சத்தமின்றி சிரித்தவன்.."சனா கண்ண திறயேன்.." என்றான்.


என்ன என்று மெதுவாய் சனா ஒரு கண்ணை திறந்து பார்க்க இவள் கண்டது தன்னை சுற்றி இருந்த ஆதிஷின் இடது கையையும் அதில் தன் முகத்திற்கு முன்னால் இருந்த சவர்க்காரத்தையும் தான். அவனிற்கு தான் அன்று கண்ணில் தேய்த்து விட்டு ஓடியது நினைவில் வர இருப்பது ஒரு வழி தான் என எண்ணிக்கொண்ட சனா பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


உடன் பிறப்பே மயங்கிடும் போது இவன் எம்மாத்திரம் என நினைக்க அது போலவே அவளை சிரித்துக்கொண்டே விலக்கி நிறுத்தி விட்டு "வா.." என்று முன்னே நடந்தான் ஆதிஷ்.


"நல்ல வேள தப்பிச்சோம்.." குதூகலித்துக்கொண்டு சனா அவன் பின்னே நடந்தாள்.


தனதறைக்குள் ஆதிஷ் நுழைய அவன் பின்னாலேயே இவளும் நுழைந்தாள். அப்போது.."டேடி பேய் பேய்..பேய்.." என்று அவளுக்கு அருகில் ஒரு சத்தம் கேட்க அந்த குரல் யாருடையது என திரும்பாமலே புரிந்து கொண்ட சனா ஆதிஷ் காணாமல் அனுவை பார்த்து நாக்கை வெளியில் நீட்டி கண்களை உருட்டி பேய் போன்றே ஒரு போஸ் கொடுத்தாள்.


"டேடி.." பயத்தில் ஓடிச்சென்று அவன் காலைக்கட்டிக்கொண்டது குழந்தை.


ஆதிஷ் சனா பக்கம் திரும்பவும் முகத்தை சாதுவாய் வைத்துக்கொண்டு கவலையாய் அவனை பார்த்தாள்.


"சாரி.."என சனாவிடம் கேட்டு விட்டு அனு பக்கம் குனிந்தவன்.."அனு அப்படிலா சொல்ல கூடாது ஆன்ட்டிய பாரு ஹலோ சொல்லு.." எனவும் முறைத்து விட்டு அவள் திரும்பிக்கொள்ள இவளும் பே என மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.


இருவரையும் பார்த்த ஆதிஷ்க்கு மென்னகை மலர சனாவை அமரச்சொல்லி விட்டு அனுவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.


போகும் போதே.."அந்த பேய போ ச்சொல்லு என்கு பிதிக்கல.." என்ற குழந்தையின் குரலும் தேய்ந்து மறைந்தது.


உட்கார்ந்தவளுக்கு அப்போதுதான் அது உறைக்க படக்கென எழுந்து நின்றாள்.."அந்த பிசாசு ஆதிஷ டேடி சொல்லுது...😨 அப்போ அது அவன் பொண்ணா...அய்யோ இத எப்படி கண்டுக்காம விட்டோம்.." யோசித்துக்கொண்டிருக்கும் போதே ஆதிஷ் பின்னால் வந்து.."உட்காரு சனா.."என்று கூறினான்.


அவன் பக்கம் திரும்பிய சனா.."எங்க அவ..நான் இப்பவே பாக்கனும் எங்க அவ.." என்று சம்பந்தமே இல்லாமல் சத்தமிட்டாள்.


நெற்றியை சுருக்கிய ஆதிஷ்.."யார பாக்கனும் யார கேட்குற.." என்றான்.


"அந்த குழந்தை டேடி சொல்லுது..அப்போ அதோட அம்மா எங்க.." கோபமாய் கேட்கிறேன் என்ற பெயரில் அவனை அந்த சீரியசான நிலையிலும் சிரிப்பூட்டிக்கொண்டிருந்தாள்.


ஆதிஷிற்கோ இது சரியான தருணம் என புலப்பட.."யெஸ் வீட்டுக்கு தெரியாது அதுனால தான் உனக்கு இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லுறன்.." என்று விட்டு கால் மேல் கால் போட்டு கட்டிலில் அமர்ந்தான்.


அவனை முறைத்த சனா.."ஓஹோ அப்பிடியா..நான் ஏதோ பாவம் நீ சொன்னத யோசிக்கலம்னு இருந்தேன்..இனிமே நெவர் நானா அவளா பார்த்துடலாம்.." கூந்தலை சிலிப்பி விட்டு அவனை மீண்டும் ஒரு முறை முறைத்து விட்டு சனா நகர.."சனா உன்ன ஒரு நாளும் மனைவியா என்னால ஏத்துக்க முடியாது.." என்றான் ஆதிஷ்.எவ்வளவோ முயன்றும் மனதில் இருந்த கோபத்தை குரலில் காட்ட முடியவில்லை.


அவனுக்கே புரியவில்லை ஏன் இவளிடம் மட்டும் எல்லா பெண்களிடமும் போல் எறிந்து விழ முடியவில்லை என்பதோடு குறைந்தது கோபமாய் கூட பேச முடியவில்லை என்றே. நடந்து சென்றவள் அலட்சியமாய் அவனை திரும்பி பார்த்து விட்டு செல்ல தன்னை மதிக்காமல் செல்பவள் மேல் கோபம் வந்தாலும் அதை அவளிடம் காட்ட முடியவில்லை என்றும் தன்மீதே அந்த கோபமெல்லாம் திரும்பியது.


சனா அறையிலிருந்து வந்து வாசல்வரை நடக்க முன்னால் நேராக நடந்து வந்துகொண்டிருந்த பாட்டி வள்ளி கண்ணாடியை சரி செய்து கொண்டே இவளை குறு குறு என பார்க்க அய்யோ என்றிருந்தது அவளிற்கு.


கருத்துக்களை பகிர
 
Status
Not open for further replies.
Top