All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘கரை சேர்ந்த விண்மீன்’ - கதை திரி

Status
Not open for further replies.

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..8

💛வினா அது நான்
விடை அது நீயோ
இருந்தும் இன்னுமே
வினாவும் ஏனோ
விடையின்றி இங்கு
வெறும் வரிகளாய்..💛


சனா அறையிலிருந்து வந்து வாசல்வரை நடக்க முன்னால் நேராக நடந்து வந்துகொண்டிருந்த பாட்டி வள்ளி கண்ணாடியை சரி செய்து கொண்டே இவளிருந்த பக்கம் குறு குறு என பார்க்க அய்யோ என்றிருந்தது அவளிற்கு.


வந்த வழியே திரும்பி ஓடிச்சென்று அவனறைக்குள் புகுந்து கொண்டாள். அங்கு கதவிடுக்கில் கொஞ்சமாய் இடைவெளியில் அவள் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்க பின்னால் யாரோ தொண்டையை செறுமும் சத்தம் கேட்டது.


திருபிப்பார்க்க அங்கு நின்றிருந்தான் ஆதிஷ். முகத்தை மீண்டும் உர்ரென வைத்துக்கொண்ட சனா..கூந்தலை சிலுப்பி விட்டு திரும்ப மௌனமாய் சிரித்துக்கொண்டு "பாட்டி.." என அழைத்தான் ஆதிஷ்.


பதறித்திரும்பிய சனா.."உஷ் உஷ்.." என அவனிடம் சைகை காட்ட இப்போதோ முன்னிலும் சத்தமாய் அழைத்தான் அவன்.


அதே நேரம் "என்னப்பா.." என அறைக்கதவு திறக்க அவனை இழுத்து தன் முன்னால் நிறுத்தி அவன் முதுகில் ஒட்டிக்கொண்டாள் சனா.


இதை சற்றும் எதிர்பார்க்காத அவன் வார்த்தையின்றி தடுமாற..பின்னிருந்து சிரித்துக்கொண்டிருந்தாள் அவள்.


இரண்டு மூன்று முறை அழைத்துக்களைத்துப்போன வள்ளி தலையிலடித்துக்கொண்டு திரும்பி நடக்க சனா விலகினாள். அவள் விலகவுமே மூச்சை இழுத்து விட்டவன் திரும்பி அவளை முறைக்க இவள் என்ன என்றாள் ஒன்றும் நடக்காதது போல்.


இவனும் என்ன என்று யோசித்து விட்டு ஒன்றுமில்லை என தலையாட்டிவிட்டு நகரப்போக புயல் போல்.."ஆஷி டேடி..." என்ற கூவலோடு உள்ளே ஓடிவந்து அவன் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டாள் அனு.


இவனும் அவளை தூக்கிக்கொள்ள.."டேடி டேடி நீ என்கு ஆன்தி கொன்னு வாதயாமே..ஏன் என்கு சொல்லலலலல?" என அவன் முகத்தை எல்லா பக்கமும் திருப்பி திருப்பி கேட்க அதை பார்த்து அடக்க முடியாமல் சத்தமாய் சிரித்தாள் சனா.


இப்போது அனுவின் பார்வை சனா பக்கம் திரும்பியது.."நீ இன்னும் போவத????" கண்களை சுருக்கி மூச்சை இழுத்து விட்டு கோபமாய் கேட்க அதை பார்த்த சனா அவளை இன்னும் சீண்டிப்பார்க்க ஆதிஷின் வலது புறம் வந்து தோள் மேல் கையை வைத்து சாய்ந்து நின்று.."ஏன் உனக்கு பார்த்தா தெரில நான் இங்க தான இருக்கேன்.." என்றாள்.


"நீ ரொம்ப பேசுத.." ஒரு விரல் நீட்டி அனு கூற..


"ஆமா உனக்கு தான் முடிலயே.." என்றாள் சனா.


"ஹேய் ஹேய் ஸ்டாப் ஸ்டாப்.." ஆதிஷ் அனுவை கட்டிலில் நிறுத்தி அவளை நேராய் தன்புறம் திருப்பினான்.


அவள் உர்ரென்று பார்க்க.."அனு குட்டி இப்படி பேசலாமா.." எனக்கேட்க அவளோ பட்டென முகத்தை திருப்பி விட்டு சனாவை பார்த்தாள்..


"அபோ அது மத்தும் பேசுது.." என்றாள் கையை சனா பக்கம நீட்டி. எது என அவள் கை நீட்டிய பக்கம் அவன் பார்க்க அங்கு சனா தீவிரமாய் அங்கிருந்தவற்றை ஆராய்ந்து ஒரு சாக்லெட்டை கண்டெடுக்க அதை பார்த்த அனு குதித்திறங்கி ஓடிச்சென்று அதை அவளிடம் இருந்து பிடுங்கினாள்.


"ஏய் அதை கொடு.."


"முதியாது அது ஏன்ட.." கைகளுக்குள் மூடிக்கொண்டு தனக்கு பின்னால் ஒழித்துக்கொண்டாள் அனு.


அதனை பறிக்க சனா அவளை பிடிக்க முயல ஆரம்பிச்சிட்டாங்க என செல்லமாய் அழுத்துக்கொண்டு அனுவை கையில் தூக்கிக்கொண்டான் ஆதிஷ்.


ஆதிஷ் கையிலிருந்து கொண்டு சனாவிற்கு அனு வாயை இழுத்துக்காட்ட சனா முகத்தை சுருக்கிக்கொண்டாள்.


ஆதிஷ்க்கு சனாவையும் பார்க்க இன்னொரு குழந்தையாய் தோன்ற அனுவை தன்பக்கம் திருப்பி.."அனு குட்டி நமக்கு பிடிச்ச சாக்லட்னாலும் நாம அடுத்தவங்களோட ஷெயார் பன்னிக்கனும்டா..எப்பவும் எங்களுக்கு பிடிச்சதை தான் அடுத்தவங்களுக்கும் கொடுக்கனும்.." ஆதிஷ் கூறவும் யோசித்து விட்டு ஒரு முறை கையில் இருந்த சாக்லட்டை பார்த்து விட்டு சரி என கடினப்பட்டு தலையை ஆட்டி வைத்தாள்.


ஆதிஷ் சிரித்துக்கொண்டே கன்னத்தில் தட்டி விட்டு அதனை இரண்டாக பிரித்து அவளுக்கு ஒன்றும் சனாக்கு ஒன்றும் கொடுத்து விட்டு.."அப்புறம் அனு மா அவங்கள ஆன்டி சொல்லனும் நீ.." இவன் கூறி முடிக்க முன்னமே.."முதியாது சனா தான் சொல்வேன்.." என்றாள் அனு.


இந்த அளவு சாக்லெட் விடயத்தில் இறங்கி வந்ததே பெரிய விடயம் என்பதால் இதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டான் ஆதிஷ்.


அப்போதுதான் சனாவிற்கு நினைவில் வந்தது.."நம்ம கூட ஒரு கூட்டம் வந்ததே..சரி அது இருக்கட்டும் போகும் போது பார்த்துக்கலாம்..ரொம்ப பசிக்குதே.." எண்ணிக்கொண்டு ஆதிஷ் பக்கம் திரும்பினாள் சனா.


"ஆ..ஹ்ம்..உங்களை எப்படி கூப்பிடுறது நான் ?"


"பெயர் சொல்லி கூப்பிடவா..?"
என அவளும்
"பெயர் மட்டும் சொல்லி கூப்பிடாதே" என அவனும் இருவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கூற..கண்கள் மின்ன.."அப்போ பெயர் தான் சொல்லி கூப்பிடனும்.." அவள் கூற இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டான் ஆதிஷ். ஆதிஷிற்கு பொதுவாக யாரும் பெயர் சொல்லி கூப்பிடுவது பிடிப்பதில்லை இவளிடம் மறுத்து வாதம் செய்ய முடியாமல் விட்டு விட்டான்.


"ஓகே ஆதிஷ் ஒரு காபி இல்லையா.." சனா கேட்க "ஏய் எங்க டேடி பேத் பேசாத.." காபி வந்ததோ இல்லையோ அனு சனா முன்னாடி வந்து மூச்சிறைக்க நின்று கொண்டாள்.


"ஏனாம் பெரிய பேத் பேத்து..அப்பிதான் கூப்பிதுவேன்..பாரு பாரு..ஆதிஷ் ஆதிஷ் ஆதிஷ்.." சனா வம்பிலுக்க ஆதிஷ், குட்டி சிறுத்தையாய் சீறிக்கொண்டிருந்தவளை தூக்கிக்கொண்டு சென்று எங்கேயோ விட்டு விட்டு வந்தான்.


"வா.." என அவளை அழைத்துக்கொண்டு அவன் செல்ல..வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே வந்தாள் சனா.


"ஆமா ஏன் அனு கூட சண்ட போட்டுகிட்டே இருக்க.." ஆதிஷ் கேட்க..


"ஆதிஷ் நானா சண்ட போடுறேன்..நல்லா பாருங்க என்னை பார்த்தா சண்டை போடுற போலவா இருக்கு.." முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு அவள் கேட்க.."ஆமா ஆமா.." என கூறிக்கொண்டான் ஆதிஷ்.


இருவரும் படிக்கட்டுகளில் கீழிறங்கிச்செல்லவும் படிக்கட்டுகளின் அடியில் சில நடமாட்டம் தெரிந்தது. யார் என ஊகித்துக்கொண்ட சனா படிகளில் இருந்து தலையை கீழே தொங்க விட்டு எட்டிப்பார்த்து.."bowwwwww".... என கூறி சத்தமிட "இந்து மஹதி இதை.." என ஏதோ சொல்லிக்கொண்டிருந்த சுதன் அங்கு திடீரென முளைத்த தலையையும் சத்தத்தையும் கண்டு பேய் பேய் என அலறினான்.


அவனது சத்தத்தில் ஆதிஷ் அங்கு ஓடி வர அங்கிருந்த வாண்டுகளை கண்ட அவன்.."அதானே பாத்தேன் வால் இல்லாம தலை மட்டும் வருமான்னு"..என ஒரு பார்வை பார்த்தான்.


அனைவருக்கும் டீ பிஸ்கட் என வைத்து ஆதிஷ் உபசரிக்க அமைதியே நிலவியது உபசரிப்புக்கள் முடியும் வரை. அங்கிருந்த வாண்டுகள் அனைத்தும் சனாவை முறைத்துக்கொண்டே இருக்க அவளோ அந்த டீயும் பிஸ்கட்டும் தவிர வேறு எதுவும் அங்கு இல்லை என்பது போல் ஒவ்வொரு பிஸ்கட்டும் கதறக் கதற அவற்றை டீயில் மூழ்கடித்து வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள்.


ஆதிஷை பார்த்து முதலில் பேசினான் சுதன்.
"மாமா அந்த விக்கி கொடுத்த பெட்ட எங்ககிட்ட கொடுத்தீங்கன்னா நாங்க போய்டுவோம்..இல்ல மஹதி.." பல்லைக்காட்டிக்கொண்டே அவன் கேட்க.."இவ்வளவு தானா..இதுக்கு எதுக்கு இவ்வளோ ரிஸ்க்..என்கிட்டே கேட்டிருக்கலாமே..ஆமா அந்த பெட் உங்களுக்கு எதுக்கு.." கேட்டான் ஆதிஷ்.


சுதன் பெட் வரலாற்றை சில பல மூக்கு உறிஞ்சலுடனும் வராத கண்ணீருக்குப் பதில் வாடகைக்கு குமாரின் கண்ணீரையும் எடுத்து முழுவதுமாய் கூறி பெட்டை வாங்கிக்கொண்டு சனாவிடம் கூறாமலே சென்று விட அனைத்து பிஸ்கட்டையும் காலி செய்த பின் அவள் நிமிர அங்கு ஆதிஷையும் இவளையும் தவிர யாருமில்லை...


திரு திரு என விழித்துக்கொண்டிருந்தவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதிஷ்.


அந்த அழகிய தருணம்.."ஆதிஷ் என் பொண்ணு எங்க.." என்று அதிகாரமாய் ஒலித்த பெண் குரலில் கலைந்திட அது யார் என குரலிலே அறிந்து கொண்ட ஆதிஷ் கோபத்தில் கையில் இருந்த கப்பை இறுக்க பிடிக்க சனா குழம்பியவண்ணம் குரல் வந்த திசைக்கு தன் பார்வையை திருப்பினாள்.

கருத்துக்களை பகிர
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..9


💛உன் விழிகளில்
நான் காணும் நிறங்கள்
என்றும் நிலைத்திடவே
வேண்டி என் விழிகளை
மீட்டே செல்கிறேன்
உன்னிடம் இருந்து..💛



"ஆதிஷ் என் பொண்ணு எங்க.." என்று அதிகாரமாய் ஒலித்த பெண் குரலில் அது யார் என குரலிலே அறிந்து கொண்ட ஆதிஷ் கோபத்தில் கையில் இருந்த கப்பை இறுக்க பிடிக்க சனா குழம்பியவண்ணம் குரல் வந்த திசைக்கு தன் பார்வையை திருப்பினாள்.


அங்கு இறுக்கி பிடித்த டெனிம் அணிந்து டிஷர்ட்டுடன் முடியையும் விரித்துப்போட்டுக்கொண்டு வாய் நிறைய லிப்ஸ்டிக் என நின்று கொண்டிருந்தாள் ஒருத்தி. அதாவது சனாவின் பார்வைக்கு அப்படியே தான் தெரிந்தாள்.


ஆதிஷோ அங்கு அவள் வந்ததை திரும்பியும் பார்க்காமல் தன் வேலையில் கவனமாய் இருக்க .."கேட்கல்லயோ.." என சனா எண்ணியவாறு.."ஆதிஷ் உங்களை தன் கூப்பிட்றாங்க அவங்க.." என்றாள் அவன் தோளில் தட்டி.


அவனோ உன்கிட்ட கேட்டேனா என்று ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து அவளை நோக்கி நடந்து சென்றான். அவனை இதுவரை இப்படி கண்டிறாத சனாவும் எழுந்து யோசனையோடே அவன் பின்னே சென்றாள்.


அவளருகில் சென்றதும் அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்த சனா எம்பி நின்று ஆதிஷ் காதருகில் சென்று.."ஆமா அவங்க ஏன் ஸ்டூல் மேல நின்றுக்காங்க.." கேட்க ஆதிஷ் அவளை பார்த்து "கொஞ்சம் பேசாம இரு.." என்றான்.


தன் ஜோக்கிற்கு தானே சிரித்து விட்டு அவள் கப்சிப் என வாயை மூடிக்கொள்ள புதியவளோ பொறுமையை இழந்து.."ஹலோ மேன்..என் பொண்ணு எங்க..நான் சீக்கிரம் போகனும்..வர சொல்லு அவள.." என்றாள் மீண்டும் அதே அதிகாரத்தொனியில்.


பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு நிமிர்ந்த ஆதிஷ்.."ரஞ்சனா லிஸ்ன்..அவ என்னோட பொண்ணு.." என்று அவன் கூறி முடிக்கும்முன்னே..


"ஹான்..உன்னோட பொண்ணு..ஹ்ம் கேட்க நல்லாதான் இருக்கு..பட் இங்க அவள பார்த்துக்க யாரு இருக்கா இதை தான கோர்ட்டும் சொல்ல போகுது.. ஷி இஸ் மைன்..அன்ட் மைன் ஒன்லி.." ஆதிஷின் முகத்திற்கு நேரே நெயில் பொலிஷ் பளபளப்புடன் அரை இன்ச் நீளத்திற்கு நீண்டிருந்த நகத்தை அவள் நீட்டிக்கூற சனாவிற்கு ஏனோ அந்த நகத்தை உடைத்துப்போடும் அளவு கோபம் வந்தது.


எதையும் யோசிக்காது அவளது கையை பட்டென ஆதிஷின் முன்னிருந்து தள்ளிவிட்டாள் சனா. கண்கள் சிவக்க சனாவை முறைத்த ரஞ்சனா அடுத்த நொடி கையை ஓங்க அவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்த ஆதிஷ் ஓங்கிய கையை இடையிலே பிடித்து சனாவிற்கு அரணாய் அவள் முன்னால் நின்றிருந்தான்.


ஆதிஷின் தோள்வழியே அவளை எட்டிப்பார்த்து "எனக்கே அடிக்க பார்த்தல உனக்கு வேணும்" என கையால் சைகை செய்தாள் சனா.


"அவ மேல கை வச்ச..நீ யாருன்னும் பார்க்க மாட்டேன்.." என்றான் இம்முறை ஆதிஷ் ஒற்றை விரலை அவளுக்கெதிராய் நீட்டி.


அதேநேரம் "டேடி.." என அனு அங்கே வர..ரஞ்சனாவின் பார்வை அவள் பக்கம் திரும்பியது..அவளருகில் தன் ஹீல்ஸ் டக் டக் என சத்தம் எழுப்ப சென்றவள்.."வா போக.." என்றாள் அனுவின் கையை பற்றி ஒரே இழுப்பில்.


"நா வத மாட்டன்.." அனு அவள் கையை உதற..ஏற்கனவே ஆதிஷ் மேலிருந்த கோபம் அனுமேல் பன்மடங்காய் ஏற.."வான்னு சொன்றேன்ல.." என ரஞ்சனா அவளை பற்றி இழுக்க ஆதிஷ் அங்கு செல்லும் முன்னே அனுவை ரஞ்சனாவிடம் இருந்து பிரித்து தன்னோடு சேர்த்தணைத்திருந்தது இரு கரங்கள்.


"அவள பார்த்துக்க நான் இருக்கேன்.." என்றாள் சனா அழுத குழந்தையை தன்பக்கம் திருப்பி கண்ணீரை துடைத்தவாறே..


"ஏது வேலைக்காரி நீ..." ரஞ்சனா ஆரம்பிக்க..


"ஹலோ மேடம் நாளைக்கு நான் மிஸஸ் ஆதிஷ்.." என்றாள் சனா.


"ஓஹோ நீதானா அவள்..பார்க்கலாம் என்னை மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு.." சொல்லி விட்டு வெடுக்கென திரும்பியவள் மீண்டும் அதே டக் டக் என சத்தத்தோடே சென்று மறைந்தாள்.


புயல் போல் வந்தவள் அதே போல சென்று விட ஆதிஷ் இன்னுமே அதே இடத்தில் நின்று அனுவை சனா நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருப்பதையே கண் இமைக்காது பார்த்திருந்தான்.


பேசாது அமைதியாய் இருந்த குழந்தையை பார்க்க சனாவிற்கு ஏதோ போல் இருக்க அவளை சீண்டிப்பார்க்க எண்ணி.."என்ன பேய்கிட்ட இப்படி அணைஞ்சிட்டு இருக்க.." என்று கேட்க அப்போது தான் உணர்ந்த அனு மெதுவாய் நிமிர்ந்து..."அது அது.." என்று இழுக்க.."எது எது.." என கேட்டாள் சனா சிரித்துக்கொண்டே..


அவளை பார்த்து நாக்கை துருத்திக்காட்டி விட்டு ஓடினாள் அனு.


சிரித்துக்கொண்டே எழுந்த சனா அங்கிருந்த ஆதிஷை அப்போதுதான் கவனித்தாள்.


அருகில் சென்று அவன் முன்னே கையை ஆட்டவே தன்னிலை அடைந்தவன் மறுபக்கம் திரும்பி கண்ணை அவள் காணாது துடைத்துக்கொண்டான்.


சனா பேசாமல் நிற்க..அவனே தானாக சரியான பின் மெதுவாய் கேட்டாள்.."ரஞ்சனா..அனுவோட அம்மாவா.."


"ஹ்ம் ஆமா.."


அப்போது ஆதிஷிற்கு பின் பம்மிக்கொண்டே அங்கு அனு வர அவளை முதலில் கண்டு கொண்ட சனா.."bowwwwwww..." என பாய்ந்தாள் அவளிடம்.


இவர்களை பயமுறுத்த வந்த அனுவோ சனாவின் சத்தத்தில் பயந்து பின் அவளை பார்த்து முறைத்தாள்.


"ஏன் எதும இப்பி பயமா காட்டின.." கீழுதட்டை தள்ளிக்கொண்டு கேட்டாள் அனு.


"எதும ஏது உன் பெயதா..நன்னா இருக்கே.."


"ஏய்ய்.." குட்டி குரலில் அவள் சத்தமிட


"ஊய்ய்ய..." என்றாள் சனா அவளை மேலும் கோபப்படுத்தவே.


"ஏய்ய கச்சிடுவேன்.." மீண்டும் அனு கைகளை விரித்து பல்லை காட்டி கூற..


"ஓஹ் நீ கச்சிடுவயா..எங்க ஊருல கடிக்கதான் செய்வாங்க.." இன்னும் ஏற்றினாள் சனா.


இருவரும் சண்டையிட முன்னே நடுவில் வந்து நின்ற ஆதிஷ் அனுவை ஒரு சாக்லெட்டை கொடுத்து அனுப்ப அவள் அதை சாப்பிட்டாலோ இல்லையோ சனாவிற்கு காட்டி காட்டி அவள் முகம் போன போக்கை கண்டு பூரித்துதான் போனாள்.


அனு சென்றதும் அமைதியாய் நின்றிருந்த ஆசிஷ் "வா போகலாம்.." என்றான் சனாவை பார்த்து.


அவனை நிமிர்ந்து பார்த்த சனா "நீங்க ஏன் அனு பற்றி பர்ஸ்ட்டே சொல்லல.." என கேட்க..


"எனக்கு சொல்றதுக்கான நிலைமை அமையல்ல சனா..ஆனால் இப்போ உறுத்தலா இருக்கு..இந்த கல்யாணம் உனக்கு வேணாம்..இதுக்கு தான் சொன்னேன்..நான் இன்னைக்கே உன் வீட்டுல இல்ல இப்போவே சொல்லிட போறேன்..வா.." ஆதிஷ் முன்னே நடக்க.."ஒரு நிமிஷம்.." என தடுத்தாள் சனா.


"என்ன.."ஆதிஷ் நின்று திரும்பி கேட்க..


" வாழப்போறது நான் தான்..எனக்கு இந்த அழகான கூட்டுக்குள்ள வாரதுக்கு ரொம்ப ஆசையாதான் இருக்கு....." என்றாள் அமைதியாய்.


ஒரு நிமிடம் நிதானமாய் நம்ப முடியாமல் அவளை பார்த்தவன் பின் தலையை உலுக்கிக்கொண்டு வா என்று முன்னை நடந்தான்.


பைக்கில் வீடு வரும் வரை அமைதியே நிலவியது. சனாவிற்கு தான் ஏதோ பயம் உள்ளே இருந்து கொண்டே இருந்தது. வீடு வர ஏனோ வீடு முன்பிருந்த பிரகாசம் இழந்து நிற்பது போல் தோன்றியது. பயத்துடனே ஒவ்வொரு அடியாய் எடுத்து வாசல் வரை சென்றவள் கதவை தட்டும் முன்னே கதவு படக்கென திறந்தது.


"எங்கடி போயிருந்த.." கோபமாய் கேட்டார் வசுந்தரா.."அம்மா.." இவள் சொல்லும் முன்னே.. வசுந்தராவின் பார்வை சனாவிற்கு பின்னால் சென்றது...


கசந்த புன்னகையை உதிர்த்தவர்.."வா உள்ள.." என கோபமாய் அவளை வீட்டினுள் இழுத்து சென்றார்.


அந்த புன்னகை பலதையும் ஆதிஷிற்கு உணர்த்த மேலே வானை அண்ணாந்து பார்த்து மூச்சை ஆழ இழுத்து விட்டான்.


கருத்துக்களை பகிர


 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..10

சொந்தக்காரர்களால் இரு தினங்களுக்கு முன் நிரம்பி வலிந்திருந்த வீட்டில் இன்றோ வழமை போல் சனாவை எழுப்பும் படலம் முடிந்து சனாவிற்கு அறிவுரை வழங்கும் படலம் மேடையேறியிருந்தது.

"உன்னதான்டி..உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்.." வசுந்தரா பொறுமை இழந்து அவளை பிடித்து உலுக்க..

"ஆஹ் அம்மா கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லு..ஏதோ சமைக்க பழகுன்னு சொல்லிட்டு இருந்தியே.." டிவியில் கண்ணை பதித்துக்கொண்டு கையிலிருந்த பக்கோடாவை கொறித்தவண்ணம் சனா கூற அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தார் அவர்.

அவர் போகும் வரை கண்ணை பக்கமாய் உருட்டி பார்த்துக்கொண்டிருந்தவள் அவர் சென்று மறைந்ததும் டிவியை அணைத்து விட்டு சோபாவில் மேலே பார்த்தவண்ணம் படுத்துக்கொண்டாள்..

கையிலிருந்த நகத்தை கடித்துக்கொண்டேஅடுத்த ப்ளான் என்னது என யோசித்துக்கொண்டிருந்தாள் சனா....அவள் எப்படியும் உருப்படியாக எதுவும் யோசிக்க போவதில்லை என்று உணர்ந்தவராய் வசுந்தரா அவளருகில் இருந்த மேசை மேல் நங் என்று எதையோ போட "ப்ச் டிஸ்டர்ப் பன்னுறியேமா.."என அதே போசில் இருந்து கொண்டே அவரை பார்த்தாள்.

"ஓஹோ மேடம் எப்போ மாஸ்க்கு போகலாம்ன்னு யோசிக்கிறீங்க நாங்க டிஸ்டர்ப் பன்னிட்டோம் பாருங்க.. நல்லா வரும்..போ போய் இந்த வெங்காயம் எல்லாம் நறுக்கி வை.."

மெதுவாய் முழங்காளில் சோபாவில் நின்று அந்த பாத்திரத்திற்குள் எட்டிப்பார்த்தாள் சனா. இருபதிற்கும் மேற்பட்ட வெங்காயங்கள் தண்ணீரிற்குள் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தன..

"எதுக்கு இவ்வளோதையும் இப்போ நான் வெட்டனும்.."

"பதில் கேள்வி கேட்க கூடாது சொன்னதை செய்.."

"இப்போ எதுக்கு இப்படி ஹிட்லருக்கு தங்கச்சி போல மூஞ்ச வச்சிகிட்டு என்னையே இப்படி எல்லா வேலையும் பன்னு பன்னுன்னு சொல்லிட்டு இருக்க..இன்னும் இரண்டு தடிமாடு இருக்குள்ள..நானும் பாவம் எவ்வளோ வேலைதான் பன்னுவே...ன்.." கடைசி வரிகள் தனக்கே ஓவராய் தெரிய வசுந்தரா பார்த்த பார்வையில் "சரி செய்யுறேன்..சும்மா சும்மா என்ன முறைக்காதம்மா.." முணுமுணுத்த் விட்டு பாத்திரத்தை தூக்கிக்கோண்டு சமயலறைப்பக்கம் நகர்ந்தாள் சனா.

நிரம்பி வலிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டே "என்ன இருந்தாலும் எப்படி பார்த்தாலும்..எதுவா இருந்தாலும்.."

"இப்படி ஆகி இருக்க கூடாது.." அவளது வாக்கியத்தை முடித்து வைத்தான் ஜன்னல் வழி எட்டி பார்த்த சுதன்.

இது வழமைதான் என்பதால் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு.."எங்கயாவது விழுந்து கைய கால உடைச்சிக்காத..அப்புறம் உன் அம்மா வந்து எல்லாம் இந்த சனாவால தான் பொண்ணா வளர்த்து வச்சிருக்கீங்கன்னு என் அம்மாகிட்ட வந்து பேயாட்டம் ஆடும்.." அவள் பாட்டிற்கு சொல்லிக்கொண்டே தன் வேலையை கவனிக்க..சுதனிடம் இருந்து பதில் ஏதும் வராமல் போக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனை பார்த்ததும் சிரிப்பு பீரிட.."டேய் முறைக்கிறன்னா சொல்லிட்டு முறைடா..இல்லனா எனக்கு தெரியாதுல.." என்றாள் சிரித்துக்கொண்டே.

"ரொம்பதான் பன்னுற பாவமேன்னு நீ கேட்டதுக்கு ஐடியா கொடுக்க வந்தேன்ல என்ன சொல்லனும்..பே எப்படியாவது போ.." அவன் கூறிவிட்டு மறைய..என்ன கேட்டேன் என்ன ஐடியா என யோசித்தவள் மண்டையில் அப்போதுதான் தான் கேட்டிருந்தது உறைக்க.."அய்யய்யோ இது தெரியாம ஓவரா பேசிட்டேனே..இப்ப சொல்ல மாட்டானே..டேய் சுப்பு இருடா.." கையிலிருந்த கத்தியை தூக்கி ஒரு ஓரமாய் போட்டு விட்டு சமயல் கட்டின் மேடையில் ஏறி அந்த சிறிய ஜன்னல்வழியே தவழ்ந்து வர இடையில் தலையும் இவளது அவசரம் புரியாது நங் என இடித்துக்கொண்டது அதனை ஒதுக்கி விட்டு ஒருவாரு ஏறி மறுபக்கம் குதித்தாள் சனா.

குதித்தவள் தனக்கு நேரேதிரே இரு கால்களை கண்டதும் பயத்துடனே நிமிர அங்கு இவளையே குறு குறு என பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தான் விக்கி.

"ச்ச நீயா..நகரு.." அவள் அவனை கடந்து கொண்டு போக எத்தனிக்க அவளது உதாசீனம் அவனை சீற வைக்க..

"ஏய் இரு உன் அம்மாட்ட போய் நீ ஜன்னல்வழியா குதிச்சி எங்கேயோ ஓடுறன்னு மாட்டி கொடுக்குறன்.."

இரண்டு அடி முன்னே வைத்திருந்தவள்.."நம்ம வாய்தான் எனக்கு பர்ஸ்ட் எதிரி..கம்முனு இரு.." தலையில் அடித்துக்கொண்டே.."ஆஹ் கொக்கில மாட்டு பே..நானும் உன் அம்மாட்ட போய் நீ போன வருஷம் ஒன்பதாம் மாசம் இரண்டாம் திகதி அந்தில நாலு பத்து மணிக்கு அவங்களுக்கு தெரியாம காசு திருடிட்டு வந்து பந்தயம் கட்டினல்ல அதை மாட்டி கொடுப்பேனே.." இவள் கூறிவிட்டு அவனது பேயறைந்த முகத்தை திருப்தியுடன் பார்த்து விட்டு சுதனை பிடிக்க ஓடினாள்.

"டேய் டேய் சுதன் பாப்பு சொல்லுடா..ப்ளீஸ் இனிமே இப்படிலா பன்ன மாட்டேன்டா உன் மேல சத்.." அவன் முறைக்க.."ஈஈஈ சரி நாய்குட்டி மேல சத்தியம் டா.." அவள் கெஞ்சிக்கொண்டே வர இருவரும் மரத்தடிக்கு வந்திருந்தனர். அங்கு ஏற்கனவே அவர்களது சங்க உறுப்பினர்கள் அமர்ந்திருக்க அவர்களை பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு மீண்டும் சுதன் பக்கம் திரும்பினாள் சனா.

"சரி போனா போகுதுன்னு மன்னிச்சி விடுறேன்..மஹதி நம்ம ப்ளான சொல்லு.." சுதன் கட்டளையிட..

"ஏய் எனக்கு ஆடர் போடாத சொல்லிருக்கேன்.."

"ஏய் என்ன இத்துணோண்டு சைஸ்ல இருந்துட்டு ஸவுன்டு விடுற.." சுதன் பதிலுக்கு பாய..

அய்யோ என தலையில் அடித்துக்கொண்டு நடுவில் வந்து நின்றாள் சனா..

"கொஞ்சமாவது பாசம் இருக்காடா உங்களுக்கு அக்கா மேல..அக்காவே எவ்வளோ நொந்து போய் உடைஞ்சி போய் இருக்கேன்.." சனா பொய்யாய் கண்ணை துடைக்க..

"இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல..கீழ குனி சொல்லுறன்.." என்று அவள் உயர்த்திற்கு சனாவை இழுத்து குனிய வைத்து காதில் அவர்கள் இரவு பகலாக ஆளுக்கு ஒரு பக்கம் இருந்து யோசித்து கடைசியாய் ஒன்றாக மூட்டை கட்டியிருந்த ப்ளானை அவுத்து விட்டாள்.

கண்களை உருட்டி உருட்டி இடையிடையே ஒரு ஓஹ் உடன் கேட்டுக்கொண்டிருந்தவள்..அப்புறம் என மஹதியை பார்த்து கேட்டு வைக்க.."லூசு அவ்வளவு தான்..நான் என்ன கதையா சொல்லுறன்.." எகிறினாள் மஹதி.

சனா ஷாலை கையில் சுருட்டிக்கொண்டே மரத்தடியில் அமர்ந்து வெகு தீவிரமாக யோசித்தாள். ஐந்து நிமிடம் கடக்க அவளருகில் வந்து நின்ற இந்து.." இதோ பாரு இப்படி யோசிக்கிறேன்னு சீன்லா போடாத உனக்கு செட்டே ஆகல்ல..நாம சொன்னதுக்கு தலையாட்டிட்டு சொல்லி கொடுத்தது போல அப்படியே வீட்டுல சொல்லு..தட்ஸ் ஆல்.."

"சரி போறேன்.." நிமிர்ந்து பார்த்து விட்டு சனா எழுந்து நடக்க..

"ஏய் இப்படியேவா போய் சொல்ல போற.." சுதன் கேட்க.."ஆமா வேற எப்படி.." நின்று திரும்பி கேட்டாள் சனா.

"உன்னல்லாம்..உனக்கு கல்யாணம் நாளைக்குன்னு இருக்கப்போ இன்னக்கி நின்றிருக்கு..அப்படி ஒரு பொண்ணுக்கு நடந்தா.." சுதன் விளக்கிக்கொண்டிருக்க..

"அவதான் பொண்ணே இல்லையே..ஹிஹி"என்று இடையில் வந்து பல்லைகாட்டிய மகேஷின் பல்லை ஒரே அடியில் உடைத்திட எழுந்த ஆர்வத்தை அடக்கிக்கொண்டே சுதன் தொடர்ந்து கூறியதை கேட்டாள் சனா.

"இந்நேரம் நீ சாப்பிடாம அழுதிட்டே.."

"சாப்பிடாமயா..சாப்பிடாம நான் எப்படிடா இருப்பேன்.."

"ஆமால்ல சரி அப்போ சும்மா சாப்பிட மாட்டேன்னு சீன போடு அப்புறம் எல்லாரும் தூங்கிட அப்புறம் சாப்பிட்டுக்கலாம் எப்படி ப்ளானு.." குமார் கூற.."ஹை ஜுப்பர்.." என அவனுடன் கையை போட்டுக்கொண்டாள் அவள்.

"சரி ரொம்ப இளிக்காத..அப்புறம் அழுதிட்டே இரு.."சுதன் கூறவும்.."சும்மா சும்மா எனக்கு எப்படிடா அழ முடியும்.." என்றாள் சனா.

"அதான் இன்னக்கி வெங்காயம் வெட்டுறப்போ அழுதியே அழுக வரலன்னா வெங்காயம் வெட்டிக்கோ"

"என்னாது சனா நீ வெங்காயம் வெட்டுனயா..சொல்லவே இல்ல.." இந்து வியப்பாய் கேட்க..

"அடச்சே இது ரொம்ப முக்கியம் பாரு இப்போ..நம்ம ப்ளான்க்கு வா..அப்புறம்..." என தொடங்கி இந்த ப்ளான் நடைபெற வேண்டும் என்றால் அவள் செய்ய வேண்டியது எல்லாம் லிஸ்ட் போட்டு முடித்தான் சுதன். அனைத்திற்கும் தலையை ஆட்டி விட்டு வீடு வந்தாள் சனா.

வீட்டு வாசலிலே வசுந்தரா முறைத்துக்கொண்டு நிற்க அவரை பார்த்ததும் தான் வெங்காயம் நியாபகமே வர..தலையை சொறிந்து கொண்டே அவர் பக்கமாய் வந்தவள்..

"வெங்காயம் இருக்குல்ல கிச்சன் ஜன்னல் இருக்குல்ல..அதால கீழ விழுந்திரிச்சி..அதை தான் எடுக்க போனேனா அப்படியே சுதன் வந்தானா..அதான் ஈஈ.." வசுந்தரா இருந்தும் முறைத்துக்கொண்டு இருக்க முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டே நின்று கொண்டிருந்தாள் சனா.

அது என்னவோ இந்த முகத்தை பார்த்தாலே வசுந்தரா உட்பட அனைவருக்கும் திட்டவே தோணாது போல..கண்களை உருட்டி விட்டு.."உன்ன எப்படிதான் நான் திருத்த போறேனோ..போ போய் கொட்டிகோ டைம் ஆச்சு.." என்று வாசலில் இருந்து விலகிக்கொண்டார் வசுந்தரா.

சரி என்று உள்ளே கிச்சன் பக்கமாய் போனவள் சுதன் போட்ட ப்ளான் நினைவில் உதிக்க ஹையோ என்று இருந்தது காரணம் உள்ளிருந்த சமையல் வாசனை அவளை ஒரு பக்கமாய் இழுத்துக்கொண்டிருந்தது. சரி ப்ளான இரவு வரை தள்ளி வச்சிக்கலாம் என்ற எண்ணத்துடன் வாசனை பிடித்துக்கொண்டே சமயலறைக்குள் நுழைந்தாள் சனா.


கருத்துக்களை பகிர
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..11

நன்றாக நாளைக்கும் சேர்த்தே வயிற்றை நிறைத்துக்கொண்டு தனதறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள் சனா. நேரம் தான் நகர மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அறையிலிருந்து வெளியேறத்துடித்த கால்களை கஷ்டப்பட்டு இழுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

"இது இவ்வளோ கஷ்டமான வேலைன்னு தெரியாம போச்சே..இன்னும் மூனு நாளைக்கு நான் எப்படி இருப்பேன்.." புலம்பிக்கொண்டே குறுக்கும் நொடுக்குமாய் அந்த அறையை கால்களால் அளந்து கொண்டிருந்தாள்.

பகலவன் உச்சியை விட்டு மேற்குப்பக்கம் சாய்ந்து மறைய தொடங்கியிருந்த நேரம் "அம்மா.."என்ற மதியின் குரல் ஹாலில் கேட்க.."வந்துட்டா என் செல்ல குட்டி.." என கையிலிருந்த போனை கட்டிலில் போட்டு விட்டு ஓடி வந்து கதவுடன் சேர்த்து காதை வைத்துக்கொண்டாள் சனா.

"இன்னைக்கி க்ளாஸ் எப்படி போச்சு.." அடுத்து வசுந்தராவின் குரல் கேட்க மது தொடர்ந்து பேசுவது கேட்டது..

"சூப்பரா போச்சும்மா..மெத்ஸ்ல நான் தான் ஹையஸ்ட்..அப்புறம் ஸயன்ஸ்ல.."அவள் தொடர்ந்து பேச சனாவோ.."உன்னோட இந்த புராணமெல்லாம் யாரு கேட்டா இப்போ..அக்கா எங்கன்னு கேளு சீக்கிரம்.."என்று தனக்குள் பேசிக்கொண்டு அவள் கேட்கும் வரை காத்திருந்தாள்.

ஆனால் மது மதி இருவரும் வரும் வழியில் ரோட்டில் உறங்கிக்கொண்டிருந்த நாய்குட்டி பற்றி கூட பேசி விட்டார்கள் ஆனால் சனா பற்றி ஒரு பேச்சு கூட வரவில்லை. இவள் கதவடியில் சாய்ந்து நின்று கொண்டே தூங்க ஆரம்பிக்க ஒருவாறு மதி.."ஆமாம்மா அந்த எருமை எங்க காணோம் இன்னக்கி எந்த வீட்ட உடைக்க போயிருக்கு.." ரொம்ப மரியாதையாக சனா பற்றி விசாரிக்க தூக்கம் பறந்து போய் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது, பல்லைக்கடித்துக்கொண்டே காத்திருந்தாள்.

எங்க ஒரு பதில் சத்தத்தையும் காணோம்.. என இன்னும் நன்றாக காதை கதவுடன் வைத்து அழுத்த அந்த நேரம் எதிர்பாராமல் திறந்தது கதவு. கதவு திறப்பதை ஊகித்து அவள் திரும்பி விலகும்முன்னே ஆசையாய் அவளது மூக்கை வந்து பதம் பார்த்திருந்தது கதவு.

கதவை திறந்து விட்டதும் சனாவின் முகத்தில் தடார் என கதவு மோதியதை கண்ட மது.."ஹையோ இன்னக்கி செத்தேன்.."என பயந்து கொண்டே சனாவை பார்க்க ஆனால் அவளோ தனக்கு எதிரிலிருந்தவளை சோகமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து திரும்பி சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

தான் காண்பது கனவா என கண்களை நன்றாக கசக்கி விட்டு பார்த்தாள் மது. கனவு இல்லை என புரிந்து விட திறந்த வாய் மூடாது அப்படியே வசுந்தராவிடம் வந்து நடந்ததை கூறினாள்.

வசுந்தரா யோசனையோடு வந்து அறையில் பார்க்க அவர் வந்ததை ஊகித்த சனா.."இதுதான் கரக்ட் டைம் சனா உன் ஆக்டிங்க எடுத்து விடு.." என்று எண்ணிக்கொண்டு மூக்கை சத்தமாக உறிஞ்சினாள்..

இதை கேட்ட வசுந்தரா "அட உன் அக்காக்கு சலி பிடிச்சிருக்கு மது..அதுதான்.."என்று விட்டு அவர் திரும்பி சென்றார்.

இவ்வாறே தொடங்கி இவள் செய்த ஒவ்வொன்றும் ஏனோ தானோ என்று தான் முடிந்தது எல்லாவற்றிலும். சாப்பிட உட்கார்ந்து சாப்பாடு வேண்டாம் என சோகமாய் கூறினாலோ இருக்கவே இருக்கும் குட்டி பிசாசுகள் இரண்டும் அக்கா பங்கு எனக்கு உனக்கு என அடித்துப்பிடித்துக்கொண்டு சாப்பிட்டன. கடைசியில் பசியில் நள்ளிரவில் வயிற்றுக்குள் யுத்தம் நடக்கும் போது சுதனை தான் திட்டி தீர்க்க முடிந்தது சனாவினால்.

இரண்டாம் நாள் பகல் பசி வயிற்றைக்கிள்ள மெதுவாய் அறையிலிருந்து எட்டிப்பார்த்தாள் சனா. மூர்த்தி ஹாலில் அமர்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார். சிணுங்கிக்கொண்டே மீண்டும் அறையினுள் வந்து கட்டிலில் விழுந்தாள்.

விழுந்தவள் அடுத்த நொடி "சட்டி..." என கேட்ட அலறலில் அடித்துப்பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள்..

"டேய் எங்கடா இருக்க.." சனா கிசுகிசுப்பாய் கேட்க..

தொப் என்ற சத்தத்தோடு மேலிருந்து கட்டிலிற்கு குதித்தான் மகேஷ். அவனோடே அடுத்ததாய் குதித்தாள் இந்து.

"கொரங்கு மாதிரி மேல எங்க இருந்துடா பாயிரீங்க.."என்றபடி அவர்கள் வந்த வழியை தேடினாள்...

"அது இதோ இந்த கூரைய கொஞ்சம் லைட்டா தள்ளிட்டு உள்ள வந்துட்டோம்..ஈஈஈ"

"அடிப்பாவி என் வீட்டுலயேவா..சரி சரி என்ன சாப்பிட கொண்டு வந்த எடு எடு.."

இந்து பாக்ஸை எடுத்து அவளிடம் நீட்டிட முன்னே அதனை பொறுமையின்றி பிடுங்கிக்கொண்டு கட்டிலில் கால்களை மடித்து அமர்ந்து கைகளை தேய்த்து விட்டுக்கொண்டே திறந்தாள்.

திறந்தவள் பாக்ஸின் உள்ளேயே கையை விட்டு எதையோ தேட.."அய்யய்ய என்ன பன்னுற நீ.."இந்து கேட்கவும்

"சிக்கன காணோம்டி.." முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டே இன்னும் ஆழமாய் தேடினாள்.

"லூசு சிக்கன் இருந்தாதான உள்ள இருக்கும்.. விட்டா பாக்ஸையே உடச்சிடுவ போல..சீக்கிரமா கொட்டிகிட்டு பாக்ஸ கொடு அம்மா தேடுவாங்க.." மகேஷ் அவள் தலையில் அடித்து கூற..

அவன் அடித்ததில் மூக்ககலிருந்து நழுவப்போன கண்ணாடியை சரிசெய்து கொண்டே.."அப்போ சிக்கன் இல்லையாடா.." என சோகமாய் இழுக்க அவன் முறைத்த முறைப்பில் "ஈஈஈ சும்மாடா இதுவே போதும்.." என்று விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

"ஆமா ப்ளான் எப்படி போகுது..டிக்கட் வேற புக் பன்னும்..மாலினி கிட்ட சொல்லிட்டல்ல நீ.."இந்து கேட்க எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டிக்கொண்டே பாக்ஸை காலி செய்யும் வேலையில் மும்முரமாக இருந்தாள் சனா.

"ஏய் லூசு வாய திறந்து சொல்லு.."

"பார்த்து புக் பன்னுங்கடா..சும்மா இதுலா என்ட கேட்டுகிட்டு.." அலட்சியமாய் பதிலளித்து விட்டு சனா தொடர்ந்து சாப்பிட...

"ஆஹா அப்போ நீயே பன்னிக்கோ..உனக்கு எல்லாம் ஓவர்தான்..வாடா நாம போகலாம்.." இந்து அவளது அலட்சியமான நடத்தையில் சிலுப்பிக்கொண்டு திரும்பினாள்.

"நீங்க என்ன எனக்கு இதுலாம் சும்மாவா செய்து தரீங்க..லிஸ்ட்டுல இருக்க சாமான்லா நான் வாங்கிட்டு வாரேன் சொல்லிருக்கேன்..நினைவிருக்குல்ல சரி அப்போ வேணாம்னா போங்க எனக்கு என்ன.." சனா இருவரையும் பார்த்து தோளை குலுக்கி விட்டு திரும்பிக்கொள்ள.."ஹையோ மறந்துட்டோமே..இப்போ எப்படி இவள சமாளிக்கிறது.." இந்து முளிக்கவும் அவளை முறைத்துக்கொண்டிருந்தான் மகேஷ்.

"சரி சனா கோவிச்சிக்காத சும்மா சொன்னேன்...நாங்க எல்லாம் பார்த்துக்குறோம்..நைட்டுக்கு சிக்கன் கொண்டு வாரேன் சரியா.." இந்து சிக்கனை முன்னிறுத்தி ஒருவாரு இதனை சமாளித்து விட்டு அவள் தெளியும் முன் காலி பாக்ஸுடன் மகேஷையும் இழுத்துக்கொண்டு வந்த வழியே மறைந்தாள்.

இதுவே அடுத்த நாளும் தொடர இரண்டு நாட்கள் கடக்க மூன்றாவது நாள் தான் மூர்த்தியினது பார்வை இவள் பக்கம் திரும்பியது.

"சனா ஏன்டா ஒருமாதிரி இருக்க.." மூர்த்தி கேட்க..அப்பாடா கேட்டுட்டாரு என சனா பதில் கூற வர அவளை முந்திக்கொண்டு "அதுப்பா அக்காக்கு..." மதி அனைத்தையும் கெடுக்கவென அங்கு வர.."ஏய் பிசாசு வாய மூடு இல்ல நீ லவ் லெட்டர் கொடுத்த விஷயத்த போட்டு கொடுத்துடுவன்.." என தன்னையும் மீறி தன்னியல்பு நிலை தலைதூக்க மதியை நன்றாக நகத்தால் கீறி வைத்தாள் சனா.

இவள் லவ் லெட்டர் என்றதுமே கப்சிப் என வாயை மூடிவிட்ட மது போனஸாய் கீறலையும் வாங்கிக்கொண்டு விட்டால் போதும் என அங்கிருந்து ஓடிவிட்டாள்.

சமயம் பார்த்து சுதன் அங்கு வர அவனை கண்டு கொண்ட சனா..அவனை கற்பனையிலே கொஞ்சிக்கொண்டாள்..உள்ளே வர காலை வைக்கப்போனவன்..

"கேட்குறேன்ல சனா சொல்லு.." என கேட்ட மூர்த்தியின் குரலிலும் சனா நின்றிருந்த விதத்தையும் பார்த்து விட்டு.."ஆத்தி இந்த பேயி என்ன பன்னி வச்சிட்டு இப்படி நிக்கிது..நாம வந்த டைமிங் ரொம்ப தப்பாயிருக்கே.." என வைக்கப்போன காலை பின்னோக்கி வைத்து விட்டு திரும்ப எத்தனிக்க அதற்குள் மூர்த்தியின் கண்களில் சிக்கிக்கொண்டான் அவன்.

"சுதன் இங்க வா.."

பதுங்கிக்கொண்டே உள்ளே வந்த சுதன்.."எனக்கு ஒன்னும் தெரியாது அங்கிள்..நான் சனாக்காகிட்ட எவ்வளவோ வேணாம் சொன்னேன் அவதான் கேட்கல்ல.."என்று இவள் என்ன செய்து வைத்திருந்தாலும் தனக்கு இந்த வரிகள் கை கொடுக்கும் என முற்பாதுகாப்பிற்காக அவன் கூற...இதனை கேட்ட கொஞ்சிக்கொண்டிருந்த சனாவோ இப்போது அவனை அடித்து துவைத்து கிட்னியை பிடுங்கி எடுத்திருந்தாள்.

"என்னப்பா என்ன கேட்கல..இல்ல இவ இரண்டு மூனு நாளா அப்சட்டாவே இருக்கா அதை பற்றி உனக்கு எதுவும் தெரியுமான்னு கேட்கதான் கூப்பிட்டேன்.."என்று விளக்கிக்கூறினார் மூர்த்தி.

"வேற என்ன திருட எந்த வீடும் கிடைச்சிருக்காது இல்ல எங்காயவது வாங்கி கட்டிருப்பா நீங்க வேற இதுலாம் பஞ்சாயத்து பன்னிகிட்டு.." என அவளை சரியாக புரிந்து வைத்திருந்த அவளை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அன்னை அங்கு வந்தார்.

"டேய் எரும சொல்லுடா.." என கண்களாலே சனா சுதனை கேட்க..இரு இரு நான் பார்த்துக்கிறேன் என பதிலும் இவன் கண்களாலே கூறிவிட்டு..

"ஆன்ட்டி என்ன இப்படி பேசுறீங்க..இப்போ சனா எங்க கூட ஏன் வெளில கூட வாரதில்ல தெரியுமா.. வார போறவங்க எல்லாம் சனாக்கா கல்யாணம் நின்னுறிச்சேன்னு கிண்டல் பன்னுறாங்க..அக்காவே மனசு உடைஞ்சி போயிருக்கா.." அவன் கதைக்கு பிஜிஎம் போல சனா மூக்கை பலமாய் என்றும் போல் உறுஞ்ச இது தெரியாத சுதன்.."அய்யோ பகல் நேரத்தில கூட இங்க பன்னி வருமா ஆன்ட்டி.."என தன் கதையை விட்டு வெளியில் எட்டி பார்க்க..சனாவோ முடிந்தால் அவனை கண்களாலே எரித்திருப்பாள்.

நல்ல வேளை சுதன் முதலில் சொன்ன வரிகளே வசுந்தராவினதும் மூர்த்தியினதும் மனதை தொட்டிருக்க யோசனையுடன் இருந்ததால் இதனை கவனிக்கவில்லை.

உன்னை பிறகு கவனித்துக்கொள்கிறேன் என அவனிடம் இருந்து தற்காலிகமாக தன் பார்வையை திருப்பியவள் முகத்தை ஏழு கிலோமீற்றருக்கு சந்தரப்பத்திற்கு ஏற்றது போல் இழுத்து வைத்துக்கொண்டாள்.

அவளருகில் எழுந்து வந்த வசுந்தரா.." ஏன்டா அந்த பையன் வீட்டுல இருக்கவங்க தான் அவனுக்கு ஒரு குழந்தை இருக்குற உண்மைய மறச்சி கல்யாணத்த நடத்த பார்த்தாங்க..நல்ல வேளை கடவுளோட அருளால அந்த பொண்ணு சரியான நேரத்திற்கு இங்க வந்து சொல்லிச்சி..ஊர்ல இருக்க எல்லாருக்குமா நமக்கு போய் இது சொல்லிட்டு இருக்க முடியும்..அவங்க பேசுறதுலாம் நீ இப்படி நினைச்சி கவலைபடலாமா சொல்லு..உனக்கு தான் தெரியும்ல நீதான் காப்பாதபட்டிருக்க.." வசுந்தரா கூற ஹையோ என கேட்டுக்கொண்டிருந்த சனா மீண்டும் சுதனை பார்க்க அவனும் புரிந்து கொண்டதன் அடையாளமாய்..

"என்ன இருந்தாலும் ஆன்ட்டி அக்காக்கு ஒரு மாற்றம் வேணும்ல..கொஞ்ச நாள் அக்கா இங்க இல்லாம போனா அக்காவ கண்ணுல படலன்னா இங்க ஊர்காரங்களும் இதை மறந்துடுவாங்க..அக்காக்கும் ரிலாக்ஸா இருக்கும்.." சுதன் பவ்யமாக எடுத்துக்கூறினான்.அதாவது அவர்களது ப்ளானின் அடுத்த காயை மெதுவாக நகர்த்தினான்.

மூர்த்தியும் வசுந்தராவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு.."ஆனால் எங்கப்பா அனுப்புறது..?" வசுந்தரா கேட்க..

"ஆன்ட்டி அதான் அக்காவோட ப்ரன்ட் மாலினி இருக்காங்களே..அங்கதான்.."

"ஆனாலும்.." வசுந்தரா இழுக்க..

"இல்ல வசு..சுதன் சொல்லுறது கரக்ட்தான் நாம கூட அவனளவு யோசிக்கல்ல பாரு..சனா கொஞ்ச நாளா ஒழுங்கா சாப்பிடுறது இல்ல..பாரு எப்படி இருக்கான்னு.." மூர்த்தி அவள் பக்கம் கையை காட்டும் போது இன்னும் எக்ஸ்ட்ராவாய் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டாள் அவள்.

"என்னா நடிப்பு.." என சுதன் ஒரு பக்கம் அவளை பார்த்து வியக்க மூர்த்தி தொடர்ந்தார்..

"அதுனால அவளுக்கும் ஒரு மாற்றமா இருக்கும் போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும்.." என்று மூர்த்தி கூறி முடிக்க சிறிது நேர யோசனையின் பின் வசுந்தராவும் அவரது முடிவுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்.

"சரி ட்ரையின் டிக்கட்.." வசுந்தரா தொடங்க

"அதுலாம் எடுத்தாச்சே.." என ஆர்வமிகுதியில் சுதன் இடையில் பாய்ந்து விட.."போச்சு எல்லாம் போச்சு.." என தலையில் கை வைத்துக்கொண்டாள் சனா.

தான் கூறியது அப்போதுதான் புரிய குழப்பமாய் அவனை பார்த்துக்கொண்டிருந்த வசுந்தரா மற்றும் மூர்த்தியின் பக்கம் மெதுவாய் திரும்பினான் சுதன்.


கருத்துக்களை பகிர
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..12

"ஓய் சட்டி.." இன்னமும் நடந்ததை நம்ப முடியாதவளாய் நகத்தை கடித்துக்கொண்டே அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தவளை பிடித்து உலுக்கினான் குமார்.

அவன் உலுக்கியதும் தான் நினைவுலகிற்கு வந்தவளாய் திரும்பி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள்.

"என்ன முழிக்கிற.." மஹதி சந்தேகமாய் இழுத்துக்கொண்டே கேட்க..

"இல்ல உங்கள எல்லா விட்டுட்டு நானு எப்படி அவ்வளோ தூரம்.." சனா தரைக்கும் மஹதிக்கும் என பார்வையை மாற்றிக்கொண்டே கூற..

"சட்டி உன் நடிப்பலாம் நம்ப நாங்க உன் வீட்டுல இருக்கவங்க கிடையாது பேபி.."

"என்னபா இப்படி பேசுறீங்க..அக்காவே எவ்வளோ சோகமா.."

"இரு இரு சோகம்ன்னு ஏதோ சொன்னியே ஆமா அது எங்க இருக்கு.." சுதன் அவளையும் தாண்டி எட்டிப்பார்க்க..

"டேய் கண்ண திறந்து பாருடா.." என சனா தலையில் தட்ட போகும் முன்னே சுதாரித்து விலகிக்கொண்டான் சுதன்..

"சரி இப்போ எதுக்கு ஐஸ் வெக்கிர..நேரா விஷயத்துக்கு வா.." மகேஷ் கூறிவிட்டு மரத்தடியில் சாய்ந்து அமர அவனை ஆமோதித்தவாரே மற்றையவர்களும் இணைந்து அமர்ந்தனர்.

"அது அது வந்துடா..அது.." கையில் ஷாலை சுற்றிக்கொண்டு கண்ணை உருட்டிக்கொண்டு சனா இழுத்துக்கொண்டு இருந்தாள்.

"என்ன தொண்டைல முள்ளு சிக்கிரிச்சா..நான் அப்போவே சொன்னேன் உனக்கு..சிக்கன்ல எழும்பையும் சேர்த்து தின்னாத வையின்னு..இப்போ பாரு..ஆமா லெக் பீஸா சிக்கியிருக்கு.." மஹதி படபட என பேசிவிட்டு ஏதோ இங்கிருந்தே பார்த்தால் தெரிவது போல் உட்கார்ந்த இடத்திலிருந்தே எட்டி பார்த்தாள்.

"எருமையே எனக்கு வெக்கமா இருக்கு..நான் வெக்கபடுறேன்.." சனா கோபமாய் முகத்தை சுருக்கிக்கொண்டு கூறினாள்.

ஒரு நிமிடம் அனைவரும் ஒவ்வொருவர் முகத்தை பார்த்துக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டு பின் "எஹ்ம் எஹ்ம்..வெக்கம் அதுவும் நீயி..?" இந்து அமைதியாய் முதலில் கேட்டு விட்டு அடுத்த கணம் வெடித்து சிரிக்க அவளுடன் வழமை போல மற்றைய வாண்டுகளும் சேர்ந்து கொண்டது..

திரும்பி அனைவரையும் முறைத்தவள்.."ஒன்னும் வாங்கிட்டு வர முடியாது.." என்று கூறி காலை தரையில் உதைத்து விட்டு அங்கிருந்து வேகமாய் நடக்க..

அவள் கூறியது கேட்டு அனைவரது சிரிப்பும் ஒரே நொடியில் நின்றது..

"ஏய் சனா உனக்காக இவ்வளோ பன்னிருக்கோம் இப்போ ப்ராமிஸ மீறுர பாரு..இது நல்லா இல்ல.." சுதன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இறங்கி குரல் கொடுக்க போன வேகத்திலே திரும்பி வந்த சனா..

"கிழிச்ச.. கடைசி டைம் ஒலறிட்டல்ல நல்ல வேளை ஏதோ நான் புத்திசாலிதனமா யோசிச்சி சொன்னதால தான்..இல்லன்னா.." சனா பேச

"அப்போ உனக்கு சாப்பாடுலா கொண்டு வந்து தந்தது.." இந்து சுதனை தள்ளிக்கொண்டு முன்னால் வந்து நின்றாள்.

"நீங்க கொண்டு வரலன்னா நான் என்ன சாப்பிடாம செத்தா போயிருப்பேன்..வந்துட்டாங்களாம்.."

"சுப்பு இங்க பாருடா இப்போவே இந்த சனாவ நம்ம கேங்ல இருந்து தூக்கனும்.." இந்து கோபமாய் சத்தமிட சுதனும் அவளை பார்த்து முறைத்து கொண்டே தலையை ஆட்டினான்.

பதிலுக்கு சனாவும் முறைக்க தலையில் அடித்துக்கொண்டே இரு தரப்பினருக்கும் நடுவில் வந்து நின்றாள் மஹதி.

"அறிவு இருக்காடா இதுக்கலாம் சண்டை போட்டுக்குறீங்க..இதுனால தான் நம்ம டைகர் கெங் முன்னேறவே இல்ல.."

இப்போது மூவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்பியது..

"ஏது எங்களால தான் அப்போ முன்னேறலயா..ஆமா இல்லன்னா மட்டும் அப்படியே வானம் வரை ஏறி இருக்கும் பாரு..என்னடா சுப்பு..?" சனா கேட்கவும்..

"அதானே நல்லா இருக்கே நீ எங்கள சொல்லுறது.." சுதனும் சேர்ந்து கொள்ள இந்துவும் அவனுடன் ராகம் பாடினாள்.

இப்போது மஹதி முழிக்க ஓரமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மகேஷும் குமாரும்..
இது தேவையா உனக்கு என்று பார்த்தனர்.

"போங்கடா டேய்..லாஸ்ட்டா எனக்கேவா..பே நீயாச்சி சனாவாச்சி.." மஹதி இப்போது சிலிப்பிக்கொண்டு நகர.. ஒருவாரு மகேஷ் அவளை இழுத்து வைத்து சமாளித்து விட மீண்டும் கலைந்து போன கூட்டம் கூடியது.

இது வழமையாக நடப்பதுதான் என்பதால் எப்போதுமே ஓரமாய் இருந்து பார்த்திருந்து விட்டு க்ளைமெக்ஸில் உள்ளே வந்து அனைவரையும் சேர்த்து வைப்பது தான் மகேஷினதும் குமாரினதும் வேலை.

"சரி நீ சொல்ல வந்தத சொல்லு சட்டி.." பக்கத்து தோட்டத்தில் இருந்து திருடி வந்திருந்த மாம்பழத்தை சுவைத்துக்கொண்டே எடுத்துக்கொடுத்தான் குமார்.

"அதுடா நா...ன் அவங்..ஞ்யம் பார்... போறே..ன்ன.." சனா மாம்பழத்தை கடித்து விழுங்கிக்கொண்டே பேச "இவ என்ன சொல்லுறா.." என இந்துவும் மஹதியும் அவள் பேசிய மொழி புரியாது பார்க்க..

"எரும இப்போ பேசு.." என அவள் கையிலிருந்த மாம்பழத்தை பறித்து எடுத்தான் சுதன்.

"சரிடா அது கொடு நான் கையில வச்சிட்டு பேசுறன்..சாப்பிட மாட்டேன்..உன் மேல.."

"ஹயஹோ ஏன்டி சட்டி இப்படி படுத்துற..பிடி இப்ப சொல்லு..தெளிவா சொல்லல அப்புறம் நடக்குறதே வேற பாரு.."

ஈஈஈ என பல்லைக்காட்டி விட்டு.."அது நான் அவங்கள பார்க்க போறேன்ல எதாவது ஸ்பெஷலா நான் கொடுக்கனும்ல அதான்.." சனா கூறி முடித்து விட்டு அவள் வேலையை ஆரம்பித்து விட..

"ஆமா மாலினியோட தாத்தாக்கு நீ ஏன் எதாவது ஸ்பெஷலா கொடுக்கனும் சட்டி.." இந்து யோசனையாய் கேட்க அவளை ஒரே நேரத்தில் ஆரம்பிச்சிட்டா என திரும்பி பார்த்தனர் அனைவரும்..

"மக்கு..சட்டி சொல்லுறது அவுங்கள..அவுங்க அவுங்க.." என்று கையால் சைகை காட்டி கண்களாலும் கூறினான் குமார்.

"எவுங்கடா.." என்றாள் பதிலுக்கு இந்து தலையை சொறிந்து கொண்டே

"அட அதுதான் டியுப் லைட்டுன்னு தெரியும்ல.." அவளை இடித்துத்தள்ளி விட்டு அனைவருக்கும் நடுவில் வந்து அமர்ந்தாள் மஹதி.

அமர்ந்தவள் யாருக்கும் கேட்காமல் இரகசியம் பேசுகிறேன் என்ற பெயரில் அங்கிருந்தவர்களுக்கும் கேட்காமல் வழமை போல் பேச அடுத்த கட்டமாய் சுதனின் அடியை வாங்கிக்கொண்டு முறைத்து விட்டு தன் திட்டத்தை கூறினாள்.

"உண்மையாவா..வேர்க் ஆகுமா.."சனா இழுக்க..

"சட்டி த டைகர் கெங்க நீ என்னான்னு நினைச்சிட்ட அதுலாம் பக்கா ப்ளானு.." என மஹதி கூற மற்றையவர்களும் தலையை உருட்ட அதையே செயல்படுத்த வேலையை அப்போதே ஆரம்பித்தனர் அனைவரும்.

மாலை வரை ஊரை சுற்றி பல அரிய செயல்கள் செய்து பலரது திட்டுக்களையும் பரிசாக வாங்கிக்கொண்டு இருந்தும் தளர்ந்து விடாது அதே கம்பீரத்துடன் மாலை சனாவின் வீட்டின் முன் வந்து நின்றிருந்தனர் டைகர் குழு உறுப்பினர்கள்.

"சரிடா அப்போ நாளைக்கு பார்க்கலாம்.."சனா கூறிவிட்டு செல்ல எத்தனிக்க

"சட்டி நாளைக்கு காலைல ஆறுமணிக்காச்சும் நீ எழுந்துக்கனும்..நினைவு இருக்குல.." சுதன் நியாபகமூட்டினான்.

"ஆமா பேசாம தூங்காமயே இருந்துடு இல்லன்னா அவ்வளோ தான்.."

"அய்யோ அப்போ நான் காலைலே எழுந்துக்கனுமா..ஏன்டா டிக்கட்ட அந்தில புக் பன்ல.."சனா கேட்டுவிட்டு இந்து பார்த்த பார்வையில்.." இஹிஹி சரி காலைல எழுந்துர்ரன்...இல்லனாலும் என் ஸ்வீட் பேபிஸ் நீங்க தான் இருக்கீங்கல்ல சரி சரி நான் போறேன் இப்போ என்ன விட்டுட்டு வெளில எங்கயும் சுத்தாம வீட்டுக்கு போங்கடா டாட்டா.." என்று விட்டு துள்ளிக்குதித்து வீட்டு கேட்டை திறந்து கொண்டு ஓடினாள்.

வாசல் வரை அப்படியே வந்தவள் உள்ளே போகும் முன் சட்டென முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நிதானமாக குனிந்த தலை நிமிராது நடந்து சென்றாள்.

ஹாலை தாண்டும் போது.."சனா நில்லு.."என ஒலித்தது வசுந்தராவின் குரல்.

"எதுக்கா இருக்கும்..ஒருவேள சுந்தரி அக்கா அவங்க வீட்டு ஜன்னல உடைச்சத போட்டு கொடுத்துட்டாங்களோ..இல்ல ராம் தாத்தா சைக்கிள் டயர பஞ்சர் பன்னத சொல்லி கொடுத்திருப்பாரோ..அச்சச்சோ சுதா..கண்டிப்பா அவளா தான் இருக்கும்..ஆனால் தப்பு அவ மேல தான்..கேக் கேட்டதுக்கு அவமானப்படுத்திட்டா அதுவும் எங்க டைகர் கேங்கயேல்ல தப்பா பேசிட்டா அதுக்குதான சுப்பு மண்ணை அள்ளி கேக் மேல போட்டான்..எங்க மேல எந்த தப்புமே இல்லயே.."

என வசுந்தரா தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சனா நின்றிருந்த இடம் வரை இருந்த அந்த சில இன்ச் தூரத்தை கடந்து வருவதற்குள் பலதையும் யோசித்து முடித்திருந்தாள் சனா.

"உன் ஷால் எங்க.."வசுந்தரா கேட்ட கேள்வியில் அட இதுதானா..என்று ஒரு பெருமூச்சை விட்டவள்..தன் ஷாலை வைத்து மீன்பிடித்து விட்டு அதை அங்கேயே போட்டு விட்டு வந்தது நினைவில் உதிக்க..

"அதும்மா நான் வரும் போது ஒரு தாத்தா..அவங்க கையில கம்பு..அதை வச்சி ஊண்டிகிட்டே வந்தாங்க.." சனா கதை கூற ஆரம்பிக்க..

"அவங்க கம்ப நீ தட்டி விட்டிருப்ப அந்த தாத்தாகிட்ட அதே கம்பால செம்மயா வாங்கி கட்டிருப்ப..ஓடி வந்த வேகத்துலயும் அவசரத்துலயும் ஷால எங்கயோ போட்டுட்ட இதுதானா சொல்ல வார.." மது ஆர்வமாய் தான் அமர்ந்திருந்த சோபாவில் எழுந்து நின்று அதன் மேல்பகுதியில் இவள் பக்கம் திரும்பியவாறு அமர்ந்து கொண்டு கேட்டாள்.

"இல்ல மது நான் அப்படி பன்னுவேனா..என்ன நீ..அவங்க கீழ விழுந்துட்டாங்க..நான் தான் என் ஷால் எடுத்து கிழிச்சி கட்டு போட்டு விட்டேன் தெரியுமா." சனா கூறிவிட்டு அனைவரையும் ஒரு முழி முழித்துப்பார்த்தாள். அவர்கள் பார்வையே சொல்லாமல் சொன்னது யாரும் நம்பவில்லை என்று.

அந்த பாகம் வசுந்தராவின் சனாவிற்கு வழமையாய் கேட்டு போரடித்துப்போன சில அறிவுரைகளுடன் முடிந்து விட இரவு சாப்பாட்டிற்கு பின் அறைக்கு வந்தாள் சனா.

நாளை இதே நேரம் அவள் வேறு இடத்தில் இருப்பாள். ஆனால் மனதில் அவள் எதிர்பார்க்கும் சந்தோஷம் இல்லை ஏதோ வீட்டில் அனைவரையும் ஏமாற்றுகிறோமோ என்று தான் உள்ளே அடித்துக்கொண்டு இருந்தது.

உண்மையாகவே மாலினி வீட்டுக்கு தான போறோம் இதுல ஏதும் பொய் இல்லையே போற நோக்கம் மட்டும் தான் வேற..என பலதும் யோசித்து தன்னை சமாதானப்படுத்தி விட்டு தூங்கவே கூடாது என கண்ணை பிடிவாதமாக திறந்து வைத்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் மணி பன்னிரண்டை தாண்ட அவள் போராட்டத்தை அலட்சியப்படுத்தி விட்டு இமைகள் அவை பாட்டிற்கு சேர்ந்து கொண்டன.


கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..13

ஐந்தரை மணியிலிருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை போன் அலாரத்தை ஒலிக்க விட்டு களைத்துப்போய் இருந்தது. அலாரம் வைத்தவளோ ஏதோ இப்போது தான் இரண்டு மணி போல என்று தூங்கிக்கொண்டிருந்தாள்.

"சனா எழுந்திரு ஆறரைக்கு ட்ரைன்..ஆறு மணி ஆகுது பாரு.." ஜன்னல் திரையை விலக்கி தன்னால் முடியாததை இதுவாது செய்தால் சந்தோஷம் என்று சூரிய ஒளியை உள்ளே புக இடம் விட்டார் வசுந்தரா.

"சனா.." வசுந்தரா அருகில் வந்து தட்டி எழுப்பி அவள் போர்வையை இழுத்து கீழே போட.."ப்ச் என்னம்மா இவ்வளோ காலைல எழுப்புற..பாரு எப்படி ஜில்லுன்னு இருக்குன்னு பேசாம நீயும் போய் போர்த்தி படுமா.." தூக்கத்தில் உலறிவிட்டு எழுந்து போர்வையை எடுத்து மீண்டும் போர்த்திக்கொண்டு தன் உறக்கத்தை தொடர்ந்தாள்.

"தூங்கும் போது கூட பொண்ணு மாதிரி தூங்குறாளா பாரு.." சனா ஒரு காலை சுவற்றில் வைத்து தூங்குவதை பார்த்து கோபத்தில் வசுந்தரா சென்று விட..அவர் சென்றதும் மேலே கூரையை நகர்த்தி விட்டு உள்ளே எட்டி பார்த்தது இரு தலைகள்.

"நான் சொல்லல இந்த மாடு எழுந்திருக்காதுன்னு எப்படி தூங்குது பாரு.." மஹதி சனாவை பார்த்து கோபமாய் திட்ட..

"நான் மட்டும் அவ எழுந்திருப்பான்னா சொன்னேன்..சரி சீக்கிரம் அந்த பக்கட்டுல இருக்க தண்ணிய ஊத்திடு அவ மேல.." இந்து மஹதி கையில் இருந்த பக்கட்டை பார்த்து கூறினாள்.

மஹதியும் அதை ஊற்ற தயாராக அப்போது.."ஏய் என்னடி சுதா பார்க்குற கண்ண தோண்டி ஒவன்ல வச்சி பேக் பன்னிடுவேன் பாரு.." என்று தூக்கத்தில் தெளிவாகவே உலறினாள் சனா. கவிழ்க்கப்போன பக்கட்டை சட்டென நேராக பிடித்தாள் மஹதி.

"என்ன.." இந்து பார்வையால் கேட்க.. அவள் தயங்கவும்.."அவ உன்ன சொல்லல சுதாவ சொன்னா சீக்கிரம் ஹ்ம்.." என அவசரப்படுத்தினாள்.

"ஈஈஈ எனக்கு பக்கட்டுல தண்ணீ ஊத்த தெரியாதுடி..இந்தா நீயே ஊத்திடேன்..இதோ இப்படி பிடிச்சி.." மஹதி பக்கட்டை உயர்த்திப்பிடித்து செய்து காட்ட முயல..

"அப்படியே ஊத்திடு.."என இந்து பக்கட்டை அவளிடம் இருந்து சட்டென பிடுங்க பக்கட்டை இறுக்கிப் பிடித்திருந்த மஹதியோ பக்கட் சட்டென கையிலிருந்து நழுவியதில் பிடிமானம் இல்லாது தடுமாறிக்கொண்டு கீழே விழுந்தாள்.

இதை எதிர்பார்க்காத இந்து.."அய்யோ.." என்று எட்டிப்பார்த்து விட்டு அங்கிருந்து ஓட முயல அப்போதுதான் கையிலிருந்த கடமை நினைவில் வர தண்ணீரை கீழே பார்க்காமலே ஊற்றி விட்டு பக்கட்டையும் போட்டு விட்டு அங்கிருந்து ஓடி மறைந்தாள்.

தொப் என கீழே விழுந்த மஹதி இடுப்பை பிடித்துக்கொண்டு அம்மா என அலற அதற்குள் பக்கட்டும் நங் என அவள் தலையில் விழ உள்ளிருந்த தண்ணீரும் அவளை முழுவதுமாய் நனைத்திருந்தது.

நடுக்கட்டிலில் தலையிலிருந்து தண்ணீர் சொட்ட விழுந்த நிலையில் அப்படியே அமர்ந்திருந்தாள் மஹதி.

கொஞ்சமாய் தன் மீது தெறித்த தண்ணீரில் ப்ச் என கண்ணை கசக்கிக்கொண்டு திரும்பி படுக்கப்போன சனா ஏதோ தோன்ற கண்ணை திறந்தாள்.

கண்ணை திறந்தவள் முகத்தை மறைத்து முடியை முன்னால் போட்டு அமர்ந்திருந்த மஹதியை கண்டு.."பேய் பேய்..." என அலற ஏற்கனவே கோபத்தில் கொதித்துக்கொண்டு அதேநேரம் ஜில் என்ற தண்ணீரில் நனைந்ததில் நடுங்கிக்கொண்டும் இருந்த மஹதி முடியை விலக்கி விட்டு அவளை இயன்றளவு முறைத்தாள்.

"இவளா..இவள் எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கா..எதுக்கு முறைக்கிறா.." என எண்ணிக்கொண்டு தூக்கம் முழுவதுமாய் சென்று விட மேலே அண்ணாந்து பார்த்தாள் சனா.

அங்கு யாரும் இல்லாமல் போக ஆனாலும் கூரை நகர்ந்திருப்பது தெரிந்தது..எதுவோ சரியில்லை என்று மட்டும் உணர்ந்து கொண்டவள்.."வெரி குட் மார்னிங் மஹதி.." என்று ஒரு சலியூட் உடன் கூறிக்கொண்டே அங்கிருந்து ஒரே ஓட்டமாய் அறையிலிருந்து வெளியே ஓடி வர அதேநேரம் உள்ளே வந்து கொண்டிருந்த வசுந்தரா..இவள் எழுந்து வருவதை அதிசயமாய் அதுவும் ஏனைய நாட்களில் அறையிலிருந்து குளியலறை வரை இருக்கும் சுவரெல்லாம் ஒட்டிக்கொண்டே நத்தை போல் வருபவள் இன்று ஓடி வருவதை இன்னும் அதிசயமாய் பார்த்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே வந்தவர் மஹதியை பார்த்து புன்னகையுடனே.."நீ எப்போம்மா வந்த..காலையிலே தலைக்கு குளிச்சிடுவியா..ரொம்ப நல்ல பழக்கம் சின்ன பொண்ணா இருந்தும் பொறுப்பா இருக்க..முடிஞ்சா அந்த சோம்பேறிக்கும் கொஞ்சம் சொல்லி கொடும்மா.."என்று பேசிவிட்டு சென்று விட..பற்கள் தந்தியடிக்க மெதுவாக எழுந்து நின்றாள் மஹதி.

நடந்தால் அசைவில் இன்னும் குளிர் பரவ முடிந்தளவு அசையாமலே காலை சேர்க்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்து வைத்தே தன் வீட்டை நோக்கி நகர்ந்தாள் மஹதி.

"ஏய் ஏய்..கண்ணு தெரியாதா இப்படி ஓடி வார.." ஓடி வந்து தன்மேல் மோதப்போனவளை பிடித்து நிறுத்தினான் குமார்.

"என்ன நீ ஓடி வாரத பார்த்தா போன காரியத்துல ஏதோ சொதப்பிட்டு வாங்கி கட்டிகிட்டு வாரது போல இருக்கே.."சந்தேகமாய் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான் சுதன்.

"டேய் இல்லடா அதுலாம் கர்க்ட்டா பன்னிட்டேன்..இந்த மஹதிய தான்.."இந்து இழுக்கவும்..

"அவளுக்கு என்ன.." என்று கேட்டான் மகேஷ்.

இந்து நடந்ததை முழுவதுமாக கூறி முடிக்கவும் அடுத்த கணம் அந்த இரயில் நிலையம் இவர்களது சிரிப்பால் அதிர்ந்தது.

சிரித்துக்கொண்டே பக்கமாய் திரும்பிய மகேஷ் அங்கு முறைத்துக்கொண்டு நின்றிருந்த மஹதியை கண்டு விட கப்சிப் என வாயை மூடிக்கொண்டு..

"என்ன இந்து என்னா இருந்தாலும் நம்ம மஹதிய நீ இப்படி பன்னிருக்க கூடாது.."என்று திரு திரு என விழித்துக்கொண்டே கூறினான்.

"இவனுக்கு என்னாச்சி.." என இந்து சுதனிடம் கேட்க இவர்களின் இந்த குழப்பம் தீரும் முன்னே அங்கிருந்த மஹதி உட்பட அனைவரையும் திசை திருப்பியது அந்த குரல்.

"ஏய் இங்க வந்து ஹெல்ப் பன்னுங்கடா.."

காரில் இருந்து மூட்டை மூட்டையாய் மலை போல் பைகளை இறக்கி குவித்துக்கொண்டிருந்தாள் சனா.

அவளை நோக்கி நடந்து சென்றனர் அனைவரும்.

"சட்டி நீ என்ன உன் லைப் முழுசுக்கும் சேர்த்தே மூட்டை கட்டிட்டு போறியா..என்ன இதுலாம்..உனக்கே தனி ட்ரைன் பிடிக்க வரும் போல இருக்கே.." அவள் குவித்துக்கொண்டிருந்தவற்றை பார்த்தவாரே கேட்டான் சுதன்.

"சும்மா பேசிட்டே இருக்காம பர்ஸ்ட் இதுலாம் எடுத்து வை.."

அனைவரும் ஒருவாரு அனைத்தையும் இறக்கி அடுத்த பத்து நிமிடங்களில் இரயிலிலும் அவற்றிற்கு இடம் பிடித்து விட்டனர்.

"ஆமா சட்டி உன்ன வழியனுப்ப யாருமே வரல்ல..விட்டது தொல்லன்னு இருந்துட்டாங்களோ.." சுதன் அவள் வந்த கார் திரும்பி போவதை பார்த்துக்கொண்டே கேட்டான்.

"ஆமா போல..பார்த்தியா எங்க நட்பு மாதிரி வருமா..இதுக்கு நீ கோயிலே கட்டி அங்க எங்க எல்லார் சிலையும் செய்து வச்சா கூட பத்தாது..." குமார் கூறவும்

"டேய் மொக்க போடாத.." மஹதி முகத்தை சுருக்கி கூறிவிட்டு சனா பக்கம் திரும்ப அவள் பக்கம் அப்போதுதான் திரும்பிய சனாவிற்கு நேரம் காலம் இல்லாது அப்போது பார்த்து காலையில் மஹதி அமர்ந்திருந்த கோலம் நினைவில் வர சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

"சனனனாஆஆஆ..நிறுத்திடு.." பல்லைக்கடித்துக்கொண்டு மஹதி கூற இருந்தும் சனா அவளை பார்த்து பார்த்து சுதனின் தோளில் கை போட்டு சிரித்தாள்.

"இரு இப்போவே போய் இதுலாம் நாடகம் தான்னு ஆன்ட்டி அங்கிள்ட்ட சொல்லுறன்.." வெடுக்கென திரும்பிய மஹதி தூரமாய் ஒரு காரில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த வசுந்தரா மூர்த்தி மற்றும் மதி மதுவை நோக்கி நடக்க ஆரம்பிக்க..

அவள் சில அடி தூரம் சென்றதும் தான் சனாவிற்கு உறைக்க தாவிச்சென்று அவள் முடியை பிடித்து இழுத்து பின்னோக்கி கொண்டு வந்தாள்.

அதற்குள் வசுந்தரா உட்பட அனைவரும் அவளை நெருங்கியிருந்தனர். இரயிலும் கிளம்புவதற்கான சைகையை காட்ட ஒருவாரு மஹதியை கெஞ்சி கொஞ்சி சமாளித்தாள் சனா.

"சனா சொன்னதுலாம் நினைவு இருக்குல்ல.." வசுந்தரா கேட்கவும் தலையை ஆட்டினாள் சனா.

"ஹ்ம் மாலினி இல்லாம தனிய எங்கயும் போக கூடாது.." வசுந்தரா கூற..

"மாட்டேன்.." என்றாள் சனா.

"காலையில இரவுல டெய்லி கால் பன்னும்.."

"சரி.."

"அங்கயும் சின்ன பசங்க கூட ஊர் மேய போகாத."

"மாட்டேன்.."

"நல்லா சாப்பிடு.."

"சரி.."

"எல்லாம் சொன்னது போல நடந்துப்பல்ல.." வசுந்தரா இறுதியாய் கேட்க..ஆடராய் சரி மாட்டேன் என கூறிக்கொண்டே இருந்தவள் கடைசியாய் கேட்டதற்கும் "மாட்டேன்.." என்றாள்.

"என்ன.."வசுந்தரா கோபமாய் அவளை பார்க்க.

"இ..இல்லமா அதாவது நீ மாட்டேன் சொன்னதுக்கெல்லாம் மாட்டேன்..நீ சரி சொன்னதுக்கெல்லாம் சரின்னு சொன்னேன்..ஈஈஈ" சமாளித்து விட்டு வழமை போலவே இளித்து வைத்தாள்.

அடுத்த ஐந்து நிமிடம் வசுந்தரா அறிவுரைகளை கொட்டிக்கொண்டே இருக்க சனாவின் காதுகளோ இடது காதால் உள்ளே எடுத்து வலது காதால் வெளியே அவற்றை தள்ளிவிடும் வேலையை சிறப்பாக பார்த்துக்கொண்டிருந்தன.

ஒருவாரு எல்லாம் முடிந்து அனைவரிடமும் விடைபெற்றுக்கொள்ள சனாவிற்கு தன் குடும்பத்தினரை பிரிவதிலும் டைகர் கேங்கை பிரிவது தான் வலித்தது.

கண்கலங்க அவர்களை பார்த்து தலையை அசைத்து விட்டு அவள் பின்னோக்கி இவர்களை பார்த்துக்கொண்டே நடந்தாள். மஹதிக்கும் கொஞ்சம் முன்பு இருந்த கோபம் மறந்து கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

"மஹதி அந்த கிப்ட்ட கொடுத்தியா.."

"ப்ச் மறந்துட்டேன்.." சுதன் கேட்கவும் தான் நினைவில் உதித்தவளாய் கையில் ஒரு பொதியுடன் ஓடிச்சென்று சனாவிடம் அதனை கொடுத்தாள்.

சனா அதை வாங்கிக்கொள்ள அவளை விட கொஞ்சம் உயர்த்தில் குறைவாய் இருந்த மஹதி எம்பி நின்று சனாவை இறுக்க கட்டிக்கொண்டாள்.

"சாரி சட்டி.." மஹதி ஒரு விம்மலுடன் அவள் காதில் கூற பதிலாய் அவளை இறுக்க அணைத்துக்கொண்டாள் சனா.

இரயில் நகர ஆரம்பிக்க அவளிடம் இருந்து விலகி மீண்டும் ஒரு முறை அனைவரையும் பார்த்து கண்களாலே பயணம் கூறிவிட்டு இரயிலில் ஏறிக்கொண்டாள்.

உண்மைக்காதல் என்றும் அழிவதில்லை..அழியும் நிலை வந்தாலும் கூட ஒரு இதயம் மற்றைய இதயத்தை தேடி செல்லும் அது சென்ற வழியிலே..


கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..14

இரயில் தன் பயணத்தை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தது. ஏறியதிலிருந்து எந்த மாற்றமும் இல்லாது முகத்தை எக்ஸ்ட்ராவாக தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள் சனா.

"ஏய் சட்டி இங்க பாரு.." இந்து அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஜன்னல் ஓரமாய் எதையோ காட்டி விட்டு எட்டிப்பார்க்க..

"நல்லா பாரு.." என ஜன்னல் கம்பியின் அருகே இருந்த அவள் தலையில் ஒரு அடி வைத்தாள் சனா கோபமாய்.

இந்துவின் தலை நங் என ஜன்னல் கம்பியில் இடித்துக்கொள்ள பட்டென எழுந்த இந்து.."இரு அத்தைய கூட்டிட்டு வாரன்.." என எழுந்து செல்ல அதற்காகவே காத்திருந்த சனா பாய்ந்து வந்து ஜன்னல் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

சனா ஏன் யாருமே எதிர்பார்க்கவில்லை கடைசி நேரம் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று. இரயில் கிளம்பும் நேரம்..வசுந்தரா "என்னங்க அண்ணிய இன்னும் காணோம்.." என இரயில் நிலைய வாசலை பார்க்க.."ஓஹ் வழியனுப்ப வாராங்க போல.."என எண்ணிக்கொண்டு சனாவும் காத்திருக்க..வசுந்தராவின் அண்ணி அதாவது சனாவின் அத்தை மேகலா உள்ளே வரவும் அவருடனே கையில் பைகளும் சேர்ந்தே வரவும் குழப்பமாய் அனைவரும் பார்த்துக்கொண்டனர் சனாவின் பெற்றோரை தவிர.

"சாரி வசுந்தரா கொஞ்சம் லேட் ஆகிரிச்சி..பசங்களா சீக்கிரம் ஏறுங்க ட்ரையின் போயிட போகுது.." வந்ததும் வராததுமாய் அவர் அனைவரையும் விரட்ட நின்று பேசவும் விடாது சனா உட்பட அனைவரையும் அடுத்த நிமிடம் கிட்ட தட்ட இழுத்து போட்டு இரயிலில் அடைக்க ஆரம்பித்திருந்தார் அவர்.

மகேஷும் குமாரும் அப்போதுதான் வெளியில் சென்றிருக்க இன்னும் திரும்பாத அவர்களையாவது காரணம் காட்டி தப்பி விடலாம் என நினைத்த சுதன்.."ஆன்ட்டி இன்னும் மகேஷ் குமார் வரல்ல நான் போய் என்னன்னு பார்த்துட்டு வாரேன்.." என்று கூற.."இல்ல சுதன் அவங்க இரண்டு பேரோட வீட்டுலயும் ஏதோ முக்கியமான பங்ஷன் இருக்கதால முடியாது சொல்லிட்டாங்க.." இருந்த கொஞ்ச நம்பிக்கையிலும் மண்ணை அள்ளிப்போட்டார் மூர்த்தி.

"அப்போ இவனுங்களுக்கு முதல்லே தெரியுமா அதான் டைம் பார்த்து எஸ்கேப் ஆகிட்டானுங்க.." சுதன் யோசித்து முடிக்கும் முன்னமே அவனை இழுத்து ஏற்றியிருந்தார் மேகலா.

"அண்ணா நீங்க கவலையே பட வேணாம் பசங்க அப்புறம் உங்க பொண்ணு எல்லாரும் என் பொறுப்பு.."அவர் கையசைத்துக்கொண்டே கூற சனாவோ நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

"அப்போ அந்த மூட்டை முடிச்சு எல்லாம் எனக்காக பேக் பன்னது இல்லையா..எல்லாம் இந்த பேய்ங்களோடதா. ஆனாலும் போயி போயும் இவங்களையா அனுப்பனும்...."என தொடங்கி பலவாறு சுற்றி வளைத்து ஒன்றையே மனதால் எண்ணிக்கொண்டு நின்றிருந்தாள் சனா.

காரணம் மேகலாவை ஒரே வரியில் கூறிட வேண்டும் என்றால் சனாவின் மிகவும் பிடித்த நினைத்தாலே இனிக்கும் தொடரில் வரும் நித்யாவின் பெரியம்மா என்று கூறலாம்.வயது கூட அப்படி தான் இருக்கும். அவர் அதனை கண்டு தான் மாறினாரா இல்லை இவரை கண்டு தான் அந்த கதாபாத்திரமே வடிவமைத்தார்களா என்பது இன்று வரை சனாவிற்கு கேள்விக்குறி தான்.

சனா யோசித்துக்கொண்டு நிற்க..மற்றையவர்களும் நடந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாது யோசனையில் நிற்க இரயில் நிலையம் மறையும் வரை பற்களுடன் கையையும் காட்டிவிட்டு உள்ளே திரும்பி நுழைய போன மேகலா பின்னால் அவருடனே ஒட்டிக்கொண்டு நின்றிருந்த சுதனோடு மோதி பின்னால் விழப்போய் கம்பியை பற்றிக்கொண்டு நின்றார்.

அய்யோ என எல்லோருமே அடுத்து வரப்போகும் புயலுக்காய் காத்திருந்தனர்.

"என்ன நீ இங்கயே உட்கார போறியா..இல்ல என்ன தள்ளி விடலாம் பார்த்தியா..நல்லா வளர்த்திக்காங்க உங்க அம்மா போய் உள்ள உட்காரு போ....என்ன உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா உள்ள போங்க எல்லாரும்.." கையில் ஒலிபெருக்கி வைக்காத குறையாய் அவர் சத்தமிட அனைவரும் தலையை ஆட்டி விட்டு அடித்துப்பிடித்துக்கொண்டு போய் உட்கார்ந்து கொள்ள இந்த கலவரத்தில் சனாவிற்கு ஜன்னல் இருக்கை கை நழுவிப்போனது.

ஜன்னலோரமாய் அமர்ந்து மலைகளின் அழகை இரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள் சனா..

"அடடா இந்து ஏன் இப்படி செய்யுற அப்படி என்ன பன்னிச்சி அந்த சனா பொண்ணு.." மேகலாவின் குரல் அருகில் ஒலிக்க சட்டென கண்ணை மூடி ஏதோ இன்று எழவே மாட்டேன் என்பது போல் ஆழந்த தூக்கத்தில் இருப்பதை போல் இருந்தாள் சனா.

"பாருங்க அத்தை.."
இந்து சனா பக்கமாய் மேகலாவை பார்த்துக்கொண்டே கைகாட்டி விட்டு அவர் முறைப்பதை பார்த்து என்ன என்று சனா பக்கம் திரும்பினாள்.

இந்து சனாவை கண்களாலே குத்திக்கிழித்து விட்டு மேகலா பக்கமாய் தயங்கி தயங்கி திரும்ப..

"அந்த புள்ள எவ்வளோ அமைதியா தூங்கிட்டு இருக்கு..அது அடிச்சன்னு வந்து நிக்கிற..போயி நீயும் தூங்கு போ..ஊருக்கு போக இன்னும் தூரம் இருக்கு.." என இந்துவின் தலையில் தட்டி விட்டு அவர் சென்றுவிட தலையை தடவிக்கொண்டே வந்து அமர்ந்தாள் இந்து.

சனாவிற்கு அருகில் இருந்த மஹதியும் முன் சீட்டில் இருந்த சுதனும் மேகலா வந்தது கூட தெரியாதது போல புத்தகத்தினுள் சீரியசாக முகத்தை புதைத்து வாயை மூடிக்கொண்டு சிரிக்க இந்துவால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

ஊரில் தவறியும் கூட மேகலா இருக்கும் பக்கம் கூட தலை காட்ட மாட்டார்கள் டைகர் கேங்.. இன்றோ அவரையும் சேர்த்து அதுவும் இவர்களுக்கு பாதுகாப்பாயல்லவா அனுப்பி இருக்கிறார்கள்.

முதலில் அமைதியை களைத்தான் சுதன்..

"இப்போ நாம என்ன பன்ன போறோம்.."

"எல்லாம் இவளால தான்.." சனா பக்கமாய் இருந்த கோபத்தையும் சேர்த்து கைகாட்டினாள் இந்து.

"ஹலோ என்ன என்னாலயா..நீங்க எல்லாம் எதுக்குடா வாரன்னு சொன்னீங்க..இப்போ நீங்க எல்லாம் சின்ன பசங்க எல்வாருக்கும் பாதுகாப்புக்கு வேணும்னு தான் அத்தைய அனுப்பியிருக்காங்க.."

நடிப்பை தூக்கி போட்டு விட்டு சிலிப்பிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் சனா.

"என்ன எங்களுக்கு உன்கூட வாரதுக்கு ஆசையா..எங்களுக்கே அப்போதான் தெரியும்..அதுக்காக உன் இந்த அத்தைய போயா கூட கூட்டிட்டு வருவ அதில்லாம எங்களயுமல்ல மாட்டி விட்டுருக்க" மஹதி பதிலுக்கு கூற..

"ஏய் நடிக்காத நீ..நீ தான் வீட்டுல சொல்லியிருப்ப.."

"நான் எதுக்கு நடிக்கனும்...ஓஹோ அப்போ என்ன சந்தேகபடுற நீ.. உன் சீக்ரட்ட யார்ட்டயும் சொல்லாம பாதுகாத்தேன் பாரு என்ன சொல்லனும்..." மஹதி குரலை உயர்த்த..

"உன் பொய் எல்லாம் வேற யார்கிட்டாவது போய் சொல்லு.." சனா அவளை மீறி குரலை உயர்த்த..அப்போது அங்கு இவர்களை மீறியும் ஒலித்தது இன்னொரு குரல்..

"இப்போ சண்ட போடாம இருக்க போறீங்களா இல்ல உங்க அம்மா அப்பாக்கு கோல் பன்னி சொல்லவா..சரியான தொல்லலங்கள அனுப்பி வச்சிருக்காங்க.." மேகலாவின் குரல் கடு கடு என ஒலிக்க இங்கு கப்சிப் என அடங்கியது சண்டை.

"லூசு மாதிரி சண்ட போடாதீங்க..நடந்தது நடந்திடிச்சி..அத்தைய எங்க கழட்டி விடலாம் அதை யோசிங்க.." சுதன் கூறவும் அதுவும் சரிதான் என ஆளுக்கு ஒரு பக்கமாய் இருந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

"ஐடியா.." என இந்து கையை தூக்கிக்கொண்டு சத்தமிட சுதன் அவளை அடக்க முன்னே அங்கு வந்து நின்றிருந்தார் மேகலா.

அனைவரது பார்வையும் ஒன்றாய் தன் பக்கவாட்டிற்கு நகர இந்துவும் தூக்கிய கையுடனே திரும்பினாள்.

"என்ன ஐடியா என்ன மேல கைய காட்டிட்டு இருக்க.." மேகலா இடுப்பில் இருகைகளுயும் வைத்து கேட்க..

"அ..அது உங்கள எப்படி கழட்டி விடலாம்ன்னு.." இந்து உலறவும் சட்டென அவள் கையில் கிள்ளி வைத்தாள் சனா. அப்போதுதான் உலறியது உணர்ந்தவளாய்.."அது அத்தை உங்கள அங்க போய் ஒரு குறையும் வைக்காம எப்படிலாம் நாங்க பார்த்துக்கலாம்ன்னு பேசிட்டு இருந்தோம்..ஆமா..ஆமால்லடா.." துணைக்கு மற்றையவர்களையும் இழுக்க..குழு விதிப்படி அனைவரும் ஆமாம் போட்டனர்.

"நீங்க எல்லாம் உருப்படியா இருந்தாலே போதும்..உங்க பெத்தவங்க எல்லாம் என்னை நம்பி தான் அனுப்பி வச்சிருக்காங்க பசங்களா..உங்களுக்கு ஏதும்னா நான் தான் பதில் சொல்லனும் புரிஞ்சிதா..ஆமா சனா அப்படி என்ன குறு குறுன்னு வெளிய பார்த்துட்டு இருக்க..தள்ளு.." பேசிக்கொண்டே சனா வெளியில் பார்ப்பதை பார்த்து விட்டு அவளருகில் வந்து எட்டி பார்த்தார் மேகலா.

"இங்க நல்லா காத்து வருதே..சனா நீ அப்படி தள்ளி உக்காந்துக்கோ.." என ஒரே தள்ளில் அவளை தள்ளி விட்டு அந்த இடத்தை அடைத்துக்கொண்டார்.

"எனக்கு தலைல தட்டினல்ல இப்போ அவங்களுக்கும் தட்டு.." இந்து சனா காதில் முணுமுணுக்க எங்கே அவருக்கு கேட்டு விடுமோ என அவளை தட்டி அமைதிபடுத்தினாள் சனா.

அவர்களில் மீதிப்பயணம் முழுவதும் ஆன்லைன் க்ளாஸில் வீடியோ மற்றும் மைக் ஆன்னிலிருந்தால் எப்படி இருக்குமோ நிலை.. அப்படியே தான் கழிந்தது.

இரயில் நிலையம் வர அனைவரும் அவரவர் பைகளுடன் இறங்கினர். "எல்லாரும் சேர்ந்தே இருங்க..வாங்க போய் டாக்ஸி இருக்கா பார்க்கலாம்..சனா அந்த அட்ரஸ கொடு.."அட்ரஸை வாங்கிக்கொண்டு மேகலா முன்னால் நடக்க அவரை தொடர்ந்து நடந்தனர் அனைவரும்.

அடுத்த பத்து நிமிடம் பத்து டாக்ஸியை பார்த்து சண்டை போட்டும் கட்டணத்தை குறைக்க முடியாது போனது மேகலாவிற்கு. சனா வாய்மூடி அழ சுதன் வாய்விட்டே அழுது விட்டான்.

"என்னடா அழுகுற வீட்டு நியாபகம் வந்திரிச்சா..அதுக்காக இப்போ திரும்பி போகவா முடியும்.." மேகலா அவர் பாட்டிற்கு பேசவும்..

"இல்ல அத்தை சுதனுக்கு கொஞ்சம் அவசராம..போகனுமாம்.." மஹதி நேரம் பார்த்து அப்படி கூறினாலாவது ஏதாவது ஒரு டாக்ஸியை பிடிப்பார் என சுதனின் முறைப்பையும் பொறுத்துக்கொண்டு கூறினாள்.

"அடடா இங்கயும் போக முடியாதே எப்படி சுத்தமா இருக்குமா தெரில..சரி வாங்க நாம நடந்தே போயிடலாம்..இருபது முப்பது நிமிஷத்துல போயிடலாம்.." என மேகலா நடக்க ஆரம்பிக்க..

"அடியேய் உனக்கு இது தேவையாடி..நீ சும்மா இருந்திருந்தாலாவது அவங்க இருபதாவது டாக்ஸிய சரி வழிக்கு கொண்டு வந்திருப்பாங்க..ஹையோ இந்த பையெல்லாம் தூக்கிட்டு நடக்க வேணாமா..ஏன் சட்டி உன் அத்தைக்கு நட்டு கிட்டு கழன்றிடிச்சா என்ன.." இருந்த கோபத்தை எல்லாம் மஹதி மேல் பொழிந்து விட்டு கடைசியாய் சனாவிடம் தன் கேள்வியை சீரியசாக முன்வைத்தான் சுதன்.

"என்ன அங்கயே நின்னுட்டு இருந்தா உங்கள கூட்டிட்டு போக ஏரோப்ளானா வரும்..நடங்க ஹ்ம்.." என நடக்க ஆரம்பத்திருந்த மேகலா தூரமாய் சென்று நின்று அவர்களை பார்த்து அதட்ட..விதியே என நொந்து கொண்டே நடக்க ஆரம்பித்தனர் அனைவரும்.


கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..15

💛விழியோடு தினம்
உன்னை காண்கிறேன்
அருகில்..
இருந்தும் என்னை
சேராத நினைவுகளாய்
தூரமாய்
நிற்கிறாய் ஏனோ..💛

காலை மணி ஏழை எட்டிக்கொண்டிருந்தது. வழமையாய் ஐந்தரை மணிக்கெல்லாம் அலாரம் இன்றியே எழுந்து கொள்ளும் ஆதிஷிற்கு இன்றும் ஏழு மணிக்கு தான் விழிப்பு வந்தது. சிரமத்துடன் எரிந்த கண்களை குளியலறைக்கு சென்று ஜில்லென்ற குளிர் நீரால் அடித்துக்கழுவி ஓரளவிற்கு சமன் செய்து கொண்டு வெளியில் வந்தான்.

இங்கு வந்ததிலிருந்து இரவில் நேரத்திற்கு உறக்கமில்லை காலையில் எழுந்து கொள்ளவும் முடியவில்லை. இடமாற்றத்தின் பாதிப்பு தான். பலனாக கண்களை சுற்றி கருவளையமும் பார்த்தாலே தெரியும் அளவிற்கு இளைத்தும் போய் இருந்தான்.

கட்டிலில் பஞ்சுப்பொதிக்குள் மலர்குவியல் போல் முகம் கூட தெரியாத வண்ணம் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுருண்டு படுத்திருந்தாள் அனு.

அவளுடன் அவன் இந்த சில நாட்கள் தவிர அவ்வளவாக கூடவே இருந்ததில்லை இருந்தும் அப்படியே அனைத்திலும் இருந்த கொஞ்ச நாளில் அவனை பிடித்துக்கொண்டாள். இதோ முகம் வரை போர்த்தி படுப்பதிலிருந்து கோபத்தில் அழுந்த பற்களை கடிக்கும் பழக்கம் வரை.

நினைக்க நினைக்க சிரிப்பாக இருக்கும் இவனாவது அந்த பழக்கத்தை விட முயன்று தோற்று பின் மறைக்க கற்றுக்கொண்டான். அதனையும் கூட இந்த குட்டி கண்டு கொண்டு கோபம் வரும் போது நறுக் நறுக் என்றல்லவா கடிக்கிறது.

சிரிப்பு விரிய அவள் பக்கமாய் நகர போனவனை தடுத்தது அறைக்கதவு தட்டும் ஓசை. ஒரு நிமிடம் நின்று பின் மெதுவாய் சென்று கதவை திறந்தான்.

அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தது இவன் நினைத்தது போலவே இவனது சித்தி லதா தான்.

கதவை திறந்து விட்டு என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தான் ஆதிஷ்.

அவர் கையிலிருந்த காபியை இதுதான் என்பதுபோல் காட்ட நகர்ந்து வழி விட்டான் அவன்.

உள்ளே கொண்டு வந்து வைத்த லதா அனுவை தூரமாய் இருந்தே பார்த்து விட்டு செல்வதற்கு வெளியேற..

"ஒரு நிமிஷம் ஆன்ட்டி.." என்றான் ஆதிஷ்.

"என்னப்பா.." அவனது ஆன்ட்டி என்ற அழைப்பு என்றும் போல் உள்ளே வலிக்க செய்ய அதன் பாதிப்பை குரலில் காட்டாது மறைத்துக்கொண்டு கேட்டார்.

"நான் பாட்டியையும் அனுவையும் சீக்கிரமே இங்க பக்கத்துல ஒரு வீடு பார்த்துட்டு கூட்டிட்டு போயிடுறேன். உங்களுக்கு அதுவரை சிரமம் கொடுக்கிறதுக்கு மன்னிச்சிடுங்க..அதுவரை நீங்க எங்களுக்கு எதுவும் பன்ன வேண்டாம்.. நாங்க பார்த்துக்குறோம். " பட பட என கூறி முடித்து விட்டு அவ்வளவு தான் என்பது போல் அனுவை எழுப்ப கட்டில் பக்கம் சென்று விட்டான் ஆதிஷ்.

இதுதான் இவன் தன்னிடம் அதிகமாய் பேசியது முதல் தடவை என சிரமம் எதுவும் இல்லை என்றோ அல்லது இங்கேயே எங்களுடன் இருந்து விடேன் என்றோ கூறினால் கேட்கவா போகிறான் இல்லையே..அவனது பிடிவாதத்தை ஏழு வருடங்களின் முன்னே பார்த்தாயிற்றே அவர்.எதுவும் பதில் பேசாது அறையிலிருந்து வெளியேறினார் லதா.

********

படர்ந்திருந்த பனியில் பாதி மறைந்தும் மறையாதும் நின்றிருந்த அந்த மூன்று தள வீட்டில் கடைசி தளத்தில் முன் வாசலோடு அமைந்திருந்த ஹாலில் குளிருக்கு இதமாய் நெருப்பு ஒரு பக்கம் தன் வேலையை செய்து கொண்டிருந்தது.

சூரியன் உச்சியை அடைந்து வெயில் மண்டையை பிளக்கும் நேரம் தான் ஆனால் நேரம் மட்டும் தான் காரணம் அந்த ஊரில் இப்போதுதான் அதிகாலை போல குளு குளு என்று தான் இருந்தது காலநிலை.

சனா மஹதி சுதன் இந்து மேகலா மாலினி மற்றும் அவளது தாத்தா சேகர் என அனைவரும் குளிரிற்கு இதமாய் தேனீரிற்காக அங்கு அமர்ந்திருந்தனர்.

சனா மும்முரமாக கையிலிருந்த தேனீரையே உறிஞ்சி உறிஞ்சிக்குடித்துக்கொண்டிருக்க.. அவளை முறைத்து முறைத்து தோற்றுப்போயிருந்தான் சுதன். பின்னே அந்த கப்பில் இருந்து கொஞ்சமாவது தலையை நிமிர்த்தினால் தானே அவன் முறைப்பதாவது தெரியும்.

தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மஹதியிடம்.."அந்த சட்டிகிட்ட கேளு இந்த டீய குடிக்கதான் வந்தாளான்னு.."காதருகில் குனிந்து மெதுவாய் கூறினான் சுதன்.

சரி என மஹதி தலையை ஆட்டும் போதாவது சுதனிற்கு புரிந்திருக்கலாம்..இல்லை டைகர் கெங்கில் எதற்கு தான் மூளை இருந்திருக்கு என்றாவது யோசித்து இருந்திருக்கலாம்..

"சட்டி நீ இந்த டீய குடிக்கதான் அங்க இருந்து இங்க வந்தயா..சுப்பு கேட்க சொல்லுறான். " ஆடாமல் அசையாமல் குண்டை தூக்கி போட்டு விட்டு அவள் தன் டீயில் கவனத்தை திருப்ப..அங்கிருந்த அனைத்து கண்களும் சுதனை மொய்த்திருந்தது.

"ஹிஹி இல்ல அத்த..அக்கா.. அவ குடிச்சிட்டு இன்னொரு கப்பும் கேட்டுறுவா.. அம்மா பார்த்துக்க சொல்லிருக்காங்..கல்ல அதா.." பரவாயில்லையே இதுங்க கூட இருந்தாலும் இப்போலாம் நமக்கும் மூளை வேலை செய்யுது.. மனதில் எண்ணிக்கொணடான் சுதன்.

மேகலா ஒரு முறை கூர்மையாய் பார்த்து விட்டு.."ஓஹோ நல்ல பையன்..இவன் என்னோட தாத்தாவோட.." அவர் வழமை போல அடுத்தவர் உயிரை வாங்க டாபிக் மாட்டி விட்ட சந்தோஷத்தில் ஆரம்பித்து விட்டார்.

மஹதி பக்கம் திரும்பிய சுதன் நங் என அவள் தலையில் ஒன்று போட பயனாக டீ கப்பினுள்ளேயே மூக்கு சென்று டீயை அரை இன்ச் இழுத்துக்கொண்டது.. அவள் அலறி ஊரை கூட்டும் முன் அவளையும் மற்றவர்களையும் இழுத்துக்கொண்டு அறைக்கு ஓடினான் சுதன்.

"அடிச்சேன்னா பல்லு எல்லாம் மேல ஒட்டிக்கும் பாரு..சத்தம் போடாத.." சுதன் மஹதியை மிரட்டி வைக்க..

"டேய் அடிச்சா பல்லு கழரும் கேட்டுறுக்கேன்..அதென்னாஆஆது ஒட்டிக்கும் மேல.." சனா யோசிக்க..

"எரும சட்டி ரொம்ப முக்கியம் உனக்கு.. என்ன பன்னலாம் இருக்க உனக்கெல்லாம் மூளைன்னு எதாச்சு இருக்கா இல்லையா..வந்ததுல இருந்து எதாவது உருப்படியா பன்னுறயா நீ மாமாவோட வீட்ட கண்டுபிடிக்கனும் நினைவு இருக்கா..ஒன்னையும் காணோம் டைம்க்கு கொட்டிக்கிற அப்புறம் தூங்குற..உன்ன எல்லாம் திருத்தவே முடியாதுடி அந்த பீப்பா வேற என்னையவே போட்டு உருட்டிக்கிட்டு இருக்கு.."

"ஏன்டா என்ன திட்டுற இப்போ.."சனா சிலிப்பிக்கொண்டு எழுந்து நிற்க..

"அய்யோ ஏன்டா இப்படி சண்டை போடுறீங்க.. இப்படி இருந்தா எப்படி...." இவ்வளவு நேரம் பார்வையாளராய் இருந்த இந்து ஆரம்பிக்கவும்,

"எப்படி டைகர் கெங் முன்னேறும் அதான..அது முன்னேறவே வேணாம்.." என முடித்து வைத்தாள் அங்கு வந்த
மாலினி.. இவ எப்போ வந்தா ஹையோ பேசினது எல்லாம் கேட்டு இருப்பாளோ
...சனா முழிக்கவும்..

"என்ன சனா வந்த வேலைய எப்போ ஸ்டார்ட் பன்னலாம் இருக்க.." என்றாள் அவள்.

"அதுதான் அக்கா மாம்ஸோட வீட்டை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருக்கோம்.."
மஹதி சனா தடுப்பதற்குள் கூறி முடித்துவிட..

"யாரு மாம்ஸ்..என்ன வீடு.." என குழப்பமாய் கேட்டாள் மாலினி..

"எருமையே கோர்த்து விட்டுட்ட.." என சனா ஒரு கொந்தளிக்கும் லுக்கை விட.."ஹயோ ஒலரிட்டேனா.." எவ்வாறு சமாளிப்பது என சனாவின் பார்வையிலிருந்து தப்பி மாலினி பக்கம் தன் கண்களை திருப்பினாள் மஹதி.

மாலினி பதிலுக்காய் காத்திருப்பது புரிய.." அது மாலினி அக்கா சனாவோட அப்பாவோட அம்மாவோட மாமா இருக்காங்கல்ல அவங்க கம்பனிக்கு தான் அக்கா வேலைக்கு ஜாய்ன் பன்ன போறாங்க..அதுதான் அந்த மாமாவ அவங்க வீட்டுல மீட் பன்னுறதா இல்ல கம்பனிலயா..இல்லனா அவங்களோட தம்பியோட மாமாவோட வீட்டுக்கு போகலாமா..அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கோம்னு சொல்ல வந்து அதை அப்படி மாம்ஸ்னு மாத்தி.." மஹதி தொடர்ந்து உலறிக்கொண்டே போக அவள் எதிர்பார்த்தது போலவே இவ என்ன பைத்தியமா என்ற ரேஞ்சில் மாலினி பார்த்து விட்டு எதாவது செய் என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் சென்றதும் சனா மஹதி பக்கம் திரும்ப அவள் பேசும்முன்னே கையை நீட்டி தடுத்தாள் மஹதி.." நிறுத்து அதுதான் சமாளிச்சிட்டேன்ல..இப்போ மணி ஒன்னு ஆக போகுது..இந்த டைம் அதுவும் இன்னைக்கு சன்டே சோ மாம்ஸ் வெளில வர சான்ஸ் அதிகம் அதுனால நாம எல்லாம் ஆளாளுக்கு ஒரு பக்கம் போய் மாமாவ தேடலாம் டன்னு? டேய் சுப்பு சட்டி இஞ்சி என்ன ப்ளான் தூக்கலா இருக்குல்ல..சரி சரி ரெடி ஆகுங்க..வந்து என்னை புகழ்ந்துக்கலாம்.."

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அனைவரும் யார் முதலில் தயாராகி வாசல் வரை செல்வது என்று வழமை போல அடித்து பிடித்து தயாராகி படிக்கட்டில் தட தட என இறங்கி வர ஹால் சோபாவில் கால் நீட்டி அமர்ந்திருந்த ஜீவனை கண்டதும் தான் அதன் நினைவே வர படிக்கட்டு முடியும் இடத்தில் முதலில் ஓடி வந்த சனா சடன் பிரேக் போட்டாள்.

அவளிற்கு பின்னால் வந்த இந்து மற்றும் மஹதி அவளை முட்டி நிற்க சமாளித்து நின்றுவிட்ட சனா மூன்றாவதாய் வந்து இடித்து நின்ற சுதனின் வேகத்தில் கை நழுவி விழப்போக ஒருவாறு அனைவரும் ஒரு பக்கம் அவளை இழுத்து காலை படிக்கட்டில் ஊன்றி என சமாளித்து விட ஒரு நிம்மதி மூச்சு விடுவதற்குள்.. கடைசியில் இந்து தடுமாறிட பிடிப்பாக சனாவின் காலில் மிதித்து அவள் நிற்க வாயை மூடி வந்த அலறலை விழுங்கி விட்டு அவளை பிடித்து இழுத்து நிறுத்தினாள் சனா..ஆனால் அவளது கால் தான் ஒரு பக்கம் படிக்கட்டிலும் மேலே இந்துவும் அழுத்தியதில் சுள் என இழுத்தது.

ஒருவாரு மேகலாவின் கண்ணிலிருந்து தப்பி தவழ்ந்து வெளியே வந்து விட..சனா காலையும் மற்றவர்களையும் மாற்றி மாற்றி பார்த்து முறைத்துக்கொண்டு நகராமல் நின்றாள்.

"ஏய் ச்சீ போஸ் கொடுக்காம சீக்கிரம் வா.." சுதன் அவளது கோபத்தை கோபமாய் கூட மதிக்காது தலையில் நங் என தட்டி விட்டு நகர்ந்தான்.

"இன்னைக்கு மட்டும் தான்டா அப்புறம் இருக்கு.." என மனதிற்குள் கறுவிக்கொண்டே நடந்தாள் சனா.

"இவ்வ்வளோ பெரிய ஊருல நாம எப்படி வீட்ட கண்டுபிடிக்க போறோம் சட்டி.."மஹதி வழமை போல போரடிக்காமல் கேள்வியை வீச..

"அதானே..சுப்பு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?" தன் வலியை தற்காலிகமாக தள்ளி வைத்து விட்டு தங்களது வேலையில் கவனத்தை திருப்பினாள் சனா.

"அதென்ன அவன்ட கேட்குற..எங்களுக்கு மூள இல்லையா அப்போ..நாங்க எதுக்கு இருக்கோம்..இந்த கேங்கே இப்படிதான்..நான் போறேன் .." இந்து ஆரம்பிக்க பொறுமையாய் பல்லைக்கடித்துக்கொண்டே வந்தவளது பொறுமை பறந்து விட..

"ஏய் போற போறன்னு..போ உன்ன யாரு போக வேணா சொன்னா..நீ என் கால மிதிச்சதுக்கு உன் வாய்லயே நான் மிதிச்சிருக்கனும்..ச்சி பே மொறக்காத.." சனா பாய்ந்து விட இந்து சிலிப்பிக்கொண்டு திரும்ப..

அடுத்த நொடி "ஏய் ஏய்..அத்தைடா..எங்கயாவது போய் ஒழிஞ்சிக்கோ.." வீட்டு திசையை பார்த்து விட்டு அலறிக்கொண்டு இந்து பாதையில் ஓரமாய் இருந்த மரத்திற்கு பின்னால் சென்று ஒழிந்து கொள்ளவும்.. அனைவரும் அவளோடே வந்து அந்த மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டனர்.

"அங்க அவ்வளோ மரம் இருக்குல்ல..உனக்கும் இங்கயே வரனுமா அங்க போ.." சனாவை முறைத்துக்கொண்டு இந்து பிடித்து தள்ளிவிட..சமாளித்து நிற்க முடியாமல் சனா மஹதியை பற்றி இழுக்க..
விழுந்தாலும் சேர்ந்து தான் விழ வேண்டும் என்ற குழுவின் நான்காவது விதிப்படி மஹதி சுதனை இழுக்க..என அனைவரும் ஒற்றுமையாய் ஒன்றாகவே விழுந்தனர்.அதுவும் மேகலா சரியாக அந்த இடத்தை தாண்டும் வேளையில் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக மரத்திற்கு பின்னிருந்து வந்து விழுந்தனர்.

மேகலா இவர்களை அதுவும் இப்படி ஒரு இடத்தில் இப்படி ஒரு கோலத்தில் கண்ட அதிர்ச்சியில் கையிலிருந்த பையெல்லாம் போட்டு விட்டு தலையில் கை வைத்து விட, கீழே விழுந்திருந்தவையெல்லாம் வேறு வழி இன்றி அவரது லெக்சரிற்கு காதை தயார் படுத்திக்கொண்டு அங்கேயே அமர்ந்து கொண்டன.

நீண்ட நேர லெக்சரிற்கு பின் அப்போதுதான் கவனித்தவராய்.."என்ன இருந்தாலும் அந்த பொண்ணு..அதான் அது பேரு..ஆஹ் இந்து அவள் உங்களோட சேர்ந்தும் கெட்டு போகல நல்ல வேல..உங்களோட ஊர் மேய.." அவர் தொடர்ந்து கூறிக்கொண்டு போக..இத்தனை நேர சொற்பொழிவை கூட தாங்கியவளால் இது தாங்க முடியாமல் போக மரத்துடன் ஒன்றிக்கொண்டு நின்றிருந்த இந்துவை பிடித்து இழுத்துவிட்டாள் சனா.

அவளை பார்த்ததும் இருந்த கோபம் இன்னும் பலமடங்கு ஏறிவிட..முறைத்த மேகலா..அங்கு பக்கமாய் இருந்த ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு வர..ஐயோ என்று மூவரும் எழுந்து ஒவ்வொரு திசைக்கு ஓட..எழப்போன சனாவை சுதன் ஓடும் அவசரத்தில் தள்ளி விட..கடைசியாக மீண்டும் எழப்போனவள் வசமாக மேகலாவிடம் மாட்டிக்கொண்டாள்.

"நீ தான் அந்த பசங்கல கொடுக்குறது..சொல்லு இனிமே இப்படி செய்வியா.." குச்சியால் சுள் என காலில் ஒரு அடி வைத்தார் மேகலா.

இந்த நேரம் பார்த்து முழங்கால் வரை அணிந்திருந்த பாவாடை வேறு சதி செய்திட வலி பல மடங்காய் இருந்தது..

"அய்யோ அத்த அடிக்காதீங்க அத்த.." துள்ளிகுதித்துக்கொண்டே..சுற்றியும் பார்தது கொண்டாள். "நல்ல வேள நம்ம ஊரு போல இங்க யாருமே இல்ல..இல்லனா வந்த இடத்திலயும் அசிங்கமா போயிருக்கும்.." என எண்ணிக்கொண்டே வெளியில் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

"இதென்ன இவ்வளோ குட்டையா பாவாட போட்டிருக்க..எல்லாம் உங்க அம்மா கொடுக்குற செல்லம் தான்.. இதெல்லாம் தூக்கி நெருப்புல போடுறேன் இரு.." ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் ஒவ்வொரு அடி வைக்க..

"என்ன அழாம இருக்க..அப்போ உனக்கு வலிக்கல்ல..இந்த கம்பு சரிவராது இரு வீட்டுக்கு போய்.." என கூறிவிட்டு அவர் சுற்றி யாரையோ தேட ஆரம்பித்தார்.

சனாவோ அழாதது வேற தப்பா என்று சட்டென ஓவென அழ ஆரம்பித்தாள். அவள் நடிப்பு தெரிந்ததால் அவளை கண்டு கொள்ளாமல் அவளை ஒரு கையில் இறுக்க பிடித்துக்கொண்டு தன் தேடுதலில் யாரோ மாட்டி விடவும்.."கொஞ்சம் இங்க வாப்பா..என் வீடு பக்கத்துல தான் நான் போய்ட்டு வந்திடுறேன்..சனா அதான் இவள போக விடாம இறுக்கி பிடிச்சிக்கோ.. இரண்டு கையையும் பிடிச்சிக்கோ
நடிப்பா.. நீ விட்டுறாத.." கூறிவிட்டு அவர் சென்றார்.

சனா திரும்ப போக அவளது இரு கைகளையும் பின்னிருந்து சுற்றி வளைத்து தன்னுடன் சேர்த்து அணைத்தாற் போல் பிடித்தது இரு கரங்கள்.

"ஏய் யார்டா நீ..அவங்கதான் அறிவில்லாம சொல்லிட்டு போறாங்கன்னா..வந்து பிடிச்சிட்டு இருக்க விடுடா கைய.." இரு கால்களையும் தரையில் ஊன்றி தலையால் பின்னோக்கி இடித்து என பலவாறும் இவள் அந்த பிடியில் இருந்து தன்னை விடுவிக்க போராடினாள்.

ஆனால் தன் பின்னால் நின்றிருந்த உருவமோ ஒரு இன்ச் கூட நகரவில்லை அப்படியேதான் நின்று கொண்டிருந்தது.
சனாதான் களைத்துப்போனாள்.

"இவனுங்க வேற எங்க போனாங்க..டேய் நான் ப்ளாக் பெல்ட்..என்கிட்ட வேணா..விடு.."

"எது சுவர் ஏறி குதிக்கிறதிலயா?"

காதருகில் கேட்ட அந்த சில வார்த்தைகள் அவ்வளவு நேரம் இருந்த துள்ளலையும் அடக்கிட.. உடலில் இருந்து பலமெல்லாம் வடிந்தது போல் கால்கள் மடியப்போன அந்த நொடி அதனை அவன் உணர்ந்து கொண்டது போல அவளை மென்மையாக தன்னுடன் சேர்த்து பற்றிக்கொண்டான் ஆதிஷ்.


கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன் 16

💛கரையில்லா கடலா
உன் நினைவுகள்..
வருவாயா நீயே
என்னை கரைசேர்த்திட..
இல்லை என்றும்
கரை சேரா
கடலில் யாருமற்றே
மடியுமா என் நேசம்..💛

அவள் அதிர்ந்து நிற்க மெதுவாய் அவளருகில் குனிந்த ஆதிஷ்..."என்ன சத்தத்தையே காணோம்..யாரோ ரொம்ப துள்ளிகிட்டு இருந்தாங்களே இப்போ.."என்றான் மெதுவான குரலில்.

குரலின் மென்மையும் அவளது காதோரமாய் தீண்டிய மூச்சு காற்றும் அவளது சிந்தனையை மூட்டை கட்டி வாயையும் சேர்த்தே கட்டி போட்டிருந்தது.

தன் இரு கைகளையும் அவன் ஒரு கையாலேயே பற்றியிருந்த விதம், மறுகை தன்னை விழுந்து விடாமல் அவனுடன் சேர்த்து அணைத்திருக்க..மூச்சு காற்று காதருகில் தீண்டாமல் தீண்டிச்செல்ல.. என ஒவ்வொன்றாய் அவளை இம்சிக்க கண்களை மூடி ஆழமாய் ஒரு மூச்சை இழுத்து விட்டு..

குரல் கேட்டு அவனை அறிந்தவளிற்கு முகத்தை பார்த்து இன்னும் உறுதி படுத்திட எண்ணம் தோன்ற..பட்டென பின்னால் திரும்ப போக அதனை அறிந்த ஆதிஷ் சட்டென மீண்டும் அவளது இரு கரங்களையும் சிறைசெய்து அவளை திரும்ப விடாமல் பிடித்தான்.

"ஏய் யார் நீ..விடு விடு.."பொய்யாய் மீண்டும் சனா திமிற..

"ஓஹோ அப்போ யார்ன்னு தெரியாது.."

"தெரியாது விடு ஆதிஷ்.." கூறிவிட்டு நாக்கை கடித்து கண்களை சுருக்கினாள் சனா.

"ஹாஹா.. நல்லது, சரி நாக்க ரொம்ப கடிக்காத.."

"இரு இரு..நான் நாக்க கடிச்சன் உனக்கு எப்படி தெரியும்"

"அது அது..பொதுவா.."ஆதிஷ் முழித்தவண்ணம் இழுக்க..அவனை காப்பாற்றவென அங்கு..

"இரு இதோ வந்திட்டேன்.." என்ற குரலோடு வந்து கொண்டிருந்தார் மேகலா..

"ஹையோ இத எப்படி மறந்தேன்.. ஏய் ஆதிஷ் ப்ளீஸ் விடு விடு.."கையை அவன் பிடியிலிருந்து விடுவிக்க வெகுவாக முயன்று கொண்டே கெஞ்சினாள் சனா.

அவனோ கொஞ்சமும் அசையாமல்.. "நோ அத்தை பிடிச்சிக்க சொன்னாங்க.." என்றான்.

"ஆஆஆஆதிதிதிஷ்ஷ்..இப்போ விட போறியா இல்லையா.." மெதுவான குரலில் சனா கேட்க

"சனாஆஆஆஆஆ..இப்போ விட முடியாது.." அவளை போலவே அவனும் கூறிக்காட்ட..

இனிமேல் பேச்சு சரி வராது என எண்ணியவளாய் குனிந்து தன் கைகளை பிடித்திருந்த அவன் கையை நறுக்கென கடித்து வைத்தாள் சனா.

"ஆவ் ஆவ்..சனா.." உதறிக்கொண்டு ஆதிஷ் வலியில் அவள் கரங்களை விட்டு விட.. குடு குடு என ஓடி வந்த மேகலாவை பார்த்து நாக்கை காட்டி விட்டு துள்ளிக்குதித்து ஓடியவளிற்கு அப்போதுதான் தன் காலின் நிலை நினைவில் வர இருந்தும் செய்ய வழி இன்றி ஓடப்போனவள் பின்தான் ஆதிஷ் நினைவில் வர திரும்பி ஓடி வந்து அவனையும் இழுத்துக்கொண்டே ஓடினாள் சனா.

பாதையில் அனைவரது பார்வையும் இவர்களையே மொய்க்க..
"சனா கைய விடு என்ன பன்னுற..பாரு எல்லாரும் பார்க்குறாங்க.." அடிக்குரலில் கூறினான் ஆதிஷ்.

இதுவரை இத்தனை வருட வாழ்க்கையில் ஒழுக்கம் நேரம் என்றால் மறுபெயர் ஆதிஷ் என்பர்.. அப்படியிருக்க அவனால் எப்படி இதனை ஏற்றுக்கொள்ள முடியும்.. ஆனால் நம் நாயகி சனா பாடசாலை காலத்திலும் சரி கல்லூரி காலத்திலும் சரி வகுப்பறையில் இருந்ததை விட மைதானத்திலிருந்த மரங்களிலும் அதிபர் அறையிலும் இருந்தது தானே அதிகம்..அவளிற்கு இதெல்லாம் சர்வசாதாரணமன்றோ..

இருவரும் நேரெதிராய் இருக்க காதல் ஏனோ நடுவில்.. அதுதான்ங்க இருவரையும் இணைத்திடும் பாலம்.

"ரோட்னா நாலு பேர் இருக்க தான் செய்வாங்க..பார்க்கதான் செய்வாங்க ஆதிஷ்..ஓடி வாங்க இல்லனா அந்த பேய் வந்து பிடிச்சி உங்களையும் தான் அடிக்கும்.." ஓடிக்கொண்டே கூறினாள் சனா.

வெகுதூரம் வந்த பின் கையை கஷ்டப்பட்டு விடுவித்து விட்டு நின்றான் ஆதிஷ். சனாவும் நிற்க மூச்சு வாங்கிக்கொண்டே அவளை முறைத்து பார்த்தான் அவன்.

இப்போதுதான் இத்தனை நாட்கள் பிறகு அவனை பார்க்கின்றாள் சனா.. மிகவும் இளைத்து போய் இருந்தான்..கண்ணில் ஒளியே இல்லை.. ஆனால் எப்படி இருந்தாலும் ஆதிஷ்.. சனாவின் ஆதிஷ் சனாவை போல அழகு தான்.. என அவள் நினைத்துக்கொண்டே போக மனசாட்சியோ கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து ஹ்ம் வேற என்ன சொல்ல போற என்பது போல் ஒரு போஸை கொடுத்தது.

"என்ன.." சனா பார்வையாளேயே கேட்க..

"என்ன என்ன..எதுக்கு இப்போ இழுத்துட்டு ஓடின.."

"நான் எப்போ இழுத்துட்டு ஓடினேன்..நீங்க தான என் கைய பிடிச்சிட்டு ஓடி வந்தீங்க.." அப்பாவியாய் கண்களை விரித்து சனா கேட்க அவள் பாவனையில் ஆதிஷ் சிரித்துவிட..

"க்யூட் சிரிக்கும் போது.." என்றாள் சனா.

அவள் வார்த்தையில் தான்..தான் யார் இவள் யார் எதற்கு இங்கே வந்தோம் என்பதெல்லாம் ஒரே கணத்தில் ஆதிஷிற்கு உரைக்க..சட்டென சிரிப்பை மறைத்தவன் கடுமையை முகத்தில் ஏற்றிக்கொண்டான்.

இதனை கவனித்து விட்ட சனா.."பெக் டூ மோட் போல.." எண்ணிவிட்டு தானும் பேசாமல் இருந்து விட..அந்த நேரம் அருகில் இருந்த பூங்காவினுள் இருந்து வெளியே வந்தான் சுதன் அவனை தொடர்ந்து இந்து மற்றும் மஹதி.

இவர்களை கண்டு விட்ட சனா எதாவது உலறிட கூடாதே என சைகையால் போ என கூற மஹதி உற்று கவனித்து விட்டு.."சட்டி நம்மள வர சொல்லுறாடா.. வா" என அனைவரையும் அழைத்துக்கொண்டு திரும்பி நின்றிருந்த ஆதிஷின் பின்னால் வந்து நின்றாள்.

"இதுங்களுக்கு அறிவு இருக்கனும் சொல்லல..ஆனால் இருந்தா நல்லா இருக்கும் நினைக்கிறேன்.." மனதினுள் எண்ணியவண்ணம் எண்ணத்திலே தலையிலும் அடித்துக்கொண்டாள் சனா.

அதே நேரம் ஆதிஷ்.."ஆமா நீங்க இங்க எங்க..?" என வினவினான்.

ஒருமையிலிருந்து பன்மையிக்கு தாவிய விழிப்பையும் சுருங்க பேசுவதையும் மனதில் குறித்துக்கொண்ட சனா..பின்னால் இவன் குரலை கேட்டே அறிந்து கொண்டு இந்து வாயை திறக்க முன்னமே அவளை முன்னால் பட்டென இழுத்து அருகில் நிற்க வைத்தாள்.

"டி இஞ்சி ஆஆதிதிஷ்ஷ் கேட்குறாங்கல்ல..சொல்லு எதற்கு வந்தோம்.." அந்த ஆதிஷில் மாம்ஸ்னு உலறிடாதே என்ற அழுத்தம் இருந்தது.

"நாம மாமா.." இந்து ஆரம்பிக்க அவளை இறுக்க பிடித்த சனா.."டிடி நாம எதுக்கு வந்தோம் நல்லா யோசிச்சி சொல்லு.." என்று பல்லைக்கடித்து வினவ..இவ என்ன மென்டலா என்று பார்த்த இந்து.."அதான்டி நாம மாமா.." என மீண்டும் ஆரம்பிக்க சட்டென அவர்களின் சிக்னலான மூக்கை பிடித்துக்காட்டி சொல்லாதே என்பதாக சைகை செய்ய.. இப்போது புரிந்து கொண்ட இந்து.."அது.." என ஆதிஷை பார்த்து இழுக்க..

"ஓஹ் நீங்க எல்லாரும் கூட இங்கதான் இருக்கீங்களா.. சரி என்ன மாமான்னு ஏதோ ஆரம்பிச்ச.." அனைவரையும் பார்த்து விட்டு சுற்றி வந்த பார்வை இந்துவிடம் நின்று அவள் விட்டதை எடுத்துக்கொடுத்தான் ஆதிஷ்.

"மாமான்னா சொன்னேன்..அது மாமா அத்தை தம்பி.. ஆஹ்.. மாமாவோட அத்தை வீட்டுக்கு சனா வேலைக்கு வந்திருக்கா.." மாமா என்று தொடங்கியதை சமாளித்து விட்ட மகிழ்ச்சியில் கூறிவிட்டு சனாவை பார்த்தாள்.

"கடைசில என்னய வேலைக்காரியா மாத்திட்ட எரும.."என்று முறைத்து வைத்தாள் சனா.

சுதனும் மஹதியும் இதுலாம் என ஒரு பார்வையை இந்துவை நோக்கி வீச ஆதிஷோ என்ன நடக்கிறது என புரியாது..

"என்னது..வேலையா அதுவும் வீட்டுல?"என்று குழப்பமாய் கேட்க..

"ஆமா அக்கா பாவம்..அங்கிள் நீங்களாச்சும் உங்க கம்பனில ஹெல்ப் பன்னலாம்.." சுதன் பாய்ன்டை பிடிக்க சனாவிற்கோ இவனுக்கு கோயிலே கட்டலாம் போல என இருந்தது.

"ஆனா எதுக்கு.." ஆதிஷ் இன்னும் குழப்பம் தீராதவனாய் கேட்டான்.

"எதுக்கு..எ..துக்குனா இப்படி பட்டுனு கேட்டா .. ஆமா..எதுக்கு..." சுதன் உலற..

"அங்கிள் ஒரு மாற்றம் வேணாமா.. கல்யாணம் நின்னிறுச்சில அக்காக்கு.. " மஹதி பட்டென கூறினாள்..

அந்த பேச்சை எடுத்ததும் ஆதிஷின் முகம் சுருங்கியதை கவனித்த சனா சைகையாலேயே மஹதியை இன்னும் இன்னும் பத்தல என ஏத்தி விட்டாள்.

"அக்கா அந்த நாள்ள இருந்து ஒழுங்கா சாப்பிடாம ரொம்ப இளைச்சி போய்ட்டா.." இந்து கூறவும் ஆதிஷ் அவளை மேலிருந்து கீழ் வரை பார்க்க..

சனாவோ.."சொல்ற பொய்ய பொருந்த சொல்லியிருக்கலாம்.."என வயிற்றை உள்ளே இழுத்து கன்னங்களையும் உள்ளே இழுத்து என இளைத்தது போன்ற ஒரு அமைப்பை காட்ட முயன்று தோற்றுக்கொண்டிருக்க நல்ல வேளை ஆதிஷ் சுதன் பக்கம் பார்வையை திருப்பி விட்டான்.

"ஹ்ம்..சரி வீட்டுக்கு கிளம்புங்க.." பந்தி பந்தியாய் பேசியதற்கு ஒரே வரியில் பதில் கூறி விட்டு ஆதிஷ் திரும்ப..

"வீட்டு அட்ரஸ்.."என்றனர் கோரசாக அனைவரும்..

"நான் சொன்னது உங்க வீட்டுக்கு.."

"அதென்னா உங்க வீடு எங்க வீடு..எல்லாம் ஒரே வீடு நம்ம வீடு..எங்க வீடுன்னா அது உங்க வீடு..உங்க வீடுன்னா அது எங்க வீடு.. நான் என்ன சொல்ல வரேன்னா நாம இப்போ ப்ரன்ஸ்.." இந்து பேச பேச இது எப்போ என நெற்றியை சுருக்கி பார்த்தான் ஆதிஷ்.

"சட்டி என்ன மட்ட போல நிற்குற..ஆமா சொல்லு.." இந்து அவளை இழுக்க...

"ஆஹ் ஆதிஷ் ப்ரன்ஸ்..." அவனிடம் கையை நீட்ட.. இடையில் அடித்து பிடித்துக்கொண்டு வந்து கையை திணித்தனர் சுதன் இந்து மற்றும் மஹதி.

"உங்கள்ட்ட எல்லாம் யாருடா கேட்டது கைய இப்போ.." பார்வையாளயே சனா எரிக்க ஆதிஷோ இதுங்களுக்கு என்னாச்சு என நிற்க சுதன் ஆதிஷ் கையை இழுத்து மேலே வைத்து க்ளிக் க்ளிக் என போனிலும் படம் பிடித்துக்கொண்டான்.

"இனிமே நீங்களே இல்ல சொன்னாலும் ஆதாரம் இருக்கு.. எப்படி எங்க டைகர் கெங்.." சுதன் கெத்தாய் போட்டோவை காட்டி கூற..ப்ளாக் மெயில் வேறயா.. என பார்த்தான் ஆதிஷ்.

"சரி ஏதோ இப்போ வீட்டுக்கு போங்க எனக்கு வேலை இருக்கு.."ஆதிஷ் திரும்பி நடக்க ஆரம்பிக்கவும்..

சட்டென அவனை பார்த்துக்கொண்டே "சனா உன் கால்ர அடி பட்டிருக்குல..எப்படி வீட்டுக்கு போவ..எங்களாலையும் உன்ன தூக்க முடியாதே..நடந்தா அப்புறம் உன் கால் முள்ளு வெளில தள்ளிறாது.. அப்புறம் நீ போற இடமெல்லாம் அதுவும் இழுத்துகிட்டு வராது.. இப்படியே இருந்தா இன்னும் மூணு மாசத்துல கால.." என ஆதிஷிற்கு மட்டுமன்றி அந்த ஊரிற்கே கேட்க உரக்க தன் கற்பனை சிறகை மஹதி கொடூரமாய் விரித்துக்கொண்டே போக.."போதும்.."என அவள் வாயை பட்டென மூடினாள் சனா.

"அதென்னா சிக்கன் முள்ளாடி ஹிஹி.." இந்து ஜோக் என தானே சொல்லி தானே சிரிக்க..

"நீ மூடுடி..டேய் அவன் கேட்காத மாதிரி போறான் பாரு.. போய் பிடி எதாவது பன்னுடா.. " நடந்து போய் கொண்டிருந்த ஆதிஷை காட்டி சுதனை பிடித்து உலுக்கினாள் சனா.

"ஐடியா.." என மஹதி கூற..

"என்ன.." என்றாள் சனா.

"நீ விழுந்துட்ட சட்டி.."

"நான் எப்போடி விழுந்தேன்.."

"இதோ இப்போ.." மஹதி கூறிவிட்டு சட்டென அவளை தள்ளிவிட "ஏய் ஏய்.."பிடிப்பு தேடி தடுமாறி அருகிலிருந்த கற்குவியலிற்குள் சென்று விழுந்தாள் சனா.

அவளது சத்தத்தில் ஆதிஷ் திரும்பி பார்க்க கையிலிருந்து இரத்தம் வழிய விம்மலுடன் அங்கு நின்றிருந்தாள் சனா.

கடைசியாய் ஒரு முள் காலில் கீறியதில் கோடென கசிந்த குருதியை கண்டு அவள் வீட்டில் அனைவரையும் ஏன் டைகர் கெங்கையும் கூட விடாது செய்த அலப்பறையும் இப்போது இருந்த காயத்தையும் பார்த்தே நடக்க போகும் சம்பவத்தை ஊகித்த சுதன் மஹதியை பார்க்க...அவளும் இந்த அளவு எதிர்பார்க்கவில்லை என்பது போன்ற ஒரு பார்வையை தாங்கி அடுத்து வரப்போகும் புயலை எதிர்பார்த்து நின்றாள்.

●°○•○°○°●°●°●●°●°●°●●°○°○•○●●°●°●●°●°

Realllyy reallly sorry darlings i know im soooo lateeee.. coz of some personal issues ennala continue panna mudila so stop panni irunthen..kutty papa a mannichikanum neengathan 🫣 inimey daily ud na waralanalum wandhurum 😁 support pannunga 😍 thanks a lotttt for your support and love ♥

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன் 17

💛நிஜத்தில் நிழலென
நானும் நீயும்
இருப்பதாலே..
கவிதைகளில்
சேர்க்கிறேன்
என்னை
உன்னோடு..💛

"ஹேய்.." பதறிக்கொண்டு சனா அருகில் ஓடி வந்தான் ஆதிஷ்.

"பார்த்து இருக்க மாட்டியா..எழுந்திரு.." ஆதிஷ் சனாவை பற்றி தூக்க அவளோ ஒரு சிறுபுன்னகையுடன் அவனை பார்த்தவண்ணம் எழுந்து நின்றாள்.

"இது என்னடா இது சிரிக்கிறா.." மஹதி வாயைப்பிளந்த வண்ணம் சுதனை பார்த்து கேட்க அவனும் இந்துவும் கூட அதே போல் அதிர்ச்சியில் தான் இருந்தனர்.

"பாரு கையில அடி பட்டிறுக்கு..இரத்தம் வேற வருது.. " ஆதிஷ் அவளது கையை பார்த்து விட்டு சொன்னது தான் தாமதம்..

"ஏது இரத்தமா.. அய்யோ இரத்தம்..அய்யோஓஓஓஓ.. வலிக்குது..அம்மா..வலிக்குது...டேய் சுப்பு இரத்தம்டா.. நான் என்ன பன்னுவேன்...இஞ்சி நான் செத்துருவேனா.. அப்புறம் அந்த பிஸ்கட் எல்லாம் நீங்க தனிய சாப்பிடுவீங்க.. நோ...ஆதிஷ் ஆதிஷ்..சேவ் மீ ப்ளீஸ்.." என ஆதிஷின் கையை பிடித்து உலுக்கோ உலுக்கு என உலுக்கினாள் சனா.

இவளது புலம்பலை கண்டு முதல் இரண்டு நிமிடங்கள் ஆதிஷ் தலை கால் புரியாது விழித்துக்கொண்டிருக்க..அவர்களை சுற்றி கூடும் கூட்டத்தை அப்போது தான் கவனித்தவன்..

"சனா டோன்ட் க்ரேயட் அ சீன்.. அவ்வளோ எல்லாம் பெரிய காயம் இல்ல எழுந்திடு.." என்றான் அழுத்தமான குரலில்.

சட்டென சனாவின் அழுகை நின்றது.."என்னடா பட்டுனு ஓப் ஆகிட்டா.."சுதனின் காதை கடித்தாள் மஹதி.

"இரு இரு பார்ப்போம்.."

அழுகை நிறுத்தி விட்டு கையை திருப்பி பார்த்த சனா ஒரு விம்மலுடன் மீண்டும் ஆதிஷை பார்த்து "ஆதிஷ் உனக்கு அடி பட்டு இருந்தா தெரிஞ்சிருக்கும்.. எவ்வ்வளோ ரத்தம் பாரு..வல்லிக்குது..." ஓவென மீண்டும் ஆரம்பிக்க அங்கிருந்தவர்கள் எல்லாரும்.."தூக்குங்கப்பா ஹாஸ்பிடல் கொண்டு போகலாம்.." என காயத்தை காணாது அவளது அழுகையை வைத்து பரபரக்க..பல்லைக்கடித்துக்கொண்ட ஆதிஷ் அந்த வழியே வந்த ஆட்டோவை கைநீட்டி மறைத்தான்.

ஆட்டோ நிற்க.."ஏறு.." என்றான் ஒற்றை சொல்லாக..

"எங்க போறோம்.." அப்பாவியாய் முகத்தை வைத்து அதில் ஒரு பயம் சந்தேகம் என அனைத்தும் கலவையென கொண்டு கேட்டாள்..

"ஹா...ஹ்ம் வீட்டுக்கு.." அன்றொரு நாள் மருந்தைக்கண்டு நாலடி பின்னால் சென்றது நினைவில் வர சட்டென ஹாஸ்பிடல் என தொடங்கி மாற்றினான்.

"சரி" தலையை ஆட்டி விட்டு இடது கையை திருப்பி வாயால் உப் உப் என ஊதிக்கொண்டே சென்று ஆட்டோனுள் ஏறி அமர்ந்தாள்.

அடுத்ததாக ஆதிஷ் ஏறி தொடர்ந்து சுதன் இந்து மஹதியையும், ஆட்டோகாரரை பக்கத்தில் தான் என சமாளித்து ஏற்றினான்..

கடைசியாய் சுதன் ஏறியதும் ஆதிஷின் தோள் இலேசாக சனாவின் கையை உரசிட..

"கை கை என்னோட கை..ஏய் சுப்பு மாடு இறங்குடா.. இன்னும் ரத்தம் வரும்..இறங்குடா.. கை என்னோட கைடா...." சனா அலற.. பறக்கப்போன பொறுமையை இழுத்துப்பிடித்த ஆதிஷ்..

"சனா இங்க பாரு.. பசங்கள தனிய விட்டுட்டு போக முடியாது இல்லையா.. நீ கைய வெளில நீட்டி வச்சிக்கோ சரியா.." இயன்றளவு பொறுமையாய் அவன் கூற..

"நீங்க என் கைய லாறி இல்லனா பஸ்ஸுக்கு அடிச்சி விட பார்க்குறீங்கல்ல..உங்களுக்கு என்னா என் கை தான..உங்களுக்கு இரண்டு கை இருக்கும் நீங்க சாப்பிடுவிங்க..அப்புறம் எனக்கு தான்.." மூக்கை உறிஞ்சிக்கொண்டு உதட்டையும் பிதுக்கிய வண்ணம் பேசிக்கொண்டே சென்றாள் சனா.

அவளை ஒரு பார்வை பார்த்த ஆதிஷ்
ஏதோ கூற வந்து பின் கட்டுப்படுத்திக்கொண்டு கழுத்தை இருபுறமும் திருப்பி கோபத்தை சமன் செய்து விட்டு ஆழ ஒரு மூச்சையும் இழுத்து விட்டான்..

பின் அவளது கையை எடுத்து தாங்கினாற் போல தன் மடியில் வைத்து பிடித்துக்கொண்டவன் அவள் ஏதோ கூறப்போகவும் உஷ் என வாயில் ஒரு விரலை வைத்து எச்சரித்து விட்டு ஆட்டோவை எடுக்குமாறு கூற.. பயணமும் ஆரம்பித்தது.

இதற்கிடையில் இந்து மஹதி மடியில் அமர்ந்திருக்க..மஹதியின் பாரம் தாங்காது.."எதுக்கு இவ்வளோ சாப்பிட்ற..இந்த கனம் கனக்குற.. வேற எங்காவது போய் உட்காரு போ.. என்னால உன்ன வச்சிக்க முடியாது.." என இந்து அவளை தள்ளி விட மஹதியோ பதிலுக்கு இன்னும் நன்றாக குதித்து உட்கார வலியில் இந்து அலறப்போக பட்டென அவளது வாயை மூடினான் சுதன்.

"சும்மாவே மாம்ஸ் செம கோபத்துல இருக்காங்க..நீங்க வேற எதாச்சு பன்னி வச்சிராதீங்க..இஞ்சி இங்க பாரு சத்தம் போட்ட ஓடுற ஆட்டோல இருந்து தள்ளி விட்டுறுவன்..அப்புறம் டயருக்கு நசுங்கி செத்துருவ.."

"டேய் சுப்பு அவ மேல ஏறினா டயர் தான் நசுங்கும்.." தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து மஹதி அவளை கலாய்த்து விட விளைவு இந்துவின் நகம் மஹதியின் கையை அலங்கரித்தது.

மஹதி.."இஞ்சி.." என குதித்து ஆதிஷ் மேல் சரிய சனாவின் கையை ஆதிஷ் மறைக்க முன் அதிலும் உரசி விட இங்கு இதன் விளைவாக.."நான் அம்மாவ பார்க்காமயே சாக போறேனா..இந்த பாவம் யாரையும் சும்மா விடாது..இந்த சின்ன வயசுல என்ன கொன்னுடீங்க.." ஓவென மீண்டும் ஆரம்பித்திருந்தாள் சனா.

ஆதிஷ் மஹதியை முறைப்பதா சனாவை பார்ப்பதா..இல்லை இதுங்க எல்லாம் எந்த ஹாஸ்பிடல் பைத்தியம் என்ற ரேஞ்சில் லுக்கு விட்ட ஆட்டோ ட்ரைவரை பார்ப்பதா என குழம்பி இதில் ஹாஸ்பிடல் சென்றால் வரும் புயலை தாங்க வலிமை இல்லை என உணர்ந்து ஆட்டோவை தன் வீட்டிற்கு விட சொன்னான்.

அதனை கேட்ட மஹதி வாயெல்லாம் பல்லாக, சனாவை பார்க்க..ஆனால் அவளோ புலம்பல்களுடன் இருந்ததால் கவனிக்கவில்லை..

வீட்டின் முன் வந்து ஆட்டோ நிற்க முதலில் சுதன் இறங்க கோபத்தை எல்லாம் வைத்து பட்டென இந்து மஹதியை தள்ளி விட அவள் தனியே விழுவேனா என அவளையும் இழுக்க ஆட்டோவே கதி கலங்கும் அளவு இருந்தது இவர்களின் கலவரம்..ஆதிஷ் முறைத்ததை முதலில் கவனித்த மஹதி..சண்டையை கைவிட்டு விட்டு இந்துவிடம் கண்ணால் காட்ட..பின்னால் திரும்பி ஆதிஷை பார்த்த இந்து கப்சிப் என அமைதியாய் மஹதியை தொடர்ந்து இறங்கிக்கொண்டாள்.

ஒருவாரு சனாவையும் கவனமாக இறக்கிய ஆதிஷ் மற்றவர்களை உள்ளே அழைக்க ஆளுக்கு முந்திக்கொண்டு உள்ளே நுழைய போன இந்துவை பிடித்து இழுத்து வைத்த சுதன்.."இல்ல அங்கிள் நீங்க அக்காவ கூட்டிட்டு வாங்க நாங்க எல்லாரும் லேட்டா போன அத்தை தேடுவாங்க அப்புறம் போரே ஸ்டார்ட் ஆகிடும்..நாங்க இதே ஆட்டோல போயிடுறோம்.." என்றான்.

"நீ என்ன ரொம்ப பேசுற நல்லவன் மாதிரி.. சுப்பு போனா டீ பிஸ்கட் தருவாங்கடா..க்ரீம் பிஸ்கட் தர கூட வாய்ப்பு இருக்குடா.."இந்து சுதனை சொறிய..

"மானத்த வாங்காதடி.." அவளை ஆட்டோவில் ஏற்றி விட்டு தானும் ஏற ஆதிஷ் ட்ரைவரிடம் இடத்தை சொல்லி அனுப்பி வைத்தான்.

ஒருவாரு ஆட்டோவை அனுப்பி விட்டு அப்போதுதான் தன் பின்னால் நின்றிருந்தது பற்றிய நினைவு உதித்தது ஆதிஷிற்கு.

"இவளை எப்படி உள்ள கூட்டிட்டு போறது.." என்ற அவ்வளவு நேரம் இல்லாத சந்தேகம் அப்போது உதிக்க செய்வது அறியாது யோசனையுடன் நின்றான்.

"ஆஆஆ..வலிக்கிது.." ஆதிஷை பார்த்து தான் இருப்பதை நினைவு படுத்த தகவல் கொடுப்பதை போல் ஒரு சத்தம் வைத்தாள் சனா.

அவளை திரும்பி ஆழமாய் ஊடுறுவி பார்த்தான் ஆதிஷ்.

"எ..துக்கு இப்படி பார்க்கிறீ..ங்க.." உள்ளே போன குரலில் அவள் கேட்க..

"இல்ல உண்மையிலேயே உனக்கு அந்த அளவு வலிக்குதா சனா.."

அவன் கேட்ட கேள்விக்கு பதிலென சனாவின் உதடு ஒரு பக்கம் நீள முகம் கோணலாய்.. அழுகையில் முகம் கசங்க ஆரம்பிக்க..அடுத்து என்ன நடக்கும் என அறிந்த ஆதிஷ்..

"ஹே சும்மா கேட்டேன் ப்ளீஸ் ப்ளீஸ்..அழுதுறாத..உனக்கு வலிக்குது.. ஐ நோ ரொம்ப வலிக்குது..வா உள்ள போகலாம்.." இவன் பேச பேச அவள் முகம் சரியாகுவதை கண்டு ஒரு நிம்மதி மூச்சு விட்டவன் வாசலை நோக்கி நடந்தான்.

சனா பின்தொடர.. வாசல் அருகில் சென்றவன் அவளை கைநீட்டி நிற்க கூறி விட்டு உள்ளே எட்டி பார்க்க.. கண்எட்டும் தூரம் வரை யாரும் இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டு மேல் தளத்திலிருந்த தன் அறை வரை உள்ள தூரத்தை கண்ணாலே அளந்து விட்டு அவளை பின்தொடர கூறிவிட்டு முன்னால் வேகமாக நடந்தான்.

படியில் மேலே ஏறிய பின் இவன் திரும்பி பார்க்க அப்போதுதான் சனா படியருகில் வந்திருந்தாள்.

"சனா...என்ன பன்னிட்டு இருக்க சீக்கிரம் வா.." ஆதிஷ் மெதுவான குரலில் அழுத்தமாய் கூற..

கீழிருந்தவளோ.."ஆதிஷ் கால்ல அடிப்பட்டிருக்கு தெரியும்ல..நானே கஷ்டப்பட்டு நடந்து வாரேன்.."சத்தமாய் சனா பேச ஆரம்பிக்கவும் மேலிருந்து உஷ் உஷ் என கூறிப்பார்த்தவன் பயனில்லாமல் போக.. தட தட என படிகளில் அவசரமாய் இறங்கி வந்தான்.

"நீங்க மேல ஜாலியா நின்னுட்டு சீக்கிரம் வான்னு கூப்பிடுறீங்க..எல்லாம் உங்களுக்கு கால் நல்லா இருக்க திமிரு..கல்ல தூக்கி போடுறேன் பாருங்க..அப்புறம் தெரியும்.."

அவன் வருவதற்குள்..அவன் பேசிய மெதுவான குரலிற்கே பல மடங்கு சத்தமாய் பேசி விட்டு மேலே ஏறப்போனவள் ஏதோ தோன்ற சுற்றி பார்க்க அங்கு "ஆஷி டேடி..பேயி.." என மேலிருந்து எட்டிபார்த்தவண்ணம் நின்றிருந்த அனு உட்பட வீட்டில் இருந்த அனைவரும் பல குழப்ப இரேகைகள் முகத்தில் படர நின்றிருந்தனர்.

கருத்துக்களை பகிர

 
Status
Not open for further replies.
Top