All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘மாயம் செய்தாயோ’ - கதை திரி

Status
Not open for further replies.

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்..

புது கதையோட வந்துருக்கேன்.. சக்தி சாருமதியோட ஒரு பயணம்.. போர் அடிக்காது உத்தரவாதம் நான் 😜 சரி சரி வாங்க கதைக்குள்ள போயே பார்த்துடலாம்..

மீரா_
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
11A3F249-1089-409A-AA22-FFF64A8B3549.jpeg

மாயம் செய்தாயோ ❤ 1 ❤

❤அறியா முகமாய்
உன் அறிமுகம்..
என்னுள் என்றும்
அழியா முகமாய்
பதிந்தது தான்
மாயமோ...❤

வலது கையில் கைக்கடிகாரத்தைக் கட்டியவாறே கறுப்பு நிற கோட், கறுப்பு பான்ட் அதற்கு எடுப்பாய் சிவப்பு நிறத்தில் சார்ட்டும் அணிந்து படிக்கட்டு வழியே கீழிறங்கிக் கொண்டிருந்தான் சதீஷ்.

"வாவ் அண்ணா" என்றவாறு அவனை பார்த்து வாய்பிளந்தவள், சட்டென நினைவு வர முகத்தை திருப்பிக் கொண்டாள் நிலா.

கீழிறங்கி வந்தவன் படிக்கட்டுகள் முடியும் இடத்திலேயே அவனுக்கு வழிவாடாது நடுவில் தான் கோபம் எனக்காட்டிக் கொள்வதற்காகவே தன் சுட்டித்தங்கை முகம் திருப்பி நின்று கொண்டிருப்பதைப்பார்த்து சிரித்தவாறே,

"ஹெலோ மேடம்.." முகத்திற்கு நேரே வந்து அழைத்து பார்த்தான்..பதிலுக்கு அவளது முகம் வெடுக் என திருப்பி கொள்ள, "ஓஹோ பேச மாட்டிங்களா?" கேட்டு விட்டு அவள் பதிலு கூற மாட்டாள் என அறிந்தும் சற்று காத்திருந்தான் சதீஷ்.

பின் அடக்கிய சிரிப்புடனே "சரி அப்படியே கொஞ்சம் நகர்ந்து உங்க கோபத்தை காட்டினிங்கன்னா நான் போக வசதியா இருக்கும்." என அவன் கூற

ஒரு முறை நிமிர்ந்து முறைத்தவள் மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"ஏய் நிலா..ஏய் குட்டி..ஏய் நிலா குட்டி என்ன ஆச்சு??"

என்றும் போல் அவளை பலவிதமாய் கொஞ்சியவண்ணம் அவள் முகம் பற்றித் திருப்ப, அவள் இயன்றளவு கண்ணை சுருக்கி முறைத்தவண்ணம் இருந்தாள்.

"இன்னக்கி என்ன நாள்?" இதற்கு மேல் முடியாது கோபத்தை இழுத்துப்பிடிக்க என அறிந்தது தன் கேள்வியை முன்வைத்தாள்.

"இன்னக்கி tuesday" ஒரு கணம் கண்களை மேலே உருட்டி யோசித்து விட்டு பதில் பட்டென வந்தது சதீஷிடம் இருந்து.

"அய்யோ அதல்ல என் college ல இன்னக்கி என்னா?" சலிப்புடன் இருந்தாலும் கோபத்தை குரலில் அதிலும் அதிகமாய் காட்டி கேட்டாள் நிலா.

"ஓஹ்ஹ்..ஆமால்ல உன் college ல இன்னக்கி ஏதோ function ல..." அவன் கூற அதற்கும் அவள் முறைப்பை தர,

"சரியாதன சொன்னன் அதுக்கும் ஏன் மொறக்கிற?" உள்ளே போய் விட்ட குரலில் பாவமாய் கேட்டான் சதீஷ்.

"கெஸ்ட் யாரு? நீ தான? நீ வாரன்னு ஏன் சொல்லல நீ? பாரு ப்ரீதிக்கு தெரியும் கீர்த்துக்கு கூட தெரியும். எனக்கு மட்டும் தெரியாது. நீ சொல்லல.."

என்றவாறு உதடு பிதுங்கி அழப்போனவளை கண்டு பதறியவன்.

"ஹேய் ஹேய் கூல்டா. ஏன் இவ்ளோ எமோஷன் ஆகுற? ஒவ்வொரு வருஷமும் நான் இல்லன்னா அப்பாதானடா வாரம். உனக்கு தெரியும்னு நினைச்சன் அதான்டா.. சரி சரி சதீஷ் தான் தப்பு..நிலா அழக்கூடாது சாரிடா."

அவளை அணைத்து ஆறுதல் படுத்தியவாறே சோபாவில் சென்றமர்நதான் சதீஷ்.அப்போதும் உம் என்று இருந்தவளிடம்,

"சரி இப்போ நான் என்னடா பன்னனும்? சதீஷ்க்கு என்ன பனிஷ்மன்ட் சொல்லு." என்னதான் இது கோபம் எடுக்கும் அளவு சீரியசான விஷயமில்லை என்று சதீஷ் அறிந்திருந்தாலும் நிலாவின் கோபமும் வருத்தமும் அவனை என்றும் போல் வெகுவாய் பாதிக்க அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருந்தான்.

"நீ கேட்டாலும் பன்ன மாட்ட போ. நான் சொல்ல மாட்டன்."

கோபம் என்று முகம் திருப்பிக் கொள்வாள் ஆனால் பதில் மட்டும் கரக்ட்டா வரும்.அவளது சிறு பிள்ளைத்தனத்தை எண்ணி சிரித்தவாறே..

"ப்ரொமிஸ்டா சொல்லு பன்னிர்லா" சதீஷ் உறுதியாய் அவள் கை பற்றி கூறவும், கண்கள் விரிய திரும்பியவள்

"நிலா ப்ரொமிஸ் ?" கேள்வியோடு நோக்க,

"ஹா நிலா ப்ரொமிஸ்." என்று விட்டு என்ன கேட்க போறாள் என அவளை நோக்க..

"எனக்கு அண்ணி வேணும்" பட்டென வந்தது பதில்.

"ஏது????? அண்ணியா????? அப்போ இது எல்லாமே உன்னோட நடிப்பா"அவன் திகைக்க கண்சிமிட்டிச்சிரித்தவள்

"No no no நீ ப்ரொமிஸ் பன்னிர்க்க, உன் answer ஓகே ஒன்லி..ஓகே சொல்லுண்ணா சொல்லு சொல்லு...." அவனை பிடித்து உலுக்கோ உலுக்கு என உலுக்கினாள் நிலா.

"ஓகே ஓகே நிலா அண்ணி தான நான் பார்த்துர்ரன்..." என சோபாவில் சாய்ந்து அமர்ந்தான் சதீஷ்.

"என்னடா சதீஷ் ஓகே?" என்றவாறே அங்கு வந்தார் சிவா.
அவர் உட்காரவும் எழுந்து நின்றவன்,

"இல்லப்பா நிலாக்கு ஏதோ வேணும் சொன்னா அதா..."கண்கள் கூறிவிடாதே என நிலாவை பார்க்க.. அதை கேட்டு நடந்தாள் என்றும் போல் வழமையான காலை நேர நிலா விஸஸ் சதீஷ் வார் ஏது..

இடையில் புகுந்தவள்,
" ஏதோ இல்லப்பா அண்ணி வேணும்ன்னு ஒரு பேச்சுக்கு கேட்டேனா..டக்குன்னு ஓகே சொல்ட்டான். பாருங்கப்பா எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம்தான் இந்த சின்ன வயசுல அண்ணி கேக்குறான்...மேபி அவன் பார்த்து கூட வச்சிருக்கானோ என்னவோ..எனக்கு ப்ரீதி என்ன சொன்னான்னாஆஆஆ" நிலா வேணும் என்றே இழுக்க..

திரு திரு என விழித்த சதீஷ்
"இல்லப்பா அது நான்..நிலா..அப்பா பொய்ப்பா ப்ரீதி எனக்கு தங்கச்சி மாதிரி"என்று தடுமாற, சிவாவோ நிலாவின் விளையாட்டு தெரிந்திருக்க அவனைப்பார்த்து சத்தமாகச்சிரிக்க, நிலாவை முறைத்த சதீஷ் அவளை துரத்திக் கொண்டு ஓடினான்.

பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே வாசலை தாண்டி கார்டனில் ஓடியவள் யார் மீதோ மோதி விழப்போக பின்னால் வந்த சதீஷ் சட்டென அவளை விழாது தாங்கிப்பிடித்தான்.

அங்கு எரிமலையாய் கொதித்தவண்ணம் "what the hell" என்று கண்களாலே தீம்பிழம்பை உமிழ்ந்தவாரு நின்று கொண்டிருந்தான் சக்தி.

********************

"டேய் பாலு அதா போன தடவ ஒன்னு கூட தராம எல்லா சாப்டியே..ப்ளீஸ் டா ஒன்னே ஒன்னு தா..அக்கா பாவம்ல."

அவள் இடுப்பளவே உயரம் இருந்த பாலுவிடம் மானம் விட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் நம் நாயகி சாருமதி.

"ஹோய் யாரு,யாருக்கு அக்கா? பார்த்து பேசு..உன் வயசென்ன என் வயசென்ன..என் பெரியம்மா வயசு உனக்கு..அதெல்லா தர முடியாது. இது ஏ அண்ணா வெளியூருல இருந்து எனக்கு அனுப்பினது." அவளை ஏற இறங்க பார்த்து கூறி விட்டு சாக்லெட் கவரை தாண்டி கையில் வழிந்த சாக்லட்டை நாக்கால் உள்ளிலுத்துக்கொண்டான் பாலு.

பாரு நக்குறத பக்கவாதம் வந்த பல்லி மாதிரி, டேய் நான் உனக்கு பெரியம்மாவா இருடா மாட்டாமலா போவ மனதில் கறுவிக்கொண்டு "இங்க பாருடா அன்னக்கி உனக்கு ராமய்யா தோட்டத்துல அவாக்கு தெரியாம மாங்கா பிச்சி தந்தப்போ என்ன சொன்ன, உன் அண்ணா சாக்லட் அனுப்பினதும் தர்ரன்டல்ல..இப்போ கதைய மாத்துர" அவன் ரசித்து உண்ணும் அழகில் வழியபோன உமிழ்நீரை உள்ளிலுத்துக்கொண்டே நியாயம் கேட்டு நின்றாள் சாரு.

"அய்ய பே அந்த மாங்கா ஒன்னு கூட இனுப்பே இல்ல எல்லா புளி. அத பிச்சி தந்ததுக்கு உன்ன நா திட்டாம விட்டதே பெருசு."இவளை ஒரு பொருட்டாகவே மதிக்காது சாக்லேட்டை தொடர்ந்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டே பதிலளித்தான்.

குட்டி பிசாசு திமிர பாரு ஒன்னு தந்தா கொறஞ்சா போயிடுவ மனதினுள் அவனை திட்டி தீர்த்தவாரு வெளியே அன்பில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள்.

பின்னே வெளியூர் சாக்லேட்டுன்னா சும்மாவா.சிறு வயதில் எங்கோ கிடந்த ஒரு சாக்லட் கவரை புத்தகத்தினுள் பத்திரப்படுத்தியது முதல் கிராமத்திற்கு பெரிய ஐயா வீட்டுக்கு டீவி வந்து அதில் தினம் வரும் விளம்பரங்களை பார்த்து அவள் ஆவலாய் கண்ட கனவு என்று கூட சொல்லலாம்.கைக்கு எட்டியது இன்று வாய்க்கு எட்டாமல் போகலாமா?

அந்த குட்டி கிராமத்தில் பட்டணத்துக்கு போவது என்றாலே பெரும் அதிசயம் இதில் வெளிநாடு போவது என்றால்..வேற்று கிரகம் போனது போல் தான்.

பாலுவின் அண்ணா வேலுவிற்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிராமத்தில் முதல் ஆளாய் வெளி உலகில் கால் வைத்தான்.சாருமதியால் முதலில் நம்பவே முடியவில்லை. பாலு புளுகு மூட்டை என்ற புது பெயர் வேறு சூட்டி விட்டாள்.

ஆனால் வேலு பல நாள் கழித்து ஊர் திரும்ப ஏதோ அவனை வேற்றுக்கிரகவாசி போல் பார்த்தனர் ஊர் ஜனம்.

ஆத்த்திதி என்னடி இது சாக்கால எல்லாம் உடுப்பு போட்ருக்கான்.ஆளே மாறிப்போயிருந்த வேலுவைப் பார்த்து கிசுகிசுத்துக் கொண்டனர் சாருவின் தோழிகள்.

அவனைக்கண்டாலே மரியாதை நிமித்தமாய் அனைவரும் ஒதுங்கிப் போயினர்.

கிர்ரென்று விமானம் மேலேறிப்பறக்க ஆரம்பித்தது முதல் இவன் விமான யன்னலைத்திறந்து காற்று வாங்கியது , வாசலில் நின்று கீழே எட்டிப்பார்த்தது..ஏன் அவனை வரவேற்க அந்த நாட்டில் சிவப்புக் கம்பளம் விரித்து நாட்டுத் தலைவரே வந்து கூட்டிச்சென்று அவனை அவருடனே தங்க வைத்து உபசரித்தது வரை கூற ஊர் ஜனங்கள் ஆ என வாய் பிளந்தபடி விடிய விடிய கதை கேட்டது.
வாய் பிளந்த கூட்டத்துடன் ஒரு ஓரமாய் இருந்து கதை கேட்ட பின்னே நம்பினாள் சாரு.

நீண்ட நேரம் கெஞ்சியும் பயனில்லாது போக

" போடா பல்லு நீயும் உன் சாக்லேட்டும்..நாமளும் போவோம் அப்போ பார்த்துக்க சாக்லேட் என்ன சாக்லேட் நான் கோழி பிரியாணியே வாங்கி சாப்ட்டுவேன் பாரு"
சபதம் விட்டவாரு திரும்பி நடந்தாள் சாரு.

"ஏய் மக்கு சாம்பிராணி வெளியூர் போக முன்னாடி மொதல்ல இங்கிலீசு கத்துக்கோடி.."

பாலு இவள் பின்னே கூவ சுற்றி இருந்த வாணரங்கள் எல்லாம் கைகொட்டிச் சிரித்தது.

கருத்துக்களை பகிர

 
Last edited:

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 2 ❤

❤மொழிகளும்
மௌனமானது
உன் இரு
விழி மொழி
கொண்டு
நீ செய்த
மாயங்களால்❤

"Idiots"
எரிந்து விழுந்தவாரே தன் கோட்டின் மடிப்பை நீவிக்கொண்டான் சக்தி.

நிலாவும் சதீஷும் தலை குனிந்தவாறே நின்று கொண்டு கீழ்கண்ணால் ஒருவரை ஒருவர் முறைத்தவண்ணம் இருந்தனர்.

"நிலா"

சக்தி தொடங்கும் போதே அவன் தொலைபேசி சிணுங்க அதனை ஏற்று பேசியவாறே சற்று விலகி நடந்தான்.

அதுவரை அமைதியாய் குனிந்த தலை நிமிராமல் இருந்த இருவரும்,

"எல்லா உன்னாலதான்"
என்றவாறே நிமிர்ந்தனர்.

இருவரும் ஒரே சமயம் கூற கோபம் மறந்து இருவரும் சிரித்துக் கொள்ள, சக்தி இவர்களை நோக்கி வந்தான்.
சட்டென பழைய நிலைக்கே திரும்பினர் இருவரும்.
இருவரையும் ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன்
"நிலா" என உறும, தயங்கித்தயங்கி நிமிர்ந்தாள் நிலா.

"College இல்ல?"மீண்டும் உறுமலாய் ஒலித்தது.

"இ..இருக்கு"

" ஓஹ் அப்போ உங்களுக்கு டைம் போகலன்னு college போறிங்க..அதா அப்பா நிறையவே பணத்த கட்டி வெச்சிருக்காறே இல்ல."

"இல்லண்ணா"

"உஷ் இடையில பேசாத, look இப்போ அப்பாவொட கம்பனி அத்தனையும் என் கன்ட்ரோல்ர தான் இருக்கு mind it. உனக்கு டைம் போகலன்னு college போய் படிப்ப கேவலப்படுத்தாத..அப்படி நீ நெனச்சா தாரளமா வீட்ல இரு. உண்மையிலே படிப்பு அவசியமான ஒருதர்க்கு அந்த வாய்ப்ப கொடுத்துட்டு. இல்ல உனக்கும் உண்மையிலே படிக்கனும்னு நினைச்சா இந்த விளையாட்டு எல்லாம் ஓரமா வெச்சிட்டு படி. Idiot understood?"

கர கர என கண்ணீர் வடிய தலையை அவசர அவசரமாக ஆட்டினாள்.
நிலாவைப்பார்க்க பாவமாக இருந்தது சதீஷிற்கு. இவளுக்குத்தான் எத்தனையோ முறை சொல்லிருக்கேனே அண்ணா இப்படித்தான் அவர் சொல்ரத இந்த காதால வாங்கி அந்த காதால விட்டுடுன்னு. அப்பக்கூட அழுதுகிட்டு நிற்கிறத பாரு.

"சதீஷ்"

அய்யய்யோ நம்மளுக்கு இன்னும் அர்ச்சனை தொடங்கவே இல்லையே எப்படி மறந்தேன். எண்ணியவாறு அவனை நோக்க, சக்தி அவனை நிதானமாக தலை முதல் பாதம் வரை பார்த்தவன்.

"எதுக்கு" என்றான் ஒற்றை சொல்லாக

" இன்னக்கி நிலா college ல function அதுக்கு..guest ஆ.."
அவன் இழுக்க,

கையைக்கட்டியவாறு மேலே சொல்லுமாறு சைகை செய்தான் சக்தி.

"Guest ஆ இன்வைட் செய்திருக்காங்க அதுக்கு..போகத்தாண்ணா."
தயங்கித்தயங்கி கூறி முடித்தான் சதீஷ்.

"எப்படி இன்வைட் பன்னினாங்க?"

"இன்விடேஷன் அனுப்பினாங்கண்ணா."

"Hm hm அதுல எப்படி போட்டிருந்தாங்க?"

"கெஸ்ட்டான்னு"

"அதுல இருந்தத அப்படியே ஒரு word மிஸ் பன்னாம சொல்லு"

என்னடா இது வம்பு இன்விடேஷன நான் என்ன உட்கார்ந்து பாடம் செய்தா வெச்சி இருக்கேன். இருந்தாலும் ஒருவாறு பொது அறிவு கைகொடுக்க,

"We have great pleasure in inviting 'RK designers' as cheif guest to our 20th annual prize giving to be held on tuesday the 15th of may 2019 at 9.00 am at the college auditorium".

அவன் கூறி முடிக்க, நிலாவுக்கோ சதீஷின் நிலை மிகுந்த வேடிக்கையாக இருந்தது, கண்ணீரையும் மறந்து கைக்குட்டையால் வாயை மூடிச்சிரித்தாள்.

" so சதீஷ் அதுல உன் பெயர் மென்ஷன் பன்னி இல்லல?" நிதானமாக சக்தி வினவ, அப்போது தான் சதீஷிற்குப்புரிந்தது.

அடப்பாவி நீ இருந்து வேலைய பாரு நான் போறேன்னு சொல்லியிருந்தாலே சரின்னு பேசாம என் பாட்டுக்கு போயிர்ப்பேனடா எண்ணியவாறே வெளியில் "இல்லண்ணா" என்றான் பவ்யமாக.

"நீ அங்க கெஸ்ட்டா போய், இன்னக்கி function போனேன்னு full day கம்பனி பக்கம் தல காட்டாம இருக்க உன் plan இல்ல? போ போயி கிளம்புற வழிய பாரு. நம்ம கம்பனிதானன்னு லேட்டா போகலாம் நினைக்காத நான் டேவிட் கிட்ட சொல்லித்தான் இருக்கன் உன்ன பற்றி. ஓல்சோ உனக்கு இன்னும் செலரிதான் நியாபகம் இருக்கட்டும்." சக்தி நகர,

"அண்ணா அப்போ function?"
அவன் நின்று திரும்பி முறைத்த முறைப்பில் இவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

" சிடுமூஞ்சி போயாச்சி..டேய் சதீஷ் ஏன்டா சக்திண்ணா எப்போ பாரு இப்டி சிடு சிடுன்னே இருக்கான்" நடந்தவாறே கேட்டாள் நிலா.

" இது என்ன புதுசா..இவன் கேரக்டர் இப்படித்தான். எல்லார்கூடயும் இப்படித்தான இருக்கான் விடு."

"இவன் மாறவே மாட்டானா?"

"ஹாஹா இவன் மாறலன்னாலும் இவன மாற்ற ஒருத்தி வருவாடி.."

"அப்படிங்குர...அந்த மகாராசி சீக்கிரம் வரனும்பா..என்னால முடியல.."
இருவரும் சிரித்தவாறே வீட்டை நோக்கி நிதானமாய் நடக்க..
காற்றில் மிதந்து வந்த
"No more talks..just get lost"என்ற சக்தியின் வசையில் இருவரும் கிட்டத்தட்ட பறந்தே போய் வீட்டை அடைந்தனர்.

*******************

"இங்கிலீசு ச்ச்சச பெயர பாரு. தத்தா பித்தான்னு இருக்கு பேசும் போது.ஆனா அதில்லாம வெளியூரு போக முடியாதமே வேலு சொன்னானே.ஆனாலும் விடக்கூடாது அந்த பல்லு ரொம்பதான்ல பன்றான். பாருடா அந்த லீச ச்ச இந்த பேரு வேற வாய்லே நுழைய மாட்டேங்குது..
இங்கிலீச கத்துக்கிட்டு வெளியூரு போய் பிரியாணி வாங்கி சாப்பிட்டு காட்டுவாடா இந்த சாரு."

நடந்துகொண்டிருந்தவளைத் தடுத்தது அனிதாவின் அழைப்பு.

"சாரு சாரு"

நின்று திரும்பியவள்,
"என்னடி எதுக்கு இப்போ என் பெயர ஏலம் போட்ர?"

இவளுக்கு என்னாச்சி எனப் பார்த்தவள்
"எல்லா ஒரு விஷயம் சொல்லத்தா ஆனா நீ தான் ஏதோ கோபமா இருக்காப்பல, நான் அப்புறம் வாரன்" என்று அவள் முறுக்கிக்கொண்டு திரும்பி நடந்தாள்.
ஒருவாரு அவளை தடுத்து கெஞ்சிக் கொஞ்சி கூற வைக்க,

"சரி விடு, என்னன்னா நம்ப ஊர்க்கு தண்ணீ எடுக்குறது விஷயமா பெரியவுக பேச வர்ரத அன்னிக்கு பெரிய அய்யா சொன்னாகல"

"ஆமா ஆமா.."

"ஹா அவுக இன்னக்கி சாயங்காலம் வாரகலாம். அதோட முக்கியமான சமாச்சாரம் என்னன்டா உஷ்ஷ் யார்கிட்டயும் சொல்லிராத, அவுக பெரிய்ய்ய்ய கார்ல வாரகலா டி"

"ஹய்ய்யா நிஜமாவா சொல்லுர?"

"ஆமா அதேன் உன்கிட்ட சொல்லிட்டு போகலா வந்தேன். மண்டபத்துல கூட்டம் இருக்கும். நாம நாலு மணிக்கெல்லா போயிர்லா என்ன? யார்கிட்டயும் சொல்லிப்புடாத. மீனாட்சிக்க இருக்குல், அதான் பெரிய அய்யா வீட்டுல தோட்ட வேல செய்வாகலே அவுக தான் என்கிட்ட சொன்னாங்க. நான் உன்கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கேன். சரி சரி கிளம்பி இரு நான் வர்ரன்."

சாருவிற்கு எப்போடா சாயங்காலம் ஆகும் என்றிருந்தது. அனிதாவின் நட்புக்கு கோயிலே கட்டலாம் என வியந்து கொண்டிருந்தாள். என்னமாய் நட்பு நம்மகிட்ட மட்டும் சொல்லிருக்காலே. பெரிய காரைப் பார்க்கலாம் என்ற பூரிப்பினுள் பாலுவின் சமாச்சாரம் புதைந்து கொள்ள குதித்தவாறே வீட்டை நோக்கி சிட்டாய்ப்பறந்தாள் சாரு.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 3 ❤

❤தினம் கடந்து
சென்றிடும் நிலவும்
ஓர் கணம் நின்று
எனை பார்த்திட
கண்டேன்..
என் மாயவள்
அவளின் வருகையை
அறிவித்திடத்தானோ❤

சாருமதி அவள் குடும்பத்திற்கு ஒரே மகள். அப்பா சாதாரண விவசாயி, அம்மா அவளுக்குத்தெரிந்த அலங்காரப்பொருட்கள், பின்னல்கள், மண் பொருட்கள் என கைவேலைப்பாடுகளை தானே தயாரித்து வீட்டிலே சிறிய கடை போட்டு விற்பனை செய்வாள்.

இருவருக்கும் மகள் என்றால் உயிர், அவளுக்கு தேவையானதைப்பாரத்து பார்த்து செய்வார்கள். ஆனால் அவளது ஒரே ஆசை தான் நிராசையாய்ப்போனது. அவளுக்கு அந்த குட்டி கிராமத்திலிருந்து வெளியே போய்ப்பார்க்க வேண்டும் என்று ஓர் ஆசை.
ஆனால் என்ன செய்வது அந்த கிராம மக்களுக்கு அந்த கிராமம் தான் உலகம் ஊர் பெரிய ஐய்யா வைப்பது தான் சட்டம். அவர்களது மூதாதையர்கள் வெளியேறக்காட்டிய தயக்கம் பிற்காலத்தில் ஓர் கட்டுப்பாடாக உருப்பெற்றது கிராமத்தினுள். பல தலைமுறைகள் வெளியுலகைக் காணாதே மடிந்து போனது.

சாருவின் பெற்றோர்களுக்கு மற்றைய அந்த கிராமத்து பெற்றவர்கள் போல் பெண்பிள்ளை என்றால் கட்டுப்பாடு என்ற கோட்பாடெல்லாம் கிடையாது. ஆனாலும் சாருவின் ஆசையை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை காரணம் கிராம கட்டுப்பாட்டை மீற துணிவு வரவில்லை. ஆண்களே இன்னும் கிராமத்தை விட்டு வெளியேறாது இருக்க ஒரு பெண் பிள்ளையை வெளியே அனுப்பும் அளவு அந்த கிராமம் எப்போது முன்னேறுமோ அவர்களுக்குப் புரியவில்லை.

சாருமதி சாதாரண பெண்களிலும் பார்க்க சற்று உயரம் குறைவாக இருந்தாலும் அவளுக்கு அதுவே சுட்டியாக மேலும் அழகை சேர்த்தது. இடையையும் தாண்டிய நீண்ட கூந்தல் அடர்த்தியாக பின்னலிட்டு அவள் நடையை மெருகூட்ட சந்தனத்தை குழைந்து அதில் கொஞ்சமாய் குங்குமம் இட்டால் தோன்றிடும் நிறம் அவள் நிறத்திற்கு ஒப்பாக..பார்த்து பார்த்து வடித்த சிற்பியின் கைவண்ணத்தில் மிளிர்ந்திடும் சிலை போன்ற அழகில் பார்ப்பவர்களை மீண்டும் பார்த்திட தூண்டும் அளவு இருந்தாள்.

கிராமத்தில் இவள் வயது இளம் பெண்கள் எல்லாம் பாவாடை தாவணி அணிய இவளோ தானே புதிது புதிதாக தன் கற்பனையில் ஆடைகளை தன் அட்டைக்கொப்பியில் வரைந்து அது போல் தானே உருவாக்கி அணிந்து அழகு பார்ப்பாள்..ஊரில் மற்றய பெண்களும் கொஞ்சம் கொஞ்சமாய் இதன் பால் கவரப்பட அதே சமயம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஊர் பெரிய ஐயா.. இது போல் எல்லாம் பெண் பிள்ளைகள் அணிவது முறையல்ல என்றதோடு சாருவும் இது போல் இனிமேலும் ஆடைகளை வடிவமைத்து தங்களது கலாச்சாரத்தை கெடுக்க கூடாது என கராராய் கூறி விட்டார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அதன்படி நடந்தாள் அது சாருவா என்ன.. தனக்கு பிடித்ததை அதிலும் சரியானதை செய்ய அவள் பெற்றோரே தடை விதிக்காத போது வேறு என்ன வேண்டும்.. ஊர் பெரிய ஐயாவைக்கண்டாள் ஒழிந்து கொள்பவள் ஏனைய நேரம் எல்லாம் பட்டாம்பூச்சியாய் வலம் வருவாள். ஊர் மக்களின் செல்லப்பிள்ளை என்பதால் அனைவரும் இரசிக்கவே செய்தனர் இவளது சேட்டைகளை.
இருந்தாலும் சில நேரம் பெரிய ஐயா முன் தலை குனிந்து முதலைக்கண்ணீர் வடிக்காமல் தப்பியதும் இல்லை ஊர் வாண்டுகளுடன் சேர்ந்து செய்திடும் சேட்டைகளில் கையும் களவுமாக மாட்டிடும் வேளைகளில்.

கிராமத்தில் கல்வியில் அவ்வளவு முன்னேற்றம் இல்லாவிட்டாலும் அவளாகவே முயன்று நிறைய கற்றுத்தெரிந்திருந்தாள். எதையும் ஒளிவு மறைவு இன்றி துணிந்து யாரிடமும் கேட்டு விடுவாள். அதேபோல் எங்கும் நியாயத்தை விட்டுக்கொடுத்ததும் இல்லை தவறை கேட்க தயங்கியதும் இல்லை. அவளிற்கு பிடித்த மிகவும் பிடித்த ஒன்று என்றால் அவளது அட்டைக்கொப்பியும் பென்சிலும் தான் அதனைப்பிரிந்து இருக்கவும் மாட்டாள். கிராமத்தில் அவள் அடையாளமும் கூட அந்த அட்டைக்கொப்பியும் பென்சிலும் தான். அவள் அறிந்திருக்கவில்லை தன் வாழ்வையே புரட்டிப்போடும் வலிமை அதற்கு இருக்கும் என்று.

*******************

"Dammit"
உயர் ரக வெள்ளை நிற துணியில் தைக்கப்பட்ட அந்த நீண்ட wedding gown ஐ தன் கோபம் முழுவதையும் காட்டி தூர எறிந்தான் சக்தி.

அவன் கோபத்தின் காரணம் தெரியாது கைகளைப்பிசைந்தவாறே நின்று கொண்டிருந்தாள் RK designers யின் பெஷன் டிசைங்கனர்ஸ் குழுவின் டீம் லீடர் ரம்யா.
"சார் எ..துக்கு?"

"Idiot just shut up..எதுக்குன்னா கேட்குற..நான் உனக்கு இந்த ட்ரெஸ்க்கு நெட் எடேட்ச் பன்னு என்று சொன்னேனா?"

"இல்..ல சார் அதுக்கு இதையும் சேர்த்தா நல்லா இருக்கும்னு.."
திக்கித்திக்கி பதில் அளித்தாள் ரம்யா.

"ஓஹ் great வாங்க வாங்க take this seat..நான் இங்க எதுக்கு"
என்றவாறே அவன் எழுந்து அந்த சீட்டை இவள் பக்கம் நகர்த்த அவமானத்திலும் பயத்திலும் மிரண்டவாறே இரண்டடி பின்னகர்ந்தாள்.

" அதிகப்பிரசங்கித்தனமா நடந்துக்காம நான் சொல்லுறத மட்டும் செய்ய பழகு. அது தான் உன்னோட வேலை and அதுக்கு தான் நான் சம்பளம் கொடுக்குறதாகவும் ஞாபகம் எனக்கு. இன்னக்கி ஈவ்னிங் சிக்ஸ்குள்ள எனக்கு இது நான் சொன்ன டிசைன்ல வேணும் get lost"
கர்ஜித்தவாறே கோபம் முழுவதையும் அந்த சீட்டில் காட்டி இழுத்துப்போட்டு அமர்ந்தான் சக்தி.

கண்களில் கண்ணீர் முட்ட தலையை ஆட்டியவள் அவன் விட்டெறிந்த ஆடையை எடுக்க செல்ல..
"Stop...நீ அதனை வைத்து செய்ய கூடாது..you must start from the Beginning go"

மீண்டும் தலையை ஆட்டியவள் வெளியே வந்து மணியைப்பார்க்க அது காலை பத்து என காட்டியது. அது அவளது குழுவின் மூன்று நாள் உழைப்பு அதனை எட்டு மணி நேரத்தில் அதுவும் அவள் மட்டும் முடிப்பது பெரிய சவால் தான். இன்று சப்மிட் செய்யும் நாள் என்பதால் இவர்களின் குழுவில் மற்றையவர்களை வர தேவையில்லை என்று கூறியிருந்தாள்.. இப்போது அது வேறு தெரிந்தது என்றால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிப்பானே..

"ஹம்" ஒரு பெருமூச்சோடு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தன்னிடம் வந்தவள் களைப்பை எல்லாம் தூக்கி ஒரு ஓரமாய் மூட்டை கட்டி விட்டு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தாள். முடியும் என்று நினைத்துவிட்டால் முடியாதது தான் உலகத்தில் ஏது..இது தன் திறமைக்கு சவால் என எப்போதும் போல் முடியாத ஒரு விஷயத்தை செய்ய தொடங்கும் போது எண்ணுவதையே மனதில் நிறுத்திக்கொண்டு புன்னகையோடு ஆரம்பித்தாள் ரம்யா.

*********************

மதியம் இரண்டு மணிக்கெல்லாம் தயாராகி அம்மாவையும் அப்பாவையும் வறுத்து எடுத்துக்கொண்டிருந்தாள் சாரு.

"அம்மா அவ்ளோ பெருசாம்மா காரு. அனி சொன்னா. மீனாட்சிக்கா கூட பார்த்தாங்களாம். நான்கு சக்கரம் இருக்குமாம்...அது நாலும் உருண்டு போகும் போதுதான் காரு போகுமாம்..அம்மா நீயும் வாயேன் பார்க்க போலாம்.."

பெரிய கருவிழிகள் மின்ன கைகளை விரித்து கதை சொல்லிக்கொண்டிருந்தவளை இரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள் காயத்ரி.

"அம்மா"
அவளது இரண்டாவது அழைப்பில் தன்னிலை அடைந்தவர்..
"இல்ல பாப்பா நீ பார்த்துட்டு வா சரியா."

"போம்மா நீ.."
சிணுங்கியவாறே அப்பாவிடம் சென்றவள்
"அப்பா நீயாவது வாயேன்"

"பாப்பா அப்பா வயலுக்கு போகனும்ல" தலையைத்தடவியவாறு கூற..
"சாரு சாரு" வாயிலில் அனிதாவின் குரல் ஒலித்தது.

"ஹை அனி வந்துட்டா..அப்பா ம்மா நான் வர்ரன்"
துள்ளிக்குதித்து ஓடினாள் சாரு.

"வாடி போகலாம்"
சாரு முன்னே நடக்க..அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள் அனிதா. நின்று திரும்பி, சாரு என்ன என வினவ..

"இந்த துணியோடா வர போற?"

அவள் கஷ்டப்பட்டு பாலுவிடம் பந்தயம் கட்டி அதில் வெற்றி பெற்ற போது அவனிடம் இருந்து கிட்டத்தட்ட பிடுங்கிய ஒரு செய்தித்தாளில் இருந்த ஓர் ஆடையை இவள் சற்று மாற்றி தைத்து அணிந்திருந்தாள்.பாதம் வரை நீளமாக இருந்த அந்த ஆடையைப்பார்த்து கேட்டாள் அனிதா.

ஒருமுறை சுற்றி அவளிற்கு அழகு காட்டியவள்
"ஆமாம் ஏன்" வினவ அவள் சுற்றும் போது அழகாய் குடை போல் விரிந்து விட்டு அடங்கிய அந்த உடையைப்பார்த்தவளினுள் சற்றே ஏக்கம் எட்டிப்பார்க்க
"ஹ்ம் எப்படி டி நீயா அதுவும் கையாலயே இப்பிடி விதம் விதமா செய்யுற.. என்ன பன்னுறது ஆசையாதான் இருக்கு ஆனால் ஐயா அவுக தான் விட மாட்டாங்களே..உன்ன போல தப்பிச்சிக்க சாமார்த்தியம் வேணாமா எங்களுக்கு..அதுவும் இல்ல..சரி எதுக்கு வீண் வம்பு..சரி டி வா போலாம்... இரு இரு கையில அது எதுக்குடி இப்போ?"
சாருவின் கையில் இருந்த அட்டைக்கொப்பியை காட்டி அனிதா கேட்க..
"நான் தான் இத விட்டு இருக்க மாட்டேனே..உனக்கு என்ன கஷ்டம் இப்போ நான் இத எடுத்து வாரதுல..பேசாம வா காரு வந்திட போகுது." சாரு நடக்க..
"என்னமோ செய்"
அனிதாவும் கூடவே நடந்தாள்.

இருவரும் கூட்டம் நடக்கும் இடம் வந்தடைந்தனர். அந்த பழங்கால மண்டபம் இன்று வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. மண்டபத்தினுள் சென்ற சாருவும் அனிதாவும் அங்கு வரிசையாய் போடப்பட்டிருந்த கதிரைகளைப்பார்வையிட்டவாறே முன் வரிசையை அடையவும் பெரிய ஐயாவின் கண்ணில் மாட்டவும் சரியாய் இருந்தது.
அவர் பார்வையிலேயே புரிந்து கொண்ட சாரு அவர் முன்னால் போய் அவரை முந்திக்கொண்டு

"என்ன ஐயா உடம்புக்கு ஒன்னும் இல்லையே.. எதுக்கு இது எல்லாம் நீங்க இழுத்துப்போட்டுட்டு செய்யுரீங்க பாருங்க எப்படி வியர்த்து இருக்கு என்று முதல்ல இப்படி உட்காருங்க.."அவரை வழுக்கட்டாயமாய் அமர வைத்தவள அவரிற்கு பேசவே அவகாசம் அளிக்காது..
"ஏலே குமாரு ஐயாவுக்கு குடிக்க நல்ல கூல்லா சோடா எடுத்திட்டு வெரசா வா போ" அங்கிருந்த வேலையாளை விரட்டிவிட்டு தன் அட்டைக்கொப்பியால் விசிற தொடங்கினாள்.

பெரிய ஐயாவுக்கும் இவள் அன்பில் எல்லாம மறந்து போக ஆனால் அனிதா தான் மூக்கில் விரல் வைத்தவண்ணம் இருந்தாள்..
"பெரிய ஐயாகிட்ட பேசவே நடுங்கும் இவள் என்னடான்னா பிடிச்சி உட்கார வச்சி விசிறிட்டு வேற இருக்கா..அவரும் சிரிச்சிட்டேல்ல இருக்காரு..எல்லாம் கொடுமை தான் போ.."

திடீரென ஒருவன் "ஐயா ஐயா அவுக வாராக" என்று பதறியவண்ணம் ஓடி வர பதட்டமான அனைவரும் வருபவர்களை வரவேற்க தயாராக இவர்கள் இருவரும் மண்டபத்தை விலகி ஒரு ஓரமாய் போய் நின்று கொண்டனர்.
சர்ரென விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது ஒரு கார். கறுப்பு நிறத்தில் படகு போல் நீளமாக இருக்க மினுமினுப்பாய் இருந்த அதன் மேல் அந்தி மாலை வெயில் பட்டுத்தெறிக்க வாய் தானாக அதிர்ச்சியில் திறந்து விட கண்களை விரித்து விரித்துப்பார்த்துக் கொண்டிருந்தாள் சாரு.

இதுவரை கார் என அம்மா அவர் கற்பனைக்கு எட்டியது போல் வரைந்து காட்டியது தான் சாரு கண்டிருந்த கார். ஆனால் அதற்கும் இதற்கும் ஒரு பொருத்தம் கூட இருக்காதே.
காரின் ஒருபக்கம் விரிந்து இறங்க வழி கொடுக்க..காரிலிருந்து இறங்கிய பெரியவரையே அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க சாருவோ காரின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்களால படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

முன்னே நடந்து சென்ற பெரியவர் மேடையில் ஏறி முன்வரிசையில் அமரச்செல்ல அவர் கால்களுக்குத்தடுக்கியது ஏதோ ஒரு பொருள்..அவர் கையில் எடுத்த பொருளைக்கண்ட ஊர் ஜனம் பதட்டத்துடன் கண்களால் சாருவை அலச அவளோ நடந்த எதுவும் புலப்படாது காரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 4 ❤

❤கனவில் தோன்றினாய்
மாயமாய் போனது
உறக்கமும்...
நினைவில் பதிந்தாய்
மாயமாய் போனது
நிதர்சனமும்...❤

சிவாவின் தந்தை சிதம்பரம் பலரும் தன்னை பார்த்திட வேண்டும் ஊரில் தன்னை மிஞ்சிட யாரும் இருக்க கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அதற்காகவே கஷ்டப்பட்டு உழைத்து ஊரிலே பெரும் பணக்காரர் என்ற இடத்தையும் பிடித்தவர். கணவன் எவ்வழியோ தானும் அவ்வழியே என வாழ்பவர் கனகா.
ஆனால் இருவருக்கும் எதிர்மாறாய் அன்பை மட்டுமே பெருமளவு மதிப்பவர் இவர்களது ஒரே மகன் சிவராம். இதனாலேயே இதுவரை தன் பெற்றறோரை எதற்கும் எதிர்த்திடாத சிவா முதன் முதலாக தன் காதலிற்காக எதிர்த்து யாரும் துணையின்றி தவித்த சாவித்ரியை கரம் பற்றி ஊர் விட்டே வெளியேறினார். சிதம்பரமும் தன் கௌரவம் தான் முக்கியம் என சிவா தன் மகனே அல்ல என கூறிவிட்டார்.

முதலில் கூலிக்கு சிறு வேலைகளை செய்த சிவா தன் நெருங்கிய நண்பன் உதவியுடன் தங்குவதற்காக ஒரு சிறு வீடு மட்டும் எடுத்தார். சாவித்ரிக்கு சிறுவயது முதல் புதிய விதங்களில் ஆடைகளை வடிவமைப்பதில் பெரும் ஆர்வம் இருக்க அதுவே பொழுதுபோக்காய் ஆனது.
ஒருநாள் சாவித்ரி தன் வேலையில் மூழ்கி இருக்க இதனைப்பார்த்த சிவாவிற்கு உதித்தது அந்த எண்ணம். முதல் வேலையாய் சாவித்ரி ஏற்கனவே வடிவமைத்திருந்த ஆடைகளை கடைகளில் கொண்டு போய் காண்பிக்க இவர் தோற்றம் கண்டே சிலர் பார்க்காமலேயே தட்டிக்கழிக்க இருந்தும் விடாது பல கடைகள் ஏறியவருக்கு பலன் கிடைத்தது ஒரு கடையில். முதலில் இருந்த சில ஆடைகளை விற்பனைக்கு வைக்க போகப்போக விற்பனை அதிகரித்து மக்களிடையே ஆடைக்கான கேள்வியும் அதிகரித்தது.

முதலில் ஒரு கடைக்கு விற்பனைக்கு இவர்கள் தயாரித்து வழங்க பின் அதுவே பல கடைகள் என மாறி..சதீஷ் பிறந்த பின் வெற்றிகரமாக தொடங்கியது RK designers. ஆடர்களுக்கு பெரிய அளவில் ஆடைகளை தயாரித்து வழங்குவதோடு சாதாரண ஆடைகளையும் தயாரித்து விற்பனைக்கென RK collection ஆடை நிலையமும் தொடங்கியது. தரமான துணிகளில் புதுவித அலங்காரங்களில் உற்பத்தி செய்திடும் RK உற்பத்திகளுக்கு என்றுமே மக்களிடம் முதலிடம் தான்.

சிவா கம்பனி அனைத்து கிளைகளின் பொறுப்பையும் சக்தியிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்க..இதுவரை சிவாவின் அன்பு கலந்த கட்டளைகள்..பொறுமையாய் எதையும் விளக்கிடும் தன்மை என பழக்கப்பட்டிருந்த அனைவருமே சக்தியின் இயல்பில் திணறித்தான் போனார்கள்.

சக்தியின் அகராதியிலேயே பொறுமை என்ற ஒன்று கிடையாது. என்னதான் ஆறடி உயர்த்தில் ஆணழகனாய் பல பெண்களின் கனவு நாயகனாக இருந்தாலும் யாரும் அவனை நெருங்கிட மனதால் கூட எண்ணியதில்லை.. காரணம் விலகியே நில் என கூறு போட்டிடும் அவனது துளைக்கும் பார்வை தான். சிரிக்கவே தெரியாத அவனது அழுத்தமான உதடுகள் சில நேரம் மட்டும் புன்னகை என்ற பெயரில் கொஞ்சமாய் நெளியும். அதுவும் சாவித்ரியுடன் மட்டுமே. என்னதான் எண்ணையில் போட்ட கடுகாய் எப்பொழுதும் பொரிந்து கொண்டே இருந்தாலும் இன்னும் தாய்மடி தேடிடும் குழந்தை தான் சக்தி.

அவன் பலம்..பலவீனம் இரண்டுமே சாவித்ரி தான். தன் மகனின் குணம் கண்டு கவலை கொண்டிடும் சாவித்ரிக்கு எப்போதுமே ஓர் நம்பிக்கை உண்டு. தன்னிடம் மட்டுமே இயல்பாய் இருக்கும் சக்திக்கு நிச்சயமாக தன் குணத்தை ஒத்த ஒரு பெண் அவனிற்கு பிறந்து தான் இருப்பாள் என்று...

கையில் எடுத்த அந்த அட்டைக்கொப்பியை விரித்தவரது கண்கள் ஆச்சரியத்தில் விரிய அதேவேளை நினைவலைகளும் பின்னோக்கி பாய்ந்தது. வாய் தானாகவே " யாரோடது இது" என உதிர்க்க...

பதட்டமடைந்த பெரிய ஐயா முன்னே வந்து..
"மன்னிச்சிடுங்க ஐயா. இது இந்த சாரு சிறுக்கியோடது..புள்ள தெரியாம இங்க போட்டிருக்கும் தப்பா எடுக்க வேணாம்ங்க."

பணிவாய் அவர் பேச..அவரைப்புரியாது பார்த்த பெரியவர் "இதுல தப்பா எடுக்க என்னங்க இருக்கு..அந்த பெண்ண நான் பார்க்கனும்."

அவர் கேட்க ஊர் ஜனங்களின் பார்வைகளோ பல விதமாக இருந்தது. அனைவரது பார்வையிலும் அதிர்ச்சி, ஆச்சரியம், பயம் என பலவும் கலந்திருந்தது.

"சரிங்க ஐயா..நான் வரச்சொல்லுரன். அதற்கு முன்னமா இந்த கூட்டத்த முடிச்சிக்கிட்டா...."பெரிய ஐயா இழுக்க, பெரியவரும் சம்மதமாய் தலை அசைத்து விட்டு முன்னே நடந்தார்.

****************

" அம்மா உன் மகன்கிட்ட நீயே கேளேன்மா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..."
சாவித்ரியின் சாரியில் தொங்கியவாறு அரைமணிநேரமாய் சுற்றிக்கொண்டிருந்தாள் நிலா.

"கொஞ்சம் போயேன்டி நிலா. நானும் அரைமணிநேரமா ஒரே பதிலதான் சொல்லுரன்.நீயாச்சி உன் அண்ணணாச்சி..அவனுக்கு தான் இந்த தூது போறது எல்லாம் புடிக்காது தெரியும்ல..நீயே கேளு அவ்ளோதான்"

"போம்மா காமடி பன்னாம..உன் மகன் இதோ பக்கத்து தெருல இருக்க ப்ரீதி வீட்டுக்கு போகனும்னாலே இரண்டு நாள் முன்னாடி permission வாங்கனும்..போனா one hour ற்கு மேல இருக்க கூடாது..இதெல்லாம் கூட பரவாயில்ல போறதுக்கு permission latter வேணும் அதுல எங்க போறன்..எப்ப போறன் ஏன் எத்தன மணிக்கு போறேன்னு கூட எழுதி அவன் signature வாங்கனும்..இதுக்கே இப்படின்னா இரண்டு நாள் ட்ரிப் போக நான் கேட்டா விடுவானாம்மா..ப்ளீஸ்மா.."
நீண்ட நேரம் விளக்கி விட்டு கடைசியில் ப்ளீஸுடன் அவள் பின்னால் திரும்ப அங்கு அம்மாவிற்கு பதிலாக சதீஷ் தான் நின்று கொண்டிருந்தான்.

"டேய் அண்ணா..என்னடா ஒருநாளும் இல்லாத அதிசயமா இன்னக்கி நாலு மணிக்கு வந்திருக்க.."
கேட்டவள் சத்தத்தை குறைத்து இரகசிய குரலில்..
"சிடுமூஞ்சி விட்டிச்சா உன்ன நம்ப முடியலயே"
யோசனையுடனே இழுக்க...

அவளருகில் வந்த சதீஷ் அவள் தலையில் செல்லமாகத்தட்டி "சிடுமூஞ்சா..அண்ணா முன்னாடி தான் சொல்லிப்பாரேன்..ஆமா என்ன வரும் போது ஒரே சோக கீதமா இருந்திச்சே.."

"அதுவா அது பக்கத்து தெரு ப்ரீதி.."
அவள் ஆரம்பிக்க பதறியவாறே தடுத்தவன்.."ஐயோ அதெல்லா கேட்டேன்டி முதல்ல இருந்து ஆரம்பிக்காம உன் பிரச்சினை மட்டும் short a சொல்லு"

"Permission latter..sign வேணும்"
முகத்தைத் தொங்கப்போட்டவாறே latter ஐ நீட்டினாள் நிலா.

அதை வாங்கிப்படித்த சதீஷ்
"ஹ்ம்ம் 2 days...கொஞ்சம்...கொஞ்சமில்ல நல்லாவே கஷ்டம் தான். கண்டிப்பா sign பன்னவே மாட்டான். அதாவது பரவாயில்ல நீ இதை கொண்டு போய் கொடுத்தாலே உனக்கு நிச்சயாமா குறைந்தது 2 hours lecture கன்பர்ம்..கண்டிப்பா போயே ஆகனுமா..?"

"அண்ணா.."

"சரி சரி முகத்தை அர கிலோ மீட்டர் இழுக்காத..நாம இதுக்கு கொஞ்சம் நம்ம மூளையில கிரிமினல் சைட்ட யூஸ் பன்னலாம்..follow me" சதீஷ் முன்னே நடக்க...

"சதீஷ் என்னடா பன்ன போற?"
கிசுகிசுத்தவாறே அவனைப்பின்தொடந்தவள், அவன் நேராய் மாடிப்படி ஏறிச்சென்று கடைசியாய் இருந்த அறைக்கதவின் பூட்டில் கை வைக்க..
"ஐயோ சதீஷ்..வேணான்டா"
என்று அலரியவாறே தடுத்தாள் நிலா...

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 5 ❤

❤காற்றும் காதில்
உன் பெயர்
சொல்லிட..
இருளிலும் உன்
விம்பம் என்
விழிகளில்..
முடிவில்லா
மாயங்களின்
ஆரம்பமாய் நீ..❤

"சதீஷ் என்னடா பன்ன போற?"
என பல முறை கிசுகிசுத்தவாறே அவனைப்பின்தொடந்தவள் பதில் கிடைக்காமல் போக சலிப்புடன் அவனை பிடித்து இழுக்க அதேநேரம், அவன் நேராய் மாடிப்படி ஏறிச்சென்று கடைசியாய் இருந்த அறைக்கதவை நெருங்கி பூட்டில் கை வைக்கவும் சரியாய் இருந்தது..

"ஐயோ சதீஷ்..வேணான்டா"
என்று அலரியவாறே அவனை தடுத்தாள் நிலா.

"உஷ் சும்மா இரு.." அவளை அமைதிப்படுத்தி விட்டு அவன் தன் வேலையை பார்க்க..

"ஓய் அண்ணா ரூம்டா சதீஷ்..இங்க க்ளீன் பன்னவே உள்ள வர கூடாது..இதுல இப்போ எதுக்கு நீ உள்ள போற?" பயம் சந்தேகம் என பலதையும் கண்களில் தேக்கி அதோடே இதுக்காக இருக்குமோ என்ற எண்ணத்தையும் சேர்த்து சதீஷை பார்த்தாள் அவள்.

"தாங்கள் என்ன எண்ணுகிறீறோ அதுவே நான் உள்ளே நுழைவதன் காரணமும்.." கண்களை மூடி ஏதோ வரம் அளிப்பது போன்ற பாவனையில் கூறினான் அவன்.

"அண்ணா சைன்ன கொபி பன்ன போறியா?"
உறுதிப்படுத்திக்கொள்ள கண்கள் விரிய அவனிடம் கேட்டவளிடம்..

"அதுவே" என்று அதே பாவனையில் கூறிவிட்டு மீண்டும் கதவைத்திறக்கப்போனான் சதீஷ்.

"டேய் டேய் இருடா..போய் சாமிக்கு ஒரு பூஜை பன்னிட்டே வந்து திறக்கலாம்."
மீண்டும் தடுத்தவாறே நிலா கூற..

"நாம என்ன பேய் ரூம்முக்கா போறம். அதோட பூஜைக்கெல்லாம் இங்க நேரம் கொட்டி கிடக்குது பாரு. இன்னும் one hour la அவன் வந்திடுவான் நீ பேசாம வா." அலள் தலையில் தட்டி அமைதிப்படுத்தி விட்டு அவன் கதவின் கைப்பிடியைத்திருகி திறக்க..பாரமான கதவாக இருந்தாலும் இலகுவாஇ இடம் விட.. இடைவெளிவிட்ட கதவை பட்டென இழுத்து மூடினாள் நிலா..

"அடுத்தது என்ன எரும..?"
அவள் செய்கையை பார்த்து சலிப்புடனே வினவினான் சதீஷ்

"ஒரு வேளை நாம மாட்டிக்கிட்டா.."
இடையில் அவனின் முறைப்பைக்கண்டு
"அதில்லடா எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும்ல..சோ அப்பிடி மாட்டிக்கிட்டா என்ன ப்ளான்...?" ஏதோ அட்வன்ச்சர் பயணம் போவது போன்ற பாவனை தான் அவள் முகத்தில்.

சிறிது நேரம் யோசித்தவன்..
"நம்ம ஜிம்மி உள்ள போயிரிச்சி அத பிடிக்க வந்தம் சொல்லலாம்." வழி கண்டுவிட்ட சந்தோஷத்தில் கண்கள் மின்ன சதீஷ் கூற

"ஏஹ் ? அது யார்டா ஜிம்மி?" புரியாது கேட்டாள் நிலா..

"அதான் நாம வளக்குற எலி ச்சச்ச இல்ல அணில்.." என்றான் சதீஷ்.

"நாம எப்போ வளர்த்தம் அத?"
அவள் மீண்டும் யோசிக்க..

"வளர்க்கல்ல தான்..இந்த one hour ற்கு தத்து எடுத்துக்கலாம்.."
இப்போது அவள் முறைக்க..
"இப்ப உனக்கு சைன் வேணுமா வேணாமா..சும்மா கேள்வி கேட்டுட்டே இருந்த போய்டுவேன் நான். மாட்டிக்கிட்டா நீ ஒன்னும் பேச கூடாது சொல்லிட்டன்.வாய மூடிக்கிட்டு இரு அது போதும். வா இப்போ"

மீண்டும் அவன் கதவை திறக்க போக.."சதீஷ் சதீஷ் இரு இருடா.." என்று தடுக்க அவன் முறைத்த முறைப்பில் "ஹி ஹி பைனல்டா.." என்று அவனை பார்த்து கண்சிமிட்ட
தலையில் அடித்துக்கொணடவன் "சரி கேளு இங்கயே one hour ஆகிறும் பாரு" என்று கதவில் சாய்ந்து நின்றான் சதீஷ்.

"அதெல்லாம் ஆகாது..நீ சொல்லு... என்னன்னா ஜிம்மி நாய்க்கு வைக்குற பெயர் போல இருக்கேடா.." நிலா இப்போதாவது எதாவது உருப்படியாக கேட்பாள் என நின்றிருக்க அவள் கேட்ட கேள்வியில் அதே கதவில் தலையை முட்டிக்கொண்டவன்..

"என் பொறுமைய நீ ரொம்பவே சோதிக்கிற..இதெல்லாம் ஒரு கேள்வியடி வேணும்டா டிம்மின்னு வச்சிக்கோ..இனிமே ஒரு கேள்வி கேட்டாலும் நான் போய்டுவன் சொல்லிட்டன். "
தலையை அவசர அவசரமாக ஆட்டியவள் வாயை மூடிக்கொள்ள..அவன் கதவைத்திறந்தான்..

கதவைத்திறந்து பூனை நடை போட்டு உள் நுழைந்த இருவரும் பிரம்மித்து தான் போனார்கள். அறை எல்லா அறைகளிலும் போல கட்டில் கப்போர்ட் டிவி ப்ரிஜ் மேசை அட்டேட்ச் பார்த் ரூம் என இருந்தாலும் இங்கு இவர்கள் பிரம்மிப்பின் காரணம் அறையின் ஒவ்வொரு சுவரில் கண்ணைப்பறித்திடும் அழகில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் தான்.

"சதீஷ்..இவனுக்கு இதெல்லாம் தெரியுமா அதவிடு இதெல்லாம் வரைவானா என்ன இவ்வளோ இரசனையோட"
வாய்பிளந்தவாறே நிலா கேட்க..அதனையே தான் ஆமோதித்தான் சதீஷும்..

"சரி சரி வா நாம அவன் சைன் தேடலாம்." அவசரமாய் முன்னே நடந்தான் சதீஷ்.

இருவரும் அதே ரூமில் ஒரு பக்கமாய் இருந்த இன்னொரு கதவைத்திறந்து அவன் ஆபிஸ் ரூமினுள் நுழைந்தனர். இருவரும் ஒருவாராக தேடி ஒரு பைலில் இருந்த அவன் கையெழுத்தை பார்த்து பார்த்து அந்த latter யில் அதே போல் வைக்க..அது சக்தியின் கையெழுத்திற்கு 80% ஒத்துப்போவதாய் தான் இருந்தது.

ஒருவாரு வேலையை முடித்து விட்டு இருந்த இடத்திலே அனைத்தையும் வைத்த பின் வெளியேற எழுந்தவர்களுக்கு அறைக்கதவு திறக்கும் சத்தம் துல்லியமாய் ஒலித்தது.

சதீஷ் சட்டென வாட்ச்சை பார்க்க அது அழகாக ஐந்து என காட்டிக்கொண்டிருந்தது. சதீஷ் திரும்பி நிலாவை முறைத்து வைத்தான். அவள் இப்போது இதற்கு நேரமல்ல இது என்பது போல் சைகை செய்து விட்டு கதவை காட்ட..சதீஷும் அதுவும் சரி தான் என்பது போல் மெல்ல கதவு பக்கம் நகர்ந்தான்.

கதவில் காதை வைக்க அங்கே கேட்ட காலடியோசை அவன் வரவு நிஜம் தான் என்பதை உணர்த்திட நிலாவும் சதீஷும் தங்களையே சமன் செய்தபடி மூச்சை ஆழமாக இழுத்து விட்டனர்..

"டோன்ட் வொரி அவன் குளிக்க போவான்ல் அதுவரை இங்க இருந்துட்டு எஸ் ஆகிடலாம்." என சதீஷ் கூறவும் நிலாவும் சரி என புதிதாய் உதித்த நம்பிக்கொயோடு தலை ஆட்ட..
இருவரும் அவன் குளியலரைக்குள் செல்வதற்காய் தவமிருந்தனர்.

ஒருவாரு அவன் குளியலரைக்குள் செல்வது அந்த கதவின் ஓர் பக்கமாய் இருந்த கண்ணாடி வழியே தெரிய..இருவரும் அடித்துப்பிடித்துக்கொண்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு ஓடினர் அறைக்கதவுப்பக்கமாய்.. சதீஷ் அப்போது தான் கவனித்தான் அறையின் கதவில் கைப்பிடியே இல்லை என்பதை.."அப்போ இத அவனால மட்டும் தான் திறக்க முடியுமா.. " முணங்கியவாறே அவன் நிலாவைப்பார்க்க அவளோ இவனுக்கு பின்னால் எதையோ கண்டு பேய் அறைந்தாற் போல் நின்று கொண்டிருந்தாள்.

*****************

"பெரியவரே இது தான் அந்த புள்ள.."
பெரிய ஐயா பணிவாய் அறிமுகப்படுத்த அழகுப்பதுமையாய் முன்னால் வந்து நின்று கை கூப்பினாள் சாரு.

பெரியவர் அவள் அணிந்திருந்த ஆடையை மெச்சுதல் பார்வை பார்க்க..சாருவிற்கோ அனிதா கூறி அனுப்பியது மனதினுள் ஓடியது..

"இங்க பாருடி அவ்வளோ சொன்னேன் கேட்டியா இப்ப அந்த கொப்பி பெரியவுக கையில இருக்கு பாரு.. போதாத்துக்கு நீ வேற இந்த துணியோட வந்திருக்க இப்ப உன்ன அவங்க புடிச்சி ஜெயில்ல போட்ருவாகலாம்..மீனாட்சிக்காட நான் போய் கேட்டேன். அஞ்சு வருஷத்துக்கு உன்னால வரவே முடியாதாம்..தோல உறிச்சிருவாக..ஏதாவது பன்னி தப்பிச்சிடு என்ன"

அனிதாவின் சொற்கள் கற்பனையாய் விரிய எச்சில் கூட்டி விழுங்கி அதனை அப்போதைக்கு ஒதுக்கி விட்டு..
"அய்யா வர சொல்லிருந்தீங்க.."மெதுவாய் கேட்க..

"அது இந்த புத்தகம்.." அவர் கையிலிருந்த புத்தகத்தை காட்டி ஆரம்பிக்கையிலேயே..ஓடிச்சென்று அவள் காலில் விழுந்தாள் சாரு..

"ஐயா ஜெயில் எல்லா வேணா ஐயா..சும்மாதான் இப்படி வரஞ்சன்..இனிமே பாவட தாவணியே போட்டுக்குறன்..இந்த துணி எல்லா எறிச்சிர்ரன்."

அவள் காலில் விழுந்ததுமே பதறிக்கொண்டு எழுந்த பெரியவர் அவள் கூறுவதில் தலையும் புரியாது வாலும் புரியாது "முதல்ல நீ எழுந்திருமா..என்ன சொல்லுற..முதல்ல எழுந்திரி" அவளை எழுப்ப முயலோ அவளோ "நீங்க மன்னிச்சிட்டேன் சொல்லுங்க அப்போ தான் எழுந்திரிப்பேன்." சாரு நல்லாதான் பன்னுற என்று தன்னையே மெச்சியவாறு அவர் காலை இறுக்கப்பற்றி கண்ணை மூடிக்கொண்டாள்..

"எதுக்கு மன்னிப்பு..என்ன ஐயா நீங்க சும்மா பார்த்திட்டு இருக்கிங்க முதல்ல இந்த பொண்ண எழுந்திருக்க சொல்லுங்க."
பெரிய ஐயாவிற்கு இவளது முதலைக்கண்ணீர் தெரிந்த விடயம் என்பதால் அதுவரை அமைதியாய் இருந்தவர். "சாரு மொதல்ல எழுந்திரி" என்றார்.

வராத கண்ணீரை கஷ்டப்பட்டு எப்போதும் செய்வது போல் கண் சிமிட்டாதே இருந்து வரவழைத்துக்கொண்டு மூக்கை சத்தமாய் உறிஞ்சியவாரே எழுந்து நின்றாள்.

"இப்ப சொல்லு எதுக்கு மன்னிப்பு?"
பெரியவர் கேட்க..மெதுவாய் நிமிர்ந்து பெரிய ஐயாவை ஒரு பார்வை பார்த்து விட்டு...

"அது நான் இப்பிடி உடுப்பு எல்லாம் போட கூடாதுன்னு ஐயா சொல்லிருக்காங்க..நான் கேட்காம போட்டுருவன்..அதுக்கு உங்கள்ட சொல்லி என்ன அஞ்சு வருஷம் ஜெயில்ல போட போறாங்களாம்." இடையிடையே பெரிய ஐயாவை பார்த்தவாறே திக்கித்திக்கி அவள் கூறி முடியவும் பெரியவர் விழுந்து விழுந்து சிரிக்க பெரிய ஐயாவும் சேர்ந்து கொண்டார்.

ஒருவாரு சிரித்து முடித்தவர்..
"என்னடாம்மா நீ இப்பிடி இருக்க..அப்படி எல்லாம் இல்ல உன் திறமைக்கு நீ இங்க இருக்க வேண்டியவ இல்ல..என்னோட எங்க ஊர்க்கு போய் எங்க கம்பனிலே உனக்கு வேலை தாரன். அதிலும் உனக்கு அந்த வேலை தேவையோ இல்லையோ எங்க கம்பனிக்கு நீ தேவை..அதுனால இன்னக்கே கிளம்பலாம் தயாராகு என்று சொல்லதான் வர சொன்னன்."

அவர் கூறி முடிக்க ஹப்பா அப்போ ஜெயில் எல்லாம் இல்ல என்று நிம்மதியடைந்தவள்..அவர் கூறியதன் பின்பகுதி அப்போது தான் உறைக்க..

"என்னது நான் பட்டணத்துக்கா.."
பெரிதாய் அதிர்ச்சியடைந்தவள்..

"ஐயா இல்ல ஐயா எங்க ஊருல.."
அவள் ஆரம்பிக்கவும் அவளை தடுத்தவர்

"அதெல்லாம் உங்க ஐயாகிட்ட நான் பேசியாச்சி" என்க அவள் பெரிய ஐயாவைப்பார்த்தாள்.

அவரும் கண்களாலே தன் சம்மதத்தை தெரிவிக்க..சாருவிற்கோ நடப்பதை நம்பவே முடியவில்லை..

"ரொம்ப நன்றி ஐயா.." இருவரிடமும் கூறிவிட்டு சந்தோஷம் தலைக்கேற துள்ளிக்குதித்து ஓடினாள் தன் பெற்றோரைத் தேடி சாருமதி.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 6 ❤

❤மாயம் செய்திட
உனை என்
மாயவலையில்
வீழ்த்திட
என் பயணம்
தொடங்கிடுதே❤

இவள் எதுக்கு இப்போ இப்பிடி நிக்கிறா..சந்தேகமாய் நோக்கி விட்டு
"ஏய் நிலா நிலா.." கிசுகிசுப்பாய் சதீஷ் அழைக்க அவனிலிருத்து கொஞ்சம் விலகி நின்று கொண்டிருந்த நிலா இவன் பக்கம் திரும்பி நீ நினைப்பது சரி தான் என்பது போல் தலையை ஆட்டினாள்.

"லெட்ஸ் ஸ்டார்ட்.."என கட்டை விரலை உயர்த்தி கண்களால் பரிமாறிக்கொண்டு இருவரும் ஒரு சேர

"ஜிம்மி.."

"டிம்மி.."

என வெவ்வேறாக அழைக்க..சதீஷ் அவளைப்பார்த்து முறைக்கவும் இவள் இளித்து வைக்க மூன்றாமவனோ வழமை போல் எரிமலையாய் கொதித்து எழுந்தான்..

"What the hell you both doing here ?"

"அது அண்ணா ஜிம்மில அது இங்க இந்த ரூம்க்கு வந்துட்டு அத தேடிதான்.." கூறிக்கொண்டே அவனை நம்ப வைக்கும் பொருட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாய் சென்று அங்கிருந்த சக்தியின் மேசை அடியில் குனிந்து தேடுவது போல் பாவனை செய்தான் சதீஷ்.

நிலாவோ மெதுவாய் குனிந்து அவனிடம்
"ஜிம்மி இல்லடா அது டிம்மி.."என்க

"அடியே இப்போ அதுவாடி முக்கியம் உன் ஆசைப்படியே அவன்கிட்ட மாடிட்டம் பாரு எப்படி குறுகுறுன்னு பார்க்குறான்னு.. கடவுளே காப்பத்து." கடவுள் எங்கே இருக்கிறார் என தெரியாது எல்லா திசையிலும் கற்பனையிலே கைகூப்பி வேண்டிக்கொண்டான் சதீஷ்.

"வாட் ஜிம்மி" சக்தி இருவரையும் கேள்வியாய் நோக்கினான்..

"அதான் அண்ணா ஜிம்மி அண்ணா வளர்க்குற பெட் டாக்"
நிலா ஏதோ அவனிற்கு தெரியாத ஒன்றை தெளிவுபடுத்தும் பாவனையில் கூற..

வெளிப்படையாகவே இப்போது தலையில் அடித்துக்கொண்டான் சதீஷ்
"இவளுக்கு அந்த எரிமலைகிட்டே மாட்டி சாம்பலாகிடலாம்..அணில்ன்னு நான் சொன்னதே ரூம்க்கு வந்தது சொன்னா கொஞ்சமாவது நம்புவான்னு. இப்ப நாய் எப்படி மூடின கதவிற்குள்ள வந்ததுன்னு என்னல்ல கேள்வி கேட்டு சாகடிப்பான்." சதீஷ் நிலாவை முறைத்துக்கொண்டே எண்ண..

"சதீஷ்" சக்தி அழைக்கவும்..

"அண்ணா"எதிர்பார்த்தது தானே என நொந்தவண்ணம் அவனை பார்த்தான் சதீஷ்..

"எப்ப டாக் வாங்கின என்ட் அது எப்படி இந்த ரூம்க்குள்ள வந்தது கம் ஆன். மூடின கதவுக்குள்ள எப்படி?"
இவர்களது திருட்டுத்தனம் புரிந்து விட கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு ஸ்டைல்லாக சுவரில் சாய்ந்து கொண்டே வினவினான் சக்தி.

இப்போ திருப்தியா என்று சதீஷ் நிலாவைப்பார்க்க அவளோ இப்ப நாம என்ன பன்னினம்ன்னு இவன் இப்படி லுக்கு விட்றான் என
யோசிக்க அப்போது தான் அவளுக்கு பட்டது தான் டாக் என்று மாற்றிக்கூறியது.

"டாக் இல்ல அண்ணா..டாக் நேம்ல இருக்க அணில் என்று சொல்லுறதுக்கு ஸ்லிப்பாகி டாக் என்று சொல்லிட்டன்."
நிலா கூற சக்திக்கோ மேலும் இவர்கள் மேல் சந்தேகம் வழுத்தது.

கொஞ்ச நேரம் யோசித்தவன் "நிலா இங்க வா" சக்தி கை நீட்டி நிலாவை அழைக்க..

"தனியா கூப்ட்ரானே..இவனும் கூடதான வந்தான். சேர்த்தே கூப்டலாம்ல." சதீஷை திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்று அவன் முன் நின்றாள்.

அவளை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு
"உண்மைய சொல்லு இந்த ரூம்க்கு எதுக்கு வந்தீங்க?"

"உண்மையா அணில தேடிதான் அண்ணா"
இப்போவே அழுது விடுவேன் என்ற குரலில் அவள் கூற..

"Idiots நான் வேணாம் சொல்லுறது எல்லாம் செய்வேன்னு தான் சுத்துரிங்களா இரண்டு பேரும் ..இன்னும் ஒரு தடவை அணில் தேடினேன்..பூனை தேடினேன்னு போறதா பார்த்தன் அப்புறம் இருக்கு..அதோட என் ரூம்க்கு வர்ரது இதுவே லாஸ்ட்டா இருக்கனும். மைன்ட் இட். Get lost." கண்ணாடிகளும் அதிரும் வண்ணம் ஓங்கி ஒலித்தது சக்தியின் குரல்.

விட்டால் போதும் என்று இருவரும் தலையை நாலா பக்கமும் ஆட்டி விட்டு கதவருகில் வந்து முழிக்க..கதவருகில் வந்த சக்தி அதன் அருகில் இருந்த சிறிய கறுப்பு நிற சதுர வடிவ இடத்தில் தன் பெரு வரலை வைத்து அழுத்தவும் கதவு தன் எஜமான் தான் என புரிந்து கொண்டு திறந்து வழி கொடுத்தது.

அவன் செய்கையை தன்னை மறந்து வாய் பிளந்து நோக்கிக் கொண்டிருந்த நிலாவை சதீஷ் தோளில் இடிக்க அதே நிலையிலே சக்தியிடம் திரும்பியவள் சக்தியின் பார்வையில் சப்பென வாயை மூடிக்கொண்டு இருவரும் வெளியில் வரவும் கதவு இனிமேல் வந்து விடாதே என்பது போல் பின்னால் பெரிய சத்தத்துடன் மூடியது.

"சதீஷ் நாம செய்த வேலைக்கு இவனுக்கு வந்த கோபம் பத்தலல?"
சீரியசாக நிலா வினவ.

"ஏன் வேணும்ணா உள்ள இன்னொருக்கா போய் உனக்கு பத்துற அளவுக்கு நல்ல perform பன்னிட்டு வாயேன். நீ ஏதோ பிக்னிக் போற ரேஞ்சுல வந்த நான் தான் இருக்க கடவுள் எல்லாம் வேண்டினதால ஏதோ இந்த அளவுல தப்பிச்சம். வரவர என் பெயரே எனக்கு மறக்குது அவன் என்ன இடியட்ன்னு கூப்பிட்டு கூப்பிட்டு.." வராத கண்ணீரை இருபக்கமும் துடைத்துக்கொண்டான்.

"சரி சரி சதீஷ் பீல் பன்னாத வாழ்க்கைன்னா அப்பிடித்தான். மேடு பள்ளம் எல்லாம் இருக்கும்ல"
அவனை தோளில் தட்டி நிலா சமாதானம் செய்ய..

"இதெல்லா ஓவர்டி அதுக்காக உன் வாழ்க்கையில இருக்க மேடு பள்ளம் எல்லா நா உருளனுமா.. சரி இந்தா நாளைக்கு கொண்டு போய் காலேஜ்ல கொடு லெட்டர.. இரண்டு நாள் நான் சமாளிச்சிக்கிறன். எப்படியும் நீ எங்கன்னு எல்லா கேட்டு துருவ மாட்டான். பீ ஹாப்பி மூன் பேபி"

அவன் latter ஐ நீட்ட அதனை வாங்கிக்கொண்டவள் " my sweeeeettttttt சதீஷ்..love you அண்ணா" என்றவாறே கன்னத்தை கிள்ளி விட்டு பறந்தாள் நிலா.

*****************

"அந்த துணியெல்லா வேணா நல்லா பொண்ணா லட்சனமா இந்த பாவடை தாவணி எல்லா எடுத்து வை"
சாரு அருகில் வந்து ஏவிக்கொண்டிருந்தாள் அவளது அத்தை காமாட்சி.

"சரி அத்த"
பணிவாய் கூறியவள் அவர் சற்று நகரவும் தன் பையின் கீழ் ஒழித்து வைத்திருந்த மற்றைய ஆடைகள் எல்லாத்தையும் எடுத்து பையினுள் திணித்தாள்.

அதிகாலையில் பயணம் தள்ளிப்போடப்பட்டிருக்க இரவே எல்லாவற்றையும் தயாராக்கிக் கொண்டிருந்தாள் சாரு.

எல்லாத்தையும் எடுத்து வைத்து விட்டு அமர்ந்தவள் அருகில் வந்த காயத்ரி அன்பாய் தலையை தடவ அவர் மடியில் படுத்துக்கொண்டாள் சாரு. இதுவரை தாயைப்பிரிந்ததில்லை...எப்படி இருக்க போகிறோம் என எண்ண நெஞ்செல்லாம் அடைத்துக்கொண்டு வந்தது அழுகை. காயத்ரியின் நிலையும் அதுவே. மகளின் ஆசை நிராசைதான் என இருந்தவருக்கு அவள் ஆசைப்படியே அவள் திறமைக்கு கிடைத்த பரிசு ஊரிற்கே பெருமை தான்..தன் மகள் என கூறிக்கொள்ளவே இனித்தது காயத்ரிக்கு. இருந்தும் அவளின்றி எப்படி இருக்கப்போகிறோம் என்று தான் தெரியவில்லை அவருக்கு.

"பாப்பா"

"ஹ்ம்" முனகலாய் வந்தது பதில்..

"என்ன ஆச்சு..?" கண்ணீரை அவளிற்கு காணாமல் துடைத்துக்கொண்டாள்.

"நான் போ.. போவலம்மா.." கேவியவாறே காயத்ரியின் மடியில் புதைந்து கொண்டாள்.

காயத்ரிக்கும் அழுகை வெடிக்க சிறிது நேரம் அவளை அணைத்துக்கொண்டு அழுதவள்.. இது தன் மகளின் எதிர்காலம் என்று தன்னை சமன் செய்து கொண்டு..
"சாரு இங்க பாரு..பாரு பாப்பா."
அவளை நிமிர்த்த..கண்ணீர் வழிய நிமிர்ந்தாள் சாரு.

"எதுக்கு அழுவுற..பாரு யாரையும் தேடி வராத அதிஷ்டம் உனக்கு வந்திருக்கு அதிலும் உன்னோட ஆசையும் கூட.. தூரம் தான் ஆனா பெரியவர் கம்பனில தான நீ கேட்டா மறுக்க மாட்டாக..உனக்கு கண்டிப்பா வரலாம்..சரியா. இன்னக்கி நீ போய் முன்மாதிரியா இந்த கிராமத்துக்கு இருத்து காட்டனும்.. இந்த ஊர மாத்துறது உன் கையில கடவுள் கொடுத்திருக்காரு. உன் எதிர்காலம் மட்டுமில்ல இந்த ஊரோட எதிர்காலமும் உன் கையில தான். எப்பவும் கேட்டிட்டே இருப்பல்ல இந்த ஊரு எப்போம்மா மாறும்னு..அது மாற காரணமா நீ இருக்கலாம் பாப்பா.. அழுகாத..அழுகை உன்ன ஒருநாளும் மேல கொண்டுவராது..உன் தன்னம்பிக்கைய இழக்க செஞ்சிடும்.. அப்பொறம் அம்மாவ அப்பாவ பிரிஞ்சி இருக்கது நினைச்சி ஒரு தடவ அழுதுட்ட..இது போதும்..இதே விஷயத்துகாக இன்னொரு தடவ உன் கண் அழுவ கூடாது சரியா..இந்தா இப்போ அழுதியே அது தான் உன் பலம்..ஒரே விஷயத்துக்காக நீ இன்னொரு தடவ அழுதா அது உன்னோட பலகீனம்..கண்ண துடைச்சிக்க"
காயத்ரி ஆதரவாய் தலையை தடவிக்கொண்டே பேச பேச கண்ணீருடனே புன்னகைத்தாள் சாரு.

அதேநேரம் "சாரு சாரு" என அனிதா வீட்டினுள் நுழைய..
"அனிகிட்ட பேசிட்டு இரு வாரன்" என எழுந்து சென்றார் காயத்ரி.

"வா அனி" அறையினுள் நுழைந்தவளை வரவேற்றால் சாரு.

"என்ன சாரு எல்லா தயாரா?"

"ஆமா எல்லாம் எடுத்தாச்சு" கட்டிலின் ஓரத்தில் இருந்த பைகள் இரண்டையும் பார்த்தவாறே பதிலளித்தாள் சாரு.

"ஹ்ம் உன்ன பிரிஞ்சி எப்பிடி இருக்க போறேன் தெரியல்ல" கண்ணை துடைத்துக்கொள்ள சிறிது நேரம் தோழிகள் இருவரும் ஆதரவாய் அணைத்துக்கொண்டனர்.

"சாரு ஒன்னு தெரியுமா பட்டணத்துல இங்கிலீசு தான் பேசுவாங்களாம். அதுகும் பெரியவர் கம்பனில இங்கிலீசு தானாம் முழுசாவே"
அனிதா வியந்தவாறே கூற..

"என்னடி சொல்லுற எனக்குதான் அது தெரியாதே."

"ஒன்னும் கவல இல்ல நான் உனக்கு ஒதவ மாட்டேனா சொல்லு..நான் நம்ம டீச்சர்ட்ட கேட்டேன் .இங்கிலீசே தெரியாட்டியும் யேசு(yes)..சாரி(sorry)..தாங்சு(thanks)..அப்புறம் என்ன சொன்னாங்க.."
சிறிது நேரம் சிந்தித்தவள்..

"ஆஹ் நோர்(no)..இது எல்லாம் மனசுல பதிச்சுக்க இந்த நாலும் தான் இங்கிலீசுல மந்திர வார்த்தைகள் மாதிரி.. ஒன்னுமே புரியல்லன்னாலும் இதுல ஏதாவது சொல்லி உனக்கும் இங்கிலீசு தெரியும்ன்னு காமிச்சிக்க.."

"இதுகெல்லாம் அர்த்தம் தெரியாதேடி எனக்கு"

"அது பிரச்சினை இல்ல அதையும் கேட்டேன்டி நான்..சரி அம்மா தேடுவாங்க நான் விடிய வாரன்."
அனிதா கிளம்பவும்..சாரு கதவை அடைத்து விட்டு வந்து படுத்துக்கொண்டாள்.

வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது. நேற்று கனவிலும் எண்ணவில்லை இன்றைய நாள் இவ்வாறு அமையும் என்று.. நாளை நடக்கப்போவதோ தெரியவில்லை..எண்ணியவண்ணம் கண்ணயர்ந்தாள் சாரு.


கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் friends..

1st sorry சொல்லிக்கிறேன் 😶 ஏன்னா எனக்கு நாளைக்கு sem exams ஆரம்பிக்குது.. june 1st வரை இருக்கும்.. அதுவரை எனக்கு அப்டேட் போட முடியுமா தெரியல்ல.. முடிஞ்சா இந்த சனிக்கிழமை ud எடுத்துட்டு வாரேன்.. இல்லனா மன்னிச்சு டியர்ஸ்..

அப்புறம் முடிஞ்சா கதை படிக்கிறவங்க அதோட நிறை குறைகளை பகிர்ந்து கொண்டா தொடர்ந்து எழுதுறதுக்கு எனர்ஜி கொடுக்கும்..படிக்கிறீங்க ஆனால் கருத்துக்கள் வருவது குறைவா இருக்கு ☹ சோ கொஞ்சமா டைம் எடுத்து குறை ஓர் நல்லா இருந்தா அப்படியே அதையும் டைப் செய்து போட்டுட்டு போங்க மீரு வில் பி ஹாப்பி 😄❤

thanks a lot for your love and support ❤
keep supporting

_meera shalini_
 
Status
Not open for further replies.
Top