All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘மாயம் செய்தாயோ’ - கதை திரி

Status
Not open for further replies.

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ♥ 15 ♥

❤என்றுமில்லா
வேகம் என்
துடிப்பில்..
கூர்ந்து கேட்டிட
உன் பெயர்
சொல்லிட
கேட்டேன் என்
இதயம்..❤

"கங்க்ராட்ஸ் மிஸ்டர் என்ட் மிஸஸ் சக்தி.." தனியாக ஓர் குரலோடு கைதட்டல் ஓசையும் ஒலிக்க இருவரும் அத்திசையில் பார்க்க முன்னால் வந்து நினறவளைப்பார்த்து "தீக்ஷா.." என முணுமுணுத்தன சக்தியின் உதடுகள்.

"சார் அது எப்படி உங்க பெயர் மட்டும் சொல்லலாம் அவங்க..நானும் கூடவே தான வந்தன். கூடவே தான இருக்கன் இவ்வளோ நேரம்.." எம்பி நின்று சக்தியின் காதில் முணுமுணுத்தாள் சாரு.

இப்ப இது ரொம்ப அவசியம்..என்ற பார்வையை மட்டும் அவளிடம் வீசி விட்டு தன் பார்வையை தீக்ஷா பக்கம் திருப்பியவன் அவள் கூறியதை மறுக்க போகவும் அவளே தொடர்ந்து பேசினாள்.

"என்ன சக்தி சொல்லாம மேரேஜ் பன்னிகிட்டிங்க..அதுவும் என்ன மறக்கலாமா சக்தி சொல்லுங்க" அவனை ஆழமாக பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

"எனிவே இந்த டேபிள் நாங்க 'best couple of the day' ற்கு ரிசேவ் செய்திருந்தம்...என்ட் நவ் யு ஹவ் காட் இட்..ப்ளீஸ் கம் டு தி ஸ்டேஜ் மிஸ்டர் என்ட் மிஸஸ் சக்தி.."


கைதட்டல்கள் மீண்டும் ஒலிக்க ஒரு கணம் சிந்தித்தவன் சாருவை பார்க்க அவன் நினைத்தது போலவே அவள் எதுவும் புரியாது விழித்துக்கொண்டு தான் இருந்தாள்.

திரும்பி தீக்ஷாவை பார்க்க அவள் கண்களில் தெரிந்த தோல்வியின் வலியும் கோபமும் சக்தியை சொல்ல முடியாத சந்தோஷத்தில் ஆழ்த்தியது. வெற்றிப்புன்னகை மிளிர சாருவின் பக்கம் திரும்பியவன் அவள் வலது கையை அழகாய் பற்றினான் ஆனால் அவளது கவனம் எங்கோ இருக்கவும் ஒரு முறை சக்தி சாருவின் கையை மென்மையாய் அழுத்த குழப்பத்தில் இருந்து விடுபட்டவள் சக்தியின் புறம் திரும்பினாள். இருவரும் கண்ணோடு கண் நோக்க அவ்வழகிய தருணம் அழகாய் படம் பிடிக்கப்பட்டது.

அவளை அழைத்துக்கொண்டு மேடை ஏறப்போனவன் தீக்ஷா அருகில் கொஞ்சமாய் தாமதித்து " finally its me..." என்று கூறிவிட்டு செல்ல...
கோபத்தை அடக்க வழி அறியாது அவன் போகும் திசையிலேயே இயன்றளவு முறைத்துக்கொண்டு இருந்தாள் தீக்ஷா..ஆனால் அவளது உதடுகள் மட்டும்..இதுக்கெல்லாம் பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவ சக்தி என்று முணுமுணுத்தன..

சக்தியின் பின்னே அவன் இழுப்பிற்கே நடந்தாள் சாரு..மேடை ஏறிய இருவரையும் ஆடைகளை ஆடர் தந்த மணமகளின் தந்தையே முன்னால் வந்து அழைத்து தன் கையால் விருதை வழங்கிவிட்டு.." என்ன தம்பி நீங்க இரண்டு பேரும் ஹஸ்பன்ட் என்ட் வைப்பா சொல்லவே இல்ல பாருங்க.. ஆனா பொருத்தம் ரொம்பவே நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.." அவர் கூறி முடியவும் சக்தி எதிர்பார்த்தது போலவே சக்தியின் கையை இழுத்து அவனை அவள் உயரத்திற்கு குனிய வைத்த சாரு..." ஹாஸ்பன்னு வைபு ன்னா என்னது?" கிசுகிசுப்பாய் அவள் வினவ..

" நான் பாஸ் நீ என்கிட்ட வேலை செய்யுற அத தான் அப்படி சொல்லுறாங்க.." என்று அவன் விளக்கவும் அவளும் அழகாய் சிரித்து புரிந்ததாக தலையாட்டினாள். ஆனால் சக்தி அறியவில்லை தன் சுயநலத்திற்காய் இன்று கூறிய பொய் சாருமதியின் வாழ்வையே நாளை புரட்டிப்போடும் என்று.

"அப்போ இது எதுக்கு? " அவள் அந்த விருதை சுட்டிக்காட்டி கேட்க..
அது என்று கொஞ்ச நேரம் சிந்தித்தவன்.." அது நீ அந்த ட்ரெஸ் எல்லாம் அழகா செய்து கொடுத்ததுக்கு." அவன் கூறவும் சாருவும் சரி என்று நின்று கொண்டாள்.

மேடையின் கீழ் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர்.
"சார் இன்னக்கி ஷோ நீங்க இரண்டு பேரும் தான் செய்யனும்..கம் ஆன்..ஒரே ஒரு டான்ஸ்" என்று கூச்சலிடவும் பின்னனியில் பாடலும் ஒலித்தது...

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக


சாரு திரு திரு என விழிக்க அவளருகில் வந்த சக்தி அவள் இடை பற்றி தன்னுடன் இணைத்து மறுகையை அவள் கையுடன் பிணைத்து கொண்டான்..."சார்..என்..ன பன்னுறீங்க.." சாரு கையை விலக்க முயலவும்.."உஷ்.."என அவள் இதழ் மேல் ஒற்றை விரலை வைத்து அமைதிப்படுத்தினான் சக்தி. சாருவிற்கு அந்த தீண்டல் உள்ளே சிலிர்க்க கண்களை விரித்து சக்தியை பார்த்தாள்.

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்


சாருவிற்கு என்ன நடக்கிறது என புரியாதது ஒரு பக்கம் என்றால் நடனம் ஆட வேறு தெரியாது என இருக்க..சக்தி அவளை நடனமாடச்செய்ய சாருவும் சக்தியுடன் இணைந்து கொள்ள..அவர்களின் நடனம்.. இருவரின் விழிகளும் கலந்து வடித்த உணர்வும் கலந்திருக்க அனைவரும் மெய் மறந்து இரசித்தனர் இரு விழிகளைத்தவிர அது மட்டுமே வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது.

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்


கடைசியாக அவள் கைபற்றி சுழற்றியவன் தன் பக்கமாய் இழுக்க கொஞ்சமாய் தடுமாறியவளை தன் கரங்களில் தாங்கிக்கொண்டான்.. பாடல் முடிந்தும் இருவரும் அதே நிலையில் விழிகள் இரண்டும் கலந்திருக்க..பார்வையாளர்களும் மெய் மறந்திருக்க தீக்ஷா பொறுக்க முடியாது பலமாய் கைதட்டினாள்.. அதன் பின்னே உணர்வு பெற்று இருவரும் விலகிக்கொள்ள அனைவரும் கைதட்டலும் காதைப்பிளந்தது.

சாரு உணர முடியாத ஏதோ ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தாள்..இதயத்துடிப்போ வேக வேகமாய் அடித்துக்கொண்டது.. மெதுவாய் நிமிர்ந்து அவள் சக்தியை நோக்க அவனோ ஒன்றுமே நடவாதது போல் தான் இருந்தான். இருவரும் கீழிறங்கி வர சக்தியின் முன்னால் வந்து நின்றாள் தீக்ஷா..

"சாரு நாம சீக்கிரமா கிளம்பனும்.. நீ போய் ஆன்டி அங்கிள்ட்ட சொல்லிட்டு வா." அவன் கூறவும் சரி என தலை ஆட்டி விட்டு நகர்ந்தாள் சாரு.

அவள் சென்ற பின் தீக்ஷா புறமாய் திரும்பிய சக்தி.." தீக்ஷா என்ன இப்படி இருக்க.. ஆர் யு ஓகே..? என்னாச்சி பீவர் ஏதுமா? நான் வேணும்ணா..."

"ஸ்டொப் திஸ் Nonsense.." கோபத்தில் கண்கள் சிவக்க சத்தமிட்டவளை கைகளை பாக்கெட்டினுள் நுழைத்துக் கொண்டு கூலாக பார்த்தான் சக்தி.

"என்னடா ரொம்ப தான் துள்ளுர..நீ ஜெய்ச்சிட்டன்ன திமிரா.. உன் அன்பு மனைவி ஆருயிர் மனைவி சாருவ தூக்கிட்டு..அடுத்து ஒவ்வொருத்தரா உன் குடும்பத்துல தூக்கிட்டா வால ஆட்டிட்டே என் வழிக்கு வர மாட்ட.உன்னால என்ன பன்ன முடியும் என்னை..நான் யாரு தெரியும்ல..அதுவும் உன்னோட லவ்லி மம்மிய மட்டும் பர்ஸ்ட்.. " அவள் பேசிக்கொண்டே போக...
"ஏய்..." கர்ஜித்தவாறு ஒரு விரல் நீட்டி எச்சரித்தான் சக்தி..

அவன் ஒரு விரலை தன் ஒரு விரல் கொண்டு மடக்கிய தீக்ஷா.."ரொம்ப Strain பன்னிக்காத பேபி.. உன் வைப்ப வேற கவனமா கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கனும்ல ரிலேக்ஸ்.. ஓகே பார்க்கலாம் டாட்டா.."
முன்னே சென்றவள் மீண்டும் பின்னால் நடந்து அவனெதிரே வந்து.."தீக்ஷா ஜெய்க்க பொறந்தவ.." சொல்லிவிட்டு glasses ஐ அணிந்து கொண்டு நகரவும்..."சார் போலாமா.." என்றவண்ணம் எதிரே வந்து நின்றாள் சாரு..

தன் சுயநலத்திற்காக இந்த அப்பாவி பெண்ணை சிக்கலில் மாட்டி விட்டோமோ என முதன் முறையாய் எண்ணினான் சக்தி..

****************

காலைநேரம் குளிர் ஊசியாய் அவள் உடையையும் தாண்டி குத்த..இன்னும் கொஞ்ச தூரம்தான் இருந்த போதும்.. கஷ்டமாய் இருந்தாலும் மெதுவாகவே அந்த தேயிலைத்தொட்டங்களை கண்களில் நிரப்பிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் மாயா.

பத்து நிமிட நடையின் பின் கம்பீரமாய் நின்று கொண்டிருந்த அந்த காலத்தில் கட்டப்பட்டிருந்த அந்த சிறிய மாளிகை முன் வந்திருந்தாள். எப்படியும் சாரதாம்மா சாப்பிட்டிருக்க மாட்டாங்க எண்ணியவாறே கேட்டை திறந்து கொண்டு உள்ளே அவசரமாக நுழைந்தாள்.

வீட்டினுள் சென்றவளின் முன் கோபமாய் வந்து நின்றார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணி.
" எத்தன தடவ சொல்லுறது மாயா உனக்கு..குளிருல வெளில போகாதன்னு..இங்க பாரு எப்படி கை எல்லாம் குளிரா இருக்குன்னு.. பேஸ் எல்லாம் கூட சிவந்து போச்சு.. வா சூடா காபி போட்டு தர்ரன்.. உஷ் ஒன்னும் பேச கூடாது வா." கோபமாய் முகம் இருந்தாலும் அன்பும் பாசமான கண்டிப்பும் மட்டுமே கலந்திருந்தது அவர் கண்களில்..

காபியை பருகி முடித்தவள் அருகில் வந்த சாரதா அன்பாய் மாயாவின் தலையை வருடிக்கொடுக்க அவரை பார்த்தவள் அவர் மடியில் தஞ்சம் புகுந்திருந்தாள்.

"சாரதாம்மா.."
மெதுவாய் மாயா அழைக்க..

"சொல்லுடா.."

" மதன் சார் நாளைக்கு வாரார்ல.."

ஹ்ம் என்பது மட்டுமே அவர் பதிலாய் இருந்தது.." ஏன்மா? " மாயா மீண்டும் வினவ..

" என்னடாம்மா சொல்லுறது.. பத்து வருஷம் கழிச்சி அம்மாவ நினைவு வந்திருக்கு.. இந்த பத்து வருஷத்துல ஒரு கால் கூட இல்ல.. வாரது கூட இப்ப இங்க இரண்டு நாள் இருக்கத்தான் அதுவும் அவன் நண்பன் தான் சொல்லி எனக்குதெரிய வேண்டி இருக்கு.. விடும்மா எனக்கு இந்த மயூ குட்டி மட்டும் போதும்."

மடியிலிருந்த மாயாவை அணைத்து அவள் தலைமேல் படுத்துக்கொண்டார் சாரதா..அவளும் அவரை அன்புடன் அணைத்துக்கொள்ள கீற்றாய் கன்னம் வழியே வழிந்து சென்றது கண்ணீர்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ♥ 16 ♥

❤வாரி சென்றாய்
பெண்ணை
பார்த்து நின்றேன்
கண்ணை
ஏது செய்தாய்
என்னை
கேட்டு நின்றேன்
உன்னை...❤

வரும் வழி எல்லாம் நொய் நொய் என்றே ஒரே விடயத்தை பேசிக்கொண்டு வந்தாள் சாரு..

"என்ன இருந்தாலும் பாவம் சார் அந்த அக்காக்கு துணி பத்தல போல.. கம்பனியில இருந்து கொஞ்சம் துணி கொடுத்திருக்கலாம்ல.. உங்களுக்கு ஒன்னுமே தெரியல்ல உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவங்க தான சார்."

நடனம் ஆடிய போது அவன் தீண்டலில் ஏதோ வித்தியாசமாய் தோன்ற அந்த இனம்புரியா உணர்வில் கூடியது ஒரு ஐந்து நிமிடம் வாயை மூடிக்கொண்டிருந்திருப்பாள்.. காரிற்கு ஏறியதுமே தொடங்கி விட்டாள் ஆனால் சக்தி தான் குழம்பிப் போய் இருந்தான்.

வெகு நேரம் யோசித்தவன் இனி சாருவின் பாதுகாப்புக்கு தான் மட்டுமே பொறுப்பு நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் தீக்ஷா வெறும் பேச்சுக்கு சொல்பவள் அல்ல என்று தீர்மானித்துக்கொண்டான்.

நேராக விமான நிலையம் வந்தவர்கள் நேரம் சரியாக இருக்க விமானத்தில் ஏறி தங்களது சீட்டில் அமர்ந்தனர்.. மூன்று பேர் அமரும் சீட்டில் ஜன்னலோரத்தில் அவளது அலப்பறை தெரிந்திருந்த சக்தி முதலில் வந்து அமர்ந்து கொள்ள இரண்டாவது சீட்டில் முகத்தை அரை கிலோமீட்டர் இழுத்துக்கொண்டே வந்து அமர்ந்தாள் சாரு. மூன்றாவதாக ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண் வந்து அமர்ந்தாள். அமர்ந்ததிலிருந்து அவள் கண்ணை மூடிக்கொண்டு கைகளைக்கூப்பி வேண்டிக்கொண்டே இருக்கவும் அவரை மெதுவாக அழைத்த சாரு.."அக்கா இதான் முதல் தடவை போறிங்களா?" கேட்க..அவளும் ஆம் என தலையாட்டினாள்.

"அக்கா பயப்பட தேவையே இல்ல நான் பயப்படவே இல்லன்னா பாருங்களேன்..எனக்கு பஸ்ஸில போற போல ஆகிடிச்சி.."அவள் பேசிக்கொண்டே போக அவளைத்திரும்பி புளுகுறதுக்கு ஒரு அளவு வேணாம் என்பது போல் சக்தி ஒரு பார்வை பார்த்திட..அவன் பக்கம் பார்த்து இளித்து வைத்தவள் மீண்டும் திரும்பிக்கொண்டாள்.

"அப்படியா செல்லுறீங்க.. ஆமா என் தம்பி கூட சொன்னான் குதிரைல போறது போலே இருக்குமாமே.." அப்பெண்ணும் இவளுடன் சேர்ந்து பேச..
"இவளுக்கு மட்டும் எப்படி தான் ஏத்ததாவே வந்து மாட்டுதோ..." என்று கண்மூடி சீட்டில் சாய்ந்தவன் எண்ணங்கள் மீண்டும் வந்து நிலைத்தது தீக்ஷாவிடம்.

அவளை முதலில் சந்தித்தது...எண்ணங்கள் பின்னோக்கி பயணித்தது.. அன்று சக்தியின் கல்லூரியில் இறுதி நாள்.. நண்பர்கள் என்று யாரும் அவ்வளவாக இல்லை சக்திக்கு, எப்போதும் தனிமையிலேயே இருப்பான்..அவனே அமைத்துக்கொண்டது தான் அந்த தனிமை.

அதோடு அனைவரிடனும் பழகும் போதும் அவனிற்கு என்று ஒரு எல்லை வைத்துக்கொள்வான்..ஆனால் படிப்பில் எப்போதும் முதல் தான் என்பதால் அவனைத்தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அன்று விழாவில் அனைவரும் ஏதாவது மேடையில் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
சக்தி ஓர் பாடலை பாட அவன் குரலே அங்கு அனைவர் மனதையும் நனைத்திருந்தது. எப்போதும் ஓர் இறுக்கத்தோடு வலம் வருபவன் அவனுள் இவ்வளவு மென்மையான ஓர் குரலை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

விழா முடிந்து இவன் வெளியே வரவும் முன்னால் வந்து நின்றாள் தீக்ஷா அவள் நண்பிகள் புடைசூழ. தீக்ஷா அப்போதைய எதிர்கட்சி தலைவரின் மகள். எங்கு சென்றாலும் அப்பாவின் பெயர் வைத்தே அனைத்தையும் சாதித்து விடுவாள். கல்லூரியிலும் அவள் கேன்ங்கின் தவறுகளை கூட தட்டிக்கேட்கவோ இல்லை சுட்டிக்காட்டினாலோ அடுத்த நாளே அந்த ஆசிரியர் வீட்டுக்கு நடை போடத்தான் வரும்.

இதனாலயே இவளைக்கண்டாலே அனைவரும் வம்பு எதற்கு என்றும்.. இவள் வம்பு செய்தாலுமே செய்யாத தவறிற்கும் மன்னிப்பு வேண்டியும் விலகிக்கொண்டனர்.

சக்தியும் ஓரளவு இவள் பற்றி அடுத்தவர் சொல்லி கேள்விப்பட்டிருந்தான். இவன் அவளை புரியாது நோக்கவும் அருகில் நெருங்கி வந்தவள் ஒற்றை விரலால் அவன் முகவடிவை அளக்கத்தொடங்கினாள்.

இவன் கையை தட்டி விட்டு விலகிச்செல்லவும் மீண்டும் வழி மறித்தவள்.." சக்தி..நைஸ் நேம் உன் வாய்ஸ் போலவே.." அவள் கண்ணடித்து கூற..அவளை அறுவறுப்பாய் பார்த்தவன் மீண்டும் விலகிச்செல்ல எத்தனிக்க..அவன் சட்டை காலர் பற்றி அருகில் இழுத்தவள் " ஐ லைக் யு மேன்.. நான் முடிவு பன்னிட்டன்.. நீ தான் என்னோட லைப்..உன்ன போல ஒருத்தன் தான் தேடிகிட்டு இருந்தன்..ரொம்ப அமைதியா இருக்க..கண்டிப்பா என் லைப்ல தலையிட மாட்ட நான் என்ன செய்தாலுமே.." என்ன செய்தாலுமே என்றதில் அழுத்திக்கூறியவள் அவனை நெருங்கவும் சக்திக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ ஓங்கி ஓர் அறை விட சுழன்று சென்று கீழே விழுந்தாள் தீக்ஷா..

சுற்றியிருந்த கூட்டம் என்ன நடக்குமோ என பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருக்க..கீழே விழுந்து கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியில் இருந்த அவளருகில் சென்ற சக்தி..

" எனக்கு ஒரு பெண் தான் மனைவியா வர முடியும். ஒரு அட்வைஸ் உன் லைப்காக பர்ஸ்ட் ஒழுங்கா பெண்ணா இருக்க பழகு.. நான் மட்டும் இல்ல நீ இப்பிடி இருந்தா எவனும் உன்ன கட்டிக்க நினைச்சியும் பார்க்க மாட்டான். என்ட் திஸ் இஸ் த லிமிட்.. டோன்ட் க்ரொஸ் மை லைப் எகைன்." அவன் சொல்லி விட்டு நகரவும்..சிறிது தூரம் சென்றவனை கைதட்டி அழைத்தாள் தீக்ஷா.

திரும்பாமல் நின்றவன் முன்னால் வந்தவள்..தன் கன்னத்தை தொட்டு காட்டி.." இத்துன பேர் முன்னால இந்த தீக்ஷாவே அடிச்சிட்ல்ல..இந்த அஞ்சி விரலும்..உன்னோட இந்த அஞ்சி விரலும் இங்க பதிஞ்சதுக்காக உன்ன ஒவ்வொரு நாளும் நான் சாகடிப்பேன்டா.. தாலிய கட்ட வெச்சி என் காலடியிலே உன்ன கிடக்க வைக்கிறேனா பாரு.. இத்துன பேர் முன்னாடி சொல்லுறன்.." ஒரு விரல் நீட்டி சபதம் விட்டவள் திரும்பி நடக்கவும் அருகில் வந்து அவனை உலுக்கினாள் சாரு.

"சார் சார்ர்ர்ர..." சட்டென நினைவில் இருந்து விடுபட்டு அவன் சாரு பக்கம் திரும்பினான்.

" என்ன சார் கண்ண திறந்துட்டே தூங்குறீங்க..உங்களோட அந்த செங்கல்.." அவன் முறைக்க நாக்கை கடித்துக்கொண்டு.." கொடுங்க நிலாக்கு ஒரு கால் போடனும்."

அவள் கேட்க அவளை பார்த்தவன் அப்போது தான் உறைத்தது அவர்கள் விமான நிலையத்தில் இருப்பது. ட்ரைவரிற்கு சொல்லலியே என அவன் போன் எடுத்து டையல் செய்யப்போக.."சார் அக்கா போகனுமாம் சார் ஒரு அஞ்சு நிமிஷம் குடுங்க." அந்த அக்காவும் அவள் பங்கிற்கு அவனிடம் ப்ளீஸ் சொல்ல வேறு வழி இல்லாதவன்..."charge கொஞ்சமா தான் இருக்கு...ஹம் கரன்ட் போன்ல கொஞ்சமா தான் இருக்கு சீக்கிரமா கொடு பேசிட்டு ட்ரைவருக்கு சொல்லனும்." சரி என எல்லா பக்கமும் தலையை சாரு ஆட்ட நிலாவிற்கு கால் செய்து கொடுத்தான் சக்தி..

அப்படி என்ன தலை போற விஷயம் பேச போற என்று சக்தி பார்த்துக்கொண்டு இருக்க..அந்த பக்கம் அழைப்பை ஏற்றதும்.." ஹலோ ஹலோ நிலா இந்த பக்கம் சாரு பேசுறன்." அவள் வழமை போலவே அழைப்பில் இருப்பவருக்கு நேரடியாகவே கேட்டு விடும் சத்தத்தில் பேச அவளருகில் வந்த சக்தி சத்தத்தை குறைத்து பேசு என்று கூற.."கொஞ்சம் இரு நிலா..என்ன சார் இன்னும் சத்தமாவா..ஏன் இந்த சத்தம் கேட்காதா சார்..சத்தமா பேச எனக்கு கொஞ்சம் கூச்சம் சார்.. நான் இதே போல பேசிக்கிறேன்."

சக்தி திகைத்து நோக்க சாருவோ தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அங்கிருந்தவர்கள் எல்லோரும் இவளையே பார்த்துக்கொண்டு செல்ல சக்திக்கோ இவள் எப்போ பேசி முடிப்பாள் என்று இருந்தது.

" அதான் நிலா நீ அன்னக்கி செய்தியே அந்த கூலாப்(p) சாமுன்னு ஏதோ சொன்ன முட்ட முட்டயா இருந்திச்சி.. ஆஹ் அதான் அது செய்து நம்ம அக்காக்கு சரியாவே வரல்லயாம் பாவிப்பய எவனோ தப்பா சொல்லி குடுத்துட்டான் போல....ஆஹ் நம்ம அக்காவா இங்க பிளைட்ல தான் பார்த்தேன்..." அந்த அக்காவைப்பார்த்த வரலாறைத்தொடங்க இதற்கு மேல் முடியாது என போனை எடுக்க சக்தி அருகில் வரவும்.." ஹலோ ஹலோ.." என சாரு அழைப்பு துண்டிக்கப்பட்டதற்கு அடையாளமாக சத்தமிட்டுக்கொண்டு இருந்தாள்.

போனை கையில் எடுத்து பார்த்தவள்.." என்ன சார் இது ஒன்னுமே கேட்க மாட்டாது." என்க அவள் கையிலிருந்த போனை பட்டென பறித்தவன் அதனை பார்க்க அது உயிர்ப்பற்று போய் இருந்தது.

*****************

அதிகாலைப்பொழுது ஜில்லென்ற தண்ணீர் தலையில் விழுந்தது முதல் சுடச்சுட காபி வரை அணு அணுவாக இரசித்தவள் காலை சாப்பாடையும் மதிய உணவையும் செய்து சாரதாவிற்கு எடுத்து வைத்து விட்டு அவசர அவசரமாக தயாராகிக்கொண்டிருந்தாள்.

தயாராகி முடித்தவள் நேராக சாரதாவின் அறைக்குள் சென்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டாள்.

"நல்லா இருடா மயூ..இன்னக்கி பர்ஸ்ட் டே பாரு ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் மயூ டீச்சர் மயூ டீச்சர்ன்னு உன் பின்னாலே தான் சுத்த போறாங்க.. என்னையவே வலைச்சிட்ட.." அவர் சிரித்துக்கொண்டே அவள் தலையை வருட சட்டென கடுமையானது சாரதாவின் முகம்..அச்சச்சோ கண்டுபுடிச்சிட்டாங்களோ மாயா விழிக்க.." மயூ சொல்லுறது கேட்கவ மாட்டியா..உனக்கு தான் காலைல தலைக்கு குளிச்சா ஒத்துக்காதே..ஏன்டா இப்படி பன்னுற?" கோபத்தில் தொடங்கி கவலையுடன் முடித்தார்.

" அம்மா அம்மா இங்க பாருங்க ஒன்னு ஒத்துக்கலைன்னா அது ஒத்துக்குற வரைக்கும் நாம ட்ரை பன்னும்மா அதுல நன்மை இருக்கபட்சத்துல.. எனக்கு காலைல குளிக்கிறது ஒத்துக்கலன்னு எனக்கு சும்மா இருந்திடலாமா..அதுல எவ்வளோ உடம்புக்கு நல்லது இருக்கு...பாருங்க முதல்ல எல்லாம் ரொம்ப காய்ச்சலா அடிக்கும்..இப்ப உடம்பு கொஞ்சமா பழகிட்டுது..காய்ச்சல் வாரது இல்ல சோ எல்லாம் அப்படித்தான் மா வராது ஒத்துக்காதுன்னு இருந்தா அதுல இருக்க நன்மையையும் மறந்துட வேண்டியது தான்." அவள் அவர் கழுத்தில் தொங்கிக்கொண்டு விளக்கம் கொடுக்க.." ஹ்ம் என்னமோ போ.." அவரும் சமாதானமாகி அவள் கன்னத்தை தன் கன்னத்துடன் ஒட்டிக்கொண்டார்.

" சரிம்மா நேரமாகிட்டு பாருங்க உங்களுக்கு சாப்பாடு மதியத்துக்கும் செய்து வச்சிட்டேன்.. கரக்ட்டா சாப்பிட்டுட்டு மருந்த குடிக்கனும் சரியா.." புன்னகையுடன் அவர் சரி என்க அவளும் விடை பெற்றுக்கொண்டாள்.

கேட்டை மூடிக்கொண்டு அவள் திரும்பவும்..
"Excuse me..இது ராஜசேகர் அவங்களோட வீடு தான?"
மாயாவின் பின்னால் ஒலித்தது ஓர் ஆண் குரல்.

கருத்துக்களை பகிர

 
Last edited:

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ♥ 17 ♥

❤உன் சிரிப்பில்
என் உலகம்
மறந்தேன்..
அதிலும் அதன்
காரணமாய்
நான் என்கையில்
என்னையே
மறந்தேன்..❤

கேட்டை மூடிக்கொண்டு மாயா திரும்பவும்..
"Excuse me..இது ராஜசேகர் அவங்களோட வீடு தான?"
மாயாவின் பின்னால் ஒலித்தது ஓர் ஆண் குரல்.

திரும்பிப்பார்த்தவள் அந்த புதியவனை யார் என்ற குழப்பத்தில் பார்த்துக்கொண்டு..
"யெஸ் சார் இது அவங்களோட வீடு தான்.. நீங்க..?" என இழுக்க..

"நான் அவங்களோட சன் மதன்."
அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

அவங்க வீட்ட அவங்களே அடையாளம் கேட்குறாங்க என எண்ணிக்கொண்டே
"ஓஹ் சார் நீங்களா ..சாரி சார் உங்களை எனக்கு தெரியாது முன்ன அதான்.. ஒன்னும் நினைச்சிக்காதிங்க. அம்மா உள்ளதான் இருக்காங்க சார் போங்க.. சாரி எனக்கு இன்னக்கி பர்ஸ்ட் டே ஸ்கூல்..ஆல்ரெடி டைம் ஆகிட்டு ஈவ்னிங் மீட் பன்னுறன் சார்..டாட்டா"

கண்களை சுருக்கி அவள் சாரி கேட்டது முதல் இடையில் அம்மா உள்ளே தான் இருக்கிறார்கள் என்று திரும்பி அவள் வீட்டைக்காட்டும் போது துள்ளி அடங்கிய அவள் சிறிய கற்றை முடி..கடைசியாக டாட்டா காட்டி விட்டு சென்ற அந்த வெண்டைக்காய் விரல்கள் வரை அவன் கண்கள் படம் எடுத்திருக்க..அவள் போனதன் பின்தான் யோசித்தான்.. ஆமா அவ என்ன சொல்லிட்டு போனா..சரி வீடு இதான போகலாம். என உள்ளே கேட்டை திறந்து கொண்டு சென்றான் மதன்.

மதியம் பாடசாலை விட்டு.. நடை தூரம் தான் வீடு என்பதால் பத்து நிமிட நடையில் வீட்டை அடைந்தாள் மாயா. எப்போதும் போல் வந்ததுமே அம்மா என அழைத்துக்கொண்டு சாரதாவின் அறைக்கதவைத்திறந்து கொண்டு உள்ளே சென்றவள் அங்கு இருந்த மதனை கண்டதும் தான் "அச்சச்சோ மறந்துட்டோமே..மதன் சார் என்ன நினைச்சிருப்பாரு..ச்சே.." எண்ணியவாறே அங்கு கட்டிலில் அமர்ந்து ஏதோ முக்கியமாக பேசிக்கொண்டிருந்த மதனையும் சாரதாவையும் சங்கடமாக பார்த்தவள் "சாரி அம்மா சாரி சார் வழக்கம் போல வந்துட்டேன்." சொல்லி விட்டு அவள் செல்வதற்கு திரும்ப மாயா என்று அழைத்தான் மதன்.

அவள் திரும்பவும்.."அதென்னா வழமை போலன்னு சொல்லுறீங்க..அப்போ நான் வந்ததால உங்களால வழமை போல இருக்க முடியல்லன்னு தான அர்த்தம்.. சரி நான் இன்னக்கே கிளம்புறன்."
அவன் கூறி விட்டு சாரதாவைப்பார்த்து கண்ணடிக்க..பதட்டமான மாயா.." அய்யோ சார் அப்படி இல்ல இது உங்களோட வீடு."

"அப்போ நீ யாராம்..என் அம்மாவ எவ்வளவோ நல்லா பார்த்துக்குற..வந்ததுல இருந்து உன் புராணம் தான். கம் அன் மாயா ஜாய்ன் வித் அஸ். "
அவன் அழைக்க சங்கடமாகவே வந்து சாரதா பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"அம்மா மருந்து எல்லாம் சாப்பிட்டீங்களா?"
வாஞ்சையுடன் அவள் தலையை தடவியவர் "சாப்பிட்டேன்மா" என்று கூறிவிட்டு.." கொஞ்சம் அசதியா இருக்குடா நான் கொஞ்சம் தூங்குறன்" தொடர்ந்து கூற அவரை போர்த்திவிட்டு இருவரும் கதவை அடைத்து விட்டு வெளியே வந்தனர்.

என்ன பேசுவது அம்மா என்னை பற்றி எல்லாம் சொல்லியிருப்பாங்களோ என்று மாயா யோசித்துக்கொண்டு இருக்க..மதனே பேசினான்.

"சோ மாயா பர்ஸ்ட் டே எப்படி இருந்தது. என்ன subject?"

"நல்லா இருந்திச்சி. மெத்ஸ் சார்.."
கொஞ்சம் தயக்கமாய் வந்தது பதில்.

"இந்த சார் வேணாமே அம்மாவ மேடம்ன்னா கூப்பிட்றீங்க இல்லதான.." மதன் மெதுவாய் கூறவும்..

"அது அம்மாவ அம்மா தான் சொல்லுறன்..அப்போ உங்கள அண்..." அவள் கேட்கும் முன்னே பதறிக்கொண்டு தடுத்தான் அவன்.

"ஐயோ வேணாம் வேணாம்.." என்ன என புரியாது அவனை பார்த்தாள் மாயா.

பின்தான் நல்லாவே காட்டிகிட்டோமோ என்று எண்ணியவன். "இல்ல மாயா..மதன்னே கூப்பிடலாமேன்னு சொல்ல வந்தன் அண்ணான்னு எல்லாம் கூப்பிட்டா ரொம்ப வயசு போல இருக்காது.. இதுவே பெயர் சொல்லி கூப்பிட்டா நானும் உங்க வயசுதான்னு சும்மா சரி யோசிச்சி சந்தோஷபட்டுக்கலாம்ல.." அவளை சமாளிக்க பலதையும் அவன் கூற..மாயாவும் ஒரு சிரிப்புடன்..

" வயசு போறதுன்னா அவ்வளவு கவலை போலயே..ஓகே மதன். நீங்களும் சும்மா வா போ ன்னே கூப்பிடுங்க.. உங்கள விட வயசுல சின்ன பொண்ணு சாரி சாரி ஒரே வயசு தான் நான்." அவள் இடையில் நிறுத்தி ஒரு சாரியுடனும் இதழ் விரிந்த புன்னகையுடனும் பேச இவனும் சரி என்றான்.

"ஓகே மதன் நான் ப்ரெஷ் ஆகிட்டு சாப்பிட்டு வாரன்..ஆமா நீங்க சாப்பிட்டீங்களா..." அவன் சாப்பிட்டதாக கூறவும் அவள் படியேறி மேலே தன் அறைக்கு சென்றாள்.

*****************

போனை கையில் எடுத்து பார்த்தவள்.." என்ன சார் இது ஒன்னுமே கேட்க மாட்டாது." என்க அவள் கையிலிருந்த போனை பட்டென பறித்தவன் அதனை பார்க்க அது உயிர்ப்பற்று இருந்தது.

"என்ன சார் அதையே உத்து உத்து பார்த்துட்டு இருக்கீங்க.." போனை அழுத்தி அழுத்தி பார்த்தவனை பார்த்து கேள்வி வேறு சாரு கேட்க..

அவன் முறைத்த முறைப்பிலே "ஓஹ்ஹ் கரன்ட் தீந்திருச்சி போல..நாம என்ன பன்னுறது.. அது இருக்கு பேசுறதுக்கு. நான் அததானே செய்தேன்.. ஆனால் கேட்க வேண்டியத கேட்க முன்னே அந்த செங்கல் துண்டு போயிரிச்சி.."

அவள் எண்ணியவாறே அக்காவைத்தேட அவளோ எப்போதோ இடத்தை காலி செய்திருந்தாள். சொல்லாமளே போய்ட்டாங்களே என நொந்தவாறே அவள் கண்தெரியும் தொலைவு வரை தேடினாள். அவளிற்கு எப்படி தெரியும் அந்த அக்காவின் திடீர் மறைவிற்கு காரணம் சக்தியின் முறைப்பு தான் என்று..

தேடி கிடைக்காமல் அங்கு சக்தி புறம் சாரு திரும்ப அவன் வழமை போலே தொடங்கி விட்டான்.

"உனக்கு எவ்வளோ சொன்னாலும் புரியவே புரியாதா.. எல்லாம் இந்த அப்பாவ சொல்லனும். நான் அப்போவே சொன்னன் நான் மட்டும் வர்ரேன்னு.. இப்ப ட்ரைவர் நம்பரிற்கு எங்க போறது. பாரு டைம் நைட் டென். ரோட்ல ஒரு வாகனம் இல்ல.. ச்ச இதெல்லாம் உன்கிட்ட சொல்லி என்ன யூஸ் இடியட்." அவன் திட்டி தீர்த்து விட்டு சாரு புறமாய் திரும்ப அவளோ சீரியசாக வானத்தில் எதுவோ எண்ணிக்கொண்டு இருந்தாள்.

"சார் புடிச்சிட்டேன்..ட்ரேவர் நம்பரு தான..அதுக்கு ஏன் இப்பிடி குதிக்கிறீங்க.. ட்ரேவர்கிட்டே கேட்கலாமே சார்." கண்கள் பளிச்சிட கேட்டவளைப்பார்த்த சக்திக்கு கோபம் தலைக்கேற " fool fool ஏன் இப்படி foolisha இருக்க..உன்ன எல்லாம் கம்பனிக்கு கூட்டிட்டு வந்தாங்க பாரு.. கடைசில நான் மேட் ஆகிடுவன். போ பர்ஸ்ட் இங்க இருந்து." அவன் சத்தமிட..

"பே உனக்கு சொன்னன் பாரு என்ன சொல்லனும்..நான் வீட்டுக்கு போறன் நீ எப்படியாவது வா.." விரு விரு என அவள் முன்னே நடக்க..அவனும் போ என்று மறுபக்கம் சென்றான்.

இருட்டில் பாதையோர வெளிச்சத்தில் வெகு தூரம் நடந்து வந்திருந்தாள் சாரு.. ஹ்ம் ஒரு பஸ் கூட இல்லையே..அவள் அலுத்துக்கொண்டு அங்கேயே நிற்க தூரத்தில் அவள் வந்த திசையில் வந்து கொண்டிருந்தது இரு புள்ளி வெளிச்சம்.

திரும்பி நின்று அவள் கைகாட்டிக்கொண்டே நின்றாள் அது நெருங்கும் வரை. அருகில் வர அது ஒரு கார் என புலப்பட்டது.. இவளைத்தாண்டிக்கொண்டு சென்ற கார் சற்றே விலகிச்சென்று நின்றது.

சாருவும் ஓடிச்சென்று பின்கதவை திறக்க...உள்ளிருந்த சக்தியைக்கண்டவள் அடடா இவனா இப்ப எப்படி சமாளிக்கிறது என வேக வேகமாக யோசித்து.." ஓஹ் சார் நீங்களா நான் தான் ட்ரேவர வர சொல்லியிருந்தேன் பாவம் இங்க அலஞ்சிட்டு இருந்த உங்களையும் கண்டு ஏத்தியிருப்பாரு போல. பரவாயில்ல பிரச்சனையில்ல ஒன்னாவே போகலாம்." ஒருவாரு சமாளித்து விட்டோம் என்று ஏறிக்கொண்டாள். சக்தி முறைத்துக்கொண்டே இருந்தான் இவள் மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை.

அவளை போ என்று சொல்லிவிட்டு இவன் திரும்பிட பின் தான் நினைவில் வந்தது சாருவின் பாதுகாப்பு பற்றி..டாக்ஸி பிடித்துக்கொண்டு அவள் சென்ற வழியிலேயே வந்திருந்தான்.

ஏறினதும் தன் வேலையைத்தொடங்கி விட்டாள்.
அண்ணா அண்ணா என ட்ரைவரிடம் வழவழத்துக்கொண்டே வந்தாள். ட்ரைவரும் சுவாரஸ்யமாக ஊர் விவசாயம் என பேசிக்கொண்டு வர சக்திக்கு தான் காதிரண்டும் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.

"ஏன்மா நீயும் சார்ரும் யாரு? " ட்ரைவர் அண்ணா கேட்க..அவள் என்ன சொல்லுவாள் என அறிந்து சக்தி பாய்ந்து வந்து தடுக்கும் முன் " சார்ரும் நானும் ஹஸ்பன்டு வைப்பு அண்ணா." அழகாய் அவள் கூற ட்ரைவரும்.."பொருத்தம் சூப்பர் சார்..நீங்க வாயே திறக்க மாட்டிங்க அதுக்கெல்லாம் சேர்த்தே அவங்க பேசிடுவங்க போல" என்று கண்ணாடி வழி பார்த்துக்கொண்டு கூறினான்.

அவனைப்பார்த்து கடமைக்கு என சிரித்து வைத்தவன் உள்ளே தன் வினை தன்னை சுடும் என்பது இதுதான் போல என்று நொந்து கொண்டிருந்தான்.

இரவு வீட்டிற்கு தாமதமாக வந்தவர்கள் கதவைத்தட்ட வந்து திறந்தாள் நிலா.. "குட் மார்னிங் அண்ணா..குட் மார்னிங் சாரு.." திறந்து விட்டு அவள் சென்று விட.." ஆஹ் குட் மார்னீக் நிலா.." என்றவாறு உள் நுழைந்தாள் சாரு.

இவள் வந்ததுக்கு அப்புறம் இருக்க எல்லாத்துக்குமே நட் கழன்டுறிச்சி..முணுமுணுத்தவாறு போகும் வழியில் சமையல்காரரிடம் தன் அறைக்கு ஒரு glass பால் என்று சொல்லி விட்டு சென்றான்.

மேலே சென்று சிறிது நேரத்திற்கெல்லாம் சமையல்காரர் பாலுடன் வந்து அவன் அறைக்கதவைத்தட்ட இவன் திறந்து வாங்கிக்கொள்ள அதே நேரம் அவள் அறையிலிருந்து வெளியில் வந்த சாரு நேராக நடந்து சக்தியருகில் வந்து அவன் கையிலிருந்த glass ஐ பிடுங்க அவளைப்புரியாது பார்த்தவன்..

" என்ன பன்னுற..உனக்கு வேணும்னா போய் எடுத்து குடி..இதுலயும் சண்டைக்கு வார.."
இவன் மீண்டும் தன் பக்கம் இழுக்க.."முடியாது அது எப்படி நானும் பசியில தான இருக்கன் இரண்டு பேரும் கூட தான வந்தம்.. அப்போ எனக்கு மட்டும் சொல்லாம உங்களுக்கு மட்டும் ஒன்னு சொல்லலாம்." பேசிக்கொண்டே அவள் இழுக்க..

"உனக்கு இதேதான் வேலையா..விடு பர்ஸ்ட் அதை..எப்படிதான் உன்ன இத்துன வருஷம் அங்க வச்சிருந்தாங்களோ..அதான் கிராமமே சேர்ந்து எங்க தலைல கட்டி விட்டிருக்கு.." சக்தி தன் பக்கமாய் பேசிக்கொண்டே இழுக்க மீண்டும் சாரு இழுக்க சட்டென சக்திக்கு ஒன்று தோன்றியது.

தன் பக்கம் பலமாய் இழுக்க அவன் நினைத்தது போலவே அவள் அதிலும் இருமடங்கு பலமாய் அவள் பக்கம் இழுக்க அந்நேரம் பார்த்து சட்டென க்ளாஸை விட்டான் சக்தி.

க்ளாஸிலிருந்த பால் முழுவதும் அவள் மீது கொட்டி விட கோபத்தில் வாய் திறக்கப்போனவள் முதல் முறையாக சக்தியின் சிரிப்பில் தன்னை மறந்து நின்றாள்.

கருத்துக்களை பகிர
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 18 ❤

❤வானவில் கொடுத்தாய்
என் விழிகளில்..
துடிப்போடு இணைந்தாய்
இதயத்தில்..
நீங்கா மாயமாய்
நீளுகிறாய் என்னோடு..❤

முதல் முறையாக சக்தியின் சிரிப்பில் தன்னிலை மறந்து நின்று கொண்டிருந்தாள் சாரு.
இவன் சிரிச்சா இவ்ளோ அம்சமாவா இருப்பான்..என்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிரித்து முடித்தவன் அவளது பார்வையில் அவள் அருகில் வந்தான். தட்டி அவளை அழைக்க அப்போதுதான் கனவில் இருந்து விடுபடுவது போல் விழித்தாள் சாரு. ஒரு வேளை கனவோ என எண்ணிட சந்தேகம் இன்றி இன்னுமே சிரித்த முகத்தோடு நின்றிருந்தான் சக்தி. அவள் விழிப்பதை பார்த்தவன் அவள் நெற்றியில் தட்டி
"போய் முகத்த கழுவிக்கோ.." அறைக்கு சென்று விட்டான்.

அவன் சென்று கதவை அடைத்த பின்தான் எதுக்கு முகம் கழுவ சொன்னான் என்று நினைவு வர..அதுக்கு காரணமும் அவன் தான் என்றும் தாமதமாய் தான் அவளுக்கு நினைவில் வந்தது. கதவு அடைத்திருக்க வேறு வழியின்றி தன் அறைக்கு சென்றாள் சாரு.

அதிகாலைப்பொழுது பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டு உலா வர ஆரம்பிக்க இரவு தாமதமாய் தூங்கி இருந்தாலும் வழமையான நேரத்திற்கே விழித்து விட்டாள் சாரு.
எழுந்து தயாராகிக் கீழே வந்தவள் சாவித்ரி சமயலறையில் இருக்க அங்கே சென்றாள்.

"குட் மார்னிங் வாம்மா சாரு.. நேற்று ரிசப்ஷன் எல்லாம் எப்படி?" காபி கப்பை கையில் கொடுத்தவாறே கேட்டார் அவர்.

வாங்கிக்கொண்டு சமையற்கட்டில் ஏறி அமர்ந்து கொண்டு.." ரொம்ப ரொம்ப நல்லா இருந்திச்சிம்மா...கல்யாணப்பொண்ணு.."என தொடங்கி கதையளக்கத்தொடங்கியவள் நேரம் காலம் இன்றி சாவித்ரிக்கு உதவியவாரே பேசிக்கொண்டிருந்தாள்.

பேசிக்கொண்டே ஹால் பக்கம் திரும்பியவள் கண்ணில் பட்டது சக்தி தயாராகி படிக்கட்டு வழி கீழே இறங்கிக்கொண்டிருந்தது.

ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு ஓடிச்சென்றவள் மீண்டும் வந்து "அம்மா சக்தி சார் கேட்டார்னா நான் இங்க இல்லன்னு சொல்லிருங்க.." என சாவித்ரியிடம் கூறிவிட்டு மீண்டும் ஓடிச்சென்று அங்கு படிக்கட்டிற்கு பின்னால் மறைவில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டாள். இவள் செய்கை புரியாது சாவித்ரி விழித்துக்கொண்டிருந்தார்.

வெகுநேரம் சென்றும் சத்தம் இல்லாது போக மெதுவாக ஒரு கண்ணைத்திறந்து பார்த்தவள் முன் கைகட்டி நின்று கொண்டிருந்தான் சக்தி. சட்டென கண்ணை மூடிக்கொண்டாள் "நம்ம கண்ண திறந்தத கண்டுடானோ" கண்மணிகள் உள்ளே அங்கும் இங்கும் உருண்டன.

"சாரு"

"அய்யோ அம்மா ரொம்ப தலைவலிக்குதே.." நெற்றியை சுருக்கி முனகியவண்ணம் அவள் திரும்பிப்படுத்துக்கொண்டாள்.

"சாரு நீ இவ்வளோ நேரம் பேசிட்டு இருந்தது என் காதுல நல்லாவே விழுந்திச்சி.. மரியாதையா போய் ரெடி ஆகுற..இல்ல இன்னயோட இனிமேல் கம்பனி பக்கம் வந்துடாத." கோபமாய் ஒலித்தது அவன் குரல்.

"கண்ணா அவள் தான் தலைவலி என்று சொல்லுறாளே பாவம்பா இருக்கட்டும் இன்னக்கி விடு." சாவித்ரி கூற..அதனை மறுத்து தலையசைத்த சக்தி.." அம்மா அவள நம்பாதீங்க.. வர வர கொழுப்பு கூடிபோச்சு. என்ன பன்னி வச்சிருக்கா தெரியுமா.." என்று சத்தமிட்டவாறு அவளைப்பார்க்க தெரிஞ்சிடுச்சோ..எழுந்து நழுவப்போனவள் கையை இறுக்கப்பற்றியது சக்தியின் கை..

"சார் வலிக்குது ..அய்யோ என்னோட இருபது ரூவா காப்பு உடைச்சிடாதீங்க அப்புறம் நீங்க தான் அதே கடையில இதே கலருல வாங்கி கொடுக்கனும்.."

அவள் அவனது கையை விலக்க முயன்றவண்ணம் அவன் அழுத்தத்தில் நொறுங்கப்போன வளையலைக்காத்துக்கொண்டிருந்தாள்.

"டேய் டேய் சக்தி கைல குத்திட போகுது விடுடா.." சாவித்ரியும் பேச இருந்தும் முறைத்தவாறே கையை விட்டவன்.."ம்மா அவள் என்ன செஞ்சி வச்சிருக்கான்னு நீங்களே பாருங்க.." அவன் தன் போனில் எடுத்துக்காட்ட அதில் அவன் கம்பனியில் ஆபிஸ் அறையின் கதவு கண்ணாடி சுக்கு நூறாக உடைந்திருந்தது.
இவள் எதுக்கு என்றவாறு சாவித்ரி அவனைப்பார்க்க "ஹம் சொல்லு அம்மா கேட்குறாங்கல்ல" சாருவைப்பார்த்து கூறினான்.

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தரையில் காலால் கோடு இழுத்துக்கொண்டே " நான் ஒன்னும் பன்னல்லம்மா.." அவள் கூறத்தொடங்க அடிச்சேன்னா பாரு என்று கை ஓங்கிக்கொண்டு அவன் அருகில் வர ஓடி வந்து சாவித்ரியின் பின்னால் ஒழிந்து கொண்டவள்.."சார்ர கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்லுங்க அப்போதான் நான் சொல்லுவன்.." சிணுங்க.."டேய் கொஞ்சம் இரு அவ சொல்லட்டும்..நீ சொல்லு சாரு." என்றார் சாவித்ரி.

"அதும்மா என் பைய உள்ள வச்சிட்டன் தெரியாம அத எடுக்க போக முன்னாடி இந்த சார் கதவ அடச்சிட்டு போய்ட்டாரு அதோடே சீக்கணமா வரனும் இல்லன்னா விட்டுட்டு போய்டுவன் சொன்னாரு.. நான் என்ன பன்னட்டும்.. டேவிட் சார்கிட்ட சாவி கேட்டேன் இல்ல சொல்லிட்டாரு. நானும் எத்துனையோ தடவ கேட்டுட்டேன்.. அப்போ அவரு தான் கதவ உடைச்சி எடுத்துக்கோம்மா போன்னு சொன்னாரு அதான், அதுவும் அவர் சொல்லித்தான் உடைச்சேன்." சாவித்ரியின் பின் ஒழிந்து கொண்டு அவர் தோளை ஒருவிரலால் சுரண்டிக்கொண்டே கூறி முடித்தாள் சாரு.

சாவித்ரிக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வர இருந்தும் அவர் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு சக்தியை பார்த்தார். ஆனால் அங்கு இரண்டு ஜீவன்கள் சக்தி இருப்பதை மறந்து வாய்விட்டு சிரிக்க யார்டா என அனைவரும் அத்திசையை பார்க்க அங்கு சதீஷும் நிலாவும் படிக்கட்டருகில் நின்று சிரிக்கிறேன் என்ற பெயரில் சக்தியை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
முறைத்த சக்தி ஸ்டொப் இட் என கர்ஜிக்க இருவரும் சப் சிப் என மூடிக்கொண்டனர்.

சாருவின் பக்கம் திரும்பிய சக்தி.." அம்மா அப்பாகிட்ட சொல்லிடுங்க இனிமே கம்பனில நான் இருக்கனும் இல்ல இவ இருக்கனும்..கம்பனி பக்கம் இவள் தலையே காட்ட கூடாது" கூறிவிட்டு வேகமாக வெளியேறினான்.

*****************

மதன் வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள் பொது விடுமுறை தினம் என்பதால் காலையில் எழுந்து குளித்து முடித்தவள் சாரதாவிற்கு காலை சாப்பாட்டையும் எடுத்துக்கொடுத்து விட்டு கோயில் வரை சென்று வருவதாக தயாராகிக்கொண்டிருந்தாள் மாயா. அவள் சாரதாவிடம் கூறிக்கொண்டு வெளியேறவும் மதனும் அங்கு வந்து சேர்ந்தான்.

"மாயா எங்க போற..?"

"கோயிலுக்கு மதன்..சாப்பாடு எடுத்து வச்சிருக்கன்..சாப்பிடுங்க போய்ட்டு வாரன்.."
அவள் நகரவும்.."எனக்கு பசியில்ல இரு நானும் வர்ரன்."

"சரி வாங்க போகலாம்.." புன்னகையுடன் முன்னே நடந்தாள்.

அதிக வாகனம் போகாத அந்த சாலை மனித நடமாட்டம் ஆக்கிரமிப்பு இன்றி பார்க்க அழகாய் இருந்தது. காலைப்பொழுது வெயில் தரையை தழுவிடாது இருபக்கம் உயர இருந்த மரங்கள் கிளை பரப்பி மறைத்திருக்க ஆங்காங்கே பூக்கள் ஒவ்வோரு வண்ணங்களில் பாதையில் சிதறி இருந்தது.

"அழகா இருக்குல்ல.." மாயா கூற.. ஹ்ம் என்று முணகலாய்ப்பதில் அளித்தவனை திரும்பி ஒருமுறை பார்த்து விட்டு பாதையை இரசித்துக்கொண்டே நடந்தாள் மாயா.

இதுதான் கரக்ட்டான நேரம் சொல்லிடலாம் என் சிந்தித்தவன்..தொண்டையை செறுமிக்கொண்டு ஆரம்பிக்கப்போக...
"மதன் நாளைக்கு கிளம்புறீங்களா..?" முந்திக்கொண்டாள் மாயா.

"ஆமா மாயா.."

"ஏன் மதன் பத்து வருஷமா நீங்க இங்க வரவே இல்ல.. அம்மாக்கு நீங்க மட்டும் தான இருக்கிறீங்க ஏன் அவங்க கூட நீங்க இருக்கல்ல.. அவங்களுக்கு அட்டார்க் வந்த போது கூட ரொம்ப நேரம் கழிச்சி வீட்டுக்கு சேலை விற்க வந்தவங்க தான் கொண்டு போய் அட்மிட் பன்னி இருக்காங்க.. அப்போ கூட உங்களுக்கு தகவல் சொல்லியும் நீங்க வரல்ல..?" மனதில் அடக்கி வைத்திருந்த அத்தனையும் கேள்வியாய் வந்தது.

"யெஸ் மாயா அப்போ எனக்கு ஒரு முக்கியமான மீடிங்.. அம்மாவ பார்த்துக்க என் பி.ஏ வ நான் கூடவே அனுப்பிருந்தன்.. ஹோர்ம்லே கூடவே இருக்கது போல் நர்ஸும் நான் ஏற்பாடு பன்னிருந்தேனே..என்ட் நான் இவ்வளோ கஷ்டப்படுறது என் அம்மாவ நல்லா பார்த்துக்க தானே.."
அவன் பதிலில் தான் செய்தது தானே சரி என்ற நியாயமும் வேறு இருந்தது. சுரு சுரு என கோபம் தலைக்கேற இருந்தும் அடக்கிக்கொண்டு..

" ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட புரியாதா..? உங்க அம்மாக்கு நீங்க தான மகன்? அவங்க உணர்வ உங்களால தான புரிஞ்சி கொள்ள முடியும்..உங்க சின்ன வயதுல அங்கிள் இறந்த அப்புறம் உங்களுக்காகவே வாழ்ந்தங்க அவங்க.. யார்க்கு வேணும் உங்களோட பணம்.. இங்க அவங்க தனியா இருக்காங்க அது உங்களுக்கு தெரியலயா..சார் இதோ பாருங்க யார்க்கு எப்போ இறப்பு வரும் யார்க்கும் சொல்ல தெரியாது. அதுனால தான் இவ்வளவு அலச்சியமா உறவுகள மதிக்காம இருக்கு உலகம் இன்னக்கி.. அப்படி ஏதும் நடந்துட்டா உங்க பணத்த வச்சி அவங்க, உங்க கூட வாழனும் ஏங்கின வாழ்க்கைய கொடுக்க முடியுமா உங்களால? உங்க தொழில் அங்க தான் அதை மாற்ற முடியலனாலும் உங்கள பிரிஞ்சி இருக்கனும் தெரிஞ்சியும் உங்க ஆசைக்காக படிக்க வச்சி அங்க அனுப்பின உங்க அம்மாக்கு நீங்க உணர்வுகளால கூட ஏக்கத்த தீர்க்கலாமே.. ச்சே பத்து வருஷமா ஒரு போன் கால் கூட இல்ல என்ன மனுசன் சார் நீங்க.. ஒரு நாள் உங்கள சாப்பிட வைக்க பட்டினி கிடந்த உங்க அம்மாகிட்ட சாப்பிட்டீங்களான்னு ஒரு வார்த்த கேட்டு இருப்பீங்களா? யாரும் இல்லன்னு உள்ள ஒரு உணர்வு சொன்னாலும் உனக்காக நான் இருக்கேன்னு சொல்ல முடியும் இன்னொரு உணர்வுக்கு...அது யாரு எங்க இருக்காங்கன்னு தெரியலன்னாலும் கூட.."

ஆவேசமாய் பேசி முடித்த மாயா கடைசி வரிகளை எங்கோ பார்த்துக்கொண்டு கூறி விட்டு திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள். அவள் கூறியவற்றிலும் அவள் கேள்விகளிலும் சிலையாய் நின்று கொண்டிருந்தான் மதன்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 19 ❤

❤இதயம் உருகித்தான்
கரைந்து போவதை
பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன்
இந்த நிமிடம் தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்❤

சக்தி ஏதோ தீவிரமாக தனது லேப்பில் டேவிட்டிடம் விளக்கிக்கொண்டிருந்தான். விளக்கி முடித்தவன் அவனை நிமிர்ந்து நோக்கி புரிந்ததா என்று கேட்க அவனோ சீரியசாக அங்கிருந்த சிசிடிவிகளை ஒளிபரப்பிக்கொண்டிருந்த மொனிட்டரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

வர வர இங்க இருக்க எல்லாமே அவள மாதிரியே தான் எண்ணியவாரு சுத்துதுங்க கோபம் தலைக்கேற டேவிட் என்றான் சக்தி..

"அய்யோ சார் காது காது.." அவன் பக்கத்திலே நின்று கொண்டிருந்த டேவிட் காதை தேய்த்துக்கொண்டான்.

"சார் உஷ்ஷ்ஷ்ஷ் அங்க பாருங்க.." அவன் மொனிட்டரை சுட்டி காட்ட அதன் மேல் பார்வையை பதித்தான் சக்தி.

"வாட்..?" அங்கு எதுவுமில்லாது போக கோபத்தில் திரும்பி வினவினான்.

" அங்க அதோ மெய்ன் கேட் கிட்ட சார்.. ஒரு பொண்ணு முகத்த மறச்சிருக்கு பாருங்க." அங்கு அவன் பார்க்க... ஒரு சல்வார் அணிந்த பெண் தன் முகத்தை ஒரு துண்டால் மறைத்து தலையையும் மூடி காவலாளியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

"அதுக்கு இப்போ என்ன ?" எரிச்சலுடன் அவன் கேட்க.." என்ன சார் நீங்க நியூஸே பாரக்குறது இல்லையா.. இப்படிதான் இப்போ நாட்டுல நிறைய இடங்கள்ள தீவிரவாதிகள் முகத்த மறச்சிகிட்டு அதுகும் பொண்ணுங்களா அனுப்பி பாம் போடுறாங்களாம்.. கடைசி வாரம் கூட இப்படி ஒரு கம்பனில தான் உள்ள வந்து பர்ஸ்ட்டே கம்பனி ஓனர.." சக்தி கையசைவால் தடுக்க அவன் பேச்சு நின்றது.

" இப்போ என்ன உனக்கு அவள் யாருன்னு பார்க்கனும் அதான.. ஓகே நான் பார்த்துக்கிறேன் நீ இங்க யார்கிட்டயும் இத சொல்ல வேண்டாம்.. அப்புறம் கம்பனி டிஸ்டர்ப் ஆகிடும் நிலைமய பர்ஸ்ட் பார்க்கலாம்." கூறியவாறு எழுந்து சென்றான் சக்தி.

அவன் லிப்டில் கீழ்தளத்தை அடைய அந்த பெண்ணும் மெய்ன் டோரை அடைந்திருந்தாள். சக்தி அருகில் நெருங்க நெருங்க அவள் தடுமாறிக்கொண்டே சுவருடன் ஒன்றிக்கொண்டு அவனைக்கடக்க முயல சட்டென அவளை வழிமறித்தான் சக்தி.

"யார் நீ..?" சக்தி குரலில் கடுமையை ஏற்றி வினவ..

அவளோ பதிலின்றி கீழே குனிந்தவண்ணம் இருந்தாள். "கேக்குறேன்ல.." என்றவாறே அவள் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கினான்.

"சார் என்ன சார் எதுக்கு இப்போ அத எடுத்தீங்க குடுங்க இங்க.." உள்ளிருந்து பட பட என பொரிந்தாள் சாரு.

திகைத்த சக்தி "உன்ன நான் இந்த பக்கம் வர கூடாதுன்னு சொன்னேனா இல்லையா..எதுக்கு வந்த என்ட் இது என்ன வேஷம் ஆஹ்?" உறுமலாய் அவன் கேட்கவும்..

" சார் சும்மா எல்லாத்துக்கும் திட்டாதீங்க..நீங்க சொன்னத தான் நான் செய்திருக்கேன்.. கம்பனி பக்கம் தலைய காட்டாதே சொன்னீங்கல்ல அதுனால தான் தலைய மூடிகிட்டு வந்தன்.."

சக்திக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. இவள் தெரிந்து செய்கிறாளா இல்லை தெரியாமால் செய்கிறாளா.. இவன் சிந்தித்து விடை காணும் முன்னே..

க்ளுக் என்ற சிரிப்போடு அங்கிருந்து ஓடினாள் சாரு. சக்திக்கு புரிந்தது இவள் வேண்டும் என்றே தன்னை சீண்டத்தான் இவ்வாறு செய்கிறாள் என. சாருவை முதலில் திருட வந்தவள் என்ற கண்ணோட்டத்தில் கண்ட சக்திக்கு அவளது வெகுளித்தனம் புரிய ஆரம்பிக்க அவனை அறியாதே அவள் மேல் இருந்த அந்த எண்ணமும் அகன்றிருந்தது. ஆனால் விவரம் இல்லாத பெண் என்றிட முடியாது கிராமம் நகரம் இதற்கிடையிலான வித்தியாசங்களில் ஏற்படும் சில குழப்பங்கள் தவிர ஏனைய அனைத்திலும் தெளிவு தான் ஏன் வெகு புத்திசாலி என்று கூட கூறலாம். அவள் ஓடியது அப்போது தான் உரைக்க தானும் அவள் சென்ற திசையிலே ஓடினான் சக்தி. அவள் லிப்ட்டை பயன்படுத்துவது குறைவு என அறிந்தவன் தான் அதில் சென்றால் அவளை பிடிப்பது இலகு என்பதையும் மறந்து அவனும் படிக்கட்டுக்களை இரண்டிரண்டாக தாவி ஏறினான்.

படிக்கட்டு வளைவொன்றில் இவன் வேகமாய் ஏற நேரெதிரே இறங்கிக்கொண்டிருந்த டேவிட் "சார்" என்ற கூச்சலோடு மோதி விழப்போக சக்தி அவனை தாங்கிப்பிடித்தான்.

யாரோ சிரிக்கும் சத்தம் கேட்க சக்தி நிமிர அங்கே சாரு மேல்தள படியில் இருந்து இவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் தான் டேவிட்டை தான் தாங்கி பிடித்திருக்க அவன் தன் கோர்ட்டை பிடித்தவண்ணம் இருப்பதை உணர்ந்த சக்தி கண்களை மூடி.."டேவிட்.." என்றான் பல்லைக்கடித்தவண்ணம்.

"சார் வெக்கமா இருக்கு.." டேவிட் சக்தியின் ஷர்ட் பட்டனை திருக..இதற்குள் அங்கு வந்திருந்த ரம்யாவும் இதை கண்டுவிட..
"யோவ்.." என அவனை முறைத்தவண்ணம் நிமிர்த்தி நிற்க வைத்தான் சக்தி. அவனுக்குமே அதிசயமாய் கோபம் விடுத்து சிரிப்பு தான் வந்தது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொண்டவன் தலையை அழுந்த கோதிக்கொண்டான்.

"என்ன சார் ஆபிஸ் டைம்ல ஓடிப்பிடிச்சி விளையாடிட்டு இருக்கீங்க.." டேவிட் கேட்க சட்டென சுதாரித்த சக்தி.."டேவிட் வீண் பேச்ச விட்டுட்டு கம் டூ மை ரூம் வித் தட் ப்ராஜக்ட் பைல்ஸ்." கூறிவிட்டு ஒரு முறை சாருவை ஆழமாய் பார்த்து விட்டு.. தட தட என படிக்கட்டுக்களில் இறங்கி சென்று விட்டான்.ஒரு நிமிடம் புரியாது தலையை சொறிந்து விட்டு டேவிட்டும் அவன் பின்னேயே சென்றான்.

அன்று வேலை நேரம் முடிந்து சிவாவுடன் சக்திற்கு முன்னதாகவே வீடு திரும்பியிருந்தாள் சாரு.
இரவு உணவின் பின் அன்று முழு நிலவு என்பதால் மாடியில் நின்று நிலவை இரசித்துக்கொண்டிருந்தாள் சாரு.. "எத்தன முற கேட்டுட்டேன் இந்த கடலுக்கு மட்டும் கூட்டிட்டே போக மாட்டேங்குறாங்க.. இந்த சதீஷ் நிலா ரொம்ப மோசம்.."அவள் சத்தமாக தனியாக பேசிக்கொண்டிருக்க அதற்கு நேர் கீழே தன் அறை பெல்கனியில் இருந்த சக்தி யார் பேசுவது என்று யோசித்த வண்ணம் மாடிப்படிகளில் ஏறினான்.

அங்கு சென்றவன் கண்டது வெள்ளை நிற தாவணியில் முடி விரிந்து முதுகில் படர்ந்திருக்க கன்னத்தை கையில் தாங்கி நிலா முகம் இரசித்துக்கொண்டிருந்த மதியைத்தான்..

அவள் கன்னம் வருடிச்சென்ற முடியை ஒரு கரம் விலக்கவும் திடுக்கிட்டுத்திரும்பினாள் சாரு.
அங்கு நின்றுகொண்டிருந்த சக்தியை கண்டு திகைத்தவள் அவன் பார்வையில் இருந்த மாற்றத்தையும் கண்டு கொண்டாள் ஆனால் எதற்கு என்று தான் புரியவில்லை.. காலையிலும் இப்படி பார்த்தானே என அவள் மெதுவாய் அந்த பார்வையிலிருந்து தன் விழிகளை ஒதுக்கி குனிந்து கொண்டாள்.

முடியை காதின் பின் ஒதுக்கிய அவன் விரல்கள் அங்கேயே நிலைத்து விட பெருவிரல் மட்டும் தொடர்ந்து அவள் கன்னத்தை மெதுவாக வருடியது. சாருவிற்கோ உடல் சிலிர்த்து அடங்கியது ஒரு முறை.. கண்ணை இறுக்க மூடிக்கொண்டவள் அவன் நெருங்குவதை அவன் மூச்சுக்காற்று உணரச்செய்ய சட்டென விலகிச்சென்றாள். தடுத்தது அவன் கரம்.. அவள் கரம் பற்றி அவன் இழுக்க அவனுடன் மோதி நின்றாள் சாரு.. மெதுவாய் அவள் முகவாய் பற்றி உயர்த்திய சக்தி அவளை நோக்கி மெதுவாய் குனிந்து அவள் கன்னத்தில் தன் இதழ் பதித்தான் மென்மையாய் அதே நேரம் அழுத்தமாய்.

*************

தென்றல் இவள் மேனி வருடிட குளிரில் சால்வையை இறுக்க போர்த்திக்கொண்டு தோட்டத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள் மாயா.. இன்று முழு நிலவு சட்டென அவள் வானத்தைப்பார்க்க களங்கமற்று அழகாய் ஒளி வீசிக்கொண்டிருந்தது நிலா.. அது அவளுக்கு எதுவோ உணர்த்த தன்னாலே அவள் கன்னம் வருடியது அவள் விரல்கள். இனம்புரியா உணர்வில் சிக்கியிருந்தவளை தன்னிலைக்கு அழைத்து வந்தது மதனின் அழைப்பு..
அவள் திரும்பி அவனைப்பார்த்து புன்னகைக்க..

" என்ன கோபம் எல்லாம் போயாச்சா மாயா மேடம்?" என்று மதன் கேட்க அவனைப்பார்தது அழகாய் சிரித்தவள்.."அதெல்லாம் நான் வரும் போது யாரோ அம்மா மடில அழுது ஓய்ஞ்சி போய் தலை வச்சிட்டு தூங்கி இருந்தாங்களே அப்போவே போயே போயாச்சி மதன் சார்.."

தலையை சரித்து சிரித்துக்கொண்டே தலையைக்கோதிக்கொண்டவன்.."அப்போ பார்த்திட்டீங்க..ஹம் தாங்ஸ் மாயா.." என்றான் கண்களில் நன்றியுடன்..

"என்ன மதன் நீங்க தாங்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு.."

"சரி சரி சொல்லல.."

சிறிது நேரம் மௌனத்தில் கரைய..அதைக் கலைத்தான் மதன்.." மாயா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே..?"

என்ன என்றவாறு அவள் பார்க்க.."ஹ்ம் உங்க அம்மா அப்பா..?"
என்று அவன் இழுக்க.. "நினைச்சன் இதுதான் கேட்பீங்கன்னு.. எனக்கு என் அம்மா அப்பா யாருன்னு தெரியாது மதன்.. எனக்கு நான் இங்க வந்த ஆறு மாதத்துல என் அம்மா அப்பா எல்லாமே சாரதாம்மா தான். எனக்கு வேற யாருமில்ல." அவள் முடிக்கவும்..அவன் ஏதோ பேச வரவும் அவளே தொடர்ந்தாள்..

"பட் அப்படின்னு என்னால சொல்லவும் முடியல்ல காரணம் எனக்காக யாரோ இருக்காங்க..எனக்காக தவிச்சிட்டு இருக்காங்கன்னு எனக்குள்ள ஒரு உணர்வு எப்பவும் சொல்லிட்டே இருக்கும் மதன்." அவள் நிலவைப்பார்ததவாறே கூறி முடித்தாள்.

"மாயா நான் இதுவரை எப்படி சொல்லுறது..எனக்கு இதுவரை தோன்றாத ஒரு உணர்வு உன்ன பார்த்ததும்..எனக்கு சொல்ல தெரியல்ல இது காதலா ன்னு ஆனால் லைப் லாங் உன்னோட இருக்கனும் தோணுது. ஆனால் தயவு செய்து உன் நிலைமைய பார்த்து பரிதாபப்பட்டு இப்படி சொல்லுரன் நினைக்காத.. உன்ன பத்தி எனக்கு அம்மா சொல்ல முன்னாடியே என் மனசு எனக்கு சொல்லிடிச்சி.. டைம் எடுத்துக்கோ மாயா.. ஒரு நல்ல முடிவா சொல்லு..நான் நாளக்கி போறன் திரும்பி.. ஆனால் இனிமேல் வாரத்துக்கு இரண்டு நாள் கண்டிப்பா வருவன். Good night." கூறிவிட்டு அவன் சென்று விட அவன் செல்லும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாயா..அவள் ஓரளவு அவன் நடவடிக்கைகள் வைத்து எதிர்பார்த்தது தான் இது. அதனால் அவ்வளவாக அதிர்ச்சி ஏதும் இல்லை.

நீண்ட நேரம் நிலவைப்பார்த்தே அமர்ந்திருந்தவள் தெளிவாக ஒரு முடிவு எடுத்தவளாக உள்ளே சென்றாள்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 20 ❤

❤உன்னை நினைக்க
மறந்திடா இதயம் இது..
முப்பொழுதும்
உனையன்றி வேறு
நினைவில்லை..
இருந்தும் கரையாததோ
உன் இதயம்..
கலங்குகிறேன்
எப்பொழுதும்...❤

நிமிர்ந்த சக்தி மீண்டும் கண்களை இறுக்க மூடியிருந்தவள் நோக்கி குனியவும் சட்டென அவனை தள்ளிவிட்டாள் சாரு.
தள்ளிவிடவும் தான் தன்னிலை உணர்ந்தவன் தான் என்ன செய்தோம் என கண்டறியவே சில நேரம் பிடித்தது. அதற்குள் தன் கன்னத்தை அழுந்த துடைத்துக்கொண்ட சாரு..அவனை முறைத்துக்கொண்டே " என்ன சார் இது..உங்களுக்கு அறிவு இல்ல.. சின்ன புள்ளத்தனமா இப்படி கன்னத்த எச்சில் பன்னுறீங்க..முதல்ல நல்லா சோப்பு போட்டு கழுவனும்." அழுந்த அழுந்த துடைத்துக்கொண்டே படியிறங்கிச்சென்றாள் சாரு.

சக்திக்கு சிரிப்பு தான் வந்தது அவள் செயலில். கோபமோ துளியும் இல்லை அவனுக்கே ஆச்சரியமாய்த்தான் இருந்தது. இதுவரை எந்த பெண்ணிடமும் இப்படி தோன்றியதை விட்டு நிமிர்ந்து பார்க்க வேண்டும் என்று கூட நினைத்ததில்லை. ஆனால்... மேலும் யோசிக்க அவனுக்கு தேவையிருக்கவில்லை சில காலமாகவே அவனும் யோசித்துக்கொண்டு தான் இருந்தான் அவனுள்ளே ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் பற்றி..அதனாலோ இன்று இந்த சின்ன தீண்டல் போதுமாய் இருந்தது சக்திக்கு அவன் மனம் புரிந்திட..
முதன் முதலாக நிலா அவனிற்கு அழகாய் தோன்றியது. அதைவிடவும் அதில் தெரியும் அவனது மதியின் முகம் வெகு அழகாய் இருந்தது. வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

கீழிறங்கி அறைக்கு வந்த சாருவின் இதயமோ தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. என்னதான் அங்கு கோபமாய் பட பட என பொரிந்து விட்டு வந்துவிட்டாலும் மனம் ஒரு நிலையில் இருக்க மறுத்தது. இதயமும் விட்டால் தொண்டைக்கு வந்து விடுவேன் என்பது போல் நாலா பக்கமும் அடித்துக்கொண்டிருந்தது.

"என்ன இது இப்படி பட பட ன்னு அடிக்குது.. இங்க வேற குறு குறு ன்னு இருக்கு.. இந்த சக்தி என்ன பன்னி வச்சான்.."மீண்டும் மீண்டும் கன்னத்தை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். வெகு நேரமாக உறக்கமின்றி புரண்டு புரண்டு படுத்தவள்.. ஒரு முடிவுடன் எழுந்து மாடிக்கு சென்றாள். அவள் நினைத்தது போலவே அவன் அங்கு தான் இருந்தான்.

"சார்." என்றாள் மெதுவாக.. அவனோ திரும்பவில்லை.. "கேட்டுதான இருக்கும்... எப்படி கேட்குறது.." எண்ணிக்கொண்டு மீண்டும் மெதுவான குரலில் "சார் ஒன்னு கேட்கனும்.." என்றாள்.

இப்போதும் பதில் இல்லை..தாவணியின் நுனியை கையில் சுருட்டிக்கொண்டே இன்னும் நெருங்கிச்சென்று தயங்கித் தயங்கி அவன் தோள்பற்ற சடாரென அவள் எதிர்பார்க்காதவாரு அவளை இழுத்து தனக்கும் சுவற்றிற்கும் இடையே சுவற்றில் சாய்த்து நிறுத்தியவன் சொல்லு என்றான் புன்னகையுடன்..
"எதுக்கு இப்படி சிரிக்கிறான்." இருந்த கொஞ்ச துடிப்பும் நின்று விடும் போல இருந்தது.

அவன் திடீரென இழுத்த அதிர்ச்சியில் இருந்து வெளிவராதவள் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு..அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்து " எதுக்கு அப்படி செய்தீங்க. " என்றாள் சண்டை இழுக்கும் தொனியுடன்.

"எப்படி?" என்றவாறே அவள் இருபக்கமும் கைகளை சுவரில் வைத்து குனிந்தான்.

"அதான் அப்போ அப்பிடி.." அவள் இருபக்கம் பதிந்திருந்த கைகளை பார்த்தவாறே கேட்க கொஞ்சமாய் பின்னகர்ந்து கொண்டே கேட்டாள்.

"அதான்மா எப்போ எப்பிடி?"
அவன் அவள் தொனியிலே மீண்டும் புரியாதது போல் கேட்க..

"உண்மையிலே மறந்துட்டானா இல்ல கனவா..ஒருவேள கனவு தானோ..நாம கூட ஒழுங்கா தூங்கலயே அதால ஏதாவது ஆகி கனவு வந்திருக்குமோ.." சீரியசாக அவள் சிந்திக்க..

அவனோ அவள் சிந்தனையை படித்தவன் போல்..."கனவில்ல.. நிரூபிக்கட்டுமா நான்..?" ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டுக்கொண்டே மீண்டும் அவளை நெருங்க அவன் நெஞ்சில் கைவைத்து அவனை பின்னோக்கி தள்ளிப்பிடித்தவள்..

"இந்த சார்க்கு இன்னக்கி என்ன ஆச்சி..சுய நினைவோடதான் இருக்காறா.." யோசித்தவண்ணம்..
"சார் சார் அதெல்லாம் வேணாம் எனக்கு தூக்கம் வருது." சொல்லிவிட்டு அவன் வலது கைக்கு கீழாக குனிந்து அவனது கைச்சிறையில் இருந்து விலகி திரும்பியும் பார்க்காது ஓடியே விட்டாள் சாரு.

சக்திக்குதான் எல்லாமே அழகாய் இருந்தது. தலைகோதிச்சிரித்தவன் சிரித்தவாறே படியிறங்கிச்சென்றான். அவன் படிக்கட்டைத்தாண்டி செல்லவும் படியின் அடியில் இருந்த இரு தலைகளும் மெல்ல வெளியில் நீட்டின.

"சத்தீஷ்ஷ் அவன் சிரிக்கிறான்டா.." நிலா சக்தி சென்ற திசை பார்த்துக்கொண்டே கூறவும்..

"சாருவும் இப்பதான் ஓடினா அதுக்கு பின்னாலே இவனும் சிரிச்சிட்டே வாரான்..சோ..?"
சதீஷ் இழுத்துக்கொண்டே நிலாவைப்பார்க்க..
"சம்திங் சம்திங்.." என்று நிலாவும் அவன் பார்வையுடன் இணைந்து கொண்டாள்.

"எப்படியோ அவன் சிரிச்சிட்டான் பாரு.. இனிமே தான் இருக்கு சீன்..காதல் அவனை படுத்தும் பாட்டை நாமும் பார்த்து இரசிப்போமே.."
நிலா ராகம் பாட..

"உவ்வே நல்லாவே இல்ல வேற ட்ரை பன்னு. சரி வா போய் தூங்கலாம் அப்போதான் நாளைக்கு விடியவே எழும்பி இங்க சீன் பார்க்கலாம்." சதீஷ் கூற நிலாவும் அதுவும் சரிதான் என தலையாட்ட இருவரும் தத்தமது அறை நோக்கி நடந்தார்கள்.

ஆனால் அந்த தளத்தில் இருந்த எதிரே எதிரே இருந்த இரு அறைகளில் இருந்த இரண்டு இதயங்களும் தான் உறக்கம் இன்றி வெவ்வேறு எண்ணங்களில் உருண்டு கொண்டிருந்தது.
சக்தி தனக்குள்ளே ஏற்பட்டிருக்கும் அழகிய உணர்வை இரசித்துக்கொண்டிருக்க.. அங்கு சாருவோ சார்க்கு ஏதாவது மூளைள கோளாரா இருக்குமோ பின்ன காரணமே இல்லாம சிரிக்கிறாரு..காரணமே இல்லாம ஏதேதோ பன்னுறாரு..என்னவா இருக்கும்..
என தன் இல்லாத மூளையை சீரியசாக கசக்கிக்கொண்டிருந்தாள்.

காலைப்பொழுது அழகாய் விடிய மெல்ல சாருவின் அறைக்கதவு திறந்து கொள்ள அதில் இருந்து மெல்ல வெளியே நீண்டது சாருவின் தலை. "ஹப்பா அவன் இன்னும் எழுந்தில்ல" என்று இவள் அடுத்தபக்கம் திரும்ப...அங்கு இவளுக்கு வெகு அருகில் இருந்த இரு முகங்களையும் கண்டு அலறப்போனவள் வாயை அழுந்த மூடினாள் நிலா.."உஷ் சத்தம் போடாத..நாங்க தான்." என்றாள் நிலா.

"நீங்கதானா" என்றவாறு அமைதியானவள் "ஆமா இங்க என்ன பன்னுறீங்க?" சாரு கேட்க சதீஷ் சக்தியின் அறைக்கதவை காட்டினான். சாரு அந்த பக்கம் திரும்ப அவன் அறைக்கதவு திறந்தது. இவள் ஐயோ என்று உள்ளே சென்று மீண்டும் தன் அறை கதவை மூடிக்கொள்ள வெளியே வந்து சோம்பல் முறித்த சக்தியின் பார்வை எதிரே இருந்த அறைகதவில் மொய்க்க, நேராய் சாரு அறை அருகில் வந்து தட்டப்போனவன் பின் கையை எடுத்துக்கொண்டு ஒற்றை காலால் ஒருமுறை சுற்றி வந்தவன் வெட்கப்பட..
"டேய் முடியலடா இதுக்கு இவனோட சிடுமூஞ்சே பெட்டர்.." நிலா சதீஷ் காதில் முணுமுணுத்தாள்.

அப்போது தான் சாருவின் அறைக்கதவிற்கு அருகில் தரையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்த நிலாவையும் சதீஷையும் கண்டவன் திரு திரு என விழிக்க இவர்களோ இவனுக்கு மேலாக விழித்தனர்.

"ஹாய் அண்ணா குட் மார்னிங்.." நிலா முதலில் பேச..தொண்டையை செருமிக்கொண்ட சக்தி "மார்னிங்.. இங்க என்ன பன்னுற?" கடுமையை குரலில் ஏற்றி வினவ.."அத நாங்க கேட்கனும்" என முணுமுணுத்த சதீஷின் வயிற்றில் முழங்கையால் இடித்துவிட்டு.." படிக்கிறம் அண்ணா.." என்று புத்தகத்தையும் சேர்த்தே தூக்கிக்காட்டினாள் நிலா.. "ஓஹ் படிங்க படிங்க.." என்று விட்டு நகர்ந்து சென்ற சக்தியை இருவரும் அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தனர். பின்னே எதற்கு எடுத்தாலும் கேள்விகளாலே துளைத்து எடுப்பவனது இந்த அமைதியும் மாற்றமும் அதிசயிக்க தானே செய்யும்.

சக்தியின் அறைகதவு மூடிக்கொள்ள "சதீஷ் நீ சொன்னது சரி தான்டா.." நிலா கூறவும் மீண்டும் சாரு அறைக்கதவைத்திறந்து எட்டிப்பார்த்தாள்.

"சார் போயாச்சா?? " அவள் கேட்க ஆம் என தலையாட்டிய சதீஷ் " இங்க என்ன நடக்குது? "என கேட்டான்.

" அய்யோ அத ஏன் கேட்குற நேத்து சார்க்கு தலைல பலமா அடி..அதுல இருந்து இப்படிதான் இருக்காரு." அவள் சோகமாய் கூறவும் இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து விட்டு " எப்போ??" என்றனர் ஒரே குரலில்.

"நேத்து ஒரு பைல் எடுக்க... அத தேட கீழ குனிந்து அங்கிருந்த இழுப்பறையில சார் தேடிட்டு இருந்தாரு நான் எதுக்கு நேரத்த வீணாக்கனும் நாமளும் தேடலாமேன்னு மேல இருந்தத திறந்து தேடினன்..சார் எழுந்தார இடிச்சிரிச்சி.. பாவம்ல சார்.."
இதிலும் நீ தானா என்று இருவரும் பார்த்து விட்டு இதனாலயா இருக்குமோ என சிந்திக்க ஆரம்பிக்க சாருவும் எழுந்து சென்றாள் அதே சோகத்துடன்.

***************

காலையில் எழுந்து பாடசாலைக்கு செல்ல தயாராகி வந்த மாயா நேராய் மதன் அறைக்கு சென்று கதவைத்தட்டினாள்.

கதவைத்திறந்தவன் "வா மாயா.." என்று வரவேற்க உள்ளே சென்றவள் அவன் காட்டிய கதிரையில் அமர்ந்து எப்படி ஆரம்பிப்பது என்று தன் கைவிரல்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"மாயா... " மதன் அழைக்கவும் நிமிர்ந்தவள் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

"மதன் மன்னிச்சிடுங்க எனக்கு கல்யாணம் செய்துக்குறதுக்கு விருப்பம் இல்ல என்ட் எனக்கு ஐடியாவும் இல்ல..உங்க மனசுல அப்படி ஒரு எண்ணத்த நான் எப்படி எதனால உருவாக்கினேன் தெரியல்ல.. அதுக்கும் மன்னிச்சிடுங்க.. என் உணர்வுகள நீங்க புரிஞ்சிப்பீங்க நினைக்கிறேன் மதன்." சொல்லிவிட்டு அவள் எழுந்து வாசல் நோக்கி நடந்தாள். வாசல் வரை சென்றவளை தடுத்தது மதனின் குரல்.

"ஆனால் மாயா நீங்க மறுக்குறதுக்கு இது மட்டும் தான் காரணம் என்று எனக்கு தோணல்ல.. இதுக்கு பின்னால ஸ்ட்ரோங்கான ஒரு காரணம் இருக்கு..m i right?" அவன் கேட்கவும் அதிர்ந்து நோக்கினாள் மாயா..

சிறிது நேரம் மௌனமே அங்கு ஆட்சி புரிய அவன் தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்தவள் ஒருவாறு தரையை பார்த்துக்கொண்டே கூறினாள்.

அவள் பதிலைக்கேட்டவன்..."வாட் அது எப்படி நீங்க கரக்ட்டா சொல்லுறீங்க மாயா?" ஆச்சரியமாய் வினவினான் மதன்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 21 ❤

❤இருதயம்
துடிக்கவில்லையடி
உனை கண்ட நொடி..
மறந்துதான் போனதோ
துடிப்பையும்..
ரகசியமாய்
தவிக்கிறேன்..
மாயவள் உன்னால்..❤

என்றுமில்லா முகமலர்ச்சியுடன் அம்மா என்று வந்தவனை பார்க்க சாவித்ரிக்கோ சந்தோஷம் தாங்கவில்லை..காரணம் அறியாவிட்டாலும் அவனது முகமலர்ச்சியை பார்க்கவே போதுமானதாக இருந்தது அவரிற்கு.


"வா சக்தி.. இரு காபி தாரன்.." அவர் சொல்லிவிட்டு சமயலறைக்குள் நுழைய மேசையில் சமயலறைக்கு பக்கமாய் போட்டிருந்த கதிரையில் சென்றமர்ந்தான் சக்தி.


முழித்துக்கொண்டே அவன் எங்கே இருப்பானோ என்று படியிறங்கி வந்த சாரு இவனைக்கண்டு விட மெதுவாய் பின்னால் பதுங்கி பதுங்கி வந்து சமயலறைக்குள் நுழைய முயல இவள் பதுங்கி வந்ததை முன்னால் இருந்த கண்ணாடியூடு பார்த்துக்கொண்டிருந்த சக்தி அவள் கடக்கப்போகும் நொடி சரியாகப்பற்றினான்.


முன்னால் திரும்பி அமர்ந்தவாறே சரியாக பின்னால் கை நீட்டி தன் கை பற்றிய சக்தியையே திகைத்து நோக்கினாள் சாரு.


மெதுவாய் இவள் பக்கம் திரும்பியவன்.." ஆமா எதுக்கு இப்பிடி பதுங்கி பதுங்கி வர்ர? " என்று கேட்க மேலும் கீழுமாய் கண்ணை உருட்டியவள்.." அது அது..அது இருக்கட்டும் நீங்க எதுக்கு என் கைய கைய பிடிக்கிறீங்க?" திரும்பி சாரு கேட்டாள்.


அவளை ஆழ நோக்கியவன் தன் பற்றிய கையாலயே அவள் கை மணிக்கட்டை மெதுவாய் வருடிக்கொண்டே "சும்மா தான்.." என்றான்.. இவளோ என்றும் இரும்பிப்பிடி பற்றும் சக்தி இன்று பற்றியிருக்கும் விதம் ஏதோ உணரச்செய்ய அவன் கைப்பிடியில் இருந்த தன் கையை மறு கையால் விலக்க முயன்று கொண்டே அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.


வழமை போலவே நிலாவும் சதீஷும் இங்கு நடப்பதைக்கண்டு வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தனர் படிக்கட்டு இடை வழியே.


"அண்ணாவ பேய் விரட்ட கூட்டிட்டு போலாம்டா.."கவலையாய் கூறிய நிலாவை முறைத்தவன்.."இப்பதான்டி அவன் மனுஷனாகவே மாற ஆரம்பிச்சிருக்கான்..அதையும் நீ விரட்டிறாம கம்முன்னு இரு..சீன் பார்த்தமா போனமான்னு இரு.." சொல்லிவிட்டு மீண்டும் அங்கு நடப்பதை கவனிக்கத்தொடங்கினான் சதீஷ்.


"சார்...அம்மா.." சாரு கூற சட்டென கையை விட்டான் சக்தி..


கிடைத்த சந்தர்ப்பத்தில் சமையலைக்குள் பதுங்கிக்கொண்டாள் சாரு.


அவள் மூச்சிரைக்க ஓடி வருவதைக்கண்ட சாவித்ரி அவள் நெற்றியில் கைவைத்துப்பார்த்து விட்டு என்னாச்சி என்று கேட்க..


"ஒன்னுமில்லம்மா காபிபி..." என்றாள் இருக்கும் பற்கள் அத்தனையும் வெளியில் தெரிய..


"இதுக்குதானா இந்த ஓட்டம்.."அவர் கேட்டு விட்டு திரும்பி காபியை கையில் கொடுக்க மீண்டும் கனவுலகத்திற்கு சென்றிருந்தாள் சாரு.


"சாரு என்ன யோசிக்கிற?" அவர் கேட்க சாருவோ "எந்த தாயிற்கு தான் தாங்க முடியும் தன் மகன் மூளையில் கோளாறு என்றால்..நாமதான் இத யாருக்கும் தெரியாம சரியாக்கனும்.." என நினைத்துக்கொண்டு "ஈஈஈஈ ஒன்னுமில்லம்மா" என்றாள் காபி கப்பை வாங்கியபடியே.


இவளுக்கு என்னாச்சி என்று பார்த்துவிட்டு சக்திக்கு காபி எடுத்துக்கொண்டு நகர்ந்தார் சாவித்ரி.


ஒருவாரு அடுத்த அரைமணிநேரமும் சக்தியின் கண்ணில் அகப்படாமல் இருந்தவள் அவன் சென்ற பின்னே சிவாவுடன் கம்பனிக்கு சென்றாள். உள்ளே செல்லும் போதே அங்கு வந்த டேவிட்..சார் கூப்பிட்டாரு என்று சொல்லிவிட்டு செல்ல படபடப்புடனே அவன் அறைக்கு சென்றாள் சாரு.


அங்கு சக்தி விட்டத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பதை கண்டவள் கவலையுடன் அவன் அருகில் சென்று "சார்.." என்றாள்.


அதே நேரம் அங்கே வினோதும் வந்து கதவில் தட்ட.."கம் இன்.." என்றான் சக்தி.


இருவரையும் பார்த்து விட்டு பேசத்தொடங்கினான் அவன்.


" அடுத்து வந்திருக்க திருமண ஆடர் இன்னும் இரண்டு வாரத்துல ஒப்படைக்கனும். என்ட் அதுக்கான துணி இன்னக்கி ரெடியா இருக்கும். Address a நான் wtsp grp இல் போட்டுடன். உங்க டீம்ல யாராவது இரண்டு பேர் போங்க இப்ப போனால் தான் ஈவ்னிங்குள்ள வந்துடலாம். ஓகே.."


இருவரும் சம்மதமாய் தலை அசைத்துவிட்டு நகர.."one minute.."என்றான் சக்தி..இருவரும் திரும்ப.."வினோத் நீங்க போகலாம்...சாரு கொஞ்சம் இரு." அவன் சொல்ல யோசனையுடனேயே வெளியே வந்தான் வினோத்.


தயங்கித்தயங்கி நின்று கொண்டிருந்த சாரு அருகில் ஒரு கதிரையை இழுத்துப்போட்டவன் அமருமாறு சைகையில் கூற அவனைப்பாரத்தவாறே அமர்ந்தாள்.


மேசையில் ஏறி அமர்ந்த சக்தி ஒரு காலை தூக்கி அவள் அமர்ந்திருந்த கதிரையின் கைப்பிடியில் வைக்க கண்விரித்துப்பார்த்த சாரு..பின் மூக்கை சுருக்கிக்கொண்டு.."சார் கால கீழ போடுங்க.. சாகஸ் கழுவவே இல்லையா.." என்று கேட்க..அவனோ பலமாக சிரித்தான். பல்வரிசை தெரிய மனம்விட்டு சிரித்தவனை சாரு வியந்து நோக்க அவளுக்கு மேலாக வியந்து பார்த்துக்கொண்டிருந்தது இருவிழிகள் ஆனால் அவ்விழிகளில் ஆச்சரியத்துக்கும் மேலாக இவர்களது நெருக்கம் கண்டு வலியும் கலந்திருக்க வந்த வழியே வந்த சுவடு தெரியாது திரும்பியது.


நீண்ட நேரம் வினோவைக்காணாது போக தேடிக்கொண்டே வந்த ரம்யா அவன கென்டீனில் இருப்பதைக்கண்டு அவனமர்ந்திருந்த மேசையில் சென்றமர்நதாள்.


அப்பொழுதும் அவன் உணர்வின்றி இருக்க.."வினோ.." அவன் கைபற்றி அழைக்க சட்டென தன்னிலை அடைந்தவன் தொண்டையை சரி செய்து கொண்டு நிமிர்ந்தான்.


"ஆர் யு ஓகே..?" ரம்யா கேட்க..அவள் கண்களை நிமிர்ந்து பார்த்தவனிற்கு ஏனோ மறைக்கத்தோணவில்லை..இல்லை என மெதுவாக தலையசைத்தான்.


கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டவன்.."நம்ம பாஸ் சாருவ லவ் பன்னுறாரு.."என்று விட்டு அமைதியானான்.


ரம்யாவிற்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை..இருந்தும் மெதுவாக அவனிற்கு புரிய வைக்கும் நோக்கில் தொடர்ந்தாள்.


"இப்ப அதுக்காக தான் பீல் பன்னிட்டு இருக்கயா..சரி உனக்கு சாரு இல்லன்னு கடவுள் முடிவு பன்னிடாரு.. இப்போ என்ன பன்னுறது? ஒன்னு எப்பவும் நினைவுல வெச்சிக்கோ வினோ..காதல்ல ஒருநாளும் தோல்வின்ன ஒன்னே கிடையாது..காரணம் நம்மளோட துணைய காதலிக்கிறது மட்டும் தான் காதல்.. அந்த துணைய கடவுள் நாம பிறக்கும் போதே எழுதி வச்சிட்டாரு.. அதுக்கு இடையில இட் மீன்ஸ் இப்ப உனக்கு சாரு கூட வாழனும் தோணிச்சி அது சரி ஆனால் எதுனால ? உனக்கு காரணம் இருந்திச்சில்ல.. அவளோட குழந்தை செயல உன் லைப் லாங் நீ இரசிக்கனும் சொன்ன..அப்படி ஒரு ரீசனால எப்பவும் எங்களோட துணைய காதலிக்கனும் தோணாது.. ஈவன் அதுக்கு பெயர் காதலே இல்ல..உனக்காக ஒருத்தி உன் மேல அவ மொத்த அன்பையும் உனக்காக மட்டுமே சேர்த்து வச்சிட்டு உனக்காக காத்திட்டு இருப்பா வினோ.. அவளுக்கு நீ துரோகம் பன்னலாமா? ஏன் யோசிச்சி பாரு உன் மனைவி இப்போ இன்னொருத்தர நினைச்சி பீல் பன்னிட்டு இருந்தா உனக்கு ஓகே வா?" அவள் கூறியதை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த வினோ அவளது கடைசி வாக்கியத்தில் ரம்யாவைப்பார்த்து முறைக்கவும் சிரித்தவள்.."பார்டா கோபத்த..நீ மட்டும் பீல் பன்னுவியாம் அதே அவ பன்ன கூடாதா..சரி சரி உனக்கு புரிய வைக்க தான் சொன்னன்..அப்படி எல்லாம் இருக்க மாட்டாங்க..ஓகே வினோ cloth எடுக்க நானும் சாருவும் தான் போறம்.. ஒன்னும் யோசிக்காத டாட்டா.."


அவள்..அவன் கண்களில் தெளிவைக்காண நிம்மதியாக எழுந்து நடந்தவள் வாசல் வரை சென்று நின்றாள். திரும்பி சுற்றி பார்க்க..அங்கு இவர்களைத்தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இவன் புறம் திரும்பி.."வினோ.." என்று அழைத்தாள்.. அவன் நிமிர்ந்து பார்க்க.."உன் மனைவி உனக்காக மட்டும் தான் காத்திட்டு இருப்பா..அப்புறம் அவ நேம் ரம்யாவா கூட இருக்கலாம்.." அவள் கூறிவிட்டு ஓடி விட..நெற்றியை சுருக்கி அவள் கூறியதை யோசித்தவனுக்கு புரியவே சில கணங்கள் எடுத்தது..


நம்பமுடியாதவனாய் ரம்யா என்றவாறு இவன் எழுந்து செல்ல அவளோ லிப்டினுள் ஏறி சென்றிருந்தாள். பரபரத்த மனதை அவள் வந்ததும் கதைத்துக்கொள்ளலாம் என அடக்கியவன் புன்னகையுடனே தன்னிடம் நோக்கி நடந்தான். ஆனால் அவனுக்கோ தெரியவில்லை தன் புன்னகையின் வாழ்நாள் சில மணிநேரம் தான் என்று.

கருத்துக்களை பகிர

 
Status
Not open for further replies.
Top