All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மெரின் நெல்சனின் "மூன்லைட் காதல்" - கதை திரி

Status
Not open for further replies.

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தரை தூசம் என்னிக்கி அறியும் ஈ சார் .. அவர் யாரை ப்ரேமிக்குன்னுனே எனக்கு தீர்ச்சையாயிட்டு பறையான் பட்டினுள்ளா (இவ்ளோ நாளா இவரை தெரிஞ்சும் இவர் யாரை காதலிக்கறாருன்னு எனக்கு தெரிய மாட்டிங்குது ) என்று புலம்பிக்கொண்டே மேடி அனுப்பிய பிக்ஸ் ஐ டெலீட் செய்துக்கொண்டிருந்தான்



மேகி காத்தமுத்தண்ணாவிடம் அண்ணா அருண் நெஸ்ட் வீக் வரான் . வரப்போ உங்களுக்கு எல்லா என்ன வாங்கிறதுனு கேட்டு இருந்தான் நான் தா சோக்கோலேட் மட்டும் போதும்னு சொல்டே



சேரி தாயி அந்த கிண்டர் சாய் நிரம்ப வாங்கியார சொல்லு நல்லா இருக்கும்.இங்க 45 ரூவா கண்ணு . அங்க சாலிசா கெடைக்கும்னு கேள்விப்பட்ட . அதும் சேர்மன் கார பிரண்டு தானமே



ஐயோ அண்ணா அது ஜெர்மனி அங்க பேசுற மொழி தான் ஜெர்மன் சேர்மன் இல்ல. ஆமா இவ்ளோ விவரம் உங்களுக்கு யாரு சொன்னா



உங்களுக்கு நீகுழாய் தெரியாதா தாயி



நீகுழாயா ?? அப்டினா



உங்களுக்கு எப்டி கூகிள் ஆண்டவரோ எங்களுக்கு நீகுழாய்



குழப்பத்துடன் மண்டைய போட்டு யோசித்து கொண்டு இருந்தாள் ... ஒரு வகை நியூஸ்பேப்பரோ , இப்டி நான் கேள்வி பட்டதில்லையே என்று யோசித்துக்கொண்டே கூகிளில் நீகுழாய் என்று டைப் செய்தாள் . பாவம் அவள் கெட்ட நேரம் neekkulai என்று ஆங்கிலத்தில் டிஸ்பிலே ஆனது



என்னடா இது கூகுள் ஆண்டவர் கே தெரியலையா . ஒ மை காட் ... என்று எண்ணி காத்தமுத்தண்ணாவை பார்த்தாள்



ஹா ஹா ஹா ஹா என்று சிரித்துக் கொண்டு தாயி நீ என்றால் ஆங்கிலத்தில் என்ன



யூ



குழாய் கு ஆங்கிலத்தில் என்ன



பைப்பு



அட இல்லத்தாயி வேற பேரு இருக்குல்ல



யோசித்து பார்த்தவளுக்கு அந்த நொடி கிளிக் ஆகாமல் அவரை பார்த்தாள் ..



அவர் அவளிடம் உங்க மொபைல் ல சிகப்பு கலர் வீடியோ குறியீடு போட்டு இருக்கும்குமா . இதுக்கு மேல குழு சொல்ல முடியாது நான் ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கேன் என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார்



மேகி அவள் மொபைலில் தேடிக் கொண்டிருக்கையிலே



+974 என்று தொடங்கும் எண்ணில் இருந்து கால் வந்தது



என்றும் போல் இன்றும் சிறு நடுக்கமும் எதிர்பார்ப்பும் காதலும் மாரி மாரி அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றன



அதை எடுத்து பேசு என்று மனம் சொன்னாலும் பேசாதே என்று அறிவு வற்புறுத்தியது . நமக்கு சொந்தமில்லன்னு முடிவானதுக்கப்பரோ அதை நெனைக்கிறது கூட தப்பு



அவள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த காத்தமுத்தண்ணா அவளிடம் நெருங்கி என்ன தாயி கண்டு புடிச்சிட்டியா என்று சொல்லி அருகில் வரவும் அவள் கய் விரல்கள் எதேச்சையாய் போன் சிகிரீனில் பட்டு கால் அட்டென்ட் ஆகிவிட்டது







மறுமுனையில் குட் நூன். அம்மு ஹொவ் ஆர் யு என்று கேட்ட குரலை மேகி அவள் உயிர் உள்ளளவும் மறக்காது . என்ன செய்வது என்று அறியாமல் பதட்டத்த்தோடே போன் ஐ காதில் வைத்தாள்



ஹே யு தேர் ... லைன் ல இருக்கியா ? பிசியா



மேகி வாய் திறக்கவே இல்லை .. துக்கமோ சந்தோஷமோ சிலர்க்கு பேச்சு வராது அதே நிலையில் தான்

மேகியும் இருந்தாள் .



ஆர் யு ஓகே பேபி என்று மறுமுனையில் கேட்ட பதட்டமான குரலில் மேகி சுதாரித்து இயாஹ் ஆம் ஓகே .எதுக்கு கூப்ட்டே



மறுமுனையில் இருந்து நல்லா இருக்கியா என்று வந்த குரலின் இனிமையை அனுப்பிவிக்க முடியாத சூழ்நிலையில் தான் இருப்பதை நினைத்து வேறுத்துப்போனவளாய் .... ம்ச்சா என்று சொல்லி கொண்டு எதாவுது விஷயமா இருந்தா சொல்லு நான் கேக்ரே . இவ்ளோ நாள் இல்லாத அக்கறை இப்போ என்ன



மறுமுனையில் வேதனையுடன் நான் எப்படி இருக்கேனு கூட நீ கேக்க மாட்டியா



ஹ்ம்ம் நீ ரொம்ப நல்லா இருக்கானு எனக்கு நல்ல தெரியும் சோ டோன்ட் இரிடேட் மீ .



சேரி விடு . அம்மா குப்ட்ருந்தாங்க . நீ அவங்கள பாத்து பேசனாதா சொன்னாங்க .



ஓஹ் சேரி என்று மேகி முடித்துக் கொண்டாள்



புடிக்காதவங்க கிட்ட பேசுனு சொல்லி கெஞ்ச முடியாது .கொஞ்சம் நேரம் பேசு



அதற்கும் மௌனமே பதிலை தந்தாள் மேகி



நம்ம பேசி கிட்டத்தட்ட ஒன்னு அண்ட் half இயர்ஸ் மேல ஆச்சு .அதும் இல்லாம இன்னைக்கு என் பர்த்டே நீ விஷ் பண்ண மாட்டேன்னு தெரிஞ்சும் நானா கால் பண்ணே . ஆனா நீ . விடு லெட் மீ பீ சோ . ஆனா நான் செஞ்சது உன் நல்லதுக்கு தான்னு ஒரு நாள் புரிஞ்சுப்பே . ஐ அம் நோட் எ மெஷின் அம் எ ஹியூமன் வித் பீலிங்ஸ் னு நீ அடிக்கடி சொல்வேல அதே தா இப்போ எனக்கும் சொல்லணும்னு தோணுது .



மேகி க்கு காலையில் இருந்து உறுத்திக்கொண்டே இருந்தது கால் பண்ண்லாமா வேண்டாமா என்று பிறகு வேண்டாம் நா வேண்டாம் தான் முளசை விட்றணும்னு வைராகியமை இருந்தாள் .ஆனாலும் மணிக்கொருமுறை மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாள் கால் வருமா வரதானு .ஒரு பக்கம் வரும் என்றாலும் வராது போனால் மன போராட்டத்தை எப்படி சமாளிப்பது என்றும் அவளுக்கு தெரியவில்லை .



சிறிது நேர இருவரின் மௌன நிமிடங்களுக்கு பின்.ஹாப்பி பர்த்டே விஷ் யு ஆல் லவ் சக்ஸஸ் ஹப்பின்ஸ் அண்ட் டு கேதேர்ன்ஸ் லட்டு என்று சொல்ல வந்ததை ரிச்சர்ட் என்று சொல்லி காலை கட் செய்து விட்டாள்



அப்பொழுது தான் காத்தமுத்தண்ணாவை தேடினாள் அவர் அவளின் ரூமில் இல்லை . வெளியே சென்று பார்த்தாள் அங்கே சௌந்தர்யாவுடன் அவர் எதையோ பேசிக் கொண்டிருந்தார்



அவர்களிடம் சென்று என்ன அண்ணா எனக்கு தெரியலைனு சௌண்டு கிட்ட சொல்ல வந்தீங்களா



அட போங்க தாயி இந்த பாப்பாக்கும் தெரியல



அப்டியா ஆச்சர்யம் ஆனாலும் உண்மை . சௌண்ட் கு இந்த தமிழ் கவிதை நாவல் எல்லாம் ரொம்ப இண்ட்ராஸ்ட் ஆச்சே அவளுக்கே தெரிலைய



அட ஆமா தாயி என்ன நீங்க படிச்சு கலெக்டர் ஆணீகளோ .

என்ன அண்ணா பண்ண உங்க அளவுக்கு பொது அறிவு இல்லையே



ஹா ஹா ஹா என்று சிரித்து வைத்து youtube ஆஹ் தன நான் நீக்குழாய் னு சொன்னே . கூடி கழிச்சி பாருங்க வார்த்தை கரெக்ட் ஆஹ் வரும் என்று சொல்லி அவர்களை விட்டு கடந்து சென்றார்



இவர்கள் இரண்டு பேரும் அவர் சொல்லியதை யோசித்தவண்ணம் ஓர் நேரத்தில் அட ஆமால்ல என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்



சௌண்ட் மேகியிடம் ஆப்ஷன் நம்பர் ஒன்னு ஆமாவா இல்ல ஆப்ஷன் நம்பர் ரெண்டு இல்லையா என்று சொல்லி புருவத்தை உயர்த்தினாள்



மேகி சிரித்துக்கொண்டே ஆமால்ல என்று சொல்லி சௌண்டையையே காண்ட்த்த்தினாள்



சவுண்ட் மேகியிடம் பழசு ஏதும் நினைக்காத future ஆஹ் மட்டும் யோசி என்று சொல்லி நகர்ந்துவிட்டாள்



சவுண்ட் போகும்போது மேடிக்கு அழைத்தாள்



மேகி மனத்தினுள்ளே ரிச்சி ஐ ஹாட் யுவர் yesterdays பட் நோட் யுவர் tomorrows



உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்ணாளனே

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத காலம் தான் எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடா



பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்



எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை

அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க ? யார் முடிக்க ? ஒரு வழியும் தோன்றவில்லை

இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை ...



அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்

ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்



கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்

கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடா

.



இப்படிக்கு

உங்கள் அன்பை என்றென்றும் எதிர்நோக்கும்

மெரின் நெல்சன்



http://srikalatamilnovel.com/community/threads/மெரின்-நெல்சனின்-மூன்லைட்-காதல்-கருத்துத்-திரி.356/post-88040
 
Last edited:

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Moonlight Kadhal Episode 5 (Part 1)



ஹே பேபி என்று மேகியை இருக கட்டிக்கொண்டான் நம்ம ஐசு ...

அவளும் அன்னு எப்படி டா இருக்க . ஐ missed யு சோ மச் என்று சொல்லிக் கட்டிக் கொண்டாள் .



அப்பொழுது அங்கே வந்த சுந்தரம் இக்காட்சியைக் கண்டுக் கொண்டான் . இவனுக்கு வெவஸ்த்தையே இல்ல காலங் காத்தலே வந்த உடனே அதுவும் நாடு ஹால்ல இப்படியா ஆண்டவனே !!! என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்



சுந்தரம் அப்பொழுது தான் உள்ளே நுழைந்தான் . இன்று அவனுக்கே உரிய நாள் அதான் காலையில் கோயில் சென்று கிடைத்த சக்கரை பொங்கல் பிரசாதத்தை மேகிக்கு குடுக்கலாம் என்று எடுத்து வந்தான் . ஆனால் அவன் கண்ட காட்சியில் பிபி ,சுகர் சால்ட் எல்லாம் ஏகத்துக்கும் ஏகிரி விட்டது .



என்ன நெனச்சுருக்கான் இந்த அருண் பய கேக்க ஆள் இல்லனா. வகுந்துருவே வந்து . நாங்கெல்லா திருநெல்வேலி சீமையின் தொண்டு தொட்ட வாரிசு . பேச்சு இல்லடி ஒரே வீச்சு தான் என்று நினைத்து க்கொண்டே உள்ளே போலாமா வேண்டாமா எப்புடியும் வெளிய வந்துதாண்டி ஆகணும் அப்போ இருக்கு .



சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் அவன் வெளியே வந்த வழியைக் காணோம் . டேய் பிலைட் லேண்ட் ஆன உ டனே வீட்டுக்கு போனோமா அம்மை கையாள சோறு தின்னோமா இல்லாம . இவனை என்ன பண்றது . சேரி இன்னும் அரை மணி நேரம் பாக்கலாம் அப்ரோ உள்ள போய்ட வேண்டியது தான் .





அங்கே மேகியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் . என்ன அம்மு இப்புடி இளைத்துட்டே நான் போன ரெண்டு வர்ஷத்துக்குள்ள இப்டி ஒல்லி பெல்லி ஆகிட்ட ... 90 பிளஸ் கிலோ இருந்தவ மாதிரியா இருக்க . டோடல்லி சேஞ்ட் .





அதற்க்கு அவள் புன்முறுவலுடன் இனிமே என்ன யாரும் என் தோற்றத்தை பார்த்து வெறுத்துற கூடாது என்கிறதுக்கு தான் . அதுமில்லாம இப்போ ஐ பீல் சோ லைட்



நீ இன்னும் அவனை தான் நெனச்சுட்டு இருக்கியா . அவன் தான் உன்ன வேண்டான்னு சொல்லிட்டான் இல்ல அப்புரோ ஏன் இப்புடி . அவனுக்கு சமமா இருக்கணும்னு உடம்ப கம்மி பண்ணிருக்கே . உனக்கே இது முட்டாள் தனமா தெரியல . அவன் உனக்கு ஒர்த் இல்ல போயும் போயும் அவனுக்காக ச்சை என்று அவன் சொல்லுவதுற்குள்



அன்னு ஸ்டாப் இட் . என்று சீறினாள்





உனக்குத் தெரியுமா அவனுக்காக தான் நான் குறைச்சேன்னு உனக்கு தெரியுமா சொல்லு தெரியுமா என்று கத்தினாள்



அவ்வளவு நேரம் அவள் நாற்காலியிழும் இவன் கதவின் பக்கவாட்டில் இருந்த பீன் சோஃபாவிலும் உக்கார்ந்து இருந்தவன் அவள் பக்கம் வந்து அவள் முன் மண்டியிட்டு அவள் தாடையை நிமிர்த்தி என் கண்ண பார்த்து சொல்லு என்று கூறினான்



அவளோ என்னடா என்ன பார்த்து சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லுனு பட வசனம் பேசுற . திருநெல்வேலி பூர்வீகம்னு நிரூபிக்கிறீயா



ஷட் அப் என்று கத்தினான் . அவளோ அவனின் பேச்சை மாற்றுவதற்கு முயன்றாள் என்றால் அவனோ அவளின் பதிலை கேட்டு ஆத்திரம் கொண்டான்



அவனின் கத்தலில் அவளின் முகம் வருத்தத்தில் கூம்பி போய்விட்டது.



சொல்லு அம்மு . என்னிடம் எதையும் மறைக்காதே இத்தனை வருஷ பழக்கத்துக்காவது நீ எனக்கு சொல்லணும் . பிகாஸ் யு ஆர் ஆன்சரபில் டு மீ ஒன்லி மீ . யு காட் இட் ??



அவள் மெதுவாய் தலை நிமிர்ந்து ஆழ மூச்சிழுத்து .



அவள் அறையின் வெளியே பால்கனியில் உள்ள ஊஞ்சல் மீது அமர்ந்தாள் .



இவன் அவள் பின்னே சென்று அவள் பக்கமாய் அமர்ந்து அவள் கையை தன் கைகளுக்குள் பொதித்து வைத்துக் கொண்டான்



அவளும் அவன் தோள்களில் சாய்ந்துக் கொண்டாள் . அப்புடியே அமைதியாய் இருந்தாள் நேரம் தான் சென்று கொண்டிருந்தது அவள் வாய் திறந்த பாட்டை காணும்



என்னனு சொன்னா தானே தெரியும் என்று அவன் சொல்லவும் கதறிவிட்டாள் . ஓ வென்று கதறிவிட்டாள் . என்னால முடியல டா நான் ஸ்ட்ராங் பேர்சன்னு நெனச்சன் பட் ஐ அம் நா ட் சோ .. என்று சொல்லி மீண்டும் மீண்டும் அழுதாள் .



இது வேலைக்காகாது என்று எண்ணி நான் இப்போவே ரிச்சிக்கு கூப்புடுறே . அவனாலதான எல்லாம் . என்று அவன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணிற்கு அழைக்க போக அவளே நான் சொல்றேன் அவனை டிஸ்டர்ப் பண்ணாதே இப்போதான் நைட் ஷிபிட் பாத்துட்டு தூங்கிருப்பான் . கத்தார்ல இப்போ தா 5 ஓ கிளாக் அன்னு என்று சோகமாய் சொல்லி அவனை நோக்கினாள்





அவன் உன்னை வேண்டான்னு சொல்லியும் உன்ன அவன் யுஸ் பண்றான்னு நான் சொன்னத கூட கேக்காம அவன்கூட பேசுனதான இப்பவும் அவனுக்கு தான் நீ சப்போர்ட் பண்றே.நீ எல்லாம் திருந்த மாட்டே .



அவன் எனக்கு உண்மையா தான் இருந்தான் . இப்பவும் எப்பவும் என் மனசுல இருப்பான். என் வாழ்க்கைல இல்லாம போகலாம் . இப்பவும் நான் தான் அவனை விளக்கி வச்சிருக்கேன் . அவன் இல்ல . எனக்குத் தெரியும் அவனை பத்தி என்று சொல்லிக் கொண்டிருந்தவளை பரிதாபமாக பார்த்தான்



கலெக்டர் பதிவில இருக்குறவங்க காதலிக்க மாட்டாங்களா இல்ல அவங்களுக்கு காதல் தோல்விதான் இல்லாம போகுமா . அதுக்கு அத்தாச்சியாய் இதோ அவள் அம்மு இருக்காளே பிறகென்னே



சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவள் கடந்த இரண்டு வருட காலங்கள் நடந்த எல்லாவற்றையும் சொன்ன்னாள் . அவள் என்ன செய்கிறாள் என்று அவனுக்கு தெரிந்து விடும் அசோக் டிடெக்ட்டிவ் ஏஜென்ட்டி டம் தான் அந்த பொறுப்பை குடுத்தான் . அவனும் சொல்வான் தான் வெளியில் அவளுக்கு நடப்பவை தெரியும் . அப் டு டேட் அவனுக்கு செய்திகள் போய்விடும் புகைப்படத்துடன் .



ஆனால் அவள் மனக்குமுறல்கள் அவளின் தொலைபேசி உரையாடல்கள் அவன் அறியவில்லை என்பதை விட அறிய முற்பட வில்லை .அவன் நினைத்திருந்தால் அதையும் செய்துருக்க முடியும் ஆயிரம் தான் இருந்தாலும் அது அவளுடைய பெர்சனல் ஸ்பேஸ் .என்று ஒதுக்கி விட்டான்



அவளின் உடல் எடை குறைப்புக் கூட அவளின் உடல் ஆரோக்யத்துக்கென்று நினைத்தவன் அவளின் தகப்பனா ர் சொன்ன செய்திகள் வைத்து கண்டிப்பாக அதற்காக இருக்காது என்று முடிவெடுத்தான் அதனால் தான் அவன் நேரே விஷயத்திற்கு வந்தது

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தவை எல்லாம் அவனிடம் ஒப்புவித்தாள் சிறு குழந்தைபோல் .

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை . அவள் தலையை வருடி கொடுத்துக்கொண்டிருந்தான்



சுந்தரம் பொறுமை இழந்து உள்ளே வந்து ஹாலில் பார்த்தான் யாருமே இல்லை . ஒரு வேளை வெளிய பொய்ற்பங்களோ என்று கார்டநில் தேடினான்



அங்கே அவன் கண்டா காட்சி அவனை அப்புடியே ஸ்தம்பிக்க வைத்தது . மேகி அக்கா அந்த வீனா போனவன் தோள் மேலையா சாஞ்சிட்டு இருக்காங்க . அப்போ இவந்தா அவங்க லவ் பண்ணவனா . ஆனா அப்புடி தெ ரிலேயே .. போயும் போயும் இவனா நெனச்சாலே நாராசமா இருக்கு . இருக்காது இருக்காது . இவன் அக்காக்கு ஒர்த்தே இல்ல

இவன கொன்னாலும் என் ஆத்திரம் தீராது ஜெர்மனில இருந்தவன் அங்கேயே இருக்க வேண்டியது தானே எவன் அவனை இங்க வர சொன்னது மங்கூஸ் மண்டையன் . பேபி பேபி னு உருகுறான் . இருடா ஐஸ் கிரீமு உன்ன உருக வைக்கிறேன்



மேகி தேம்பிக்கொண்டே இருந்தாள் .இவளை எப்புடி வழிக்கு கொண்டு வரதுன்னு முழித்துக் கொண்டு இருந்தவன் சிறிது நேரத்துக்குப் பின் யோசித்தவனாய் ரொம்ப நாளாய் என் மனசில பூட்டி வச்ச என் காதலை உன்கிட்ட சொல்லலாமுன்னு இருக்கேன் அம்மு .



என்ன நீ புரிஞ்சுப்பல்லே . உன்ன விட்ட வேற யாரும் இல்ல டா . என்று ஏக்கத்தோடு சொன்னான் அருண்



இவன் என்ன சொல்ல வரான் என்று யோசித்தவாரே . சொல்லு டா ஏங்கிட்ட என்ன தயக்கம் என்று மேகி சொன்னது தான் தாமதம்



நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது .வி க்நொவ் ஈச் அதர் போர் எ வெரி லாங் டைம் . வி வுட் மேக் எ குட் கப்பில் . வாட் டூ யு சே என்று கேட்டான்



உலகமே தட்டாமலை சுற்றுவது போல் இருந்தது மேகிக்கு ... இவன் உண்மையா தான் சொல்றானா இல்ல விளையாடுறானா என்று அவன் முகத்தை கூர்ந்து கவனித்தாள்



அவன் கூறுவது உண்மையே என்று அடுத்து செய்த செயல் இருந்தது



அவன் மண்டியிட்டு அவள் முன் அழகான வைர மோதிரம் கொண்ட சிறு நகை பெட்டியை நீட்டி "வில் யு மேர்ர்ரி மீ " என்று சிரித்த முகத்துடனே கேட்டான் அருண்



மேகியோ விக்கித்து போய்விட்டாள் . அவள் அவனை உற்ற தோழன் தன் தாய்க்கு நிகரானவன் தனக்காக எதுவும் செய்பவன் என்று நினைத்திருக்க இப்புடி ஒரு முடிவு அவள் எதிர்பார்க்காதது .

வார்த்தைகளற்ற நிலையில் இருந்தாள் அவள்

இதை தூரத்தில் இருந்து பார்த்த சுந்தரத்திற்கு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியாகவும் பார்த்ததை நம்ப முடியாததாகவும் இருந்தது .



பிறகு இவ்வளோ நாள் அக்கா என்று அழைத்து வந்தவளை அண்ணி என்று கூப்பிடும் பாக்கியம் அவனுக்கு கிடைக்க போகுதல்லவா.....

அண்ணி என்று அழைத்து பார்த்தான் உள்நாக்கு வரை தித்தித்தது ...


to be continued .....

comment link
https://srikalatamilnovel.com/community/threads/மெரின்-நெல்சனின்-மூன்லைட்-காதல்-கருத்துத்-திரி.356/post-89725
 
Last edited:

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Episode 5.2


அப்போ இவங்க ரெண்டு பெரும் தான் ஜோடியா அதனால தான் அருண் பைய கிடைச்ச வேலைய விட்டுட்டு ஜெர்மனிக்கு அவசரமா போனானா என்னடா இது 2கி ஸ்கேம் கேஸ் போல தோண்ட தோண்ட பூதாகாரமா இருக்கு . அம்மைக்கு தெரியுமா .இவன் ரைம்ஸ் மாதிரி எல்லாத்தையும் ஒப்பிப்பானே . ஆனா அம்மை ஏதும் நம்மட்ட சொல்லலையே ...



அட ஆண்டவனே இங்க ஒருத்தன் மண்டைய பிச்சிகிட்டு இருக்கான் அதுங்க அங்க கண்ணும் கண்ணும் நோக்கியாவா இருக்குதுகுகளே . நம்ம கொஞ்சம் வளந்திருக்கலாம் ஜூம் மோட் வரமாட்டேங்குதே என்று புலம்பியவாறு எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்தான்

அங்கே மேகியோ தான் கனவில் கண்டது நிறைவேறி விட்டதாய் நினைத்தாள் . ஆம் அவள் கனவில் தினமும் ஒரு ஆடவன் முழங்காலிட்டு அவளுக்கு மோதிரம் அனுவிப்பான் . கூடவே யூ ஆர் மைன் போரேவேர் என்று சொல்வதையும் கேட்டு இருக்கிறாள் . இத்தனை நாளும் அது ரிச்சி தான் என்று எண்ணி எண்ணியே அவன் மேல் மேலும் காதலை வளர்த்தவள் . அவன் தான் அடிக்கடி யூ ஆர் மைன் என்று சொல்லிக்கொண்டே இருப்பான் அதுனாலே என்னவோ அந்த கனவில் வருபவன் ரிச்சி என்றே நம்பினாள் . இந்த கனவு விஷயத்தைக் கூட ரிச்சியிடம் அவள் கூறியது இல்லை . அவன் மோதிரம் அணிவித்த அன்று அவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு இந்த நிஜம் கனவில் நடப்பதை விட ரொம்ப ஹாப்பி ஆஹ் இருக்கு என்று சொல்லி அவனை காதலோடு அணைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாள் .



ஆனால் அவன் வேறொரு பெண்ணிற்கு மோதிரம் அணிகின்ற புகைப்படத்தை தான் பார்த்து நைஸ் பேர் மேட் போர் ஈச் அதர் என்று கமெண்ட் பண்ணுவோம் என்று கனவிலும் அவள் நினைத்ததில்லை.



இது தான் நிஜம் கனவு நிழல் என்று நினைத்துக் கொண்டாள் . பிறகு அந்த கனவு அவளுக்கு வரவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அந்த கனவு வருவதை அவள் உணர்ந்திருந்தாள் . ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ரிச்சிக்கு தான் நிச்சியம் முடிஞ்சாச்சே பிறகென்ன என்று . ஆனால் அவளுக்காய் நான் காத்திருப்பேன் என்று சொன்ன ஜீவனை அவள் மறந்தாளா இல்லை அவள் நினைவடுக்கில் அவன் இல்லையா என்று தான் அவனுக்கும் தெரியவில்லை இவளுக்கும் ஆராய தோன்றவில்லை



அனால் இன்று அருண் செய்த காரியத்தை நினைத்தவள் அழகையுடனே பதறியவளாய் "அருண் " என்று உரக்க விழித்தாள்



சுந்தரத்திற்கு அவள் அருண் என்று உரக்க அழைத்தது எதுவோ சரியில்லை என்ற தோன்ற மேலே போக படிக்கட்டை அடைந்து சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே அவள் அறைக்குள் நுழைந்தான் . என்ன தான் அவளிடம் அக்கா என்று உரிமையுடன் பேசினாலும் பழகினாலும் அவள் அரைக்கெல்லாம் அவன் வந்ததில்லை . முதல் முறையாய் அவள் அறைக்குள் நுழைகிறான் . அங்கே அவன் கண்ட காட்சி மேகி அருணை சரமாரியாக அறைந்தது தான்



பதறியபடி அவர்கள் அருகில் சென்றவன் . அக்கா பொறுமையா இருங்க பேசிக்கலாம் என்று அவள் கையை பற்ற முயல்கையில் அருண் அவனை நோக்கி " அழகு விடுடா . அவ அடிக்கட்டும் அப்போவது அவ கோவம் எல்லாம் வடியட்டும் . நீ போ நான் வரேன் ".



அழகு " அம்மை உன்ன அதிர்ப்பாத்துட்டு இருப்பாவ . இன்னைக்கு வீட்டுல விருந்தே தயார் பண்ணிருக்காவ . அதுதான் அக்காளையும் கூட்டிட்டு போலாம்னு வந்தேன் . இப்போ ஏதும் சரியில்லை அப்புறமா பேசிக்கலாம் . நீ வா நேரஞ்செண்டு போனா ஐய்யாக்கு நீ தான் பதில் சொல்லணும் ".



அருண் " இல்லடா பரவ இல்ல எல்லாம் பேசிட்டு நான் வரேன் . அம்மைக்கிட்ட நான் மதியம் செவ்வந்திய கூட்டியாரேனு சொல்லிரு . நான் பாத்துக்கிறேன் . நீ போ " என்று கண்ஜாடை காட்டினான்



அருண் அவர்களை திரும்பி திரும்பி பார்த்தவாறே அங்கே இருந்து செல்ல அடி எடுத்து வைக்க அவள் புறம் திரும்பி இந்தாங்க பொங்கல் உங்களுக்கு புடிக்குமேனு கோயில் போயிருந்தப்போ நான் கூட சாப்பிடாம உங்களுக்கு கொண்டுவந்தேன் .



அவள் இவர்கள் பேசின அந்த சிறு இடைவேளையில் தன்னை சுதாரித்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள் . அவன் நீட்டினதை அவள் வாங்கி அதில் சிறு துவளையை தன் வாயில் வைத்து சுவைத்து "பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு " என்று வராத சிரிப்பை வா வா என்று அழைத்து உதட்ட்டில் ஒட்ட வைத்துக் கொண்டாள் .



அவளை ஒன்றும் சொல்லாது சிரித்த முகத்துடனே வெளியேற போக " டேய் அல்லஸ் குட்டே ஸும் கேபர்ட்ஸ்தாக் (Alles Gute zum Geburtstag)" என்று சொல்லி அவனை நோக்கினாள்



இது வேறு பாஷைன்னு தெரியுது ஆனா என்னனு தான் விளங்களை என்று பொலம்பினான் சுந்தரம்



அருண் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே " உனக்கு ஹாப்பி பர்த்டே ஜேர்மன் ல சொல்றா ".



ஓஹ் அப்புடியா "தாங்கே தாங்கே "



ஆச்சர்யமாய் அவனை நோக்கிய மேகி " எப்புடி அழகு ஜெர்மன்ல தாங்கியூ சொல்ற "



அழகு அருணை பார்த்தவாறே " இந்த தடிமாடு போன்ல பேசுறப்போ எப்போ பாரு போற வர புள்ளைக கிட்ட இத தான் சொல்லுவான் . என்னடா அப்டினு கேட்டா தாங்யூ னு சொன்னான் அதான் கற்பூரமா புடிச்சுக்கிட்டேன் "



மேகி " சூப்பர் டா . அப்போ உங்க நொண்ணன் அங்க போய் இந்த வேல தான் பாத்திருக்கான் . பெரிய கேடி டா இவன் . ஒரு புள்ளைங்கள விட மாட்டான் காலேஜ் படிக்கிறப்போ மேப் வச்சு சுத்திட்டு இறுந்தாண்டா .நாங்க கூட கேட்டோம் என்னடா சைட் அடிக்கிறதுக்கும் மேப்க்கும் என்ன சம்பந்தம்னு அதுக்கு இந்த டாக் என்று அருணின் மண்டைய ஆட்டிட்டே " மேப்ல எந்த ஸ்டேட்ல நான் இன்னும் கவர் பண்ணலனு கண்பியூஸ் அகிர கூடாதுன்னு மார்க்கர் கைல வச்சு அப்போ அப்போ மார்க் பண்ணிப்பேன் . ஒரு ஸ்டேட்க்கு ஒன்னு தான் சோ மொத்தமா 29 ஸ்டேட் . மாசத்துல 30 இல்லனா 31 நாள் கணக்கு . ஒன்லி 2 டேஸ் தாண்டா ரெஸ்ட் எனக்கு " என்று பாவமாய் சொன்னவனை அவன் நண்பர்கள் கூட்டம் கய் முஷ்டிகள் முறுக்கி கொண்டே "அப்போ பெப்ரவரி மாசம் என்னடா பண்ணுவே . அதுல 28 நாள் தானே இருக்கு ."



அதற்கு அருண் " சீட்டு குலுக்கி ஆட் வுமன்(odd woman ) அவுட் பண்ணிருவேண்டா இல்லனா ராக் பேப்பர் சிஸர் வச்சி ஜட்ஜ் பண்ணனும்டா என்று முகத்தை தொங்க போட்டு சொன்னனவனை கய் தொங்கி போற அளவுக்கு அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள் .



இதை கேட்ட அழகு " ஓஹோ படிக்க அனுப்பிச்சா துரை இந்த வேல தானா . நான் கூட நெனச்சுருக்கேன் இன்ஜினியரிங் படிக்கிறவனுக்கு எதுக்கு இவ்ளோ மேப்னு . அப்போ என்ன சொன்ன எல்லா ஸ்டேட் ல இருக்கிற IT கம்பனியும் மேப் பண்ணி அதுல பெஸ்ட் சூஸ் பண்ணி , கேம்பஸ் ட்ரை பண்ணி , அப்டி பண்ணி இப்டி பண்ணினு எத்தனை பண்ணி போட்ட என் வெள்ள பண்ணி "என்று அவனும் கோதாவில் இறங்க



மேகியும் அழகும் அவனை குமிய வைத்து கும்மாங்குத்து குத்தி விட்டு தான் நிமிர்ந்தனர்

நிமிர்ந்த அருண் ஐ அனைத்து விடுவித்த அழகு "எவ்ளோ அடிச்சாலும் தாங்குற டா நீ ரொம்ப நல்லவன் ... அவ்வ்வ்வ்வ்வ் " என்று வடிவேல் பாணியில் சொல்லி சிரித்தான்



அருண் " சேரி ரெண்டு பெரும் அழகாய் சிட்டுவேஷன் டிஸ்ட்ராக்ட் பண்ணிட்டீங்க . சூப்பர் குட் ஜாப் . ஆனா எனக்கு ஏதும் மறக்காது. அழகு நீ வீட்டுக்குப் போ . நாங்க ரெண்டு பேரும் வரோம்

" என்று சொல்லிக்கொண்டே மேகியை அழைத்துக் கொண்டு பக்கத்து ரூம் சென்று தாழ் இட்டுக் கொண்டான்



அழகு கதவை தட்டி " டேய் கல்யாணத்துக்கு அப்பறோம் தான் மத்ததெல்லாம். ஞாபகம் வச்சுக்கோ அம்மை கண்ணீர் அருவியை தெறந்துச்சுன்னா சரவணா ஸ்டோர்ஸ் ஆபர் ல சீல வாங்கி குடுத்தாலும் நிக்காது டே . பாத்துக்கோ சொல்லிப்புட்டேன் அவ்ளோதான் ".



அருண் "வாய மூடிட்டு போ அவன் அவன் இங்க எந்திருச்சு நீக்கவே முடியல இதுல .... போடா டாக் கடுப்ப கெளப்பாத "



அழகு " சேதாரம் இல்லாம வீட்டுக்கு வந்து சேறு . அக்கால கொடும படுத்தாதே . எதுனாலும் பேசி தீர்த்துக்கோ "



உள்ளே சென்றவுடன் நீண்ட நேரம் அவள் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் .



அருண் " நீ இப்போ என்ன சொல்ல வர அம்மு "



அதற்கு மௌனமே பதிலாய் நின்றவளை ஒன்னும் செய்ய முயலாதவனாய் . அவள் அருகில் சென்று அவள் தோள் தொட்டுத் திருப்பி " ஸ்பீக் அவுட்" என்று கர்ஜித்தான்



மேகி நிதானமாக " கல்யாணம்னு வந்தாள் கண்டிப்பா நான் அவரை முதலாவதா கன்சிடெர் பண்ணுவேன்னு நான் ப்ராமிஸ் பண்ணிற்கே. இது நடந்து ஒரு 2 இயர்ஸ் இருக்கும். ஆனா அப்ரோ அவர் என்ன டிஸ்டர்ப் பண்ணல. நானும் அவர் நடவடிக்கை பார்த்து அவர் இன்னொருதுங்க மேல இன்டெர்ஸ்டெட்ன்னு நெனச்சு விட்டுட்டே . பட் அவரோட நான் பேசிட்டு தான் உன்ன பத்தி நான் யோசிக்க கூட முடியும்



அருண் " யாரவன் ?" என்றான் கைகள் மார்புக்கு குறுக்கே கட்டியவாறு வெகு நிதானமாய்



மேகி " உனக்கு தெரிஞ்சவர் தான் " என்று மென்னு முளிங்கினாள்



அருண் " நான் யாருன்னு மட்டும் தான் கேட்டேன் "



அவள் வெகு நிதானமாய் உச்சரித்த பெயரைக்கேட்டு சந்தோஷப்படுவதா இல்லை குழப்பமாவதா என்று தெளிவாக குழம்பினான்
 
Last edited:
Status
Not open for further replies.
Top