All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யா சங்கரின் “மின்சாரப் பூவே! பெண் பூவே!” - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Ramya shankar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே,



நான் உங்களின் ரம்யா ஷங்கர்,
இப்போதுதான் முதன்முதலாக கதை எழுதும் உலகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் ஏதேனும் பிழை இருந்தால் என்னை சுட்டிக் காட்டி திருத்துங்கள்.. கேட்டவுடன் கதை எழுத வாய்ப்பளித்த ஸ்ரீகலா மேடம்க்கு மிக்க நன்றி..


முதல் முதலில் எனக்கு கதை எழுத ஆசையாக இருக்கிறது என்று கூறியவுடன் எனக்கு பக்கபலமாக, உறுதுணையாக இருந்த மீனா கண்ணனுக்கு மனமார்ந்த நன்றி..



அன்புடன்,
ரம்யா ஷங்கர்
 

Ramya shankar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூ -1




மண்ணின் மனம் வீச நிலப் பயிர்களின் வாசம் கொண்ட ஒரு அழகிய கிராமம், அக்கிராமத்தில் உள்ள பெண்மணிகள் காலை சூரியன் ஒளிதரும் முன் சாணி தெளித்து கோலம் விட்டுக்கொண்டிருந்தன, அப்போது தலைக்கு குளித்து அந்த வட்ட முகத்தில் கஸ்தூரி மஞ்சள் பூசி, சாதாரண தாவணி அணிந்து பெண் கோலம் போட வந்தவள் குணம் பூவை விட மனமும் வாசமும் கொண்டது அவள் சங்கமித்ரா..! அவள் குடும்பத்தை பற்றி கூறவேண்டும் என்றால் மிகவும் ஏழ்மையான குடும்பம்..., நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள்தான் தன் குடும்பத்தை தாங்கிக் கொண்டு வருகிறாள்..


இவளின் தந்தை மூர்த்தி என்ன தான் அரசு வேலையில் இருந்தாலும் மாத சம்பளம் என்னவோ வீட்டிற்க்கு முழுமையாக வருவதில்லை.. இதை நினைத்து மித்ராவின் அம்மா ராதாவுக்கு வருத்தம். ஆனால் ராதா அதையே எண்ணி வருந்திக் கொண்டு இருக்காமல் நாற்று நடுவது வயல்காட்டு வேலை என்று கைத்தொழில் பார்த்துக் கொண்டிருப்பவர். இந்த நிலையில் மித்ரா 12 வகுப்பை அதிக மதிப்பெண்களுடன் பெற்று படித்து முடித்தாள். அவளின் அம்மா அப்பாவுக்கு சந்தோசம் இவளின் அடுத்த நிலை உயர் நிலை கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை,



மித்ராவுக்கு என்ன தான் உயர் நிலை கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவளுக்கு அவள் தங்கை மூன்று பேறையும் நினைத்து வருத்தம் ! ஏன் என்றால் மித்ரா படிக்க சென்று விட்டாள் தன் தந்தை தாய் நினைத்து வருத்தம், இந்த நிலையில் ஒரு நாள் மூர்த்தி, மித்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்க போவதாக ராதா விடம் கூறிக்கொண்டு இருந்தார்..!


எப்படியோ இதை அறிந்துகொண்ட மித்ரா அவள் அறையில் அழுதுக் கொண்டு இருந்தாள்.. அப்போது அவ்வழியாக சென்ற ராதா மகள் அழும் சத்தத்தைக் கேட்டு, "ஏண் டி அழுவுற" என அதட்டலாக கேட்க.



தாயின கண்டிப்பான குரலில் சற்று நடுங்கி கண்கள் சிவக்க கன்னத்தில் நீர் துளிகள் தழுவிட அதை மித்ரா தன் கைகளால் துடைத்து விட்டு, "அம்மா! என்று ஏதோ கூற வர.. ராதா அதை முழுமையாக கேட்டு கொள்ளாமல் ஓங்கி கன்னம் சிவக்க ஒரு அறை கொடுத்தார்.




வேலைக்கு சென்று வீடு திரும்பிய மூர்த்தி மூர்த்தி, "ராதா" என குரல் கொடுத்தார். ராதா மித்ரா அழுவதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், "இதோ வரெங்கனு என கணவனுக்கு பதில் கூறியவள் அழுதுகொண்டிருந்த மகளை சற்றும் ஏறெடுத்துப் பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினார். மித்ரா வின் அழுகை மேலும் கூடியதே தவிர குறையவில்லை.



மூர்த்தி ராதாவைப் பார்த்து, "ஏன் மித்ரா அழுதுகிட்டு இருக்கா?" என்று கேட்டார். ஏனென்றால் அவர் காதுகளிலும் விழுந்தது மித்ராவின் அழுகையின் சத்தம் அதற்குத்தான் சந்தேகமாக தன் மனைவியிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.


அதற்கு ராதா, "உங்க பொண்ணுக்கு கல்யாணம் வேண்டாமுன்னு சொல்றா" என்றார் நக்கலாக.



இதைக் கேட்டு மூர்த்தி மகளின் அறை நோக்கி, "மித்ரா மித்ரா இங்க வாம்மா" என சற்று கட்டமாக அழைத்தார்.


"இதோ வரேன் பா என உள்ளறையில் இருந்து குரல் கொடுத்தவள் அழுகையை நிறுத்தி விட்டு, "சொல்லுங்க அப்பா எனக் கூறிக் கொண்டே அவர் அருகில் வந்து நின்றாள்.


"நாளைக்கு உணக்கு மாப்பிள்ளை பார்க்க வராங்க அதுக்கு அம்மா கொடுக்கிற நகை புடவை எல்லாம் போட்டுகிட்டு தயாராகி இரு" என்றார் மித்ரா உடனே மனதில் உள்ள ஆசைகளை மறைத்து, "சரிங்க அப்பா என்றாள் தந்தை சொல்லுக்கு மதிப்பு கொடுத்து. மூர்த்தியின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.




மறுநாள் காலை ஐந்து மணி மேகம் தளர்ந்து போக சூரியன் உதிக்க மித்ரா வழக்கம்போல் வாசலில் கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் உடனே ராதா நகைகள் புடவை அனைத்தையும் கொண்டுவந்து மித்ரா விடம் கொடுத்துவிட்டு, 'மாப்பிள்ளை மணி பத்து மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு', "நீ அவர்கள் வரும் முன் தயாராகி விடு" என்று கூறிவிட்டு தன் வேலைகளை பார்க்க சென்றுவிட்டார். பாவம் மித்ரா அன்னை கொடுத்த புடவை மற்றும் நகைகளை கையில் வைத்துக் கொண்டு அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு நேரம் ஆக்குவதை உணர்ந்து குளிக்கச் சென்றாள்.



குளித்து முடித்து வந்தவள், அழகாக புடவை கட்டி பெண்களுக்கு அழகு சூட்டும் வகையில் புருவத்திற்கு மையிட்டு கண்களுக்கு மை இட்டு அவள் கண்ணுக்கு அழகு சேர்க்கும் வகையில் உருவத்திற்கும் அழகு சேர்க்கும் வகையில் இரண்டிற்கும் நடுவே வட்டவடிவ பொட்டு வைத்து ஒட்டி இருக்கு கீழே அழகிய குங்குமம் இட்டு கைகளில் அழகிய வளையல்கள் போட்டு காதில் தோடு போட்டு கால்களுக்கு அழகு சூட்டும் வகையில் கால் கொலுசு போட்டு பெண்ணிற்கு அழகு அவள் கூந்தலில் உள்ள பூக்களையே சூடும் அந்த வகையில் மிகவும் அழகிய மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டு அன்னை கூறிய நேரத்திற்கு முன்பு தயாராகி அமர்ந்து இருந்தாள்.



மித்ரா தயாரான நிலையில், மூர்த்திக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைப்பு வந்தது மூர்த்தி போனை கையில் வைத்துக்கொண்டு ராதாவிடம் கூற, உடனே ராதா, " சீக்கிரம் என்னன்னு கேளுங்க!" என்று ஆர்வமாக கேட்டார். மூர்த்தி அந்த அழைப்பை ஏற்று, " சொல்லுங்க? "என கேட்டார். அதற்கு மாப்பிள்ளை வீட்டார் தாங்கள் வருவதற்குத் தாமதமாகும் சொல்லிவிட்டு அழைப்பை பட்டென்று துண்டித்து விட்டார். மூர்த்திக்கு அப்போதே மனது உறுத்தியது தன்னையே கேள்வியாக நோக்கி கொண்டிருக்கும் மனைவியிடம் இதை கூற, ராதாவிற்கு மனக்கசப்பு வந்துவிட்டது ஏனென்றால் முதல் பெண் மித்ரா அவளுக்கு திருமணம் நல்லபடியாக செய்து விட்டு விட்டாள் இன்னும் 3 இளம்பெண்களை கரை சேர்க்க வேண்டும் என்ற கவலை வந்துவிட்டது. முதல் பெண்ணிற்கு இந்த தடுமாற்றம் என்றால் அடுத்து 3 பெண்ணிற்கு என்ன தடுமாற்றம் என மூர்த்திக்கு மிகவும் மனக்கவலை வந்துவிட்டது. ஊர்தியின் முகபாவனை பார்த்துக் கொண்டிருந்த ராதா கணவனிடம், 'கவலைப்படாதீங்க எல்லாமே நல்லபடியா நடக்கும்" எனக் கூறி தன்னையும் தேற்றிக் கொண்டார்.




நேரம் ஆனதே தவிர இன்னும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து எந்த தகவலும் இல்லை மறுபடியும் எந்த அழைப்பும் வரவில்லை ராதா, "என்னங்க இது மணி 11:00 மணி ஆகுது இன்னும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரல?? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு நீங்க போன் பண்ணி என்னன்னு கேளுங்க" என்றால் பதைப்புடன்.


மூர்த்தி, "இதோ கேட்டுப் பாக்குறேன்" எனக்கூறி கையில் போனை எடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு அழைப்பு கொடுத்தார் மாப்பிள்ளை வீட்டாரும் சரியாக பதில் அளிக்காமல் இதோ வருகிறோம் இதோ வருகிறோம் என பட்டும் படாமல் மூன்று தடவை சொல்லி விட்டு போனை துண்டித்து விட்டார். உடனே மூர்த்தி ஆதங்கமாக ராதாவிடம் சொல்லி கவலைப்பட. இம்முறையும் ராதா, "கவலைப்படாதீங்க எல்லாம் வருவாங்க" என மீண்டும் அதையே கூறி தங்களது வேலைகளை பார்க்க தொடங்கி விட்டனர். மித்ராவும் தன் அலங்காரத்தை கலைக்காமல் அவர்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.




இப்படியே காத்துக்கொண்டிருக்க அந்தி மாலை சூரியன் மறையும் மணி மாலை ஐந்து மணி ஆகிவிட்டது இந்த நிலையில் ராதா தன் கணவனிடம், "என்னங்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக தெரியவில்லை, மறுபடியும் மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி என்னனு ஒழுங்கா விசாரிங்க?" என்றார் தோய்ந்த குரலில்.



மனைவியின் சோர்வை கண்டு, "என்னம்மா பண்றது நான் போன் செய்தால் மாப்பிள்ளை வீட்டார் இது வருகிறோம் இதோ வருகிறேன்னு சொல்லிட்டு போனை கட் பண்றாங்க, ஒழுங்கா நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க என்னதான் பண்றது" என்றார் மனக் கசப்புடன்.


ராதா அதற்கு, "ஒரு தடவை கடைசியா போன் பண்ணி பாருங்க" என்றார் நம்பிக்கையுடன். மனைவியின் சொல்லுக்கு அடிபணிந்து மூர்த்தியும் கடைசி முயற்சியாக மாப்பிள்ளை வீட்டாருக்கு அழைப்பு விடுவித்தார், அந்தப்பக்கம் அழைப்பை ஏற்ற மாப்பிள்ளையின் தந்தை, "என் மகன் அரசு வேலையில் வேலை பார்க்கிறான் எனது மகனுக்கு உயர்கல்வி படித்த பெண்ணை தான் நாங்கள் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று இருந்தோம்" என்று கூறினார். அதற்கு மூர்த்தி, " நாங்கள் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருந்தோம் இல்லை என் பெண் பன்னிரண்டாம் வகுப்பு தான் படித்து இருக்கிறாள் என்று அதை தெரிந்து நீங்கள்தான் வருவதாக சொன்னீர்கள் பிறகு ஏன் இப்படி சொல்றீங்க" என மூர்த்தி மாப்பிள்ளையின் தந்தையிடம் கேட்டார்.



உடனே மாப்பிள்ளையின் தந்தை, "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது நாங்கள் எங்கள் மகனுக்கு நல்ல உயர் கல்வி படித்த பெண்ணை தான் தேடுகிறோம் நாங்கள் வரவில்லை" என கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். மூர்த்திக்கு மிகவும் கவலையாகி விட்டது உடனே தன் மகள் இருக்கும் அறைக்குள் நுழைந்து , "என்ன மன்னிச்சிடு மா மாப்பிள்ளை வீட்டார் வரலை" என கூறி அவர்கள் கூறிய காரணத்தையும் கூறினார். ராதா கணவன் பின்னாலே வந்தவர் அவர் கூறியதைக் கேட்டு அவரும் திகைத்து, "என்னங்க இப்படி சொல்றீங்க என்ன ஆச்சு?" பதற்றத்துடன் விசாரிக்க.


"எத்தனை முறை கேட்டாலும் நான் சொன்னதுதான் உண்மை, வேற எதுவும் என்னால மாத்தி சொல்ல முடியாது என்றார் சற்று எரிச்சலுடன். ராதா கண்கள் கலங்க அதைக் கணவரிடம் காட்டிக்கொள்ளாமல் வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார். மனைவி சென்ற உடன் அங்கே எந்த முக பாவனையும் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்த மகளிடம் திரும்பிய மூர்த்தி, "மாப்பிள்ளை வரும் முன் நீ ஏன் அழுதாய்?" என கேட்க உடனே மித்ரா கண்களில் கண்ணீர் கன்னம் சிவக்க கண்ணீர் துளிகள் அவள் முகத்தில் விழுந்து, " வேலை பார்த்துக்கொண்டே உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற அம்மாவிடம் கேட்டேன் அம்மா அதற்கு உயர்கல்வியை ஒன்றும் தேவை இல்லை என சொல்லிவிட்டு உனக்கு அடுத்து 3 தங்கைகளே இருக்கிறார்கள் அவர்களை நினைத்துப் பார்த்தாயா எனக் கேட்டுவிட்டு என்னை அடித்து விட்டார்" என மித்ரா தேம்பி தேம்பி அவள் அப்பாவிடம் அழுது சொல்லிவிட்டாள்
மித்ரா அடுத்து உயர் கல்வி படிக்க செல்வாலா !மூர்த்தி என்ன சொல்லப் போகிறார் என அடுத்த அதியாயதில் பார்க்கலாம்.




மலருவாள்....
 

Ramya shankar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே இதோ எனது இரண்டாவது பூ _2:வந்து விட்டது
 

Ramya shankar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூர்த்தி கன்னத்தில் கையை வைத்து யோசித்துக் கொண்டிருக்கிறார் தன் மகள் அழுது புலம்பியது கேட்டு மனம் தாங்கவில்லை எனவே முதல் பெண்ணிற்கு அடுத்து மூன்று பிள்ளைகளையும் யோசித்து கொண்டிருந்தான் ஆனால் பெண் பார்க்க வருவதாக சொல்லிவிட்டு வராமல் அவமதித்த அதை எண்ணி மனம்கலங்கினார் மூர்த்தி ராதா உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் கன்னம் சிவக்கும் படி அழுதுகொண்டே இருந்தால் அதற்கு மூர்த்தி உடனே "ராதா ராதா ஏன் இப்படி இருக்கிறாய் இப்பொழுதுதான் நம் பெண்ணிற்கு முதல் மாப்பிள்ளை வந்து வராமல் போய் விட்டார் நம் பெண்ணிற்கு இதற்கு மேல் மாப்பிள்ளை வரமாட்டாரா என்ன ?வருவார்கள் நாம் பார்த்துக் கொள்ளலாம் வா"


உடனே ராதாவிடம் நான் ஒரு யோசனை வைத்துள்ளதாக கூறினார் அதற்கு ராதா உடனே "சொல்லுங்க சொல்லுங்க என்ன அதை சொல்லுங்க" என்று ஆர்வமாக கேட்டாள் அதற்கு மூர்த்தி "நம் பெண் படிக்கவில்லை என மாப்பிள்ளை வீட்டார் அவமதித்து வராமல் போய்விட்டதால் நம்முடைய நான்கு பெண்களையும் உயர்கல்வி படிக்க வைத்து தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்" என்றார் அதற்கு ராதா "என்னங்க சொல்றீங்க ஏற் கல்வியா" என கேள்விக்குறியாக கேட்டார்


அதற்கு மூர்த்தி ஆமாம் உயர்கல்வி படிக்க வைக்கப் போவதாக ராதாவிடம் சொன்னார் அதற்கு ராதா "என்னங்க சொல்றீங்க நமக்கு ஒரு பெண் பிள்ளை இல்லை நமக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர் இந்த நான்கு பிள்ளைகளை கரை சேர்க்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கு" என ராதா கவலையாக சொன்னார் அதற்கு மூர்த்தி வாக்குவாதமாக "ஆமாம் எனக்கு தெரியும் நான் நான்கு பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து தான் திருமணம் செய்து தருவதாக" ராதாவிடம் வாதாடினார் அதற்கு ராதா சொன்னால் "இல்லங்க இது சரியா வராது ஒரு பெண் பிள்ளை படிக்க தேவைப்படும் பணம் அதை நம் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து விடலாம் ஏன் இப்படி வீண் செலவு செய்வீர்கள்" என ராதா மூர்த்தி இடம் வாக்குவாதம் செய்தார் அதற்கு மூர்த்தி கடுமையாக ராதாவை திட்டிவிட்டு நான் என் நான்கு பெண் பிள்ளைகளையும் தலை நிமிர்த்தி உயர்கல்வி படிக்க வைக்கப் போவதாக சொன்னார் அதற்கு ராதா "நான் சொல்றத இனிமேல் நீங்க கேட்கவா போறீங்க நீங்க என்ன செய்கிறீர்களோ செய்முறை" என்று அங்கிருந்து உடனடியாக சென்று விட்டார் உடனே மூர்த்தி சங்கமித்ரா வின் கைகளைப் பிடித்துக்கொண்டு "நீ படிக்க வை உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை கூறினாய் ஆனால் நாங்கள் அதை வேண்டாம் என்று சொன்னோம் நாங்கள் சொல்லி அதற்கு பலன் இல்லை ஆனால் நீ சொல்லி அதற்கு ஒரு பலன் உண்டு எனவே மூர்த்தி நீ உயர்கல்வி படிக்க போகிறாய்" என மனதில் கவலையுடனும் ஒரு ஆச்சரியக்குறி உடனும் கேள்விக்குறியுடன் தன் பெண்ணிடம் சொன்னார்அதற்கு சங்கமித்ரா தன் அப்பாவிடம் அப்பா ஏன் நான் உயர்கல்வி படிக்க போவதை இவ்வளவு கவலையுடனும் சோகத்துடனும் சொல்கிறீர்கள் நான் நல்லா படிக்க துறை அப்பா என்று சொன்னால்


சங்கமித்ரா அதற்கு "சரிம்மா நீ நன்றாக படிக்க வேண்டும் என்று சொன்னார் இப்படியே அன்று மாலை வந்தது பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு பிறகு அனைவரும் தூங்க சென்று விட்டார்கள் என்னதான் மூர்த்தி படிக்க சம்மதிக்க ஒத்துக்கொண்டாலும் ஏதோ ஒரு தயக்கம் ஏதோ ஒரு நடுக்கம் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்ததை எண்ணிக்கொண்டே சங்கமித்ரா அன்றிரவு உறங்க சென்று விட்டாள்.
காலை ஆறுமணி சூரியன் உதிக்க வழக்கம்போல் சங்கமித்ரா புள்ளி வைத்து கோலம் போட முகத்திற்கு மஞ்சள் பூசிக் தாவணி அணிந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் அவள் சொந்தக்காரர்கள் அனைவரும் கேட்டார்கள் மாப்பிள்ளை வரப் போவதாகச் சொன்னீர்கள் ஏன் வரவில்லை எதற்கு வரவில்லை என அனைவரும் கேள்வி கேட்க அதற்கு மூர்த்தியிடம் பதில் ஏதும் இல்லாமல் தவிக்க தன் பெண் பிள்ளையை உயர்கல்வி படிக்க வைக்கப் போவது எப்படி சொல்வது என தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டு அங்கு பதிலேதும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார் .



எனவே சங்கமித்ரா விற்கு யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது தன் அப்பா என்னை உயர்கல்வி படிக்க வைக்கப் போவது எல்லோரிடமும் சொல்வாரா?மூர்த்தி வந்திருந்த சொந்தக்காரர்கள் அனைவரின் அனைவரிடமும் சொன்னார் என் நான்கு பெண் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைத்து நான் திருமணம் செய்து தருவதாக வாக்களித்தார் எனவே இதற்கு சொந்தக்காரர்கள் வாக்குவாதம் செய்தனர் நான்கு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு எப்படி உயர்கல்வி படிக்க வைக்கப் போகிறாய் எப்படி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறாய் என கேள்வி கேட்பார்கள் அதற்கு மூர்த்தி யோசித்துக்கொண்டு ராதாவையும் சங்கமித்ரா அவையும் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பார்த்து சிந்தித்துக் கொண்டே இருந்தார் ! மூர்த்தி என்ன பதில் சொல்லப்போகிறார் என அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் .உடனே மூர்த்தி தன் சொந்தக்காரர்கள் அனைவரிடமும் என் பெண் பிள்ளைகளை நான் படிக்க வைத்து தான் திருமணம் செய்து தருவதாக சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டார் அதன்பிறகு சங்கமித்ரா வின் பாட்டியும் இவளை இவள் படித்து என்ன செய்யப் போகிறாள் கல்யாணம் செய்து வைத்து விட்டால் நம் கடமை முடியுமென அவர் பாடி சங்கமித்ரா விமர்சித்தார்



அதற்கு சங்கமித்ரா பாட்டியை கடுமையாக திட்டி விட்டு கோபத்துடன் சத்தமிட்டு விட்டு அழுது கொண்டே உள்ளே சென்று விட்டாள் உடனே இந்த சத்தம் கேட்ட மூர்த்தி வேகமாக வந்து அவர் அம்மாவிடம் சண்டை போட்டால் படிக்க வைக்கப் போவதாக நான்தான் சொன்னேன் அதற்கு ஏன் சங்கமித்ரா வைத்திருக்கிறீர்கள் என கேட்டார் அதற்கு சங்கமித்ரா மூர்த்தி என் கைகளைப் பிடித்துக்கொண்டு சங்கமித்ரா அவன் கன்னத்தில் வைத்து அழுது கொண்டே தேம்பித் தேம்பி அப்பா மிகவும் நன்றி அப்பா நான் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டேன் என்ன விட குறைவான மதிப்பெண் எடுத்த மாணவிகள் உயர்கல்வி படிக்க சென்று விட்டு செல்லப் போகிறார்கள் எனத் தெளிந்து என் மனம் வருந்தியது ஆனால் எனக்கும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது மேற்கல்வி படித்தால்தான் உங்களை என் அம்மாவையும் என் தங்கையும் பார்த்துக் கொள்வேன் என அழுது கொண்டே முட்டி இடம் சொன்னால் சங்கமித்ரா



அதற்கு மூர்த்தி நாங்கள் தான் உன் மனம் தெரியாமல் கல்யாணம் செய்து வைக்கப் போவதாக சொல்லி உன் மனதை கஷ்டப்படுத்தி விட்டோம் என அவரும் வருந்தினார் ராதா மூர்த்தியையும் சங்கமித்ரா வெளியையும் பார்த்துக்கொண்டு கண்களில் கண்ணீர் வர நின்று கொண்டு இருந்தார். உடனே ராதா லூட்டியை பார்த்து நான் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் முதலிலேயே நம் பெண் என்னிடம் அவள் ஆசையை கூறினால் நான் தான் உயர்கல்வி வேண்டாம் உனக்கு அடுத்து மூன்று தங்கைகள் இருக்கிறார்கள் அவர்களை யோசித்துப் பார்த்தாயா அவர்களுக்கு அவது விட்டுக் கொடுத்து தான் போக வேண்டுமென சமாதானம் செய்து விட்டு வந்து விட்டேன் சமாதானம் செய்து விட்டதை விட அவளை அடித்து அடித்து காயப்படுத்தி விட்டேன் உடனே ராதா சங்கமித்ரா வை பார்த்து என்னை மன்னித்துவிடு மகளே உன் மனதில் உள்ள ஆசையை தெரியாமல் நான் உனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்திருக்க கூடாது என மூர்த்தியும் ராதாவும் இரண்டு பேருமாக சென்று அவர்களது பின் சங்கமித்ரா விட மன்னிப்பு கேட்டார்கள் உடனே சங்கமித்ரா கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க அவளது அப்பா அம்மா கைகளையும் பிடித்துக்கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
 

Ramya shankar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே.,

இதோ எனது மூன்றாவது கதையின் அத்தியாயத்தை பதித்து விட்டேன் . படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
 

Ramya shankar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூ -3


மறுநாள் காலை ஆறு மணி மித்ராவும் மூர்த்தியும் கல்லூரிக்கு செல்கின்றனர் கல்லூரியின் வாசலில் காலை வைத்துவிட்டு பூரிப்பாக மனமகிழ்ந்து கல்லூரியின் உள்ளே சென்றாள் மித்ரா , ஆனால் மித்ராவுக்கு தெரியாது அவளின் வாழ்க்கை பயணம் இங்கிருந்துதான் தொடங்கப் போகிறது என.



மூர்த்தி பிரின்சிபல் மேடம்
இடம் "வணக்கம் மேடம்" என்று மூர்த்தி சொல்ல மித்ராவும் "குட்மார்னிங் மேடம்"என்று சொல்லிவிட்டு நின்றிருந்தார்கள்,



அவர்களை பிரின்சிபல் மேடம் "குட்மார்னிங்" என்று சொல்லிவிட்டு உக்காருங்க என்று சொன்னார். உடனே மூர்த்தி மித்ராவின் படிப்பைப் பற்றி பிரின்சிபாலிடம் பேசுகிறார் பிரின்சிபால் மேடம் சங்கமித்ரா அழைத்து நீ படிப்பில் எந்த துறையை எடுக்க விரும்புகிறாய்? என்று கேள்வி கேட்கிறார்கள்


அதற்கு அவள் நான் "டிப்ளமோ ட்ரிபில் இ" படிக்கப் போவதாக சொன்னாள் உடனே பிரின்சிபால் ஓகே என்று சொல்லிவிட்டு அட்மிசன் சீட் போடுவதற்கான சில நகல்களை எடுத்து வர சொன்னார், மதிப்பெண் சான்றிதழ் ,புகைப்படம், மித்ராவின் ஆதார் கார்டு, இது அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து வர பிரின்சிபல் மேடம் மித்ரா விடம்சொன்னார்கள் அதற்கு மித்ரா ,நானும் எனது அப்பாவும் இன்று வீட்டிற்கு சென்று நகல்களை எடுத்துக்கொண்டு நாளை வந்து "அட்மிஷன் ஷீட் "போடுவதாக சொன்னால் உடனே மூர்த்தி மித்ரா ஒரு நிமிஷம் வெளியே வாம்மா அப்படி என்று கூப்பிட்டார் ,



அதற்கு மித்ராவும் மேடம் ஒன் மினிட் ப்ளீஸ் மேடம் எனது அப்பா கூப்பிடுறாங்க நான் போயிட்டு வந்துடறேன் ?ஓகே மா என்று பிரின்ஸ்பல் மேடம் சொல்கிறார்கள் உடனே மித்ரா அவள் அப்பாவிடம் சென்று என்னபா சொல்லுங்க அப்படி என்று கேட்கிறாள் ,உயர்கல்வி படிக்க நீ எடுத்திருக்கும் துறையை சார்ந்து எவ்வளவு பணம் கட்டணும்னு கேட்டியா மா என


மூர்த்தி கேட்கிறார் ;அதற்கு மித்ரா தலையை சொரிந்து கொண்டு இல்லை அப்பா இதை மறந்துவிட்டேன் நான் இப்போ போய் கேட்கிறேன் உடனே மித்ரா பிரின்சிபல் மேடம் அறையை நோக்கி செல்கிறாள் 'உடனே பிரின்சிபல் மேடம் இடம் மேடம் நான் எடுத்திருக்கும் படிப்பு துறையை சார்ந்து பணம் எவ்வளவு செலவு ஆகும் என என் அப்பா கேட்கிறார்கள்? அதற்கு மேடம் கால்குலேட்டர் எடுத்து மொத்த தொகையையும் கூட்டி "24 ஆயிரம் "ஆகும் என சொன்னார் எனவே மித்ரா 24 ஆயிரம்! என மனதில் நினைத்துக் கொண்டே அவள் அப்பாவிடம் சென்று அப்பா பிரின்ஸிபள் மேடம் 24 ஆயிரம் ஆகும் என சொன்னார்கள் உடனே மூர்த்தி ,யோசித்துக் கொண்டே சரி மா வீட்டுக்கு போய் பேசலாம் அப்படின்னு சொல்லி வீட்டிற்கு செல்கிறார்கள்.

வீட்டிற்கு சென்றவுடன் ராதா ஆர்வமாக மித்ரா விடம் போன வேலை என்னம்மா ஆச்சு என கேட்டார்

அதற்கு மித்ரா அம்மா பிரின்சிபால் மேடம் சில நகல்களை எடுத்து வர சொல்லி இருக்காங்க அதை எடுத்துக்கிட்டு அதற்கான பணத்தையும் எடுத்துக்கொண்டு நாளைக்கு வர சொல்லி இருக்காங்க உடனே ராதா நீ படிப்பதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என மித்ராவிடம் கேட்கிறார். அதற்கு மித்ரா சற்று தயக்கத்தோடு அவள் அம்மாவிடம் 24 ஆயிரம் ஆகும் என சொல்கிறாள் உடனே ராதா 24 ஆயிரம் ஆ என வாயை
பிளகிரால்! அதற்கு மூர்த்தி சற்றும் யோசிக்காமல் பணம் பார்த்தாள் நம் பிள்ளையை படிக்க வைக்க முடியாது என ராதாவிடம் சொல்கிறார். மறுநாள் காலையில் மித்ராவும் மூர்த்தியும் கல்லூரிக்கு சென்று நகல்களை கொடுத்துவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு "அட்மிஷன் ஷீட்டை" போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார்கள்.



வீட்டிற்கு வந்தவுடன் மூர்த்தி மித்ராவை பார்த்து "இங்க பாரு மித்ரா நாங்க இவ்வளவு செலவு பண்ணி உன்னை படிக்க வைக்கிறோம் அதே மாதிரி நீயும் நல்லா படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கணும் சரியா" அப்படின்னு மித்ரா விடம் சொன்னார்.



உடனே மித்ரா "அப்பா நீங்க நெனச்சபடி நான் நல்லா படிச்சு முடிப்ப அப்பா அப்படின்னு சொன்னாள் மித்ரா. ராதாவும் ஆமாம்மா நாம இருக்கிற கஷ்டத்துக்கு உன்ன சொந்தக்காரர்களை எதிர்த்து உங்க அப்பா உன்ன படிக்கவைக்க ஆசைப்பட்டு இருக்காரு நீயும் அதுக்கேத்த மாதிரி நல்லா படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கணும் சரியா அது உன்னோட பொறுப்பு.?" உடனே மித்ரா அம்மா நீங்க நெனச்சதை விட
விட நான் கண்டிப்பா நான் நல்ல அதிக மதிப்பெண் எடுத்து உங்கள பெருமைப்படுத்துவேன் என்று மூர்த்திக்கும் ராதாவுக்கும் வாக்கு அளித்தால்.



அவள் மூன்று தங்கைகளும் மித்ராவை பார்த்து "அக்கா நீ நன்றாக படிக்க வேண்டும்" என வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

உடனே மித்ரா புன்னகை மகிழ்ச்சியுடன் மூன்று தங்கைகளை பார்த்து நன்றி என சொன்னாள். மித்ரா இரவு உறங்குவதற்கு முன் நாளை அவள் உயர்கல்வி படிக்க போவதை எண்ணி எண்ணி நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டே இருந்தாள் நாளை கல்லூரிக்கு போகும் போது எந்த உடை அணிந்து செல்வது அப்புறம் பெண் வாங்கணும் நோட்புக் வாங்கணும் என பல கனவுகளோடு அவள் உறங்கச் சென்றாள்.



மலரு வாள்..
 

Ramya shankar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹீரோ என்ட்ரி இல்லாம இருக்குமா....😎

ஹாய் நண்பர்களே இதோ எனது அடுத்த நான்காவது கதையின் அதியாயதை பதித்து விட்டேன் படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.❣



நன்றி .....
 

Ramya shankar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூ-4


சங்கமித்ரா மறுநாள் காலையிலே எழுந்து மகிழ்ச்சியுடன் மன சந்தோஷத்துடன் வாசலில் நீர் தெளித்துவிட்டுகோலம் போட்டுவிட்டு சூரியன் வருவதற்கு முன் குளித்துவிட்டு பக்தியுடன் கல்லூரிக்கு செல்வது நினைத்து "கடவுளை" வணங்கிவிட்டு கல்லூரிக்கு செல்ல தயாராகி நாள் மித்ரா.



ராதா காலை எழுந்தவுடன் மித்ரா கல்லூரிக்கு செல்வதற்காக அவள் காலையில் "டிபன்" செய்துவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக சாதமும் செய்து தயாராக வைத்தார்.


மித்ரா கையில் "நோட்புக் "அனைத்தையும் ஒரு பையில் போட்டுக்கொண்டு காலையில் ராதா செய்து வைத்த டிபன் ஐயும் சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு செல்ல தயாரானாள் மித்ரா.

மூர்த்தியும் தன் மகளை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல தயாரானார் மித்ராவும் அவள் அப்பாவும் கல்லூரிக்கு சென்று விட்டனர் உடனே மூர்த்தி மித்ராவை வண்டியில் இருந்து இறக்கி விட்டு மித்ரா பத்திரமா போயிட்டு வாம்மா பாய் என்று சொல்லிவிட்டு மூர்த்தி சென்றுவிட்டார்.



மித்ரா விற்கு அளவுகடந்த ஆனந்த கண்ணீர் வருகிறது துடைத்துக்கொண்டு கல்லூரியின் வாசலில் காலை வைத்துவிட்டு சற்று சிந்தித்து பார்க்கிறாள் இந்த கல்லூரி வருவதற்கு எவ்வளவு போராட்டங்கள், எவ்வளவு கஷ்டங்கள், அதை நினைத்து விட்டு உள்ளே செல்லும் பொழுது.!


கால் தடுக்கி கீழே விழ செல்கிறாள் மித்ரா!... அப்போது எதிர்பாராமல் அவளைத் தாங்கிப் பிடிக்க "ஒரு கை "செல்கிறது அவர் யார் என தெரியவில்லை ஆனால் அப்போது அவர் கைகளைப் பிடிக்க உடனே இரு கண்கள் மின்னல்போல் மோதிக்கொள்ள இரண்டு பேரும் எதுவும் பேசாமல் கண்களை பார்த்துக்கொள்ள

"யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் தைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது".......... என இருவர் மனதுக்குள் பாட்டு சத்தம் தான்..


உடனே மித்ரா அவர் கைகளை உதாசீனம் செய்து விட்டு நின்று விட்டாள் அப்பொழுது அவர் மித்ராவை பார்த்து கேட்கிறார் ஏன்மா பார்த்து வரக்கூடாதா? சற்று கவனத்துடன் வந்து இருக்கலாம் நான் பிடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என மித்ராவை பார்த்து கேட்க மித்ரா ஏதும் கூறாமல் அவர் கண்களை பார்த்துக்கொண்டே நின்று விட்டாள்..,....


அவர் உடனே கைகளை சுட கிட்டு ஹலோ உன்ன தான் கேட்கிறேன் மா பதில் சொல்?..

உடனே மித்ரா அவரைப்பார்த்து நான் கீழே விழாமல் இருந்ததற்கு உதவியாக இருந்த உங்களுக்கு மிகவும்" நன்றி "என கூறிவிட்டு முகத்தை சுளிதுக்கொண்டு சென்று விட்டாள்..

உடனே மித்ரா தான் படிக்கும் வகுப்பறையின் உள்ளே செல்கிறாள் அங்கு இவளைப் போலவே ஒரு பெண் புதிதாக சற்று தயக்கத்துடன் பெஞ்ச் இல் உட்கார்ந்திருப்பதை கவனிக்கிறாள் .

உடனே மித்ரா அவரிடம் சென்று ஹாய் நான் மித்ரா உங்க பெயர் என கேட்டாள் அதற்கு அந்தப் பெண் எனது பெயர் சௌந்தர்யா என சொன்னாள்.
உடனே மித்ரா அவள் கைகளை பிடித்துக் கொண்டு ஓகே என சொல்லி விட்டார்.


வகுப்பறை ஆரம்பிக்க மணி ஆகிவிட்டது ஆசிரியர் வருவதற்கு எதிர்பார்ப்புடன்' உட்கார்ந்திருந்தால் மித்ரா.

வகுப்பறை ஆரம்பிக்க போகிறது வாசலை எட்டிப் பார்க்கிறாள் யார் வரப் போகிறார்கள் என எதிர்பார்ப்புடன் பார்க்கிறாள் மித்ரா எதிர்பார்க்காத தருணம் அவள் கீழே விழாமல் அவளைத் தாங்கிப் பிடித்த அந்த மனிதன் அவர் உள்ளே வருகிறார்.

ஆனால் மித்ரா நினைத்துப் பார்க்கிறாள் இவரும் மாணவர்களுள் ஒருவர் என நினைத்துக் கொள்கிறாள், ஆனால் அதுதான் இல்லை..
என்னவா இருக்கும்........

உடனே எல்லா மாணவர்களும் எழுந்து குட் மார்னிங் சார் என சொன்னார்கள் மித்ராவும் எழுந்து குட்மார்னிங் என சொல்லிவிட்டு ஆச்சரியத்துடன் திகைத்து நின்றாள்.


உடனே அவரும் அவருடைய காலை வணக்கத்தை தெரிவித்துவிட்டு வகுப்பறையை தொடங்க ஆரம்பித்தார் ஆனால் அதற்கு முன் மாணவர்களின் பெயர்களை ஒவ்வொருவராக சொல்லும்படி சொன்னார்.

அனைவரும் சொல்லிவிட்டனர் மித்ராவும் எழுந்து அவள் பெயரை சொல்லி விட்டு அவளின் குடும்பத்தைப் பற்றியும் சொன்னாள்.


மித்ரா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வந்திருக்கிறாள் என்பதை பற்றியும் அவள் அப்பொழுது பதிவு செய்து விட்டால்.


அவளின் முக்கிய குறிக்கோள் அவள் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் எடுக்க வேண்டுமென்பதே அவளின் நோக்கமென சொன்னால்.


அதற்கு அந்த ஆசிரியர் வாழ்த்துக்கள் மித்ரா என சொன்னார்.! உடனே நிற்கும் நன்றி சார் என சொல்லி விட்டு அமர்ந்து விட்டாள்.


அந்த ஆசிரியரும் எனக்கும் இந்த கல்லூரியில் முதல் நாள் என்றும் எனது பெயர் (கைலாஷ்) என்றும் மாணவர்களிடம் சொன்னார். அன்றைய வகுப்பறை முடிந்துவிட்டது.

மித்ரா வீடு திரும்பினாள்.......


மலருவால்.,...
 
Status
Not open for further replies.
Top