All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரியா வரதராஜனின் 'காதல் ரோஜாவே' - கதை திரி

Status
Not open for further replies.

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 17

சித்தார்த் சென்று காரை எடுக்க, ஜனனி பின்னுயிருக்கையில் நிலாவுடன் சென்று அமர்ந்தாள்.....

சித்தார்த்திடம் ஜனனி இது போல் எல்லாம் வெளியே கூட்டி போகுறிருக்கலா என்று எல்லாம் கேட்டதேயில்லை......... இன்று அவள் வந்து கேட்கும் போது அவள் முகம் வாடியிருப்பதை உணர்ந்தவன் அத்தானை வேலையும் விட்டுவிட்டு உடனே கிளம்பினான் ........ சும்மாவே தன் தங்கை எது கேட்டாலும் மறுக்காமல் செய்பவன்............ இன்று அவள் எதோ வருத்தத்தில் இருக்கிறாள் என்றதும் ரிஷியிடம் செய்ய வேண்டிய வேலையை சொல்லிவிட்டு கிளம்பினான்...........

காரை மிதமான வேகத்தில் செலுத்தியவன்........ எங்க ஜனனி போகணும் என்று கவனத்தை ரோட்டில் வைத்து கண்ணாடி வழியாக பார்த்தவறே சித்தார்த் கேட்க........

அண்ணா எதாவது மால் போகலாம் அண்ணா என்று அவள் சொன்னதும் சரி என்றவன் நிலாவை பார்க்க அவள் எதோ சிறுபிள்ளை கோவத்தில் அமர்ந்திருப்பது போல் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க....... அவளை பார்த்த சித்தார்த்திற்கு அவளை பார்த்து கொண்டே இருக்கலாம் என்று இருக்க கஷ்டபட்டு கண்ணை ரோட்டில் பதித்தான்......

நிலாவிற்கு தன் மேலே கோவமாகயிருந்தது ....... அவன் தங்கச்சி மூஞ்சு சுழிச்ச அவன் வருத்த பட்ட ஏன் உனக்கு இவ்வளவு கோவம் வருது என்று அவள் மனது அவளிடம் கேள்வி எழுப்ப........... தாராளமா வருத்தபடடும் அதை பத்தி எனக்கு ஒன்னும் இல்ல.............. அவங்க வீட்டு பொண்ணு மூஞ்சு சுழிச்ச கூட தாங்கிக்க முடியாது..........ஆனா என்னை மட்டும் மீட்டிங்கில் எத்தனை பேரு முன் திட்டிருப்பான் அப்போ ஒரு தடவ கூட இப்படி வருத்த வரல என்று நிலா எதையெதையோ போட்டு மனதை குழப்பி கொண்டிருக்க........ ஒரு மால் முன் சென்று காரை நிறுத்தியவன்...... நீங்க இறங்கி உள்ள போங்க நான் பார்க் பண்ணிட்டு வரேன் என்று சொல்ல....... பெண்கள் இருவரும் இறங்கி உள்ளே செல்ல இவன் கார் பார்கிங்கிக்கும் சென்றான்............

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக ஜனனியுடன் நடக்க ஜனனிக்கு தான் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது..........

என்னாச்சு நிலா.......என்மேல உனக்கு கோவமா...... ஏன் உனக்கு எங்க கூட வர பிடிக்கலையா என்று ஜனனி கேட்கவும்.....

நிலாவிற்கு சித்தார்த்தின் மேல் மட்டுமே கோவமிருந்தது அதுவும் உரிமைக்கான கோவம்........... தன் முக சுளிப்பை ஏன் அழுகைகூட அவன் இன்று அளவும் பொருட்படுத்தவில்லையே என்று ஆதங்கம்........... ஆனால் அவனிடம் இவள் என்ன எதிற்பார்க்கிறாள் என்பது அவளுக்கே விளங்கவில்லை...........

ஜனனி அப்படி கேட்கவும் நிலாவுக்கு சங்கடமாகிவிட்டது........... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஜனனி.........அண்ணா தங்கச்சி ஒன்ன போவீங்க இதுல நான் ஏன் நடுவுல வரணுமுன்னு நினைச்சேன் சரி அது இருக்கட்டும் ....... என்ன ஜனனி திடிர்னு ஷாப்பிங் எல்லாம்...... என்ன வாங்கணும் என்று நிலா கேட்க...........

வாங்க எல்லாம் ஒன்னுமில்ல நிலா ........ என்னோமோ சச்சின் அத்தானுக்கு மெசேஜ் அனுப்புனதுலயிருந்து அவங்க திரும்ப மெசேஜ் பண்ணுவாங்கல பண்ணுவாங்களானு திரும்ப திரும்ப போன் எடுத்து பாத்துட்டே இருக்கேன்........ பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்கு........ அந்த ஆபீஸ் குள்ள இருக்குறது மூச்சு முட்டும் போல இருக்கு அதான் எங்காவது வெளிய போகலாமுன்னு நினைச்சேன் என்னவோ வேற யாரு கூடவும் போக பிடிக்கல............ஆனா சித்து அண்ணா கூட போன நல்ல இருக்குமுன்னு தோணுச்சு என்று ஜனனி சொல்லவும்............

நிலாவிற்கு ஜனனி பார்க்க பாவமாகயிருந்தது........ என்னோமோ நிலா நீ எனக்கு எதோ மைகீது வச்சுட்டானு நினைக்குறேன்........உன்கிட்ட மட்டும் என் மனசுல உள்ள எல்லாத்தியும் சொல்லணும் போல இருக்கு நிலா என்று ஜனனி சொல்லவும்............அதற்கு நிலா புன்னகைத்துவிட்டு...... இந்த பிரச்சனைய நீ இன்னும் உங்க அண்ணாகிட்ட சொல்லலையா ஜனனி என்று நிலா கேட்க...........

இல்லை என்பது போல் தலை அசைக்க........ ஏன் ஜனனி உங்க அண்ணா இந்நேரத்துக்கு சச்சின் சார்கிட்ட பேசி பிரச்சனை தீர்த்துருப்பாங்கள என்று நிலா கேட்கவும்..........

எங்க அண்ணா பேசுனா சச்சின் அத்தான் கண்டிப்பா கேட்பாங்க தான்............ ஆனா நான் சச்சின் அத்தானை லவ் பன்னுரெய்னு சொன்னே தவிர நான் என் காதலுக்காக கூட நான் எதுவுமே மெனக்கெடல.......... சச்சின் அத்தானுக்கு கல்யாணமுன்னு சொன்னதும் நான் ஒதுங்கி நிக்க தான் பார்த்தேன்......... எப்படி என்னை விட்டுட்டு இன்னோரு பொண்ணு கூட நிச்சியம் பண்ணுவிங்கனு ஒரு தடவ கூட நான் அவங்கள கேட்கல......... என் காதல அங்க நா விட்டு கொடுத்துட்டேயனோனு இருந்தது........... அவங்க என்ன சொல்ல வரங்கனு கூட நான் காதுல வாங்காம என்னனோவோ பேசிட்டேன்....... எனக்கு அவங்க மேல கொஞ்சம் வருத்தம் அவங்களுக்கு என்மேல இருக்குற கோவம் எல்லாமே நாங்க எங்ககுள்ள சரி பண்ணிக்கனும் நிலா என்று ஜனனி சொல்லிக் கொண்டிருக்கவும் சித்தார்த் அவர்கள் அருகில் வரவும் சரியாகயிருந்தது...........

என்ன ரெண்டு பேரும் உள்ள போகாம இங்கே நின்னு பேசிட்டு இருக்கீங்க..... வாங்க உள்ள போகலாம் என்று சித்தார்த் இருவரையும் அழைத்து சென்றான் ......

அண்ணா நீங்க மாலுக்கு எல்லாம் அதிகம் வர மாட்டிங்களா என்று ஜனனி கேட்க....... இல்ல ஜனனி காலேஜ் படிக்கும் போது நிறைய தடவ பிரண்ட்ஸ்வோட வந்துருக்கேன் ..... இப்போ அர்ஜுன் கூட எப்போவது வருவேன் என்றதும்.........

இதுவே ஒரு பொண்ண லவ் பன்னிருந்த அடிக்கடி வந்திருப்பிங்க என்று ஜனனி சொன்னதும்...... சித்தார்த் தன்னையும் அறியாமல் நிலாவை பார்க்க அவள் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..........

சித்தார்த் அவள் கண்ணை பார்க்க பார்க்க அதற்குள்ளே சென்று விடுவோமா என்ன கண்ணு இப்படி காந்தம் மாதிரி இழுக்குது என்று எண்ணியவன் ....... அவன் கண்ணை அவளிடம் இருந்து திருப்பவே பெரும்பாடாக இருந்தது சித்தார்திருக்கு........

அண்ணா நம்ம போட்டோ எடுக்கலாமா என்றவள் அடுத்து சில புகைப்படம் எடுக்க......... ஜனனி அவள் அருகே நிலா நிற்க சித்தார்த் சென்று நிலா அருகே நின்றான்............

அவன் தன் அருகில் நிற்பான் என்று எதிர்பாராத நிலா சித்தார்த்தை திரும்பி பார்க்க அவன் என்னவென்று இவளை பார்க்க அது ஜனனியால் புகைப்படம் ஆனது........

ஐயோ என்ன ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டு நிக்குறீங்க காமெராவை பாருங்க என்று ஜனனி சொல்லவும்........

இருவரும் கேமராவாய் பார்த்தவாறு நின்று நாலு புகைப்படம் எடுத்துவிட........ அடுத்து foodcourt போய் சாப்பிட்டுவிட்டு வீடு செல்லலாம் என்று முடிவு செய்தனர்..........

சித்தார்த்திற்கு அர்ஜுனிடம் இருந்து கால் வரவும் நீங்க போங்க நான் வரேன் என்று சொல்லிவிட்டு அவன் பேசி கொண்டிருக்க.......

நிலாவும் ஜனனியும் foodcourt நோக்கி சென்றனர்......... அங்கு நிலா ஒரு ரவுண்டு டேபிள் அருகே நிற்க........... ஜனனி food வாங்க சென்றிந்தாள்......

அங்கு நாலு பேரு நின்று பேசிக்கொண்டிருக்க அதில் ஒருவன் நிலாவை மட்டும் மேலும் கிழும் பார்க்க........ அவன் பார்வையே நிலாவிற்கு அருவெறுப்பாகயிருந்தது நிலா வேறு பக்கம் பார்த்தவாறு திரும்பி நிற்க...........

அவன் நிலாவின் எதிற்புறம் வந்து நிற்க..... நிலா ஜனனியை தேட அவள் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தாள் ....... அப்போது சித்தார்த் இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேட நிலா கண்ணில் பட அவள் அருகில் சென்றான்.......

இவனோ நிலாவை பார்த்தவாறு என்ன அல்வா மாதிரி இருக்க யாரும் கம்பெனிக்கு வரலையா.......... நான் வேண உனக்கு நைட் பிலா கம்பெனி தரேன் என்றதும்...........எதிரே இருந்தவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.......கன்னம் ஏரியவும் தான் தன்னை அறைந்திருக்கிறர்கள் என்று புரியவும் நிமிர்ந்து பார்த்தான்...........

அவனை அறைந்தது வேற யாருமில்லை நிலா தான்......... என்னடா பிரச்சனை உனக்கு நான் பாட்டுக்கு பேசாம தான நிக்குறேன் எதுக்குடா தேவையில்லாம வந்து வம்பு இழுக்குற என்று அவன் டேபிள் மேல வைத்திருந்த கைமேல் safety pin வைத்து ஓங்கி நறுக்கு என்று குத்தியவள் இனிமேல் எந்த பொண்ணையாவது மேலயிருந்து கிழ வரைக்கும் பார்ப்ப என்று கேட்க.......... ஐயோ அக்கா நான் பொண்ணுங்களே இனி பார்க்க மாட்டேன் என்று அலறி அடித்து ஓடிவிட ........

அவள் பின்னால் நின்று கொண்டிருந்த சித்தார்த் புன்னகையுடனே அவள் அருகே வர .........

ஐயோ இவன் பார்த்துவிட்டானா என்றதும் நிலாவிற்கு வெட்கமாக இருக்க........ சித்தார்த்திற்கோ என்ன பொண்ணுடா என்பது போல் இருந்தது......... ஜனனி உணவை வாங்கிட்டு வரவும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்..........

நிலாவுக்கு வந்தபொழுது இருந்த கோவம் இப்பொது துளியுமில்லை.......... காரில் யாரும் எதுவும் பேசி கொள்ளவில்லை........ வீட்டு வந்ததும் இறங்கியவர்கள்........ ஜனனி நிலாவிடம் பாய் சொல்லிவிட்டு செல்ல...........

ஜனனி ஒரு நிமிஷம் என் வீட்டுக்கு வந்துட்டு போயேன் என்று கூப்பிட இப்போவா நாளைக்கு வரேன் என்று ஜனனி சொல்ல...... இல்ல இப்போவே வா என்று வற்புறுத்தி அழைக்க ஜனனி சரி என்றாள்......... சித்தார்த் நிலாவிடம் தலை அசைத்துவிட்டு சென்றான்.........

நிலாவின் வீடு மிகவும் சிறியது தான் ஆனால் ஒரு ஆளுக்கு அது மிக பெரிய வீடாகயிருந்தது.......... அங்கு கூட்டில் 2 கிளிகள் இருக்க அதை பார்த்த ஜனனி இது பேசுமா நிலா என்றாள்...........

அது உடனே நிலா என்க........ நிலவோ அது நிலா மட்டும் தான் ஜனனி சொல்லும் ஆனா நான் என்ன பேசுனாலும் ரெண்டும் கேட்குற மாதிரியே என்னை பாத்துட்டு இருக்கும்........... அதுனால இங்க நா தனியா இருக்குற மாதிரி இருக்காது என்றாள் நிலா........

அந்த வீடு அவ்வளவு அழகாக ஒவ்வொரு பொருளும் நெருதியாக வைக்க பட்டிருக்க அந்த வீட்டை பார்த்ததும் ஜனனிக்கு பிடித்துவிட்டது....... நிலாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ஜனனி கிளம்பிருந்தாள்.........

நிலா நாளை உடுத்து வேண்டிய உடையை எடுத்து ஐயன் செய்ய ஆரம்பித்தாள்......... ஏனோ இன்று அர்ஜுன், இவளும் சித்தார்த் இருவரும் ஒரே மாதிரி டிரஸ் அணிந்து இருப்பதை கிண்டல் செய்தது நியாபகம் வர தனக்குள் சிரித்து கொண்டாள் ...........

இங்கு வீட்டிற்கு சென்ற சித்தார்த் குளித்துவிட்டு சிறிது நேரம் ரிஷியிடம் சொன்ன வேலை முடிந்தத என்று கேட்டுவிட்டு......... மெயில் செக் செய்து கொண்டிருந்தவன் நிலாவின் நியாபகம் வர........ எங்கே அன்று போல் இன்றும் நடந்து கொண்டிருப்பாளா என்று ஆவலுடன் அவன் பால்கனிக்கு சென்று நிலாவின் வீட்டு மாடியில் பார்க்க அவள் அங்கு இல்லை என்றதும் ஒரு ஏமாற்றம் வர ........ சிறிது நேரம் காற்றிலாவது நின்று விட்டு செல்லலாம் என்று நின்று கீழே பார்க்க அங்கு நிலா நடத்து கொண்டிருந்தாள்..........

இவ என்ன இந்நேரம் நடந்துகிட்டு இருக்க என்று எண்ணியவன் உடனே கீழே சென்றான்........

ஓய் நிலா என்ன இந்நேரம் நடந்துட்டு இருக்க எல்லாரும் மால்ல பார்த்தவன் மாதிரி பயந்து ஓடிரு மாட்டாங்க என்று புன்னகையுடன் சொல்லவும்......... இவளுக்கும் அந்த புன்னகை தொற்றி கொள்ள......... இருவரும் சேர்ந்து நடந்தனர் .........

அப்போது ஒருவன் பைக்யில் செல்ல நிலா அவனையே திரும்பி திரும்பி பார்க்க........ என்ன நிலா போன பைக்யே இப்படி பாத்துட்டு இருக்க என்று சித்தார்த் கேட்கவும்........

சித்தார்த் எனக்கு பைக் ஓட்ட சொல்லி தரிங்களா என்று நிலா கேட்க...... என்ன பைக் சொல்லி தரணும் என்று தயங்கியவன்........ அதுக்கு நீ டிரைவ் ஸ்கூல் என்று ஆரம்பிக்கவும்...... உங்களால சொல்லி தர முடியுமா முடியாத என்று கேட்க..........

சித்தார்த்தோ இன்னைக்கு எனக்கு கட்டம் சரியில்ல போல என்று புன்னகையுடன் சொன்னவன்..... இரு பைக் எடுத்துட்டு வரேன் என்று விட்டு சென்றவன்......... பைக்யோடு வந்தான் சித்தார்த்........

இங்க பாரு நிலா இது என்னோட உயிர் பாத்து பக்குவமா ஹண்டில் பண்ணனும் சரியா என்று சித்தார்த் கேட்க........ நிலா நாலா பக்கமும் தலையை ஆட்டினாள்......... இவ தலையை அடிய விதமே அவனுக்கு சரியாக படவில்லை..........

சரி என்று விட்டு clutch, பிரேக், அசிஸ்ல்டோர் என்று சொல்லி கொடுத்தவன்..... ஹே இரு உனக்கு முதல
பைக்க்கு கால் எட்டுமா என்று கேட்க........

எல்லாம் எட்டும் எட்டும் என்று பைக்கில் அமர சித்தார்த் அவள் பின்னாடி அமர்ந்து அவளுக்கு சொல்லி கொடுத்தவன்....... அவளை குழந்தை போல் முன்னாடி அமர விட்டு இவன் வண்டியை ஓட்டினான்........ கொஞ்சமாக அவளுக்கு clutch பிரேக் என்று பயன்படுத்த சொல்லி கொடுத்திருந்தான்........ ஒரு ரவுண்டு அவன் உதவியின்றி அவளே ஓடிருக்க ......... அருகே ஒரு பைக் வரவும் நிலா ஹண்டலை அட்ட.......

நிலா ஸ்ட்ராயிட்டா போ ஹாண்டில் அடாத பிரேக் பிடி என்று அவன் சொல்லிய எதுவும் அவள் காதில் விழவில்லை.......... கண்முடி கிலே படுத்திருந்தாள் பைக் ஒரு பக்கமாக கீழே கிடைக்க அவன் அருகில் விழுந்து கிடந்தான்.........

அவன் எழுந்ததும் முதலில் பார்த்தது நிலாவை தான்......... எதிற்வந்வரை தூக்கிவிட்டவன் அவர் பைக்யையும் எடுத்து கொடுத்தான்.........

என்ன சார் பார்த்து வர மாட்டிங்களா என்று கடுப்பாக சொல்லிவிட்டு....... அந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு பாருங்க சார்......... இந்த காலத்து பசங்களுக்கு கொஞ்சமும் பொறுப்பில்ல..... எல்லாம் விளையாட்டா போச்சு என்று சொல்லிவிட்டு சென்றார் .........

நிலா அருகே வந்த சித்தார்த் பைக் தூக்கி நிறுத்திவிட்டு....... பைக்கு என்ன ஆச்சு என்று ஆராய்ந்து கொண்டிருக்க........ நிலா கண் முடி கிடந்தாள்.........

அவள் அருகே சென்றவன்......... ஹேய் கண்ண திற என்று சொல்ல நிலா அசைவின்றி படுத்திருக்க......... சல்லி பைசாவுக்கும் போராஜனம் இல்ல உன் நடிப்பு என்று சொல்ல.......... நிலா உடனே கண்ணை திறந்தவள்........

என்ன சல்லி பைசாவுக்கு போராஜனம் இல்லையா என் நடிப்பு நான் மட்டும் நடிக்கலேனா அவரு இப்படி உங்கள சும்மா விட்ருப்பாரா என்று நிலா கேட்க........

இது எல்லாம் நல்ல கேளு என்றவன் அருகிலிருந்த மேடையில் சென்று அமர நிலாவும் அவன் அருகில் சென்று அமர்ந்தாள்..........

அடி எங்காவது பட்டுச்சு என்று சித்தார்த் கேட்கவும் இல்லை என்று தலை அட்டியவள் உங்களுக்கு என்று கேட்க......... தெரியல அங்கங்க எரியுது என்றான்.........

உனக்கு எப்போ பைக் கத்துக்கணும்னு ஆசை வந்தது என்று சித்தார்த் கேட்க........ சின்ன வயசுல அப்பா கூட வண்டில போகும் போது நாமலும் கத்துக்கணும்னு தோணுச்சு..........

அப்போ ஏன் இவ்வளவு நாளா கத்துக்காமயிருந்த என்று கேட்க....... நான் என் வீட்டுக்காரன் கிட்ட தான் கத்துக்கணும்னு இருந்தேன் என்று நிலா சொல்லவும்.........

சித்தார்த் அவ என்ன சொல்ல வருகிறாள் என்பது போல் அவள் முகத்தை பார்க்க அது மிகவும் சாதரணமாக இருக்க.........

ஜனனி சச்சின் சார் பிரச்சனை ஏன் நீங்க கண்டுக்காம இருக்கீங்க என்று நிலாவே வேறு பேச்சு எடுக்க..........

கண்டுக்காம இல்ல தலையிடாம இருக்கேன்.......... சச்சின் ஜனனியை தான் கல்யாணம் பணிபேனு உறுதியா இருக்கான்....... ஆனா அவனுக்கு இப்போதைக்கு கொஞ்சம் டைம் வேணும் அவ்வளவு தான் என்று சொல்லியவன்.......

ஏன் ஜனனி எதாவது சொன்னாளா என்று கேட்க....... ஜனனி சொல்லியதை மேலோட்டமாக நிலா கூறினாள்.......... கொஞ்சம் நேரம் அதை பற்றியே பேசியவர்கள்...........

மணியை பார்க்க அது இரண்டே முக்கால் என்று காட்ட...... இவ்வளவு நேரம் ரோட்ல உக்காந்து பேசிருக்கோம் என்று கேட்டு கொண்டே சித்தார்த் வண்டியை எடுக்க...... நிலா இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருக்கலாமே என்று நிலா கேட்க......... இன்னும் கொஞ்சம் நேரமா அப்புறம் விடிஞ்சுரும் ...... எஞ்சு வா நிலா என்று வீட்டிற்க்கு அழைத்து சென்றான் சித்தார்த்............
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 18

இரவு நேர இதமான காற்று மனதுக்கு மிகவும் பிடித்த நபருடன் பைக்யில் செல்வது மிகவும் மகிழ்ச்சியை அளிக்க.......... வாழ்க்கையில் இந்த நொடிகள் மட்டும் முடியவே கூடாது என்று மனம் ஏங்க............. இருவரும் ஒவ்வொரு நொடியும் சகமாக உணர்ந்தனர்...........

வீடு வரவும் மனமே இல்லாமல் நிலா இறங்கிவிட ........ சித்தார்த் தலை அசைக்க
நிலா அப்படியே நின்று சித்தார்த்தை பார்த்து கொண்டே நின்றாள்......... அங்கு விதி விளக்கு எதுவும் இல்லாமல் இருட்டாகயிருக்க பௌர்ணமி நிலாவின் வெளிச்சத்தில் நிலாவை கண்டவன் ஒரு நிமிடம் அவள் முகத்தை கண்டு அசைவற்று நின்றான்.........அந்த பௌர்ணமி ஒளியில் பேரழகியாக தெரியும் நிலாவை பார்க்க பார்க்க தேகட்டவில்லை சித்தார்த்திற்கு..........

சித்தார்த் அசைவற்று நிற்பதை கண்ட நிலா அவனின் பைக் ஹொரணை அழுத்தவும் தான் சித்தார்த் நடப்பிற்கு வந்தான்....... அவனிடம் புன்னகையுடன் நிலா விடைபெற ...... அவள் செல்லும் வரை நின்று பார்த்தவன் அவள் உள்ளே சென்று கதவை முடிய பின்னே வீட்டிற்க்கு சென்றான் சித்தார்த்................

வீட்டிற்க்கு சென்ற சித்தார்த் உடையை மாற்றிவிட்டு படுத்தவன் உடனே உறங்கியும் விட்டான்............. உறக்கத்தில் இன்று பௌர்ணமி வெளிச்சத்தில் தெரிந்த நிலா முகம் மீண்டும் மீண்டும் வந்து சித்தார்த் என்று அழைப்பது போல் இருக்க தூக்கத்தில் இருந்து விளித்தான் சித்தார்த்........... அவன் அறையை சுற்றி முற்றி பார்த்தவன் கனவு என்று தெரியவும் மீண்டும் படுக்க....... நிலாவின் முகம் மட்டும் வந்து வந்து போனதே தவிர தூக்கம் மட்டும் எட்ட ஓடிவிட்டது .............

எழுந்து அமர்ந்தவன் இன்று நடந்தத்தை ஒன்றின் பின் ஒன்றாக நினைவுகூர அவன் இதழில் புன்னகை ஒட்டிகொண்டது .......... இன்னைக்கு என்ன இவ்வளவு அழகாயிருக்க....... என்னமோ அவ முகம் நட்சத்திரம் மாதிரி ஜொலிச்ச மாதிரி இருந்ததே................ இவள மாதிரி ஓரு அழக பொண்ண பார்த்ததே இல்லடா சாமி என்று எண்ண........... இன்னோரு மனமோ கண்டிப்பாக இவள் ஒன்று அவளோ பெரிய அழகி இல்லை........நம்ம எவளோ அழகான பெண்களை எல்லாம் கடந்து வந்துருக்கோம் என்று அவனுக்கு தெரிந்த பெண்களை வைத்து நிலாவை ஒப்பிட என்னோ நிலாவை தவிர வேறு பெண்கள் அழகாக இருப்பது போல் இல்லை என்று தோன்ற............ நிலாவிடம் கண்டிப்பாக எதோ தனித்துவ அழகு இருக்கிறது என்று எண்ணியவன்......... விடியும் வேலையில் தான் உறங்கினான் சித்தார்த்..............

இங்கு அவன் தூக்கத்தை கெடுத்த புனியவதியோ நன்றாக உறங்கிவிட்டு காலையில் எழுந்து சாமி படத்திற்க்கு பூ போட சித்தார்த் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் பூ பறித்து கொண்டிருந்தாள்...........

சித்தார்த் பால்கனியில் நிற்கிறானா என்று அடிக்கடி அங்கு திரும்பி திரும்பி பார்த்து கொண்டேயிருக்க...............அந்த பக்கம் வந்த ரேவதி நிலாவை பார்த்ததும் அவள் பார்வை சித்தார்த்தின் அறை பக்கம் இருக்கும் பால்கனியில் இருப்பதை பார்த்தவர்............

என்ன நிலா அங்க என்ன சித்தார்த் ரூம் பார்த்துட்டுயிருக்க என்று ரேவதி கேட்டுவிட............

அப்போது தான் அங்கு வந்த ரேவதியை கவனித்தாள்......... ஐயோ இப்படி நமக்கு முன்ன ஆள் நிக்குறது கூட தெரியாம இப்படியா பாத்துவைப்போம் என்று எண்ணியவள் ......... இல்லாம நான் சூரியனை பார்த்தேன் என்று நிலா மழுப்ப ........

சரி நிலா எனக்கு உள்ள வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு ரேவதி கிளம்ப......... நிலா அங்குயிருந்து ஓடியேவிட்டாள்......... சாமி படத்திற்கு பூ போட்டுவிட்டு சாமியை வணங்கியவள்............ ஆபீஸ்க்கு நேரமாக சாப்பிடாமல் கொள்ளாமல் அவசர அவசரமாக கிளம்பி சென்றாள்...............

இங்கு ngmn குரூப் ஒப் கம்பெனி மிகவும் பரபரப்பாக இருக்க....... நிலா சென்று அவள் இருக்கையில் அமரவும்....... ரிஷி ஜனனி வரவும் சரியாகயிருந்தது...........

என்ன moon இன்னைக்கு full moon ஆ இருக்கீங்க என்ன விசேஷம் என்று கிருஷ் கேட்க.........

ஹான் உங்க அண்ணா வந்ததும் half moon ஆகிருவேன் அதுதான் விசேஷம் என்று கவனத்தை கணினியில் வைத்த படியே நிலா சொல்ல.............

இதற்கு இது பதிலளவே என்று வடிவேல் பாணியில் சொல்ல.......

வேற என்ன பதில் எதிற்பார்க்குறீங்கனு சொல்லிட அப்படியே சொல்லிடுவேன் கிருஷ் என்று நிலா சொல்ல........

இன்னைக்கு என்கூட வேலை பாக்க தான் இவ்வளவு ஹாப்பி எக்ஸிசிட்மென்டா இருக்கீங்கன்னு சொல்லணும் என்று கிருஷ் சொல்ல........ ஜனனி தலையில் அடித்துகொண்டு எதுக்குடா இந்த விளம்பரம் என்று கேட்க........ நிலா வாய்விட்டு சிரித்துகொண்டிருக்க...........

அந்நேரம் சரியாக அர்ஜூனுடன் பேசி கொண்டே சித்தார்த் உள்ளே நுழைந்தவன்........ முதலில் கண்டது நிலாவை தான்..........

அவர்கள் அருகே செல்லும் வரை நிலாவை கண் எடுக்காமல் பார்த்துகொண்டிருக்க....... அவன் பார்வையின் வீழ்ச்சி தாங்க முடியாமல் வேறு பக்கம் பார்ப்பது போல் பார்த்தவளின் கன்னங்கள் செவந்து போயிருக்க.......... சித்தார்த்தின் கண் மட்டும் அவளைவிட்டு அகன்றபாடு இல்லை...............

நிலா சித்தார்த்தை பார்ப்பதுமாக திரும்புவதுமாக இருந்தவள் அர்ஜுனை பார்த்து, என்ன அர்ஜுன் இன்னைக்கு செம ஸ்மார்டா இருக்கீங்க என்று கேட்க...............

அப்போ நான் இத்தன நாளா நல்லயிலேன்னு சொல்ல வரிங்களா என்று அர்ஜுன் நிலாவை வம்பு இழுக்க.........

அட இதுக்கு தான் நல்லதுக்கே காலமில்லைனு சொல்லுவாங்க போல......... நல்ல இருக்கீங்கனு சொன்னது ஒரு குத்தமா என்று நிலா பாவமாக கேட்க..........அதற்கு வாய்விட்டு சிரித்தவன்......... சரி வாங்க என்ன அழகா இருக்கெய்னு சொன்னால உங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்குறேன் என்று அழைக்க அவன் அருகே நின்று போட்டோ எடுத்துக்கொள்ள......... அதை பார்த்த சித்தார்த் எரிச்சலாகயிருந்தது........... சற்று நேரம் பொறுத்துயிருந்து பார்த்தவன் அதற்குமேல் முடியாமல் போக.......

என்ன வேலை செய்ற உதசமில்லையா......... இன்னைக்கு மட்டும் மதியத்துக்குள்ள வேலை முடிக்காமயிருந்து பாருங்க அப்புறம் பேசிக்குறேன் என்று கிருஷ்யிடம் ஆரம்பித்து நிலாவிடம் முடித்தவன் அடுத்த நிமிடமே அர்ஜுனை அழைத்து கொண்டு அறைக்கு சென்றான்...........

சிறிது நேரம் அர்ஜுனிடம் பொதுவாக பேசி கொண்டிருந்தவன்.......... அர்ஜுன் நீ நிலாவை பார்த்து என்ன நினைக்குற என்று கேட்க.........

நான் நினைக்குறது இருக்கட்டும் மச்சான் நீ என்ன நினைக்கிறேய்னு முதல சொல்லு என்று கேட்க .......

அவ அழகா இருக்காளா என்று அதிமுக்கியமான கேள்வி நேற்று தன் தூக்கத்தை துளைக்க வைத்த கேள்வியை அர்ஜுனிடம் கேட்க...............

என்ன கேள்வி இது என்பது போல் ஒரு பார்வை பார்த்தவன்......... ஒரு பொண்ணு எது மாதிரியிருந்த அழகு அப்படினு நீ நினைக்குற என்று சித்தார்த்திடமே எதிற்கேள்வி கேட்டான் அர்ஜுன்........

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சித்தார்த் அர்ஜுனை பார்க்க.........

அழகு மனசு சமந்தபட்ட விஷயம் மச்சான்....... இது மாதிரியிருந்த தான் அழகுன்னு நம்ம சொல்ல முடியாது........உனக்கு ஒருத்தவங்கள ரொ ம்ப பிடிச்சுதுனு வை அவங்க உனக்கு அவ்வளவு அழகா தெரியுவாங்க அதுவே பிடிக்கலேன்னு வை அவங்க உலக அழகியவே இருந்தாலும் நமக்கு அழகா தெரிய மாட்டாங்க................எனக்கு நிலாவை ரொம்ப பிடிக்கும் அதுனால என்ன பொறுத்த வரைக்கும் நிலா ரொம்பவே அழகுதான் என்றவன்......

இப்போ என்னோட கணிப்பு கரெக்ட்டுன You are Fall in love with nila என்று மகிழ்ச்சியிடன் சித்தார்த்திடம் கேட்க..........

தெரியல மச்சான்...... அவ கூட இருக்கும் போது நான் வேற உலகத்துல இருக்க மாதிரி இருக்கு அவளை தாண்டி எதுவும் எனக்கு தோணல........... இவ்வளவு பெரிய பிஸ்ஸின்ஸ் மேன் அப்படின்றதே ஒரு நிமிஷத்தில மறக்க வச்சுறா .......... சொன்ன நம்புவியா நேத்து நைட் முணு மணி வரைக்கும் நான் ரோடுல உக்காந்து அவகூட பேசிட்டு இருந்தேன் என்று புன்னகைத்தவன் ..............

ஒவ்வொரு நிமிஷமும் பணம் ஆகுற நான்........ நேத்து ஒருத்தர் பொறுப்ப நடந்துக்க அப்படினு என்கிட்ட சொல்லிட்டு போறாருன பாரேன் என்றான் சித்தார்த் ..........

நிலா நீ லவ் பன்னுரெய்னு உனக்கு உணர எவ்வளவு நாள் ஆச்சு மச்சான்........ நீ அன்னைக்கு இந்த ஜன்னல் வழிய அந்த பொண்ண பாக்கும் போதே எனக்கு பட்சி சொல்லுச்சு எதோ சரி இல்லை என்று இப்போ பாத்தியா என்று அர்ஜுன் புன்னகைத்தவன்........

தன் நண்பன் எப்போதும் இதே போல் பிஸ்ஸின்ஸ் பிஸ்ஸின்ஸ் என்றுயிருந்து விடுவானோ என்று எண்ணியவனுக்கு இது மிகுந்த சந்தோசத்தை அளிக்க............ இதுவரை சந்தோசம் என்று ஒன்றை சிறு வயதிலிருந்து அறியாத தன் நண்பன் இனியாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எண்ணியவன்............ நிலா மனதில் என்ன இருக்கிறது என்று வேறு தெரியவில்லை அவள் மறுத்து விட்டாள் கண்டிப்பாக சித்தார்த்தால் தாங்கி கொள்ள முடியுமா என்ற எண்ணம் தோன்ற கலவரமானான் அர்ஜுன்...........

சித்தார்த் தண்ணி குடித்து கொண்டிருக்க அவனிடம் நிலா ரொம்ப soft and silent போல என்று அர்ஜுன் கேட்க...........

அதை கேட்ட சித்தார்த்திற்கு புரை ஏறிவிட அந்த ரெண்டுத்துல ஒன்னு கூட அவ கிடையாது என்றவன் நேற்று அந்த safety pin வைத்து குத்தியதை சொல்ல.........

அதை கேட்ட அர்ஜுன் வாய் விட்டு சிரித்தான் ........... பொண்ணுங்க நெருப்பு மாதிரியிருந்த பசங்க பக்கத்துல கூட போக மாட்டாங்க.......... பொண்ணுங்களுக்கு தைரியம் கொடுத்து வளர்க்கமா பயத்தை மட்டும் வுட்டி வுட்டி வளத்துருக்காங்க என்றான் அர்ஜுன்.............

மேலும் இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருக்க மதிய வேலை நெருங்க சரிடா அர்ஜுன் நானும் நிலாவும் போய் லீனாவை போய் பார்த்துட்டு வரோம் என்று கிளம்பியவன் வெளியில் சென்று நிலாவை அழைத்து கொண்டு சென்றான்.........

சித்தார்த் காரை எடுக்க நிலா ஏறியதும் காரை பறக்கவிட்டான்.........நிலா ஒன்றும் பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி வர........ இருவரும் காரில் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே சென்றனர்..........

லீனா சித்தார்த் அர்ஜுன் எல்லோரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்......... லீனாவுக்கு சித்தார்த் மீது காதல் உண்டு......... ஆனால் அதை சித்தார்த் சிறிதும் கண்டு கொள்ளவில்லை.......... இன்று சித்தார்த் கால் செய்யவும் அவனுக்கும் தன் மேல் விருப்பம் இருக்கும் போல அதான் தன்னை அளித்திருக்கிறான் என்று நினைத்து கிளாமராக உடை அணிந்து ஒப்பனை செய்து கொண்டு வந்து காத்து கொண்டிருந்தாள் ............

சித்தார்த்தும் நிலாவும் லீனா அருகே சென்று...... ஹாய் லீனா என்று சித்தார்த் கை கொடுக்க......... ஏனோ நிலாவுக்கு லீனாவை பார்த்த மாத்திரம் சுத்தமாக பிடிக்கவில்லை....... சித்தார்த் கை கொடுப்பதை கண்டு கொள்ளாமல் ஹாய் சித்து என்று கட்டிபிடிக்க........

அதை பார்த்ததும் நிலாவுக்கு கடுப்பாகி விட்டது........ ஆமா அப்படியே அம்மணி அமெரிக்கால தான் பொறந்து வளந்தாங்க கட்டி பிடிச்சு தான் வெல்கம் பண்ணுவாங்க....... அவ டிரஸ் பாரு உள்ளாடை மட்டும் போட்டுட்டு வந்துருக்கும் போல லூசு........ மேக்ப்பை பாரு அர கிலோ இருக்கும் போல....... இதுக்கு எல்லாம் தோல் நோய் வராதா .............. என்று லீனாவை பார்த்த ஐந்து நிமிடங்களில் அவளை மனதுக்குள் அர்ச்சித்து கொண்டிருந்தாள்............

லீனா நிலாவை பார்த்து இவங்க என்று கேட்க......... அதற்கு சித்தார்த், என் ஆபீஸ் ஸ்டாப் என்று சொல்ல நிலாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது......... அவன் என்ன சொல்ல வேண்டும் என்று அவள் எதிற் பார்த்தாள் என்பது அவளே அறியாத ஒரு விஷயம்.........

லீனாவுக்கு பயம் தான் எங்கே என்னோட லவர் என்று சித்தார்த் சொல்லி விடுவானோ என்று இப்போது தான் சற்று நிம்மதியாகயிருந்தது...........

சரி என்ன லீனா சாப்புடுற என்று சித்தார்த் கேட்கவும் கப்பசினோ என்க...... நிலா உங்களுக்கு என்று கேட்க...... இல்லை எனக்கு எதுவும் வேண்டாம் என்றாள்........ சித்தார்த் 2 கப்பசினோ ஆர்டர் செய்தான்........

லீனா நாங்க ஒரு புட்பால் டௌர்ன்மெண்ட் நடத்தலாமுன்னு இருக்கோம் சோ அதுக்கு நீ brand ambassdor இருக்கனும் உனக்கு ஓகேன காண்ட்ராக்ட் சைன் பண்ணிரலாம் என்று சித்தார்த் சொல்ல.........

அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த கப்பச்சினோ வர......... நிலாவுக்கு பசியுடன் தலை வலியும் வேற சேர்ந்து கொள்ள மிகவும் சோர்ந்து விட்டாள்.........

ஐ அம் கிளாட் டு ஒர்க் வித் யூ சித்தார்த் என்று வாய் எல்லாம் பல்லாக கூறியவள்......... கான்ட்ராக்ட்டில் சைன் செய்து கொடுத்தாள்....... சித்தார்த் நான் உன்கூட கொஞ்சம் தனியா பேசணும் என்று நிலாவை பார்த்த படி லீனா சொல்ல ........ நீங்க பேசிட்டு இருங்க சார் நான் வெளிய வெயிட் பண்ணுறேன் என்று நிலா எழ போகவும் .......

நிலா கையை பிடித்து தடுதவன்........ இல்லை லீனா இட்ஸ் ஆல்ரெடி கெட்டிங் லேட் என்று லீனாவிடம் விடை பெற்று சித்தார்த் நிலாவை அழைத்து கொண்டு கிளம்பினான் .............

கார் மிதமான வேகத்தில் செல்ல......... நிலா ஒன்றும் பேசாமல் அமைதியாக வெளிய வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ......... என்ன ஆச்சு நிலா ஏன் ஒரு மாதிரி இருக்க என்று சித்தார்த் கேட்கவும்........ நிலா ஒன்றும் பேசாமல் அமைதியாக வர......... நிலா நான் உன்னை தான் கேட்குறேன் என்று சித்தார்த் அழுத்தமாக கேட்க.........

ஒரு ஆபீஸ் ஸ்டாப் மேல ஏன் உங்களுக்கு இவ்வளவு கரிசனம் என்று நிலா நிதானமாக கேட்க....... அதற்கு மேல் சித்தார்த் ஒன்றும் பேசவில்லை......... நிலாவும் சீட்டில் சாய்ந்து கண்ணை மூட சில நொடிகளில் தூங்கியும் விட்டாள் .............

நேராக ஒரு ரெஸ்டூரண்ட் முன் வண்டியை நிறுத்தியவன் ........ நிலாவை பார்க்க அவள் கார் நின்றது கூட தெரியாமல் தூங்கி கொண்டிருந்தாள்..............நிலா என்று பெயருக்கே வலித்து விடும் போல மெதுவாக அழைக்க........ அதற்கு எல்லாம் நிலா எழுந்தபாடு இல்லை........ அவள் கையை தொட்டு எழுப்பவும்....... எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் நிலா விழிக்க....... கிழ இறங்கு நிலா சாப்புட்டுட்டு போலாம் என்று அழைத்தான் ..........

இல்லை எனக்கு வேண்டாம் என்று நிலா திரும்பி கொள்ள...... சிறு குழந்தையை போல் அடம் பிடிக்க....... அதை ரசித்தவாறு........ இப்போ நீயே வரியா இல்ல நான் தூக்கிட்டு போகட்டா என்று சித்தார்த் கேட்க............

ஓ உங்க ஆபீஸ் ஸ்டாப் எல்லாரு கிட்டவும் இப்படி தான் கேட்டுட்டு இருப்பிங்களா என்ன???? என்று நிலா கேட்க.............

உன்கிட்ட எல்லாம் பேசுனா வேளைக்கு ஆகாது என்று அவள் அருகில் சென்றவன் அவளை அப்படியே தூக்கி கொண்டு காலால் கதவை சாத்தியவன் முன்னேறி சென்றான் ............ அங்கே இருந்தவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையுமே பார்க்க........

நிலா சித்தார்த்தின் சட்டையை பயத்தில் இறுக பற்றி கொண்டு......... ஐயோ சித்தார்த் என்னை கிழ விடுங்க ப்ளீஸ் நானே வரேன் ப்ளீஸ்.......... ஐயோ எல்லாரும் பாக்குறாங்க சித்தார்த்.......... அங்கே கணவன் மனைவி சென்று கொண்டிருக்க.........அந்த பெண், கணவனை பார்த்து அவ்வான் ஊருல பொண்டாட்டிய எப்படி தாங்குறானு பாருங்க..... நீங்களும் தான் இருக்கீங்கலே என்று புலம்பி கொண்டு போக.........

ஐயோ என் மனமே போகுது கிழ இறக்கி விடுங்க என்று நிலா கெஞ்சவும் ....... அவளை கீழே இறக்கி விட்டதும் ........... நிலா அவனை சர மாறி அடிக்க ......... அதை புன்னகையுடன் வாங்கியவன்...... வலிக்குது டி என்று போலியாக நடிக்க...... அவள் அடிப்பதை நிறுத்தியதும் அவளை அனைவாக பிடித்து அழைத்து சென்றான் .........

இருவரும் சென்று சாப்பாடு மேஜையில் சென்று அமர்ந்ததும் சித்தார்த் உணவை ஆர்டர் செய்தான்......... நிலா வெயிட் பண்ணு நான் இதோ வந்துறேன் என்றுவிட்டு செல்ல.......... நிலாவிற்கு ஏனோ இது எல்லாம் கனவில் இருப்பது போல் இருக்க.........

ஏய் நிலா உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா நேத்து அவனை ரசித்து பார்த்துக்கே உன்னைய நிக்க வச்சேன்ல........ நீ மட்டும் அவன் தூக்கணத்துக்கு ஈஈஈனு இளிச்சுகிட்டு இருக்க என்று அவள் மனசாட்சி அவளை காரி துப்ப..........

ஒரு நிமிடம் தலையை உலுக்கியவள்......... நான் சந்தோசமா இருந்தாலே உனக்கு பொறுக்காதே.......... வந்து எதாவது சொல்லி என் மூடு கெடுத்து விட்டு போயிரு........ என்று மண்சட்சிக்கு பதில் கொடுக்கவும் ............ சித்தார்த் வந்து அமரவும் சரியாக இருந்தது...........

எதுக்கு சித்தார்த் இப்போ ரெஸ்டாரண்ட் கூட்டிட்டு வந்திங்க என்று நிலா கேட்க........நீ சாப்பிட்டு முடி நான் சொல்றேன் என்கவும் .......இருவரும் சாப்பிட்டு முடித்ததும்............ பாரேர் வந்து சார் யுவர் ரூம் இஸ் ரெடி என்று சொல்ல...........

நிலாவிற்கு ஒன்றும் புரிய வில்லை........ எதுக்கு ரூம் ரெடினு சொல்லிட்டு போறான் என்று யோசித்து கொண்டிருக்க .........

நிலா வா என்று ஒரு ரூமிற்கு அழைத்து சென்றான் சித்தார்த்.........
அந்த அறைக்குள் நுழைந்த நிலா ஸதம்பிது நின்றுவிட்டாள்............ அங்கே அகல் விழுகுகளால் ஹார்ட் வரைந்து அது பக்கத்திலே ஐ லவ் யூ நிலா என்று ரோஜா பூக்களால் எழுத பட்டிருக்க......... அந்த அறை முழுவதும் பலூன் கொண்டு டெகரேஷன் செய்ய பட்டிருந்தது.......... ஒவ்வொரு பலூன் மேலும் ஒவ்வொரு புகைப்படம் படம் ஓட்ட பட்டிருந்தது அது அவர்கள் பீச்யில் மற்றும் நிலா பிறந்தநாளில் எடுக்க பட்டது................

நிலாவிற்கு தன் கண்களையே நம்ப முடியாமல் நிற்க......... அவள் அருகில் மண்டியிட்டு I love u nila என்று bouquet கொடுக்க........ நிலா தன்னையும் அறியாமல் அவன் கொடுத்த மலர் கொத்தை வாங்கினாள்..........

நீ ரொம்பவே அழகான பொண்ணு நிலா ....... ஒரு பொண்ணுக்கு அழகு அவ முகம் இல்ல..... அவளோட தைரியம் துணிச்சல் தன்நம்பிக்கை தான்......

என்னை எதிர்க்க தைரியம் யாருக்கு இருக்கு அப்படினு நினைக்கும் போது தில்ல நீ வந்து நின்ன போதே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுயிருந்தது என்னமோ உண்மை தான் ...........

உன்னைய பழி வாங்கணுமுனு நினைக்க நினைக்க உன் மேல உள்ள காதல் அதிகமாக ஆரம்பிச்சுருச்சு என்று புன்னகைக்க......... இதுவரை என் வாழ்க்கையில இருந்த வெறுமை நீ வந்ததும் தான் நீங்குச்சு நிலா ............

இனி வாழுற வாழ்க்கை உன்கூட தான் இருக்கனுமுனு ஆசைபடுறேன் நிலா என்றவன்........ நிலா உனக்கு என்னை பிடிச்சுருக்கு தானே என்று கேட்க.........

நிலா புன்னகையுடன் இப்படி safety வோட செக்யூரிட்டி வோட ஒருத்தர் கியூட்டா பழிவாங்குன பிடிக்காமலா போகும் என்று நிலா கேட்க......... அதற்கு புன்னகைத்து கொண்டவன்

இன்னைக்கு ப்ரொபோஸ் பன்னுவெய்னு நினைக்கவே இல்ல நிலா ......... அதுனால நான் உனக்கு எந்த கிப்ட்டும் வாங்கல....... ஆனா இந்த நாள் தினமும் நினைக்குற அளவுக்கு ஸ்பெஷலா எதாவது கொடுக்கணுமே என்று சொல்லி கொண்டே தன் கழுத்தில் உள்ள செயினை கழட்டி நிலா கழுத்தில் போட்டு விட்டான்............அதில் s என்று டாலோர் போட பட்டிருந்தது............

நிலா அங்கு இருக்கிற அணைத்து பலூனில் ஓட்ட பட்டிருந்த போட்டோகலை பார்த்து கொண்டிருந்தாள்....... அதில் ஒரு புகைப்படம் பீச்யில் இருவரும் விளையாடி கொண்டிருந்த போது நிலா விழாமல் இருக்க சித்தார்த் பிடித்து இருப்பது போல் எடுக்க பட்டிருந்தது........... இனொன்று நிலா கடலை பார்ப்பது போல் இருக்க சித்தார்த் இவளை காதலோடு பார்ப்பது போல் இருந்தது.............. அட பாவிங்கள இதை எல்லாம் எப்போ போட்டோ எடுத்தீங்க எனக்கு தெரியாம என்று நிலா கேட்க..........

உனக்கு என்னை பார்க்கவே நேரம் சரியா இருந்துருக்கும் அதுனால கவனிச்சுருக்க மாட்ட என்று சித்தார்த் அவளை கிண்டல் செய்ய ........

என்ன????? அந்த போட்டோவை பாருங்க யாரு யாரை பாத்துட்டு இருக்காங்கனு தெரியும்......... கண் எடுக்காம நீங்க பாத்துட்டு என்னை சொல்றிங்க.........

அந்த புகைப்படத்தில் சித்தார்த்தின் கண்கள் அத்துணை பவராக இருக்க அதை பார்த்து நிலா இந்த கண் தான் என்னை விழவச்சுருச்சு போல...... ஒரு புகைப்படதில் கூட ஒருவனால் இவ்வளவு அழகாவும் கம்பிரமாகவும் தெரிய முடியுமா என்று எண்ணி கொண்டிருக்க............. அவள் இடுப்பை பிடித்து தன் பக்கம் திருப்பியவன் நேருல இருக்குறவன கொஞ்சம் பாரு டி என்க...........

ஐயோடா அப்படி எல்லாம் பார்க்க முடியாது என்றவள் கனவு மாதிரி இருக்குது சித்தார்த் என்னால நம்பவே முடியல.......... இந்த நிமிஷம் நான் செத்தாலும் என்று சொல்ல வர அவள் இதழில் கை வைத்து பேச விடாமல் தடுத்தவன்........... இனி இறப்பு கூட என்னை தாண்டி வந்துதான் உன்னை நெருங்கனும் என்றான் சித்தார்த்............
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi readers,
Thanks for all the readers for ur continous support........ still 7 more episode s tere to complete this novel.......... due to your continous support i had restarted this novel........ my sincere apologize to all the readers for the delay.......... keep supporting......... thank you nd love u all.......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 19

வேலை முடித்து கொண்டு சச்சின் வீட்டிற்க்கு வர அவன் வரவுக்காக வாசலிலே ஜனனி காத்து கொண்டிருந்தாள்...........

சச்சின் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல எத்தனிக்க...... அத்தான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நில்லுங்க ப்ளீஸ் என்க............. பொறுக்கி கூட எல்லாம் நீங்க எதுக்குங்க பேசுறீங்க என்று சச்சின் கேட்க ........... சாரி அத்தான் அது எதோ கோவத்துல பேசிடேன்.......... சச்சின் எதுவும் பேசாமல் முன்னே செல்லவும் ......... அவ்வளவு தான அத்தான் என் காதலுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க என்று ஜனனி கேட்க........ நான் எந்த பொண்ணு வாழ்க்கையும் கெடுக்க விரும்பல என்று அவள் சொன்னதையே அவளுக்கு திரும்ப சொல்ல........

ஜனனிக்கு சுருக்குனு இருந்தது ...... தப்பு தான் அத்தான் நான் அப்படி பேசியிருக்க கூடாது ஆனா எனக்கு ஒரு சான்ஸ் தர கூடாதா அத்தான் என்க அதற்கு சச்சின் ஓரு கசப்பான புன்னகை சிந்தியவன். ........ I am hurted enough ஜனனி என்று கூறிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்று விட்டான்...........

ஜனனியிடம் அப்படி பேசிய சச்சினுக்கு மிகவும் கஷ்டமாகயிருந்தது......... இன்று வரை அவன் அப்பா சதாசிவம் சச்சினிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை......... ஜனனி எப்படி அப்படி நினைக்கலாம் என்ற நினைப்பே அவனை ரணமாக அறுத்தது.......

***************-------------------****************

சித்தார்த் நிலா இருவரும் ரெஸ்டூரண்ட் விட்டு கிளம்பியவர்கள் காரில் ஏறி கொள்ள....... சித்தார்த் காரை கிளப்பினான்..........

வரும்போது இருந்த நிலை முற்றிலும் மாறி மனம் மிகவும் சந்தோசமாக இருப்பது போல் உணர்ந்தனர்.........

நிலாவிற்கு சித்தார்த் தன்னுடையவன் என்று நினைப்பே அத்தனை மகழ்ச்சியாகயிருக்க........ வாழ்க்கையில் முதல் முதலில் இப்படி ஒரு சந்தோசத்தை உணர்ந்தாள் கை மட்டும் அவன் மாட்டி விட்ட செயினில்யிருந்தது.......

சித்தார்த் வண்டி ஓடினாலும் அவன் கண்கள் அடிக்கடி நிலாவை பார்த்தவரு ஓடினான்.............

சந்தோஷத்தை வெளி சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தடுமாறியவள்...... அவன் மேல் சாய்ந்து கொள்ள ஒரு கையாலே ஸ்டேரிங் பிடித்தவன் மற்றொரு கைகளில் அவள் சாய்ந்து கொள்ள ஏதுவாக வைத்துயிருந்தான்............

நிலா நம்ம விஷயத்தை இன்னைக்கே அம்மா கிட்ட சொல்லணும் என்றதும் நிலாவிற்கு முகம் வாடி விட்டது.........

அவள் முக வாட்டத்தை நொடியில் உணர்ந்தவன்....... என்னாச்சு நிலா என்று கேட்க.......

அம்மா ஒத்துப்பாங்களா சித்தார்த் என்று நிலா சங்கடமாக கேட்க ......... அம்மா கண்டிப்பா முழு மனசோட சம்மதிப்பாங்க ரிலாக்ஸ் என்று சித்தார்த் சொல்ல..........

அந்த ஆர்டிகிள் எழுதினது நான் தாணு தெரிஞ்சு சம்மதிப்பாங்களா சித்தார்த் என்று அவன் முகத்தை ஏக்கத்துடன் பார்க்க......

ஸ்டாப் இட்....... நிலா அத பத்தி இன்னோரு முறை என்கிட்ட பேசாத என்று உறும....... அவனின் கோவம் அந்த விஷயத்தில் கொஞ்சமும் குறைய வில்லை என்பது புரிய........ தன் கண்ணீரை அவனிடம் காட்ட விரும்பாமல் ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்ப்பது போல் திரும்பி கொண்டாள் நிலா.........

சித்தார்த் தன் கோவத்தை காரின் வேகத்தில் கட்டினான்........ கார் புயல் வேகத்துல் பறந்தது...........

அந்த அதிரடி வேகத்தில் பயந்த நிலா...... சித்தார்த் புறம் திரும்பி....... கொஞ்சம் மெதுவா போங்க சித்தார்த் என்று அவள் கத்தலையும் காதில் வாங்காமல் சென்றான்..........

சிறிது நேரத்துக்கு பிறகு இவனிடம் சொல்லுவது விண் என்று எண்ணிய நிலா கண்ணை இறுக முடி கொண்டு கைப்பிடியை இறுக பிடித்தவரு அமர்திந்தாள் ............

அவனின் கோவம் கொஞ்சமும் குறையாமல் இருக்க ........ அப்போது அர்ஜுன் போனில் அழைக்க அவன் போன் கார் ப்ளூடூத்தில் கனெக்ட் ஆகிருந்தால் அவன் பேசுவது வெளியில் கேட்டது.........

மச்சி நாளைக்கு நம்ம போய் ஜெர்சி எல்லாம் செலக்ட் பண்ணி ஆர்டர் கொடுத்துட்டு வந்தராளம் என்று அர்ஜுன் சொல்ல.......

இல்ல மச்சான் எனக்கு நாளைக்கு மீட்டிங் இருக்கு..... என்னால வர முடியாது நீ நிலாவையும் கிரிஷையும் கூட்டிட்டு போ என்று சொல்ல..... சரி என்று சொல்லி போனை வைத்தான் அர்ஜுன்..........

அர்ஜூனுடன் பேசிய சித்தார்த் சற்று ஆசுவாசம் அடையவும் நிலாவை பார்க்க ..........அவள் வேடிக்கை பார்த்து கொண்டு வரவும் ...... அவள் கையை பிடித்தவன் சாரி என்க........

அவன் கையை பிடித்து கொண்டு சாரி உங்க ஹாப்பியான மூட் கெடுத்துக்கு என்று சொல்லியவள் திரும்பவும் அவன் தோளில் சாய்ந்து கொள்ள.........

நிலா நீ உங்க பேமிலிவோட ஜோய்ன் பண்ணிக்கோ என்று சொன்னவனின் பார்வை ரோட்டில் இருக்க........ நிலா ஒன்றும் பேசாமல் இருக்கவும்.......

நிலா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் என்று சித்தார்த் சொல்ல....... இல்ல சித்தார்த்...... அது நான் செஞ்ச தப்புக்கான தண்டனை அது நான் அனுபவிச்சுதான் ஆகணும் ...... என்று நிலா சொல்லவும் அதற்கு மேல் அங்கு மௌனமே ஆட்சி செய்தது .........

சிறிது நேரத்திலே வீடு வந்து விட...... சித்தார்த் நிலா இருவரும் வீட்டிற்க்கு வந்தவர்கள் நேராக ரேவதி பார்க்க அவர் அறைக்கு செல்ல........... ரேவதி துணி மடித்து கொண்டிருந்தார்......... ரேவதி எப்போதும் எதாவது வேலை செய்து கொண்டே தான் இருப்பார்.........

அவர்கள் இருவரும் ஒன்ன வருவதை கவனித்த ரேவதியின் கண்களில் தவறாமல் சித்தார்த்தின் செயின் நிலா கழுத்தில் இருப்பது பட்டுவிட்டது............

வாமா நிலா என்றார்........ அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்தவள் அம்மா உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் என்று நிலா கேட்க...........

அதற்கு புன்னகையுடன்........ மருமகளா வந்த கூட மகள பார்க்கிற அளவுக்கு உன்னை பிடிக்கும்..... உனக்கு தேவையான பதில் கிடைச்சுருச்சா நிலா என்றதும் நிலா புன்னகைக்க.......... சித்தார்த் தன் அன்னையை அணைத்து கொண்டான்...........

ரேவதிக்கு மிகவும் சந்தோசமாகயிருந்து...... கல்யாணம் என்று பேசினாலே பிடி கொடுக்காமல் எப்போதும் அந்த கம்பெனியே உலகம் என்று வாழ்பவன்........ எங்கே கடைசி வரை இப்படியே வாழ்ந்து விடுவானோ என்ற பயம் அவர்க்கு இல்லாமல் இல்லை ...........

சித்தார்த் லவ் பன்கிறான் என்ற சந்தோசம் ஒரு பக்கம் என்றால் நிலா போன்ற ஒரு நல்ல பெண்ணை லவ் செய்கிறேன் என்றதும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் உணாந்தார் ரேவதி...........
அம்மா இப்போதிக்கி இதை பத்தி யாருகிட்டவும் சொல்ல வேண்டாம்மா என்றவன் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன் என்று சித்தார்த் சொல்லிவிட்டு செல்ல.........

என் பையனுக்கு கொஞ்சம் முன் கோவம் ஜாஸ்தி மத்தபடி ரொம்ப நல்லவன்மா....... அவன் வாழ்க்கையில எந்த வித சந்தோசத்தியும் அனுபவிச்சதேயிலை...... ஆன இனி எனக்கு எந்த கவலையும் இல்ல நிலா ........ நீ எல்லாத்தியும் பாத்துக்குவான்னு எனக்கு நம்பிகை இருக்கு என்றவரின் குரலில் மகழ்ச்சி நிறைந்திருந்தது............

சிறிது நேரம் ரேவதியிடம் பேசிவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் நிலா.......... நாளை புடவை தான் அணிய வேண்டும் என்று முடிவு எடுத்தவள்........ ஒரு காட்டன் புடவையே எடுத்து ஐயன் செய்ய மனதில் இன்று மாலை நடந்தது ஓடி கொண்டிருக்க.......ஒவ்வொரு தடவை சித்தார்த் ப்ரொபோஸ் செய்ததை எண்ணியவளுக்கு ஒவ்வொரு முறையும் புதிதாக நடந்தது போலிருக்க....... வேகமாக தன் புடவையை ஐயன் செய்தவள் தூங்க சென்றாள்............

அடுத்த நாள் காலை அழகாக விடிய.......... சித்தார்த், சச்சின், கிருஷ் ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருக்க........ ஜனனி அப்போது தான் எழுந்தேயிருந்தாள்......... அவளை கண்ட ரேவதி உனக்கு ஆம்பள பசங்களே பரவல போல....... உனக்கு இன்னைக்கு intership இல்லையா என்று ரேவதி கேட்க........

இருக்கு என்று ஜனனி மெல்லிய குரலில் சொல்ல........ இருக்குனு சொல்லிட்டு இப்படி சாவகாசமாக உக்காந்திருக்க கிளம்புற உதசமில்லையா என்று ரேவதி கேட்கவும் ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டாள்........

என்ன ஆச்சு சித்தார்த் இவளுக்கு...... இப்போ எல்லாம் வர வர ரொம்ப வித்தியாசமா நடந்துக்குற யாருகிட்டவும் அதிகம் பேச மாட்டேங்குற....... நீ கொஞ்சம் என்னனு கேளுபா என்று சொல்லிவிட்டு செல்ல.........

சச்சினுக்கு மிகுந்த குற்ற உணர்ச்சியாக இருக்க........ சச்சினை கவனித்த சித்தார்த் எல்லாம் சரி ஆகிரும் நீ உன் ஒர்க்ல முதல கான்செண்ட்ரட் பண்ணு என்று சச்சினை தேற்றியவன்....... சாப்பிட்டு முடித்து கம்பெனிக்கு சென்றான்...........

அவன் மற்றும் கிருஷ் கம்பெனிகுளே செல்ல எல்லாரும் எழுந்து நின்று வணக்கத்தை சொல்ல அதை கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவன்........ நிலாவை பார்த்து ஒரு நிமிடம் நின்று விட்டான்...... காட்டன் புடவையில் அழகான மினியவளை கடந்து செல்ல முடியாமல் நின்று விட்டான் சித்தார்த்.........

அவன் கூட வந்த கிருஷ் என்ன சித்து இங்கே நின்னுட்ட என்று கேட்கவும் தான் சுயநினைவுக்கு வந்தவன்.......... நிலா ஒரு நிமிஷம் உள்ள வாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் சித்தார்த் .........

சித்தார்த்தின் பார்வை நிலாவை வெக்கம் அடைய செய்ய....... அவன் சென்று பின்பு தான் அவளுக்கு மூச்சே வந்தது..........

எதோ சத்தம் கேட்கவும் நிலா திரும்பி பார்க்க அங்கு லீனா வரவேற்பிளரிடம் வாதாடி கொண்டிருந்தாள்....... இவ எங்க இங்க என்று எரிச்சல் அடைந்த நிலா...... அவள் டிரஸ் முட்டி வரை மட்டுமே அணிந்திருக்க அதை பார்த்த நிலாவுக்கு பற்றி கொண்டு வந்தது.......... எதற்கு இப்படி கத்தகிறாள் என்று எண்ணி கொண்டு அவள் அருகில் சென்றவள்........

வரவேற்பாளரிடம் என்ன என்று விசாரிக்க...... இல்ல நிலா சார் பாக்கனுமுனு சொன்னாங்க....... அப்பொய்ன்ட்மென்ட் இல்ல சோ ரிஷி சார்க்கு கால் பண்ணுனதுக்கு வெயிட் பண்ண சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு ஆனா அவங்க இப்போவே சார் பாக்கனுமுனு பிரச்சனை பண்ணுறாங்க என்று அந்த பெண் நிலாவிடம் சொல்லி கொண்டிருக்க.......

வாட்??? நான் பிரச்சனை பண்ணுறேனா??? மைண்ட் யுவர் ஒர்டஸ் என்று லீனா கத்தவும்......... சாரி மேம் சார் இப்போ தான் வந்துருக்காங்க சோ இப்போ உங்கள உள்ள விட்ட எங்கள தான் சார் திட்டுவாங்க என்று அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய அள்ளிலை என்பது போல் நிலா பேச..........

அதில் கடுப்பு அடைந்த லீனா அவளை அசிங்கபடுத்த எண்ணி அவள் உடையை மேலிருந்து கீழ் வரை கேவலமான ஒரு பார்வை விசியவள்......... என்ன உள்ள விட்டாலேன தான் சித்து உங்களைய திட்டுவான் என்று சொல்லி கொண்டே முன்னேற...... அவள் சித்தார்த் ஒருமையில் அழைத்ததிலே கடுப்பாகியவள்...... அவள் முன்னேறி செல்ல எத்தனிக்க அவளை கை பிடித்து நிறுத்திய நிலா.......

நீங்க வந்த டிரெக்ட்ட உள்ள விடலாம்னு எங்க சார் இதுவரைக்கும் சொன்னது இல்ல........சோ எங்க சார்ரோட பெர்மிஸ்ஸின் இல்லாம உங்கள உள்ள விடமுடியாது மேடம் என்று நிலா சொல்லவும்........ ஓ ஒரு சம்பளத்துக்கு வேலை பாக்குற நீ எனக்கு ரூல்ஸ் போடுறியா.........உன்னை இந்த நிமிஷமே வேலைவிட்டு தூக்கி காட்டடா என்று லீனா அகம்பாவத்தில் கத்த.............

அப்போது அங்கு வந்த அர்ஜுன்........ எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க இது என்ன ஆபீசா என்னனு நினைச்சுட்டு இருக்கீங்க என்று அதட்ட..........

ஹாய் அர்ஜுன் என்று லீனா அவனை அணைக்க முன் வர அவளை கை காட்டி தடுத்தவன் ஹாய் லீனா என்று விட்டு...... ஓய் நிலா உங்க சார் வந்தாச்சா என்று அர்ஜுன் நிலாவிடம் கேட்க........

இப்போதான் அர்ஜுன் வந்தாரு என்று நிலா சொல்லவும்........ என்ன நிலா காலையிலேயே ஒரு மாதிரியா இருக்கீங்க என்று அர்ஜுன் கேட்க...... காலையிலேயே தல வலி வந்துருச்சு என்ன பண்ண அர்ஜுன் என்று லீனாவை பார்த்தபடி சொல்ல...... அதை கேட்ட அர்ஜுனுக்கு சிரிப்பு வர அதை பெரும் பாடுபட்டு அடக்கியவன்........

இங்க என்ன பிரச்சனை என்று கேட்க....... நான் சித்தார்த் பார்க்கனும் ஆனா இவ என்னை உள்ள விட மாட்டேங்குற என்று லீனா சொல்லவும்........

சித்தார்த் உன்னை வர சொன்னனா என்று அர்ஜுன் லீனாவிடம் கேட்க....... இல்ல நான் தான் ஒரு முக்கியமான விஷயம் பேசணுமுனு வந்தேன் என்று லீனா சொல்ல..........

ஓ அப்படியா இங்க வெயிட் பண்ணு..... சித்தார்த் கூப்புடுவான் என்றுவிட்டு வாங்க நிலா என்று அவளை அழைத்து கொண்டு சித்தார்த் அறைக்கு சென்றான்..........

நான் தான் உன்கிட்ட சொன்னேன்ல அவ வேணாம் எப்போ பாரு எதாவது பிரச்சனை பணிக்கிட்டே இருப்பான்னு கேட்டியா என்று அர்ஜுன் பொறியவும்.........

டேய் எதுவாயிருந்தாலும் புரிர மாதிரி பேசுடா........ யாரு பிரச்சனை பண்ணுன என்று சித்தார்த் கேட்கவும்........

ஹ்ம்ம் லீனா வெளிய நின்னு கத்திக்கிட்டு இருக்க என்று அர்ஜுன் சொல்லவும் சித்தார்த் கடுப்பாகினான்......

லீனாவுக்கு சித்தார்த்தின் ஆபீஸ் பார்க்க பார்க்க பிரமிப்பாகயிருந்தது....... அந்த ஏழு மடி கட்டிடமும் பிரமாண்டமான அந்த ஆபீஸ் அமைப்புயும் கண்டு வியந்தவள் சித்தார்த்தை எக்காரணம் கொண்டும் எதுக்காகவும் விட்டுவிட கூடாது என்று எண்ணம் தலைதூக்க......... அந்நேரம் சரியாக தன்னை உள்ளே விடாமல் ஒரு வரவேற்பாளினி தடை செய்யதது லீனாவுக்கு ஆத்திரம் அடைய செய்ய .......சித்தார்த்க்கு நான் ரொம்ப முக்கியமான நபர் என்று காட்டி கொள்ளவே இவ்வளவு அக்கப்போரும் செய்து கொண்டிருந்தாள்.........

சிறிது நேரத்திலே சித்தார்த் அவளை பார்க்க அழைப்பதாக ஒரு பெண் வந்து சொல்லி சித்தார்த் அறைக்கு அழைத்து சென்றாள்........

லீனா உள்ளே நுழையும் போது அங்கே சித்தார்த், அர்ஜுன், கிருஷ், நிலா மற்றும் ரிஷி உள்ளேயிருந்தனர் ........

ஹாய் சித்தார்த் என்று லீனா சொல்லவும்.... ஹலோ லீனா உக்காருங்க என்றவன் அர்ஜூனுடன் பேசி கொண்டிருந்தான்...........

நம்ம பிரஸ் மீட் கண்டிப்பா ரெடி பண்ணனும் சித்து அது தான் நம்மளோட முதல் official அறிவிப்ப இருக்கனும் என்று சொல்ல.........

இந்த பிரஸ் எதாவது ஏடாகூடமா கேள்வி கேட்டு இரிடேட் பண்ணுவாங்கடா என்று சொல்லவும் நிலா அவனை முறைத்து பார்த்தவள் ........ நீங்க official announcement தான கொடுக்க போறீங்க அதுல பர்சனல் கேட்க வேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லிருங்க என்று நிலா சொல்லவும் ........

டேய் நம்ம நிலா journalist தான அவங்கள வச்சே நம்ம ஒரு வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ணிரலாம் ஓகேயா என்று அர்ஜுன் சித்தார்த்திடம் கேட்க............

ஓகேடா என்று சித்தார்த் சம்மதம் சொல்ல...... அர்ஜுன் நிலாவிடம் உனக்கு ஓகேயா நிலா என்று கேட்க......... no issues என்று நிலா சொன்னதும்.......

சரி இணைக்குகே வீடியோ பண்ணிரலாம் அர்ஜுன் லீனா எல்லாம் இங்க தான இருக்காங்க நான் சச்சின் வர சொல்லுறேன் என்றவன்......

லீனாவிடம் என்ன விஷயமா பார்க்க வந்துருக்கீங்க லீனா என்று சித்தார்த் நேரடியாக விஷயத்துக்கு வர ...... ஏன் விஷயம் இருந்தாதான் உன்னை பார்க்க வரணுமா என்று லீனா கொஞ்சி பேசவும் ..........அதை கேட்ட சித்தார்த் கடுப்பாகிவிடவும் ......

ஒன்னும் இல்லத்துக்கு தான் இவ்வளவு பிரச்சனை பண்ணிய என்று அர்ஜுன் கேட்க...........

லுக் அர்ஜுன் நான் ஒன்னும் பிரச்சனை பண்ணல then யாருகிட்ட எப்படி நடந்தகனுமுனு கொஞ்சம் உங்க ஸ்டாப்க்கு
சொல்லி கொடுங்க....... அதுவும் நிலா அவளுக்கு கொஞ்சம் கூட manners இல்ல...... look her way of dressing and what kind of attitude....... இந்த மாதிரி ஆளுங்கள எப்படி வேளைக்கு வச்சுக்குரியோ........ என்று லீனா சொல்லி கொண்டிருக்க....... நிலாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிடவும் .......

ஸ்டாப் இட் லீனா...... நான் உன்கிட்ட இத கொஞ்சம் கூட எதிர்பார்கள........ நீங்க professional ஆ behave பண்ணுவிங்கனு நினைச்சேன்...........ஏன் அனுமதி இல்லாம நீ நினைச்ச நேரத்துக்கு எல்லாம் என்னை பார்க்க முடியாது....... அதுக்கு உனக்கு விருப்பமிலேனா நீ காண்ட்ராக்ட் டெரிமினட் பண்ணிட்டு போயிடலாம் i don't have any issues with that........ then one more thing என் staffs பத்தி பேச உனக்கு எந்த வித அதிகாரமுமில்லை mind it என்று சித்தார்த் எச்சரிக்க............

சித்தார்த்தின் கோவத்தை கண்டு மிரண்டு போன லீனா...... சாரி சித்தார்த் என்கவும்........ வெளியே வெயிட் பண்ணுங்க......... நம்ம டௌர்ன்மெண்ட் பத்திய வீடியோ பண்ணனும் சோ பண்ணிகொடுத்துட்டு நீங்க கிளம்பலாம் என்றவன்........ நிலாவிடம் திரும்பி நீங்க போய் வீடியோக்கு ரெடி பண்ணுங்க..... கிருஷ் நீ நிலாவுக்கு ஹெல்ப் பண்ணு என்று உத்தரவிட..... அவர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றனர்.........

கிருஷ் நிலாவிற்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்க...... நிலா வீடியோ எடுப்பதுக்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருக்க....... ஜனனியும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.............

சிறிது நேரத்திலே கிருஷ் தன் ஸ்கிரிப்டை நிலாவிடம் நீட்ட அதை படித்த நிலா அதிர்ந்து போய்ட்டாள்.........

ஏன் கிருஷ் நான் நல்ல இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா ஏன் இப்படி ??? நான் மட்டும் இத ஒரு கேள்வின்னு கேட்டேன்னு வைங்க உங்க அண்ணா அதே இடத்தில எனக்கு சமாதியே கட்டிடுவாரு என்று நிலா பாவமாக சொல்ல............

அது எல்லாம் எனக்கு தெரியாது moon நான் எழுதுன படிதான் நீங்க பேசனும்....... மிச்சத்தை நான் பாத்துக்குறேன் என்று கிருஷ் சொல்ல........

ஐயோ அண்ணன் தம்பிகிட்ட வந்து இப்படி மாட்டிகிட்டோமே என்றிருந்தது......... கொஞ்சம் நேரத்திலே சச்சினும் வந்துவிட....... இன்டெர்வியூவை ஆரம்பித்தனர்........

தாய் மொழிக்கும் என் தமிழ் உறவுக்கும் வணக்கம் என்றுவிட்டு அங்கு இருப்பவர்களை அறிமுகம் செய்தவள்........

Ngmn group of company புட்பால் டௌர்ன்மெண்ட் கண்டக்ட் பண்ண போறாங்க சோ அத பத்தி கேட்கலாம்...... சித்தார்த் சார் சொல்லுங்க இந்த டௌர்ன்மெண்ட் பத்தி என்று நிலா கேட்க........

வெற்றி தோல்வி என்பது மிக சாதாரண விஷயம் ஆனா வாய்ப்புகளே கிடைக்காம தோற்பது என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று...... சோ புட்பால் பிலேயேர்ஸ்க்கு வாய்ப்புகள் ரொம்ப குறைவா இருக்குனு பீல் பண்ணுனோம் அதுனால இந்த டௌர்ன்மெண்ட் என்றான் சித்தார்த்.........

மேலும் சில கேள்விகள் அனைவரிடமும் கேட்டுவிட்டு அடுத்தது லீனாவை தாக்க தயார் ஆகினால் நிலா.......... அவளுக்கு லேசாக பயம் எட்டி பார்க்க...... கிருஷ் அவளை பார்த்து பேசு என்பது போல் கண்ணை காட்டவும்......... மீண்டும் பேச ஆரம்பித்தாள் நிலா.........

இப்போ உங்க படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது அதுக்கு முதல என்னுடைய வாழ்த்துக்கள் லீனா என்றவள் இந்த டௌர்ன்மெண்ட்வோட brand ambassador நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க...........

இந்த டௌர்ன்மெண்ட்ல நானும் ஒரு பார்ட்டா இருக்குறதுல ரொம்ப ஹாப்பியா இருக்கு என்றாள் லீனா ........

வாவ் சூப்பர் லீனா......... நீங்க எப்போவுமே unique costume தான் சூஸ் பண்ணுவீங்க போல என்று நிலா கேட்கவும்........

எஸ் டிரஸ்ல மட்டும் இல்ல எல்லாத்துளையும் எனக்கு unique தான் பிடிக்கும் என்று லீனா சொல்லவும்..........

பட் ஏன் இப்படி ஒரு uncomfortable டிரஸ் லீனா என்றாள் நிலா ...... சித்தார்த் நிலாவை பார்த்து முறைத்து பார்க்க அதை நிலா சிறிதும் கொண்டுகொள்ளாமல் லீனாவின் பதிலுக்காக காத்திருக்க.......

இப்படி கிளாமரா டிரஸ் பண்ண தானே ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று லீனா சிரித்து கொண்டே சொல்லவும் ...... அதை கேட்ட நிலாவுக்கு தான் பற்றி கொண்டு வந்தது....... அதை முகத்தில் காட்டாமல்...... ஓ அப்போ நடிப்பினால் முன்னேறுவதை விட இப்படி உடம்ப காட்டி ஈசியா மக்கள் மனசுல இடம் பிடிச்சிரலாம் ரைட் என்று நிலா லீனாவை போல் சிரித்து கொண்டே அடுத்த கேள்வியை முன் வைக்க.....

இல்லை நிலா நீங்க சரியா புரிஞ்சுக்கல..... இங்க என்ன தான் நாங்க நல்ல நடிச்சாலும் ரசிகர்களுக்கு எங்கள் மேல் ஒரு ஈர்ப்பு வேணும் அப்போ தான் எங்களுக்கு படம் வாய்ப்பு கிடைக்கும்.........

ரசிகர்களை ஈர்க்க உங்க உடம்பை ஒரு போதை பொருள் போல் காட்டுவது தான் ஒரே வழியா........வேறு வழிகள் இல்லையா....... don't you feel so???????என்று நிலா அடுத்த கேள்வியை கேட்க

இம்முறை கட்டுக்கு அடங்காத கோவம் வந்தது லீனாவுக்கு ஆனாலும் சித்தார்த்திற்காக அமைதி காக்க........ அதை உணர்ந்த சித்தார்த்......... பெண்களை இப்படி தான் டிரஸ் போடணும்னு எதாவது ரூல்ஸ் வச்சுருக்கீங்களா......... அப்படி ரூல்ஸ் போடுறதுக்கு பதிலா பெண்களை தவறா பார்க்குற ஆண்களுடைய பார்வையை மாத்த சொல்லுங்க என்று சித்தார்த் நிலாவுக்கு பதில் கொடுத்தான் ...........

ஒரு ஆண் பெண்ணை கண்ணியமான பார்வை தான் பார்க்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை......... ஆனால் உங்க தோழி எனக்கு இந்த டிரஸ் தான் எனக்கு பிடிச்சுருக்கு அல்லது கம்போர்ட்டேபிலாக இருக்குனு சொன்ன நான் ஏன் இப்படி கேட்க போறேன்...... பெண்கள் அவர்களுக்கு பிடித்த உடைகளை தாராளமாக அன்னியலாம்........... ஆனால் ஹீரோயின் என்று உடம்பை போதை பொருள் போல் பாவிப்பது போதத்திற்கு மாடல் என்று மிகவும் மோசமாக புகைப்படம் எடுப்பதன் நோக்கம் என்ன என்று நிலா அடுத்த கேள்வியை முன் வைக்க ........

இப்போ என்ன நிலா சொல்ல வர நடிப்பு துறையில் பெண்கள் இருக்க கூடாதா என்ன என்று சித்தார்த் கேட்கவும்........

நான் அப்படி சொல்ல வரல...... சினிமா என்பது அணைத்து மக்களுக்கும் சென்று அடையும் அப்படி இருக்கையில்........ பெண்கள் நிறைய துறையில் சாதித்து வருகின்றனர்....... பெண்கள் ராணுவமாக இருக்கட்டும் மெட்ரோ ட்ரெயின் ஓடுவதில் இருந்து விளையாட்டு துறை வரை அணைத்து துறையில் தங்கள் பாதம் பதித்து விட்டனர்........... அப்படி இருக்கையில்....... ஒரு பொம்பை போல் ஐந்து ஆறு சீனில் மட்டும் வந்து போகும் கதாபாத்திரத்திலும் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவதை நிறுத்தி விட்டு...... போற்ற படும் பெண்ணாக நடித்து இளம் பெண்கள்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் தைரியத்தையும் துணிச்சலும் தர கூடிய கதாபாத்திரமாக இதுவரை பெண்ணை போதை பொருளாக மட்டுமே பார்க்க கூடிய ஆண்களாக இருந்தால் கூட அவர்களையே பெண்களை மதிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும்......... படத்தில் எந்த ஒரு இடத்திலும் பெண்களை இழிவு படுத்துவது போல் ஒரு வார்த்தை வந்தால் அந்த படத்தில் நான் நடிக்க மாடெய்னு சொல்ற திமிரு இருக்கனும்..........

ரசிகர்களை ஈர்க்க ஹீரோயின்களுக்கு நல்ல மனமும் திறமையும் இருந்தாலே போதுமானது என்பது என் கருத்து என்று நிலா சொல்ல......

அர்ஜுன் கிருஷ்யும் சூப்பர் நிலா என்று கை தட்ட.......... சித்தார்த்திருக்கு மழை அடித்து ஓய்ந்தது போல்யிருந்தது........

லீனாவுக்கு நிலா தன்னை அவமான படுத்திவிட்டாள் என்று தோன்ற அவளை சும்மா விட கூடாது என்று வன்மமாக எண்ணி கொண்டாள்..........
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
Enoda pathivula entha oru edathulium pengalai ilivaga elutha koodathu apdintrathula na romba teliva irunthen ana inaiku apdi elutha vendiyatha poiruchu ipadium pengal iruka tan seiranga enbatharkaga tan intha pathivu........ padichutu neenga ena ninaikuringanu enaku comment panunga friends.........
 
Status
Not open for further replies.
Top