All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரியா வரதராஜனின் 'காதல் ரோஜாவே' - கதை திரி

Status
Not open for further replies.

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 9

காலை விடியல் அழகாக விடிய, அந்த விடியலை போலவே அந்த நாளும் எல்லாருக்கும் அழகாக அமைவதில்லை....... சிலருக்கு மறக்க முடியாத துயரத்தையும், சிலருக்கு சந்தோஷத்தையும், சிலருக்கு மறக்க முடியாத அனுபவத்தையும் விட்டு செல்கிறது.......

ஒரே நாளில் வாழ்க்கையே மாறிவிடுமா என்ற கேள்வி சச்சினின் மனதில் திரும்ப திரும்ப ஓடி கொண்டிருந்தது...... நேற்று வரை உலகமே தன் வசமாக இருக்க.... ஒரு சிறிய தவறு வாழ்க்கையே மாறிவிட்டது......இதுவும் கடந்து போகும் கண்டிப்பாக கடந்து சென்றே ஆக வேண்டும் ஆனால் நமக்கு பிடித்தது போல் கடக்குமா என்பதற்கு...... ஜனனி இல்லாத ஒரு வாழ்கையையேய் நினைத்து கூட பார்க்க முடியாது என்பது மட்டுமே பதிலாக கிடைக்க....... அவளாக தன்னை புரிந்து கொள்வாள் தன்னை தேடி வருவாள் என்று எண்ணிய சச்சினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது........

கொஞ்சம் கூட என்மேல் நும்பிகை இல்லையா..... காதலில் மட்டுமா எல்லா உறவுகளுக்கும் மூலதனமே நும்பிகை தான்...... தன்மேல் தவறு இருந்த போதிலும் அவள் தன்னை நம்பவில்லை என்பதில் சச்சினுக்கு சிறு ஏமாற்றத்துடன் கோவமமும் கலந்திருந்தது........

இந்த எட்டு வருடங்களில் ஒரு நொடி கூட என் காதலை நீ உணரவில்லையா என்று என்னும் போதே ஒரு வெற்று புன்னகையுடனே ஏன் அவனுமே, இந்த எட்டு வருடங்களில் உணராத இந்த காதலை இந்த இரண்டே நாட்களில் இந்த வெறுமையில் உணர்ந்தாயிற்றே.........

""""இது என்ன இடைவெளியோ
காணாத முகவரியோ
மலரினும் மழைதுளியோ
மாறாத மஞ்சமும் நீயோ
மலைவெயில் போல் வந்தாய்
கொல்லாமல் என்னை கொன்றாய்
கண்ணீரும் தந்துவிட வைத்தாய்
தனிமை கொள்ளுவது கொஞ்சம்
தவிப்பால் ஏங்கும் நெஞ்சம்
என்ன பிழை செய்தேனோ
ஏமாற்றம் தொடங்குவது இங்கே
தாலாட்டு பாட வைத்தாய்
தங்கமே தள்ளியும் நின்றாய் """"

இன்று நிச்சயம் எல்லாவற்றையும் சரி படுத்தியே ஆகவேண்டும் என்று எண்ணி கொண்டே சச்சின் கம்பனிக்கு தயாராகி சென்றான்.......

******************************

சித்தார்த் இப்பொது ஒரு பெரிய ப்ரொஜெக்ட்டை சைன் செய்திருந்தான்........இந்த ப்ராஜெக்ட் NGMN அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பதனால்...... சித்தார்த் அதில் மிகவும் பிஸியாக இருந்தான்......... நிலாவும் அந்த ப்ரொஜெக்ட்டில் இருந்தாள் அதனால் இப்பொது எல்லாம் நிலாவுக்கு நிற்க கூட நேரமில்லை அவ்வளவு வேலை இருந்தது...... தவறாக ஏதேனும் செய்துவிட்டால் சித்தார்த் தொலைத்து எடுத்துவிடுவான் எல்லாவற்றைக்கு சற்று கூடுதல் கவனத்துடனே செய்தாள் இல்லை செய்ய வைத்தான்.........

சித்தார்த்திற்க்கு வேலை என்று வந்துவிட்டால் நேரம் காலமே கிடையாது அவன் கீழ் வேலை பார்பவர்களுமே அப்படியே செய்ய வேண்டியதாயிற்று..........

நிலாவை ஒரு presentation தர சொல்லிருந்தான்....... நிலாவிற்கு எல்லாருக்கு முன்னாடி பேசி எல்லாம் பழக்கமே இல்லை.......அவன் வேலை கூடததும் இல்லை செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவளுக்கு தைரியம் இல்லாததால் பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டால்......... அதற்காக விடிய விடிய தூங்காமல் ஏறுபாடு செய்தாள்.......

அடுத்த நாள் காலையில் எழவே முடியவில்லை..... நல்ல காய்ச்சலாக இருந்தது மணியை பார்த்தால் ஏழு காட்டியது அடித்து பிடித்து கொண்டு எழுந்து அவசர அவசரமாக தயாராகி எட்டு மணிக்குள் செல்ல வேண்டும் என்று சாப்பிடாமல் கொள்ளாமல் சென்றாள்......

அவள் போவதற்குள் சித்தார்த், கிளைன்ட் எல்லாரும் conference ஹாலில் தயாரக அமர்ந்து இருக்க...... எல்லோரும் நிலாவுக்காக காத்திருப்பது போல் ஆகிவிடவே சித்தார்த்திற்க்கு கோவம் தலைக்கு ஏறியது........

ரிஷி, நிலா நிலா வந்துவிட்டாளா என்று வந்து வந்து பார்த்து சென்றான்........ சிறிது நேரத்திலே நிலா வந்துவிட, என்ன நிலா இவ்வளவு லேட்டா வரீங்க........ எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட் பன்னிட்டு இருகாங்க என்று சற்று கோவமாகவே உரைத்தான்.........

நிலாவுக்கு அப்போவே பதற ஆரம்பித்துவிட்டது...... சாரி ரிஷி, இரவு முழுவதும் presentation ரெடி பண்ணறதுல என்றுபோது தான் அவளுக்கு pendrive நியாபகமே வந்தது....... காலையில் கிளம்பும் அவசரத்தில் சுத்தமாக மறந்துவிட்டாள் ...........

ரிஷி நான் pendrive மறந்துவிட்டேன் அதுலதான் presentation இருக்கிறது.... இப்போ என்ன பண்றது ரிஷி என்றாள் அழுகையுடனே......... அவளுக்கு சித்தார்த் நினைக்கவே பயமாக இருந்தது....... இன்று அவனிடம் நன்றாக மாட்டிக்கொண்டோம்……… நிச்சயம் அவன் சும்மா விடமாட்டான் என்பது புரிய பாவமாக ரிஷியை பார்த்தாள்.........

ரிஷிக்கு தலையில் அடித்து கொள்ளவேண்டும் போல் இருந்தது......... யாராவது இப்படி கிளைன்ட் மீட்டிங் போது இதுபோல் கவனகுறைவாக இருப்பார்களா என்று கடுப்பாகியவன் ...... அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சித்தார்த்திடம் சென்று எதோ பேசிவிட்டு வந்தான்........

பயப்படாதீங்க நிலா presentation இல்லனாலும் பரவாயில்ல........ நீங்க என்ன ரெடி பனீங்களோ அத மட்டும் கொஞ்சம் தெளிவாவும் போல்டவும் பேசுங்க என்றான் ரிஷி ........

நிலாவிற்கு உள்ளே சென்றதுமே மயக்கமே வருவதுபோல் ஆகிவிட்டது..... எல்லாரும் தன்னை பார்ப்பது புரிய அவளுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.......... எதில் இருந்து ஆரம்பிப்பது என்று எதுவும் புரியவில்லை……கவனமாக சித்தார்த் பக்கம் திரும்பாமல் தவிர்த்தாள்.......... சித்தார்த்திற்க்கும் அது புரியவே செய்தது........ முதலில் கொஞ்சம் தடுமாறியவள் பிறகு எல்லாவற்றையும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொன்னாள்.....

சித்தார்த் சரியான கோவத்தில் இருந்தான்.........நிலா வேண்டுமென்றே செய்து இருக்கிறாள்..... எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் , எவ்வளவு பெரிய முக்கியமான பொறுப்பை அவளிடம் கொடுத்திருக்கிறோம் …… எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி செய்வாள் என்று எண்ணியவன்...... clients செல்லும் வரை தன் கோவத்தை கட்டுப்படுத்தி அமைதியாக இருந்தான் ........ அவர்கள் சென்றதுமே நிலாவை தான் முதலில் அவன் அறைக்கு அழைத்தான்.......


Presentation முடித்து வெளியே வந்த நிலாவிற்கு பயமாக இருந்தது...... கண்டிப்பாக இன்று சித்தார்த் சும்மா விடமாட்டான் என்பது தெளிவாக தெரிய ரிஷியை தேடி சென்றாள்......ரிஷியை கண்டதுமே, ரிஷி எனக்கு ரொம்ப பயமா இருக்கு சித்தார்த் சார் கோவமா இருக்காரா என்று கேட்கவும்…… கொலவெறில இருக்காரு என்றான் ரிஷி........ ரிஷி எப்படியாவது இந்த ஓரு தடவ என்னை காப்பாத்துங்க, அடுத்து தடவ இந்த மாதிரி நடக்காது என்று ரிஷியிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்........ ரிஷிக்கு நிலாவை பார்க்க பாவமாக இருந்தது........புயூன், நிலாவை சித்தார்த் சார் அழைக்கிறார் என்று சொல்ல........

ரிஷி அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்........ சித்தார்த் கண்கள் இரண்டும் கோவத்தில் செவந்து இருந்தது அவளையே அவன் முறைத்து பார்க்க........ நிலாவால் அவனை எதிர் கொள்ள முடியாமல் வேறு எங்கோ பார்த்த படி நின்றாள் ........

அவள் முகத்தை அழுத்தி அவன் பக்கம் திருப்பிய சித்தார்த்...... என்னடி திமிரா என்க..... நிலாவுக்கு அவன் அழுத்திய இடம் உயிர் போய் விட்டது...... அதற்குள் ரிஷி, சார் அதுவந்து என்று எதையோ ஆரம்பிக்க, Out ரிஷி என்றான் அந்த அறையே அதிரும் அளவிற்கு .......... ரிஷி நிலாவை பாவமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டான்.........

ரிஷி சென்று அடுத்த நொடி சித்தார்த்தின் கை நிலாவின் கன்னத்திலே இறங்கியது...... இந்த திமுரு வேலையை என்னிடம் வைத்து கொள்ளவையா என்று கன்னம் கன்னமாக அடித்தான் அதில் தடுமாறி கீழே விழுந்தவளை .....… இழுத்து அடிக்க எத்தனிக்க அவள் மிரண்டு போய் அவனை பார்க்க.........அவளின் மிரட்சி பார்வை கண்டவன் என்ன நினைத்தானோ அப்படியே விட்டுவிட்டான்........

நிலாவிற்கு வேலை அதிகமாக இருந்தது கூட காய்ச்சலும் தலை வலியும் சேர்ந்து கொள்ள...... அவளால் வேளையில் கவனம் செலுத்த சிரமமாக இருந்தது......... லீவ் எடுத்து சென்றுவிடலாம் என்று பார்த்தால் திருப்பவும் அவனிடமே சென்று நிற்க வேண்டும்....... என்று எண்ணும் போதே பரவாயில்ல அதற்கு வேலையே செய்துவிடலாம் என்றாகிவிட்டது.........

****************

ஜனனியை இன்று அவள் வீட்டுக்கே சென்று பார்க்கலாம் என்று எண்ணிய சச்சின்....... அவள் வீட்டுக்கு கார்யை செலுத்தியா சச்சின், போகும் வழியில் அவளிடம் என்ன பேச வேண்டும் எப்படி சமாதான படுத்த வேண்டும் என்று எண்ணி கொண்டே சென்றான் ..... ஜனனி ரோட்டில் நின்று கொண்டிருப்பதை பார்த்த சச்சின் கார்யை ஓரமாக நிறுத்திவிட்டு ஜனனியை நோக்கி சென்றான்.......

ஹே ஜனனி என்றான்........ அவனை சிறிதும் எதிர் பார்க்காத ஜனனி என்ன பண்ணுவது என்று ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு பிறகு அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்........ சச்சின் அவள் பின்னாடியே சென்றான் .... ஜனனி ஒரே நிமிஷம் நான் சொல்றத கேளு..…..ப்ளீஸ் ஜனனி என்ன நடந்துச்சுனு கேட்ட தான தெரியும்....….ஒரு நிமிஷம் ஜனனி என்று பின்னாடியே சென்று கொண்டிருந்தான்........ ஒரு நேரத்துக்கு மேல் கடுப்பான சச்சின்..…..இப்போ மட்டும் நீ நிக்கலேனா இனி இந்த ஜென்மத்துல நான் உன் முஞ்சுளே முழிக்கமாட்டேன் ஜனனி என்றதும்.……ஜனனி அப்படியே நின்றுவிட்டாள்.....

சற்றென்று அங்கு சுபத்ரா ஆட்டோ விட்டு இறங்கி இவர்களை நோக்கி நடந்து வந்தாள்......... ஹலோ ஜனனி எப்படி இருக்கீங்க என்றாள்.…. ம்ம் இருக்கேன் நீங்க என்றாள் ஜனனி ஒரு போர்மாலிட்டிகாக....... நான் நல்லா இருக்கேன் ஜனனி...... உங்கள பத்தி சச்சின் நிறைய சொல்லிருக்காரு காலேஜ் படிக்கும் போது......

ஓஹோ என்றவள் கண்களை மட்டும் சச்சின் விட்டு நகர்த்தவில்லை......... சச்சினுக்கு எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல் இருந்தது.......... எங்க சுபத்ரா இந்த பக்கம் என்று கேட்க, எங்க வீட்டு இந்த பக்கம் தான் ஜனனி சச்சின் சொன்னது இல்லை என்று கேட்டாள் சுபத்ரா......... சச்சினுக்கோ இந்த நாள் இதை விட மோசமாக செல்ல வாய்ப்பு இல்லையோ என்று இருந்தது...........


ஓஹோ அப்போ சார் உங்கள தான் பார்க்க வந்துருக்காரோ என்று ஜனனி கேட்க........ சுபத்ராவோ சிரித்து கொண்டு நின்றுருக்க.....… அதில் கடுப்பான சச்சின் உன்னை தான் ஜனனி பார்க்க வந்தேன்........ எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன் என்று காரை கிளப்பி சென்று விட்டான்.........

**********************

நிலா வேலையை முடிக்கவே இரவு இரண்டு ஆகிவிட்டது......... சித்தார்த்திடம் சைன் வாங்க சென்றாள்.......... எல்லாத்தியும் சரி பார்த்த சித்தார்த் சைன் செய்துவிட்டு...... வெயிட் பண்ணு நான் ட்ரோப் பண்றேன் என்றான்........ சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டாள்.......

அவனுக்காக வெயிட் பண்ணி பார்த்த நிலா அதற்கு மேல் முடியாமல் போகவே அப்படியே தூங்கிவிட்டாள்........ கொஞ்ச நேரத்திலே அங்கு வந்த சித்தார்த் அவளை பார்க்க, குழந்தை போல் தூங்கி கொண்டிருந்தாள்...... கன்னத்தில் அவன் கை தடங்கல் அதை கண்டவன், அவன் கையாலே நிவிவிட்டான்.......அதையும் அவள் உணராமல் தூங்கி கொண்டிருந்தாள்...…. அவள் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தான்...….. பிறகு அவளை எழுப்பி எழுப்பி பார்த்தான் அவள் எழுவதாக இல்லை ....... செக்யூரிட்டி அழைத்து கார் கதவை திறக்க சொன்னவன்....... அவளை கையால் தூக்கி கொண்டு காரில் உக்கார வைத்தான் ........... தூங்கும் போது கடத்திட்டு போன கூட தெரியாது போல என்று சிரித்து கொண்டு அவளை பார்க்க....... பார்க்க பார்க்க தெகட்டாவில்லை அவனுக்கு....... கண்ணை அவளை விட்டு திருப்பவே கொஞ்சம் சிரமாகவே இருந்தது....... வீட்டு வந்ததும் அவளை உலுக்கி கஷ்டபட்டு அவளை எழுப்பி அவளை வீட்டுக்கு அனுப்பினான் .........


அடுத்தநாள் காலை சிக்கரமே விடிந்து விட…… நிலா இன்று tournament விசயமாக selection commitee வரை செல்ல வேண்டி இருந்தது........ இருக்குற வேலை பத்தாதுன்னு இது வேற என்று சலிச்சு கொண்டே சென்றாள்.........

எத்தன டீம் யாரு எல்லாம் விளையாடுகிறார்கள்....... என்ற லிஸ்ட் வாங்கி கொண்டு வெளியே வர அங்கு......... புட்பால் பிளேயர் அர்ஜுன் நின்று கொண்டிருந்தான்......... நிலாவின் favorite பிளேயர்........ நிலாவுக்கு ஒரே சந்தோசம் ஆகிவிட....... ஹலோ அர்ஜுன்…. நான் உங்களோட பெரிய பேன்..... நான் உங்கள மீட் பன்னுவெய்னு நினைச்சு கூட பார்க்கல..... i'm really very very happy to meet you arjun என்று கையை கொடுக்க...... hi miss என்று இழுக்க ஓஹோ சாரி என் பேரு நிலா என்றாள்........ நைஸ் மீட்டிங் யூ நிலா........

அர்ஜுனுக்கு நிலாவை பார்த்ததுமே பிடித்துவிட்டது........ஒரு பேப்பர் எடுத்து நீட்டி உங்க ஆட்டோகிராப் ப்ளீஸ் என்றாள்........ அர்ஜுன் சிரித்து கொண்டே இப்போ எல்லாம் போட்டோகிராபிக்கும் மறியாச்சு நீங்க இன்னும் ஆட்டோகிராப் வாங்கிட்டு இருக்கீங்க என்றான்.......

என்னிடம் போன் இல்லை அதன் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவனுக்கு போன் வந்துவிட்டது……இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துருவேன் டா என்று போன்னை வைத்தான்.........

ஓகே நிலா இன்னிக்கு என்னோட பர்த்டே சோ பக்கத்துல காலேஜ் நண்பர்கள் எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்கணும்........ So if u don't mind u can also join with us....... நீங்க வந்த நான் ரொம்ப சந்தோசபடுவேன் என்றான் அர்ஜுன்...... Happy birthday அர்ஜுன் பட் சாரி நான் ஆபீஸில் ஒர்க் ஆஹ் வந்துருக்கேன் சோ ப்ளீஸ் என்க.........இங்க பக்கத்துல தான் வாக்கிங் டிஸ்டன்ஸ் தான் வாங்க என்று கம்பெல் செய்ய வேறு வழி இல்லாமல் சென்றாள்.........

அங்கு அவர்கள் நண்பர்கள் கூட்டம் எல்லாம் கூடி இருக்க...... இவர்கள் இருவரும் வருவதை பார்த்து எல்லாரும் ஓட்ட ஆரம்பித்துவிடவே....... நிலாவுக்கு தான் ஏன் வந்தோம் என்று ஆகிவிட்டது........ அர்ஜுன் தான் அவங்க அப்படி தான் நீங்க அத எல்லாம் கண்டுக்காதிங்க என்றான்......... பிறகு அங்க ஒரே கிண்டலும் பேசுச்சுமாக இருக்க....... நிலாவும் அவர்களுடன் ஒட்டி கொண்டாள்.......

டேய் சித்து எங்க டா எப்போ டா வருவான் என்றான் அர்ஜுன் ...... On the way மச்சி என்றதும்...... அனைவரும் சித்துகாக காத்திருந்தனர்.......

எல்லாரையும் ரொம்ப நேரம் காக்க வைக்காமல் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டான் சித்தார்த்........ அர்ஜுனை அணைத்து ஹாப்பி பர்த்டே மச்சான் என்றான் சித்தார்த்.......

நிலாவை அங்கு பார்த்த சித்தார்த் முதலில் திகைத்தான் அடுத்த நொடி எதையும் காட்டி கொள்ளாமல் நண்பர்களுடன் இணைந்தான்........நிலாவிற்கு இது சித்தார்த் ஆஹ் என்பதுபோல் இருந்தது பார்க்க கல்லூரி படிக்கும் பையன் போல இருந்தான்....... இவனை யாராவது, ஒரு பெரிய லீடிங் கம்பெனி நிறுவாகி என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.........

இதுவரை எப்போதும் அவனை formals உடையிலே பார்த்து பழகி இருந்தாள்....... இன்று அவன் வைட் ட்ஷிர்ட் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து இருக்க........ அவன் உயரத்துக்கு அந்த உடையும் அவ்வளவு பொருத்தமாக இருக்க கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்......... இன்று தான் அவன் சிரித்து முதல் முதலில் அவள் பார்க்கிறாள்....... ஒருவனால் இவ்வளவு அழகாவும் வசிகரமாகவும் சிரிக்க முடியுமா என்று பார்த்து கொண்டிருந்தாள்..........

எல்லாரும் சென்று சாப்பிட அமரவே சித்தார்த் சென்று நிலா அருகில் அமர்ந்தான்........ அவ்வளவு அருகில் அமர்ந்து இருக்க ........ அவன் வசத்தில் நிலா மூச்சு விடமறந்தாள்........சித்தார்த் தான் நிலாவுக்கு வேண்டியதை எடுத்து பரிமாறினான்....... நிலாவுக்கு இந்த சித்தார்த் ரொம்ப பிடித்து இருந்தது..........
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே -10

சித்தார்த்தின் கல்லூரி நண்பர்கள் வருடத்தில் ஒரு முறையாக சந்திக்க வேண்டும் என்று கல்லூரி படிக்கும் போதே தீர்மானிக்க பட்டவை...... இப்பொது அந்த நண்பர்கள் கூட்டம் வேறு பாதையில் கொடி கட்டி பறந்தாலும்....... ஆண்டுக்கு ஒரு நாள் நண்பர்களுக்கு என்று கட்டாயம் ஒதுக்கி விடுவது என்பது வழக்கமாக இருந்தது........

சித்தார்த் இப்படி அருகில் அமர்ந்து தனக்கு தேவையானதை பார்த்து பார்த்து பரிமாற.......அங்கு இருப்பவர்கள் முன்னிலையில் இப்படி சித்தார்த் நடந்து கொள்ள நிலாவுக்கு தான் ஒரு ஒரு மாதிரியாக இருந்தது.......... சாப்பிட்டு முடித்ததும் அருகில் இருந்த பீச்க்கு சென்றனர்........

அந்த ரெஸ்டூரண்ட்டில் இருந்து ஒரு கிமி குறைவில் தான் பீச் என்பதால் நடந்தே சென்றனர்.......... அவர்கள் கல்லூரி காலத்தில் நடந்தவையை சொல்லி கலாய்த்து சிரித்து கொண்டு வர....... அப்போது நாம மூன்றாம் ஆண்டு படிக்கும் போது சித்து பண்ணுனது நியாபகம் இருக்க என்று கேட்க....... அதில் எல்லாரும் சிரிக்க, நிலாவுக்கு என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகரிக்க அப்படி என்ன செய்தார் என்று வாய்விட்டு கேட்டு விட்டாள் .......... நான் சொல்கிறேன் நான் சொல்கிறேன் என்று ஓவருவராக சொல்ல நான் தான் சொல்லுவேன் என்று அர்ஜுன் சொல்ல...... எதுக்கு இப்போ எல்லாரும் என் மானத்த வாங்க இப்படி அடிச்சுக்குறிங்க என்று சித்தார்த் கேட்க........ என்ன நீ பண்ணுன காரியம் அப்படி டா என்றான் அர்ஜுன் சிரித்துகொண்டே ........

நாங்க காலேஜ் படிக்கும் போது truth or dare விளையாடுவது வழக்கம் truth என்றால் கேட்க கூடியதற்கு உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் கேட்க கூடிய கேள்வி ஏடாகூடமாக இருக்கும்...... dare என்றால் சொல்லுவதை செய்ய வேண்டும்.........

சித்துவின் டர்ன் வரும் போது சித்து dare என்க...... யாரிடமாவது போய் லவ் என்று சொல்ல வேண்டும் என்பது தான் அவனுக்கு நாங்கள் கொடுத்த டாஸ்க்......... அவ்வளவு பெண்கள் இருக்கும் கல்லூரியில் சித்து ஒரு பெண்ணை தேர்ந்து எடுத்து அவனின் வசீகர புன்னகை அந்த பெண்ணிடம் நான் உங்கள ரொம்ப லவ் பண்றேன்..... நீங்க திரும்பவும் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ஆன நான் உங்கள லவ் பன்னுரெய்னு நீங்க தெரிஞ்சாகணும்......நான் கல்லூரி வருவதே உங்களை பார்க்க இருக்கும் அந்த இரண்டு நிமிடத்திருக்காக தான் இனி நான் உங்கள தொந்தரவு பணமாட்டேன் என்று டாஸ்க் ஓவர் என்று சிரித்து கொண்டே வந்தான்............... அவ்வளவு பேரு படிக்குற காலேஜ்லா அவன் லவ் சொன்னது செகிரேட்டரி மகளிடம் அவள் படிப்பை வெளிநாட்டில் முடித்துவிட்டு இங்க நிருவாகத்தை கவனிக்க வந்திருக்கிறாள்..... அவள் அன்று தான் முதல் முதலில் கல்லூரி வந்திருப்பதை அறியாமல் என்றதும் நிலா சிரிக்க ..... ஏன் டா இப்படி மனதை வாங்குற என்றான் சித்தார்த்..... அன்று கல்லூரியே உன்னை பார்த்து சிரிச்சது கவலை இல்லை இன்று நிலா சிரிப்பதற்கு கவலை படுகிறாய் என்றான் அர்ஜுன்.........

அப்படியா பேசிய படி பீச் வந்துவிட.......எல்லாரும் பல நாட்கள் கழித்து பார்ப்பதுனால் ஆங்காகே நின்று பேசி கொண்டு தண்ணீரில் விளையாடி கொண்டு இருக்க....... நிலா சென்று ஒரு ஓரமாய் மணலில் சென்று அமர்ந்தாள்........

முகத்தில் காற்று விச தன்னை நோக்கி அலைகள் பாய்ந்து வர மனம் ஏனோ இன்று லேசாக இருப்பது போல் உணர்ந்தாள் நிலா....... வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் சிரித்திருக்காள்...........சித்தார்த் எங்க என்று தேட அவன் அர்ஜுன்வுடன் நின்று பேசி கொண்டிருக்கிறான்...........

சித்தார்த் இன்று மிகவும் வித்யாசமாக தெரிந்தான்......... இவனிடம் பேசவே கம்பெனியில் அனைவரும் பயப்படுகின்றனர் ஆனால் அவனின் நண்பர்களோ அவனை கேலி செய்து விளையாடுகின்றனர்........ இங்கு அவனின் நட்புக்குள் எந்த ஒரு வேறுபாடும் இன்றி அன்று பழகியவர்கள் போல இப்போதும் இருக்கிறாரகள் என்று புரிந்தது நிலாவிற்கு........ நிலாவின் பார்வை சித்தார்த்தை விட்டு கொஞ்சமும் நகரவில்லை........

நண்பர்கள் அனைவரும் விளையாட தொடங்க ஒருவரை ஒருவர் தண்ணியில் பிடித்து தள்ளிவிட்டு விளையாடி கொண்டிருக்க....... சித்தார்த் நிலாவை நோக்கி நடந்து வந்தவன்....... நிலாவின் கையை பற்றி இழுத்து கொண்டு ஓடியவன்..... அவள் கையை பற்றி கொண்டே தண்ணீரில் குதித்தான்............

இப்போது நிலா நடு கடலில் அவன் கையை விடாமலே எழுந்து நிறுக்க....... அவன் அவளின் கையை பற்றிய அந்த நொடி அவன் கையை என்றும் விடகூடாது என்ற எண்ணம் வர...... ஒரு நிமிடம் தன் மனதில் ஓடியதை நினைத்து அவளுக்கே வித்தியாசமாக பட அந்த எண்ணத்தை புறம் தள்ளியவள்..........நடு கடலில் இருவரும் நின்று கொண்டிருக்க தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் சித்தார்த் அடிக்க, அவனை தள்ளி விட்டு பழிப்பு காட்டியவள் அவன் மேல் அவளும் விழுந்தாள்.........

அதற்குள் அவர்கள் நண்பர்கள் வந்து ஏர் பலூன் கொடுக்க........ என்ன என்பது போல் நிலா பார்க்க..... சித்தார்த் அந்த பலூன்னை வாங்கி நிலா உன் மனசுல உள்ள ஆசையை நினைத்து கொண்டு இந்த பலூன்னை பறக்க விடு என்றான்.......

பலூன்னை கையில் வாங்கியவள் என்ன நினைக்கலாம் என்று யோசிக்க இந்த சித்தார்த் என்றும் எனக்கு வேண்டும் என்று மனிதில் தோன்ற...... ச்சை என்ன மாதிரியான நினைப்பு இது என்றே தோன்றியது......... நான் ஒன்னுமே நினைக்க போறது இல்ல சாமி உங்க கிட்ட யோசிக்க சொன்னதே தப்பு தன் என்று மனதுடன் சண்டை போட்டு கொண்டிருக்க எல்லாரும் பலூன்னை காற்றில் விட அவளையும் அறியாமல் அவள் ஆசை அந்த காற்றில் பறந்தது...........

****************************************
வீட்டிற்கு சென்ற சச்சின் அங்கு சதாசிவமும் சாரதாவும் எதோ பேசி கொண்டிருக்க அதை கவனியாத போல் அவன் அறைக்கு செல்ல எத்தனிக்க, சச்சின் என்னடா ஆச்சு உனக்கு ஏன் உன் முகமே சரி இல்லை என்று சாராத கவலையாக கேட்க......நிச்சயதாரத்துல கண் பட்டு போயிருக்கும் வேற ஒன்னும் இல்லை என்று பதிலும் அவரே சொல்ல...... அதில் எரிச்சலானான் சச்சின்..... சதாசிவத்திற்கு வேறு எதோ காரணம் இருப்பது போல தோன்ற, எதாவது பிரச்சனையா சச்சின் என்று மென்மையாக கேட்டார் சதாசிவம்......

என்ன ஆனாலும் சரி இன்று சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தவன் தன்னை சற்று ஆசுவாச படுத்தி கொண்டு, அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என்றான்....... அதில் சதாசிவம் சாராத இருவரும் அதிர்ந்து நிறுக்க.....என்னை மன்னிச்சுருங்க என்று இருவருக்கும் பொதுவாக சொன்னான்......
என்னடா இப்படி சொல்லற உனக்கும் அந்த பொண்ணுக்கும் சண்டையா அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு பா அவளை போய் வேணாம்னு சொல்லுறா என்றார் சாராத...... அவன் எதுவும் பேசாமல் வேறு எங்கோ பார்த்த படி நிறுக்க........ அதில் கடுப்பான சதாசிவம் உன்னை கேட்டு தானே முடிவு செய்தோம் என்று கேட்க....... அன்று ஜனனி நினைவில் இருக்கும் போது இவர்கள் கேட்க ஜனனியை தான் சொல்கிறார்கள் என்று தவறாக நினைத்து தன் மடதனத்தை எண்ணி வெட்கியவன் இன்று தன் அப்பாவின் முன் பேச முடியாமல் மௌனமாக நின்றான்.......

என்ன சச்சின் என்ன பிரச்சனை எதாவது சொன்ன தானே தெரியும்..... எதாவது பேசு சச்சின் எங்க...... வேண்டாம் மா இது சரி வராது என்க...... இப்படி சொன்னால் எப்படி பொண்ணு வீட்டிற்கு சொல்ல காரணம் சொல்லி தானே ஆகணும்...... செருப்பு எடுத்து அடிப்பது போல் கேட்பார்களே அப்போ சொல்லி தானே ஆகணும் என்றார் சாரதா ....... நான் செத்து போய்ட்டேய்னு சொல்லுங்க எல்லாம் பிரச்சனையும் முடி என்ற அவன் சொல்லி கூட முடிக்கவில்லை அவன் கணங்கள் எறியவும் தான் சதாசிவம் அவனை அறைந்ததே உணர்ந்து இருந்தான் சச்சின்.......

இதுவரை தன்னை அடித்திராத அப்பா இன்று தன்னை அடித்ததை நினைத்து, அந்த நிலை உருவாக்கி தன்னை தானே நொந்து கொண்டான்.......

கல்யாணத்தை நிறுத்துவது அவ்வளவு சுலபம் என்று நினைத்துவிட்டாயா...... நிச்சயம் வரை ஒரு பெண் வந்து அவளை வேண்டாம் என்றால் அந்த பெண்ணிற்கும் அவள் குடும்பத்துக்கும் எத்தனை அவமானம் தேடி தரும் என்று உனக்கு தெரியுமா........ இந்த உலகம் அவளை என்னவெல்லாம் பேசும் என்று தெரியுமா உனக்கு ....... ஒரு பெண்ணின் வாழக்கை அழித்துவிடாதே என்றார் சதாசிவம்.......

நான் அவளை கல்யாணம் செய்தால் தான் அவள் வாழ்க்கை அழித்தது போல் ஆகிவிடும் என்றான் உடைந்து குரலில்........

கல்யாணத்தை நிறுத்த சொல்ல காரணம் என்ன என்று சொல் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்றார் சதாசிவம் சற்று பொறுமையாகவே....... அப்பா இதை பற்றி என்னை எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ் ஆன ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன் இதில் தவறு முழுவதும் என்னுடையது மட்டுமே ........ அந்த பொண்ணுக்கு நீங்க நல்லது செய்யணும்னு நினைச்ச இந்த கல்யாணத்தை நிறுத்திருங்க அப்பா என்றான் கெஞ்சும் குரலில்...... அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் அவ்விடத்தை விட்டு போய்விட்டான்.........

சச்சின் பொறுப்பு இல்லாதவன் இல்லை இந்த சிறு வயதிலேயே ஒரு கம்பெனி நிருவாகம் செய்கின்றவன் எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று செய்பவன் அல்ல....... அதே போல் அவன் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்ன என்று சொல்லியவன் யோசிக்காமல் சொல்லிருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றியது சதாசிவத்திற்கு...... என்னங்க இவன் திடிர்னு இப்படி வந்து சொல்லிட்டு போறேன் எனக்கு தலையே சுத்தும் போல இருக்குங்க என்றார் சாரதா...... அடுத்து சதாசிவம் சொன்னதை கேட்டு உண்மையிலேயே மயக்கம் வந்து இருக்கும் சாரதாவிற்கு.......... கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள் என்று அந்த பெண்ணின் காலில் விழுந்து விட்டு வருகிறேன் என்றார் சதாசிவம் .......

என்னங்க கொஞ்சம் பொறுமையா இருங்க...... அவன் தான் சொல்றனா நீங்களும் ஏங்க இப்படி பேசுறீங்க என்றார் சாரதா ...... இப்போ போய் சொல்லலேன்னா கல்யாணத்துக்கு முன்னாடி நாள் போய் சொல்ல சொல்றியா என்கவும் செய்வது அறியாது நின்றார் சாரதா........
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 11

சித்தார்த் இந்த வருடம் உங்கள் நிறுவனம் புதியதாக புட்பால் டௌர்ன்மெண்ட் எல்லாம் நடத்த போகறீர்கள் என்று கேள்விபட்டேன்.......... மச்சான் இது உண்மையாவே ஒரு நல்ல விஷயம் டா....... இத கண்டிப்பா ஒரு பெரிய அளவில் பண்ணுனா நிறைய திறமைகளை வெளிய கொண்டு வந்த மாதிரி இருக்கும்.........ஏன் என்றால் இப்போ எல்லாம் இளைனர்கள் எல்லாம் வாய்ப்பு கிடைக்காமலே, தங்களின் திறமையை வெளிய கொண்டு வராமலே தோற்று போகின்றனர் .......... எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே தான் நிரூபிக்க முடியும்......... உங்கள் நிருவாகம் இந்த டௌர்ன்மெண்ட் நடத்துவதில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மச்சான்......முதல் முதலில் டௌர்ன்மெண்ட் நடத்துறீங்க சோ இதில் மிகவும் கவனமாக செயல் பட வேண்டும் கொஞ்சம் ரிஸ்க் அதிகம்.... என்றான் அர்ஜுன்.....

ஆமாம் அர்ஜுன்....... இது NGMNனின் ஒரு புதிய முயற்சி........ நாங்கள் எல்லா வருடமும் ப்ரோமொஷன்காக எதாவது ஈவென்ட் நடத்துவது வழக்கம் தானே...... ஆனால் இந்த முறை உபயோகமாக நடத்த இந்த யோசனையை கொடுத்தது நிலா தான் என்றான் சித்தார்த்.........

That's really an awesome idea nila என்றான் அர்ஜுன்....... நிலாவிற்கு காற்றில் பறப்பது போல் இருந்தது...... பின் ஏன் இருக்காது அவளின் பிடித்தமான விளையாட்டு வீரர் அவளை பாராட்டி இருக்கிறானே....... ஆனால் இப்போ தான் அவன் இங்கு இருக்கிறான் என்பதே அவளுக்கு நினைவு வந்தது அவளின் நினைவு சித்தார்த்விட்டு வேறு எங்கும் செல்லவில்லை என்பதே உண்மை .......... மெல்ல புன்னகைத்து தேங்க்ஸ் என்றாள்......

சரி நேரமாக எல்லாரும் கிளம்பலாம் என்று அனைவரும் விடைபெற...... நிலா வா நான் உன்னை வீட்டில் ட்ரோப் செய்கிறேன் என்றான் சித்தார்த்........ நாம இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு கிளம்பலாமா என்றாள் நிலா.........

கொஞ்ச நேரம் அவளையே பார்த்தவன் என்ன நினைத்தானோ...... சரி என்றவன் அந்த மணலில் அமர நிலாவும் அவன் அருகிலே அமர்ந்தவள் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.......... இன்று ஏனோ அவளுக்கு அவளின் வில்லன் ஹீரோ போல தெரிந்தான்.....

சற்று நேரம் மௌனமாக செல்ல........ என்ன நிலா இன்னும் எவ்வளவு நேரம் என்னைய பார்த்துட்டு இருப்ப...... காலையில் இருந்து என்னை பார்த்தது பத்தவில்லையா உனக்கு என்றதும்........ நிலா அதற்கு என்ன சொல்லுவது என்று தெரியாமல் பேந்த பேந்த விளிக்கவும்...... அதை பார்த்தவன் வாய்விட்டு சிரித்தான்........

ஐயோ சிரிக்காத டா நீ சும்மா இருந்தாலே என் மனசு உன்மேல கொஞ்சம் கொஞ்சமாக சாய்த்து........ இதுல நீ இப்படி அழகா சிரிச்ச நான் அவ்வளவு தான் என்று மனதில் எண்ணி கொண்டிருக்க....... என்ன என்பது போல் அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க ......... ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தவள்...... நிலாவுக்கு என்னோ இதய துடிப்பு அதிகரித்தது......... ஐயோ இவன் என்னையை கொல்லாமல் விடமாட்டான் போலவே என்று எண்ணி கொண்டவள் ......... தான் அவனை பார்ப்பதை கவனித்திருக்கிறான் போல பின்ன இப்படியா ஒருவனை வாயை திறந்து கொண்டு பார்ப்பது என்று தன்னை தானே நொந்தவள்........அவனிடம் எதாவது பேசி சமாளிப்போம் என்று பேச்சை தொடங்கினாள்........

நீங்க இப்படி தான் அடிக்கடி நண்பர்களுடன் வெளியே வருவீர்களா என்றாள்........ அடிக்கடியா வாய்ப்பே இல்ல ........ எல்லாருக்கும் வேலை இருக்கும் அதுனால வருஷத்துக்கு ஒரு தடவ கட்டாயம் சந்தித்து கொள்ளுவது வழக்கம் ......... ஆனால் நானும் அர்ஜுனும் அடிக்கடி சந்தித்து கொள்ளுவோம் என்றான் சித்தார்த்......

கொஞ்ச நேரம் மௌனத்தில் கரைய..... நேரமாவதை உணர்ந்த சித்தார்த் நிலாவை காரை நோக்கி அழைத்து சென்றான் ........
காரில் ஏறியதும் காரை பறக்க விட்டவன்..... பிளேயரை ஆன் செய்ய ...... அதில் ஓடிய பாடல் நிலாவிற்கு அத்தனை இனிமையாக இருந்தது........ ஏனோ அந்த பாடல் அவள் மனதை வருடுவது போல இருக்க..... கண்களை முடி பாட்டை ரசிக்க ஆரம்பித்தாள்..........

"பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போகவில்லையே​
உதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ

இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே


வார்த்தை தேவை இல்லை
வாழும் காலம் வரை
பார்வை பாவை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே
வேறின்றி விதை இன்றி
வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே


வாழின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே

எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே
எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே


யாரென்று அறியாமல்
பேர்கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே

யாரென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

பதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இழை தொடங்கும் நடனம் முடிவதில்லையே​
இது எதுவோ"

பாட்டை கேட்டபடியே உறங்கி விட்டாள்...... வீடு வந்ததும் அவளை மெல்ல எழுப்பினான் சித்தார்த் ...... நிலா காரை விட்டு இறங்கியதுமே ரேவதி வா மா நிலா என்று அழைக்க...... இல்லை மா நான் வீட்டுக்கு போறேன் நாளைக்கு வரேன் என்கவும்.......பிடிவாதமாக அவளை உள்ளே அழைக்க சித்தார்த்தை திரும்பி பார்த்த படி உள்ளே சென்றாள் .......

என்னமா நிலா என்ன குடிக்கிற காபி டீ என்று கேட்டு கொண்டே மணியை பார்க்க அது ஏழு அரை காட்ட இருமா நைட் டிபன் சாப்பிட்டு விட்டு போ என்று சமைக்க சென்றுவிட ......... நிலாவும் ரேவதி பின்னாடியே சென்றவள்...... அம்மா நானும் உதவி செய்கிறேன் என்று சப்பாத்தி மாவை தேய்த்து கொண்டிருக்க.........

ரேவதி நிலாவை ஏக்கமாக பார்க்க...... என்னமா ஏன் அப்படி பாக்குறீங்க என்று நிலா கேட்க..... எனக்கு இந்த மாதிரி ஒரு பொண்ணு இல்லையேன்னு ஒரு வருத்தம் தான்....... எத்தனை பசங்க இருந்தாலும் வீட்டுக்கு ஓரு பொண்ணு இருக்கனும் மா ...... வளையல் கொலுசு ஓசை கேட்ட மஹாலக்ஷ்மி அந்த வீட்டுல வளம் வர மாதிரி இருக்கும்......... எனக்கு அந்த கொடுப்பணை இல்லை என்றவர் வா மா போய் சாப்பிடலாம் என்று அழைத்து சென்றார்..........

சாப்பாட்டை நிலாவிற்கு பரிமாற, அம்மா அவங்க சாப்பிட வரலையா என்கவும்....... அவனுங்க எல்லாம் நேரத்துக்கு சாப்பிட மாட்டாங்க...... அவனுங்களுக்கு நான் எதோ சத்திரம் வச்சு நடத்துவது போல் நினைப்பு போல..........அவனுங்க விருப்பத்துக்கு வீட்டிற்கு எப்போவென வருவாங்க எப்போ தோணுதோ அப்போ தான் சாப்பிடுவாங்க ........ நீ சாப்பிடுமா என்கவும்...... ரேவதி மிகவும் தனிமையை உணர்கிறார் போல அதுவே அவரை இவ்வாறு பேச வைக்குறது என்று நிலாவிற்கு நன்றாக புரிய....... அம்மா நீங்களும் வாங்க ஒன்ன சாப்பிடலாம் என்று நிலா அழைக்கவும் இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.......... சற்று நேரம் பேசிவீட்டு நிலா வீட்டிற்கு செல்ல...... நிலாவிற்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது ..... வீட்டில் நுழைந்தது முதல் சித்தார்த் அவள் "கண்ணிலே படவில்லை சட்டென்று காலையில இருந்து பார்த்தது பத்தவில்லையா உனக்கு "என்று சித்தார்த் கேட்டது நினைவு வர....... அப்படியே சிரித்த படி வீட்டிற்கு சென்றாள் .......

அடுத்த நாள் அவளுக்காக என்ன காத்து கொண்டுருக்கிறது என்பதை அறியாமல்.........

நிலவை மறைத்து கொண்டு சூரியன் அழகாக உதயமாக.......... NGMN மிகவும் என்றும் போல் இன்றும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது........

Government ப்ராஜெக்ட்க்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருக்க........ அதற்கு ஆறு பேர் சேர்ந்த குழு அமைக்கபட்டது.......அதில் வினோத், பிரியா, திவ்யா, ஆகாஷ், அரவிந்த்,நிலா ஆகியோர் இருந்தனர்............ எல்லாரும் மீட்டிங் அறையில் சித்தார்த்திருக்காக காத்து கொண்டிருக்க.........

புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தவன் எல்லாரையும் ஒரு முறை பார்த்துவீட்டு தன் பேச்சை தொடர்ந்தான்.......

A very Good Morning Everyone.........எதுக்கு இந்த மீட்டிங் என்று தெரியும் தானே என்று கேட்கவும் ....... எல்லாரும் எஸ் சார் என்று சத்தமாக சொல்ல...... அந்த நேரம் கதவை தட்டி கொண்டு உள்ளே வந்த நிலாவை பார்த்து மூச்சு விட மறந்தான் சித்தார்த்...... சந்தன நிறத்தில் டிசைனர் சாரி உடுத்தி இருக்க தேவதை போல் இருந்தாள்.......... நொடி நேரத்தில் சுதாரித்தவன்........ what's the time nila என்றான் ........ அவனின் கடுமையான குரலிலே அவளுக்கு நடுக்கம் வர...... இடியட் இது என்ன ஆபீஸ்னு நினைச்சீங்களா வேற என்ன நினைச்சீங்க உங்க இஷ்டத்துக்கு வரீங்க என்கவும் அதுவரை அடக்கி வைத்து இருந்த கண்ணீர் அதற்கு மேல் முடியாமல் வெளியே வந்துவிட மூக்கு செவந்து இருக்க அப்போது அவளை பார்த்தவன் மனதில் பர்பக்ட் என்று எண்ணி கொண்டான்.........சாரி சார் என்கவும் திஸ் லாஸ்ட் வார்னிங் என்றான்...... நிலாவிற்கு இத்தனை பேர் முன்னாடி சித்தார்த் திட்டவும் அவமானமாக உணர்ந்தாள்........ அவளுக்கு கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருக்க...... சித்தார்த் அதை சிறிதும் அலட்டி கொள்ளாமல் மீட்டிங்கை தொடர்ந்தான்........

இது ஒரு government ப்ராஜெக்ட் இது பெரிய ப்ராஜெக்ட் இதற்கு காம்பெடிஷன் ரொம்ப அதிகம் பட் இந்த ப்ராஜெக்ட் நாம நிறுவனத்திற்கு தான் கிடைக்க வேண்டும்....... i want all your co-operation and this project wants to be very secured என்றான்...... பிறகு இந்த ப்ராஜெக்ட் பற்றி அவர்களுக்கு தெளிவாக விளங்கியவன்.......மேலும் அந்த ப்ராஜெக்ட்க்கு ஒரு சிறந்த abstract செய்து இன்னும் இரண்டு மணி நேரத்தில் முடித்து என்னிடம் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டான் சென்றான் ..........

மதியத்துக்குள் அவர்கள் abstract செய்து சித்தார்த்திடம் காட்டி அவனிடம் ஒப்புதல் வாங்கிவிட பிறகு எல்லாரும் வெளியே சென்று உணவு அருந்தலாம் என்று முடிவு எடுக்க நிலா மட்டும் செல்லாமல் ஆபீஸ்லே இருந்து கொண்டாள்............

நிலாவின் எண்ணம் சுற்றி சுற்றி சித்தார்த்திடமே வந்து நின்றது....... நேற்று எத்தனை மென்மையாக நடந்து கொண்டான்........ எவ்வளவு அசையாசையா அவனை பார்க்க வேண்டும் என்று கிளம்பி வந்தேன் எல்லார் முன்னால் என்னை ஏன் இப்படி அவமான படுத்திவிட்டான் என்று நினைத்து கொண்டிருக்க........ இன்னோரு மனமோ சீக்கரம் வரவில்லை மீட்டிங் ஆரம்பித்த பிறகு வந்தால் யாருதான் கோவாபட மாட்டார்கள் என்று இன்னோரு மனம் அவனுக்காக பேசியது............
 
Last edited:

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே -12

சித்தார்த் மிகவும் பிஸியாக இருந்தான்...... இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட், அரசாங்க ப்ராஜெக்ட் மற்றும் டௌர்ன்மெண்ட் என்று அணைத்து வேலைகளும் இருக்க.......... எல்லாத்தையும் நிதானமாகவும் கவனமாகவும் செயல் படுத்தி கொண்டிருந்தான்........

இந்த வயதில் இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கியுளான் என்று அனைவரும் அதிசியக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளான் .........NGMN பல பேரின் ட்ரீம் கம்பெனியாக உள்ளது............ இந்த வெற்றிக்கு பின் அவன் வாழ்க்கையின் கருப்பு பக்கமே காரணமாக இருந்தது..... அவன் சந்தித்த அவமானகள் வேதனைகள் அதன் விளைவே இந்த ஆசாத்திய வெற்றி அடைந்திருக்கிறான் ............ இரவு பகல் பார்க்காமல் உழைத்தான் கஷ்டபட்டு யாருடைய தயவும் இல்லாமல் தன் திறமையை வைத்து மட்டுமே முன்னேறி இருக்கிறான்..........

கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவன்...... ரிஷியை அழைத்தான்...... அடுத்த நொடியே உள்ளே நுழைந்தவனிடம் அடுக்கு அடுக்காக அவன் செய்ய வேண்டிய வேலையை உத்தரவிட்டவன்........ அப்புறம் ரிஷி ஈவென்ட் ஹாலை டெகரேட் செய்ய சொல்லுங்கள் என்றவன் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று ஓவனாக சொல்ல ...... ஓகே சார் என்று ரிஷி சென்று விட்டான் ....... சற்று நேரம் கணினியில் பார்த்து கொண்டிருக்க கவனம் அதில் பதியாமல் போகவே எழுந்து ஜன்னல் அருகே வந்தவன் அந்த சிகிரீன் மேட்டை சிறிது இழுத்து பார்க்க அங்கு நிலா தான் அமர்ந்து இருப்பது தெரிய அவள் அழகில் கண் அசைக்க மறந்தான் சித்தார்த்......

சந்தன நிறத்தில் நிறைய வேலைப் பாடுகள் செய்த டிசைனர் புடவை உடுத்தி, எப்போதும் விட இன்று கொஞ்சம் கூடுதலாகவே அழகாக தெரிந்தாள் நிலா ......... உன்கிட்ட பிடிச்சதே அந்த மூக்கு தான் டி........ காலையில் கண் கலங்கிய நொடி அந்த மூக்கு எப்படி செவந்துவிட்டது என்று மனதில் நினைத்து கொண்டே அவளை பார்த்து கொண்டிருக்க...............

சித்தார்த் அறை கதவை, தட்டி உள்ளே நுழைந்த அர்ஜுன்..... சித்தார்த்தை நோக்கி செல்ல...... அதை கூட உணராமல் சித்தார்த் வெளிய நிலாவை பார்த்து கொண்டிருந்தான் ......... அவன் அருகில் சென்றவன் என்னடா மச்சான் பொழப்ப பார்க்காம இப்படி சைட் அடிச்சுகிட்டு இருக்க என்கவும்..........

சட்டேன்று சுற்று புறம் உணர...... ஐயோ அர்ஜுன் நீ எப்போடா வந்த என்றதும்..... அப்போ நீ எவ்வளவு நேரமா இப்படியே நின்னு பார்த்துகிட்டு இருக்க என்று அர்ஜுன் கேட்க.......... சித்தார்த் வாய் வீட்டு சிரித்தான்......... என்ன மச்சான் லவ் ஆஹ் என்று அர்ஜுன் கேட்க ......... டேய் எதோ நினைப்புல வெளிய பார்த்துட்டு இருந்தேன் அதுக்கு ஏன்டா இப்படி சரி அதவிடு சாப்பிட வெளியே போகலாமா என்று சித்தார்த் கேட்க......... ஹ்ம்ம் போகலாம் என்று இருவரும் கிளம்பி வெளியே வர..........

அங்கு நிலாவை பார்த்த அர்ஜுன் நிலாவிடம் சற்று பேசிவிட்டு சரி நிலா நாங்க வெளியே செல்கிறோம் என்று சொல்லவும் நிலா சித்தார்த்தை பார்க்க அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் ........

சித்தார்த் அர்ஜூனுடன் செல்ல நிலா முகம் வாடிவிட்டது ........... அவ்வளவு தான் அவன் வெளியே சென்றுவிட்டான்...... இனி நாளை தான் வருவான் போல என்று நினைக்கும் போதே ஏமாற்றமாக இருந்தது நிலாவிற்கு
............ சட்டென்று ஒரு யோசனை தோன்ற நம்ம ஏன் ஜனனிகிட்ட போய் பேசி சித்தார்த் பற்றி தெரிந்து கொள்ள கூடாது என்ற தோன்ற..... அடுத்த நொடியே அவங்க நாம கிட்ட பேசவங்களா அதுவும் அவங்க அண்ணா பத்தி எல்லாம் சொல்லுவாங்களா என்று பலவாறு தோன்ற ........ சரி மொதல்ல அவங்ககிட்ட போய் பேசி பார்ப்போம் என்று எழுந்து சென்றாள்..........

ஜனனி அருகே சென்ற நிலா சற்று தயக்கத்துடனே ஹாய் ஜனனி என்க........ ஹாய் நிலா வாங்க வேலை எல்லாம் முடிச்சுட்டீங்களா என்று கேட்கவும்........ என்ன நீங்களும் உங்க அண்ணா மாதிரி தான் போல என்கவும்........ ஜனனி முழிக்கவும் இல்ல உங்க அண்ணாவும் எப்போ பாரு வேலை பத்தி மட்டும் தான் பேசுவாங்க நீங்களும் அதே மாதிரி பேசுறிங்களேனு கேட்டேன் என்றாள் நிலா.........

ஐயோ அப்படி எல்லாம் இல்ல நிலா....... நான் நேத்து கொடுத்த வேலையை இன்னும் முடிக்கவில்லை....... எனக்கு நெட்வொர்க்கிங் என்றாலே ஆகாது ரிஷி அண்ணா என்னிடம் இதுவரை இரண்டு முறை சொல்லி கொடுத்தும் எனக்கு புரிந்தபாடு இல்லை ....... எதோ ஆசையில் அண்ணா கிட்ட இன்டெர்ன்ஷிப் வருவதாக சொல்லி இப்போ முழிச்சுகிட்டு இருக்கேன் என்றாள் ஜனனி பாவமாக .......... வாவ் ஜனனி நீங்களும் என்னை மாதிரியே இருக்கீங்க........ ஆனா உங்களை யாரும் கேட்க மாட்டாங்க............. எனக்கு இன்று ஐந்து மணிக்குள் டாக்குமெண்ட் ரெடி செய்து சைன் வாங்க வேண்டும் நான் இன்னும் ஆரம்பிக்க கூட இல்ல என்றாள் நிலா ........

ஐயோ அப்புறம் என்ன பண்ண போறீங்க என்று ஜனனி கேட்க....... சார் தான் கிளம்பிட்டாங்களே என்றவள் வந்த வேலையை மறந்துவிட்டு ஜனனியிடம் கதை அடித்து கொண்டிருப்பதில் இரண்டு மணி நேரம் சென்றதே இருவரும் அறியவில்லை அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பு உண்டாகி இருந்தது ..........

அந்நேரம் உள்ளே நுழைந்த சித்தார்த் இவர்கள் இருவரும் எதோ பேசி சிரித்து கொண்டிருப்பதை பார்த்தவன்....... நீண்ட நாள் பிறகு ஜனனி இயல்பாக இருப்பதை பார்த்ததில் திருப்த்தி அடைந்தான்........

அப்போது தான் சித்தார்த்ததை பார்த்த நிலாவிற்கு உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விட்டது..... அவன் சொன்ன வேலையை அவள் சிறிதும் செய்யவில்லை........ நிலா என் ரூமிற்கு வாங்க என்றதும்......

அவ்வளவு தான் நிலா நீ இன்னிக்கு முடிஞ்சுட்ட இனி அந்த கடுவுளே நேர வந்தாலும் உன்னைய காப்பாத்த முடியாது...... வேலை பாக்குற நேரத்துல இப்படி பேசியே நேரத்த ஓடியாச்சு இப்போ அவன் கேட்ட என்ன சொல்றது என்று மனதுக்குலே புலம்பி கொண்டே பயத்துடனே உள்ளே சென்றாள்.........

நிலா உக்காருங்க ஒரு அஞ்சு நிமிஷம் என்றவன் கணினியில் முகத்தை புதைக்க....... நிலாவிற்கு நேரம் ஆக ஆக ரொம்பவும் பயமாக இருந்தது...... காலையிலே அவ்வளவு கோவாபப்பட்டன்....... இப்போ வேலை செய்யவில்லை என்றாள் அவ்வளவு தான் என்று மனதில் எண்ணி கொண்டுருக்க.........

அவள் எண்ணத்தை தடை செய்வது போல் சித்தார்த்தின் போன் அடிக்க அதை எடுத்து ...... Is all set ???? என்று கேட்டவன்.......சரி நான் வரேன் என்று முடித்து கொண்டான்.............

நிலா வாங்க நாம ஈவென்ட் ஹாலுக்கு போகலாம் என்றதும் சரி என்று அவன் பின்னே செல்ல......... ஈவென்ட் ஹால் கதவை திறந்த சித்தார்த் நிலாவுக்கு வழி விட்டு நிற்க....... அந்த அறையை பார்த்த நிலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது........

அந்த அறை முழுக்க அலங்கரிக்கபட்டு Happy Birthday Nila என்று எழுத பட்டுருக்க........ அந்த கம்பெனியில் வேலை செய்யும் அனைவரும் அங்கு கூடிருக்க........... black forest கேக் வைக்கபட்டு இருந்தது .......... நிலா என்ன இப்படியே நின்னுட்ட வா என்று அவளை அழைக்க நிலாவுக்கு இது கனவா இல்லை நினைவா என்ற சந்தேகம் எழ அடுத்த நொடியே இது அவள் கனவிலும் நினைத்து பாராத ஒன்று என்று தோன்றவே........

நிலா, இப்படியே பாத்துட்டே இருக்க போறியா என்ன..... வா என்கவும் அவன் பின்னாலே சென்றாள்......... அத்தனை பேரு முன்னில் நின்று கேக் வெட்ட சொல்லவும் அவளுக்கு கை எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட ஒரு சிறிய பீஸ் வெட்டி சித்தார்த்துக்கு கொடுக்க கொண்டு போக அதை கையில் வாங்கியவன் அவளுக்கு ஊட்டிவிட்ட அதை எல்லாரும் வித்தியாசமாக பார்க்க ...... அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் wish u a very happy birthday nila என்றான் ............... அவள் கையில் இருந்த பீஸ்யை அவனுக்கு ஊட்டிவிடவும் அதை ஒரு புன்னகையுடன் வாங்கி கொண்டான் .....

பிறகு ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்ல அனைவருக்கும் புன்னகையுடனே நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டாள்........... கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் சென்று விட....... சித்தார்த் நிலாவிடம் கிளம்பலாமா என்று கேட்க...... அவனுடனே கிளம்பி வீட்டிற்கு சென்றாள்.......

நிலா மாடியில் நடந்த படியே ........ இன்று நடந்த அனைத்தையும் நினைத்த பார்த்து கொண்டிருந்தாள்........எதோ உள்ளுணர்வு தோன்ற சித்தார்த் பால்கனி பக்கம் திரும்பி பார்க்க சித்தார்த் அங்கு நின்று அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்..........

அவனை பார்த்த உடனே மனதில் மகழ்ச்சி பொங்க......... அவள் வீட்டின் வாட்டர் டேங்க் மடி வரை ஏறியவள் அங்கு இருந்து சித்தார்த் அறையின் பால்கனியில் குதித்தாள்.........

அதை பார்த்த சித்தார்த் ஹே என்ன பண்ற நிலா என்கவும்.... இல்ல உங்கள நான் இப்போ பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல சித்தார்த்...... அதான் உங்கள இப்போ பார்த்ததும் ஒரே சந்தோசமா இருக்கு என்றாள் அவள் மனதை மறைக்காமல்........

அதுக்கா இப்படி தாவி குதிச்சு வந்த என்று சித்தார்த் சிரித்து கொண்டே கேட்க...... அவன் சிரிப்பில் உண்மையில் மயங்கி தான் போனாள்....... தேங்க்ஸ் சித்தார்த்.... தேங்க் யூ சோ மச்......... என்னால இந்த நாளா என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள் என்கவும் .........

நிலா, I have a gift for u என்றவன் உள்ளே சென்று ஒரு கிளி குண்டு எடுத்து கொண்டு வர அதை அவளிடம் கொடுத்தான் .......... வாவ் சூப்பரா இருக்கு சித்தார்த் தேங்க்ஸ் அலோட் சித்தார்த் என்றாள் ........... நிலாவுக்கு அந்த கிளி மிகவும் பிடித்து விட்டது.........

சித்தார்த் உங்களுக்கு எப்படி தெரியும் இன்னைக்கு என் பர்த்டேனு என்கவும்......... உன் certificates கொடுத்தில அதுல பார்த்தேன் என்றான்........ அப்போ இன்னைக்கு காலையில வேணுமூணு தான என்னை காலையில திட்டி அழுக வச்சிங்க என்று கேட்கவும்...... அவன் சிரித்து கொண்டே, நான் சாதாரணமா தான் கேட்டேன் நீ அழுத்தத்துக்கு நான் பொறுப்பு இல்ல மா என்கவும் ........

என்ன சாதாரணமா கேட்டதே இப்படியா....... அப்போ கோவமா கேட்டுருந்தா என்றதும்....... சரி அத விடு, சாப்பிட்டியா என்று கேட்க...........சாப்பிட்டேன் சித்தார்த் ஆனா பசிக்குது என்று முகத்தை சுளித்து கொண்டு சொன்னவள்..... நாம எங்காவது வெளிய போய் சாப்பிடலாமா என்று கேட்டாள் .......

நான் வெளிய போயிருவேன் ஆனா நீ எப்படி வருவா என்று சித்தார்த் கேட்க........ அது ஒன்னும் பிரச்சனை இல்லை நான் எப்படி வந்தேனோ அப்படியே குதிச்சு அந்த பக்கம் போயிறேன்...... நீங்க கிழ வெயிட் பண்ணுங்க என்றாள்.........

நிலா நீ ஒன்னும் அப்படி எல்லாம் குதிச்சு வர வேணாம்...... எல்லாரும் இந்நேரத்துக்கு தூங்கிருப்பாங்க நம்ம நேராவே போய்காலம் வா என்று அழைத்து சென்றான்......... எங்கே அவங்க அம்மா வெளியவந்துருவங்களோ என்று அங்கும் இங்கும் பார்த்து கொண்டே அவளை அழைத்து சென்றவன்........ ஏன் டி சொந்த வீட்டுலே திருடன் மாதிரி போக வச்சுட்டியே டி என்றான் சித்தார்த்...........

அவன் அவளை டி என்று அழைத்த நொடியே தான் அவனுக்கு சொந்தம் ஆகிவிட்டது போல அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தவள்...........

அவன் கார் எடுக்க போக ஐயோ சித்தார்த் கார் வேணாம்....... பைக்ல போகலாமா ப்ளீஸ் என்று கேட்க ....... வேணாம் நிலா கார்லே போலாம் என்க ப்ளஸ் சித்தார்த் என்றதும்....... சரி என்றவன் வந்து அவன் பைக் எடுத்து அவளை அழைத்து செல்ல.........

நல்ல மழை அடித்து ஓய்ந்திருக்க.......... குளிர் காத்து வீசவும் நிலாவுக்கு குளிர் எடுக்க தூப்புடவை வைத்து பொத்தி கொள்ள ...........

என்ன குளிருத்த நிலா...... இதுக்கு தான் சொன்னேன் கார்லே போகலாம்னு கேட்டியா என்று சித்தார்த் கேட்டு கொண்டு வர......... அவனுடன் பைக்யில் வருவத்திலே உள்ளம் சந்தோஷத்தில் நிறைந்த்திருக்க........அவன் தன் மேல் காட்டும் அக்கறையில் மேலும் சந்தோசமாக இருக்க ............ நொடிக்கு நொடி அன்பு கூடி கொண்டே போவது போல் உணர்ந்தாள்.........

அவன் அவளை ஒரு பெரிய ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்து செல்ல....... சித்தார்த் இங்க வேணாம் நாம வேற என்று அவள் சொல்லி கூட முடிக்கவில்லை......... அதற்குள் வேணாம் நிலா அங்க எல்லாம் பசங்கள இருப்பாங்க நாம இங்கே சாப்பிடலாம் என்றான்..........

நிலாவிடம் என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்ய....... சித்தார்த் நீங்க சாப்பிடலையா என்றாள்....... எனக்கு வேணாம் என்றதும் சரி என்ன அவள் ஆர்டர் செய்த தோசை வரும் வரை காத்திருந்தவள் ...... தோசை வந்ததும், தோசையை பிட்டு அவனுக்கு ஊட்டி விட வேணாமுனு சொல்லாமல் அவனும் வாங்கி கொள்ள இருவரும் சாப்பிட்டு முடித்தனர் .......... மீண்டும் அவளின் விருப்ப படி பைக்யில் சுற்றி கொண்டு இருவரும் விட்டிருக்கு செல்ல மணி மூணு ஆகிவிட்டது..........அவன் அவளை வீட்டின் முன் இறக்கி விட மனமே இன்றி வீட்டிற்க்கு சென்றாள்.........

அடுத்த நாள் காலை விடிந்திருக்க, நிலா அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தாள்........ இன்று கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் தர வேண்டும்..... அந்த ப்ரெசென்ட்டேஷனை வைத்து எந்த கம்பனிக்கு தர வேணும் என்று முடிவு செய்வார்கள்........

நிலா கிளம்பி சித்தார்த் வர சொன்ன எடுத்திருக்கிக்கு செல்ல அங்கு அவளுக்கு முன்னே சித்தார்த் ரிஷி மற்றும் அரவிந்த் நின்று கொண்டிருந்தனர்......... மேலும் அங்கு நிறைய கம்பெனியிலும் வந்துருந்தனர்..........
நிலா வந்ததும் அவர்கள் உள்ளே செல்ல........

சித்தார்த் கம்பெனி செய்து வைத்த அதே ப்ரெசென்ட்டேஷனை வருண் தேவ் அவர்களுக்கு எடுத்து உரைத்து கொண்டிருக்க...........

அதை பார்த்த சித்தார்த், நிலா, ரிஷி மூவருக்குமே அதிர்ச்சியாக இருக்க......... சற்றுயென்று சித்தார்த் எழுந்து வெளியே சென்றுவிட....... அவனை தொடர்ந்து ரிஷி நிலா அரவிந்த் மூவரும் எழுந்து வெளியே சென்றவிட்டனர்..............

சித்தார்திருக்கு கோவத்தில் கண்கள் செவந்திருக்க...... அதை பார்த்த ரிஷி நிலா இருவருக்குமே உள்ளூகுள் நடுக்கம் எடுக்க.......... என்ன போய் பேசவாது என்று புரியாமல் நின்று கொண்டிருக்க...........

வருண் தேவ் அவர்களை நோக்கி வர......... அவனை கொலை வெறியுடன் நெருங்கிய சித்தார்த் எதுக்குடா எங்க ப்ரொஜெக்ட திருடுனயென்று அவன் கையை பின்னால் இழுத்து முறுக்க....... வலி எடுத்தாலும் அதை முகத்தில் காட்டி கொள்ளாமல்........

நான் எதுக்கு அண்ணா என்று அவன் எதோ சொல்ல வர...... அண்ணா என்று அவன் சொன்னதும் சித்தார்த் வெறி ஏற..... யாரு யாருக்கு டா அண்ணா என்று சித்தார்த் அவன் மூக்கிலே குத்த....... அதை பார்த்த நிலா பயத்தில் தன்னையும் அறியாமல் கத்திவிட...........

சித்தார்த்தை பார்த்து நக்கலாக சிரித்தபடி........ இந்த ப்ராஜெக்ட் பத்தி மட்டும் இல்லை உன் ஆபீஸ்ல என்ன நடந்தாலும் எனக்கு அப்டேட் பண்ண ஆளு இருகாங்க........ என்று நிலாவை பார்த்து கொண்டே வருண் தேவ் சொல்லிவிட்டு செல்ல .............

நிலாவுக்கு புரிந்தது வேணுமென்ட்றே அவள் தான் செய்தது போல சித்தரித்து விட்டு சென்று இருக்கிறான் என்று எங்கே சித்தார்த் இதை நம்பி விடுவானோ என்ற பயத்தில்.........

அவனிடம் தன்னை புரிய வைக்கும் எண்ணத்தில்......... அவனிடம், சித்தார்த் அவன் என்று அவள் சொல்ல வருவதை கூட காதில் வாங்காமல் வேகமாக செல்ல..........

அவனின் பின்னாலே சென்றவள் அவன் வேகத்துக்கு இடு கொடுக்க முடியாமல் போகவே முன்னால் செல்லும் அவனை நிக்க வைக்க எண்ணி அவன் கையை பிடிக்க .......... அவள் கையை பிடித்து வேகமாக உதறி தள்ள......... அதில் நிலை தடுமாதிரி கீழே விழுந்து விட்டாள் ........ சுற்றி இருக்கும் அத்தனை பேரும் அவளை பார்க்க.......

அவளை தூக்கி நிறுத்திவிட்டு நிலாவை பார்ப்பதா இல்லை சித்தார்த்தை பார்ப்பதா என்று தெரியாமல்........ நிலாவை பாவமாக பார்த்துவிட்டு சித்தார்த் பின்னாடி சென்றான்.........
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே -13

கம்பெனிக்கு சென்ற சித்தார்த் வெறி பிடித்தவன் போல கண்கள் எல்லாம் செவந்து போய் இருக்க..... எவ்வளவு தைரியம் இருக்கனும் நாம கம்பனிலே சம்பளம் வாங்கிட்டு நமக்கு எதிரா வேலை செய்றங்களா என்று அந்த மேஜை மேலே குத்தினான் சித்தார்த் ............. அவன் அருகே இருந்த ரிஷிக்கும் அதே அளவு கோவம் இருந்தது .......... சார் அந்த வருண் தேவ் பிளான் பண்ணி பன்னிருக்கான்...... அவனை எரிக்கும் பார்வை பார்த்த சித்தார்த் அந்த அளவுக்கு நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாத அளவு கவனமா வேலை செய்றோம் அப்படி தானே என்று கத்தவும் அந்த அறையை தாண்டியும் ஒலித்தது அவன் குரல் ......

ரிஷிக்கு பயத்தில் உள்ளுக்குள் நடுங்க என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நிற்க......... ஐ வாண்ட் அன்ஸ்சர் என்று சித்தார்த் கர்ஜிக்க........ அந்த நேரம் சரியாக கிருஷ் உள்ளே வர...... ரிஷிக்கு அப்போது தான் மூச்சே வந்தது ........

உள்ளே நுழைந்த கிருஷ்க்கு சித்தார்த் முகத்தை வைத்தே எதோ சரி இல்லை என்று தோன்ற.......... ரிஷியை நோக்கி என்ன ஆச்சு என்று கேட்க........ ஐயோ இவன் திரும்ப நமலைய மாட்டி விட்ருவான் போலவே என்று மனதில் எண்ணி கொண்டு பாவமாக கிரிஷை பார்க்க ......... அவனோ என்ன என்பது போல் ரிஷியிடம் கண்ணாலே கேட்க............ சார் கோவமாக இருகாங்க என்று ரிஷி சைகையில் சொல்ல....... அது தெரித்து ஏன் ரிஷி சத்தமாக கேட்க........

government ப்ராஜெக்ட்க்கு நம்ம ரெடி பன்னிருந்தத அதே டாக்குமெண்ட் வருண் தேவ் இன்னைக்கு ப்ரெசென்ட் பண்ணிட்டான் என்று ஒவ்வொரு வார்த்தையும் மென்னு முழிங்கி அவன் சொல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது ரிஷிக்கு.................. அதை கேட்ட கிருஷ் ஆத்திரம் அடைய......

சித்து நீ அவனை சும்மாவா விட்ட என்கவும் கிருஷ் விடு என்று சித்தார்த் சொல்லவும்........ இப்படி விடு விடுன்னு சொல்லி தான் சித்து அவன் இவ்வளவு தூரம் பன்னிட்டு இருக்கான் உனக்கு புரியலையா..........நம்ம விஷயத்துல தலையிடாத மாதிரி எதாவது பண்ணனும்....... இனிமே நம்மளை சீண்டணுமுன்னு நினைச்சு கூட அவன் பார்க்க கூடாது என்று கோவத்தில் பேசி கொண்டு போக........ சித்தார்த் சிரித்து கொண்டே ஒரு கப்பில் தண்ணீரை ஊற்றி கிருஷ்யிடம் கொடுத்தவன் ரிலாக்ஸ் கிருஷ் என்றான்.......

தண்ணீரை குடித்த பின்பும் அவன் ஆத்திரம் சிறிதும் குறைய வில்லை ....... ஆமா நம்ம ஆபீஸ்ல இருந்துட்டு அவனுக்கு யாரு ஹெல்ப் பண்ணுற என்று கிருஷ் கேட்கவும் ....... எனக்கு ஒரு டவுட் இருக்கு ஆனால் உறுதியா தெரிஞ்சதும் சொல்றேன்டா என்றான் சித்தார்த் ஒரு முறை நிலாவின் முகம் வந்து போக அதன் பின் அதை பற்றி யோசிக்க பிடிக்காமல் தலையை உலுக்கிவிட்டு வேறு வேலையை கவனிக்க ஆரம்பித்தான் ........... சரி நான் கிளம்புறேன் என்று கிருஷ் சொன்னதும்...... எதையும் போட்டு மனச குழப்பிக்காத நான் பாத்துக்குறேன் என்று சித்தார்த் சொல்லவும்........ சரி என்று வெளியில் சொன்னவன் அவன் நான் கண்டிப்பா சும்மா விட மாட்டேன் என்ன பன்னுரெய்னு பாரு என்று மனதில் எண்ணி கொண்டான் கிருஷ்............

***********************************

சித்தார்த் சென்று பின்னும் அவன் போன பாதையே வெறித்து பார்த்து கொண்டு நின்ற நிலாவிற்கு........... எல்லாரும் அவளையே பார்ப்பது போல தோன்ற உடனே அந்த இடத்தை விட்டு வெளியே வந்தவள் ........... அருகில் இருந்த கோவிலுக்கு சென்றாள்......... அங்கே சென்று அமர்ந்தவள் ஒரு மூச்சு அழுது தீர்க்க தேற்ற ஆள் இன்றி அழுதாள்..........

மனதில் சித்தார்த் பற்றிய நினைப்பு மட்டுமே ஓடி கொண்டிருக்க...... தினமும் என்னை அவமான படுத்தவில்லை என்றால் அவனுக்கு தூக்கமே வராது போல........... எவ்வளவு அவமான படுத்தினாலும் திரும்ப திரும்ப போய் அவன்கிட்ட நிக்குறேன்ல அந்த இளக்காரம் அவனுக்கு......... இவ்வளவு பெரிய நிருவாகத்தை நடுத்துறான்......... கொஞ்சம் கூட முளை இருக்கறவன் மாதிரியா யோசிக்குறான் அந்த வருண் தேவ் வந்து சொன்னதும் உடனே நான் தான் செஞ்சிருப்பேனு கொஞ்சம் கூட யோசிக்காம முடிவு பன்னிருவனா........ இனிமே அவன் மூஞ்சில கூட முழிக்க கூடாது என்று மனதில் அவனை திட்டி தீர்த்த பின்பே அழுகை குறைந்து காதல் மறைந்து அங்கு கோவம் மட்டும் நிறைந்து இருக்க........ நிலாவின் கோவம் தண்ணீரில் எழுதி வைத்தது போல் மறைந்து போகுமோ இல்லை கண்ணகியின் கோவம் போல தீ பிடித்து எரியுமோ.............. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..........

ஆனால் நிலாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்றாள் அது சித்தார்த்துடன் இருந்த நாட்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை அது மன காயங்களாக இருக்கட்டும், இல்லை காதலாக இருக்கட்டும் .......

முதல் முதலாக சித்தார்த்த்தை சந்தித்து முதல் இன்று வரை நடந்த அத்தனையும் நினைத்து பார்த்த நிலாவுக்கு கோவம் வருண் தேவ் மீதே திரும்பியது..........

தன் வாழ்க்கையே திருப்பி போட்ட அந்த நாள் மனதில் படமாக ஓடியது....... இளம் தொழில் அதிபர் விருது இந்த வருடம் சித்தார்திருக்கு வழங்க இருக்க அதை பற்றி எடிட்டர் அவளை ஒரு ஆர்டிகிள் போட சொல்லியிருந்தார் ....... சித்தார்த்தை பற்றி முழு விவரத்தையும் சேகரத்திவளுக்கு ஏனோ சித்தார்த்தை பார்த்த மாத்திரம் பிடித்துவிட்டது....... அவனை பற்றி தெரிந்து கொள்ளவே எல்லா விவரத்தையும் சேகரித்தாள்........... அன்று தான் வருண் தேவ் நிலாவை தேடி வந்தான்........

நிலா வேலை செய்து கொண்டிருக்க ஹாய் ஆர் யூ நிலா????? என்கவும் எஸ் நீங்க என்று நிலா கேட்கவும்......... நீங்க தான் சித்தார்த் ஆர்டிகிள் எழுதுறிங்களா என்கவும் ஆமா என்று நிலா தலையை மட்டும் ஆட்டி வைக்க சரி அதை பற்றி உங்ககிட்ட பேசணும் என்றான் வருண்........

முதல நீங்க யாருன்னு சொல்லுங்க சார் என்றாள் நிலா ........ சாரி ஐ அம் வருண் தேவ் நான் மினிஸ்டர் சுப்பிரமணியனின் மகன் என்கவும்....... சரி சொல்லுங்க என்றதும் ஒரு பேப்பரை நீட்டி இந்த கன்டென்ட் நாளைக்கு உங்க ஆர்டிகிள வரணும்......... அதை படித்து பார்த்த நிலா அதிர்ச்சியாக வருணை பார்க்க.........

நீங்க என்ன நினைக்குறிங்கனு தெரியுது எப்படி என்னை நம்புறதுனு தானே என்கவும்....... இல்லை இந்த மாதிரி நியூஸ் எல்லாம் எங்க பேப்பரில் போட மாட்டோம் என்று நிலா மறுக்க..........

ஓ நீங்களும் எல்லாரையும் மாதிரி தான் போல..... என் எல்லா ரிப்போர்ட்டரும் இப்படி பயந்து பயந்து இப்படி ஜால்ரா அடிக்குற நியூஸ் மட்டும் தான் போடுவீங்களா......... இல்லை உண்மையும் வெளி கொண்டு வருவீங்களா.......

செய்யற வேளைக்கு ஒரு நாளாவது உண்மையா இருங்க என்று அவன் எதோ எதோ சொல்லவே......

அவன் சொல்லுவதுலையும் உண்மை இருக்கவே....... ஏன் உண்மையை சொல்ல பயப்பட வேண்டும்........ ஆதாரம் இருக்கவே இதை போடுகிறோம்........ அந்த மன நிலையிலே அந்த ஆர்டிகிள் எழுதினாள் நிலா..............
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,
காதல் ரோஜாவே -13 போஸ்ட் பண்ணிருக்கேன் ரொம்ப சின்ன ud தான் படிச்சுட்டு எப்படி இருக்குனு மறக்க கமெண்ட் பண்ணுங்க மக்களே..........
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 14

அந்த ஆர்டிகிள் உண்மை வெளி கொண்டு வர வேண்டும் என்று எழுதும் போது ஒரு ரிப்போர்ட்டராக எழுதியவள்....... சித்தார்த் கம்பெனியில் சேர்ந்த பிறகு பல முறை அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் எத்தனை அவமானங்களை தேடி தந்திருக்கோம்...... அதுவும் அவன் அம்மா இதை படித்து எப்படி துடித்திருப்பர்....... இந்த பாவம் தன்னை சும்மா விடுமா.......... தன்னை மகள் போல் அல்லவா நடத்துகிறார்...... நான் தான் இப்படி எழுதினேன் என்று தெரிந்தால் கண்டிப்பாக தன்னை வெறுத்தே விடுவார் எண்ணும் போதே தூக்கம் தொண்டை அடைக்க.......... எழுந்து சென்று என் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ நான் நிறைய தவறு செய்து விட்டேன் அதை எப்படியாவது நீ தான் சரி செய்ய வேண்டும் என்று அழுது கொண்டே வேண்டி பாரத்தை கடுவுளிடம் போட்டவள்..... அவளுக்கு ஏனோ ஆபீஸ் செல்ல மனம் இல்லை.......தன்னை அங்கு ஒரு குற்றவாளி போல் நடத்தபடும் என்று நன்கு தெரிந்த பிறகு அங்கு செல்ல மனம் இல்லாமல்...... நேரே வீட்டுக்கு சென்று பின்பு சித்தார்த்யிடம் லீவு கோரி மெயில் அனுப்பிவிட்டாள்..........

அங்கு சித்தார்த் அன்று கோவெர்மென்ட் ப்ராஜெக்ட் நடந்த வீடியோவை போட்டு பார்த்தவனுக்கு யார் இதை செய்து இருப்பார் என்று ஏற்கனவே சந்தேகம் இருக்க இப்போது அதை பார்த்ததும் உறுதியாக தெரிய........

என்னை எதிர்க்க துணிந்து விட்டாயா...... உனக்கு இனி வாழ்க்கை இல்லாமல் பண்ணுகிறேன் பாரு ........ இந்த சித்தார்த் யார் என்று காட்டுகிறேன் பாரு என்று வன்மமாக எண்ணி கொண்டவன்........

நிலாவிடம் இருந்து மெயில் வரவும் அதை பார்த்துவிட்டு அதற்கு எதுவும் பதில் அளிக்காமல்........அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்..............

********************************

சச்சின் வீட்டில் அதற்கு பிறகு அவனை யாரும் கல்யாணம் ஏன் வேண்டாம் என்கிறாய் என்று எந்த காரணமும் கேட்கவும் இல்லை அதன் பிறகு வந்த இரண்டு நாட்களாக அவனிடம் சதாசிவமும் சாரதாவும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.......... சச்சினால் இந்த ஒதுக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்..........

தொடர்ந்து மூன்று ப்ராஜெக்ட் தோல்வி அடைந்து.... ப்ராஜெக்ட் அவன் கைவிட்டு செல்ல............ வாழ்க்கையிலும் தொழிலியையும் சேர்ந்து தோற்று விட்டோம் என்று மிகவும் உடைந்து விட்ட நிலையிலும் அவன் மனம் ஜனனியை தேடியது............

சச்சின் ஆபீஸ்யில், வேலையில் கவனத்தை செலுத்த முயற்ச்சி செய்து தோல்வி அடைந்தான்............ இதற்கு மேல் வேலை செய்ய முடியாது என்று தோன்ற....... காரில் ஒரு லாங் டிரைவ் சென்று வரலாம் என்று முடிவு செய்தவன் ...... காரை வேகமாக எடுத்து கொண்டு சென்றான்...........

ஜனனி அங்கு மால் அருகே தனியா நின்று கொண்டிருக்க இருக்க......... ஜனனி நீண்ட நாட்கள் பிறகு பார்த்ததில் சந்தோசமாக இருக்க இன்று அவளிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தவன் கார் பார்க் செய்துவிட்டு அவளை நோக்கி நடந்தான்.............

ஜனனி அங்கு அவள் தோழியின் கல்யாணத்திற்கு டிரஸ் எடுக்க வந்துருந்தாள்...... அங்கு சச்சினை சிறிதும் அவள் எதிர் பார்க்கவில்லை........... அவனை கண்டதும் முகத்தை திருப்பி கொள்ள........

ஜனனி என்ன தனியாவா வந்துருக்க உன்கூட யாரும் வரலையா???? எதுல வந்த ஜனனி என்று சச்சின் அடுக்கு அடுக்காக கேள்வி கேட்க........ ஜனனி அங்கு தன் அருகில் யாருமில்லை என்பது போல நின்று கொண்டிருக்க......... சச்சின் பொறுமையாகவே உன்கிட்ட தான ஜனனி கேக்குறேன்...... யாரு கூட வந்த என்று அவன் மீண்டும் அதையே கேட்க...........

ஒருவன் ஜனனி அருகே வந்து போலாமா ஜனனி என்று கேட்க ........ ஹ்ம்ம் போலாம் கெளதம் என்று பதில் அளித்து ஜனனியை கையை பற்றி நிறுக்க வைத்த சச்சின் நான் உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போற என்று பொறுமையை இழுத்து வைத்து கொண்டு அவன் கேட்க............

அவன் கையை பிடித்ததும், அவன் கையை விலக முயற்சி செய்ய அவன் பிடி இறுக்கி கொண்டே போனது..........சச்சின் அவள் முகத்தை பார்த்து கொண்டே நிற்க.......... ஜனனியின் நண்பன் கெளதம் முன் வந்து சார் அவ கையை விடுங்க என்று சொல்ல........ ஜனனி நான் உன்கிட்ட பேசாம இங்க இருந்து உன்னை போக விட மாட்டேன் என்று பதில் மட்டும் ஜனனிக்கு சொன்னவன் ....... ஜஸ்ட் டென் மினிட்ஸ் ஜனனி உன்கிட்ட பேசணும் ப்ளீஸ் என்றான் சச்சின் ............

உங்ககிட்ட பேச எனக்கு எதுவுமில்லை கையை விடுங்க என்று வேறு புறம் பார்த்து கொண்டு அவள் சொல்ல.......... அதான் சொல்லிட்டாள கையை விடுங்க என்று கெளதம் சொல்ல............. அதை சிறிதும் கொண்டு கொள்ளாமல் ஜனனி எதுவாக இருந்தாலும் என்னை பார்த்து சொல்லு என்று சச்சின் ஜனனியை பார்த்து கொண்டே சொல்ல...........

கெளதம் ஜனனி கையில் இருந்து சச்சினின் கையை விலக முயற்சி செய்ய அதில் பொறுமை இழந்த சச்சின் எங்க ரெண்டு பேருக்கு நடுவுல வராத என்று அவனிடம் கடுமையாக சொல்ல..........

முதல அவ கையை விடுடா என்று சச்சினை பிடித்து தள்ள....... சச்சினுக்கோ கிடைத்த சந்தர்ப்பத்தில் ஜனனியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று மட்டுமே தோன்ற தேவை இல்லாமல் இவனிடம் சண்டை போட்டு வீணடிக்க விரும்பாமல்........ ஜனனி ஒரு பத்து நிமிஷம் எனக்காக ஒதுக்க கூடாதா ப்ளீஸ் உன் கையை நான் என்னைக்குமே விட மாட்டேன் என்றதும் ....................

எனக்கு உங்கள பாக்கவே எனக்கு அருவெறுப்ப இருக்கு....... வேறு பொண்ணுனோட நிச்சியம் பன்னிட்டு எப்படி இப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம என் கையை விட மட்டேய்னு சொல்லுறீங்க.............. என்னை மட்டும் ஏமாத்துனீங்கனு பார்த்த அந்த பொண்ணுகிட்டவும் உண்மையா இருக்க மாட்டீங்க போலவே என்று ஜனனி பேசி கொண்டு போக அதில் சச்சின் அவள் சொன்ன வார்த்தையில் அடிபட்டு தான் போனான் ...........

ஜனனி ப்ளீஸ் முதல நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதுக்கு அப்புறம் நீ எவ்வளவு வேணாலும் திட்டு நான் வாங்கிக்குறேன் ஆனா நீ எனக்கு பேச கூட சந்தர்ப்பம் தர மாட்டேங்குற என்று சச்சின் கேட்க ...........

பொறுக்கிங்க கூட எல்லாம் என்னால பேச முடியாது என்று சொன்ன அடுத்த நொடி அவள் கையை விட்டவன்....... ஜனனி என்ன சொன்ன நான் பொறுக்கிய நான் பொறுக்கிய என்று மீண்டும் அவளிடம் கேட்க.........

ஆமா ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையில் விளையாடிட்டு......... என்னை விட்டுட்டு அப்படி சொல்லியும் இப்படி நடு ரோடுல கையை பிடிச்ச இண்டீசென்ட்டா நடந்துக்குறவங்கள பொறுக்கி தான் சொல்லுவாங்க என்று ஜனனி கத்தவும் ...........

சச்சினுக்கு அதற்கு மேல் அங்கு நின்றால் அவள் பேசும் வார்த்தை தன்னை உயிரோட கொன்று விடும் என்று தோன்றவே அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்....... எங்கே செல்கிறோம் என்ற இலக்கு தெரியாமல் காரை ஒட்டி கொண்டு வெகு நேரம் சென்றவன் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு கிலே இறங்கியவன்.............

ரோட்டில் அமர்ந்தவாறு ஜனனி சொன்னதை திரும்ப திரும்ப அவன் மனதில் ஓடி கொண்டிருந்தது............ என் முகத்தை பார்க்க அருவெறுப்பாக இருக்கிறதா ........... அவள் தன்னுடையவள் என்று உரிமையில் தானே அவள் கையை பிடித்தேன் என்னை பொறுக்கி என்று சொல்லி விட்டாள் என்று அவள் ஒரு முறை சொன்னதை இவன் பல முறை எண்ணி மனதை ரணம் ஆகி கொண்டான் சச்சின்..............

தனக்கு என்று யாருமில்லை என்பது போல இருந்தது......... மணி இரவு இரண்டை தாண்டியும் இவன் வீட்டில் இருந்து எங்கே இருக்கிறாய் ஏன் இன்னும் வரவில்லை என்று யாரும் கேட்கவில்லை....... அவளோ முகத்தை பார்க்கவே அருவெறுப்பாக இருக்கு என்கிறாள்........ ஒரு நிமிடம் எங்காவது சென்று விடலாமா என்று தோன்றியது சச்சினுக்கு .......

*****************************************

நிலாவிற்கு கிளம்பி ஆபீஸ் செல்ல ...... இன்று ஏனோ நிலாவிற்கு முதல் நாள் போல இருந்தது........ முதல் நாள் இந்த ஆபீஸ்க்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் அவள் அன்று வந்தது போல் இன்றும் அவளுக்கு வரவே விருப்பம் இல்லை...........

நிலா அவள் இடத்தில் அமர்ந்ததும் எல்லாரும் நிலாவை பார்த்து ஒரு மாதிரியாக பேச...... சிலர் அவள் காது படவே சத்தமாகவும் பேசினர்......... எப்படி தான் இப்படி வேலை செய்ற இடத்துக்கே தூரோகம் பண்ணிட்டு இப்படி எதுவும் தெரியாதவங்க போல முகத்தை வச்சுக்குறாங்கலோ என்று எல்லாரும் அவளை பற்றியே பேச.......... நிலா எதையும் கண்டு கொள்ளாதது போல் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் .............

கோவெர்மென்ட் ப்ராஜெக்ட் டீம் மெம்பெர்ஸ்க்கு பத்து மணிக்கு சித்தார்த் சாருடன் மீட்டிங் என்று சொல்லவும்......... நிலாவிற்கு நடுங்க ஆரம்பித்து விட்டது......... இன்று அவன் தன்னை சும்மா விடுமாட்டான் என்று தெரிய மிகவும் பயந்து போயிருந்தாள்...........

எல்லோரும் மீட்டிங் ஹாலுக்கு செல்ல நிலாவும் அங்கே சென்றாள்............ அங்கே
வினோத், பிரியா, திவ்யா, ஆகாஷ், அரவிந்த் , நிலா அனைவரும் சித்தார்த்திற்கு எதிர்பார்த்து அமர்ந்திருக்க.... நிலா நிலைமை தான் மிகவும் மோசமாக இருந்தது.........

சித்தார்த் உள்ளே நுழையந்த அடுத்த நொடி நிலாவை பார்த்து உங்களை யாரு இங்க வர சொன்ன என்று சித்தார்த் கேட்கவும்....... நீங்க இல்லை உங்களை மீட்டிங் என்று பயத்தில் நிலா உளறி கொண்டிருக்க you are no more in this team......... ask her to get out of her என்று என்று நிலாவிடம் ஆரம்பித்து ரிஷியை பார்த்து அந்த அறையே எதிரொலிக்கும் அளவுக்கு கத்தவும்........ ரிஷி நிலாவை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.............

ரிஷிக்கு நிலாவை பார்க்க பாவமாக இருந்தது......... இதை எதிர்பார்த்து தான் வந்தாள் என்றாலும் அவளால் இப்படி தினம் தினம் அவமான படுவதை தாங்கி கொள்ள முடியவில்லை...........

சித்தார்த் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு......... இந்த கோவெர்மென்ட் ப்ராஜெக்ட் எப்படி வருண் தேவ் கிட்ட போச்சுன்னு நீங்க நினைக்குறிங்க என்று கேட்கவும்.......... நிலா தான் சார் காரணம் என்று திவ்யா சொல்லவும் ........ அவளை தொடர்ந்து எல்லாரும் நிலா பெயரையே சொல்ல.........

அரவிந்தை கேட்க அவனும் நிலா தான் சார் காரணம் என்று தைரியமாக சொல்ல........ அப்போ அதுக்கு நீங்க காரணமில்லை அப்படி தானே என்று கேட்க அதில் சற்று தடுமாடியவன் சார் என்று புரியாமல் விழிக்க.........

Is my voice is audible என்று கேட்க அனைவரும் எஸ் சார் என்க........... சொல்லுங்க அரவிந்த் என்க அந்த ஏசி அறையிலும் அவனுக்கு வேர்க்க அவனை ஓரு மாதிரி பார்த்து கொண்டே others may leave என்றான் சித்தார்த் ............ வெளியில் வந்தவர்கள் நிலாவிடம் உள்ளே நடந்ததை பகிர்ந்து கொண்டு காலையில் அப்படி பேசியதற்கும் மன்னிப்பு வேண்டினர்............

அவர்கள் சென்ற அடுத்த நொடி அவன் சட்டை காலோரை பிடித்து அவனை தூக்கியவன்......... how dare you to do this என்று அவன் உறும........

சார் சாரி சார் எதோ தெரியாம பண்ணிட்டேன் சார் என்று அரவிந்த் கெஞ்ச........... இனி உனக்கு பியூச்சரே இல்லாம செய்றேன் பாரு............ அப்போ தான் அடுத்த இந்த மாதிரி பண்ணவே எல்லாம் பயப்பட்டவங்க என்றதும்.........

சார் இந்த ஒரு தடவ மட்டும் மன்னிச்சுருங்க சார் ப்ளீஸ் என்று அவன் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டியவனை எட்டி உதைத்தவன்........... அவனை இனி எங்கும் வேலை செய்ய முடியாத மாதிரி செய்தவன் அவனை போலீஸ்யிடம் ஹாண்ட் ஓவர் செய்தவன் வருண் தேவ் மீதும் கம்பளைண்ட் கொடுத்தான் சித்தார்த் ...........

மதியத்திற்கு மேல் நிலாவை தன் அறைக்கு அழைத்தான் சித்தார்த்............ அனுமதி கேட்டு உள்ளே சென்றவளை அமருமாறு சைகை செய்தவன்........ கணினிக்குள் ஏதோயோ பார்த்து கொண்டிருந்தான்.......... பியூன் சித்தார்த்க்கு காபி வைத்து விட்டு செல்ல அதை எடுத்து கொண்டு நிலா அருகே சென்றவன் மேஜை மீது சாய்ந்து அமர்ந்தவாறு காபியை குடிக்க.............

அதை நிலா என்ன ஸ்டைலலா இருக்கான்லா என்று மனதில் தோன்ற ச்சை உனக்கு வெட்கமேவே இல்லையா நீ எல்லாம் என்ன ஜென்மமோ அவன் இவ்வளவு அசிங்க படுத்தியும் அவனையே ரசிக்குற என்று தன்னை தானே திட்டி கொண்டவள்......... அவனை பார்க்க......யார கேட்டு நேத்து லீவு போட்டீங்க என்று கேட்கவும்........

சார் நான் தான் உங்களுக்கு மெயில் அனுபிரிந்தனே.......... நான் நீங்க இன்போர்ம் பண்ணதை பற்றி கேட்கல யாரு கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்டீங்கனு கேட்டேன் என்று அவன் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு கேட்டாலும் வார்த்தைகள் மிகவும் அழுத்தமாக வந்து விழுந்தது............

சாரி சார் என்றதும் திஸ் ஸ் தி லாஸ்ட் வார்னிங் போர் யூ நிலா இதுக்கு மேல என்கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்காம பண்ணனும்னு நீங்க நினைச்ச தண்டனை வேற மாதிரி இருக்கும் என்று கடுமையாக சொல்ல............ சாரி சார் என்று கீழே பார்த்து கொண்டு சொல்ல...........

நிலா இனிமேல் நீங்க 2 ஷிபிட் ஒர்க் பண்ணுற மாதிரி வரும்............. 1st ஷிபிட் எப்போவும் போல தான் காலை 8 மணி முதல் 7 மணி வரை அது வரை ஆபீஸ் ஒர்க் செய்ய வேண்டி வரும் அடுத்த ஷிபிட் டௌர்ன்மெண்ட்காக என்று அவன் சொல்லவும்............

அப்போ நான் எப்ப வீட்டுக்கு போறது என்று நிலா கேட்க நீங்க ஒர்க் முடிச்சதும் கிளம்பிரலாம் என்றான்............. அப்போ நான் வீட்டுக்கு போன மாதிரி தான் என்று எண்ணி கொண்டவள் ஆமா அந்த வீட்டுல மட்டும் யாரு இருக்க சீக்கரம் போக என்று தோன்ற சரி என்று சம்மதித்தாள்.............

Then i'm sorry for hurting you nila........அவன் எதற்கு சாரி சொல்லுகிறான் என்று புரிந்தது நிலாவிற்கு......... உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா சார் என்றாள் தயங்கிய படி.......... அவன் அவளையே பார்த்து கொண்டிருக்க........ என்மேல உங்களுக்கு எப்போவும் நம்பிக்கை வராத சித்தார்த்.......... நான் எப்படி இப்படி செய்வேய்னு நீங்க நினைச்சீங்க.......நீங்க என்னை இவ்வளவு கேவலமா நினைச்சுட்டீங்கள சித்தார்த்........ என்று கேட்டு கொண்டே நிலா அழுக.......

அந்நேரம் ஒரு பெண் அனுமதி கேட்டு உள்ளே வர............ சார் சைன் வேணும் என்று வந்து நிக்க அவன் மேஜை மீது சாய்ந்தவறே அதை செக் செய்து கொண்டிருக்க........... அந்த பெண் நிலாவை ஒரு மாதிரியாக பார்க்க.........நிலா அதை சற்றும் கண்டு கொள்ளாமல் மேஜை மீது இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டிருந்தாள்.............

அவள் செய்கையை பார்த்த சித்தார்த் கண்களால் சிரித்தபடி அதை செக் செய்து விட்டு சைன் செய்தவன் இதோட soft copy எனக்கு மெயில் பண்ணிருங்க என்றவன் நீங்க கிளம்பலாம் என்றான்............

அந்த பெண் போவதற்காகவே காத்திருந்த நிலா அவள் சென்றதும்.......... பதில் சொல்லுங்க சித்தார்த்........ இப்படி நம்பிக்கையும் மரியாதையும் இல்லாத எடத்துல நான் எதுக்கு வேலை பார்க்கணும்....... நாளைக்கே வேற எதாவதுனாலும் நீங்க என்னை தான சொல்லுவீங்க என்று கேட்டு கொண்டே அவள் அழுக............ சித்தார்த் தன் கைக்குட்டை எடுத்து அவள் கண்ணீரை துடைத்தவன்............

நிலா எனக்கு உன்மேல எந்த சந்தேகமும் இல்லை........ நீ இதை செஞ்சுருக்க மாடெய்னு எனக்கு நல்ல தெரியும் நிலா........ உனக்கு தான் என் மேல நம்பிக்கை இல்லை போலவே என்றவன் ஒரு புருவத்தை உயர்த்தி கேட்க.........அவள் என்ன சொல்லுவது என்று புரியாமல் விழிக்க......... ஆனா நான் உண்னை ஹுர்ட் பண்ணுனதுக்கு சாரி என்றான்................


******************************************

ஜனனி வேலையை முடித்துவிட்டு நேராக சித்தார்த் வீட்டிற்கு செல்ல........... ஜனனி அமைதியாக உள்ளே வருவதை பார்த்த ரேவதிக்கு ஆச்சரியமாக இருந்தது......... எப்போதும் வீட்டுக்கு வரும் போதும் அம்மா அம்மா என்று கத்தி கொண்டே உள்ளே நுழையும் ஜனனி இன்று அமைதியாக வர.........

என்ன ஜனனி என்ன ஆச்சு எதாவது உடம்புக்கு முடியலையா என்று ரேவதி பதட்டத்துடன் கேட்க......... அது எல்லாம் ஒன்னும் இல்லமா நான் நல்ல தான் இருக்கேன்.......... மூஞ்ச எல்லாம் வாடி போயிருக்கு எதாவது பிரச்சனையா அம்மா கிட்ட உண்மை சொல்லு என்று கேட்க............

ஐயோ அம்மா அது எல்லாம் ஒன்னும் இல்ல ஒரு மனுஷி அமைதியா இருக்க கூடுதே இப்படி ஓயாம கேள்வி கேட்குறீங்க........ இவ்வளவு கேட்டிங்களே பசிக்குதான்னு கேட்டீங்களா என்றதும்....... பசிக்குதா ஜனனி வா நான் உனக்கு சூடு எதாவது செஞ்சு தரேன் என்று சொல்லிவிட்டு ரேவதி செல்ல......... கிருஷ் சமாளித்து விட்டாயா என்பது போல ஒரு பார்வை பார்க்க......... அவளோ டிவி ஆன் செய்து விட்டு அதை பார்த்து கொண்டிருந்தாள்...........

சற்று நேரத்தில் ரேவதி பூரி செய்து கொண்டு வந்து கொடுக்க....... மூன்று பூரிக்கு மேல் சாப்பிட முடியாமல் இருக்க ரேவதி கட்டாயப்படுத்தி மேலும் இரண்டு பூரிகளை சாப்பிட வைத்தார்.............

அங்கு சாராத வரவும் வாங்க அண்ணி என்று ரேவதியும் வாங்க அத்தை என்று கிருஷ்யும் ஜனனியும் அழைக்க.......... சாராத பொதுவாக தலை அசைத்தவர் சோபாவில் அமர.........

என்ன அண்ணி கல்யாண வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு....... எப்போ நம்ம புடவை எடுக்க போறதுன்னு பொண்ணு வீட்டுல கேட்டீங்களா என்று கேட்க............

சாரதாவுக்கு கண் கலங்கி விட கல்யாணம் நிறுத்துற வேலை எல்லாம் நல்ல போய்ட்டு இருக்கு ரேவதி என்றார் ......... அங்கு இருக்கிற மூவருக்குமே அதிர்ச்சி தான்....... ரேவதி நம்ப முடியாமல் மீண்டும் என்ன அண்ணி சொல்லுறீங்க என்று கேட்க............

என்ன ரேவதி சொல்ல என்ன நடக்குதுனே எனக்கு புரியல.............. சச்சின் நிச்சயம் பணத்துலருந்து யாரு கிட்டவும் பேசாம ஒரு மாதிரியவே இருக்கான்........ என்னடா ஆச்சுன்னு கூப்பிட்டு கேட்ட இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் நிறுத்திடாங்கனு சொல்லுறன்........... அப்பறம் பிரச்சனையாகி அவர் சச்சின் மேல கைய வச்சுட்டாரு.............

ஐயோ என்ன அண்ணி சொல்லுறீங்க சச்சின் எதுக்கு வேணாம்னு சொல்லுறான்........ சச்சின் எதையுமே சொல்ல மாட்டேங்குறான் ரேவதி கல்யாணம் வேணாம் என்னை கல்யாணம் பண்ணி அந்த பொண்ணோடா வாழ்க்கை கெடுத்துறாதீங்கனு சொல்லுறான் என்கவும்..........

அதற்கு அண்ணா என்ன சொன்னாங்க அண்ணி என்க பொண்ணு வீட்டுல வெளி ஊர் போயிருக்காங்களாம் வந்ததும் நேருல பார்த்து விஷயத்தை சொல்லலாம்னு இருக்கார் என்று சாராத சொல்லவும் ............

என்ன அண்ணி சச்சின்கிட்ட பேசி பாக்கலாம்ல என்கவும்......... எவ்வளவு தடவ கேட்க எதுவுமே சொல்ல மாட்டேங்குறான்...... அவன் மனசுல என்ன நினைக்குறானே தெரியல ரேவதி......... அவன்கிட்ட பேசியே ரெண்டு நாள் ஆகிருச்சு நேத்து நைட் வீட்டுக்கு கூட வரல என்றதும் .............

ஜனனிக்கு நேற்று அவன் தன்னிடம் எப்படி வந்து கெஞ்சினான் பத்து நிமிடம் பேச வேண்டும் என்றானே ........ என்ன என்று கேட்டுருக்க வேண்டும்....... அவனிடம் கோபப்பட்டு என்னவெல்லாம் பேசி விட்டோம்.......... நேற்று தன் செய்யலை எண்ணி தன் மேலே கோவம் திரும்பியது ஜனனிக்கு....... சற்றும் தாமதிக்காமல் போனை எடுத்து கொண்டு வெளியே சென்று அவனுக்கு கால் செய்ய போன் சுவிட்ச் ஆப் என்று சொல்லவே நொந்து போனாள்.................
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,
காதல் ரோஜாவே -14 போஸ்ட் பண்ணிருக்கேன் படிச்சுட்டு எப்படி இருக்குனு மறக்க கமெண்ட் பண்ணுங்க மக்களே.......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 15

ஜனனிக்கு சாரதா சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சி தான் ஒரு வேலை சச்சின் அத்தான் நேற்று இதை தான் சொல்ல வந்தார்களோ என்று நினைக்கும் பொழுதே மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி பரவியது................

சிறு வயதில் இருந்தே சச்சின் என்றால் ஜனனிக்கு மிகவும் பிடிக்கும்......... அவன் படிப்பதற்கு வெளி நடு சென்று போது தான் முதல் முதலில் பிடித்தம் , காதலாக மாறியதை இருவரும் உணர்ந்த தருணம்......... அப்போது இருந்து இருவரும் காதலை சொல்லி கொள்ளவில்லையே தவிர அதை உணர்த்த தவற வில்லை.......... ஏனோ இன்னோரு பெண்ணுடன் தன்னவனை என்று நினைத்து கூட பார்க்க முடியாமல் இத்தனை நாள் அனுபவித்த மன வலி ஒரே நொடியில் நீங்கியது போல் உணர்ந்தாள் ஜனனி..........

உடனே சச்சின் கூட பேசிய ஆக வேண்டும் என்று தோன்ற மீண்டும் சச்சினுக்கு முயற்சித்தும் அது சுவிட்ச் ஆப் என்று சொன்னதே சொல்லி கொண்டிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளே சென்றாள் ..........

*******************************

சச்சின் தன் கவனத்தை முழுவதாக வேலையில் செலுத்தினான் கிட்டதட்ட ஒரு வரமாக தன் கம்பெனி பணிகளை செய்ய தவறு விட்டதால்......... வேலை அதிகமாக இருக்கவே எதை பற்றியும் சிந்திக்க நேரம் இன்றி வேலையில் முழுகினான் .......... அந்நேரம் சரியாக அவனின் லேண்ட் லயன் ஒலிக்க அதை எடுத்ததும் மறு முனையில் வரவேற்பில் இருந்து அழைத்து ngmn கம்பெனி MD, Mr.சித்தார்த் வந்திருக்கிறார் என்று சொன்னதும் ஏகத்துக்கும் கடுப்பானவன்.......... வர சொல்லுங்க என்று மட்டும் சொல்லி போனை வைத்தான்..................

சச்சின் சரியான கோபத்துடன் அமர்ந்திருக்க உள்ளே நுழைந்தான் சித்தார்த்.......... சச்சின் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க..... சித்தார்த் முதலில் ஆரம்பித்தான்........... இதுவரைக்கும் கம்பெனி ப்ரோமோஷன்ஸ் ஒன்ன தான் பன்னிருக்கோம் இந்த வருஷம் புட்பால் டௌர்ன்மெண்ட் நடத்தலாம் என்று இருக்கிறேன் என்று நிறுத்தி சச்சினின் பதிலுக்காக காத்திருக்க .......ஓ அப்படியா...... பண்ணலாம் எங்க கம்பெனி சைடுல இருந்து என்ன பண்ணனுமுனு சொல்லுங்க என்றான் சச்சின்............

என்ன ஆச்சு சச்சின் உனக்கு ?????? நம்ம எல்லாம் ஒரே குடும்பம் இதுல உன்னோடது என்னோடதுனு என்ற பேச்சை இப்போ தான் முதல் தடவையா கேட்குறேன் என்று சித்தார்த் அழுத்தத்தை கூட்டி சொல்ல............. நானும் அப்படிதான் நினைச்சேன் சித்தார்த்........ நீ ngmn கம்பெனி md அப்படினு அனுமதி கேட்டு உள்ளே வரதுக்கு முன்னாடி வரைக்கும் நானும் அப்படிதான் நினைச்சேன் என்றான் சச்சின் கோபத்துடன் .............

சச்சினின் கோவம் புரிய...... ஒரு புன்முறுவலுடன் நான் உன்னை பார்க்க யாருகிட்டவும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்ல......... நைட் லேட் ஆகிருச்சுல அதான் நீ ஆபீஸ்ல இருந்து கிளம்பிருப்பியோனு ஒரு சந்தேகம் அதுனால தான் வரவேற்புல நீ இருக்கியான்னு கேட்டேன் என்று தன் தாடியை தடவிய படி..... ஓ சாருக்கு இந்த நினைப்பு வேறு இருக்கோ என்று சித்தார்த் கேட்கவும் சச்சினின் கோவம் இருந்த இடம் தெரியாம காணாமல் போகவும் புன்னகைத்தான் ...........

சச்சின் கொஞ்சம் வெளிய போலாம் வா என்று சித்தார்த் அழைக்க......... ஐயோ நிறைய வேலை இருக்கு சித்து ரொம்ப நாளா பெண்டிங்ல இருக்கு என்று சச்சின் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே....... சரி நீ முடிச்சுட்டு வா நான் கார்லா வெயிட் பண்றேன் என்று சொல்லிவிட்டு சித்தார்த் வெளியே செல்ல.........வேறு வழியின்றி பின் தொடர்ந்தான் சச்சின் ............

சச்சின் காரில் ஏறியதும் கார் அதிவேகம் எடுக்க....... அதைவிட வேகமாக சச்சினின் மனதில் எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தது........ சித்தார்த் தன்னை கேள்விகளால் தொலைத்து எடுக்க நேரிடும் என்று அறிந்தவன் சற்று படபடப்பாகவே உணர்ந்தான்...........

அவனவன் தப்பு பன்னி பயப்புடுறன் ஆனா உலகத்திலே எந்த தப்பும் பண்ணாம எல்லாத்தியும் அனுபவிக்குறது நானா மட்டும் தான்டா இருப்பேன் போல எல்லாம் என் ராசி அப்படி என்று மனதில் நொந்தவன்...... இன்னைக்கு என்ன ஆனாலும் பாத்துரலாம் என்று எண்ணி கொண்டிருக்கும் பொழுதே காரை பீச்யில் நிறுத்த ......... இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர் .............

சித்தார்த் சச்சினை அழுத்தமாக பார்த்த படியே what's happening சச்சின் ????? ஏன் கல்யாணத்த ஸ்டாப் பண்ணுன???? என்று கேட்க............

நான் ஜனனியை லவ் பண்றேன்...... அவளை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன் அதான் என்றான் சச்சின் நிதானமாக............

அப்புறம் நிச்சயம் வரைக்கும் போய் கல்யாணத்தை நிறுத்தி தான் ஜனனியை லவ் பன்னுரெய்னு சொல்ல வேண்டிய அவசியம் என்ன???? என்று சற்று காட்டமாகவே சித்தார்த் கேட்க .........

என்ன சித்தார்த் தெரிஞ்சுக்கணும் உனக்கு...... நான் ஜனனியை லவ் பண்றேன்...... உங்க எல்லார்கிட்டையும் சொல்லி அவள் கை பிடிக்கணும்னு நினைச்சேன்...... ஆனா நானே எதிர்பார்க்காத நேரத்துல ஜனனியே எனக்கு ப்ரொபோஸ் பண்ணுன.......... அன்னைக்கு உலகத்துல என்னை விட சந்தோசமானவங்க யாரும் இருக்க முடியாது....... அப்புறம் அம்மா என்கிட்ட கல்யாணம் பத்தி பேசுனாங்க........ உனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு தாணு சொன்னதுமே , அவங்க ஜனனியை தான் சொல்லுறாங்கனு நினைச்சேன்.......... நிச்சயம் அப்போ தான் அம்மா சுபத்ராவா சொல்லிருக்காங்கனு தெரியுஞ்சுது.......... ஆனா அப்போ இருந்து உன் தங்கச்சி கிட்ட சொல்லி புரிய வைக்கனுமுனு எவ்வளவு முயற்சி பண்ணியும் ஒரு தடவ கூட அவ என்னை பேச விடவே இல்ல......... சம்மந்தமே இல்லாம எந்த தப்பும் பண்ணாத சுபத்ரா வாழ்க்கை வேற பாதிக்க படுத்துறோமுன்னு என் மனசாட்சியே என்னை ஒரு பக்கம் கொல்லுதுன்னா இதுல எங்க அம்மா அப்பா வேற என்னை ஒதுக்குறாங்க சரி ஜனனிக்கு புரிய வைக்கலாமுன்னு நினைச்சா அவளுக்கு என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை......... நான் பொறுக்கியாம் எவ்வளவு உயர்வான அவிபரயம் பாரு உன் தங்கச்சிக்கு என்று சச்சின் ஒரு கசப்பான புன்னகை சிந்த.................

சச்சின் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக இருந்த சித்தார்த் ......... சரி அடுத்து என்ன பன்னலாமுன்னு இருக்க என்று சித்தார்த் அடுத்த கேள்வியை முன் வைக்க...........

எனக்கே தெரியாம தப்பு பண்ணிட்டேன் ஆனா அதுக்காக அம்மா அப்பா ஜனனி எல்லாரும் ஒரே சமயத்துல என்னை வெறுத்து ஒதுக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு மச்சான்........... என்று அவன் சொன்னதும் அவன் கையை ஆதரவாக பற்றிய சித்தார்த்...........

உன்னோட பர்சனல் லைப் எப்போவும் உன்னோட கம்பெனியை பாதிக்க கூடாது சச்சின் ........... இந்த பிரச்சனையை எல்லாம் விட்டுட்டு தொழிலை பாரு என்று கண்டிப்பான குரலில் கூறியவன் ....... நீ கொஞ்சம் நாள் நம்ம வீட்டுக்கு வந்து இரு....... கிரிஷ் இருக்கான் சோ உனக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும் என்று ஒரு தோழனாக அறிவுறுத்தவும் தவறுவில்லை............

இல்லை மச்சான் அம்மா என்று சச்சின் ஆரம்பிக்கும் போதே........ நான் மாமா கிட்டவும் அத்தை கிட்டவும் பேசுறேன் என்றவன் ......... இதற்கு மேல் இதை பற்றி பேச எதுவுமில்லை என்பது போல் சரி நேரம் ஆச்சு போலாமா என்றான் சித்தார்த்...........

இதுதான் சித்தார்த்....... கிரிஷ் கால் செய்து விஷயத்தை சொன்ன அடுத்த நொடி சச்சினை சந்திக்க கிளப்பிவிட்டான்......... அவன் எவ்வளவு பெரிய பிஸ்ஸின்ஸ் மேன் என்றாலும்........ தன் குடும்பத்தின் முத்த மகனாக அவனின் கடமையை செய்ய என்றுமே தவறியதில்லை ..............

இருவரும் வீட்டுக்கு செல்ல....... ஏனோ வரும் பொழுது மனதில் இருந்த கணம் குறைவது போல் உணர்ந்தான் சச்சின் ........... சித்தார்த் சொன்னது போல் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணி கொண்டான்.............

காரில் செல்லும் போதே சித்தார்த் அவனின் அத்தை சாரதாவிற்கு கால் செய்தான்....... அத்தை சச்சின் என்கூட கொஞ்ச நாள் இருக்கட்டும் என்றதுமே........ இனி சித்தார்த் பார்த்து கொள்வான் என்று நம்பிக்கையுடன் சரி சித்து என்று போனை வைத்தார்.............

***************----------------------------**********

நிலாவிற்கு வேலை அதிகமாகயிருந்தது நேற்று விடுப்பு எடுத்தால் பெண்டிங் ஒர்க் வேற சேர்ந்து கொள்ள........ முடிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தாள்............

நிலா வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்த ரிஷி என்ன நிலா மணி 7:30 ஆகிருச்சு இன்னும் நீங்க கிளம்பாளைய என்று ரிஷி கேட்டான் ..........

இல்லை சார் வேலை இன்னும் முடியல அதான் என்று நிலா பதிலளிக்க.........

சொன்ன நேரத்துக்கு வேலை முடிச்சு பழக்கமே இல்லையா என்று ரிஷி நக்கலாக சிரித்தபடி கேட்க........

நிலாவிற்கு முகம் மாறுவதை உணர்ந்த ரிஷி....... ஐயோ சாரி நிலா நான் எதோ விளையாட்டா சொன்னேன் அத போய் சீரியசா எடுத்துகுறீங்க என்று ரிஷி வருதபடவும்........
அதுக்கு இல்ல.

சித்தார்த் சார்....... இன்னைக்கு குள்ள முடிச்சு மெயில் அனுப்ப சொல்லிருங்க....... சரியா லாக் ஆகிட்டேன் கண்டிப்பா இன்னைக்கு நைட் முழுக்க பன்ணுனாலும் வேலை முடிக்க முடியாது போல என்று பேசி கொண்டே வேலையை தொடர..........

நிலா நீங்க இப்போவே சார் கிட்ட டைம் கேட்டு மெயில் பண்ணிருங்க........ சார் கூப்பிட்டு கேட்டதுக்கு அப்புறம் முடிக்கலேன்னு சொன்ன ரொம்பவே கோவா படுவாரு பார்த்துக்கோங்க என்கவும் ............

இப்போவே பெர்மிஸ்ஸின் கேட்ட திட்ட மாட்டாரா என்று நிலா கேட்க......அது சார் மூடு பொறுத்து இருக்கு நிலா ......... ஆனா நாளைக்கு போய் முடிக்கலேன்னு சொன்ன கண்டிப்பா நீங்க முடிஞ்சுடிங்க என்றான் ரிஷி .........

நிலாவுக்கும் வேறு வழியில்லை பெர்மிஸ்ஸின் கேட்டு தான் ஆக வேண்டும் இல்லை என்றால் ரிஷி சொல்லியது போல் சித்தார்த் தொலைத்து எடுத்து விடுவான் என்பது புரிய ........... என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கையில் மெயில் செய்து கேட்பதை விட வீட்டிற்க்கு சென்று நேராகவே கேட்டு விடலாம் என்ற தோன்றவும் ......... நேராக சித்தார்த் வீட்டிற்கே சென்றாள்..........

என்ன சொல்லுவானோ என்று பயம் ஒரு பக்கம் இருந்தாலும்...... அவனை பார்க்க போகிறோம் என்றதும் சில்லென்ற ஒரு உணர்வு பரவ உள்ளே சென்றாள் நிலா .........

அங்கு ரேவதி தான் சித்தார்த்தின் வரவுக்காக காத்து கொண்டிருந்தவர் நிலாவை பார்த்ததும்............. வா மா நிலா...... பக்கத்து வீட்டுல இருந்துட்டு உனக்கு இங்க வர நேரம் இல்லையா என்று கேட்கவும்........ அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்தவள்......... சித்தார்த் சார் கிட்ட கொஞ்சம் பேசணுமா என்றாள் நிலா ....... ஏன் எங்க கூட எல்லாம் பேச மாட்டிய என்று கேட்ட படியே ஜனனி வர ............

அட நீங்க வேற ஏன்...... நானே சார் கொடுத்த ஒர்க் எதுவும் முடிக்கல........ அதான் பெர்மிஸ்ஸின் கேட்க வந்தேன் என்று நிலா சொல்லவும் ........ அதை கேட்ட கிருஷ்யும் ஜனனியும் சத்தமாக சிரித்தனர் ...... வீட்டுக்கு வந்து கேட்ட திட்ட மாட்டேன்னு நினைச்சீங்களா என்று கிருஷ் கேட்க.........

ஆமா அந்த நம்பிக்கையில தான் வந்துருக்கேன்..... சார் எதாவது சொல்லுவாரா என்று கிருஷ்யை பார்த்து கேட்க ....... ஐயோ நான் சித்தார்த் கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேசுனேன் அவன் ரொம்ப கோவமா இருக்குற மாதிரி தெரிஞ்சுது என்று வேணுமென்றெ கிருஷ் சொல்ல...........

அதை கேட்ட நிலாவிற்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது பேசாம மெயில் அனுப்பிருக்கலாமோ....... நாமளே வந்து மாட்டிகிட்டோமோ என்று நிலா எண்ணி கொண்டிருக்கையில்............... அவள் எண்ணத்தை தடை செய்தது ரேவதின் குரல்........ அது எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான்........ நீ வாமா நிலா சாப்பிடலாம் என்று ரேவதி அழைத்தார் .............

இல்லை மா நான் கிளம்புறேன்....... நான் வீட்டுக்கு போய் சாருக்கு மெயில் பண்ணிறேன் இல்லைனா கால் பண்ணி சொல்லிறேன் என்று நிலா கிளம்ப........ மீண்டும் ஜனனியும் கிருஷ்யும் சேர்ந்து சிரிக்கவே நிலாவுக்கு சற்று கடுப்பாக இருந்தது.........

என்ன ரெண்டு பேருக்கு என்னை பார்த்த சிரிப்பா இருக்க என்று நிலா கேட்டு விட்டு வேகமாக திரும்பி போகவும்....... அப்போ சித்தார்த் உள்ளே நுழையவும்........ சித்தார்தின் மிது மோதி நின்றாள் நிலா ........

அங்கு நிலாவை எதிர்பார்க்காத சித்தார்த்தும், சச்சினை எதிர்பார்க்காத ஜனனியும் தங்கள் கண்களை நம்ப முடியாமல் பார்த்தனர் ...........

வா சச்சின் என்று ரேவதி அழைக்க அவரை பார்த்து தலை அசைக்கவும்....... அம்மா சாப்பாடு எடுத்து வைங்க நாங்க வரோம் என்றவன்........ நிலாவிடம் திரும்பி கொஞ்சம் வெயிட் பண்ணு நிலா வரேன் என்று சொல்லி விட்டு மேலே அவன் அறைக்கு சென்றான் சித்தார்த்.............

ரேவதி சென்று உணவு எடுத்து வைக்க நிலா சென்று அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் ....... சச்சினோ ரேவதியிடம் தலை அசைத்தோட சரி தப்பி தவறியும் ஜனனியின் பக்கம் அவன் திரும்பவில்லை........ சித்தார்த்த்தை பின் தொடர்ந்து சச்சினும் சித்தார்த்தின் அறைக்கு சென்றான் ........

ஜனனிக்கோ சச்சினின் பாரா முகம் வருத்தத்தை கொடுத்தாலும்........ சச்சின் கிளம்புவதுக்குள் பேசி விட வேண்டும் என்று அவன் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்..........

சித்தார்த் கீழே வந்ததும் நிலாவை தேட அவள் ரேவதிக்கு உதவி கொண்டிருந்தாள்...... ஓ இவளுக்கு வேலை எல்லாம் செய்ய தெரியுமா என்று எண்ணி கொண்டே உணவு மேடைக்கு சென்று அமர அவனை பின் தொடர்ந்து சச்சின் மற்றும் கிருஷ்யும் அமர்ந்தனர்........ சச்சினுக்கு எதிரே சென்று அமர்ந்தாள் ஜனனி....... ரேவதி நிலாவையும் வற்புறுத்தி சாப்பிட சொல்ல ஜனனியின் அருகே அமர்ந்தாள் நிலா........

சச்சின் இவங்க தான் நிலா...... இவங்க தான் டௌர்ன்மெண்ட் coordinate பண்ணறாங்க என்று சித்தார்த் நிலாவை சச்சினுக்கு அறிமுகம் செய்தான் ........ கிருஷ் உனக்கு நாளைல இருந்து எதாவது plans இருக்க என்று கேள்வி கேட்டவன்...... இருந்த கான்செல் பன்னிட்டு நாளைல இருந்து கம்பெனிக்கு வா...... வேலை அதிகமா இருக்கு என்று பதிலும் அவனே சொன்னான்............

கிருஷ்க்கு ஐயோ என்றுயிருந்தது ....... இதுவரை நட்பு வட்டாரத்துடன் சுத்தி திரிந்து கொண்டிருந்தவனை இப்படி ஆபீஸ்க்கு வர சொன்னால்............ குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம் என்று அவன் மண்டையில் யாரோ பாடுவது போல் இருக்க...........

உன் mindvoice எனக்கு கேட்டு விட்டது என்பது போல் நிலா கிருஷ்யை பார்த்து சிரித்தாள்........ அதை கண்டு கொண்ட கிருஷ் ஈஈஈ என்று சிரித்து வைத்தான்.......
ஜனனியோ சச்சின் முகத்தையே ஏக்கமாக பார்க்க அவன் அவளை சிறிதும் கண்டு கொள்ளமால் வேலை சம்மந்தமாக சித்தார்த்திடம் பேசி கொண்டே சாப்பிட......

நிலா சாப்பிடும் போது சித்தார்த்தை பார்க்க...... சச்சின் சொல்லுவதை கேட்டு கொண்டிருந்த சித்தார்த் நிலா பார்ப்பதை உணர்ந்து சட்டென்று பார்த்து தன் புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்க........ நிலா சட்டென்று தலை குனிந்தவள் தான்....... சித்தார்த் சாப்பிட்டு முடிக்கும் வரை நிமரவே இல்லை...........

நிலா சாப்பிட்டு மேல வா என்று சொன்னவன் மேலே செல்ல .......... ரேவதி நிலாவிடம் அது எல்லாம் அவன் ஒன்னும் திட்ட மாட்டான் நீ மேல போ...... அவன் எதாவது சொன்ன நீ உடனே என்னை கூப்பிடு என்று நிலாவிடம் சொன்ன ரேவதிக்கு மகனிடம் சொல்ல பயம் தான்.......

நிலா மேலே அவன் அறைக்கு சென்று கதவை தட்ட....... எஸ் கம் இன் என்று குரல் கொடுத்தான் சித்தார்த்....... அவன் அப்போதும் எதோ வேலை செய்து கொண்டிருக்க...... நிலா எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள் .......... என்ன நிலா இன்னைக்கு முன் வாசல் வழிய வந்துருக்க என்று சித்தார்த் வேலை செய்து கொண்டே அவளிடம் கேட்க........

அவள் பிறந்த நாளன்று அவள் வீட்டு மடி ஏறி குதித்து வந்ததை தான் குறிப்புடுகிறான் என்பது புரிய........... நிலாவுக்கு அந்த நாள் சித்தார்த்துடன் வண்டியில் சென்றது நினைவு வர...... வெக்கத்தை அவளின் சிவந்த முகமே காட்டி கொடுக்க மௌனமாக நின்றாள்...........

அவளிடம் எந்த பதிலும் வராமல் போகவும் சித்தார்த் அவளை பார்க்க...........சரி அது இருக்கட்டும்....... உன்னை நான் டாக்குமெண்ட் மெயில் பண்ண சொல்லி இருந்தனே ஏன் இன்னும் பண்ணல என்று கேள்வியை சித்தார்த் கேட்டதும் தான் நினைவிற்கு வந்தாள் நிலா........

ஐயோ இப்போ என்ன சொல்லுவது என்பது போல் நிலா முழித்து கொண்டிருக்க......... அதில் கடுப்பானவன்........ இப்போ வாயை திறந்து பேசுனின கொஞ்சம் நல்ல இருக்கும் என்று சித்தார்த் சொல்ல........

இல்லை சார் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் முடிக்க அதான் பெர்மிஸ்ஸின் கேட்கலாமுன்னு வந்தேன் என்று பயத்துடனே ஒரு வழியாக நிலா சொல்லி முடிக்க .......

ஸ்டாப் இட்......... எந்த வேலையும் உன்னால உருப்படியா செய்ய முடியாது அப்படித்தான......... எப்படி உனக்கு டைம் இருக்கும்...... எல்லாரு கிட்டவும் பல்ல காட்டவே நேரம் சரியா இருக்கு....... இதுல வேலை எங்க செய்ய நேரம் இருக்கும்...........நாளைக்கு மதியத்துக்குள்ள நீ கம்ப்ளீட் பண்ணல then you will pay for it என்று சித்தார்த் காட்டமாக கத்த............

நாளைக்கு முடிச்சுறேன் சார் என்று சொல்லி அறையை விட்டு நிலா வெளியே வரவும்........ அங்கு கிருஷ், ஜனனி, ரேவதி மூவரும் நிலாவை பாவமாக பார்த்தனர்.......... அவள் அழுது கொண்டு யாரையும் பார்க்காமல் சென்றுவிட்டாள்......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 16

காலை பொழுது அழகாக விடிய......... சித்தார்த் வென்று விட்டோம் என்று மிதப்பில் மிகவும் சந்தோசமாக இருந்தான் வருண்....... நேரத்திலே ஆபீஸ் கிளம்பி கீழே வர அவன் தந்தையும் மினிஸ்டரும் ஆன சுப்பிரமணி பேப்பர் படித்து கொண்டிருந்தார்................

வருண் சிரித்து கொண்டே வருவதை பார்த்தவர்........ என்ன துரை யாரு கூடிய கேடுக்க இவ்வளவு நேரத்துல கிளம்பிட்டாரு என்று சுப்பிரமணி கேட்கவும் .........

அதற்கு அவர் துணைவியார் சரஸ்வதி அவரை ஒரு முறை முறைக்க.......... சுப்பிரமணி வாயை முடி கொண்டார்.......... வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலையோ என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறி விட்டு..... மகனுக்கு உணவு பரிமாற சென்றார்..........

எம்மா சரசு எனக்கும் சாப்பாடு எடுத்து வை கட்சி ஆபீஸ் வரைக்கும் போகணும் என்று அவரும் உணவு மேடையில் சென்று அமர்ந்தார்...........

வருண் நான் உனக்கு ஒரு பொண்ணு பாத்துருக்கேன்பா........ நீ பார்த்தின உனக்கு ரொம்ப பிடிச்சு போயிரும்....... ரொம்ப பெரிய இடம் உனக்கு ஏத்த பொண்ணு என்று சரவஸ்தி மகனின் முகத்தை பார்க்கவும் .............

அம்மா எனக்கு இந்த கல்யாணம் கச்சேரி எல்லாம் எதுவும் வேணாம் என்று வருண் சொல்ல.......... ஏன் முன்னாடியே ஆகிருச்சு என்ன என்று சுப்பிரமணி இட்லியை பிட்டு கொண்டே கேட்க..........வருண் சரஸ்வதி இருவரும் அவரை முறைக்கவும் ........ இல்லை இவ்வளவு ஆணி தனமா வேணாமுன்னு சொல்லுரானேன்னு கேட்டேன் என்று சொல்லிவிட்டு சுப்பிரமணி சாப்பிட்டு கொண்டிருக்க......... வருண் இதற்குமேல் சாப்பிட முடியாது என்று எழுந்து செல்லவும்.............

இப்போ சந்தோசமா உங்களுக்கு என்று சரஸ்வதி சுப்பிரமணியிடம் கேட்க......... எனக்கு என்ன சரசு சந்தோசம் இட்லி காலு மாதிரி இருக்கு என்று அவர் இட்லி பிட்டு காட்ட........ ச்சை இவரோட மனுஷன் பேச முடியுமா என்று சரஸ்வதி நொந்து போனார்..................

***************----------------------------**********

Ngmn குரூப் ஒப் கம்பெனி எப்போதும் போல் இன்றும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை............ சித்தார்த் வரும் நேரம் என்பதால் அனைவரும் வேலையில் முழுகிருக்க...........

நிலா வழக்கத்துக்கு மாறாக இன்று நேரத்திலே கம்பெனிக்கு வந்துருந்தாள்........ இரவு தூங்காமல் வேலையை செய்து முடித்து அதை சித்தார்த்திருக்கு மெயில் செய்து இப்போது தான் அவளுக்கு நிம்மதியாகயிருந்தது........இன்று மீட்டிங் வேறு இருப்பதால் அதற்கு ஆயுதமாகி கொண்டிருந்தாள்..............

சற்று நேரத்திலே சித்தார்த்தும் சச்சின் இருவரும் ஒன்னாக உள்ளே வர....... அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக எல்லாரும் வணக்கம் சொல்லவும் அதற்கு ஒரு தலை அசைவை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு உள்ளே சென்றனர்..........
ரிஷியும் பின்னோடு செல்ல........

ரிஷி மீட்டிங்க்கு எல்லாம் ரெடியா என்று கேட்டு கொண்டு சித்தார்த் கணினியை பார்க்க....... சார் எல்லாம் perfect சார் அர்ஜுன் சார்க்கு மார்னிங் கால் பன்னி ரிமைன் பண்ணிட்டேன் சார் என்கவும் ............

நிலாவுக்கு கால் செய்து உள்ளே அழைத்தான் .......... கதவை தட்டி கொண்டு நிலா உள்ளே நுழைந்தவள் ....... சித்தார்த் பார்த்து குட் மார்னிங் சார் என்றுவிட்டு சச்சினுக்கும் குட் மார்னிங் சார் என்று விஷ் செய்துவிட்டு நிற்க............

அவள் அனுப்பிய டாக்குமெண்ட்டில் உள்ள திருத்தங்களை சொல்லி கொண்டிருக்க நிலா அவன் அருகில் நின்று சொல்லிய திருத்தங்களை எழுதி கொண்டிருக்க........
அப்போது உள்ளே நுழைந்தான் அர்ஜுன்........

நிலாவையும் சித்தார்த்தையும் ஒரு மாதிரியாக பார்த்தவன்......... என்னடா எல்லாம் மேட்சிங் மேட்சிங்கா தான் ட்ரெஸ் எல்லாம் கூட பண்ணுவீங்க போல என்று கேட்டதும் தான் சித்தார்த் நிலாவை கவனித்தான்....... கருப்பு நிற சுடிதார் அணிந்திருக்க...... அது அவள் நிறத்தை இன்னும் எடுத்து காட்ட அழகு தேவதையாக நின்றிருந்தாள் நிலா...........

சித்தார்த் அவளை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருக்க ........ நிலாவுக்கு தான் வெட்கத்தில் முகம் சிவந்து போகிவிட்டது .........

இருவரும் வேறு உலகத்தில் இருக்க........ டேய் ரிஷி உங்க பாஸ் இப்போ எல்லாம் சரிய இல்லைடா பாத்துக்க என்று அர்ஜுன் சொல்லவும் தான் இருவரும் நடப்புக்கு வந்தனர்...........

ஏன் சார் அப்படி சொல்றிங்க என்று ரிஷி கேட்கவும்......... கண் முன்னாடி என்னனோமோ நடக்கும் ரிஷி.... ஆனா உங்க பாஸ் கிட்ட போய் என்னனு கேட்டு பாரு அடிச்சு சத்தியம் பன்னி ஒன்னும் இல்லனு சொல்லிருவான் என்று அர்ஜுன் சித்தார்த்த்தை கேலி செய்ய ........ நிலா அங்கு இருந்து உடனே வெளி ஏறிவிட்டாள் ............

நிலா வெளி ஏறவும்..... ஏன்டா காலையிலேயே இந்த வேலை உனக்கு என்று சித்தார்த் அர்ஜுனை பார்த்து கேட்க..........

இல்லடா மச்சான் உன் ஆள் கோவத்துல வெளியே போகல வெக்கபட்டு வெளியே போயிருக்காங்க சோ நீ டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை என்று அர்ஜுன் சொல்லவும்........

சித்தார்திற்கு ஐயோயென்று இருக்க......... ரிஷியை பார்த்து , சரி மீட்டிங் டைம் ஆகிருச்சு ரிஷி எல்லாரையும் assemble பண்ணுங்க நாங்க பைவ் மினிட்ஸ்ல வரோம் என்றான் சித்தார்த்.........

வெளிய வந்ததும் தான் நிலாவுக்கு மூச்சே வந்தது.........என்ன கண்ணுடா சாமி இவ்வளவு பவரா இருக்கு.......... காலத்துக்கும் அந்த கண்ணை பார்த்து கிட்டே இருக்கலாம் போல என்று எண்ணி கொண்டிருக்க..........

என்ன moon அப்படியே freeze ஆகி நின்னுட்டு இருக்கீங்க என்று கிருஷ்யின் குரலில் திரும்பி பார்க்க அங்கு கிருஷ் மற்றும் ஜனனியும் நின்று கொண்டிருந்தனர்.......

அந்நேரம் சரியாக ரிஷி மீட்டிங்க்கு அழைக்கவும்............. அனைவரும் மீட்டிங்க்கு ஹாலுக்கு சென்றனர்........... ஜனனியின் பார்வை சச்சினிடமே இருக்க......... சச்சினோ சிறிதும் கண்டு கொள்ளாமல் போனை பார்த்து கொண்டிருந்தான்............ அதை பார்த்த ஜனனி உங்களிடம் பேச வேண்டும் மீட்டிங் முடிந்ததும் இங்கே வெயிட் பண்ணுங்க என்று குறும் செய்தி அனுப்பினாள்.......... சிறிது நேரத்திலே சித்தார்த் மீட்டிங்கை தொடங்க அனைவரும் அதை கவனிக்க ஆரம்பித்தனர்...........

ஹலோ எவெரி ஒன் எதுக்காக இந்த மீட்டிங்னு எல்லாருக்கும் தெரியும் நம்ம கம்பெனி ப்ரோமோஷன்காக டௌர்ன்மெண்ட் நடத்தலாமுன்னு நம்ம ஆல்ரெடி decide பண்ணுனது தான்...........சோ இந்த மீட்டிங் அதை எப்படி பண்ணலாம் எப்போ பண்ணலாம் என்பது தான்........so all can share your ideas.......start with the coordinator of this tournament nila என்று சித்தார்த் கூறவும்........ அடுத்து நிலா தொடர்ந்தாள்............

Good morning one and all present here..........இந்த டௌர்ன்மெண்ட்க்கு 15 district செலக்ட் பன்னி வச்சுருக்கோம் அதுக்கு டீம் selection எல்லாம் பன்னி முடிச்சாச்சு ........... என்று மேலும் ரவுண்டு போர்மட் பற்றி கூறி விட்டு நிலா அமர.........

அடுத்தது கிருஷ், இந்த டௌர்ன்மெண்ட்க்கு brand ambassador வைக்க வேண்டும் என்று சொல்லவும்........ அதை அனைவரும் ஆமோதித்தனர்......... பிறகு opening ceremony மற்றும் finale கிராண்ட்டாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.............

மீட்டிங் முடிந்து அனைவரும் செல்ல......... சச்சினும் சென்றுவிட...... ஜனனிக்கு சச்சின் தன்மேல் கோவமாக இருக்கிறான் என்பது புரிய........ சாரி அத்தான் ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தான் என்று செய்தி அனுப்பி கொண்டிருக்க....... அங்கு ஜனனி மட்டும் எழாமல் போனையே பார்த்து கொண்டிருப்பதை கவனித்த நிலா அவள் அருகில் சென்றாள்........... என்ன ஆச்சு ஜனனி ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்று நிலா கேட்க......... சட்டென்று தான் முக பாவனையை மாத்திய ஜனனி....... இல்ல நிலா ரொம்ப தல வலிக்குது அதான் என்றாள்...........

சரி வாங்க காபி குடிச்ச சரி ஆகிரும் என்று சொல்லி ஜனனியை cafeteria அழைத்து சென்று இருவருக்கும் காபி வாங்கி வந்து அமர்ந்ததும்..........

இப்போ சொல்லுங்க என்ன ஆச்சு என்று நிலா கேட்க..........இதுவரை தன் மனதில் அடக்கி வைத்து இருந்த பாரத்தை....... ஆறுதல் தேடி நிலாவிடம் தன் மனதை பகிருந்தாள் ஜனனி.........

நான் சச்சின் அத்தானை லவ் பண்றேன் நிலா......... எனக்கு சின்ன வயசுல இருந்து சச்சின் அத்தானை ரொம்ப பிடிக்கும்........ அவங்க கூட இருக்கும் போது அவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா .......... அவங்க கண்ணுல நிறைய தடவ எனக்கான காதல பாத்துருக்கேன்............ அவங்ககிட்ட நான் போய் ப்ரொபோஸ் பண்ணும் போது அவங்க கண்ணல இருந்து ஏன் பார்வையை எடுக்கவே முடியல ......... என் முன்னாடி சச்சின் அத்தானுக்கு இன்னோரு பொண்ணு கூட நிச்சயம் பண்ணும் போது எனக்கு எப்படியிருந்ததுனு தெரியுமா என் வாழ்க்கையில அதை விட ஒரு மோசமான நாள் இருக்கவே முடியாது.............

சச்சின் அத்தான் எனக்கு சொந்தம் இல்லனது என்னால ஏத்துக்கவே முடியல......... ஒவ்வொரு தடவையும் சச்சின் அத்தானை பார்க்கும் போதும் அவங்க எனக்கு இல்லைனு நினைக்கும் போது மனசு அப்படி வலிக்கும்........... அதுனாலவே அவங்க என்கிட்ட வந்து பேசும் போது எல்லாம் நான் அவங்க கிட்ட பேசாம வந்துருவேன்............... கடைசி தடவ அவங்க என்கிட்ட பேசனுமுனு ரொம்ப ட்ரை பண்ணுனாங்க ஆனா நான் தான் லூசு மாதிரி என்னனோமோ பேசிட்டேன்...............

ஆனா அவங்க கல்யாணத்தை நிறுத்துவங்கனு நான் நினைக்கவே இல்லை......... நானும் ரொம்ப அதிகமா பேசிட்டேன் அதான் என்மேல ரொம்ப கோவமா இருகாங்க நிலா....... நேத்துல இருந்து அவங்க ஒரு தடவ கூட என் பக்கம் திரும்பல........ நானும் பேசனுமுனு எவ்வளவோ ட்ரை பண்ணுறேன் ஆனா முடியல என்று ஜனனி சொல்லி முடிக்க........

கவல படாதீங்க ஜனனி......... இவ்வளவு லவ் பண்றீங்க உங்க அத்தானா......... அவங்களுக்காக பொறந்த நீங்க இருக்கும் போது உங்கள தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது என்று நிலா சொல்ல..............

தேங்க்ஸ் நிலா உங்ககிட்ட ஷேர் பண்ணுனதும் ரொம்ப ரிலசக்ஸ்டா இருக்கு என்று புன்னகையுடன் ஜனனி சொல்ல........... தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்......... எல்லாம் சரி ஆகிரும்......... நீங்க எப்போவும் போல கலகலப்பா இருங்க அது போதும் என்றாள் நிலா...........

நேத்து அண்ணா ரொம்ப திட்டிட்டாங்களா என்று ஜனனி கேட்க........ உங்க அண்ணா திட்டலேனாதான் ஆச்சிரியம் என்று மனதில் நினைத்து கொண்டு....... பழகிருச்சு ஜனனி திட்டுவாங்கி என்று புன்னகைக்க.............

அண்ணா ஒர்க் விஷயத்துல ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட் நிலா .......... அவங்களுக்கு எப்போவுமே ஒர்க் கரெக்டா நடந்துறணும் இல்லனா ரொம்ப கோவம் வரும் என்று ஜனனி சொல்ல........ அப்போது தான் சித்தார்த் நேற்று பல்ல காட்ட தான் நேரம் சரியா இருக்கு என்று அவன் சொல்லியது நிலாவுக்கு நினைவு வர.............

ஐயோயோ இவ்வளவு நேரமா ஆஹ்னு கதை கேட்டுட்டு இருந்துருக்கோம் என்று நிலா எண்ணி கொண்டிருக்க ....... நிலா எங்க எல்லாம் உங்கள தேடுறது சார் உங்கள கூப்புடுறாங்க என்று ரிஷி சொல்லிவிட்டு சென்றான் ........

சரி ஜனனி நான் கிளம்புறேன் என்று படபடப்புடன் வேகவேகமாக நடந்து சித்தார்த்தின் அறைக்கு செல்ல....... அங்கு சித்தார்த் மற்றும் அர்ஜுன் மட்டுமே இருந்தனர்.......... உக்காருங்க நிலா என்று சித்தார்த் சொல்லவும்...... காலையிலேயே அர்ஜுன் கேலி செய்தது வேற நினைவு வர........ அங்கு அமரவே கூச்சமாக இருந்தது நிலாவுக்கு ......... ஆனால் அவர்கள் இருவரும் அதை கண்டு கொள்ளாமல் பேசி கொண்டிருந்தனர்........

அர்ஜுன் நம்ம டௌர்ன்மெண்ட்க்கு லீனாவ ஏன் brand ambassador ஆ போட கூடாது என்று சித்தார்த் கேட்க......... அவ சும்மாவே ஓவரா சீன் போடுவா இதுல நீ அவள brand ambassador போட்டுட்டின அவ்வளவு தான் சொல்லவே வேணாம் என்று அர்ஜுன் சொல்ல .............

இல்ல மச்சான் இப்போ அவ நடிச்ச ரெண்டு படமுமே நல்ல ஓடிருக்க........ அதுவும் இப்போ கொஞ்சம் டாப்ல இருக்க என்று சித்தார்த் சொல்ல.......... சரி மச்சான் அவளையே பண்ணிரலாம் no issues...... ஆனா காண்ட்ராக்ட் மட்டும் நல்லா தெளிவா ரெடி பன்னிரு......கடைசில எதாவது பிரச்னை பண்ணிர போற பாத்துக்க ......... சரி மச்சான் நான் கிளம்புறேன் பை நிலா என்று அர்ஜுன் சொல்லிவிட்டு கிளம்பினான் ............

அர்ஜுன் சென்றதும் லீனாவுக்கு கால் செய்தான் சித்தார்த்....... ஹலோ லீனா சித்தார்த் ஸ்பிக்கிங்....... ஷால் வி மீட் திஸ் வீக் என்ட் அட் பரடெய்சி என்றுவிட்டு போனை வைக்க.........

அடுத்தவங்கள பேசவே விடமாட்டான் போல...... இவனே பேசிட்டு இவனே போன வச்சுட்டான் என்று நிலா எண்ணி மனதில் எண்ணி கொண்டிருக்க ..........

நிலா நம்ம இந்த வீக் என்ட் லீனவா போய் மீட் பண்ணனும் என்றான் சித்தார்த் ....... இல்லை நான் எதுக்கு நான் வரல என்று நிலா சொல்லவும்........ சித்தார்த் பார்த்த பார்வையில் நிலா வாயை இறுக முடி கொண்டாள்...... சோ அதுக்குள்ள காண்ட்ராக்ட் ரெடி பண்ணியகனும் என்று சொல்லியவன்.......

அடுத்து சித்தார்த் நிலாவின் அருகில் இருக்கும் மேஜை மீது அமர்ந்தவரு நிலாவுக்கு கான்ட்ராக்ட்டில் எதை எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்க...........

பாவம் அவன் சொல்லி கொண்டிருப்பது எதுவும் நிலாவின் காதுகளில் சென்று அடையவில்லை........

சித்தார்த் கருப்பு நிற சட்டை அணிந்திருக்க அதில் அழகாகவும் கம்பிரமாகவும் இருக்கும் அவனை பார்க்க பார்க்க நிலாவுக்கு தெகட்டாவில்லை........... ஐயோ கொல்லுரானே....... இவ்வளவு அழகா இருக்கான்...... இதுவரைக்கும் யாரையுமே லவ் பன்னிருக்க மாட்டானா........ வாய்ப்பே இல்லை லவ் எந்த கடையில கிடைக்குமுன்னு கேட்பான்.......... அவகிட்ட பேசுற நேரத்துக்கு எத்தனை காண்ட்ராக்ட் சைன் பன்னலாமுன்னு யோசிப்பான் என்று நிலா தன் போக்குக்கு எண்ணி கொண்டிருக்க........

நிலாவின் கவனம் இங்கு இல்லை என்று உணர்ந்த சித்தார்த் மேஜை மீது சத்தமாக ஒரு தட்டு தட்ட அதில் பயந்து போய் கனவில் இருந்து எழுந்தது போல் விழித்தாள்.........

ஹே எந்திரி நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன கனவு கண்டுகிட்டு இருக்கியா என்று கேட்டுவிட்டு.........
அவன் சர்ரில் அமர்ந்து...... அவளை அருகில் நிக்க வைத்தே காண்ட்ராக்ட் பத்தி அனைத்தும் சொல்லி கொண்டிருந்தான் ...... நிலாவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் நகராமல் அப்டியே நிற்க மிகவும் சிரமாக இருக்க............ மிக கஷ்டபட்டு அவன் சொல்லுவதை எழுதி கொண்டிருந்தவள் இவன் எதோ பிரின்சிபால் மாதிரியும் நம்ம எதோ இவன் ஸ்டுடென்ட் மாதிரியும் ட்ரீட் பண்ணுறன் என்று எண்ணியவாள் அவன் சொல்லுவதை கவனமாக கேட்டு குறிப்பு எடுத்துகொண்டாள் .......
ஒரு வழியாக சொல்லி முடித்தவன்...... கனவு காணாம போய் நான் சொன்னதை உடனே டைப் பன்னி கொண்டுவாங்க என்றான் சித்தார்த்........... சரி என்று தலையை ஆட்டிவிட்டு நிலா வெளியே வர.........

வெளியே வந்த நிலா.... ச இவனை ரசிச்சு பார்த்ததுக்கு இப்படி அனியத்துக்கு ரெண்டு மணி நேரம் நிக்க வச்சுட்டானே...... ஆமா இப்போ நான் சாப்பிட எல்லாம் வேணாமா உடனே கொண்டு வான்றான் எல்லாம் என் நேரம் என்று எண்ணி கொண்டே டைப் செய்து முடித்தாள்.........

அவனிடம் சென்று காட்ட அதை சரி பார்த்து கொண்டிருக்க........ ஜனனி உள்ளே நுழைந்தவள்....... சித்தார்திற்கு எதிரே இருக்கும் சாரில் அமர்ந்தாள்.......... அண்ணா என்னை இன்னைக்கு ஷாப்பிங் கூட்டிட்டு போங்க எனக்கு நிறைய வாங்க வேண்டியது இருக்கு என்றாள்..........

ஜனனி எனக்கு நிறைய வேலை இருக்கு வீக் என்ட் போலாம் என்றான் சித்தார்த் கண்ணை மட்டும் கணினிவிட்டு விலக்காமல்..........

ஐயோ அண்ணா எனக்கு உடனே வாங்கணும் என்று அவள் பிடிவாதம் பிடிக்கவும்......... தன் தங்கையின் பிடிவாதத்திற்கு இறங்கியவன்....... சரி வேலை முடிச்சிட்டு வரேன் வெயிட் பண்ணு என்கவும்............

ஐயோ அண்ணா நீங்க வேலை முடிக்கவே 10 மணிக்கு மேல பன்னிருவிங்க என்று ஜனனி சொல்லவும்......... ஜனனி நான் சொன்ன மாதிரி இன்னைக்கு நான் உன்னை கூட்டிட்டு போறேன்...... நான் வேலை முடிச்சிட்டு உன்னை கூப்புடுறேன் என்று சித்தார்த் சொல்லவும்........

ஜனனி மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு இருக்கா........ அதை பார்த்தவன் சரி போலாம் கிளம்பு என்று சொல்ல .............
ஜனனி மிகவும் குஷி ஆகிவிட........ அதை பார்த்த நிலாவிற்கு தான் சற்று பொறுமையாகயிருந்தது.........

நேத்து நான் வேலை செய்யலேனதும் அப்படி திட்டி என்னை அப்படி அழுக வாட்சன்........ இன்னைக்கு தங்கச்சி மூஞ்சி சுளிச்சதும் ஐயாவுக்கு கஷ்டமா போயிருச்சு போல...... இவ்வளவு இறங்கி வாரான்........ ரொம்ப ஓவர் தான் என்று எண்ணவும்........ அவன் தங்கச்சி அவன் இறங்கி வாரான் உனக்கு என்ன என்று அவள் இன்னோரு மனது கேள்வி கேட்க........

நிலா நீயும் வாயேன் என்று ஜனனி அழைக்கவும் தான் தன் நடப்புக்கு திரும்பியவள்....... இல்ல நான் வரல என்று பட்டென்று சொல்லிவிட .........

நிலாவை ஒரு பார்வை பார்த்தவன் அதான் ஜனனி கூப்பிடுறாளா வா என்று சொல்ல...... நிலாவிற்கு கடுப்பாகயிருந்தது........ அவளுக்கு தான ஷாப்பிங் பண்ணறாங்க என்னை எதுக்கு இப்படி போர்ஸ் பண்ணறான் என்று எண்ணி கொண்டே வேறு வழி இல்லாமல் அவன் கூட சென்றாள்...........
 
Status
Not open for further replies.
Top