All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'உயிரோடு கலந்தவள் 02' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 01 [ A ]



ஆறு வருடங்களுக்குப் பிறகு.....



இந்த ஆறு வருடங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை மாற்றங்கள்!!!



எத்தனை வலிகள்???



எத்தனை எதிர்பார்ப்புக்கள்??



***



லண்டன்.....



பி.எஸ்.ஜி தனியார் பாடசாலை.....



[[ BRITISH SCHOOL OF GENEVA ]]



தனியாக அமர்ந்திருந்த அந்த ஏழு வயது சிறுவனிடம் வந்தாள் மதுமிதா...



அவளும் இந்தியாதான்...



அங்கேயே படித்து பட்டம் பெற்று இப்போது ஆசிரியராக பணிபுரியும் இளம் நங்கை....



இடைவரை நீண்டிருக்கும் கருங்கூந்தல் சீராக வெட்டப்பட்டு இருப்பது கூட அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.



ஒப்பனை தேவையற்ற அழகு...



அனைவரையும் நின்று திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகு....



ஆனால் அதை அவள் மெருகூட்டுவதற்கு எந்தப் பிரயத்தனத்தையும் மேற்கொள்ளாதது தான் அவளை இன்னும் பேரழியாகக் காட்டியதோ???



அவன் அருகில் வந்தமரவே அவளைப் பார்த்து வசீகரமாக சிரித்தான் அச்சிறுவன்....



"க்யூட் ஸ்மைல்" என்றாள் எப்போதும் போல் தலையை கலைத்துக் கொண்டே....



அதற்கும் சிரித்தான்....



"என்னாச்சு...ஏன் தனியா உக்காந்திருக்க?"



"டாட் இன்னும் வர்ல மிஸ்"



"எல்லோரும் பொய்ட்டாங்களேடா... தனியா இருந்துப்பியா?"



"எஸ் மிஸ்...டாட் இப்போ வந்துடுவாங்க" அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் முன் வந்தது கருப்பு நிற லம்போகினி ஒன்று....



கதவைத் திறந்து தன் கூலிங் க்ளாஸை கலற்றியவாறே அதிலிருந்து இறங்கிய அந்த ஆறடி ஆண்மகனிடம் துள்ளிக் கொண்டு ஓடினான் அச்சிறுவன்....



அவன் யாதவ்....



யாதவ் தேவமாருதன்!!!



ரிஷியின் தவப்புதல்வன்....



தன்னை நோக்கி பாய்ந்தவனை தூக்கிப் போட்டு பிடித்தவன் அவன் கண்ணத்தில் முத்தமிட எப்போதும் போலவே அவனையும் அச்சிறுவனையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமிதா....



"போலாமா?" தன் மகனை பார்த்து கேட்டவன் திரும்ப எத்தனிக்க



"டாட்...எங்க மிஸ்" என அவளை அறிமுகப்படுத்தவும் அவளைப் பார்த்து வசீகரமாய் சிரித்தவன் தலையசைத்து விடைப் பெற்றுப் போய்விட்டான்.



இப்போது அவளுக்குப் புரிந்தது அந்தச் சிரிப்பு யாரிடமிருந்து வந்திருக்குமென்று...



அமைதியாக வந்து கொண்டிருந்த தன் மகனை திருப்பிப் பார்த்தவன்



"யாது...வட்ஸ் த ப்ராப்ளம்....ஏன் உன் முகம் டல்லா இருக்கு?"



"எப்போவுமே மாம் அவங்களோட பர்த்டேக்கு வருவாங்கன்னு சொல்லுவீங்க.... பட் இன்னிக்கும் வர வர்லியே டாட்.... உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்காது.... ஆனா நீங்க பொய் சொல்லிகிட்டே இருப்பீங்க?" என்றவனின் கேள்வியில் வாயடைத்து இருந்து கொண்டிருந்தான் அவன்....



"பதில் சொல்லுங்க டாட்" அவனுக்கு மௌனமே மொழியாகிப் போக



"யூ ஆர் சீட்டர் டாட்...ஐ ஹேட் யூ" கோபமாய் சொன்னவனுக்கு கண்களில் கண்ணீர் விழவா வேண்டாமா என கேட்டுக் கொண்டு நிற்க அதைக் கண்டு அவசரமாக காரை ஓரமாக நிறுத்தியவன் அவனை ஆதரவாக அணைத்துக் கொள்ள அவனோ அவனை விட்டு விலகி அமர்ந்தான்.



"சாரி" வேறு வழி தெரியவில்லை அந்தத் தந்தைக்கு...



"ஸ்கூல்ல எல்லா பசங்களுக்கும் மாம் தான் ஊட்டி விடுவாங்க டாட்... எனக்கு ஆசயா இருக்கும்" அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தில் இவனுக்குள் வலித்தது.



என்ன நடந்திருந்தாலும் அவளிடமே குழந்தையை கொடுத்திருக்க வேண்டுமோ???



அவளைப் பற்றிய நினைப்பு வந்த நொடி அவன் முகம் பாறையாய் இறுகிப் போனது.



அவன் அமைதியாக இருக்கவும்



"சாரி டாட்...இனிமே இப்பிடி பண்ண மாட்டேன்" அவன் கண்ணத்தில் முத்தமிட்டவனைப் பார்க்க தொண்டை அடைத்தது ரிஷிக்கு....



அவன் தலையை கலைத்து விட்டு சிரித்தவனின் சிரிப்பின் பின்னால் ஓராயிரம் வலிகள் மறைந்திருந்தது.





அதே நேரம் இரவு...



இந்தியா...



இராமநாதபுரம்.....



உறங்கிக் கொண்டிருந்த முன்று வயது குழந்தையின் மழலைச் சிரிப்பில் உலகை மறந்து அதனுடன் இணைந்து சிரித்துக் கொண்டிருந்தாள் காரிகை...



அதற்குள் அதற்கு விழிப்புத் தட்டி விட்டதோ என்னவோ தூக்கத்திலேயே இலேசாக சிணுங்க ஆரம்பிக்க மெதுவாக அதை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் சொல்ல முடியாத ஏக்கம் இழையோடிக் கொண்டிருந்தது.



அதன் சிணுங்கல் அடங்கவே மெதுவாக கட்டிலில் கிடத்தியவள் அதன் இரு பக்கமும் தலையணையை அணையாக வைத்து விட்டு நிமிர வாசலில் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அஜய்...



வீட்டில் அவளுடன் பேசும் ஒரே ஜீவன்!!!



"இன்னிக்கு சீக்கிரமா வந்துட்ட?" அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொண்டே கேட்டான் அவன்...



இன்று அவள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டு பேசப்படும் மிகப்பெரிய லாயர்...



லாயர் அஷ்வினி என்றாலே கோர்ட்டே நடுநடுங்கும்....



அந்தளவு அசுர வளர்ச்சி எல்லாம் அவளுக்கானது அல்ல...



அவளைத் துறத்திக் கொண்டிருக்கும் நினைவுகளிலிருந்து தப்புவதற்கு அவள் தேர்ந்தெடுத்த வழி....



அவன் நெஞ்சில் வாகாய் சாய்ந்து கொண்டவள்



"இன்னுமே அவர் எங்க இருக்கார்னு தெரியலயாணா?" கண் கலங்க கேட்டவளைப் பார்க்க அவனுக்குமே பொறுக்கவில்லை



அவளும்தான் ஆறு வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறாள்... ஆனால் பலன் என்னவோ பூச்சியம்தான்....



தான் இந்தியாவில் இருந்ததற்காக தடயமே இல்லாது இருக்க வேண்டுமென்று அழித்து விட்டானோ???



எங்கு தேடியும் இல்லை...இல்லவே இல்லை....!!!



கடைசி முயற்சியாகத்தான் டிடெக்டிவ் ஏஜன்சியிடம் அவன் போட்டோவை ஒப்படைத்திருந்தாள்.



அதுவும் ரகசியமாக....



அவன் பெயர் கெட்டுப் போய்விடக் கூடாதல்லவா???



"நாளக்கு தான் சொல்லுவாங்கமா பாக்கலாம்" என்றான் வருத்தத்துடன்....



"கயு எங்கணா மித்துவ தூக்க வர்லியா....?"



"வந்துடுவா"



"இன்னிக்கு இவ என்கூடவே படுக்கட்டும்னு சொல்லுணா..."

அவள் ஆசையாய் கேட்கவும் தடுக்க முடியவில்லை அவனால்....



"ம்...சரி....நீ இவக்கூட படுத்துக்கோ... நா கயல் கிட்ட சொல்ஸிட்றேன்"



"தேங்க்ஸ்ணா..." எனவும் அவளின் நெற்றியில் இதழ் பதித்து வெளியேறியவன் குழந்தைக்கான மாற்றுடையையும் பாலையும் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து குடுத்துவிட்டு கிளம்பி விட்டான்.





கப்பேர்டில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த தன் மனையாளை பின்னாலிருந்து அணைத்தான் ஆரவ்.



அஸிஸ்டன் கமிஷ்னர் ஆப் போலிஸ்!!!



"என்ன பண்ற ஆரு விடு"



"என் பொண்டாட்டி நா கட்டிப் பிடிப்பேன்....உனக்கென்னடி?"



"விடு ஆரு"



"இன்னிக்கு தான் உன் அரும மக இல்லாம ப்ரீயா இருக்கேன்... அதுகூட பொறுக்காதா உனக்கு?" எனவும் அவள் உதடுகள் சிரித்தன.



எல்லாவற்றையும் சரி செய்து விட்டு திரும்பி அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்தவள்



"ஏ.சி.பி சார் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரீது"



"ஆமா...ரொம்.....ப"



"எனக்கும் சொன்னீங்கன்னா நானும் சந்தோஷப் பட்டுப்பேன்ல?"



"நீயே கண்டுபிடி"

"ப்ளீஸ் ஆரு சஸ்பண்ட்ஸ் வேணாமேடா"

முகத்தை சுருக்கி கெஞ்சவும் கிறங்கிப் போனான் அவன்.



"இப்பிடியெல்லாம் பண்ணீன்னா அப்பறம் எனக்கு பேசுற மூடே போயிடும்"



"இல்ல இல்ல பண்ண மாட்டேன்" சிறு பிள்ளை போல் தலையாட்ட அவள் செய்கை தன் தோழியை ஞாபகப்படுத்தவும் கண்களை இறுக்க மூடித் திறந்தவனுக்கு இருந்த உற்சாகம் இடம் தெரியாமல் மறைந்து போனது.



தன்னை சமாளித்துக் கொண்டவன்



"அண்ணா இருக்குற இடம் தெரிஞ்சு போச்சு"



"நிஜமாவா ஆரு..." துள்ளிக் குதித்தாள் அவள்.



"எங்க எங்க.... சீக்கிரமா சொல்லு"



"லண்டன்"



"வாட்....அங்கேயா?"



"ம்....என் ப்ர்ண்டு ஒருத்தன் தான் அங்க ஸ்கூல்ல பாத்ததா சொன்னான்.... ஏன் இப்பிடி பண்றாங்கன்னு புரிய மாட்டேங்குது அம்மு.... ரொம்ப கஷ்டமா இருக்குடி... ஒன்னு ரெண்டு வருஷம்னா பரவால்ல.... ஆறு வருஷம்....எங்கள யாரயும் பாக்கனும்னு கூட தோனல பாத்தியா... அவ்வளவு அழுத்தம்" தன் மனைவியிடம் நன்றாக திட்டிக் கொண்டிருந்தான்.



"விடு ஆரு....இப்போதான் எங்க இருக்காங்கன்னு தெரிந்சுடுச்சுல்ல... பாத்துக்கலாம் விடு" என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.



"சரி....மித்து அவ கூட சமத்தா தூங்கிடுவாளா அம்மு?"



"அதெல்லாம் இருந்துக்குவா...

அவளுக்கு நா அம்மாவா இல்ல அவ அம்மாவான்னே புரிய மாட்டேங்குது"

அவள் அலுத்துக் கொள்ளவும் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.



"ஆரு....இல்ல...வந்து அ...அஷ்வி..."



"இத பத்தி நாம பேச வேணாம்னு நெனக்கிறேன்"

என்றான் வெடுக்கென....



அவர்கள் எல்லோருக்கும் அவள் அவனிடம் நீ போகாவிட்டால் குழந்தையை கலைத்து விடுவேன் என சொன்ன கோபம் அவளின் மீது...



அவன் போனதன் பின்னர்தான் தெரிய வந்தது விடயம்....



அதுவும் அவளே கூறி கதறிக் கதறி அழுதாள்.



அழுது என்ன பயன்???



அவன்தான் போய்விட்டானே!!!



இருவர் முகமும் வேதனையில் கசங்கியது.



"அத்தான் தான் அவள கஷ்டப்படுத்துறாருன்னு பாத்தா நாமலும் ஏன்டா... பாவம்டா... ப்ளீஸ் ஆரு...நீ பேச வேணாம்....நா மட்டுமாவது பேசுறேன்டா... அவள பாக்கும் போது என்னால அழுகய கட்டுப்படுத்தவே முடிலடா"



"ஓகே..." என்ற ஒற்றை சொல்லொடு முடித்துக் கொண்டவன்



"சரி நீ போய் தூங்கு அம்மு... எனக்கு வேல இருக்கு நா முடிச்சுட்டு படுத்துக்குறேன்"



"ஓகேடா குட் நைட்" என்றவள் அவன் கண்ணத்தில் இதழ் பதித்து விட்டு சென்று படுத்துக் கொள்ள அவன் லேப்டாபை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.



***



"விஷு....இங்க வாங்களேன்" கத்தி குதூகலித்த தன் மனைவியிடம் வந்தான் வருண் விஷ்வா...



"எதுக்குடி கத்தற?"



"உங்க புள்ள அப்பான்னு சொல்றான்"



"வாட்...." ஆனந்தத்தில் அவனும் கத்தினான்.



அவள் முன் தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தன் குழந்தை வருண் ஸ்ரீதரை தூக்கி பிடித்தவன்



"என்னடா கண்ணா....அப்பான்னு கூப்டீங்கலாம்....அதான் அப்பா என் குட்டிய பாக்க வந்துட்டேன்ல....

திரும்ப ஒரு தடவ சொல்லுங்க பாக்கலாம்...." என்க "ங்ஙே...."என தன் பொக்கை வாயை திறந்து சிரிக்க அதன் அழகை ரசித்தவன்



"அப்பா சொல்லுங்க குட்டி..." என்றான் மீண்டும்....



"ப்பா...." எனவும் சந்தோஷக் கூச்சலிட்டவனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் துப்பட்டா விழியழகி....



"யாழ்....இங்க பாரேன்....இவன் அப்பான்னு சொல்றான்டி" அவனைப் பார்த்து சிரித்தாள்.



"எதுக்குடி சிரிக்குற?" இல்லையென தலையாட்டினாள்.



குழந்தையை கிடத்திவிட்டு அவளை தன் வளைவுக்குள் கொண்டு வந்தான்.



"இப்போ சொல்லு"



"தேவாண்ணா போனதுக்கப்பறம் உங்கள இவ்வளவு சந்தோஷமா இன்னிக்குத்தான் பாக்குறேன்"

எனவும் சிரித்துக் கொண்டிருந்தவனின் சிரிப்பு அப்படியே நின்று விட்டது.



"விஷு..." கண்கள் கலங்கியது அவளுக்கு....



அவளை இறுக்கி அணைத்தவன்



"எங்க எப்பிடி இருக்கான்னு தெரில யாழ்....பட் நல்லா இருக்கனும்" அவனின் குரல் கரகரக்க அவனுள் இன்னும் ஒன்றினாள்.



"ப்ச்...விடு யாழ்... எல்லாம் சரியாயிடும்" அவன் கை அவள் கூந்தலை வருடி விட அவளையறியாமல் அவன் கதகதப்பிலேயே உறங்கிப் போனாள் பெண்.



***



"டேய் வேணாம்...குடுத்துடு...

என்கிட்ட விளயாடாத அர்வி

ப்ளீஸ்டா.... என் மொபைல குடுடா" அர்விந்த் அவளுடைய போனை வைத்து போக்கு காட்டிக் கொண்டிருக்க அவனிடமிருந்து எப்படியாவது அதை வாங்கிவிடத் துடித்துக் கொண்டிருந்தாள் அபிநயா...



"ஏன் நா பாக்க கூடாதா?" விடாமல் கேட்டான் அவன்...



அவளுக்கும் பார்க்கக் கூடாது என்றெல்லாம் இல்லை....



அதற்கு காரணமே வேறு....



அவளுடைய வால்பேப்பர் அவன்தான்....



அதை கண்டுவிட்டாள் வைத்து ஓட்டுவான்...



"உன் மேல காதலெ இல்லை..." என்று இவள் சொல்லிக் கொண்டிருக்க இதனைப் பார்த்து விட்டால் அவளின் மனது தெரிந்து விடுமல்லவா???



அதுதான் அவளது தற்போதைய பெரும் பிரச்சனை...



"நீ பாக்கலாம் அர்வி....பட் இப்போ வேணான்டா ப்ளீஸ்"



"இல்ல நா பாத்தே ஆகனும்"



"ப்ளீஸ்டா...ப்ளீஸ் ப்ளீஸ்...குடுத்துடு ப்ளீஸ்"



"ஊஹூம்..."



"ஏன்டா இப்பிடி பண்ற?"



"நீ ஏன் இப்பிடி பண்ற?" மடக்கினான் அவன்...



"ப்ச்...குடுத்துடு அர்வி..ப்ளீஸ்டா"



"முடியாது..."



"ப்ளீஸ் ப்ளீஸ் நீ என்ன சொன்னாலும் பண்ணுவேன்டா"

அவளை கெஞ்ச வைப்பதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம் போலும்...



"என்ன வேணும்னாலும் பண்ணுவியா?"



"ஆமா"



"நா சொல்றத பண்ணா குடுத்துடுவேன்"



"ஓகே சொல்லு"



"எனக்கு ஒரு முத்தம் குடு..." எனவும் அவள் ஆவென வாய் பிளக்க அவள் உதடுகளை திடீரென சிறை செய்தான் அவன்...



((நம்ம அபி இருக்காங்கல்ல.... அவங்க அர்விய தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..

வேற அர்விந்த் இல்ல நண்பா நம்ம அர்விந்தே தான்...



அவங்க அம்மா இவன்கிட்ட இல்ல ஒப்படச்சிட்டு போனாங்க....



அட வருண சொல்றேன் நண்பா....



அவன்தான் அர்விந்த் கிட்ட பேசி ரெண்டு பேரையும் சேத்து வெச்சிட்டான்....



முதல்ல லவ்வெலலாம் இல்லதான்.....அவ அம்மா இறந்ததுனால இவன் அம்மாக்கு எதுவும் ஆகவிடாம பாத்துகிட்டாளா....



துரை டப்புனு லவ்ல விழுந்துட்டாரு....இப்போ மனமொத்த தம்பதிகள்தான்....



புள்ள கூட இருக்கு...



பொம்பள புள்ள தாங்க....



பேரு வர்ஷினி....



நல்லாருக்குல???))



***



"ரிதி...ரிதிமா...." அவன் மேலிருந்து கத்த அவனிடம் அவசரமாக வந்தாள் அவன் மனைவி ரித்திகா...



((அய்யய்யோ...இவங்கள பத்தி மறந்தே பொய்ட்டேன் நண்பா....



இவங்களுக்கும் ஒரு குழந்த இருக்கு...ஆண் குழந்த...



பேரு ரித்விக்...



நம்ம சித்துவும் அஸிஸ்டன்ட் கமிஷ்னர்தான்...



வேற என்ன...



ஹி..ஹி....

அவ்வளவு தான் நண்பா))



"என்ன சித்... ஏதாவது வேணுமா?"



"என் வாட்ச் பாத்தியா... இங்கேதானே வெச்சேன்... எங்க போச்சு..." மீண்டும் தேட அவளும் சேர்ந்து தேடினாள்.



"ஆமா....ரித்வி எங்கடி?" எனவும் இடுப்பில் கை குற்றி முறைத்தவள்



"உங்கள போலவே எல்லாம் லேட்டா எந்திரிச்சு கெளம்புவாங்கன்னு நெனச்சீங்களா...அவன் ஸ்கூல் கெளம்பி அரை மணி நேரமாச்சு"



"ஹி...ஹி...இன்னிக்கு மட்டும் தான் லேட்டுடி"



"யாரு நீங்க...நம்பிட்டேன்"



"நாளக்கு சீக்கிரமா எந்திருச்சுருவேன்டி"



"இதயேதான் அவன் பிறந்ததுல இருந்து சொல்லிகிட்டு இருக்கீங்க...."



"நீ வேணா பாரு"



"சும்மா வெட்டி பேச்சு பேசாம வாட்ச்ச தேடுங்க" என்று விட்டு தேடயவளின் கைகளிலேயே கிடைத்தது அது....



அதை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்தவள் அதை அவனுக்கு அணிவித்து விட்டு அவனுடைய கேப்பையும் போட்டு விட்டாள்.



அவளையே காதலாய் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து



"வர்றேன்டி...பத்தரமா இருந்துக்கோ...பய்" என்றவன் அவசரமாக வெளியேறி விட்டான்.





ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



தன் எம்.டி சேரில் அமர்ந்து கொண்டு கணனியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ரகு....



((நான்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்னு சொன்னேன்ல

இவன் வேணாம்னுதாங்க சொன்னான்... பட் நம்ம ஹீரோதான் நா வரும் வர சரி பாத்துக்கோன்னு ஒப்படச்சிட்டு பறந்துட்டாரு....



தற்காலிகம்னு இவன் நெனக்க ஏழு வருஷமாகியும் அவன் திரும்பி வராததுல ரகுக்கு நம்ம ஹீரோ மேல அப்பிடி ஒரு கடுப்பு...



இப்போவும் ஏதோ அவன் சொன்னானேன்னு தான் வேண்டா வெறுப்பா செஞ்சிகிட்டு இருக்காப்ல....



ஆமா... கதிர் எங்கன்னு நீங்க யோசிக்கிறது புரியுது....



இருங்க அதயும் சேத்தே சொல்லிட்றேன்....



அவரு.... அதாங்க கதிரவன் நம்ம ஹீரோவோட பீ.ஏ... இருக்காருல்ல...



அவன் இன்னும் ரிஷிக்கு பீ.ஏ வாதான் இருக்கான்....



தெளிவா குழப்புறேனா...



ரிஷியோட இந்த கம்பனி இருக்குல்ல.... அதனோட கிளை இருக்குறது லண்டன்ல....



இவ்வளவு நாளா இங்க இருந்தே தான் பாத்துகிட்டு இருந்தான்....



போக வேண்டிய கட்டாயம் வந்ததுல அங்க போயி எம்.டி யா சார்ஜ் எடுத்துகிட்டான்.



கதிர தான் முதல்ல எம்.டி ஆக்க ட்ரை பண்ணான்....பட்...கதிரவன் ஒத்துகல...உங்க கூடவே வர்றேன் சார்னு...லண்டன்லயே அவனும் செட்ல் ஆயிட்டான்....



இப்போ ஆர்.கே இண்டஸ்ட்ரீஸோட பீ.ஏ வா இருக்குறவங்க மிஸ்.வசுந்ரா



இதுதாங்க நடந்துது.....



ஷ்ஷப்பா....முடில))



கதவு தட்டப்பட நிமிர்ந்தவன்



"கம் இன்...." என்க உள்ளே நுழைந்தாள் அவன் பீ.ஏ



"என்ன விஷயம் வசுந்ரா....?"



"இன்னிக்கு இன்டர்வீவ் செலக்ஷன் இருக்கு சார்....அத ஆரம்பிக்கலாமான்னு கேக்கலாம்னு..."



"ஓஹ்....மறந்தே பொய்ட்டேன்....

நீங்க போய் அரேன்ஜ்மண்ட்ஸ் பாருங்க....நா ஆர்.கேக்கு மெயில் அனுப்பிட்டு வந்துட்றேன்...."

என்றவன் அவசரமாக மெயிலை தட்டினான்....



((இவனுக்கு தெரிஞ்சா இவனே சொல்லலாம்னு நீங்க யோசிக்கிறது கரக்ட்...பட் இவன் சொல்ல விட்டாதானேங்க...



பயபுள்ள ரகுகிட்ட சத்தியம் வாங்கி வெச்சிட்டான்....))



அவனுக்கு மெயிலை அனுப்பி விட்டு தன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைக்க அது துண்டிக்கப்படவும் முக்கியமான வேலையில் இருப்பான் போல என நினைத்தவன் எழுந்து கான்ப்ரன்ஸ் அறை நோக்கி நடந்தான்...





லண்டன்.....



இதே நேரம் இரவு....



ஆடிக் களைத்துப் போய் தன் தோள் மீது தூங்கிக் கொண்டு வரும் தன் மகனின் முடியை அடிக்கடி தடவி விட்டுக் கொண்டிருந்தான் ரிஷிகுமார்....



அவன் டல்லாக இருக்கவும் அவன் மனதை மாற்ற தன் மீட்டிங்களையெல்லாம் கேன்ஸல் செய்து விட்டு அவன் சொன்ன இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றான்....



ஓரளவு தேறியவன் நன்றாக விளையாடி களைத்துப் போய் வந்தும் வராததுமாக படுத்தும் விட்டான்.



மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு இன்று யாதவ் கேட்ட கேள்விகளே மீண்டும் மீண்டும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.



"பர்த்டேக்கு மாம் வந்துடுவாங்கன்னு சொல்லுவீங்கல்ல டாட்..... அப்போ இன்னும் டூ டேஸ்ல மாம் வந்துடுவாங்களா?"

ஏக்கமாய் கேட்டிருந்தான்.



ஆம்....இன்னும் இரு நாட்கள் அவள் பிறந்த நாளைக்கு...



அதுவும் யாதவ்வின் பிறந்த நாள் அன்றே தான் அவளதும்....



ஒவ்வொரு வருடமும் பர்த்டே கேக்கை கட் பண்ண முன் வாசலை பார்க்கும் அவனின் ஏக்கப் பார்வைவில் துடித்துப் போவது என்னவோ அவன் தந்தைதான்.....



அந்த பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தியவன் இறங்கி வந்து அவனையும் தூக்கிக் கொண்டான்.



நேரே தங்களறைக்குச் சென்று அவனை கட்டிலில் கிடத்தியவனுக்கு தன் மகனின் செய்கையில் தன் மனையாளின் பிம்பம் மின்னி மறைய தலையை உலுக்கி விட்டுக் கொண்டான்.



ஆம் அவன் ரிஷியின் ஷர்ட்டை தன் கைகளால் இறுக்கப் பற்றி இருந்தான்!!!



எப்போதும் நடப்பது தான்....



இவன் இப்படி செய்யும் போதெல்லாம் மின்னி மறையும் அவள் பிம்பத்தை மட்டும் ஏனோ அழிக்கவே முடியவில்லை அவனால்.....



விதி!!!!!



அவனுக்கு போர்வை போர்த்தி

விட்டு தலைவருடி முத்தமிட்டவன் எழுந்து ப்ரஷப்பாக சென்றான்.



கொஞ்ச நேரத்திலெல்லாம் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து தனது லேப்டாப் முன் அமர்ந்தவனால் வேலையை பார்க்கவே முடியாமல் போக எழுந்து பால்கனிக்குச் சென்று விட்டான்.



சிக்கரட் ஒன்றை பற்ற வைக்க நினைத்தவனுக்கு மீண்டும் அவனவளின் பிம்பம்....



அவள் கோபத்துடன் இழுத்து வீசியது நினைவில் படற கோபத்தில் வேண்டுமென்றே புகைக்கப் போனவனால் சத்தியமாய் அதை வாய்க்கு அருகில் கூட கொண்டு செல்ல முடியவில்லை என்பதுதான் நிஜம்!!!



அதை தூக்கிப் போட்டு விட்டு வானத்து நிலவை வெறித்தான் காளை....



ஆறு வருடங்கள் கடந்து விட்டது யாவரையும் பார்த்து....



எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்து விட்டதென்று தெரியும்....



என்ன அவன் அருகில் இல்லை அவ்வளவே....



அவர்களுடனெல்லாம் பேசக் கூடாதென்று இல்லை....

ஆனால்..... அவள் இருக்கிறாளே....



அதனால் தவிர்த்து விட்டான்.



குழந்தை பிறந்த அன்று அவர்களை விட்டு வந்தவன்தான்...



இதோ இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்து விட்டன... அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்றெல்லாம் அவனுக்கு தெரியாது....தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை....



இன்னும் இரண்டு நாட்களில் அவன் மகவின் பிறந்தநாள்...

அவளதுவும் கூடவே...



இந்த முறை அவனை சமாளிக்க முடியாதென்றே தோன்றியது அவனுக்கு....



அவள் மீதிருக்கும் கோபத்தில் அவளைப் பற்றி சொல்லாமல் மறைத்து வளர்க்க விரும்பவில்லை அவன்....



என்றாலும் உண்மையையும் கூறிவிட வில்லை...



அம்மா வருவார்கள் என்று சொல்லி வளர்க்க அது அவன் மனதில் ஏக்கமாக மாறும் என்பதை அவன் யோசிக்கவே இல்லையே???



"டாட்...." யாதவ்வின் குரல் கேட்க தன்னை மீட்டவன் சட்டென திரும்பிப் பார்க்க அங்கே கண்ணை கசக்கிக் கொண்டு கொட்டாவி விட்டவாறே தூக்க கலக்கத்தில் நின்றிருந்தான் அவன்....



கீழே மண்டியிட்டு கைகளை விரித்து வா என கண்ணசைக்க ஓடி வந்து தன் தந்தையிடம் அடைக்கலம் புகுந்தவன் அவன் தோளிலேயே தூங்கிப் போனான்.



அவன் முதுகை வருடிவிட கொஞ்ச நேரம் அசையாது இருந்து விட்டு திடீரென எழ



"என்னாச்சுடா....ஏன் எழுந்துகிட்ட?" என்றான் பரிவாக...



"டாட் எனக்கு மாம் வேணும்" எனவும் தூக்கிவாரிப் போட்டது ரிஷிக்கு..



"மாம் வருவாங்க கண்ணா....நீ டாட் கிட்ட சமத்தா தூங்கு" தூங்க வைக்க முயன்றான்.



"இல்ல நீங்க பொய் சொல்லுவீங்க...."



"இந்த பர்த்டேக்கு மாம் தான் உன்னோட பெரிய கிப்ட் சரியா.... கண்டிப்பா வருவா... இப்போ நீ தூங்குறியா?" நடக்கப் போவதில்லை என தெரிந்தே பொய் சொன்னான்.



ஆனால் இந்த தடவை விதியின் விளையாட்டில் அவன் சொன்ன பொய் மெய்யாகப் போகிறதென்று அவன் அறிவானா???



"கண்டிப்பாவந்துடுவாங்கல்ல டாட்...?"



"வந்துடுவா கண்ணா....நீ தூங்கு" மீண்டும் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் அந்த அன்புத் தந்தை....





இராமநாதபுரம்.....



தன் ஆபிஸ் டேபிளில் தலைசாய்த்தை கண் மூடி இருந்தவளின் கண்களிலிருந்து விடாமல் வழிந்து கொண்டே இருந்தது கண்ணீர்.....



"சாரி தேவ்....ரியலி சாரி....உங்கள பாக்கனும் போல இருக்கு தேவ்... எங்க இருக்கீங்க.... இன்னும் எத்தன நாள் தேவ் காக்க வெப்பீங்க....நரக வேதனயா இருக்கு தேவ்.... நா சாகுறதுக்குள்ள ஒரு தடவ உங்கள பாக்க மாட்டேனான்னு இருக்கு தேவ்.... ப்ளீஸ் வந்துடுங்க நீங்க இல்லாம நானில்லன்னு புரிஞ்சுகிட்டேன் தேவ்... எனக்கு உங்க கூட வாழனும்....நீங்க என் பக்கத்துலேயே இருக்கனும் தேவ்...

என் ஆசய தீத்து வெப்பீங்களா?" பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவளிடமிருந்து....



தன் கையிலிருந்த தன்னவனின் போட்டோ ப்ரேமை வருடிக் கொடுத்துக் கொண்டே



"ஐ மிஸ் யூ தேவ்.... ஐ மிஸ் யூ லாட்...." என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதித்து



"தேவ்...." என ஆழ்மனதிலிருந்து அழைக்க இங்கே தன் மகனை பக்கத்தில் பொட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.



தொடரும்.....



15-05-2021.

உங்களது கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா

 

Attachments

Last edited:

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 01 [ B ]



தன் மகனை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவன் யாரோ தன்னை அழைப்பது போல் இருக்கவும் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.



சுற்றும் முற்றும் தேடினான்....

ஊஹூம்....யாருமே இல்லை....



ஏன் வெளியில் போய் கூட பார்த்துவிட்டு வந்துவிட்டான்....

யாருமே இல்லாமல் போக குழப்பமாக இருந்தது அவனுக்கு....



ஒரு வேலை யாதவ்வோ.... என நினைத்தவன் சட்டென அவனை திரும்பிப் பார்க்க அவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.



அவனைப் பார்க்கவும் மற்றையது எல்லாம் மறந்து போனது அந்த தந்தைக்கு...



யாதவ் அப்படியே அஷ்வினியின் ஜெராக்ஸ் என்றுதான் கூற வேண்டுமோ???



காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை அவளுடன் இருப்பது போலவே இருக்கும் அவன் மகவின் செய்கையில் தவித்துப் போவது என்னவோ அந்த ஆறடி ஆண்மகன்தான்....



ஏதாவது செய்து விட்டு மன்னிப்பு கேட்டுவிடுவான்...அவளைப் போலவே....அதுவும் அவனிடம் மட்டும்!!!



என்ன ஒன்று....



பிடிவாதமும் கோபமும் அதிகம்!!!

அவர்கள் இருவரையும் போலவே.....



அவளுக்கு பிடிவாதம் அதிகம்... அவனுக்கு கோபம் அதிகம்....



இது இரண்டும் ஒருவனிடத்தில் என்றால் அது அவன்களின் குழந்தை யாதவ் தான்....



ஒருவேலை ஒரே திகதியில் பிறந்ததால் இருக்குமோ என்று கூட சில நேரம் மடத்தனமாய் யோசித்ததும் உண்டு....



அவனையே பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிப் போயிருந்தது காலை எழுந்து பார்க்கும் போது தான் தெரிந்தது.



எழுந்து ப்ரஷப்பாகி விட்டு வந்தவன் அவனுக்கும் காபியும் யாதவ்விற்கு பூஸ்டும் போட்டு எடுத்துக் கொண்டு வந்து அதை மேசை மேல் வைத்து விட்டு அவனை எழுப்பச் சென்றான்.



"யாதவ்...." "யாது...."



"...."



"டேய் எந்திரிடா"



"ஊம்...விடுங்க டாட்...நா தூங்கனும்"

சிணுங்கினான் மகன்....



"ஸ்கூலுக்கு லேட் ஆகிருச்சு....எந்திரி யாதவ்... ஓ...காட்... மறுபடியும் தூங்கிட்டானா...டேய்....எந்திரி கண்ணா..."



"ப்ளீஸ் டாட்..."



"உங்க அம்மாவ விட மோசமா இருக்கியேடா..."

என்றவனுக்கு அப்போது தான் தான் வாய் தவறி அவள் நினைப்பில் சொல்லி விட்டது உறைக்க கப்பென வாயை மூடிக் கொண்டான்.



கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களை இறுக்க மூடித்திறந்து அவனை தூக்கத்துடனேயே தூக்கிக் கொண்டு போய் ஷவரின் அடியில் வைத்து விட்டான்.



அதில் அவன் மகனிற்கு அப்படி ஒரு கோபம் வந்துவிட்டது போலும்....



அவனை முறைத்து

"ஏன் டாட் ராட்சஸன் மாறி நடந்துகுறீங்க?" என்க அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தவனின் முகம் பாறை போல் இறுகி விட்டது....



"அதிக பிரசங்கிதனமா பேசாம சீக்கிரம் குளிச்சிட்டு வா...." என்றவன் வெளியேற



"ஐ ஹேட் யூ டாட்... ஐ லவ் மை மாம்... அவங்க இருந்தா என்ன இப்பிடி பண்ண விட்டிருக்க மாட்டாங்க...." அவன் கத்தியதில் ஒரு நிமிடம் தயங்கி தொடர்ந்தது அவன் நடை.....





இந்தியா.....



வீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த ரிக்ஷிதாவின் போன் அலற சோர்வுடன் அதை எடுத்து காதிற்கு கொடுத்தாள்.



எதிர்முனையில் அவள் நண்பி கவிதா....



"ஹாய் அஷ்வி.... எப்பிடி இருக்க....

முக்கியமான விஷயம் ஒன்னு சொல்னும் உன்கிட்ட"



"நல்லா இருக்கேன் கவி..." அவள் சொன்ன விதத்திலேயே தெரிந்து போனது தன் நண்பியின் நிலை....



"நா இப்போ எங்க இருக்கேன்....?" என்ற கவியின் கேள்வியில் குழம்பிப் போனாள் பேதை....



"ஏன் உளர்ற கவி?"



"அட சொல்லுடி"



"லண்டன்"



"கரெக்ட்"



"அது எதுக்கு இப்போ கேட்ட?"



"அதான் முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னேன்ல...

நீதான் என்னன்னு கேக்கவே இல்ல"



"சரி என்ன விஷயம்?" வேண்டா வெறுப்பாகத் தான் கேட்டாள்.



"உனக்கு விடிவு காலம் வந்துடுச்சு"



"ப்ச்...நேரடியா வா கவி...எனக்கு டைம் இல்ல"



"ஓகே ஓகே கூல்யா... விடமாட்டீங்களே... இன்னிக்கு ஹாட் நியூஸ் என்னன்னா...."



"சிரிக்காத கவி.... நா கட் பண்ணிடுவேன் பாத்துக்கோ..."



"வெயிட் வெயிட்...இப்போல்லாம் நீ ரொம்ப மோசம்னு இரு அண்ணாகிட்ட போட்டு கொடுக்குறேன்" எனவும் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென அமைதியாகி விட அவள் மனநிலை உணர்ந்து



"லூசு....அண்ணாவ பாத்தேன்டி....

ஒழுங்கு மரியாதயா கண்டு பிடிச்சு குடுத்ததுக்கு ட்ரீட் வெச்சிடு...." படபடவென பொரிந்து கொட்ட



"வாட்....என்ன சொன்ன கவி... நிஜமாவாடி?" நம்ப முடியா ஆச்சரியத்தில் கேட்டாள் பாவை...



"ஆமா...உன் கூட விளயாடிகிட்டு இருக்க தான் எனக்கு டைம் இருக்கு பாரு"



"க...கவி...நி...நிஜமா பாத்தியா?" ஆனந்தக் கண்ணீர் வடிய துடைத்துக் கொண்டே கேட்டாள்.



"நிஜம் செல்ல குட்டி....உன் வட்ஸ் அப்புக்கு உன் புருஷனோடதும் உன் மகனோடதும் போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு"



"இ....இதோ..."



"ஏய்...இருடி வெச்சிடாத....அப்பறம் எப்போ கிளம்ப போற?"



"இப்போவே..."



"இப்போவேயா....?"



"நைட் ப்ளைட்டுக்கு கிளம்பி யாதவ்வோட பர்த்டே அன்னிக்கு அவன் முன்னாடி நிக்க போறேன்"



"வாவ் சூப்பர் மச்சி...."



"தேங்க்ஸ்டி"



"அடிதான்டி வாங்குவ என்கிட்ட"

எனவும் கலகலத்து சிரித்தவளின் சிரிப்பின் ஓசையில் மனம் நிறைந்து போனது அந்த தோழிக்கு....



"சரி சரி... வெச்சிட்றேன்...பய்டி....டேக் கேர்" என்று வைத்து விட அவசரமாக வட்ஸ் ஆப்பை திறந்து போட்டோவை தட்டியவளின் கண்கள் பணித்தது.



யாதவ்வின் உயரத்திற்கு மண்டியிட்டு மன்னிப்பு யாசிப்பது போல் தன் இரு கைகளையும் காதில் வைத்திருக்க யாதவ் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு முகத்தை திருப்பி இருந்தான்.



இருவருக்கும் முத்தமழை பொழிந்தவள் அவசரமாக வீட்டுக்கு கிளம்பினாள்.



.....



வீட்டுக்குள் சிரித்துக் கொண்டே நுழைந்த தமக்கையை அதிசயப் பிறவி போல் பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்விழி....



தத்தி தத்தி நடந்து வந்த மித்ராவை கைகளில் அள்ளிக் கொண்டவள் கண்ணத்தில் அழுத்த முத்த மிட்டு



"மித்து குட்டி.... நான் இன்னிக்கு எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா...." மீண்டும் முத்தமிட்டாள்.



தன்னையே கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்த தன் தங்கையிடம் வந்தவள் மித்துவை இறக்கிவிட்டு அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.



அழுது கொண்டே தன்னை அணைத்திருந்த கயலை ஆதரவாக தட்டிக் கொடுத்தவள் அவளைப் பிரித்து



"ஐ அம் சாரி கயு.... புத்தி இல்லாம ஏதேதோ பண்ணிட்டேன்....சாரிடி" மன்னிப்பு வேண்டவும் உருகிப் போனது தங்கைக்கு....



"நானும் சாரிக்கா...சாரி"



"ப்ச்...எதுக்கு அழற?" கண்ணீரை துடைத்து விட்டவள் தண்ணீரை அருந்தக் கொடுத்தாள்.



"ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் நீ சிரிச்சு பாத்தேனா....அதான் அடக்க முடில"



"நா நைட் ப்ளைட்டுக்கு லண்டன் போறேன் கயு" என்றவளை அதிர்ச்சியாக பார்த்திருக்க இவ்வளவு நேரம் வாசலில் இவர்களின் பாசமலர் நாடகத்தை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஆரவ்விற்கு அவள் பதில் சட்டென கோபத்தை மூட்டிவிட்டது.



"ஏன் அங்க போயும் அவங்க ரெண்டு பேரு உசுர வாங்குறதுக்காகவா?" தன்னையும் மறந்து கோபத்தில் பேசிவிட்டவனை சலேரென திரும்பிப் பார்த்தாள் மாது....



போலிஸ் உடையில் கம்பீரமாக நின்றவனிடம் வந்தவள்



"உசுர வாங்குறதுக்காக இல்லங்க ஆரு தாத்தா....உசுர கொடுக்க...." என்றவள் அவன் முறைப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடிவிட்டாள்.



கயலின் சிரிப்பில் மீண்டவன் அவளையும் முறைக்க வாய் பொத்தி சிரிக்கவும்



"நா கோபமா இனைக்கேன்னு கண்டுக்காம போறா ராட்சஸி...." என்றவனுக்கும் அவள் மீதுள்ள கோபம் சற்று குறைந்து அவன் உதடுகளிலும் உதயமானது ஒரு அழகான புன்னகை!!!



ஒரு கையில் தன் மகளை தூக்கிக் கொண்டவன் மறுபக்கம் தன் மனைவியை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.



இராமநாதபுரம்.....



யாரிடமும் மன்னிப்பு கேட்காமல் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் நேரே அங்கே வந்துவிட்டாள்.



"விஜி...." என கத்திக் கொண்டே உள்ளே நுழைந்த தன் மகளின் குரலில் அவசரமாக வெளியே வந்தார் விஜயலக்ஷ்மி....



அவசரம் இருக்காதா பின்னே....



அவள் இங்கு வந்தே ஏழு வருடமாகிவிட்டதல்லவா.....



ஆம்....அன்றைய நாளிற்குப் பிறகு இங்கே வரவே இல்லை அவள்...



ஏன் அப்படி ஒரு நினைப்பு கூட இல்லை அவளுக்கு....



தன்னை பார்த்து கலங்கிக் கொண்டிருந்தவரை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டவள் மௌனமாக கண்ணீர் விட்டாள்.



தன் குழந்தை அழுவது பொறுக்குமா எந்தத் தாய்க்காவது???



அவளின் முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டே தன் கண்ணீரையும் துடைத்துக் கொண்டார்.



"ஐ அம் ரியலி சாரிமா....என்ன மன்னிப்பியா....என்கூட பேசுவியாமா....?"



"ஆமாடா கண்ணா....உன்கூட பேசாம இருப்பேனா....நீ அழறத நிறுத்து.... உன் மேல வருத்தமே தவிர கோபமெல்லாம் இல்லடா.... நீ அழாத" எனவும் இன்னும் இறுக்கி கட்டிக் கொண்டு கதறியே விட்டாள் பேதை....



தன் அன்னைக்குப் பின்னால் நின்று கண் கலங்க பார்த்துக் கொண்டிருக்கும் தன் அண்ணியை கண்டவள் கைகளை பிசைய அவளே வந்து அணைத்துக் கொண்டாள்.



"சாரி அண்ணி.... நா எல்லோரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்"



"அப்பிடியெல்லாம் எதுவுமில்ல அஷ்விமா...." என்றவளுக்கும் அழுகை வந்தது.



தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்தவள்



"அஜய் எங்க அண்ணி?" என்க அவள் பதில் கூற வாயெடுக்கும் முன்



"மா....என் தங்கச்சி வீட்டுக்கு வந்ததா கேள்விப்பட்டேன்" என்றவாறே மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் அவள் அண்ணன்.



அழுகையினூடே சிரித்தவள் அவன் நெஞ்சில் சலுகையாய் சாய்ந்து கொள்ள



"என்னாச்சு என் தங்கச்சிக்கு....

மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு இருக்கா.... அத விட மூஞ்சுல பல்ப் எரியுதே?"



"நா லண்டன் போறேன்..." என்க அனைவருக்கும் அதிர்ச்சி....



"ஏன் என்னாச்சு அஷ்வா....?" தாய் கேட்க



"தேவ் அங்கதான் இருக்குறதா கவி கால் பண்ணா...." எனவும் ஆனந்த அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிந்தது அவர்களுக்கு....



"ஆர் யூ ஷூர் அஷ்வி?" நம்பமாட்டாதவனாய் கேட்டான் அஜய்....



"எஸ் அஜய்...."



"நாளக்கு போடி"



"நோவே..." மறுத்தே விட்டாள்.



"அஜய்...வருண் அண்ணா கிட்ட கூட்டிட்டு போறியா?" அவன் ரித்திகா வீட்டில் இருப்பதால் அப்படி கேட்டாள்.



"ஓகே...வா...." என்றுவிட்டு திரும்ப ஓரத்திலிருந்த ஒரு அறையில் இருமல் சத்தம் கேட்கவும் அனைவரும் கலவரமாக அவள் முகம் பார்க்க நினைத்தது போலவே சிரித்துக் கொண்டிருந்தவள் உணர்ச்சி துடைத்து இறுகி இருந்தாள்.



((நீங்க நெனக்கிறது கரக்ட் நண்பா.....அங்க இருக்குறது ராமநாதன்தான்..அதுவும் படுத்த படுக்கையாக....



அப்பிடி என்னதான் நடந்துது???



விஷயத்த அஜய்தான் கண்டு பிடிச்சு எல்லோர் கிட்டவும் சொன்னான்....



ஒருநாள் அழுது மயக்கம் போட்டு உணர்வில்லாமல் இருந்த விஜயலக்ஷ்மி....அடுத்தநாள்ள இருந்து மொத்தமா மாறிப் போனாங்க...தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியையும் அவர் கண் முன்னாடியே ஆக்ரோஷமா இழுத்து அவர் முகத்துலயே எரிஞ்சிட்டாங்க....



யாருமே அவர் கூட பேசுறது என்ன அவர பாக்குறது கூட இல்ல.... அதுலயே மனுசன் தான் செஞ்ச தப்ப உணர்ந்து கிட்டாரு....



உணர்ந்து என்ன பயன்...எல்லாம் அவரவிட்டு தூரமா போயிடுச்சு...



எவ்வளவோ மன்னிப்பு கேக்க முயற்சி பண்ணாரு...எல்லோரும் சொல்லி வெச்சா மாறி அவர தவிர்த்துட்டாங்க....



ரொம்ப மன உலச்சல்ல இருந்தவரு ஒரு தடவ யோசிச்சு கிட்டே நடந்து வந்துகிட்டு இருக்கும் போது டிப்பர் லாரி இடுச்சுடுச்சு....அப்போ கூட அசஞ்சு கொடுக்கலங்க நம்ம ஹீரோயின் அம்மா....



குத்துகல்லு மாறி இருந்தவங்க தன் வாழ்க்கைல அப்பிடி ஒருத்தர் இருந்தாருங்குற அடையாளம் இருந்தா மாறியே காட்டிகல...



அவர் என்ன.... யாருமே போகல.....



கடைசில ஈஷ்வரிதான் எல்லாம் சரிபாத்து வீட்டுக்கு கொண்டு வந்தா....உயிர் போற கட்டம்தான்....



மன்னிக்கனும்னு ஆசப்படுறாரோ என்னவோ மன்னிக்கும் வர மூச்சு விட்டு கிட்டு இருக்காரு...



அடி பட்டதுல உடம்புல இப்போ எதுவும் வேல செய்றதில்ல.... அதிஷ்டவசமா மூச்சு மட்டும் போகுது....அதுவும் சில நேரம் இப்பிடிதான் இருமல் வந்துடும்...



அவர பாக்க போனன்னு ஈஷ்வரி கூட கொஞ்ச நாளா பேசாம இருந்தவன் இப்போ இப்போ தான் பேசுறான்.))





ஈஷ்வரி அவசரமாக உள்ளே ஓட விறுட்டென வெளியேறி காரில் போய் அமர்ந்து விட்டாள் அஷ்வினி.



......



"வாம்மா...." உள்ளே வரவேற்றார் வள்ளி....

ரித்திகாவின் அம்மா....



கடமைக்காக வரவழைத்து புன்னகைத்தாள்.



வீட்டிற்கு வரும்போதிருந்த உற்சாகம் முற்றாக வடந்து அங்கே எரிச்சல் வந்து குடி கொண்டு விட்டது.



"அண்ணா எங்க அம்மா....?" அவளுடைய அம்மா எனும் அழைப்பில் பூரித்துப் போனார் அவர்.



"நீ இரும்மா முதல்ல...." அவளை அமர வைத்தவர் யாழினியை அழைத்தார்.



குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் மாடியிலிருந்து எட்டிப் பார்க்க அங்கு அஷ்வினியைக் கண்டு முகம் பிரகாசமாகி



"அஷ்வி அக்கா..." என்றவள் உள்ளே சென்று



"ஸ்ரீ...வா...வா...உன் அத்த வந்திருக்காங்க பாக்கலாம்...." மகனையும் தூக்கிக் கொண்டு அவசரமாக கீழே இறங்கி வந்தாள்.



அதுவரை இறுக்கமாகவே அமர்ந்திருந்த அஷ்வினிக்கு குழந்தையை கண்டதும் சட்டென புன்னகைத்தவளுக்கு அப்படியே எரிச்சல் மறைந்து விட



"அட....ஸ்ரீ...வாடா..." என தூக்கிக் கொண்டாள் உற்சாகமாக....



"எப்பிடிக்கா இருக்கீங்க?"



"நல்லா இருக்கேன் யாழி...நீ?"



"நானும் நல்லா இருக்கேன்கா"



"ஆமா....அண்ணா எங்க....ஆபிஸ் வர்லன்னு சொன்னாங்க...

அதான் இங்க வந்தோம்" என்றாள் விளக்கமாக....



"மேலதான் ஆபிஸ் ரூம்ல ஏதோ கேஸ் விஷயமா படிச்சிகிட்டு இருக்காருக்கா....இருங்க நா பேசுறேன்..." என எழுந்தவளை அவசரமாக தடுத்தவள்



"இ...இல்ல....இல்ல நா...நா..நானே போய் பாக்குறேன்" என்றுவிட்டு எழ வள்ளி காபியுடன் வந்தார்.



"நா அண்ணா கூட பேசிட்டு வந்து குடிக்கிறேன்மா...."



"ஆரி போயிடுமேமா"



"ஏன் நீங்க மறுபடி உங்க புள்ளக்கு ஊத்தி தர மாட்டிங்களா?" அவளை திருஷ்டி கழித்தவர்



"உனக்கில்லாததா நீ போய் பேசிட்டு வா....இந்த அம்மா உனக்கு ஊத்தி வெக்கிறேன்" என்க திரும்பி அஜய்யை பார்த்து புருவம் தூக்க அவனோ இவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.



......



ஏதோ மும்முரமாக பைல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க தலையுயர்த்திப் பார்த்தான்.



அங்கே மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு புன்சிரிப்புடன் நின்றிருந்தா தன் தங்கையை காண அவன் மயங்கி விழாத குறைதான்....



"ஹாய் வருண் சார்...." உற்சாகமாக அவள் அழைக்க அவள் அழைப்பில் அவனுக்கு கண்கள் கரித்தது.



கூடவே ஏதேதோ ஞாபகங்கள் கண் முன் நிழலாட தன் பார்வையை திருப்பிக் கொண்டவன் பைலில் கண்களை ஓட்டினான்.



அவனருகே வந்து பைலை பறித்து மேசையில் போட்டவள் அப்படியே அவன் காலடியில் அமர்ந்து விட பதறிப் போய் தூக்கிவிட்டான் அவள் அண்ணன்.



"என்ன பண்ற அஷ்வினி?"



"ஹப்பா....பேசிட்டீங்க வருண் சார்...." எனவும் அப்படியே அமைதியாகி விட்டான்.



"பட்....உங்களுக்கு இன்னும் என்மேல கோபம் இருக்குன்னு புரியுது....இன்னொரு முக்கியமான விஷயம்....உங்க ப்ரண்டு அதாங்க....என் புருஷன்...எங்க இருக்காருன்னு தெரிஞ்சு போச்சு" என்க அவன் கண்கள் சட்டென கலங்கி அவளை ஆர்வத்துடன் நோக்க



"லண்டன்...." என்றாள் அவன் ஆர்வத்தை புரிந்து கொண்டவளாக....



"ஏன் வருண் சார்.... உங்க ப்ரண்டு எங்க இருக்கார்னுதான் கண்டு புடிச்சு சொல்லிட்டேன்ல... இப்போவாவது பேசுங்க வருண் சார்...."



"...."



"ஐ அம் ரியலி சாரிணா....பார் எவ்ரிதிங்...." என்றவளின் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் கொட்ட அதை பார்க்க முடியாதவன் சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.



அவன் செய்கையில் அவளுடைய அழுகை இன்னுமின்னும் கூட அவனுக்கும் தேங்கியது நீர்....



"ஐ அம் சாரிணா.... உங்கள ரொம்ப ஹேர்ட் பண்ணிட்டேன்... கோபத்துல லூசு மாதிரி பன்னிட்டேன்.... என்ன மன்னிச்சிருணா ப்ளீஸ்...."



"...."



"ஐ மிஸ் யூ லாட்ணா....உங்க கூட பேசாம இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துது தெரியுமா... சில நேனங்கள்ல ஆபிஸ் வரவே புடிக்காது....ஐ மிஸ் யூ ணா....நா உங்க கிட்டவே அஸிஸ்டனா இருந்துக்குறேண்ணா...." எனவும் இருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் ஜகா வாங்கிக் கொள்ள அவள் தலையை வருடியவன்



"ப்ச்....அழக்கூடாது ரிக்ஷிமா....நீ அழுதா என்னால தாங்க முடியுமா சொல்லு...." அவன் அழைப்பில் இன்னும் அழுதாள்.



ஆனந்தக் கண்ணீராக....



"எவ்வளவு பெரிய லாயர்....எனக்கு அஸிஸ்டன்னா உன்னோட க்ளயின்ட்ஸ் எனக்கில்ல அடி பின்னுவாங்க...."



"எவ்வளவு பெரிய லாயரா இருந்தாலும் முதல்ல உங்களுக்கு நா தங்கச்சிதான் வருண் சார்" என்றாள் சிரிப்பினூடே....



அவள் மூக்கை பிடித்து ஆட்டி



"வாலு....இத எப்போ தான் விடுவ?" என்றான் சிரிப்புடன்....



"ஆமா...யார்கூட வந்த?"



"உங்க உடன்பிறப்பு....அதான் அந்த லூசு அஜய் கூடதான்" என்றுவிட்டு நாக்கை கடித்தவள் வாசல் புறம் பார்க்க அங்கே இவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் அஜய்...



"அய்யய்யோ..." என அலரியவள் வருணின் பின்னால் போய் நின்று கொள்ள



"நீ பின்னாடி போய் நின்னு கிட்டா எங்களுக்கு அடிக்க தெரியாதாக்கும்" என்று விட்டு அவளை பிடிக்கப் போக அவனுக்கு போக்கு காட்டி அறை முழுக்க ஓடிக் கொண்டிருந்தவள் அவன் கைகளில் அகப்படும் சமயம்



"ப்ளீஸ் அஜய் அண்ணா.... இன்னிக்கு மட்டும் விட்டுடு ப்ளீஸ்...." என முகத்தை சுருக்கி அப்பாவியாய் கெஞ்ச உஷாரானான் வருண்....



"டேய் வேணாம்....இவள நம்பாத....இவ சரியான ப்ராடு... கேடிடா..." அதெல்லாம் அவன் காதில் விழுந்தால் தானே....



" சரி சரி பொழச்சி போ" என்க வருணின் பக்கத்தில் வந்து சேஃபாக நின்று கொண்டவள்



"போடா லூசு.... என்னய எவன்டா உனக்கு நம்ப சொன்னது....?" எனவும்



"அடிப்பாவி.."என வாயில் கை வைத்த அஜய்யை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் வருண்.....



"அண்ணா...."



"என்னடி?"



"லூசு....உன்ன இல்லடா...வருண் அண்ணாவ"



"இதென்னடா அநியாயம் அவனுக்கு மட்டும் மரியாதயா?"



"உனக்கு எவனாவது மரியாத தருவானா?"



"ஒன்ன....எங்கூடதானே வர்தாகனும் அப்போ பாத்துக்கலாம்"



"ஹி.....ஹி....சாரீ..." என அவள் சொன்ன பாவனையில் பக்கென சிரித்து விட்டான் அஜய்....



தானும் புன்னகைத்தவள் வருண் புறம் திரும்பி



"அண்ணா...." என்றாள் மறுபடியும்....



"சொல்லு ரிக்ஷிமா?" என்றான் பரிவாக...



"இன்னிக்கு நைட் ப்ளைட்டுக்கு நா லண்டன் போறேன்"



"வாட்....இன்னிக்கா..."



"ஆமா"



"யாரு கூட....?"



"தனியதாண்ணா"



"நீ தனியா போக வேணாம் ரிக்ஷிமா... நானோ இல்ல அஜய்யோ கூட வர்றோம்" என்றான் கண்டிப்பாக....



"ப்ளீஸ்ணா...."



"நோ ரிக்ஷி"



"அண்ணா தேவ் என் மேல ரொம்ப கோபத்துல இருப்பாரு....நா முதல்ல போய் சமாதானம் பண்ணிக்குறேன்... அப்பறம் நீங்க வாங்க" எனவும் அறைமனதாக தலையாட்டி வைத்தான்.





லண்டன்.....



பிறந்த நாள் அன்று காலை....





தன் முன் இருந்த கேக்கை சோகமாக பார்த்தவாறு நின்றிருந்தான் யாதவ்....



தன்னை சுற்றி அத்தனை பேர் இருந்தாலும் அவன் கண்கள் என்னவோ வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது.



"யாதவ் கேக் கட் பண்ணு....கமான்" மதுமிதா உற்சாகப் படுத்த அவளைப் பார்த்து சிரித்துவிட்டு திரும்பியவனின் பார்வை வாசலில் நின்று கொண்டிருந்த அஷ்வினியில் நிலைத்து சந்தோஷத்தில் விரிய



அவளோ இவனைப்பார்த்து கீழே மண்டியிட்டு கண்கலங்க



"வா..." என தலையசைக்க அருகலிருந்தவர்களை தள்ளிவிட்டு "மா.....ம்" என கத்திக் கொண்டே ஓடிப் போய் அவளுள் தஞ்சம் புக....



இவன் கத்துவதை கேட்டு போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த ரிஷி திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க அங்கே வாசலில் மண்டியிட்டு தன் மகனை அணைத்திருந்தவளை கண்டதும் கையிலிருந்த மொபைல் நழுவி கீழே விழ கண்கள் தெரித்து விடுமளவு அதிர்ச்சியில் உறைந்தான் அவளவன்!!!!



தொடரும்......



16-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 02 [ A ]



தன்னை அணைத்திருந்தவனை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதவளை பார்த்தவர்களுக்கு கண்கள் பனித்தது இருவரை தவிற....

கோபத்திலிருக்கும் கணவன் ஒன்று...



அடுத்தது மதுமிதா.

தாய் இல்லையென்று நினைத்திருந்நாளோ என்னவோ!!!

அதனால் தான் அதிர்ச்சியோ???



தன் மகனை அணைத்திருந்தவளின் கண்கள் கூட்டத்தின் நடுவில் அதிர்ச்சியில் உறைந்திருந்த தன்னவனை கண்டதும் அவனை முழுதாக ஆராய்ந்து தன்னுள் நிரப்பிக் கொண்டது.



ஏனெனில் வந்து விட்டாள்....இதன் பிறகு நடப்பதற்கு அவனே பொறுப்புதாரி...



காயப்படுத்துவான்ஒரு படி மேலே சென்று வெளியே அனுப்பினாலும் சொல்வதற்கில்லை....



இப்படி இருக்கும் போது மட்டுமே ரசிக்க முடியுமல்லவா...



"ஐ மிஸ் யூ மாம்..." தன் தோளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த தன் மகனின் குரலில் சட்டென சிந்தை கலைந்தாள் பேதை....



"நானும் உன்ன ரொம்ம மிஸ் பண்ணேன் கண்ணா...சாரிடா"



"இட்ஸ் ஓகே மாம்... வாங்க கேக் கட் பண்ணலாம்" என்றுவிட்டு அவளை விட்டு பிரிந்தவன் அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போக எத்தனிக்க திடீரென இழுத்தெடுக்கப்பட்டான் யாதவ் தேவமாருதன்....



பார்க்கவே தேவையில்லை...

நிச்சயமாக அவனேதான் என மனம் அடித்துக் கூற கீழே குனிந்திருந்தவளின் இதயம் வெளியே வந்து விடுமளவு வேகமாக துடித்தது.



"விடுங்க டாட் என்ன....நா மாம் கூடதான் வருவேன் விடுங்க...." ரிஷியின் கைகளில் திமிறினான் அவன்....



"யாதவ்..." அவன் அதட்ட அவன் கத்தலில் வந்திருந்த அனைவரும் சலேரென இவர்கள் புறம் திரும்ப சபை நாகரிகம் கருதி அவளை உறுத்து விழித்தவனின் ஆக்ரோஷத்தில் கதிருக்கு காய்ச்சல் வரும் போல் இருந்தது.



ஆனால் அவள் மறந்தும் குனிந்த தலை நிமிரவே இல்லை....



"கழுத்த புடிச்சு வெளிய அனுப்புறதுக்கு முன்னாடி மரியாதயா வெளில போய்டு" அடுத்தவர்களுக்கு கேட்காத வகையில் சொன்னாலும் அவன் குரலில் தெரிந்த அழுத்தம் அவளை இன்னும் பயப்பட வைத்தது.



இருந்தும் அசையாமல் நின்றாள்....



பின்னே அவ்வளவு கஷ்டப்பட்டு வந்தது திரும்பிப் போகவா???



'இல்ல...இல்ல...பயப்பட கூடாது.... ரிலாக்ஸ்....ரிலாக்ஸ்....'

மனதில் உறுப் போட்டுக் கொண்டவள் அவனை நேராக நிமிர்ந்து பார்த்தாள்.



பார்த்தே விட்டாள்!!!



அதுவும் கழுத்து வரைதான்...



அதற்கு மேல் பார்க்க அவளால் முடியவில்லை....



'நா எதுக்கு பயப்படனும்...என் புருஷன் நா பாப்பேன்.....' கண்களை மேலே உயர்த்தப் போக அவளுடைய கண்களே அவளுக்கு எதிராக நின்று சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது.



"சொன்னது காதுல விழல.... போறியா... இல்ல நானே அனுப்பி வெக்கட்டுமா....?" அவன் மீண்டும் உறும



"முடியாது" பட்டென சொல்லி விட்டாள் எங்கோ பார்த்தபடி...



எங்கிருந்துதான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ....



ஏற்கனவே கோபத்திலிருந்தவனுக்கு தான் என்ன செய்கிறோம் என்று கூட புரியவில்லை போலும்!!!



அவளை தன் பக்கம் திருப்பி இழுத்து விட்டான் ஒரு அறை!!!



கண்கள் ரத்தமென சிவந்து போய் இருந்தவனின் ஆக்ரோஷத்தில் கண்ணத்தில் கையை வைத்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் அவனை அவள் பார்த்த பார்வையில் அவனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமற் போனதுவோ???



அவனுக்குக் கோபம்....

அவன் மீது கோபம்...

அவள் மீது கோபம்...

ஏழு வருடமாக தன் மகனை ஏங்க வைத்த கோபம்....

அவனை தவிக்கவிட்ட கோபம்....



எல்லாமுமாக சேர்ந்து அவள் வந்ததற்கான கோப முகமூடியாய் போயிற்று....



"டாட்...." யாதவ்வின் கோபக் குரலில் அவன் பக்கம் சலேரென திரும்ப



"ஆர் யூ மேட்.... எதுக்காக இப்பிடி பிஹேவ் பண்றீங்க...அவங்க என்னோட மாம்... உங்க வொய்ப்.... அம் ஐ ரைட்?" அவன் போட்ட போடில் அஷ்வினி வலியையும் மறந்து வாய் பிளந்து விட்டாள்.



"யாதவ்..." அவன் மறுபடி அதட்ட



" ஷட் அப் டாட்.... வொய் ஆர் யூ டூயிங் திஸ்.... இப்போ பாருங்க எல்லோரும் நம்மளையே பாக்குறாங்க" அப்போதுதான் அவன் சுற்றுப் புறம் பார்த்தான்.



மயான அமைதியாக இவர்களையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.



கண்களை இறுக்க மூடித் திறந்து தலையை அழுத்தக் கோதிக் கொண்டவன் வெளியேறப் போக அவனைத் தடுத்து பிடித்திருந்தாள் அவன் மனையாள்.



திரும்பிப் பாராமலேயே உணர்ந்தவன் பல்லை கடிக்க



"நீங்க போக வேண்டாம்....நானே போயிட்றேன்" என்க அவளை திரும்பி முறைத்தான் ஒரு முறை....



'போய்டுவியா இடியட்....மறுபடி என்ன விட்டு போய்டுவிவியாடி' அவனின் உளக் குமுறலை அவனே அறியாத போது அவள் எங்கே என்று அறிவது???



"நோ டாட்....மாம் இல்லாம நா கேக் கட் பண்ண போறதில்ல..." பிடித்த பிடியில் பிடிவாதமாய் நின்றான் அவன் மகன்....



"நீங்களும் இருக்கணும்" என மறுபடியும் கூறிவிட்டு அஷ்வினியின் கையை பிடித்து இழுக்க அவள் கை தன்னவனை பிடித்திருந்தது.



அவளையும் கையையும் மாறி மாறி பார்த்தவன் அவளை முறைத்துக் கொண்டே தன் கையை உறுவிக் கொண்டான்.



அதற்குள் ஒரு கையில் தன் தாயை பிடித்திருந்தவன் மறு கையால் தன் தந்தையை பிடித்து இழுத்துக் கொண்டு போக வேறு வழியின்றி இணைந்து நடந்தான் ரிஷிகுமார் தேவமாறுதன்!!!





இராமநாதபுரம்....



"அப்பா...." உள்ளே நுழைந்தான் பதின்மூன்று வயது கம்பீரமான ஆண்மகன்....



இரவு உணவை முடித்துக் கொண்டு பால்கனியில் நின்று கொண்டிருந்த அஜய் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்து வந்தவனைப் பார்த்து புன்னகைத்தான்.



"வா அர்ஜு...."



(( அட...அர்ஜுன்ங்க.... நம்ம ரிஷி பாய் ப்ரண்டு நெனச்சி குடிச்சானே அதே அர்ஜுன்தான்....

அஜய்யின் மகன்....

ஈஷ்வரியின் அம்மா போய் சேந்துட்டாங்க....இப்போ பாய்ஸ் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறான்....

நேத்து தான் லீவுல ஊருக்கு வர்திருக்கான்.



தன்னோட கேர்ள் ப்ரண்ட் அதாங்க அஷ்வி....லண்டன் பொய்ட்டான்னு கேள்விப்பட்டு அவ மேல செம்ம காண்டுல இருக்கான்...



மவனே உன்ன பாத்தான் நம்ம ஹீரோ காண்டாயிடுவான் பாத்துக்கோ))



தன் தந்தையை அணைத்து விடுவித்தவன்



"ஏன்பா இன்னும் தூங்காம இருக்கீங்க?" என்றான் அக்கறையாய்...



"சும்மாதான் அர்ஜு....என்கிட்ட ஏதாவது பேசனுமா?"



"நத்திங்பா...சும்மா தான்....உங்க கூட பேசி ரொம்ப நாளாச்சுல....அதான் பேசலாம்னு வந்தேன்"



"சரி வா.." அவனையும் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான் அஜய்.



"அம்மா எங்கப்பா?"



"அவ கீழ இருக்கா... இப்போ வந்துடுவா"



"ம்...."



"அப்பறம்....படிப்பு எப்பிடி இருக்கு?"



"சூப்பர்பா...ஏதாவது ப்ராப்ளமாப்பா?"



"நத்திங் அர்ஜு... ஏன் திடீர்னு கேக்குற?"



"உங்க ஃபேஸ் டல்லா இருக்கேன்னு கேட்டேன்" எனவும் தன் மகன் அந்தளவு வளர்ந்து விட்டானா என்றிருந்தது அந்த தந்தைக்கு....



"ஏன்பா அப்பிடி பாக்குறீங்க?"



"நீ இப்போதான் பொறந்து சின்ன குழந்தயா இருக்குறா மாறி இருந்துது....அதுக்குள்ள பெரிய மனுஷன் ஆகிட்ட"



கொஞ்ச நேரம் பேசிருந்து விட்டு எழுந்தவன்



"ஓகேபா....நா தூங்க போறேன்....

கண்ண கட்டுது.... குட் நைட்" என்றவாறே தன்னறைக்குச் செல்ல அவனையே புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அஜய்....



***



"ஹாய்டா...." கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஆரவ்.



ஏதோ பைலை மும்முறமாக படித்துக் கொண்டிருந்த சித்தார்த் யாரு அனுமதி கேட்காமல் உள்ளே நுழைறது என்ற ரீதியில் நிமிர்ந்து பார்க்க அங்கே நின்றிருந்த ஆரவ்வை பார்த்துசிரித்துக் கொண்டே



"வாடா ஏ.சி.பி...." என்க சிரித்துக் கொண்டே அவன் முன் அமர்ந்தான் ஆரவ்.



"சாரு...என்ன இந்த பக்கம்?"



"ஏன்டா டேய்.... ஒருத்தன் வந்தா நல்லாருக்கியான்னு விசாரிக்கிறத விட்டுட்டு எதுக்குடா வந்தன்னு கேப்பியா?"



"நா எப்போடா அப்பிடி கேட்டேன்?"



"இதோ இப்போ கேட்டியே?" என்றுவிட்டு சிரிக்க அவனை போலியாக முறைத்தவன்



"சரி நல்லாருக்கியா?" என்க



"நா கேட்டு தான் கேக்குற பாத்தியா?" என்றான் வேண்டுமென்றே...



"டேய் படுத்தாதடா டேய்.... ம்... அப்பறம் இந்தப் பக்கம் வந்திருக்க?"



"கேஸ் விஷயமா சின்ன வேல இருந்துது...அதான் உன்னயும் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"



"அதானே பாத்தேன்... என்னடா நம்ம ப்ர்ண்டு நம்மள பாக்க வந்திருக்கானே.... அப்புட்டு பாசமா எம்மேலன்னு....இப்போ தானே புரியுது..."



"ஹி...ஹி...."



"ரொம்ப வழியாத" என்றான் கடுப்புடன்...



"கடுப்பாகாத மச்சி....ஒர்க் பிஸின்னு உனக்கே தெரியும்ல... நானாவது வந்திருக்கேன்....உனக்கு அந்த நெனப்பே இல்லியே?"



"அ...அது...அது...ஆ...எனக்கும் ஒர்க் பிஸி" என சமாளிக்க இப்போது முறைப்பது ஆரவ்வின் முறையானது.



"அப்பறம் என் மறுமக எப்பிடி இருக்கா?" மித்துவை கேட்டான்.



"அவக்கென்ன ஜாலியா இருக்கா"



"என்னடா அலுத்துக்குற?"



"பின்ன....நாமலும் குழந்தயாவே இருந்திருக்கலாம்டா....நோ டென்ஷன்....நோ ஒர்க்....ஒன்லி ஹேப்பி..." பீல் பண்ணி சொன்னவனை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் சித்தார்த்.



"எதுக்கும் நீ டாக்டர போய் பாத்துட்டு வந்துடு" எனவும் மீண்டும் முறைத்தவனுக்கும் உதடு சிரிப்பில் துடித்தது.



"இந்த கேஸ் ரொம்ப இழுக்குது மச்சான்....எவ்வளவு நாளா தான் நானும் அந்த பரதேசிய தேடிகிட்டு இருக்கேன்.....கைல சிக்க மாட்றான்டா" எரிச்சலில் சொன்னான் ஆரவ்....



"ஆன்கன்ஸ் கடத்தல் கேஸ் தானே மச்சி?"

"எஸ்டா....ரொம்ப படுத்துறான்டா" சட்டென ஏதோ தோன்ற



"மச்சி வெயிட்...." என்ற சித்தார்த் யாருக்கோ அழைப்பு விடுத்து



"மிஸ்டர்.குணா....நீங்க இன்னிக்கு புடிச்ச ஆளு எந்த கேஸ்ல மாட்டினாருன்னு சொன்னீங்க?"



"பெண் கடத்தல் சார்....எனி ப்ராப்ளம்?"



"நத்திங்....தேங்க்ஸ்" என வைத்தவன் தன்னை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த ஆரவ்விடம்



"மச்சி லிஸின்..."



"கேக்குது சொல்லு"

கடுப்படித்தான் ஆரவ்.



"பீ ஸீரியஸ் ஆரவ்....இப்போ நா பேசினேன்ல....அவரு பெயர் குணா....***ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்....இன்னிக்கு அவரு கிட்ட ஒருத்தன் பெண் கடத்தல் கேஸ்னு மாட்டி இருக்கான்....நீ எடுத்திருக்குற கேஸ்ல இவன் ஏன் இன்வாலவ் ஆக கூடாது?" எனவும் உஷாரானான் ஆரவ்.



"நா குணா கிட்ட இருந்து அந்த கேஸ நா ஹேண்டில் பண்றேன்னு சொல்லிட்றேன்....உன் கேஸ ஈஸியா முடிச்சிடலாம்"



"மச்சி...." கத்தினான் ஆரவ்...



"ஏன்டா கத்துற?"



"மச்சி நா சொல்றத கேளு....இப்போ குணா பிடிச்சிருக்குற ஆளு அந்த பரதேசியோட ஆளா இருந்தா குணா மாட்ன விஷயம் இந்நேரம் அவனுக்கு போயிருக்கும்....ரைட்?"



"யூ மீன்?"



"ஐ மீன்....குணா முக்கிய புள்ளியா இருந்தா இன்னிக்கு அந்த பொண்ண கடத்துறதுக்கு மறுபடி முயற்சி நடக்கும்....என் கணிப்பு சரியா இருந்தா இன்னிக்கு அந்த பரதேசி வெளில வருவான்"



"ஓ காட்...சூப்பர் மச்சி...."



"இப்போ நாம என்ன பண்றோம்... ஆல் செக் பொய்ட்ஸயும் உஷாராக்க சொல்றோம்...நா என் ஸைட்ல கண்ட்ரோலுக்கு கொண்டு வர்றேன்...நீ உன் ஸைட பாரு...பய் மச்சி" என்றவன் தன் ஜீப்புக்கு ஓடினான்.



***



லண்டன்.....



"மாம்...." என்றபடி ஒரு கேக் துண்டை ஊட்டிய தன் மகனை கண் கலங்க அணைத்துக் கொண்டாள் அஷ்வினி.



இவனையா ஈவு இரக்கமின்றி அழிக்கத் துனிந்தேன்???



ஆனால் உண்மை அதுவல்ல என்று அவள் ஆழ்மனம் மட்டுமே அறியும்....



தன் வயிற்றுக்குள் நகமும் சதையுமாய் வளரும் குழந்தையை கொள்ளும் அவ்வளவு கொடூரக்காரி இல்லை அவள்....



அது அவனை தன்னை விட்டு வந்து விலக்கி வைக்க அவள் சொன்ன பொய்!!!



இதை அவன் அறிவானா???



"மாம் ஏன் உங்க கண் கலங்குது?"

ஒன்றுமில்லை என தலையாட்ட அவளுடன் சேர்ந்து ஆடிய அவள் கூந்தலிலேயே படிந்து மீண்டது அவள் கணவன் பார்வை....



"டாட்....ஐ அம் சாரி" மன்னிப்பு யாசிப்பது போல் இரு கைகளையும் காதில் வைக்க சிரித்துக் கொண்டு அவனை தன் கைகளில் தூக்கி அணைத்துக் கொண்டவனுக்கும் ஊட்டி விட்டான்.



இரவு......



ஆசை தீர தன் குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் பேதை....



எவ்வளவு நாள் ஏக்கம் அவளது...

பார்ட்டி முடிந்தவுடன் போனவன்தான்....



இரவு பத்தை தாண்டியும் இன்னுமே வந்திருக்கவில்லை...



கதிரிடம் கால் பண்ணி அவன் ஆபிஸில் இருப்பதை உறுதி செய்து கொண்டவள் ஆசுவாசப் பெருமூச்சொன்றை விட்டு விட்டாலும் எப்படி எதிர் கொள்வது என்பதில் சற்று திணறித்தான் போனாள் அவனவள்....



யாதவ்வை ஓரமாக படுக்க வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று நின்றது மட்டும் தான் அவளுக்கு தெரியும்...



திடீரென எங்கிருந்து தான் உள்ளே வந்தானோ....



அவளை பிடித்து சுவற்றில் சாற்றி அவளை கண்களில் அனல் தெறிக்க பார்த்து நின்றவனின் தோற்றத்தில் தூக்கிவாரிப் போட்டது அவள் தேகம்...



கூடவே அவன் பிடித்திருந்த இரும்புப் பிடி அவ்வளவு வலித்தது.



இருந்தும் என்ன செய்ய???



அவனுக்கு கொடுத்த வலிக்கு அவன் தரும் வலியை பொறுத்துத் தான் ஆக வேண்டும்....



அது தான் அவள் விதி!!!



அவன் முகம் பார்க்கப் பயந்து கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.



"எதுக்குடி வந்த... சொல்லு எதுக்கு வந்த....சொல்லுடி.... ஏன் நாங்க நிம்மதியா இருக்கறது புடிக்கலயா....

இல்ல.... இன்னுமே உயிரோட இருக்காங்களே சாவடிக்கலாம்னு வந்தியா?" கண்களை சட்டென திறந்து அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.



அதெல்லாம் அவன் கருத்திற்குள் பதிந்தால் தானே...



அவன்தான் அவளை காயப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறானே....



"எதுக்குடி அமைதியா இருக்க....?" அவளை உதறித் தள்ளியவன்



"என் கண்ணு முன்னாடி நிக்காத.... போயிடுஉன்ன பாத்தாலே பத்திகிட்டு வருது... வீட்டுக்குள்ள வர்னும்னு நெனச்ச அதுக்கப்பறம் என்ன மனுஷனா பாக்கமாட்ட....கெட் லாஸ்ட்" கத்தியவன் கதவை தடாரென அறைந்து சாத்திவிட்டு உள்ளே போய்விட்டான்.



அப்படியே மடங்கி அமர்ந்தவளுக்கு கண்ணீர் மட்டுமே துணையாகிப் போக கதறி அழுதாள் பெண்....



.....



காற்றுக்கு யன்னல்கள் படபடவென அடித்துக் கொண்ட ஓசையில் திடுக்கிட்டு விழித்தான் ரிஷி....



வெளியே மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது.



அருகில் பார்த்தான்....



யாதவ் நல்ல உறக்கத்தில் இருந்தான் உதட்டில் சிறு புன்னகையோடு...



இதுவரை அவனை அப்படி பார்த்ததில்லை அவன்....



அந்த புன்னகைக்கான காரணம் அவள்!!!

ஆனால் அவள் எங்கே???



இரவு உதறிவிட்டு வந்தது நியாபகம் வர



"ஓஹ்...காட்..." தலையை அழுத்தக் கோதிக் கொண்டவன் கட்டிலிலிருந்து பாய்ந்து இறங்கி வந்து வேகமாக பால்கனி கதவை திறந்தவனுக்கு தன்னவள் இருந்த கோலத்தில் அதிர்ந்தது மனது...



மழையில் நனைந்த கோழிக் குஞ்சு போல் வெடவெடத்துக் கொண்டிருந்தவளின் அருகில் ஒடினான்.



மயங்கி விட்டிருந்தாள்!!!



ஆனால் வாய் எதையோ முனுமுத்துக் கொண்டே இருந்தது.



காதை கூர்மையாக்கி கேட்டான்....



அவன் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருந்தாள்...



அதுவும் அவனவளின் பிரத்தியேக அழைப்பு.....



தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் காற்றுக்கு மூடியிருந்த கதவை உதைந்து திறந்துவிட்டு அவளை சோபாவில் கிடத்தினான்.



அவள் ஈரமாக இருப்பதை உணர்ந்து உள்ளே சென்றவன் அவளுக்கான மாற்றுடையை எடுத்துக் கொண்டு வந்து மாற்றியும் விட்டான்...



கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டே அவளிடம் பேசினான்....

இல்லையில்லை திட்டினான்.



"இடியட்....ஏன் தான் என் உசுர வாங்குறியோ....உன் புள்ளயே உன்ன விட அறிவா இருக்கான்....

ஸ்டுப்பிட்.... நா வெளில இருன்னா இருந்துடுவியாடி.... மண்டைல மூளன்னு ஒன்னு இருக்கா இல்லயான்னே தெரில.... ஓங்கி ஒன்னு விட்டென்னா தெரியும்....டாமிட்"



இப்போது அவள் உடம்பு நடுங்குவது நின்றிருந்தது.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை தூக்கிக் கொண்டு போய் யாதவ்விற்கு அருகில் கிடத்திவிட்டு நிமிர அவனை விடாமல் அவனின் டீ-ஷர்ட்டை பிடித்திருந்தாள் அவள்....



அவள் கையை எடுத்தவன் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு யாதவ்வின் விலகி இருந்த போர்வையையும் சரி செய்தவன் அவனுக்கு முத்தமிட்டு விட்டு எழ அவன் கண்களை உறுத்தியது அவளின் மதி முகம்.....



இருவரையும் பார்த்தான்....



அவளே குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தாள்.



தன்னையும் மீறி அவளுக்கு முத்தமிடக் குனிந்தவன் தான் செய்யவிருந்தது உணர்ந்து பட்டென எழுந்து சோபாவில் சென்று படுத்துக் கொண்டான்.



விதி மாற்றுமா???



.......



"யாதவ்...."



"ப்ளீஸ் டாட்..." தூக்கத்தில் சிணுங்கினான் மகன்...



"யாது ப்ளீஸ் எந்திரிடா.... டைமாச்சு பாரு.."



"விடுங்க டாட்....நா தூங்கனும்"



"இவனோட இதே வேலையா போச்சு..."

தூக்கிக் கொண்டு போய் ஷவருக்கு அடியில் நிறுத்தி விட்டான்.



"டாட்..." வழமை போல் கத்தினான் மகன்.



"ஒழுங்காரெடியாகிட்டு வா..." திரும்ப எத்தனிக்க அவனை தள்ளி விட்டுக் கொண்டு தன் தாயிடம் ஓடினான்.



அவன் செய்யப் போவது உணர்ந்து



"ஏய்...ஸ்டாப்...இருடா.... அவள டிஸ்டர்ப் பண்ணாத..." கத்தும் போதே நெருங்கி விட்டிருந்தான்.



"மாம்..." உலுக்கினான்.



"யாதவ்....உன் மாம்கு ஜுரம்டா...

அவங்கள டிஸ்டர்ப் பண்ணாத" சற்று கோபமாகவே சொன்னான் அவளவன்.



"வாட்....ஏன் டாட் என்கிட்ட சொல்லல...." என்றவன் அஷ்வினியிடம் திரும்பி அவள் நெற்றியை தன் பிஞ்சுக் கைகளால் தொட்டுப் பார்த்தவனுக்கு கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.



ரிஷி இதனை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை....



அவனை தூக்கி அவன் கண்ணீரை துடைத்து விட்டவன்



"கண்ணா...இதுக்கெல்லாமா அழுவாங்க....?" என்றான் முடியை வருடியவாறே....



"மாம்கு ஒன்னும் ஆகாதில்ல டாட்...?" அவளைப் பார்த்து அழுது கொண்டே கேட்கவும் தான் அவனுக்கு விஷயம் புரிந்தது.



அவள் கண் திறக்காமல் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பது கண்டு பயந்திருக்கிறான்..



"நோ யாது...மாம்கு சரியாயிடும்..."



"அப்போ ஏன் அவங்க என்கிட்ட பேச மாட்டேங்குறாங்க?"



"நீயே எழுப்பி விட்றியா...?" அவன் பயம் போக்க மனமில்லாமல் கேட்டான்.



"ம்..." என தலையாட்ட அவனை இறக்கி விட்டான் ரிஷி.



அவளருகில் சென்று மீண்டும் அசைத்தான்.



"மாம்...மாம்...எந்திரிங்க மாம்..."



"மாம்..." மீண்டும் அழத் தயாராக அவன் அழைத்ததில் விழிப்புத் தட்டியிருந்தாலும் அவளால் கண்களை திறக்கவே முடியவில்லை....



அவன் அழப்போகிறான் என தெரிந்த தாய் மனது பதற கஷ்டப்பட்டு விழிகளை திறந்தாள் பேதை...



"மாம்...." அவளை கட்டிப் பிடிக்க முயன்று எழுந்தவள்



"கண்ணா....அழக்கூடாது.... அதான் நான் இருக்கேன்ல... அழக்கூடாது...

சரி....இன்னிக்கு நானும் நீங்களும் ஸ்கூல் போலாமா?" அவன் மனதை மாற்றக் கேட்டாலும் அவளுக்கே ஆசையாகத் தான் இருந்தது.



உடற் சோர்வு அனுமதிக்காததால் பேசாமல் இருந்தாள்.



"நா கிளம்பிட்றேன் மாம்....நீங்க இருங்க"



"அப்போ ரெண்டு பேரும் குளிக்கலாமா...?" அப்போதுதான் தன் தந்தை செய்தது ஞாபகம் வர புகார் வாசிக்க துவங்கினான் மகன்.



"மாம்...இந்த டாட் ரொம்ப மோசம்....

தூங்கிகிட்டு இருந்த என்ன ஷவருக்கு அடியில போய் நிறுத்திட்றாரு..." எனவும் உண்மையில் அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது அவன் மீது...



அவனை முறைத்தவள்

"கமாண்டர்...." என முணுமுணுக்க அவள் உதட்டசைவில் என்ன கூறினாள் என்பதை படித்தவன் பல்லை கடித்தான்.



"அவரு அப்பிடி தான் கண்ணா.... வா நாம குளிக்கலாம்" உற்சாகமாக பேசிவிட்டு எழப் போனவள் தெம்பின்றி அப்படியே விழப்போக



"ஏய் பாத்து..." கத்திவிட்டான் அவள் கணவன்.



"நோ மாம்...நானே ரெடியாகிருவேன்... நா குட் பாய்னு டாட் சொல்லுவாரு...." எனவும் அவளுக்கு இதயம் வலித்தது.



இந்த வயதில் இதெல்லாம் செய்வதற்கு அவனுக்கு என்ன தலையெழுத்து???



எல்லாம் என்னால் வந்தது....



கண்கள் சட்டென கலங்கிவிட கீழே குனிந்து கொண்டாள்.



அவளை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவன் யாதவ்வுடன் குளியலறை நுழைந்தான்.



.....



அவனை ஸ்கூலில் ட்ராப் பண்ணி விட்டு ஆபிஸ் போக நினைத்தவனுக்கு மனம் முழுதும் அவளிடமே நின்றது....



காய்ச்சலில் இருப்பவளை தனியாக விட்டு விட்டு வந்திருப்பது அவனை உறுத்தியது.



"என்ன டென்ஷன் ஆக்குறதுக்குன்னே இவள கடவுள் படச்சிருக்காரு போல" வாய் விட்டுச் சொன்னவன் நேராக வீட்டுக்கே வண்டியை செலுத்தினான்.



.....



'நா எப்பிடி இங்க வந்தேன்...' தீவிர யோசனையில் இருந்தாள் அஷ்வினி.



அனுறொரு நாள் வீட்டில் இதே போல் நடந்தது ஞாபகம் துள்ளிக் குதித்தது மனது.



"அப்போ கமாண்டர் என்ன தூக்கியிருக்கான்...ஹுர்ரே...." கைகளை மேலே தூக்கி கத்தியவள் மெல்ல கட்டிலை விட்டு எழுந்து நடந்தாள்.



நேற்றைய பயண அசதியும் சேர்த்து அவளை ரொம்பவும் பலவீனப்படுத்தி இருக்க மீண்டும் விழப் போனவளின் இடைபற்றி அணைத்துப் பிடித்திருந்தான் அவளவன்....



விதிர்விதிர்த்துப் போய் திரும்பிப் பார்த்தவள் அவன் கண்களில் அப்படியே தொலைந்து போனாள்.



அவளையே தானும் பார்த்திருந்தவன் தலையை உலுக்கிக் கொண்டு அவளை நேராக நிமிர்த்தி விட்டு அவளை உறுத்து விழித்தான்.



"முடியாதுன்னு தெரியுதில்ல.... அப்பறம் எந்த மண்ணாங்கட்டிக்கு நடந்து பழகிகிட்டு இருக்க?"



"நீங்க புடிப்பீங்கன்னு நெனச்ச தைரியத்துலதான் தேவ்" அவள் அழைப்பு அவன் உயிர்வரை சென்று ஊடுறுவினாலும் வெளியே விறைப்பாகவே இருந்தான்.



"இடியட்..."



"இட்ஸ் ஓகே" தோளை குழுக்க பல்லை கடித்தான் அவன்.



'இவள....' மனதால் மட்டுமே...



"தேவ்..."



"ப்ச்...என்ன அப்பிடி கூப்புடாத எரிச்சலா இருக்கு"



"தேவ்..."



"உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா?"



"தேவ்..." சிரித்துக் கொண்டே அழைத்தாள்.



என்னமோ பண்ணித்தொலை என்று சென்றுவிடவும் முடியவில்லை அவனால்....



"ப்ச்...."



"என்னன்னு கேளுங்க தேவ்... தே....வ்"



"என்ன?" எரிந்து விழுந்தான்.



"ஒன்னில்ல..." அவள் கண் சிமிட்ட பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு...



'இம்சை...' மனதிற்குள் திட்டினான்.



"தேவ்...." அவளை முறைத்து விட்டு நகரப் போக அவனை எட்டிப் பிடித்தவள்



"தேவ்....என்ன பாத்ரூம் கிட்ட விட்டுட்றேங்களா?" பாவம் போல் முகத்தை வைத்துக் கொள்ள மறுக்க முடியவில்லை அவனால்....



எதுவும் பேசாமல் அவளை தூக்கிக் கொள்ள அவள் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்துக் கொண்டவள் அவனையே ரசித்துப் பார்த்தாள்.



தெரிந்தும் அவள் புறம் திரும்பவே இல்லை அவன்...



அவளை வாசலில் இறக்கிவிட அவனை இழுத்து கண்ணத்தில் முத்தமிட்டவள் அவசரமாக உள்ளே நுழைந்து கொள்ள அதிர்ச்சியில் விரிந்தன ரிஷியின் கண்கள்...





இராமநாதபுரம்.....



"அஜய் ப்ளீஸ்.... நாம நெனச்சா காப்பாத்தலாம்...." தன் மாமனாருக்காக கெஞ்சிக் கொண்டிருந்தவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன்...



இந்த கொஞ்ச நாட்களில் அவர் நிலை இன்னுமின்னும் மோசமாகிக் கொண்டே இருந்தது....



அது பொறுக்க முடியாமல்தான் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்.



அவளுக்கும் கோபம் இருக்கத்தான் செய்கிறது...



இல்லையென்பதற்கில்லை...



என்றாலும் மனிதாபிமான முறையில் ஒரு உயிர் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை அவளால் பார்க்க முடியவில்லை அவ்வளவே....



"எதுக்கு காப்பாத்தனும்...எதுக்குடி காப்பாத்தனும்?"



"அஜய்..." அதிர்ந்து போனாள் அவன் மனையாள்....



"அவன் மனுஷனே இல்லன்னு சொல்லிகிட்டு இருக்கேன்...நீ என்னடான்னா மனிதாபிமான அடிப்படைல உதவி பண்ணலாம்குற" சீறினான்.



"அஜய்...வந்து நா.."



"நீ எதுவும் பேசாத...எத்தன பேரோட வாழ்க்கய நாசமாக்கியிருக்கான் தெரியுமா அந்தப் பாவி... என் அஷ்வி....ஏழு வருஷமா கஷ்டப்பட்டா...யாரால.... அந்த நாய்தான் காரணம்

அப்பறம் வருண்... எங்கள விட்டு தனியா இருக்குறதுக்கு அவனுக்கு என்ன தலையெழுத்தா....இந்த துரோகியால அவனும் போனான்.. அம்மா.... என் அம்மா என்ன பண்ணாங்க அவனுக்கு.... அவன கட்டிக்கிட்டது தப்பா" சட்டென உடைந்தது அவன் குரல்...



"ஐ அம் சாரி அஜய்..."



"முடிலடி....மனசுல பூட்டி பூட்டி...

கடைசியில வெடுச்சிடும் போல இருக்குடி" சட்டென அவனை தன்னோட அணைத்துக் கொண்டவளை தானும் அணைத்தவன் அவளிடமே அழுது தீர்த்தான்.



***



"ஆரு...எங்கடா இருக்க...ரெண்டு நாளா வீட்டுக்கு வர்ல....நா தனிய இருக்கேன்டா...பயமா இருக்கு...

இன்னிக்காவது வாடா" போனில் கெஞ்சினாள் அவன் மனையாள்.



"சாரி அம்மு...ஒர்க்டி.... அதான் வர முடில...நா வேனும்னா ரித்துவ வீட்டுக்கு வர சொல்லட்டுமா?"



"ஒன்னும் தேவயில்ல போடா...நீ உன் போலிஸ் வேலயே கட்டிகிட்டு அழு" பட்டென துங்டித்து விட அவனே அழைத்தான்.



"அம்மு...ப்ளீஸ்மா...இன்னிக்கை ஒரே ஒரு நாள் பொறுத்துக்கோ.... இந்த கேஸ முடிச்சு குடுத்துட்டு கிளம்பி வந்துடுவேன்"

"அம்மு...என் செல்லம்ல....

ப்ளீஸ்டி"



"அப்போ நாளக்கு வருவல்ல?"



"ஆமா அம்மு குட்டி...பய்..." முத்தமழை பொழிந்தவாறே வைத்தவன் நேரே சித்தார்திடம் சென்றான்.



.....



"வா மச்சான்....நானே வர்லாம்னு இருந்தேன்...."



"என்ன விஷயம்டா...எனிதிங் சீரியஸ்?" கேட்டுக் கொண்டே அமர்நதான்.



"எஸ் மச்சி....*** பக்கத்துல இன்னிக்கு ஒருத்தன் மாட்டியிருக்கான்"



"அன்னிக்கும் போனோமேடா....

ஒரு க்ளூவும் கெடக்கலியே"



"ட்ரை பண்ணலாம் மச்சி...வீ கென் டூ" அவனின் பேச்சில் உறுதியாய் தலையாட்டியன் நிமிர்ந்து அமர்ந்தான்.



"ஆமா....மதன் இன்னிக்கு உன்ன பாக்க வர்றதா சொன்னானே...

வந்தானா ஆரு?" அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தான் மதன்சிவா...



"ஹாய் மச்சீஸ்"



"வாடா புது மாப்பிள்ள..." கிண்டலடித்தான் ஆரவ்.



"இவன் ஒருத்தன்" பேச்சில் சலிப்பு தெரிந்தாலும் சிரித்துக் கொண்டே இருந்தது அவன் முகம்.



"அப்பறம் எப்பிடி இருக்க?" சித்தார்த் விசாரிக்க



"இருக்கேன்டா..." என்று விட்டு ஆரவ்விடம் திரும்பினான்.



"ஆமா...நீ இன்னும் அந்த கேஸ புடிச்சு தொங்கிகிட்டே இருக்கன்னு சித்து சொன்னானேடா..." என்க



"அடப்பாவி....நா எப்போடா சொன்னேன்?" அலறினான் சித்தார்த்.



"அந்த பரதேசி கைல மாட்டவே மாட்டேங்குறான்டாஇழுத்தடிக்குது கேஸ்" சலித்தான் ஆரவ்.



அவன் தோளில் கைவைத்து



"வீ கென் டூ மச்சி.... நாம மூனு பேரும் சேந்து இந்த கேஸ பாக்கலாம்" என மதன் கூற புன்னகைத்தவாறே கையை நீட்டிய சித்தார்தின் கை மேல் தங்கள் கையை வைத்தனர் இருவரும்.



லண்டன்....



அவள் திறந்து "தேவ்" என உலுக்கவும் தன்னிலை அடைந்தவன் அவளைப் பார்த்து முறைத்தான்.



"ஏன் தேவ் முறக்கிறீங்க?" அப்பாவி போல் கேட்டாள்.



அவள் செயலில் பல்லை கடித்தவன் அவளை தூக்கிக் கொள்ள முன்பு போலவே கைகளை மாலையாய் கோர்த்துக் கொண்டாள்.



அவனையே ரசித்துப் பார்க்க அவன் மறுபுறம் திரும்பிக் கொண்டான்.



அவன் முகவாயை பற்றி தன் புறம் திருப்பியவள் மீண்டும் அவன் கண்ணங்களில் முத்தமிட்டாள்.



இப்போதும் அவளை பார்த்து முறைத்தவன்



"என்ன பண்ற?" என சீரினான்.



"அய்யே இது கூட தெரியாம தான் இருக்கீங்களா?" வேண்டுமென்றே வம்பிலுத்து வாய் பொத்திச் சிரித்தாள்பெண்.



"ப்ச்..."



"அய்யோ தெரியலயா...நா வேணும்னா சொல்லட்டுமா.... முத்தம்ங்க" என்றவள் மீண்டும் முத்தமிட ஒன்றும் பேசாது இறக்கி கட்டிலில் அமர வைத்தான்.



அவன் ஷர்ட் காலரை பிடித்து மீண்டும் இழுக்க அவளை உணர்ச்சியற்று அவன் பார்த்த பார்வையில் அவனை விட்டுவிட்டாள்.



"தேவ்..." மறுபடியும் சிணுங்க



'இவள....'பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அவனால்....



"என்னன்னு கேளுங்க தேவ்"



"நீ சொல்றதெல்லாம் பண்றதுக்கு நா என்ன உன் அடிமயா?"



"ச்சே...ச்சே...நீங்க எப்பிடிங்க அடிமயா ஆவீங்க....நீங்க அடிமைனா அடிமைங்க பாவமில்ல?" என சீரியஸாக கேட்க அவளை மீண்டும் முறைத்தான்.



"இப்போ கூட பாருங்க... முறைச்சிகிட்டே இருக்கீங்க....உங்கள போய் அப்பாவி அடிமைன்னு சொல்லுவாங்களாா.. நீங்க கமாண்டர் தேவ்... அவங்க தான் உங்கள போலவே விறச்சிகிட்டே நிப்பாங்க....இல்ல நண்பா?"



((அய்யய்யோ....



நாங்க இல்லப்பா...



நண்பா இந்த பக்கம் வாங்க))



அவளையே பார்த்திருந்து விட்டு பேசாமல் போய் லேப்டாபை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டான்.



கண்ணத்தில் கை குற்றி அவனையே பார்த்தவளுக்கு அவன் படும் பாட்டை பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.



மனதிற்குள் சிரித்துக் கொண்டவள் மீண்டும்



"தேவ்" என கத்தி அழைத்தாள்.



அவன் தன் வேலையிலேயே மும்முறமாய் இருக்க கொஞ்ச நேரம் கத்திக் கொண்டிருந்தவளின் சத்தம் அப்படியே நின்று விட தலையை உயர்த்திப் பார்த்தவனுக்கு அவள் கண்ணத்தில் கைவைத்துக் கொண்டே தூங்கிவிட்டிருப்பது கண்டு கோபம் மறைந்து சிரிப்பு வந்தது.



அவள் முத்தமிட்ட போது எழுந்த உணர்வை அடக்க அவன் பட்ட பாடு....



ஹப்பா....



கடைசியாக அமர்ந்து கொண்டு அவள் இழுக்க அதற்கு மேல் விட்டிருந்தால் அவனே முத்தமிட்டிருப்பான்....



அதில் வந்த கோபத்தில் தான் எந்த உணர்ச்சியுமற்று இருந்தான்.



"ராட்சஸி..." மெல்ல முணுமுணுத்துக் கொண்டவனுக்கு ஆரவ் சொல்வதில் தப்பே இல்லை என்றே தோன்றிற்று.....



தொடரும்......



17-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 02 [ B ]



"சித்து....வேக் அப் மச்சி....ப்ளீஸ்....

கமான் குவீக்..." அசதியில் ட்ரைவர் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன் நண்பனை பாரபட்சம் பார்க்காமல் எழுப்பிக் கொண்டிருந்தான் ஆரவ்.



நேற்று முழுவதும் கேஸுக்காக அலைந்ததில் மூவருக்கும் ஒரு பொட்டுத் தூக்கமில்லை....



வீட்டுக்கும் போகாமல்தான் தேடிக் கொண்டிருந்தனர்.



இப்போது மணி அதிகாலை ஐந்து...



சுமார் அதிகாலை நான்கு மணியளவில் ஜீப்பை சாலையோரமாக நிறுத்திய சித்தார்த்



"கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம் மச்சான்...." என்க அதை ஆமோதித்து தான் உறங்கியிருந்தனர்.



மதன் வெளியே சென்று வருவதாக கூறிச் செல்ல சரி என தலையாட்டியவன் உறங்கிக் கொண்டிருந்த சித்தார்தை எழுப்பினான்.



"சித்து டேய்.... எந்திரிடா....நமகிட்ட டைமில்ல மச்சான்.. வேக் அப்..."



"டேய் கொஞ்சம் சும்மா இர்றேன்டா...

இப்போதானே தூங்கினேன்..."



"பாவி....தூங்கி ஒரு மணி நேரமாச்சுடா...எந்திரிடா...." எனும் போதே மூவருக்கும் டீயுடன் வந்து நின்றான் மதன்.



"மச்சான் நீ இவன எழுப்பி விடு...நா முகத்துக்கு தன்னி அடிச்சு கழுவிட்டு வந்துட்றேன்..."



"ஓகேடா..." என்றவன் ஆரவ் இறங்கவும் டீ கப்பை கார் பானட்டின் மீது வைத்து விட்டு உள்ளே ஏறினான்.



"டேய் சித்து மணி அஞ்சு....எந்திரிடா"



"கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களாடா..." என்றவாறே தூக்க கலக்கத்தில் சோம்பல் முறித்தவன் மணியை பார்த்து அலறினான்.



"டேய் எரும....மணி அஞ்சாச்சு....

எழுப்பி விட்ருக்கலாம்ல?"



"சாரி மச்சான்.... எங்க ரெண்டு பேருக்கும் எழுப்ப மறந்து போச்சு" கடுப்பானான் மதன்.



"ஹி...ஹி...ரொம்ப நேரமா எழுப்பியிருப்ப போல?"



"ச்சே...ச்சே நாங்க எழுப்பவே இல்ல"



"ஆமா...அந்த கேள்விக்கு பொறந்தவன் எங்க போனான்"



"அவன் ப்ரஷப்பாக பொய்ட்டான் மச்சி நீயும் பொய்ட்டு வந்துடு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வெளியில் வந்து நின்றான் ஆரவ்.



"எந்திரிச்சுடியாடா எரும....போ போயி முகத்த கழுவிட்டு வா கிளம்பலாம்" காருக்குள் தலையை நீட்டி சொன்னான்.



"இதோ" என்றுவிட்டு சித்தார்த் செல்ல பானட் மீதிருந்த டீ கப்பை எடுத்து மதனிடம் ஒன்றை நீட்டியவன் தானும் பருகினான்.



"ஆரு..."



"என்ன மச்சி?"



"நாம யுனிபார்ம மாத்திரலாம்டா...

சந்தேகம் வர சேன்ஸஸ் இருக்கு"



"ஆமா மச்சான்....அதயே தான் நானும் யோசிச்சு கிட்டு இருந்தேன்..." என்று விட்டு அவன் யுனிபாமை கலற்றி மஃப்டிக்கு மாற மதனும் மாறிக் கொண்டான்.



சித்தார்த் வரவும் டீ கப்பை கொடுத்தவன்



"மச்சி நீயும் மஃப்டிக்கு மாறிரு..." என்க தலையாட்டியவாறே டீயை குடித்தான் அவன்...



***



லண்டன்......



அன்று போலவே இன்றும் தனியாக அமர்ந்திருந்த யாதவ்வின் அருகில் வந்து அமர்ந்தாள் மதுமிதா.



"ஹாய்"



"ஹாய் மிஸ்..." என்றான் அதே வசீகர சிரிப்புடன்...



"இன்னிக்கு ஏன் லேட்?"



"டாட் இன்னும் வர்ல"



"நா உன்கிட்ட ஒன்னு கேக்கட்டுமா?"



"கேளுங்க மிஸ்"



"உனக்கு உன் அம்மான்னா ரொம்ப புடிக்குமா?" என்றவளின் கேள்வியின் சட்டென அவன் முகம் விகசித்தது.



"எஸ் மிஸ் ரொம்.......ப" கையை அகல விரித்துச் சொன்னான்.



"உன் அப்பாவ?"



"அவரயும் தான்"



"யார ரொம்ப புடிக்கும்?"



"ரெண்டு பேரையுமே புடிக்கும் மிஸ்... ஐ லவ் மை பேரண்ட்ஸ்...."



"உன் அம்மா எங்க இருந்தாங்க?"



"அவங்க ஒரு லாயர்....அவங்களுக்கு ஒர்க் அதனால இன்டியால இருந்தாங்க"



"உன் அம்மாவ நா பாக்கலாமா?" அவளுக்குமே ஆர்வமாக இருந்தது அவளுடன் பேச....



"நாளைக்கு கண்டிப்பா வர்றேன்னு சொல்லியிருக்காங்க" எனும் போதே அவன் முன் வந்து நின்றது கருப்பு நிற லம்போகினி....



துள்ளி இறங்கியவன்



"பய் மிஸ்...." என்றபடியே ஓடிச் சென்று ஏறிக் கொண்டான்.



"டாட்....க்வீக்கா போங்க....நா மாம் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்"



"அதெல்லாம் அவசரமா போக முடியாது" மாம் மாம் என்றிருந்தவனை பார்க்க கடுப்பாகியது அந்தத் தந்தைக்கு...



"ஒய் டாட்?" சட்டென கோபப்பட்டான் அவன் மகன்.



"என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு"



"அதான் உங்க கூட டெய்லி இருக்கேனே டாட்..."



"பரவாயில்ல இன்னிக்கும் இரு"



"ப்ளீஸ் டாட்....எனக்கு மாம் கிட்ட போகணும்"



"பீச்சுக்கு போலாமா?"



"நோ டாட்...ப்ளீஸ்"



"அவகிட்ட அப்பிடி என்னடா இருக்கு.... என்ன விட்டுட்டு அவ பின்னாடியே சுத்திட்டு இருக்க?"



'நீ என்ன பண்ண' காரித் துப்பியது மனசாட்சி....



"டாட் நீங்க பேசுறது எனக்கு புரியல" அப்பாவியாய் சொல்லவும் அவனைப் பார்த்து பக்கென சிரித்தான் ரிஷி.



"அவசரமா போங்க டாட்...." மீண்டும் அவன் அதே பல்லவியை பாட



"நோ யாதவ் நாம இன்னிக்கு கண்டிப்பா பீச்சுக்கு போறோம்"



"ப்ளீஸ் டாட்... ப்ளீஸ்"



"நோ" தெளிவாக மறுத்தான் ரிஷி.



ஏனோ அவளுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் போல் இருந்தது அவனுக்கு....



"ஏன் டாட்... ப்ச்....ஐ ஹேட் யூ டாட்... நா உங்க கூட கோபமா இருக்கேன்....

என்கூட பேசாதீங்க டாட்" கோபமாய் ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டான்.



அவனைப் பார்த்து சிரித்துவிட்டு அவன் தலையை கலைத்து விட்டான்.



"விடுங்க டாட்..." அவன் கையை தட்டிவிட்டான்.



"கால் பண்ணி தர்றேன் பேசுறியா... சொல்லுடா"



"நா உங்க மேல கோபமா இருக்கேன்"



"அப்போ ஏன் பேசுற?"



"போங்க டாட்"



"உனக்கு ஏன்டா இவ்வளவு கோபம்?"



"உங்களுக்கு ஏன் கோபம்?" மடக்கினான் மகன்.



"நா எப்போ கோபப்பட்டேன்?"



"பர்த்டே பார்ட்டி அன்னிக்கு மாம்கு அடிச்சீங்களே டாட்.. பாவம் டாட் மாம்... ஐ ஹேட் யூ அகைன்" அவனது பேச்சில் அப்படியே அமைதியாகி விட்டான் அவளவன்.



"இறங்கு யாது" என்க வெளியே பார்த்தவன் வீடு வந்துவிட்டது அறிந்து கண்கள் பிரகாசிக்க



"தேங்க்ஸ் டாட்.... சாரி"



"இட்ஸ் ஓகே கண்ணா...." மீண்டும் அவன் தலை முடியை கலைத்தான்.



"ஐ லவ் யூ டாட்" என்றவன் அவன் கண்ணத்தில் முத்தமிட்டுவிட்டு துள்ளிக் குதித்து உள்ளே ஓடி விட்டான்.



இருபக்கமும் தலையாட்டி சிரித்தவனுக்கு அன்றும் இதே போல் தன்னவளும் முத்தமிட்டு விட்டு ஓடியது நினைவு வர சிரிப்பு மறைந்து பாறை போல் இறுகியது அவன் முகம்.



தனியே இருக்கும் போதெல்லாம் அவள் மீது வரும் கோபம் அவளை கண்டவுடம் எங்கு தான் மறைந்து போகிறதோ???



அவ்வளவு பலவீனமாகவா இருக்கின்றேன்???



ஒரு பெருமூச்சுடன் காரை பார்க் பண்ணி விட்டு உள்ளே நுழைந்தான்.



சோபாவில் அமர்ந்து தன் மகனிடம் கதை கேட்டுக் கொண்டே உடை மாற்றிக் கொண்டிருந்தவள் அவன் நுழைந்தது கண்டு



"சாப்பாடு எடுத்து வெக்கட்டுமா தேவ்?" என்க அவளை முறைத்தவன் மேலேறிச் சென்று விட்டான்.



"கண்ணா....உன் டாட்கு தேவ்னு பேரு வெச்சிருக்கறதுக்கு பதில் கமாண்டர்னு வெச்சிருக்கலாம்... எப்போ பாரு உர்ருன்னு கிட்டு" என அலுத்துக் கொள்ள அவள் பேச்சில் வாய் பொத்திச் சிரித்தான் மகன்.



"நீயும் இனிமே அப்பிடியே கூப்புடு கண்ணா....அப்போவாவது உன் அப்பன் திருந்துறானான்னு பாக்கலாம்"



"ஓகே மாம்...." சந்தோஷமாக தலையாட்டிய மகனை அள்ளி அணைத்துக் கொண்டாள்.



"பசிக்குது மாம்"



"வா கண்ணா" அவனை தூக்கிக் கொண்டு போய் சாப்பாட்டு டேபிள் மேல் அமர வைத்தவள் சாப்பாட்டை போட்டு அதை எடுத்து ஊட்டி விட்டாள்.



அவனும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொள்ள அவளுக்கு ஏனோ தொண்டை அடைத்து அழுகை வரும் போல் இருந்தது.



கண்கள் சட்டென கலங்கிவிட இமை தட்டி அடக்கியவளை கூர்ந்து பார்த்தவாறே இறங்கிக் கொண்டிருந்தான் அவள் கணவன்.



"ஐ அம் சாரி கண்ணா...." என்றவள் அவனை அணைத்து வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.



"பட் எதுக்கு மாம்?"



"சும்மாடா....கேக்கனும் போல இருந்துது...." எனவும் அழகாக சிரித்தான் அவர்களின் தவப்புதல்வன்.



அதற்குள் ரிஷி வந்து இருக்கையை இழுத்துக் கொண்டு அமர சலேரென திரும்பி அவனை பார்த்தவள் தலையை குனிந்து கொண்டு சாப்பாட்டை எடுத்து வைக்க கை நீட்டி தடுத்தவன்



"எனக்கு எடுக்க தெரியும்.... இவ்வளவு வருஷமா நான்தான் எடுத்துகிட்டு இருக்கேன்" என்றான் பட்டென்று...



ஏற்கனவே கவலையில் இருந்தவளுக்கு அவனிடம் பதில் பேச முடியாமல் போக மீண்டும் கலங்கி விட்டன கண்கள்.



"சாரி...." மெதுவாக முணுமுணுத்துக் கொண்டவள் யாதவ்விற்கு சாப்பாடு ஊட்டுவதிலேயே கவனமாகிப் போக அவன் சாப்பிடாமல் எழுந்து சென்றது கருத்தில் பதியாமற் போனது!!!
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாதவ்விற்கு ஊட்டிவிட்டு எழுந்தவள் இரவாகும் வரை அவனுடனேயே ஐக்கியமாகி விட கணவனை மறந்து தான் போனாள் பேதை!!!



இரவு சாப்பாட்டிற்கு யாதவ்வுடன் கீழே வந்த போதுதான் அவன் போட்ட சாப்பாடு அப்படியே இருப்பதை கண்டவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.



'அப்போ இவங்க சாப்பிடலயா....நா கவனிக்கவே இல்லயே....மரமண்ட மரமண்ட' தனக்குத் தானே குட்டு வைத்துக் கொண்டவள் தன் மகனுக்கு அவசரமாக ஊட்டி தூங்க வைத்து விட்டு அவனை தேடிப் போனாள்.



மேலே மொட்டை மாடியில் நின்று கொண்டு நிலவையே கண்வெட்டாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தவள் தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுத் தட்டை ஓரமாக வைத்து விட்டு தன்னைவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள்.



அவள் அணைக்க அவன் உடல் விறைத்தது.



அதை உணர்ந்து கொண்டவள் வேண்டுமென்றே தன் முகத்தை அவன் முதுகில் இருபக்கமும் தேய்க்க தன் இடை பற்றியிருந்த அவள்டைய கையை எடுத்து விட்டு அவள் பக்கமாக முறைத்தவாறே திரும்பி நின்றான்.



அவனை நிமிர்ந்து பார்த்தவள்



"வாங்க தேவ் சாப்பிடலாம்...." என்க அவனிடம் மீண்டும் அதே உணர்ச்சியற்ற பார்வை....



"ப்ச்...வாங்க தேவ்... எனக்கும் பசிக்குது" என்றுவிட்டு அவன் கையை பிடித்து இழுக்க அதை உதறியவன்



"எனக்கு பசிக்கல... முதல்ல போ இங்க இருந்து" எரிந்து விழ உதட்டை வளைத்தவள் தான் எடுத்து வந்த சாப்பாட்டை எடுத்து அவனுக்கு ஊட்டி விட கை நீட்ட அவளை கூர்ந்து பார்த்தவன்



"எனக்கு பசி அடங்கி ரொம்ப நேரமாச்சு" என்றான் குத்தலாக....



அதில் உதடு கடித்து கண்களை இறுக்க மூடித் திறந்தவள்



"சாரி" என்று விட்டு மீண்டும் ஊட்ட அவள் கையை தட்டிவிட்டான்.



மீண்டும் ஊட்டி விடுவதற்காய் கை நீட்ட அதையும் தட்டி விட்டான்.



அவளும் மீண்டும் மீண்டும் ஊட்ட கை நீட்டிக் கொண்டே இருக்க அவனும் தட்டி விட்டுக் கொண்டே இருந்தான்.



"ப்ச்...ஏன் தேவ் இப்பிடி பண்றீங்க... பாருங்க எல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சு" என்றாள் வருத்தத்துடன்....



"நா உன்கிட்ட கேட்டேனா?" மீண்டும் காய்ந்தான்.



"கேட்டா மட்டும் தான் கொடுக்கனுமா?"



"உன்ன இங்க இருந்து கிளம்புன்னு சொன்னேன்"



"நா இந்த வீட்ட விட்டு போறதா இருந்தா இருந்தா அது என் உயிர் போனதுக்கு...." சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பளாரென விட்டான் ஒன்று.



அவள் அதிர்ந்து நோக்க



"சாவு கீவுன்னு பினாத்திகிட்ட இருந்தேன்னா அப்பறம் என்ன மனுஷனா பாக்க மாட்ட....இடியட்" தட்டை விசிறியடித்து விட்டு அவன் சென்று விட தனக்கு எதற்காக அறைந்தான் என யூகித்துக் கொள்ளவே சில கனங்கள் பிடித்தது அந்தப் பேதைக்கு....



அவன் பேசியதை மீண்டும் ஓட்டிப் பார்த்தவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.



"அப்போ....என் மேல இன்னும் உங்களுக்கு லவ் இருக்குள்ள தேவ்...." முகம் தாமரையாய் மலர அவனிடம் ஓடினாள்.



கண்களை மறைத்தாவாறு கம்பீரமாக உறங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தவள் அவனுக்கு அருகில் படுத்திருந்த யாதவ்வை சற்று நகர்த்தி விட்டு இருவருக்கும் நடுவில் வந்தாள்.



மெதுவாக அவன் வயிற்றின் மீது வைத்திருந்த கையை எடுத்து தன்னை அணைக்குமாறு வைத்துவிட்டு அவன் நெஞ்சில் தலைவைத்தாள்.



அவளின் திடீர் அணைப்பில் திடுக்கிட்டு கண்களிலிருந்து கையை எடுத்துவிட்டு பார்த்தவன் தன்னையே அண்ணார்ந்து பார்த்துக் கொண்கிருப்பவளை முறைக்க அவளோ அதையெல்லாம் தூசு போல் தட்டிவிட்டு அவனையே ரசித்தாள்.



"என்ன பண்ற ரிக்ஷிதா?" அவனது அழைப்பில் விக்கித்துப் போனது பேதை மனம்.



கண்கள் கலங்கினாலும் அடக்கிக் கொண்டவள்



"பாத்தா தெரில...?" என்றாள் மிடுக்காக....



"அது தெரிது....ஏன் இப்பிடி பண்றன்னு கேட்டேன்?" என்றான் கோபமாக....



"எனக்கு உரிம இருக்கு நா பண்றேன்...உங்களுக்கு என்ன?"



"என்ன உரிம...யார் கொடுத்தா?"



"பொண்டாட்டிங்குற உரிமை.... என்னை தவிர வேற யாருக்கும் இல்ல... நீங்களே இல்லன்னு சொல்லுங்க பாக்கலாம்?"



"...."



"உங்களால முடியாது தேவ்.... ஏன்னா...." அவளை இடையிட்டான் அவன்.



யாதவ் ஓரத்தில் படுத்திருப்பது அவனுக்கு அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தியது.



"என் குழந்தைக்கு நடுவுல வர்றது எனக்கு பிடிக்கல"



"உங்க குழந்தயா...?"



" ஆமா என் குழந்த " அவள் சொன்ன சொல் அவளையே திருப்பித் தாக்கிவிட கண்களில் இம்முறை அடக்கமுடியாமல் நீர் கோர்த்துக் கொண்டது.



"அப்போ நா யாரு தேவ்?" என்றாள் குரல் கரகரக்க....



"நீ என் குழந்தயோட அம்மா....தட்ஸ் ஆல்.... அத தாண்டி வர ட்ரை பண்ணாத" அவன் பதிலில் அவள் மனம் அதிகமாக காயம்பட்டுப் போனது.



வலியுடன் அவனைப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய சட்டென அவனை விட்டு எழுந்து வெளியே செல்ல அவளையே வெறித்துப் பார்த்தான் அவன்......



***



"ஆரூ...." கத்திக் கொண்டே ஆரவ்வை பிடித்து தன் பக்கம் இழுத்தான் மதன்.



தனக்கு விழ வேண்டிய அடியிலிருந்து ஒரு நொடியில் தப்பியவன் தன்னை தாக்க வந்தவனின் நெஞ்சிலேயே ஓங்கி மிதிக்க தூரத்தில் போய் விழுந்தான் அவன்.



தங்களை தாக்க வந்தவர்களை பந்தாடிக் கொண்டிருந்தவர்களின் அடியை எதிர் கொள்ள முடியாமல் வீழ்ந்து கொண்டிருந்தனர் அந்த ரவுடிகள்...



அடிபட்டு கீழே கிடந்த ஒருவனின் தலை முடியை கொத்தாக பற்றி அவன் மீது அமர்ந்த ஆரவ் அவனுக்கை பளார் பளாரென மாற்றி மாற்றி அறைந்தான்.



"யாருடா நீங்க?" அவன் பதில் பேசாது அமைதியாக இருக்கவும் அவன் மூக்கிலேயே ஒரு குத்து குத்த குபுகுபுவென பீரிட்டுக் கிளம்பியது இரத்தம்.



"சொல்டா..." என கேட்டுக் கொண்டே மீண்டும் குத்தப் போக அவன் அடிக்குப் பயந்து அலறினான் அவன்.



"சொ....சொ....சொல்லிட்றேன்.... சொல்லிட்றேன்"



"ம்...சொல்லு யாரு நீங்க..எதுக்காக எங்கள அட்டாக் பண்ணீங்க?"



"அது...அது ராகேஷ் ஐயா தான் உங்க மூனு பேரயும் போட்டுத் தள்ள சொன்னாரு" என்க அவன் பதிலில் அதிர்ச்சியானவன் பின் கத்தி கத்தி சிரிக்கத் துவங்கி விட்டான்.



ஆரவ் அவனிடம் கேட்கும் போதே வந்து விட்டிருந்தவர்கள் அவனைப் போலவே அதிர்ச்சியாகி இருக்க அவன் சிரிப்பில் தான் தன்னிலை அடைந்தனர்.



"எதுக்குடா பைத்தியம் மாறி சிரிக்குற?" கடுப்பாக கேட்டான் மதன்.



"இல்ல மச்சீஸ்.... அண்ணா அன்னிக்கு போட்ட போடுல அந்த துரோகி கோமால ஹாஸ்பிடல்ல படுத்திருக்கான்....இதுல இவன் ஐயா நொய்யான்னு வேற சொன்னானா....அதான் சிரிப்ப அடக்க முடில..." என்றுவிட்டு மீண்டும் சிரிக்க அவர்களுக்குமே சிரிப்பு வந்தது.



"பட்....அவன் இப்போ எந்திருச்சு இருந்தான்னா...?" சந்தேகமாக சித்தார்த் கேட்கவும் சட்டென நின்றது ஆரவ்வின் சிரிப்பு....



தன் முதுகுக்குப் பின்னால் சொறுகியிருந்த பிஸ்டலை எடுத்து அவனை சுட்டு விட்டு எழுந்தவன்



"எஸ் சித்து....நீ சொல்றது கரெக்ட் தான்....நா இத யோசிக்கவே இல்ல...." என்றான் தீவிரமாக....



"மச்சி....ஒரு வேல..." சொல்லி வைத்தாற் போல் ஆரவ்வும் சித்தார்த்தும் ஒரே போல் இழுக்க



"ராகேஷோட வேளயா இருக்குமோ?" முடித்து வைத்தான் மதன்.



"மச்சி....முதல்ல இருந்தே பாரு.... நீ எடுத்த எந்த கேஸும் இது வர இழுத்ததில்ல....பட் இத எப்போ கைக்கு எடுத்தியோ அன்னில இருந்து எல்லாம் மிஸ் ஆகிகிட்டே இருக்கு...." ஆரவ்வை பார்த்து சொன்னான் சித்தார்த்.



"ஆமா மச்சான்...." மதனும் ஆமோதிக்க முதலிலிருந்து அலசிப் பார்த்தவனுக்கு அப்படி இருக்குமோ என்றே தோன்றியது.



"மச்சான்....ஆர்கன் கடத்தல் கேஸ்னு இல்ல...வேற எந்த கேஸ்லயுமே ராகேஷ் பேரு வந்ததில்லயே மச்சான்?"



"ஆரு....இதுல இருந்தே லாஜிக் புரிலயா....அவன் மேல சந்தேகம் வராத மாதிரி பண்ணி இருக்கான்டா..."



"எஸ் ஆரு சித்து சொல்றது கரெக்ட்.... நாம ஹாஸ்பிடல் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி பாக்கலாம்டா...."



"ஓகே மச்சி....பட் எப்பிடி திடீர்னு வந்தானுங்க....?" சித்தார்த் கேட்க



"பாலோ பண்ண சந்தேகம் கூட வர்ல மச்சான்" என்றான் மதன்.



"நோ மச்தி....இது பாலோ இல்ல.... நம்மள இங்க ப்ளான் பண்ணி வர வெச்சிருக்கானுங்க" என்றான் ஆரவ் ஏதோ யூகித்தபடி....



சித்தார்த்தும் மதனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள



"நீ கவனிச்சியா மச்சான்....நாம வந்த வழில சில கடைகள தவிர வேற எதுவுமே இல்ல....இன்பாக்ட் நமக்கு கூட இந்த இடத்துலயா கடத்த போறானுங்கன்னு சந்தேகம் கூட வந்துது.... அவனுங்க நம்மல இங்க வர வெச்சினுக்கானுங்க மச்சான்.....

இன்னியோட நம்ம கத முடிந்சுதுன்னு ஆள் அனுப்பி இருப்பான்....பட் நமக்கு அது நடக்கல....அது நடந்திருந்தா நமக்கு அவன் மேல சந்தேகம் வந்திருக்காது"



"ஆமா மச்சான்" ஆமோதித்தான் சித்தார்த்.



"இப்போ என்னடா பண்றது?"



"நீ வீட்டுக்கு போ மதன்....நாங்க பாத்துக்குறொம்.... உன் பொண்டாட்டி ரொம்ப பாவம்" ஆரவ் கண்ணடிக்க



"அதெல்லாம் இல்லடா....உங்கள விட்டுட்டு எப்பிடி போறது?"



"நடந்து போ" சொல்லி விட்டு சித்தார்த் சிரிக்க அவன் முதுகிலேயே ஒன்று போட்டான்.



"இல்லடா நா போல"



"அது சரியா இருக்காது மச்சான்.....

அர்ஜன்ட்னா நாங்களே உன்ன கூப்புட்றோம்.... நீ கிளம்பு" ஆரவ் உறுதியாய் மறுத்து விட சரி எனவும் மூவரும் கிளம்பினர்.





லண்டன்.......



வெகு நேரமாகியும் அவள் உள்ளே வராததில் பொறுமை இழந்தவன் எழுந்து வெளியே வந்தான்.



சோபாவில் மேல் கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்திருந்தாள் அவனவள்....



அவள் அருகில் சென்றவன்



"எதுக்கு இப்போ சிம்பதி க்ரியேட் பண்ணிகிட்டு இருக்க?" என்றான் கோபமாக....



அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் குனிந்து கொண்டாள்.



"உள்ள வந்து படு"



"உள்ள வான்னு சொல்றேன்ல?"



"நீங்க போங்க....நா இங்கேயே படுத்துக்குறேன்"



"ஏன்?"



"அந்த ரூமுக்குள்ள வர்ற தகுதிய நா இழந்துட்டேன்னு நெனக்கிறேன் தேவ்.....அதானால வர்ல.... ஐ அம் சாரி தேவ்" என்றுவிட்டு எழுந்தவளை இடையோடு பிடித்து தூக்கியவன் நேரே தங்கள் அறைக்கு நடக்க நம்ம மாட்டாமல் அவனை விழிவிரித்துப் பார்த்தாள் அவன் மனையாள்....



அவளை இறக்கி விட்டவன்

"சும்மா சும்மா உலறிகிட்டு இருக்காம போய் தூங்கு..." என்றான் எங்கோ பார்த்தபடி...



"நா உங்க பக்கத்துல தான் தூங்குவேன்" என்றவளை திரும்பி முறைக்க



"உங்க மனசுல எனக்கு அப்பறம் தான் எல்லாம் இருக்கனும்.... உங்க பக்கத்துல கூட நா யாரயும் படுக்க விட மாட்டேன்....அது நம்ம குழந்தயாவே இருந்தாலும்" அழுத்தம் திருத்தமாக அவள் கூறி விட அவள் வார்த்தைகள் அவன் இதயத்தை மயிலிறகால் வருடுவது போல் இருந்தது.



குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் போது ஏன் உங்கள் குழந்தை என்று சொன்னாள் என்று இப்போது தான் அவனுக்கு புரிவதாய்!!!



அதாவது யரையும் தனக்குப் பிறகே இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறாள்.....



அது பிள்ளைக்கு காட்டும் அன்பாக இருந்தாலும் கூட....



அவள் மீதுள்ள கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போல் இருந்தது.



"வாங்க....வந்து படுங்க தேவ்....எனக்கு ரொம்ப தூக்கம் வருது" சிறு பிள்ளை போல் சிணுங்கவும் எதுவும் பேசாமல் நடுவில் சென்று படுத்துக் கொள்ள அவனின் மறுபக்கம் வந்து அவன் நெஞ்சில் படுத்துக் கொண்டாள் அவன் மனையாள்.



கொஞ்ச நேரத்தில் திரும்பிப் பார்த்தவன் அவள் உறங்கிவிட்டது கண்டு



"இம்ச...." என்றான் உதட்டில் சிறு புன்னகையுடன்....



மறுபக்கம் பார்த்தான்....

தன்னுள் சுருண்டு கொண்டு படுத்திருந்தான் மகன்.



"உனக்கு அவ்வளவு பொறாமயாடி?" கேட்டுக் கொண்டே இருவரின் தலையையும் தடவிக் கொடுத்தான் அந்தத் தலைவன்!!!



தொடரும்.....



18-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 03 [ A ]



"ஹாய் மச்சி" என்றவாறு உள்ளே நுழைந்த சித்தார்தை ஆச்சரியமாகப் பார்த்தான் ஆரவ்.



"என்னடா அப்பிடி பாக்குற?"



"சாரு ரொம்ப பிஸி...அப்பிடி இருக்கும் போது இவ்வளவு தூரம் என் ஸ்டேஷனுக்கு வந்திருக்கீங்க....

அதான் நம்பமுடிலங்க"



"டேய் டேய் ஓட்டாதடா" என்க சிரித்தான் அவன்.



"ஆமா...அஷ்வி லண்டன் போய்டால்ல?"



"இப்போ எதுக்கு அவ பேச்சு?" சட்டென எரிச்சல் வந்தது ஆரவ்விற்கு....



"சரி விடு.... கேஸ் என்னாச்சு...

எனி இம்ப்ரூவ்மெண்ட்ஸ்?" உதட்டை பிதுக்கி இல்லையென தலையாட்டினான் ஆரவ்....



அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டவன்

"எனி ஐடியாஸ்?" என்றான் மீண்டும்...



ஆரவ் தன் ஐடியாவை விளக்க

திடுக்கிட்டு விழித்தவன்



"வேணாம் மச்சி...இது ரொம்ப ரிஸ்குடா...." என்றான் அக்கறையாய்....



"நோ மச்சி....அவன உயிரோட விட்டு வெச்சதே தப்பு"



"அதுக்காக அவன் இடத்துக்கே போவியா.... எனக்கென்னமோ இது சரியா படலடா....விட்று ஆரு"



"நா முடிவு பண்ணிட்டேன் மச்சான்... அண்ணா திரும்பி இந்த நாட்டுக்கு வரும் போது அப்பிடி ஒருத்தன் இருந்தாங்குறதுக்கான அடையாளமே இருக்க கூடாது"



"பண்ணலாம் மச்சி...பட் இது மட்டுமே வழி இல்லயே?"



"எனக்கு வேற வழி தெரில மச்சான்.... நேருக்கு நேர் மோத போறேன்"



"நானும் வர்றேன்...செத்தா ஒன்னா சாவலாம்" என்ற நண்பனின் கை மேல் தன் கையை வைத்து அவனை பார்த்து சிரித்தான் ஆரவ் தேவமாருதன்.





லண்டன்.....



காலை....



எப்போதும் போலவே அவனை எழுப்ப முடியாமல் எழுப்பிக் கொண்டிருந்தான் ரிஷி.



மகனுக்கு அருகிலேயே இன்னுமே உறங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கடுப்பானவன் அவளையும் எழுப்பினான்....



ஊஹூம் இரண்டும் அசைவதாகவே இல்லை...



யாதவ்வை தூக்கி குளியலறை கொண்டு போக எத்தனித்தவனின் கைகளிலிருந்து தன் குழந்தையை சட்டென பறித்துக் கொண்டாள் அஷ்வினி.



'இப்போ தூங்கிகிட்டு தானே இருந்தா.... எப்போ எந்திரிச்சா' மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டவன் அவளை பார்த்து நெற்றி சுறுக்க



"நா எழுந்து ரொம்ப நேரமாச்சு.... நீங்க குழந்தய என்ன பண்றீங்கன்னு பாக்க தான் படுத்தா மாறி நடிச்சிகிட்டு இருந்தேன்....

ரொம்ப யோசிக்காதீங்க" என்றுவிட்டு யாதவ்வை தூக்கிக் கொண்டு குளியலறை சென்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்....



......



"மாம்....ப்ளீஸ்..." தோளில் தூங்கிக் கொண்டே சிணுங்கினான் மகன்.



"யாது...நானும் உன்கூட இன்னிக்கு ஸ்கூல் வர்னும்ல....யாதுகுட்டி குளிச்சா தானே அம்மாவும் குளிக்கலாம்....இல்லன்னா அந்த கமாண்டர் விட்டுட்டு போய்டுவானே"



"நோ மாம்....நா குளிச்சிடுவேன்" என்று எழுந்த மகனை குளிப்பாட்டி எடுப்பதற்குள் அவளுக்கு பாதி உயிர் போய்விட்டது.



ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருந்தவனை பார்த்து இடுப்பில் கை வைத்து முறைத்தாள் தாய்...



அவன் குளிப்பதற்குள் இவளை குளிப்பாட்டி முடித்து விட்டான் என்றுதான் கூற வேண்டுமோ???



'ஷப்பா...இவன இத்தன வருஷமா இந்த கமாண்டர் எப்பிடித்தான் சமாளிக்கிறானோ ஒரு நாளக்கே இப்பிடியா' தலையில் கை வைத்தவள் அவனை தூக்கிக் கொண்டு வெளியே வர அவள் கோலத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் ரிஷி.



அவனையே....அவன் சிரிப்பையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டவன் சட்டென அடங்கி விட்டது கண்டு அவளுக்கு உள்ளுக்குள் வலித்தது.



அவளைப் பாராமலேயே குழந்தையை வாங்கிக் கொண்டு அவன் போய்விட அவனையே பார்த்திருந்தவள் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.



....



"டாட்...மாம் என்கூட வரணும்" காரிலிருந்து கீழே இறங்காமல் அடம்பிடித்த மகனை கோபத்துடன் திட்ட வாயெடுத்தவனை தடுத்தாள் அவன் அருமை மனைவி.



"வா கண்ணா போலாம்...." என்றுவிட்டு தன் மடியிலிருந்த தன் மகனை இறக்கி விட்டு தானும் இறங்கப் போனவளின் கையை இறுக்கிப் பிடித்தான் அவள் கணவன்.



அவள் திரும்பி கேள்வியாய் அவனை பார்க்க



"என்னால நீ வரும் வர வெயிட் பண்ணிகிட்டு இருக்க முடியாது.... எனக்கு அர்ஜன்ட் வேல இருக்கு... சோ யாதவ்வ அடம்பிடிக்காம போக சொல்லிட்டு என்ன கடுப்பாக்காம உள்ள உக்காரு" எரிந்து விழுந்தான்.



"ப்ளீஸ் தேவ்...."



"நோ வே ரிக்ஷிதா" அவன் அழைப்பில் அடிபட்ட பார்வை பார்த்தவள்



"நா எப்பிடியாவது வந்துக்குறேன்....

நீங்க கெளம்புங்க" என்றுவிட்டு சட்டென இறங்கி யாதவ்வுடன் சென்று விட தலையை அழுத்தக் கோதிக் கொண்டு வேறு வழியின்றி தானும் இறங்கினான் ரிஷி.



காரில் சாய்ந்தவாறு கதிருக்கு அழைத்தவன்



"கதிர்"



"எஸ் சார்"



"நா இன்னிக்கு ஆபிஸ் வர லேட் ஆகும்....மீடிங்ஸ தள்ளி போட்டுடு"



"ஓகே சார்"



"ம்...ஓகே"

என்றுவிட்டு நிமிர்ந்தவன் தூரத்தில் தன்னையே பார்த்தவாறு நடந்து வந்து கொண்டிருந்த மதுமிதாவை பார்த்து அறிமுகமாய் புன்னகைத்தான்.



அதற்குள் அவனருகில் வந்து விட்டிருந்தவள்



"நீங்க யாதவ்வோட அப்பா தானே?" என்றாள் தமிழில்.



அவள் தமிழில் பேசியது அவனுக்கு அப்படியொரு ஆச்சரியம் போலும்.



இரு புருவத்தையும் ஏற்றி இறக்கியவன்



"எஸ் மிஸ்...."



"மதுமிதா..."



"எஸ் மது...நீங்க தமிழா?"



"ஆமாங்க...நா தமிழ்தான்" என சிரித்தாள்.



"அப்போ இங்க எப்பிடி?"



"இங்க ஹயர் ஸ்டடீஸ் படிச்சேன்...

இங்கேயே ஜாப்பும் கெடச்சதால ஜாயின் பண்ணிகிட்டேன்..."



"ஓஹ்"



"அப்பறம் யாதவ் எங்க?"



"அவன் ரிக்...வந்து என் ஒய்போட உள்ள போயிருக்கான்" என்று விட்டு முறுவலிக்க அவள் முகம் கலையிழந்தது.



"ஓகே...பய்" என்றவள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட திரும்பி பார்த்தவன் அப்போதுதான் கவனித்தான் அஷ்வினி மறுபக்கம் திரும்பி நின்று கொண்டிருப்பதை..



"வந்துட்டேன்னு சொல்றதுக்கு என்ன?" கோபப்பட்டவனை சலேரென திரும்பிப் பார்த்தவள்



"சாரி"என்றுவிட்டு ஏறிக் கொள்ள வழமை போல் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் தோளை குழுக்கிக் கொண்டு ஏறிக் கொண்டான்.



வரும் வழியிலும் அவள் எதுவுமே பேசவில்லை...



அவளை நெற்றி சுருக்கி ஒருமுறை ஆழ்ந்து நோக்கியவனும் வீடு வரும் வரை திரும்பவே இல்லை....



கார் ஒரு குழுக்களுடன் நிற்க எதுவும் கூறாமல் இறங்கியவளை பார்த்து பல்லை கடித்தவன்



"இப்போ எதுக்கு முகத்த தூக்கி வெச்சிகிட்டு இருக்க?" என கோபப்பட



"ஈ...போதுமா?" வெடுக்கென கேட்டு விட்டு உள்ளே போய் விட்டாள்.



மீண்டும் கதிருக்கு அழைத்தவன்



"இன்னிக்கு மீடிங்ஸ கேண்ஸல் பண்ணிடு கதிர்" என்றுவிட்டு துண்டித்தவன்



"என்ன டென்ஷன் படுத்துறே இவளுக்கு வேலயா போச்சு... சரியான இம்சை..."என முணுமுணுத்துக் கொண்டே வீட்டிற்குள் போனான் அவளவன்....



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



தன் பீ.ஏ வசுந்தராவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு.



காலையில் ஒரு வேலையை அவசரமாக செய்து தா என கொடுத்திருக்க இரவாகியும் முடிக்காமல் பாதி வேலையில் தன் முன் வந்து நின்றவளைப் பார்த்தவனுக்கு அப்படி ஒரு கோபம் அவள் மீது....



"சாரி பாஸ்" அவள் மீண்டும் மன்னிப்பு கேட்க பல்லை கடித்தவன்



"உனக்கு நா இத பன்ன சொன்னது காலைல... சரி டைமில்லன்னு எஸ்கியூஸ் தரலாம்னு பாத்தா எல்லாம் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போயும் நீ முடிக்கல...அதயும் விட்டா இன்னும் நீ பாதி கூட தான்டலன்னு வந்து நிக்கிற.... என்ன நெனச்சிகிட்டு இருக்க உன் மனசுல?"



"...."



"பதில் பேசித் தொலக்க வேண்டியது தானே...இல்லன்னா நா பேசாதன்னு சொன்னாலும் கேக்க மாட்ட.... இப்போ மட்டும் என்ன?"



"....."



"ச்சேஹ்....இதுக்கு தான் எனக்கு ஜென் பீ.ஏ வா போட்டு தாடான்னு தலப்பாடா அடிச்சிகிட்டேன்... கேட்டானா எரும..."



"சாரி பாஸ்..."



"ஆமா...ஆ ஊன்னா இத ஒன்ன கேட்டுடு... சரி கெளம்பு" என்றுவிட்டு தன் வேலையில் மூழ்கிப் போனவன் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் தலையுயர்த்தி பார்க்க அவள் இன்னும் வேலை செய்து கொண்டிருப்பது கண்டு அதிர்ந்து போனான்.



"ஏய்....என்ன பண்ற இன்னும்....டைம் ஒன்பதாச்சு....நா உன்ன அப்போவே கெளம்புன்னு சொன்னேனா இல்லயா?" அவன் கத்திய கத்தலில் திடுமென உடல் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தவள் பயத்தில் கதிரையிலிருந்து எழுந்தே விட்டாள்.



"உனக்கு என்னதான் பிரச்சன?" அவள் பயம் கண்டு தனிந்தது அவன் குரல்.



"நீங்க திட்னீங்கல்ல...அதான் முடிச்சு குடுக்கலாம்னு...." அவள் பேசப் பேச இவனுக்குள் மீண்டும் சுர்ரென்று ஏறியது.



"முட்டாள்....அதுக்காக இப்பிடிதான் பண்ணுவியா.....இப்போ எப்பிடி வீட்டுக்கு போவ?"



"நா போய்க்குவேன் பாஸ்..." என்றவளை முறைத்தவன் தன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு எழுந்து அவளருகில் வந்தான்.



"கெளம்பு....உன்ன ட்ராப் பண்ணி விட்றேன்"



"இல்ல பாஸ்...வேண்டாம்..."



"ப்ச்....கடுப்பேத்தாம வா" என்றுவிட்டு நடக்க கிட்டத்தட்ட அவன் பின்னே ஓடினாள் அவன் பீ.ஏ....



.....



"உனக்கு என்ன பிரச்சன வசு?" என்றான் கார் ஓட்டியபடியே....



"ஒ...ஒன்னில்ல பாஸ்" அவள் அழுகையை அடக்குவது பெரும் பாடாய் இருந்தது.



"சரி விடு"



"பா...பாஸ்...."என்க என்னவென்பது போல் அவளை திரும்பிப் பார்த்தான் ரகு.



அவள் தலையை குனிந்து கொண்டு அமைதியாக இருக்கவும் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவள் புறம் திரும்பியவன்



"வசு....நாம ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் தானே?" என்க அவள் மேலும் கீழும் தலையாட்ட



"அப்பறம் என்கிட்ட ஷேர் பண்ணிக்கிறதுல என்ன தயக்கம்?" என்று கேட்ட மறுநொடி அவன் மீதே சாய்ந்து அழத் தொடங்கியவளை பார்த்து அதிர்ந்தது அவன் தேகம்.



இருந்தும் அவள் தலையை வருடிக் கொடுத்தவன்



"என்னமா...என்ன பிரச்சன?" என்றான் மீண்டும்.



"ர...ர...ரகு...அந்த ரவி இருக்கான்ல?"



"யாரு...நம்ம ஆபிஸ் ரவியா?"



"ஆமா..."



"ம்...சரி...அவனுக்கு என்ன?"



"அ....அ....அவன் அவன் என்ன அ...அசிங்கமா பே...பே பேசிட்டான்.." என்று விட்டு மீண்டும் அழ கோபத்தில் அவன் கை முஷ்டி இறுகியது.



"அய்யே இதுக்காகவா சின்ன பப்பா மாறி அழுதுகிட்டு இருக்க?" என்றாள் அவளை சகஜமாக்கும் பொறுட்டு...



"உன்கிட்ட போய் சொன்னேன் பாரு..." என்றவள் விலகி அமர்ந்து கொண்டு கண்களை துடைக்க சிரித்துக் கொண்டே வண்டியை எடுத்தான் அவன்....



இராமநாதபுரம்.....



"லவ் யூ பா...லவ் யூ மா...." தன் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தது விட்டு எழுந்து சென்றான் மகன்.



நாளை ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டும்...



அதனால் இன்று தன் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட்டவன் இப்போதுதான் படுக்கச் சென்றான்.



அவன் சென்றவுடன் தன் மார்பில் சாய்ந்த தன் மனைவியை அணைத்துக் கொண்டான் அஜய்.



"அஜய்"



"சொல்லுமா?"



"வந்து....நம்ம அஷ்வி கூட பேசினீங்களா?"



"இல்லமா பேசல"



"ஏன் அஜய்?"

தலையுயர்த்திக் கேட்டவளின் நெற்றியில் இதழ் பதித்தவன்



"அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு நெனச்சேன்" என்றான் அவள் கண்களை பார்த்தபடியே....



மீண்டும் குனிந்து கொண்டாள்.



"ஏன் உனக்கு பேசணுமா....நா வேணும்னா கால் பண்ணி தரவா?"



"எனக்கும் பேசனும்தான் அஜய்..."



"எனக்கும்தான்னா அடுத்த ஆள் யாரு?"



"அத்த..."



"அம்மாவா....அவங்க என்கிட்ட சொல்லவே இல்லயே?"



"அதான் என்கிட்ட சொல்லிட்டாங்கல்ல.... இப்போ அதுவா முக்கியம்?"



"ஓகே ஓகே கூல் பேபி...."



"போங்க அஜய்"



"அம்மாக்கு மாத்திர குடுத்துட்டியா?"



"ஆமா....ரொம்ப யோசிக்கிறாங்க அஜய்....எப்போ பாரு ஏதாவது நெனச்சி குழப்பிகிட்டே இருக்காங்க.... எனக்கு பயமா இருக்கு"



"ப்ச் எதுக்கு பயம்...பாத்துகலாம் விடு... சரி... நா அம்மா கூட பேசிட்டு வந்துட்றேன்...லேட் ஆனா எனக்காக காத்துகிட்டு இருக்காம தூங்கு" என்றவன் மீண்டும் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு கீழே போனான் தன் தாயைத் தேடி....



....



கட்டிலில் சாய்வாக அமர்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவரின் அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் அவர் கைகளின் மேல் தன் கைவைத்து



"மா..." என அசைக்கவும்தான் சிந்தை கலைந்தார் விஜயலக்ஷ்மி.



"வாப்பா...."



"இன்னும் தூங்காம என்னமா பண்றீங்க?"



"ஒன்னில்லப்பா...சும்மாதான்"அவர் சமாளிப்பது நன்றாகவே தெரிந்தது.



"மாத்திர சாப்டீங்களா?"



"ஆமாடா கண்ணா...நீ தூங்கலயா?"

என்றவர் அவன் தலை முடியை வருடி விட்டார்.



"தூங்கனும்மா....உங்கள பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்... மா... அந்த வாலு கூட பேசுறியா?" என்றான் சிரித்துக் கொண்டே....



அவன் காதை பிடித்து செல்லமாக திருகியவர்



"என் பொண்ணு உனக்கு வாலுவா?" என்றார் அவரும் சிரித்துக் கொண்டே....



"ஆ...அம்மா விடுமா....அவளுக்கு சப்போர்ட் பண்ணி என் காத திருகுறல்ல....இன்னிக்கு இருக்கு அவளுக்கு" என்க அவன் காதை விட்டு விட்டு சிரித்தார்.



அவளுக்கு அழைப்பெடுத்து



"இந்தா பேசு உன் அரும பொண்ணோட" என்றுவிட்டு மொபைலை கொடுத்தான்.



மறுமுனையில் உற்சாகமாய் வந்து விழுந்தது அவள் குரல்...



"விஜி...எப்பிடிடி இருக்க?"



"அடிப்பாவி....பெத்த அம்மாவுக்கே டி போட்டு பேசுறியா...உன்ன..." என்க கலகலவென சிரித்தாள் அவள்.



லவுட் ஸ்பீக்கர் ஆன் இல் இருந்ததால் அஜய்யும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.



"சரி எப்பிடி இருக்க சொல்லு விஜி" என்றாள் மீண்டும்.



"நா நல்லா இருக்கேன்டா...நீ?"



"நானும் நல்லா இருக்கேன் விஜி" அவர் குரலிலேயே பேசிக் காட்ட வாய்விட்டுச் சிரித்தான் அஜய்.



அவன் சிரிப்பு சத்தம் கேட்க



"டேய் அஜய் எரும....நீயும் பக்கத்துலதான் இருக்கியா....வாய்ல என்ன கொழுக்கட்டயா வெச்சிருக்க?"



"அடியே...போதும்டி அண்ணன்னு கொஞ்சமாச்சும் மரியாத தர்றியா லூசு"



"யாருடா லூசு நீதான்டா காட்டெரும"



"நீ குரங்கு"



"போடா எரும...மா பாருமா இவன..."



"டேய் அஜய்... என்னடா இது... சின்ன பசங்க மாறி...நீ எந்திரிச்சு போ நா பேசிட்டு தர்றேன்" என்றவர் அவனை அனுப்பியே விட்டார்.



"விஜி பொய்ட்டானா?"



"ம் பொய்ட்டான்டா...நீ சொல்லு?"



"நா சந்தோஷமா இருக்கேன் விஜி... நீ உடம்ப பாத்துக்குறியா?"



"ஆமாடா கண்ணு"



"என்ன பாசமழ பொழியுது?"



"போடி வாலு.... உன்ன வெச்சிகிட்டு எப்பிடித்தான் அந்த தம்பி சமாளிக்கிதோ"



"உனக்கு அவருக்கு சப்போர்ட் பண்ணலன்னா தூக்கம் வராதே"



"ஆமா... உனக்கு என்ன வந்துது?"



"எனக்கு ஒன்னில்ல...உன் மனுமகன நீயே வெச்சு கொஞ்சிக்க" எனவும் சிரித்தார் தாய்.



கொஞ்ச நேரம் பேசிவிட்டு



"மா அந்த தடியன் கிட்ட போன குடு... அவன் கிட்ட பேசணும் நான்"



"அஷ்வா...அண்ணனுக்கு மரியாத தரனும்மா" என்றார் கண்டிப்புடன்....



"மரியாத தானே குடுத்துட்றேன்...நீ போன அவன் கிட்ட குடுமா"



"ம் சரிடா...." என்றவர் அஜய்யை அழைத்து அவனிடம் கொடுத்தார்.



"சொல்லுடி லூசு"



"எதுக்கு அண்ணா எனக்கு போன் பண்ணல?" என்றாள் பவ்யமாய்.....



காதிலிருந்த போனை எடுத்து அவளுடன் தான் பேசிக் கொணடிருக்கிறோமா என்று பார்த்துவிட்டு மீண்டும் காதில் வைத்தான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 03 [ A ]



"ஹாய் மச்சி" என்றவாறு உள்ளே நுழைந்த சித்தார்தை ஆச்சரியமாகப் பார்த்தான் ஆரவ்.



"என்னடா அப்பிடி பாக்குற?"



"சாரு ரொம்ப பிஸி...அப்பிடி இருக்கும் போது இவ்வளவு தூரம் என் ஸ்டேஷனுக்கு வந்திருக்கீங்க....

அதான் நம்பமுடிலங்க"



"டேய் டேய் ஓட்டாதடா" என்க சிரித்தான் அவன்.



"ஆமா...அஷ்வி லண்டன் போய்டால்ல?"



"இப்போ எதுக்கு அவ பேச்சு?" சட்டென எரிச்சல் வந்தது ஆரவ்விற்கு....



"சரி விடு.... கேஸ் என்னாச்சு...

எனி இம்ப்ரூவ்மெண்ட்ஸ்?" உதட்டை பிதுக்கி இல்லையென தலையாட்டினான் ஆரவ்....



அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டவன்

"எனி ஐடியாஸ்?" என்றான் மீண்டும்...



ஆரவ் தன் ஐடியாவை விளக்க

திடுக்கிட்டு விழித்தவன்



"வேணாம் மச்சி...இது ரொம்ப ரிஸ்குடா...." என்றான் அக்கறையாய்....



"நோ மச்சி....அவன உயிரோட விட்டு வெச்சதே தப்பு"



"அதுக்காக அவன் இடத்துக்கே போவியா.... எனக்கென்னமோ இது சரியா படலடா....விட்று ஆரு"



"நா முடிவு பண்ணிட்டேன் மச்சான்... அண்ணா திரும்பி இந்த நாட்டுக்கு வரும் போது அப்பிடி ஒருத்தன் இருந்தாங்குறதுக்கான அடையாளமே இருக்க கூடாது"



"பண்ணலாம் மச்சி...பட் இது மட்டுமே வழி இல்லயே?"



"எனக்கு வேற வழி தெரில மச்சான்.... நேருக்கு நேர் மோத போறேன்"



"நானும் வர்றேன்...செத்தா ஒன்னா சாவலாம்" என்ற நண்பனின் கை மேல் தன் கையை வைத்து அவனை பார்த்து சிரித்தான் ஆரவ் தேவமாருதன்.





லண்டன்.....



காலை....



எப்போதும் போலவே அவனை எழுப்ப முடியாமல் எழுப்பிக் கொண்டிருந்தான் ரிஷி.



மகனுக்கு அருகிலேயே இன்னுமே உறங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கடுப்பானவன் அவளையும் எழுப்பினான்....



ஊஹூம் இரண்டும் அசைவதாகவே இல்லை...



யாதவ்வை தூக்கி குளியலறை கொண்டு போக எத்தனித்தவனின் கைகளிலிருந்து தன் குழந்தையை சட்டென பறித்துக் கொண்டாள் அஷ்வினி.



'இப்போ தூங்கிகிட்டு தானே இருந்தா.... எப்போ எந்திரிச்சா' மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டவன் அவளை பார்த்து நெற்றி சுறுக்க



"நா எழுந்து ரொம்ப நேரமாச்சு.... நீங்க குழந்தய என்ன பண்றீங்கன்னு பாக்க தான் படுத்தா மாறி நடிச்சிகிட்டு இருந்தேன்....

ரொம்ப யோசிக்காதீங்க" என்றுவிட்டு யாதவ்வை தூக்கிக் கொண்டு குளியலறை சென்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்....



......



"மாம்....ப்ளீஸ்..." தோளில் தூங்கிக் கொண்டே சிணுங்கினான் மகன்.



"யாது...நானும் உன்கூட இன்னிக்கு ஸ்கூல் வர்னும்ல....யாதுகுட்டி குளிச்சா தானே அம்மாவும் குளிக்கலாம்....இல்லன்னா அந்த கமாண்டர் விட்டுட்டு போய்டுவானே"



"நோ மாம்....நா குளிச்சிடுவேன்" என்று எழுந்த மகனை குளிப்பாட்டி எடுப்பதற்குள் அவளுக்கு பாதி உயிர் போய்விட்டது.



ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருந்தவனை பார்த்து இடுப்பில் கை வைத்து முறைத்தாள் தாய்...



அவன் குளிப்பதற்குள் இவளை குளிப்பாட்டி முடித்து விட்டான் என்றுதான் கூற வேண்டுமோ???



'ஷப்பா...இவன இத்தன வருஷமா இந்த கமாண்டர் எப்பிடித்தான் சமாளிக்கிறானோ ஒரு நாளக்கே இப்பிடியா' தலையில் கை வைத்தவள் அவனை தூக்கிக் கொண்டு வெளியே வர அவள் கோலத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் ரிஷி.



அவனையே....அவன் சிரிப்பையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டவன் சட்டென அடங்கி விட்டது கண்டு அவளுக்கு உள்ளுக்குள் வலித்தது.



அவளைப் பாராமலேயே குழந்தையை வாங்கிக் கொண்டு அவன் போய்விட அவனையே பார்த்திருந்தவள் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.



....



"டாட்...மாம் என்கூட வரணும்" காரிலிருந்து கீழே இறங்காமல் அடம்பிடித்த மகனை கோபத்துடன் திட்ட வாயெடுத்தவனை தடுத்தாள் அவன் அருமை மனைவி.



"வா கண்ணா போலாம்...." என்றுவிட்டு தன் மடியிலிருந்த தன் மகனை இறக்கி விட்டு தானும் இறங்கப் போனவளின் கையை இறுக்கிப் பிடித்தான் அவள் கணவன்.



அவள் திரும்பி கேள்வியாய் அவனை பார்க்க



"என்னால நீ வரும் வர வெயிட் பண்ணிகிட்டு இருக்க முடியாது.... எனக்கு அர்ஜன்ட் வேல இருக்கு... சோ யாதவ்வ அடம்பிடிக்காம போக சொல்லிட்டு என்ன கடுப்பாக்காம உள்ள உக்காரு" எரிந்து விழுந்தான்.



"ப்ளீஸ் தேவ்...."



"நோ வே ரிக்ஷிதா" அவன் அழைப்பில் அடிபட்ட பார்வை பார்த்தவள்



"நா எப்பிடியாவது வந்துக்குறேன்....

நீங்க கெளம்புங்க" என்றுவிட்டு சட்டென இறங்கி யாதவ்வுடன் சென்று விட தலையை அழுத்தக் கோதிக் கொண்டு வேறு வழியின்றி தானும் இறங்கினான் ரிஷி.



காரில் சாய்ந்தவாறு கதிருக்கு அழைத்தவன்



"கதிர்"



"எஸ் சார்"



"நா இன்னிக்கு ஆபிஸ் வர லேட் ஆகும்....மீடிங்ஸ தள்ளி போட்டுடு"



"ஓகே சார்"



"ம்...ஓகே"

என்றுவிட்டு நிமிர்ந்தவன் தூரத்தில் தன்னையே பார்த்தவாறு நடந்து வந்து கொண்டிருந்த மதுமிதாவை பார்த்து அறிமுகமாய் புன்னகைத்தான்.



அதற்குள் அவனருகில் வந்து விட்டிருந்தவள்



"நீங்க யாதவ்வோட அப்பா தானே?" என்றாள் தமிழில்.



அவள் தமிழில் பேசியது அவனுக்கு அப்படியொரு ஆச்சரியம் போலும்.



இரு புருவத்தையும் ஏற்றி இறக்கியவன்



"எஸ் மிஸ்...."



"மதுமிதா..."



"எஸ் மது...நீங்க தமிழா?"



"ஆமாங்க...நா தமிழ்தான்" என சிரித்தாள்.



"அப்போ இங்க எப்பிடி?"



"இங்க ஹயர் ஸ்டடீஸ் படிச்சேன்...

இங்கேயே ஜாப்பும் கெடச்சதால ஜாயின் பண்ணிகிட்டேன்..."



"ஓஹ்"



"அப்பறம் யாதவ் எங்க?"



"அவன் ரிக்...வந்து என் ஒய்போட உள்ள போயிருக்கான்" என்று விட்டு முறுவலிக்க அவள் முகம் கலையிழந்தது.



"ஓகே...பய்" என்றவள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட திரும்பி பார்த்தவன் அப்போதுதான் கவனித்தான் அஷ்வினி மறுபக்கம் திரும்பி நின்று கொண்டிருப்பதை..



"வந்துட்டேன்னு சொல்றதுக்கு என்ன?" கோபப்பட்டவனை சலேரென திரும்பிப் பார்த்தவள்



"சாரி"என்றுவிட்டு ஏறிக் கொள்ள வழமை போல் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் தோளை குழுக்கிக் கொண்டு ஏறிக் கொண்டான்.



வரும் வழியிலும் அவள் எதுவுமே பேசவில்லை...



அவளை நெற்றி சுருக்கி ஒருமுறை ஆழ்ந்து நோக்கியவனும் வீடு வரும் வரை திரும்பவே இல்லை....



கார் ஒரு குழுக்களுடன் நிற்க எதுவும் கூறாமல் இறங்கியவளை பார்த்து பல்லை கடித்தவன்



"இப்போ எதுக்கு முகத்த தூக்கி வெச்சிகிட்டு இருக்க?" என கோபப்பட



"ஈ...போதுமா?" வெடுக்கென கேட்டு விட்டு உள்ளே போய் விட்டாள்.



மீண்டும் கதிருக்கு அழைத்தவன்



"இன்னிக்கு மீடிங்ஸ கேண்ஸல் பண்ணிடு கதிர்" என்றுவிட்டு துண்டித்தவன்



"என்ன டென்ஷன் படுத்துறே இவளுக்கு வேலயா போச்சு... சரியான இம்சை..."என முணுமுணுத்துக் கொண்டே வீட்டிற்குள் போனான் அவளவன்....



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



தன் பீ.ஏ வசுந்தராவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு.



காலையில் ஒரு வேலையை அவசரமாக செய்து தா என கொடுத்திருக்க இரவாகியும் முடிக்காமல் பாதி வேலையில் தன் முன் வந்து நின்றவளைப் பார்த்தவனுக்கு அப்படி ஒரு கோபம் அவள் மீது....



"சாரி பாஸ்" அவள் மீண்டும் மன்னிப்பு கேட்க பல்லை கடித்தவன்



"உனக்கு நா இத பன்ன சொன்னது காலைல... சரி டைமில்லன்னு எஸ்கியூஸ் தரலாம்னு பாத்தா எல்லாம் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போயும் நீ முடிக்கல...அதயும் விட்டா இன்னும் நீ பாதி கூட தான்டலன்னு வந்து நிக்கிற.... என்ன நெனச்சிகிட்டு இருக்க உன் மனசுல?"



"...."



"பதில் பேசித் தொலக்க வேண்டியது தானே...இல்லன்னா நா பேசாதன்னு சொன்னாலும் கேக்க மாட்ட.... இப்போ மட்டும் என்ன?"



"....."



"ச்சேஹ்....இதுக்கு தான் எனக்கு ஜென் பீ.ஏ வா போட்டு தாடான்னு தலப்பாடா அடிச்சிகிட்டேன்... கேட்டானா எரும..."



"சாரி பாஸ்..."



"ஆமா...ஆ ஊன்னா இத ஒன்ன கேட்டுடு... சரி கெளம்பு" என்றுவிட்டு தன் வேலையில் மூழ்கிப் போனவன் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் தலையுயர்த்தி பார்க்க அவள் இன்னும் வேலை செய்து கொண்டிருப்பது கண்டு அதிர்ந்து போனான்.



"ஏய்....என்ன பண்ற இன்னும்....டைம் ஒன்பதாச்சு....நா உன்ன அப்போவே கெளம்புன்னு சொன்னேனா இல்லயா?" அவன் கத்திய கத்தலில் திடுமென உடல் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தவள் பயத்தில் கதிரையிலிருந்து எழுந்தே விட்டாள்.



"உனக்கு என்னதான் பிரச்சன?" அவள் பயம் கண்டு தனிந்தது அவன் குரல்.



"நீங்க திட்னீங்கல்ல...அதான் முடிச்சு குடுக்கலாம்னு...." அவள் பேசப் பேச இவனுக்குள் மீண்டும் சுர்ரென்று ஏறியது.



"முட்டாள்....அதுக்காக இப்பிடிதான் பண்ணுவியா.....இப்போ எப்பிடி வீட்டுக்கு போவ?"



"நா போய்க்குவேன் பாஸ்..." என்றவளை முறைத்தவன் தன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு எழுந்து அவளருகில் வந்தான்.



"கெளம்பு....உன்ன ட்ராப் பண்ணி விட்றேன்"



"இல்ல பாஸ்...வேண்டாம்..."



"ப்ச்....கடுப்பேத்தாம வா" என்றுவிட்டு நடக்க கிட்டத்தட்ட அவன் பின்னே ஓடினாள் அவன் பீ.ஏ....



.....



"உனக்கு என்ன பிரச்சன வசு?" என்றான் கார் ஓட்டியபடியே....



"ஒ...ஒன்னில்ல பாஸ்" அவள் அழுகையை அடக்குவது பெரும் பாடாய் இருந்தது.



"சரி விடு"



"பா...பாஸ்...."என்க என்னவென்பது போல் அவளை திரும்பிப் பார்த்தான் ரகு.



அவள் தலையை குனிந்து கொண்டு அமைதியாக இருக்கவும் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவள் புறம் திரும்பியவன்



"வசு....நாம ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் தானே?" என்க அவள் மேலும் கீழும் தலையாட்ட



"அப்பறம் என்கிட்ட ஷேர் பண்ணிக்கிறதுல என்ன தயக்கம்?" என்று கேட்ட மறுநொடி அவன் மீதே சாய்ந்து அழத் தொடங்கியவளை பார்த்து அதிர்ந்தது அவன் தேகம்.



இருந்தும் அவள் தலையை வருடிக் கொடுத்தவன்



"என்னமா...என்ன பிரச்சன?" என்றான் மீண்டும்.



"ர...ர...ரகு...அந்த ரவி இருக்கான்ல?"



"யாரு...நம்ம ஆபிஸ் ரவியா?"



"ஆமா..."



"ம்...சரி...அவனுக்கு என்ன?"



"அ....அ....அவன் அவன் என்ன அ...அசிங்கமா பே...பே பேசிட்டான்.." என்று விட்டு மீண்டும் அழ கோபத்தில் அவன் கை முஷ்டி இறுகியது.



"அய்யே இதுக்காகவா சின்ன பப்பா மாறி அழுதுகிட்டு இருக்க?" என்றாள் அவளை சகஜமாக்கும் பொறுட்டு...



"உன்கிட்ட போய் சொன்னேன் பாரு..." என்றவள் விலகி அமர்ந்து கொண்டு கண்களை துடைக்க சிரித்துக் கொண்டே வண்டியை எடுத்தான் அவன்....



இராமநாதபுரம்.....



"லவ் யூ பா...லவ் யூ மா...." தன் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தது விட்டு எழுந்து சென்றான் மகன்.



நாளை ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டும்...



அதனால் இன்று தன் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட்டவன் இப்போதுதான் படுக்கச் சென்றான்.



அவன் சென்றவுடன் தன் மார்பில் சாய்ந்த தன் மனைவியை அணைத்துக் கொண்டான் அஜய்.



"அஜய்"



"சொல்லுமா?"



"வந்து....நம்ம அஷ்வி கூட பேசினீங்களா?"



"இல்லமா பேசல"



"ஏன் அஜய்?"

தலையுயர்த்திக் கேட்டவளின் நெற்றியில் இதழ் பதித்தவன்



"அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு நெனச்சேன்" என்றான் அவள் கண்களை பார்த்தபடியே....



மீண்டும் குனிந்து கொண்டாள்.



"ஏன் உனக்கு பேசணுமா....நா வேணும்னா கால் பண்ணி தரவா?"



"எனக்கும் பேசனும்தான் அஜய்..."



"எனக்கும்தான்னா அடுத்த ஆள் யாரு?"



"அத்த..."



"அம்மாவா....அவங்க என்கிட்ட சொல்லவே இல்லயே?"



"அதான் என்கிட்ட சொல்லிட்டாங்கல்ல.... இப்போ அதுவா முக்கியம்?"



"ஓகே ஓகே கூல் பேபி...."



"போங்க அஜய்"



"அம்மாக்கு மாத்திர குடுத்துட்டியா?"



"ஆமா....ரொம்ப யோசிக்கிறாங்க அஜய்....எப்போ பாரு ஏதாவது நெனச்சி குழப்பிகிட்டே இருக்காங்க.... எனக்கு பயமா இருக்கு"



"ப்ச் எதுக்கு பயம்...பாத்துகலாம் விடு... சரி... நா அம்மா கூட பேசிட்டு வந்துட்றேன்...லேட் ஆனா எனக்காக காத்துகிட்டு இருக்காம தூங்கு" என்றவன் மீண்டும் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு கீழே போனான் தன் தாயைத் தேடி....



....



கட்டிலில் சாய்வாக அமர்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவரின் அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் அவர் கைகளின் மேல் தன் கைவைத்து



"மா..." என அசைக்கவும்தான் சிந்தை கலைந்தார் விஜயலக்ஷ்மி.



"வாப்பா...."



"இன்னும் தூங்காம என்னமா பண்றீங்க?"



"ஒன்னில்லப்பா...சும்மாதான்"அவர் சமாளிப்பது நன்றாகவே தெரிந்தது.



"மாத்திர சாப்டீங்களா?"



"ஆமாடா கண்ணா...நீ தூங்கலயா?"

என்றவர் அவன் தலை முடியை வருடி விட்டார்.



"தூங்கனும்மா....உங்கள பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்... மா... அந்த வாலு கூட பேசுறியா?" என்றான் சிரித்துக் கொண்டே....



அவன் காதை பிடித்து செல்லமாக திருகியவர்



"என் பொண்ணு உனக்கு வாலுவா?" என்றார் அவரும் சிரித்துக் கொண்டே....



"ஆ...அம்மா விடுமா....அவளுக்கு சப்போர்ட் பண்ணி என் காத திருகுறல்ல....இன்னிக்கு இருக்கு அவளுக்கு" என்க அவன் காதை விட்டு விட்டு சிரித்தார்.



அவளுக்கு அழைப்பெடுத்து



"இந்தா பேசு உன் அரும பொண்ணோட" என்றுவிட்டு மொபைலை கொடுத்தான்.



மறுமுனையில் உற்சாகமாய் வந்து விழுந்தது அவள் குரல்...



"விஜி...எப்பிடிடி இருக்க?"



"அடிப்பாவி....பெத்த அம்மாவுக்கே டி போட்டு பேசுறியா...உன்ன..." என்க கலகலவென சிரித்தாள் அவள்.



லவுட் ஸ்பீக்கர் ஆன் இல் இருந்ததால் அஜய்யும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.



"சரி எப்பிடி இருக்க சொல்லு விஜி" என்றாள் மீண்டும்.



"நா நல்லா இருக்கேன்டா...நீ?"



"நானும் நல்லா இருக்கேன் விஜி" அவர் குரலிலேயே பேசிக் காட்ட வாய்விட்டுச் சிரித்தான் அஜய்.



அவன் சிரிப்பு சத்தம் கேட்க



"டேய் அஜய் எரும....நீயும் பக்கத்துலதான் இருக்கியா....வாய்ல என்ன கொழுக்கட்டயா வெச்சிருக்க?"



"அடியே...போதும்டி அண்ணன்னு கொஞ்சமாச்சும் மரியாத தர்றியா லூசு"



"யாருடா லூசு நீதான்டா காட்டெரும"



"நீ குரங்கு"



"போடா எரும...மா பாருமா இவன..."



"டேய் அஜய்... என்னடா இது... சின்ன பசங்க மாறி...நீ எந்திரிச்சு போ நா பேசிட்டு தர்றேன்" என்றவர் அவனை அனுப்பியே விட்டார்.



"விஜி பொய்ட்டானா?"



"ம் பொய்ட்டான்டா...நீ சொல்லு?"



"நா சந்தோஷமா இருக்கேன் விஜி... நீ உடம்ப பாத்துக்குறியா?"



"ஆமாடா கண்ணு"



"என்ன பாசமழ பொழியுது?"



"போடி வாலு.... உன்ன வெச்சிகிட்டு எப்பிடித்தான் அந்த தம்பி சமாளிக்கிதோ"



"உனக்கு அவருக்கு சப்போர்ட் பண்ணலன்னா தூக்கம் வராதே"



"ஆமா... உனக்கு என்ன வந்துது?"



"எனக்கு ஒன்னில்ல...உன் மனுமகன நீயே வெச்சு கொஞ்சிக்க" எனவும் சிரித்தார் தாய்.



கொஞ்ச நேரம் பேசிவிட்டு



"மா அந்த தடியன் கிட்ட போன குடு... அவன் கிட்ட பேசணும் நான்"



"அஷ்வா...அண்ணனுக்கு மரியாத தரனும்மா" என்றார் கண்டிப்புடன்....



"மரியாத தானே குடுத்துட்றேன்...நீ போன அவன் கிட்ட குடுமா"



"ம் சரிடா...." என்றவர் அஜய்யை அழைத்து அவனிடம் கொடுத்தார்.



"சொல்லுடி லூசு"



"எதுக்கு அண்ணா எனக்கு போன் பண்ணல?" என்றாள் பவ்யமாய்.....



காதிலிருந்த போனை எடுத்து அவளுடன் தான் பேசிக் கொணடிருக்கிறோமா என்று பார்த்துவிட்டு மீண்டும் காதில் வைத்தான்.



"ஏய் என்னடி ஆச்சு....மரியாதயா அண்ணாங்குற?"



"தாய் ராஜமாதா விஜதயக்ஷ்மி தேவியாரின் அன்புக் கட்டளை அண்ணா....என்னால் மீற முடியவில்லை" என்றாள் நாடக பாணியில்...



"அடச்சி நிறுத்து... அண்ணா கிண்ணான்ன கொன்னுறுவேன்" கடுப்பாகியவனை பார்த்து வாய் பொத்தி சிரித்தவள்



"வேறு வழியில்லை அண்ணா....தாய் சொல் தட்டக்கூடாது"



"என்கிட்ட அடிதான்டி வாங்குவ"



"கோபம் கூடாது தமையனாரே..."



"அஷ்வி..." பல்லை கடித்தான்.



"நான்தான் அண்ணா என அழைக்காமல் தமையன் என்று அழைத்தேனே....இன்னும் என்ன?"



"உன்ன....பெரிய வித்தியாசம் பாரு"



"தமையனாரே நான் சொல்..."



"பக்கத்துல வந்தேன் மவளே என்கிட்ட அடி வாங்குவ"



"அண்...."



"போன வைடி" என்றான கடுப்புடன்...



கலகலவென சிரித்தவளின் சிரிப்பில் அவனுக்கும் சிரிப்பு வந்து விட



"ஏன்டி இப்பிடி இருக்க....?"



"அது ஏதோ மேனுபெக்சரிங் டிபெஃக்ட்"



"சரி....உன் புனுஷன் உன் குழந்த எல்லாம் எப்பிடி இருக்காங்க?"



"நல்லா இருக்காங்க...நீ அண்ணி...அர்ஜூ?"



"இருக்கோம்டி...."



"ஓகே பாய் அஜய்... வைடா போன"



"அடிப்பாவி...நீ திருந்த மாட்ட" என்றவன் சிரித்துக் கொண்டே துண்டித்தான்.



லண்டன்......



சோபாவில் அமர்ந்து சுவாரஷ்யமாய் பேசிக் கொண்டிருந்தவள் தன்னையே பார்த்துக் கொண்டு கதவில் கைகட்டி சாய்ந்து நிற்கும் கணவனை அப்போது தான் கண்டு கொண்டாள்.



அவன் அழைப்பின் வலியில் சோர்ந்திருந்த மனது வீட்டாருடன் பேசி முடிக்கையில் உற்சாகமாக மாறியிருக்க துள்ளி எழுந்தவள் அவனிடம் சென்றாள்.



"வாங்க தேவ்.... அர்ஜன்ட் ஒர்க் இனுக்குன்னு சொன்னீங்க?"



"போகல" என்றான் மொட்டையாய்....



"ஏன்....?"



"சும்மா"



"சும்மாவெல்லாம் மீட்டிங்க கேண்ஸல் பண்ற ஆளா நீங்க?"



"ப்ச் வழி விட்றியா போனும்" என்க வேண்டுமென்றே கையை நீட்டி மறைத்து நின்றாள்.



"முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க தேவ்?"



"அப்பிடி கூப்புடாதன்னு சொல்லி இருக்கேன்ல?"



"பட் நா கூப்புட மாட்டேன்னு சொல்லவே இல்லியே?"



"வழி விடு"



"முடியாது தேவ்"



"ப்ச்"



"தேவ்...."



"...."



"என்னன்னு கேளுங்க"



"என்ன?"



"மதுவ பத்தி என்ன நெனக்கிறீங்க?"



"யார் மது?"



"அதான் தேவ் நம்ம யாதுவோட மிஸ்..."



"ஓ அவங்களா... ஏன் அவங்" என ஏதோ சொல்ல வந்தவன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்து விட்டு



"அழகான பொண்ணு " என்றான் அடக்கப்பட்ட சரிப்புடன்....



அவன் நினைத்தது போலவே அவள் முகம் கடுகடுவென மாறியதில் அவளுடைய பொஸஸிவ்னெஸ்ஸில் அவனுக்கு சரிப்பு தான் வந்தது.



'ராட்சஸி என்னயவே டென்ஷன் ஆக்குறியா....இப்போ பாரு' நினைத்துக் கொண்டவன் அவளையே பார்த்தான்.



"அழகா?"



"ஆமா அழகு...நேச்சுரல் பியூடி"



"😡"



"நீ அவள பாத்தியா ரிக்ஷிதா....அவள போலவே அவ பேரும் செம்மல?" என்று கேட்டவனை முறைத்துப் பார்த்தாள் மனைவி.



"அத ஏன் என்கிட்ட சொல்றீங்க போய் அவகிட்டயே சொல்லுங்க"



"நீதானே அவள பத்தி என்ன நெனக்கிறீங்கன்னு கேட்ட.... அதான் சொன்னேன்"



"ப்ச்" என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.



"யாதுவுக்கும் எனக்கும் அவள ரொம்ப புடிக்கும்"



"அதுக்கு நா என்ன பண்ணனும்?"



"சும்மா சொன்னேன்... மதுன்னா ஹனி தானே....நா அவள இனிமே அப்பிடிதான் கூப்புடலாம்னு இருக்கேன்" அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவளாய்



"போடா...." என அவனை தள்ளிவிட்டு போய் சோபாவில் கோபமாய் அமர்ந்து கொண்டாள்.



திரும்பி சிரித்தவன் அவளுக்கு முன்னுள்ள சோபாவில் போய் அமர்ந்து இன்னும் வெறுப்பேற்றினான்.



"நா கேட்டதுக்கு பதில் சொல்லலன்னா என்ன அர்த்தம் ரிக்ஷிதா?"



'ரிக்ஷிதாவாம் ரிக்ஷிதா....இருடா மவனே மாட்டாமலா போவ'



"பதில் சொல்லு"



"நீங்க கூப்புடுங்க கூப்புடாம போங்க எனக்கென்ன வந்துது?"



"சோ நா அவகூட பழகுறதுல உனக்கு ஒன்னும் இல்ல...ரைட்?"



"ஆமா"



"இட்ஸ் ஓகே...." என்றவனுக்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாய் இருந்தது.



"ஹனி....கூப்புட்றதுலயே ஒரு கிக் இருக்குல?" என்க அவனை முறைத்தவள் தன் கையிலிந்த குஷனால் வீசி அடித்தாள்.



அவன் அதை லாவகமாக பிடிக்க மீண்டும் இன்னொன்றை எடுத்து அடித்தாள்.



மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டே இருந்தவள்



"கமாண்டர் போடா....உன் கூட கா" சிறு குழந்தை மோல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட தன்னவளையே நீண்ட வருடங்களின் பின் ரசித்தன அவனவளின் கண்கள்!!!



***



குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு முன் ஹாலில் அமர்ந்திருந்தவள் யாரோ வரும் அரவம் கேட்டு சட்டென திரும்பிப் பார்த்தாள்.



அவள் கணவன்தான்....



போலிஸ் யூனிபார்மிலேயே வந்து நின்றவனை முறைத்தவள் முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டாள்.



வீட்டிற்கு வந்தே ஒரு வாரத்திற்கு மேலாகிறது!!!



தலையிலிருந்த தொப்பியை கலற்றி அவளுக்கு குறிபார்த்து தூக்கிப் போட அவன் குறி தவறாமல் அவள் தலையிலேயே போய் பொருந்தி நின்றது அது....



அதை வெடுக்கென கலற்றி வீசிவிட்டு மீண்டும் அவனை கோபமாக முறைக்க



"அம்முகுட்டி உன் முறப்பு கூட செம்ம க்யூட்டா இருக்குடி" என்றான் சிரிப்புடன்....



"...."



"அம்மு...." அவளை பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே அவளருகில் வர சட்டென எழுந்து அவனை விட்டு தள்ளி நின்று கொண்டாள் அவன் மனையாள்.



"அம்மு சாரி சாரி சாரி செல்லம்... மன்னிக்க மாட்டியா... எதுக்கிப்போ அமைதியா இருக்க?"



"...."



"ஏய்....சாரிடி" என்றுவிட்டு அவளை நெருங்க இன்னும் இரண்டடி தள்ளி நிற்க



"எதுக்குடி விலகி விலகி போற... அதான் ஒர்க் டென்ஷன்னு சொன்னேன்லடி.... நிஜமாலுமே சாரி அம்மு"



"என் மேல சத்தியமா ஒர்க் அதிகம்டி" அவன் எவ்வளவு கெஞ்சியும் அவளிடம் எந்த பிரதிபளிப்புமே இல்லை....



அவள் எதிர்பாரா நேரத்தில் சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொள்ள அவளோ அவனிடமிருந்து விடுபட திமிரிக் கொண்டே இருந்தாள்.



"சாரிடி"



"ஒன்னும் தேவயில்ல விடு ஆரவ்.... விடுடா"



"ப்ளீஸ்டி...."



"ப்ச் விடப்போறியா இல்லயா?"



"இல்ல" என்றவனது பிடி இன்னும் இறுக சோர்ந்து போனாள் பேதையவள்....



தன் சட்டையையும் மீறி தீண்டிய அவளது கண்ணீரை கண்டு பதறி தன்னிலிருந்து பிரித்தவன்



"சாரிமா....ரியலி சாரி....இனிமே இப்பிடி நடக்காது ப்ராமிஸ்.... அழாதடி"



"...."



"ப்ச் அழாத அம்மு

நீ அழறத பாக்க கஷ்டமா இருக்குடி"

என்றவன் தன் கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட மீண்டும் வழிந்தது கண்ணீர்....



"ஐ அம் சாரிமா....அதான் வந்துட்டேன்ல....?"



"உனக்கு ஒர்க் தான் முக்கியம்னா என்ன எதுக்குடா கல்யாணம் பண்ணிகிட்ட....அதையே பண்ணியிருக்க வேண்டியது தானே?" என்க சிரித்தவன்



"பட் எனக்கு இந்த பொண்ணதானே புடிச்சிருக்கு" என்றான் காதலாய்...



"பொய்"



"நிஜம் அம்முகுட்டி... ஐ லவ் யூ...." என்றுவிட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்து விலக அவனை இறுக்க அணைத்த மனைவியை தானும் அணைத்தான் ஆரவ் தேவமாருதன்!!!



லண்டன்......



கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்தவனின் உடல் திடீரென விறைப்புற சட்டென எழுந்தவன் அவளைப் பார்க்காமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.



அவன் திடீரென எழுந்து செல்லவும் அவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை....



ஏனெனில் அவள்தான் அவனின் ரசனை பார்வையை கண்டு கொண்டாளே!!!



இருந்தும் ஏனென்றுதான் அவளுக்கு புரியவே இல்லை....



மனம் மீண்டும் சோர்ந்து கண்கள் குளம் கட்டிவிட மெளனமாய் கண்ணீர் வடித்தாள் காரிகை...



"சாரி தேவ்...ரியலி சாரி....என்னால எப்பிடி மன்னிப்பு கேக்க முடியும்னு தெரில தேவ்.... நா மன்னிப்பு கேக்க வந்தேன்னா இருந்ததுக்கே மோசமாயிடுவீங்க... உங்க கிட்ட மன்னிப்பு கேக்க பயமா இருக்கு தேவ்....நா பண்ண தப்புக்கு என்ன வேணா தண்டன ஏத்துக்குறேன் தேவ்...பட் உங்க அவாய்டிங்க தான் தாங்கிக்க முடில.... சாரி தேவ்.... என்ன எப்போ மன்னிச்சு ஏத்துப்பீங்க.... நா உங்க முன்னாடி வந்திருக்கவே கூடாதோன்னு அடிக்கடி தோனுது தேவ்...ரொம்ப ஹேர்டிங்கா இருக்கு..." புலம்பியபடி அவளையறியாமல் சோபாவிலேயே உறங்கிப் போனாள்.



......



காரை அதிவேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தவனின் மனம் எரிமலை போல் வெடித்துக் கொண்டிருந்தது.



காரணம் ஒன்றே ஒன்று!!!



அது அவன் மீதே அவனுக்கு கோபம்!!!



"உங்க கொழந்தய அழிச்சிருவேன்" மீண்டும் மீண்டும் காதிற்குள் இறைந்து கொண்டே இருந்தது அவள் குரல்....



"ஏன்டி அப்பிடி பண்ண.... வொய்... வொய்... வொய் டேமிட்.....எனக்கு என்ன பண்றதுன்னு கூட தெரிலடி.... ஏன்டி...ஏன்டி அந்த மாதிரி பேசுன.... என்ன பத்தி கொஞ்சம் கூட யொசிக்கவே இல்லல்ல நீ.... எனக்கு வலிக்குதுடி....ராகேஷோட துரோகம் கூட எனக்கு இந்த அளவு வலிக்கல தெரிமாடி.... நீ பேசின ஒவ்வொன்னும் வலிச்சுது.... வலிக்குது... உன்ன ரிக்ஷிதான்னு கூப்புடும் போது உன்ன விட எனக்கு வலிக்கும்....அது தெரியுமா இடியட் உனக்கு.... உன்ன யாதவ் கூட பாக்கும் போதெல்லாம் இவனயா அழிப்பேன்னு சொன்னன்னு இருக்கும்....சத்தியமா உன்ன என்ன பண்றதுன்னு புரிய மாட்டேங்குதுடி.... எனக்கு நீ வேணும்...பட் என்னால உன்ன அக்ஸப்ட் பண்ணிக்க முடில..."



தன்னை தேடி வர வேண்டுமென நினைத்திருந்தவனுக்கு அவள் வந்தும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையோ???



கிரீச்சிட்டு நின்ற வண்டியிலிருந்து இறங்கியவன் புயலென உள்ளே நுழைய அவன் ஆக்ரோஷத்தில் நடுநடுங்கிப் யோயினர் அனைவரும்....



"கதீர்...." என கர்ச்சிக்க அவன் முன் பயந்தபடி வந்து நின்றான் கதிரவன்.



"கேன்ஸல் பண்ண மீடிங்ஸ் எல்லாதயும் இப்போவே அரேன்ஞ் பண்ணு.. ரைட் நௌ...."



"எ...எ...எஸ் சார்" என்றவர் ஓடியே விட்டான்.



தலையை தாங்கிப் பிடித்து அமர்ந்தவனுக்கு கோபத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவதென்பதே பெரும் சவாலாய்!!!



***



"ஹாய் ரிதிமா...." போனில் அழைத்தான் தன் மனைவியை...



இங்கு நிலைமை ஆரவ்வை விட மோசமாக இருந்தது தான் வேடிக்கையே....



அவன் அழைத்ததுமே அழத் துவங்கி விட்டவளை பார்த்து விழி பிதுங்கியது சித்தார்த்திற்கு....



"ஹேய் அழாதடி....இன்னும் கொஞ்ச நேரத்துல நானே நேர்ல வந்துர்றேன் செல்லம் அழாத"



((சுத்தம்.....ஏன்டா டேய்.... அவன் நேர்ல போயே சமாதானப்படுத்த முடில....நீ மொபைல்ல சமாதானப் படுத்திருவியா???))



"ரிதி....ரிதிமா...இதோ வந்துகிட்டே இருக்கேன்டி...அழாத ப்ளீஸ்.... நீ போன வை....நா வந்து பேசிக்கிறேன்" என்றவன் அவள் அழுகை இன்னுமின்னும் கூடவும் அவசரமாக கட் பண்ணி விட்டு தலையில் அடித்துக் கொண்டான்.



'ஷ்ஷப்பா...இவள எப்பிடிதான் சமாளிக்க போறேனோ....என்னடா சித்து உனக்கு வந்த சோதன' மனதிற்குள் புலம்ப மட்டுமே முடிந்தது அவனால்....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீப்பை விட்டு பாய்ந்து இறங்கியவன் அவசரமாக உள்ளே ஓடினான்.



அவன் திடுமென உள்ளே நுழையவும் என்னமோ ஏதோவென்று பயந்து போனார் வள்ளி.



"என்னப்பா என்னாச்சு?"



"ஹி...ஹி ஒன்னுமில்ல அத்த....ரிதி எங்க?"



"மேலதான்பா இருக்கா....நீ போ" என்க விட்டால் போதுமென்று படியேறப் போனவனை பிடித்துக் கொண்டாள் வருணின் துப்பட்டா விழியழகி....



"என்ன மாம்ஸ்....அக்கா கிட்ட டோஸ் வாங்குறதுக்கு இவ்வளவு ஆர்வமா?" என்று விட்டு சிரிக்க



'இவ ஒருத்தி.... இவள பேசாம சி.பி.ஐ ல சேத்து விட்றனும்....

எல்லாத்தயும் கரெக்டா கண்டு புடிச்சிடுவா' என நினைத்தவன் வெளியே சமாளிப்பாய் சிரித்தான்.



"அய்யே ரொம்ப வழியாதிங்க...

போங்க போயி அவள சமாதானப்படுத்துங்க மாம்ஸ்.... ஆல் த பெஸ்ட்"



"உன்ன..." அவன் அடிக்க கை ஓங்கவும் சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள்.



.....



மெல்ல கதவை திறக்க முகத்துக்கு பறந்து வந்தது ஒரு தலையணை....



"யம்மா....ஹை டெஸிபல்ல இருக்கா போலவே" என்றவன் உள்ளே நுழைய இப்போது பூச்சாடியொன்று பறந்து வந்தது.



"கொலகாரப் பாவி...புருஷன் செத்துருவான்னு கொஞ்சம் யோசிக்குதா பாரு" மீண்டும் முன்னேற இப்போது பாட்டில்...



அதை லாவகமாக பிடித்தவன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு பத்ரகாளியாய் நின்றவளிடம்



"ரிதி....நா சொல்றத கொஞ்..."



"போடா வெளிய.... இப்போ மட்டும் எதுக்கு வீட்டுக்கு வந்த....அங்கேயே இருக்க வேண்டியது தானே?"



"உன்ன பாக்காம இருக்க முடில செல்லம்"



"இத நா நம்பனுமா...போ இங்கிருந்து"



"ஐ லவ் யூ செல்லம்....ப்ளீஸ் இந்த ஒரு தடவ மட்டும்..." அவன் பேசியபடியே முன்னேறிக் கொண்டிருக்க அது அவளுக்கு உறைக்கவே இல்லை.....



"ஐ ஹேட் யூ போடா..."



"பட் ஐ லவ் யூ"



"ஐ ஹேட் யூ....ஐ ஹேட் யூ...." என்றவளின் இடையில் கையிட்டு தன் பக்கம் இழுக்க அவனை உறுத்து விழித்தாள் அவனவள்...



"ஐ லவ் யூ"



"ஐ ஹேட் யூ விடுடா என்ன...." என்றவளின் இதழ்களை சட்டென சிறை செய்ய அப்படியே அவனுள் அடங்கிப் போனாள் பேதை....



லண்டன்.....



காய்ந்த கண்ணீர் கோடுகள் அப்படியே முகத்தில் இருக்க திடுக்கிட்டு விழித்தாள் ரிக்ஷிதா.



நேரம் மதியம் பண்ணிரெண்டை கடந்திருக்க



"அய்யய்யோ யாது ஸ்கூல் விட்டு வர்ற நேரமாச்சே.....நா வர்றேன்னு சொல்லியிருந்தேனே....ஒரு வேல அழுதிருப்பானோ?" இவள் யோசித்துக் கொண்டிருக்க தன் தந்தையுடன் உர்ரென்ற முகத்துடன் உள்ளே நுழைந்தான் யாதவ்.



அவசரமாக எழுந்து அவனருகில் சென்று அவன் முன் மண்டியிட்டு அமர அவளையே வெறித்தவன் சட்டென யாதவ்வின் கையை விட்டுவிட்டு வெளியேறிவிட போகும் அவனையே பார்த்திருந்தவள் ஒரு பெருமூச்சுடன் தன் மகன் புறம் திரும்பினாள்.



"சாரி கண்ணா" தன் காதில் இரு கைகளையும் வைத்து மன்னிப்பு யாசிக்க கொஞ்ச நேரம் முறைத்தவன் அவளை தாவி அணைத்துக் கொண்டான்.



"மிஸ் யூ மாம்"



"நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்டா..." என்க அவளிடமிருந்து விலகி அவள் கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டான்.



"மாம்..."



"என்னடா?"



"டாட் எனக்கு திட்டிட்டாங்க" கண்ணீர் எட்டிப் பார்க்க பதறி துடைத்தவள்



"டாட்கு ஒர்க் டென்ஷன் கண்ணா....அதான் கோபம் வந்திருக்கும்....டாட் வந்த உடனே ஏன் என் கண்ணாக்கு திட்டினீங்கன்னு கேக்குறேன் சரியா...?" என்க சந்தோஷமாய் தலையாட்டியவனை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள் பேதை...



....



கை தன் போக்கில் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாலும் மனம் என்னவோ கணவனையே சுற்றி சுற்றி வந்தது.



"மாம்...மாம்...."



"...."



"அஷூ..." என்றுவிட்டு சிரிக்க திடுக்கிட்டு விழித்தாள் அவனவள்.



கண்கள் சட்டென கலங்க



"யா...யா...யாது நீ..நீ இப்போ என்ன சொன்ன?" என்றாள் தழுதழுக்க....



தன் தாயின் குரல் மாற்றத்தை கணித்தவன்



"சாரி மாம்... இனிமே அப்பிடி சொல்ல மாட்டேன்" எனவும் அவன் பயந்து விட்டது உணர்ந்து அவன் நெற்றியில் முத்தமிட்டவள்



"சாரியெல்லாம் எதுக்கு கண்ணா... அம்மாக்கு யாது குட்டி மேல கோபமே இல்ல" எனவும் தான் மலர்ந்தது குழந்தை முகம்.



"ஆமா உனக்கு யாரு சொல்லித் தந்தா?"



"டாட் தான் மாம்"



"எ...எப்போ?" என்றாள் ஆர்வமாய்.



"நா பர்ஸ்ட் ஸ்டாண்டட் படிக்கும் போது ஒரு தடவ டாட் உங்க பேரு சொல்லியிருக்காரு" அவளும் அவனிடம் மீண்டும் எதுவும் கேட்கவில்லை....



கேட்கத் தோன்றவில்லை....



'முதல்ல பயத்த விட்டுட்டு மன்னிப்பு கேட்டுடனும்' மனதில் உறுப் போட்டுக் கொண்டவளுக்கு எங்கே தெரியப் போகிறது விதி செய்து விட்ட சதி!!!



தொடரும்.......



19-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 03 [ B ]



லண்டன்.....



இரவு....



யாதவ்வை தூங்க வைக்கவே நேரம் பத்தை கடந்திருக்க அப்போதும் வீட்டுக்கு வராமல் இருந்தவனை நினைத்து பரிதவித்தது பேதை மனம்.....



இங்கு வந்த இந்த மூன்று வாரங்களில் என்னதான் கோபமாக இருந்தாலும் வீட்டிற்கு வந்து விடுபவன் இன்று மட்டும் வராமல் இருந்தது அவளுக்குள் ஏதோ ஒன்று பிசைந்தது.



திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்க வெளியே ஓடிச் சென்று மேலிருந்தவாறே கீழ் ஹாலை எட்டிப் பார்க்க உள்ளே தள்ளாடியபடியே வந்து கொண்டிருந்தான் அவள் கணவன்.



இதயம் பதறித் துடிக்க படிகளில் இறங்கி ஓடியவள் விழப்போனவனை சென்று பிடிக்க அவனோ அவளை உதறித் தள்ளிவிட்டான்.



"தொடாத என்ன..."

அவ்வளவு போதையிலும் தெளிவாக வந்து விழுந்தன வார்த்தைகள்....



"சாரி தேவ்...." அழுது கொண்டே கேட்டாள்.



"அப்பிடி கூப்புடாதடி....எனக்கு இர்ரிடேட்டிங்கா இருக்கு...." என கத்திவிட்டு விழப் போக மீண்டும் அவள் கை அவனை தாங்கிப் பிடிக்க நீண்டது.



"கிட்ட வராத டேமிட்...போ இங்க இருந்து.... சாரி கேட்டா எல்லாம் சரியாயிடுமா?"



"சரியாகாது தேவ்....சரியாகாது.... நா என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்ணிட்றேன் ப்ளீஸ் தேவ்..." கண்களில் கண்ணீர் வடிய கும்பிட்டவளை பார்த்து அவனுக்கு இரக்கமே வரவில்லை போலும்!!!



"என்ன சொன்னாலும் பண்ணுவியா?" சந்தேகமாக அவன் கேட்க தன் மேல் அவனுக்கிருந்த நம்பிக்கையை தானே உடைத்த வலி வருடங்கள் கழித்து அப்போதுதான் அவளை கூராக தாக்கியது.



"ப...பண்றேன் தேவ்"



"அப்போ என்ன விட்டு போயிடு.... உன்ன பாக்கவே எனக்கு பிடிக்கல.."



"என்னால உங்கள விட்டு இருக்க முடியாது தேவ்....புரிஞ்சிக்கோங்க"



"சும்மா பேசிட்டிருக்காம போடி இங்க இருந்து....கொலகாரன் கொலகாரனாவே இருந்துட்டு போயிட்றேன்... எங்கேயாவது தொலஞ்சு போ..." உச்சகட்ட கோபத்தில் அவன் வார்த்தையை விட அவனவள் நொறுங்கித் தான் போனாள்.



'கொலைக்கு பின்னாலுள்ள எந்த காரணமும் எனக்கு தேவயில்லனெனு உங்களுக்காகவே தானே வந்தேன் தேவ்... தொலஞ்சி போன்னு சொல்லிட்டீங்களே.... ஏன் நீங்க என்ன அவ்வளவு வெறுக்குறீங்களா' நெஞ்சு விம்மி வெடிக்க மடங்கி கதறி அழுவதை காணும் கண்களில் கூட கண்ணீர் ஊற்றெடுக்கும்....



"சாரி தேவ்....ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க....நா போறேன் தேவ்...உங்க வாழ்க்கைல இனிமே நா வரமாட்டேன்....சாரி தேவ்" கதறிக் கதறி அழுதவளை வெறித்துப் பார்த்தவன் அப்படியே சோபாவில் விழுந்து உறங்கிப் போனான்.



துடைக்க துடைக்க வழிந்து கொண்டே இருக்க கண்ணீரை எப்படி கட்டுப் படுத்துவதென்றே பரியவில்லை அப்பேதைக்கு....



தட்டுத் தடுமாறி எழுந்தவள் அவனருகில் சென்று அவன் நெற்றியில் இதழ் பதித்து விலகப் போக அவனோ அவள் கையை இறுக்கப் பற்றியிருந்தான்.



"கண்ணம்மா...."



வாய் மூடி அழுகையை அடக்கியவள் அவனிடமிருந்து விலகி கடைசியாய் தன் குழந்தையை பார்க்கச் செல்ல தூக்கத்தில் கூட அவளை தேடிக் கொண்டிருந்தவனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவளால்....



ஓடிச்சென்று தன் மீது அள்ளி போட்டுக் கொண்டவள் அவளை அணைத்துக் கொண்டே அழ சிறிய சத்தத்திற்கே கண் விழிப்பவன் உடனே எழுந்து கொண்டான்.



"மாம் ஏன் அழறீங்க?" அவனும் அழத் தயாராக அவசர அவசரமாக கண்களை துடைத்தவள்



"நோ கண்ணா அழக்கூடாது.... பாருங்க அம்மா அழல.... யாதுகுட்டி சமத்து பையன்ல...அழக்கூடாது" தொண்டை அடைக்க அதற்கு மேல் அவளால் பேசவே முடியவில்லை....



"யாதுகுட்டி சமத்து பையன் அழமாட்டான்...." அவளைப் போலவே உரைத்தவன் அவள் கழுத்தை கடடிக் கொண்டு அப்படியே உறங்கிப் போனான்.



மீண்டும் அழுகை முட்டியது அவளுக்கு....



'தன் மேல் உயிராய் இருப்பவனையா அழிக்கத் துணிந்தேன்....'



தன்னவனை விலக்க நினைத்து சொன்ன வார்த்தையாயினும் கேட்ட அவனுக்கு எப்படி வலித்திருக்குமென்று சம்மட்டி அடியாய் உறைத்தது அவளுக்கு.....



தன்னையறியாமலேயே அப்படியே உறங்கி விட்டிருந்தவள் விடியும் முன் தான் இங்கு இருக்கக் கூடாது என்பது நினைவு வர திடுக்கிட்டு விழித்தாள்.



நேரம் அதிகாலை நான்கை தாண்டிக் கொண்டிருக்க மீண்டும் கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் மகன் தூக்கம் கலையாதவாறு அவனை படுக்க வைத்தவள் அவன் தலை வருடி இதழ் பதித்துவிட்டு அரவம் காட்டாமல் மெதுவாக கீழிறங்கி வந்தாள்.



அவளவன் இன்னும் அப்படியே தான் உறங்கிக் கொண்டிருந்தான்.



அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரகரவென வழியத் துவங்க அவனருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தவள் சோபாவிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்த அவன் கையை தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள்.



"சாரி தேவ்.... எனக்கு இத விட்டா வேற எதுவும் தெரில.... நா போயிட்றேன் தேவ்...நிரந்தரமா போயிட்றேன்.... உங்களுக்கு இனி தொந்தரவா இருக்க மாட்டேன் தேவ்.... என்னால உங்க சந்தோஷம் போயிடுதுன்னா அப்பிடி ஒரு நிலமைக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்... கடைசியா ஒன்னே ஒன்னு....ஐ லவ் யூ தேவ்"



இதற்குப் பிறகு சொல்லவே கிடைக்காது என பயந்தோ என்னவோ வார்த்தைக்கு வார்த்தை தன்னவன் பெயரை சொல்லிக் கொண்டது நாவு....



அவனிதழ்களை சிறை செய்து நெற்றி முட்டி கண்ணீர் வடித்தவள் அவன் நெற்றியில் தன் இதழ் பதித்தவாறே எழுந்து வீட்டை விட்டு வெளியேறினாள்.



இராமநாதபுரம்....



அதே நேரம் காலை.....



ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவது போல் மனம் அடித்துக் கொண்டே இருந்தது விஜயலக்ஷ்மிக்கு...



அவரை படபடப்பாக காணவே அவர் தோள் தொட்ட ஈஷ்வரி



"அத்தை....உடம்புக்கு ஏதாவது பண்ணுதா.....ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் அக்கறையாய்....



ஜாகிங் முடித்துவிட்டு உள்ளே நுழைந்த அஜய்யின் காதுகளிலும் அது தெளிவாக விழ யோசனையாய் சமையலறைக்குள் நுழைந்தான்.



"அம்மா என்னாச்சு?" அவனும் தன் பங்கிற்கு கேட்க



"ஒன்னில்லப்பா.... ஏதோ மனசுக்கு சரியா படல" என்றவரின் உள்ளம் கலங்கியது யாருக்கும் எதுவும் ஆகி விடக் கூடாதே என்று....



"எல்லோரும் நல்லாதான்மா இருக்காங்க....எதுக்கு வீணா டென்ஷனாகுற... ப்ச்...மாத்திரை சாப்டியா?"



"ஆமாடா"



"ஓகே....நீ பொய்ட்டு ரெஸ்ட் எடு.....ஈஷ்வரி பாத்துப்பா.... அம்மாவ உள்ள கூட்டிட்டு போ நா இதோ வந்துட்றேன்" என்றவன் தங்களறைக்கு சென்று அவர் திருப்திக்காக எல்லோரையும் ஒருமுறை விசாரித்தான்.



கடைசியாய் தன் தங்கைக்கு அழைக்க அது எடுக்கப்படாமல் போகவும் நேர வித்தியாசம் உணர்ந்து அதை அப்படியே விட்டு விட்டு ப்ரஷப்பாகி கீழே வந்தான்.



"மா...நா உனக்காக எல்லோர் கிட்டவும் பேசிட்டேன்... எல்லாம் நல்லாதான் இருக்காங்களாம்....நீ சும்மா எதயும் போட்டு குழப்பிக்காம இரு" என்கவும் தான் அவர் முகம் சற்று தெளிந்தது.



***



தன் மனைவியை கட்டிக் கொண்டு படுத்திருந்தான் ஆரவ்.



நெஞ்சிற்குள் ஏதோ நெருடலாகவே இருக்க இதற்கு மேலும் முடியாதவன் எழுந்து அமர்ந்தான்.



ஏனோ உயிர் தோழியின் ஞாபகம் அன்று அவனை அளவுக்கு அதிகமாகவே தாக்கிக் கொண்டிருக்க எரிச்சல் ஒருபுறம் என்றாலும் போடி என உதறித் தள்ளவும் முடியவில்லை அவனால்....



"ராட்சஸி....எப்போ பாரு என்ன டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருக்கா...." வாய்விட்டே புலம்பியவன் மெதுவாக எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.



அன்றைக்கு சண்டே என்பதால் சற்று தாமதமாக எழுந்த கயல் அருகில் கணவனில்லாது போகவும் படக்கென விழிகளை திறக்க சிரித்துக் கொண்டே அவளிடம் டீ கப்பை நீட்டியவாறு நின்றிருந்தான் ஆரவ்.



சரித்துக் கொண்டே எழுந்தவள் அவன் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு வாங்கிக் கொண்டாள்.



அவளருகில் அமர்ந்து அவளையே பார்த்தவனிடம்



"என்ன கேக்க நெனக்கிற ஆரு....?" என்க அசந்து போனவன் அசடு வழிய சரித்தான்.



"ஹி...ஹி....அது ஒன்னில்ல அம்முகுட்டி....வந்து இன்னிக்கு ஒர்க்..." அவன் முடிக்கு முன் அவன் கையிலேயே டீ கப்பை பக்டென வைத்தவள்



"வீட்ட விட்டு வெளிய போன கொன்னுடுவேன்" அவனை மிரட்டி விட்டு செல்ல பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டான் அவளவன்.



அவள் ப்ரஷப்பாகி வருவதற்குள் அவன் மொபைலுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துவிட்டிருந்தது.



போனையே சோகமாக பார்த்திருந்தவன் அவள் வெளியே வரவும் மீண்டும் அவள் முன் போய் நின்றான்.



"என்ன?" என்றாள் கோபமாய்...



"அம்மு..."



"நா ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் ஆரு....எல்லோரும் எப்போடா சண்டே ஆகும்னு காத்துகிட்டு இருப்பாங்க....உனக்கு மட்டும் அப்பிடி என்னதான் வேலையோ.... ஒரு நாள் கூட உனக்கு என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதா?" பொரிந்துக் கொட்டினாள்.



"டாக்டர்ஸுக்கு லீவ் இருக்கா....அதே மாதிரி தான்டி இதுவும்"



"ஆமா...உன்ன அத்தான் டாக்டருக்கு எவ்வளவு படிக்க சொன்னாரு... படிச்சியா...

தேவயில்லணா நா போலிஸ் வேலைலயே இருந்துக்குறேன்னு வீம்பு பண்ணிட்டு இப்போ உதாரணம் காட்ட கூட அந்த டாக்டர் வேலயதான் இழுத்துகிட்டு இருக்க"



"அய்யோ....இப்போ அதுவாடி முக்கியம்?"



"ஆமா முக்கியம்தான்"



"ப்ளீஸ் அம்மு புரிஞ்சிக்கோடி.... நைட் கண்டிப்பா வந்துருவேன்டி" கெஞ்சுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு....



"என்னமோ பண்ணு" என்றுவிட்டு நகரப் போனவளின் கை பிடித்து தன் பக்கம் இழுத்தான்.



அவன் மேல் வந்து மோதியவள் எதுவும் பேசாமல் முகத்தை திருப்ப அவள் கண்ணம் ஏந்தியவன்



"அம்மு....இன்னிக்கு முக்கியமான கேஸ் விஷயமா போணும்....

இன்னிக்கு தான் தொடங்க போறேன்.... நீ இப்பிடி என்ன அனுப்பி வெச்சா என்னால சாதாரணமா அங்க வேல பாக்க முடியாதுடி"



"சரி போ"



"நா போகல" இப்போது அவன் முறுக்கிக் கொள்ள அவன் முகத்தை தன் புறம் திருப்பியவள் அவன் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து



"நல்லபடியா பொய்ட்டு வெற்றியோட திரும்பி வாடா" என்க



"லவ் யூ டி பொண்டாட்டி" என்றவன் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.



லண்டன்......



அவள் வீட்டை விட்டு வெளியேறிய மறுநொடி உடல் தூக்கிவாரிப் போட எழுந்தமர்ந்தான் ரிஷிகுமார் தேவமாருதன்....



இதயம் படபடவென அடித்துக் கொள்ள வியர்த்து வழிந்தது அவனுக்கு....



போதை முழுமையாக இறங்கியிருக்க இரவு நடந்ததெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர கண்களை தன்னவளை தேடி சுழல விட்டவன் எழுந்து ஒரே பாய்ச்சலில் மாடிக்கு ஓடினான்.



'போயிடாத....போயிடாத....' ஜபம் போல் மனது உச்சரிக்க படாரென கதவை திறந்தவன் அறையிலும் அவளில்லாது போகவும் அதிர்ந்து தான் போனான் அந்த ஆண்மகன்.



கதவு திறந்த சப்தத்தில் மகன் கண்விழித்து தன் தாயை தேடி அழத் துவங்க அவனை கைகளில் அள்ளிக் கொண்டு தட்டிக் கொடுத்தவனுக்கு முழு உடம்பும் பதற்றத்தில் நடுங்கியது.



"டாட்...மாம் வேணும்...."



"தூங்கு கண்ணா... அம்மா இப்போ வந்துடுவாங்க" சமாதானப்படுத்த முயன்றான்.



"நோ எனக்கு மாம் பாக்கணும்....மாம் அழுதா நானும் அழுவேன்" அவன் இன்னும் அழத் துவங்க



"அ...அம்மா எ..எப்போ அழுதாங்க யாது கண்ணா?" என்றான் ஒரு திடுக்கிடலுடன்....



"மாம் அழுதாங்க.....எனக்கு மாம் வேணும்" அவன் அடம்பிடிக்க நேரம் பார்க்காமல் கதிருக்கு அழைத்து விட்டான்.



"எவன்டா அது இந்த நேரத்துல..." அவன் தூக்க கலக்கத்தில் உலற பல்லை கடித்தவன்



"கதிரவன்" என்றான் அழுத்தமாக....



அவனுக்கு மொத்த தூக்கமும் வடிந்தே போனது....



வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தவன்



"ச...சா..சார் நீங்களா?"



"வீட்டுக்கு கொஞ்சம் வர்றியா கதிர்?" இதுவரை கேட்டிராத தவிப்பு அவன் குரலில் தெரியவும்



"இதோ வந்துட்றேன் சார்" அடுத்த நிமிடம் கிளம்பியிருந்தான்.



அவன் யாதவ்வை தூக்கிக் கொண்டு கீழே வர உள்ளே நுழைந்த கதிரிடம்



"கதிர் நீ யாதவ்வ பாத்துக்கோ.... நா...வந்து வெளில பொய்ட்டு வந்துட்றேன்" என்கவும்



"ஓகே சார்" என்றவன் தூங்கியிருந்த யாதவ்வை தன் கைகளில் வாங்கிக் கொள்ள மாயமாய் மறைந்திருந்தான் ரிஷிகுமார்!!!



......



அழுதழுது கண்களில் கண்ணீரும் வற்றி விட்டது போலும் அந்த பேதைக்கு!!!



மூளை மறத்துப் போய் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவளுக்கு தான் அவனுக்கு தொல்லை...இனிமேல் உலகில் இருக்கக் கூடாது என்பது மட்டுமே பதிந்து போயிருந்தது.



எதுவும் அவள் நினைவுகளில் இல்லை....தன்னவனே தன்னை வெறுத்து விட்டான் என்பதிலேயே உழன்ற மனதுக்கு தான் நடு ரோட்டில் நடந்து கொண்டிருப்பது கூட புரியவே இல்லை!!!



......



அந்த அதிகாலை வேலையில் எந்தப் பக்கம் போவதென்றே தெரியவில்லை அந்த ஆறடி ஆண்மகனுக்கு....



அவளை காணாமல் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது அவனுக்கு....



அதிக தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதை மனம் அடித்துக் கூற தன்னவள் பெயரை கத்திக் கொண்டே அங்குமிங்கும் அலைந்தான்.



ஊஹூம் அவள் இல்லவே இல்லை...!!!



"என்ன விட்டு போயிடாத அஷு.... நா இனிமே அப்பிடி பேச மாட்டேன்டி.... என்கிட்ட வந்துடுடி....நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி.....ஐ லவ் யூ கண்ணம்மா....ப்ளீஸ் என்கிட்ட வந்துடு" கிட்டத்தட்ட புலம்பினான்....



.....



நடு ரோட்டில் நடைப்பிணமாய் நடந்து கொண்டிருந்தவளுக்கு பின்னால் வந்த பெரிய மண் லாரியின் ஹார்ன் சத்தம் கேட்காமலே போனதுதான் விதி செய்த சதியோ???



.....



தூரத்திலிருந்தே அவளை கண்டுவிட்டவனின் கண்களில் வந்து போன மின்னல் பின்னால் சென்று கொண்டிருந்த லாரியை பார்த்ததும் அப்படியே உறைந்து தான் போனதுவோ???



ஹார்ன் சத்தத்துடன் அவளவனின் சத்தமும் இப்போது சேர்ந்து கொள்ள அவனுக்கு இதயம் எகிறி குதித்தது.



அவளை நோக்கி ஓடியவன்



"அஷூ....." என கத்தவும் லாரி அவளை அடித்துத் தூக்கவும் சரியாக இருந்தது.



அவன் கத்திய கத்தலில் இளைப்பாறிக் கொண்டிருந்த பறவைகளெல்லாம் திடுமென பறந்து போனது.



தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தவளுக்கு எங்கிருந்து இரத்தம் வருகிறதென்றே யூகிக்க முடியாமற் போயிற்று!!!



உயிர் இருந்தது....



அதுவும் அவனுக்காகவோ??



ஓடிச் சென்று தன் மடியில் தன்னவளை ஏந்தியவன்



"எ...எந்திரிடி எந்திரிடி" கண்ணத்தை தட்டிக் கொண்டே கதறி அழுதான்.



ஆம்...அவன் அழுதான்!!!



அவள் முன்னேயே அவளுக்காக அழுதான்!!!



"ஐ....ஐ...அம்....சா...சாரி... தே...தேவ்.... எ...எ...என்ன ம...மன்.. மன்னிச்...சிடுங்க"



"அய்யோ எந்திரிடா....எனக்கு நீ வேணும் ப்ளீஸ்"



"இ...இல்ல...நா...நா உ...உங்களு... க்கு...வேணாம்...நா...நல்லவ க்...கிடயாது"



"நோ...எந்திரிடி....எனக்கு நீதான் வேணும்...சாரிடி..."



"ம...ம...மது...மது...நல்லவங்க...யா..யாதுக்கு ந...நல்ல அம்மாவா இருப்பாங்க...நீ...நீங்க அ...அவங்கள க...கல்யாணம் ப..பண்ணிக்கோங்க..."



"எனக்கு யாருமே வேணான்டி நீ மட்டும் போதும்... ப்ளீஸ் இப்பிடி பேசாதடி"



"அ...அவங்க...உ...உங்கள லவ் ப..பண்றாங்க...நா..அத அ....அவங்க க..கண்ல பா... பாத்தேன்.... இ..இது...எ..என்னோட க...க...கடைசி ஆ...ஆச"



"இதுக்கு மேல பேசினா நானே உன்ன கொன்னுடுவேன்டி...ஏன்டி இப்பிடி பண்ற?"



"நீ...நீங்களே....கொ..கொ... கொன்னாலும் எ...எனக்கு ச...ச... சந்தோஷம் தான்... எ...எனக்கு வாழவே த...தகுதி இல்ல...." எதுவும் பேசாமல் அவளை கட்டிக் கொண்டு கதறினான்.



"அ...அம்மாவுக்கு ந..நல்ல பொண்ணா இ...இருக்கல.... உ...உங்களுக்கு ந...நல்ல ம...மனைவியா இ..இருக்கல...க...

கடைசியா ந....நல்ல தா...தாயா கூட இருக்கல...."



"அப்பிடில்லாம் இல்லடி....என்னால முடிலடி..."



"எ...எ...எனக்கு ஒ...ஒரே ஒரு ஆ...ஆச....எ...என்ன அ...அஷுன்னு கூ...கூப்புட்றீங்களா?"



"காலம் முழுக்க கூப்புட்றேன் க...கண்ணம்மா....எ...எ...என்னவிட்டு போய்டாதடி...நீ இல்லாம எ...என்னால வாழ முடியாதுடி....

ப்ளீஸ்...." கதறி அழுதான் அவளவன்....



"ஒ...ஒரு தடவ கூ...கூப்புடுங்க...எ... எனக்கு கே...கேக்கனும் ப...போல இ...இருக்கு..."



"ஏன்டி என்ன படுத்துற....?"



"ம...மது உ...உங்கள ந..நல்லா பா...பாத்துப்பாங்க அ...அவங்கள... க...கல்யாணம்...." அவள் முடிக்கும் முன்



"ஐ லவ் யூ இடியட்... ஐ லவ் யூ டி.... ப்ளீஸ்டி" கத்திவிட்டு அழவும் அவள் கண்களில் திடீர் மின்னல்...



செயன்முறையில் உணர்ந்திருக்கிறாள் அவன் காதலை...ஆனால் இதுவே முதல் தடவை அவன் வாயால் கேட்பது...



இது போதும் அவளுக்கு!!!



உதட்டில் உறைந்த புன்னகையுடன் கண்கள் சொறுக எப்போதும் போல் அவன் ஷர்ட்டை பற்றியிருந்த அவள் கீழே விழ அதிர்ந்தான் அவன்!!!



இதற்கு முன் அவள் பற்றிய ஒவ்வொரு தடவையும் படமாய் வந்து போக



"நோ...நோ...நோ....இருக்காது...
இருக்காது...." அவள் கண்ணங்களை தட்டினான் பைத்தியக்காரன் போல்!!!



தொடரும்.....



20-05-2021.
 
Status
Not open for further replies.
Top