All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரையானாவின் "தவத்தின் வரமாய்..." - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே

Thank you sri ma,
thank you sooo much

எப்படி இருக்கீங்க நான் உங்கள் ரையானா, இதுவரை வாசகிய இருந்த நான் இப்போ என்னோட ஒரு குட்டி கதையோட உங்கள பாக்க வந்து இருக்கேன். என்னோட கதையை படிச்சிட்டு எப்படி இருக்கு நல்லா எழுதறேன்னா அண்ட் கதையா பத்தின பிளஸ் மைனஸ் சொல்லுக

பல லெஜெண்ட்ஸ் முன்னாடி ஒரு நியூ போர்ன் பேபிய வந்து இருக்கேன் என்ன கையேடு பண்ணுங்க

உங்களோட நட்ப்பூ ஆத்தா அத குடுக்க மறந்துட வேண்டாம்பா
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போக்குவரத்து நெறிசல் இல்லாத அமைதியான சாலை

மஞ்சள் வெயில் , குளிர்ந்த காற்று , அமைதியான சூழ்நிலை ரசித்த வண்ணம் ஜூஹியும், யஷ்வினியும் கைகள் கோர்த்த வண்ணம் , பால்ய நினைவுகளும் எதிர் கால கனவுகளுமாக பேசி கொண்டு வந்து கொண்டிருந்தனர்.சிலநூறு அடிகளுக்கு ஒரு வீடு என , சில மின் கம்பங்களுமாக நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத சாலை


ஷ் ஷ் ஷ் .......ஷ் ஷ் ஷ் .....ஷ் ஷ் ஷ் ....


ஒரு நிமிடம் இருவரின் கால்களும் வேரோடி விட்டன , யஸ்வினியின் கால்களுக்கு அருகில் கண்ட ராஜ நாகத்தை பார்த்து, இருட்டில் பளபளக்கும் அதன் உடல் இருவரையும் செயலிழக்க செய்தது என்றால் அதன் ரத்தத்தால் நனைத்த அதன் உடல் அவர்களை பயத்தால் உறைய செய்து விட்டது .

அருகில் ஒரு மரத்தின் அடியில், சாலையின் அறிவிப்பு பலகையின் கம்பம் பாம்பின் நடு உடம்பில் விழுந்து பாம்பின் உடலில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது . அந்த கம்பம் மனிதன் மீது விழுந்தால் எலும்பு முறிவு ஏற்படும் என்பது நிச்சயம் . அதனால் எந்த பக்கமும் நகர முடியவில்லை ரத்த போக்கு அதிகமாக இருந்தது. மரத்தின் அடிப்பகுதி மற்றும் வெளிச்ச குறைவின் காரணமாக யார் கண்களுக்கும் அது தெரியவில்லை.



சில நொடிகளுக்கு பின் முதலில் நினைவுக்கு வந்த யஸ்வினி , ஜுஹி " வா போலாம் " , என்றாள் நடுக்கத்துடன். நினைவு வந்த ஜுஹி அதனை பார்த்து கொண்டே ' "யஷு , அதுக்கு ரத்தம் வருது" என்றாள். அவளை நன்றாக முறைத்து கொண்டு , " அதுக்கு ?" என்றாள் ஜுஹி பற்றி நன்கு தெரிந்தவளாக.

"அதுக்கு யாருடைய உதவி கிடைச்சா தான் அது போக முடியும். நாம உதவி பண்ணலாமா?" என்று கேட்டவாறு எவ்வாறு உதவி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

"லூசாடி , நீ அது பாம்பு பூனை இல்ல"-யஷு

"ஆமா, ஆனா அதுக்கு உதவி தேவைப்படுது"

"அது ஒரு போடு போட்டதுன்னா நீ பரலோகம் போகவேண்டியது தான் முதல்ல இடத்தை காலி பண்ணு " என்றவாறு யஷு அவளை இழுக்க முயற்சிக்க அவர்கள் நகர்வது பாம்பிற்கு புரிய மீண்டும் தாழ்த்த குரலில் சீறி அவர்கள் முகம் பார்த்தவாறு தலையை மெதுவாக தரையில் வைத்தது.யஷு நின்ற இடத்திலேயே உறைய , ஜுஹி நகராமல் பாம்பை பார்த்த வண்ணம் நின்று இருந்தாள்.

ஜுஹி , யஷு கை பற்றி கொண்டு பின்னால் நகர்ந்து யஷுவின் முகம் பார்த்தாள். யாஷுவின் முகத்தில் பயமும் மறுப்பும் இருக்க ஜுஹி பார்வை மற்றும் முக பாவத்தால் அவளிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். நிஷ்டமாக தெரிந்த மறுப்பு சிறிது சிறிதாக மாறி மனம் முழுதும் பயத்துடன் பாம்பிற்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டாள் யஷு .

ஜூஹி , கண்களால் பாம்பின் மீது இருக்கும் கம்பத்தின் மறுமுனையை காட்ட யஷு அதனைப் புரிந்துகொண்டு இருவரும் கம்பத்தின் மறுபுறம் சென்று அந்த கம்பத்தை பிடித்து தூக்க சிறிது சிறிதாக பாம்பு முன்புறம் நகர ஆரம்பித்தது மேலும் சிறிது முயற்சித்து உயரே தூக்க பாம்பு முழுதாக கம்பத்தை விட்டு வெளியே வந்தது. முழுதும் நகர்ந்து நின்று அவர்களைப் பார்த்து சீற இருவரின் மூச்சும் ஒருமுறை நின்றது. அந்த நாகம் தரையை ஒரு முறை கொத்திவிட்டு சென்றுவிட சில நிமிடங்கள் இருவரும் அப்படியே நின்றுவிட்டனர்.

"பாம்பு போயிடுச்சு" என்று யஷு
என்று கூற

ஆமா என்றாள் ஜுஹி

"ஆமா,அது ஏன் அப்படி செஞ்சது " என்று யஷு கேட்க

"நாம உதவி பண்ணதுக்கு நன்றி சொல்லி சின்னு நினைக்கிறேன்" ஜுஹி

" அதுக்கு இப்படி பயமுறுத்தின மாதிரி சீர வேண்டாம்"- யஷு


"வேறு எப்படி இங்கிலீஷ் இல்ல ஹிந்தில நன்றி சொல்லணும் அப்படின்னு பார்க்கிறியா , பாம்பு அதனுடைய பாஷைல நன்றி சொல்லி இருக்கு . உதவி செய்தோம்அதுவும் நல்லா ஆயிடுச்சு நமக்கும் எதுவும் ஆகல அது போதும். போகிற போக்கில் ஒரு சோசியல் சர்வீஸ் அவ்ளோ தான். என்றவாறு யஷு, ஜுஹி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்

" மண்ணாங்கட்டி , உன்னோட இந்த ஹெல்பிங் tendency கொஞ்சம் மனிதன் மற்றும் நாய் பூனையோடு நிறுத்திக்கோ அதுதான் நமக்கு நல்லது " என்றாள் சிறிது பதற்றத்துடன்குரலில் பதற்றம் நன்றாகவே தெரிந்தது. மேலும் கை உள்பகுதி சில்லிட்டு இருக்க அருகிலிருந்தவளின் கை சூட்டியதாக அதை பற்ற அதுவும் குளிர்ந்திருக்க கண்டாள்.


" உன் கை ஏன் இப்படி சில்லிட்டு இருக்கு" என்றாள் யஷு .

" உனக்கு மட்டும் என்னவாம்"- ஜுஹி

"எனக்கு பயத்தில் இப்படி இருக்கு" என யஷு கூற

" எனக்கும்தான்"

"அப்புறம் ஏண்டி உதவி பண்ண"

"அதுக்கு உதவி தேவைப்பட்டது அதனால"

"ஆனால்?" என்றவாறு ஏதோ யஷு கூற வர இடையிட்ட


"நாம கண்ணு முன் நடக்குற ஜீவ மரண போராட்டத்துக்கு முன் நம்மளோடது பயம் பெரிசா தெரியக்கூடாது. அந்த உயிரை காப்பாற்றணும் அவ்வளவுதான். சரி நாம பயந்து வந்துடறோம் வேற யாரும் உதவி பண்ணுவாங்கன்னு என்னா நம்பிக்கை அது ரத்த பிறப்பிலேயே உயிர் விட்டுடும். மருத்துவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இந்த பயம் வந்தா நாம ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் எப்படி இருக்கிறது"
என்று ஜுஹி கேட்க

அதற்கு யஷு "இது எல்லாம் நீ பயப்படாம இருந்து சொன்னா எடுக்கலாம் அதை விட்டுட்டு பயந்துகொண்டு சொன்னா எப்படி எடுத்துக்கிறது." என்று கேட்க

"சரி சரி விளம்பரப்படுத்த " என்றுவிட்டு ஏதாவது " வாங்கி வரவா?" என்று கேட்டாள்

"மற்றவர்களும் வரட்டும் " என்று கூறியவாறு நண்பர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர் பேசிக்கொண்டே இருவரும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ஜுஹி "வில்" என்ற சத்தத்துடன் இடத்தைவிட்டு எழுந்தாள் அவன் இருந்த இடத்தில்சிறிய பூச்சி அவள் மீது இருந்து கீழே விழுந்தது அவள் அலறலில் எழுந்த யஷுவும் அவளைக் கண்டு பயந்து அந்த பூச்சியை பார்க்க பக்கத்தில் " கொள் " என்ற சிரிப்புடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது அந்த நண்பர்களின் படை பின்பு அந்த பூச்சியை பார்க்க விழுந்த வாரே இருந்தது பின்பு தான் அது அவர்களின் விளையாட்டு என்று புரிந்தது

" இது யாரோட வேலை" என்று ஜுஹி கத்த

"அடியேனின் திருவிளையாடல் " என்றவாறு சுரேஷ் தன் கைகளை விரித்து முன்புறம் சாய்ந்து பழந்தமிழர் மொழியில் பேச ஜுஹி அவன் தலையில் கொட்டுவதற்காக வர அதை உணர்ந்தவன் லாவகமாக நகர்ந்து அவளுக்கு அழகு காட்டினான்


"எத்தனை முறை சொல்லி இருக்கேன் இப்படி பொது இடத்தில் பயமுறுத்தாதீங்க என்று "ஜுஹி கூற

" எத்தனை முறை சொல்லி இருக்கேன் இப்படி பொது இடத்தில் கத்தாதே என்று" என்று அவளைப்போலவே பேசி அவளை கலாய்க்க ஆரம்பித்தான் suresh,
ஜுஹி அவனை முறைக்க ஆரம்பித்தாள்

"சமாதானம் சமாதானம் இங்கே நாம வந்தது கொண்டாட அதனால் சண்டை வேண்டாம்" என்றவாறு ஜாஃபர் கூற மற்றவர்கள் உடன் புல்தரையில் அமர்ந்தனர்.

யஷு, ஜுஹி , இர்பான் , ஜாபார் ,சுரேஷ்
கல்லூரி இளநிலை ஒன்றாக முடித்துவிட்டு அடுத்த நிலை செல்ல தயாராக உள்ளனர் . பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் அனைவரும் பட்டம் பெற்றதால் இந்த கொண்டாட்டம். சிற்றுண்டி வாங்கி வர அதை உண்டபடி அனைவரும் கதை பேச ஆரம்பித்தனர்

" சுரேஷ் நீ அடுத்து என்ன போடப்போற " என்று யஷு கேட்க

" இப்ப கடலை போடுறேன் அடுத்த சுண்டலை வாயில் போட போறேன் " என்றான்

"லூசு நான் சாப்புடுறது கேக்கல படிக்கிறத கேட்டேன் " என்றவாறு அவன் தோளில் அடிக்க சிரித்துக்கொண்டே
" நான் கௌதம் இர்பான் மூவரும் எம் பி ஏ போடப் போறோம் ஜாஃபர் இன்னும் ஏதும் சொல்லல "என்றான்.
ஜுஹி ஜாபரை பார்த்து என்ன பண்ணப் போற என்று கேட்க

" நான் தொழிலதிபர் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன் " என்றான்

அனைவரும் அவனை பார்க்க
"நான் உண்மையா தான் சொல்றேன் விளையாடல அப்பா வேலை தெரியும் தானே அதை factory லெவலுக்கு கொண்டு போகணும் அப்படின்னு முடிவு பண்ணியிருக்கேன்
பேட்டரி லெவல் என்ன பண்ணப் போற என்று இர்பான் கேட்க
அப்பா பண்ற பிஸ்கட் மற்றும் பேக்கரி ஐட்டம் இருக்கு நல்ல டிமாண்ட் இருக்கு ஆனா அவரால நிறைய தயாரிக்க முடியல வேலைக்கு ஆட்களைப் போட்டாலும் மெயின்டைன் பண்ண முடியல அவரால அதனால நானும் இதுல இறங்கி சப்ளை maintenance தயாரிப்பு என்ன பார்க்கலாம்னு இருக்கேன்"

நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அவனை வாழ்த்தி விட்டு தங்கள் கதைகளை தொடர்ந்தனர்.

"ஏய் ! இவ இன்னைக்கு ஒருவேளை செஞ்சா தெரியுமா ?" என்று ஆரம்பித்து நடந்த சம்பவம் அனைத்தையும் மற்றவரிடம் கூறினாள்

" நீ எதுக்கு இந்த மாதிரி வேலை செய்ற எமர்ஜென்சிக்கு கால் செய்து இருந்தா அவங்க வந்து தகுந்த பாதுகாப்புடன் முறையான ஆளுங்கள அனுப்பி இருப்பார்கள். உனக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்றது " என்று இர்பான் முழு கோபத்துடன் கேட்க

மற்றவர்களும் அவளைத் திட்ட ஆரம்பித்தனர்.
"ஒழுங்கா இருக்க மாட்டியா நீ போன முறை நாய்க்குட்டி காப்பாத்த போனதுக்கு உன் கால் உடைந்தது போதாதா இதை உன் அம்மாகிட்ட இன்னைக்கு சொல்றேன்என்று சுரேஷ் கூற

"ப்ளீஸ் சொல்லாதடா இனிமே முதல்ல என்safety அப்புறம் உதவி செய்கின்ற வேலை போதுமா "என்று கூறி ஆயிரம் ப்ளீஸ் மற்றும் சில வாக்குறுதிகளுடன் உடன் கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு புறபட தயாராகினர்.

"கூட இருந்து இவனுங்க கிட்ட மாட்டி விடுற இரு உன்ன கவனிச்சிக்கிறேன்" ஜுஹி என்று கூற

"அதை அப்போ பார்க்கலாம் " என்று யஷு சொல்லி அழகு காட்ட இருவரும் ஒருவரை ஒருவர அடித்து கொண்டனர்

தங்கள் உலகத்தில் சென்று கொண்டிருந்த இவர்கள் அனைவரையும் 2 நவீன ரக கேமராக்கள் அவர்களை புகைப்படங்களாக உள்ளிழுத்துக் கொண்டது அவற்றில் ஒன்று ஜூயை குறிவைத்து

வரம் பெறும் வரை தவம் தொடரும்....
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi my dear frnds

என் முதல் குழந்தை ( இந்த கதையை சொல்றேன் பா ) உங்க முன்னாடி கொண்டு வந்து இருக்கேன் இதுக்கு மேல என் குழந்தையை நடக்க ஓட ரன்னிங் ரேஸ் ல first price வாங்க வைக்க எல்லாத்துக்கும் உங்க அன்பும் கருத்துக்களும் , என்னக்கு வேணும்


இந்த story படிச்சிட்டு தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்

:):):):):smiley3:
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதற்கும் மசியாத மனம்
எதற்கும் இணங்காத இதயம்
இரண்டும் நிலையிழந்து தவிக்கிறது
கண்கள் அறியாத உன்னை
கனவில் கண்ட கணத்தில் இருந்து
வருவாயா நனவில்
எனக்கே எனக்காக......



திருமண மண்டபம்......

திருமணம் முடிந்து அனைவரும் தன் நண்பர்கள் வட்டத்துடன் அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். எல்லோரையும் தன்னைை கவனிக்குமாறு அழைக்கிறான் ஓர் இளைஞன். அனைவரின் கவனமும் அவனிடம், ஏதோ கூறுகிறான் அனைவரும் அமைதியாக அவனையே கவனிக்கின்றனர், தான் நிற்கும் இடத்தைவிட்டு நகர்ந்து செல்கிறான் தன்் பெற்றோருடன் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணை எழுப்புகிறான். ஏதும் செய்ய இயலாமல் அவளும் எழுந்து நிற்கிறாள். எங்கிருந்தோ ஒரு பூச்செண்டு அவன் கைக்கு வீசப்படுகிறது.

அதை லாவகமாக பிடித்துக்கொண்டு, மண்டியிட்டு அந்த பெண்ணிடம் மணம் புரிய கோருகிறான். அவள் திரு திரு வென்று விழிக்க பின் கண்களைஇறுக்க மூடி பின் மீண்டும் திறக்கிறாள்.

கண்களை திறந்தவுடன் அறையின் மேல்புற சுவர், பக்கவாட்டு ஜன்னலின் வழியே விடியல் தெரிகிறது ஜுஹிக்கு.
தான் கண்டது கனவு என்பது புரிய சில நிமிடங்கள் எடுத்தது ஜுஹிக்கு.
"யார், யாருக்கு, கொடுத்தது,? " நல்ல இனிய கனவு இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா கண்டுபிடிச்சி இருக்கலாம். "
என்று எண்ணியவாறு, இதழ் கடையில் சிரிப்புடன் தன்னை சுத்த படுத்திக்கொள்ள எழுந்தாள். காலை யோகாசனங்களை முடித்துக்கொண்டு தன் தாயைக் காண அறையை விட்டு வெளியே வந்தாள்.
mrs அருணா ராமமூர்த்தி இந்த சிறு குடும்பத்தின் அழகான தாய் பறவை. தன் கணவன் சென்னையில் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட் தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் இந்த நிமிடம் வரை விடாது தோல் கொடுத்து வரும் இன்றைய நாகரீக குடும்பத் தலைவி. மிஸ்டர் ராமமூர்த்தி தன் மனைவிக்கு முதல் குழந்தையாகவும் , அவளுக்கு முதுகெலும்பாகவும், நின்று நானும் அவளும் வேறு வேறு இல்லை என்பது போல் தன்னுடைய செய்கையின் மூலமும் இன்றுவரை நிரூபிக்கும் அழகான தந்தை. இந்த கூட்டின் அழகான இரு குஞ்சுகள் ஆதி மற்றும் ஜூஹிசாரா. ஆதி, தன் பெற்றோர் பார்த்து முடித்து வைத்த தன் அன்பு மனைவியுடன் இன்றுவரை தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரன். கணவனின் fabric business தன்னால் இயன்ற உதவியை செய்து வரும் அவன் அன்பு மனைவி அதிதி.
காலையில் தன் யோகாசனங்களின் முடித்துக்கொண்டு கீழே வந்த ஜூஹி தன் தாயிடம்
"அப்பாட்ட பேசினீங்களா? என்ன சொன்னாங்க? " என்று தன்னுடைய மேற்படிப்பிற்கான விசாரணையைப் பற்றி ஆரம்பித்தாள்.
அதற்கு அருணா "யோசிக்கிற தான் சொல்லி இருக்காங்க, அண்ணன் மாப்பிள்ளை பாக்கலாம்னு சொல்றான்? ".
"அப்ப MBA என்ன ஆகிறது? முடிச்சதுக்கப்புறம் கல்யாணத்தைப் பற்றி பாக்கலாமே இப்ப என்ன அவசரம்"
"நான் மட்டும் கல்யாணம் செஞ்சுகிட்டு அவதிப்பட ரன் இல்லை, யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று கூறிக்கொண்டே தங்கையுடன் சேர்ந்து சமையல் மேடை மீது அமர்ந்து கொண்டான்.
" உன்ன பார்த்தா கஷ்டப் படிக்கிறவன் போல் தெரியலையே எப்ப பார்த்தாலும் அவ பின்னாடியே தானே சுத்திட்டு இருக்க" என்று அருணா கேட்க.
"அது அவ நம்ம வீட்டுக்கு புதுசு இல்லையா அதனால் எந்தப் பொருள் எங்க இருக்கும்னு தெரியாது அதனால பின்னாடியே போய் எடுத்து கொடுத்து ஹெல்ப் பண்ணு பண்ணினேன் அதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க" என்று ஆதி கூற தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு
"ஒரே குரலில் வழியுது தொடச்சுக்கோ "என்று கூறி சிரிக்க அவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு அதிதி அறைக்குள் நுழைந்தாள்.
"காலையில் என்ன சிரிப்பு எனக்கும் சொல்லலாமே? " என்று கூற, தன் சகோதரனை மாட்டிவிட வாயை திறந்தவளை பார்த்து அவசரமாக தன் மனைவியின் தோளில் கை போட்டுக்கொண்டு "நான் உன்கிட்ட முக்கியமா சொல்ல மறந்துட்டேன் வா போலாம்" என்று கூறி தன் அறையை நோக்கி அழைத்துச் சென்றான்.
அவனின் அவசரத்தை கண்ட தாயும் மகளும் சிரிக்க ஆரம்பித்தனர.
*******************************************

பெங்களூரு தேசிய NH நெடுஞ்சாலை...
இருதயம், புற்றுநோய், நரம்பியல் மூளை உள்ளிட்ட சிறப்பு துறைகளும, 50000 பரப்பளவில், ஹெலிகாப்டர் தரை இறங்கும் அளவு வசதி கொண்ட அதி நவீன மருத்துவமனை. மேற்புறத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் பணியாற்றும் மின்னல் வேகத்திற்கு சற்றும் குறைவின்றி கீழ்தட்டில் மருத்துவமனை உள் பிரிவு பணியாளர்கள் அதி வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தனர்.
மருத்துவமனையின் நுழைவாயில் காற்றைக் கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் Bugatti Chiron Sport கார் மருத்துவமனையினுள் வளாகத்தில் நுழைய அதன் வேகத்தில் அனைவரும் தங்களை மறந்து, உரைந்து வழிவிட்டு நிற்க பார்க்கிங் சென்று எம்டி என்ற எழுத்துக்கள் குறிக்கப்பட்ட இடத்தில் நின்றது. பார்வையாளர்கள் அனைவரும் அதன் வேகத்தில் உயர்ந்து நிற்க மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் அதன் உரிமையாளர் யார் என்பதை அறிந்ததில் உறைந்து நின்றனர்.
ஐந்தரை அடிக்கும் சற்று சற்று உயரமாக சந்தன நிறத்தில் சிலை போன்று, கருப்பு நிற லெக்கின்?, சிவப்பும் கருப்பும் கலந்த முழுநீள கைக்கொண்ட குர்தாவும், நீண்ட பின்னலை சுருக்கி கட்டி இருப்பது போன்ற தலை அலங்காரமும் கொண்டு தன் வேகநடை உடன் மருத்துவமனை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.
ஊழியர்கள் அனைவரும் வழிவிட்டு நிற்க மருத்துவமனையில் நான்காவது மாடியில் இருக்கும் தன் அறையை நோக்கி விரைந்தாள். அறையின் நுழைவாயிலில் நெருங்கும் சமயம் வலது பக்கம் திரும்பி பார்க்க செயலாளர் அவள் அழைப்பை உணர்ந்து பின்னே செல்ல தொடங்கினான். அறையில் தான் இடத்தில் அமராது வேட்டையாட தயாராக இருக்கும் பெண் சிங்கத்தை போல் நடைபயில, இன்று தவறு செய்தவர்கள் தலை இனி அவர்கள் உடலில் இருக்குமா என்று அவனுக்கு சந்தேகம் எழுந்தது. தன் நடையை நிறுத்தி மேசையின் முன் புறம் வந்து நின்று அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க அடுத்த நொடி அவளின் கோபத்திற்கு காரணமான அனைவரும் அவள் முன் நிறுத்தப்பட்டனர்.
நேற்று புற்று நோய் பிரிவில் ஒரு 12 வயது சிறுவனுக்கு செய்ய இருந்த போன் Bone Marrow சிகிச்சை கடைசி நேரத்தில் கொடையாளியின் tissue பொருந்தி வராத காரணத்தால் தடை பட்டதாக கூறி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. விஷயம் துறைத் தலைவருக்கு கொல்லப்பட இதுபோல் கடைசி நேர மாற்றம்சில நேரம் சகஜம் என்பதால் அதனை பெரிதும் விசாரிக்காமல் இருந்துவிட்டார். தகவல் தெரிந்து காரணங்கள் அலசப்பட, கொடையாளி தெரிவுசெய்யும் பரிசோதனை முடிவுகளை மாற்றி, சிறுவனுக்கு பொருந்தாது என அறிக்கை வழங்கி தானம் செய்ய வந்த அந்த நபரின்bone marrow அவருக்கே தெரியாமல் வேறு ஒரு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு அதிக பணத்திற்காக பேசப்பட்டது. இந்த விசாரணை ரகசியமாக சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமல் நடத்தப்பட அவர்கள் அனைவரும் தற்சமயம் அவள் முன் நிறுத்தப்பட்டனர். இதற்கு இடையில் அந்த சிறுவனுக்கு மீண்டும் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது.
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Bone marrow : நமது இடுப்பு அல்லது தொடை போன்ற உறுதியான எலும்புகளில் இருந்து பெறப்படும் ஒரு மேன்மையான திசு. புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு செலுத்தி அதன் மூலம் அவரின் புற்று நோயை குணப்படுத்தும் ஒரு முறை. நோயாளியின் ரத்த உறவுகள் எனில் 25 சாதம் பொருந்த வாய்ப்பு உள்ளது, சொந்தம் அல்லாத வேறு நபர் எனில் வாய்ப்பு குறைவு. மேலும் பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு இந்த சிகிச்சைக்கு கொடையாளி தேர்ந்தெடுக்கபடுவர். திசு கொடுப்பவருக்கு அந்த திசு 3 அல்லது 4 வாரத்தில் திரும்ப ஒருவாக்கப்பட்டுவிடும். நோயாளி மற்றும் கொடையாளி இருவருக்கும் வலி நிறைத்த சிகிச்சை முறை. )
துறைத் தலைவரும், அறிக்கை கொடுத்த மருத்துவரும் நடுக்கத்துடன் இருக்க , மேஜையின் மீது சாய்ந்து நின்ற அவளின் கூர் விழிகள் இருவரின் மீதும் நிலைத்திருக்க முகம் அமைதியை விடுத்து வெடிக்க தயாராக இருக்கும் எரிமலை போல் சிவந்து காணப்பட்டது. துறைத்தலைவர் நேற்று நடந்ததை மீண்டும் ஒரு முறை கூறி பின்பு அரிதாக சில நேரங்களில் இவ்வாறு கடைசி பரிசோதனையில் மாற வாய்ப்புள்ளதாக கூற, அவள் பார்வையில் "அப்படியா? " என்னும் கேள்வி கூர்மையாக வந்து விழ, எங்கு தன் தவறு வெளியாகி விடுமோ என்று எண்ணி அறிக்கை முடிவு மாற வாய்ப்புள்ளது என கூறிய அடுத்த நொடி, பக்கத்தில் இருந்த மேஜை மேல் பலமாக மோதி நெற்றி தாடையில் ரத்தம் வழிய தரையில் கிடந்தார் அந்த மருத்துவர். நடந்தது என்னவென்று தெரியாமல் திடீரென தரையில் விழுந்து கிடந்தவனை அமர் மற்றும் துறைத்தலைவர் பார்க்க, தரையில் விழுந்த மருத்துவர் தலையை தூக்கி தன் பயந்த விழிகளுடன் துறை தலைவரையும், அமரையும் நோக்கி பின் மெதுவாக எழும்பிய மருத்துவர் அவளைப் பார்க்க கண்கள் இரண்டும் இரையை வேட்டையாடும் சிங்கத்தை போன்று இருக்க, உள்ளமும் உடலும் ஒருங்கே நடுங்க தன் செய்த அனைத்து செயல்களும் ஒப்புக்கொண்டார்.
அந்த மருத்துவர் தன் தவறை ஒப்புக் கொண்டவுடன் துறைத் தலைவருக்கு தான் செய்த தவறு புரிய வந்தது. அறிக்கை முடிவுகளை தயார் செய்யும் மருத்துவர் துறைத் தலைவருடன்ஒருமுறை பரிசீலிக்க வேண்டும், அதனை தான் அந்த மருத்துவர் மேலுள்ள நம்பிக்கையாலும் அந்த நேரம் வேறு அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி அவசரத்தாலும் அவரைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிய துறை தலைவர், சிகிச்சை முடிந்து வந்த பிறகும் அதனை பரிசோதிக்கவில்லை, விளைவு ஒரு சிறுவனின் உயிர் தான் செய்தது தவறு விளைவு உணர்ந்தவர் ஏதும் செய்ய இயலாத வண்ணம், தன் தவறுக்கு தானும் அவளிடம் மன்னிப்பை வேண்டி ர்நின்றிருந்தார்.
மன்னிப்பு கேட்ட மருத்துவரையும், மற்றும் துறை தலைவரையும் ஒருநிமிடம் எந்தவித மாற்றமும் இன்றி இருவரையும் கண்டவள்,
"இந்த மருத்துவமனையில் கொடுக்கப்படும் மருத்துவம் அனைவருக்கும் ஒன்றுதான், ஒருவனின் பணம் அவன் தங்கும் அறையின் வசதிகளை தான் மாற்றுமே தவிர அவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவத்திலும் கவனிப்பிலும் அல்ல", என்று கூறியவள்.
அந்த மருத்துவரை நோக்கி " you are fire " என்று கூறியவள், அமரை நோக்கி permanently என்ற வார்த்தையை அழுத்த கூறினாள். அதான் அர்த்தம் இன்று அவருடைய கடைசி நாள், மேலும் தான் செய்ய வேண்டியதும் புரிந்தது என தலையசைத்தான்.
துறை தலைவரை நோக்கி" you will be the next, if you let this mistake happen again "
( இந்தத் தவறு மீண்டும் நடக்க நீங்கள் அனுமதித்தால் அடுத்து நீங்களாக இருப்பீர்கள்) என்று கூறினாள்.
தான் செய்த தவறையும் அதன் விளைவையும் ஏற்கனவே உணர்ந்தவர், பல வருடமாக இங்கு வேலை செய்யும் அவருக்கு அவரைப் பற்றியும் தெரியும் ஆதலால் இன்று தான் உயிர் போவது உறுதி என எண்ணி கொண்டவர், ஏனெனில் அவளின் இடத்தில் உயிருக்கு பதில் உயிர் மட்டுமே. தனக்குக் கிடைத்த கடைசி மன்னிப்பை நம்ப முடியாமல் அவள் முகம் பார்த்தவர் தலையை மட்டும் இயந்திரம் போல் ஆட்டி விட்டு அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினார். அமருக்கு, அவருக்கு கொடுக்கப்பட்ட மன்னிப்பை எண்ணி குழப்பம் ஏற்பட்டது இது எதற்காக என்று.
இவை அனைத்தையும் தன் அறையில் அமர்ந்து ஒலி ஒளி வடிவாக நேரிடையாக பார்த்து கொண்டு இருந்தவன் Good job MRS. ஜோயா (joya ), என்று தன் மனைவியை பார்த்து பெருமையுடன் கூறினான்.
 
Last edited:

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ் ,

தவத்தின் வரமாய் இரண்டாவது அத்தியாயம் பதிந்து இருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுக மக்களே !!!!!!!

அண்ட் என்னோட first ud like and , commend குடுத்த எல்லாருக்கும் நன்றி, மக்களே .

என்னோட ஸ்டோரி பத்தி என்ன நினைக்குறீங்க அப்படின்னு Commend box la commend panna nalla irukkum Plzzzz......


http://srikalatamilnovel.com/community/threads/ரையானாவின்-தவத்தின்-வரமாய்-கருத்துத்-திரி.1036/page-2
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Promo 1:

பவுர்ணமி நள்ளிரவு, நிலவொளி மட்டும் அந்த நில மகளுக்கு பாதையில் வழி காட்டியபடி இருக்க, நட்சத்திரங்கள் தான் சகோதரி பூமியில் தனியே நடந்து செல்வதை கண்டு, அவள் தனிமையை போக்கும் வண்ணம் தங்களை மின்னி மறைத்து அவளுடன் கண்ணாமூச்சி ஆடிய படி அவளை உற்சாகப்படுத்தின. நிலவின் ஒளியையும் மீறி தன் பாதையில் வேறு ஒளி பரவ, தன் நடையின் வேகத்தை மட்டும் குறைத்து திரும்பி பார்க்க அவளை கடந்து சென்ற வாகனம் அவளை பின் தொடர்வது போல் வந்தது. உள்ளுக்குள் உதறல் எடுக்க தன் நடையை எட்டி போட்டவாறு இரு சக்கர வாகனத்தை தள்ளி கொண்டு சென்றாள், அவளின் வேகம் அதிகம் ஆனதை உணர்த்த வாகனம் தன் வாகனத்தின் ஒளியை நிறுத்தி, பின் தொடர ஆரம்பித்தது. " ஒரு வேலை தனது பாதுகாப்பிற்கோ? , நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் போல" என எண்ணியவாறு செல்ல ஆரம்பித்தாள். நெடுஞ்சாலை இருபுறம் இருந்த மரங்களும் செடிகளும் இடையே ஒரு பிரிவு பாதை செல்ல அதை அவள் வாகனம் கடக்கும் வரை பின் தொடர்ந்த அந்த கார் , அடுத்த நொடி வேகமாக முந்திக்கொண்டு அவளின் பாதையை மறைத்தவாறு நின்றது . அதில் இருந்து இறங்கிய நான்கு வாலிபர்களை கண்டதும் , அவள் உதிரம் உறைய , உடல் நடுங்க ஆரம்பித்தது . அந்த வாலிபர்களின் முகம் நிலவொளியில் வரிவடிவாக தெரிய அடுத்து நடக்க இருப்பது புரிந்து ஓட முயன்றாள் .

சுற்றிலும் இருட்டு ,இரவின் குளிர் , நிலவின் ஒளியை தவிர வேறெந்த ஒளியும் இல்லாத , தூரத்தில் தெரிந்த சொற்பமான மக்கள் நடமாட்டம். தன்னை காத்துக்கொள்ள ஓட ஆரம்பித்தவளை , அடுத்த நொடி அந்த நான்கு வாலிபர்களும் சுற்றி வளைக்க, நரிகளுக்கு நடுவே மாட்டிய மான்குட்டியானாள். தன் முன் நின்று இருந்த ஆடவனை தள்ளி விட்டு ஓட முயல அவள் பின் இருந்தவன் அவளின் இடையோடு இழுத்து வாய் பொத்தி தூக்க கால்கள் அந்தரத்தில் நிற்க அவன் கைகளில் சிக்கிருந்தாள் .

---------------------------------------------------------------------------------------------------

_____________________________________________

"--------------தன் முகம் நோக்கி குனிந்தவனின் கண்களை நேருக்கு நேர் ஓர் நொடி பார்த்தவள் , அடுத்த நொடி அவனின் குரல்வளையை , தன் முழு பலத்தையும் கூட்டி , அகல வாய் திறந்து , அழுந்த கடித்து இழுத்தாள். ஒரு முறை அல்லது மீண்டும் மீண்டும் கடித்தாள் , பற்றி இருந்த அவள் கைகளை விட்டு தன் குரல்வளையை காக்க முயன்று அவளை தள்ளி விட்டு கைகளை தூக்க முயன்றான் ஆனால் முடியவில்லை வளைக்கரத்தை பற்றி இருந்த அந்த கைகள் இப்பொழுது அந்த வளைக்கரத்தில் சிக்கி இருந்தது. அவள் வாய் பொத்தி குரல் அடைத்தவனின் குரல் , இப்போது எழுப்ப முடியவில்லை , தன்னுடன் அவளை நெருக்க முயன்றவன் இப்போது அவளை தன்னில் இருந்து விலக்க முடியவில்லை , வேட்டையாட வந்த மனித ஓநாய் அந்த சிறுப்( சிங்கப் ) பெண்ணிடம் தன்னை காத்துக்கொள்ள போராட ஆரம்பித்தது.
அந்த சிங்க பெண் தனது வேட்டையை ஆரம்பித்திருந்தது .....................

----------------------------------------------------------------------------------------------------------


" ----------------- அந்த பசங்களோட நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம் தான் , ஒருத்தனுக்கு குரல் வளை ரொம்ப பாதிச்சி இருக்கு , குரல் வருமா இல்லையா இப்போதைக்கு தெரியாது , இரண்டாமவனுக்கு முதுகு தண்டுவடம் உடைஞ்சிருக்கு , முன்றாமவமுக்கு நெஞ்சு எலும்பு உடைஞ்சிருக்கு , நான்காமவனுக்கு இடுப்பு எலும்பு நொறுங்கி இருக்கு , இப்போதைக்கு இந்த அளவு தான் ..................... அது மட்டும் இல்லாம சிறிது இடைவேளை விட்டவர் முகம் மெல்லிய சந்தோஷத்தில் உதட்டில் சிரிப்புடன் அவங்க எல்லாரோட ஆண்மையும் பறிக்க பட்டு இருக்கு "


"அப்போ அந்த பொண்ணு "


' அவங்களும் தாக்க பட்டு இருக்காங்க பின் மண்டையில் அடி பட்டு இருக்கு "


"இப்படி ஒரு கேள்வி கேட்கவேண்டி இருக்கு தப்ப நினைக்க வேண்டாம் இது என்னோட வேலைகளில் ஒன்று "

"அந்த பொண்ணுக்கு அந்த பாசங்களால் ஏதேனும் "

"ஹாஹாஹாஹா "

" தலை , கை இவற்றில் காயம் மற்றும் உடை கிழிபட்டு இருக்கு , இதை தவிர அவனுங்களால அவ கிட்ட கூட நெருங்க முடியல , i think she is not only fire, she is more then your imagination ...................... "
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவம் : 3


இளங்கலை படிப்பை முடித்த நண்பர்கள் பட்டாளம் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வின் அடுத்த நிலை சென்றனர். யஸ்வினிக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம். ஜாபர் தன் தந்தை தொழிலில் மாற்றம் கொண்டுவந்து அதில் வெற்றியும் பெற்று விட்டான். ஜூஹி, இர்பான், கெளதம், சுரேஷ் நால்வரும் தங்களது முதுகலை படிப்பில் இறுதி ஆண்டின் தேர்வு முடிக்க சில தினங்கள் இருக்க , இந்த இரண்டு வருடமும் பகுதி நேர வேலையாக five star டெகரேஷன் என்ற பெயரில் வீடு ஒன்றை வாடகை எடுத்து சிறு அளவில், விருந்து அலங்காரம், திருமண அலங்காரம் செய்கின்றனர்.

ஆதி மற்றும் அதிதி தம்பதி தற்சமயம் தங்களின் நூற்பு ஆலை ( faberic business ) விரிவுபடுத்தும் வேளையில் தீவிரமாக உள்ளனர். அருணா - ராமமூர்த்தி தம்பதி தங்களின் மகள் திருமணத்தை நடத்த எண்ணி அதற்கான வேளையை ரகசியமாக செய்து வருகின்றனர். அடுத்த வாரம் தங்களின் உறவில் நடக்கும் திருமணத்திற்கு, அவளை கோவை அழைத்து செல்ல உள்ளனர். திருமணத்தில் அணிய வேண்டிய உடைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தவர் கையில் தன் சகோதரனின் டைரி கிடைக்க அதனை எடுத்துக்கொண்டு அமர்ந்து விட்டார், அது கொடுக்க போகும் அதிர்ச்சி தெரியாமல்.

***************


நண்பர்கள் தங்களின் தொழில் கூடத்தில் அடுத்த 2 தினங்களில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு தேவையான அலங்கார பொருட்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர் சுரேஷ் மற்றும் இர்பான்.

" மாலை, செண்டு டிசைன் செலெக்ஷன் முடிச்சதா? " - சுரேஷ்.

" இன்னைக்கு காலைல தான் பைனல் பண்ணாக, ஆர்டர் கொடுத்தாச்சு, அட்வான்ஸ் போகும் போது கொடுக்கணும். " இர்பான்.

" peyment எவ்ளோ செட்டில் பண்ணி இருகாங்க"

" ¾ பண்ணிட்டாங்க மீதி marriage முடிச்சதும் வாங்கணும் ".

" ஜீஹி, கவுதம் எப்போ வராங்க? "

" டிரஸ் trial பாக்க எடுத்துட்டு போய் இருக்கா , இன்னும் அறை மணிநேரத்தில் வந்துடுவா, கவுதம் அவகூடத்தான் போய் இருக்கான் "

" மதிய சாப்பாடுக்கு பொருள் வாங்கி குடுத்து இருக்கேன், நாளைக்கு எனக்கும், ஜீஹிகும் பைனல் எக்ஸாம் அது முடிச்சிட்டு அப்புறம் ஈவினிங் நேர பொண்ணு வீட்டுக்கு வந்துடுவோம் " . - இர்பான்.

" ஓகே, மிதி நாங்க பாத்துக்கிறோம். " - சுரேஷ்

அந்த நேரம் மண மக்களின் உடைகளை எடுத்து கொண்டு உள்ள நுழைந்தனர் மற்ற இருவரும்.

" ஹாய், பா டிரஸ் எல்லாம் ஓகே சொல்லிட்டாங்க, அங்கிள் arrangement's பத்தி கேட்டாக, சொல்லி இருக்கேன், நாளைக்கு ஈவினிங் திங்ஸ்லாம் வந்துடும்னு சொல்லி இருக்கேன். ஓகே வா? " - ஜீஹி

" நாங்க ரெண்டு பேரும் காலைல போடுறோம் நீங்க ஈவினிங் வந்துடுங்க " என சுரேஷ் கூற இர்பானை பார்த்து விட்டு யோசனை ஓடு சரி என தலை அசைக்க

அதை பார்த்து கெளதம் " என்ன? "

" எனக்கு அடுத்த வாரம் ஒரு நாலு நாள் லீவு வேணும்? " என முகத்தை பாவம் போல் வைத்து கொண்டு கேட்க. மற்ற மூவரும் அவளை எரிப்பது போல் பார்த்தனர். காரணம் பரிட்சை முடிந்து அடுத்த இரண்டு வாரம் தமிழ் நாடு முழுக்க சுற்றுலா பயணம் போக திட்டம் போட்டு ஒரு படையை திரட்டிய பின் இப்பொழுது இவ்வாறு பேசுவது அவர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியது.

" என்ன விளையாடுறியா ? " இர்பான்

" இப்போ எதுக்கு லீவு? எங்க போற? " சுரேஷ்.

தலை குனிந்து இருப்பது போல் நடித்து கொண்டு ஓர கண்ணால் மூவரையும் அளந்து கொண்டே

" கல்யாணத்துக்கு " என்றாள்.

" யாருக்கு உனக்கா - என நக்கலாக கெளதம் கேட்க

" டேய் லூசு, சொந்தக்காரங்க கல்யாணம் டா "

" நீ எதுக்கு போற? " சுரேஷ்

" கல்யாணத்துக்கு எதுக்கு டா போவாங்க "

" நாங்க எல்லாம் சாப்பிட தான் போவோம், அந்த சாப்பாடு நான் இங்க வாங்கி தரேன் ne ஒன்னும் போக வேண்டாம் "

" நீ வேணா அதுக்கு போலாம் நான்லாம் அந்த மாதிரி கிடையாது "

" பின்ன பாத்திரம் கழுவ போறியா "
என்றவனை, ஜீஹி கொலை வெறியுடன் பாக்க. இர்பான் அவளை பார்த்து,

" நாம பிளான் பண்ணி ஒரு மாசம் ஆகுது இப்போ வந்து இப்படி சொல்ற, நாம ஆறு பேர் மட்டும் பரவாயில்ல, வீட்டுல இருந்து வேற வராங்க இல்ல, உன்ன விட்டுட்டு எப்படி போக முடியும் ? "

" ம்…. புரியுது பா. அம்மா ரொம்ப வற்புறுத்தி கூப்புடுறாங்க, ரெண்டு வருஷம் எங்க கூட எந்த விருந்துளையும் கலந்துகல இப்போ இதுக்கு கூட வா சொல்ராங்க, மறுக்க முடியல அதான் "

" நீங்க எல்லாரும் கிளம்புக நான் வந்து சேந்துக்கறேன் "

" அம்மாக்கு நாம டூர் போறது தெரியுமே, இருந்தும் வர சொல்றங்களா? " கெளதம்.

" ம்.. முக்கியமான சொந்தகாரங்களாம், அண்ணா வர முடியாதனால நான் கண்டிப்பா வரணும் சொல்ராங்க. "

" அம்மாக்கு தெரியும், இருந்தும் வர சொல்றங்கனா முக்கியமானவங்கள இருக்கணும். சரி போய்ட்டு வா, டூர் டேட்ஸ் மாத்திக்கலாம் , நீ வந்த பிறகு போகலாம் " என கெளதம் கூற. மனம் சந்தோசம் அடைந்தாலும், தான் பொருட்டு மற்றவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்து

" டேட்ஸ் மாத்த வேணாம், பிளான் படி நீங்கள் எல்லாம் போங்க, நான் இடைல வந்து உங்க கூட சேந்துக்கறேன்.. "


அவளை விட்டு செல்ல மனம் இன்றி, கெளதம் கூறியது சரி என எண்ணி சுரேஷ்,
" ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம், மத்தவங்க கிட்ட நாங்க பேசிக்கறோம், இப்போ நேரம் ஆச்சு நீ கெளம்பு " என்றான்.


மறுத்து பேச நினைத்து வாய் திறக்க, அந்த நேரம் அவளது அலைபேசியில் அருணா அழைக்க,

" என்னமா… "

"---------"

" இன்னும் இல்ல, கொஞ்ச நேரம் ஆகும்…. "

"---------"

" இல்லை, நாளைக்கு பரிட்சை இருக்கு, அடுத்த நாள் கல்யாணம் இருக்கு, நாங்க யாரும் இன்னும் வேலைய பிரிச்சுக்க கூட இல்லை….. "

"-----------"

" ஏன் மா, சரி அறை மணி நேரத்துல கிளம்புறேன். "

"----------"

" மா, ஜஸ்ட் அறை மணி நேரம் தான் "

"--------"

" சரி வரேன். "

அவளின் சம்பாஷணை பார்த்து கொண்டு இருந்த மூவருக்கும் அருணா என்ன சொல்லி இருப்பார் என்பது புரிய.

, " நீ கெளம்பு நாங்க பாத்துக்கறோம் " கெளதம்.

" சரி, வேலை எல்லாம் பிரிச்சி யாருக்கு என்ன என்ன வேலை, எனக்கு என்ன வேலைனு கால் பண்ணி சொல்லுக " என்று கூறி தன் இரு சக்கர வாகனத்தை வீடு நோக்கி செலுத்தினாள்.
 
Status
Not open for further replies.
Top